(ஒற்றைப்படை வந்தால் சேர மாட்டாள்
இரட்டைப்படை வந்தால் பெறுவாள்
கூடல் இளைத்தல் என்றும்
முத்துக்குறி என்றும் சொல்வர்
ஒற்றைப்படையே வரும் என்று அஞ்சி கூடல் இளைக்கவில்லை என்றும்
கடல் அலை அளித்ததாகவும் சொல்வர்
மின்னிடை மடவார் திருவாய் -அழிதற்கே நோற்றோம் யாம் -ப்ரணய ரோஷம் –
இப்பெண்ணும் கூடலை காலால் உதைத்து -ஆழியைச் சீறி
ஆழி -மண்டல ஆகாரம் -கூடல் என்றபடி –
அங்கு கண்ணன் அருகில் வர போ என்றாள்
பரிகாரம் தேடும் பிராப்தியும் சக்தியும் இல்லையே –
உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் என்னுமவள் தானே
நம்பிள்ளை நிர்வாகத்தில் இரண்டாவது ஆழி கடல் -என்று கொண்டு
கடல் இடத்து கோபித்தாள் என்பர் )
அவதாரிகை-
அவன் வரும் அளவும் ஆறி இருக்க ஒண்ணாமை யாலே
கூடல் இழைக்க தொடங்கினாள்–
அது தப்பின படியை கண்டு ,
நாயகன் தன்னைக் கண்டால் கோபிக்குமோ பாதி கூடலோடே கோபிகிறாள்-
(இப்படி தலைமகனுக்கு தோழி கூறுகிறாள் )
சிதைக்கின்ற தாழி என்று ஆழியை சீறி தன் சீர் அடியால்
உதைக்கின்ற நாயகம் தன்னொடு மாலே உனது தண்டார்
ததைக்கின்ற தண் அம் துழாய் அணிவான் அதுவே மனமாய்
பதைக்கின்ற மாதின் திறத்து அறியேன் செயற் பால் அதுவே -34-
பாசுரம் 34-சிதைக்கின்றது ஆழி என்று ஆழியைச் சீறி –
கூடல் இழைத்து வருந்தும் தலைவி நிலையை தோழி தலைவனுக்கு உரைத்தல் –
மின்னிடை மடவார்கள் -6-2-
பதவுரை
மாலே–எம்பெருமானே
ஆழி–கூடல் வட்டமானது-கடலை என்று நம்பிள்ளை நிர்வாகம் –
சிதைக்கின்றது–காரியத்தைக் கெடுக்கின்றது
என்று–என்ற காரணத்தினால்
ஆழியை–அக்கூடல் வட்டத்தை
சீறி–கோபித்து
தன் சிறுஅடியால்–தனது சிறிய கால்களால்
உதைக்கின்ற–உதைக்கும் படியான மேம்பாடுடனே
உனது–உன்னுடையதான
தண் தார் ததைக்கின்ற–வாடாத மலர்கள் நிறைந்த
தண் அம் துழாய்–குளிர்ந்த அழகிய திருத்துழாயை
அணிவான் அதுவே மனம் ஆய் பதைக்கின்ற–சூடும் பொருட்டு அதிலேயே கருத்தாய் வருந்துகிற
மாதின் திறத்து–இம்மங்கை விஷயத்தில்
செயல் பாலது–செய்யத்தக்கவை
அறியேன்–யான் அறிகின்றிலேன்.
வியாக்யானம்-
சிதைகின்ற தாழி என்று ஆழியை சீறி —
முன்புள்ளார் கூடல் இழைக்க புக்கவாறே-
அது சிதறி வருகிற படியை கண்டு-
அத்தோடு சீறி அழியா நின்றாள் என்பார்கள்
பட்டர்–
இது கூடுகைக்கு ஏகாந்தம் இன்றியே-
பிரிகைக்கும் ஒரு புடை உண்டாய் இருக்கையாலே ,-
சீறி உதையா நின்றாள் -என்று நிர்வாகம்
(மூன்றாவதாக நம்பிள்ளை நிர்வாகம் )
கூடல் இழைக்க புக்கவாறே
கடல் ஆனது திரை ஆகிய கையால் அழிக்கப் புக்க வாறே
அத்தோடு சீறா நின்றாள்-
நாயகனும் வரவு தாழ்ந்தவாறே ,கடலோடு சீரும் அத்தனை இறே–
சாபமானாய
ரக்தாந்த லோசன -என்ன-
கண் சிகப்பாய் வில்லை கொடு வா என்னும் இத்தனை இறே-
(வில்லை மட்டும் முதலில் கொடுத்து
மேலே சின்ன அம்புகளைக் கொடுத்து
சஜாதீயமான படுக்கை தானே கடல் )
சீர் அடி இத்யாதி-
ஆர் செவி சீ பாய்ந்து ,கிடக்கும் அது ஆருக்கு பலிகிறது தான்
பிறரை இழப்பிக்கும் அளவு அன்றியிலே தம் தாம் பேற்றையும் இழப்பர்களோ ?
பெறுதற்கு அரிதான திரு அடிகளாலே ,கிடீர் அசேதனமான கூடலை உதைகின்றது
(சீர் அடி –
சீற்றம் உள்ள அடி
அழகை யுடைய அடி
மென்மையான அடி )
இங்கனே என்னும் இடம் அறிந்தான் ஆகில்-
தூணிலே ஒதிங்கினோ பாதி
இம் மண்ணிலே ஒதுங்கிக் கிடக்கும் கிடீர்
கடல் ஆன போது இவை சில கிடைக்கும் என்று அன்றோ
நீர் தோறும் பரந்து நிற்கிறது
அப்போதைக்கு தானே பெற்றான் ஆகிறான்
(மின்னிடை மடவார் -ப்ரணய ரோஷம்
என் சினம் தீர்வன் நானே குலசேகரப்பெருமாள்
அரையர் -காலால் உதைக்கப்பதைக் காட்ட
இரண்டாம் சுற்றில் முகத்தைத் திருப்பி -அது தானே இவனுக்கு தண்டனை
உதைப்பது பெரிய பாக்யம் என்று நினைப்பான் )
துவத் பாத பங்கஜ பரிக்ரக தனய ஜன்மா பூயாசம்-(பட்டர் -குணரத்னகோசம் )என்று
அவன் சர்வேஸ்வரன் ஆவது இவள் காலுக்கு இலக்கான வாறே
(வேதாந்தம் தத்வ சிந்தனை பண்ண
திருமார்பில் மட்டும் தழும்பு கண்டு நிச்சிதம் )
அஸ்தி வஸ்து இதம் இத்தம் லஷ்மி பதி லாசஷைக லஷணம்–
ஈஸ்வரன் ஆவான் தலையில் அல்லது திரு அடிகள் தான் ஏறாது இறே
தன் சீர் அடியால் உதைக்கின்ற நாயகம்-
தரம் பாராதே உதைக்கின்ற படி
மதித்தும் மதியாது (அறிந்தும் அறியாதே )இருக்கிற வேண்டப் பாடு உடைய நாயகம்
மாலே-
இவளை இப்படி பிச்சேற்றி
இவள் பிச்சை கண்டு பிச்சேறி இருகிறவன்-
உனது தண்டார் இத்யாதி–
உன் பக்கல் உண்டாய்
குளிர்த்தியை உடையதாய் ,
தாரையும் உடைத்தாய்
கொம்பிலே நின்ற போதை காட்டில் ,
திரு மேனியில் ஸ்பர்சத்தால் தழையா நின்றுள்ள திரு துழாய் மாலையை
தனக்கு ஆபரணமாக விடுகையாலே ,
மனசு பிரவணமாய் பதையா நின்ற இவள் இடை ஆட்டத்து
பட்ட போது எழு போது அறியாள் வரை மட்டலர் தண் துழாய் என்னும் –திரு வாய் மொழி -2-4-9-
திரு துழாய் என்றே பதையா நின்றாள்
பரதஸ்ய வதே தோஷம் நாஹம் பஸ்யாமி –என்றும்
வத்யதாம்-என்றும்-
இளைய பெருமாளை போலே
(இளைய பெருமாளையும்
சுக்ரீவன் போல்வார் விபீஷணன் பார்த்து கோபித்தார்களே )
(கடல் தானே ஜனனி
தாயை உதைக்கலாமோ என்னில்
இன்னார் என்று பார்க்காமல்
பெருமாளுக்கு விரோதி என்று எண்ணி கோபித்தார்கள் உண்டே )
அறியேன் செயல் பால் அதுவே-
க்ரம பிராப்தியும்
இவள் உடைய த்வரையும்
சாதனம் இல்லை-
அப்ரயோகம் –
பலம் அவன் தன்னாலே இருந்த படி-
(க்ரம பிராப்தி -ஸ்வரூபம் பார்த்து வரும்
விஷய வைபவம் -வை லக்ஷண்யம் -பார்த்து த்வரை வரும்
இரண்டுமே சாதனம் ஆகாதே
பேறு தப்பாது என்று இருக்கையும்
பேற்றுக்குத் த்வரிக்கையும் வேணுமே
அவன் நினைவே இரக்கமே உபாயம் )
தாத்பர்யம்
கீழே மோஹித்துக் கிடந்த நாயகி
அருளார் திருச்சக்கரம் என்று தாயார் சொல்ல
அதனால் மோஹம் தெளிந்து எழுந்து இருந்து
விரஹ தாபம் போக்க கடல் கரைக்குச் சென்று
அங்கு சகுனம் பார்க்கத் தொடங்கிய இவள்
அவன் வரவில்லை -அதுக்கும் மேலே அவன் வரவைப் பார்க்க முடியாமல் கடலும் கூட வஞ்சிக்க வேண்டுமோ
ஸ்வப்னம் கூட வஞ்சித்ததே -என்று சீதாபிராட்டி ஆற்றாமை சொல்லிக் கொண்டது போல்
சர்வஸ்வரனைக் குறித்து திருத்தாயார் பாசுரம்
ஓ ஸ்வாமி நீர் எப்போது வருவாய் என்று இவள் கூடல் அழைக்க ப்ரவர்த்திக்க
இந்த சமுத்திரம் நாயகன் வரவை அறிய ஒட்டுகிறது இல்லை
ஆகையால் இவள் செருக்கு கொண்டு அத்தை உதைத்து
பின்னும்
நீ அணிந்த திருத்துழாய்க்கு ஆசைப்பட்டுத் துடிக்கிறாள்
நீர் எப்பொழுது ரக்ஷிப்பாய் என்று தெரியவில்லை என்கிறாள்
————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply