எம்பெருமான் மறைய நிற்க
ஆழ்வார் ஒரு பிராட்டி நிலையை அடைந்து
பறவைகளும் வாடை போன்றவற்றையும் தம்மோடு
இணைந்து துன்புறுவதாக எண்ணி வருந்தி அருளும் திரு வாய் மொழி
திரு குரும் குடி நம்பியை இழந்த பெரும் இழப்பால்
வாயும் திரை உகளும் கானல் மட நாராய் !
ஆயும் அமர் உலகும் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
நோயும் பயலைமையும் மீதூர எம்மே போல்
நீயும் திரு மாலால் நெஞ்சம் கொள் பட்டாயே ?-2-1-1
29
கோள் பட்ட சிந்தையாய்க் கூர் வாய வன்றிலே !
சேட் பட்ட யாமங்கள் சேராது இரன்குதியால்
ஆட் பட்ட எம்மே போல் நீயும் அரவணையான்
தாள் பட்ட தன் துழாய் தாமம் காமுற்றாயே ?-2-1-2
கண்ணனால் கொள்ள பட்ட சிந்தை -அன்றிலும்-
யாமம் நீண்டு போக -விரகத்தால்
சேராமல் வருந்தி
அவனுக்கே ஆள பட்டு -சூடி களைந்த துழாயும் கிடைக்காமல்
தீன சுரம் -தாச்யத்தில் ஆழ்ந்து அச்சுத பாத கிம்வா தாமம் -ஸ்லோஹம் போல்
காமுற்ற கையறவோடு எல்லே ! இராப்பகல்
நீ முற்ற கண் துயிலே நெஞ்சு உருகி யேங்குதியால்
தீ முற்றத் தென் இலங்கை ஊட்டினான் தாள் நயந்த
யாம் உற்றது உற்றாயோ வாழி கனை கடலே !–2-1-3
கனைக்கின்ற கடலே -இரவும் பகலும்
ஆசை பட்டது கிடைக்க இல்லை என்று
அலை சப்தம் ஒழித்து கொண்டே-அலை பாயுதே
ஏங்கி அழுகிறாயா
அக்னி அஸ்தரம் கொண்டும் திரு அடி மூலம் ஒரு பெண்ணை கொள்ள –
தன்னை ஆஸ்ரித்த ஒருவனை கொள்ளும் பாரிப்பால் –
கடலே கடலே –நாச்சியார் திரு மொழி உன்னை கடைந்து உடல் உள் புகுந்து -போல்
துவாரகை பட்ட மகிஷி-பாகவதத்தில் தூக்கம் வராத தனால் கடலே -உன் சாயலை கண்ணன் கொண்டுபோய் விட்டானா
என் லாஞ்சனம் நெற்றி கும்குமம் கண் மை ஒத்தி கொண்டு போனது போல்
கடலும் மலையும் விசும்பும் துழாய் எம் போல்
சுடர் கொள் இராப் பகல் துஞ்சாயால் தன் வாடை !
அடல் கொள் படை ஆழி அம்மானைக் காண்பான் நீ
உடலம் நோய் உற்றாயோ? ஊழி தோறு ஊழியே –2-1-4
காற்றை பார்த்து அடுத்து
ஆகாசம் கடல் மலை அலைந்து
இரா பகல் -சூர்யன் சந்தரன் -சுடர் இருப்பதால் தூங்க வில்லையா -அவன் பார்க்காமல் விரக நோய் –
முடிவு தெரியாமல்-
காற்று வியாபக தத்வமாய் –அபிமத விரக விசனம் -மடல் இடுவாரை போல் உடம்பில் புழுதி ஏற் இட்டு கொண்டு -நீயும் நான் பட்டது பட்டாயா
அலைகிறது எங்கும்-குளிர்ந்து சன்னி கொண்டது போல் –கிருஷ்ண விரகம் மிகுந்து காற்றை கட்டி அழுகிறார் -கொண்ட காதலுக்கு பத்திமை நூல் வரம்பு இல்லையே
ஊழி தோறு ஊழி உலகுக்கு நீர் கொண்டு
தோழியரும் யாமும் போல் நீராய் நெகிழ்கின்ற
வாழிய வானமே ! நீயும் மது சூதன்
பாழிமையில் பட்டு அவன் கண் பாசத்தால் நைவாயே -2-1-5
திரண்டு வரும் மேகத்தை -வானம் -உப லஷனம்-
மழை பொழிவது இயற்க்கை
நினைத்து நினைத்து கண்ணீர் விடுவது போல்-அடை மழை –ஐப்பசி மாசம்-மேகம் அடைத்து கொட்டுமே
விரகத்தால்-குழந்தை நினைத்து நினைத்து அழுவது போல் –அழுதும் ஆறுதல் அடைந்தும் மீண்டும் அழுதும்
நீராய் நெகிழ -கண்ணனின் மிடுக்கை இழந்து –அவன் கண் பாசத்தால்
பாகவதத்திலும்-இதே -வரி
விண்ணீல மேலாப்பு விரித்தால் போல் மேகங்காள்-ஆண்டாள்-
நைவாய வெம்மே போல் நாள் மதியே ! நீ இந் நாள்
மைவான் இருள் அகற்றாய் மாழாந்து யேம்புதியால்
ஐவாய் அரவணை மேல் ஆழிப் பெருமானார்
மெய் வாசகம் கேட்டு உன் மெய் நீர்மை தோற்றாயே ?–2-1-6
அடுத்து சந்தரன் தேவதை பார்த்து-போர்த்தி ஆகாமல் தே பிறை-நாளை கொண்டு சொல்ல சந்தரன்
இருள் மூடிய வானை போக்கும் ஒளி இன்றி நிற்கிறாயே
சேஷ சயனம் -கண்ணன் வார்த்தை மெய் நினைப்பது உன் தப்பு தானே
ஏலா பொய்கள் உரைப்பான்-
அவளுக்கும் மெய்யனில்லை
தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணர்க்கு எம்
ஆற்றாமை சொல்லி அழுவோமை நீ நடுவே
வேற்றோர் வகையில் கொடிதாய் எனை ஊழி
மாற்றாண்மை நிற்றியோ? வாழி கனை இருளே ! 2-1-7
அடுத்து இரவை பார்த்து –
பெருமாள் விரகத்தால் தசரதன் புலம்பியது போல்
நெஞ்சை அவன் பறித்து போக
அழுவதை அவன் இடம் சொல்லலாமே
மாற்றி விட பார்கிறாயே-அவனுடன் சேர்த்து விட வேண்டுமே
இருளின் திணி வண்ணம் மா நீர் கழியே போய்
மருள் உற்று இராப் பகல் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
உருளும் சகடம் உதைத்த பெருமானார்
அருளின் பெரு நசையால் ஆழ்ந்து நொந்தாயே ?-2-1-8
இருள் போல் ஒரு நீர் ஓடையும் -நீலமாக –ஓடி கொண்டே இருக்க -துஞ்சாமல்-
ஓடுவதால் ஓடை-தேங்கி இருந்தால் குளம்
இருள் செறிந்தால் போல்-மடல் எடுப்பது போல்-தாபம் பித்து –
ஓடுவதை பார்த்தல் அது போல்
சகடாசுரனை முடித்த கண்ணன் கிடைக்க நப்பாசை கொண்டு
ஆழம் கால் பட்டு– நோவு தான் மிச்சம் -அவன் கிடைக்க வில்லை–
வறண்டு -விரகத்தால்-தாமரை போக்க வில்லை-அழகு படுத்தி கொள்ளாத பெண் போல் -இஷ்ட பர்த்து இல்லை என்பதால்-பாகவதம்
கடாஷம் கூட கிடக்க வில்லையே -பார்த்தால் நெஞ்சை பறித்து போனானே குற்றம் சொல்வார்–
நொந்தாராக் காதல் நோய் மெல்லாவி யுள் உலர்த்த
நந்தா விளக்கமே ! நீயும் அளியத்தாய்
செம் தாமரைக் தடம் கண் செம் கனி வாய் எம்பெருமான்
அம் தாமத் தன் துழாய் ஆசையால் வேவாயே ?-2-1-9
நந்தா விளக்கு–ஆரா காதல்-கிருஷ்ண விரகம் தணியாமல்-
பிரேமைக்கு முடிவு இல்லை-ஆரி போகாது
எண்ணெய் முடிந்து திரி மட்டும் இருப்பது போல் ஆவி உலர்ந்து –
அதனால் வேவி இருக்கிறாயே
வேவாரா வேட்கை நோய் மெல்லாவி உள் உலர்த்த
ஓவாது இராப் பகல் உன் பாலே வீழ்த்து ஒளிந்தாய்
மாவாய் பிளந்து மருதிடைபொய் மண் அளந்த
மூவா முதல்வா ! இனி எம்மை சோ ரேலே –2-1-10
இனி அவனை பார்த்து-
நோய் நீங்க வேண்டாம்-ஆரா நோய் விரகம்
உள்ளம் உலர்ந்து -இரவும் பகலும் விழுந்து இருக்கும்
மருதிடை சென்று சாய்ப்பது போல்
பூமிபிராட்டி திரு அடி வைத்து விரக தாபம் நீக்கினையே உலகு அளந்த யுவா குமாரா
இனி வாட்டாமல் வந்து கலந்து விடு-சோர விடாதே
சோராத எப் பொருட்கும் ஆதியாம் சோதிக்கே
ஆராத காதல் குருகூர் சடகோபன்
ஓர் ஆயிரம் சொன்ன அவற்றுள் இவை பத்தும்
சோரார் விடார் கண்டீர் வைகுந்தம் திண் எனவே 2-1-11
ஆழ்வார் அனுபவம் -ஆராத காதல் –
ஆரா வேட்கை நோய்
பக்திக்கு முடிவு இல்லை ஷணம் ஷணம் வளரணுமே
பூர்த்தி இல்லை அவன் கிடைத்தாலும்
ராதா கண்ணன் மடியில் உட்கார்ந்தாலும் அழுகிறாள்-வர போகிற விரகம் நினைத்து
கிருஷ்ண த்ருஷ்ண காதலுக்கு கேட்க வேண்டுமா
கண்ணன் திரு அடி-ஸ்ரீ வைகுந்தம் அடைந்து நழுவாமல் இருப்பார்
வாயும் திருமால் மறைய நிற்க ஆற்றாமை
போய் விஞ்சி மிக்க புலம்புதலாய் ஆய
அறியாத அவற்றோடு அணைந்து அழுத மாறன்
செறிவாரை நோக்கும் திணிந்து –திரு வாய்மொழி நூற்று அந்தாதி -11
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்
Leave a Reply