கடலும் மலையும் விசும்பும் துழாய்எம்போல்
சுடர்கொள் இராப்பகல் துஞ்சாயால் தண்வாடாய்!
அடல்கொள் படைஆழி அம்மானைக் காண்பான் நீ
உடலம்நோய் உற்றாயோ, ஊழிதோறு ஊழியே?
பொ-ரை : ‘வடக்கிலிருந்து வருகின்ற குளிர்ந்த காற்றே! கடலும் மலையும் ஆகாயமும் ஆகிய இவற்றைத்தடவிக்கொண்டு, சந்திர சூரியர்களைக் கொண்ட இரவிலும் பகலிலும் எம்நைப் போன்று தூங்குகிறாய் இல்லை; பகைவர்களுடைய மிடுக்கைக் கொள்ளுகின்ற சக்கரப்படையினையுடைய தலைவனைக் காணுவதற்கு, காலமுள்ள வரையிலும் உடலோடு முடியும்படியான நோயினைக் கொண்டாயோ?’ என்கிறாள்.
வி. – கு : ‘துழாய்த் துஞ்சாய்’ என முடிக்க. துழாய் – வினையெச்சம். சுடர் – ஆகுபெயர், வாடை – விளியேற்றலின், ‘ஆய்’ ஈறாகத் திரிந்தது. காண்பான் – வினையெச்சம். ‘சுடர்கொள் இரா’ என்பதற்கு ‘வெப்பத்தைக்கொண்டுள்ள இரவு’ எனப் பொருள் கூறலுமாம்.
ஈடு : நாலாம் பாட்டு. காற்று என்று ஒரு 2வியாபகதத்வமாய், அதுதான் காதலனைப் பிரிந்த விரஹத்தால் உண்டான வியசனத்தால், 3இருந்த இடத்தில் இருக்கமாட்டாமல், மடல் ஊருவாரைப்போன்று உடலிலே புழுதியை ஏறிட்டுக்கொண்டு வடிவு தெரியாத படியாய், 1சன்னிசுரம் வந்தவர்களைப் போன்று குளிர்ந்திருந்தது; அதனைப் பார்த்து, ‘நீயும் நான் பட்டது பட்டாய் ஆகாதே?’ என்கிறாள்.
கடலும் மலையும் விசும்பும் துழாய் – அளவு அற்ற பெரிய கடலும், செறிந்த மலையும், இடவெளியினைக் கொடுக்கிற ஆகாயமும் என்னும் இவற்றைத் தடவி. எம் போல் சுடர் கொள் இராப் பகல் துஞ்சாயால் தண் வாடாய் – ஆதித்தன் மறைந்த இரவோடு ஆதித்தனையுடைய பகலோடு வேற்றுமை அற எம்மைப் போன்று உறங்குகின்றாய் இல்லை; குளிர்ந்த வாடாய்! சன்னிசுரம் பிடித்தவர்களைப் போன்று முடியுமளவினை அடைந்தாய் என்பாள்,‘தண்வாடாய்’ என்கிறாள். ‘சுடர் கொள்’ என்றது, சிலேடை: ‘சுடரைக் கொண்ட’ அதாவது, ‘மறைந்த’ எனவும், ‘சுடரையுடைய’ எனவும் இரு பொருள்படும். மறைந்த என்பதனோடு இரவையும், உடைய என்பதனோடு பகலையும் கூட்டிப் பொருள் கோடல் வேண்டும். ‘ஆயின், ‘துழாய் எம்போல்’ என்பதற்கு, இவள் துழாவினாளோ?’ எனின், 2காரார் திருமேனி காணு மளவும் போய்ச், சீரார் திருவேங்கடமே திருக்கோவ, லூரே ஊராய எல்லாம் ஒழியாமே நான் அவனை’ என்று வருதலால் தேடினால் என்க. ‘ஆயின், இங்குத் திருப்பாற்கடலும் பரமபதமும் கூறினாள் இலளே?’ எனின், அவையும் இறைவன் தங்கியிருக்கின்ற இடங்களேயாதலின், ‘ஊராய எல்லாம்’ என்றதனால் பெற வைத்தாள். ஆக, ‘திருப்பாற்கடலோடு திரு மலையோடு பரமபதத்தோடு வாசியறத் 3தேடுவார்க்குப் போலியாய் இருக்கின்றது’ என்றபடி.
இனி, ‘கடலும் மலையும் விசும்பும் துழாய்’ என்பதற்கு, ‘சக்கரவர்த்தியின் புதல்வர்களான இராம இலக்குமணர்கள் வனங்களிலும் மலைகளிலும் நதிகளிலும் தடாகங்களிலும் சீதா பிராட்டியைத் தேடிக்கொண்டு திரிந்தார்கள்,’ என்கிறபடியே, இராம இலக்குமணர்கள் பிராட்டியைத் தேடித் திரிந்தது போன்று, வாடையும், கடலையும் மலையையும் விசும்பையும் துழாவிக்கொண்டு வந்தது,’ என்று பொருள் கூறலுமாம்.
அடல்கொள் படை ஆழி அம்மானைக் காண்பான் – ‘மிடுக்கை யுடைத்தான படையாகிற திருவாழியைக் கையிலேயுடைய, சர்வேஸ்வரனையோ நீயும் காண ஆசைப்பட்டாய்? 1‘இது எனக்கு நோன்பு’ என்னும் நிலை தவிர்ந்து, பாரதப்போரில் மூன்றாம் நாள் அருச்சுனன் இளைத்துக் கைவாங்கினவாறே, செய்த சூளுறவையும் அழித்துத் திருவாழியைக்கொண்டு 2ஸ்ரீவீடுமரைத் தொடர்ந்தான்; ஆதலால், செய்த சூளுறவை அடியார்கட்காகத் தப்பியவனுடைய பக்ஷ பாதத்திலே அகப்பட்டாய் ஆகாதே’ என்பாள், ‘அடல்கொள் படையாழி அம்மான்’ என்கிறாள். அடல் கொள் படை அடல் என்றது மிடுக்கு. எதிரிகள் மிடுககைக் கொள்ளும் படை என்னுதல், தான் மிடுக்கையுடைத்தாய் இருக்கும் படை என்னுதல்.
நீ உடலம் நோய் உற்றாயோ – கைம்மாறு கருதாது உதவி செய்யும் நீ. எல்லாப் பொருள்களுக்கும் ரக்ஷகமான சரீரத்திலே நோவு வரும்படி பட்டாய் ஆகாதே! சஞ்சாரம் இதற்கு எப்பொழுதும் உள்ளதொரு தன்மை; இதனை அறியாது, எப்பொழுதும் சஞ்சரிக்கையை நோவு கண்டது என்று இருக்கிறாள். ஊழிதோறு ஊழி – கல்பந்தோறும். காலம் மாறிக்கொண்டே வரவும் நோய் மாறாது ஒரே தன்மையாகச் செல்லுகின்றதாதலின், ‘ஊழிதோறு ஊழி’ என்கிறாள். ‘சரீரத்தோடு முடியும்படியான நோயினைக் கொண்டாயே என்பாள், ‘ஊழி உடலம் நோய் உற்றாயே’ என்கிறாள்.
2. ஏஹ்யேஹி – கெட்டோடுகிறவன் பிற்காலித்து நின்று ‘எங்கள் அம்மை நாயனார் மாறி
மாறி இடுகிற அடி இருக்கிற அழகு என்? புல்லாம் புஜபத்ர நேத்ர-என்றும் ஆணை
மறுத்தால் சேதம் என்? சீறிச்சிவந்த கண்ணழகைக் காணப்பெற்றால். பிரஸஹ்ய மாம்
பாதய – ‘ஆயுதமெடேன்’ என்ற நீர் ஆயுதம் எடுத்தாலும் அடியேன் கையில் ஆயுதம்
இருக்கிறவரையில் தோலேன்; ஆயுதத்தைப் போகடச் சொல்லித் தலையறுத்தருளீர்,’
லோகநாத-உமக்கும் வீரத்துக்கும் தோலோன்; முதன்மைக்குத் தோற்பன்’ என்பது
அவ்விடத்துப் பாரதச் சுலோகத்துக்கு உரைகாரர் அருளிச் செய்த பொருள். (பார. பீஷ்ம.
59 : 98)
‘ஆரண கற்பித மாதவ அச்சுத ஆழி யிடைத்துயிலும்
காரண சிற்குண ரூப மலர்க்கொடி காதல் மனத்துறையும்
நாரண அற்புத வானவ ருக்கொரு நாயக நிற்பணியும்
வாரண முத்தி விசால தலத்திடை வாழ்வுற வைத்தவனே.’
என வீடுமன் துதித்தலை, வில்லி பாரதம் மூன்றாம் போர்ச்சருக்கத்து 14 முதல் 20 முடிய
உள்ள செய்யுள்களில் காண்க.
காற்று -வ்யாபக தத்வம்
அபிமத விரக விசனத்தால் இருந்த இடத்தில் இருக்க மாட்டாமல்
மடலூருவாரை போலே உடம்பில் புழுதியை ஏற் இட்டு கொண்டு
வடிவு தெரியாத படி -ரூபம் இல்லை
ஜுரம் சன்னிதர் போலே குளிர்ந்து
இவள் போல
திரிந்து
புழுதி ஏறிட்டு
வடிவு அடையாளம் இன்றி -தண் வாடை
ஜுரத்தால் குளிர்ந்து
இவளுக்கும் காற்றுக்கும் பொருத்தம் இவை எல்லாம்
கடல் மலை விசும்பு துழாவி என்னை போல்
அம்மானை காண்பதற்கு -சீரார் திருவேம்கடமே திரு கொவலஊரே அவனை தேடி போவது போல்
காரார் திரு மேனி காணும் அளவு
ஷீராப்தி திருவேம்கடம் பரமபதம் -தேடுவார்க்கு போலி
வநானி க்ரீ -தசரதார்மாஜர் சீதை தேடி திரிந்தது போல் –
சீதம் தேடிக் கண்டிலோம் ஆரி இருக்க முடியாத விஷயம்
தேட பிறந்தவர் அல்லர் இருந்தும் தேடி
அவர்கள் ஜீவிக்கை என்று ஒரு பொருள் உண்டோ –
ஜீவிதும் ந சக்த -இழந்த வஸ்து வை லஷண்யம்
நீட்டும் துழாவி
அபரிசின்னமான கடல் -நிர்விமரமான மலை ஓட்டை இன்றி -சுத்தமான ஆகாசம்
துஞ்சாள்
த ண் வாடை -ஜுரத்தில் விழுந்து -ஜனனி கண்டது போல்
சுடர் ஆதித்யன் கொள்ள விழுங்கிய இரவு –
சுடர் கொள் பகலும் இரவும் விழுங்கிய -கொண்டு இருக்கிற இரண்டும் –
உறங்காமல்-இருக்கிறாய்
அடல் கொள் படை
அடல்மிடுக்கு -எதிரிகள் மிடுக்கை அபஹரிக்கும்
மிடுக்கு உள்ள ஆழி
அதனால்தான் ஏமாந்தாய்
ஆஸ்ரித எதத் வரதம் மாம -வைத்து கொண்டு
-பொய் கூட சொல்வான் ரஷிக்க -உன்னை ஏமாற்ற தான் இப்படி பண்ணினான்
தன்னை நம்புவார்கள்
ஏமாற்றலாம்
மதியினால் குறள் மாண் ஆய – இப்படி அர்த்தம்-பாவம் – அங்கு பார்த்தோம்
புத்தி சாதுர்யத்தால்
வஞ்சகன் மகா பலி வஞ்சித்து– பிள்ளான் நிர்வாகம்
எம்பெருமானார் நிர்வாகம் இது -ஆழ்வாரை வஞ்சித்து
நம்பிக்கை விளைத்து
அழகில் ஈடு பட்டு -அவளை வஞ்சிக்க முன்னே ஏற்பாடு செய்தான் .
அம் சிறைய மட நாராய் முன்பு பார்த்தோம்
அடல் கொள் -வஞ்சனம் இங்கும் அகப்பட்டாய்
அசத்திய பிரதிக்ஜன் ஆஸ்ரிதர்க்கு
பஷ பாதம்
பரத சமரத்திலே -அடல் கொள் படை ஆழி அம்மான் –
ஆயுதம் எடுக்க வைப்பேன் பீஷ்மர்
கண்ணன் எடுக்க -தான் அசத்திய பிரக்ஜன் தான் கொண்ட வ்ரதம் கை விட்டான் –
அர்ஜுனன் இளைத்து கை வாங்கினவாறே -பீஷ்மரை தொடர்ந்து போக –
புல்லாம்புஜா பத்ர பீஷ்மர் லோக நாத பூத சரண்யா சங்க்ய
ஏகி ஏகி எழணும் வா வா
கெட்டு ஓடுகிறவன் –நடை அழகை சேவித்து -எம்மை கொல்ல வந்தவனும் –
ஓடினவர் பிற் காலித்து நின்று -எங்கள் அம்மை நாயனார் -மாதா பிதா சர்வ லோகம் -மாறி மாறி இடுகிற அழகு –
புள்ளம்புஜா பத்ரம் தாமரைக் கண்ணா
சீறி சிவந்த கண் அழகு ஆணை மறுத்தால் –
சேஷி எம்பெருமான் -ஆயுதம் எடுக்க மாட்டேன் -ஆயுதம் எடுக்க வைப்பேன் –
திரு கண் சேவை கிடைக்க இதுவும் தப்பு இல்லை ஆணை மறுத்தாலும் சேதமஎன் என்ன குறை
சீறி சிவந்த கண் அழகை சேவிக்க
பிரசக்ய மாம் பாதைய –ஷமிக்க வேண்டும் –
ஆயுதம் எடேன் ஆயுதம் எடுத்தாலும் -என் கையில் ஆயுதம் இருக்க தோற்க மாட்டேன் –
அடியேன் -அஞ்சலி ஹச்தராய் பிராத்திக்க -தோற்க மாட்டேன்
அஞ்சலிக்கு தோற்று விடுவான்
பிரத்யஸ்தரம் -அஸ்தி தேசிகன் -அஞ்சலி ரசவ் -ப்ரஹ்மாச்த்ரமும் முனை மழுங்கி போகும் –
பாதைய கீழே விழும்படி பண்ணும்-ஆயுதம் பொகட சொல்லி -தலை அறுக்கலாம் –
லோக நாதா வீரத்துக்கும் முதன்மைக்கும் தோற்க மாட்டேன்
அடியவன் சத்யம்நிரைவேற்ற தன் சத்ய வாக்கை பொய் ஆக்கி –
மிடுக்கை உடைய –
நீயும் காண ஆசை பட்டு உடலும் நோய் பட்டாயே
பிரத் உபகாரமஎதிர் பார்க்காமல் காற்று
உனக்கு நோவு சர்வ ரஷகன் நீ
சஞ்சாரம் நியத ஸ்வபாவம்
நோவு பட்டதாக நினைத்து
கல்பம் தோறும் ஊழி
காலம் மாறினாலும் நோவு மாறாமல் இருக்க –
உடலம் நோய் உற்றாயே நீங்கத நோவு
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.