ஸ்ரீ நாத முனிகள் அருளிய தனியன்கள்-
அவிதித விஷயாந்தரச் சடாரே ருபநிஷதன் முபகான மாத்ர போக
அபி ச குண வசரத்த தேக சேஷீ மதுரகவிர் ஹ்ருதயே மாமாவி ரஸ்து —
அவிதித விஷயாந்தரச்-நம்மாழ்வாரைத் தவிர வேறொரு விஷயத்தை அறியாதவரும்
சடாரே ருபநிஷததாம் -நம்மாழ்வாருடைய திவ்ய ஸூ க்திகள் ஆகிய திவ்ய பிரபந்தங்களை
முபகான மாத்ர போக -இசை பாடுவது ஒன்றையே பேரின்பமாகக் கொண்டவரும்
அபி ச குண வசரத் -குண வசிரதபிர -குணம் அடியாகவும்
த தேக சேஷீ -அந்த நம்மாழ்வார் ஒருவரையே தமக்கு சேஷியாகக் கொண்டவருமான
மதுரகவிர் ஹ்ருதயே மாமாவி ரஸ்து -ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் என் நெஞ்சில் ஆவிர்பவிக்கக் கடவர் –
தனியன் அவதாரிகை –
அவிதித விஷயாந்தர -இத்யாதி
இதில் வேறு ஒன்றும் நான் -அறியேன் என்று -ஆழ்வாரை ஒழிந்த விஷயங்கள்
அவிவிதங்களாய் இருப்பாராய் –
சடகோபர் -என்னும் திரு நாமத்தை உடையரான -ஸ்ரீ நம் ஆழ்வார் உடைய
அநுபவ பரிவாஹ ரூபமான -திருவாய்மொழியின் -காநமே -போகமாய் இருப்பாராய் –
அவ்வளவிலும் நில்லாதே -அதுக்கும் மேலே அவர் வாத்சல்யாதி குணத்தாலும் -தோற்று -அவரையே தம்மை அடிமை கொள்ளும் சேஷி -என்று அறுதி இட்டு இருக்கும்
ஸ்ரீ -மதுரகவிகள் -தன் நிஷ்டை -நிலை உண்டாகும்படி என் ஹ்ருதயத்தில்
ஸூ ப்ரதிஷ்டராய் ஆகக் கடவர் –என்கிறது
தனியன் வியாக்யானம் –
அவிவித விஷயாந்தர –
ஆழ்வாரை ஒழிந்த விஷயங்களிலே வ்யத்புத்தி பண்ணி யறியார் -என்கிறது –
சிந்தைமற்று ஒன்றின் திறத்தல்லா –என்றும்
பாவோ நான்யத்ர கச்சதி –மற்று ஒன்றினைக் காணாவே -என்னக் கடவது இறே –
இங்கு விஷயாந்தரங்கள் ஆகிறது –
பாட்டுக் கேட்கும் இடமான பர -விஷயமும்
கூப்பீடு கேட்கும் இடமான வ்யூஹ விஷயமும்
குதித்த இடமான விபவ விஷயமும் –
வளைத்த விதமான அந்தர்யாமி விஷயமும் –
ஊட்டும் இடமான அர்ச்சாவதாரவிஷயமும் —
எல்லாம் வகுத்த விஷயமான ஆழ்வாரே ஆகையாலே மற்று ஒரு விஷயங்களையும்
அறியாதே இருப்பர் –
மாதா பிதா இத்யாதி
அன்னையாய் -அத்தனாய் -சர்வம் யதேவ –
சமஸ்த சாம்சாரிக விஷய சுகங்களும் சடகோபாச்சார்யர் என்று அறுதி இட்டு –
தத் அந்யங்களை அறியாதவர் –என்றுமாம்
ஆழ்வார் -எல்லாம் -கண்ணன் என்று இருக்குமா போலே
கோயில் கொள் தெய்வம் எல்லாம் தொழ -வைகுந்தம் கோயில் கொண்ட குடக்கூத்த
வம்மான் கோயில் கொண்டான் அதனோடும் என்நெஞ்சகம் -என்றும் –
மொய்த்தே திரை மோது தண் பாற்கடல் உளான் பைத்தேய் சுடர் பாம்பணை நம் பரனை
வைத்தேன் மதியால் -என்கையாலே -அவனும் கிடந்தது என் நெஞ்சு -அகலான் -என்றும் –
உருப்பிணி நங்கை அணி நெடும் தோள் -புணர்ந்தான் என்றும் –
எப்போதும் என் நெஞ்சம் துதிப்ப வுள்ளே இருக்கின்ற பிரான் -என்றும்
கண்கள் சிவந்திலே -அப்படியே -ஒருவன் அடியேன் உளான் -என்றும் –
திருப்பேர் நகரான் திருமாலிரும்சோலைப் பொருப்பே உறைகின்ற பிரான்
இன்று வந்து இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் -புகுந்தான் என்றும் –
விண் மீது இருப்பாய் -என்கிற -ஐந்தும் எனதாவியுள் மீதாடி -என்றும் –
தேவர் கோலத்தோடுமானான் என்கிற தெய்வ உருவில் இவர்க்கு எல்லாம் உண்டாகையாலே
அவற்றை அறியத் தேவை இல்லை இ றே-
பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள் உரியர் ஆகையாலே ஆயிற்று –
கரிய கோலத் திரு உருக் காண்பன் -என்றதும் –
அதவா –
அவிவித விஷயாந்தரஸ் ஸடாரே -என்கையாலே –
சடாரியைக் காட்டிலும் அறியாமல் இருப்பதான -அந்ய விஷயங்களை உடையவர்
என்கிறது –
அதாவது -ஆழ்வார் கழிக்குமது -இளம் தெய்வத்தை யாயிற்று –
இவர் கழிக்குமது –கழி பெரும் தெய்வமாய் -கரும் தெய்வமான -கண்ணனான
பெரும் தேவனை யாயிற்று –
கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன் என் அப்பனில் நண்ணி -என்றார் இ றே-
உன்னித்து மற்று ஓர் தெய்வம் தொழாள் -என்றும் –
ஒரு மா தெய்வம் மற்று உடையமோயாமே -என்றும் –
தேவு மற்று அறியேன் -என்று ஆயிற்று இவர்கள் பேச்சு இருப்பது –
இப்படி ஆழ்வாரில் வ்யாவருத்தராய் இருக்கிற இவர்-
சடாரே ருபநிஷதர முபகாநமாத்ரே போகர் -ஆகையாவது –
நாட்டியல் ஒழிந்து சடரை ஒட்டின சடகோபன் மொழி பட்டோடும் கவி அமுதமான
யாழின் இசை வேதத்தின் பண்ணார் பாடலின் அநுபவ ரச ஜ்ஞராய் –
பாவின் இன்னிசை பாடித் -திரிவேன் என்றும் –
நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் மேவினேன் அவன் பொன்னடி மெய்மையே –
என்று இருக்கை -என்றபடி-
இத்தால் –
அவரோபாதி அவர் சம்பந்தம் உடையதும் உத்தேச்யம் -என்று ஆயிற்று இவர் விரும்புவது –
அவிவித விஷயாந்தரஸ் ஸடாரே -என்று ஸ்வரூப பிரயுக்தமான தாஸ்யம் -சொல்லிற்று
அபிச குணவ ஸாத்தா தேக தேஷீ -என்று குணாக்ருத தாஸ்யமு+ம் உண்டு என்கிறது
அபிச -கீழ் சொன்ன அளவு அன்றிக்கே பின்னையும் –
குணவ ஸாத் -என்று த்ருதீயார்த்தே பஞ்சமியாய்க் கிடக்கிறது –
ஆதலில் அன்னையாய் அத்தனாய் என்னை யாண்டிடும் தன்மையான் சடகோபன் என் நம்பியே -என்றும் –
பயன் அன்றாகிலும் பாங்கலர் ஆகிலும் செயல் நன்றாக திருத்திப் பணி கொள்வான்
குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பி -என்றும்
அனுசந்தித்த வாத்சல்யாதி குண பூர்த்தியாலும் குணைர்த் தாஸ்யம் உபாகதராய்
தத் ஏக சேஷியாய் இருப்பார் ஆயிற்று –
ஏவம் பூதரான –மதுரகவி -அண்ணிக்கும் அமுதூரும் என் நாவுக்கே -என்னும்படியான
வாக் மாதுர்யத்தை உடையவர்
மம ஹ்ருதயே –
மதுரகவி நிஷ்டையை அபேஷிக்கிற என் மனச்சிலே -நின்று இருந்து
பட்டோலை கொண்ட நிலையோடே
ஆவிரஸ்து
ஆவிர்ப்பிக்கக் கடவர் –
சந்நிதானம் பண்ணக் கடவர்
இத்தால் -அனுகூலரான ஆசார்ய பரதந்த்ரர் ஆதரணீயர் என்னும் அர்த்தம் சொல்லிற்று ஆய்த்து –
————————————————————————–
வேறு ஒன்றும் நான் அறியேன் வேதம் தமிழ் செய்த
மாறன் சடகோபன் வண் குருகூர் -ஏறு எங்கள்
வாழ்வாம் என்று ஏத்தும் மதுரகவியார் எம்மை
யாள்வார் யவரே யரண் –
வேறு ஒன்றும் நான் அறியேன் –
ஆழ்வாரை ஒழிய தேவு மற்று அறியாத மதுரகவிகள் நமக்கு ஸ்வாமியும் ரஷகரும் அவரே என்கிறது –
வேறு ஒன்றும் நான் அறியேன் -வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன் வண் குருகூர் -ஏறு எங்கள் வாழ்வாம் -என்னும் அளவும் மதுரகவி சொல்லை அனுகரித்து சொன்னபடி
மேல் ஏவம்வித ரானவர் நமக்கு சேஷியும் சரண்யரும் -என்கிறது –
தேவு மற்று அறியேன் –என்றத்தை –வேறு ஒன்றும் நான் அறியேன் -என்றது –
மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள் நிற்கப் பாடி என் நெஞ்சினுள் -நிறுத்தினான் –
என்றத்தை –வேதம் தமிழ் செய்த -என்றது –
காரி மாறப் பிரான் -சடகோபன் என் நம்பி -என்றத்தை –மாறன் சடகோபன் -என்கிறது
பெரிய வண் குருகூர் நம்பிக்கு ஆள் உரியனாய் அடியேன் பெற்ற நன்மையே –
என்றத்தை –வண் குருகூர் ஏறு எங்கள் வாழ்வாம் -என்றது
எழுமையும் எம்பிரான் நின்று தன் புகழ் ஏத்த அருளினான் -என்றத்தை –ஏறு எங்கள் வாழ்வாம் என்று -ஏத்தும் என்றது
தென் குருகூர் நம்பிக்கு அன்பனாய் மதுரகவி -என்றத்தை-வண் குருகூர் ஏறு எங்கள் வாழ்வாம் என்று ஏத்தும்-எம்மை யாள்வார் -என்றது –
அவரை ஆளுகிறவர் ஆழ்வார் -நம்மை ஆளுகிறவர் இவர்
யவரே யரண் –
ரஷை
சரண் -என்ற பாடமான போதும் ரஷை என்றே அர்த்தம் –
மதுரகவிக்கு எல்லாம் ஆழ்வாரே ஆனால் போலே-நமக்கு எல்லாம் மதுரகவி -என்கிறது
————————————————————————–
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த-வியாக்யானம்-
பிரவேசம்-
த்ரை குண்ய விஷயா வேதா -என்கிறபடியே -ஐஸ்வர்யாதி சகல புருஷார்த்தங்களையும் யதாதிகாரம் விதிக்கிற-வேத மர்யாதையிலேநின்றார்கள் ருஷிகள் –
அதாகிறது வேத உப ப்ரும்ஹண முகத்தாலே சேதனருடைய குண அநுகூலமாக
ஐஸ்வர்யாதி ஷூத்ர புருஷார்த்தங்களையும் -பரம புருஷார்த்த லஷணமான
மோஷத்தையும் உபதேசிக்கை –
கேவல சரீர அனுஷ்டானங்களே ஐஸ்வர்ய விசேஷங்களுக்கு சாதனமாக உபதேசித்து –
கைவல்ய நிஷ்டருக்கு ஆத்ம ப்ராப்தியை உபதேசித்து -நித்ய சத்வஸ்தருக்கு பகவத் ப்ராப்தியை உபதேசித்தான் இ றே ஸ்ரீ பராசர பகவான் –
இந்த ரிஷிகளைக் காட்டிலும் ஆழ்வார்களுக்கு நெடு வாசி உண்டு -எங்கனே என்னில் –
வேத தாத்பர்யமாய் -உத்த புருஷார்த்தமான பகவத் ப்ராப்தியில் நிஷ்டராய் –
பிறருக்கும் உபதேசிக்கும் இடத்திலும் சாஸ்திர சித்தமான ஐஸ்வர்யாதிகளையும்
த்யாஜ்யமாக உபதேசிக்குமவர்கள் இ றே
இவ் விலஷண புருஷார்தத்தின் காஷ்டையான ததீய சேஷத் வத்தளவிலே
வரப் புகுர நின்றார் ஸ்ரீ மதுர -கவிகள்
இவர்க்கு இவ் வேற்றம் வந்தபடி எங்கனே என்னில் –
ஆழ்வார் -பொய் நின்ற ஞானம் -தொடங்கி -அவா வற்று வீடு பெற்ற -என்னும் அளவும்
செல்ல அனுபவித்த இடத்தில் ஆழ்வார் தமக்கு புருஷார்த்த காஷ்டையாக அபிமதமான
ததீய சேஷத்வத்தைப் பற்றுகிறார் -ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதரான அர்த்தமே சாத்விகருக்கு-பரிக்ராஹ்யம் -என்னும் இடம் மகாபாரத சாரமான ஸ்ரீ சஹஸ்ரநாம அத்யாயத்திலே-சொல்லிற்று இ றே
ஸ்ரீ பீஷ்மர் பக்கலிலே சகல அர்த்தங்களையும் குறைவறக் கேட்ட தர்ம -புத்திரன்
இவ்வர்த்தம் தமக்கு உத்தேச்யமாக ஸ்வீகரித்த தத்வ ஹிதங்களே நமக்கு உத்தேச்யம் என்று-நினைத்து –கேட்க தன்னுடைய ருசி பரிக்ருஹீதமான அர்த்தத்தை உபதேசித்தான் இ றே –
த்ரிபுரா தேவியாரை -பிரமாண ப்ராபல்யத்தாலோ -எம்பிரானே ஆஸ்ரயணீ யன் -என்று
நீங்கள் பற்றிற்று -என்ன -அது ஒன்றும் அன்று –எம்பெருமானார் காழிச்சால் மூலையில்-தேவதையை ஆஸ்ரயித்தார் ஆகில் அதுவும் எங்களுக்கும் ஆஸ்ரயணீய வஸ்துவாகக்--கடவது -என்றாள் –
அந்த ந்யாயத்தாலே -ஆழ்வார் தமக்கும் தஞ்சமாக நினைத்து இருக்கும் ததீய சேஷத்வத்தையே-இவரும் தமக்கு புருஷார்த்தமாக அத்யவசிக்கிறார்
இது தான் ராமாயண புருஷர்களில் ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வான் பக்கலிலே அநுஷ்டாந
சேஷமாக –காணப்பட்டது -எங்கனே -என்னில்
வேத உப ப்ரும்ஹணார்த்தமாக பிரவ்ருதமான ஸ்ரீ ராமாயணத்தில் ராமாயண புருஷர்
நால்வரும் -தர்ம சமஸ்தான அர்த்தமாக -அவதரிக்கையாலே நால்வரும் நாலு அர்த்தத்தை-அனுஷ்டிதித்து -காட்டினார்கள்
பித்ரு வசன பரிபாலநாதிகளாலே சாமான்ய தர்மத்தை அநுஷ்டித்தார் –பெருமாள்
நிருபாதிக சேஷியைக் குறித்து சேஷபூதன் கிஞ்சித் கரித்து தானாகக் -கடவன்
என்கிற விசேஷ தர்மத்தை அனுஷ்டித்து காட்டினார் இளைய பெருமாள் –
நிர்பந்தித்து அடிமை செய்கை -அன்றிக்கே -சேஷி உகந்த அடிமையே சேஷ பூதனுக்கு
கர்த்தவ்யம் -என்பதை அனுஷ்டித்து காட்டினார் ஸ்ரீ பரத ஆழ்வான் –
தன் செல்லாமையை பாராதே -சேஷி உடைய ஹ்ருதயதைப் பார்த்து ப்ரீதியோடே
மீண்டான் இ றே
இப்படி இருக்கிற இவனை அல்லாது அறியாதே இருக்கையாலே பகவத் சேஷத்வ
காஷ்டையான ததீய சேஷத்வத்தை அனுஷ்டித்து காட்டினார் ஸ்ரீ சத்ருந ஆழ்வான் –
அவனை ஒழிய ஜீவிக்க மாட்டாமையாலே உடன் -போனான் -அவன் போனதுவே முஹூர்தமாக போனானே -அஹம் இல்லாதது இவனுக்கே -அஹம் ஆவது உத்தேச்ய விரோதி –
இவ் விஷயத்தில் ராம பக்தியும் விரோதி -இத்தை பாபம் எண்ணப் போமோ என்னில்
பாபத்தில் புண்யம் நன்றாய் இருக்க மோஷ விரோதியாகையாலே அதுவும் த்யாஜ்யம் இ றே-பரத அனுவ்ர்த்தி ஆகிய உத்தேச்யத்தில் ராம சௌந்தர்யத்தில் கால் தாழாமல் –
அதுவும் இடைச் சுவர் இவருக்கு -என்பதால்
பிள்ளைகளுடைய சந்நிவேசம் பார்த்து திரு நாமம் சாத்தும் ஸ்ரீ வசிஷ்ட -பகவான்
-பெருமாளை அழகாலே கண்டாரை துவக்க வல்லவர் ஆக தோற்றுகையாலே -ராமர் –என்றும்
இளைய பெருமாளுக்கு கைங்கர்யமே நிரூபகமாக தோற்றுகையாலே –லஷ்மணன் என்றும் –
சத்ருக்குகள் மண் உண்ணும்படி இவர் சந்நிவேசம் இருக்கவே –சத்ருனன் -என்றும் -சாத்தினான்-
பாஹ்ய சத்ருக்கள் அன்றிக்கே -ஆந்தர சத்ருக்களான இந்திரியங்களை ஜெயித்து -இருப்பவன்-அவ் விந்திரிய ஜெயத்தின் -எல்லை என் என்னில் -ராம சௌந்த்ர்யத்திலும் துவக்கு-ஒண்ணாது ஒழிகை –
அதாவது பெருமாளைப் பற்றும் -போதும்
தன உகப்பாலே -யாதல்
அவனுடைய வை லஷண்யத்தாலே யாதல் -அன்றிக்கே –
தனக்கு உத்தேச்யரான இவன் உகந்த விஷயம் -என்று பற்றுகை
ராஜாக்கள் போகும் போது உடை வாள் கொண்டு போவது போலே -அவன் கொண்டு போக போனான் –
ஜாதி குனங்களோபாதி போனான் –
சர்வ வித அடிமை செய்ய வாய்ப்பு என்று ப்ரீதி ப்ரேரிக்க போனான் –
படியாய் கிடந்தது உன் பவள வாய் -காண்பேனே
ஸ்வரூப அனுரூபமான வ்ர்த்தியில் சைதன்ய ப்ரயுக்தமான தர்மங்களோடு கூடி இருக்கை-பாவநத்வத்தாலும் போக்யத்தாலும் அவனையே பற்றி இருக்கை –
ஸ்ரீ உடையவர் அருளிச் செய்த – வார்த்தை ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வான் பெருமாளுக்கு
நல்லனான படி -அவனை அல்லது அறியாத ஸ்ரீ பரத ஆழ்வானை அல்லது வேறு ஓன்று அறியாத -படியானான் என்று
ஆக ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் -ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வான் -நிஷ்டை
இனி இவர்க்கு ததீயர் உத்தேச்யர் ஆம் இடத்தில்
பகவத் சம்பந்த மாதரத்தில் விஷயீ கரித்தும்
தத் விஷயத்தில் அவஹாகிப்பித்தும்
குண அனுசந்தானத்தால் அல்லது செல்லாத தசையிலே
போது போக்குகைக்கு உசாத் துணையாகவும்
ப்ராப்தி தசையில் -பகவத் அனுபவ சஹாகாரிகளாயும்
சர்வ அவஸ்தையிலும் ததீயரை என்று அத்யவசித்து
தமக்கு வைஷ்ணவ விஷயீகாரத்துக்கு முன்பே அஞ்ஞா தஜ்ஞாபந
முகத்தாலே பகவத் விஷயத்தில் மூட்டின மஹா உபாகாரகரான ஆழ்வார்
தம்மையே பற்றுகிறார்
————————————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –