கண்ணி நுண் சிறு தாம்பு- பயன் நன்றாகிலும் பாங்கு அலர் ஆகிலும் -ஸ்ரீ கோமடம் சம்பத் குமார் ஸ்வாமிகள் ..

பயன் நன்றாகிலும் பாங்கு அலர் ஆகிலும்

செயல் நன்றாக திருத்தி பணி கொள்வான்

குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பி !

முயல்கின்றேன் உன் தன் மொய் கழல்க்கு அன்பையே –10

ஆழ்வார் விஷயத்தில் முன்பு நின்ற நிலைகள் அடங்க முதல் அடி இட்டிலராகி தோற்றுகையாலே -பிரத்யு உபகாரம் ஒன்றும் இல்லையே – ஆச்சர்யர் இருவருக்கும் உபகாரன் ஈஸ்வரனுக்கு சேஷ வஸ்து இழந்து -ஸ்வாமி சொத்து இன்றி -நமக்கு சேஷி யாரு காட்டி உபகரித்தார் ஈசவரனும் ஆச்சார்யர் ஆசை கொண்டு -கீதாசார்யன் -திரு அடி தூது வைபவம் கண்டு யின்னார் தூதன் என்று -குரு பரம்பரையில் இடம் பிடித்தான் -அபய பிரதானத்திலும் -விபூதி சதுஷ்டையும் – ஈஸ்வர துவயமும் உண்டாகில் பிரதி உபகாரம் –இன்னும் இரண்டு இருந்தால் பண்ணலாம் –ஸ்ரீ வசன பூஷணம் பூர்வர் வசனம் நிறைந்த அபூர்வ கிரந்தம் -கடக சமாச்ரயம்-புள் இனம் தூது பொன் உலகு ஆளீரோபுவனி எல்லாம் ஆளீரோ -அடுத்து நீராய் நிலனாய் -அடுத்து உலகம் உண்ட பெருவாயா இரண்டு விபூதிகளும் கொடுக்கிறார் நப்பின்னை எருது சீதை வில் பராங்குச நாயகிக்கு இரண்டு விபூதி பிரகிருதி உடன்பரம பதம் கொடுக்கிறார் ஜடாயு உடம்பு இழந்தான் சேர்க்க பார்த்து –இரண்டையும் கொடுத்து எங்கு குடுத்தனம் குருவி காட்டின இடத்திலே –இவரே கை பட்டதை கொடுத்து பின்பு தானே -காட்டின வழியே சொல்கிறார் அமரர்கள் அதிபதி நித்ய இலனது உடையானது லீல விபூதி காட்டின அடைவில் ஞானம் வந்த பின்பு அது கிட்டே இருக்கும் அக்கரை அனர்த்த கடலுள் அழுந்து இக்கரை ஏறி–இளைத்து இருந்தேன் –பொன் உலகு கொடுத்த பின் புவனி எதற்கு-உதவிக்கு என்ன கொடுப்போம் அறியாமல் பெருமாள் ஜடாயு அனுப்பும் பொழுது -சொன்ன வார்த்தை போல் சர்வாதிகாரமான மிதுனத்தை உபகரித்த அவருக்கு ஒன்றும் செய்திலனாய் -என்றும் ஒக்க குறைவாளனாய்–உதவி கைம்மாறு எனது ஆவியும் நீ யான் யார் -கொண்டு ஆக்கினையே-ஜனக ராஜன்- பிராட்டி அவன் சொத்து மீண்டும் கொடுத்தான் -மகா பலி தானம் போல் உதவி கைம்மாறு -விவரிக்கிறார் இதை எல்லாம் எதுவும் செய்வது ஒன்றும் இல்லை இங்கும் அங்கும் –ஆத்மா திருத்தின ஆச்சர்யருக்கு கொடுக்க ஒன்றும் இல்லை-

நாட்டில் பிரயோஜனம் செய்வது பலன் எதிர் பார்த்து -பயன் அன்றாகிலும் -அப்படி ஒன்றும் இல்லாவிடிலும் -ஆத்மா திருத்தும் பொழுது பலன் எதிர் பார்க்காமல் பாங்கு அலர் தகுதி இன்றி அதிகாரி இல்லை – இப்படி இருந்தாலும் அனர்த்தம் பொறுக்க மாட்டாமல் -அனுவர்த்தி பிரசன்னாச்சர்யர் கிருபா மாத்ரா பிரசன்னாசார்யர்-துவண்டு கஷ்டம் பட்டு-காரே ய் கருணை ராமானுசா –பூர்வர் முறை மாற்றி- இன் அருளால் ஆரியர்காள் வரம்பு அறுத்தார்-தாய்க்கும் மகனுக்கும் தம்பிக்கும் இவர்க்கும் இவர் அடி பணிந்தாருக்கும் -அனைவரையும் போதுமினோ போந்தார் -மித்திரன் போல போக உபதேசித்தாள் பிராட்டி-

விரோதிக்கும் உபதேசம்-வீடு முன் முற்றவும் முதல் கண்ணன் கழலினை வரை ஆழ்வார் உபதேசம் கிருபை அடியாக

உபதேசம் ஆழ்வார் -ஞாலத்தாரின் மந்த புத்தி கருதி -நித்யர் போல அனுபவிக்க பிராப்தி அனர்த்தம் கண்டு கிருபையால் உபதேசிக்கிறார் -சாஸ்திரம் -வேதாந்த சாரம் ஸ்ரீ பாஷ்யம்- பிரமத்தை அறிந்தவன் சம தம -வெளி உள் இந்த்ர்யம் அடக்கி -உபதேசிக்க சொல்லி இருக்க -பிரம நிஷ்டர் இப்படி பட்டவர்களுக்கு -யாரும் பிரார்த்திக்காமல் -ஏ பாவம் பரமே ! ஆழ்வார் சொல்கிறார் -ஆச்சார்யர் சிஷ்யருக்கு ஒரு சம்வச்ர காலம் பணிவிடை செய்த பின் -அப்படி இல்லை ஆழ்வாருக்கு பாங்கு அல்லர்- கைங்கர்யம் செய்ய வில்லை-ஆச்சார்யர் யுக்தி ஏ பாவம் பரமே ! சிஷ்யர் யுக்தி பயன் நன்றாகிலும் பாங்கு அலர் ஆகிலும்-கிருபை ஒன்றாலே அறுதி இடுகிறார் ஆச்சர்ய ஹிருதயத்தில் வேத வேத்ய வைதிகன் உபதேசம் விட ஆழ்வார் உபதேசம் சிறந்தது -நண்பனாக கொள்ள புருஷோத்தமன்- ஹிதம் பிராட்டி சொல்ல -தலைகடையும் புளக் கடையும் பூட்டி அஹம் நெருப்பு -அபேஷிக்காமல் அணைக்கும் போல் -தனக்கு பிரயோஜனம் இன்றி சிஷ்யரை திருத்தி -தகுதி இல்லாமை இருந்தாலும் –உஜ்ஜீவிக்க எல்லாம் நன்றாக ஆகும் படி பண்ணி -செயலாலே திருத்தி -இவன் செயல் நன்றாக ஆகும் படியுமாம் -ஞானம் கொடுத்து தானும் அனுஷ்டித்து அதை கண்டு அவனும் அனுஷ்டிக்கும் படி -திருத்தி பணி கொள்வான்-தீர்ந்த அடியவர் தம்மை திருத்தி பணி கொள்ள வல்ல -எம்பெருமானே பிராப்யம் பிராபகம் -என்பவரை அவன் திருத்துவான்-வாசி உண்டே இவர் திருத்துவதற்கும் அவன் திருத்துவதற்கும்  –அஹம் சர்வம் கரிஷ்யாமி-ஏவி பணி கொள்ள வேண்டும் தேவிமார் மற்றும் -ஏவ மற்று அமரர் ஆள் செய்வார் -கட்டளை இட வேண்டுமே இவை ஒன்றும் இன்றிக்கே தீர்ந்த அடியார் இல்லாமல்-புன்மையாக இருந்தாலும் பணி கொள்வான் குருகூர் நம்பி –குயில் நின்றார் பொழில் சூழ் –காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவன்று –யாவர் இனி நிகர் அகல் வானத்தே–பிரபாவம் மிகுந்தவர் ஆழ்வார் – மார் தட்டி கொள்கிறார் இங்கு பகவத் அனுபவம் செய்வதால்-தண் தாமரை சுமக்கும் பாத பெருமானை- தோற்றவர் சுமக்கும்–ஆசன பத்மம்-குயில்கள் கேட்டு கொண்டு இருக்கும் இந்த பாசுரங்களை-புன்னை மரம்-போற்றி யாம் இரந்தேன்- புன்னை குருக்கத்தி பொருப்பினில் வாழும் குயில்கள்-குயில்- பர -காக்கை இடம் போட்டு வளர்க்க படுவதால் பர பரமம்-மதுர கவியே குறிக்கும்-திரு வாய் மொழி அர்த்தம் மனம் கமழும் புன்னை மரம்-பாடும் குயில்காள் -ஆழ்வான் போல்வார் செவ்வாய் கிளியே நான் மறை பாடும் – திரு சித்ர கூடம்-சிவந்த வாய் உடன்–மற்றை நாள்களில் திரு வாய் மொழி பாடுமே -வட மொழி வேதமே கிளி படும் பொழுது குயில் திரு வாய் மொழி பாட கேட்க வேண்டுமா குயில் நின்று ஆர் -நின்றால் பாட பேதம் -கற்று கொண்டு சொல்கின்றன குருகூர் நம்பி ஊரும் நாடும் உலகமும் திர்யக்கும் பிதற்ற வைத்தார்

ச்லாக்கியமான -மொய் முயற்சி செய்கிறேன் -முயல்கின்றேன் அன்பையே -செய்கிற கைங்கர்யம் போதும் அலம் புத்தி இன்றி -என்னை தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன்

நாயனார் வியாக்யானம்

சர்வ பிரகார வைபவம் கீழே சொல்லி -உள் பொருளை உபதேசித்து -தோஷத்துக்கு எதிர் தட்டு ஆழ்வார் வைலஷண்யம்-பிரத் உபகாரம் காணாமையால் தடுமாறுகிறார் –ச ஏவ தேவதை அசத்தை சத்தாக்கி முமுஷு ஆக்கி -அவரே தெய்வம்–சம்சாரிகள் அன்ன பாதிகள் முமுஷு அப்படி இல்லையே –ஆச்சர்ய லஷணம் பிரதி உபாகாரம் எதிர்பாராமல் உபதேசிப்பது-சிஷ்ய லஷனம் பிரதி உபகாரம் செய்ய ஆசை கொள்ள வேண்டும் -உபகாரம் பிரதி உபகாரம் பண்ண வைக்கும் -என்ன செய்தாலும் சதிர்சம் இருக்காது -எத்தை செய்வோம் தலை சீப்போடு ஏக்கத்தோடு – எனது ஆவி யார் யான் யார் தந்த நீ கொண்டு ஆக்கினையே -அவன் வஸ்துவை அவனுக்கு தருகிறோம் ஆச்சார்யர் திருத்தின பின்பு-திருத்தி தருகையாலே -ஆத்மா சமர்ப்பணம் பண்ணி பண்ணினதற்கு தவித்தும் -இருப்போம் –

தர்மம் அர்த்தம் -பணிவிடை செய்யாதவனுக்கு உபதேசம் செய்ய கூடாது பயன்-தர்மம் அர்த்தம்-அத்ருஷ்ட திருஷ்ட பயன் திரு ஆரதனதுக்கு த்ரவ்யம் கொடுத்து -அவனுக்கு சந்தொஷம்தர்மம்-இவை இருந்தால் உபதேசிக்கலாம் ஆச்சர்யருக்கு -பணி விடை செய்தால் அவன் உகப்பான்-அர்த்தத்தை தந்தால் தர்மம் தந்தால்சிஸ்ருஷை செய்தால் உபதேசிக்கலாம்-கீதையிலும்-உபதேசம் பிரார்த்தித பின் -அர்ஜுனன் மனசில் புகுந்து சேனையை உபயோர் மத்யத்தில் ரதம் விட்டு தூண்டி விட்டான் -கிளப்பி –

நிரவதிக வத்சல்யன் சிஷ்யனை பிரார்த்திக்க வைத்தான் -இவர் அப்படி அன்றிக்கே துர் கதியே பற்றாசாக உபதேசித்தார் -புன்மையாக கருதினதே பற்றாசாக கொண்டு அன்னையாய் அத்தனாய் இருந்து உபதேசித்தார் -பிரகலாதன் தனக்கு பிரயோஜனம் அசுர புத்ரர்களுக்கு நல்லது கேட்டு கொள்ள – தனக்கு ஆசை இன்றி இன்றி -ந அதர லோபாகாரணம்- அசுர யோனி-துர் கதி- கேட்காமால் இருக்கும் பொழுதே -ஆப்தன்-வாக்கியம்-நம்ப தகுந்தது-

அனுஷ்டான பர்யந்தமாக திருத்தி செயல் நன்றாக திருத்தி பணி கொள்வான்-பட்டர் எனக்கு இதுவும் வேண்டாம்- உனக்கு அதுவும் போதாது எப்பொழுதும் அவனையே நினைந்து -திரு ஆராதனம் -ஐதீகம்-என் அளவிலே அன்றி தம் அளவிலே உபதேசிக்கிறார் -ஆச்சர்யார் அவர் நிலையில்-ஷத்ர பந்து பராம்கதி துர் கதியே பற்றாசாக -ஊரும் நாடும் பேரும் தாறும் அலற்றும் படி -அத்யவசாய பர்யந்தமாய் அனுஷ்டான சேஷமாய் -சரவணம் மனனம் உறுதி அத்யவசாயம் தியானம்-சத் அனுஷ்டானம் படி நிறுத்தினார் -ஞானம் அனுஷ்டானம் நன்றாகவே அடைந்த குரு -மகா விசுவாசம் முக்கியம் -கப்பலில் பிரயாணம் சிறாங்காயை நம்பி போகிறானே -எம்பெருமான் கரை ஏற்றுவான் விஷ்ணு போதம்–செயல் நன்றாக -கிட்டே இருந்து திருத்தினார் கை தொடனாய் -இவற்றில் என் கையில் என்னை கை விடாதே

பணி கொள்வான்-பகவத் பாகவத கிஞ்சித் கைங்கர்யம் திருத்திய பலன் -அவர் உகப்புக்கு இரண்டு கைங்கர்யம் -பகவத் ஆச்சர்ய பாகவத கைங்கர்யம்-ஆச்சார்யர் உகப்பு -பகவானுக்கும் பாகவதர்க்கும்/சொரூபதுக்கும் பிராப்யதுக்கும் சேர்ந்து இருக்க வேண்டும் பிராபகம் -சொரூப உபாய புருஷார்த்தம்-ஒரு வகை- சொரூபம் புருஷார்த்தம்-உபாயம்-சொரூபம் பகவானுக்கு நாம் அடிமை அதற்க்கு அவனை உபாயம் அவனுக்கு கைங்கர்யம் பலன்–செஷத்வத்துக்கு சேர்ந்த கைங்கர்யம்-சேர்ந்த உபாயம் —பாகவத சேஷத்வம் பாகவத கைங்கர்யம் பாகவத உபாயம் –பிரதம பர்வம் போல் சரம பர்வம்-ஆச்சர்ய பிரதம -பகவத் -மத்யம பாகவத -சரம –//பகவானுக்கு செய்யும் கைங்கர்யம் -ஆசார்யன் உகப்புக்கு பகவானுக்கு செய்யும் கைங்கர்யம் பிரதம கைங்கர்யம் -திரு மலை அப்பனுக்கு அனந்தாழ்வான் ராமானுஜர் உகப்புக்கு –பகவான் அடியார்க்கு என்னை ஆள் படுத்த விமலன்–பகவான் உகப்புக்கு பாகவதர் செய்யும் கைங்கர்யம் பகவத் கைங்கர்யம்– பாகவதர் உகப்புக்கு ஆச்சார்யர் கைங்கர்யம்- நாடு நாயக கல் போல் இது

முதலில் செய்து கடைசியில் சேர்ப்பான் நடு நாயக கல் அவஸ்தா விசேஷம் நிர்மாண அவஸ்தை வேற -அபாரமான மூளை பூர்வர் -அவர் அவர் உகப்புக்கு என்று கொள்ள வேண்டும்-திரு மந்தரத்தால் கிடைக்கும் -சொரூப பிராப்தி எட்டு கல்யாண குணம் இல்லை சேஷத்வம் இருந்தால் கைங்கர்யம் முக்கியம்-மா முனிகள் அழகாக கட்டினார் -பத த்ரய  நிஷ்டை-அனந்யார்க்க சேஷத்வ அனந்யார்க்க உபாயம் அனந்யார்க்க கைங்கர்யம் போல் கிஞ்சித் கார நிஷ்டையும் அபேஷதையாய் இருக்கும் -ஆள் பார்த்து உழி தருவான்-கோவில் காப்பானே -சொரூபம் பகவத் கிஞ்சித் காரத்தில் மூட்டும் –பகவத் பிரீதி பாகவத கிஞ்சித்காரத்தில் மூட்டும் -பாகவத் ப்ரீதியும் வியக்தி த்வயம் -ஆச்சர்ய கிஞ்சித் காரத்தில் மூட்டும்

இதில் ஓன்று நிருபாதிக சம்பந்தம்-ஓன்று பகவத் சம்பந்தம் ஒழிக்க ஒண்ணாத -மற்றவை இரண்டும் சோபாதிகம்-குணம் அடியாக காரணம் மூலமாக உபாதி=காரணம் ஓன்று உதேச்யத்தை= பகவத் அடியார்கள் என்பதால் பாக்கவத -ததீய -தத் -பகவான் ததீய -பாகவதர் -ஒரு காரணம் இது ஆச்சார்யர் உபகாரம் செய்ததால் ஏற்றம்-செயல் நன்றாக திருத்தி பணி கொள்வதால் -அதிகாரத்தில் மேல் எல்லையில் நிறுத்தி -நிஷ் பலனான என்னை-

தீர்ந்த அடியவர் தன்னை அவன் திருத்துவான் இவர் கரும் தரையில் வெற்றிடம்-திருத்துவான் அவன் அதிகாரம் உண்டாகில் செய்வான்-ச்வாதந்த்ர்யம் உடையவன் -இவன் அதிகாரம் கொடுத்து -அதிகாரம் கொடுப்பது ஆச்சார்யர் –புருஷார்த்தம் கொடுப்பது ஈஸ்வரன் –ஞான அனுஷ்டானம் மிகுந்து இருப்பதே அதிகாரம் –புரை அறுதி பொங்கி அற்று -அவராலே இவருக்கு உண்டானது —

துர் கதியே பார்த்து தானாகவே தன் நிலைக்கு சேர -தன் உபதேசத்தால் ஞானம் உண்டாக்கி தானும் அனுஷ்டித்து அவன் தன்னில் மிஞ்சி அனுஷ்டிக்க பண்ணி பகவத் கைங்கர்யம் அர்ஹதை அக்கி-திருத்தி பணி கொள்ள வல்ல ஆர்த்த புகழ் அச்சுதன்-விட மாட்டான்-பற்றினாரை விட மாட்டான் என்ற பதட்ட பெயர் பெற்றான்-ஒரு காலத்திலும் நழுவ விட மாட்டான்

பணி கொள்ளும் அவர் -கைங்கர்யம் ஏற்று கொள்ள -திரு நகரிக்கு நிர்வாகர் குயில் அசேதனம் கூட திரு வாய் மொழி பாட நின்றால் நான் என் திருந்த மாட்டேன் -சாகாசம் -சாகை கிளை இதுவும் ஆயிரம் பாசுரம் கிளை -மதுர கவி தொண்டர் அடி பொடி ஆழ்வார் போல் உடையவர் உடையார் போல்வர் ராமானுஜ உடையார் பெரிய நம்பிகள் வம்சம் –பாடும் குயில்கள் தம்பிரான் போல் அரையர் ஆரம்பித்து சாதித்து அருள சொல்வது போல்–தேச சம்பந்தாதாலே செவ்வாய் கிளி பாட வல்லது ஆனால் இவை பாட கேட்க வேண்டுமா தாம் மதுர வாக்கு கொண்டவர் இயல் பெயர் இன்றி மதுர கவி அவர் இன் கவி குயில் போல் மதுர கவி-குயிலை இட்டு பொழிலை சிறப்பிக்கிறார்குருகூர் நம்பி-பிரத்யு உபகாரம் -செய்ய முடியாது ஏங்கி தவிப்பான்-காட்டி-அதற்க்கு அடியான பூர்த்தி-பகவத் கிஞ்சித்காரம் துவாரம் பெறினும் ஆச்சர்ய கிஞ்சித்காரம் துவாரம் இல்லை-அர்ச்சையில் கைங்கர்யம் செய்ய வாய்ப்பு உண்டு ஸ்நானம் பானம் பிரசாதம் எதிர் பார்த்து இருக்கிறான் –ஆச்சார்யர் -இந்த நில உலகில் இருக்க காரணம் கர்மமஎன்ற நினைவு-இவன் த்ருஷ்டம் கர்மத்தில் -அதிர்ஷ்டம் ஈஸ்வரன் கையில் புகட்டு இருப்பான் ஒன்றும் செய்ய முடியாதே –

உன் தன மொய் – பரம போக்யமான  கழல்கள்- கைங்கர்யம் செய்ய ஆசை படுகிறேன் -உனக்கு என் செய்கேன் எனக்கு தீ மனம் கெடுத்தாய் -ஆழ்வார் பிரதம பர்வத்தில் அருளியது போல் –மொய் கழலே ஏத்த முயல்- திரு அந்தாதி பாசுரம் -கேட்டு போன வாசனை
பொன்னடி முதலில் சொல்லி  மொய் கழல் -ஆரம்பம்  முடிவில்-உபன்யாசம் ருசி வரவைக்க கால ஷேமம் ஞானம் வர
பொன்னடி பாவனத்வம்-தோஷம் -நான் தீண்டினாலும் -அங்கு–தங்கத்துக்கு தோஷம் இல்லை மிற் கடம் போல இல்லையே பொன் கடம் திருமாலை முதல் உழி தற்கின்றோம் பாவனத்வம் அடுத்து இச் சுவை போக்யத்வம்-தப்பு போக்கி-பயம் போனால் தானே ரசிக்கும் -பிரசாத்துக்கும் பாவனத்வம் போக்யத்வம் உண்டு ரிஷிகளுக்கும் -திரு நெடும் தாண்டகம் வியாக்யானம் -இங்கு போக்யத்வம் மகிழ் மாலை மார்பன்-இந்த திரு அடி போக்யதை அன்பு கொடுத்தது அன்பு பிரத் உபகாரத்தில் மூட்ட அதற்க்கு இடம் இன்றி திகைத்து தேடி கொண்டு இருக்கிறேன்-
———————————————————————————————————————————————————————
நம்ஜீயர் திரு அடிகளே சரணம் .
நம் பிள்ளை திரு அடிகளே சரணம் .
பெரிய வாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம் .
அழகியமணவாள பெருமாள் நாயனார் திரு அடிகளே சரணம் .
மதுர கவி ஆழ்வார் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading