அன்பன் தன்னை அடைந்தவர் கட்கு எல்லாம்
அன்பன் தென் குருகூர் நகர் நம்பிக்கு
அன்பனாய் மதுர கவி சொன்ன சொல்
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே –11-
நிகமத்தில் -இப் பிர பந்தமே தஞ்சமாக நினைப்பவருக்கு வாச பூமி ஸ்ரீ வைகுண்டமே
ஆழ்வார் அங்கு இருப்பதால் -ஆதி நாதர் நம் ஆழ்வார் தேவஸ்தானம் -இருவர் ஆட்சி அது வானவர் நாடு ஆழ்வார் ஆட்சியே அது –
எம்பெருமான் ஆட்சி இல்லை
அன்பன்-வாத்சல்யன் -கருணை-அருள்-இரண்டு குணமும் இந்த பிரபந்தத்தில்
எம்பெருமானுக்கே அன்பன் பெயர் -ஆழ்வாருக்கு வரும்
அவனை அடைந்தவர் -அவர்கள் இடத்தில் அன்பன் ஆழ்வார்
ஆழ்வார் அன்பன் மதுர கவி ஆழ்வார்
ஆக மூன்று அன்பர் இதில்
இன்னாருக்கு அன்பன் இல்லை பொது நின்ற பொன்னம் கழல்- வேண்டாதவர் இல்லாத சர்வ விஷயம்-சத்ருக்கள் இடமும் வாத்சல்யம் ரிபூனாம் அபி வத்சல்யன் தோஷ போக்யத்வம் வாத்சல்யம்– வச்தம் அழுக்கை பசு மாடு நாக்கால் -தான் போட்ட மூத்ரம் -புல்லை சாப்பிடாத பசு–தர்மம் அறிந்தவன் என்று அறிந்து கொள் சரணா கத வத்சலன் பெருமாள்- குற்றமே நற்றமாக கொள்வான் செய்த குற்றம் நற்றமாக திரு சந்த விருத்தம்- மாறு செய்த -அவனுக்கும் –சர்வேஷாம் மாதா பிதா மாதவன்–ஜனகத்வம் -பிறப்பித்தவன் அவன் -வாத்சல்யம் பொதுவாக இருக்கும்
ஆழ்வார் உபாதி-அவன் அடியார் இடம் மட்டு தான் -எந்த ஜாதியில் பிறந்தாலும் -சண்டாளர் ஆகிலும் மணி வண்ணற்கு ஆள் இருந்தால் போதும் –
பரமனை பயிலும் திரு உடையார் எவர் என்னை ஆளும் பரமர் கைங்கர்ய ஸ்ரீ பாரதந்த்ர்யம் செல்வம் -ஆத்மாவுக்கு தானே -காரணம் அடிக்கு
தம்மை போலே அடி கீழ் அமர்ந்து புகுந்த அனைவரையும் தமக்கு நாதர்
அடியார் அடியார் -அடியான் என்ற பூர்த்தி நம்பி ஒவ் ஒரு பாசுரத்திலும் நம்பிக்கு வேற விஷயம் -அன்பு பூண்ட பூர்த்தி
அடுத்து ஆசார்யர் விஷயத்தில்
பகவத் விஷயம் அன்றிக்கே ததீயர் விஷயம் அன்றிக்கே ஆழ்வார் பற்றி-
பகவான் உகப்புக்கு பாகவதர் -நம் ஆனந்தத்துக்கு இன்றி -ஈஸ்வரன் உகப்பே -மம பிராணன் பாண்டவர்
உதாரா அனைவரும் –உயிர் நிலை தாரகம் அறிவார் உயிர் ஆவாய் அறிவாருக்கு உயிர் ஆக இருப்பவன் அறிவாராய் உயிர் ஆக கொண்டவன் அவன் மதம் -ஆச்சர்யனை கொண்ட புருஷனே சிறந்தவன்-திருத்தி பணி கொண்டவன்- தாமரை நீரை விட்டு பிரிந்தால் உலர்துமே ஆதித்யன்–மலர பண்ணிய அதே ஆதித்யன் –அது போல் -செம் தழலே வந்து அழல செய்திடினும்-அலராதே திரு வித்துவ கோடு அநந்ய கதித்வம் காட்டும்–ஆச்சர்ய சம்பந்தம் ஒன்றே மோட்ஷம் கொடுக்கும் -தாலி கிடந்தால் பூஷணம் பண்ணி கொள்ளலாம்-ஞான பக்தி வைராக்கியம் இருகிறதே ஆச்சார்யர் இன்றி அவனை கிட்டினால்-தாலி ஸ்தானம் ஆச்சார்யர் -பூஷணம் ஞான பக்தி வைராக்கியம் —
சொரூப ஞானம் பிரதமத்தில் கொடுத்து –அறியாத அர்த்தங்களை அடைய அறிவித்து -அறியாத அறிவித்த அத்தா -நெறி எல்லாம் எடுத்து உரைத்த -பகவத் சமாஸ்ரையான வேளையில் புருஷகாரம் பூதை- அனுஷ்டானத்தல் நல் வழி –பிராப்தி தசையில் கைங்கர்யம் வளர செய்து -வேதாந்த சார சாஸ்திரம்-திரு மந்த்ரம் -கைங்கர்ய வளர்ச்சி -பகு முக உத்தேச்யன்-
மதுர கவி சொன்ன சொல்- ஆழ்வாரை தான் சொன்ன பாசுரம் தமக்கு இனிதாக இருப்பதால் மதுர கவி -இன் கவி போல்
இனிதாக இல்லா விடிலும்-நம் போல்வாருக்கு-இப் பிர பந்தம் தஞ்சமாக இருப்போர்க்கு வச்தவ்யம் ஸ்ரீ வைகுண்டம்
ஆழ்வார் திரு நகரி இரு புரியாய் செல்லும் அங்கும் திரு அரங்கம் நம் ஊர் உன் கோவில் நின்றும் இங்கனே போந்து அருளி நந்த கோபன் கோவில் புள்ளரையன் கோவில்- பிரணவம் போல் -ஜீவனை பற்றி தான் திரு மந்த்ரம் -யாருக்கு சேஷ பூதன் சொல்ல எம்பெருமான் அர்த்த தகா -அவன் சப்த தக ஜீவன்- பிரணவம் உபய பிரதான -இருவருக்கும் பொலிந்து நின்ற பிரான்-ஆழ்வார் பரே சப்தம் பொலியும் -பாசம் வைத்த -நிகரில் வாச்தல்யம்-ஒப்பு இல்ல யாவர் நிகர் அகல் வனத்தே வாத்சல்யம் உஜ்வலம் -திரு வேம்கடம் முதலில் அடுத்து திரு குறுங்குடி திரு மால் இரும் சோலை- பரத்வம் வியூகம் விபவம் அர்ச்சை-அசாதாரண குணம்-அந்தர்யாமி-வாத்சல்யம்-திரு மலை-கோவில் சௌகார்தம் – திரு மலை சொல்லி -விபவ லாவண்யம் திரு குறுங்குடி நான்காவது ருசி ஜனகம் விளைக்க -அடுத்து வரிசையாக -திரு மால் இரும் சோலை இறுதியில் சொல்லி முடிக்கிறார் –வரிசைக்கு மா முனிகள் காரணம் சொல்கிறார் –
ஓம்காரம் விஷ்ணு -அர்த்தம் நோக்கு-சப்த நோக்கு ஜீவாத்மா
நம்மை நோக்கா நாணினார் போல் வெட்க்கி- தேவர் என்று அஞ்சினோம்-அங்கு திரு அரங்கம் நம் ஊர் -இது அன்றோ எழில் ஆலி-என் ஊர் -பொதுவாக சொல்லி –பார்த்தன் செல்வ தேர் போல்-அர்ஜுனன் கண்ணன் இருவருக்கும் ரதி சாரதி-குருகூர் -ராச கிரீடை-கோபிகள் கண்ணன் இருவருக்கும் பிரதானம் –ஆழ்வார் ஆணையாய் செல்லும் ஸ்ரீ வைகுண்டம்-கண்ணாவான் -விண்ணோர் வெற்பனே -இது அவர்களுக்கு -வானோர் மால் இரும் சோலை–நித்யர்களுக்கு –
உரைக்க வல்லருக்கு வைகுந்தம் ஆகும் தம் ஊர் எல்லாம் திரு வழுதி நாடு தாசர் நிர்வாகம்
பெற்றி நம் ஜீயர் சிஷ்யர் பணித்தார் இடை சுவர் தள்ளி பட்டர் -அங்கு அனுபவம் இங்கே ஆய்ப்பாடி இங்கே அனுபவம்- ஒரே போகி-
நாயனார் வியாக்யானம்
ஆழ்வாருடைய போக்யதையும் -முதல் பாசுரம் -அண்ணிக்கும் அமுது ஊரும்
அவர் தமக்கு ஸ்வாமி என்னும் இடமும் -இரண்டாம் பாசுரம்-தேவு மற்று அறியேன்
தமக்கு கால ஷேபம் அவருடைய பிரபந்தம்-பாவின் இன் இசை பாடி திரிவனே -இரண்டாம் பாசுரம்
ஆழ்வார் ஓட்டை சம்பந்தத்தால் அவன் மேல் விழுந்து -கரிய கோல திரு உரு காண்பன் மூன்றாம் பாசுரம்
தம்முடைய தோஷம் பாராமல் விஷயீ கரித்த படியும் நான்காம் பாசுரம்
தோஷம் அவர் கடாஷத்தால் போக்கின படியும்-தேச பிரேவச மாத்ரத்தில் கழன்று -ஐந்தாம் பாசுரம்
பின்பு அவர் குண கீர்த்தனை -கால யாத்ரை-ஆகும் படி அவர் திருத்தின படியும் நின்று தன புகழ் ஏத்த அருளினான் -ஆறாம் பாசுரம்
அவருடைய கிருபை விசேஷத்தை லோகத்தில் பரப்பின படியும் -எலாம் பாசுரம்
உள் பொருளை -அவர் சொன்னது பொருள் -ஒன்பதாம் பாசுரம்
பிரத் உபகாரம் பண்ண முடியாமல் தான் அலமந்த படியும் -பத்தாம் பாசுரம்
வாசக பிர பந்தம் –ஆதரவு உள்ளவருக்கு தங்கள் நாட்டை நித்ய சூரிகள் கொடுப்பார்கள் ஆண்மின்கள் வானகம் –
தெள்ளூரும் இளம் தெங்கின் தேறல் மாந்து திரு அரங்கம்-வர வளைக்குமாம் அனைவரையும்
அங்கு போய் ஆழ்வாரை அனுபவிக்க -அவா அற்று வீடு பெற்ற சடகோபன் -பெறுவார்கள்
கவி பாட்டு உண்ட விஷயத்தையும் -நம் ஆழ்வாரை -அன்பன் தன்னை அடைந்தவர்–தென் குருகூர் நம்பி
கவி பாடின தம்மையும் -மதுர கவி
கவி தன்னையும் -சொன்ன சொல்
கவி ஏதேனும் ஒரு வழியால் கற்றவர்க்கு பலமும் சொல்கிறது -விச்வசித்து இருந்தால் போதும் நம்பும் –
தன்னை அடைந்தவர் கடக்கு எல்லாம் அன்பன்
தன் திரு அடி ஆச்ரயித்த என் போல்வார்க்கு அன்பன்- இவர் மட்டும் இப்படி வியாக்யானம்
புன்மையாக கருதினாலும் கை கொண்டாரே இவர் -அன்னையாய் அத்தனாய் -ஆண்டிடும் -கைங்கர்யமும் கொண்டார்
தோஷம் பார்க்காமல் -நின்று தன் புகழ் ஏத்த அருளினான்
எம்பெருமானையே அன்பன் சொல்லலாம் அன்றிக்கே அன்பன் -சர்வேஸ்வரன் திரு நாமம்
அவனை ஆச்ரயித்த-எல்லாரும் அன்பு பாராட்டும் ஆழ்வார்
எட்டு விதமான தன்மை -முதல் பிரகரணம் சூரணை மிலேசனும் பக்தன் ஆனால்-மத பக்த ஜன வாத்சல்யம்-
பூஜா -எட்டு விஷயம் -முனி ஸ்ரீமான் ..கருட புராண ஸ்லோகம் -வாத்சல்யம் திரு ஆராதனம்ம்பண்ண ஆமோதித்து தானே திரு ஆராதனம்-ஆள் இட்டு அந்தி தொழுதல் கூடாது-டம்பம் இன்றி -கதை கேட்க பக்தி கொண்டு -சரித்ரம் கேட்க கண்கள் நீர் -சிந்தித்து கொண்டே -நினைத்து கொண்டே பிரயோஜனம் எதிர்பார்க்காமல்- மிலேசன் ஆக இருந்தாலும் அவனே பண்டிதன் -என்னை போல் பூஜிக்க தகுந்தவன் பிரதம லஷணம் இது தான்
இன்ன படி அன்பன் என்று இன்றி -எல்லாருக்கும் எல்லா வழியிலும் சுக்ருது உயிர் நண்பன் போல் -இயல்பாகவே காரணம் அடி இன்றி-
ஏவம் நிசர்க சுக்ருது -ஆளவந்தார் -பிரளய காலத்தில் கடாஷித்து -கரண களேபரம் கொடுத்து-அசித் போல் இருந்தோமே-தயமானம் -இயல்பான கருணையால் அருளி-அனைத்து காரியங்களுக்கும் காரணன் –சொவ்கார்த்த காரியமே வாத்சல்யம் சர்வ லோக வத்சல்யன் சரணாகத வத்சல்யன் ரிபூணாம் அபி வத்சல்யன் –என்னும் படி
லோகதுக்காகா வத்சல்யனாய்–அதில் ஆஸ்ரிதர் அளவில் தோஷம் இருந்தாலும் ஏற்று கொள்வேன்-விபீஷணன்-தோஷம் உள்ளவனை ஏற்று கொண்டால் தான் பிரயோஜனம்- அடியார்கள் பிழை அறியாத பெருமாள்-கொண்டாட்டம் -பிரதி கூலமே பண்ணி போரும் அவர்களுக்கும் வத்சல்யன் மாறு செய்த வாள் அரக்கன்-
பிரதி -பவம்- சிசுபாலன்-ஆளவந்தார்- அவனுக்கே மோஷம் கொடுத்தாயே -கேட்பார்கள் செவி சுடும் -பல பல நாளம் சொல்லி -குல மலை திரு மால் இரும் சோலை-வாய் விட்டு சொல்ல முடியாத வசவுகள்-வையும் கோஷ்ட்டி-ஏற்பாடு செய்தவனும் காதை பொத்தி கொள்ளும் படி-கேட்பார்கள் செவி சுடும்–காகம்-தஞ்ச -விபீஷணம்-தமேவ சரணம் கத -விழுந்தவனை ரஷித்தாய் – கண்ணன் பெயரை சொன்னான் சிசுபாலன்-இந்த நன்மை கூட இல்லை ஷமை விலை போக என் இடம் காட்டு பெரிய பெருமாள் ஆயர் குலத்து ஈற்று இளம் பிள்ளை ஈறு இளம் பிள்ளை வார்த்தை முக்த சிசு- –
தன்னை ச்நேகித்தாருக்கு தான் ஒருவனே விஷயீ பூதனாய் –ஸ்ரியதே ஸ்ரேயதே-நாம் அவளை பற்ற அவள் அவனை பற்ற -தான் சினேகிக்கும் இடத்தில் விபூதி அனைத்திலும் -தன்னை சிநேகிதவன் புறம்பே சில இடத்தில் சிநேகித்தால் தன்னை பெற விரகு இல்லை -உதாரா -நான்கு வித அதிகாரிகள்–விரகு-உபயம் தான் சிநேகிக்காவிடில் தான் இன்றி ஒழியும்-தயா சிந்து ஆளவந்தார் வாத்சல்ய ஏக ஜலதே -வாத்சல்ய மகோ ததே -கத்யம்-கடலுக்குள் குண கடல்- பல குணம் உண்டு வாத்சல்யம் சிறந்தது-கருணை இல்லா விடில் பிரகாசிக்காது -மனச இன்றி புலன்கள் வேலை செய்யாது போல் –மாணிக்கங்கள் பல இருக்கும் கடலில்-நிகரில் புகழாய் சொரூபம்-வாத்சல்யதுக்கு சமமாக ஓன்று இல்லை -புகழப் படுவது புகழ் ஒப்பு இல்லாத புகழ்- ஆஸ்ரித வாத்சல்யம்-துவயம் முன் அடி ஸ்ரீ மத நித்ய யோகம்- எப்போதும் கூடி இருப்பவன்-தலை எடுக்கும் குணங்கள் நாராயண -அவளை பார்த்து அவனை பார்த்து -வாத்சல்யம் முதலில்- எடுத்து -ஏற்று கொள்ள ஸ்வாமி-சௌசீல்யம் தாழ்ந்தவன் கண்டு பற்றுகைக்கு சௌலப்யம் -நாராயண பதம் அர்த்தம் இங்கு திரு மந்த்ரத்தில் சர்வ சேஷி -ஆஸ்ரித சௌகர்யம் குணம்- ஆச்ராயண கார்ய -நிகரில் அமரர் -இங்கும் ஒப்பு இல்லை-ஆஸ்ரித வாச்தல்ய -தனியாக கத்யத்தில் போட்டு -குண கணங்கள் உடன் சௌசீல்யம் இருந்தும் -நிகரில் அமரர்-நித்யர்- சொரூபத்தால் பர தத்வம் இத்தால் எளிதாக பற்றலாம் சரணத்வ சித்தி சௌசீல்யம் வியாமோகம் பித்து பிடித்தவன் –
வாங்குபவன் உதாரன் என்கிறான்
அன்பன்-முதல் பாசுரத்தில் மூன்று குணம்-காட்டி
கட்டு உண்ண பண்ணிய சௌசீல்யம்
மாயன் -சௌலப்யம்
என் அப்பன்-ஸ்வாமித்வம்
இங்கு அன்பன்
அவை ஒரு தட்டு இவை ஒரு தட்டு-சீதை கலா -கலை துண்டு-சந்தரன்-விச்வம் சகல சப்த -தரை லோகய ராஜ்ஜியம் ஒரு தட்டு -அழகில் ஒரு பகுதி ஒரு தட்டு -தென் அரங்கர் -பிறர் மினுக்கம் பொறாமை- ஏழு அடி ஒரு தட்டு இது ஒரு தட்டு -இப்படி இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர் உகந்து இருக்காய் தனி தட்டு-புறம்பு உண்டான -சர்வ தரமான் பரித்யஜ்ய -பேற்றுக்கு துவரிக்கை- வேஷம் போடுகிறான் இவ்வளவு பண்ணினாலும் -இந்தலத்தில் தாமரை பூத்தால் போல் இது வேறு தட்டு
சீலம்-குணம்-சீல சௌலப்ய ஸ்வாமித்வம் — சீலாதி குண –சொல்லி -சர்வ லோககை வாத்சல்ய என்கிறார்
இத்தை பற்ற இறே சீலாதி குணம் -ரிஷிகளும் சொன்னார்கள்–சீலாதி குண சம்பனவ் சர்வ லோக வாத்சல்ய ரிஷிகளும் சொன்னதையும் பிரமாணம்
இந்த குணத்துக்கு தோற்று அடிமை குண தாஸ்யம்- உயர்வற உயர் நலம் -சமஸ்த கல்யாண குணம் இருப்பை காட்டி தோற்படித்தான் எவன் சொரூபம் அடுத்து ஞானம் திவ்ய மங்கள விக்ரகம் விபூதி காட்டி -குணம் கண்டதும் தலை சாய்க்க பார் -மரங்கள் கதை -சொரூப கிருத தாஸ்யம் குணம் தூண்ட அடிமை குண கிருத தாஸ்யம் இரண்டு வகை –சொரூப கிருத தாச்யமே சிறந்தது –பிராட்டி அனசூயைக்கு அருளிய வார்த்தை ஸ்மார்பிப்பது- -கணவன் அன்பு பாராட்டுவது கடமை -ஸ்ரீமான் வாக்மி-இல்லா விடிலும் அன்பு வைத்து இரு-குணம் பிரிக்க முடியாதே -இல்லா விடிலும் இருப்பை காட்டுவேன்- கடியன் கொடியன் -வைய நான் தான் வையணும் நெடிய மால் உலகம் கொண்ட -சிசுபாலனும் வைய இவள் இடம் கற்று கொள்ள வேண்டுமே –அத்வைதி போல் நிர் குணனாக இருந்தாலும்-ஆகிலும் கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்குமே -அவன்-வார்த்தை வைத்து வியாக்யானம்- தாசோஹம் திருமாலே நானும் உனக்கு பழ அடியேன்-எம்மா வீட்டு திறமும் இளைய பெருமாளும் பஞ்சவடியில் பாரதந்த்ர்யம் காட்டினது சொன்னதே
அவனுக்கே எல்லோரோடும் பந்தம்-இவரோ அவன் இடம் அன்பை வைத்தவர் இடம் -பரமனை பயிலும் திரு உடையார் எவரேலும் கண்டீர் என்னை ஆளும் பரமர்-கண்ணாளன் கண்ண மங்கை நகராளன் கழல் சூடி அவனை உள்ளத்து -எண்ணாத மானிடத்தை எண்ணாத பொது எல்லாம் இனிது –காண்பரோ கேட்பாரோ–இவரை போல் வைராக்கியம் அவனுக்கு இல்லை -அவனுக்கு சொரூபம் நிபந்தமான -சொத்து இவருக்கு உபாதி காரணம்- அவனது நிரூபாதகம் ஜாதி நியமம் பாராதே சம்பந்தமே ஹேதுவாக -எவரேலும்-கும்பி நகரர் எத்துவரேலும்-நம்பனை திரு மார்பனை- நம்பதக்கவன்-
தனக்கும் தான் தஞ்சம் அல்ல -பிறரை நம்புகிறான்-அது போல் காகாசுரன்-பிறரும் தஞ்சம் இல்லை நம்பனை-திரு மார்பினை
-அடுத்த படி வலம்தாங்கு சக்கரத்து அண்ணலை-அங்கும் வடிவாய் நின் வலமார்பினில் மங்கை சொல்லி வடிவார் ஜோதி வலது உறையும் —
நரகத்தில் அப்பா அண்ணா நினைத்தாலும்-கஷ்டம் படும் பொழுது தானே நினைப்போம்-அப்படி சொன்னாலும் -நரகமே சுவர்க்கம் ஆகும்-அப்படி சொன்னவனும் எனக்கு ஸ்வாமி-அவன் மட்டும் இல்லை அவன் குலம் எனக்கு சந்தானம்-என்கிறார் ஆழ்வார் –தொழு குலம் தாங்கள்–குலம் தாங்கு சாதி நாலிலும்- சண்டாளர் ஆகிலும் மணி வண்ணற்கு என்று உள் கலந்தார் குறி இருந்தால் போதும்-மனசுக்குள் இருக்குமே —உபாதி நிபந்தனம்
அன்பன்-வைஷ்ணவ சமவாய சேர்ந்து இருப்பது-குணம் கர்மம்பொருளில் இருப்பது போல் –அவன் அடியார் -நாளும் வாய்க்க -அடைந்தவர்க்கு எல்லாம் அன்பன்-சேஷி உறவு முறை ஏதாவது விதமாக -உபாயதுக்கு உபேயதுக்கு ஏதேனும் ஒரு வகை–அப்பா அம்மா தாயே சொன்னாலும் போதும் நரகத்தில் கூப்பிடுவானே -அதனால் இங்கு அதை சொல்கிறார்-பொருளை சொன்னால் அதனுள் அவன் இருக்கும் வரை போகுமே -தாத் பர்ய ஞானம் வேதாந்தா சாரம் பரி பூர்ணம் –
திரு நகரி மண் விளைவிகிறது இவரை–ஊற்று வாய் -துறை வாய்ப்பாலே பயிர் விளையுமே
இவருக்கு காதல் கடல் புரைய விளைந்தது அடி இந்த நகர வாசி -சார அசார விவேகம் பெற்ற பூர்ணர்
நம்பிக்கு அன்பனாய்-ஞான பக்தி வைராக்ய பூர்ணர் இடம் -ஆத்மா குணம் கண்டு இவருக்கு சிநேகம்
இவருக்கு நிரூபகம் -அன்பை கொண்டே ஆழ்வார் கிருஷ்ண த்ருஷ்ண தத்வம் -ஆராத காதல் கொண்டே நிரூபகம்
இவருக்கு ஆழ்வார் காதலே நிரூபக தர்மம்
புஷ்பம் மணம் நிரூபகம் நிரூபித்த சொரூப விசே ஷணங்கள் பல வெண்மை மேன்மை போல்வன
நிரூபிக்க வட்ட வஸ்துவில்
பிரணவம்-எம்பெருமானுக்கு அதில் நின்று நம அர்த்தம் பாகவத சேஷத்வம் வரை
இவர் நம ஒன்றிலே மத்திம பதத்தில்
அவர் இன் கவி சத் விஷயம் கவி பாடி
இவர் ஆழ்வாரை கவி பாடி மதுர கவி நெஞ்சுக்கு பணி ஆழ்வார் பக்கல் சிநேகம்
வாய்க்கு பணி அவர் குணம் ஸ்தோத்ரம்
சொன்ன சொல்- இதுவும் ஒரு சொல் விச்வமிகிறார்
நம்புவார் ஆசை பட்டு நம்பிக்கை உடையவர் இரண்டு அர்த்தம்
நசை கொண்டு எப்பொழுதும் சொல்லி கொண்டு -ஆழ்வார் பிரபாவம் ஈடு பட்டு மயிர் கூச்சுஅடைந்து
விரும்பி-கை தவம் அல்ல -உண்மை சத்யம்- தஞ்சமாக விச்வசித்து
பத்தி வைகுந்தம் வாஸ்தவ பூமி பரம பதம்
பரம பதம் தம் ஊர் ஆகுமே
ஆழ்வார் -சேதனனுக்கு பிரதிகூல்யத்தில் ஈஸ்வரன் பக்கம் சிநேகித்து -அடியார் -ஞான பிரதன் ஆச்சார்யர் -திரு நாட்டை பிராப்தம்
திரு நாடு -இடை சுவர் தள்ளி ஒரு போகி ஆகும்-
———————————————————————————————————————————————————–
நம்ஜீயர் திரு அடிகளே சரணம் .
நம் பிள்ளை திரு அடிகளே சரணம் .
பெரிய வாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம் .
அழகியமணவாள பெருமாள் நாயனார் திரு அடிகளே சரணம் .
மதுர கவி ஆழ்வார் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .
Leave a Reply