Archive for the ‘ஸ்ரீ ராமனின் அருள் அமுதம்’ Category

ஸ்ரீ கம்ப ராமாயணம்/ஆரணிய காண்டம்–மிகைப் பாடல்கள்–

December 18, 2020

1. விராதன் வதைப் படலம்-

ஆதியானிடம் அமர்ந்தவளை
அன்பின் அணையா,
ஏதில் இன்னல் அனசூயையை
இறைஞ்ச, ‘இறையோய்!
வேத கீதம் அவை வெண் கடல்
வெறிப்பு அரு புவி
ஓது முன் பிறவி ஒண்
மதி தண்டம் உமிழ்வோய்.–1-/3-1-

ஆதியான் – சிவன்; இடம் அமர்ந்தவள் – உமை

———-

‘உன்ன அங்கி தர,
யோகிபெலை யோக சயனன்-
தன்னது அன்ன சரிதத்
தையல் சமைத்த வினை இன்று
உன்னி, உன்னி மறை உச்ச
மதி கீத மதுரத்து
உன்னி மாதவி உவந்து
மன வேகம் உதவி.–2-/3-2-

அங்கி – நெருப்பு; யோக சயனன் – திருமால்

———

பருதியைத் தரும் முன்
அத்திரி பதத்து அனுசனைக்
கருதி உய்த்திடுதல் காணுதி,
கவந்த பெலையோய்
சுருதி உய்த்த கலனைப் பொதி
சுமந்து கொள்’ எனா,
தருதல் அங்கு அணைச் சயத்து
அரசி சாரும் எனலும்.–3-/3-3-

பருதி – சூரியன்; அனுசன் – பின் பிறந்தோன் (தம்பி); சுருதி-
வேதம்.

———–

பாற்கடல் பணிய பாம்புஅணை
பரம் பரமனை
ஏற்கை ஏத்தி இவண்
எய்துதலின், என்னை எதிர
வாற்கலன் பொதி அசைந்தென
கரத்தின் அணையா,
ஊர்க்க முன், பணி உவந்து அருள்
எனப் பெரிது அரோ.–4-/3-4-

பரம் பரமன் – மேலுக்கு மேலானவன்

————-

அன்றது அக் கடல் அளித்து
அகல நின்று அளிதுஅரோ;
சென்று தக்க பணி சேர் முனி
திறத்து எனின்அரோ;
வென்று இதற்கு மொழி மேல்
இடுதல் வேண்டுதல்அரோ;
இன்று இதற்கும் ஓர் எல்லை
பொருள் உள்ளுள் உளரோ.–5- / 3-5-

அளிது – இரங்கத்தக்கது.

——–

யோசனைப் புகுத யோகி முனி
யோக வரையின்
பாச பத்திர் இடர் பற்று
அற அகற்று பழையோர்
ஓசை உற்ற பொருள் உற்றன
எனப் பெரிது உவந்து,
ஆசை உற்றவர் அறிந்தனர்
அடைந்தனர் அவண். –6 /4-1-

——–

ஆதி நான்மறையினாளரை
அடித்தொழில் புரிந்து
ஏது நீரில் இடை எய்தியது
நாமம் எனலும்
சோதியோ உள புரந்தர
துடர்ச்சி மடவார்
மாதர் மாண்டு அவையின்
மாயையினில் வஞ்ச நடமே. –7 / 4-2-

———

விண்ணை ஆளிசெய்த மாயையினில்
மெய் இல் மடவார்
அண்ணல் மாமுனிவன் ஆடும்
என அப்பி நடமாம்
என்ன உன்னி, அதை
எய்தினர் இறைஞ்சி, அவனின்
அண்ணு வைகினர் அகன்றனர்
அசைந்தனன் அரோ.–8-

——-

ஆடு அரம்பை நீடு அரங்கு-
ஊடு நின்று பாடலால்,
ஊடு வந்து கூட, இக்
கூடு வந்து கூடினேன்.–9 / 62-1-

ஆடு அரம்பை – நடனமாடும் ரம்பை என்னும் பெயருடைய
தேவசாதிப் பெண்; கூடு – உடம்பு.

———

வலம்செய்து இந்த வான் எலாம்
நலிஞ்சு தின்னும் நாம வேல்
பொலிஞ்ச வென்றி பூணும் அக்
கிலிஞ்சன் மைந்தன் ஆயினேன்.–10 /64-1-

நலிஞ்சு – நலிந்து, துன்புறுத்தி; நலிஞ்சு, பொலிஞ்ச – போலி
(நலிந்து, பொலிந்த); நாம வேல் – அச்சம் தரும் வேல்; கிலிஞ்சன்
என்பது ஓர் அரக்கனின் பெயர்.

——

வெம்பு விற்கை வீர! நீ
அம்பரத்து நாதனால்,
தும்புருத்தன் வாய்மையால்,
இம்பர் உற்றது ஈதுஅரோ.–11/65-1-

வெம்பு வில் – வெதும்புகின்ற வில்; அம்பரத்து நாதன் –
தேவருலகத் தலைவன்; இம்பர் – இவ்வுலகு.

——

3. அகத்தியப் படலம்-

‘அருந் திறல் உலகு ஒரு
மூன்றும் ஆணையின்
புரந்திடும் தசமுகத்து
ஒருவன், பொன்றிலாப்
பெருந் தவம் செய்தவன்,
பெற்ற மாட்சியால்
வருந்தினெம் நெடும் பகல் –
வரத! – யாம் எலாம்.–12/14-1-

தசமுகத்து ஒருவன் – பத்துத் தலை கொண்ட இராவணன்;
பொன்றிலா – அழியாத.

———-

‘தேவர்கள்தமைத் தினம்
துரந்து, மற்று அவர்
தேவியர்தமைச் சிறைப்படுத்தி,
திக்கு எலாம்
கூவிடத் தடிந்து, அவர்
செல்வம் கொண்ட போர்
மா வலித் தசமுகன்
வலத்துக்கு யார் வலார்?–13 / 14-2-

துரந்து – விரட்டி.

—————

அவன் வலி படைத்து,
மற்று அரக்கர் யாவரும்,
சிவன் முதல் மூவரை,
தேவர் சித்தரை,
புவனியின் முனிவரை,
மற்றும் புங்கவர்
எவரையும் துரந்தனர் –
இறைவ! – இன்னுமே.–14 / 14-3-

புங்கவர் – உயர்ந்தோர்.

———

ஆயிர கோடி என்று
உரைக்கும் அண்டமேல்
மேய போர் அரக்கரே
மேவல் அல்லதை,
தூய சீர் அமரர் என்று
உரைக்கும் தொல் கணத்து
ஆயவர் எங்ஙன் என்று
அறிந்திலோம், ஐயா!–15 / 14-4-

மேவல் அல்லதை – வாழ்கின்றார்களே யல்லாமல் (ஆயிரங்
கோடி அண்டங்களிலும் பொருந்தினவர்கள் அரக்கர்களே தவிர
அமரர் முதலியோர்க்கு இடம் இல்லை).

———–

“வெள்ளியங் கிரியிடை
விமலன் மேலை நாள்,
கள்ளிய அரக்கரைக்
கடிகிலேன்” எனா,
ஒள்ளிய வரம் அவர்க்கு
உதவினான்; கடற்
பள்ளி கொள்பவன் பொருது
இளைத்த பான்மையான்.–16 /4-5-

வெள்ளியங்கிரி – கயிலை மலை; விமலன் – இயல்பாகவே
மலங்களின்று நீங்கியவன்; கடற் பள்ளி கொள்பவன் – திருமால்.1

———–

‘நான் முகன் அவர்க்கு
நல் மொழிகள் பேசியே
தான் உறு செய்
வினைத்தலையில் நிற்கின்றான்;
வானில் வெஞ்சுடர் முதல்
வயங்கு கோள் எலாம்
மேன்மை இல் அருஞ்
சிறைப்பட்டு மீண்டுளார்.’–17 /14-6-

வினைத்தலை – வினைப் பயனிலே.

———–

என்று, பினும், மா தவன்
எடுத்து இனிது உரைப்பான்:
‘அன்று, அமரர் நாதனை
அருஞ் சிறையில் வைத்தே
வென்றி தரு வேல் தச
முகப் பதகன் ஆதி
வன் திறல் அரக்கர்
வலிமைக்கு நிகர் யாரே!–18 / 53-1-

தச முகப் பதகன் – இராவணனாகிய பாதகன்.

———-

‘ஆயவர்கள் தங்கள் குலம்
வேர்அற மலைந்தே,
தூய தவ வாணரொடு
தொல் அமரர்தம்மை
நீ தனி புரந்திடுதல் நின்
கடனது’ என்றான்;
நாயகனும், ‘நன்று!’ என
அவற்கு நவில்கின்றான்:–19 / 53-2-

ஆயவர்கள் தங்கள் – அரக்கர்களாகிய அவர்கள்.

———–

4. சடாயு காண் படலம்

‘தக்கன் நனி வயிற்றுஉதித்தார் ஐம்பதின்மர்
தடங் கொங்கைத் தையலாருள்,
தொக்க பதின்மூவரை அக் காசிபனும்
புணர்ந்தனன்; அத்தோகைமாருள்,
மிக்க அதிதிப் பெயராள் முப்பத்து
முக் கோடி விண்ணோர் ஈன்றாள்;
மைக் கருங் கண் திதி என்பாள் அதின்
இரட்டி அசுரர்தமை வயிறு வாய்த்தாள்.–20 / 24-1-

ஐம்பதின்மர் – ஐம்பது பேர்; விண்ணோர் – தேவர்கள்;
இரட்டி – இரண்டு மடங்கு.

———-

தானவரே முதலோரைத் தனு பயந்தாள்;
மதி என்பாள் மனிதர்தம்மோடு-
ஆன வருணங்கள் அவயவத்து அடைவே
பயந்தனளால்; சுரபி என்பாள்
தேனுவுடன் கந்தருவம் மற்று உள்ள
பிற பயந்தாள்; தெரிக்குங்காலை,
மானமுடைக் குரோதவசை கழுதை, மரை,
ஒட்டை, பிற, வயிறு வாய்த்தாள்.–21 / 24-2-

தானவர் – அரக்கர்; வயிறு வாய்த்தாள் – கர்ப்பம் உற்றாள்.

———-

மழை புரை பூங் குழல் விநதை, வான்,
இடி, மின், அருணனுடன் வயிநதேயன்,
தழை புரையும் சிறைக் கூகை, பாறு முதல்
பெரும் பறவைதம்மை ஈன்றாள்;
இழை புரையும் தாம்பிரை ஊர்க்குருவி, சிவல்,
காடை, பல பிறவும் ஈன்றாள்;
கழைஎனும் அக்கொடிபயந்தாள், கொடியுடனே
செடி முதலாக் கண்ட எல்லாம்.–22 / 24-3-

மழை புரை பூங்குழல் – மேகம் போன்ற பொலிவு பெற்ற
கூந்தல்; கூகை – ஆந்தை; இழை புரையும் தாம்பிரை – (மகளிர்க்கு)
ஆபரணம் போன்ற தாம்பிரை என்னும் பெயருடையால்.

———-

வெருட்டி எழும் கண பணப்பை வியாளம்
எலாம் கத்துரு ஆம் மின்னும் ஈன்றாள்;
மருள் திகழும் ஒரு தலைய புயங்கம்
எலாம் கதை என்னும் மாது தந்தாள்;
அருட்டை என்னும் வல்லி தந்தாள், ஓந்தி,
உடும்பு, அணில்கள் முதலான எல்லாம்;
தெருட்டிடும் மாது இளை ஈந்தாள், செலசரம்
ஆகிய பலவும், தெரிக்குங்காலை.–23-/24-4-

கண பணப் பை வியாளம் – கூட்டமாயுள்ள படமும்
நச்சுப்பையும் கொண்ட பாம்புகள் (பல தலைகள் கொண்ட
பாம்புகளைக் குறித்தது); மருள் – அச்சம்; புயங்கம் – பாம்பு;
செலசரம் – நீரில் இயங்கும் உயிரினங்கள்.

———-

‘அதிதி, திதி, தனு, அருட்டை, சுதை,
கழையே, சுரபி, அணி விநதை, ஆன்ற
மதி, இளை, கத்துருவுடனே, குரோதவசை,
தாம்பிரை, ஆம் மட நலார்கள்,
விதிமுறையே, இவைஅனைத்தும் பயந்தனர்கள்;
விநதை சுதன் அருணன் மென்தோள்,
புது மதி சேர் நுதல், அரம்பைதனைப்
புணர, உதித்தனம் யாம், புவனிமீதே.–24 / 24-5-

புது மதி சேர் நுதல் – (அமாவாசைக்குப் பின்) புதிதாகத்
தோன்றும் (பிறைச்) சந்திரன் போன்ற நெற்றி. 24-5

———

என்று உரைத்த
எருவை அரசனைத்
துன்று தாரவர் நோக்கித்
தொழுது, கண்
ஒன்றும் முத்தம்
முறை முறையாய் உக-
நின்று, மற்று இன்ன
நீர்மை நிகழ்த்தினார்.–25 / 27-1-

எருவை அரசன் – பருந்துகளுக்கு அரசனாகிய சடாயு; துன்று
தாரவர் – நெருங்கத் தொடுத்த மாலை அணிந்த இராமலக்குவர்கள்;
முத்தம் – முத்துப் (போன்ற).

———

5. சூர்ப்பணகைப் படலம்-

கண்டு தன்இரு வழி
களிப்ப, கா….கத்து
எண் தரும் புளகிதம்
எழுப்ப, ஏதிலாள்
கொண்ட தீவினைத் திறக்
குறிப்பை ஓர்கிலாள்
அண்டர் நாதனை, ‘இவன்
ஆர்?’ என்று உன்னுவாள்.–26 / 11-1-

எண்தரும் புளகிதம் – எண்ணத்தக்க புளகம் (மெய்ச் சிலிர்ப்பு);
அண்டர் நாதன் – தேவர்க்குத் தலைவனாகிய இராமபிரான்; ஓர்
கிலாள் – குறிப்பாக உணராதவளாய்.

———-

பொன்னொடு மணிக் கலை
சிலம்பொடு புலம்ப,
மின்னொடு மணிக்கலைகள்
விம்மி இடை நோவ,
துன்னு குழல் வன் –
கவரி தோகை பணிமாற,
அன்னம் என, அல்ல
என, ஆம் என, நடந்தாள்.–27 / 33-1-

பொன்னொடு மணிக் கலை – பொன்னும் மணியும் சேர்த்துச்
செய்யப்பட்ட மணிமேகலாபரணம்; புலம்ப – ஒலிக்க.

———-

6. கரன் வதைப் படலம்

ஆற்றேன் ஆற்றேன், அது கெட்டேன்;
அறுத்தான் அறுத்தான் என் மூக்கை;
கூற்றே கூற்றே என் உடலை,
குலையும் குலையும்; அது கண்டீர்;
காற்றே தீயே எனத் திரியும்
கரனே! கரனுக்கு இளையோரே!
தோற்றேன் தோற்றேன்; வல்லபங்கள்
எல்லா வகையும் தோற்றேனே.–28 / 7-1-

ஆற்றேன் – தாங்க மாட்டேன்; வல்லபங்கள் – வெற்றிகள்.

———

பத்துடன் ஆறு எனப்
பகுத்த ஆயிரம்
வித்தக வரத்தர்கள்
வீர வேள்வியில்
முத் தலைக் குரிசிலுக்கு
அன்று முக்கணான்
அத்துணைப் படைத்து
அவன் அருள உற்றுளார்.–29/ 35-1-

வித்தக வரத்தர் – சதுரப்பாடு விளங்கும் வரம் பெற்றவர்கள்;
முத்தலைக் குரிசில் – திரிசிரா என்னும் அரக்கர் தலைவன்.

————-

ஆறு நூறாயிரம் கோடி
ஆழித் தேர்,
கூறிய அவற்றினுக்கு
இரட்டி குஞ்சரம்,
ஏறிய பரி அவற்று இரட்டி,
வெள்ளம் நூறு
ஈறு இல் ஆள், கரன்
படைத் தொகுதி என்பரால்.–30 / 38-1

ஆழித் தேர் – சக்கரம் கொண்ட தேர்கள்; குஞ்சரம் -யானை.

——-

276. நடந்து தன் இரு கரத்தினின்
நலம் பெறும் சிலைவாய்
தொடர்ந்த நாண் ஒலி எழுப்பினன்;
தொகைப்படும் அண்டம்
இடிந்ததென்ன நின்று அதிர்ந்தது;
அங்கு இறைவனும் இமைப்பில்
மிடைந்த வெஞ்சரம் மழை விடு
தாரையின் விதைத்தான்.—31/ 148-1-

சிலைவாய் – வில்லிலிருந்து.

——–

277. விழுந்த வெம் படை தூடணன்
சிரம் என வெருவுற்று
அழிந்த சிந்தையர் திசை
திசை ஓடினர் அரக்கர்;
எழுந்த காதலின் இடைவிடாது,
இமையவர், முனிவர்,
பொழிந்து பூ மழை போற்றினர்;
இறைவனைப் புகழ்ந்தார்.–32 /161-1-

அழிந்த சிந்தையர் – தளர்ந்த மனத்தவராய்; காதல் – அன்பு.

————

7. சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம்

278. பரிக்கும் அண்டப் பரப்பு எவைக்கும் தனியரசு
என்று அரன்கொடுத்த வரத்தின் பான்மை
உரைக்கு உவமை பெற, குலிசத்தவன் முதலாம்
உலகு இறைமைக்கு உரிய மேலோர்
இருக்கும் அரித் தவிசு எவைக்கும் நாயகம்
ஈதுஎனக் குறித்து அங்குஇமையோர் தச்சன்
அருக்கர் வெயில்பறித்து அமைத்தஅரிமுகத்தின்
மணிப் பீடத்து அமர்ந்தான் மன்னோ.–33 / 2-1

பரிக்கும் – ஈர்க்கும் (அண்டத்தின் கோளங்கள்
ஒன்றையொன்று ஈர்ப்பன); குலிசத்தவன் – வச்சிராயுதம் ஏந்தும்
இந்திரன்; அரித் தவிசு – சிங்க ஆசனம்; நாயகம் – தலைமை;
இமையோர் தச்சன் – மயன்; அருக்கர் – சூரியர்கள்; அரிமுகத்தின்
மணிப் பீடம் – சிங்க முகம் அமைத்து மணிகள் பதித்த (அழகிய)
பீடம்.

——

பொருப்பினையும் கடந்த புயப் பரப்பினிடைப்
பொழி கதிரின் ஒளி குலாவி,
பரப்பும் இருட் குறும்பு எறிந்த பகல்
ஒளியும் கெடத் துரந்து, பருவ மேகத்து
உருப் பயில் இந்திர நீலச் சோதி தளைத்து
உலகம் எலாம் உவந்து நோக்க,
திருப் பயில் உத்தரிகமொடு செறி
வாகுவலய நிரை திகழ மன்னோ.–34 /5-1-

பொருப்பு – மலை; துரந்து – விரட்டி; உரு – நிறம், அழகு;
உத்தரிகம் – மேலாடை; வாகு – தோள்.

————–

இலங்கு மரகதப் பொருப்பின் மருங்கு தவழ்
இளங் கதிரின் வெயில் சூழ்ந்தென்ன,
அலங்கு செம் பொன் இழைப் பயிலும்
அருந்துகிலின் பொலிந்தஅரைத் தலத்தின்மீது,
நலம் கொள் சுடர்த் தொகை பரப்பும்
நவமணிப்பத்தியின் இழைத்தநலம் ஆர்கச்சு
துலங்க அசைத்து அதில் சுரிகையுடை வடி
வாள் மருங்கினிடைத் தொடர மன்னோ.–35 / 5-2

வெயில் – ஒளி; வடி – கூர்மை.

——–

281. வானுலகு அளிக்கும் புரந்தரன் ஆதி,
மருவும் எண் திசைப் படு நிருபர்
ஆனவர்தமது புகழ் எலாம் ஒருங்கே
அன்ன மென் புள் உருத் தாங்கி,
தான் இடைவிடாது தசமுகத்து அரக்கன்
பதத்து இடைத் தாழ்ந்து தாழ்ந்து எழல்போல்
பால் நிறக் கவரி மயிர்க் குலம் கோடி
பாங்கினில் பயின்றிட மன்னோ.–36 /5-3-

அளிக்கும் – காக்கின்ற; புரந்தரன் – இந்திரன்; கவரி மயிர்க்
குலம் – வெண்சாமரைக் கூட்டம்; பாங்கினில் – பக்கங்களில்.

———–

தேவ கன்னியர்கள், இயக்கர் தம் குலத்துத்
தெரிவையர், சித்தர் மங்கையர்கள்,
மேவ அருந் திறல் சேர் நாகர் மெல்லியர்கள்,
விளங்கு கந்திருவர், மேல் விஞ்சைக்
காவலர் குலத்தில் தோன்று கன்னியர்கள்,
ஆதியாய்க் கணிப்பு இல் பல் கோடிப்
பாவையர் எவரும் பாங்குற நெருங்கி,
பலாண்டு இசை பரவிட மன்னோ.–37 / 5-4

கணிப்பில் – கணக்கற்ற; பலாண்டு – பல்லாண்டு.

———

தண் கதிர் பொழியும்
ஓர் தவள மா மதி
விண் பிரிந்து இரு
நிலத்து இருந்து, வேறு வேறு
எண் கடந்து உரு
எடுத்து இருளை ஓட்டல்போல்
வெண் குடைத் தொகை
பல கோடி மேவவே.–38 /7-1-

தவள மா மதி – வெள்ளையாயுள்ள பெருமைக்குரிய சந்திரன்.

———-

284. ஏவலின் புரி தொழில்
எவையும் செய்து, செய்து
ஓவு இலர், துயர்க் கடற்கு
ஒழிவு காண்கிலர்,
மேவரும் பெரும் பயம்
பிடித்து, விண்ணவர்
தாவினர், தலைத் தலை
தாழ்ந்து நிற்கவே.–39 / 7-2-

ஓவு இலர் – நீங்குதல் இலராய் (ஓய்வு ஒழிச்சல் இல்லாமல்);
ஒழிவு – முடிவு.

——-

வியக்கும் முப் புவனமும்
வெகுண்டு, மேலைநாள்
கயக்கிய கடுந் திறல்
கருத்துளே கிடந்து,
உயக்கிய பயத்தினர்
அவுணரோடு மற்று
இயக்கரும் திசை திசை
இறைஞ்சி நிற்கவே.–40 /11-1-

கயக்கிய – கசக்கிய.

———

பெருந் திசை இரிந்திடப்
பெயர்த்தும் வென்ற நாள்,
பருந் திறல் புயம்
பிணிப்புண்டு, பாசத்தால்
அருந் தளைப்படும் துயர்
அதனுக்கு அஞ்சியே,
புரந்தரன் களாஞ்சி கை
எடுத்துப் போற்றவே.–41 / 11-2-

களாஞ்சி – காளாஞ்சி, தாம்பூல எச்சில் துப்பும் கலம்.

——–

287. கடி நகர் அழித்துத்
தன் காவல் மாற்றிய
கொடியவன் தனக்கு உளம்
குலைந்து கூசியே,
வடதிசைப் பரப்பினுக்கு
இறைவன் மா நெதி
இடு திறை அளந்தனன்,
இரந்து நிற்கவே.–42/15-1-

கடிநகர் – காவல் மிக்க நகரம்; மாற்றிய- நீக்கிய; நெதி-நிதி.

———–

288. நிகர் அறு புவனம் மூன்று
என நிகழ்த்திய
தொகையினில் தொகுத்திடும்
அண்டச் சூழலில்
வகையினைக் குரு முறை
மரபின் வஞ்சியாப்
புகரவன் விரித்து எடுத்து
இயம்பிப் போகவே.–43 /15-2-

குருமுறை மரபின் வஞ்சியாப் புகரவன் – குரு நெறி
மரபிலிருந்து வஞ்சியாத ஒளி (புகழ்) உடைய சுர குரு.

———-

289. மதியினில் கருதும் முன்
வந்து வேண்டின
எது விதப் பொருள்களும்
இமைப்பின் நல்கியே,
திதி முதல் அங்கம்
அஞ்சுஅவையும் தெற்றென,
விதிமுறை பெறத்
தனி விளம்பிப்போகவே.–44 / 15-3

திதி முதல் அங்கம் அஞ்சு – திதி முதலான ஐந்து
அங்கங்கள், பஞ்சாங்கம்.

———

290. ‘உரிய நும் குலத்து உளேன்
ஒருவன் யான்’ எனப்
பரிவுறும் பழமைகள்
எடுத்துப் பன்னியே,
விரை மலர் சிதறி, மெய்
அன்பு மீக்கொளா,
நிருதி அங்கு அடிமுறை
காத்து நிற்கவே.–45 / 17-1-

நிருதி – தென்மேற்குத் திசைக் காவலன்.

———-

என்ற பொழுதில், கடிது
எழுந்து அலறி, வாய் விட்டு,
அன்று அருகு நின்ற
பல தேவர் கணம் அஞ்ச,
புன் தொழில் அரக்கர்
மனதில் புகை எழும்ப,
கன்றிய மனத்தள்
கழறுற்றிடுவதானாள்.
கடிது எழுந்து – விரைவாக எழுந்து. 49-1

292. என்பதை மனக்கொடு
இடர் ஏறிய கருத்தாள்,
முன்ப! உன் முகத்தின்
எதிர் பொய் மொழியகில்லேன்;
நின் பதம்; நின் ஆணை
இது; நீ கருதுவாய் என்று
அன்பின் உரியோர் நிலை
எடுத்து அறைசெய்கிற்பாள்.
மனக்கொடு – மனத்தில் கொண்டு (எண்ணி); முன்ப – வலிமை
உடையவனே. 51-1

293. ‘ஈது அவர்கள்தங்கள் செயல்’
என்று அவள் உரைப்ப,
கோது உறு மனத்து எரி
பிறந்து, குறை நாளில்
மோது வடவைக் கனல்
முகந்து, உலகம் எல்லாம்
காதுறு சினததன்
இதனைக் கழறுகின்றான்.
காதுறு சினத்தன் – சிதைக்கும் சினம் உடையவனாய். 57-1

294. இற்று எலாம் அரக்கி ஆங்கே
எடுத்து அவள் இயம்பக் கேட்ட
கொற்ற வாள் அரக்கன் முன்னே,
கொண்ட வெங் கோபத் தீயில்
சொற்ற ஆதரத்தின் வாய்மை
எனும் புனல் சொரிதலோடும்
அற்றதால; பின்பு ஆங்கு
அன்னோன் கருத்தும்வேறாயது அன்றே.
கொற்றவாள் அரக்கன் – வெற்றி தரும் வாள் ஏந்திய
அரக்கன் (இராவணன்); ஆதரம் – அன்பு, பற்று. 81-1

8. மாரீசன் வதைப் படலம்

295. ஆயிரம் அடல்
கையுடையானை மழு வாளால்
‘ஏ’ எனும் உரைக்குள் உயிர்
செற்ற எதிர் இல்லோன்
மேய விறல் முற்றும்
வரி வெஞ் சிலையினோடும்
தாயவன் வலித் தகைமை
யாம் உறு தகைத்தோ.
ஆயிரம் அடல் கையுடையான் – ஆயிரம் வெற்றிக் கைகளை
உடைய கார்த்தவீரியன்; எதிர் இல்லோன் – ஈடு இல்லாதவன் (வாலி);
தாயவன் – கடந்தவன் (இராமன்). 25-1

9. இராவணன் சூழ்ச்சிப் படலம்

296. ஓவரு கவனம்மீது
உற்றுச் சென்றுளான்,
பூ வரு சாலையுள்
பொருந்த நோக்குறா,
‘யாவர், இவ் இருக்கையுள்
இருந்த நீர்?’ என்றான் –
தேவரும் இடர் உறத்
திரிந்த மேனியான்.
ஓவரு – நீக்குதற்கு அரிய; பூவரு சாலை – மலர்கள் மலரும்
(இலைக்) குடில்; நோக்குறா – பார்த்து. 24-1

297. ‘மேனகை, திலோத்தமை,
முதல ஏழையர்,
வானகம் துறந்து வந்து,
அவன் தன் மாட்சியால்,
ஊனம் இல் அடைப்பை, கால்
வருடல், ஒண் செருப்பு,
ஆனவை முதல் தொழில் அவரது ஆகுமே.
ஏழையர் – பெண்கள்; அடைப்பை – வெற்றிலைப் பை
(தாங்குதல்). 43-1

298. ‘சந்திரன், இரவி
என்பவர்கள்தாம், அவன்
சிந்தனை வழி நிலை
திரிவர்; தேசுடை
இந்திரன் முதலிய அமரர்,
ஈண்டு, அவன்
கந்து அடு
கோயிலின் காவலாளரே.
தேசு – ஒளி; கந்து அடு கோயில் – கட்டுத்தறிகளை முறிக்கும்
(களிறுகள் காவல் காக்கும்) அரண்மனை. 43-2

299. என்றனள்; அபயம், புட்காள்!
விலங்குகாள்! இராமன் தேவி,
வென்றி கொள் சனகன் பேதை,
விதியினால் அரக்கன் தேர்மேல்
தென் திசை சிறைபோகின்றேன்;
சீதை என் பெயரும் என்றாள்;
சென்று அது சடாயு வேந்தன்
செவியிடை உற்றது அன்றே.
புட்காள் – பறவைகளே; பேதை – பெண். 43-2

10. சடாயு உயிர் நீத்த படலம்

300. ‘பின்னவன் உரையினை
மறுத்து, பேதையேன்,
அன்னவன்தனைக் கடிது
அகற்றினேன்; பொரு
மன்னவன் சிறை அற
மயங்கினேன்; விதி
இன்னமும் எவ் வினை
இயற்றுமோ?’ எனா,

பின்னவன் – தம்பி (இலக்குவன்); பொரு மன்னவன் –
(இராவணனை எதிர்த்து) போரிட்ட கழுகரசன் (சடாயு). 45-1

301. சடாயுவைத் தடிந்த வாளைச்
சடுதியில் விதிர்க்கக் கண்டாள்;
‘தடால்’ எனக் கபாடம் சாத்தி,
சாலையுள் சலித்தாள் அந்தோ;
விடாது அட மண்ணை விண்மேல் விரைந்து
எடுத்து உச்சி வேட்டான்,
குடா மதி கோனைச் சேரும்
கோமுகன்-குறளி ஒத்தான்.
கபாடம் – வாயில் (கதவு). 58-1

302. ‘பெண்ணை விட்டு அமைந்திடின்
பிழையது ஆம்’ என,
உள் நிறை கூடமும்
உவந்த சாலையும்,
மண்ணினில் இராமன் மார்பு
அமர்ந்த ஆதியும்
விண்ணினில் மேதினி
வேண்டி எய்தினாள்.

303. முன்னமே பூமியை
முகந்து, பாதலம்-
தன்னிலே தரித்தன
சயமும் தந்திலது
என்னவே, மாகம்மீது
ஏகினான் செய
உன்னியே இராவணன்
உவந்ததொத்துஅரோ.
மாகம் – வானம். 58-3

304. சடாயுவும் சாய்ந்தனன்;
சனகி சாய்ந்தனள்;
விடா செயம் ஏதியும் பிற
கதி வேறு உளோள்
தொடா மறைக் கிரியையும்
சுவைத்த கோமகன்
அடாத மேற் செயல் எலாம்
அமைத்தல் என்சயம்?
ஏதி – ஆயுதம். 58-4

305. மூன்று பத்து ஒருபது
முந்து யோசனை
ஏன்றது; பாவையும், ‘ஏது’?
என்று எண்ணும்முன்,
தோன்றினன் சுபாரிசன்;
தொழுது, ‘தொல் உலகு
ஈன்றவள் இவள்’
என, இசைத்து இறைஞ்சியும்.
மூன்று பத்து ஒருபது – நாற்பது. 58-5

306. ‘இசைக் கடல் உறைபவ!
இலங்கை வேந்தன் நீ;
திசைப்படாப் புவனம் உன்
செல்வம்; என்னதோ
வசைக் கடல் வாழ்வு; இது
வழக்கு என்று எண்ணியோ,
துசக் கடல் மொழி செலத்
தொழுது போயினான்?
இசைக்கடல் – புகழ்க்கடல். 58-6

307. தேன்றிரும் இராவணன்
சேற என்று எதிர்ந்து,
ஊன்று செம்பாதி சேய்
தூண்டத் தூண்டிட,
மூன்று தன் பதத்தில்
ஒன்று இழிந்த மொய் கரத்து
ஊன்று தண்டு ஒடிந்தென
வீழ ஓடினான்.
(301 – 307 பாடல்கள் தெளிவில்லை). 59-1
11. அயோமுகிப் படலம்

308. என்று அவள் கூறலும்,
மைந்தனும், ‘இன்னே
நன்றியதாய நறும்
புனல் நாடி,
வெனறி கொள் வீரன்
விடாய்அது தீர்ப்பான்
இன்று இவண் வந்தனன்’
என்று உரைசெய்தான்.
நன்றியதாய – நல்லதான; வென்றி கொள்வீரன் – வெற்றி
கொள்ளும் வீரன் (இராமன்); விடாய் – தாகம். 55-1

12. கவந்தன் படலம்

309. ‘பாரிடமே இது;
பரவை சுற்றுறும்
பார் இடம் அரிது எனப்
பரந்த மெய்யது;
பார், இடம் வலம்
வரப் பரந்த கையது:-
பார் இடந்து எடுத்த
மா அனைய பாழியாய்!
பாரிடம் – பெரிய இடம்; பரவை சுற்றும் பார் – கடல் சூழ்ந்த
உலகம்; பாழி – வலிமை. 21-1

310. காவாய் என்பால், தன்
ஐயரான் கைவிட வல்லேன்;
வேவா நின்றே நிற்க, ‘இவ்
வெய்யோற்கு இணை ஆவார்
நீ வா, என்ன, அன்னது
கண்டும், அயர்கில்லேன்;
போவேன் யானே; எவ் உலகோ,
என் புகல் அம்மா!
இவ்வெய்யோற்கு – இந்தக் கொடியவனுக்கு. 29-1

13. சவரி பிறப்பு நீங்கு படலம்

311. ‘மாங்கனி, தாழையின் காய்,
வாழையின் கனிகளோடும்,
ஆம் கனி ஆவதே என்று அருந்தி,
நான் விரும்பி வைத்தே
பாங்கின் நல் அமுது செய்மின்’
என்று அவள் பரவி, நல்கும்
தேம் கனி இனிதின் உண்டு,
திருஉளம் மகிழ்ந்தான், வீரன்.
அமுது செய்மின் – சாப்பிடுங்கள். 5-1

————- ————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கம்ப ராமாயணம்–அயோத்தியா காண்டம்-மிகைப் பாடல்கள்-

December 14, 2020

1. மந்திரப் படலம்

மன்னனே! அவனியை
மகனுக்கு ஈந்து, நீ
பன்ன அருந்தவம்
புரி பருவம் ஈது’ என,
கன்ன மூலத்தினில்
கழற வந்தென,
மின் எனக் கருமை போய்
வெளுத்தது – ஓர் மயிர்.

அவனி – பூமி; கன்ன மூலம் – காதின் அடியில், காது அடியில்
தலைமயில்நரைத்தல் முதுமைக்கு அடையாளம் ஆகும்; சுழறல் –
இடித்துரைத்தல்.

———-

தீங்கு இழை இராவணன்
செய்த தீமைதான்
ஆங்கு ஒரு நரையது
ஆய் அணுகிற்றாம் என,
பாங்கில் வந்திடு நரை
படிமக் கண்ணடி
ஆங்கு அதில் கண்டனன் –
அவனி காவலன்

படிமம் – பிரதிமா என்னும் வடசொல் திரிபு. தன்னுடைய உருவம்.

———-

எய்திய முனிவரன்
இணைகொள் தாமரை
செய்ய பூங் கழலவன்
சென்னி சேர்த்த பின்,
‘வையகத்து அரசரும்
மதி வல்லாளரும்
வெய்தினில் வருக’ என
மேயினான் அரோ.-4-1-

முனிவரன் – வசிட்டன்; செய்ய பூங்கழலவன் – தயரதன்;
மதிவல்லாளர்- அறிவின் வலிமை படைத்தவர், இங்கே அமைச்சர்;
வெய்து – விரைவாக; அரோ- அசை.

————-

ஆளும் நல் நெறிக்கு அமைவரும்
அமைவினன் ஆகி,
நாளும் நல் தவம் புரிந்து,
நல் நளிர் மதிச் சடையோன்
தாளில் பூசையின் கங்கையைத்
தந்து, தந்தையரை
மீள்வு இல் இன் உலகு
ஏற்றினன் ஒரு மகன், மேல்நாள்.–66-1-

நளிர் மதிச் சடையோன் – சிவபிரான். சிவனை வழிபட்டுக்
கங்கையைக்கொணர்ந்து தன் முன்னோர்கள் ஆய சகரர்களை நல்லுலகு
சேர்ப்பித்தவன்பகீரதன்.

————

‘நறைக் குழற் சீதையும்
ஞால நங்கையும்,
மறுத்தும், இங்கு ஒருவற்கு
மணத்தின்பாலரோ –
கறுத்த மா மிடறுடைக்
கடவுல் கால வில்
இறுத்தவற்கு அன்றி?’ என்று
இரட்டர் கூறினார்.–76-1-

மறுத்தும் – மீட்டும் – இங்கே ‘வேறும்’ என்பது பொருள்; கடவுள்-
சிவன்; இரட்டர் – இரட்டதேயத்து அரசர்.

———-

‘ஏத்த வந்து உலகு எலாம்
ஈன்ற வேந்தனைப்
பூத்தவன் அல்லனேல்,
புனித வேள்வியைக்
காத்தவன் உலகினைக்
காத்தல் நன்று’ என,
வேத்தவை வியப்புற,
விதர்ப்பர் கூறினார்.-76-2-

பூத்தவன் – திருமால்; வேள்வியைக் காத்தவன் – விசுவாமித்திரனது
வேள்வியைக் காத்தளித்த இராமன்.

——-

பெருமையால் உலகினைப்
பின்னும் முன்னும் நின்று
உரிமையோடு ஒம்புதற்கு
உரிமை பூண்ட அத்
தருமமே தாங்கலில்
தக்கது; ஈண்டு ஒரு
கருமம் வேறு இலது’ எனக்
கலிங்கர் கூறினார்.–76-3-

‘தருமமே தாங்கல்’ என்பது இராமனை நினைத்துக் கூறியதாம்.

———

கேடு அகல் படியினைக்
கெடுத்து, கேட இலாத்
தாடகை வலிக்கு ஒரு
சரம் அன்று ஏவிய
ஆடக வில்லிக்கே
ஆக, பார்!’ எனாத்
தோடு அவிழ் மலர் முடித்
துருக்கர் சொல்லினார்.–76-4-

படி – பூமி; ஆடக வில்லி – பொன் வில்லை உடைய இராமன்;
ஆடகம்- பொன் வகைகளுள் ஒன்று. ஆடகம், சாம்பூநதம், கிளிச் சிறை,
சாதரூபம் என்பவை பொன்னின்நான்கு வகைகள். இவற்றைச் செம்பொன்,
கரும்பொன், பசும்பொன், வெண்பொன்என்பர்.

———–

‘கற்ற நான்மறையவர்
கண்ணை, மன்னுயிர்
பெற்ற தாய் என அருள்
பிறக்கும் வாரியை,
உற்றதேல் உலகினில்
உறுதி யாது?’ என,
கொற்றவேல் கனை கழல்
குருக்கள் கூறினார்.–76-5-

வாரி – கடல்; கனை – செருக்கிய; குருக்கள் – குரு
தேசத்தவர்கள்.

——–

வாய் நனி புரந்த மா
மனுவின் நூல் முறைத்
தாய் நனி புரந்தனை,
தரும வேலினாய்,!
நீ நனி புரத்தலின்
நெடிது காலம் நின்
சேய் நநி புரக்க!’ எனத்
தெலுங்கர் கூறினார்.–76-6-

வாய்- இடம்; முறைத்தாய்- முறைப்படி; நின் சேய்- இராமன்.

———

‘வையமும் வானமும்
மதியும் ஞாயிறும்
எய்திய எய்துப; திகழும்
யாண்டு எலாம்,
நெய் தவழ் வேலினாய்!
நிற்கும் வாசகம்;
செய் தவம் பெரிது!; எனச்
சேரர் கூறினார்.–76-7-

நிற்கும் வாசகம் – புகழ்.

———

பேர் இசை பெற்றனை;
பெறாதது என், இனி?
சீரியது எண்ணினை;
செப்புகின்றது என்?
ஆரிய! நம் குடிக்கு
அதிப! நீயும் ஓர்
சூரியன் ஆம்’ எனச்
சோழர் சொல்லினார்.-76-8-

ஆரிய – தசரதனை நோக்கிய விளி. மேலோனே என்பதாம். சோழர்
சூரிய குலத்தவர்ஆதலின் ‘நம் குடிக்கு’ என்றார்.

———

ஒன்றிய உவகையர்;
ஒருங்கு சிந்தையர்,
தென் தமிழ் சேண் உற
வளர்த்த தென்னரும்,
‘என்றும் நின் புகழொடு
தருமம் ஏமுற,
நின்றது நிலை’ என
நினைந்து கூறினார்.–76-9-

தென்னர்- பாண்டியர்; ஏமுற- ஏமம்; உற- பாதுகாப்பு அடைய.

———-

‘வாள் தொழில் உழவ! நீ
உலகை வைகலும்
ஊட்டினை அருள் அமுது;
உரிமை மைந்தனைப்
பூட்டினை ஆதலின்,
பொரு இல் நல் நெறி
காட்டினை; நன்று’ எனக்
கங்கர் கூறினார்.–76-10-

வாள் தொழில் உழவ! – தயரதனை நோக்கிய விளி. “வில்லேர்
உழவர்” என்பது போல.

——–

‘தொழு கழல் வேந்த! நின்
தொல் குலத்துளோர்
முழு முதல் இழித்தகை
முறைமை ஆக்கி, ஈண்டு
எழு முகில் வண்ணனுக்கு
அளித்த இச் செல்வம்
விழுமிது, பெரிது!’ என
மிலேச்சர் கூறினார்.–76-11-

முகில் வண்ணன் – இராமன்; இச்செல்வம் – அரசுச் செல்வம்.

———-

‘கொங்கு அலர் நறு விரைக்
கோதை மோலியாய்!
சங்க நீர் உலகத்துள்,
தவத்தின் தன்மையால்,
அங்கணன் அரசு
செய்தருளும் ஆயிடின்’-
சிங்களர் – ‘இங்கு இதில்
சிறந்தது இல்’ என்றார்.-76-12-

கோதை – மாலை; மோலி – மௌலி, அதாவது மகுடம்;
அங்கணன்-அருள் கண்ணையுடைய இராமன்.

———

ஆதியின் மனுவும் நின்
அரிய மைந்தற்குப்
பாதியும் ஆகிலன்;
பரிந்து வாழ்த்தும் நல்
வேதியர் தவப் பயன்
விளைந்ததாம்’ என,
சேதியர் சிந்தனை
தெரியச் செப்பினார்.–76-13-

ஆதியின் மனு – வைவஸ்வத மனு, சூரிய குல முன்னோன்; பரிந்து- அன்புகொண்டு; சேதியர் – சேதி நாட்டவர்.

———–

அளம் படு குரை கடல்
அகழி ஏழுடை
வளம் படு நெடு நில
மன்னர் மன்னனே!
உளம் படிந்து உயிர் எலாம்
உவப்பது ஓர் பொருள்
விளம்பினை பெரிது!’ என
விராடர் கூறினார்.–76-14-

அளம் – வயல், உப்பளம் என்பது போல.

———-

பொன்னும், மா மணியும்.
புனை சாந்தமும்,
கன்னி மாரொடும்
காசினி ஈட்டமும்,
இன்ன யாவையும்
ஈந்தனள், அந்தணர்க்கு,
அன்னமும் தளிர்
ஆடையும் நல்கினான்.–9-1-

அந்தணர்க்கு ஈந்தனள் என முடிக்க. நல்கினாள். கோசலை.

—————

நல்கி, நாயகன்
நாள்மலர்ப் பாதத்தைப்
புல்லிப் போற்றி,
வணங்கி, புரை இலா
மல்லல் மாளிகைக்
கோயில் வலங்கொளா,
தொல்லை நோன்புகள்
யாவும் தொடங்கினாள்.-9-2-

புரை – குற்றம். உயர்ச்சி என்பதும் ஆம்; தனக்கு மேல் உயர்ச்சி
இல்லாத எனஉரைக்க. நோன்பு – விரதம்.

————

கடி கமழ் தாரினான்,
கணித மாக்களை
முடிவ உற நோக்கி, ஓர்
முகமன் கூறி, பின்,
‘வடி மழுவாளவற்
கடந்த மைந்தற்கு
முடி புனை முதன்மை நாள்
மொழிமின்’ என்றனன்.–9-3-

கணித மாக்கள் – சோதிடர்; வடி மழுவாளவன் – பரசு ராமன்.

——–

3. கைகேயி சூழ்வினைப் படலம்-

வந்து மன் நகரில் தம்தம்
வகைப்படும் உருவம் மாற்றி,
சுந்தரத் தடந்தோள் மாந்தர்
தொல் உருச் சுமந்து தோன்றாது,
அந்தரத்து அமரர், சித்தர்,
அரம்பையர், ஆதி ஆக
இந்திரை கொழுநற் போற்றி
இரைத்துமே எய்தி நின்றார்–75-1

மன் நகர் – அரச நகரம், அயோத்தி. அமரர், சித்தர், அரம்பையர்
முதலியோர் வடிவம் மறைத்து மனித வடிவில் அயோத்தியில் வந்து நின்றார்
என்பதாம்; இந்திரை – திருமகள். 75-1

——

4. நகர் நீங்கு படலம்-

விழுந்து பார்மிசை,
வெய்து உயிர்த்து, ஆவி சோர்ந்து,
எழுந்து, ‘என் நாயகனே!
துயர் ஏது எனாத்
தெளிந்திலேன்; இது
செப்புதி நீ’ எனா,
அழுந்தினாள்; பின்னர்
அரற்றத் தொடங்கினாள்.-29-1-

வெய்து உயிர்த்து – வெப்பமாக மூச்சு விட்டு, பெருமூச்சு விடுதலாம்;
அழுந்தினாள்- துன்பத்தில் மூழ்கினாள்.

————

அன்னாள் இன்ன பன்னி
அழியத் துயரால், மன்னர்
மன்னானவனும் இடரின்
மயங்கி, ‘மைந்தா! மைந்தா!
முன்னே வனம் ஏகிடல் நீ
முறையோ? முதல்வா! முறையோ?
என்னே, யான் செய் குறைதான்?’
என்றே இரங்கி மொழிவான்;–53-1-

பன்னி – பலமுறை சொல்லி; மன்னர் மன் ஆனவனும் – தயரதனும்.

———-

உணர்வு ஏதும் இலாள் உரையால்
உரை சால் குமரன் நெடு நாள்
புணரான் நிலம்; மா வனமே
போவானேயாம்; என்னில்,
இணரே பொலி தார் நிருபா;
இடரால் அயர்வாய்; இதுவும்
துணையோ? – துணைவா!’ என்றாள்;
‘துயரேல் ! துயரேல்!’ என்றாள்.–53-2-

குமரன் – இராமன்; இணர் – பூங்கொத்து.

———-

சேல் ஆகிய மா முதல்வன்
திரு உந்தியின் நீள் மலரின்-
மேல் ஆகிய நான்முகனால்,
வேதங்களின் மா முறையின்-
பால் ஆகிய யோனிகளின்
பல ஆம் வருணம் தருவான்,
நால் ஆகியது ஆம் வருணம்தனின்,
முன் எமை நல்கினனால்.–76-1-

சேல் ஆகிய மா முதல்வன் – மீனாக அவதாரம் செய்த திருமால்;
முன் -முதல் வருணம், அந்தணர் பிறப்பில்.

———–

‘ “அந் நான்மறையோன் வழியில்,
அருள் காசிபன் நல் மைந்தன்,
மின் ஆர் புரி நூல் மார்பன்,
விருந்தேசனன் மெய்ப் புதல்வன்,
நல் நான்மறை நூல் தெரியும்
நாவான் சலபோசன் எனச்
சொன்னான் முனிவன் தரு
சுரோசனன் யான்” என்றான்.–76-2-

பிரமன் – காசிபன், விருத்தேசனன், சலபோசன், சுரோசனன் எனக்
குல முறைக்காண்க.

———

தாவாத அருந்தவர் சொல்
தவறாததானால், தமியேன்
சாவாதவரும் உளரோ? தண்டா
மகவு உண்டு’ என்றே
ஓவாதவர் முன் நின்றறேன்;
ஒரு சொல் உடையாது அவரும்,
பூவார் அனலுள்பொன்றி,
பொன் – நாடு அதனின் புக்கார்.’–86-1-

தவறாது அதனால் – எனப் பிரிக்க; ஒரு சொல் உடையாது –
ஒன்றும் பேசாது.

———

இம் மா மொழி தந்து அரசன்
இடர் உற்றிடுபோழ்தினில், அச்
செம் மா மயில் கோசலையும்,
திகையா, உணர்வு ஓவினளால்;
மெய்ம்மாண் நெறியும், விதியின்
விளைவும், தளர்வின்றி உணரும்
அம்மா தவனும் விரைவோடு
அவலம் தரு நெஞ்சினனாய்.–87-1-

ஓவினள் – ஒழிந்தாள்; மாதவன் – வசிட்டன்

——

என்று என்று சீற்றத்து
இளையோன் இது இயம்பிடாமுன்,
கன்று ஒன்றும் ஆவின்
பல யோனியும் காத்த நேமி
வன் திண் சிலைக் கைம்
மனு என்னும் வயங்கு சீர்த்திக்
குன்று ஒன்று தோளான்
மருமான் இவை கூறலுற்றான்;–127-1-

மருமான் – பரம்பரையில் வந்தவன். இராமன்.

———–

ஆய் தந்த மென் சீரை அணிந்து
அடி தாழ்ந்து நின்ற
சேய் உந்து நிலை நோக்கினள்,
சேய் அரிக் கண்கள் தேம்ப,
வேண் தந்த மென் தோளி தன்
மென் முலை பால் உகுப்ப –
தாய், ‘நிந்தை இன்றிப் பல ஊழி
தழைத்தி!’ என்றாள்.–147-1-

ஆய் – தாய், கைகேயி; தாய் – சுமித்திரை.

—————

‘வானமே அனையது ஓர்
கருணை மாண்பு அலால்
ஊனம் வேறு இலானுடன்,
உலகம், யாவையும்,
கானமே புகும்எனின்,
காதல் மைந்தனும்
தானுமே ஆளும்கொல் தரை?’
என்றார் சிலர்.–191-1-

ஊனம் வேறு இலான் – இராமன். இராமனுடன் அனைவரும் காடு
சென்றால் கைகேயியும்,பரதனுமே ஆள்வார்களோ இப்பூமியை என்பது
மக்கள் கூற்று,.

———–

போயினான் நகர்
நீங்கி – பொலிதரு
தூய பேர் ஒளி ஆகி,
துலங்கு அருள்
ஆய மூவரும் ஆகி,
உயிர்த் தொகைக்கு
ஆயும் ஆகி,
அளித்தருள் ஆதியான்.–234-1-

பேரொளி ஆகி, மும்மூர்த்திகள் ஆகிய பிரமன், திருமால், சிவன்
ஆகி; உயிர்த்தொகைக்கு ஆயும் ஆகி – உயிர்களுக்குத் தாயும் ஆகி
உள்ள இராமன்.

———–

5. தைலம் ஆட்டு படலம்-

தொடுத்த கலிடைச் சிலர்
துவண்டனர், துயின்றார்;
அடுத்த அடையில் சிலர்
அழிந்தனர் அயர்ந்தார்;
உடுத்த துகில் சுற்று
ஒரு தலைச் சிலர் உறைத்தார்;
படுத்த தளிரில் சிலர்
பசைந்தனர் அசைந்தார்.–16-1-

கல் இடை – கல்லிடத்து; அடை – இலை; பசைந்தனர் – அன்பு
கொண்டவராய்.

———

ஒரு திறத்து உயிர் எலாம்
புரந்து, மற்று அவண்
இரு திறத்து உள வினை
இயற்றும் எம்பிரான்
தரு திறத்து ஏவலைத்
தாங்கி, தாழ்வு இலாப்
பொரு திறல் சுமந்திரன்
போய பின்னரே.–46-1-

இரு திறத்து உள வினை – நல்வினை, தீவினை.

———-

துந்துமி முழங்க, தேவர்
தூய் மலர் பொழிந்த வாழ்த்த,
சந்திர வதனத்து ஏயும்
அரம்பையர் தழுவ, தங்கள்
முந்து தொல் குலத்துளோரும்
முக்கணான் கணமும் சூழ,
அந்தரத்து அரசன் சென்றான்,
ஆன தேர்ப் பாகன் சொல்லால்.–59-1-

அரசன் – தயரதன்.

———

6. கங்கைப் படலம்-

அன்ன காரணத்து
ஐயனும், ஆங்கு அவர்
உன்னு பூசனை
யாவும் உவந்தபின்,
மின்னு செஞ் சடை
மெய்த் தவர் வேண்டிட,
பன்ன சாலையின்
பாடு இருந்தான் அரோ.–27-1-

பன்ன சாலை – தவத்தோர் தங்கும் குடில்; பர்ண சாலை – பன்ன
சாலை ஆயிற்று; இலை, தழைகளால் வேயப்பெற்றது. ‘அரோ’ அசை.

———–

7. குகப் படலம்

நின்றான் நெஞ்சில்
நிரம்புறும் அன்பால்,
இன்றே நின் பணி
செய்திட, இறைவா!
நன்றே வந்தனென்;
நாய் அடியேன் யான்’
எயினரின் இறையோன்.–10-1-

எயினர்- வேடர்; இறைவா- இராமனே;கூவினன்- அழைத்தான்.

——–

வெயில் விரி கனகக் குன்றத்து
எழில் கெட விலகு சோதிக்
கயில் விரி வயிரப் பைம் பூண்
கடுந் திறல் மடங்கல் அன்னான்
துணில் எனும் அணங்கு வந்து
தோன்றலும், அவளை, ‘நாமே
எயிலுடை அயோத்தி மூதூர்
எய்து நாள் எய்துக!’ என்றான்.–22-1-

கனகக் குன்றத்து….சோதி என்றது இலக்குவன் திருமேனியை; கயில்-
மூட்டு; மடங்கல் – சிங்கம். சிங்கம் அன்னான் இலக்குவன். தூக்கம் என்னும்
மகள்அங்கே வந்தாள். அவளை நாம் அயோத்திக்கு வருகின்ற நாளில்
எம்பால் வருக என்றான்இலக்குவன்; பதினான்கு ஆண்டுகளும் உறங்காமல்
இருந்தான் ஆதலின் ‘உறங்காவில்லி’ என்பது அவனுக்கு ஒரு பெயர்.

———-

மறக் கண் வாள் இளைய வீரன்
ஆணையை மறுத்தல் செல்லா
உறக்க மா மாதும், அண்ணல்
உபய பங்கயங்கள் போற்றி,
‘துறக்கமாம், என்னல் ஆய
தூய மதில் அயோத்தி எய்தி
இறுக்கும்நாள், எந்தை பாதம்
எய்துவல்’ என்னப் போனாள்.–22-2-

உபய பங்கயம் – இரண்டாகிய தாமரை – இங்கே திருவடிக்கு
உருவகம். துயில் மடந்தைஇலக்குவனைத் தீண்டாது சென்றாளாம்.

——–

மற்றவள் இறைஞ்சி ஏக,
மா மலர்த் தவிசின் நீங்காப்
பொற்றொடி யோடும் ஐயன்
துயில்தரும் புன்மை நோக்கி,
இற்றது ஓர் நெஞ்சன் ஆகி,
இரு கண் நீர் அருவி சோர,
உற்ற ஓவியம்அது என்ன,
ஒரு சிலை அதனின் நின்றான்.–22-3-

ஒரு சிலை – ஒரு கல். இனி ஒரு வில் எனலும் ஆம் ‘வில்லை
ஊன்றிய கையோடும்நின்றான்’ என வருதலின்.

———

9. சித்திரகூடப் படலம்-

நெய் கொள் நீர் உண்டு,
நெருப்பு உண்டு, நீண்டு, மைந் நிறைந்த
வை கொள் வேல் எனக்
காலனும் மறுகுறும் கண்ணாய்!
மெய்கள் நோகின்ற பிடிகளை
விரும்பிய வேழம்
கைகள் நோகில தாங்கின
நிற்பன காணாய்!’–36-1-

மெய் நோவுற்ற பெண்யானைகளை ஆண் யானைகள் தம் கை நோவு
கருதாது தாங்கிக்கொண்டுநிற்பனவாம்.

———-

விடம் கொள் நோக்கி! நின்
இடையின் மின் என வெருவி,
படம் கொள் நாகங்கள் முழை
புகப் பதைப்பன பாராய்!
மடங்கள் ஆளிகன் எனக்
கொடு மழைஇனம் முழங்க,
கடம் கொள் கார் மதக்
மைம்மலை இரிவன காணாய்!–36-2-

மின்னலைக் கண்டு பாம்பு அஞ்சும். இடிகேட்டு வெருளும் நாகம். இடி,
மின்னல் இரண்டும்ஒன்றே. சிங்கம் போல மேகம் முழங்க யானைகள்
ஓடுகின்றன.

——–

எய்த இன்னல் வந்த போது
யாவரேனம் யாவையும்
செய்ய வல்லர் என்று கொள்க;
சேண் நெறிக்கண் நீங்கிட,
மைய கண்ணி செய்ய பாதம்
வல்ல ஆய; எம்பிதன்
கைகள் இன்று பன்னசாலை
கட்ட வல்ல ஆயவே.’–50-1-

‘துன்பம் வந்த போது யாரும் எவையும் செய்ய வல்லவர்’ என்ற உலக
நீதி இங்குக்கூறப்படுகிறது.

———-

‘தினைத் துணை வயிறு
அலாச் சிற்றெறும்புகள்
வனத்திடைக் கரிகளை
வருத்தி வாழ்வன;
அனைத்து உள உயிர்களும்
யாவும் அங்ஙனே;
மனத்து இடர் நீங்கினார்
இல்லை. மன்னனே!’–55-1-

எறும்பும் யானையை வருத்துகிறது. எல்லா உயிர்களும் ஒன்றையொன்று
வருத்துகின்றன. துன்பம்அற்றவர் யாரும் இல்லை என்றபடி.

————

10. பள்ளிபடைப் படலம்

ஆய காதல்
தனையனைத் தந்த அத்
தூய தையல்
தொழிலுறுவார், ‘உனைக்
கூயள் அன்னை’ என்றே
சென்று கூறலும்,
ஏய அன்பினன்தானும்,
சென்று எய்தினான்.–41-1-

தொழில் உறுவார் – ஏவல் மகளிர்; அன்பினன் – இராமன்.

————-

தீ அன கொடியவள்
செய்த செய்கையை
நாயினேன் உணரின், நல்
நெறியின் நீங்கலாத்
தூயவர்க்கு இடர் இழைத்து
உழலும் தோமுடை
ஆயவர் வீழ் கதி
அதனின் வீழ்க, யான்’–116-1-

தோம் – குற்றம். நல்லவர்க்குத் தீங்கு செய்யும் கயவர்கள் செல்லும்
நரககதியில் நான் செல்வேனாக.

———

உந்து பொன்
தடந் தேர் வலானொடும்,
மந்திரப் பெருந்
தலைவர், மற்றுளோர்,
தந்திரத் தனித்
தலைவர், நண்பினோர்,
வந்து சுற்றும் உற்று,
அழுது மாழ்கினார்.–125-1-

தேர் வலான் – சுமந்திரன்; மாழ்கினார் – மயங்கினார்,

————–

என்று கொண்டு மா
தவன் இயம்பலும்,-
நின்று நின்று தான்
நெடிது உயிர்த்தனன்;
‘நன்று, நன்று!’ எனா
நகை முகிழ்த்தனன்;-
குன்று குன்றுறக்
குலவு தோளினான்.–131-1-

மா தவன் – வசிட்டன்; முகிழ்த்தல் – மொக்குவிட்டு மலர்தல்,
அங்குச் சிரித்தான் என்பது பொருள்; தோளினான் – பரதன்.

———

அன்னதாக, அங்கு,
ஆறு பத்து எனச்
சொன்ன ஆயிரம்
தோகைமார்களும்,
துன்னி வந்தனர்-
சோர்வு இலாது, அவர்
மின்னும் வாள்
எரிமீது வீழவே.–136-1-

அறுபதினாயிரம் மனைவியர்களும் தீக்குளித்தனர்.

————

11. கங்கை காண் படலம்

வந்து எதிரே விழுந்தவனும்
வணங்கினான்; வணங்காமுன்,
சந்த நெடுந் திரள்
புயத்தான் தழுவினான்; தழுவியபின்,
இந்த இடர் வடிவுடன் நீ
எங்கு எழுந்தாய் – இமையோர்தம்
சிந்தையினும் சென்னியினும்
வீற்றிருக்கும் சீர்த்தியாய்!– 32-1-

2334 ஆம் பாடலின் மாற்றுருவம் இப்பாடல்.

———

ஏறினர் இளவலோடு,
இரங்கு நெஞ்சு கொண்டு
ஊறிய தாயரும்
உரிய சுற்றமும்;
பேறு உள பெரு நதி
நீங்கி, பெட்போடும்
கூறு தென் கரையிடைக்
குழீஇய போதிலே.–63-1-

பேறு உள பெருநதி – புண்ணியப் பயன் உடைய கங்கை.

————

தன் அன தம்பியும்,
தாயர் மூவரும்,
சொன்ன தேர் வலவனும்,
தூய தோழனும்,
துன்னினர் ஏறலும்,
துழா துடுப்பு எனும்
நல்நயக் காலினால்
நடத்தல் மேயினான்.–63-2-

தம்பி – சத்துருக்கனன்; தேர் வலவன் – சுமந்திரன்; தோழன் –
குகன்; துழா துடுப்பு – துழாவுகின்ற துடுப்பு. இனி துழாவும், துடுப்பும்
என்னும் இரண்டுகால்களால் படகை நடத்துதல் என்றும் ஆம். துழா
என்பது நீரைத் துழாவும் நீண்ட கோல் ஆகும். துடுப்பு – மட்டை
ஆகும்.

———-

அன்ன காதல்
அருந் தவர், ‘ஆண் தகை!
நின்னை ஒப்பவர் யார்
உளர், நீ அலால்?’
என்ன வாழ்த்திடும்
ஏல்வையில், இரவியும்
பொன்னின் மேருவில்
போய் மறைந்திட்டதே.–5-1-

ஏல்வை – பொழுது.

————-

இன்ன ஆய
எறி கடல் சேனையும்,
மன்னர் யாவரும்,
மன் இளந் தோன்றலும்,
அன்ன மா முனியோடு
எழுந்து, ஆண்தகை
துன்னு நீள் வரைக்கு
ஏகிய சொல்லுவாம்.–19-1-

ஆண்தகை துன்னு – இராமன் தங்கியுள்ள.

—————–

ஐய! நின்னுடைய
அன்னை மூவரும்,
வைய மன்னரும்,
மற்றும் மாக்களும்.
துய்ய நாடு ஒரீஇத்
தோன்றினார்; அவர்க்கு
உய்ய நல் அருள்
உதவுவாய்’ என்றான்.–89-1-

ஒரீஇ – நீங்கி.

————-

கங்குல் வந்திடக்
கண்டு, யாவரும்
அங்கணே துயில்
அமைய, ஆர் இருள்
பொங்கு வெம் பகை,
போக, மற்றை நாள்,
செங் கதிர் குண
திசையில் தோன்றினான்.–94-1-

அங்கணே – அவ்விடத்தே.

———–

‘வானின் நுந்தை சொல்
மரபினால் உடைத்
தானம் நின்னது என்று
இயைந்த தன்மையால்,
ஊனினில் பிறந்து
உரிமையாகையின்
யான் அது ஆள்கிலேன்’ என,
அவன் சொல்வான்.–111-1-

2485 ஆம் பாடலின் மாற்றுவரும் இது. இராமன் கூறும் பாட்டைத்
திருப்பிப் பரதன் கூற்றாகமாற்றியதாகும். தயரதன் சபையில் கூறிய
சொல்லால் அரசு நின்னதாயிற்று; ஊனினில் பிறந்து- தயரதனிடத்தில்
பிறந்து; நீ உரிமையாகையின் – நீ மூத்தவனாய் உரிமைபெற்றபடியால்.
யான் அது ஆள்கிலேன் என்றான் பரதன் என்க. இதை இராமன்
கூற்றாகவும்உரைக்கலாம்.

——————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கம்ப ராமாயணம்/அயோத்தியா காண்டம்/ 12- கங்கை காண் படலம்–

December 13, 2020

பூ விரி பொலன் கழல், பொரு இல் தானையான்,
காவிரி நாடு அன்ன கழனி நாடு ஒரீஇ,
தாவர சங்கமம் என்னும் தன்மைய
யாவையும் இரங்கிட, கங்கை எய்தினான்.–1-

பூவிரி – பூத் தொழிலாற் சிறப்புற்ற; பொலன்கழல் – பொன்னாற்
செய்யப்பெற்ற வீரக்கழலை அணிந்த; பொருஇல் தானையான் – ஒப்பற்ற
சேனையை உடையபரதன்; காவிரி நாடு அன்ன – காவிரி நதியால்
வளம்பெறும் (தமிழகத்துச்) சோழ நாட்டை ஒத்த;
கழனி நாடு ஒரீஇ- வயல்வளம் பொருந்திய கோசல நாட்டை விட்டு
நீங்கி; தாவர சங்கமம் என்னும் தன்மையயாவையும் – நிலைத்திணை;
இயங்கு திணை என இரண்டாகப் பிரிக்கப்பெறும் எல்லாஉயிர்களும்;
இரங்கிட – (தன் நிலை கண்டு) வருந்த; கங்கை எய்தினான் -கங்கைக்
கரையை அடைந்தான்.

——–

எண்ண அருஞ் சுரும்பு தம் இனத்துக்கு அல்லது,
கண் அகன் பெரும் புனல் கங்கை எங்கணும்
அண்ணல் வெங் கரி மதத்து அருவி பாய்தலால்,
உண்ணவும், குடையவும், உரித்து அன்று ஆயதே.–2-

கண் அகன் – இடம் அகன்ற; பெரும் புனல் – மிக்க நீரை உடைய;
கங்கை – கங்கையாறு; அண்ணல் – பெருமையுடைய; வெங்கரி – கொடிய
யானைகளின்; மதத்து அருவி – மத நீர்ப் பெருக்காகிய அருவி; எங்கணும்
பாய்தலால் – எல்லா இடங்களிலும் பாயப் பெறுதலால்; எண்ண அரும்
சுரும்பு தம் இனத்துக்கல்லது – கணக்கிட முடியாத வண்டுக்
கூட்டங்களுக்கெல்லாமல் (ஏனைய உயிர்களுக்கு); உண்ணவும் – குடிக்கவும்;
குடையவும் – குளித்து மூழ்கவும்; உரித்தன்று ஆயது –
உரிமையுடையதல்லாததாக ஆயிற்று.

———–

அடிமிசைத் தூளி புக்கு, அடைந்த தேவர்தம்
முடி உறப் பரந்தது ஓர் முறைமை தேர்ந்திலெம்;
நெடிது உயிர்த்து உண்டவும், நீந்தி நின்றவும்
பொடிமிசைப் புரண்டவும், புரவி ஈட்டமே.–3-

அடிமிசைத் தூளி புக்கு – (குதிரைகளின்) அடியின் மேல் எழுந்த
தூசி(அமரருலகத்தில்) புகுந்து; அடைந்த தேவர்தம் – அங்கே உள்ள
தேவர்களது; முடி உற- தலைமீது படும்படி; பரந்தது – (தேவருலகு
முழுமையும்) பரவியது (ஆகிய); ஓர் முறைமைதேர்ந்திலெம் – ஒரு
தன்மையை (அனுமானிக்க முடிகிறதன்றி) மனிதராகிய (எம்மால்)
ஆராய்ந்தறிய இயலவில்லை; நெடிது உயிர்த்து உண்டவும் – பெருமூச்சு
விட்டு (நீரைப்)பருகியவையும்; நீந்தி நின்றவும் – (நீரில்) நீந்திக்கொண்டு
இருந்தவையும்; பொடிமிசைப் புரண்டவும் – மண்ணில் விழுந்து
புரண்டவையும்; (எல்லாம்) புரவி ஈட்டமே- குதிரைத் தொகுதிகளே.
(வேறில்லை)

———–

பாலை ஏய் நிறத்தொடு, பண்டு தான் படர்
ஓலை ஏய் நெடுங் கடல், ஓடிற்று இல்லையால்;-
மாலை ஏய் நெடு முடி மன்னன் சேனை ஆம்
வேலையை மடுத்தது, அக் கங்கை வெள்ளமே.–4-

அக் கங்கை வெள்ளம் – அந்தக் கங்கையாற்றின் நீர்ப் பெருக்கு;
பாலை ஏய்நிறத்தொடு – பால் ஒத்த வெண்மை நிறத்துடன்; தான்
பண்டு படர் – தான் முன்புசென்று சேர்கின்ற; ஓலை ஏய் நெடுங்கடல்-
ஆரவாரம் பொருந்திய நீண்ட கடலின்கண்; ஓடிற்று இல்லை – சென்று
கலந்தது இல்லை; (ஏன் எனில்) மாலை ஏய் நெடுமுடி -பூமாலை
பொருந்திய நீண்ட மகுடத்தை உடைய; மன்னன் சேனை ஆம்
வேலையே – பரதனது சேனையாகிய கடலே; மடுத்தது – உண்டு விட்டது.

———

கான்தலை நண்ணிய காளைபின் படர்
தோன்றலை, அவ் வழித் தொடர்ந்து சென்றன –
ஆன்றவர் உணர்த்திய அக்குரோணிகள்
மூன்று பத்து ஆயிரத்து இரட்டி முற்றுமே.–5-

கான் தலை நண்ணிய – காட்டிடத்திற் சென்ற; காளை பின்படர் –
இராமன்பின்னே (இராமனை நாடிச்) சென்ற; தோன்றலை – இராமன்
பின்னே (இராமனை நாடிச்)சென்ற; தோன்றலை – பரதனை; அவ்வழி –
அந்த வழியிலே; தொடர்ந்து சென்றன – பின்பற்றிச் சென்ற சேனைகள்;
முற்றும் -; ஆன்றவர் உணர்த்திய -பெரியோர்களால் கணக்கிட்டு
உணர்த்தப்பெற்ற; மூன்று பத்து ஆயிரத்து இரட்டி -அறுபதினாயிரம்;
அக்குரோணிகள் – அக் குரோணிகள் ஆகும்.

அக்குரோனி என்பது ஓர் எண்ணம். யானை இருபத்தோராயிரத்
தெண்ணூற்றெழுபது (21870), தேர்இருபத்தோராயிரத் தெண்ணூற் றெழுபது
(21870). குதிரை அறுபத்தையாயிரத்து அறுநூற்றுப் பத்து (65610), காலாள்
இலக்கத் தொன்பதினாயிரத்து முந்நூற்றைம்பது (190350) ஆக இரண்டு
இலட்சத்துப் பதினெண்ணாயிரத் தெழுநூறு கொண்டது (218700) ஓர்
அக்குரோணி. இப்படிஅறுபதினாயிரம் அக்குரோணி சேனைகள் உடன்
சென்றன என்க-அகௌஹிணீ என்னும் வடிசொற் சிதைவு என்பர்

———-

அப் படை கங்கையை அடைந்த ஆயிடை,
‘துப்புடைக் கடலின் நீர் சுமந்த மேகத்தை
ஒப்புடை அண்ணலோடு உடற்றவே கொலாம்
இப் படை எடுத்தது?’ என்று, எடுத்த சீற்றத்தான்.–6-

அப்படை – அந்தச் சேனை; கங்கையை அடைந்த ஆயிடை –
கங்கைக் கரையைநெருங்கிய அச்சமயத்தில் (அது கண்டு) ‘குகன் எனப்
பெயரிய கூற்றின் ஆற்றலான்’ (2309); இப்படை எடுத்தது – இந்தச் சேனை
புறப்பட்டது; துப்பு உடைக் கடலின் நீர் சுமந்தமேகத்தை – பவளம்
உடைய கடலிலிருந்து நீரை முகந்து சூல் கொண்ட கரு மேகத்தை; ஒப்பு
உடை அண்ணலோடு – உவமையாகப் பெற்ற கரிய திருமேனியுடைய
இராமபிரானோடு; உடற்றவேகொல் – பேர் செய்வதற்காகவேயோ;
என்று – எனக் கருதி; எடுத்தசீற்றத்தான்- மேல் எழுந்த கோபம் உடையவனாய் தென்கரை வந்து
தோன்றினான்

இதுமுதல் ஆறு பாடல்கள்
தொடர்ந்து (2313) ‘தென்கரை வந்து தோன்றினான்’ என்கின்ற இப்படலத்துப்
பதினொராம்பாடலில் முடியும்.

———

குகன் எனப் பெயரிய கூற்றின் ஆற்றலான்
தொகை முரண் சேனையைத் துகளின் நோக்குவான் –
நகை மிக, கண்கள் தீ நாற, நாசியில்
புகை உற, குனிப்புறும் புருவப் போர்விலான்.–7-

குகன் எனப் பெயரிய – குகன் என்ற பெயரை உடைய; கூற்றின்
ஆற்றலான் – யமனை ஒத்த பராக்கிரமத்தை உடைய வேடர் தலைவன்;
தொகை முரண் சேனையை – கூட்டமாகஉள்ள வலிமை படைத்த (பரதன்)
சேனையை; துகளின் நோக்குவான் – ஒரு தூசி போலப்பார்ப்பவனாய்;
நகை மிக – (இகழ்ச்சிச்) சிரிப்பு அதிகமாக; கண்கள் தீ நாற –
கண்களிலிருந்து நெருப்புத் தோன்ற; நாசியில் புகை உற – (உள்ளே
எரியும் கோபநெருப்பால்) மூக்கிலிருந்து புகை வெறிவர; குனிப்புறும் –
(கோபத்தால்) மேலேறிவளைந்த; புருவப் போர்விலான் – புருவமாகிய
போர்க்குரிய வில்லை உடையனானான்.

———-

மை உற உயிர் எலாம் இறுதி வாங்குவான்
கை உறு கவர் அயில் பிடித்த காலன்தான்
ஐ – ஐந் நூறாயிரம் உருவம் ஆயின
மெய் உறு தானையான், வில்லின் கல்வியான்.–8-

மை உற – தீமை உண்டாக; இறுதி உயிர் எலாம் வாங்குவான் –
இறுதிநாள்வந்த பொழுது உயிர்கள் எல்லாவற்றையும் (அவற்றின்
உடலிலிருந்து) வாங்குகின்ற; கை உறுகவர் அயில் பிடித்த காலன்
தான்- கையிற் பொருந்தி முக்கிளையாகப் பிரியும் சூலத்தைஏந்தியயமனே;
ஐ – அழகிய; ஐ நூறாயிரம் உருவம் ஆயின – ஐந்து இலட்சம் வடிவம்
எடுத்தாற் போன்ற; உறு மெய் தானையான் – வலிய உடம்புடைய
சேனையை உடையவன்; வில்லின் கல்வியான் – வில்வித்தையில்
தேர்ந்தவன்.

——-

கட்டிய கரிகையன், கடித்த வாயினன்,
வெட்டிய மொழியினன், விழிக்கும் தீயினன்,
கொட்டிய துடியினன், குறிக்கும் கொம்பினன்,
‘கிட்டியது அமர்’ எனக் கிளரும் தோளினான்.–9-

கட்டிய – (இடைக்கச்சில்) கட்டப்பெற்றுள்ள; கரிகையன் –
உடையவாளை உடையவன்; கடித்த வாயினன் – (பற்களால்) உதட்டைக்
கடித்துக் கொண்டிருப்பவன்; வெட்டிய மொழியினன்- கடுமையாகப் பேசும்
சொற்களை உடையவன்; விழிக்கும் தீயினன்- (கண்கள்) விழித்துப்
பார்க்கும் நெருப்புத் தன்மை உடையவன்; கொட்டிய துடியினன் –
அடிக்கப் பெரும் உடுக்கையை உடையவன்; குறிக்கும் கொம்பினன் –
(போர்) குறித்து ஒலிக்கப் பெறும் ஊது கொம்பினை உடையவன்; ‘அமர்
கிட்டியது’ – ‘போர் அருகில்வந்துவிட்டது;’ எனக் கிளரும் தோளினான்-
என்று கருதி மகிழ்ச்சியால் மேல் எழும்பும்தோள்களை உடையவன் (ஆகி..)
(வரும் பாடலில் முடியும்).

———-

‘எலி எலாம் இப் படை; அரவம், யான்’ என,
ஒலி உலாம் சேனையை உவந்து கூவினான் –
வலி உலாம் உலகினில் வாழும் வள் உகிர்ப்
புலி எலாம் ஒரு வழிப் புகுந்த போலவே.-10-

‘இப்படை எலாம் எலி – இந்தச் (பரதன்) சேனை முழுவதும்
எலிகளாகும்; யான்அரவம் – யான் இந்த எலிகளைத் தின்றொழிக்கும்
பாம்பாவேன்;’ என – என்று வீரவார்த்தை பேசி; வலி உலாம் – வலிமை
நிரம்பிய; உலகினில் வாழும் -உலகத்தில் வசிக்கின்ற; வள் உகிர்ப் புலி
எலாம் – வளவிய நகத்தை உடைய புலிகள்எல்லாம்; ஒரு வழிப் புகுந்த
போல- ஒரே இடத்தில் வந்து சேர்ந்தன என்று சொல்லும்படி உள்ள; ஒலி
உலாம் சேனையை- (தனது) ஆர்ப் பொலி மிகுந்த(வேட்டுவச்) சேனையை;
உவந்து கூவினான் – மகிழ்ச்சியால் (போகுக்கு) அழைத்தன.(ஆகி).

——–

மருங்கு அடை தென் கரை வந்து தோன்றினான் –
ஒருங்கு அடைநெடும் படை ஒல்லென் ஆர்ப்பினோடு
அருங் கடையுகம்தனில், அசனி மா மழை
கருங் கடல் கிளர்ந்தெனக் கலந்து சூழவே,–11-

ஒருங்கு அடை நெடும் படை – ஒன்று சேர்ந்து வந்த பெரிய
(வேட்டுவச்) சேனை; அருங் கடை உகம்தனில் – அரிய கடையூழிக்
கூாலத்தில்; அசனி மா மழை – இடியோடுகூடிய மேகமும்; கருங்கடல் –
கரிய கடலும்; கிளர்ந்து என – (ஒலித்து) மிக்குஎழுந்தார் போல;
கலந்து சூழ – ஒன்று சேர்ந்து தன்னைச் சுற்றிவர; மருங்கு அடை-
பக்கத்தில் உள்ள; தென்கரை – (கங்கையாற்றின்) தெற்குக் கரையில்; வந்து
தோன்றினான் – (குகன் என முடிக்க)

———–

தோன்றிய புளிஞரை நோக்கி, ‘சூழ்ச்சியின்
ஊன்றிய சேனையை உம்பர் ஏற்றுதற்கு
ஏன்றனென், என் உயிர்த் துணைவற்கு ஈகுவான்
ஆன்ற பேர் அரசு; நீர் அமைதிர் ஆம்’ என்றான்.–12-

(தென்கரை வந்து சேர்ந்த குகன்) தோன்றிய புளிஞரை நோக்கி –
(தென்கரையில்தன்னால் அழைக்கப்பட்டுத் தன்முன் வந்து) தோன்றிய
வேடர்களைப் பார்த்து; ‘ஆன்ற பேர்அரசு – நிரம்பிய பெரிய
அரசாட்சியை; என் உயிர்த் துணைவற்கு – என் உயிர்போலச் சிறந்த
தோழனாகிய இராமனுக்கு; ஈகுவான் – தருவதற்காக; சூழ்ச்சியின்ஊன்றிய
சேனையை – (அதனை அவன் பெறாமல் தடுக்கும்) ஆலோசனையோடு
எதிரில் (வடகரையில்)கால் ஊன்றி நிற்கும் (இப்பரதனது) சேனையை;
உம்பர் ஏற்றுதற்கு – (போரில்தொலைத்து) வீரசுவர்க்கத்தே செல்ல
விடுதற்கு; ஏன்றனென் – தொடங்கியுள்ளேன்; நீர் அமைதி ஆம்’ –
நீங்களும் இதற்கு உடன்படுவீர்களாக; என்றான் – என்றுசொன்னான்.

———

துடி எறி; நெறிகளும், துறையும், சுற்றுற
ஓடியெறி; அம்பிகள் யாதும் ஓட்டலிர்;
கடி எறி கங்கையின் கரை வந்தோர்களைப்
பிடி; எறி, பட’ எனா, பெயர்த்தும் கூறுவான்.–13-

‘துடி எறி – போர்ப் பறைகளை அடியுங்கள்; நெறிகளும் துறையும்-
வருவதற்குரிய வழிகளையும் (தென்கரையில்) ஏறுதற்குரிய துறைகளையும்;
ஓடியெறி – அழித்துநீக்கி, இல்லாமல் செய்யுங்கள்; அம்பிகள் யாதும்
ஒட்டலிர் – தோணிகளுள்ஒன்றையும் (கங்கையில்) ஓட்டாதீர்கள்; கடி எறி
கங்கையின் – விரைந்து அலைவீசிவருகின்ற கங்கையாற்றின்; கரை
வந்தோர்களை – தென்கரைக்கு (தரமாக முயன்று)வந்தவர்களை; பிடி –
பிடியுங்கள்; பட எறி’ – இறக்கும்படி அழியுங்கள்; எனா – என்று (குகன்)
கூறி; பெயர்த்தும் -மேலும்; கூறுவான் – சில வீரவார்த்தைகளையும் சொல்லுவான் ஆனான்.

———-

‘அஞ்சன வண்ணன், என் ஆர்
உயிர் நாயகன், ஆளாமே,
வஞ்சனையால் அரசு எய்திய
மன்னரும் வந்தாரே!
செஞ் சரம் என்பன தீ
உமிழ்கின்றன, செல்லாவோ?
உஞ்சு இவர் போய்விடின், “நாய்க்குகன்”
என்று, எனை ஓதாரோ?–14-

‘என் ஆருயிர் நாயகன் – என் அரிய உயிர்த் துணைவனாகிய;
அஞ்சனவண்ணன்- மை போலும் கரிய நிறமான திருமேனி அழகனாகிய
இராமபிரான்; அரசு ஆளாமே – ஆட்சிஉரிமை எய்தாதபடி;
வஞ்சனையால் – சூழ்ச்சியால்; எய்திய -(அவ்வரசாட்சியைக் கைப்பற்றி)
அடைந்த; மன்னரும் – அரசரும் (பரதரும்); வந்தாரே – (இதோ
என்னருகில்) வந்துள்ளார்கள் அன்றோ!; தீ உமிழ்கின்றனசெஞ்சரம் –
நெருப்பைக் கக்குகின்றனவான (என்) சிவந்த அம்புகள்; செல்லாவோ –
(இவர்கள் மேற்) செல்லாமல் போய்விடுமோ?-; இவர் உஞ்சு போய்விடின்-
இவர்கள்(என் அம்புக்குத் தப்பிப்) பிழைத்து (இராமன் இருக்கும்
இடத்துக்குப்) போய்விட்டால்; ‘நாய்க்குகன்’ என்று – (உலகோர்) குகன்
றாய் போன்ற கீழ்த்தன்மை உடையவன் என்று; எனை – என்னைப் பற்றி;
ஓதாரோ’ – சொல்லாமல் இருப்பார்களா? (தொடரும்)

———

‘ஆழ நெடுந் திரை ஆறு கடந்து
இவர் போவாரோ?
வேழ நெடும் படை கண்டு
விலங்கிடும் வில்லாளோ?
‘‘‘தோழமை” என்று, அவர்
சொல்லிய சொல் ஒரு சொல் அன்றோ?
ஏழைமை வேடன் இறந்திலன்” என்று
எனை ஏசாரோ?–15-

‘இவர் -; ஆழம் – ஆழத்தையும்; நெடுந் திரை – நீண்ட பெரிய
அலைகளையும் உடைய; ஆறு – கங்கையாற்றை; கடந்து – தாண்டி;
போவாரோ- அப்பால் ( தென்கரைப் பகுதிக்குச் ) செல்வார்களா?
(மாட்டார்); வேழ நெடும்படை- யானைகளை உடைய நீண்ட பெரிய
சேனையை; கண்டு – பார்த்து (பயந்து); விலங்கிடும்- புறமுதுகு காட்டி
விலகிச் செல்லுகின்ற; வில் ஆளோ – வில் வீரனோ (நான்); ‘தோழமை’
என்று- (உனக்கும் எனக்கும்) நட்பு என்பதாக; அவர் சொல்லிய சொல்-
அந்த இராமபிரான் சொல்லிய வார்த்தை; ஒரு சொல் அன்றோ –
(காப்பாற்ற,மதிக்கப்பட வேண்டிய) ஒப்பற்ற வார்த்தை அல்லவா?
(அந்நட்புக்கு மாறாக இவர்களைப்போகவிட்டால்); ஏழைமை வேடன் –
அற்பனாகிய இந்த வேடன்; இறந்திலன் -(இவ்வாறு இராமனோடு நட்புச்
செய்து, இப்பொழுது சேனைக்குப் பயந்து இராமனை எதிர்க்கும்பரதனோடு
நட்பாய் மானங்கெட்டு வாழ்தலைவிட) இறக்கலாமே, அது தானும்
செய்தானிலனே; என்றுஎனை ஏசாரோ – என்றிவ்வாறு உலகத்தார்
என்னைப் பழியாமல் விடுவார்களா – (பழிப்பர்)(தொடரும்)

ஏழை ஏதலன் கீழ்மகன்
என்னாது…..தோழன் நீ எனக்கு” (திவ்யப். 1418) என ஆழ்வார் கூறியதும்
இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. “ஏழை வேடனுக்கு, ‘எம்பி நின் தம்பி, நீ
தோழன்; மங்கை கொழுந்தி எனச் சொன்ன, வாழி நண்பு” (5091) என்று
இவரே பிற்கூறியது கொண்டும் அறியலாம்.

——–

“முன்னவன்” என்று நினைந்திலன்;
‘மொய் புலி அன்னான் ஓர்
பின்னவன் நின்றனன்” என்றிலன்;
அன்னவை பேசானேல்,
என் இவன் என்னை இகழ்ந்தது?
இவ் எல்லை கடந்து அன்றோ?
மன்னவர் நெஞ்சினில்,
வேடர் விடும் சரம் வாயாவோ?–16-

‘இவன் – இப் பரதன்; “முன்னவன்” என்று நினைந்திலன் –
(இராமபிரானைக்குறித்து) தன் அண்ணன் என்று நினைந்தானில்லை;
“மொய் புலி அன்னான் ஓர் பின்னவன்நின்றனன்” – வலிமை
நெருங்கிய புலியை ஒத்த இளவலாகிய இலக்குவன் இராமனுக்குத் துணையாக
உடன் உள்ளான்; என்றிலன் – என்று கருதினானும் இல்லை; அன்னவை
பேசானேல் -அந்த (இராம இலக்குவர்களாகிய) இரண்டையும் பற்றி
நினைக்காமல் விட்டாலும்; என்னைஇகழ்ந்தது என் – (இடையே கங்கைக்
கரை யுடைய) என்னையும் (ஒரு பொருளாக மதியாமல்)இகழ்ந்தது என
கருதி?; இவ் எல்லை கடந்து அன்றோ – (இவன் இராமன்பால்
போர்செய்வது)இந்த எனது எல்லையைக் கடந்து சென்றால் அல்லவா?;
வேடர் விடும் சரம் – வேடர்கள்விடுகின்ற அம்புகள்; மன்னவர்
நெஞ்சினில் – அரசர்கள் மார்பில்; வாயாவோ’ -தைத்து உள் நுழைய
மாட்டாவோ?

——–

பாவமும் நின்ற பெரும் பழியும்,
பகை நண்போடும்,
ஏவமும், என்பவை மண்
உலகு ஆள்பவர் எண்ணாரோ?
ஆவது போக, என் ஆர்
உயிர்த் தோழமை தந்தான்மேல்
போவது, சேனையும ஆர் உயிரும்
கொடு போய் அன்றோ?–17-

மண் உலகு ஆள்பவர் – (இப்) பூவுலகத்தை ஆள்கின்ற அரசர்கள்;
பாவமும் -(தாம் ஒரு செயலைச் செய்கிறபோது அதனால் விளையும்)
பாவத்தையும்; நின்ற பெரும் பழியும்- (செயல்முடிந்த பிறகு அதனால்)
தம்மேல் நின்ற பெரும் பழியையும்; பகை நண்போடும்-பகைவர் இன்னார்,
நண்பர்கள் இன்னார் என்பவற்றையும்; ஏவமும் – விளையும்குற்றங்களையும்;
என்பவை – என்று இதுபோலச் சொல்லப்படுபவைகளையும்; எண்ணாரோ-
நினைக்கமாட்டார்களோ?; ஆவது போக – அது கிடக்கட்டும்; என்
ஆருயிர்த்தோழமை தந்தான் மேல் போவது – எனக்கு அரிய
உயிரோடொத்த நட்புறவைத் தந்தஇராமன்மேல் படையெடுத்துச் செல்வது;
ஆர் உயிரும் சேனையும் கொடு போயன்றோ – தம்முடைய அரிய
உயிரையும் சேனைகளையும் (எனக்குத் தப்பி) உடன் கொண்டு சென்ற
பிறகல்லவா(முடியும்)?

———-

‘அருந் தவம் என் துணை ஆள,
இவன் புவி ஆள்வானோ?
மருந்து எனின் அன்று உயிர்?
வண் புகழ் கொண்டு, பின் மாயேனோ?
பொருந்திய கேண்மை
உகந்தவர்தம்மொடு போகாதே
இருந்தது நன்று; கழிக்குவென்,
என் கடன் இன்றோடே.–18-

என் துணை – எனக்கு நண்பனாகிய இராமன்; அருந் தவம் ஆள-
அரியதவத்தைச் செய்துகொண்டிருக்க; இவன் – இந்தப் பரதன்; புவி
ஆள்வானோ? -உலகத்தை ஆட்சி செய்வானோ? (அதையும்
பார்த்துவிடுவோம்); உயிர் – என்னுடையஉயிர்; மருந்து எனின் –
(கிடைத்தற்கரிய) தேவர் அமுதமோ என்றால்; அன்று -அல்ல (நான்
அப்படி அதை அரிதாக எண்ணிப் பாதுகாக்க நினைக்க வில்லை);
வண்புகழ்கொண்டு- (இராமனுக்காகப் பரதனை எதிர்த்து) அதனால் சிறந்த
புகழைப் பெற்று; பின் மாயேனோ- அதன் பிறகு உயிர் துறக்க
மாட்டேனோ?; பொருந்திய கேண்மை – மிகவும் ஒட்டியஉறவை;
உகந்தவர் தம்மொடு – என்பால் கொண்டு மகிழ்ந்த இராம
இலக்குவர்களோடு; போகாதே – உடன் செல்லாமல்; இருந்தது நன்று –
(நான்) இங்கேயே தங்கியது நல்லதாய்ப் போயிற்று; என்கடன் – (நான்)
இராமனுக்குச் செய்ய வேண்டிய கடமையை; இன்றோடு கழிக்குவென் –
இன்றைக்கே செய்து முடிப்பேன்.

———–

‘தும்பியும் மாவும் மிடைந்த
பெரும் படை சூழ்வு ஆரும்,
வம்பு இயல் தார் இவர்
வாள் வலி கங்கை கடந்து அன்றோ?
வெம்பிய வேடர் உளீர்!
துறை ஓடம் விலக்கீரோ?
நம்பி முன்னே, இனி நாம்
உயிர் மாய்வது நன்று அன்றோ?–19-

தும்பியும் – யானைகளும்; மாவும் – குதிரைகளும்; மிடைந்த –
நெருங்கிய; பெரும்படை – பெரிய சேனையால்; சூழ்வு ஆரும் –
சுற்றப்படுதல்பொருந்திய; வம்பு இயல் தார் இவர் – மணம் வீசுகின்ற
மாலையணிந்துள்ள இவர்கள்; வாள்வலி – படையின் ஆற்றல்; கங்கை
கடந்து அன்றோ – இக் கங்கையாற்றைக்கடந்து போன பிறகு அல்லவா
(காட்டமுடியும்?); வெம்பிய வேடர் உளீர்! – (இவர்களைக்கண்டு) மனப்
புழுக்கம் அடைந்துள்ள வேடர்களாய் உள்ளவர்களே!; துறை ஓடம்
விலக்கீரோ – நீர்த்துறையிலே இவர்களுக்கு ஓடம் விடுவதை
நிறுத்திவிடுங்கள். (ஒருவேளை இவர் நம்மைத்தடுத்து மேற்செல்லும்
ஆற்றல் உடையவராயினும் இவரோடு போரிட்டு); நம்பி முன்னே –
இராமபிரானுக்கு முன்னாலேயே; நம் உயிர் மாய்வது – நமது உயிர்
அழிந்து போவது; இனி நன்று அன்றோ? – இனிமேல் நல்லது அல்லவா?

———-

போன படைத் தலை வீரர்தமக்கு
இரை போதா இச்
சேனை கிடக்கிடு; தேவர் வரின்,
சிலை மா மேகம்
சோனை பட, குடர் சூறை பட,
சுடர் வாளொடும்
தானை பட, தன் யானை பட,
திரள் சாயேனோ?–20-

போன – (நம்முடன்) வந்துள்ள; படைத்தலை வீரர் தமக்கு –
சேனையின்கண் உள்ள வீரர்களுக்கு; இரை போதா – (ஒருவேளைப்)
போர்க்கும் பற்றாத; இச்சேனை – இந்தப் (பரதனது) சேனை; கிடக்கிடு-
கிடக்கட்டும்; தேவர்வரின்- தேவர்களே (படையெடுத்து) வந்தாலும்; சிலை
மா மேகம் – என் வில்லாகியகரிய மேகம்; சோனை பட – அம்பு
மழையைச் சொரிய; குடர் சூறைபட -எதிரிகளது குடர்கள் சிதைந்து
அலைய; தானை சுடர்வாளோடும் பட – எதிரிச் சேனைகள்தம்கையிற்
பிடித்த படைக்கலங்களோடும் இறக்க; தனி யானை பட – ஒப்பற்ற
யானைகள்அழிய; திரள் சாயேனோ – (அப்படைக்) கூட்டத்தை
நிலைகுலைக்காமல் விடுவேனோ?

——

‘நின்ற கொடைக் கை என்
அன்பன் உடுக்க நெடுஞ் சீரை
அன்று கொடுத்தவன் மைந்தர் பலத்தை,
என் அம்பாலே
கொன்று குவித்த நிணம்கொள் பிணக் குவை
கொண்டு ஓடி,
துன்று திரைக் கடல்,
கங்கை மடுத்து இடை தூராதோ?–21-

அன்று – (முடிசூட்டு விழா நிகழ இருந்த) அந்நாள்; கொடை நின்ற
கை – (முடிசூட்டுவதற்கு முன்பு செய்யவேண்டிய தானம் முதலியவற்றைச்
செய்து) நின்ற திருக்கரங்களை உடைய;என் அன்பன்- என் அன்பிற்குரிய
இராமன்; நெடுஞ் சீரை உடுக்க – பெரியமரவுரியை உடுக்குமாறு;
கொடுத்தவள் – (அவனுக்குக்) கொடுத்தவளாகிய கைகேயியின்; மைந்தர்
பலத்தை – மகனார் ஆன பரதன் சேனையை; என் அம்பால் கொன்று
குவித்த – என்னுடையஅம்பினால் கொன்று குவியல் செய்த; நிணம்கொள்
பிணக்குவை – கொழுப்பு மிகுதிகொண்ட பிணங்களின் திரட்சியை;
கங்கை – இந்தக் கங்கா நதி; கொண்டு ஓடி – இழுத்துக் கொண்டு விரைந்து சென்று; துன்று
திரைக்கடல் – நெருங்கிய அலைகளை உடைய கடலில்; மடுத்து –
அவற்றைச் சேர்த்து; இடை தூராதோ?- அக்கடல் இடத்தைத் தூர்த்து
விடாதோ? (தூர்த்துவிடும்)

———-

‘ “ஆடு கொடிப் படை சாடி,
அறத்தவரே ஆள
வேடு கொடுத்தது, பார்” எனும் இப்
புகழ் மேவீரோ?
நாடு கொடுத்த என் நாயகனுக்கு
இவர், நாம் ஆளும்
காடு கொடுக்கிலர் ஆகி,
எடுத்தது காணீரோ?–22-

ஆடு – அசையும்; கொடி – கொடிகளை உடைய; படை –
சேனைகளை; சாடி – கொன்றழித்து; அறத்தவர் ஆள – தருமத்தின்
துணைவர்களாய இராமஇலக்குவர்கள் ஆளும்படி; வேடு- வேடர்கள்; பார்
கொடுத்தது – (இந்தப்)பூமியை மீட்டுக் கொடுத்தனர்; எனும் இப்புகழ்
மேவீர் – என்கின்ற இந்தப் புகழைஅடையுங்கள்; நாடு கொடுத்த என்
நாயகனுக்கு – (இவர்கள் ஆளும்படி) தான் ஆட்சியுரியவேண்டிய
நாட்டைக் கொடுத்துவிட்டு வந்த என் தலைவனாகிய இராமனுக்கு; இவர் –
இந்தப்பரதர்; நாம் ஆளும் காடு – நாம் ஆட்சி செயும் நமக்கு
உரிமையாகிய இந்தக்காட்டையும்; கொடுக்கிலர் ஆகி – ஆட்சி செய்ய
மனம் பொறாதவராய; எடுத்தது- படை எடுத்து வந்த படியை;
காணீர் – காணுங்கள்.

———-

‘ “ மா முனிவர்க்கு உறவாகி
வனத்திரைடயேவாழும்
கோ முனியத் தகும்” என்று,
மனத்து இறை கொள்ளாதே,
ஏ முனை உற்றிடில், ஏழு கடற்
படை என்றாலும்,
ஆ முனையின் சிறு கூழ்
என இப்பொழுது ஆகாதோ?’-23-

‘மா முனிவர்க்கு – பெரிய தவசிகளுக்கு; உறவாகி – இனிய
சுற்றமாகி; வனத்திடையே வாழும் – காட்டிடத்தில் வாழும்; கோ –
இராமன்; முனியத் தகும்’- (தன் தம்பியான பரதனை எதிர்த்தால் என்னை)
வெறுத்துக் கோபிப்பான்; என்று -; மனத்துஇறை கொள்ளாது –
மனத்தின்கண் சிறிதும் நினையாமல்; ஏ முனை உற்றிடில் – போர்முனையில்
சென்று (பரதனைச்) சந்தித்துப் போரிட்டால்; இப்பொழுது -இந்நேரத்தில்;
ஏழு கடற் படை என்றாலும் – ஏழு கடல் அளவு சேனை என்றாலும்; ஆ
முனையின் சிறு கூழ் என – பசு தின்பதற்கு முனைந்தவழி அதன் எதிரில்
கிடந்த சிறிய புல்என்று சொல்லும்படி; ஆகாதோ – அனைத்தும் அழிந்து
போகாதோ (போகும்.)

——-

என்பன சொல்லி, இரும்பு அன
மேனியர் ஏனோர்முன்,
வன் பணை வில்லினன், மல் உயர்
தோளினன், வாள் வீரற்கு
அன்பனும், நின்றனன்; நின்றது
கண்டு, அரிஏறு அன்ன
முன்பனில் வந்து, மொழிந்தனன்.
மூரிய தேர் வல்லான்;–24-

வன் பனை வில்லினன் – வலிய கட்டமைந்த பருத்த வில்லை
உடையவனும்; மல்உயர் தோளினன் – மல் தொழிலால் சிறப்புற்ற
தோளை உடையவனும்; வாள் வீரற்குஅன்பனும் – வாளாற் சிறந்த
வீரனாகிய இராமனுக்கு அன்பு பூண்டவனும் ஆய குகன்; இரும்பு
அனமேனியர் ஏனோர்முன் – இரும்பை ஒத்த வலிய உடம்பை உடைய
வேடுவ வீரர்களுக்கு முன்னால்; என்பன சொல்லி – என்ற இச்
சொற்களைச் சொல்லி; நின்றனன் -; நின்றது கண்டு – (குகன்) நின்ற
படியைப் பார்த்து; மூரிய தேர்வல்லான் – வலிய தேரைஓட்டுதலில்
வல்லவனாகிய சுமந்திரன்; அரி ஏறு அன்ன முன்பனில் – ஆண்
சிங்கத்தைஒத்த வலிமை படைத்த பரதனுக்கு முன்னால்; வந்து
மொழிந்தனன் – வந்து சிலசொற்களைக் கூறுவானானான்.

——–

‘கங்கை இரு கரை உடையான்;
கணக்கு இறந்த நாவாயான்;
உங்கள் குலத் தனி நாதற்கு
உயிர்த் துணைவன்; உயர் தோளான்;
வெங்கரியின் ஏறு அனையான்;
வில் பிடித்த வேலையினான்;
கொங்கு அலரும் நறுந் தண் தார்க்
குகன் என்னும் குறி உடையான்.–25-

‘கங்கை – கங்கையாற்றின்; இருகரை – இரண்டு கரைப் பகுதியில்
உள்ளநிலங்களையும்; உடையான் – தனக்குச் சொந்தமாக உடையவன்;
கணக்கு இறந்த -அளவில்லாத; நாவாயான் – படகுகளை உடையவன்;
உங்கள் குலத் தனி நாதற்கு -உங்கள் சூரிய வம்சத்தில் திருவவதாரம்
செய்தருளிய ஒப்பற்ற தலைவனான இராமனுக்கு; உயிர்த் துணைவன் –
ஆத்ம நண்பன்; உணர் தோளான் – உயர்ந்த தோள்களைஉடையவன்;
வெங்கரியின் ஏறு அனையான் – (மதம் பிடித்த) கொடிய ஆண்
யானையைஒத்தவன்; வில் பிடித்த வேலையினான்- வில்லைக் கையில் பிடித்துக் கொண்டுள்ள
(வேட்டுவவீரராகிய) சேனைக் கடலை உடையவன்; கொங்கு அலரும் நறுந்
தண்தார்- மணம் வீசித் தேன் பிலிற்றும் குளிர்ந்த மாலையைஅணிந்துள்ள;
குகன் என்னும் குறி உடையான்- குகன் என்கின்ற பெயரை உடையவன்;’
(அடுத்த பாட்டில் முடியும்)

——–

‘கல் காணும் திண்மையான்;
கரை காணாக் காதலான்;
அற்கு ஆணி கண்டனைய
அழகு அமைந்த மேனியான்;-
மல் காணும் மணி நிறத்தாய்!-
மழை காணும் மணி நிறத்தாய்!-
‘நிற் காணும் உள்ளத்தான்,
நெறி எதிர் நின்றனன்’ என்றான்.–26-

‘மல் காணும் திரு நெடுந்தோள் – மற்போரில் எல்லை கண்ட
அழகிய நெடிய தோளைஉடைய; மழை காணும் மணி நிறத்தாய் –
கார்மழையைக் கண்டால் போன்ற நீலமணி போலும்நிறம் வாய்ந்த
திருமேனி அழகனே!; கல்காணும் திண்மையான் – மலையைக் கண்டாற்
போன்ற வலிமை உடையவன்; கரை காணாக் காதலான் – (இராமன் பால்)
எல்லை காணமுடியாத பேரன்பை உடையவன்; காணில் -வடிவத்தைப் பார்த்தால்; அல் கண்டு அனைய அழகு அமைந்த
மேனியான் – இருளைக் கண்டாற்போன்ற அழகு பொருந்திய உடம்பை
உடையவன் (ஆகிய இத்தகைய குகன்); நெறி எதிர் – நீசெல்கின்ற
வழியின் எதிரில்; நின்காணும் உள்ளத்தான் – உன்னைப் பார்க்கும் மனம்
உடையவனாய்; நின்றனன் ‘என்றான் – நின்று கொண்டுள்ளான்’ என்று
சொன்னான்சுமந்திரன்.

———–

தன் முன்னே, அவன் தன்மை,
தந்தை துணை முந்து உரைத்த
சொல் முன்னே உவக்கின்ற
துரிசு இலாத் திரு மனத்தான்,
‘மன் முன்னே தழீஇக்
கொண்ட மனக்கு இனிய துணைவனேல்,
என் முன்னே அவற் காண்பென்,
யானே சென்று’ என எழுந்தான்.–27-

தன்முன்னே – தன் எதிரில்; அவன் தன்மை – அந்தக் குகனது
நல்லியல்புகளை; தந்தை துணை – தன் தந்தையாகிய தயரதனின்
நண்பனான சுமந்திரன்; முந்து உரைத்த – முற்பட்டுச் சொல்லிய;
சொல்முன்னே – சொல்லுக்கும் முன்பாக;உவக்கின்ற – மகிழ்ச்சி
அடைகின்ற; துரிசு இலாத் திரு மனத்தான் – குற்றம்சிறிதும் இல்லாத
நல்ல மனத்தை உடையவனாகிய பரதன்; ‘மன் முன்னே தழீஇக்
கொண்ட -நம் அரசனாகிய இராமன் வனம் புகுந்த முன்னமே (அன்பு
செய்து) தழுவிக் கொண்டுள்ள; மனக்குஇனிய துணைவனேல் – அவன்
மனத்துக்கு இனிய துணைவன் ஆனால்; என் முன்னே – என்னை(அவன்
வந்து பார்ப்பதற்கு) முன்னமே; யானே சென்று அவற் காண்பென்’ –
நானே(முற்பட்டு) சென்று அவனைக் காணுவேன்;’ என – என்று சொல்லி;
எழுந்தான் -புறப்பட்டான்.

——-

என்று எழுந்த தம்பியொடும்,
எழுகின்ற காதலொடும்,
குன்று எழுந்து சென்றது எனக்
குளிர் கங்கைக் கரை குறுகி
நின்றவனை நோக்கினான், திரு மேனி
நிலை உணர்ந்தான்,
துன்று கரு நறுங் குஞ்சி எயினர் கோன்;
துண்ணென்றான்.–28-

(பரதன்) என்று – இவ்வாறு சொல்லி; எழுந்த தம்பியொடும் –
தன்னுடன்புறப்பட்ட சத்துருக்கனனொடும்; எழுகின்ற காதலொடும் –
(இராமனிடத்தில்அன்புடையவனும், இராமனால் அன்பு செய்யப்
பெற்றவனும் ஆகிய குகனைப் பார்க்கப் போகிறோம்என்று) உள்ளே
மேலும் மேலும் உண்டாகின்ற பேரன்போடும்; குன்று எழுந்து சென்றது
என -ஒருமலை புறப்பட்டுச் சென்றது என்று சொல்லுமாறு; குளிர்
கங்கைக் கரை குறுகி- குளிர்ச்சி மிகுந்த கங்கையின் வடகரையை அணுகி;
நின்றவனை – நின்ற பரதனை; துன்று கரு நறுங் குஞ்சி எயினர் கோன்-
நெருங்கிய கருமையான மணம் வீசும் தலைமுடி உடையவேடர் தலைவனாய
குகன்; நோக்கினான் – கண்ணால் (மனக் கருத்தோடு) பார்த்தான்;
திருமேனி நிலை – வாடிச் சோர்ந்துள்ள பரதனது திருமேனியின்
வாட்டமான உணர்ந்து கொண்டான்; துண் என்றான் – திடுக்குற்றான்.

———

வற்கலையின் உடையானை,
மாசு அடைந்த மெய்யானை,
நற் கலை இல் மதி என்ன
நகை இழந்த முகத்தானை,
கல் கனியக் கனிகின்ற துயரானைக்
கண்ணுற்றான்;
வில் கையினின்று இடை வீழ,
விம்முற்று, நின்று ஒழிந்தான்.–29-

வற்கலையின் உடையானை – மரவுரியாலாகிய ஆடையை
உடுத்துள்ள; மாசு அடைந்தமெய்யானை – புழுதி படிந்த உடம்பை
உடைய; நற் கலை இல் மதி என்ன – நல்லகலைகளில்லாத (ஒளியற்ற)
சந்திரன் போல; நகை இழந்த முகத்தானை – ஒளி இழந்தமுகத்தை
உடைய; பரதனை; கண்ணுற்றான் – (குகன்) கண்ணால் சந்தித்துப் பார்த்து;
கையினின்று வில்இடை வீழ – தன் கையிலிருந்து வில்லானது தானே
சோர்ந்து நிலத்தின்கீழ் விழும்படி; விம்முற்று – துன்பத்தால் கலக்கமுற்று;
நின்று ஒழிந்தான் -ஒரு செயலும் இன்றி நின்றவாறே இருந்தான்.

———-

நம்பியும் என் நாயகனை ஒக்கின்றான்;
அயல் நின்றான்
தம்பியையும் ஒக்கின்றான்; தவ வேடம்
தலைநின்றான்;
துன்பம் ஒரு முடிவு இல்லை;
திசை நோக்கித் தொழுகின்றான்;
எம்பெருமான் பின் பிறந்தார்
இழைப்பரோ பிழைப்பு?’ என்றான்.–30-

‘நம்பியும் – ஆடவரிற் சிறந்த இப்பரதனும்; என் நாயகனை – என்
தலைவனாகியஇராமனை; ஒக்கின்றான் – ஒத்திருக்கிறான்; அயல்
நின்றான் – அருகில்இருக்கின்றவன் (ஆகிய சத்துருக்கனன்); தம்பியையும்
ஒக்கின்றான் – இராமனது உடன்பிரியாத் தம்பியாகிய இலக்குவனை
ஒத்திருக்கின்றான்; தவ வேடம் தலை நின்றான் – (இப்பரதன்)
தவத்துக்குரிய வேடத்தை மேற்கொண்டுள்ளான்; துன்பம் ஒரு முடிவு
இல்லை -(இப் பரதன்) படுகிற துன்பத்துக்கோ ஓர் அளவே இல்லை;
திசை நோக்கித் தொழுகின்றான்- இராமன் சென்ற திசையாகிய
தென்திசையைப் பார்த்து அவ்வப்போது வணங்குகிறான்; (இவற்றால்இவன்
துயர்நிலை விளங்குதலின்) எம்பெருமான் – எம்கடவுளாகிய இராமனுக்கு;
பின்பிறந்தார் – தம்பிகள்; பிழைப்பு இழைப்பரோ’ – (தவறு
செய்வார்களா)’தவறு செய்வர் என்று நான் எண்ணியது பெரும் தவறு);
என்றான் – என்று நினைத்தான்.

——

‘உண்டு இடுக்கண் ஒன்று
உடையான், உலையாத அன்பு உடையான்,
கொண்ட தவ வேடமே கொண்டிருந்தான்
குறிப்பு எல்லாம்
கண்டு, உணர்ந்து, பெயர்கின்றேன்’
காமின்கள் நெறி’ என்னா,
தண் துறை, ஒர் நாவாயில், ஒரு
தனியே தான் வந்தான்.–31-

‘உண்டு இடுக்கண் ஒன்று உடையான்- புதிதாக உண்டாகிய துன்பம்
ஒன்றை உடையவனும்; உலையாத அன்பு உடையான் -இராமன்பால் சிறிதும் தளர்ச்சியுறாத அன்பு கொண்டவனும்; கொண்ட தவ
வேடமே – (அந்த இராமன்) கொண்டிருந்த தவ வேடத்தையே;
கொண்டிருந்தான் – தானும்கொண்டுள்ளவனும் ஆகிய இப்பரதனது;
குறிப்பு எல்லாம் – மனக் கருத்து எல்லாம்; கண்டு- நேரில் பார்த்து
அறிந்து; உணர்ந்து – அதனை என் அநுபவத்தாலும் நுகர்ந்து;
பெயர்கின்றேன் – திரும்பி வருகின்றேன்; நெறி காமின்கள் – (அதுவரை)
வழியைப்பாதுகாத்திருங்கள்;’ என்னா – என்று சொல்லி; தண்துறை –
(கங்கையின்) குளிர்ந்தநீர்த்துறையில்; தான் ஓர் நாவாயில் ஓரு தனியே
வந்தான்- (குகன்) தான் ஒருபடகில் வேறு யாரும் இன்றித் தனியே வந்து
சேர்ந்தான்.

———–

வந்து எதிரே தொழுதானை
வணங்கினான்; மலர் இருந்த
அந்தணனும் தனை வணங்கும் அவனும்,
அவன்த அடிவீழ்ந்தான்.
தந்தையினும் களிகூரத் தழுவினான் –
தகவு உடையோர்
சிந்தையினும் சென்னியினும் வீற்றிறுக்கும்
சீர்த்தியான்.–32-

வந்து – (கங்கையின் வடகரைக்கு) வந்து; எதிரே தொழுதானை –
தன்னைஎதிரிலே கும்பிட்ட பரதனை; வணங்கினான் – (குகன்) தானும்
வணங்கினான்; மலர்இருந்த அந்தணனும் தனை வணங்கும் அவனும் –
(திருமாலின் திருவுந்தித்) தாமரையில்வீற்றிருக்கும் வேதியனாகிய பிரமனும்
தன்னை வணங்கும் சிறப்புப் பெற்ற பரதனும்; அவன் அடிவீழ்ந்தான் –
அந்தக் குகனது அடித்தலத்தில் விழுந்து வணங்கினான்; (அதுகண்டு) தகவு
உடையோர் சிந்தையினும் சென்னி யினும் வீற்றிருக்கும் சீர்த்தியான் –
நடுவுநிலைமையிற்சிறந்த மேலோர்களது மனத்திலும், தலையிலும் ஏற்றிப்
போற்றப்படும் புகழ் உடைய பண்பு நலம்செநிந்த உத்தமனாகிய குகனும்;
தந்தையினும் களிகூர – பெற்ற தந்தையினும் மகிழ்ச்சிமிக; தழுவினான் –
(அந்த அடி வீழ்ந்த பரதனை எடுத்து) மார்போடு அணைத்துக்கொண்டான்
(தொடரும்)

——-

தழுவின புளிஞர் வேந்தன்
தாமரைச் செங்கணானை,
‘எழுவினும் உயர்ந்த தோளாய்!
எய்தியது என்னை?’ என்ன,
‘முழுது உலகு அளித்த தந்தை
முந்தையோர் முறையினின்றும்
வழுவினன்; அதனை நீக்க, மன்னனைக்
கொணர்வான்’ என்றான்.–33-

தழுவின புளிஞர் வேந்தன்- (அவ்வாறு பரதனைத்) தழுவிக்
கொண்ட வேடர் தலைவனான குகன்; தாமரைச் செங்கணானை –
செந்தாமரை போலும் கண்களை உடைய பரதனைப் (பார்த்து); ‘எழுவினும்
உயர்ந்த தோளாய்!- கணைய மரத்தினும் வன்மைமிக்குயர்ந்த தோள்களை
உடைய பரதனே!; எய்தியது என்னை’ என்ன- (கங்கைக் கரைக்
காட்டிற்கு) நீ வந்த காரணம் என்ன என்று வினாவ; (பரதன்) உலகு முழுது
அளித்த தந்தை – உலகம் முழுவதையும் ஒரு குடை நீழலில் ஆட்சி செய்த
சக்கரவர்த்தியாகியஎன் தந்தை தயரதன்; முந்தையோர் முறையினின்றும்
வழுவினன் – தன் மரபில் முன்னுள்ளாரது நீதிமுறையிலிருந்தும்
தவறிவிட்டான்; அதனை நீக்க – அந்த அநீதியை நீக்கும் பொருட்டு;
மன்னனைக் கொணர்வான்’ – முறைப்படி அடுத்து அரசனாகிய
இராமனைத் திரும்ப அழைத்துக்கொண்டு செல்வதற்காக (வந்தேன்);
என்றான் – என்று சொன்னான்.

——–

கேட்டனன், கிராதர் வேந்தன்;
கிளர்ந்து எழும் உயிர்ப்பன் ஆகி,
மீட்டு்ம், மண் அதனில் வீழ்ந்தான்;
விம்மினன், உவகை வீங்க;
தீட்ட அரு மேனி மைந்தன்
சேவடிக் கமலப் பூவில்
பூட்டிய கையன், பொய் இல்
உள்ளத்தன், புகலலுற்றான்;–34-

கிராதர் வேந்தன்- வேடர் தலைவனாய குகன்; கேட்டனன் –
(பரதன் சொல்லிய வார்த்தைகளைக்) கேட்டு; கிளர்ந்து எழும் உயிர்ப்பன்
ஆகி – மேல் எழுந்து மிகும் பெருமூச்சு உடையவனாகி; மீட்டும் – (முன்
வணங்கியதோடு அன்றித்) திரும்பவும்; மண் அதனில் வீழ்ந்தான்-
பூமியில் விழுந்து வணங்கி; உவகை வீங்க – மன மகிழ்ச்சி மேல் பெருக;
விம்மினன் – உடம்பு பூரித்து; தீட்ட அரு மேனி மைந்தன் –
எழுதலாகாததிருமேனியையுடைய பரதனது; சேவடிக் கமலப் பூவில் –
திருவடிகளாகிய தாமரை மலரில்; பூட்டிய கையன் – இறுக அணைத்த
கையுடனே; பொய்யில் உள்ளத்தன் – பொய்யற்ற புரைதீர்ந்த மனத்தால்;
புகலல் உற்றான் – சில வார்த்தைகள் சொல்லலானான்.

—–

தாய் உரைகொண்டு தாதை உதவிய
தரணிதன்னை,
‘‘தீவினை” என்ன நீத்து,
சிந்தனை முகத்தில் தேக்கி,
போயினை என்றபோழ்து, புகழினோய்!
தன்மை கண்டால்,
ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ,
தெரியன் அம்மா!–35-

‘புகழினோய்! – புகழ் உடையவனே!; தாய் உரை கொண்டு – (உன்)
தாயாகியகைகேயியின் ‘வரம்’ என்கின்ற வார்த்தையைக் கொண்டு; தாதை
உதவிய – (உன்)தந்தையாகிய தயரதன் அளித்த; தரணி தன்னை –
(கோசல நாட்டு) அரசாட்சியை; தீவினைஎன்ன நீத்து – தீயவினை வந்து
சேர்ந்தது போலக் கருதிக் கைவிட்டு; முகத்தில் சிந்தனை தேக்கி –
முகத்தில் கவலை தேங்கியவனாய்; போயினை – (வனத்துக்கு) வந்தாய்;
என்ற போழ்து – என்ற காலத்தில்; தன்மை கண்டால் – (உனது)
நல்லியல்புகளைஅறியுமிடத்து; தெரியின் – ஆராய்ந்தால்; ஆயிரம்
இராமர் நின்கேழ்ஆவரோ – ஆயிரம் இராமர்கள் உளரானாலும் நின்
ஒருவனுக்குச் சமானம் ஆவரோ; அம்மா! -.

——–

‘என் புகழ்கின்றது, ஏழை
எயினனேன்? இரவி என்பான்-
தன் புகழ்க் கற்றை,
மற்றை ஒளிகளைத் தவிர்க்குமாபோல்,
மன் புகழ் பெருமை நுங்கள்
மரபினோர் புகழ்கள் எல்லாம்.
உன் புகழ் ஆக்கிக்கொண்டாய் –
உயர் குணத்து உரவுத் தோளாய்!
‘உயர் குணத்து உரவுத் தோளாய்!- 36-

உயர்த்த உத்தமக்
குணங்களையும், வலிமையான தோளையும் உடைய பரதனே!; ஏழை எயின
னேன் – அறிவில்லாத வேடனாகிய யான்; என் புகழ்கின்றது? – எவ்வாறு
புகழ முடியும்; இரவிஎன்பான் தன்- சூரியன் என்று சொல்லப்படுகிறவனது;
புகழ்க் கற்றை- புகழாகியஒளித்தொகுதி; மற்றை ஒளிகளைத் தவிர்க்குமா
போல் – மற்றைக் கோள்கள், உடுக்களின் ஒளிகளையெல்லாம் அடக்கிக்
கீழ்ப்படுத்தித் தான் மேற் சென்றுள்ளவாறு போல;மன் புகழ் பெருமை
நுங்கள் மரபினோர் புகழ்கள் எல்லாம் – எல்லா அரசர்களாலும்
பாராட்டப்பெறும் பெருமை படைத்த உங்கள் சூரிய வம்சத்து முன்னைய
அரசர்களது எல்லாப்புகழ்களையும்; உன் புகழ் ஆக்கிக்கொண்டாய் –
உனது புகழுக்கும் அடங்குமாறு செய்துகொண்டுவிட்டாய்.

——–

என இவை அன்ன மாற்றம்
இயைவன பலவும் கூறி,
புனை கழல், புலவு வேற் கை,
புளிஞர்கோன் பொரு இல் காதல்
அனையவற்கு அமைவின் செய்தான்;
ஆ அவற்கு அன்பு இலாதார்?-
இராமன்மேல் நிமிர்ந்த காதல்?–37-

புனை கழல்- அலங்கரிக்கப் பெற்ற வீரக்கழலை அணிந்த; புலவு
வேற்கை – புலால் மணம் வீசும்வேலைப் பிடித்த கையை உடைய; புளிஞர்
கோன் – வேடர் தலைவனாகிய குகன்; என இவைஅன்ன மாற்றம்
இயைவன புலவும் கூறி – என்று இதுபோன்ற பொருந்திய சொற்கள்
பலவற்றையும்சொல்லி; பொரு இல் காதல் அனையவற்கு –
இராமன்பாலும் அதனால் தன்பாலும் ஒப்பற்றபேரன்பினை உடையனாகிய
பரதனுக்கு; அமைவின் செய்தான் – பொருந்தியநல்லுபசரிப்புகளைத்
தகுதியாகச் செய்தான்; அவற்கு அன்பு இலாதார் யார்-அப்பரதனிடத்தில்
அன்பு செலுத்தாதவர் யார்உளர்?; இராமன் மேல் நிமிர்ந்த காதல்-
இராமனிடத்து மேல் சென்று உயர்ந்த அன்பு (அவன் சக்கரவர்த்தித்
திருமகள் என்பதாலா?அன்று); நினைவு அருங் குணம்கொடு அன்றோ-
நினைக்கவும் முடியாத நற்குணங்களின்நிலையமாக அவன் இருந்தான்
என்பதனால் அல்லவா? (அக்குணங்கள் இவன்பாலும் இருத்தலால்
இவனிடமும் அன்பு நிமிர்ந்தது.)

———–

அவ் வழி அவனை நோக்கி,
அருள் தரு வாரி அன்ன
செவ் வழி உள்ளத்து அண்ணல்,
தென் திசைச் செங் கை கூப்பி,
எவ் வழி உறைந்தான் நம்முன்?’
என்றலும், எயினர் வேந்தன்,
‘இவ் வழி , வீர! யானே காட்டுவல்;
எழுக!’ என்றான்.–38-

அருள் தரு வாரி அன்ன – கருணைப் பெருங்கடலை ஒத்த;
செவ்வழி உள்ளத்து அண்ணல் – நேரிய வழியிற் செல்லும்மனத்தை
உடைய பரதன்; அவ் வழி – அப்போது; அவனை நோக்கி – குகனைப்
பார்த்து; தென்திசைச் செங்கை கூப்பி – இராமன் சென்றுள்ள
தென்திசையைப் பார்த்துத்தன் சிவந்த கைகளைக் குவித்து வணங்கி;
‘நம்முன் – நம்முடைய அண்ணன்; எவ்வழிஉறைந்தான்?’ – எந்த
இடத்தில் தங்கியிருந்தான்?; என்றலும் – என்றுகேட்டவுடனே; எயினர்
வேந்தன் – வேட அரசனாகிய குகன்; ‘வீர! – வீரனே!; இவ் வழி –
இவ்விடத்தில்; யானே காட்டுவல் – நானே (அவ்விடத்தை உனக்குக்)
காண்பிப்பேன்; எழுக’ – என்னுடன் புறப்படுவாயாக; என்றான் -.

———-

கார் எனக் கடிது சென்றான்;
கல்லிடைப் படுத்த புல்லின்,
வார் சிலைத் தடக் கை வள்ளல்,
வைகிய பள்ளி கண்டான்;
பார்மிசைப் பதைத்து வீழ்ந்தான்;
பருவரற் பரவை புக்கான்-
வார் மணிப் புனலால் மண்ணை
மண்ணுநீர் ஆட்டும் கண்ணான்.–39-

(குகன் காட்டிய இடத்துக்குப் பரதன்) கார் எனக் கடிது சென்றான் –
மேகம் போலவிரைவாகச் சென்று; வார் சிலைத் தடக்கை வள்ளல் –
கட்டமைந்த வில்லேந்திய நீண்டகைகளை உடைய இராமன்; வைகிய –
தங்கியிருந்த; கல்லிடைப் படுத்த புல்லின் பள்ளி -கற்களின் இடையே
பரப்பப்பெற்ற புல்லால் ஆகிய படுக்கையை; கண்டான் – பார்த்து;
பார்மிசை – பூமியின் மேல்; பதைத்து – துடித்து; வீழ்ந்தான் – விழுந்து;
பருவரல் பரவை புக்கான் – துன்பம் எனும் கடலில் புகுந்து; வார் மணிப்
புனலால்- பெருகுகின்ற முத்துமணி போன்ற கண்ணீரினால்;
மண்ணை – பூமியை; மண்ணு நீர் ஆட்டும் – திருமஞ்சனத் தண்ணீரால்
குளிப்பாட்டுகின்ற; கண்ணான் – கண்ணுடையவனாக ஆனான்.

——

இயன்றது, என் பொருட்டினால்,
இவ் இடர் உனக்கு என்ற போழ்தும்,
அயின்றனை, கிழங்கும் காயும்
அழுது என; அரிய புல்லில்
துயின்றனை எனவும், ஆவி துறந்திலென்;
சுடரும் காசு
குயின்று உயர் மகுடம் சூடும்செல்வமும்
கொள்வென் யானே!”–40-

உனக்கு இவ் இடர் என்பொருட்டினால் இயன்றது என்ற
போழ்தும் – (இராம!) உனக்கு இவ் வனவாசமாகிய துன்பம் என்காரணமாக
உண்டாகியது என்று அறிந்த அந்தநேரத்திலும்; (அதன் பிறகு) கிழங்கும்
காயும் அழுது என அயின்றனை – கிழங்கு, காய்முதலியவற்றை
(அரண்மனையில் இருந்து உண்ணும்) அமுது போல உண்டாய்; அரிய
புல்லில்துயின்றனை- உறங்குதற்கு இயலாத புற்படுக்கையில் உறங்கினாய்;
எனவும் – என்றுஅறிந்த இந்த நேரத்திலும்; யான் ஆவி துறந்திலென்-
யான் உயிர் போகப் பெற்றேன்இல்லை, (அம்மட்டோ); சுடரும் காசு
குயின்று உயர் மகுடம் – ஒளி விடும் பொன்னாற்செய்யப்பெற்று உயர்ந்த
திருமுடியை; சூடும் செல்வமும் கொள்வேன் – சூட்டிக்கொள்ளும்அரசச்
செல்வத்தையும் ஏற்றுக் கொள்வேன் போலும்.

—-

தூண்தர நிவந்த தோளான்
பின்னரும் சொல்லுவான்! ‘அந்
நீண்டவன் துயின்ற சூழல்
இதுஎனின், நிமிர்ந்த நேயம்
பூண்டவன், தொடர்ந்து பின்னே
போந்தவன், பொழுது நீத்தது
யான்டு?’ என, இனிது கேட்டான்;
எயினர்கோன், இதனைச் சொன்னான்;–41-

தூண்தர – தூணை ஒப்பாக; நிவந்த தோளான் – உயர்ந்த
தோள்களை உடையபரதன்; பின்னரும் சொல்லுவான் – மீண்டும்
குகனைப் பார்த்துப் பேசுவான்; ‘அந்நீண்டவன் துயின்ற சூழல் இது
எனின் – அந்த நெடியவனாகிய இராமன் உறங்கிய இடம்இது என்றால்;
நிமிர்ந்த நேயம் பூண்டவன் தொடர்ந்து பின்னே போந்தவன்- (அவ்
இராமனிடத்தில்) மேற்சென்ற மிகுந்த அன்பு கொண்டு அவனைத் தொடர்ந்து
அவன் பின்னேயேவந்தவனாகிய இலக்குவன்; பொழுது நீத்தது – இரவுப்
பொழுதைக் கழித்தது; யாண்டு?’- எவ்விடத்தில்?; என – என்று; இனிது
கேட்டான் – இனிமையாக வினாவினான்;எயினர்கோன் – வேட
வேந்தனாய குகன்; இதனைச் சொன்னான் – இந்த விடையைக்கூறினான்.

——–

‘அல்லை ஆண்டு அமைந்த மேனி
அழகனும் அவளும் துஞ்ச,
வில்லை ஊன்றிய கையோடும்,
வெய்து உயிர்ப்போடும், வீரன்,
கல்லை ஆண்டு உயர்ந்த தோளாய்!-
கண்கள் நீர் சொரிய, கங்குல்
எல்லை காண்பு அளவும் நின்றான்;
இமைப்பிலன் நயனம்’ என்றான்.–42-

‘கல்லை ஆண்டு உயர்ந்த தோளாய்!- மலையைக் கீழ்ப்படுத்தி
உயர்ந்ததோள்களை உடையவனே!; அல்லை ஆண்டு அமைந்த மேனி
அழகனும்- இருளைப் பயன்படுத்தி அமைத்தால் ஒத்த கரிய
திருமேனியுடைய அழகிற் சிறந்த இராமனும்; அவளும் – அந்தப்
பிராட்டியும்; துஞ்ச – உறங்க; வீரன் – இலக்குவன்; வில்லை ஊன்றிய
கையோடும்- வில்லின் மேல் வைத்த கையுடன்; வெய்து உயிர்ப்போடும்-
வெப்பமான மூச்சுடையவனாய்; கண்கள் நீர் சொரிய – தன்னிரண்டு
கண்களும் நீரைச்சொரிய; கங்குல் எல்லை காண்பளவும் – இரவு தன்
முடிவான விடியலைப் பார்க்குமளவும்; நயனம் இமைப்பிலன் – கண்கள்
இமைகொட்டாமல் (உறங்காமல்); நின்றான்’ -நின்றுகொண்டே (காவல்
செய்து) இருந்தான்; என்றான் –

——–

என்பத்தைக் கேட்ட மைந்தன்,
‘இராமனுக்கு இளையார் என்று
முன்பு ஒத்த தோற்றத்தேமில்,
யான் என்றும் முடிவு இலாத
துன்பத்துக்கு ஏது ஆனேன்; அவன்,
அது துடைக்க நின்றான்;
அன்பத்துக்கு எல்லை உண்டோ? அழகிது,
என் அடிமை!; என்றான்.–43-

என்பத்தை- என்று (குகன் ) சொன்னதை; கேட்ட மைந்தன் –
கேட்ட பரதன்; இராமனுக்குஇளையார் என்று – இராமனுக்குத் தம்பிகள்
என்று சொல்லும்படி; முன்பு ஒத்ததோற்றத்தேமில் – பிறக்கும்பொழுது
ஒத்த தன்மையான பிறப்பைப் பெற்ற எங்கள்இருவரிலும்; யான் –
பரதனாகிய யான்; என்றும் முடிவு இலாத துன்பத்துக்கு ஏது ஆனேன்-
எக்காலத்தும் கரைகாணாத பெருந்துன்பத்தை இராமன் அடைதற்குக்
காரணமாக ஆய்விட்டேன்; அவன் -அந்த இலக்குவன்; அது –
அத்துன்பத்தை; துடைக்க நின்றான் – இராமனிடமிருந்து நீக்கத் துணையாக
இராமனுடன் நின்றான்; அன்புக்கு எல்லை உண்டோ? – அன்புக்கு ஒரு
வரையறை உள்ளதோ; என் அடிமை அழகிது’ – நான் இராமனுக்குச்
செய்யும் அடிமைத்திறம்நன்றாயிருந்தது; என்றான் – என்று கூறினான்.

———

அவ் இடை, அண்ணல்தானும், அன்று,
அரும் பொடியின் வைகி,
தெவ் இடைதர நின்று ஆர்க்கும்
செறி கழல் புளிஞர் கோமா அன்!
இவ் இடை, கங்கை ஆற்றின்
ஏற்றினை ஆயின், எம்மை
வெவ் இடர்க் கடல் நின்று ஏற்றி,
வேந்தன்பால் விடுத்தது’ என்றான்.–44-

அண்ணல் தானும்- பரதனும்; அவ் இடை – அந்த இடத்தில்;
அன்று – அன்றையிரவு; அரும்பொடியின் வைகி- தற்குதற்கியலாத புழுதி
மண்ணில் தங்கியிருந்த, (பொழுதுவிடிந்ததும்); ‘தெவ் இடை தர –
பகைவர்கள் தோற்றோடும்படி; நின்று ஆர்க்கும்செறிகழல்- தங்கி ஒலிக்கும்
கட்டப்பட்ட வீரக்கழல் அணிந்த; புளிஞர் கோமாஅன்! -வேடர்களுக்கு
அரசனாகிய குகனே!; இவ் இடை – இந்த நேரத்தில்; கங்கை ஆற்றின்-
கங்கை ஆற்றிலிருந்து; எம்மை ஏற்றினை ஆயின்- எம்மைப் கரையேற்றிச்
(தென்கரை)சேரச் செய்தால்; வெவ இடர்க்கடல் நின்று ஏற்றி – கொடிய
துயரக் கடலிலிருந்துகரையேற்றி; வேந்தன்பால் விடுத்தது’ – இராமன்பால்
அனுப்பியது ஆகும்;’ என்றான்- என்று சொன்னான்.

——-

நன்று’ எனப் புளிஞர் வேந்தன்
நண்ணினன் தமரை; ‘நாவாய்
சென்று இனித் தருதிர்’ என்ன, வந்தன-
சிவன் சேர் வெள்ளிக்
குன்று என, குனிக்கும் அம் பொன் குவடு என,
குபேரன் மானம்
ஒன்று என, நாணிப் பல் வேறு
உருவு கொண்டனைய ஆன,–45-

(பரதன் கூறியது கேட்டு) புளிஞர் வேந்தன் – வேடர் வேந்தனாய
குகன்; ‘நன்று’- நல்லது (அவ்வாறே செய்வேன்) என்று சொல்லி; தமரை
நண்ணினன் – தன் இனத்தவரைஅடைந்து; ‘சென்று இனி நாவாய்
தருதிர்’ என்ன – (நீங்கள்) சென்று இனிமேல்படகுகளைக் கொண்டு
வருக என்று சொல்லிவிட; (நாவாய்கள்) சிவன் சேர் வெள்ளிக் குன்று
என- சிவபெருமான் வீற்றிருந்து அருளும் (திருக்கயிலாயம் எனப்பெறும்)
வெள்ளிமலை போல; குனிக்கும் அம்பொன் குவடு என –
(அச்சிவபெருமான் திரிபுர மெரித்த காலத்தில்) வளைத்த(மகா மேரு
மலையாகிய) பொன்மலை போல; குபேரன் மானம் என – (வடதிசைக்கு
அதிபனாகிய) குபேரனது புஷ்பக விமானம் போல; ஒன்று என நாணி –
(இவையெல்லாம்) தாம்ஒன்றாய் இருப்பதற்கு வெட்கமுற்று; பல்வேறு
உருவு கொண்டனைய ஆன – அவை தாமேஒவ்வொன்றும் பல்வேறு
வடிவங்களை எடுத்துக் கொண்டாற்போன்றவையாகிய நாவாய்கள்; வந்தன-
(கங்கையின் கண்) வந்து சேர்ந்தன.

———

நங்கையர் நடையின் அன்னம்
நாண் உறு செலவின் நாவாய்.
கங்கையும் இடம் இலாமை மிடைந்தன –
கலந்த எங்கும், –
அங்கொடு, இங்கு, இழித்தி ஏற்றும் அமைதியின்,
அமரர் வையத்து
இங்கொடு அங்கு இழித்தி ஏற்றும்
இருவினை என்னல் ஆன,—46-

நங்கையர் நடையின்- பெண்கள் நடைபோன்ற நடையையும்;
அன்னம் நாணுறு செலவின் – அன்னப் பறவைகள்நாணப்படும் படியான
நீரிற் செல்லுதலும் உடைய, நாவாய்; அங்கொடு இங்கு – அக்கரையில்
உள்ளாரை இக்கரையிலும்; இழித்தி ஏற்றும் அமைதியின் – ஏற்றி
இறக்கும்தன்மையினால்; அமரர் வையத்து அங்கொடு – தேவருலகமாகிய
அவ்வுலகத்தோடு; இங்கு – இவ்வுலகில்உள்ளாரை; இழித்தி ஏற்றும் –
ஏற்றி இறக்கும்; இருவினை – புண்ணியம், பாவம்என்னும் இருவினை;
என்னல் ஆன – என்று சொல்லும்படியாக இருந்தனவாய்; கங்கையும்
இடம் இலாமை மிடைந்தன- கங்கா நதியிலும் இடம் இல்லை என்னும்படி
நெருங்கின; எங்கும் கலந்தன – எல்லா இடங்களிலும் சேர்ந்தன.

——–

வந்தன, வரம்பு இல் நாவாய்;
வரி சிலைக் குரிசில் மைந்த!
சிந்தனை யாவது?’ என்று,
சிருங்கிபேரியர்கோன் செப்ப,
சுந்தர வரி விலானும்
சமந்திரன்தன்னை நோக்கி,
‘எந்தை! இத் தானைதன்னை ஏற்றுதி,
விரைவின்’ என்றான்.–47-

சிருங்கி பேரியர் கோன்- சிருங்கிபேரம் என்னும் நகரில்
உள்ளார்க்கு அரசன் ஆகிய குகன்; (பரதனை நோக்கி) ‘வரிசிலைக்
குரிசில் மைந்த – கட்டமைந்த வில் தொழிலிற் சிறந்த தயரத குமாரனாகி
பரதனே!; வரம்பு இல் நாவாய் வந்தன – கணக்கில்லாத படகுகள்
வந்துள்ளன; சிந்தனையாவது’ – (உன்) மனக்கருத்து என்ன?; என்று
செப்ப – என்று சொல்ல; சுந்தரவரிவில்லானும் – அழகிய கட்டமைந்த
வில்லானாகிய பரதனும்; சுமந்திரன் தன்னைநோக்கி – (மதியமைச்சருள்
மூத்தோனாகிய) சுமந்திரனைப் பார்த்து; ‘எந்தை – என்தந்தையே!;
இத்தானை தன்னை – இச்சேனைகளை; விரைவின் ஏற்றுதி’-விரைவாகப்
படகில் ஏற்றுக; என்றான் – என்று சொன்னான்.

————-

குரிசிலது ஏவலால், அக்
குரகதத் தேர் வலானும்,
வரிசையின் வழாமை நோக்கி, மரபுளி
வகையின் ஏற்ற,
கரி, பரி, இரதம், காலாள்,
கணக்கு அறு கரை இல் வேலை,
எரி மணி திரையின் வீசும் கங்கை யாறு
ஏறிற்று அன்றே!–48-

குரிசிலது ஏவலால்- பரதனது கட்டளையால்; அக் குரகதத்
தேர்வலானும் – குதிரைகள் பூட்டிய தேரைச்செலுத்தலில் வல்ல
அச்சுமத்திரனும்; வரிசையின் வழாமை நோக்கி – முறைப்படி தவறாமல்
பார்த்து; மரபுளி வகையின் ஏற்ற – அவரவர்க்குள்ள மரபுகளின்படி
(படகுகளில்)ஏற்றியனுப்ப; கரி, பரி, இரதம், காலாள் – யானை,
குதிரை, தேர், வீரர் என்றுசொல்லப்பெறும்; கணக்கு அறு –
எண்ணிக்கையில் அளவுபடாத; கரை இல் வேலை – கரையற்றசேனைக்
கடல்; எரிமணி திரையின் வீசும் – ஒளிவீசும் மணிகளை அலைகளால்
(கரைக்கண்)எறிகின்ற; கங்கை யாறு – கங்கையாற்றை; ஏறிற்று – கடந்து
அக்கரை சென்றுஏறியது.

——-

இடிபடு முழக்கம் பொங்க,
இன மழை மகர நீரை
முடிவு உற முகப்ப, ஊழி
இறுதியின் மொய்ப்ப போலக்
கொடியோடு வங்கம் வேலை
கூம்பொடு படர்வ போல
நெடிய கை எடுத்து நீட்டி நீந்தின,
நெடுங் கை வேழம்.–49-

இன மழை – கூட்டமான மேகங்கள்; இடிபடு முழக்கம் பொங்க –
ஒன்றுடன் ஒன்றுமோதுவதால் உண்டாகிய முழக்க ஒலி அதிகரிப்ப; ஊழி
இறுதியின் – யுகப்பிரளயகாலத்தே; மகர நீரை – கடல் நீரை; முடிவுஉற
முகப்ப – அடியோடு வற்றும்படிமொண்டு உண்பதற்காக; மொய்ப்ப
போல – நெருங்கி யுள்ளவை போலவும்; கொடியோடுவங்கம் –
கொடியோடு கூடிய கப்பல்; வேலை – கடலின்கண்; கூம்பொடு –
பாய்மரத்தோடு; படர்வ போல – செல்வன போலவும்; நெடுங்கை வேழம் –
நீண்டதுதிக்கையை உடைய யானைகள்; நெடிய கை எடுத்து நீட்டி –
தமது நீண்ட துதிக்கையை உயரத்தூக்கி; நீந்தின- (கங்கையில்) நீந்திச்
சென்றன.

———

சங்கமும் மகர மீனும்,
தரளமும் மணியும் தள்ளி,
வங்க நீர்க் கடலும் வந்து
தன் வழிப் படர, மானப்
பொங்கு வெங் களிறு நூக்க,
கரை ஒரீஇப் போயிற்று அம்மா –
கங்கையும் இராமற் காணும்
காதலது என்ன மாதோ!–50-

மானம் – பெருமை பொருந்திய; பொங்கு – மேல்கிளம்பிய;
வெங்களிறு -கொடிய யானைகள்; நூக்க – தள்ளுதலால்; சங்கமும்
மகரமீனும் தரளமும் மணியும்தள்ளி – சங்கு, சுறாமீன், முத்து,
மணிக்கற்கள் ஆகியவற்றைத் தள்ளி; வங்க நீர்க் கடலும் –
மரக்கலங்களையுடையநீர்மிகுந்த கடலும்; தன்வழி வந்து படர –
தன்னிடத்து வந்து பரவும்படி; கங்கை -கங்கா நதியும்; இராமன் காணும்
காதலது என்ன – இராமனைக் காணும் அன்பு மீக்கூர்ந்தது என்னும்படி;
கரை ஒரீஇப் போயிற்று – கரை கடந்து சென்றது.

————–

பாங்கின் உத்தரியம் மானப்
படர் திரை தவழ, பாரின்
வீங்கு நீர் அழுவம்தன்னுள்,
விழு மதக் கலுழி வெள்ளத்து
ஓங்கல்கள் தலைகள் தோன்ற,
ஒளித்து அவன் உயர்ந்த கும்பம்,
பூங் குழற் கங்கை நங்கை முலை எனப்
பொலிந்த மாதோ!–51-

பாங்கின் -அருகில்; உத்தரியம் மான – பெண்கள் அணிந்துள்ள
மேலாடைபோல; படர் திரை தவழ – கரைமேல் சென்று தவழும்
அலைகள் செல்ல; பாரின் வீங்குநீர் அழுவம் தன்னுள் – உலகில்
மிகுந்த நீர்ப்பரப்பையுடைய யாற்றுப் பள்ளத்துள்; விழும் மதக் கலுழி
வெள்ளத்து ஓங்கல்கள் – விழுகின்ற மதநீர்ப்பெருக்காகிய கலங்கள்
வெள்ளத்தை உடைய மலைபோன்ற யானைகள்; ஒளித்துத் தலைகள்
தோன்ற – உடல் முழுவதும்நீரால் மறைக்கப்பட்டுத் தலைகள்மட்டும் மேல்
தோன்ற; அவண் உயர்ந்த கும்பம் -அங்கே கங்கைப் பரப்பின் மேல்
உயர்ந்து தோன்றுகின்ற மத்தகங்கள் (தலைமேடுகள்); பூங்குழல் கங்கை
நங்கை முலை எனப் பொலிந்த – அழகிய கூந்தலை உடைய கங்கை
மகளின்தனங்களைப்போல விளங்கின.

———

கொடிஞ்சொடு தட்டும், அச்சும், ஆழியும்,
கோத்த மொட்டும்,
நெடுஞ் சுவர்க் கொடியும்; யாவும்,
நெறி வரு முறையின் நீக்கி,
விடும் சுவல் புரவியோடும்
வேறு வேறு ஏற்றிச் சென்ற –
மடிஞ்சபின் உடம்பு கூட்டும் வினை என –
வயிரத் தேர்கள்.–52-

வயிரத் தேர்கள்- வலிய இரதங்கள்; கொடிஞ்சொடு –
கொடிஞ்சியுடன்; தட்டும் -தேர்த்தட்டும்; ஆழியும் – சக்கரமும்; கோத்த
மொட்டும் – இணைத்தமொட்டும்; நெடுஞ்சுவர்க் கொடியும் – நீண்ட
இருபக்கச் சுவர்களின் மேல் கட்டியகொடியும்; யாவும் – பிறவற்றையும்;
நெறிவரு முறையின் நீக்கி – முறைப்படியான வகையில்தனித்தனியாகப்
பிரித்து; விடும் சுவல் புரவியோடும் – (கத்தரியாது) விட்டு வளர்ந்த
பிடரியை உடைய குதிரையோடும்; வேறு வேறு – தனித் தனியாகப்
படகுகளில் எற்றி அக்கரை கொண்டுசெல்லப்பட்டன. (எவ்வாறு உளது
எனில்); மடிஞ்சபின் – இறந்த பிறகு (அவ்வுயிர்க்கு); உடம்பு கூட்டும்
வினை என – வேறு உடம்பினைக் கூட்டுகின்ற வினைபோல; ஏற்றிச்
சென்ற- ஏற்றிச் செல்லப்பட்டன.

———-

நால் – இரண்டு ஆய கோடி, நவை இல்
நாவாய்கள் மீதா,
சேல் திரண்டனைய ஆய கதியொடும்,
நிமிரச் சென்ற –
பாலி திரண்டனைய மெய்ய,
பயம் திரண்டனைய நெஞ்ச,
கால் திரண்டனைய கால,
கடு நடைக் கலினப் பாய் மா.–53-

பால் திரண்டனைய மெய்ய- பால் திரண்டாற்போன்ற (வெள்ளிய)
உடம்பை உடையன; பயம் திரண்டனைய நெஞ்ச -அச்சம்
திரண்டாற் போன்ற (திடுக்கிடும்) மனம் உடையன; கால் திரண்டனைய
கால – காற்று ஒன்றுகூடினாற்போன்ற (வேகமாகச் செல்லும்) காலினை
உடையன; கடுநடை – விரைந்து செல்லும்நடையை உடைய; கலினம் –
சேணம் அணிந்த; பாய்மா – பாயும் குதிரைகள்; நால் இரண்டு ஆய
கோடி- எட்டுக்கோடியானவை; சேல் திரண்டனைய ஆய கதியொடும் –
சேல்மீன்கள் கூடிச் சென்றாற்போன்ற செலவோடும்; நவை இல் நாவாய்கள்
மீது-குற்றமற்ற படகுகளின் மேலாக; நிமிரச் சென்ற- நிமிர்ந்து சென்றன.

——–

ஊடு உற நெருக்கி, ஓடத்து,
ஒருவர்முன் ஒருவர் கிட்டி,
சூடகத் தளிர்க் கைம் மாதர்
குழமினர் துவன்றித் தோன்ற,
பாடு இயல் களி நல் யானைப் பந்தி அம்
கடையின் குத்தக்
கோடுகள் மிடைந்த என்ன,
மிடைந்தன குரவுக் கொங்கை.–54-

சூடகம் – வளையல் (அணிந்த); தளிர்க் கைம் மாதர் – தளிர்
போன்ற(மென்மையான) கையினை உடைய மகளிர்; ஊடு உற நெருக்கி –
இடையே புகுந்து நெருங்கிநெருக்கி; ஒடத்து – நாவாய்களில்; ஒருவர்
முன் ஒருவர் கிட்டி – ஒருவர்க்குமுன்னால் ஒருவர் அண்மி; குழுமினர்
துவன்றித் தோன்ற – திரண்டு நெருங்கித்தோன்றுதலால்; பாடு இயல் –
பெருமை பொருந்திய; களி நல் யானை -மதமகிழ்வுடைய உத்தம யானை;
பந்தி – வரிசையில்; அம் கடையின் குத்த -அழகிய முனைகளால்
குத்துமாறு; கோடுகள் மிடைந்த அன்ன – கொம்புகள் நெருங்கின என்று
சொல்லும்படி; குவவுக் கொங்கை – (அம்மகளிரின்) திரண்ட முலைகள்;
மிடைந்தன- நெருங்கின.

———

பொலங் குழை மகளிர், நாவாய்ப்
போக்கின் ஒன்று ஒன்று தாக்க,
மலங்கினர்; இரண்டு பாலும்
மறுகினர் வெருவி நோக்க,
அலங்கு நீர் வெள்ளம் தள்ளி
அழிதர, அங்கம் இங்கும்
கலங்கலின், வெருவிப் பாயும்
கயற்குலம் நிகர்த்த, கண்கள்.–55-

நாவாய்- (மகளிர் ஏறிச் செல்லும்) மரக்கலங்கள்; போக்கின் –
செல்லும் வேகத்தில்; ஒன்று ஒன்று தாக்க- ஒன்று மற்றொன்றோடு மோத;
பொலங்குழை மகளிர் – (அக்கலத்தில்உள்ள) பொன்னாலியன்ற குழை
அணிந்த மகளிர்; மலங்கினர் – மனம் கலங்கி; மறுகினர் – மயங்கி;
வெருவி – அச்சமுற்று; இரண்டு பாலும் நோக்க – இரண்டுபக்கமும்
பார்க்க; கண்கள் – (இவ்வாறு மிரண்டு பார்க்கு அவர்களின்) கண்கள்;
அலங்கும் நீர் வெள்ளம் தள்ளி அழிதர – அசைகின்ற நீர்ப்பெருக்குத்
தள்ளி நிலைகெட; அங்கும் இங்கும் கலங்கலின் – ஆற்று நீர் அங்கும்
இங்குமாகக் கலங்குவதனால்; வெருவிப் பாயும் – பயந்து துள்ளுகின்ற;
கயற்குலம் நிகர்த்த – மீன் கூட்டத்தைஒத்துள்ளன.

——–

இயல்வு உறு செலவின் நாவாய்,
இரு கையும் எயினர் தூண்ட,
துயல்வன துடிப்பு வீசும்
துவலைகள், மகளிர் மென் தூசு
உயல்வு உறு பரவை அல்குல் ஒளிப்பு
அறத் தளிப்ப, உள்ளத்து
அயர்வுறும் மதுகை மைந்தர்க்கு
அயாவுயிர்ப்பு அளித்தது அம்மா!–56-

இயல்பு உறு செல்வின் நாவாய்- இயல்பாகப் பொருந்திய
செலவினை உடைய மரக்கலங்கள்; இரு கையும் எயினர் தூண்ட –
இருபக்கத்தும் வேடர்கள் உந்துதலால்; துயல்வன துடுப்பு –
அசைவனவாகிய துடுப்புகள்; வீசும் துவலைகள் – வீசுகின்ற நீர்த்துளிகள்;
மகளிர் – (கலத்தில் உள்ள) மகளிரது; மென்தூசு – மெல்லிய ஆடை;
உயல்வு உறு – மறைந்து பொருந்திய; பரவை அல்குல் – பரந்த
அல்குலை; ஒளிப்பு அற தளிப்ப – மறைவு நீங்க வெளித் தோன்றச்
செய்ய; உள்ளத்து அயர்வுறும் – (இராமன் வனம் புகுந்த நாள்முதலாகப்
போகம் இழத்தலின்) மனச்சோர்வுஅடைந்த; மதுகை மைந்தார்க்கு –
மனவலிமை உடைய வீரர்களுக்கு; அயா வுயிர்ப்பு- வருத்தத்திலிருந்து
நீங்குதலை; அளித்தது – உண்டாக்கி (உற்சாகப்படுத்தி)யது.

———

இக் கரை இரைத்த சேனை
எறி கடல் முகந்து, வெஃகி,
அக் கரை அடைய வீசி, வறியன
அணுகும் நாவாய்-
புக்கு அலை ஆழி நல் நீர் பொறுத்தன
போக்கிப் போக்கி,
அக் கணத்து உவரி மீளும்
அகல் மழை நிகர்த்த அம்மா!–57-

இக் கரை – (கங்கையின்) வடகரையில் உள்ள; இரைத்த சேனை
எறிகடல் -ஒலித்துக்கொண்டுள்ள சேனையாகிய அலைகடலை; வெஃகி
முகந்து – விரும்பிஏற்றுக்கொண்டு; அக்கரை – தென்கரையில்; அடைய
வீசி – முழுவதும் இறக்கிவிட்டு; வறியன – ஒன்றும் இல்லாதனவாய்;
அணுகும் – (வடகரை வந்து) சேரும்; நாவாய் – மரக்கலம்; அலை ஆழி
புக்கு – அலை வீசும் கடலின் கண் புகுந்து; நல் நீர் -மிகுதியான நீரை;
பொறுத்தன – சுமந்தனவாய்ப் (புறப்பட்டு); போக்கிப் போக்கி –
(மழைப்பெய்து) கழித்துக் கழித்து; அக்கணத்து – அடுத்த கணத்திலேயே;
உவரிமீளும் – (மீண்டும் முகப்பதற்காகக்) கடலுக்குத் திரும்புகின்ற; அகல்
மழை- அகன்ற மேகத்தை; நிகர்த்த – ஒத்திருக்கின்றன.

——–

அகில் இடு தூபம் அன்ன
ஆய் மயிர் பீலி ஆர்த்த
முகிழுடை முரண் மாத் தண்டு
கூம்பு என, முகிலின் வண்ணத்
துகிலொடு தொடுத்த செம் பொன்
தகட்டிடை தொடுத்த முத்தின்
நகு கொடி நெடிய பாயா,
நவ் எனச் சென்ற நாவாய்–58-

நாவாய் – மரக்கலங்கள்; அகில் இடு தூபம் அன்ன ஆய் மயில்
பீலி ஆர்த்த- அகிற்கட்டைகளால் உண்டாக்கப்பெற்ற புகையைப்
போன்ற அழகிய மயில் தோகைகள்கட்டப்பெற்ற; முகிழுடை முரண்மாத்
தண்டு – அரும்புபோன்ற உறுப்பைத் தலையிற் கொண்ட(தேரிலிருந்து
பிரித்த) தண்டுகள்; கூம்பு என – பாய்மரமாகத் தோன்ற; முகிலின்
வண்ணத் துகிலொடு தொடுத்த – மேகநிறமான துணியொடு கட்டப்பெற்ற;
செம்பொன் தகட்டிடைதொடுத்த – செம்பொன்னால் ஆகிய தகட்டின்
இடையே அழகுறத் தைத்த; முகத்தின் நகுகொடி -முத்துக்களால் விளங்கும்
கொடிகள்; நெடிய பாயா – நீண்ட பாயாகத் தோன்ற; நவ் எனச்சென்ற –
பெரிய பாய்மரக் கப்பல்கள் போலச் சென்றன.

———–

ஆனனம் கமலத்து அன்ன,
மின்அன்ன, அமுதச் செவ் வாய்
தேன் நனை, குழலார் ஏறும்
அம்பிகள் சிந்து முத்தம்
மீன் என, விரிந்த கங்கை
விண் என, பண்ணை முற்றி
வானவர் மகளிர் ஊறும்
மானமே நிகர்த்த மாதோ!–59-

விரிந்த கங்கை – அகன்ற கங்காநதி; விண் என – ஆகாயம் ஆக;
சிந்து முத்தம் மீன் என – (கங்கையாறு) சிந்துகின்ற முத்துகள்
விண்மீன்களாக; கமலத்து அன்ன ஆனனம் – தாமரை மலர் போன்ற
முகம்; அமுதச் செவ்வாய் – அமுதமூறும் சிவந்தவாய் ஆகியவற்றை
உடைய; மின் அன்ன தேன் நனை குழலார் – தேன் சிந்தும் கூந்தலை
உடைய மின்னலை ஒத்த மகளிர்; ஏறும் அம்பிகள் – ஏறிச் செலுத்தும்
ஒடங்கள்; வானவர் மகளிர் பண்ணை முற்றி – தேவ மகளிர்கள் நீர்
விளையாட்டை முடித்து; ஊறும்மானமே நிகர்த்த – மேலேறிச்
செல்லுகின்ற விமானங்களை ஒத்தன.

———-

துளி படத் துழாவு திண் கோல்
துடிப்பு இரு காலின் தோன்ற,
நளிர் புனல் கங்கை ஆற்றில்
நண்டு எனச் செல்லும் நாவாய்,
களியுடை மஞ்ஞை அன்ன,
கனங் குழை, கயல் கண், மாதர்
ஒளிர் அடிக் கமலம் தீண்ட,
உயிர் படைத்தனவே ஒத்த.–60-

துளிபட – துளிகள் உண்டாகும்படி; துழாவு – (நீரைத்) துழாவுகின்ற;
திண்கோள்- வலிய கோலை உடைய; துடுப்பு – துடுப்புகள்; இரு காலின்
தோன்ற -இரண்டு கால்களைப் போலத் தோன்ற; நளிர் புனல் கங்கை
ஆற்றில்- குளிர்ந்த நீரைஉடைய கங்கா நதியில்; நண்டு எனச் செல்லும்
நாவாய் – நண்டு என்று சொல்லும்படிசெல்கின்ற மரக்கலம்; களி உடைய
மஞ்ஞை அன்ன – களிப்பை உடைய மயிலை ஒத்த; கணங்குழை-
பொற்றோடு அணிந்த; கயல்கண் – மீன் போன்ற கண்ணை உடைய;
மாதர் -மகளிரது; ஒளிர் அடிக் கமலம் தீண்ட – விளங்குகின்ற அடித்
தாமரைகள் படுதலால்; உயிர் படைத்தனவே ஒத்த – உயிர் பெற்றனவே
போன்றிருந்தன

———

மை அறு விசும்பில், மண்ணில்,
மற்றும் ஓர் உலகில், முற்றும்
மெய் வினை தவமே அன்றி
மேலும் ஒன்று உளதோ? கீழோர்
செய் வினை நாவாய் ஏறித் தீண்டலர்;
மனத்தின் செல்லும்
மொய் விசும்பு ஓடம் ஆக,
தேவரின் முனிவர் போனார்.–61-

(இவ்வாறு நாவாய் ஏறிப் பலரும் செல்ல) முனிவர் – முனிவர்கள்;
கீழோர்செய்வினை நாவாய்- கீழான மனிதச் சாதியினரால் செய்யப்பெற்ற
தொழிலமைந்தமரக்கலத்தை; ஏறித் தீண்டலர் – தீண்டி ஏறாதவர்களாய்;
மனத்தில் செல்லும்மொய்விசும்பு ஓடமாக – மனத்தால் நினைத்த
மாத்திரையில் செல்லும் ஆகாயமே தாம் ஏறிச்செல்லும் ஓடமாகக் கருதி;
தேவரின் – தேவர்களைப் போல; போனார் – வான் வழியேசென்றார்கள்;
மை அறு விசும்பில் – குற்றமற்ற விண்ணுலகிலும்; மண்ணில் –
மண்ணுலகிலும்; மற்றும் ஓர் உலகில் – வேறோர் உலகிலும்; மெய்வினை –
உண்மையானதொழில்; தவமே அன்றி மேலும் ஒன்று உளதோ – தவமே
அல்லாமல் அதற்கு மேற்பட்டதாகவேறு ஒரு தொழில் உள்ளதா? இல்லை
என்றபடி,

——-

‘அறுபதினாயிரம் அக்குரோணி’ என்று
இறுதி செய் சேனையும், எல்லை தீர் நகர்
மறு அறு மாந்தரும், மகளிர் வெள்ளமும்,
செறி திரைக் கங்கை, பின் கிடக்கச் சென்றவே.–62-

அறுபதினாயிரம் அக்குரோணி’ என்று இறுதிசெய் சேனையும் –
அறுபதாயிரம் அகௌஹிணிகள் என்று (கணக்கு) முடிவு செய்யப்பட்ட
சேனைகளும்; எல்லைதீர் நகர் – அளவுகடந்த அயோத்தி நகரத்து; மறு
அறு மாந்தரும் – குற்றம் அற்ற மக்களும்; மகளிர் வெள்ளமும் –
பெண்கள் கூட்டமும்; செறி திரைக் கங்கை – நெருங்கிய அலைவீசுகின்ற
கங்கை; பின் கிடக்கச் சென்ற – கங்கையாறு பின்னிடும்படி போயின.

————-

சுழித்து நீர் வரு துறை ஆற்றை, சூழ் படை
கழித்து நீங்கியது என, கள்ள ஆசையை
அழித்து, வேறு அவனி பண்டு ஆண்ட வேந்தரை
இழித்து, மேல் ஏறினான்தானும் ஏறினான்.–63-

சூழ்படை – (பரதன்) தன்னைச் சுற்றியுள்ள சேனை; நீர் கழித்து
வருதுறையாற்றை – நீர் கழியுண்டாக்கிப் பெருகும் கரையமைந்த
கங்கையாற்றை; கழித்து நீங்கியது என – கடந்து சென்றதாக; கள்ள
ஆசையை அழித்து – வஞ்சகமானமண்ணாசையைப் போக்கி; அவனி
பண்டு ஆண்ட வேறு வேந்தரை இழித்து – (இம்) மண்ணுலகைமுன்பு
ஆட்சி புரிந்த மற்ற அரசர்களையெல்லாம் கீழ்ப்படுத்தி; மேல்
ஏறினான்தானும் -மேற்சென்றவனான பரதனும்; ஏறினான் – (நாவாயின்
கண்) ஏறினான்.

———–

சுற்றத்தார், தேவரொடும் தொழ நின்ற
கோசலையைத் தொழுது நோக்கி,
‘கொற்றத் தார்க் குரிசில்! இவர் ஆர்?’ என்று
குகன் வினவ, ‘கோக்கள் வைகும்
முற்றத்தான் முதல் தேவி; மூன்று
உலகும் ஈன்றானை முன் ஈன்றானைப்
பெற்றத்தால் பெறும் செல்வம், யான்
பிறத்தலால், துறந்த பெரியாள்’ என்றான்.–64-

குகன்-; சுற்றத்தார்- உறவினர்கள்; தேவரொடும் – தேவர்களோடு;
தொழ – வணங்குமாறு; நின்றகோசலையைத் தொழுது நோக்கி –
இருந்த கோசலைப் பிராட்டியை வணங்கிப் பார்த்து; ‘கொற்றத்தார்க்
குரிசில்! – வெற்றிமாலை சூடிய பரதனே!; இவர் ஆர்? என்று வினவ-
இவர் யாராவார் என்று கேட்க; (அதற்குப் பரதன்) ‘கோக்கள் வைகும்
முற்றத்தான் -அரசர்கள் (திறை தரக் குழுமித்) தங்கியிருக்கும் முன்றிலை
உடைய தயரதனது; முதல் தேவி- முதல் பட்டத்தரசி; மூன்று உலகும்
ஈன்றானை -மூவுலகங்களும் (முன்பு) உண்டாக்கியபிரமதேவனை; முன்
ஈன்றானை – முன்னால் (தனது திருஉந்திக் கமலத்தில்)தோற்றுவித்தருளிய
(ஸ்ரீ நாராயணன் திரு அவதாரமாகிய) இராமனை; பெற்றதால் பெறுஞ்
செல்வம்- (தன் மகனாகப்) பெற்ற காரணத்தால் பெறவேண்டிய அரசச்
செல்வத்தை; யான் பிறத்தலால்- நான் (கைகேயி மகனாகப் பின்னே)
பிறந்த காரணத்தால்; துறந்த – இழந்த; பெரியாள்’ – பெருமையுடையாள்;
என்றான் -.

———

என்றலுமே, அடியின்மிசை நெடிது வீழ்ந்து
அழுவானை, ‘இவன் யார்?’ என்று,
கன்று பிரி காராவின் துயர் உடைய
கொடி வினவ, கழல் கால் மைந்தன்,
‘இன் துணைவன் இராகவனுக்கு; இலக்குவற்கும்,
இளையவற்கும், எனக்கும், மூத்தான்;
குன்று அனைய திரு நெடுந் தோள் குகன்
என்பான், இந் நின்ற குரிசில்’ என்றான்.–65-

என்றலுமே – என்று பரதன் கூறிய – அளவிலேயே; அடியின்
மிசை -கோசலையின் திருவடிமேல்; நெடிது – நெடுநேரம்; வீழ்ந்து –
நிலம்தொட்டு வீழ்ந்து; அழுவானை – அழுகின்ற குகனை; கன்று பிரி
காராவின் துயர் உடைய கொடி – கன்றைப்பிரிந்த காராம் பசுவின்
(துன்பம் போன்று மகனைப் பிரிந்த) துன்பத்தை உடைய கொடி
போல்பவளாகிய கோசலை; ‘இவன் யார்?’ என்று வினவ – (இதோ காலில்
விழுந்துகிடக்கிற) இவன் யார்? என்று கேட்க; கழல் கால் மைந்தன் –
வீரக் கழலணிந்த கால்உடைய பரதன்; ‘இந் நின்ற குரிசில் – இதோ
தொழுது நிற்கின்ற ஆண்மகன்; இராகவனுக்கு இன்துணைவன் –
இராமனுக்கு இனிய சகோதரன்; இலக்குவற்கும் இளையவற்கும்எனக்கும்
மூத்தான் – இலக்குவனுக்கும் சத்துருக்கனனுக்கும், எனக்கும் அண்ணன்;
குன்றுஅனைய திருநெடுந் தோள் குகன் என்பான்’ – மலையொத்த
திரண்ட அழகிய நெடிய தோள்களைஉடைய குகன் என்ற பெயரை
உடையவன்; என்றான் –

———-

‘நைவீர் அலீர் மைந்தீர்! இனித் துயரால்;
நாடு இறந்து காடு நோக்கி,
மெய் வீரர் பெயர்ந்ததுவும் நலம் ஆயிற்று
ஆம் அன்றே! விலங்கல் திண்தோள்
கை வீரக் களிறு அனைய காளை இவன்
தன்னொடும் கலந்து, நீவிர்
ஐவீரும் ஒருவீர் ஆய், அகல் இடத்தை நெடுங்
காலம் அளித்திர்’ என்றாள்.–66-

(அதுகேட்ட கோசலை அவர்களைப் பார்த்து); ‘மைந்தீர்’ – என்
பிள்ளைகளே!; இனித் துயரால் நைவீர் அலீர் – இனிமேல் நீங்கள்
துன்பத்தால் வருந்தாமல்இருப்பீர்களாக; மெய்வீரர் – சுத்த வீரர்கனாகிய

இராம இலக்குவர்கள்; நாடு இறந்து – கோசல நாடு கடந்து; காடு
நோக்கி -வனத்தை நோக்கி; பெயர்ந்ததுவும் – புறப்பட்டுச் சென்றதுவும்;
நலம் ஆயிற்று ஆம்அன்றே! – (இத்தகைய சிறந்த சகோதரனைத்
தருதலால்) நன்மைக்குக் காரணமாயிற்றல்லவா!; விலங்கல் திண்தோள் கை
வீரக் களிறு அனைய காளை – மலை போன்ற வலிய தோளைஉடைய
துதிக்கையாற் செய்யும் வீரச் செயலை உடைய ஆண் யானையை ஒத்த
ஆண் மகனாகிய; இவன்தன்னோடும் – இந்தக் குகனோடும்; கலந்து –
ஒன்றுபட்டு; நீவிர் ஐவீரும் -நீங்கள் ஐந்து பேரும்; அகல் இடத்தை –
அகன்ற பூமியை; நெடுங்காலம் -நீண்டகாலம்; அளித்தீர்’ – அரசாட்சி
செய்து காப்பாற்றுவீர்களாக; என்றாள்- என்று சொன்னாள்.

————–

அறம் தானே என்கின்ற அயல் நின்றாள்தனை
நோக்கி, ‘ஐய! அன்பின்
நிறைந்தாளை உரை’ என்ன, ‘நெறி திறம்பாத்
தன் மெய்யை நிற்பது ஆக்கி
இறந்தான்தன் இளந் தேவி; யாவர்க்கும்
தொழு குலம் ஆம் இராமன் பின்பு
பிறந்தானும் உளன் என்னப் பிரியாதான் தனைப்
பயந்த பெரியாள்’ என்றான்.–67-

அறம் தானே என்கின்ற அயல் நின்றாள் தனை- அறக்கடவுளே
என்று சொல்லத் தக்கவளாய்ப் பக்கத்தில் நின்ற சுமித்திரா தேவியை;
நோக்கி – (குகன்) பார்த்து; ‘ஐய! – பரதனே!; அன்பின் நிறைந்தாளை-
அன்பால் நிறைந்த கொள்கலமாகிய இப் பெருமாட்டியை; உரை’ – (யார்
என்று எனக்குச்)சொல்; என்ன – என்று கேட்க; (பரதன்) ‘நெறி திறம்பா-
சத்திய வழியில்சிறிதும் மாறுபடாத; தன் மெய்யை – தன் வாய்மையை;
நிற்பது ஆக்கி – என்றும் நிலைபெறுவதாகச்செய்து; இறந்தான்தன் –
தன் (மெய் எனும் பொய்யுடலைக் கைவிட்டு) இறந்தவனாகியதயரதனது;
இளந்தேவி – இளைய பட்டதரசியாவாள்; (அதன் மேலும் இவள்) யாவர்க்கும் – எல்லா மக்களுக்கும்; தொழுகுலம் ஆம்
இராமன் -வணங்கத்தக்க குல தெய்வமாகிய இராமனுக்கு; பின்பு
பிறந்தானும் உளன் என்ன – பின்னேபிறந்த தம்பியும் (ஒருவன்) உளம்
என்று அனைவரும் அறிந்து சொல்லுமாறு; பிரியாதான் தனை-
(இராமனை விட்டு) நீங்காத இலக்குவனை; பயந்த – பெற்றெடுத்த;
பெரியாள்’ -பெருமை உடையவள்; என்றான் – என்று சொன்னான்.
சொன்னான்.

———

சுடு மயானத்திடை தன் துணை ஏக,
தோன்றல் துயர்க் கடலின் ஏக,
கடுமை ஆர் கானகத்துக் கருணை ஆர்கலி
ஏக, கழல் கால் மாயன்
நெடுமையால் அன்று அளந்த உலகு எல்லாம்,
தன் மனத்தே நினைந்து செய்யும்
கொடுமையால், அளந்தாளை, ‘“ஆர் இவர்?”
என்று உரை’ என்ன, குரிசில் கூறும்;–68-

(பின்னர்க் குகன்) தன் துணை கடு மயானத்திடை ஏக – தன்
கணவனாய தயரதன்(இறந்தாரைச்) சுடுகின்ற சுடுகாட்டிடத்தே செல்ல;
தோன்றல் – (தன் மகனாகிய) பரதன்;துயர்க் கடலின் ஏக – துன்ப
வெள்ளத்தினிடையே செல்ல; கருணை ஆர்கலி – அருட்கடலாகிய
இராமன்; கடுமை ஆர் கானகத்து ஏக – கொடுமை பொருந்திய
காட்டிடத்தே செல்ல;(இவ்வாறு செய்து) கழல்கால் மாயன் – கழலணிந்த
காலையுடைய திருமால்; நெடுமையால் -(வாமனனாக வந்த மாவலி)
பால் மூவடி மண் கேட்டுப் பின்னர் எடுத்த) நெடிய திருவுருவத்தால்;
அன்று -முற்காலத்தே; அளந்த உலகு எல்லாம் – மூவடியில் ஈரடியால்
அளந்த எல்லா உலகங்களையும்; (திருமால் போல அவதாரம் எடுத்துச்
சிரமப்படாது) தன் மனத்தே நினைந்து செய்யும்கொடுமையால்
அளந்தாளை – தன் மனத்தின்கண் தானே எண்ணிச் செய்கிற
கொடுமையினால்(எளிதாக) அளவு செய்தவளாகிய கைகேயியை; “ஆர்
இவர்” என்று உரை’ என்ன- இவர் யார்என்று சொல்லுக என்று கேட்க;
குரிசில் – பரதன்; கூறும் – சொல்வான்ஆயினன்.

———–

படர் எலாம் படைத்தாளை, பழி வளர்க்கும்
செவிலியை, தன் பாழ்த்த பாவிக்
குடரிலே நெடுங் காலம் கிடந்தேற்கும்
உயிர்ப் பாரம் குறைந்து தேய,
உடர் எலாம் உயிர் இலா எனத் தோன்றும்
உலகத்தே, ஒருத்தி அன்றே,
இடர் இலா முகத்தாளை, அறிந்திலையேல்,
இந் நின்றாள் என்னை ஈன்றாள்.’–69-

‘படர் எலாம் படைத்தாளை – துன்பங்களை எல்லாம்
உண்டாக்கினவளை; பழிவளர்க்கும் செவிலியை – உலக நிந்தை
என்கின்ற பழியாகிய குழந்தைக்கு வளர்ப்புத் தாயை; தன் பாழ்த்த பாவிக்
குடரிலே – தனது பாழான தீவினையுடைய வயிற்றில்; நெடுங்காலம்
கிடந்தேற்கும் -நீண்டநாள் (பத்துத் திங்கள்) தங்கியிருந்த எனக்கும்;
உயிர்ப்பாரம் குறைந்து தேய – உயிர் என்கின்ற சுமை குறைந்து
தேயும்படி; உடர் எலாம் உயிரிலாஎனத் தோன்றும் உலகத்தே –
உடல்கள் எல்லாம் உயிரில்லாதன என்று தோன்றும்படி உள்ள
உலகத்தின்கண்; ஒருத்தி அன்றே இடரிலா முகத்தாளை – இவ் ஒருத்தி
மட்டும் அல்லவாதுன்பமே இல்லாத முகம் உடையவள்;
இவளை, அறிந்திலையேல் – (இவ்வளவு நேரம் முகத்தைக் கண்டே
அறிந்து கொண்டிருக்கவேண்டும், அப்படி) அறியவில்லையானால்; இந்
நின்றாள் – இதோ இருக்கின்றவள்; என்னைஈன்றாள் – என்னைப்பெற்ற
கைகேயி யாவாள்,’

———-

என்னக் கேட்டு, அவ் இரக்கம் இலாளையும்
தன் நல் கையின் வணங்கினன் தாய் என;
அன்னப் பேடை சிறை இலது ஆய்க் கரை
துன்னிற்று என்னவும் வந்தது, தோணியே.–70-

என்னக் கேட்டு- (குகன்) பரதன் இவ்வாறு சொல்லக் கேட்டு; அவ்
இரக்கம் இலாளையும் – அந்தஇரக்கமற்றவளாகிய கைகேயியையும்; தன்
நல் கையின் – தன் நல்ல கைகளால்; தாய் எனவணங்கினன் – தனக்குத்
தாய் எனக் கருதி வணங்கினான்; தோணி – மரக்கலம்; அன்னப் பேடை-
பெண் அன்னம்; சிறை இலது ஆய் – சிறகுகள் இல்லாமல்; கரை
துன்னிற்றுஎன்னவும் – கரையை வந்து அடைந்தது என்று
சொல்லலாம்படி; வந்தது – கரையை வந்தடைந்து.

————–

இழிந்த தாயர் சிவிகையின் ஏற, தான்,
பொழிந்த கண்ணின் புதுப் புனல் போயினான்-
ஒழிந்திலன் குகனும் உடன் ஏகினான் –
கழிந்தனன், பல காவதம் காலினே.–71-

(தோணியிலிருந்து) இழிந்த – இறங்கிய; தாயார் – தாய்மார்கள்;
சிவிகையின் ஏற- பல்லக்கில் ஏறி உடன்வர; (பரதன்) கண்ணின் பொழிந்த
புதுப் புனல்போயினான் – கண்ணிலிருந்து பொழிந்த புதிய கண்ணீரில்
நடந்து சென்றான்; குகனும்ஒழிந்திலன் உடன் ஏகினான் – குகனும்
தன் நாட்டில் தங்காமல் பரதனுடன் சென்றான்; காலில் பல காவதம்
கழிந்தனன் – (இங்ஙனம் பரதன்) காலால் பல காவத வழிகளை நடந்து
கடந்தான்.

————

பரத்தின் நீங்கும் பரத்துவன் என்னும் பேர்
வரத்தின் மிக்கு உயர் மாதவன் வைகு இடம்,
அருத்தி கூர, அணுகினன்; ஆண்டு, அவன்
விருத்தி வேதியரோடு எதிர் மேவினான்.–72-

(பின்பு பரதன்) பரத்தின் நீங்கும் – வினைச் சுமையிலிருந்து விலகிய;
பரத்துவன் – பரத்துவாசன்; என்னும் பேர் வரத்தின் மிக்கு உயர்
மாதவன் வைகு இடம்- என்கின்ற பேரை உடைய மேன்மையிற் சிறந்த
உயர்ந்த முனிவன் தங்கிய ஆச்சிரமத்தை; அருத்தி கூர – அன்பு மிக;
அணுகினன் – சேர்ந்தான்; அவன் – அப்பரத்துவாசன்; ஆண்டு –
அவ்விடத்தில்; விருத்தி வேதியரோடு – அறுதொழில் உடைய
அந்தணரோடு; எதிர்மேவினான் – எதிர்கொண்டு வந்தான்.

——————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கம்ப ராமாயணம்/அயோத்தியா காண்டம்/11-ஆறு செல் படலம்–

December 13, 2020

வரன்முறை தெரிந்து உணர் மறையின் மா தவத்து
அரு மறை முனிவனும், ஆண்டையான், என,
விரைவின் வந்து ஈண்டினர்; விரகின் எய்தினர்;
பரதனை வணங்கினர்; பரியும் நெஞ்சினர்.–1-

வரன்முறை தெரிந்து உணர் – அரச குலத்தின் மரபு முறைகளை
ஆராய்ந்து உணர்ந்த; மறையின் மாதவத்து – வேதவழியில் செய்யப்படும்
தவங்களைச் செய்துள்ள; அருமறை முனிவனும் – வேதத்திற்சிறந்தவசிட்ட
முனிவனும்; ஆண்டையான் என – (பரதன் உள்ள) அவ்விடத்தில்
இருக்கின்றான் என்றறிந்து; விரகின் எய்தினர் -(மந்திரக் கிழவர்கள்) ஆலோசனைக்குரிய சூழ்ச்சியோடு; விரைவின் வந்து-
விரைந்துஅரசவைக்கு வந்து; ஈண்டினர் – நெருங்கி; பரியும் நெஞ்சினர்
பரதனை வணங்கினர்- அன்பினால் இரங்கும் மனம் உடையவராய்ப்
பரதனை வணங்கினார்கள்.

———

மந்திரக் கிழவரும், நகர மாந்தரும்,
தந்திரத் தலைவரும், தரணி பாலரும்,
அந்தர முனிவரோடு அறிஞர் யாவரும்,
சந்தரக் குரிசிலை மரபின் சுற்றினார்.–2-

அந்தர முனிவரோடு- ஆகாய வழியில் இயங்கவல்ல
முனிவர்களோடு; மந்திரக் கிழவரும் – மந்திராலோசனைக்குஉரிமை
உடைய அமைச்சர்களும்; நகர மாந்தரும் – நகரத்தில் உள்ள மக்களின்
பிரதிநிதிகளாய் உள்ளவர்களும்; தந்திரத் தலைவரும் – சேனைத்
தலைவர்களும்; தரணிபாலரும் – அரசர்களும்; அறிஞர் யாவரும் –
அவ்வத் துறையில் முறைபோகிய வல்லார்களும்ஆகிய அனைவரும்;
சுந்தரக் குரிசிலை – அழகிற் சிறந்த பரதனை; மரபின் -அவரவர்க்
குள்ள வரிசை முறையின்படி; சுற்றினார் – (நெருங்கிச்) சூழ்ந்து
கொண்டார்கள்.

———-

சுற்றினர் இருந்துழி, சுமந்திரப் பெயர்ப்
பொன் தடந் தேர் வலான், புலமை உள்ளத்தான்,
கொற்றவர்க்கு உறு பொருள் குறித்த கொள்கையான்,
முற்று உணர் முனிவனை முகத்து நோக்கினான்.–3-

சுற்றினர் இருந்துழி- (வசிட்ட முனிவனும், மந்திரக் கிழவரும்,
அறிஞரும்) சூழ இருந்தபோது; கொற்றவர்க்குஉறுபொருள் அரசர்க்குரிய
சிறந்த பொருள்களை; குறித்த கொள்கையான் – நன்குஉணர்ந்து
நிறைவேற்றம் கொள்கைப் பிடிப்பு உடைய; புலமை உள்ளத்தான் –
அறிவால்நிறைந்த மனம் உடைய; சுமந்திரப் பெயர்ப் பொன் தடந்
தேர்வலான் – பொன்னால்இயன்ற பெரிய தேரைச் செலுத்துதலின் திறன்
வாய்ந்த சுமந்திரன் என்னும் பெயருடைய (அமைச்சர்தலை)வன்; முற்று
உணர் முனிவனை – எல்லாம் முழுதுணர்ந்த வசிட்ட முனிவனை; முகத்து
நோக்கினான் – (தன் மனக்கருத்தை வாயால் உரைக்க வேண்டாது அது
தோன்றும்படி) நேரேபார்த்தான்.

——–

நோக்கினால் சுமந்திரன் நுவலலுற்றதை,
வாக்கினால் அன்றியே உண்ர்ந்த மா தவன்,
‘காக்குதி உலகம்; நின் கடன் அது ஆம்’ எனக்
கோக் குமரனுக்கு அது தெரியக் கூறுவான்;–4-

சுமந்திரன் -; நோக்கினால் – மனத்தொடு பட்ட பார்வைக்
குறிப்பினால்; நுவலலுற்றதை – சொல்லியதை; வாக்கினால் அன்றியே –
(அவன்) வாயினாற்சொல்லாமலே; உணர்ந்த – தெரிந்துகொண்ட;
மா தவன் – பெருந்தவம் செய்த வசிட்டமுனிவன்; ‘உலகம் காக்குதி –
இந்த அரசாட்சியைப்பாதுகாப்பாய்; இது – இத்தரணி தாங்குதல்; நின்
கடன் ஆம் – நீ (எற்றுச்)செய்யவேண்டிய கடமையாகும்; என -; கோக்
குமரனுக்கு – அரச குமாரனாகிய பரதனுக்கு; அது – அரசின் சிறப்பும்
இன்றியமையாமையும; தெரிய – விளங்கும்படி; கூறுவான்-
எடுத்துரைக்கலானான்.

——

வேதியர், அருந் தவர், விருத்தர், வேந்தர்கள்
ஆதியர் நின்வயின் அடைந்த காரியம்,
நீதியும் தருமமும் நிறுவ; நீ இது,
கோது அறு குணத்தினாய்! மனத்துக் கோடியால்–5-

‘கோதறு குணத்தினாய்!- குற்றமற்ற குணத்தை உடைய (பரதனே)
வனே!; வேதியர் – அந்தனர்; அருந்தவர் – அரியதவம் செய்த முனிவர்;
விருத்தர் – (அநுபவத்தால்) முதிர்ந்த பெரியோர்; வேந்தர்கள் – அரசர்கள்;
ஆதியர் – முதலானோர்; நின்வயின் -உன்னிடத்து; அடைந்த காரியம் –
வந்து சேர்ந்த செயல்; நீதியும் -(மக்களுக்கு நன்மை செய்ய உள்ள) அரச
நீதியையும்; தருமமும் – (அவரவர் செயலை அவரவர்செய்தற்குத்
தடையிலாத) அரச தர்மத்தையும்; நிறுவ – (அரசன் இல்லாமையால்
சிதையாவண்ணம்)நிலை நிறுத்தவே; நீ-; இது – இச்செயலை; மனத்துக்
கோடி – மனத்தின் கண்நினைத்துக் கொள்வாயாக.’

———-

தருமம் என்று ஒரு பொருள் தந்து நாட்டுதல்
அருமை என்பது பெரிது அறிதி ஐய! நீ
இருமையும் தருவதற்கு இயைவது; ஈண்டு, இது,
தெருள் மனத்தார் செய்யும் செயல் இது ஆகுமால்.–6-

ஐய! நீ-;தருமம் என்று ஒரு பொருள் – அறம் என்று சொல்லப்
படுகின்ற ஒப்பற்ற ஒரு பொருளை; தந்து – உலகிற்குத் தந்து (மக்கள்
அனைவரையும் மேற்கொள்ளுமாறு செய்து); நாட்டுதல்-நிலைநிறுத்துதல்;
அருமை என்பது – மிகவும் அருமையான செயல் என்பதனை; பெரிது
அறிதி – நன்கு அறிவாய்; ஈண்டு – இவ்விடத்தில்; இது – இவ்வறம்;
இருமையும் -இம்மை, மறுமை ஆகிய இரண்டையும்; தருவதற்கு -;
இயைவது – பொருந்தியதாகும்; இது -இவ்வறம்; தெருள்மனத்தார் –
தெளிவுபெற்ற மனம் உடைய மேலோர்; செயும் செயல்ஆகும் – செய்யும்
செயலாகும்.

———-

‘வள் உறு வயிர வாள் அரசு இல் வையகம்,
நள் உறு கதிர் இலாப் பகலும், நாளொடும்
தெள்ளுறு மதி இலா இரவும், தேர்தரின்,
உள் உறை உயிர் இலா உடலும், ஒக்குமே.–7-

‘தேர்தரின்- ஆராயும்பொழுது; வள்உறு வயிரவாள் அரசு –
வளமை பொருந்திய வன்மையான வாளையுடையஅரசனை; இல்வையகம் –
பெறாத உலகம்; நள் உறு கதிர் இலாப் பகலும் – (எல்லோராலும்)
விரும்பப்படுகின்ற சூரியன் இல்லாத பகலையும்; நாளொடும் –
விண்மீன்களோடும்; தெள்ளுறு மதி இலா இரவும் – தெளிந்த
வெண்மையான சந்திரன் இல்லாத இரவையும்; உள்உறைஉயிர் இலா
உடலும் – உள்ளே பொருந்திய உயிர் இல்லாத உடலையும்; ஒக்கும் –
போலும்.’

——–

‘தேவர்தம் உலகினும், தீமை செய்து உழல்
மா வலி அவுணர்கள் வைகும் நாட்டினும்,
ஏவெவை உலகம் என்று இசைக்கும் அன்னவை
காவல் செய் தலைவரை இன்மை கண்டிலம்.–8-

‘தேவர்தம் உலகினும் – தேவலோகத்திலும்; தீமை செய்து உழல்-
பிறர்க்குத் தீமையே செய்து திரிகின்ற; மா வலி அவுணர்கள்
வைகும் நாட்டினும்- பெருவலி படைத்த அசுரர்கள் தங்கியுள்ள
நாடுகளிலும்; ஏ எவை உலகம் என்று இசைக்கும்அன்னவை – எவை
எவைகள் உலகம் என்று பெயர்பெறுமோ அவைகள் எல்லாம்; காவல் செய்
தலைவரை இன்மை – தம்மைக் காக்கின்ற அரசர்கள் இல்லாமல்
இருத்தலை; கண்டிலம்- (யாம்) பார்த்திலோம்.’

——-

‘முறை தெரிந்து ஒரு வகை முடிய நோக்குறின்,
மறையவன் வகுத்தன, மண்ணில், வானிடை,
நிறை பெருந் தன்மையின் நிற்ப, செல்வன,
இறைவரை இல்லன யாவும் காண்கிலம்,–9-

‘முறை தெரிந்து – முறைமையை நன்கு ஆராய்ந்து; ஒருவகை முடிய
நோக்குறின் -ஒருபடித்தாக இறுதிவரை பார்த்தால்; மறையவன் வகுத்தன –
பிரமனால் படைக்கப்பட்டனவாகிய;மண்ணில் வானிடை – நிலத்திலும்,
விண்ணிலும்; நிறை பெருந்தன்மையின் – நிறைந்துவிளங்கும்
பேரியல்போடு; நிற்ப -நிலைத்து நிற்பன; செல்வன – இயங்குவன (வாகிய
பொருள்களில்); இறைவரை இல்லன – தலைவரைப் பெற்றிராத
பொருள்கள்; யாவும் எவையும்; காண்கிலம் – காண்கின்றிலோம். (யாம்)’

——–

‘பூத்த, நாள்மலர் அயன் முதல புண்ணியர்
ஏத்து, வான் புகழினர், இன்றுகாறும் கூக்
காத்தனர்; பின், ஒரு களைகண் இன்மையால்,
நீத்த நீர் உடை கல நீரது ஆகுமால்.–10-

‘பூத்த – (திருமாலின் திருஉத்தியில்) உண்டான; நாள்மலர் –
அன்றலர்ந்தாற் போன்ற தாமரை மலரில் தோன்றிய; அயன் முதல
புண்ணியர் – பிரமதேவன்முதலிய மேலோர்களால்; ஏத்து – பாராட்டப்
பெறுகின்ற; வான் புகழினர் -சிறந்த புகழைப் பெற்ற (உன்) முன்னோர்கள்;
இன்றுகாறும் – இன்று வரையிலும்; கூ -(இந்தப் ) பூமியை; காத்தனர் –
(அரசு நடத்திக்) காத்தார்கள்; பின் -இப்போது; ஒரு களைகண்
இன்மையால் – (நீ அரசன் ஆகாதபடியால்)தமக்கொரு துன்பம் நீக்கிப் பாதுகாப்பாரை இல்லாமையால்; (இவ்வுலகம்)
நீத்த நீர் – கடலின்கண்; உடைகல நீரது – உடைந்த கப்பல் தத்தளிப்பது
போன்றது; ஆகும் -.’

———

உந்தையோ இறந்தனன்; உம்முன் நீத்தனன்;
வந்ததும், அன்னைதன் வரத்தில்; மைந்த! நீ
அந்தம் இல் பேர் அரசு அளித்தி; அன்னது
சிந்தனை எமக்கு’ எனத் தெரிந்து கூறினான்.-11-

‘மைந்த! – பரதனே!; உந்தையோ இறந்தனன் – உன் தந்தையாகிய
தயரதனோஇறந்துபட்டான்; உம் முன் – உன் தமயனாகிய இராமனோ
(தந்தை சொற்கேட்டு); நீத்தனன் – (அரசைக்) கைவிட்டுக் கானகம்
புகுந்தான்; வந்ததும் – (இந்த அரசுஉனக்குக்) கிடைத்திருப்பதும்;
அன்னை தன் வரத்தில் – உன் தாயாகிய கைகேயியின்வரத்தால் ஆகும்;
நீ அந்தம் இல் பேரரசு அளித்தி – நீ அழிவற்றதாகிய இந்தக்கோசலத்
தரசை ஏற்று நடத்துக; அன்னது – (அவ்வாறு) நீ அரசு ஏற்பது; எமக்குச்
சிந்தனை – எங்களுக்கு எண்ணம்;’ என – என்று; தெரிந்து கூறினான் –
ஆராய்ந்து சொன்னான்.

———-

தஞ்சம் இவ் உலகம், நீ தாங்குவாய்’ எனச்
செஞ்சேவே முனிவரன் செப்பக் கேட்டலும்,
‘நஞ்சினை நுகர்’ என, நடுங்குவாரினும்
அஞ்சினன் அயர்ந்தனன் – அருவிக் கண்ணினான்.–12-

‘இவ் உலகம் – இந்த உலகம்; தஞ்சம் – (உனக்கு) அடைக்கலம்; நீ
தாங்குவாய் – நீ (அரசனாக இருந்து) பாதுகாப்பாய்; என – என்று;
முனிவரன் -முனிவர்களில் மேலான வசிட்டன்; செஞ்செவே –
செம்மையாக; செப்பக் கேட்டலும்- சொல்லக் கேட்டவளவில்; அருவிக்
கண்ணினான் – அருவிபோலக் கண்ணின் நீர் ஒழுகும்பரதன்; ‘நஞ்சினை
நுகர்’ என – விடத்தை உண்பாயாக என்று ஒருவர் சொல்ல; (அதுகேட்டு)
நடுங்குவாரினும் – நடுங்குகின்றவர்களைவிட; அஞ்சினன் அயர்ந்தனன்த-
பயந்து சோர்ந்தான்.

———

நடுங்கினன்; நாத் தடுமாறி, நாட்டமும்
இடுங்கினன்; மகளிரின் இரங்கும் நெஞ்சினன்;
ஒடுங்கிய உயிரினன்; உணர்வு கைதர,
தொடங்கினன், அரசவைக்கு உள்ளம் சொல்லுவான்;–13-

(பரதன்), நடுங்கினன் – (முனிவன் சொன்னதைக் கேட்டு) நடுங்கி;
நாத்தடுமாறி – (பேசுதற்கியலாமல்) நாக் குழறி; நாட்டமும் இடுங்கினன் –
கண்கள்(குழிவிழுந்து ) உள்செல்லப் பெற்று; மகளிரின் – பெண்களைப்
போல; இரங்கும் நெஞ்சினன்- நெஞ்சினாற் புலம்பிக் கொண்டு; ஒடுங்கிய
உயிரினன்- மூச்சு ஓடுங்கப்பெற்று(மூர்ச்சித்து); உணர்வு கைதர – (பின்னர்)
மூச்சு எழும்பி உணர்வு வரப்பெற; அரசவைக்கு- அரசவையில் உள்ளவர்க்கு;
உள்ளம் – தன் மனக்கருத்தை; சொல்லுவான் தொடங்கினன் – சொல்லத்
தொடங்கினான்.

——–

மூன்று உலகினுக்கும் ஓர் முதல்வன் ஆய், முதல்
தோன்றினன் இருக்க, யான் மகுடம் சூடுதல்,
சான்றவர் உரைசெயத் தருமம் ஆதலால்,
ஈன்றவன் செய்கையில் இழுக்கு உண்டாகுமோ?-14-

‘மூன்று உலகினுக்கும்- மேல், நடு, கீழ் என்னும் மூன்று இடங்களில்
உள்ள மூன்று உலகங்களுக்கும்; ஓர் முதல்வன்ஆய் – ஒப்பற்ற
முதற்பொருளாகி; முதல் தோன்றினன் இருக்க – (எனக்கு) முன்னே
பிறந்தவனாகிய இராமன் இருக்கின்ற போதே; யான் மகுடம் சூடுதல் –
யான் அரசனாக அரசுகட்டில் ஏறி மணிமகுடத்தைச் சூடிக்கொள்ளுதல்;
சான்றவர் உரைசெய – பெரியோர்கள்தக்கதே என்ற தம் வாயால்
எடுத்துரைக்க; தருமம் ஆதலால் – அறம் என்று கருதப்படுகின்றது
ஆதலாம்; ஈன்றவள் செய்கையில் – (இதே செயலைச் செய்த) என்னைப்
பெற்றதாயாகிய கைகேயியின் செயற்பாட்டில்; இழுக்கு உண்டாகுமோ –
தவறு உளதாகுமா?’

———

அடைவு அருங் கொடுமை என் அன்னை செய்கையை,
நடைவரும் தன்மை நீர், “நன்று இது” என்றிரேல்,
இடை வரும் காலம் ஈண்டு இரண்டும் நீத்து, இது
கடை வரும் நீ நெறி்க் கிலியின் ஆட்சியோ!–15-

‘நடை வரும் தன்மை நீர்- உயரிய ஒழுக்கத்திற் செல்லும் தன்மை
உடைய சான்றோர்களாய நீவிர்; அடைவு அருங்கொடுமைஎன் அன்னை
செய்கையை – ஓரிடத்திலும் சென்று அடைதற்கு அரிய பெருங்கொடுமை
உடைய என்தாய் கைகேயியின் செயலை; ‘இது நன்று’ -; என்றிரேல் –
என்று சொல்வீராயின்; இது- இக்காலம்; ஈண்டு – இவ்விடத்தில்;
இடைவரும் காலம் இரண்டும் நீத்து -திரேதாயுகம், துவாபரயுகம்
என்னும் இரண்டு காலமும் கடந்து சென்று; கடைவரும் – நான்குயுகங்களில்
இறுதியில் உள்ள; தீ நெறி – தீயவழியில் (மக்களைச்) செலுத்துகின்ற;
கலியின் ஆட்சியோ! – கலிபுருடனின் ஆட்சிக்காலமாகிய கலியுகமோ?’

அறத்தின் ஆட்சி மங்கிக் கொடுமை மலிந்திருப்பது கலியின் இயல்பு
என்பதனைப் ‘பொலிக. கலியும் கெடும் கண்டு கொண்டீர்” (திவ்யப். 3352.)
“கலியிருள் பரந்த காலை”(கலிங்கத். அவதாரம். 30 ) “தருமந் தவிர்ந்து
பொறைகெட்டுச்சத்தியஞ் சாய்ந்து தயை, தெருமந்து தண்பூசனை முழுதுஞ்
சிதையக், கலியே பொருமந்தக் காலம்”(திரு அரங்கத்துமாலை. 75.) என
வருவன கொண்டு அறியலாம்.

————

வேத்தவை இருந்த நீர், விமலன் உந்தியில்
பூர்தவன் முதலினர் புவியுள் தோன்றினார்,
மூத்தவர் இருக்கவே, முறைமையால் நிலம்
காத்தவர் உளர்எனின், காட்டிக் காண்டிரால்.-16-

‘வேத்தவை இருந்த நீர்- அரசவையில் அமர்ந்துள்ள நீவிர்;
விமலன் உந்தியில் பூத்தவன் முதலினர் -திருமாலின் திருவுந்தித்
தாமரையில் தோன்றிய பிரமதேவன் முதலிய; புவியுள் தோன்றினர்-
மண்ணுலகத்தில் தோன்றிய (அரசு புரிந்த) அரச குலத்தினருள்; மூத்தவர்
இருக்கவே -உடன் பிறந்தவர்களுள் வயதால் முதிர்ந்தவர் இருக்க; நிலம்
முறைமையால் காத்தவர் – உலகத்தைமுறைப்படி (அரசு நடத்திக்)
காத்தவர்கள்; உளர் எனின் – இருப்பார்கள் ஆயின்;காட்டி – அவர்களைச் சான்றாகக் காட்டி; காண்டிர் – உம் கருத்தையும்
ஒப்புக் காண்பீர்களாக.

———

நல் நெறி என்னினும், நான் இந் நானில
மன் உயிர்ப் பொறை சுமந்து இருந்து வாழ்கிலேன்;
அன்னவன்தனைக் கொணர்ந்து, அலங்கல் மா முடி
தொல் நெறி முறைமையின் சூட்டிக் காண்டிரால்.–17-

‘நான் -; நல் நெறி என்னினும் – (அரசு புரிவது) தரும நெறியே
என்று நீங்கள்சான்றுகளால் நிரூபித்த வழியும்; இந் நானில மன்
உயிர்ப்பொறை – இப்பூமியில்உயிர்களைப் பாதுகாக்கும் சுமையை; சுமந்து
இருந்து வாழ்கிலேன் – தூக்கி அரசனாக இருந்துவாழ உடன்
படமாட்டேன்; அன்னவன்தனைக் கொணர்ந்து – அந்த (அரசாட்சிக்குரிய)
இராமனைக் கொண்டு வந்து; அலங்கல் மாமுடி – மலர் மாலையோடு கூடிய
மகுடத்தை; தொல்நெறி முறைமையின் – தொன்று தொட்டு வரும் மரபு
வழிப்படி; சூட்டிக் கண்டிர் -(அவன் தலையில்) அணிவிக்கக் காணுங்கள்.’

———

அன்று எனின், அவனொடும் அரிய கானிடை
நின்று, இனிது இருந் தவம், நெறியின் ஆற்றுவென்;
ஒன்று இனி உரைக்கின், என் உயிரை நீக்குவென்’
என்றனன்; என்றபோது; இருந்த பேர் அவை,–18-

‘அன்று எனின் – (இராமனைக் காட்டிலிருந்து அழைத்து வந்து முடி
சூட்டல்) இயலாதுஆயின்; அவனொடும் – அந்த இராமனோடும்; அரிய
கானிடை – வாழ்தற்கரியகாட்டிடத்து; நின்று – வாழ்ந்து; இருந்தவம் –
பெரிய தவத்தை; இனிது -இனிமையாக; நெறியின் – செய்தற்குரிய
முறைப்படி; ஆற்றுவென் – செய்வேன்; இனி -இதற்குமேல்; ஒன்று
உரைக்கின் – (மாறாக) ஒன்றை நீங்கள் சொன்னால் (என்னை ஏற்றுநடத்த
வற்புறுத்தினால்); என் உயிரை நீக்கு வென் – என் உயிரை அழித்துக்
கொள்வேன்; என்றனன் – என்று சொன்னான்; என்றபோது – என்று பரதன் சொல்லியபோது; இருந்த பேர்
அவை -அங்கே அமர்ந்திருந்த அரசவையில் உள்ளார்……

அரசவையில் உள்ளார்….‘வாழ்த்தினார்’ (2263) எனப் பின்வரும் கவியிற்
சென்றுமுடியும்.

———-

‘ஆன்ற பேர் அரசனும் இருப்ப, ஐயனும்
ஏன்றனன், மணி முடி ஏந்த; ஏந்தல் நீ,
வான் தொடர் திருவினை மறுத்தி; மன் இளந்
தோன்றல்கள் யார் உளர் நின்னின் தோன்றினார்?-19-

ஆன்ற – குணங்களான் அமைந்த; பேர் அரசனும் – பெருமை
மிக்க தயரதனும்;இருப்ப – உயிரோடு இருக்கின்றபோதே; ஐயனும் –
இராமனும்; மணிமுடி ஏந்த -மணிகள் அழுத்திச் செய்யப்பெற்ற
மகுடத்தைத் (தலையில்) தாங்க; ஏன்றனன் -உடன்பட்டான்; ஏந்தல் நீ –
பெருமையின் உயர்ந்த பரதனே! நீ; வான் தொடர்திருவினை – மிக
உயர்ந்த பாரம்பரியமாக வருகின்ற அரசச்செல்வத்தை; மறுத்தி -வேண்டாம்
என்கிறாய்; மன் இளந்தோன்றல்கள் – அரசகுலத்தில் தோன்றிய இளைய
குமாரர்களில்; நின்னின் தோன்றினார்? – உன்னைப் போலப் புகழுடன்
தோன்றியோர்;யார் உளர் – யார் இருக்கின்றார்கள்?’ (எவரும் இல்லை
என்றபடி)

——–

ஆழியை உருட்டியும், அறங்கள் போற்றியும்,
வேள்வியை இயற்றியும், வளர்க்க வேண்டுமோ?
ஏழினோடு ஏழ் எனும் உலகம் எஞ்சினும்,
வாழிய நின் புகழ்!’ என்று வாழ்த்தினார்.–20-

‘ஆழியை உருட்டியும்- (அரசேற்று நடத்தி) ஆனைச்சக்கரத்தைச்
செலுத்தியும்; அறங்கள் போற்றியும் -பல்வகையான அறச்செயல்களைப்
பாதுகாத்தும்; வேள்வியை இயற்றியும் – (அரசர்க்குரியபரி மேதம், இராயசூயம் முதலிய) யாகங்களைச் செய்தும்; வளர்க்க
வேண்டுமோ? – (நின்புகழைஇனி நீ) வளர்க்க வேண்டியதில்லை;
நின்புகழ் – (இத்தகைய நற்குண நற்செயல்களால்இப்போது பெற்றுள்ள)
நின்புகழே; ஏழினோடு ஏழ்எனும் உலகம் எஞ்சினும் – பதினான்கு
உலகமும் அழிந்திட்டாலும்; வாழிய – வாழ்வதாக;’ என்று வாழ்த்தினார்-.

———-

குரிசிலும், தம்பியைக் கூவி, ‘கொண்டலின்
முரசு அறைந்து, “ இந் நகர் முறைமை வேந்தனைத்
தருதும் ஈண்டு” என்பது சாற்றி, தானையை,
“விரைவினில் எழுக!” என, விளம்புவாய்’ என்றான்.–21-

குரிசிலும் – பரதனும்; தம்பியைக் கூவி – (தன்) இளவலான
சத்துருக்கனனைஅழைத்து; கொண்டலின் – மேகம் போல; முரசு
அறைந்து – இடியென ஒலிக்கும்முரசினை அடித்து; இந் நகர் முறைமை
வேந்தனை – இந்நகரத்திற்கு மரபு வழிப்படி அரசனாகவேண்டிய
இராமனை; ஈண்டுத் தருதும்’ – காட்டிலிருந்து அயோத்திக்கு அழைத்து
வரப்போகிறோம்; என்பது சாற்றி – என்னும் செய்தியை அறிவித்து;
தானையை – நம்சேனைகளை; ‘விரைவினில் எழுக’ என – (இராமனை
அழைத்து வர) விரைவாகப் புறப்படுக என்று;விளம்புவாய்’ –
சொல்லுவாயாக;’ என்றான் – என்று கட்டளை இட்டான்.

———-

நல்லவன் உரைசெய, நம்பி கூறலும்
அல்லலின் அழுங்கிய அன்பின் மா நகர்
ஒல்லென இரைத்தலால் – உயிர் இல் யாக்கை அச்
சொல் எனும் அமிழ்தினால் துளிர்த்தது என்னவே.–22-

நல்லவன் உரை செய- நற்குணத்தாற் சிறந்த பரதன் பணிக்க; நம்பி-
சத்துருக்கனன்; கூறலும் – (இராமனைஅழைத்து வரும் செய்தியைச்)
சொல்லுதலும்; அல்லலின் – துன்பத்தால்; அழுங்கிய- இரங்கிக்கெட்ட;
அன்பின் மாநகர் – இராமன்பால் அயரா அன்பினை உடைய; அயோத்தி
மாநகர மக்கள்; உயிர் இல் யாக்கை- உயிர் இல்லாத உடம்புகள் எல்லாம்;
அச்சொல் எனும் அமிழ்தினால்- அந்த வார்த்தை என்னும் அமுதத்தால்;
துளிர்த்தது -(மீண்டும் உயிர் பெற்றுத்) துளிர்விட்டது; என்ன – என்று
சொல்லும்படி; ஒல்லென -பேராலி உண்டாகுமாறு; இரைத்தது – மகிழ்ச்சி
ஆரவாரம் செய்தனர்.

——–

அவித்த ஐம் புலத்தவர் ஆதியாய் உள
புவித்தலை உயிர் எலாம், ‘இராமன் பொன் முடி
கவிக்கும்’ என்று உரைக்கவே, களித்ததால் – அது
செவிப் புலம் நுகர்வது ஓர் தெய்வத் தேன்கொலாம்?–23-

அவித்த ஐம்புலத்தவர் ஆதியாய்- ஐம்புலன்களை
அடக்கியவர்களாகிய முனிவர்கள் முதலாக; புவித்தலை உள உயிர்
எலாம் -உலகத்திடத்து உள்ள உயிர்கள் எல்லாம்; ‘இராமன் பொன்முடி
கவிக்கும்’ – இராமன்பொன்மயமான மகுடம் சூடப்போகிறான்; என்று
உரைக்கவே என்று (முரசொலி மூலம்சத்துருக்கனன்) சொல்லவே;
களித்தது – பெரு மகிழ்ச்சி அடைந்தன; அது – அந்தச் சொல்;
செவிப்புலம் நுகர்வது ஓர் தெய்வத் தேன்கொல் – செவி யென்னும்
பொறி,கேள்வி என்னும் புலம் அனுபவிக்கும்படியான ஒப்பற்ற
தெய்வத்தன்மை வாய்ந்த தேனோ?

———

படு முரசு அறைந்தனர், ‘பரதன் தம்முனைக்
கொடி நகர்த் தரும்; அவற் கொணரச் சேனையும்
முடுகுக’ என்ற சொல் மூரி மா நகர்,
உடுபதி வேலையின் உதயம் போன்றதே!–24-

‘பரதன் – ; தம் முனை- தன் அண்ணனாகிய இராமனை; கொடி
நகர் – கொடிகள் கட்டப்பெற்றுள்ள அயோத்தி மாநகர்க்கு;தரும் –
அழைத்துவரப் போகிறான்; அவன் கொணர – அந்த இராமனை
அழைத்துவர; சேனையும் முடுகுக’ – சேனைகளும் புறப்படுவதற்கு
விரைவாக; என்ற படுமுரசு அறைந்தனர் சொல்- என்றிவ்வாறு ஒலிக்கும்
முரசினை அடித்தவர்கள் கூறிய சொல்லானது; மூரி மா நகர் -பெருமையும்
சிறப்பும் உடைய அயோத்தி நகரமாகிய; வேலையின் – சமுத்திரத்திலே;
உடுபதி – விண்மீன்களுக்குத் தலைவனாகிய சந்திரனின்; உதயம்
போன்றது -தோற்றம் போன்றது.

———

எழுந்தது பெரும் படை – ஏழு வேலையின்,
மொழிந்த பேர் ஊழியின் முழங்கி, முந்து எழ,
அழிந்தது கேகயன் மடந்தை ஆசை; போய்க்
கழிந்தது துயர், நெடுங் காதல் தூண்டவே.–25-

பெரும் படை – பெரிய (அந்தச்) சேனை; மொழிந்த பேர்
ஊழியின் -(எல்லோராலும்) பேசப்படுகின்ற உலக இறுதிக் காலத்தில்; ஏழு
வேலையின் – ஏழுகடல்களும் பொங்கி எழுந்தது போல; முழங்கி –
பேரொலி செய்து; முந்து எழ -முற்பட்டுப் புறப்பட; (அதனால்) கேகயன்
மடந்தை ஆசை – கைகேயியின் (தன் மகன்அரசாள வேண்டும் என்னும்)
ஆசை; அழிந்தது – கெட்டழிந்தது; பானது உள் நின்றுசெலுத்திவிட;
துயர் – (இராமனைப் பிரிந்ததனாலும், பிரித்ததனாலும்) உண்டாகியதுன்பம்;
போய்க் கழிந்தது – மிகவும் அதிகமாகியது.

———

பண்ணின புரவி, தேர், பகடு, பண்டியும்,
மண்ணினை மறைத்தன; மலிந்த மாக் கொடி
விண்ணினை மறைத்தன; விரிந்த மாத் துகள்,
கண்ணினை மறைத்தன, கமலத் தோனையே–26-

பண்ணின – அலங்கரிக்கப்பெற்றனவாகிய; புரவி, தேர், பகடு,
பண்டியும்- குதிரை, தேர், யானை, வண்டி ஆகியவை; மண்ணினை
மறைத்தன – (வெற்றிடம்இல்லாமல் பரந்திருத்தலின்) மண்ணை
மறைத்துவிட்டன; மலிந்த மாக் கொடி -(சேனைகளில் அங்கங்கே)
நிரம்பியுள்ள பெரிய கொடிகள்; விண்ணினை மறைத்தன – (ஆகாயம்எங்கும்
கட்புலன் ஆகாதபடி பரந்திருத்தலின்) ஆகாயத்தை மறைத்து விட்டன;
விரிந்த மாத்துகள் – சேனைகள் செல்வதால் மேல் எழுந்து விரிந்த
பெரிய புழுதித் துகள்கள்; கமலத்தோனை – (சத்திய லோகத்தில் உள்ள)
பிரமதேவனது; கண்ணினை மறைத்தன -கண்களை மறைத்துவிட்டன.

——

ஈசன் இவ் உலகினை அழிக்கும் நாள் எழும்
ஓசையின் நிமிர்ந்துளது, ஒல்லென் பேர் ஒலி;
காசையின் கரியவற் காண மூண்டு எழும்
ஆசையின் நிமிர்ந்தது அவ் அனிக ராசியே.–27-

‘ஒல்’ என் பேர் ஒலி – (சேனைகளின் எழுச்சியால் உண்டாகிய)
‘ஒல்’ என்றபெரிய ஆரவாரம்; ஈசன் – (அழித்தற் கடவுளாகிய) சிவன்;
இவ் உலகினை அழிக்கும்நாள் – இந்த உலகினை அழித்துச் (சர்வ
சங்காரம்) செய்யும் காலத்தில்; எழும்ஓசையின் – எழுகின்ற
பேரோசையைவிட; நிமிர்ந்துளது – மேற்சென்றுளது; அவ்அனிகராசி –
அந்தச் சேனைத் தொகுதி; காசையின் கரியவன் – காயாம்பூப் போலும்
கருநிறமுடைய இராமனை; காண மூண்டு எழும் ஆசையின் –
காண்பதற்காக உள்ளே கிளர்ந்து எழுகின்ற ஆசையைக் காட்டிலும்;
நிமிர்ந்தது – மேற்சென்றுவிட்டது (அதிகமாய் உள்ளது.)

———

படியொடு திரு நகர் துறந்து, பல் மரம்
செடியோடு தொடர் வனம் நோக்கி, சீதை ஆம்
கொடியொடு நடந்த அக் கொண்டல் ஆம் எனப்
பிடியொடு நடந்தன – பெருங் கை வேழமே.–28-

பெருங்கை வேழம்- (சேனையில் உள்ள) பெரிய துதிக்கையையுடைய
களிற்று யானைகள்; பிடியொடு – (தம்) பெண் யாணைகளுடனே; படியொடு
திருநகர் துறந்து – பூவுலகஆட்சியோடு அழகிய அயோத்தி நகரத்தையும்
விட்டு; செடியொடு பல்மரம் தொடர் வனம்நோக்கி – செடிகளோடு
பல மரங்கள் ஒன்றை ஒன்று பற்றி நெருங்கியுள்ள காட்டை நோக்கி;சீதை
ஆம் கொடியொடு – சீதாபிராட்டி யென்கின்ற கொடியுடனே; நடந்த –
நடந்து சென்ற; அக் கொண்டல் ஆம் என – அந்த மேச நிறனாகிய
இராமன் போல; நடந்தன – நடந்து சென்றன.

——-

சேற்று இள மரை மலர் சிறந்தவாம் எனக்
கால் தளம் பொலிதரு கன்னிமா ரொடும் –
ஏற்று இளம் பிடிக்குலம் – இகலி, இன் நடை
தோற்று, இள மகளிரைச் சுமப்ப போன்றவே.–29-

சேற்று இள மரை மலர் – சேற்றின்கண் தோன்றுவன ஆகிய
இளமையான தாமரை மலர்; சிறந்தவாம் என – எம்மைக் காட்டிலும்
சிறந்தனவோ; என – என்று கேட்பது போல; கால்தளம் – பாதமாகிய
மலரிதழ்; பொலிதரு – விளங்குகின்ற; கன்னிமாரொடும் – இளம்
பெண்களுடனே; இளம் பிடிக்குலம் – இளைய பெண்யானைக்கூட்டம்;
இன் நடை இகலி – இனிய நடையால் பகைத்து; ஏற்று – (எதிர்) ஏற்று;
தோற்று – நடை அழகில் அவர்கள் விஞ்சியபடியால்) தோல்வியடைந்து;
(அதற்குத்தண்டனையாக) இள மகளிரைச் சுமப்ப போன்ற –
இளம்பெண்களை (இப்போது) சுமந்து திரிவனபோன்றன.

—-

வேதனை வெயிற்கதிர் தணிக்க, மென் மழைச்
சீதநீர் தொடு நெடுங் கொடியும் சென்றன;
கோதை வெஞ்சிலையவன் கோலம் காண்கிலா
மாதரி்ன் நுடங்குவ, வரம்பு இல் கோடியே.–30-

வேதனை – வருத்தத்தைத் தரும்; வெயிற்கதிர் தணிக்க –
சூரியனால் ஆகியவெம்மையை (இராமனை அழைத்து வரச் செல்லும்
சேனைகளுக்கு) இல்லாதவாறு போக்க; (வானளாவிநின்று) மென்மழைச்
சீதநீர் தொடு – மெல்லிய மேகங்களது குளிர்ச்சி பொருந்தியநீரைத்
தொட்டுக் கொண்டு (கீழ்த் துளித்து); சென்றன – (சேனைகளின் இடையே)
சென்றன வாகிய; வரம்பு இல் கோடி – கணக்கற்ற கோடியளவான;
நெடுங்கொடியும் -நீண்ட கொடிகளும்; கோதை – கையுறை அணிந்த;
வெஞ்சிலையவன் – கொடிய(கோதண்டம் எனப்பெறும்) வில்லை ஏந்திய
இராமனது; கோலம் – பட்டாபிடேகக் கோலத்தை; காண்கிலா – காணப்பெறாத; மாதரின் – பெண்கள் போல;
நுடங்குவ – அசைகின்றனவாயின.

——-

வெண் மதி மீச்செல மேகம் ஊர்ந்தென,
அண்ணல் வெங்கதிரவன், அளவுஇல் மூர்த்தி ஆய்,
மண்ணிடை இழிந்து ஒரு வழிக்கொண்டாலென,
எண்ண அரு மன்னவர் களிற்றின் ஏகினார்.–31-

எண்ண அரு மன்னவர் – கணக்கிட முடியாத அரசர்கள்; அண்ணல்
வெங் கதிரவன்- பெருமை பொருந்திய வெப்பமுள்ள ஒளிக்கதிர்களை
உடைய சூரியன்; அளவு இல் மூர்த்திஆய் – அளவுபடாத பல
வடிவங்களை எடுத்துக்கொண்டு; மீ வெண்மதி செல – தன்மேலே
வெண்மதியானது சென்றுகொண்டிருக்க; மேகம் ஊர்ந்து – (தான்)
மேகத்தின் மேல்ஊர்தியாக ஏறி; மண்ணிடை இழிந்து – பூமியில் இறங்கி;
ஒரு வழிக் கொண்டால் என- ஒரேவழியில் பயணம் செய்தாற் போல;
களிற்றின் ஏகினார் – (வெண்குடைநீழலில்) யானைமேல் சென்றார்கள்.

———

தேர்மிசைச் சென்றது ஓர் பரவை; செம்முகக்
கார்மிசைச் சென்றது ஓர் உவரி; கார்க்கடல்,
ஏர்முகப் பரிமிசை ஏகிற்று; எங்கணும்
பார்மிசைப் படர்ந்திது, பதாதிப் பௌவமே.–32-

ஓர் பரவை – (சேனை வீரர்களாகிய) ஒரு கடல்; தேர் மிசைச்
சென்றது -தேர்மேல் சென்றது; ஓர் உவரி – (யானை வீரர்களாகிய) ஒரு
சமுத்திரம்; செம்முகக் கார் மிசைக் சென்றது – சிவந்த (புள்ளிகளை
உடைய) முகத்தை உடைய மேகம்(போன்ற யானை) மேல் சென்றது;
கார்க்கடல் – கரிய (குதிரை வீரர்களாகிய) கடல்; ஏர்முகப் பரிமிசை
ஏகிற்று – அழகிய முகத்தை உடைய குதிரைகளின் மேல் சென்றது; பதாதிப் பௌவம் – காலாட் படை வீரர்களாகிய கடல்;
பார்மிசைஎங்கணும் படர்ந்தது – மண்ணில் மேல் எல்லா இடங்களிலும்
படர்ந்து சென்றது.

——–

தாரையும் சங்கமும், தாளம் கொம்பொடு
பார்மிசைப் பம்பையும், துடியும், மற்றவும்,
பேரியும், இயம்பல சென்ற – பேதைமைப்
பூரியர் குழாத்திடை அறிஞர் போலவே.–33-

தாரையும் – தாரை என்ற நீண்ட ஊது கொம்பும்; சங்கமும் -;
தாளம் -; கொம்பு – வளைந்த ஊது கருவியும்; பம்பையும் – பம்பை
என்னும் பறையும்; துடியும் -; பேரியும் – பெருமுரசும்; மற்றவும் –
ஏனைய வாத்தியங்களும்; பார்மிசை – மண்ணின் மேல்; பேதைமைப்
பூரியர் குழாத்திடை – அறியாமையுடையபுல்லர்கள் கூட்டத்தின்கண்;
அறிஞர் போல – (கற்றுத் துறைபோகிய) நல்லறிவாளர்ஒன்றும் பேசாமல்
மௌனமாக இருத்தல் போல; இயம்பல சென்ற – ஒலிக்காமல் சென்றன.

——

தா அரு நாண் முதல் அணி அலால், தகை
மே வரு கலங்களை வெறுத்த மேனியர்,
தேவரும் மருள்கொளத் தெரியும் காட்சியர்,
பூ உதிர் கொம்பு என மகளிர் போயினார்.–34-

தேவரும் மருள்கொளத் தெரியும் காட்சியர் – தேவர்களும்
திகைக்கும் ஒளிர்கின்றதோற்றமுடைய; மகளிர் – பெண்கள்; தா அரு-
குற்றம் அற்ற; நாண் முதல்- நாணம், அச்சம், மடம், பயிர்ப்பு எனப்பெறும்;
அணி அலால் – அணிகலன்கள் அல்லாமல்; தகை மேவரு – அழகு
பொருந்திய(பொன்னாலும் மணியாலும் புனைந்த); கலன்களை –
அணிகளை; வெறுத்த மேனியர் -வேண்டாம் என்று நீக்கிய உடம்போடு;
பூ உதிர் கொம்பு என – பூக்களை உதிர்த்துவிட்டபூங்கொம்பு போல;
போயினார் – (அக்கூடத்தில்) சென்றார்கள்.

———–

அதிர் கடல் வையகம் அனைத்தும் காத்தவன்
விதி வரும் தனிக்குடை மீது இலாப் படை
பொதி பல கவிகை மீன் பூத்தது ஆகிலும்
கதிர் மதி நீங்கிய கங்குல் போன்றதே.–35-

அதிர் கடல் – ஒலிக்கின்ற கடலாற் சூழப்பெற்ற; வையகம்
அனைத்தும் – உலகம் முழுவதையும்; காத்தவன் – (நீதி வழுவாது)
காப்பாற்றிய தயரதசக்கரவர்த்தியின்; விதிவரு – மரபுவழியில்
பாரம்பரியமாக வருகின்ற; தனிக்குடை- ஒப்பற்ற வெண்கொற்றக்குடை;
மீது இலா – மேலே பிடிக்கப்படாது உள்ள; படை- அச்சேனை;
பொதி பல கவிகை மீன் – நெருங்கிய பலவாகிய (மற்றை மன்னர்களின்)
வெண்குடைகளாகிய விண்மீன்கள்; பூத்தது ஆகிலும் – வானம் எங்கும்
நிரம்பித்தோன்றின ஆயினும்; கதிர் மதி – ஒளியுடைய சந்திரன்;
நீங்கிய கங்குல் – இல்லாத இரவை; போன்றது -.

———-

செல்லிய செலவினால், ‘சிறிய திக்கு’ எனச்
சொல்லிய சேனையைச் சுமந்ததே எனில்,
ஒல்லொலி வேலை நீர் உடுத்த பாரை, ‘ஓர்
மெல்லியல்’ என்றவர் மெலியரேகொலாம்.?–36-

செல்லிய செலவினால் – பரந்து செல்கின்ற செல்கையால்;
‘திக்கு சிறிய’- திசைகள் இடம் போதாமல் சிறியன; எனச் சொல்லிய
சேனையை – என்று பிறரைச்சொல்லச்செய்கின்ற (பேரளவுள்ள) இந்தச்
சேனையை; சுமந்தது எனில் – (இந்தப் பூமி)சுமந்து கொண்டுள்ளது
என்றால்; ஒல் ஒலி வேலை நீர் உடுத்த பாரை – ஒல்லென்றுஒலிக்கின்ற
கடல் நீரை ஆடையாகச் சுற்றி உடுத்துக் கொண்டுள்ள பூமியை; மெல்லியல்-
மென்மைத் தன்மை உடைய பெண் என்று சொன்னவர்கள்; மெலியர்
கொல் – மெலியர்போலும்.

———-

தங்கு செஞ் சாந்து அகில் கலவை சார்கில,
குங்குமம் கொட்டில, கோவை முத்து இல, –
பொங்கு இளங் கொங்கைகள் – புதுமை வேறு இல
தெங்கு இளநீர் எனத் தெரிந்த காட்சிய.–37-

பொங்கு இளங் கொங்கைகள் – (மகளிரது) பருத்துக் கொண்டுள்ள
இளமையானதனங்கள்; தங்கு செஞ்சாந்து அகில் கலவை சார்கில –
(தம்மிடம் பூசப்பெற்று எப்பொழுதும்) தங்கியிருக்கப்பெற்ற செஞ்சந்தனம்,
அகில் குழம்பு, கலவைச் சாந்து இவை(இப்போது) சாரப் பெறாமல்;
குங்குமம் கொட்டில – குங்குமக் குழம்பு பூசப்பெறாமல்; கோவை முத்து
இல – முத்துவடம் அணியாமல்; வேறு புதுமை இல – வேறு புதிய
செயற்கை நலன்கள் இல்லாமல் (இருப்பதால்); தெங்கு – தென்னையின்;
இளநீர்எனத் தெரிந்த காட்சிய – இளநீர்க் காய்கள் போலத் தோற்றம்
உடையவாயின.

———-
இன் துணையவர் முலை எழுது சாந்தினும்
மன்றல் அம் தாரினும் மறைந்திலாமையால்
துன்று இளங் கொடி முதல் தூறு நீங்கிய
குன்று எனப் பொலிந்தன – குலவுத் தோள்களே.–38-

குலவுத் தோள்கள் – (ஆண்களின்) திரண்ட தோள்கள்; இன்
துணைவர் -(அவர்களுடைய) இனிய மனைவியரது; முலை எழுது
சாந்தினும் – முலை மேல் தொய்யில்எழுதப்பெற்ற சாந்தினால்; மன்றல்
அம் தாரினும் – (தாமே அணியும்) மணம் வீசும்மாலையால்;
மறைந்திலாமையால் – இப்பொழுது மறையாமல் (இயற்கையாகஉள்ளபடி) விளங்கித் தோன்றுதலால்; துன்று இளங்கொடி முதல் –
நெருங்கிய இளைய கொடிமுதலாகிய; தூறு நீங்கிய – புதர்கள் இல்லாமற்
போன; குன்று என – மலைபோல;பொலிந்தன – தோன்றின.

————

நறை அறு கோதையர் நாள் செய் கோலத்தின்
துறை அற, அஞ்சனம் துறந்த நாட்டங்கள்
குறை அற நிகர்த்தன – கொற்றம் முற்றுவான்.
கறை அறக் கழுவிய கால வேலையே.–39-

நறை அறு கோதையர் – வாசனைப் புகை ஊட்டாத கூந்தலை
உடைய மகளிர்; நாள்செய் கோலத்தின் துறை அற – நாள்தோறும்
செய்யப்படுகின்ற அலங்காரத்தின் தன்மைகள்நீங்கினமையால்; அஞ்சனம்
துறந்த – மை தீட்டப் பெறாத (இயற்கையான தோற்றத்தோடுஉள்ள)
கண்கள்; கொற்றம் முற்றுவான் – (போர்செய்து) வெற்றியை முடித்த
ஒருவன்; கறை அறக் கழுவிய – போர்காலத்துப் படித்த போன்ற
வேற்படையை; குறை அற நிகர்ந்தன- குறைவில்லாமல் ஒத்திருக்கின்ற
ஆயின.

——–

விரி மணி மேகலை விரவி ஆர்க்கில
தெரிவையர் அல்குல், தார் ஒலி இல்தேர் என
பரிபுரம் ஆர்க்கில பவளச் சீறடி,
அரிஇனம் ஆர்க்கிலாக் கமலம் என்னவே.–40-

தெரிவையர் அல்குல் – மகளிரது இடைப்பகுதி; தார் ஒலி இல்
தேர் என -மணி ஒலி இல்லாத (அலங்கரிக்கப்பெறாத) தேர் போல; மணி
விரி மேகலை விரவி ஆர்க்கில- மணிகள் பதிக்கப் பெற்ற மேகலை
அணியப்பெற்றிலாமல் ஒலி யற்றவையாய் இருந்தன; பவளச் சீறடி –
பவளம் போன்ற சிவந்த நிறம் வாய்ந்த சிறிய அடி; அரி இனம்
ஆர்க்கிலாக் கமலம் என்ன – வண்டுக் கூட்டங்கள் ஒலிக்காத தாமரை
மலர் போல; பரிபுரம் ஆர்க்கில – சிலம்புகள் ஒலிக்கப்பெறாமல், உள்ளன.

——–

மல்கிய கேகயன் மடந்தை வாசகம்
நல்கியது அரிவையர் நடுவிற்கே கொலாம்!
புல்கிய மணிவடம் பூண்கிலாமையால்,
ஒல்கிய ஒரு வகைப் பொறை உயிர்த்தவே.–41-

ஒல்கிய – (மகளிரது ) வளையும் தன்மை உள்ளனவாகிய இடைகள்;
புல்கிய -(எப்பொழுதும் தம்மைத்) தழுவிக் கிடக்கும்; மணிவடம் –
மணிகள் பதிக்கப்பெற்றவடங்களை; பூண்கிலாமையால் – (இப்பொழுது)
அணியாமையால்; ஒருவகைப் பொறைஉயிர்த்த – ஒருபடியாகப் பாரம்
நீங்கி இளைப்பாறின; (எனவே) கேகயன் மடந்தைமல்கிய வாசகம் –
கைகேயியின் வளமான வரம்; நல்கியது – அருள் செய்தது; அரிவையர்
நடுவிற்கே கொல் – மகளிரது இடைக்கு மட்டும் போலும்.

——-

‘கோமகன் பிரிதலின், கோலம் நீத்துள
தாமரைச் செல்வியும், தவத்தை மேவினாள்’
காமனும், அருந்துயர்க் கடலில் மூழ்கினான்
ஆம்’ என, நிகழ்ந்தது – அவ் அளவு இல் சேனையே.–42-

அவ் அளவு இல் சேனை – அந்த அளவற்ற சேனையானது;
கோமகன் பிரிதலின் -அரச குமாரனாகிய இராமன் நாடு விட்டுக் காடு
சென்றபடியால்; கோலம் நீத்துள – தன்அலங்காரத்தைத் துறந்துள்ள;
தாமரைச் செல்வியும் – இலக்குமியும்; தவத்தைமேவினாள் – (தானும்)
தவம் செய்ய விரும்பிச் சென்று விட்டாள்; காமனும் -மன்மதனும்;
அருந்துயர்க் கடலில் மூழ்கினான் ஆம் – (இன்பம் நுகர்வார் எவரும்
இன்மையின் தன்தொழில் இறந்தது என்று) அரிய துன்பக் கடலில்
மூழ்கிவிட்டானாகும்; எனநிகழ்ந்தது – என்று சொல்லுமாறு பொலிவும்
மகிழ்ச்சியும் இன்றிச் சென்றது.

————-

மண்ணையும், வானையும், வயங்கு திக்கையும்
உண்ணிய நிமிர் கடல் ஒக்கும் என்பது என்?
கண்ணினும் மனத்தினும் , கமலத்து அண்ணல்தன்
எண்ணினும், நெடிது – அவண் எழுந்த சேனையே.–43-

அவண் எழுந்த சேனை – அயோத்தியில் (அப்போது) புறப்பட்ட
சேனை; மண்ணையும், வானையும், வயங்கு திக்கையும் – பூமி,
ஆகாயம், திசைகள் ஆகியவற்றையெல்லாம் ஒருசேர; உண்ணிய நிமிர்
கடல் – உண்ணுதற்கு எழுந்த யுகாந்த காலக் கடலை; ஒக்கும் என்பது
என் – ஒத்திருக்கும் என்று சொல்வது நிரம்பாதாகும்; கமலத்து அண்ணல்
தன் – (படைப்புக் கடவுளாகிய) பிரமதேவனது; கண்ணினும், மனத்தினும்,
எண்ணினும் நெடிது – (படைத்த பொருளைக் காணும்) கண்ணையும்,
நினைக்கும்) மனத்தையும்,(நினைக்கின்ற) நினைப்பையும் கடந்து
நீண்டதாகும்.

———-

அலை நெடும் புனல் அறக் குடித்தலால், அகம்
நிலை பெற நிலை நெறி நிறுத்தலால், நெடு
மலையினை மண் உற அழுத்தலால், தமிழ்த்
தலைவனை நிகர்த்தது – அத் தயங்கு தானையே.–44-

அத் தயங்கு தானை – விளங்குகின்ற அந்தச் சேனை; அலை
நெடும் புனல் அறக்குடித்தலால் – கடந் நீரை முற்றும் வற்றக்
குடித்தலாலும்; அகம் நிலைபெற நிலைநெறிநிறுத்தலால் – பூமி இடம்
(ஒரு புறம் சாயாது) நிலைபெறும்படி நிலையான முறையில் நிற்கச்
செய்வதாலும்; நெடு மலையினை மண் உற அழுத்தலால் –
பெருமலைகளை மண்ணிற் புகும்படிஅழுத்திவிடுதலாலும்; தமிழ்த்
தலைவனை – தமிழன் தலைவனாகிய அகத்திய முனிவனை; நிகர்ந்தது –
ஒத்துள்ளது.

———-

அறிஞரும், சிறியரும் ஆதி அந்தமா
செறி பெருந் தானையும் திருவும் நீங்கலால்
குறியவன் புனல் எலாம் வயிற்றில் கொண்டநாள்
மறிகடல் ஒத்தது – அவ் அயோத்தி மாநகர்.–45-

அவ் அயோத்தி மாநகர் – அந்த அயோத்தி மா நகரமானது;
அறிஞரும்,சிறியரும் ஆதி அந்தமா – அறிவானமைந்த பெரியோர்
முதல் சிறியவர் வரை (அனைவரும்); செறி பெருந் தானையும் –
நெருங்கியுள்ள பெரிய சேனையும்; திருவும் -செல்வமகளும்; நீங்கலால் –
நீங்கிக் காடு நோக்கிச் சென்றுவிட்டபடியால்; குறியவன் – அகத்திய
முனிவன்; புனல் எலாம் வயிற்றில் கொண்ட நாள் – (தன்)நீரை
யெல்லாம் வயிற்றில் அடக்கிய அந்நாளில்; மறிகடல் ஒத்தது- அலைவீசும்
கடல்வறிதானாற் போன்றது.

———–

பெருந் திரை நதிகளம், வயலும், பெட்புறு
மரங்களும், மலைகளும், மண்ணும், கண்ணுறத்
திருந்தல் இல் அயோத்தி ஆம் தெய்வ மா நகர்
அருந்தெரு ஒத்தது – அப் படை செல் ஆறு அரோ.–46-

அப்படை செல் ஆறு – அந்தப் படைகள் செல்கின்ற வழி;
பெருந்திரை நதிகளும்- பேரலைகளைக் கொண்ட நதிகளும்; வயலும் -;
பெட்புறு – விரும்புதல் அமைந்த; மரங்களும் -; மலைகளும் -;
மண்ணும் -; கண்ணுற – பக்கங்களில் கட் புலனாகத் தோன்ற, (அதனால்);
அயோத்தி ஆம் தெய்வ மா நகர் – அயோத்தியாகிய தெய்வத் தன்மை
வாய்ந்த பெரு நகரத்தின்; திருந்தல் இல் அருந்தெரு ஒத்தது –
திருத்தமற்ற அரியதெருவைப் போன்றது.

——

‘தார்கள் தாம், கோதைதாம், தாமம்தாம், தகை
ஏர்கள்தாம், கலவை தாம், கமழ்ந்தின்று என்பரால் –
கார்கள்தாம் என மிகக் கடுத்த கைம்மலை
வார் கடாம் அல்லது, அம் மன்னன் சேனையே.–47-

அம் மன்னன் சேனை – (அந்தப் ) பரதன் ஏவிய சேனையில்;
கார்கள்தாம் என- மேகங்களே என்று சொல்லும்படி; மிகக் கடுத்த
கைம்மலை – மிகவும் பொருந்த அமைந்தயானைகள்; வார்கடாம்
அல்லது – பெருகவிடும் மதசலம் அல்லது; ‘தார்கள் தாம், கோதை தாம்,
தாமம் தாம், ஏர்கள் தாம், கலவை தாம் – தார், கோதை, தாமம்,
பல்வசைச் சிறப்பான அழகுப்பொருள்கள், கலவைச் சாந்து (இவற்றின்);
கமழ்ந்தின்று’ -மணம் வீசப் பெறவில்லை; என்பர் – என்று சொல்லுவர்.

——–

ஆள் உலாம் கடலினும் அகன்ற அக்கடல்,
தோள் உலாம் குண்டலம் முதல தொல் அணி
கேள் உலாம் மின் ஒளி கிளர்ந்தது இல்லையால் –
வாள் உலாம் நுதலியர் மருங்குல் அல்லதே.–48-

ஆள் உலாம் கடலினும் – மக்கள் மரக்கலத்தில் ஏறி உலாவுதற்
கிடனாக உள்ளகடலைக்காட்டிலும்; அகன்ற அக்கடல் – விரிந்து
பரந்துள்ள அச் சேனைக்கடலில்; வாள் உலாம் நுதலியர் – ஒளி பரந்த
நெற்றியுடையமகளிரது; மருங்குல் அல்லது – (மின்னல் போன்ற) இடையே
அல்லாமல்; (வேறாகிய) தோள் உலாம் குண்டலம் முதல தொல் அணி –
தோளின்கண் தவழ்கின்ற காதணியாகிய குண்டலம்முதலாகிய பழமையாக
அணியும் அணிகளின்; கேழ் உலாம் மின் ஒளி கிளர்ந்தது இல்லை –
நிறம் விளங்குகின்ற மின்னல் ஒளி மிக்கு ஒளிர்வது இல்லை.

——

மத்தளம் முதலிய வயங்கு பல் இயம்
ஒத்தன சேறலின், உரை இலாமையின்,
சித்திரச் சுவர் நெடுஞ் சேனை தீட்டிய
பத்தியை நிகர்த்தது – அப் படையின் ஈட்டமே.–49-

அப் படையின் ஈட்டம் -அந்தச் சேனைத் தொகுதி; மத்தளம்
முதலிய வயங்கு பல்இயம் – மத்தளம் முதலாகிய விளங்குகின்ற பல
வாத்தியங்கள்; உரை இலாமையின் ஒத்தனசேறலின் – ஒலிக்காமல்
பொருந்திச் செல்கின்ற படியால் (ஒலியவிந்த படைச்செலவு); நெடுஞ் சுவர்-
நீண்ட சுவரில்; சித்திரம் தீட்டிய – சித்திரமாக வரைந்த; சேனைப்
பத்தியை நிகர்த்தது – சேனை வரிசையை ஒத்துள்ளது.

———-

ஏடு அறு கோதையர் விழியின் எய்த கோல்
ஊடு உற உரம் தொளைத்து, உயிர் உணாவகை.
ஆடவர்க்கு அரும் பெருங் கவசம் ஆயது –
காடு உறை வாழ்க்கையைக் கண்ணன் நண்ணவே.–50-

கண்ணன் – கண்ணாற் செய்யப்படும் அருளிற் சிறந்தவனாகிய
இராமன்; காடு உறவாழ்க்கையை நண்ண – காட்டின்கண் வசிக்கும்
வாழ்க்கையை மேற்கொள்ள, (அச்செயல்); ஆடவர்க்கு – ஆண்களுக்கு
எல்லாம்; ஏடு அறு கோதையர் – புறவிதழ் நீக்கிய மலர் கொண்டு
தொடுத்த மாலை அணிந்த மகிளிர்; விழியின் எய்த கோல் –
கண்ணிலிருந்து எய்த காதற் பார்வை அம்பானது; உரம் ஊடு உறத்
தொளைத்து உயிர் உணா வகை- மார்பினை ஊடுருவிச் சென்று அவர்கள் உயிரைப்
போக்காதபடி; அரும்பெரும் கவசம் ஆயது- அரிய பெரிய கவசம்
அணிதல் போன்றதாய்ப் பாதுகாப்பானது.

——–

கனங் குழைக் கேகயன் மகளின் கண்ணிய
சினம் கிடந்து எரிதலின், தீர்ந்தவே கொலாம் –
அனங்கன் ஐங் கொடுங் கணை அடரும் ஆடவர்
மனம் கிடந்து உண்கில, மகளில் கொங்கையே?–51-

அனங்கன் ஐங்கொடுங்கணை அடரும் ஆடவர் மனம் – மன்
மதனது (பிறரை வருத்தும்)ஐந்து கொடிய கணையால் நெருக்கப்படும்
ஆண்களது மணம்; மகளிர் கொங்கை – பெண்களது முலைகளில்;
கிடந்து உண்கில – இருந்து தங்கி அநுபவியாமல் போயின; கனம் குழை
கேகய மகளின் கண்ணிய சினம் – கனமான காதணி அணிந்த
கைகேயியின்மேல் (மகளிர்) கருதியசினம்; கிடந்து – பெண்கள் இடத்தே
தங்கி; எரிதலின் – எரிகின்றகாரணத்தால்; தீர்ந்தவே கொல் –
(கொங்கைகள் கடும் என்று கருதித்)தவிர்ந்தனவோ?

———–

இன்னணம் நெடும் படை ஏக, ஏந்தலும்,
தன்னுடைத் திரு அரைச் சீரை சாத்தினான்;
பின் இளையவனொடும், பிறந்த துன்பொடும்,
நல் நெடுந் தேர்மிசை நடத்தல் மேயினான்.–52-

இன்னணம் – இவ்வாறு; நெடும்படை ஏக – பெருஞ்சேனை செல்ல;
ஏந்தலும் – பரதனும்; தன்னுடைத் திரு அரை – தன்னுடைய அழகிய
இடுப்பிலே; சீரைசாத்தினான் – மரவுரியைத் தரித்து; பின்
இளையவனொடும் – பின்னே தொடர்ந்துவரும் தம்பியாய
சத்துருக்கனனொடும்; பிறந்த துன்பொடும் – (மனத்துள்) தோன்றியதுக்கத்
தோடும்; நல்நெடுந் தேர்மிசை – நல்ல பெரிய தேர்மீது ஏறி; நடத்தல்
மேயினான் – (வனத்துக்குச்) செல்லத் தொடங்கினான்.

———-

தாயரும், அருந் தவத்தவரும், தந்தையின்
ஆய மந்திரியரும், அளவு இல் சுற்றமும்,
தூய அந்தணர்களும், தொடர்ந்து சூழ்வரப்
போயினன் – திரு நகர்ப் புரிசை வாயிலே.–53-

தாயரும் – (கோசலை, கைகேயி, சுமித்திரை முதலிய) தாய்மார்களும்;
அருந்தவத்தவரும் – செய்தற்கரிய தவத்தைச் செய்த முனிவர்களும்;
தந்தையின் ஆயமத்திரியரும் – தன் தந்தையாகிய தயரதன் கண்
பொருந்திய மந்திரிமார்களும்; அளவுஇல் சுற்றமும் -அளவிட முடியாத
பலவாகிய சுற்றத்தார்களும்; தூய அந்தணர்களும் -தூய்மையான
வேதியர்களும்; தொடர்ந்து சூழ்வர – தன்னைப் பின்பற்றிச் சுற்றிவர;
திருநகர்ப் புரிசை வாயில் போயினன் – அழகிய அயோத்தி நகரத்து
மதிலின் (முதன்மையான)வாயிலைச் சென்றடைந்தான்.

———–

மந்தரைக் கூற்றமும், வழிச் செல்வாரொடும்
உந்தியே போதல் கண்டு, இளவல் ஓடி, ஆர்த்து
அந்தரத்து எற்றுவான் அழன்று பற்றலும்,
சுந்தரத் தோளவன் விலக்கிச் சொல்லுவான்;–54-

இளவல் – நால்வரினும் இளையவனாகிய சத்துருக்கனன்; வழிச்
செல்வாரொடும் -(இராமனைக் கண்டு அழைக்கக் காடு நோக்கி)
வழிச்செல்லும் அவர்களோடு; மந்தரைக் கூற்றமும்- மந்தரையாகியயமனும்;
உந்தியே போதல் கண்டு – மற்றவர்களைத் தள்ளிக்கொண்டுமுந்திச்
செல்லுதல் கண்டு; ஓடி – விரைந்து சென்று; ஆர்த்து – பேரொலிசெய்து;
அழன்று – கோபித்து; அந்தரத்து எற்றுவான் – ஆகாயத்தில் மேலே
வீசுமாறு; பற்றலும்- (கையாற்) பற்றிக் கொள்ளுதலும்; சுந்தரத் தோளவன்-
அழகிய திருத் தோள்களை உடைய பரதன்; விலக்கி – (அவ்விடத்திலிருந்த
மந்தரையை); விடுவித்துச் சொல்லுவான் – (தம்பிக்குச்) சொல்லலானான்.

——

‘முன்னையர் முறை கெட
முடித்த பாவியைச்
சின்னபின்னம் செய்து, என்
சினத்தைத் தீர்வெனேல்,
“என்னை இன்று என் ஐயன் துறக்கும்”
என்று அலால்,
“அன்னை” என்று, உணர்ந்திலென்,
ஐய! நான்’ என்றான்.–55-

ஐய! – சத்துருக்கனனே!; ‘முன்னையர் முறைகெட – (நம் குலத்து)
முன்னோர்களின் முறைமை சிதைய; முடித்த பாவியை – (வரத்தின்
மூலமாகத்) தன் ஆசையைநிறைவேற்றிக் கொண்ட (என் தாயாகிய) பாவியை;
சின்ன பின்னம் செய்து – கண்டதுண்டம் செய்து; என் சினத்தைத்
தீர்வெனேல் – என் கோபத்தைத் தீர்த்துக்கொள்வேனானால்; என்
ஐயன் – என் தலைவனாகிய இராமன்; இன்று என்னைத் துறக்கும்-
இன்றே என்னைத் தம்பியல்லன் என்று துறந்துவிடுவான்; என்று அலால் –
என்றுகருதி அதனால் அமைதியாக இருந்தேனே அல்லாமல்; (இவளை)
‘அன்னை’ என்று நான் உணர்ந்திலென்- ‘தாய்’ என்று கருதி நான்
அமைதியாக இருந்தேனில்லை; என்றான் -.

——————-

ஆதலால், முனியும் என்று ஐயன், அந்தம் இல்
வேதனைக் கூனியை வெகுண்டும் என்னினும்,
கோது இலா அரு மறை குலவும் நூல் வலாய்!
போதும் நாம்’ என்று கொண்டு, அரிதின் போயினான்.–56-

‘கோது இலா அருமறை குலவும் நூல்வலாய்! – குற்றம் இல்லாத
அரிய மறை பொருள்களைத்தன்னிடத்தே கொண்டுள்ள வேத நூலில்
தேர்ச்சி பெற்றவனே!; அந்தம் இல் வேதனைக் கூனியை- முடிவில்லாத
வேதனைகளை அனைவர்க்கும் உண்டாக்கிய கூனியை;
வெகுண்டும் என்னினும்- மிகவும் (வெறுத்துக்) கோபிக்கிறோம் ஆனாலும்;
ஐயன் முனியும் ஆதலால் -இராமபிரான் வெறுப்பான் என்ற காரணத்தால்;
என்று – என்று கருதி; நாம் போதும்- நாம் அவளை விட்டுப் போவோம்;
என்று அரிதின் கொண்டு – என்று சொல்லிச்சிரமப்பட்டு (அவனைத்
தடுத்து) அழைத்துக்கொண்டு; போயினான் – சென்றான்.

———-

மொய் பெருஞ் சேனையும் மூரி ஞாலமும்
கைகலந்து அயல் ஒரு கடலின் சுற்றிட,
ஐயனும் தேவியும் இளைய ஆளியும்
வைகிய சோலையில் தானும் வைகினான்.–57-

மொய் பெருஞ் சேனையும் – நெருங்கிய பெரிய சேனையும்; மூரி
ஞாலமும் – பெருமை பொருந்திய அயோத்தி மக்களும்; கைகலந்து –
ஒன்று திரண்டு; அயல் ஒருகடலின் சுற்றிட – பரதனின் பக்கல் ஒரு கடல்
போலச் சுற்றியிருப்ப; ஐயனும் தேவியும்இளைய ஆளியும் வைகிய
சோலையில் – இராமனும், சீதையும், இளைய யாளிபோல்வானாகிய
இலக்குவனும் தங்கியிருந்த அந்தச் சோலையிலேயே; தானும் – (பரதன்)
தானும்; வைகினான் – (அன்று) தங்கினான்.

———

அல் அணை நெடுங் கணீர் அருவி ஆடினன்,
கல் அணை கிழங்கொடு கனியும் உண்டிலன்,
வில் அணைந்து உயர்ந்த தோள் வீரன் வைகிய
புல் அணை மருங்கில், தான் பொடியின் வைகினான்.–58-

(பரதன்) அல்- இரவில்; நெடுங்கண் அனை நீர் அருவி ஆடினன்-
(தன்)நீண்ட கண்களிலிருந்து வருகின்ற நீராகிய அருவியில் மூழ்கி; கல்
அணை கிழங்கொடு கனியும்உண்டிலன் – மலையில் விளையும்
கிழங்குகளோடு பழங்களையும் புசியாது; வில் அணைத்து உயர்ந்த தோள் வீரன் வைகிய- வில்லைத் தழுவியிருக்கும் உயர்ந்த
தோள்களை உடைய இராமன் தங்கியிருந்த; புல்லணைமருங்கில் –
புல்லாலாகிய படுக்கையின் பக்கத்தில்; தான் -; பொடியின் –
மண்புழுதியின்கண்; வைகினான் – தங்கியிருந்தான்.

———–

ஆண்டு நின்று, ஆண்தகை அடியின் ஏகினான்
ஈண்டிய நெறி’ என, தானும் ஏகினான் –
தூண்டிடு தேர்களும் துரக ராசியும்
காண்தகு கரிகளும் தொடர, காலினே,.–59-

‘ஆண்டு நின்று – அங்கிருந்து; ஆண்தகை – ஆடவர் திலகனாய
இராமன்; ஈண்டிய நெறி – நெருங்கிய வழியிலே; அடியின் ஏகினான் –
காலால் நடந்துசென்றான்; என – என்று (அறிந்து); தானும் – பரதனும்;
தூண்டிடு தேர்களும்- செலுத்தப்படும் தேர்களும்; துரகராசியும் –
குதிரைத் தொகுதிகளும்; காண்தகுகரிகளும் – காட்சிக்குப் பொருந்திய
யானைகளும்; தொடர – (தன்னைப்)பின்பற்றிவர; காலின் ஏகினான் –
காலால் நடந்து சென்றான்.

——————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கம்ப ராமாயணம்—-அயோத்யா காண்டம் —

December 10, 2020

உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும்
நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் – அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே.

ஏனையமூன்று பிள்ளைகளை அவன்நினைவில் கொண்டிருப்பதாகவே தெரியவில்லை.
பால காண்டத்திலேயே இந்தக் குறிப்பை வைத்துக் காட்டுகிறான் கம்பன்.
பிள்ளைகளைக் கேட்க வந்த விஸ்வாமித்திரன்.
“நின் சிறுவர் நால்வரினும் கரிய செம்மல் ஒருவனைத் தந்திடுதி” (324)
“மைந்தனை அலாது உயிர் வேறு இலாத மன்னன்” (1514)
“போயினன் என்றான் என்ற போழ்தத்தே ஆவி போனான்”(1898)
“சொன்னேன் இன்றே இவள் என் தாரம் அல்லள் துறந்தேன்
மன்னனே ஆவான் வரும் அப் பரதன் தனையும் மகன் என்று
உன்னேன் முனிவா அவனும் ஆகான் உரிமைக்கு” (1654)
“உன் கழுத்தின் நாண், உன் மகற்கு காப்பின் நாண் ஆம்”(1653)

——–

“இளவல் உன் இளையான்இந் நன்னுதலவள் நின் கேள் (1994)

“இன் துணைவன் இராகவனுக்கு; இலக்குவற்கும்,இளையவற்கும், எனக்கும் மூத்தான்” (2367)
என்று குகனைக் கோசலைக்கு பரதனும் கூட,அறிமுகம்

“தேனும் மீனும் அமுதினுக்கு அமைவது ஆகத்
திருத்தினென் கொணர்ந்தேன்; என்கொல் திருவுளம்?” (1966)

“ஆழ நெடுந் திரை ஆறு கடந்து இவர் போவாரோ” (2317)

“நம்பியும் என் நாயகனை ஒக்கின்றான், அயல். நின்றான்
தம்பியையும் ஒக்கின்றான்” (2332)

“எம்பெருமான் பின் பிறந்தார் இழைப்பரோ பிழைப்பு” (2332)

“ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ, தெரியின் அம்மா!”(2337)

நம்பியும் என் நாயகனை ஒக்கின்றான் அயல் நின்றான்
தம்பியையும் ஒக்கின்றான் ; தவ வேடம் தலை நின்றான்
துன்பம் ஒரு முடிவில்லை ; திசை நோக்கித் தொழுகின்றான்
எம்பெருமான் பின்பிறந்தார் இழைப்பரோ பிழைப்பு என்றான்
(II 12.30)

———

“நதியின் பிழை அன்று நறும் புனல் இன்மை அற்றே
பதியின் பிழை அன்று பயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழை அன்று மகன் பிழை அன்று மைந்த!
விதியின் பிழை நீ இதற்கு என்னை வெகுண்டது?”(கம்பன் 1734)

“நன் சொற்கள் தந்து ஆண்டு எனை நாளும் வளர்த்த தாதை
தன் சொல் கடந்து எற்கு அரசு ஆள்வது தக்கது அன்றால்
என் சொல் கடந்தால் உனக்கு யாது உளது ஈனம்”(கம்பன் 1741)

——–

அந்தத் தவச்சாலையைப் பார்த்த இராகவன் தம்பியைஏற
இறங்கப் பார்த்து,”என்று கற்றனை நீ இதுபோல்” (2096)

மேவு கானம் மிதிலையர் கோன் மகள்
பூவின் மெல்லிய பாதமும் போந்தன
தா இல் எம்பி கை சாலை சமைத்தன
யாவை யாதும் இலார்க்கு இயையாதவே’ (2095)

———

வான்மீகி ராமாயணம் மட்டும் தசரதனின் கிரகநிலை பற்றியும், அவன்
கண்ட தீக்கனா பற்றியும்இராமனிடம் கூறுவதாகக் குறிப்பிடுகிறது.:

இராம, ஆகாயத்திலிருந்து கொள்ளிக் கட்டையொன்று இடியோசையுடன்
வீழ்வதாகக் கனவு கண்டேன்.மேலும் எனது ஜன்ம நட்சத்திரத்தில்
சூரியன், செவ்வாய், இராகு என்னும் மூன்று கிரகங்களும் ஒருங்கு
வந்து கூடியிருப்பதாகச் சோதிடர்கள் கூறுகின்றனர். இவற்றின்
காரணமாய் அரசனுக்கு மரணம்நேரலாம்; அல்லது அவனுக்கு மிகப்
பெரிய தீங்கு உண்டாகலாம் என்பது சோதிட நூற் கொள்கை. மேலும்
மனிதர்களின் எண்ணங்கள் நிலையானவை அல்ல. ஆகையால், எனக்கு
இறுதி நேர்வதற்கு முன்னரே, என் மனம் உறுதியாக இருக்கும்பொழுதே
உனக்கு முடிசூட்டி மகிழ விரும்புகிறேன். (II4.17-20)

உயிர்க்கு உறுதி பயக்கும் துறவற நெறியை மேற்கொள்ள விரும்புவதாக
வான்மீகம் கூறுவில்லை.கம்பன் படைத்த தசரதன் இக்கருத்துடையவனாக
இருந்தான் என்பதை,

மன்னுயிர்க்கு உறுவதே செய்து வைகினேன்
என்னுயிர்க்கு உறுவதும் செய்ய எண்ணினேன். (II.1.14)

ஆதலால் இராமனுக்கு அரசை நல்கியிப்
பேதைமைத் தாய்வரும் பிறப்பை நீக்குறு
மாதவம் தொடங்குவான் வனத்தை நண்ணுவேன்
யாதுநும் கருத்து?….. (1.30)

———–

சம்பரா சூரனுடன் பொருது வென்றபோது தசரதன் உனக்கு அருளிய
இரண்டு வரங்களை இப்போது கேள்என்று கூனி உபாயம் செப்பியதாகக்
கம்பராமாயணம் கூறுகிறது. (II. 2.89)

உந்தன் மணவாளரும் கோசலையும்
உகந்து ரதம் ஏறி வரும்போது
தேர்வண்டி அச்சுதான் முறிய
சிறப்பாய் உன் கரத்தினால் ஏந்திக்கொண்டாய்
அப்போது உன் கணவன் தான் பார்த்து
ஆயிழையே உனக்கென்ன வரம் கேளும் என்றார்.
கேளுமென்று ராசன் உரைத்த போது
கெம்பீரமா யுன் மகன் பரதாள் வார்க்கு
எந்தன் மகன் பரதாள் வானுக்கு
யேத்த முதப்பட்டங் கட்டவேணும்
யென்று நீவரங் கேட்டபடி
யிசைந்து வரமது தந்து விட்டார்
அந்த வரம் சற்றும் நினையாமல்
ஆயிழை கைகேசி மறந்து விட்டாய்.26

எந்தையே ஏவ, நீரே உரைசெய இயைவதுண்டேல்
உய்ந்தனன் அடியேன்…
தந்தையும் தாயும் நீரே, தலைநின்றேன் பணிமின் (II.3.110)

இப்பொழுது எம்மனோரால் இயம்புவதற்கு எளிதோ யாரும்
செப்பருங் குணத்து இராமன் திருமுகச் செவ்விநோக்கின்
ஒப்பதே முன்பு பின்பு; அவ்வாசகம் உணரக் கேட்ட
அப்பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்றதம்மா.

தெருளுடை மனத்து மன்னன் ஏவலின் திறம்ப அஞ்சி
இருளுடைய உலகம் தாங்கும் இன்னலுக்கு இளைந்து நின்றான்
உருளுடைச் சகடம் பூண்ட உடையவன் உய்த்த காரேறு
அருளுடை ஒருவன் நீக்க அப்பிணி அவிழ்ந்தது ஒத்தான்
(II.3 . 112 – 13)

மன்னவன் பணியன்றாகில் நும்பணி மறுப்பனோஎன்
பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றதன்றோ
என்இனி உறுதி யப்பால் இப்பணி தலைமேற் கொண்டேன்
மின்னொளிர் கானம் இன்றே போகின்றேன் விடையும்
கொண்டேன்(II.3.114)

———–

நின் பிரிவினும் சுடுமோ பெருங்காடு?

சுமித்திரைகோயில்புக்கு அவள் இணையடிம இறைஞ்சி
விடைபெறாநிற்கையில் சுமித்திரை.

ஆகாதது அன்றால் உனக்கு; அவ்வனம் இவ் அயோத்தி
மாகாதல் இராமன் நம் மன்னவன்; வையம் ஈந்தும்
போகா உயிர்த் தாயர் நம் பூங்குழல் சீதை என்றே
ஏகாய் இனி இவ்வயின் நிற்றலும் ஏதம்……

பின்னும் பகர்வாள் மகனே இவன்பின் செல், தம்பி
என்னும் படி அன்று, அடியாரின் ஏவல் செய்தி;
மன்னும் நகர்க்கே இவன் வந்திடின் வா, அஃது அன்றேல்
முன்னம் முடி…….

———————

வான்நின்று இழிந்து, வரம்பு இகந்த
மா பூதத்தின் வைப்பு எங்கும்,
ஊனும் உயிரும் உணர்வும்போல்,
உள்ளும் புறத்தும் உளன் என்ப –
கூனும் சிறிய கோத்தாயும்
கொடுமை இழப்ப, கோல் துறந்து,
கானும் கடலும் கடந்து, இமையோர்
இடுக்கண் தீர்த்த கழல் வேந்தன்.

கூனும் – கூனியாகிய மந்தையும்; சிறிய கோ தாயும் – இளைய
பட்டத்து அரசியும் தாயுமாகிய கைகேயியும்; கொடுமை இழைப்ப-
தனக்குப் பொல்லாங்கு செய்ய ; கோல் துறந்து – அரசாட்சியை நீத்து;
கானும்கடலும் கடந்து – காட்டையும் கடலையும் தாண்டிச் சென்று ;
இமையோர் இடுக்கண்தீர்த்த – (இராவணனைக் கொன்று) தேவர்களின்
துன்பத்தை கிழங்கெடுத்த ; கழல்வேந்தன் – வீரக்கழலை அணிந்த
இராமபிரானே ; வரம்பு இகந்த – எல்லைகடந்து பரந்த ; மா பூதத்தின்
வைப்பு எங்கும் – பெரிய பூதங்கள் ஐந்தினால்ஆகிய உலகத்தில் உள்ள
பொருள்கள் எல்லாவற்றிலும் ; ஊனும் உயிரும் உணர்வும் போல்-
உடலும் உயிரும் போலவும் உடலும் உணர்வும் போலவும் ; உள்ளும்
புறத்தும் உளன்என்ப – அகத்தேயும் புறத்தேயும் நிறைந்திருக்கின்றான்
என்று ஞானிகள் கூறுவர்.

இப்பாட்டு இராமாயணச் சுருக்காய் இருப்பது மூலப் பகுதியிலிருந்தும்
தோன்றிய உலகத்தில் உள்ள பொருள்களின் உள்ளேயும் வெளியேயும்
நிறைந்திருக்கும் பரம்பொருளேஇராமனாக அவதரித்தான் என்பது கருத்து.
இழிந்து என்னும் வினையெச்சம் இகந்த என்னும் பெயரெச்சவினைகொண்டு
முடிந்தது. ‘வானின்று இழிந்து வரம்பு இகந்த வைப்பு’ என்றும், ‘மாபூதத்தின்
வைப்பு’என்றும் இயைத்துப் பொருள் கொள்க. வானிலிருந்து காற்றும்,
காற்றிலிருந்து நெருப்பும்,நெருப்பிலிருந்து நீரும், நீரிலிருந்து நிலமும்
தோன்றியது என்னும் மறை முடிபினையொட்டி‘வானின்றிழிந்து……. வைப்பு’
என்றார். உணர்வு -ஆன்மாவின் பண்பாய் வெளிப்பட்டு நிற்கும் அறிவு. இறைவன்
பொருள்களுக்குஉள்ளே உடம்புக்குள் உயிர் இருப்பது போலவும், வெளியே
உயிரில் உணர்வு வெளிப்பட்டு இருப்பதுபோலவும் இருக்கிறான் என்பார்
‘ஊனும் உயிரும் உணர்வும் போல் உள்ளும் புறத்தும் உளன் என்ப’
என்றார். பரம்பொருள் உயிர்களைத் தனக்கு உடம்பாகக் கொண்டு தான்
உள்ளேயும், உயிர்களுக்குஉடம்பாக அமைந்து தான் புறத்தேயும் உள்ளான்
என்பது சமய நூற் கொள்கையாதலின் இவ்வாறுகூறினார் என்க.

இக் காண்டம் அயோத்தியில் நடந்த நிகழ்ச்சிகளைக் கூறுவதால் இப்
பெயர் பெற்றது. இதில் மந்திரப் படலம் முதலாகத் திருவடி சூட்டு படலம்
ஈறாக மொத்தம்பதின்மூன்று படலங்கள் உள்ளன. தயரதன் இராமபிரானுக்கு
முடிசூட்டக் கருதுவது தொடங்கி, காடு சென்றஇராமனைப் பரதன் சென்று
கண்டு திரும்புவது வரையிலான கதை நிகழ்ச்சிகள் இதில் இடம்
பெறுகின்றன. தாய் தந்தையர் சொல் தட்டாத இராமன் பண்புச் சிறப்பும்,
அரசின்மீது சிறிதும்ஆசையில்லாத பரதன் பெருஞ்சிறப்பும், கைகேயியின்
கொடுமையும், ஏழை வேடன் குகன் இராமன்மீதுகாட்டும் பரிவும் இக்
காண்டத்தில் நன்கு வெளிப்படுகின்றன
———————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கம்ப ராமாயணம்-பால காண்டம்-மிகைப் பாடல்கள்-1-187- –

December 10, 2020

1-ஆற்றுப் படலம்

ஒன்றாய். இரண்டு சுடர் ஆய்.
ஒரு மூன்றும் ஆகி.
பொன்றாத வேதம் ஒரு நான்கொடு.
ஐம் பூதம் ஆகி.
அன்று ஆகி. அண்டத்து அகத்து ஆகி.
புறத்தும் ஆகி.
நின்றான் ஒருவன்; அவன் நீள் கழல்
நெஞ்சில் வைப்பாம்.–1-

ஒன்றாய் – பரம்பொருள் ஒன்றால்;
இருசுடர் – பரிதி. மதி என்று இருசுடர்;
ஒரு மூன்று – பிரமன்-திருமால்-சிவன்;
பொன்றாத வேதம் – அழியாத வேதம்;
அன்று – இல்லை;
நீள்கழல் – நெடிய பாதம்.

———–

நீலம் ஆம் கடல். நேமி அம் தடக் கை
மாலை மால் கெட. வணங்குதும் மகிழ்ந்தே.–2-

நீலம் ஆம் கடல் – கடல் போன்ற நீல நிறமும்;
நேமி அம் தடக்கை – திரு வாழி ஏந்திய நீண்ட கைகளையும் உடைய;
மாலை – திருமாலை;
மால்கெட – மயக்கம் நீங்க;
மகிழ்ந்து வணங்குதும் -மகிழ்ந்து வணங்குவோமாக.

————

காயும் வெண் பிறை நிகர் கடு ஒடுங்கு எயிற்று
ஆயிரம் பணாமுடி அனந்தன் மீமிசை.
மேய நான்மறை தொழ. விழித்து உறங்கிய
மாயன் மா மலர் அடி வணங்கி ஏத்துவாம்.–3-

கடு – நஞ்சு;
விழித்து உறங்கல்- அறிதுயில்;
ஆயிரம் பணா முடி
ஒப்பு பரிபாடல். ‘கடுவொடு ஒடுங்கிய தூம்புடை வால்எயிறு’
முருகாற்றுப்படை; மாயன் – கரியன்; மாயம் வல்லவன்.

———–

மாதுளங் கனியை. சோதி
வயங்கு இரு நிதியை. வாசத்
தாது உகு நறு மென் செய்ய
தாமரைத் துணை மென் போதை.
மோது பாற்கடலின் முன்நாள்.
முளைத்த நால் கரத்தில் ஏந்தும்
போது தாயாகத் தோன்றும்
பொன் அடி போற்றிசெய்வாம்.–4-

மாதுளங்கனியை – மாதுளங்கனி போன்ற நிறத்தினளை;
சோதி -ஒளி;
வயங்குதல் – விளங்குதல்;
நிதி – செல்வம்;
தாது – மகரந்தம்;
உகு – சிந்தும்;
துணை – இரண்டு;
போது – மலர்;
தாய் – இலக்குமி.

———-

பராவ அரு மறை பயில் பரமன். பங்கயக்
கராதலம் நிறைபயில் கருணைக் கண்ணினான்.
அரா – அணைத் துயில் துறந்து அயோத்தி மேவிய
இராகவன். மலர்அடி இறைஞ்சி ஏத்துவாம்.–5-

பராவ அருமறை-போற்றுதற்கரிய வேதங்கள்;
பங்கயம் – தாமரை;
கராதலம் – கைகள்;
அராவனை – பாம்புப்படுக்கை;
இராகவன் -இராமன்;
இறைஞ்சி – வணங்கி.

———

கலங்கா மதியும். கதிரோன் புரவிப்
பொலன் கா மணித் தேரும். போகா இலங்கா
புரத்தானை. வானோர் புரத்து ஏறவிட்ட
சரத்தானை. நெஞ்வே! தரி.–6-

கலங்கா- கலங்காத;
மதி – சந்திரன்;
கதிரோன் – சூரியன்;
பொலன் – அழகிய;
இலங்காபுரத்தான் – இராவணன்;
சரம் – அம்பு;
சரத்தான் – இராமன்;
தரி – தரிக்கச் செய்

———-

‘நாராயணாய நம!’ என்னும் நல் நெஞ்சர்
பார் ஆளும் பாதம் பணிந்து. ஏத்துமாறு அறியேன்;
கார் ஆரும் மேனிக் கருணாகர மூர்த்திக்கு
ஆராதனை என் அறியாமை ஒன்றுமே.–7-

நல் நெஞ்சர்- நல்ல மனமுடைய சான்றோர்;
ஏத்துமாறு -போற்றும் வகை;
கார் – மேகம்;
கருணாகரன் – கருணை வடிவினன்;
மூர்த்தி – வடிவம்;
ஆராதனை – நிவேதனம்.

———–

பராவரும் இராமன். மாதோடு
இளவள் பின் படரக் கான் போய்.
விராதனை. கரனை. மானை.
கவந்தனை. வென்றிகொண்டு.
மராமரம். வாலி மார்பு.
துளைத்து. அணை வகுத்து. பின்னர்.
இராவணன் குலமும் பொன்ற
எய்து. உடன் அயோத்தி வந்தான்.–8-

பராவரும் – துதிப்பதற்கு அரிய;
மாது – சீதை;
இளவல் -இலக்குவன்;
பின்படர – பின்தொடர்ந்து வர;
கான் – காடு;
துளைத்து- துளைசெய்து;
அணை வகுத்து – அணை அமைத்து;
பொன்ற -அழிய;
எய்து – அம்பெய்து.

———–

தருகை நீண்ட தயரதன்தான் தரும்
இரு கை வேழத்து இராகவன்தன் கதை
திருகை வேலைத் தரைமிசைச் செப்பிட.
குருகை நாதன் குரை கழல் காப்பதே.–9-

தருகை – தருகின்ற கை (வினைத் தொகை) ; வேழம் – யானை;
திருகை வேலை – சூழ்ந்துள்ள கடல்; குருகைநாதன் – திருக்குருகை
நாதனான நம்மாழ்வார்; குரை – ஒலிக்கும்; கழல் – பாதங்கள்;
காப்பதே – காக்குமாக.

——–

அஞ்சிலே ஒன்று பெற்றான்.
அஞ்சிலே ஒன்றைத் தாவி.
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக.
ஆர் உயிர் காக்க ஏகி.
அஞ்சிலே ஒன்று பெற்ற
அணங்கைக் கண்டு. அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான்.
அவன் எம்மை அளித்துக் காப்பான்.–10-

அஞ்சிலே ஒன்று – காற்று; அஞ்சிலே ஒன்றை – கடலை;
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக – வான் வழியாக; ஆருயிர் –
சீதாபிராட்டியின் உயிர்; அஞ்சிலே ஒன்று பெற்ற – நிலமகள் பெற்ற;
அணங்கு – சீதை; அயலார் – பகைவர்; அஞ்சிலே ஒன்று – நெருப்பு.

———

எவ் இடத்தும். இராமன் சரிதை ஆம்
அவ் இடத்திலும். அஞ்சலி அத்தனாய்.
பவ்வ மிக்க புகழ்த் திருப் பாற்கடல்
தெய்வ தாசனைச் சிந்தை செய்வாம்அரோ.-11-

சரிதை- கதை; அஞ்சலி அத்தம் – கூப்பிய கை (அத்தம் – கை) ;
பவ்வமிக்க புகழ் – கடல் போல் திரண்ட புகழ்; தெய்வ தாசன் –
தெய்வத்தின் தொண்டன் (இங்கு அனுமன்).

——–

பொத்தகம். படிகமாலை. குண்டிகை.
பொருள் சேர் ஞான
வித்தகம் தரித்த செங் கை
விமலையை. அமலைதன்னை.
மொய்த்த கொந்து அளக பார
முகிழ் முலைத் தவள மேனி
மைத் தகு கருங் கண் செவ் வாய்
அணங்கினை. வணங்கல் செய்வாம்.-12-

பொத்தகம் – ஏட்டுச்சுவடி; படிகமாலை – வெண் பளிங்கு மாலை;
குண்டிகை – கமண்டலம்; ஞான வித்தகம் – ஞானமுத்திரை; விமலை
– குற்றமற்றவள் (கலைமகள்); கொந்து – கொத்து; அளக பாரம் –
கூந்தல்; தவளமேனி – வெண்மைநிறமான உடம்பு; மைத்தரு – மை
போன்ற; அணங்கு – தெய்வ மகள்.

———-

தழை செவி. சிறு கண். தாழ் கைத்
தந்த சிந்துரமும். தாரை
மழை மதத் தறுகண் சித்ர
வாரண முகத்து வாழ்பவை.
இழைஇடைக் கலசக் கொங்கை
இமகிரி மடந்தை ஈன்ற
குழவியைத் தொழுவன். அன்பால் –
‘குறைவு அற நிறைக’ என்றே.–13-

தழை செவி- தழைத்த காது; சிறுகண் – சிறியகண்; தாழ்கை –
நீண்டகை; தாரை மழை மதம் – மழைத்தாரையாய்ப் பொழியும்
மதநீர்; தறுகண் – வலிமை; சித்ரவாரணம் – அழகிய யானை; இழை –
நூல்; கலசம் – குடம்; இமகிரிமடந்தை – இமயமலை யரசன் மகள்;
குழவி – குழந்தை (விநாயகன்); தொழுவன் – வணங்குவேன்; குறைவு
அற – குறைகள் நீங்க; நிறைக – நன்மை நிறைய.

——–

எக் கணக்கும் இறந்த பெருமையன்.
பொக்கணத்தன். புலி அதள் ஆடையன்.
முக்கண் அத்தன். வரம் பெற்ற மூப்பனை.
அக் கணத்தின் அவன் அடி தாழ்ந்தனம்.–14-

எக்கணக்கும் – எந்தக் கணக்கையும்; பொக்கணம் – ஒரு வகைப்
பை; புலிஅதள் – புலித் தோல்; முக்கண் அத்தன் – முக்கண் மூர்த்தி
(சிவபெருமான்); அப்பன் – தலைவன்; அக்கணத்தின் – அந்தக்
கணத்திலே.

———

நாரணன் விளையாட்டு எல்லாம்
நாரத முனிவன் கூற.
ஆரணக் கவிதை செய்தான்.
அறிந்த வான்மீகி என்பான்;
சீர் அணி சோழ நாட்டுத்
திருவழுந்தூருள் வாழ்வோன்.
கார் அணி கொடையான். கம்பன்.
தமிழினால் கவிதை செய்தான்.–15-

நாரணன் விளையாட்டு- திருமாலின் திருவிளையாடல்; ஆரணம் –
வேதம்; சீர்அணி – சிறப்புடைய; திருவழுந்தூர்- தேரழுந்தூர்;
கார்அணி – மேகம் போன்ற; கொடை – ஈகை; கவிதை – செய்யுள்.

———-

அம்பிலே சிலையை நாட்டி
அமரர்க்கு அன்று அமுதம் ஈந்த
தம்பிரான் என்ன. தானும்
தமிழிலே தாலை நாட்டி.
கம்ப நாடு உடைய வள்ளல்.
கவிச் சக்ரவர்த்தி. பார்மேல்
நம்பு பாமாலையாலே
நரர்க்கும் இன் அமுதம் ஈந்தான்.–16-

அம்பு – தண்ணீர் (இங்குப் பாற்கடல்); சிலை – மலை (மந்தர
மலை); அமரர் – தேவர்கள்; அமுதம் ஈந்த தம்பிரான் – திருமால்;
தால் – நாவு; நரர்க்கு – மானிடர்களுக்கு; ஈந்தான் – தந்தான்.

———–

வாழ்வு ஆர்தரு வெண்ணெய் நல்லூர்ச்
சடையப்பன் வாழ்த்துப் பெற.
தாழ்வார் உயர. புலவோர்
அகஇருள் தான் அகல
போழ் வார் கதிரின் உதித்த
தெய்வப் புலமைக் கம்ப நாட்டு
ஆழ்வார் பதத்தைச் சிந்திப்பவர்க்கு
யாதும் அரியது அன்றே.–17-

வாழ்வு ஆர்தரு- நல்வாழ்வு பொருந்திய;அகஇருள் – உள் இருள்
(அகம் – மனம்); அகல – நீங்க; போழ்வார் கதிர் – காலத்தில் மிக்குப்
பொலியும் பரிதி; சிந்திப்பவர்க்கு – நினைப்பவர்களுக்கு; அரியது –
செய்தற்கரியசெயல்.

——–

அம்பு அரா அணி சடை அரன் அயன் முதல்
உம்பரால். முனிவரால். யோகரால். உயர்
இம்பரால். பிணிக்க அரும் இராம வேழம் சேர்
கம்பர் ஆம் புலவரைக் கருத்து இருத்துவாம்.–18-

அம்பு- நீர் (கங்கை); அரா – பாம்பு; அணி – அணிந்த; உம்பர் –
தேவர்; இம்பர் – இவ்வுலகத்தோர்; பிணிக்க – கட்ட; வேழம் –
யானை; கருத்து – உள்ளத்தில்; இருத்துவாம் – இருக்கச் செய்வோம்.

———-

சம்பு. அ(ந்)நாள். தன் உமை செவி சாற்று பூங்
கொம்பு அனாள்தன் கொழுநன் இராமப் பேர்
பம்ப நாள் தழைக்கும் கதை பாச் செய்த
கம்பநாடன் கழல் தலையில் கொள்வாம்.–19-

சம்பு – சிவபிரான்; உமைசெவி – உமாதேவியின் காதுகளில்;
பூங்கொம்பு அன்னாள் – மலர்க் கொம்பு போன்றவள் (சீதை) ;
கொழுநன் – கணவன்; பாச்செய்த – பாக்களால் செய்த; பம்ப –
பொலிய.

———-

இம்பரும் உம்பர்தாமும்
ஏத்திய இராம காதை
தம்பமா முத்தி சேர்தல்
சத்தியம் சத்தியம்மே;
அம்பரம் தன்னில் மேவும்
ஆதித்தன் புதல்வன் ஞானக்
கம்பன் செங் கமல பாதம்
கருத்துற இருத்துவாமே.–20-

இம்பர் – இவ்வுலகத்தோர்; உம்பர் – விண்ணுலகத்தோர்; ஏத்திய –
போற்றிய; தம்பம் – பற்றுக்கோடு; ஞானக் கம்பன் -ஞானத்தை உடைய கம்பன்;
செங்கமலம் – செந்தாமரை; கருத்துற- உள்ளத்தில் பொருந்தி நிற்க;
ஆதித்தன் – கம்பனது தந்தையின் பெயர் என்பர்.

———

ஆதவன் புதல்வன். முத்தி
அறிவினை அளிக்கும் ஐயன்.
போதவன் இராம காதை
புகன்றருள் புனிதன். மண்மேல்
கோது அவம் சற்றும் இல்லான்.
கொண்டல் மால்தன்னை ஒப்பான்.
மா தவன் கம்பன் செம் பொன்
மலர்அடி தொழுது வாழ்வாம்.–21-

ஐயன் – தலைவன்; அளிக்கும் – கொடுக்கும்; போதவன் – அறிவு
மிக்கவன்; புகன்று – கூறி; புனிதன் – தூய்மையாளன்; கோது –
குற்றம்; அவம் – வீணான; கொண்டல்மால் – மேகம் போன்ற
திருமால்; செம்பொன் – செம்மையானபொன்.

———

ஆவின் கொடைச் சகரர் ஆயிரத்து நூறு ஒழித்து.
தேவன் திருவழுந்தூர் நல் நாட்டு – மூவலூர்ச்
சீர் ஆர் குணாதித்தன் சேய் அமையப் பாடினான்
கார் ஆர் காகுத்தன் கதை.–22-

ஆவின் கொடை – ஆக்களைக் கொடையாக அளித்த;
திருவழுந்தூர் நல் நாட்டு மூவலூர்- திருவழுந்தூர் நாட்டைச் சேர்ந்த
மூவலூர்; குண ஆதித்தன் – நல்ல குணம் உள்ள ஆதித்தன்; சேய் –
பிள்ளை; கார்ஆர் – மேகம் போன்று நிறம்; காகுத்தன் – இராமன்.

——-

எண்ணி சகாத்தம் எண்ணூற்று
ஏழின்மேல். சடையன் வாழ்வு
நண்ணிய வெண்ணெய் நல்லூர்
தன்னிலே கம்பநாடன்
பண்ணிய இராம காதை
பங்குனி அத்த நாளில்.
கண்ணிய அரங்கர் முன்னே.
கவி அரங்கேற்றினானே.-23-

சகாத்தம் – சாலிவாகன சகாப்தம் (807) ; பங்குனி அத்த நாள் –
பங்குனி மாதம் அஸ்தம நட்சத்திரத்தன்று; அரங்கர் முன்னே –
திருவரங்கப் பெருமான் முன்பு; அரங்கேறினான் – அரங்கேற்றம்
செய்தான்.

——–

கழுந்தராய் உன கழல் பணியாதவர்
கதிர்மணி முடிமீதே
அழுந்த வாளிகள் தொடு சிலை இராகவ!
அபிநவ கவிநாதன்
விழுந்த நாயிறுஅது எழுவதன்முன்.
மறை வேதியருடன் ஆராய்ந்து.
எழுந்த நாயிறு விழுவதன்முன்
கவி பாடியது எழுநூறே.–24-

கழுந்தராய் – கழுந்து போன்றவராய் (கழுந்து – உலக்கை); உன
கழல் – உனது பாதங்களை; வாளி – அம்பு; தொடு – எய்த; சிலை –
வில்; அபிநவம் – புதுமை; கவிநாதள் – கவிஞர்தலைவன்; நாயிறு –
சூரியன்.

———

கரை செறி காண்டம் ஏழு.
கதைகள் ஆயிரத்து எண்ணூறு.
பரவுறு சமரம் பத்து.
படலம் நூற்றிருபத்தெட்டே;
உரைசெயும் விருத்தம் பன்னீ
ராயிரத்து ஒருபத்தாறு;
வரம் மிகு கம்பன் சொன்ன
வண்ணமும் தொண்ணூற்றாறே.–25-

காண்டம் எழு ;கதைகள் ஆயிரத்து எண்ணூறு;போர்கள் பத்து;
படலம் நூற்று இருபத்தெட்டு; வண்ணம் (சந்தம்) தொண்ணூற்று ஆறு;
வரம் மிகு கம்பன் – வரபலம் மிகுந்த கம்பன்.

————-

தராதலத்தின் உள்ள தமிழ்க் குற்றம் எல்லாம்
அராவும் அரம் ஆயிற்று அன்றே -இராவணன்மேல்
அம்பு நாட்டு ஆழ்வான் அடி பணியும் ஆதித்தன்
கம்ப நாட்டு ஆழ்வான் கவி.-26-

தராதலம்- உலகம்;அரம் – இரும்பை ராவும் கருவி; அம்பு நாட்டு
ஆழ்வான் – அம்பை நாட்டி ஆழ்த்தியவன் (இராமன்); கம்ப
நாட்டாழ்வான் – கம்பன்.

———-

இம்பர் நாட்டில் செல்வம் எல்லாம்
எய்தி. அரசு ஆண்டு இருந்தாலும்.
உம்பர் நாட்டில் கற்பகக் கா
ஓங்கும் நீழல் இருந்தாலும்.
செம்பொன்மேரு அனைய புயத்
திறல் சேர் இராமன் திருக் கதையில்
கம்பநாடன் கவிதையில்போல்.
கற்றோர்க்கு இதயம் களியாதே.–27-

இம்பர் நாட்டின் – இவ்வுலகத்தின்; எய்தி- அடைந்து; அரசாண்டு
– ஆட்சி செய்து; உம்பர் நாட்டின் – விண்ணுலகத்தின்; கற்பகக் கா –
கற்பகச் சோலை; நீழல் – நிழல்; மேரு அனைய – மேரு மலை
போன்ற; புயம் – தோள்; திறல் – வலிமை; கவிதை – பாடல்; இதயம்
– மனம்; களியாது – மகிழாது.

———-

நாரதன் கருப்பஞ் சாறாய்.
நல்ல வான்மீகன் பாகாய்.
சீர் அணி போதன் வட்டாய்.
செய்தனன்; காளிதாசன்.
பார் அமுது அருந்தப் பஞ்ச –
தாரையாய்ச் செய்தான்; கம்பன்.
வாரம் ஆம் இராமகாதை
வளம் முறை திருத்தினானே.–28-

கருப்பஞ்சாறு – கரும்புச் சாறு; பாகு – சக்கரைப் பாகு; வட்டு –
வெல்லக்கட்டி; பஞ்சதாரை – சர்க்கரை; பார் அமுது அருந்த –
உலகம் அமுதாக உண்ண; வாரம் – அன்பு.

——–

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே;
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே;
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே-
இம்மையே இ‘ராம’ என்று இரண்டு எழுத்தினால்.–29-

நல்கும்- வழங்கும்; தின்மை – தீமை; தேயும் – தேய்ந்து போகும்;
சென்மம் – பிறப்பு;மரணம் – இறப்பு; இன்றி – இல்லாது; இம்மையே –
இவ்வுலகிலேயே;

———

ஓர் ஆயிரம் மகம் புரி பயனை உய்க்குமே;
நராதிபர் செல்வமும் புகழும் நல்குமே.
விராய் எணும் பவங்களை வேர் அறுக்குமே-
‘இராம’ என்று ஒரு மொழி இயம்பும்காலையே.-30-

மகம்- வேள்வி;உய்க்கும் – சேர்க்கும்; நராதிபர் – அரசர்; விராய்
– கலந்து; எணும் – எண்ணும்; பவம் – பிறப்பு; இயம்பும் காலை –
சொல்லும் போது; வேர் அறுக்கும் – வேருடன் அழிக்கும்.

——–

மற்று ஒரு தவமும் வேண்டா;
மணி மதில் இலங்கை மூதூர்
செற்றவன் விசயப் பாடல்
தெளிந்து. அதில் ஒன்றுதன்னைக்
கற்றவர். கேட்போர். நெஞ்சில்
கருதுவோர். இவர்கள் பார்மேல்
உற்று அரசு ஆள்வர்; பின்னும்
உம்பராய் வீட்டில் சேர்வார்.-31-

மணி மதில் -அழகிய மதில்; மூதூர் – பழமையான ஊர்; விசயம் –
வெற்றி; செற்றவன் – வென்றவன்; உம்பராய் – தேவராய்; வீட்டில் –
பேரின்ப வீட்டில்.

——–

வென்றி சேர் இலங்கையானை
வென்ற மால் வீரம் ஓத
நின்ற ராமாயணத்தில்
நிகழ்ந்திடு கதைகள் தம்மில்
ஒன்றினைப் படித்தோர் தாமும்.
உரைத்திடக் கேட்டோர் தாமும்.
‘நன்று இது’ என்றோர் தாமும்.
நரகம்அது எய்திடாரே.–32-

வென்றி- வெற்றி; இலங்கையான் – இராவணன்; மால் – திருமால்;
ஓத – கூற; நின்ற – நிலைபெற்ற; நிகழ்ந்திடு- நடைபெறுகின்ற; நரகம்
அது எய்திடார் – நரகத்தை அடைய மாட்டார்கள்.

——–

இறு வரம்பில் ‘இராம’ என்றோர். உம்பர்
நிறுவர் என்பது நிச்சயம்; ஆதலால்.
மறு இல் மாக்கதை கேட்பவர் வைகுந்தம்
பெறுவர் என்பது பேசவும் வேண்டுமோ?–33-

இறுவரம்பு – இறுதிக்காலம் (உயிர் விடும் போது); உம்பர் –
சுவர்க்கம்; நிறுவர் – நிலைப்பர்; மறு இல் – குற்றமில்லாத; மாக்கதை
– சிறந்த கதை; பெறுவர் – அடைவர்; பேசவும் – சொல்லவும்.

——–

அன்னதானம். அகில நல் தானங்கள்.
கன்னி தானம். கபிலையின் தானமே.
சொன்ன தானப் பலன் எனச் சொல்லுவார்-
மன் இராம கதை மறவார்க்குஅரோ.–34-

அன்னம்- சோறு;அகிலம் – எல்லாம்; கபிலை- பசு; சொன்னம்
– பொன்; மன் – நிலைபெற்ற; மறவார்க்கு – மறக்காதவர்க்கு.

——–

வட கலை. தென் கலை. வடுகு. கன்னடம்.
இடம் உள பாடை யாது ஒன்றின்ஆயினும்.
திடம் உள ரகு குலத்து இராமன்தன் கதை
அடைவுடன் கேட்பவர் அமரர் ஆவரே.-35-

வடகலை- வட மொழி; தென்கலை – தென் மொழி (தமிழ்); வடுகு
– தெலுங்கு; பாடைகள் – மொழிகள் (பாஷை) ; திடம் – வல்லமை;
ரகுகுலம் – சூரிய குலம்; அடைவுடன் – முறையாக; அமரர் –
விண்ணவர்.

———-

இத் தலத்தின் இராமாவதாரமே
பத்திசெய்து. ‘பரிவுடன் கேட்பரேல்.
புத்திரர்த் தரும்; புண்ணியமும் தரும்;
அத் தலத்தில் அவன் பதம் எய்துமே.–36-

இத்தலத்தின் – இவ்வுலகத்திலே; இராமாவதாரம் – இராமாயணம்;
பத்தி – பக்தி; பரிவுடன் – அன்புடன்; அத்தலம் – மறு உலகம்;
அவன்பதம் – பரமபதம்; எய்தும் – அடையும்.

———–

‘ஆதி “அரி ஓம் நம” நராயணர் திருக் கதை
அறிந்து. அனுதினம் பரவுவோர்.
நீதி அனுபோக நெறி நின்று. நெடுநாள் அதின்
இறந்து. சகதண்டம் முழுதுக்கு
ஆதிபர்களாய் அரசு செய்து. உளம் நினைத்தது
கிடைத்து. அருள் பொறுத்து. முடிவில்
சோதி வடிவு ஆய். அழிவு இல் முத்தி பெறுவார்’ என
உரைத்த. சுருதித் தொகைகளே.

நராயணர்- நாராயணர்; அனுதினம் – நாள்தோறும்; பரவுவோர் –
சொல்லுவோர்; சகதண்டம் – உலகம் முழுவதுக்கும்; ஆதிபர் –
அதிபர் (உரியவர்); சோதி வடிவு – ஒளி வடிவம்; சுருதித் தொகை –
நூல்களின் தொகை.

———–

இராகவன் கதையில். ஒரு கவிதன்னில்
ஏக பாதத்தினை உரைப்போர்.
பராவ அரும் மலரோன் உலகினி. அவனும்
பல் முறை வழுத்த. வீற்றிருந்து.
புராதன மறையும் அண்டர் பொன் பதமும்
பொன்றும் நாள் அதனினும். பொன்றா
அரா-அணை அமலன் உலகு எனும் பரம
பதத்தினை அடைகுவர் அன்றே.–38-

இராகவன் – இராமன்; ஏக பாதம் – ஒரு வரி; பராவரும் –
பரவுதற்கு அரிய; மலரோன் – பிரமன்; வழுத்த – துதிக்க; புராதன –
பழமையான; அண்டர் பொன்பதம் – தேவருலகம்; பொன்றும் –
அழியும்; அரா அணை – பாம்புப் படுக்கை; அமலன் – திருமால்.

————-

இனைய நல் காதை முற்றும்
எழுதினோர். வியந்தோர். கற்றோர்.
அனையதுதன்னைச் சொல்வோர்க்கு
அரும் பொருள் கொடுத்துக் கேட்டோர்.
கனை கடல் புடவி மீது
காவலர்க்கு அரசுஆய் வாழ்ந்து.
வினையம் அது அறுத்து. மேல் ஆம்
விண்ணவன் பதத்தில் சேர்வார்.–39-

இனைய – இத்தகைய; காதை – கதை; முற்றும் – முழுவதும்;
அரும்பொருள் – அரிய செல்வம்; கனைகடல் – ஒலிக்கும் கடல்;
புடவி மீது – உலகத்தின் மேல்; காவலர் – மன்னர்; வினையம் –
தீவினை; விண்ணவர் பதம் – பேரின்ப வீடு.

———–

நாடிய பொருள் கைகூடும்;
ஞானமும் புகழும் உண்டாம்;
வீடு இயல் வழிஅது ஆக்கும்;
வேரி அம் கமலை நோக்கும்;-
நீடிய அரக்கர் சேனை
நீறுபட்டு அழிய. வாகை
சூடிய சிலை இராமன்
தோள் வலி கூறுவோர்க்கே.–40-

நாடிய – விரும்பிய; ஞானம் – மெய்யறிவு; வீடு – பேரின்ப வீடு;
வேரி – மணம்; கமலை – மலர்மகள்; நீடிய – நீண்ட; நீறு – புழுதி;
வாகை – வெற்றிமாலை; சிலை – வில்.

———–

வான் வளம் சுரக்க! நீதி
மனு நெறிமுறை எந் நாளும்
தான் வளர்ந்திடுக! நல்லோர்
தம் கிளை தழைத்து வாழ்க!
தேன் வளர்ந்து அறாத மாலைத்
தெசரத ராமன் செய்கை
யான் அளந்து அறிந்த பாடல்
இடையறாது ஒளிர்க. எங்கும்!–41-

வான் – வானம் (மழை); கிளை – சுற்றம்; அறாத – நீங்காத;
தெசரத ராமன் – தசரத ராமன் (மோனை கருதி ‘தெச’ என்றார்);
இடை அறாது – இடைவிடாமல்; ஒளிர்க – விளங்குக.

———–

எறிகடல் உலகம்தன்னுள்
இன்தமிழ்ப் புலவர்க்கு எல்லாம்
முறுவலுக்கு உரியதாக
மொழிந்தனென்; மொழிந்த என்சொல்
சிறுமையும். சிலை இராமன்
கதைவழிச் செறிதல் தன்னால்.
அறிவுடை மாந்தர்க்கு எல்லாம்
அமிழ்தம் ஒத்து இருக்கும் அன்றே.–42-

எறிகடல் – ஒலிக்கும் கடல்; இன்றமிழ் – இனிய தமிழ்; முறுவல் –
புன்சிரிப்பு; மொழிந்த – கூறிய; சிறுமை – தாழ்வு; செறிந்த – சேர்ந்த;
அமிழ்தம் – அமுதம்; ஒத்து – போல

——–

2 நாட்டுப் படலம் –

காளையர் சேறுதன்னைக்
கலந்து. உடன் மிதித்து. நட்ட
தாள்களும் கழுநீர் நாறும்;
தடக் கையும் அதுவே நாறும்;
ஆளையும் சீறிப் பீறி.
அணி மலர்க் கமுகில் பாய்ந்த
வாளையும். பாளை நாறும்;
வயல்களும் அதுவே நாறும்.–43-

காளையர் – காளை போன்றவர் (மழவர்); கழுநீர் – செங்கழு நீர்
மலர்; தடம் கை – பெரிய கை; அணிமலர் கமுகு – அழகிய மலரை
உடைய கமுகு.

உழவர்கள் சேற்றை மிதிக்க அங்கு மலர்ந்துள்ள செங்கழுநீர்
மலரின் மணத்தால் தாள்களும் கைகளும் அந்த மலர்மணமே கமழும்.
வாளைமீன்கள் கமுகில் பாய்வதால் அந்த வாளை மீன்களும்
வயல்களும் கமுகம் பாலை மணம்கமழும்.

———–

3 நகரப் படலம்

எங்கும் பொலியும் பரஞ் சுடர் ஆகி.
எவ் உயிரும்
மங்கும் பிறவித் துயர் அற.
மாற்று நேசம்
தங்கும் தருமத்து உரு ஆகி.
தரணி மீது
பொங்கும் கருணைப் புத்தேள் கருத்து
யாம் எவன் புகல்வோம்?

பொலியும்- விளங்கும்; பரஞ்சுடர் – மேலான ஒளி; தரணி –
உலகம்; புத்தேள் – இறைவன்; தருமத்து உரு – அறத்தின் வடிவம்.

——–

வேதம்அதனுள் விளை பொருள்
விகற்பத்துள் அடங்காச்
சோதி மயமாய்த் துலங்கி.
தொல்உயிர்த் தொகை பலவாய்.
ஓது புவனம் உதரத்துள்
ஒடுக்கியே. பூக்கும்
ஆதி முதல்வன் அமர் இடம்
அயோத்தி மா நகரம்.–45-/74-2-

விளைபொருள்- விளைந்த பொருள்; விகற்பம் – வேறுபாடு;தொல்
உயிர் – பழைமையான உயிர்; புவனம் – உலகம்; உதரம் – வயிறு;
ஆதி முதல்வன் – ஆதியாகிய முதல் பொருள்; அமர் –
அமர்ந்திருக்கும்.

————

4 அரசியற் படலம்-

விரி கதிர் பரப்பி. மெய்ப் புவனம் மீது இருள்
பருகுறும் பரிதி அம் குலத்தில். பார்த்திவன்
இரகு. மற்று அவன் மகன் அயன் என்பான். அவன்
பெருகு மா தவத்தினில் பிறந்த தோன்றலே.–46 /

விரிகதிர் – விரிந்த கிரணங்கள்; பருகுறும் – உண்ணுகின்ற;
பார்த்திபன் – அரசன்; பெருகு – பெருகிய; தோன்றல் – மகன்
(தயரதன்).

———-

5 திரு அவதாரப் படலம்

‘பொறை இலா அறிவு. போகப்
புணர்ப்பு இலா இளமை. மேவத்
துறை இலா வனச வாவி.
தூசு இலார் போலித் தூய்மை.
நறை இலா மலரும். கல்வி
நலம் இலாப் புலமை. நன்னீர்ச்
சிறை இலா நகரும். போலும்.
சேய் இலாச் செல்வம்’ என்றான்.–47-/ 4-1-

பொறை – பொறுமை; போகப்புணர்வு – இன்ப நுகர்ச்சி; துறை –
இறங்குதுறை; வனசவாவி – தாமரைத் தடாகம்; நறை – மணம்; சேய் –
குழந்தை.

————

கறை மிடற்று அண்ணலும் கடவுளோர்களும்
மறை முதற் கிழவனை வந்து நண்ணலும்
முறைமையின் கடன் முறை முற்றி. முண்டகத்து
இறைவனும். அவரொடும் இனிதின் ஏகினான்.–48 / 5-2-

கறை மிடறு- கறுத்த மிடறு; அண்ணல் – சிவபிரான்; மறை –
வேதம்; கிழவன் – பிரமன்; முண்டகம் – தாமரை; இனிதின் –
மகிழ்வுடன்.

——–

என்று இனையன பல இயம்பி. ‘எங்கணும்.
கன்றி. அவ் அரக்கரை அழித்துக் காத்தியேல்.
ஒன்றிய உயிர்களும். உலகு யாவையும்
இன்று நீ படைத்தி’ என்று இசைத்து. பின்னரும்.–49-/5-4-

இனையன – இத்தகைய; ஒன்றிய – நெருங்கிய; எங்கணும் –
எங்கும்; காத்தியேல் – காப்பாயானால்; இசைத்து – கூறி; பின்னரும் –
மறுபடியும்.

————-

ஆயவர் அயன் முதல் அமரர். ஈறு இலா
நாயகன் இரு பதம் நயந்து. சிந்தைமீது
ஓய்வு இலாது. அவன் அரு மறைகள் ஓதியே.
நேயமோடு இருந்து. இவை நிகழ்த்தல் மேயினார்.–50-/ 8-1-

ஆயவர் – அத்தகையோர்; ஈறு இலா – முடிவில்லாத; பதம் –
பாதம்; அருமறை – அரிய மறைகள்; ஓதி – கூறி; மேயினார் –
தொடங்கினர்.

————–

‘காத்தி நீ எமை; காக்கிலர் தம்மை யாம்
ஏத்தியே இளைத்தோம்; இறைவா! இடர்ப்
பார்த்தியோ? – திருப் பாற்கடற் பள்ளியின்
மூர்த்தியே! முதல்வா! முகில் மேனியாய்!–51 / 8-2-

காத்தி- காப்பாயாக; காக்கிலர் – காக்க இயலாதவர்கள்; இடர் –
துன்பம்; ஏத்தி – துதித்து; முகில் – மேகம்; மேனி – உடல்.

————-

‘அந்தகாரத்து அரக்கர் செய் தீமையால்.
நொந்துளோம்! இறைவா! நொடிப் போதினில்
வந்து மாற்றிடும் வண்ணம் எமக்கு அருள்-
எந்தையே! கருணாகரனே!’ எனா.–52- / 8-3-

அந்தகாரம் – பேரிருட்டு; செய்தீமை – செய்த தீமை (வினைத்
தொகை) ; நொடிப் போதினில் – ஒரு நொடிப் பொழுதில் (விரைவாக)
எனா – என்று.

———

அறி துயில் எழுந்தனன். அமரர் கூப்பிடும்
மறை மொழித் துதி ஒலி வந்து இசைக்கவே;
நிறை குணத்து அமரர்கள் நினைத்து அழைப்பதை.
இறைவனும். திரு உளத்து அறிந்து. அங்கு எய்தவே.–53 .15-1-

அறிதுயில்-யோக நித்திரை; அமரர் – தேவர்கள்; மறை – வேதம்;
இசைக்க – கேட்க; இறைவன் – திருமால்; எய்த – அடைய.

———-

வானவர் அம் முறை வழங்க. மா மதித்
தேன் உறும் இதழி அம் தெரியல் வேணியான்
ஆனவர்தமைக் கரம் அமைத்து. அங்கு. ஐயனைத்
தான் முகம் நோக்கியே சாற்றல் மேயினான்.–54 / 9-1-
வானவர் – தேவர்கள்; இதழி – கொன்றை; தெரியல் – மாலை;
வேணி – சடைமுடி; சாற்றல் மேயினான் – சொல்லத் தொடங்கினான்.

——

எனக் கலை மா முகச் சிருங்கன் இவ் உரை-
தனைச் சொல. தரணிபர்க்கு அரசன்தான் மகிழ்ந்து.
அனைத்து உலகு உயிரொடும் அறங்கள் உய்ய. தம்
மனத் துயர் அகன்றிட. வணங்கிக் கூறுவான்.-55 / 78-1

கலை மாமுகம் – மான்முகம்; தரணிபர் – அரசர்; உய்ய -வாழ.

——–

மேடம் ஆம் மதி; திதி நவமி; மீன் கழை;
நீடு உறு மாலை கற்கடகம்; நீதி சேர்
ஓடை மா களிறு அனான் உதய ராசி கோள்
நாடின். ஏகாதசர் நால்வர் உச்சரே.–56 / 106-1

ஓடை – நெற்றிப் பட்டம்; களிறு அனான் – யானை போன்றவன்
(இராமன்); உதயம் – இலக்கினம் (கடகம்); மதி மேடம் – திங்கள்
சித்திரை; மீன் – நட்சத்திரம்; கழை – புனர் பூசம்; மால் – புதன்; ஐ
– பத்தாமிடம்; கோள் – கிரகங்கள்; நால்வர் – செவ்வாய். குரு.
சுக்கிரன். சனி. ஜென்ம இலக்கினத்திலிருந்து பதினொன்று.
பதினொன்றுக்குரியவர் நால்வரும் தங்களது உச்ச வீடுகளான நான்கில்
இருந்தனர் என்பது கருத்து.

——-

என்றனர் சாதகம் ஈசற்கு; ஏனையர்
தம் தமக்கும் தகும் முறையில். தாம் தெரிந்து.
ஒன்றிய தமனியத்து எழுதி ஓதினார்-
வன் திறல் சுரர்குரு வாழ்த்து எடுப்பவே.–57 / 106-2-

ஈசன் – இறைவனாகிய இராமன்; தகும் முறை – தகுந்த முறையில்;
தமனியம் – பொன்; ஓதினார் – படித்தார்கள்; சுரர்குரு –
வியாழன்.

———-

நோக்கினன் களிப்பு எழ; நுணங்கு கேள்வி நூல்
ஆக்கிய முனிவனை வணங்கி. ‘ஐய! என்
பாக்கியம் பலித்தது. இப் பாலர்’ என்று. பார்
காக்குறும் அரசனும். கழறல் மேயினான்.–58-/ 107-1-

நோக்கினன் – பார்த்தான்; பாக்கியம் – பேறு; பார்காக்குறும்
அரசன் – தயரதன்; கழறல் – கூறல்.

———

சுந்தரப் பொடிகளும் செம் பொற் சுண்ணமும்
சந்தனம் நீரொடு கலந்து. தையலார்
பந்தியில். சிவறியால் சிதற. பார்மிசை
இந்திரவில் எனக் கிடந்தது எங்குமே.–59-/ 115-1-

சுந்தரப் பொடி- மணப் பொடி; பொற்சுண்ணம் – பரிமளப் பொடி;
தையலார் – பணிப் பெண்கள்; பந்தியில் – வரிசையில்; சிவிறி –
விசிறி; இந்திரவில் – வானவில்; பார்மிசை – தரை மேல்.

———–

அரு மறை நெறி வழி. அரசனும். அன்னப்
பிரசனம் மதலையர் பெறு வழி உதவி.
கரை அறு திரு நகர் விழவொடு களியா.
இருமையும் உதவுறு தானமும் ஈந்தான்.–60 / 120-1-

அன்னப் பிரசனம் – முதன் முதல் குழந்தைக்கு
உணவூட்டுதலாகும்; கரை அறு – அளவற்ற; களியா – களிப்படைய;
இருமை – இம்மை. மறுமை.

———

6- கையடைப் படலம்

அப் பெருந் திருவொடும் ‘அகில நாதன்’ என்று.
எப் பெரும் புவனமும் இறைஞ்சி ஏத்தவே.
தப்ப அருந் தருமமும் தயாவும் தாங்கியே.
ஒப்புரவுடன் அவன் உவந்து வாழும் நாள்.–61-/ 1-1-

பெருந்திரு – பெருஞ் செல்வம்; அகில நாதன் – அகிலத்துக்குத்
தலைவன்; புவனம் – உலகம்; தப்ப அரும் – தப்ப அரிய; தயா –
கருணை; ஒப்புரவு – பரோபகாரம்; உவந்து – மகிழ்ந்து.

——-

அரி – அணைமிசைதனில். அழகு மன்றினில்.
புரி தவம் மிகு பதப் பொற்பின் நீடு அருள்
அரசர்கள் முடி படி அணைய. அம் பொனின்
உரை பொடி மலை குவை ஒப்ப குப்பையோ.–62 / 1-2-

அரியணை – சிம்மாசனம்; மன்று – மன்றம் (அரசவை) ; நீடு –
நீண்ட; படி அணைய – நிலத்தில் பட; பொனின் – பொன்னின்; உரை- உரையும்.

———-

‘“இனைய சோலை மற்று யாவது?” என்று. மா
முனிவ! கூறு’ என முதல்வன் கூறலும்.
பனுவல் வேத நூல் பகரும் மா தவன்.
‘தனு வலாய்! இதன் தன்மை கேள்’ எனா.–63- / 24-1-

இனைய- இத்தகைய; முதல்வன் – இராமபிரான்; பனுவல் – நூல்;
பகரும் – சொல்லும்; தனுவல்லாய் – விற்போரில் வல்லவனே.

———

‘சம்பரப் பெயர்த் தானவ(ன்)னுடன்
உம்பர் கோமகன் அமர் உடன்ற நாள்.
வெம்பி. மற்று அவன் வெற்றி கொண்ட போது.
அம்பரம் இழந்து. அவனி வந்தனன்;–64-/ 24-2-

தானவன் – அரக்கன்; உம்பர் கோமகன் – தேவர்களுக்கு அரசன்;
அமர் – போர்; உடன்று – புரிந்து; அம்பரம்-விண்ணுலகம்.

———

‘அவனி வந்து. மன்னவர் இடம்தொறும்.
தவனன் என்னவே தான் உழன்று. அறிந்து.
“இவனில் வேறு மற்று இல்லை எற்கு” எனா.
உவன் விரும்பி வந்து. உந்தை நாடு உறா.–65-/24-3-

அவனி – மண்ணுலம்; தவனன் – சூரியன்; உழன்று – திரிந்து;
இவனில் – இவனை விட; எற்கு – எனக்கு; உந்தை – உனது தந்தை
(தயரதன்); எனா – என்று; உறா – உற்று; இரண்டும் செயா என்ற
வாய்ப்பாட்டு வினை எச்சங்களாகும்.

———–

‘இந்த இவ் இடத்து எய்தி. இந்திரன்.
“சந்த வார் பொழில் தரு ஒர் ஐந்தையும்
வந்து நிற்க” எனா. மன நினைப்பின்முன்.
முந்து வந்து மா முரல நின்றவால்.–66 / 24-4-

எய்தி – அடைந்து; சந்த – அழகிய; வார் – நீண்ட; தரு – மரம்
(கற்பகம் முதலிய ஐந்து); நினைப்பின் முன் – நினைக்கும் முன்;
மாமுரல – வண்டுகள் ரீங்கரிக்க.

———-

‘நின்ற சோலைவாய். நியமம் நித்தமும்
குன்றல் இன்றியே செய்து கொண்டு. அவன்
நன்றியால் இருந்து. அரசை நண்ணியே.
துன்று சோலையின் தொழில் உணர்த்தினான்.-67 / 24-5-

சோலைவாய்- சோலையிடம்; குன்றல் – குறைதல்;அரசை நண்ணி
– அரசை விரும்பி; துன்று சோலை – நெருங்கிய சோலை.

—-

‘உருவம் மாறி. வேறு உருமாகியே.
நிருப! நின் குடை நிழலின் நிற்றலும்.
பரிவின் நோக்கி. “நீ பகர்தியால்” எனத்
தருவின் நாயகன்தான் விளம்பினான்;–68 / 24-6-

உருவம் மாறி – வேறு வடிவம் கொண்டு; நிருப – அரச; பரிவு –
அன்பு; பகர்தியால் – கூறுக; தருவின்

———

‘“சதமகன்தனைச் சம்பரன் எனும்
மத மகன் துரந்து அரசு வவ்வினான்;
கதம் அகன்றிடாக் கனக வெற்பு அவன்
விதம் அகன்று வந்து. உன்னை மேவினேன்.”–69 /24-7-

சதமகன் – இந்திரன்; மதுமகன் – மதம் கொண்ட அரக்கன்
(சம்பரன்); துரந்து – வென்று; கதம் – கோபம்; மேவினேன் -அடைந்தேன்.

——

என்றபோது தன் இரதம் ஏறியே
சென்று. மற்று அவன் சேனையோடு உகக்
கொன்று. வாசவன் அரசு கொள்ளவே
அன்று அளித்து. மீண்டு அயோத்தி மேவினான்.–70 / 24-8-

என்றபோது – எனக் கூறிய போது; உக – அழிய; வாசவன் –
இந்திரன்; கொள்ள – அடைய; அளித்து – ஈந்து; மேவினான் –
சேர்ந்தான்.

———

‘அன்னது ஆதலின் அவனி வந்த கா
இன்ன நாமம். இச் சோலை’ என்றலும்.
மன்னர்மன்னவன் மதலை. ‘நன்று’ எனா.
பின்னை நன்று உயிர்ப் பிரியம் ஆயினார்.–71 / 24-9-

அவனி – பூமி; கா – சோலை; இன்ன நாமம் – இந்தப் பெயர்;
மன்னவர் மன்னவன் – தயரதன்; மதலை – மகன்; பின்னை -பிறகு.

————

7 தாடகை வதைப் படலம்

‘கல் நவில் தோளினாய்! கமலத்தோன் அருள்
மன்னுயிர் அனைத்தையும் வாரி வாய் மடுத்து.
இன் உயிர் வளர்க்கும் ஓர் எரி கொள் கூற்றமே
அன்னவள் யாவள் என்று அறையக் கேட்டியால்:–72 / 20-1-

கல்நவில் தோள்- கல்லையும் வென்ற தோள்; கமலத்தோன் –
பிரமன்; வாய் மடுத்து – வாயில் பெய்து; கூற்றம் – எமன்; அறைய -கூற.

———-

‘இயக்கர்தம் குலத்துளான்.
உலகம் எங்கணும்
வியக்குறும் மொய்ம்பினான்.
எரியின் வெம்மையான்.
மயங்கு இல் சற்சரன். எனும்
வலத்தினான். அருள்
துயக்கு இலன் சுகேது என்று
உளன் ஒர் தூய்மையான்.–73-/20-2-

இயக்கர் – கந்தருவர்; மொய்ம்பு – வலிமை; வியக்குறும் –
வியப்படையும்; வெம்மை – வெப்பம்; துயக்கு – குற்றம் (சற்சரன் மகன் சுகேதுவாம்).

———–

‘அன்னவன் மகவு இலாது அயரும் சிந்தையான்.
மன் நெடுந் தாமரை மலரின் வைகுறும்
நல் நெடு முதல்வனை வழுத்தி. நல் தவம்
பல் நெடும் பகல் எலாம் பயின்ற பான்மையான்.–74 / 20-3-

அன்னவன்- அந்த சுகேது; மகவு – குழந்தை; இலாது – இல்லாது;
வைகுறும் – தங்கும்; முதல்வன் – பிரமன்; வழுத்தி – வணங்கி;
பல்நெடும் பகல் – பல நாட்கள்; பயின்ற – செய்த; பான்மை -தன்மை.

————

‘முந்தினன் அரு மறைக்
கிழவன். “முற்றும் நின்
சிந்தனை என்?” என.
“சிறுவர் இன்மையால்
நொந்தனென்; அருள்க” என.
“நுணங்கு கேள்வியாய்!
மைந்தர்கள் இல்லை; ஒரு மகள்
உண்டாம்” என்றாள்.–75-/ 20-4-

முந்தினன் – முன் வந்தான்; அருமறை – அரிய மறை; கிழவன் –
தலைவன்; சிந்தனை – எண்ணம்; நுணங்கு கேள்வி – நுட்பமான
கேள்வியறிவு.

——–

“பூ மட மயிலினைப் பொருவும் பொற்பொடும்.
ஏமுறு மதலை ஈர்-ஐஞ்ஞூறுடைத்
தாம் மிகு வலியொடும் . தனயை தோன்றும்; நீ
போ” என. மலர் அயன் புகன்று போயினான்.–76 / 20-5-

பூ மட மயில்- அழகிய இளமையான மயில்; பொருவும் – ஒக்கும்;
பொற்பு – அழகு; மதமலை – மதங் கொண்ட யானை; ஈர்ஐந்நூறு –
ஆயிரம்; வலி – வலிமை; தனயை – மகள்; மலர் அயன் – பிரமன்.

——–

‘ஆயவன் அருள்வழி. அலர்ந்த தாமரைச்
சேயவள் என வளர் செவ்வி கண்டு. “இவட்கு
ஆயவன் யார்கொல்?” என்று ஆய்ந்து. தன் கிளை
நாயகன். கந்தன் என்பவற்கு நல்கினான்.–77-/ 20-6–

ஆயவன் – அந்த பிரமன்; அலர்ந்த – மலர்ந்த; சேயவள் –
திருமகள்; செவ்வி – தன்மை; இவட்கு ஆயவன் – இவளுக்கு உரிய
கணவன்; நாயகன் – தலைவன்; என்பவற்கு – என்பவனுக்கு;
நல்கினான் – தந்தான்.

—–

‘ “காமனும் இரதியும் கலந்த காட்சி ஈது
ஆம்” என. இயக்கனும் அணங்கு அனாளும். வேறு
யாமமும் பகலும் ஓர் ஈறு இன்று என்னலாய்.
தாம் உறு பெருங் களிச் சலதி மூழ்கினார்.–78-/20.7 –

காமன் – மன்மதன்; இயக்கன் – சுந்தன்; அணங்கு – தெய்வ
மகள்;அனாளும் – அன்னாளும்; யாமம் – இரவு; ஈறு – முடிவு; சலதி
– கடல்; பெருங்களி – பெரும் களிப்பு; தாம் உறு – தாம் உற்ற.

———–

‘பற்பல நாள் செலீஇ. பதுமை போலிய
பொற்பினாள் வயிற்றிடை. புவனம் ஏங்கிட.
வெற்பு அன புயத்து மாரீசனும். விறல்
மல் பொரு சுவாகுவும். வந்து தோன்றினார்.–79 / 20-8-

செலீஇ- சென்று; பதுமை – பாவை;போலிய – போன்ற; புவனம் –
உலகம்; வெற்பு – மலை; விறல் – வலிமை.

——-

மாயமும். வஞ்சமும். வரம்பும் இல் ஆற்றலும்.
தாயினும் பழகினார் தமக்கும் தேர்வு ஒணாது.
ஆயவர் வளர்வுழி. அவரை ஈன்ற அக்
காய் சினத்து இயக்கனும். களிப்பின் மேன்மையான்.–80 / 20-9

வரம்பு- எல்லை; இல் – இல்லாத; தேர்வு ஒணாது- தேர இயலாது;
வளர்வுழி – வளரும் போது; இயக்கன் – கந்தர்வனாகிய சுந்தன்.

———

தீது உறும் அவுணர்கள் தீமை தீர்தர.
மோதுறு கடல் எலாம் ஒரு கை மொண்டிடு
மா தவன் உறைவிடம் அதனின் வந்து. நீள்
பாதவம் அனைத்தையும் பறித்து வீசினான்.–81 / 20-10

தீது உறும்- தீங்குடைய; அவுணர் – அரக்கர்; தீமை தீர்தர –
தீங்கு தீர; எலாம் – எல்லாம்;மாதவன் – அகத்தியன்; நீள் பாதவம் -பெரிய மரம் (மலையுமாம்.)

——

‘விழைவு அறு மா தவம் வெஃகினோர் விரும்பு
உழை. கலை. இரலையை உயிர் உண்டு. ஓங்கிய
வழை முதல் மரன் எலாம் மடிப்ப. மா தவன்
தழல் எழ விழித்தனன்; சாம்பல் ஆயினான்.–82 / 20-11-

விழைவு – விருப்பம்; உழை – பசு (மானுமாம்); கலை – கலைமான்;
இரலை – புல்வாய்; வழை – சுரபுன்னை; மரன் – மரம்; மடிப்ப –
அழிக்க; தழல் – நெருப்பு; என – என்னும்படி; விழித்தனன் -விழித்தான்.

——

‘மற்றவன் விளிந்தமை மைந்தர் தம்மொடும்
பொற்றொடி கேட்டு. வெங் கனலின் பொங்குறா.
‘முற்றுற முடிக்குவென் முனியை’ என்று எழா.
நற்றவன் உறைவிடம் அதனை நண்ணினாள்.–83 / 20-12-

விளிந்தமை – இறந்ததனை; பொற்றொடி – பொன் வளையல்
அணிந்த தாடகை; கனல் – தீ; பொங்குறா – பொங்கி; முற்றுற –
அடியோடு (முழுதும்); எழா – எழுந்து; நற்றவன் – அகத்தியன்;
நண்ணினான் – அடைந்தான்.

———

‘இடியொடு மடங்கலும் வளியும் ஏங்கிட.
கடி கெட அமரர்கள். கதிரும் உட்கிட
தடியுடை முகில் குலம் சலிப்ப. அண்டமும்
வெடிபட. அதிர்த்து. எதிர் விளித்து. மண்டவே.–84 / 20-13-

வளி – காற்று; அடங்கலும் – எல்லாமும்; கடிகெட – மகிழ்ச்சி
நீங்க; கதிர் – சூரியன்; தடி உடை – மின்னலை உடைய; மண்ட – நெருங்க.

—-

தமிழ் எனும் அளப்ப அருஞ் சலதி தந்தவன்
உமிழ் கனல் விழி வழி ஒழுக. உங்கரித்து
“அழிவன செய்தலால் அரக்கர் ஆகியே
இழிக!” என உரைத்தனன். அசனி எஞ்சவே.–85 / 20-14

அளப்ப அரும் சலதி- அளக்க அரிய கடல்; தந்தவன் – தந்த
அகத்தியன்; கனல் உமிழ் – நெருப்பை உமிழ்கின்ற; உங்கரித்து –
ஊங்காரம் செய்து; இழிக – இழிந்தவர்களாகுக; அசனி – இடி.

——-

‘வெருக்கொள. உலகையும் விண்ணுளோரையும்
முருக்கி. எவ் உயிரும் உண்டு. உழலும் மூர்க்கராம்
அரக்கர்கள் ஆயினர். அக் கணத்தினில்
உருக்கிய செம்பென உமிழ் கண் தீயினர்.–86 / 20-15

வெருக்கொள – அஞ்ச; முருக்கி – அழித்து; உழலும் – திரியும்;
உருக்கிய செம்பு – உருக்கப்பட்ட செம்பு; உமிழ் கண் – உமிழ்கின்ற கண்.

———

‘ஆங்கு அவன். வெகுளியும். அறைந்த சாபமும்
தாங்கினர்; எதிர் செயும் தருக்கு இலாமையின்.
நீங்கினர்; சுமாலியை நேர்ந்து. “நிற்கு யாம்
ஓங்கிய புதல்வர்” என்று. உறவு கூர்ந்தனர்.–87 / 20-16

வெகுளி- சினம்; அறைந்த – கூறிய; தருக்கு – வலிமை; நேர்ந்து
– அடைந்து; நிற்கு – உனக்கு; கூர்ந்தனர் – அணுகினர்.

———–

‘அவனொடும் பாதலத்து அநேக நாள் செலீஇ.
தவன் உறு தசமுகன் தனக்கு மாதுலர்
இவர் என. புடைத்து அழித்து. உலகம் எங்கணும்
பவனனின் திரிகுநர். பதகி மைந்தவர்கள்.–88 / 20-17

அநேக நாள் செலீஇ- பல நாட்கள் சென்று; தவன் – தவம்;
தசமுகன் – இராவணன்; மாதுலர் – மாமன்மார்; பவனன் – சூரியன்;
திரிகுநர் – திரிபவர்கள்; பதகி – பாதகி (தாடகை).

———

‘மிகும் திறல் மைந்தரை வேறு நீங்குறா.
தகும் தொழில் முனிவரன் சலத்தை உன்னியே.-
வகுந்துவின் வசுவரி வதிந்தது இவ் வனம்
புகுந்தனள். – அழல் எனப் புழுங்கும் நெஞ்சினாள்.–89 / 20-18

மிகும் திறல்- மிகுந்த வலிமை;நீங்குறா – நீங்காத; சலம் – சினம்;
வகுந்துவின் – வழிவழியாக; வசுவரி – வசுக்களின் தலைவனான
இந்திரனது குற்றக் குறி; வதிந்தது – தங்கியது; அழல் – நெருப்பு.

———-

‘மன்னர் மன்னவன் காதல! மற்றும் ஒன்று
இன்னம் யான் உரைக்கின்றது யாது எனின்.
முன் ஒர் காலம் நிகழ்ந்த முறைமை ஈது’
என்ன ஓதலுற்றான் தவத்து ஈறு இலான்.–90 / 39-1-

மன்னர் மன்னவன்- தயரதன்; மற்றும் ஒன்று – இன்னும் ஒன்று;
உரைக்கின்றது – சொல்லுவது; ஓதல் – கூறுதல்; ஈறுஇலான் – முடிவில்லாதவன்.

———

பிருகு என்னும் பெருந் தவன்தன் மனை
வரு கயல் கண் கியாதி. வல் ஆசுரர்க்கு
உருகு காதலுற. உறவாதலே
கருதி. ஆவி கவர்ந்தனன். நேமியான்.–91- / 39-2

பிருகு- பிருகு முனிவன்; கயல்கண் – கயல் போன்ற கண்; வல்
ஆசுரர்க்கு – வலிய அசுரர்களுக்கு; உறவாதல் – உறவு
உடையவதனால்; கருதி – எண்ணி; ஆவி – உயிர்; நேமியான் -ஆழிப்படையுடைய திருமால்.

———-

வானகத்தினில். மண்ணினில். மன்னுயிர்
போனகம் தனக்கு” என்று எணும் புந்திய
தானவள் குமுதிப் பெயராள்தனை
ஊன் ஒழித்தனன் வச்சிரத்து உம்பர்கோன்.–92-/ 39-3-

போனகம்- உணவு; எணும் – எண்ணும்; புந்தி – மனம்; ஊன்
ஒழித்தல் – கொல்லுதல்; வச்சிரத்து உம்பர்கோன் – இந்திரன்.

———–

‘ஆதலால். அரிக்கு. ஆகண்டலன்தனக்கு.
ஓது கீர்த்தி உண்டாயது அல்லால். இடை
ஏதம் என்பன எய்தியவோ? சொலாய்-
தாது அடர்ந்து தயங்கிய தாரினாய்!’–93 / 39-4

அரி- திருமால்; ஆகண்டலன் – இந்திரன்; கீர்த்தி – புகழ்; ஏதம்- குற்றம்; சொலாய் – சொல்லாய்;
தாது – மகரந்தம்; அடர்ந்து -செறிந்து; தயங்கிய – விளங்கிய; தார் – மாலை.

———-

ஏக்கமோடும் இமையவர் எங்கணும்.
வாக்கின் முந்துற மாயை வளர்ப்பவள்.
மூக்கும் வார் செவியும் முறை போயிட.
தாக்கும் வள்ளற்கு இளவலும் தாக்கினான்.–94-/ 48-1-

வாக்கின்- பேச்சுக்கு; முந்துற – முன்னம்; மாயை – மாயைச்
செயல்; போயிட – போக; இளவல் – இலக்குவன்.

——–

விலக்கி நின்று. அவன் வெங் கணை
விரைவினில் விலக்கி.–95-

——–

கலக்கம் வானவர் தவிர்ந்திட.
காலனும் கலங்கத்
துலக்கி. வையகத்து இடுக்கணும்
முனிவர்தம் துயரும்
உலக்க. ஊழித் தீ ஒப்பது ஓர் கணை
தொடுத்து எய்தான்.–96-/ 48 -2 –

வெங்கணை – கொடிய அம்பு; காலன் – எமன்; இடுக்கண் –
துன்பம்; உலக்க – நீங்க; ஊழித்தீ – ஊழிக்காலத்துத் தீ; ஒப்பது – ஒத்தது.

————
8 வேள்விப் படலம்

‘குசன். குசநாபன். கோது இல்
குணத்தின் ஆதூர்த்தன். கொற்றத்து
இசை கெழு வசு. என்று ஓதும்
இவர் பெயர்; இவர்கள் தம்முள்
குசன் கவுசாம்பி. நாபன்
குளிர் மகோதயம். ஆதூர்த்தன்
வசை இல் தன்மவனம். மற்றை
வசு கிரிவிரசம். வாழ்ந்தார்.–96-/ 4-1

கோது இல்- குற்றமில்லாத; இசை கெழு – புகழ் விளங்கும்; ஓதும்
– கூறும்; குளிர் – குளிர்ந்த; வசை இல் – குற்றமில்லாத.

———–

குறியவன் கையில் நீர் விழாமல். குண்டிகை
மறிபட. வாமனன் மலர்க் கைத் தர்ப்பையால்.
செறிவது நீக்கிட. சிதைந்து கண் உடைந்து
உறு துயர் வெள்ளியும் ஒதுங்கிப் போயினான்.–97 / 23-1

குறியவன்- வாமனன்; குண்டிகை – கமண்டலம்; மறிபட – தடுத்து
நிற்க; செறிவது – செறிந்து நிற்பது; உடைந்து – கெட்டு; உறுதுயர் -மிக்க துயர்.

——-

நீட்டிய வேலையில் நீரை மாற்றினான்;
நாட்டம்அது அகத்துளான். சிலம்பின் நாமத்தான்.
ஓட்டினன் தருப்பையை; உடை கண் நீர் விழ.
வாட்டம் இல் அந்தணன் மலர்க்கை நீட்டினான்.–98 / 23-2-

வேலை – சமயம்; சிலம்பின் நாமத்தன் – வெள்ளி; அந்தணர் –
வாமனன்; வாட்டம் இல் – வாட்டமில்லாத; மலர்க் கை – மலர் போன்ற கை.

——–

9 அகலிகைப் படலம்

‘இனைய சோலை மற்று யாது?’ என
இராகவன் வினவ.
வினை எலாம் அற நோற்றவன்
விளம்புவான்; ‘மேல்நாள்
தனையவர் ஆனவர்க்கு இரங்கியே.
காசிபன் தனது
மனையுளாள் தவம் புரிந்தனள்.
இவண்’ என வலித்தான்.–99 /3-1-

வினை எலாம் அற நோற்றவன்- விசுவாமித்திரன்; வலித்தான் – தெளிவாகச் சொன்னான்.

காசிபன் மனைவி திதி என்பவள் தன் மக்களான அசுரர்கள்
தேவர்களால் அடியுண்டு மடிந்து போனதால் மிகத் துயரம் அடைந்து
இந்திரனைக் கொல்லவும். மூவுலகையும் ஆளவும் ஒரு மகனைப்
பெறுமாறு தன் கணவனிடம் அனுமதி பெற்றுப் பல காலம் தவம்
புரிந்த இடம் இது என்று விசுவாமித்திரன் கூறினான்.

——

‘அண்ட கோளகைக்கு அப்புறத்து.
என்னை ஆளுடைய
கொண்டல் நீள் பதத்து எய்தி. ஓர்
விஞ்சையர் கோதை.
புண்டரீக மென் பதத்தியைப்
புகழ்ந்தனள்; புகழ.
வண்டு அறா மது மாலிகை
கொடுத்தனள் மகிழ்ந்து.–100-/ 3-2

நீள்பதம் – வைகுண்டம்.

ஒரு வித்தியாதரப் பெண். செந்தாமரையில் உள்ள திருமகளைப்
பாடித் துதித்தாள். அது கேட்டு மகிழ்ந்த இலக்குமி மனமுவந்து தனது
பூமாலையை அவள் கையில் கொடுத்தாள் என்பது.

——–

‘அன்ன மாலையை யாழிடைப்
பிணித்து. அயன் உலகம்.
கன்னி மீடலும். கசட்டுறு
முனி எதிர் காணா.
என்னை ஆளுடை நாயகிக்கு
இசை எடுப்பவள்” என்று.
அன்னள் தாள் இணை வணங்கிநின்று
ஏத்தலும். அனையாள்.–101 / 3-3

அந்த வித்தியாதரப்பெண் பூமாலையை யாழிலே கட்டிக்கொண்டு
பிரம்மலோகம் திரும்பினாள். அப்பொழுது துருவாச முனிவன்
அவளை எதிரே கண்டு அவளடிகளில் வீழ்ந்து வணங்கினான் என்பது.
இதனால் துருவாசரின் திருமால் பக்தி புலனாகிறது. இவன் பிறரைச்
சபிக்கச் சபிக்கத் தவம் வளரும் வரம் பெற்றவன். இவன் அத்திரி முனிவன் மகன்.

——–

‘ “உலகம் யாவையும் படைத்து. அளித்து.
உண்டு. உமிழ். ஒருவன்
இலகு மார்பகத்து இருந்து. உயிர்
யாவையும் ஈன்ற
திலக வாணுதல் சென்னியில்
சூடிய தெரியல்.
அலகு இல் மா முனி! பெறுக” என
அளித்தனள் அளியால்.–102-/ 3-4 –

உலகம் யாவையும் படைத்து. அளித்து. உண்டு உமிழ் ஒருவன்-திருமாலின் முத்தொழில் பேசப்பெறுகின்றன.

அவ்வித்தியாதர மகள் தன் யாழில் கட்டிய அப் பூமாலையைத் துருவாச முனிவனுக்குக் கொடுத்தாள் என்பது.

——————-

‘ “தெய்வ நாயகி சென்னியில்
சூடிய தெரியல.
ஐய! யான் பெறப் புரிந்தது
எத் தவம்?” என ஆடி.
வெய்ய மா முனி சென்னியில்
சூடியே. வினை போய்
உய்யும் ஆறு இது
என்று உவந்து வந்து. உம்பர் நாடு அடைந்தான்.–103-/ 3-5-

வினை போய் உய்யுமாறு- கருமம் ஒழிந்து நற்கதி பெறும்விதம்
இதுவென்று; தெய்வ நாயகன் – திருமால்; தெய்வ நாயகி – திருமகள்.
தேவர்களின் தலைவியான திருமகளின் பூமாலையைத் தான்
பெறுவதற்கு என்ன மாதவம் செய்தேன் என மகிழ்ந்து அதைத்தன்
முடியிலே சூடிக்கொண்டு தெய்வலோகம் சென்றான் என்பது –

——

‘பெய்யும் மா முகில் வெள்ளிஅம்
பிறங்கல் மீப் பிறழும்
செய்ய தாமரை ஆயிரம்
மலர்ந்து. செங் கதிரின்
மொய்ய சோதியை மிலைச்சிய
முறைமை போன்று ஒளிரும்
மெய்யினோடு. அயிராவதக்
களிற்றின்மேல் விளங்க.–104 / 3-6-

யானைக்கு மலை உவமை – வலிமை. பெருமை. மதநீர்
அருவியுடைமை பற்றி; ஐராவதம் – இந்திரனது பட்டத்து யானை;
நான்கு தந்தங்களையுடையது; வெண்மை நிறமுடையது.

இந்திரன் ஐராவத யானைமேல் வீற்றுள்ள சிறப்பைச் சொல்வது
இப்பாடல். ஐராவதத்தின் மேல் வீற்றிருப்பதால் இந்தரனுக்குச் சிறப்பு;
இந்திரன் வீற்றிருப்பதால் ஐராவதத்திற்குச் சிறப்பு.

——–

‘அரம்பை. மேனகை. திலோத்தமை.
உருப்பசி. அனங்கன்
சரம் பெய் தூணியின் தளிர் அடி
நூபுரம் தழைப்ப.
கரும்பையும் சுவை கைப்பித்த
குதலையர். விளரி
நிரம்பு பாடலோடு ஆடினர்.
வீதிகள் நெருங்க.–105 / 3 -7-

அரம்பை – நளகூபரனின் போகமடைந்தை; திலோத்தமை –
பிரமனால் படைக்கப்பட்டவள்; ஊர்வசி – நாராயண முனிவனது
தொடையிலிருந்து (ஊரு) தோன்றியவள்.

அரம்பை முதலான தேவதாசிகள் நால்வரும் பாடிக்கொண்டும்
ஆடிக்கொண்டும் தெருக்களில் சென்றார்கள் என்பது.

———

‘நீல மால் வரை தவழ்தரு
கதிர் நிலாக் கற்றை
போலவே. இரு புடையினும்.
சாமரை புரள.
கோல மா மதி குறைவு அற
நிறைந்து. ஒளி குலாவி.
மேல் உயர்ந்தென
வெள்ளி தம் தனிக் குடை விளங்க.–106 / 3-8-

நீல மலையின் இருப்பக்கத்தும் சஞ்சரிக்கும் நிலாக்கற்றைபோல
இந்திரனின் இரு பக்கங்களிலும் வெண் சாமரங்கள் அசையவும்.
வானத்தில் விளங்கும் முழுமதிபோல ஒற்றைக் குடை ஒளிரவும்
சென்றான் என்பது.

——-

‘தழங்கு பேரியும். குறட்டொடு
பாண்டிலும். சங்கும்.
வழங்கு கம்பலை மங்கல
கீதத்தை மறைப்ப.
முழங்கு நான்மறை. மூரி நீர்
முழக்கு என. உலகை
விழுங்க. மால் வரும் விழா அணி
கண்டு உளம் வியந்தான்.–107 / 3-9-

‘மங்கல கீதத்தை மறைப்ப’ – இந்திரனுக்கு இனிமேல்
வரவிருக்கின்ற துன்பத்தைக் குறிப்பாக உணர்த்துவது – அமங்கலம்.
பூமிக்கு முன்பு கடல் படைக்கப்பட்டது – அதனால் ‘மூரிநீர்’ என்றார்.

பேரிகை முதலான பலவகை வாத்தியங்கள் முழங்கும் ஓசை
ஓங்கவும் நான்மறை ஓசை ஒலிக்கவும் இந்திரன் உலாவரும் திருவிழாக்
காட்சியைக் கண்டு துருவாசன் வியந்து நின்றான் என்பது.

———

‘தனை ஒவ்வாதவன் மகிழ்ச்சியால்.
வாசவன்தன் கை
வனையும் மாலையை நீட்டலும்.
தோட்டியால் வாங்கி.
துனை வலத்து அயிராவதத்து
எருத்திடைத் தொடுத்தான்;
படை செய் கையினால் பறித்து
அடிப்படுத்தது. அப் பகடு.–108 / 3 -10-

வாசவன் – இந்திரன். அஷ்ட வசுக்களுக்குத் தலைவன். எல்லாச்
செல்வங்களும் உடையவன். ஐராவதத்தின் துதிக்கைக்குப் பனைமரம்
உவமை. (திரட்சி. உருட்சி. நீட்சி வடிகால்).
துருவாசன் அம் மாலையை இந்திரனுக்குக் கொடுக்க. அவன்
அங்குசத்தால் அதைப்பெற்று யானையின் தலைமேல் வைக்க. அந்த
யானை அதைக் காலால் தேய்த்தது என்பது

——

‘ “கண்ட மா முனி விழி வழி
ஒழுகு வெங் கனலால்.
அண்ட கூடமும் சாம்பராய்
ஒழியும்”என்று. அழியா.
விண்டு நீங்கினர் விண்ணவர்;
இரு சுடர் மீண்ட;
எண் திசாமுகம் இருண்டது;
சுழன்றது எவ் உலகும்.–109-/ 3-11-

அதைக்கண்ட துருவாசன் பெருங்கோபம் கொள்ள வானவர்
யாவரும் ஓடிப்போகத் திசைகள் எங்கும் இருண்டன என்பது. சந்திர
சூரியரும் தம் கதியிற் செல்லத் தடுமாறினர் என்றார்.

——–

‘புகை எழுந்தன. உயிர்த்தொறும்;
எயில் பொடித்தவனின்
நகை எழுந்தன; நிவந்தன புருவம்.
நல் நுதலில;
சிகை எழும் சுடர் விழியினன்.
அசனியும் திகைப்ப.
“மிகை எழுந்திடு சதமக!
கேள்” என வெகுண்டான்.—110 / 3-12-

சதமகன்- இந்திரன் – நூறு அசுவமேத வேள்விகளைச்செய்து
இந்திர பதவி பெற்றவன்; எயில் – பட்டணம் – ஆகுபெயர்.

கோபத்தால் துருவாச முனிவனின் மூச்சில் புகை கிளம்பியது;
சிரிப்பு எழுந்தது; புருவங்கள் நெற்றியில் ஏறின என்றார்.

——–

‘ “பூத நாயகன். புவிமகள்
நாயகன். பொரு இல்
வேத நாயகன். மார்பகத்து
இனிது வீற்றிருக்கும்
ஆதி நாயகி விருப்புறு
தெரியல் கொண்டு அணைந்த
மாதராள்வயின் பெற்றனென்.
முயன்ற மா தவத்தால்.–111-/ 3-13

பூத நாயகன் – பஞ்ச பூதங்களையும் படைத்து அவற்றை
நியமிப்பவன்; ஆதி நாயகி – கலைமகள். மலைமகள். இந்திராணி
முதலான தேவியர்களுக்கு நாயகி என்றபடி.

துருவாச முனிவன் அந்த மலரைப்பெற்ற பாங்கினை எடுத்துரைப்பது இப்பாடல்

———

‘ “இன்று நின் பெருஞ் செவ்வி கண்டு.
உவகையின் ஈந்த
மன்றல்அம் தொடை இகழ்ந்தனை;
நினது மா நிதியும்
ஒன்று அலாத பல் வளங்களும்
உவரி புக்கு ஒளிப்ப.
குன்றி. நீ துயர் உறுக” என
உரைத்தனன். கொதித்தே.–112 / 3-14-

உவரி- உப்புச் சுவையுடையது; இங்கே பாற்கடலைக் குறித்தது;
குன்றி – பெருமை குறைதல். மனவேதனையால் உடல் குன்றுதல்.

‘உலா வருகின்ற உன் சிறப்பைக் கண்டு இம் மாலையை
உனக்குத் தந்தேன்; நீயோ அதனை இகழ்ந்தாய். ஆதலால். உன்
பெருநிதிகளும். செல்வங்களும் மறையட்டும்’ என்று துருவாசன்
இந்திரனை நோக்கிச் சபித்த செய்தி கூறுவது இப்பாடல்.

———

‘அரமடந்தையர். கற்பகம்.
நவ நிதி. அமிர்தம்.
சுரபி. வாம் பரி. மதமலை.
முதலிய தொடக்கத்து
ஒரு பெரும் பொருள் இன்றியே
உவரி புக்கு ஒளிப்ப
வெருவி ஓடின. கண்ணன் வாழ்
வெண்ணெய் மேவாரின்.–113 / 3-15-

நவநிதி – மகா பதுமம். பதுமம். சங்கம். மகரம். கச்சபம். முகுந்தம்.
குந்தம். நீலம். வரம் என்பன;புதியனவாகிய சங்க நிதி. பதுமநிதி.

துருவாசன் சாபத்தால் இந்திரன் செல்வங்களான தேவ மாதர். கற்ப
மரங்கள். நவநிதிகள். பாலைக்கறக்கும் காமதேனு. வெண் குதிரை.
ஐராவத யானை ஆகியன பாற்கடலில் மறைந்தன என்பது.

——-

‘அந்த வேலையில். இந்திரன்
சிந்தை நொந்து அழிந்து.
வந்து. வானவ முனிவனை
வழிபட்டு வழுத்த.
“நந்தும் நின் பெருஞ் செல்வம் மால்
அருளினால். நயக்க
முந்தும்” என்று சாபத்தினின்
மோக்கமும் மொழிந்தான்.–114 / 3-16-

நந்துதல் – குறைதல். செழித்தல்.

இந்திரன் மனம் நொந்து துருவாசனை வழிபட்டு நிற்க. ‘தேய்ந்த
உன் செல்வம் திருமால் அருளால் உனக்குக் கிடைக்கும்’ என்று
அம்முனிவன் சாப விமோசனம் தருவது என்பது.

————

‘வெய்ய மா முனி வெகுளியால் விண்ணகம் முதலாம்
வையம் யாவையும் வறுமை நோய் நலிய. வானோரும்.
தையல் பாகனும். சதுமுகக் கடவுளும். கூடி.
செய்ய தாமரைத் திரு மறு மார்பனைச் சேர்ந்தார்.–115 / 3 -17

மறு- திருமாலின் மார்பில் உள்ள உத்தமக்குறி. திருமகள் பிறர்
மார்பை மறுத்தற்குக் காரணமான மார்பு; தையல் பாகன் – சிவன்.

வானுலகு எங்கும் வறுமை நோய் வாட்டத் தேவர்களும். சிவனும்.
நான்முகனும் திருமாலை அடைந்து முறையிட்ட செய்தியைக் கூறுவது.
செல்வத்தை இழந்த தேவர்கள் அச்செல்வத்திற்குத் தலைவியான
திருமகளின் கணவனை அடைந்தனர் என்றார்.

———–

‘வெஞ் சொல் மா முனி வெகுளியால்
விளைந்தமை விளம்பி.
கஞ்ச நாள்மலர்க் கிழவனும்.
கடவுளர் பிறரும்.
“தஞ்சம் இல்லை; நின் சரணமே
சரண்” எனச் செப்ப.
“அஞ்சல். அஞ்சல்! என்று உரைத்தனன்.
உலகு எலாம் அளந்தோன்.–116 /3-18-

உலகெலாம் அளந்தோன்- மூவுலகங்களையும் தன் அடிகளால்
அளந்தவன் – திருமால்; தஞ்சம் – புகலிடம்.
தேவர்கள் துருவாச முனிவனது சாபத்தின் விளைவைத்
திருமாலிடம் எடுத்துச் சொல்ல. அத்திருமாலும். ‘அஞ்சாதீர்’ என்று
அவர்களுக்கு அபயம் தரும் பாங்கு இதில் கூறப்படுகிறது.

———-

“மத்து மந்தரம்; வாசுகி
கடை கயிறு; அடை தூண்
மெத்து சந்திரன்; சுராசுரர்
வேறு வேறு உள்ள
கொத்து இரண்டு பால் வலிப்பவர்;
ஓடதி கொடுத்து.
கத்து வாரிதி மறுகுற.
அமிழ்து எழக் கடைமின்;–117 / 3 -19-

மந்தர மலை- மத்து; வாசுகி என்னும் பாம்பு – கடை கயிறு;
சந்திரன் – அடை தூண்; தேவர். அசுரர் – இருபக்கமும் கயிற்றைப்
பிடித்துக் கடைபவர்; ஓடதி – ஓஷதி;அமிர்த வல்லி என்னும் மூலிகை.

இழந்த செல்வங்களைப் பெறும் பொருட்டுப் பாற்கடலைக்
கடையுமாறு அத்தேவர்களுக்குத் திருமால் கட்டளையிட்டான் என்பது.

——–

‘ “யாமும் அவ் வயின் வருதும்; நீர்
கதுமென எழுந்து
போமின்” என்று அருள்புரிதலும்.
இறைஞ்சினர் புகழ்ந்து.
“நாமம் இன்று” எனக் குனித்தனர்.
நல்குரவு ஒழிந்தது
ஆம் எனும் பெருங் களி துளக்
குறுதலால். அமரர்.–118 / 3-20-

நாமம் – அச்சம்; துளக்குறுதல் – ஆட்டுதல்; குனித்தனர் –
கூத்தாடினர்.

பாற்கடல் கடையுங்கால் தானும் துணை வருவதாகக் கூற.
அத்தேவர் மகிழ்ந்து இனித் தம் வறுமை அகலுமென்று துணிந்து
கூத்தாடினர் என்றார்.

———

மலை பிடுங்கினர்; வாசுகி பிணித்தனர்; மதியை
நிலை பெறும்படி நட்டனர்; ஓடதி நிரைத்தார்;
அலை பெறும்படி பயோததி கடைந்தனர்; அவனி
நிலை தளர்ந்திட. அனந்தனும் கீழுற நெளித்தான்.–119 / 3-21-

பயோததி – பயஸ் – பால்; உததி – கடல்;பாற்கடல்; அனந்தன் –
பிரளய காலத்தும் அழிவில்லாமல் என்றும் ஒரு தன்மையாக
நித்தியனாயிருப்பவன்; இவன் பூமியின் கீழ் இருந்து
ஆயிரந்தலைகளாலும் பூமியைத் தாங்குகின்றான் என்பது நூற்கொள்கை.

தேவர்களும் அசுரர்களும் கடல் கடையப் பூமி நிலைகுலைய
ஆதிசேடனாகிய பாம்பும் உடல் நெளித்தான் என்றார்.

—–

‘திறல் கொள் ஆமை ஆய்.
முதுகினில் மந்தரம் திரிய.
விறல் கொள் ஆயிரம் தடக் கைகள்
பரப்பி. மீ வலிப்ப.
மறன் நிலாம் முனி வெகுளியால்
மறைந்தன வரவே.
அறன் இலா மனத்து அடைகிலா
நெடுந் தகை அமைத்தான்.–120 / 3-22

மறன் இல் ஆம்- கோபத்துக்கு இடமான;மறன் நில்லா – கோபம்
மனத்தில் அடங்கி நிற்கப் பெறாத; மறன் நிலாம் – கோபம் உலாவி
விளங்குதற்கு இடமான.

திருமால் ஆமை வடிவெமடுத்துத் தன் முதுகின் மேல் மந்தர மலை
சுழலும்படி. மந்தர மலையை மேலே அழுத்தும்படி ஆயிரம்
கைகளைப் பரவச்செய்தும் நீங்கின பொருள்கள் மீண்டு வர உதவினான் என்பது.

———

‘இறந்து நீங்கின யாவையும்.
எம்பிரான் அருளால்.
பிறந்த; அவ்வயின் சுராசுரர்
தங்களில் பிணங்க.
சிறந்த மோகினி மடந்தையால்.
அவுணர்தம் செய்கை
துறந்து மாண்டனர்; ஆர் அமிர்து
அமரர்கள் துய்த்தார்.–121 / 3-23

மோஹிநீ – மோகினி (தன்னைக்கண்டவரை); மதிமயங்கச்
செய்யும் அழகுடைய தெய்வமகள்.

கடலில் சென்று ஒளித்த தெய்வலோகப் பொருள்கள் யாவும்
மீண்டும் தோன்றின; அவ்வாறு தோன்றிய அமிர்தம் காரணமாகத்
தேவர் அசுரர்க்குப் பிணக்கு உண்டாகத் திருமால் சூழ்ச்சி செய்து
அவ் அமுதத்தைத் தேவர்களுக்கே கொடுத்தான் என்பது.

——-

‘வெருவும் ஆலமும் பிறையும்
வெள் விடையவற்கு அளித்து.
தருவும் வேறு உள தகைமையும்
சதமகற்கு அருளி.
மருவு தொல் பெரு வளங்களும்
வேறு உற வழங்கி.
திருவும் ஆரமும் அணிந்தனன்.
சீதர மூர்த்தி.–122 / 3 -24 —

ஆலகாலம். பிறை நிலா- சிவனுக்கு பஞ்ச தருக்கள். தேவமாதர்.
நிதிகள். உச்சைச் சிரவம்; ஐராவதம். சிந்தாமணி – இந்திரனுக்கு;
புட்பகம் – குபேரனுக்கு; இலக்குமி. இரத்தினம் – திருமாலுக்கு; சீ –
இலக்குமி. ஒளி; பிறை – பிறப்பது (இளஞ்சந்திரனுக்கு) – காரணக்குறி.

பாற்கடலில் தோன்றிய பொருள்களைப் பங்கிட்ட வகை இதிற் கூறப்பெறுகிறது.

———

‘அந்த வேலையில் திதி பெருந்
துயர் உழந்து அழிவாள்.
வந்து காசிபன் மலரடி
வணங்கி. “என் மைந்தர்
இந்திராதியர் புணர்ப்பினால்
இறந்தனர்; எனக்கு ஓர்
மைந்தன் நீ அருள். அவர்தமை
மடித்தலுக்கு” என்றாள்.–123 / 3 -25

வேலை – காலம்; காசிபன் – திதியின் கணவன்.

அசுரர்களைக் கொன்ற தேவர்களைப் பழிவாங்கும் பொருட்டு ஒரு
மகனைத் தரவேண்டும் என்று திதி என்பவள் தன் கணவனிடம்
கேட்டாள் என்பது.

———

‘என்று கூறலும். “மகவு உனக்கு
அளித்தனம்; இனி. நீ.
சென்று பாரிடை. பருவம்
ஓர் ஆயிரம் தீர.
நின்று. மா தவம் புரிதியேல்.
நினைவு முற்றுதி” என்று
அன்று கூறிட. புரிந்தனள்.
அருந் தவம். அனையாள்.–124 / 3 -26

திதி தவம் செய்த இடம் – குசப்லவம்.

காசிபன் தன் மனைவியான திதிக்குத் தவம் செய்து மகவு பெற
அனுமதி தந்தான்; அவளும் ஆயிரம் ஆண்டு கடுந்தவம் செய்தாள் என்பது.

———

‘கேட்ட வாசவன். அன்னவட்கு
அடிமையில் கிடைத்து.
வாட்டம் மா தவத்து உணர்ந்து.
அவள் வயிற்று உறு மகவை
வீட்டியே எழு கூறு செய்
திடுதலும். விம்மி.
நாட்டம் நீர் தர. “மருத்து” எனும்
நாமமும் நவின்றான்.–125 / 3 -27

மருத்து -வாயு.

திதி என்பவள் தன்னைக் கொல்லும் மகனைப் பெறத் தவம்
புரிகிறாள் என்பதையறிந்த இந்திரன் அவளுக்குப் பணியாளாக
அமைந்தான்; அவளது கருப்பத்தைப் பிளந்து சிதைத்தான்; அவள்
விருப்பப்படி அந்த ஏழு துண்டங்களுக்குச் சப்த மருத்துக்கள்
என்னும் பெயரிட்டான் என்பது.

———

‘ஆயது இவ் இடம்; அவ் இடம்
அவிர் மதி அணிந்த
தூயவன் தனக்கு உமைவயின்
தோன்றியே. தொல்லை
வாயுவும் புனல் கங்கையும்
பொறுக்கலா வலத்த
சேய் வளர்ந்தருள் சரவணம்
என்பதும் தெரித்தான்.’–126 / 3 -28

சரம் – நாணல்; வனம் – காடு; சரவணம் – நாணற்காடு.

சிவனுக்கு உமை வாயிலாகப் பிறந்த சுப்பிரமணியக்கடவுள் வளர்ந்த
சரவணக் காடு இது என்று விசுவாமித்திரன் கூறினான் என்பது.

——–

‘இந்த மா நதிக்கு உற்று உள
தகைமைய யாவும்.
எந்தை! கூறுக’ என்று இராகவன்
வினவுற. ‘எனை ஆள்
மைந்த! நின் திரு மரபு உளான்.
அயோத்தி மா நகர் வாழ்
விந்தை சேர் புயன். சகரன்.
இம் மேதினி புரந்தான்.–127 / 5-1

சகரன் – நஞ்சோடு பிறந்தவன்; கரம் – விடம்;
மேதிநீ – திருமாலால் வதைக்கப்பட்ட மதுகைடபர்களின் மேதசால் (கொழுப்பு) நனைந்தது என்னும் பொருளது.

சூரிய குலத்தவன் அயோத்தியை ஆண்டவன் சகரன் என்பவன்.
விசுவாமித்திரன் கங்கையின் வரலாற்றை இராமனுக்குச் சொல்ல
முற்படுகையில் அச்சகரனைக் குறித்துக் கூறுகிறான் என்பது.

———

விறல் கொள் வேந்தனுக்கு உரியவர்
இருவரில். விதர்ப்பை
பொறையின் நல்கிய அசமஞ்சற்கு
அஞ்சுமான் புதல்வன்;
பறவை வேந்தனுக்கு இளைய மென்
சுமதி முன் பயந்த
அறனின் மைந்தர்கள் அறுபதி
னாயிரர் வலத்தார்.–128 / 5-2-

சுமதி – காசிபனுக்கு விநதையிடம் தோன்றியவள்; சுமதி –
நல்லறிவுடையவள் என்பது பொருள்.

சகரனுக்கு இரு மனைவியர். முதல் மனைவியான கேசினிக்கு ஒரு
மகன் – அசமஞ்சன்;இளையவள் சுமதிக்கு அறுபதினாயிரவர்.

——–

திண் திறல் புனை சகரனும்.
தனையர் சேவகங்கள்
கண்டு. முற்றிய அய மகம்
புரிதலும். கனன்று.
வண்டு துற்று தார் வாசவற்கு
உணர்த்தினர். வானோர்;
ஒண் திறல் பரி கபிலனது
இடையினில் ஒளித்தான்.–129 / 5-3-

அசுவமேத யாகம் செய்யக் கருதிய சகரன் குதிரையை
அனுப்பினான்; அக்குதிரையை இந்திரன் மாயையால் கவர்ந்துசென்று
தவத்திலுள்ள கபில முனிவனுக்குப்பின்னே ஒரு மரத்தில்
கட்டிச்சென்றான் என்பது.

நூறு அசுவமேத யாகங்கள் செய்பவன் இந்திர பதவி அடைவான்.
அதனால் இந்திரனால் அந்த யாகத்தை ஏற்க முடியவில்லை.

————

‘வாவு வாசிபின் சென்றனன்
அஞ்சுமான் மறுகி.
பூவில் ஓர் இடம் இன்றியே
நாடினன் புகுந்து.
தேவர் கோமகன் கரந்தமை
அறிந்திலன். திகைத்து.
மேவு தாதைதன் தாதைபால்
உரைத்தனன். மீண்டு.–130 / 5-4-

வாசி – குதிரை; பூ – பூமி.

குதிரைக்குக் காவலாக இருந்த அம்சுமானுக்கு இந்திரனது வஞ்சகம்
தெரியவில்லை; காணாத குதிரையை அம்சுமான் பூமியெங்கும்
தேடியும் கிடைக்கவில்லை; தந்தை சகரனிடம் சொன்னான் என்பது.

———-

‘கேட்ட வேந்தனும். மதலையர்க்கு
அம் மொழி கிளத்த.
வாட்டம் மீக்கொள. சகரர்கள்
வடவையின் மறுகி.
நாட்டம் வெங் கனல் பொழிதர.
நானிலம் துருவி.
தோட்டு நுங்கினர் புவியினை.
பாதலம் தோன்ற.–131 / 5-5

வடவை – பெண்குதிரை (நெருப்பு) – இடவாகு பெயர். கடலிடையே
வாழும் ஒரு பெண் குதிரையின் முகத்திலே நெருப்பு எப்பொழுதும்
அவியாமல் உள்ளது என்றும். பிரளய காலத்தில் அது வெளிப்பட்டு
உலகை எரித்து அழிக்குமென்றும் கூறுவர்.

வேள்விக் குதிரை காணாதுபோன செய்தியைச் சகரன் தன்
மக்களிடம் கூறல் – அவர்கள் மிக்க கோபத்தோடு சென்று எங்கும்
தேடுதல் – காணாமையால் பூமியைத் தோண்டுதல் – என்பது.

——

‘நூறு யோசனை அகலமும் ஆழமும் நுடங்கக்
கூறு செய்தனர். என்பரால். வட குணதிசையின்;
ஏறு மா தவக் கபிலன்பின் இவுளி கண்டு. எரியின்
சீறி. வைதனர்; செருக்கினர். நெருக்கினர்; செறுத்தார்.–132 / 5-6

யோசனை – பேரளவு – சமணநூல் வழக்கு; குணக்கு – கிழக்கு.

சகர குமாரர் வடகிழக்குத் திசையிலே நூறு யோசனை அகலமும்
ஆழமும் அமையத் தோண்டினர்;கபிலன் பின் இருந்த குதிரையைப்
பார்த்தனர்; கோபத்தால் அம் முனிவனை ஏசினர் என்பது.

———-

‘மூளும் வெஞ் சினத்து அருந் தவன்
முனிந்து. எரி விழப்ப.
பூளைசூடிதன் நகையினில்
எயில் பொடிந்தனபோல்.
ஆளும் மைந்தர் ஆறு – அயுதரும்
சாம்பர் ஆய் அவிந்தார்;
வேள்வி கண்ட நல் வேந்தனுக்கு
உரைத்தனர். வேயர்.–133 / 5-7-

பூளை சூடி – சிவன்; பூளை – (மலர்) – முதலாகுபெயர். இதனை
உழிஞை என்பர்.

தவம் கலைந்த கபில முனிவன் கோபத்தால் சீறினான் – அவனது
சாபத்தால் அரச மைந்தர் அறுபதினாயிரவர் சாம்பரானார்கள் –
இச்செய்தி சகரனுக்கு எட்டியது என்பது.

——–

‘உழைத்த வெந் துயர்க்கு ஈறு காண்கிலன்;
உணர்வு ஒழியா.
அழைத்து மைந்தன்தன் மைந்தனை.
“அவர் கழிந்தனரேல்.
இழைத்த வேள்வி இன்று இழப்பதோ?”
என. அவன் எழுந்து.
தழைத்த மா தவக் கபிலன் வாழ்
பாதலம் சார்ந்தான்.–134 / 5-8-

ஏல் – (என்னில்) எதிர்கால வினையெச்சத்திரிபு; அம்சுமான் –
சகரனுடைய மைந்தனுக்கு மைந்தன்.
தன் மைந்தர் அறுபதினாயிரவர் மாய்ந்தது கேட்டுச் சகரன்
வருந்தினான். அங்ஙனம் வருந்தினும் வேள்வியைச் செய்து முடிக்க
உறுதி கொண்டான் என்பது.

———–

‘விண்டு நீங்கினர் உடல் உகு
பிறங்கல் வெண் நீறு
கண்டு. துண்ணெனும் மனத்தினன்.
கபில மா முனிதன்
புண்டரீக மென் தாள் தொழுது
எழுந்தனன் புகழ.
“கொண்டு போக. நின் இவுளி!” என்று
உற்றதும் குறித்தான்.–135 / 5-9-

அம்சுமான் இறந்துவிட்ட தன் தந்தையரின் சாம்பல் மலைபோலக்
குவிந்து கிடப்பதைப் பார்த்துத் திடுக்கிட்டான். கபில முனிவனை
வணங்கிக் குதிரையைக் கொண்டுபோகக்கேட்டான். கபிலனும் உடன்
பட்டான் என்பது.

—–

பழுதிலாதவன் உரைத்த கொல்
கேட்டலும். பரிவால்
தொழுது. வாம் பரி கொணர்ந்து. அவி
சுரர்களுக்கு ஈயா.
முழுதும் வேள்வியை முற்றுவித்து.
அரசனும் முடிந்தான்-
எழுது கீர்த்தியாய்! – மைந்தனுக்கு
அரசியல் ஈந்து. –136 / 5-10

பழுது- காமம். வெகுளி. மயக்கம் என்பன; எழுது கீர்த்தி –
எழுதப்படுகின்ற புகழ்.

அம்சுமான் கொண்டுவந்த குதிரையை வைத்துச் சகரன் வேள்வியை
முடித்தான். தேவர்களுக்கு அவிசு தந்தான். பெயரனான
அம்சுமானுக்கு முடிசூட்டி இறந்தான் என்பது.

——–

‘சகரர் தொட்டலால். “சாகரம்”
எனப் பெயர் தழைப்ப.
மகர வாரிதி சிறந்தது;
மகிதலம் முழுதும்
நிகர் இல் மைந்தனே புரந்தனன்;
இவன் நெடு மரபில்.
பகிரதன் எனும் பார்த்திபன்
பருதி ஒத்து உதித்தான்.–137 / 5-11-

அக்கடல் சகரர் தோண்டியதால் சாகரம் எனப்பட்டது;அம்சுமான்
மரபிலே பகீரதன் என்பவன் தோன்றினான் என்பது.

அம்சுமான் மைந்தன் திலீபன்; திலீபன் மகன் பகீரதன்.

———-

‘உலகம் யாவையும் பொது அறத்
திகிரியை உருட்டி.
இலகும் மன்னவன் இருந்துழி.
இறந்தவர் சரிதம்.
அலகு இல் தொல் முனி ஆங்கவற்கு
உரைத்திட. அரசன்
திலகம் மண் உற வணங்கி நின்று.
ஒரு மொழி செப்பும்:–138 / 5 -12-

பொது அற – பல அரசர்க்குப் பொது என்னும் தன்மை நீங்கித் தனக்கே உரிமையாகும்படி.

பகீரதன் தன் குலகுருவான வசிட்டனிடம் தன் முன்னோர் வரலாறு கேட்டான் என்பது.

——

‘ “கொடிய மா முனி வெகுளியின்
மடிந்த எம் குரவர்
முடிய நீள் நிரயத்தினில்
அழுந்திடு முறைமை
கடியுமாறு. எனக்கு அருந் தவம்
அமைகுறு கருமம்.
அடிகள்! சாற்றுக” என்றலும்.
அந்தணன் அறைவான்:–139 / 5-13

பகீரதன். தன் முன்னோர் நரகத்தில் அழுந்திடும் தன்மையை
நீக்கும் விதமே தனக்கு அருந்தவம் என்றும் அதற்கு இசைவான
செயலைச் சொல்லுக என்றும் வசிட்டனிடம் கூறினான் என்பது.

முனிவர்களின் சாபத்தால் இறக்கின்றவர்களுக்கு நற்கதியில்லை என்பது நூல் துணிபு.

———

‘ “வையம் ஆளுடை மன்னவர்
மன்னவ! மடிந்தோர்
உய்ய. நீள் தவம் ஒழிவு அறு
பகல் எலாம் ஒருங்கே.
செய்ய. நாள்மலர்க் கிழவனை
நோக்கி. நீ செய்தி;
நையல்!” என்று இனிது உரைத்தனன்.
நவை அறு முனிவன்.–140 / 5-14

மலர்க்கிழவன் – நான்முகன்; நவையறு முனிவன் – வசிட்டன்.

பிரமனை நோக்கி நீ தவம் செய்தால் உனது முன்னோர்
நற்கதியடைய வேண்டும் என்ற உனது எண்ணம் ஈடேறும் என்று
வசிட்டன் பகீரதனிடம் உரைத்தான் என்பது. 5

——

‘ஞாலம் யாவையும் சுமந்திரன் தன்வயின் நல்கி.
கோலும் மா தவத்து இமகிரி மருங்கினில் குறுகி.
காலம் ஓர் பதினாயிரம் அருந் தவம் கழிப்ப.
மூல நான்மறைக் கிழவனும் வந்து. இவை மொழிவான்:–141 / 5-15

சுமந்திரன் – நல்ல ஆலோசனையுடையவன் என்பது பொருள்.

வசிட்டனது மொழிப்படி இமயமலைச் சாரலில் பதினாயிரம் ஆண்டு
பகீரதன் கடும் தவம் செய்தான்; அத் தவத்திற்கு மகிழ்ந்த பிரமனும்
அம் மன்னன்முன் தோன்றினான் என்பது.

———

‘ “நின் பெருந் தவம் வியந்தனம்;
நினது நீள் குரவர்.
முன்பு இறந்தனர். அருந் தவன்
முனிவின்; ஆதலினால்.
மன் பெரும் புவிஅதனில்.
வான் நதி கடிது அணுகி.
என்பு தோயுமேல். இருங் கதி
பெறுவர்” என்று இசைத்தான்.–142-/ 5-16

கதி – இறந்தபின் அடையும் பதவி; வான் நதி – ஆகாய கங்கை.

‘சாம்பரான சகரர் நற்கதியடைய வானகங்கை மண்ணுலகம் வந்து
அவ்வெலும்புகள் மேல் படிய வேண்டும் என்று பிரமன் பகீரதனிடம் கூறினான் என்பது.

———-

‘ “மாக மா நதி புவியிடை நடக்கின்.
மற்று அவள்தன்
வேகம் ஆற்றுதல் கண்ணுதற்கு
அன்றி வேறு அரிதால்;
தோகை பாகனை நோக்கி. நீ
அருந் தவம் தொடங்கு” என்று
ஏகினான். உலகு அனைத்தும் எவ்
உயிர்களும் ஈன்றான்.–143-/ 5-17

வேறு- (வேற்றோர்) – பண்பாகு பெயர்; கண்ணுதல் –
அன்மொழித்தொகை; தோகை பாகன் – சிவன்.

ஆகாய கங்கையைத் தாங்கும் வல்லமை பூமிக்கு இல்லை;
அவ்வல்லமை சிவனிடமே உள்ளது; அவனை நோக்கித் தவம்
செய்யுமாறு பகீரதனிடம் நான்முகன் கூறினான் என்பது.

————-

‘மங்கை பாகனை நோக்கி. முன்
மொழிந்தன வருடம்
தங்கு மா தவம் புரிதலும்.
தழல் நிறக் கடவுள்
அங்கு வந்து.”நின் கருத்தினை
முடித்தும்” என்று அகன்றான்;
கங்கையைத் தொழ. காலம்
ஐயாயிரம் கழித்தான்.–144 / 5-18

மங்கை பாகன் – சிவன்; தழல் நிறக் கடவுள் – சிவன்.

பகீரதன் சிவன் அருளை வேண்டிப் பதினாயிரம் ஆண்டுகள் தவம்
செய்தான்; சிவனும் அரசனின் கருத்துக்கு இசைந்தான்; பின்னர்க்
கங்கையை நோக்கி ஐயாயிரம் ஆண்டுகள் தவம் கிடந்தான் பகீரதன் என்பது.

——

‘ஒரு மடக் கொடி ஆகி வந்து.
“உனது மா தவம் என்?
பொரு புனல் கொடி வரின். அவள்
வேகம் ஆர் பொறுப்பார்?
அரன் உரைத்த சொல் வினோதம்;
மற்று இன்றும் நீ அறிந்து.
பெருகு நல் தவம் புரிக!” என.
வர நதி பெயர்ந்தாள்.–145 / 5-19

அரன் – ஊழிக் காலத்தில் எல்லா உயிர்களையும் அழிப்பவன்;
எப்பொழுதும் தன்னைச் சரண் புகுந்தவர்களின் துயரை அழிப்பவன்;
வரநதி – சிறந்த நதியான கங்கா தேவி.

பகீரதனது வழிபாட்டை ஏற்றுக் கொண்ட கங்காதேவி இந்தக்
கங்கை மண்ணுலகம் வந்தால் அதன் வேகத்தைச் சிவனால் தாங்க
முடியுமா என்பதை அறியுமாறு கேட்டாள் என்பது.

— —–

கரந்தை. மத்தமோடு. எருக்குஅலர்.
கூவிளை. கடுக்கை.
நிரந்த பொற் சடை நின்மலக்
கொழுந்தினை நினையா.
அரந்தை உற்றவன். இரண்டரை
ஆயிரம் ஆண்டு
புரிந்து நல் தவம் பொலிதர.
வரை உறை புனிதன்.–146 / 5 -20

கரந்தை – ஒரு பூண்டு; கூவிளை – (இலை) – முதலாகு பெயர்
(வில்வம்); மத்தம் – உன்மத்தம். ஊமத்தம்: முதற்குறை: வரைமகள்
புனிதன்- பார்வதி கொழுநனான சிவன். கரந்தை. ஊமத்தம். எருக்கு.
வில்வம். கொன்றை ஆகியன சிவனுக்கு உரியவை.

கங்காதேவியின் மொழியைக் கேட்டுப் பகீரதன் மீண்டும் சிவனை
நோக்கிக் தவம் புரிந்தான் என்பதும் சிவன் அவன்முன் தோன்றிக்
காட்சி தந்தான் என்பதும் இதிற் சொல்லப்பெறுகின்றன.

———

‘எதிர்ந்து. “நின் நினைவு என்?” என.
இறைஞ்சி. “எம் பெரும!
அதிர்ந்து. கங்கை ஈது அறைந்தனள்”
என்றலும். “அஞ்சேல்!
பிதிர்ந்திடா வகை காத்தும்”
என்று ஏகிய பின்றை.
முதிர்ந்த மா தவம் இரண்டரை
ஆயிரம் முடித்தான்.–147 / 5-21-

பிதிர்ந்திடாவகை- கங்கை நீர் சிந்தாதபடி; முதிர்ந்த மாதவம் –
சிறந்த பெருந்தவம்.

பகீரதன் முன் எழுந்தருளிய சிவன் கங்கையைத் தாங்குவதாகப்
பகீரதனுக்கு உறுதி தந்தான் என்பதும். மீண்டும் அவ் வரசன்
கங்கையை நோக்கித் தவமிருந்து தனது கருத்தை நிறைவு செய்தான் என்பதும்
இதிற் சொல்லப்பெறுகின்றன.

——–

‘பெருகும் நீரொடு. பூதியும்.
வாயுவும். பிறங்கு
சருகும். வெங் கதிர் ஒளியையும்.
துய்த்து. மற்று எதையும்
பருகல் இன்றியே. முப்பதி
னாயிரம் பருவம்.
உருகு காதலின் மன்னவன்
அருந் தவம் உழந்தான்.–148 / 5-22

பகீரதனின் தவச் சிறப்பு. சொல்லப்பெறுகிறது. அவன் பிரமனைக்
குறித்துப் பதினாயிரமும். கங்கையைக் குறித்து. ஏழாயிரத்தைந்நூறும்.
சிவனை நோக்கிப் பன்னீராயிரத்து ஐந்நூறும் ஆக முப்பதாயிரம்
ஆண்டுகள் கடுந்தவம் புரிந்தான் என்பது.

அவன் சருகு. சாம்பல். நீர். காற்று. வெயில் ஆகியவற்றையே
உண்டும். இறுதியில் அவ் வெயிலையும் நுகராமலும் தவம் செய்தான் என்றார்.

———

‘உந்தி அம்புயத்து உதித்தவன்
உறைதரும் உலகும்.
இந்திராதியர் உலகமும்.
நடுக்குற இரைத்து.
வந்து தோன்றினள் வர நதி;
மலைமகள் கொழுநன்
சிந்திடாது. ஒரு சடையினில்
கரந்தனன் சேர.–149 / 5-23

அம்புயம்- நீரில் பிறப்பது; உந்தி அம்புயத்து உதித்தவன் –
பிரமன்.

கங்கா நதி சத்திய லோகமும். சொர்க்கலோகமும் நடுங்கும்படி
ஆரவாரித்துக்கொண்டு மண்ணுலகிற்கு வந்தது; அதனைச் சிவன்
தனது சடையில் சிறிதும் சிதறாமல் தாங்கினான் என்பது.

———-

புல் நுனித் தரு பனி என.
வர நதி. புனிதன்
சென்னியில் கரந்து ஒளித்தலும்.
வணங்கினன். திகைத்து.
மன்னன் நிற்றலும். “வருந்தல்; நம்
சடையள். வான் நதி இன்று”
என்ன விட்டனன். ஒரு சிறிது;
அவனி போந்து இழிந்தாள்.–150 / 5 -24

போந்து- புகுந்து – மருஉ மொழி; புல் நுனி தரு பனி என –
கங்கைக்கு உவமை.

கங்கை சிவனது சடையில் மறைந்துவிட்டதைப் பகீரதன் கண்டு
திகைத்தான். அச்சிவன் அவன் கலக்கத்தைப் போக்கிக் கங்கையில்
சிறிதுவிட அது பூமியில் பெருகியது என்பது.

——

இழிந்த கங்கைமுன். மன்னவன்
விரைவொடும் ஏக.
கழிந்த மன்னவர் கதி பெற
முடுகிய கதியால்.
அழுந்தும் மா தவச் சன்னுவின்
வேள்வியை அழிப்ப.
கொழுந்து விட்டு எரி வெகுளியன்.
குடங்கையில் கொள்ளா.–151 / 5 -25

பூவுலகில் இறங்கிய கங்கையின் பின்னே பகீரதன் விரைந்து
வந்தான்; அக் கங்கையின் வேகத்தால் சன்னு முனிவனின் தவம்
கலைந்தது; வெகுண்ட அம் முனி அந் நீரை உள்ளங் கையில்
மொண்டு கொண்டான் என்பது.

சன்னு முனிவன் பருகிக் காதுவழி வெளியிட்டதால் கங்கைக்குச் சானவி’ என்னும் பெயர் உண்டு

————

உண்டு உவந்தனன். மறை முனிக்
கணங்கள் கண்டு உவப்ப.
கண்ட வேந்தனும் வணங்கி. முன்
நிகழ்ந்தன கழற.
“கொண்டு போக!” என. செவிவழிக்
கொடுத்தனன்; குதித்து.
விண்டு நீங்கினர் உடல் உகு
பொடியில் மேவினளே.–152-/ 5 -26

சன்னு முனிவன் அக் கங்கை நீரைப் பருகினான். பகீரதனும்
அம்முனிவனை வணங்கிச் செய்திகளைச் சொல்ல இரங்கிய
முனிவனும் காது வழியாக அந்த நீரை விட்டான் என்பது.
மறைமுனிக் கணங்கள்- வேதங்களைத் தாம் ஓதுதலும். பிறர்க்கு
ஓதுவித்தலும். அவற்றின் விதிப்படி ஒழுகுதலையுமுடைய முனிவர்

——–

நிரையம் உற்று உழல் சகரர்கள்
நெடுங் கதி செல்ல.
விரை மலர் பொழிந்து ஆர்த்தன.
விண்ணவர் குழாங்கள்;
முரைசம் முற்றிய பல்லியம்
முறை முறை முழங்க.
அரைசன் அப்பொழுது. அணி மதில்
அயோத்தி மீண்டு அடைந்தான்.–153 / 5-27

முறை முறை – அடுக்கு மிகுதிப் பொருள் பற்றியது.

நரகத்திற் புகுந்த சகரர் நற்கதி உற்றனர்; விண்ணவர் மகிழ்ந்து
மலர் சொரிந்தனர்; பல்லியங்கள் ஆர்த்தன; பகீரதனும் அயோத்தி அடைந்தான் என்பது.

——-

‘அண்ட கோளகைப் புறத்தது ஆய்.
அகிலம் அன்று அளந்த
புண்டரீக மென் மலரடிப்
பிறந்து. பூமகனார்
கொண்ட தீர்த்தம் ஆய். பகிரதன்
தவத்தினால் கொணர.
மண்தலத்து வந்து அடைந்தது.
இம் மா நதி. மைந்த!–154 / 5-28

திருமால் உலகம் அளந்த காலத்தில் அப்பரமன் திருவடி
சத்தியலோகம் செல்லப் பிரமன் தன் கைக் கமண்டல நீர் கொண்டு
அத்திருவடியைக் கழுவினான். அந்தப் புனித நீரே கங்கையாகியது
என்பது அக் கங்கையைப் பகீரதன் தவத்தால் பூவுலகு கொணர்ந்தான்
என்றான் விசுவாமித்திரன்.

——–

‘சகரர்தம்பொருட்டு அருந் தவம்
பெரும் பகல் தள்ளி.
பகிரதன் கொணர்ந்திடுதலால்.
“பகிரதி” ஆகி.
மகிதலத்திடைச் சன்னுவின்
செவி வழி வரலால்.
நிகர் இல். “சானவி” எனப் பெயர்
படைத்தது. இந் நீத்தம்.–155 / 5 -29

பகல் – (நாள்) – ஆகு பெயர்.

கங்கை நதி பகீரதன் கொண்டு வந்ததால் ‘பாசீரதி’ என்னும்
பெயரைப் பெற்றது; பூவுலகிலே சன்னுவின் காது வழியாக
வெளிப்பட்டதால் ‘சானவி’ என்னும் பெயரை அடைந்தது என்பது

——–

என்று கூறலும். வியப்பினோடு
உவந்தனர். இறைஞ்சி.
சென்று தீர்ந்தனர் கங்கையை;
விசாலை வாழ் சிகரக்
குன்றுபோல் புயத்து அரசன் வந்து.
அடி இணை குறுக.
நின்று. நல் உரை விளம்பி.
மற்று அவ் வயின் நீங்கா.–156 / 5-30

விசாலை – இட்சுவாகு – அலம்புசை மகனான விசாலன்
ஏற்படுத்தியது.

விசுவாமித்திரன் கங்கையின் வரலாற்றைக் கூறியபின். மூவரும்
கங்கையைக் கடந்து விசாலையை அடைந்தார் என்பது.

————-

மது மலைந்த வெண் தரளமும்.
(வயிரமும்). மணியும்.
கதிர் வளம் செயும் பவளமும்.
கழுத்திடைக் காட்டி.
எதிர் மலைந்த பைங் கூந்தலை
இன வண்டு (நணுக).
புது மணம் செயும் மடந்தையர்
போன்றன – பூகம்.–157 / 7-1

முத்தும். வயிரமும். மணியும் கழுத்தை அலங்கரிக்க. மது நிறைந்த
கூந்தலில் வண்டுகள் மொய்க்கப் புது மணத்தை எங்கும் பரப்பும்.
மடந்தையரைப் போன்றன கமுகுகள்.

———-

அந்த இந்திரனைக் கண்ட
அமரர்கள். பிரமன் முன்னா
வந்து. கோதமனை வேண்ட.
மற்று அவை தவிர்த்து. மாறாச்
சிந்தையின் முனிவு தீர்ந்து.
சிறந்த ஆயிரம் கண் ஆக்க.
தம் தமது உலகு புக்கார்;
தையலும் கிடந்தாள். கல் ஆய்.–158 / 23 -1

இந்திரனுக்கு நேர்ந்த சாபத்தைப் போக்குமாறு தேவர்கள்
கௌதமனை வேண்டினர்; அக் கௌதம முனிவனும் ஆயிரம்
கண்களாகுமாறு அருளிச் சென்றான்; அகலிகை கல்லாய்க் கிடந்தாள் என்பது.

——–

‘வண்ண வார் குழலினாட்கும்
வானவர்தமக்கும் ஆகேன்;
எண்ணி நான் செய்த குற்றம்.
முனிவ! நீ பொறுத்தி’ என்ன.
‘பண்ணிய உறுப்பில் கோடல்
பத்து நூறு அவையும் போக.
அண்ணிய விண்ணில் ஆளிக்கு
ஆயிர நயனம்’ என்றான்.–159 -23 -2

இந்திரன் அகலிகையைச் சேர விருப்பமுடையவனாயினும்
பெருந்தவமுடைய கௌதமன் முன் தோற்றான்; தன்
தவற்றையுணர்ந்த. இந்திரனும் முனிவனிடம் மன்னிப்புக் கோரினான்;
ஆயிரம் கண்கள் பெற்றான்.

————

10 மிதிலைக் காட்சிப் படலம்

இன்ன பல் வளங்கள் எல்லாம்
இனிதுற நோக்கி. யார்க்கும்
முன்னவன் ஆய தேவும்.
முனிவனும். இளைய கோவும்.
பொன்னகர் இறையும் மற்றைப்
பூதலத்து அரசும் ஒவ்வா
மன்னவன் சனகன் கோயில்
மணி மதில் புறத்தைச் சேர்ந்தார்.–160-/ 20 -1

முன்னவன் ஆய தேவு – இராமன்; கோயில் – அரண்மனை.

வழியிலே மூவரும் பல காட்சிகளைக் கண்டு மகிழ்ந்தனர்.
இராமனும். இலக்குவனும். விசுவாமித்திரனும் சிறந்த மன்னவனாகிய
சனகனின் அரண்மனையின் மதில்புறம் சேர்ந்தார்கள்.

——–

நங்கையர் விழிக்கு நல் விழவும் ஆய். அவர்
இங்கிதத்தொடு தொழுது இறைஞ்சும் தேவும் ஆய்.
அங்கு அவர்க்கு அமுதும் ஆய். வந்த சானகி
எங்கள் நாயகற்கு இனி யாவது ஆம்கொலோ?–161 / 32 -1

சீதை பெண்களின் கண்களுக்குச் சிறந்த காட்சிப் பொருளாக.
அவர்கள் தொழுது வணங்கும் தெய்வமாக. அவர்களுக்கு அமுதமாக
ஆயவள் எங்கள் நாயகனான இராமனுக்கு இனி எவ்வகை அமைவாளோ என்பது.

——-

தீங்கு செய் அரக்கர்தம் வருக்கம் தீயவும்.
ஓங்கிய தவங்களும். உலகும். வேதமும்
தாங்கி மேல் வளரவும். தழைத்த சானகி
ஆங்கு அவன் வடிவினை அகத்தில் உன்னுவாள்.–162 / 52 -1

அரக்கரை அழிக்கவும். உயர் தவங்களும். உலகும். வேதமும்
மேன்மேல் வளரவும் தோன்றிய சீதை இராமனது திருமேனியைத் தன்
உள்ளத்தில் எண்ணினாள் என்பது. அரக்கரை அழிக்கவே சீதை பிறந்தாள்.

——-

அப் புறத்து அலை கடல் அர்ந்த தாமரை
ஒப்புற இந்து என்று உதித்த ஒள் அழல்
வெப்புறு வெங் கதிர் பரப்ப. விண் எலாம்
கொப்புளங் கொண்டென. உடுக்கண் கூர்ந்தவே.–163 / 76-1

கடலிடத்து மலர்ந்த தாமரை போலத் தோன்றிய சந்திரனாகிய
நெருப்பு வெம்மைக் கதிர்களைப் பரப்பியது; வானம் எங்கும்
கொப்புளங்கள் ஏற்பட்டன போல விண்மீன்கள் பரவின என்றார்.

——–

நின்றனன் அரசன் என்றான்;
நீ எனைக் கொண்டு போகை
நன்று என மொழிந்து நின்றான்.
நல்கிய தாயை நோக்கி.
‘இன்று எனைக் கொடுத்தியோ?’ என்று
இறைஞ்சினன் கசிந்து நின்றான்;
தன் துணை மார்பில் சேர்த்துத்
தழுவலும். அவனை நோக்கி.–164 / 121-1-

நடுக் குமரனான சுனச்சேபன் தன்னைப் பலியிடக் கொண்டு
போகுமாறு மன்னனிடம் சொன்னான்; தன்னைப் பெற்ற தாயை
நொந்து கொண்டான்; வருந்திய தாயும் அவனைத் தழுவி உருகினாள்

————–

என்று கூறி. இமையவர் தங்கள்முன்
வன் தபோத வசிட்டன் வந்து. என்னையே
“நின்ற அந்தணனே” என நேர்ந்தவன்
வென்றி வெந் திறல் தேவர் வியப்புற.–165-135-1

தபோத வதிட்டன் – தவ வலிமை மிக்க வசிட்டன்.

தேவர்களின் வேண்டுகோளை ஏற்ற வசிட்டன் அவர்கள் முன்
விசுவாமித்திரனை நோக்கித் தவ முனிவரே! அந்தணரே என்று
தேவர்களும் வியப்புற அழைத்து வாழ்த்தினான் என்பது.

———-

காதலால் ஒருத்தியை நினைப்ப. கண் துயில்
மாதராள் அவன்திறம் மறுப்ப. கங்குல் மான்.
‘ஏதிலான் தமியன்’ என்று. ‘ஏகலேன்’ என.
ஆதலால் இருந்தனன்; அளியன் என் செய்வான்?–166-143-1

அன்பினால் அவளைத் தழுவக் கருதினான்;தூங்குகின்ற அவளோ
அவனது எண்ணத்தை மறுத்தாள்; இரவோ இவன் அயலான்.
தனித்துள்ளான். நான் அகலமாட்டேன் என்று கூறத் தலைவனும் காம
வேதனையோடு இருந்தான். அதைத் தவிர அவன் வேறு என்னதான்
செய்வான்! என்பது.

————

11 குலுமுறை கிளத்து படலம்

அந்தரத்தில் உருள்சேர.
அடு சனி வந்து உறும் அளவில்.
சிந்தை மகிழ் தசரதனும் சென்று அவன்மேல்
சரங்கள் தொடுத்து.
‘இந்த வழி போகு அரிது’ என்று
இயைந்தவனை எந்நாளும்
உந்தும் என உலகுதனக்கு
உறுதுயர் தீர்த்திடும் உரவோன்.–167-15-1

தசரதன் சனியை அம்புகளால் வதைத்து மக்களின் துயர் துடைப்பவன் என்பது.

——–

‘கோதமன் தன் மனைக்கிழத்திக்கு
உரைத்த கொடுஞ் சாபம் எனும்
ஓத அருங் கல் உருத் தவிர்த்து.
முன்னை உருக் கொடுத்தது இவன்
பாதமிசைத் துவண்டு எழுந்த
பசும் பொடி மற்று அது கண்டாய்;
ஈது இவன்தன் அருள் வடிவம்
வரலாறும்’ என உரைத்தான்.–166

‘கோதமன் தன் மனைவியான அகலிகையைக் கல்லாகச் சபித்தான்;
அக் கல்லுருவத்தை நீக்கி அவளது முன்னை உருவைத் தந்தவன்
இந்த இராமன்; அவனது பாத தூளிப்பட்டுச் சிதைந்து பொடியாகிக்
கிடப்பது அக்கல்; இது அவனது அருள் புலப்படுத்தும் வரலாறு’
என்று விசுவாமித்திரன் உரைத்தான் என்பது. அகலிகையின் சாபத்தை
நீக்கிப் பெண்ணுருத் தந்தவன் இராமன்.

————-

12 கார்முகப் படலம்

புக்கனர்; சனகர் கோன்.
‘பொரு இல் நீங்கள்தாம்
ஒக்கவே வில்லினை
உரத்து அடுத்து எடுத்து.
இக் கணத்து எய்துவீர்’
என்றனன்; என.
மிக்கவர் அவ் உரை
விளம்பினார் அரோ.–169 / 2-1

சனகன் இராம லக்குவரை நோக்கி. ‘நீங்கள் இவ்வில்லை எடுத்து
நாணேற்றி அம்பு எய்யுங்கள் என்று கூறினன் என்பது.

———-

புக்கனர். அவர்களைப் பொருந்த நோக்கி. ‘இம்
முக்கணன் வில்லினை மொய்ம்பின் ஆற்றலோடு
இக் கணத்து அளித்திர் என்று. எம்மை ஆளுடை.
மிக்குறு சனகனும் விளம்பினான்’ என்றார்.–170 / 2-2

உள்ளே புகுந்த இராமலக்குவரைப் பார்த்து ‘இச் சிவ தனுசை
உங்கள் ஆற்றலால் வளைத்திட வேண்டும். இது இந்நாட்டு மன்னன்
வேண்டுவது’ என்று சதானந்தன் உரைத்தான் என்பது.

———

என்று சாலவே வெதும்பி
இன்ன இன்னவாறெலாம்
ஒன்றலாது பன்னி ஆவி
ஊசலாட வாடுவாள்
மன்றல் நாறு மாலை மீளி
மான யானை போல முன்
சென்ற வீதியூடு பார்வை
செல்லநிற்கும் எல்லையே.–171 / 54-1

சீதை இவ்வாறு இராமனை நினைந்து பலவாறு சொல்லித் தன்
உயிர் ஊசலாட வருந்துவாள்; சிறந்த வீரனைப் போலவும் யானை
போலவும் வீதியிலே சென்ற வீரனைக் காணத் துடிக்கிறாள்
என்பது.

———–

என்று மாதராள் நினைந்து. இவ்
இடரின் மூழ்கு போதினில்.
குன்றுபோல் எழுந்த கொங்கை
மங்கை கொம்பை அன்னவள்.
வென்றி வீரன் இங்கு வந்து
வில் இறுத்த மேன்மையை
சென்று கூறுவோம்’ எனத்
தெளிந்து சிந்தை முந்துவாள்.–172-/ 55-1

சீதை அவ்வீரனை (இராமனை) நினைந்து வருந்துகையில் இராமன்
வில் இறுத்த செய்தியைக் கூறுவதற்காகத் தோழி விரைந்து
செல்கின்றாள் என்பது. 55-

———

13 எழுச்சிப் படலம்

‘ஓது நீதியின் கோசிக
மா முனி ஓலை
தாது சேர் தொடைத் தயரதன்
காண்க! தற் பிரிந்து
போது கானிடைத் தாடகை
பொருப்பு எனப் புகுந்து.
வாது செய்து நின்று. இராகவன்
வாளியால் மாண்டாள்.–173 /3-1

கோசிக முனிவன் தசரதனுக்குத் தூதுவர் மூலம் ஓலை
போக்குகிறான்; காட்டில் தாடகை என்னும் அரக்கி மலையென வந்து
போர் செய்து இராமனது அம்பினால் மடிந்தாள் என்பது.

———–

‘சிறந்த வேள்வி ஒன்று அமைத்தனென்;
அதுதனைச் சிதைக்க.
இறந்த தாடகை புதல்வர் ஆம்
இருவர் வந்து எதிர்த்தார்;
அறம் கொள் மாலவன்
வாளியால் ஒருவன் தன் ஆவி
குறைந்து போயினன்; ஒருவன் போய்க்
குரை கடல் குளித்தான்.–174 /3-2

விசுவாமித்திரன் அமைத்த வேள்வியைச் சிதைக்க இறந்து போன
தாடகையின் மைந்தர் இருவர் வர. அவர்களுள் ஒருவன் இராமனது
கணையால் மடிய. மற்றவன் கடலில் சென்று ஒளிந்து கொண்டான்
என்பது. 3-

————

கூட மேவு போர் அரக்கரை
இளையவன் கொன்று.
நீடு வேள்வியும் குறை படாவகை
நின்று நிரப்பி.
பாடல் மா மறைக் கோதமன்
பன்னி சாபத்தை.
ஆடல் மா மலர்ச்சோலையில்.
இராகவன் அகற்றி.–175 / 3-3

எதிர்த்த அரக்கரை இலக்குவன் கொல்ல. வேள்வியும் இனிதாக
முற்றியது; கௌதமன் மனைவி அகலிகைக்கு நேர்ந்த சாபத்தை
இராமன் போக்கினான் என்பது.

————-

பொரு இல் மா மதில் மிதிலையில்
புகுந்து. போர் இராமன்
மருவு வார் சிலை முறித்தலின்.
சனகன் தன் மகளை.
“தருவென் யான்” என இசைந்தனன்;
தான் இங்கு விரைவின்
வருக’ என்பதாம் வாசகம்
கேட்டு. உளம் மகிழ்ந்தான்.–176 /3-4

பின்னர் மூவரும் மிதிலை சேர்தல்;அங்கே இராமன் சிவ தனுசை
முறித்தது; மகிழ்ந்த சனகன் தன் மகளான சீதையை இராமனுக்கு
மணமுடிக்க இசைந்தது; தசரதனை விரைந்து வருமாறு வேண்டியது
ஆகிய செய்திகளைக் கூறுவது இப் பாடல்.

————–

பன்னும் நான்மறை வசிட்டனாம்
பராவ அரு முனிக்கும்.
அன்னைமார்க்கும். தன் அமைச்சர்க்கும்.
சோபனம் அறிவித்து.
இன்ன வாசக ஓலை அங்கு
இட்ட தூதர்க்குச்
சொன்னம் ஆயிரம் கோடியும்
தூசுடன் கொடுத்தான்.–177 / 3-5-

சொன்னம் – பொன்; தூசு – ஆடை.

நான்மறை வசிட்டன். அரசியர் அமைச்சர் ஆகியோர்க்குத்
தசரதன் மங்கலச் செய்தி தெரிவித்தது;ஓலை தாங்கி வந்த தூதர்க்குப்
பொன்னும். பட்டாடையும் தந்தது – இச்செய்திகளை இப்பாடல்
எடுத்துரைக்கிறது.

————

மாண்ட பின்னரும் மந்திர வேள்வியும் இயற்றித்
தூண்டு அரும் பெரும்……… ……………… ……………….
……………. …………. ……………. ………….. ………………
……………. ………….. சனகனும் மகட்கொடை நேர்ந்தான்.–178/3-6

விசுவாமித்திரன் வேள்வியை நிறைவு செய்ததும். தசரதன் இராமன் –
சீதை மணத்தை ஏற்றுக் கொண்டதும் இப்பாடலால்
கூறப்பெறுகின்றன.

——-

மன்னன் அங்கு அவர் பெருமகம்
காணிய வருவான்
அன்ன வசிட்டன் அந்தணர்
அரசர் ஆபாலர்
இன்னர் இன்றியே வருக என
எழுதினன்; இச் சொல்
சொன்ன வாசகம் சொல்தொறும்
அமுது எனச் சொரிந்த.–179 /3-7

தசரதன் அவர்களின் திருமணத்தின் பொருட்டு வசிட்டன்.
அந்தணர். அரசர் ஆகியோரை உடனே புறப்படுமாறு ஓலை விடுத்த
செய்தி இதில் கூறப்படுகிறது. 3-7

——–

சாற்றிய முரசு ஒலி செவியில் சாருமுன்.
கோல் தொடி மகளிரும். கோல மைந்தரும்.
வேல் தரு குமரரும். வென்றி வேந்தரும்.
காற்று எறி கடல் எனக் களிப்பின் ஓங்கினார்.–180 / 8-1

மண முரசு முழங்கியது;கேட்ட மகளிர் ஆடவர். வேல் தாங்கிய
வீரர். அரசர் ஆகியோர் காற்றினால் பொங்கும் கடலென மகிழ்ந்தனர்
என்னும் செய்திகள் இதிற் சொல்லப் பெறுகின்றன.

———-

எதிர் கொண்டு ஏந்தி ஓர் ஏந்திழை கொங்கை பூண்
அதிர. மார்பம் அழுந்தத் தழுவினான்.
‘முதிரும் தோள் மலையோ முலைக் குன்றமோ
அதிகம் என்பது அறிக வந்தேன்’ என்றான்.–181 / 37-1

சேனைகள் மிதிலை செல்லும் காட்சி- வீரன் ஒருவன் தன்
மனைவியை மார்போடு தழுவிய செய்தி இப் பாடலால்
கூறப்பெறுகிறது.

———-

18 உண்டாட்டுப் படலம்–182 / 66-1

அரம்பையரினும். இவர் ஆடல் நன்று எனப்
புரந்தரன் கலவியின் பூசல் நோக்கி. வான்
நிரம்பிய கண்களை முகிழ்ந்து. நீள் நகர்
கரந்தது கடுத்து உடுக்கணங்கள் மாண்டவே.

புரந்தரன் – இந்திரன்; உடு – தாரகைகள்; கரத்தல் – ஒளித்தல்.

——–

22 கடிமணப் படலம்

எரி கால் சுடர் ஏக. எழுந்த நிலா
வரும் ஈரமும். மா மயில் சானகிதன்
திருமேனியின்மீது சினந்து சுட.
தரியாது. உளம் நொந்து. தனித்து உறைவாள்.–183 / 2-1-

தரியாது – பொறாது.

——–

என்று. ஐயன் மனத்தொடும் எண்ணினன்; மற்று
அன்று அங்கு அவை நிற்க. அருட் சனகன்
முன் தந்த தவத்து உறு மொய்குழலாள்
துன்றும் மணம் உற்றது சொல்லிடுவாம்.–184 / 18-1

துன்றும் – பொருந்தும் இது கவிக்கூற்று.

———–

கதிரவன் எழலோடும். கடி நகர் இடம் எங்கும்
மதி முக மடவாரும் மைந்தரும் முதியோரும்
விதி புரி செயல்போலும். மேல் உலகினும் இல்லாப்
புதுமையின் உறு. கோலம் புனைதலை முயல்வுற்றார்.–185 / 21 -1

கடி – காவல்; விதி – பிரமன்; முயல்வுறல் – முயற்சி
தலைப்படுதல்.

————

என்றும். நான்முகன் முதல் யாரும். யாவையும்.
நின்ற பேர் இருளினை நீக்கி. நீள் நெறி
சென்று மீளாக் குறி சேரச் சேர்த்திடு
தன் திரு நாமத்தைத் தானும் சாத்தியே.–186 / 48-1

நாமம் – பெயர். திருமண்; திருமண் இடல் சிறப்பு
உரைத்தவாறு.

———

23 பரசுராமப் படலம்

கயிலைக் கிரிதனை மூடிய அன்றிற்கிரி கந்தன்
அயிலைப் புக விடர்விட்டதுபோல் ஏழ் வழியாகச்
சயிலத் துளைபட எய்தனை. அயில் தெற்றிய அதனால்
முயலுற்றவர் நிருபக்குலம் மூ-ஏழ் முறை முடித்தான்.–187 / 14-1

அன்றில் கிரி- கிரௌஞ்சம்; அயில் – வேல்; சயிலம் – சைலம் –
சிலா – கல் – மலை; நிருபக்குலம் – மன்னர் மரபு.

——————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ இராமாயண அனுபவ துவாதச நாம ஸ்தோத்ரம் -ஸ்ரீ உ -வே -கார்ப்பங்காடு ஸ்வாமிகள் –

December 3, 2020

ஸ்ரீ ராம தாசரதே ஸ்ரீ மன் பரத ப்ரிய ஸத்ரு ஹந்த
ஸூ க்ரீவ மித்ர லங்க அக்நே ராஜன் திவ்ய நமஸ்துதே –1-

நமஸ்கார ஆஸீஸ் ரூப மங்களம்
ஏழு காண்டங்கள் அர்த்த சுருக்கம்
ஸ்ரீ ராம தாசரதே ஸ்ரீ மன் -பால காண்ட சுருக்கம் -திரு அவதாரம் -ஸ்ரீ ஸீதா பிராட்டி திருமணம்
பரத ப்ரிய -அயோத்யா காண்டம் -பாரதந்தர்ய சிறப்பைக் காட்டும்
ஸத்ரு ஹந்த -ஆரண்ய காண்ட சுருக்கம்
ஸூ க்ரீவ மித்ர -கிஷ்கிந்தா காண்ட சுருக்கம்
லங்க அக்நே -ஸூந்தர காண்ட சுருக்கம் -திருவடி மூலம் இலங்கா தகனம்
ராஜன் -யுத்த காண்ட சுருக்கம் -ஸ்ரீ பட்டாபிஷேகம்
திவ்ய -உத்தர காண்ட சுருக்கம் -தன்னுடைச் சோதிக்கு எழுந்து அருளினது
நமஸ்துதே

———-

ஸ்ரீ கேஸவ
ஸ்ரீ மன் வரத தேவைஸ் த்வம் ப்ரஹ்மாத்யை ப்ரார்த்திதோ திவி
அவதீர்னோ தசராதாத் லோக த்ராணாய கேஸவ -2-

ஸ்ரீ ப்ரஹ்மாதிகளால் பிரார்த்திக்கப் பட்டு ஸ்ரீ வரத லோக ரக்ஷண அர்த்தமாகவே அன்றோ
ஸ்ரீ சக்ரவர்த்தி திரு மகனாய் அவதரித்து அருளினீர்

க இதி ப்ரஹ்மணோ நாம ஈஸோஹம் ஸர்வ தேஹி நாம்
ஆவரம் தவாங்கே ஸம்பூதவ் தஸ்மாத் கேஸவ நாம பாக்

———

ஸ்ரீ நாராயண
பிதுர் மதே ஸ்திதோ ராம ஸ அநுஐ கௌசிகம் கத
ததத்வரம ரக்ஷஸ் தவம் நாராயண ரிபோர் வதாத் -3-

தந்தை சொல் படி தம்பியுடன் விசுவாமித்திரர் யாக ரக்ஷணம் –
தாடகை ஸூபாஹு -நிரஸனம் -நார ரக்ஷணம் -என்பதால் நாராயண

—————-

ஸ்ரீ மாதவ
ஜனகஸ்ய மீ கே பங்க்த்வா துரா ரோபம் பரைர் தநு
ஸஹ தர்ம ஸரீம் ஸீதாம் பிராப்தஸ் த்வம் மாதவ ஸ்ரீயம் -4-

ஸ்ரீ சீதாப் பிராட்டியைத் திருக்கைப் பற்றி மாதவன் ஆனார்

———-

ஸ்ரீ கோவிந்த
கைகேய்யா ப்ரிய பர்த்ருஸ் த்வம் பிதுர் வசன கௌரவாத்
அபிஷேகம் ஹி கோவிந்த த்யக்த்வா ப்ராப்தோ வநம் முதா -5-

ஹர்ஷத்துடன் வனம் போய் புக்கு –
ராஜ்ஜியம் வா வன வாஸோ மஹோ தய
கோவிந்தா -காம் விந்ததீதி கோவிந்த -வாக்குகளை ரஷிப்பவன்

————

ஸ்ரீ விஷ்ணு
குஹம் க்ருதார்த்தம் குர்வம்ஸ் சித்ர கூடம் கதோ கிரிம்
பாதுகே பரத யாதா விஷ்ணு ஸர்வ அபி ரஷகே -6-

குஹனை க்ருதார்த்தன் ஆக்கி அருளி சர்வ ரக்ஷகமான ஸ்ரீ பாதுகையை பரதனுக்கு அருளி –
ஸ்ரீ விஷ்ணு ஆனீர்

——————–

ஸ்ரீ மது ஸூதனன்
விராதஸ்ய கராதீநாம் தமஸா மிவ பாநுமான்
சேத்தா க்ருத்ர பவஸ்யாபி விபாஸி மது ஸூதந -7-

விரோதன் கரன் போன்றவர் நிரஸனம்
ஜடாயு மோக்ஷம் -அருளியதால் மது ஸூ தனன் ஆனீர்
பிரகிருதி சம்பந்தம் போக்கி -விரோதி நிரஸந சீலத்வம்

—————-

ஸ்ரீ த்ரிவிக்ரம
ஸூக்ரீவேண க்ருபாவத்யை ஸீதாயை ப்ரேஷித கபி
த்ரி விக்ரம அப்திம் வவ்ருதே லங்கிதும் த்வமி வா த்வரே -8-

முதல் பிரிவால் சிறை இருந்தவள் கிருபையை வெளியிட்டு அருளி ஏற்றம் காட்டி அருளினாரே
உம்மைப் போலவே திருவடி வளர்ந்து அருளி த்ரிவிக்ரமனும் நீரே என்று காட்டி அருளினாரே

———-

ஸ்ரீ வாமன
லங்காம் விசித்ய ஹநுமான் த்வத் ரூபோ வாமன அகிலாம்
ஸீதாம் த்ருஷ்ட்வா அக்ஷதாம் தேவீம் ஜகாத ச தவ பிரியம் -9-

உம்மைப் போன்ற வடிவைக் கொண்டு உம்முடைய பிரியத்தை பிராட்டி இடம் அறிவித்த திருவடி
நியதாம் அக்ஷதாம் தேவீம் ராகவாய நிவேதயத் -கற்பு நிலை நின்றதைச் சொல்லிற்றே –

———-

ஸ்ரீ தர
ப்ரபந்நாப்ய தாயீ த்வம் ராவணா தீன் நிஹத்யச
அபி ஷிக்தஸ் ஸீத ஸ்த்வம் ஸ்ரீ தர ஆப்தோ மஹீ மிமாம் -10-

அபய பிரதானம் அளித்த சீர்மை
குண ஸ்ரீ -வீர ஸ்ரீ-ராஜ்ய ஸ்ரீ அனைத்தும் கொண்ட சீர்மை –
பட்டாபிஷேகம் செய்து அருளி பிராட்டி உடன் கூடிய சீர்மை –

————–

ஸ்ரீ ஹ்ருஷீ கேஸ
பார தந்தர்ய ப்ரகாசாய த்வத் விஹீ நாபி ஜாநகீ
கங்கா யாம் நாஜஹத் ப்ராணான் ஹ்ருஷீ கேஸ தவ ப்ரியா -11-

இரண்டாம் பிரிவால் பாரதந்தர்யம் வெளியிட்டு அருளினாள் பிராட்டி
அவனே ஹ்ருஷீ கங்களுக்கு எல்லாம் -ஞான கர்ம இந்திரியங்களுக்கும் அந்தக்கரணத்துக்கும்
அனைத்துக்கும் -ஈசன் –

——————–

ஸ்ரீ பத்ம நாப

ப்ரஹ்மாதீ நாம் ச ஸர்வேஷாம் பஸ்யதாம் ஜாநகீ தவ
ப்ரகாஸ்யா நாய சேஷத்வம் பத்ம நாப புவம் கதா –12-

மூன்றாம் பிரிவால் -அநந்ய சேஷத்வம் –பத்ம சம்பவனான -ப்ரஹ்மாதிகள் பார்க்க
பூமிக்குள் சென்று வெளியிட்டு அருளினாள்
நாபி பத்ம கமலம் உடைய பத்ம நாபன் –

————————–

ஸ்ரீ தாமோதர
த்வம் ஸிராத் பரிபால் யாத ஸா கேதம் தச் சராசரை
ப்ரஹ்மாத் அபிஷ்டுத ப்ராப்த நாகம் தாமோதர ஸ்வகம் -13-

துக்க பூயிஷ்டமான இருள் தரும் மா ஞாலத்தில் அவதரித்ததே ஸுலப்யம் காட்டவே தாமோதரா
அன்று சாரா சரங்களை வைகுந்தத்து ஏற்றி அருளி
ப்ரஹ்மாதிகள் ஸ்துதி செய்ய ஸ்வ பரம பதம் எய்திற்றே –

————-

ஏதத் துவாதச நாமார்ந்த தேவ ராஜ வர பிரத
ஸர்வதா தவ ஸர்வம்ச ஸர்வேப்யோபி பவேஸ் ஸூபம் –14-

ஸ்ரீ தேவாதி தேவனே எல்லா வற்றாலும் மங்களம் உண்டாகட்டும் –

———————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ -வே -கார்ப்பங்காடு ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பிராட்டியார் சமேத பேர் அருளாளன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீராம நாம மகிமை

November 24, 2020

சதுர் யுகங்களில்”-கிருத யுகம்-தவம்; திரேதா யுகம்-யாகம்; துவாபர யுகம்-பாத சேவை; கலி யுகம்-நாம சங்கீர்த்தனம்

“ஸ்ரீ ராம” என்று நினைக்க, சொல்ல, எழுத புண்ணியம் பல செய்து இருக்க வேண்டும்
நாமத்திற்காகவே படைக்கப்பட்டுள்ளோம்-நாமம் “சொல்லல், கேட்டல், நினைத்தல்” மூன்றும் ஒன்றே.
கலியுகத்திற்கு உகந்தது நாம தர்மமே.
கலியுகத்தில் நாம தர்மமே தர்மங்களுக்கு ராஜா.
பகவான் நாமம் சொல்ல குரு கூட தேவை இல்லை, பகவான் நாமமே குரு.
பகவான் நாமங்களுக்குள் வேறுபாடு இல்லை, பகவானும் பகவான் நாமமும் ஒன்றே. நாமத்தை ஆஸ்ரயிப்பவன் வீணாகமாட்டான்.
நாமம், பாதை “மீறிவர்க்கும்-தவறிவர்க்கும்” மருந்து, சரியான பாதையில் செல்பவருக்கு விருந்து.
நாமம், “பாதை மீறிவர்க்கும் தவறிவர்க்கும்” வழி காட்டும்
எல்லா நாமமும் பர பிரும்மத்தின் நாமமே, நாமம் சரியான நேரத்தில் ஞானத்தை அளித்து விடும்.
பகவானின் மிக சமீபத்தில் இருப்பது நாமம்.
நாமத்துடன் எழுவீர், பணியின் “தொடக்க-இடை-இறுதியில்” நாமத்துடன் இணைவீர்.
நாமத்துக்கு விலக்கு இல்லை.
நாம் ஆராதனை செய்யும் பகவான் நாமம், நம்மை ஆதரிக்கும்
நாம நிதி பெருக, நம் நிதியும் பெருகும்.
நாமம் தாய்-தந்தை போன்றது.
நாமம் தாய் குலத்தையும் தந்தை குலத்தையும் கரை சேர்க்கும்.
பவரோக அருமருந்து நாமம்.
சாஸ்திரங்களின் முடிவு நாமம்.
நான்கு லஷம் கோடி ஜன்மாக்கள் எடுத்து வேத-அத்யானம், யோகம், யாகம், தீர்த்தாடனம், பூஜை,
ஸ்வ தர்ம அனுஷ்டானம் என செய்து இருந்தால் தான் வாயில் ஒரு “ராம” நாமம் வரு்ம்.
நாம தர்மம் பயத்தை போக்கி மோஷத்தை தரும்.
காமதேனு, சிந்தாமணி, கல்பக விருட்சம் எதையும் கொடுக்கும், ஆனால் நாம-தர்மம், நல்லதையே தரும்.
நாமம் சொன்னால் பகவானே வந்து விடுவார்
சொல்பவரின், “ஜாதி, மதம், தரம், இடம், காலம்”, பேதமற்றது நாமம்.
நாமமே சரணாகதி, உலகுக்கு ஜீவன் வரும் போதும் போகும் போதும், நாமம் சொல்லலாம்.
நாமத்தால், புத்தி, மனம், தெளிவு பெற்று திருப்தி அடையும்.
நாமத்தால் தீர்க்க முடியாத பாவங்கள் இல்லை.
நாமத்தை எந்த அசுத்தமும் தீட்டும் பாதிக்காது.
நாமம் துன்பத்தை விலக்கும், நல்லதை தரும், அமைதி பிரேமை வளர்க்கும்
நாமத்தை, எண்ணுவதை விட, எண்ணுவது சிறப்பு.
நாமத்தால் அடைய நாமமே சாதனம்.
நாமம்,நிந்திப்பவனையும்-நாத்திககனையும் காப்பாற்றும்.

ஸ்ரீ ராம நாமம்; தாரகம் மந்திரம்.
‘ஸ்ரீ ராம’ என்று கடலைக் கடந்த ஸ்ரீ அநுமான்
சிரஞ்சீவி வாயு புத்திரன் ஸ்ரீ அநுமான். ஸ்ரீ இராமனின் அடிமையான சேவகன். ஸ்ரீ ராம நாமமே அவரின் உயிர் மூச்சு.
ஸ்ரீ ராம நாமம், ஸ்ரீ ராம பாணத்தைவிடச் சிறந்தது என்று நிரூபித்தார்.
‘ராம’ என்று ஸ்ரீ சேது அணை கட்டிய வானரங்கள்
ஸ்ரீராமஜெயம்: அநுமான்-சீதைக்கு, இராமனின் வெற்றியை சுருக்கமாக தெரிவித்தது

“மரா” என்று உச்சரித்து “ராமா” என்று ராமாயணம் இயற்றிய ஸ்ரீ வால்மிகி.
ஸ்ரீ வால்மீகியை ஸ்ரீ ராமாயண காவியம் எழுத அவருக்கு ஞானத்தை கொடுத்ததும், “ஸ்ரீ ராம” நாமம்.

ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே
ஸ்ரீ ராம நாம வரானன ஓம் நம இதி…..ஸ்ரீ ராம:3 Times=1000”

ஸ்ரீ ராம = (ரா=2; ம=5) இரண்டை ஐந்தால் பெருக்கினால் பத்து (2 x 5 = 10); ஸ்ரீ ராம என்ற சொல்லுக்குரிய எண் 10,
ஸ்ரீ ராம, ஸ்ரீ ராம, ஸ்ரீ ராம என்று மும்முறைகள் சொன்னால், அதற்குரிய எண் 10 x 10 x 10 அதாவது ஆயிரம்.
ஸ்ரீ ராம= 2 × 5 = 10; ராம என்ற வார்த்தையை மூன்று முறை சொன்னால் ஆயிரத்திற்குச் சமமாகும்.
மூன்று முறை 1000 x1000 x1000=1000000000 =10 லட்சம்
“ஸ்ரீ ராம” நாமத்தை ஒரு லட்சத்து எண்ணூறு (1,00,800) முறை சொன்னால் (மேலும் எழுதினால் One Book)
என்ன கணக்கு என்பதை நினைத்து பார்க்க வேண்டும்

“ஸ்ரீ விஷ்ணு காயத்ரி”-ஸ்ரீ நாராயணா, வாசுதேவ, விஷ்ணு
ஓம் நாராயணாய வித்மஹே வாஸுதேவாய தீமஹி தந்நோ விஷ்ணு: ப்ரசோதயாத்

‘ஸ்ரீ நாராயண‘ என்ற வாக்கியத்தில் “ரா”வை நீக்கினால் ‘நாயணா’ அதாவது நா+அயணா என்று மாறும்.
அயணம்=மோக்ஷம், கதி . நா=இல்லை எனவே மோக்ஷம் இல்லை என்று பொருள் கிடைக்கும்.

உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்,
நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் – அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே–பால காண்டம்-29(கம்பர்)-ஸ்ரீ கம்பராமாயணம் (கடவுள் வாழ்த்து)

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும பாவமும் சிதைந்து தேயுமே
ஜன்மமும் மரணமும் இன்றித் தீருமே இம்மையே
‘ராம’ என்ற இரண்டு எழுத்தினால்

மும்மை சால் உலகுக்கெல்லாம் மூல மந்திரத்தை முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும் தனிப் பெரும் பதத்தை, தானே
இம்மையே, எழுமை நோய்க்கும் மருந்தினை ராமன் என்னும்
செம்மை சேர் நாமம் தன்னை கண்களில் தெரியக் கண்டான்

சிவனோ அல்லன் ,நான்முகனோ அல்லன் ,திருமாலாம்
அவனோ அல்லன் ,செய்தவம் எல்லாம் அடுகின்றான்
தவனோ என்னின் செய்து முடிக்கும் தரன் அல்லன்,
இவனோ அவ்வேத முதல் காரணன்–ஸ்ரீ இராமனைக் கண்டு வியந்த இராவணன்

நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம்
வீ டியல் வழியதாக்கும் வேரியம் கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேனை நீறு பட்டழிய வாகை
சூடிய சிலை ராமன் தோள்வலி கூறுவார்க்கே.–ஸ்ரீ ராம நாம பலன்

ஸ்ரீ ராமன் எத்தனை ஸ்ரீ ராமன்:
ராமன்; அனந்தராமன், பரசுராமன்; ரகுராமன்; தசரதராமன்; கோசலராமன்; கோதண்டராமன்;
கல்யாணராமன்; சீதாராமன்; ஜானகிராமன்; வைதேகிராமன்; ஸ்ரீராமன்; சேதுராமன்; ஜெயராமன்;
சிவராமன்; முத்துராமலிங்கம், முத்துராமன், அயோத்திராமன்; பட்டாபிராமன்; ராஜாராமன், ராமசந்திரன்,
ராமகிருஷ்ணன், ராமநாதன், ராமலிங்கன்; சுந்தரராமன், சாய்ராம்; பலராமன், வெங்கட்ராமன்; சாந்தாராமன்

ஸ்ரீ ராம குல பரம்பரை
ஸ்ரீ திருமால்–பிரம்மா—மரீசி—-காஸ்யபர்—சூரியன்—மனு—இக்ஷ்வகு—குக்ஷி—விகுக்ஷி—பாணு–அரண்யகன்—விருது—
திரிசங்கு—துந்துமாரன்—மாந்தாதா—சுசந்தி—துருவசந்தி—பரதன்—ஆஷிதன்—சாகரன்—அசமஞ்சன்—அம்சமந்தன்—திலீபன்—
பகீரதன்—காகுஸ்தன்—ரகு—பிரவருத்தனன்—சங்கன்—சுதர்மனன்—அக்நிவர்ணனன்—சீக்ரவேது—மருவு—பிரஷீக்யன்—
அம்பரீஷன்—நகுஷன்—யயாதி—நாபாகு—அஜன்—தசரதன்—ராமன்.

அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடைவாள் ஏந்த,
பரதன் வெண் குடை கவிக்க, இருவரும் கவரி பற்ற,
விரை செறி குழலி ஓங்க, வெண்ணெயூர்ச் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி, வசிட்டனே புனைந்தான், மௌலி

—————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார்-மகாவித்வான் ஸ்ரீ ரா. இராகவையங்கார்

November 3, 2020

கவிச்சக்ரவர்த்தி கம்பர்
மகாவித்வான் ரா. இராகவையங்கார்
(சேது சமஸ்தான வித்வான் – அண்ணாமலைப் பல்கலைக்கழக
முன்னாள் தலைமைத் தமிழாராய்ச்சியாளர்)

‘கல்வியிற் பெரியர்’ என்றும், ‘கவிச்சக்ரவர்த்தி’ என்றும் நல்லியற்புலவரெல்லாம் மனமொத்து வாயாரப் புகழும்
பெருமாண்புடைய அருமைக் கம்பரின் பெருமைச் சிறப்பு முழுதும், இத்தமிழுலகம் நன்றறிந்து நாளும் பாராட்டுவதேயாம்.
இக்கவியரசர் வரலாறு, காலம் முதலியன இக்காலத்து, ஒன்றோடொன்றொவ்வாப் பல்வேறு வகையால் வழங்கப்படுகின்றன.
சிறிது பழைய தமிழ் நூல்களையே பெருங்கருவியாகக் கொண்டு நோக்கின், அவற்றதுண்மை இன்னதென்று துணியலாகும்.
இவ்வாராய்ச்சிக்குப் பெருண்துணையாகக் காண்பன:-
தமிழ் நாவலர் சரிதை, தொண்டைமண்டல சதகம், சோழமண்டல சதகம், பாண்டிமண்டல சதகம் என்பனவும், பிறவுமாம்.
இவற்றுள் கண்ட சில பாடல்களையும் அடிகளையும் ஈண்டு எடுத்தோதி விளக்குதலானே, இத்தெய்வப்புலவரது வரலாறு
ஒருவாறு நண்குணரலாகும். இவற்றில் சில கற்பனை வரலாறுகளும் இருக்க வாய்ப்பு உண்டு.

இவர் ஊர்

திருவழுந்தூர்த் தாதியை, சோழன், எந்த ஊர் என்று கேட்ட போது பாடியது,

கம்பன் பிறந்தவூர் காவேரி தங்குமூர்
கும்பமுனி சாயங் குலைந்தவூர் – செம்பதுமத்
தாதகத்து நான்முகனுந் தாதையுந்தே டிக்காணா
வோ தகத்தார் வாழுமழுந் தூர்.–(தமிழ் நாவலர் சரிதை)

இவர் குலம்

நாரணன் விளையாட் டெல்லா நாரத முனிவன் சொல்ல
வாரணக் கவிதைசெய்தா னறிந்துவான் மீகியென்பான்
சீரணி சோழநாட்டுத் திருவழுந் தூருவச்சன்
காரணி கொடையான் கம்பன் றமிழினாற் கவிதை செய்தான்.-(இராமாவதாரப் பாயிரம்.)

இப்பாட்டில் ‘உவச்சன்’ என்பதற்கியைய, வாணியன் தாதன் என்பான் இக்கம்பரைப் பாடிய வசைப்பாட்டின்கண்,
“கைம்மணிச் சீரன்றிச் சீரறி யாக்கம்ப நாடன்” (தமிழ் நாவலர் சரிதை) என வருதல் காண்க.
கைம்மணிச் சீர் – கையின் மணியோசை. உவச்சர் என்பார் காளிகோயில் முதலியவற்றிற் பூசைபுரியும் வகுப்பினராதலால்,
அவர்க்குக் கையால் மணியொலிப்பித்தலுந் தொழிலாம்.

இவர் வளர்ந்து கல்வி பயின்று சிறந்தவாறு

பெற்றுவளர்த்தும் வித்தைதனைப் பேணிக்கொடுத்தும் பெயா கொடுத்தும்
பற்றவரும்பா லமுதளித்தும் பகைத்தவறுமைப் பயந் தீர்ந்துங்
கற்றமுதனூற் றிருவழுந்தூர்க் கம்பன்றழையக் கருணை செய்தோர்
மற்றும்புலவோ ரையும்வாழ வைத்தார் சோழ மண்டலமே.–(சோழமண்டல சதகம்.)

இங்ஙனம் கம்பரை வளர்த்துச் சிறப்பித்தவன் வெண்ணெய் நல்லூர்ச் சடையன் என்பான்.
இதனை மேல்வருஞ் செய்யுளானும் உணர்க.

கம்பர், தெய்வ வரத்தினாற் கவி சொல்லிய நாளிற் பாடிய வெண்பா:

மோட்டெருமை வாவிபுக முட்டுவரால் கன்றென்று
வீட்டளவும் பால்சொரியும் வெண்ணெயே – நாட்டி
லடையா நெடுங்கதவு மஞ்சலென்ற சொல்லு
முடையான் சரராமனூர் (தமிழ் நாவலர் சரிதை)

சரராமன் என்பது வெண்ணெய்நல்லூர்ச் சடையற்க்கு ஒரு பெயர்.
“மழையென், றாசங்கை கொண்ட கொடை மீளியண்ணல் சரராமன் வெண்ணெய்,” (நாகபாசப் படலம்)
என இவர் இராமாவதாரத்து வழங்குதலானுமுணர்க.

இவர் ஏரெழுபது பாடி அரங்கேற்றியது

குணங்கொள் சடையன் புதுச்சேரிக் கொடையன் சேதிராயன் முதற்
கணங்கொள் பெரியோர் பலர்கூடிக் கம்பநாடன் களிகூற
விணங்கும்பரிசி லீந்துபுலி யேழும்புகழே ரெழுபதெனு
மணங்கொள் பெருங்காப் பியப்பனுவல் வகித்தார் சோழ மண்டலமே–(சோழமண்டல சதகம்.)

சடையனாகிய புதுச்சேரிக் கொடையன் என்க, சேதிராயனும் புதுவை ஊராதல் பற்றிப் புதுச்சேரிக் கொடையனாகிய
சேதிராயன் எனினுமமையும், சடையன், சேதிராயன் முதலிய பெரியோர் நிறைந்த அவையியற்றான் இவர் ஏரெழுபது அரங்கேற்றியது.

இப்பாட்டின்கண் ‘குணங்கொள் சடையன்’ எனப்பட்ட மேற்கூறிய வெண்ணெய்ச் சரராமனாவன்.
புதுவை, புதுச்சேரி என்று வழங்குகின்ற ஊரும் இவனதாதல் பற்றி இவனையே ‘புதுச்சேரிக் கொடையன்’ எனவும்,
‘புதுவைச் சடையன்’ எனவும் வழங்குபவர் எனத் தெரிகின்றது.
இவனைப் ‘புதுவைத் திரிகர்த்தன்’ ‘வெண்ணெய்த் திரிகர்த்தன்’ என வழங்குதலுமுண்டு.
இவன், மூவேந்தர்க்கும் அவர் பரிசனங்கட்கும் ஒருகாற் பெருவிருந்தளித்து, அவரால் திரிகர்த்தராயன் எனச் சிறப்புப் பெயர்
சூட்டப்பெற்றான் என்பர். இவர் சோணாட்டில் மிகப்பெரிய காணிவளமுடையனாயிருந்தனனெனவும், நாளும் பல்லாயிரவர்க்குப்
பாலுஞ்சோறும் பரிந்தளித்தனனெனவும், சிங்களமாண்ட பரராசசிங்கப் பெருமான் என்னுமரசன், ஈழநாடு பஞ்சம் பட்டபோது
இவ்வள்ளலைப் பாட, இவன் ஆயிரங்கப்பலில் நெல்நிறைத்துக் கொண்டுபோய்க் கொடுத்து அவன் நாடு முற்றும்
பாதுகாத்துச் சிறந்தனனெனவும் சொல்லுவர்.

இவன் சங்கரன் என்பவர்க்குப் புதல்வனென்பதும், இணையாரமார்பன் என்பவனைத் தம்பியாக உடையவனென்பதும்,
பெரும்பாலும் திருவெண்ணெய் நல்லூரையே தனது பெருங்குடிக் கிருக்கையாகக் கொண்டவனென்பதும்,
கல்வியில் சிறந்தானென்பதும் தெரிகின்றன. சிறுபான்மை, இவனைப் புதுவைச் சடையன் என வழங்குவது,
அதன்கண் இவன் தந்தையாகிய சங்கரன் வதிந்த சிறப்புப் பற்றியும், அவ்வூர் இவனுக்குச் சிறந்த கடற்றுறைப் பட்டினமாதல் பற்றியும் ஆகும்.
இவன் வியலூர் என்னும்மிடத்துமிருந்தனனென்ப. புதுவையும் வெண்ணெயும் வியலூரும் தூரவூர்களல்லாமை உணர்ந்து கொள்க.
இவன் தந்தையாகிய சங்கரனுக்கு ஒட்டக்கூத்தர் முதலில் உதவித்தொழில் புரிந்து கொண்டிருந்தனரெனவும்,
அவரை, அப்புதுவைக்கணிருந்த காங்கேயன் என்னும் உபகாரியொருவன் கல்விபயிலுவித்து நல்லறிஞராக்கிக் கவிராக்ஷசன் எனவும்,
கெளடப் புலவன் எனவும், பெயர் சிறப்பித்து உயரச் செய்தானெனவும், அந்நன்றி பாராட்டி அக்கூத்தர்
காங்கேயன் மேல் ‘நாலாயிரக் கோவை’யொன்று பாடினாரெனவும் அறியலாவன, “கெளடம்” என்பது ஒருவகைக் கவிமார்க்கம்.

அது, பொருள் புலப்படத் தொடுப்பதிலும் சொல்வளம்படத் தொடுப்பதே சிறப்பெனக் கருதுவோம்.
‘இடுக்கட்புண்படு’ ‘பத்துக் கொண்டன’ ‘விக்காவுக்கு’ என்பது முதலாக வரும் இக்கூத்தர் பாடல்கள்,
அக்கெளட நெறியே என்றதாதலுணர்க. ஒட்டக்கூத்தர், சடையன்றந்தையாகிய சங்கரனுக்கு உதவித்தொழில்
புரிந்துகொண்டிருந்தனரெனவும், கம்பர் அச்சடையனால் வளர்த்துச் சிறப்பிக்கப்பட்டனரெனவும் தெரிதலால்
கம்பர் கூத்தருக்கு இளையராவரென உய்த்துணரப்படுகின்றது.
மற்றுமிச் சடையனைப் பற்றியன ஆங்காங்குக் கூறப்படும். பின்னர்க் கண்டுகொள்க.

இனி, புதுவைச் சடையனும், வெண்ணெய்ச்சடையனும் வேறு வேறாவரெனக் கூறின், இருவரும் ‘திரிகர்த்தன்’ எனச்
சிறப்புப் பெயர் புனையப் பெற்றனரெனவும், இருவரும் நாளும் பல்லாயிரவர்க்குப் பசியாற்றும் வண்மையும்
வளப்பமுமுடையராயிருந்தனரெனவும், இவ்விருவரும் கல்வியிற் பெரிய கம்பரைப் போற்றினரெனவும்,
“புதுவைச் சடையனிருந்த வியலூர்” என்று பாடப்பெற்ற வியலூர், வெண்ணெய்நல்லூர்க்கு மிக அணித்தாதலால்,
அவ்விருவரும் நெருங்கி வதிந்தனரெனவும் கொள்ள நேரும். அங்ஙனம் திரிகர்த்தனென்னும் பட்டம்
அக்காலத்து இருவர்க்குச் சூட்டியமை அறியப்படாமையாலும், புதுவையானொருவனே திரிகர்த்தனே பட்டம் பெற்றானாக
வெண்ணெய்த்திரிகர்த்தன் எனவும் வழங்குதலறியப்படுதலாலும், திரிகர்த்தனென்னுஞ் சிறப்புடையானொருவனே
வெண்ணெயும் புதுவையுமுடையனாயினான் எனக் கருதுதலே இயைபுடைத்தாமென்பது உணரத்தக்கது.
அன்றியும், ஊரன்றி மற்றைவளமுங் குணமும் வண்மையும் பெயரும், கம்பரால் புகழப்படுஞ் சீருஞ்சிறப்புமென்னுமிவற்றில்
எவ்வகை வேற்றுமையும் அறியப்படாமை காண்க. இவற்றுக்கெல்லாம் செய்யுள் வருமாறு; —

அளிக்கும்படைமூ வேந்தருங்கொண் டாடும்விருந்தா லதிசயமாய்த்
திளிக்குந் திரிகர்த் தராயனெனச் செப்பும்வரிசைத் திறஞ்சேர்ந்தோன்
விளைக்குமரிசி மாற்றியநீர் வெள்ளங்கிழக்கு விளையுமென
வளைக்குப் பெருமைப் புதுவையர்கோன் வளஞ்சேர் சோழமண்டலமே.-(சோழமண்டல சதகம்.)

புரந்தர தாரு புதுவைச் சடையன்
னிருந்தவிய லூர்தெற்கு மேற்கு – பரந்த பொன்னி
யாற்றுநீ ரால்விளையு மப்பாற் கிழக்கரிசி
மாற்றுநீ ரால்விளையு மாம்.

யாமார் புகழ வியற்கம்ப நாட னிராமரொடும்
பாமாலை சூட்டுங் குலமுடை யானைப் படிபுரக்கக்
கோமாற னிட்டபொற்சிங்கா தனம் பெற்ற கொற்றவனைத்
தேமாலை யச்சந் தவிர்ப்பான் வெண்ணெய்த்திரிகர்த்தனையே.

தண்ணார் கமலச் சதுமுகத் தோனையும் தப்புவதோ
பண்ணா மணித்தலைக் கட்செவி யானது பாரிலுள்ளே
கண்ணாக வாழும் வெண்ணெய்த்திரி கர்த்தன் கலைத்தமிழ்கேட்
டெண்ணா முடியசைத் தாலுல கேழுமிறக்கு மன்றே.

எட்டுத் திசையும் பரந்த நிலா வெறிக்குங்கீர்த்தியேருழவர்
சட்டப்படுஞ்சீர் வெண்ணெய்நல்லூர்ச் சடையன் கெடிலன் சரிதமெலா
மொட்டிப்புகழ வாயிநா வுடையார்க்கன்றி யொருநாவின்
மட்டுப்படுமோ வவன்காணி வளஞ்சேர் சோழ மண்டலமே.

தேனார்தொடையார் பரராச சிங்கப்பெருமான் செழுந்தமிழ்க்குக்
கானார்நெல்லின் மலைகோடி கண்டிநாடு கரைசேரக்
கூனார்கப்ப லாயிரத்திற் கொடுபோயளித்த கொடைத் தடக்கை
மானாகரன் சங்கரன் சடையன் வளஞ்சேர் சோழ மண்டலமே.

இரவுநண்பக லாகிலென்பக லிருளறாவிர வாகிலெ
னிரவியெண்டிசை மாறிலென்கட லேழுமேறிலென் வற்றிலென்
மரபுதங்கிய முறைமைபேணிய மன்னர்போகிலெனாகிலென்
வளமையின்புறு சோழமண்டல வாழ்க்கை காரணமாகவே

கருதுசெம்பொனி னம்யலத்திலோர் கடவுணின்று நடிக்குமே
காவிரித்திரு நதியிலேயொரு கருணைமாமுகி றுயிலுமே
தருவுயர்ந்திடு புதுவையம்பதி தங்குமன்னிய சேகரன்
சங்கரன்றரு சடையனென்றொரு தருமதேவதை வாழவே.
இது பரராசசிங்கப்பெருமான் சடையனுக்கு எழுதி விடுத்த செய்யுளாயினுமாம்.

கம்பர் காவிரி எச்சிற்படப் பாடிய வெண்பா

மெய்கழுவி வந்து விருந்துண்டு மீளுமவர்
கைகழுவ நீர்போதுங் காவிரியே பொய்கழுவும்
போர்வேள் சடையன் புதுவையான் றன்புகழை
யார்போற்ற வல்லா ரறிந்து. (தமிழ் நாவலர் சரிதை)

விருந்துநுகர்வோர் கைகழுவ விளங்கும்புனற்கா விரியென்றார்
தருந்தாயனைய புகழ்ப்பதுவைச் சடையன்கொடையார் சாற்றவல்லார்
பரிந்தாரெவர்க்கு மெப்போதும் பாலுஞ்சோறும் பசிதீர
வருந்தாதளிக்க வல்லதன்றோ வளஞ்சேர்சோழ மண்டலமே.

இவற்றால் இவன் நாளும் பல்லாயிரவர்க்குணவளித்தது உணரப்படும்.

கோலாகலமன் னரிலவன்போற் கொடுத்தேபுகழுங் கொண்டாரார்
மேலார்கவுடப் புலவனெனும் விழுப்பேர்க்கூத்தன் முழுப்பேரா
னாலாயிரக்கோ வையம்புனைய நவில்கென்றிசைத்து நாட்டுபுகழ்
மாலாமெனுங்காங் கயன்வாழ்வு வளஞ்சேர்சோழ மண்டலமே. (சோழமண்டல சதகம்.)

புதுவைச் சடையன் பொருந்து சங்கரனுக்
குதவித் தொழில்புரி யொட்டக் கூத்தனைக்
கவிக்களி றுகைக்குங் கவிராட்சதனெனப்
புவிக்குயர் கவுடப் புலவனு மாக்கி
வேறுமங் கலநாள் வியந்துகாங் கயன்மேற்
கூறுநாலாயிரக்கோவைகொண் டுயர்ந்தோன்.

இனிச் சேதிராயனென்பான் புதுவையின்கணிருந்த ஓர் உபகாரி. இவன் ‘கம்பர் வேளாளரைச் சிறப்பித்துப்பாடிய
ஏரெழுபது’ என்னும் நூலைச் சடையனுடனிருந்து கேட்டவன். கம்பர் ஏரெழுபது அரங்கேற்றும்போது
இச்சேதிராயனை விடந்தீண்டிற்றாகவும் அதனாலரங்கேற்றம் இடையறவு படலாகாது என்னுங்கருத்தாற்
சேதிராயன் தனக்கு நிகழ்ந்ததனைப் பிறர்க்குறையாது மறைத்து அவையத்திருந்து நூல்கேட்க,
விடந்தலைக்கேறுதலால் மயங்கி வீழ்ந்தனன்.
அவ்வளவில் ஆங்குக்கூடிய பெரியார் பலரும் உடற்குறியால் விடமென்று கண்டு வருந்தாநிற்கையிற்
கம்பர் தமதருமைத் தெய்வவாக்கினாற் சிலவெண்பாக்கள் பாடி விடத்தையேறியபண்பே யிறக்கி அவனை உயிர்ப்பித்தார் என்ப.
இச்சேதிராயனுக்குத் தொண்டைநாட்டிலுங் காணிவளமுண்டு. இவற்றிர்குச் செய்யுள்:

அழுவதுங் கொண்டு புலம்பாது நஞ்சுண் டதுமறைத்தே
ரெழுபதுங் கொண்டு புகழ்க்கம்ப வாணனெழுப்பவிசை
முழுவதுங் கொண்டொரு சொற்பேச நெய்யின் முழுகிக்கையின்
மழுவதுங் கொண்டு புகழ்கொண்ட தாற்றொண்டை மண்டலமே–(தொண்டைமண்டல சதகம்.)

“…………………………பாவலர்தா
மேரெழுப தோதியரங் கேற்றுங் களரியிலே
காரிவிட நாகங் கடிக்குங்கை.” (திருக்கைவழக்கம்)

கம்பர் ஏரெழுபது பாடி அரங்கேற்றும்போது புதுவைச் சேதிராயனை விடந்தீண்டத் தீர்த்த வெண்பா

ஆழியான் பள்ளி யணையே யவன்கடைந்த
வாழி வரையின் மணித்தாம்பே – பூழியான்
பூணே புரமெரித்த பொற்சிலையிற் பூட்டுகின்ற
நாணே யகல நட.

மங்கை யொருபாகர் மார்பிலணி யாரமே
பொங்கு கடல்கடைந்த பொற்கயிறே – திங்களையுஞ்
சீறியதன் மேலூருந் தெய்வத் திருநாணே
யேறிய பண்பேயிறங்கு. (தமிழ் நாவலர் சரிதை)

இவர் வல்லியை விழைந்தது

இவர் ஒருகால் தொண்டைநாட்டுள்ள திருவொற்றியூருக்குச் சென்றபோது, அங்குச் சதுரானன பண்டிதன் மடத்திருந்த
வல்லி எனப்பெயரிய கணிகையொருத்தியை விழைந்து, பலகாலம் அவளுடன் அங்கே தங்கி மகிழ்ந்து அவளுக்கு
எருமைகள் வாங்கி வரப் புழற்கோட்டம்புக்குக் காளிம்பன் என்னும் நிரைமேய்ப்பானொருவனைக் கண்டு பாட,
அவன் ஈன்ற எருமைகள் ஆயிரம் (பல) கொடுக்கப் பெற்று, அவற்றையெல்லாம் வல்லிபாலுய்த்துப்,
பின் அவளுக்கு அணி பலவியற்றித் தருதற்குத் திருமயிலைபோய் ஆண்டுத்திருவாலி என்னும் தட்டான் ஒருவனைப்பாடி
அணியெல்லாம் இயற்றுவித்துக்கொண்டு மீண்டு அவளுக்கு அணிவித்து, இன்னவாறு அவளுக்கு வேண்டுவன பலவும் உதவிவந்தனர்.
அவள் இவர்பாற் பாராட்டிய பேரன்பினாற் பின் அவளைப் பிரியலாற்றாது உடன்கொண்டு சோணாடுபுக்கு ஆங்கும்
அவளுடன் இனிது களித்தனர் என்ப. அக்காலத்து ஆங்கு வல்லியிருந்தவீட்டினை மழையால் நனையாமற்,
கம்பருக்கு ஆருயிர்த் துணைவனான சடையவள்ளல் ஓரிரவிற்குள் நெற்கதிராலே வேய்ந்து இனிது புரிந்தனன் என்ப.
இவற்றிர்குச் செய்யுள் வருமாறு:

திருவொற்றியூர் வல்லியைக் கண்டு சொல்லியது

இல்லென்பார் தாமவரை யாமவர்தம் பேரறியோம்
பல்லென்று செவ்வாம்பன் முல்லையையும் பாரித்துக்
கொல்லென்று காமனையுங் கண்காட்டிக் கோபுரக்கீழ்
நில்லேன்று போனாரென் னெஞ்சைவிட்டுப் போகாரே.–(தமிழ் நாவலர் சரிதை)

நடக்கிலன்னமா நிற்கினல் வஞ்சியாங்
கிடக்கி லோவியப் பாவை கிடந்ததாந்
தடக்கை யான்சது ரானன பண்டிதன்
மடத்து ளாளென் மனத்துறை வல்லியே. (க்ஷெ)

கம்பருக்குக் காளிம்பன் ஈன்ற எருமை ஆயிரம் கொடுத்த வெண்பா

புக்கு விடைதழுவிக் கோடுழுத புண்ணெல்லாந்
திக்கிலுயர் காளிம்பன் றென்புழன்மா – னக்கணமே
தோள்வேது கொண்டிலனேற் சுந்தரப்பொற் றோன்றலுக்கு
வாழ்வேது கண்டிலமே மற்று. (தமிழ் நாவலர் சரிதை)

கம்பர் திருவாலிமேற் பாடிய வெண்பா

அண்ணறிரு வாலி யணிமயிலை யத்தனையும்
வெண்ணிலவின் சோதி விரித்ததே – நண்ணுந்
தடந்துப்பு விற்பாணந் தன்முகத்தே கொண்டு
நடந்துப்பு விற்பா ணகை. (க்ஷெ)

தனதானியத்தி லுயர்ந்தோர்க டாமேயென்னுந் தருக்கேயோ
வினவாதிரவி னெற்கதிரான் வேய்ந்தாரவல்லி வீடதல்லாற்
கனிசேர்தமிழ்க்குப் பன்னிரண்டு கடகயானைக் காடளித்த
மனைவாழ்வுடையான் வெண்ணெய்நல்லூர் வாழ்வான் சோழமண்டலமே. (சோழமண்டல சதகம்.)

பொதுமாதர் வீட்டைப் புகழ்பெற வேனெற்
கதிரானே வேய்ந்தருளுங் கங்கைப் – பதிநேர்
வருவெண்ணெய் நாடன் வருநா வலர்க்குத்
தருவா னவன்சடையன் றான்.

கம்பர் குரும்பை என்னுந் தாதிபாற் சொல்லிய கலித்துறை

சொல்லியைச் சொல்லி னமுதான செல்லியைச் சொற்கரும்பு
வில்லியை மோக விடாய்தவிர்ப் பாளை விழியம்பினாற்
கொல்லியைக் கொல்லியம் பாவையொப் பாளைக் குளிரொற்றியூர்
வல்லியைப்புல்லியகைக்கோ விவர்வந்து வாய்த்ததுவே. (தமிழ் நாவலர் சரிதை)

இப்பாட்டினால் இவர் வல்லியைப் பிரிந்த காலத்துக் குரும்பை என்பாளைத் தழுவி மனம் பொருந்தாமையால் வெறுத்தனர்
எனத் தெரிகின்றது. இவர் வல்லியைப் பிரிகின்றபோது பாடியதாக “வடிப்பாளை வீசுந் திருவொற்றியூர்வல்லி” என்னும்
முதலையுடைய பாட்டொன்றும் வழங்குகின்றது.

இவர்களையன்றிக் களந்தைப் பதியிலொருத்தியையும் இவர் விழைந்தனரென “வில்லிகளந்தை மின்னை”
(தமிழ் நாவலர் சரிதை) என்னும் முதலையுடைய செய்யுளான் விளங்குகின்றது. இப்புலமைக்கரசரது அறிவு வீற்றிருந்த
செறிவுடை மனத்தையும் இவ்வாறு அலைக்கவல்ல காமனே யாரினும் பெருவலியுடையன் என்பது ஒருதலை.

‘எவர்க்கும் வேள்கணை தீர்திறமின்று’ என்பரன்றோ? இவ்விழைவெலாமுட்கொண்டு போலும் இப்புலவர் பெருந்தகையார்
“கற்றனர் ஞான மின்றேற் காமத்தைக் கடக்கலாமோ” (மாரீசன்வதை) எனப்பாடினாராவர்.

இவர் இராமாயணம் பாடி அரங்கேற்றியது

அரும்பெறன்மணியும் பெரும்பெயரமிழ்துமே நிறையப் பெற்ற பாற்கடல்போலப் பரந்துவிளங்குகின்ற இராமாயணமென்னுந்
தெய்வான்பனுவலை இவர் பாடியருளியதற்குக் காரணம், இவரது சீராமபத்தியேயன்றி வேறில்லையென்பது,
இவர், “ஆசைபற்றியறையலுற் றேன்மற்றிவ், வேசில் கொற்றத் திராமன் கதையரோ.” எனவும்,
“ஆங்கவன் புகழ்ந்த நாட்டை யன்பெனு நறவமாந்தி, மூங்கையான் பேச லுற்றா னென்னயான் மொழியலுற்றேன்” எனவும்
இராமாவதாரத்துரைத்துப் புகுந்தவாற்றால் நன்கறியத்தக்கது.
இவர் “பத்தர் சொன்னவும் பன்னப்பெறுபவோ” என்றதூஉம் இக்கருத்தையே வலியுறுத்தும்.
இவர் வளர்ந்து சிறத்தற்க்குக் காரணமான சடையவள்ளல் குடிக்கும் இச்சீராமபத்தி உண்டென்பது,
அவ்வள்ளற்க்குச் சரராமன் எனப்பெயரிட்டு வழங்கியவாற்றால் ஊகிக்கப்படும்.
அக்குடிப் பரிசயம் இவரது பத்திக்கு ஒரு காரணமாயினும் ஆம். அன்றியும் வான்மீகி முனிவர் திருவாய் மலர்ந்தருளிய
சீராமாயணத்தின் திட்பநுட்ப ஒட்பன்களே இவர்காலத்து யாண்டும் பரந்து விளங்கிமேம்பட்டன என்பதும்,
அக்காலத்தறிஞரெல்லாம் சீராம கதையை அம்ழ்தினும் அதிகமாகமதித்துவந்தனரென்பதும்,

“வைய மென்னை யிகழவு மாசெனக்
கெய்த வும்மி தியம்புவ தியாதெனிற்
பொய்யில் கேள்விப் புலமையி னோர்புகழ்
தெயவ மாக்கதை மாட்சி தெரிக்கவே.” (பாயிரம்)

“நொய்தினொய்யசொன் னூற்கலுற் றேனெனை
வைத வைவின் மராமர மேழ்துளை
யெய்த வெய்தவற் கெய்திய மாக்கதை
செய்த செய்தவன் சொன்னின்ற தேயத்தே.” (க்ஷெ)

“வாங்கரும் பாத நான்கும் வகுத்தவான் மீகியென்பான்
றீங்கவி செவிகளாரத் தேவரும் வருகச் செய்தான்.” (நாட்டுப்படலம்)

“எறிகடலுலகந் தன்னு ளின் றமிழ்ப் புலவர்க் கெல்லா
முறுவலுக் குரியதாக மொழிந்தனன் மொழிந்த வென்சொற்
சிறுமையுஞ் சிலையி ராமன் கதைவழிச் செறித றன்னா
லறிவுடை மாந்தர்க் கெல்லா மமிழ்தமொத் திருக்குமன்றே.” (பாயிரம்)

என இவர் இராமாவதாரத்து வழங்கியவாற்றால் உய்த்துணரப்படும். இவ்வாறு அறிஞரெல்லாம் ஒருங்குபாராட்டும்
சீராம காதையின் தெய்வமாட்சி, இப்பெரும்புலவரது அறிவுடை நெஞ்சினையும் நன்கு கவர்ந்ததாதலின்,
அதனையே தமது ‘செவ்விய மதுரஞ்சேர்ந்த நற்பொருளிற் சீரிய கூரிய தீஞ்சொல் வவ்விய’
தமிழ்ப்பாக்களாற் பாடிப் புகழ் நிறுத்துதற்கு ஆசைப்பட்டனர் எனினும் அமையும்.

இவர் இராமாயணத்தைப் பெரும்பான்மை வெண்ணெய்நல்லூரிலும், சிறுபான்மை ஒற்றியூரிலும் இருந்துபாடினரெனவும்,
ஒற்றியூரில் இவரிருந்தபோது இந்நூலை இரவிலே பாடினரெனவும், அக்காலத்து மாணாக்கர் பலர் பிந்தாமலெழுதுவதற்கு
அவ்வூர்க் காளியைத் தீப்பந்தம் பிடிக்கப் பாடினரெனவும்,

‘தொடை நிரம்பிய தோமறு மாக்கதை
சடையன் வெண்ணெய்நல் லூர்வயிற் றந்ததே’ (இராமாவதாரப் பாயிரம்.)

கம்பர் காளியைப் பந்தம்பிடியென்று பாடியது

ஒற்றியூர் காக்க வுறைகின்ற காளியே
வெற்றியூர்க் காகுத்தன் மெய்ச்சரிதை – பற்றியே
நந்தா தெழுதுதற்கு நல்லிரவின் மாணாக்கர்
பிந்தாமற் பந்தம் பிடி. (தமிழ் நாவலர் சரிதை) என வருவனவற்றால் அறியப்படுகின்றன.
இவர் தாம் பாடிய சீராம கதைக்கு இட்டபெயர் இராமாவதாரம் என்பது, (இது பின்னர் விளக்கப்படும்.)

“நடையி னின்றுயிர் நாயகன் றோற்றத்தி
னிடைநி கழ்ந்த விராமாவ தாரப்பேர்த்
தொடைநி ரம்பிய தோமறு மாக்கதை.”-(இராமாவதாரப் பாயிரம்.)

“இத்த லத்து மிராமாவ தாரமே
பத்தி செய்து பரிவுடன் கேட்பவர்
புத்தி மிக்கரும் புண்ணிய முந்தரு
மெத்த லத்து மவனடி யெய்துவார்.” (க்ஷெ) என வருவனவற்றாலும்,
புறத்திரட்டுடையார் இந்நூலை, இராமாவதாரம் என்னும் பெயரே கொண்டாளுதலாலும் தெரிகின்றது.
இவர் பாடியது பாலகாண்டமுதல் யுத்த காண்ட மீறாகவுள்ள ஆறுகாண்டங்களே என்பதும்,
பின் உத்தரகாண்டத்தை ஒட்டக்கூத்தர் பாடினாரென்பதும், அவ்வுத்தரகாண்டம் சோழனதவைக்களத்தே அரங்கேற்றப்பட்டதென்பதும்,

“பூணிலாவுங் கம்பனலம் பொலியுந்தமிழாற் புகழெய்திக்
காணுமாறு காண்டமுறுங் கதையிற்பெரிய கதையென்னுந்
தாணிலாவுங் கழலபயன் சபையிற்பயிலுத் தரகாண்டம்
வாணிதாச னரங்கேற்ற வைத்தார்சோழ மண்டலமே.” (சோழமண்டல சதகம்.) என்னும் பாடலாற் றெரிகின்றன.
ஈண்டு அபயன் என்பது சோழன் என்னும் பொருளில் வந்தது. ஒட்டக்கூத்தர் சரசுவதி தம்பலங் கொடுக்க அதனாற் கவித்திறம்
எய்தினவராதலால் அவரை ‘வாணி தாசன்’ எனப் பெயர் சிறப்பித்து வழங்குவரெனத் தெரியலாகும்.
இங்ஙனம் கம்பர் பாடியன ஆறுகாண்டங்களேயாம் என்பதற்குப் பெரிதும் இயையவே, அரசகேசரியார் தாமியற்றிய இரகுவம்மிசம்
என்னுஞ் செந்தமிழ் நூலிற் சீராமமூர்த்தியின் திருவவதாரமேயுரைத்து
“மற்றிவ்விராமகதையின் பூருவபாகம் முழுவதையுங் கடலிற்பெரிய தமிழ்க்கல்வியினையுடைய கம்பநாடர் நிகழ்ந்தவாறு
உரைத்தாராதலால் அதனை யீண்டு ஓதினேனில்லை; அவருரையாத அக்கதையின் உத்தரபாகமே யானினியோதப்புக்கேன்”
என்னுங்கருத்தினை வெளிப்படுத்த,

பொற்றா மரைமா னொழியாது பொலியு மார்ப
வெற்றாங்கு மேனி ரகுராம சரிதை யாவுங்
கற்றார் கலியிற் பெரிதாந் தமிழ்க் கம்பநாட
னுற்றாங் குரைத்தானுரையாத வோது கிற்பாம். என ஒரு பாடலைக்கூறி அதன்பின்னே
சீதை வனம்புகுதல், இலவணன்வதை, சம்புகன்வதை, இராமாவதார நீங்குதல் முதலாகிய உத்தரகாண்டக் கதைகளையே
பல படலங்களாற் பாடியதனையும் ஈண்டைக்கு ஆராய்ந்து கொள்க.
இவ்விரகுவம்மிசச் செய்யுளாற் கம்பர் உத்தர காண்டம் பாடினாரில்லையென்பது நன்கு தெளியப்படும். இனிச் சில இராமாயண ஏடுகளில்,

கரைபொரு காண்டமேழு கதைகளாயிரத்தெண்ணூறு
பரவிய பாடைபத்து படலநூற் றைம்பத்தாறு
ளுரைதரு விருத்தம்பன்னீ ராயிரத் தொருபத்தாறு
வரமிகு கம்பன்சொன்ன வண்ணமு மெண்பத்தேழே. என ஓர் செய்யுள் உள்ளது.
மேற்காட்டிய பிரபலமான பிரமாணங்களோடு பகைத்தலால் பண்டை வழக்கறியாதார் ஒருவர்
பிற்காலத்து இயற்றியதாகுமெனக் கொள்ளத்தகும்.
‘கரைபொருகாண்டமாறு’ என்னும் முதலோடு, அதற்குப் பொருந்திய படலமுதலியவற்றின் வரையறையையுமுடைய
பழைய பாட்டொன்றைப் பிற்காலத்தார் ஏழுகாண்டங்கட்கும் ஒருவாறு இயையத்திரித்து இவ்வாறு வழங்கினரென ஊகித்தலுமாம்.
இச்செய்யுளிற் கணக்கிட்ட ஏழுகாண்டச் செய்யுட்டொகையினின்று உத்தரகாண்டச் செய்யுட்டொகையாகிய 1500ஐக் கழித்து
நோக்கின் மற்ற ஆறுகாண்டங்கட்கும் உரிய செய்யுட்டொகை 10516 ஆகும்.
இக்காலத்து முதல் ஆறுகாண்டங்கட்கும் உள்ள செய்யுட்டொகை
அச்சுப் பிரதிகளில் 10587ஆகவும் ஏட்டுப் பிரதிகளில் 10825; 10685 ஆகவும் பல வேறுவகைப்படுவது,
ஆறுகாண்டங்கட்கும் உள்ள படலத்தொகையும் இங்ஙனமே 113, 115, 128, 137 எனப்பலவாறாகக் காணப்படுகின்றது.
உத்தரகாண்டச் செய்யுட்டொகை, 1500 என்பதிற் பெரும்பான்மை வேறுபாடு காணாவிடினும்
அதன் படலத்தொகை 18, 23, என வேறு வேறு காணப்படுகிறது. இவ்வளவு மாறுபாடுற்ற இக்காலத்துப் பிரதிகளைக் கொண்டு
இச்செய்யுளில் கண்ட வரையறைகட்குப் பொருந்தவுரைப்பது அரிதாமென்க.
அன்றியும் புறத்திரட்டுடையார் இராமாவதாரமெனப் பெயரிட்டாண்ட,

எய்தவின்னல் வந்த போழ்தி யாவரேனும் யாவையுஞ்
செய்ய வல்ல ரென்ப தோர்க சென்னெறிக்க ணேகிட
மைய கண்ணி செய்ய பாதம் வல்ல வாய மற்றிவன்
கைக ளின்று பன்ன சாலை கட்ட வல்ல வாயவே (இடுக்கணழியாமை – 15) என்னுஞ் செய்யுளுக்கு வேறாக இக்காலத்து

மேவு கான மிதிலையர் கோன்மகள்
பூவின் மெல்லிய பாதமும் போந்தன
தாவி லெம்பிகை சாலை சமைத்தன
யாவை யாது மிலார்க்கியை யாதவே.
(அயோத்திய காண்டம். சித்திரகூடப்படலம்) என ஒரு செய்யுள் காணப்படுதலாற்
கம்பர் பாடிய பாடல்கள் சில பிற்காலத்து விடப்பட்டும் பிறர் பாடியன சில இடையிடையே மடுக்கப்பட்டும்
இப்போதைப் பிரதிகளுள்ளனவென்று தெளியப்படும்.

பரிபாடலிலும் சிந்தாமணியிலும் பிற்காலத்துக் கந்தியார் என்பாரொருவர் தன்சொற்களையுஞ் செய்யுள்களையும்
இடைமடுத்தாற்போல இவ்விராமவதாரத்திலும் பிற்காலத்து வெள்ளியம்பலத் தம்பிரான் என்பாரொருவர்
தன் செய்யுள்கள் சிலவற்றை இடைமடுத்துப் போயினரென்பர். இவற்றை வெள்ளிபாடல் என்னும் பெயரான் வழங்குவர்.
இப்பிறழ்ச்சியேயன்றி எழுதினர் பிழைப்பாலும் பாடகர் பிழைப்பாலும் இவ்வேடுகளெய்திய மாறுபாட்டிற்கும் அளவேயில்லை.
ஆதலால் இந்நிலையில் கம்பர் ஆறு காண்டங்கட்கும் வகுத்த படலங்கள் இத்துணையெனவும், பாடிய பாடல்கள் இத்துணையெனவும்,
அப்படலங்களும் பாடல்களும் இவை இவை எனவும் வரையறுத்துணர்த்தல் இயலாதென்றுணர்க.
மேற்குறித்த மாறுபாடுகளொன்றும் எய்தாதனவும், புறத்திரட்டில் இராமவதாரம் என்று பெயரிட்டு எடுத்தாளப்பட்ட
செய்யுள்களெல்லாம் தம்பாலுள்ளனவும் ஆகிய மிகப்பழைய ஏடுகள் சில கிடைத்தனவாயின்
இவ்வரையறைகளின் உண்மை நன்கு புலனாகும் என்று கொள்க.

இனி கம்பர் தாம் பாடியருளிய இராமாவதாரத்துள் சடைய வள்ளலது பெருநன்றி பாராட்டி அவ்வள்ளலை
ஆங்காங்கு ஒருபது கவிகளால் புகழ்ந்துள்ளனரென்பது,

எண்ணத்தகும்பா ருள்ளளவு மிரவிமதிய மெழுமளவும்
கண்ணிற்கினிய சயராம் கதையிலொருபான் கவிமுழுதுங்
வெண்ணெய்ச்சடையன் சடையனென விறலார்கம்பன் விளங்கவைத்த
வண்ணத்துரைவே ளான்பெருமான் வளஞ்சேர் சோழ மண்டலமே.(சோழமண்டல சதகம்.)என்னுஞ் செய்யுளாற் றெரிகின்றது.
அப்பத்துப் பாடல்களாவன :-

நடையி னின்றுயர் நாயகன் தோற்றத்தின்
இடைநி கழ்ந்த விராமாவ தாரப்பேர்த்
தொடைநி ரம்பிய தோமறு மாக்கதை
சடையன் வெண்ணெய் நல்லூர்வயிற் றந்ததே. (பாயிரம்.)

விண்ணவர் போயபின்றை விரிந்தபூ மழையினாலே
தண்ணெனும் கானநீங்கித் தாங்கருந் தவத்தின் மிக்கோன்
மண்ணவர் வறுமைநோய்க்கு மருந்தன சடையள் வெண்ணை
யண்ணறன் சொல்லேயன்ன படைக்கல மருளினானே. (பாலகாண்டம், வேள்விப்படலம்)

அரம டந்தையர் கற்பக நவநிதி யமிழ்தஞ்
சுரபி வாம்பரி மதமலை முதலியதொடக்கற்
றொருபெ ரும்பொருளின்றியே யுவரிபுக் கொளிப்ப
வெருவி யோடின வெண்ணைவாழ் கண்ணன்மேவாரின் (க்ஷெ அகலிடைப்படலம் 18)

வண்ண மாலைக் கைபரப்பி யுலகை வளைந்த விருளெல்லா
முண்ண வெண்ணித் தண்மதியத் துதயத்தெழுந்த நிலாக் கற்றை
விண்ணு மண்ணுந் திசையனைத்தும் விழுங்கிக் கொண்ட விரிநன்னீர்ப்
பண்ணை வெண்ணைச் சடையன்றன் புகழ்போலெங்கும் பரந்துளதால். (க்ஷெ மிதிலைகாண்படலம். 74.)

மஞ்செனத் திகழ்தரு மலையை மாருதி
யெஞ்சலிற் கடிதெடுத் தெறிய வேநளன்
விஞ்சையிற் றாங்கினன் சடையன்வெண்ணையிற்
றஞ்சமென் றார்களைத் தாங்குந் தன்மைபோல். (யுத்தகாண்டம், சேதுபந்தனப்படலம்.)

வாசங்கலந்த மரைநாளநூலின் வகையென்ப தென்னை மழையென்
றாசங்கைகொண்ட கொடைமீளியண்ணல் சரராமன் வெண்ணை யணுகுந்
தேசங்கலந்த மறைவாணர் செஞ்சொ லறிவாள ரென்றிம் முதலோர்
பாசங்கலந்த பசிபோலகன்ற பதகன்றுரந்த வுரகம். (க்ஷெ நாகபாசப்படலம். 263)

வன்னிநாட் டியபொன் மொளலி வானவன் மலரின் மேலான்
கன்னிநாட் டிருவைச் சேர்ந்த கண்ணனுமாளுங் காணிச்
சென்னிநாட் டெரியல் வீரன் றியாகமா விநோதன் தெய்வப்
பொன்னிநாட் டுவமைப்பைப் புலன்கொள நோக்கிப் போனான்.(க்ஷெ மருத்துமலைப்படலம். 58)

அந்தணர் வணிகர் வேளாண் மரபின ராலி நாட்டுச்
சந்தணி புயத்து வள்ளல் சடையனே யனைய சான்றோர்
ருய்ந்தன மடிய மென்னு முவகைய ருவரி நாண
வந்தன ரிராமன் கோயின் மங்கலத் துரிமை மாக்கள்.
‘சங்கரனைய சான்றோர்’ எனவும் பிரதிபேதமுண்டு(க்ஷெ திருவபிடேகப்படலம்.)

அரியணை யநுமன் தாங்க அங்கத னுடைவாள் வாங்கப்
பரதன்வெண் கவிகை யேந்த விருவருங் கவரி பற்ற
விரைசெறி குழலி லோங்க வெண்ணைமன் சடையன் வண்மை
மரபுளோர் கொடுப்ப வாங்கி வசிட்டனே புனைந்தான் மொளலி. (க்ஷெ க்ஷெ. 38)

‘விரதமா தவர்களேத்த வெண்ணையூர்ச் சடையன் முந்தை’ எனவும்,
‘விரிகடலுலகங்காக்கும் வெண்ணைமன் சடையன் வண்மை’ எனவும்,
‘உரிமையி னயோத்தியுள்ளாருரைசெய் வெண்காடன் வந்த மரபினோர்’ எனவும் பிரதிபேதங்கள் உள்ளன.

8மறையவர் வாழி வேத மனுநெறி வாழி நன்னூன்
முறைசெயு மரசர் திங்கண் மும்மழை வாழி மெய்ம்மை
யிறையவ னிராமன் வாழி யிக்கதை கேட்போர்வாழி
யறைபுகழ்ச் சடையன் வாழி யரும்புக ழநுமன் வாழி.
(க்ஷெ விடை கொடுத்த படலம் வாழ்த்து)

இவற்றுள் ‘வெண்ணைவாழ் கண்ணன்’ எனவும் ‘கன்னிநாட்டிருவை சேர்ந்த கண்ணன்’ எனவும்
வருவனவற்றாற் சடையற்குக் கண்ணன் என்பதும் புலவர் கொடுத்த குணப்பெயராமெனத் தெரிகின்றது.
பலர்க்குக் கண்போன்றவன் ஆதலால் அவ்வாறு வழங்கினராவர். இக்கருத்துக்கியையவே
தண்ணார் கமலச்சதுமுகத் தோனை, என்னும் பாட்டில்
“பாரிலுள்ளோர் கண்ணாக வாழும் வெண்ணைத் திரிகர்த்தன்” என வந்ததுங் காண்க.
இராமகதையில் ஒரு பான் கவியாற் புகழப்பட்டவன் சடையனே என்பது
“சயராமகதையிலொரு பான்கவிமுழுதும், வெண்ணைச் சடையன் சடையனென விறலார் கம்பன் விளங்க வைத்த,
வண்ணத்துரைவேளாண் பெருமான்” என்று கூறுதலானும் அறியப்படும்.

இதற்குப் பொருந்தவே பாண்டிமண்டல சதகமுடையாரும்

தேனேறு மின்சொலி ராமாயணத்துத் திருவழுந்தூ
ரானே றனைய தமிழ்க்கம்ப நாட னமைத் துவைத்த
தானேரில் கீர்த்திசெய் வெண்ணெய்நல் லூரிற் சடையனைப் போல்
வானேறு சீர்த்திகொள் வேளாளர் பாண்டியன் மண்டலமே—எனக்கூறினார்.
இனி ‘அந்தணர் வணிகர்’ என்னுஞ் செய்யுளிற் ‘சங்கரனனையசான்றோர்’ எனவும்
‘அரியணையநுமன்’ என்னுஞ் செய்யுளில் ‘உரிமையி னயோத்தியுள்ளாரைசெய்வெண் காடன்வந்த மரபினோர்’ எனவும்
வந்த பாடங்களையே கொண்டு நோக்கிற் கம்பர் சடையனையல்லாமல் அவன் குலத்தவரையும் பாடினாரெனெ எண்ணலாகும்.
சங்கரன் என்பான் சடையன் தந்தை என்பது முன்னரே கூறப்பட்டது. வெண்காடன் என்பவன் சடையனுக்கு இன்னவுறவினன் என்பது
தெளியப்படவில்லையாயினும் நெருங்கிய சுற்றத்தவன் என்பது மட்டிலூகித்தலாகும்.
இச்சடைய வள்ளலது குலத்துப் பெண் வழியினரென்று சொல்லப்படுகின்ற மெய்கண்டதேவர்க்குச் ச்வேதவனப் பெருமாள் என
ஒரு பெயருளதாதல் பற்றி ஈண்டை வெண்காடன் என்பது அவர் பெயராக வைத்து அவர்க்குப் பிற்காலத்து ஒருவர்
இப்பாடத்தை இடைமடுத்தனரோ என ஐயுறுதற்கு மிடனுண்டாதலால் இப்பாடபேதங்களிலுண்மை இப்போது அறிதலறிதாகின்றது.

ஒருசாரார் கண்ணன், சரராமன் என்னுமிருவரும் சடையனுக்குத் தம்பியர் எனவும் கூறுவர்.
இவ்வாறு பகுத்தறிதற்கு ஏற்ற மேற்கோளொன்றும் யான் காண்கிலேன்.
அன்றியும் கம்பர், பாண்டியன் முன்னே இணையாரமார்பன் என்பானொருவனை இன்னவன் என்றுரைத்தவிடத்துச்
சரராமனுக்கிளையான் எனவே கூறியுள்ளார். சரராமன் சடையனின் வேறாய் அவனுக்கு இளையனேயாயின்
இயல்பாகவே மூத்தோனும் எல்லாரினுஞ் சிறந்து புகழ் பெற்றோனும் பல்லோரானும் நன்கறியப்பட்டோ னும் ஆகிய
சடையனுக்கிளையான் எனக்கூறுவல்லரது அவ்வாறு கூறார்; பின்னர்ச் சரராமனை இன்னவன் எனத் தெரிவித்தற்குச்
சடையன்றம்பி எனவே கூறவேண்டும்.

இவையல்லாமற் கம்பர் தெய்வவரத்தினாற் கவி சொல்லிய நாளில் முதன்முதற் பாடிய ‘மோட்டெருமை வாவிபுக’ என்னும்
வெண்பாவில் வெண்ணெய்நல்லூரைச் சரராமனூர் எனப்பாடுதலால் சடையனினும் முற்படச் சரராமனது நன்றியே பாராட்டினார்
எனக் கருதற்கும் இடனாகும். சோழமண்டல சதமுகமுடையார், ஒருபான் கவிமுழுதும் வெண்ணைச்சடையன் புகழப்பட்டுள்ளான்
எனக் கருதியதும் தவறாகும். கம்பர் தம்மால் நன்றி பாராட்டிப் புகழப்பட்டார் பலராகவும், நூல் இறுதியிற் சடையன் ஒருவனையே
வாழ்த்தலும் தாம் சாகும்போதும் அச்சடையனது நன்றியே நினைந்துருகுதலும் பொருந்தாவாம்.
இவற்றால் அவ்வொருசாரார் கூற்றுப் பெரிதும் ஐயப்படுதலுடைத்து. மழையென்றா சங்கை கொண்ட கொடைமீளியண்ணலும்,
மண்ணவர் வறுமைநோய்க்கு மருந்தானவனும், பாரிலுள்ளோர் பலர்க்குக் கண்போன்றவனும், திரிகர்த்தன் எனப் பட்டம்
பெற்றவனுமாகிய வெண்ணைச் சடையனொருவனே சரராமன், கண்ணன் என்னும் பெயர்களானும் விளங்கினோன்
எனக்கருதுதற்கண் மேற்காட்டிய இடையீடொன்றும் எய்தாமையும் பலவற்றுக்கும் பொருந்தியதாலும் ஆராய்ந்து கொள்க. இவர்,

“புவிபுகழ் சென்னிபோ ரமலன் றோழ்புகழ்
கவிகடம் மனையெனக் கனக ராசியுஞ்
சவிபுடைத் தூசுமென் சாந்தும் மாலையு
மவிரிழைக் குப்பையு மளவி லாதது”–(கிட்கிந்தாகாண்டம், பிலநீங்குபடலம்.)

“சென்னிநாட் டெரியல் வீரன்றியாகமா விநோதன் தெய்வப்
பொன்னிநாட் டுவமை வைப்பைப் பலன்கொள் நோக்கிப்போனான்.” (யுத்தகாண்டம், மருத்துமலைப் படலம்)

எனப்பாடுதலான் இவரைச் சிறப்பித்துயர்த்திய சோழனும் இவரால் நன்றி பாராட்டப்பட்டுள்ளான் என்பது அறியலாகும்.
இனி இவர் இராமாவதாரம் அரங்கேற்றியது திருவரங்கப் பெரியகோயிற்கண்ணே யென்பதும் அந்நாள் பங்குனி உத்திரமாம் என்பதும்,

திண்மையேறுங் கம்பனிடஞ் செய்யத்தகும்பல் சிறப்பயர்ந்து
நண்மையேறு மிராமகதை நற்பேர்புவியிற் றழைத்தேற
வுண்மையேறுந் திருவரங்கத் தொருவன்சபையி லுத்தரநாள்
வண்மையேற வரங்கேற்றி வைத்தார்சோழ மண்டலமே.

“பண்ணிய விராமகாதை பங்குனி யுத்தரத்திற்
கண்ணிய வரங்கர் முன்னே கவியரங் கேற்றினானே”.–என்பனவற்றானறியப்படும்.
பங்குனியுத்தரநாள் சீராமமூர்த்தியின் திருக்கல்யாண தினமாதலால் அதனையே தாம்பாடிய இராமாவதாரம்
அரங்கேற்றுதற்கு உரிய மங்கலநாளாகக் கொண்டனராவர்;

பங்குனி யுத்தர மான பகற்போ
தங்க ணிருக்கினி லாயி நாமச்
சிங்க மணத்தொழில் செய்த திறத்தான்
மங்கள வங்கி வசிட்டன் வகுத்தான் (கடிமணப்படலம்) எனக் கூறியதனையும் நோக்கிக்கொள்ளுக.
‘பங்குனி யுத்த நாளில்’ என்னும் பிரதிபேதமுமுண்டு. அது சோழ மண்டல சதகத்துக் கூறப்பட்டதனோடு மாறுபடுதலையும்
பங்குனி யுத்தரம் போலச் சிறவாமமையும் தேர்ந்துகொள்க. இவர் சோழனது அவையிலரங்கேற்றாமற் பெரியகோயிலையே
அதற்கேற்ற நல்லவையாகக் கருதியதனானே, இவர் அரசவையிலும் அறிவுடையந்தணரது நல்லவையையே பெரிதும் மதித்தனரென்பதும்,
ஒருவரான் வேண்டப்படாமற் றாமே தமது சீராமபத்தி முதிற்ச்சியாற் பாடிய பெருநூலாகலின் அதனை அப்பெரிய கோயிற் கடைத்தலை
பற்றி வாழும் பரமபத்தர்களான அரியபெரியார்கள் திருச்செவிகளில் ஏற்பிக்கவே உள்ளமுவந்தனரென்பதும் நன்குணரலாகும்.

இவர் இராமாவதாரம் அரங்கேற்றுதற்காகத் திருவரங்கப் பெரியகோயிலையெய்தி ஆண்டைப் பிரணவாகார விமானத்து
அறிதுயிலமர்ந்த கருணைமாமுகிலைச் சேவித்து நின்றபோது அவ்விறைவன், இவரது பத்திக்குவந்து இவரைத்
தன்னடியார்க்கு ஆட்படுத்தக்கருதி “நஞ்சட கோபனைப் பாடினையோ” என்று அருச்சகர் முகனாய்த் திருவுளம்பற்றித்
தமிழ்மகளின் தவப்பேறனைய சடகோபரது பரமஞானபத்தியதிசயத்தை இவர் நெஞ்சிற்றேற்றுவித் தருளினான்.
அப்போதே இவர் அவ்வாழ்வாரது திருக்கோயின் முன்றிலிற் புக்குப் பணிந்து கிடந்தார்க்கு ஆழ்வாரது திருவருணோக்கம் உண்டாயிற்று.
அந்நிலையிலெழுந்து ஆழ்வாரைப்போற்றி, ‘வேதத்தின் முன்செல்க’ என்றெடுத்துத் தேனெனப் பாலெனச் சில்லமிழ் தூற்றென
ஒருநூறு செய்யுள் அந்தாதியாகப் பாடி ஆழ்வார்க்கடியராய்ச் சிறந்தனர்.
இதன்பின்னேதா னிராமாவதார வரங்கேற்றம் சிறப்பாக நிறைவேறியடென்ப. இவர் சடகோபரந்தாதிக்கண்,

“பாவைத் திருவாய் மொழிப்பழத் தைப் பசுங் கற்பகத்தின்
பூவைப் பொருகடற் போதா மமுதைப் பொருள் சுரக்குங்
கோவைப் பணித்தவெங் கோவையல் லாவென்னைக் குற்றங்கண்டென்
நாவைப் பறிப்பினு நல்லோரன் றோமற்றை நாவலரே.”–எனப்பாடுதலால்
இவர் இராமாவதாரம் அரங்கேற்றப் புக்கபோது திருவரங்கத்துள்ள பெருநாவலர்கள் இவர்க்கு ஆழ்வார் சம்பந்தமில்லாமை
பற்றி இவர்பாற் பலகுற்றங் காணத் தலைப்பட்டனரெனவும் ஆழ்வாரைப்பாடியடியராயபின்னே தான் இவர் அவர்களால்
அபிமானிக்கப்பட்டனரெனவும் கொள்ளத்தகும். இவர் ஆழ்வாரால் அருளப்பட்டனரென்பது,

இழைத்தா ரொருவரு மில்லா மறைகளை யின்றமிழாற்
குழைத்தார் குருகையிற் கூட்டங்கொண் டார்கும ரித்துறைவர்
மழைத்தார் தடக்கைக ளாலென்னை வானின்வரம் பிடைநின்
றழைத்தா ரறிவுந்தந் தாரங்கும் போயவர்க் காட்செய்வனே.

நாய்போற் பிறர்கடை தோறு நுழைந்தவ ரெச்சினச்சிப்
பேய்போற் றிரியும் பிறவியி னேனைப் பிறவியென்னும்
நோய்போ மருந்தென்னு நுன்றிருவாய்மொழி நோக்குவித்துத்
தாய்போ லுதவிசெய் தாய்க்கடி யேன்பண்டென் சாதித்ததே. என இவர் பாடுதலான் நன்கறியலாகும்.
இவர் ஆழ்வாரது திருவாய்மொழியினை எவ்வளவாக மதித்தனரென்பது

பண்ணுந் தமிழுந் தவஞ்செய் தனபழ நான்மறையு
மண்ணும் விசும்புந் தவஞ்செய் தனமகிழ் மாறன்செய்யு
ளெண்ணுந் தகைமைக் குரியமெய் யோகியர் ஞானமென்னுங்
கண்ணும் மனமுஞ் செவியுந் தவஞ்செய்த காலத்திலே.

உரிக்கின்ற கோடலி னுந்துகந் தம்மென வொன்றுமின்றி
விரிக்குந் தொறுவெறும் பாழாய் விடும்பிறர் புன்கவிமெய்
தெரிக்கின்ற கோச்சட கோபன்றன் றெய்வக் கவிபுவியிற்
சுரிக்கின்ற நுண்மணலூற்றொக்குந் தோண்டச் சுரத்தவினே.–என்னும் இவர் பாடல்களான் உணரப்படும்.

(இவ்வுவமை இராமாவதாரத்தும் வந்தது கண்டு கொள்க.)

தேவிற் சிறந்த திருமாற்குத் தக்கதெய் வக்கவிஞன்
பாவிற் சிறந்த திருவாய் மொழிபகர் பண்டிதனே
நாவிற் சிறந்தநம் மாறற்குத் தக்கநந் நாவலவன்
பூவிற் சிறந்தவாழ் வான்கம்ப நாட்டுப் புலமையனே. என்னுஞ் சடகோபரந்தாதிப் பாயிரத்தான்
அத்திருவரங்கத்துள்ள பெரியாரெல்லாம் இவரை நம்பெருமாளுக்கு உரியராகிய நம்மாழ்வார்போல,
நம்மாழ்வார்க்குரியராகிய நந்நாவலரென்று உரிமையினுயர்த்தி அன்பு பாராட்டினாரென்பது தேறப்படும்.
நன்னாவலவன் என்றும் பாடமோதுவாருமுளர்.

இனிச் சில இராமாயண ஏடுகளில் விடைகொடுத்த படலத்த்ன்பின் சில அரிய செய்யுட்கள் வரையப்பட்டுள்ளன. அவையாவன:

நாராயணாய நமவென்னு நன்னெஞ்சர்
பாராளும் பாதம் பணிந்தேத்து மாறறியேன்
காராரு மேனிக் கருணா கரமூர்த்திக்
காரா தனையென் னறியாமை யொன்றுமே.

பராவரு மிராமன் மாதோ டிளவல்பின் படரக்கான் போய்
விராதனைக் கரனை மானைக் கவந்தனை வென்றி கொண்டு
மராமரம் வாலி மார்பு துளைத்தணை வகுத்துப் பின்ன
ரிராவணன் குலனும் யொன்ற வெய்துட னயோத்தி வந்தான்.

வாள்வளஞ் சுரக்க நீதி மதுநெறி முறையெந் நாளுந்
தான்வளர்ந் திடுக நல்லோர் தங்கிளை தழைத்துவாழ்க
தேன்வளர்ந் தறாத மாலைத் தெசரத ராமன்செய்கை
யானளந் தறிந்த பாட லிடையறா தொளிர்க வெங்கும்.

ஆவின் கொடைச்சசர ராயிரத்து நூறொழித்துத்
தேவன் றிருவழுந்தூர் நன்னாட்டு-மூவலூர்ச்
சீரார் குணாதித்தன் சேயமையப் பாடினான்
காரார்கா குத்தன கதை.

தராதலத்தி னுள்ள தமிழ்க்குற்ற மெல்லா
மராவு மரமாயிற் றன்றே-யிராவணனை
யம்பினால் வீழ்த்தா னடிபணியு மாதித்தன்
கம்பனா டாள்வான் கவி.

ஆதவன் புதல்வன் முத்தி யறிவினை யளிக்கு மண்ணல்
போதவ னிராமகாதை புகன்றருள் புனிதன் மண்மேற்
கோதவஞ் சிறிது மில்லான் கொண்டன்மா றன்ளை யொப்பான்
மாதவன் கம்பன் செம்பொன் மலரடி தொழுது வாழ்வாம்

இம்பரு மும்பர் தாமுமேத்திய விராமகாதை
தம்பமா முத்தி சேர்தல் சத்தியஞ் சத்தியம்மே
யம்பரந் தன்னின் மேவு மாதித்தன் புதல்வன் ஞானக்
கம்பன்செங் கமல பாதங் கருத்துற விருத்துவாமே.

இவற்றுள்; முதன்மூன்றும் கம்பர் பாடியவாமெனத் தோற்றுகின்றது. மற்றை நான்கும் பிறர்பிறர் கூறியனவாகும்.

இறுதிச் செய்யுளில் ‘ஆதித்தன் புதல்வன்’ எனவருதலானும், அவ்வாதித்தன் என்னும் பெயரே மற்றையிரண்டு வெண்பாக்களிலும்
பயிறலானும் கம்பர் தந்தையார்க்கு ஆதித்தன் என்பது தெரிகின்றது.
இது பற்றியே “தராதலத்திலுள்ள” என்னும் பாட்டில் ‘ஆதித்தன் கம்பன்’ என வழங்கினர் என்று அறியப்படுகின்றது.
இது சங்கரன் புதல்வனான சடையனைச் ‘சங்கரன் சடையன்’ என வழங்கியது போல்வது.

ஆதவன் என்பது ஆதித்தனென்பதற்குப் பிரதிநாமமாதலால், இவரை, “ஆதவன் புதல்வன்” எனவும் வழங்கினராவர்.
‘ஆவின்கொடை’ என்னுஞ் செய்யுளில் “திருவழுந்தூர் நன்னாட்டு மூவலூர்ச் சீரார் குணாதித்தன்சேய்” என வருதலால்,
இவருடைய தந்தையார் திருவழுந்தூர் நாட்டு மூவலூரில் வசித்தவரெனத் தோன்றுவது.
கம்பர் பிறந்தவூர் திருவழுந்தூர் என்பது நன்கு தெளியப்பட்டதாதலின் அவ்விரண்டூர்களிலும் இவர் தந்தையார்
இருந்தனராவரெனக் கருதப்படுகின்றது. திருவழுந்தூரும், மூவலூரும் மிகவும் அண்மை ஊர்களென்பதும் உணர்க.
மேற்காட்டிய வெண்பாக்களிரண்டும், இவர் இராமாவதாரமரங்கேற்றிய காலத்து ஆண்டிருந்து கேட்டோர் பாடியவாமெனக் கொள்ளத்தகும்.

இவர் சோழனுடன் கோபித்துக் கொண்டது.

கம்பர் சோழனுடன் கோபித்துக் கொண்டு மதுரைக்குப் போகும்போது சொல்லியது.

காத மிருபத்து நான்கொழியக் காசினியை
யோதக் கடல்கொண் டொளித்ததோ–மாதவா
கொல்லி மலையுடைய கொற்றவா நீமுனிந்தா
வில்லையோ எங்கட்கிடம். (தமிழ்நாவலர் சரிதை)

இச்செய்யுளானும் இதன்றலைக் குறிப்பானும் கம்பர் சோழனுடன் கோபித்துக் கொண்டமை உணரப்படும்.
இதன்கட் கம்பர் சோழனை நோக்கி “நீ முனிந்தால்” எனக் கூறுதலால், அவன் இவரை முதற்கண் முனிந்தனனென்பது அறியப்படுகின்றது.
இவரைச் சோழன் முனிதற்குக்காரணம், இவர், பெருஞ்செல்வத்தினும், பெருங்கொடையினும், புலவரெல்லாம் ஒருங்குபாராட்டுஞ்
சிறப்பினும் சோழனாற் பெரிதும் அழுக்காறு கொள்ளப்பட்ட வெண்ணைச் சடைய வள்ளலையே மீப்படமதித்து
இராமாவதாரத்துப் புகழ்ந்து பாடியதேயாகும்.

சடையன், முடியுடையரசரும் அழுக்காறு கொள்ளும் வளப்பமும் வண்மையும் உடையனாயினான் என்பதற்குப் பல கதைகள் வழங்குவன.
அவற்றுட் சிலவற்றை ஈண்டைக்கேற்றவாறு சுருக்கியுணர்த்துவேன். முன்னர் இவர் சோழனால் பெரிதும் பாராட்டப் பெற்றவராவர்.

ஒருநாள் சடையவள்ளல் சோழனதவைக்களத்தே போந்து சிறக்கவீற்றிருந்தபோது, பெருங்குடி வணிகனொருவன்,
கடலிற்பட்ட அருவிலையுடைய பெருகொளிப்பருமுத்துகள் பலவற்றைக் கொணர்ந்து சோழன் திருமுன்னர் வைத்து,
‘இவை முடியுடை வேந்தர்க்குத் தக்கன’ என்று கூறாநிற்ப, அரசன் அவற்றைக் கண்டு மகிழ்ந்து புகழ்ந்தானாக,
அதுகண்ட சடையவள்ளல் கழனிபடு வளத்தையே மேம்படுத்தேத்தி, அக்கழனிபடுமுத்தைக் போல
இவை பெரியனவும் ஒள்ளியனவுமாகா’ என்று சோழற்கு மாறுரைத்தனன்.

அதுகேட்ட சோழன் கழனியில் முத்துப்படுவது கேட்டறிவதன்றி யாம் கண்டறிவதில்லை என்ன,
சடையவள்ளல் அது நுமக்கரிதாவதன்றி எமக்கன்று; நுமக்கு யான் அதுகாட்டுவேன் என்று,
தமது கழனியிற் கமுகுபோலப் பருத்துவளர்ந்துள்ள கரும்புகளில் ஒரு சிலவற்றைக்கொணருவித்து,
அவற்றுட் கோணிக் குறுகியதொரு கரும்பினை எடுத்து அதனொரு கண்ணை முறித்தனன்.
அதினின்று பல முத்துகள் தெறித்து வீழ்ந்து, அரசனது முடிமணியொளியினும் பேரொளி பரப்பின.

அப்போது சடையவள்ளல் தன் கழனிகளிலொன்றில் ஆயிரக்கணக்கான கரும்புகளில் ஒரு சிலவற்றானாயதொரு
சிறுகட்டின்கணிருந்தவற்றில் ஒரு கோணற் சிறுகரும்பின் ஒரு கண்ணிலிருந்தன இவை என்றும்,
இங்ஙனமே தன்கழனிதோறும் உள்ளனவற்றையெண்ணிற் கணக்கிலவாமென்றும் அரசற்கு எடுத்துக் கூறினன்.
அதுகேட்டு, அரசவையிலிருந்த சான்றோரெல்லாம் ‘சடையன் கழனிபடுவ கடல்படா’ என்று புகழ்ந்தனர்.
கரும்பினின்று தெறித்த முத்துகளெல்லாம் ஒளியானும் பருமையானும், வணிகன் கொணர்ந்த கடல்படு முத்துகளையும்
வென்று சிறத்தலை அரசன் கண்ணாரக்கண்டு, முகத்தான் வியந்து, அகத்தாற் சடையனது செல்வத்தில் அழுக்காறு கொண்டனன் என்ப.

இவ்வரியகதையே மேல் இணையார மார்பனைப் பாண்டியன் இவன் ஆரென்னும்போது கம்பர் பாடும் வெண்பாவிற்
“கன்னன்மதயானைக் கண்டன்மகந்முன்னங் கணையாழி முத்துதிர்க்கும்” என்பதனாற் குறிக்கப்படுவதாகும்.
மதயானைக் கண்டன்மகன் முன்னங் கன்னலினின்று கணையாழி முத்தினை உதிர்க்கும் என உரைக்க.
கணையாழிமுத்து-திரட்சியையுடைய கடல்முத்து.

பின், ஒருநாள் வடநாட்டு வணிகன் மற்றொருவன், முடிவேந்தர்க்கேற்ற நுண்ணிய தொழில் பலவியற்றிய
பெருவிலைப் பட்டொன்று கொண்டு சோழன்பால் எய்திய போது, சோழன் அவ்வழகிய பட்டாடையைக் கண்டு
அதனைப்பெறுதற்கு மனமுவந்து அதற்குரியவிலையை அவ்வணிகன் பால் வினாயினான்.
அதற்கு வணிகன் கூறிய விலைப் பொன்னளவு, தனது பெருநிதியறைக்கணுள்ள பொன்னளவினும் பன்மடங்கு அதிகமானது கண்டு,
அரசன் அவ்வழகிய பட்டினைக் கொள்ளவியலாமல் மனம்வாடி, அவ்வணிகனைச் செலவிடுத்தனன்,
பின்பு, அவ்வணிகன், அரசனினும் சடையவள்ளலையே பெருஞ்செல்வனாக நாடுமுழுதும் புகழ்தலைக் கேட்டு
வெண்ணெய்நல்லூரெய்தி அவ்வள்ளல் பால் அப்பெருவிலைப்பட்டைக் காட்டி நிகழ்ந்ததுரைக்க,
அவ்வள்ளல் மகிழ்ந்து அதனைக் கொள்ளுதல் கருதி விலையினைச் சொல்லக்கேட்டு,
இப்பட்டின் மென்மையையும் நுண்டொழிலையும் கருதுமிடத்து இவ்விலை மிகவுஞ் சிறியதேயாமென்று நினைந்து,
தனது பெருநிதியறைக்கணிருந்து அதன் பெருவிலையை எளிதினல்கி அப்பட்டினை வாங்கிக்கொண்டு வணிகனைச் செலவிடுத்தனன்.
இதன் மேற் சோழன் ஒருநாள் சடையவள்ளலைக் கண்டு அளவளாவவேண்டித் தூதரை விடுத்தானுக்கு,
அவ்வள்ளல் தனக்குத் துடையிற் புண்ணுண்டாயிருந்ததலால் இவ்வமயம் அரசவையெய்தற்கு இயலாதென்றும்,
அதுதீர்ந்து சிறிது குணப்பட்டவாறே ஆண்டுதான் எய்தலாகுமென்றும் ஓலை போக்கி, சின்னாளில் அப்புண் சிறிது தீர்ந்தவாறே,
முன் வணிகன்பால் வாங்கிய பெருவிலைப்பட்டினை உடுத்துக் கொண்டு சோழன்பால் எய்தினான்.
சோழன், தன்னாலுங் கொள்ளற்கியலாத அப்பட்டைச் சடையனதரையிற்கண்டு வியப்பும் அழுக்காறும் மிக்கு
முகத்தான் அளவளாவுதற்கிடையே ‘துடையிற் புண் தீர்ந்து முழுதும் குணப்பட்டதில்லையே: இப்போது எவ்வளவிலுள்ளது;
அதனையாள் காணவிரும்புவல்’ என அன்புடன் மொழிந்தனனாக, அப்போது சடையன்,
உடுத்த ஆடையைத் திரைந்து நீக்கித் துடையைக் காட்டுதல் அரசர் மரியாதைக்குப் பொருந்தாதென்று கருதுத்,
தான் பெருவிலை கொடுத்துப் பெற்ற அப்பட்டாடையைப் புண்ணுள்ள இடத்துக்கு நேரே கையாற் கிழித்து அப்புண்ணளவிற் கட்டினான்.
அது கண்டு அரசன், எமக்கரியதாய்த் தன் செல்வமிகுதி தோன்றற்குக் காரணமான
இப்பட்டாடையையும் இவன் ஒரு பொருளாகக் கருதினானில்லை; இவன் செல்வநிலையும் மனநிலையும் இருந்தவாறென்னே!
என்று முன்னினும் அதிகமாக இவன்பால் அழுக்காறுகொண்டனன் என்பர். இவ்வரிய கதையே,

“… … … ஆறாத்
துடையிலெழுசிலந்தி தோற்றுவிக்கப்பட்டின்
புடைவை கிழித்த பெருங்கை” எனத் திருக்கை வழக்கத்தினும்,

“விளைவாஞ் சிலந்தியை ஆடையைக் கீறி வெளியிலிட்டும்
வளமான கீர்த்திகொள் வேளாளர்” எனப் பாண்டிமண்டல சதகத்திலும் பாராட்டப்பட்டிருத்தல் காண்க.
தன்னால் விலைகொடுத்துக் கொள்ளற்கியலாததொன்றை இவன் கொண்டதனைத் தனக்கறிவிக்கவே,
இவன் இப்பட்டுடுத்திப் போந்தானென்றும், தான் அதிகமாக மதித்துள்ள இவ்வரிய பட்டாடையையும்
இவன் ஒரு பொருளாக மதியாமையைத் தனக்குணர்த்தவே இவ்வாறு கிழித்தனன் என்றும்
சோழன் கருதிச் சடையன்பாற் செற்றங்கொண்டனனாவன். அன்றியும்,

“மரபுதங்கிய முறைமை பேணிய மன்னர்போகிலெனாகிலென்
………………………………………….
சங்கரன் றரு சடையனென்றொரு தருமதேவதை வாழவே”

எனச் சங்கரன் பாடல்பெறுதலாலும் இவன்பால் அரசன் அழுக்காறு கொண்டனனாவன்.
இது முற்காலத்துப் பாரியென்னும் வள்ளற்றலைவன்பால் தமிழ் மூவேந்தரும் அழுக்காறு கொண்டதனோடு ஒக்கும்.

இனி, வேறொரு வணிகன், பெரும்பொருள் செலவு செய்து நெடுங்காலஞ் சென்றாலும் தனது தூய்மையினும்
நறுமணத்தினும் குறைவுறாத மேலான கலவைச்சாந்தை மிகுதியாக இயற்றி அதனை ஒரு வண்டியிலுய்த்துச் சோழன்
பாலெய்தினானுக்கு, தக்க பொருள் கொடுத்து அந்நறுஞ் சாந்தினைப் பெறுதற்கியலாமல் அவ்வணிகனை அரசன் செலவிடுக்க,
அவன் சடையன் பாற்சென்று நிகழ்ந்தது தெரிவிக்க, இவ்வாறு முடியுடையரசரும் பெறுதற்கியலாத இத்தகைப்
பொருள்களெல்லாம் தன்பாலெய்தற்கு இவ்வளம்பெறு கழனியே காரணமென்றும், அஃதே இவற்றை அனுபவித்தற்குரியதென்றுங் கருதி,
அச்சாந்து முழுதையும் சில கழன்களில் உழுதொளியுடன் கலக்கி அச்சாந்துக்குரிய விலைப் பொருளை அது கொணர்ந்த
வணிகற்கு ஈந்து விடுத்தனன் எனவும், அதுகேட்டுச் சோழன் சடையன்பால் அழுக்காறுஞ்செற்றமுங் கொண்டனனெனவுஞ்சொல்லுவர்.

பின்னொரு காலத்து, புலவர் பலர் பரிசில் பெறுதற்கு வெண்ணெய் நல்லூரையெய்திச் சடையனது
வளமனைக்கண் வீற்றிருந்தாராக, அவ்வமயம் கழனிவெளியிற் சென்றிருந்த சடையவள்ளல் தம் மனைமுற்றத்தைச் சார்ந்த
வளவில் ஆண்டு நெல் மிகுதியாகச் சிதறுண்டு கிடத்தலைக் கண்டு, மக்கட்கு உயிர்போலச் சிறந்த இந்நல்லுணவு
இவ்வாறு பலர் காலிற்பட்டுப் போவதாகாதே என்னுங் கருத்துக் கொண்டு அவற்றைப் பொறுக்கி ஒருங்கு சேர்க்கத் தலைப்பட்டனன்.
ஆண்டுக் குழுமிய புலவரெல்லாரும் அவ்வள்ளலது திருவுளத்தினைத் தேறாமல், இவ்வாறு ஒவ்வொரு நெல்லையும் விடாமற்
பொறுக்கிச் சேர்ப்போன் நமக்கெவ்வாறு பொருள் வழங்க வல்லான்! என்று தம்முள்ளே கூறியிழிந்தனர்.
அதனைக் குறிப்பானுணர்ந்த சடையவள்ளல் சிதறிய நெல்முழுதையும் பொறுக்கிச் சேர்த்துவிட்டுக் கூடிய
புலவர்க்கெல்லாம் நல்வரவு கூறி அவர்கட்குணவளித்தர்கு விரைந்து அவர்களனைவரையும்
வரிசைப்பட அமர்த்தி வைத்து உண்கலனமைத்தனன்.

பொன்னையே அமுதும் பொரிக்கறியுமாகப் படைத்து அவற்றை உண்டு பசிதீருமாறு வேண்ட, அவரெல்லாம் ஒன்றும்
அறியாராய்த் திகைத்திருந்தவளவில், பொற்கறியும் பொன்னமுதும் உண்டற்காகாவாதலால் இவற்றையெடுத்து வெளியே
எறிந்து விட்டு வேறுண்கலம்பரப்பி நெற்சோறளிக்க என ஆவினான். உடனே தொழிற்குரியார் அவ்வாறே புரியப்,
புலவர்கள், வயிறாரவுண்டு கைகழுவி வாய் பூசி வெளியிற் குப்பையிலெறியப்பட்ட பொன்களைத் தாம்தாம்
விரைந்து பொறுக்கிக் கொள்ளப் புக்குழி, அவர்கள் ஒருவரோடொருவர் கலகம்பட்டுப் பூசன்மிகுத்து நின்றார்கள்.
அப்போது சடையவள்ளல் அங்கேபோந்து ‘எச்சிற்கலத்துக்குப் பெரும்புலவர்கள் இவ்வாறு கலகமிடலாகாதே’ என்று கூறி
அவர்கட்கு வேண்டுவன நல்கி விடுத்தனன் என்ப. இவ்வரிய கதையினொருபகுதியே,

“பொன்னா லமுதும் பொரிக்கறியுந் தான்கொணர்ர்ந்து
நன்னா வலர்க்களித்த காணயக்கை”–எனத் திருக்கைவழக்கத்திற் பாராட்டப்பட்டிருப்பதாகும்.

இவ்வாறு முடியுடை வேந்தரும் அழுக்காறுகொள்ளும் வளப்பமும் வண்மையும் சடையவள்ளல் உடையனாய்ச்
சிறந்தனனென்பதற்கு இயையக் கேட்கப்படுங் கதைகள் பலவாம். இத்துணையுங் கூறியவற்றாற்,
சோழன் சடையன்பால் அழுக்காறு கொண்டிருந்தனனென்பது ஒருதலையாம். அவ்வழுக்காறடியாகச் சடையற்க்குயிர்த்
துணையாய்ச் சிறந்த கம்பர்பாலும் சோழற்கு வெறுப்புண்டாயிற்றென்பது பொருந்திற்றேயாம்.
பல்லாற்றானும் தன்னால் அழுக்காறு கொள்ளப்பட்ட சடையனுக்கே கம்பர் உயிர்த்துணையாய்ச் சிறந்து
அவனையே மீப்படப்பாராட்டியதும், தமக்கு அரசர்க்கொத்த வரிசை பலவளித்துத் தம்மை மிகவுமுயர்த்திய தன்னை
அவ்வாறு பாராட்டாமையுமே சோழன் இவரை முனிதற்குக் காரணமென்பது உணர்ந்து கொள்க.
இஃதன்றி வேறு வேறு கூறுவாருமுளர். பின்னர் பாண்டிய மன்னரால் பெரிதும் ஆதரிக்கப் பெற்று மீண்டும் சோழ நாடு திரும்பினார்.

கம்பர் பின்னொருகாற் சோழனுடனேகோபித்துக் கொண்டபோது சொன்ன வெண்பா

மன்னவனு நீயெயோ மண்ணுலகு மிவ்வளவோ
வுன்னையோ யான்புகழ்த்திங் கோதுவ தென்னை
விருந்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ சோழா
குரங்கேற்றுக் கொள்ளாதோ கொம்பு.(தமிழ் நாவலர் சரிதை) எனவரிதலானறியப்படுகின்றது.
இவர் சோழனுடன் திரும்பவும் இவ்வாறு கோபித்துக்கொள்ளுதற்குக் காரணம் என்னையெனிற் கேறுவேன்.

கம்பருக்கு அம்பிகாபதி என்னும் பெயரிலோர் திருமகனாரிருந்தனர். அவரும் புலமையாற் சிறந்து அரசவையேத்த வாழ்கின்ற
காலத்துச் சோழன்றிருமகள் அவரைக் காமிக்க அவரும் அவளை விழைந்து களவினொழுகுதலைச் சோழன் தெரிந்துகொண்டு
அவரை ஒறுத்தற்க்குக் காலம் பார்த்திருந்தனன். அக்காலத்து அம்பிகாபதி பாடுவனவெல்லாம் சிற்றின்பம் பற்றியே
வரிதலை அரசன் தேர்ந்து ஒருநாள் அவன் அவரை நோக்கி “நீவிர் இப்போதே ஒருநூறு செய்யுள் சிற்றின்பம்பற்றாது
பேரின்பமே பற்றிப் பாட வல்லீரோ?” என வினாவ அவரும் “அங்ங்னம் பாட வல்லேன்” என்ன,
அரசன் அந்நூறிலொன்றேனுஞ் சிற்றின்பங் கலந்ததாயின் தலையை வெட்டிவிடுவேனென அவரும் ஒட்டிய
முறைதவறின் அவ்வாறே புரிக என்றுடன்பட்டுப் பாடிக்கொண்டிருந்தனர். இச்செய்தியைக் கேள்வியுற்ற
சோழன்மகள் தன் ஆசைநாயகருக்கு ஏதேனும் இடையூறு நேருமோ என்று கவன்றிருந்தவள் சில்போது கழிந்தவாறே
அம்பிகாபதியாரைக் காண்டல் வேட்கை மீதூர்ந்து மாளிகையின் மேனிலையினோர்புறத்தே மறைந்து நின்று
தலையை மட்டும் வெளிக் கொண்டு அவரிருந்த அரசவையை நோக்குவாளாயினாள்.
அந்நிலையில் அம்பிகாபதியார் தொண்ணூற்றொன்பது கவியும் பேரின்பமாகப் பாடியவர் ஊழ்வினை சூழ்தலான்
அம்மறைந்து நோக்கிய சோழன்மகள் தலையினைத் தாம் முற்படக்கண்டு மயங்கி நூறாஞ் செய்யுளொன்றைச்
‘சற்றே பருத்த தனமே குலுங்க’ என்றெடுத்துச் சிற்றின்பமாகப் பாடி முடித்தனர்.
அப்போதே சோழன் ஒட்டியநெறி பிழைத்தீரென்று அம்பிகாபதியார்க்கு உரைத்து அவர் தலையினை வாளாலெறிந்தனன்.
இந்நிகழ்ந்தவெலாம் கம்பர் கேட்டு விரைந்து போந்து வெட்டுண்டு கிடக்கும் மகனுடலைக் கண்டு ஆறாத்துயருடையராய்,

மட்டுப் படாக்கொங்கை மானார் கலவி மயக்கத்திலே
கட்டுப்பட்டாயென்ன காதல்பெற் றாய்மதன்கையம்பினாற்
பட்டுப்பட்டாயினுந் தேறுவையோவென்று பார்த்திருந்தேன்
வெட்டுப்பட் டாய்மக னேதலை நாளின் விதிபடியே.–என்னுஞ் செய்யுளைக் கூறித் தம்மகனார்க்குச் செய்வன செய்திருந்தனர் என்ப.
இங்ஙனந் தம்மருமை மகனாரை அரசன் கொன்றதே கம்பர் திரும்பவும் அவனுடன் கோபித்தற்குத் தலையாய காரணமாகும்.

இனி, கம்பர் வம்மிசத்தினர்க்குள் ஓர் அரிய கதை வழங்குகின்றது. அஃதாவது; –
கம்பருக்குக் காவேரி என்னும் பெயரில் ஓர் அழகுடைத் திருமகள் இருந்தனள். அவளைச் சோழன்மகன் முறை தவறி
விரும்பி அவளைத் தான் எய்தற்குப் பல்லாற்றானும் முயன்றனன். இது தெரிந்த அத்திருமகள் உயிரினும் பன்மடங்கு
சிறந்த கற்பினையழித்துப் பழிமலைந்து வாழ்தலினும், அவ்வுயிரையிழந்து புகழெய்தலே சீரிதாமெனத் தேர்ந்து,
கம்பர் திருமனையின்முற்றத்தொருபுறத்துக் கம்புநிறையப் பெய்திட்ட மிகவும் ஆழமான பெரியதோர் கம்பங்குழி நடுவில்
ஒருநள்ளிரவில் தனியே இறங்கி மூழ்கிமாய்ந்தனள். [கம்பு என்னுந்தானியத்தை ஒரு பெருங்குழி நிறையப் பெய்து
அதன்மேல் ஓர் திண்னியபொருளையிட்டால் அக்கம்பு எளிதிலிடம் விட்டுக் கொடுத்தலால், அப்பொருள் விரைந்து உள்ளே புக்கு மூழ்கலுறும்]
இங்ஙனம் தம்மருமைமகள் மாய்ந்தவகையினைக் கம்பர் ஆராய்ந்தறிந்து ஆற்றொணா இடரில் மூழ்கினவராகி,
‘இஃது அரசன் முறை தவறியதனானே எய்தியது’ என்று தெரிந்தபோது அரசனை முனிந்தனர் என்பதேயாம்.
இப்போதும் இவர் வம்மிசத்தினர் மேற்காட்டிய காவேரி என்னுங் கற்புடையாட்டியைத் தங்கள்வீட்டுத் தெய்வமாகக் கொண்டு
அவளது திருவுருவத்தை வழிபட்டு வருகின்றனர். இதுவும் கபர் சோழனை முனிதற்குத் தக்க பெருங்காரணமாம்.
இக்கதைகளில் உண்மை எவ்வளவோ! எனினும் கவிநயம் கருதி எழுதப் பெற்றது.

கம்பர் குறித்த தமிழ்ப்பெருமை

இக்காலத்துத் தமிழாராய்வாருட் சிலர் தமிழை வடமொழியினின்று திரிந்த மரூஉ மொழியெனவும்
சிலர் அவ்வாறு திரியாத் தனிமொழியெனவும் க்க்றுவர். வேறுசிலர் தமிழ் என்னும் பெயரே திரமிளம் என்பதன்றிரிபு எனவுரைப்பர்.
பின்னர் சிலர் அப்பெயர் தமி என்பதனடியாய்ப் பிறந்ததென்பர்;
சிலர் தமிழ் என்பது இனிமையென்னும் பொருட்டாதலின் அதுபற்றி அப்பெயர் எய்திற்றென்பர்.

சிலர் தமிழ்மொழி சிவபிரான் பாற்றோன்றியதெனவுரைப்பர்; சிலர் தமிழ்மொழி என்றுமுள்ளதெனவுரைத்து
அதனிலக்கணமே சிவபிரானரிளினர் என்பர்; சிலர் அகத்தியர் அவலோகிதன்பாற்றமிழ் கேட்டார் என்பர்;
சிலர் சிவபிரான்பால் கேட்டனர் என்பர். சிலர் அகத்தியர் தமிழிலக்கணமே செய்திலர் என்பர்.
சிலர் தமிழ் வடவெல்லையாகிய வேங்கடத்தைக் குமரக்கடவுள் வரைப்பு என்பர்.
சிலர் அதனை நிலங்கடந்த நெடுமுடியண்ணலதென்பர். சிலர் பாண்டிய நாட்டைச் செந்தமிழ்நாடென்பர்.
சிலர் சோணாட்டை அங்ஙனம் கூறுவர்.
சிலர் செந்தமிழ்ப் புலவர் பலர் ஒருங்கு குழுமி ஆராய்ந்த சங்கமென்பது முன்னில்லையென்பர்.
இவ்வாறு தமிழின் பெருமை வரலாறு முதலியன பற்றிக் கேட்கப்படுவன வேறு வேறு மிகப் பலவாம்.
இன்னோரன்ன பலவற்றைப்பற்றி இற்றைக்குப்பன்னூறு வருடங்கட்குமுற் சிறந்து விளங்கிய அரிய கல்வியில்
பெரிய கம்பர் கருத்தென்னவாமென ஆராய்வது இக்காலைத் தமிழ்மக்களால் விரும்பப்படுவதேயாகும்.

கம்பர் சீராமாயணமென்னுத் தேவபாஷைக்கதையினையே பாடப்புக்காரேனும், தாம் அத்திருக்கதையினைத் தம் அருமைத்
தாய்மொழியாகிய பெருமைத் தமிழ்க்கண்ணேயாகலான் தாம்கண்டு கேட்டுணர்ந்த தமிழ் நாட்டியல்புகளையும், தமிழ்வழக்குகளையும்,
தமிழ்நூல் பொருள்களையுமே கொண்டு கோசலை நாட்டியல்புகளையும் அயோத்தியர் வழக்காசாரங்களையும் வருணித்தனர்
என்று கருதுதலே பொருந்திற்றாகும்; என்னையெனின், மிகப் பழைய காலத்தே நிகழ்ந்தனவும் மொழியாலும் வழக்காலும்
இயல்பாலும் பல வேற்றுமப்பட்டனவுமாகிய வேற்றுநாட்டுச் சரிதைகளை மிகப்பிற்பட்ட காலத்தே அவ்வேற்றுநாட்டுப்
பரிச்சயமில்லாரொருவர் தந்தாய் மொழியில் புனைந்துரைக்கப் புகின், அவர்க்குத் தாங்கண்டு கேட்டுணர்ந்த தந்நாட்டு
வழக்கியல்புகளேயன்றி வேறு தோன்றாவாதலான் என்க. வான்மீகி முநிவர் ஒரு சுலோகம் ஒன்றானே மிகச்சுருங்கவுரைத்த
கோசலநாட்டினைக் கம்பர் வருணிக்கப்புக்கு மழையை முன்னோதி ஆற்றைச்சிறப்பித்து நானிலம் பகுத்துக்கொன்டு விரித்துப்
பலபல பாடல்களாற் புனைவதெல்லாம் தமிழ்நாட்டு இயல்பும் வழக்கும் பற்றியேயாகும்,
நாட்டு வருணனையில் மருதத்தையே மிகுத்துக் கூறுவதும் தாங்கண்ட காவிரிநாட்டியல்பு கொண்டேயாம்.

கம்பர் “காவிரி நாடன்ன கழனிநாடு” எனவும் “தெய்வப்பொன்னியே பொருவுங்கங்கை” எனவும்
“பொன்னிநாட்டு வமைவைப்பை” எனவும் ஆங்காங்குப்பாடுதலாலும் இக்கருத்து வலியுறுவதென்க.

அம்முநிவர் நூற்றுக்கணக்கான சுலோகங்களால் மிக விரித்துப்புனைந்த தசரதருடைய அசுவமேதத்தை
“முகமலரொளிர்தர” (திருவவதாரம்-86.) என்னுஞ் செய்யுளொன்றானே கம்பர் மிகச்சுருங்கவுரைத்து விடுதலும்
தமிழர் சுவைக்கேற்பது கருதியேயாம்.

கம்பர் வான்மீகி முனிவர் போல அயோத்தியை அஷ்டா பதாகாரமான கட்டடங்களையுடைத்தெனவும்
இராமனைக் காகபஷம் எனப்பெயரிய மயிர் முடியுடையனனெனவும் கூறினாரில்லை. இவ்வாறு தமிழ்நாட்டில்லைபோலும்.
கம்பர் “நம்பன் மாதுலன் வெம்மையை நண்ணினான்” (ஆற்றுப்படலம் 3) என மகட்கொடுத்தானை மாதுலன் என்னும் பெயரால் வழங்கினார்.
மாதுலன் என்பது வடமொழியுள் தாயுடன் பிறந்தானுக்காவது. தாயுடன் பிறந்தானே மகட்கொடுத்தற்குரியனாதல்
தமிழ்நாட்டுத் தொன்று தொட்ட வழக்கம்;
“கண்போன்ற மாமன்மகள் கண்மணிப் பாவையன்னட் பெண்” [சிந்தாமணிப்பதிகம் 22] எனவருதலானுமுணர்க.
இவ்வழக்குப் பற்றியே மாமன் என்பது தமிழில் தாயுடன் பிறந்தானுக்கும் மகட்கொடுத்தானுக்கும் பொதுவாக வழங்கப்படும்.

“மாமனானென்னு மதத்தா லுனையிகழ்ந்து, தோமுற்றார் தக்தனார் சோமேசா” என மாமனென்பது மகட்கொடுத்தாக்கானுயிற்று.
இத்தமிழர் வழக்குப் பற்றியே மாதுலன் என்பதை மகட்கொடுத்தானுக்கு வழங்கினராவர்.

இங்ஙனமே கம்பர் முதனூற்கதைகளையும் தமிழர் சுவைக்கும் இயல்புக்கும் ஏற்ற பெற்றியாற்றிரித்தும்
சேர்த்தும் விரித்தும் விடுத்துங் கூறியன பலவுள. இராமனும் சீதையும் மிதிலையில் வில் முறித்தற்கு முன்னே
ஒருவரையொருவரைக் கண்டு விழைவு மிகுத்துக் காமத்தால் வருத்தினர் எனவைத்து வருணித்தல் முநிவர் உடன்படாதது
“ஒத்த கிழவனும் கிழத்தியுங் காண்ப” (தொல்-கள-2) என்பதனாற் பிறப்பு முதலியவற்றானொப்புமையுடைய
தலைவனுந் தலைவியும் ஒருவர் முயற்சியானன்றித் தனியெதிர்ப்பட்டு நோக்கெதிர் நோக்கி ஒருவருள்ளத்தொருவர் புகுந்து
ஈருடற்கோருயிர்போல் இயையும் உழுவலன்பினையே தலையாய காமம் என்பது தமிழ் வழக்காதல் பற்றிக் கம்பர் அங்ஙனங் கூறினராவர்.

“அண்ணலு நோக்கினாவளு நோக்கினாள்” (மிதிலைக்காட்சி 35) “இருவரு மாறிப்புக்கிதய மெய்தினார்” (ஷெ 38)
“ஒருங்கியவிரண்டுடற் குயிரொன்றாயினர்” (ஷெ 38) என இவர் ஓதியனபற்றியுணர்ந்து கொள்க.

முநிவர் சூர்ப்பநகைக்கு மூக்கரிதலே கூறினராகவும் கம்பர் அம்மூக்குடன் முலையும் காதும் அரிதல் கூறுவர்.
“மூக்குங் காதும்மெம் முரண்முலைக் கண்களுமுறையாற், போக்கி” (சூர்ப்ப-64)
“நங்கைநிருஞ் செவி முலையுமூக் குமரிந்தநாள்” (அங்கதப்படலம்) என வருதலானுமுணர்க.
“முலையிரண்டு மில்லாதாள் பெண்காமுற் றற்று” என்பதும் “காதிரண்டுமில்லாதாள் ஏக்கழுத்தஞ் செய்தலும்” என்பதும்
தமிழ்நூல் வழக்காதலால் முலையரித்து அவள் பெண்மையைக் குலைத்தும் காதரிந்து அவள் தலையெடுப்பினைத் தொலைத்தும்
மூக்கரிந்து அவள் பிறர்முன் முகங்காட்டலை யொழித்தும் போக்கினர் என்றல் ஆண்டைக் கேற்பதேயாம்.

இராவணன் சீதையைத் தொடாமலே பன்னசாலையோடு பெயர்த்துக் கொண்டேகினான் எனக் கம்பர் கூறுவது முநிவர் கூற்றுக்கு மாறாம்.
அரக்கன் உலகுக்கொரு தாயைத் தொட்டிழுத்துச் சென்றான் என்பது பெருந்தமிழரான தம்பத்திக்கும் தந்நாட்டார் பேரன்பிற்குப்
பொருந்தாதாதலின் அவ்வாறு கூறினார்.

சீதை இலங்கையிற் சிறையிருந்த காலத்து ஊண் துறந்திருந்தனள் என்பார் கம்பர்.
இந்திரன் நாளுந்தரும் பாயசத்தின் பகுதியை உண்டு உயிர் தரித்திருந்தனளென்றார் முநிவர்.
இதுவும் பத்தியான் மிகுத்துக் கூறியவாறாம். இங்ஙனம் சொல், பொருள், வழக்கு, கதை முதலியவற்றையும்
தமிழுக்கியையக் கொண்டு இவர் கூறியன எல்லாம் ஒவ்வொன்றாக எடுத்துக் காட்டப்புகின் மிக விரிஉமென்றுணர்க.
சுருங்கவைத்து விளங்கவிரைக்கின் இவர் தமிழ் மாட்டுற்ற அளவிலன்பினால் தாமெடுத்துக் கொண்ட தெய்வக்கதையைத்
தனி நாயகனான சீராமமூர்த்தியையும் தமிழ் முழுதுணர்ந்த தமிழறிவனாகக் கூறுவர்.
இதனை “தென்சொற் கடந்தான் வடசொற்கலைக்கெல்லை தேர்ந்தான்” (அயோத்தி-நகர் நீங்கு-140) என இவர் வழங்குதலாலுணர்க.

நச்சினார்க்கினியர் சிந்தாமணியுரையில் (குணமாலை-42) சாதாரண வரசராகிய விக்கிரமாதித்தனும், சீவகனும் முறையே
எறும்பின் பாஷையையும் கரும்பின் பாஷையையும் உணர்ந்திருந்தனரெனக் கொள்ளுதலால் கல்வியிற்பெரியர் தெய்வவேந்தாகிய
சீராமமூர்த்தியைத் தமிழ் வல்லவனாகவுங்கூறல் இழுக்காகாதென்க.
எடுத்துக்கொண்ட கதாநாயகனைத் தமிழ்ச்சுவை அறியானாகக் கொண்டு அவனைச் செவ்விய மதுரஞ் சேர்ந்த நற்றிமிழால்
துதிப்பதே இழுக்காமெனக் கொள்க. இவ்வாறு தமிழர் பண்பும் தமிழறிவும் ஓருருக்கொண்டாற் போன்ற இக்கல்வியிற்
பெரியாருக்குத் தமிழைப்பற்றித் தனியே யுரைத்தற்கு அற்றம்வாயாவிடினும் அதன் பெருமையையும்
அதன் தொன்மை வரலாறு முதலியவற்றையும் பற்றிச் சிறிதும் விளக்காமற் போயினாரில்லை.

இவர் பழைய தமிழ்ப் புலவர்களையும் அவர்களினிய கவிகளையும் அக்கவியின் சொன்னடை பொருளமைதிகளையும்
அவற்றாலெய் துமின்பத்தினையுமே பலவிடத்தும் வாயாரப் புகழ்ந்து உயர்ந்த உவமையாகக் கூறுவர்.
“முத்தமிழ்த் துறையின் முறைபோகிய உத்தமக் கவிகள்”; (பாயிரம்)
“துறைபடுத்த விருத்தத் தொகைக் கவிக்குறையடுத்த செவிகள் (ஷெ)
“செவ்வியமதுரஞ் சேர்ந்தநற் பொருளிற் சீரிய கூரிய தீஞ்சொல் வவ்விய கவிஞர்” (பால நகர்.1)
“தென்னுண்டேனிற் றீஞ்சுவை செஞ்சொற் கவியின்பம்” (மிதிலை-23)
“சான்றோர் கவியெனக் கிடந்த கோதாவரி” (சூர்ப்பந)
“பாவருங் கிழமைத் தொன்மைப் பருணிதர் கொடுத்த பத்தி, நாவருங் கிளவிச் செவ்விநடை வருநடையள்” (நாடவிட்ட 64)
என வருவனவற்றான் உய்த்துணரலாம்.

இவர் தாடகைபடலத்துத் “தமிழெனும் அளப்பருஞ் சலதி தந்தலன்” எனவும்
அகத்தியப்படலத்து “நீண்ட தமிழ் வாரி நிலமேனி மிரவிட்டான்” எனவும்
ஆறுசெல் படலத்து “எத்திறத்தினு மேழுலகும் புகழ் முத்துத்தமிழும்” எனவும்
பம்பைப்படலத்துத் “தன்பாற்றழுவுங்குழல்வண்டு தமிழ்ப்பாட்டிசைக்குந் தாமரையே” எனவும் கூறினாராதலான்
இவர் தமிழை அளத்தற்கரிய பெருங்கடலாகக் கொண்டு அது பல்வகையானும் பல்லுலகும் புகழத்தக்கதெனவைத்து
அஃது இனிமையென்பதையே பொருளாக உடைத்தென்று காட்டி, அது வடமொழி போல் காடிந்நியம் உடையதின்றிக் குழைவே
இயல்பாகவுடைத்தெறுரைத்துத் தமிழின் பெருமையை நன்கு விளக்கினார்.

இக்காலத்த்துப் புலவர் பல்பிறப்புத் தோறும் இடைவிடாமற் பயின்றாலும்எய் தற்காகாவென ஒரு தலையாகத் துணியப்படும்
பெருங்கவியும் நுண்ணறிவும் அருங்கவித் திறனும் இயல்பிற் பெற்றுப் பாற்கடல் போலப் பல்லாயிரஞ் செய்யுட்களை
இந்நிலவுலகில் நிமிர்ந்தேற விட்ட தெய்வப்புலவரே தமிழை அளப்பருஞ் சலதி எனவும் நீண்ட வாரி எனவும் உரைத்தருளுவரானால்
அதனகலமும் ஆழமும் பெரும் பொருளமைதியும் யாமே யளத்தற்குரியேம்.
தமிழ்ப்பாஷை இரண்டு மூன்று வருஷத்துப் படிப்பின் முற்றுமென்று வாய்பிதற்றுவார்
இவ்வரிய பெரியார் வாய்மொழிவழி நின்று சிறிது சிந்திப்பாராகுக.

அசரீரி, நாமகள், முருகக்கடவுள், சிவபிரான் முதலாகிய தெய்வங்களும் புகழ்ந்தோதிய பாடல்கள் நிறைதலால்,
தமிழ் பல்லுலகும் புகழ்வது எனக்கூறியது மிகையன்றாம்.
ஸ்ரீசடகோபராந் தெய்வக்கவிவாணர் “பாலேய் தமிழர்” எனப்பாடுதலால் தமிழின் இனிமையுங்குழைவுந் தூய்மையும் எளிதினறியத்தக்கதாம்.
இவ்வாறே சான்றோர் பலருந் தமிழைந் கூறுமிடனெல்லாந் தனியே கூறாமல்
தட்பம், ஒட்பம், வண்மை, நறுமை, அருமை, பெருமை, இனிமை, செம்மை, பசுமை, நன்மை, விழுப்பம் முதலிய
குணங்களாற் சிறப்பித்தே கூறுதலானும் இதனியல் புணரப்படும்.

இத்துணைக் குணங்களாற் சிறப்பிக்கப்படும் தீந்தமிழை ஒருசாரார் ஒன்றின் மரூஉமொழி என்பராலெனின்
அது கல்வியிற் பெரியார்க்குக் கருத்தன்றாம் எனவுணர்க.
அவர் அகத்தியப்படலத்து “என்றுமுள தென்றமிழ் இயம்பியிசை கொண்டான்” என்பதனால் தமிழை என்றுமுள்ளதென விளங்கவைத்தல் காண்க.
ஒன்றினின்று மருவிய மரூஉவானால் இதற்குத் தனியே என்றுமுளதா தற்தன்மை யெய்தாதென்பது ஒருதலையாம்.
மற்று, இத்தமிழை இயம்பி இசைகோடலாவது எஞ்ஞான்றுமுளதாய் தமிழ்மொழிக்கு இலக்கணம் வகுத்துப்புகழ் பெறுதலாம் என்பது.
புகழாவது குறுமுனியாகிய அகத்தியர் தமிழ்முனியெனச் சிறந்தோங்குதவாம். ஈண்டு “என்றுமுள தென்றமிழ்” எனவுரைத்து வைத்துமேல்,

“உழக்குமறை நாலினு முயர்ந்துலக மோதும்
வழக்கினு மதிக்கவி னினுமரபினாடி
நிழற்பொலி கணிச்சி மணிநெற்றியுமிழ் செங்கண்
தழற்புரை சுடர்க்கடவுள் தந்ததமிழ் தந்தான்.”–என்பதனால் சிவபிரான் தந்தமிழ் என்பராலெனின்
ஆண்டுச் சிவபிரான் தந்தது எனக் கூறியதும் தமிழிலக்கணத்தையேயாமென்க.
சிவபிரான் தந்த தமிழிலக்கணத்தையே அகத்தியர் உலகிற்குத் தந்தார் என்பதே இதன் கருத்தாம்.
சிவபிரான் பாணினிக்குணர்த்தியதும் வடமொழி இலக்கணத்தையேயாகும். அதுபோல இதனையும் கொள்க.
நான்மறையினும் உலகவழக்கினும் கவின்பெற நூலினும் முறைப்பட ஆராய்ந்து கடவுள் தந்த தமிழ் என்றதனாலும்
அஃதிலக்கணமேயாவதறிக. நான்மறையினாராய்ந்தன – மொழிக்கு முதற்காரணம் எழுத்தென்றலும், அச்சும் அல்லுமாம்.
அவற்றின் வேற்றுமையும் கலப்பும் இயக்கமும் கருதி அவற்றிற்கு உயிரையும் உடலையும் உவமையாகக் கண்டு அங்ஙனமே குறியிடுதலும்,
அவற்றிற்குப் பிறப்பு வருணமுதலிய உணர்த்தலும், அவற்றிற்கு மாத்திரை காண்டலும், அவற்றிற்சிலவற்றிற்குப் புலுதங்கோடலும்,
அறம்பொருள் இனப்பகுதி கோடலும், நிலங்கட்குத்தெய்வங்கள் கூறலும், யாழோர் கூட்டமுடன்படலும்,
அந்தணர் அரசர் வணிகர் வேளாண்பக்கத்தியல்பு காட்டலும், அங்கடம் பிசி மந்திரம் வாய்மொழி முதலியன வகுத்தலும், பிறவும் ஆம்.
உலகவழக்கினாராய்ந்தன:- இயற்சொல் திரிசொல், செந்தமிழ்ச்சொல், கொடுந்தமிழ்ச்சொல், மரீஇயினசொல்,
மருவாமுதற்சொல், மங்கலச்சொல், இடக்கரடக்குக் குழூஉக்குறிச்சொல் முதலியனவும், மரபியலிற் முறித்தனவும், பிறவுமாம்.
மதிக்கவினினாடியன – தமிழ்நாட்டுத் தொன்றுதொட்டுக்கேள்வியான்வந்த அம்மானைவரி, ஊசல்வரி, குன்றங்குரவை,
ஆய்ச்சியர் குரவை, வள்ளைப் பாட்டு, உழத்தில் பாட்டு, குறத்திப் பாட்டு, வெறிப் பாட்டு என்பன போன்ற பாடல்கள் பற்றி ஆராய்ந்தனவாம்.
மதி-நூல். அகத்தியனாராற் செய்யப்பட்டது மூன்று தமிழிலக்கணம் என அறியப்படுதலால்
இம்மூன்றாகிய இயல், இசை, கூத்து எனப்பாகுபாடு செய்வதற்கேற்றவாறு, தமிழ் என்னும் பெயரிய மொழி
அவரிலக்கணஞ் செய்வதற்கு முன்னே இருந்தவென்பது நன்கறியலாகும்.
இதனாற் சிவபிரான் திருவாய்மலர்ந்த தமிழிலக்கணத்தையே அகத்தியர் முத்தமிழிலக்கணம் எனச்செய்து
தொல்காப்பியர் முதலிய பன்னிரு புலவர்க்கும் அளித்தவாறு கூறிற்றாம்.

தொல்காப்பியனாரும் அம்முந்துநூல் கண்டு முறைப்படவெண்ணிப் புலர்ந்தொகுத்தோராதலால்,
தாம் அகத்தியர், வாயிலானுணர்ந்த அச்சிவபிரான் பரக்கவருளிய இலக்கணங்களினொருபகுதியையே
சில்வாழ்நாட்பல்பிணிச் சிற்றறிவினர்க்கேற்றவாறு தொகுத்துச் சுருங்கவுரைத்தாரெனக் கொள்ளப்படும்.
இதுவே நல்லறிவுடைய தொல்பேராசிரியர்க்கும் கருத்தென்றுணர்க; அவர்,

தாயிற் சிறந்ததன்று நாண்டையலாருக்கந் நாண்டகைசால்
வேயிற் சிறந்தமென் றோளிதிண் கற்பின் விழுமிதன்றீங்
கோயிற் சிறந்துசிற்றம்பலத் தாடுமெங் கூத்தப்பிரான்
வாயிற் சிறந்த மதியிற் சிறந்த மதிநுதலே.–என்னுந் திருச்சிற்றம்பலக்கோவையுரையில்
(“உயிரினுஞ் சிறந்தன்று” – தொல்காப்பியம் – களவியல் 22) என்றாராகலின் வாயிற்சிறந்த மதியிற் சிறந்த என்பதற்குத்
தாய்போல நாண் சிறத்தலும் நாணிலும் கற்புச்சிறத்தலும் ஆகிய இரண்டும் கூத்தப்பிரான் வாயிற்சிறந்த நூல்களிடத்துச்
சிறப்புடையப் பொருள் என்றுரைப்பினுமமையும்) என ‘உயிரினுஞ் சிறந்தன்று நாணே’ என்னுந் தொல்காப்பியத்தினை
எடுத்தோதி அதனைக் கூத்தப்பிரான் வாயிற்சிறந்த நூலாகக் கொண்டு நாண் சிறத்தலும் கற்புச்சிறத்தலுமிரண்டும் அந்நூற்பொருளெனக் கூறுதற்குடன் பட்டதனாற்றெளிந்துகொள்க. இதனாலும் கூத்தப்பிரானருளியதிலக்கணமென்ப துணரப்படும்.

இனிக் கம்பர் நாடுவிட்ட படலத்தின்காண்,

“வடசொற்குந் தென்சொற்கும் வரம்பிற்றாய் நான்மறையு மற்றைநாலு
மிடைசொற்ற பொருட்கெல்லா மெல்லையதாய் நல்லறத்துக் கீறாய்வேறு
புடைசுற்றுந் துணையின்றிப் புகழ்பொதிந்த மெய்யேபோற் பூத்துநின்ற
வுடைசுற்றுந் தண்சார லோங்கியவேங் கடத்திற்சென் றுறுதிர்மாதோ”.

“கோடுறுமால் வரையதனைக் குறுகுதிரே லுங்கொடிய கொடுமைநீங்கி வீடுறுதிர்” (26)

“பிறக்க முற்ற மலைநாடு காடி நகன்றமிழ்நாட்டிற் பெயர்தி மாதோ” (30)

“தென்றமிழ்நாட் டகன் பொதியிற் றருமுனிவன் தமிழ்ச் சங்கஞ் சேர்கிற்றீரேல்” (31)

என ஓதியபின்னரும் ஆறுசெல் படலத்துள்
“இருந்ததிற் றீர்ந்து சென்றார் வேங்கடத் திறுத்த காலை.” (33)

“வலங்கொ ணேமி மழைநிற வானவ
னலங்கு தாளிணை தாங்கிய வம்மலை
விலக்கும் வீடுறு கின்றன மெய்ந்நெறிப்
புலங்கொள் வார்கட்கனையது பொய்க்குமோ?” (35)

“அனைய பொன்னி யகன்புன னாடொரீஇ
………. ……… ………. ……….. ………..
இனைய தென்றமிழ் நாடுசென் றெய்தினார்.” (52)

“அத்தி ருத்தகு நாட்டினை யண்டர்நா
டொத்தி ருக்குமென் றாலுரை யொக்குமோ
வெத்திறத்தனு மேழுலகும்புகழ்
முத்துமுத்தமிழுந் தந்துமுற்றுமோ.” (53)

எனவும் கூறுதலான் வடசொல், தென்சொல் இரண்டிற்குந் தனிப் பேரெல்லையாய் விளங்கியது, திருவேங்கடமலையென்றும்,
அம்மலை தன்னடைந்தார்க்கெல்லாம் வீடளிக்கவல்லதென்றும் அது வசக்கரத்துச் சக்கராயுதத்தைத் தரித்த
மழைநிற வானவன் றிருத்தாளிணை தாங்கியதென்றும், சேர சோழ பாண்டிய நாடுகள் மூன்றினுள்ளும் சிறப்பித்துத்
தமிழ் நாடென்பது பாண்டிய நாலாமென்றும் அந்நாட்டுப் பொதிய முனிவன் தமிழ்ச்சங்கம் ஒன்று முன்னே உண்டு என்றும்
அந்நாடே பல்லுலகும் புகழ்கின்ற முத்தையும் முத்தமிழையுந் தந்ததென்றும் விளங்க வைத்தனராவர்.

திருவேங்கடம் வடசொற்குத் தெற்கெல்லையாகவும் தென்சொற்கு வடவெல்லையாகவும் இருப்பதென்று கருத்தாம்.
தொல்காப்பியப் பாயிரவுரையில் நச்சினார்க்கினியர் வடவேங்கடத்தை
‘நிலங்கடந்த நெடுமுடியண்ணலைநோக்கியுலகந் தவஞ்செய்து வீடு பெற்ற மலை” என வுரைத்துள்ளார்.
அதுவும் “மால்வரையதனைக் குறுகுதிரேல் வீடுறுதீர்” எனவும்
“மழைநிற வானவன் அலங்குதாளிணை தாங்கியவம்மலை விலங்கும் வீடுறுகின்றது” எனவும் ஓதிய
பொருளையே தழுவி நிற்றல் நோக்கிக் கொள்க.

ஸ்ரீசடகோபரும் “திருவேங்கடநங்கட்குச் சமன்கொள் வீடு தருந்தடங்குன்றமே” எனப்பணிந்தருளினார்.
“வேங்கட மென்னு மோங்குயர் மலையத்துச்சிமீமிசை… நன்னிறமேக நின்றதுபோலச்….
செங்கணெடியோ னின்ற வண்ணமும்” எனச் சிலப்பதிகாரத்துக் கூறியது கொண்டு
“மழைநிற வானவன் தாளிணை தாங்கிய அம்மலை” என்றார் எனினுமமையும்.
ஆசிரியமாலை யுடையாரும் “புடையிது நெடுமால்வரைக் கப்புறம் புகினும்” எனவுரைத்தார்.
ஐயனாரிதனாரும்,
“வெறிகொ ளறை யருவி வேங்கடத்துச் செல்வி
னெறிகொள் படிவத்தோய் நீயும்–பொறிகட்
கிருளீயு ஞாலத் திடரெல்லா நீங்க
வருளீயு மாழியவன். (பாடாண்-(42))–என ஓதினார்.
பாரதம் பாடிய பெருந்தேவனாரும்,
தேனோங்கு நீழற் றிருவேங்கட மென்றும்
வானோங்கு சோலை மலையென்றுந்–தானோங்கு
தென்னரங்க மென்றுந் திருவத்தி யூரென்றுஞ்
சொன்னவர்க்கு முண்டோ துயர்”–எனப் பாடியருளினார்.
கம்பர் திருவாக்கு இப்பல்சான்றோர் கருத்தையுந் தழுவி விளங்குதல் கண்டுகொள்க.

இனிக் ‘காவிரிநாடன்ன கழனிநாடு’ எனச் சோணாட்டை மேம்படுத்துரைக்கின்ற கம்பர் அதனை ஈண்டுத் தமிழ்பற்றிச் சிறப்பியாமற்
பாண்டி நாட்டையே தென்றமிழ் நாடெனக் கூறி அதனைற் தமிழ்ச் சங்கத்தானும் முத்தமிழானும் புகழ்தலால்
அதுவே செந்தமிழ் நாடெனக் கருதினராவரென உய்த்துணரப்படும்.
இவர் ஈண்டுக்குறித்த சங்கம் முதற்சங்கமாமென்பது “பொதியத்திருமுனிவன் தமிழ்ச் சங்கம்” என்றதனாலறியப்படும்.
ஈண்டுக்குறித்த சில கொண்டு இக்காலத்தார் கருத்துக்கும் அக்காலத்துக் கல்வியிற்பெரியார் கருத்துக்கும் உள்ள
ஒற்றுமை வேற்றுமைகளை நன்குணர்ந்துகொள்க.

இனிக் கம்பர் சடகோபரந்தாதிக் கண்ணே,
சுவடிறக் கத்தொட ராசைக் களிற்றைத் தொடர்ந்திரண்டு
கவடிறக் கட்டிய பாசத் தளைக்கண் பரிந்துசங்கக்
குவடிறக் குத்திய மாறப் பெயர்க்கொலை யானைநங்காய்
இவடிறத் தொன்றும் படரந்தி வான மிருள்கின்றதே.–என்னும் பாட்டிற்
சடகோபரைச் சங்கமாகிய மலைக்குவடு இடியக்குத்திய மாறன் என்னும் பெயருடைய கொலையானை எனக் கூறியுள்ளார்.
இதனால் சடகோபர் காலத்தே சங்கம் ஒன்றிருந்ததெனவும் அதனை அவர் வென்றனரெனவும் கம்பர் குறித்தனராவர்.

சடகோபர் சங்கம் ஒன்றை வென்ற கதை வைணவருக்குள்ளும் விளங்குகின்றது.
அச்சங்கம் கூடலில் முந்நூறு புலவரையுடைத்தாயிருந்த தெனவும் அப்புலவரெல்லாம் வீற்றிருந்த தனிமரப்பலகை
ஆழ்வாரருளிய ஒரு செய்யுள் வரைந்த ஓலையொன்றிற்கு இடந்தந்து வேறியார்க்கும் இடந்தராமற் றன்னுட்சுருங்கியதெனவும்
அதுகண்டு புலவரெல்லாம் ஆழ்வாரைப் புகழ்ந்து பாடினரெனவும் கூறுவர்.

இதனுண்மை எவ்வாறோ எனக்கருதப்படுமாயினும், இவ்வரிய செய்தியின் குறிப்பு கல்வியிற்பெரியார் திருவாக்கினும்
காண்டலால் இது முழுதும் பொய்யேயாமென நினைத்தற்கு இடமின்றாகிறது.
இதெற்கேற்ப ஆழ்வார் திருநகரியினின்று கிடைத்த சில பழைய தமிழ் ஏடுகளில்
“சங்கத்தார்க்கு ஆழ்வார் அருளிச்செய்த அகவல்” என்ற தலைப்பின் கீழ்

“அண்ட கோளத் தாரணு வாகிப்
பிண்டம் பூத்த பரெழி லொருமை
யீருயிர் மருங்கி னாருயிர் தொகுத்து
நித்திலத் தன்ன வெண்மணல் பரப்பில்
வேரும் வித்து மின்றித் தானே
தன்வலி யறியாத் தொன்மிகு பெருமர
மூவழி முப்பழ முறைமுறை தருதலி
னொன்றுண் டொண்சுவை தருவது மற்றது
கல்லி லெழுந்து கடலிலழுந்தி
யறுகாற் குறவ னீரற விளைக்கு
நிறைபொழிற் குப்பை தறுகட் பொன்றுவித்
தறுகோட் டாமா விளைக்கு நாட
னவனே தலையிலி யவன்மகண் முலையிலி
தானு மீனா ளீனவும் படாஅ
ளெழுவர் மூவர் சிறுவரைப் பயந்தன
ளவளிவ னவளென் றறித
றுகளறு காட்சிப் புலவரது கடனே”–என ஓரரும்பெருஞ் செய்யுள் காணப்படுகிறது.

இனி இச்சங்கப் புலவர்கள் முந்நூற்றுவர் எனக் கேட்கப்படுதலால் இச்சங்கம் முதல் மூன்று சங்கமும் இல்லையென்பது எளிதிலறியத்தகும்.
முன்னைமூன்று சங்கத்துக்கும் பின்னே வேறு சங்கம் உண்டோ என ஆராயுமிடத்துத் திகம்பர தரிசனம் என்னும் ஓர்
சமயநூலின்கண் விக்கிரமசகம் 546-இல் (கி.பி. 470) பூச்சியபாதர் என்பாருடைய மாணாக்கருள் ஒருவராய் வச்சிரநந்தி என்பவரால்
தென்மதுரையில் ஒரு திராவிட சங்கம் கட்டப்பட்டதென்று கூறப்பட்டிருத்தல் கேட்கப்படுகின்றது.
மதுரையில் இச்சைநர் தொகுத்த தமிழ்ச்சங்கம் கி.பி.470-முதல் எத்துணைக்காலம் நடைபெற்றதென அறியப்படாவிடினும்,
அது திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் காலத்துக்குப் பின்னும் ஆண்டிருந்ததெனக் கருதற்கு இடனில்லையாகும்.

அந்நாயனாரால் மதுரையிற் சைநர் கொலையுண்டது பல நூற்களாற்றெளிந்தது.
அந்நாயனார் காலத்துப் பாண்டியன் நெல்வேலிவென்ற நெடுமாறன்.
அப்பாண்டியனுடன் நெல்வேலியிற் பொருதவன் நந்திபோதவன்மனுடைய சேனாதிபதியான உதயசந்திரன் என்பதும்,
நந்திபோதவன்மன் காலம் கி.பி.710 முதல் கி.பி.760 வரையாம் என்பதும்
உதயேந்திர சாஸனத்தாலும் பிறசாஸனங்களாலும் உய்த்தறியப்படுகின்றன.
இதனால் நெடுமாறனும் நந்திபோதவன்மனும் ஒருகாலத்தவராகத் துணியப்படுதலுடன் ஸ்ரீஞானசம்பந்தர் காலமும் அஃதாமெனக் கருதவுமாகும்.

அங்ஙனமாயின் மேற்குறித்த சைநர் தமிழ்ச்சங்கமும் கி.பி.470 முதல் கி.பி.760-வரைக்குமே இருந்ததாக வைத்துக் கொள்ளலாம்.
இக்காலந்தான் சைவர் சமணருடனும் சாக்கியருடனும் வாது செய்த காலமாகும்.
சடகோபர் “இலிங்கத்திட்ட புராணத்தீருஞ் சமணருஞ் சாக்கியரும், மலிந்து வாது செய்வீர்களு” மெனப்பணித்தலையும் ஈண்டைக்கு நோக்குக.
இச்சங்கந்தான் கிளிவிருத்தம், எலிவிருத்த முதலிய நூல்களைத் தோற்றுவித்ததாகும்.

ஞானசம்பந்தர் காலத்துப் பின்னர்க் கூடலில் வேறுசங்கமுண்டென்பது எல்லாற்றானும் அறியப்படாமையாற் கல்வியிற் பெரியார்
குறித்த ஆழ்வார் காலத்துச் சங்கம் இச்சைநசங்கமேயாமெனத் துணியப்படும்.
கம்பர் சடகோபரைத் “தெருளிற் கரும்பொக்கு மாயிரம்பாப்புண்டு செய்தவரே” எனப்பாடுதலால்
ஆழ்வார் கம்பருக்கு மிக முந்திய காலத்தவராகக் கருதப்படுதலுங் காண்க.

இனி இக்கல்வியிற் பெரியாரால் மிகவுயர்த்திப் புகழப்பட்ட தமிழ் நூல்கள் இரண்டு எனத் தெரிகின்றது.
அவை திருக்குறளுந் திருவாய் மொழியும். இவர் திருக்குறளை வேதமெனவும் திருவாய்மொழியினை உபநிடதம் எனவும் புகழ்வர்.

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வாற்மற் றெல்லாருந்
தொழுதுண்டு பின்செல்வ ரென்றேயித் தொல்லுலகி
லெழுதுண்டமறை சொன்னால்” (ஏரெழுபது) (16)

“தென்றலைத் தோன்று முபநிடத்தை யென்றீவினையை
நின்றலைத் தொன்று நியாய நெறியை நிறைகுருகூர்
மன்றலைத் தோன்று மதுரகவியை” (சடகோபரந்தாதி 62)
எனவருதலால் அறியலாம்.

இராமாவதாரம்

இது நம்நாட்டுள் மிகுதியாகப் பயின்றுவரும் சிறந்த தமிழ்க் காவியங்களுள் ஒன்று.
இத்தமிழ் நூலை அறியாதார் ஒருவருமிராராயினும், ஈண்டுக்காட்டிய பெயர் மாத்திரம் பெரும்பாலார்க்குப் புதுமையாகத்
தோன்றுமென்று நினைக்கின்றேன். அதன் காரணம் இக்காலத்து அந்நூல் வேறு பெயரான் வழங்கப்பட்டு வருதலேயாகும்.
இக்காலப்பெயர் “கம்பராமாயணம்” என்பதே.

கவிச்சக்கரவர்த்தியாகிய கம்பநாடார், தாம் சீராம கதையினை செந்தமிழ்த் தொடர்நிலைச் செய்யுளாக அமைத்த காலத்து
‘இந்நூல் இவ்வாறு வழங்குக’ என இட்டபெயர் இராமாயணம் என்னும் முதனூற் பெயர் அன்று;
மேற்குறித்த இராமாவதாரம் என்பதேயாகும். என்னை?

“நடையி னின்றுயர் நாயகன் தோற்றத்தின்
இடை நிகழ்ந்த இராமாவ தாரப்பேர்த்
தொடைநி ரம்பிய தோமறு மாக்கதை
சடையன் வெண்ணெய்நல் லூர்வயிற் றந்ததே.”–என அவர்தாமே அந்நூற்கு அவ்வாறு பெயர் வழங்குதலால் என்க

நம் மதுரைத் தமிழ்ச்சங்கத்துக்குக் கிடைத்த பழைய பாடல் காண்டப் பிரதி ஒன்றில் –

“இத்த லத்தினு மிராமாவ தாரமே
பக்தி செய்து பரிவுடன் கேட்பவர்
புத்தி மிக்கரும் புண்ணிய முந்தரு
மெத்த லத்து மவனடி யெய்துவார்.” என்னுஞ் செய்யுளொன்று உள்ளது.
அதனாலும் கம்பர் இயற்றிய தொடர்நிலைச் செய்யுட்கு வழங்கிவந்த பெயர் இராமாவதாரமே என்பது நன்கு தெளியப்படும்.

தாமிட்ட அவ்விராமாவதாரப் பெயர், இராமபிரானது பிறப்பொன்றே விரிக்கும் நூல் என்னும் பொருள்படவும் நிற்றலான்
இங்ஙனம் கொண்டு உலகம் மயங்காமைப் பொருட்டுத் திருமாலினது தசாவதாரங்களுள் ஒன்றாகிய இராமாவதாரத்து நிகழ்ந்த
சரித முழுவதும் உணர்த்தும் நூல் என்பதே பொருளென்பார்,
“….நாயகன், தோற்றத் தினிடை நிகழ்ந்த விராமாவதாரப் பேர்த்….மாக்கதை” என்றார்.

இவ்வாறு ஒரு பெயர் வழக்குண்மை அறியாது சிலர் இராமாவதாரப் பேர் மாக்கதை என்பதற்கு
‘இராமாவதாரத்தைக் குறித்த பிரசித்தமான கவித்தொடைகள் நிறைந்த குற்றமற்ற பெருமை பொருந்திய சரிதம்’ எனப் பொருள் கூறினர்.

இது தவிர, அப்பெயர் கம்பநாடர் காலத்தன்றி, அவர் காலத்துக்குப் பின்னரும் வழங்கப்பட்டு வந்ததென்பதற்கு
மேல் உண்டோ வெனின்:- உண்டு. தான் எடுத்துக்காட்டும் தலைப்பில் அவ்வந்நூற்பெயரை எழுதி விளக்குவதும்,
பல அதிகாரவடைவுகளையுடையதுமாகிய ‘புறத்திரட்டு’ என்னுந் தொகை நூலுட் கம்பர் இயற்றிய
தொடர்நிலைச் செய்யுளினின்றும் பல பாடல்கள் எடுத்தாளப்பட்டுள்ளன.
அங்ஙனம் அவையுள்ள இடங்களிலெல்லாம் இராமாயணம் என வேறு பெயராற் குறிக்கப்படாது, இராமாவதாரம் என்றே எழுதப்பட்டுள்ளது.
அதனாற் புறத்திரட்டுத் தொகுத்தார் காலத்து அப்பெயரே வழங்கி வந்தமை நன்கு விளங்கும். இதுநிற்க.

இனி, அப்புறத்திரட்டு நூலுட் காணப்படும் இராமாவதாரச் செய்யுட்களுள்:-

“எய்தவின்னல் வந்தபோழ்தி யாவரேனும் யாவையுஞ்
செய்யவல்ல ரென்றுகொள்க செந்நெறிக்க ணேகிட
மையகண்ணி செய்யபாதம் வல்லவாய மற்றிவன்
கைகளின்று பன்னசாலை கட்டவல்ல வாயவே”–என்பதும் ஒன்று.
இஃது அச்சுப்பிரதிகள் எவற்றினும் இல்லாதது. இப்புறத்திரட்டுச் செய்யுளுள் ‘இவன்’ என்றும் ‘இன்று’ என்றும்
சுட்டப்பட்டிருத்தலால் இலக்குமணர் பன்னசாலை கட்டிய வரலாற்றினைக் குறித்த வேறுசில செய்யுள்கள் இருந்தனவாதல் பெறப்படும்.

அக்கதைத் தொடர்பு, அச்சுப்பிரதி அயோத்தியாகாண்டம் சித்திரகூடப்படலத்துள் 43-ஆம் செய்யுண்முதல் 48 வரை காணப்படுகின்றது.
அன்றியும், “எய்தவின்னல்” எனும் புறத்திரட்டுச் செய்யுளின் கருத்தமைந்த செய்யுளால் அப்படலத்துள்:-

“மேவு கான மிதிலையர் கோன்மகள்
பூவின் மெல்லிய பாதமும் போந்தன
தாவி லெம்பிகை சாலை சமைத்தன
யாவை யாதுமி லார்க்கியை யாதவே.” என வேறு சந்தத்தில் உள்ளது.
இச்செய்யுளும் மேற்காட்டிய ‘எய்தவின்னல்’ என்னுஞ் செய்யுளும் இருவேறு சந்தங்களில் அமைந்து
பெரும்பான்மை பொருள் ஒத்து நிற்றலான், இவற்றுள் ‘கம்பர் பாடல் இது’ என ஒருதலை துணிதல் அரிதாயினும்,
புறத்திரட்டு தொகுத்தாரது பெருமையும் பழைமையும், அவர் நூலானும், இராமாவதாரமெனக் கம்பரிட்ட முற்காலப் பெயரையே
வழங்குதலானும் தெளியக் கிடத்தலின், அவர் எடுத்தாண்ட செய்யுளே கம்பராற் செய்யப்பட்டதாமென ஊகித்தல் ஆகும்.

அவ்வாறாயின், அவ்’எய்தவின்னல்’ என்னும் பாடலும், அச்சந்தத்தில் வேறு பாடல் உளவாயின் அவையும் பிற்காலத்து
நீக்கப்பட்டமையும், அவ்விடத்து ‘மேவுகானம்’ என்னும் வேறு சந்தங்கொண்ட பாடலும் மற்றுஞ் சிலவும் இடைச்செருகப்பட்டமையும் தெளிவாம்.
பரிபாடலுள் மிகைபடு பொருளை நகைபடுபுன்சொலில் தந்திடை மடுத்தும். சிந்தாமணி முதலாய முற்காலப் பெருங்காப்பியங்களுள்
தஞ்செய்யுள்களை இடைச்செருகியும் போந்த கந்தியாரைப்போல, இடைக்கால இசக்கியங்களுள்
இடைச்செருகிய வெள்ளி என்பார் காலத்தே இப்பிறழ்ச்சியும் நேர்ந்துள்ளது போலும்.

யாப்பருங்கல விருத்திகாரர் “பாதம் பலவரிற் பஃறொடை வெண்பா” (63) என்பதன் உரையில்
“இன்னும் பலவடியான் வந்த பஃறொடை வெண்பா இராமாயணமும், புராண சாகரமு முதலாகவுடைய செய்யுட்களிற் கண்டுகொள்க”
எனக் கூறுதலால் தமிழில் வெண்பாயாப்பிற் சீராம சரிதையை அமைத்து ‘இராமாயணம்’ எனப் பெயரிடப்பட்ட
ஒரு நூல் முற்காலத்து இருந்ததாகத் தெரிகின்றது.

வீரசோழியவுரையிற் கண்ட சில பாடல்களின் பொருளை ஆராய்ந்தால், அவை சீராமகதையினைப் பற்றியன எனப் புலப்படும்.
அச்செய்யுள்கள் வருமாறு:-

“மற்றிவனை மாலென் றறிந்தாலவ் வாளரக்கன்
பெற்றி கருதுவதென் பேதையர்காண்-மற்றிவன்றன்
கண்டான் கடைசிவத்தற் குண்டோ கடலிலங்கை
வண்டா ரரக்கன் வலி.:

“ஐயிருப தோசனையு மாங்கோ ரிடமின்றிக்
கைபரந்த சேனைக் கடலொலிப்பத்-தையல்
வழிவந் திராமன் வடகரையா னென்றான்
விழிவந்து வேறாக மீட்டு.”

(பொருட்படலம், “வேந்தன் சிறப்பு” என்னுங்கலித்துறையுரை.) இவை, அவ்விராமாயணச் செய்யுள்கள் போலும்!

கம்பர் காலம்

கம்பரது வரலாற்றால் அவரது காலம் இஃதாகுமென ஒருவாறு ஆராய்ந்து கொள்ளலாகும்.
ஆயினும் அதனைப் பலருந் தெளியுமாறு வெளிப்பட வைத்து விளக்கி ஈண்டுச் சில கூறுவேன்.
கம்பரது வரலாற்றால், அவர் சடையர்க்குயிர்த்துணைவர் எனவும் ஒரங்கலுருத்திரனாற் சிறப்பிக்கப்பட்டனரெனவும் தெரிதலோடு
சடையவள்ளலுக்குச் சங்கரன் தந்தையெனவும் ஒட்டக்கூத்தர் அச்சங்கரனுக்கு முதலில் உதவித் தொழில் புரிந்து
கொண்டிருந்தனரெனவும் தெளிதலுமாயிற்று. சங்கரசோழனுலா வுடையார்,

“கூடிய சீர்தந்த வென்றெடுத்த கூத்தனுலாச்
சூடிய விக்கிரம சோழனும்-பாடிய
வெள்ளைக் கலியுலா மாலையொடு மீண்டுமவன்
பிள்ளைத் தமிழ்மாலை பெற்றோனுந்-தெள்ளித்தன்
முன்னாய கரினவன் மூதுலாக் கண்ணிதொறும்
பொன்னாயிரஞ் சொரிந்த பூபதியும்” என வுரைத்ததனாற்,
கூத்தர், விக்கிரமசோழன் முதலாக மூவர் சோழரைப் பாடினாரென்றறியப்படுதலின், அவர் அச்சோழர் மூவர் காலத்தவரென்பது நன்கறிந்தது.

அச்சோழர் மூவரும், விக்கிரமனும் அவன் மகன் குலோத்துங்கனும், அக்குலோத்துங்கன் மகன் இராசராசனும்
ஆவரென்பது அக்கூத்தர் பாடிய மூன்றுலாக்களாலுந் தெளிந்தது.
இவ்வுண்மை ‘கூத்தருங் குலோத்துங்கன் கோவையும்’ என்னும் ஆராய்ச்சியினும் நன்கு தெளிவிக்கப்பட்டதாம் (செந்தமிழ், தொகுதி-3, பக்கம்-194).
புராதன சாசன ஆராய்ச்சியுடையார் பலரும் விக்கிரமன் கி.பி. ஆண்டு 1118 முதல் 1132 வரைக்கும்,
குலோத்துங்கன் கி.பி. ஆண்டு 1132 முதல் 1162 வரைக்கும்,
இராசராசகி கி.பி. ஆண்டு 1162 முதல் 1200க்கு மேற் சிலவாண்டுகள் வரைக்கும் அரசாண்டார்களெனக் கூறுவர்.

இதனாற் கம்பருக் குயிர்த்துணைவனான சடைய வள்ளலுடைய தந்தையாகிய சங்கரனுக்கு உதவித்தொழில் புரிந்து
கொண்டிருந்த ஒட்டக்கூத்தர், கி.பி.1118-க்கும் கி.பி.1200க்கும் இடைப்பட்ட காலத்தே பெயர்சிறந்திருந்தவரென்று கொள்ளலாகும்.
விக்கிரமன் அரசாட்சிக்காலம் 14 ஆண்டேயாகக், கூத்தர் அக்காலத்தே புலமை நிரம்பினராகி அவனை உலாவாற் பாடினரென்பதால்,
அவர் அவ்விக்கிரமன் ஆட்சி செய்ததற்கு முன்னே பிறந்தவராதல் தெள்ளிதாம்.
கூத்தர், விக்கிரமன் அரசாட்சியினிறுதிக்காலத்தே தான் புலமை நிரம்பினராகி, அவனை உலாவாற் பாடினராவர் எனக் கூறுதலாகும்.
விக்கிரமனாட்சி 1132-க்கு மேற்படாமையால், கூத்தர் உலாப்பாடிய அவனாட்சியின் இறுதிக்காலம் 1130-க்கும் பிற்பட்டிருத்தல் பொருந்தாதாம்.

கூத்தர் விக்கிரமனை உலாப்பாடும்போது அவருக்கு வயது இருபதிற்குக் குறைந்திராதென வைத்துக்கொள்ளலாகும்.
விக்கிரம சோழன் கூத்தருக்கு முதன் முதல் பரிசில் பல நல்கிச் சிறப்புச் செய்தபோது அவர்
‘இடுக்கட் புண்படு நிரப்புக் கொண்டுழன் றிரக்கச் சென்றவின் றெனக்குச் சிங்களந்,
திடுக்குற் றஞ்சும்வெஞ்சினத்துச் செம்பியன் றிருக்கைப் பங்கயஞ் சிறக்கத் தந்தன’ என்பதனால்
தம் வறுமைப்பட்ட நிலையை எடுத்துரைத்தலின், அக்காலம், குடும்ப வருத்தம் நெஞ்சிற்றோற்றி அதனைத் தீர்த்தற்கு
அவர் உழன்றதோர் பெரும்பிராயகாலமாகுமென்றும் ஊகித்தல் கூடும்.

தமிழ் நாவலர் சரிதைக்கண் 25’கடித்தது நச்சரவு’ என்னுஞ் செய்யுட்டலைப்பில்
“சரசுவதி தம்பலங்கொடுக்கக் கவிதையுண்டாகிய கூத்தமுதலியார் அரும்பைத் தொள்ளாயிரம் பாடும்போது விக்கிரமசோழன்
கேட்டு ஒரு கவியை ஒட்டச் சொல்லென்று சொன்னபோது பாடியது” என அமைந்திருத்தலால்,
கூத்தருக்குக் கவிதையுண்டாகிய காலம் என்பது விக்கிரமசோழன் ஆட்சிக்காலமே யென்பது அறியப்படும்.
கூத்தர் குலோத்துங்கன் ஆட்சிக்காலமாகிய முப்பதியாண்டையும் கடந்து இராசராசனது நெடிதாட்சிக் காலத்தின்
முற்பகுதியின் பெரும்பாகத்தும் இருந்தாராவரென்று அறியப்படுதலால், அவர் விக்கிரமன் காலத்திற் கவிதையுண்டானவராகி
அவனை உலாவாற்பாடியபோது, அதிகவயதாயினராகக் கொள்ளுதற்கும் இயையாதாம்.
இவற்றாற் கூத்தர் விக்கிரமனுலாப் பாடியபோது இருபது பிராயத்தினரெனவும் அது
விக்கிரமன் இறுதியாட்சிக் காலமாகிய கி.பி.1130-க்கு அடுத்ததாமெனவும் கொள்ளின்,
கூத்தர் பிறந்த காலம் கி.பி.1110 எனக் கூறலாம்.

சடையவள்ளலுடைய தந்தையாகிய சங்கரனுக்கு உதவித் தொழில் புரிந்து கொண்டிருந்த கூத்தர்
கி.பி.1110-ஆம் ஆண்டினை அடுத்துப் பிறந்தவரானால், கூத்தரை அத்தொழிற்கு அமைத்துக் கொண்ட சங்கரன்
கூத்தரின் மிக மூத்தோனாவனென்று ஊகித்தலாகும்.
கூத்தர் சங்கரனுக்கு உதவித் தொழில் புரிந்தது அவருக்குக் கவிதையுண்டாததற்கு முன்னேயாம்.
அக்காலம் கூத்தருடைய இளமைக்காலமாகத் துணியப்படும். அன்றியும் கூத்தர் விக்கிரமனுலாவின்கண் அச்சோழனிருமருங்கும்
‘மந்திரிகள், படைத்தலைவர், சிற்றரசர், பெருங்காணியாளர் எனப்பலர் மொய்த்தீண்ட உலாப்போந்தான்’ எனக் கூறுமிடத்து
விக்கிரமன் தந்தையாகிய அபயன்காலத்தேகலிங்கம் வென்று கொண்ட கருணாகரத்தொண்டைமான் முதலிய பலருடன்,

“…… …… …… மோட்டரணக்
கொங்கைக் குலைத்துக் குடகக் குவடொடித்த
செங்கைக் களிற்றுத் திரிகர்த்தனும்” என்பதனால் திரிகர்த்தனைக் கூறுதலின்,
விக்கிரமசோழன் காலத்தே திரிகர்த்தனாகிய சடையன் சிறந்திருந்தனன் என்பது தெளியப்படும்.
சங்கரன் மகனான வெண்ணெய்ச் சடையனையே திரிகர்த்தன் என்பர் என்பது,
‘இராமரொடும் பாமாலை சூடும் குலமுடையானை… ….வெண்ணெய்த்திரி கர்த்தனையே’ எனவும்
“பாரிலுள்ளோர் கண்ணாக வாழும் வெண்ணெய்த்திரிகர்த்தன்’ எனவும் மேல்வரலாற்றுள் எடுத்துக்காட்டிய மேற்கோள்களால் நன்கறிந்தது.

விக்கிரம சோழன் திருமருங்கும் மொய்த்தீண்டிய இப்பலர் வரிசையில்,

“……. …….. …….. மட்டையெழக்
காதித் திருநாடர் கட்டரணங் கட்டழிந்த
சேதித் திருநாடர் செல்வனும்”-என்பதனாற் சேதிராயனும் கூறப்பட்டுள்ளான்.
சேதிராயன் என்பான் சடையனுடனிருந்து கம்பருடைய ஏரெழுபதினைக் கேட்டவன் என்பதும்
அவன் அவ்வரங்கேற்றத்திடையே பாம்பாற் கடியுண்டு, பின்னர்க் கம்பருடைய தெய்வவாக்கால் உயிர்ப்பிக்கப்பட்டான் என்பதும்
முன்னை வரலாற்றாற் தெரிந்தனவாம். (செந்தமிழ், தொகுதி-3, பக்கம்-8)
இச்சேதிராயன் காலத்தே திரிகர்த்தன் எனப்பட்டவன் சடையனல்லாமல் வேறில்லாமையால் விக்கிரமசோழ னுலாவிற் கூறப்பட்ட
திரிகர்த்தன் சடையனே யாவனெனத் தெளிந்து கொள்க. இதனாற் கம்பர்பால் ஏரெழுபது கேட்ட சடையனும் சேதிராயனும்
கூத்தர் விக்கிரமையுலாவாற்பாடும் போதே சிறப்புற்றிருந்தனராதல் அறியலாகும்.

இவ்விக்கிரமனுலாவிற் கூத்தர் சங்கரனைக் கூறாமற் சடையனையே கூறுதலால், அவர் விக்கிரமன் மேலுலாப் பாடும்போது
சங்கரன் இறந்தனன் எனவும் சடையனே அக்குடியிற் தலை சிறந்த்தனன் எனவும் கொள்ளலாம்.
கூத்தருடைய இளமைக்காலத்தே அவரை உதவித் தொழிற்கு அமைத்துக்கொண்ட சங்கரன்,
அவர் புலமையெய்தி விக்கிரமனைப் பாடிய போது இல்லையாயினான் என்பதனால்,
அச்சங்கரன் இறந்தகாலம் கூத்தருடைய 16 பிராயத்திற்கும் 20 பிராயத்திற்கும் இடைப்பட்டதாகுமென்று உய்த்துணரலாகும்.
கூத்தர் பிறந்த காலம் கி.பி.1110 எனக் கொள்ளப்படுதலாற் சங்கரன் இறந்த காலம் கி.பி.1127ஆம் ஆண்டினை
அடுத்ததாகுமென்று ஊகிக்கப்படும்.

கம்பர், சங்கரனுடைய இளையமகனும், சரராமனாகிய சடையனுக்குத் தம்பியும் ஆகிய இணையாரமார்பன் என்பானை
என்னுடைய தம்பி சரராமனுக்கிளையான்… இணையாரமார்பனிவன்” என்று பாண்டியனுக்கு அறிவுரைத்தலாற்
கம்பராற் றம்பியென்று சிறப்பிக்கப்பட்ட இணையாரமார்பன் பிறத்தற்கு முன்னே கம்பர் பிறந்தவராதல் தெளியப்படும்.

இதனாற் கம்பர் பிறந்த காலம் சங்கரன் இணையாரமார்பனைப் பிறப்பித்தற்கு முன்னேயாமெனத் தேறலாம்.
கம்பர் தெயவவரத்தினாற் கவிசொல்லிய நாளில் முதன் முதற் பாடிய
‘மோட்டொருமை வாவிபுக’ என்னும் வெண்பாவின்கண்ணே வெண்ணெய் நல்லூரை,
“நாட்டில், அடையா நெடுங்கதவு மஞ்சலென்ற சொல்லு, முடையான் சரராமனூர்” எனவே கூறுதலாற்
கம்பர் கவித்திறம் எய்தற்கு முன்னே சடையன் கொடைத் திறம்பயின்று சிறந்தனன் எனவும்
அக்காலத்துச் சங்கரன் இல்லையாயினான் எனவும் துணியலாகும்.

கம்பர் கவித்திறமெய்தற்கு முன்னே சடையன் கொடையாற் சிறந்தனன் என்பதனாலும்
கூத்தர் புலமை நிரம்பி விக்கிரமனைப் பாடும்போதே சடையனாகிய திரிகர்த்தன் சிறந்து விளங்கினன் என்பதனாலும்
சடையன் கம்பருக்கு மூத்தோனாகக் கருதப்படுகின்றான்.
அங்ஙனமாயின் கம்பர் பிறந்தது, சங்கரன் காலத்தே சடையன் பிறந்ததற்குப் பின்னும் இணையாரமார்பன் பிறந்ததற்கு முன்னும்
ஆம் எனத் தெளியப்படும். கம்பர் கவித்திறம் எய்தற்கு முன்னே சங்கரன் இறந்துவிட்டனன் என்பதனாலும்
கூத்தர் இளமைக்காலமெல்லாம் சங்கரனுக்கு உதவித் தொழில் புரிந்து கொண்டிருந்தனர் என்பதனாலும்
கூத்தர் விளங்கிய விக்கிரமன் காலத்தே கம்பரும் புலமையாற் சிறந்தது புலப்படாமையாலும் கூத்தருக்கும் இளையராகவே துணியப்படுவர்.

கூத்தர் பிறந்தது கி.பி.1110-ஆம் ஆண்டினை அடுத்தும், சங்கரன் இறந்தது கி.பி.1127 ஆம் ஆண்டினை அடுத்தும் ஆதலின்,
கம்பர் பிறந்த காலமும் அந்த கி.பி.1110க்கும் கி.பி.1127க்கும் இடைப்பட்டதாகுமென்று தெளிந்துகொள்க.
இந்நிலையிற் சடையனையும் கூத்தரையும் ஒத்த பிராயத்தினராகக் கொள்ளுதலும்
அவ்விருவருக்கும் கம்பர் பத்து வருடம் இளையராகக் கருதுதலும் இழுக்காவாம்.
அவ்வாறு கொண்டு கருதிற் கம்பர் பிறந்தது கி.பி.1120-ஆம் ஆண்டினை அடுத்ததாமென உய்த்துணரப்படும்.
இதனாற் கம்பர் காலத்துக்கு முதலெல்லை சங்கரனது இறுதிக் காலத்தை யடுத்ததென்பதும்,
அதுவே விக்கிரமனது இடையாட்சிக் காலமென்பதும் உணர்ந்து கொள்க.

இனிக் கம்பருக்கு அடைப்பை கட்டிச் சிறப்புச்செய்த ஓரங்கல் உருத்திரன் காலத்தை யாராயுமிடத்து,
ஓரங்கற் கணபதியரசர்களுள் இவ்வுருத்திரன் என்னும் பெயரினர் இருவரிருந்தமை காணப்படும்.
அவருள் ஒருவன் கி.பி.1162க்குச் சிறிதுமுன் முதல் கி.பி.1197க்குச் சிறிது பின்வரை அரசாட்சி புரிந்தனன் எனவும்
மற்றொருவன் 29கி.பி.1288 முதல் கி.பி.1323 வரை அரசாண்டனன் எனவும் புராதனசாசன ஆராய்ச்சி செய்தார் கூறுவர்.
இவருள் பின்னோனாகிய உருத்திரன் காலந்தொட்டேதான் பிராதாபருத்திராப்தம் வழங்கியது.

இச்சங்கத்துள்ள சில பழையதமிழ் ஏடுகளில் அவ்வவ்வேடு எழுதப்புக்க (அல்லது எழுதி முடித்த)
அப்தம் ஆண்டு திங்கள் நாள் முதலியவற்றை வரைந்த பிரதிகளும் உள்ளன.

இதன்கட் கூறப்பட்ட மற்றை அப்தங்களெல்லாம் இப்போது வழங்குவனவற்றோடு கணக்கிடுமளவிற் பொருந்தியனவேயாதலால்
இதன் பிராதாபருத்திராப்தமும் உண்மையுடையதேயாமென நம்புதலாகும். இதன்கட்கண்ட சகாப்தம் முதலியவற்றாலிவ்வேடு
நூற்றாறு வருடங்களுக்கு முற்பட்டதாமெனத் துணியலாம்.

அந்நூற்றாறினையும் 511-வருடத்துடன் கூட்டி நோக்கின் இப்போது பிராதாபருத்திராப்தம் 617 எனத் துணியப்படும்.
இந்த 617-வருடங்களையும் நிகழும் கி.பி.1905இல் கழித்தால் பிராதாபருத்திரன் காலம் கி.பி.1288 என்னலாகும்.
இதுவே, பின்னோனாகிய உருத்திரன் ஆட்சியெய்திய காலமாம்.

கம்பருக்கு அடைப்பை கட்டிய உருத்திரன் இப்பின்னோனாயின், கூத்தர் விக்கிரமனுலாப்பாடுதற்கு முன்னே இறந்த
சங்கரன்காலத்தே இணையாரமார்பனுக்கு முன்னே பிறந்த கம்பர் (அது கி.பி.1120 அடுத்தது) கி.பி.1288க்குப் பிற்பட்டும்
இருந்தாரெனப்பட்டுக் கம்பர் வாழ்நாள் 160 வருடங்களுக்கு அதிகமாகி இயற்கைக்கு மாறாகிப் பொய்யாகி விடும்.

முன்னோனாகிய உருத்திரனைப் பற்றி ஆராயுமிடத்து, அவன் பெயரிட்ட சாசனங்கள் கோதாவரி ஜில்லா திராக்ஷாராமா
என்ற ஊரில் கி.பி.1179இல் அமைந்தது ஒன்றும் (Sewells List of Antiquities, Madras, Vol 1, p.31)
கிருஷ்ணாஜில்லா குங்கலகுண்டா என்ற ஊரில் கி.பி.1197இல் அமைந்தது ஒன்றும் (Do. Do. p.71) 1162இல் அமைந்தது
மற்றொன்றும் (Do. Vol.11, p.173) காணப்படுதலால் இவன் கி.பி.1162க்குச் சிறிது பின்னும் ஆட்சி புரிந்தவனாகக் கருதப்படுகின்றான்.

கி.பி.1120ஆம் ஆண்டினை அடுத்துப் பிறந்த கம்பர் கி.பி.1200க்கு மேற் சில்லாண்டிருந்தாலும்,
அது மக்கள் யாக்கைக்கு இயல்பாகிய ஆயுளைக் கடவாதாதலின் முதலாம் பிராதாபருத்திரனுடைய ஆட்சியின்
இறுதிக் காலமாகிய கி.பி.1197இலும் கம்பர் இருந்து அவனால் அடைப்பை கட்டுஞ்சிறப்பப்ப் பெற்றனரென்பதில் விரோதமில்லையாம்.

இதனாற் கம்பருக்கு அடைப்பைக்கட்டினவன் முதலாம் உருத்திரன் எனவும் அவன் அவருக்கு அது புரிந்த காலம்
கி.பி.1162க்கும் 1197க்கும் இடைப்பட்டதாகுமெனவும் கொள்ளத்தகும்.

இவற்றாற் கம்பருடைய காலத்திற்கு இறுதியெல்லை, முதலாம் உருத்திரனுடைய அரசாட்சியின் இறுதிக்காலமேயாமென்பதுணர்ந்து கொள்ளலாம்.

கி.பி.1162க்குப் பிற்பட்ட காலம் இராசராசன் காலமாதலால் கம்பர் ஓரங்கல் உருத்திரன்பாற்சென்று சிறப்பெய்தியதும், அவன் காலத்தேயாதல் ஒருதலையாம்.

இதனாற் கம்பரை முனிந்தவனும் கொன்றவனும் ஆகிய சோழன் இராசராசனே என்பதும் உய்த்துணரப்படும்.
இவன் காலத்தோடு சோழருடைய பேரரசாட்சி சிதைந்ததெனவும் பின் சிற்சில சிற்றரசர்களால் நாடு ஆளப்பட்ட போது
ஓரங்கல் வேந்தர் படையெடுத்துச் சோணாட்டைக் கைப்பற்றிக் கொண்டு அதனை 14ஆம் நூற்றாண்டு வரை ஆண்டனரெனவும்
புராதனசாசன ஆராய்ச்சியாற் றெரிகிறது (Sewells List of Antiquities, Madras, Vol 11, p.159).
இதனாலே “என்பாட்டம்புநின் குலத்தைச் சுட்டெரிக்குமென்றே துணி” என்று கல்வியிற் பெரியரால் முனியப்பட்டவன்
இவ்விராசராசனே யாவனென்று கொள்க.

கம்பர் இராமாயணம்பாடி அரங்கேற்றியதும் இவ்விராசராசன் காலமேயாகும்.
கூத்தர் தக்கயாகப்பரணி பாடிய காலமும் இவன் காலமேயாம்.
இவ்விராசராசன் காலம் கம்பருடைய 42 வயதுக்கு மேற்பட்டதாகலின் அதுவே இவரதுளத்தூய்மைக்கும் பத்தியொழுக்கங்கட்கும்
உலகியலுணர்ச்சிக்கும் வீட்டுநெறி விழைவுக்கும் ஏற்றதாகும்.

கி.பி.1162க்கு முன்னெல்லாம் இவரது யெளவனகாலமாம். அக்காலங் குலோத்துங்கன் காலமே.
அக்காலத்தே தான் இவர் வல்லியை விழைந்ததும் ஏரெழுபது பாடியதும் மும்மணிக் கோவை பாடியதும் ஆம்.
இவரது கவித்திறத்துக்கு உவந்து இவருக்குப் பெருஞ்சிறப்பெல்லாஞ் செய்தவன் குலோத்துங்கன் ஆவன்.

அவன் இவருடைய 42ஆம் பிராயத்தோடு இறந்தனன். இதன் பின்னேதான்
‘இராமாயணமென்னும்பத்தி வெள்ளம்’ கம்பருடைய அறிவுடை நெஞ்சிற் குடிகொண்டதாகும்.

இனி, “எண்ணிய சகாத்த மெண்ணூற் றேழின்மேற் சடையப்பன் வாழ்வு, நண்ணிய வெண்ணெய் நல்லூர் தன்னிலே
கம்பநாடன், பண்ணிய விராம காதை” என்பதனாற் கம்பர் இராமாயணம் பாடியரங்கேற்றிய காலம்
சகாப்தம் 807-என்று கூறுதலாற் கம்பர் காலமே மேற்காட்டிய காலத்துக்கு 1200-வருடம் முற்பட்டதன்றோவெனிற்
கூறுவேன். சகாப்தம் 807-என்பது கி.பி.885 ஆகும்.
அது விக்கிரமன் காலத்துக்கு நெடுதூரமானது. அங்ஙனமாயின் அஃது ஒட்டக்கூத்தர் காலமும் அன்று.
கூத்தர் காலமன்றாயிற் சங்கரன் காலமுமன்று. சங்கரன் காலமன்றாயிற் சடையன், சேதிராயன் காலமுமன்று.
சடையன், சேதிராயன் காலமன்றாயிற் கம்பர் காலமுமன்றாம். ஓரங்கலுருத்திரன் காலமும் இஃதன்றாதல் கூற வேண்டா.
இங்ஙனம் கம்பர் காலத்தவராகத் தெளியப்பட்ட வேறு பலர் காலங்கட்கும் இக் கி.பி.885 பொருந்தாதாதலின்
அது கம்பருக்கும் பொருந்தாதென்பது ஒருதலை.

மேற்காட்டிய பிரபல பிரமாணங்களாற்றெளியப்பட்ட கம்பர் காலத்தோடு பொருந்த வைத்து நோக்கின்,
இந்த ‘எண்ணியசகாத்தம்’ என்ற செய்யுள் சிறிது பாடம் பிழைத்ததென்றேனும் வேறொரு பொருளுடைய தென்றேனும் கருதப்படும்.
பாடம் பிழைத்தலாவது ‘எண்ணிய சகாத்தம்’ என்ணூற்றேழின்மேல் எனவிருந்ததை “எண்ணிய சகாத்தம் எண்ணூற்றேழின்மேல்” எனக் கொண்டதாம்.

அஃதாவது ‘எண்ணிய சகாத்தம், என்கின்ற நூற்றேழின் மேல்’ என்றவாறாம்.
ஆயிரம் என்ற பேரெண்ணையொழித்துக் கொல்லமாண்டு முதலியவற்றை 80ஆம் ஆண்டு என்பது முதலாகச்
சிற்றெண்ணையே வழங்கல் இக்கால வழக்காதல் போலப் பண்டும் சகாப்தம் ஆயிரத்து நூற்றேழினைச் சகாப்தம் நூற்றேழென வழங்கியதென்க.
இனி வேறொரு பொருள் பெறுதலாவது “எண்ணிய சகாத்தம் எண்ணூற்றேழின்மேல்” என்ற பாடமே
‘கருதிய சகாத்தம் எண்ணப்பட்ட நூற்றேழின் மேல்’ என்ற பொருள் படுதல்.

இவ்விரு வகையினும் ஆயிரமாகிய பேரெண்ணையொழித்து உலகவழக்கு நெறியே தழுவிச்
சிற்றெண்ணானே கூறியதாமெனக் கொண்டால், சகாப்தம் 1107 என்பது கி.பி.1185ஆம் ஆண்டாம்.
இந்தக் கி.பி.1185ஆம் ஆண்டு கம்பருக்கு 65ஆம் பிராயமெனக் கொள்ளப்படுமாதலின் அது கம்பர்காலமேயாதல் தேறப்படும்.

இந்த ‘எண்ணிய சகாத்தம்’ என்ற செய்யுளை இவ்வாறு இணங்கிக் கொள்வது, மேற்காட்டிய உண்மைப் பிரமாணங்களோடு
பொருந்த நோக்குமிடத்து உசிதமேயாகும். அன்றியும் இஃது “இராமாயணமெனும் பத்தி வெள்ளங் குடிகொண்ட கோயி”லாகிய
இராமாநுஜமுனிவர் நிலைநாட்டிய வைணவம் தழைத்தோங்குகின்ற காலமுமாம்.

அக்காலத்தே தான் ஞானபூரணரான ஸ்ரீசடகோபரது குணாநுபவம் செய்யும் அடியாரும் பகவரும் மிக்கனராவர்.
கம்பர் சடகோபரந்தாதிக் கண்ணே
“கூட்டங்கடோ றுங் குருகைப் பிரான்குணங் கூறுமன்பர் ஈட்டங்கடோ றும் இருக்கப்பெற் றேமிருந் தெம்முடைய,
நாட்டங்க டோ றும் புனல் வந்து நாலப்பெறேம்” எனப்பாடுதலால் இவர் காலத்தே பெரிய கோயிற்கண்ணே
கூட்டம் கூட்டமாகக் குருகைப்பிரான் குணாநுபவம் பண்ணும் பரமபக்தர்கள் மிக்கிருந்தனரெனவும்,
அத்திருக்கூட்டத் தோடெல்லாம் தாமும் உடன் இருக்கப் பெற்றார் எனவும் இருந்து ஆனந்தக் கண்ணீர் பெருக்கினாரெனவும் அறியப்படும்.
இங்ஙனம் கம்பர் குருகைப்பிரானார் திருவடிகளில் ஈடுபடுதற்கேற்ற காலம் அதுவேயாமென நோக்கிக் கொள்க.
ஈண்டுக்காட்டிய கி.பி.1185ஆம் ஆண்டு இராசராசன் ஆட்சியின் இடைக்காலமாதல் ஆராய்ந்து கொள்க.

இனி இவர் இராமாவதாரத்து “சென்னிநாட்டெரியல் வீரன் தியாகமாவிநோதன் தெய்வப், பொன்னிநாட்டுவமை வைப்பை”
எனக் கூறிய விடத்துச் சென்னியாகிய சோழனொருவனை ‘வீரன்’ என்னும் பெயரால் வழங்கியுள்ளார்.
கூத்தர் இராசராசனுலா விறுதியிற் பாடிய,

“அன்று தொழுத வரிவை துளவணிவது
என்று துயில்பெறுவ தெக்காலந்-தென்றிசையி
னீரதிரா வண்ண நெடுஞ்சிலையை நாணெறிந்த
வீரதரா வீரோத யா.”–என்னும் வெண்பாவிலும்
இராசராசனுக்கு வீரசப்தமே பெயராகப் பயின்றுள்ளது. இவனை வீரராசராசன், வீரராசேந்திரன் எனவும் வழங்குவரெனத் தெரிகின்றது.
இதனாலும் கம்பர் இராமாயணம் பாடிய காலத்தவன் இராசராசனென ஊகித்தலாகும்.

கம்பர் இராமாவதார இறுதியில் “அறைபுகழ்ச் சடையன்வாழி அனுமனெப்போதும்வாழி” என வாழ்த்துக் கூறுதலாற்
சடையன் அவர் இராமாயணம் பாடி முடித்த காலத்தும் இருந்தனன் என்று கொள்ளப்படும்.
கூத்தர் உத்தரராமாயணம் பாடிய காலமும் அதுவாம். அக்காலத்துச் சடையற்கும் கூத்தருக்கும் 75 வயதாமெனக் கொள்ளலாகும்.

இனி “ஆவின் கொடைச்சகர ராயிரத்து நூறொழித்து” என்னும் வெண்பாவினை வைத்து நோக்கின்
கம்பர் இராமாயணம் பாடியது சகாப்தம் 1100 (அஃதாவது கி.பி.1178) எனத் தெரியலாகும்.
அஃது ‘எண்ணிய சகாத்தம்’ என்ற செய்யுளாற் கொள்ளப்பட்ட சகாப்தம் 1107க்கு (அஃதாவது கி.பி.1185க்கு)
ஏழுவருடம் முற்பட்டதாமெனக் கருதப்படும். ‘எண்ணிய சகாப்தம்’ என்ற செய்யுள் அரங்கேற்றக் காலமாக வைத்துக்கொண்டால்
கம்பர் இராமாயணம் பாடிமுடித்த காலம் அவ்வரங்கேற்றத்திற்கு 7 வருடம் முற்பட்டதாமெனத் தேறலாம்.

இங்ஙனம் பல்லாற்றானோக்கினும் கம்பர் காலம் 1120க்கும் 1200க்கும் இடைப்பட்டதலால் கண்டு கொள்க.

திருத்தக்கதேவரும், கம்பரும்–இருவரும் யாத்த காவியம்

இவர்கள் இருவரும் தமிழிற் பெருங்காப்பிய நூல்கள் இயற்றி மிகச்சிறந்த புகழ்படைத்த புலவர் பெருமக்களாவர்.
துறையடுத்த விருத்தத் தொகைக்கவிகளாற் றொடர்நிலைச் செய்யுளை வளம்பெறப் பாடுதலில் இவர்களுடைய பேராற்றல்
அளத்தற்கு அரியதேயாகும். இவருள் திருத்தக்கதேவர் பாடியது சீவகசிந்தாமணி என்பது. கம்பர் பாடியது இராமாவதாரமென்பது.
இவ்விரு பெரும் புலவர்களுடைய அறிவின் ஒற்றுமை வேற்றுமைகளை ஆய்ந்தறிதற்கு இவ்விரண்டு நூல்களுமே உற்ற கருவிகளாவன.

சீவகன் கதையும், ராம் காதையும்

சீவகன் கதைக்கும் சீராமகாதைக்கும் சரிதையினியல்பு பற்றி நோக்குமிடத்துச்
சிறிய உவர்க்குட்டத்துக்கும் பெரிய பாற்கடற்குமுள்ள வேற்றுமை புலனாகும்.
சீவகன் கதையாண்டுஞ் சிற்றின்பமே பெரும்பாலும் பயின்று வருகின்றது.
சீராமகாதை அறம் பொருளின்பம் வீடு என்னும் நாற்பொருளும் மலிந்து இயல்வது.
இக்காப்பியங்களின் தலைவர்களை நோக்குமிடத்துச் சீவகன் பல தாரங்களை மணந்தவனாவான்;
சீராமமூர்த்தி ஏகதார மகாவிரதனாவான்.
சீவகசரிதையில் இரண்டோ ரிடங்களில் வாழ்வுந் தாழ்வுங் கலந்து இன்பச்சுவையும் துன்பச்சுவையும் காணப்படினும்
பெரும்பாலும் கதையினைச் செல்வ வாழ்க்கையிலே கொண்டு செலுத்த சுவையின்றாவது.
சீராமகாதைக்கண் யாண்டும் வாழ்வுந்தாழ்வும் பற்றி இன்பமும் துன்பமும் விரவிவருதலிற் சுவை மிகுதி பயக்கின்றது.
இன்னோரன்ன சரித்திரவியல்புபற்றி இவ்விரண்டு நூல்களுக்குள் உயர்வு தாழ்வு காண்டல் எளிதேயாகும்.
ஆதலால் சரித்திரவியல்பினை எடுத்து இவ்விரு பெருங்காப்பியங்களையும் நன்றியற்றிய இவ்விரு நூலாசிரியர்களுக்குள்
புலமைத்திறன் பற்றியுள்ள ஒற்றுமை வேற்றுமைகளையே யான் இவ்விடத்தாராயப்புக்கேன்.

புலமைத்திறன்

இவ்விரு புலவர்களும் காலத்தானுங் கொள்கையினானும் வேற்றுமைப்பட்டவர்களேயாயினும்
புலமை எய்தியது தமிழ்க்கல்வியிலே யாதலால் இவர்கள் அம்மொழியில் கற்ற பெருநூல்களெல்லாம்
பழைய சங்கநூல்களே யாகுமென்று துணியலாம். இவ்விருவர் வாக்கிலும் திருக்குறள், புறநானூறு, அகநானூறு
முதலிய பழைய நூல்களின் அரிய வழக்குகள் பல விரவியிருத்தலானே ஈதறியப்படும்.
இவ்விருவரும் எடுத்தாண்ட சங்கநூல் மேற்கோள்களை இங்கு ஒவ்வொன்றாக எடுத்துக்காட்டப்புகின் மிக விரியுமாதலால்
ஒரு சிலவே கூறிச்செல்வேன்.

சிந்தாமணியும் திருக்குறளும்

சிந்தாமணிக்கண்,
“வேட்டார்க்கு வேட்டனவே போன்றினிய வேய் மென்றோள்” (குணமாலை-192) என்பது

“வேட்ட பொழுதி னவையவை போலுமே
தோட்டார் கதுப்பினா டோ ள்” (1305) என்னும் திருக்குறளையும்;

“கண்ணிலா லின்று கண்டாங் கூற்றினைக் காமர் செவ்வாய்
…. ….. ….. ……. ……
பெண்ணுடைப் பேதைநீர்மைப் பெருந்தடங் கண்ணிற்றம்மா” (இலக்கணை-81) என்பது

“பண்டறியேன் கூற்றென் பதனை யினியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு” (1083)

என்னும் திருக்குறளையும் கொண்டு வந்தனவாதல் அறிக.
இவ்வாறு முழு முழுத் திருக்குறளைக் கொண்டுவருவன இந்நூலுண் மிகப்பலவாகும்.
இவையன்றி ஒவ்வொரு திருக்குறளில் குறித்த உவமை பற்றி வருவனவும் பலவுள.

“பெரும்பார வாடவர்போல் பெய்பண்டந் தாங்கி” (முத்தி-186) எனப்பகட்டிற்கு ஆடவரை-உவமித்தது
“மடுத்த வாயெல்லாம் பகடன்னான்” (திருக்குறள்-624) என்பது கொண்டு என அறிக.
“போதுவாய் திறந்தபோதே பூப்பொறி வண்டு சேர்ந்தால், கூதுமே மகளிர்க் கொத்த போகமு மன்னதொன்றே” (கேமசரி 379) என்பது
“மலரினு மெல்லிது காமம்” (1289) என்னும் திருக்குறள் கருத்தினை விளங்கவுரைத்ததாம்.

“வாய்ப்படும் கேடு மின்றாம் வரிசையினரிந்து நாளும்
காய்த்தநெற் கவளத் தீற்றிற் களிறுதான் கழனிமேயின்
வாய்ப்பட லின்றிப் பொன்றும் வல்லனாய் மன்னன் கொள்ளின்” (முத்தி-309) என்பது

“சாய்நெல் லறுத்துக் கவளங் கொளினே
மாந்தை வில்லதும் பன்னாட் காகு
தூறுசெறு வாயினும் தமித்துப்புக் குணினே
வாய்பகு வதனினும் கால்பெரிது கெடுக்கு
மறிவுடை வேந்த னெயறிந்து கொளினே” (184) என்னும் புறப்பாட்டையும்;

“நெல்லுயிர் மாந்தர்க் கெல்லா நீருயி ரிரண்டு செப்பில்
புல்லுயிர்………..மன்னர்கண்டாய் நல்லுயிர்…………..” (முத்து-310) என்பது

“நெல்லு முயிரன்றே நீரு முயிரன்றே
மன்ன னுயிர்த்தே மலர்தலை யுலகம்” (186)

என்னும் புறப்பாட்டையும் கொண்டு வந்தன. இவைபோல வந்தன பிறவும் கண்டுகொள்க.

இராமாவதாரத்தில் திருக்குறள்

இனி இராமாவதாரத்தில்,

“ஊருணி நிறையவு முதவு மாடுயர்
யார்கெழு பயன்மரம் பழுத்தன் றாகவும்
கார்மழை பொழியவும் கழனி பாய்நதி
வார்புனல் பெருகவு மறுக்கின் றார்கள் யார்–(அயோத்தி-மந்திரம்-82) என்பது

“ஊருணி நீர் நிறைந் தற்றே யுலகவாம் பேரறி வாளன் றிரு” (215)

“பயன்மர முள்ளூர்ப் பழுத்தற்றாற் செல்வ நயனுடைய யான்கட் படின்” (216)

“கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட் டென்னாற்றும் கொல்லோ வுலகு” (211)

என்னும் திருக்குறளையுட்கொண்டு எழுந்தது என்று துணியத்தகும்.
பேரறிவாளனும், நயனுடையானுமாகிய இராமன் அரசுச் செல்வம் எய்தல் ஊருணி நிறைதல் போலவும்
பக்கத்துயர்ந்த பயன்மரம் பழுத்தது போலவும் கார்மழை பொழிதல் போலவும், கழனி பாய்ந்து பெருகல் போலவும்
எல்லாரானும் தத்தமக்கு வரும் நன்மையாகக் கொண்டு விரும்பப்படும் என்றதாம்.
இதன்கண் நதிபெருகலொழித்து மற்றை மூன்றும் திருக்குறளைக் கொண்டு நின்றன.

“மானநோக்கில் கவரிமாவனைய நீ ரார்” (அயோத்தி-மந்திரம்-7) என்பது

“மயிர்நீப்பின் வாழாக் கவரிமா வன்னா ருயிர்நீப்பர் மானம் வரின்”–என்னும் திருக்குறளைக் கொண்டு வந்தது.

“உரைசெயற் கெளிதுமாகி யரிதுமா மொழுக்கினின்றான்” (கிட்கிந்தை, அரசியல்-44) என்பது

“சொல்லுதல் யார்க்கு மெளிய வரியவாஞ் சொல்லிய வண்ணஞ் செயல்” (664) என்னும் திருக்குறளைக் கருதி வந்தது.
இதன்கண் உரைசெயற்கு என்பதனை ஒரு சொல்லாகக் கொள்ளாது உரைக்கு செயற்கு எனப் பிரித்து
உரைக்கு எளிதுமாகிச் செயற்கு அரிதுமாம் என இயைத்துரை கொள்க.

“கொடுப்பது விலக்குகொடி போயுனது சுற்ற
முடுப்பதுவு முண்பதுவு மின்றிவிடு கின்றாய்” (பால-வேள்வி-33) என்பது

“கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்ற முடுப்பதூஉ
முண்பதூஉ மின்றிக் கெடும்” (165) என்னுந் திருக்குறளைப் பற்றி வந்தது.
இவைபோல வந்தன பலவுள. கம்பர் திருக்குறளை “எழுதுண்டமறை” என்று வழங்கலால்
அவருக்கு அந்நூற்கண் உண்ண நன்மதிப்பினை எளிதிலறியலாகும்.

சங்கத்தமிழும், கம்பரும்

இனிக் கிட்கிந்தாக்காண்ட கார்காலப்படலத்து

“காலமறி வுற்றுணர்தல் கன்னலள வல்லான்
மாலைபக லுற்றதென வோர்வரிது மாதோ” என்பது

“நிலனும் விசும்பு நீரியைந் தொன்றிக்
குறுநீர்க் கன்ன லெண்ணுத ரல்லது
கதிர்மருங்கறியா தஞ்சுவாப் பாஅய்த்
தளிமயங் கின்றே தண்குர லெழில்” (43) என்னும் அகப்பாட்டினையே கருதிவந்தமை கண்டுகொள்க.
கம்பர் கன்னல் என்றது குறுநீர்க்கன்னலை. குறுநீர்க்கன்னல் என்பது அளவுபட்ட நீரினையுடைய நாழிகை வட்டில்;
ஒரு கடாரத்து நீரிலே ஒரு நுண்ணிய துளையுடையதோர் வட்டிலையிட்டு அதன்கண் நீர் புகுவதுபற்றி
நாழிகையளப்பதோர் கருவியாகும்.

சூர்ப்பநகைப் படலத்து,

“சேற்றவளை தன்கணவ னருகிருப்பச் சினந்திருகிச்
சூற்றவளை வயலுழக்குந் துறைகெழுநீர் வளநாடா”
என்பது
“கதிர்கோட்டு நந்தின் சுரிமுக வேற்றை
நாகிளந் தவளையொடு பகன்மணம் புகூஉ
நீர்திகழ் கழனி நாடுகெழு பெருவிறல்” (296)–என்னும் புறப்பாட்டைக் கொண்டு கூறியதென்றுணரப்படும்.
புறப்பாட்டுரையாசிரியர் இப்பாடத்தினை எடுத்தோதி
“நந்தி னேற்றை நாகிளந் தவளையுடனே தத்தம் இனத்தோடு புகன்மணம்புகூஉம் எனினுமமையும்” என்றார்.
இவ்வுரைக்குத் ‘தத்தமினத்தொடு’ பாடத்திலில்லாமல் வருவித்ததாம்.
இங்ஙனம் வருவித்துரையாது இப்பாடத்தின் நேர்பொருளே கொண்டு கம்பர் கூறியுள்ளாரென்று துணியப்படும்.
இவ்வாறு சங்கநூல் வழக்குப்பற்றி வருவன இராமாவதாரத்து மிகப்பலவாகும்.
இவற்றால் திருத்தக்க தேவருக்கும் கம்பருக்கும் சங்கம் மருவிய பழைய பெருநூல்களிலெல்லாம் நல்லதேர்ச்சியுண்லென்றுணரலாம்.

கம்பர்க்குற்ற ஏற்றம்

பண்டைத்தமிழ் நூற்பயிற்சி இருவர்க்கும் ஒத்ததென்று துணியப்பட்டவிடத்தும்
கம்பருக்கும் சிந்தாமணியாரினுஞ் சிறந்ததோரேற்றமுள்ளது.
அஃதாவது கம்பர் சிந்தாமணியார் பேரறிவையும் நன்கறிந்தவராவார். சிந்தாமணியார் கம்பருக்கு முற்பட்ட காலத்தவராதலால்,
சிந்தாமணியாரோ கல்வியிற் பெரியாராகிய கம்பரது விழுப்பேரறிவையறியார்.
கம்பர், சிந்தாமணி தமிழ்மக்களாற் பெரிதும் போற்றப்படுதலைக் கண்டுவைத்து அதனினுஞ் சிறக்கவே ஒரு பெருங்காப்பியஞ்செய்து
புகழ்பெற வேண்டுமென்ற ஊக்கத்துடனே இராமாவதாரத்தைப் பாடியிருப்பார்.
இவர் காலமோ சிந்தாமணியையே அரியபெரிய காப்பியமாகப் போற்றிப் படித்த காலமாகும்.
அன்றியும் இவர் காலம் செயங்கொண்டார், சேக்கிழார் நாயனார், புகழேந்தியார், ஒட்டக்கூத்தர் முதலிய
கவிவேந்தர்களெல்லாம் பெரிய பெரிய நூல்கள் பாடி அழியாப்புகழ் நிறுத்திய காலமாம்.
கம்பர் இவர்கள் அறிவையெல்லாமும் அளந்தறிந்து கொண்டவருமாவர்.
அளக்கலாகா இயற்கையறிவின் மாட்சி நன்கு பெற்ற ஒருவருக்குப் பல பெரிய புலவர்களின் புலமையையும் அளந்து கண்ட
செயற்கையறிவும் நன்கு கூடுமாயின் அவருக்கு அரியவாவனயாவை?
“மதிநுட்ப நூலோடுடையார்க் கதிநுட்பம், யாவுன முன்னிற் பவை” என்பது பொய்யாமொழியன்றோ?

சிந்தாமணியினும் சிறக்கப் பாடுதல்

இதனேற்றிருத்தக்க தேவர்க்கும் கம்பருக்கும் நூலான் எய்திய செயர்கையுணர்விலுஞ் சில வேற்றுமையுண்டென்று கொள்ளப்படும்.
மற்றுக்கம்பர் திருத்தக்கதேவர் கவிகளையும் நன்றறிந்தவர் என்றற்குச் சான்று என்னையெனின்
இராமாவதார நூற்கண்ணே சிந்தாமணிச் சொல்லும் கருத்தும் ஆங்காங்குப் பயின்றிருதலேயாமென்க.
கம்பர் சிந்தாமணிக் கருத்தை எடுத்தாளுமிடங்களிலெல்லாம் அந்நூற்கண் உள்ளவாறே கூறியொழியாது
தாமெடுத்தாளப்புகுந்த ஒவ்வொரு கருத்தையும் முன்னதினுஞ் சிறக்கப் புனைந்து பல அழகும் ஒருங்கு பெறப்பாடுவரெனவறிக.
சிந்தாமணியார் கருத்தும் கம்பர் பாற்பட்டு இனிய சுவையுடைத்தாமென்று கொள்க. இவ்வாறு வந்தன பலவற்றுள் ஈண்டுச் சில கூறுவல்.

குவளை மலர்ந்த தாமரை

கம்பர் ஆரணியகாண்டத்து மாரீசன்வதைப் படலத்து,
“ஆற்றாகிற்றம்மைக் கொண்டடங்காரோ வென்னா ருயிர்க்குக்
கூற்றாய் நின்றகுலச்சனகி குவளை மலர்ந்ததாமரைக்கு
தோற்றாயதனான கங்கரிந்தாய் மெலிந்தாய்வெதும்பத் தொடங்கினாய்
மாற்றார்செல்வங் கண்டழிந்தால் வெற்றியாக வற்றாமோ” எனப் பாடியுள்ளார்.
இது சூர்ப்பநகையாற் சீதையின் பேரழகை நன்றுகேட்டு அச்சீதைபாற் பெருங்காமங் கொண்ட இராவணன்,
இரவிற்றண்ணிலவெறிப்பக்கண்டு, என்றுங் குளிர்கின்ற மதிமயங்கிச் சுடுகின்றதெனக்கருதி, மதிமயங்கி
அத்தங்களை நோக்கிக் கூறியதுக்குச் செய்யுள். இதனட் ‘குவளை மலர்ந்த தாமரை’ என்பது சிந்தாமணியார் கருத்தாம்.

“தாமரைப் போதிற் பூத்த தண்ணறுங் குவளைப் பூப்போற்
காமரு முகஹ்த்டிற் பூத்த கருமழை தடங்கண் டம்மால்” (மண்மகள்-23) எனவும்

“இழையொளி பரந்த கோயி லினமர்க் குவளைப்பொற்பூ
விழைதகு கமல வட்டத் திடைவிராய்ப் பூத்த தேபோல” (ஷெ-29) எனவும் வருவனவற்றானுணர்க.
கம்பருக்குக் “குவளை மலர்ந்த தாமரை” என்னுங்கருத்து இச்சிந்தாமணி யடிகளினின்றும் உண்டாயிற்று என்று
கொள்ளலாமாயினும் கம்பர் சிந்தாமணியார் கூறியாங்குக் கூறாமல்,
அக்குவளை தாமரைகளுக்கும் திங்களுக்கும் உள்ள இயைபினைத் தெளிந்து,
குவளையும் தாமரையும் வேறு வேறிடங்களிலுளவாயின் முன்னதை யலர்த்தியும் பின்னதைக் குவித்து வாடுவித்தும் போதுகின்ற
அத்திங்கள், குவளையைத் தன்னடுவில் வைத்துக் கொண்டதொரு தாமரையுளதாயின் அதனைக் குவிக்கலாற்றாது தோற்கும் என்று கண்டு,
யாண்டுந் தாமரை திங்களுக்குத் தோற்றதுபோல் ஈண்டுச் சமயோசிதமாகக் ‘குவளை மலர்ந்த தாமரைக்குத் தோற்றாய்’ என்று அலங்கரித்தனர்.
திங்கள் குவளையைத் தன் நடுவில் வைத்துக்கொண்டதோர் தாமரைக்குத் தோற்ரவாறு யாங்ஙனமெனின்,
திங்களின் இயல்பு குவளையை அலர்த்தி தாமரையைக் குவித்தல் அன்றோ?
இத்தாமரை குவளையைத் தன் நடுவில் வைத்துக் கொண்டடாதலால் தாமரையைக் குவித்தால்
அதனடுவிலுள்ள குவளையும் அதனுள்ளே சாம்பும்; அப்போது தானியல்பாக அலர்த்தும் குவளையை
இவ்விடத்டலர்த்தினானாகான்; குவளையை அலர்த்தினும் அதனை நடுவிலுடைய தாமரையும் அலர்ந்து விடும்;
அப்போது தானியல்பாகக் குவிக்கின்ற தாமரையை ஈண்டுக் குவித்தானாகான்;
இவ்வாறு தன்னியற்கையான செயல் ஈண்டு நிகழ்த்தலாகாற்றாது தோற்றான் என்க.
இத்தகைய தாமரை சாநகி பாலுள்ளது. அதற்கு மதி தோற்றானென்க.
இவ்வியைபெல்லாம் தம்முடைய பரந்தவுள்ளத்து விரைந்துபட்டனவில்லையாயின்
“குவளை மலர்ந்த தாமரைக்குத் தோற்றாய் அதனால் அகங்கரித்தாய் மெலிந்தாய் வெதும்பத் தொடங்கினாய்” என
அழகு பொலியக் கூறலாகாதென்க.

திங்கள் சாநகியினுடைய கண்களாகிய குவளை மலர்ந்த முகத்தாமரைக்குத் தோற்றதனா லுண்டாய உள்வெதுப்பு,
அத்திங்களை அகங்கரித்து மெலியச் செய்து புறத்தும் வெதும்பத் தொடங்கிற்றானென்க.
இப்பாட்டில் “மாற்றார் செல்வங் கண்டழிந்தால் வெற்றியாகவற்றாமோ” என்னும் அறவுரை நினைக்கத்தக்கது.
இவ்வறவுரை உபதேசஞ் செய்கின்ற இராவணனார், தாம் இப்போது புரிகின்றது அம்மாற்ரார் செல்வங்கேட்டறபவர் போலும்!
இதனாற் சிந்தாமணியார் கருத்து என்னப்பட்டதோர் நல்லவண்ணத்தில் கம்பர் தம்பேரறிவாகிய எழுதுகோலைத் தோய்த்துக்
கண்டார் கண்ணும் மனமும் கவருந்தகைத்தாக ஒரு செய்யுளாகிய திருவுருவைச் சித்திரித்தனர் என்று துணியலாகும்.

இல்லை உண்டு என்னும் இடை

கம்பர் கோலங்காண்படலத்து,
“பல்லியனெறியிற்பார்க்கும் பரம்பொருளென்ன யார்க்கும்
இல்லையுண்டென்னநின்ற விடையினுக்கிடுக்கண் செய்தார்” என்றார்.
இது,
“………………கண்கொள்ளா நுடங்கிடையை
யுண்டெனத்தமர்மதிப்பர் நோக்கினாற்பிற செல்லா
முண்டில்லையெனவையமல்ல தொன்றுணர்வரிதே” (நாமகள்-146) என்பதுபற்றி வந்தது என்னலாம்.
இதன்கண் ‘உண்டெனத் தமர் மதிப்பர்’ என்பதுபற்றியே
பின்னும் நாடவிட்ட மடலத்தின் கண் சீராமபிரான் “தொட்டவற்குணரலாமற்றுண்டெனுஞ் சொல்லுமில்லை” எனக்
கூறியருளியதாகப் பாடினாரெனவுங் கருதலாம்.
இவ்வீரிடத்துஞ் சிந்தாமணியார் கருத்தே பயின்றதாயினும் கம்பர் சிந்தாமணியார் கூறியாங்கு
‘உண்டு இல்லை யென வையம் உணர்வரிது’ எனக் கூறியொழியாமல்
“பல்லிய னெறியிற்பார்க்கும் பரம்பொருளென்ன யார்க்கும் இல்லையுண்டென்ன நின்ற இடை” என்ன
மிகவும் அழகியதோருவமையினை முன் வைத்து இன்மையும் உண்மையுங் கூறுதல் காட்டியது,
எத்துணையேற்ற முடையதென்பது உய்த்துணர்ந்து கொள்க.
பரம்பொருளை யெய்தியறிந்த சுவாநுபூதிமான்களுக்கே அதனுண்மை புலனாம்; ஏனையோர்க்காகாது.
அதுபோல இவளிடையும் தொட்டறிந்தவனுக் குணரலாமல்லாது ஏனையோர்க்காகாது. இக்கருத்துப்பற்றியன்றே
“தொட்டவெற்குணரலா”மென்று சீராமமூர்த்தி திருவாக்கில் வைத்தார், கவிச்சக்கரவர்த்தி கம்பநாடர்.
இதுபோல் பல்வேறு இடங்களில் கம்பர், திருத்தக்க தேவரைத் தம் முன்னோடியாகக் கொண்டுள்ளார்.

இராமாவதாரவுரை
[முதல் இரு பாடல்களுக்கு விளக்கம்]

நாடிய பொருள்கை கூடு ஞானமும் புகழு முண்டாம்
வீடியல் வழியு மாக்கும் வேரியன் கமலை நோக்கு
நீடிய வரக்கர் சேனை நீறுபட் டழிய வாகை
சூடிய சிலையிராமன் றோளவலி கூறு வோர்க்கே.

(இதனுரை) நாடிய பொருள்-நாடப்பட்டவனாகிய கல்விப் பொருளும் செல்வப் பொருளும்; இவ்விரண்டனையுமே
பொருளென்பதாகக் கருதினாரென்பது மேலிவற்றின் பயனாக ஞானமும் புகழுமுண்டாம் என்றதனானுய்த்துணரலாகும்.
கல்விப் பொருளான் ஞானமும் செல்வப் பொருளாற் புகழுமுண்டாம் என்க.
பொருளைப் பெற்ருப் புகழெய்தாமலும், கல்வியைப் பெற்று ஞானெமெய்தாமலும் வாளாகழியும் உயிர்கள் பலவாதலின்
அவற்றை வேறுகூறினார்; “ஓங்குபுகழ் செய்யான் — பொருள் காத்திருப்பான்” (நாலடி)
“கற்றவர் ஞானமின்றேற் காமத்தைக் கடக்கலாமோ” (இராமாவதாரம்) எனவருதலானுணர்க;
கைகூடும் என்பது கால்சீத்தல் போல்வதோர்சொல்.
“திருவேறு தெள்ளியராதலும் வேறு” என்று கூறப்பட்ட இருவேறு நல்வினைப்பயன்களும் ஒருங்கே கைகூடும் என்றதாம்.
உண்டாம் என்றது, வித்தினின்று முளையுண்டாம் என்பதுபோல, அக்கைகூடிய பொருள்களினின்று இவைதோன்றலுணர்த்தி நின்றது.

“ஞானிக்குமப் பயனில்லையேற் சிறுக நினைவதோர் நினைவுண்டாம் பின்னும் வீடில்லை.” (திருவாய்மொழி) எனப்
பெரியார் பணித்தலான் முன்னோதிய ஞானத்தாலும் எய்தலாகாமையின் “வீடியல் வழியுமாக்கும்” என வேறே கூறினார்.
மற்று “ஞானத்தால் வீடெனவே நாட்டு” என்பது போன்று வருவனவெல்லாம் பத்திவிசிட்ட ஞானத்தையே குறித்தனவாகும்.
“அன்பே தகளியா….ஞானச்சுடர் விளக்கேற்ரினேன்” எனவும்,
“ஞானநற்சுடர் கொளீஇ……. அன்பினன்றியாழியானை யாவர்காண வல்லரே” எனவும்
“இனியார் ஞானங்களா லெடுக்க லெழாத வெந்தாய்” எனவும் வருந் திருவாக்குகளான் இதனுண்மை உணர்க.

“பக்தி ஞானத்தினுஞ் சிறந்தது” என்னுமதம்பற்றி “வீடியல் வழி” என்று பக்தியையே ஞானத்தின் மேம்பயனாகக் கூறினார்.
வீடியல்வழி, வீட்டிற்கியலுநெறி; “பக்திநெறி” என்பது வழக்கு. வேரியங் கமலைநோக்கு வீடியல் வழியுமாக்கும் என்க.
“வேரி மாறாத பூமேலிருப்பாள் வினைதீர்க்குமே” அதுவுமவன தின்னருளே” எனவரும்
திருவாக்குகளையுட்கொண்டு கமலைநோக்கு அப்பக்திமையை உண்டாக்குமென்றார்.
பிறசான்றோரும், அருட்சத்திநோக்கந் தம்பால் வீழ்தலையே தெய்வ வழிபாட்டிற்குக் காரணமாகக் கூறுப.
“அவனருளானே அவன்றாள் வணங்கி” என்பது அவர்க்கு மேற்கோள்.

இவ்விராமாயணம் பக்திசத்திரமாதலான் அப்பக்தியையே முடிவு பேறாகவுரைத்தார்.
“படிகொண்ட கீர்த்தியிராமாயணமெனும் பக்திவெள்ளம்” என்பது அமுதனார் திருவாக்கு.
வேரி-தேன். நீடியவரக்கர்-அழிவில்லாத அரக்கர்; “நீடுவாழ்வார்” என்புழிப் பரிமேலழகருரைத்தவாறுணர்க.
அரக்கருஞ் சேனையு நீறுபட்டழிய வாகைசூடிய சிலை-வென்றிமாலை சூடியவில், “நீறுபட்டழிய” என்றது.
“நீறுபடவிலங்கை செற்றநேரா” என்ற தெய்வச்சடகோபர் திருவாக்கினையுட்கொண்டு கூறியதாம்.
“மசரதமனையவர் வரமும் வாழ்வுமோர், நிசரத கணக்களா னீறு செய்யாந், தசரதன் மதலையா வருதும்” என்று
வரமணித்ததனையும் நோக்குக.
“தென்னிலங்கையெரியெழச் செற்றவில்லியை” என்று அப்பெரியார் பணித்தலான் நீறுபட்ட வாறுணர்ந்து கொள்க.
சீராமமூர்த்தி திருச்சரத்தைச் “சுடுசரம்” எனப் பலவிடத்துங்காண்க.
அரக்கரை அழித்தல் முழுமுதற்கோர் பொருளன்றாதலின் வாகை சூடியது சிலையேயென்றார்.
சிலையிராமன், பரசுராமன், அலராமன் இவரின் வேற் பிரித்துணர வைத்தது.
“இராமன் தோள்வலி கூறுவோர்க்கு” என்றது. “தென்னிலங்கை செற்ராய் திறல்போற்றி” என்ற
திருவாக்கினையுட்கொண்டு கூறியதாம்.
“கற்பாரிராமபிரானையல்லான் மற்றுங்கற்பரோ” எனவும்,
“நிற்கின்ற செல்வம் வேண்டி நெறிநின்றவுயிர்களெல்லாங், கற்கின்றதிவன்றன்னாமம்” எனவும் வருதலாற்
“கூறுவோர்க்கே” என்ற சொன்னோக்குணர்ந்து கொள்க.
கூறுவோர்க்கே கைகூடும், உண்டாம், கமலை நோக்கு ஆக்கும் எனவுரைக்க.

பாயிரம்

உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலு நீக்கலு நீங்கலா
வலகி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவ ரன்னவர்க் கேசர ணாங்களே.

(இ-ரை) உலகம் என்றது புவனமும், சனமும். யாவையும் என்றது உலகிலுள்ள உயிர்கட்குத்
தாரகபோட போக்கியங்களான மற்றெல்லாமும் எனலாம்.
உயிர்கட்கு வேண்டிய தனுகரண புவனபோகமெனப்பட்ட நான்கனுள் ஈண்டுலகமென்றது அஃதொழிந்த மற்றைய
மூன்றுமாம் எனினும் உலகம் என்பது காணப்பட்டதெனக்கொண்டு
யாவையும் என்பது நூற்றொகைகளாற் கேட்கப்பட்டனவுமாம் என்னும் அமையும். கேட்கப்பட்டன சத்தியலோகாதிகள்.
தாமுள வாக்கல்-தாமேசிருட்டித்தல்.
தாம் என்றது உபாதான நிமித்தசக காரிகாரணங்கள் தம்மின் வேறல்லாமையுணர நின்றது.
“மன்னுயிரெல்லாந் தானே வருவித்து வளர்க்குமாயன்” என மேலும் இக்கருத்தே பற்றிவந்தது. (இராம. வீடணனடைக்கலம் 114)
நிலைபெறுத்தல்-நிற்றலைப் பெறுவித்தல், இம்முத்தொழிலும் நீங்கா விளையாட்டு,
அகிலா விளையாட்டு-கணக்கில்லாத விளையாட்டு, உயிர்த்தொகைகளும் அவற்றின் கருமப்பகுதிகளும்
அளக்கலாகாமையின் அவைபற்றி நிகழும் விளையாட்டும் கணக்கின்றாம் என்பது;
முதற்காரணமுந் தாமேயாகவும் படைப்பளிப்பழிப்பானோர் துன்புறுதலிலர் என்பார் விளையாட்டென்றார்.
உயிர்த்தொகைகள் ஒரோவொன்றாக வீடுபெற்றேகின் இறுதியில் ஒருகால் விளையாட்டுக்குயிர்களே யில்லையாங்கொல்
என்னுஞ் சங்கையைப் பரிகரித்தற்கு நீங்காவிளையாட்டென்றார். உயிர்ப்பகுதி ஒன்றொன்றாக எண்ணப்படினும்
அதன் பெருந்தொகுதி எண்ணப்படாதென வறிக.
இது காலம் என்பது, நிமிஷங் கலை காட்டை முகூர்த்தம் யாமம் பகல் இரவு நாள் திங்கள் ஆண்டூழி எனப்
பலபகுதிகளாக எண்ணப்படினும் அதன் பெருந்தொகுதி முடிவுபெறாது நெடிதுசேறல் போலக் கொள்க.
இம்முத்தொழில் விளையாட்டுடையாரே தலைவரென்றது.
பிரமசூத்திரத்துள் வியாசபகவான் “இவற்றினுடைய தோற்றம் முதலியன எதனிடத்தினின்று நிகழ்வனவோ அது பிரமம்”
எனக்கூறிய சூத்திரகருத்தைத் தழீஇயுரைத்தாம். இராமாநுசரும் அச்சாரீரகபாடிய முகத்து
“எல்லாவுலகங்களுடையவும் படைப்பளிப்பு முதலிய விளையாட்டுடையான்” என இறைவனை முந்துறவுரைப்பது காண்க.
தலைவர்-முதல்வர். இது பிரணவப் பொதுவாகிய தலைமைப்பண்புபற்றித் தலைவர் எனப்பெயராடலையுநோக்குக.

இதனையே வடமொழி வல்லுநரான பட்டரும் உலகின் படைப்பளிப்பழிப்பழிப்பினைப் புரிகின்றவனான இறைவன்
அகரப் பொருள் என உரைத்தார். இனி, “அன்னவர்க்கே சரண்” என்பது, ஆன்மாக்கள் தமக்கேனும்
அசித்துக்கேனும் உரியவல்லவவென்று உகாரப்பொருள் கொள்ள வைத்தது.
உகாரம், “அகரப் பொருளான இறைவனுக்கன்றி வேறொருவர்க்கு உயிர்கள் உரியஅல்லாமை நியமிப்பது” என்றதற்கு இயையவந்தது.
உகாரம் அவதாரணப் பொருள் குறித்துவரும். இனி, “நாங்கள்” என்றது மகாரப்பொருளைக் கொண்டு கூறியது;
மகாரப்பொருள் ஜீவன் என்றுரைத்தவாறு நோக்கிக் கொள்க. இவ்வாறு, அ-உ-ம என்னும் மூன்றெழுத்துகளின்
பொருள்களை முறையே கொண்டு கூறியவாறறிக. “அன்னவர்க்கு” என்றது, அகாரத்திலேறிக் கழிந்த சதுர்த்தியை விரித்துரைத்ததாம்.
“அன்னவர்க்கே சரணாங்களே” என்பது, “உனக்கே நாமாட்செய்வோம்” என்னுங் கோதையர் திருவாக்கின் கருத்தையே
தழுவி நிற்பது, இதனாற் சரணங்களே என்ற பாடம் தவறாதலுணர்ந்து கொள்க.

இனித்தலைவர்க்கே நாங்கள் சரண் என்னாமல் தலைவரன்னவர்க்கே நாங்கள் சரணென்றது,
தலைவர்க்கும் அவரொடொரு நீர்மயராகிய திருமகனார் முதலிய பாகவதர்க்கும் நாங்கள் சரண் எனினும் அமையும்.
நாங்கள் சரணென்றது நாங்கள் சரண்புக்கோம் என்றவாறு.

மற்றைய கடவுள் வாழ்த்துப் பாடல்களின் உரையைச் “செந்தமிழ்” இலக்கிய இதழ்களில் பரக்கக் காணலாம்.

ஆதிகாவியமும் தென்னக இலக்கியமும்

[மகாவித்வான் பல இடங்களில் கம்பன், காளிதாசன், வால்மீகியின் காவியங்களைப் பற்றி உரையாற்றியதுண்டு.
இதன் குறிப்புகளை என் தந்தையார் சேகரித்து வைத்திருந்தார். அவற்றின் சுருக்கமே இது.]

இராமாயணம் என்ற மெரிய இதிகாசம் “ஆ சேது இமாசலம்” என்று பாரத காண்டம் முழுவதும் பலரால் படிக்கப்படும் பெருநூலாகும்.
வால்மீகியால் இயற்றப்பெற்ற இந்நூலை ஆதி காவியம் என்பர். காளிதாசனும் இரகுவம்சத்தில் இவ்வரலாற்ரைக் குறிப்பிடுகிறான்.
வால்மீகி இராமாயணத்தில் தான் வடமொழி அல்லாத பிறமொழிகளின் குறிப்பு காணப்படுகிறது.
அநுமன் பிராட்டியிடம் உரையாடத் தேவபாஷையை ஒதுக்கி மானுட மொழியை உபயோகித்தான் எனக்கவி கூறுவர்.
இது தென்னகமொழியேயாகும். அநுமன் தாய் அஞ்சனை.
இவள் பிறந்த ஊர் அஞ்சனை புரி, என்றும், மூசுஸ்ரீ (குரங்கின் ஊர்) அல்லது குரங்கிலூர்,
முசிறி என்றும் உலக் வழக்கிலும் இலக்கிய வழக்கிலும் கேட்கப்படுகிறது.

இது இன்றைய கேரள நாட்டில் உள்ள ஊராகும். (அஞ்சைக்களம், கரங்கலூர்) இது தேவாரப்பாடல் பெற்ற தலமாகும்.

இக்காவியத்தை இயற்றிய வால்மீகி, இராமனை, தேவ, மானிட பாவம் தோன்றவே சுலோகம் செய்துள்ளார்.
இதற்கிணங்க இராமன் “நான் தேவனல்லன், மனிதன்; தசரதன் புத்திரன்” என்று கூறுகிறான்.
விசுவாமித்திரரும் தசரதனிடம் “உலகத்தைக் காக்க உன் புதல்வனை நான் காப்பாற்றி உன்னிடம் சேர்க்கிறேன்” என்று
தேவ, மனித பாவம் இரண்டும் விளங்குமாறு கூறுவார். தன் தெய்வத்தன்மையை அறிந்தபடியால்தான் இராமன்,
சபரியை அவள் விரும்பும் மேலுலகத்திற்குச் செல்ல வழி அமைக்கிறான். சீதையைவிடத் தன்னுடன் கூடியிருந்தவர்களுக்கே
அன்பையும் அருளையும் காட்டுவதாகப் பல இடங்களில் வால்மீகி கூறுவார்.
இராவண வதத்திற்குப் பின்பு அநுமன் சீதையை அழைத்து வந்து அவள் கற்பின் மேன்மையை வாயார இராமனிடம் புகழ்வான்.
ஆனால் இராமனோ தன் அகன்ற மார்பை அநுமனைத் தழுவக் கொடுப்பான்.
“அகலகில்லேன் என்று உறையும் அலர்மேல் மங்கை”க்குத் தன் மார்பைத் தராது அநுமனுக்குக் கொடுத்தது,
நட்பின் பெருமையைக் காட்டவில்லையா? சுக்கிரீவன் இலங்கை சென்று போராட்டத்திலிருந்து மீண்டு இராமனிடம் வருகிறான்.
சுக்கிரீவனைப் பார்த்து இராமன் “ஏதானும் உனக்குக் கேடு வருமானால் சீதையால் நான் பெறும் சுகம் என்ன?” என்று வருந்திக் கூறுவான்.
இராமாவதாரம் சரணாகதியின் பெருமையைக் கூறும் நூல் என்பர் வைணவர். விபீஷணனைத் தம்பக்கல் சேர்க்கக் கூடாது என்று
பலரும் கூற “சர்வலோக சரண்யாய, ராகவாய, மகாத்மனே” என்று விபீஷணன் கூறிய வாக்குக்காகவே
அவனைத் தன்னுடன் சேர்த்துக் கொள்கிறான். இதே போல் குகனையும் தன் தம்பியாக ஏற்றுக் கொள்கிறான்.

இராமனுடைய பாதுகைக்கு இராமனுடைய முடிசூடும் பாக்கியம் கிட்டியது பின் தன் அடி சூடிய முடியை
இராவண வதத்திற்குப்பின் இராமன் முடிசூடினான். ஏனென்றால் தன் தம்பியும், பரமபகவதனுமான பரதன்,
தன் பாதுகையைச் சிரமேல் வைத்திருந்த அன்பு நோக்கியே, இராமன் தன் முடி மேலும் சூடினான்.
நந்திக் கிராமத்தில் பாதுகையில் வைத்த முடி இராம பிரானுக்குத் திருமுடியாகிறது.

அவதாரத்தின் மகியைக் காட்ட, வால்மீகி, தசரதன் பல மகளிரை மணந்தும் புத்திரப் பேற்றைப் பெறமுடியாமல் போய்,
பின் இராமன், யாரைத் தந்தையாக வரித்து அசுரர்களை அழிக்கலாம் என நினைத்து தசரதனுக்கு
மகப் பேற்றை யாகத்தின் மூலம் அளித்தான் என்று கூறுவர். புதல்வர் பேறு இறைவனால் வருவது என்று பண்டைத் தமிழரும் கருதுவர்.

“குன்றக்குறவன் கடவுள் பேணி
ஓம்பினன் பெற்ற காதல் குறமகள்” (ஐங்குறு நூறு-257)

“மலைவாழ்குறவன் கடவுளைப் பேணித் தவங்கிடந்து பெற்ற அழகிய குறப்பெண்” என்பது இதன் பொருளாகும்.

கிஷ்கிந்தையில் சுக்ரீவன் சீதையைத் தேட அனுப்பும் வானர வீரர்களுக்குத் தெந்திசையில் உள்ள பெருநகரங்களையும்,
அவர்கள் பேசும் மொழியையும் வர்ணிக்கிறான். அவையாவன: ஆந்திரம், சோளம், கேரளம், பாண்டிய நாடுகள்,
பொன்மயமான வண்ணமுள்ளதாய் முத்துகளால் அலங்கரிக்கப் பெற்ற பாண்டியனின் கபாடபுரத்தையும் குறிப்பிடுகிறார் வால்மீகி.
கபாடபுரம் இடைச்சங்கம் இருந்த ஊர் என்பர் பண்டைத்தமிழ் நூலார். இது போன்றே கேரள, சோழ நாட்டு நகரங்களையும் கவி வர்ணிக்கிறார்.

தமிழ் மக்களுடய பழக்க வழக்கங்களையும் வால்மீகி நன்கு அறிந்திருந்தார்.
தென்னாட்டவரைப்போல வடநாட்டு வீரர்களும் தலையில் பூக்களை அணிந்தனர் என்று பரதன் கூற்றாக
அயோத்தியா காண்டத்தில் தெரிவிக்கிறார். தமிழ் அரசர் போருக்குச் செல்லுமுன் தங்கள் குலத்திற்கேற்பப்
பூச்சூடுவது பண்டைத் தமிழ் நூல்களில் பரக்கக் காணலாம்.
இறந்தவர்களை எரிக்காமல் புதைக்கும் வழக்கமும் தென்னாட்டில் இருந்ததாகத் தெரிகிறது.

கம்பர் இராமாவதாரம் இயற்று முன்பே ஒருசில இராமாயணங்கள் தமிழில் இருந்தன.
ஜைன இராமாயணம் இராமாயண வெண்பா நூல்களில் ஒரு சில பாட்டுகள் இப்பொழுது கிடைத்துள்ளன.
இவற்றின் காலம் கூட நன்கு அறியப்பட இயலவில்லை.

சங்க இலக்கியங்களிலும், வைணவப்பிரபந்தங்களிலும் இராமாயணக் கதைக் குறிப்புகள் உள்ளன.
சில செய்திகள் வடமொழி நூல்களில் காணப்படாதவையாகும். தனுஷ்கோடிக்கரையில் இராமபிரான் யுத்த சம்பந்தமான
ஆலோசனை நடத்துகையில், ஆலமரத்தில் இருந்த பறவைகளின் ஒலியால் துன்பப்பட்டு, தன்கையமர்த்தி பறவைகளை
ஒடுங்கி இருக்கச் செய்த சேதி வால்மீகியால் கூறப்படாதது கடுவன் மன்னனார் என்ற சங்கப் புலவர்,

வெள்வேல் கவுரியர் தொன்முதுகோடி
முழங்கிரும் பெளவம் இரங்கு முன்றுறை
வெல்போர் இராமன் அருமறைக் கவித்த
பல்வீழ் ஆலம் போல ஒலி அவிந்து அன்றால்” (அகநானூறு-70)என்று பாடுவர்.
“குரங்கு செய்கடல் குமரியம் பெருந்துறை” என்று சீத்தலைச் சாத்தனார் மணிமேகலையில் குறிப்பிடுவது
வால்மீகி குறிக்கும் சேதுவா, கன்னியாகுமரியா என்பதை அறிஞர்கள் ஆராயவேண்டும்.

வானரங்களுடன், அணிலும் அணைகட்ட உதவிய செய்தி வால்மீகியில் இல்லாதது. தொண்டரடிப் பொடியாழ்வார்,

“குரங்குகள் மலையை தூக்கக் குளித்துத்தாம் புரண்டிட்டோ டித்
தரங்கநீரடைக்கலுற்ற சலமிலா அணிலம் போலேன்” (திருமாலை-27)என்று பாடியுள்ளார்.
இக்கதை தமிழ்நாட்டில் பலராலும் கேட்கப்பட்டதொன்று.

கம்பரும், வால்மீகியும் குறிப்பிடாத ஓர் அரிய செய்தி பெரியாழ்வார் வாக்கால் நாம் அறிகிறோம். மிகவும் அழகிய பாடல்.
சீதையிடம் அடையாளம் சொல்ல அனுப்பிய அனுமனிடம் இராமன் தனக்கும் சீதைக்கும் மட்டுமே தெரிந்திருக்கக்கூடிய
ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிடுகிறான்.

“எல்லியம் போதினிருத்தல் இருந்ததோர் இடவகையில்
மல்லிகை மாலை கொண்டங்கார்த்தது மோர் அடையாளம்” (பெரியாழ்வார் திருமொழி 3-10)

சீதையும், இராமனும் தனித்து அயோத்தியில் இருக்கும் பொழுது, சீதை குறும்பாக இராமனை மல்லிகை மாலையால் கட்டினாளாம்.
கூனி முதுகில் உண்டைவில் அடித்த கதை தமிழ் நாட்டுக்கே உரியது. சூர்ப்பனகை மூக்கொரு மார்பையும் அறிந்ததும் அவ்வாறேயாகும்.

ஊன் பொதி பசுங்குடையார் என்ற சங்கப் புலவர் புறநானூற்ற்஢ல் உவமை முகமாக ஓர் அரிய செய்தி கூறுகிறார்.
சோழன் இளஞ்சேட் சென்னியிடம் பரிசில் பெற்ற புலவர்கள் தாங்கள் பெற்ற அணிகலன்களை அணியும் முறை அறியாமல் மாறி மாறி அணிந்தனர்.
சீதையின் அணிகலன்களைக் கண்டெடுத்த குரங்கினம் எவ்வாறு நகையாடும்படி அணிந்ததோ அவ்வாறு இருந்தது
வறுமையுற்ற புலவர் செய்கை. [புறநானூறு 378] இந்த விநோத விவரம் கம்பராலும் காட்டப்படாடதாகும்.

ஜைன ராமாயணத்தில் தசரதன் காசி அரசன் என்றும், பின் அயோத்தி அரசனானதாகவும் கூறப்படுகிறது.
கதையும் மிக வேறுபடுகிறது. அநுமன் அணுமகான் என்று குறிப்பிடப்படுகிறான். இலட்சுமணனால் இராவணன் அழிக்கப்படுகிறான்.
இராமன் துறவறம் மேற்கொண்டு சுவர்க்கமடைகிறான். இராவணனும், அநுமனும் ஜைன மதத்தைத் தழுவுகின்றனர்.
அநுமன் ஆயிரம் பெண்களை மணந்தான். ஓர் இராமாயணம், சீதையை இராவணன் மகளாகவே கூறும்.
பெளத்த இராமாயணம் புத்த ஜாதகக் கதைகளிலிருந்து அறியப்படுகிறது. சாக்கிய மரபில் உடன் பிறந்தோர்
தங்களுக்குள் திருமணம் செய்து கொள்வது உண்டாம். இதன் மூலம் சீதையும், இராமனும் உடன் பிறந்தவர்கள் ஆவர்.
அகஸ்தியர் இயற்றியதாக அத்யாத்ம இராமாயணம் என்ற நூல் உண்டு. துளசிதாசர் இயற்றிய இந்தி இராமாயணமும்,
எழுத்தச்சன் எழுதிய மலையாள இராமாயணமும், தியாகையரின் இராமரைப் பற்றிய பாடல்களும் பக்தி ரசம் ததும்பப் பாடப்பட்டவை.
அருணாசலக் கவிராயரின் இராமர்கதை நாடக பாணியில் அமைந்து உள்ளது.

கம்பர் பொதுவாக வால்மீகியைப் பின்பற்றுகிறார் சிலவிடங்களில் வேறுபடுகிறார்.
அகல்யையை “நெஞ்சினால் பிழையிலாள்” என்று கூறும் கம்பர், அவள் கெளதம முனிவர் வேடம் தரித்த
இந்திரனோடு அடைந்த இன்பம் புதியது என உணர்ந்ததாகவும் கூறுகிறார்.

“தக்கதன்று என் ஓராள், தழ்ந்தனள்” என்பது கம்பர் வாக்கு. இவள் இவ்வாறு கூறி மயங்கியதற்குக் காரணம்:

“காமப் புதுமண மதுவின் தேறல் ஒக்க உண்டிருத்தலால்” ஏற்பட்டதாகு. கள்ளுண்டோர் இது
“தக்கது”, “தக்கது அன்று” என்று பிரித்து எண்ண முடியாத, மயக்க நிலையில் இருப்பார்கள்.
இவ்வாறு நாம் பொருள் கொள்ளாவிடில் அகல்யை மனதறிந்து குற்றம் செய்தவள் ஆகி விடுவாள்.
வில் முரிப்பதற்கு முன்பே இராமனும், சீதையும் ஒருவரையொருவர் பார்த்து உள்ளங்கவர்ந்தவராயினர் என்று
தமிழர் சுவைக்கு ஏற்ப வைத்தார். இதற்குப் பழைய தமிழ் நூல் வழக்குகளிலும் சான்றுகள் உள்ளன.
(தொல் காப்பியம், பொருளதிகாரம் 54 உரை). தம் வாழ்வில் புத்திர சோகம் கண்டவராகையால்,
இராமாயணத்தில் இப்படிப்பட்ட நிகந்ச்சிகள் வரும்பொழுது ஆதிகாவியத்தையும் மிஞ்சி விடுகிறார்.
மேகநாதன் மறைவு கேட்ட மண்டோதரி இறந்த மகன் உடம்பைப் பார்த்தாள்.

பஞ்செரி உற்றதென்ன அரக்கர்தம் பரவை எல்லாம்
வெஞ்சின மனிதர் வெல்ல விளைந்ததே மீண்டதில்லை
அஞ்சினேள் அஞ்சினேன் இச்சீதை என்ற அமிழ்தாற்செய்த
நஞ்சினால் இலங்கை வேந்தன் நாளை இத்தகையன் அன்றோ? (யுத்தகாண்டம்)

வால்மீகியும், கம்பரும் பெண் கதாபாத்திரங்களை, நளினமாகக் கையாள்வார்கள்.
இராமாயணத்தைச் “சீதையின் மகத்தான சரிதம்” என்று வால்மீகி உரைப்பர்.
கம்பரும் “வாழி சானகி, வாழி இராகவன்” என்று சீதையை முற்பட வைத்தார்.
தாடகை, சூர்ப்பனகை, கைகேயி, கூனி, மண்டோ தரி போன்ற பெண்களைக் கூட நாம் மதிக்கும் வண்ணம் கதையில் சித்தரித்துள்ளனர்.

பல நூற்றாண்டுகள் இந்த இரு மகாகவிகளைப் பிரித்த போதிலும், மனநிலையை அறிவதில் ஒரே மாதிரியாகக் கவனம் செலுத்தினார்கள்.
இராவணன் வதத்திற்குப் பிறகு அநுமன் சீதையைச் சந்தித்தது, “அரக்கர் யாவரும் அழிந்து விட்டனர்” என்று கூறியவுடன்
சீதை அடக்க முடியாத இன்பத்தில் கூத்தாடுவாள் என்று எதிர்பார்க்க, அவளோ பல விநாடிகள் ஏதும் பேசாமல் இருந்தாள்.
அநுமன் பன்முறை சொல்லியும் காதில் விழாதவள் போல் குனிந்து இருந்தாள். பலகாலமாக எதிர்பார்த்து,
நடக்க வேண்டிய ஒரு நிகழ்ச்சி நடைபெற்ற பொழுது, மனம் மரத்துச் செயலற்றுப் போகிறது.
வால்மீகி இதைக் கையாளும் முறையைக் கம்பரும் மிகவும் ரசித்து அதே போல் கவிபாடுகிறார்.

இந்தியப் பண்பாட்டுக்கு இராம காதை மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
இரு மகாகவிகளும் தங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப மகாகாவியம் படைத்துள்ளனர்.
இதை அநுபவிக்கும் பேறு பாரத மக்களுக்கு எப்பொழுதும் கிட்ட வேண்டும்.

————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ரா. இராகவையங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கம்ப ராமாயணம்/யுத்த காண்டம்/39. விடை கொடுத்த படலம்–

November 3, 2020

பூமகட்கு அணி அது என்னப் பொலி பசும் பூரி சேர்த்தி,
மா மணித் தூணின் செய்த மண்டபம் அதனின் நாப்பண்,
கோமணிச் சிவிகைமீதே, கொண்டலும் மின்னும் போல,
தாமரைக் கிழத்தியோடும் தயரத ராமன் சார்ந்தான். 1-

பூமகட்கு அணி அது என்ன- நிலமகளுக்கு இது ஓர்
அணிகலன் என்று சொல்லும்படியாக;பொலி பசும் பூரி சேர்த்தி
மாமணித் தூணின் செய்த மண்டபம் அதனின் நாப்பண்-
விளங்கும் பசிய பொன்னைக் கொண்டு சிறந்த
மணிக்கற்களால் ஆகிய தூண்களை அமைத்துச் செய்த
திருவோலக்க மண்டபத்தின் நடுவில்; கோமணிச் சிவிகை
மீதே- சிறந்த மணிகள் அழுத்திச் செய்த பல்லக்கின்
மேல்; கொண்டலும் மின்னும் போல- மேகமும் மின்னலும்
போல; தயரதராமன்- தசரத சக்கரவர்த்தியின் புதல்வனான
ஸ்ரீராமன்; தாமரைக் கிழத்தியோடும்- தாமரை மலரில்
வீற்றிருக்கும் திருமகளாகிய சீதாபிராட்டியோடும்;
சார்ந்தான்- வந்து சேர்ந்தான்

——————

விரி கடல் நடுவண் பூத்த மின் என ஆரம் வீங்க,
எரி கதிர்க் கடவுள்தன்னை இனமணி மகுடம் ஏய்ப்ப,
கரு முகிற்கு அரசு செந்தாமரை மலர்க் காடு பூத்து, ஓர்
அரியணைப் பொலிந்தது என்ன, இருந்தனன், அயோத்தி வேந்தன். 2-

அயோத்தி வேந்தன்- அயோத்தி நகருக்கு அரசனான
ஸ்ரீராமன்; விரிகடல் நடுவண் பூத்த மின் என ஆரம் வீங்க
– அகன்ற கடலின் நடுவில் தோன்றிய மின்னலைப் போல முத்தாரம்
மார்பில் தோன்ற; எரி கதிர்க்கடவுள் தன்னை இனமணி
மகுடம் ஏய்ப்ப – பிரகாசிக்கிற ஆயிரம் கிரணங்களை உடைய
சூரியனைக் கூட்டமான மணிகள் அழுத்திச் செய்யப் பெற்ற
கிரீடம் ஒத்திருக்க; கருமுகிற்கு அரசு செந்தாமரை
மலர்க்காடு பூத்து – கருமேகத்துக்கு அரசானது செந்தாமரைப்
பூக்கள் காடுபோலத் தன்னிடையே பூக்கப் பெற்று; ஓர் அரியணைப்
பொலிந்தது என்ன இருந்தனன் – ஒரு சிம்மாசனத்தில் வீற்றிருந்தது
என்று சொல்லும்படி வீற்றிருந்தான்.

—————

மரகதச் சயிலமீது வாள் நிலாப் பாய்வது என்ன,
இரு குழை இடறும் வேற் கண், இளமுலை, இழை நலார்தம்
கரகமலங்கள் பூத்த கற்றை அம் கவரி தெற்ற,
உரகரும், நரரும், வானத்து உம்பரும், பரவி ஏத்த, 3-

மரகதச் சயில மீது வாள் நிலாப் பாய்வது என்ன –
பச்சைமணியால் ஆகிய மலையின் மேல் ஒளி நிலா வெள்ளம்
பாய்வது போல; இருகுழை இடறும் வேற்கண், இளமுலை,
இள நலார்தம் கர கமலங்கள் பூத்த கற்றை அம்கவரி தெற்ற-
இரண்டு காதணிகளை முட்டித்தள்ளும் வேல் போன்ற நீண்ட
கண்களையும், இளமுலைகளையும் உடைய இளமையும் அழகும் உடைய
மகளிரது கைகளாகிய தாமரை மலரில் பூத்த வெண் சாமரைகள்
மேலே வீசப்பெற; உரகரும் நரரும் வானத்து உம்பரும் பரவி
ஏத்த- நாகலோகத்தினரும், புனிதர்களும் தேவலோகத்
தேவரும் பரவித் தோத்திரம் செய்ய.

—————

உலகம் ஈர்-ஏழும் தன்ன ஒளி நிலாப் பரப்ப, வானில்
திலக வாள் நுதல் வெண் திங்கள் சிந்தை நொந்து, எளிதின் தேய,
கலக வாள் நிருதர் கோனைக் கட்டழித்திட்ட கீர்த்தி
இலகி மேல் நிவந்தது என்ன, எழு தனிக்குடை நின்று ஏய. 4-

திலக வாள் நுதல் – இராமபிரானது திலகம் அணிந்த
ஒளிபடைத்த நெற்றி; உலகம் ஈர்எழும் தன்ன ஒளிநிலாப்
பரப்ப- பதினான்கு உலகங்களிலும் தனது நிலவொளியைப்
பரவச் செய்தலால்; வானில் வெண் திங்கள் சிந்தை நொந்து
எளிதின் தேய – வானத்தில் வரும் வெண்ணிலவானது மனம்
வருந்தி மெல்ல மெல்லத் தேய்ந்து போக; எழுதனிக் குடை-
அரியணைக்கு மேலாக எழுந்துள்ள வெண்கொற்றக் குடையானது;
கலக வாள் நிருதர் தன்னைக் கட்டழித்திட்ட கீர்த்தி இலகி
மேல் நிவந்தது என்ன- கலகமிடுகின்ற கொடிய அரக்கர்களை
அடியோடு இல்லையாம் படிச் செய்த பெரும்புகழ் விளங்கி மேல்
உயர்ந்துள்ளது போல; நின்று ஏய- நின்று பொருத்தமுற அமைய.

—————

மங்கல கீதம் பாட, மறையவர் ஆசி கூற,
சங்கு இனம் குமுற, பாண்டில் தண்ணுமை துவைப்ப, தா இல்
பொங்கு பல்லியங்கள் ஆர்ப்ப, பொரு கயல் கருங் கண், செவ் வாய்,
பங்கய முகத்தினார்கள் மயில் நடம் பயில மாதோ. 5-

மங்கல கீதம் பாட- மங்கலப் பாடல்கள் பாடப்பெற;
மறையவர் ஆசி கூற- அந்தணர்கள் ஆசீர்வாத மொழிகளைக்
கூற; சங்கு இனம் குமுற- சங்கங்கள் ஊதப் பெற; பாண்டில்
தண்ணுமை துவைப்ப – தாளமும் மத்தளமும் ஒலியைச் செய்ய;
தாஇல் பொங்கு பல்லியங்கள் ஆர்ப்ப – குற்றமற்ற பலவகையான
வாத்தியங்கள் ஆரவாரிப்ப;பொருகயல், கருங்கண், செவ்வாய்,
பங்கய முகத்தினார்கள் – பொருகின்ற கயல்மீன் போன்ற கரிய
கண்ணையும், சிவந்த வாயையும் உடைய தாமரை போன்ற
முகத்தினராய மகளிர்கள்; மயில் நடம் பயில- மயில் போல
நடனம் ஆடவும்.

—————

திரை கடல் கதிரும் நாணச் செழு மணி மகுட கோடி
கரை தெரிவு இலாத சோதிக் கதிர் ஒளி பரப்ப, நாளும்
வரை பொரு மாட வாயில் நெருக்குற வந்து, மன்னர்
பரசியே வணங்கும் தோறும் பதயுகம் சேப்ப மன்னோ. 6-

திரைகடல் கதிரும் நாண- அலைகடலின் மேல் தோன்றுகின்ற
உதய சூரியனும் நாணமுறும் படி; செழுமணி மகுட கோடி- (வணங்க
வந்த மன்னர்களின்) செழுமையான மணிகள் அழுத்திச் செய்யப்
பெற்ற மகுட வரிசைகள்; கரை தெரிவு இலாத சோதிக் கதிர்
ஒளி பரப்ப- முடிவு காணமுடியாத சோதிப் பிரகாசத்தை எங்கும்
பரவச் செய்யும்படி; நாளும் வரைபொரு மாட வாயில் நெருக்குற
வந்து- நாள்தோறும் மலையொத்த அரண்மனை வாயிலில்
நெருக்கித்தள்ளி வந்து; மன்னர் பரசியே

——————

மந்திரக் கிழவர் சுற்ற, மறையவர் வழுத்தி ஏத்த,
தந்திரத் தலைவர் போற்ற, தம்பியர் மருங்கு சூழ,
சிந்துரப் பவளச் செவ் வாய்த் தெரிவையர் பலாண்டு கூற,
இந்திரற்கு உவமை ஏய்ப்ப எம்பிரான் இருந்தகாலை. 7-

மந்திரக் கிழவர் சுற்ற- அரசனது ஆலோசனைக்குரிய
அமைச்சர் முதலியோர் சுற்றியிருப்ப; மறையவர் வழுத்தி
ஏத்த- அந்தணர்கள் தோத்திரம் செய்து பாராட்ட;
தந்திரத் தலைவர் போற்ற- சேனைத் தலைவர்கள் துதிக்க;
தம்பியர் மருங்கு சூழ- பரத இலக்குவ சத்துருக்கனராகிய
தம்பிமார்கள் பக்கத்தில் சூழ இருப்ப; சிந்துரப் பவளச்
செவ்வாய்த் தெரிவையர் பலாண்டு கூற- செந்நிறமான பவளம்
போன்ற சிவந்த வாயை உடைய மகளிர்கள் பல்லாண்டு கூறி
வாழ்த்த; (இவ்வாறு) எம்பிரான்- ஸ்ரீராமபிரான்; இந்திரற்கு
உவமை ஏய்ப்ப இருந்த காலை- இந்திரன் திருவோலக்க
மிருந்தமைக்கு உவமை சொல்லலாம் படி வீற்றிருந்த பொழுது.

———

சுக்ரீவன், வீடணன், குகன் வணங்கல்
10339.
மயிந்தன், மா துமிந்தன், கும்பன், அங்கதன்,அனுமன், மாறு இல்
சயம் தரு குமுதக்கண்ணன், சதவலி, குமுதன், தண் தார்
நயம் தெரி ததிமுகன், கோகசமுகன் முதல நண்ணார்
வியந்து எழும் அறுபத்து ஏழு கோடியாம் வீரரோடும்.–8-

மயிந்தன், மாதுமிந்தன், கும்பன், அங்கதன், அனுமன்,
மாறுஇல் சயம் தரு குமுதக்கண்ணன், சதவலி, குமுதன், தண்தார்
நயம் தெரி ததிமுகன், கோகசமுகன் முதல நண்ணார் வியந்து
எழும்- பகைவர்கள் ஆச்சரியப்படும்படியான; அறுபத்து ஏழு
கோடியாம் வீரரோடும்- வானர சேனைத் தலைவர்கள்
அறுபத்தேழு கோடியினர். சுக்கிரீவனுடன் வந்தோர்களுடன்.

————

ஏனையர் பிறரும் சுற்ற, எழுபது வெள்ளத்து உற்ற
வானரரோடும் வெய்யோன் மகன் வந்து வணங்கிச் சூழ,
தேன் இமிர் அலங்கல் பைந் தார் வீடணக் குரிசில்,செய்ய
மான வாள் அரக்கரோடு வந்து, அடி வணங்கிச் சூழ்ந்தான்.–9-

ஏனையர் பிறரும் சுற்ற- எழுபது வெள்ளத்துற்ற வானரரோடும்;
வெய்யோன் மகன்- சுக்கிரீவன்; வந்து வணங்கிச் சூழ –
தேன் இமிர் அலங்கல் பைந்தார் வீடணக் குரிசில் –
வண்டுகள் ஒலிக்கின்ற அசையும் பசிய மாலை அணிந்த வீடண
நம்பி; செய்யமான வாள் அரக்கரோடும் வந்து – சீரிய
பெருமை படைத்த கொடிய அரக்கர்களோடும் வந்து; அடிவணங்கிச்
சூழ்ந்தான் – இராமன் திருவடியை வணங்கிச் சுற்றியிருந்தான்.

—————

வெற்றி வெஞ் சேனையோடும், வெறிப் பொறிப் புலியின் வெவ் வால்
சுற்றுறத் தொடுத்து வீக்கும் அரையினன், சுழலும் கண்ணன்,
கல் திரள் வயிரத் திண் தோள் கடுந் திறல் மடங்கல் அன்னான்,
எற்று நீர்க் கங்கை நாவாய்க்கு இறை, குகன்,தொழுது சூழ்ந்தான்.–10-

வெறிப் பொறிப் புலியின் வெவ்வால்- நிறம் அமைத்த
புள்ளிகளை உடைய புலியின் கொடிய வாலை; சுற்றுறத் தொடுத்து
வீக்கும் அரையினன் – சுற்றி இழுத்துக் கட்டிய இடுப்பை
உடைய; சுழலும் கண்ணன் – சுழல்கின்ற கண்களை உடைய;
கல்திரள் வயிரத்திண்தோள் – கல்லைப் போல உருண்ட வலிய தோள்களை
உடைய; கடுந்திறல் மடங்கல் அன்னான் – மிக்க வலிமை
படைத்த சிங்கத்தைப் போன்றவனாகிய; எற்று நீர்க் கங்கை
நாவாய்க்கு இறை குகன்- கரையோடு மோதுகின்ற
நீர்ப்பெருக்கினை உடைய கங்கையில் உள்ள மரக்கலங்களுக்குத்
தலைவன் ஆகிய குகன்; வெற்றி வெஞ்சேனையோடும் – தன்னுடைய
வெற்றி பெற்ற கொடிய சேனையோடும்;தொழுது சூழ்ந்தான் –
இராமனை வணங்கிச் சுற்றி இருந்தான்.

————-

கெவனொடு கெவாக்கன், தூம்பன், கேசரி, கெந்தமாதன்,
தவன் உறு சரபன், சாம்பன், சுடேணன், சம்பாதி, நீலன்,
நவை அறு பனசன், தாரன், கெசன், நளன், சமீரன், நண்பாம்
இவன் அரிலோமன், மின்போல் எயிற்றினன், இடபன் என்பான். 8

விரதன், வீமாக்கன், வேகதரிசியே, விந்தன், வெற்றிக்
கரமுடைச் சதுக்கன், சோதிமுகன், தெதிமுகன், கயந்தன்,
அரன், விறல் கொடிய கோபன், இடும்பனோடு, அரம்பன், ஆண்மை
தெரிவரு வசந்தன், கொற்றத் துன்முகன், தீர்க்க பாதன், 9

மயிந்தன், மா துமிந்தன், கும்பன் அங்கதன், அனுமன், மாறு இல்
சயம் தரு குமுதக் கண்ணன், சதவலி, குமுதன், தண் தார்
நயம் தெரி ததிமுகன், கோசமுகன், முதல நண்ணார்
வியந்து எழும் அறுபத்தி ஏழு கோடியாம் வீரரோடும். 10

ஏனையர் பிறரும் சுற்ற, எழுபது வெள்ளத்து உற்ற
வானரரோடும் வெய்யோன் மகன் வந்து வணங்கிச் சூழ,
தேன் இமிர் அலங்கல் பைந் தார் வீடணக் குரிசில், செய்ய
மான வாள் அரக்கரோடு வந்து, அடி வணங்கிச் சூழ்ந்தான். 11

வெற்றி வெஞ் சேனையோடும், வெறிப் பொறிப் புலியின் வௌ; வால்
சுற்றுறத் தொடுத்து வீக்கும் அரையினன், சுழலும் கண்ணன்,
கல் திரள் வயிரத் திண் தோள் கடுந் திறல் மடங்கல் அன்னான்,
எற்று நீர்க் கங்கை நாவாய்க்கு இறை, குகன், தொழுது சூழ்ந்தான். 12

————–

வள்ளலும் அவர்கள் தம்மேல் வரம்பு இன்றி வளர்ந்த காதல்
உள்ளுறப் பிணித்த செய்கை ஒளி முகக் கமலம் காட்டி,
அள்ளுறத் தழுவினான் போன்று அகம் மகிழ்ந்து, இனிதின் நோக்கி,
‘எள்ளல் இலாத மொய்ம்பீர்! ஈண்டு இனிது இருத்திர்’ என்றான். 13

வள்ளலும் – இராமபிரானும்; அவர்கள் தம்மேல் வரம்பு
இன்றி வளர்ந்த காதல் – அத்துணைவர்களிடத்து அளவுபடாது
வளர்ந்த பேரன்பானது; உள்ளுறப் பிணித்த செய்கை-
தன்மனத்தை இறுகக் கட்டியிருக்கிற பாங்கினை; ஒளி முகக்
கமலம் காட்டி- ஒளி சிறந்த தனது முகத்தாமரை மூலம்
காண்பித்து; அள்ளுறத் தழுவினான் போன்று அகம் மகிழ்ந்து-
நெஞ்சாரத் தழுவினவனைப் போல மனம் மகிழ்ச்சி அடைந்து;
இனிதின் நோக்கி – கருணைப் பார்வையால் இனிமையாகப்
பார்த்து; ‘எள்ளல் இலாத மொய்ம்பீர் – இகழப் படாத
வலிமை படைத்தவர்களே!ஈண்டு இனிது இருத்திர் – இங்கே
இனிமையாக இருங்கள்; என்றான் –

——————

நல் நெறி அறிவு சான்றோர், நான்மறைக் கிழவர், மற்றைச்
சொல் நெறி அறிவு நீரார், தோம் அறு புலமைச் செல்வர்,
பல் நெறிதோறும் தோன்றும் பருணிதர், பண்பின் கேளிர்,
மன்னவர்க்கு அரசன் பாங்கர், மரபினால் சுற்றமன்னோ. 14

நல்நெறி அறிவு சான்றோர்- சாத்திரங்களிற் கூறப்பட்ட
நல்ல வழிகளால் ஆகிய அறிவான் அமைந்தவர்கள்; நான்மறைக்
கிழவர் – சதுர் வேத பாரகர்; மற்றைச் சொல் நெறி அறிவு
நீரார் – வேறுபட்ட பல்துறை அறிவிற் சிறந்த தன்மை
உடையவர்கள்; தோம் அறு புலமைச் செல்வர் – குற்றமற்ற
புலமையால் உயர்ந்தவர்கள்; பல்நெறிதோறும் தோன்றும்
பருணிதர்- பல்வகைப்பட்ட சாத்திரங்களினும் நுட்ப அறிவு
பெற்ற நிபுணர்கள்; பண்பின் கேளிர்- நற்குணங்களுக்கு
உறைவிடம் ஆனவர் (ஆகியோர்); மன்னவர்க்கு அரசன்
பாங்கர் – சக்கரவர்த்தியாகிய ஸ்ரீராமன் அருகில்;
மரபினால் சுற்ற – அவரவர்க்கு உரிய முறைமைப் படி சுற்றியிருப்ப.

———–

தேம் பரு படப்பை மூதூர்த் திருவொடும் அயோத்தி சேர்ந்த
பாம்பு-அணை அமலன் தன்னைப் பழிச்சொடும் வணக்கம் பேணி,
வாம் புனல் பரவை ஞாலத்து அரசரும் மற்றுளோரும்
ஏம்பல் உற்று இருந்தார்; நொய்தின், இரு மதி இறந்தது அன்றே. 15-

தேம்பரு படப்பை மூதூர்த் திருநகர் அயோத்தி சேர்ந்த
பாம்பணை அமலன் தன்னைப் பழிச்சொடு வணக்கம் பேணி-
தேன் சிந்துகின்ற சோலைகள் சூழ்ந்த பழமையான ஊராகிய
அயோத்தி என்னும் திருநகரை வந்தடைந்த ஆதிசேஷ சயனனாகிய
பெரிய பெருமாளைத் தோத்திரம் செய்து வணங்கி;வாம்புனல்
பரவை ஞாலத்து அரசரும் மற்றுளோரும்- தரைமேல் வாவுகின்ற
நீரை உடைய கடலாற் சூழப் பெற்ற இவ்வுலகத்து அரசர்களும்
மற்றும் உள்ளவர்களும்; ஏம்பல் உற்று இருந்தார் – மகிழ்ச்சி
அடைந்து இருந்தார்கள் (இவ்வாறு); நொய்தின்-இலேசாக;இருமதி
இறந்தது – இரண்டு திங்கள் சென்றது.

‘பாம்பணை அமலன்’ இட்சுவாகு குலதனமாகிய ஸ்ரீரங்கநாதன்
என்னும் பெரிய பெருமாளாகும். திருமாலின் அவதாரமாகிய
ஸ்ரீராமன் என்றுரைப்பாரும் உளர்

————–

நெருக்கிய அமரர் எல்லாம் நெடுங் கடற் கிடை நின்று ஏத்த,
பொருக்கென அயோத்தி எய்தி, மற்று அவர் பொருமல் தீர,
வருக்கமோடு அரக்கர் யாரும் மடிதர, வரி வில் கொண்ட
திருக் கிளர் மார்பினான் பின் செய்தது செப்பலுற்றாம். 16-

நெருக்கிய அமரர் எல்லாம்- ஒன்று திரண்ட தேவர்கள்
எல்லாம்; நெடுங்கடற்கு இடைநின்று ஏத்த – பெரிய
திருப்பாற் கடலின் இடையிலே நின்று துதிக்க; மற்று அவர்
பொருமல் தீர – துன்புற்ற அவர்களது துயரம் நீங்கும்படி;
பொருக்கென- விரைவாக; அயோத்தி எய்தி- அயோத்தியை
அடைந்து; அரக்கர் யாரும் வருக்கமொடு மடிதர – அரக்கர்கள்
எல்லாம் தம் கூட்டத்தோடு அழிந்து போக;வரிவில் கொண்ட
திருக்கிளர் மார்பினான் – கட்டமைந்த வில்லைக் கையில்
ஏந்திய திருமகள் விளங்கும் மார்பினனாகிய ஸ்ரீராமன்; பின்
செய்தது செப்பலுற்றாம் – பின்னால் செய்த செயல்களைக்
கூறத் தொடங்கினோம். இது கவிக்கூற்று.

——————-

மறையவர் தங்கட்கு எல்லாம் மணியொடு முத்தும், பொன்னும்,
நிறைவளம் பெருகு பூவும், சுரபியும், நிறைந்து, மேல் மேல்,
‘குறை இது’ என்று இரந்தோர்க்கு எல்லாம் குறைவு அறக் கொடுத்து, பின்னர்,
அறை கழல் அரசர் தம்மை ‘வருக’ என அருள, வந்தார். 17-

(இராமன்)- மறையவர் தங்கட்கு எல்லாம் –
அந்தணர்க்கெல்லாம்; மணியொடு முத்தும் பொன்னும் -;
நிறைவளம் பெருகு பூவும் சுரபியும் – நிறைந்த வளந்தரக்கூடிய
பூமியும், பசுவும்;நிறைத்து – நிறையும்படிக் கொடுத்து;மேல்
மேல்- மேலும் மேலும்; ‘குறை இது’ என்று இரந்தோர்க்
கெல்லாம் குறைவு அறக் கொடுத்து – தமக்கு இது வேண்டும்
என்று கேட்டவர்களுக்கெல்லாம் அவர்களுடைய குறைவு தீரும்படி
வேண்டுமளவு கொடுத்து; பின்னர்- பிறகு; அறை கழல்
அரசர்தம்மை – ஒலிக்கின்ற வீரக்கழல் அணிந்த அரசர்களை;
‘வருக’ என அருள- வருக என்று அழைத்தருள; வந்தார் –
அவர்களும் வந்தார்கள்.

————–

ஒரு சில பிரதிகளில் இதுமுதல் விடை கொடுத்த படலம் தொடங்குகிறது

ஐயனும் அவர்கள் தம்மை அகம் மகிழ்ந்து, அருளின் நோக்கி,
வையகம், சிவிகை, தொங்கல், மா மணி மகுடம், பொன் பூண்,
கொய் உளைப் புரவி, திண் தேர், குஞ்சரம், ஆடை இன்ன
மெய் உறக் கொடுத்த பின்னர், கொடுத்தனன் விடையும் மன்னோ. 18-

அய்யனும் – இராமனும்; அவர்கள் தம்மை – அரசர்களை;
அகம் மகிழ்ந்து அருளின் நோக்கி- மனமகிழ்ச்சியுற்று அருளோடு
பார்த்து; வையகம், சிவிகை, தொங்கல், மாமணி மகுடம்,
பொன்பூண், கொய் உளைப் புரவி, திண்தேர், குஞ்சரம், ஆடை
இன்ன -; மெய் உறக் கொடுத்த பின்னர் – நன்றாக கொடுத்த
பிறகு; விடையும் கொடுத்தனன் – அவர்கள் தம்மூர் செல்ல
விடை ஈந்து அனுப்பினான்.

—————

சம்பரன் தன்னை வென்ற தயரதன் ஈந்த காலத்து
உம்பர் தம் பெருமான் ஈந்த ஒளி மணிக் கடகத்தோடும்,
கொம்புடை மலையும், தேரும், குரகதக் குழுவும், தூசும்,-
அம்பரம் தன்னை நீத்தான்-அலரி காதலனுக்கு ஈந்தான். 19-

அம்பரம் தன்னை நீத்தான் – திருப்பாற்கடலைத் துறந்து
அயோத்தியில் அவதரித்த இராமபிரான்; சம்பரன்தன்னை
வென்ற தயரதன் – இந்திரன் பகையாகிய சம்பரனை வென்ற
தயரதசக்கரவர்த்தி; ஈன்ற காலத்து – தன்னைப் பெற்றெடுத்த
பொழுது;உம்பர்தம் பெருமான் ஈந்த ஒளிமணிக் கடகத்தோடும்
– தேவர் தலைவனாகிய இந்திரன் தனக்குக் கொடுத்த ஒளிபடைத்த
மணிகள் அழுத்திய கடகத்தோடும்; கொம்புடைமலையும் –
யானைகளும்; தேரும்-; குருகதக் குழுவும்- குதிரைக் கூட்டமும்;
தூசும் – பட்டாடையும் (ஆகியவற்றை); அலரி – சூரியனது;
காதலனுக்கு – மகனாகிய சுக்கிரீவனுக்கு; ஈந்தான்-.

——————-

அங்கதம் இலாத கொற்றத்து அண்ணலும், அகிலம் எல்லாம்
அங்கதன் என்னும் நாமம் அழகுறத் திருத்துமாபோல்,
அங்கதம் கன்னல் தோளாற்கு அயன் கொடுத்தனை ஈந்தான்;
அங்கு அதன் பெருமை மண்மேல் ஆர் அறிந்து அறையகிற்பார்? 20-

அங்கதம் இலாத கொற்றத்து அண்ணலும்- பழிப்பில்லாத
வெற்றியை உடைய இராகவனும்; அகிலம் எல்லாம்- இந்த
உலகம் முழுவதும்; அங்கதன் என்னும் நாமம் – அங்கதன் என்ற
அவனுடைய பெயரை; அழகுறத் திருத்துமா போல்- அழகு
பொருந்த வழங்கச் செய்யுமாறு போல; அங்கதம்- தோள் வளையை;
கல்நல் தோளாற்கு அயன் கொடுத்ததனை- கல்போன்ற நல்ல
தோளை உடைய இட்சுவாகு மன்னனுக்கு பிரமன் கொடுத்ததாகிய
அதனை; ஈந்தான் – (அங்கதனுக்கு) கொடுத்தான்; அங்கு அதன்
பெருமை மண்மேல் ஆர் அறிந்து அறையகிற்பார்?- அந்தத்

——————-

பின்னரும், அவனுக்கு ஐயன் பெரு விலை ஆரத்தோடும்
மன்னும் நுண் தூசும், மாவும் மதமலைக் அரசும்; ஈயா
‘உன்னை நீ அன்றி, இந்த உலகினில் ஒப்பு இலாதாய்!
மன்னுக, கதிரோன் மைந்தன் தன்னொடும் மருவி’ என்றான். 21-

ஐயன்- இராமன்; அவனுக்கு- அங்கதனுக்கு;பின்னரும் –
மேலும்; பெருவிலை ஆரத்தோடும்- மிக்க விலை உடைய
முத்துமாலையோடும்; மன்னும் நுண் தூசும்- நிலைபெற்ற நுண்ணிய
பட்டாடையும்; மாவும் – குதிரையும்;மதமலைக்கு அரசும்-
யானையும்; ஈயா- அளித்து; ‘உன்னை நீ அன்றி இந்த
உலகினில் ஒப்பு இலாதாய்! – உனக்கு நீயே அல்லாமல் இந்த
உலகில் வேறு உவமை சொல்ல முடியாமல் சிறந்தவனே!கதிரோன்
மைந்தன் தன்னொடும் மருவி மன்னுக- சுக்கிரீவனோடும்
பொருந்தி வாழ்க;என்றான் -.

————

மாருதி தன்னை ஐயன் மகிழ்ந்து, இனிது அருளின் நோக்கி,
‘ஆர் உதவிடுதற்கு ஒத்தார், நீ அலால்? அன்று செய்த
பேர் உதவிக்கு யான் செய் செயல் பிறிது இல்லை; பைம் பூண்
போர் உதவிய திண் தோளாய்! பொருந்துறப் புல்லுக!’ என்றான். 22-

ஐயன் மாருதி தன்னை மகிழ்ந்து இனிது அருளின் நோக்கி –
இராமன் அனுமனை மகிழ்ச்சியோடு இனிமையாக அருட் பார்வை
பார்த்து; ‘பைம்பூண் போர் உதவிய திண்தோளாய்! – பசிய
பூண் அணிந்த போர்க்குத் தகுதியாகிய வலிய தோளை
உடையவனே! நீ அலால் ஆர் உதவிடுதற்கு ஒத்தார்? – நீ
அல்லாமல் வேறு யார் உதவி செய்வதற்கு ஏற்றவர்கள் உளர்;
அன்று செய்த பேர் உதவிக்கு யான் செய் செயல் பிறிது
இல்லை- அன்று இராவணயுத்தத்தின் போது நீ ஆற்றிய பெரிய
உதவிகளுக்கு நான் செய்யக்கூடிய கைம்மாறாகிய செயல் வேறு
எதுவும் இல்லை; ‘பொருந்துறப் புல்லுக’ – என்னை நன்கு
தழுவிக் கொள்வாயாக, இதுவன்றி வேறு கைம்மாறு இல்லை;
என்றான்-.

அனுமனை ‘என்னைத் தழுவிக் கொள்க’ என்று இராமன் கூறவே
இராமன் தழுவப்பட்டவன் ஆகிறான். தழுவுகின்றவன்
உயர்ந்தோன் என்னும் முறைப்படி இராமன் இப்படிக்
கூறியதனால் அநுமனைத் தன்னினும் உயர்ந்தவனாக ஆக்கினான்;
தனக்குக் கைம்மாறு கருதாமல் உதவி செய்தவர்களைத்
தன்னினும் உயர்ந்தோராக ஆக்கிவிடுதல் இராமனது பண்பு நலம்
ஆகும்

மாருதியைத் தழுவிக்
கொள்ளச் சொல்லவே அவனுக்குள் இவன் உடம்பு
அடங்கியதாகும். எனவே அனுமனுக்குத் தன்னுடம்பையே
கொடுத்தான் ஆயிற்று. அசோகவனத்தில் ‘இராம’ நாமம்
சொல்லி பிராட்டியைக் கொடுத்தான். இராவண வதத்தில்
இருமுறை இளைய பெருமாளையும் ஒருமுறை பெரிய
பெருமானையும் மீட்டுக் கொடுத்து ‘நின்னின் தோன்றினோம்’
(கம்ப.8812) என்று சொல்ல வைத்தான். எரி வீழ்ந்து இறந்து புக
எண்ணிய பரதனைக் காத்து உயிர் கொடுத்து நிறுத்தினான்.
இங்ஙனம் நால்வர் உடம்பையும் நிறுத்திய அவனுக்குத் தன்
திருமேனியைக் கொடுக்கவே எல்லாம் கொடுத்ததாக ஆகும்
என்று கருதித் தழுவிக் கொள்ளச் சொன்னான் ஆகும்; அவன்
திருமேனி சகலமும் ஆய் இருப்பதன்றோ ஆதலின் அவன்
திருமேனி அநுமனுக்கு எல்லாம் கொடுத்ததாக ஆயிற்று

—————

என்றலும், வணங்கி நாணி, வாய் புதைத்து, இலங்கு தானை
முன் தலை ஒதுக்கி நின்ற மொய்ம்பனை முழுதும் நோக்கி,
பொன் திணி வயிரப் பைம் பூண் ஆரமும், புனை மென் தூசும்,
வன் திறல் கயமும், மாவும், வழங்கினன், வயங்கு சீரான். 23-

வயங்கு சீரான் – விளங்கிய புகழை உடைய இராமன்; என்றலும்
– இவ்வாறு கூறுதலும்; வணங்கி, நாணி, வாய் புதைத்து, இலங்கு
தானை முன்தலை ஒதுக்கி நின்ற மொய்ம்பனை – பணிந்து
நாண்முற்று வாயைக் கையால புதைத்துக் கொண்டு விளங்கிய
வேட்டி முகப்பினை அடக்கிக் கொண்டு நின்ற வலியோனாகிய
அனுமனை; முழுதும் நோக்கி – நன்றாகப் பார்த்து; பொன்
திணி வயிரப் பைம்பூண் ஆரமும்- பொன் திணித்துச்
செய்யப் பெற்ற பசிய பூணும் முத்துவடமும்; புனை மென் தூசும்-
அணிதற்குரிய மெல்லிய பட்டாடையும்; வன்திறல் கயமும் –
வலிமிக்க யானையும்; மாவும்- குதிரையும்; வழங்கினன்- ஈந்தான்.

————–

பூ மலர்த் தவிசை நீத்து, பொன் மதில் மீதிலை பூத்த
தேமொழித் திருவை ஐயன் திருவருள் முகத்து நோக்க,
பா மறைக் கிழத்தி ஈந்த பரு முத்த மாலை கைக் கொண்டு
ஏமுறக் கொடுத்தாள், அந்நாள், இடர் அறிந்து உதவினாற்கே. 24

ஐயன் – இராமன்; பூ மலர்த் தலிசை நீத்து- தாமரை
மலராகிய பீடத்தை வெறுத்து; பொன் மதில் மிதிலை பூத்த
தேமொழித் திருவை – பொன்னாற் செய்த மதில் சூழ்ந்த
மிதிலையில் தோன்றிய தேன் போலும் மொழியுடைய
திருமகளாகிய சீதையை; திருவருள் முகத்து நோக்க-
திருவருளோடு கூடிய முகத்தால் பார்க்க; (அவள்) அந்நாள்
இடர் அறிந்து உதவினாற்கு- அசோக வனத்தில் தன்
துன்பமறிந்து உதவிய அனுமனுக்கு;பாமறைக் கிழத்தி ஈந்த
பருமுத்தமாலை கைக்கொண்டு ஏமுறக் கொடுத்தாள்- பரவிய
வேதத்தலைவியாகிய சரஸ்வதி தேவி தனக்களித்த முத்து மாலை
ஒன்றைக் கையிற் கொண்டு இன்பமுறக் கொடுத்தாள். ஏ – அசை.

—————

சந்திரற்கு உவமை சான்ற, தாரகைக் குழுவை வென்ற,
இந்திரற்கு ஏய்ந்ததாகும் என்னும் முத்தாரத்தொடு
கந்து அடு களிறு, வாசி, தூசு, அணிகலன்கள், மற்றும்
உந்தினன், எண்கின் வேந்தற்கு-உலகம் முந்து உதவினானே. 25

உலகம் முந்து உதவினான்- உலகத்தை முற்காலத்துப்
பிரமனால் தந்தருளிய திருமாலின் அவதாரமான இராமன்;
சந்திரற்கு உவமை சான்ற- நிலவுக்கு உவமையாகச்
சொல்லப்படக் கூடிய; தாரகைக் குழுவை வென்ற- நட்சத்திரக்
கூட்டங்களை வென்ற; இந்திரற்கு ஏய்ந்த தாகும் என்னும்
முத்தாரத்தோடு- இந்திரன் அணிதற்குப் பொருந்தியதாகும்
என்று சொல்லப்படும் முத்து மாலையோடு; கந்து அடுகளிறு,
வாசி, தூசு, அணிகலன்கள், மற்றும்- கட்டுத்தறியை
அழிக்கும் யானை, குதிரை, பட்டாடை, ஆபரணங்கள், ஏனைய
பிறவும்; எண்கின் வேந்தற்கு உந்தினன் – கரடிக்
கூட்டத்தின் தலைவனான சாம்பனுக்குத் தந்தான்

————

நவ மணிக் காழும், முத்தும், மாலையும், நலம் கொள் தூசும்,
உவமை மற்று இலாத பொன் பூண் உலப்பு இல பிறவும், ஒண் தார்க்
கவன வெப் பரியும், வேகக் கதமலைக்கு அரசும், காதல்
பவனனுக்கு இனிய நண்பன் பயந்தெடுத்தவனுக்கு ஈந்தான். 26

காதல் பவனனுக்கு இனிய நண்பன் பயந்து எடுத்தவனுக்கு-
அன்பால் காற்றுக்கு இனிய நண்பனாகிய அக்கினி தேவன்
மகனாகிய நீலன் என்னும் வானர சேனைத் தலைவனுக்கு; நவமணிக்
காழும் – நவமணிகளால் ஆகிய வடமும்;முத்தும் மாலையும்
நலங்கொள் தூசும் உவமை மற்று இலாத பொன் பூண் உலப்பு
இல பிறவும் – ; ஒண்தார்க் கவன வெம் புரியும் வேகக்
கதமலைக்கு அரசும் – ; ஈந்தான் – கொடுத்தான்.

————–

பத வலிச் சதங்கைப் பைந் தார்ப் பாய் பரி, பணைத் திண் கோட்டு
மதவலிச் சைலம், பொன் பூண், மா மணிக்கோவை, மற்றும்
உதவலின் தகைவ அன்றி, இல்லன உள்ள எல்லாம்
சதவலிதனக்குத் தந்தான்-சதுமுகத் தவனைத் தந்தான். 27-

சதுமுகத் தவனைத் தந்தான் – நான்முகனைப் பெற்றவனாகிய
திருமாலாகிய இராமன்; சதவலி தனக்கு- சதவலி என்னும்
பெயருடைய வானர சேனைத் தலைவனுக்கு; பதவலிச் சதங்கைப்
பைந்தார் பாய்பரி – வலிமையான பதத்திலே சதங்கை அணிந்த
பசிய கிண்கிணி மாலையுடைய பாயும் குதிரை; பணைத்தின்
கோட்டு மதவலிச் சைலம் – பருத்த வலிய தந்தங்களை உடைய
மதமிக்க மலையாகிய யானை; பொன் பூண், மாமணிக் கோவை
மற்றும் உதவலின் தகைவ இன்றி இல்லன – கொடுப்பதற்குத்
தடை ஏதும் இல்லாமல்;உள்ள எல்லாம்- உள்ள எல்லாவற்றையும்;
தந்தான் -.

————–

‘பேச அரிது ஒருவர்க்கேயும் பெரு விலை; இதனுக்கு ஈதுக்
கோ, சரி இலது’ என்று எண்ணும் ஒளி மணிப் பூணும், தூசும்,
மூசு அரிக்கு உவமை மும்மை மும் மதக் களிறும், மாவும்,
கேசரிதனக்குத் தந்தான்-கிளர் மணி முழவுத் தோளான். 28-

கிளர் மணி முழவுத் தோளான்- மிக்குவிளங்கும் ஆழகிய
முழவு போன்ற தோள் உடைய இராமன்; கேசரி தனக்கு – அனுமன்
தந்தையாகிய கேசரிக்கு; பெருவிலை ஒருவர்க்கேயும் இதனுக்குப்
பேச அரிது- மிக்க விலையை ஒருவராலும் இதனுக்குப் பேச
முடியாது; ஈதுக்கோ சரி இலது – இதற்கொப்பான பொருள்
இல்லை; என்று எண்ணும் ஒளி மணிப் பூணும் தூசும்- என்று
மதிப்பிடப்படும் ஒளி படைத்த மணி ஆபரணமும் பட்டாடையும்;
மூசு அரிக்கு மும்மை உவமை மும்மதக் களிறும் -உலகெங்கும் பரவும் வடவைத் தீக்கு மூன்று மடங்கு உவமையாகக்
கூடிய மும்மத யானையும்; மாவும்- குதிரையும்; தந்தான் –

——————

வளன் அணி கலனும் தூசும், மா மதக் களிரும், மாவும்,
நளனொடு குமுதன், தாரன், நவை அறு பனசன், மற்றோர்
உளம் மகிழ்வு எய்தும் வண்ணம் உலப்பில பிறவும் ஈந்தான்-
களன் அமர் கமல வேலிக் கோசலக் காவலோனே. 29-

களன் அமர் கமல வேலிக் கோசலக் காவலோன்-
நெற்களங்கள் நிரம்பியுள்ள தாமரைப் பூ வேலியை உடைய
கோசல நாட்டரசனாய இராமன்;நளனொடு குமுதன், தாரன், நவை
அறு பனசன், மற்றோர் உளம் மகிழ்வு எய்தும் வண்ணம் – ;
வளன் அணி கலனும் தூசும் மாமதக் களிறும் மாவும் – உலப்பில
பிறவும் – கணக்கில்லாத மற்றைப் பொருள்களையும்; ஈந்தான்-.

————–

அவ் வகை அறு பத்து ஏழு கோடியாம் அரியின் வேந்தர்க்கு
எவ் வகைத் திறனும் நல்கி, இனியன பிறவும் கூறி,
பவ்வம் ஒத்து உலகில் பல்கும் எழுபது வெள்ளம் பார்மேல்
கவ்வை அற்று இனிது வாழக் கொடுத்தனன், கடைக் கண் நோக்கம். 30-

(இராமன்) அவ்வகை- அவ்வாறு; அறுபத்து ஏழு கோடியாம்
அரியின் வேந்தர்க்கு – அறுபத்தேழு கோடி என்னும் கணக்கினை
உடைய குரங்கு அரசர்களுக்கு; எவ்வகைத் திறனும் நல்கி –
எல்லாவகைப் பட்ட பொருளும் கொடுத்து; இனியன பிறவும் கூறி
– பிரிய வசனங்களையும் சொல்லி; பவ்வம் ஒத்து உலகில்
பல்கும் எழுபது வெள்ளம்- கடல் நீரைப் போல வற்றாது
உலகில் பெருகும் எழுபது வெள்ளம் குரங்குகள்; பார்மேல் –
உலகில்; கவ்வை அற்று இனிது வாழ- துன்பமின்றி; நன்றாக
வாழும்படி; கடைக்கண் நோக்கம்- தனது கடைக்கண் பார்வையாகிய
திருவருளைக:் கொடுத்தனன் – கொடுத்தான்.

————-

மின்னை ஏர் மௌலிச் செங் கண் வீடணப் புலவர் கோமான்-
தன்னையே இனிது நோக்கி, ‘சராசரம் சூழ்ந்த சால்பின்
நின்னையே ஒப்பார் நின்னை அலது இலர், உளரேல்; ஐய!
பொன்னையே இரும்பு நேரும் ஆயினும் பொரு அன்று’ என்றான். 31-

(இராமன்) – மின்னை ஏர் மௌலிச் செங்கண் வீடணப்
புலவர் கோமான் தன்னையே இனிது நோக்கி – மின்னலை ஒத்த
கிரீடத்தை அணிந்த சிவந்த கண்களை உடைய வீடணன் என்னும்
அறிஞர்க்கரசனை அன்பொழுகப் பார்த்து;’ஐய! சராசரம்
சுமந்த சால்பின் – ஐயனே! உலகமுழுதும் தாங்கிய
சான்றாண்மையை உடைய; நின்னையே ஒப்பார் நின்னை அலது
இலர் – உன்னைப் போன்றவர்கள் நீயே அல்லாமல் வேறு
யாரும் இலர்;உளரேல் – அப்படி இருப்பதாகக் கூறினால் (அது
எவ்வாறாகும் எனின்); பொன்னையே இரும்பு நேரும் ஆயினும்
பொரு அன்று என்றான் – பொன்னை ஒருகாலத்து இரும்பு
ஒத்துவிடும் ஆனாலும் உனக்கு ஒப்பல்ல என்றான்.

————–

என்று உரைத்து, அமரர் ஈந்த எரி மணிக் கடகத்தொடு
வன் திறல் களிறும், தேரும், வாசியும், மணிப் பொன் பூணும்,
பொன் திணி தூசும், வாசக் கலவையும், புது மென் சாந்தும்,
நன்று உற, அவனுக்கு ஈந்தான்-நாகணைத் துயிலைத் தீர்ந்தான். 32-

நாகணைத் துயிலை தீர்ந்தான் – பாம்பணைத் துயிலை நீங்கி
அவதரித்த இராமன்; என்று உரைத்து- என்று வீடணனைப்
பாராட்டிக் கூறி; அவனுக்கு- அந்த வீடணனுக்கு; நன்று உற-
நன்மை பொருந்த; அமரர் ஈந்த எரிமணிக் கடகத்தோடு-
தேவர்கள் கொடுத்த ஒளிவீசும் மணிகள் அழுத்திய கடகத்தோடு;
வன்திறல் களிறும் தேரும் வாசியும் மணிப்பொன் பூணும் பொன்திணி
தூசும் வாசக் கலவையும் புதுமென் சாந்தும் – ; ஈந்தான்-.

—————

சிருங்கபேரம் அது என்று ஓதும் செழு நகர்க்கு இறையை நோக்கி,
‘மருங்கு இனி உரைப்பது என்னோ, மறு அறு துணைவற்கு?’ என்னா,
கருங் கைம் மாக் களிறும், மாவும், கனகமும், தூசும், பூணும்,
ஒருங்குற உதவி, பின்னர் உதவினன் விடையும் மன்னோ. 33-

(இராமன்) சிருங்க பேரம் அது என்று ஓதும் செழுநகர்க்கு
இறையை நோக்கி – குகனைப் பார்த்து; ‘மறு அறு துணைவற்கு
மருங்கு இனி உரைப்பது என்னோ?’; என்னா- குற்றமற்ற
சகோதரனாய உனக்கு இப்போது சொல்ல வேண்டியது யாது உள்ளது
என்று சொல்லி; கருங்கை மாக்களிறும் மாவும் கனகமும் தூசும்
பூணும் -; ஒருங்குற உதவி – சேரக் கொடுத்து;பின்னர்
விடையும் உதவினன்- பிறகு ஊர் செல்ல உத்தரவும் கொடுத்தான்.
மன், ஓ – அசைகள்.

———-

அனுமனை, வாவி சேயை, சாம்பனை, அருக்கன் தந்த
கனை கழல் காலினானை, கருணை அம் கடலும் நோக்கி,
‘நினைவதற்கு அரிது நும்மைப் பிரிக என்றல்; நீவிர் வைப்பும்
எனது; அது காவற்கு இன்று என் தன் ஏவலின் ஏகும்’ என்றான். 34-

கருணை அம்கடலும்- அருட்கடலாய் விளங்கும் இராமபிரானும்;
அனுமனை வாலிசேயை சாம்பனை அருக்கன் தந்த கனைகழல்
காலினானை; நோக்கி – பார்த்து; ‘நும்மை பிரிக என்றல்
நினைவதற்கு அரிது- உங்களைப் பிரிந்து செல்க என்று கூறுதல்
கூற நினைப்பதற்கே முடியாத செயல் ஆகும் (ஆனாலும்); நீவிர்
வைப்பும் எனது – உங்கள் நாடுகளும் தற்போது என்னுடையதே
அல்லவா (ஆதலின்);அது காவற்கு – அந் நாடுகளைக்
காப்பதற்கு; இன்று என் ஏவலின் ஏகும்- இன்று என்
கட்டளையை மேற்கொண்டு செல்லுங்கள்;என்றான்-.

—————

இலங்கை வேந்தற்கும் இவ்வாறு இனியன யாவும் கூறி,
அலங்கல் வேல் மதுகை அண்ணல் விடைகொடுத்தருளலோடும்,
நலம் கொள் பேர் உணர்வின் மிக்கோர், நலன் உறும் நெஞ்சர், பின்னர்க்
கலங்கலர், ‘ஏவல் செய்தல் கடன்’ எனக் கருதிச் சூழ்ந்தார். 35-

இலங்கை வேந்தனுக்கும்- வீடணனுக்கும்; இனியன யாவும்
இவ்வாறு கூறி – பிரிய வார்த்தைகளை இவ்வாறே சொல்லி;
அலங்கல் வேல் மதுகை அண்ணல்-மாலையணிந்த வேலினையுடைய;
வலிமிக்க இராமபிரான்; விடை கொடுத்தருளலோடும் – உத்திரவு
கொடுத்துப் புறப்படச் சொல்லிய அளவில்; நலம்கொள் பேருணர்வின்
மிக்கோர்- நன்மை கொண்ட மெய்யுணர்வால் சிறந்த அவர்கள்; நலன்
உறும் நெஞ்சர்- ஆறுதல் அடைந்த மனம் உடையராய்; பின்னர்க்
கலங்கலர்- பிறகு தடுமாற்றம் அடையாதவராய்; ‘ஏய செய்தல் கடன்’-
இராமபிரான் ஏவிய பணியைச் செய்தல் தமக்குரிய கடமை; எனக்
கருதிச் சூழ்ந்தார் – என்று கருதிப் புறப்பட முடிவு செய்தார்கள்.

————-

பரதனை, இளைய கோவை, சத்துருக்கனனை, பண்பு ஆர்
விரத மா தவனை, தாயர் மூவரை, மிதிலைப் பொன்னை,
வரதனை, வலம்கொண்டு ஏத்தி, வணங்கினர் விடையும் கொண்டே,
சரத மா நெறியும் வல்லோர் தத்தம பதியைச் சார்ந்தார். 36-

சரதமா நெறியும் வல்லோர்- என்றும் நிச்சயமான பரமபத
நெறிக்கும் வல்லோராகிய அவர்கள்; பரதனை இளைய கோவை
சத்துருக்கனனை பண்பு ஆர் விரத மாதவனை தாயர் மூவரை
மிதிலைப் பொன்னை வரதனை – வலம் கொண்டு ஏத்தி – சுற்றி
வந்து தோத்தரித்து; வணங்கினர் விடையும் கொண்டு- வணங்கி
விடை பெற்று; தத்தம பதியைச் சார்ந்தார்- தங்கள் தங்கள்
நகரங்களை அடைந்தார்கள்.

————–

குகனைத் தன் பதியின் உய்த்து, குன்றினை வலம் செய் தேரோன்
மகனைத் தன் புரத்தில் விட்டு, வாள் எயிற்று அரக்கர் சூழ,
ககனத்தின் மிசையே ஏகி, கனை கடல் இலங்கை புக்கான்,-
அகன் உற்ற காதல் அண்ணல், அலங்கல் வீடணன், சென்று, அன்றே. 37-

அகன் உற்ற காதல் அண்ணல் அலங்கல் வீடணன்-
நெஞ்சார்ந்த அன்புடைய பெரியோனாகிய மாலை அணிந்த
வீடணன்; வாள் எயிற்று அரக்கர் சூழ – கூரிய பல்லினை உடைய
அரக்கர்கள் தன்னைச் சுற்ற; ககனத்தின் மிசையே ஏகி –
(புட்பக விமானத்தில் அனைவரையும் அழைத்துக் கொண்டு; ஆகாய
வழியாகச் சென்று. குகனைத் தன் பதியின் உய்த்து- குகனை
அவன் நகராகிய சிருங்க பேரத்தில் கொண்டு விட்டு; குன்றினை
வலம் செய் தேரோன் மகனை- மகாமேரு மலையைச் சுற்றி வரும்
தேரினையுடைய சூரியன் மகனாகிய சுக்கிரீவனை; தன்புரத்தில் விட்டு
– அவன் நகராகிய கிட்கிந்தையில் கொண்டுவிட்டு; அன்றே சென்று –
அன்றைக்கே போய்; இலங்கை புக்கான்- இலங்காபுரியைச்
சென்றடைந்தான்.

—————

ஐயனும் அவரை நீக்கி, அருள் செறி துணைவரோடும்
வையகம் முழுதும் செங்கோல் மனு நெறி முறையில் செல்ல,
செய்ய மா மகளும் மற்றச் செகதல மகளும் சற்றும்
நையுமாறு இன்றிக் காத்தான், நானிலப் பொறைகள் தீர்த்தே. 38-

அய்யனும்- இராமபிரானும்; அவரை நீக்கி – அவர்களை
அனுப்பிய பிறகு; அருள் செறி துணைவரோடும் – தன்னருள்
நிரம்பிய பரத இலக்குவ சத்துருக்கனர்களோடும் கூடி; வய்யகம்
முழுதும் – உலகம் முழுவதும்; செங்கோல் மனு நெறி முறையில்
செல்ல – தன் அரசாட்சியாகிய செங்கோல் நீதி நெறிமுறைப்படி
நடவா நிற்ப; செய்ய மாமகளும்- திருமகளும்; மற்றச் செகதல
மகளும் – பூமகளும்; சற்றும் நையுமாறு இன்று- சிறிதும்
வருத்தமுறாமல்; நானிலப் பொறைகள் தீர்த்து-பூமியின் சுமைகளை
நீக்கி, காத்தான் –

———-

உம்பரோடு இம்பர்காறும், உலகம் ஓர் ஏழும் ஏழும்,
‘எம் பெருமான்!’ என்று ஏத்தி, இறைஞ்சி நின்று,ஏவல் செய்ய,
தம்பியரோடும், தானும், தருமமும், தரணி காத்தான் –
அம்பரத்து அனந்தர் நீங்கி, அயோத்தியில் வந்த வள்ளல்.

அம்பரத்து – திருப்பாற்கடலில்; அனந்தர் நீங்கி –
அறிதுயிலிலிருந்து விலகி; அயோத்தியில் வந்த வள்ளல் –
அயோத்தியில் ஸ்ரீராமனாக அவதரித்து பலர்க்கும் அருள் செய்த
இராமபிரான்; உம்பரோடு இம்பர் காறும் – தேவர் முதல்
மக்கள் வரை; உலகம் ஓர் ஏழும் ஏழும் – பதினான்கு உலகங்களும்;
‘எம்பெருமான்’ என்று ஏத்தி – எம்பெருமான் என்று துதித்து;
இறைஞ்சி நின்று ஏவல் செய்ய- வணங்கி நின்று தன்
கட்டளையை நிறைவேற்ற;தம்பியரோடும் தானும் தருமமும்-
தம்பியர்களோடும் தானும் அறக்கடவுளும் ஒன்றாக நின்று;
தரணி காத்தான் – இந்த உலகம் முழுவதையும் பாதுகாத்தான்.

—————

வான் வளம் சுரக்க் நீதி மனு நெறி முறையே என்றும்
தான் வளர்ந்திடுக் நல்லோர் தம் கிளை தழைத்து வாழ்க்
தேன் வழங்கு அமுத மாலைத் தெசரத ராமன் செய்கை
யான் அளந்து அறைந்த பாடல் இடைவிடாது ஒளிர்க, எங்கும். 39

——-

எறி கடல் ஞாலம் தன்னுள் இன் தமிழ்ப் புலவர்க்கு எல்லாம்
முறுவலுக்கு உரியவாக முயன்றனம் இயன்ற எம் சொல்,
சிறுமையே நோக்கார், தங்கள் பெருமையே சிந்தை செய்யும்
அறிவுடை மாந்தர்க்கு எல்லாம் அடைக்கலம் ஆக வாழி. 40

————

வாழிய, சீர் இராமன்! வாழிய, சீதை கோமான்!
வாழிய, கௌசலேசை மணி வயிற்று உதித்த வள்ளல்!
வாழிய, வாலி மார்பும் மராமரம் ஏழும் சாய,
வாழிய கணை ஒன்று ஏவும் தசரதன் மதலை வாழி! 41

———

இராவணன் தன்னை வீட்டி, இராமனாய் வந்து தோன்றி,
தராதலம் முழுதும் காத்து, தம்பியும் தானும் ஆகப்
பராபரம் ஆகி நின்ற பண்பினைப் பகருவார்கள்
நராபதி ஆகி, பின்னும் நமனையும் வெல்லுவாரே. 42

—————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-