Archive for the ‘திரு நெடும் தாண்டகம்’ Category

திரு நெடும் தாண்டகம்–3 திரு வடிவில் கரு நெடுமால் சேயன் என்றும் –ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம் –

December 14, 2013

அவதாரிகை –

முதல் பாட்டிலே -விஷயாந்தர ப்ராவண்யா நிவ்ருத்தி தொடக்கமாக
ஸ்வரூப பிராப்தமான சேஷ சேஷித்வ பர்யந்தமாக ஈஸ்வரன் தன் பேறாக
சாஷாத்கரிப்பித்த உபகாரத்தைக் கண்டு விஸ்மிதர் ஆனார் –
தான் அபேஷிக்க அவன் செய்யுமது இறே பிராப்தமாய் இருப்பது –
தாம் விமுகராய் இருக்க அவன் தானே மேல் விழுந்து கார்யம் செய்கையாலே விஸ்மயமாய் இருக்கும் இறே –

இரண்டாம் பாட்டிலே –அந்ய சேஷத்வத்தை அறுத்துத் தந்தான் -என்கிறார் –
த்ரிமூர்த்தி சாம்ய பிரமத்தாலே பிரமித்தது அந்ய சேஷத்வம் இறே –

இப்பாட்டில் –
மணி வுருவில் பூதம் ஐந்தும் -என்றும் –
முகில் உருவம் -என்றும் –
ஸ்வரூபத்துக்கும் ஸ்வரூப ஆஸ்ரயமான குணங்களுக்கும் பிரகாசகமாய் –
நிரதிசய போக்யமாய்
காள மேக நிபச்யாமமாய் -இருக்கிற வடிவை

ஆசா லேசம் உடையாருக்கு
ருசி அனுகுணமாக
அழிய மாறி -உபகரிக்கும் படியையும் –

தமக்கு ஸ்வாபாவிகமான வடிவு தன்னையே
நிர்ஹேதுக கிருபையாலே காட்டித் தந்த படியையும் கண்டு
நான் கண்டாப் போலே யார் காண வல்லார் -என்கிறார் –

(சேஷத்வ ஞானம் வந்த பின்பு மங்களா ஸாஸனம் பண்ண வேண்டி இருக்க இவ்வாறு அனுபவிப்பது என் என்னில்)

பதிவ்ரதையானால் பர்த்தா சம்ச்லேஷத்தில் இழியுமா போலே
சேஷத்வ சித்தி உண்டாய் –
அநந்யார்ஹதை உண்டானால் –
பின்னை அனுபவத்தில் இழியும் இத்தனை -இறே –

ஸ்வரூபத்தை கால் கடைக் கொண்டு பற்ற வேண்டும் படி இருக்கும் குணங்கள் –
உபயத்தையும் கால் கடைக் கொண்டு பற்ற வேண்டும்படி இறே –
வடிவின் போக்யதை இருப்பது –

இத்தால் –வடிவை -அனுபவிக்கிறார் –

—————————————————————————————————————————————–

திரு வடிவில் கரு நெடுமால் சேயன் என்றும்
த்ரேதைக் கண் வளை யுருவேத் திகழ்ந்தான் என்றும்
பெருவடிவில் கடல் அமுதம் கொண்ட காலம்
பெருமானைக் கரு நீல வண்ணன் தன்னை
ஒரு வடிவத் தோர் உருவன் என்று உணரலாகாது
ஊழி தோறு ஊழி நின்று ஏத்தல் அல்லால்
கருவடிவில் செங்கண்ண வண்ணன் தன்னைக்
கட்டுரையே யார் ஒருவர் காண்கிற்பாரே

பதவுரை

திரு வடிவில்–விலக்ஷணமான வடிவுகளில்,
கருநெடுமால்–காளமேக ஸ்யாமமான வடிவை
பெரு வடிவின்–பெரிய கூர்ம ரூபத்தோடே
கடல்–கடலினின்றும்
அமுதம் கொண்ட காலம்–(தேவர்களுக்கு) அமுதமெடுத்துக் கொடுத்த காலமாகிய கிருத யுகத்திலே
வளை உரு ஆய் திகழ்ந்தான் என்றும்–சங்கு போலே வெளுத்த நிறத்தை யுடையவனாக விளங்கினானென்றும்
திரேதைக் கண்–த்ரேதா யுகத்திலே
சேயன் என்றும்–சிவந்த நிறத்தை யுடையவனாக விளங்கினானென்றும்
(கலியுகத்தில்)
கரு நீலம் வண்ணன் என்றும்–இயற்கையான) நீல நிறத்தை யுடையவனாய் விளங்குகிறானென்றும்
ஊழி தோறு ஊழி நின்று ஏத்தல் அல்லால்–எப்போதும் நின்று துதிப்பதல்லாமல்
ஒரு வடிவம் என்று ஓர் உரு என்று உணரல் ஆகா-வடிவும் நிறமும் இன்ன தென்றும் இவ்வள வென்றும் அறியப் போகாமலிருக்கிற
கரு வடிவின் செம்வண்ணம் கண்ணன் தன்னை பெருமானை–கறுத்த திருமேனியையும் செந்நிறமான திருக் கண்களை யுமுடையனான எம்பெருமானை
யார் ஒருவர்–ஆரேனுமொருவர்
காண் நிற்பாரே–(ஸ்வ ப்ரயத்நத்தால்) காணக் கூடியவரோ?
கட்டுரை–(நெஞ்சே!) சொல்லு.

வர்ணங்களில் ஸ்வாபாவிகமான நீல வர்ணத்தை யுடையனான ஸர்வேஸ்வரனை அசாதாரண விக்ரஹத்தில்
நீல வர்ணனாய்க் கொண்டு
ஆஸ்ரிதர் இடத்தில் பெரிய வியாமோஹத்தை யுடையவன்
த்ரேதா யுகத்தில் சிவந்த நிறத்தை யுடையனாய் இருப்பன் என்றும்
பல வடிவுகளை யுடையனாய்க் கொண்டு
சமுத்திரத்தில் நின்றும் அம்ருதம் எடுத்த காலத்தில் கிருத யுகத்தில்
சங்கத்தினுடைய -வெண்மையான ரூபத்தை யுடையவனாய் -விளங்கினான் என்றும்
இப்படி பிரதி கல்பங்களிலும் இருந்து ஸ்தோத்ரம் செய்வது ஒழிய
ஒருபடிப்பட்ட விக்ரஹத்தை யுடையவன் என்றும்
ஒரு விதமான நிறத்தை யுடையவன் என்றும் அறியப் போகாது

நீலமான திருமேனியையும் சிவந்த திருக்கண்களையும் யுடைய
அந்த ஸர்வேஸ்வரனை யார் தான் காண வல்லார்
ஓ மனஸ்ஸே சொல்லிக் காண் –

———————————————

திரு வடிவில் –
வடிவிடை யாட்டத்தில் –
கீழே -சேஷத்வத்தின் இடையாட்டமாகவும்
அந்ய சேஷத்வ நிவ்ருத்தியின் இடையாட்டமாகவும் -செய்தவை போலே
இவ்விடை யாட்டத்தில் செய்தவை கிடீர் என்கிறார் –

திரு வடிவு
1-வி லஷணமான வடிவு -என்னுதல் –
2-திருவினுடைய வடிவு -என்னுதல் –

வடிவு -யென்ன அமைந்து இருக்க
திரு வடிவு -என்கிறது
அகலகில்லேன் இறையும்-என்கிறபடியே
பிராட்டி தண்ணீர் தண்ணீர் -என்னும்படி இருக்கிற
துர்லபமான வடிவைக் கிடீர் நாட்டார்க்கு அழிய மாறி –
முகம் கொடுத்தது என்று
அவ்வடிவின் வை லஷண்யம் தோற்றுகைக்காக –

(நித்ய அநபாயிநி -திருவே அவளும் அனுபவிக்க உரிய வடிவு -திருவை அனுபவிக்கக் கொண்ட வடிவு

அகல கில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா!
நிகரில் புகழாய்! உலக மூன்றுடையாய்? என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே!
புகல் ஓன்றில்லா அடியேன் உன்னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே.–6-10-10-)

அவ்வடிவை உபகரித்த படியை சொல்லுகிறது மேல் –
கரு நெடு மால் –
காள மேய நிபஸ்யாமமான வடிவை உடையனாய்
உபய விபூதிக்கும் அவ்வருகான
பெரிய மேன்மையை உடையவன் –

இத்தால் –
விலஷண விக்ரஹ உக்தனாய்
ஸ்வயம் நிரபேஷனாய்
சர்வாதிகனாய் இருக்குமவன் கிடீர் -இப்படி ஆனான் -என்கிறார் –

அதவா
மால் -என்று – வ்யாமோஹமாய்
அதி வ்யாமுக்தன் என்னவுமாம் –

இத்தால்
இப்படி இருக்கிறவன் -தன்னை அழிய மாறி முகம் காட்டுகைக்கு ஹேது
ஆஸ்ரித வ்யாமுக்தன் ஆகையாலே என்ற ஹேது ஆகவுமாம் –

சேயன் என்றும் -த்ரேதைக் கண் –
த்ரேதா யுகத்தில் வந்தால் -சிவந்த வடிவை உடையவனாய் இருக்கும் –
அக் காலத்திலே புருஷர்கள் ரஜஸ் பிரசுரர் ஆகையாலே சிவப்பிலே யாய்த்து ருசி உண்டாய் இருப்பது –
அந்த ருசி அனுகுணமாக சிவந்த வடிவைக் கொண்டு முகம் காட்டும் –

ரஜஸ் ஸூ சிவந்து இருக்கக் கடவதாய் –
சத்வம் வெளுத்து இருக்கக் கடவதாய் –
தமஸ் ஸூ கறுத்து இருக்கக் கடவதாய் -இறே இருப்பது –
லோஹித சுக்ல க்ர்ஷ்ணம் -என்று இறே

(வேத வாக்கியத்தில்
* அஜாமேகாம் லோஹித சுக்ல க்ருஷ்ணாம் * (ஸ்வேதார உபநிஷத் ) என்று சிவப்பு வெளுப்பு கறுப்பு என்கிற அடைவிலே
ஓதி யிருக்கையாலே அந்தச் சாயையாலே அருளிச் செய்கிறபடி எனலாம்.

பிரக்ருதியை முக்குண கலவி கொண்ட பெண்ணாக உருவகம் -முமுஷு இதில் தண்மை அறிந்து அவன் மேன்மை அறிந்து முக்தன் ஆகிறான்

முதல் யுகத்தில் கொண்ட வெண்மையை முதலில் சொல்லாமல் சிகப்பைச் சொல்லி வெண்மை சொன்னது போல் இங்கும் அருளிச் செய்கிறார் )

பிரக்ர்திக்கு அசாதாரண குண த்ரயத்தையும் சொல்லிற்று –
சிவந்த வடிவை பிரதமத்திலே சொல்லிற்று –
லோஹித சுக்ல க்ர்ஷ்ணம் -என்கிற ஸ்ருதி சாயையாலே
அருளிச் செய்கிறார் -என்னும் இடம் தோற்ற –

சேஷி உகப்புக்கு அனுகுணமாக சேஷ பூதன் தன் வடிவை அமைக்கை அன்றிக்கே
(நிவாஸ சய்யா –இத்யாதி
சென்றால் குடையாம் -இத்யாதி )
சேஷ பூதன் உகப்புக்கு அனுகுணமாக சேஷி தன் வடிவை
அழிய மாறுகிறான் இறே
தமர் உகந்தது எவ்வுருவம் -என்கிறபடியே

என்றும் -என்றும் -என்கிற இவை
ஊழி தூறு ஊழி -நின்று ஏத்தல் அல்லால் என்கிற இடத்தில் அந்வயிக்கக் கடவது

(சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்
நின்றால் மரவடியாம் நீள் கடலுள் என்றும்
புணையாம் அணி விளக்காம் பூம் பட்டாம் புல்கும்
அணையாம் திருமாற்கு அரவு –ஸ்ரீ முதல் திருவந்தாதி-53-

நிவாஸ ஶய்யாஸந பாதுகாம்ஶுக
உபதாந வர்ஷாதப வாரணாதிபி: |
ஶரீர பேதைஸ் தவ ஶேஷதாம் கதைர்
யதோசிதம் ஶேஷ இதீரிதே ஜநை: ||-ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -ஶ்லோகம் 40 –

ஆபாஸ விருத்திக்கு ஐம்பது சரீரம் கொண்டானே ஸுபரி

“மீனாயாமையுமாய் நரசிங்கமுமாய்க் குறளாய்க் காணோரேனமுமாய்க் கற்கியாம்“ இத்யாதிப்படியே
தேவ மநுஷ்ய திர்யக் ஸ்தாவர யோநிகளிலே பலவகைப் பட்ட வடிவுகளையும்

சதங்கை அழகியார் -நம்பிள்ளை ஆராதன தெய்வம் -நாவல் பழம் கேட்ட வ்ருத்தாந்தம்

தமருகந்த   தெவ்வுருவம் அவ்வுருவம் தானே
தமருகந்த தெப்பெர் மற்றப்பேர் தமருகந்து
எவ்வண்ணம் சிந்தித்து இமையா திருப்பரே
அவ்வண்ணம் ஆழியானாம் —ஸ்ரீ முதல் திருவந்தாதி —44–)

பெரு வடிவில் கடல் அமுதம் கொண்ட காலம் –
கிருத யுகத்தில் வந்தால் –
திரேதைக் கண் -என்றவோபாதி –க்ர்த யுகம் -என்னாதே
பெரு வடிவில் கடல் அமுதம் கொண்ட காலம் -என்கிறது-
திரேதைக் கண் -என்று மலட்டுக் காலம் போலே இருக்கையாலே
பகவத் ஸ்பர்சியான காலம் என்று அருளிச் செய்கிறார் –
அக் காலத்தில் பண்ணின வியாபாரம் தமக்கு அபிமதமாய் இருக்கையாலே-

இப்படி பகவத் ஸ்பர்சத்தை இட்டுச் சொன்ன இடத்துக்கு த்ருஷ்டாந்தம் –
பெரிய திரு நாளில் ஆதரம் உடையார் -பங்குனி மாசத்துக்கு அப்புறம் கார்யம் செய்கிறோம் என்ன பிராப்தமாய் இருக்க
பெரிய திருநாளுக்குப் பின் கார்யம் செய்கிறோம் -என்னுமா போலே –

ஆனால் –கடல் அமுதம் கொண்ட காலம் -யென்ன அமையாதோ
பெரு வடிவில் கடல் அமுதம் கொண்ட காலம் -என்பான் -என்னில் –
பதினாலு நூறாயிரக் காதமாறு பரப்பை உடைத்தாய் இறே ஷீராப்தி இருப்பது –
(14 லக்ஷம் காதம் நீளமும் அகலமும் காய்ந்த பாற் கடல் )இப் பரப்பு அடங்கலும் விம்மும்படி யிறே
தாளும் தோளும் முடிகளும் சமன் இலாத பல பரப்பி -என்கிறபடியே
கண் வளர்ந்து அருளுவது –

நாளும் வாய்க்க நங்கட்கு நளிர் நீர்க் கடலைப் படைத்து தன்
தாளும் தோளும் முடிகளும் சமன் இலாத பல பரப்பி
நீளும் படர் பூங்கற்பகக் காவும் நிறை பல் நாயிற்றின்
கோளும் உடைய மணி மலை போல் கிடந்தான் தமர்கள் கூட்டமே–8-10-8-)

அவ் வடிவோடே எழுந்து இருந்து -கடைகிற போது
ஒரு கடல் செவ்வே நின்று கடல் கடைந்தால் போலே இருக்கையாலே
அருளிச் செய்கிறார் -(பாற் கடலை குணக் கடல் அன்றோ கடைந்து )
ஸ்ரமஹரமாய் அபரிச்சின்னமாய் இறே கடல் இருப்பது –
அப்படியே ஸ்ரமஹரமுமாய் அபரிச்சின்ன போக்யமுமாய் இருக்கிற படி –

அதவா
பெரு வடிவு -என்று
அசங்க்யாதமான வடிவாலே -என்னவுமாம் –
1-மந்த்ரம் அழுந்தாமைக்கு கூர்ம ரூபியாகவும்
2-மேலே கொந்தளியாமைக்கு ப்ர்ஹத் ரூபியாயும் –
3-தேவதைகளோடு அந்ய தமமான வடிவைக் கொண்டும்
4-அசுரர்களோடு அந்ய தமமான வடிவைக் கொண்டும் –
5-அவர்களுடைய மத்யே நின்று வலித்தும்-
5-வாஸூகிக்கு பலமாய் புகுந்து நின்றும் –
யன்ன த்ரஷ்டும் சூராசூரை -என்று
மலையோடு தேவதைகளோடு அசுரர்களோடு வாசி அற –
வியாபித்து -பலாதானம் பண்ணுவதாயும்
இப்படி அநேகம் வடிவைக் கொண்டபடி –

கடல் அமுதம் கொண்ட காலம் –
துர்வாசவினுடைய சாபத்தால் நஷ்ட ஸ்ரீகராய்
அம்ர்தத்தை இழந்து தரித்ரராய் –
சரணம் த்வா மநு ப்ராப்தா சமஸ்தா தேவ கணா-(ஸ்ரீ விஷ்ணு புராணம் )என்கிறபடியே

பிறிகதிர் படாதபடி சகல தேவதைகளும் வந்து சரணம் புகுர –
அவர்களுக்கு கடலைக் கடைந்து அமர்த்தம் கொடுத்த படி –

கொண்ட –
அவர்களுக்கு கொடுத்தது தன் பேறாய் இருக்கை –

கடல் அமுதம் கொண்ட காலம் –
1-தேவதைகளுக்கும் -2–தனக்கும் -3–எனக்கும் –
கடலிலே அமுதத்தை உண்டாக்கின காலம் –
1-தேவதைகள் பந்தகமான அம்ர்தத்தைக் கொண்டு போனார்கள் –
2-தான் பெரிய பிராட்டியார் ஆகிற அம்ர்தத்தை ஸ்வீகரித்தான் –
விண்ணவர் அமுது உண்ண அமுதினில் வரும் பெண்ணமுதம் உண்ட
இவை இரண்டும் அன்று இவருக்கு போக்கியம் –
3-நால் தோள் அமுது –என்கிறபடியே
கையும் திரு ஆழியும் கொண்டு
கடல் கடைந்தானே யாய்த்து இவருக்கு போக்கியம் –

(வந்தாய் போலே வாராதாய்! வாராதாய் போல் வருவானே!
செந்தாமரைக்கட் செங்கனி வாய் நாற்றோ ளமுதே! என துயிரே!
சிந்தா மணிகள் பகரல்லைப் பகல் செய் திரு வேங்கடத்தானே!
அந்தோ அடியேன் உன பாதம் அகல கில்லேன் இறையுமே.–6-10-9-)

1-தேவதைகளும் தங்கள் அபிமதத்தைப் பெற்றுப் போந்தார்கள் –
2-அவனும் தன் அபிமதம் பெற்றான் –
3-நானும் என் அபிமதம் பெற்றேன் –
பஸ்யதாம் -சர்வ தேவாநாம் யவௌ வஷஸ் த்தலம் ஹரே –
என்கிறபடியே
சகல தேவதைகளும் பார்த்து இருக்க
திரு நாபீ கமலத்திலே அடியை இட்டு திரு மார்பிலே ஏறினாள் ஆய்த்து –

(சிந்து கன்யை -பாற் கடலில் பிறந்தவள்-திவ்ய மால்ய அம்பர தரா
பதுமா -வாமனன் அவதாரம் பொழுது
தாரணி -பரசுராமன்
ருக்மிணி -கண்ணன்
சீதா -ராமன்)

இவர்களைப் பாராதே திரு மார்பிலே ஏறுவான் என் என்னில்
தன் அபிமதம் பெற்றால் இறே பிறர்க்கு அபிமதம் செய்வது –
அங்கன் அன்றியே
அவன் கடாஷம் அடியாக விறே நம்முடைய கடாஷம் என்று அவன் முகத்தைப் பார்த்தாள் –
அவன் நினைவு அறிந்து செய்கைக்காக –

இவ்விடத்திலே ஜீயர் பட்டர் –இடம்
தேவதைகள் அடங்க நிரம்பக் கிடக்கச் செய்தே
திரு மார்பிலே ஏறுகை ஸ்த்ரீத்வத்துக்கு போருமோ -என்று கேட்க –
பர்தர் சம்ஸ்லேஷத்தில் இழியும் பொழுது (கூனர் குறளர்  வயசானவர் பணி செய்யும் )கலசப்பானை எடுப்பார்க்குக் கூச வேணுமோ –
என்று அருளிச் செய்தார் –

சகல தேவதைகளும் ஈஸ்வரோஹம் -என்று இருந்தாலும்
இம் மிதுனத்துக்கு கிஞ்சித் கரிக்க யோக்யமாய் இறே ஸ்வரூபம் இருப்பது –

(அஸௌ மயா ஹத ஸத்ருர் ஹநிஷ்யே சாபராநபி–
ஈஸ்வரோஹமஹம் போகீ ஸித்தோஹம் பலவாந் ஸுகீ–৷৷16.14৷৷

நானே இயற்கையாகவே பலமுடையவன் – நானே சுகமுடையவன் –
அநிஷ்ட நிவ்ருத்தியும் என்னாலே -என்னாலே சத்ருக்கள் மாண்டனர் -நான் தான் ஈஸ்வரன் -நானே அனுபவிக்கிறேன்
ஸ்வர்க்காதிகளை நானே அடைவேன் -பலமும் என்னாலே சுகம் என்னாலே –)

அமுதம் கொண்ட காலம் –
அதுவும் ஒரு காலமே -என்கிறார்
அநந்ய பிரயோஜனருக்கு முகம் காட்டுகை அன்றியே
பிரயோஜனாந்த பரருக்கும் கூட வாழும் காலம் இறே –
1-மேன்மையும்–2- நீர்மையும்–3- போக்யதையும் பிரகாசிக்கும் காலம் இறே –

சகல தேவதைகளும் வந்து சரணம் புகுருகையாலே மேன்மை பிரகாசியா நின்றது
பிரயோஜனாந்த பரர்கள் –ஈஸ்வரோஹம் -என்று இருக்கும் துர்மானிகள் என்று பார்த்தல் –
செய்யாதே கார்யம் செய்கையாலே நீர்மையும் பிரகாசியா நின்றது –
பிராட்டியும் தானும் சேர்ந்த சேர்த்தியால் போக்யதையும் பிரகாசியா நின்றது –

வளை வுருவாய் திகழ்ந்தான் -என்று
க்ர்த யுக புருஷர்கள் சத்வோத்தராகையாலே வெளுப்பாய்த்து அவர்கள் உகப்பது –
ஆகையால் அவர்கள் ருசி அனுகுணமாக சுக்ல வர்ணமான வடிவை உடையனாய் இருக்கும் –

வளை வுருவாய் -சங்க வர்ணனாய் –
சசி வர்ணம் சதுர்புஜம் -என்னக் கடவது இறே –

கடல் கடைந்த காலம் க்ருத யுகம் யென்ன பிரமாணம் என் என்னில் –
ஸ்வேத வர்ணம் -என்கையாலே –க்ர்த யுகம் என்னும் இடம் தோற்றுகிறது

(ஸூக்ல அம்பர தரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர் புஜம் பிரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ந உப சாந்தயே

சுக்லாம்பரதர”வெள்ளை வஸ்த்திரம் கட்டிக் கொண்டிருப்பவர்.
விஷ்ணு’ என்றால் எல்லா இடத்திலேயும் பரவியிருப்பவர், ஸர்வ வ்யாபி என்று அர்த்தம்.
சசிவர்ண”: நிலா மாதிரி நிறமுடையவர்.-சதுர்புஜ”: நாலு கை உள்ளவர்.
ப்ரஸந்ந வதந”: நல்ல மலர்ந்த முகமுள்ளவர்
த்யாயேத்’ என்பதற்கு ‘த்யானிக்க வேண்டும்’
“ஸர்வ விக்ந உப சாந்தயே”- எல்லா விக்னங்களும், தடைகளும் இடையூறுகளும் அடங்கி மறைந்து போவதற்காகவே,)

அங்கமாறு வேத நான்கு மாகி நின்று அவற்றுளே
தங்குகின்ற தன்மையாய் தடம் கடல் பணைத் தலை
செங்கண் நாகணைக் கிடந்த செல்வ மல்கு சீரினாய்
சங்க வண்ண மன்ன மேனி சாரங்க பாணி யல்லையே –(ஸ்ரீ திருச்சந்த விருத்தம்-15-)

பாலின் நீர்மை —நிறைந்த காலம் நான்குமாய் -என்று
நாலு யுகத்துக்கும் நாலு வர்ணமாக அருளிச் செய்தார் இறே ஒருவர் –

(பாலின் நீர்மை செம் பொன் நீர்மை* பாசியின் பசும் புறம்,*
போலும் நீர்மை பொற்பு உடைத்தடத்து* வண்டு விண்டு உலாம்,*
நீல நீர்மை என்று இவை* நிறைந்த காலம் நான்குமாய்,*
மாலின் நீர்மை வையகம்* மறைத்தது என்ன நீர்மையே?–ஸ்ரீ திருச்சந்த விருத்தம் -44-)

திகழ்ந்தான் -என்றும் –
தன்னை அழிய மாறி இவர்களுக்கு முகம் கொடுத்தால்
அவர்கள் உஜ்ஜ்வலராகை அன்றியே
இவன் உஜ்ஜ்வலனான படி –
தன்னை அழிய மாறியும் முகம் கொடுக்கையால் நீர்மை விளங்கா நிற்கும் இறே –

பெருமானைக் –
இப்படி ஆஸ்ரிதர்க்காக கொள்ளும் வடிவுக்கு தொகை இன்றிக்கே இருக்கிறவனை
யுகங்கள் நாலா னால் வடிவும் நாலாக இருக்குமோ வென்னில்
அவ்வவோ யுகங்களுக்கு தொகை இல்லாமையாலே வடிவும் அசங்க்யாதமாய் இறே இருப்பது –

(எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் -25-அவதாரங்கள் ஸ்ரீ மத் பாகவதம் சொல்லும்)

த்வாபர யுகத்தில் உள்ளார் -ரஜஸ் தமோ மிஸ்ரராய் இருக்கையாலே
அவர்கள் உடைய ருசி அனுகுணமாக
சிவப்பும் இன்றியிலே நீலமும் இன்றியிலே இருக்கும் வடிவை உடையவை இருக்கும் என்னும் இடம்
அநுக்தம் ஆகையாலே அத்தையும் சமுச்சயிக்கிறது –
பாசியின் பசும் புறம் போலும் நீர்மை –என்னக் கடவது இறே –

கரு நீல வண்ணன் தன்னை –
கலிகாலத்தில் தன் பக்கல் அபிமுகராய்
ஒரு வர்ண விசேஷத்திலே ருசி பண்ணுவார் இல்லாமையாலே
ஸ்வா பாவிகமான வடிவு தன்னைக் கொண்டு இருக்கும் –

கலௌ ஜகத்பதிம் (கலௌ ஜகத் பதிம் விஷ்ணும் ஸர்வஸந்த்ரஷ்டாரம் ஈஸ்வரம். நார்சயிஷ்யந்தி மைத்ரேய பாஷண்டே -இத்யாதி-ஸ்ரீ விஷ்ணு புராணம்
மைத்ரேய -பட்ட பாடு பாராய் -என்னுதல் –
பராசரருக்கு கலியுகம் பிரத்யஷம் போலே தோற்றுகையாலே இக் காலம் -என்கிறார் –
இக் காலம் தட்டாதே நீ ஒருவனே இரு -என்னுதல்
கருமை -என்று கறுப்புக்கும் பேர் -வர்ண சாமான்யத்துக்கும் பேர் –
நிறத்தில் வந்தால் நீலமான நிறத்தை உடையனாய் இருக்கும் –

ஒரு வடிவத் தோர் உருவன் என்று உணரலாகாது –
நிறத்தை அழிய மாறுகை அன்றியே
வடிவையும் அழிய மாறும் –
இப்படி ஆஸ்ரித அர்த்தமாக வடிவையும் வர்ணத்தையும் அழிய மாறுகையாலே
இது வடிவு இது வர்ணம் என்று ஒருவராலும் பரிச்சேதிக்க போகாது

ஸூர நர திரஸாம் -(ஸ்ரீ வரதராஜ ஸ்தவம் )என்கிறபடியே
சர்வ யோநியிலும் வந்து அவதரிக்கையாலே
வடிவை அழிய மாறினான் இறே –

(இயம் வையூஹீ வை ஸ்திதிரத கில இச்சா விஹ்ருதயே
விபூதி நாம் மத்யே ஸூர நர திரிச்சாம் அவதரன்
சஜாதியஸ் தேஷாமிதி து விபாக்க்யாம் அபி பஜந்
கரீச த்வம் பூர்ணோ வர குண கணைஸ் தாந் ஸ்தகயஸி –(ஸ்ரீ வரதராஜ ஸ்தவம்-17-)

யுவா குமார -என்கிற பருவம் -காள மேகம் போலே இருக்கிற நிறம்
ஸ்வா பாவிகமாய் இருக்கும் என்று பரிச்சேதிக்கப் போகாதோ -என்னில்
புத்ரனாய் இருக்கவும் காண்கையாலே பருவத்தைப் பரிச்சேதிக்கப் போகாது –
ஆஸ்ரிதர் உடைய ருசி அனுகுணமாக வர்ணத்தைப் பரிகிரஹிக்கையாலே
நிறத்தை பரிச்சேதிக்கப் போகாது –

(யுவா குமார – யுவா அகுமாரா -கௌமாரம் இன்றியே யௌவன மாத்ரமேயாய் யுள்ளவனை
நீல ஜீமுத இந்திர நீல மணி ப்ரபாம் இவள் -யுவா குமார ரூபஞ்ச யுவதஸ்ய குமாரிணி)

ஆனாலும் இவை ஆகந்துகம் -நிலை நின்ற வேஷம் இது என்று பரிச்சேதிக்க குறை யென்ன -என்னில்
ஆஸ்ரித அர்த்தமாக கொண்ட வடிவையும் நிறத்தையும் பார்த்தால் அது தான் ஆகந்துகம் என்னும்படியாய் –
அவை தன்னை ஆதரித்து இருக்கையாலே பொருந்தி இருக்கும் படி –
இச்சா க்ருஹீதம் (ஸ்ரீ விஷ்ணு புராணம் )இறே –

(இச்சா க்ருஹீதம் -இச்சையால் கொள்ளப் படுகின்ற உருவம் நின் உருவம் என்னுதல்-கர்ம நிபந்தனம் அல்ல என்று தோற்றுகிறது;

பாசி தூரத்துக் கிடந்த பார் மகட்குப் பண்டு ஒரு நாள்
மாசுடம்பில் நீர் வாரா மானமிலாப் பன்றியாம்
தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார்
பேசியிருப்பனகள் பேர்க்கவும் பேராதே–11-8-)

உணரலாகா –
பாசுரமிட்டு பேச முடியாமை யன்று –
நெஞ்சாலும் நினைக்கப் போகாது –

ஊழி தோறு ஊழி நின்று ஏத்தல் அல்லால் –
செய்யலாவது இது -என்கிறார் –
அவன் கொண்ட ரூப பேதங்களையும்
வர்ண பேதங்களையும் பார்த்தால்
கால தத்வம் உள்ளதனையும் நின்று ஏத்தும் இத்தனை யல்லது பரிச்சேதிக்கப் போகாது –

கரு வடிவில் செங்கண்ண வண்ணன் தன்னைக் –
தமக்கு காட்டின வடிவை அருளிச் செய்கிறார் –
தமக்கு ருசி உண்டாகில் இறே ருசி அனுகுணமான வடிவைக் கொண்டு காட்டுவது
நாம் பகவத் விமுகராய்
விஷய பிரவணராய் இருக்க
தன்னுடைய ருசியாலே -ஸ்வா பாவிகமான வடிவு தன்னையே யாய்த்து காட்டிற்று –
காள மேக நிபாஸ்யமான வடிவையும்
அதுக்கு பரபாகமாய் உள் வாயிலே கிடக்கிற வாத்ஸல்யம்
அமர்த்த வர்ஷியான திருக் கண்களை உடையவன் –
இதையும் ஸ்ரீயபதித்வத்தோபாதி
தனித் தனியே சர்வாதிக லஷணமாய் இறே இருப்பது –

கட்டுரையே யார் ஒருவர் காண்கிற்பாரே -(யார் ஒருவர் கட்டுரையே -யார் ஒருவர் காண்கிற்பாரே )
நிர்ஹேதுக பகவத் பிரசாதத்தாலே
நான் கண்டு பேசினால் போலே எவர் தான் கண்டு பேச வல்லார் –
நான் கண்டால் போலே காண வல்லார் உண்டோ –
நான் பேசினால் போலே பேச வல்லார் உண்டோ

அதவா
கட்டுரையே –
எல்லாரும் பேசியே போம் இத்தனை ஒழிய
காண வல்லார் உண்டோ -என்னவுமாம் –

வேதங்களும் ஈஸ்வரன் வடிவு இருக்கும் படியை
நீல தோயாத மத்யஸ்தா -(வித்யுல்லகேவ பாஸ்வர தைத்ரியம் )என்று கடக்க நின்று பேசிப் போம் அத்தனை -அல்லது கண்டது இல்லை
நீலமுண்ட மின்னன்ன மேனி எம்பெருமான் –என்றவர்களும் நான் கண்டால் போலே கண்டார்களோ –

(இன்னன்ன தூதெம்மை ஆள் அற்ற பட்டு இரந்தாள் இவள் என்று
அன்னன்ன சொல்லாப் பெடையொடும் போய் வரும் நீலம் உண்ட
மின்னன்ன மேனி பெருமான் உலகில் பெண் தூது செல்லா
அன்னன்ன நீர்மை கொலோ? குடிச் சீர்மையில் அன்னங்களே –ஸ்ரீ திரு விருத்தம் -29-)

நைசர்க்கிகமான விரக்தியையும் -நைசர்க்கிகமான பிரேமத்தையும்
உடையராய் (ஸஹஜ பக்தராய்-மணி வல்லிப் பேச்சு வந்தேறி அல்லவே )அன்றோ அவர்கள் கண்டது –
நைசர்க்கிகமான பகவத் வைமுக்யத்தையும் விஷய பிராவண்யத்தையும் உடைய நான்
அவ்வாறு இவ்வாறாய் கண்ட காட்சிக்கு ஸத்ர்ஸம் உண்டோ –
ஆன பின்பு -நான் கண்ட காட்சியை வேதங்கள் கண்டதோ –
ஆழ்வார்கள் கண்டார்களோ –

ஆர் ஒருவர் காண்கிற்பாரே –
ஸ்வ சாமர்த்யத்தாலே எவர் காண வல்லார்
சாதகரைப் போலே ஸ்வ யத்னத்தால் கண்டேனோ
பிரபன்னரைப் போலே சம்சார பீதனாய் கண்டேனோ –
விஷய பிரவணனாய் திரியச் செய்தே அன்றோ நான் கண்டது –
பரகத ஸ்வீகாரத்துக்கு முக்ய அதிகாரி -தாம் -என்றபடி –

———————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

திரு நெடும் தாண்டகம்–2–பாருருவி நீர் எரி கால் விசும்புமாகி –ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம் –

December 13, 2013

அவதாரிகை —

முதல் பாட்டில் –
தேகாத்ம அபிமான ராஹித்யம் தொடக்கமாக
பிராப்தி பர்யந்தமாக ஈஸ்வரன் தமக்கு பண்ணின உபகார பரம்பரைகளை அருளிச் செய்தார் –

இதில் –
தமக்கு த்ரிமூர்த்தி சாம்ய ப்ரமத்தை அறுத்து தந்தபடியை அருளிச் செய்கிறார் –
எண்ணும் பொன்னுருவாய் -என்று ஸ்வரூப வைலஷண்யத்தை சொன்ன போதே

இதுவும் அதிலே அர்த்ததா உக்தம் அன்றோ -என்னில் –
சிம்ஹாவ லோக ந்யாயத்தாலே -கீழ்ச் சொன்ன உபகாரங்களை
மறித்துப் பார்த்து அல்லாத உபகாரங்களை உண்டு அறுக்கிலும்
இந்த த்ரிமூர்த்தி சாம்ய கூழ்ப்பை அறுத்துத் தந்த உபகாரத்தை
உண்டறுக்கப் போமோ -என்று -அவற்றின் உடைய ஆதிக்யத்தாலே திரியட்டும் சொல்லுகிறார் –

கூழ்ப்பு -சம்சயம்
விஷயாந்தர ப்ராவண்யத்தில் நின்றும் மீட்ட உபகாரம் போலேயோ –
கைவல்யம் ஆகிற ஆபத்தில் நின்றும் மீட்ட உபகாரம் போலேயோ –
இந்த உபகாரம் -என்கிறார்-

1-இருவர் சேஷமாய் -ஒருவன் சேஷியாய்
2-இருவர் உத்பாதகராய் -ஒருவன் உத்பாதகனாய் –
3-இருவர் சரீரமாய் -ஒருவன் சரீரியாய் –
இருக்கிறபடியை எனக்குக் காட்டித் தந்தான் –
என்கிறார் –

—————————————————————————-

பாருருவி நீர் எரி கால் விசும்புமாகி
பல் வேறு சமயமுமாய் பரந்து நின்ற
ஏருருவில் மூவருமே யென்ன நின்ற
விமையவர் தம் திரு வுரு வேறு எண்ணும் போது
ஓர் உருவம் பொன்னுருவம் ஓன்று செந்தீ
யொன்று மா கடலுருவம் ஒத்து நின்ற
மூ வுருவம் கண்ட போது ஒன்றாம் சோதி
முகிலுருவம் எம் அடிகள் உருவம் தானே-–2-

பதவுரை

ஏர் உருவில் அழகிற ஜகத்தில்–
மூவருமே என்ன நின்ற–மூன்று தெய்வங்களே முக்கியம்‘ என்று சொல்லலாம்படி யமைந்த
இமையவர் தம்-தேவதைகளினுடைய
திரு உரு-ரூபங்களை
வேறு எண்ணும் போது–தனித் தனியாகப் பிரித்து ஆராயுமிடத்தில்
ஓர் உருவம்-(நான்முகக் கடவுளாகிற) ஒரு மூர்த்தியானது
பொன் உருவம்–பொன்னின் வடிவாகவுள்ளது;
ஒன்று–(பரம சிவனாகிற) ஒரு மூர்த்தி யானது
செம் தீ–சிவந்த நெருப்பின் வடிவாக வுள்ளது;
ஒன்று–(ஸ்ரீமந் நாராயணனாகிற) ஒரு மூர்த்தியானது
மா கடல் உருவம்–கருங்கடல் போன்ற வடிவமாக வுள்ளது;
ஒத்து நின்ற–சேர்ந்திருக்கின்ற
மூ உருவும்–(மேற்சொன்ன) மூன்று மூர்த்திகளையும்
கண்ட போது-(பிரமாணங்கொண்டு) பரிசீலனை செய்யுமிடத்து,
பார் உருவி–கடினமான பூமி யென்ன
நீர்-ஜலமென்ன
எரி-அக்நியென்ன
கால்-வாயுவென்ன
விசும்பும் ஆகி–ஆகாசமென்ன ஆகிய பஞ்ச பூதங்களையும் படைத்தும்
பல் வேறு சமயமும் ஆய்-பலவாய் வேறுபட்ட சமயங்களை யுடைத்தாயிருக்கும் ஜகத்தை ஸ்ருஷ்டித்தும்
பரந்து நின்ற-இப்படி ஸ்ருஷ்டிக்கப்பட்ட ஜகத்திலே அந்தர்யாமியாய் வியாபித்து நிற்குமதாய்
ஆம் சோதி-பரஞ்சோதி யென்று போற்றப் படுமதாய்
ஒன்று-அத்விதீயமா யிருக்கின்ற
முகில் உருவம்-காளமேக வுருவமானது
எம் அடிகள் உருவம்–எம்பெருமானுடைய வடிவமாம்.

அழகிய சரீரங்களில் பிராணிகளில் -மூவருமே பிரதானர் என்னும்படி இருக்கிற
ப்ரஹ்ம விஷ்ணு ருத்ரர்களுடைய ரூபங்களை வேறாகப் பிரித்துப் பார்க்கும் போது
ஒரு -ப்ரஹ்மாவின் வடிவம் பொன்னின் ஸ்வபாவம்
ஒரு -ருத்ரனின் வடிவு -சிவந்த அக்னியின் வடிவு
ஓரு -ஸ்ரீ யபதியான நாராயணனுடைய வடிவு பெரிய கடல் போலே ஸ்ரமஹரமான வடிவு
சேர்ந்து இருக்கிற மூன்று வடிவுகளையும் ப்ரமாணத்தாலே பார்க்கும் போது
கடினையான பூமி ஜலம் அக்னி காற்று ஆகாசங்களை ஸ்ருஷ்ட்டித்தும்
பலவாய் வேறுபட்ட சமயத்தை யுடைத்தாய் இருக்கும் ஜகத்தை ஸ்ருஷ்ட்டித்தும்
அந்தராத்மதயா வியாபித்து நிற்குமவனாய்
தத்வ ஸ்தியை ஆராய்ந்து பார்க்கும் இடத்து
பரஞ்சோதி ஸப்த வாஸ்யனாய்
ஒருவனாய் விளங்குகிற
காளமேக நிபஸ்யா மமான வடிவு
ஸர்வ ஸ்வாமியான ஸர்வேஸ்வரன் வடிவமாம் –

—————–

பாருருவி-நீர் எரி கால் விசும்புமாகி –
கடினையான பூமி
ஆர்யச் சிதைவாகையாலே –உர்வியை -உருவி -என்கிறது –
பார் -என்று பூமியைச் சொல்லுகிறது அன்று –
காடிந்ய பரம் உருவி -என்று பூமியைச் சொல்லுகையாலே –
இத்தால் பூதாந்தரங்களில் காட்டில் வ்யாவர்தகமான
காடிந்யத்தை உடைத்தான பூமி -என்கை —

உருவில் -என்ற பாடமான போது –
அண்ட காரணமான பதார்த்தங்களில்
பார் நீர் எரி கால் விசும்பு ஆகிய பஞ்ச பூதங்களையும் சிருஷ்டித்து –
அல்லாத அஷர அவ்யக்த மஹத் அஹங்காரங்கள் ஆகிற
இவை அண்டத்துக்கு காரணம் அன்றோ என்னில் –
அவற்றில் காட்டில் ஸ்தூலமாய் இருக்கையாலும்
அண்டத்துக்கு சாஷாத் காரணமாய் இருக்கையாலும்
நித்ய சிருஷ்டியைச் சொல்லுகிறது –
ருஷியும் –பூதோப்யண்டம் -என்றார் இறே
பார் முதலாகச் சொல்கிறது -வ்யய க்ரமத்தைப் பற்றி –

ஆகி –என்றது
உண்டாக்கி -என்னுமத்தை காட்டுமோ என்னில்
வேதாந்திகள் -ஆகையாலே
பஹுஸ்யாம் –என்கிற ஸ்ருதி சாயையாலே அருளிச் செய்கிறார் –
ஆகாசாத் வாய் -வாயுரோக்னி -அக்னேராப -அத்யப்ப்ரத்வி –
என்று ஒன்றுக்கு ஓன்று உத்பாதகமாக சொல்லச் செய்தே
இவற்றுக்கு எல்லாம் ஈஸ்வரனே உத்பாதகன் -என்னப் போமோ -என்னில் –
தேஜ ஐஷத-ஆப ஐஷத -என்கிற ஈஷண க்ரியை
அசேதனத்துக்கு கூடாமையாலே
ததவஸ்தனான சர்வேஸ்வரனே இவற்றுக்கு உத்பாதகன் என்னும் இடம் தோற்றிற்றே –

த்ரிமூர்த்தி சாம்ய பிரம நிவர்தனம் ஆகில்
இப்பாட்டுக்கு வாக்யார்த்தம் பிரக்ருத சிருஷ்டியை சொல்லுவான் என் என்னில் –
அண்ட காரணமான பூதங்களை ஸ்ருஷ்டிதவனுக்கு
அண்டத்தில் உத்பன்னரான ப்ரஹ்மாதிகளோடு
சாம்ய சம்பாவனையும் இல்லை -என்கைக்காக –

பல் வேறு சமயமுமாய் –
கீழே சமஷ்டி சிருஷ்டியைச் சொல்லிற்று
இத்தால் – வ்யஷ்டி சிருஷ்டியைச் சொல்லுகிறது –
பத்த சேதனர் பூதங்களிலே சமஷ்டி ரூபேண அந்வயித்து போருகையாலே சமஷ்டி சிருஷ்டி -என்கிறது –
பத்தாத்ம சமஸ்டி பூதனான ப்ரஹ்மாவின் பக்கலில் நின்றும்
பக்த சேதனாபின்னராய் பிறக்கையாலே வ்யஷ்டி சிருஷ்டி -என்கிறது –

பலவாய் வேறுபட்ட சமயத்தை உடைய ஜகத்தை சிருஷ்டித்து
சமஷ்டி சிருஷ்டி போலே சங்க்யாதமாய் இருக்கை அன்றிக்கே
அசங்க்யாதரான ஆத்மாக்களை ஸ்ருஷ்டிக்கையாலே –வ்யஷ்டி சிருஷ்டியை -பல் -என்கிறது –

வேறு பட்டு இருக்கை யாவது -ஒன்றோடு ஓன்று தீண்டவும்
துடைக்கவும் ஒண்ணாத படி
தேகாதி பேதத்தாலே அன்யோன்யம் அத்யந்த பின்னமாய் இருக்கை –

சமயம் ஆகிறது -வியவஸ்தை -வ்யவஸ்தித ஸ்வபாவமாய் இருக்கை –
தேவதைகள் ஆராத்யராயும் -அமர்த்த புக்குகளாய் இருக்கையும்-
மனுஷ்யர் ஆராதகராயும் அந்நாசிகளாயும் இருக்கையும் –
திர்யக் ஸ்தாவரங்கள் ஆராதனா உப கரணங்களாயும் -ஆராதகருக்கு உஜ்ஜீவனமாயும்
அல்லாதவை அவன் அபிமானத்திலே கிடந்தது உஜ்ஜீவிக்கையும் வ்யவஸ்த்திதமாய் இருக்கை –
தாஸ்ய ஸூகைக்க சங்கினாம் -பவநேஷ் வஸ்த்வபி கீட ஜன்மமே -என்னக் கடவது இறே –

(தவ தாஸ்ய ஸுகைக ஸங்கிநாம்
பவநேஷ்வஸ் த்வபி கீடஜந்ம மே |
இதராவஸதேஷு மா ஸ்ம பூத்
அபி மே ஜந்ம சதுர் முகாத்மநா ||-ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -ஶ்லோகம் 55 –

எம்பெருமானுக்குத் தொண்டு செய்வதில் மூழ்கியிருப்பவர்களின் திருமாளிகைகளில் ஒரு புழுவாகவாவது பிறக்க வேண்டும்.
மற்ற க்ருஹங்களில் ப்ரஹ்மாவாகப் பிறப்பதும் எனக்கு வேண்டாம்.)

பரந்து நின்ற –
பரக்கை யாவது -ஸ்ருஷ்டையான சகல பதார்த்தங்களையும்
அனு பிரவேசத்தாலே
ஆத்ம தயா வியாபித்து நிற்கை –

அனு பிரவேசமாவது – ஸ்தூலாகாரத்துக்கு அனுகூலமாக தன்னை அமைக்கை –
சூஷ்ம சிதசித் விசிஷ்டனான தன்னை ஸ்தூல சிதசித் விசிஷ்டன் ஆகை இறே-

(காரண ப்ரஹ்மமே கார்ய ப்ரஹ்மமாவான் அன்றோ-அப்ருதக் ஸித்த விசேஷணம் -அனைத்து நிலைகளிலும் -)

அழகிய சரீரங்களிலே
பரந்து நின்ற -என்று
ஆத்ம தயா வ்யாப்தனான ஈஸ்வரனுக்கு
ஜகத் சர்வம் சரீரம் தே -என்று ஜகத்தடைய சரீரமாய் இருக்கையாலே
உரு -என்று ஜகத்தைச் சொல்லுகிறது –

(பவான் நாராயண தேவ
ஸமஸ்காரா த்வத் பவன் வேதா -வேதங்கள் உன்னையே காட்டும்
நைன தத் த்வத் விநா -நீ இல்லாத ஒன்றுமே இல்லை
ஜகத் ஸர்வம் சரீரம் தே -அனைத்தும்
வஸூ தலம் தே -பூமி எல்லாம் நீயே)

த்யாஜ்யரான சம்சாரிகளை –ஏருரு -என்பான் -என் என்னில் –
முமுஷூவுக்கு சம்சாரம் தான்
பய ஸ்தானமாயும் இருக்கும்
உத்தேச்யமாயும் இருக்கும் –
கர்ம நிபந்தனமாகப் பார்த்தால் -பய ஸ்தானமாய் -இருக்கும் –
ஜகத் சர்வம் சரீரம் தே -என்று பகவத் சரீரத்வ ஆகாரத்தாலே பார்த்தால் -உத்தேச்யமாய் இருக்கும் —

மூவருமே யென்ன நின்ற –
பஹூ நாயக ஜகத்து -என்கிறதை தவிர்த்து குறுக விட்டு வைத்தார்களே சிலர் -வேதாந்திகள்
ஆராத்யராய்த் தோற்றுகிறவர்கள் அடைய நிஷேதிக்க வேண்டாதே
நமக்கு நிஷேத்யர் இவராம்படி பண்ணித் தந்தார் -என்கை –

பூர்வ காண்டத்திலே –
த்ரிம் சச்ச தேவா நாவச ஸ்பர்யன் த்ரீணி சதாத் ரீஷஹஸ்ராண் யக்நிம்-(ரிக்வேதம் அஷ்டகம் )என்று
3339 தேவதைகளை அக்னி தேவதைக்கு  ஆஸ்ரயணீயாராகச் சொல்லக் கடவது இறே –

வேதாந்திகள் -காரணந்து த்யேய –ஜகத் காரண வஸ்துவே -ஆஸ்ரயணீம் -என்று இறே சொல்வது –
அதில் சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரங்களுக்கு கடவார் மூவர் ஆகையாலே
இவர்கள் மூவருமே ஆஸ்ரயணீயர் -என்பார்கள் –

யென்ன நின்ற –
என்கையாலே -ஆபாத பிரதீதியிலே சாம்யம் தோற்றுகையாலே
ஆஸ்ரயணீயாராகத் தோற்றும் இத்தனை ஒழிய-
நிரூபித்தால் சாம்ய சம்பாவனையும் இல்லை -என்கை –

ஸ்ருஷ்ட்டி ஸ்திதி அந்தக் கிராணம் ப்ரஹ்ம விஷ்ணு சிவாத்மிகாம் சசம்ஜ்ஞாம் யாதி பகவநேக  ஜனார்த்தனா-(ஸ்ரீ விஷ்ணு புராணம் )
என்று ஆபாத ப்ரதீதியிலே சாம்யம் தோற்றுகையும் –
ஜனார்த்தனா -என்று
விஷ்ணு சப்தத்தோடு பர்யாய்சமான ஜனார்த்தன சொல்லுகையாலே
பரிஹ்ர்தமாகக் கடவது இறே -(இருவருக்கும் இவனே காரணம் என்றதாயிற்று )

விமையவர் –
இதுவும் ஒரு ப்ரம ஹேது –
அநிமிஷத்வாகாரம் ஒத்து இருக்கையாலும்
தேவ -சப்தத்தால் சொல்லுகையாலும்
சாம்ய பிரமத்துக்கு ஏகாந்தமாய் இருக்கை –
அநிமிஷத்வம் தேவாதி வர்க்கங்களுக்கு எல்லாம் பொதுவாய் இருக்கையாலும்
சாஷாத் தேவ புராணா சௌ -என்று
நிருபாதிக தேவத்வம் ஒரு வ்யக்தியிலே கிடக்கையாலும் –சாம்ய சம்பாவனை -இல்லை –

(ஆரண்ய பர்வதம் ஸுநகர் யுதிர்ஷ்டனிடம் சொல்வது
புண்யா துவாரகை -தத்ர மது ஸூதனன் – -ஸாஷாத் தேவன் புராணா சௌ –கிருஷ்ணன் தர்மம் ஸனாதந -)

தம் திரு வுரு வேறு எண்ணும் போது
அவ்வவர் உடைய ஸ்வபாவங்களைப் பிரித்து –
அனுசந்திக்கும் போது –
பிரம யோக்யதை உண்டு என்கை –

தமக்கு நிஷேத்யராய் இருக்குமவர்களைப் பற்றி –திரு உரு -என்று
ஸ்லாகித்துச் சொல்லுவான் -என் என்னில் –
அவர்கள் உடைய ஸ்வரூபத்தோபாதி –
அவர்கள் சரீரம் ஈஸ்வர சரீரம் ஆகையால் -தத்வாரா பேசுகிறார் –

வேறு எண்ணும் போது –
கூட அனுசந்திக்கும் போது இறே
இருவர் சேஷமாய் -ஒருவர் சேஷியாய் -இருப்பது –
அரிஅயன் அரன் என்னும் இவரை ஒன்ற நும் மனத்து வைத்து -என்னக் கடவது இறே –

உணர்ந்துஉணர்ந்து இழிந்துஅகன்று உயர்ந்துஉரு வியந்தஇந் நிலைமை
உணர்ந்துஉணர்ந்து உணரிலும் இறைநிலை உணர்வுஅரிது உயிர்காள்!
உணர்ந்துஉணர்ந்து உரைத்துஉரைத்து அரிஅயன் அரன்என்னும் இவரை
உணர்ந்து உணர்ந்து உரைத்துஉரைத்து இறைஞ்சுமின் மனப்பட்டது ஒன்றே.–1-3-6-)

(ஓன்று என பலவென வறிவரும் வடிவினுள் நின்ற
நன்ற எழில் நாரணன் நான்முகன் அரன் என்னும் இவரை
ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நும் இரு பசை அறுத்து
நன்றென நலம் செய்வது அவனிடை நம்முடைய நாளே –திருவாய் மொழி-1-3-7-)

(நான்முகனை நாராயணன் படைத்தான் -யஸ்ய உபசேஷணம் -ருத்ரனையும் ஸம்ஹரித்தார் -பிரமாணங்கள் உண்டே)

(உலகு அளந்த அரி அதிகன் அயன் அயன் அதிகன் அதிகன் -அறிவிலிகள் கம்பர்)

(பொதுவான கேள்வி -ஸ்ரீ மத் பாகவதம் -ஸ்ரீ ராமாயணம் ஸ்ரீ சஹஸ்ர நாமம் -பதில் இவனே -விஷ்ணவே ஜகத் பதிம்)

ஓர் உருவம் பொன்னுருவம் ஓன்று செந்தீ –பிரம ஹேதுவான அசாதாரண ஸ்வபாவங்களைச் சொல்லுகிறது –
ப்ரஹ்மா வினுடைய ஸ்வபாவம் பொன்னின் ஸ்வபாவம் –
பொன்னாவது சர்வ ஆபரணங்களுக்கும் பண்ண யோக்யமாய் இறே இருப்பது –
அப்படியே சதுர் தச புவனங்களையும் ஸ்ருஷ்டிக்கைக்கு யோக்கியம் என்று தோற்றி இருக்கும் –
பத்தாத்ம சமஷ்டி பூதன் ஆகையாலே –
ஸ்வ சரீரத்தின் நின்றும் இறே -சகல பதார்த்தங்களும் உத்பன்னம் ஆவது –

ஓன்று செந்தீ –
ஒரு தத்தவத்தின் உடைய ஸ்வபாவம் காலாக்னி யினுடைய ஸ்வபாவம் –
அக்னிக்கு ஸ்வபாவம் சர்வத்தையும் தஹிக்கை இறே –
அப்படியே ருத்ரனுடைய ஸ்வபாவத்தைப் பார்த்தால் ஜகத்தை உபசம்ஹரிக்கைக்கு ஈடாக இருக்கும் –

யொன்று மா கடலுருவம் –
கண்டார்க்கு ஸ்ரமஹரமாய் இருக்கையும் –
துஷ்ட சத்வங்களோடு -அதுஷ்ட சத்வங்களோடு -ரத்நாதிகளோடு -வாசி அற
சகல பதார்த்தங்களையும் தன்னுள்ளே இட்டு வைத்து ரஷிக்கும் ஸ்வபாவம் இறே -கடலின் ஸ்வபாவம்

அப்படியே ஈஸ்வரனுடைய ஸ்வரூபத்தைப் பார்த்தால் –
ஆஸ்ரயித்தாற்கு ஸ்ரமஹரமாய் இருக்கையும் –
ஆஸ்ரயித்தாரை தன் அபிமானத்தில் இட்டு வைத்து
மூன்றும் உண்டான இடத்தே இறே ஜகத் காரணத்வம் உள்ளது –

மூவர் பக்கலிலே மூன்று ஸ்வபாவமும் கிடைக்கையாலே
மூவரையும் ஜகத் காரணராய் பிரமிக்கலாய் இருக்கை –

ஒத்து நின்ற –
சேர்ந்து நின்ற –
அதாகிறது
அவ்வவ ஸ்வபாவங்கள் அவ்வவருடைய ஸ்ருஷ்டியாதி வியாபாரங்கள் உடன் சேர்ந்து இருக்கை –

அநந்தரம் -பிரம நிவ்ருத்தி -சொல்கிறது –
மூ வுருவம் கண்ட போது –
மூன்று தத்வத்தையும் பிரமாணத்தால் கண்ட போது –

ஒன்றாம் சோதி –
அவற்றில் வைத்துக் கொண்டு ஒன்றேயாம் சோதி –
உத்பாதகமாயும் –
சரீரியாயும் –
சேஷியாகவும் -இருக்கும் –

எங்கே கண்டோம் -என்னில் –
ஏகோஹவை நாராயண ஆஸீத் -என்று ஜகத் காரண வஸ்துவைச் சொல்லி –
ந ப்ரஹ்ம நேசாந நேமேத்யாவா பர்த்வீ (மஹா உபநிஷத் )–என்று
அசேதனமான ப்ரத்வ்யாதிகளோபாதி
ப்ரஹ்ம ருத்ராதிகளையும் சம்ஹாரத்திலே கர்மீபவித்து
சொல்லுகையாலும் –

ஸ ப்ரஹ்ம ஸ சிவா ஸ இந்த்ர (தைத்ரியம் நாராயண வல்லி )-இத்யாதிகளாலே
இவர்களுடைய ஷேத்ரஞ்ஞ்த்வ சேஷத்வத்தைச் சொல்லுகையாலும்

ஏஷ சர்வ பூத அந்தராத்மா அபஹத பாப்மா (ஸூ பாலா உபநிஷத் ) – என்று
சர்வ சப்தத்தாலே க்ரோடீ க்ர்தமான வ்யாப்ய பதார்த்தங்களிலே
அந்ய தமராகையாலும் –
கார்யத்வமும்
ஷேத்ரஞ்ஞத்வமும்
சரீரத்வமும்
சம் பிரதிபன்னம் -என்கை –

ஆம் சோதி -என்கையாலே
நிர்வாஹ்ய ஜ்யோதிஸ் ஸூக்களான -ஆத்மாக்களை -வ்யாவர்த்திக்கிறது –
சேதனரும் ஸுவயம் பிரகாசமாய் இறே இருப்பது –
ஆகையால் இறே
நாராயண பரோஞ்சோதி -(தைத்ரியம் நாராயண வல்லி)என்றும் –
ஜ்யோதிஷாம் ஜ்யோதி -(ப்ருஹதாரண்யம் )என்றும்
சொல்ல வேண்டிற்று –

மூ வுருவும் கண்ட போது ஒன்றாம் ஜோதி -என்கிறது –
ஏக த்ரவ்யாதிகளுக்கு சேருமா போலே இருக்கும் –
இது இவருக்கு தர்சனம் அல்லாமையாலே பஷம் அல்ல –

இன்னமும்
மின்னுருவாய் –என்றும் –பின்னுருவாய் -என்றும் –பொன்னுருவாய் -என்றும்
தத்வ த்ரயங்களை அகலகல பிரித்துச் சொல்லுகையாலும் –
இப் பாட்டிலே –ஏருரு -என்றது சரீர ஆத்ம பாவங்களைச் சொல்லுகையாலும்
இந்த்ரற்கும் பிரமனுக்கும் முதல்வன் தன்னை -என்று மேலே (4 பாசுரம் )சொல்லுகையாலும்
பிரகரண விரோதம் உண்டு –

முகிலுருவம் எம் அடிகள் உருவம் –
எம் அடிகள் உருவம் -முகில் உருவம் –
என் ஸ்வாமிகள் உடைய வடிவு -காள மேக நிபஸ்யமாய் இருக்கும் –
அங்கு -ரஷகன் -என்கைக்காக –ஓன்று மா கடல் உருவம் -என்று கடலின் ஸ்வபாவத்தைச் சொல்லிற்று –
இங்கு வடிவைச் சொல்லுகிறது –
இவ் வடிவு இறே சர்வாதிகத்வத்துக்கு அடையாளமாய் இருப்பது -(நீல தோயதா மத்யஸ்தா )

(உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணம் கூடியும்
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் றன்னை
வண் தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே.–4-5-10 )

தானே –
மணி வுருவில் பூதம் ஐந்தாய் -என்ற வடிவு தான்
காள மேக நிபாச்யாமமாய் கிடீர் இருப்பது –
அங்கு –மணி யுரு -என்று சொல்லிற்று –

1-முந்தானையில் முடிந்து ஆளலாம் படி -பவ்யமாய் இருக்கை யாலும் –
2-பிரகாசகமாய் இருக்கை யாலும் –
3-மஹார்க்கமாய் இருக்கையாலும் –
4-போக்யமாய் இருக்கையாலும் –

ஏருருவில் மூவருமே யென்ன நின்ற இமையவர் தம் திரு வுரு வேறு எண்ணும் போது–
ஓருருவம் பொன்னுருவம் -ஓன்று செந்தீ -ஓன்று மா கடல் வுருவம் -ஒத்து நின்ற –

மூ வுருவும் கண்ட போது பாருருவி நீர் எரி கால் விசும்புமாகி பல் வேறு சமயமுமாய் பரந்து நின்ற–

ஒன்றாம் சோதி முகில் வுருவம் -எம் அடிகள் உருவம் -தானே –

என்று அந்வயம் –

—————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

திரு நெடும் தாண்டகம்–பிரவேசம் –பாசுரம் -1 –மின்னுருவாய் முன்னுருவில் வேத நான்காய் –ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம் –

December 13, 2013

பிரவேசம் –

(ஆழ்வார்கள் பதின்மரில் இந்த )ஆழ்வார் திருமங்கை ஆழ்வார் ஆகிறார் –
வென்றியே வேண்டி வீழ் பொருட்கு இரங்கி வேல் கணார் கல்வியே கருதி –என்று
சர்வேஸ்வரன் விபூதி அடைய இவர் துடைக்கு கீழே கிடக்கிறதோ வென்று
சங்கிக்க வேண்டும்படி -அதிசய அஹங்காரராய் –

(வென்றியே வேண்டு வீழ் பொருட்கிரங்கி வேற்கணார் கல்வியே கருதி
நின்றவா நில்லா நெஞ்சினை யுடையேன் என் செய்கேன் நெடு விசும்பு அணவும்
பன்றியாய் அன்று பாரகம் கீண்ட பாழியான் ஆழியான் அருளே
நன்று நான் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம் –1-1-4-)

அதுக்கடியான
தேகாத்ம அபிமானத்தை உடையவராய் –
அத்தாலே -சாந்தேந்து மென் முலையார் தடம் தோள் இன்ப வெள்ளம் தாழ்ந்தேன் -என்கிறபடியே
ஆத்ம விஷயம் ஆதல்
ஈஸ்வர விஷயம் ஆதல்
ஜ்ஞானம் பிறக்கைக்கு(த்யாஜ்ய உபாதேய விவேக ஞானம் )யோக்யதை இல்லாதபடி (ஸப்தாதி)விஷய ப்ரவணராய் போந்தார் ஒருவர்(ஆத்மாவை வெய்யிலே வைத்து வாழ்ந்த படி )

(சாந்தேந்து மென்முலையார் தடந்தோள் புணரின்ப வெள்ளத்து
ஆழ்ந்தேன் அரு நரகத்து அழுந்தும் பயன் படைத்தேன்
போந்தேன் புண்ணியனே  உன்னை எய்த்து என் தீ வினைகள்
தீர்ந்தேன் நின்னடைந்தேன் திருவிண்ணகரானே -6-3-4-)

சர்வேஸ்வரன் இவருக்கு இப்படி உண்டான விஷயாந்தர பிரசித்தியைக் கண்டு
இவரை இதில் நின்றும் மீட்கும் விரகு தேடித் பார்த்து –
விஷயாந்தர பிரவணராய் போந்த இவரை
சாஸ்த்ரத்தைக் காட்டி மீட்க ஒண்ணாது
நம் அழகைக் காட்டி மீட்க வேணும் என்று பார்த்து
இவருக்கு விஷயங்களில் உண்டான ரசிகத்வத்தையே பற்றாசாகக் கொண்டு
(திரு மந்த்ரம் உபதேசித்த போது )தன் அழகைக் காட்டிக் கொடுக்கக் கண்டு –

(பிள்ளை உறங்கா வல்லி தாஸருக்கு அவர் தோற்ற கண் அழகையே பற்றாசாக-தன் பால் ஆதரம் பெருக வைத்த அழகனான -பெரிய பெருமாள் இடம் கூட்டிச் சென்று திருப் பாண் ஆழ்வாருக்குக் காட்டி அருளிய
கரிய வாகிப் புடை பெயர்ந்து –நீண்ட -அப்பெரிய வாகிய கண்களைக் காட்டி மீட்டிக் கொண்டது போலவே)

அத்தைக் கண்ட இவர் -ரசிகர் ஆகையால் இவர் அளவு கடந்து ஈடுபட்டு -வேம்பின் புழு வேம்பு அன்றி உண்ணாது –
அடியேன் பின்னும் உன் சேவடி அன்றி நயவேன் -என்று-இவர் அருளிச் செய்தபடியே
தமக்கு ஈஸ்வர விஷயத்தில் உண்டான போக்யதை
தத் விஷய வை லஷ்ண்ய பிரயுக்தமோ-என்னும்படி இவ் விஷயத்தில் அவஹாஹித்தார் –

(இவர் ஈடுபாடு -அந்த அழகின் போக்யதையால் -இனிமையால்-இன்று வந்தது போல் அன்றியே
நித்ய ஸூரிகளைப் போல் ஆதியிலேயே தொடங்கி அனுபவிப்பார் போல் அவஹாஹித்தார்)

(வேம்பின் புழு வேம்பன்று உண்ணாது அடியேன்
நான் பின்னும் உன் சேவடி யன்றி நயவேன்
தேம்பல் இளம் திங்கள் சிறை விடுத்து ஐ வாய்ப்
பாம்பின் அணைப் பள்ளி கொண்டாய் பரஞ்சோதீ –11-8-7-)

ஆழ்வார் தம் பக்கலில் ஆழம் கால் படக் கண்ட ஈஸ்வரன் –
இவருக்கு நம் பக்கல் உண்டான ப்ரேமம் விஷய சாமான்யத்தில் போல் அன்றியே
(நம் இனிமையால் மாத்திரமேயால் உண்டானதாக இருக்க ஒண்ணாது என்று )சம்பந்த ஜ்ஞான பூர்வகமாக வேணும் -என்று
கிழிச் சீரையோடே தனத்தைக் கொடுப்பாரைப் போலே –
சர்வார்த்த பிரகாசமான திரு மந்தரத்தையும் –
சௌசீல்யாதி குணாதிக்யத்தையும்
திருமந்த்ரார்த்ததுக்கு எல்லை நிலமான திருப்பதிகளையும் காட்டிக் கொடுக்கக் கண்டு –

(குண க்ருத தாஸ்தத்தை விட ஸ்வரூப பிராப்தி தாஸ்யம் ஸ்ரேஷ்டம் அன்றோ –

அநந்யார்ஹ சேஷத்வம் அநந்ய சரண்யத்வம் அநந்ய போக்யத்வம் -மூன்றையும் மாத்ரம் அல்லாமல்
1-எம்பெருமானுடைய பெருமை -ரக்ஷகத்வாதி சேஷ்டிதங்கள்
2-நவ வித சம்பந்தம்
3-ஸுலப்யாதி குணங்கள் –
4-சரம நிலையான இதம் பூர்ணம் -ஸர்வஸ்ய பூர்ணம் -அர்ச்சாவதார தேசங்கள் –
அனைத்தையும் காட்டக் கண்டாரே-ஏரார் முயல் விட்டுக் காக்கைப் பின் போவாரோ என்னும் படி அர்ச்சையிலேயே மண்டினாரே )

வாடினேன் வாடி -(குடந்தை தஞ்சை தொடங்கி) தொடங்கி
ஒரு நல் சுற்றம் -அளவும்-(35 திவ்ய தேச மங்களா ஸாஸனம்)—விரிவாக அனுபவித்து
உகந்து அருளின இடமே
ஆஸ்ரயணீயமும் -சாதனமும் -போக்யமும் –
என்று அனுபவித்தார் –

(ஆஸ்ரயிக்கத்தக்கவை
பரமபுருஷார்த்த ஸாதனம்
இனிமை -அனைத்தும் திவ்ய தேசங்களே என்று மண்டினார்)

(வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால் பெரும் துயர் இடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர் தம்மோடு அவர் தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால் உணர்வு எனும் பெரும் பதம் திரிந்து
நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம் –1-1-1-

ஆவியே அமுதே என நினைந்து உருகி அவரவர் பணை முலை துணையா
பாவியேன் உணராது எத்தனை பகலும் பழுதே யொழிந்தன நாள்கள்
தூவிசேர் அன்னம் துணையோடும் புணரும் சூழ் புனல் குடந்தையே தொழுது என்
நாவினால் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் –1-1-2-

எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் எனக்கரசு என்னுடை வாழ் நாள்
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி அவருயிர் செகுத்த வெம் மண்ணல்
வம்புலாம் சோலை மா மதிள் தஞ்சை மா மணிக் கோயிலே வணங்கி
நம்பிகாள் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம் –1-1-6-

ஒரு நல் சுற்றம் எனக்கு உயிர் ஒண் பொருள்
வரு நல் தொல் கதியாகிய மைந்தனை
நெருநல் கண்டது நீர் மலை இன்று போய்
கரு நெல் சூழ் கண்ண மங்கையுள் காண்டுமே–10-1-1-)

இப்படியே இவர் திருப்பதிகளிலே மண்டி அனுபவிக்கிறபடியைக் கண்டு –
இவ்வனுபவம் அவிச்சின்னமாம் படி -ஒரு தேச விசேஷத்தே கொடு போக வேணும்
அதுக்காக சம்சாரத்தின் உடைய தண்மை அறிவிப்போம் என்று பார்த்து -அத்தை அறிவிப்பிக்க
பீத பீதராய் –
மாற்றமுளவிலே(11-8)
இருபாடு உறு கொள்ளி யினுள்ளே எறும்பே போலே- என்றும்
ஆற்றங்கரை வாழ் மரம் போலே அஞ்சுகிறேன் -என்றும்
பாம்போடு ஒரே கூரையிலே பயின்றால் போல் -என்றும்
இப்படி தம்முடைய பயத்துக்கு அநேகம் த்ருஷ்டாந்தங்களைச் சொல்லிக் -கூப்பிட்டார்-

(பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் என்று பிரதமத்திலே நம்மாழ்வார்

உருவார் பிறவிக்குள் இன்னம் புகப் பெய்து
திரிவாய் என்று சிந்தித்து என்றதற்கு அஞ்சி
இருபாடு எரி கொள்ளியினுள் எறும்பே போல்
உருகா நிற்கும் என் உள்ளம் ஊழி முதல்வா –11-8-4-

மாற்றமுள வாகிலும் சொல்லுவன் மக்கள்
தோற்றக் குழி தோற்றுவிப்பாய்  கொல் என்று இன்னம்
ஆற்றங்கரை வாழ் மரம் போல் அஞ்சுகின்றேன்
நாற்றச் சுவை யூறொலியாகிய நம்பீ—11-8-1-

தூங்கார் பிறவிக்கள் இன்னம் புகப் பெய்து
வாங்காய் என்று சிந்தித்து நான் அதற்கு அஞ்சிப்
பாம்போடு ஒரு கூரையிலே  பயின்றாப் போலே
தாங்காது உள்ளம் தள்ளும் என் தாமரைக் கண்ணா —11-8-3-

காற்றைத் திடைப் பட்ட கலவர் மனம் போல் ஆற்றத் துளங்கா நிற்பன் ஆழி வலவா -11-8-2-

வெள்ளத்திடைப் பட்ட நரியினம் போலே உள்ளம் துளங்கா நிற்பன் ஊழி  முதல்வா -11-8-5-

இடையன் எறிந்த மரமே ஒத்து இராமே அடைய வருளாய் எனக்கு உன் தன் அருளே  -11-8-6-

மா மழை மொக்குளில் மாய்ந்து மாய்ந்து -இத்யாதி )

இவர் கூப்பிடச் செய்தேயும்
பிரஜை கூப்பிடா நிற்கச் செய்தேயும் ஆமம் அற்று பசிக்கும் தனையும் சோறு இடாத தாயைப் போலே
தன்னை அனுபவிக்கு ஈடான விடாய் வளருவதற்கு ஈடாக
ஈஸ்வரன் முகம் காட்டாது ஒழிய
ஒரு ஷணமும் தரிக்க மாட்டாது -பெரு விடாய் பட்டார் –

(இவ்வாறு ஏழு படிக்கட்டுக்கள் -பெரிய திருமொழி அவதரித்து நிகமித்து பரம பக்தி நிலையில் -பிரிந்தால் தரிக்க மாட்டாமை)

நீரிலே விழுந்து நீரைக் குடிப்பது
நீரையே ஏறிட்டுக் கொள்ளுவதாப் போலே
அவனை வாயாலே பேசியும்
தலையாலே வணங்கியும்-
நெஞ்சாலே நினைத்தும்-
தரிப்போம் என்று பார்த்து
அதிலே உபக்ரமித்தார் -திருக் குறும் தாண்டகத்தில்-

(மாலை வாழ்த்தி வணங்கி என் மனத்து வந்த விதியினைக் கண்டு கொண்ட தொண்டனேன் விடுகிலேனே

மாயிருஞ்சோலை மேய மைந்தனை வணங்கினேனே –3-

வாக்கினால் கருமம் தன்னால் மனத்தினால் சிரத்தை தன்னால் வேட்கை மீதூர வாங்கி விழுங்கினேற்கு இனியவாறே-4-

வரும் புயல் வண்ணனாரை மருவி என் மனத்து வைத்துக் கரும்பினின் சாறு போலேப் பருகினேற்கு இனியவாறே–5-

உலகம் ஏத்தும் கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை என்று
மண்டினார் உய்யல் அல்லால் மற்றை யார்க்கு உய்யலாமே –19-)

பெரு விடாயர் குடித்த தண்ணீர் ஆறாதே மேலும் விடாயைப் பிறப்பிக்குமா போலே
அது பழைய அபிநிவேசத்துக்கு உத்தம்பகமாய்-(உத்தம்பகம்–கிளப்புகை )
திரு வெழு கூற்று இருக்கையிலே (ரத பந்தனம் )-நின் அடி இணை பணிவன்
வரும் இடர் அகலமாற்றோ வினையே -என்று
ஆர்த்தராய் சரணம் புக்கார்

(செல்வம் மல்கு தென் திருக் குடந்தை அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க
ஆடரவமளியிலறி துயில் அமர்ந்த பரம–நின்னடியிணை பணிவன் வருமிடர் அகல மாற்றோ வினையே )

அநந்தரம் அபேஷிதம் பெறாமையாலே கண்ணாம் சுழலை இட்டு
பெருமாள் முந்துற கடலை சரணம் புக்கு அவன் முகம் காட்டா விட்டவாறே
(உப்புக் கடலை கருணைக் கடல் சரணம் அடைந்து கார்ய கரம் ஆகாமல் )சாபமாநய சௌமித்ரே -என்று
கொண்டு வா  தக்கானை -என்னுமா போலே
(ஸ்வரூபத்துக்கு விரோதமான செயலான )வழி அல்லா வழியே மடலூர்ந்து –
இரண்டு தலையும் அழித்தாகிலும் முகம் காட்டு வித்துக் கொள்ளுவோம் -என்று
மடல் எடுக்கையில் உபக்ரமித்தார் –

அதில் -சிறிய திருமடலில்
அவன் ஐஸ்வர்யத்தையும் (பரத்வத்தையும் )-
தேவும் தன்னையும் –என்று
தானான தன்மையாய் அபிமானித்து இருக்கும்
அவதாரங்களில்
உண்டான நீர்மையையும் (கிருஷ்ணாவதார நீர்மையில் ஸீமா பூமியையும் )அழிக்கிறேன் -என்றார் –

(கோவிந்தன் குடக்கூத்தன் கோவலன் என்று என்றே குனித்து
தேவும் தன்னையும் பாடியாடத் திருத்தி என்னைக் கொண்டு என்
பாவம் தன்னையும் பாறக் கைத்து எமர் ஏழேழு பிறப்பும்
மேவும் தன்மையம் ஆக்கினான் வல்லன் எம்பிரான் விட்டுவே –2-7-4-)

அதுக்கும் முகம் காட்டிற்று இலன் –
அதுதான் பர தசை என்னும்படி நீர்மைக்கு எல்லை நிலமான கோயில்களும் உண்டு இறே
என்று இருந்தான் -என்று கொண்டு
அவனுக்கும் தமக்கும் வைப்பான கோயில்களில் உண்டான நீர்மையையும்
அழிக்கிறேன் -என்றார் பெரிய திருமடலிலே –

இனி முகம் காட்டாது ஒழியில்
ஜகத்து அநீஸ்வரமாம் என்று பார்த்து –
ப்ரஹ்லாதிகளுக்கு முகம் காட்டுமா போலே
இவருக்கு முகம் காட்டி
தானும் இவரும் ஜகத்தும் உண்டாம்படி பண்ணினான்-(இந்த பிரபந்தத்தில் )

(ப்ரஹ்லாதன் ஹிரண்யன் -சேதனங்கள் பல -தூண் போல் அசேதனங்கள் பல -தானும் இவரும் ஜகத்தும்-தத்வ த்ரயம்
பரமாத்மா -ஸர்வ வியாப்தி -ஸர்வ நியந்தா என்பதைக் காட்டி அருளி-ஈஸ்வர சீல நாராயண -பகவத் சங்கரர் )

சுகாதிகளும் முதல் ஆழ்வார்களும் பரத்வத்தில் ஊன்றி இருப்பார்கள் –
சனகாதிகளும் திரு மழிசைப் பிரானும் அந்தர்யாமித்வத்தில் ஊன்றி இருப்பார்கள் –
வால்மிகீகாதிகளும் குலசேகரப் பெருமாளும் ராமாவதாரத்தில் ஊன்றி இருப்பார்கள் –
பராசர பாராசாராதிகளும் -நம் ஆழ்வாரும் பெரியாழ்வாரும் ஆண்டாளும் கிருஷ்ணாவதாரத்தில் ஊன்றி இருப்பார்கள் –
நாரதாதிகளும் ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வாரும் திருப் பாண் ஆழ்வாரும் கோயிலிலே ஊன்றி இருப்பார்கள் –
ஸ்ரீ சௌநக பகவானும் இவரும் அர்ச்சாவதாரத்திலே ஊன்றி இருப்பார்கள் –

(கோயிலும் அர்ச்சாவதாரமாக இருக்க
அத்தையும் பரத்வாதிகளோடே கூட்டினது
ஸ்வயம் வ்யக்தமாகையாலும்
எல்லாவற்றுக்கும் வேர்ப் பற்றாகையாலும்
அவற்றோடே கூட்டிற்று-

பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமல் ஆள்கின்ற எம்பெருமான் -பூ லோக வைகுண்டம் அன்றோ

ஸதாத்யாதி-ஷீராப்தி நாதனை -நாரதர் பகவான் ஸ்துதி -வியூஹ ஸுஹார்த்தம் கோயிலிலே பிரஸித்தம் அன்றோ )

அல்லாத ஆழ்வார்களைப் போலேயும் ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகளைப் போலேயும் அன்றிக்கே
சம்ஸ்லேஷாசஹமான சௌகுமார்யத்தை உடையராய் இருப்பார் –
அதாவது –
விஸ்லேஷித்த போது -உம் அடியார் எல்லாரோடும் ஒக்க எண்ணி இருந்தீர் அடியேனை -என்று
மலையாளர் ஊட்டுப் போலே அனுபவிக்கவும் வல்லராய் –
பிரிந்தாலும் சில நாள் தரிக்கவும் வல்லர்களான ஆழ்வார்களோடும்
பத்து மாசம் பிரிந்து இருந்த ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகளோடும்
ஷண காலம் விஸ்லேஷ அசஹனான என்னை கூட நினைக்கலாமோ -என்னும்படி இருக்கையும் –
சம்ஸ்லேஷ தசையிலே
ஆழியோடும் பொன்னார் சார்ங்கம் உடைய அடிகளை இன்னார் என்று அறியேன் -என்று
சம்ஸ்லேஷ ரச அனுபவத்தால் கண்ணாம் சுழலை இட்டு முன்னடி தோற்றாதே
அசாதாராண லஷணத்தை காணச் செய்தேயும் அறுதி இட மாட்டாது இருக்கையும் –

(கீழே வக்த்ரு வை லக்ஷண்யம் சொல்லும் இடத்தில்
ஸ்வ யத்ன லப்த ஞானாதிகரான ரிஷிகளில் வியாவருத்தி சொல்லிற்று
இங்கே
ஆழ்வார்களைப் பற்ற இவருக்கு உண்டான ஸுகுமார்ய அதிசயத்தை அருளிச் செய்கிறார்

பிரணய கலஹத்தாலே கிலாய்த்துச் சொல்லும் பாசுரம் அடைய
ஆழ்வார் தாமான தன்மையிலே சொல்லலாம் படி யான பாவம் பிறந்து

சொல்லாது ஒழிய கில்லேன் அறிந்த சொல்லில் நும் அடியார்
எல்லாரோடும் ஒக்க எண்ணி இருந்தீர் அடியேனை
நல்லார் அறிவீர் தீயார் அறிவீர் நமக்கு இவ் உலகத்து
எல்லாம் அறிவீர் ஈதே அறியீர் இந்தளூரீரே —4-9-6-

இன்னார் என்று அறியேன்
அன்னே ஆழியொடும்
பொன்னார் சார்ங்கமுடைய வடிகளை
இன்னார் என்று அறியேன் –10-10-9- )

(மலையாள ஊட்டு –
உண்டாலும் ஓரு காலே பத்து எட்டு நாளைக்கு உண்ணவுமாய்
பட்டினி இருந்தாலும் பத்து எட்டு நாளைக்கு இருக்கவும் வல்லராகை )

ஆக
எம்பெருமான் இவருக்கு நிர்ஹேதுகமாக –
சித் அசித் ஈஸ்வர தத்வ த்ரயத்தையும் காட்டிக் கொடுக்கக் கண்டு –
அனுபவத்து –
அதனில் பெரிய என் அவா -என்று
தம்முடைய அபிநிவேசத்துக்கு இறை போராமையாலே
அலமந்து கூப்பிட்டு பின்பு தாம்
அவா அற்று வீடு பெற்று த்ருப்தரான தசையைப் பேசித் தலைக் கட்டுகிறார் –
இப் பிரபந்தத்தில்-

(சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–10-10-10-

அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–10-10-11-

மின்னுமா மழை தவழும் மேக வண்ணா விண்ணவர் தம் பெருமானே அருளாய், என்று,
அன்னமாய் முனிவரோ டமர ரேத்த அரு மறையை வெளிப்படுத்த அம்மான் றன்னை,
மன்னு மா மணிமாட வேந்தன் மான வேல் பரகாலன் கலியன் சொன்ன பன்னிய நூல்
தமிழ் மாலை வல்லார் தொல்லைப் பழ வினையை முதலரிய வல்லர் தாமே.–30)

——————————————————————-

அவதாரிகை –
முதல் பாட்டில் –
தேகாத்ம அபிமான நிவ்ருத்தி தொடக்கமாக
திருவடிகளோட்டை சம்பந்தம் பர்யந்தமாக
சாஷாத் கரிப்பித்த உபகார பரம்பரைகளைப் பேசுகிறார் –

மின்னுருவாய் முன்னுருவில் வேத நான்காய்
விளக்கொளியாய் முளைத்து எழுந்த திங்கள் தானாய்
பின்னுருவாய் முன்னுருவில் பிணி மூப்பில்லாப்
பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது எண்ணும்
பொன்னுருவாய் மணிவுருவில் பூதமைந்தாய்
புனலுருவாய் அனல் வுருவில் திகழும் சோதி
தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தாய்
தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே—-1-

பதவுரை

முன் உருவில்–முன்னே யுள்ள (கண்ணாற் காணத் தக்க) பிராகிருத பதார்த்தங்களில்
மின் உரு ஆய்–மின்னின் தன்மையைக் காட்டிக் கொடுத்தவனாய்
வேதம் நான்கு ஆய்–நால் வேதங்களையும் உபகரித்தவனாய்
விளக்கு ஒளி ஆய்–இருளை அகற்றும் விளக்கொளி போலே அஜ்ஞான அந்தகாரத்தைப் போக்கித் தன் ஸ்வரூபத்தை ப்ரகாசிப்பித்தவனாய்
முளைத்து எழுந்த திங்கள் தான் ஆய்–(மலையில்) தோன்றி (ஆகாசத்திலே) கிளம்பின சந்திரனைப் போலே
ஆஹ்லாதகரமான ஞானத்தை எனக்குக் கொடுத்தவனாய்,
பின் உரு ஆய்–இருபத்தினான்கு தத்துவங்களுக்குப் பிற்பட்ட தத்துவமாகி
முன் உருவின் பிணி மூப்பு இல்லா பிறப்பு இலி ஆய்–முன்னே தோன்றுகிற பிராகிருத வஸ்துக்களுக்குப் போலே
வியாதியும் கிழத்தனமுமின்றியே பிறப்பு மில்லாதவனான ஜீவாத்மாவுக்கு நிர்வாஹகனாய்
இறப்பதற்கே எண்ணாது–கைவல்ய மோக்ஷத்தை ஆச்ரிதர்கட்குக் கொடுக்க நினையா தவனாய்
எண்ணும் பொன் உரு ஆய்–எண்ணத் தக்க பொன் போன்ற ஸ்வரூபத்தை யுடையவனாய்
மணி உருவின் பூதம் ஐந்து ஆய் புனல் உரு ஆய்–திவ்ய மங்கள விக்ரஹத்திலே பஞ்சோநிஜந்மயனாய்
புனல் உரு ஆய்-தண்ணீர் போலு ஸர்வ ஸுலபனாய்
அனல் உருவின் திகழும்–அக்னி போலே ஒருவர்க்குங் கிட்ட வொண்ணாத வடிவை யுடையனாய்
சோதி தன் உரு ஆய்–ஸ்வயம் ஜ்யோதிஸ் ஸ்வரூபனாய்
என் உருவில் நின்ற–என் சரீரத்திலே நின்றவனாய்-ஸ்ரீ ரெங்க நாத மம நாத போல்
எந்தை-எனக்குத் தந்தையான ஸர்வேச்வரனுடைய
தளிர் புரையும் திரு அடி–தளிர் போன்ற திருவடிகள்
என் தலை மேல–எனது தலையிலே இரா நின்றன;
ஏ-ஆச்சரியம்!

முன்னுருவில்—முன்னே உள்ள -கண்ணால் காணத் தக்க ப்ரக்ருதி பிராகிருத பதார்த்தங்களில்
மின்னுருவாய் –மின்னுடைய அஸ்த்தைர் யத்தைப் பிரகாசிப்பித்தவனாய்
வேதம் நான்காய் -நான்கு வேதங்களை உஜ்ஜீவன அர்த்தமாகத் தந்து அருளினவனாய்
விளக்கொளியாய் -விளக்கு ஒளி இருளை நீக்குமா போலே அஞ்ஞான அந்தகாரத்தைப் போக்கி தன் ஸ்வரூபத்தை பிரகாசிப்பித்தவனாய்
முளைத்தெழுந்த திங்கள் தானாய்,–மலையில் தோன்றி ஆகாசத்தில் கிளம்பின சந்திரனைப் போலே ஆஹ்லாத கரமான ஞானத்தை எனக்குக் கொடுத்தவனாய்–ஸ்ரவண மனன நிதித்யாஸந ஸாஷாத் கார ப்ரதனாய்
பின்னுருவாய் -பின்னான இருபத்தைந்தாவது தத்வமாய்
முன்னுருவில் பிணி மூப் பில்லாப் பிறப்பிலியாய் -முன்னே தோன்றுகிற பிராகிருத துக்கம் வியாதி கிழத்தனங்கள் இல்லாதவனாய்
பிறப்பிலியாய்-ஜென்மமும் இல்லாத ஆத்மாவுக்கும் நிர்வாஹகனாய்
இறப்பதற்கே எண்ணாது, –மரணத்தை -கைவல்யத்தை ஆத்மாவுக்கு கொடுக்க எண்ணாதவனாய்
எண்ணும்-எப்போதும் மனனம் பண்ணுகைக்கு யோக்யமான
பொன்னுருவாய் -பொன்னினுடைய ஸ்வ பாவத்தை யுடையவனுமாய் –
மணியுருவில் பூதம் ஐந்தாய்ப்
புனலுருவாய் —ஜலம் போலே சர்வ ஸூலபனாய்
அனலுருவில் –அக்னி போலே ஒருவருக்கும் கிட்ட ஒண்ணாத வடிவை யுடையவனாய்
திகழுஞ் சோதி,–ஸ்வயம் ஜ்யோதிஸ் ஸ்வரூபனாய்
தன்னுருவாய் –என் சரீரத்தில் நின்றவனாய்-ஸ்ரீ ரெங்க நாத மம நாத போல்
என்னுருவில் நின்ற எந்தை -எனக்கு ஸ்வாமியான ஸர்வேஸ்வரனுடைய
தளிர் புரையும் திருவடி யென் தலை மேலவே.-தளிரை ஒத்த திருவடிகள் என் தலையிலே இரா நின்றனவே

(தத்வ ஞானம் மோக்ஷ லாபம் அஞ்ஞானத் ஸம்ஸாரம்-தத்வம் ஹதம் புருஷார்த்தம் அனைத்துமே இப்பாசுரத்தில் உண்டே

ஆய் -ஸாமாநாதி கரண்யம் -தானே உலகாகி தனக்குள்ளே தான் அடங்கி -விஸிஷ்ட அத்வைதம் -உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்

திருநெடும் தாண்டக ஸாஸ்த்ரம் அன்றோ -அனைத்தும் உண்டே )

(மின்னுருவாய் முன்னுருவில் -அசேதன தத்வம்
வேத நான்காய் விளக்கொளியாய் முளைத்து எழுந்த திங்கள் தானாய்-ஸ்ரவணம் மனனம் நிதித்யாஸனம் ஸாஷாத் கார ப்ரதனாய்

பின்னுருவாய் முன்னுருவில் பிணி மூப்பில்லாப் பிறப்பிலியாய் -சேதன தத்வம்
இறப்பதற்கே எண்ணாது -கைவல்ய மோக்ஷம் அளவில் நில்லாமல்
எண்ணும் பொன்னுருவாய் மணிவுருவில் பூதமைந்தாய் புனலுருவாய் அனல் வுருவில் திகழும் சோதி
தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தாய்–ஈஸ்வர தத்வம்
தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே-பரம புருஷார்த்தம் -சேதன லாபம் ஈஸ்வரனுக்கே -)

மின்னுருவாய் முன்னுருவில் –
முன்னுருவில் மின்னுருவாய் –
பிரத்யஷ -பரித்ர்ஷ்டமான பதார்த்தங்களில் –
மின்னின் உடைய ஸ்வபாவத்தை பிரகாசிப்பித்தான் –
அதாவது –
பிரத்யஷ பரித்ர்ஷ்டமான -பிரகிருதி ப்ராக்ருதங்களின் அஸ்த்ரையத்தை பிரகாசிப்பித்தான் -என்கை –

(மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள்)

இப்பிரக்ருதி சேதனனோட்டை சம்பந்தத்துக்கு ஹேது பேதம் உண்டான போது –
இதுக்கு ஸ்வபாவ பேதம் உண்டாகக் கடவது –

ஹேது பேதம் -ஆவன –
1-கர்மத்தால் பந்திக்கையும் –
2-கிருபையால் பந்திக்கையும்
3-இவர்களுக்கு மயர்வற மதிநலம் அருளுகையும்
4-மற்று உள்ளார்க்கு ஜாயமான கடாஷம் பண்ணுகையும் –

அதாவது –
கர்மத்தால் பந்தித்த போது -ஆத்ம பரமாத்ம ஸ்வரூபங்களுக்கு திரோதாயகமாய் இருக்கையும் –
தன் பக்கல் -அஸ்த்ர்யத்தையும் அபோக்யதையும் மறைத்து
ஸ்த்ர்யத்தையும் போக்ய புத்தியையும் பிறப்பிக்க கடவதுமாய் இருக்கும்-

பகவத் பிரசாதத்தாலே பந்தித்த போது
ஸ்வ விஷயத்திலும் ஸ்வ கீயங்களிலும் கிடக்கிற
அஸ்த்ரையத்தையும் அபோக்யதையையும் பிரகாசிக்கக் கடவதாய்
ஆத்ம பரமாத்ம ஸ்வரூபங்களையும் பிரகாசிப்பிக்க கடவதாய் இருக்கும் –

இப்போது
பகவத் பிரசாதம் அடியாகையாலே
பிரகிருதி பிராக்ருதங்களில் அஸ்தைர்யம் பிரகாசிப்பித்தது
த்யாஜ்யதா பிரதிபத்தி உண்டாய்த்து -என்கை –

விசித்ரா தேக சம்பத்தி ஈஸ்வராய நிவேதிதும் -பூர்வமேவ க்ர்தா -என்றும்
சரீர மாத்ரம் கலு தர்ம சாதனம் (குமார சம்பவம் )-என்றும் –
புருஷார்த்த சாதனம் என்றும்-
தர்மத்துக்கு பிரதான உபகரணமான பிரக்ருதியாதிகளை த்யாஜ்யம் என்னக் கடவதோ -என்னில் –
போஜநார்த்தமாக அங்கீ கரித்த கலமும்
போஜன அநந்தரம் அஸ்பர்சமாப் போலேயும் –
அவப்ர்த ஸ்நான அநந்தரம் யூபாதிகள் அஸ்பர்சமாப் போலேயும்
இதுவும் கார்ய அநந்தரம்-ஜ்ஞானம் பிறந்த பின்பு – த்யாஜ்யமாகக் கடவது –

மின்னுருவாய் -என்ற
சாமாநாதி கரண்யம் -உபகார்யா உபகார பாவ சம்பந்த நிபந்தனம் –

(மின்னுருவாய்– எந்தை சொல்லலாமோ என்னில் -விசேஷ்யம்-விசேஷணம் -ஸாமாநாதி கரண்யம் – நீலோ வாயும் வயிறுமான குடம் –
இவை எல்லாமாயும் இருக்கிறான் -அந்த ஆகாரத்தை எனக்குக் காட்டி அருளினான் என்றபடி-இல்லதும் உள்ளதும் அல்லது அவன் உரு -தத்வ த்ரயம் )

இப்படி இவை அஸ்தரம் ஆனால் அநந்தரம் ஸ்திரமான ஆத்ம வஸ்துவே-ஜ்ஞாதவ்யமாகக் கடவது –

அஹம் -என்று பிரத்யஷிக்கிற ஆத்ம வஸ்துவை
தேஹம் என்பார்
இந்த்ரியம் என்பார்
மனஸ் என்பார்
பிராணன் என்பார்
புத்தி என்பார்
இப்படி பண்ணுகிற விப்ரதிபத்தி -சமித்து யதா ஜ்ஞானம் பிறக்கைக்கு
சாஸ்திர அபேஷை உண்டாகையாலே
சாஸ்திர பிரதானம் பண்ணினார் -என்கிறார் மேல் –

வேத நான்காய் –
ஆத்மாவின் உடைய யாதாம்ய பிரதிபாதன பரமான வேதங்கள் நான்குமாய் –
வெறும் ஆத்மா பரமயோ வேதங்கள் என்னில் -தத்வ த்ரயத்தையும் பிரதி பாதியா நிற்க –
அல்லாத தத்வ த்யவமும் இவனுக்கு இன்னது த்யாஜ்யம்
இன்னது உபாதேயம்
என்கைக்காக பிரதிபாதிக்கப் படுகிறது இத்தனை ஒழிய
ஆத்ம பரமேயாகக் கடவது –

(ஆத்மா ஞான மயம் ஆனந்த மயம் எம்பெருமானுக்கே சேஷமாக இருப்பவன் என்று வேதம் நான்காய் உள்ள எந்தை காட்டிக் கொடுத்தான் அன்றோ)

(ஸாஸ்தா -ஸாஸ்த்ரம் -சேதனனுக்கு அறிய வேண்டியதை உபதேசிக்கும் -பற்ற வேண்டிய ஈஸ்வரனையும் விட வேண்டிய அசேதனங்களையும் சொல்லி உபதேசம்-ஆத்ம பரமேயாகக் கடவது – என்றவாறு)

ஆனால் த்யாஜ்ய உபாதேயங்களைச் சொல்ல அமையாதோ –
ஆத்ம ஸ்வரூபம் சொல்லுகிறது என் என்னில் –
த்யாஜ்ய உபாதேயங்களுக்கு நிர்ணாயக பிரமாணம் (நிச்சயத்துக்கு ஹேதுவான விஷயம் )ஸ்வரூபம் ஆகையாலே
ஸ்வரூப அனுரூபமான த்யாஜ்யம் இன்னது
ஸ்வரூப அனுரூபமான உபாதேயமின்னது -என்று அறியும் போது
ஸ்வரூபத்தை அறிய வேணும் இறே –

ஸ்வரூப யாதாம்ய ஜ்ஞானம் இல்லாத போது
சரீர மாத்ரம் த்யாஜ்யமாய்
புத்திர பசு அந்நாதி மாத்ரம் உத்தேச்யம் ஆதல் –

சரீர வியதிரிக்தம் ஆத்மாவான போது
புத்திர பசு அந்நாதிகள் த்யாஜ்யமாய்
ஸ்வர்க்கம் உத்தேச்ய மாதல் செய்யும் இறே-

சாஸ்திர அபேஷை சேதனனுக்கே ஆகையாலே சேதன பரமாகக் கடவது –
ஈஸ்வரன் ஸ்வதஸ் சர்வஞ்ஞன் ஆகையாலும்
அசித் தத்வம் ஜடம் ஆகையாலும் சாஸ்திர அபேஷை இல்லை –

இனி சாஸ்திர வச்யனுமாய் -ஜ்ஞாதாவுமான சேதனனைப் பற்றி -சாஸ்திரம் உதிக்கக் கடவது –
வேதம் பிரதிபாதிக்கிற மாத்ரம் அன்றிக்கே வேதம் உண்டாக்கினதும் இவனுக்கே –
இவ்விடத்தில் ஸ்வார்த்த பிரகாசத்வத்தைப் பற்ற -ஸ்ருதி -மறை -என்னாமல் –வேதம் -என்கிறது –

(வேதயதி இதி வேத -அறிவிக்கும் -தெளிவிக்கும்)

பிரகாசம் உண்டோ என்னில்
மறையாய நால் வேதம் -என்கிறபடியே
தன்னை அதிலங்கித்தார்கு ஸ்வார்த்த திரோதாயகமாயும்
தன் பக்கலிலே புபுத்ஷூக்களுக்கு -ஸ்வார்த்த பிரகாசமாயும் இருக்கும் –
போத்தும் இச்சு புபுத்ஷூ -அறிய வேணும் என்கிற இச்சை உடையவன் -என்றபடி –
பத்துடை அடியவர்க்கு எளியவன் -பிறர்க்கு அரிய வித்தகன் -என்கிறபடியே
பிரமேய ஸ்வ பாவம் பிரமாணத்துக்கும் உண்டாய் இருக்கும் -என்கை –

(மறை ஆய நால் வேதத்துள் நின்ற* மலர்ச் சுடரே,*
முறையால் இவ் உலகு எல்லாம்* படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்தாய்
பிறை ஏறு சடையானும்* நான்முகனும் இந்திரனும்*
இறை ஆதல் அறிந்து ஏத்த* வீற்றிருத்தல் இது வியப்பே?)

(வேதம் என்றாலும் மறை என்றாலும் பர்யாயம் எனினும் அர்த்தஸக்தியில் வாசியுண்டு; வேதம் என்றால் விளங்கக்காட்டுவது என்று பொருள்;மறை என்றால் மறைத்துக் காட்டுவது என்று பொருள். ஆஸ்திகராயிருப்பாருக்குத் தன் அர்த்தங்களை வெளியிட்டு காட்டுதலால் வேதம்; பாஹ்யராய் நாஸ்திகரா யிருப்பார்க்கு மறைத்தலால் மறை; ஆகவே, மறையாய நால்வேதமென்றது தகுதியே. “துஷ்ப்ரக்ருதிகளுக்கு மறையாய் ஸத்ப்ரக்ருதிகளுக்கு வேதமாயிருக்கும்”)

(பத்துடை அடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய
வித்தகன் மலர் மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை ஆப்புண்டு
எத்திறம் ! உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே 1-3-1)

இங்கு வேதம் நான்கு -என்கிற சாமாநாதி கரண்யம் –
வேதைஸ் ச சர்வை ரஹ மேவ வேத்ய – என்று
பிரதிபாத்ய பிரதிபாதிக பாவ சம்பந்த நிபந்தனம் அன்று –
மாநம் பிரதீபமிவ காருணிகோ ததாதி -என்கிறபடியே
பிரதார்த் பிரத்தேய பாவ சம்பந்த நிபந்தனம் –

(ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸந்நிவிஷ்டோ–மத்த ஸ்ம்ருதிர் ஜ்ஞாந மபோஹநம் ச–
வேதைஸ்ச ஸர்வைரஹமேவ வேத்யோ-வேதாந்த க்ருத் வேத விதேவ சாஹம்–৷৷15.15৷৷

நான் எல்லா ஜீவர்களுடையவும் ஹ்ருதயத்தில் ஆத்மாவாக நுழைந்து இருக்கிறேன்
அனைவருடைய நினைவும் வஸ்து நிர்ணயமும் மறதியும் என்னிடமிருந்தே உண்டாகின்றன
எல்லா வேதங்களாலும் நானே அறியப் படுகிறேன் –
வேத விதிகளின் பலனை அளிப்பவனும் வேதத்தை அறிந்தவனுக்கு நானே)

(ஹர்த்தும் தமஸ் சத் அஸதீ விவேக்தும் ஈச மாநம் ப்ரதீபம் இவ காருணிகா ததாதி
தேந அவ லோக்ய க்ருதிநஸ் பரி புஞ்ஜதே தம் தத்ர ஏவ கேபி சபலா ஸலபீ பவந்தி–1-

(தயாளுவான-சர்வ ஸ்வாமியான ஸ்ரீ பெரிய பெருமாள் அஞ்ஞான அந்தகாரத்தை போக்குவதற்கும்-நல்லதும் தீயதும் அறிகைக்கும்
பெரு விளக்குப் போலே இருக்கிற பிரமாணத்தை பிரகாசிக்கிறார் ––
பாக்யாதிகர் அந்த ஈசனை அந்த பிரமாணத்தாலே நன்றாக அறிந்து-ததீய பர்யந்தமாக அனுபவிக்கின்றார்கள்–
சஞ்சல ஹ்ருதயராவார் அந்த பிராமண விஷயத்தில் வீட்டில் பூச்சிகள் போலே விழுந்து நசிக்கிறார்கள் )

அநந்தரம் இந்த சாஸ்திர ஜன்யமான ஜ்ஞானத்தையும்
எனக்கு உண்டாக்கினான் -என்கிறார் –
விளக்கொளியாய் –
விளக்கு ஒளியின் ஸ்வபாவத்தை உடைத்தாய் ஆகையாலே –
விளக்கொளி -என்றது சாஸ்திர ஜன்ய ஜ்ஞானத்தைச் சொல்கிறது –
அதாகிறது -தீபமாகிறது அந்தகாரத்தைப் போக்கி பதார்த்தங்களைப் பிரகாசிப்பிக்குமா போலே
அஞ்ஞானத்தைப் போக்கி ஸ்வரூபத்தை பிரகாசிப்பிக்கக் கடவதாய் இருக்கை –
அந்தம் தம இவா ஜ்ஞானம் தீபவஸ் சேந்த்ரிய உத்பவம் -(ஸ்ரீ விஷ்ணு புராணம் )என்று
ஸ்ரவண ஜ்ஞானத்தை தீபமாகச் சொல்லக் கடவது இறே –

ஹர்த்தும் தமஸ் சதஸ தீவ விவேகத்து மீசோ மாநம் பிரதீபமிவ காருணிகோ ததாதி-என்னக் கடவது இறே-
இத்தால் -ஸ்ரோதவ்ய -என்று சொல்லுகிற ஸ்ரவணத்தை சொல்லிற்றாய் யாய்த்து –

முளைத்து எழுந்த திங்கள் தானாய் –
என்று -மந்தவ்ய நிதித்த்யாசிதவ்ய த்ரஷடவ்ய -என்கிற
மனந நிதித்யாசன தர்சனங்களைச் சொல்லுகிறது –

(ஸ்ரோதவ்ய -மந்தவ்ய – நிதித்யாஸி தவ்ய -த்ரஷ்டவ்ய-ப்ருஹதாரண்யம்–விளக்கொளியாய் -முளைத்து எழுந்த திங்கள் தானாய் )

முளைத்து –
பர்வதாக்ரத்திலே தோன்றின சந்தரனைப் போலே
தீப த்ர்ஷ்டாந்தத்தால் சொன்ன ஸ்ரவண ஜ்ஞானத்தில் காட்டிலும்
பிரகாச ரூபமான மனந தசையைச் சொன்னபடி –

எழுந்து –
பர்வதாக்ரத்தை விட்டு ஆகாசத்தில் எழுந்த சந்தரனைப் போலே
மனந அவஸ்தையில் காட்டிலும் அதி பிரகாசமான அநவரத பாவனையைச் சொல்லிற்றாயிற்று

(விளக்கு ஒளியாய் திங்கள் தானாய் -என்கிற இத்தால்
ஸ்ரவண மனன நிதித்யசங்களாலே பரமாத்மாவைக் காணுமா போலே
இவற்றால் இங்கே ஜீவாத்மாவைக் காணும் படி சொல்கிறது

ஸ்வயம் பிரகாசம் -ஆனந்த மயம் -அவன் அருளால் அறியப் பெற்றேன் -என்றது )

திங்கள் தானாய் –
சாஷாத் காரத்தைச் சொல்லுகிறது –
எங்கனே என்னில் –
தானான திங்கள் -என்று –
ஆகந்துகமான களங்கம்- இன்றியே இருக்கிற சந்த்ரனைச் சொல்லுகையாலே
ஆகந்துகமான களங்கம் -பூமியினுடைய சாயை பிரதிபலிக்கையாலே –
சந்த்ர பிரபா ஸ்தானத்திலே ஆத்மாவுக்கு பிரபா ரூபமான தர்ம பூத ஜ்ஞானம் –
பிரகிருதி சம்சர்க்கம் நேராக அற்று
நிஷ்க்ர்ஷ்டமான ஆத்ம வஸ்துவைச் சொன்னபடி –
நிஷ்க்ர்ஷ்ட ஸ்வரூபத்தைக் கண்டால் இறே-
சாஷாத்காரம் சித்தித்ததாவது –
சாஷாத்கார விசிசிஷ்ட ஆத்மா -சாஷாத்காரம் தந்தவன் -என்று -பரமாத்மா சாஷாத்காரம் –
சந்திர த்ர்ஷ்டாந்தத்தாலே –
சதி ஆஹ்லாதே -என்கிறபடியே
ஆஹ்லாத ரூபம் தோற்றுகைக்காகவும்
பகவத் பிரசாத லப்தம் ஆகையாலே
அனாயாச சித்தியால் வந்த அம்லானதை தோற்றுகைக்காவும்-சந்திரனை த்ருஷ்டாந்திக்கிறார் –

யதா ஸூர்யஸ் ததா ஞானம் -என்று
ஸூர்யனை த்ருஷ்டாந்தித்தது சந்திரனுக்கு ஸ்வ யத்னத்தால் வந்த க்லிஷ்டதை தோற்றுக்கைக்காக –

பின்னுருவாய் –
பின்னான தத்வமாய் –
பஞ்ச விம்சோயம் புருஷ பஞ்ச விம்ச ஆத்மாபவதி –
இருபத்தஞ்சாவது தத்வமான ஆத்மா சாஷாத்க்ர்த்யன் ஆகையாலே
சதுர்விம்சதி தத்வாத்மிகையான பிரகிருதிக்கு அவ்வருகாய் பிரிந்து தோற்றுகிறபடி –
தேகேந்த்ரிய மன பிராண தீப்யோன்ய அநந்ய சாதன
நித்யோவா பீப்ரதி ஷேத்ர மாத்மாபின்னஸ் ஸ்வதஸ் ஸூகி -(ஆத்ம ஸித்தி ஆளவந்தார் )
என்னக் கடவது இறே –

(ஸ்வயம் ப்ரகாஸம் -தானே ஒளிவிடும் -தர்ம பூத ஞானம் -நித்யம் -தேகம் முழுவதும் பரவி இருக்குமே –
பல ஜீவாத்மாக்கள் -இயற்கையில் ஆனந்த மயம் -ஞான மயம் -ஐந்தையும் சொன்னவாறு)

அநந்தரம் -இப்படிப் பட்ட ஆத்ம வஸ்து
வ்யாப்த கதமான தோஷங்களால் ஸ்பர்சிக்கப் படான் -என்கிறார் –
முன்னுருவில் பிணி மூப்பு இல்லா பிறப்பிலியாய் –
முன்னுருவாகிறது -கீழே மின்னுரு -என்று கொண்டு சொன்ன
ப்ரத்யக்ஷ பர்த்ர்ஷ்டமான பிரகிருதி பிராக்ருதங்களை –
அதில் உண்டான பிணி மூப்பு பிறவிகளோடு
ஸ்பர்சம் இல்லாத ஆத்ம வஸ்து –

பிணி -துக்கம் -இத்தால் அஞ்ஞாநாதிகளை உப லஷிக்கிறது –
மூப்பு பிறப்பு -என்கையாலே ஷட் பாவ விகாரங்களை உப லஷிக்கிறது –

(அஸ்தி -ஜாயதே -பரிணமிதே- விவர்த்ததே-அப ஷீயதே -விநஸ்யதே)

(ஆய்-இவையாவும் உள்ளான் -இத்தைக் காட்டிக் கொடுத்தான்)

நிர்வாண மய ஏவாய மாத்மா ஜ்ஞான மயோமலா (ஸ்ரீ விஷ்ணு புராணம்)-என்று(இன்பமே வடிவு எடுத்தவன் -ஞான மயன் -அழுக்கு அற்றவன் )
துக்காதிகள் பிரகிருதி தர்மமாய்
ஆத்மாவோடு சம்பந்தம் இல்லை -என்னக் கடவது இறே –

ஸவதஸ் ஸூகியாய் இருக்கிற ஆத்மாவுக்கு
துக்க அஜ்ஞாநாதிகள் கூடாதோவோபாதி
ஜடமான பிரக்ருதிக்கும் துக்க அஜ்ஞாநாதிகள் கூடாதே யாகிலும்
ஊமத் தங்காய் உடைய சம்சர்க்கத்தாலே ப்ரமம் வருகிறாப் போலே
பிரகிருதி சம்சர்க்கத்தாலே ஆத்மாவுக்கு துக்காதிகள் வருகையாலே
துக்காதிகள் பிரகிருதி தர்மமாகவே கடவது

இறப்பதற்கே எண்ணாது –
இறக்கை யாவது -மரிக்கை
மரணத்தை எண்ணாதே
கீழ் -ஷட் பாவ விகாரங்களிலே தேக அனுபந்தியான மரணத்தைச் சொல்லிற்று
இங்கே ஸ்வரூப அனுபந்தியான மரணத்தைச் சொல்லுகிறது -அதாகிறது
கைவல்யம் –

ஸ்வதஸ் ஸூகியான ஆத்மாவினுடைய அனுபவ ஸ்வரூபமாய்
தனியே ஒரு புருஷார்தமாய்
புனராவர்த்தி இல்லாத கைவல்யத்தை மரணம் என்னக் கடவதோ -என்னில்
மரணம் ஆகிறது
ஆத்மவியோகமாக லோகத்திலே பிரத்யஷியா நின்றது இறே –
இதுவும் அப்படியே
சாஷாத் ஆத்ம பூதனான பரமாத்மா வியோகத்தாலே மரணம் ஆகக் கடவது –

பிரத்யஷமாக ம்ர்தமான சரீரம் நஷ்டம் ஆகை போலே
இது நசியாமையாலே இத்தை மரணம் என்னலாமோ -வென்னில்
ஸ்வரூப அனுரூபமான போகம் இல்லாமையாலே
பர ஹ்ர்தயத்தால் மரணமாகக் கடவது –

(அவனை ஸதா அனுபவிக்கும் நித்யர் முக்தர் நினைவாலே இது மரணம் என்னக் குறையில்லையே

ஸ்வர்க்காதிகள் பலர் நினைவால் பலதரப்பட்டு இருக்குமே )

ம்ர்தோ தரித்ர புருஷ -என்று
போக்தாவானவன் தரித்ரனை ம்ர்தன் ((ஏழையான மனிதன் செத்தவனே))என்னுமா போலே
இந்த கைவல்யம் அந் நாதனுக்கு மரணமாகத் தோற்றுகையாலே-மரணம் –என்கிறது –

(அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத -தைத்ரியம்
போக்யமாக இருந்து -அவன் அனுபவிக்க அத்தைக் கண்டு போக்யமாக உகக்கும் –
பகவத் அனுபவ ஜெனித ப்ரீதிகார கைங்கர்யம் -செய்யும் நித்ய முக்தர்களுக்கு-மரணமாகத் தோற்றுகையாலே-மரணம் –என்கிறது -)

இதனைத் திருவாய் மொழியில் ‘இறுகலிறப்பு என்றது முணர்க.

எண்ணாது –
இத்தை தருகைக்கு எண்ணாதே போந்தான் –
ஜரா மரண மோஷாயா மாமாச்ரித்ய தந்தியே -(7-29-)என்று
இத்தை புருஷார்தமாகக் கொடுக்கக் கடவன் –
அவன் இப்போது இப்படி படு குழியில் விழாதபடி
இத்தை எனக்கு எண்ணாதே போந்தான் –

(ஜரா மரண மோக்ஷாய–மாமாஸ்ரித்ய யதந்தி யே ।–
தே ப்ரஹ்ம தத்விது₃: க்ருத்ஸ்நம்-அத்யாத்மம் கர்மசாகி₂லம் ॥–7-29-)

அவனது எண்ணம் கொண்டே நமக்கு ஜீவனம் ஆகையாலே
எண்ணாது -என்கிறார் –

இவ் வாபன் நிவ்ருத்தியை பண்ணினது மேலே
தன்னுடைய ஸ்வரூப ரூப குணங்களை பிரகாசிப்பித்தான் -என்கிறார் மேல்
எண்ணும் பொன்னுருவாய் -என்று
திவ்யாத்ம ஸ்வரூபத்தை பிரகாசிப்பித்தான் -என்கிறார் –

எண்ணும் –
போக்யாதிசயத்தாலே
நேதி நேதி –(ப்ரஹ்மதாரண்யம்)என்கிறபடியே
அது அது -எண்ணும் இத்தனை போக்கி
இதம் -என்று பரிச்சேதிக்க ஒண்ணாது இருக்கை –

(உபர்யுபர்யப்ஜ புவோ’பி பூருஷாந்
ப்ரகல்ப்ய தே யே ஶதமித்யநுக்ரமாத் |
கிரஸ் த்வதேகைக குணாவதீப்ஸயா
ஸதா ஸ்திதா நோத்யமதோ’திஶேரதே ||–ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்-ஶ்லோகம் 19 –

வேத வாக்யங்கள் “தேயே சதம்” (இது போன்ற நூறு) என்று மீண்டும் மீண்டும் புதிய ப்ரஹ்மாக்களை கற்பனை செய்து,
உன்னுடைய ஒரு (ஆனந்தம் என்னும்) குணத்தின் எல்லையைக் காண முயன்று,
சிறிதளவும் முன்னேறாமல், ஆரம்ப நிலையிலேயே இருக்கின்றன,)

ஏகைக குணாவதீப்சயா சதா ஸ்திதா -என்று
ஒரோ குணம் தான் அபரிச்சின்னமாய் இருக்க
ஈத்ர்சமாய் அசங்கயாதமான குணங்களுக்கு ஆஸ்ரயமான ஸ்வரூபத்தை
பரிச்சேதிக்க ஒண்ணாது எண்ணும் இடம் சொல்ல வேணுமோ –

பொன்னுருவாய் –
பொன்னின் உடைய ஸ்வபாவத்தை உடைத்தாய் ஆகையாலே –ஸ்வரூபத்தைச் சொல்லுகிறது –
அதாகிறது-1- -ஸ்பர்ஹணீயமாய் இருக்கையும் –
2-உண்டு என்ன உயிர் நிற்கையும் –
3-இத்தைக் கொண்டு சர்வ அபேஷிதங்களையும் சாதித்துக் கொள்ளலாய் இருக்கையும் –
4-இத்தை உடையவன் காலில் லோகம் அடங்க விழும்படியாய் இருக்கையும்-

மணி வுருவில் பூதம் ஐந்தாய் –
உபாதான பூதங்கள் ஐந்தாய் –
மணி வுருவில் –
மணியின் ஸ்வ பாவாத்தை உடைத்தான வடிவில்
1-தேஜோ மயமாய் இருக்கையும்
2-மாணிக்கச் செப்பிலே பொன் போலே தனக்கு ஆஸ்ரயமான ஸ்வரூபத்துக்கும்
ஸ்வரூப ஆஸ்ரயமான குணங்களுக்கும்-தான் ஸூத்த சத்வம் ஆகையாலே பிரகாசமாய் இருக்கையும் –
3-தான் ஸ்வரூப குணங்களில் காட்டில் போக்யமாய் இருக்கையும் –
இதுக்கு உபாதான பூதமான பூத பஞ்சகம் ஆகிறது –பஞ்ச உபநிஷத்
ஒரு தேச விசேஷமாக பஞ்ச உபநிஷண் மயமாய் இறே இருப்பது –
பரமேஷ்டீ புமான் விச்வோ நிவ்ர்த்தஸ் சர்வ ஏவஸ-

(பஞ்ச சக்திகளாவன : – பரமேஷ்டி, புமான், விஸ்வம், நிவிருத்தி, சர்வம் என்பன.
இவ்வுலகம் ஐம்பெரும்பூதங்களால் ஆக்கப்பட்டது போன்று, அவ்வுலகம் பஞ்ச
சக்திகளாலாயது என்பர்.)

மணி வுருவில் பூதம் ஐந்தாய் –என்று
திரோதாயகமாய் இருந்துள்ள சரீரத்துக்கு உபாதான பூதமான பூதங்களை(பகவத் ஸ்வரூப திரோதான கரீம் )வ்யாவர்த்திக்கிறது
அதவா
மணி வுருவிலும் வர்த்திக்க கடவதாய்
ப்ராக்ர்தமான பூதங்களிலும் வர்த்திக்கக் கடவனாய் இருக்கை –
இத்தால்
அசாதாரணமான விஹ்ரகதோபாதி இவையும் விதேயம் -என்கை –
பத்தனோடு பந்தகத்தோடு வாசி அற
இரண்டும் விதேயமாக வேணும் இறே விமோசகனுக்கு –
பிரதான புருஷேச்வர -(ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் )என்னக் கடவது இறே-

இப்படி விலஷணமாய் இருக்குமவன் துர்லபமாய் இருக்குமோ வென்னில் –
புனல் வுருவாய் –
வசிஷ்ட சண்டாள விபாகம் அற
ஒரு துறையிலே விநியோகம் கொள்ளலாய் இருக்கும் ஜலம் போலே  -என்க-

இப்படி சர்வ ஸூலபன் ஆனால் என் வருகிறதோ என்று வயிறு பிடிக்க வேண்டாதபடி
ஆஸ்ரித ஸூலபனானோபாதி
பிரதிகூலர்க்கு அக்னி போலே அநபிபவனாய் இருக்கும் என்கிறார் -மேல் –
அனலுருவில் திகழும் –
அபித பாவ கோப மம் -என்று
நினையாத போது அந்தரங்கருக்கும் அநபிபவனாய் இருக்கும் அவன்
(மான் தோல் மரவுரி தரித்த பெருமாள் -நெருப்பு போல் நான்கு பக்கமும் அணுக ஒண்ணாதபடி  -ஸ்ரீ பரதாழ்வானுக்கும் ஆனதே )
உகவாதார்க்கு அநபிபவனாய் இருக்கும் என்னும் இடம் சொல்ல வேண்டா விறே –

(கதிர் மதியம் போல் முகத்தான் -சந்த்ர ஸூர்ய நேத்ர)

சோதி தன்னுருவாய் –
கீழே ஸ்பர்ஹணீ யதையாலே பொன்னுருவாய் -என்று
ஸ்வரூபம் ஸூவம் பிரகாசமாய் இருக்கும் என்றது –

நாட்டில் ஜ்யோதிஸ் பதார்த்தங்களுக்கு ஜ்யோதிஸூ உண்டாகிறது
தன்னோட்டை சம்பந்தத்தால் யாம்படி இருக்கை –
தஸ்ய பாஸா சர்வமிதம் விபாதி -(கட வல்லி )என்னக் கடவது இறே —

(அந்த பரம் பொருளுக்கு முன் ஸூர்யன் ஒளி விடுவது இல்லை –

சந்திரனும் நக்ஷத்ரங்களும் ஒளி விடுவது இல்லை -அக்னியைச் சொல்லவும் வேணுமோ)

(முடிச் சோதி யாயுனது முகச் சோதி மலர்ந்ததுவோ
அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் யலர்ந்ததுவோ
படிச்சோதி ஆடையொடும் பல்கலனாய் நின் பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ திருமாலே கட்டுரையே –3-1-1-)

என்னுருவில் நின்ற —
என்னுடைய ஆத்மாவில் நிற்கிலும் தனக்கு அவத்யவஹமாய் இருக்க
எனக்கு த்யாஜ்யமான வடிவில் வந்து நின்றான் என்க –

நின்ற –
இவர் மடல் எடுக்கையாலே -தன்னுடைய சாத்தா ஹாநி பிறக்கும்படியான-கலக்கம் சமித்து -தரித்து நின்றபடி –

எந்தை –
சத்தையோபாதி சேஷித்வமும் உறுதிப் படுத்திய படி –

தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே –
என் தலை மேலவே –தளிர் புரையும் அடி –
அமரர் சென்னிப் பூவான -திருவடிகளே கிடீர் எனக்கு சிரோ பூஷணம் ஆய்த்து –
ஆருடைய கால் இருந்த தலையிலே ஆருடைய திருவடிகள் இருக்கிறது –

இவர் தலையிலே திருவடிகளை வைத்த பின்பு
அவன்
சத்தையும்
சேஷித்வமும்
விக்ரஹமும்
பெற்றானே -இருக்கிறபடி –

(நின்ற எந்தை திருவடி -நின்ற சத்தை -எந்தை -ஸ்வாமி -சேஷித்வம் -திருவடி -விக்ரஹம்)

ஆக
1-பிரகிருதி ப்ராக்ருதங்களில் அஸ்த்ரத்தையை பிரகாசிப்பித்த அவ் அளவு போராதோ –
2-ஸ்வ ஸ்வரூபத்தை பிரகாசிப்பித்த அவ் அளவு போராதோ –
3-கைவல்யத்தில் போகாதபடி நோக்கின அவ் அளவு போராதோ –
அதுக்கு மேலே
4-தன்னுடைய ஸ்வ ரூபத்தையும்
5-ஸ்வரூப பிரகாசமான விக்ரஹத்தையும் காட்டித் தந்தது போராதோ –
6-அதுக்கு மேலே த்யாஜ்யமான என் சரீரத்தில் புகுந்து நிற்பதே –
அதுக்கு மேலே
7-தன்னுடைய திருவடிகளை என் தலை மேல் பொருந்த வைப்பதே –
என்று தமக்கு அவன் பண்ணின உபகார பரம்பரைகளை கண்டு விஸ்மிதர் ஆகிறார் –

ஆக
இப் பாட்டால்
1-தத்வ த்ரயங்களின் உடைய நிஷ்க்ர்ஷ்டமான ஸ்வ ரூபமும்
2-அவை மூன்றும் புருஷார்த்தம் என்னும் இடமும்
(சாமான்யேன தேகாத்ம அபிமானிக்கும் -கேவலனுக்கும் -பகவத் பரனுக்கும் -மூவருக்கும்
மூன்று தத்துவமும் புருஷார்த்தம் என்றபடி )
3-அவற்றில் ஒன்றே ஸ்வரூப பிரயுக்தமான முக்ய புருஷார்த்தம் –
4-அல்லாதவை நிஹீன புருஷார்த்தம் என்னும் இடமும் -(ஆத்மாவை நிஹீனம் என்றது கைவல்யத்துக்கு உறுப்பாகையாலே )
5-அந்த முக்ய புருஷார்த்த பூதனான ஈஸ்வரன் உடைய-ஸ்வரூப ரூப குணங்களின் உடைய வை லஷண்யமும்-
6-அவற்றை ஈஸ்வரன் தன் ஆஸ்ரிதர்க்குக் காட்டும் போது தன் பேறாக காட்டும் படியையும்-சொல்லுகிறது –

——————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

அருளிச் செயல் அனுபவம்-இங்கும் அங்கும் –சொல் தொடர் ஒற்றுமை – திருக்குறும் தாண்டகம் -திரு நெடும் தாண்டகம் – –ஸ்ரீ வேளுக்குடி வரதாசார்யர் ஸ்வாமிகள் .

February 2, 2013

777
கேட்க யான் உற்றதுண்டு -திருக்குறும் தாண்டகம் -4
சோலை சூழ் குன்று எடுத்தாய் சொல்லு -முதல் திருவந்தாதி -69

778
அரும் பெறல் அன்பு -5
அரும் பெறல் அன்பு -திருவாய்மொழி -1-3-1-

779-
செம்மையை கருமை தன்னை -7
முன்னை வண்ணம் பாலின் வண்ணம் -பெரிய திருமொழி -4-9-8-

780-
திருவினை -8
திருவுக்கும் திருவாகிய -பெரிய திருமொழி -7-7-1-

781-
எரி நின்று உண்ணும் கொள்ளி மேல் எறும்பு போலே -9
இருபாடு எரி கொள்ளியினுள் எறும்பே போல் -பெரிய திருமொழி -11-8-4-

782-
தெள்ளியீர் தேவர்க்கு எல்லாம் தேவர் -9-
தெள்ளியீர் தேவர்க்கும் தேவர் -பெரிய திருமொழி -8-2-1-

783-
மருதிற நடந்து -16
மருதிற நடந்து -பெரிய திருமொழி -4-5-3-

784-
சொற்கள் என்னும் தூய மாலை கொண்டு சூட்டுவன் -16-
இப்பத்தால் அடி சூட்டலாகும் அந்தாமமே -திருவாய்மொழி -2-4-11-
நறிய நன் மலர் நாடி நன் குருகூர் சடகோபன் -திருவாய்மொழி -5-5-11-

785-
பிண்டியார் மண்டை -19-
சந்தார் தலை கொண்டு -பெரிய திருமொழி -1-5-8-
முடையடர்த்த சிரமேந்தி –பெரிய திருமொழி -6-9-1-

———————————————————
786-
புனலுருவாய் அனலுருவில் -திரு நெடும் தாண்டகம் -1
கனலுருவா புனலுருவா -பெரிய திருமொழி –7-9-9-

787-
ஓருருவம் பொன்னுருவம் ஓன்று செந்தீ -2
அரி  அயன் அரன் என்னும் இவரை -திருவாய்மொழி -1-3-6-

788-
அந்தரத்தில் தேவர் –4–
அந்தரத்தில் வாழும் வானோர்–பெரிய திருமொழி -2-2-9-

789-
ஒண் மிதியில் ஒரு கால் -5
ஓரடி வைத்து -பெரிய திருமொழி -11-3-6-
பாயோரடி வைத்து -திருவாய்மொழி -6-9-6-
கழல் தலம் ஒன்றே -திருவிருத்தம் -58
மாமுதலடிப் போது ஒன்றே -திருவாசிரியம் -5
நின்றதோர் பாதம் -இரண்டாம் திருவந்தாதி -61-

790-
பாவை பேணாள் -11
பாவை பேணாள் -பெரிய திருமொழி -5-5-9-

791-
துணை முலை -13
துணை முலை-திருவாய்மொழி –10-3-7-

792-
அப்பால் முதலாய் நின்ற ஆரமுதை அரங்கமேய -14
அண்டர்கோன் அணி அரங்கன் -அமலனாதிபிரான் -10-

793-
குறும் குடியுள் -14
ஆழி யுள் -திருப்பாவை 4-

794-
கணபுரத்து –வட திருவேம்கடம் -16
காட்டில் வேம்கடம் –கண்ணபுர நகர் -நாச்சியார் திருமொழி -4-2-

795-
துணை முலை மேல் துளி சோரச் சோர்கின்றாளே -16
துணை முலை மேல் துளி சோரச் சோர்கின்றாளே -13

796-
கண்ணீர் அரும்ப -17
மழைக் கண் துளும்ப -திருவாய்மொழி –4-4-10-

797-
பாரையுண்டு -20
பாரினையுண்டு -பெரிய திருமொழி –4-10-5-

798-
கைவளையும் மேகலையும் -22
சுடர்வளையும் கலையும் -திருவாய்மொழி -9-7-7-

799-
புள்ளூரும் கள்வா -22
புள்ளூரும் கள்வா -திருவிருத்தம் -22

800-
மாலுக்கு -22
மாலுக்கு -திருவாய்மொழி -6-6-1-
மாலாய் பிறந்த நம்பி -நாச்சியார் திருமொழி -14-3-

801-
நின்றானை –கிடந்த மாலை -29
மா மலை நின்றான் அரங்கத்து அரவின் அணையான் -அமலனாதிபிரான் -3-

—————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

அருளிச் செயல் அனுபவம்-இங்கும் அங்கும் –திரு நெடும் தாண்டகம் –ஸ்ரீ வேளுக்குடி வரதாசார்யர் ஸ்வாமிகள் .

February 1, 2013

470-
வேதம் நான்காய் -1
வீடு முதல் முழுவதுமாய்-திருவாய்மொழி -2-2-1-
சாமாநாதி கரண்யம் -வேதங்களால் கூறப் பட்டவனும் -வேதங்களை தந்து அருளினவனும் அவனே
காருணிகனான சர்வேஸ்வரன் பரதீபமான கலைகளை நீர்மையினால் அருள் செய்தான்
சகல பல நிர்வாஹகன் பகவான்
நிர்வாஹ்ய நிர்வாஹ பாவ நிபந்தனம்-

——————————————————————-
471-
பிறப்பிலியாய் -1
பிறப்பிலி தன்னை -திருவாய்மொழி -3-5-6-
பேரில் பிறப்பிலியை -பெரிய திரு மடல் -116-
கலியன் ஜீவாத்மாவை பிறப்பிலியாகவும்
நம் ஆழ்வார் பகவனை பிறப்பிலியாகவும் அருளி –
இருவரும் நித்யம் -கர்ம அனுகுணமாக ஜீவாத்மா பிறவி -காருண்யா அதிநமான அவதாரம் அவனுக்கு
அஜாயமான பஹுதா விஜாயதே -சம்பவாமி ஆத்மமாய யா -பல பிறப்பாய் ஒளி வரும் –
அபஹதபாப்மா நாராயணா
நம் ஆழ்வார் பகவத் அபிப்ரயத்தாலே -பகவானை பிறப்பிலி என்கிறார்
கலியனும் பேரில் பிறப்பிலியை -என்று அருளிச் செய்கிறார் –

———————————————————————

472-
இறப்பதற்கே எண்ணாது -1-
பின் பிறக்க வைத்தனன் கொல் -திருச் சந்த விருத்தம் -84
இங்கே ஸ்வரூப அநு பந்தியான மரணம் -கைவல்யத்தை -சொல்கிறது
தேக அநு பந்தியான மரணத்தை முன்பு சொல்லி –
பர ஹ்ருதயத்தால் இதுவும் மரணம் தானே
பின் பிறக்க -பல சரீரம் கொள்ள பகவான்
பின்பு இறக்க -ஞானம் பிறந்த பின்பும் தன்னை விச்மரிப்பித்து நசிப்பிக்க நினைத்து இருக்கிறானோ-

—————————————————————————-

473
ஓர் உருவம் பொன் உருவம் -திரு நெடும் தாண்டகம் -2
மூ உருவும் கண்ட போது –திரு நெடும் தாண்டகம் -2
தேனை நன் பாலை -திருவாய்மொழி -8-4-11-
திருந்துலகுண்ட -திருவாய்மொழி -8-4-11
உத்பாதகம் சரீரீ சேஷி ஒன்றே
தேனை சர்வ வித போக்யத்வம் -ஆழ்வார் பயப்பட காரணம் இதுவே -அங்கும் இங்கும் திருவாய் மொழி சாரம்
மேலே பய நிவ்ருத்தி ஹேது -இது அத் திருவாய் மொழி சாரம்
இன்ப மாரி -அருள் மாரி அனுபவம் இப்படி –

————————————————————————-

474
பெரு வடிவு -3
பெரு மாயன் -கண்ணி நுண் சிறு தாம்பு -1
பெரிய வடிவு -பல வடிவு -தாளும் தோளும் முடிகளும் சமனிலாத பலபரப்பி -கண் வளர்ந்து அருளி –
கடல் செவ்வே கிடந்தது கடல் கடைந்தால் போலே
அஸங்யாதமான வடிவு -பல ரூபியாக
பெரு மாயன் -இவருடைய எத்திறம் இருக்கிறபடி -அப்க்ரக்ருத திவ்ய சமஸ்தானத்தை இதர சஜாதீயம் ஆக்கி
ஷூத்து நலிகையும் -நவநீதத்தில் சரத்தை உண்டாக்கை – களவு காண்கை –வாயது கையதாக அகப்படுகை –
கட்டு உண்கை -விட்டுக் கொள்ள மாட்டாது ஒழிகை
கண்ணனை கால் கடை கொண்டு ஆழ்வாரை மட்டும் கொண்ட மதுர கவிகளும் அனுபவித்தபடி மாயம் இ றே-

—————————————————————————–

475
கரு வடிவில் செங்கண்ண வண்ணன் -3
கார்மேனி செங்கண் -திருப்பாவை -1
காட்டிய வடிவை அருளிச் செய்கிறார் -ருசி ஜனகம் ஆக்க -வாத்சல்ய அம்ருத வர்ஷியான திருக் கண்கள் –
ஸ்ரீ ய பதி போலே சர்வாதிகத்வ லஷணம் -ஒளித்து வைத்தாலும்  விட ஒண்ணாத வடிவழகு –
தூ நீர் முகில் போல் தோன்றாய் -மேகஸ்யாமம் -ஒரு மேகத்தில் இரண்டு தாமரை பூத்தால் போலே –
இவர்கள் இழவு தன்னது என்று தோற்றும்படி

——————————————————————————

476-
அந்தணனை -1
அந்தணனை -திருவாய்மொழி -1-7-1-
இந்தளூர் அந்தணனை -பெரியதிருமடல் -125-
அறவனை ஆழிப் படை அந்தணனை -சுத்தன் கையில் திருவாழி உடன் இருக்கும் குண விசிஷ்டனாக பகவத் விஷய காமன் உபாசிக்க
கேவலன் சுத்தனாக -உபாசிக்க
எம்பெருமான் காருண்யத்தை அந்தணன் என்கிறார் கலியன் –

———————————————————————

477-
அந்தரத்தில் அந்தணனை -4
யாவரும் எவையும் தானாய் –தோய்விலன் -திருவாய்மொழி -3-4-10-
ஏஷ சர்வ பூத அந்தராத்மா அபஹதபாப்மா -வ்யாப்தியை சொல்லி தோஷ ரஹீதன் சுத்தன் –
சிறையில் கைதியும் ராஜ குமாரனும் -கர்மம் அடி -கிருபை அடி –

——————————————————————–

478
அந்தணர் மாடு -4
அருமறையின் பொருள் -கண்ணி நுண் சிறு தாம்பு -8
தாம் பரம வைதிகராக இருக்கச் செய்தே பிறர் தனம் என்னுமா போலே அந்தணர் மாடு என்கிறார்
தான் வாக்ய உச்சாரணம் பண மாட்டாமையாலே பொருளை அருளினார்
திரு மழிசை பிரானும் -கிருஷ்ணா நாம வரீஹீணாம் நக நிர் பிந்நம -சுருதி வாக்யதை
வாயாலே சொல்ல மாட்டாமையாலே ஹஸ்த சேஷ்டிதத்தாலே காட்டி அருளினாரே-

————————————————————————-

479-
அந்தணர் மாடு -4
மாவலி மாடு -திரு விருத்தம் -91
செல்வம் /பக்கல் இரண்டு அர்த்தங்களும் மாடு –

————————————————–
480
அந்தரத்தில் தேவர்க்கும் அறியலாகா -4
விண்ணோர் தாள் நிலம் தோய்ந்து தொழுவர் -திரு விருத்தம் -92
பரணியிலே இருப்பாரைப் போலே -நிலத்திலே கால் தோயக் கடவர் இல்லையே
தேவர்கள் மண்ணை வெறுக்கும் தன்மை -அவர்களாலும் அறிய முடியாத பகவத் மகிமையும்
ஸ்வ பிரயோஜன லாபத்துக்கு நிலை அழிந்து தொழுவார்கள் -ஆழ்வார் அருளிச் செயல்களில் வ்யக்தம் –

——————————————————————

481-
மறவாது -4
மற்றை நம் காமங்கள் மாற்று -திருப்பாவை -29
வாட்டற்றான் அடி வணங்கே -திருவாய்மொழி -10-6-1-
மறவாது -பகவத் அனுபவத்துக்கு விஸ்மருதி ஹேது -விஷயாந்தர ப்ராவண்யம்
அத்தை சொல்ல வில்லை இங்கே -சரம தசையிலே சாஷாத் கரித்து -அனுபவிக்கிறார்
ஆகையாலே தேக நிவ்ருத்திக்கும் அபிமத சித்திக்கும் உறுப்பாக யீச்வரனை உபாயமாக அனுசந்திப்பதொரு அனுசந்தானம் –
ஸ்வ உஜ்ஜீவனைத்தை சிந்திக்கை பிறர் கார்யத்தில் இழிகை -இவர் த்வய நிஷ்டர் அன்றோ –
தத் தஸ்ய சத்ருசம பவேத் -என்று இருக்கவே அடுப்பது
அவனே மருந்தும் விருந்தும் -மறுபடியும் பகவானை மருந்து என்று அனுசந்திப்பதே மறதி இவருக்கு இப் பொழுது
வேறு ஒரு காமம் இல்லை இவர்களுக்கு -தேறேல் என்னை -என்று இருக்கும் இவர்களுக்கு
ஸ்வரூபத்துக்கு விரோதியான அஹங்கார கர்பமான கைங்கர்யம் அபுருஷார்தம் இ றே
போக்யத்வ பிரதிபத்தியும் மதீயத்வ பிரதிபத்தியும் -போஜனத்துக்கு கிருமி கேசங்கள் போலே –
அந்த விரோதிகளை போக்கடிக்க வேணும்
அடி வணங்குகை -ஈரரசு தவிருகை -நமக்கு ஹிதகாமனாய் வந்து இருக்கிறவன் வழியே போய்
அவனை அனுபவிக்கப் பாராய்
மறதி -காமம் -வணக்கம் -மூன்று சப்தங்களுக்கும் விலஷண வியாக்யானம்-

—————————————————————————————-

482
மந்திரத்தை மந்திரத்தால் -4-
அந்தணனை -அந்தணர் –4
அந்தணனை -அந்தணர் -14-
பகவானை திருமந்த்ரத்தால் -சுத்தனை -வைதிகர்களால் -அடியார்களால் –
ஸ்ருதியும் யஞஜேனே யஞ்ஞம் -என்று அருளிற்றே-

——————————————————————————-

483-
ஒருகால் நிற்ப -5
வில்லாண்டான் -திருப்பலாண்டு -12
அளந்த திருவடியை அவன் வருந்தி நிறுத்தியபடி -மத்த கஜத்தை ஆளுபவன் போலே வில்லையும் இது போலே ஆண்டான் –
திருவடி வேகத்தையும் திரு வில்லின் வேகத்தையும் குறைத்த படி –

—————————————————————————-
484
அவுணன் உள்ளம் -5-
அவுணர்க்கு -6
அந்தணனை -4
அந்தணர் மாட்டு அந்தி -4
அந்தணனை -14
அந்தணர் தம் சிந்தையானை -14
அவுணன் உள்ளத்து எண் மதியும் கடந்து -ஜாதி பரன்
அவுணர்க்கு என்றும் சலம் புரிந்து -ஜாதி பரம் இல்லை -அஹங்கார மமகார யுக்தமாய் ந நமேயம் –
என்று இருக்குமவர்கள் -ப்ரஹ்லாதனை ஸாதூனாம் -விபீஷணனை -விபீஷணச்து தர்மாத்மா
ஜெயந்தன் ஸ்வாப பரம்
அறியலாகா அந்தணனை -அரங்கமேய அந்தணனை -சுத்தன்
அந்தணர் மாட்டு அந்தி -அந்தணர் தம் சிந்தை -ஜாதி பரமாக ராகாதி தூஷிதன் அன்றியே
சுத்தனாய் இருப்பவன் –
இப்படி ஜாதி பரமாயும் சுத்தி பரமாயும் வியாக்யானம்-

——————————————————————————
485
வற்புடைய -7
தென்னிலங்கை -28
இரண்டு பாசுரங்களிலும் அவதார த்ரயம் அனுபவம்
பரசுராம ராம கிருஷ்ண அவதார அனுபவம் -வற்புடைய பாசுரம்
ராம திரிவிக்கிரம -கிருஷ்ண -அவதார அனுபவம் -தென்னிலங்கை
திருக் கோவலூர் ஆயனின் சௌ குமார்யம் அனுசந்தித்து அஞ்சிய ஆழ்வாருக்கு வீர சரிதங்களை காட்டிக் கொடுக்க
மூன்று அவதாரங்களையும் வற்புடைய பாசுர அனுபவம்
தென்னிலங்கையில் வரை உருவின மா களிறு -யானையாக வர்ணித்து பிரணய ரோஷம்
தலை எடுத்து தோழி இடம் ஊடிப் பேசும் பாசுரம் இது -ஆனைத் தொழில்கள் செய்த
ராம -திரிவிக்கிரம கிருஷ்ண அனுபவம் –

———————————————————————————–

486-
உலகமாண்டு -7
உலகாண்டு -பெரிய திருமொழி -5-4-10-
உலகமாண்டு வடிவாய மழு ஏந்தி -பரசுராம அனுபவம் -அனுபூதம் -ராஜ்ய பரிபாலனம் இங்கே
உலகாண்டு -கோயில் வாசம் -என்பதே வியாக்யானம்-

——————————————————————————

487-
வற்புடைய -7
பூம் கொள் –சங்கொலியும் -நாச்சியார் திருமொழி -9-9-
அநேக அவதாரங்களில் உள்ள மிடுக்கைக் காட்டி தரிப்பித்தான் -வற்புடைய -பாசுர அனுபவம்
ஸ்ரீ பாஞ்ச ஜன்ய ஸ்ரீ சாரங்க கோஷம் இரண்டையும் கேட்டு ஆறும் படி இ றே ஆண்டாள் ஆற்றாமை-

——————————————————————————–
488-
பொன்னானாய் -10
தேராளும் -20
பொன்னானாய் -ஈஸ்வர புத்தியை சமாதானம் பண்ணினார்
தேராளும் பாசுரத்தில் வினவ வந்தவர்கள் இவளுடைய ஆற்றாமையில் சாதனா புத்தி பண்ண
தாயார் நிலையிலே நின்று அவர்கள் உடைய ஹிருதயத்தை சமாதானம் பண்ணித் தலைக் கட்டுகிறார் –
சித்த சாதன பரிக்ரஹம் பண்ணினவர்களுக்கு பகவத் குண சேஷ்டிதங்கள் கால ஷேபத்துக்கு விஷயம் .

————————————————————————————

489-
பொன்னானாய் -10
நோற்ற நோன்பு-திருவாய்மொழி -5-7-1-
பொன்னானாய்  -இவருடைய நோற்ற நோன்பு இருக்கிற படி
மந்தரத்தால் -சாதனா பாவமும் -மறவாது வாழ்தியேல் -கர்தவ்யமும் -வாழலாம் -பலமுமாய் –
அது இல்லை என்கிறார் பொன்னானாய் -பாசுரத்தில் –
நோற்ற நோன்பு இலேன்-ஆகிஞ்சன்யம்
உன்னை விட்டு ஒன்றும் ஆற்ற கிற்கின்றிலேன் -ருசியில் குறைவற்ற படி
கலியனும் -என்னானாய் என்னானாய் என்னல் அல்லால் என்னறிவேன் ஏழையேன் –
கால ஷேபதுக்கு குண அனுபவம் -ஆற்றாமையை சாதனமாக நினைத்து இருந்தேன் இல்லை
பிராபக பிரார்த்தனைக்கு -அகிஞ்சன்யமும் ஸ்வ தோஷ க்யாபனமும் போலே பிராப்ய பிரார்த்தனைக்கும் ப்ராப்ய ருசி வேணும் இ றே

பக்த்யயாகளுக்கு அபேஷிதமான அதிகாரம்  பிரபத்திக்கு இல்லையே
இது சர்வாதிகாரம்-

——————————————————————————————-

490
பொழில் ஏழும் காவல் பூண்ட -10
உலகம் உண்டபெரு வாயா -திருவாய்மொழி -6-10-1-
பொழில் -லோகம் -ஒருரை நோக்குவாரை போலே சகல லோகங்களையும் அவதானம்
பண்ணி ரஷிப்பது -பெரு வாயா -ரஷ்யத்தின் அளவல்ல ரஷகனுடைய பாரிப்பு இருக்கும் படி –

—————————————————————————

491-
காவல் பூண்ட புகழானாய் -10
உலகமுண்ட –உலப்பில் மூர்த்தி -திருவாய்மொழி -6-10-1-
ரஷிக்கையால் வந்த குண ப்ரதை -உண்ட -ரஷணத்வம் -கீர்த்தி -கீர்த்தி மதத்வம்
பகவானுக்கு ஜகத்தே ஊண் இ றே -வயிற்றிலே வைத்து நோக்குகை ரஷணம்-

———————————————————————–

492–
தொண்டனேன் -9
தொண்டனேன் -திருவாய்மொழி -8-5-6-
கைங்கர்யத்தில் சபலனான நான்-பிராப்ய ருசி சொல்லிற்று இத்தால்-

—————————————————————-

493
பாவை பேணாள் -11
பூவை –திருமால் நாமங்களே கூவி எழும் -திருவாய்மொழி -6-7-3-
விஷயாந்தரங்கள் திருஷ்டி விஷம் போலே இருக்கும் -மாற்பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கை விட்டு -மூன்றாம் திருவந்தாதி -14-
பரமாத்மனி யோ ரகத -கண்டு கேட்டு  உற்று மோந்து -திருவாய்மொழி -4-9-10
ஹர்ஷம் எல்லாம் ஸ்ரீ ய பதி என்னும் நாமத்தாலே இவளுக்கு
ஊரும் நாடும் உலகும் தன்னைப் போலே என்று இவையும் திருநாமம்
சொல்லிற்று என்னால் ஆகாதோ -என்று பெற்றி நம்பிள்ளையை  கேட்க –
உண்ணும் சோறு எல்லாம் கண்ணன் அதிமத்ர ப்ராவண்யத்துக்கு சேராதே -பரதாழ்வான் ராஜ்ய தாச நாமம் அசஹ்யமானாப் போலே
அவனுடைய லீலா உபகரணங்கள் இவளுக்கு போக உபகரணங்கள் ஆயிற்று புபுஷு தசையில்
இவனுடைய முமுஷு தசையில் இவனுடைய லீலா உபகரணங்கள் அவனுக்கு போக உபகரணங்கள் ஆயின
பாவையும் பூவையும் அனுபவம் ருந்த படி-

———————————————————————————

494
நெடும் கண் -11
நீண்ட அப் பெரியவாய கண் -அமலனாதி பிரான் -8
ஈஸ்வரனுக்கும் அபரிச்சின்ன மான போக்யதை உடைய அவள் கண்கள்
அவன் ஸ்வரூபத்தில் அபரிச்சினம் -இவள் போக்யதையில் அபரிச்சின்னம்
உபய விபூதி உக்தனையும் ஒரு புடையிலே அடக்க வல்ல நெடும் கண் -ஞான வைபவம் –

நீண்ட -செவி அளவும் -தம் அளவும் வந்த கடாஷம்
அரங்கனின் கிருபையை பார்த்தால் உடம்பு எல்லாம் கண்ணாக வேண்டாவோ
ஸ்ரீவைகுண்ட நாதன் -வியூக விபவம் போலே இரண்டு கண்கள் போராதே
விபூதி த்வயத்தை கபளீ கரிக்கும் அவன் திருக் கண்கள் நீட்சி
உபய விபூதி விசிஷ்டன் அவனையும் கபளீ கரிக்கும் ஆழ்வாருடைய திருக் கண்கள்
யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவர் –

—————————————————————-

495-
பள்ளி கொள்ளாள் -11
நீராடப் போனாள் -19
நீராடப் போதுவீர் -திருப்பாவை -1-
புத்ரனோடு சிஷ்யனோடுவாசி அற -பகவத் சம்பந்தம் உண்டானால் பூஜா வாசி சப்தம் கொண்டே –
ஏஷ ப்ரஹ்ம ப்ரவிஷ்டோச்மி க்ரீஷ்மே சீதமிவ ஹரதம -சம்ச்லேஷம் -பகவத் அனுபவம்
சுனையாடல் -நீராட போதல் -பொற்றாமரைக் கயம நீராடப் போனாள் -என்னக் கடவது இ றே-

———————————————————————————

496-
இது செய்தார்-11
இது -தகாது -திருவாய்மொழி -1-4-4-
இந்நோய் பெரும் பேறு தோற்ற இது செய்தார் என்கிறாள் -நிர்ஹேதுக பகவத் பிரசாதத்தால் வந்தது –
உபாசகனுக்கு சாதன மேல் எல்லையாய் வரும் பரம பக்தி பிரபன்னனுக்கு முதல் அடியில்
இது தகாது என்னாத -தன்  தசை தானும் தனக்கும் பேச்சுக்கு நிலம் இல்லை
தெய்வ நல் நோய் வாசாம் அகோசரம்

——————————————————————————

497-
உண்டு அறியாள் -12
கண் துயில் அறியாள் -திருவாய்மொழி -7-2-1-
கண் துயில் மறந்தாள் -பெரிய திருமொழி-2-7-5-
ஊணை மறந்தாள்  -உண்ணா நாள் பசியாவது ஓன்று இல்லை -உண்ணும் சோறு எல்லாம் கண்ணன்
என்று இருக்கையாலே -தத் விச்லேஷத்தில் உபவாச கிரிசையாய் –
சம்ச்லேஷத்தில் உறங்கவிடான் -விச்லேஷத்தில் விரஹ வ்யசனம் உறங்க ஒட்டாது
அனிதர சத்தம் ராம -என்று கொண்டு தன் படி யாக்கினான் -சாம்யா பத்தி -பரமம் சாம்யம் உபைதி
நாட்டாரோடு இயல் ஒழிந்து நாரணனை நண்ணினமே -கண் துயில் மறந்தால் என்றதும் இதுவே இ றே-

————————————————————————————

498-
நஞ்சரவில் துயில் அமர்ந்த நம்பீ என்னும் -12
தொழுதாடி தூமணி வண்ணனுக்கு ஆட் செய்து -திருவாய்மொழி -4-6-11-
சூட்டுமின் -சூட்டு நன் மாலைகள் -திரு விருத்தம் -20/21
கடல் வண்ணர் -என்று கட்டு விச்சி சொல்லுகையாலும் -தாயார் அநு  பாஷிக்கையாலும் -வினவ வந்தார்க்கு
சொல்லுகையாலும் -இவளும் -எம்பெருமான்  திருவரங்கம் எங்கே -என்று திரு நாமத்தை சொல்லுகையாலும்
பூர்வ அவஸ்தையிலும் கொஞ்சம் உணர்ந்து -அவ்வளவிலும் முகம் காட்டாமையாலே ஆற்றாமைக்கு
உடலாய் -நஞ்சரவில் துயில் அமர்ந்த நம்பீ என்னும்-என்று கூப்பிடத் தொடங்குகிறாள்-

தொழுதாடி -இதற்க்கு அம்மங்கி அம்மாள் பணிக்கும் படி -மோஹித்தவள் அல்பம் ஆஸ்வாசித்த வாறே
மோர் குழம்பு குடித்தாள் தரித்தாள் கண் விழித்தாள் வார்த்தை சொன்னாள் -போலே காணும் என்று
மேலே சீலமிலா சிறியன் -உணர்ந்து கூப்பிடும் அளவு -தோழி தானும் அறிந்து இலள் பகவத் பிரபாவம்
அவளை ஏத்தும் கோள் என்றாள் –

வண் துவாராபதி மன்னனை ஏத்துமின் -என்று தோழி சொன்ன
மாத்ரமே -இத் தோழி தானும் -தானும் சொல்லி அவர்களும் சொல்ல வேணும் -என்று இருந்தாள்

சூட்டுமின் -இப்படி செய்வது என்ற பிரசங்க மாத்ரத்திலே உணர்ந்தாள் -மோகம் தீர்ந்து கண்ணும் விழித்தாள்
இப்படி இறே இருவர் உணர்த்தியும்-

—————————————————————————

499-
துயில் அமர்ந்த நம்பீ -12
பள்ளி கொள்ளும் -இடம் நாச்சியார் திருமொழி -4-1-
முன்பு திருவரங்கம் என்று ஊரைச் சொன்னாள் -கட்டுவிச்சி கடல் வண்ணர்
என்று பெரிய பெருமாளை சொன்னாள் -இப்போது படுக்கையை சொல்கிறாள்-
முதல் படுக்கை கோயில் போலே காணும் இவளுக்கு
மணாளனார் பள்ளி கொள்ளும் இடம் -பிரணயிநி முகம் காட்டுவது ஓலக்கத்தில் இறே அன்றே
படுக்கையிலே இறே -அது ஆகிறது கோயில் ஆய்த்து -பள்ளி கொள்ளும் இடம் ஆகிறது கோயில் –
பட்டர் அருளிச் செய்த வார்த்தை -என்று பிள்ளை அழகிய மணவாள அரையர் பணிப்பர்-

———————————————————————————

500-
துயில் அமர்ந்த வயலாலி மைந்தா -12-
அணைவது அரவணை மேல் –பூம் பாவை யாகம் புணர்வது -திருவாய்மொழி -2-8-1-
மெல்லியல் தோள் தோய்ந்தாய் –துயில் அமர்ந்த -13
வீசி வில்லிட்டு எழுப்பினாலும் படுக்கை வாய்ப்பாலே நிர்பயமாக போக ரூபமாக கண் வளரப் பண்ணி
படுக்கையோடு சேருகைக்கு பாணி க்ரஹணம் பண்ணின தேசம்
அணைவது -நாக பர்யங்கத்தை கூறி பூம் பாவை யாகம் புணர்வது ஸ்ரீ யபதித்வம் –
சேஷ சாயித்வமும் ஸ்ரீ யபதித்வமும் இ றே பரத்வ லிங்கம்
அணைவது -பர்யங்கம் -புணர்வது பத்னி சம்ச்லேஷம் -இருவர் அவர் முதல் -புத்ர ஜனனம்
கலியனும் மெல்லியல் தோள் தோய்ந்தாய் -விவாஹம் முந்துற அருளி
துயில் அமர்ந்த -பர்யங்க சயனம் -அருளிச் செய்தார் இ றே
நம் ஆழ்வாரும் திருமால் -2-1-1- ஸ்ரீ யபதித்வம் அருளி – அரவணையான் 2-1-2-பர்யங்க சயனம் க்ரமமாக அருளிச் செய்தார்-

————————————————————————–

501-
துயில் அமர்ந்த வயலாலி –அஞ்சிறைப்புள் -12-
அடைவது –மிடைவது கடைவது -திருவாய்மொழி -9-3-6-
துயில் படுக்கை -பாணி க்ரஹணம் சொல்லிக் -கொண்டு வந்த விஸ்வாமித்திரன் அஞ்சிறைப்புள்
அடைவது -சம்ச்லேஷிக்க -மிடைவது -அதற்க்கு இடும் பிச்சை -கடைவது பெற யத்னம்
இவர் திரு உள்ளம் உடைகுலை  பட ஹேது
அவன் பனிக்கடலை கடைய இவர் மனக்கடல் உடைய புக்கது
பனிக்கடலும் மனக்கடலும் -பெரியாழ்வார் திருமொழி -5-4-9-
பிராட்டிகாக செய்த வியாபார த்ரயம்

—————————————————————————

502-
அஞ்சிறையபுள் -12
வள்ளி மருங்குல் -பெரிய திருமொழி -3-7-1-
அஞ்சிறைப்புள் விச்வாமித்ரனை சொல்லி
வள்ளி மருங்குல் அவனைக் கொண்டு வந்த விஸ்வாமித்திரன் -இவளுடைய அழகு ஆய்த்து
ஸ்ரீ பரகால நாயகி இடை அழகு இடையனை வரச் செய்தது
இடைச்சிகள் பொன்னையும் மாணிகத்தையும் அழிய மாறி வெள்ளி வளை இடுவார்
ஆயனுக்கு நேரான ஆய்ச்சி இ றே-

———————————————————

503-
கல்லெடுத்து -13-
நீரகத்தாய் -8
ஆபத் நிவர்தகமான திரு நாமங்களைச் சொல்லி
திருக் கோவலூரில் அனுபவிக்க புறப்பட பாதம் பேராமல் கால் ஆளும் நெஞ்சு அழியும் கண் சுழலும்
கூவுதல் வருதல் செய்யாய் -என் திறம் சொல்லார் -கதிர் பொறுக்கிக் கூட்டுவாரைப் போலே
ஆயனுடைய ஸ்வாபம் பிரகாசிக்கும் திருப்பதிகளை திரு நீரகம் தொடக்கமான இவை –

————————————————————————–

504-
கல்லெடுத்து –ஊரகத்தாய் -13
அன்று தேர் கடாவிய பெருமான் -திருவாய்மொழி -3-6-10-
பிடி தோறும் நெய் வார்ப்பாரைப் போலே அடி தோறும் அர்ச்சை சேர்த்து அனுபவம்
நம் ஆழ்வார் அர்ச்சை அவதார சௌலப்யம் -செய்ய தாமரைக் கண்ணன் திருவாய்மொழியில் உபதேசித்து
அன்று தேர் கடாவிய பெருமான் -எத்திறம் என்று ஆழம் கால் பட்டது கிருஷ்ண அவதாரம்
கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் -பாவோ நான்யத்ர கச்சதி –

————————————————————————–

505-
கல் மாரி  காத்தாய் -ஊரகத்தாய் -13
குரவை யாச்சியரோடு கோத்ததும் –மாணியாய் -திருவாய்மொழி -6-4-1/6-4-8-
வரையாதே எல்லாரையும் தீண்டி
தனது பேறாக கார்யம் செய்து
இரண்டு அவதார சாம்யம்

—————————————————————————

506-
துணை முலை -13-
நும் அடியார் எல்லோரோடும் ஒக்க எண்ணி இருந்தீர் -பெரிய திருமொழி -4-9-6-
ஒரு முலைக்கு ஒரு முலை துணையாம் -திருவடி போலே
இவருடைய சௌகுமார்யம் -சம்ஸ்லேஷிக்கவும் விஸ்லேஷிக்கவும் மாட்டாத
மலையாள ஊண் போலே இல்லையே
உண்ணவும்   விடவும் மாட்டார்

———————————————————————————

507-
முளைக் கதிரை -14
கண்ணன் நாமமே குளறிக் கொன்றீர் -திருவாய்மொழி -9-5-8-
சொல்லக் கேட்டதை தரித்து வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக என்று கிளையைக் கொண்டாடினாள் –
பரகால நாயகி வளர்த்த கிளி சக்ரமமாக பேசிற்று
சில நாமங்களைச் சொல்ல வேண்டா என்று இரக்க -அது சொல்ல -வெறுத்து
மிருத சஞ்சீவனமான ராம நாமம் சொன்னால் ஆகாதோ என்கிறாள் பராங்குசநாயகி

—————————————————————————————-

508-
முளைக் கதிரை -14
நலமுடையவன் -திருவாய்மொழி -1-1-1-
தம்மை அடியிலே விஷயாந்தரங்களில் நின்று மீட்டதும்
ஸ்வ விஷயத்தில் ருசியைப் பிறப்பித்ததும்
வடிவு அழகைக் காட்டி இ றே -ஆகையால் அத்தை யாயிற்று இதுக்கு பிரதமத்தில்
உபதேசித்தது -மணி உருவில் பூதம் ஐந்தாய்
நம் ஆழ்வார் அகப்பட்ட துறை கல்யாண குணங்கள்
இப்படி இன்ப மாரியையும் அருள் மாரியையும் பற்றின அனுபவம்

—————————————————————————————-

509-
முளைக் கதிர் –முகில் –14
செம்மா பாத பற்பு -திருவாய்மொழி -2-9-1-
மணி உரு என்றும் முகில் என்றும் நீல வர்ணனாக சொல்லி
முளைக் கதிர் -என்று ரக்த வர்ணனாக சொல்லுவான் என் என்னில்
தேஜோமயமான நீல விக்ரகம் -த்விவித ரூபத்தை சொன்னபடி –
செம் -சிவப்பாய் மா -கறுப்பாய் -உன்னுடைய அகவாய் சிவந்து
ஸ்யாமமாய் -இரு வர்ணங்களும் விவஷிதங்கள்
ஆண்டாள் கழல் போற்றி என்று இந்த வர்ண த்வயத்தை நினைத்து இ றே
குஞ்சிதத திருவடிகளில் வீரக் கழலுக்கும் அகவாயில் சிவப்பையும் கண்டு
காப்பிடுகிறார்கள் -நாயனார் ஸ்ரீ ஸூ க்தி

—————————————————————————————-

510-
குருங்குடியில் முகிலை –அப்பால் முதலாய -14
வேம்கடவன் –அரங்கத்தம்மான் -அமலனாதி பிரான் -1
குருங்குடியில் சீலாதிகனுடைய அடிப்பாடு சொல்கிறது மேல்
மூவா மூ உலகும் கடந்து அப்பால் முதலாய் -இத்யாதி
அப்பால் என்று பரம பதத்தைஸச சொல்லி -அரங்கம் -என்று திருவரங்கத்தைச் சொல்கிறது
அவ்வோ நிலைகளில் காட்டிலும் சீலாதிகயம் இ றே திருக்குருங்குடியில் என்றபடி –
ஒருவனைக் கவி பாடும் பொழுது வரத்து சொல்லி இ றே கவி பாடுவது
பரம பதத்தில் நின்றும் -ஸ்ரீ மதுரையிலே தங்கி -திருவாய்ப்பாடிக்கு வந்தால் போலே
ஸ்ரீ வைகுண்டத்தில் நின்றும் திருமலையில் தங்கி காணும் கோயிலுக்கு வந்தது -பட்டர்

——————————————————————————————–

511-
மூ உலகும் கடந்து -14
உலகம் மூன்று -திருவாய்மொழி -8-1-1-
நித்தியமான த்ரிவித ஆத்ம வர்கத்தைக் கடந்து அவ்வருகாய் இருக்குமவன்
மேவிய உலகம் மூன்று -கீழும் மேலும் நடுவுமான உலகங்கள் சொல்லுதல்
த்ரிவித சேதனரை சொல்லுதல்
விலஷணன் -ரஷகன்

————————————————————————————-

512-
திருமாலைப் பாடக் கேட்டு -17
செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும் -திருவாய்மொழி -1-10-8-
திருமாலை சொல்லே என்று சோர்கின்றாள் -என்று முன்பு திருநாமம் சொன்ன இடத்தில்
கேட்ப்பாரைப் பெற்றது இல்லை -இப்போது சாத்ம்யம் ஆகையாலே கேட்ப்பாரைப் பெற்றது என்கிறாள்

செல்வ நாரணன் -அர்த்த அனுசந்தானம் பண்ண வேண்டா சொல்லே அமையும்
நாம் இதுக்கு முன்பு நினைத்தும் பேசியும் தப்பச் செய்தோம்
திருநாமம் நடையாட இடம் செல்ல குட்டிச் சுவர் அருகில் முக்காடு இட்டு கிடக்க
வழிப் போக்கன் சுமை கனத்ததால் ஸ்ரீ மன் நாராயணன் சொல்ல கேட்டு
ஆழ்வார் கரணங்கள் ப்ரவணமாய் போகிற படி கண்டு விஸ்மிதர் ஆகிறார் -ஈடு

வளம் கொள் மந்திரமும் மெய்ம்மைப் பெரு வார்த்தையும் அருளிச் செய்த வாயாலே
த்வ்யவக்தா -த்வய அர்த்தம் அனுசந்தானே ந சஹ -என்று இரண்டின் ஏற்றமும் வெளி இடப் பட்டது இ றே –

கற்றவர்கள் சொல்லக் கேட்டாலும் கற்பித்தவர்கள் கை கூப்பிக் காலிலே
வணங்கும் படி இ றே இச் சொல்லின் ஏற்றம் -செல்வ நாரணர் என்ற சொல் வழிப் போக்கர்
சொல்லிலும் அகலாதே உள்ளே புகுரும்படி பண்ணும் -நாயனார் அருளிச் செயல் ரகசியம் ஸ்ரீ ஸூக்தி –

அருள் மாரியாம் கலியன் பிரார்தித்து பெற்றார்
இன்ப மாரியாம் ஆழ்வார் அசிதிதமாக இது கிடைத்தது
இருவரும் திருமால் திரு நாமம் கேட்டு பிரவணர் ஆனார்கள்

———————————————————————————

513-
கச்சி மேய களிறு -15
கன்று மேய்த்து -16-
கல்லுயர்ந்த பாசுரம் -திருப்பாடகம் -திருப்பாற்கடல் -தேரழுந்தூர் -திவ்ய தேச த்ரயம்
பிந்தைய பாசுரம் -திருக்கண்ணபுரம் -திருவேங்கடம் -திரு நறையூர் -திவ்ய தேச த்ரயம்
திருப்பாடகத்தில் இருந்தவாறும் திருப்பாற்கடலில் கிடந்தவாறும் -தேரழுந்தூரில் நின்றவாறும்
இங்கேயோ மூன்றும் நின்றவாறும்

——————————————————————————–

514-
கச்சி மேய களிறு -15
பனியேய் பரம் குன்றின் பவளத் திரள் -பெரிய திருமொழி -7-1-6-
திவ்ய தேசங்கள் நிறைந்தகச்சி இ றே
கச்சி மேய களிறு திருபாடகத்து நாயனார் -ஆங்கே இருந்தவாறு
பனியேய் பரம் குன்று -திருப்பிரிதியாக வியாக்யானம்-

————————————————————————————–

515-
கச்சி மேய களிறு -15
வரை உருவின் மா களிறு -28
நிதய ஸ்ப்ருஹணீயம்- ஸ்வா தந்த்ர்யம் இத்தால் மத களிறு போலே
அவ்வானை படும் ஆகாரத்தை சொல்லுகிறது கடல் கிடந்த
அவ்வானை ஸ்வரை சஞ்சாரம் பண்ணி வந்து நிற்கிறபடியைச் சொல்லுகிறது
அணி அழுந்தூர் நின்று உகந்த -இத்யாதி
தென்னிலங்கை பாட்டிலே வரை களிறு யானையைச் சொல்லி அரண் சிதறி
அவுணன் மாள -ஆனைத் தொழில்களைச் சொல்லுகிறது-

——————————————————————————————

516
கல்லுயர்ந்த -15
நின்றது எந்தை -திருச் சந்த விருத்தம் -64
நின்றது ..திரு ஊரகம் திருப்பாடகம் திருவெக்கா -திருமழிசை ஆழ்வார் அனுபவம்
திருப்பாடகம் திருப்பாற்கடல் தேரழுந்தூர் இவர் அனுபவம்-

——————————————————————————————–

517
கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் –கண புரத்து என் கனியே -16-
திருக்குறள் அப்பன் அமர்ந்து உறையும் –திறுவாறன் விளை -திருவாய்மொழி -7-10-2-
விரி பொழில் சூழ் திரு நறையூர் -16
பிற்பட்டாரையும் ரஷிக்க திருக் கண்ணபுரம் புக்கான் -பூர்வர்கள்
பசுக்கள் கை கழிய போகையாலே -அவற்றை மறிக்கப் போன இடத்தில் சரமஹரமாய் இருப்பதொரு பொழிலைக்  கண்டு
திருவாய்ப்பாடியாக நினைத்து புக்கான் -அப்பொழில்
மயல் மிகு பொழில் ஆகையாலே கால் வாங்க மாட்டிற்று இலன் -பட்டர்
இதுக்கடி -ஸ்வரூப ஐக்ய பிரதி பத்தி அவதாரத்திலும் அர்ச்சையிலும் -ஆகாதோ மதுராம் புரீம் -என்ற இடத்திலும்
கண்ணபுரம் என்று அருளுகிறார்  பெரியவாச்சான் பிள்ளை

இந்தரனுக்கு ராஜ்ஜியம் வாங்கி கொடுத்து திருப்பாற்கடலில் சாய்கை அன்றிக்கே
அவன் வந்து நித்யவாசம் பண்ணுகிற திருவாறன் விளை
விரி -ஏகதார வ்ரதன் வந்து நிற்கிற தேசம் -பிராட்டியை பிரிந்து அலமந்து திரிந்து
இங்கே கண்டவாறே தரித்து நின்றபடி –
ஆக கோகுலங்களை –ஷீராப்தி -அயோதியை துறந்து -அர்ச்சையில்
விபவ சத்தா ஆனந்தம் விட விபவ கந்த சத்தா ஆனாந்தம் விட அர்ச்சை ஆனந்தம்
அவன் உகப்பின் மிகுத்து தெளிவாக தெரிகிறது –

————————————————————————————
518
வென்று அசுரர் -16
அவுணன் மாள -28
அசுர ஜாதி பரங்கள் அன்று -அரக்கனை குறிப்பவை
ஸூர வ்யதிக்தர் இறே ராஷசரும்

———————————————————————————————

519-
கன்று மேய்த்து இனிது உகந்த -16
திவத்திலும் பசு நிரை மேய்த்து உவத்தி -திருவாய்மொழி -10-3-10-
நித்ய ஸூரிகளை ரஷிக்கை தட்டியில் இருப்பாய் கன்றுகளை மேய்த்து சார்வ பௌமன் ஆகிறான் –
சர்வ ரஷகத்வம் புஷ்கலமாகிறது இப் பொழுது தானே
பசுக்களை மேய்த்து உகக்கும்
கன்று மேய்த்து இனிது உகக்கும் -அவற்றுக்கு ரஷகன் என்ற ஞானமுண்டே
ரஷ்ய ரஷணம் இ றே ரஷகனுக்கு ஹர்ஷ ஹேது

———————————————————————————————–

520-
தண் குடந்தை -17
தண் கோவலூர் -17
திருப்பிரபந்த அவதாரம் திருக் கோவலூரிலே
திருப்பிரபந்த லாபம் திருக்குடைந்தையிலே
ஆஸ்ரிதர் உடன் முறை அழிய சம்ஸ்லேஷித -திரு மழிசை ஆழ்வார்
அமுது செய்த பிராசாதம் உண்டு உகந்தான் –
தானே மேல் விழுந்து அவர்களை நெருக்கிய இடம் இது
அவர்கள் போன இடத்திலும் அங்கே நின்று அருள் பாலிக்கிறான்

———————————————————————————————-

521-
நங்காய் நம் குடிக்கு இதுவோ நன்மை -17
நிறைந்த வன் பழி நம் குடிக்கு இவள் -திருவாய்மொழி -5-5-7
மனைக்கு வான் பழி -திருவாய்மொழி -6-7-10-
நங்காய் -அவன் மேல் விழக் கடவ நீ விழுவாயோ
பூரணை யானவளே -உனது பூர்த்தி கொண்டு இக்குடி வாழ இருந்தபடி
தாயார் வார்த்தை  பூர்வ பஷம் -மகள் வார்த்தை சித்தாந்தம்
ஸ்வரூபம் உணர்ந்து ஸ்வரூப அநு ரூபமான புருஷார்தத்தில் இழிய வேணும் -தாயார்
போக அநு ரூபம் ஸ்வரூபம் அது ஒழிய ஸ்வரூப அநு ரூபம் போகம் இல்லை -மகள்
பழி -பிராவண்யம் -சரம ஸ்லோக கீழ் உள்ளவற்றை அநு பாஷித்து தாயார்
பழி என்று மீளேன் -மகள் உபேயத்தில் கொத்தை அறுக்கிறது
கர்தவ்ய அம்சங்களிலும் உபாய புத்தி பிறக்கிறதோ –
உபேயம் பார்த்தால் அஹம் சர்வம் கரிஷ்யாமி -ன்னும்படியாய் இருக்கும் உத்தரார்தத்தில் நிஷ்கர்ஷம் இது
நம சப்தார்த்த நிஷ்டை -உபாயத்தில் துணிவாகிற பிரஞ்ஞா அவஸ்தை தாய்
அவனே உபாய பூதன் -அவனை ஒழிந்தவை உபாயம் இல்லை

—————————————————————————————————–

522-
கண்ணும் வாயும் கைத்தலமும் அடி இணையும் -18
கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் -21
பங்கயக் கண்ணன் என்கோ பவளச் செவ்வாயன் என்கோ -திருவாய்மொழி -3-4-3-
சூடகமே தோள் வழியே -திருப்பாவை -27

முதல் உறவு பண்ணும் கண்ணும் -அத்தை ஸ்திரம் ஆக்கும் முறுவலும் முறை உணர்ந்தாரை மேல் விழுந்து அணைக்கும் -கையும்
அந்த சஸ்பர்சத்துக்கு தோற்று விழும் திருவடிகளும் இருக்கிறபடி –
விவாக சமாதியிலே திருக்கையால் தாள் பற்றி அம்மி மிதிக்க நீட்டிய கை -வேதம் ஓதும் வாய் –
காலே தொடங்கி கரிய குழல் அளவும் பார்த்த கண்கள் -சப்தபதி நடந்த திருவடி
சேதனர் உடன் கலப்பது கண் வழி இ றே -நோக்குக்கு தப்பினாலும் தப்ப ஒண்ணாத முறுவல் –
நோக்குக்கும் ஸ்மித்துக்கும் தோற்று விழும் திருவடிகள் -திருவடிகளில் விழுந்தார்க்கு அனுபாவ்யமான வடிவு
சூடகமே தோள் வளையே க்ரம நிர்தேச தாத்பரியமும் இங்கனே கண்டு கொள்க

———————————————————————————————————

523-
ஏர்வண்ண வென் பேதை -18
இத்திரு -திருவாய்மொழி -4-4-7-
கார் வண்ணமும் ஏர்வண்ணமும் -வேறே திருஷ்டாந்தம் இல்லாத வடிவு
வடிவு இணை இல்லா என்னும் இத்தனை இ றே அவன் போக்யமாய் இருக்கும்
அவனுக்கு இவள் போக்யமாய் இருக்கும் -அம் மிதுனத்தை அனுபவிக்கும் ஏற்றம் ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு –
இந்த சமுதாயத்தை அனுபவிக்கும் ஏற்றம் இவளுக்கு -போகம் மிக்கு அழகும் மினுங்கும் –
கார்வண்ணம் திருமேனி -பார்வண்ண மடமங்கை -பனி மலர் மேல் பாவை ஏர்வண்ண வென் பேதை-என்னக் கடவது இ றே
இத்திரு -அநபாயினி யான அவளோடு விகல்பிகலாம் படி -அவளுக்கு அவன் உத்தேச்யன்
இருவரும் உத்தேசயரான ஏற்றம் உண்டு இ றே இவளுக்கு
இருவரைப் பற்றினார் நம் ஆழ்வார்
மூவரைப்  பற்றின ஏற்றம் கலியனுக்கு-

——————————————————————————————————–

524-
பொற்றாமரைக் கயம் -19
தயரதன் பெற்ற மரகத மணித் தடம் -திருவாய்மொழி -10-1-8-
மகள் -அணி அரங்கம் ஆடுதுமோ என்று ஊரைச் சொன்னாள்
தாய் -பொற்றாமரைக் கயம் -என்று பெரிய பெருமாளைச் சொல்லுகிறாள்
தயரதன் பெற்ற மரகத மணித் தடம் -வாசத் தடம் போல் வருவானை
என்று தடமாகச் சொல்லக் கடவது இ றே

—————————————————————————————————-

525-
உம் பொன்னும் அக்தே -19
நங்கைமீர் நீரும் -திருவாய்மொழி -4-2-9-
உங்கள் வயிற்றில் பிறந்தார்க்கும் இவள் படி உண்டோ
அல்லாத ஆழ்வார்களை சொல்லிற்று இத்தால்
அர்ச்சையிலே இ றே இவள் மோகித்தது

—————————————————————————————————-

526-
செந்தீ ஒல்கி -20
மூக்கரிந்திட்ட -நாச்சியார் திருமொழி -10-4-
சரக் அக்நியால் இலங்கையை அழித்த சக்ரவர்த்தி திருமகன்
திருவடி செய்தான் அன்றோ என்னில் -கையில் திருச்ச்சரம் செய்தது தான் செய்தது அன்றி ஒழியுமோ –
ராமஸ்ய தஷிண பாஹூ -இளைய பெருமாள் செய்தது ராம கரம்  செய்தால் போலே –

—————————————————————————————————–

527-
பெரும் தவத்தள் -20
விண்ணுளாரிலும் சீரியரே -திரு விருத்தம் -79
சம்சாரத்தில் இருந்தும் அதுவே யாத்ரையாக இருப்பதால்

————————————————————————————————

528-
மைவண்ண நறும் குஞ்சி -21
கொள்கின்ற கோள் இருளை –குழல் -திருவாய்மொழி -7-7-9-
காளமேக ஸ்யாமமான வடிவை ஸ்படிகம் ஆக்கும்படியான திருக் குழலின் கறுப்பு இருந்தபடி –

ஓர் இருளை சிஷித்து அது சத்ருசம் அல்லாமையாலே -அன்று மாயன் குழல் -என்றார் நம் ஆழ்வாரும் ஸ்நிக்த நீல குடில குந்தளம் இ றே

————————————————————————————————

529-
சிலையே துணையா -21
கொங்குண் வண்டே கரியாக -பெரிய திருமொழி -9-3-4-
சம்ஸ்லேஷிக்கைக்கு ஏகாந்தமாக வந்தார்
கண்டார்க்கு வேட்டையாட வந்தோம் என்று சொல்ல வில்லுடன் வந்தார்
போகத்துக்கு வருபவர் ஊரைத் திரட்டிக் கொண்டு வாராமல் வில்லே துணையாக குறி உடைமையோடே வந்தார்
தானும் யானுமே  என்னும் படிக்கு  ஈடாக வந்தார் -தனது வளையத்தில் மதுபானம் பண்ணுகிற வண்டு சான்றாம் படி வந்தான்
-சுகமே ஜீவித்து இருக்குமவர்கள் அவை உண்டு உடுத்து சுகமே காலம் போக்குகிறன வி றே –
நக்குண்டார் நா வெழார் -அவன் பக்கலில் ஜீவித்தவை நமக்காக வார்த்தை சொல்லுமோ-

——————————————————————————————-

530
இருவராய் -21
தன்னுள்ளே -திருவாய்மொழி -2-3-1-
இருவராம் படியாக வந்தார் -தாமும் நாமுமே யாம்படி வந்தார் என்கை
தன்னுள்ளே என்றது எல்லா ரசங்களும் தன்னுள்ளே யாம்படி என்றது-

———————————————————————————————

531-
கைவண்ணம் தாமரை வாய் கமலம் -21
கண்ணும் வாயும் கைத்தலமும் அடி இணையும் கமல வண்ணம் -18
போக்ய அதிசயத்தாலே அவயவங்கள் தோறும் தனித் தனியே தாமரையை திருஷ்டாந்தமாக சொல்கிறாள் –
அடியும் அக்தே -கீழ் சொன்னவையும் சத்ருச த்ருஷ்டந்தம் அன்று
கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை ஒவ்வாது -என்னக் கடவது இ றே-

—————————————————————————————————–

532-
தாமரை அரவிந்தம் பல சப்தங்கள் பிரயோகம்
திவ்ய கவியும் திருவரங்க கலம்பகம் கரை பொருது ஒழுகும் காவிரி பாசுரத்தில்
பத்து தாமரை பர்யாய பதங்களும் அவன் செய்து அருளின ஒன்பது அதிசயங்களையும் பட்டியல் இட்டு அருளுகிறார்-

——————————————————————————————————-

533-
சௌந்தர்ய சாகரத்தில் தாம் அகப்பட்ட சுழிகளை சொல்லுகிறாள்
சூடகம் பிரதமத்தில் ஸ்பர்சிக்கும் கைக்கு இடும் ஆபரணம்
அந்த ஸ்பர்சத்தாலே அணைக்க தோளுக்கு இடும் ஆபரணம் அடுத்து
அணைத்த திருக்கையில் உறுத்தும் ஆபரணம் போல் அன்றிக்கே அணைத்த அநந்தரம் ரகஸ்யம் கேட்ட இடத்துக்கும்
ஆகாரணத்துக்கு விஷயமான இடத்துக்கு இடும் ஆபரணம் தோடு
அணைத்தால் தோற்று பிடிக்கும் காலுக்கு இடும் ஆபரணம் பாடகம்
கையை கையாலே பிடியீர் என்றான் ஜனகன் கைத்தலம் பற்றி தீவலம் வந்து
திருக்கையால் தாள் பற்றி அம்மி மிதிப்பது -காலைத் தொடுவது வைதிகமும் லௌகிகமும்–

——————————————————————————–

534-
தோழீ -21
ஏ டீ -பெரிய திருமொழி -10-8-9-
தோழீ –உன் சன்னதி இல்லாமையால் நான் இழந்தேன் -அவர் படியையும் என் படியையும் அறிந்த நீ என் பிராந்தியை போக்க வல்லாய்
ஏ டீ -நீ அன்றோ அவரை புகுர விட்டுக் கொடுத்தாய் -அவர் பஷத்தை சேர்ந்தவள் என்று வெறுக்கிறாள்-

———————————————————————————————-

535-
கைவளையும் மேகலையும் காணேன் –கண்டேன் கன மகர குழை இரண்டும் நான்கு தோளும் -22
ஐங்கருவி கண்ட இன்பம் சிற்றின்பம் ஒழிந்தேன் -ஒண் டோடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப -கண்ட சதிர் கண்டு -திருவாய்மொழி -4-9-10-
கைவளை -அஹங்கார மமகார நிவ்ருத்தி ஸ்வா பதேச அர்த்தம் –
போக வேளையில் வஸ்த்ரம் வளை -என்பர் –
நான் போக்தா எனக்கு போக்யம் என்று இருப்பது ஸ்வரூபம் அன்று இ றே
போக்யமாய் இருக்கை இ றே ஸ்வரூபம் -த்ருஷ்டம் அத்ரிஷ்டமாயும் அத்ருஷ்டம் த்ருஷ்டமாயிற்று
அநாதி காலமாய் அத்ருஷ்டமான பகவத் விஷயம் த்ருஷ்டமானவாறே
அநாதி காலமாய் த்ருஷ்டமான ஆத்ம ஆத்மீயங்கள் அத்ருஷ்டம் ஆயிற்றன என்றபடி –

———————————————————————————————–

536-
எவ்வளவுண்டு எம்பெருமான் கோயில் -22
அடியார்கள் குழாம் களை உடன் கூடுவது என்று கொலோ -திருவாய்மொழி -2-3-10-
அவிச்சின்னமாக அனுபவிக்க வேண்டும் என்று உம்முடைய அகம் எத்தை தூரம் போரும்
என்று கேட்டாள் -கூடப் போவோம் என்று -நினைத்து பருகிக் களித்தேனே என்ற அநந்தரம்
அடியார்கள் குழாம் களை உடன் கூடுவது என்று கொலோ -என்று பிரார்த்தித்தால் போலே
பரிஜனத்தோடே அனுபவிக்க வேண்டும் என்று எவ்வளவுண்டு எம்பெருமான் கோயில் -என்கிறாள்-

—————————————————————————————–

537-
நைவளம் -22
பேதை நெஞ்சு அறவறப் பாடும் பாட்டு -திருவாய்மொழி -9-9-9-
கேட்டாரோடு சொன்னாரையும் நைவிக்கும் பண் -நட்டபாடையை குணா யோகத்தால் நைவளம் என்கிறது
பேதை -பெண்களின் நெஞ்சு ஊடலை மறந்து வந்து பொருந்தும்படி பாடுகிற பாட்டு

———————————————————————————————

538-
நயங்கள் பின்னும் செய்வளவில் -22
வண்டு இன்னிசை முரல் -பெரிய திருமொழி -3-1-2-
நீச பாஷணங்களை பண்ணிலே இட்டு -நம்முடைய மகா விசுவாசம் போலே ஆயிற்று அவனுடைய மஹா விசுவாசம் இருக்கும் படி –
பண்ணின பிரதிபத்தி விபரீத பலம் ஆனாலும் அத்தை ஒழிய வேறு கதி இன்றி இருக்குமா போலே
தான் நுனுங்கின பண் பலித்தது இல்லை என்று விடாதே
பின்னையும் அதையே நுனுங்கினான் -என்கை
வண்டு பிரணய கலகம் மாறாதே செல்லுமா போலே திர்யக்களின் யாத்ரையும்
பேடை மாதவியிலே செறிய பூத்த பூவில் புக்கு ஒழிய சேவல் நோவு பட்டு எல்லா சாதனங்களையும் அனுஷ்டித்தது –
அவற்றில் ஓன்று இ றே இன்னிசை முரல்வது
அது வண்டு இவன் தெய்வ வண்டு இ றே -9-9-4-

——————————————————————————————————

539-
நாணினார் போல் -22
நாணி -திருவாய்மொழி -5-8-5-
அவர் நுணுக்கிய பண்ணிலே அகவாய் அழிந்து இருக்கச் செய்தே பொரி புறம் தடவி நான் அழிந்து இருப்பது
அவருக்கு தெரியாதபடி இருக்க -அத்தைக் கண்டு லஜ்ஜை பிறக்க
பிரபன்னர் தன்னை லபிக்கைக்கு அழுவன் தொழுவன் பட்ட பாட்டை எல்லாம் அபிமத விஷயத்தில் தான் பட்ட படி –
நாணி அழுவன் தொழுவன் -பாலர் செய்வதையும் செய்யா நின்றேன்
வேதாந்த ஞானம் உடையவர் செய்வதையும் செய்யா நின்றேன்
அங்கு வந்து தோற்றக் காணாமையாலே ஆசைப்பட்டு அழகிதாக உண்டோம் என்று
லஜ்ஜித்து தலை கவிழ்ந்திட்டு இருப்பன் –
பகவான் பாகவதன் நாணம் இப்படி கூறப் பட்டது.

—————————————————————————————————-

540-
ஆராயா நோக்கா -22
ஆலியா அழையா -பெருமாள் திருமொழி -3-2-
ஆராய்ந்து நோக்கி என்றபடி
ஆலித்து அழைத்து என்றபடி
இறந்தகால வினை எச்சம்

—————————————————————————————–

541-

இங்கே -21
இங்கே -23
நான் வழிப்பறி உண்ட தேசம் இது -வழிபறிக்க வந்து வழி பறி உண்டேன்
இங்கே இருவராய் வந்தார் -நான் நிதி எடுத்த தேசம் இது என்றாள் அங்கு
இங்கு என்று திருமணம் கொல்லையை காட்டுகிறாள் -இதுவோ திருவரசு –
இதுவோ திருமணம் கொல்லை -எட்டு எழுத்தும் பறித்த இடம் -என்னா நின்றது இ றே-

———————————————————————————————–

542-
என் ஒளி வளையும் மா நிறமும் -23-
என் உயிர் -திருவாய்மொழி -9-9-3-
நோவை விளைவித்ததுக்கு மேலே நோவுக்கு ஆசவாச கரமாய் இருக்கும் அத்தையும் கொண்டு போனார் –
மதீயம்ச நிகிலம் -தவைவ -என்று இருக்குமவள்
தேகாத்ம அபிமானிகளைப் போலே சொல்லக் கடவளோ என்னில் –
சம்ச்லேஷ தசையில் இதொரு வளை இருந்தபடி என் -சேரத்தியால் வந்த ஒளி இருந்தபடி என்
வடிவில் நிறம் இருந்தபடி என் -என்று கொண்டாடும் அவை என்பதால் சொல்கிறாள் –
அவனுக்கு ஆதரணீயமாய் இருக்குமவை அவ்வழியாலே தனக்கும் ஆதரணீயயமாய் இருக்கையாலே-என்னது -என்னலாம் இ றே
என் உயிர் –ஆத்ம ஸ்லாகை வாராதோ என்னில் -அவன் சேர்த்தி அழகு சொல்லி வாய்
வெருவுகிறான் -அது தன்னை தான் கேட்டிருக்கையாலே என் உயர் -என் இணை முலை -என்று சொல்லலாம் இ றே

————————————————————————————–

543
நம்மூர் -23
நந்தகோபனுடைய கோயில் -திருப்பாவை -16
உன் கோயில் -திருப்பாவை -23
கண்ணன் முற்றம் -பெரியாழ்வார் திருமொழி -1-1-1-
எனக்கு தேசம் பக்தாநாம்
அவளுக்கு உன்னை ஒழிய எனக்கு தேசமாவது என்
இரண்டு தலைக்கும் ஸ்வரூப ஹானி என்பதால் நம்மூர் என்கிறார்
இருவர் சத்தையும் உண்டாக்கும் தேசம் -என்னை பிரணயி யாக்கி உன்னை பிரணயினி
ஆக்கும் தேசம் -திருமந்தரம் போலே இருவருக்கும் பொதுவான ஊர்
கிருஷ்ணன் உகப்பது பாரதந்த்ர்யம் ஆகையாலே ஸ்ரீ வைகுண்டத்தில் இழவு தீர
ஸ்ரீ நந்தகோபர் திருப்பிள்ளையாய் அவர் அபிமானத்தில் ஒதுங்கி தயதற்கு மகன் போலே

உன் கோயில் வாச பூமி ஒன்றாய் இருவருக்கும் பொதுவாய் இருப்பது
இவன் வந்து இருக்கும் கோயிலுக்கு சேஷ சேஷிகள் உடைய ப்ரதான்யம் கொள்ளக் கடவது இ றே –
பிரணவம் போலவும் ஹிருதய கமலம் போலவும் -ராச மண்டலம் போலவும்
-அர்ஜுன ரதம் போலவும் -திருவரங்கம் நம்மூர் -இதுவன்றோ எழில் ஆலி -என்னக் கடவது இ றே
பெரியாழ்வார் கண்ணன் முற்றம் -கிருஷ்ணன் அவதரித்த போதே க்ருஹ நிர்வாஹன்
பிள்ளையாக நந்தகோபன் நினைத்து இருக்கையாலே -பரஸ்பரம் ஏற்பட்ட பரிமாற்றம்
இளைய பெருமாள் பெருமாளை தந்தையாக அபிமானிக்க
பெருமாளும் இளைய பெருமாளை தந்தையாக அபிமானிக்க
அவ்வோபாதி கண்ணனும் நந்த கோபரும் தம் தாமை பரதந்த்ரராக நினைக்கும் படி –
பிரணவம் உபய பிரதான்யம் -சப்தம் பிரதாந்யம் ஜீவனுக்கு அர்த்த பிரதாந்யம் பரனுக்கே
அது போலே திருவரங்கம் நம்மூர் -பிரபத்யே பிரணவாகாரம் ரங்கம் -என்னக் கடவது இ றே

——————————————————————————-

544-
சங்கிவை நில்லா -24
கழல் வளையே ஆக்கினரே -நாச்சியார் திருமொழி -11-2-
வெள்வளை மேகலை கழன்று வீழ -திருவாய்மொழி -10-3-7-
தான் போகை அன்றிக்கே -எனக்கு ஆஸ்வாச ஹேதுவான அவற்றையும் கொண்டு போனான்
அவன் போன போதே ஆற்றாமை குடி வந்தது
கையிலே வளையை பார்க்க -வளை-அவன் போக உபகரணங்கள்  அவனுக்கு முன்னே போயிற்று –
அவன் கையின் கார்யஸ்த்தால் வந்ததோ என்று மற்ற கையைப் பார்த்தாள்
இரு கையில் சங்கிவை நில்லா -சேஷியாகில் அவன் போகிறான் எனக்கு சேஷமான இவையும் போக வேண்டு மா –
சேதனன் ஆகையாலே இத்தலையில் குறை கண்டு அவன் போகலாம் அசேதனம் இவையும் போகணுமா –
வந்து கலந்தவன் போனால் சஹஜமான இவையும் போகணுமா -கைக்கு அடங்காதவன் போனால் கைக்கு அடங்கின இவையும் போகணுமா
கழல் வளை எழில் கொண்டார் என்று -இதனுடைய நாமத்தை மெய்யாக்கினார்
கழலும் வளை
விரஹ காச்யத்தாலே கழன்று விடும்படி உடம்பு க்ருசமானபடி
ஸ்வா பாவிக ஸ்த்ரீத்வம் கொண்ட ஆண்டாளுக்கும் நாயிகா பாவம் கொண்ட
ஆழ்வார்களுக்கும் இது சமானம்- மணிவல்லிப் பேச்சு வந்தேறி யன்று

——————————————————————————-

545-
உலகுண்ட பெருவாயர் -24
கடல் வண்ணர் -11
இத்தால் பிரளய ஆபத் சகனை சொல்லுகிறது அன்று -சக்கரவத்தி திருமகன் -தத் ஸ்வாபம்
பிரளய காலத்தில் ஜகத்துக்கு தம்மை ஒழிய செல்லாதது போலே என்னோடு கலக்க வருகிற போது அவன் வந்தபடி –
கடல் வண்ணர் -பெரிய பெருமாளைச் சொல்லுகிறது -ஸ்வபாவம் சொல்வது  இல்லை-
நிறத்தைச் சொல்லுகிறது- மா கடலுருவம் என்ற இடத்தில் ஸ்வபாவம் சொல்வதாக வியாக்யானம்

————————————————————————————-

546-
மின்னிலங்கு -25
கார்வண்ணம் -18
கார்வண்ணம் திருமேனி ஔ தார்யம்
கரு முகிலே ஒப்பர் ஸ்ரமஹதையும் சொல்லிற்று கீழ்
இங்கு காள மேகத்தை அருண க்ரணத்தாலே வழிய வாட்டினால் போலே
திருவாழி உடைய தேஜஸ் திரு மேனி எங்கும் ஒக்கப் பரவி -வடிவார் சோதி வலத்துறையும்
சுடர் ஆழி -ஒரு கையில் சங்கு ஒரு கை மற்று ஆழி ஏந்தி -தமஸ பரமோ தாதா சங்கு சக்கர கதா தர -என்று பெரிய மேன்மையை காட்டின படி
கிட்டின போது பெரு வயிற்ற கரு முகிலே என்றாள் -பேர நின்றவாறே பளபளத்துத் தோற்றுகிறபடி

——————————————————————————————-

547-
என் நலனும் -25
நலம் கொள் நா தன் -திருவாய்மொழி -1-8-6-
சர்வ ஸ்வாதானம் பண்ணுவாரைப் போலே சர்வ ஸ்வாபஹாரம் பண்ணிப் போந்தான்
நலனும் நிறைவும் சிந்தையும் வளையும் கொண்டு என்னை யாளும் கொண்டான்
அபஹரித்து போகை அன்றிக்கே சுமை யாளும் நானே ஆக வேணுமோ
கலியன் விஸ்தாரமாக அருளியதை ஆழ்வார் நலம் கொள் நாதன் சுருங்க அருளுகிறார்

————————————————————————————————

548-
அறுகால சிறுவண்டே -26
நும் கால்கள் என் தலை மேலே கெழுமீரோ நுமரோடே -திருவாய்மொழி -9-7-1-
கமன சாதனமாக ஆறு கால்கள் பூர்வர் நிர்வாகம்
கமன சாதனம் சிறகு ஆகையாலும் -மேலே தொழுதேன் -என்கையாலும்
என் தலையில் வைகைக்கு ஆறு கால்களாக ஆகப் பெற்றேன் -பட்டர்
தத்துவனை வரக் கூகிற்று ஆகில் தலை யல்லால் கைம்மாறு இலேன் -ஆண்டாள்
நும் கால்கள் -இவள் தலை இரண்டும் பரார்த்தம்
நுமரோடே சபரிகரமாக சபுத் பௌ த்ர ஸ கண -ஆசார்யவத் ஆசார்ய புத்ர வருத்தி
நும்கால் பைம்கானம் என்று ப்ரஹ்மரதம் பண்ணி -ஆசார்ய ஹிருதயம் ஸ்ரீ ஸூ க்தி-

—————————————————————————-

549-
ஓர் மாது -26
ஒருத்தி -திருவாய்மொழி -1-4-3-
ஒருத்தி -திருவாய்மொழி -6-1-4-
பேர் சொல்ல வேண்டா ஒருத்தி என்று சொல்லவே அமையும்
அம்பு பட்டு கிடந்தது ஒரு மான் துடியா நின்றது என்றால் எய்தவன் அறிவான் இ றே
அதவா
அத்வதீயை -சம்சாரிகள் முக்தர் முமுஷுக்கள் கூட்டு இன்றிக்கே
பிறந்திட்டாள் -என்னும்படி
ஒருத்தி-சம்சார விபூதியில் இவள் ஒருத்தி -சம்சாரிகள் அந்ய பரர்
நித்ய சூரிகளுக்கு விச்லேஷம் இல்லை -மற்றைய ஆழ்வார்கள் இவருக்கு அவயவம்
வைகல் பூம் கழிவாய் -திரு வண் வண்டூர் பதிகம் இரண்டிலும் தன்னை
ஒருத்தி யாக ஆழ்வார் அருளுகிறார்-

———————————————————————————

550-
இயம்பிக் காணே -26
பவள வாயனைக் கண்டு -திருவாய்மொழி -9-7-7-
உன்னை சத்கரிக்கும் சத்காரம் எல்லாம் காண புகுகின்றாய்
தழுவிக் கொள்ளுகைகாக புகுகின்றான்
நான் காணப் பெறாத வடிவை நீ காணப் போகிறாய்
அந் நோக்கையும் முறுவலையும் காண்கையாலே உனக்கு பேறு முற்பட்டது
இப்படி தூது சென்றார் சிறப்பு கூறபடுகிறது-

———————————————————————————

551-
நாராய் -27
தூயோமாய் வந்தோம் -திருப்பாவை -16
ஆர்த்தி இசையிலே தோற்றும் படி நாராய்
மிடற்று ஓசை காட்டி -திருவடி திரு ஆழியும் வடிவையும் காட்டாமல்
தனது மிடற்று ஓசை காட்டி விஸ்வசிப்பிக்க பண்ணினாப்  போலே
இவர்களும் ஆர்த்தி த்வனியை காட்டுகிறார்கள் –

———————————————————————————

552-
பைம் கானம் ஈது எல்லாம் உனதே யாக -27
பொன்னுலகு ஆளீரோ -புவன முழுது ஆளீரோ –திருவாய்மொழி -6-8-1
பைம் கானம் உபய விபூதிக்கும் உப லஷணம்
தனது அசந்நிதியிலும் உபய விபூதியும் இஷ்ட விநியோக அர்ஹம் ஆக்கும்படி
அவன் தன்னையும் தனது உடைமையும் இவளுக்கு ஆக்கி வைத்தபடி
கடக சமாஸ்ரயணம் ஆறாம் பத்தின் சாரம்
ஆசார்ய அதீனன் உபயவிபூதி நாதன்
தத்தே ரங்கீ நிஜமபி பதம் தேசிகாதேச காங்ஷி -என்னா நின்றது இ றே-

———————————————————————————

553-
மீன் கவர்ந்து உண்ணத் தருவன் -27
நிச்சல் பாலொடு மேவீரோ -திருவாய்மொழி -6-8-2-
தனக்கு சித்தித்த அம்சம் அவனுக்கு கொடுக்க –
கடகர்களுக்கு அவர்கள் உகந்த வஸ்து தேடி கொடுக்க வேண்டுமே
புத்திரனை ஓதுவித்த தக்கணையாக -கண்டு நீ தருவாய் எனக்கு -என்ற சாந்தீபனுக்கு வழங்கி அருளினான் கிருஷ்ணன்
இவை உகப்பது தேடுகிறாள் உண்ணும் சோறு எல்லாம் கண்ணன் என்று இருக்கும் பராங்குச நாயகியும்

—————————————————————————————-

554-
செங்கால மட நாராய் -27
தென் இலங்கை அரண் சிதறி -28
வைகல் பூம் கழிவாய் -திருவாய்மொழி -6-1-
மின்னிடை மடவார்கள் -திருவாய்மொழி -6-2-
தூத பரேஷணம் செய்து அநந்தரம் பிரணய ரோஷம் தலை எடுக்கிறது
இருவருக்கும் -ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்க்கு இன்பம் கூடி முயங்க பெறின் -திருவள்ளுவ நாயனார் –

———————————————————————————————

555-
இன்பம் எய்த -28
மின்னிடை –என்னுடைய பந்து -திருவாய்மொழி -6-2-1-
ச குடும்பமாய் ஆற்றிலே புக்கும் முடியும் குடும்பி போலே அவயவங்கள்
உடன் முடிய கடவேன் -முடிகை தான் பரமபத சததாநீயம் ஆம்படியான ஆற்றாமையால்-
அவன் சந்நிதியில் என்னது -என்பதும் முடிய பார்ப்பது தானே
த்வயஷர ஸ து பவேத் ம்ருத்யு -இ றே-

———————————————————————————————

556-
அன்றாயர் -29
-முனியே திருவாய்மொழி -10-10-
பிரணய ரோஷம் நிலை நிற்கில் இ றே அவன் வந்து முகம் காட்டுவது
அது செய்யாதே நடுவே எளிமை பட்டு பழைய பிரக்ருதியிலே விழுந்தார்
விழுந்த இடத்திலும் தரித்து இருக்கலாவது அவன் வந்து முகம் காட்டினால்  இறே
அது இல்லாமையலே முனியே -வில் பிறந்த பரம பக்தி இவருக்கு பிறந்து
தம்முடைய அநந்ய கதித்வத்தையும் ஸுவ தோஷ பூயசத்வத்தையும் முன்னிட்டு
பிரணயியான நீ முகம் காட்டாது ஒழிவதே -என்று கூப்பிடுகிறார்
நம் ஆழ்வார் முனியே -பரத்வத்தையும் அவதாரத்தையும் பற்றிக் கூப்பிட்டார்
இவருக்கு பராவஸ்தையும் அவதாரம் ஆகையாலே அவதாரத்தையும் அர்ச்சாவதாரத்தையும்
பற்றிக் கூப்பிடுகிறார்

—————————————————————————————————

557-
அலை கடலைக் கடைந்து அடைத்த -29
அது கடைந்து அடைத்த -திருவாய் மொழி -8-1-5-
மலை அதனால் அணை கட்டி –அலை கடலைக் கடைந்து -பெருமாள் திருமொழி -8-8-
பிராட்டியை லபிக்க கடலைக் கடைந்து
அவள் தனிமை தீர்க்க கடலை அடைத்து
சமுத்திர மதன பந்தனங்களை மாற்றி அனுபவிக்கிறார் குலசேகரர்

———————————————————————————————–

558-
அடி நாயேன் -29
அதனில் பெரிய என் அவா -திருவாய்மொழி -10-10-10-
அவனுடைய உத்கர்ஷதுக்கு அவதி இல்லை -என்னுடைய நிகர்ஷத்துக்கும் அவதி இல்லை –
திறந்த வாசல் எல்லாம் நுழைந்து திரிகை -நுழைந்த வாசல் எல்லாம் பரிபூதமாய் புறப்படுகை –
உடையவனும் உகந்து தொடிலும் ஸ்நானம் பண்ண வேண்டும்படி யான -ஜன்மம் –

சம்பந்தமே ஹேதுவாக நீ முகம் காட்டுவது ஒழிய புறம்பு கதி இல்லாதவன் –
ஆஸ்ரயண  வேளை யோடு போக வேளையோடு வாசி அற
ஆகிஞ்சன்யமும் ஸுவ தோஷ க்யாபனமும் காணும் இவருக்கு –
நாயேன் வந்தடைந்தேன் என்றார் முன்பு -இங்கே அடி நாயேன் -என்கிறார்
தமக்கு உண்டான நன்மைகள் அடங்கலும் போக உபகரணமாக நினைத்து இருக்குமவர்
நம் ஆழ்வார் அதனில் பெரிய என் அவா -என்று தலைக் காட்டுகிறார் -அதுக்கு ஹேது –

அவர்க்கு விரக்தி நைசர்க்கிகம் ஆகையாலே பிரேமத்தை
விளைக்கை ஆயிற்று கிருத்யம் -அதனால் அதனில் பெரிய என அவா –
என்னும்படிக்கு ஈடாக பண்ணினான் –
இவர் -வென்றியே வேண்டி –கலவியே கருதி நின்றவா நில்லா – நெஞ்சினை உடையராய் போருகையாலே இவரை
அடிநாயேன் -என்னும்படி யாயிற்று கிருத்யம் -ஆகையால் இவரை -அடிநாயேன் நினைந்திட்டேன் -என்னப் பண்ணினான்-

——————————————————————

559-
மின்னும் மா மழை தவழும் மேக வண்ணா -30
அரியை யயனை யரனை -திருவாய்மொழி -10-10-11-
அயன் அரன் என உலகு அழித்து அமைத்து உளனே -உபக்ரமம்
அவா அறச் சூழ் அரியை அயனை அரனை –ஜகத் காரணத்வத்தோடே தலைக் கட்டினார்
இவர் -மணி உருவில் பூதம் ஐந்தாய் -வடிவிலே உபக்ரமித்து
மின்னும் மா மழை தவழும் -என்று வடிவிலே தலைக் கட்டுகிறார்

——————————————————–

560-
மான வேல் பரகாலன் -30
அவா அறச் சூழ்ந்தாயே -திருவாய்மொழி -10-10-11-
மானவேல் -மங்கை வேந்தன் ஆனார் -மானவேல் பரகாலன் ஆனார்
பஷிகள் காலில் விழுந்தவருக்கு அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிராப்தியும் ஏற்பட்ட படி -திருமங்கைக்கு நிர்வாஹகர்  ஆனார்
வேல் எடுக்கவும் ஷமர் ஆனார் -கிஞ்சித் கரிக்கவும் பெற்றார் –
அத்தலையிலே பரிவால் எடுத்த வேல் இ றே
எம்பெருமானை கண்ட போதே -என் அவா அறச் சூழ்ந்தாயே என்ன- சக்தர் அல்லாமையாலும் –
கீழில் பாட்டுகள் போலே பல ஹானி தோற்றாமல்
எம்பெருமான் திருமேனி வர்ஷுக வலாஹகம் போலே இருந்தது என்கை யாலும் –
அயர்வறும் அமரர்களுக்கு தன்னை புஜிக்கக் கொடுத்துக் கொண்டு இருக்கும்படியை சொல்லுகையாலும் –
தாமே வேல் எடுக்க சக்தர் ஆகையாலும் –
பிரதி பஷத்தை நிரசித்தபடியை அருளிச் செய்கையாலும் –
இப்படிப் பட்ட பேச்சுக்களால் தம்முடைய பல ஹானி போய் -தம்முடைய அபேஷிதம் பெற்று த்ருப்தர் ஆனார்
என்னும் இடம் இப்பாட்டில் வ்யக்தம்
என் அவா அறச் சூழ்ந்தாயே -என்று ஸ்பஷ்டமாக கூற சக்தர் அற்ற ஸுகுமாரர் இ றே

——————————————————–

561-
அருளாய் -30
அருளே -பெரிய திருமொழி -1-1-4-
பாழியான் ஆழியான் அருளே என்று உபக்ரமித்து அருளாய் என்று நிகமித்தார்
திருமாலால் அருளப் பெற்ற சடகோபனைப் போலே அருளைக் கொண்டே உஜ்ஜீவிக்கும்
இவர் இறே -அருள் என்னும் தண்டு -அருள் என்னும் ஒள் வாள் -முதலாய நல்லான்
அருள் அல்லால் பல்லார் அருளும் பழுது இ றே-

————————————————————

562-
மேக வண்ணா -30
சிறந்த பொழில் சூழ் குருகூர் சடகோபன் -திருவாய்மொழி -5-4-11-
ஸ்ரமகரமான மேக ஸ்யாமமான வடிவைக் காட்ட ஐவரும் நிவ்ருத்த தாபர் ஆனார்
இது இ றே அவனுடைய ஆர்த்தி ஹரத்வம்
சிறந்த -ஆழ்வார் குண விஷ்காரத்தாலே தரித்தவாறே திருநகரியும் தரித்தபடி

இப்படி ஆர்த்தி ஹரத்வத்தால் தரித்தபடி

——————————————————————

ஸ்ரீ கோயில்  கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

அருளி செயல் அரங்கம் -திரு நெடும் தாண்டகம் சாரம் ..

December 1, 2011

சரம பிரபந்தம்

தனி ஸ்தானம் -பேர் இன்பம் எய்தினார்-
-ஈது அவர் தோற்றத்து அடைவு-இறுதி-ஆழ்வார்-
நின் நாமம் கற்ற ஆவலிப்பு-ஸ்ரீ ரெங்க பிரபு–ஸ்ரீ ரெங்கேசன்
நரகமே சொர்க்கம் ஆகும் -கடல் கடந்து பேச பயம் வேண்டாம் .
இசையில் மயங்கி-அரங்கன்-மதயானை-தென் ஆனாய் –
திரு மங்கை மன்னன்-திக் கஜம் இருக்கிறபடி -வட ஆனாய்-
திக்கு ஆனவான் -என்பர் -மத சப்தம்-குட பால மத யானை-
கலியன் அருள் பாடு -தனி கிரந்தம் பெரியவாச்சான் பிள்ளை அருளியது
அத்யயன உத்சவம்-வேத சாம்யம்-கொடுக்க-திரு மங்கை ஆழ்வார்-
வேதத்வம் உண்டே -திரு வாய் மொழிக்கு —
பெரிய பெருமாள் சோதி வாய் திறந்து -சாம்யம் –
இசைக்கு மயங்குவானே-
கைசிக பண்-வைஷ்ணவ ராகம்-கைசிக புராண படலம்-
அறியக் கற்று வல்லார் -கற்று அறிய வல்லார்- வைஷ்ணவர் ஆவார்- ஆழ் கடல் ஞாலத்துள்ளே-
அணைத்த வேலும் தொழுத கையும்-மங்கையர் கோன்-மா முனிகள்

நைவளமும்-நம்மை நோக்கா-
நட்ட பாஷை-கேட்பவர்கள் மனம் நைய வைக்கும் –
நாணினார் போல்-வெட்க்க பட்டான்-நயங்க ள் செய்தான்–
சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்
சாத்விகர்-இப்படி பேசும்படி –
என் மனமும் கண்ணும் ஓடி-அங்கே சேர்ந்து –
கைவளையும் மேகலையும் காணேன்
சங்கு பறிக்கும் வழக்கு ஆண்டாள்-
தாத்பர்யம் சங்கு வளை நாச்சியார் திரு மொழி பறை ஆண்டாள்
மகர நெடும் குழைக் காதன்-நான்கு தோளாக பணைத்து இருந்தான்
இது அன்றோ எழில் ஆலி என்றான் தாமே
திரு அடி தொட்டு–
வாரீர் -உம்முடைய ஆசைப் படி திரு வாய் மொழிக்கு வேத சாம்யம் தந்தோம் -அருளினான்.
திரு வாய் மொழி திரு நாள் உண்டாக்கி –
மதிள்கள் எடுத்தார்
புத்த விக்ரகம் கொண்டு வந்தார்-திரு நாகை-
தலை அறுத்து-திரு மாலை-புத்தோடு சமணம் எல்லாம்
கலை அற கற்ற மாந்தர் கற்பரோ கேட்பரோ
வெறுப்போடு சமணர்–பொருப்பரியன வார்த்தை பேசும்-நின் பால் போவதே நோயதாகி குறிப்பென கடையுமாகில்-
எனக்கு அடையுமாகில்- சட்டம் இடம் இருந்தால்-
அசக்தன்-ஆங்கே தலை அறுப்பேன் -கூர் வேல் கொடும் தொழிலன் நந்த கோபன்-எறும்பை -.
அரட்டமுக்கி-ரவுடிகளை ஒட்டி அடையார் சீயம்
ஸ்ரீ வைஷ்ணவ தர்மம் காத்து
தொண்டர் அடி பொடி-அருள் மாரி–கத்திரி கோல்பெயர்  — இன்ப மாரி-மாறன்
திரு பாண் ஆழ்வாரும் சம காலத்தார்
அமர்ந்தவர் கைங்கர்யம்-சுமந்தவர் இச்சை படி –
மதிள் திரு அரங்கத்தை-
திரு பாண் ஆழ்வார் பாசுரம் கண்டு மதிள் கட்டினாராம் .
கம்பர்-திருவாய் மொழி திரு நாள் கண்டு –
ஆதித்ய சோழன்-
கம்பனுக்கு -கற்ப்பார் ராம பிரானை -மற்றும் கற்பரோ- ஸ்ரீ ராமாயணம் செய்ய ஆழ்வார் ஆணை
மற்றும் கற்பரோ–தேவதாந்த்ரம் இல்லை அவதாராந்தரம் விலக்கி
மற்று ஒன்றினை காணாவே போலே
தொகை வகை விரி-தொகுத்தார் ஆழ்வார் வகுத்தார் கலியன் விரித்தார் கம்பன்
குக படலம்-மாசடைந்த மேனியான்-பரதன்
அனைவர் கண்ணீரை கண்டு பெருமாள் இரங்குவார்
குகன் திரு மங்கை ஆழ்வார் என்பர்
கம்ப சூத்திரம்
வணங்கினான்–வந்து எதிரே தொழுதானை–கூப்பிய கையுடன் பரதன்-
மலர் இருந்த அந்தணன் தன்மை-நாபி கமலம் நாராயணன் போல்
அடி வீழ்ந்தான்-காலில் விழுந்தான்-ராம பக்தன்-

தசரதன் போல் தழுவி கொண்டான் குகன்-
தக உடையோர்-ஆழ்வார்கள்-சிந்தையிலும் சென்னியிலும் விளங்கி -வீற்று இருக்கும் கீர்தியான்-குகன்
ஏழை ஏதலன்கீழ் மகன் என்னாது இரங்கி -அணி பொழில் திரு அரங்கத்து அம்மானே –
எம்பி உம்பி-
தலைமகன்-பெருமாள்- என்னாது-என்று கருதாது /சொல்ல நினைக்க அதை விட வில்லையாம் பெருமாள்
மட நோக்கி கடாஷம் பட்டதால்-உன் தம்பி என் தம்பி-
இளைய பெருமாள் பெருமாள் பக்கம் இருந்ததால்-
அடியேன்-சொல்ல சொன்னானாம்
மங்கை கொழுந்தி –
நற் பாலுக்கு உய்த்தினன்
நான்முகனார் நாட்டினுள்ளே
கிளிகள் அழுதனவாம் -கம்பர்
கிள்ளை ஒரு பூவை –கற்பத்தில் உள்ள சிசுக்களும் அழ -பெரியோரை என் சொல்லும் –
கற்ப சிசபாலர்களும்-நஞ்சீயர் வியாக்யானம்

—————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திரு நெடும் தாண்டகம்-30-மின்னு மா மழை தவழும் மேக வண்ணா!-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

March 2, 2011

மின்னு மா மழை தவழும் மேக வண்ணா!
விண்ணவர் தம் பெருமானே! அருளாய் என்று
அன்னமாய் முனிவரோடு அமரர் ஏத்த
அரு மறையை வெளிப் படுத்த அம்மான் தன்னை
மன்னு மா மணி மாட மங்கை வேந்தன்
மான வேல் பரகாலன் கலியன் சொன்ன
பன்னிய நூல் தமிழ் மாலை வல்லார் தொல்லை
பழ வினையை முதல் அரிய வல்லார் தாமே—-30-

நம்மை திருத்திப் பணி கொள்ள சாஸ்திரம் கொடுத்து —
தானே அவதரித்து கீதா சாஸ்திரம் அருளி-
ஆழ்வார்களை அவதரிக்கப் பண்ணி  –
உகந்து வர்த்திக்கிற தேசங்களைப் பாட வைத்தான் ..
நீலன்- நால்வர் உடன் அலைந்து வயலாலி மணவாளன் இடம் திவ்ய ஆபரணங்களை -வாயாலும் பல்லாலும் எடுக்க -நம் கலியனோ–
மந்த்ரம் வாள் வலியால் கொண்டான்–
மந்திர அரசு திரு மந்த்ரம்-
தேவர் அரசு-
ஆலி நாட்டு அரசனுக்கு-
அரச மரம் அடியில் கொடுக்க-
ஆத்மாவை நிழலில் வைத்து உடலை வெய்யில் வைத்து —
ருசி விளைய -தர்சனம் கிட்டாமல் —
பெரிய திரு மொழியில் அனைத்து அர்ச்சைகளை ஆடல் மா குதிரை ஏறி  மங்களா சாசனம் பண்ணி —
நிதியினை பவள தூணை -திரு குறும் தாண்டகம் -அர்ச்சை பிராவண்யம் மிகுந்து —
திரு எழு கூற்று இருக்கையில் சரண் அடைந்து –
சிறிய திரு மடல் விபவம் அழிக்கவும்
பெரிய திரு மடலில் அர்ச்சை அழித்து விடுவேன் என்று பயப்படுத்தி –
திரு நெடும் தாண்டகம் அருளுகிறார்..

மின்  உரு பின் உரு பொன் உரு தத்வ த்ரயம் —
மந்திரத்தை மந்தரத்தால் மறவாமல் வாழலாம் மட நெஞ்சமே சொல்லி-
திரி விக்ரமன் -பத த்ரயம் பாத த்ரயம் – –
திரு கோவலூரில் தொழுதும் போகு நெஞ்சே–பல திவ்ய தேசம் அருளி —
ஞானத்தில் தன் பேச்சு -முதல் பத்து –
அடுத்து தாய் பேச்சு –கடல் வண்ணர் செய்தால் காப்பார் யார் —
என் சிறகின் கீழ் அடங்கா பெண் பெற்றேன் —
மலை எடுத்தது கல் இவர் சொல் எடுத்து கிளியை சொல்ல சொல்ல —
வீணை கொண்டு அவனே என்று நினைத்து -இன்றும் அந்த திரு கோலம் சேவிக்கலாம் –
ஹிதம் ஒன்றும் எடு படாமல் அவள் நிலையை கொண்டாடி
பெரும் தவம் -பாக்யசாலி -பொன் தாமரை கயம் நீராட -பகவத் அனுபவம் போகம் –

இவள் பட்ட பாட்டை கண்ட தோழிக்கு சம்ச்லேஷ  ரசம் சொன்னாள்–
அழகு ஆபரணம் சேஷ்டிதம் காட்டி -அவரை தேவன் என்று அஞ்சினத்தை சொல்லி –
பண் இசைத்து பாடினதை சொல்லி —
இறையே நயங்கள் செய்து வசப் படுத்த –
மனமும் கண்ணும் ஓடி அவன் திருவடியில் புக –
ஈஸ்வர தத்வம்  கண்ணில் பட்டதை சொல்ல —
பிரிந்து போனதை புறப்பாடு-புள்ளூர்ந்து -பெரும் தவத்தவர் அரும் தவத்து முனிவர்  சூழ –
அழகு பெருமை காட்டி இவள் இடம் எல்லாம் கொண்டு போனதை சொல்லி–
ஆற்றாமை தலை எடுத்து தூது விட –
தேர் அழுந்தூர் திரு கண்ண புரம் வண்டுகளையும் நாரையையும் —
வருவான் என்று –மகா விசுவாசம் கொண்டு–பிரணய ரோஷம் தலை எடுக்க —
முடிந்து பிழைக்க -ஊடவும் முழுவதும் முடியாமல் –தன் தோஷம் அநந்ய கதித்வம் சொல்லி கூப்பிட்டார் —
சேவை பெற்றதை சொல்லி தலை கட்டுகிறார் —
தொல்லை பழ வினையை -அவித்யை வாசனை கர்மம் ஜன்மம் -அனைத்தையும் வெட்டி விலகும் பலன் சொல்லி —
அருளாய் என்று -மேக வண்ணன் தன்னைப் பாட –
ஹம்ச அவதாரம் கொண்டு அரு மறையை ஈந்து கொடுத்த அம்மான் –சேவை கொடுக்க –பன்னிய நூல் தமிழ் மாலை–

உப சம்காரம் நிகமம் -தான் பெற்ற பேற்றைச் சொல்லி–
ஞான தரிசன பிராப்ய அவஸ்தை –நாம் பெற போகும் பேற்றையும் அருளி -தலைக் கட்டுகிறார் ..
முதல் ஆழ்வார் திரு மழிசை ஆழ்வார் திரு பாண் ஆழ்வார் ஐவரும் பலன் சொல்லாமல் அருளினார்கள் —
தாமே வினைகளை முடிக்க பெறுவார்கள் —
சரணா கதிக்கு பிற் பட்ட பிரபந்தம் — மோஷ இஷ்யாமி -இச்சாலே நானும் வேண்டாம் நீயும் வேண்டாம் தன் அடையே விட்டு போகும் —

மிக பெரிய திரு உருவத்துடன் சேவை சாதிக்க -மின்னல் வெட்டிய மேகம் போலே –
நீல  தோயாத மத்யஸ்தா வித்யுத் –ஆழி போல் மின்னி -முழங்கி வில் இட்டு —
ஆழ்வார் தரைப் பட்டு அடி நாயேன்  என்று கிடகிறவரை எழுப்ப —
துணுக்கு என்று எழுப்ப –மின்னல் வெட்டி கர்ஜித்து —
நீர் சாவியிலே ஒரு காள மேகம் வர்ஷித்தால் போலே —
பட்டர் லகு சம்ப்ரோஷணம் நாய் நுழைந்ததால்  கேள்விப் பட்டு–நித்யம் தாம் வந்து -அருளினார் —
தாபம் நோக்கும் படி குளிர நோக்கி –வேம்கடத்தை பதியாக வாழ்வீர்காள் மேகம் தூது விட்டாள் ஆண்டாள்–
அவா அறும் படி சூழ்ந்தான் —
கீழ் பாசுரத்தில் படர்க்கையில் பேசினவர் இதில் மேக வண்ணா என்று நேராக பேசுவதால் முகம் காட்டியது தெரிகிறது ..
வண்  துவராபதி மன்னனை ஏத்துமின் -என்றால்- தோழி தீர்ப்பாரை பாசுரம்  -தொழுது ஆடி அடுத்த பாசுரம்–
இவள் சொல்லக் கேட்டே எழுந்து ஆடினார்–அது போலே இங்கும் —
முடிந்து பிழைப்போம் முன்பு சொல்லியும் கார்யம் கிட்ட வில்லை –
அடுத்து தோஷம் சொன்ன உடன் கார்யம் சித்தி –
பட்டர் தம்மை வைதவனுக்கு சம்பாவனை பண்ணிய ஐதிகம் -தான் செய்யாததை அவன் பண்ணியதால் —

நம் ஆழ்வார் ஜகத் காரணத்வம் உப கிரமித்து -பரம வேதாந்தி –
நெஞ்சுள் நிற்க பாடி நிறுத்தினான் -அவா அற சூழ் அரியை  ..அலற்றி வீடு பெற்ற –என்று அதை சொல்லியே -முடித்தார் —
பரத்வத்திலே நோக்கு –
இவர் வடிவில் ஆரம்பித்து வடிவிலே முடித்தார் –
சாஸ்திரம் கொண்டு நம் ஆழ்வார்-
திரு மேனி கொண்டு இவர் ..
சுபாஸ்ரயம் ஆஸ்ரயம்–வ்யாபிக்கிறான் -ஸ்வரூபத்தாலும் ரூபத்தாலும் –
முனிவர் ரிஷிகளுக்கு ஸ்வரூபத்தால் —
ஆழ்வார்களுக்கும் பிர பன்னர்களுக்கும் -நிறைந்து சோதி வெள்ளம் சூழ்ந்த ..
நீண்ட பொன் மேனியோடும் நிறைந்து ஒழிந்தான்
பச்சை மா மலை போல் மேனி பவள வாய்  கமல செம்கண் அச்சுதா அரங்கர் ஏறே —
ஐயப்பாடு அறுத்து தோன்றும்  தன் பால் ஆதாரம் பெருக வைத்ததும் அழகனூர் அரங்கம்–
ருசி ஜனக  விபவ லாவண்யம் வைஷ்ணவ வாமனத்வம் —
கண்ணின் உள்  நின்று அகலான் கருத்தில் கண் பெரியான் — தாரை -தும் அப்ரேமேயம்-நேராக பார்த்து மனசுக்கு எட்டாதவன் –

சஷுஷா அவிஷயம் -ஹோம குண்டத்தில் வந்து தோன்றிக் காட்க்டி கொடுகிறானே தேவாதி ராஜன் —
பிராமணருக்கு  அக்நி யோகிகள் ஹிருதயம்
ஞானிகளுக்கு சம தர்சனம் –
மந்த புத்திகளுக்கு சிறிய விக்கிரகத்தில் சேவை —
வந்து அருளி நெஞ்சு கொண்ட வானவர் கொழுந்து-மேகம் சென்று வர்ஷிப்பது போலே —
மின்னல் வெட்டு பிராட்டி அவனுக்கு –திரு ஆபரணம் வான வில் போலே –
மழை மேகம் கடலில் நீரை எடுத்து கடலிலே பொழியும் –
ராமன் வசிஷ்டர் வாமனாதிகள் இடம் கற்று அவர்களுக்கு பொழிவான் –
கனைத்து இளம் கன்று -ஓடி போய் சப்தம் ரஷிக்க போகும் துவரை உண்டு –
வந்தாய் போலே வாராதே -வாராதே போலே வருவான் மேகம் போல் —
நிர்பந்திக்க முடியாது
ஏரி வெட்டி வைத்துநீ கொண்டு பொழியும் பொழுது -மாரி  யார் பெய்விப்பார் மற்று –
சரண் அடைந்து காத்து இருக்க வேண்டும் /
ஜல ஸ்தல விபாகம் இன்றி பொழிவான் வசிஷ்டர் சண்டாளருக்கும் பொழிவான் —
திரு வாய் மொழி பாடினால் கட்டுண்டு இருப்பான் —
கருணை திவலை முத்து சிப்பியில் -போல ஆழ்வார்கள் மூலம் பிர பந்த முத்துகள் அருள வைத்தான் —
மேகமும் தூது
இவனும் இன்னார் தூதன் என்று கழுத்தில் ஓலை கட்டி பாண்டவ தூதன் —
மேகம் மழை சிலருக்கு ஆனந்தம்- பாஞ்ச சன்ய ஓசை நெஞ்சை உலுக்க பண்ணும் சிலருக்கு- பலருக்கு ஆனந்தம் –
சாதக பறவை ஆகாசம் நோக்கி இருக்கும்-
பிர பன்னர்களும் உன்னால் அல்லல் யாவராலும் குறை வேண்டேன் –என்று இருப்பார்கள்-
பரதன் சிஷ்யச்ய தாசச்ய இருந்தும் கார்யம் கொள்ள முடிய வில்லை அவன் திரு உள்ளமே –
மழையும் அப்படி தான் -அவதார பிறப்பிடம் கடல் அங்கே சயனம் —
மழையும் அப்படி –
மயில் ஆடும் ஆழ்வார்கள் இவனை கண்டு ஆடிப் பாடுவார்கள் —
விண்ணவர் தம் -அமிர்தம் மேகம் பார்த்து ஜீவித்து இருப்பவர்கள் —
அயர்வறும் அமரர்களுக்கு அதிபதி -கடல்  மேல் மழை பெய்தால் போலே —
பகல் விளக்கு -ஈசன் வானவர்க்கு –அது தேசமோ என் கண் பாசம் வைத்த பரம் சுடர் சோதி —

நானும் நித்யர் போலே — சரீர சம்பந்தம் அறுத்து ஒழிவில் காலம் எல்லாம் உடனே மன்னி
வழு இலா அடிமை செய்ய வேண்டும் படி அருள வேண்டும் —
இனி நான் போகல ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல்—அருளாய்–
பரம  பக்தி நிலைக்கு வந்தாலும் இரக்கமே வேண்டும் –பிர பின்னர் போலே —
ஆற்றாமை விஞ்சி இருந்தாலும் -பேற்றுக்கு உபாயம் அவன் கிருபையே —
விஷயாந்தரம் போக ஆழியான் அருளாய் முதலில் சொன்னார் —
இங்கு அனுபவம் கொடுக்கவும் அவன் அருள் தான் —
அன்னமாய்–தனக்கு அவன் வந்து அருளியதர்க்கு திருஷ்டாந்தம் —
எனக்கு பிரமேயம் கொடுத்தான்
பிரமாதிகளுக்கு பிரமாணம் கொடுத்தான் —
மூக்கு வழியாக வேதம் போக குதிரை முக அசுரர் கொண்டு போக மீட்டு கொடுத்தான் –
வேத சஷுசை இழந்தோம் என்று ரிஷிகளும் ப்ரமாதிகளும் வேண்டிக் கொள்ள –
அந்தணர் மாடு தனம் வேதம் தானே —
பிரம்மா வேதம் கொண்டு  கார்யம் செய்ய —
ரிஷிகள் வேதம் கொண்டு அனுபவிக்க –அபுருஷேதேயம்  கொடுக்க அன்னமாய் வந்தான் —
ஹம்சம் புருஷன் இல்லை என்பதால் –
அரு மறை-பெறுவதற்கு அரிய–வெளிப்படுத்த -சொன்ன இல்லை உருவாக்கிய இல்லை —
அநாதித்வம்-சுயம்பு –ஜீவாத்மா ஜனம் மரணம் சரீரம் சம்பந்தம்  எடுப்பதும் விடுவதும் தானே –

அம்மான்- சர்வேஸ்வரன்-உடையவன் ஆகையால் -அவர்கள் பிரார்த்திக்க இவன் கொடுத்தான் —
குடல் துவக்கு –ஒழிக்க ஒழியாத சம்பந்தம் –
வேதம் நான்காய் ஆரம்பித்து அரு மறை -இதில் சொன்னார் ..
இவர் தரித்த வாறே ஊரும் திடம் ஆனதாம் —
மங்கை நாடு ரத்னம் பொதித்த மாடம்- தூ மணி மாடம் துவளில் மா மணி —
பஷி காலில் விழுந்தவர் திரு மங்கை நாட்டுக்கு மன்னர் ஆனார் அவனை தரிசித்த படியால்-
மான வேல் பர காலர்-
இட்ட கால் இட்ட கைகளாய் இருந்தவர் வேல் எடுத்தார் –
கிஞ்சித் கரிக்கிறார்-
ஸ்ரீ வைஷ்ணவம் நிலை நாட்டினார் –
வேலைக் கொண்டு நாட்டிய நீச சமயங்கள் மாண்டன —
அவனுக்கு ரஷணத்துக்கு வேல் -கூர் வேல் கொடும் தொழிலர் நந்த கோபாலன் –
கா புருஷன் எடுத்தாலும் திரு மங்கை ஆழ்வார் ஆக்க வல்ல வேல் மான வேல்–
மான வேல் பர காலன் என்னுதல்-
மானம் அபிமானம் தாஸ்யன் என்கிற  –
அடியார்க்கு இன்ப மாரி அருள் மாரி -இவர் தானே எல்லா ஆழ்வார்களின் நால் ஆயிரமும் பெற்ற கடைக் குட்டி –
அபிமான துங்கன் செல்வனை போல இவர் -பர காலன் —
கையில் வாளாலும் பிர பந்தங்களாலும் பிரதி பஷம் வென்று –
வைதிக மதம் ரஷித்து ஸ்தாபித்தவர்-
புத்த விக்ரகம் கூட  வைதிக கைங்கர்யம் கலியன் – மிடுக்கு வாளிலும் பிர  பந்தம் அருளி /
கலி காலம் கடிந்தவர் -ஸ்வரூபம் ரூபம் குணம் விபூதி அனைத்தையும் அடக்கி பாடினவர்-
வாசாம் அகோசர பெருமை அடக்கிய பன்னிய -நூல் -லஷணம் பொருத்தி –
இது கொண்டு இலக்கணம் வரை அறுக்கும் படி –
தமிழ்-சர்வ அதிகாரமாய் இருக்கை –
மாலை ஈஸ்வரனுக்கு தலையால் தரிக்க வல்ல –
சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி -சங்க தமிழ் மாலை போல –
பழ வினை -காரிய காரணம் -அவித்யா கர்ம வாசனை பற்றுதல் ருசி துடிப்பு பிரகிருதி சம்பந்தம்
தாமே சவாசனமாக போக்க வல்லவர் –
தொல்லை பழ இரண்டு சப்தம் -மிக பழமை /அநாதி -காலம் –
புண்ய பாபம் கர்ம துவயம் வினை ஈஸ்வர திரு உள்ள ப்ரீதி அப்ரீதி /
பூர்வ உத்தரவினை ==அஞ்ஞானம்-ஞானம் பிறக்க வில்லை-அன்யதா ஞானம் -விபரீத ஞானம் –
ஸ்தூல சூஷ்ம அசித் சம்பந்தம் -அனந்த கிலேச பாஜனம் -பழமை அடி காணாத –
தாங்களே போக்க வல்லவர்–ஈஸ்வரன் முழம் கை தண்ணீர் வேண்டாம் என்கை–
ஈஸ்வர அப்ரீதி போனதால் தானே விலகும் —
அருளாய் என்று முனிவரோடு அமரர் ஏத்த கொண்டு–என் அவா அற சூழ்ந்தாயே என்ன சக்தர் அல்லாதவர் இவர் –
பெற்ற பேற்றைச் சொல்லி கொள்ள முடியாது —
கீழ் பாட்டில் உள்ள பல ஹீனம் இல்லை –
ரிஷிகளுக்கு ஸ்வரூபம் நோக்கு –
அயர்வர்கள் அமரர் அதிபதி புஜிக்க -தாமே வேல் எடுக்க சக்தி- கலியன்-
அதனால் இவர் தான் அருளாய் என்று அருளிச் செய்து தலைக்கட்டுகிறார் ..

——————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே .வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திரு நெடும் தாண்டகம்–29-அன்று ஆயர் குலமகளுக்கு அரையன் தன்னை-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

March 2, 2011

அன்று ஆயர் குலமகளுக்கு அரையன் தன்னை
அலை கடலை கடைந்து அடைத்த அம்மான் தன்னை
குன்றாத வலி அரக்கர் கோனை மாளக்
கொடும் சிலை வாய் சரம் துரந்து குலம் களைந்து
வென்றானை குன்று எடுத்த தோளினானை
விரி திரை நீர் விண்ணகரம் மருவி நாளும்
நின்றானை தண் குடந்தை கிடந்த மாலை
நெடியானை அடி நாயேன் நினைந் திட்டேனே—-29

மின் இடையார் சேர் கண்ணன்–ஊடல் -நீடிக்க சேர்த்தி உத்சவம் -பெரியவர் சொல் படி சேர்ந்தோம் –
பர கால நாயகி மார்த்வம் ஊடல் பண்ண முடியாமல் உரத்த குரலில் அவனை மீண்டும் கூப்பிடுகிறார் –
கதருவதே இயல்பு பக்தர்களுக்கு –கடல் வண்ணா கதறுகின்றேன் -தொண்டர் அடி பொடி ஆழ்வார் –
முனியே நான் முகனே –ஆழ்வாருக்கு போலே பரம பக்தி நிலை இவருக்கு –
ஞான தர்சன பிராப்தி   நிலைகளே –பக்தி ஒன்றாலே அடைய– கட்டி வைக்க முடியும் –
பர பக்தி பர ஞான பரம பக்தி –சூழ் விசும்பு பதிகம் பர ஞான நிலை

அந்தமில் பேர் இன்பத்து அடியோரோடு இருந்தமை வரை காட்டிக் கொடுக்க –
தரிசன  சமானா கார சாஷாத் கார -பிர பன்ன குல கூடஸ்தர் -அவா அற்று வீடு பெற்ற நிலை கடைசியில் —
பரம பிராப்தம் தேசாந்தரத்தில்  தேகாந்த்தரத்தில் தானே —
நாயேன் சொல்லிக் கொள்கிறார் இதில்–
நம் ஆழ்வார் பிறந்த பொழுதே பக்தி —
வென்றியே -நின்றவா நில்லா நெஞ்சு -அடிமை தனம் வளர்த்தார் இவருக்கு-
இன்ப  மாரி  அருள் மாரி இருவரும் —

முதல் பத்தில் -மின்  உரு பின் உரு  பொன் உரு என்று அசித் சித் ஈஸ்வர -ஸ்வரூபம் நிர்ணயித்து
ஸ்வரூப அநு ரூபமான புருஷார்த்தம் நிர்ணயித்து
விரோதி நிரசனம் புருஷார்த்த சித்தி அநு ரூபமான உபாயம் நிர்ணயித்து —
பக்தி- பிர பத்தி -துல்யம் இல்லை -இரண்டு வழிகள்–
அர்த்த பஞ்சகம் நிர்ணயம் பண்ணி
அதற்க்கு அநு ரூபமாக திரு மந்த்ரம் -வாயார சொல்ல நெஞ்சை நிர்ணயித்து —
அர்த்தத்தை நெஞ்சுக்கு விஷயம் ஆக்கி–
வாழ –பூம் கோவலூர் தொழுதும் -தெளிந்து– கால ஷேபம் செய்தார் ஞான தசை –தானான தன்மை —

நடுவில் பத்தில்-அனுசந்தானம் மட்டும் இன்றி –அனுபவம் முற்ற -ஆற்றாமை மிக்கு –விடாய்-ஏற்பட -தாய் பாசுரம் –

மூன்றாம் பத்தில் தோழி–இவளை தெளிவு படுத்த —
விருத்த கீர்த்தனம் பண்ண–கேள்வி பதில் மூலம் தரித்து –
மீண்டும் தாபம் மேல் இட்டு தூது விட்டாள்–
அனந்தரம் வராமல் பிரணய ரோஷம் தலை எடுத்தது –
அதும் நிலை நிற்காமல் நடுவில் எளிமை பட்டு தளர்ந்து தாபத்தில் அழுது அலற்ற–பரம பக்தி நிலை ஏற்பட்டு
அநந்ய கதித்வம் -நெடியான்-தோஷம் நிறைந்த நிலையையும் -ஆகிஞ்சன்யம் –அடி நாயேன் –முன் இட்டு கூப்பிடுகிறார் இதில் —

நம் ஆழ்வார் பரத்வம் அவதாரம் கூப்பிட்டார்– கோல வராகம் ஒன்றாய்– முனியே நான் முகனே –என்றாலும் —
இவருக்கு அவதாரம் பர அவஸ்தை என்பதால் அவதாரமும் அர்ச்சை கூப்பிடுகிறார் /
நப் பின்னைக்கு ஏழு ரிஷபம் —
கடலைக் கடைந்து பெண் அமுதம் கொண்டு
கடல் அடைத்து சீதைப் பிராட்டி பெற்றதை —
அனுகூலர் சம்பந்த சம்பந்தம் அளவிலும்  மோஷ அனுபவம் போலே
பிரதி கூலர்  சம்பந்த சம்பந்தம் அனைத்தையும் அழிப்பான்–
குன்று எடுத்தானே -அவர்களை காத்து –
திருக் விண்ணகரம் நின்றான் –
திருக் குடந்தை சயனித்து ஆஸ்ரித வியாமோகம் கொண்டு –கதறுகிறார் ..

காதல் வசப் பட்டவர்களுக்கு உதவினத்தை சொல்கிறார் —
கும்பன் யசோதை பிராட்டி கூட  பிறந்தவன் -ஆய மகள் அன்பன்–
விஷ்ணு-ஸ்ரீ தேவி வைஷ்ணவி– பூ தேவி தான் முதல் ஸ்ரீ வைஷ்ணவி
சாயா நிழல் போல்வனர்– உடன் அமர் காதல் மகள் –நப்பின்னை தானே அடியார்க்கு அடியார் முதலில் ..
அன்றும் இன்று போல் தானே ஆபத்து –ரஷிக்க வல்ல சமர்த்தன் வேண்டும் என்று –
ஏழு ரிஷபம் வைக்க -கோவை வாயாள் பொருட்டு –பொய் சிலை குரல் ஏற்றின் இருத்தம் இருத்து —
கோட்டிடை ஆடின கூத்து –ஒரு கொம்பை ஆலிங்கனம் செய்ய ஏழு கொம்பில் குதித்து அடக்கினான் —
ஆயர் குல மகளுக்கு –அபிஜாதையாகி நப்பின்னை பிராட்டிக்கு —
இவளைத் திரு மணம் பண்ணி கொள்ளத் தானே ஆய் குலம் புக்கான் –
நந்த கோபாலன் திரு மகன் ஆனான் —
புனிதன் இன்று தீர்த்தம் ஆடி வந்த புனிதத்வம் –
ஜனகர் ஷத்ரியன் ஆசை பட ஸ்ரீ ராமனும் இஷ்வாகு குலம் புகுந்தான் —
இடைக் குலம் தனி சிறப்பு -எளிமை பட -பிறந்து வாழ்ந்து –
அரையன் -கோன் ஸ்வாமி–
அலை கடல் இத்யாதி –பிராட்டிக்கு உதவின படி-
இரண்டு செயல் கடல் கடைந்து அடைத்து..லபிக்க கடைந்தான் -தனிமை தீர்க்க கடலை அடைத்தான்

அம்ருதம் கொடுப்பதும் — ராவணனை மாய்தததும் – குடி இருப்பு கெடுத்ததும் ஆனுசங்கிகம்–
கொண்டு உகந்ததும் -அம்மான் தன்னை–பிரண்யத்வம் காட்டிய ஸ்வாமி–
துர்வாசர் சாபத்தால் நஷ்ட ஸ்ரீ ஆன இந்த்ராதிகளின் அஸ்ரீ போக்கி –
குடி இருப்பு போக்கிய பிரணயித்வமும் அதனால் –
வந்த பரத்வம் இரண்டும் –
பெரிய நீர் படைத்து அடைத்து பெரிய  சீரியரே –ஸ்வாமித்வம் போகப் போகிறது என்று அம்மான் தன்னை —
குன்றாத வலி அரக்கர் கோன் –
வர பலத்தால் – வரத்தினில் சிரத்தை வைத்த –நேர்ந்த நிசாசரை–அரக்கர் கோனை-ராவணனை-
ராம விராம– வரமும் வரம் கொடுத்தவன் வரம் வாங்கினவன் மூன்றுக்கும் ஓயுவு கொடுத்தவன் —
கொடும் சிலை -சரம் தானே கொடுமை –சார்ங்கம் கண்ட பொழுதே எதிரிகள் மண் உண்ணும் படியான ஸ்ரீ சார்ங்கம் —
வில்லாண்டான் –குலம் களைந்து புல் பூண்டு இன்றி அழியச் செய்து —
செல்வ விபீடணனுக்கு வேராக-வேறாக- நல்லான் –
ராவனணன் நினைவாலும் விபீஷணன் நினைவாலும் பெருமாள் நினைவாலும் இஷ்வாகு குலம் தானே —

ஒருத்தன் அநு கூலன் ஆனால் சம்பந்த  சம்பந்தம் அளவும் கிருபை –
மகாராஜர் பக்கல் சிநேகம் வானர ஜாதி அனைத்தும் வாழ்ந்து போயின-
பிரதி  கூலன் சம்பந்த சம்பந்தம் எல்லாம் அழியும் படி-வென்றானை —
வானர ஜாதி ஒன்றுக்கும் வாட்டம் இல்லாத படி வென்றான் —
அடுத்து குன்று எடுத்த தோள்–நாலாவது சரித்ரம் பஞ்ச லட்சம் பெண்களுக்கு அனுபவம் —
பக்தி ருசி ஜனக விபவ லாவண்யம் திருக் குறுங்குடி –ரஷித்து ஆள் கொள்ள வான மா மலை பெருமாள் —
இந்த பெருமாளை பின்னானார் சேவிக்க–  காதலால் உந்த பட்டு -தூதம் –
பிரணய ரோஷம் தலை எடுத்து –
திரு விண்ணகரம் -சௌவ்குமார்யம் அநு கூலமான ஜல சமர்த்தி உடைய தேசம் – விண்ணகரம் மருவி

பொருந்தி -ஆஸ்ரித வாத்சல்யம் காரணமாக -ஹர்ஷகனுக்கு உழவன் -அகத்தில் கிடையை காட்டில்-மடை தடையிலே –
களத்து மேட்டிலே தான் -பக்தி உழவன் அவன் –
கிழங்கு எடுத்தால் அல்லது பேரேன் என்றி மன்னி கிடக்கிறான் –
உகந்து அருளின நிலங்களில் பிரவணராய் இருக்க வேண்டும் —
தண்  குடந்தை கிடந்த மால்–
சூழ் புனல் குடந்தை தொழுது முதலில் ஆரம்பித்தார் பெரிய திரு மொழி
நின்றார் கிடந்தார் நின்றால் போவார் -கிடந்தவர் பேரேன் என்று கிடக்கிறான் –
நடந்த கால்கள் நொந்தவோ –ஸ்ரம ஹரமான திருக் குடந்தை –கிடந்த மாலை-
பித்து பிடித்தவன் -நின்றவாறும் கிடந்தவாரும் –நினைப்பு அரியன  உன் மாயங்கள் —
ஆஸ்ரித வியாமோகம் நெடியானை- வரை அரைக்க முடியாது – சொல் இட்டு பேச முடியாத -நெடியானே வேம்கடவா –
என்றோ சரண் பண்ணினாலும் -நினைந்து  கொண்டு இருக்கிறான் –
நினைமின் நெடியான் -கொண்டாடுகிற பிர கரணம் இல்லை
சர்வ சுலபன் கிடீர் எனக்கு எட்டாக் கனியாய் இருக்கும் நெடியான் –
எட்டா பூ என்கிறார்-
கனி அனுபவம் பரி பக்குவம் என்பதால் சூடுகிற அனுபவமே கொடுக்க வில்லை –
சேயன் அனியன் சிறியன் மிகப் பெரியன் —
அவனுக்கு மேல் எல்லை இல்லை –
எனக்கு தாழ்ச்சிக்கு எல்லை இல்லை –
நாயேன் -திறந்த வாசல் எல்லாம் நுழைந்து போனவன்-
பைய நடமின் சொல்வார் –நுழைந்த வாசல் எல்லாம் பரி போதம்- அவமானம் வெளி ஏற்ற –
உடையவனே தொட்டாலும் ஸ்நானம் பண்ண வேண்டும் படி–சம்பந்தம் அடியாக நீ பார்த்து அனுக்ரஹித்தால் தானே வாழ்ச்சி
இல்லையேல் –வீழ்ந்து முடிந்ததே போக வேண்டியது தானே

ஆஸ்ரித தசையிலும் அனுபவிக்கும் பொழுது -நாயேன் வந்து அடைந்தேன் தொடங்கி ஆஸ்ரித -இங்கும் அடி  நாயேன் —
விட்டு பிரிந்தால் துடிக்கிறார்-
இருந்தும் அடி நாயேன் –
உலக விஷய வைராக்கியம் இருக்கே- கை முதல் இல்லை என்கிறாரே -இவை எல்லாம் தன் பிரயத்னம் இல்லை —
அவன் உண்டாக்கினது தான் –நீ அனுபவிக்க கொடுத்த வைராக்கியம் எல்லாம்
உன் போகத்துக்கு உபயோகம் போக உபகரணம் தானே நான் —
நம் ஆழ்வார் அதனில் பெரிய என் அவா என்று தலைக் கட்டினார்- தத்வ த்ரயம் விட பக்தி பெருக்கு –
இவர் நாய் தனம் -சு தோஷ கதனம் –விரக்தி  பிறவியிலே இருந்தது அவருக்கு –
காதல் வளர்த்தான் –இவர் அப்பிராப்த விஷய ஆசைப் பட்டு இருந்தார்–
பழைய நினைவால் அடி நாயேன் நினைந்திட்டேன்  என்கிறார் —
எப்படியோ இருந்தவனுக்கு நிர்ஹேதுமாக விஷயீ கரித்ததை நினைந்து கொண்டே இருப்பேன் —
இயற்க்கை புணர்ச்சி காந்தர்வ விவாகம் நினைத்துக் கொண்டு –
திரு மந்த்ரம் அர்த்தம் கொடுத்ததை  நினைத்துக் கொண்டு இருப்பேன் –ஸ்வாபதேச அர்த்தம்

———————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே . வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திரு நெடும் தாண்டகம்–28-தென் இலங்கை அரண் சிதறி அவுணன் மாள-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

March 2, 2011

தென் இலங்கை அரண் சிதறி அவுணன் மாள
சென்று உலகம் மூன்றினையும் திரிந்தோர் தேரால்
மன்னிலங்கு பாரதத்தை மாள ஊர்ந்த
வரை வுருவின் மா களிற்றை தோழி! என் தன்
பொன்னிலங்கு முலை குவட்டில் பூட்டிக் கொண்டு
போகாமை வல்லேனாய்ப் புலவி எய்தி
என்னிலங்கம் எல்லாம் வந்து இன்பம் எய்த
எப்பொழுதும் நினைந்து உருகி இருப்பன் நானே—28-

பிரணய ரோஷம் —
முடிந்து பிழைக்கப் போகிறேன் –
மாற்றி ஆனந்தமாக சேர்ப்பித்துக் கொள்ளப் போகிறான் அடுத்த இரண்டு பாசுரங்களில் ..
வைகல் பூம் கழிவாயில் தூது விட்டார் ஆழ்வார்
திரு வண்  வண்டூர் ரக்ஷணம் -விசுவாசம் -கொண்டு விட
அடுத்து  பிரணய ரோஷம் காட்டியது போல
என் உடைய பந்தும் கழலும் தந்து போ என்றது போல —
மேகம் தூது விட்டாள்-ஆண்டாள் –
சகுனம் வேற வருவது காட்ட –தவிக்க விட்டவனை ஊட வேண்டும் —
சேர வருவான் சம்ச்லேஷம் -பிரிவான் அடுத்து ஆனந்தம் குறைக்க —
கீழே சேர்ந்து பிரிந்தது தெரியுமே —
சேராமல் முகம் காட்டாமல் இருந்தால் –
சேஷத்வ பார தந்த்ர்யம் போகும் ஸ்வரூப நாசம் –
நாமே இல்லை துக்கமும் போகுமே -இருந்து துக்கப் பட வேண்டாமே —
முடிந்து பிழைப்போம் –இந்த நிலை –தூது விட்டோம் கட்டாயம் வருவான் என்பதே அடிப் படைக் கருத்து

தூது விடுகைக்கு அடுத்த தசை இது –பிரணய ரோஷம் –
கலங்கி இருந்தார் இது வரை- இடி விழுந்து தெளிந்தார்–சுப நிமித்தம் தெரிகை —
என் சினம் தீர்வன் நானே அரையர் அபிநயம் காட்ட-எம்பார் சொல்லி கர ஸ்பர்சம் இன்றி -முகம்  திருப்பி காட்டச் சொல்லி –
இதுவே சினம் தீர்க்க வழி –இதற்க்கு ஹேது என் என்னில் –
முடிந்து பிழைக்கக் கடவோம் –
ஸ்வரூப நாசம் முடிவது — -இதைக் கண்ட தோழி -பிரணய ரோஷம் எதிர் பார்த்து இருக்க —
தெளிந்து இருப்பதைக் கண்டு பயப்பட –
நெஞ்சில் ஓடுவது என் வினவ

அவன் வந்தால் பண்டு போல் முகம் காட்டாமல் –
கெடுவாய் மலை உடன் பொருதும் மல்லர் உண்டோ–
உபய விபூதி நாயகன் சர்வ  சக்தி  யுக்தன் -அபலை -தொளிக்கும் ரோஷம் உண்டு தலை மகளை காக்க சொல்கிறாள் —
பரனுக்கு காலன் நான்
ஈஸ்வர விபூதியை அழிக்க வல்ல திறமை உடையவள்  நான்-இதற்க்கு பதிலாக  —
பிரபு உடன் ஊடலாமா
பிரணயித்வம் தெரியாதவன் என்றேன் என்கிறாள் தோழி – –
இவர் பிரபுத்வம்- நாடு ஆளும் திறமையும்- படப் போகும் பாடு பார் என்றாள்–
தோழி  யோசித்து -ஆஸ்ரிதர்க்கு  கட்டாயம் அனுக்ரஹிப்பாரே –
கதைகள் பல பெண்ணுக்கு– சீதை காத்து இருந்தாளே -இது எல்லாம் பகட்டு —
கைக் கூலி கொடுத்து வால்மீகி வியாசரை எழுதி வைக்கச் சொன்னவன் —
நான் முடிகை தவிரேன் என்கிறாள் —
கடகர் ஆச்சார்யர் -பெருமாள் முகம் காட்டா விடில் அவன் மேலே கோபம் கொள்ளுவார் –
துஷ்க்ருதாம் க்ருதவான் ராம -திரு வடி நினைத்தாரே சீதை பிராட்டி பார்த்ததும் —
பெருமாளும் இவர் இடம் கணை ஆழி கொடுத்ததே இவர் எண்ணம் அறிந்து தானே —
இன்னும் உயிர் உடன் இருக்கிறாரே என்ற எண்ணம் -வால்மீகி -வைராக்ய சிகாமணி கோபம் கொண்டு இப்படி  எழுதும் பொழுது –
ப்ரணியத்வம் அறியாமல் யானை ஏற்றம் வில் வித்தை அறிந்து என்ன பலன்–
குறி அழியாமல் இருக்கிறாரே பெருமாள் —

ஸ்ரீ ராம திருவிக்கிரம கிருஷ்ண  மூன்று விருத்தாந்தம்  சொல்ல –
எல்லாம் பகட்டு – வேஷம் முடிந்தே தீருவேன் என்கிறாள் தலைவி —
தென் இலங்கை- யானை  வியாபாரம் பேசுகிறாள் —
மா களிற்றை -போன்றவனை -தருவித்துக் கொண்டு– அவனைக் கட்டி வைத்து –
என்னில் அங்கம் எல்லாம் –அவன் இடம் முன்பு  போன அங்கம் எல்லாம் -திரும்பி வந்து –
இன்பம் எய்த =உயிரை விட –துக்கம் போவதே இன்பம் எய்த –
தென் இலங்கை-
தர்சநீயமான -திருவடி மதித்த ஐஸ்வர்யம்–
பர காலன் முன்பு வீரன் ஆகையாலே அதை வீரம் படிந்த விருத்தாந்தம் –
பாடிய வாளன் படி துறை -திரு மங்கை ஆழ்வார் -சம்பந்திகள் அனைவருக்கும் மோஷம் வாள் வீசி எறிய
அது குத்திட்ட பாடிய வாளன் படி துறை —
தவராசன் படி துறை –ஸ்வாமி ராமானுஜர்-கேசவ பெருமாள் சந்நிதி சுற்றி காவேரி கரை அருகில் வாழ்ந்தார்கள் முன்னோர் —
அரண் பார்த்து தானும் தகப்பன்  வாயுவும் கருடனும் மட்டுமே இரவில் புக முடியும் என்றாரே —
திருவடி நெஞ்சு உளுக்கும் படி அரண் இருந்த படி–

சிதறி-
சுருக்கி -மண் வீடு கட்டி விளையாடி கலைத்தால் போல –
கிள்ளிக் களைந்தானை–அனாயாசமாக -இடறி இல்லை -நிறைய இருந்ததால் சிதறி–
தண்ணீரில் வீடு அடித்து போவது போல அனைவரும் அழிவார்கள்
விபீஷணன் தவிர மற்ற அனைவரும் வெள்ளம் மணல் கட்டடம் அழிவது போல –அவுணன் -வெம்  அசுரர் குலம் களைந்த வேந்தே –
ராக்ஷசர் -சென்ற -வந்த வரவால் பிராணன் போனதாம்-
யானை நடந்து போகும் பொழுது துவம்சம் பண்ணி போவது போல
கர தூஷணன்  நிரசித்து -மூல பலம் -தன்னை வாலிலே கட்டி திரிந்த வாலி  முடித்து –
கார்த்த வீர்ய அர்ஜுனன் பூச்சி போலே கட்டி வைத்தானே ராவணனை -அங்கதன் ராவணன் இடமே இதை எல்லாம் சொன்னானே —–
அனைத்தையும் முடித்து –
கடலை அரண் செய்து –
ஒரு பிராட்டிக்கு -உண்ணாது உறங்காது –ஒலி கடலை-தோழி சொல்ல —
செய்த கார்யம் -அபலையாய் இருப்பார் அகப் படுத்த செய்த கதை தான் இது —

அடுத்து திரி விக்ரமன்–
அபேஷா நிரபேஷமாக தலை தீண்டியவன் –
பாத பங்கயமே தலைக்கு அணியாய் -பிரார்திக்காமலே தீண்டி –
தாய் குழந்தையை அணைத்துக் கொள்வது போலே–உன்னையும் விட மாட்டான் –
கண்ட பேருக்காகா உதவினவன் —
மதம் பிடித்த யானை போல -திரிந்து -விமுகர் தலையிலும் அந்ய சேஷத்வ பரர் அனைவருக்கும்
வஞ்ச முக் குறும்பு உள்ளவருக்கும் –விசேஷஞ்சன் காண் —
விமுகர் தலைவில் வைப்பான் ஒழிய- எம்பெருமான் ஒழிய வேறு எங்கும் போகாத எனக்கு முகம் காட்ட மாட்டான் —

அடுத்து கண்ணன் பெண்களுக்கு அன்று தேர் கடாவிய பெருமான் —
மாயப் போர் தேர் பாகன்–சித்திர தேர் வலவா–
தனம் -கோவர்த்தனம் தரித்த தனம்-
தூது போகல்  சொல்ல வில்லையே -தேராலே அழித்தான் –
சங்கல்ப சக்தி யாலே முடிக்கிறவன் –
சுக்கிரன் கண்ணை துரும்பால் கிளறிய சக்கர கையன்
கொல்லா மாகொல் —
கொலை செய்து –அதி ரதன்– பிணமும் கண் காணாத படி தேரை நடாத்தி தூசி யாலே —
ஆடிய மா நெடு தேர்–நர்த்தனம் போலே இருந்ததாம் —
தேர் காலில் துகை உண்டு போம் படி ஆனதாம் –
திரௌபதிக்கு பண்ணிய -இவன் உனக்கு பண்ணுவானே –
ஒருத்தி குழலை முடிக்க -நட்டாரை மயப்பிக்க –
நம்பி -கெட்டுப் போக -தன்னை ஒழிய செல்லாதார் குழலை விரிக்கச் செய்பவன் –
யானை திண்மை செருக்கு மலை போலே —
ஆஸ்ரித விரோதி நிரசனம் திண்மை —
ஆஸ்ரிதம் கார்யம் பண்ணி முடித்த செருக்கு –தோழி-கூப்பிடுகிறாள்
என் கையால் அவன் பட போகும் பாடு பாராய் —

சுக்ரீவன் ராமன் – ஏகம் சுகம் துக்கம் –சொன்னது போல -என் துக்கம் பங்கு போடத் தடுக்காதே –அடுத்து கெஞ்சுகிறாள் —
படட்டும் விளக்காமல் /
என் உடைய திரு பொன் இலங்கு முலை அவன் மோவாய் எழுந்தால் போலேயோ என் முலை
பக்தி என் ஸ்த்ரீத்வம் அவன்- புருஷோத்தமன்– குறி அழியாமல் –
அவன் உண்டு அறியாமல் உறக்கம் பேணாமல் –சதைக ரூபா ரூபாயா அவனை ஸ்தம்பத்தில் சேர்த்து கட்ட போகிறேன்
பக்தி யால் கட்டுவது-
பக்தியால் ஏற்படும் ஆற்றாமை வெளி படுத்துவது —
போகாமல் பூட்டிக் கொண்டு – பர கால நாயகி முகம் காட்டாமல்  இருக்க –
அவன் போக முற்படுவான் -பட்ட பாடு எல்லாம் தெரியப் படுத்துவேன் –
முலை குவட்டில் பூட்டிக் கொண்டு-
வரை போன்ற களிறு –
மலையை மலையில் சேர்க்க -வல்லேனாய் சக்தி வேண்டும் –
அழகில் ஆழம் கால் பட்டால் முடியாதே –
நெஞ்சம் நிறைந்தன–இது ஓன்று தான் குறை —
மனசு சகாயம்  பண்ண வேண்டும் /
நெஞ்சு மேல் விழுந்து ஒழியாமல் இருக்க வேண்டும் –
தோழி நீ தடுக்காமல் இருக்க வேண்டும் –ஆச்சார்யர் போல் நீ —

புலவி எய்தி -அவனை பிரிந்து படும் துன்பம் அவன் சந்நிதியில் படுவேன் —
அவன் துடிப்பான்
அதவா
நான் படும் பாட்டை  அவன் பண்ணும் படி பண்ணுவேன் —
என்னில் அங்கம் எல்லாம் -வந்து –
இன்னொரு விச்லேஷத்துக்கு இலக்கு ஆகாத படி முடிந்து பிழைப்பேன் –
பிழைக்கும் பிள்ளை பிறந்த அன்றே போய் இருக்கும் இருந்தால் தானே துக்கம்–
இது ஒரு முலை இருந்த படி என் –
இது ஒரு அதரம் இருந்த படி என் —
அவன் கொண்டாடிய அங்கங்கள் எல்லாம் முடிந்தால் தானே அவன் வருந்துவான் –
ச குடும்பமாய் ஆற்றில் முடிவது போல –
அவயவங்கள் உடன் கூடி முடிய கடவேன் –
வந்து –
கன்றும் தாயும் ஒன்றாய் இருக்க வேண்டும் –
பரதன் கைகேயி போலே கருத்து வேறு பாடு படுத்தி பிரித்தான் –
ஞானம் அங்கம் எல்லாம் கொடுத்து பிரிந்து போயின
அவை அங்கு நின்று மீண்டு ஆஸ்ரித பூதனான என் இடம் வந்து சேர்ந்து முடிய வேண்டும் –
முடிகை தான் பரம பதம் —
எப் பொழுதும் நினைந்து உருகி —
வந்து நின்றதும் மேல் விழுவாய்-தோழி சொல்ல –
அத் தசையிலும் முடிவேன் –என்கிறாள் —
ஆசைப் பட்டு சேராமல் போனாலும் விதித்து
சேஷி சேஷன் -சொன்னாலும் முடியக் கடவேன் –
நினைந்து உருகி –நின்றால் எனக்கு ஆபத்து –
ஸந்நிஹிதன் ஆகி என்னை விட்டு இல்லை
சாகாச பேச்சு பேசுவான் – வந்து நின்றதும் நினைந்த மாத்ரம் முடிவேன் –
மனோ ரதித்த மாத்ரத்திலே முடிவேன்-
சௌவ்குமார்யம் –ஆழ்வார் -பிரணய ரோஷம் மதிள் கட்ட –
அவனும் புகுர முடியாமல் கிரமத்தால் செல்லாமை காட்டி
பிரணய ரோஷம் அழித்தான் -ஆழ்வாரை  சேர்த்து கொண்டான் —
நானே –பக்தி முதிர்ந்த நிலை பிரணய ரோஷம் முதிர்ந்த நிலை –
மதிர் மம /நான் கண்ட நல்லதுவே போல
அண்ணிக்கும் அமுதூரும்  என் நாவுக்கே போல நானே என் நிலை –
நம் ஆழ்வாரை போல இல்லை -சங்கல்பித்த உடனே அழிய கூடியவள் நான் என்கிறாள்

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே . வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

–

திரு நெடும் தாண்டகம்–27-செம் கால மட நாராய்! இன்றே சென்று-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

March 1, 2011

செம் கால மட நாராய்! இன்றே சென்று
திருக் கண்ண புரம் புக்கு என் செம் கண் மாலுக்கு
என் காதல் என் துணைவர்க்கு உரைத்தியாகில்
இது வொப்பது  எமக்கு இன்பம் இல்லை நாளும்
பைம் கானம் மீது எல்லாம் உனதே யாகப்
பழன மீன் கவர்ந்து உண்ணத்  தருவன் தந்தால்
இங்கே வந்து இனிது இருந்து உன் பெடையும் நீயும்
இரு நிலத்தில் இனிது இன்பம் எய்தலாமே–27

ஸூர சௌரி ஜநேச்வராக -சூரன் பிள்ளை கண்ணன் சௌரி பெருமாளையே குறிக்கும் பட்டர் —
64 சதுர யுகம் கண்ட பெருமாள் -கீழை வீடு என்பர்-
இதை  ஆண்டாள் -காட்டில் வேம்கடம் கண்ண புர நகர் சேர்த்து –
மன்னு குறுங்குடியாய்- வெள்ளறையாய்- சோலை மலைக்கு அரசே கண்ண புரத்து அரசே  –
காலை மாலை கமல மலர் இட்டு ஆழ்வார் – –உடம்பின் முடிவில் -மரணம் ஆனால் வைகுந்தம் கொடுக்கும் பெருமாள்-
சரண்ய முகுந்தத்வம் -மோஷ பூமி பிரதன் –
பித்தேறிக் கொடுக்கிறான் -அவனைத் தான் செம் கண் மால் என்கிறார் இவரும் இங்கு —

கடகர் -சேர்த்து வைப்பவர் -திருக் கண்ண புரம் நோக்கி –
அத்யாவசியம் ஆழ்வாருக்கு- கிளம்பு- வண்டுகளையும் கூட்டி வருவான் —
கடலும் கடலை சார்ந்த இடமே பிரிந்தவர் இருக்கும் இடம் –
அது எல்லாம் உனக்கு தருவேன் -இருள் தரும் ஞாலத்தில் இங்கேயே ஸ்ரீ வைகுண்ட அனுபவம் எய்தலாம் –
இன்றே புறப்பட வேண்டும் –திவ்ய தேச ஆசையால் அங்கு அங்கு இருப்பான்–
அயோதியை கிளம்பி திரு அரங்கம் தங்கினவன் –
தடி போட்டு கிளப்பணும்-
தேர் அழுந்தூரில்  நிற்பான் -கருவறை போல் நின்றான் –
பிரயோக சக்கரம் கொண்டு நிற்கிறான் –
என் துணைவருக்கு உரைத்தியாகில் –இன்பம் வேற ஒன்றும் இல்லை-அறிவிப்பே அமையும் —

வண்டுகள் சென்று சொல்லி மறு மாற்றம் கொண்டு வரும் வரை தரிக்க சக்தி இல்லை —
சீதை ராமன் காத்து இருந்தார்கள்–இவர் அத்வீதியம் —
நாரையை -கண்டவற்றை அடைய ஏவுகிறாள்
பக்ஷி ஜாதி சீர்மை பெற்றது ஆழ்வார்களால் —
காம தேவனை ஆண்டாள் தொழுதாள் முதலில் —
அயோத்யா வாசிகள் அனைவர் காலிலும் விழுந்தது போல –
குயில் காலில் விழுந்தாள்–
கூடிடு கூடலே அசேதனம் கூட–
செம் கால மட நாராய்-சிவந்த காலை பார்த்ததும் —
சம்ச்லேஷ திசையில் அவன் திரு வடி பிடித்தும் -தன் காலை அவன் கொண்டாடி இருந்தானே —
ஆச்சார்யர் திருவடியே உத்தேசம்–
இது ஒரு காலும் சிகப்பும் இருந்த படி என் -சிவந்த கால் உடன் வாசனை உண்டு இவளுக்கு —
கரு முகை மாலையை சும்மாடு வைத்தது போல –
இந்த அழகிய கால் கொண்ட உம்மை தூது விடவோ–பார்த்து கொண்டே இருக்கலாம்-
அஷ்ட புய கரம் வாய் திறந்து ஓன்று பணித்தது உண்டு-சொன்ன வாயின் அழகை பார்த்து பேச்சு கேட்க்க வில்லை —
ஆள் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயன் —
அவன் காலோடு ஒக்கச் சொன்னதை தப்பைச் சொன்னேன்-
தன் காலை தரும் அத்தனை அவனுக்கு-
தன் காலையும் தந்து அவனையும் கொடுக்கும் ஏற்றம் –
ஆச்சார்யர் தம்மையும் தந்து அவனையும் கொடுப்பாரே –
சிந்தை யினோடு –தந்த அரங்கனும் தன் சரண் தந்திலன் தான் அது தந்து -அமுதனார்–
பாட்டு கேட்க்கும் இடமும் —எல்லாம் வகுத்த  இடமே இருக்க கடவன் –ஐந்தும் ஆச்சார்யர் தானே —
தானும் சுலபனாய் இருந்து அவனையும் சுலபனாய் ஆக்கும் பிராட்டி ஆச்சார்யர் போலே

அறிவு இழந்து முறை கெட பரி மாறும் -மட நாராய் —
ப்ரணியத்வம் தெரிந்த –
மடப்பம்-ஸ்த்ரீத்வம் பெருமை- என் இழவு போகும் பூரணத்வம் உண்டு —
நாலையும் சொல்வதற்கு உப லஷணம் அச்சம் நாணம் மடப்பம் பயிர்ப்பு —
சாஸ்திரம் கண்டு அச்சம் /பெருமாள்  மோஷ மண்டலம் கை காட்டி உடையவருக்கு கொடுக்க –
நம்மை கண்டு வெட்கி உபதேசம் —
அம்மே என்பாரை போலே நாராய் என்கிறாள் —
போக்கிடம் அற்று –வழி பறி கொடுத்து கலங்கி இருக்கும் பர கால நாயகி இதை தெப்ப கட்டை போல –
எங்கே சீதை தேடி போன பெருமாளுக்கு-கோதாவரி சொல்ல வில்லை-
சபரி கண்டதும் சுக்ரீவன் இருக்கும் இடம் சொல்ல  -திருவடி ஸந்நிஹிதன் ஆனதும் –அம்மே என்றார் போலே –
தசரதன் பிள்ளை- இந்த அலைச்சலுக்கா புத்திர காமோஷ்டி யாகம் பண்ணிப் பெற்றார் –
அவர் தோன்றிய ஆனந்தம் திருவடி கண்டதும் ஹா -வால்மீகி சில இடத்தில் ஹா சப்தம்–
நாராய் -சுரத்துடன் ஆற்றாமை எல்லாம் தோற்ற  நாராய் என்கிறாள் –
ஆடி ஆடி அகம் கரைந்து பாடி பாடி கண்ணீர் மல்கி –சிந்திக்கும் திசைக்கும் -இட்ட கால் இட்ட கைகளாய் இருக்கும் —
எழுந்துலாய் மயங்கும் கை கூப்பும் கட்டமே காதல் என்று மூர்சிக்கும் –
எரிகிற விளக்கு பிரகாசமாய் போல எழுந்த உடன் பயம் -எம்பார்-
சிந்த்கிக்கும் திசைக்கும் தேறும்  -தேற்றி கொண்டு எழ -ஆடி ஆடி நினைத்து நினைத்து –
அது போல ஆற்றாமை இசையிலே தோன்ற-பட்ட மகிஷி  –கைக் கூலி செய்து தானே கார்யம் செய்வது இருக்க –
இவள் பிரார்த்திக்க வேண்டி இருகிறதே

இன்றே -முதலில் –
எங்கே சொல்வதை விட இன்றே சொல்வது இவளுக்கு முக்கியம்
ஷிப்ரம்-விபீஷணன் –
நில்லவா நில்லா நெஞ்சம் -ராமனே வந்து ரஷித்து விடுவான்
நீங்கள் பேறு இழப்பீர்கள்  –
அவன் ஸ்வரூபம் பார்த்தாலும்
இன்றே –
நானும் அநந்யார்ஹ சேஷ பூதை —
ஷண நேரம் இருக்க முடியாமல் துடித்த ராமன் படி- ந ஜீவேயம் ஷ்ணம் அபி- -ஜலாம் மத்ஸ்யம் என் படி  –
நீர் பசை அற்று மீன் உயிர் விடுவது போல —
ரிஷிகளும் அல்லாத ஆழ்வார்களும் -சொல்வது போல இல்லை இவர்
திருக் கண்ண புரம்-பாவ பந்தம் -ஸ்வாபாகிகம் –
அனந்தாழ்வான் -திரு வேம்கடம் உடையான்//
பட்டர் -அழகிய மணவாளன் /
ஆழ்வார் -திரு தொலை வில்லி மங்கலம்/
சோமாசி ஆண்டான் -எம்பெருமானார் —
பாடு வித்த முக்கோட்டை–
புக்கு —
அங்கே விடாமல் இங்கே விடுவான் என் –
திரு அழுந்தூரில் தரிக்க மாட்டான் -23 மாரி யாம் வந்த கார்யம் ஆராய்ந்து அருள்–
யோசிக்க– மகா பலி யாக சாலை நடந்தாயே –
இலங்கை நடந்தாயே- நினைக்க -வேகமாக அவன் வர வைத்து போசிக்க வேண்டிய திரு வடியை நடக்க வைத்தோமே என்று
போற்றி பாடினாள்-நினைவு ஒன்றுமே வேண்டும் –
கிளம்பி வேகமாக வந்து கொண்டு இருப்பான் –
ராஜ பாட்டை போகாமல் வயல் வழியே போ —
வண்டும் தானும் அரை குலைய தலை குலைய எதிரே வருவான்-கருடன் உடன் கஜேந்த்ரனை ரஷிக்க கூட்டி வந்தானே –

என் செம் கண் மாலுக்கு —
மால் உபய விபூதியும் தான் இட்ட வழக்காய் இருகிறவன்–
என் மால்-பவ்யன் –
என்னை எதற்கு தூது விடுகிறார் –
ஆச்சார்ய பதவி உனக்கு என்பதால்-வாய்ப்பு உண்டு –
என் அபிமானத்தில் ஒதுன்கினவன்-நினைக்க நினைக்க அதற்க்கு பதில் இஷ்வாகு குல குணம் –
யார் வந்தாலும் அங்குள் அக்ரேண–இச்சன்னு கரி கணேஸ்வர-
குரங்கு கூட்ட தலைவா–என்றானே பெருமாள்–
தூதன் திருவடிக்கு பெயர் கொடுக்க –கண் அழகை காட்டி ஜெயித்தவன் ஜிதந்தே புண்டரீகாஷா —
பிரிகையால் உறக்கம் இன்றி கண் குதறி சிவந்து இருக்கும் –
சாரூப்ய மோட்ஷம் -திருக் கண்ண புரம் –பெரும் பித்தர்-
தம் பித்தை காட்டி நம்மை பித்தேற்றியவன்–
மயல் மிகு-பிச்சேறி இருக்கையும்
எதிரி  தலையை பிச்சேற்றதுவதும் அவனுக்கு இரட்டை வேலை–
மாலாய் பிறந்த நம்பி மாலே செய்யும் மணாளன் —
மாலும் அது -வாஞ்சை திரு வாய் மொழி நூற்று அந்தாதி மாலே மாய பெருமானே —-
தானும் பித்தன் பனி மலர் பாவைக்கு —

என் காதல் –
இது அவன் உடைய காதல் இல்லை -என்று சொல்லச் சொல்ல –
மின் இலங்கு திரு உருவம் குறி அழியாமல்–
பொன்னார்- பசலை -உடன் இருக்கும் என் காதல்-
முக்தர் காதல் போல் அன்று —
விஷயாந்திர ஆசை சம்சாரிகள் போல உன் மேல் இருக்கும் அன்பு வேண்டும் பிரகலாதன்-அது போல என் காதல்-
நாட்டார்  காதல் போல் அன்று —
ஞானம் பிறந்தவாறே காதல் விடுவார் சம்சாரிகள் — சுகம் கொடுக்க காதல்  முக்தர் உடையது –
எனக்கு துக்கம் கொடுக்கும் காதல்–
என் துணைவர்க்கு –துணைவனா -பிரிந்தவனை–பைத்தியம் தானே வார்த்தையிலே தேறியும் -துணைவன் எண்ணம் மாறாது

விட்டு பிரிய முடியாத பந்து —
எல்லா அவஸ்தையிலும் –ஈஸ்வரனை ஒழிந்தவர் ரஷகர் இல்லை
விமுகராய் இருந்த பொழுது சத்தையை நோக்கி
ஆபி முக்கியம் திரும்பி பார்க்க பற்றுதல் அனுபவம் கொடுத்து
பிரிந்த பின்பும் சத்தை கொடுத்து
புனல் அரங்கம் என்று சொல்லி போனானே —
ஆறு படிகள் – ஈஸ்வரஸ்ய ஸுஹார்த்தம் -அத்வேஷம்- ஆபி முக்கியம்- சாது சமாகம்- மகா க்ரமம் படிக் கட்டுகள் வைத்து –
துணையாய் இருக்க ஆசை உண்டு–
ஆற்றாமை போக்க அவன் ஒருவனே –
உரைத்தியாகில்–சொன்னால்–
கடகரை  நியமிக்க வில்லை பிரார்த்தனை–
ஆகில்–
அவர் அழகில் கால் தாழ்ந்து–
போன கார்யம் மறந்து –
உண்ணப் புக்கு வாயை மறப்பர் – மறந்து இருப்பாய்–
ஒருவரையும் நின் ஒப்பார் இல்லை -என் தசையை அறிவிப்பாரில்-
தாரின் ஆசையில் போயின நெஞ்சமும்  தாழ்ந்தது ஓர் துணை காணேன்  –
மா கடல் கரிய கண்ணன் —
ஸ்ரீ ரெங்கனுக்கு நீர் இருக்க -தூது சொல்லாமல் -தூது விட்ட பிழை -பிள்ளை பெருமாள் ஐயங்கார் —
திரும்பி வருதல் இன்றி என்னையும் மறந்து  தன்னையும் மறந்ததே —
தடை தாண்டி என் தசை அறிவிப்பீர் ஆகில்–
இது ஒப்ப எனக்கு இன்பம் இல்லை–சொல்வதே சுகம்–
அறிவிப்பே அமையும்
விளம்பம் இதுவே —
அவனால் காத்து இருக்க முடியாது அவன் மனசு இன்னு வரவில்லையா துடித்து கொண்டு இருக்கிறான்

வரவு தப்பாது –புருஷோத்தமன் –
நாளும் –உபகாரம் பண்ணி– போய் விடாமல் நான் பண்ணும் கிஞ்சித்கார ஸம்ருத்தியும் கொள்ள வேண்டும் –
காட்டிக் கொடுத்த ஆச்சர்யனுக்கு கைங்கர்யம் பண்ணிக் கொண்டே இருக்க வேண்டும்–
அவனுக்கு பிரியமானதைக் கொடுக்க வேண்டும் -யாவத்தா ஆயுஷும் —
உபய விபூதியும் நான் இட்ட வழக்கு போல வைத்து இருக்கிறானே —
பரப்பை உடைத்தான கடலுள் சோலை அடைய –
பிரிந்தார் இரங்கும் இடம்  நெய்தல் -ஈது எல்லாம் கண்ணால் காணும் அளவும் —
உபய விபூதிக்கும் -பொன் உலகம் ஆளீரோ புவனம் ஆளீரோ–
நான் கிட்டிய பின் வேற இடம் அவனுக்கு வேண்டாம்-
நீ காட்டின இடத்தில் இருப்போம் —
உனதே ஆக —
எனக்கும் உனக்கும் பொதுவாக இல்லை–
பழன மீன் –
இடம் மட்டும் இல்லை –
மத்ஸங்களும் யானைக் கன்று போல இருக்கும்- கொழும் கயலாய்  –
இளந்த பழம் அடை கொடுத்தான் தசரதனுக்கு –
தனக்குப் பிடித்ததை அவனுக்கு கொடுக்கலாம் –ஆச்சர்யருக்கு பிடித்ததை கொடுக்க வேண்டும் –
அவருக்கு உகந்ததை தேடி கொடுக்க வேண்டும் –கவர்ந்து உண்ண –
கொத்தி கொண்டு மேல் விழுந்து புஜிக்க வேண்டும் படி இருக்கும் —
தருவன் –
என் கண் முன்னே இருந்து  புஜிக்க வேண்டும்-
வந்து -அவனை போலே உபகரித்து  -பின்பு வாராது ஒழியாதே —
உன் பெடையும் நீயும் –
ஏ காங்கியாய்  இல்லை –
உனக்கு அபிமத விஷயம் கூட்டி கொண்டு —
திரு வாய் மொழி துணைக் கேள்வி–
அந்தமில் பேர் இன்பம்-நலம் இங்கேயே அனுபவிக்கலாம்–
அனந்த கிலேச பாஜன சம்சாரத்தில் நல்ல பதத்தால் மனை வாழ்வார் கொண்ட பெண்டீர் மக்கள் வாழப் பெறலாம் —
சரீர சம்பந்த திசை என்பதால் ஆச்சர்யர் பிரியமானதை கொடுத்து  வர்த்திக்கும் ஏற்றம் –
தெள்ளியீர்  அனுபவம் இங்கு தான் உண்டு -வையத்து நீடு நிற்பார்களே —

—————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே . வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-