மின்னு மா மழை தவழும் மேக வண்ணா!
விண்ணவர் தம் பெருமானே! அருளாய் என்று
அன்னமாய் முனிவரோடு அமரர் ஏத்த
அரு மறையை வெளிப் படுத்த அம்மான் தன்னை
மன்னு மா மணி மாட மங்கை வேந்தன்
மான வேல் பரகாலன் கலியன் சொன்ன
பன்னிய நூல் தமிழ் மாலை வல்லார் தொல்லை
பழ வினையை முதல் அரிய வல்லார் தாமே—-30-
நம்மை திருத்திப் பணி கொள்ள சாஸ்திரம் கொடுத்து —
தானே அவதரித்து கீதா சாஸ்திரம் அருளி-
ஆழ்வார்களை அவதரிக்கப் பண்ணி –
உகந்து வர்த்திக்கிற தேசங்களைப் பாட வைத்தான் ..
நீலன்- நால்வர் உடன் அலைந்து வயலாலி மணவாளன் இடம் திவ்ய ஆபரணங்களை -வாயாலும் பல்லாலும் எடுக்க -நம் கலியனோ–
மந்த்ரம் வாள் வலியால் கொண்டான்–
மந்திர அரசு திரு மந்த்ரம்-
தேவர் அரசு-
ஆலி நாட்டு அரசனுக்கு-
அரச மரம் அடியில் கொடுக்க-
ஆத்மாவை நிழலில் வைத்து உடலை வெய்யில் வைத்து —
ருசி விளைய -தர்சனம் கிட்டாமல் —
பெரிய திரு மொழியில் அனைத்து அர்ச்சைகளை ஆடல் மா குதிரை ஏறி மங்களா சாசனம் பண்ணி —
நிதியினை பவள தூணை -திரு குறும் தாண்டகம் -அர்ச்சை பிராவண்யம் மிகுந்து —
திரு எழு கூற்று இருக்கையில் சரண் அடைந்து –
சிறிய திரு மடல் விபவம் அழிக்கவும்
பெரிய திரு மடலில் அர்ச்சை அழித்து விடுவேன் என்று பயப்படுத்தி –
திரு நெடும் தாண்டகம் அருளுகிறார்..
மின் உரு பின் உரு பொன் உரு தத்வ த்ரயம் —
மந்திரத்தை மந்தரத்தால் மறவாமல் வாழலாம் மட நெஞ்சமே சொல்லி-
திரி விக்ரமன் -பத த்ரயம் பாத த்ரயம் – –
திரு கோவலூரில் தொழுதும் போகு நெஞ்சே–பல திவ்ய தேசம் அருளி —
ஞானத்தில் தன் பேச்சு -முதல் பத்து –
அடுத்து தாய் பேச்சு –கடல் வண்ணர் செய்தால் காப்பார் யார் —
என் சிறகின் கீழ் அடங்கா பெண் பெற்றேன் —
மலை எடுத்தது கல் இவர் சொல் எடுத்து கிளியை சொல்ல சொல்ல —
வீணை கொண்டு அவனே என்று நினைத்து -இன்றும் அந்த திரு கோலம் சேவிக்கலாம் –
ஹிதம் ஒன்றும் எடு படாமல் அவள் நிலையை கொண்டாடி
பெரும் தவம் -பாக்யசாலி -பொன் தாமரை கயம் நீராட -பகவத் அனுபவம் போகம் –
இவள் பட்ட பாட்டை கண்ட தோழிக்கு சம்ச்லேஷ ரசம் சொன்னாள்–
அழகு ஆபரணம் சேஷ்டிதம் காட்டி -அவரை தேவன் என்று அஞ்சினத்தை சொல்லி –
பண் இசைத்து பாடினதை சொல்லி —
இறையே நயங்கள் செய்து வசப் படுத்த –
மனமும் கண்ணும் ஓடி அவன் திருவடியில் புக –
ஈஸ்வர தத்வம் கண்ணில் பட்டதை சொல்ல —
பிரிந்து போனதை புறப்பாடு-புள்ளூர்ந்து -பெரும் தவத்தவர் அரும் தவத்து முனிவர் சூழ –
அழகு பெருமை காட்டி இவள் இடம் எல்லாம் கொண்டு போனதை சொல்லி–
ஆற்றாமை தலை எடுத்து தூது விட –
தேர் அழுந்தூர் திரு கண்ண புரம் வண்டுகளையும் நாரையையும் —
வருவான் என்று –மகா விசுவாசம் கொண்டு–பிரணய ரோஷம் தலை எடுக்க —
முடிந்து பிழைக்க -ஊடவும் முழுவதும் முடியாமல் –தன் தோஷம் அநந்ய கதித்வம் சொல்லி கூப்பிட்டார் —
சேவை பெற்றதை சொல்லி தலை கட்டுகிறார் —
தொல்லை பழ வினையை -அவித்யை வாசனை கர்மம் ஜன்மம் -அனைத்தையும் வெட்டி விலகும் பலன் சொல்லி —
அருளாய் என்று -மேக வண்ணன் தன்னைப் பாட –
ஹம்ச அவதாரம் கொண்டு அரு மறையை ஈந்து கொடுத்த அம்மான் –சேவை கொடுக்க –பன்னிய நூல் தமிழ் மாலை–
உப சம்காரம் நிகமம் -தான் பெற்ற பேற்றைச் சொல்லி–
ஞான தரிசன பிராப்ய அவஸ்தை –நாம் பெற போகும் பேற்றையும் அருளி -தலைக் கட்டுகிறார் ..
முதல் ஆழ்வார் திரு மழிசை ஆழ்வார் திரு பாண் ஆழ்வார் ஐவரும் பலன் சொல்லாமல் அருளினார்கள் —
தாமே வினைகளை முடிக்க பெறுவார்கள் —
சரணா கதிக்கு பிற் பட்ட பிரபந்தம் — மோஷ இஷ்யாமி -இச்சாலே நானும் வேண்டாம் நீயும் வேண்டாம் தன் அடையே விட்டு போகும் —
மிக பெரிய திரு உருவத்துடன் சேவை சாதிக்க -மின்னல் வெட்டிய மேகம் போலே –
நீல தோயாத மத்யஸ்தா வித்யுத் –ஆழி போல் மின்னி -முழங்கி வில் இட்டு —
ஆழ்வார் தரைப் பட்டு அடி நாயேன் என்று கிடகிறவரை எழுப்ப —
துணுக்கு என்று எழுப்ப –மின்னல் வெட்டி கர்ஜித்து —
நீர் சாவியிலே ஒரு காள மேகம் வர்ஷித்தால் போலே —
பட்டர் லகு சம்ப்ரோஷணம் நாய் நுழைந்ததால் கேள்விப் பட்டு–நித்யம் தாம் வந்து -அருளினார் —
தாபம் நோக்கும் படி குளிர நோக்கி –வேம்கடத்தை பதியாக வாழ்வீர்காள் மேகம் தூது விட்டாள் ஆண்டாள்–
அவா அறும் படி சூழ்ந்தான் —
கீழ் பாசுரத்தில் படர்க்கையில் பேசினவர் இதில் மேக வண்ணா என்று நேராக பேசுவதால் முகம் காட்டியது தெரிகிறது ..
வண் துவராபதி மன்னனை ஏத்துமின் -என்றால்- தோழி தீர்ப்பாரை பாசுரம் -தொழுது ஆடி அடுத்த பாசுரம்–
இவள் சொல்லக் கேட்டே எழுந்து ஆடினார்–அது போலே இங்கும் —
முடிந்து பிழைப்போம் முன்பு சொல்லியும் கார்யம் கிட்ட வில்லை –
அடுத்து தோஷம் சொன்ன உடன் கார்யம் சித்தி –
பட்டர் தம்மை வைதவனுக்கு சம்பாவனை பண்ணிய ஐதிகம் -தான் செய்யாததை அவன் பண்ணியதால் —
நம் ஆழ்வார் ஜகத் காரணத்வம் உப கிரமித்து -பரம வேதாந்தி –
நெஞ்சுள் நிற்க பாடி நிறுத்தினான் -அவா அற சூழ் அரியை ..அலற்றி வீடு பெற்ற –என்று அதை சொல்லியே -முடித்தார் —
பரத்வத்திலே நோக்கு –
இவர் வடிவில் ஆரம்பித்து வடிவிலே முடித்தார் –
சாஸ்திரம் கொண்டு நம் ஆழ்வார்-
திரு மேனி கொண்டு இவர் ..
சுபாஸ்ரயம் ஆஸ்ரயம்–வ்யாபிக்கிறான் -ஸ்வரூபத்தாலும் ரூபத்தாலும் –
முனிவர் ரிஷிகளுக்கு ஸ்வரூபத்தால் —
ஆழ்வார்களுக்கும் பிர பன்னர்களுக்கும் -நிறைந்து சோதி வெள்ளம் சூழ்ந்த ..
நீண்ட பொன் மேனியோடும் நிறைந்து ஒழிந்தான்
பச்சை மா மலை போல் மேனி பவள வாய் கமல செம்கண் அச்சுதா அரங்கர் ஏறே —
ஐயப்பாடு அறுத்து தோன்றும் தன் பால் ஆதாரம் பெருக வைத்ததும் அழகனூர் அரங்கம்–
ருசி ஜனக விபவ லாவண்யம் வைஷ்ணவ வாமனத்வம் —
கண்ணின் உள் நின்று அகலான் கருத்தில் கண் பெரியான் — தாரை -தும் அப்ரேமேயம்-நேராக பார்த்து மனசுக்கு எட்டாதவன் –
சஷுஷா அவிஷயம் -ஹோம குண்டத்தில் வந்து தோன்றிக் காட்க்டி கொடுகிறானே தேவாதி ராஜன் —
பிராமணருக்கு அக்நி யோகிகள் ஹிருதயம்
ஞானிகளுக்கு சம தர்சனம் –
மந்த புத்திகளுக்கு சிறிய விக்கிரகத்தில் சேவை —
வந்து அருளி நெஞ்சு கொண்ட வானவர் கொழுந்து-மேகம் சென்று வர்ஷிப்பது போலே —
மின்னல் வெட்டு பிராட்டி அவனுக்கு –திரு ஆபரணம் வான வில் போலே –
மழை மேகம் கடலில் நீரை எடுத்து கடலிலே பொழியும் –
ராமன் வசிஷ்டர் வாமனாதிகள் இடம் கற்று அவர்களுக்கு பொழிவான் –
கனைத்து இளம் கன்று -ஓடி போய் சப்தம் ரஷிக்க போகும் துவரை உண்டு –
வந்தாய் போலே வாராதே -வாராதே போலே வருவான் மேகம் போல் —
நிர்பந்திக்க முடியாது
ஏரி வெட்டி வைத்துநீ கொண்டு பொழியும் பொழுது -மாரி யார் பெய்விப்பார் மற்று –
சரண் அடைந்து காத்து இருக்க வேண்டும் /
ஜல ஸ்தல விபாகம் இன்றி பொழிவான் வசிஷ்டர் சண்டாளருக்கும் பொழிவான் —
திரு வாய் மொழி பாடினால் கட்டுண்டு இருப்பான் —
கருணை திவலை முத்து சிப்பியில் -போல ஆழ்வார்கள் மூலம் பிர பந்த முத்துகள் அருள வைத்தான் —
மேகமும் தூது
இவனும் இன்னார் தூதன் என்று கழுத்தில் ஓலை கட்டி பாண்டவ தூதன் —
மேகம் மழை சிலருக்கு ஆனந்தம்- பாஞ்ச சன்ய ஓசை நெஞ்சை உலுக்க பண்ணும் சிலருக்கு- பலருக்கு ஆனந்தம் –
சாதக பறவை ஆகாசம் நோக்கி இருக்கும்-
பிர பன்னர்களும் உன்னால் அல்லல் யாவராலும் குறை வேண்டேன் –என்று இருப்பார்கள்-
பரதன் சிஷ்யச்ய தாசச்ய இருந்தும் கார்யம் கொள்ள முடிய வில்லை அவன் திரு உள்ளமே –
மழையும் அப்படி தான் -அவதார பிறப்பிடம் கடல் அங்கே சயனம் —
மழையும் அப்படி –
மயில் ஆடும் ஆழ்வார்கள் இவனை கண்டு ஆடிப் பாடுவார்கள் —
விண்ணவர் தம் -அமிர்தம் மேகம் பார்த்து ஜீவித்து இருப்பவர்கள் —
அயர்வறும் அமரர்களுக்கு அதிபதி -கடல் மேல் மழை பெய்தால் போலே —
பகல் விளக்கு -ஈசன் வானவர்க்கு –அது தேசமோ என் கண் பாசம் வைத்த பரம் சுடர் சோதி —
நானும் நித்யர் போலே — சரீர சம்பந்தம் அறுத்து ஒழிவில் காலம் எல்லாம் உடனே மன்னி
வழு இலா அடிமை செய்ய வேண்டும் படி அருள வேண்டும் —
இனி நான் போகல ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல்—அருளாய்–
பரம பக்தி நிலைக்கு வந்தாலும் இரக்கமே வேண்டும் –பிர பின்னர் போலே —
ஆற்றாமை விஞ்சி இருந்தாலும் -பேற்றுக்கு உபாயம் அவன் கிருபையே —
விஷயாந்தரம் போக ஆழியான் அருளாய் முதலில் சொன்னார் —
இங்கு அனுபவம் கொடுக்கவும் அவன் அருள் தான் —
அன்னமாய்–தனக்கு அவன் வந்து அருளியதர்க்கு திருஷ்டாந்தம் —
எனக்கு பிரமேயம் கொடுத்தான்
பிரமாதிகளுக்கு பிரமாணம் கொடுத்தான் —
மூக்கு வழியாக வேதம் போக குதிரை முக அசுரர் கொண்டு போக மீட்டு கொடுத்தான் –
வேத சஷுசை இழந்தோம் என்று ரிஷிகளும் ப்ரமாதிகளும் வேண்டிக் கொள்ள –
அந்தணர் மாடு தனம் வேதம் தானே —
பிரம்மா வேதம் கொண்டு கார்யம் செய்ய —
ரிஷிகள் வேதம் கொண்டு அனுபவிக்க –அபுருஷேதேயம் கொடுக்க அன்னமாய் வந்தான் —
ஹம்சம் புருஷன் இல்லை என்பதால் –
அரு மறை-பெறுவதற்கு அரிய–வெளிப்படுத்த -சொன்ன இல்லை உருவாக்கிய இல்லை —
அநாதித்வம்-சுயம்பு –ஜீவாத்மா ஜனம் மரணம் சரீரம் சம்பந்தம் எடுப்பதும் விடுவதும் தானே –
அம்மான்- சர்வேஸ்வரன்-உடையவன் ஆகையால் -அவர்கள் பிரார்த்திக்க இவன் கொடுத்தான் —
குடல் துவக்கு –ஒழிக்க ஒழியாத சம்பந்தம் –
வேதம் நான்காய் ஆரம்பித்து அரு மறை -இதில் சொன்னார் ..
இவர் தரித்த வாறே ஊரும் திடம் ஆனதாம் —
மங்கை நாடு ரத்னம் பொதித்த மாடம்- தூ மணி மாடம் துவளில் மா மணி —
பஷி காலில் விழுந்தவர் திரு மங்கை நாட்டுக்கு மன்னர் ஆனார் அவனை தரிசித்த படியால்-
மான வேல் பர காலர்-
இட்ட கால் இட்ட கைகளாய் இருந்தவர் வேல் எடுத்தார் –
கிஞ்சித் கரிக்கிறார்-
ஸ்ரீ வைஷ்ணவம் நிலை நாட்டினார் –
வேலைக் கொண்டு நாட்டிய நீச சமயங்கள் மாண்டன —
அவனுக்கு ரஷணத்துக்கு வேல் -கூர் வேல் கொடும் தொழிலர் நந்த கோபாலன் –
கா புருஷன் எடுத்தாலும் திரு மங்கை ஆழ்வார் ஆக்க வல்ல வேல் மான வேல்–
மான வேல் பர காலன் என்னுதல்-
மானம் அபிமானம் தாஸ்யன் என்கிற –
அடியார்க்கு இன்ப மாரி அருள் மாரி -இவர் தானே எல்லா ஆழ்வார்களின் நால் ஆயிரமும் பெற்ற கடைக் குட்டி –
அபிமான துங்கன் செல்வனை போல இவர் -பர காலன் —
கையில் வாளாலும் பிர பந்தங்களாலும் பிரதி பஷம் வென்று –
வைதிக மதம் ரஷித்து ஸ்தாபித்தவர்-
புத்த விக்ரகம் கூட வைதிக கைங்கர்யம் கலியன் – மிடுக்கு வாளிலும் பிர பந்தம் அருளி /
கலி காலம் கடிந்தவர் -ஸ்வரூபம் ரூபம் குணம் விபூதி அனைத்தையும் அடக்கி பாடினவர்-
வாசாம் அகோசர பெருமை அடக்கிய பன்னிய -நூல் -லஷணம் பொருத்தி –
இது கொண்டு இலக்கணம் வரை அறுக்கும் படி –
தமிழ்-சர்வ அதிகாரமாய் இருக்கை –
மாலை ஈஸ்வரனுக்கு தலையால் தரிக்க வல்ல –
சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி -சங்க தமிழ் மாலை போல –
பழ வினை -காரிய காரணம் -அவித்யா கர்ம வாசனை பற்றுதல் ருசி துடிப்பு பிரகிருதி சம்பந்தம்
தாமே சவாசனமாக போக்க வல்லவர் –
தொல்லை பழ இரண்டு சப்தம் -மிக பழமை /அநாதி -காலம் –
புண்ய பாபம் கர்ம துவயம் வினை ஈஸ்வர திரு உள்ள ப்ரீதி அப்ரீதி /
பூர்வ உத்தரவினை ==அஞ்ஞானம்-ஞானம் பிறக்க வில்லை-அன்யதா ஞானம் -விபரீத ஞானம் –
ஸ்தூல சூஷ்ம அசித் சம்பந்தம் -அனந்த கிலேச பாஜனம் -பழமை அடி காணாத –
தாங்களே போக்க வல்லவர்–ஈஸ்வரன் முழம் கை தண்ணீர் வேண்டாம் என்கை–
ஈஸ்வர அப்ரீதி போனதால் தானே விலகும் —
அருளாய் என்று முனிவரோடு அமரர் ஏத்த கொண்டு–என் அவா அற சூழ்ந்தாயே என்ன சக்தர் அல்லாதவர் இவர் –
பெற்ற பேற்றைச் சொல்லி கொள்ள முடியாது —
கீழ் பாட்டில் உள்ள பல ஹீனம் இல்லை –
ரிஷிகளுக்கு ஸ்வரூபம் நோக்கு –
அயர்வர்கள் அமரர் அதிபதி புஜிக்க -தாமே வேல் எடுக்க சக்தி- கலியன்-
அதனால் இவர் தான் அருளாய் என்று அருளிச் செய்து தலைக்கட்டுகிறார் ..
——————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே .வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply