திரு நெடும் தாண்டகம்–29-அன்று ஆயர் குலமகளுக்கு அரையன் தன்னை-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

அன்று ஆயர் குலமகளுக்கு அரையன் தன்னை
அலை கடலை கடைந்து அடைத்த அம்மான் தன்னை
குன்றாத வலி அரக்கர் கோனை மாளக்
கொடும் சிலை வாய் சரம் துரந்து குலம் களைந்து
வென்றானை குன்று எடுத்த தோளினானை
விரி திரை நீர் விண்ணகரம் மருவி நாளும்
நின்றானை தண் குடந்தை கிடந்த மாலை
நெடியானை அடி நாயேன் நினைந் திட்டேனே—-29

மின் இடையார் சேர் கண்ணன்–ஊடல் -நீடிக்க சேர்த்தி உத்சவம் -பெரியவர் சொல் படி சேர்ந்தோம் –
பர கால நாயகி மார்த்வம் ஊடல் பண்ண முடியாமல் உரத்த குரலில் அவனை மீண்டும் கூப்பிடுகிறார் –
கதருவதே இயல்பு பக்தர்களுக்கு –கடல் வண்ணா கதறுகின்றேன் -தொண்டர் அடி பொடி ஆழ்வார் –
முனியே நான் முகனே –ஆழ்வாருக்கு போலே பரம பக்தி நிலை இவருக்கு –
ஞான தர்சன பிராப்தி   நிலைகளே –பக்தி ஒன்றாலே அடைய– கட்டி வைக்க முடியும் –
பர பக்தி பர ஞான பரம பக்தி –சூழ் விசும்பு பதிகம் பர ஞான நிலை

அந்தமில் பேர் இன்பத்து அடியோரோடு இருந்தமை வரை காட்டிக் கொடுக்க –
தரிசன  சமானா கார சாஷாத் கார -பிர பன்ன குல கூடஸ்தர் -அவா அற்று வீடு பெற்ற நிலை கடைசியில் —
பரம பிராப்தம் தேசாந்தரத்தில்  தேகாந்த்தரத்தில் தானே —
நாயேன் சொல்லிக் கொள்கிறார் இதில்–
நம் ஆழ்வார் பிறந்த பொழுதே பக்தி —
வென்றியே -நின்றவா நில்லா நெஞ்சு -அடிமை தனம் வளர்த்தார் இவருக்கு-
இன்ப  மாரி  அருள் மாரி இருவரும் —

முதல் பத்தில் -மின்  உரு பின் உரு  பொன் உரு என்று அசித் சித் ஈஸ்வர -ஸ்வரூபம் நிர்ணயித்து
ஸ்வரூப அநு ரூபமான புருஷார்த்தம் நிர்ணயித்து
விரோதி நிரசனம் புருஷார்த்த சித்தி அநு ரூபமான உபாயம் நிர்ணயித்து —
பக்தி- பிர பத்தி -துல்யம் இல்லை -இரண்டு வழிகள்–
அர்த்த பஞ்சகம் நிர்ணயம் பண்ணி
அதற்க்கு அநு ரூபமாக திரு மந்த்ரம் -வாயார சொல்ல நெஞ்சை நிர்ணயித்து —
அர்த்தத்தை நெஞ்சுக்கு விஷயம் ஆக்கி–
வாழ –பூம் கோவலூர் தொழுதும் -தெளிந்து– கால ஷேபம் செய்தார் ஞான தசை –தானான தன்மை —

நடுவில் பத்தில்-அனுசந்தானம் மட்டும் இன்றி –அனுபவம் முற்ற -ஆற்றாமை மிக்கு –விடாய்-ஏற்பட -தாய் பாசுரம் –

மூன்றாம் பத்தில் தோழி–இவளை தெளிவு படுத்த —
விருத்த கீர்த்தனம் பண்ண–கேள்வி பதில் மூலம் தரித்து –
மீண்டும் தாபம் மேல் இட்டு தூது விட்டாள்–
அனந்தரம் வராமல் பிரணய ரோஷம் தலை எடுத்தது –
அதும் நிலை நிற்காமல் நடுவில் எளிமை பட்டு தளர்ந்து தாபத்தில் அழுது அலற்ற–பரம பக்தி நிலை ஏற்பட்டு
அநந்ய கதித்வம் -நெடியான்-தோஷம் நிறைந்த நிலையையும் -ஆகிஞ்சன்யம் –அடி நாயேன் –முன் இட்டு கூப்பிடுகிறார் இதில் —

நம் ஆழ்வார் பரத்வம் அவதாரம் கூப்பிட்டார்– கோல வராகம் ஒன்றாய்– முனியே நான் முகனே –என்றாலும் —
இவருக்கு அவதாரம் பர அவஸ்தை என்பதால் அவதாரமும் அர்ச்சை கூப்பிடுகிறார் /
நப் பின்னைக்கு ஏழு ரிஷபம் —
கடலைக் கடைந்து பெண் அமுதம் கொண்டு
கடல் அடைத்து சீதைப் பிராட்டி பெற்றதை —
அனுகூலர் சம்பந்த சம்பந்தம் அளவிலும்  மோஷ அனுபவம் போலே
பிரதி கூலர்  சம்பந்த சம்பந்தம் அனைத்தையும் அழிப்பான்–
குன்று எடுத்தானே -அவர்களை காத்து –
திருக் விண்ணகரம் நின்றான் –
திருக் குடந்தை சயனித்து ஆஸ்ரித வியாமோகம் கொண்டு –கதறுகிறார் ..

காதல் வசப் பட்டவர்களுக்கு உதவினத்தை சொல்கிறார் —
கும்பன் யசோதை பிராட்டி கூட  பிறந்தவன் -ஆய மகள் அன்பன்–
விஷ்ணு-ஸ்ரீ தேவி வைஷ்ணவி– பூ தேவி தான் முதல் ஸ்ரீ வைஷ்ணவி
சாயா நிழல் போல்வனர்– உடன் அமர் காதல் மகள் –நப்பின்னை தானே அடியார்க்கு அடியார் முதலில் ..
அன்றும் இன்று போல் தானே ஆபத்து –ரஷிக்க வல்ல சமர்த்தன் வேண்டும் என்று –
ஏழு ரிஷபம் வைக்க -கோவை வாயாள் பொருட்டு –பொய் சிலை குரல் ஏற்றின் இருத்தம் இருத்து —
கோட்டிடை ஆடின கூத்து –ஒரு கொம்பை ஆலிங்கனம் செய்ய ஏழு கொம்பில் குதித்து அடக்கினான் —
ஆயர் குல மகளுக்கு –அபிஜாதையாகி நப்பின்னை பிராட்டிக்கு —
இவளைத் திரு மணம் பண்ணி கொள்ளத் தானே ஆய் குலம் புக்கான் –
நந்த கோபாலன் திரு மகன் ஆனான் —
புனிதன் இன்று தீர்த்தம் ஆடி வந்த புனிதத்வம் –
ஜனகர் ஷத்ரியன் ஆசை பட ஸ்ரீ ராமனும் இஷ்வாகு குலம் புகுந்தான் —
இடைக் குலம் தனி சிறப்பு -எளிமை பட -பிறந்து வாழ்ந்து –
அரையன் -கோன் ஸ்வாமி–
அலை கடல் இத்யாதி –பிராட்டிக்கு உதவின படி-
இரண்டு செயல் கடல் கடைந்து அடைத்து..லபிக்க கடைந்தான் -தனிமை தீர்க்க கடலை அடைத்தான்

அம்ருதம் கொடுப்பதும் — ராவணனை மாய்தததும் – குடி இருப்பு கெடுத்ததும் ஆனுசங்கிகம்–
கொண்டு உகந்ததும் -அம்மான் தன்னை–பிரண்யத்வம் காட்டிய ஸ்வாமி–
துர்வாசர் சாபத்தால் நஷ்ட ஸ்ரீ ஆன இந்த்ராதிகளின் அஸ்ரீ போக்கி –
குடி இருப்பு போக்கிய பிரணயித்வமும் அதனால் –
வந்த பரத்வம் இரண்டும் –
பெரிய நீர் படைத்து அடைத்து பெரிய  சீரியரே –ஸ்வாமித்வம் போகப் போகிறது என்று அம்மான் தன்னை —
குன்றாத வலி அரக்கர் கோன் –
வர பலத்தால் – வரத்தினில் சிரத்தை வைத்த –நேர்ந்த நிசாசரை–அரக்கர் கோனை-ராவணனை-
ராம விராம– வரமும் வரம் கொடுத்தவன் வரம் வாங்கினவன் மூன்றுக்கும் ஓயுவு கொடுத்தவன் —
கொடும் சிலை -சரம் தானே கொடுமை –சார்ங்கம் கண்ட பொழுதே எதிரிகள் மண் உண்ணும் படியான ஸ்ரீ சார்ங்கம் —
வில்லாண்டான் –குலம் களைந்து புல் பூண்டு இன்றி அழியச் செய்து —
செல்வ விபீடணனுக்கு வேராக-வேறாக- நல்லான் –
ராவனணன் நினைவாலும் விபீஷணன் நினைவாலும் பெருமாள் நினைவாலும் இஷ்வாகு குலம் தானே —

ஒருத்தன் அநு கூலன் ஆனால் சம்பந்த  சம்பந்தம் அளவும் கிருபை –
மகாராஜர் பக்கல் சிநேகம் வானர ஜாதி அனைத்தும் வாழ்ந்து போயின-
பிரதி  கூலன் சம்பந்த சம்பந்தம் எல்லாம் அழியும் படி-வென்றானை —
வானர ஜாதி ஒன்றுக்கும் வாட்டம் இல்லாத படி வென்றான் —
அடுத்து குன்று எடுத்த தோள்–நாலாவது சரித்ரம் பஞ்ச லட்சம் பெண்களுக்கு அனுபவம் —
பக்தி ருசி ஜனக விபவ லாவண்யம் திருக் குறுங்குடி –ரஷித்து ஆள் கொள்ள வான மா மலை பெருமாள் —
இந்த பெருமாளை பின்னானார் சேவிக்க–  காதலால் உந்த பட்டு -தூதம் –
பிரணய ரோஷம் தலை எடுத்து –
திரு விண்ணகரம் -சௌவ்குமார்யம் அநு கூலமான ஜல சமர்த்தி உடைய தேசம் – விண்ணகரம் மருவி

பொருந்தி -ஆஸ்ரித வாத்சல்யம் காரணமாக -ஹர்ஷகனுக்கு உழவன் -அகத்தில் கிடையை காட்டில்-மடை தடையிலே –
களத்து மேட்டிலே தான் -பக்தி உழவன் அவன் –
கிழங்கு எடுத்தால் அல்லது பேரேன் என்றி மன்னி கிடக்கிறான் –
உகந்து அருளின நிலங்களில் பிரவணராய் இருக்க வேண்டும் —
தண்  குடந்தை கிடந்த மால்–
சூழ் புனல் குடந்தை தொழுது முதலில் ஆரம்பித்தார் பெரிய திரு மொழி
நின்றார் கிடந்தார் நின்றால் போவார் -கிடந்தவர் பேரேன் என்று கிடக்கிறான் –
நடந்த கால்கள் நொந்தவோ –ஸ்ரம ஹரமான திருக் குடந்தை –கிடந்த மாலை-
பித்து பிடித்தவன் -நின்றவாறும் கிடந்தவாரும் –நினைப்பு அரியன  உன் மாயங்கள் —
ஆஸ்ரித வியாமோகம் நெடியானை- வரை அரைக்க முடியாது – சொல் இட்டு பேச முடியாத -நெடியானே வேம்கடவா –
என்றோ சரண் பண்ணினாலும் -நினைந்து  கொண்டு இருக்கிறான் –
நினைமின் நெடியான் -கொண்டாடுகிற பிர கரணம் இல்லை
சர்வ சுலபன் கிடீர் எனக்கு எட்டாக் கனியாய் இருக்கும் நெடியான் –
எட்டா பூ என்கிறார்-
கனி அனுபவம் பரி பக்குவம் என்பதால் சூடுகிற அனுபவமே கொடுக்க வில்லை –
சேயன் அனியன் சிறியன் மிகப் பெரியன் —
அவனுக்கு மேல் எல்லை இல்லை –
எனக்கு தாழ்ச்சிக்கு எல்லை இல்லை –
நாயேன் -திறந்த வாசல் எல்லாம் நுழைந்து போனவன்-
பைய நடமின் சொல்வார் –நுழைந்த வாசல் எல்லாம் பரி போதம்- அவமானம் வெளி ஏற்ற –
உடையவனே தொட்டாலும் ஸ்நானம் பண்ண வேண்டும் படி–சம்பந்தம் அடியாக நீ பார்த்து அனுக்ரஹித்தால் தானே வாழ்ச்சி
இல்லையேல் –வீழ்ந்து முடிந்ததே போக வேண்டியது தானே

ஆஸ்ரித தசையிலும் அனுபவிக்கும் பொழுது -நாயேன் வந்து அடைந்தேன் தொடங்கி ஆஸ்ரித -இங்கும் அடி  நாயேன் —
விட்டு பிரிந்தால் துடிக்கிறார்-
இருந்தும் அடி நாயேன் –
உலக விஷய வைராக்கியம் இருக்கே- கை முதல் இல்லை என்கிறாரே -இவை எல்லாம் தன் பிரயத்னம் இல்லை —
அவன் உண்டாக்கினது தான் –நீ அனுபவிக்க கொடுத்த வைராக்கியம் எல்லாம்
உன் போகத்துக்கு உபயோகம் போக உபகரணம் தானே நான் —
நம் ஆழ்வார் அதனில் பெரிய என் அவா என்று தலைக் கட்டினார்- தத்வ த்ரயம் விட பக்தி பெருக்கு –
இவர் நாய் தனம் -சு தோஷ கதனம் –விரக்தி  பிறவியிலே இருந்தது அவருக்கு –
காதல் வளர்த்தான் –இவர் அப்பிராப்த விஷய ஆசைப் பட்டு இருந்தார்–
பழைய நினைவால் அடி நாயேன் நினைந்திட்டேன்  என்கிறார் —
எப்படியோ இருந்தவனுக்கு நிர்ஹேதுமாக விஷயீ கரித்ததை நினைந்து கொண்டே இருப்பேன் —
இயற்க்கை புணர்ச்சி காந்தர்வ விவாகம் நினைத்துக் கொண்டு –
திரு மந்த்ரம் அர்த்தம் கொடுத்ததை  நினைத்துக் கொண்டு இருப்பேன் –ஸ்வாபதேச அர்த்தம்

———————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ . வே . வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading