Archive for the ‘திருச்சந்த விருத்தம்’ Category

Thiru Chanda Vruttam-111-120-Shri PBA Swaami.-திருச்சந்த விருத்தம் -ஸ்ரீ உ. வே . PBA ஸ்வாமிகள்  

January 25, 2008

..111..”vaithu ninai valla aa pazlithavarkkum “=devareerai nindithu, sakthi vullavaraiyil abavaadangal sonna sisubalar polvarukkum..”maaru eil poru seythu “=oppillada yudam panni..”nina setram theeyil”=vunathu koba agniyil….”venthavarkkum”=vaali polvar..”vunai vanthu yeythal aahum yenbar”=vunnai kitti vujeevakilaam yentru maha rishikal solluvaarkal..”aadalaal yem maaya ,naayineyn seytha kutram, natramahavey koll ,gjaalam naadaney”….”yen adiyaar athu seyyaar,sevaareyl nantrey seythaar”-pola…avanathu vaadsalyathaal,”poruthu nalhu”yentru piraarthipathu abachaaram yentru..”naayineyn seytha kutram nattramahavey koll”yenkiraar..”kattrinam  meykkallum meykka petraan,kaaduvaazl saadhiyumaaha petraan,pattri vural edai aappum vunndaan paavikaall vungalukku etchu kolo”yentru aandaal vayiru erinthu pesum padi thooshthavarkallum praapthar aanaarkal..athai pola pradikoolanana adiyen seyum kutangallai bogyamaha kollanum yenkiraar..”ketpaar sevi sudu keezlmai vasavukaley vaiyum setpaal pazlam pahaivan sisubaalan ,thiruvadi thaadpaal adaintha thanmai arivaarey arinthumey”..vaithal=ellada solli thooshipathu..pazlithal=vullathai ezlivaha solli thooshipathu..

வைது நின்னை வல்லவா பழித்தவர்க்கும் மாறில் போர்
செய்து நின்ன செற்றத் தீயின் வெந்தவர்க்கும் வந்து உனை
எய்தலாகும் என்பர் ஆதலால் எம்மாய நாயினேன்
செய்த குற்றம் நற்றமாகவே கொள் ஞால நாதனே -111-

வைது நின்னை வல்லவா பழித்தவர்க்கும்
தேவரீரை நிந்தித்து சக்தி உள்ளவரையில் அபவாதங்கள் சொன்ன சிசுபாளர் போல்வாருக்கும்
 மாறில் போர் செய்து
ஒப்பில்லா யுத்தம் பண்ணி
நின்ன செற்றத் தீயின்
உனது கோப அக்னியில்
வெந்தவர்க்கும்
வாலி போல்வார்
வந்து உனை எய்தலாகும் என்பர்
உன்னைக் கிட்டி உஜ்ஜீவிக்கலாம் என்று மக ரிஷிகள் சொல்லுவார்கள்
ஆதலால் எம்மாய நாயினேன் செய்த குற்றம் நற்றமாகவே கொள் ஞால நாதனே
என் அடியார் அது செய்யார் செய்தாரேல் நன்றே செய்தார் போலே
அவனது வாத்சல்யத்தால் பொறுத்து நல்கு -என்று பிரார்த்திப்பது அபசாரம் என்று நாயினேன் செய்த குற்றம் நற்றமாகவே கொள்-என்கிறார்
கற்றினம் மேய்க்கலும் மேய்க்கப் பெற்றான்
காடுகள் சாதியாயும் ஆகப் பெற்றான் பற்றி உரல் இடை ஆப்பும் உண்டான் பாவிகாள் உங்களுக்கு ஏச்சு கொலோ
என்று ஆண்டாள் வயிறு எரிந்து பேசும் படி தூஷித்தவர்களும் ப்ராப்தரானார்கள்
அதே போலே பிரதிகூலனான அடியேன் செய்யும் குற்றங்களை போக்யமாக கொண்டு அருள வேணும் என்கிறார்
கேட்பார் செவிசுடு கீழ்மை வசவுகளையே வையும் சேட்பால் பலம் பகைவன் சிசுபாலன் திருவடி தாட்பால் அடைந்த தன்மை அறிவாரே அறிந்துமே
வைதல் -இல்லாததை சொல்லி தூஷிப்பது
பழித்தல் -உள்ளதை இல்லாததாக சொல்லி தூஷிப்பது

——————————————————————————-

..112….”vaallkal aahi naallkal sella”=namathu aayullai arukkum vaallkal pola thinangal kazliya..”noymai kuntri mooppu yeythimaallum naall athu aathalaal”…”vannangi vaazlthu yen nenjamey”…”aalathu nanmai aahum yentru”= emberumaanukkey aadpattu erupathu nanmai yentru..”nangu vunnarnthu “….”athu antriyum meellvu elaada boham nalha veynndum maala paadamey”..”minin nilai ela manueir aakkaikal”…naallaikku thozluvom yentru eraamal eppozluthey vannangi vaazlthanum..adimai seyvathu thaan purushaardam yentra ninaivudan..

வாள்களாக நாள்கள் செல்ல நோய்மை குன்றி மூப்பெய்தி
மாளு நாளதாதலால் வணங்கி வாழ்த்து என்னெஞ்சமே
ஆளதாகும் நன்மை என்று நன்கு உணர்ந்த தன்றியும்
மீள்விலாத போகம் நல்க வேண்டும் மால பாதமே –112-

வாள்களாக நாள்கள் செல்ல
நமது ஆயுளை அறுக்கும் வாள்கள் போலே திங்கள் கழிய
நோய்மை குன்றி மூப்பெய்தி மாளு நாளதாதலால் வணங்கி வாழ்த்து என்னெஞ்சமே-ஆளதாகும் நன்மை
எம்பெருமானுக்கு ஆட்பட்டு இருப்பது நன்மை என்று
என்று நன்கு உணர்ந்த தன்றியும் மீள்விலாத போகம் நல்க வேண்டும் மால பாதமே
மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள்
நாளைக்கு தொழுவோம் என்று இராமல் இப்பொழுதே வணங்கி வாழ்த்த வேண்டும் -அடிமை செய்வது தானே புருஷார்த்தம் என்ற நினைவுடன்

—————————————————————————————-

..113..”salam  kaslantha sem sadai “=gangai neerodu koodina sivantha thalaiyudan..”karutha kanndan”…”ven thalai”=velutha kabaalathiley..”pulan kalanga”=sarva endariyangalum kalangumaaru..”vunnda paadahathan”=pitchai eduthu  jeevitha korabadahathan sivan…”van thuyar keda”…”alangal maarvil “=thiruthullay anninda marbiley..”vaasam neer”=divya parimallamana theerthathai..”koduthavan”…  “adutha  seer “=yentrum vittu neengaatha kalyaana gunnangal vudaiya..”nalam koll “=aanandamayamaana ….”maalai nannum vannam “=anuhum vazliyakira avanin thiruvadiyai …”yennu “=anusanthueru…”vaazli nenjamey”..

சலம் கலந்த செஞ்சடைக் கறுத்த கண்டன் வெண்டலைப்
புலன் கலங்க வுண்ட பாதகத்தன் வன் துயர் கெட
அலங்கல் மார்பில் வாச நீர் கொடுத்தவன் அடுத்த சீர்
நலம் கொள் மாலை நண்ணும் வண்ணம் எண்ணு வாழி நெஞ்சமே -113-

சலம் கலந்த செஞ்சடைக்
கங்கை நீரோடு கூடின சிவந்த தலையுடன்
கறுத்த கண்டன் வெண்டலைப்
வெளுத்த கபாலத்திலே
புலன் கலங்க
சர்வ இந்த்ரியங்களும் கலங்கு மாறு
வுண்ட பாதகத்தன்
பிச்சை எடுத்த ஜீவித கோர பாதகத்தன் -சிவன்
வன் துயர் கெட-அலங்கல் மார்பில்
திருத் துழாய் அணிந்த மார்பிலே
வாச நீர் கொடுத்தவன்
திவ்ய பரிமளமான  தீர்த்தத்தை கொடுத்தவன்
அடுத்த சீர்
என்றும் விட்டு நீங்காத கல்யாண குணங்கள் உடைய
நலம் கொள் மாலை நண்ணும் வண்ணம் எண்ணு வாழி நெஞ்சமே
ஆனந்த மயமான மாலை அணுகும் வழி யாகிற அவனது திருவடிகளை அனுசந்தித்து வாழி நெஞ்சமே –

———————————————————————————-

..114..”yeenam aaya ettum neekki”=arivukku padaham villaikka valla -,avidyai,karumam,vasanai,rusi,prakrudi sambandam ,daaba trayam -aahiya ettaiyum pokki…”edam eintri”=samsara thukkangal yellaam pokki..”meethu poey”=arshiraathi maargathaal sentru..”vaanam aalla villai yeyl”=paramapadam anubavikka aasai konndu erunthaal..”vannangi vaazlthu yen nenjamey”=namaskarithu, thuthithu ..:gjanam aahi”=atma gjanam allipavanaayum..”gjaayiru aahi”=sooriyan pola endariya gjanathai allippavanum…ahaa erulum pura erulum pokkubavan..”gjana piraan-varaha moorthi–.”gljalam mutrum oer yeiru”=boomi muzluthum oru kottinaal..”yenam aay edantha moorthi”=varaha perumaanaay..”yenthai paadam yenniyey”..pralaya kadalil eruntha piraattiyai vutharathu arulinathu pola, namaiyum samsaara kadalil erunthu meettu arulanum yenkiraar..

ஈனமாய எட்டும் நீக்கி ஏதமின்றி மீது போய்
வானமாள வல்லையேல் வணங்கி வாழ்த்து என்னெஞ்சமே
ஞானமாகி நாயிறாகி ஞாலம் முற்றும் ஓர் எயிற்றில்
ஏனமாய் இடந்த மூர்த்தி யெந்தை பாதம் எண்ணியே -114-

ஈனமாய எட்டும் நீக்கி
அறிவுக்கு பாதகம் விளைக்க வல்ல அவித்யா கர்மம் வாசனை ருசி பிரகிருதி சம்பந்தம் தாப த்ரயம் ஆகிய எட்டையும் போக்கி
ஏதமின்றி மீது போய்
சம்சாரிக்க துக்கங்கள் எல்லாம் போக்கி -அர்ச்சிராதி கதியிலே சென்று
வானமாள வல்லையேல்
பரமபதத்தை அனுபவிக்க ஆசை கொண்டு இருந்தால்
வணங்கி வாழ்த்து என்னெஞ்சமே
நமஸ்கரித்து துதித்து
ஞானமாகி
ஆத்ம ஞானம் அளிப்பவனாயும்
நாயிறாகி
சூர்யன் போலே
ஞாலம் முற்றும் –எண்டறிய ஞானம் அளிப்பவனாயும்
ஆக அக இருளையும் புற இருளையும் போக்குபவனாயும்
ஓர் எயிற்றில் ஏனமாய் இடந்த மூர்த்தி யெந்தை பாதம் எண்ணியே
வராஹ மூர்த்தியாய் பூமி முழுவதையும் ஒரு கோட்டினிலே பிரளய கடலில் இருந்த பிராட்டியை உத்தரித்து அருளினது போலே
நம்மையும் சம்சார கடலில் இருந்தும் உத்தரித்து அருள வேணும் என்கிறார் –

——————————————————————————-

..115..”aththan aahi annai aahi aallum embiraanum aay”…”oththu ovvaatha pal pirappu ozlithu namai aadkollvaan”…”mukthanaar muhunthanaar  puhunthu nammull meyvinaar”…”yethinaal edar kadal kidathi ezlai nenjamey”….sarama sloham entha paasuram koorum.. ethaiyum “vaarthai aribavar” paasuramum mumushupadi  mudivil eduthu kaatti arulukiraar..nammull oru neeraaha porunthi,erukiraar mada nenjamey soha padaathey yenkiraar..

அத்தனாகி அன்னையாகி யாளும் எம்பிரானுமாய்
ஒத்து ஒவ்வாத பல் பிறப்பு ஒழித்து நம்மை ஆட்கொள்வான்
முத்தனார் முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினார்
எத்தினால் இடர் கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே -115-

சரம ச்லோகார்த்தம் சொல்லும் பாசுரம்
இத்தையும் வார்த்தை அறிபவர் -பாசுரத்தையும் முமுஷுப்படி முடிவில் எடுத்துக் காட்டி அருளுகிறார்
நம்முள் ஒரு நீராகப் பொருந்தி இருக்கிறார் மட நெஞ்சமே சோகப் படாதே என்கிறார்

—————————————————————————–

..116..”maaru seytha vaall arakkan naall vulappa”=ethiritta, aaydapaanni yaana raavannanin vaazl naall mudiyum padi ..”antru elangai neeru seythu sentru kontru ventri konnda veeranaar”..”veru seythu tammull yennai vaithidaamaiyaal “=yennai andaranga boodanaha -verupaduthi vaikkamal-konndu arulinathaal..”naman koru seythu  konndy”=yamananavan avanidam erunthu pirithu…”erantha kutram”=naan seythu kazlitha papangal..”yenna vallaney”=nenjaalum-thanathu edathil erunthey-ninaikka sakthi atravan yenkiraar..

மாறு செய்த வாளரக்கர் நாள் உலப்ப அன்று இலங்கை
நீறு செய்து சென்று கொன்று வென்றி கொண்ட வீரனார்
வேறு செய்து தம்முள் என்னை வைதிடாமையால் நமன்
கூறு செய்து கொண்டு இறந்த குற்றம் எண்ண வல்லனே -116-

மாறு செய்த வாளரக்கர் நாள் உலப்ப
எதிரிட்ட ஆயுத பாணியான ராவணின் வாழ் நாள் முடியும் படி
அன்று இலங்கை நீறு செய்து சென்று கொன்று வென்றி கொண்ட வீரனார் வேறு செய்து தம்முள் என்னை வைதிடாமையால்
என்னை அந்தரங்க பூதனாய்-வேறு படுத்தி வைக்காமல் -கைக் கொண்டு அருளினதனால்
நமன் கூறு செய்து கொண்டு
யமனானவன் அவனிடம் இருந்து பிரித்து
இறந்த குற்றம் எண்ண வல்லனே
நான் செய்து கழித்த பாபங்கள் -நெஞ்சாலும் -தனது இடத்தில் இருந்தே நினைக்க சக்தி அற்றவன் என்கிறார்-

———————————————————————————-

..117..”atcham  noeyodu allal pal pirappu avaayam mooppu evai”..allal=mano vyaathi..avaayam mooppu=abaayamana kizla thanam..”vaitha sinthai vaitha aakkai”=evatrai anubavikka nenjaiyum vudalaiyum ..”maatri vaanil yetruvaan”=pokkadithu paramapadam serpavan..”atchudan ananda keerthu aadhi andam ellavan”..”nanju naaha annai  kidantha naadan veda geethaney”..

அச்சம் நோயோடு அல்லல் பல் பிறப்பவாய மூப்பிவை
வைத்த சிந்தை வைத்த வாக்கை மாற்றி வானில் ஏற்றுவான்
அச்சுதன் அனந்த கீர்த்தி யாதி யந்தம் இல்லவன்
நச்சு நாகணைக் கிடந்த நாதன் வேத கீதனே -107-

அச்சம் நோயோடு அல்லல் பல் பிறப்பவாய மூப்பிவை
அல்லல் -மநோ வ்யாப்தி
வைத்த சிந்தை வைத்த வாக்கை
இவற்றை அனுபவிக்க நெஞ்சையும் உடலையும்
மாற்றி வானில் ஏற்றுவான்
போக்கடித்து பரம பதம் சேர்ப்பவன்
அச்சுதன் அனந்த கீர்த்தி யாதி யந்தம் இல்லவன் நச்சு நாகணைக் கிடந்த நாதன் வேத கீதனே

——————————————————————————

..118..”sollinum”=vaakkilum..”thozlil kannum thodakku araatha anbinum”=kaayiha vyaabarangallilum,visedam atra anbilum,..”alli nan pahalinodu  aana maalai kaalai yum “=sarva kaalangallilum…”valli nall malar kizlathi naada”=padarntha senthaamarai poovil pirantha piraattikku naadaney..”pulli”=annainthu..” vullam veellvu elaathu”= nenjai oru nodi pozluthum vishedam ellaamal..”poonndu”=antha thiruvadikallaiyey mer konndu..”meendathillai”=nillaithu erukkum..sinthaiyaalum, sollaalum,seyhaiyinaalum  sarva kaalamum avanudan layithu erukkum ..

சொல்லினும் தொழிற் கணும் தொடக்கு அறாத அன்பினும்
அல்லு நன் பகலினோடு ஆன மாலை காலையும்
அல்லி நாண் மலர்க் கிழத்தி நாத பாத போதினைப்
புல்லி யுள்ளம் வீள்விலாது பூண்டு மீண்டதில்லையே -118-

சொல்லினும் தொழிற் கணும் தொடக்கு அறாத அன்பினும்
வாக்கிலும் -காயிக வியாபாரங்களிலும் விச்சேதம் அற்ற அன்பிலும்
அல்லு நன் பகலினோடு ஆன மாலை காலையும்
சர்வ காலங்களிலும்
அல்லி நாண் மலர்க் கிழத்தி நாத பாத போதினைப்
படர்ந்த செந்தாமரை பூவில் பிறந்த பிராட்டிக்கு நாதனாய்
புல்லி யுள்ளம் வீள்விலாது பூண்டு மீண்டதில்லையே
அணைத்து நெஞ்சை ஒரு நொடி பொழுதும் விச்சேதம் இல்லாமல்
பூண்டு –அந்த திருவடிகளையே மேல் கொண்டு நிலைத்து இருக்கும்
சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் சர்வ காலமும் அவனுடனே லயித்து இருக்க வேண்டும்

————————————————————————————

..119..”ponni soozl arangam meya poovai vanna maayaa keyll”..entha vinnappathai kettu arula venum..”yennathu aavi yennum val vinaiyin vull”=yennudaiya atma yennum valiya paapa raasiyiley..”kozlunthu ezlunthu vunna paadam yenna nintra”=(devareer vishayamaha anuraaham)kozlunthu killarnthu devarerin thiruvadi yenkintra..”onn sudar kozlu malar manna vanthu poonndu”=azlahiya sudar mikka pushpathiley ,sthiramaha vanthu padinthu,..”vaattam eintri yengum nintrathey”=kuraiyaamal, devareerin viboothikal ellavatrilum vyaabithu erunthathu….vadivazlahaalum, seelathaalum rusi piranthu padarnthathu…neruppiley thaamarai poothathu pola, yenathu valvinai yennum aavieil kozlunthu pola bagavath vishayam padarnthathu..

பொன்னி சூழ் அரங்கமேய பூவை வண்ண மாய கேள்
என்னதாவி என்னும் வல் வினையினுள் கொழுந்து எழுந்து
உன்ன பாதம் என்ன நின்ற ஒண் சுடர்க்  கொழு மலர்
மன்ன வந்து பூண்டு வாட்டமின்றி எங்கும் நின்றதே -119–

பொன்னி சூழ் அரங்கமேய பூவை வண்ண மாய கேள்
இந்த விண்ணப்பத்தை கேட்டு அருள வேணும்
என்னதாவி என்னும் வல் வினையினுள்
என்னுடைய ஆத்மா என்னும் வலிய பாப ராசியிலே
கொழுந்து எழுந்து உன்ன பாதம் என்ன நின்ற -ஒண் சுடர்க்  கொழு மலர் மன்ன வந்து பூண்டு வாட்டமின்றி எங்கும் நின்றதே
தேவரீர் விஷயமாக அனுராகம் அழகிய சுடர் மிக்க புஷ்பத்திலே ஸ்திரமாக வந்து படிந்து-குறையாமல் தேவரீரின் விபூதிகள் எல்லாவற்றிலும் வியாபித்து இருந்தது
வடிவு அழகாலும் சீலத்தாலும் ருசி பிறந்து படர்ந்தது நெருப்பிலே தாமரை பூத்தாப் போலே-
என்னது வாழ்வினை என்னும் ஆவியில் கொழுந்து போலே பகவத் விஷயம் படர்ந்தது-

——————————————————————————————-

..120..”eyakku araatha pal pirappil”=thodarnthu varum pala piraviyilum..”yennai maatri eintru vanthu”=adiyenai maatra thiru vullam konndu eingey ezlunthu aruli..”vuyakoll meha vannan nanni”=vujeevika seybavanaana mkaala meha perumaall nerungi..”thannil aaya yennull”=thanodu avinaaboodamana yennulley…”mayakkinaan than mannu soodhi”=thanathu nithya jothi mayamana divya mangala vigrahathai samsleshipithaan..”aadalaal”=eppadi purai ara kalanthu aruliyathaal..”yen aavi thaan eyakku elaam aruthu “=yenathu atma vasthu,ontrodu ontraha ennainthu kidantha avidyaathikalai veru aruthu..”araada enbam veedu petrathey”=oru naallum mudiyaatha enbamaahiya motsha suhathai petrathu..andamil perinbamana kainkarya saamraajyam petrathai arulukiraar..parahada svekaaram  parimallikka arulukiraar..

இயக்கறாத பல் பிறப்பில் என்னை மாற்றி இன்று வந்து
துயக் கொண் மேக வண்ணன் நண்ணி என்னிலாய தன்னுளே
மயக்கினான் தன் மன்னு சோதி யாதலால் என்னாவி தான்
இயக்கொலா மறுத்தறாத வின்ப வீடு பெற்றதே -120-

இயக்கறாத பல் பிறப்பில்
தொடர்ந்து வரும் பல பிறவிகளிலும்
என்னை மாற்றி இன்று வந்து
அடியேனை மாற்ற திரு உள்ளம் கொண்டு இங்கேயே எழுந்து அருளி
துயக் கொண் மேக வண்ணன் நண்ணி
உஜ்ஜீவித்து அருளிச் செய்வானாக காள மேக பெருமாள் நெருங்கி
என்னிலாய தன்னுளே
தன்னுள்ளே அவின்னாபூதமான என்னுள்ளே
மயக்கினான் தன் மன்னு சோதி
தனது நித்ய ஜோதிமயமான திவ்ய மங்கள விக்ரகத்தை சம்ச்லேஷிப்பித்தான்
யாதலால்-
இப்படி புரை யறக் கலந்தது அருளியதால்
என்னாவி தான் இயக்கொலா மறுத்த
எனது ஆத்ம வஸ்து ஒன்றோடு ஒன்றாக இணைந்து கிடைந்த அவித்யாதிகளை வேறு அறுத்து-
ஆராத வின்ப வீடு பெற்றதே
ஒரு நாளும் முடியாத இன்பமாகிய மோட்ஷ சுகத்தை பெற்றது
அந்தமில் பேரின்ப மான கைங்கர்ய சாம்ராஜ்யத்தை பெற்றத்தை அருளிச் செய்கிறார் –
பரகத ச்வீகாரம் பரிமளிக்க அருளுகிறார்

——————————————————————————————–

ஸ்ரீ கோயில்  கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை பிரான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Thiru Chanda Vruttam-101-110-Shri PBA Swaami.-திருச்சந்த விருத்தம் -ஸ்ரீ உ. வே . PBA ஸ்வாமிகள்  

January 24, 2008

..101..”eranthu vuraippathu vunndu”=devareeridam ,yaasithu sollum vaarthai ontru vunndu…”vaazli”….”yemam neer nirathu ammaa”=kadal pontra nirathai vudaiya swaami….”varam tharum thiru kurippil vaithathu aahil mannu seer”=sedanarkalluku varam aruluvathey eyalbaha vunnathu thiru vullathil,adiyenukku yethaavathu varam tharanumaanaal.ethai tharanum…”parantha sinthai”=kannda edangallil thiriyum  yenathu nenjai..”ontri nintru”=devar vishayathil sthiramaha erunthu…”ninna paada pangayam nirandaram ninaipathu aaha nee ninaikka veynndum”..”vaazli” yentrathum paravasamaay nokkinaan..vudaneu “yema neer nirathu ammaa’ yenkiraar..

இரந்து உரைப்பது உண்டு வாழி ஏமம் நீர் நிறத்தம்மா
வரம் தரும் திருக் குருப்பில் வைத்ததாகில் மன்னு சீர்ப்
பரந்த சிந்தை ஒன்றி நின்று நின்ன பாத பங்கயம்
நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே -101-

இரந்து உரைப்பது உண்டு
தேவரீரிடம் யாசித்து சொல்லும் வார்த்தை ஓன்று உண்டு
வாழி ஏமம் நீர் நிறத்தம்மா
கடல் போன்ற நிறத்தை உடைய ஸ்வாமியே
வரம் தரும் திருக் குருப்பில் வைத்ததாகில் மன்னு சீர்ப்
சேதனர்களுக்கு வரம் அருளுவதே இயல்பாக உன்னது திரு உள்ளத்தில் அடியேனுக்கு ஏதாவது வரம் தர வேண்டுமானால்
இத்தை தந்து அருள வேண்டும்
பரந்த சிந்தை ஒன்றி நின்று நின்ன பாத பங்கயம் நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே
கண்ட இடங்களில் திரியும் எனது நெஞ்சை தேவரீர் விஷயத்திலே ஸ்திரமாக இருந்து நின்ன பாத பங்கயம் நிரந்தரம்
நினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே-
வாழி-என்றதும் பரவசமாக நோக்கி அருளினான் —ஏமம் நீர் நிறத்தம்மா-என்கிறார்

———————————————————————————–

..102..”villvu elaada kaadalaal”=neekam ellada anbinaal..”villangu paatha pothil vaithu”=vunathu paadara vindathil nenjai vaithu..”vulluveyn athu vuoonam noey”=antha thiruvadikallaiyey thanjamaha erukkum yenathu sareera sambandamaana noeykallai..”ozlikkum aa”=ozlikkum vazlikallil….”thezlikkum neer”=konthallikkum kadalliley…”palli maaya”..”pantri aaya”..”ventri veera”..”thullum neer kuntrinaal varambu seytha thontral”…”ontru sollidu”..nirantharam kainkaryam panna ,sareeram tholaithu arula praarthikiraar..

விள்விலாத காதலால் விளங்கு பாத போதில் வைத்து
உள்ளுவேனது ஊன நோய் ஒழிக்கும் ஆ தெழிக்கும் நீர்
பள்ளி மாய பன்றியாய வென்றி வீர குன்றினால்
துள்ளு நீர் வரம்பு செய்த தோன்றல் ஓன்று சொல்லிடே -102-

விள்விலாத காதலால்
நீக்கம் இல்லாத அன்பினால்
விளங்கு பாத போதில் வைத்து
உனது பாதாரவிந்தத்திலே நெஞ்சு செலுத்தி
உள்ளுவேனது ஊன நோய்
அந்த திருவடிகளையே தஞ்சமாக இருக்கும் எனது சரீர சம்பந்தமான நோய்களை
ஒழிக்கும் ஆ
ஒழிக்கும் வழிகள்
தெழிக்கும் நீர்
கொந்தளிக்கும் கடலிலே
பள்ளி மாய பன்றியாய வென்றி வீர துள்ளு நீர் குன்றினால் வரம்பு செய்த தோன்றல் ஓன்று சொல்லிடே
நிரந்தரம் கைங்கர்யம் பண்ண சரீரம் தொலைத்து அருள பிரார்த்திக்கிறார்

———————————————————————————-

..103..”thiru kalanthu serum maarba”….”devar devar devaney”….”erukku kalantha vedam neethi aahi nintra ninmalaa”=palavahai patta rukkukal sernthu erukkum vedathaal pradipaadikkum pari sudamanavaney…”karu kalantha”=ponnodu serntha …”kaalla meham meyni aaya nin peyar “=vunathu thirunaamamgallai …”ozlivu ellathu”=nirantharamaha….”vuru kalanthu vuraikkum aaru”=divya mangalavigrahathodu sernthu anusanthikkum vahaiyai…”vurai sey”=aruli seyya venum….sareera sambandam therum varai,thirunama sangeerthanam pannum padiyai arula praarthikiraar..

திருக்கலந்து சேரு  மார்ப தேவ தேவ  தேவனே
இருக்கலந்த வேத நீதி யாகி நின்ற நின்மலா
கருக்கலந்த காள மேக மேனி யாய நின் பெயர்
உருக்கலந்து ஒழிவிலாது உரைக்குமாறு உரை செயே –103-

திருக்கலந்து சேரு  மார்ப தேவ தேவ  தேவனே இருக்கலந்த வேத நீதி யாகி நின்ற நின்மலா
பலவகைப் பட்ட ருக்குகள் சேர்ந்து இருக்கும் வேதத்தில் பிரதிபாதிக்கப்படும் பரி சுத்தமானவனே
கருக்கலந்த காள மேக மேனி யாய நின் பெயர்உருக்கலந்து ஒழிவிலாது உரைக்குமாறு உரை செயே –
பொன்னோடு சேர்ந்த திவ்ய மங்கள விக்ரகத்தோடு சேர்ந்து உனது திரு நாமங்களை நிரந்தரமாக அனுசந்திக்கும் வகையை அருளிச் செய்ய வேணும்
சரீர சம்பந்தம் தீரும் வரை திரு நாம சங்கீர்த்தனம் பண்ணும் படியை அருளிச் செய்யப் பிரார்த்திக்கிறார் –

———————————————————————————

..104..”kadu kavandan vakran karan muran siram avai”…”edanthu kooru seytha pal padai thada kai maayaney”….”kidanthu erunthu nintru eiyangu pothum ninna pon kazlal”….”thodarnthu veellvu elaadathu oer thodarchi nalha venndum”……sarva avasthaikallilum avanathu sinthanai thodara praarthikiraar..

கடுங் கவந்தன் வக்கரன் கரன் முரன்  சிரமவை
இடந்து கூறு செய்த  பல் படைத் தடக்கை மாயனே
கிடந்து இருந்து நின்றி யங்கு போது நின்ன பொற் கழல்
தொடர்ந்து வீள்விலாத தோர் தொடர்ச்சி நல்க வேண்டுமே -104-

சர்வ அவஸ்தை களிலும் அவனது சிந்தை தொடர பிரார்த்திக்கிறார் –

———————————————————————————-

..105..”mannai vunndu  vumizlnthu pin eranthu konndu allantha”…..”mann kannull allathu ellai yentru”=entha vulaham namathu kadaashathal antri sathai peraathu yentru thiru vullam konndu..”ventra kaalam aayinaay”=vulaham ellaam svaadenam patri konndu pontha, sarva kaala,nirvaahaney….”pannai ventra einsol mangai kongai thangu pangaya kanna ninna vannam allathu yennum vannam ellai”…vunathu divya mangala vigraha anubavam mattumey nenjaal dyaanithu eruppeyn yenkiraar..

மண்ணை உண்டு உமிழ்ந்து பின்னிரந்து கொண்டு அளந்த மண்
கண்ணுள் அல்லது இல்லை என்று வென்ற காலமாயினாய்
பண்ணை வென்ற வின் சொல் மங்கை கொங்கை தங்கு பங்கயக்
கண்ண ! நின்ன வண்ண மல்ல தில்லை எண்ணும் வண்ணமே -105-

மண்ணை உண்டு உமிழ்ந்து பின்னிரந்து கொண்டு அளந்த மண் கண்ணுள் அல்லது இல்லை என்று
இந்த உலகம் நமது கடாஷத்தால் அன்றி சத்தை பெறாது என்று திரு உள்ளம் கொண்டு
வென்ற காலமாயினாய்
உலகம் எல்லாம் ஸ்வ அதீநம் பற்றிக் கொண்டு போந்த சர்வ கால நிர்வாஹகனாய்
பண்ணை வென்ற வின் சொல் மங்கை கொங்கை தங்கு பங்கயக் கண்ண ! நின்ன வண்ண மல்ல தில்லை எண்ணும் வண்ணமே
உனது திவ்ய மங்கள விக்ரஹ அனுபவம் மட்டுமே நெஞ்சால் த்யானித்து இருப்பேன் என்கிறார்-

——————————————————————————–

..106..”karuthu ethirntha kaalanemi kaalanodu kooda antru”….”arutha aazlisangu thanndu villum vaallum yenthinaay”….”thoru kalantha vuoonam ahthu”=pasukkallukku nerntha appadipatta aabathai…”antru ozlikka”=appothey pokka…”mun”=yellorudaiya kann munney…”kuntram porutha nin puhazlukku alaal nenjam oer nesam ellai”..divya seshdithangal pesi anubavikiraar..

கறுத்து எதிர்ந்த  கால நேமி காலனோடு கூடவன்று
அறுத்த வாழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்தினாய்
தொறுக்கலந்த ஊனம் அஃது ஒழிக்க வன்று குன்றம் முன்
பொறுத்த நின் புகழ்கு அலாலோர் நேசம் இல்லை நெஞ்சமே -106-

கறுத்து எதிர்ந்த  கால நேமி காலனோடு கூடவன்று அறுத்த வாழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்தினாய்-
தொறுக்கலந்த ஊனம் அஃது ஒழிக்க வன்று
பசுக்களுக்கு நேர்ந்த அப்படிப்பட்ட ஆபத்தை அப்போதே போக்க
குன்றம் முன் பொறுத்த நின் புகழ்கு அலாலோர் நேசம் இல்லை நெஞ்சமே-
எல்லோருடைய கண் முன்னே குன்றம் எடுத்து அருளிய சேஷ்டிதங்களை பேசி அனுபவிக்கிறார்

————————————————————————

..107..”kaay sinatha kaasi mannan vakkaran pavunndiran “….”maa sinatha maali maa sumaali kesi thenuhan “…”naasam vutru veezla”..”  naall kavarntha”=(avarkallin)vaazl naallai muditha …”nin kazlarkku allaal “…”nesa paasam”=aasaa paasam…”ethirathum vaithideyn yem easaney”..

காய்சினத்த காசி மன்னன் வக்கிரன் பவுண்டிரன்
மாசினத்த மாலிமான் சுமாலி கேசி தேனுகன்
நாசமுற்று வீழ நாள் கவர்ந்த நின் கழற்கலால்
நேசபாசம் எத்திறத்தும் வைத்திடேன் எம் ஈசனே -107-

நேச பாசம் -ஆசா பாசம்

——————————————————————————-

..108..”kedu eil seer varathan aam ayan”=azlivilla sambathai vudaiyavanaam padi varam petra brahmanum……”kedum varathu aran”=ellaavatrukkum mudivu vunndu panuvathaha varam petra sivanum…….”naadinodu koodi”=evarkallin naadukalodu kooda ….”naattam aayirathan naadu”=1000 kann vudaiya endranin naattaiyum….”nanninnum”…”veedu aana athu boham yeythi veetru eruntha pothilum”….”koodum aasai allathu ontru kurippil kollveyno”..avanai anubavipathai vida avanai patrum mano radamey siranthathu yenkiraar..

கேடில் சீர் வரத்தனாய்க் கெடும் வரத்தயனரன்
நாடினோடு நாட்டம் ஆயிரத்தன் நாடு நண்ணினும்
வீடதான போகமெய்தி வீற்று இருந்த போதிலும்
கூடுமாசை யல்லதொன்று கொள்வனோ குறிப்பிலே -108-

கேடில் சீர் வரத்தனாய்க் கெடும் வரத்தயனரன்
அழிவில்லாத சம்பத்தை உடையவனாம் படி வரம் பெற்ற பிரம்மனும் -எல்லா வற்றுக்கும் முடிவு உண்டு பண்ணுவதாக வரம் பெற்ற சிவனும்
நாடினோடு நாட்டம் ஆயிரத்தன் நாடு நண்ணினும்
இவர்களின் நாடுகளின் கூட 1000 கண் கொண்ட இந்தரனின் நாட்டையும் நண்ணினும்
வீடதான போகமெய்தி வீற்று இருந்த போதிலும் கூடுமாசை யல்லதொன்று கொள்வனோ குறிப்பிலே
அவனை அனுபவிப்பதை விட அவனைப் பற்றும் மநோ ரதமே சிறந்தது என்கிறார் –

——————————————————————————-

..109..”surukku vaarai eintriyey”=suranga seyya heduvana karumam ontrum ellaamal..”surunginaay”=vamananaaha surunginaay..”surungiyum”…”perukka vaarai eintriyey perukkam yeythu petriyoy”=thiru vikramanaay aanaay..”serukkuvaarkal theekunnangal  theertha deva devan yentru”…ahangaaram konndu eruntha maaha bali  polvaarin ahangaaram, mahangaaram ,pontra theeya gunnangallai therthaay..”erukku vaay muni kannangal yetha yaanum yethineyn”..vedam othum vaayai vudaiya munivarkal  thuthikka, athai kanndu naanum thuthitheyn….”eraitha nalla menmakkal yetha yaanum yethineyn “polavum..”eppadi vuooram ellaikka kuruttaam ellaikkum yennum ,appadi yaanum sonneyn,adiyey mattru yaathu yenbeyney”-pola..

சுருக்குவாரை இன்றியே சுருக்கினாய் சுருங்கியும்
பெருக்குவாரை இன்றியே  பெருக்கமெய்து பெற்றியோய்
செருக்குவார்கள் தீக்குணங்கள் தீர்த்த தேவ தேவன் என்று
இருக்கு வாய் முனிக் கணங்கள் ஏத்த யானும் ஏத்தினேன் -109-

சுருக்குவாரை இன்றியே
சுருங்க செய்ய
ஸ்ரீ வாமனனாய் சுருங்கினாய்
சுருங்கியும் பெருக்குவாரை இன்றியே  பெருக்கமெய்து பெற்றியோய்
திரிவிக்ரமனனாய் பெருக்கமும் எய்தினாய்
செருக்குவார்கள் தீக்குணங்கள் தீர்த்த தேவ தேவன் என்று
அஹங்காரம் கொண்டு இருந்த மகா பலி போல்வாரின் அஹங்காரம் மமகாரம் போன்ற தீய குணங்களைத் தீர்த்தாய்
இருக்கு வாய் முனிக் கணங்கள் ஏத்த யானும் ஏத்தினேன்
வேதம் ஓதும் வாய் உடைய முனிவர்கள் துதிக்க அத்தைக் கண்டு நானும் துதித்தேன் -நல்ல மேன்மக்கள் ஏத்த யானும் ஏத்தினேன்

———————————————————————————–

..110..”thooyanaayum antriyum”=parisudanahavo,alladanaahavo..”surumbu vullavu thann thullaay maaya”=vanndukal vulaavapetra kullirntha thiruthullay maalai vudaiya perumaaney..”ninai naayineyn vannangi vaazlthum ethu elaam”…”neeyum nin kurippinil poruthu nalhu”=thiruvullathil shamithu aruli anugraham seyya venum..”velai neer paayalodu pathar sitham meya velai vannaney”=thirupaarkadal padukkaiyudan kooda baktharin nenjil kudi konndu erukkum kadal nira vannan…..”thooyanaavum antriyum”=ahangaaram,mahangaaram nirainthu asuthanahavum, devarai parama parisudaraha anusanthipathaal sudanahavum erukireyn..

தூயனாயும் அன்றியும் சுரும்பு உலாவு தண் துழாய்
மாய நின்னை நாயினேன் வணங்கி வாழ்த்துமீதெலாம்
நீயு நின் குறிப்பினில் பொறுத்து நல்கு வேலை நீர்ப்
பாயலோடு பத்தர் சித்தம் மேய வேலை வண்ணனே -110-

தூயனாயும் அன்றியும்
பரிசுத்தனாகவோ அல்லாதானாகவோ
சுரும்பு உலாவு தண் துழாய் மாய –
வண்டுகள் உலாவப் பெற்ற குளிர்ந்த திரு துழாய் மாலையை உடைய பெருமானே
நின்னை நாயினேன் வணங்கி வாழ்த்துமீதெலாம் நீயு நின் குறிப்பினில் பொறுத்து நல்கு
திரு உள்ளத்தில் ஷமித்து அருளி அனுக்ரஹம் செய்ய வேணும்
வேலை நீர்ப் பாயலோடு பத்தர் சித்தம் மேய வேலை வண்ணனே
திருப் பாற் கடல் படுக்கை உடன் கூட பக்தரின் நெஞ்சில் குடி கொண்டு இருக்கும் கடல் நிற வண்ணன்
தூயனாயும் அன்றியும் -அஹங்காரம் மமகாரம் நிறைந்து அசுத்தனாகவும் தேவரை பரம பரிசுத்தராக அனுசந்திப்பதால் சுத்தனாகவும் இருக்கிறேன்

—————————————————————————————–

ஸ்ரீ கோயில்  கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை பிரான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Thiru Chanda Vruttam-91-100-Shri PBA Swaami.-திருச்சந்த விருத்தம் -ஸ்ரீ உ. வே . PBA ஸ்வாமிகள்  —

January 24, 2008

..91..”pann vulaavum mel mozli”=raahangal(kurinchi,kaandaaram,kaamaram)villangum eniya petchu vudaiyavall..”padai dadam kannaal poruttu”=vaall pontra periya kann vudaiyavall piraattiyin poruttu..”yennilaa arakkarai neruppinaal nerukkinaay”..ambukallin theeyaal tholaithu arulinaay..”kann alaal oer kann eleyn”=nee thaan nirvaahan veru nirvaahan yaarum ellai..”kalanda suttram mattru elleyn”=nenju porunthina suttram veru ellai..”yenn elaada maaya ninai yentrum yennull neekkeyl”..

பண்ணுலாவு மென் மொழி படைத்தடம் காணாள் பொருட்டு
எண்ணிலா வரக்கரை நெருப்பினால் நெருக்கினாய்
கண்ணலாலோர் கண்ணிலேன் கலந்த சுற்றம் மற்றிலேன்
எண்ணிலாத மாய நின்னை என்னுள் நீக்கல் என்றுமே -91-

பண்ணுலாவு மென் மொழி
ராகங்கள் -குறிஞ்சி காந்தாரம் காமாரம் விளங்கும் இனிய பேட்சு உடையவள்
படைத்தடம் காணாள் பொருட்டு
வாள் போன்ற பெரிய கண் உடைய பிராட்டியின் பொருட்டு
எண்ணிலா வரக்கரை நெருப்பினால் நெருக்கினாய்
அம்புகளின் தீயால் தொலைத்து அருளினாய்
கண்ணலாலோர் கண்ணிலேன்
நீயே தான் நிர்வாஹகன் -வேறு நிர்வாஹகன் யாரும் இல்லை
கலந்த சுற்றம் மற்றிலேன்
நெஞ்சு பொருந்தின சுற்றம் வேறு இல்லை
எண்ணிலாத மாய நின்னை என்னுள் நீக்கல் என்றுமே

————————————————————————-

..92..”vidai kulangal ezl adarthu”=ezlu rishabangallaiyum  kozluppu adakki..”ventri vel kann maadar”=jayaseelamana vel pontra kannkal vudaiya nappinnai piraatti vudaiya..”kadi kalantha tholl punnarntha”=parimallam mikka thollkaludan samsleshitha ..”kaali aaya”=gopaala krishna..”velai neer padaithu”=jala thathuvamana kadalai srushtithu..”adaithu”=(rama avadarathil)annai katti..”athil kidanthu”=thangal aabathai vanthu solla heduvaha athil palli konndaruli..”mun kadainthu”..”nin thanakku adaikalam puhuntha yennai anjal yenna veynndum”..yenakkum “maasusaha’ yentru arula venum..

விடைக்குலங்கள் ஏழு அடர்த்து வென்றி வேற் கண் மாதரார்
கடிக்கலந்த தோள் புணர்ந்த காலி யாயா வேலை நீர்
படைத்து அடைத்து அதில் கிடந்து முன் கடைந்த நின் தனக்கு
அடைக்கலம் புகுந்த என்னை யஞ்சல் என்ன வேண்டுமே –-92-

விடைக்குலங்கள் ஏழு அடர்த்து
ஏழு ரிஷபங்களையும் கொழுப்பை அடக்கி
வென்றி வேற் கண் மாதரார்
ஜெயசீலமான வேல் போன்ற கண்கள் உடைய நப்பின்னை பிராட்டி உடைய
கடிக்கலந்த தோள் புணர்ந்த
பரிமளம் மிக்க தோள்களுடன் சம்ச்லேஷித்த
காலி யாயா
கோபால கிருஷ்ணனாக
வேலை நீர் படைத்து
ஜல தத்வமான கடலை சிருஷ்டித்து
அடைத்து
ஸ்ரீ ராமாவதாரத்திலே அணை கட்டி அடைத்து
அதில் கிடந்து
தங்கள் ஆபத்தை சொல்லி முறை இட ஹேது வாக அதிலே பள்ளி கொண்டு அருளி
முன் கடைந்த நின் தனக்கு அடைக்கலம் புகுந்த என்னை யஞ்சல் என்ன வேண்டுமே
எனக்கும் மாஸுசா என்று அருளிச் செய்ய வேணும்

—————————————————————————

..93..”surambu arangu thann thuzlaay”=vanndukal padintha kullirntha thiru thullay ..”thuthaithu alarntha paadamey”=nerungi, vihasikka pettra vunathu thiruvadikallaiyey..”virumbi nintru erainchuverrkku erangu aranga vaannaney’…..”karumbu eruntha kattiyey”..”kadal kidantha kannaney”….”erumbu aranga”=erumbu pontra raadshasa sarrerangal azliyum padi..”vem saram thurantha vil raamaney”….anchal yentru mattum arulinaal poraathu –vunathu thiruvadiyil  nitha kainkaryam pannum anubavamum thanthu  arulanum yenkiraar..

சுரும்பு அரங்கு தண் துழாய் அலர்ந்த பாதமே
விரும்பி நின்று இறைஞ்சுவேற்கு இரங்கு அரங்க வாணனே
கரும்பு இருந்த கட்டியே கடல் கிடந்த கண்ணனே
இரும்பு அரங்க வெஞ்சரம் துரந்த வில்லி ராமனே-93-

சுரும்பு அரங்கு தண் துழாய் அலர்ந்த பாதமே
வண்டுகள் படிந்த குளிர்ந்த திரு துழாய்
துகைத்து அலர்ந்த பாதமாய் –
நெருங்கி விகசிக்க பெற்ற உனது திருவடிகளையே
விரும்பி நின்று இறைஞ்சுவேற்கு இரங்கு அரங்க வாணனே -கரும்பு இருந்த கட்டியே -கடல் கிடந்த கண்ணனே-இரும்பு அரங்க வெஞ்சரம் துரந்த வில்லி ராமனே
இரும்பு போன்ற ராட்ஷச சரீரங்கள் அழியும் படி
அஞ்சேல் என்று மட்டும் அருளினால் போராது-உனது திருவடியில் நித்ய கைங்கர்யம் பண்ணும் அனுபவம் தந்து அருள வேண்டும் என்கிறார்

—————————————————————————

..94..”vuoonin meya aavi nee”=sarerathil vulla piraannan nee etta vazlakku..”vurakkamodu vunnarchi nee”=gjanamum, agjanamum nee etta vazlakku..”aanil meya einthum nee”=pasuvin pancha kavyamum nee..”avattrul nintra thooymai nee”..”vaaninodu mannum nee”…”vallam kadal payanum nee”…”yaanum nee athu vantri embiraamanum nee”..avan sarva prakaari..kadal amudam devarkalukku thanthathu pola radnam pontravatrai eisvaryaarthikalukkum tharukiraay..vaaninodu mannum nee yentrathu aahasathil pala pala devathaikal yeanguvathum,neeriley karaiyaamal boo loham eruppathum vunnaaley thaan..yaanum ne yentrathu yenakku vun pakkal rusi piravaada kaalathilum,yenakku nalla madi allithu rusiyai perukinathum nee thaan yenkiraar..

ஊனின் மேய வாவி நீ உறக்கமோடு உணர்ச்சி நீ
ஆனில் மேய ஐந்தும் நீ யவற்றின் நின்ற தூய்மை நீ
வானினொடு மண்ணும் நீ வளம் கடல் பயனும் நீ
யானும் நீ யதன்றி எம்பிரானும் நீ யிராமனே –94-

ஊனின் மேய வாவி நீ-
சரீரத்தில் உள்ள பிராணன் நீ இட்ட வழக்கு
 உறக்கமோடு உணர்ச்சி நீ
ஜ்ஞானமும் அஜ்ஞ்ஞானமும் நீ இட்ட வழக்கு
ஆனில் மேய ஐந்தும் நீ
பசுவின் பஞ்ச கவ்யமும் நீ
யவற்றின் நின்ற தூய்மை நீ வானினொடு மண்ணும் நீ வளம் கடல் பயனும் நீ யானும் நீ யதன்றி எம்பிரானும் நீ யிராமனே
அவன் சர்வ பிரகாரி -கடல் அமுதம் தேவர்களுக்கு தந்தது போலே ரத்னம் போன்றவற்றை ஐஸ்வர் யார்த்திகளுக்கும் தருகிறாய்
வானினொடு மண்ணும் நீ -என்றது -ஆகாசத்தில் பல பல தேவதைகள் ஏங்குவதும் நீரிலே கரையாமல் பூ லோகம் இருப்பதும் உன்னாலே தான்
யானும் நீ என்றது -எனக்கு உன் பக்கல் ருசி பிறவாத காலத்திலும் எனக்கு நல்ல மதி அளித்து ருசியை பெருக்கினதும் நீ தான் என்கிறார்

—————————————————————————

..95..”adakka arum eimpulankal adakki”…”aasai aam avai thudakku aruthu vanthu”…”nin thozlil kann nintra yennai”..”vida karuthi mey seyyaathu mikka oer aasai aakkilum”..”kadal kidantha nin allaal oer kann elleyn”..”yennai nehizlkilum yennudaiya nal nenjamthannai ahalvikka thaanum engu ellan eni”-pola  nee ethu seythaalum,yen manam vunnai vittu pohaathu..

அடக்கரும் புலன்கள் ஐந்தும் அடக்கி யாசையாம் யவை
துடக்கு அறுத்து வந்து நின் தொழில் கண் நின்ற வென்னை நீ
விடக்கருதி மெய் செயாதே மிக்கோர் யாசை யாக்கிலும்
கடல் கிடந்த நின்னலாலோர் கண் இலேன் எம் அண்ணலே -95-

என்னை நெகிழ்கிலும் என்னுடைய நல நெஞ்சம் தன்னை அகல்விக்க தானும் இங்கிலன் போலே
நீ எது செய்தாலும் என் மனம் உன்னை விட்டு போகாது

————————————————————————–

..96..”varambu ellada maaya maayaa”..”vaiyam ezlum meymaiyey”..”varambu el vuoozli yethilum”=pala pala karbangal sthothiram panninaalum..”varamillada keerthiyaay”=ellai kaanna mudiyaatha  pugazl vudaiyoney..”varabillada pal pirappu aruthu”..” nin kazlal porunthum aa “=vunathu thiruvadikal kitti ,avatriley sakdanaay erukum padi..”thiruntha nee varam sey”..thamudaiya prapyathai spashdamaha praarthikiraar..

வரம்பிலாத மாயமாயா வையம் ஏழும் மெய்ம்மையே
வரம்பிலூழி யேத்திலும் வரம்பிலாத கீர்த்தியாய்
வரம்பிலாத பல் பிறப்பு அறுத்து வந்து நின் கழல்
பொருந்துமாறு திருந்த நீ வரம் செய் புண்டரீகனே–96-

வரம்பிலாத மாயமாயா வையம் ஏழும் மெய்ம்மையே வரம்பிலூழி யேத்திலும்
பல பல கல்பங்கள் ஸ்தோத்ரம் பண்ணினாலும்
வரம்பிலாத கீர்த்தியாய்
எல்லை காண முடியாத புகழ் உடையோனாய்
வரம்பிலாத பல் பிறப்பு அறுத்து வந்து நின் கழல் பொருந்துமாறு
உனது திருவடிகள் கிட்டி அவற்றிலே சக்தனாய் இருக்கும் படி
திருந்த நீ வரம் செய் புண்டரீகனே
தம்முடைய பிராப்யத்தை ஸ்பஷ்டமாக பிரார்த்திக்கிறார்

——————————————————————————

..97..”veyya aazli sangu thanndu villum vaallum yenthu seer kaiya”…”seyya pothil maathu ser maarbaa”..”naadaney””eiyil aaya aakkai  noey aruthu vanthu nin adainthu”..”vuyavathu oer vubaayam yenakku nee nalha veynndum”..

வெய்ய வாழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்து சீர்க்
கைய ! செய்ய போதில் மாது சேரு மார்பா !நாதனே !
ஐயிலாய வாக்கை நோய் அறுத்து வந்து நின்னடைந்து
உய்வதோர் உபாயம் நீ எனக்கு நல்க வேண்டுமே -97

————————————————————————————–

..98..”maram thuranthu”=kobathai ozlithu..”vanjam maattri”…”eim pulankallaiyum aasaiyum thuranthu”…”nin kann aasaiyey thodarnthu ninta naayineyn”..”piranthu eranthu per edar suzlikann nintrum neengum”..” aa”=vazliyaiyum ……”Matru”=adarkku membatta paramaanandam adaiyum vazliyum..”yenakku maranthiraathu nalha veynndum”..

மறம் துறந்து வஞ்சம் மாற்றி ஐம் புலன்கள் ஆசையும்
துறந்து நின் கண் ஆசையே தொடர்ந்து நின்ற நாயினேன்
பிறந்து இறந்து பேர் இடர் சுழிக் கண் நின்று நீங்குமா
மறந்திடாது மற்று எனக்கு மாய நல்க வேண்டுமே -98-

மறம் துறந்து
கோபத்தை ஒழித்து
வஞ்சம் மாற்றி ஐம் புலன்கள் ஆசையும் துறந்து நின் கண் ஆசையே தொடர்ந்து நின்ற நாயினேன்-பிறந்து இறந்து பேர் இடர் சுழிக் கண் நின்று நீங்குமா
ஆ -வழியையும்
மறந்திடாது மற்று எனக்கு மாய நல்க வேண்டுமே

————————————————————————————–

..99..”kaatti naan sey val vinai”=naan seyum periya paapangallai  yenakku ninaivu paduthi..’payan thanil manam thannai naatti vaithu”=antha paapangalin payankall anubavipathil manasai seluthi…”nalla alla seyya yenninaa”=himsaikalai seyyaninaithu erukiraarkal …”yena kettathu antri”=yentru naan kettu erukira padiyaahaamaikaka…”yennathu aavi ninnodum pootti vaitha yennai “=yenudaiya aatmaavai vun pakkalil samarpithu,nirparanaay erukum yennai…”ninnul neekkal poovai vannaney”…vunnai vittu pirithida venndaam..

காட்டி நான் செய் வல் வினைப் பயன்தனால் மனம் தனை
நாட்டி வைத்து நல்ல வல்ல செய்ய எண்ணினார் எனக்
கேட்டதன்றி என்னதாவி பின்னை கேள்வ நின்னொடும்
பூட்டி வைத்த வென்னை நின்னுள் நீக்கல் பூவை வண்ணனே -99-

காட்டி நான் செய் வல் வினைப்
நான் செய்யும் பெரிய பாபங்களை எனக்கு நினைவு படுத்தி
பயன்தனால் மனம் தனை நாட்டி வைத்து
அந்த பாபங்களின் பயன்களை அனுபவிப்பதில் மனசை செலுத்தி
நல்ல வல்ல செய்ய எண்ணினார் எனக்
ஹிம்சைகளை செய்ய நினைத்து இருக்கிறார்கள் என்று
கேட்டதன்றி
நான் கேட்டு இறுக்கிற படி யாமைக்காக
என்னதாவி பின்னை கேள்வ நின்னொடும் பூட்டி வைத்த வென்னை
என்னுடைய ஆத்மாவை உன் பக்கலில் சமர்ப்பித்து நிர்ப்பரனாய் இருக்கும் என்னை-
நின்னுள் நீக்கல் பூவை வண்ணனே
உன்னை விட்டுப் பிரித்திட வேண்டாம்

————————————————————————————-

..100..”pirappinodu per edar suzlikkal nintrum neengum ahthu”…”erappa vaitha”=maranthu ozlintha..”gjana neesarai”=sarva yagjaraha ninainthu konndu erukkum neesarai….”karai kodu yetram aa”=karaiyil konndu serkkum padiyaha..”perarkku ariya nina paadam pathi aana “…”paasanam”=mara kalam…”perarkku ariya maayaney yenakku nalha veynndumey”…

பிறப்பினோடு பேர் இடர் சுழிக்கண் நின்று நீங்கும் அஃது
இறப்ப வைத்த  ஞான நீசரைக் கரைக்கொடு ஏற்றமா
பெறற்கு அரிய நின்ன பாத பத்தியான பாசனம்
பெறற்கு அரிய மாயனே யெனக்கு நல்க வேண்டுமே -100-

பிறப்பினோடு பேர் இடர் சுழிக்கண் நின்று நீங்கும் அஃது
இறப்ப வைத்த -மறந்து ஒழிந்த
ஞான நீசரைக் -சர்வஜ்ஞ்ஞாராக நினைந்து கொண்டு இருக்கும் நீசரை
கரைக்கொடு ஏற்றமா
கரையில் கொண்டு சேர்க்கும் படியாக
பெறற்கு அரிய நின்ன பாத பத்தியான
பாசனம்-மரக் கலம்
பெறற்கு அரிய மாயனே யெனக்கு நல்க வேண்டுமே

———————————————————————————

ஸ்ரீ கோயில்  கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை பிரான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Thiru Chanda Vruttam-81-90-Shri PBA Swaami.-திருச்சந்த விருத்தம் -ஸ்ரீ உ. வே . PBA ஸ்வாமிகள்  –

January 24, 2008

..81..”kadaintha”=koormaa avadarathil kadaiya petra..: paal kadal kidanthu”…”kaalanemiyai kadinthu”…”vudaintha vaali thanthanukku”=nadungi kidantha sugreevanukku..”vudava raaman aay vanthu “….”midaintha ezl marangallum adanga yeythu”…”venkadam adaintha maala paadamey naallum adainthu vuymin”..

கடைந்த பாற்கடல் கிடந்து கால நேமியைக் கடிந்து
உடைந்த வாலி தந்தனுக்கு உதவ வந்தி ராமனாய்
மிடைந்த மேழ் மரங்களும் அடங்க வெய்து வேங்கடம்
அடைந்து மால பாதமே யடைந்து நாளும் உய்மினோ –81-

கடைந்த பாற்கடல் கிடந்து கால நேமியைக் கடிந்து
கூர்ம அவதாரத்தில் கடையப் பெற்ற
உடைந்த வாலி தந்தனுக்கு உதவ வந்தி ராமனாய்
நடுங்கிக் கிடந்த சுக்ரீவனுக்கு
மிடைந்த மேழ் மரங்களும் அடங்க வெய்து வேங்கடம் அடைந்து மால பாதமே யடைந்து நாளும் உய்மினோ

—————————————————————–

..82..”ethirathum othu nintru”=yentha jaadhiyil piranthu erunthaalum, chedana achenarkaludan othu erunthu..””vuyarnthu vuyarntha petriyoy”….”muthirathu moori neer”=thiru paar kadaliley…”araa annai thueintra  nin”…”pathu vurutha sinthaiyodu nintru “=bakthi azlunthina nenjathodu koodi erunthu..’paasam vittavarkku”=vishayaandara patrukkallai vittavarkalukku ..”ethirathum enbam engum angum yengum aahum”..evuvulahathilum, avuvulahathilum evuvulahathilumenbam kittum…deva,manusha,jandhu,daavara jaathiyilum avadarathu,jaathiyil othu erunthaalum, gunna perumaiyaal vuyarnthavan..myn neer=kadal..aattru,vuttru,mazlai neer..

எத்திறத்தும் ஒத்து நின்று உயர்ந்து உயர்ந்த பெற்றியோய்
முத்திறத்து மூரி நீர் அராவணைத் துயின்ற நின்
பத்து  உறுத்த சிந்தையோடு நின்று பாசம் விட்டவர்க்கு
எத்திறத்தும் இன்பம்  இங்கும் அங்கும் எங்கும் ஆகுமே –82-

எத்திறத்தும் ஒத்து நின்று
எந்த ஜாதியில் பிறந்து இருந்தாலும் -சேதன அசேதனர்களுடன் ஒத்து இருந்து
உயர்ந்து உயர்ந்த பெற்றியோய்
முத்திறத்து மூரி நீர் அராவணைத் துயின்ற நின்
பத்து  உறுத்த சிந்தையோடு நின்று
பக்தி அழுந்தின நெஞ்சத்தோடு கூடி இருந்து
பாசம் விட்டவர்க்கு
விஷயாந்தர பற்றுக்களை விட்டவர்களுக்கு
எத்திறத்தும் இன்பம்  இங்கும் அங்கும் எங்கும் ஆகுமே –
இவ்வுலகத்திலும் அவ்வுலகத்திலும் எவ்வுலகத்திலும் இன்பம் கிட்டும்
தேவ மனுஷ்ய ஜந்து ஸ்தாவர ஜாதியிலும் அவதார ஜாதியில் ஒத்து இருந்தாலும் குணா பெருமையால் உணர்ந்தவன்
மூரிநீர் கடல் ஆற்று ஊற்று– மழை நீர் என்னவுமாம்

—————————————————————–

..83..”mattu vulaavu”theyn nithyamaay erukkum..”thann thuzlaay alangalaay”…”pulan kazlal vittu”=thiruvadikallai entha boo vulahileyey anubavipathai vittu….”veezlvu elaada boham nanninum”=azlivu ellada kainkaryam parama padam sentru kittinaalum..”ettinodu eranndu yennum kayitrinaal manam thannai katti”=pathu yentra bakthi aahira  paasathaal manasai kattu paduthi…”veedu ellaada kaadal enbam aahumey”=visedamillada amaikka patta premaiyaal kidaikkum aanandathukku yeedu ellai..”pathudai adiyavarkku elliyavan” pola pathu=bakthi..vaitha kaadaley enbam yenkiraar..

மட்டுலாவு தண் துழாய் அலங்கலாய் புலன் கழல்
விட்டு வீள்விலாத போகம் விண்ணில் நண்ணி ஏறினும்
எட்டினோடு இரண்டு எனும் கயிற்றினால் மனம் தனைக்
கட்டி வீடிலாது வைத்த காதல் இன்பமாகுமே –83-

மட்டுலாவு –
தேன் நித்தியமாய் இருக்கும்
தண் துழாய் அலங்கலாய் புலன் கழல் விட்டு
திருவடிகளை இந்த பூ உலகத்திலேயே அனுபவிப்பதை விட்டு
வீள்விலாத போகம் விண்ணில் நண்ணி ஏறினும்
அழிவில்லாத கைன்காராயம் பரம பதத்திலே சென்று கிட்டினாலும்
எட்டினோடு இரண்டு எனும் கயிற்றினால் மனம் தனைக் கட்டி
பத்து என்ற பக்தி யாகிற பாசத்தால் மனசைக் கட்டுப் படுத்தி
வீடிலாது வைத்த காதல் இன்பமாகுமே –
விச்சேதம் இல்லாத அமைக்கப் பட்ட ப்ரேமையால் கிடக்கும் ஆனந்தத்துக்கு ஈடு இல்லை
பத்துடை அடியவர்க்கு எளியவன் போலே –பத்து -பக்தி –வைத்த காதலே இன்பம் பயக்கும்

————————————————————-

..84..”pin pirakka vaithannan kol”=naan ennum pala piravikkal edukka thiru vullamaa..”antru”=allathu….”nintru”=nillaithu nintru…”than kazlarkku anbu vuraikka vaithu”…”annaall arinthannan kol”=parama padalil sentru anubavikkum naallai thiru vullamaa…”than thirathu”=than vishayathiley..’oer anbu elaa arivu elaada naayineyn “…”yen thirathil embiraan kurippil vaithathu yen kol”..pinbu erakka vaithannan kol yentrum kollalaam mudal adiyai..erakka=marakka..emberumaanai maranthu erupathu atmavukku erappu..avan thiru vullam vuhappu than parama padam adaiya vubaayam,,

பின் பிறக்க வைத்தனன் கொல் அன்றி நின்று தன் கழற்கு
அன்புறைக்க வைத்த நாள் அறிந்தனன் கொல் யாழியான்
தன் திறத்தோர் அன்பிலா வறிவிலாத நாயினேன்
என்திறத்தில் என் கொல் எம்பிரான் குறிப்பில் வைத்ததே -84-

பின் பிறக்க வைத்தனன் கொல்
நான் இன்னும் பல பிறவிகள் எடுவிக்க திரு உள்ளமா
பின்பு இருக்க வைத்தனன் கொல் என்றுமாம் -இருக்க -எம்பெருமானை மறந்து இருப்பது ஆத்மாவுக்கு இறப்பு-
அன்றி நின்று தன் கழற்கு அன்புறைக்க வைத்த நாள்-நிலைத்து நின்று-அறிந்தனன் கொல் யாழியான்
பரம பதத்தில் சென்று அனுபவிக்கும் நல்ல
திரு உள்ளமா
தன் திறத்தோர் அன்பிலா வறிவிலாத நாயினேன்
தன் விஷயத்தில்
என்திறத்தில் என் கொல் எம்பிரான் குறிப்பில் வைத்ததே
அவன் திரு உள்ளம் உகப்பு தான் பரம பதம் அடைய உபாயம்

————————————————————-

..85..”nanchu araa annai kidantha naada”=aasrida virothikalin meley vishathai vumizlum thiruvannadaazlvaan yennum sayanathil thiru kann vallarum sarvesvaraney…”paada pothunil vaitha sinthai”..thiruvadi thaamaraikallil eppothu vaithu erukkum manasai ..”vaanguvithu”=athil nintrum thiruppi..”neenguvikka”=veru vishayathil pokka…”nee”=svadandaranaana nee..”enam”=einnamum..”meythanan”=meyyahavey..”vallai aadal’=samardan yenbathai…”arinthannan”…”maayaney  yennai nin maayamey vuythu mayakkinil  mayakkal”=adiyenai prakruda  paasangalil mayakka veynndaam yenkiraar….vunathu svaadandriyathaal yennai samsaara padu kuzliyil thallaamal krubai panni arula venum  yenkiraar..

நச்சராவணைக் கிடந்த நாத பாத போதினில்
வைத்த சிந்தை வாங்குவித்து நீங்குவிக்க நீயினம்
மெய்த்தன் வல்லை யாதலால் அறிந்தனன் நின் மாயமே
உய்த்து நின் மயக்கினில் மயக்கல் என்னை மாயனே –85-

நச்சராவணைக் கிடந்த நாத
ஆஸ்ரித விரோதிகளின் மேலே விஷத்தை உமிழும் திரு வநந்த வாழ்வான் என்னும் சயனத்தில் திருக் கண் வளரும் சர்வேஸ்வரனே
பாத போதினில் வைத்த சிந்தை
திருவடி தாமரைகளில் எப்போதும் வைத்து இருக்கும் மனசை
வாங்குவித்து-அதில் நின்றும் திருப்பி
நீங்குவிக்க நீயினம்
வேறு விஷயத்தில் போக்க -ஸ்வ தந்த்ரனான நீ இன்னம்
மெய்த்தன் வல்லை யாதலால் அறிந்தனன் நின் மாயமே
மெய்யாகவே சமர்த்தன் என்பதை அறிந்தனன்
உய்த்து நின் மயக்கினில் மயக்கல் என்னை மாயனே
அடியேனை ப்ராக்ருத பாசங்களில் மாய்க்க வேண்டாம் என்கிறார்
உனது ஸ்வா தந்த்ர்யத்தால் என்னை சம்சார படு
குழியில் தள்ளாமல் கிருபை பண்ணி அருள வேணும் என்கிறார் –

—————————————————————-

..86..”saadu saadu paadaney”=sahadaasuranai  vuthaithu ozlitha thiruvadikallai vudaiyavaney….”salam kalanda poyhai vaay”=vishmamey erunthu, athudan sirithu thannerum kalantha maduvil…”aadu aravin van pidar nadam payintra naadaney “=serukkinal padam eduthu aadum kaallinganin,valiya pidariyil,nardanam  seytha swaamiyey…”kodu needu kaiya kannaney “=pancha sanyam neengaathu vaithu erukkum kaiyan kanna piraan….”seyya paadam naallum “..”vullinaal “thyaanam panni konndu erunthaal…”mey”=meyaahavey..”vidan aaha seyaada vannam yen kol’=adiyenai muktan  akkaadathu yeno?–virothi pokkum samardan nee yenathu virothiyai nivarthika venndaamo yenkiraar..

சாடு சாடு பாதனே சலங்கலந்த பொய்கைவாய்
ஆடரவின் வன் பிடர் நடம் பயின்ற நாதனே
கோடு நீடு கைய செய்ய பாத நாளும் உள்ளினால்
வீடனாக மெய் செயாத வண்ணம் என் கொல் கண்ணனே –86-

சாடு சாடு பாதனே
சகடாசுரனை உதைத்து ஒழித்த திருவடிகளை உடையவனே
சலங்கலந்த பொய்கைவாய்
விஷமமாகவே இருந்த அத்துடன் சிறிது தண்ணீரும் கலந்த மடுவில்
ஆடரவின் வன் பிடர் நடம் பயின்ற நாதனே
செருக்கினால் படம் எடுத்து ஆடும் காளிங்கனின் வலிய பிடரியில் நர்த்தனம் செய்த ஸ்வாமியே
கோடு நீடு கைய
பாஞ்ச ஜன்யம் நீங்காது வைத்து இருக்கும் திருக் கையின் கண்ணபிரான்
செய்ய பாத நாளும் உள்ளினால்
த்யானம் பண்ணிக் கொண்டு இருந்தால்
வீடனாக மெய் செயாத வண்ணம் என் கொல் கண்ணனே
மெய்யாகவே அடியேனை முக்தன் ஆக்காதது ஏனோ-
விரோதி போக்கி அருளும் சமர்த்தன் நீ எனது விரோதிகளை நிவர்த்தித்து அருள வேண்டாவோ என்கிறார்-

——————————————————————-

..87..”netri petra kannan”=netri kann vulla sivan..”vinnin naadan”.=endran..”pothin meyl nal thavathu naathan”=brahman..”mattrum vulla vaanavar”…”kattra pettriyaal”=thangal thangal abyasithulla muraipadi..”vannangu paada”….”veda”=vedathil solla pattavaney..”vuraikkil”=yenathu adyavasaayathai solla puhunthaal..”nin pattru allaal  mattrathu oer pattru vuttrilleyn”==vunnaiyey pattri eruppeyn veru puhal edam nenjaalum ninaikka maatteyn..”kallai vaay  thunbam kallaiyaathu ozlivaay kallai kann mattrileyn” -pola..”thangallan baara thamathu sol valathaal  thalai thalai siranthu poosippa “-pola devarkal yellorum evan kai ethir paarthu erukiraarkal..

நெற்றி பெற்ற கண்ணன் விண்ணின் நாதனோடு போதின் மேல்
நல் தவத்த நாதனோடு மற்றும் உள்ள வானவர்
கற்ற பெற்றியால் வணங்கு பாத நாத வேத நின்
பற்று அலால் ஓர் பற்று மற்ற துற்றிலேன் உரைக்கிலே –87-

நெற்றி பெற்ற கண்ணன்
நெற்றிக் கண் உள்ள சிவன்
விண்ணின் நாதனோடு போதின் மேல் நல் தவத்த நாதனோடு
இந்த்ரன் பிரமன்
மற்றும் உள்ள வானவர் கற்ற பெற்றியால் –
தங்கள் தாங்கள் அப்யசித்த முறைப்படி
வணங்கு பாத நாத-வேத-வேதத்தில் சொல்லப் பட்டவனே
நின் பற்று அலால் ஓர் பற்று மற்ற துற்றிலேன் உரைக்கிலே –
எனது அத்யவசாயத்தைச் சொல்லப் புகுந்தால் -உன்னையே பற்றி இருப்பேன் -வேறு புகலிடம் நெஞ்சாலும் நினைக்க மாட்டேன்
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன் -போல
தங்களன்பார தமது சொல் வலத்தால் தலை தலை சிறந்து பூசிப்ப -போலே தேவர்கள் எல்லோரும் இவன் திருக்கை எதிர் பார்த்து இருக்கிறார்கள்

———————————————————————-

88..””vellai velai”=venn kadalaana thiru paarkadal..”verppu naatti”=mandaara malaiyai  nattu..”vell yeyiru araa allaay”=vellutha parkallai vudaiya vaasuhi naagathai  kayaraha suttri…”allal aa”=allaikal seriyum padi..”kadaintha antru”…”aru varaikku”=thaanga mudiyaatha antha mallaiku..”oer aamai aay”…”vaanavarkku  vulla noeykall theer marunthu allitha yem vallalaarai antri mattru  oer deivam naan madippaney”..

வெள்ளை வேலை வெற்பு நாட்டி வெள்  எயிற்று அரவு அளாய்
அள்ளலாய் கடைந்த வன்று அருவரைக்கு ஓர் ஆமையாய்
உள்ள நோய்கள் தீர் மருந்து வானவர்க்கு அளித்த எம்
வள்ளலாரை யன்றி மற்று ஓர் தெய்வம் நான் மதிப்பேனே –88-

வெள்ளை வேலை
வெண்மையான கடலான திருப் பாற் கடலில்
வெற்பு நாட்டி
மந்தர  மலையை நாட்டி
வெள்  எயிற்று அரவு அளாய்
வெளுத்த பற்களை உடைய வாசுகி நாகத்தை கயிறாக சுற்றி
அள்ளலாய்
அலைகள் செறியும்படி
கடைந்த வன்று அருவரைக்கு
தாங்க முடியாத அந்த மலைக்கு
ஓர் ஆமையாய் உள்ள நோய்கள் தீர் மருந்து வானவர்க்கு அளித்த எம் வள்ளலாரை யன்றி மற்று ஓர் தெய்வம் நான் மதிப்பேனே

————————————————————————-

..89..”paar mihutha paaram mun”= mun oru kaalathil,boomiyil  paramaha vulla thushda vargathai..”ozlitchuvaan arjunan they mihuthu”..”maayam aakki nintru  kontru “=pahallai eravakinathu pola maaya seyalkal seythu,ethirikallai kontru..”ventri ser maa radarkku”=vettri peruvathaha ninaithu eruntha ,mahaa radarkalaana duryodanaadikalai..”vaan koduthu”= veera svarga loham thanthu..”vaiyam eivar paalathu aam”=boomandalathai pancha paandavarkalukku aakkuvitha…”seer mihutha nin alaal oer deivam naan mathippaney”..adi radar(1-1000),maha radar(1-pala1000),sama radar(1-1.win),ardaradar(1-1..defeat)..yentru naangu vahai rada veerarkal..

பார் மிகுத்த பாரம் முன் ஒழிச்சுவான் அருச்சுனன்
தேர் மிகுத்து மாயமாக்கி நின்று கொன்று வென்றி சேர்
மாரதர்க்கு வான் கொடுத்து வையம் ஐவர் பாலதாம்
சீர் மிகுத்த நின் அலால் ஓர் தெய்வம் நான் மதிப்பனே –89-

பார் மிகுத்த பாரம் முன்
முன் ஒரு காலத்தில் பூமியில் பாரமாக இருந்த துஷ்ட வர்க்கத்தை
ஒழிச்சுவான் அருச்சுனன் தேர் மிகுத்து மாயமாக்கி நின்று கொன்று
பகலை இரவாக்கியும் போன்ற பல மாயங்களைச் செய்து எதிரிகளைக் கொன்று
வென்றி சேர் மாரதர்க்கு வான் கொடுத்து
வெற்றி பெறுவதற்காக நினைத்து இருந்த மகா ரதர்களான
துரியோதானாதிகளை வீர ஸ்வர்க்கம் அனுப்பி
வையம் ஐவர் பாலதாம்
பூ மண்டலத்தை பஞ்ச பாண்டவர்களுக்கு ஆக்குவித்து அருளி
சீர் மிகுத்த நின் அலால் ஓர் தெய்வம் நான் மதிப்பனே
அதி ரதர் -1-1000
மகா ரதர் -1- பல 1000
சம ரதர் -1-1-
அர்த்தரர் -1-தோற்று -இப்படி ரதர்கள் -நான்கு வகைகள் உண்டே

————————————————————————-

..90..”kulangal aaya yeer eranndil”=naangu varnnangallil..”ontrilum piranthileyn”…”nalangal aaya nal kallaikal naalilum”=naangu vadangalaiyum ..”navintrileyn”..”pulangal einthum ventrileyn”..”poriyileyn”=sabdathi vishayangallil  ahapattu erukiren..”nin elangu paadam antri mattru oer pattru elleyn”….elangu=olli mikka….mun paasurathil ananya kadidvam solli, eppo aakinchanyam arulukiraar..vubaayamum vubeyamum avan thiruvadikall thaan yenkiraar..

குலங்களாய ஈரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன்
நலங்களாய நற் கலைகள் நாலிலும் நவின்றிலேன் –நாவிலும் என்றும் பட பேதம் -இங்கே
புலன்கள் ஐந்தும் வென்றிலேன் பொறியிலேன் புனித நின்
இலங்கு பாதம் அன்றி மற்றோர் பற்றிலேன் எம் ஈசனே –90-

குலங்களாய ஈரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன்
நான்கு வர்ணங்களில் ஒன்றிலும் பிறந்திலேன்
நலங்களாய நற் கலைகள் நாலிலும் நவின்றிலேன் —
நான்கு வேதங்களையும் நவின்றிலேன்
நாவிலும் என்றும் பட பேதம் -இங்கே
புலன்கள் ஐந்தும் வென்றிலேன் பொறியிலேன்
சப்தாதி விஷயங்களிலே அகப்பட்டு இருக்கிறேன்
புனித நின் இலங்கு பாதம் அன்றி மற்றோர் பற்றிலேன் எம் ஈசனே –
இலங்கு ஒளி மிக்க
முன் பாசுரத்தில் அநந்ய கதித்வம் சொல்லி இதில் ஆகிஞ்சன்யம் அருளுகிறார்
உபாயமும் உபேயமும் அவன் திருவடிகள் தான் என்கிறார் –

————————————————————————————————-

ஸ்ரீ கோயில்  கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை பிரான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Thiru Chanda Vruttam-71-80-Shri PBA Swaami.-திருச்சந்த விருத்தம் -ஸ்ரீ உ. வே . PBA ஸ்வாமிகள்  —

January 24, 2008

..71..”vanndu vulaavu kothai maadar kaarannathaal vehunndu”=(maharanthathukaka )vanndukal  vulavum poo maalai anninthu eruntha ushaiyin nimithamaha kobam konndu….”einnda “=serinthu vantha ….”vaannan yeer einooru thollkalai thunnitha naall”….”munndan neeran”=mottai thalaiyanum thiruneeru poosinavanum aana rudran..””makkal”=avanin kumararkalum..”veppu”=jura devathaiyum..”modi”=pidaariyum..”angi”=agni devanum ..matru ellaarum “oodida “=(baanaasuranai vanjithu, thangal vueirai kathu kolla)oodi pona pothu..”kanndu “=paarthu..”naanni”=(entha puramuduhu kaatti oodum payalkaludanaa por seyya vanthom yentru)vetka pattu..”vaannanukku eranginaan yem maayaney”..evan thaaney radshahan..yenna acharyam.. yem aayaney yentrum kollalaam..

வண்டுலாவு கோதை மாதர் காரணத்தினால் வெகுண்டு
இண்ட வாணன் ஈரைஞ்சு நூறு தோள்களை துணித்த நாள்
முண்டன் நீறன் மக்கள் வெப்பு மோடி அங்கி யோடிடக்
கண்டு நாணி வாணனுக்கு இரங்கினான் எம் மாயனே -71-

வண்டுலாவு கோதை மாதர் காரணத்தினால் வெகுண்டு
மகரத்துக்காக வண்டுகள் உலாவும் பூ மாலை அணிந்து இருந்த உஷையின் நிமித்தமாகக் கோபம் கொண்டு
இண்ட வாணன் ஈரைஞ்சு நூறு தோள்களை துணித்த நாள்
செறிந்து வந்த வாணனது ஆயிரம் கரங்களையும் துணித்து
முண்டன் நீறன் மக்கள் வெப்பு மோடி அங்கி யோடிடக்கண்டு நாணி
மொட்டைத் தலையனும் திரு நீறு பூசினவனுமான ருத்ரனும் -அவனுடைய குமாரர்களும் ஜுர தேவதையும் பிடாரியும்-அக்னி தேவனும் மற்று எல்லாரும் ஓடிட
பாணாசுரனை வஞ்சித்து தங்கள் உயிரைக் காத்துக் கொள்ள ஓடிப் போன போது
பார்த்து இந்த புற முதுகு காட்டி ஓடும் பயல்களுடனே போர் செய்ய வந்தோம் என்று வெட்கப் பட்டு
வாணனுக்கு இரங்கினான் எம் மாயனே –
இவன் தானே ரட்சகன் -என்ன ஆச்சர்யம் எம் ஆயனே என்றும் கொள்ளலாம் –

————————————————————-

..72..”pothil mangai”poo mahal lakshmiyum..”boodalam kizlathi”=boomi piraattiyum..”devi”=devimaar aavar..”antriyum”..”pothu thangu naanmuhan mahan”=poovil porunthi erukkun brahmanin pudran rudran..”solil”=melum solla pukkaal…”maadu thangu kooran”=oru pakkam paarvathi thanga petravanaay….”yeyru athu vuoorthi”=erumai vahanamaay vudaiya sivan…”avan mahan”=peranaay erukiraan….”yentru veda nool oothukintrathu  vunnmai”.ethu thaan sadyam….”matru allathu vuraikil ellai”..veru maathiri sonnal asadyam..

போதில் மங்கை பூதலம் கிழத்தி தேவி யன்றியும்
போது தங்கு நான்முகன் மகன் அவன்மகன் சொலில்
மாது தங்கு கூறனேற தூர்தி என்று வேத நூல்
ஓதுகின்றது உண்மை யல்லது இல்லை மற்றுரைக்கிலே –72-

போதில் மங்கை பூதலம் கிழத்தி தேவி யன்றியும்
ஸ்ரீ மகா லஷ்மியும் ஸ்ரீ பூமிப் பிராட்டியும் தேவிமார் ஆவார் -அன்றியும்
போது தங்கு நான்முகன் மகன் அவன்மகன் சொலில்
பூவில் பொருந்திய இருக்கன் பிரமன் -புத்திரன் -மேலும் சொல்லப் பார்க்கில்
மாது தங்கு கூறனேற தூர்தி –
ஒரு பக்கம் பார்வதி தேவி தங்கப் பட்டவனாய் -எருமை யை வாகனமாக கொண்டவனாய் உடைய சிவன் -அவனது பேரனாய் இருக்கிறான்
என்று வேத நூல் ஓதுகின்றது உண்மை யல்லது இல்லை மற்றுரைக்கிலே
இது தான் சத்யம் -வேறு பட சொல்வது அசத்தியம் என்கிறார்

————————————————————-

..73..”maram potha saram thuranthu”=sabda saala marangal thullai padum padi ambai prayohithu…”vaali vizla mun oru naall vuram potha”=vaali mudiyum padiyum,avanathu maarbil porunthum padiyum…”saram thurantha vumbar aalli embiraan”….”varam kurippil vaithavarkku  alaathu “=(thannudaiya)sirantha thiru vullathil ,yaarai vishayeekarikiraano, avarai thavira….”vaanam aallilum”=mel vulahangalukku adipadiyaha erunthaalum…”yaarkkum nirambu veedu boham yethirathum ellai”…nithya suhaanubavam avarkalukku-ramanin thiruvullathil elladavarkallukku- ellai yenkiraar..

மரம் பொதச் சரம் துரந்து வாலி வீழ முன்னோர் நாள்
உரம் பொதச் சரம் துரந்த வும்பர் ஆளி எம்பிரான்
வரம் குறிப்பில் வைத்தவர்க்கு அலாது வானம் ஆளிலும்
நிரம்பு நீடு போகம் எத்திறத்தும் யார்க்கும் இல்லையே –73-

மரம் பொதச் சரம் துரந்து
சப்த சால மரங்கள் துழாய் படும்படி அம்பை பிரயோகித்து
வாலி வீழ முன்னோர் நாள் உரம் பொதச்
வாலி முடியும் படியும் அவனது பார்பில் பொருந்தும் படியும்
சரம் துரந்த வும்பர் ஆளி எம்பிரான்-வரம் குறிப்பில் வைத்தவர்க்கு அலாது
தன்னுடைய சிறந்த திரு உள்ளத்தில் யாரை விஷயீ கரிக்கிரானோ அவரைத் தவிர
வானம் ஆளிலும்
மேல் உலகங்களுக்கு அதிபதியாக இருந்தாலும்
நிரம்பு நீடு போகம் எத்திறத்தும் யார்க்கும் இல்லையே –
நித்ய சுகானுபவம் அவர்களுக்கு ராமனின் திரு உள்ளத்தில் இல்லாதவர்களுக்கு இல்லை என்கிறார்-

—————————————————————-

..74..”arinthu arinthu “=vubaayam, vubeyam yentru therinthu konndu..”vaamanan adi ennai vannanginaal”…”serinthu ezluntha gjanamodu selvamum serinthidum”….”marinthu ezluntha thenn thiraiyull “=parambi killarntha ,thellintha allaikall vudaiya thiru paarkadaliley…”mannu maalai vazlthinaal”=nithya vaasam seyum sarvesvaranai sangeerdanam panninaal….”parithu  ezluntha the vinaikall “….”pattru aruthal paanmaiyey “=vasanaiyum mihaadapadi nasivathu eyarkkai….avanathu thiru vullam patruthal thaan motsha saadanam..thirunamangallai  sonnaal paapangal thanahavey kammbara ozliyum..

அறிந்து அறிந்து வாமனன் அடி இணை வணங்கினால்
செறிந்து எழுந்த ஞானமோடு செல்வமும் சிறந்திடும்
மறிந்து எழுந்த தெள் திரையுள் மன்னு மாலை வாழ்த்தினால்
பறிந்து எழுந்து தீ வினைகள் பற்று அறுதல் பான்மையே –74-

அறிந்து அறிந்து
உபாயமும் உபேயமும் என்று தெரிந்து கொண்டு
வாமனன் அடி இணை வணங்கினால் செறிந்து எழுந்த ஞானமோடு செல்வமும் சிறந்திடும்
மறிந்து எழுந்த தெள் திரையுள்
பரம்பி கிளர்ந்த தெளிந்த அலைகளை உடைய திருப் பாற் கடலிலே
மன்னு மாலை வாழ்த்தினால்
நித்ய வாசம் செய்யும் சர்வேஸ்வரனை சங்கீர்த்தனம் பண்ணினால்
பறிந்து எழுந்து தீ வினைகள் பற்று அறுதல் பான்மையே –நசிவித்து இயற்க்கை
அவனது திரு உள்ளம் பற்றுதல் தான் மோட்ஷ சாதனம்
திரு நாமங்களைச் சொன்னால் பாபங்கள் தானாகவே ஒழியும்

——————————————————————-

….75..”ontri nintru “=manam saliyaamal nilaithu nintru..”nal thavam seythu  vuoozli vuoozli thoru yelaam “…”nintru nintru avan gunnangal vulli “….”vullam thooyar aay”…”sentru sentru”=mel padikallil yeri-saravannam,mananam,nidithyaasanam  yenkira padikalil sentru…”deva devar”=matra padi deva devaraay erunthaalum…”vumbar vumbar vumbar aay antri”=para bakthi,para gjana,parama bakthi yuktharaay allathu ..”yengal semkann maalai yaavar kaanna vallar”..yengal perumaan ellai yengal easan entru sollamal yengal semkann maal yenkiraar..rusi piranthu avanathu kadashathil thaan sidhi kittum ..

ஒன்றி நின்று நல் தவம் செய்து ஊழி ஊழி தோறேலாம்
நின்று நின்றவன் குணங்களுள் உள்ளி உள்ளம் தூயராய்
சென்று சென்று தேவ தேவர் உம்பர் உம்பர் உம்பராய்
அன்றி எங்கள் செங்கண் மாலை யாவர் காண வல்லரே –75-

ஒன்றி நின்று
மனம் சலியாமல் நிலைத்து நின்று
நல் தவம் செய்து ஊழி ஊழி தோறேலாம் நின்று நின்றவன் குணங்களுள் உள்ளி உள்ளம் தூயராய்
சென்று சென்று தேவ தேவர் உம்பர் உம்பர் உம்பராய் அன்றி
பர பக்தி பர ஞான பரம பக்த உக்தராய் அல்லது
எங்கள் செங்கண் மாலை யாவர் காண வல்லரே
எங்கள் பெருமான் -எங்கள் ஈசன் என்று சொல்லாமல் எங்கள் செங்கண் மால் என்கிறார்
ருசி பிறந்து அவனது கடாஷத்தால் தான் சித்தி கிட்டும் –

————————————————————————-

..76..”pul pulan vazli adaithu”…”arakku elachinai seythu”=vishya maarga thuvarathil arakku mudirai ettu adaithu…”nan pulan vazli thiranthu”…”gjanam nal sudar kolee yee”=gjanamaahiya  vilashannamana prabaiyai kolluthi….”enbu el”=elumbu veedaahiya sareeram…”ellhi”=sidilamaakki…”nenju vuruhi”..”vull kaninthu ezlunthathu oer anbil antri aazliyaanai yaavar kaanna vallar..”eppozluthum kai kazlalaa nemiyaan nam meyl vinai kadivaan”..”kadal nira kadavul yenthai aravannai thuyilumaa kanndu vudal yena kuruhumaalo”..yelhum yenkiraar ethilum..

புன்புல வழி அடைத்து அரக்கு இலச்சினை செய்து
நன் புல வழி திறந்து ஞான நற் சுடர் கொளீ இ
என்பில் எள்கி நெஞ்சு உருகி யுள் கனிந்து எழுந்தது ஓர்
அன்பில் அன்றி ஆழி யானை யாவர் காண வல்லரே –76-

புன்புல வழி அடைத்து அரக்கு இலச்சினை செய்து
விஷய மார்க்க த்வாரத்தில் அரக்கு முத்தரை இட்டு அடைத்து
நன் புல வழி திறந்து ஞான நற் சுடர் கொளீ இ
ஞானமாகிய வி லஷணமான பிரபையைக் கொளுத்தி
என்பில் எள்கி நெஞ்சு உருகி
எலும்பு வீடாகிய சரீரம் சிதிலமாக்கி
யுள் கனிந்து எழுந்தது ஓர் அன்பில் அன்றி ஆழி யானை யாவர் காண வல்லரே
எப்பொழுதும் கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான்
கடல் நிற கடவும் எந்தை அரவணை துயிலுமா கண்டு உடல் எனக்கு உருகுமாலோ இங்கும் எள்கி  என்கிறார் இதிலும்

———————————————————————–

..77..”ettum ettum ettumaay”=24 thathuvangalukkum nirvaahanaay…”oer ezlum ezlum ezlumaay”=7 deevu,7 malai,7 kadal evatrukkum nirvaahanaay…”ettum moontrum ontrum aahi nintra”=12aadityarkallukkum andaratmaavahavum…”aadhi devanai”…”ettinaaya pedamodu erainchi”=saashdaanga prannamam panni…”avan peyar ettezluthum oothuvaarkall vallar vaanam aallavey”..

எட்டும் எட்டும் எட்டுமாய் ஒரு ஏழும் ஏழும் ஏழுமாய்
எட்டு மூன்று ஒன்றுமாகி நின்ற வாதி தேவனை
எட்டினாய பேதமோடு இறைஞ்சி நின்றவன் பெயர்
எட்டு எழுத்தும் ஓதுவார்கள் வல்லர் வானம் ஆளவே –77-

எட்டும் எட்டும் எட்டுமாய்
24 தத்துவங்களுக்கும் நிர்வாஹகனாய்
ஒரு ஏழும் ஏழும் ஏழுமாய்
7 தீவுகள் 7 மலைகள் 7 கடல்கள் இவற்றுக்கும் நிர்வாஹகனாய்
எட்டு மூன்று ஒன்றுமாகி
12 ஆதித்யர்களுக்கும் அந்தராத்மாகவும்
நின்ற வாதி தேவனை
எட்டினாய பேதமோடு இறைஞ்சி
சாஷ்டாங்க ப்ரணாமம் பண்ணி
நின்றவன் பெயர் எட்டு எழுத்தும் ஓதுவார்கள் வல்லர் வானம் ஆளவே

—————————————————————————-

..78..”sorvu elaada kaadalaal”=vishayaandara patrinaal thalaratha kaadalodu..”thudaku arraa manatharaay”=visedam ellaamal,ekaakramana manam vudaiyavaraay..”neer araa annai kidantha nin malan nalam kazlal”….”aarvamodu erainchi nintru avan peyar ettu ezluthum”….”vaaram aaha”=ethuvey thanjam yentru…”oothuvaarkal vaanam aalla vallar”..bagavath vishayam ontrilley kaadal sorvillatha kaadal aahum..

சோர்விலாத காதலால் தொடக்கறா மனத்தராய்
நீர் அராவணைக் கிடந்த நின்மலன் நலம் கழல்
ஆர்வமோடு இறைஞ்சி நின்று அவன் பெயர் எட்டு எழுத்தும்
வாரமாக வோதுவார்கள் வல்லர் வானம் ஆளவே –78-

சோர்விலாத காதலால்
விஷயாந்தர பற்றினால் தளராத காதலோடு
தொடக்கறா மனத்தராய்
விச்சேதம் இல்லாமல் ஏகா க்ரமமான மனம் உடையவராய்
நீர் அராவணைக் கிடந்த நின்மலன் நலம் கழல்
ஆர்வமோடு இறைஞ்சி நின்று அவன் பெயர் எட்டு எழுத்தும்
வாரமாக வோதுவார்கள் வல்லர் வானம் ஆளவே
இதுவே தஞ்சமாக -பகவத் விஷயம் ஒன்றிலேயே காதல் சோர்வில்லாத காதல் ஆகும் –

—————————————————————————–

..79..”pathinodu pathum aay”=pathu thikkukalukkum pathu thikbaalarkallukkum andaryaamiyaay..”oer ezlinodu oer onbathaay”=sabda svarangal, nava naattiya rasangal evatrukku pravarthanaay…”pathu naal thisai kann nintra naadu petra nanmaiyaay”=14 vahai patta  lohangal vullavarkalin nanmaikaka..”pathin aaya thotramodu”dasavadarangalodu aavirpavithu…”aatral mikka oer aadhi paal”..”bakthar aamavarkku alaathu muthi mutaral aahumey”..

பத்தினோடு பத்துமாய் ஓர் ஏழினோடு ஓர் ஒன்பதாய்
பத்து நான்கு திசைக்கண் நின்ற நாடு பெற்ற நன்மையாய்ப்
பத்தினாய தோற்றமொடு ஓர் ஆற்றல் மிக்க வாதி பால்
பத்தர் ஆமவர்க்கு அலாது முக்தி முற்றல் ஆகுமே –-79-

பத்தினோடு பத்துமாய்
பத்து திக்குகளுக்கும் பத்து திக் பாலர்களுக்கும் அந்தர்யாமியாய்
ஓர் ஏழினோடு ஓர் ஒன்பதாய்
சப்த ஸ்வரங்கள் நவ நாட்டிய ரசங்கள் இவற்றுக்கு பிரவர்த்தனாய்
பத்து நான்கு திசைக்கண் நின்ற நாடு பெற்ற நன்மையாய்ப்
14 வகைப் பட்ட லோகங்களில் உள்ளவர்க்களின் நன்மைக்காக
பத்தினாய தோற்றமொடு
தசாதவரங்களோடு ஆவிர்பவித்து
ஓர் ஆற்றல் மிக்க வாதி பால் பத்தர் ஆமவர்க்கு அலாது முக்தி முற்றல் ஆகுமே

——————————————————————————

..80..”vaasi aahi”=koveri kazluthai vadivam konndu..”nesam entri vanthu ethirntha thenuhan”=bakthi attravanaay vantha denuhaasurannai..”naasam aahi naall vulappa”=aayusu maandu azlinthu pohum padi..”nanmai ser panam kannikku veesi”=azlahiya panam pazlangalin meley thooki yerinthu..”mel nimrntha thollin”=vuyara thooka patta thollaaley..”ellai aakkinaay kazlarkku”antha asuranai ozlithu arulina thiruvadikallukku…”aasai aam avarkku allaalamarar aahal aahumey”

வாசியாகி நேசமின்றி வந்து எதிர்ந்த தேனுகன்
நாசமாகி நாளுலப்ப நன்மை சேர் பனம் கனிக்கு
வீசி மேல் நிமிர்ந்த தோளின் இல்லை ஆக்கினாய் கழற்கு
ஆசையாம் யவர்க்கு அலால் அமரர் ஆகல ஆகுமே –80-

வாசியாகி நேசமின்றி வந்து எதிர்ந்த தேனுகன்
கோவேரி கழுதை வடிவம் கொண்டு -பக்தி அற்றவனாய் வந்த தேனுகாசுரனை
நாசமாகி நாளுலப்ப நன்மை சேர் பனம் கனிக்கு
ஆயுசு மாண்டு அழிந்து போகும் படி -அழகிய பனம் பழங்களின் மேலே தூக்கி எறிந்து
வீசி மேல் நிமிர்ந்த தோளின் இல்லை ஆக்கினாய் கழற்கு
உயரத் தூக்கப் பட்ட தோள்களாலே அந்த அசுரனை ஒழித்து அருளின திருவடிகளுக்கு
ஆசையாம் யவர்க்கு அலால் அமரர் ஆகல ஆகுமே

——————————————————————————————

ஸ்ரீ கோயில்  கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை பிரான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Thiru Chanda Vruttam-61-70-Shri PBA Swaami.-திருச்சந்த விருத்தம் -ஸ்ரீ உ. வே . PBA ஸ்வாமிகள்  –

January 24, 2008

..61..”nadantha kaalkal nonthavo”=vulahu allantha thiru adikal nontha thanaalo…”nadunga gjalam yenamaay”=boomi piraatti, thammai yedukka  vallavar yaarum ellai yentru baadallathil vuru  maaynthu eruntha kaalathil,maha varaaha moorthiyaay..”edantha mey kulungavo”=boomiyai viduvitha siramam theeravo..”vilangu maal varai “=neer peruha thadaiyaha eruntha perutha maaikalaiyum..”suram”=paalai nilam pontra aru vazlikallaiyum..”kadantha kaal parantha kaaviri karai “=vehathaal kadanthu vanthu..visdaramana vaaykaal vudaiya kaaviri karai methu”…”kudanthaiyul kidanthavaaru ezlunthu erunthu pesu vaazli kesaney”…”vadivu ennai ellaa malarmahal matrai nila mahal pidikum melladi” …vulahallantha vidaay theeravaa?.. allathu yenamaay vulahu edantha vidaay theeravaa ?.. yethanaal vantha aayaasam?…mallaikallaiyum nilangallaiyum kadanthu kaaviri seetho vubasaram panna oodi varukiraall….ezlunthirukkum pothu vunndahum seshdithangal kaannavum, aruli seyum pothu svarathai ketkavum aasai..chitra koodathil sethai piraatti ezluppiya pinbu anudabapattathu pola evarum vunnarnthu vaazli yenkiraar..Aaraa amudan ezlunthu erunthu pesa muyalum pothu, aazlvaar archavadara samaathi kulaiya koodaathu yentru vaazli yenkirar..Uddaana sayanam ..

நடந்த கால்கள் நொந்தவோ நடுங்க ஞாலம் ஏனமாய்
இடந்த மெய் குலுங்கவோ விலங்கு மால் வரைச் சுரம்
கடந்த கால் பரந்த காவிரி கரைக் குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்து இருந்து பேசு வாழி கேசனே –61-

நடந்த கால்கள் நொந்தவோ-உலகு அளந்த திருவடிகள் நொந்ததாலோ
நடுங்க ஞாலம் ஏனமாய்-பூமிப் பிராட்டி தம்மை எடுக்க வல்லவர் யாரும் இல்லை என்று பாதளத்தில் உரு மாய்ந்து இருந்த காலத்தில் மகா வராஹ மூர்த்தியாய்
இடந்த மெய் குலுங்கவோ -பூமியை விடுவித்த சிரமம்  தீரவோ
விலங்கு மால் வரைச் -நீர் பெருக தடையாய் இருந்த பெருத்த மலைகளையும்
சுரம்-பாலை நிலம் போன்ற ஆறு வழிகளையும்
கடந்த கால் பரந்த காவிரி கரைக் குடந்தையுள்-வேகத்தால் கடந்து வந்து விஸ்தாரமான கால்வாய்கள் உடைய காவேரி கரை மீது
கிடந்தவாறு எழுந்து இருந்து பேசு வாழி கேசனே-வடிவிணை இல்லா மலர் மகள் மற்றை நிலம் மகள் பிடிக்கும் மெல்லடி
உலகளந்த விடாய் தீரவோ -அல்லது என்னமாய் உலகு இடந்த விடாய் தீரவோ -எதனால் வந்த ஆயாசம்-
-மலைகளையும் நிலங்களையும் கடந்து காவேரி சீதோ உபசாரம் பண்ண ஓடி வருகிறாள்
எழுந்து இருக்கும் போது உண்டாகும் சேஷ்டிதங்கள் காணவும் அருளிச் செய்யும் போது ஸ்வரத்தை கேட்கவும் ஆசை
சித்ர கூடத்தில் சீதா பிராட்டி எழுப்பிய பின்பு அனுதாபப் பட்டது போலே இவரும் உணர்ந்து வாழி என்கிறார்
ஆராவமுதன் எழுந்து இருந்து பேச முயலும் போது ஆழ்வார் அர்ச்சாவதார சமாதி குலைய கூடாது என்று வாழி என்கிறார் -உத்தான சயனம் –

————————————————————————

..62..”karanndam aadu poyhaiyull”=neer kaakkaikal erukkum poyhaiyil..”karu panai peru pazlam puranndu vizla”=kariya,periya,panam pazlangal vizlunthu puralla,(athai paarthu neer kakkaikal  yentru piramithu meenkal anjina)..”vaallai paay kurum kudi nedum thahaay “=meenkal thulli oodi ollikintra thiru kurum kudiel ezlunthuarulm mahaanubaavaney..”thirannda tholl eranniyan sinam koll aaham ontrai eranndu kooru seythu vuhanda singam yenbathu vunnaiyey”…suhumarana vunnai muratu singam yennalaamaa?..eppothum antha poyhai “karanndam aadu poyhai” yentra peyar vunndu..athan karaiyil thiru panai maram nambiyin kadaashamey tharahamaha eintrum erukirathu..

கரண்ட மாடு பொய்கையுள் கரும் பனைப் பெரும் பழம்
புரண்டு வீழ வாளை பாய் குறுங்குடி நெடும் தகாய்
திரண்ட தோள் இரணியன் சினம் கொள் ஆகம் ஒன்றையும்
இரண்டு கூறு செய்து உகந்த சிங்கம் எனபது உன்னையே –62

கரண்ட மாடு பொய்கையுள்
நீர் காக்கைகள் இருக்கும் பொய்கையுள்
கரும் பனைப் பெரும் பழம் புரண்டு வீழ
கரிய பெரிய பனம் பழங்கள்விழுந்து புரள
அத்தைப் பார்த்து நீர்க் காக்கைகள் என்று என்று பிரமித்து மீன்கள் அஞ்சின
வாளை பாய் குறுங்குடி நெடும் தகாய்
மீன்கள் துள்ளி ஓடி ஒளிகின்ற திருக் குருங்குடியில் எழுந்து அருளும் மஹானுபாவனே
திரண்ட தோள் இரணியன் சினம் கொள் ஆகம் ஒன்றையும் இரண்டு கூறு செய்து உகந்த சிங்கம் எனபது உன்னையே
.ஸூ குமாரமான உன்னை முரட்டு சிம்ஹம் என்னலாமா இப்போதும் இங்கே பொய்கையின் பெயர் கரண்ட மாடு பொய்கை . ..-அதன் கரையில் திரு பனை மரம் நம்பியின் கடாஷமே தாரகமாக கொண்டு இன்றும் உண்டே

————————————————————————

..63..”nantru erunthu”=yoga payirchikku vuriyathu pola  aasanathil  muraipadi niaithu erunthu …….””yogam neethi nannuvaarkal sinthaiyull sentru erunthu”…….”the vinaikal theertha deva devaney “……..”kuntru eruntha needa maadam baadahathum “=malaikalai konndu serthu vaithathu pola vulla maadangal vudaiya thiru badahathilum..”vuoorahathum  nintru erunthu vehhannai kidanthathu yenna neermaiyey”..prahladanuku yentru muratu singamaha vanthathu pola..samsaarikallai kadaithera eppadi nintrum ,erunthum, kidakiraay yenkiraar..veha vannai vehha aanathu..yadothakaari sannithi..vulahallantha perumal sannithi vuoraham..

நன்று இருந்து யோக நீதி நண்ணுவார்கள் சிந்தையுள்
சென்று இருந்து தீ வினைகள் தீர்த்த தேவ தேவனே
குன்று இருந்து மாட நீடு பாடகத்தும் ஊரகத்தும்
நின்று இருந்து வெக்கணைக் கிடந்தது என்ன நீர்மையே –63-

நன்று இருந்து
யோக பயிற்சிக்கு உரியது போலே ஆசனத்தில் முறைப்படி நன்று இருந்து
யோக நீதி நண்ணுவார்கள் சிந்தையுள் சென்று இருந்து தீ வினைகள் தீர்த்த தேவ தேவனே
குன்று இருந்து மாட நீடு பாடகத்தும்
மலைகளைக் கொண்டு சேர்த்து வைத்தது போலே மாடங்கள் உடைய திருப் பாடகத்திலும்
ஊரகத்தும் நின்று இருந்து வெக்கணைக் கிடந்தது என்ன நீர்மையே
பிரகலாதனுக்கு என்று முரட்டு சிங்கமாக வந்தது போலே சம்சாரிகளை கடைத்தேற இப்படி நின்றும் இருந்தும் கிடக்கிறாய் என்கிறார்
வெக்கணை-வெக்கா-யதோத்தகாரி சந்நிதி
ஊரகம் -உலகளந்த பெருமாள் சந்நிதி

—————————————————————————

..64..”nintrathu  yenthai vuoorahathu”…”erunthathu yenthai baadahathu’…”antru vehhannai kidanthathu”…”yen elaada mun yelaam”=naan piravaada mur kaalathil…”antru naan piranthileyn”=appothu naan gjana janmam pera villai…”pirantha pin maranthileyn”…”nintrathum,erunthathum, kidanthathum ,yen nenjulley”…kainkarya kadanai petru kolla “kadanai theerthaal allathu pohamaatteyn “yentru nintru, erunthu, kidanthu ..yellam avan meley rusi pirakka..entha rusi pirappathu saadyam-palan.. atharkku saadanam evan pannuvathu-nirpathu,erupathu,kidapathu-..palan kidaithavaarey..ethai thavirthu “aravath amalliyinodum ,azlahiya paarkadalodum,aravinda paavaiyum,thaanum,aham padi vanthu puhunthu”antha seyalkall yellaam namathu nenjiley pannukiraan..”naan elada mun elaam” yentru arulaamal yen elada mun elaam” yentrathu”appanai yentru marappeyn yennaahiyey”yentra thiruvaay mozli pola..

நின்றது எந்தை ஊரகத்து இருந்தது எந்தை பாடகத்து
அன்று வெக்கணைக் கிடந்தது என்னிலாத முன்னெலாம்
அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின்பு மறந்திலேன்
நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே –64-

நின்றது எந்தை ஊரகத்து இருந்தது எந்தை பாடகத்து அன்று வெக்கணைக் கிடந்தது என்னிலாத முன்னெலாம்
நான் பிறவாத  முன் காலத்திலே
அன்று நான் பிறந்திலேன்
அப்பொழுது நான் ஜ்ஞான ஜன்மம் பெற வில்லை
பிறந்த பின்பு மறந்திலேன்-நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே
கைங்கர்ய கடனைப் பெற்றுக் கொள்ள -கடனைத் தீர்த்தால் அல்லது போக மாட்டேன் என்று நின்று இருந்து கிடந்து-எல்லாம்
அவன் மேல் ருசி விளைவிக்க -ருசி பிறப்பது சாத்தியம் -பலன் கிடைத்தவாறே இத்தத் தவிர்த்து
அரவத் தமளியினோடும் அழகிய பாற் கடலோடும் அரவிந்த பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து –
அந்த செயல்கள் எல்லாம் நமது நெஞ்சிலே பண்ணுகிறான்
நான் இலாத முன் எலாம் என்று அருளாமல் என்னை இழந்த முன் எல்லாம் என்றது அப்பனை என்று மறப்பேன் என்னாகியே -திருவாய் மொழி போலே

—————————————————————————-

..65..”nirpathum oer verpahathu “=nintra sevai oppatra thiruvemkadathil..”eruppathu vinn”=veetru eruppathu parama padathil..”kidappathum nal peru thirai kadalull”=kidapathu nalla  periya allaikallai vudaiya thiru paarkadalil..”naan elaada mun elaam”=naan murai ariyaamal asathaay eruntha kaalathil..eppozlutho yentraal..”arpudan,ananda sayanan,aadi boodan, maadavan”..”nirpathum,erupathum,kidapathum yen nenjulley”..

நிற்பதும் ஓர் வெற்பகத்து இருப்பும் விண் கிடப்பதும்
நற் பெரும் திரைக் கடலுள் நான் இலாத முன்னெலாம்
அற்புதன் அனந்த சயனன் ஆதி பூதன் மாதவன்
நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுளே –65-

நிற்பதும் ஓர் வெற்பகத்து
நின்ற சேவை ஒப்பற்ற திருவேங்கடத்தில்
இருப்பும் விண்
வீற்று இருந்த சேவை பரம பதத்தில்
கிடப்பதும் நற் பெரும் திரைக் கடலுள்
கிடப்பது நல்ல பெரிய அலைகளை உடைய திருப் பாற் கடலிலே
நான் இலாத முன்னெலாம்
நான் முறை அறியாமல் அசைத்தாய் இருந்த காலத்திலே
இப்பொழுதோ என்றால்
அற்புதன் அனந்த சயனன் ஆதி பூதன் மாதவன் நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுளே

————————————————————————–

..66..”eintru saadal”=pirantha vudan saavathu..”nintru saadal”=sila kaalam  eruntha pin saavathu..”antri”=ethu eranndum ellamal..”yaarum vaiyahathu ontri nintru vaazlthal  einmai kanndu”…”neesar”..”antru paar allanda bothai vuni sentru ,vaanil mel sentru ,devar aay erukilaada vannam yen kolo”….antru vulahallantha thiruvadi thamaraiyai ninainthu ,aasrayithu,archiraadi maargathil sentru ,nithya soorikaludan erukka muyalvar yaarum ellaiyey yenkiraar…

இன்று சாதல் நின்று சாதல் அன்றி யாரும் வையகத்து
ஒன்றி நின்றி வாழ்தல் இன்மை கண்டும் நீசர் என் கொலோ
அன்று பாரளந்த பாத போதை யொன்றி வானின் மேல்
சென்று சென்று தேவராய் இருக்கிலாத வண்ணமே –66-

இன்று சாதல் நின்று சாதல்
பிறந்த உடன் சாவது -சிறிது காலம் இருந்த பின் சாவது
அன்றி யாரும் வையகத்து ஒன்றி நின்றி வாழ்தல் இன்மை கண்டும் நீசர் –அன்று பாரளந்த பாத போதை யொன்றி
வானின் மேல் சென்று சென்று தேவராய் இருக்கிலாத வண்ணமே என் கொலோ
இவை இரண்டும் இல்லாமல் அன்று உலகு அளந்த திருவடித் தாமரையை நினைந்து ஆஸ்ரயித்து அர்ச்சிராதி மார்க்கத்தில் சென்று
நித்ய ஸூ ரிகளுடன் இருக்க முயல்வார் யாரும் இல்லையே என்கிறார்

————————————————————————————————–

..67..”sanndan manndalathinoodu sentru”=soorya manndala madya  margathiley poey..”veedu petru”=parama padam adainthu angey..”mel kanndu veedu elaada kaadal enbam naallum yeythuvar”=azlivilla  bakthiyin palanaha ,kainkarya enbam ,nithyamaha pera viruppam vudaiyavarkaley…mumushukkaley..”punndareeha paadan punnya keerthy”..”num sevi maduthu ,vunndu”..”num vuru  vinai thuyarull neengi vuymin”..ethu mudal namakku vubadesam pannukiraar..

சண்ட மண்டலத்தினூடு சென்று வீடு பெற்று மேல்
கண்டு வீடு இலாத காதல் இன்பம் நாளும் எய்துவீர்
புண்டரீக பாத புண்ணிய கீர்த்தி நுஞ் செவி மடுத்தி
உண்டு நும் உறுவினைத் துயருள் நீங்கியுய்மினோ –67-

சண்ட மண்டலத்தினூடு சென்று -சூர்ய மண்டல மத்திய மார்கத்திலே போய்
வீடு பெற்று
பரம பதம் அடைந்து அங்கே
மேல் கண்டு வீடு இலாத காதல் இன்பம் நாளும் எய்துவீர்
அழிவில்லா பக்தியின் பலனாக கைங்கர்ய இன்பம் நித்யமாக பெற விருப்பம் உடையவர்களே –
முமுஷூக்களே
புண்டரீக பாத புண்ணிய கீர்த்தி நுஞ் செவி மடுத்தி உண்டு நும் உறுவினைத் துயருள் நீங்கியுய்மினோ
இந்த பாசுரம் முதல் நமக்கு உபதேசம் பண்ணி அருளுகிறார்

————————————————————————————————-

..68..”muthirathu”=saadviha,raajasa,daamasa yentra moovahai patta..”vaanniyathu”=palankallukkul..”eranndil”=saadviham ozlintha mattra eranndin palankallil..”ontrum “=viruppam vudaiyavarana..”neesarkal”..”madaraay mayangu hintrathu”=dehamey atma yentru mohithu..”ettu athil eranthu poonthu”=antha lohathil antha karuma palankallai ozlithu,athai anubavikkum sareeram mudithu,(marupadiyum karba vaasam vazliyey)boolohathil vanthu…”ethirathu vuyathuoer vubaayam ellai”=vujeevano vubaayam evvazliyilum ellai..pala pala janmaakkal thaan edupaarkal..”vuykuril “=vuyya  venum yentra viruppam erunthaal..”thothu erutha thann thuzlaay nal maalai vaazlthi vaazlmin”..punathullaay maalaiyanai aasrayithu vujeevanam adaiyanum..

முத்திறத்து வாணியத்தில் இரண்டில் ஓன்றும்  நீசர்கள்
மத்தராய் மயக்குகின்றது இட்டு அதில் இறந்து போந்து
எத்திறத்தும் உய்வதோர் உபாயம் இல்லை யுய்குறில்
தொத்து இறுத்த தண் துழாய் நன் மாலை வாழ்த்தி வாழுமினோ –68-

முத்திறத்து-சாத்விக ராஜச தாமஸ-என்ற மூ வகைப் பட்ட
வாணியத்தில் இரண்டில் ஓன்றும்  நீசர்கள்
பலன்களுக்குள் சாத்விகம் ஒழிந்த மற்ற இரண்டின் பலன்களில் விருப்பம் உடையீரான நீசர்களே
மத்தராய் மயக்குகின்றது
தேகமே ஆத்மா என்று மோஹித்து
இட்டு அதில் இறந்து போந்து
அந்த லோகத்தில் அந்த கர்ம பலன்களை ஒழித்து அத்தை அனுபவிக்கும் சரீரம் முடித்து -மறுபடியும் கர்ப்ப வாசம்-வழியே பூ லோகத்தில் வந்து –எத்திறத்தும் உய்வதோர் உபாயம் இல்லை-உஜ்ஜீவன உபாயம் எவ்வழியிலும் இல்லை -பல பல ஜன்மங்கள் தான் எடுப்பார்கள்
யுய்குறில்
உய்ய வேண்டும் என்ற விருப்பம் இருந்தால்
தொத்து இறுத்த தண் துழாய் நன் மாலை வாழ்த்தி வாழுமினோ
புனத் துழாய் மாலையானை ஆஸ்ரயித்து உஜ்ஜீவனம் அடைய வேணும் –

———————————————————-

..69th..”kaannilum vuru polaar”=kanndaalum vihaara vuruvam vudaiyavar..”sevikku einaada keerthiyaar”..kadinamana vaarthaikal vudaiyavar..”pennilum”=eppadi erunthaalum, aasrayithaal..”varam thara midukku elaada devarai”….”aannam yentru”=sarannam yentru..”adainthu vaazlum aadarkaall”=avatrai adainthu kettu pohum kurudarkalley..”yem aadhi paal”…”penni num pirappu yenum pinnakku arum kittrirey”…devaandarangallai paarkavey koodaathu..avatrin ayogyathaikallai nantraha solli…jagad kaaranna boodanai patri muktar aahanum yenkiraar..

காணிலும் உருப்பொலார் செவிக்கினாத கீர்த்தியார்
பேணிலும் வரந்தர மிடுக்கிலாத தேவரை
ஆணம் என்று அடைந்து வாழும் ஆதர்காள் எம் ஆதி பால்
பேணி நும் பிறப்பெனும் பிணக்கறுக்க கிற்றிரே —69-

காணிலும் உருப்பொலார் -கண்டாலும் விஹார உருவம் உடையவர்கள்
செவிக்கினாத கீர்த்தியார்
கடினமான வார்த்தைகள் உடையவர்
பேணிலும் -எப்படி இருந்தாலும் ஆஸ்ரயித்தால்
வரந்தர மிடுக்கிலாத தேவரை-ஆணம் என்று அடைந்து-சரணம் என்று அடைந்து கேட்டுப் பெரும் குருடர்களே
வாழும் ஆதர்காள் எம் ஆதி பால்-பேணி நும் பிறப்பெனும் பிணக்கறுக்க கிற்றிரே-
தேவ தாந்த்ரங்களை பார்க்கவே கூடாதே -அவற்றின் அயோக்யதைகளை சொல்லி -ஜகத் காரணனைப் பற்றி முக்தர் ஆகணும் என்கிறார்

———————————————————————————–

..70th..”kundamodu soolam velkall thomarangal thanndu vaall”=yeetti, soolam,velaayudam,eruppu vulakkai, gathai, vaall evatrudan erukkum..”pandamaana devarkal”.=koottam kootamay eruntha rudraadi devathaikal .”paranthu”=pala thisaikallilum sithari poey..”vaanaham vura”=thangal erupidam  sentru sera..”vanda vaannan yeer einooru thollkalai thunnitha naall”….”antha antha aahulam amarey arivar”..aahulam=vyaahulam pattathu.. rashamaha venndiya aayudangal yellaam kaal kattu pola aayina ..raavananin vil pola.. eruntha varai pozlintha  Raamanin ambukkal vizlunthathum nintrathu pola..

குந்தமோடு சூலம் வேல்கள் தோ மரங்கள் தண்டு வாள்
பந்தமான தேவர்கள் பரந்து வானகமுற
வந்த வாணன் ஈரைஞ்சு நூறு தோள்களை துணித்த நாள்
அந்தவந்த வாகுல மமரேரே யறிவரே –70-

குந்தமோடு சூலம் வேல்கள் தோ மரங்கள் தண்டு வாள்
ஈட்டி சூலாயுதம் வேலாயுதம் இரும்பு உலக்கை கதை வாள் இவற்றுடன் இருக்கும்
பந்தமான தேவர்கள்-கூட்டம் கூட்டமாக இருந்த ருத்ராதி தேவர்கள்
பரந்து வானகமுற
பல திசைகளிலும் சிதறிப் போக -தங்கள் இருப்பிடம் சென்று சேர
வந்த வாணன் ஈரைஞ்சு நூறு தோள்களை துணித்த நாள்-அந்தவந்த வாகுல மமரேரே யறிவரே
ஆகுலம் — வியாகுலம் பட்டு
ரஷகமாக வேண்டிய ஆயுதங்கள் எல்லாம் கால் கட்டு போலே ஆயின
ராவணன் கையில் வில் போலே -இருந்த வரை அடி பட்டான் -வெறும் கை வீரன்

——————————————————————————–

ஸ்ரீ கோயில்  கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை பிரான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Thiru Chanda Vruttam-51-60-Shri PBA Swaami.-திருச்சந்த விருத்தம் -ஸ்ரீ உ. வே . PBA ஸ்வாமிகள்  —

January 23, 2008

..51..”sarangallai thuranthu vil vallaithu elangai mannavan sirangal pathu arruthu vuthirtha selvar mannu ponnidam”..”paranthu ponniranthu nunthi vanthallaikkum vaar punal”..”arangam yenbar naanmuhathu ayan pannintha koyiley”

சரங்களைத் துரந்து வில் வளைத்து இலங்கை மன்னவன்
சிரங்கள் பத்தறுத்து உதிர்த்த செல்வர் மன்னு பொன்னிடம்
பரந்து பொன்னிரந்து நுந்தி வந்தலைக்கும் வார் புனல்
அரங்கம் என்பர் நான்முகத் தயன் பணிந்த கோயிலிலே –51

———————————————————–

..52..”Potrai vutra mutral yaanai poer ethirnthu vanthu athai”…patri vutru matrathan maruppu ositha baahanoor”..”sitreyitru mootral moongil moontru thanndar ontrinaar”…”atra patrar sutri vaazlum  antha neer arangamey”

பொற்றை யுற்ற முற்றல் யானை போர் எதிர்ந்து வந்ததைப்
பற்றி உற்று மற்றதன் மருப்பு ஒசித்த பாகனூர்
சிற்றெயிற்று முற்றல் மூங்கில் மூன்று தண்டர் ஒன்றினார்
அற்ற பத்தர் சுற்றி வாழும் அம் தண் நீர் அரங்கமே –52-

———————————————————–

..53..”modiyodu”=kaaliyum..”elatchai aaya saabam yeythi mukkannaan “=vedkathai villaipathaana  saabam petra rudranum…” koodu senai makkalodu  konndu  manndi vem samathu  ooda”=svajangalodu,thirannda senaiyai allaithu konndu,payangaramana poerkallathilirunthu ,vehamaha oodi poha…”vaannan aayiram karam kazlitha aadhi maal  beedu kovil neer koodu  arangam yentra per athu”..elatchai=latchai yennum vadasollin  thirubu..

மோடியோட இலச்சையாய சாபம் எய்தி முக்கண்ணான்
கூடு சேனை மக்களோடு கொண்டு மண்டி வெஞ்சமத்து
ஓட வாணன் ஆயிரம் கரம் கழித்த வாதிமால்
பீடு கோயில் கூடு நீர் அரங்கம் என்றபேரதே –53-

மோடியோட-காளி உடன் –
இலச்சையாய சாபம் எய்தி முக்கண்ணான்-வெட்கத்தை விளைப்பதான சாபம் பெற்ற ருத்ரனும்
கூடு சேனை மக்களோடு கொண்டு மண்டி வெஞ்சமத்து ஓட-ஸ்வ ஜனங்களோடு திரண்ட சேனையை அழித்துக் கொண்டு பயங்கரமான போர் களத்தில் இருந்து வேகமாக ஓடி போக
வாணன் ஆயிரம் கரம் கழித்த வாதிமால்-பீடு கோயில் கூடு நீர் அரங்கம் என்றபேரதே
இலச்சை -லச்சை என்னும் வேதா சொல்லின் திருப்பு –

—————————————————————-

..54..”elai thalai saram thuranthu”=elai pola nuni vudaiya ambukalai vubayohithu..”elangai kattu azlithavan”=elangaiyin arannkalai azlitha rama piraan..”malai thalai piranthu”=sahyam yennum malaiyiley piranthu..”ezlinthu vanthu”=angey pravahithu, neduhey oodi vanthu..”nunthu chandanam “=chandana marangalai perthum..”kulaithu alaithu eruthu yerintha kumkumam kuzlambinodu “=kumkuma padar kodiyai sidila paduthi,alasi,murika,antha kodikalil erunthu vellipatta kumkuma thuhalkalana  kuzlambudan koodi..”alaithu ozluhu kaaviri “=alai mothikonndu nerukamaha erukkum  thiru kaaviri vudaiya..”arangam meya annaley”..elangai katazlithavan arangam meya annal yenkiraar.. entha paasurathai srivaishnavarkal ,naall thorum ,neeraadum pothu ,anusandhipathu sambradaayam..

இலைத்தலைச் சரம் துரந்து இலங்கை கட்டு அழித்தவன்
மலைத்தலைப் பிறந்து இழிந்து நுந்து சந்தனம்
குலைத்தலைத் திறுத்து எறிந்த குங்குமக் குழம்பினோடு
அலைத் தொழுகு காவிரி அரங்கமேய வண்ணலே –54-

இலைத்தலைச் சரம் துரந்து-இலை போலே நுனி உடைய அம்புகளை உபயோகித்து
இலங்கை கட்டு அழித்தவன்-இலங்கையின் அரண்களை அழித்த ராம பிரான்
மலைத்தலைப் பிறந்து இழிந்து நுந்து சந்தனம்–சக்யம்  என்னும் மலையிலே பிறந்து -அங்கேயே பிரவகித்து நெடுதாய் ஓடி வந்து சந்தன மரங்களை பேர்த்தும்
குலைத்தலைத் திறுத்து எறிந்த குங்குமக் குழம்பினோடு-கும்குமப் படர் கொடியை சிதில படுத்தி -அந்த கொடிகளில் இருந்து வெளிப்பட்ட கும்கும குழம்புடன் கூடி
அலைத் தொழுகு காவிரி அரங்கமேய வண்ணலே –அலை மோதிக் கொண்டு நெருக்கமாக இருக்கும் திருக் காவேரி உடைய –
இலங்கையை கட்டழித்தவன் அரங்கம் மேய அண்ணலே என்கிறார்
இந்த பாசுரத்தை ஸ்ரீ வைஷ்ணவர்கள் நாள் தோறும் நீராடும் பொழுது அனுசந்திப்பார்கள்-

———————————————-

..55..”mannu maa malar kizlathi”=sirantha thaamarai poovil porunthiya piraattikum..”vaiyam mangai mainthan aaya pinnum”=sri boomi piraattikkum virumba thakka yuvaavaay..”aayar pinnai”=gobalarana kumbarin mahal nappinnai piratti  vudaiya..”tholl mannam punnarnthu”=tholodey samsleshithu erukkum …”athu antriyum”..”vunna paadam yenna sinthai manna vaithu nalhinaay’…”ponni soozl  arangam meya pundareehan allaiyey”..avarkaludan erukkum divya anubavam asadaranam yentru ninaithu yenathu hrudayathiley nodi pozluthum ahalamal  vunathu thiru adikallai vaithu arulinaay.. yenna vaadsalyam..yenakku mattum ellamal, sarva janangalum  sevikka arangathil palli konndaay..

மன்னு மா மலர்க்கிழத்தி வைய மங்கை மைந்தனாய்ப்
பின்னும் ஆயர் பின்னை தோள் மணம் புணர்ந்தது அன்றியும்
உன்ன பாதம் என்ன சிந்தை மன்ன வைத்து நல்கினாய்
பொன்னி சூழ் அரங்கமேய புண்டரீகன் அல்லையே –55-

மன்னு மா மலர்க்கிழத்தி-சிறந்த தாமரை பூவில் பொருந்திய பிராட்டிக்கும்
வைய மங்கை மைந்தனாய்ப் பின்னும்-ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கும் விரும்பத் தக்க யுவாவாய்
ஆயர் பின்னை தோள் மணம் புணர்ந்தது அன்றியும்-கோபாலரான கும்பனின் மகள் நப்பின்னை பிராட்டி உடைய தோளோடு சம்ச்லேஷித்து இருக்கும்
உன்ன பாதம் என்ன சிந்தை மன்ன வைத்து நல்கினாய்
பொன்னி சூழ் அரங்கமேய புண்டரீகன் அல்லையே –
அவர்களுடன் இருக்கும் திவ்ய அனுபவம் அசாதாரணம் என்று நினைத்து எனது ஹிருதயத்திலே நொடிப் பொழுதும் அகலாமல் உனது திருவடிகளை வைத்து அருளினாய் -என்ன வாத்சல்யம்-
எனக்கு மட்டும் இல்லாமல் சர்வ ஜனங்களும் சேவிக்க திருவரங்கத்தில் பள்ளி கொண்டாய்

—————————————————-

..56..entha paasuram mudal adutha aaru paasurathaal thiru kudanthai perumallai arulukiraar..”elangai mannan einthodu einthu”….”pai thalai nilathu vuha”=valiya thalaikal boomiyil  vizlunthu ozliyavum..”kalanga  antru sentru kontru ventri konda veeraney”..”vilangu noolar”=boonool tharitha..”vedam naavar”=vedangalai naavin nuniyil  vudaiyavar..”needi aana kelviyaar”=nalla aasriyar pakkal saramana ardangallai kettu vunnarntha vaithiharkalum..”valam kolla”=vazlipaadukal seyum padi…..”kudanthaiyul kidantha maalum allaiyey”….

இலங்கை மன்னன் ஐந் தொடைந்து பைந்தலை நிலத்துகக்
கலங்க அன்று சென்று கொன்று வென்றி கொண்ட வீரனே
விலங்கு நூலர் வேத நாவர் நீதியான கேள்வியார்
வலம்கொளக் குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே –56-

இது முதல் ஆறு பாசுரங்களால் திருக் குடந்தை பெருமாளை மங்களா சாசனம் செய்து அருளுகிறார் –
இலங்கை மன்னன் ஐந் தொடைந்து பைந்தலை நிலத்துகக்-வலிய தலைகள் பூமியில் விழுந்து ஒழியவும்
கலங்க அன்று சென்று கொன்று வென்றி கொண்ட வீரனே விலங்கு நூலர் –பூணூல் தரித்த
வேத நாவர் நீதியான கேள்வியார்-வேதங்களை நாவின் நுனியில் உடையவர் -நல்ல ஆசரியர் பக்கல் சாரமான அர்த்தங்களைக் கேட்டு உணர்ந்த வைதிகர்களும்
வலம்கொளக் குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே-
வழி பாடுகள் செய்யும் படி குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே

—————————————————————-

..57..”sangu thangu mun kai nangai”=sangu vallaikal porunthiya piraatti..”kongai thangal vutravan  angam manga”=raavannan sareeram maalla…..”antru sentru adarthu yerintha aazliyaan”..”kongu thangu “=parimalam porunthiya…”vaar kuzlal madanthaimaar”= neenda koonthalai vudaiya divya sundarikal …” kudaintha neer pongu thann kudanthaiyull kidantha punndareehan”….”madi muha madanthaiyar yenthinar vanthey” yentru aazlvaar aruliyathu pola,madanthaimaar yentru divya sthreekallai arulukiraar..

சங்கு தங்கு முன்கை நங்கை கொங்கை தங்கல் உற்றவன்
அங்க மங்க வன்று சென்று அடர்த்து எறிந்த  வாழியான்
கொங்கு தங்கு வார் குழல் மடைந்தமார் குடைந்த நீர்
பொங்கு தண் குடந்தையுள் கிடந்த புண்டரீகனே –-57-

சங்கு தங்கு முன்கை நங்கை-சங்கு வளைகள் பொருந்திய பிராட்டி
கொங்கை தங்கல் உற்றவன் அங்க மங்க-ராவணன் சரீரம் மாள
வன்று சென்று அடர்த்து எறிந்த  வாழியான்-கொங்கு தங்கு வார் குழல் மடைந்தமார் குடைந்த நீர் பொங்கு தண் குடந்தையுள் கிடந்த புண்டரீகனே
பரிமளம் பொருந்திய -நீண்ட கூந்தலை உடைய திவ்ய சுந்தரிகள் –
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே என்றது போலே –மடைந்தமார் -திவ்ய ஸ்த்ரீகளை அருளிச் செய்கிறார்

—————————————————————–

..58..”maram keda nadanthu”=yamallarjuna  marangal  mudiyum padi nadantha ..”adarthu matha yaanai”=kuvalayaabeedam yentra kozlutha yaanaiyin madam ozlithu..”mathahathu”=athan thalaiyiley..”vuram keda pudaithu”=athan vali maalla prahaarangal koduthu..”oru kombu ositha vuthamaa”…”thurangam vaay pillanthu “kuthirai vadivam konnda kesi yennum arakkanin vaayai pillanthu ,avanai ozlithavaney..”mann allanda paadaa”..”vediyar varam kolla kudanthaiyull kidantha maal allaiyey”

மரம் கெட நடந்து அடர்த்து மத்த யானை மத்தகத்து
உரம் கெடப் புடைத்து ஓர் கொம்பு ஒசித்து உகந்த உத்தமா
துரங்கம் வாய் பிளந்து மண் அளந்த பாத வேதியர்
வரம் கொளக் குடந்தையுள் கிடந்த கிடந்த மாலும் அல்லையே –58-

மரம் கெட நடந்து-யமளார்ஜுன மரங்கள் முடியும் படி நடந்த
அடர்த்து மத்த யானை-குவலயாபீடம் என்ற கொழுத்த யானையின் மதம் ஒழித்து
மத்தகத்து-அதன் தலையிலே
உரம் கெடப் புடைத்து-அதன் வலி மாள பிரகாரங்கள் கொடுத்து
ஓர் கொம்பு ஒசித்து உகந்த உத்தமா-துரங்கம் வாய் பிளந்து-குதிரை வடிவம் கொண்ட கேசி என்னும் அரக்கனை வாயைப் பிளந்து அவனை ஒழித்தவனை
மண் அளந்த பாத வேதியர்-வரம் கொளக் குடந்தையுள் கிடந்த கிடந்த மாலும் அல்லையே

——————————————————————

..59..”saali veli thann vayal”=sen ner payirkallai veliyaha vudaiya vayalkal..”thadam kidangu”=periya ahazlikal..”poom pozlil”pushbangal mikka solaikal..”kolam needu maadam”=azlahaha oongiya maadangal..”thann kudanthai  meya kovalaa”…”kaalanemi,vakkaran,karan muran siram avai  kaalanodu kooda”=kaalanemi,danvakran,kodiya muran evarkalathu thalaikallai yama loham serumpadi seytha..”vil kunitha”=vilai vallaitha ..”vil kai veeraney”..kaalanemi  raavannanin maadulan thaarahaasura yudathil  kolla pattavan..danda vakran yentra arakkan, rukmini piraattiyai sveekaraikkum pothu ethirthu poer seythavan..muran yenbavan narahaasuranin maniri..evarkal yellorum krishna avadara saridrangal ..karan yentrathu muranukku adai mozli… antha  karan arakkan rama avadarathil vunndu..

சாலி வேலி தண் வயல் தட கிடங்கு பூம் பொழில்
கோல மாட நீடு தண் குடந்தை மேய கோவலா
காலநேமி வக்கிரன் கரன் முரன் சிரமவை
காலனோடு கூட வில் குனித்த வில் கை வீரனே –59-

சாலி வேலி -தண் வயல்–செந்நெல் பயிர்கள் வெளியாக உடைய வயல்கள்
தட கிடங்கு பூம் பொழில்-பெரிய அகழிகள் புஷ்பங்கள் மிக்க சோலைகள்
கோல மாட நீடு தண் குடந்தை மேய கோவலா-அழகிய ஓங்கிய மாடங்கள்
காலநேமி வக்கிரன் கரன் முரன் சிரமவை-தலைகளை யம லோகம் சேரும்படி செய்த
காலனோடு கூட வில் குனித்த வில் கை வீரனே-வில்லை வளைத்த –
கால நேமி -ராவணனின் மாதுலன் -தாரகாசுர யுத்தத்தில் கொல்லப்  பட்டவன்
தந்தவக்ரன் -ருக்மிணி பிராட்டியை சுவீகரிக்கும் பொழுது எதிர்த்த அரக்கன்
முரன் நரகாசுரனின் மந்த்ரி -இவர்கள் மூவரும் கிருஷ்ணனால் வதம் செய்யப் பட்டார்கள்
கரன் -ராம திருவவதாரத்தில் வதம் செய்யப் பட்டவன்
——————————————————————–

..60..”sezlum kozlum perum pani pozlinthida “=edaividatha tharaikallaay vizlukira kanatha moodu paniyaanathu pozlintha allaviley..”vuyarntha vey vizlunthu”=munbu oongi eruntha moongir pannaikal, antha paniyin kanathaal  tharaiyil saaynthu..”vularnthu”=pinbu soorya grannangalaal vularnthu..”ezlunthu”=antha mongir pannaikal  vuyara killambi..”vinn pudaikkum vemkadathull nintru “….”theyn ezlunthu erunthu porunthu “=vanndukal meley killambuvathum ,keezley padinthum erukumaaru….”poo pozlil “=pushbangal mihuntha sollaikal…”thazlai kozlum”=thazlaithu oongi..”sezlum thadam”=sezlumaiyana thadaahangallai vudaiya….”kudanthaiyull kidantha maal allaiyey”..nintrum kidanthum sevai arulukiraan..”nilaiyaara nintraan than neell kazlaley adai nenjey”..”kidanthathor kidakkai kanndu yenganam maranthu vaazlveyn”..

செழும் கொழும் பெரும் பனி பொழிந்திட வுயர்ந்த வேய்
விழுந்து உலர்ந்து எழுந்து விண் புடைக்கும் வேம்கடத்துள் நின்று
எழுந்து இருந்து தேன் பொருந்து பூம் பொழில் தழைக் கொழும்
செழும் தடம் குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே –60-

செழும் கொழும் பெரும் பனி பொழிந்திட-இடை விடாத தாரைகளாய் விழுகிற கனத்த மூடு பனியானது பொழிந்த அளவிலே
வுயர்ந்த வேய் விழுந்து-முன்பு ஓங்கி இருந்த மூங்கில் பனைகள் அந்த பனியின் கனத்தால் தரையிலே சாய்ந்து
உலர்ந்து எழுந்து-பின்பு சூர்ய கிரணங்களால் உலர்ந்து -அந்த மூங்கில் பனைகள் உயர கிளம்பி
விண் புடைக்கும் வேம்கடத்துள் நின்று எழுந்து இருந்து தேன் பொருந்து பூம் பொழில் தழைக் கொழும்-வண்டுகள் மேலே கிளம்புவதுவும் கீழே படிந்தும் இருக்குமாறு -புஷ்பங்கள் மிகுந்த சோலைகள் தழைத்து ஓங்கி
செழும் தடம் குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே-செழுமையான தடாகங்கள் உடைய -திருக் குடந்தையுள் நின்றும் கிடந்தும் சேவை அருளுகிறான்
நிலையார நின்றான் தன் நீள் கழலே அடை நெஞ்சே-கிடைந்ததோர் கிடக்கை கண்டு எங்கனம் மறந்து வாழ்வேன்-

——————————————————-

ஸ்ரீ கோயில்  கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை பிரான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Thiru Chanda Vruttam-41-50-Shri PBA Swaami.-திருச்சந்த விருத்தம் -ஸ்ரீ உ. வே . PBA ஸ்வாமிகள்  —

January 23, 2008

..41st..”aayan aahi aayar mangai  veya tholl virumbinaay”=edaiyanahi, edaipenn nappinnai piraattiyin vey pontra thollkalai virumbi punnarnthaay….”aaya ninai  yaavar vallar ambarathodu embarayaay”=vun svaroobathai aaraya melvulahathilum evulahathilum yaavar vullaar…”maaya maayam maaya kol”=aacharya boodaney ,sarvaj egjanaha erunthum vunathu svaroobam ariya mudiyaathu…”athu antri”=athu appadi erukattum….’nee”=sarva sakdanana nee..”vahuthalum”=vunnai vannangi vazlipada karanna kallebarangallai koduthu erunthum …”maaya”=sedanarkal ,nal vazliyil puhaamal, maaynthu poha..antha vinaasathai nee sahikka maattaamal….”maayam aakinaay’=evarkallai samharipathey shemam yentru prakrud avasthaiyil niruthinaay..”vun maayam mutrum maayamey”=vunathu sankalpam yellaam aacharyamaha erukirathu….nal vazli thavirnthu theeya vazliyil sentra samsaarikallai samharipathum  karmaanu gunnamana rashannam yentru arulukiraar..

ஆயனாகி ஆயர்மங்கை வேய தோள் விரும்பினாய்
ஆய நின்னை யாவர் வல்லர் அம்பரத்தோடு இம்பராய்
மாய மாய மாயை கொல் அதன்றி நீ வகுத்தலும்
மாய மாய மாக்கினாய் யுன் மாயம் முற்றும் மாயமே –41-

ஆயனாகி ஆயர்மங்கை வேய தோள் விரும்பினாய்-இடையனாகி –இடைப்பெண் நப்பின்னை பிராட்டியின் மூங்கில் போன்ற தோள்களை விரும்பி புணர்ந்தாய்
ஆய நின்னை யாவர் வல்லர் அம்பரத்தோடு இம்பராய்-உனது ஸ்வரூபத்தை ஆராய மேல் உலகத்திலும் இவ் உலகத்திலும் வல்லார் யார்
மாய மாய மாயை கொல்-ஆச்சர்ய பூதனாய் -சர்வஜ்ஞ்ஞானாய் இருந்தும் உன்னாலேயும் உனது ஸ்வரூபம் அறிய முடியாதே
அதன்றி நீ வகுத்தலும் மாய மாய மாக்கினாய் யுன் மாயம் முற்றும் மாயமே –
அது அப்படி இருக்கட்டும் -சர்வ சக்தனான நீ உன்னை வணங்கி வழிபட கரண களேபரங்களை கொடுத்து இருந்தும் சேதனர்கள்-நல் வழியில் புகாமல் மாய்ந்து போக அந்த விநாசத்தை நீ சகிக்க மாட்டாமல் -பிரகிருதி அவஸ்தையில் நிறுத்தினாய்
உனது மாயம் -சங்கல்பம் எல்லாம் எவ்வளவு ஆச்சர்யமாக இருக்கிறதே
நல் வழி தவிர்ந்து தீய வழிகளில் செல்லும் சம்சாரிகளை சம்ஹரிப்பதும் -கர்ம அனுகுணமாக ரஷணம் என்று அருளுகிறார்

——————————————————————-

..42nd..”veru esaintha sekkar meni”=varaaha samhara thozlilukku  thaka sivanda vudalai vudaiyanaay…”neeru anninda punn sadai keeru thingal vaithavan”= rudran….”kai vaitha van kabaala misai”=than kaiyil vaithu eruntha valiya kabaalathai….”vuooru sem kuruthiyaal niraitha  kaarannam thanai pesu”…”yeru sentru adartha easa  koosam eintriyey pesu”..koosamal sentru nappinnai piraattikaha erudukallai vali adakkiya perumaaney aruli seyya venum…

வேறு இசைந்த செக்கர் மேனி நீறணிந்த புன் சடைக்
கீறு திங்கள் வைத்தவன் கை வைத்தவன் கபால மிசை
ஊறு செங்குருதியால் நிறைத்த காரணம் தன்னை
ஏறு சென்று அடர்த்த வீச பேசு கூசம் இன்றியே –42-

வேறு இசைந்த செக்கர் மேனி -வேறாக சம்ஹார தொழிலுக்கு தக்க சிவந்த உடலை உடையானாய்
நீறணிந்த புன் சடைக் கீறு திங்கள் வைத்தவன் -ருத்ரன் –
கை வைத்தவன் கபால மிசை-தன் கையில் வைத்து இருந்த வழிய கபாலத்தை
ஊறு செங்குருதியால் நிறைத்த காரணம் தன்னை-ஏறு சென்று அடர்த்த வீச பேசு கூசம் இன்றியே-கூசாமல் சென்று நப்பின்னை பிராட்டிக்காக எருதுகளை வலி அடக்கிய பெருமானே அருளிச் செய்ய வேணும்

———————————————————————-

..43rd..”vem sinatha vezlam venn marppu osithu”= vukramana gobathai vudaiya kuvalayaabadam yentra yanaiyin vennmaiyana danthathai odithu ,antha yaanaiyai mudithu….”vurutha maa kanjanai kadinthu”=kobishdan,palishdan aahiya kamsanai vadam seythu…”mann allanthu konnda kaalaney”=thiruvikramanaay vulaham yellaam allantha thiruvadiyai vudaiyavaney….”vanchanathu  vantha peytchi aavi paalull vaanginaay”….nee “anchanathu vannan aaya aadi devan allaiyey”..

வெஞ்சினத்த வேழவெண் மருப்பொசித்து உருத்தமா
கஞ்சனைக் கடிந்து மண் அளந்து கொண்ட காலனே
வஞ்சனது வந்த பேய்ச்சி யாவி பாலுள் வாங்கினாய்
அஞ்சனத்த வண்ணனாய வாதி தேவன் அல்லையே –43-

வெஞ்சினத்த வேழவெண் மருப்பொசித்து-உக்ரமான கோபத்தை உடைய குவலயாபீடம் என்ற யானையின் வெண்மையான தந்தத்தை ஒடித்து அந்த யானையை முடித்து
உருத்தமா கஞ்சனைக் கடிந்து –கோபிஷ்ட பலிஷ்டன் ஆகிய கம்சனை வதம் செய்து
மண் அளந்து கொண்ட காலனே-திரு விக்ரமனாய் உலகம் எல்லாம் அளந்த திருவடியை உடையவனே-
வஞ்சனது வந்த பேய்ச்சி யாவி பாலுள் வாங்கினாய்-அஞ்சனத்த வண்ணனாய வாதி தேவன் அல்லையே

————————————————————————-

..44th.”paalin neermai”=paal pola venmai niramum….”sem pon neermai”=sivantha ponnin niram pola semai niramum….”paasiyin pasum puram polum neermai”=paasiyin velli niram patchai pola…”porppu vudai thadathu vanndu vinndu vulaam neelam neermai”=azlahana dadahathil vulla vanndukal  sirahu virithu karuneythal poovin niram pola karu niram yenna….”yentru evai niraintha “…”kaalam naangum aam maalin neermai “=naangu yugangalukkum nirvaahanaay erukkum emberumaanin sowlapya gunathai….”vaiyaham maraithathu yenna neermai”….eppadi  muham kaatinathai anusandithu,einnum samsaarikal  kadai theravillai ethu yenna durvaasanaa palam yenkiraar..

பாலின் நீர்மை செம்பொன் நீர்மை பாசியின் பசும்புறம்
போலு நீர்மை பொற்புடைத் தடத்து வண்டு விண்டுலா
நீல நீர்மை யென்றிவை நிறைந்த கால நான்குமாய்
மாலின் நீர்மை வையகம் மறைந்ததென்ன நீர்மையே –44-

பாலின் நீர்மை செம்பொன் நீர்மை பாசியின் பசும்புறம் போலு நீர்மை-
பால் போலே வெண்மை நிறம் கொண்டும்
சிவந்த பொன்னின் நிறம் போலே செம்மை நிறமும்
பாசியின் வெளி நிறம் பச்சை போலே
பொற்புடைத் தடத்து வண்டு விண்டுலா நீல நீர்மை
அழகான தடாகத்தில் உள்ள வண்டுகள் சிறகை விரித்து கரு நெய்தல் பூவின் நிறம் போலே கரு நீலம் என்ன
யென்றிவை நிறைந்த கால நான்குமாய் மாலின் நீர்மை
நான்கு யுகங்களுக்கும் நிர்வாஹகனாய் இருக்கும் எம்பெருமானின் சௌலப்ய குணத்தை
வையகம் மறைந்ததென்ன நீர்மையே –இப்படி முகம் காட்டினத்தை அனுசந்தித்து இன்னும் சம்சாரிகள் கடை தேற வில்லை
-ஏது என்ன துர்வாசன பலம் என்கிறார்

————————————————————————–

..45th….”mann vullaay kol vinn vullaay kol “=leela viboothiyil avadarithaay ,parama padathil  erukiraay….”mannulley  mayangi nintru yennum yenn ahapadaay”=samsaarikalin  yennangalukku vishayam aahaathu erukiraay….”nin thamar kann vullaay kol “=vunathu ananya prayojanarkalukku  vishayamaanaay….”seyai kol”=matravarukku thoorasdanaay erunthaay…”anandan mel kidantha yem punnyaa punam thullaay alangal am punithaney”.. pala pala  vahaiyaha paranthu nirkka valla aatral ethu yenna aacharyam yenkiraar…. .thaanum samsarathil erunthum avanathu paradvamum ezlimaiyum yeedu pattu aruluvathu avanaaley yenkiraar..

மண்ணுளாய் கொல் விண்ணுளாய் கொல் மண்ணுளே மயங்கி நின்று
எண்ணும் எண் அகப்படாய் கொல் என்ன மாயை நின்தமர்
கண்ணுளாய் கொல் சேயை கொல் அநந்தன் மேல் கிடந்த வெம்
புண்ணியா புனம் துழாய் அலங்கல் அம் புனிதனே –45-

மண்ணுளாய் கொல் விண்ணுளாய் கொல் -லீலா விபூதியிலே திருவவதரித்தாய் -பரம பத நாதனாய் இருந்து வைத்தும்
மண்ணுளே மயங்கி நின்று எண்ணும் எண் அகப்படாய்
சம்சாரிகளின் எண்ணங்களுக்கு விஷயம் ஆகாது இருக்கின்றாய்
கொல் என்ன மாயை நின்தமர் கண்ணுளாய் கொல்
உனது அநந்ய பிரயோஜன அடியார்களுக்கு எளிதாக விஷயம் ஆகிறாய்
சேயை கொல்
மற்றவர்களுக்கு தூரச்தனாய் இருக்கிறாய்
அநந்தன் மேல் கிடந்த வெம் புண்ணியா புனம் துழாய் அலங்கல் அம் புனிதனே
பல பல வகையாக பரந்து நிற்கிற எல்லா ஆற்றல் -இது என்ன ஆச்சர்யம் என்கிறார் –
தானும் சம்சாரத்தில் இருந்தும் அவனது சௌலப்யங்களையும் பரத்வங்களையும் ஏடு படுத்தி அருளுவது அவனாலேயே என்கிறார்

————————————————————

.46th..”thodu petra thann thullaay alangal aadu senniyaay”=ethallkal vudaiya, kullirntha thiru thullaay maalai konnda thiru mudiyai  vudaiyavaney..”koodu patri aazli yenthi am sirai pull vuoorthiyaal”=sangu,chakaram yenthi garuda vahanam konnda …”naadu petra nanmai nannam ellai yenum”=matra perkal petra nanmai naan pera villai  aayinum…”naayineyn veedu petru errapodum pirrappu arukkum  aa sol”=nesanana adiyen motsham petru ,samsaaram thollaikkum vahaiyai aruli seyyanum..

தோடு பெற்ற தண் துழாய் அலங்கலாடு சென்னியாய்
கோடு பற்றி யாழி யேந்தி யஞ்சிறைப் புள்ளூர்தியால்
நாடு பெற்ற நன்மை நன்மை யில்லை யேனும் நாயினேன்
வீடு பெற்று இறப்போடும் பிறப்பு அறுக்கும் ஆ சொலே –46-

தோடு பெற்ற தண் துழாய் அலங்கலாடு சென்னியாய்-இதழ்கள் உடைய குளிர்ந்த திருத் துழாய் மாலை சூடிய திரு அபிஷேகத்தை உடையவனாய்
கோடு பற்றி யாழி யேந்தி யஞ்சிறைப் புள்ளூர்தியால்-சங்கு சக்கரம் ஏந்தி கொண்டு கருட வாகனாகவும் உள்ள உன்னால்
நாடு பெற்ற நன்மை நன்மை யில்லை யேனும்
மற்ற பேர்கள் பெற்ற நன்மை நான் பெற வில்லை யாயினும்
நாயினேன் வீடு பெற்று இறப்போடும் பிறப்பு அறுக்கும் ஆ சொலே
நீசனான அடியேன் மோட்ஷம் பெற்று சம்சாரம் தொலைக்கும் வகையை அருளிச் செய்ய வேண்டும் –

—————————————————————————-

..47th..”kaarrodu otha meyni nangal kannna vinnin naadaney”…”neer edathu”=thirupaarkadaliley….”araa annai kidathi yenbar antriyum”….”oer edathai allai”oer edam mattum erupidamaha  vudayai allai….”yellai ellai yenbar”=nee vuraiyum edangalukku yellai ellai enbar….”aadalaal”=eppadi sulabam ellai aadalaal….”naayineyn”….”servu edathai therinthu errainjum aa sol “aasriyatharkku vuriya edathai therinthu konndu aasariyakalaam padiyai arulanum…sarva vasthukalilum vyabthiyaay erukiraan yenkiraar..

காரோடு ஒத்த மேனி நாங்கள் கண்ண விண்ணின் நாதனே
நீரிடத்து அரவணைக் கிடத்தி என்பர் அன்றியும்
ஓர் இடத்தை அல்லை எல்லை இல்லை என்பர் ஆதலால்
சேர்விடத்தை நாயினேன் தெரிந்து இறைஞ்சும் ஆ  சொலே –47-

காரோடு ஒத்த மேனி நாங்கள் கண்ண விண்ணின் நாதனே
நீரிடத்து அரவணைக் கிடத்தி என்பர் அன்றியும்-ஷீராப்தி நாதனாகவும் இருந்து
ஓர் இடத்தை அல்லை எல்லை இல்லை என்பர் ஆதலால்
நீர் உகந்து அருளி இருக்கும் இடங்களுக்கு எல்லை இல்லையே
சேர்விடத்தை நாயினேன் தெரிந்து இறைஞ்சும் ஆ  சொலே
ஆஸ்ரியர்க்காக உறையும் இடத்தை தெரிந்து கொண்டு ஆஸ்ரயிக்கும் படியை அருளிச் செய்ய வேண்டும் –
சர்வ வஸ்துக்களிலும் வ்யாப்தியாய் இருக்கிறான் என்கிறார்

———————————————————————–

..48th..”kuntril nintru”=thiruvengada mallaiyil nintru….”Vaan erunthu”…”neell kadal kidanthu”…”mann ontru sentru”=thiruvikramanaay ella vulahamum allanthu…”ontru athai vunndu”=matru oru kaal antha boomiyai vizlunkiyum….”ontru athai pantriyaay edarnthu”…”nantru sentra naall avatrull”=nantraay sentra naadkalliley…”nal vuyier padaithu”=nalla vueirana manitharkallai srushtithum…”antru avarkku devu amaithu allitha aadi devan allaiyey”=thangal gunnangalukku thakka padiyana devathaikallai  yerpaduthi aruliya parama purushan neeyey..

குன்றில் நின்று வான் இருந்து நீள் கடல் கிடந்தது மண்
ஓன்று சென்று அது ஒன்றை உண்டு ஓன்று இடந்து பன்றியாய்
நன்று சென்ற நாள் அவற்றுள் நல் உயிர் படைத்து அவர்க்கு
அன்று தேவு அமைத்து அளித்த வாதி தேவன் அல்லையே –48-

குன்றில் நின்று
திருவேங்கட திருமலையிலே நின்று
வான் இருந்து நீள் கடல் கிடந்தது
மண் ஓன்று சென்று
ஒரு திருவடியால் -ஒரு காலத்தில் — திரிவிக்ரமனாய் எல்லை கடந்து அளந்து –
மற்று ஒரு கால் அந்த பூமியை விழுங்கியும்
ஓன்று இடந்து பன்றியாய்-நன்று சென்ற நாள் அவற்றுள் நல் உயிர் படைத்து அவர்க்கு-நன்றாய் சென்ற நாட்களிலே நல்ல உயிரான மனுஷ்யர்களை ஸ்ருஷ்டித்தும்
அளித்த வாதி தேவன் அல்லையே-
தங்கள் குணங்களுக்குத் தக்க தேவாதிகளை ஏற்படுத்தி அருளிய பரம புருஷன் நீயே என்கிறார் –

——————————————————————

..49th..”konndai konnda kkothai meethu”…”then vulavu kooni koon vunndai konndu”..”aranga ootti vull mahizlntha naathanoor”…”nanndai vunndu naarai pera vaallai paaya neelamey”…”anndai konndu kenndai meyum antha neer arangamey”

கொண்டை  கொண்ட கோதை மீது தேனுலாவு கூனி கூன்
உண்டை கொண்டு அரங்கவோட்டி யுண் மகிழ்ந்த நாதனூர்
நண்டை உண்டு நாரை பேர வாளை பாய நீலமே
அண்டை கொண்டு கெண்டை மேயும் அம் தண் நீர் அரங்கமே –49-

—————————————————————-

..50th..”venn thirai karum kadal sivanthu veyva”..”mun oru naall thinn thiral sillai kai vaalli vitta veerar serum vuoor”…”yenn thisai kannangallum erainchi aadum theertha neer”..”vanndu eraitha sollai veli mannu seer arangamey”

வெண் திரைக் கரும் கடல் சிவந்து வேவ முன்னொரு நாள்
திண் திறல் சிலைக்கை வாளி விட்ட வீரர் சேருமூர்
எண் திசைக் கணங்களும் இறைஞ்சி யாடும் தீர்த்த நீர்
வண்டு இரைத்த சோலை வேலி மன்னு சீர் அரங்கமே –50

——————————————————————————————

ஸ்ரீ கோயில்  கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை பிரான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Thiru Chanda Vruttam-31-40–Shri PBA Swaami.–திருச்சந்த விருத்தம் -ஸ்ரீ உ. வே . PBA ஸ்வாமிகள்  –

January 22, 2008

..31.”kalanemi kaalaney”..”kannakilada keerthiyaay”..”gjalam ezlum  vunndu panndu”..”oru balan aaya maayaney”..”velai veva”=kadal neer venthu pohum padi ..”Vil vallaitha vel sinatha veera”..”nin baal ar”=vunidathu vullavarkal..” aaya bathar sitham muthi seyyum moorthiyey”=vun pakkal anbu poondavarkalin sidam padi avarkalukku motsham thanthu aruliya swaami….kaalanemi raavannanin maadulan..vel sinatha veran=silar kobam konja neram sentra pinbu theerum.. evanathu sinam jeyathathin pinbu thaan-vel- theerum yenkiraar..moorthi yentru divya mangala vigramaha nintru vadivallahai kaatti than pakkallil aazlankaal paduthi kolluvaan..

கால நேமி காலனே கணக்கிலாத கீர்த்தியாய்
ஞாலம் ஏழும் உண்டு பண்டோர் பாலனாய பண்பனே
வேலை வேவ வில் வளைத்த வெல் சினத்த வீர நின்
பாலராய பத்தர் சித்தம் முத்தி செய்யு மூர்த்தியே –31-

கால நேமி -ராவணின் மாதுலன் –காலனே
கணக்கிலாத கீர்த்தியாய்
ஞாலம் ஏழும் உண்டு பண்டோர் பாலனாய பண்பனே
வேலை வேவ -கடல் நீர் வெந்து போகும் படி
வில் வளைத்த வெல் சினத்த வீர -சிலர் கோபம் கொஞ்ச நேரம் சென்ற பின்பு தீரும் -இவனது சினம் ஜயித்ததின் பின்பே தீரும் என்கிறார்
நின்பாலராய -உன்னிடத்து உள்ளவர்கள்
பத்தர் சித்தம் முத்தி செய்யு மூர்த்தியே -மூர்த்தி -திவ்ய மங்கள விக்ரஹம் -வடிவு அழகைக் காட்டி தன பக்கலில் ஆழம் கால் படுத்திக் கொள்ளுவான்
அன்பு பூண்டவர்களின் சித்தம் படி அவர்களுக்கு மோட்ஷம் தந்து அருளிய ஸ்வாமியே

————————————————————————–

..32..”kurangu enam padai kodu”vanarangalil thiralana senai konndu..”kurai kadalin meethu poey”=koshikintra kadalil(sethu annai katti) ezlunthu aruli..”arakkar angu aranga’= angu-elangaiyil-ravannaadi raashdarkal atha  azliyum padi..”vem saram thurantha aadi nee”..”erakka mann koduthavarkku erukka ontrum entriyey  parakka vaithuallanthu konnda padmanaban allayey”..parakka..=visdeeramaha allanthu moovulahamum sveekaramaha konndaar..

குரக்கினப் படை கொடு குரை கடலின் மீது போய்
அரக்கர் அரங்க வெஞ்சரம் துரந்த வாதி நீ
இரக்க மண் கொடுத்து அவற்கு இரக்கம் ஒன்றும் இன்றியே
பரக்க வைத்து அளந்து கொண்ட பற்ப நாபன் அல்லையே –32-

குரக்கினப் படை கொடு -வானரங்களில் திரளான சேனை கொண்டு
குரை கடலின் மீது போய்-கோஷிக்கின்ற கடலில் -சேது அணை கட்டி எழுந்து அருளி
அரக்கர் அரங்க வெஞ்சரம் துரந்த வாதி நீ-இலங்கையிலே ராவணன் போன்றாரை அழிக்கும் படி
இரக்க மண் கொடுத்து அவற்கு இரக்கம் ஒன்றும் இன்றியே பரக்க வைத்து அளந்து கொண்ட பற்ப நாபன் அல்லையே
பரக்க -விஸ்தீரமாக அளந்து மா வுலகமும் ச்வீகாரமாகக் கொண்டார்

————————————————————————

..33..”min nirathu eyiru arakkan”=minallai otha parkkalai vudaiya raavannan..veezla vem saram thuranthu”..”pinnavarkku arul purinthu arasu allitha pettriyoy”…”nal nirathu oer ein sol yezlai pinnai kelva”..nappinnai nayahaney..’mannu seer pon niratha vannan aaya punndareehan allayey”

மின் நிறத்து எயிறு அரக்கன் வீழ வெஞ்சரம் துரந்து
பின்னவருக்கு அருள் புரிந்து அரசளித்த பெற்றியோய்
நன் நிறத்து ஓர் இன்சொல் ஏழை பின்னை கேள்வ மன்னு சீர்ப்
பொன்னிறத்த வண்ணனாய புண்டரீகன் அல்லையே –33-

மின் நிறத்து எயிறு அரக்கன் -மின்னலை ஒத்த பற்களை உடைய ராவணன்
வீழ வெஞ்சரம் துரந்து
பின்னவருக்கு அருள் புரிந்து அரசளித்த பெற்றியோய்
நன் நிறத்து ஓர் இன்சொல் ஏழை பின்னை கேள்வ -நப்பின்னை நாயகனாய்
மன்னு சீர்ப் பொன்னிறத்த வண்ணனாய புண்டரீகன் அல்லையே

————————————————————————-

..34.”aadi aadi aadi nee”=mukkaarannamum -ubaadaana,sahakaari,nimitha-mann,chakram,kuyavan pola-neeyey..”oru anndam aadi”=andathukku  vudpatta sahala padaarthangalukkum nirvaahan..”aadalal”..”sodhiyaatha sodhi nee”=parishikka vendaatha param porul..”adu vunnmai el”=antha jothi pramanna sitham..”villanginaay”=veru ontraalum antrikkey thanaheyvey villangukintraay..”vedam aahi”=vedangalukku nirvahanaay..””vellvi aahi”=yaagangallalaaradyanay..”vinninodu mannum aay”=vubaya viboothikkum niyamahanaay..”aadi aahi”=eppadi sarva kaarano boodanaay erunthu..”aayan aaya maayam yenna maayam”..

ஆதி யாதி யாதி நீ ஓர் அண்டம் ஆதி ஆதலால்
சோதியாத சோதி நீ யது உண்மையில் விளங்கினாய்
வேதமாகி வேள்வியாகி விண்ணினோடு மண்ணுமாய்
ஆதியாகி ஆயனாய மாயம் என்ன மாயமே –34-

ஆதி யாதி யாதி நீ
-உபாதான சககாரி நிமித்த முக் காரணங்களும் நீயே
ஓர் அண்டம் ஆதி -அண்டத்துக்கு உட்பட சகல பதார்த்தங்களுக்கும் நிர்வாஹகன்
ஆதலால்
சோதியாத சோதி நீ -பரிசிக்க வேண்டாத பரம் பொருள் நீயே
யது உண்மையில் விளங்கினாய்-அந்த ஜோதி பிரமாண சித்தம் -வேறு ஒன்றாலும் அன்றிக்கே தானாகவே விளங்கிற்றே
வேதமாகி வேள்வியாகி-வேதங்களுக்கு நிர்வாஹகனாய் யாகங்களால் ஆராத்யனாய்
விண்ணினோடு மண்ணுமாய்-உபய விபூதிக்கும் நிர்வாஹகனாய்
ஆதியாகி ஆயனாய மாயம் என்ன மாயமே -இப்படி சர்வ காரண பூதனாய் இருந்து ஆயனாய மாயம் என்ன மாயமே

————————————————————————–

..35..”ambu vulaavum meenum aahi”=jalathil vulaavum meen aahiyum..”aamai aahi’..”aazliyaar tham piraanum aahi”..”mikkathu”=adisayathai adainthu arulitru..”anbu mikkathu’=mihuntha anbaiyum kaati aruli..”antriyum”..”kombu araavu nunn marunkal aayar madar pillai aay”vanchi kombu polum paambu polum  nudpamana edai vudaiya edai pannin pillaiyaay piranthu..”embiraanum  aaya vannam yen kol”..

அம்பு உலாவு மீனுமாகி யாமையாகி யாழியார்
தம்பிரானுமாகி மிக்க  தன்பு மிக்க தன்றியும்
கொம்பு அராவு நுண் மருங்குல் ஆயர் மாதர் பிள்ளையாய்
எம்பிரானும் ஆய வண்ணம் என்கொலோ எம் ஈசனே –35-

அம்பு உலாவு மீனுமாகி -ஜலத்தில் உள்ள மீனுமாகியும்
யாமையாகி யாழியார் தம்பிரானுமாகி மிக்க  தன்பு மிக்க தன்றியும்-மிகுந்த அன்பையும் காட்டியும் அருளி
கொம்பு அராவு நுண் மருங்குல் ஆயர் மாதர் பிள்ளையாய்
கொம்பு போலேயும் பாம்பு போலவும் நுட்பமான இடை உடைய இடை பெண்ணின் பிள்ளையாய் பிறந்து
எம்பிரானும் ஆய வண்ணம் என்கொலோ எம் ஈசனே

———————————————————————————

..36..”Aadahatha poonn mulai”=svarnnamayamana aabarannangalai annintha sthanangallai vudaiyaval..”asodhai aaytchi pillai aay”…”saadu vuthaitha”=sahadaasurannai thiruvadikallal vuthaithu ozlithu..”oru pullathu aavi “=siru kuzlanthaikallai annunga pannum paraivai vadivu konndu “kalla thaaya pey mahall”..=vantha krudrima madavana boothanai “veeda”=nee vueir vittu maallum padi.. “vaitha  veyya konngai eiya paal amudhu seythu”..”aadaha kai madar”=ponvallaikal anninda madarkal…”vaay amudam vunndathu”=adarathin amudathathai paruhinathu..”yen kol”….”vunnaiyum okkalaiyil konndu damil maruvi vunoduthangall karuthaayina seythu varum kanniyarum mahizla”yentra padi evanai eduppil eduthu konndu thangal thangal manaikalukku konndu pokha ,avarkalin vaay amudathathai vunnbaan..poothanai pakkal  vunnda vishathukku entha amudam parihaaramo yenkirar..

ஆடகத்த பூண் முலை யசோதை யாய்ச்சி பிள்ளையாய்ச்
சாடுதைத்த தோர் புள்ளதாவி கள்ளதாய பேய் மகள்
வீட வைத்த வெய்ய கொங்கை ஐய பாலமுது செய்
தாடகக் கை மாதர் வாய் அமுதுண்டது என் கொலோ –36-

ஆடகத்த பூண் முலை -ஸ்வர்ண மயமான ஆபரணங்களை அணிந்த ஸ்தனங்களை உடையவளான
யசோதை யாய்ச்சி பிள்ளையாய்ச்-சாடுதைத்த தோர் புள்ளதாவி கள்ளதாய பேய் மகள்-சகடாசுரனை திருவடிகளால் உதைத்து ஒழித்து -சிறு குழந்தைகளை அணுகப் பண்ணும் பறவை வடிவும் கொண்டு
க்ருத்ரிமான தாய் வடிவம் கொண்டு வந்த பூதனை உயிர் விட்டு மாளும் படி
வீட வைத்த வெய்ய கொங்கை ஐய பாலமுது செய்
தாடகக் கை மாதர்-பொன் வளைகள் அணிந்த மாதர்கள்
வாய் அமுதுண்டது என் கொலோ -.-அதரத்தின் அமுதத்தை பருகினது –
உன்னையும் ஒக்கலையில் கொண்டு –கன்னியரும் மகிழ என்றபடி இவனை இடுப்பில் எடுத்துக் கொண்டு தங்கள் தங்கள் மனைகளுக்கு கொண்டு போக அவர்களின் வாய் அமுதத்தை உண்பான் -பூதனை பக்கலில் உண்ட விஷத்துக்கு இந்த அமிர்தம் பரிகாரமோ என்கிறார் –

—————————————————————-

..37..”kaaytha neell villamkani vudirthu”=kaaykal nirainthathum,vurarthiyum vudaiya (asooraavishdamana) villa marathin kannikallai vuthira seythu(avanai kontru)….”ethirntha poo kuruntham saaynthu”=ethirita azlahiya kurunda marathil vulla asaurannai mudithu..”maa pillantha”=kuthirai vadivu konndu vantha kesi yennum asurannai eru thunnamaha pillantha..”kai thalatha kannan yenbaar”=thiru kaikall vudaiya kannan yentru arivudaiyavar solluvaarkal..”aaychi paal vunndu”=yasodhai  piraattiyin mullai paal vunndu…”venney vunndu”..”peytchi paal vunndu”..”pin mannai vunndu”=kalbathin mudivil  boomiyai thiru vayiril vaithu ..”Panndu oer yanam aaya  vamanaa”kalbathin aadhiyiley  oppatra varaha roobiyaha avadaritha vamana moorthiyaay..

காய்த்த நீள் விளங்கனி உதிர்த்து எதிர்ந்த பூங்குருந்தம்
சாய்த்து மா பிளந்த கைத்தலத்த கண்ணன் என்பரால்
ஆய்ச்சி பாலை உண்டு மண்ணை யுண்டு வெண்ணெய் உண்டு பின்
பேய்ச்சி பாலை உண்டு பண்டு ஓர் ஏனமாய வாமனா –37-

காய்த்த நீள் விளங்கனி உதிர்த்து -காய்கள் நிறைந்தும் உயர்த்தியையும் உடைய -அசூர விசிஷ்டமான விளா மரத்தின்-கனிகளை உதிரச் செய்து -அவனைக் கொண்டு
எதிர்ந்த பூங்குருந்தம் சாய்த்து-எதிர்த்த அழகிய குருந்த மரத்தில் உள்ள அசுரனை முடித்து
மா பிளந்த -குதிரை வடிவு கொண்டு வசந்த கேசி என்னும் அசுரனை இரண்டு துண்டாக பிளந்த
கைத்தலத்த கண்ணன் என்பரால்
திருக் கைகளை உடைய கண்ணன் என்று அறிவுடையார் சொல்லுவார்கள்
ஆய்ச்சி பாலை உண்டு -யசோதைப் பிராட்டி உடைய முலையில் பால் உண்டு
மண்ணை யுண்டு வெண்ணெய் உண்டு பின்-பேய்ச்சி பாலை உண்டு
பாலை உண்டு வெண்ணெய் உண்டு பின் மண்ணை உண்டு -கல்பத்தின் முடிவில் பூமியைத் திரு வயிற்றிலே வைத்து
பண்டு ஓர் ஏனமாய வாமனா -கல்பத்தின் ஆதியிலே ஒப்பற்ற வராஹ ரூபமாகி -திருவவதரித்த வாமன மூர்த்தியே

—————————————————————–

..38..”kadam kalanda”=mada jalathaal vyaapthamaana…’van kari”=valiya kuvalaaya beedam yennum yaanai..”maruppu osithu”=kombai murithu erinthu…”oer poyhai vaay “=oru maduvin thuraiyil..”vidam kalanda paambin mel”=visha mayamana kaaliya naagathin meley..”nadam payintra”=nardanam seythu arulina..”nadaney”=swaamiyey..”kudam kalanda koothan aaya”=kuda koothaadina “konndal vanna”=kaalla meham pontra kanna piraaney…”thann thuzlaay   vadam kalanda maalai maarba “…”kalanemi kaalaney”..

கடம் கலந்த வன் கரி மருப்பு ஒசித்து ஓர் பொய்கை வாய்
விடம் கலந்த பாம்பின் மேல் நடம் பயின்ற நாதனே
குடம் கலந்த கூத்தனாய கொண்டல் வண்ண தண் துழாய்
வடம் கலந்த மாலை மார்ப காலநேமி காலனே –38-

கடம் கலந்த -மத ஜலத்தால் வ்யாப்தமான
வன் கரி -வழிய குவலையா பீடம் என்னும் யானையை
மருப்பு ஒசித்து-கொம்பை முறித்து எறிந்து
ஓர் பொய்கை வாய்-ஒரு மடுவின் துறையிலே
விடம் கலந்த பாம்பின் மேல் -விஷ மயமான காளியன் நாகத்தின் மேலே
நடம் பயின்ற நாதனே-நடனம் செய்து அருளின ஸ்வாமியே
குடம் கலந்த கூத்தனாய கொண்டல் வண்ண-குடக் கூத்தாடின கார் மேகம் போன்ற நிறம் உடைய கண்ண பிரானே
தண் துழாய் வடம் கலந்த மாலை மார்ப காலநேமி காலனே –

——————————————————————

..39th..”verppu eduthu’=mandara parvathathai  konndu….”velai ner kalakkinaay”=kadal neerai kalanga seythaay..”athu antriyum’…”verppu eduthu velai neer varambu katti”=mallaikalai konndu therku kadaliley annai kattinaay…”velai soozl  verpu edutha enchi soozl  elangai”=kadalaaley ahazliyaha soozlapatta,thiri koda parvada-mallaiyaalum soozla patta elangai..”kattu azlitha nee”=arannai azliya seytha devareer..”verppu eduthu’=govardana mallaiyai kudaiyaha eduthu….”maari kaatha meha vannan allaiyey”=mazlaiyai kaatha kaalla meha nibachyaamar ..

வெற்பெடுத்து வேலை நீர் கலக்கினாய் அதன்றியும்
வெற்பெடுத்து வேலை நீர் வரம்பு கட்டி வேலை சூழ்
வெற்பெடுத்த இஞ்சி சூழ் இலங்கை கட்டழித்த நீ
வெற்பெடுத்து மாரி காத்த மேக வண்ணன் அல்லையே –39-

வெற்பெடுத்து வேலை நீர் கலக்கினாய் -மந்திர பர்வதத்தைக் கொண்டு கடல் நீரைக் கலங்கச் செய்தாய்
அதன்றியும்
வெற்பெடுத்து வேலை நீர் வரம்பு கட்டி -மலைகளைக் கொண்டு தெற்குக் கடலில் அணை கட்டினாய்
வேலை சூழ் வெற்பெடுத்த இஞ்சி சூழ் இலங்கை கட்டழித்த நீ-கடலாலே அழகாக சூழப் பட்ட -திரிகூட பர்வத மழையாலும் சூழப் பட்ட இலங்கையை -அரனை அழியச் செய்த தேவரீர்
வெற்பெடுத்து மாரி காத்த மேக வண்ணன் அல்லையே-கோவர்த்தன மலையைக் குடையாக எடுத்து மழையைக் காத்த காள மேக சியாமளன் தானே என்கிறார்

—————————————————————

..40..”aanai kaathu”=gajendra aazlvaanai kaathu…”oru aanai kontru”=kuvalayaabedam yentra yaanaiyai kontru….”athu antri aayar pillaiyaay”…”aanai meythi”=pasukalai meythu arulinaay…”aa ney vunndi”..pasukalin neyamudathathai vunndaay…”antru kuntru ontrinaal aanai kaathu “=endran mazlai peyvitha antha kaalathil guvardana mallai konndu pasukallai rashithu…””mai ari kann madar thirathu”=mai anninthu sevari padarntha nappinnai piraattikaha…”antru  mun sentru aanai adartha maayam  yena maayam”=akalathil aval ethirey sentru ezlu eruthukallaiyum kontra  aacharyam yenna aacharyam..Aa yentrum aan yentrum pasukalukku peyar..

ஆனை காத்து ஓர் ஆனை கொன்று அதன்றி ஆயர் பிள்ளையாய்
ஆனை மேய்த்தி ஆ நெய் உண்டியன்று குன்றம்  ஒன்றினால்
ஆனை காத்து மை யரிக்கண் மாதரார் திறத்து முன்
ஆனை யன்று சென்று அடர்த்த மாயம் என்ன மாயமே –40-

ஆனை காத்து ஓர் ஆனை கொன்று-ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானைக் காத்து -குவலயா பீடம் என்ற யானையைக் கொன்று
அதன்றி ஆயர் பிள்ளையாய்-ஆனை மேய்த்தி -பசுக்களை மேய்த்து அருளினாய்
ஆ நெய் உண்டியன்று குன்றம்  ஒன்றினால் ஆனை காத்து-பசுக்களின் நெய் அமுதத்தையும் உண்டு அருளினாய் -இந்த்ரன் மழை பெய்வித்த அந்த காலத்தில் கோவர்த்தன மலை கொண்டு-பசுக்களைக் காத்து அருளினாய்
மை யரிக்கண் மாதரார் திறத்து முன் ஆனை யன்று சென்று அடர்த்த மாயம் என்ன மாயமே –மை அணிந்து செவ்வரி படர்ந்த நப்பின்னை பிராட்டிக்காக -அக்காலத்திலே அவள் எதிரிலே சென்று ஏழு எருதுகளையும் கொன்றது என்ன ஆச்சர்யம்
ஆ –ஆன் -இரண்டுமே பசுவுக்கு பெயர் –

——————————————————————————————

ஸ்ரீ கோயில்  கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை பிரான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Thiru Chanda Vruttam-21-30-Shri PBA Swaami.-திருச்சந்த விருத்தம் -ஸ்ரீ உ. வே . PBA ஸ்வாமிகள்  —

January 22, 2008

..21.”aranganey tharanga neer  kalanga antru “= aranganey antru-thurvasa maha rishyin sabathaal ,devarkal selvam ezlanthu ,varunthi ,vunnai sarannan adaintha pothu-allaikalai vudaiya samudram kalangavum….”kuntru soozl marangal deya”=mandra mallai sozl marangal deyavum….”maa nilam kulunga”=periya boomiyanathu kulungavum….”maa sunnam  sullay nerunga “=(sarba jaadhi)vaasuhi yennum naagathai azluthi sutri….”nee kadaintha pothu nintra soorar”=kadalai nee kadainthu arulina kaalathil aruhey nintra parakrama saalikal yentru peyar petra deva asura prapruthikal..”yen seythaar ethu veru thera kooru”=yenna seythaarkal  -evishayathai nan therinthu kollumpadi viseshithu aruli seyya venum..thaaney asahaayanaay kadainthu devarkalum asurarkalum kadainthaarkal yentru vijaya peyar petru koduthaay..”kurangai aal vuhanda enthai”=vanara padaikallai vuhanthu aadkonnda naayahaney..Raavannanai  thollaithathu ellaam thanathu seshdithangal yentraalum “vanarangal elangai thavidu podi aakkinaarkal”yentra peyar vaangi koduthaay..yenna aasrida patcha paadam yenkiraar..

அரங்கனே தரங்க நீர் கலங்க வன்று குன்று சூழ்
மரங்கள் தேய மா நிலம் குலுங்க மா சுணம் சுலாய்
நெருங்க நீ கடைந்த போது நின்ற சூரர் என் செய்தார்
குரங்கை யாள் உகந்த வெந்தை கூறு தேற வேறிதே –21-

அரங்கனே தரங்க நீர் கலங்க வன்று –
அரங்கனே அன்று துர்வாச மஹா ரிஷியின் சாபத்தால் தேவர்கள் செல்வம் இழந்து வருந்தி உன்னை சரணம் அடைந்த போது-
அலைகள் உடைய சமுத்ரம் கலங்கவும்
குன்று சூழ் மரங்கள் தேய –
மந்திர மலை சூழ் மரங்கள் தேயவும்
மா நிலம் குலுங்க
பெரிய பூமியானது குலுங்கவும்
மா சுணம் சுலாய் நெருங்க-
சர்ப்ப ஜாதி -வாசுகி என்னும் -நாகத்தை அழுத்திச் செற்ற
நீ கடைந்த போது நின்ற சூரர்
கடல் நீ கடைந்து நீ அருளின காலத்திலேயே அருகே நின்ற பராக்கிரம சாலிகள் என்ற பேர் பெற்ற தேவ அசுர பிரக்ருதிகள்
என் செய்தார் இது வேறு தேற கூறு
என்ன செய்தார்கள் என்று இவ்விஷயத்திலே நான் தெரிந்து கொள்ளும் படி விசேஷித்து அருளிச் செய்ய வேணும்
தானே அசகாசனாய்க் கடைந்து -தேவர்களும் அசுரர்களும் கடைந்தார்கள் என்று விஜய பெயர் பெறும் படி கொடுத்து அருளினாய்
குரங்கை யாள் உகந்த வெந்தை
வானர படைகளை வகுத்து -அது கொண்டு நாயகனாய் ராவணனைத் தொலைத்தது எல்லாம் தனது சேஷ்டிதங்கள் என்றாலும்
-வானரங்கள் இலங்கையை தவிடு பொடி ஆக்கினார்கள் என்ற பெயர் வாங்கிக் கொடுத்து அருளினாய்-
என்ன ஆஸ்ரித பஷபாதம் என்கிறார்

—————————————————————————

..22nd..”panndum entrum melum aay”=moontru kaalathilum-srushti kaalathuku munbum,srushti kaalathilum, prallaya kaalathilum- kai vidaamal radshithu aruli…”oer baalan aahi  gjalam ezlum vunndu manndi”=opatra siru kuzlanthaiyaay,(prallaya vallam kollada padi)vulahangallai yellam virumbi amudhu seythu….”aal elai thueintra aadi devaney”…”vanndu kinndu thann thuzlay alankallaay”….”kalanda seer punndareeha paavai serum maarba boomi  naadaney”..oruvaraiyum villakkamal anaivaraiyum thiru vayitril konndavan aasriyar pakkal kollum patsha dabam vyappu alla yenkiraar..

பண்டும் இன்றும் மேலுமாய் பாலனாகி ஞாலம் ஏழும்
உண்டும் மண்டி ஆலிலைத் துயின்ற வாதி தேவனே
வண்டு கிண்டு தண் துழாய் அலங்கலாய் கலந்த சீர்ப்
புண்டரீகப் பாவை சேருமார்ப பூமி நாதனே –22-

பண்டும் இன்றும் மேலுமாய்-
மூன்று காலத்திலும் -சிருஷ்டி காலத்து முன்பும் -சிருஷ்டி காலத்திலும் -பிரளய காலத்திலும் கை விடாமல் ரட்ஷித்து அருளி
ஓர் பாலனாகி ஞாலம் ஏழும் உண்டும் மண்டி –
அத்விதீயமான சிறு குழந்தையாய் -பிரளய வெள்ளம் கொள்ளாத படி உலகங்களை எல்லாம் விரும்பி அமுது செய்து
ஆலிலைத் துயின்ற வாதி தேவனே-வண்டு கிண்டு தண் துழாய் அலங்கலாய் கலந்த சீர்ப்-புண்டரீகப் பாவை சேருமார்ப பூமி நாதனே –
ஒருவரையும் விலக்காமல் அனைவரையும் திரு வயிற்றிலே கொண்டவன் ஆஸ்ரிதர் பக்கல் கொள்ளும் பஷ பாதம் வியப்பு அல்ல –என்கிறார் –

—————————————————————————–

..23rd..”vaal nirathu oer seeyam aay”=vellutha nirathai vudaiya oppatra narasinga moorthiyaay avadarithu..”vallaintha vaal eyitravan”=vallainthum ,olli petra parkkallai vudaiya eranniyannai…”vuoon nirathu”=marma sthanathil(hrudayam)…”vuhir thalam azluthinaay”=kai nagangallai azluthinavaney…”vulaya seer naal niratha vedam”=vulaham yengum vulavukintra seermai vudaiya naangu-vudaatham,anudaatham,svaridam,prasayam-svarangallai vudaiya vedangallai…”naavar”=naaviley vudaiyavarkal(srothriyarkal)….”nalla yoginaal vannangu paal nira kadal kidantha padmanaaban allaiyey”…manushya,thiriyak jaadhi eranndaiyum ,eha vigramaha toonil thontriya vinthaiyai arulukiraar..svarooam antri niramum maatri konndaan yenkiraar “vaal nirathu”yentru..vaan niram=divyamana thannmai yentrum kollalaam..

வால் நிறத்தோர் சீயமாய் வளைந்த வாள் எயிற்றவன்
ஊனிறத்துகிர்த்தல மழுத்தினாய் உலாய சீர்
நானிறத்த வேத நாவர் நல்ல யோகினால் வணங்கி
பால் நிறக் கடல் கிடந்த பத்மநாபன் அல்லையே –23-

வால் நிறத்தோர் சீயமாய் –
வெளுத்த நிறத்தை உடைய ஒப்பற்ற நரசிம்ஹ மூர்த்தியாக திருவவதரித்து
வளைந்த வாள் எயிற்றவன்-
வளைந்தும் ஒளி பெற்ற பற்களையும் உடைய ஹிரண்யனை
ஊனிறத்துகிர்த்தல மழுத்தினாய்
மர்ம ஸ்தானத்தில் -ஹிருதயத்தில் திருக் கை நகங்களை அழுத்தினவனே
உலாய சீரநானிறத்த வேத நாவர்
எங்கும் உலாவுகின்ற சீர்மையை உடைய -நான்கு ஸ்வரங்கள் -உதாத்தம் அனுதாதம் ஸ்வரிதம் பிரசயம் -உடைய வேதங்களை –
நாவர் -நாவிலே உடையவர்கள் -ஸ்ரோத்யர்கள்
நல்ல யோகினால் வணங்கி-பால் நிறக் கடல் கிடந்த பத்மநாபன் அல்லையே
மனுஷ்ய திர்யக் ஜாதிகள் இரண்டையும் ஏக விக்ரஹமாக்கி தூணிலே தோன்றிய விந்தையை அருளுகிறார்
ஸ்வரூபம் மட்டும் இன்றி நிறத்தையும் மாற்றிக் கொண்டானே என்கிறார்-
வால் நிறத்து -வாண் நிறத்து என்று திவ்யமான தன்மை என்றும் கொள்ளலாம்

—————————————————————————–

..24th..”gangai neer bayanda bada bangayathu yem annaley”=gangaa deertham vunndakiya thiruvadi thaamarai vudaiya emberumaaney..”am kai aazli sangu thanndu villum vaallum yenthinaay”….”singam aaya deva deva then vulaavum mel malar mangai manni vaazlum maarba =narasimaha morthiyaay avadaritha devaathi devaney, then porunthiya suhumaara poovinil piranthu, athai vittu  vanthu porunthi vaazlum padiyana thiru maarbu vudaiyavaney…”aazli meni maayaney”=kadal pontra thirumeni vudaiya aacharya boothaney yenkiraar..ahangaarikallil thalaivanana rudranukkum sri pada theertham thanthu arulunaay..kala damadam eraamal eppothum divya aayudam tharithu konndu eruppavaney.. ethai oru nodiyiley angey appozluthey thontri velliyittay narasinga moorthiyaay..eppadipatta kalyanna gunnangalil thotru,periya piraattiyaar manni kidakiraar..vunathu thirumeniyai sevitha yen kannkal kullirnthu,daba trayamum aarukirathu..

கங்கை நீர் பயந்த பாத பங்கயத்து எம் அண்ணலே
அங்கை யாழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்தினாய்
சிங்கமாய தேவ தேவ தேனுலாவு மென் மலர்
மங்கை மன்னு வாழு மார்ப வாழி மேனி மாயனே –24-

கங்கை நீர் பயந்த பாத பங்கயத்து எம் அண்ணலே
கங்கை தீர்த்தம் உண்டாக்கிய திருவடித் தாமரையை உடைய எம்பெருமானே
அங்கை யாழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்தினாய்-சிங்கமாய தேவ தேவ தேனுலாவு மென் மலர் மங்கை மன்னு வாழு மார்ப –
நரசிம்ஹ மூர்த்தியாய் திருவவதரித்த தேவாதி தேவனே -தேன் பொருந்திய சுகுமார பூவினில் பிறந்து அத்தை விட்டு
வந்து பொருந்தி வாழும் படியான திரு மார்பு உடையவனே
வாழி மேனி மாயனே-
கடல் போன்ற திருமேனி உடைய ஆச்சர்ய பூதனே -என்கிறார்
அஹன்காரங்கரர்களில் தலைவனான ருத்ரருக்கும் ஸ்ரீ பாத தீர்த்தம் தந்து அருளினாய்
கால தாமதம் இராமல் எப்போதும் திவ்ய ஆயுதம் தரித்துக் கொண்டு இருப்பவனே
இத்தை ஒரு நொடியிலே அங்கே அப்பொழுதே
தோன்றி வெளியிட்டாய் நரசிம்ஹ மூர்த்தியாய் –
இப்படிப்பட்ட கல்யாண குணங்களில் தோற்று பெரிய பிராட்டியார் மன்னிக் கிடக்கிறார்
உனது திருமேனியை சேவித்த கண்கள் குளிர்ந்து தாபத்ரயங்கள் அற்றதே

—————————————————————————-

..25th..”varathinil”=brahman kodutha varathil..”sirathai mikka vall eiyiru mattravan”=adihamana nambikkai vudaiya, vaall pontra bayangaramana kora parkkallai konnda,asrida sadruvana eranniyan….”vurathinil karathai vaithu vuhirthalathai vunntrinaay”=maarbil thirukarathai vaithu,nahangallai azluthi kontraay….”nee”=eppadi patta nee…”erathi ethu yenna poey”=(oru samayam maavaliedam sentru)yaasikiraay.ethu yenna endra jaalam..”eranda mann”=yaasithu petra vulahathai….”Vayirulley karathi”=(oru kaal)thiru vayitrukul ollithu vaikiraay..”kannaney vun karuthai yaavar kaanna vallar”…ananya prayojanan brahladanukku  vudavinaay.. prayojanandra paran endranukaha  yasaha vesham poonndu ..ethu yenna maayam.. appadi  endran allavu aabimukyam ellada samsaarikallaiyum thiru vayitril vaithu radshithaayey …neeyey yenakku arula venum..

வரத்தினில் சிரத்தை மிக்க வாள் எயிற்று மற்றவன்
உரத்தினில் கரத்தை வைத்து உகிர் தலத்தை ஊன்றினாய்
இரத்தி நீ யிது என்ன பொய் யிரந்த மண் வயிற்றுளே
கரத்தி யுன் கருத்தை யாவர் காண வல்லர் கண்ணனே –25-

வரத்தினில் சிரத்தை மிக்க வாள் எயிற்று மற்றவன்
பிரமன் கொடுத்த வரத்தில்-அதிகமான நம்பிக்கை உடைய வாள் போன்ற பயங்கரமான கோர பற்களைக் கொண்ட
ஆஸ்ரித சத்ருவான ஹிரண்யன்
உரத்தினில் கரத்தை வைத்து உகிர் தலத்தை ஊன்றினாய்
மார்பினில் திருக் கரத்தை வைத்து திரு நகங்களால் அழித்துக் கொன்றாய்
இரத்தி நீ யிது என்ன பொய்
இப்படிப்பட்ட நீ ஒரு சமயம் மாவலியிடம் சென்று -யாசிக்கிறாய் -இது என்ற ஜாலம்
யிரந்த மண் வயிற்றுளே கரத்தி யுன் கருத்தை யாவர் காண வல்லர் கண்ணனே
யாசித்துப் பெற்ற உலகத்தை ஒரு கால் திரு வயிற்றிலே ஒழித்து வைக்கிறாய்
அநந்ய பிரயோஜனனான பிரகலாதனுக்கு உதவி அருளினாய்
பிரயோஜனாந்த பரனான இந்த்ரனுக்காக யாசக வேஷம் பூண்டு -இது என்ன மாயம்
அப்படி இந்த்ரன் அளவு ஆபி முக்கியம் இல்லாத சம்சாரிகளையும் திரு வயிற்றிலே வைத்து ரஷித்து அருளினாய் –
நீயே எனக்கு அருள வேணும்

—————————————————————————

..26th.”aanninodu pennumaahi allavodu nallanaay”….”vunnodu oosai vuoorum  aahi”=rasam,sabdam,sparsam mudaliya vishayangalukku nirvahanaay..”ontru alatha maayai yaay”=vulahathil vulla ella porulahavum parinnamikra prakruthikku nirvaahanaay….”poonni pennum aayanaahi”=pasukkalai meykkum edaiyanahi….”poyinodu meyanaay”=poyarana duryodanar pakkam poyahavum, meyyana paanndavar pakkal meyyanahavum….”kaanni pennum maayanaay”=moovadi nilam aasai patta brahmachaariyaay….”karanthu sentra kallvaney”=(mahabaliyin yaha saalaiyil)krudrimamaha ezlunthu arulina maayaney….”vunnai yaar madikka vallar”….leela viboothiyai visdara padutha aaninodu pennumaay avarkalukkul andaratmavaahi sambandam yerpaduthi nirvahikiraan..”nalla vaay” yentru vulahathil sirappu petra vasthukallil avanathu thotram  mikka veeru petru erukkum..

ஆணினோடு பெண்ணுமாகி அல்லாவோடு நல்லவாய்
ஊணோடு ஓசை யூறுமாகி யொன்றலாத மாயையாய்ப்
பூணு பேணு மாயனாகிப் பொய்யினோடு மெய்யுமாய்க்
காணி பேணு மாணியாய்க் கரந்து சென்ற கள்வனே –26-

ஆணினோடு பெண்ணுமாகி அல்லாவோடு நல்லவாய் ஊணோடு ஓசை யூறுமாகி -ரசம் சப்தம் ஸ்பர்சம் முதலிய விஷயங்களுக்கு நிர்வாஹகனாய்
யொன்றலாத மாயையாய்ப்
உலகத்தில் உள்ள எல்லா பொருள்களாகவும் பரிணமிக்க பிரக்ருதிக்கு நிர்வாஹகனாய்
பூணு பேணு மாயனாகிப்
பசுக்களை மேய்க்கும் இடையனாகி
பொய்யினோடு மெய்யுமாய்க்
பொய்யர்களான துரியோதனாதிகளுக்கு பொய்யனாகவும் -மெய்யர்களான பாண்டவர்கள் பக்கம் மெய்யனாகவும்
காணி பேணு மாணியாய்க் கரந்து சென்ற கள்வனே
மூவடி நிலம் ஆசைப்பட்டு ப்ரஹ்மசாரியாய் -மகா பலியின் யாக சாலையில் க்ருத்ரிமாக எழுந்து அருளின மாயனே
லீலா விபூதியை விஸ்தாரப் படுத்த ஆணினோடு பெண்ணுமாய் அவர்களுக்குள் அந்தர்யாமியாகவுமாகி சம்பந்தம் ஏற்படுத்தி நிர்வஹிப்பவன்
நல்ல வாய் -உலகில் சிறப்பு பெற்ற வஸ்துக்கள் அவனது தோற்றம் மிக வீறு பெற்று இருக்கும்

——————————————————————————

..27th..”Vinn kadantha sothiyaay”=vibuvana moola prakruthi vunakku vulley aahum padi athanai athiramitha svayam prakasam vudaiyavaney…”villangu gjanam moorthiyaay”=svayam prakasanana jeevatmavai sareeramaha kondavaney….”pann kadantha desam mevy”=vedangallal allavida mudiyatha parama padathil nithya vaasam pannubavaney….”paava naasa nadaney”heya pradyaneehanana sarvesvaraney….”yenn kadantha yohinodu maanni aay”=yenna mudiyada acharya sakthiyodu erukkum vaamananaay….”erandu sentru mann kadanda vannam  ninai yaar madikka vallarey”….

விண் கடந்த சோதியாய் விளங்கு ஞான மூர்த்தியாய்
பண் கடந்த தேசமேவு பாவ நாச நாதனே
எண் கடந்த யோகினோடு இரந்து சென்று மாணியாய்
மண் கடந்த வண்ணம் நின்னை யார் மதிக்க வல்லரே –27-

விண் கடந்த சோதியாய்
விபுவான மூல பிரகிருதி உனக்கு உள்ளே ஆகும் படி அத்தனை அதி ரமித ஸ்வயம் பிரகாசம் உடையவனே
விளங்கு ஞான மூர்த்தியாய்-
ஸ்வயம் பிரகாசமான ஜீவாத்மாக்களை சரீரமாக கொண்டவனே
பண் கடந்த தேசமேவு –
வேதங்களால் அளவிட முடியாத பரம பதத்தில் நித்யம் வாசம் பண்ணி அருளுபவனே
பாவ நாச நாதனே
ஹேய பிரத்ய நீக சர்வேஸ்வரனே
எண் கடந்த யோகினோடு இரந்து சென்று மாணியாய்-
என்ன முடியாத ஆச்சர்ய சக்தியோடு இருக்கும் வாமனாய்
இரந்து சென்று மண் கடந்த வண்ணம் நின்னை யார் மதிக்க வல்லரே-

———————————————————————————

..28th..”padaitha paar edandhu allanthu vunndu vumizlnthu pawavam neer”=(annadangalukku kaaranna mana ekaarannavathai)  srushtithu pirahu (annda brahma srushti poorvamaha) srushtikka patta boomiyai (sri varaha moorthiyaay annda pithiyil nintrum)ottu viduthu eduthu(thiru vikramanaay)allanthu(prallaya kaalathil)thiru vayitril vaithu nokki(prallayam kazlintha pinbu)vellipadithiyum..”adaithu”=sethu katti thoorthu…”mun athil kidanthu”=munbu orukaal athil kann vallarnthu aruli….”kadaintha”=(oru kaal amudam peraathanai0kadainthu aruliya…”pettriyoy”=eppadi patta allavatra perumaikallai vudaiyavaney….”midaitha”=serukki vantha….”Maali”..maali yennum raashadanum..”vilangu maan maali”=adi soodranana sumaali yennum arakkanum…”kaalan vuoor puha”=yamaloham serumpadi…”padaikalam vidutha”=aaythangallai prayohitha….”pal padai dada kai maayaney”=palavahai patta thiruvaayudangallai vilasamana thiru kaikallil vudaiya emberumaaney….vunnai yaar madikka vallaar

படைத்து பார் இடந்து அளந்து உண்டு உமிழ்ந்து பௌவ நீர்
படைத்து அடைத்து அதில் அதில் கிடந்து முன் கடைந்த பெற்றியோய்
மிடைத்த மாலி மாலிமான் விலங்கு காலனூர் புகப்
படைக்கலம் விடுத்த பல் படைத் தடக்கை மாயனே –28

படைத்து பார் இடந்து அளந்து உண்டு உமிழ்ந்து பௌவ நீர் படைத்து அடைத்து
அண்டங்களுக்கு காரணமான ஏ காரணவத்தை சிருஷ்டித்து -பிறகு அண்ட பிரம்ம சிருஷ்டி பூர்வகமாக சிருஷ்டிக்கப் பட்ட பூமியை
ஸ்ரீ வராஹ மூர்த்தியாய் அண்ட பித்தியில் நின்றும் ஒட்டு விடுத்து எடுத்து
திருவிக்ரமனாய் அளந்து பிரளய காலத்தில் வயிற்றில் வைத்து நோக்கி பிரளயம் கழிந்த வாறே வெளிப்படுத்தியும் –
அடைத்து -சேது கட்டி தூர்த்து
அதில் கிடந்து முன் –
முன் அதில் கிடந்தது -முன்பு ஒரு கால் அதன் முன்னே கண் வளர்ந்து அருளி
அதில் கடைந்த பெற்றியோய்
ஒரு கால் அமிர்தம் பெறுவதற்காக கடைந்து அருளிய -இப்படிப்பட்ட அளவற்ற பெருமைகளை உடையையாய்
மிடைத்த மாலி மாலிமான் விலங்கு காலனூர் புகப்படைக்கலம் விடுத்த பல் படைத் தடக்கை மாயனே
செருக்கி வந்த மாலி என்னும் ராட்ஷசனும் அதி சூரனனான ஸூ மாலி என்னும் அரக்கனும் யம லோகம் சேரும் படி ஆயுதங்களைப் பிரயோகித்த
பலவகைப் பட்ட திவ்ய ஆயுதங்களை விலாசமான திருக் கரங்களிலே உடைய எம்பெருமானே உன்னை யார் நினைக்க வல்லார்

———————————————————————————-

..29th..”parathilum parathai aadi”=paradparanaay erunthaay…”powvam neer annai kidanthu”=thirupaarkadalil kann vallarnthu aruli….”vurathil oruthi thannai vaithu vuhandu “thirumaarbiley oppatra periya piraattiyai piriyaamal  annaiya vaithu mahizlnthu….”adhu antriyum”…”narathilum pirathi “=maanida jaathiyilum vanthu pirakintreer..”nin adu thanmai orutharum ennathu yenna vallarey”..mennmaiyum ezlimaiyum ellai nilamaay erukkum thanmaiyai arulukiraar..parathilum parathai  yentru sheera saahara saayidvamum,lakshmipadidvamum menmaikku ellai.. rama krishna  pontra avadarangal  ezlimaikku ellai nilam..

பரத்திலும் பரத்தையாதி பௌவ நீர் அணைக் கிடந்தது
உரத்திலும் ஒருத்தி தன்னை வைத்து உகந்தது அன்றியும்
நரத்திலும் பிறத்தி நாத ஞான மூர்த்தி யாயினாய்
ஒருத்தரும் நினாது தன்மை இன்னதென்ன வல்லரே –29-

பரத்திலும் பரத்தையாதி -பரா பரனாய் இருந்தாய்
பௌவ நீர் அணைக் கிடந்தது-திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளி
உரத்திலும் ஒருத்தி தன்னை வைத்து உகந்தது -திரு மார்பிலே ஒப்பற்ற பெரிய பிராட்டியை பிரியாமல் அணைய வைத்து மகிழ்ந்து
அன்றியும் நரத்திலும் பிறத்தி -அதுவும் அன்றியும் மனுஷ்ய சஜாதீயமாக திருவவதரித்து
நாத ஞான மூர்த்தி யாயினாய்-ஒருத்தரும் நினாது தன்மை இன்னதென்ன வல்லரே
மேன்மைக்கும் எளிமைக்கும் எல்லை நிலமாய் இருக்கும் உன் தன்மையை அருளுகிறார்
பராத்பரன் ஷீராப்தி நாதன் ஸ்ரீ யபதித்வம் -பரத்வ பரமாகவும்
ராம கிருஷ்ணாதி அவதாரங்கள் – எளிமைக்கு எல்லை நிலம்

————————————————————————————

..30th..”vaanahamum mannahamum”..”ezlu verppum ezlu kadalkallum”..”ponaham seythu”=amudhu seythu…”aal elai thueintra punndareehaney”..”then sey aham”=then niraintha manathaay..”thann naru malar thuzlaay nal maallaiyaay”…koon aham puha theritha kottram vill allayey”=kooniyinathu koonam vulley odungum padi vittu erintha villai vudaiyavan antro…

வானகமும் மண்ணகமும் வெற்பும் ஏழ் கடல்களும்
போனகம் செய்து ஆலிலைத் துயின்ற புண்டரீகனே
தேனகம் செய் தண்ணறு மலர்த் துழாய் நன் மாலையாய்
கூனகம் புகத்தெறித்த கொற்ற வில்லி யல்லையே –30-

வானகமும் மண்ணகமும் வெற்பும் ஏழ் கடல்களும் போனகம் செய்து -அமுது செய்து
ஆலிலைத் துயின்ற புண்டரீகனே
தேனகம் செய் -தேன் நிறைந்த மனத்தனனாய்
தண்ணறு மலர்த் துழாய் நன் மாலையாய் கூனகம் புகத்தெறித்த கொற்ற வில்லி யல்லையே –

—————————————————————————————-

ஸ்ரீ கோயில்  கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை பிரான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்