..41st..”aayan aahi aayar mangai veya tholl virumbinaay”=edaiyanahi, edaipenn nappinnai piraattiyin vey pontra thollkalai virumbi punnarnthaay….”aaya ninai yaavar vallar ambarathodu embarayaay”=vun svaroobathai aaraya melvulahathilum evulahathilum yaavar vullaar…”maaya maayam maaya kol”=aacharya boodaney ,sarvaj egjanaha erunthum vunathu svaroobam ariya mudiyaathu…”athu antri”=athu appadi erukattum….’nee”=sarva sakdanana nee..”vahuthalum”=vunnai vannangi vazlipada karanna kallebarangallai koduthu erunthum …”maaya”=sedanarkal ,nal vazliyil puhaamal, maaynthu poha..antha vinaasathai nee sahikka maattaamal….”maayam aakinaay’=evarkallai samharipathey shemam yentru prakrud avasthaiyil niruthinaay..”vun maayam mutrum maayamey”=vunathu sankalpam yellaam aacharyamaha erukirathu….nal vazli thavirnthu theeya vazliyil sentra samsaarikallai samharipathum karmaanu gunnamana rashannam yentru arulukiraar..
ஆயனாகி ஆயர்மங்கை வேய தோள் விரும்பினாய்
ஆய நின்னை யாவர் வல்லர் அம்பரத்தோடு இம்பராய்
மாய மாய மாயை கொல் அதன்றி நீ வகுத்தலும்
மாய மாய மாக்கினாய் யுன் மாயம் முற்றும் மாயமே –41-
ஆயனாகி ஆயர்மங்கை வேய தோள் விரும்பினாய்-இடையனாகி –இடைப்பெண் நப்பின்னை பிராட்டியின் மூங்கில் போன்ற தோள்களை விரும்பி புணர்ந்தாய்
ஆய நின்னை யாவர் வல்லர் அம்பரத்தோடு இம்பராய்-உனது ஸ்வரூபத்தை ஆராய மேல் உலகத்திலும் இவ் உலகத்திலும் வல்லார் யார்
மாய மாய மாயை கொல்-ஆச்சர்ய பூதனாய் -சர்வஜ்ஞ்ஞானாய் இருந்தும் உன்னாலேயும் உனது ஸ்வரூபம் அறிய முடியாதே
அதன்றி நீ வகுத்தலும் மாய மாய மாக்கினாய் யுன் மாயம் முற்றும் மாயமே –
அது அப்படி இருக்கட்டும் -சர்வ சக்தனான நீ உன்னை வணங்கி வழிபட கரண களேபரங்களை கொடுத்து இருந்தும் சேதனர்கள்-நல் வழியில் புகாமல் மாய்ந்து போக அந்த விநாசத்தை நீ சகிக்க மாட்டாமல் -பிரகிருதி அவஸ்தையில் நிறுத்தினாய்
உனது மாயம் -சங்கல்பம் எல்லாம் எவ்வளவு ஆச்சர்யமாக இருக்கிறதே
நல் வழி தவிர்ந்து தீய வழிகளில் செல்லும் சம்சாரிகளை சம்ஹரிப்பதும் -கர்ம அனுகுணமாக ரஷணம் என்று அருளுகிறார்
——————————————————————-
..42nd..”veru esaintha sekkar meni”=varaaha samhara thozlilukku thaka sivanda vudalai vudaiyanaay…”neeru anninda punn sadai keeru thingal vaithavan”= rudran….”kai vaitha van kabaala misai”=than kaiyil vaithu eruntha valiya kabaalathai….”vuooru sem kuruthiyaal niraitha kaarannam thanai pesu”…”yeru sentru adartha easa koosam eintriyey pesu”..koosamal sentru nappinnai piraattikaha erudukallai vali adakkiya perumaaney aruli seyya venum…
வேறு இசைந்த செக்கர் மேனி நீறணிந்த புன் சடைக்
கீறு திங்கள் வைத்தவன் கை வைத்தவன் கபால மிசை
ஊறு செங்குருதியால் நிறைத்த காரணம் தன்னை
ஏறு சென்று அடர்த்த வீச பேசு கூசம் இன்றியே –42-
வேறு இசைந்த செக்கர் மேனி -வேறாக சம்ஹார தொழிலுக்கு தக்க சிவந்த உடலை உடையானாய்
நீறணிந்த புன் சடைக் கீறு திங்கள் வைத்தவன் -ருத்ரன் –
கை வைத்தவன் கபால மிசை-தன் கையில் வைத்து இருந்த வழிய கபாலத்தை
ஊறு செங்குருதியால் நிறைத்த காரணம் தன்னை-ஏறு சென்று அடர்த்த வீச பேசு கூசம் இன்றியே-கூசாமல் சென்று நப்பின்னை பிராட்டிக்காக எருதுகளை வலி அடக்கிய பெருமானே அருளிச் செய்ய வேணும்
———————————————————————-
..43rd..”vem sinatha vezlam venn marppu osithu”= vukramana gobathai vudaiya kuvalayaabadam yentra yanaiyin vennmaiyana danthathai odithu ,antha yaanaiyai mudithu….”vurutha maa kanjanai kadinthu”=kobishdan,palishdan aahiya kamsanai vadam seythu…”mann allanthu konnda kaalaney”=thiruvikramanaay vulaham yellaam allantha thiruvadiyai vudaiyavaney….”vanchanathu vantha peytchi aavi paalull vaanginaay”….nee “anchanathu vannan aaya aadi devan allaiyey”..
வெஞ்சினத்த வேழவெண் மருப்பொசித்து உருத்தமா
கஞ்சனைக் கடிந்து மண் அளந்து கொண்ட காலனே
வஞ்சனது வந்த பேய்ச்சி யாவி பாலுள் வாங்கினாய்
அஞ்சனத்த வண்ணனாய வாதி தேவன் அல்லையே –43-
வெஞ்சினத்த வேழவெண் மருப்பொசித்து-உக்ரமான கோபத்தை உடைய குவலயாபீடம் என்ற யானையின் வெண்மையான தந்தத்தை ஒடித்து அந்த யானையை முடித்து
உருத்தமா கஞ்சனைக் கடிந்து –கோபிஷ்ட பலிஷ்டன் ஆகிய கம்சனை வதம் செய்து
மண் அளந்து கொண்ட காலனே-திரு விக்ரமனாய் உலகம் எல்லாம் அளந்த திருவடியை உடையவனே-
வஞ்சனது வந்த பேய்ச்சி யாவி பாலுள் வாங்கினாய்-அஞ்சனத்த வண்ணனாய வாதி தேவன் அல்லையே
————————————————————————-
..44th.”paalin neermai”=paal pola venmai niramum….”sem pon neermai”=sivantha ponnin niram pola semai niramum….”paasiyin pasum puram polum neermai”=paasiyin velli niram patchai pola…”porppu vudai thadathu vanndu vinndu vulaam neelam neermai”=azlahana dadahathil vulla vanndukal sirahu virithu karuneythal poovin niram pola karu niram yenna….”yentru evai niraintha “…”kaalam naangum aam maalin neermai “=naangu yugangalukkum nirvaahanaay erukkum emberumaanin sowlapya gunathai….”vaiyaham maraithathu yenna neermai”….eppadi muham kaatinathai anusandithu,einnum samsaarikal kadai theravillai ethu yenna durvaasanaa palam yenkiraar..
பாலின் நீர்மை செம்பொன் நீர்மை பாசியின் பசும்புறம்
போலு நீர்மை பொற்புடைத் தடத்து வண்டு விண்டுலா
நீல நீர்மை யென்றிவை நிறைந்த கால நான்குமாய்
மாலின் நீர்மை வையகம் மறைந்ததென்ன நீர்மையே –44-
பாலின் நீர்மை செம்பொன் நீர்மை பாசியின் பசும்புறம் போலு நீர்மை-
பால் போலே வெண்மை நிறம் கொண்டும்
சிவந்த பொன்னின் நிறம் போலே செம்மை நிறமும்
பாசியின் வெளி நிறம் பச்சை போலே
பொற்புடைத் தடத்து வண்டு விண்டுலா நீல நீர்மை
அழகான தடாகத்தில் உள்ள வண்டுகள் சிறகை விரித்து கரு நெய்தல் பூவின் நிறம் போலே கரு நீலம் என்ன
யென்றிவை நிறைந்த கால நான்குமாய் மாலின் நீர்மை
நான்கு யுகங்களுக்கும் நிர்வாஹகனாய் இருக்கும் எம்பெருமானின் சௌலப்ய குணத்தை
வையகம் மறைந்ததென்ன நீர்மையே –இப்படி முகம் காட்டினத்தை அனுசந்தித்து இன்னும் சம்சாரிகள் கடை தேற வில்லை
-ஏது என்ன துர்வாசன பலம் என்கிறார்
————————————————————————–
..45th….”mann vullaay kol vinn vullaay kol “=leela viboothiyil avadarithaay ,parama padathil erukiraay….”mannulley mayangi nintru yennum yenn ahapadaay”=samsaarikalin yennangalukku vishayam aahaathu erukiraay….”nin thamar kann vullaay kol “=vunathu ananya prayojanarkalukku vishayamaanaay….”seyai kol”=matravarukku thoorasdanaay erunthaay…”anandan mel kidantha yem punnyaa punam thullaay alangal am punithaney”.. pala pala vahaiyaha paranthu nirkka valla aatral ethu yenna aacharyam yenkiraar…. .thaanum samsarathil erunthum avanathu paradvamum ezlimaiyum yeedu pattu aruluvathu avanaaley yenkiraar..
மண்ணுளாய் கொல் விண்ணுளாய் கொல் மண்ணுளே மயங்கி நின்று
எண்ணும் எண் அகப்படாய் கொல் என்ன மாயை நின்தமர்
கண்ணுளாய் கொல் சேயை கொல் அநந்தன் மேல் கிடந்த வெம்
புண்ணியா புனம் துழாய் அலங்கல் அம் புனிதனே –45-
மண்ணுளாய் கொல் விண்ணுளாய் கொல் -லீலா விபூதியிலே திருவவதரித்தாய் -பரம பத நாதனாய் இருந்து வைத்தும்
மண்ணுளே மயங்கி நின்று எண்ணும் எண் அகப்படாய்
சம்சாரிகளின் எண்ணங்களுக்கு விஷயம் ஆகாது இருக்கின்றாய்
கொல் என்ன மாயை நின்தமர் கண்ணுளாய் கொல்
உனது அநந்ய பிரயோஜன அடியார்களுக்கு எளிதாக விஷயம் ஆகிறாய்
சேயை கொல்
மற்றவர்களுக்கு தூரச்தனாய் இருக்கிறாய்
அநந்தன் மேல் கிடந்த வெம் புண்ணியா புனம் துழாய் அலங்கல் அம் புனிதனே
பல பல வகையாக பரந்து நிற்கிற எல்லா ஆற்றல் -இது என்ன ஆச்சர்யம் என்கிறார் –
தானும் சம்சாரத்தில் இருந்தும் அவனது சௌலப்யங்களையும் பரத்வங்களையும் ஏடு படுத்தி அருளுவது அவனாலேயே என்கிறார்
————————————————————
.46th..”thodu petra thann thullaay alangal aadu senniyaay”=ethallkal vudaiya, kullirntha thiru thullaay maalai konnda thiru mudiyai vudaiyavaney..”koodu patri aazli yenthi am sirai pull vuoorthiyaal”=sangu,chakaram yenthi garuda vahanam konnda …”naadu petra nanmai nannam ellai yenum”=matra perkal petra nanmai naan pera villai aayinum…”naayineyn veedu petru errapodum pirrappu arukkum aa sol”=nesanana adiyen motsham petru ,samsaaram thollaikkum vahaiyai aruli seyyanum..
தோடு பெற்ற தண் துழாய் அலங்கலாடு சென்னியாய்
கோடு பற்றி யாழி யேந்தி யஞ்சிறைப் புள்ளூர்தியால்
நாடு பெற்ற நன்மை நன்மை யில்லை யேனும் நாயினேன்
வீடு பெற்று இறப்போடும் பிறப்பு அறுக்கும் ஆ சொலே –46-
தோடு பெற்ற தண் துழாய் அலங்கலாடு சென்னியாய்-இதழ்கள் உடைய குளிர்ந்த திருத் துழாய் மாலை சூடிய திரு அபிஷேகத்தை உடையவனாய்
கோடு பற்றி யாழி யேந்தி யஞ்சிறைப் புள்ளூர்தியால்-சங்கு சக்கரம் ஏந்தி கொண்டு கருட வாகனாகவும் உள்ள உன்னால்
நாடு பெற்ற நன்மை நன்மை யில்லை யேனும்
மற்ற பேர்கள் பெற்ற நன்மை நான் பெற வில்லை யாயினும்
நாயினேன் வீடு பெற்று இறப்போடும் பிறப்பு அறுக்கும் ஆ சொலே
நீசனான அடியேன் மோட்ஷம் பெற்று சம்சாரம் தொலைக்கும் வகையை அருளிச் செய்ய வேண்டும் –
—————————————————————————-
..47th..”kaarrodu otha meyni nangal kannna vinnin naadaney”…”neer edathu”=thirupaarkadaliley….”araa annai kidathi yenbar antriyum”….”oer edathai allai”oer edam mattum erupidamaha vudayai allai….”yellai ellai yenbar”=nee vuraiyum edangalukku yellai ellai enbar….”aadalaal”=eppadi sulabam ellai aadalaal….”naayineyn”….”servu edathai therinthu errainjum aa sol “aasriyatharkku vuriya edathai therinthu konndu aasariyakalaam padiyai arulanum…sarva vasthukalilum vyabthiyaay erukiraan yenkiraar..
காரோடு ஒத்த மேனி நாங்கள் கண்ண விண்ணின் நாதனே
நீரிடத்து அரவணைக் கிடத்தி என்பர் அன்றியும்
ஓர் இடத்தை அல்லை எல்லை இல்லை என்பர் ஆதலால்
சேர்விடத்தை நாயினேன் தெரிந்து இறைஞ்சும் ஆ சொலே –47-
காரோடு ஒத்த மேனி நாங்கள் கண்ண விண்ணின் நாதனே
நீரிடத்து அரவணைக் கிடத்தி என்பர் அன்றியும்-ஷீராப்தி நாதனாகவும் இருந்து
ஓர் இடத்தை அல்லை எல்லை இல்லை என்பர் ஆதலால்
நீர் உகந்து அருளி இருக்கும் இடங்களுக்கு எல்லை இல்லையே
சேர்விடத்தை நாயினேன் தெரிந்து இறைஞ்சும் ஆ சொலே
ஆஸ்ரியர்க்காக உறையும் இடத்தை தெரிந்து கொண்டு ஆஸ்ரயிக்கும் படியை அருளிச் செய்ய வேண்டும் –
சர்வ வஸ்துக்களிலும் வ்யாப்தியாய் இருக்கிறான் என்கிறார்
———————————————————————–
..48th..”kuntril nintru”=thiruvengada mallaiyil nintru….”Vaan erunthu”…”neell kadal kidanthu”…”mann ontru sentru”=thiruvikramanaay ella vulahamum allanthu…”ontru athai vunndu”=matru oru kaal antha boomiyai vizlunkiyum….”ontru athai pantriyaay edarnthu”…”nantru sentra naall avatrull”=nantraay sentra naadkalliley…”nal vuyier padaithu”=nalla vueirana manitharkallai srushtithum…”antru avarkku devu amaithu allitha aadi devan allaiyey”=thangal gunnangalukku thakka padiyana devathaikallai yerpaduthi aruliya parama purushan neeyey..
குன்றில் நின்று வான் இருந்து நீள் கடல் கிடந்தது மண்
ஓன்று சென்று அது ஒன்றை உண்டு ஓன்று இடந்து பன்றியாய்
நன்று சென்ற நாள் அவற்றுள் நல் உயிர் படைத்து அவர்க்கு
அன்று தேவு அமைத்து அளித்த வாதி தேவன் அல்லையே –48-
குன்றில் நின்று
திருவேங்கட திருமலையிலே நின்று
வான் இருந்து நீள் கடல் கிடந்தது
மண் ஓன்று சென்று
ஒரு திருவடியால் -ஒரு காலத்தில் — திரிவிக்ரமனாய் எல்லை கடந்து அளந்து –
மற்று ஒரு கால் அந்த பூமியை விழுங்கியும்
ஓன்று இடந்து பன்றியாய்-நன்று சென்ற நாள் அவற்றுள் நல் உயிர் படைத்து அவர்க்கு-நன்றாய் சென்ற நாட்களிலே நல்ல உயிரான மனுஷ்யர்களை ஸ்ருஷ்டித்தும்
அளித்த வாதி தேவன் அல்லையே-
தங்கள் குணங்களுக்குத் தக்க தேவாதிகளை ஏற்படுத்தி அருளிய பரம புருஷன் நீயே என்கிறார் –
——————————————————————
..49th..”konndai konnda kkothai meethu”…”then vulavu kooni koon vunndai konndu”..”aranga ootti vull mahizlntha naathanoor”…”nanndai vunndu naarai pera vaallai paaya neelamey”…”anndai konndu kenndai meyum antha neer arangamey”
கொண்டை கொண்ட கோதை மீது தேனுலாவு கூனி கூன்
உண்டை கொண்டு அரங்கவோட்டி யுண் மகிழ்ந்த நாதனூர்
நண்டை உண்டு நாரை பேர வாளை பாய நீலமே
அண்டை கொண்டு கெண்டை மேயும் அம் தண் நீர் அரங்கமே –49-
—————————————————————-
..50th..”venn thirai karum kadal sivanthu veyva”..”mun oru naall thinn thiral sillai kai vaalli vitta veerar serum vuoor”…”yenn thisai kannangallum erainchi aadum theertha neer”..”vanndu eraitha sollai veli mannu seer arangamey”
வெண் திரைக் கரும் கடல் சிவந்து வேவ முன்னொரு நாள்
திண் திறல் சிலைக்கை வாளி விட்ட வீரர் சேருமூர்
எண் திசைக் கணங்களும் இறைஞ்சி யாடும் தீர்த்த நீர்
வண்டு இரைத்த சோலை வேலி மன்னு சீர் அரங்கமே –50
——————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை பிரான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply