..91..”pann vulaavum mel mozli”=raahangal(kurinchi,kaandaaram,kaamaram)villangum eniya petchu vudaiyavall..”padai dadam kannaal poruttu”=vaall pontra periya kann vudaiyavall piraattiyin poruttu..”yennilaa arakkarai neruppinaal nerukkinaay”..ambukallin theeyaal tholaithu arulinaay..”kann alaal oer kann eleyn”=nee thaan nirvaahan veru nirvaahan yaarum ellai..”kalanda suttram mattru elleyn”=nenju porunthina suttram veru ellai..”yenn elaada maaya ninai yentrum yennull neekkeyl”..
பண்ணுலாவு மென் மொழி படைத்தடம் காணாள் பொருட்டு
எண்ணிலா வரக்கரை நெருப்பினால் நெருக்கினாய்
கண்ணலாலோர் கண்ணிலேன் கலந்த சுற்றம் மற்றிலேன்
எண்ணிலாத மாய நின்னை என்னுள் நீக்கல் என்றுமே -91-
பண்ணுலாவு மென் மொழி
ராகங்கள் -குறிஞ்சி காந்தாரம் காமாரம் விளங்கும் இனிய பேட்சு உடையவள்
படைத்தடம் காணாள் பொருட்டு
வாள் போன்ற பெரிய கண் உடைய பிராட்டியின் பொருட்டு
எண்ணிலா வரக்கரை நெருப்பினால் நெருக்கினாய்
அம்புகளின் தீயால் தொலைத்து அருளினாய்
கண்ணலாலோர் கண்ணிலேன்
நீயே தான் நிர்வாஹகன் -வேறு நிர்வாஹகன் யாரும் இல்லை
கலந்த சுற்றம் மற்றிலேன்
நெஞ்சு பொருந்தின சுற்றம் வேறு இல்லை
எண்ணிலாத மாய நின்னை என்னுள் நீக்கல் என்றுமே
————————————————————————-
..92..”vidai kulangal ezl adarthu”=ezlu rishabangallaiyum kozluppu adakki..”ventri vel kann maadar”=jayaseelamana vel pontra kannkal vudaiya nappinnai piraatti vudaiya..”kadi kalantha tholl punnarntha”=parimallam mikka thollkaludan samsleshitha ..”kaali aaya”=gopaala krishna..”velai neer padaithu”=jala thathuvamana kadalai srushtithu..”adaithu”=(rama avadarathil)annai katti..”athil kidanthu”=thangal aabathai vanthu solla heduvaha athil palli konndaruli..”mun kadainthu”..”nin thanakku adaikalam puhuntha yennai anjal yenna veynndum”..yenakkum “maasusaha’ yentru arula venum..
விடைக்குலங்கள் ஏழு அடர்த்து வென்றி வேற் கண் மாதரார்
கடிக்கலந்த தோள் புணர்ந்த காலி யாயா வேலை நீர்
படைத்து அடைத்து அதில் கிடந்து முன் கடைந்த நின் தனக்கு
அடைக்கலம் புகுந்த என்னை யஞ்சல் என்ன வேண்டுமே –-92-
விடைக்குலங்கள் ஏழு அடர்த்து
ஏழு ரிஷபங்களையும் கொழுப்பை அடக்கி
வென்றி வேற் கண் மாதரார்
ஜெயசீலமான வேல் போன்ற கண்கள் உடைய நப்பின்னை பிராட்டி உடைய
கடிக்கலந்த தோள் புணர்ந்த
பரிமளம் மிக்க தோள்களுடன் சம்ச்லேஷித்த
காலி யாயா
கோபால கிருஷ்ணனாக
வேலை நீர் படைத்து
ஜல தத்வமான கடலை சிருஷ்டித்து
அடைத்து
ஸ்ரீ ராமாவதாரத்திலே அணை கட்டி அடைத்து
அதில் கிடந்து
தங்கள் ஆபத்தை சொல்லி முறை இட ஹேது வாக அதிலே பள்ளி கொண்டு அருளி
முன் கடைந்த நின் தனக்கு அடைக்கலம் புகுந்த என்னை யஞ்சல் என்ன வேண்டுமே
எனக்கும் மாஸுசா என்று அருளிச் செய்ய வேணும்
—————————————————————————
..93..”surambu arangu thann thuzlaay”=vanndukal padintha kullirntha thiru thullay ..”thuthaithu alarntha paadamey”=nerungi, vihasikka pettra vunathu thiruvadikallaiyey..”virumbi nintru erainchuverrkku erangu aranga vaannaney’…..”karumbu eruntha kattiyey”..”kadal kidantha kannaney”….”erumbu aranga”=erumbu pontra raadshasa sarrerangal azliyum padi..”vem saram thurantha vil raamaney”….anchal yentru mattum arulinaal poraathu –vunathu thiruvadiyil nitha kainkaryam pannum anubavamum thanthu arulanum yenkiraar..
சுரும்பு அரங்கு தண் துழாய் அலர்ந்த பாதமே
விரும்பி நின்று இறைஞ்சுவேற்கு இரங்கு அரங்க வாணனே
கரும்பு இருந்த கட்டியே கடல் கிடந்த கண்ணனே
இரும்பு அரங்க வெஞ்சரம் துரந்த வில்லி ராமனே-93-
சுரும்பு அரங்கு தண் துழாய் அலர்ந்த பாதமே
வண்டுகள் படிந்த குளிர்ந்த திரு துழாய்
துகைத்து அலர்ந்த பாதமாய் –
நெருங்கி விகசிக்க பெற்ற உனது திருவடிகளையே
விரும்பி நின்று இறைஞ்சுவேற்கு இரங்கு அரங்க வாணனே -கரும்பு இருந்த கட்டியே -கடல் கிடந்த கண்ணனே-இரும்பு அரங்க வெஞ்சரம் துரந்த வில்லி ராமனே
இரும்பு போன்ற ராட்ஷச சரீரங்கள் அழியும் படி
அஞ்சேல் என்று மட்டும் அருளினால் போராது-உனது திருவடியில் நித்ய கைங்கர்யம் பண்ணும் அனுபவம் தந்து அருள வேண்டும் என்கிறார்
—————————————————————————
..94..”vuoonin meya aavi nee”=sarerathil vulla piraannan nee etta vazlakku..”vurakkamodu vunnarchi nee”=gjanamum, agjanamum nee etta vazlakku..”aanil meya einthum nee”=pasuvin pancha kavyamum nee..”avattrul nintra thooymai nee”..”vaaninodu mannum nee”…”vallam kadal payanum nee”…”yaanum nee athu vantri embiraamanum nee”..avan sarva prakaari..kadal amudam devarkalukku thanthathu pola radnam pontravatrai eisvaryaarthikalukkum tharukiraay..vaaninodu mannum nee yentrathu aahasathil pala pala devathaikal yeanguvathum,neeriley karaiyaamal boo loham eruppathum vunnaaley thaan..yaanum ne yentrathu yenakku vun pakkal rusi piravaada kaalathilum,yenakku nalla madi allithu rusiyai perukinathum nee thaan yenkiraar..
ஊனின் மேய வாவி நீ உறக்கமோடு உணர்ச்சி நீ
ஆனில் மேய ஐந்தும் நீ யவற்றின் நின்ற தூய்மை நீ
வானினொடு மண்ணும் நீ வளம் கடல் பயனும் நீ
யானும் நீ யதன்றி எம்பிரானும் நீ யிராமனே –94-
ஊனின் மேய வாவி நீ-
சரீரத்தில் உள்ள பிராணன் நீ இட்ட வழக்கு
உறக்கமோடு உணர்ச்சி நீ
ஜ்ஞானமும் அஜ்ஞ்ஞானமும் நீ இட்ட வழக்கு
ஆனில் மேய ஐந்தும் நீ
பசுவின் பஞ்ச கவ்யமும் நீ
யவற்றின் நின்ற தூய்மை நீ வானினொடு மண்ணும் நீ வளம் கடல் பயனும் நீ யானும் நீ யதன்றி எம்பிரானும் நீ யிராமனே
அவன் சர்வ பிரகாரி -கடல் அமுதம் தேவர்களுக்கு தந்தது போலே ரத்னம் போன்றவற்றை ஐஸ்வர் யார்த்திகளுக்கும் தருகிறாய்
வானினொடு மண்ணும் நீ -என்றது -ஆகாசத்தில் பல பல தேவதைகள் ஏங்குவதும் நீரிலே கரையாமல் பூ லோகம் இருப்பதும் உன்னாலே தான்
யானும் நீ என்றது -எனக்கு உன் பக்கல் ருசி பிறவாத காலத்திலும் எனக்கு நல்ல மதி அளித்து ருசியை பெருக்கினதும் நீ தான் என்கிறார்
—————————————————————————
..95..”adakka arum eimpulankal adakki”…”aasai aam avai thudakku aruthu vanthu”…”nin thozlil kann nintra yennai”..”vida karuthi mey seyyaathu mikka oer aasai aakkilum”..”kadal kidantha nin allaal oer kann elleyn”..”yennai nehizlkilum yennudaiya nal nenjamthannai ahalvikka thaanum engu ellan eni”-pola nee ethu seythaalum,yen manam vunnai vittu pohaathu..
அடக்கரும் புலன்கள் ஐந்தும் அடக்கி யாசையாம் யவை
துடக்கு அறுத்து வந்து நின் தொழில் கண் நின்ற வென்னை நீ
விடக்கருதி மெய் செயாதே மிக்கோர் யாசை யாக்கிலும்
கடல் கிடந்த நின்னலாலோர் கண் இலேன் எம் அண்ணலே -95-
என்னை நெகிழ்கிலும் என்னுடைய நல நெஞ்சம் தன்னை அகல்விக்க தானும் இங்கிலன் போலே
நீ எது செய்தாலும் என் மனம் உன்னை விட்டு போகாது
————————————————————————–
..96..”varambu ellada maaya maayaa”..”vaiyam ezlum meymaiyey”..”varambu el vuoozli yethilum”=pala pala karbangal sthothiram panninaalum..”varamillada keerthiyaay”=ellai kaanna mudiyaatha pugazl vudaiyoney..”varabillada pal pirappu aruthu”..” nin kazlal porunthum aa “=vunathu thiruvadikal kitti ,avatriley sakdanaay erukum padi..”thiruntha nee varam sey”..thamudaiya prapyathai spashdamaha praarthikiraar..
வரம்பிலாத மாயமாயா வையம் ஏழும் மெய்ம்மையே
வரம்பிலூழி யேத்திலும் வரம்பிலாத கீர்த்தியாய்
வரம்பிலாத பல் பிறப்பு அறுத்து வந்து நின் கழல்
பொருந்துமாறு திருந்த நீ வரம் செய் புண்டரீகனே–96-
வரம்பிலாத மாயமாயா வையம் ஏழும் மெய்ம்மையே வரம்பிலூழி யேத்திலும்
பல பல கல்பங்கள் ஸ்தோத்ரம் பண்ணினாலும்
வரம்பிலாத கீர்த்தியாய்
எல்லை காண முடியாத புகழ் உடையோனாய்
வரம்பிலாத பல் பிறப்பு அறுத்து வந்து நின் கழல் பொருந்துமாறு
உனது திருவடிகள் கிட்டி அவற்றிலே சக்தனாய் இருக்கும் படி
திருந்த நீ வரம் செய் புண்டரீகனே
தம்முடைய பிராப்யத்தை ஸ்பஷ்டமாக பிரார்த்திக்கிறார்
——————————————————————————
..97..”veyya aazli sangu thanndu villum vaallum yenthu seer kaiya”…”seyya pothil maathu ser maarbaa”..”naadaney””eiyil aaya aakkai noey aruthu vanthu nin adainthu”..”vuyavathu oer vubaayam yenakku nee nalha veynndum”..
வெய்ய வாழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்து சீர்க்
கைய ! செய்ய போதில் மாது சேரு மார்பா !நாதனே !
ஐயிலாய வாக்கை நோய் அறுத்து வந்து நின்னடைந்து
உய்வதோர் உபாயம் நீ எனக்கு நல்க வேண்டுமே -97
————————————————————————————–
..98..”maram thuranthu”=kobathai ozlithu..”vanjam maattri”…”eim pulankallaiyum aasaiyum thuranthu”…”nin kann aasaiyey thodarnthu ninta naayineyn”..”piranthu eranthu per edar suzlikann nintrum neengum”..” aa”=vazliyaiyum ……”Matru”=adarkku membatta paramaanandam adaiyum vazliyum..”yenakku maranthiraathu nalha veynndum”..
மறம் துறந்து வஞ்சம் மாற்றி ஐம் புலன்கள் ஆசையும்
துறந்து நின் கண் ஆசையே தொடர்ந்து நின்ற நாயினேன்
பிறந்து இறந்து பேர் இடர் சுழிக் கண் நின்று நீங்குமா
மறந்திடாது மற்று எனக்கு மாய நல்க வேண்டுமே -98-
மறம் துறந்து
கோபத்தை ஒழித்து
வஞ்சம் மாற்றி ஐம் புலன்கள் ஆசையும் துறந்து நின் கண் ஆசையே தொடர்ந்து நின்ற நாயினேன்-பிறந்து இறந்து பேர் இடர் சுழிக் கண் நின்று நீங்குமா
ஆ -வழியையும்
மறந்திடாது மற்று எனக்கு மாய நல்க வேண்டுமே
————————————————————————————–
..99..”kaatti naan sey val vinai”=naan seyum periya paapangallai yenakku ninaivu paduthi..’payan thanil manam thannai naatti vaithu”=antha paapangalin payankall anubavipathil manasai seluthi…”nalla alla seyya yenninaa”=himsaikalai seyyaninaithu erukiraarkal …”yena kettathu antri”=yentru naan kettu erukira padiyaahaamaikaka…”yennathu aavi ninnodum pootti vaitha yennai “=yenudaiya aatmaavai vun pakkalil samarpithu,nirparanaay erukum yennai…”ninnul neekkal poovai vannaney”…vunnai vittu pirithida venndaam..
காட்டி நான் செய் வல் வினைப் பயன்தனால் மனம் தனை
நாட்டி வைத்து நல்ல வல்ல செய்ய எண்ணினார் எனக்
கேட்டதன்றி என்னதாவி பின்னை கேள்வ நின்னொடும்
பூட்டி வைத்த வென்னை நின்னுள் நீக்கல் பூவை வண்ணனே -99-
காட்டி நான் செய் வல் வினைப்
நான் செய்யும் பெரிய பாபங்களை எனக்கு நினைவு படுத்தி
பயன்தனால் மனம் தனை நாட்டி வைத்து
அந்த பாபங்களின் பயன்களை அனுபவிப்பதில் மனசை செலுத்தி
நல்ல வல்ல செய்ய எண்ணினார் எனக்
ஹிம்சைகளை செய்ய நினைத்து இருக்கிறார்கள் என்று
கேட்டதன்றி
நான் கேட்டு இறுக்கிற படி யாமைக்காக
என்னதாவி பின்னை கேள்வ நின்னொடும் பூட்டி வைத்த வென்னை
என்னுடைய ஆத்மாவை உன் பக்கலில் சமர்ப்பித்து நிர்ப்பரனாய் இருக்கும் என்னை-
நின்னுள் நீக்கல் பூவை வண்ணனே
உன்னை விட்டுப் பிரித்திட வேண்டாம்
————————————————————————————-
..100..”pirappinodu per edar suzlikkal nintrum neengum ahthu”…”erappa vaitha”=maranthu ozlintha..”gjana neesarai”=sarva yagjaraha ninainthu konndu erukkum neesarai….”karai kodu yetram aa”=karaiyil konndu serkkum padiyaha..”perarkku ariya nina paadam pathi aana “…”paasanam”=mara kalam…”perarkku ariya maayaney yenakku nalha veynndumey”…
பிறப்பினோடு பேர் இடர் சுழிக்கண் நின்று நீங்கும் அஃது
இறப்ப வைத்த ஞான நீசரைக் கரைக்கொடு ஏற்றமா
பெறற்கு அரிய நின்ன பாத பத்தியான பாசனம்
பெறற்கு அரிய மாயனே யெனக்கு நல்க வேண்டுமே -100-
பிறப்பினோடு பேர் இடர் சுழிக்கண் நின்று நீங்கும் அஃது
இறப்ப வைத்த -மறந்து ஒழிந்த
ஞான நீசரைக் -சர்வஜ்ஞ்ஞாராக நினைந்து கொண்டு இருக்கும் நீசரை
கரைக்கொடு ஏற்றமா
கரையில் கொண்டு சேர்க்கும் படியாக
பெறற்கு அரிய நின்ன பாத பத்தியான
பாசனம்-மரக் கலம்
பெறற்கு அரிய மாயனே யெனக்கு நல்க வேண்டுமே
———————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை பிரான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply