..11th.. “sollinaar thodarchi nee”…”sollinaal”=vedandra saasthra muhathaal..”thodarchi nee”=ehaanthikalukku vuravai vunndu pannubavan nee..”sola padum porulum nee “=sila purannangallil solla padaum devaathi anaithukkum andar atmaa nee..”sollinaal solla padaathu thontrukintra jothi nee”=vedathil solla mudiyaathu yentru thontrukintra dejas sabda vaakyan nee..”sollinaal padaikka nee padaikka vanthu thontrinaar”= nee kaatti kodutha vedathil solliyapadi vulahathai vunndakka vunnaley srushtikka pattu vanthu pirantha brahmaa mudalanavar..”sollinaal”=sabdangallai konndu..”surunga”=surukkamaha vaavadhu “nin gunnangal solla vallerey”=vunathu kalyanna gunnangallai varnnikka saktharkalo?..
சொல்லினால் தொடர்ச்சி நீ சொலப்படும் பொருளும் நீ
சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதி நீ
சொல்லினால் படைக்க நீ படைக்க வந்து தோன்றினார்
சொல்லினால் சுருங்க நின் குணங்கள் சொல்ல வல்லரே –11-
சொல்லினால் தொடர்ச்சி நீ –சொல்லினால் -வேதாந்த சாஸ்திர முகத்தால்
தொடர்ச்சி நீ- ஏகாந்திகளுக்கு .உறவை உண்டுபவன் நீ
சொலப்படும் பொருளும் நீ-சில புராணங்களில் சொல்லப் படும் தேவாதி அனைத்துக்கும் அந்தர்யாமி நீயே .
சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதி நீ-வேதத்தால் சொல்ல முடியாது என்று தோன்றுகின்ற தேஜஸ் சப்த வாக்கினும் நீயே .
சொல்லினால் படைக்க நீ படைக்க வந்து தோன்றினார்-நீயே காட்டிக் கொடுத்த வேதத்தில் சொல்லிய படியே உலகத்தை உண்டாக்கிய
உன்னாலேயே சிருஷ்டிக்கப் பட்டு வந்து பிறந்த பிரம்மா முதலானோர்
சொல்லினால் -சப்தங்களைக் கொண்டு
சுருங்க -சுருக்கமாக வாவது -உனது கல்யாண குணங்களை வர்ணிக்க சக்தர்களோ
———————————————————
..12th.”vulahu thannai nee padaithee”…jagad kaaranna boodanaay nintru nokkum allavey antru ,asadaranna vigrahathodu koodi vanthu avatharithu nokkukintra vun padikallai ariya vallaar yaarum ellai yenkiraar..
உலகு தன்னை நீ படைத்தி யுள் ஒடுக்கி வைத்தி மீண்டு
உலகு தன்னுளே பிறத்தி ஓர் இடத்தை அல்லை ஆல்
உலகு நின்னொடு ஒன்றி நிற்க வேறு நிற்றி ஆதலால்
உலகு நின்னை உள்ள சூழல் யாவர் உள்ள வல்லரே –12-
உலகு தன்னை நீ படைத்தி-ஜகத் காரண பூதனாய் நின்று நோக்கும் அளவே அன்று
அசாதாரண விக்ரஹத்தோடு கூடி வந்து திருவவதரித்து நோக்குகின்ற உன் படிகளை அறிய வல்லார் யாரும் இல்லை என்கிறார்
—————————-
..13th.”einnai yentru sollalavathu yaadum ellai”=nee eppadi pattavan yentru solla koodiyathu oru padiyum ellai..”vun pinnakku vunnarntha petrriyor”=vunnudaiya avadaraathi vishayangallil,aasridarukkum anaasridarukkum vulla vivaathathai arintha mahaankal..”ettidai pinnai kelvan enbar”=nunniya edai vudaiya nappinnai piraattikku valabanaha kooruvaarkal..”pinnai aaya kolamoodu”=sarva vilakshamana divya mangala vigrahathaiyum..”perum”=thirunaamangallaiyum ..”vurrum”=divya sthanangallum..”aadiyum”=vigraha parigraham panniyatharkku kaarannathaiyum..”neermaiyaal ninaikkil(allathu) aar ninaikka vallar”=vunathu krubaiyaal nee arivikka ariyalam ozliya mattra padi yaaraalum ariya mudiyathu..”aadi am jothivuruvai anghu vaithu engu pirantha”..pinnakkavathu..aasriyarkal”perum oer aayiram pira pala vudaiya emberumaan” yentrum anaasridarkal”perum oer vuruvamum vulathillai”yenbar”pinnai yaaya kolam”=maanida saathikkum keezlaha thiriyum jaadhiyil vanthu avadarithaay yentrum kollallaam..
இன்னை என்று சொல்லலாவது இல்லை யாதும் இட்டிடைப்
பின்னை கேள்வன் என்பர் உன் பிணக்கு உணர்ந்த பெற்றியோர்
பின்னையாய கோலமோடு பேருமூரும் ஆதியும்
நின்னை யார் நினைக்க வல்லர் நீர்மையால் நினைக்கிலே –13-
“இன்னை என்று சொல்லலாவது இல்லை-நீ இப்படிப் பட்டவன் என்று சொல்லக் கூடியது ஒரு படியும் இல்லையே
உன் பிணக்கு உணர்ந்த பெற்றியோர்-உன்னுடைய திருவவதாரத்து விசேஷங்களை ஆஸ்ரிதர்களுக்கும் அநாஸ்ரிதர்களுக்கும்
உள்ள விவாதத்தை அறிந்த மகான்கள்
இட்டிடைப் பின்னை கேள்வன் என்பர் .-நுண்ணிய இடையை உடைய நப்பின்னை பிராட்டியாருக்கு வல்லபனாக கூறுவார்கள்
பின்னையாய கோலமோடு-சர்வ விலஷணமான திவ்ய மங்கள விக்ரஹத்தையும்
பேருமூரும் ஆதியும்-திரு நாமங்களையும் -திவ்ய தேசங்களையும் விக்ரஹ பரிக்ரஹம் பண்ணியதற்கு காரணத்தையும்
நீர்மையால் நினைக்கில் அல்லது நின்னை யார் நினைக்க வல்லர் -ஒழிய மற்றப்படி யாராலும் அறிய முடியாதே-
ஆதி அம ஜோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த பிணக்காவது-ஆஸ்ரியர்கள் பேரும் ஓர் ஆயிரம் பிற பல உடைய எம்பெருமான் -என்றும்
அநாஸ்ரிதர்கள் பேரும் ஓர் உருவமும் உள்ளதில்லை என்பர் ”
பின்னையாய கோலம் -மானிட ஜாதிக்கும் கீழாக திரியும் ஜாதியில் வந்து திருவவதரித்து -என்றும் கொள்ளலாம் –
—————————————-
..14th..”thooymai yogam aayinaay”=samsaarikal azlukku vudambu neengi aprakruda sareeram perum padi arul seybavan..”nin nama deyam”=vunathu thirunamangalukku vaasyamana gunna seshdithangal.vunathu yenna mudiyatha pala pala gunnangallaiyum enbamuru villaiyattukallaiyum evai evai yentru pahuthu solla adiyey samarthan allan..nee parihrathu arulina Koorma vigraham samanyathu alla kaiyil thiru aazliyumana samavedathaal aruliya adi ramaneeya hirannmaya vigraham yentru arinthen yenkirar..
தூய்மை யோகமாயினாய் துழாய் அலங்கல் மலையாய்
ஆமையாகி ஆழ் கடல் துயின்ற வாதிதேவ நின்
நாமதேயமின்னதென்ன வல்லமல்ல வாகிலும்
சாமவேத கீதனாய சக்ர பாணி அல்லையே –14-
தூய்மை யோகமாயினாய் –சம்சாரிகள் அழுக்கு உடம்பு நீங்கி அப்ராக்ருத சரீரம் பெறும் படி அருள் செய்பவன்
நின் நாமதேயமின்னதென்ன வல்லமல்ல வாகிலும்--உனது திரு நாமங்களுக்கு வாச்யமான திருக் கல்யாண குண சேஷ்டிதங்கள்
-உனது எண்ண முடியாத பல பல திருக் கல்யா ண குணங்களையும் இன்புறும் விளையாட்டுக்களையும் இவை இவை என்று
பகுத்து சொல்ல அடியேன் சமர்த்தன் அல்லேன் என்றாலும்
நீ பரிஹரித்து அருளின ஸ்ரீ கூர்ம விக்ரஹம் ..திருக்கையில் திருவாழியுமான சேர்த்தியை சாம வேதத்தில் அருளிய
அதி ரமணீய ஹிரண்மய விக்ரஹம் என்று அறிந்தேன் என்கிறார் ..
—————————————-
..15..”angam aarum”=seeshai,vyakarannam,sandas,nirukdam,jyothisham,kalbam yentraaaru vedaangam..asharanngallai vutcharikka venndiyathai seeshai sollum..prakruthi,pradyayangalin paahupaadu vyakarannathil..artha viveham nirukdam..kaalangallai jyothishamum,vaithiha karumangallai anushtikka venndiya muraikallai kalbamum sollum..entha aaru angangallum naangu vedathukkum vunndu..evatraal avanin svarooba svaabangal solla padum..avan than ..”maa kadal”=thiru paarkadalil ..”pannam thallai sem kann naaga annai kidantha “=padangallin thallaiyil sivantha kannkal vudaiya thiru ananthaazlvaan yennum annaiyil palli konndy erukkum ..”malhu selvam seerinaay”=nirantha selvathaiyum gunnangallaiyum konnda”sanga vnnam anna meyni”=sangin vannam pontra thirumeni vudan -kruda yugathil-avatharithu.”saarnga paanni allaiyey”=dredaa yugathil eshvaahu kulathilkaiyil villumay vanthu avadaritha neeyey antro..
அங்கமாறு வேத நான்கு மாகி நின்று அவற்றுளே
தங்குகின்ற தன்மையாய் தடம் கடல் பணைத் தலை
செங்கண் நாகணைக் கிடந்த செல்வா மல்கு சீரினாய்
சங்க வண்ண மன்ன மேனி சாரங்க பாணி யல்லையே –15-
“அங்கமாறு=-சீஷை வியாகரணம் சந்தஸ் நிருக்தம் ஜ்யோதிஷம் கல்பம் என்ற ஆறு வேத அங்கங்களும்
அஷரங்களை உச்சரிக்க வேண்டியவற்றை சிஷை சொல்லும்
பிரகிருதி பிரத்யங்களின் பாகுபாடு வியாகரணத்தில்
அர்த்த விவேகம் சொல்லும் .நிருக்தம்
காலங்களை ஜ்யோதிஷமும்
வைதிக கர்மங்களை அனுஷ்டிக்க வேண்டிய முறைகளை களபமும் சொல்லும் –
இந்த ஆறு அங்கங்களும் நான்கு வேதங்களுக்கும் உண்டு -இவற்றால் அவனுடைய ஸ்வரூப ஸ்வ பாவங்கள் சொல்லப்படும் .
அவன் தான் –மா கடல் திருப் பாற் கடலில்-பணைத் தலை-செங்கண் நாகணைக் கிடந்த.-பணங்களின்தலையில் சிவந்த கண்களை உடைய திரு அனந்தாழ்வான் என்னும் அணையில் பள்ளி கொண்டு இருக்கும் .
மல்கு செல்வம் சீரினாய்.”-நிறைந்த செல்வத்தையும் குணங்களையும் கொண்ட
சங்க வண்ண மன்ன மேனி-சங்கின் வண்ணம் போன்ற திருமேனியை உடையவன்-கருத யுகத்தில் திருவவதரித்து
சாரங்க பாணி யல்லையே -த்ரேதா யுகத்தில் இஷ்வாகு குலத்திலே திருக்கையிலே திருச் சார்ங்கம் என்னும்-கோதண்டம் கொண்டு வந்து திரு வவதரித்த நீயே அன்றோ -என்கிறார்
————————————————————
..16.”thallaikannam”=mudanmai petra deva ganangal..”thuhal”=shhotramana davara kannam..”kuzlambu jaadhi”=misra yonikallana manushya jandhujaadikal..evatrilley “jothi thotram aay”=aprakrudamana dejas vudan thiru avatharithu..”nillai kannangal kaanna vanthu nitrri yelum “=devarkal mattum ellathu anaivarum anubavikkum padiyaha vanthu nirbaayaahilum..”needu erum kallai kannangal”=nithyamaayum virinthum vulla veda saasdra samoohangal..”sol porulinaal”=abithana vruthiyaalum..”karuthinaal”=dadparya vruthiyaalum..”ninaikka onna”=vunathu perumaikallai ninaikkavum maattaamal..”malai kannangal pol vunnarthum maatchi”parvada samuhangal pola abarisedyamaaha arivikkum vailashannyam…”nin than maatchiyey”=vunnudaiya vailashanyam yethannai..Kubjaamramaay -siriya maramaha avadaram seythathu puraannam koorum..
தலைக்கணத் துகள் குழம்பு சாதி சோதி தோற்றமாய் –
நிலைக் கணங்கள் காண வந்து நிற்றியேலும் நீடிரும்
கலைக் கணங்கள் சொல் பொருள் கருத்தினால் நினைக்கொணா
மலைக் கணங்கள் போல் உணர்த்தும் மாட்சி நின் தன் மாட்சியே —-16 –
தலைக்கணம் –முதன்மை பெற்ற தேவ கணங்கள்
துகள் -ஷூத்ரமான ஸ்தாவர கணங்கள்
குழம்பு சாதி -மிஸ்ர யோநிகளான மனுஷ்ய ஜங்கம ஜாதிகள் இவற்றிலே ”
சோதி தோற்றமாய் -அப்ராக்ருத தேஜஸ் உடன் திரு வவதரித்து
நிலைக் கணங்கள் காண வந்து நிற்றியேலும்-தேவர்கள் மட்டும் இல்லாது அனைவரும் அனுபவிக்கும் படியாக வந்து நிற்பாயாகிலும் .
நீடிரும் கலைக் கணங்கள் -நித்தியமாயும் விரிந்தும் உள்ள வேத சாஸ்திர சமூகங்கள்
சொல் பொருள் கருத்தினால் -அபிதான வ்ருத்தியாலும் தாத்பர்ய வ்ருத்தியாலும்
நினைக்கொணா-உனது பெருமைகளை நினைக்கவும் மாட்டாமல் .
மலைக் கணங்கள் போல் உணர்த்தும் மாட்சி-பர்வத சமூகங்கள் போலே அபரிச்சேத்யமாக அறிவிக்கும் வைலஷண்யம்
நின் தன் மாட்சியே -உன்னுடைய வைவைலஷண்யம் எத்தனை
குப்ஜ மரமாய் .-சிறிய மரமாயும் திருவவதாரம் செய்ததை புராணம் கூறும் –
——————————————-
..17..”eha moorthi aay”=parama pada nilayanana para vaasudeva moorthiyaay..”moontru moorthi aay”=sankarshanna,pradyumna,aniruddan aahiya moontru moorthiyaay..”naalu moorthiaay”=pradanam,purushan,avyakdam, kaalam yennum evatrai sareeramaha konnda..”nanmai ser boham moorthi aay”=vilashannamaay bohathukku arkkyamana moorthiyaay…”punnyathin moorthi aay”=punnyamey vadivu konnda thoru moorthi aay..”yenn eil moorthi aay”=eppadi yennirantha pala pala moorthi aay..”nalam kadal”=nalla thiru paar kadaliley..”naham moorthi sayanamaay kidanthu”=thiruvananthaazlvaanin thirumeniyai padikkaiyaha konndu kann vallarum..”meley”=atharkku meley..”aaha moorthi aaya vannam”=adiyaarkal vuhantha vuruvamaahiya archaa avadaram edutha thannmai”yen kol”..”thamar vuhantha vuruvam avuruvam thaanaay”-pola aadi devaney ethu enna vinthai yenkiraar..
ஏக மூர்த்தி மூன்று மூர்த்தி நாலு மூர்த்தி நன்மை சேர்
போக மூர்த்தி புண்ணியத்தின் மூர்த்தி எண்ணில் மூர்த்தியாய்
நாக மூர்த்தி சயநமாய் நலம் கடல் கிடந்தது மேல்
ஆக மூர்த்தி யாய வண்ணம் என் கொல் ஆதி தேவனே –17-
ஏக மூர்த்தி
-பரமபத நிலையனான பர வாஸூ தேவ மூர்த்தியாய்
மூன்று மூர்த்தி யாய் –
சங்கர்ஷன பிரத்யுமான அநிருத்தன் ஆகிய மூன்று மூர்திக்களுமாய்
நாலு மூர்த்தி யாய்
பிரதானம் புருஷன் அவயகதம் காலம் என்னும் இவற்றை சரீரமாகக் கொண்ட
நன்மை சேர் போக மூர்த்தி யாய் –
வி லஷணமாய் போகத்துக்கு அர்ஹ்யமான மூர்த்தியாய்
புண்ணியத்தின் மூர்த்தி யாய்
புண்யமே வடிவு கொண்ட தொரு மூர்த்தியாய்
எண்ணில் மூர்த்தியாய்-
இப்படி எண்ணிறந்த பல பல மூர்த்தியாய்
நாக மூர்த்தி சயநமாய் நலம் கடல் கிடந்தது –
நல்ல தொரு பாற் கடலிலே திரு வநந்த ஆழ்வான் திரு மேனியைப் படுக்கையாகக் கொண்டு கண் வளரும்
மேல்
அதற்கும் மேலே
ஆக மூர்த்தி யாய வண்ணம் –
அடியார்கள் உகந்த உருவமாகிய அர்ச்சாவதாரமும் எடுத்த தன்மையை
என் கொல் ஆதி தேவனே ––
தமர் உகந்த உருவம் அவ்வ்ருவம் தானே போலே ஆதி தேவனே இது என்ன விந்தை என்கிறார் .
——————————-
..18..”naga moorthy sayanamaay” yentrum “thadam kadal panna thalai semkann naagannai kidantha” yentru aruli, athil aazlankaal pattu adutha paasuram arulukiraar..”vidatha vaay oer aayiram “=vishathai vudaiya aayiram vaaykall intrum..”eru aayiram kann”=errariram kannkalintrum..”vem thazlal”=vevviya thazlalai..”viduthu”=purapada vittu konndu..”veezlvu elaada boham”=oru kaalum visedamillada bagavath anubavathai vudaiyavanaay..”mikka sothi”=mihuntha jothisai vudaiyavanaay..”thokka “-thiral thiralaay erukkum..”seer”=azlahai..” thoduthu “=thoduthu “mel”=mel purathiley” vidaanam aaya”=mer katti pontra padangal vudaiya “bowvam neer”=samudra jalathil..”araa annai padutha paayal palli kollvathu yen kol”=padukkaiyahi amaitha thiruvanthaazlvanin sayanathiley palli konndu arulum thanmai yethiram..”aangaaravaaram adu kettu azlal vumizlum poongaar aravu”-Naanmuhan Thiruvanthaathi pola..veezlvu ellatha boham”semtraal kudaiyaam,erunthaal singaasanamam,nintraal maravadiyaam,neell kadalull yentrum punnaiyaa aanni villakkam,boom pattam,pulhum annaiyaam thirumaarkku aravu”bagavath anubavam maaramal erupathaal “mikka sodhi”yenkiraar..
விடத்த வயோராயிரம் ஈராயிரம் கண் வெந்தழல்
விடுத்து விள்விலாத போக மிக்க சோதி தொக்க சீர்
தொடுத்து மேல் விதாநமாய பௌவ நீர் அராவணைப்
படுத்த பாயில் பள்ளி கொள்வது என் கொல் வேலை வண்ணனே –18-
நாக மூர்த்தி சயனமாய் -என்றும் –தடம் கடல் பணை தலை செங்கன் நாகனைக் கிடந்த -என்றும்- அருளி அதிலே ஆழம் கால் பாட்டு அடுத்த பாசுரம் அருளுகிறார்
.விடத்த வயோராயிரம்-விடாத்தை உடைய ஆயிரம் வாயில் என்றும்
இராராயிரம் கண் வெந்தழல்-விடுத்து-ஈராயிரம் கண்கள் என்றும் வெவ்விய தழலை புறப்பட விட்டுக் கொண்டு
விள்விலாத போக
ஒரு காலும் விச்சேதம் இல்லாத பகவத் அனுபவத்தை உடையானாய்
மிக்க சோதி
மிகுந்த ஜ்யோதிசை உடையனாய்
தொக்க சீர்
திரள் திரளாக இருக்கும் அழகை
தொடுத்து மேல் விதாநமாய
தொடுத்து மேல் புறத்திலே மேல் கட்டி போன்ற படங்கள் உடைய
பௌவ நீர் அராவணைப் படுத்த பாயில் பள்ளி கொள்வது என் கொல் வேலை வண்ணனே –
சமுத்திர ஜலத்தில் கடுக்கையை அமைத்த திரு வநந்த ஆழ்வான் சயனத்திலே பள்ளி கொண்டு அருளும் தன்மை எத்திறம் –
ஆங்கு ஆரவாரமது கேட்டு அழல் உமிழும் பூங்கார அரவு -போலே
விள்விலாத போகம் -சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமும் நின்றாள் மரவடியாம் நீள் கடலுள் என்றும் புணையாம்-அணி விளக்காம் பூம் பட்டாம் புல்கும் அரவாம் திருமாற்கு அரவு -பகவத் அனுபவம் மாறாமல் இருப்பதால் மிக்க சோதி -என்கிறார்
————————————————-
.19..”pull adhu aahi vedam naankum oodinaay”=hamsa roobamaay avadarithu naangu vadangallaiyum vubadesithu arulinaay..”athu antriyum pullin vaay pillanthu”=athum allamal vunnai kolla vantha bahaasuranin vaayai killithu kontru “pull kodi pidithy, pinnarum”=periya thiruvadiyai dvajamaha pidithathu allaamal..”pullai vuoorthi”=antha periya thiruvadiyai vaahanamayum konndu..”aadaaal”=eppadi pala pala rashano vubaayangallai seythu “kadal”=thiru paar kadaliley..”pullin pahai mey kidathal”=garuda jaadikku pahai yentru thotrum padiyana thiruvanthaazlvaanudaiya thiru meniyiley palli kollvathai..””kadalithathu ‘=virumi poruvadaha.”athu”=entha kaariyam..”yen kol”=yenna thiruvullam?…………………..thiru paar kadalil sayanithu erupathu yetharkku yentru vinava..samsarikallai radshikka yenna.. munnamey hamsamaha vedam anaithum vubadesithu arulinaay yenna..ethaal prammannam koduthu pullin vaay keendi premeya boodanana thannai koduthaan munnam..thaan radshahan yentru thontra kodi katti konndu erukiraan ..abathu vanthaal garuda vahanathil vanthu radshikiraan..
புள்ளதாகி வேத நான்கும் ஓதினாய் அதன்றியும்
புள்ளின் வாய் பிளந்து புட் கொடி பிடித்த பின்னரும்
புள்ளை ஊர்தி யாதலால் என் கொல் மின் கொள் நேமியாய்
புள்ளின் மெய்ப் பகைக் கடல் கிடத்தாழ் காதலித்ததே –19-
புள்ளதாகி வேத நான்கும் ஓதினாய் –
ஹம்ச ரூபனாய் திருவவதரித்து நான்கு வேதங்களையும் உபதேசித்து அருளினாய்
அதன்றியும் புள்ளின் வாய் பிளந்து –
அதுவும் அல்லாமல் பகாசுரனாய் -உன்னைக் கொல்ல வந்த பஷியின் வாயைப் கிழித்துக் கொன்று
புட் கொடி பிடித்த பின்னரும
பெரிய திருவடியை த்வஜமாக பிடித்ததும் அல்லாமல்
புள்ளை ஊர்தி யாதலால்
அந்த பெரிய திருவடியை வாகனமாயும் கொண்டு இப்படி பல பல ரஷண உபாயங்களைச் செய்து அருளி
என் கொல் மின் கொள் நேமியாய் புள்ளின் மெய்ப் பகைக் கடல் கிடத்தாழ் காதலித்ததே –
திருப்பாற் கடலிலே கருட ஜாதிக்கு பகை என்றும் தோற்றும்படியான திரு வநந்த ஆழ்வான் உடைய திரு மேனியிலே
பள்ளி கொள்வதை விரும்பிப் போர்வதான இக்கார்யம் என்ன திரு உள்ளம்
திருப் பாற் கடலிலே சயனித்து இருப்பது எதற்கு என்று வினவ சம்சாரிகளை ரட்ஷிக்க என்ன
முன்பே ஹம்சமாக வேதம் அனைத்தும் உபதேசித்து அருளினாய் என்ன -இத்தால் பிரமாணம் கொடுத்து அருளி –
புள்ளின் வாய் கீண்டு –பிரமேயபூதமான தன்னை ரட்ஷித்து அருளியும் சர்வ ரட்சகன் என்று கொடி கட்டி பறை சாற்றிக் கொண்டு
ஆஸ்ரிதற்கு ஆபத்து வந்தால் பெரிய திருவடியை வாகனாமக் கொண்டு வந்தும் ரட்ஷித்து அருளுகிறான் என்றவாறு
————————————————-
..20..”koosam ontrum entri”=sirithum koosaathey..”maakannam paduthu”=thiruvannanthaazlvaanai padukkaiyaha virithu…”velai neer”=samudra jalathil..”pesa nintra devar vanthu pada mun kidanthathum”=stotram pannuvatharkentru amaintha brahmaadi devarkalum vanthu paadum padi,anadi kalamaha, sayanithu erunthu aruliyathaiyum..”antru”=devarkalukku kadal kadaintha antru..”pasam nintra neeril vaazlum aamaiyana kesavaa”=varunna pasangal kidakkira kadalil vaazlukintra aamai yennum shootra janthuvaha pirantha kesavaney..”yentru yesa neekidantha aarum”=arivilikal yesumpadi kidantha padiyum..”thera kooru”=adiyen nangu therinthu kollum padi yenakku aruli seyya venum….neermaikku yellai paarkadal sayanam.. menmaikku ellai kadal kadainthathu..evatrai pirithu yenakku aruli seyyanum yenkiraar..yella avadarathilum erandum kalanthu erukkum..”pasam nintra neer”etharkku parama padathai vida entha kadaley bogyam yentru erukkai..emberumaan aasai padathakka neer..
கூசமொன்றுமின்றி மாசுணம் படுத்து வேலை நீர்
பேச நின்று தேவர் வந்து பாட முன் கிடந்ததும்
பாச நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா
ஏசவன்று நீ கிடந்தவாறு கூறு தேறவே –-20-
கூசமொன்றுமின்றி மாசுணம் படுத்து வேலை நீர்
சிறிதும் கூசாதே -திரு வநந்த ஆழ்வானைப் படுக்கையாக விரித்து -சமுத்திர ஜலத்தில்
பேச நின்று தேவர் வந்து பாட முன் கிடந்ததும்
ஸ்தோத்ரம் பண்ணுவதற்கு என்று -அமைந்த -ப்ரஹ்மாதிகளும் வந்து பாடும் படி அநாதி காலமாக சயனித்து இருந்து அருளியதையும்
அன்று -தேவர்களுக்கு கடல் கடைந்த அன்று
பாச நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா
வருண பாசங்கள் கிடக்கிற கடலிலே வாழுகின்ற ஆமை என்னும் ஷூத்ர சஜாதீயனாக திருவவதரித்த கேசவனே
ஏசவன்று நீ கிடந்தவாறு
அறிவிலிகள் ஏசும்படி கிடந்த படியும்
தேற கூறு –
அடியேன் நன்கு தெரிந்து கூறும்படி எனக்கு அருளிச் செய்ய வேணும்
நீர்மைக்கு எல்லை பாற் கடல் சயனம்
மேன்மைக்கு எல்லை கடல் கடைந்தது
இவற்றைப் பிரித்து எனக்கு அருளிச் செய்ய வேணும் என்கிறார்
-எல்லா அவதாரங்களிலும் பரதவ சௌலப்யங்கள் இரண்டுமே கலந்தே இருக்குமே -பாசம் நின்ற நீர் -பரம பதத்தை விட இந்த பாற் கடலிலே சயனம் போக்யமாய் இருக்கை –ஆஸ்ரித ரஷணத்துக்காக வென்றே –கூப்பாடு கேட்கும் இடம் அன்றோ
—————————————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை பிரான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்