ஸ்ரீ ஸூத மஞ்ஜரீ – ஸ்ரீ பாஷ்ய முதல் அத்யாயம் முதல் பாத ஸாரம்–ஸ்ரீ உ.வே. வித்வான்‌ மதுராந்தகம்‌ திருமலை. ஈச்சம்பாடி. வீரராகவாசார் ஸ்வாமிகள்–

பர தத்வ பரம ஹித பரம புருஷார்த்தங்களை ப்ரதிபாதிக்கும் உபநிஷத் பாகங்களை ஸ்மீசீந ந்யாயங்களைக்‌ கொண்டு விவரணம்‌ செய்கிறது சாரீரக சாஸ்த்ரம்‌.-பரம ஹிதமாவது–கர்மாங்ககமான பக்தி, கர்ம விசாரத்தாலே அங்கத்தைத்‌ தெளிந்து, ப்ரஹ்ம விசாரத்தாலே அங்கியான பக்த் யுபாயத்தைத்‌ தெளிந்து அநுஷ்ட்டித்து பரம புருஷார்த்தம்‌ பெற வேண்டும்‌-பரம – புருஷார்த்தமாவது-— அவித்யா நிவ்ருத்தி ‘பூர்வகமான பரிபூர்ண ப்ரஹ்மாநு பவம்‌. பக்தியினால்‌ ப்ரஸந்நனான பகவான்‌ ஜீவனுடைய அவித்யா பந்தத்தை விடுவித்து ஸாஸ்வதமான ஸ்வாநுபவ கைங்கரியங்களைத்‌ தந்தருளுகிறான்‌, இது விஸிஷ்டாத்வைத ஸித்தாந்தம்‌.அத்வைத ஸித்தாந்தமாவது – பர ப்ரஹ்மமானது அநாத் யவித்யையினாலே கட்டுண்டு ஸம்ஸரிக்கின்றது. ஜீவாத்மா வானவன்‌ ஸ்ரவண மநநாதி பூர்வகமான ஐக்ய ஜ்ஞாநம்‌ பெற்று ப்ரஹ்மத்திற்கு அவித்யா நிவ்ருத்தி ரூப மோக்ஷத்தைத் தந்து உபகரிக்‌கிறான்‌ என்பதே -இவ்வாறு ப்ரஹ்ம அஜ்ஞாந நிவ்ருத்திக்காக ஜீவன்‌ ஸம்பாதிக்க வேண்டியது தத்வமஸி இத்யாதி வாக்ய ஜன்ய ஜ்ஞாநமே. இதுவே மோக்ஷ ஸாதாம்‌. . இதற்குக்‌ கர்மம்‌ அங்கமன்று-விரோதியே, ஆதலால்‌ கர்ம விசார பூர்வகமன்று ப்ரஹ்ம விசாரம்‌. நித்யா நித்யவஸ்து விவேகம்‌ முதலிய ஸாதந சதுஷ்டய பூர்வகமே அது என்பது அத்வைத வாதம்‌

இவ்வர்த்தங்களை நிரஸித்து ஸித்தாந்தம்‌ செய்வதே ஜிஜ்ஞாஸாதிகரண ஸ்ரீபாஷ்யத்திலே லகு ஸித்தாந்தம்‌ என்‌றும்‌ மஹா ஸித்தாந்தம்‌ என்றும்‌ சொல்லப் படுகின்றது.
லகு ஸித்தாந்தம்‌ :–

1-விரோதாத்‌:–கர்மமானது ஸ்வர்காதியான அநித்ய பலத்தைத்‌ தருகின்றது. மேலும்‌ பேத வாஸனையை விருத்தி செய்கின்றமையால்‌ ஐக்ய ஜ்ஞானத்துக்கு விருத்தம்‌ என்பதாக பூர்வபக்ஷம்‌
ஸித்தாந்தமாவது ;–பலாபி ஸந்தி யின்றிக்கே ஸாத்விக த்யாக புரஸ்ஸரமாகச்‌ செய்யும்‌ கர்மமானது சித்த சுத்தியைத்‌ தந்து பக்திக்கு உபகாரகம்‌. ஆகையால்‌ விரோத மில்லை. பேத வாஸனையானது விரோதி யன்று, பேத ஜ்ஞாநமானது மோக்ஷ ஸாதகமே யன்றி மோக்ஷ பாதகமன்‌ று.

2-அப்ரமாணத்வாத்‌ –ப்ரஹ்ம ஜ்ஞாகத்திற்குக்‌ கர்மமானது காரணம்‌ என்‌பதில்‌ ப்ரமாணமில்லை என்று பூர்வபக்ஷம்‌
ஸித்தாந்தமாவது :-ப்ரஹ்ம ஜ்ஞாநத்துக்குக்‌ கர்மம்‌ காரணம்‌. கர்மாநுஷ்டாதாவே ப்ரஹ்ம வித்துக்களில்‌ ஸ்ரேஷ்டன்‌ என்றிவ் வாறாக ப்ரமாணங்களிருப்பதால்‌ அப்ரமாணம்‌ என்பது ஸரியன்‌று,

3-சித்த சுத்த யுபயோஜநாத்‌ :– கர்மத்தினால்‌ மனதுக்கு சுத்தி யேற்பட்டு ஜ்ஞாநத்தில்‌ இச்சை யுண்டாகின்றது. இச்சை யுண்டான பிறகு கர்மாநுஷ்டாநம்‌ வேண்டியதில்லை என்று பூர்வபக்ஷம்‌.
ஸித்தாந்தமாவது :–யஜ்ஞாதிகள்‌ வேதந ஸாதநங்களே யன்றி விவிதிஷைக்கு ஸாதநங்களன்று, இச்சா ஸாதநங்களே யாகிலும்‌ கர்மாநுஷ்டாநம்‌ வேணும்‌. ஏனெனில்‌, மோஷ உபாய ஜ்ஞாநமானது ஆப்ரயாணம்‌ ப்ரதிதிநம்‌ அநுஷ்ட்டிக்கப்பட வேண்டியது. அதற்கு அபேஷிதிதையான இச்சையும்‌ ப்ரதிதிநம்‌ வேண்டும்‌. இச்சைக்கு ஸாதாமான கர்மமும்‌ ப்ரதிதிநம்‌ அநுஷ்ட்டிக்கப்பட வேணும்‌ என்று.

4-ஜ்ஞாந மாத்ரஸ்ய ஹேதுத்வச்ருதே:–மோக்ஷத்துக்கு ஜ்ஞாநமே ஸாதந மென்‌பதால்‌ கர்மம்‌ வேண்டாவே என்று பூர்வபக்ஷம்‌, ஸித்தாந்தமாவது :–ஜ்ஞாநமே ஹேது என்பது இஷ்டமே: அந்த ஜ்ஞாநமானது பக்தி ரூபமானதாகையால்‌, அதற்கு ப்ரதிதிநம்‌ கர்மாநுஷ்டாநம்‌ அபேஷிதிதம் என்று பிரமாணங்கள் உள்ளன

5-ஸமாத்யங்ககதாம் நாநாத।—சம தமாதிகள்‌ மோக்ஷ ஸாதந ஜ்ஞாநத்துக்‌ உபேஷிதிதங்கள்‌ -கர்மமானது அவற்றுக்கு விரோதியாயிற்றே என்று பூர்வபக்ஷம்‌.
ஸித்தாந்தமாவது:விஹித கர்மா நுஷ்டாநத்திற்கும்‌ அவிஹிதமும்‌ ப்ரதிஷித்தமு மானதிலிருந்து உபரதி ரூபங்களான சம தமாதிகளுக்கும்‌ பரஸ்பர விரோத மில்லை யென்று. இவ்வாறு ஐந்து ஆக்ஷேபங்கள்‌ லகு ஸித்தாந்தத்தில்‌ பரிஹ்ருதங்கள்‌.
இனி 6) ஸாமர்த்த்யதோபிச :–என்கிற ஆஷேபம்‌ பரிஹரிக்கப்படுகிறது மஹா ஸித்தாந்தத்திலே-அதாவது-ப்ரஹ்மமானது நிர்விசேஷம்‌. சித்து அசித்து ஸ்வ கத குணங்களிவையில்லாதது -இதற்கு அநாதியான அவித்யையால்‌ இந்த பேதங்கள்‌ தோன்றுகின்றன. ஸ்ரவண, மநந , நிதித்யாஸந க்ரமத்தாலே பேத வாஸனையானது நிர் ஸேஷமாக நிவ்ருத்தையான பின்பு தத்த்வமஸி முதலிய மஹா வாக்யத்திலே யுண்டாகும்‌ ஜக்ய ஜ்ஞாநமே ப்ரஹ்ம அவித்யா நிவர்த்தகம்‌. அதற்காக வேதாந்த விசாரம்‌ செய்ய ஆரம்பிக்க வேண்டுமென்று மஹா பூர்வ பக்ஷம்‌-அதாவது :–(1) ‘ப்ரஹ்மம்‌ அவித்யாஸ்ரயம்‌, (2) அவித்யையானது ப்ரஹ்மத்தை மறைக்கிறது, (3) இந்த அவித்யையான தோஷம்‌ அபரமார்த்தமானது; (4) ஸத்து அஸத்து என்று அதிர்வசநீயமிது, (5) ப்ரத்யக்ஷம்‌ அநுமாநம்‌ ஸ்ருதி ஆகிய மூன்று ப்ரமாணங்களாலும்‌ இவ்வாறு அவித்யை என்பது ஸித்திக்கின்றது, (6) இதற்கு நிவர்த்தகம்‌ ஜக்ய ஜ்ஞாநம்‌. (7) நிவர்த்திக்கப்படுமது மித்யா பூதமான ப்ரபஞ்சம்‌, மித்யா பூதமான ப்ரபஞ்சமானது ஐக்ய ஜ்ஞாநத்தாலே நிவ்ருத்தி பெறலாமே யன்றி, கர்மத்தினால்‌ உபயோகமில்லை. மித்யா பூதமான ஸர்ப்பமானது, இது ஸர்ப்பமன்று, ரஜ்ஜு என்கிற ஜ்ஞாநத்தாலே யன்றோ நிவ்ருத்தி பெறும்‌. தடியினாலடித்து மித்யா ஸர்ப்பத்தை விலக்கப் போமோ – அவ்வாறே கர்ம நிரபேக்ஷமான ஜ்ஞானமே நிவர்த்தகம்‌ என்பது மஹா பூர்வ பஷம்‌ ஸாமர்ர்த்யமாவது:–மித்யா பூதமானது ஜ்ஞாநத்தாலேயே நிவ்ருத்தி யடையும்‌, கர்மத்தாலன்று

1-கண்டாபரணம் போல்‌ நித்ய ப்ராப்தமானது ப்ரஹ்மம்‌, இதை மறந்திட்டானிவன்‌.
2-ப்ரபஞ்சமானது பொய்‌. இது தான்‌ நிவர்த்திக்கப் பட வேண்டியது.
3-ஸ்ருதி ஸகலமாவது–தத்த்வமஸி இத்யாதி. இந்த ஸகல ஜக்யமான ஸாக்ஷாத்‌ காரத்தாலே ப்ராந்தி ஸித்தமான ஸகலமும்‌ நிவ்ருத்தி யடைகிறது-இவ்வாறு. 1-உபாயம்‌ ஐக்ய ஜ்ஞாநமே-2-உபேயமானது நித்ய ப்ராப்தமான நிர் விஸேஷ ப்ரஹ்மம்‌-3-நிவர்த்த்யமானது மித்யா பூதமான ப்ரபஞ்சம்‌ என்று தேறிய பிறகு, கர்மத்துக்கு என்ன உபயோகம்‌
. பேத வாஸநாதிகளை உண்டு பண்ணி விரோதியுமாகிறது கர்மம்‌ என்ற ஆஷேபத்துக்கு ப்ரதி வசநமாக அமைந்தது மஹா ஸித்தாந்தம்‌ என்பது தாத்பர்யம்‌.-முன்‌ குறிப்பிட்ட ஸப்தவிதாநுப பத்திகளில்‌ ப்ரமாணாநுபபத்தி யென்பது மூன்று விதமாகையால்‌, ஆச்ரயாநுபபத்தியும்‌, அவித்யாஸ்ரயம்‌ ப்ரஹ்மமா? அல்லது ஜீவனா என்று விகல்பத்துக் குள்ளாகின்றமையால்‌ பத்து விதங்களான அநுபபத்திகள்‌ தேறுகின்றன. 1-ஆச்ரயாநுபபத்தி -2-திரோதாநாநுபபத்தி-3-ஸ்வரூபாநுபபத்தி-4-அநிர்வநதீயத்வாநுபபத்தி-5-ப்ரமாணுநுபபத்தி-6. நிவர்த்தகாநுபபத்தி, 7-நிவ்ருத்த் யநுபபத்தி-

1-ஆஸ்ரயாநுபபத்தி
பர ப்ரஹ்மமே பாவ ரூப அஜ்ஞாந மென்னும்‌ அவித்யைக்கு ஆஸ்ரயமென்பது ப்ரஹம அஜ்ஞாந வாதம்‌, அவித்யை யானது மித்யை யாகையாலே ப்ரஹ்ம ஜ்ஞாநத்தாலே நிவ்ருத்தி யடைகிறது என்றும்‌ சொல்லுகிறார்கள்‌-நிவர்த்தகமான ப்ரஹ்‌ம ஜ்ஞாநத்தில்‌ நிவர்த்தயமான அஜ்ஞாநம்‌ இருக்க மாட்டாது-ஸூர்யனிடத்தில்‌ தமஸ்ஸு இருக்குமோ? ப்ரஹ்ம ஸ்வரூபமான ஐஞாநம் நிவர்த்தகமன்று: ப்ரஹ்ம விஷயகமான ப்ரமாண ஜ்ஞாநமே நிவர்ததக மென்னில்‌;–ஸ்வரூப ஜ்ஞாநத்துக்கும்‌ ப்ரமாண ஜ்ஞாநத்துக்கும்‌ வாசி யில்லையே. இரண்டும்‌ ஸ்வயம் ப்ரகாசமாய்‌ ப்ரஹ்ம விஷயங்களன்றோ? மேலும்‌ மற்றொரு ஜ்ஞாநத்திற்கு நிர்விசேஷமான ப்ரஹ்மம்‌ விஷயமாகாதே, விஷயமாகில்‌ கட படாதிகளைப் போல்‌ ஜடமாகுமே –இவ்வாறு ஸ்வ ஸித்தாந்தத்துக்கு விருத்தமாய்‌ ஜ்ஞாந விஷயம்‌ ப்ரஹ்மம்‌. என்னலாகாதே-இந்த தோஷத்தைப்‌ பரிஹரிப்பதற்காக, ஜீவன்‌ அஜ்ஞாநத்துக்கு ஆஸ்ரயம்‌ எனில்‌, ஜீவன்‌ என்பது அஜ்ஞாநத்தாலே கல்பிதமாகையால்‌, கல்பநத்துக்கு முன்புள்ள அவித்யை யானது கல்பிக்கப்படப் போகும்‌ ஜீவனை ஆஸ்ரயித்திருக்க மாட்டாதே. ஆகையால்‌ ஆஸ்ரயா நுபபத்தி த்ருடீ க்ருதமாயிற்று –

2-திரோதாநாநுபபத்தி
திரோதாந மாவது மறைவு. ப்ரஹ்மமானது அவித்யையால்‌ மறைக்கப் படுகின்றது என்றால்‌, ப்ரஹ்மமானது அவித்யை யினால்‌ நாசம்‌ பெறுகிறதென்று பொருளாகும்‌. ப்ரகாச திரோதாகமாவது ப்ரகாசம்‌ உண்டாகாமை, அதாவது ப்ரகாச ப்ராகபாவம்‌, அல்லது இருக்கிற ப்ரகாசத்துக்கு நாசம்‌. இவ் விரண்டைத்‌ தவிர்த்து வேறு திரோதாநம்‌ என்பது கிடையாது, ப்ரஹ்மமானது நித்யமாகையால்‌ ப்ரகாசாநுத்பத்தி சொல்ல விரகில்லை. ஆகவே ப்ரகாச நாசமே திரோதாக மென்றதாகிறது, ப்ரகாச ஸ்வரூபம்‌ ப்ரஹ்மம்‌. அதற்குத்‌ திரோதாநம்‌ நாசம்‌ என்றதாகும்‌–ஸித்தாந்தத்தில்‌ இவ்வாறு ஆச்ரயாநுபபத்திக்கும்‌ திரோதாகாநுபபத்திக்கும்‌ அவகாசமில்லை. ப்ரஹ்மாஜ்ஞானத்தை இசையாமையால்‌ ததநுபந்திகளான தூஷணங்‌களுக்கு அவகாசமில்லை. அவதார தசையில்‌ எம்பெருமானுக்கு ஸோக மோஹாதிகளும்‌ ஆபாத ப்ரதீதியில்‌ தோன்‌றும்‌ ஸுக து:க்காதிகளும்‌ வாஸ்தவிகங்களன்‌ று, அபிநய மாத்ரமே. இதனை அந்தரதிகரண ஸ்ருத ப்ரகாசிகையிலே ஸுஸ்பஷ்டமாக அருளிச் செய்தார்‌–இதனால்‌ ஸோக மோஹாதிகள்‌ ஹேயங்களே என்பதும்‌, அவை ஈஸ்வரனுக்கு அபிநய மாத்ரமே யென்பதும்‌ தெளிவாகிறதன்றோ – ஆகவே ப்ரஹ்மாஜ்ஞாந வாதம்‌ விசிஷ்டாத்‌வைதி ஸம்மதமன்று-ஜீவாஸ்ரிதை யானது அவித்யை. அவித்யையினால்‌ ஜீவன்‌ கல்பித னன்றாகையாலே இரண்டாவது அநுபபத்திக்கு மிடமில்லை-ஆனால்‌ ஜீவன்‌ ஸ்வயம் ப்ரகாசமாயிருக்க அவித்யை யினால்‌ திரோதாநம்‌ கொண்‌டால்‌ ஸ்வரூப நாச ப்ரஸங்கமானது அத்வைத மதத்திற் போலே ஏற்படுமே யென்னில்‌ :-ஜீவனுக்கு தர்ம பூத ஜ்ஞானமென்று தர்மமுண்டு. தீபத்துக்கு ப்ரகாசம் போலே அவித்யை யினால்‌ தர்ம பூத ஜ்ஞாநத்துககு ஸங்கோசமே யன்றி ஜீவனுக்கு ஸங்கோச விகாஸங்கள்‌ கிடையா. பக்தி ப்ரபத்திகளாலே ஜீவனுக்கு அவித்யா நாசம்‌ ஏற்படுகிறது. ஆகவே மோக்ஷத்திலே ஜ்ஞாந விகாஸம்‌ பெறுகிறான்‌ ஜீவன்‌. ஆதலால்‌ ஸ்வரூப நாச ப்ரஸக்தி கிடையாது, தர்ம பூத ஜ்ஞாநத்துக்கு ஸங்கோசமாவது :–கதிபய பதார்த்தங்களை விஷயீகாரம்‌ செய்கை, அதாவது சில வஸ்துக்களோடு ஸம்யோகம்‌ விகாஸமாவது : –அநேக பதார்த்த ஸம்யோகம்‌-இந்த ஸம்யோகத்துக்கு உத்பத்தியும்‌ விநாசமும்‌ உண்டாகையால்‌ ப்ரகாசாநுத்பத்தி ப்ரகாச நிவ்ருத்தி என்று இரண்டு படியான திரோதாநமும்‌ கூடும் –

3-ஸ்வரூபாநுபபத்தி
அவித்யா ஸ்வரூபமானது பாரமார்த்திக மன்று. ப்ரஹ்ம வ்யதிரிக்தமான அனைத்தும்‌ அபாரமார்த்திகம்‌ என்பதன்றோ அத்வைதம்‌. அபாரமார்த்திகமாகில்‌ த்ரஷ்டா அல்லது த்ருஸ்யம்‌ இவ் விரண்டில்‌ ஒன்றாக வேணும்‌, இவை யிரண்டும்‌ அவித்யா கல்பிதங்‌களாகையால்‌ கல்பகமும்‌ கல்பிதமும்‌ ஒன்றாக மாட்டாதே. மற்றொரு அவித்யையை இசைய வேண்டும்‌. அதுவும்‌ இரண்டிலும்‌ சோந்ததாகையால்‌ அதற்கு கல்பகம்‌ மற்றொன்று இசைய வேண்டும்‌ என்று இவ்வாறு அநவஸ்த்தா தோஷம்‌ ப்ரஸங்கிக்கும்‌. ப்ரஹ்ம ஸ்வரூபமான து அவித்யை, வேறன்று என்றால்‌ ப்ரஹ்மம்‌ நித்யம்‌, ததாத்மிகையான அவித்யை நித்யை நித்ய ஸம்ஸாரமே ஸித்தித்தது. முக்திக்கு முக்தி ஸித்தாந்திதமாயிற்று.

4-அநிர்வநதீயத்வாநுபபத்தி
ஸத்து என்றும்‌ அஸத்து என்றும்‌ நிர்வசநம் செய்ய முடியாதாகையால்‌ அவித்யை யானது ஸதஸதநிர்வசநீயை என்பது அத்வைத மதம்‌. ஸத்தல்லாதது அஸத்தாகும்‌. அஸத்தல்லாதது ஸத்தாகும்‌. ஸத்துமன்று அஸத்தமன்று என்பது விருத்தமான வசநம்‌- பாவமுமன்று அபாவமுமன்று விதி முரண்பட்ட வார்த்தை. அவ்வாறே ஸதஸதநிர்வநீயம்‌ என்பதும்‌.

5-ப்ரமாணுநுபபத்தி
அவித்யை யென்பது பாவ ரூபமான அஜ்ஞாநமே. ப்ரபஞ்சத்திற்கு உபாதாந காரண மிதுவே. இதைப்‌ பரிணாமி உபாதாநமென்பர்‌, இதற்கு ப்ரமாணம்‌ (1) ப்ரத்யக்ஷம்‌ (2) அநுமாநம்‌ (3) ஸ்ருதி ஆகியவை-ப்ரத்யக்ஷமாவது :–அஹம்‌ அஜ்ஞ: ” என்று ஸ்வாநுபவம்‌. அஜ்ஞ;”! என்பது ஜ்ஞாந ஸாமாநயாபாவத்தை விஷயீ கரிப்பதன்று, **அஜ்ஞ:” என்ற அநுபவமிருக்கும்‌ போது ஜ்ஞாந ஸாமாந்யாபாவ மென்பது கூடாதே. மேலும்‌ அபாவத்தைப் பற்றியதாகில்‌, அபாவாநுபவத்துக்கு ஆஸ்ரயா நுபவமும்‌ ப்ரதியோகி ஜ்ஞாநமும்‌ வேண்டுமே, இவ்வாறு ஸ்வாநுபவம்‌, ஆச்ரயாநுபவம்‌, ப்ரதியோகி ஜ்ஞாநம்‌ ஆகிய மூன்‌று ஜ்ஞாநம்‌ இருக்கும் போது, அஹம்‌ அஜ்ஞ:. அதாவது ஜ்ஞாந ஸாமான யபாவமுடையவன்‌. ஜ்ஞாந மொன்று மில்லை எனக்கு என்று ப்ரதீதி வ்யவஹாரம்‌ கூடுமோ ? ஆகையால்‌ அஜ்ஞாந மென்பது பாவ ரூபம்‌ இதற்கு ஆச்ரய ப்ரதியோகிகளுடைய ஜ்ஞாநம்‌ அபேஷிதமன்று. அபாவமாகிலன்றோ அவற்றின்‌ அபேக்ஷை. ஆதலால்‌ அஹம்‌ அஜ்ஞ. ” என்கிற ப்ரத்யக்ஷமே பாவ ரூபமான அஜ்ஞாநத்துக்கு ப்ரமாணம்‌ என்று பூர்வ பக்ஷம்‌,

ஸித்தாந்தமாவது -அஜ்ஞாநமானது பாவரூபமென்றாலும் அபாவ ரூபமென்கிற
பக்ஷத்தில்‌ சொன்ன தூஷணங்கள்‌ இதற்கும்‌ உண்டு. “அஹம்‌ அஜ்ஞ: *” என்று ப்ரதீதி யேற்படும்போது, அஹம்‌ என்கிற அஜ்ஞாநாஸ்ரயமான ப்ரத்யகாத்மாவும்‌ ப்ரதீதி விஷயமா௧ வேணுமே. அஜ்ஞாநத்துக்கு நிவர்ததகமானது அஹமர்‌த்தமான நிஷ் க்ருஷ்ட ஸ்வரூப ஜ்ஞானம்‌. நிவர்த்தகமிருக்கும் போது நிவர்த்ததீயமான அஜ்ஞாநம்‌ அநுபவிக்க மாட்டாதே-அஹமர்த்த ஜ்ஞாந மில்லை யென்றால்‌, ஆஸ்ரய ப்ரதீதி யில்லாமல்‌ அஜ்ஞாநம்‌ எப்படி அநுபவிக்‌கப்படும்‌. ஆக பாவரூபாஜ்ஞாநம்‌ ப்ரத்யஷமன்று. அஹமஜ்ஞ। என்பது ஜ்ஞாந ப்ராக பாவ விஷயமேயாகும் -இவ்வாறாகில்‌ பூர்வபஷி யுடைய ஆஷேபத்துக்கு ஸமாதாநம்‌ என்ன வெனில்‌ :–‘*அஹம்‌ அஜ்ஞ: ” என்று அஜ்ஞானமானது அஹமர்த்தமான, ஆத்ம ஸ்வரூபத்தாலே விஷயீ காரம்‌ பெறுவதாகக்‌ கொள்ள முடியாது. ஆத்ம ஸ்வரூபமானது ஸ்வ மாத்ர ப்ரகாசகம்‌: ஸ்வ ப்ரகாசம்‌ ஸ்வபிந்ந விஷயகமன்று ஸுஷுப்தி தசையில்‌ தர்ம பூத ஜ்ஞாநமானது நிர்விஷயக மாகையாலே அதனாலே அஜ்ஞாநம்‌ தோன்றுவதாகவும்‌ சொல்ல முடியாது, ஜாக்ரத் தசையில் தர்ம பூத ஜ்ஞாநத்தாலே அஹம்‌ அஜ்ஞ: என்று தோன்றுவதாகக்‌ கொள்ள வேண்டும்‌. ஸுஷுப்தி காலத்திலே ஜ்ஞாநாபாவ விஸிஷ்டனாயிருந்தேன்‌ என்று தாத்பர்யம்‌. ததாநீம்‌ அஹம்‌ அஜ்ஞ: என்றபடி. இதில்‌ காலமும்‌ அஜ்ஞாநமும்‌ அநுமானிக்கப் படுகிறது. அஹமர்த்தமானது ஸ்வயம்‌ ப்ரகாசமே யாகிலும்‌ அஜ்ஞாநாதி விஸிஷ்ட வேஷத்தாலே தர்ம பூத ஜ்ஞாந கோசரமாகும்‌. ”ந ஜ்ஞாநம்‌ ” என்கிற வியுத்பத்தி யாலே ஜ்ஞாநா பாவத்தையே அஜ்ஞ ஸப்தம்‌ போதிக்கும்‌. பாவ ரூபாஜ்ஞாநமானது அஜ்ஞாந ஸப்தார்த்தமாக மாட்டாது.

ஸித்தாந்தத்தில்‌ அபாவமென்பது பாவ ரூபமாகையாலே அஜ்ஞாந மென்பது பாவ ரூபாஜ்ஞாநமே யன்றோ. இதை நிரஸிப்பது ஏன்‌ என்னில்‌ :–ஸ்வயம் ப்ரகாசமான தர்ம பூத ஜ்ஞாநத்திற்கு ஸங்கோசமே ஜ்ஞாந ப்ராகபாவமென்பது. ஸ்வயம் ப்ரகாச ஜ்ஞாந பிந்ந மான பாவ ரூபாஜ்ஞாநம்‌ பிறர் கொள்வது, ஆகவே இவ்விரண்டும்‌ ஒன்றாக மாட்டாது – ஸ்ருதி ஸ்ம்ருதிகளாலே தர்ம பூத ஜஞாந நித்யத்வமும்‌ அதற்கு ஸங்கோச விகாஸங்களும்‌ ஸித்தம்‌. பாவ ரூபமான அஜ்ஞானமென்பது கல்பிக்கப்பட்டதே யன்றி ப்ரமாண ஸித்தமன்று –

பாவருபாஜ்ஞா நாநுமாநாநுபபத்தி அத்வைதிகள்‌ அநுமாநத்தாலும்‌ பாவரூபாஜ்ஞாநம்‌ ஸித்திக்கும்‌ என்கிறார்கள் -தத்த்வமஸி முதலான ப்ரமாண ஜ்ஞாந மானது. தான்‌ உண்டாவதற்கு முன்னே யுள்ளதொரு வஸ்த்வந்தரமுடையது. அந்த வஸ்த்வந்தரமானது, (1) தன்னுடைய ப்ராகபாவமன்‌று- வேறுபட்டது. (2) தனக்கு விஷயமான ப்ரஹ்மத்தை மறைக்குமது (3) தன்னாலே நாசம்‌ பெறக் கூடியது (4) ஸ்வதேசகதம்‌. அதாவது, தானும்‌ வஸ்த்வந்தரமும்‌ ஒரே ப்ரஹ்மத்திலே யுள்ளது. இது அநுமாநத்தாலே ஸாதிக்கப்படும்‌ விஷயம்‌, இனி ஹேது:-அப்ரகாசிதமான ஓர்‌ அபூர்வமான அர்த்தத்தைப்‌ பிரகாசிப்பிக்கிறது–ப்ரமாண ஜ்ஞாநம் இதே ஹேதுவால்‌ இந்த ஸாத்யம்‌ ஸித்திக்கிறது. இந்த ஹேது ஸாத்யங்களுக்கு வயாப்தி யுண்டு.: உதாஹரணம்‌ :–அந்தகாரத்தில்‌ முதன்‌ முதலாக உண்டாகும்‌ ‘தீப ப்ரபை த்ருஷ்‌டாந்தம்‌. இது தமஸ்ஸைப்‌ போக்குகின்றது. தமஸ்ஸானது ஸ்வ ப்ராகபாவமன்று. வ்யதிரிக்தமே. ப்ரபைக்கு விஷயமானதை மறைத்துக் கொண்டிருக்கிறது. தன்னாலே தமஸ்ஸு நிவர்த்திக்கப் படுகிறது. ப்ரபையும்‌ தமஸ்ஸும்‌ ஒரே யிடத்திலிருக்கின்‌றன. ஆகையால்‌ பாவ ரூபமான – அஜ்ஞாந மானது அநுமாநத்தாலும்‌ ஸித்தம்‌. இது அத்வைத வாதம்‌:

இதில்‌ ஏற்படும்‌ அநுபபத்தியாவது.–இந்த அநுமாநமும்‌ ப்ரமாண ஜஞாநமே யன்றோ. இதனால்‌ ஸித்திப்பது பாவ ரூபா ஜ்ஞாநமாகில்‌, ஸ்வ விஷயமான பாவ ரூபா ஜ்ஞாநத்தை மறைப்பதாய்‌ தன்னாலே நிவர்த்‌திக்கப்படுமதாய்‌ ஸ்வ தேசகதமாய்‌- மற்றொரு பாவரூபா ஜ்ஞாநம்‌ ஸித்திக்கிறதாகிறது. ப்ரஹ்மத்தில்‌ உள்ள பாவரூபா ஜ்ஞாநத்தை மறைத்து விடுகிறது மற்றொரு பாவரூபா ஜ்ஞாநம்‌ என்றதாகிற்து. ப்ரஹ்மமானது தன்னுடைய அஜ்ஞாநத்தை ஸாஷாத்கரிக்க முடிய வில்லை- ஏனெனில்‌ மற்றொன்றால்‌ மறைக்கப்பட்டு விட்டதன்‌றோ அஜ்ஞாநம்‌. ஆதலால்‌ பாவ ரூபாஜ்ஞாந கல்பனம்‌ பயனற்றதாயிற்று, அபாரமார்த்திகமானது ஸாஷாத்கரிக்கப்‌ படாமல்‌ கார்யகரமாகாது. ப்ரஹ்ம ஸ்வரூப திரோதநத்திற்காக வன்றோ அஜ்ஞாந கல்பகம்‌. அது ஸித்திக்காது. ஜ்ஞாத மன்றிக்கே ஸ்வரூப ஸத்தையாலே திரோதாந ரூப கார்யத்தைச்‌ செய்யலாகாதோ என்னில்‌—கூடாது. ஸத்தயா கார்யகரங்கள்‌ திமிராதி தோஷங்கள்‌ ஸத்யங்களாய்‌ ஜ்ஞாந நிவர்த்யங்க ளன்றிக்கே யிருப்பது போல்‌, பாவரூபா ஜ்ஞாநமும்‌ ஸத்யமாய்‌ ஜ்ஞாந நிவர்த்யமாக மாட்டாது-இப்போது ஹேது வ்யபிசரிதமாகிறது: ஜ்ஞாந நிவர்த்யத்வ ரூப ஸாத்யாபாவவத்‌தான பாவரூபா ஜ்ஞானத்திற்கு அப்ரகாசிதார்த்த ப்ரகாஸ சத்வமாகிற ஹேது இருப்பதால்‌. ஸாத்யாபாவவதி ஹேதோ: ஸத்பாவாத்‌ வ்யபிசார த்ருஷ்டாந்தமான தீப ப்ரபையில்‌ ஹேது -இல்லாமையால்‌ வ்யாப்தி பங்க மேற்படுகிறது. அப்ரகாசிதார்த்த ப்ரகாசகம்‌ ஜ்ஞாநமே யன்றி தீப ப்ரயை யன்றே, அந்தகனுக்கு தீப ப்ரபையால்‌ ப்ரகாசமுண்டோ, மேலும்‌ ப்ரத்யஷ அநுமாநங்களும்‌ பல வுண்டு –உதாஹ்ருதமான -அத்வைத் யநுமாந ரூபமான -ப்ரமாண ஜ்ஞாநமானது ஸ்வ ப்ராகபாவ பூர்கமே யன்றோ-அதிரிக்த பாவ ரூபா ஜ்ஞாந பூர்வகமன்றே. உக்தாநுமாநத்தில்‌ ஸ்வ ஸப்தங்கள்‌ ப்ராக் ஸப்தம்‌, அந்தர ஸப்தம்‌ இவை நிஷ் ப்ரயோ ஜநங்களுமாகின்றன –

ஸ்ருதி ருப ப்ரமாணாநுபபத்தி – மித்யா பூதமான அஜ்ஞாநத்தாலே ஸ்வரூப அந்யதா பாவம்‌ , பெற்றது ப்ரஹ்மம்‌ என்று பிறர் கொண்ட பொருள் –அந்ருதமென்பது பலாபிஸந்தியோடு கூடிய காம்ய கர்மம்‌. அந்ருதமான பலா பிஸந்தி ஸஹித கர்மத்தாலே ஜீவன்‌ உருமாறி விடுகிறான்‌ என்று தாத்பர்யமிதற்கு-இப் பொருளே ஸமீசீநமானது- ஸதஸத்‌ விலஷணமான ப்ரஹ்மாஜ்‌ஞாநமானது தமஸ் ஸப்தத்தால்‌ சொல்லப்படுவதாக அத்வைத மதம்‌-இதில்‌ ஸத்‌ என்று சித் வ்யஷ்டியையும்‌ அஸத்‌ என்று அசித் வ்யஷ்டியையும்‌ சொல்லி, ப்ராக்ருத ப்ரலயத்திலே தமஸ்‌ ஸப்த வாச்யையான ஸூஷ்ம ப்ரக்ருதியீலே அவற்‌றுக்கு அவிபாகம்‌ சொல்லுகிறது– ப்ரக்ருதியை மாயா ஸப்தத்தாலே மித்யை யென்று சொல்லி யுள்ளதென்‌று அத்வைத மதம்‌-மாயா ஸப்தமானது ஆஸ்சர்ய கரம்‌ என்கிற பொருளுடையது. மித்த்யாபரமன்‌று. *தேவ மாயேவ நிர்மிதா ‘! இத்யாதிகளில்‌ ஸத்ய வஸ்துவையே மாயா ஸப்தம்‌ சொல்லக்‌ காண்கிறோம்‌ என்று ஸித்தாந்தம்‌-தத்த்வமஸி என்று ப்ரஹ்மத்தோடு ஜீவனுக்கு ஐக்யம்‌ சொல்லுவதாக சங்கை. ஸர்வஜ்ஞத்வாதி குண விசிஷ்டனான பரமாத்மாவும்‌ அல்பஜ்ஞத்வ அல்ப ஸக்தித்வாதி விஸிஷ்டனான ஜீவனும்‌ ஐக்யம்‌ பெற முடியாது. *தத்‌!’ ஸப்தம் போலே *த்வம்‌” ஸப்தமும்‌ பரமாத்மாவையே போதிக்கிறது. ஜீவன்‌ அவனுக்குச்‌ சரீரம்‌. ஸாரீரவாசி ஸ தமானது ஸரீரியைச்‌ சொல்லுமாகையால்‌ ஜீவ ஸரீரக பரமாத்மா *த்வம்‌” ஸப்தார்த்தமாகிறான்‌. இவ்வாறே, ப்ரஹ்ம ஸப்தத்தோடு ஸமாநாதிகரணமாய்‌ ஜீவ வாசி ஸப்தத்தையோ அசித் வாசி சப்தத்தையோ ப்ரயோகிக்கு மிடமெங்கும்‌ கொள்ள வேணும்‌-ஆக ப்ரஹ்ம ஜ்ஞான பக்ஷத்திலே ப்ரத்யக்ஷா நுபபத்தி அநுமாநா நுபபத்தி ஸ்ருத்யநுப பத்தி அர்ததா பத்த்யநுப பத்திகளைக் கொண்டு ப்ரமாணாநுபபத்தி ஸ்த்தாபிதமாயிற்று.

6-நிவர்த்தகாநுபபத்தியும்‌-7-நிவ்ருத்த்யநுபபத்தியும்‌ –ப்ரஹ்மாத்வைத விஜ்ஞாநமே அவித்யா நிவர்த்தகம்‌ என்று பூர்வ பக்ஷம்‌. அது ஸரி யன்று-ப்ரபஞ்சமானது மித்யையாகி லன்றோ அது ஜ்ஞாநத்தாலே நிவ்ருத்திக்கிறதாகக்‌ கொள்ள வேண்டும்‌-புண்யாபுண்ய கர்ம பலமான பந்தத்தை மித்யை யென்னலாகாது. ஜக்ய ஜ்ஞாநத்தாலே பந்த விவ்ருத்தி ஏற்படுமே யன்றி நிவ்ருத்தி யேற்படாது-பல பல ஸ்ருதி ஸ்ம்ருதிகள்‌ பேத ஜஞாநத்‌தாலேயே மோக்ஷ மென்கின்றன –
மேலும்‌ நிவர்த்தகமான ஐக்ய ஜ்ஞாநமும்‌ மித்யா பூதமாகையாலே அவித்யா நிவர்த்த கமான இதற்கு மற்றொரு நிவர்த்தக மபேஷிதிதம்‌. அவ்வாறே மற்றொன்றுக்கு மென்று இவ்வாறாக அநவஸ்த்தா தோஷமுமேற்படும்‌- ஸகுணோபாஸநத்‌ தாலேயே முக்தி யென்கிறது–புண்ய பாபாஸ்லேஷ விநாச ரூப மோக்ஷத்தை யிங்கேயே பெறுகிறான்‌ என்று ஸ்ருதியின்‌ பொருள்‌--அவித்யா நிவருத்தி யானது ப்ரஹ்ம ஸ்வரூபமாகில்‌ நிவருத்தி யானது பூர்வ ஸித்த மாகையாலே ஸ்ரவணாதிகள்‌ வேண்டா-ப்ரபஞ்ச ப்ரதிபாஸத்திற்கும்‌ வழி யில்லை. அது ப்ரஹ்ம பிந்நமாகில்‌ ஸத்யமானதா அல்லது மித்யா பூதமா *? ஸத்யமாகில்‌ த்வைதமே ஸித்திக்கும்‌. அஸத்யமாகில்‌ நிவ்ருத்திக்கு நிவர்த்தகம்‌ தேட வேண்டும்‌. அவித்யா நிவ்ருத்தி நிவ்ருத்தமாகில்‌ அவித்யையே நிலைத்து நிற்கும்‌-ஸ்ரவணாதிகளால்‌ ப்ரபஞ்ச நிவ்ருத்தி யேற்பட்டு ஜ்ஞாதாவும்‌ நாசம் பெற வேண்டியதாகையால்‌ ஸ்வ நாசத்திற்காக வேதாந்த ஸ்ரவணம்‌ பண்ண மாட்டான்‌ ஜ்ஞாதா.

இவ்வாறான ஸப்த விதாநுபபத்திகளாலே ப்ரஹ்மாஜ்ஞாந வாதம்‌ நிரஸ்தமாயிற்று. பலாபிஸந்தி ரஹித கர்மாங்கக-பகதியே மோஷ உபாயம்‌. ப்ரபஞ்சம்‌ ஸத்யம்‌, ப்ரஸந்நனான ஸ்ரீயபதியினாலேயே சேதநன்‌ மோக்ஷம்‌ பெறுகிறான்‌ என்பது ஸாரம்–ஸ்ரீபாஷ்யகாரர்‌ ஜிஜ்ஞாஸாதிகரண ஸ்ரீ பாஷ்யத்திலே க்யாதி வாதங்களில்‌ சிலவற்றை நிரூபித்தருளினா்‌. அவற்றை ஒன்பது விதமாக தேசிகன்‌ ந்யாய பரிசுத்தியிலும்‌, தத்வ முக்தா கலாபத்திலும்‌ நிரூபித்‌து, அவற்றை ஸங்க்ரஹித்து அதிகரண ஸாராவளியில்‌ ஒரு ஸ்லோகத்தாலே வெளி யிட்டருளி யிருக்கிறார் –

சுக்தி (சிப்பியை ரஜதம்‌ என்றும்‌, ரஜ்ஜுவை ஸர்ப்பம்‌ என்றும்‌ இவ்வாறாக ப்ரமமானது உலகில்‌ ப்ரஸித்தமானது. சுக்தியில்‌ தோன்றும்‌ ரஜத வஸ்து எது? உண்மையான ரஜதமா ? மித்யா பூதமா? இது மற்றொன்றில்‌ தோன்றக்‌ காரணமென்ன ? என்பதில்‌ மத பேதங்கள்‌ காண்கின்றன -விஸிஷ்டாத்வைத ஸித்தாந்தத்திலே ஜ்ஞாந மென்பதனைத்தும்‌ யதார்த்தமே யென்று கொண்டிருக்கிறார்கள்‌. இதற்கு யதார்த்த க்யாதி வாதம்‌ என்று பெயர்‌. சுக்தியில்‌ ரஜதம்‌ உண்டு, எப்படி யெனில்‌, ஒவ்வொரு வஸ்துவிலும்‌ மற்றொரு வஸ்துவின்‌ சேர்க்கை யுண்டு ஸ்ருதிகளிலே த்ரிவ்ருத் கரணமென்றும்‌ பஞ்சீகரண மென்றும்‌, ஸ்ம்ருதிகளில்‌ ஸப்தீகரண மென்றும்‌ இவ்வாறு ஸ்பஷ்டமா யுள்ளது, ஒரு வஸ்துவில்‌ மற்றொரு வஸ்துவின்‌ சேர்க்‌கையே த்ரிவ்ருத் கரணம்‌ முதலியது.-இவ்வாறாகில்‌ ப்ருதிவீ என்றும்‌ ஜலம்‌ என்றும்‌ தனித் தனியே பிரித்து வ்யவஹாரம்‌ எப்படி யென்றால்‌, அதிக பாகத்தை யிட்டு அந்த அந்த வ்யவஹாரம்‌ ஏற்படுகிறது. ப்ருதிவீ பாகம்‌ அதிகமாய்‌ ஜலம்‌ தேஜஸ்‌ வாயு ஆகாசம்‌ இவை அல்பங்களாகில்‌ ப்ருதிவீ என்று வ்யவஹாரம்‌. இந்த ஐந்து பூதங்களில்‌ ஒரு பூதத்தில்‌ தன்னுடைய அம்சம்‌ பாதியும் மற்ற புண்ணனிதுடைய நான்கில்‌ ஒரு பாகமும்‌ உள்ளது. இது பஞ்சீகரணம்‌, சுக்தியில்‌ ரஜதாம்சம்‌ குறைவு, சுக்தி பாகம்‌ அதிகம்‌. ஆகிலும்‌ தோஷ வசத்தாலே அதிகாம்சம்‌ தோன்றாமல்‌ குறைந்த பாகமே தோன்றுகிறது. சுக்தியில்‌ ரஜதாம்சமே தோன்றுகிறது. தோஷம்‌ விலகினால்‌ சுக்தி பாகம்‌ அதிகம்‌ என்று தெளிவு ஏற்படுகிறது.-ஆகவே சுக்தியைப் பார்த்து **இதம் ரஜகம்‌ ‘” என்று ஏற்படும்‌ ஜ்ஞாநம்‌ ஸத்யமே. ரஜகம் தானே அது. ** நேதம்‌ ரஜதம்‌”’ என்ற ஜ்ஞாநமும்‌ ஸத்யமே. சுக்தித்வம்‌ அதிகம்‌ என்று இதன்‌ பொருள்‌, ரஜத பேத மென்பது சுக்தித்வமே. சுக்த்யம்ஸம்‌ அதிகமுடையது என்று தெளிவு ஏற்பட்டால்‌ முன்‌ ஜ்ஞாநத்தாலே ஏற்பட்டுள்ள ப்ரவ்ருத்தி அதாவது வ்யவஹாரம்‌ பாதிக்கப்படுகிறது, குறைந்த அம்சம்‌ கார்யகரமன்று. அதிகாம்ஸமே வ்யவஹாரத்துக்கு உபயுக்தமானது. ஜ்ஞாநத்துக்கு பாதமில்லை. அதனால்‌ ஏற்படும்‌ ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகள்‌ பாதிக்கப்படுகினறன. பாதித வ்யவஹாரா நுகுணம்‌ ஞாநம்‌ ப்ரமமென்றும்‌ அபாதித வ்யவஹாராநுகுணம்‌ ஜ்ஞாநம்‌ ப்ரமை என்றும்‌ உலகில்‌ வழங்கப்‌ படுகிறது. ஜ்ஞாநம்‌ ஸத்யமே-வ்யவஹார பாதமே--மேலும்‌ யாகத்தில்‌ ஸோமலதை கிடைக்கா விடில்‌ பூதீகமென்றும்‌ வஸ்துவைக்‌ கொண்டு ரஸமெடுத்து ஹோமம்‌ சொல்லப் படுகிறது. ஸோமததுக்கு ப்ரதிநிதி பூதீகம்‌: ஏன்‌? ஸோமத்தின்‌ அவயவம்‌ கொஞ்சம்‌ பூதீகத்திலுள்ளது-ஸத்ருஸே ஸத்ருஸாம்ஸம்‌ அடங்கி யிருப்பதால்‌ இவ்வாறு விகல்பம்‌ கொண்டனர்‌ வைதிகர்‌. இவ்வாறு த்ரிவிருத்‌ கரணம்‌ சொல்லும்‌ ப்ரமாணங்களும்‌ ப்ரதிநிதி ந்யாயமும்‌ மூலாதார ப்ரமாணங்களாகும்‌. இதனை ஸ்ரீமந் நாதமுனிகள்‌ தாம்‌ அருளிய ந்யாய தத்வம்‌ எனகிற க்ரந்தத்தில ஸ விஸ்தர மாக ஸ்த்தாபநம்‌ செய்தருளி யிருக்கிறார்‌,-இப்படியாகில்‌ தேஹாத்ம ப்ரம ஸ்தலத்தில்‌ த்ரிவ்ருத் கரணமோ ப்ரதிநிதி ந்யாயமோ கொள்ள முடியாதே. அங்கு நிர்வாஹமெது எனில்‌ :–ஆத்மாவுக்கும்‌ தேஹத்துக்கு முள்ள பேதத்தை யறியாமை. இத்தை பேதாக்ரஹமென்பர்‌. ஆகவே சில ப்ரம ஸ்த்தலத்தில்‌ பேதாக்ரஹமும்‌ இசைய வேண்டும்‌. இதற்கு அந்யாதியென்று பெயர்‌, பேதத்தை அறியாமை யென்று இதன்‌ பொருள; பெரும்பாலும் யதார்த்த கயாதியே. அது நிர்வஹிக்க முடியாத விடததிலே பேதாக்ரஹம் முதலியது முண்டு, அந்யதா க்யாதி யென்பது தார்ககிக மதம்‌, அந்யாதி யென்பது மீமாம்ஸகமதம்‌. யதார்த்த க்யாதியானது விஸிஷ்டாத்வைத வேதாந்த நிஷ்டர்‌ மதம்‌.-உலகில்‌ சுக்தியை ரஜதமாக வெண்ணினேன என்று பாமரர்களுக்கும்‌ உட்பட வ்யவஹாரம்‌ ப்ரஸித்தமானது. இதில்‌ ஒன்றை மற்றொன்றாக எண்ணியதாகவே ப்ரதீதி ஸ்வாரஸ்யமுள்ளது. கீதாசார்யன்‌ :–ராஜஸ தாமஸ புத்திகளை விசேஷித்து நிரூபிக்கு மிடத்தில்‌ அந்யதாக்யாதி பக்ஷமே ஸ்வ ரஸமாகத்‌ தோன்றுகிறது. *: அயதாவத்‌ ப்ரஜாநாதி புத்திஸ்‌ ஸா பார்த்த ராஜஸீ” என்றும்‌, ஸர்வார்த்தான்‌ விபரீதாம்ஸ்ச புத்திஸ்ஸா பார்த்த தாமஸீ ‘” என்றும்‌ அந்யதா க்யாதியையே யன்றோ நிரூபிக்கின்றான்‌. தர்மத்திலே அந்யதாக்ரஹம்‌ ராஜஸம்‌. அதாவது சங்கத்தைப் பீதமென்று நினைப்பது-இங்கு சங்கத்திலுள்ள வெண்மையை மாற்றி மஞ்சளாக நினைக்கிறான்

இவனுக்கு சங்க ஸ்வரூபத்திலே மாறாட்டமில்லை. இவ்னுக்கு அதிலுள்ள குணத்திலேயே மாறாட்டம்‌. இது தர்ம விபர்யாஸ மென்றும்‌ அந்யதாக்யாதி, இது ராஜஸீ புத்தி. வஸ்து ஸ்‌வரூபத்திலே மாறாட்டத்தைத்‌ தாமஸீ புத்தி யென்கிறான்‌ கீதாசார்யன்‌: சுக்தியை ரஜதமாக நினைப்பது, இது தர்மி விபர்யாஸம்‌ ஆக லோகாநுபவத்துக்கும்‌ கீதாசார்யாதி வசநங்களுக்கும்‌ உசிதமாயிருப்பதால்‌ !’ ஒளசித்யம்‌ அந்யதாக்யாதெள ”’ என்றார்‌-அக்யாதிபக்ஷம்‌ மீமாம்ஸகருடையது. அதாவது–சுக்தித்வத்திற்கும்‌ ரஜதத்‌ வத்திற்கும்‌ பேதத்தை யறியாமை அக்யாதி–க்யாதி யாவது பேத ஜ்ஞாநம்‌. அதில்லாமை அக்க்யாதி. இப் பக்ஷத்தில்‌ லாகவமுண்டு என்‌றருளிச் செய்தார்‌ தேசிகன்‌. லாகவமாவது-இடையில்‌ அந்யதாக்யாதி என்று ஒரு விஸிஷ்ட புத்தியைக்‌ கல்பநம்‌ செய்யாமை. அந்யதா க்யாதிக்குக்‌ காரணம்‌ பேத ஜ்ஞாந மில்லாமையும்‌ தோஷமும்‌. சக்திக்கும்‌ ரஜதத்துக்கும்‌ வாசி யறியாமையா லன்றோ சுக்தியை ரஜத மென்று பார்க்கிறான்‌–அந்யதாவாக க்ரஹிப்பதற்குக்‌ காரணம்‌ இவை. இவ்விரண்டாலேயே சுக்தியில்‌ ரஜத புத்தி யேற்படுகிறது. அதைக் கொண்டு வருகிறான்‌. இது ரஜத மென்று வ்யவஹரிக்கிறான்‌. இந்த வ்யவஹார மானது அந்யதா க்யாதியை இடையில்‌ இசையாமலே ஸித்திக்கலாகுமே பேத க்ரஹ மில்லாமையாலும்‌, தோஷ விஸேஷத்தாலும்‌ ப்ராந்திஸ்த்தலீயமான ப்ரவருத்தி யேற்படுகிறது என்ன வேண்டி யிருக்க, இடையில்‌ அந்யதாக்யாதி யென்றொன்றை கல்பகம்‌ செய்ய வேண்டா. இது தன்னை ‘”அக்யாதெள லாகவம்‌ ஸ்த்திதம்‌ ‘* என்றார்‌ ஸ்வாமி தேசிகன்‌. இடையில்‌ அக்யதா க்யாதியைக்‌ கல்பியாமையே லாகவம்‌.

யதார்த்த க்யாதியானது நம்‌ ஆசார்யர்களால்‌ கொள்ளப் பட்டது. இதற்கு ப்ரமாணங்கள்‌ ஸ்ருதி ஸ்ம்ருதிகள்‌ ப்ரபலங்களாயுள்ளன. முற் கூறிய த்ரிவ்ருத் கரணமானது சாந்தோக்யத்தில்‌ ஸ்பஷ்டமாகச்‌ சொல்லப் பட்டது. ‘* தாஸாம்‌ த்ரி வ்ருதம்‌ த்ரிவிருதம்‌ ஏகைகாம்‌ கரவாணி ‘” என்று ஸத் வித்யா ப்ரகரணத்திலே சாந்தோக்ய ஸ்ருதி. தேஜஸ்ஸு அப்பு அந்நம்‌ எனப்பட்ட ப்ருதிவீ ஆகிய இவற்றை ஒவ்வொன்றை மூன்று மூன்று அம்சங்கள்‌ அடங்கியதாகச்‌ செய்கிறேன்‌ என்று ஸங்கல்பித்து அவ்வாறே செய்தான்‌ எம்பெருமான்‌ என்கிறது இந்த ஸ்ருதி: இதனால்‌ ஒவ்வொரு த்ரவ்யமும்‌ மற்றும்‌ சில த்ரவ்யங்களோடு சேர்ந்தவையே யென்று. தெளிவாகிறது. யதார்த்த க்யாதி வாதத்துக்கு இவ்வாறான ப்ரமாணங்கள்‌ ப்ரதாநமானவை–ஆனால்‌ இந்த யதார்த்த க்யாதி வாதத்தை விஸேஷஜ்ஞரான பண்டித ப்ரகாண்டர்‌ அறிந்து கொள்ளலாமே யன்றி பாமரர்களுக்கு இது புத்தியில் புலப்பட மாட்டாது. கானல்‌ ஜலம்‌ ஸத்யம்‌, இரண்டு சந்த்ர ஜ்ஞாம்‌ ஸத்யம்‌. சுக்தி ரஜதம்‌ ஸத்யம்‌. ரஜ்ஜு ஸர்ப்பம்‌ ஸத்யம்‌ என்று தத்வத்தை அறிவாரார்‌-இவற்றின்‌ ஸத்யத்வத்தை ஸ்ரீபாஷ்யத்திலே ஜிஜ்ஞாஸாதி கரணத்திலே ஸ்ரீபாஷ்ய காரர்‌ ஸவிஸ்தரமா!ப்‌ உபபாதகம்‌ செய்திருக்கிறார்‌, ஆனால்‌ இது பாமரர்கள்‌ புத்தியில படாது. அந்யதா க்யாதி பஷமே ஸ்ரீபாஷ்யகார ஸம்மத மென்‌றும்‌ நம்‌ ஸித்தாந்திகளிலேயே சிலர்‌ சொல்லுவதாக ந்யாய பரிசுத்தியிலே ஆசார்யன்‌ ஸாதித்திருக்கிறார்‌. ஸ்ரீபாஷ்யத்‌திலே க்யாதி வாதங்கள்‌ பலவற்றை உதாஹரித்து எல்லோருக்கும்‌ அந்யதா க்யாதியை யிசைந்தே ஆக வேண்டு மென்று ஸ்தாபித்தருளினார்‌- க்யாதி வாதங்களை வெவ்வேறாகக்‌ கொண்டவர்கள்‌ அனைவருக்கும்‌ அந்யதா க்யாதியை விலக்க முடியாது என்று அருளினார்‌ இதில்‌.

ஸ்ரீபாஷ்ய ஸூக்திகளைப் பார்ப்போம்
க்யாதியாவது–ஜ்ஞாநம்‌. **இதம்‌ ரஜதம்‌”’ **அயம்‌ ஸர்ப்ப:’” என்றாற் போல்‌ உலகத்தார்க்கு ஏற்படும்‌ ப்ரம ரூபமான ஜ்ஞாநத்தில்‌, சுக்தி அதிஷ்டாநம்‌ அதிலே ரஜதமானது ஆரோபிக்கப்படுகிறது, இவ்வாறே ரஜ்ஜு அதிஷ்டாநம்‌. அதிலே ஸர்ப்பம்‌ ஆரோபிக்கப்படுகிறது. ஆரோபத்துக்கு ஆச்ரயத்தை யதிஷ்டாந மென்கிறது ஆரோபிக்கப்படுமதை ஆரோப்யம்‌ என்கிறது. ஆரோபிக்கப்படுமது எத்தகையது என்பதைப் பற்றிய வாதமே க்யாதி வாதம்‌ என்று வழங்கப்படுகிறது.
1-சுக்தியிலே ஆரோபிதமான ரஜதமானது ஸத்‌ என்றும்‌
2-அஸத்து என்றும்‌
3-ஸத்தும்‌ அஸத்துமென்றும்‌
4-ஸத்துமன்று அஸத்துமன்று என்றும்‌ நான்கு வித க்யாதி வாதங்கள்‌ மத பேதத்‌தாலே இசையப் படடிருக்கின்‌றன-
இவற்றின்‌ உட்பிரிவாலே பத்து விதங்களான வாதங்கள்‌ ஏற்பட்டிருக்கின்‌றன.

1-ஸ்ரீபாஷ்யகார ஸித்தாந்தத்திலே ஸத் க்யாதி வாதம்‌ ஒப்புக் கொள்ளப் பட்டது. ஸர்வ ஞாநமும்‌ யதார்த்தம்‌. சுக்தி யுண்டாகும் போதே அதில்‌ ரஜதமும்‌ உண்டாயிருக்‌கிறது. தரிவ்ருத் கரணச்‌ ஸ்ருதி பலத்தாலே இவ்வாறு ஸித்திக்கின்றது. ஆனால்‌ சுக்த்‌ யம்ஸம்‌ அதிகம்‌. ரஜத அம்ஸம்‌ குறைந்துள்ளது. ப்ரம காலத்திலே தோஷ வசத்தாலே சுக்த்யம்ஸம்‌ மறைந்து அதிலுள்ள ரஜதாம்ஸமே தோன்றுகின்றது. தோஷம்‌ விலகினால்‌ அதிகமான சுக்த்யம்ஸம்‌ க்ருஹீதமாகிறது. சுக்தியிலே ரஜதாம்‌ஸம்‌ ஸ்வல்பமாகையாலே ஆபரணாதி கார்யத்துக்கு உப யுக்தமாகிற தில்லை. இது ஸத் க்யாதி வாதம்‌-

2-அக்யாதிவாதம்‌ :–மீமாம்ஸகர்‌ அக்யாதிவாதிகள்‌. யதார்த்தம்‌ ஸர்வ விஜ்ஞாநம்‌ என்பது ஸ்ரீபாஷ்ய ஸித்தாந்தத்திற் போலே இவர்களாலும்‌ இசையப் படுகிறது. சுக்தியைப் பார்த்து ரஜதம்‌ என்று ப்ரமிக்குமிடத்தில்‌ இதம்‌ என்றும்‌ ரஜதம்‌ என்றும்‌ இரண்டு கஞாநங்கள்‌, இதம்‌ என்பது ப்ரத்யக்ஷம்‌, ரஜதம்‌ என்பது ஸ்மரணம்‌, இவ் விரண்டு ஜ்ஞாநங்களுக்கு முள்ள பேதத்தை க்ரஹியாமையே அக்யாதி எனப்படுகிறது. க்யாதி: பேத க்ரஹ:–ததபாவ:அக்யாதி:: ப்ரமம்‌ விலகிய பிறகு இதம்‌ ந ரஜதம்‌ என்று. உண்மை ரஜதத்தில்‌ ரஜத புத்தி யானது விசிஷ்ட ஜ்ஞாநம்‌ ஒன்றே, ப்ரமஸ்த்தலத்தில்‌ போல்‌ ஜ்ஞாந த்வயமன்று என்பது இவர்கள்‌ மதம்‌.

3-அந்யதாக்யாதி;–இது தார்க்கிக மதம்‌. ஆபண (கடை)ஸ்த்தமான ரஜத மானது தோஷ வசத்தாலே புரோ வர்த்தியான சுக்தியில்‌ தோன்றுகின்றது. அந்யத்தான சுக்தியானது அந்யதா—ரஜத ரூபமாகத்‌ தோன்றுகிறது என்று அந்யதாக்யாதி ஸப்தார்த்தம்‌.

4-நிர்விஷய க்யாதி :–பெளத்தரில்‌ சிலர்‌ ப்ராந்தி ஸ்தலத்திலே ஜ்ஞாநத்திற்கு விஷயமொன்றும்‌ கிடையாது என்பர்‌, இது நிர்விஷய க்யாதி-

5-நிரதிஷ்டாநவாதம்‌ :–இதுவும்‌ பெளத்தருடையதே. ஆகாசத்தில்‌ கோபுரம்‌ போலவும்‌ பட்டணம்‌ போலவும்‌ தோன்றுகிறது. இதற்கு அதிஷ்டாந மொன்று மில்லை. அவ்வாறே ப்ரபஞ்சம்‌ என்பது இவர்கள்‌ பக்ஷம்-

6-பாஹ்யார்த்தாகார யோக க்யாதி :–ஸெளத்ராந்திகள்‌ ‘ என்னும்‌ பெளத்தன்‌ ஜ்ஞாநத்திலே பாஹ்ய பதார்த்தங்களினுடைய ஆகாரமானது ஸங்க்ரமிக்கிறது. இந்த ஆகாரத்தினலே பாஹ்யார்த்தமானது அநுமிக்கப்படுகிறது.: பாஹ்ய பதார்த்தங்கள்‌ ப்ரத்யக்ஷங்களன்று என்பது இவர்கள்‌ மதம்‌.-

7-ஸதஸத்விலக்ஷண க்யாதி :–இது அத்வைதிகள்‌ மதம்‌. ப்ரஹ்ம வ்யதிரிக்‌தங்களான பதார்த்தங்கள்‌, தோன்றுவதால்‌ அஸத்துக்கள்‌ என்று சொல்ல முடிய வில்லை. நாசமடைவதால்‌ ஸத்து என்றும்‌ சொல்ல முடிய வில்லை. ஆகவே ஸதஸத்‌ விலஷண க்யாதி விஷயங்கள்‌ என்பது இவர்கள்‌ மதம்‌-

8-சூந்யக்யாதி:–மாத்யமிக பெளத்தவாதமிது, ஸர்வம்‌ சூந்யமே. அபாவத்‌திலிருந்துதான்‌ ஒவ்வொன்றும்‌ தோன்றுகிறது. காரணம்‌ அபாவ ரூபமாகையால்‌ கார்யமும்‌ அபாவ ரூபமாகவே தானே இருக்க வேணும்‌. ஸம்வ்ருதி யென்னும்‌ தோஷத்தாலே இருப்பது போல்‌ தோன்றுகிறது. ஸம்வ்ருதி ஸத்யமிது என்பது மாத்யமிக மதம்‌. வ்யாவஹாரிக ஸத்யம்‌ என்று இதையே அத்வைதிகள்‌ கொண்டிருக்கிறார்கள்‌.

9-ஆத்மக்யாதிவாதம்‌ :–இது யோகாசாரனென்றும்‌ பெளத்தனுடைய மதம்‌, ஜ்ஞாநம்‌ ஒன்றே ஸத்யம்‌, இது பாஹ்ய பதார்த்தம் போல்‌ தோற்றுகிறது, நீலம்‌, பீதம்‌, கடம்‌, படம்‌ என்று ஜ்ஞாந முண்டாகும் போது தானே தோன்றுகிறது. இந்த நீலாதி ஆகார மானது ஜ்ஞாநத்துக்கே கொள்ள வேண்டும்‌. விஷயத்துக்கு அன்று. ஜ்ஞாநமில்லாத காலத்தில்‌ இவை தோன்‌ற வில்லையே, ஆகையால்‌ ஜஞாநமே விஷயாகாரமாய்‌ ப்ராந்தியால்‌ தோன்றுகிறது. இது யோகாசார மதம்‌-

அக்யாதி முதலான வாதங்களை நிரூபிக்கும் போது அந்யதா க்யாதியில் தான்‌ முடிகின்றன என்பதாக ஸ்ரீபாஷ்யத்திலே ஜிஜ்ஞாஸாதி கரணத்திலே நிரூபித்திருக்கிறார்‌ ஸ்ரீபாஷ்யகாரர்‌-அஸத்க்யாதிவாதம்‌ மாத்யமிகனுடையது. அஸத்து என்றே தீர்மானித்து விட்டால்‌ ஒரு வஸ்துவைக் கொண்டு ஒரு கார்யமும்‌ நடை பெறாது. அதனால்‌ தோஷ வசத்தினால்‌ ஸத்து என்று தோற்றுகிறதாகக்‌ கொள்ள வேண்டும்‌. அஸத்தானது ஸத்தாக அந்யதா வாகத்‌ தோன்றுவதால்‌ இதுவே அந்யதா க்யாதி வாதமாகிறது-அக்யாதி பக்ஷத்திலும்‌, சுக்தி ஜ்ஞாநமும்‌ ரஜத ஜ்ஞாகமும்‌ இரண்டும்‌ வெவ்வேறு என்று தோன்றினால்‌ ப்ரவ்ருத்தி வருவதற்கில்லை. இரண்டு ஜ்ஞாநமும்‌ ஒன்று என்று எண்ணி ப்ரவ்ருத்திப்பதாகக்‌ கொள்ள வேணும்‌. இப்பொழுது இரண்டு ஜ்ஞாநங்களை அந்யதாவாக ஒன்றாக எண்ணுவதால்‌ அந்யதா க்யாதி வாதமே யாகிறது–அயதார்த்த ஜ்ஞாநமென்பதே யில்லை யாகில்‌ ஸ்வ மதம்‌ பர மதம்‌ என்கிற பிரிவே யில்‌லாமற்‌ போகுமே. ஈஸ்வரன்‌ பர லோகம்‌ இவ்வாறான வைதிக முறைகள்‌ ஒன்றும்‌ கிடையாது என்று சொல்லும்‌ நாஸ்திகருடைய ஜ்ஞாநமும்‌ யதார்த்தம் தானே என்னில்‌:-எங்கும்‌ ஜ்ஞாநம்‌ ஸத்யம் தான்‌. ஜ்ஞாநம்‌ உண்டாக வில்லை யென்று ஒருவனுக்கும்‌ எண்ணம்‌ ஏற்படுவதில்லையே. கனாக் காண்‌கிறவனுக்கு கனவு ஜ்ஞாநம்‌ பாதிதமாகாது. நான்‌ கனாக்‌ காணவில்லை என்று அவன்‌ எண்ணுவதில்லை-கனவில்‌ கண்ட பதார்த்தங்கள்‌ இல்லை என்றே அவன் சொல்லுகிறான்‌. இதனால்‌ ஜ்ஞாநத்திற்கு விஷயமானது பாதிக்கப் படுகிறதே அன்றி ஜ்ஞாநம்‌ பாதிக்கப் படுவதில்லை எனபது தெளிவாகிறது. ஆகவே யதார்த்த வ்யவஹாரானுகுணம்‌ ஜ்ஞாநம்‌ ப்ரமை என்று லக்ஷணம்‌ அருளிச் செய்தார்‌ ந்யாய பரிசுத்தியிலே தேசிகன்‌. இந்த லக்ஷணத்தை முன்‌ குறிப்பிட்ட எந்த க்யாதி வாதிகளும்‌ இசைந்தாக வேண்டும்‌ ஸர்வ சூன்ய வாதியான மாத்யமிகனும்‌ லோக வ்யவஹாரத்தை அபலபிக்க முடியாதே. அதனால் தான்‌ ஸம்வ்ருதி ஸத்யம்‌ எனறு கொண்டு லோக வ்யவஹாரத்தை பின்பற்றுகிறான்‌. ப்ரம்ஹத்தைத்‌ தவிர்த்து ப்ரபஞ்சம்‌ அனைத்தும்‌ பொய்‌ என்று கொண்டுள்ள அத்வைதிகளும்‌ வ்யாவஹாரிக ஸத்யம்‌ என்று பெயரிட்டு லோக வ்யவஹாரத்தை பின்பற்றி வருகிறார்கள்‌. ஸபல ‘ப்ரவ்ருததியை உண்டு பண்ணும்‌ ஜ்ஞாநம்‌ யதார்த்தம்‌, யதாவஸ்த்தித வ்யவஹாரானுகுண ஜ்ஞாநம்‌ என்றவாறு. விபல ப்ரவ்ருத்தி ஜனகமானது அயதார்த்தம்‌. அங்கு வ்யவஹாரமே அயதார்த்தம்‌. ஜ்ஞானமன்று. நமது விசிஷ்டாத்வைத சித்தாந்‌ தத்திலே ஜ்ஞாநமும்‌ ஸத்யம்‌. அதன்‌ விஷயங்களும்‌ பரமார்த்தமே என்று கொள்ளப்பட்டு இருக்கிறது. த்ரிவிருத்கரணாதி ப்ரதிபாதக ப்ரமாண பலம்‌ நமக்கு உண்டு. ஸ்வப்ந பதார்த்தங்களை தத் தத்‌ காலத்திலே கனாக் காணுமவன்‌ ஒருவனுக்கே அனுபவிக்கப்படும்படி ஈஸ்வரன்‌ ஸ்ருஷ்டிக்கிறான்‌. ஆகையால்‌ ஸ்வப்னம்‌ ஸத்தியம்‌. இவ்வாறு ‘ப்ரம ஸ்தலத்தில்‌ தோன்றுமவை அனைத்தும்‌ ஸத்ய மென்பதை ஸ்ரீபாஷ்யத்திலே ப்ரபஞ்சித்தருளினார்‌ ஸ்ரீபாஷ்யகாரர்‌. சாஸ்த்ரார்த்தங்கள்‌ துருஹமானவை, அவற்றை குரு முகமாய்‌ கால க்ஷேபம்‌ செய்து மனனம்‌ செய்தவர்களுக்கே தெளிய முடியும்‌. மேலெழுந்த வாரியாக சில சாஸ்த்ரார்த்தங்களை மேடை பிரசங்கங்களிலும்‌, பத்ரிகை வியாசங்கள்‌ மூலமாகவும்‌ தெரிந்து கொள்ளலாமே யன்றி தெளிவு பெற முடியாது. இதனால்‌ ஆபாத ப்ரதீதி ஏற்படும்‌. மேலெழுந்தவாரியான ஜ்ஞாநம்‌ பெற்றவனுககு அதைத் தெளிய வேணும்‌ என்று அவா உதித்து, ஆசார்யனை அணுகி ஸ்ரவணம்‌ செய்து தெளிய வேணும்‌. இதுவே நமது சாரீரக ஸித்தாந்தம்‌. அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா என்கிற ஸூத்திரத்திற்கு இவ்வாறாக தாத்பர்யம்‌ அருளினார்‌ ஸ்ரீபாஷ்யக்காரர்‌.

சேதநாசேதநாத் மகமான ஜகத்து அனைத்தையும்‌ சரீரமாக வுடைய எம்பெருமானை ப்ரதிபாதிக்கின்‌றமையால்‌ சாரீரகம்‌ என்று ப்ரஹ்ம மீமாம்ஸை க்குத்‌ திருநாமம்‌. இதை ஆநந்த மயாதிகரண ஸ்ரீபாஷ்யத்திலே அருளிச் செய்துள்ளார் –விசிஷ்டாத்வைதமென்பதும்‌ சாரீரகமென்பதும்‌ பர்யாயங்கள்‌. இந்த ஸித்தாந்தத்‌திற்கு ப்ரதாந ப்ரதிதந்த்ரமானது, ஜகதனைத்தும்‌ பகவானுடைய சரீரமென்பதுவே -. சிற் சில சரீர பரிக்ரஹம்‌ பண்ணும்‌ ஜீவாத்மா முக்ய சாரீரனாகான்‌. ஸகல சரீரனான வெம்பெருமானே முக்ய சாரீரன்‌ என்றவாறு.ஜகத் ஸர்வம்‌ சரீரம்‌ தே. இத்யாதியான உப ப்ரும்ஹணங்கள்‌ பல பல வுண்டே

ஸாத்விக புராணமான ஸ்ரீபாத்மோத்தரத்திலே உமா மஹேச்வர ஸம்வாதத்திலே, பார்வதி மஹேச்வரனைக்‌ கேட்கிறாள்‌–* தர்ம ஸம்ஸ்தாபநத்திற்காக பகவான்‌ அவதரித்து பர தார பரிக்ரஹம்‌ ஸ்ரீக்ருஷ்ணாவதாரத்திலே செய்தருளியது எப்படி உசிதமாகும்‌ என்று. மஹேஸ்வரன்‌ பதிலளிப்பதாவது–எல்லா வஸ்த்துக்களும்‌ பகவானுக்கு சரீரம்‌, சரீர மல்லாத ப்ருதக் பூத மொன்றுமில்லை. ஆகவே தன்‌ சரீரத்தைத்‌ தான் தழுவுவது பர தார பரி க்ரஹமாகாது என்று -ஸ்ரீவராஹப்பெருமானை ‘! விசிஷ்டைக ஸ்வரூபாய *’ என்று ஸ்துதிக்கின்றார்கள்‌ என்பதும்‌ அதிலேயே உளது-விசிஷ்டாத்வைத ரூபனான வராஹன் என்றபடி –குமாரில பட்டர்‌ க்ருஹைகத்வாதி கரணத்திலே ஸம் ப்ரமாணமாக ஆகாசம்‌ வேதம்‌ யஜ்ஞம்‌ முதலியது பகவத் சரீரம்‌. ஒவ்வொரு அசேதநமும்‌ ஜீவன்‌ பரமாத்மா ஆகிய இருவர்களுக்கும்‌ சரீரமானது என்று நிரூபித்துள்ளார் -குஸுமாஞ்ஜலியில்‌ ந்யாயாசார்யரான உதயநர்‌ பரமாணுக்கள்‌ ஈஸ்வரனுடைய சரீரங்கள்‌ என்று ஐந்தாவது ஸ்தபகத்திலே நிரூபித்துள்ளார் –ஆயினும்‌ லோக வேத ப்ரயோக் ஸாதாரணங்களான லக்ஷணங்களை யிட்டு ஸ்ரீபாஷ்‌யத்தில்‌ விலஷணத்வாதிகரணம்‌ முதலியதிலும்‌ வேதார்த்த ஸங்க்ரஹாதிகளிலும்‌ ஸ்ரீபாஷ்யகாரர்‌ நிலை நாட்டியதால்‌ இது விசிஷ்டாத்வைத ப்ரதிதந்தரமாயிற்று –

மாயா விசிஷ்டாத்வைதம்‌, உபாதி விசிஷ்டாத்வைதம்‌, சக்தி விசிஷ்டாத்வைதம்‌ என்று ஸ்ரீசங்கர பாஸ்கர யாதவ மதங்களை ஸங்க்ரஹித்தருளினார்‌ அதிகரண ஸாராவளியில்–நம்முடைய விசிஷ்டாத்வைதத்தில்‌ ப்ரகார்ய த்வைதம்‌ என்றும்‌ ப்ரகாரா த்வைதம்‌ என்றும்‌ இரண்டு விபாகம்‌, இதையே முறையே ப்ரஹ்மாத்வைதம்‌, ஜீவாத்வைதம்‌ என்கிறது–ப்ரஹ்ம ப்ரகரணங்களில்‌ ப்ரஹ்மாத்‌வைதம்‌ அல்லது ப்ரகார்த்வைதம்‌–ஸோஹம்‌ ஸசத்வம்‌ ‘” இத்யாதிகளில்‌ ஜீவாத்வைதம்‌ அல்லது ப்ரகாராத்வைதம்ப்ராப்யமும்‌ ப்ராபகமும ப்ரஹ்மமே என்று சாரீரகத்தின்‌ திரண்ட பொருள்‌. இதில்‌ நான்கு அத்யாயங்கள்‌. முதலிரண்டும்‌ விஷய த்விகம்‌ என்றும்‌, மற்றவிரண்டும்‌ விஷயி த்விக மென்றும்‌ பேடிகா விபாகம்‌ பெற்றுள்ளது. ஓரொரு அத்யாயத்திலும்‌ நான்கு பாதங்களாக பதினாறு பாதங்கள்‌. இவற்றால்‌ பகவானுடைய பதினாறு குணங்களை ஷோடச குணங்களை சொல்லப்படுகின்றன என்று நிருபித்‌ தருளினார்‌கள்

இவற்றுள்‌ முதல் பாதத்திலே ஸ்ரஷ்ட்ருத்வம்‌ என்கிற குணமானது ப்ரதிபாத்யம்‌. காரணத்வ ப்ராபக வாக்யங்களில்‌ ப்ரதாகமாகிய ஸத் வித்யாதி வாக்யத்தில்‌ ஜகத் காரணத்வம்‌ சொல்லுவதால்‌ ஸ்ரஷ்ட்ருத்வ குணமானது இந்த பாதத்துக்கு முக்ய ப்ரதிபாத்யமாகிறது. சாரீரகம்‌ பகவத்‌ குண பரமென்றதை ஸ்ரீபாஷ்யகாரரே அருளிச் செய்துள்ளார் – ஸத் வித்யை ஆநந்தமய வித்யை அந்தராதிதய வித்யைகளாகிற மூன்று வித்யைகளாகிலும்‌ சிதசித்விலக்ஷணன்‌ ஈச்வரன்‌ என்று ஸித்தித்துவிட்டது. ஆகிலும்‌ ஓரொரு விதமாக பூர்வபக்ஷத்தை உத்தாபநம் பண்ணி அந்தந்த விஷய வாக்யங்களில்‌ ஸித்திக்கும்‌ கல்யாண குணங்களை அநுபவிக்கிறார்‌ ஸூத்ரகாரர் –

அஸ்பஷ்டதா ஜீவாதி லிங்க பாதம்‌ என்றும்‌ அயோக வ்யவச்சேத பாதம்‌ என்றும்‌ முதல் பாதத்தை ஆசார்யர்கள்‌ வழங்குகிறார்கள்‌. ப்ரஹ்‌ம பாதமென்று நாமாந்தரமு முண்டு, அயோக வ்யவச்சேதமாவது–ப்ரஹ்‌மத்துக்கு ஜகத் காரணத்வ லக்ஷணமானது அஸம்பாவிதம்‌ என்கிற பூர்வ பஷத்தை நிரஸிக்கை, அயோக;–லக்ஷணாஸம்பவ: தத்வ்யச்சேத: அதற்கு நிரஸநம்‌. ப்ரஹமம்‌ என்கிற லக்ஷ்ய வஸ்து இல்லாமையால்‌ அதற்கு லக்ஷண மென்பது சுவரில்லாத சித்ரம்‌ என்று பூர்வ பக்ஷம்‌ என்கிறதை நிரஸநம் செய்வதே அயோக வ்யவச்சேதமென்பது. முதல் பாதத்தில்‌ விஷய வாக்யங்களில்‌ ஜீவ லிங்கமும்‌, அசேதந லிங்கமும்‌ மிகவும்‌ அஸ்‌பஷ்டமா யிருக்க அதை யிட்டு பூர்வ பக்ஷம்‌ ஏற்பட அதை நிரஸிப்பதால்‌ அஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க பாதம்‌ என்றும்‌ பெயர் –ப்ரஹ்மத்தை ஸ்த்தாபநம்‌ செய்வதால்‌ ப்ரஹ்ம பாதமென்னும்‌ திருநாமமிதற்கு ஆகவே முதல் பாதத்தில்‌ ப்ரஹ்ம லக்ஷணத்திற்கு அஸம்பவ நிராஸம்‌, மேல்‌ அந்ய யோக வ்யவச்சேத பாதங்களில்‌ அதி வ்யாப்தி நிராஸம்‌ என்று பேடிகா விபாகம்‌ கண்டு கொள்வது –

இவ்வாறு விபாகம்‌ செய்வதற்கு மூலம்‌ ஸ்ருதி ஸ்வாரஸ்யமும்‌, ஸூத்ர ஸ்வாரஸ்யமுமாகும்‌, எங்ஙனேயெனில்‌-
1-ஸத்வித்யா வாக்யமானது முதலிலே உதாஹ்ருதம்‌. இது காரணத்வ ப்ராபக வாக்யம்‌. இது அசேந பரமாகில்‌ மற்றவையும்‌ அவ்வாறேயாக வேண்டுமாகையால்‌ ப்ரஹ்மமென்பதே கிடையாது.
2-இவ்வாறே ஆநந்த வல்லியானது ஜீவபரமென்‌று தேறினால்‌ ப்ருகுவல்லியிலுள்ள லக்ஷண வாக்யமும்‌ ஜீவ பரமே என்று கொள்ள வேண்டி யிருக்கிறது. அதற்கு சேஷம்‌ அந்தரதிகரணம்‌ அதே ஜீவனைப் பற்றியது-மேல்‌ ஆகாச ப்ராண ஜ்யோதி: இந்த்ர ப்ராணாதிகரணங்களில்‌ விசேஷித்து அசேதநத்தையும்‌ ஜீவனையுமே ப்ரதிபாதிக்கின்றமையால்‌ பர ப்ரஹ்மமென்பது கிடையாது. இது ஸ்ருதி ஸ்வாரஸ்யம்‌,

இனி ஸூத்ர ஸ்வாரஸ்யமாவது–ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா என்று உபக்ரமத்தில்‌ ப்ரஹ்ம சப்தமிருக்கச் செய்தே ** ந-அசப்தம்‌ ” என்றும்‌, பேத வ்யபதேசாச்சாந்ய: என்றும்‌ இரண்டு அதிகரணங்களில்‌ விசேஷித்து ஸாத்ய நிர்தேசமுள்ளது ஸூத்ரங்களில்‌. இதனால்‌ ப்ரஹ்ம பதத்திற்கு அநுவ்ருந்தி யில்லை என்று தெளிவாகிறது-த்விதீய பாதத்திலே அத ஏவச ஸப்ரஹ்ம என்றும்‌, தருதீய பாதத்திலே ஈக்ஷதி கர்ம வ்யபதேசாத்‌ ஸ: என்றும்‌, சதுர்த்த பாதத்திலே ப்ராஜ்ஞஜோஹி ப்ரகரணாத் என்றும்‌ ஸாத்ய நிர்தேசமானது உளது- இவை ஸாஷாத்தாக ப்ரஹ்ம பரங்கள்‌. அவ்வாறு முதல் பாதத்தில்‌ ப்ரஹ்ம பர சப்த நிர்தேச மில்லாமையால்‌ ப்ரஹ்மமென்பது ஆஸித்தம்‌ என்று பூர்வ பக்ஷத்திற்கு அவகாசம்‌ கொடுப்பதால்‌ முதல் பாதத்திலே ப்ரஹ்மமானது ஸித்தாந்திதமான பிறகு மற்றொன்றும்‌ காரணமாகலாமே என்று அதி வ்யாப்தி சங்கை பிறக்க அதை அந்ய யோக வ்யவச்சேத பாதத்தால்‌ நிரஸிக்கிறார்‌ ஸூத்ரகாரர்‌. ஸ்ரீபாஷ்யத்திலே முதல் பாதத்திலே “பரமாத்மா’” என்று ஸாத்ய நிர்தேச மிருந்தாலும்‌, அதற்கு அசேதந பிந்நம்‌, சேதந பிந்நம்‌ என்று பொருளே யன்றி ஸாஷாத்‌ பரமாத்மா என்பதில்‌ தாத்பர்யமில்லை. இவ் வர்த்தம்‌ அநதஸ்‌ தத்தாமோபதேசாத்‌ ஆகாசஸ் தல் லிங்காத்‌ இத்யாதி ஸூத்ர ஸ்ருதப் பிரகாசிகையிலே ஸுஸ்பஷ்டம்‌, ஆகவே அயோக வ்யவச்சேத பாதம்‌ என்று முதல் பாதத்தின்‌ பெயர்‌ ஸுப்ரதிஷ்‌டிதமாயிற்று

முதல் பாதத்தில்‌ பகவத்‌ குணங்கள்‌ ஸ்ரீபாஷ்யகாரர்‌ இரண்டாவது பாதத்தின்‌ அவதரணிகையில்‌ அருளியபடி முதல்‌ ‘ பாதத்தில் பதினொன்று அதிகரணங்களிலும்‌ பதினொன்‌று குண விசேஷங்கள்‌ ப்ரதிபாதிககப்‌ படுகின்றன. அவையாவன--1-அக்ருதத்வம்‌ -2-விஸ்வ ஹேதுத்வம்‌ -3-சாஸ்த்ரைக ஸ்த்தாபநீயத்வம்‌–4-நிருபாதிக -ப்ரேம யோக்யத்வம்‌ –5-ஸ்வேச்சையால்‌ ஸர்வ ஹேதுத்வம்‌ –6-அநந்த நிஸ் ஸீம ஹர்‌ஷத்வம்‌ –7-ஸூபாஸ்ரயத்வம்‌–8-நிருபாதிகமான ப்ரகாசகத்வம்‌–9-ஜகத் ப்ராணநத்வம்‌ –10-திவ்ய தீப்திமத்த்வம்‌–11-ப்ராணேந் த்ராத்‌ யந்தராத்மத்வம்‌ ஆகியவை-இவற்றில்‌ முதல்‌ நான்கு குணங்களும்‌ உபோத்காதாதி கரணங்களான முதல் நான்கு அதிகரணங்களின்‌ விஷய வாக்யங்களில்‌ ஸித்திக்கும்‌ குண விசேஷங்கள் –

முதல் அதிகரண விஷய வாக்யமான முண்டகோபநிஷத்தில் , புண்ய கர்மங்களால்‌ ஸம்பாதிக்கப்பட்ட பலங்கள்‌ நஸ்வரங்க ளென்பதை மீமாம்ஸா ந்யாயங்களாலே நிரூபித்து நித்யனான வெம்பெருமான்‌ அநித்ய பலங்களான கர்மங்‌களாலே ஸித்திக்க மாட்டான்‌ என்று நிர்வேதமடைந்துள்ள ஸாங்க வேதாத்யாயி யானவன்‌ உபஹார பாணியாய்‌ ஜிதேந்த்ரியனும்‌ ஸ்ரோத்ரியனும்‌ ப்ரஹ்ம நிஷ்டனுமான ஆசார்யனை ஆஸ்ரயிக்க வேண்டும்‌. அந்த சிஷ்யனுக்கு ஆசார்யன்‌ ப்ரஹ்ம ப்ராப்தி ஸாதநமான ப்ரஹ்ம வித்யையை உபதேசிக்க வேண்டும்‌ என்று திரண்ட பொருள்‌. இந்த விஷய வாக்‌யத்தில்‌ சொல்லிய குணமாவது, அக்ருதத்வம்‌ என்று ஸாராவளியினால்‌ தெளிவாகிறது. இரண்டாமதிகரணத்துக்கு விஷய வாக்யம்‌: யதோவா இமாநி இத்யாதி, அதனால்‌ விஸ்வ ஹேதுத்வ குணம்‌ ஸித்திக்கின்றது-மூன்றாமதிகரணம்‌ சாஸ்த்ரயோநித்வாதிகரணம்‌. ப்ருஹதாரண்யகத்திலே சாகல்ய யாஜ்ஞவல்கய ஸம்வாதத்திலே சாகல்யன்‌ கேட்கிறான்‌ -இதனால்‌ சாஸ்த்ரைக ப்ரமாணத்வ ரூபமான குணம்‌ ஏற்படுகிறது: ஈசாவாஸ்யோபநிஷத்தில்‌ உள்ள இரண்டு ஸ்ருதிகளும்‌ ஸமந்வயாதிகரணத்திற்கு விஷயங்கள்‌. இதில்‌ ஸித்திக்கும்‌ குணம் தான்‌ நிருபதி பரம ப்ரேமயோக்யத்வம்‌ என்பது, சாரீரக சாஸ்த்ரார்த்த தீபிகையிலே விவரணம்‌ காண்பது-இவ்வாறு உபோத்காதாதிகரண குணங்களை நிரூபித்து, மேல்‌ ஏழதிகரணங்களின்‌ குணங்களை ஸாராவளியில் தெளிவித்தருளினார்-

சாஸ்த்ரமானது சாப்த போத ரூபமான இஷ்டத்திற்கு ஸாதநம்‌ என்கிற ஜ்ஞாநம்‌, சாஸ்த்ர ப்ரவ்ருத்‌திக்கு ஹேது. அந்த ஜ்ஞாநத்திற்கு ப்ரதிபந்தகம்‌, தாத்பர்யாபாவஜ்ஞாநம்‌-இதற்குக் காரணம்‌ வ்யுத்பத்ய பாவாதிகள்‌. இவற்றை நிரஸநம் செய்து தாத்பர்ய ஸமர்த்தக த்வாரா சாஸ்த்ராரம்ப ஹேதுவாகிறது சதுஸ் ஸூத்ரீ--இந்த சதுஸ் ஸூத்ரியானது முறையே நான்கு அத்யாயாரம்பத்திற்கும்‌ உபயுக்த மாகிறது என்று நயம யூக மாலிகையிலே அப்பய தீஷிதிதரும்‌ சாரீரக சாஸ்த்ரார்த்த தீபிகையிலே உபநிஷத்‌ பாஷ்யகாரரும்‌ நிரூபித்துள்ளார்கள்‌. அதாவது–1-ஸித்தப்‌ ப்ரஹ்மத்தில்‌ வ்யுத்பத்தி ஸமர்த்தரமானது. ஸமந்வயாத்யாயத்திற்கு உபயுக்தமானது-2-விசேஷங்கள்‌ அநந்தங்களால்‌ விரோதி யில்லை என்றது அவிரோதாத்யாயத்திற்கு உபயுக்தமாகிறது–3-அநுமாநத்தினால் ஸித்திப்பதை நிராகரணம்‌ செய்திருப்பது ஸாதநாத்மாயத்திற்கு அபேக்ஷிதமாகிறது. தார்க்கிகர்கள்‌ அநுமாநத்தினால்‌ ‘மஹேஸ் வரேஷ்டெள ‘* என்று எட்டு குணங்களே ஈஸ்வரனுக்கு உண்டென்கிறார்கள்‌. அவை யாவன–ஜ்ஞாந சிகீர்ஷா ப்ரயத்நங்கள்‌ மூன்று, ஸங்க்யா, பரிமாண, ப்ருதக்த்வ, ஸம்யோக விபாகங்கள்‌ ஐந்து. ஆக எட்டு குணங்களே ஈசனுக்கு என்பது ஆநுமாநிக ஈச்வரவாதிகள்‌ ஸித்தாந்தம்‌. ஸாதநாத்யாயத்திலே ஓரோரு வித்யையிலும்‌ ப்ரதி நியதங்‌களான அக் குணங்கள்‌ அநுஸந்தேயங்கள்‌ என்று ஸ்தாபிதம்‌, இதற்கு விருத்த மாகையால்‌ சாஸ்த்ர யோநித்வாதிகரணத்திலே அதுமாந நிராஸம்‌ செய்தது ஸாதநாத்யாத்திற்கு உபயுக்தமாகிறது.–4-ஸமந்வயாத்யாயத்திலே புருஷார்த்த பர்யவஸாநம்‌ செய்தது பலாதயாயோப யோகி.

ஸாங்கவேதாத்யயம்‌ செய்தவனுக்கு ஆபாத ப்ரதீதியைக் கொண்டு அத்யயந க்ரமத்திலே பூர்வ காண்ட விசாரத்தில்‌ ப்ரவ்ருத்தி ஏற்பட, விசாரத்தினால்‌ கர்மமானது அல்ப அஸ்திர பலம்‌ என்று தெளிவு ஏற்பட்டு விட்டபடியால்‌ வேதாந்த விசாரத்தில்‌ ப்ரவ்ருத்திக் குளனாகையாலே. கர்ம பலத்தில்‌ அல்ப அஸ்திரத்வாதி நிர்ணயமும்‌ அநந்த ஸ்திர பலத்தில்‌ முன்னமே ஏற்பட்ட ஆபாத ப்ரதீதியை யுமுடையவன்‌ கர்ம விசாராநந்தரம்‌ அதே காரணத்தினாலே ப்ரஹ்ம விசாரம்‌ செய்கிறான்‌. இவ் விசாரமானது ராக ப்ராப்தமானது வைதமன்று என்று ஸூத்ரத்தின்‌ பொருள்‌.-அதன்‌ ஸ்ருதிக்குப்‌ பிறகு என்று அத சப்தத்திற்குப்‌ பொருள்‌ ஸ்ரீபாஷ்பத்தில்‌ அருளியது ஸ்ருதிகளுக்கு உபபத்‌திக்கும்‌ ஸம்ப்ரதாயத்திற்கும்‌ பொருத்தமானது –

லக்ஷணத்தினாலே துர்நிரூபம்‌ ப்ரஹ்மம்‌ என்று ஆக்ஷேபத்தைப்‌ பரிஹரிக்கிறது இரண்டாம் அதிகரணம் -ஸ்ரீ ய:பதியே ப்ரஹ்ம சப்த வாச்யன்‌ என்று ஸ்தாபிப்பதே இவ் வதிகரணத்‌தின்‌ லக்ஷ்யம்‌-ஸ்ரீபாஷயத்தில்‌ புருஷோத்தமனிடமிருந்து என்று விவரணம்‌ செய்தருளியதும்‌, பாசுபதாதி கரணத்திலே பரம புருஷனே நிமித்தோபாதாந பூதன்‌ என்று ஜந்மாத்யதிகரணத்திலே ஸ்தாபிதம்‌ என்று அருளியதும்‌ ஸாராவளி நிஷ்கர்‌ஷத்தை த்ருடீகரிக்கினறன-நான்காம் பாதத்திலே காரணத்தவாதிகரணத்திலே ஸ்தாபிதமான இவ் வர்த்தத்தை ஜந்மாத்யதிகரணத்திலும்‌ ஸ்தாபிப்பது புநருக்தமன்றோ வெனில்‌, அங்கு ஸ்தாபநம்‌, இங்கு அதை உபஜீவித்து அநுவதித்தபடி என்‌று கொள்ளவும்‌–இவ்வாறே ஸமந்வயாதிகரணத்தில்‌ ஸ்தாபித்த அர்த்தம்‌ புருஷார்த்தத்வம்‌. மேலே உபய லிங்காதி கரணத்திலும் இந்த அர்த்தம்‌ ஸ்தாபிதமா யுள்ளதே எனில்‌ இதற்கும்‌ இதுவே ஸமாதாநம்‌. இந்த ஸூக்ஷ்‌மார்தத்தை தேசிகன்‌ ஸாராவளியில்‌ விளக்கி யருளினார்‌ –மூன்றாவது ஸூத்ரத்தில்‌ ஈஸ்வராநுமாந நிராஸம்‌ செய்கிறார்‌. இப்படியாகில்‌ இரண்டாமத்யாயத்திலே இரண்டாம் பாதத்தின்‌ ஆரம்பமான ஸூத்திரத்திலே ஈஸ்வரனை அநுமாநத்‌தால்‌ ஸ்தாபனம்‌ செய்வதாகத்‌ தோன்றுகிறதே என்று பரஸ்பரம்‌ முரண்பாடு இருப்பதாக சங்கிக்க இடமுண்டு. இந்த கேள்வியை ஸ்வாமி ஸமாதாநிப்பதாவது–அநுமாநத்தினால்‌ ஈஸ்வரனை ஸ்தாபிக்க முடியாதென்றார்‌ சாஸ்த்ர யோநித்வாதி கரணத்திலே, அநுமாநத்தினாலே இல்லை செய்யவும்‌ முடியாதென்றார்‌ ரசநாநுபவத்தி அதிகரணத்திலே என்று இரண்டிற்கும்‌ விரோதமில்லை-இனி ஈக்ஷத் யதிகரணத்திலும்‌, ஆகந்த மயாதி கரணத்திலும்‌, அந்தரதி கரணத்திலும்‌, லிங்கத்தினால்‌ அசேதந வைலக்ஷண்யமும்‌, சேதந வைலக்ஷண்யமும்‌ ஸ்தாபிதமாயிற்று.-லிங்கத்தைப் பார்க்கில்‌ ஸ்ருதி ப்ரபலை யாகையாலே ஆகாச-ப்ராண-ஜ்யோதி இந்த்ராதி சப்தங்களாலே லிங்கம் பாதிதமாகி பரமாத்மா இல்லை என்றதாகாதோ வெனில்‌, அந்த சப்தங்களும்‌ ப்ரஸிததமாகாச ப்ராண ஜ்யோதிரிக்த்ர விலக்ஷண வஸ்து பரங்களாகையாலே முன் ஸ்தாபித்த லிங்கத்திற்கு பாதகங்களன்‌று என்று ஸ்தாபித்தருளினார்‌ ஸூத்ரகாரர்‌– இவ்வாறு ப்ரஹ்மம்‌ ஜிஜ்ஞாஸ்யம்‌ என்றும்‌, லக்ஷண ரூப விசேஷண விசிஷ்டம்‌ என்றும்‌, சாஸ்தர ஸித்தமென்றும்‌, புருஷார்த்த ரூபமென்று ஸ்தாபித்து முக்யமான ஈஷணம்‌, அப்யாஸம்‌, தர்மோபதேசம்‌, தல் லிங்கம்‌, சரணாபிதாநம்‌, ததாநுகமம்‌ இத்யாதிகளான தர்மங்களை யிட்டே ப்ரஹ்மத்தை நிஷ்கர்ஷிப்பதால்‌ விசிஷ்டாத்வைதமே ப்ரஹ்மம்‌ ஸ்ரீமந் நாராயணனே ஜிஜ்ஞாஸ்ய ப்ரஹ்மம்‌. அவனை உபாஸித்து மோக்ஷம் பெறுதலே ஸாதநமும்‌ பலமும்‌. போக மாத்ர ஸாம்யமும்‌, ஜகத் வ்யாபாரமின்மையும்‌ புந ராவ்ருத்தியில்லா மையும்‌ ஸித்தாந்திதமாகையாலே முக்தியிலும்‌ ப்ரஹ்மத்தோடு பேதமும்‌ சாரீரிக சித்தாந்த மென்று தெளிவிக்கின்றது.

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ.வே. வித்வான்‌ மதுராந்தகம்‌ திருமலை. ஈச்சம்பாடி. வீரராகவாசார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading