ஸ்ரீ ஸூத மஞ்ஜரீ – ஸ்ரீ பாஷ்ய முதல் அத்யாயம் -இரண்டாம் பாத ஸாரம்-ஸ்ரீ உ.வே. வித்வான்‌ சேட்டலூர்‌ வா. ஸ்ரீவத் ஸாங்காசார்யர்‌ ஸ்வாமிகள்-

ஸ்ரீ எம்பெரு மானாருக்கு முன்பாக 95 (தொண்ணூற்றைந்து) பெரியோர்கள்‌ பாஷ்யம்‌ எனற பெயரால்‌ உரையிட்டதாய்‌ அறிகிறோம்‌. திருமழிசை ஸ்வாமிகளால்‌ அருளிச் செய்யப்பட்ட ஸ்ரீபாஷ்ய ப்ரகாசிகையில்‌ நம்‌ ஸ்ரீபாஷ்யத்தை 96 (தொண்ணாூற்றாறாவது பாஷ்யம்‌) என்பதாய்‌ குறிப்பிட்டுள்ளது. இவ்விதம்‌ ஸ்ரீஆளவந்தார்‌ திருவுள்ளப்படி அருளிச்‌ செய்யப்பட்டி ஸ்ரீபாஷ்யத்தில்‌ போதாயன முனிவரின்‌ விருத்தி க்ரந்தத்தையும்‌, அதை யடி யொற்றி டங்கர்‌, த்ரமிடர்‌, குஹ தேவர்‌ முதலானோரில்‌ சிறிய பெரிய நூல்களையும்‌ ஆதாரமாய் கொண்டு, ஸ்ரீமன்‌ நாதமுனிகளின்‌ நியாய தத்துவம்‌ முதலான நூற்‌களையும்‌ ஸ்ரீ ஆளவந்தாரின்‌ ஸித்தி த்ரயம்‌ முதலான நூல்களையும்‌ முன்னோடியாய்க்‌ கொண்டு, எம்பெருமானார்‌ அருளிச் செய்த ஸ்ரீபாஷ்யம் –

த்ரிவிஷ்டப்தகம்‌ என மஹா பாஷ்யகாரரால்‌ அடிக்கடி முக்கோல் பகவருக்கு இலக்கணமாய்‌ கூறப்பட்ட த்ரி தண்டம்‌ எப்படி ஒன்றோடொன்று இணைந்து ஓருருவாய்‌-பகுதி மூன்றாய்‌ விளங்குகிறதோ—அவ் வண்ணம்‌ முப்புரி நூலான மீமாம்ஸையில்‌-(கர்ம-தேவதா -ப்ரஹ்ம -) கீழ்‌ விளக்கியபடி வேதாங்கமான மற்றைய நூல்களை கற்றறிவதால்‌ வேதத்தின்‌ உட்பொருளை அறிய பரிகரம்‌ ஸரிவர அமையுமே தவிர–வேத விசாரம்‌ செய்தாலன்றி மெய்ப் பொருளைக் காண முடியாதபடியால்‌ உயர்ந்த விசாரமான மீமாம்ஸை ஒன்றே வேதத்தின்‌ உட் பொருளை அறிய வழி யென்னும்‌ வகையில்‌ சாஸ்த்ர சங்கதி –

அதிலும்‌ கீழ்க் கூறிய பூர்வ மீமாம்ஸையால்‌ ஆராதனமான கர்மங்களை அறிந்து நிலையான ஆராத்யனான எம்பிரானை அறிய முற்படுவது பொருத்தமான வகையில்‌ ப்ரம்ஹ காண்டம்‌ வந்தபடியால்‌ காண்ட ஸங்கதி-இதிலுள்ள நான்கு அத்யாயங்களிலும்‌ முதலிரண்டும்‌ ஸித்த த்விகம்‌-*என்று முள” எம்பிரானைப் பற்றியது. மேலுள்ள இரண்டு. அத்யாயங்களும்‌ அவனை யடையவும் அடைவதாலுள்ள பயனையும்‌ விளக்கப் புகுந்தன, ஆகவே ஸித்தமான எம்பிரானைப் பற்றிய முற் பகுதியுடன்‌ சேர்ந்தது என்ற வகையில்‌ த்விக ஸங்கதி-வேதத்தில்‌ உள்ள பரமாத்மாவைப் பற்றிய எப் பகுதியிலும்‌—உலகின்‌ படைப்பு-அளிப்பு — அழிப்பு முதலானவை எவ்விதம்‌–எந்தப்‌ பெயரில்‌ கூறப்பட்டிருப்பினும்‌ அவை யாவும்‌ ”நாராயணன்‌ பரன்‌” எனப்பட்ட எம்பெருமானைப் பற்றியதாகவே முடியும்‌ என்பதாய்‌ காரண வாக்யங்கள்‌ யாவும்‌ உட்பொருளை நோக்கி துணிந்தபடி. எம்பிரானிடமே ஒரு மிடறாய்‌ நிலை கொண்டன-என்றபடி. முடிவுக்கு வருவது எனப்பட்ட முதல்‌ அத்யாயம்‌. இதர மதங்களால்‌ கூறப்படும்‌ உலகயியல்பு-ஸ்ருஷ்டி முதலானவை பொருந்தாது எனக்‌ காரணங்களைக் காட்டி இதை நிலை நிறுத்துவது இரண்‌டாவது அவிரோத அத்யாயம் எனப்பட்டது. இத்தகைய எம்பிரானை அடைந்து உஜ்ஜீவிப்பது’ எங்ஙனம்‌ என்ற போது -அவனைப்பெற வழிகளை வகுத்தது உபாசனம் எனப்பட்ட மூன்றாவது அத்யாயம்‌. அவனை அடைந்து பெறும்‌ பலன்‌ வேண்டும்‌ பெரும் பயன்‌ வீடு! என்று கூறப்பட்டதை விளக்கப் புகுந்தது பல அத்யாயம் என்ற நான்காவது. ஆக இவ்விதம்‌ நான்கு உட்பிரிவான வேதாந்த சாஸ்த்ரத்திரத்தில் —ஸித்த த்விகத்தில்‌ ‘*ப்ரம்ஹமே ஜகத்‌ காரணம்‌’” என நிலை நிறுத்த ஏற்பட்ட முதலத்யாயத்தில்‌ உள்ளதால்‌ இந்த பாதத்திற்கு அத்யாயஸங்கதி.

முதலத்யாயத்தில்‌ உள்ள நான்கு பாதங்களிலும்‌ முதல் பாதம்‌ ஒரு வகுப்பாயும்‌,’ மற்றைய மூன்று பாதங்களும்‌ ஒரு வகுப்பாயும்‌ ஓர்‌ உட் பிரிவு உண்டு. எப்படி ? எனில்‌-ப்ரஹ்மத்திற்கு உலக ஸ்ருஷ்டி முதலிய வேலைகளில்‌ ஸம்பந்தமில்லை–என்ற அயோகத்தைத்‌ தடுக்க வந்தது முதல் பாதம்‌– ப்ரம்ஹம்‌ தவிர ப்ரதானமோ–ஜீவர்களோ உலகிற்குக்‌ காரணமா யிருக்க முடியாது என்ற அந்யயோக வ்யவச்சேதம்‌ என்னப்பட்ட நிலையை விளக்க முற்பட்டது மேல்‌ மூன்று பாதங்கள்‌-இதிலும்‌ நான்கு பாதங்களில்‌–நன்றாய்‌ முற்றிலும்‌ விளங்காத சொற்களை ப்ரஹ்ம பரமாய்‌ யோஜிக்க ஏற்பட்டது முதற் பாதம்‌, விளங்கியும்‌ விளங்காமலும்‌ ஸிதாஸிதமாய்‌ உள்ள காரண வாக்யங்களை விசாரிக்கப்‌ புகுந்தது இரண்டாம் பாதம்‌. ஸ்பஷ்டமாய்‌ ஜீவனையே உலகின்‌ காரணமாய்‌ கூற வந்த வாக்யங்களை விசாரிக்கப்‌ புகுந்தது இரண்டாம்‌ பாதம்‌. ஸ்பஷ்டமாய்‌ ஜீவனையே உலகின்‌ காரணமாய்‌ கூற வந்த வாக்யங்களை விசாரிக்க முற்படுவது மூன்றாம் பாதம்‌. ஜீவனையோ, ப்ரதானம்‌ எனப்பட்ட அசேதநமான மூல ப்ரக்ருதியையோ உள்ளிட்டுச்‌ சொல்வதைப் போன்ற ஜகத் காரண வாக்கியங்களைப் பற்றி விசாரிக்க ஏற்பட்டது நான்காம் பாதம்‌, இது பாஷ்யத்தில்‌ ஸ்பஷ்டமாய்‌ கூறப்பட்டது –

அஸ்பஷ்ட என்ற சொல்லால்‌- ப்ரஹ்மத்தைப் பற்றி ஸ்பஷ்டமாயில்லாத வாக்யங்‌களால்‌!” என்று பொருள்‌ கொண்டார்‌ சங்கரர்‌. நம்‌ எம்பெருமானார்‌ ஜீவனைப் பற்றி காரண வாக்யங்களில்‌ ஸ்பஷ்டமாயில்லை என்று கொண்டு காரண வாக்யங்களுக்கு விளக்கம்‌ கூறினார்‌. இதுவல்லவோ நம்‌ தர்சனத்திற்கு உள்ள ஏற்றம்‌ ! ஸூத்ரகாரரும்‌ பிற்பாடு இதே கருத்தை யல்லவா வெட்டெனப்‌ பணித்து ஜீவனைக்‌ காரண வாக்யங்களிலே கூறப்பட்டதாக ஒரு கல்பனையாய்‌ கொள்வதையே மறுத்துள்ளாரல்லவா ? ஸ்ருத ப்ரகாசிகையில்‌ இது விளக்கிக்‌ கூறப்பட்டுள்ளது
ஆக இந்த இரண்டாம்‌ பாதத்தில்‌, காரண வாக்யங்களில்‌ சில ஜீவனைப் பற்றியதாய்‌ உள்ளனவே எனக்‌ கொள்ளக் கூடாது. ஜீவனைப் பற்றியதாய்‌ அஸ்பஷ்டமாகவே மேற்படி வாக்யங்களில்‌ உள்ளபடியால்‌ எனப்‌ பொதுப்படையாய்‌ கூற முற்பட்டார்‌ என ஸங்கதி--இனி உட்பிரிவை நோக்குவோம்‌. இந்த பாதத்தில்‌ மொத்தம்‌ ஆறு அதிகரணங்கள்‌, இவற்றில்‌ முதல்‌ மூன்றில்‌ எம்பெருமான்‌ மிகக்‌ குறுகிய இடத்தில்‌ – அதாவது ஹ்ருதயத்‌திலும்‌, ஹ்ருதய குஹையிலும்‌, கண்ணிலும்‌ என்றபடி உபாஸிக்க வேண்டியவனாய்‌ கூறப்‌ பட்ட வேத வாக்ய விசாரம்‌ உள்ளது. மேல்‌ மூன்று அதிகரணங்களில்‌ ‘“எங்கும்‌ பரந்துளன்‌-என்றருளிச் செய்யப் பட்ட வகையில்‌ ஸர்வ வ்யாபியாகக்‌ கூறும்‌ வேத வாக்ய விசாரம்‌ செய்யப்பட்டது. ஆகக் கூடி ஆறு அதிகரணங்களாலும்‌ சேதனாசேதன வர்கமிரண்டும்‌ எம்பெருமானுக்கு உடலாயமைந்தன என்பதாய்‌ இந்த இரண்டாம் பாதத்தில்‌ எம்பிரான்‌ நிலை தெளிவிக்கப்பட்டது, ஆக முதலில்‌ உள்ளதும்‌, பிற்பகுதியுமாய்‌ இந்த பாதத்தில்‌ இரண்டு பேடிகைகள்‌. (உட் பிரிவுகள்‌)-இதில்‌ ஸ்வல்ப ஸ்தானததில்‌ உபாஸிக்கும்படி கூறிய வேத வாக்ய விசாரமான முதல்‌ பேடிகையில்‌ உள்ளபடியால்‌ முதல்‌ அதிகரணமான ஸர்வத்ர ப்ரஸித் யதிகரணத்திற்கு பேடிகா ஸங்கதி-முதல்பாதத்தில்‌ கடைசீ அதிகரணமான இந்த்ர ப்ராணாதிகரணத்தில்‌–‘இந்த்ரனைச்‌ சுட்டிக் காட்டும்‌ முதல்‌ வாக்யம்‌ எடுபடாது; மஹா வாக்யத்தில்‌ கடைசியில்‌ பரமாத்மாவைப்‌ பற்றியே இருப்பதால்‌, அத்தகைய பரமாத்ம லக்ஷணம்‌ ஜீவனான இந்த்ரனுக்குச்‌ சேராத படியால்‌ என்று முடிவு கூறப்பட்டது-இங்கு இந்த ஸர்வத்ர ப்ரஸித்யதிகரணத்தில்‌ விஷயவாக்யம்‌ சாந்தோக்யத்திலுள்ள சாண்டில்ய வித்யை. இதில்‌ ப்ராண மய: –இவ்வுலகம்‌ எங்கு கிளம்பி, காப்புண்டு, அழியுமோ– அவன்‌ ப்ராண ஸ்வரூபன்‌—எனக்‌ கூறப்பட்டுள்ளது. ப்ராணனைக் கொண்டு உயிர்வாழ்பவன்‌ ஜீவனான படியால்‌– பரமாத்மாவுக்கு இது சேராத படியால்‌ சாண்டில்ய வித்யையில்‌ கூறப்பட்டவன்‌, ப்ரதர்தன வித்யையில்‌ என்னப்பட்ட ஜீவனே–என ஆஷேபிப்பதால்‌ ஆக்ஷேப ஸங்கதி, முன்‌ அதிகரணத்தில்‌ மனுஷ்யர்களுக்கு ஹித தமம்‌ பரம புருஷோபாஸனமே என்று முடிவு கண்டது. அந்த ஹித தமம்‌ இங்கு விளக்கி தத் க்ரது ந்யாயம்‌ என்னப்பட்டபடி உபாஸிக்கும்‌ விதம்‌ விளக்கப்படுகிறது என்றும்‌ கூறலாம்‌ என சிந்தாமணியில் விளக்கம்

இனி முதலதிகரணம்‌-இது ஸர்வத்ர ப்ரஸித்யதிகரணம்‌ எனப்படும்‌. சாண்டில்ய வித்யையில்‌ – உபாஸனத்தை செய்யச்‌ சொல்லி, அந்த உபாஸகனுக்கு இலக்கணம்‌ வகுக்கும் போது–மனதைக் கொண்டு எண்ணுபவன்‌, பிராணனையும்‌, சரீரத்தையும்‌ கொண்‌டு நடப்பவன்‌ முதலான தன்மைகள்‌ பிரம்ஹத்திற்கு ஏற்காது. ஏனெனில்‌ பிரம்ஹத்திற்கு பிராணனைக் கொண்டும்‌, மனதைக் கொண்டும்‌ தேவை யில்லை எனச்‌ சொல்லப் பட்டுள்ளது. முதல்‌ வாக்யத்தில்‌ கூறிய ப்ரம்ஹத்தைக் கொண்டு இங்கு சேர்க்க முடியாது. ஏனெனில்‌ பிரம்ஹத்தைப் பற்றிய வாக்யம்‌ முன்னதோடு முடிந்து விட்டது. ஆகவே இந்த வித்யையில்‌ சொல்லப்பட்டது ஜீவனே–என பூர்வ பூக்ஷம்‌. ‘இங்கு ஸித்தாந்தமாவது–மநோ மயன் என்றது –பரிசுத்தமான மனதாலேயே . உபாஸிக்கத் தக்கவன்‌ எனப்‌ பொருளைக் கொண்ட – எல்லா வேதாந்தங்களிலும்‌ இதையே- வேறு விதமாய்‌ ப்ரஸித்தமாய்‌ உபதேசம்‌ செய்யப் பட்டிருப்பதால்‌ மநோ மயன்‌ பிரஹ்மமே. – மேலும்‌ எம்பெருமானை ப்ராணன்களைக் கொண்டு ஜீவனுக்கு ப்ரேரகனா யிருப்பதாய்‌ தெரிவிப்பதாலும்‌, கீழ்‌ ப்ராணாதிகரணத்தில்‌ முடிவுக்கு வந்தபடி ப்ராண சப்தம்‌ ப்ரம்ஹத்தைச்‌ சொல்வதில்‌ ஏதும்‌ தடையில்லாத படியால்‌ இங்கும்‌ அவ்விதமே என்றது ப்ரம்ஹத்தையே, மேலும்‌ முதலிலும் முடிவிலும் இந்த வித்யையில்‌ சொல்லப்பட்டது ப்ரம்ஹமே எனத்‌ தேறியது- ஜீவனைப் போல்‌ ப்ரம்ஹம்‌ ப்ராணனைக் கொண்டு உயிர்‌ வாழ்வதில்லை என்பதைத்‌ தெரிவிக்க வந்ததே யன்றி ப்ராணனையும்‌ கட்டுப்படுத்தும்‌ சக்தி உண்டு ப்ரம்ஹத்திற்கு என்பதை இது தடுக்காது என ஸித்தாந்தம்‌–

பிரம்ஹத்தினின்றும்‌ உலகு உண்டாகி, அவரால்‌ காக்கப் பெற்று, அவரில்‌ அடங்குவதால்‌ இந்த உலகம்‌ முழுவதும்‌ பிரம்ஹம்‌ எனக் கொண்டு உபாஸிக்க வேண்டும்‌ என இந்த வாக்யத்திற்குப்‌ பொருள் -இங்கு ஆக்ஷேபம்‌–இங்கு ஜீவனையே கொள்ளவேண்டும்‌. ஏனெனில்‌ சரீரத்தோடு அப்போது தான்‌ சேர்ந்து படிக்கப்பட்டது என்பது பொருந்தும்‌. அனேக ஜூகுப்ஸிதமான நிலைகளைக் கொண்ட இந்த உலகிற்கு ப்ரம்ஹத்வம் கூடாது அல்லவா ?ப்ரம்ஹ சப்தம்‌ சில இடங்களிலே ஜீவனையே குறிப்பதாய்‌ நாம்‌ கொண்டுள்ளபடி இங்கும்‌ கொள்ளத் தகும்‌, ஜீவனுக்கு கர்மாதீனமாய்‌ எல்லா வகைத்‌ தோற்றமும்‌ கூடுமானபடியால் ஜீவனைச்‌ சொல்லத்‌ தடை ஏதுமில்லை என பூர்வபஷம் –
ஸித்தாந்தம்‌
-ஸர்வ சப்தத்தைச்‌ சொல்லி குறிக்கப்பட்ட உலகில்‌ ப்ரம்ஹ சப்தத்தோடு சேர்ந்து ப்ரம்ஹாத்மகமாய்‌ சொல்லப்பட்டது ஜீவனல்ல, பரம் பொருளே. பிரம்ஹத்திற்கு மட்டும்‌ சேரும்‌ உலகைப்‌ படைத் தளித் தழிப்பதாகிய செயல்களைக் குறிக்கும்‌ என்ற காரணத்தை உபாஸித்தமாய்‌ இங்கும்‌ சொன்னபடியால்‌– ஆயினும்‌ உலகிலுள்ள தோஷங்கள்‌ ப்ரம்ஹத்திற்குச்‌ சேராது. ஏனெனில்‌ விசேஷணங்களில்‌ உள்ள தோஷங்கள்‌—உடலிலுள்ள வியாதிகள்‌ ஆத்மாவைச்‌ சேராதது போல்‌–பரமாத்மாவிற்குச்‌ சேராது. ஜீவர்கள்‌ ஒவ்வோருடலிலும்‌ வெவ்வேறானவர்களாகையால்‌ ஜீவனை இங்கு கொள்ளத் தகாது. முக்தனானபிறகும்‌ உலகோடு தாதாத்ம்யம்‌ அதாவது உலகைச்‌ சரீரமாய. உடைய நிலை கூடாது. உலக ஸ்ருஷ்டியில்‌ ஜீவனுக்கு ஸம்பந்தமில்லை என மேல்‌ கடைசி அதிகரணத்தில்‌ தெளிவாகக்‌ கூறப்பட்டுள்ளது. ஜீவன்‌ கர்மங்களை யடி யொற்றி உலகப் படைப்பு ஏற்பட்டபடியால்‌ ஜீவனுக்கு ஜகத் காரணத்வம்‌ உண்டு என்ற வாதம்‌ எடுபடாது. ஏனெனில்‌–ஜீவன்‌ கர்மங்கள்‌ காரணமாயினும்‌ அதை யனுசரித்து பலனளிப்பவன்‌ எம்பெருமானே. பலபல விதைகளில்‌ குணங்கள்‌ மாறாமல்‌ செடிகள்‌ வளர்ந்து அதே தன்மை யுடனிருந்தாலும்‌–விதைகள்‌ வளர ஜலம்‌ எப்படித்‌ தேவையோ–அப்படி ஜீவ கர்மங்கள்‌ பலனைக் கொடுக்க எம்பெருமான்‌ தேவை –

ஒளி பொருந்திய திருமேனி படைத்தவன்‌. ”சுடரொளி“” அன்றோ :–தடையற்ற திருவுள்ள முள்ளவன்‌-ஆகாயம் போல்‌ ஸூக்ஷ்மமானதும்‌ நிர்மலமானதுமான திருமேனி உள்ளவன்‌ -நன்‌கு ப்ரகாசித்து, அண்டினவர்களையும்‌ ப்ரகாசிக்கும்படிச்‌ செய்பவன்‌. எல்லா உலகையும்‌ படைப்பவன்‌. உலகிலுள்ள எல்லா வகைச்‌ செயல்களுக்கும நேரிடையாகவே மறைமுகமாகவோ இவரே காரணம்‌-புண்யமான எல்லா வகை வாஸனையுமுள்ளவர்‌-துர்கந்தத்தை எம்பிரானிடம்‌ இல்லை எனக்‌ கூறியுள்ளபடியால்‌ நல் வாஸனைகள்‌ மட்டுமே இங்கு என்று கொள்ள வேண்டும்‌-கீழ்க்‌ கூறிய எல்லா வகை ரூப ரஸாதி குணங்களையும்‌ பெற்றவர்‌–இவ்விதம்‌ இந்த வித்யையில்‌ பணிக்கப் பெற்ற குணங்களில்‌ ஒன்றும்‌ ஜீவனிடம்‌ சேராத படியாலும்‌ ஜீவனைப் பற்றியதல்ல இந்த ப்ரகரணம்‌–ஸம்ஸாரத்தில்‌ * பல செய்வினை வன் கயிற்றால்‌ திண்ண மழுந்தக் கட்டிய பத்த ஜீவனுக்கோ, முக்தனாய்‌ அணு மாத்ரனாய்‌ ஜகத் ஸ்ருஷ்டி முதலான வற்றில்‌ துளியும்‌-ஸம்பந்தம்‌ பெறாத ஜீவனுக்கு இவை ஒட்டாது ஆகவே ஜீவன்‌ இங்கு கூறப்படவில்லை.–இங்கு நின்றும்‌ கிளம்பி ப்ரம்ஹத்தை அடைந்தவனாகப்‌ போகிறேன்‌ என்று அடைபவனையும்‌, அடையப்படும்‌ பரம்ஹத்தைப் புற்றியும்‌ தனித்‌ தனியாய்‌ கூறியபடியால்‌ ஜீவனல்லன்‌-என்‌ ஹ்ருதயத்துள்ளே ப்ரம்ஹம்‌ உள்ளது என்ற கருத்தை உடைய என்று ஆறாம்‌ வேற்றுமையால்‌ ஜீவனும்‌, உபாஸிக்கப்படும்‌ பரமாத்மா ப்ரதமா விபக்தியாலும்‌ கூறப்பட்டபடியாலும்‌, ஜீவனுக்கு இந்த வித்யையில்‌ உபாஸிக்கப்படும்‌ நிலையில்லை. இதே போல்‌ ஸமானமான ப்ருஹதாரண்யகோபநிஷத்‌திலும்‌ சாண்டில்யவித்யையில்‌ ஜீவன்‌ ஏழாம்‌ வேற்றுமையாலும்‌ சொல்லப் பட்டிருப்பதையும்‌ கவனிக்க வேண்டும்‌. ஆகவே இங்கு ப்ரஹ்மமே உபாஸ்யம்‌-பகவத் கீதை முதலான ஸ்ம்ருதிகள் முதலான இடங்களில்‌ ஜீவனையும்‌, உபாஸ்யமான ப்ரம்ஹத்தையும்‌ வெவ்வேறாகக் கூறிய படியாலும்‌ உபாஸ்யம்‌ ப்ரஹ்மமே.

இந்த ப்ரம்ஹம்‌ அணு பரிமாணத்துடன் ஹ்ருதய குஹையிலுள்ளது -நெல்லையும்‌, யவ தான்யத்தையும்‌, சாமையையும்‌ சாமை யரிசியையும் விட சிறியது என்றவாறு—சிறிய இடத்தில்‌ உள்ளதாய்‌ கூறப்‌, பட்டதல்லவா? ஆகவே இந்த நிலை அணுவான ஜீவனுக்கே அன்றோ தகும்‌? என்னில் –இந்த வித்யையில்‌ அணுவாக உபாஸிப்பதைப் பற்றியது- அணுவாயினும்‌ பெருமை பொருந்தியவன்‌ என்பதை விளக்க வந்ததாகும்‌. ஆகையாலேயே அவனது உண்மையான பரிமாணம்‌ (அளவு) மேல்‌ இங்கேயே புவி, ஆகாயம்‌, தேவருலகு, மற்றைய ஸகல லோகங்களைக் காட்டிலும்‌ அவன்‌ *’பெரியன்‌”‘ எனப்‌ பணிக்கப்பட்டது. இவ்வளவு பெருமை பொருக்திய பெரியவன்‌ ”சேயன்‌ அணியன்‌ ” என்ற வகையில்‌ பரம காருண்யத்தால்‌ நம்‌ ஹ்ருதயத்தில்‌ உபாஸிக்க வஸதியாய்‌ நித்ய வாஸம்‌ செய்தருள்‌கிறான்‌ என்று கூறி, இவ்விதம்‌ இவனை உள்ளபடி அறிந்து உபாஸித்தால்‌ அவனை நாம்‌ சென்றடையலாம்‌ என இங்கு விளக்கியுள்ளது, ஆகவே இது யாவும்‌ ஜீவனாகில்‌ பொருந்தாது-ஆனால்‌ நம்‌ ஹ்ருதயத்தில்‌ உள்ளே நம்மைப் போல்‌ அவனுமிருப்பதானால்‌ நாம்‌ கர்ம பலன்களை அனுபவிப்பது போல்‌ அவனும்‌ அனுபவிக்க நேரிடுமே? இது வேதாந்தங்‌களும்‌ ஆன்றோரும்‌ இசையாத தன்றோ? எனக்‌ கேள்வி வர—அதற்கும்‌ பதில்‌ உண்டு-சரீரத்தில்‌ உள்ளே இருப்பது மட்டிலும்‌ வினைப் பயனை அனுபவிக்கவே எனக்‌ கொள்ள முடியாது. கர்மங்களை செய்பவனே வினைப் பயனை அனுபவிக்க ஏற்பட்டவன் – இந்த சரீரத்தை ஓர்‌ மரம்‌ போலவும்‌, உள்ளே உள்ள ஜீவனையும்‌, எம்பிரானையும்‌ பறவைகளைப்‌ போலவும்‌, வினைப் பயனை பழமாகவும்‌ உருவகப் படுத்தி, பழத்தை உண்ணும்‌ ஜீவனையும்‌, உண்ணாது பார்த்துக்‌ கொண்டு இருக்கும் எம்பெருமானையும்‌ சொல்லிய படியால்‌ வினைப் பயனாலான தோஷங்கள்‌ பரமாத்மாவுக்குச்‌ சேரா என்றது தரும்‌. ஆக சாண்டில்ய வித்தையில்‌ சொன்னது பரமாத்மாவே-என்று நிரூபிதமாயிற்று –

இனி அந்தாரதிகரணம்‌–கீழ்‌ ப்ரஹ்மம்‌ கர்ம பலன்களை அனுபவிப்பது கிடையாது–என முடிக்கப் பெற்றது. அப்படியானால்‌ கடவல்லியில்‌ எந்த ப்ரம்ஹத்திற்கு ப்ரம்ஹ க்ஷத்ரஙகள்‌ உணவாகிறதோ-யமனும்‌ உபஸேசனம்‌ (ஊறுகாய் போல்‌ தொட்டுக் கொள்ளும்‌ பொருளாய்‌)–ஆகிறானோ-அவனை உள்ளபடி அறிவார்‌ யார்‌? என்ற மந்த்ரத்தில்‌ ஸ்பஷ்டமாய்‌ உலகையே உணவருந்தியவனாய்‌ கூறப்பட்டவன்‌ ஜீவனே ஆக வேண்டும்‌ என்று ஆக்ஷேப சங்கதி -கடவல்லி மர்த்ரத்தில்‌ – காட்டப் பெற்ற இந்த உலகம்‌ முழுவதும்‌ எவனுக்கு உணவோ–யமனும்‌ உபஸேசன மாகிறானோ அவன்‌ ஜீவன்‌ அல்லன்‌. -: ஏனெனில்‌ அசைபவை, அசையாதவை என்ற யாவற்றையும் உண்பது ஜீவனால்‌ இயலாது. அவன்‌ கட்டாயம்‌ உலகமுண்ட பெரு வாயனான *” விஷ்ணுவே; இந்த: உண்பது வினைப் பயனை அனுபவிப்பது அன்று. உண்பதாவது– உலகு யாவும்‌ எம்பிரான்‌ உடலில்‌ அடங்குவது. –யமனையும்‌- தொட்டுக் கொண்டு உண்‌பதாவது -உலகில்‌ யம வசம்‌ அடையாதவரில்லை-கீதையில்‌ கண்ணன்‌ அருளியபடி காலனையும்‌ எரிக்கும்‌ காலனான எம்பெருமான்‌ உள்ள நிலை விளக்கி இந்த விதம்‌ எம்பிரானை உபாஸிப்பவன்‌ அவனது நிலையான ஸ்தானமான ஸ்ரீவைகுண்டத்தை யடைகிறான்‌ என்று கூறி முடித்தது –
மேலும்‌ இந்த உபநிஷத்தில்‌ கீழும்‌ மேலும்‌ உள்ள ப்ரகரணத்தில்‌ பரமாத்மாவே கூறப்பட்டார்‌– இப்படி ‘உலகமுண்ட பெருவாய”னான மஹானான பரமாத்வாவைத் தியானிக்கும்‌ தீரன்‌ மீண்டும்‌ சோக ஹேதுவான ஸம்ஸாரத்திற்கு வருவதில்லை என்று கூறி, இத்தகைய எம்பெருமான்‌ வேதாத்யயன அத்யாபன ப்ரவசனங்களால்‌ அடைய முடியாதவன்‌, என்பதாய்‌ – எவன்‌ அவனுக்கு அத்யந்தம்‌ ப்ரிய தமனோே அவனுக்கு மட்டும்‌ எம்பெருமான்‌ தமது முழு ஸ்வரூபத்தையும்‌ காட்டி யருள் பாலிக்கிறான்‌ – ஆகவே முன்பின்‌ ஸந்தர்பம்‌ ‘முழுவதும்‌ ஜீவனுக்குச்‌ சேராது. ஆகையாலும்‌ இங்கு பரமாத்மாவே கூறப்பட்டான்‌.

இதற்கு மேல்‌ ஓர்‌ வினா –இந்த ப்ரகரணத்தில்‌ மேல்‌ ஓர்‌ வாக்யம்‌ உண்டு, இதில்‌ தான்‌ பண்ணிய புண்யம்‌ முதலானவற்றின்‌ பலன்களை அனுபவித்துக் கொண்டு ஹ்ருதய குஹையில்‌ உள்ளே இருவர்‌ வெளிச்சமும்‌ நிழலும் போலுள்ளனர்‌–என்ற பொருளுள்ள மந்த்ரம்‌ உண்டு. -ஆகவே இங்கு ருதபானமாவது–கர்ம பலன்களை அனுபவிப்பதே. அது இருவருக்கும்‌ உண்டு எனத்‌ தேறுகிறபடியால்‌–அவ் விருவர்‌ யார்‌? என ஆராய்ந்தால்‌ ஜீவனும்‌, ஜீவனுக்கு ஸாதனமாய்‌ அமைந்த அறிவோ, அல்லது ப்ராணனோ என்றே கூற வேண்டும்‌. ஆகவே ப்ரம்ஹத்தைப் பற்றியது இந்த ப்ரகரணம்‌–என்பது பொருந்தாது–என்‌று -இதற்குப் பதில்‌-.ஜீவனையும்‌ பரமாத்மாவையுமே இங்கு உபநிஷத்‌ கூறியது. நிழலும் ஒளியும் என்றது. உருவகம்‌ மட்டுமல்லாமல்‌ ஸ்வயம்‌ ப்ரகாசம்‌ குன்றாத படியால் பரமாத்மாவை ஆதப சப்தத்தாலும்‌, கர்ம பலன்களை அனுபவித்து – உருவியந்த நிலை-யிலுள்ளபடியால்‌ ஜீவனை நிழலைப் போலவும் கூறியதாம்‌. ஆகவே ஹ்ருதய குஹையில்‌ நுழைந்திருப்பவர் ஜீவனும் பரனுமே – கர்ம பலங்களை அன்னமாய்‌ உட் கொள்வதால்‌ ஜீவனைக்‌ காரணப் பெயராயும்‌ கூறிற்று- புலன்‌ வழியாய்‌ அற்ப சாரங்களைச்‌ சுவைப்பவன்‌. ஆகவே குஹையில் இருப்பவர்‌ ஜீவனும்‌ பரமாத்மாவுமே- இருவரையும்‌ கர்ம பலங்களை அனுபவிப்பதாய்‌ கூறியது எப்படி ? என்னில்‌, குடை பிடித்துச்‌ செல்லும்‌ நபருடன்‌ அக்‌ குடையில்‌ அண்டிச் செல்பவரையும்‌–குடை பிடிக்காமல்‌ செல்லும் போதும்‌ கூட (குடை பிடித்துச்‌ செல்கின்றவர்கள்‌) என்று சொல்வது போல்‌ இப்படியும்‌ வழக்கு உண்டே–

மேலும்‌ இந்த கடவல்லி ஜீவனையும்‌ பரனையும்‌ பற்றியே அடி முதல்‌ கூறுகிறது. அறிவை தேரோட்டியாய்‌ கொண்டு மனதைக்‌ கடிவாளமாக்கி எவன்‌ செல்கிறானோ அவன்‌ ஸம்ஸாரத்தின்‌ அக்கரையாகிய விஷ்ணுவின்‌ பரம பதத்தை யடைகிறான்‌ என்றது முதலியன வாக்யங்களால்‌ பரனும்‌ ப்ரம்ஹத்தினின்று உண்டாகி அறிவாளியான ஜீவனையும்‌ கூறுகிறது-இடையில்‌ ஓர்‌ கேள்வி–நசிகேதஸ்‌ யமனிடம்‌ வரம்‌ கேட்கும் போது, இந்த உடலை விட்டு ஜீவன்‌ வெளியேறியதும்‌, ஜீவன்‌ உண்டென்று சிலரும்‌. இல்லை என்று சிலரும்‌ கூறினர்‌. இதன்‌ உண்மை என்ன? என்று விளக்கவும்‌. இதுவே எனது மூன்றாம்‌ வரன்‌-எனபதாய்‌ உள்ளது. ஆகவே ஜீவனைப் பற்றிய தன்றோ முழு ப்ரகரணமும்‌ என்று. இதற்கு விடையாய்‌ ஸ்ரீபாஷ்யத்தில்‌ முழு உபநிஷத்தின்‌ பொருளும்‌ விளக்கமாய்‌ சுருங்கப்‌ பணிக்‌கப்பட்டது. ஜீவனுக்கு மோக்ஷ விஷயத்தில்‌ பல மத வேறுபாடுகள்‌ பண்டை நாட்களாய்‌ உண்டு. இதன்‌ உண்மை நிலை என்னை *? எது மோக்ஷம்‌ ? என்றே மூன்றாவது வரத்தின்‌ உட்பொருள்‌ என்பது- ஆகவே ஜீவனது நிலையை முதலில்‌ விளக்கி, பரமாத்ம ஸ்வரூபத்தைப்‌ பிறகு கூறி அவன்‌ உலகைப்‌ படைத்து காதது அழிப்பதைச்‌ சொல்லி அவனைத்‌ தியானம்‌ செய்வதே வழி என்பதைக் கூறி முடித்தபடியால்‌ ஜீவனை முன்னிட்டு பரமாத்மாவின்‌ ஸ்வரூப ஸ்வபாவ மோக்ஷ ப்ரதத்வங்களை விளக்க வந்ததே இந்த ப்ரகரணம்‌ என்று முடிந்தது. ஆகவே இங்கும்‌ ஜீவனுக்கு ஜகத் காரணத்வமோ மற்றைய பெருமையோ இல்லை என்று ஏற்பட்டது:–

அந்தராதிகரணம்‌–3–எம்பெருமானை எளிதில்‌ காண முடியாது என்று கூறப்பட்டது. ஆனால்‌ சாந்தோக்யத்தில்‌ ஸுலபமாய்‌ காணவாகும்படி. கண்களில்‌ காணப்படுபவனே பரமாத்மா–என்றபடி உள்ளதால்‌ இவள்‌ பரமாத்‌மாவாக முடியாது என்று ஆக்ஷேபித்து மேல்‌ அதிகரணம்‌ வந்தது–சாந்தோக்யத்தில்‌ அஷி புருஷ வித்யையிலுள்ளது. இதோ கண்ணில்‌ ஓர்‌ புருஷன்‌ தென்படுகிறானே இவனே ஆத்மா, இவன்‌ அழிவற்றவன்‌. இவனை யண்டினாலேயே அபயம்‌ (மோக்ஷம்‌). இவனே ப்ரம்ஹம்‌ என இதன்‌ பொருள்‌. இவ்விதம்‌ கூறப்பட்டவன்‌-1-கண்களில்‌ ப்ரதி பிம்பமாய்‌ தெரியுமதா ? -2-கண்களுக்கு அதிஷ்டான தேவதையா -3-அல்லது ஜீவனோ? -4-அல்லது பரமாத்வா என நான்கு வகையாய்‌ ஸந்தேஹம்‌.-மிக ப்ரஸித்தமாய்‌ கூறிய படியாய்‌ ப்ரதி பிம்பமாய் தான்‌ இருக்க வேண்டும்‌. பிரதி பிம்பம்‌ தானே தெரிகிறது ? இது எப்படிப்‌ பொருந்தும்‌? அசேதநமான ப்ரதி பிம்பத்திற்கு வாமனீத்வம்‌ முதலியன—இஷ்டப்பட்டதை வழங்கும்‌ திறமை உண்டோ? என்ன வேண்டரம்‌. கண்ணாடியைக்‌ கண்டால்‌ மங்களம்‌ உண்டாகும்‌ என்றதைப் போல்‌ இங்கும்‌ கொள்ளலாம்‌. அதிகரண ஸாராவளியில்‌ இது ஸ்பஷ்டம்‌, அல்லது கண்ணைத்‌ திறந்து பார்த்து ஜீவனுள்ளானா ? சென்று விட்டானா ? (இறந்து விட்டானா?) என்பதாய்‌ உலகில்‌ அறிவதால்‌ ஜீவனாகவே இருக்கக் கூடும்‌ என்பது அடுத்த பக்ஷம்‌- கண்களில்‌ ஒளி மூலம்‌ அபிமானி தேவன்‌ நிலை நின்றான்‌–என்றல்லவோ ப்ருஹதாரண்யகத்திலும்‌ உள்ளது, ஆகவே இவைகளில்‌ ஏதேனுமாகக்‌ கூடும்‌. எப்படியும்‌ ப்ரஹ்மம்‌ அன்று என்று பூர்வ பக்ஷம்‌-
ஸித்தாந்தம்‌–மேல்‌ வாக்யத்தில்‌ இவன்‌ அம்ருதமானவன்‌. இவனை பிரஹ்மம்‌ என்பர்‌, இவனை மங்களங்கள்‌ வந்தடைந்தன. இவன்‌ அழகானவன்‌. இவன்‌ ஒளி பொருந்தியவன்‌: இவன்‌ எல்லா உலகிலும்‌ ஒளி வீசுகிறான்‌–முதலான குணங்கள்‌ சொல்‌லப்பட்டன. இவையாவும்‌ கீழ்க் கூறிப ப்ரதி பந்தத்திற்கோ, அதிஷ்டான தேவதைக்கோ, ஜீவனுக்கோ ஒரு போதும்‌ சேரா. இவை எம்பெருமானுக்கே ஏற்பட்ட இன்றி யமையாத குணங்கள்‌-
-மேலும்‌ அந்தர்யாமி ப்ராம்ஹணத்தில்‌ கண்‌ முதலான இடங்களில்‌ இருந்து கொண்டு அவைகளை ஆட்டிப் படைத்து அவைகளால்‌ அறிய முடியாமல்‌, அங்கு நிலையா யிருப்பதால்‌ ஏற்படும்‌ தோஷம்‌ முதலியன அண்டாமல்‌ இருப்பவன்‌ அந்தர்யாமியான எம்பெருமானே என்று கூறப்பட்டது, ஆதலாலும்‌ இங்கு கண்களில்‌ உள்ளவன் அந்தர்யாமியான பரமாத்மாவே. ”இதோ காணப்படுகிறான்‌”” என்‌று கூறியது–யோகிகளால்‌ எப்போதும் காணப்படுகிற படியால்‌, இங்கும்‌ உபாஸகனுக்கு காணக் கிடைக்கவாகும்‌ என்பதைக்‌ காட்ட இங்ஙனம்‌ கூறியது-மேலும்‌ ஸூகத்தின்‌ தன்மையுடன்‌ கூடியவனாய்‌ உயாஸன ஸ்தானத்தை (கண்ணை) உடையவன்‌ என்ற காரணத்தாலும்‌ பரமாத்மாவே, இங்கு ஸூத்ரத்தில்‌ வேறு காரணம்‌ தேவை யில்லை என்று விளக்க வந்ததாம்‌-இதன் மேல்‌ ஒர்‌ கேள்வி எழுகிறது. இங்கு அக்னிகள்‌ உபகோஸலனுக்கு வித்யையை உபதேசிக்கத்‌ தொடங்கி ஆசார்யனிடம்‌ முறைப்படி உபதேசம்‌ பெற்றால் மட்டுமே வித்யை நிலை நிற்கும்‌ என்ற கருத்துடன்‌ ”மீதியையும்‌ அர்சிராதி கதியையும்‌ ஆசான்‌ உனக்கு உரைப்பர்‌’” என முடித்தன. ஆகவே அக்னி வித்யைக்கும்‌, உபகோஸல வித்யைக்கும்‌ இடையில்‌ தொடர்பு இல்லாத படியால்‌ இது எங்ஙனம்‌ பொருந்தும்‌ ? என்று-–

இதற்கு விடை: பல ஸ்ருதி இடையில்‌ இருந்தால்‌ வித்யைகள்‌ மாறுபடும்‌ எஸ்று எண்ண வேண்டாம்‌. அக்னி வித்யையின்‌: தொடர்ச்சியே உபகோஸல வித்மயை-வேதமே இதை விளக்கியது. இடையில்‌–பாபங்களைத்‌ தொலைக்கிறான்‌. ப்ரம்ஹ லோகத்தை அடைகிறான்‌. நிறையா யுனையும்‌ பெறுகிறான்‌, இவன்‌ கீழ்‌ ஸந்ததிகள்‌ அழிவதில்லை என்பது முதலான பலங்கள்‌ – பல வாக்யங்களில்‌ சொல்லப்பட்டன. இவை யெல்லாம்‌ ‘ நின்னையே தான் வேண்டி நீள் செல்வம்‌ வேண்டாதான்‌ தன்னையே தான்‌ வேண்டும்‌ செல்வம் போல்‌ ‘” என்று ஸ்ரீகுலசேகரப் பெருமாள்‌ அருளிச் செய்தபடி வித்யா மாஹாத்ம்யத்தால்‌ ஆனுஷங்கிகமாய்‌ மோஷ பலத்தோடு சேர்ந்து வரும்‌ இடைப்பட்ட பயன்களாகும்‌. இங்கு அக்னி வித்யை ப்ரஹ்ம வித்யைக்கு அங்கம்‌ பலன்களும்‌ அப்படியே-மேலும்‌—கீழ்‌ ப்ராணனுக்கு ஆதாரமாய்‌ ப்ரம்ஹத்தைக் கூறி, அது ஸுக ரூபமானது என பணித்து, நிறுத்தின அளவிலே உபகோஸலன்‌, ” இது விளங்கியது. ஸுகம்‌ ப்ரம்ஹமே என்பது அறிய முடிய வில்லை” என்று கேட்டபோது மேல் வாக்யம்‌ அதையே விளக்க வந்தது. ஆகவே விசிஷ்டமான படியாலே ஆகாச சப்தத்தால்‌ குறிப்பிடப்பட்டவர்‌ பிரம்ஹமே–மேலும்‌ உபநிஷத்தை முறைப்படி குரு முகமாய்‌ அத்யயனம்‌ செய்து ஆசான்‌ வாயிலாக உபாஸன மார்க்கத்தை அறிந்து உபாஸித்தவன்‌ அடையும்‌ மோக்ஷத்திற்குச்‌ செல்லும்‌ வழியான அர்ச்சிராதி மார்க்கம் இந்த வித்யையில்‌ பணிக்கப் பட்டபடியால்‌ இந்த வித்யையில்‌ அஷி – கண்ணுக்குள்ளே உபாஸிக்கு மிடமாய்‌ கொண்டவன்‌ பரமாத்மாவே-அமானவன்‌ அர்ச்சிராதி மார்க்கமாய்‌ உபாஸகர்களை ப்ரம்ஹத்தை (மோக்ஷத்திற்கு) சேர்ப்பிப்பதைக்‌ கூறி, இந்த வழியால்‌ சென்றவர்கள்‌ ”தேரார்‌ நிறை கதிரோன்‌ மண்டலத்தைக்‌ கீண்டு புக்கு!’ என்றும்‌ போயினார்‌ பின்னை இத் திசைக்‌ கென்றும்‌ பிணை கொடுக்கிலும்‌ போக வொட்டாரே ” என்றும்‌ அருளிச்‌ செய்தபடி மீண்டுமிங்கு திரும்புவதில்லை என்று: முடிப்‌ பதால்‌—இத்தகைய அர்ச்சிராதிகதி ஜீவாதிகளை உபாஸிப்பவருக்கு நேராத படியால்‌, இவ்‌ வித்யை பரமாத்மாவைப் பற்றியதே என முடித்தார்‌.

மேலும்‌, ப்ரதி பிம்பம்‌, ஜீவன்‌, அபிமானி தேவதை முதலானோர்‌ நிலையாய்‌ கண்ணில்‌ இருப்பது கூடாது. மேலும்‌ கீழ்‌ கூறிய அபய ஹேதுவாதல்‌, மோஷமளித்தல்‌, முதலான தன்மைகளில்‌ ஒன்றும்‌ இவைகளுக்கு ஏற்படாது: ஆகவே இவைகள்‌ இங்கு உபாஸ்பமாகக் குறிக்கப்பட வில்லை, பிம்பம்‌ உள்ள போதே ப்ரதி பிம்பமுணடு. ஜீவனும்‌ எல்லா இந்திரியங்களுக்கும்‌ வேர் போன்ற மனதில்‌ மட்டும்‌ நிலையாய்‌ தஙகுபவன்‌. கிரணங்களால் மட்டுமே அபிமானி தேவதை கண்ணிலிருப்பவன்‌. ஆகவே இது பர ப்ரம்ஹமே.

இப்படி கீழ்‌ மூன்றதிகரணங்களிலும்‌ அர்த்தம்‌ மாறுபடுவதால்‌ வாக்ய பேதம்‌ உண்டு என்று கொண்டு எழுந்த ஆக்ஷேபங்களை வாக்ய பேதம்‌ இல்லை, அர்த்தம்‌ ஒன்றே -முன் பின் வாக்கியங்களுக்கு என்று ஸ்தாபித்து விலக்கினார்‌. இவ் வகையில்‌ முதல் பேடிகை முடிந்தது-

அந்தர்யாம்யதிகரணம்‌–4 –-இப்படி கீழ்‌ மூன்றதிகரணங்களில்‌ முறையே எம் பெருமான்‌ ஸ்வாதீனமான எல்லாப்‌ பொருட்களின்‌ பிறப்பு–அளிப்பு–இறப்பை உடையவன்‌ என்றும்‌, ஆகவே ஸர்வம்‌ என்று கூறப்பட்டதாயும்‌ முதலில்‌ கூறி ப்ரளய காலத்தே யாவற்றையும்‌ விழுங்கி. உலகைக் காப்‌பவன்‌ என்று இரண்டாவதாய்‌ விளக்கி, கண்களில்‌ நித்ய வாஸம்‌ செய்பவன்‌ கண்ணன்‌ என்று மூன்றில்‌ கூறினார்‌. இனி இதில்‌ யாவற்றையும்‌ தனக்கு உடலாய்‌ உள்ளவர்‌ என்று கூறுகிறார்‌. கீழ்‌ மூன்றதிகரணங்களில்‌ ஸ்வல்ப ஸ்தாபனத்திலிருப்பதால்‌ எங்கும்‌ பரந்துள்ள பரமாத்மா அன்று என்பதாய்‌ ஆக்ஷேபித்து ஸமாதானம்‌ கூறப்பட்டது. இனி மேல்‌ மூன்றதிகரணங்களில்‌ அதி விசாலமான ஸ்தானங்களில்‌ உள்ளவனாய்‌ சொல்லப்பட்ட இடங்களைப் பற்றி விசாரிக்கப்படுகிறது. இதுவே முன் பின்‌ பேடிகா ஸங்கதி.—

கீழ்‌ அதிகரணத்தில்‌ எம்பெருமான்‌ கண்களில்‌ இருந்து நியமனம்‌ செய்கிறான்‌ என்னப்பட்டது. அதையே இங்கு ஸமர்த்திக்கிறார்‌, அதாவது, பரமாத்வாவுக்கு அந்தர்யாமித்வம்‌ கூடுமா கூடாதா ? என்று ஸந்தேஹம்‌ அல்ல. பின்‌ என்‌? எனில்‌—கீழில்‌ கூறியபடி கண்ணுக்குள்‌ இருந்து நியமனம்‌ செய்பவன்‌ எம்பிரானைப் போல்‌ ஜீவனுமாகக்‌ கூடுமோ? என ஸந்தேஹம்‌ வர–அதை நீக்க இந்த அதிகரணம்‌ ஏற்பட்டது -ப்ருஹதாரண்ய கோபநிஷத்தில்‌ காண்வ சாகையில்‌ அந்தர்யாமி ப்ராம்ஹணம்‌ என்ற பகுதியில்‌ நீண்ட ஒரு பகுதி உண்டு. அதில்‌– யாவனொருவன்‌ இப் புவியின்‌ உள்ளே இருந்து கொண்டு மறைந்து அதை கட்டுக்குள்‌ வைத்துள்ளானோ, எவனுக்கு இப் புவி உடலோ, எவனை உள்ளிருக்கும் போதும்‌ இப் புவி அறிய வில்லையோ, அவன்‌ உனக்கு ஆத்மாவாய்‌ நின்ற–எவ்வித தோஷமுமற்ற—அந்தர்யாமி என்று இதன்‌ பொருள்‌. இவ் விதமே –
மாயா வாமனனே மதுசூதா நீ யருளாய்‌ தீயாய்‌ நீராய்‌ நிலனாய்‌ விசும்பாய்‌ காலதாய்‌
தாயாய்‌ தந்தையாய்‌ மக்களாய்‌ மற்றுமாய்‌ முற்றுமாய்‌ நீயாய்‌ நீ நின்ற வாறிவை யென்ன நியாயங்களே.””
என்று ஆழ்வார்‌ (7-8-1) அருளிச் செய்தபடி–நீர்‌, நெருப்பு, ஆகாசம்‌, வாயு, மேல்‌ உலகம்‌, ஸூர்யன்‌, திக்குகள்‌, சந்திர தாரகைகள்‌, தமஸ்‌, தேஜஸ்‌ முதலான தேவர்‌ பூதங்களுள்ளும்‌, வாக்கு, ப்ராணன்‌, கண்‌, காது, மனம்‌, உடல்‌, ஜீவன்‌, ரேதஸ்‌ முதலான ஆத்மாவையும் , அதைச் சார்ந்த உறுப்புக்களிலும்‌ இருக்கும்‌ பூதா வாஸனான வாஸு தேவனை விளக்கிக் கூறி அவனை அந்தர்யாமி என்றது. இதே ப்ருஹாரண்யகத்தின்‌ மற்றோர்‌ சாகையான மாத்யந்தின சாகையில்‌ உலகுகள்‌, வேதங்கள்‌, யஜ்ஞங்கள்‌ முதலியனவும்‌ அதிகப் படியாய்‌ படிக்கப் பட்டன –ஆக இந்த இரண்டு சாகைகளிலும்‌ படிக்கப் பட்டவன்‌ ஜீவனாகவும்‌ கூடும்‌ என் பூர்வ பஷம்‌. ஏனெனில்‌ இந்த அந்தர்யாமியை காண்பவனாயும்‌ கேட்பவனாயும்‌ சொல்லி, மேல்‌ இவனுக்கு மேல்‌ யாருமில்லை என்று தடுத்து முள்ளது, ஆகவே கண்‌ முதலான உறுப்புகளைக் கொண்டு ”கண்டு கேட்டுற்று மோந்து ஐங்கருவி கண்ட வின்பம்‌ ” ஜீவனுக்கே தகுமான படியால்‌ ஜீவனே இங்கு ‘கூறப்பட்டான்‌-என பூர்வ பக்ஷம்‌.

ஸித்தாந்தம்‌. இங்கு அந்தர்யாமி பரமாத்மாவே. அவனுக்கே பொருந்தக் கூடிய தர்மங்களை இங்கு உபதேசித்த படியால்‌. எப்படி என்றால்‌ காண்வத்திலும்‌ மாத்யங்தின சாகையிலும்‌ ஸம்பந்தமான பூதங்களையும்‌ தைவங்களையும்‌ எடுத்து–விளக்கும்‌ முன்பாக–உத்தாலகர்‌ யாஜ்ஞவல்க்யரைப் பார்த்து கேட்டது உலகிலும்‌ ஸர்வ பூதங்களி னுள்ளும்‌ நிறைந்து ”கரந்த பாலுள்‌ நெய்யே போல்‌ எங்கும்‌ பரந்துள்ள ” கண்ணனை எனக்குப்‌ பகர்வாய்‌ என்று. ஆக இப்படி சேதனா சேதனங்கள்‌ யாவற்றினுள்ளும்‌ உள் நின்று நியமனம்‌ செய்யும்‌ திறன்‌ ஜீவனுக்குச்‌ சேராது, இதையே ஸ்வர்ண கர்மானுவாகத்தில்‌ சுருக்கமாய்‌ ஒரே வரியில்‌ வேதம்‌ ஓதியது.- எல்லாவற்றையும்‌ படைத்து அதனுள்‌ நின்று அதற்கு ஆற்றலை யளித்து உயிரற்றதும்‌ உயிருள்ளதுமாய்‌ அவன்‌ நின்றான்‌–என்று தைத்திரீயமும்‌ கூறியது. சரீரத்துள்‌ அவனது இருப்பைக்‌ கூறி -இப்படி யாவற்றினுள்ளும்‌ இருந்த போதிலும்‌ ப்ரக்ருதி விகாரங்களால்‌ ஏற்படும்‌ தோஷம்‌ ஏதுமற்று அப்ராக்ருதனான நாராயணன்‌ விளங்குகிறான்‌ என்று ஸ்பஷடமாய்‌ இந்த அந்தர்யாமி நாராயணனனே என்று ஸுபாலோபதிஷ.த்‌ பலபடி ஆவ்ருத்தி செய்து விளக்கியது. இத்தகைய இயற்கை யாய்‌ தோஷமற்ற நிலை ஜீவனுக்கு (முக்தனுக்கும்‌, நித்யருக்கும்‌ உட்பட) கூடுமோ ? இப்படி யாகில்‌ —-எம்பிரானுக்கு இந்திரியங்களுந்கு அதீனமான உணர்வு என்பதில்லை. கண்ணில்லா விடினும்‌ காண்கிறார்‌. காதின்றியும்‌ கேட்பார்‌. கை கால்கள்‌ இல்லா விடிலும்‌ வேகமாய்‌ செல்லும்‌ திறமையும்‌, ஓர்‌ பொருளை எடுக்கும்‌ திறனும்‌ பெற்றவர்‌ என்பதாய்‌ கூறப்பட்டது. ஆக இந்த மாதிரி நியமனம்‌ செய்யும்‌ அந்தர்யாமிக்கு மற்றோர்‌ நியந்தா கிடையாது எனக்‌ கூற வந்தது. என்று உத்தாலகரைப் பார்த்து கூறிய படியால்‌ உபாஸகரான உத்தாலகரை விட ஆத்மா எனப்பட்ட அந்தர்யாமி வேறு என்பதும்‌ தேறியது. இப்படி எம்பெருமானிடமே குணங்கள்‌ சேரும்‌ என்று கூறி–இனி எப்படி அசேதனமான ப்ரதானம்‌, ப்ரக்ருதி, ஸ்மார்த்தம்‌ என்னப்பட்ட மூல ப்ரக்ருதிக்கு இந்த குணங்கள்‌ — தர்மங்கள்‌ யாவும்‌ சேராதனவோ–அவ் விதம்‌ ஜீவனுக்கும்‌ இவை பொருந்தாதவை என்று கூற மேல்‌ ஸூத்ரம்‌-காண்வ—மாத்யந்தின சாகைகளை அத்யயனம்‌ செய்த ஆன்றோர்கள்‌ இருவரும்‌-ஜிவனை விட இந்த அந்தர்யாமி வேறானவன்‌ என்பதாய்‌ ஓதுகிறார்கள்‌. மாத்யந்தினர்கள்‌ காண்வர்கள்‌ இருவரும் படிக்கின்றனர்‌. இரண்டு ஸ்தான ப்ரமாணத்தை யனுசரித்து ஜீவனைக்‌ குறிப்பிடுவதாய்‌ கொண்டாலும்‌, புத்தியை – சப்தத்தால்‌ கூறப்பட்ட அறிவை ஏன்‌ வாங்கிக் கொள்ளக் கூடாது ? என்பதற்கு ஸித்தி த்ரயத்தில்‌ ஆளவந்தார்‌ விளக்கமாய்‌ பதில்‌ கூறி யுள்ளார்‌- விஜ்ஞான சப்தம்‌ அர்ஸ ஆதி என்ற கணத்தில்‌ படிக்கப் பெற்று உருப் பெற்றுள்ளது. ஆகவே ஜீவனையே சொல்லும்‌, ஆக இருவித சாகைப் படியும்‌ ஜீவனை விட வேறாய்‌ இவர்களை நியமிப்பவனே அந்தர்யாமி என முடிவாயிற்று –

அத்ருச்யத்வாதி குணகாதிகரணம்‌–5-கீழில்‌ காண முடியாதவன்‌, ஆனால்‌ எல்லாவற்றையும்‌ காண்பவன்‌ ” என்ற பொருளுடைய என்னப்பட்டவன்‌ பரமாத்மாவே என்று முடித்தோம்‌-அப்படியானால்‌ மேல்‌ இங்கு முண்டகோபநிஷத்தில்‌ ‘காண முடியாதது * என்றே உள்ளபடியால்‌, காணப்படுமது என்றோ காண்பது என்றோ இல்லாதபடியால்‌ என்று தொடங்கும்‌ வாக்யத்தில்‌ ப்ரதானம்‌ எனப்பட்ட மூல ப்ரக்ருதியே சொல்லப்பட்டதாகட்டுமே–என்று ஸங்கதி. ஆதர்வண வேதத்தைச்‌ சேர்ந்த முண்டகோபநிஷத்தில்‌ கூறப் பட்டது –எது காணவும்‌, எடுத்தாளவும்‌ முடியாதோ, எதற்கு நிறம்‌ கோத்ரம்‌, கண்‌, காது, கால்‌, கை முதலான இல்லையோ எது முக் காலத்திலுள்ளதும்‌ எங்கும்‌ பரவியதும்‌, பெரியதும்‌, ஆயினும்‌ ஸூஷ்மமானதும்‌, கூட்டல்‌ குறைதல்‌ முதலியன அற்றதும்‌, இந்த உலகிற்கு காரணமானதோ–அதை அறிவாளிகள்‌ நேரில்‌ ஸாக்ஷாத்கரிக்கிறார்கள்‌–என்‌று இதன்‌ பொருள்‌, இது யாவும்‌ மூல ப்ரக்ருதிக்குப்‌ பொருந்தும்‌ விசேஷணங்கள்‌. ஆகவே இங்கு கூறப்பட்டது ப்ரக்ருதியே என்று ஸாங்கய மதத்தைச்‌ சார்ந்தவர்கள்‌ நிலை. ஆகவே இப்படி கூறப்‌பட்ட ப்ரக்ருதியைக் கூறி மேல் வாக்யத்தாலே ஜீவன்‌ சொன்னதாய் தானே தேறுகிறது. ஆகவே இங்கு ப்ரம்ஹத்தைப் பற்றிய ஸம்பந்தமே இல்லை என்று பூர்வ பஷம்‌, இப்படிக் கொண்டபடியால்‌ மேல்‌ மந்த்ரத்தில்‌ எப்படி. சிலந்தி வலையைப் பின்னி மீண்டும்‌ தானே உள்ளே அதை இழுத்துக்‌ கொள்கிறதோ, எப்படி. மண்ணினின்றும்‌ பயிர்‌ வகைகள்‌ உண்டாகின்‌றனவோ, எப்படி. புருஷன்‌ உடலி லிருந்து மயிர் வகைகள்‌ தோன்றுகின்றனவோ அப்படியே இந்த அக்ஷரத்திலிருந்து உலகம்‌ உண்டாகியது என்று கூறப்பட்டதும்‌, இந்த ப்ரக்ருதியே–என்று பூர்வ பக்ஷம்‌, இங்கு சேதனனின்‌ செயலால்‌ ஏற்படும்‌ மாறுபாட்டிற்கு சிலந்தியை எடுத்தது. சேதனன்‌ செயல்‌ ஏதும்‌ வேண்டாது ஒன்றோடொன்று அசேதன ஸம்பந்தமே போதும்‌ எனக்‌ காட்ட பூமியில்‌ பயிர் வகைகளைக்‌ காட்டியது, உடலில்‌ மயிர்‌ தோன்றும்‌ த்ருஷ்டாந்தம்‌–சேதனனின்‌ இருப்பு மட்டிலும்‌ போதும்‌, செயல்‌ தேவை யில்லை எனக்காட்ட எடுத்தது –
ஸித்தாந்தம்‌. இங்கு பூத யோனி என்று வர்ணிக்கப்பட்டு உலகின்‌ உத்பத்திக்குக்‌ காரணமாய்‌ கூறியதற்கே –அறிவையும்‌ ஆற்றலையும்‌ பணித்த படியால்‌ அசேதனமான ப்ரக்ருதி இங்கு கூறப்படவில்லை-பூத ஸூக்ஷ்மங்களையே குறிக்கும்‌. ஆகவே கீழ்‌ப் படித்த குணங்களை உடையவன்‌ பரமாத்மாவே. இந்த தர்மங்கள்‌ யாவும்‌ ப்ரக்ருதிக்குச்‌ சேரா. ஜீவனுக்கும்‌ தகாதவை, ஏனெனில்‌ மேல்‌ குறிப்பிட்ட அக்ஷரத்திற்குச்‌ சேராத ரூபம்‌ முதலானவை குறிப்பிட்டுச் சொல்லப் பட்டது-மேலும்‌ இப்‌ ப்ரகரணத்தில்‌ ப்ரக்ருதி புருஷர்களை விட மேலாக பரமாத்மாவை குறிப்‌பிட்டுச்‌ சொல்லியுள்ள படியால்‌ ஜீவனும்‌ ப்ரதானமும்‌ இங்கு பணிக்கப்பட வில்லை-செளனகர்‌ ப்ரம்ஹ வித்யையை விரும்பி வந்து அங்கிரஸை கேட்டார்‌ – எதை அறிந்தால்‌ எல்லாவற்‌றையும்‌ அறிந்ததாகும்‌? என்று இதன்‌ பொருள்‌. அவருக்கு அபர வித்யை எனப்பட்ட ருக் வேதம்‌ முதலாய்‌ 18 வித்யா ஸ்தானங்களையும்‌ மற்றும் பல சாஸ்த்ரங்களையும்‌ குறிப்பிட்டு விட்டு: பர வித்யையைத்‌ தொடங்கி உபாஸனம்‌ எனப்பட்ட ப்ரம்ஹ ஸாக்ஷாத்‌ காரத்தை உபதேசித்து மேல் பல ஸ்ருதிகளால் ப்ரம்ஹ ஸ்வரூபத்தை விளக்கி, சிலந்தி முதலான த்ருஷ்டாந்தங்களைக் கொண்டு இதை விளக்கி, ஜகத் ஸ்ருஷ்டிக்குத்‌ தேவையான எல்லாவற்றையும்‌ பற்றின அறிவு, விரும்பியது ஸாதிக்கும்‌ சக்தி என்பனவற்றை ப்ரம்ஹத்துக்கு கூறி, பலனைக் கருதாது வேதங்களில்‌ கூறியபடி யாக யஜ்ஞங்களைச்‌ செய்து வரும்படி பணித்து கர்மங்களை அனுஷ்டிக்காவிடில்‌ கரை கடக்க உறுதியான ஓடமாக இந்த யாகாதிகள்‌ அமையாது என விளக்கி, பயனைக்‌ கருதாமல்‌ செய்த கர்மங்களைப்‌ புகழ்ந்து, இந்த கர்மாக்கள்‌ ப்ரம்ஹத்தை யடைய வழி வகுக்கும்‌ என்று கூறி, அந்த ப்ரம்ஹத்தை யடைய ஜ்ஞானம்‌ தேவை என்றும்‌, அதை அடைய ஆசார்யனை முறைப்படி ஸேவித்துப்‌ பெற வேண்டும என்றும்‌ கூறி, எம்பெருமானின்‌ விஸ்வ ரூபத்தைக்கூறி பரமபத நிலையனான இவனே நம்‌ ஹ்ருதயத்திலும்‌ “அடியேனுள்ளான்‌”, என்றபடி நித்யம்‌ ஸன்னிஹிதனானபடியைத்‌ தெரிவித்து இவனை உபாஸித்தால்‌ ப்ரஹ்மத்‌திற்கு ஸமமாக ஆவான்‌ எனப் பலனையும்‌ (மோக்ஷத்தையும்‌) கூறி இந்த உபநிஷத்‌ முடித்தது.-ஆக இவ்விதம்‌ விளக்கிய படியால்‌–ஜீவனோ ப்ரதானமோ இங்கு உபாஸ்யமாகவோ—ஜகத் காரணமாகவோ சொல்லப்பட வில்லை என்றதாயிற்று-மேலும்‌ இந்த பரமாத்மாவிற்கு விஸ்வ ரூபத்தை வேதம்‌ ஓதியது. இங்கு ஸ்ரீ கீதையில்‌ விஸ்வ ரூபாத்யாயத்தையும்‌ அஸ்த்ர பூஷணாத்யாயத்‌தையும்‌ அனுஸந்திக்கவும்‌. இப்படி பஞ்ச பூதங்கள்‌ முதலானவைகளையும்‌, ஜீவ விசேஷங்களையும்‌ எம்பிரானுக்கு உடலில்‌ ஓர்‌ கூறுகளாகச்‌ சொல்லியபடியாலும்‌ , இத்தகைய ரூபம்‌ பரமாத்‌மாவுக்கே கூடுமாதலால்‌ இங்கு சொல்லப்பட்டது பரமாத்மாவைப் பற்றியது மட்டுமே: ஜீவாதிகளை அல்ல.

வைச்வாநராதிகரணம்‌–6-முன்‌ அதிகரணத்தில்‌ விஸ்வரூபத்தைச்‌ சொல்லி, இது எம்பெருமானுக்கே கூடும்‌ என்று முடிந்தது. எப்படி? விஸ்வரூபத்தில்‌ உலகின்‌ பகுதிகளை அந்தந்த அவயவமாக கல்பனை தானே ? அது ஜீவன்‌. முதலானோருக்கும்‌ கூடுமல்லவா? என்ற கேள்வி எழ–மேல்‌ அதிகரணம்‌ ஏற்பட்டது–என ஸங்கதி-ப்ரஸங்க ஸங்கதி என்பதாய்‌ சிந்தாமணியில் உள்ளது –சாந்தோக்ய உபநிஷத்தில்‌ உள்ளது-ஒளபமன்யவர்‌ முதலான ஐவர்‌ ஒன்று கூடி ” நமக்கு யார்‌ ஆத்மா ? ப்ரம்ஹம்‌ என்பது யாது?”‘ என்று விசாரிக்கத் தொடங்கி ‘இதோ பகவான்‌ உத்தாலகர்‌. வைஸ்வான ராத்மாவை நன்றாய்‌ அத்யயனம்‌ செய்கிறார்‌. அவரிடம்‌ செல்வோம்‌ ‘? எனத்‌ துணிந்து ‘வந்து கிட்டி “நீர்‌ அறிந்தபடி நன்கு வைஸ்வாநரனை எங்களுக்குக்‌ கூறும்‌ ‘ என வினவினர்‌-இந்த வாக்கியத்திலுள்ள வைஸ்வாநர சப்தத்தால்‌ யார்‌ குறிப்பிடப் பட்டார்‌ ? இவன்‌ பரமாத்வா ₹ அல்லவா * என் ஸந்தேஹம்‌,: 1-உடல்‌ உள்ளே ஜாடராக்னியைக்‌ குறிக்கும்‌,-நாம்‌ உண்ட உணவு வகைகளை உடலிலுள்ள எந்த அக்னி ஜரிப்பிக்கிறதோ. இதுவே வைஸ்வாநரன்‌, காதைப்‌ பொத்திக்‌ கொண்டு கேட்டால்‌ உள்ளே ஓர்‌ இரைச்சல்‌ -கேட்கிறதே—அது இந்த ஜாடராக்னியின்‌ ஓசையே–ஜீவன்‌ உடலை விட்டு வெளியேறினால்‌ இந்த வைஸ்வாநர கோஷம்‌ கேளாது ‘ என்று–கூறிய விடத்தில்‌ ஜாடராக்னியே வைஸ்வாநர சப்தத்தால்‌ குறிப்பிட்டபடியால்‌ அதுவே ஆகலாம்‌.-
2-அல்லது எல்லா உலகும்‌ நன்மை பெற ஸூர்யனை வைஸ்வானராக்னியாக தேவர்கள்‌ படைத்தனர்‌–என்று உள்ளபடி, உணவைச்‌ சமைக்கப்‌ பயன்படும்‌ ஸாதாரண அக்னியாகிய மூன்றாவது பூத மாகவும்‌ இது ஆகலாம்‌.-3-அல்லது அக்னிக்கு அதிஷ்டான தேவதையும்‌ ஆகக் கூடும்‌-4-பரமாத்மாவையே கொண்டது போலும்‌-பரமாத்மாவையும்‌ கொள்ளலாம்‌.
ஆக இப்படி. நான்கு விதமாயும்‌ வழக்கில்‌ உள்ளபடியால்‌ பரமாத்மாவை மட்டும்‌ இந்த வைஸ்வாநர வித்யையில்‌ கொள்வது–என்பது: தகாது. இந்த நான்கில்‌ எதற்கும்‌ இங்குள்ள விசேஷணங்கள்‌ பொருந்தும்‌, ஆகவே எப்படி வேண்டுமானாலும்‌ கொள்ளலாம்‌ என்பது பூர்வ பக்ஷம்‌.–

ஸித்தாந்தம்‌–வைஸ்வாநரன்‌ இங்கு பரமாத்மாவே. பொதுப் படையான வைஸ்வாநர சப்தம்‌ இங்கு பரமாத்மாவையே குறிக்கும்படிக்கு விசேஷமாய்‌ அமைந்துள்ள படியால்‌ என்று. கீழ்க் கூறியபடி உத்தாலகரை அணுகி ஐவரும்‌ கேட்க, அதற்கு அவர்‌, “‘கேகய அரசன்‌ அஸ்வபதியே நன்றாய்‌ இந்த வித்யையை அறிவார்‌, ஆகவே அவரிடம்‌ செல்வோம்‌ ” எனச்‌ சொன்னார்‌. அஸ்வபதி தாம்‌ யாகம செய்ய முற்பட்டிருப்பதையும்‌, :’ என்‌ நாட்டில்‌ திருடன்‌ வெட்டியான்‌, கள் குடிப்பவர்‌, அக்னி ஹோத்ரம்‌ செய்யாதவர்‌, அறிவாளி யல்லாதவர்‌, தான் தோன்றிகள்‌, வ்யபிசாரிணிகள்‌ யாரும்‌ கிடையாது, ஆகவே தாங்கள்‌ என்னிடம்‌ எதையும்‌ தானம்‌ வாங்கலாம்‌’”– என்று கூறி, தாம்‌ செய்யும்‌ யாகத்தில்‌ ருத்விக்குகளுக்கு எவ்வளவு பொருள்‌ அளிப்பேனோ–அவ்வளவு தங்கள்‌ ஒவ்வொருவருக்கும்‌ அளிப்பேன்‌–என்பதாய்‌ சொல்லி அவர்களை அங்கு வஸிக்கும்படி கூறி– நம்‌ எல்லோருக்கும்‌ அந்தராத்மா யார்‌? என்றும்‌ எது ப்ரம்ஹம்‌ ? என்றும்‌ இவர்களால்‌ கேட்கப்‌ பட்டதற்கு விடை யிறுக்கும் போது இந்த வைஸ்வாநர சப்தம்‌ காணப்படுவதால்‌ இந்த ஸந்தர்ப்பத்தில்‌ இங்குள்ள இந்த பதம்‌ பரமாத்மாவையே குறிககும்‌.

மேலும்‌ இந்த வைஸ்வானராத்மாவை அறிந்தவனுக்கு பலம் கூறுகையில்‌ இந்த வித்யையை உபாஸிப்பவனுக்கு பாபங்கள்‌ ** போய பிழையும்‌ புகுதருவான் நின்றனவும்‌ தீயினிற்றூசாகும்‌ ‘” என்றபடி. அழியும்‌ என்றும்‌ கூறி யுள்ள படியால்‌–மற்றைய ப்ரகரணங்களில்‌ போல்‌ இங்கும்‌ ஸர்வ பாபங்‌களும்‌ தொலைவதை பலமாகக்‌ கூறியபடியால்‌, இங்கு வைஸ்வாநர சப்தத்தால்‌ பரமாத்மாவே சொலலப் பட்டான்‌-மேலும்‌ மேலுலகமான என்பது முதற் கொண்டு இந்த புவி பர்யந்த முள்ளவற்றை இந்த வைஸ்வநராத்மாவுக்கு அவயவங்களாகக்‌ கூறி யுள்ளது. இதை எண்ணிப் பார்த்தால்‌–இந்த விஸ்வரூபம்‌ சொன்னது பரமாத்மாவுக்கே தகும்‌ என்று அனுமானிகக ஹேதுவாகிறது. வேத வேதாந்தங்களில்‌ பரமாத்மாவுககே அல்லவா இந்த ரூபம்‌ சொல்லப் பட்டது ? கீழ்‌ ஸூத்ரத்தில்‌ கூறியபடி முண்டக வாக்யத்தில்‌ அக்னி சப்தத்தால்‌ மேல்‌ உலகமானதை எடுத்துக் கூறியது இந்த ரூபத்தையே முனிகளும்‌ இதையே ஸ்ம்ருதிகளில்‌ கூறினர்‌-இவ்விதம்‌ கூறப்பட்ட வைஸ்வாநராத்மாவின்‌ அவயவங்களான ஒவ்வோர்‌ பகுதியையும்‌ கீழ்க் கூறிய ஒவ்வோர்‌ மஹர்ஷிகளும்‌ தனித் தனியாய்‌ வைஸ்வானராத்மாவாய்‌ உபாஸித்து வந்தனர்‌, அவர்கள்‌ வாய் மூலம்‌ அவரவர்‌ அறிந்ததை அறிந்து அச்வபதி–‘* நல்லது. நீங்கள்‌ என்னை அண்டி முழு வைஸ்வாந ராத்மாவையும்‌ பற்றிக் கேட்டு அறிந்திராவிடில்‌ உங்களுக்கு சில தீங்குகள்‌ (அந்த அந்த அவயவங்கள்‌ சிதைந்து போதல்‌) நேர்ந்திருக்கக் கூடும்‌ ‘* என்பதாய்‌ கூறினார்‌- அவரவர்‌ உபாஸித்தவற்றிற்கு குணங்களால்‌ ஏற்பட்ட நாமாக்களை கூறினார்‌. இவை யாவும்‌ முழு வைஸ்வாநராத்மாவின்‌ அவயவங்கள்‌ எனத்‌ தேறியது. ஆகவே இங்கு வைஸ்வாநரன்‌ பரமாத்மாவே-

இதற்கு மேல்‌ பெரியதொரு ஆஷேபம்‌:–ப்ருஹதாரண்யகத்தில்‌ வைஸ்வாநர் வித்யா ப்ரகரணத்தில்‌ இது கேவலம்‌ அக்னியே. இங்கும்‌ மனதில்‌ உள்ளே உள்ள வைஸ்வானரனை கார்ஹ பத்ய–அன்வாஹார்ய பசன அக்னிகளாகவே கூறி யுள்ளது, பரமாத்மாவாக அல்ல. நாம்‌ செய்யும்‌ ப்ராணாஹுதி இந்த வைஸ்வான ராக்னியையே சேரும்‌ என உள்ளபடியாலும்‌ இது தேறுகிறது. மேலும்‌ வாஜஸனேய ப்ராம்ஹணத்தில்‌ ஜீவனுள்ளே இருந்து உண்ட உணவுகளை ஐரிப்‌பிக்கும்‌ அக்னியாகவே சொல்லி யுள்ளது. இவை யாவற்றையும்‌ நோக்கினால்‌–பரமாத்மா இங்கு கூறப்படவில்லை என்றே சொல்லலாம்‌ போலுள்ளதே* என்று–இதற்குப் பதில்‌–உள்ளே உள்ள ஜாடராக்னி ஸ்வரூபனாய்‌ பரமாத்மாவை உபாஸிக்க வேண்டும்‌ என்று த்ருஷ்டி விதி என்னப்பட்ட வகையிலும்‌ இவன்‌ உபாஸிக்கத் தக்கவன்‌ என்று காட்டவே இங்கு இப்படிக்‌ கூறியது. ஏனெனில்‌ இப்படி கூறிய உடனேயே இதே ப்ரகரணத்தில்‌ புருஷ ஸூக்தத்திலுள்ளபடி இந்த வைஸ்வாநரனை உலகெல்லாமாகக்‌ கூறியுள்ள படியால்‌. கேவலம்‌ ஜாடராக்னிக்கு உலகத்தோடு தாதாத்ம்யமும்‌ ஸஹஸ்ர சீர்ஷத்வாதிகளும்‌ கூடுமா? ஆகவே இது ஓர்‌ திருஷ்டி விதி எனக் கொள்வதே பொருந்தும்‌. இதே காரணங்களைக் கொண்டு பார்த்தோமே யானால்‌–பஞ்ச பூதங்களில்‌ ஒன்றான அக்னியும்‌, வைஸ்வாநர தேவதையும்‌ இங்கு கூறப்பட வில்லை என்பது ஸுலபமாய்‌ விளங்கும்‌-இனி இவ்விதம்‌ ஒன்றை ஒன்றாய்‌ கூறி ஸந்தேஹம்‌ வரும்படிச்‌ சொல்வானேன்‌ என்ற கேள்விக்கு பல மகர்ஷிகள்‌ மதப்படி. விளக்கம்‌ கூறுகிறார்‌–அதாவது ரூடியாகக்‌ கொள்ளாமல்‌ அவயவ வ்யுத்பத்தி கொண்டு நேராக எல்லா ஜீவன்களையும்‌ நல்‌ கதிக்கு இட்டுச் செல்லுபவர்‌ எம்பிரானான படியாலே இத்தைக்‌ கணிசித்து பரமாதமாவே சொல்லப்பட்டான்‌ இங்கு என்பது ஜைமினி மஹர்ஷியின்‌ கொள்கை- ஸ்ரீகீதையில்‌ ஸ்பஷ்டமாய்‌ தாமே வைஸ்வாநர சப்த வாச்யன்‌ என்றருளிச் செய்ததையும்‌ இங்கு நினைவு கூறவும்‌, இதே போல்‌ அக்னி: என்ற பதமும்‌ முன்‌ நின்று நல்வழிக்கு நம்மை சேர்த்து விடுபவர்‌ என்று கொண்டு எம்பெருமானையே சொல்லலாம்‌ என்பது கூடும்‌, ப்ரஸித்தமான அக்னியை அல்ல என்பது ஜைமினியின்‌ கோட்பாடு.–

இந்த வழியையே பின்பற்றி நம்‌ ஆன்றோர்கள்‌ நித்ய நைமித்திகமான கர்மங்‌களிலும்‌, மற்றைய இடங்களிலும்‌, உபாஸனாப்ரகரணங்களிலும்‌, ஜகத் காரணத்வத்தைச்‌ சொல்ல வந்த இடங்களிலும்‌ உள்ள பொதுப்படையாயும்‌–வேறு ஸந்தேஹத்திற்கு இடமான சொற்களையும்‌ ஸாக்ஷாத்‌ ஸ்ரீமன்‌ நாராயண வாசகமாகவே கொண்டனர்‌. இது ஸ்ரீஸஹஸ்ர தாம பாஷ்யத்தில்‌ ஸ்ரீ பராசர பட்டரும்‌ ஸ்ருதப்ரகாசிகாசிரியர்‌ தாம்‌ அருளிச்‌ செங்த ஸந்த்யாவந்தன பாஷ்யத்திலும்‌ விரிவாய்‌ காணத் தகும்‌-இது வ்யுத்பத்திக்கும்‌ பொருந்திய வழியே.
நாம நிர்வசனாத்யாயத்திலும்‌ இந்த வழி வ்யாசரால்‌ கைக் கொள்ளப் பட்டது, ஸர்வா ந்தர்யாமி ஸ்ரீமந் நாராயணனே என்பது அந்தர்யாம்யதிகரணத்தில்‌–அந்தர்யாமி ப்ராம்ஹணம்‌ ஸுபாலோபதிஷத்‌ ஸ்வர்ண கர்மானுவாகம்‌ முதலானவற்றை எடுத்‌துக் காட்டி முடிவு செய்துள்ளபடியால்‌–யஜ்ஞாக்ரஹராதயாயத்திலும்‌ ஸ்ரீஹஸ்திகிரி மாஹாத்ம்யத்திலும்‌ தெரிவித்தபடியும்‌- இது நேர்வழியான படியால்‌ ஜைமினி மதம்‌ சாலவும்‌ சிறந்தது என்று கொண்டு இதை முதலில்‌ ஸூத்ரகாரர்‌ அருளிச் செய்தார்‌-இதற்கு மேல்‌ ஓர்‌ கேள்வி. அளவிடமூடியாத எம்பெருமானை விளக்க வந்த இங்கு ஒட்டைச்சாண்‌ அளவுள்ளவளனாய்‌ கூறியது ஏன்‌ ? என்று: இதற்கு விடை ஆச்மரத்யர்‌ என்ற மஹர்ஷி கூறுகிறார்‌–அதாவது–உபாஸகன்‌ த்யு–ப்ருதிவீ முதலான ப்ரதேசங்களை வைஸ்வானர புருஷனின்‌ அவயவங்களாய்‌ கொண்டபடியால்‌–இங்கெல்லாம்‌ இப் பிரதேசங்களில்‌ பரமாத்ம ஸம்பந்தமுண்டு என்பதை மட்டும்‌ தெரிவிக்க இப்படிச்‌ சொன்னது– உண்மையில்‌ மிகப்‌ பெரியவன்‌ அவன்‌ – அளவு கடந்தவன்‌ என்று இங்கேயே அடுத்தபடி கூறியுள்ளதை கவனிக்கவும்‌. ஆகவே உபாஸகனுக்கு தாரணா ஸெளகர்யத்திற்காக இங்ஙனம்‌ இங்கு கூறியது என ஆச்மரத்யமஹர்‌ஷி பணித்தார்‌.

ஆயினும்‌ தலை கால்‌ முதலியன அவயவங்களுடன்‌ கூடி நம்மைப் போல்‌ உருவுள்ளபடி எதற்காக இங்கு என்ற கேள்விக்கு பாதரி என்ற மஹர்ஷி அருளிச் செய்த விடை–உபாஸிகக சித்தாலம்பனம் ஏற்படுவதற்காக இவ்விதம்‌ கூறியதாய்‌ பாதரி திருவுள்ளம்‌-இதற்கும் மேல்‌ ஒரு கேள்வி, இப்படி உபாஸனம்‌ மட்டும்‌ போதுமே. மேற் கொண்டு இந்த ஜீவன்‌ மார்பை யாகத்திலுள்ள உத்தர வேதியாகவும்‌, மார்பிலுள்ள உரோமங்களை தர்பங்களாகவும்‌, மற்றும்‌ யாகத்தில்‌ பயன்படும்‌ பொருட்களாய்‌ மனிதன்‌ உறுப்புக்களையும்‌, இவனது செயல்களையும்‌ சொல்வானேன்‌ என்று–இதற்கும்‌ ஜைமினி மஹர்ஷியே விடையளித்துள்ளார்‌– அதாவது இவ் விதம்‌ வைஸ்வானர வித்யோபாஸகன்‌ தினந் தோறும்‌ செய்யும்‌ ப்ராணாக்நி ஹோத்ரத்தையே – முறைப்படிச்‌ செய்ய வேண்டிய நித்யாக்நி ஹோத்ரம்‌ செய்தால்‌ வரும்‌ பலனும்‌ ஏற்படும் பொருட்டே இப்படிக்கு உருவகப் படுத்தப் பட்டது-இதுவும்‌ இங்கு ப்ராணாஹுதியையே அக்னி ஹோத்ரமாய்‌ தெரிவித்த வாக்யத்தால்‌ ஏற்படுகிறது. ஆக ஏதும்‌ ஸந்தேஹத்திற்கு இடமில்லை-ஒன்றை மற்றொன்றாக பாவிக்கும்‌ என்பதால் மட்டும்‌ மோக்ஷம்‌ ஸித்தியாதே? ஆகவே என்னப்பட்ட அன்ன ஸம்ருத்தியே இவ்விதம்‌ உபாஸனத்திற்குப்‌ பலமானால்‌ என்ன? என்னவாகாது-இங்கு திருஷ்டி விதி. ப்ரம்ஹத்தையே அல்லவா இப்படி உபாஸிப்பது. ஆகவே இது கூடும்‌.-இங்கு ஜைமினி, ஆச்மரத்யர்‌, பாதரி என்று வெவ்வேறு ருஷிகளின்‌ பெயரால்‌ விளக்கியுள்ள போதிலும்‌ ஒருவர்‌ கூறியது யாவருக்கும்‌ ஏற்புடைய கொள்கையே. விகல்ப மில்லை என்று அறியவும்‌. ஏனெனில்‌ உலக வழக்கில்‌ ஒருவர்‌ பெயரைக்‌ குறிப்பிட்டு அவர்‌ இப்படிச்‌ சொன்னார்‌” என்றால்‌ மற்றையோருக்கு அந்தக்‌ கொள்கை கட்டாயம்‌ ஏற்புடையதே என்று தேராது. வ்யாகரண சாஸ்த்ரத்தில்‌ ஓர்‌ ரிஷி பெயரை எடுத்து ஒரு விதியைக்‌ குறிப்பிட்டால்‌–அது அவர்‌ பக்ஷம்‌ மட்டுமே. எல்லோரும்‌ கொண்டது அல்ல–விகல்பம்‌ என்று முடிவுக்கு வந்தனர்‌. இங்கு அப்படியல்ல ரிஷிகள்‌ பெயரை கெளரவிக்க’ எடுத்தது-மேலும்‌ இந்த வைச்வாகரனை தயுப்ருதிவீ முதலிய உருவுடன்‌ கூட இந்த உபாஸக ‘சரீரத்தில்‌ உள்ளதாய்‌ கூறியுள்ளபடியால்‌ வைஸ்வாநர சப்தத்தால்‌ இந்த வித்யையில்‌ சொல்லப்பட்டவன்‌ பரமாத்மாவே- ஆகவே வைஸ்வாநரன்‌ பரமாத்மாவே என ஸித்தித்தது.–

இவ்விதம்‌ இந்த முதலத்யாயம்‌ இரண்டாம் பாதத்தில்‌ ஆறு அதிகரணங்களால்‌ எம்பிரானே சாண்டில்ய வித்யாதிகளில்‌ ஜகத் காரணமாகவும்‌, முமுக்ஷுக்களால்‌ உபாஸிக்‌கப்படுமவனாயும்‌ சொல்லப் பட்டான்‌. இப்படி மஹர்ஷிகள்‌ அனுஸந்தானம் செய்ய மூலமான உபநிஷத்‌ வாக்யங்களில்‌–சிறியனவும்‌ பெரியனவுமான பல பொருட்களின்‌ சரீரத்தில்‌ உள்ளே உறைந்து உள்ளவன்‌ நாராயணனே என்பது இந்த பாதத்தில்‌ தேறியது-இவ்விதம்‌ இந்த பாதத்தில்‌ எம்பிரானிடமிருந்து உலகின்‌ படைப்பு முதலிய ஏற்பட்டதாயும்‌, உலகு முதலியன அவனுக்கு உடலாய்‌ அமைந்தன என்றும்‌, எல்லா வற்றினுள்ளும்‌ அவன்‌ அந்தர்யாமியாய்‌ உள்ளான்‌ என்றதாலும்‌—உலகிற்கும்‌ பிரம்ஹத்தில்‌ பாதிப்பு ஏற்பட்டு அதன் மூலம்‌ எல்லாம்‌ அவனே என்ற விஸ்வாசமும் ஏற்பட்டது என்று கூறும்‌ மதங்களை ஸூத்ரகாரர்‌ ஏற்கவில்லை என்று ஏற்பட்டது–

—

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ.வே. வித்வான்‌ சேட்டலூர்‌ வா. ஸ்ரீவத் ஸாங்காசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading