ஸ்ரீ விசிஷ்டாத்வைத விஜயம்
யானும் தானாய் ஒழிந்தானை யாதும் யவர்க்கும் முன்னோனை
தானும் சிவனும் பிரமனுமாகிப் பணைத்த தனி முதலை
தேனும் பாலும் கன்னலும் அமுதுமாகித் தித்தித்து என்
ஊனில் உயிரில் உணர்வினில் நின்ற வொன்றை யுணர்ந்தேனே–8-8-4-
வேதம், வேத்யம் என்று இரண்டு பதங்கள், வேதம் என்றால் கைவசப் பட்ட பொருள், ‘வேத்யம் என்றால் இனி கைவசப்படத் தருந்ததான பொருள் – ஸகல புருஷார்த்த ஸாதனம் வேதம் என்றபடி-உலகத்தின் ஸ்திரத்துக்குக் காரணம் தர்மம் என்கிறது தைத்திரீய உபநிஷத்து. வித்யை தான் விநயத்தைக் கொடுக்கிறது. வித்யை விநயத்தையே கொடுக்கிறது. வித்யை விநயத்தைக் கொடுத்தே தீரும் என்று ஏவகாரத்தை மூன்று பதங்களிலும் அந்வயித்துப் பொருள் –ஆதியில் வேதம் நான்கு பாதங்களுடன் நூறு ஆயிரம் சாகைகளுடன் கூடிய ஒரே விருக்ஷமாக இருந்தது. துவாபராதியில் வ்யாஸரால் ருக் யஜுஸ் ஸாமம் அதர்வணம் என்று நான்காகப் பிரிக்கப்பட்டது. ஸமஸ்தமான வேதத்தை வ்யஸ்தமாக்கியதால் தான் வ்யாஸர் என்று அவருக்குப் பெயர் வந்தது. இந்த வேதத்தை நான்காகப் பிரித்ததும் இதிஹாச புராணங்களை அருளிச் செய்ததும் பத்ரிகாஸ்ரமத்தில் வியாசராலே தான் – ருக் மயமான வேதம் ருக்வேதம் எனப்பட்டது. அதே ருக்குகளில் கீதம் விசேஷத்தை அனுசரித்து கானம் செய்வது ஸாமம் -. யஜுஸ் என்பது 2 பதங்களோ பல பதங்களுடன் கூடிய வாக்யமே. யஜுர் வேதத்துக்கு யஜுர் வேதம் என்கிற பெயர் வரக் காரணம் யஜந ஸாதனமா யிருப்பதாலும் யஜு; ப்ரசுரமா யிருப்பதாலும் -ருக் வேதத்தைப் ! பைலர்* கிரஹித்து, பல சிஷ்யர்கள் மூலம் பரவச் செய்தார். யஜுர் வேதத்தை வைசம்பாயனரும், ஸாம வேதத்தை ஜைமினியும், அதர்வண வேதத்தை ‘சுமந்துவும், இதிஹாஸ புராணங்களுக்கு மஹா புத்திசாலியான ரோமஹர்ஷணரும் (ஸூதர்) ப்ரவசனம் செய்து வந்தார்கள் -இவ் விதமே பூ: புவ: ஸுவ வ்யாஹ்ருதி த்ரயம்-* மஹ” என்பதைக் கூட்டி வ்யாஹ்ருதி நான்கு என்றும் வேதத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறது–
வைசம்பாயனர் யஜுர் வேதத்தை நான்காகப் பிரித்தார் -சாதுர் ஹோத்ரம் என்று இவர்கள் யக்ஞத்தை அநுஷ்டித்தார்கள்–27 சாகைகளுடன் கூடியது யஜுர் வேதம். 27 பிரதான சாகைகள், பிரதி சாகைகளைச் சேர்த்து 101 சாகைகள் என்கிற வியவஹாரமும் உண்டு, க்ருஷ்ணாதி யஜுர் வேதங்களில் 86 சாகைகள், யாக்ஞ வல்க்யர் ஸூர்யனிடமிருந்து சுக்ல யஜுர் வேதத்தைப் பெற்று, கண்வர் முதலிய சிஷ்யர்கள் மூலம், பரவச் செய்தார். சுக்ல யஜுஸ் 15 சாகைகள். மொத்தம் யஜுர் வேதம் 101 சாகைகள் என்று பிரம்மாண்டத்தில் சொல்லப் பட்டது –
௬க்ல யஜூர்வேத உத்பத்தி ப்ரகாரம்
வைசம்பாயனரிடம் பிரம்மராத சுதர் யாக்ஞவல்க்யர் குரு சுச்ரூஷை செய்து அத்யயனம் செய்து வந்தார். எவர் மஹா மேருவில் நடக்கும் கூட்டத்திற்கு வர வில்லையோ அவருக்கு ஏழு ராத்திரிக்குள் பிரம்ம ஹத்யை உண்டாகும் என்று எல்லா முனிவர்களாலும் ஒப்பந்தம் செய்யப் பட்டது: வைசம்பாயனர் ஒருவர் தான் அந்த ஒப்பந்தத்தை மீறினார். காலைத் தொட்ட மருமானை அடித்தார். பிரம்ம ஹத்தி வந்துவிட்டது. உடனே சிஷ்யர்களை அழைத்து ப்ரஹ்ம ஹத்யையைப் போக்கும் விரதத்தை எனக்காக எல்லோரும் செய்யுங்கள் என்று ஆக்ஜை செய்தார். பிறகு ‘யாக்ஞ வல்க்யர் நான் ஒருவனே அந்த வ்ரதத்தைச் செய்கிறேன். அல்ப தேஜஸ் உள்ள இவர்கள் சிரமப்பட வேண்டாம் என்று ப்ரார்த்தித்தார். உடனே கோப மடைந்த ஆசார்யன் . மஹா முனிவரான யாக்ஞ வல்கயரிடம் ** இந்தப் பிராம்மணர்களை தேஜஸ் இல்லாதவர்களாகச் சொல்லுகிறாய். விப்ரர்களை அவமானம் செய்கிறாய். என்னிடம் கற்ற விதயையை விட்டு விடு ‘? ‘என்று கூறினர். அதற்கு யாக்ஞ வல்க்யர் *‘ பக்தியினால் இவ்விதம் என்னால் சொல்லப் பட்டது. எனக்கும் உம்மிடம் கற்றது தேவை யில்லை ” என்று சொல்லி ரக்தம் கலந்த யஜுஸ்ஸுக்களை வெளிபிட்டார். பிறகு இஷ்டப்படி சென்றார். யாக்ஞ வல்க்ய மஹர்ஷிபினால் வெளிப்படுத்தப் பட்ட வேதங்களை சிஷ்யர்கள் தித்திரி பக்ஷி பின் உருவத்தோடு ஸ்வீகரித்தார்கள். அவர்களே தைத்திரீயர்கள் என்று சொல்லப் படுகிறார்கள். பிறகு தபோ நியமத்துடன் ஸூர்யனை ஸ்தோத்திரம் செய்தார். சூர்யன் வாஜி ருபம் தரித்து வரம் கொடுத்தார். அப்போது யாக்ஞ வல்க்யர் தம் குருவினித்தில் இல்லாத யஜுஸ்ஸுக்களைக் கேட்டார். அவர்களுக்கு வாஜிகள் என்று பெயர்: அஸ்வ ரூபமான ஸூர்யனிடம் கிரஹித்தபடியால் வாஜிகள் என்று பெயர். அதன் சாகைகள் 15. கண்வர் முதலியவர்களால் கிரகிக்கப்பட்டது–
யஜுர் வேத மஹிமை
ருக் யஜுஸ் ஸாம அதர்வண என்ற நான்கு வேதங்களிலும் யஜுர் வேதமே சிறந்தது என்கிறார் வேத புருஷன். மும் மூர்த்திகளில் இரண்டாவதான விஷ்ணு தான் பிரதானன். அதே போல் வேதங்களில் இரண்டாவதான யஜுர் வேதம் தான் பிரதானம்-நாராயணோ பநிஷத்தில் ருக் வேதத்தை ஆதித்ய மண்டலமாகவும், ஸாம வேதத்தை அதில் பிரகாசிக்கிற ஒளியாகவும், ஆதித்யனின் நடுவில் வசிக்கும் புருஷனே யஜுர் வேத ரூபி என்றும் ஸ்பஷ்டமாகச் சொல்லப் பட்டது -பிரம்ம வல்லிபில் மனோ மய புருஷனைச் சொல்லும் போது யஜுஸ்ஸை சிரஸ்ஸாகவும், ருக் ஸாமங்களைப் பக்ஷங்களாகவும், அதர்வத்தைப் புச்சம் என்றும் சொல்லப்பட்டது. இங்கு யஜுர் வேதத்துககே பிரதாநம்-வேதம், ஸ்ரீராமாயணம் இவைகளில் ஒவ்வொரு அக்ஷரமும் எம்பெருமானின் திரு நாமங்கள். மஹா பாதகங்களையும் அழிக்க வல்லதுது, ஒரு எழுத்துக்குப் பதில் மற்றொரு எழுத்தைச் சொல்வதாலும், ஒரு ஸ்வரத்துக்குப் (உதாத்தம் முதலியன) பதில் வேறு ஸ்வரத்தை உச்சரிப்பதாலும் விபரீத பலன் உண்டாகும் -1-பலம்–மாம்சம், (2) *பலம்–பழம், (3) *பலம்–சரீர பலம் இவ்வாறு அர்த்த பேதங்கள் உள்ளன. ஸ்வர பேதத்துக்கு வேதத்தில் ஓர் உபாக்யானம் சொல்லப்பட்டது. தவஷ்டா இந்திரனைக் கொல்லும் சக்தி உடைய பிள்ளையை அடைவதற்காக யாக விசேஷத்தைச் செய்தான். தத் புருஷ, பஹு வ்ரீஹி ஸமாஸங்களுக்கு ஸ்வர பேதம் உண்டு. ஸ்வர பேதத்தால் இந்திரனால் கொல்லப் படத் தகுந்த பிள்ளை உண்டானான். எம்பெருமான் எல்லா வேதங்களிலுமுள்ளான். அருளிச்செயலிலும் உள்ளான் –
“ ஸ ஜயதி ஜைமிநி ராதெள ஜயதி புந ; நாஸக்ருத்ஸ்நோ5பி)
நாராயணாவதாரோ ஜயதி பரம் பாதராயண: ஸ்ரீமான் ! –
அதா அதோ தர்ம ஜிஜ்ஞாஸா”” என்று தொடங்கி “*அநா வ்ருத்தி ஸப்தாத் அநா வ்ருத்தி ஸப்தாத்” என்னுமளவாக இருபது அத்யாயங்கள் கொண்டது மீமாம்ஸா ஸாஸ்த்ரம் ஒரே ஸாஸ்த்ரம் என்பர் பெரியோர். *ஸம்ஹிதம் ஏதத் ஸாரீரகம் ஜைமிநீ யேக ஷோடஸ லக்ஷணேன இதி ஸாஸ்த்ரைகத்வ ஸித்தி;”’ என்று வ்ருத்தி காரரான ஸ்ரீபோதாயநர் அருளிச் செய்துள்ளார் . ‘ அங்காநி வேதா; சத்வார: மீமாம்ஸா ந்யாய விஸ்தர: புராணம் தர்ம ஸாஸ்தரம்ச வித்யாஹ்யேதா: சதுர்த” என்று பதினான்கு வித்யா ஸ்தானஙகளைச் சொலலுமிடத்து *’மீமாம்ஸா’” என்று ஏக வசன ப்ரயோகததாலே மீமாம்ஸா சாஸ்த்ரம் ஒன்றே என்று கூறப் பட்டுள்ளது. வேதத்வம் நான்கு வேதங்களுக்கும் அவிசிஷ்டமா யிருக்க வேதஙகளை நான்கு வித்யா ஸ்தாநங்களாகப் பிரித்து கூறியுள்ளதே –புராணங்களும் தர்ம ஸாஸ்த்ரங்களும் வேதோப ப்ருஹ்மணங்களாக யிருக்கச் செய்தே *புராணம் தர்ம ஸாஸ்த்ரம் ச ” என்று இரு வித்யா ஸ்தாகங்களாகப் பிரித்து கூறியுள்ளதே, அதே போலே கர்ம மீமாம்ஸை தேவதா மீமாம்ஸை ப்ரஹ்ம மீமாம்ஸை மூன்றும் மீமாம்ஸை என்ற ஒரே சொல்லாலே கூறப் பட்டாலும் மூன்றும் தனித் தனியாக மூன்று ஸாஸ்த்ரங்களாகவே கொள்ளப்படலாமே என்னில் :–அன் று –அநாதி ஸித்த வ்யவஹாரத்தாலே– (வேதங்கள் நான்கு என்றும் புராணம் தர்ம ஸாஸ்த்ரம் என்றும் பிரித்துக் கூறியும் உள்ள வ்யவஹாரத்தாலே)–அது கூடும். மீமாம்ஸை இப்படி ஓரிடத்திலும் ஒருவராலும் பிரித்துக் கூறப்படவில்லை —ஏக வசந ப்ரயோகமாகவே எங்கும் காணப்படுகிறது. ஆகையால் ஒரே ஸாஸ்த்ரம்: கர்மமும் தேவதையும் வேதார்த்தம். ப்ரஹ்மம் வேதாந்தார்த்தம் –
கர்ம விசாரம் கர்ம காண்டத்தில் –தேவதா விசாரம் தேவதா காண்டத்தில் –ப்ரஹ்ம விசாரம் ப்ரஹ்ம காண்டத்திலாகும்
கர்ம தேவதா ப்ரஹ்ம கோசரர் ஸா த்ரிதோத்பபள ஸூத்ர காரத; —
ஜைமிநேர்முநே ! காராக்ருத்ஸ்நத: பாதராயணாத் இத்யத: க்ரமாத் ‘* என்று ஸ்ரீபராசர பட்டர் தத்வ ரத்நாகரத்தில் அருளிச் செய்துள்ளதை நோக்குங்கால் கர்ம தேவதா ப்ரஹ்ம மீமாம்ஸா ஸாஸ்த்ரங்கள் மூன்றும் கர்த்ரு பேதத்தாலும் விஷய பேதத்தாலும் மூன்று என்று தோன்றுமே யாயினும் பூர்வோக்த போதாயந வ்ருத்தி க்ரந்தத்தோடு இதற்கு அவிரோதத்தையே கொள்ள வேணும். ஸ்ரீபராரர பட்டரும் ஸ்ரீபோதாயநரும் இருவரும் நமக்கு ஆப்த தமர்கள். அவர்கள் இருவரும் ௮பியுக்த அக்ரேஸரர்கள். ஆகையால் ஒன்றையும் பாத்யமாகக் கொள்ளாமல் இரு வசநங்களையுமே ப்ரமாணங்களாகக் கொள்வதே நமக்கு யுக்தம், * ஷோடஸ லக்ஷணேந ஜைமிநீயேந ” என்று போதாயனராலே -ஸ்புடமாகவே பதினாறு அத்யாயஙகளும் ஜைமிநி ப்ரோக்தம் என்று அருளிச் செய்யப் பட்டிருப்பதால், பட்டர் * தேவதா காண்டம் காஸக்ருத்ஸ்ந ப்ரோக்தம்”? எனறு அருளிச் செய்திருப்பது, அதுவும் ஜைமிநி ப்ரோக்தமாயினும் காஸக்ருத்ஸ்ந ப்ரகாசிதம் என்ற தாத்பர்யத்தாலே என்று கொள்ளலாம் –கர்தரு பேதம். ஸாஸ்த்ர பேதகமன்று என்பதனைப் பல பல சான்றுகளைக் கொண்டு நாம் தெளியலாம். ஆபஸ்தம்ப ஸூத்ர வ்பாக்யாநம் தூர்த்த ஸ்வாமி கபர்தி என்ற இருவராலும் செய்யப் பட்டிருந்தாலும் வ்யாக்யேயமான (மூலமான) ஆபஸ்தம்ப ஸுத்ர க்ரநதத்தின் ஐக்யத்தாலே ஏகம் என்று கொள்ளுகிறோம். வாமநர் ஜயாதித்யர் என்ற இருவரும் பாணிநி ஸூத்ரங்களுக்கு பூர்வோத்தர வ்ருத்தி கரந்தங்களை யநுக்ரஹித்திருந்தாலும் வ்யாக்யேய ஐக்யத்தாலே ஐக்யம் கொள்ளுகி3றாம்- மநு ஸ்ம்ருதி மநுவாலே தொடங்கப் பெற்று ப்ருகுவாலே உப ஸம்ஹரிக்கப் பட்டுள்ளது. ஆயினும் ஆங்கே ஸாஸ்த்ர பேதம் கொள்ளாதே ஸாஸ்த்ரைக்யம் கொள்ளுகிறோம். போஜ ராஜன் லஷ்மண ஸுூரி ஆகிய இருவரால் செய்யப்பட்ட சம்பூ ராமாயணம் ஒரே க்ரந்தம் என்றே கொள்ளப்படுகிறது. சாந்தோக்யத்தில் உபகோஸல வித்யா ப்ரகரணத்தில் உபதேஷ்டாக்கள் பிந்ந பிந்நர்களாயினும் வித்யைக்கு பேதம் கொள்ளப் படவில்லை. அதே போல இங்கும் ஜைமிநி காஸக்ருதீஸ்நர், வேத வ்யாஸர் என்று கர்த்ரு பேதம் இருந்தாலும் ஸாஸ்த்ர பேதம் இல்லை ஏகம் ஸாஸ்த்ரம் என்றே கொள்க.–
கர்ம மீமாம்ஸைக்கு கர்மமும் தேவதா மீமாம்ஸைக்கு தேவதைகளும் ப்ரஹ்ம மீமாம்ஸைக்கு ப்ரஹ்மமும் விஷயமாகையால் மீமாம்ஸைகளுக்கு விஷய பேதத்த।லே பேதத்தைக் கூற முடியுமே யெனில்:–அன்று–இம் மீமாம்ஸைகளுக்கு அர்த்தைக்யத்தையே நம் முன்னோர் கூறி யுள்ளனர். ஆகையால் ஸாஸ்த்ர பேதம் இல்லை.-கர்ம காண்டத்தில் கூறப்பட்ட கர்மங்கள் பரமாத்மாராதநங்களாகும். தேவதா காண்டத்தில் கூறப்பட்ட தேவர்கள் பரமாத்ம ஸரீர பூதர்கள் ; ப்ரஹ்ம காண்டத்தில் கூறப் பட்ட ப்ரஹ்மம் ஸர்வ கர்ம ஸமாராத்யமான ஸர்வ தேவாந்தராத்ம பூதமான ப்ரஹ்மம் நாராயண ஸப்த வாச்யமாகும் என்ற ஒரே அர்த்தம் மீமாம்ஸா த்ரய ஸாரமாகத் தேறுகிறது. ஆகையால் இது ஒரே ஸாஸ்த்ரமாகும்-ஸகல வேத வேத்யத்வம் ஸர்வ தர்ம ப்ரவர்த்தகத்வம், ஸர்வ தேவதாந்தராத்மதயா ஸர்வ கர்ம ஸமாராதநீ யத்வம் ஸர்வ தர்ம பல ப்ரதத்வம் என்ற நான்கும் பரமாத்ம லக்ஷணங்களாகும். இவை காண்ட த்ரய ஸாரமாகும்-எங்குமே – விசாரிக்கப்பட்டவன்” பரமாத்மாவே. : கர்ம காண்டத்தில் தர்மமாகவும் ‘தேவதா காண்டத்தில் தேவ சரீரகனாகவும், ப்ரஹ்ம காண்டத்தில்: தேவதா என்ற கஞ்சுகத்தைக் கழித்து ஸாஷாத் பரமாத்மாவாகவும் விசாரிக்கப்பட்டவன் அவனே என்பர் நம் பெரியோர். “ தர்மே ப்ரமீய மாணே து வேதேந கரணாத்மநா இதி கர்தவ்யதாபாநம் மீமாம்ஸா பூரயிஷ்யதி ” என்ற வசநம் இங்கே அநுஸந்தேயம்--விறகுக் கட்டையை இரு கூறாகப் பிளக்கக்-குடாரம் (கோடரி) தேவை. ஆயினும் அதனைத் தூக்கி விறகின் மேல் விழ வைக்க வேண்டுமே. விறகு இரு கூறாவதற்குக் கரணம் கோடரி. அதனைத் தூக்கிக் கீழே சேர்ப்பது அங்கம், இதி கர்தவ்யதா என்பதும் அங்கம் என்பதும் பர்யாயம், அதே போல் தர்ம ஜ்ஞாநத்துக்கு வேதம் கரணம்: வேதார்த்த விசாரமான மீமாம்ஸா ஸாஸ்த்ரம் இதி கர்தவ்யதை யாகும். இதின்றிக்கே வேதம் தர்ம ப்ரமாணமாக மாட்டாது என்றபடி, கர்மபாகார்த்த நிர்ணயம் கர்ம மீமாம்ஸையினால், தேவதா பாகார்த்த நிர்ணயம் தேவதா மீமாம்ஸை.பினால், ப்ரஹ்ம பாகார்த்த நிர்ணயம் பாரஹ்ம மீமாம்ஸையினால் உண்டாகும் என்றபடி.
ஸாஸ்த்ர ஆரம்ப சதுஸ் ஸூத்ரிகள் -ஸித்த ப்ரஹ்ம விஷயக ப்ரீதியை ஸ்தாபிப்பது முதலிரண்டு அதிகரணங்களின் க்ருத்யம். -ஸித்த வஸ்து ஸாமாந்யத்தைச் சப்த ஸாமாந்யம் போதிக்காது என்ற ஆக்ஷேபத்தை நிரஸித்தார் முதலதிகரணத்தில்–ஸித்த விசேஷமான ப்ரஹ்மத்தை சப்த விஸேஷமான: ப்ரஷ்ம சப்தம் போதிக்கும் என்றார் இரண்டாம் அதிகரணத்தில்–ஜிஜ்ஞாஸாதிகரண விஷய வாக்யத்தில் * ஸ குருமேவாபி கச்சேத்’” என்று பொதுவாக குரூபஸத்தி கூறப்பட்டது. ஜன்மாத் யதிகரண விஷய வாக்யத்தில் சிஷ்ய விசேஷமான புத்திரனுக்கு ப்ருகுவுக்கு பிதாவான ஆசார்யன் வருணன் உபதேசித்தார் எனக் கூறப்பட்டது விசேஷமாகும். முதலதிகரணத்தில் நிரீஸ்வரவாதி நிராகரணம். இரண்டாமதிகரணத்தில் நிர்விசேஷவாதி நிராகரணம் என்றும் விபஜிக்கலாம்–வஸ்துத: இரண்டாம் அதிகரணமும் நிரீஸ்வரவாதி நிராஸகம் என்றே கூறலாம். நிர்விசேஷ வஸ்து ஈஸ்வரனாக இருக்க முடியாதாகையால் என்பர் நம் பெரியோர். சாரீரகம் முதலத்யாயத்தில் கூறப்பட்ட அர்த்தத்தை முதல் ஸுத்ரத்தாலும், இரண்டாமத்யாயத்தில் கூறப்பட்ட அவிரோதத்தை இரண்டாம் அதிகரணத்தாலும் கூறுகிறார் ஸ்ரீவேத வ்யாஸர் என்றும் கூறுவர் பெரியோர்–இப்படி சதுஸ் ஸூத்ரியில் முதல் பேடிகை—இரண்டாம் பேடிகை மேல் இரண்டு அதிகரணங்களாகும். தாத்பர்ய லிங்க ஸமர்த்தக பரத்வம் உத்தர பேடிகைக்கு உள்ளதாகும். அப்ராப்தத்வ லக்ஷணமான தாத்பர்ய லிங்கம் மூன்றாவது ஸுத்ரத்தாலும் ஸ பலத்வ லஷண தாத்பர்ய லிங்கம் நான்காவது ஸூத்ரத்தாலும் ஸமர்த்திக்கப் படுகிறது. மாநாந்தர ப்ராப்தம் ப்ரஹ்ம தத்வம்.-அனுமானத்தினாலேயே ஈஸ்வரனை ஸாதித்துக் கொள்ளலாம். வேதாந்தாத்யயநத்தாலே ஏற்பட்ட ஆபாத ப்ரதீதி ஈஸ்வரா நுமாகத்தாலேயே நிச்சய புத்தியாக ஏற்படும்–சாஸ்த்ரம் ஆவச்யக மன்று என்று பூர்வ பக்ஷம், இதனை நிரஸிக்கிறார் சாஸ்த்ரயோந்யதிகரணத்தில் ஸ்ரீவேத வ்யாஸர். ப்ரஹ்ம விஷயத்தில் சாஸ்த்ரமே ப்ரமாணம் என்று கூறி ப்ரஹ்மம் மாநாந்தர கோசரமல்லாமையால் சாஸ்த்ரைக வேத்யமாகையால். ஸாஸ்த்ரத்துக்கு அப்ராப்தத்வ லஷண வைபவம் உண்டு என்கிறார்–பரமாத்மாவின் பரம புருஷார்த்தத்வரூப பலத்வம் ஸ்தாபிப்பது நான்காம் அதிகரணத்தில். ‘*தரய்யந்தா: ஸத்ய நித்ய அத்புத பரம ஸுக ப்ரஸ்ம நிஷ்டா: ப்ரமாணம்” என்றருளிச் செய்தார் தேசிகன், இந்த அதிகரணத்தில் ஸாபல்ய லக்ஷண தாத்பர்ய லிங்க ஸமர்த்தநம் செய்யப்படுகிறது–
ஆக ப்ரஹ்மம் ஸித்த வஸ்துவானாலும் சாஸ்த்ரம் கூறும் என்றும், ப்ரஹ்மம் ஜகஜ்ஜக்மாதி காரணத்வ ரூப லக்ஷண் லக்ஷிதம் என்றும் ப்ரஹ்மம் மாநாந்தர ப்ராப்த மன்று ஸாஸ்த்ரைக கோசர மென்றும்–ப்ரஹ்மம் ஸாக்ஷாத் பல பூதம் என்றும் நான்கு ஸுத்ரங்களால் கூறி ப்ரஹ்ம விசார கர்த்த்தவ்யத்வத்தை ஸ்தாபித்தார்–இதுவே அவதாரிகை. இனி ஈக்ஷத் யதிகரணம் தொடக்கமாக ஸாஸ்த்ரம், பரமாத்ம கல்யாண குணங்கள் ஸாஸ்த்ர ப்ரதிபாதிதங்கள் ஸத்யங்கள் நித்யங்கள் கல்யாணங்கள் அநந்தங்கள் நிரதிஸயங்கள் நிருபாதிகங்களும் ஆகும்–இவற்றை மேலே 16 பாதங்களாலே ஸ்ரீவேத வ்யாஸர் ஸ்தாபிக்கிறார்–ஆக ப்ரஹ்மம் ஜகஜ் ஜந்மாதிகாரணம் சேதநாசேதந விலஷணம் ஸமஸ்த கல்யாண குணா கரம் ப்ராப்ய ப்ராபக பூதம் முக்த ப்ராப்யம் அபுநரா வ்ருத்தி லக்ஷண முக்தி ப்ரதம் என்று வேதாந்த வேத்யம் என்பது சாரீரக ஸாரமாகும்–
ஸாரீரகம் நான்கு அத்தியாயங்கள் கொண்டது. இவை நான்கும் பூர்வ த்விகம் உத்தர த்விகம் என்று இரண்டு பேடிகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன .
பூர்வ த்விகம் (முன் இரண்டு அத்யாயங்கள்) விஷய த்விகம் என்றும் ஸித்த த்விகம் என்றும் கூறப்படுகிறது. ப்ரஹ்மமாகிற பகவத் விஷயத்தைப் பற்றிக் கூறுகிறபடியாலும் ப்ரஹ்மமாகிற ஸித்த வஸ்துவைக் கூறுகிறபடியாலும் அப்படி வழங்கப் பெறுகிறது.
உத்தர த்விகம் (பின் இரண்டு அத்யாயங்கள்) விஷயி த்விகம் ஸாத்ய த்விகம் என்றும் கூறப்படுகிறது. மூன்றாவது அத்யாயத்தில் ப்ரஹ்ம வித்யை (உபாஸகம்) விசாரிக்கப் படுகிற படியாலும் நான்காவது அத்யாயத்தில் ப்ரஹ்மாநுபவம் கூறப்படுகிற படியாலும் அவ்வாறு வ்யவஹரிக்கப்படுகிறது. ப்ரஹ்மமாகிய பகவத் விஷயத்தைப் பற்றிய உபாஸநம் விஷயி யாகும். அது ப்ரயதந ஸாத்யமே யன்றி ஸித்தமன்று. அவ்வோபாதி ப்ரஹ்மாநுபவமும் பகவத் விஷயத்தைப் பற்றியதாகையால் விஷயியே யாகும். விஷயத்தைப் பற்றியது விஷயி ஜ்ஞாநம் என்றபடி, ப்ரஹ்ம வித்யையும், ப்ரஹ்மாநுபவமும் ஜ்ஞாந ரூபமே யன்றோ. தேஸ விசேஷமான தெளி விசும்பு திரு நாட்டிலே அப்ராகருத விக்ரஹம் பெற்று பரிபூர்ணமாக ப்ரஹ்மத்தை யநுபவிப்பது இனி ஸாத்யமேயன்றி ஸித்தமன்று, ஆகையால் உத்தர த்விகம் விஷயி த்விகம் என்றும் ஸாத்ய த்விகம் என்றும் கூறப்படுகிறது. இவ்வாறு நான்கு அத்யாயங்களில் பேடிகா விபாகம்-
முதலத்யாயம் ஸமந்வ யாத்யாயம் என்றும், இரண்டாமத்யாயம் அவிரோதாத்யாய மென்றும் மூன்றாமத்யாயம் ஸாதனாத்யாயமென்றும் நான்காமத்யாயம் பலாத்யாயம் என்றும் கூறப் படுகிறது.
பூர்வ த்விகம் –ப்ரமேயத்வ வ்யாபக கார்யதா நிரூபித காரணத்வம் ப்ரஹ்ம லக்ஷணம் என்ற அர்த்தமே பூர்வ த்விக ப்ரதிபாத்யமாகும் –காரணத்வம் லக்ஷணமாகும் போது அது அஸம்பவ அதி வ்பாப்தி ரூப தோஷ ரஹிதமமாய் ஸல் லஷணமாய் அமைய வேண்டும் -ஸ்ருதி விபரதிபத்தி ப்ரயுக்த அஸம்பவ சங்கை ஏற்படும். (சிதசிதவிலக்ஷண ப்ரஹ்ம வஸ்துவே இல்லை–என்ற சங்கை) (லக்ஷ்யா ஸம்பவ ப்ரயுகத லக்ஷணா ஸம்பவ சங்கை என்றபடி) அதற்குப் பரிஹாரம் முதற் பாதததால் செய்கிறார் வ்யாஸார் . ஸ்ருதி விப்ரதிபத்தி ப்ரயுக்த அதி வ்யாப்தி சஙகை ஏற்படும், (பரஹ்மமும் ஜகத்காரணமா யிருக்கட்டும். சேதநாசேதநங்களும் அங்கனமாயிடுக என்ற சங்கை) அதனைப் பரிஹரிக்கிறார் வ்யாஸர் த்ரிபாதியால் (மேல் மூன்று பாதஙகளால் ) என்று பேடிகா விபாகம்
வாதி விப்ரதிபத்தி ப்ரயுக்த அஸம்பவ அதி வ்யாப்தி சங்கை யேற்பட அதனை நிரஸிக் கிறார் வ்யாஸர் இரண்டாமத்யாயம் பூர்வ பாத த்வயத்தால்– கார்யத்வம் ப்ரமேயத்வ வ்யாபகம், அதாவது எந்த ப்ரமேயமும் ப்ரஹ்ம கார்யமே என்று ஸ்தாபிக்கிறார் இரண்டாமத்யாயம் உத்தர பாத த்வயத்தால் என்றபடி-இப்படி முதலிரண்டு அத்யாயங்களால் (பூர்வ த்விகம்) சிதசித் விலக்ஷண ப்ரஹ்மம் ஜகதேக காரணம எனறு அறுதி யிட்டாராயிற்று –
முதலத்யாயம்-இது ஸமந்வயாத்யாயம் எனக் கூறப்படுகிறது. வேதாந்தங்களில் ஜகத் காரண வஸ்துவைக் குறிக்கும் வாக்யங்கள் காரண வாக்யங்களாகும். அவற்றுக்கு சிதசித் விலக்ஷண ப்ரஹ்மத்திலே ஸமீசீநாக்வயத்தைக் கூறும் அத்யாயம் ஆகையால் முதலத்யாயம் ஸமந்வயாத்யாயம் என்று கூறப்படுகிறது. அதாவது காரண வாக்ய விசாரம் செய்து இவ் வாக்யங்கள் சிதசிதவிலக்ஷண ப்ரஹ்மத்தையே ஜகத் காரணமாகக் கூறும், சேதந வஸ்துவையோ அசேதந வஸ்துவையோ ஜகத் காரணமாக இவ் வாக்யங்கள் கூறா என்று வ்யாஸர் அறுதி யிடுகிறார் என்றபடி. .
முதலத்யாயம் முதற்பாதம் அயோக வ்யவச்சேத பரம். மேல் மூன்று பாதங்கள் (த்ரிபாதீ) அந்ய யோக வ்யவச்சேத பரங்கள் என்று பேடிகா விபாகம்.—யோகமாவது ஸம்பந்தம். காரணத்வ ஸம்பந்தம், அவயோகம் காரணத்வாஸம்பந்தம். அதனை ‘ வ்யவச்சேதம் செய்கிறது முதற்பாதம். அதாவது ப்ரஹ்மத்துக்கு ஜகத் காரணத்வம் இல்லை என்பதில்லை என்றபடி. ப்ரஹ்மம் ஜகத் காரணமே “என்று-முதற் பாதத்தில் ஸ்தாபிக்கப்படுகிறது என்றபடி. -ஜகத் காரணமாக ப்ரஹ்மம் என்றொரு வஸ்து-உண்டு என்று ஸ்தாபிக்கப்படுகிறது-என்றவாறு.–
ப்ரஹ்ம பிந்நத்துக்குக் காரணத்வமில்லை என்ற அர்த்தம் த்ரிபாதீ ஸாரமாகும். அந்யத்ர யோகத்தை வ்யவச்சேதம் செய்கிறது த்ரிபாதீ என்றபடி. ப்ரஹ்மமே ஜகத் காரணம் என்றபடி. இதனால் ஜகத் காரணத்வ ரூப ப்ரஹ்ம லக்ஷணத்துக்கு அதி வ்யாப்தி ரூப தோஷமின்மை கூறப்படுகிறது.
சிதசித் விலக்ஷண ப்ரஹ்ம தத்வமே இல்லை என்று ப்ரதம பாதத்தில் பூர்வபக்ஷம். ஆகையால் நிகில வேதாந்த வாக்யாக்ஷேபம் முதற் பாதத்தில் செய்யப் படுகிறது. இதவே அஸம்பவ சங்கா.-லக்ஷ்யா ஸம்பவ ப்ரயுக்த லக்ஷணா ஸம்பவ சங்கா என்பர் பெரியோர். இதனை நிரஸிக்கிறார் வ்யாஸர் முதற் பாதத்தில்: சிதசிதவிலக்ஷண ப்ரஹ்மமாகிற ஜகத் காரண வஸ்து உண்டு என்று ஸ்த்தாபிக்கிறார் முதற் கண். ஆகையால் ப்ரதம பாதம் அஸம்பவ சங்கா பரிஹார பரம், மேலே த்ரிபாதீ அதி வ்யாப்தி சங்கா பரிஹாரம் செய்கிறது. அதாவது அந்ய யோக வ்யவச்சேதம் செய்யப்படுகிறது த்ரிபாதியால் என்றபடி, ப்ரஹ்மம் வேதாந்த வேத்யமாகப்படும், ஆயினும் இந்த வேதாந்த வாக்ய விசேஷம் ப்ரஹ்ம பிந்நத்தையும் ஜகத் காரணமாகக் கூறுகிறதே என்று வாக்ய விசேஷத்தைக் கொண்டு ஆக்ஷேபம் விளைய அதனைப் பரிஹரிக்கிறார் த்ரிபாதியில். அந்த வாக்ய விசேஷங்களும் சிதசித்விலக்ஷண ப்ரஹ்ம பரங்களே என்று த்ரிபாதியில் நிர்ணயிக்கப்படுகிறது என்றபடி. தீரிபாதியில் (முதலத்யாயம் நான்காவது பாதம் முதலதிகரணத்தில்) :” ஆநுமாநிகமபி ‘* என்று அபி ஸப்த ப்ரயோகம் செய்கிற வ்யாஸ ஹ்ருதயம் இது தான் என்று தெரிகிறது. ஆநுமாநிகமும் (ப்ரக்ருதி) ஜகத் காரணமாக ஆகட்டும் என்று ஆக்ஷேபம் விளைய அதனை நிரஸிக் கிறார் என்றபடி. இப்படி பாத த்ரிபாதீ விபாகம். இது. ப்ராயிகம்.
ஜீவாதி லிங்கங்கள் அஸ்பஷ்ட தரங்களாக உள்ள காரண வாக்யங்களை முதலத்யாயம் முதற் பாதத்தில் விசாரித்து, அவை அஸ்பஷ்டங்களாக உள்ள காரண வாக்யங்களை முதலத்யாயம் இரண்டாம் பாதத்தில் விசாரித்து, அவை ஸ்பஷ்டங்களாக உள்ள காரண வாக்யங்களை முதலத்யாயம் மூன்றாம் பாதத்தில் விசாரித்து, அவை ஸ்பஷ்ட தரங்களாக வுள்ள காரண வாக்யங்களை முதலத்யாயம் நான்காம் பாதத்தில் விசாரித்து அவை சிதசித் பரங்களல்ல–அவை சிதசித்விலஸதண ப்ரஹ்ம பரங்களே யென்று ஸித்தாந்தீகரிக்கிறார் வ்யாஸர் என்றும் கூறலாம். ஆக முதலத்யாயம் 35 அதிகரணங்களில் முதற்கண் 4 அதிகரணங்கள் உபோத்காதம் என்றும், மேல் 31 அதிகரணங்களில் சிதசித்விலகண ப்ரஹ்மம் ஜகத் காரணம் என்றும் நிரூபிக்கப்படுகிறது என்று பேடிகா விபாகம்.
முதலத்யாயம் இரண்டாம் பாதத்தில் ஜகத்து ப்ரஹ்மத்துக்குச் சரீரம் என்று கூறும் வாக்கியங்களையும்,
முதலத்யாயம் மூன்றாம் பாதத்தில் ஜகத்துக்கு ப்ரஹ்மம் ஆத்மா என்று கூறும் வாக்யங்களையும்,
முதலத்யாயம் நான்காம் பாதத்தில் ஸாங்க்யாதி பக்ஷ ப்ராந்தி ஜநக வாக்யங்களையும் விசாரித்து ப்ரஹ்ம பரத்வ ஸ்த்தாபநம் செய்கிறார் என்றும் கூறலாம்-முதலத்யாயம் முதற்பாதத்தில் சிதசித் விலஷண பரம காரண பூத பரம புருஷ நிர்ணயம். இரண்டாம் பாதத்தில் ஜகச் சரிரகத்வமும், மூன்றாம் பாதத்தில் ஜகதாத்மத்வமும் கூறப்பட்டன. நான்காம் பாதத்தில் அதத் கார்யமாய் அதச் சரீரமாய் அததாத்மகமாய் ஒரு வஸ்துவும் இல்லை என்று கூறுகிறார். ப்ரஹ்மைக காரணத்வ ஸ்த்தீ கரணம் நான்காம் பாதத்தில் செய்யப்படுகிறது என்றிங்ஙனே கூறுவதும் ஸாம்ப்ரதாயிகமேயாம்
இப்படி பாத த்ரிபாதீ பேடிகா விபாகம் –
முதலத்யாயம் முதற்பாதம்
இப் பாதம் 11 அதிகரணங்கள் கொண்டது. 4 +7=11 என்றும் 4+3+4 =11 என்றும் கணக்கிடும்படி அமைந்துள்ளது இப் பாதம்.
முதற்கண் நான்கு அதிகரணங்கள் (ஜிஜ்ஞாஸாதிகரண ஜந்மாத்யதிகரண ஸாஸ்த்ர யோநித்வாதிகரண ஸமந்வயாதிகரணங்கள்) உபோத்காதம்.
மேல் 7 அதிகரணங்களில் சிதசித்விலஷண ப்ரஹ்மத்தை ஜகத் காரணமாக ஸ்தாபிக்கிறார் எனறு பேடிகா விபாகம்-
முதல் நான்கு அதிகரணங்கள் அமைந்த உபோத்காத ப்ரகரணத்தை இரண்டு பேடிகைகளாகப் பிரிக்கலாம் –2+2=4 என்று கணக்கு–வேதாந்தங்கள் ப்ரஹ்ம விஷயக ப்ரதீதியைப் பிறப்பியாது என்ற சங்கையைப் பரிஹரிககிறது முன் அதிகரண த்வயம்-வேதாந்தத்தால் ப்ரஹ்ம ப்ரதீதி ஏற்பட்டாலும் வேதாந்தங்களுக்கு ப்ரஹ்ம விஷயத்தில் தாதபர்யமில்லை என்ற சங்கையைப் பரிஹரிககிறது மேல் அதிகரண த்வயம் என்று பேடிகா விபாகம்–
முதலதிகரணத்தில் லக்ஷ்ய விசார ப்ரதிஜ்ஜை செய்கிறார்.-இரண்டாமதிகாணத்தில் -லக்ஷ்யத்துக்கு லஷணத்தை விசாரிக்கிறார் .-மூனறாமதிகரணததில் லக்ஷண விஷயக சஙகையைப பரிஹரிக்கிறார் நான்காமதிகரணத்தில் லக்ஷ்ய விஷயக சங்கையைப் பரிஹரிக்கிறார் என்று சதுஸ் ஸூத்ரீ பிரகரணம் உபோத்காதம். இப்படி லக்ஷ்ய விசார ப்ரதிஜ்ஞை செய்த வ்யாஸார் மேலே லக்ஷ்யமான ப்ரஹ்மத்தை விசாரிக்கிறார்.
மேல் 7 அதிகரணங்களையும் 2+5=7 என்றும் 3+4=7 என்றும் இரண்டு விதமாகப் பிரிக்கலாம் –
முதல் இரண்டு அதிகரணங்களில், (ஈக்ஷத்யதிகரண ஆநந்தமயாதி கரணங்களில் ) ஸாஸ்த்ர யோநித்வாதிகரண ஸமந்வயாதிகரண ஸித்தமான அநுமாநாத்யகம்ய துஃகாஸமஸ்ப்ருஷ்ட ப்ரஹ்மம் , பிரக்ருதி புருஷ விலஷணம் என்று ஸ்த்தாபிக் கப்படுகிறது. அநுமாந கம்ய துஃக ஸம்ஸ்பருஷ்டர் களன்றோ பிரக்ருதி புருஷர்கள். மேல் 5 அதிகரணங்கள் பிரக்ருதி புருஷ வைலஷண்யம் ஸ்தாபிக்கப்படுகிறது என்று ஓர் பேடிகா விபாவம்
அதவா:–முதற்கண் மூன்று அதிகரணங்களால் (ஈக்ஷத் யதிகரண ஆநந்த மயாதிகரண அந்தரதிகரணங்கள்) ஸதாதி ஸாமாந்ய ஸாப்த கடிதங்களான காரண வாக்யங்கள் ப்ரக்ருதி புருஷ விலஷண காரண ப்ரஹ்ம பரங்களாக அறுதி யிடப்படுகின்றன .-மேலே ஆகாசாதிகரணம் தொடங்கி 4 அதிகரணங்களில் ஆகாச ப்ராணாதி விசேஷ சப்த கடித வாக்யங்கள் சிதசித்விலக்ஷண ப்ரஹ்ம பரங்களாக ஸ்தாபிக்கப்படுகின்றன –
அதவா:–முதல் மூன்று அதிகரணங்களில் காரண வாக்யங்களால் ஏற்படும் ஸந்தேஹம் பரிஹரிக்கப்படுகிறது. அதாவது ஸம்ஸய ஜுநக வாக்யங்களுக்கு அர்த்த நிர்ணயம் செய்யப்படுகிறது என்றபடி-மேலே நான்கு அதிகரணங்களில் காரண வாக்யங்களால் ஏற்படும் விபரீத ஜ்ஞாஈம் பரிஹரிக்கப்படுகிறது. அதாவது விபர்யய ஜநக வாக்யங்களுக்கு ஸதர்த்த ஸ்ததாபநம் செய்யப் படுகிறது என்றபடி.
ஈக்ஷத் யதிகரணத்தில் அசித் விலஷண ப்ரஹ்மம் ஜகத் காரணமென்றும், ஆநந்த மயாதி கரணத்தில் சித் விலஷண ப்ரஹ்மம் ஜகத் காரணமென்றும் அந்தரதிகரணததில் திவ்ய மங்கள விக்ரஹ விசிஷ்டம் ப்ரஹ்மம் என்றும நிர்ணயிககப்படுகிறது.
ஆநந்தமயாதிகரணக்தில் முதல் ஸூத்ரத்தால் ப்ரஹ்மம் ஜீவ ஸாமாந்ய விலஷண மென்றும், ஐந்தாவது ஸூத்ரத்தால் ப்ரஹ்மம் முக்த ஜீவ விலக்ஷணமென்றும் கூறுகிறார். ஈக்ஷத்யதிகாணத்தில் ப்ரஹ்மத்தை **தந் நிஷ்டஸ்ய மோஷோபதேசாத்” என்று மோஷோபாயமாகவும், ஆநந்த மயாதிகரணத்தில் ப்ரஹ்மம் முக்த ப்ராப்யம் பரமாநந்த மயமென்றும் ஸ்தாபிக்கிறார் வ்யாஸர். ஈஷந் யதிகரண பூர்வபஷியைச் சேர்ந்தவர்களை காரணத்வாதி : கரண (1.4 4)த்திலும், ஆகந்த மயாதிகரண பூர்வ பஷியைச் சேர்ந்தவர்களை ஜகத் வாசித்வாதிகரண (1.4.5)த்திலும் நிரஸிக்கிறார் வ்யாஸர்.
ஈக்ஷத் யதிகரணத்தில் ப்ரஹ்மம் ஸர்வஜ்ஞமென்றும் ஆநந்த மயாதிகரணத்தில் ப்ரஹ்மம் ப்ரசுராநந்த விசிஷ்ட மென்றும் அந்தராதிகரணத்தில் ப்ரஹ்மம் அமலம் என்றும் ஸ்த்தாபித்த ஸ்ரீ வேத வ்யாஸர் ப்ரஹ்மம் உபய லிங்க விஸிஷ்டம் என்று ஸ்த்தாபித் தருளினாராயிற்று. பரமாத்மாஸாதாரணம் உபய லிங்கம் அகில ஹேய ப்ரத்ய நீகத்வ கல்யாணை கதாநத்வங்கள், இவை ப்ரஹ்மத்துக்கே ஸாதாரணங்கள். சேதநாசேதநங்களுக்கு அஸம் பாவிதங்கள். ஆகையிறே ப்ரஹ்மம் நிகில சேதநாசேதந விலக்ஷணம் என்னப் படுகிறது.
மேல் நான்கு அதிகரணங்களை (ஆகாசாதிகரணாதி சதுஷ்டயம்) இரண்டு பேடிகைகளாகப் பிரிக்கலாம். 2+2-=4 என்று கொள்க. ஆகாச ப்ராணாதிகரணங்களிரண்டிலும் ஆகாச ப்ராண சப்தங்களுக்கு ரூட்யர்த்தத்தை விட்டு யெளகிகார்த்தத்தைக் கொண்டு தத்தச் சப்தங்கள் விலக்ஷண ப்ரஹ்ம பரங்களாக நிர்ணீதங்கள். ஜ்யோதிகரண. இந்தர ப்ராணாதிகரணங்களிரண்டிலும் தததச் சப்தங்களுக்கு ரூடிபங்கமில்லாமலே தத்தத்ரூடார்த்த விஸிஷ்ட ப்ரஹ்ம பரங்களாக அர்த்த நிர்ணயம் செய்யப்படுகிறது –
அதவா;–ஆகாச ப்ராணாதி கரணங்களிரண்டிலும் காரண வாக்யகத ஆகாச ப்ராண சப்தங்களுக்கு விலக்ஷண ப்ரஹ்ம பரத்வம் ஸ்த்தாபிதம்.–ஜ்யோதிரதிகரண இந்த்ர ப்ராணாதிகரணங்களில் அப்படியன்று. ஸாஷாத் காரண வாக்யங்கள் அங்கு விசாரிக்கப்படவில்லை, காரணத்வ வ்யாப்த லிங்கங்கள் நிரதிசய தீப்திமத்வம் முமுஷு உபாஸ்யத்வம் இவை யுள்ள விடத்தேயே காரணத்வம் உள்ளது என்றபடி. தாத்ருஸ லிஙக ப்ரதிபாதக வாக்யங்களில் உளள ஜ்யோதிச் சப்த இந்த்ர சப்தங்கள் விலஷண ப்ரஹ்ம பரங்களாக ஸ்தாபிக்கப் படுகின்றன. இங்கே இந்த்ர பதம் என்றது இந்த்ரன் தன்னைச் சொன்ன “மாம்!” என்ற ஸப்தம் என்றபடி.
அதவா:– ஆகாசாதிகரணத்தில் வஸ்த்வந்தர ப்ரஸித்தமான ஆகாச சப்தத்தைக் கொண்டு (ஸப்த விசேஷத்தைக் கொண்டு என்றபடி). அசேதநமே ஜகத்காரண மென்று ஆக்ஷேபம் விளைய, அர்த்த விரோதத்தைக் காட்டி ஆகாச ஸப்தம் அசித விலக்ஷண ப்ரஹ்ம பரம் எனகிறார்.
ப்ராணாதிகரணத்தில் அர்த்த விரோத மின்மையைக் காட்டி அசேதநமே ஜகத் காரணம் என்றார்கள் பூர்வ ஷிகள்- அதனையும் அர்த்த விரோத ஸத்பாவத்தைக் காட்டிப் பரிஹரித்தார் வ்யாஸர்.
ஜ்யோதிகரணத்தில் விரோதி லிங்கமின்மை அல்பாநுகூல லிங்க ஸத்பாவம் இவற்றைக் கொண்டு ஆஷேபம் விளைந்தது. அதனை ஸ்வ வாக்கியததில் விரோதமில்லா விடினும் உபக்ரம வாக்யத்தில் விரோதம் உள்ளது ”” என்று கூறிப் பரிஹரித்தார்.
இந்த்ர ப்ராணா திகரணத்தில் உபக்ரமத்திலேயே விரோத மில்லாமையைக் கூறி பூர்வபஷி ஆஷேபிக்க, அதனை அர்த்த விரோதததைக் கூறிப் பரிஹரிக்கிறார் வ்யாஸர்.
இப்படி சிதசித்விலக்ஷண ஸத்பாவத்தை ஸ்த்தாபித்து, வ்யாஸர், முதற் பாதத்தில் லக்ஷ்யாஸம்பவ ப்ரயுக்த லக்ஷணா ஸம்பவ சங்கையைப் பரிஹரித்தார் என்ற தாயிற்று –
–
முதலத்யாயம் இரண்டாம்பாதம் இப் பாதத்தில் அதிகரணங்கள் 6. இவற்றை 3+3-=6 என்று கொள்க-முதல் மூன்று அதிகரணங்களில் உபாஸக ஹ்ருதய ரூப பரிமித தேஸ பரிச்சிந்ந பரமாத்ம விசாரமும், மேல் மூன்று அதிகரணங்களில் விபுல தேசஸ்த்தித பரமாத்ம விசாரமும் செய்கிறார் வ்யாஸர் என்று பேடிகா விபாகம்-ஆறு அதிகரணங்களுக்கும் ஸாதாரணார்த்தம் ப்ரஹ்ம ஆத்ம புருஷ ஸப்தங்கள் சிதசித் விலக்ஷண பரமாத்ம பரங்களென்று ஸ்த்தாபிப்பதே யாகும்
முதலத்யாயம் மூன்றாம்பாதம் , இப் பாதத்தில் அதிகரணங்கள் 10–7-+3=10 என்று கொள்க--7 அதிகரணங்கள் ஸாஷாத் ஸங்கதங்கள், இடையில் மூன்றும் (தேவதாதிகரண மத்வதிகரண அபசூத்ராதி கரணங்கள்) ப்ராஸங்கிகங்கள்-ஆறாவது அதிகரணமான ப்ரமிதாதிகரணத்தில் கூறப்பட்ட ஸர்வேஸ்வரத்வத்தை உபபாதிக்கிறது. மோக்ஷ பிரதத்வத்தைக் கூறும் முகத்தாலே பத்தாவது அதிகரணமான அர்த்தாந்தரத்வ வ்யபதேசாதிகரணம். ஆகையால் ஆறாவது அதிகரணத்துக்கும் பத்தாவது அதிகரணத்துக்கும் ஸாஷாத் ஸஙகதி, 7, 8, 9 இம் மூன்று அதிகரணஙகளும் ப்ராஸஙகிகம். பத்தாவது அதிகரணத்தில் மூன்றாவது ஸூத்ரத்தால் பரமாத்மா ஜீவ ஸாமாந்ய விலஷணன் என்றும் நான்காவது ஸூத்ரத்தால் பரமாத்மா முக்த ஜீவ விலக்ஷணன் என்றும் கூறப் பட்டுள்ளது உற்று நோக்கத் தக்கது.
ப்ராஸங்கிகங்களான மூன்று அதிகரணங்களிலும் பகவத் குணங்களே கூறப்பட்டுள்ளன-சாரீரகமே ப்ரஹ்ம: மீமாம்ஸை யன்றோ: ஆகையால் எவ்விடத்திலும் அவன் குணம் கூறப்பட்டதேயாம். தேவாதீனாமப் யுபாஸ்யத்வம் தேவதாதி கரணததிலும், வஸூ முக தேவாநாமபி ஸ்வாத்மத்வேந உபாஸ்யதவம் மத்வதிகரணத்திலும், சூத்ராதீனா மநுபாஸ் யத்வம் அபசூத்ராதி கரணததிலும் கூறப் பட்டுள்ளன என்று கொள்க,
தேவதாதிகரணத்தில் தேவாதிகளுக்கு உபாஸ்யன் என்று பகவான் கூறப்பட்டுள்ளான். தேவாதி சப்தத்தில் ஆதி பத க்ராஹ்பர்கள், அஸுர ராஷஸ கந்தர்வ பிசாசங்கள் என்பர் பெரியோர். ஸ்ரீ ப்ரஹ்லாதாதிகள் அஸுரர்கள், ஸ்ரீ விபீஷணாதிகள் ராக்ஷஸர்கள், சித்ரஸேநாதிகள் கநதர்வர்கள், கண்டா கர்ணாதிகள் பிசாசங்கள். இவர்களுக்கும் உபாஸ்யனாகிறான் பரமாத்மா என்ற படி –
முதலத்யாயம் நான்காம் பாதம்-இப் பாதத்தில் அதிகரணங்கள் 8:–6+1+1=8 என்று கொள்க-முதல் ஆறு அதிகரணங்களில் ஸாங்க்யபக்ஷ ப்ரதி க்ஷேபமும், மேல் இரண்டு அதி கரணங்களில் யோக பக்ஷ ப்ரதிக்ஷேபமும் என்று பேடிகா விபாகம்.-எட்டாவது அதிகரணமான சரமாதிகரணத்தை, கீழே கூறப்பட்ட பாத சதுஷ்ட யார்த்தத்துக்கும் நிகமநமாகக் கூறுவர் சில பெரியோர்.
இந்தப் பாதத்தில் காரணத்வாதிகரண (4)த்தில் ஈஷத்யதிகரணார்த்தத்தை வ்யாஸர் ஸிம்ஹாவலோக ந்யாயத்தால் பராமர்சித்து ஸ்த்தாபிக்கிறார் என்று கொள்க–ஜகத்வாசித்வாதி கரணத்தில்–அஸூத்த ஜீவ வ்யாவ்ருத்தன் பரமாத்மா என்றும், வாக்யாநீவயாதிகரணததில் முக்த (ஸூத்த) ஜீவ விலஷணன் பரமாத்மா என்றும் வ்யாஸர் கூறி யிருப்பது குறிக் கொள்ளத் தகும்
முதலத்யாயம் முதல் பாதத்தால் ப்ரமாண லக்ஷணங்களால் பரம காரணமாக ஸர்வ வேதாந்த வேத்ய பரம புருஷ நிர்ணயம் செய்யப்பட்டது. இரண்டாம் மூன்றாம் பாதங்களால் ஜகத்துக்கும் (விபூதிக்கும்) பரஹ்மத்துக்கும் உள்ள ஸம்பந்தத்தைக் கூறினார்-நான்காம் பாதத்தால் பர பக்ஷ பிரதி க்ஷேபம் செய்தார் என்றும் கூறலாம். -முதல் மூன்று பாதங்களால் கூறப்பட்ட ப்ரஹ்மத்தினுடைய காரணத்வத்தை நான்காம் பாதததால் ரஷித்தார் ஸூத்ரகாரர் என்றபடி.-ஆக, முதலத்யாயம் நான்கு பாதங்கள் 1+3=4 என்றும், 3+1=4 என்றும் இரு விதமாகப் பிரிக்கக் கூடியவை என்று தேறியது–இவ்வாறு முதலத்யாயத்தில் பேடிகா விபாவம்
—
இரண்டாமத்யாயம்
முதலத்யாயத்தில் ஸ்ருதி விப்ரபத்தி பரிஹாரம் செய்யப்பட்டது, இரண்டாமத்யா யத்தில் வாதி விப்ரபத்தி பரிஹாரம் செய்யப்படுகிறது என்று கொள்க–அதவா:–ஸேச்வர தந்த்ர ஸ்த்தாபநம் செய்தார் முதலத்யாயத்தில், நிரீஸ்வர தந்த்ர நிராகரணம் செய்கிறார் இரண்டாமத்யாயததில் என்றும் கொள்ளலாம்-முதலத்யாயத்தில் கூறப்பட்ட ப்ரஹ்மத்தினுடைய ஜகத் காரணத்வம் இரண்டாமத்யாயத்தில் ஸ்தூணா நிகநந ந்யாயத்தாலே ஸ்த்த்ரீகரிக்கப் படுகிறது. இவ் வத்யாயத்துக்கு அவிரோதாத்யாயம் எனப் பெயரிட்டனர் பெரியோர்.
இவ்வத்யாயத்தின் பாதங்கள் நான்கினையும் 2+2=4 என்று இரு பேடிகைகளாகக் கொள்க-ஸ்ம்ருதியாலும் தர்கங்களாலும் பிரஹ்மத்தினுடைய ஜகத் காரணத்வத்தை நிரோதிக்க, அந்த பீடையைப் பரிஹரித்து ப்ரஹ்மத்தினுடைய காரணத்வத்தை ஸ்த்திரீகரிக்கினறன. முதலிரண்டு பாதங்கள் (ஸ்ம்ருதி பாத தர்க பாதங்கள் ) இது பாஹ்ய விரோத பரிஹாரம் என்று கொள்க-ப்ரஹ்மத்துக்குக் கார்யமல்லாததும் உண்டு என்ற பீடையைப் பரிஹரித்து ”ஸர்வம் ப்ரஹ்ம கார்யம் ” என்று கூறி ப்ரஹ்மத்தினுடைய ஸர்வ காரணத்வத்தை ஸ்த்திரீகரிக் கின்றன மேலிரண்டு பாதங்கள் (வியத் பாத ப்ராண பாதங்கள்) இது ஆந்தர விரோத பரிஹாரமென்று கொள்க-அதவா :–ப்ரஹ்மத்துக்குக் காரணத்வமே யில்லை என்கிற வாதத்தை முதலிரண்டு பாதங்களால் நிரஸித்து, அந்த காரணத்வம் ப்ராதேசிகமே யன்றி ஸார்வத்ரிகமன்று என்ற வாதத்தை மேலிரண்டு பாதங்களால் நிரஸிக்கிறார் என்றும் கொள்ளலாம்–அதாவது காரண விஷயத்தில் பரோக்த தோஷங்களை முதலிரண்டு பாதங்களால் பரிஹரித்து கார்ய விஷயத்தில் பரோக்த தோஷங்களை பின் இரண்டு பாதங்களால் பரிஹரிக்கிறார் என்றபடி
இரண்டாமத்யாயம் முதலிரண்டு பாதங்கள் ஸ்வ பக்ஷத்தில் பரர்களாலே கூறப்பட்ட தோஷங்களைப் பரிஹரிக்கிறார் முதற் பாதத்தில்-பர பக்ஷஙகளுக்குத் தான் தோஷம் கூறுகிறார் இரண்டாம் பாதத்தில்–ஸ்வ பக்ஷ ஸ்த்தாபாம் முதற் பாதத்தில், பர பக்ஷ நிராகரணம் இரண்டாம் பாதத்தில், என்றபடி–முதற் பாதத்தில் ஸ்ம்ருதி யுக்தி விரோத பரிஹாரமும், இரண்டாம் பாதத்தில் சாஸ்த்ராந்தர விரோத பரிஹாரமும் செய்யப் படுவதாகக் கொள்க–முதற் பாதத்தில் ஸ்ம்ருதி ந்யாயங்களால் வேதாந்தங்களுக்கு ஏற்படும் பாதம் தவிர்க்கப் படுகிறது. இரண்டாம் பாதத்தில சாரீரக ந்யாயததாலே பரபஷங்களுககுப் பாதம் கூறப்படுகிறது என்றபடி.-
இரண்டாமத்யாயம் முதற்பாதம் (ஸ்ம்ருதி பாதம்) இப் பாதத்தில் அதிகரணங்கள் 10. இவற்றை 2+8=10 என்று பிரித்துக் கொள்க.
முதலிரண்டு அதிகரணங்களில் ஸ்ம்ருதி விசாரம் செய்து மேலெட்டு அதிகரணங்களில் யுக்தி விசாரம் புரிகிறார் வ்யாஸர், ஸ்ம்ருத் யுபக்ரமமான படியால் இது ஸ்ம்ருதி பாதம் எனப் படுகிறது. ஸ்ம்ருதி விசார பாதாகம் இப் பாதம், முதலிரணடு அதிகரணங்களில ஸ்ம்ருதி விரோத பரிஹாரத்தையும் மேலெட்டு அதிகரணங்களில் யுக்தி விரோத பரிஹாரத்தையும் செய்தவாற்றால் பலித்தது ப்ரஹ்மத்தினுடைய ஜகதுபாதாகத்வமும் ஜகந் நிமித்தத் வமும் ‘ என்பர் பெரியோர்: உபஸம்ஹார தர்சந பிரயோஜநத்வாதி கராணங்களில் (8, 10) நிமித்தத்வ ஸ்த்தாபநம்-சிஷ்டா பரிக்ரஹாதி கரணத்திலும் (4) போகத்ராபத்தி யதிகரணத்திலும் (1) உபய ஸ்த்தாபநம், மற்ற ( ,4, 3, 6, 7, 9) அதிகரணங்களில உபாதாநத்வ ஸ்தாபநம் என்று கண்டு கொள்க-முதலாறு அதிகரணங்களில் ப்ரஹ்மத்தினுடைய ஜகதுபாதாநத்வத்தில் விரோத பரிஹாரமும் மேல் நானகு அதிகரணங்களில் ப்ரஹ்மத்த்னுடைய ஜகன் நிமிதத்தவத்தில் விரோத பரிஹாரமும் எனறும் பேடிகா விபாகம் கொள்ளலாம்–
இரண்டாமத்யாயம் இரண்டாம் பாதம் (தர்க பாதம்)-இப் பாதத்தில் அதிகரணங்கள் 8, 1+6+1=8 என்று இவற்றைப் பிரிக்கலாம்-முதலதிகரணத்தில் ப்ரதாந காரண வாதியான ஸாங்க்யனை நிரஸிதது மேலாறு அதிகரணங்களில் பரமாணு காரண வாதிகளான வைசேஷிக பெளத்த ஜைந சைவர்களை நிரஸித்து எட்டாவது அதிகரணத்தில் சிதசித்விலக்ஷண பரஹ்மத்தினுடைய ஜகதேக காரணத்வத்தை பிரதி பாதிக்கிற ஸ்ரீபாஞ்ச ராத்ரத்தை பரம பிரமாணம் என்று ஸ்தாபிக்கிறார் பஞ்சம வேதமாகிய மஹா பாரதத்தை யருளிய வ்யாஸர் எனறு கொள்க – இப் பாத ஸூத்ரங்கள் நஞ்கடிதங்களாக வமைந்நுள்ளன- இது கொண்டே இப் பாதம் பர பஷ ப்ரதி க்ஷேபம் என்று கொள்ளலாம்–7+1=8-என்றும் பிரிக்கலாம். ஏழு அதிகரணங்களில் பர மத கண்டநம் செய்த வ்யாஸார் எட்டாமதிகரணத்தில் ஸ்ரீ பாஞ்ச ராத்ர ப்ராமாண்யத்தை ஸ்த்தாபித்து அது தன்னை பூஷிக்கிறார் என்றபடி-முதலதிகரணத்தில் ஸாங்க்ய மதமும் இரண்டாமதிகரணத்தில் வைசேஷிக மதமும் கண்டிக்கப் படுகின்றன-த்ரவ்யம் அவஸ்த்தை இரண்டும் நித்யங்கள் என்பர் ஸாங்க்யர். இரண்டும் அநித்யங்கள் என்பர் வைசேஷிகர்-ஈஸ்வராநதிஷ்டித ப்ரதான காரண வாதி ஸாங்க்யர்-நிமித்த மாத்ர ஈஸ்வராதிஷ்டித பரமாணு காரணவாதீ வைசேஷிகர்-பெளத்தாதிகளும் பரமாணு காரண வாதிகளே யாயினும் அவர்களுக்கு முன் வைசேஷிகர்களை நிர்தேஸித்தது, இவன் வேத குத்ருஷடி அவர்கள் வேத பாஹ்யாகள் எனறு கொண்டு பாசுபதாதிகளில் பரமாணு காரண வாதிகள் ப்ரதாந காரண வாதிகள் என்று விபாக மிருந்தாலும் அவர்கள் எல்லாருமே வேத பாஹ்யர்கள்–பாசுபதாதி கரணத்தில் முதல் ஸூத்ரத்தால் அந்த மதத்துக்கு ஸ்ருதி மூலத்வமில்லை யென்றும் மேல் மூனறு ஸூத்ரங்களால அதற்கு அநுமாந மூலத்வமுமில்லை என்கிறார் வேத வியாஸர்-பெளத்த நிராகரண ப்ரகரணத்தில் ” நாபாவ: உபலப்தே: *’ (2.2.2) என்ற ஜகத்து இல்லை யென்பது இல்லை எனறு கூறும் முகத்தாலே வ்யாஸர் பரச்சந்ந பெளத்தர்களை (அத்வைதிகளளை )யும் நிரஸித்தாராகிறார்-இதே போன்று *’ வைதர்ம்யாச்ச ந ஸ்வப்நாதிவத் ” (2-2-28) என்று ஸ்வாப்நார்த்த வைஷம்ய ப்ரதர்சநக முகத்தாலே ஜகத் ஸத்யத்வத்தைக் கூறுகிறாராயிற்று வ்யாஸர். இதுவும் ம்ருஷர்வாதிமத விபரீதமிறே--இப் பாதத்தில் ஸாங்க்யாதி மதங்களுக்கு வேத ப்ரத்யர்த்தித்வமில்லை யென்கிறார் வ்யாஸர்-ஸாங்க்யாதி மதங்கள் வேத விருத்தார்த்த ப்ரதிபாதகங்கள் ஆகையால் வேதத்துக்கு எதிரே நிற்க வியலா என்றும் ஸ்ரீபாஞ்சராத்ரம் வேதாநநுகுண வசநமாகையாலே வேத விரோதித்வமே யதற்கு இல்லை யென்றும் வ்யாஸர் திரு வுள்ளம்–பஞ்சம வேதமான மஹா பாரதத்திலே ஸ்ரீபாஞ்சராத்ரத்தை மிகவும் கொண்டாடுகினற ஸ்ரீவ்யாஸர் சாரீரகத்திலே அதனை கண்டிக்க ப்ரஸக்தி யில்லை யென்றவாறு-இப்படி ப்ரஹ்மம் ஜகதேக காரணம் என்று ஸ்தாபித்தபடி –
இரண்டாமத்யாயம் மூன்றாவது பாதம் (வியத் பாதம்) –ஆதி முதல் இவ்வளவும் வர ஆறு பாதங்களால் ப்ரஹ்மத்தினுடைய காரணத்வம் உக்தம், இனி மேலிரண்டு பாதங்களால் ஜகத்தினுடைய கார்யத்வம் உச்யதே –இந்த பாதத்திலும் அடுத்த பாதத்திலும் ஐகத்தினுடைய ப்ரஹ்ம கார்யத்வம் ஸ்த்திரீ கரிக்கப்படுகிறது என்றபடி–ஸர்வம் நித்யம் என்கிறான் ஸாங்க்யன்-ஸர்வம் அநித்யம் என்கிறான் பெளத்தன்-ஸர்வம் நித்யா நித்யம் என்கிறான் ஜைனன்–நித்யா நித்யங்களை மாறாடிக் கூறுகிறான் வைசேஷிகன். இந் நால்வர் பஷங்களையும் நிரஸித்து வ்யாஸர் ப்ரஹ்மம் காரணமே யென்றும் ஜகத்து தத் கார்யமே என்றும் ஸ்த்தாபிக்கிறார். இதிறே வைதிக மதம். அசித்துக்கு பாஹ்ம கார்யத்வம் ஸ்வரூப அந்யதா பாவமென்றும் சித்துக்கு ப்ரஸ்ம கார்யத்வம் ஸ்வபாவ அந்யதா பாவ மென்றும் கொள்ள வேண்டும்–இப் பாதத்தில் அதிகரணங்கள் ஏழு. இவற்றை 3+4=7 என்று பிரித்துக் கொள்க-முதல் மூன்று அதிகரணங்களில் ஆகாசாதிகளுக்கும் ஜீவர்களுககும் ப்ரஹ்ம கார்யத்வத்தைக கூறுகிறார், இது பாத ப்ரதாநார்த்தம். மேல் நானகு அதிகரணங்களில் ஜீவ ஸ்வரூப சோதநம் செய்கிறார். இவை நான்கும் இப் பாதத்தில ப்ராஸங்கிகங்களாகும். இங்கே ஜீவனை ஜ்ஞாதாவென்று கூறும் வ்யாஸர் அவனுடைய ஜ்ஞாத்ருத்வத்தை யிசையாத மாயாவாதிகளையும் நித்ய ஜ்ஞாத்ருத்வத்தை யிசையாத நையாயிகர் களையும் நிரஸித்தா ரென்பது குறிக் கொள்ளத் தக்கது-
இரண்டாமத்யாயம் நான்காம் பாதம் (ப்ராண பாதம்) இப் பாதத்தில் இந்தரியங்கள் ப்ரஹ்ம கார்யங்கள் என்று அறுதி யிடப்படுகிறது–இப் பாதத்தில் அதிகரணஙகள் எட்டு- இவற்றை 1+6+1=8 என்று பிரித்து-முதலதிகரணமும் சரமாதிகரணமும் இப் பாதத்தில் ஸாஷாத் ஸங்கதங்கள்-இடையே ஆறு அதிகரணங்களும் ப்ராஸங்கிகங்களென்று கொள்க–வியததிகரண ந்யாயபபடி ப்ராணோத்பத்த் யதிகரணத்திலும் தேஜோதிகரண ந்யாயப்படி ஸம்ஜ்ஞா மூர்த்தி க்லுப்த்பதிகரணத்திலும் அர்த்த நிர்ணயம் செய்கிறார் வ்யாஸர்-வியததிகரணம் தொடங்கி 14 அதிகரணங்களில் ஸமஷ்டி ஸ்ருஷ்டியைக் கூறி ஸம்ஜ்ஞாமூர்த்தி அதிகரணத்தில் (15 வியததிகரணம் தொடங்கி, 8 ப்ராணோத்பத்த்யதி காணம் தொடங்கி) வ்யஷ்டி ஸ்ருஷ்டி நிரூபிக்கப்படுகிறது என்ற பேதம் காண்க, ஆக ஸமஷ்டி வ்யஷ்டி ஸ்ருஷ்டிகளுக்கும் ஸ்ரீம் நாராயணனே காரண பூதன் என்று கூறப்பட்டது.
இவ்வாறு முதலத்யாயததில் கூறப்பட்ட ப்ரஹ்மத்தினுடைய ஸர்வ காரணத்வத்தை இரண்டாமத்யாயததில ஸ்த்திரீகரணம் செய்தார் ஸ்ரீவேத வ்யாஸர் என்று தேறிய பொருள்-முதலத்யாயம் ஸமந்வயாதயாயம் இரண்டாமத்யாயம் அவிரோதாத்யாயமிறே-
உத்தர த்விகம் -ப்ரஹ்ம உபாஸநத்தையும் அதடியாக விளையும் மோக்ஷ ஆநந்தத்தை யும் இவ்வுத்தர த்விகத்தாலே கூறுகிறார் –
மூன்றாமத்யாயம் -இவ்வத்யாயம் நான்கு பாதங்களோடு கூடியது. மூன்றாம் பாதத்தில் உபாஸநத்தை விசாரிக்கப் புகுகிற வ்யாஸர் அதற்குறுப்பாக இதர வைராக்யத்துக்கான ஜீவ தோஷங்களை முதற் பாதத்தாலும் பகவத் த்ருஷ்ணை ஏற்பட அவன் குணங்களை இரண்டாம் பாதத்தாலும் ப்ரஹ்ம வித்யைக்கு அங்கமான கர்மத்தை நான்காம் பாதத்தாலும் விசாரிக்கிறார்-இப்படி பாத விபாகம் இருக்கும்படி.
மூன்றாம் அத்யாயம் முதற் பாதம்(வைராக்ய பாதம்).-இப் பாதத்தில் ஜீவனுடைய ஜாக்ரதாதி தசைகளில் உள்ள தோஷங்களைப் பூர்ணமாகக் கூறகிறார் – தோஷ தர்சநம் ஏற்பட வைராக்கியம் பிறக்குமிறே-இப்பாதத்தில் ஜீவனுக்கு ஸம்ஸார ஸம்பந்தத்தையும ஸம்ஸார பாரமார்த்த்யத்தையும் கூறுகிற ஸூத்ரகாரர் இவறறை மறுத்த ஸாங்க்ய மாயாவதிகளையும் நிரஸித்தாராயிற்று-இப் பாதத்தில் அதிகரணங்களை 1 +5=6-என்று பிரித்துக் கொள்க-முதலதிகரணததில ஆரோஹணாயச் சேதன தோஷங்களையும் மற்றைய 5 அதிகரணங்களில் அவரோஹணாவச் சேதேந தோஷங்களையும கூறுகிறார்–இப் பாதம் ஸம்ஸாரி ஜீவ தோஷ பரம்.
மூன்றாம் அத்யாயம் இரண்டாம் பாதம் (உபய லிங்க பாதம் )--சாரீரகததில் முதலிரண்டு அத்யாயங்களில் ஜகதேக காரணமாகக் கூறப்பட்ட ப்ரஹ்மம் இந்த மூன்றாமதயாயத்தில் மோக்ஷ ஸாதநமாகக் கூறப் படுகிறது. ஸித்தோபாய மிறே ப்ரஹ்மம், ஆக கீழே காரணமாகவும இங்கு ஸாதநமாகவும் கூறப்பட்டபடியால் பெளநருகத்ய தோஷமில்லையாம்-ஸாத்யோபாயமிறே ப்ரஹ்மோபாஸநம்–அதற்கு உபயுக்தம் ஜீவ தோஷ தர்சந ஜநித வைராக்யமும் பகவத் குண தர்சந ஜநித த்ருஷ்ணையு மாகும் கீழே இதர வைராக்ய ஸித்தயர்த்தம் -இதர தோஷங்களைக் கூறிய வ்யாஸர் இப் பாதத்தில் பரமாத்ம குணங்களைப பூர்ணமாகக் கூறுகிறார்-பர ப்ரஹ்மத்துக்கு உபய லிங்கமாவது நிர் தோஷத்வமும் கல்யாணைகதா கத்வமுமாகும். இதனைக் கூறும் இப் பாதம் உபயலிங்க பாதமிறே -ப்ரஹ்மம் நிர் தோஷம் கல்யாண குணா கரம் எனறு கூறும் வ்யாஸர் ப்ரஹ்மம் நிர் தோஷம் நிர் குணம் நிர் விஸேஷம் என்று கூறுவார் கூற்றை அடி யறுத்தாராயிற்று.--இப் பாதததில் அதிகரணங்கள் 8–4 +4=8 என்று பிரித்துக் கொள்க-முதல் நான்கு அதிகரணங்களில் ஜீவனுடைய ஸ்வப்ந ஸுஷுப்த்யாதி தசைகளில் தோஷங்களையும் மேலில் அதிகரணங்கள்-நான்கிலும் பரமாத்ம கல்யாண குணங்களையும் கூறுகிறார். பரமாத்ம குண பரமான’ இந்த இரணடாம் பாதத்தில் ஜீவ தோஷங்களைக் கூறுவது ப்ரதானமன்று–அந்த நான்கு அதிகரணங்களிலும் பரமாத்மாவின் குணங்களையே கூறப்பட்டனவாகக் கொள்ளலாம் என்பர் –
ஸ்வாப்ந பதார்த்த ஸ்ரஷ்ட்ருத்வாதி’ குணங்கள் கூறப்பட்டதாகக் கொள்ளுவது யுக்தம்-ப்ரதம பாத சேஷம் த்விதீய பாத ஆத்யாதிகரண சதுஷ்டயம் என்று ஸ்ரீஸேநேஸ்வராசார்யர் திருவுள்ளம்–இப் பாதத்தில் மேல் நான்கு அதிகரணங்களை இரு பேடிகைகளாகப் பிரிக்கலாம். முன்னிரண்டு (5, 6) அதிகரணங்களில் பரமாத்மாவுக்கு தத்தத் ஸ்த்தாந ஸம்பந்தத்தால் தோஷம் தட்டாது -ஸமஸ்த கல்யாண குண பரி பூர்ணமே என்றும், ஜகத் ப்ரஹ்மைகய வசந ஸங்கீத தோஷமுமில்லை. ப்ரஹ்மம் கல்யாண குண பரி பூர்ணமே என்றும் கூறுகிறபடி.
மேலிரண்டு (7,8) அதிகரணங்களில் பகவானுக்கு ஸர்வ ஸ்மாத் பரத்வத்தையும் பரமெளதார்யத்தையும் கூறி உபாஸ்யத்வத்தை ஸ்த்திரீகரிக்கிறார்.-பரத்வ பூர்த்தியும்-ஒளதார்ய பூர்த்தியுமில்லை யாகில் உபாஸ்யத்வ பூர்த்தி யில்லை யிறே.
உபய லிங்காதிகரணத்தில் முதல் ஸூத்ரத்தால் ப்ரஹ்மம் உபய லிங்க விஸிஷ்ட மென்றும், பதினோராம் ஸூத்ரத்தால் ப்ரஹ்மம் உபய விபூதி விஸிஷ்ட மென்றும் கூறுகிறார்-உபய லிங்க விசிஷ்டம் உபய விபூதி விசிஷ்டம் ப்ரஹ்மம் என்பதே வேதாந்த பக்ஷம் என்கிறார் பரம வைதிகரான வ்யாஸர்,-பராதிகரணத்தில் பரத்வமும் பலாதிகாணத்தில் ஒளதார்யமும் கூறப்பட்டது. ஸகலாதிகாரிகளுக்கும் ப்ரயோ ஜநத்தை யுத்தேசித்தே ப்ரவ்ருத்தி யுள்ளது. ப்ரயோஜநமும் பல ப்ரதனை யொழியப் பெற விரகில்லை. பல ப்ரதனுக்கு பல ப்ரதத்வம் பரத்வ ஒளதார்யங்கள் “இல்லையேல் கூடாது. பரத்வ ஒளதார்யஙகள் இரண்டும் உபய லிங்க விசிஷ்டனான நாராயணனுக்கே யன்றி மற்றொருவருக்கு இல்லை யிறே.-கர்ம காண்டோக்த ஸர்வ கர்ம ஸமாராத்யனாப் தேவதா காண்டோக்த ஸர்வ தேவதாந்தராத்மாவாய் ப்ரஹ்ம ஸப்த வாச்யனான நாராயணன் சிதசித விலக்ஷண ஜகதேக காரண பூதன். . உபாயோபேய பூதன பரன் என்று இவ்வளவால் கூறி பலாதிகரணததில் அவனே ஸகல பல பரதன் என்கிறார் ஸ்ரீ வேத வ்யாஸ பகவான் –
மூன்றாமத்யாயம் மூன்றாம் பாதம் (குண உபஸம்ஹார பாதம்)-கீழே பத்து பாதங்களால் தத்வ நிரூபணம் செய்தார். இனி மேல் ஆறு பாதங்களால் அநுஷ்டாந நிரூபணம் செய்கிறார் எனறு பேடிகா விபாகம்-தத்வ விவேக ஜ்ஞாநத்தைப் பிறப்பித்த வ்யாஸர் இனி தத்வ ஜ்ஞாநாநுகுண ஹிதா சரணத்தைக் கூறுகிறார் மேலே யென்றபடி.-ஹிதத்தை மேலிரண்டு பாதங்களாலும் தத் பலத்தை மேல் நான்கு பாதங்களாலும் கூறுகிறானர் என்றபடி-ஆக 10+6=16 பாதங்கள் என்று பேடிகா விபாகம்-உபாயத்தைக் கூறுகிறது இம் மூன்றாம் பாதம் –தத் அங்கமான கர்மத்தைப் கூறுகிறது நான்காம் பாதம் – குணோபஸம்ஹார பாதமென்றே இந்த மூன்றாம் பாதத்துக்கு வ்யவ்ஹாரம். ப்ரஹ்மம் நிர்குணம் என்று கூறும் குண தஸ்கரர்களுக்கு இப் பாதம் ஸர்வாத்மநா துர்க்கடம்-ஸ்ரீ பராசர ஸ்ரீபாராசர்ய ஸ்ரீபராங்குச ஸ்ரீராமாநுஜாதிகள் குண பக்ஷ பாதிகளிறே-பல உபநிஷத்துக்களி$ல கூறப்பட்ட வித்யைகளை விசாரித்து வித்யைகளுக்கு ஐயம் தேறுமானால் ஓரிடத்தில் கூறப்படாத மற்றோரிடத்தில கூறப் பட்ட குணங்களை உப ஸம்ஹரிக்க வேணும் என்று ஸ்தாபிக்கிறார் இப் பாதததில் ஸ்ரீவ்யாஸார் –குணோபஸம்ஹார பாதமே யன்றி குணஸம்ஹார பாதமன்றிது. இப் பாதத்தில் அதிகரணங்கள் 26. 19ஆம் அதிகரணத்தில் ஸர்வ பர விதயோபாஸ்யன் நாராயணனே என்று ஸ்தாபிக்கிறார் ஸ்ரீவ்யாஸர் ஸ்ரீ வைஷ்ணவ அக்ரேஸர்
மூன்றாமத்யாயம் நான்காம் பாதம் (அங்க பாதம்) இவ் வத்யாயம் முதற் பாதத்தில் பல த்வாரா கர்மம் த்யாஜ்யம் என்றது-ஸ்வரூபேண கர்மம் உத்தேஸ்யம் என்று இப் பாதததில கூறப்படுகிறது-இவ் வங்க பாதத்தில் உபாயமான உபாஸகத்துக் கங்கமான கர்மம் விசாரிக்கப் படுகிறது.-கர்ம காண்டத்தில் கர்மம் விசாரிக்கப் பட்டதாயினும் அது பல ஸங்க யுக்தமாயின் அது கேவல கர்மமாகும், பகவத் கைங்கர்யத்வ விதுரமென்றபடி. இது அநித்யபலநம். அது த்யாஜ்யமாம், இங்கே கூறப்பட்ட கர்மம் உத்தேச்யமானது. உபாயநாவகமானது, கர்ம காண்டத்தில் ஸ்வர்காதி ஸாதநமாகக் கூறப்பட்ட கர்மங்களே இங்கு, உபாஸநாங்கமாகக் கூறப்படுகின்றன. இதுவே விநியோக ப்ருதக் த்வந்யாயமாகும்-இப் பாதத்தில் அதிகரணங்கள் 15–முதலதிகரணத்தில் கர்மங்களின் அங்கத்வ ஸித்திக்காக வித்யையின் அங்கித்வத்தை ஸ்த்தரீகரிக்கிறார்—இரண்டாவது மூன்றாவது பதினோராவது ப்ராஸங்கிக அதிகரணங்கள், மேல் அங்க விசாரம்.-கர்மங்களும் சம தமாதிகளும் பாண்டித்ய பால்ய மெளநங்களும் அங்கமென அறுதி யிடுகிறார் இப் பாதத்தில் வ்யாஸர்–இப்படி அங்க சிந்தை செய்த வ்யாசர் பதினான்காவது பதினைந்தாவது அதிகரணங்களில் அங்கி நிஷ்பத்தி ஸமய சிந்தை செய்கிறார் என்று பேடிகா விபாகம் கொள்க–ப்ரஹ்ம வித்யைக்கு கர்மம் அங்கம் என்று இப் பாதத்தில் கூறும் வ்யாஸர் வாக்யார்த்த ஜ்ஞாந மாத்ரம் ஸாதநம் என்று கூறும் சங்கர மதத்தையும், ஜ்ஞாந கர்ம ஸம ஸமுச்சயவாதி யாதவ ப்ரகாச மதத்தையும், ஜ்ஞாநமே கர்மத்துககு அஙகமென்று கூறும் நிரீஸ்வர மீமாம்ஸக மதத்தையும், ஜீவர்கள் நிதய முக்தர், மோஷம் ஸாத்யமன்று என்று கூறும் ஸாங்கய மதத்தையும் நிரஸித்தார் இறே –ப்ரஹ்ம வித்யை மோஷ சாதனம் அங்கி, கர்மம் ததங்கம் என்று ஸித்தாந்த ஸ்த்தாபநம் செய்தார் வ்யாஸர்-
நான்காமத்யாயம் (பலாத்யாயம்)-இந்த அத்யாயத்தின் பாதங்கள் நான்கினையும் 2+2=4 என்று இரு பேடிகைகளாகப் பிரிக்கலாம். உத்தர பூர்வக அச்லேஷ விகாசங்கள், உத்க்ராந்தி இவை இரண்டி.னையும் ப்ரஹ்ம வித்யா பலங்களாக பூர்வ பாத த்வயத்தில் கூறுகிறார். இவை யிரணடும் ஸ்தூல தேஹ யுக்த காலத்தில் ஏற்படும் பலங்களாகும்-மேலிரு பாதங்களில் அர்ச்சிராதி மார்க்க கமநமும் பகவத் ப்ராப்தி யுமான பலங்களைக் கூறுகிறார். இவை ஸ்தூல தேஹத்தைத் துரந்தவனுக்கு ஏற்படும் பலங்களாகும். இப்படி பேடிகா விபாகம்.
ஸாரீரகத்தில் 156 அதிகரணங்கள் உள்ளன: முதற் கண் நான்கு அதிகரணங்கள் உபோத்காதமா யமைந்தன-மேல் 125 அதிகரணங்களில் ப்ரஹ்மமும் ப்ரஹ்ம வித்யையும் நிரூபிக்கப்பட்டன. மேல் 27 அதிகரணங்களில் ப்ரஹ்ம வித்யா பலத்தை நிருபிக்கிறார். ஆக சாரீரகம் 156 அதிகரணஙகளாயும் உபோத்காதமும் ப்ரஹ்ம ப்ரஹ்ம வித்யா பல ப்ரதி பாதக பாகங்களென்றும் பேடிகா விபாகம் –
நான்காமத்யாயம் முதற் பாதம் (ஆவ்ருத்தி பாதம்) இப் பாதத்தில் அதிகரணங்கள் 11, 6+5=11 என்று பிரித்துக் கொள்க–முகற்கண் ஆறு அதிகரணங்களில் வித்யா ஸ்வரூப சோதநம் செய்கிறார். மேல் ஜந்து அதிகரணங்களில் வித்யா பலத்தைக் கூறுகிறார் என்றபடி.- ப்ரஹ்ம வித்யை மோக்ஷ ஸாதநமே யாயினும் அதனை இந்த பலாத்யாயத்தில் வ்யாஸர் விசாரிப்பது கொண்டு நாமறியலாம். அதற்கு ஸாதநத்வம் இடு சிவப்பு-பலத்வமே ஸ்வாபாவிக ஆகாரமென்று. நான்காமத்யாயம் இரண்டாம் பாதம் (உத்க்ராந்தி பாதம்) ஸ்த்தூல தேஹ ஸ்த்திதி காலத்தில் ஏற்படும் பலமான உத்தர பூர்வாக அச்லேஷ விகாசங்களை முதற்பாதத்தில் கூறிய வ்யாஸர் மரண காலத்தில் ஏற்படும் பலத்தை இப் பாதத்தில் கூறுகிறார்-இப் பாதமே ஸாங்க்ய மாயாவாதிகளுக்கு அஸங்கதம், மோக்ஷத்தை அஸாத்ய (ஸித்த)மாகக் கூறும் ஸாங்க்யனும், இங்கேயே மோக்ஷம் என்று கூறும் மாயாவாதியும் இவ் வுத்க்ராந்தி பாதத்தில் நிரஸ்தர்கள்.
நான்காமத்யாயம் மூன்றாம் பாதம் (கதி பாதம்)-மெளகுந்த முக்தி கண்டாபத நிர்ணயம் செய்யப் படுகிறது இப் பாதத்தில் என்று கொள்க-அநாதி காலம் ஸம்ஸரித்துக் கிடக்கும் ஸம்ஸாரி ஜீவன் அஜ்ஞாத ஸுக்ருத விசேஷ மடியாக மோக்ஷமார்க ப்ரவ்ருத்தனாவதும், கர்ம ஜ்ஞாந பக்தி நிஷ்டையும், வித்யா பேதங்களும், தத்ததிகாரங்களும் பரமாதமோபாஸநத்தால் விரோதி பாப நிவருத்திபும், அர்ச்சிராதி மார்க கமநமும் , என்றிவை முதலான ஸகலார்த்தங்களையும் நிர்விசேஷ ப்ரஹ்ம வாதிகளும் இசைந்துள்ளார்கள். இவை யிததனையும் வ்யாவஹ ரிகங்கள்-நிர் விசேஷ ப்ரஹ்ம தாதாதமயபராபதியே பரம மோக்ஷம் எனறு கூறும் கூற்று கேவலம் கோஷமாகலா மத்தனை போககி, ஸாரீரகத்தில் அது கூறப்படடதன்று. பஞ்சமாத்யாய ம்ருகயமாம். உத்ஸூத்ரமென்றபடி–வ்யாஸ தாத்பர்யம் இவ்வளவே. இதுவே ஸ்ரீராமாநுஜ மதம்.
நான்காமத்யாயம் நான்காம் பாதம் (முக்தி பாதம்) இப் பாதத்தில் பேடிகா த்வயம்–அகஹாநத்தை முதற் பாதத்திலும், ஸ்த்தூால தேஹ ஹாநத்தை இரண்டாம் பாதத்திலும், ஸூஷ்ம தேஹாஹாநத்தை மூன்றாம் பாதத்திலும் கூறிய வ்யாஸர் இந் நான்காம் பாதத்தில் முக்தி நிர்ணயம் செய்கிறார்-இப் பாதத்தில் அதிகரணங்கள் 6, 3+3=6 என்று பிரித்துக் கொள்க. ஸ்வரூப ஆவிர்பாவம் மோக்ஷம் என்பதனை முதல் மூன்று அதிகரணங்களிலும் ததநுகண வ்ருததி விசேஷத்தை மேல் மூன்று அதிகரணங்களிலும் கூறுகிறார்-கர்மாங்ககமான பக்தி யோகத்தால் பரமாத்மாவை ஆஸ்ரயித்த ஜீவன், அவன் அருளால் நிர்த்தூதபாபனாய், ஸூஷ்மநாடீ விசேஷத்தால் சரீரததின் நின்றும் நிர்கதனாய், அர்ச்சிராதி மார்க்கத்தால் பரம பதத்தை ப்ராபித்து, ஆவிர்பூத ஸ்வ ஸ்வரூபனாய் பரமனைப் பரிபூர்ணமாக அநுபவிதது, அபுநா வ்ருததனாய் வாழ்கிறான் என்றறுதி யிட்டார் ஸாரீரகத்தில் ஸ்ரீவேத வ்யாஸர்,
மீமாம்ஸா காண்ட த்ரயத்திலும் மாயாவாத கந்த ப்ரஸங்கமில்லை என்பர் பரம வைதிக ஸார்வ பெளமர்கள்,
இவ்வாறு பேடிகா விபாகத்தை ஸ்ரீபாஷ்ய ஸாரத்தில் நிரூபித்தபடி. நமது ஸித்தாந்தத் திலிசைந்த ஸங்கதிகள் 8 அவையாவன—சாஸ்த்ர–காண்ட–த்விக–அத்யாய–பாத-பேடிகா—அதிகரண–ஸூத்ர ஸங்கதிகள். ஸங்கதியாவது–அபிதாந ப்ரயோஜக ஸம்பந்தம். உதாஹரணம்–ஸமந்வயாத்யாயத்திலே இவ் வாக்யங்கள் விசாரிக்கப்படுகின்றன. அவற்றுக்கு ஏற்பட்ட முற்பாடு பிற்பாடு முதலியதற்கு அபேக்ஷிதமான ஸம்பந்தம். அநந்தராபிதாந ப்ரயோஜக ஸம்பந்தம் ஸங்கதி என்பர் தார்கிகர். அது சாஸ்த்ர ஸங்கதிக்குச் சேராது. சாஸ்த்ரத்திலே ஸங்கதியேன்றி சாஸ்த்ரத்துக்குப் பிறகு என்று பொருள் கூடாதிறே –காண்ட ஸங்கதி முதலாக அநக்தராபிதாநம் கூடும். அவற்றிலும் காண்டத்தில் ஸங்கதி த்விகத்தில் ஸங்கதி அத்யாயத்தில் சங்கதி என்றிவ்வாறு ஸங்கதிகளிருப்பதால் அநந்தரா பிதாநமென்பதே ஸங்கதியாக மாட்டா. ஸூத்ர ஸங்கதியை ப்ரக்ருத்யதிகரணம் முதலிய வற்றில் ஸ்ருத ப்ரகாசிகாசார்யர் நிரூபித்துள்ளார், ஆகவே அதிகரண சிந்தாமணியிலே ஸூத்ர ஸங்கதியுள்பட எட்டு ஸங்கதிகள் நிரூபித்தருளினார் குமார குரு வரதாசார்யர்-ஸங்கதிகளின் பெயர் மற்றொரு ஆறு விதமாக வுண்டு, (1) ஆக்ஷேப ஸங்கதி (2) த்ருஷ்டாந்த ஸங்கதி (3) ப்ரத்யுதாஹரண ஸங்கதி (4) உபோத்காத ஸங்கதி (5) அபவாத ஸங்கதி (6) ப்ரஸங்க ஸங்கதி என்று.
(1) பூர்வாதிகரண ஸித்தாந்தம் அநுபபந்நம் என்று மேலதிகரண பூர்வ பக்ஷம் ஏற்படுமிடத்தில் ஆக்ஷேப ஸங்கதி,-(2) பூர்வாதிகாண ஸித்தாந்த ந்யாயத்தை த்ருஷ்டாந்தமாக்கி உத்தராதிகாண பூர்வ பக்ஷம் ஏற்படுமிடத்தில் த்ருஷ்டாந்த ஸங்கதி, (3) பூர்வாதி கரண ந்யாய விஷயமன்று இது என்று பூர்வபக்ஷம் ப்ரவ்ருத்தமாகில் ப்ரத்யுதாஹரண ஸங்கதி (4) ப்ரக்ருத ஸித்திக்காக முன் அதிகரணம் உபோத்காதம், (5) பூர்வாதிகரண ஸித்தாந்த ந்யாயத்தை அவலம்பித்து உத்தராதிகரண பூர்வபக்ஷமாகில் அபவாத ஸங்கதி, (6) முன் கூறியவற்றை விட வேறுபட்டதாய் உபஸத்திதமானது ப்ரஸங்கம்-ஸங்கதி நிரூபணம் இவ்வாறு. இனி அதிகரணமாவது
விஷயோ விசயச்சைவ பூர்வபக்ஷ்ஸ் ததோத்தரம் |
ஸங்கதிச் சேதி பஞ்சைதாந் ப்ராஞ்சோதிகரணம்விது॥ (ப்ரயோஜாம்ச பஞ்சாங்கம் ப்ராஞ்சோ$திகரணம் விது: என்றும் பாடமுள்ளது-
சிலர் (1) விஷயம், (2) ஸங்கதி, (3) ஸம்சயம், (4) ஸம்சயத்துக்குக்காரணம் முதலான பத்து விதமாக அதிகரணங்களை நிஷ்கர்ஷித்துள்ளார். இவை அதிகரண சிந்தாமணி ஆரம்பத்திலே ஸேவிக்கலாம். ஆகவே இவ்வாறு ஐந்து அல்லது பத்து சேர்ந்தது அதிகரணம் என்றதாயிற்று.
–——————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
Leave a Reply