https://archive.org/stream/ptma-kn-ao/Periya-Thirumudi-Adaivu_djvu.txt
அநந்த கோடி ப்ரஹ்மாண்ட, நாயகனாய், ஆதி மத்யாந்த மதிந்யனாய், , ஸமாநாதிக ரஹிதனாய், வேதாந்த வேத்யனாய், அவாப்த ஸமஸ்த காமனாய், அநந்த கல்யாண குணங்களுடையனா யிருக்கிற ஸ்ரீமந் நாராயணன் உகந் தருளி யிருக்கிற ஸ்தலங்கள் :- பரம், வ்யூஹம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சாவதாரம் என்று ஐந்து.–
அதில் பரமாவது- அநந்த கோடி ப்ரஹ்மாண்டங்களுக்கும் புறம்பாய், விரஜைக் கப்புறமாய், பரிணமாதி, ரஹிதமாய், குண்டேரா நாஸ்தீதி வைகுண்ட ” என்று சொல்லுகிற படியே நாஸ ரஹிதமாய், நாநா ரத்ன ஸ்வர்ண மயமாய், அநந்த விவித, விசித்ர கோபுர மண்டப ப்ராஸாதராதி, பரிஸோபிதமாய், நிரதிசயானந்த; ஸுக வஹமாய், பஞ்சோபநிஷண் மயமாய், ஸகல வஸ்து பரிபூரிதமாய், ஸகல ஸாம்ராஜ்ய லக்ஷ்மீ கரமான ஸ்ரீ வைகுண்ட மென்கிற பரம பதத்தில், லஷ்மீ பூமி நீளா நாயகனாய், அநந்த கருட விஷ்வக்ஸேனாதி, நித்ய முக்த ஸஹிதனாய்,ஸ்புரத்ரிடாங்குத; ஹாரகண்டுகா * என்றும்-“ஸ்வோசித விவித, விசித்ராநந்தாஸ்சர்ய”” என்றும் சொல்லுகிறபடியே திவ்யாம்பர, திவ்யாபரண, திவ்யமால்ய திவ்யாயுதாதி;, ஸர்வாலங்கார பூரி நிதனாய், அநந்த கோடி ஸூர்ய ப்ரகாஸயனா யெழுந்தருளி யிருக்கிறது.
வ்யூஹமாவது :– திருப்பாற்கடலிலே ப்ரஹ்ம ருத்ர தேவேந்தராதி; தேவதைகளுக்கு ஸேவ்யனாய், அநந்தாவதாரங்களுக்கும் முதலாய், ‘ உத்பத்தி ஸ்திதி லயங்களுக்குக் கர்த்தாவா யெழுந்தருளி யிருக்கிறது.-விபவமாவது * பரித்ராணாய ஸாதூநாம்”‘ என்கிறபடியே துஷ்ட நிக்ரஹ தர்ம ஸம்ஸ்தாபநாதிகள் பண்ணக் கடவதான ராம கிருஷ்ணாதி யவதாரங்கள்-அந்தர்யாமித்வமாவது “அந்தர் பஹிஸ்ச தத் ஸர்வம் வ்யாப்ய நாராயண: ஸ்தித:” என்றும், **அந்தர் பஹிஸ் ஸகல வஸ்துஷு ஸந்தமீரம்” என்றும் சொல்லுகிறபடியே வ்யாப்யவ்யாபகனாய்; ஆப்ரஹ்ம பிபீலிகாதி; ஸகல சேதநா சேதனங்களுக்கும் அந்தர்யாமியாய், ஸர்வ கதனாய், பரி பூர்ணனா யெழுந்தருளி யிருக்கிறது.–அர்ச்சாவதாரமாவது:-ஸர்வ ஸுலபமாய், சேதனர்க்கு அபிமதமான த்ரவ்யத்திலே விக்ரஹமாய், ஸகல மோஹனமாய், கோயில்களிலும், கிருஹாதிகளிலும் எழுந்தருளி யிருக்கிறது.
அதில் ஆழ்வார் பாடின திருப்பதிகள் நூற்றெட்டு; அதில் முக்யமான திருப்பதிகள்:– 6. *!ஸ்ரீரங்க மங்களமணிம் கருணா நிவாஸம் ஸ்ரீவேங்கடாத்ரி நிகராலய கான மேகம் | ஸ்ரீ ஹஸ்தி சைல சிகரோஜ்ஜ்வல பாரிஜாதம் ஸ்ரீம் நமாமி ஸிரஸா யது ஸைல தீபம் || *’ என்று சொல்லுகிறபடியே புஷ்ப த்யாக; போக, ஜ்ஞான மண்டபங்கள். அதிலும் ப்ரதானமானது ஸாக்ஷாத் பரம பதமான
நம் பெருமாள் கோயில். எங்ஙனே என்னில் **காவேரீ விரஜா ஸேயம் வைகுண்டம் ரங்க மந்திரம்। ஸ வாஸு தேவோ ரங்கேஸ : ப்ரத் யக்ஷம் பரமம் பதம் || ‘‘ என்று சொல்லுகிறபடியே. இப்படி ஸாக்ஷாத் பரம பதமான நம் பெருமாள் கோயிலுக்கு ராஜாவானவர் பரமபதநாதர்,-ஸ்ரீ ரங்கராஜர். இப்படி ஸ்ரீரங்கராஜரான பெரிய பெருமாளுக்குத் திருநக்ஷத்ரம் பங்குனியில் ரேவதி; திருநாமங்கள்
ஸ்ரீரங்கராஜர் நம்பெருமாள். அழகிய மணவாளப் பெருமாள், தகட்ட பெருமாள். ஆபரணத்துக்கு அழகு கொடுக்கும் பெருமாள் i மந்தா சங்கு மறையும் பெருமாள், தேவசிகாமணிப்பெருமாள்;
சிஷ்யைகள் ஸ்ரீ பூமி நிளாதிகளான நாச்சிமார்கள்.
தனியன்கள் திருவவதார ஸ்தலங்களும் அருளிச் செய்துள்ளார்
நாதமுனிகளின் சிஷ்யர் -உய்யக் கொண்டார், குருகைக் காவலப்பன், பிள்ளை கருணாகர தாஸர், நம்பி கருணாகர தாஸர், ஏறு திருவுடையார் திருக் கண்ண மங்கை யாண்டான், வானமாமலை தெய்வ நாயக
ஆண்டான், உருப்புட்டூராச்சான் பிள்ளை, சோகத்தூராழ்வான், கீழையகத் தாழ்வான், மேலையகத் தாழ்வான், ஆக சிஷ்யர் பதினொரு பேர்களும்–உய்யக்கொண்டாரின் சிஷ்யர்கள் மணக்கால் நம்பி,
திருவல்லிக்கேணி பாண் பெருமாள் அரையர், சேட்டலூர் செண்டலங்கார தாஸர், ஸ்ரீபுண்டரீக தாஸர், கோமடம் திருவிண்ணகரப்பன், உலக பெருமாள் நங்கை முதலானோர்-மணக்கால் நம்பியின் சிஷ்யர்கள் -ஆளவந்தார் திருவரங்கப் பெருமாளரையர், தெய்வத்துக்கரசு நம்பி, பிள்ளை யரசு நம்பி, சிறுபுள்ளூருடையார் பிள்ளை, திருமாலிருஞ் சோலை தாஸர், ‘ வங்கிபுரத்தாச்சி முதலானோர்-
ஆளவந்தாருடைய சிஷ்யர்கள் பெரியநம்பி, பெரியதிருமலைநம்பி, திருக் கோட்டியூர் நம்பி, திருமாலையாண்டான், தெய்வ வாரியாண் டான், வானமாமலை யாண்டான், ஈஸ்வராண்டான், ஜீய
ராண்டான். ஆளவந்தாராழ்வான், திரு மோகூரப்பன், திருமோகூர் நின்றார், தேவப் பெருமாள் மாறனேர் நம்பி, திருக்கச்சி நம்பி, திருவரங்கப் பெுமாளரையர், திருக் குருகூர் தாஸர், வகுளாபரண ஸோமயாஜியார், அம்மங்கி, ஆள் கொண்டி, வடமதுரையில் பிறந்த கோவிந்த தாஸர், ராஜ புரோஹிதரான நாதமுனிதாஸர், ரங்க சோழாவின் ராஜ பத்நியான திருவரங்கத்தம்மன் ஆக சிஷ்யர்களில் ப்ரதானரானவர் இருபத்திருவர்.-பெரிய நம்பியின் சிஷ்யர்கள் திருக்கச்சிநம்பி, எம்பெருமானார். மலை குனிய நின்றார், ஆரியூரில் ஸ்ரீசடகோபmதாஸர், அணியரங்கத் தமுதனார் பிள்ளை, திருவாய்க் குலமுடையார் பட்டர் முதலானவர்கள்
இளையாழ்வாருக்கு –யதிராஜருக்கு தேவப் பெருமாள் யதிராஜரென்னும் திருநாமஞ் சாத்தியருளினார்-நம்பெருமாள் உபய விபூதிகளுக்கும் யதிராஜரைப் பட்டங் கட்டி உடையவரென்று திருநாமம் சாத்தி யருளினார். திருவரங்கப்பெருமாளரையர் இவருடைய கைங்கர்யத்துக்குத் திருவுள்ளமுகந்து, த்வயார்த்தம் ஸாதித்தருளி லக்ஷ்மண முனி என்கிற திருநாமமும் சாத்தி அருளினார் –திருக்கோட்டியூர் நம்பி திருமந்த்ரார்த்தமும் எம்பெருமானார் என்கிற திருநாமமும் சரம ஸ்லோ கார்த்தமும் ஸாதித்தருளினார் –திருமாலை ஆண்டான் திருவாய்மொழி முத லான நாலாயித்துக்கும் வ்யாக்யானஙகள் ஸாதித்தருளி –சடகோபன் பொன்னடி என்கிற திருநாமம் சாத்தி, தம்முடைய குமாரரான சுந்தரத் தோளுடையாரை இவர் திருவடி களிலே ஆஸ்ரயிப்பித்தருளினார்-பெரியதிருமலைநம்பி ஸ்ரீமத், ராமாயண வ்யாக்யானம் சாதித்தருளி, கோயிலண்ணனென்கிற திருநாமம் சாத்தி அருளினார் -ஆதி கேசவப் பெருமாள் சாத்தின திருநாமம் பூத புரீஸர். திருவேங்கடமுடையான் சாத்தின திருநாமம் தேஸிகேந்த்ரர்-சரஸ்வதி தேவி சாத்தி அருளின திருநாம ஸ்ரீ பாஷ்யகாரர்-பின்னும் விஸேஷ திரு நாமங்கள் – யதீந்த்ரர், யதி குலதுர்யர், யதி ஸார்வ
பெவ்மர், யதிசக்ரவர்த்தி, யதிபதி,யதி நாதர்,யோகிந்த்ரர், க்ருபா மாத்ர ப்ரஸரந்நாசார்யர்
நடாதூரம்மாள் ஸ்ரீபாதத்திலே ஸ்ருத ப்ரகாஸிகாரும் கிடாம்பி அப்பிள்ளானும் – அப்பிள்ளான் ஸ்ரீபாதத்திலே தூப்பில் பிள்ளை என்னும் வேதாந்தாசார்யர். இவருக்குத் திருவவதார ஸ்தலம் பெருமாள் கோயில். திருநக்ஷத்ரம் புரட்டாசி மாஸம் திருவோணம்- திருத்தகப்பனார் அநந்த ஸூரிகள் -குடி தூப்பில். குலம் வடமாள், விஸ்வாமித்ர கோத்ரம். திருநாமங்கள் தூப்பில் பிள்ளை, வேங்கடாசார்யர்-வேதாந்தாசார்யர். திருவாராதனம் திருவேங்கடமுடையான், திருப்பாணாழ்வார். ஹயக்ரீவோபாஸ்தி. ஆசார்யர் கிடாம்பி அப்பி(பு?)ள்ளான், சிஷ்யர் குமாரரான நயினாராசார்யரும்,
ப்ரஹ்ம தந்த்ர ஸ்வதந்த்ர ஜீயரும்.–ப்ரஹ்ம தந்த்ர ஸ்வதந்த்ர ஜீயர் ஸ்ரீ பாதத்திலே கிடாம்பி திருமலை ஐயங்கார் ஆஸ்ரயித்தார். அவர் சிஷ்யர் திரு நாராயணபுரத்தாய் ஸ்வாமிகள்–
ப்ரமாணத் திரட்டுக்கள்
(பிரகாசிக்கிற கிரீடம், தோள் வளைகள், ஹாரம், பதத கழுத்தணி ஸ்ரீகெளஸ்துபம் , திருவரை நாண் , திருச்சிலம்பு முதலிய திருவாபூரணங்கள் – சங்கு , சக்கரம், வில் போன்ற ஆயுதங்களாலும் (உன் சேர்த்தி யாலே) பிரகாசிக்கும் திருத் துழுாயை உடைய வனமாலையாலும் பிரகாசிப்பவனை ]
[தனக்குத் தக்கவையாய், பலளிதமானவையாய், விசித்ரமானவையாய், எல்லையற்ற ஆஸ்சர்யத்தை உடையவையாய், நித்யமானவைமாய், குற்றமற்றவையாய் , மிகச் சிறந்த நறுமணமுடையவையாய், மிகச் சிறந்த மென்மை உடையவையாய், மிகச் சிறந்த ஒளியையும் வுடையவையான கிரீடம், மகுடம், திருச் சுட்டி, திருச் செவி மலர், மகர குண்டலங்கள், திருக் கழுத்தணி, ஹாரம், திருத் தோள்வளை, முன் கை வளை, ஸ்ரீவத்ஸமென்னும் திருமறு, ஸ்ரீ கெளஸ்துபம், திரு முத்து வடங்கள், திரு உ.தரபந்தனம், பீதாம்பரம், அரை நூல் பட்டிகை, திருச் சிலம்பு முதலான எண்ணிறந்த திவ்யாபரணங்கள உடையவனே
ஸ்ரீரங்கத்திற்கு மங்கள மணி போன்றிருக்கும் ஸ்ரீரங்க நாதனயும், கருணை நீர்க்கு இருப்பிடமாய், திரு
வேங்கடமலையின் உச்சியிலிருக்கு கார் மேகம் போன்ற திருவேங்கட முடையானையும், அத்திகிரிரின் உச்சியில் விளங்கும் பாரிஜாதம் போன்றவனாய், பெருந்தேவியின் கணவனுமான பேரருளாளனையும், யதுகிரிக் குன்றிலிட்ட விளக்குப் போன்ற திரு நாரணனையும் தலையால் வணங்குகிறேன்.
பரமபதத்தில் உள்ள அந்த விரஜா நதியே இங்கு காவேரி நதியாய் உள்ளது. வைகுண்டமே திருவரங்கம்
பெரிய கோயிலாய் உள்ளது. அந்தப் பரவாஸுதேவனே ரங்கநாதனாக இருக்கிறான். இவ் வண்ணமாக ஸ்ரீரங்கம் நேரே காணும் பரம பதமாய் உள்ளது.
லக்ஷ்மி தேவியாகிற கற்பகக் கொடியின் உயர்ந்த ஸ்தனங்களாகிற பூங்கொத்துக்களில் ஸஞ்சரிக்கும் ஸ்ரீரங்கராஜனாகிற வண்டு என் மனத் தாமரையில் விளையாடக் கடவது
எவருடைய புருவ நெரிப்பின் தார தம்யத்தாலே ஒரு வன் அடிமையாகவும், மற்றொருவன் ஆண்டானாகவும் வேறுபட்டு இருக்கை யாகிற மேடு பள்ளமுடையதாக இவ் வுலகம் விளங்குகிறதோ, அத்தகைய ஸ்ரீரங்கநாச்சியாருக்கு நமஸ்காரம்.
ஸ்ரீரங்க சந்திரனைப் பெரிய பிராட்டியாரோடு விளையாட விட்டு விட்டு, எல்லாச் சேதநாசேதனங்களையும் நியமிக்கும் அதிகாரத்தைத் தம் அங்குளி முத்ரையாலேயே எவர் நிர்வஹிக்கிறாரோ, அந்த ஸேனை முதலியாரை வேறு புகலற்றவர்களாய் அடி பணிந்தோம்.
அரசரால் கல்பிக்கப்பட்ட பொற்கிழியைக் கைப் பற்றுவதற்காக குருமுகமாக ஒதாமலே எல்லா வேதங்களையும் முழங்கியவராய். ரங்கநாதனுக்கு நேரே மாமனாராய், அந்தணர் தலைவரான அந்தப் பெரியாழ்வாரை வணங்குகிறேன்.
நீளாதேவியின் உயர்ந்த திருமுலைத் தடங்களாகிற மலையில் உறங்கும் கண்ணனே உணர்த்தி, கணக்கற்ற வேத வாக்யங்களினின்றும் தேறும் தன் பாரதந்த்ரியத்தை அவனுக்கு ஒதுவித்தவளாய், தான் சூடிக் களைந்த மாலையால் கட்டப்பட்ட அவனை வலியச் சென்று அனுபவித்தவளான அந்த கோதா தேவிக்கு மறுபடியும் மறுபடியும் நமஸ்காரம்.
அரசனைப் போல் உபசரிக்கத் தக்க ரங்க நாதனையே அந்தப் பரவாஸுதேவனாக எண்ணித் திருப் பள்ளியெழுச்சி யாகிற திவ்ய ப்ரபந்தத்தைப் பாடி யருளிய தொண்டரடிப் பொடிகளைத் துதிக்கிறேன்
இரண்டு காவேரிகளுக்கும் நடுவில் திருவரங்கத்தில் சயனித்திருக்கும் அரங்கனை அனுபவித்துப் பேரானந்த மடைந்த நெஞ்சை யுடையவராய், வேறு எந்த விஷயத்தையும் தன் கண்கள் காண மாட்டா என எவர் அறுதியிட்டாரோ, அத்தகைய முனி வாஹனரை மனனம் செய்கிறோம்.
எவருடைய ஒளி மிக்க வாக்குகளாகிற கிரணங்களாலே அஜ்ஞானத்தினால் ஏற்படும் உள்ளிருள் அழிந்ததோ, அத்தகைய கவிலோக ஸுர்யனான கலிகன்றியை தியானிக்கிறேன்.
இப்படிப் பட்டதென்று நினைக்க முடியாததும், ஆஸ்சர்யமானதும், (பகவானுடைய அருளாலே) எளிதாகக்
கிடைத்ததுமான ஞானத்தினுடையவும, வைராக்யத்தினுடையவும், குவியல் போன்றவராகவும், பகவானை மனனம் செய்பவராகவும் ஆழ்ந்த பகவத் பக்திக்குக் கடலாகவுமிருக்கிற நாதமுனிகளுக்கு நமஸ்காரம் செய்கிறேன்.
நாதமுனிகளின் நினைவில் நிலை நிற்பவரும், ஸூத்த; ஸத்வ மயராயிருப்பவரும், பகவானுடைய மற்றொரு அவதாரம் போன்றுள்ளவருமான புண்டரீகாக்ஷரை (உய்யக் கொண்டாரை ) வணங்குகிறேன்.
நாத முனிகளுடைய திருவடியில் ஈடுபட்டவராய், ஜ்ஞான யோக பக்தி யோகச் செல்வங்களை உடையவரான குருகைக் காவலப்பன் என்னும் யோகி, ஸ்ரேஷ்டரை எப் போதும் தலையால் வணங்குகிறேன்
(பரசு ராமனைப் போல்) பொறுமையை (பூமியை) விடாதவராய், (ராமனைப் போல) புண்ய ஜனங்களை (ராக்ஷஸர்களை) பாதிக்காதவராய், (பலராமனைப் போல்)மதுவான மதம் இல்லாதவரான நாலாவது ராமனை (மணக்கால் நம்பியை) உபாஸிக்கிறோம்.பகவத் பக்தியாகிற பாற்கடலில் குடைந்தாடப் பெற்றவராய், (அதனால்) ஆதியாத்மிகம், ஆதி தைவிகம், ஆதிபெனதிகம் என்னும் மூன்று தாபங்களும் ஆறப் பெற்றவரான ஸ்ரீராமன் என்னும் மணக்கால் நம்பியை ஆஸ்ரயிக்கிறேன் .
ஸ்ரீராம மிஸ்ரராம் மணக்கால் நம்பியின் திருவடித் தாமரையில் வண்டாயிருப்பவரும், ஸ்ரீயாமுநாசார்யருடைய சிறந்த புத்திரரும், குணத்தில் மிக்கவரும், ஸ்ரீரங்கராஜ கருணையினாலே அளிக்கப் பெற்றவரும், ஸ்ரீபாஷ்யகாரரை சிஷ்யராகச் கொண்டவருமான திருவரங்கப் பெருமாளரையரைத் துதிக்கிறேன்.
ஒன்றியொன்றி உலகம் படைத்த விஷ்ணுவின் (சேதந லாப,) மநோரதம் எவராலே நிறைவேற்றி வைக்கப் பட்டதோ, கருணை நிரம்பியவரும், யதிராஜருடைய ஆச்சார்யருமான அத் தகைய பெரிய நம்பிகளை ஆஸ்ரயிக்கிறேன்-
(பிரமனுக்குத் தந்தையான திருவேங்கடமுடை யானாலேயே அப்பா” என்று கூப்பிடப் பெறுகையாலே) உலகிற்குப் பாட்டனான பிரமனுக்கும் பாட்டனாராய், ஸ்ரீ பாஷ்யகாரருக்குச் சிறந்த ஆசார்யராய், அவருக்கு வால்மீகியின் வாக்காகிற ஸ்ரீராமாயணத்தின் பொருளை உபதேசித்தவரான பெரிய திருமலை நம்பிக்குப் பலகால் வணக்கம்.
பக்தர்களுக்கு அமுதம் போன்றவராய், கேட்பார்ககுக் கேட்டதைக் கொடுக்கும் கற்பக வ்ருக்ஷமாய்,
யாமுநாசார்யரின் திருவடியில் அன்பு கொண்டவராய், ஸ்ரீபாஷ்யகாரருக்குத் திருவாய்மொழியின் பொருளாகிற பரம ஹிதத்தை உயதேசித்தவராய், நல்லறிவு மிக்கவரான திருமாலை யாண்டானைத் தலையாலே வணங்குகிறேன்-
யாமுநாசார்யருடைய நல்ல சீடரும், திருவரங்கம் பெரிய கோயிலில் வாழ்பவரும், ஞானம், பக்தி முதலான வற்றுக்குக் கடலா யிருப்பவருமான மாறனேரி தம்பியை பஜனம் செய்கிறேன்
ஸ்ரீவரதராஜனின் கருணைக்கு இருப்பிடமாய், மிகச் சிறந்த ராமாநுஜ முனிக்கும் மதிக்கத் தக்கவராய்,
நல்லோர்கள் சென்று சேருமிடமான திருக்கச்சி நம்பியை வணங்குகிறேன்
கண்ணனின் அவதாரத்தால் மதுரையைப் போலவும், ராமனின் அவதாரத்தால் அயோத்தியைப் போலவும், கருணைக்கோர் இருப்பிடமான யதிராஜருடைய அவதாரத்தால் ஸ்ரீ பெரும்பூதூர் மிகப் புண்ணியமான நகரமாயிற்று–
திருக் கோட்டியூர் நம்பியின் நல்ல பிள்ளையாய், யதிராஜரின் திருவடிகளை அடைந்தவராய், காஸ்யப கோத்ரத்தில் உதித்தவரான நாராயணன் என்னும் திருநாமமுள்ள தெற்காழ்வானை ஆஸ்ரயிக்கிறேன்-
பெரிய திருமலை நம்பியின் நல்ல பிள்ளையாய், இளையாழ்வாரான உடையவரின் திருவடிகளை ஆஸ்ரயித்தவராய், திருமலைக் குடியில் அவதரித்தவரான பிள்ளை திருமலை நம்பியை ஆஸ்ரயிக்கிறேன்.
பாரத்வாஜ குலத்துதித்தவராய், ராமாதுஜ முனிவரின் திருவடிகளை ஆஸ்ரயித்தவராய், கருணைக்கோர் இருப்பிடமான வங்கி புரத்து தம்பியை வணங்குகிறேன்.
எம்பெருமானாருடைய நல்ல சீடராய், ஸாளக்ராமம் என்னும் ஊரில் வாழ்ந்தவராய், ஐந்தாம் உபாயமான ஆசார்ய நிஷ்டை கை வரப் பெற்றவரான ஸாளக்ராம ஐயன் எனப்படும் வடுக நம்பியை ஆஸ்ரயிக்கிறேன்.
பாரத்வாஜ குலத்தில் உதித்தவராய், பெரிய நம்பிகளின் திருக் குமாரராய், எம்பெருமானாரை ஆஸ்ரயித்தவரான ஸ்ரீ புண்டரீகாக்ஷரை வணங்குகிறேன்.
திராவிட வேதத்தின் ஸாரத்தை அறிந்தவராய், எம்பெருமானாரின் திருவடிகளை ஆஸ்ரயித்தவராய், பேரறிவாளரான திருக் குருகைப் பிரான் பிள்ளானைத் தினந்தோறும் தலையால் வணங்குகிறேன்.
திருமாலை யாண்டானின் திருக் குமாரராய், எம்பெருமானாரின் நல்ல சீடராய், சிறந்த கருணைக்கு இருப்பிடமான சுந்தரத் தோளுடையார் என்னும் ஆசார்யனை வணங்குகிறேன்
ஸ்ரீ பாஷ்யகாரருக்கு நல்ல சீடராய், கமல நயன பட்டருடைய குமாராய், எம்பாரின் தம்பியாய், கருணைக்கு இருப்பிடமான சிறிய கோவிந்தப் பெருமாளை வணங்குகிறேன்.
ஸ்ரீரங்கத்தில் பங்குனி ஹஸ்தத்தில் அவதரித்தவராய், அணி யரங்கத் தமுதனாரின் குமாரராய், எம்பெருமானாரின் திருவடியைப் பற்றியவரான திருவரங்கத்தமுதனாரை ஆஸ்ரயிக்கிறேன்.
எம்பெருமானாருடைய நல்ல சீடராய், வேத ஸாஸ்த்ரார்த்தால் பொருள்களைச் செல்வமாக உடையவராய், ஸந்யாஸ ஆஸ்ரமத்தை உடையவரான தேவராஜ முனிவர் என்னும் அருளாளப் பெருமாள் எம்பெருமானாரை ஆஸ்ரயிக்கிறேன்–
ஜ்ஞாந வைராக்யம் நிறைந்தவராய், எம்பெருமானாரின் திருவடிகளைப் பற்றியவராய், நாலாவது ஆஸ்ரம மாகிய ஸந்யாஸத்தை ஏற்றுக் கொண்டவரான முனிவர் தலைவராம் ஆட் கொண்ட வில்லி ஜீயரை வணங்குகிறேன்-
(எதிரிடும்) கவிகளுக்கும், தார்க்கிகர்களுக்கும் சிங்கம் போன்றவராய், (ஜஞாநம், பக்தி, வைராக்யம் முதலான) செல்வங்கள் நிறைந்தவராய், “வேங்கட நாதன் ” என்னும் திருநாமமுடையவரான ஸ்ரீ வேதாந்த தேசிகர் என் நெஞ்சில் எப்போதும் வாழ்வாராக.
கூரத்தாழ்வானுக்குப் பிள்ளையாய், ஸ்ரீபராஸர பட்டருக்குத் தம்பியான ஸ்ரீராம பிள்ளயை ஆஸ்ரயிக்கிறேன்.
ஸ்ரீபராசர பட்டருடைய கருணையினால் சமஸ்த உண்மை யறிவையும் வுடையவராய், ஸம்ப்ரதாய ப்ரவர்த்தராய், ஸ்ரீராமப் பிள்ளயின் குமாரரான வாக்கினால் வென்றார் பட்டருக்கு அடிமை செய்கிறேன்.
கூர குலத்திற்குத் தலைவராய், மிகச் சிறந்தவராம், எம்பெருமானார் அருளிய ஸ்ரீபாஷ்யத்தின் பொருள்களை (ஸ்ருத ப்ரகாசிகையால்) விரித்துக் காட்டியவரான ஸதாம் பட்டரை வணங்குகிறேன்.
ஸ்ரீபராசர பட்டரின் சீடராய், திருவரங்கம் பெரிய கோயிலை ரக்ஷிப்பவராய், ஞானம் முதலான குணங்களுக்குக் கடலா யிருப்பவரான நலந் திகழ் நாராயண ஜீயரை வணங்குகிறேன்
வேதாந்தி தஞ்சீயராகிற அமுதக் கடலினின்றும் மிகச் சிறந்ததான வேதப் பொருளமுதப் [பெருக்கைப் பருகிப் பொழிபவராய், கருணை (நீர்) நிறைந்த (மேகம் போன்றவரான திருக்கலிகன்றி தாஸராம் நம்பிள்ளையைச் சரணடைகிறேன்.
ராமாநுஜர்” என்னும் திருநாமமுள்ள கந்தாடை யாண்டானின் நல்ல பிள்ளையாய், உலகாசிரியரான நம்பிள்ளையின் கருணைக்குப் பாத்திரராய், நற்குணக்கடலான வாரணாதீஸரை (கந்தாடை தோழப்பரை) வணங்குகிறேன்-
வாதூல குலத்தில் உதித்தவராய், பச்சை வாரணப் பெருமாளின் பிள்ளையாய், கந்தாடை யாண்டானின் பேரனை ஈயான் எனப்படும் ராமாநுஜாசார்யரை வணங்குகிறேன் –
வாதூல குலத்துக்கு ‘ஆபரணமா யிருப்பவராய், ஈயானின் குமாரராய்,ஜ்ஞாந வைராக்யங்கள் நிறைந்தவரான திருக் கோபுரத்து நாயனாரை வணங்குகிறேன்-
வாதூல குலக் கொழுந்தாய், திருக் கோபுரத்து நாயனாரின் குமாரராய், உபய வேதாந்தச் செல்வமுடையவரான தெய்வப் பெருமாள் தோழப்பரை வணங்குகிறேன்-
வாதூல குல விளக்காய், தெய்வப் பெருமாள் தோழப்பருடைய நல்ல குமாரராய், ஞானம் முதலான குணங்களுக்குக் கடலான தேவராஜ தோழப்பரை வணங்குகிறேன்.
உலகாரியரான நம்பிள்ளையின் திருவடிகளில் ஈடுபட்டவராய், நடுவில் திருவீதியில் வாழ்பவராய், கூரத்தாழ்வானுடைய குலமாகிய கடலுக்குச் சந்திரன் போன்றவரான நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டரை ஆஸ்ரயிக்கிறேன்-
ஞானமும், வைராக்யமும் நிறைந்தவராய், திராவிட வேதமான திருவாய்மொழியின் பாஷ்யத்தை அளித்தவராய், என் ஆசார்யரான பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன்.
உலகாரியரான நம்பிள்ளையின் திருவடித் தாமரையைப் பற்றியவராய், கருணைக் கடலாய், உபய வேதாந்தச் செல்வ முடையவரான (ஈயுண்ணி) மாதவாசார்யரை ஆஸ்ரயிக்கிறேன் –
(ஈயுண்ணி) மாதவரின் நல்ல குமாரராய், அவருடைய திருவடித் தாமரையில் ஆஸ்ரயித்தவராய், வாத்ஸல்யம் முதலான குணங்களை யுடையவரான (ஈயுண்ணி) பத்மநாபாசார்யரை ஆஸ்ரயிக்கிறேன்.
நாலூரானின் வம்ஸத்தில் உதித்தவராய், (எம்பெருமானாரின் சீடரான) எச்சான் எனப்படும் யறிஜ்ஜோரின் குலத்திற்குத் திலகமாய், திராவிட வேதப் பொருளை அறிந்தவரான ஸ்ரீவராஹர் எனப்படும் நாலூர்ப் பிள்ளையை ஆஸ்ரயிக்கிறேன்
நாலூரில் வாழ்பவரும், ராமாநுஜார்யர் எனப்படும் நாலூர்ப் பிள்ளையின் குமாரரும், குணமுடையவருமான தேவராஜர் எனப்படும் நாலூராச்சான் பிள்ளைக்கு வணக்கம்.
ஆசார்ய ஹ்குதயத்தின் பொருள்களை வியாக்கியான மிட்டுக் காட்டியவராய், ஸ்ரீய:பதியின் தாஸராய், குற்றமற்றவரான தேவராஜ ரெனப்படும் திருநாராயணபுரத் தாயியை ஆஸ்ரயிக்கிறேன்-
ஸ்ரீமத் வேத மஹாசார்யரின் திருவடித் தாமரையில் பிரியாதே யிருப்பவராய், தமிழ் வேதாந்த தேசிகரான இளரிசைப் பிள்ளை நூறாண்டு வாழ்வாராக.
ஸ்ரீரங்காசார்யரின் நல்ல குமாரராய், ஞானம் ஸமதமங்கள் முதலான குணங்களுக்குக் கடலாய், திராவிட வேதாந்தத்திற்கு ஆசார்யரான ஸ்ரீ கேசவாசார்யரை வணங்குகிறேன்.
ஸ்ரீமத் கேசவாசார்யரின் திருவடித் தாமரையில் வண்டா யிருப்பவராய், நல்ல திருவடிகளை (சீடர்களை) உடையவராய், தாயின் அடிமையைத் தகர்த்தெறிந்த கருடனின் திரு நாமத்தை உடையவரான கருடாசார்யரை வணங்குகிறேன்-
கேசவாசார்யரின் நல்ல பிள்ளையாய், அவருடைய திருவடித் தாமரையை ஆஸ்ரயித்தவராய், தமிழ் வேதத்திற்கு ஆசார்யரான ஸ்ரீ நிவாஸாசார்யரை வணங்குகிறேன்-
குற்றமற்ற குணச் செல்வங்களுக்குக் கடைவீதியுமாயிருப்பவரும், ஸம்ஸாரத்தைக் கண்டு பயந்தவர்களுக்குப் புகலா யிருப்பவருமான (ஆதி) வண் சடகோப ஜீயரை ஸரணடைகிறேன்-
வண் சடகோப ஜீயரின் திருவடியைப் பற்றியவராய், கருணைக்கோர் இருப்பிடமாய், (குணச்) செல்வமுடையவரான ஸ்ரீமந் நாராயண ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன்-
எவருடைய கடாக்ஷத்திற்கு இலக்கானவர்களுக்கு தான் எப்போதும் கிடைத்தற்கெளியவனோ, அத்தகையவராய், யாமுநாசார்யரின் பிள்ளையாய், ஸ்ரீமத் க்ருஷ்ணர் என்னும் பெயரை யுடையவரான பெரிய வாச்சான் பிள்ளைக்கு வணக்கம்.
பெரியவாச்சான் பின்ளையின் திருவடித் தாமரையில் ஈடுபட்டவராய். நற்குணக் கடலாய், தமிழ் வேதத்துக்கு ஆசார்யரான ஸ்ரீரங்காசார்யரை வணங்குகிறேன்-
பர கால தாஸரெனும் ரங்கராஜரால், அறிந்த படியும் கேட்ட படியும் ஆசார்ய ஹ்ருதயத்தின் பொருள்கள் காட்டப் பட்டன-
ஸம்ஸாரக் கடலில் அமிழ்ந்த சந்துக்களைத் தாண்டுவிக்கும் ஓடம் போன்றதான (வாதிகேஸரி) அழகிய மணவாள ஜீயரின் திருவடித் தாமரையை ஸராணடைகிறேன் –
எவருடைய அருளின் பெருமையால் எனக்கு எல்லா ஸித்திகளும் கிடைத்தனவோ, அத்தகைய
ஸ்ரீ க்ருஷ்ணரெனும் வடக்குத் திருவீதிப் பிள்ளையின் திருவடித் தாமரைகளைத் தலையால் எப்போதும் வணங்குகிறேன் –
ஸம்ஸாரமாகிற பாம்பினால் கடிக்கப்பட்ட ஜீவனுக்கு உயிர் தரும் மருந்தா யிருப்பவராய், வடக்குத் திருவீதிப் பிள்ளையின் குமாரரான பிள்ளை யுலகாசிரியராம் ஆசார்யருக்கு வணக்கம்-
ஆசார்ய பரம்பரா ப்ராப்தமான திராவிட வேத ஹ்ருதயம் வடக்குத் திருவீதிப் பிள்ளையின் குமாரரான
அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரால் காட்டப்பட்டது,
திருமலை யாழ்வாராகிய திருவாய் மொழிப்பிள்ளைக்குத் தாமே வலியச் சென்றழைத்து நற் பொருள்களை உப தேசிக்கையாலே *உதாரர்” என்னும் அடைமொழி பெற்றவரான கூர குலோத்தமரை ஆஸ்ரயிக்கிறேன்–
பிள்ளை யுலகாசிரியரின் கிருபைக்குப் பாத்திரரும், கெளண்டின்ய குலத்திற்கு அலங்காரமா யிருப்பவரும், எல்லா ஆத்ம குணங்களுக்கும் இருப்பிடமானவருமான கூர குலோத்தம தாஸரை வணங்குகிறேன்.-
குந்தீ நகரத்தில் பிறந்தவராய்,(ஆசார்யனுடைய) அருளாலே கிடைக்கப் பெற்ற பரம ப்ராப்யமான கைங்கர்யத்தை உடையவரான திருமலை யாழ்வாரெனும் திருவாய் மொழிப் பிள்ளைக்கு வணக்கம்.
ஸ்ரீ மானான மணவாளமாமுனிகள் பாஷ்யகாரரேயாக விளங்குபவர். அவர் பாஷ்யத்தை விவரிக்கும் போது கேட்கும் பேறு பெற்றவன் அடியேன்.
திருமலை யாழ்வாராம் திருவாய்மொழிப் பிள்ளயின் தயைக்குப் பாத்திரராய், ஞானம், பக்தி முதலான குணங்களுக்குக் கடலாய், எம்பெருமானாரிடம் ஈடுபட்டவரான மணவாள மாமுனிகளை வணங்குகிறேன்–
மணவாள மாமுனிகளின் பாத ரேகை போன்றிருப்பவராய், எப்போதும் அவராலே தம் ஸ்வருப ஸ்திதி ப்ரவ்ருத்திகளாம்படி யிருப்பவரான வானமாமலை ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன்.–
மணவாளமாமுனிகளின் பாத கைங்கர்யத்தையே தாரகமாகக் கொண்டவராய், வாத்ஸல்யம் முதலான குணங்களுக்குக் கடலாயிருப்பவரான பட்ட நாத முனிவரை வணங்குகிறேன்.
எல்லா வேதாந்த ஸாரப் பொருள்களும் நிறைந்த திருவுள்ளத்தை உடையவரும், பெரிதான வாதூல கோத்ரத்தில் உதித்தவர்களுக்குள் சிறந்தவரும், மணவாள மா முனிகளின் திருவடிகளை ஆஸ்ரயித்தவரும், என் ஆசாரயருமான வரத நாராயணனை (கோயில் கந்தாடை அண்ணனை) ஆஸ்ரயிக்கிறேன் –
வேதாந்த தேசிகரின் கடாக்ஷத்தாலே விரிவடைந்த அறிவை யுடையவராய், மணவாள மாமுனிகளின்
கருணைக்கு ஒரே பாத்திரமா யிருப்பவராய், ஸ்ரீ வத்ஸ கோத்திரத்தி லுதித்தவராய், குற்றமற்ற குணங்களை யுடையவரான ப்ரதிவாதி பயங்கரம் அண்ணாவை பக்தி யுடன் ஆஸ்ரயிக்கிறேன்-
மணவான மாமுனிகளின் திருவடித் தாமரைகளில் வண்டா யிருப்பவராய், திவ்ய ஜ்ஞானமளிப்பவராய், மங்களமானவரான தேவராஜரெனும் எறும்பி யப்பாவை வணங்குகிறேன்–
மணவாள மாமுனிகளின் திருவடித் தாமரைகளில் வண்டா யிருப்பவராய், ஸ்ரீவத்ஸ கோத்ரத்தில் உதித்தவரான ப்ரணதார்த்தி ஹரர் எனும் அப்பிள்ளயை வணங்குகிறேன்-
மணவாள மாமுனிகளுடைய எல்லாக் கைங்கர்ய பாரங்களையும் தாமொருவரே வஹிப்பவராய், அவரையே தெய்வமாகக் கொண்டவரான ராமானுஜூரெனும் அப்பிள்ளானை ஆஸ்ரயிக்கிறேன்-
சமம், தமம் முதலான குணங்களுக்கு ஒரே இருப்பிடமாய், சரம பர்வமான ஆசார்யனிடம் நிறைய ஈடுபாட்டை யுடையவராய், யதிராஜரின திருவடித் தாமரையில் வண்டா யிருப்பவரான கந்தாடை போரேற்று நாயனார் எனும் நல்லாசிரியரை ஆஸ்ரயிக்கிறேன்-
மணவாள மாமுனிகளின் திருவடித் தாமரையை ஆஸ்ரயித்தவராய், நற் குணக் கடலான ஹீணைல் நாணிம் ஹாசார்யரை வணங்குகிறேன்-
நம்மிடம் வாத்ஸல்யத்தாலும், கருணையாலும் மணவாள மா முனிகள் தாமே விரும்பி மறுபடி அவதரித்தாரோ என்னலாம்படி யிருப்பவரும், அம் மா முனிகளின் திருப் பேரனாராம், பரம கருணை யுடையவருமான அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் எனும் என் ஆசார்யரை ஆஸ்ரயிக்கிறேன்.
வரத நாராயண குருவென்னும் கோயில் கந்தாடை யண்ணனின் திருவடிகளையே உபாயமாகக் கொண்டவரும், மணவாள மா முனிகளின் பெருங் கருணைக்குப் பாத்திரமா யிருப்பவரும், சிறந்த குணங்களாகிற ரத்னங்கள் நிறைந்த கடலா யிருப்பவருமான ஸ்ரீ நிவாஸாசார்யரென்னும் கோயில்
கந்தாடை அப்பனை வணங்குகிறேன்
வானமாமலை (ஆதி) ராமானுஜ ஜீயருக்கு இனியவரும், எல்லாமறிந்தவரும், ஸ்ரீவத்ஸ கோத்ரத்தை அலங்கரிப்பவருமான ஆத்தான் ராமாநுஜன் பிள்ளையை வணங்குகிறேன்.
பட்டர்பிரான் ஜீயருடைய விளங்கும் கருணைக்குப் பாத்திரமா யிருப்பவரும், மிகவும் சாந்தியையும் யுடையவரும், பெருத்த ஞானம், பக்தி, வைராக்யம் முதலான குணங்களால் மிகச் சிறந்து விளங்குபவரும், எப்போதும் எம்பெருமானைப் பெற வேணும் என்னும் ஆர்த்தி நிறைந்து விளங்கு பவருமான பரவஸ்து அழகிய மணவாள ஜீயரை பஜிக்கிறோம்.–
ஸ்ரீ மத் வாதூல கோத்ரத்திலுதித்த வரத நாராயண குருவாகிற கோயில் கந்தாடை யண்ணனின் பிள்ளையாயும், எல்லா மறிந்தவரும், எல்லார்க்கும் எளியவருமான ஸ்ரீநிவாஸாசார்ய ரென்னும் கோயில் கந்தாடை நாயனை பஜிக்கிறேன்
——————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கந்தாடை நாயன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply