Archive for January, 2024

ஸ்ரீ இராமாயண தனி ஸ்லோக வியாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தது –இச்சா மோஹி மஹா பாஹூம் -அயோத்யா -2-22-

January 17, 2024

இச்சா மோஹி மஹா பாஹூம்  ரகுவீரம் மஹா பலம்
கஜேந  மஹதா யாந்தம் ராமம் ராமம் சத்ரா வ்ருதா நநம –அயோத்யா -2-22-

இச்சா மோஹி -ஆசைப்படுகிறோம் அன்றோ
மஹா பாஹூம்  -நீண்ட திருக் கைகளை யுடையராய்
ரகுவீரம்-ரகு குல ஸ்ரேஷ்டராய்
மஹா பலம் -பெரும் பலத்தை யுடையரான
கஜேந  மஹதா -மஹதா கஜேந -பெரிய யானையின் மேலே
யாந்தம் -எழுந்து அருளுமவராயும்
ராமம் -ஸ்ரீ ராமனை
சத்ரா வ்ருதா நநம –குடையால் வெய்யில் படாதபடி மறைக்கப்   பட்ட திரு முகத்தை யுடையவராயும்
இச்சா மோஹி -ஆசைப்படுகிறோம் அன்றோ –

அவதாரிகை –
சக்ரவர்த்தி தான் பரிணத வயஸ்தன் ஆகையாலும்
எதிரிகளை நோக்கி எடுத்து விடுகைக்கு அசக்தன் ஆகையாலும்
தான் இருக்கிற போதே பெருமாளைத் திருமுடி சூட்டி ராஜ்யத்தோடு பொருந்தும்படி பண்ண வேணும் என்னும் நினைவுடையான் ஆகையாலும்
களித வயஸாம் இஷ்வாகூணாமிதம் ஹி குலவ்ரதம் -ரகுவம்சம் -3-70-என்று சொல்லுகிறபடியே
இந்தக் குலத்தில் பிறந்தார்க்கு பிள்ளைகள் பருவம் நிரம்பினால் அவர்களை முடி சூட்டித்
தாங்கள் உபசாந்தராய்ப் போருவதொரு முறைமை யுண்டாகையாலும்
பெருமாளை திருமுடி சூட்டி ராஜ்ய துரந்தராக பண்ண வேணும் என்று கருதி
அது செய்யும் இடத்தில்
பாண்டரஸ் யாத பத்ரஸ்ய சாயாயாம்   ஜரிதம் மயா-அயோத்யா -2-7-என்று நாம்
பயணத்தின் மேல் பயணமாய்த் திரிகையாலே நாமும் ரஷித்தோமாய்
நாட்டாரும் ரஷிதர் ஆனார்கள்
ரஷணத்தில் அல்பம் குறை யுண்டாமாகில் இப்போது ஒரு பாலன் கையிலே காட்டிக் கொடுத்து எங்களை உபேஷித்தான்
இவன் என்ன ராஜ்ஜியம் பண்ணிற்று என்று நாட்டார் குறை சொல்வார்கள்
அவர்களையும் இசைவித்துக் கொள்ளுவோம் என்று பார்த்து பௌரஜாந பதங்களை திரட்டி
கதக்லேசா பவிஷ்யாமி புத்ரே அஸ்மின் சந்நிவேச்ய வை -அயோத்தி -2-14-என்றும்
சோ அஹம் விஸ்ரமம் இச்சாமி புத்ரம் க்ருத்வா பிரஜா ஹிதே -அயோத்யா -2-10-என்றும்
நெடும் காலம் உண்டு நான் உங்களை ரஷித்துப் போருகிறது
நம்மை இப்போது வார்த்தகம் வந்து கைக் கொண்டது
இனி உங்களுடைய ரஷணம் நம்மால் துஸ் சகமாய்  இருந்தது
ஆனபின்பு ஆத்மா வை புத்ர நாமா அஸி-மந்திர பிரச்னம் -2-11-33-என்கிறபடியே
என்னோடு நிர்விசேஷரான என் பிள்ளையை உங்களுடைய ரஷணத்தில் நியோகித்து இளைப்பாறுவதாக பாரியா நின்றோம்
பவந்தோ மே அனுமன்யந்தாம் -அயோத்யா -2-15-என்று இதற்கு நீங்களும் இசைய வேணும் என்று சொல்ல
அவர்களும் இது கேட்ட ப்ரியத்தாலே
விமா நம் கம்பயன் நிவ -அயோத்யா -2-18-என்று மாளிகை கோப்புக் குலையும் படி பெரிய சம்ப்ரமத்தைப் பண்ணி
ஹர்ஷத்துக்குப் போக்கு விட்டு
அநேக வரஷ சஹஸ்ரோ வ்ருத்தஸ் த்வமஸி பார்த்திவ
ஸ ராமம் யுவராஜாநமபி  ஷிஞ்சஸ்வ பார்த்திவம் -அயோத்யா -2-21- என்று
வ்ருத்தனுமாய் நன்றாக எங்களை ரஷிப்பதும் செய்தாய் –
இவர் பெருமாளைத் திரு அபிஷேகம் பண்ணு என்று இசைந்து
அவன் கேட்ட வார்த்தைக்கு உத்தரம் சொன்னார்களாகை அன்றிக்கே
தங்கள் நினைவுகளையும் வெளியிட்டுப் பெருமாளுடைய ராஜ்ய பரண யோக்யதையும் சொல்லித் தலைக் கட்டுகிறார்கள் –

1-இச்சாம  –
இட்ட மாலையும் கவித்த அபிஷேகமுமாய் எங்கள் கண் முகப்பே தோற்ற வேணும் என்று போற ஸ்ரத்தை பண்ணுகிறோம்
2–இச்சாம –
எங்களுக்கு உள்ளது இச்சை இ றே-
முடி வைக்கும் போது நீயே வேணும் இ றே –
இச்சைக்கு காரணம் எங்கள் ஆசை இ றே –
ஸ்ரேயாம்சி பஹூ விக்நாநி -என்று இப்போது எங்களுக்குக் கிட்டப் புகுகிறதோ
3- இச்சாம –
கிடைப்பது -கிடையாது ஒழிவது –
நல்லது கண்டால் ஆசைப் படக் கடவது இ றே –
4- இச்சாம –
நிரபயமாக எங்களை ரஷித்த உனக்குக் குறையா கிறதோ என்று வாயிட்டுச் சொல்லிற்றிலோம்-
ஆனால் இப்போது தான் சொல்லலாமோ என்னில்
பாவம் விஜ்ஞாய சர்வச-அயோத்யா -2-19-என்று
அவனுடைய நினைவு அறிந்து சொல்லுகிறவர்கள் ஆகையாலே
இப்போது இச்சாம -எண்ணத் தட்டில்லை
இந்த ஆசை சிலர்க்கு உண்டாய்ச் சிலர்க்கு இல்லையாய் இருக்குமோ என்னில்
5-இச்சாம –
நாங்கள் இருந்ததே குடியாக இது தலைக் கட்ட வற்றோ என்று உம்மை இரக்கிறோம்-

உங்கள் நெஞ்சில் கிடந்தது நாம் அறியும் படி என் என்ன –
1-ஹி-அன்றோ –
பிறர் சொல்ல வேண்டி இருந்ததோ -இது எல்லார்க்கும்  ஒக்கும் என்னும் இடம் –
ஜனகோஷோ மஹாந பூத் -என்றும்
விமாநம் கம்பயந்நிவ-அயோத்யா 2-19-என்றும்
நாட்டார் பண்ணின ஆரவாரத்தாலே கோப்புக் குலைந்த உன் மாளிகையிலும் விமானங்களிலும் கண்டு கொள்ளும் இத்தனை அன்றோ –
2-ஹி -அன்றோ –
அகாமயத் மேதி நீ -அயோத்யா -2-48-என்றும்
நீயும் நிர்வாஹகனாய் இருக்க
பூமி தானே ஸ்வயம் வரித்து மாலையிட்ட போதே அறிந்திலையோ –
அகாமயத-காதலித்தாள்
நீ காக்ரஹணம் பண்ணிப் போரச் செய்தேயும் -முறை மசக்கி மாலை இட்டதில்லையோ –
காமுகருக்கு முறை தெரியாது இ றே-
லோக பாலோபமம் நாத மகாமையாதா மேதி நீ –
லோகபாலோபமா -லோக பாலனுக்கு ஒப்பானவன்
விஷ்ணு நா சத்ருசா -பால -1-18-என்று
சர்வேஸ்வரனைப் போலே இருக்கையாலே மேல் விழுந்து ஸ்ரத்தை பண்ணினாள்-
அதற்க்கடி என் என்னில் –
மேதி நீ –
மேதி நியான யாலே
எங்கனே என்றால்
மதுகைடபர்களுடைய வஸா விஸ்ர கந்தத்தாலே உபஹதையாய் இருக்கிற தன்னை
சர்வ கந்த -சாந்தோக்யம் -3-14-2-என்கிற அவனுடைய
சௌகந்த்யத்தாலே வாசிதை யாக்குகைக்காக –
வாசிதம் ஆக்க வேணுமத்தை புறம்பேயும் சொன்னார்கள் இ றே
மதுகைடபதாந வேந்த்ரமேத ப்லவ விஸ்ரா விஷமைவ மேதி நீயம அதி வாச்யயதி  –
ஸ்வ கைர்ய சோபிச் சிரமே நாமுப புஞ்சதே நரேந்த்ரா -என்று
முராரி கவியும் அனர்க்க ராகவம் -1-14-என்று சொன்னான் இ றே
இஸ் சௌகந்த்ய மாத்ரத்துக்காக கர்ப்பூர சந்த நாதிகளைப் போலே உபகரநமாய்-சேஷ கோடியிலேயோ அவதரித்தது என்னில்
நாதம-நாதனை –
ஏதாத்ருச கந்தமே பிடித்து இல்லாதபடி ரஷிப்பானாய்
அசௌகந்த்ய சௌகந்த்யன்கள்
தனக்கே அனுபவிக்க வேண்டும்படி நிருபாதிக சேஷியுமாய்-

மெய்ப்படவே உங்கள் எல்லார்க்கும் இச்சை யுண்டாகில் முடி சூட்டுகிறோம் –
அவர் தாம் நாட்டை அடக்கி ஆளவல்ல சாமர்த்தியம் யுடையவரோ என்னில்
1- மஹா பாஹூம் –
அவர் தோள் பரப்புக்கு  நடக்கிற கழஞ்சு மண்ணும் ஒரு சரக்கோ
2- மஹா பாஹூம் –
சக்தஸ் த்ரைலோக்யம் அப்யேஷ போக்தும் கிந்நு  மஹீமிமாம்-அயோத்யா -2-45-என்று
கோசல ராஜ்யம் அன்றிக்கே  லங்கா ராஜ்யமும் கைக் கொள்ளும்படியான தோளை யுடையவர் –
3- மஹா பாஹூம்
ஆயதாச்ச -என்றும்
ஆஜா நுபாஹூம் –அயோத்யா -17-7-என்றும்
அவருடைய சாமுத்ரிக லஷணம் கண்டால் சிலரைக் கேட்க வேணுமோ –
4- மஹா பாஹூம்
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே ஆள்கின்ற-நாச்சியார் -11-3- என்று
உபய விபூதியையும் வஹிக்கிற தோள் இ றே –
5- மஹா பாஹூம் –
அத் தோள் தான் வேணுமோ –
பாஹூச்சாயா ம வஷ்டப்தோ யஸ்ய லோகோ மஹாத்மந -சுந்தர -34-31-என்று
அவருடைய தோள் நிழல் தானே அமையாதோ எங்களை ரஷிக்கைக்கு –

ரஷ தர்மேண பலேந சைவ -கிஷ்கிந்தா -1-128- என்றும்
தர்மத பரி ரஷிதா -யுத்த -1-12- என்றும்
சிலரை சிலர் ரஷிக்கும் இடத்தில் தர்ம பலங்கள் இரண்டும் வேணும் இ றே
இவர் பலம் உண்டு என்று தோள் வலியாலே ரஷிக்கும் இத்தனையோ –
தார்மிகராய் ரஷிக்கும் ஆகாரம் இல்லையோ-என்னில்
1-ரகுவீரம் –
தீ நாந்தா நேந ராகவ -அயோத்யா -12-29-என்று
அவ்வாகாரம் பிறந்து படைத்ததன்றோ -இப்போதாகத் தேட வேணுமோ –
2- ரகுவீரம் –
ஆன்ரு சம்சயம்  பரோ தர்மச் த்வத்த ஏவ மயா ஸ்ருத -சுந்தர -38-41-என்று
பிறர்க்கும் கூட உபதேசிக்கும் படியாய் அன்றோ அதிருப்பது –
3- ரகுவீரம் –
தார்மிகத்வம் தன்னில் ரகுகளைக் காட்டில் இவருக்கு உள்ள தன்னேற்றம்
அது எங்கனே என்னில்
ரகுதான் ராஷசன் ஷூதார்த்தனாய்-பசியினால் – ம்ருதனானால் இதனால் வரும் பாபம் உனக்கு உண்டாகாதோ என்ன
மேல் ஒரு பிரதிக்ரியை பண்ண மாட்டாதே இருந்தான் இ றே
இவரோ -அப்யஹம் ஜீவிதம் ஐஹ்யாம் த்வாம் வா சீதே சா லஷ்மணாம்-ஆரண்யம் -10-19-என்று
பிராணன் ஒரு தலையாகவும்
ப்ராணேப்யோ அபி க்ரிய ஸீ-ஆரண்யம் -10-22-என்று பிராட்டி ஒருதலையாகவும் அழிய மாறி ரஷிக்குமவர் இ றே –

இப்படி இவர் ரஷிக்கும் இடத்தில்
வத்யதாம் பத்யதாம் -அயோத்யா -21-12- என்று விலக்குவார் உண்டானால் அவர்கள் வழியே போய் இள நெஞ்சே மீளுவாரோ என்னில்
மஹா பலம் –
ந து பிரதிஜ்ஞாம சம்ஸ்ருத்ய ப்ராஹ்மணேப்யோ  விசேஷத -ஆரண்ய -10-19- என்றும்
ஏதத் வ்ரதம் மம-யுத்த -18-34- என்றும்
ந த்யஜேயம் கதஞ்சந -யுத்த 18-3- என்றும்
அவர்கள் தங்களை கை விட்டும் ஆஸ்ரிதரை ரஷிக்கும் படியான வ்யவசாயம் யுடையவர்
பலம் -என்றது இவ்விடத்தில் மநோ பலத்தை –
நாய மாத்மா பல ஹீநேந லப்ய-முண்ட -3-2-4-என்கிறபடியே
துடங்கின கார்யத்தில் அசஞ்சலராய் இருக்கும் இருப்புக்கு
தைர்யேண ஹிமவாநிவ -பால -1-17-என்னக் கடவது இ றே-

உங்களுக்கு ஏற்ற ராஜ்ய பரணத்துக்கு சக்தராகில் நீங்கள் சொன்ன படி செய்கிறோம் –
இப்போது நான் இருந்த இடத்திலே இருக்க நாட்டுக்கு வேண்டுவது எல்லாம் ஆராய்ந்து நடத்தா நின்றார் ஆகில் அமையாதோ என்ன
உன் பிரயோஜனம் தலைக் காட்டிற்று இ றே
அவ்வளவில் விடலாமோ
எங்களுடைய பிரயோஜனமும் பெற வேண்டாவோ என்கிறார்கள் மேல் –
ஆகில் நீங்கள் சொல்லுகிறது என் என்ன
கஜேந மஹதா யாந்தம் –
நீ இசைந்தமையும் முடி சூட்டினமையும் தோற்ற
சத்ருஜ்ஞயன் கழுத்திலே இட்ட மாலையும் கவித்த முடியுமாய்-எங்கள் கண் முகப்பே தோற்ற வேணும் –
அது செய்யும் இடத்தில் தேரை அலங்கரித்து அதிலே வர அமையாதோ என்ன –
கஜேந-
அங்கன் ஒண்ணாது
மத்த மாதங்க காமிநம்  -அயோத்யா -3-28- என்ற அவருடைய நடைக்குச் சேர்ந்த வாகனமாக வேணும்
அது செய்யும் இடத்தில் ஏதேனும் ஒரு யானை யாக ஒண்ணாதோ என்ன –
கஜேந மஹதா –
சர்வ லஷணோ பேதமாய் பட்டத்துக்கு உரிய யானையாக வேணும் –
மஹதா –
சர்வ சக்தியை வஹிக்க வற்றாக வேணும் இ றே
உங்களுக்கு இப்படி அபீஷ்டமாகில் முடியையும் வைத்து
கஜாதி ரூடராம்படி பண்ணி விடுகிறோம் என்ன
யாந்தம் –
அவ்வளவும் போராது
யானைக் கழுத்திலே ஏறி நெடும் தெருவே நடக்க வேணும் –
அதுவே வேண்டும் போது அடைய இங்கே திரண்டிகோளாகில்
முடி சூட்டி யானைக் கழுத்திலே ஏற்றின அளவே அமையாதோ -என்ன
புதியது உண்பார் தனி உண்பார்களோ-என்கிறார்கள்
யாந்தம் -நனந்துஸ் ஸ பிரஜா பிரஜா -என்று இந்த மஹோத்சவத்தை எங்கள் மித்ராதிகள் உடன்
அங்கே எழுந்து அருளக் காண வேணும் –
யாந்தம் -ஆயாந்தம் –
போகின்றவரை -வருகின்றவரை
முகமும் முறுவலும்
கஸ்தூரி திரு நாமமும்
கருணா கடாஷததோடே
எழுந்து அருள சேவிக்க வேணும் –

இப்படி சேவிக்கிறது தான் யாரை -என்னில்
1-ராமம்
ராமயதீதி ராம -என்கிற வ்யுத்பத்தியாலே சமஸ்த ஜனங்களையும் கல்யாண குணங்களாலே ரஞ்ஜிப்பிக்கிற வரை –
2-ராமம் –என்கிற தாத் வர்த்தத்தின் படியே எல்லாரோடும் கூட விஹரிக்குமவர் ஆகையாலே என்றுமாம்

வெறும் யானைக் கழுத்திலே எழுந்து அருளுகிற மாத்ரம் அமையுமோ -என்ன
சத்ரா வ்ருதா ந நம் –
வெய்யில் படாமல் வெண் கொற்றக் குடை நிழலிலே எழுந்து அருளக் காண வேணும் –
பாண்டரஸ் யாத பத்ரச்ய சாயாயாம் ஜரிதம் மயா -என்று
தசரத சக்ரவர்த்தி முதலான ராஜாக்களாலே இச்சிக்கப் படுமதாய் இருக்கிற
திரு முக மண்டலத்தை சேவிக்க வேணும் என்றுமாம் –

————-

இச்சா2 மோஹி மஹாபா3ஹூம் ரகு4வீரம் மஹாப3லம்|

க3ஜேந மஹதா யாந்தம் ராமம் ச2த்ராவ்ருதாநநம்||

பொழிப்புரை:
நீண்ட திருக்கைகளை உடையவராய், ரகு குலஶ்ரேஷ்டராய், மஹாபலம் பொருந்தியவராய் இருக்கும் ராமனைப்
பெரிய யானையின்மேல் எழுந்தருளுபவராயும், வெண்கொற்றக்குடையால் (வெய்யிலிலிருந்து) மறைக்கப்பட்ட
திருமுகமண்டலத்தை உடையவராயும் காண நாம் ஆசைப்படுகிறோமன்றோ!

ராஜ்ய பாரத்தை மகனிடம் கொடுத்து வானப்ரஸ்தாஶ்ரமம் மேற்கொள்ளவேண்டும் என்ற ரகுவம்ஶ குலவழக்கத்தின் படி,
ராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்விக்க விரும்பினான் தஶரதன். தனது மனக்கிடக்கையை அப்படியே செயற்படுத்திவிடின்,
ஒருகால், அயோத்தியா நகரவாஸிகள், ‘ஒரு பச்சிளம் பாலகன் கையில் நாட்டை இப்படிக் கொடுத்துவிட்டீரே!
பகைவரிடமிருந்து மக்களைக் காக்கும் திறல் பெற்றவனோ இந்த ராமன்?’ என்று ஸந்தேகிக்கக்கூடும் என்று
தன் மனத்துள்ளே சங்கித்து மேலே செய்வது யாது என்ற யோசனையுடன் அரசன் இருந்தான்.
‘அறுபதினாயிரம் ஆண்டுகள் வெண்கொற்றக் குடையின் நிழலிலேயே நான் கிழத்தனம் அடைந்தேன்’
[பாண்ட3ரஸ்யாதபத்ரஸ்ய சா2யாயாம் ஜரிதம் மயா; அயோ.கா 2-7] என்று மனதுளே எண்ணி,
இனி தாமதிக்காமல், குலவழக்கப்படி ராஜ்யத்தை மகனுக்கு அளித்தலே மேல் என்றும் எண்ணி,
[க3லிதவயஸாமிக்ஷ்வாகூணாமித3ம் ஹி குலவ்ரதம்; ரகுவம்ஶம் 3-70] நகரத்தாருடன் கலந்து யோசிக்க விரும்பினான்.

ஒருநாள், நகரத்தாரையும், நாட்டாரையும் ஒருங்கே கூட்டி, அவர்களிடம், ‘ராஜ்ய பாரத்தைப் பிள்ளையிடம் வைத்து இடர் தீருகிறேன்’
[க3தக்லேஶோ ப4விஷ்யாமி புத்ரேஸ்மிந் ஸந்நிவேஶ்ய வை; அயோ.கா. 2-14] என்றும்,
‘பிள்ளையை ப்ரஜா ரக்ஷணத்திற்கு வைத்துவிட்டு நான் இளைப்பாறுகிறேன்’
[ஸோऽஹம் விஶ்ரமம் இச்சா2மி புத்ரம் க்ருத்வா ப்ரஜாஹிதே; அயோ.கா. 2-10] என்றும் சொல்கிறான்.
இவ்வாறு சொல்லி, அவர்களிடம், ‘நீங்களும் எனக்கு அநுமதி கொடுக்கவேண்டும்’
[ப4வந்தோ மேऽநுமந்யந்தாம்; அயோ.கா 2-15] என்று வேண்டி நிற்க,
ஜனங்களும் இதைக்கேட்ட உகப்பாலே, அரண்மனையின் கோப்பு குலையும்படி
[விமானம் கம்பயந்நிவ; அயோ.கா. 2-18] பெரியதொரு ஆரவாரத்தைச் செய்தனராம்.
அரசன் தங்களிடம் வைத்த ப்ரார்த்தனையை அங்கீகரிப்பதோடு மட்டுமின்றி தங்கள் அபிப்ராயத்தையும் சேர்த்தே,
‘அரசே!, உமக்கு வயது பல்லாயிரம் கடந்து விட்டது; வெகு விரைவில் ராமனுக்கு ராஜ்யாபிஷேகம் செய்யுங்கள்’
[அநேக வர்ஷ ஸாஹஸ்ரோ வ்ருத்3த4த்வமஸி பார்த்தி2வ; ஸ ராமம் யுவராஜாநம் அப்4யஷிஞ்சஸ்வ பார்த்தி2வம்; அயோ.கா.2-21]
என்று விண்ணைப் பிளக்கும் அளவிற்கு ஆர்பரித்தனர்.

‘இச்சா2ம:’ (விரும்புகிறோம்) என்று மக்கள் சொன்னதற்கு பல வியாக்கியானங்கள் தருகிறார் பெரியவாச்சான்பிள்ளை.
1. மாலை சூடிக் கிரீடம் தரித்து எங்கள் முன்னே அரசனாகக் காண விரும்புகிறோம்,
2. நாங்கள் விருப்பம்தான் செய்யமுடியும், செய்து வைத்துத் தலைக்கட்டவேண்டியவன் நீங்கள் அல்லவோ? எனவே விரும்புகிறோம்,
3. ‘பெரியோர்களுக்கும் நற்காரியங்கள் செய்யப்புகின் இடையூறுகள் பலவாய்த் தோன்றும்’
[ஶ்ரேயாம்ஸி பஹுவிக்3நாநி மஹதாமபி] என்ற உலக வழக்கின்படி, நாங்கள் விருப்பத்தை மட்டுமே தெரிவிக்கலாம், எனவே விரும்புகிறோம்,
4. நல்ல விஷயத்தைக் கண்டால் ஆசைப்படுவது மனுஷ்ய ஸ்வபாவமன்றோ!
ஒரு குறையுமில்லாமல் எம்மை இதுவரை காத்துவந்த உம்மிடம் குறை சொல்ல ஒரு காரணமும் இல்லை. என்றாலும்,
நீரே இப்படிக் கேட்டபிறகு, நாங்களும் ராமனையே அரசனாகக் காண விரும்புகிறோம் என்று சொல்வதில் தவறில்லையே,
5. இந்தவிருப்பம் சிலருக்கு உண்டு, சிலருக்கு இல்லை என்ற பேதமின்றிக்கே நாங்கள் அனைவரும் விரும்புவதால்,
பஹூவசனத்தில் ‘இச்சாம:’ விரும்புகிறோம் என்றபடி.

இப்படி விருப்பம் தெரிவித்த நகரத்தாரிடம், தஶரதன், ‘ஆமாம், நீங்கள் விருப்பம் தெரிவித்தீர்கள்;
ராமன் ராஜ்ய பாரத்தைத் தாங்கும் தகுதி உடையவன் தானா என்று யோசித்தீர்களா?’ என்பது போல் அவர்களை நோக்க,
அவர்களும், ‘அவர் தோள் பரப்பைக் காணுந்தோறும் இந்த மண்ணுலகும் ஒரு பொருட்டோ?
[மஹாபாஹும்], மூவுலகையும் ஆளவல்லவர், இந்த பூமியை ஆளவல்லவர் என்று சொல்லவும் வேண்டுமோ?
[ஶக்த: த்ரைலோக்யமப்யேஷ போ4க்தும் கிந்நு மஹீமிமாம்; அயோ.கா.2-45] [மஹாபா3ஹும், ஆஜாநுபா3ஹும்] என்றபடி.
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே ஆள்கின்ற செங்கோலுடைய செல்வன் அன்றோ இவன்? [நாச்.திரு. 11-3]
என்று அகல்விசும்பும் நிலனுமாகிற உபயவிபூதிகளைத் தாங்கும் தோள்கள் அல்லவோ இவனுடைய தோள்கள்?
எந்த மஹாத்மாவினுடைய தோள் நிழலில் உலகெல்லாம் விளங்குகிறதோ அவருடைய தோள் நிழல் போதாதோ எங்களைக் காப்பாற்றுவதற்கு?
[பா3ஹுச்சா2யாம் அவஷ்டப்3தோ4 யஸ்ய லோகோ மஹாத்மந: ஸூந்.கா. 34-31].

ராமன் தோள்வலியால் மட்டுமே பகைவரை வெல்ல வல்லவனா? ஒரு அரசனுக்குத் தோள்வலிமை மட்டுமே போதுமானதா? என்று வினவின்,
தார்மீகராய் ரக்ஷிக்கும் பெருமை இல்லையோ? என்றும் சங்கித்திருந்தால், அவன் ரகுவீரன் அல்லனோ?
தீனர்களை தானத்தால் வெல்கிறான் [தீ3னான் தா3னேன ராக4வ: அயோ.கா. 12-29].
தர்மத்தாலே ரக்ஷிக்கும் தன்மை ரகுகுலத்தில் பிறந்ததாலே ராமனுக்குப் பிறவிக்குணமாகவே இருக்கிறதே.
‘இரக்கம் என்ற மேலான தர்மம் உம்மிடமிருந்தே என்னால் கேட்கப்பட்டது’ என்று தாய்மைக் குணம் நிரம்பிய பிராட்டியே ஆநந்திக்கும்படி
[ஆந்ருஶம்ஸ்யம் பரோ த4ர்மஸ்த்வத்த ஏவ மயா ஶ்ருத: ஸுந்.கா 38-41] என்று பிறருக்கும் உபதேஶிக்கும்படியன்றோ இவன் பெருமை இருப்பது!
தீனர்களை ரக்ஷிக்கும் விஷயத்தில், லக்ஷ்மணனையோ, பிராட்டியையோ பின் தள்ளி ஆஶ்ரிதர்களை முன் வைப்பவன்.
காட்டில் பிராம்மணர்களுக்குச் செய்த ப்ரதிக்ஞையைக் காப்பாற்றுவதற்கு என் உயிரையும் விடுவேன்; லக்ஷ்மணனுடன் கூடிய உன்னையும் விடுவேன்;
[அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம் த்வாம் வா ஸீதே ஸலக்ஷ்மணாம்; ஆர.கா.10-19] என்றும்,
ப்ராணனைக் காட்டிலும் மேலானவள் என்ற பிராட்டியையும் தியாகம் செய்வேன்
[ப்ராணேப்யோபி க3ரீயஸி; ஆர.கா 10-22] என்றும் ஆஶ்ரித ரக்ஷணத்வத்தைக் கடைப் பிடிக்கிறான்.

ஶரணமடைந்தவர்களை ரக்ஷிப்பது என் வ்ரதம்  [ஏதத் வ்ரதம் மம; யுத்.கா.18-34 ],
ஶரணமடைந்தவர்களை ஒருபோதும்  கைவிடமாட்டேன் [ ந த்யஜேயம் கத3ஞ்சந; யுத்.கா. 18-3] என்றும் ஆஶ்ரித ரக்ஷணத்தில் உறுதி உடையவர்.
ரகுவீரம் மஹாபலம் என்று இங்கே கூறுமிடத்தே, தேஹபலம் என்று பொருள் கொள்ளாதே, மனோபலம் என்றே பொருள் கொள்ளவேண்டும்.
மஹாபாஹும் என்று முன்னமே கூறப்பட்டுவிட்டதாலும், இந்த பரமாத்மாவானவன் மனோபலமற்றவனால் அடையத்தகாதவன்
[நாயமாத்மா ப3லஹீநேந லப்4ய:, முண்.உப. 3-2-4] என்றும் மனோபலத்தைப் பல ஶப்தத்தால் குறிப்பதாலும்,
இங்கே மனோபலம் என்பதே பொருந்தும். மேலும், தொடங்கிய காரியத்தில் அசஞ்சலாராய் இருக்கும் ராமனை
தைர்யத்தில் ஹிமவானைப் போன்றவர் [தை4ர்யேண ஹிமவாநிவ; பால.கா 1-17] என்பதால் அறியலாம்.

இப்படியாக அரசரும், நகரத்தாரும் ராமனுக்கு பட்டாபிஷேகம் செய்வதே உசிதம் என்று உறுதி செய்த பிறகு,
நகரத்தார் அரசரிடம், ‘உமது விருப்பத்திற்கு நாங்கள் உடன் பட்டோம்; இப்போது எமது விருப்பத்தைக் கேளீரோ’ என்றனர்.
அப்படியாகில், நீங்கள் சொல்வதென்ன என்று வினவ,
‘கழுத்தில் மாலையும், கவித்த அரசமகுடமும் தாங்கி ஶத்ருஞ்ஜயம் மேலே பவனி வரவேண்டும்’ [க3ஜேந மஹதா யாந்தம்] என்றனர்.
அரசருக்கு ஏற்ப அரசத்தேரில் பவனி வருவதை விரும்பாமல், யானை மீதேறி வருமாறு விழைவது என்?
மதம்கொண்ட யானையைப் போன்ற நடையுடையவன் அன்றோ அவன்?
[மத்த மாத3ங்க கா3மிநம்; அயோ.கா.3-28]. அதற்கேற்ப யானைமீதேறி வரவேண்டாவோ?
அது செய்யுமிடத்தில், ஏதேனும் ஒரு யானையாக ஒண்ணாதோ? ஸர்வலக்ஷணங்களும் பொருந்தியதான பட்டத்து யானையாக இருக்கவேண்டும்.
[க3ஜேந மஹதா], ஸர்வ ஶக்திபொருந்தியவனை எழுந்தருளப்பண்ணும்படியான பட்டத்து யானையாக இருக்கவேண்டுமன்றோ!
யானை மீது ஏற்றம் மட்டும் போதாது; அயோத்தி மாநகரின் பெருந்தெருவே ஊர்வலமாய் வரவேண்டும்;
சுற்றத்துத் தோழர்கள், தோழிமாருடன் உடனிருந்து முகமும், முறுவலும், கஸ்தூரி நாமமும் கருணாகடாக்ஷத்தோடே எழுந்தருள ஸேவிக்கவேண்டும்.
அது மட்டுமன்று. வெய்யில் திருமுகத்தில் படாதவாறு வெண் கொற்றக் குடை நிழலிலே எழுந்தருளக் காண வேண்டும்.

———————————————————————————————————
ஸ்ரீ சீதா ராம ஜெயம் .
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ இராமாயண தனி ஸ்லோக வியாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தது –இயம் ஸீதா மம ஸுதா-பால – 73-27–

January 17, 2024

பால காண்டம்

ஸர்க்கம்-73; ஶ்லோகம்-27

இயம் ஸீதா மம ஸுதா ஸஹத4ர்ம சரீதவ|

ப்ரதீச்ச2 சைநாம் ப4த்3ரம்தே பாணிம் க்3ருஹ்ணீஷ்வ பாணிநா ||

பொழிப்புரை:
என்னுடைய பெண்ணான இந்த ஸீதையானவள் உமக்கும் தர்மங்களைக் கூட இருந்து செய்யக்கூடியவள்;
இவளை அங்கீகரிப்பீராக; உமக்கு மங்களமுண்டாகட்டும்;
இவளுடைய கையை உம்முடைய கையினால் பிடித்துக் கொள்ளும்.

இந்த ஶ்லோகத்தில் புருஷகாரத்துக்கும் புருஷகாரானாகும் ஜநகரின் நிலையைப் பற்றிச் சிலாகித்துச் சொல்கிறார் பெரியவாச்சான்பிள்ளை.
ராமபிரான் ஶிவதநுஸ்ஸை முறித்து பித்ரு பாரதந்த்ரியம் தோன்ற அடக்கவொடுக்கத்துடன் நிற்க,
ஜநகர் சிந்தார்ணவம் என்னும் கவலைக்கடலிலிருந்து கரையேறினவராய், மிகவும் மனமுவந்து
பெருமாளையும் பிராட்டியையும் சேர்த்து வைக்க எண்ணி, பெருமாள் கையிலே பிராட்டியைக் கொடுப்பதன் மூலம் தன் காரியத்தை முடிக்கிறான்.
சேதனரைப் பெருமாளிடம் சேர்ப்பிக்கும் புருஷகாரபூதையான பிராட்டியையே
பெருமாளிடம் சேர்ப்பிப்பதன் மூலம் பிராட்டிக்கும்  புருஷகாரமாகிறான் இவன்.

இதோ இருக்கிறாள் ஸீதை, (இயம் ஸீதா) இங்கேயும் பாரும் என்று ராமனை நோக்கிச் சொல்வதாய் அமைகிறது
இங்கே. சந்திரனைப் போன்ற முகத்தினை உடையவனாய், அந்தச் சந்திரனைக் காட்டிலும் அழகு பொருந்தியவனாய்,
வடிவழகு, வண்மை குணங்கள் முதலியவற்றால் ஆண்களின் கண்களையும், நெஞ்சங்களையும் கொள்ளை கொள்பவனாய் இருக்கும் ராமனிடம்
(சந்த்ர காந்தாநநம் ராமம் அதீவப்ரியத3ர்ஶநம், ரூபௌதா3ர்யகு3ணை: பும்ஸாம் த்3ருஷ்டிசித்தாபஹாரிணம்; அயோ.கா. 3-29 )
‘உம்மைப் பார்த்து இறுமாந்திராதீர்; இவளையும் பாரீர்; குணம், வயது, நடத்தை முதலியவற்றால்
வேறு ஒருவருக்கும் பொருத்தமின்றிக்கே, உமக்கே பொருத்தமாயிருக்கிற (துல்ய ஶீலவ்யோவ்ருத்தாம்; ஸுந்தர.கா. 16-5)
காரணத்தால் உமக்குத் தருகிறேனத்தனை காணும்’ என்று மனத்தில் நினைத்திருப்பதாகக் கற்பித்து வியாக்கியானம் செய்கிறார் பெரியவாச்சான்பிள்ளை.

‘என்னைக் காட்டிலும் இவளுக்கு ஏற்றமேது?’ என்று ராமன் நினைப்பானாகில், இவள் ஏற்றம் சொல்லும் வகையாக, இவள் என் மகள் (மம ஸுதா) என்கிறான்.
இவள் நற்குடியில் பிறந்தவள்; உன்னைப்போல் அல்லாமல் கர்ப்பவாஸம் பண்ணாதவள்;
ஸீதா லாங்கலபத்ததி: (கலப்பை உழுத வழி ஸீதை எனப்படும்) என்பதற்கிணங்க, பொற்கொடிபோலே பூமியிலே பிறந்தவள்.
ஹிரண்யவர்ணை (ஹிரண்ய வர்ணாம் ஹரிணீம்; ஶ்ரீ ஸூக்தம்) ஆயிற்றே இவள்!
பற்றி எரியும் மிதிலையில் எனக்குவொன்றும் இல்லை என்று அபிமானமற்று இருந்த எனக்கும்,
‘இவள் எனது பெண்’ என்று அபிமானிக்கும்படியாக ஏற்றமுள்ளவள்.
‘வள்ளி மருங்குல் என்றன் மடமான்’ (பெரிய திருமொழி 3-7-1) என்று தாயார் பெண்ணின் பெருமையைச் சொல்லுமாப்போலே சொல்லுகிறான்.
பிறவாமையிலும் ஏற்றமுண்டு; பிறப்பிலும் ஏற்றமுண்டு; இரண்டிலும் இவளுக்கு ஏற்றமுண்டு.
‘ஒருமகள் தன்னையுடையேன் உலகம் நிறைந்த புகழால்; திருமகள் போல வளர்த்தேன்; (பெரியாழ்வார் திருமொழி 3-8-4) என்று சொல்கிறான்.

மேலும், ஜநகர் ராமன் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருப்பான் என்று எண்ணுகிறார்.
ஒருவேளை, ‘இந்த வைலக்ஷண்யத்தில் எமக்கு என்ன தேட்டம்? எனது தர்மத்துக்கு உதவியாய் இருப்பாளா?’
என்று ஸங்கித்து இருப்பானாகில் என் செய்வது? என்று நினைத்து, மேலும் கூறுகிறான்.
உமக்கு தர்மங்களைக் கூட இருந்து செய்யக் கூடியவள் (ஸஹத4ர்ம சரீதவ) என்றும் சொல்கிறான்.
நண்பனாக வேஷம் தரித்து வந்தாலும் கைவிடமாட்டேன் (மித்ர பா4வேந ஸம்ப்ராப்தும் ந த்யஜேயம் கத3ஞ்சந; யுத்.கா.18-3)
என்கிற உமது ஸங்கல்பத்துக்கு உறுதுணையாக இருப்பாள்;
என்னைச் சரணமடைந்தவனுக்கு எல்லா பூதங்களினின்றும் நான் அபயமளிக்கிறேன்;
இது என் விரதம் (அப4யம் ஸர்வ பூதேப்4ய; த3தா3மி ஏதத் வ்ரதம் மம; யுத்.கா 18-34) என்று
விரதம் மேற்கொண்ட உமக்கு உறுதுணயாக இருப்பாள்;
இப்படித் தேவரீர் அருளிச்செய்த அர்த்தத்தை ‘ராக்ஷஸிகளான உங்களுக்கு அபயம் அளிக்கிறேன்
(அலமேஷா பரித்ராதும் ரக்ஷஸீர் மஹதோ ப4யாத்; யுத்.கா 27-46) என்றும்,
ராக்ஷஸிகளை பெரும் பயத்தினின்றும் காப்பாற்ற இப்பிராட்டியே தகுந்தவள்;
பாபிகளாயினும், நல்லோர்களாயினும், கொல்லத் தக்கவரே யாயினும் பெரியோனால் அவர்கள் விஷயத்தில்
கருணை காட்டப்படவேண்டும்; குற்றம் செய்யாதவர்கள் யாருமில்லை என்று ராக்ஷஸிகளுக்குப் பரிந்து பேசக்க்டியவள்
(பாபாநாம் வா ஶுபா4நாம் வா வதா4ர்ஹாணாம் வா ப்லவங்கம; கார்யம் கருணமார்யேண ந கஶ்சிந் நபராத்4யதி; யுத்.கா. 116-44).

இவளை அங்கீகரிப்பீராக (ப்ரதீச்ச) என்றவுடன், ஜநகர் மனதில் ஒரு ஸந்தேஹம் நிழலாடுகிறது.
நந்தகோபன் திருமகனைப் போன்றவனன்றே இவன்! ராமனும், ‘நாம் இதுக்குக் கடவோமோ?
ஐயரும், ஆச்சியரும், வஸிஷ்டாதிகளும் அன்றோ செய்விக்கவேண்டும்?’ என்றான்.
ஜனகரும் இதையறிந்து, ‘நின் தாள் நயந்திருந்த இவளை உன்மனத்தால் என் நினைத்திருந்தாய்?’ (பெரிய திரு. 2-7-1) என்று கேட்டு,
ஒத்தகுணம், வயது, நடத்தை (துல்ய ஶீல வயோவ்ருத்த:) ஆகியவற்றை உடையவளாயிருப்பினும் பயனில்லையே;
இவள் இறையும் அகலகில்லேன் (திருவாய்மொழி 6-10-10) என்று இருப்பதுபோல், நீரும் ஸீதையை விட்டு
ஒருகணமும் ஜீவியேன் (ந ஜீவேயம் க்ஷணமபி; ஸு.கா. 66-10)
தானே வருகிற ஶ்ரீதேவியைக் காலாலே தள்ளாதே கொள்ளும்’ என்று வேண்டி நின்றார்.

ஶ்ரீராமன் தந்தை இசைந்திருந்ததைப் போன்றே தானும் இசைந்திருந்தான்.
இவன் பெருமைக்கேற்ற பெருத்த கண்ணாலங்கள் செய்து (பெரியாழ். திரு. 3-7-10),
நாடு நகரமறிய நல்லதோர் கண்ணாலம் செய்து தக்கவா கைப்பற்றுங்கொலோ (பெரியாழ். திரு.3-8-6)
என்று ஆசைப்படுகிறான் ஜனகன்.
வெள்ளி வளைக்கை (பெரியாழ். திரு; 3-7-1) என்னும் கையைப் பற்றச்சொல்கிறான்
( ஏநாம் பாணிம் க்3ருஹ்ணீஷ்வ). இவ்வேப்பங்குடி நீரையன்றோ உம்மைக்குடிக்கச்செய்வது?
பால் குடிக்கக் கால் பிடிக்க வேண்டியிருப்பதே!
பால்மொழியாள் (பெரியாழ். திரு. 3-10-5), இவள் ஆயிற்றே! இனியவள்; இனிய பேச்சை உடையவள்
(மது4ரா மது4ராலாபா4; ஸு.கா. 66-15) என்று சொல்லப்பட்டவளன்றோ?
உனக்கு மங்களமுண்டாகட்டும் ( பத்3ரம்தே) பெருமாளும் பிராட்டியுமான சேர்த்தியைக் கண்டவுடன் மங்களாஶாஸனம் பண்ணுகிறார்.
பரமபுருஷனுக்குப் பெண்பெற்றுக் கொடுத்தாரெல்லாம் பெரியாழ்வாரைப்போலே திருப்பல்லாண்டு பாடவேண்டும் அன்றோ?
நன்று நன்று நறையூரர்க்கே (பெரிய திரு 8-2-2).

இப்போது செய்யவேண்டுவது என்ன? ‘இவளுடைய கையை உம்முடைய கையினால் பிடித்துக் கொள்ளும்’
(பாணிம் க்3ருஹ்ணீஷ்வ பாணிநா)
அம்மி மிதிக்கும்போது காலைக்  கையாலே பிடிப்பீர்; இப்போது, கையைக்  கையாலே பிடிப்பீர்’ என்கிறான்.
மதுஸூதன் வந்தென்னைக் கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் (நா. திரு.6-6 ),
என்கைப் பற்றித் தீவலஞ்செய்யக் கனாக் கண்டேன் (நா. திரு. 6-7),
செம்மையுடைய திருக்கையால் தாள்பற்றி அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் (நா. திரு. 6-8)
என்ற பகவானது கையைக் காட்டிலும், கைமேல் என்கை (நா.திரு. 6-9) என்கிற பிராட்டியின் கை
இனிமையில் விஞ்சியிருக்கையாலே, கையால் கையைப்பிடி என்னாதே, கையைக் கையாலே பிடி என்றது மிகப் பொருத்தம்.

————–—————————————————————————————————————————————————————————————-
ஸ்ரீ சீதா ராம ஜெயம் .
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ இராமாயண தனி ஸ்லோக வியாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தது –அஹம் வேத்மி மஹாத்மானம்-பால – 19-14–

January 17, 2024

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூநவே
யத் கடாஷைக லஷ்யாணாம ஸூ லப ஸ்ரீ தரஸ் சதா-

பால காண்டம் 19-14
அஹம் வேத்மி மஹாத்மானம் ராமம் சத்ய பராக்ரமம்
வசிஷ்டோபி மகா தேஜோ யே சேமே தபஸி ஸ்திதா தே அபி விதந்தி-

நானே ஸ்ரீ ராமனை மகாத்மாவாகவும் சத்ய பராக்ரமனாகவும் அறிவேன்
மிகுந்த தேஜஸ்சை உடைய வசிஷ்ட மஹ ரிஷியும் அறிவார்
இங்கே இருக்கிறவர்களாய் -இமே
தபஸ் சிலே நிலை நிற்கிறவர்களான யாவர் சில மக ரிஷிகள் உண்டோ அவர்களும் அறிவார்கள்-

ந யுத்த யோக்யதாம் அஸ்ய பச்சாமி -அவர் அயோக்யதையை சொல்லுகைக்கு நீ ஒருவனுமே உள்ளாய்
இவர் யோக்யதையை அறிக்கைக்கு நாங்கள் இத்தனை பேரும் உண்டு என்கிறான்-

1-அஹம் வேத்மி –
ந சஷூஷா க்ருஹ்யதே -முண்டோக்யம் 3-1-8-
மனஸா து விசுத்தே ந -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -273-2-
என்றேனும் கட் கண்ணால்   காணாத அவ்வுருவை நெஞ்சு என்னும்
உட் கண்ணால்  காணும் உணர்ந்து -பெரிய திருவந்தாதி -28
நான் அறியும் அத்தனை போக்கி
பாஹ்ய சஷூஸ்சாலே காண்கிற உனக்குத் தெரியாது காண்-

2-அஹம் வேத்மி
ஜ்ஞான வ்ருத்தாமா ராஜன் பகவ பர்யுபாசிதா –
பல ஆச்சார்யர்களை சேவித்த நான் அறியும் அத்தனை போக்கி
நாட்டாராலே சேவிக்கப் படுகிற உனக்குத் தெரியுமோ –

3-அஹம் வேத்மி –
குச தர்ப்ப தரா -புல்லும் கையுமான நான் அறியும் அத்தனை போக்கி
வில்லும் கையுமான நீ அறியாய்-

4-அஹம் வேத்மி –
தலையும் சடையுமான நான் அறியும் அத்தனை போக்கி
தலையும் முடியுமான நீ அறியாய்-

5-அஹம் வேத்மி –
சாத்விக பிரக்ருதியான நான் அறியும் அத்தனை போக்கி
ராஜச பிரக்ருதியான நீ அறியாய்-

6-அஹம் வேத்மி
நீச சய்யா ஆசனம் சாஸ்ய நிதயம் ச்யாத குரு சன்னிதௌ-என்று
ஆசனத்தின் கீழே இருந்த எனக்குத் தெரியும் அத்தனை போக்கி
சிம்ஹாசனே பிரபு -ஆசனத்தின் மேலே இருக்கிற உனக்குத் தெரியுமோ-

7-அஹம் வேத்மி
யோக க்ரமம் அறியும் நான் அறியுமத்தை போக
க்ரமம் அறியும் நீ அறிவுதியோ-

8-அஹம் வேத்மி
மோஷ காமேஷ்டி பண்ணின நான் அறியும் அத்தனை போக்கி
புத்திர காமேஷ்டி பன்னன நீ அறிவுதியோ-

9–அஹம் வேத்மி
தர்ம மோஷ பரனான நான் அறியுமத்தை
அர்த்த காம பரனான உன்னால்  அறியப் போமோ –

நானேயோ அறியாதேன் –
நேதி  நேதி-என்றும்
க இத்தா வேட யத்ரச-என்றும்
பிரமாணங்களான வேதங்கள் தான் அறிந்ததோ –

ப்ரஹ்ம ருத்ர இந்திர பூதானாம் மநாம்ப்ய கோசரம் -என்றும்
நான் முகனும் செஞ்சடையான் என்று இவர்கள் எம்பெருமான் தன்மையை யார் அறிகிற்பார் -திருவாய் -8-3-9-என்றும்
பிரமாதாக்களான ப்ரஹ்ம ருத்ராதிகளுக்குத் தான் நிலமோ

பிரமாதக்கள் அளவேயோ –
சோ அங்க வேதி யதி வா ந வேத -என்றும்
தனக்கும் தன் தன்மை அறிவரியானை -திருவாய் -8-4-6-என்றும்
பிரமேய பூதனானவன் தனக்கும் தெரியுமோ

இத்தனை பேர் அறியார்களே காண் என்ன

10-அஹம் வேத்மி
யஸ் சர்வஜ்ஞஸ்  சர்வவித
ஸ்வா பாவிகீ ஜ்ஞான பலக்ரியா ச -என்கிற பிரமாணங்களை விச்வசித்து சர்வஜ்ஞம் கொண்டாடி
ஓர் ஆச்சார்யன் பக்கல் குனிந்து கேளாமையாலே அவனுக்கும் தெரியாதே-

ததாமி புத்தியோகம் -ஸ்ரீ கீதை -10-10-என்றும்
மயர்வற   மதிநலம் அருளினான் -என்றும்
சம்ப்ரதாய சித்த ஜ்ஞானம் உடையவனுக்கு தெரியும் இறே.

ஆச்சார்யன் இடத்தில் கேளாத அக்குறை -அவ்விழவு தீருகைக்கு இறே
பஹூ ஸ்ருதானாம் வ்ருத்தானாம் ப்ராஹ்மணா நாமுபாசிதா -அயோத்யா -2-33-என்று
அறிவுடையார் கால் கடையிலே துவண்டு திரிந்தது

11-அஹம் வேத்மி-
தமேதம் வேத அநுவசநேந ப்ராஹ்மணா  விவிதி ஷந்தி யஜ்ஞேந தானேந  தபஸா அநாசகேந -ப்ரு -6-4-22-என்றும்
ஸ்ரோதவ்யோ மந்தவ்யோ நிதித்யாசிதவ்ய -ப்ரு-6-5-6-என்றும்
அவனை அறிக்கைக்கு நான் பட்ட வருத்தம் சொல்லப் போமோ –

நீ அறிந்த பிரகாரம் என் என்னில்-

1-மஹாத்மானம் -அறப் பெரியவன் -என்று அறிவேன்
தேஜசாம ஹி ந வய சமீஷ்யதே -ரகுவம்சம் -11-1-என்கிறபடியே
வடிவு சிறுத்து இருந்ததே யாகிலும் பரத்வம் உறைத்து இருக்கும் காண்

2-மஹாத்மானாம் -ஆத்மா ஜீவே -தருதௌ (தைர்யத்திலும் )-
தே ஹே -ஸ்வபாவே-பரமாத்மிநி -யத்னே-ஆகாசக்னௌ-சூர்யன் அக்னி -மநோ-புத்தி -வாதே -காற்று -என்று
அநேகார்த்த வாசி இறே ஆத்ம சப்தம்
அதில் முற்பட ஜீவ வாசியான போது
மஹாத்மானம் -என்று -யஸ் யாத்மா சரீரம் -ப்ரு -5-7-26-என்றும்
ய ஆத்ம நி திஷ்டன் நாத மநோ அந்தர -ப்ரு -5-7-26-என்றும்
சர்வ ஜீவாத்மாக்களும் சரீரமாம் படி சர்வாத்ம சரீரியாய் இருப்பான் என்னும் இடம் அறிவன்
அன்றியிலே

3- மஹாத்மானம் -என்று திருதியிலே   யாய் -தைர்யத்தில் –
ஆபதயபி ஸ்வ கார்யேஷூ கர்த்த வ்யத்வஸ்திதிர் தருதி-என்று
தாடகா தாடகேய பரமுகரான பிரபல விரோதி பரம்பரைகள் உண்டே யாகிலும்
யஜ்ஞ  விக்ன கரம் ஹந்யாம்-என்று நாம் ஏறிட்டுக் கொண்ட கார்யம் தலைக் கட்டலாம் படியான
நிலையை யுடையராய்க் காண் இருப்பது என்றுமாம்
அன்றியிலே

4-மகாத்மானம் -தேக வாசியாய்
நித்யம் நித்யாக்ருதிதரம் -என்றும்
ந தஸ்ய ப்ராக்ருதா மூர்த்திர் மாமஸ மேதோ அஸ்தி சாம்பவா -என்றும்
மாசூணாச் சுடருடம்பாய் -திருவாய் -3-1-8-என்றும் சொல்லுகிறபடியே
சத்ருக்களால் அழிக்க ஒண்ணாத படி
நித்ய நிரவதய நிரதிசய ஔஜ்வல்ய விக்ரஹராய் காண் இருப்பது -என்றுமாம்
அன்றியே

5- மஹாத்மானாம் -ஸ்வபாப வாசியாய்
அபயம் சர்வ பூதேப்யோ ததாம் யேதத் வ்ரதம் மம-யுத்த-18-34-என்றும்
பாஸூ பால்யம் ஹி வ்ருத்தி-என்றும்
ஆபன்ன ஜன ரஷணத்தை ஸ்வபாவமாக உடையராய்க் காண் இருப்பது -என்றுமாம் –
அன்றியிலே

6- மஹாத்மானம் -என்று பரமாத்மா வாசியாய்
பரோமா அஸ்மாதிதி பரம -என்றாய்
யஸ்மாத் பரம நா பரமஸ்தி கிஞ்சித் -என்றும்
ந தத்சமச்சாப் யதி கச்ச த்ருச்யதே -என்றும்
ஒத்தார் மிக்காரை இலையாய மாமாயா -திருவாய் -2-3-2-என்றும் சொல்லுகிறபடியே
தம்மை ஒழிந்த சகல தேவதைகளுக்கும் மேலாய்
அவை தனக்கும் அந்தர்யாமியாய் இருக்கும் படி அறிவன் -என்றுமாம்
அன்றியிலே

7- மஹாத்மானம் -என்று யத்ன வாசியாய் –
அதாவது பரயத்னமாய்
பிரயத்ன ஸ்வாத்ம தர்ம ச்யாதுத்சாஹோ பாவநா ச ஸ-என்றும்
விநாசாய ஸ துஷ்க்ருதாம் சம்பவாமி -கீதை -4-8-என்றும்
சொல்லுகிறபடியே
துஷ்க்ருத விநாசத்துககாக அவர் உத்சாஹித்துப் போந்த படி அறிவேன் -என்றுமாம்
அன்றியிலே

8- மஹாத்மானாம் -என்று
அர்க்க வாசியாய் -சூர்யன் –
ராம திவாகர சத்ருர ஷோமயம்  தோயமுப சோஷம் ந்யிஷ்யதி -என்றபடி
ஆயுத நிரபேஷமாய் தம்முடைய பிரதாபத்தாலே சத்ரு ரஷஸ்ஸூக்களாகிற  நீரை ஊற்றகப் படச் சுவரும்படி
பண்ண வல்லர்-என்னும் இடம் அறிவன் என்றுமாம்
அன்றியிலே

9-மஹாத்மானம் -என்று அக்னியாய்
அபித பாவ கோபமம-அயோத்-99-26-என்றும்
நிர்தஹே தபி காகுத்ச்த க்ருததஸ் தீவ்ரேண சஷூஷா-என்றும்
அனலுருவில்  திகழும் சோதி தன்னுருவாய் -திரு நெடும் -1-என்றும் சொல்லுகிறபடியே
சத்ரு சரீரங்களை யடையச் சுட்டுக் கூறாய் நீறாய்ப் போம்படி பண்ண வல்லர் என்னும் இடம் அறிவன் என்றாகவுமாம் –
அன்றியிலே

10-மஹாத்மானம் -என்று மதி வாசியாய் –
சர்வ சாஸ்த்ரார்த்த தத்வஜ்ஞ-பால -1-15-
புத்த்யாஹயஷ்டாங்கயா யுக்த-சுந்த -116-27-என்றும் சொல்லுகிறபடியே
இருந்த இடத்தில் இருந்து சத்ருக்கள் முடியும்படியான விரகுகள் வகுக்க வல்லர் என்னும் இடம் அறிவன் என்றுமாம்
அன்றியிலே

11-மஹாத்மானம் என்று வாத வாசியாய்
தஸ்மை வாதாத்மனே நம-என்றும்
காலாய் தீயாய் -என்றும் சொல்லுகிறபடியே
மகா வாதஹதமான தூல ராசி போலே சத்ருக்களைப் புக்கவிடம் அறியாமல் ஓட்டுபவர் என்று அறிவன் என்றுமாம் –
அன்றியிலே

12-மஹாத்மானம் -ம்ருத சஞ்சீவனம் ஹி ராம வ்ருத்தாந்தம் -என்று
சர்வ பிராணி பிராணன் ஹேதுவான காற்று போலே உஜ்ஜீவனகாரராக வல்லர் என்னும் இடம் அறிவன் என்றுமாம்-

வேத்தி வேதயதீதி வேத -என்று
தானும் அறிந்து பிறரை யும் அறிவிக்கக் கடவதான வேதம் அகப்பட
வேதாஹா மேதம் புருஷம் -என்று நான் அறிவேன் என்று சொல்லி -அறிந்தபடி என் என்ன

அறிந்தன வேத வரும் பொருள் நூல்கள் அறிந்தன கொள்க அரும் பொருளாதல் -திருவாய் -9-3-3-என்கிறபடியே
மஹாந்தம் -என்று அபரிச்சின்னன் என்று சொல்லி விட்டத்து இத்தனை இறே
யஸ்யா  மதம் தஸ்ய மதம் யஸ்ய ந வேத ஸ -என்று அவ்வஸ்துவை அறிக்கையாவது
அது அபரிச்சின்னம் என்று உள்ளபடி அறிகை இறே

வேதாஹ மேதம் -என்ற வேத வாக்கியம் தன்னை இறே
அஹம் வேத்மி -என்று உப ப்ரும்ஹிக்கிறது –

அங்குற்றை வேத -என்கிறத்தை இறே
இங்கு வேத்மி -என்கிறது

ஏதம் -என்று சௌலப்ய ஸூ சகமான ஏதச் சப்தார்த்தை இறே
இங்கு ராமம் என்று அவதார நிர்த்தேசம் பண்ணுகிறது

அங்குற்றை புருஷ சப்தத்தாலே நிர்த்திஷ்டமான சௌர்ய வீர்யாதிகளை இறே
இங்கு சத்ய பராக்கிரமம் -என்கிறது –

அங்கு மஹாந்தம் -என்கிறத்தை இறே
இங்கு மஹாத்மானம் -என்கிறது

ஆக
வேத புருஷனோடு
வைதிக புருஷர்களோடு வாசி யற
இவ்விஷயத்தில் பாசுரம் ஒன்றாய் இறே இருப்பது

இப்படி மஹாத்மானம் என்று பேசுகிற வஸ்து தான்
தேசாந்தரத்த்லேயாய் எட்ட ஒண்ணாதோ என்னில்

ராமம் –
பிதரம் ரோசயாமாச -பால -16-8-என்று உன்னை இசைவித்து ராம ரூபேண வந்து
பிறந்த இவர் அப்பர வஸ்து காண் -என்கிறார்

ராமம் –
பர வஸ்து என்று நீயும் நானும் உட்கூசுதல் நம்மை அருவருத்து அவர் தாம் அகல நிற்றல் செய்யாதே
எனக்கு கையாளாக அழைக்கலாம் படியாய் தம்மை அமைத்து
தாழ நிற்கையாலே தெரிகிறது இல்லை காண் –

ராமம் மஹாத்மானம் –
ஸ ஸ்ரேயான் பவது ஜாயமான -என்று
அவர் தம்மைத் தாழ விட்டு பிறந்த பின்பு காண் மஹத்வம் ஒப்பமிட்டது –

நீ தானே ராமம் -என்று சொன்னாய் இன்னம் வடிவில் சுணை அழிந்தது இல்லை –
ஸ்ரமத்தால் உடல் இறுகிற்றில்லை
இவர் பராக்ரமத்துக்கு சக்தரோ -என்ன
1-சத்ய பராக்ரமம் –
இவர் வடிவு போலே வேண்டின போது கொள்ளவும் தவிரவும் படி அல்ல காண்  இவர் குணங்கள் இருப்பது
அவை நித்யமாய்க் காண் இருப்பது –

2- சத்ய பராக்கிரமம் –
சதைக ரூப ரூபாயா -என்றும்
த இமே சத்ய காமா -என்றும்
ஏதாமச்ச சத்யான் காமான் -என்றும் சொல்லுகிறபடியே
விக்ரஹம் இச்சமாய் குணங்கள் நித்தியமாய் காண் இருப்பது

இது தன்னை பராசர மகரிஷியும் –
இச்சாக்ருஹீதாபி மதோரு தேக -என்று விக்ரஹ பரிக்ரகம் இச்சம் என்னும் இடத்தைச் சொல்லி
தேஜோ பலைச்வர்ய மகாவபோத ஸூ வீர்ய சக்த்யாதி குணைக ராசி -என்று
குணங்கள் ஸ்வாபாவிகங்கள் என்னும் இடத்தைச் சொன்னான் இறே

3- சத்ய பராக்கிரமம் –
அவ்யவஸ்தௌ ஹி த்ருச்யதே யுத்தே ஜய பராஜ யௌ-என்று நாட்டாரைப் போலே
இவருடைய ஆண் பிள்ளைத் தனம் அவ்யச்தம்-அயோத் -2-37-என்றும்
அபி யாதா ப்ரஹர்த்தா ஸ -அயோத்யா -1-29-என்றும்
சென்று கொன்று வென்றி கொண்ட வீரனே -திருச்சந்த -56-என்றும் சொல்லுகிறபடியே
இவர் எழுந்து இருந்தால் சத்ருக்களை ஆக்கிரமித்துத் தலை அழித்து அல்லது மீளார் காண்

தஸ்மின் த்ருஷ்டே பராவரே -என்றும்
சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர் தெய்வக் குழாங்கள் கை தொழக் கிடந்த -திருவாசிரியம் -1- என்றும்
தம் தாமைப் பரராக நினைத்து இருக்கிற ப்ரஹ்ம ருத்ராதிகளை அகப்படக்   கீழ்ப்படுத்தி
அவ் வருகாய் இருக்கிற வஸ்து ஷூத்ரரான சத்ருக்களை விடுமோ

4-சத்ய பராக்கிரமம்
சத்யரான பரரை ஆக்கிரமிப்பார் என்றாகவுமாம்
அதாவது
பிரகிருதி சம்பந்த நிபந்தனமாக ப்ராதி கூல்யம் பண்ணினால் அவர்கள் மீண்டும் அநு கூலிப்பார்களோ என்று
யதி வா ராவண ஸ்வயம் -யுத்த -18-34-என்றும்
கச்சா நுஜா நாமி -என்றும் யுத்த -59-143- என்றும்
வாளுகிர்ச் சிங்க வுருவாய் உளம் தொட்டு இரணியன் ஒண் மார்வகலம் பிளந்திட்ட -பெரியாழ்வார் -1-6-9- என்றும்
ஒரு நிலை நின்று முட்ட ப்ராதி கூல்யத்திலே நிலை நின்றார்கள் ஆகில் அவர்களை முடிப்பார் என்கிறது –

5-ராமம் சத்ய பராக்கிரமம்
ஆக்ரமிக்கும் இடத்தில் த்ரிவிக்ரமனைப் போலே சொல்லுவது ஓன்று செய்வது ஓன்று அன்றியிலே
ஏக ரூபமாய்க் காண் இருப்பது

6-ராமம் சத்ய பராக்கிரமம்
பிறரை அழிக்கும் இடத்தில் ஆயுதம் எடுத்தல் பராக்ரமித்தல் செய்ய வேணுமோ
ஹதான் யே கேன ராமேண்-ஆரன் -26-36-என்றும்
ராம பாணாபி ஹதோ ப்ருசார்த்தச்சால சாபஞ்ச முமோச வீர -யுத்த-59-139-என்றும்
ஸ்ரீ மான் ஸூக ஸூப்த பரந்தப -சுந்த -38-25-என்றும் சொல்லுகிறபடியே
அழகும் எழிலுமே பரிகரமாக இழியாரோ –

ஏதேனுமாகக் கொடு போகத் தேடுகிற படியாலே போரப் பொலியச் சொல்லுகிற
இந்த வாக்கியம் விஸ்வநீயமோ-என்ன
1-வசிஷ்டோபி –
சர்வஜ்ஞனாய் பரம ரிஷியான ஸ்ரீ வசிஷ்ட பகவானும் அறியும்

2-வசிஷ்ட –
என் கார்யத்துக்கு வந்த நான்  ஒழிய
ச தேஹம் பிதுராசார்யா -அயோத் -111-4-என்று
உன் கார்யத்துக்குக் கடவனாய் உனக்கு ஆப்தனான வசிஷ்ட பகவானைப் கேட்க மாட்டாயோ –

3-வசிஷ்ட –
வஸ் நஸ்ஸிலே சப்தமியாய் -குல குருர் பகவான் வசிஷ்ட -என்கிறபடியே
எங்கள் பக்கலிலே சந்நிஹிதனாய் உங்கள் ஹிதத்திலே நிலை நின்றவன் அன்றோ –

4-வசிஷ்ட –
இதம் வோ யாஜ்யா நாமுதிதம் யத் குலமபூத்
யதிஷ்டம் வா குர்வன்ன க்ருத சகர பூர்த்தமுததிம்
அசௌ தி பூர்வேஷாம் ஸூ சரிதா பதாகா யதமர
ஸ்ரவந்தீ க்ருத்ஸ் நோய்ம த்ரிபுவன குரோஸ் தஸ்ய விபவ -என்று முராரியும் சொன்னான் இறே
நீ தானும் இஷ்வாகு குல சாத்தான் ஆகையாலே உனக்கும் ஒவ்வாதோ அவற்றில் அந்தர்பாவம் என்ன

5-வசிஷ்டோபி வேத்தி
அவரும் அறிவார் –
அம்மர்யாதை குலைந்து இவன் புத்ராதிகளைக் கொள்ளுவது இவன் ஸூரபியைப் பறிப்பது -இவனோடு யுத்தம் பண்ணுவது
இவனாலே பரிபூதனாவதாய் -இப்படிக்கு விரோதம் பிறந்த படியால் எனக்காகப் பொய் சொல்லான்
அப்படிக்கொத்த இவனையும் கேட்டுக் கொள்

6-அபி சப்தம் -நானே அல்ல -இவனும் அறியும் என்று சமுச்சயமாக்கவுமாம்

7-அன்றியிலே -அபி -சப்தம் விரோதம் த்யோதயாதி
எனக்கு விருத்தனான இவனும் அறியும் என்றாகவுமாம்-

இவனுக்கு ஏற்றம் ஏது என்னில்
1-மகா தேஜா
சரஸ்வதி வல்லபனான ப்ரஹ்ம புத்ரனுமாய்
ஸ்வ யோக சித்த ஜ்ஞானனுமாகையால் வந்த மதிப்பை யுடையவன்

2- மகா தேஜா –
லோக நாதனான புருஷோத்தமன் அகப்படத் தன் காலிலே குனியும்படியான ஏற்றம் யுடையவன்

3-மகா தேஜோ –
கௌசிகோ யச சாம நிதி -என்று நாட்டில் புகழுக்கு எல்லையான நான் அகப்பட
வசிஷ்டோ மாமேவம் வதது-என்றும்
சத்யம் சகாரா ப்ரஹ்ம ரிஷி ரேவ மஸ்த்விதி சாப்ரவீத் -பால -65-25-என்றும்
அவன் வாயாலே ப்ரஹ்ம ரிஷி பட்டமும் பரியட்டமும் பெற வேண்டும்படி பெரு மதிப்பனானவன்
இப்படி உமக்கு ஏறப் பெரியராகில்
தேஷாம தேஜோ விசேஷேண்  பிரத்யவாயோ ந வித்யதே   -ஆபஸ்தம்பதர்-2-13-8-என்று
உமக்குப் பொய் சொன்னாலும் பொறுக்கும் படியாய் இருந்ததே என்ன

4-மகா தேஜோ
சத்ய தர்ம பராயண -அயோத் -2-29-என்றும்
சத்யம் வத தர்மம் சர-தை- சீஷா -11- என்றும்
தானும் சத்தியத்தை ஹிதமாக அனுஷ்டித்து பிறரையும் அகப்பட அனுஷ்டிப்பித்து இப்படி மகா தேஜச்வியாய்
பெரும் தவத்தனாய் இருக்குமவன் தேஜோ ஹானி பிறக்கும் படி அசத்தியம் சொல்லுமோ

5- மகா தேஜா
திக்பலம் ஷத்ரிய பலம் ப்ரஹ்ம தேஜோ பலம் பலம் -பால -56-23–என்னும்படி
நிரவதிக ப்ரஹ்ம தேஜச்வியாய் இருக்கிறவன் –

அப்படிப் பெரியவராய் இருந்தாலும்
யத் பிராமணச் சாப்ராஹ்மணச்ச பிரஸ்நமே  யாதாம் பிராமணா யாதி ப்ரூயாத் -என்றும்
ப்ராஹ்மானார்த்தே கவார்த்தே வா சத்ய பிராணான் பரித்யஜேத்-மனு -11-79- என்றும்
நானும் நீயுமானால் தன்னை அழிய மாறியும் ப்ரஹ்ம ரிஷியான உனக்காக வார்த்தை சொல்லும்
அத்தனை போக்கி ஷத்ரியனான எனக்காகச் சொல்லுமோ என்ன
1-யே சேமே தபஸி ஸ்திதா -தவத்தில் நிலை நிற்கும் இவர்களும் அறிவார்கள் –
படை வீட்டார் தம் பலம் மதித்து முகத்துக்குத் தக்க வார்த்தை சொல்லுகிற எங்களை விட்டுச்
சருகிலை தின்னிகளான இவர்களைக் கேட்க மாட்டாயோ -என்றுமாம்

2- இமே தபஸி ஸ்திதா
ஊன ஷோடச வர்ஷ -பா -20-2- என்று அவர் பருவம் நிரம்பாமையை இட்டு அவர் யோக்யதைக்கு நீ தட்டுளப்பட வேண்டா
தஸ்ய தீரா பரிஜா நந்தி யோ நிம –புருஷ ஸூக்தம் -என்று அவனுடைய ஜன்ம ரஹச்ய ஜ்ஞானமுடைய இவர்களைக் கேளாய்

3-இமே -இவர்கள் -புலச்த்யன் அகஸ்த்யன் -பராசரன் -பராசர புத்ரனான வியாசன் -என்றால் போலே
நான் இவர்களுக்கு சில வைலஷண்யம் ஆபாதிக்க இருந்து கேட்க வேணுமோ
நரை  தலையும் -முசியும் மோவாயும் -ஒட்டின கதுப்பும் -திரங்கின தோலும் -உலர்ந்த வடிவும் -எண்ணுகிற விரலும் –
சபிக்கிற வாயும் -வடிகிற கண்ணீரும்-ஆறாத பகவத் அனுசந்தானமும்
மயிர் எறிந்த உடம்புமாயிருக்கிற இருப்பிலே தெரியாதோ
ஆஹ்லாத சீத நேத்ராம்பு புல கீக்ருத காத்ரவான் சதா பர குணாவிஷ்டோ த்ரஷ்டவ்யஸ்  சர்வ தேஹிபி -ஸ்ரீ விஷ்ணு தத்வம் –
என்னும்படி இருக்கிறவர்கள் அன்றோ –

4- இமே -இவர்கள் இப்படி இதம் ச்ப்தத்தாலே சொல்லி விரலிட்டுக் காட்டும் அத்தனை ஒழிய
வேறு பாசுரம் இட்டு வாங் மனஸ்ஸூக்களுக்கு விஷயமோ –

5-இமே -சிறியன் என்று என் இளம் சிங்கத்தை இகழேல் கண்டாய் சிறுமையின் வார்த்தையை
மாவலி யிடைச் சென்று கேள் -பெரியாழ்வார் -1-4-8-என்று
தூரச்தனாய் இருப்பான் ஒருவன் பக்கலிலே கேட்க வேண்டாத படி இங்கே சந்நிஹிதராகப் பெற்றோம் இறே

6-இமே -மகா பலியைப் போலே ஆசூர பிரக்ருதியாகை அன்றிக்கே பரம சத்வ நிஷ்டரான ரிஷிகளாகப் பெற்றோம் இறே

7-இமே -என்னைப் போலே ஸ்ரீ வசிஷ்ட பகவானைப் போலே ஒருவராகை அன்றிக்கே
பூயாசாம் ஸ்யாத் பலீயஸ்த்வம்-என்று இவர்கள் பலரானதுவும் உனக்கு விஸ்வாச ஹேது விறே-

இவர்கள் பலரானால் பிரயோஜனம் என்
பொய் சொல்லாத படியான தார்மிகராக வேணுமே என்னில்
1-தபஸி ஸ்திதா –
தபோ தானம் தபஸ் சத்யம் தபோ தர்ம ப்ரதிஷ்டித -என்கிறபடியே
சர்வ காலமும் தப பரர ஆகையாலே பரம தார்மிகர் என்கிறது –

2- தபஸி ஸ்திதா
பகவதீயமாய் நித்தியமான ஆத்ம வஸ்துவுக்கு ஹிதம் தேடி அல்ப அஸ்திரமான சரீரத்தை ஒருத்துப் போருமவர்கள்

3- தபஸி ஸ்திதா
ஹூத மிஷ்டஞ்ச தப்தஞ்ச தர்மச்சாயம் குலச்ய தே
க்ருஹாத் பிரதி நிவர்த்தந்தே பூர்ண காமா யதர்த்தின -என்று
அதிதிகளாயும் அப்யாகதராயும் யுள்ளவர்களை உகப்பிக்கையே பரம தர்மம் என்று இருக்குமவர்கள்

4- தபஸி ஸ்திதா –
தப சப்த வாச்யமான அர்த்த த்ரயத்திலும் நிலையுடையவர்கள்
அதாவது தப சந்தாபே -என்கிற தாதுவிலேயாய்
யஜ்ஞ்ஞேன தானென தபஸா -ப்ரு-6-4-22- என்றும்
கர்ம யோகஸ் தபஸ் தீர்த்த  தான யஜ்ஞாதி சேவனம் -ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம் -22-என்றும் சொல்லுகிறபடியே
ஆத்ம ஜ்ஞான ரூபமான ஜ்ஞான யோகத்திலே நிஷ்டர் ஆனவர்கள் என்றாகவுமாம்
அன்றியிலே

5-தபஸி ஸ்திதா –
தப ஐஸ்வர்ய-என்கிற தாதுவிலேயாய்
பிரசாசி தாரம் சர்வேஷாம் -மனு -12-122-என்றும்
யே சேமே ஆரண்யே ஸ்ரத்தா தப இத்யுபாசதே -சாத் -5-10-1-என்றும்
பரமம யோ மகாத்தப -சஹஸ்ரநாமம் -என்றும் சொல்லுகிறபடியே
சர்வ பிரசாசிதாவாய் தபஸ் சப்த வாச்யனான பரமாத்மா விஷயத்திலே ஜ்ஞான பக்தி யோக நிஷ்டர் என்றாகவுமாம்
அன்றியிலே

6-தபஸி ஸ்திதா -என்று வாசிக தபசான ஸ்வ அத்யாயத்திலே உளர் என்றாகவுமாம் –
தத்தி தபஸ் தத்தி தப -தை சிஸா -9-வேதாத்யயனமே தவமாகும் –
அன்றியிலே

7-தபஸி ஸ்திதா
பரபக்தி பரஜ்ஞான பரம பக்திகளை உடையவர் என்றாகவுமாம்
அன்றியிலே

8-தபஸி ஸ்திதா
என்று -தஸ்மான் ந்யாச மேஷாம் தபஸா மதிரிக்தமா ஹூ -என்றும்
தேஷாம் து தபஸாம் ந்யாசமதிரிக்தம் தப ஸ்ருதம -என்றும் சொல்லுகிறபடியே
சர்வாதிசாயி தபசான பிரபத்தியிலே நிஷ்டர் ஆனவர்கள் -என்றுமாம் –

இஸ் ஸ்லோஹம் தன்னால் -ஊன ஷோடச வர்ஷ -பால -20-2-என்கிற ஸ்லோஹத்துக்கு உத்தரம் சொல்லுகிறது
பச்யாமி -என்று மேல் எழுந்த கண்ணாலே நீ காண்கிறது காட்சி அன்று காண்
யோக பரிசுத்தமான உட் கண்ணாலே நான் காண்கிறது காட்சி -என்கிறது-

அஹம் வேதமி -என்கையாலே -ஊன ஷோடச வர்ஷ-என்று பருவத்தை இட்டு எளியன் என்று இருக்க வேண்டா காண் –
விரோதி நிரசன ஷமராம்படி பெரியார் காண் -என்கிறது-

மஹாத்மானம் -என்கையாலே –
மே ராம -என்று நீ உன்னுடைய மமகாரத்திலே ஒதுக்க ஒண்ணாது காண் –
லோகாபி ராமோயம்-அயோத்-2-44-என்று சர்வ லோக சரண்யராய்க் காண் இருப்பார் என்கிறது
வெறும் -ராமம் -என்கிறத்தாலே-

ராஜீவ லோசன -என்று பொழுது புகுவதற்கு முன்னே உறங்குவார்
நிசாசரோடு பொருகைக்கு ஆள் அல்லர் என்று நினைத்து இருக்க வேண்டா
ஸூக ஸூ ப்த பரந்தப -சுந்தர -38-25-என்று அவ்வுறக்கம் தான் எதிரிகளை அழிக்கும்படி
நித்ய பராக்ராமர் காண் என்கிறது -சத்ய பராக்கிரமம் -என்கிறத்தாலே –

அஸ்ய ராஷசை -என்று இவரோ ஒருவர் அவர்கள் பலர்
இவர் மனுஷ்யர் அவர்கள் ராஷசர் என்று நினைத்து இருக்க வேண்டா
உட்குடையசுரர் உயிர் எல்லாம் உண்ட ஒருவன் -திருவாய் -7-2-3- என்றும்
திண் கொள் அசுரரைத் தேய  வளர்கின்றான் -பெரியாழ்வார் -1-2-16-என்றும்
ஒரு கோடி பேருக்கு ஒருவனே அமைந்து காண் இருப்பது என்கிறது .

இவற்றில் ஏக வசனத்தாலும் –
மஹாத்மானம் -என்று தர்மி நிர்த்தேசத்தாலும் —
ராமம் -என்று -பச்யாமி -என்கிற ஏவ வசன சித்தனான நீ ஒருவனுமே இறே இவர்
அயோக்யதையைச் சொல்லுகைக்கு உள்ளது
அவருடைய யோக்யதையைச் சொல்லுகைக்கு கிடக்கிற பேர் ஒரு வெள்ளம் காண் என்கிறது
வசிஷ்டோபி யே சேமே தபஸி ஸ்திதா -என்கிறத்தால்
ஆக
இப்படி இந்த ஸ்லோஹத்துக்கு உத்தரமாய் இருக்கிறது இஸ் ஸ்லோஹம் –

ஸ்ரீ சீதா ராம ஜெயம் –

பால காண்டம்

ஸர்க்கம்-19; ஶ்லோகம்-14

அஹம் வேத்3மி மஹாத்மாநம் ராமம் ஸத்யபராக்ரமம்|

வஸிஷ்டோ2பி மஹாதேஜா யே சேமே தபஸி ஸ்தி2தா:||

பொழிப்புரை:
இராமனை மஹாத்மாவாகவும், ஸத்யபராக்ரமனாகவும் இருப்பதாய் நான் அறிவேன்.
மஹாதேஜஸ்வியான வஸிஷ்ட மஹரிஷியும் அறிவார்.
மற்றும் இங்கே கூடியுள்ள தபஸ்ஸில் நிலைபெற்ற மஹரிஷி கணங்களும் இவ்வாறு அறிவார்கள்.

அயோத்தியில் த3ஶரத2ரின் அரசவைக்கு வருகை தந்த விஶ்வாமித்ர மஹரிஷி தஶரதனிடம்,
கரிய செம்மல் ஒருவனைத்  (இராமனை) தன்னுடன் அனுப்பிவைத்து
அவர் செய்யும் யக்ஞத்திற்கு உதவியாய் தர்மத்தைக் காக்கும்படி வேண்டிக்கொள்கிறார்.
இராமனை அனுப்ப மனமில்லாத தஶரதன் அதற்கு காரணமாக இராமன் மிக இளம்பருவம் உடையவன்,
அரக்கர்களை எதிர்கொள்ளச் சக்தியற்றவன் என்பன பல வார்த்தைகளைச் சொல்லித் தட்டிக் கழிக்கிறான்.
அதைக் கேட்ட விஶ்வாமித்திரர் கூறும் பதிலாக அமைந்ததுதான் இந்த ஶ்லோகம்.

த3ஶரத2ன், “ ந யுத்3த4யோக்3யதாம் அஸ்ய பஶ்யாமி” அதாவது,
‘இவனிடம் போர் செய்வதற்குண்டான அருஹதை இருப்பதாக எனக்குத் தெரியவில்லை’ என்று வாத்ஸல்ய மேலீட்டால் சொன்னாலும்,
விஶ்வாமித்திரருக்கு மனதிலே கோபம் கனன்று எழுகிறது.

“அஹம் வேத்3மி” ‘நானறிவேன்’ இவன் யாரென்று. இவனை மஹாத்மாவாகவும், ஸத்யப்ராக்ரமனாகவும் நானறிவேன்.
பரமாத்மா கண்ணாலே காணப்படுகிறவன் அல்லன் (ந சக்ஷுஷா க்3ருஹ்யதே: மு.உ.3-1-8),
தூய்மையான மனத்தாலேயே காணத்தக்கவன் (மநஸா து விஶுத்3தே4ந: வி.த.275-2).
உன்னைப்போலே ஊனக்கண்களால் காண இயலாது.
‘என்றேனும்  காணாத கட்கண்ணால் அவ்வுருவை நெஞ்சேனும் உட்கண்ணேல் காணும் உணர்ந்து’ (பெரி.தி.-28). (1)
யோகத்தினாலே அழுக்கற்ற உட்கண்ணாகிற நெஞ்சாலே நான் அறிவேனேயொழிய,
வெளிக் கண்ணாகிற கட்கண்ணாலே காணும் உனக்குத் தெரியாது காண்.
அரசனே! என்னால் அறிவில் முதிர்ந்த பல மஹநீயர்கள் உபாஸிக்கப்பட்டிருக்கிறார்கள்.

(2) பல ஆசார்யர்களை ஸேவித்த நான் அறிவேனேயொழிய பாமரர்களால் ஸேவிக்கப்படும் நீ அறிவாயோ?
(3) கையிலே புல்லைப் பிடித்த நான் அறிவேன்; கையில் வில்லைப் பிடித்த நீ அறிவாயோ?
(4) தலையிலே சடையை உடையவனான நான் அறிவேன்; தலையிலே முடிதரிக்கும் நீ அறிவாயோ?
(5) ஸாத்விக ஸ்வரூபனான நான் அறிவேன், ராஜஸ ஸ்வரூபியான நீ அறிவாயோ? (6)
குருவின் ஆஸநத்திற்கு கீழே இருந்த எனக்குத் தெரியுமேயொழிய பிரபு என்று ஸிம்ஹாஸநத்தின் மேலிருக்கிற உனக்குத் தெரியுமோ?
(7) யோகவழியறியும் நான் அறியும் விஷயத்தைப் போகவழியறியும் நீ அறிவாயோ?
(8) மோக்ஷத்தை விரும்பி யாகம் செய்த நான் அறியும் விஷயத்தைப் புத்ரனை விரும்பி யாகம் செய்த நீ அறிவாயோ? (
9) த4ர்ம மோக்ஷ புருஷார்த்தங்களில் ஈடுபட்ட நான் அறிவதை அர்த்த காம புருஷார்த்தங்களில் ஈடுபட்ட உன்னால் அறியமுடியுமோ?
இதுபோன்று பலவாறாக வினவிய விஶ்வாமித்திரர் மேலும் பரமாத்மாவை யார் யார் அறியமாட்டார்கள் என்றும் சொல்லத் தொடங்குகிறார்.

ப்ருஹ்மம் இவ்வளவுமட்டுமன்று, இப்படிப்பட்டது (வேறொன்றும்) இல்லை’ [நேதி, நேதி: ப்ருஹ.உப. 4-3-6],
‘அந்த ப்ருஹ்மம் எப்படிப்பட்டது என்று எவன் அறிவான்?’ [க இத்தா2 வேத3யத்ர ஸ: கட.உப. 1-2-25]
என்றும் ப்ரமாணங்களாக இருக்கும் வேதங்களும் அறிந்தனவா? வேறு சொல்வானேன்? ‘
நான்முகன் செஞ்சடையானென்றிவர்கள் எம்பெருமான் தன்மையை யாரறிகிற்பார்?’ [திருவாய் 8-3-9]. என்றும்
அறிவாளிகளான ப்ருஹ்ம ருத்ராதி3களுக்கும் அறியக்கூடிய விஷயமாவானோ?
அவன் தானே தன்பெருமையை அறிவானோ, அறியமாட்டானோ? [தை-ப்ரா 2-8-9]
தனக்கும் தந்தன்மை அறிவரியானை [திருவாய் 8-4-6].

இத்தனை பேர்கள் அறியாதிருக்கும் போது, ஓராசார்யன் பக்கல் குனிந்து கேளாமையாலே அல்லவோ இவர்கள் யாரும் அறிந்திலர்?
இது இவ்வாறிருக்க, தான் மட்டும் எங்ஙனம் அறிந்து கொண்டார்?
‘நான் என் பக்தர்களுக்கு என்னை அறிய உதவும் புத்தியைக் கொடுக்கிறேன்’ என்று தேர்த்தட்டிலிருந்து சொன்ன வாக்கியமிருக்கிறதே [
த3தா3மி புத்3தி4யோக3ம் தம்; கீதை 10-10],
‘மயர்வற மதிநலம் அருளினன்’ என்பதும் ஸித்தமாயிருக்கிறதே.
அவனை அறிகைக்கு நான் பட்ட வருத்தம் சொல்லப்போமோ?
‘கேட்கத்தக்கதும் நினைக்கத்தக்கதுமான பரமாத்மா தியானிக்கத்தக்கது’
[ஶ்ரோதவ்யோ மந்தவ்யோ நிதி3த்4யாஸிதவ்ய: ப்ருஹ. உப. 6-5-6] என்று
அவனை அறிய நான் பட்ட சிரமம் சொல்லவும் முடியுமோ?

வடிவு சிறுத்திருந்தாலும் பரத்வம் நிறைந்திருக்கும் அல்லவா?
தேஜஸ்ஸை உடையவர்களிடத்தில் வயது கவனிக்கப்படுவதில்லை [தேஜஸாம் ஹி ந வய: ஸமீக்ஷ்யதே; ரகு4வம்ஶம் 11-1].
அவனை மஹாத்மா என்று அறியவேண்டும்.
வைஜயந்தி என்னும் நூல் ஆத்மா என்னும் பதத்தின் தன்மையை விவரிக்கிறது.
அதாவது ஆத்மா ஜீவனிடமும், தைர்யத்திலும், தேஹத்திலும், ஸ்வபாவத்திலும், முயற்சியிலும்
என்று இவ்வாறு பல விஷயங்களில் ப்ரயோகம் உள்ளது என்று சொல்லுகிறது.
1. எவனுக்கு ஆத்மா ஶரீரமோ, எவன் ஆத்மாவில் நின்றுகொண்டு ஆத்மாவில் நுழைந்திருக்கிறானோ [ப்ரு.உப]
எல்லா ஜீவாத்மாக்களும் தன்னுடைய ஶரீரமாம்படி இருக்கும் மஹாசேதனன் என்று அறிவேன்.
2. ஆபத்துக் காலத்திலும் தைர்யத்தோடு நிலைநிற்கும் தன்மை உடையவன்
[தாடகை, ஸுபாஹு மாரீசாதிகளை வதம் செய்யும் வலிமையும் தைர்யமும் பொருந்தியவன்]
3.நித்யனாய், நித்யமான தேஹத்தை உடையவன் [மாசூணாச்சுடருடம்பு; திருவாய் 3-1-8] சத்ருக்களால் அழிக்கமுடியாதபடி நித்யன்
4. ஸ்வபாவவாசியாய், என்னைச் (பரமாத்மாவை) சரணமென்று வந்தவர்க்கு எல்லா பூதங்களிடமிருந்தும் அபயமளிக்கிறேன்,
இது என் விரதம் [அபயம் ஸர்வபூதேப்ய: ததாமி ஏதத் வ்ரதம் மம; ராமாயணம் யுத்: 18-34].
5. பரமாத்ம வாசியாய், இவனைக் காட்டிலும் மேலொருவனில்லை என்ற பரம ஶப்தார்த்திற்கு ஏற்ப
[ஒத்தார்   மிக்காரை இலையாய  மாமாயா; திருவாய் 2-3-2] தன்னையொழிந்த எல்லா தேவதைகளுக்கும் மேலாய்,
அவர்களுக்கும் அந்தர்யாமியாய் இருக்கிறபடியை அறிவேன்.
6. யத்ந வாசியாய், அதாவது பிரயத்நமாய். துஷ்ட நிக்ரஹத்திற்காக உத்ஸாஹிப்பது ஆத்ம தர்மம்மாகும்.
[விநாஶாயச து3ஷ்க்ருதாம் ஸம்ப4வாமி; கீதை 4-8]
7. அர்க்க வாசியாய், அதாவது ஆத்மா அர்க்கன் அல்லது ஸூர்யன் [ராம தி3வாகர:]
சர ஸமூகங்களாகிற கிரணங்களையுடைய ராமன் என்னும் ஸூரியன், ஸத்ருராக்ஷஸர்களாகிற நீரை வற்றச்செய்யும் வல்லமை உடையவன் என்று அறிவேன்.
8. ராமனை அக்நி ஸ்வரூபனாயும் அறிவேன். ராமன் கோபமடைந்தால், தன் கண்களாலே எரித்துவிடுவார்
[நிர்த3ஹேத3பி காகுஸ்த்த2: க்ருத்3த4ஸ்தீவ்ரேண சக்ஷுஷா; ஸு.கா: 30-14],
அனலுருவில் திகழும் சோதி தன்னுருவாய் [திருநெடு -1] ஸத்ரு ஶரீரங்களைச் சாம்பலாக்க வல்லவர்.
9. மதி வாசியாய், ராமன் எல்லா தத்துவங்களையும் அறிந்தவர்
[ஸர்வ ஶாஸ்த்ரார்த்த2 தத்வஜ்ஞ: ரா. பால.கா. 1-15] இருந்த இடத்திலேயிருந்தே ஶத்ருக்களை அழிக்க வல்லவன்
10. வாத வாசியாய், (வாயு ரூபியாய்) ‘வாயு ரூபியாய் இருக்கும் அவனுக்கு நமஸ்காரம்’
[தஸ்மை வாதாத்மநே நம: விஷ்.புரா. 1-14-31].
“காலாய்த் தீயாய்” [திருவாய் 6-9-1]
என்று சொல்லுகிறபடியே, பெருங்காற்றால் அடிக்கப்பட்ட பஞ்சுக்குவியலைப் போலே
எதிரிகளைப் போனவிடமறியாதபடி விரட்டிவிடும் மஹாவாயு இவர் என்பதை அறிவேன்.
அன்றிக்கே ‘ராமவ்ருத்தாந்தம் இறந்தவர்களையும் பிழைக்க வைப்பது”  [ம்ருத ஸஞ்ஜீவநம் ஹி ராமவ்ருத்தாந்தம்; பட்டர் ஸஹஸ்ரநாம பாஷ்யம்]
என்று எல்லா உயிர்ப்பிக்கும் காற்று போலே அநுகூலர்களை உய்ப்பிக்கும் மஹாவாயு என்று அறிவேன்.

தானும் அறிந்து பிறரையும் அறிவிக்கையாலே வேதம் [‘வேத்தி வேத3யதீதி வேத3:’] என்று வேத பதத்திற்கு வ்யுத்பத்தி சொல்லுமிடத்திலே,
நான் இந்தப் புருஷனை அறிவேன் [வேதா3ஹமேதம் புருஷம்; புரு.ஸூக்], என்று சொல்லி, அறிந்தது எப்படி? என்னும் கேள்வி எழ,
‘அறிந்தன வேதவரும்பொருள் நூல்கள் அறிந்தன கொள்க அரும்பொருளாதல்’ [திருவாய்: 9-3-3] என்கிறபடியே,
அளவற்றவன் என்று சொல்லி (மஹாந்தம்) முடித்தது அன்றோ?
எவனுக்கு அப்பரவஸ்து அளவிட்டு அறியப்படாததாகிறதோ அவனுக்கு அறிப்படாததாகிறது.
எவன்  அளவிட்டு அறிந்தேன் என்று சொல்வானோ அவன் உண்மையில் அறியாதவனாகிறான்.

கேனோபநிஷத் இதைச் சொல்லுகிறது. வேதா3ஹமேதம் (வேத3+அஹம்+ஏதம்), வேத என்னும் பதத்தை இங்கே ‘வேத்3மி’ என்றது;
அஹம் என்பது இரண்டு இடங்களிலும் மாறாமல் இருக்க, ஏதம் என்னும் பதம் இங்கே ‘ராமம்’ என்று குறிக்கிறது.
அஹம் வேத்3மி ராமம் என்பது வேதவாக்கியமான ‘வேதா3ஹமேதம்’ என்பதுடன் பொருந்தியிருக்கிறது.
அங்கே புருஷ ஶப்ததாலே காட்டப்பட்ட சௌர்ய வீர்யாதி குணங்களை இங்கே’ ஸத்யபராக்ரமம்’ என்னும் பதம் காட்டுகிறது.

குணங்களாலே பூர்ணன் (புருஷன்) அங்கு ‘மஹாந்தம்’ இங்கு ‘மஹாத்மாநம்’ ஆகிறது.
மஹாத்மா என்னும் பரமாத்மா இந்த உலகத்திலே ஒருவருக்கும் எட்டாததோவென்னில், ‘
பிதரம் ரோசயாமாஸ’ என்று உன்னையிசைவித்து,  ராமரூபேண வந்து பிறந்தவர் அந்த பரவஸ்து என்பதை அறிவாயாக.
ராமன் இப்படித் தன்னைத் தாழ விட்டுக் கொண்டு இருப்பதனால் நீ அவன் பெருமையை உணரவில்லை.
ராமனை மஹாத்மாவானவனை ‘அவன் பிறந்த பிறகே மேன்மையை அடைகிறான்’
[ஸ உ ஶ்ரேயாந் ப4வதி ஜாயமாந: யஜுர்.அஷ்.3-6-3] என்பதால் அறியலாம்.

ராமன் மிக இளம்பருவத்தினன்:

என் மகன் ராமனுக்குக் இன்னும் பதினாறு வயது நிரம்பவில்லை; [ஊனஶோடஷ]
இவனுக்கு வடிவில் மெருகழியவில்லை; கடினகாரியங்களைச் செய்து உடல் இன்னும் இறுகவில்லை;
இவன் பெருஞ்செயல் செய்யவல்லனோ?
ரமயதீதி ராம: ரமிக்கச்செய்பவனாக இருக்க இவனை அரக்கர்களை அடக்க நான் எவ்வாறு உம்முடன் அனுப்புவேன்?’ என்று பதிலிறுத்த தஶரதனுக்கு,
விஶ்வாமித்திரர் எப்படி ‘ஸத்யப்ராக்ரமம்’ (ராமம் ஸத்யபராக்ரமம்) என்னும் பதத்தின் உட்பொருளை விளக்குகிறார் என்று இங்கே காண்போம்.

ஸத்யபராக்ரமன் என்றால் நித்யமான, என்றும் மாறாத பராக்ரமத்தை உடையவன்.
ஸதை3கரூபரூபாய [விஷ்.ஸஹ] என்பதிலிருந்து அறியலாம்.

ஸத்யப்ராக்ரமன் எப்பொழுதும் ஒருபடிப்பட்டிருக்கும் பராக்ரமத்தை உடையவன்.
த இமே ஸத்யா: காமா: என்று விஷ்ணு புராணத்திலும்,
பகவானுடைய இந்த குணங்கள் ஸத்யமான காமங்கள் என்பபடுகின்றன என்று சாந்தோக்கியத்தும் சொல்லப்பட்டிருக்கிறது.
அவதார விக்ரஹம் இச்சையினால் எடுக்கப்படுவதால், குணங்கள் நித்யமாய் காணக்கிடைக்கின்றன என்று விஷ்ணு புராணத்திலும் காணலாம்.
தேஜஸ், பலம், ஐஶ்வர்யம், ஞான வீர்ய ஶக்தி ஆகிய குணங்களின் குவியலாய் இருப்பவன் பரமாத்மா என்றும் விஷ்ணு புராணம் மேலே விவரிக்கிறது.

லௌகீகர்களுடைய பராக்கிரமம் போலே அன்றிக்கே, ஸத்யபராக்ரமன் ‘ஜயிக்காமல் திரும்பமாட்டான் ராமன்’
[அபி4யாதா ப்ரஹர்த்தா ச; அயோ.கா. 2-37] என்றும்,
‘சென்று கொன்று வென்றி கொண்ட வீரனே’ [திருச்சந்த 56] என்று சொல்லுகிறபடியே,
இவர் போர் புரியப் புறப்பட்டால், எதிரிகளை வெல்லாமல் திரும்ப மாட்டார் காண்.

ஆக, இப்படியாக அழகையே ஆயுதமாகக் கொண்டும் வெல்வான் ராமன்.
ஶ்ரீமான் ஸுக2ஸுப்த: பரந்தப: [யு.கா. 38-25] என்று சொல்லுகிறபடியே அழகும் எழிலுமாகவே எதிரிகளின் படையை அழிக்க வல்லவன் ராமன் என்று அறியலாம்.

அடுத்தது,  வஸிஷ்டரும் அறிவார் (வஸிஷ்டோபி மஹாதேஜா) என்று ஏன் சொன்னார் என்று பார்ப்போம்.
விஶ்வாமித்திரர் அரசரிடம், ‘என் கார்யம் நடக்கவேண்டும் என்று வந்து உன்னிடம் கேட்கும் என்னை நீ நம்பமாட்டாயானால்,
உனக்கு ஆப்தனான வஸிஷ்டபகவானைக் கேட்கலாமே!
ரிஷிகளில் மஹாதேஜஸ்வியானவர். ப்ருஹ்மாவின் புத்திரர். லோகநாதனான புருஷோத்தமனும் தன்னை வணங்கும்படி ஏற்றமுள்ளவர்.
அவரது திருவாயாலே அடியேனுக்கு ப்ருஹ்மரிஷி பட்டமும் தந்தவர்.
ஸத்யம் வத3, த4ர்மம் சர என்று அனைவருக்கும் உபதே3ஶிக்கும்படியான இந்த கு3ருவரர் அஸத்யம் சொல்வாரோ? ‘
தஸ்ய தீ4ரா: பரிஜாநந்தி யோநிம்’ [புருஷ. ஸூ] என்று ராமனுடைய ஜந்மரஹஸ்ய ஞானமுடைய வஸிஷ்டரைக் கேளாய்!’

மேலும் இங்கே கூடியிருக்கும் மற்ற ரிஷிகணங்களும் அறிவார்கள் (யே சேமே தபஸி ஸ்திதா2: ) என்பதை விளக்குகிறார்.
“அகஸ்த்யர், பராஶரர், வியாஸர் என்ற பல மேன்மை மிக்க ரிஷிவரர்கள் ஒருவேளை தம் பெருமை நிலைநிற்க பக்ஷபாதம் செய்யக்கூடும்.
ஆனால், இங்கே அமர்ந்திருக்கும் ரிஷிகளோ தபஸ்ஸில் நிலை நின்றவர்கள்.
இவர்களுக்குப் பெருமை என்னவென்றால், இவர்களது நரைத்தலையும், ஒட்டிய கன்னமும், சுருங்கிய சருமமும்,
ஜபிக்கிற வாயும், வடிகின்ற கண்ணீரும் மட்டுமே அடையாளங்கள்.
விஷ்ணு தத்துவத்தில் சொன்னபடி. பகவதநுபவத்தாலே ஆநந்தம் பெருக குளிர்ந்த கண்ணீர் பெருகுபவராய்,
மயிர்க்கூச்செறியும் தேஹத்தினராய், எப்போதும் பரமாத்மாவின் குணங்களைத் த்யானிப்பவராய் இவர்கள்
(இமே) பெருமையை அளவிடமுடியுமோ?
‘சிறியனென்று இளஞ்சிங்கத்தை இகழேல் கண்டாய்; சிறுமையின் வார்த்தையை மாவலியிடைச்  சென்று கேள்’ (பெரியாழ்வார் 1-4-8) என்று
எங்கேயோ பாதாளத்திற்குச் சென்று மஹாபலியிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டிய வாமனன் பெருமை அன்று;
இவன் பெருமை அறிய இதோ இங்கிருக்கும் இவர்களிடம் கேள்.
மஹாபலியோ ஒரு அஸுரன்; இவர்களோ பரமஸாத்விகர்களான ரிஷிகள்;
என்னையும், வஸிஷ்டரையும் போல் தனி ஒருவரல்லர்; பலராய் இங்கே இருக்கிறார்கள்;
உனது நம்பிக்கைக்கு ஹேதுவாக இருக்கும்.” என்று விஶ்வாமித்திரர் அரசருக்கு நம்பிக்கை ஊட்டுகிறார்.

ஒருகால் இவர்கள் அஸத்யம் சொல்வரோ என்ற ஸந்தேஹம் அரசரின் மனத்தில் தோன்றினால், என் செய்வது? என்று எண்ணி,
விஶ்வாமித்திரர், மேலும் சொல்கிறார். இவர்கள் பொய் சொல்லாத தார்மிகராக இருப்பாரோவென்னில், தபஸி ஸ்திதா2: என்றார்.
‘தபோ தா3னம் தபஸ் ஸத்யம் தபோ த4ர்ம: ப்ரதிஷ்டித2:’ என்கிறபடியே எக்காலமும் தபத்திலே ஈடுபட்டவராகையாலே தர்மஶ்ரேஷ்டரென்கிறது.
மேலான தர்மமான (பரமம் யோ மஹத்தப: விஷ்ணு. ஸஹ) பகவானிடமே பக்தி செய்பவராய்
தபஸ்ஸிலே நிலைநிற்பவர்கள் (தபஸி ஸ்திதா2:) என்றுமாம்.

————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார்  ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ முமுஷுப்படி -சரம ஸ்லோஹ பிரகரணம்-ஸூர்ணிகை –263–278–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் –ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் அரும்பத விளக்கம் —

January 11, 2024

இனி இந்த ஸ்லோக அர்த்தத்தில் ருசி ஒருவனுக்கு உண்டாகையில் உள்ள அருமையையும் –
இந்த ஸ்லோகம் தனக்கு இன்னதிலே நோக்கம் என்னுமத்தையும் –
இதில் விஸ்வஸ் உத்பத்தியின் அருமையையும் –
ஈஸ்வரன் தான் முதலிலே இத்தை உபதேசியாமைக்கு ஹேதுவையும் –
வேத புருஷன் உபயாந்தரங்களை  விதிக்கைக்கு ஹேதுவையும் –
உபாயாந்தரங்களை ஸ்வரூபேண த்யஜிக்கும் அளவில் தோஷம் இல்லை என்னுமத்தையும் –
அவை தானே முகாந்தரேண அந்விதங்கள் ஆகையாலே ஸ்வரூபேண த்யக்தங்கள் அன்று என்னும் இடத்தையும் –
பேற்றுக்கு சாதனம் இன்னது என்னுமத்தையும் –
பல சித்திக்கு இவன் பக்கல் வேண்டும் அம்சத்தையும் –
ஈஸ்வரனுக்கு இவனுடைய ஸூக்ருதம் அநிஷ்டம் என்னுமத்தையும் –
இவ் அர்த்தத்தில் ஆஸ்திகயாதிகள் உண்டாய் பிழைத்தல்-இல்லையாகில் நசித்தல் இத்தனை -என்னுமத்தையும் –
வ்யவசாயஹீனன் இதில் அந்வயித்தால் விநாச பர்யந்தமாம் என்னுமத்தையும் –
இதுக்கு அதிகாரிகள் இன்னார் என்னுமத்தையும் –
அடைவே அருளிச் செய்து தலைக் கட்டுகிறார் –

——————————————————

உய்யக் கொண்டார் விஷயமாக உடையவர் அருளிச் செய்த வார்த்தையை ஸ்மரிப்பது-சூரணை -263-

அவற்றில் பிரதமத்தில் -இதில் ஒருவனுக்கு ருசி பிறக்கையில் உள்ள அருமையை தர்சிப்பிக்கைக்காக
ஓர் ஐதிக்யத்தை அருளிச் செய்கிறார் –

அதாவது –
தத்வ நிர்ணயம் பண்ணின உய்யக் கொண்டார் பக்தி நிஷ்டராய் இருக்கையாலே -அவரை
பிரபத்தி நிஷ்டராம் படி பண்ண வேண்டும் என்று அவருக்கு இந்த ஸ்லோக அர்த்தத்தை
அருளிச் செய்த அளவிலே –
அர்த்த ஸ்திதி அழகிதாய்  இருந்தது -ஆகிலும் அத்தை விட்டு இத்தை பற்ற தக்க ருசி எனக்கு இல்லை -என்ன –
வித்வான் ஆகையாலே அர்த்தத்துக்கு இசைந்தாய்-பகவத் பிரசாதம் இல்லாமையாலே ருசி பிறந்தது இல்லை -என்று
அவர் விஷயமாக உடையவர் அருளிச் செய்த வார்த்தையை நினைப்பது -என்கை –

—————————————————-

இதுக்கு ஈஸ்வர ஸ்வாதந்த்ர்யத்திலே நோக்கு –சூரணை -264-

இனி இந்த ஸ்லோகத்துக்கு இன்னதிலே நோக்கு என்னுமத்தை அருளிச் செய்கிறார் –

அதாவது –
சாஸ்திரங்கள் எல்லாம் ஒரு தலையும் -தான் ஒரு தலையுமாய் இருக்கிற இந்த இச் சேதனனுக்கு தானே –
நிரபேஷ சாதனமாய் -ப்ராப்தி பிரதிபந்தக சகல பாபங்களையும் தள்ளிப் பொகட்டு –
ஸ்வ ப்ராப்தியை பண்ணிக் கொடுக்கும் -ஸ்வாதீன சகல ப்ரவர்த்தகனான ஈஸ்வரனுடைய
ஸ்வாதந்த்ர்யத்திலே தாத்பர்யம் -என்கை-

————————————————————-

இது தான் அநுவாத கோடியிலே-என்று வங்கி புரத்து நம்பி -வார்த்தை –சூரணை -265

இனி இதில் விஸ்வாஸ உத்பத்தியில் அருமையை அருளிச் செய்கிறார் –

அதாவது இந்த ஸ்லோக அர்த்தம் தான் அனு வாதத்தினுடைய கோடியிலே -என்று
ஆப்த தமரான வங்கி புரத்து நம்பி அருளிச் செய்யும் வார்த்தை -என்கை –
அனுவாதம் -கூறிய ஒன்றை மீண்டும் கூறுவது -அர்ஜுனனன் அறிந்தவற்றை மீண்டும் கண்ணன் அருளிச் செய்கிறான் –

————————————————————

அர்ஜுனன்-கிருஷ்ணனுடைய ஆனை தொழில்களாலும் –
ருஷிகள் வாக்யங்களாலும் –
கிருஷ்ணன் தன் கார்யங்களிலே அதிகரித்துப் போருகையாலும் –
இவனே நமக்கு தஞ்சம் என்று துணிந்த பின்பு –
தன்னைப் பற்றி சொல்லுகையாலே –
அது எத்தாலே -என்ன -அருளி செய்கிறார் –சூரணை -266-

அதாவது –
இதுக்கு அதிகாரியான அர்ஜுனன் பால்யமே தொடங்கி கிருஷ்ணனுடைய அகடிதகடநா
சாமர்த்திய பிரகாசமான அதி மானுஷ சேஷ்டிதங்களாலும் –

ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஸ்ரீரார்ணவ நிகேதன
நாக பர்யங்க முத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம்

புண்யா த்வாரவதீ யத்ர தத்ராச்தே மது சூதன
சாஷாத் தேவ புராணோ அசௌ சஹி தர்மஸ் சனாதன

யத்ர நாரயனோ தேவ பரமாத்மா சனாதன
தத்ர க்ருத்ச்னம் ஜகத் பார்த்த தீர்த்தாந் யாயதநாநி ச

யே ச வேத விதோவிப்ரா யே சாத்யாத்மா விதோ ஜனா தேவதந்தி
மஹாத்மானம் கிருஷ்ணம் தர்மம் சனாதனம் –

பவித்ராணாம் ஹி கோவிந்த பவித்ராம் பரமுச்யதே
புண்யா நாம்பி புண்யா அசசௌ மங்களாணாம் ச மங்களம்

கிருஷ்ண ஏவ ஹி லோகா நா முத்பத்தி ரபி சாப்யய
க்ருஷ்ணச்ய ஹி க்ருதே பூதம் இதம்  விச்வம் சராசரம் -என்றும்
இத்யாதிகளில் இருந்துள்ள பராவர தத்வ யாதாத்ம்ய வித்துக்களான ருஷிகள் வாக்யங்களாலும் –

பல்யாத்ப்ரப்ருதி புரவாச தசையோடு -வன வாச தசையோடு -வாசியற கிருஷ்ணன்
தன் கார்யத்துக்குக் கடவனாய் நோக்கிக் கொண்டு போருகையாலும் –

இவன் சொல்லுகிற உபாயங்கள் எல்லாம் நமக்கு தஞ்சம் அன்று -இவனே நமக்கு தஞ்சம் –
என்று விச்வசித்த பின்பு -ஆனால் என்னை பற்று -என்று சொல்லுகையாலே -என்கை –

————————————————————–

புறம்பு பிறந்தது எல்லாம் இவன் நெஞ்சை சோதிக்கைக்காக-சூரணை-267-

இது தன்னை முதலில் உபதேசியாமைக்கு ஹேதுவை அருளிச் செய்கிறார் –

அதாவது
யச்சரேய சியான் நிச்சிதம் ப்ருஹூ தன்மே சிஷ்ய ஸ்தேஹம் சாதி மாம் த்வாம் பிரபன்னம் –
என்ற இவனுக்கு உபாய உபதேசம் பண்ணத் தொடங்கிகிற அளவிலே முதலிலே இத்தை உபதேசியாதே
உபாயாந்தரங்களை பரக்க நின்று உபதேசித்தது எல்லாம் -அவ்வளவிலே பர்யவசித்து விடுமோ -அவற்றினுடைய
தோஷத்தாலே இவ் உபாய உபதேசத்துக்கு  அதிகாரி யாமோ -என்று
இவனுடைய ஹ்ருதயத்தை  சோதிக்கைக்காக என்கை –

——————————————————–

வேத புருஷன் உபாயாந்தரங்களை விதித்தது -கொண்டிப் பசுவுக்கு தடி கட்டி விடுவாரைப் போலே –
அஹங்கார மமகாரங்களால் வந்த களிப்பு அற்ற ஸ்வரூப ஞானம் பிறக்கைக்காக–சூரணை -268-

ஆனால் இவன் அன்றோ இப்படி ஹ்ருதய சோதன அர்த்தமாக உபாயந்தரங்களை உபதேசித்தவன் –
வேத புருஷன் அவற்றை விதிப்பான் என் -என்ன -அருளிச் செய்கிறார் –

அதாவது –
ஆப்த தமனான வேத புருஷன் -விஞ்ஞாய  ப்ரஞ்ஞாம் குர்வீத –
ஒமித்யாத்மானம்  த்யாயத ஆத்மானமேவ லோகமுபாசீத
ஆத்மா வா அரே த்ரஷ்டவ்யஸ் ஸ்ரோதவ்ய மந்தவ்யோ  நிதித்யா சிதவ்ய-இத்யாதிகளாலே
உபாயாந்தரங்களை மோஷ சாதனமாக விதித்தது –

பட்டி தின்று திரிகிற பசுவுக்கு இடைஞ்சு வசப்படுகைக்காக கழுத்திலே தடியை கட்டி விடுவாரைப் போலே –
அஹங்கார மமகார வச்யனாய் களித்து திரிகிற இவனுக்கு –
ஜன்மான் தரசஹஸ்ரேஷூ  தபோ ஞான சமாதிபி -என்கிறபடி

காய க்லேச ரூபமான கர்ம அனுஷ்டானம் -இந்த்ரிய ஜெயம் -முதலான
அரும் தேவைகளாலே செறுப்பு உண்டு அந்த களிப்பு போய் -பகவத் பாரதந்த்ர்யம் ஆகிற
ஸ்வரூப ஞானம் பிறக்கைக்காக -என்கை –

——————————————————–

சந்நியாசி முன்பு உள்ளவற்றை விடுமா போலே இவ்வளவு பிறந்தவன்
இவற்றை விட்டால் குற்றம் வாராது –சூரணை -269-

ஆனால் இப்படி ஸ்வரூப ஞான உதய ஹேதுவான இவற்றை விட்டால் குற்றம் ஆகாதோ என்ன -அருளிச் செய்கிறார் –

அதாவது
சரம ஆஸ்ரமத்திலே அந்விதன் ஆனவன் பூர்வாஸ்ரம தர்மங்களை விடுமா போலே -அந்ய உபாயங்களினுடைய
ஸ்வரூப விரோதித்வாதிகளாலே -சித்த உபாயத்தில் இழியும் படி இவ்வளவான ஞான பாகம் பிறந்தவன் –
இவ் உபாயந்தரங்களை விட்டால் தோஷம் ஆகாது -என்றபடி –

————————————————————-

இவன் தான் இவை தன்னை நேராக விட்டிலன் –சூரணை -270-

இவை தான் ஆகாரந்தரத்தாலே அன்விதங்கள் ஆகையாலே இவற்றில் இவன் தனக்கு
ஸ்வரூப த்யாகம் இல்லை -என்னுமத்தை அருளிச் செய்கிறார் –

அதாவது
சாதனாந்தர பரித்யாக பூர்வகமாக சித்த சாதனம் பரிக்ரஹம் பண்ணின இவ் அதிகாரி தான் –
கர்ம ஞானாதிகள் ஆகிற  இவை தன்னை ஸ்வரூபேண த்யஜித்து இலன் -என்கை –

———————————————————-

கர்மம் கைங்கர்யத்திலே புகும்-
ஞானம் ஸ்வரூப  பிரகாசத்திலே புகும் –
பிரபத்தி ஸ்வரூப யாதாம்ய ஞானத்திலே புகும் –
அது எங்கனே என்ன -அருளிச் செய்கிறார் –சூரணை-271-=

அதாவது
ஸ்வ வர்ண ஸ்வ ஆஸ்ரம  உசிதமாக இவன் அனுஷ்டிக்கும் விஹித கர்மம் –
சாதனா புத்த்யா அன்றிக்கே -ஆன்ரு சம்சயத்தாலே -பரார்தமாக அனுஷ்டிக்கையாலே –
ஈஸ்வரனுக்கு மிகவும் உகப்பு ஆகையாலே -தத் ப்ரீதி ஹேதுவாக பண்ணும்  கைங்கர்யத்தாலே அந்தர்பவிக்கும்-

நுண் அறிவு -திரு வாய் மொழி -5-7-1–என்கிறபடியே -ஸ்வ ஸ்வரூப ஞான பூர்வகமாக -பர ஸ்வரூபத்தை
சாஷாத் கரிக்கைக்கும் உறுப்பான ஸூஷ்ம ஞானம் சாதனா புத்தி கழிந்தவாறே-
ஸ்வரூபத்தின் உடைய ப்ரகாசத்திலே அந்தர்பவிக்கும் –

(நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் ஆகிலும் இனி உன்னை விட்டொன்று
ஆற்ற கிற்கின்றிலேன் அரவின் அணை அம்மானே!
சேற்றுத் தாமரை செந்நெலூடு மலர் சிரீவர மங்கலநகர்
வீற்றிருந்த எந்தாய்! உனக்கு மிகை அல்லேன் அங்கே.—5-7-1-)

பக்த்யா த்வந் அந்யா சக்ய-என்கிறபடி-பகவத் ப்ராப்திக்கு சாதனமான பக்தி -அந்த சாதனா புத்தி போனவாறே –
போஜனத்துக்கு ஸூத்து  போலே -ப்ராப்யமான கைங்கர்யத்துக்கு -பூர்வ  ஷணத்திலே அநு வர்த்திக்கக் கடவதான
ருசியிலே அந்தர்பவிக்கும் –

சித்தோ உபாய வர்ண ரூபையான பிரபத்தி ஏக பதத்திலே சொல்லுகிறபடி -சாதனா பாவம் கழிந்தவாறே -அத்யந்த
பரதந்திர தயா அநந்ய சரணமாய் இருந்துள்ள ஸ்வரூபத்தின் உடைய யாதாத்ம்ய ஞானத்திலே அந்தர்பவிக்கும் -என்கை-

———————————————————

ஒரு பலத்துக்கு அரிய  வழியையும் -எளிய வழியையும் உபதேசிக்கையாலே –
இவை இரண்டும் ஒழிய -பகவத் ப்ரசாதமே உபாயமாகக் கடவது –சூரணை -272-

பக்தி பிரபத்திகள் இரண்டையும் கழித்தால்
இவன் தனக்கு பல சாதனம் ஆவது எது -என்ன -அருளிச் செய்கிறார் –

அதாவது-
பகவத் ப்ராப்தி ஆகிற ஒரு பலத்துக்கு –
ஜன்மாந்தர சகஸ்ரேஷு தபோ ஞான சமாதிபி
நராணாம் ஷீண பாபாணாம் க்ருஷ்ணே பக்தி பிரஜாயதே -என்கிறபடியே
அநேக ஜன்மங்களிலே கர்ம ஞானாதிகள் ஆகிற அங்கங்களாலே சாதிக்கப் படுமதாகையாலே
அரிதாய் இருந்துள்ள பக்தி மார்க்கத்தையும் –

சர்வ தர்மான் பரித்யஜ்ய -என்று சகல பிரவ்ருத்தி நிவ்ருத்தி பூர்வகமாக
சக்ரு தனுஷ்டேயம் ஆகையாலே -எளிதாய் இருந்துள்ள பிரபத்தி மார்க்கத்தையும் -உபதேசிக்கையாலே
சாதனா கௌரவ லாகவங்களில் தாத்பர்யம் அன்றிக்கே தத் வயாஜேன பல பிரதானாக
நின்றுள்ள அவனுடைய ப்ரசாதமே பிரதானம் ஆகையாலே –
பக்தி பிரபத்திகள் ஆகிற இவை இரண்டும் ஒழிய
பகவானுடைய  ப்ரசாதமே உபாயமாக கடவது -என்கை –

——————————————————————

பேற்றுக்கு வேண்டுவது விலக்காமையும் இரப்பும்-சூரணை -273-

ஆனாலும் பேற்றுக்கு இவன் பக்கலிலும் ஏதேனும் உண்டாக வேண்டாவோ –
என்ன அருளிச் செய்கிறார்

அதாவது
பலசித்திக்கு சேதனன் பக்கல் உண்டாக வேண்டுவது –
ஸ்வ யத்னத்தாலே அவன் பண்ணும் ரஷணத்தை விலக்காது ஒழிகையும் –
அது புருஷார்த்தம் ஆகைக்கு உறுப்பான இரப்பும் -என்கை-

———————————————————————-

சக்கரவர்த்தி திரு மகன் பாபத்தோடு வரிலும் அமையும்
இவன் புண்யத்தைப் பொகட்டு வர வேணும் என்றான் –சூரணை -274-

இங்கன் அன்றிக்கே இவன் பக்கலிலும்  சில ஸூக்ருதம் உண்டானால் ஆகாதோ -என்ன
உபாய பூதனுக்கு அநிஷ்டம் என்னுமத்தை அருளிச் செய்கிறார் –

அதாவது –
ராமோ விக்ரகவான் தர்ம -என்கிற சக்கரவர்த்தி திரு மகன் –
யதிவா ராவணஸ் ஸ்வயம் -என்று பபிஷ்டனான ராவணன் தான் ஆகிலும்
அழைத்து வாரும் -என்கையலே -பாபம் பேற்றுக்கு ஹேதுவாக நினைக்கு உடல் அல்லாமையலே
பாபத்தோடு வரிலும் அமையும் -என்றான் –
கிருஷ்ணன் தர்மம் சனாதனம் -என்று இவன் சர்வ தர்மான் பரித்யஜ்ய -என்கையாலே
பேற்றுக்கு ஹேதுவாக நினைக்கைக்கு உடலான புண்யத்தை பொகட்டு  வர வேணும் என்றான் -என்கை
ஆகையால் சகாயாந்தர சம்சர்க்க அசஹனான -உபாய பூதனுக்கு இவன் பக்கல் ஸூக்ருதம் அநிஷ்டம் என்று கருத்து –

———————————————————————–

ஆஸ்திகனாய் இவ் அர்த்தத்தில் ருசி விச்வாசங்கள் உடையனாய் உஜ்ஜீவித்தல் –
நாஸ்திகனாய் நசித்தல் ஒழிய நடுவில் நிலை இல்லை -என்று
பட்டருக்கு எம்பார் அருளிச் செய்த வார்த்தை –சூரணை -275-

இவ் அர்த்தத்தில் இழிந்த வனுக்கு ஆஸ்திகனாய் உஜ்ஜீவித்தல்
நாஸ்திகனாய் நசித்தல் ஒழிய
மத்யம ஸ்திதி இல்லை -என்னுமத்தை பூர்வாச்சார்யா  வசனத்தாலே அறிவிக்கிறார் –

அதாவது –
இவ் அர்த்தத்தில் அன்விதனானவன் பகவத் ப்ரபாவத்தால் -இது சத்யம் -என்று ஆஸ்திகனாய்
இவ் அர்த்தத்தில் ருசியும் -இது தப்பாது -என்கிற விசுவாசமும் உடையவனாய் உஜ்ஜீவித்தல் –
சாஸ்திரங்கள் எல்லாம் ஒரு தலையும் இது ஒரு தலையுமாய் இப்படி இருப்பது ஓன்று உண்டோ –
என்று நாஸ்திகனாய் இத்தை அநாதரித்து நசித்தல் இத்தனை ஒழிய -நடுவில் ஒரு நிலை இல்லை –
என்று சகல சாஸ்திர வித்தமரான -பட்டருக்கு -ஆத்மதமரான -எம்பார் அருளிச் செய்த வார்த்தை -என்கை –

———————————————————————–

வ்யவாசாயம் இல்லாதவனுக்கு இதில் அந்வயம் -ஆமத்தில் போஜனம் போலே –சூரணை -276-

வ்யவசாய ஹீனனுக்கு இதில் அந்வயம் விநாசத்துக்கு உடலாம் என்னுமத்தை
ச த்ருஷ்டாந்தமாக அருளிச் செய்கிறார் –

அதாவது –
இதில் சொல்லுகிற  த்யாக ஸ்வீகாரங்களுக்கு ஈடான வ்யவாசயம் இல்லாதவனுக்கு
இதில் உண்டான அந்வயம் அஜீர்ண தசையில் பண்ணின போஜனம் மரண ஹேதுவாமா போலே
விநாச ஹேதுவாய் பர்யவசிக்கும் -என்கை –

—————————————————————–

விஷ்ணு சித்தர் கேட்டு இருப்பர் -என்கிறபடியே அதிகாரிகள் நியதர் –சூரணை -277-

இது தனக்கு அதிகாரிகள் இன்னார் என்னுமத்தை அருளிச் செய்கிறார் –

அதாவது –
செம்மை உடைய திரு அரங்கர் தாம் பணித்த மெய்ம்மை பெரு வார்த்தை-
விஷ்ணு சித்தர் கேட்டு இருப்பர் –நாச்சியார் திரு மொழி –11-10-என்று கரண த்ரயத்தாலும் -செவ்வியராய் –
அது தன்னை அர்த்த க்ரியாகாரியாய்க் கொண்டு -கோவிலிலே சாய்ந்து அருளினவர் தாம் –
அர்ஜுன வ்யாஜ்யத்தாலே திருத் தேர் தட்டிலே நின்று அருளிச் செய்த
யதார்தமுமாய் -சீரியதுமாய் -ஸூலபமுமான –
மாம் ஏகம் சரணம் வ்ரஜ -என்கிற வார்த்தையை
பெரிய ஆழ்வார் கேட்டு -தந் நிஷ்டராய் இருபபார்-என்கிறபடி -இவ் அர்த்தத்துக்கு
அதிகாரிகள் இது கேட்டால் இதன் படியே நியதராய் இருக்குமவர்கள் -என்கை –

(செம்மை யுடைய திருவரங்கர் தாம் பணித்த
மெய்ம்மைப் பெரு வார்த்தை விட்டு சித்தர் கேட்டிருப்பார்
தம்மை யுகப்பாரைத் தாம் உகப்பர் என்னும் சொல்
தம்மிடையே பொய்யானால் சாதிப்பார் ஆர் இனியே —11-10-)

—————————————————————

வார்த்தை அறிபவர் -என்கிற பாட்டும்
அத்தனாகி -என்கிற பாட்டும்
இதுக்கு அர்த்தமாக அநு சந்தேயம் –சூரணை -278-

இவ் அர்த்த நிஷ்டரான ஆழ்வார்கள் உடைய திவ்ய ஸூக்தி யில் இதுக்கு
அர்த்தமாக அநு சந்திக்க படுமவற்றை அருளி செய்து -இது தன்னை
நிகமிக்கிறார் –

அதாவது-
வார்த்தை அறிபவர் பேர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பவை
பேர்த்து பெரும் துன்பம் வேரற நீக்கித் தன் தாளின் கீழ்
சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணித் தெளி உற்று
மாயவர்க்கு ஆள் அன்றி ஆவரோ -திரு வாய் மொழி -7-5-10–என்று –

மாம் ஏகம் சரணம் வ்ரஜ சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி -என்ற நல் வார்த்தையை அறியும் அவர்கள்
பரணி கூடு வரிந்தால் போலே -இவ் ஆத்மாவை சூழப் பொதிந்து கிடக்கிற ஜன்மங்களோடும்-
அவை புக்க இடத்தே புகக் கடவதான வ்யாதியோடும் –
அங்கனே ஆகிலும் சிறிது நாள் செல்லாத படி இடி விழுந்தால் போல் வரும் ஜரையோடும் –
அங்கனே ஆகிலும் இருக்க ஒண்ணாதபடி இவனுக்கு அநபிமதமான-வினாசமுமாகிற -இவற்றை –
விரகர் நெடும் சுவர் தள்ளுமா போலே தள்ளி -அவை போன்ற அநந்தரம் வரக் கடவதான –
கைவல்யம் -ஆகிற மகா துக்கத்தை சவாசனமாகப் போக்கி –

பாத ரேகை போலே தன் திரு அடிகளின் கீழ் சேரும் படி பண்ணி –
புனராவ்ய வசிதராய் கொண்டு தங்களுக்கு ஆஸ்ரயணீ யனாய்க் கொண்டு –
விரோதி நிவர்தகனான ஆச்சர்ய பூதனுக்கு ஒழிய வேறு ஒருவருக்கு ஆள் ஆவாரோ –
என்று நம் ஆழ்வார் அருளிச் செய்த –வார்த்தை அறிபவர் -திரு வாய் மொழி -7-5-10-என்கிற பாட்டும் –

முத்தனார் முகுந்தனார் ஒத்தொவ்வாத பல் பிறப்பு ஒழித்து நம்மை ஆள் கொள்வான்
அத்தனாகி அன்னையாகி ஆளும் எம்பிரானுமாய் புகுந்து -நம்முள் மேவினார் -ஏழை நெஞ்சமே
எத்தினால் இடர் கடல் கிடத்தி -என்று

ஹேய ப்ரத்ய நீகர் ஆகையாலே -அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தராய் -முக்தபூமி பிரதர் ஆனவர் –
சகல தேக வர்திகளான ஆத்மாக்களும் ஞான ஏக ஆகாரதையா ஒத்து -தேவாதி பேதத்தலே
ஒவ்வாமல் இருக்கும் பல வகைப் பட்ட ஜன்மங்களைப் போக்கி –

நித்ய சம்சாரிகளாய் போந்த நம்மை நித்ய ஸூரிகள் கொள்ளும் அடிமையைக் கொள்ளுகைக்காக
ஹிதமே ப்ரவர்த்திப்பிக்கும்  பிதாவாகவும் –
பிரியமே ப்ரவர்த்திப்பிக்கும் மாதாவாகவும் -அடிமை கொள்ளக் கடவ நம்முடைய ஸ்வாமி யாயும் –
இப்படி சர்வ வித பந்துமாய் –
நம்முடைய தண்மையையும்-தம்முடைய பெருமையும் பாராதே -நம்முடைய சர்வ பரத்தையும்
தாமே ஏறிட்டுக் கொண்டு செய்வாராக ஹேயமான நம்முள்ளே புகுந்து ஒரு நீராகப் பொருந்தினர் –

அறிவிலியான நெஞ்சே -நம்முடைய ஹிதம் அறிக்கைக்கு நாம் சர்வஞ்ஞராயோ -அவன் அஞ்ஞனாயோ
ஹிதத்தை ப்ரவர்த்திப்பைக்கு நாம் சக்தராயோ -அவன் அசக்தனாயோ –
கார்யம் செய்து கொள்கைக்கு நாம் ப்ராப்தராயோ -அவன் அப்ராப்தனாயோ –
தன் மேன்மை பாராதே தாழ நின்று உபகரிக்கும் அவனே இருக்க –
எத்தாலே நீ துக்க சாகரத்தில் கிடக்கிறது -என்று
திரு மழிசைப் பிரான் அருளி செய்த –அத்தனாகி -திரு சந்த விருத்தம் -115- என்கிற பாட்டும்
இந்த ஸ்லோகத்துக்கு அர்த்தமாக அநு சந்தேயம் -என்கை –

—————————————————————-

ஆக -இத்தால் –
ஸ்வீகார அங்கதயா த்யாஜ்யமான தர்ம விசேஷங்களையும் -சர்வ தரமான்-
அந்த தர்மங்களினுடைய த்யாக பிரகாரத்தையும் -பரித்யஜ்ய –
அந்த தர்ம த்யாக பூர்வகமாக பற்றும் விஷயத்தின் உடைய சௌலப்யாதி குண யோகத்தையும் -மாம்-
அக் குண விசிஷ்ட வஸ்துவினுடைய-சகாய அசஹத்வ லஷணமான நைர பேஷத்தையும் -ஏகம்-
நிரபேஷ வஸ்துவினுடைய உபாய பாவத்தையும் -சரணம்-
அத்தை உபாயத்வேன ஸ்வீகரிக்கையும் -வ்ரஜ –
ஸ்வீக்ருதமான உபாயத்தின் உடைய ஞான சக்த்யாதி குண யோகத்தையும் -அஹம்-
அக் குண விசிஷ்ட வஸ்துவிலே ந்யஸ்த பரனான அதிகாரியையும் -த்வா –
அதிகாரிக்கு விரோதியான பாப சமூகத்தையும் -சர்வ பாபேப்யோ –
அப் பாப விமோசன பிரகாரத்தையும் -மோஷ இஷ்யாமி –
அப் பாப விமோசகனைப் பற்றின அதிகாரி உடைய நைர்பர்யத்தையும்-மா ஸூச -என்று
சொல்லிற்று ஆயிற்று –

———————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முமுஷுப்படி -சரம ஸ்லோஹ பிரகரணம்-ஸூர்ணிகை –254–262–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் –ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் அரும்பத விளக்கம் —

January 11, 2024

மோஷ இஷ்யாமி -முக்தனாம் படி பண்ணக் கடவன் –சூரணை -254-

அநந்தரம் –
சதுரத்த பதத்தை உபாதானம் பண்ணுகிறார் -மோஷ இஷ்யாமி-என்று -அதுக்கு
அர்த்தம் அருளிச் செய்கிறார்

அதாவது –
இவற்றில் நின்றும் விடப் பட்டவனாம் படி பண்ணக் கடவன் -என்கை-

—————————————

ணி-ச்சாலே -நானும் வேண்டா -நீயும் வேண்டா -அவை தன்னடையே விட்டு
போம் காண் -என்கிறான் –சூரணை -255-

அதாவது – இஷ்யாமி -என்கிற ணிச்சாலே ஸ்வயம் கர்த்தா வாகை அன்றிக்கே –
தான் பிரயோஜக கர்த்தாவாய் விடுவிக்கக் கடவேன் -என்கையாலே
நானும் இதுக்கு ஒரு யத்னம் பண்ண வேண்டா –
நீயும் இதுக்கு பிரார்த்திக்க வேண்டா –
நீ என்னை ஆஸ்ரயித்த ராஜ குல மகாத்ம்யத்தாலே -உன்னைக் கண்டு தாமே
பயப்பட்டு -கானோ ஒருங்கிற்று கண்டிலமால் -பெரிய திரு அந்தாதி -54-
என்கிறபடியே போன வழி தெரியாதபடி தன்னடையே விட்டுப் போம் காண்
என்று அருளிச் செய்கிறான் -என்கை-

(வானோ மறி கடலோ மாருதமோ தீயகமோ
கானோ ஒருங்கிற்றும் கண்டிலமால் -ஆ ஈன்ற
கன்று உயரத் தாம் எறிந்து காய் உதிர்த்தார் தாள் பணிந்தோம்
வன் துயரை ஆ ஆ மருங்கு –54-)

———————————————————-

என்னுடைய நிக்ரஹ பலமாய் வந்தவை
நான் இரங்கினால் கிடக்குமோ -என்கை –சூரணை -256-

இப்படி அருளிச் செய்ததின் கருத்தை வெளி இடுகிறார் –
அதாவது –
பாபங்கள் ஆகிறன-குப்பையிலே ஆமணக்கு போலே மிடற்றை பிடிப்பது
ஒன்றன்று இறே  -சேதனன் பண்ணின கர்மங்கள் ஷண த்வம்சிகள் ஆகையாலே –
அப்போதே நசித்துப் போம் -அஞ்ஞன் ஆகையாலே கர்த்தாவான இவனும் மறந்து போக –
ஸ்வதஸ்  சர்வஞனாய் ஓன்று ஒழியாமல் உணர்ந்து இருந்து ப்ராப்த காலங்களிலே
தப்பாமல் நிறுத்து அனுபவிக்கிற என்னுடைய நிக்ரஹ ரூபம் ஆகையாலே -அந்த நிக்ரஹ
பலமாய் வந்தவை -நிக்ரஹத்துக்கு பிரதி கோடியான அனுக்ரஹத்தை நான் பண்ணினால்
அவ் விஷயத்தின் பின்னே கிடக்குமோ -என்கை- இதுக்கு கருத்து என்கிற  படி –

—————————————————————-

அநாதி காலம் பாபங்களைக் கண்டு நீ பட்ட பாட்டை
அவை தாம் படும் படி பண்ணுகிறேன் –சூரணை -257-

தன்னடையே விட்டு போம் என்கிற இடத்தில் அபிப்ராயத்தை அருளிச் செய்கிறார் –
அதாவது
அநாதியான காலம் எல்லாம் துக்க அவஹமான பாபங்கள் வந்து மேலிடப் புக்கால் –
அவற்றைக் கண்டு நீ நடுங்கின நடுக்கம் எல்லாம் -மத் ஆஸ்ரயண ராஜ குல மகாத்மயம் உடைய –
உன்னைக் கண்டு அவை தான் குடல் கரிந்து நடுங்கும் படி பண்ணக் கடவேன் -என்கை –

அவை தானே விட்டு போம்படி பண்ணுகையாவது-இவை நமக்கு  முன்பு உண்டாய் –
கழிந்தது என்று  தோற்றாத படி போக்கை-அதாகிறது -இவை ஸ்ம்ருதி விஷயம் ஆனாலும் –
தன்னுடைய ஸ்வபாவிக வேஷத்தைப் பார்த்து ஸ்வப்னம் கண்டால் போலே இவை
நமக்கு வந்தேறி யாய் கழிந்தது என்று இருக்கையும் -ஸ்ம்ருதியாலே துக்கம் அநு வர்த்தியாய் இருக்கையும் –
என்று தனி சரமத்தில் இவர் தாமே அருளிச் செய்தது இவ் இடத்திலே அனுசந்தேயம் –

————————————————————

இனி உன் கையிலும் உன்னை காட்டித் தாரேன் -என் உடம்பில் அழுக்கை
நானே போக்கிக் கொள்ளேனோ –சூரணை -258-

மோஷ இஷ்யாமி -என்கிற உத்தமனில் அபிப்ரேதமான
ஓர் அர்த்த விசேஷத்தை இனி அருளிச் செய்கிறார் –

அதாவது —
இத்தனை காலமும் — நம் கார்யத்துக்கு நாம் கடவோம் -என்று நீ திரிகையாலே
தன் கார்யம் தானே செய்து கொள்கிறான் -என்று இருந்த இத்தனை போக்கி –
எனக்கு நீ சரீரிதையா சேஷம் -என்று அறிந்து என் பக்கலிலே நியஸ்த பரனான  பின்பு –
உன்னுடைய பாப விமோசன அர்த்தமான யத்னம் நீ பண்ணிக் கொள் என்று –
உன் கையிலும் உன்னைக் காட்டி தாரேன் –
எனக்கு சரீர பூதனான உன்னுடைய அவித்யா ரூப மாலின்யத்தை
சரீரியான நானே போக்கிக் கொள்ளேனோ என்கை –
யத்ன பலித்வங்கள் இரண்டும் தன்னது என்று தோற்றுகைகாக-

ஆகையால் உன்னுடைய விரோதி நிவ்ருத்தியும் -அபிமத பிராப்தியும் -இரண்டும்
பலமாய் இருக்க -ஒன்றைச் சொல்லுவான் என் என்னில் மற்றையது தன்னடையே வருகையாலே
சொல்லிற்று  இல்லை -மாமேவைஷ்யசி -என்று கீழில் உபாயத்துக்கு சொன்ன பலம் ஒழிய
இவ் உபாயதுக்கு வேறு பலம் இல்லாமையாலே சொல்லிற்று இல்லை என்னவுமாம் –

ஆனால் விரோதி நிவ்ருத்தி தன்னைச் சொல்லுவான் என் என்னில் -அது அதிகம் ஆகையாலே சொல்லிற்று –
விரோதி நிவ்ருத்தி பிறந்தால் பலம் ஸ்வதஸ் சித்தமாய் இருக்கையாலே -தனித்துச் சொல்ல  வேண்டா இறே –
என்று ஸங்க்ரஹேண ஸ்ரீ யப்பதி படி ரஹஸ்யத்திலும்-விஸ்தரேண -பரந்த படி  தனி சரமங்களிலும் அருளிச் செய்த
சங்கா  பரிகாரங்கள் இவ் இடத்தில் அனுசந்தேயம் –

————————————————

மாஸூச -நீ உன் கார்யத்தில் அதிகரியாமையாலும் –
நான் உன் கார்யத்தில் அதிகரித்துப் போருகையலும் –
உனக்கு சோக நிமித்தம் இல்லை காண்-என்று
அவனுடைய சோக நிவ்ருத்தியைப் பண்ணிக் கொடுக்கிறான் –சூரணை-259-

அநந்தரம் –
சரம பதத்தை உபாதானம் பண்ணுகிறார் -மா ஸூச -என்று
அதுக்கு அர்த்தம் அருளிச் செய்கிறார் –

அதாவது –
நீ உன் கார்யத்தில் அதிகரித்து நின்றாய் ஆகில் -நம் கார்யத்துக்கு என் செய்வோம் -என்று
கரைந்து சோகிக்க ப்ராப்தம் –
நான் உன் கார்யத்தில் அதிகரியாது இருந்தேன் ஆகில் -நம் கார்யத்தில் இவன் உதாசீனனாய்
இரா நின்றான் -நாம் எங்கனே உஜ்ஜீவிக்க போகிறோம் -என்று சோகிக்க ப்ராப்தம் –
இங்கன் இன்றிகே யத்ன பலித்வங்கள் இரண்டும் உனக்கு இல்லாத படியான
ஸ்வரூப பாரதந்த்ர்யத்தை உணர்ந்து -நீ உன் உடைய ரஷண  கார்யத்தில் அதிகரியாது ஒழிகை யாலும் –
உன்னுடைய ரஷணத்தில் யத்ன பலித்வங்கள் இரண்டும் என்னதாம் படி ஸ்வாமியான நான்
உன் பக்கலில் தடை அறுக்கையாலே-உன்னுடைய ரஷண கார்யத்தில் அதிகரித்து கொண்டு போருகையாலும் –
உனக்கு சோகிகைக்கு  நிமித்தம் இல்லை காண் என்று -முன்பு சோக விசிஷ்டனாய் நின்ற அவனுடைய
சோகத்தின் உடைய நிவ்ருத்தியை பண்ணிக் கொடுக்கிறான் -என்கை

இத்தால் -அஹம் -த்வா-என்கிற பதங்களால் சொல்லப்  பட்ட -ரஷக ரஷ்ய பூதரான –
இவருடைய ஸ்வபாவத்தையும் அனுவதித்துக் கொண்டு சோகாபநோதனம் பண்ணின படியை –
அருளிச் செய்தார் ஆயிற்று –

————————————————————-

நிவர்தக ஸ்வரூபத்தைச் சொல்லி -நிவர்த்யங்கள் உன்னை வந்து மேலிடாது என்று சொல்லி –
உனக்கு சோக நிமித்தம் இல்லை காண் -என்கிறான் –சூரணை -260-

இனிமேல் நிவர்தகனாக தன்னுடையவும் -நிவர்தங்களான பாபங்களின் உடையவும்
ஸ்வபாவங்களைச்  சொல்லி சோகாபநோதனம் பண்ணின படியை அருளிச் செய்கிறார் –

அதாவது –
அஹம் என்று -சர்வஞ்ஞத்வாதி குண விசிஷ்டனாய்க் கொண்டு -விரோதி நிவர்தகனாய் இருக்கிற –
தன் ஸ்வரூபத்தை சொல்லி –
த்வா சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி -என்று ணி ச்சால் நிவர்த்யங்களான  பாபங்கள் உன்
தன்னைக் கண்டு தானே அஞ்சி ஓடி போம் ஒழிய -என்னையே உபாயமாக ஸூவீகரித்து இருக்கிற உன்னை
வந்து மேலிடாது என்னும் இடம் சொல்லி –
அநந்தரம் -மாஸூச -என்கையாலே –
இப்படி யான பின்பு உனக்கு சோகிக்க நிமித்தம் இல்லை -என்கிறார்-என்கை –

———————————————————

எத்தினால் இடர் கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே -என்கிறான்
இத் தலையில் விரோதியைப் போக்குகைக்கு தான் ஒருப்பட்டு நிற்கிற படியை அறிவித்து –
இவனுடைய சோகத்தை போக்குகிறமையை-அபியுக்த யுக்தியை  நிதர்சனம் ஆக்கிக் கொண்டு
அருளிச் செய்கிறார் –சூரணை -261

அதாவது –
திரு மழிசை பிரான்-எத்தினால் இடர் கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே-திரு சந்த விருத்தம் -115- என்று
தம்முடைய திரு உள்ளத்தைக் குறித்து –
சர்வேஸ்வரன் இத்தலையில் விரோதியை போக்கி அடிமை கொள்வதாக ஏன்று கொண்டு
வந்து புகுந்து இருக்கிற படியைச் சொல்லி -இனி எதுக்காக நீ துக்க சாகரத்தில் அழுந்துகிறாய்-என்றால் போலே
ஈஸ்வரனும் இப்போது இத் தலையில் சகல பாபங்களையும் போக்குவதாக தானே ஏறிட்டு கொண்டமையை
அறிவித்து -இனி எதுக்காக சோகிக்கிறாய்-என்று இவனை குறித்து அருளிச் செய்கிறான் -என்கை–

(அத்தனாகி அன்னையாகி யாளும் எம்பிரானுமாய்
ஒத்து ஒவ்வாத பல் பிறப்பு ஒழித்து நம்மை ஆட்கொள்வான்
முத்தனார் முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினார்
எத்தினால் இடர் கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே -115-)

—————————————————————–

பாபங்களை நான் பொறுத்து -புண்யம் என்று நினைப்பிடா நிற்க –
நீ சோகிக்க கடவையோ –சூரணை -262-

இனி இவனுடைய சோகம் மறுவலிடாமல் போக்குகைக்கு உறுப்பானதொரு பகவத் அபிப்ராய
விசேஷத்தை அருளிச் செய்கிறார் –
அதாவது –
நீ செய்த பாபங்கள் நான் முந்துற என்னுடைய ஷமா விஷயமாக்கி –
அவ்வளவும் அன்றிக்கே -பின்னை உன் பக்கல் எனக்கு உண்டான -வாத்சல்யத்தாலே –
செய்த குற்றம் நற்றமாகவே  கொள் -திரு சந்த விருத்தம் -111
செய்தாரேல் நன்றே செய்தார் –பெரிய ஆழ்வார் திரு மொழி -4-9-2-
என்கிறபடியே அவை தன்னை பாபமாக நினையாதே
புண்யம் என்று நினைப்பிடா நிற்க இனி நீ சோகிக்க கடவையோ -என்கை-

ஆக
இவ் உத்தர அர்த்தத்தில் அஞ்சு பதத்தாலும் –
நிவர்த்தக ஸ்வரூபத்தையும் –
நிவர்த்திய ஆஸ்ரயத்தையும்-
நிவர்தங்களான பாபங்களையும் –
அவற்றினுடைய நிவ்ருத்தி பிரகாரத்தையும் –
தத் கார்யமான சோக நிவ்ருத்தியையும்-
சொல்லிற்று ஆயிற்று –

(வைது நின்னை வல்லவா பழித்தவர்க்கும் மாறில் போர்
செய்து நின்ன செற்றத் தீயின் வெந்தவர்க்கும் வந்து உனை
எய்தலாகும் என்பர் ஆதலால் எம்மாய நாயினேன்
செய்த குற்றம் நற்றமாகவே கொள் ஞால நாதனே -111-)

(தன்னடியார் திறத்தகத்து தாமரையாள் ஆகிலும் சிதகுரைக்குமேல்
என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் என்பர் போலும்
மன்னுடைய விபீடணர்க்காய் மதிள் இலங்கை திசை நோக்கி மலர் கண் வைத்த
என்னுடைய திருவரங்கர்க்கு அன்றியும் மற்று ஒருவர்க்கு ஆளாவரே – 4-9 -2-)

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முமுஷுப்படி -சரம ஸ்லோஹ பிரகரணம்-ஸூர்ணிகை –236–253–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் –ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் அரும்பத விளக்கம் —

January 11, 2024

சரணம் -உபாயமாக-சூரணை -236

இனி பஞ்சம பதத்தை உபாதானம் பண்ணுகிறார் -அதுக்கு அர்த்தம்
அருளிச் செய்கிறார் -உபாயமாக -என்று –

——————————————-

இந்த சரண சப்தம்
ரஷிதாவையும்
க்ருஹத்தையும்
உபாயத்தையும்
காட்டக் கடவதே ஆகிலும் இவ் இடத்தில் உபாயத்தையே காட்டுகிறது –
கீழோடு சேர வேண்டுகையாலே –சூரணை -237-

அர்த்தாந்தரங்களையும் காட்டவற்றாய் இருக்க -இவ் இடத்தில் இது உபாயத்தையே காட்டுகிறமையை –
சஹேதுகமாக அருளிச் செய்கிறார் –

அதாவது
உபாயே க்ருக ரஷித்ரஸ் சப்தஸ் சரண மித்யாயம் வர்த்ததே -என்கிறபடி
சரண சப்தமான இது -ரஷிதாவையும்  க்ருஹத்தையும் உபாயத்தையும்
காட்டக் கடவதே ஆகிலும் -சாம்ப்ரதம் சைஷ உபாயர்த்தைக வாசக -என்கிறபடி –
இந்த ஸ்தலத்திலே உபாயத்தையே காட்டுகிறது –
சர்வ தர்மங்களையும் விட்டு தன்னையே பற்றச் சொல்லுகிற பிரகரணம் ஆகையாலே –
கீழோடு சேர வேண்டுகையாலே -என்கை –

—————————————————

வ்ரஜ-புத்தி பண்ணு –சூரணை -238-

இனி ஷஷ்ட பதத்தை உபாதானம் பண்ணுகிறார் -வ்ரஜ -என்று –
அதுக்கு அர்த்தம் அருளிச் செய்கிறார் -புத்தி பண்ணு -என்று –

——————————————–

கத்யர்த்தமாவது புத்த்யர்தமாய் -அத்தியவசி என்ற படி –சூரணை-239-

அது தன்னை விசதீகரிக்கிறார் –

அதாவது
வ்ரஜக தவ்–என்கிற தாதுவிலே -கத்யர்த்தமாய் -கத்யர்த்தா  புத்த்யர்தா -என்கிற ந்யாயத்தாலே
கத்யர்த்தமாவது புத்யர்த்தமாய் -அத்தியவசி -என்றபடி -என்கை-
இந்த புத்தி ஆகிறது த்யாஜ்யகோடியிலே உத்தீர்ணமாய் -உபாய கோடியிலே அதனு பிரவிஷ்டமாய் –
பிரபகாந்தர பரித்யாக பூர்வமாய் -பகவத் ரஷகத்வ அனுமதி ரூபமாய் -சைதன்ய ஹேதுவாய்-
ஸ்வரூப அநு ரூபமாய் -வியபிசார விளம்ப விதுரமாய் -இருப்பதொரு அத்யவசாயாத்மாக ஞான விசேஷம் –
என்று பரந்த படியிலே இவர் அருளிச் செய்த இது இவ் இடத்திலே அநு சந்தேயம் –

———————————————————-

வாசிக காயிகங்களும் இதுக்கு அபேஷிதங்களாய் இருக்கச் செய்தேயும்
ஞானான் மோஷம் ஆகையாலே மானசமான அனுஷ்டானத்தைச் சொல்கிறது –சூரணை-240–

சாமான்யேன கதி வாசியான இது -மானச வாசக காயிக ரூபமான -கதி த்ரயத்தையும்
காட்டவற்றாய் இருக்க -மானசமான அத்யவசாய மாத்ரத்திலே ஒதுக்குகிறது என் -என்ன
அருளிச் செய்கிறார் –

அதாவது –
சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும்  -திரு வாய் மொழி -6-5-11–என்கிறபடி
கரண த்ரயத்தாலும் உண்டான ஸ்வீகாரம் அதிகார பூர்த்திக்கு உடலாகையாலே –
வர்ணோக்தி ரூபமான வாசிகமும் –
அஞ்சலியாதி ரூபமான காயிகமும் –
இந்த ஸ்வீகாரத்துக்கு அபேஷிதங்களாய் இருக்க செய்தேயும் -ஞானான் மோஷ –
ஆகையாலே -அவை இரண்டையும் ஒழிய மானசமான அனுஷ்டான மாத்ரத்தைச்
சொல்லுகிறது -என்கை –
ஆக பிரதி பதம் அர்த்தம் அருளிச் செய்தார் ஆயிற்று –

(சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவ பிரானையே
தந்தை தாய் என்றடைந்த வண் குரு கூரவர் சடகோபன்
முந்தை ஆயிரத்துள் இவை தொலை வில்லி மங்கலத்தைச் சொன்ன
செந்தமிழ் பத்தும் வல்லார் அடிமை செய்வார் திருமாலுக்கே.–6-5-11-)

————————————————————-

ஆக -த்யாஜ்யத்தைச் சொல்லி –
த்யாக பிரகாரத்தைச் சொல்லி –
பற்றப்படும் உபாயத்தைச் சொல்லி –
உபாய நைரபேஷ்யம்  சொல்லி –
உபாயத்வம் சொல்லி –
உபாய ஸ்வீகாரம் சொல்லுகிறது –சூரணை -241-

இனி பூர்வார்த்தத்தால் சொல்லுகிற அர்த்தத்தை அநுவதித்து நிகமிக்கிறார் –
அதாவது –
ஆக பூர்வ அர்த்தத்தால் –
சர்வ தர்மான் -என்று த்யாஜ்யத்தைச் சொல்லி –
பரித்யஜ்ய -என்று த்யாக பிரகாரத்தைச் சொல்லி –
மாம்-என்று பற்றப்படும் உபாயத்தைச் சொல்லி –
ஏகம் -என்று உபாய நைரபேஷயம் சொல்லி –
சரணம் -என்று உபாயத்வம்  சொல்லி –
வ்ரஜ -என்று உபாய ஸ்வீகாரம் சொல்லுகிறது -என்கை

—————————————————

அஹம்-சூரணை -242

அனந்தரம் உத்தர அர்த்தத்துக்கு அர்த்தம் அருளிச் செய்வதாகக் கோலி-அதில்
பிரதம பதத்தை உபாதானம் பண்ணுகிறார் -அஹம் -என்று –

——————————————————-

ஸ்வ க்ருத்யத்தை அருளிச் செய்கிறான் –சூரணை -243

இவ் உத்தர அர்த்தத்தில் ஈஸ்வரன் செய்து அருளுகிற அம்சத்தை அருளிச் செய்கிறார் –
அதாவது -அதிகாரி க்ருத்யம் இறே பூர்வ அர்த்தத்தில்  சொல்லிற்று –
உபாய பூதனான தன்னுடைய க்ருத்யத்தை அருளிச் செய்கிறது இதிலே இறே-

———————————————-

சர்வஞ்ஞானாய் -சர்வ சக்தியாய் -ப்ராப்தனான -நான் –சூரணை -244-

இனி இப் பதத்துக்கு அர்த்தம் அருளிச் செய்கிறார் –

அதாவது
யஸ் சர்வஞ்ஞஸ் சர்வவித் -என்கிறபடியே -சர்வத்தையும் அறியுமவனாய் –
பராச்ய சக்திர் விவிதைவ ஸ்ருயதே -என்கிறபடி எல்லா சாமர்த்தத்தையும்
உடையனாய் -சேஷி ஆகையாலே -ப்ராப்தனாய் இருக்கிற நான் -என்கை-

————————————————-

இவன் கீழ் நின்ற நிலையும்-
மேல் போக்கடியும் அறிகையும் –
அறிந்தபடி செய்து தலைக் கட்டுகைக்கும் –
ஏகாந்தமான குண விசேஷங்களையும் –
தன் பேறாக செய்து தலைக் கட்டுகைக்கு ஈடான
பந்த விசேஷத்தையும் காட்டுகிறது –சூரணை -245-

அல்லாத குணங்கள் எல்லாம் கிடக்க -இந்த குண விசேஷங்களை -இவ் அஹம் சப்தம் –
காட்டுகிற இதுக்கு பிரயோஜனம் அருளிச் செய்கிறார் –

அதாவது
இச் சேதனனுக்கு அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட ப்ராப்திகளை பண்ணும் அளவில் –
இவன் பூர்வத்தில் நின்ற நிலையும் –
மேலே போக தக்க வழியும் அறிகைக்கும் –
அறிந்த படி அவற்றை செய்து தலைக் கட்டுகைக்கும் –
தக்கவையாய் இருந்துள்ள-சர்வஞ்ஞ்த்வ சர்வ சக்தித்வங்கள் ஆகிற குண விசேஷங்களையும் —
இவன் கார்யம் செய்யும் இடத்தில் இவனுக்காக அன்றிக்கே தன் பேறாகச் செய்து
தலைக் கட்டுகைக்கு ஈடான சேஷத்வ ரூப பந்த விசேஷத்தையும் –
பிரகாசிப்பிக்கிறது -என்கை –

மாம்-என்கிற இடத்தில் ஆஸ்ரயண த்துக்கு ஏகாந்தமான குண விசேஷங்கள் பிரகாசித்தால் போலே –
அஹம்-என்கிற இடத்திலும் கார்ய கரத்வத்துக்கு ஏகாந்தமான குண விசேஷங்கள் பிரகாசிக்கும் இறே –
வாத்சல்யாதிகள் -இல்லாத போது ஆஸ்ர்யணம் கூடாது போலே -ஞான சக்த்யாதிகள் இல்லாத போது –
கார்ய கரத்வம் கிடையாமையாலே -இவ் இடத்தில் ஞான பிராப்தியும் சொன்ன இது பூர்த்திக்கும் உப லஷணம்-

————————————————————

தனக்காகக் கொண்ட சாரத்திய வேஷத்தை
அவனை இட்டுப் பாராதே -தன்னை இட்டுப் பார்த்து –
அஞ்சின அச்சம் தீர -தானான தன்மையை –
அஹம் -என்று காட்டுகிறான் –சூரணை -246-

இப் பதத்தில்-மாம் -என்கிற இடத்தில் சாரதியாய் நின்ற பாரதந்த்ர்யத்துக்கு எதிர்த் தட்டான
அவன் ஸ்வாதந்த்ர்யத்தை பிரகாசிப்பித்தமையை அருளிச் செய்கிறார் –

அதாவது –
மாம் -என்ற சாரத்திய வேஷத்தோடே நிற்கிற தன்னைப் பற்றிச் சொன்ன போது –
அர்ஜுனன் தன்னுடைய ரஷண அர்த்தமாக ஏறிட்டு கொண்ட சாரத்திய வேஷத்தை –
சர்வதிகனானவன் இப்படி தாழ நின்றது தன் குணத்தாலே இறே -என்று அவனை இட்டுப் பாராதே –
நமக்கு இழி தொழில் செய்து சாரதியாய் நிற்கிறவன் அன்றோ -என்று தன்னை இட்டுப் பார்த்து –
சர்வ தர்மங்களையும் விட்டு என்னைப் பற்று என்னா நின்றான் -இது என்னாகக் கடவது -என்று
அஞ்சின அச்சம் தீர ஸ்வாதீன த்ரிவித சேதன அசேதன ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருதிகனாய்க் கொண்டு –
நிரந்குச ஸ்வதந்த்ரனாய் இருக்கிற தன்னுடைய யதாவஸ்தித வேஷத்தை -அஹம் -என்று
தர்சிப்பிக்கிறான் -என்கை –

———————————————

கீழில்  பாரதந்த்ர்யமும் இந்த ஸ்வாதந்த்ர்யத்தின் உடைய எல்லை நிலம் இறே –சூரணை-247-

ஏதம் பூதனானவன் பரதந்த்ரன் ஆனதும் தனக்கு ஸ்வரூபமாய்  செய்தது அன்று
என்னும் இடத்தை அருளிச் செய்கிறார் –

அதாவது –
கீழ் சாரதியாய் நின்ற பாரதந்தர்யமும் -நினைத்தது செய்யும் அளவில் தனக்கொரு
நிர்வாகர் இல்லாதபடியான இந்த ஸ்வாதந்த்ர்யத்தின் உடைய ஸீமா பூமி இறே -என்கை –

——————————————————–

த்வா -அஞ்ஞனாய் -அசக்தனாய் -அப்ராப்தனாய்-என்னையே
உபாயமாகப் பற்றி இருக்கிற  உன்னை –சூரணை -248-

அநந்தரம் த்வதீய பதத்தை உபாதானம் பண்ணுகிறார் -த்வா -என்று
அதுக்கு அர்த்தம் அருளிச் செய்கிறார் –

அதாவது
உன் கார்யங்கள் அறிகைக்கு தக்க ஞானம் இல்லாதவனாய் –
அறிந்தாலும் செய்து தலைக் கட்டிக் கொள்கைக்கு சக்தி இல்லாதவனாய் –
அது தான் உண்டானாலும் உன் உடைய ரஷணத்தில் உனக்கு பிராப்தி இல்லாதவனாய் –
இப்படி இருக்கையாலே –
சர்வ தர்மங்களையும் விட்டு என்னையே நிரபேஷ உபாயமாக பரிக்ரஹித்து இருக்கிற உன்னை -என்கை –

—————————————————–

சர்வ பாபேப்யோ -மத் ப்ராப்தி ப்ராபகங்கள் என்று
யாவை யாவை சில பாபங்களைக் குறித்து அஞ்சுகிறாய்-
அவ்வோ பாபங்கள் எல்லாவற்றிலும் நின்று –சூரணை -249-

அநந்தரம் த்ருதீய பதத்தை உபாதானம் பண்ணுகிறார் -சர்வ பாபேப்யோ -என்று –
இதுவும் -பாபமும் -பஹூ வசனமும்- சர்வ சப்தமுமாய் -த்ரி பிரகாரமாய் -இருக்கையாலே –
இம் மூன்றையும் உள் கொண்டு -இப் பதத்துக்கு அர்த்தம் அருளிச் செய்கிறார் –

அதாவது
பாபம் ஆகிறது -இஷ்ட விரோதியாயும் அநிஷ்ட ஹேதுவாயும்-இருக்கும் அது ஆகையாலும் –
மோஷ பிரகரணம் ஆகையாலே இவ் இடத்தில் இஷ்ட விரோதிகள் ஆகிற பகவத் லாப
விரோதிகள் ஆகையாலும் –
அதில் ஞான விரோதியும் -ருசி விரோதியும் உபாய விரோதியும்- பண்டே நிவ்ருத்தம் ஆகையாலும் –
இனி உள்ளது ப்ராப்தி விரோதி ஆகையாலே நீ என்னை பிராபிக்கைக்கு பிரதி பந்தகங்கள் என்று
யாவை யாவை சில பாபங்களை உத்தேசித்து பயப்படுகிறாய் –
அந்த அந்த பாபங்கள் எல்லாவற்றிலும் நின்று -என்கை –

—————————————————————–

பொய் நின்ற ஞானமும் -பொல்லா ஒழுக்கும் -அழுக்கு உடம்பும் –
என்கிறபடியே
அவித்யா கர்ம வாஸநா ருசி பிரகிருதி சம்பந்தங்களைச் சொல்லுகிறது –சூரணை -250-

அதில் பஹூ வசன விவஷிதங்களை அருளிச் செய்கிறார் –

அதாவது –
பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் -என்று
உத்பத்தி விநாசாதி-யோகத்தாலே -அசத்திய சப்த வாச்யனான அசேதன விசேஷத்தில் ஆத்ம ஞானமும்
அந்த தேக ஆத்ம அபிமானம் அடியான -சாம்சாரிக துஷ்கர்ம ப்ரவர்த்தியும் –
அந்த கர்மம் அடியாக வரக் கடவதான -மாம்ச அஸ்ருகாதி மல ரூப தேக சம்பந்தமும் –
என்று சொல்லுகிறபடியே –
அவித்யையும் -கர்மமும் -வாசனையும் -ருசியும் -பிரகிருதி சம்பந்தமும்
ஆகிற அவற்றைச் சொல்லுகிறது -என்கை –
இவற்றில் அவித்யை ஆவது -ஞான அனுதய ரூபமாயும் -அன்யதா ஞான ரூபமாயும்-
விபரீத ஞான ரூபமாயும் -மூன்று வகைப் பட்ட அஞ்ஞானமும்
கர்மம் ஆவது -புண்ய பாவம் -மோஷத்தைப் பற்ற பாபத்தோபாதி புண்ணியமும் த்யாஜ்யமாம் –
புண்ய பாபே விதூயே -என்னக் கடவது இறே –
வாசனை ஆவது -அஞ்ஞான வாசனையும் -கர்ம வாசனையும் -பிரகிருதி சம்பந்த வாசனையும் –
ருசியும் -விஷய பேகத்தாலே பஹூ விதையாய் இருக்கும் –
பிரகிருதி சம்பந்தம் ஆவது -ஸ்தூல சூஷ்ம ரூபமாய் இருந்துள்ள அசித் சம்பந்தம் –

(பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்
இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை உயிர் அளிப்பான்
எந்நின்ற யோனியுமாய்ப்ப் பிறந்தாய் இமையோர் தலைவா
மெய்ந்நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே –1–)

——————————————————————-

தருணச் சேத கண்டூ யநாதிகளை போலே –
பிரகிருதி வாசனையாலே -அநு வர்த்திக்கும் அவை என்ன –சூரணை -251-

லோகாபவாத பீதியாலும் -கருணையாலும் -கலக்கத்தாலும் -செய்யும் அவை என்ன –
எல்லாவற்றையும் நினைக்கிறது –
இனி சப்த விவஷிதத்தை அருளிச் செய்கிறார் –

அதாவது –
துரும்பு நறுக்குகை -தினவு தின்ற இடம் சொரிகை -தொடக்கமானவை போலே –
அபுத்தி பூர்வகமாக பிரகிருதி வாசனையாலே அநு வர்த்திக்கும் உத்த ராகங்கள் என்ன –
நாம் இவற்றைச் செய்யாத போது -லோகம் நம்மை அபவாதம் சொல்லுமே -என்கிற பயத்தாலும் –
நம்மை கண்டு லௌகிகர் இவற்றைத் தவிருவர்கள் ஆகில் அவர்களுக்கு விநாசம் ஆமே -ஐயோ -என்ற
கிருபையாலும் செய்யும் நித்ய நைமித்திய கர்மங்கள் என்ன –
ரஜஸ் தமஸ் ஸூக்களால் கலங்கி த்யக்த உபாயங்களில் அன்வயித்தல் -புன பிரபத்தி பண்ணுதல் –
செய்யும் அவை என்ன -எல்லாவற்றையும் நினைக்கிறது -என்கை –

—————————————————————–

உன்மத்த பிரவ்ருத்திக்கு க்ராம ப்ராப்தி போலே -த்யஜித்த உபாயங்களிலே இவை
அன்விதங்கள் ஆமோ -என்று நினைக்க வேண்டா –சூரணை -252-

சாதனா புத்த்யா செய்யாதவையும் -வஸ்துகத்யா  சாதனா கோடியிலே அன்வயிக்கும்-
என்னுமத்தை சங்கா பூர்வமாக அருளி செய்கிறார் –

அதாவது –
உந்மாதச்  சித்த விப்ரம-என்கிற படியே சித்த விப்ரமம் பிறந்தான் ஒருவன் –
இன்ன ஊருக்குப் போகிறோம் -என்ற நினைவு இன்றிக்கே ஒரு வழியே போகா நின்றால்-
அவ்வழிக்கு  ஓர் ஊரூடே சம்பந்தம் உண்டாய் இருக்கையாலே அவ்வூரிலே சென்று சேருமா போலே –
சாதனா புத்தி ரஹிதமாக லோகாபவாத பீத்யாதிகளாலே செய்யப் படுகிற இவை –
விட்ட உபாயங்களிலே அன்விதங்கள் ஆமோ -என்று நினைக்க வேண்டா –
அன்விதங்களாயே விடும் என்ற படி –

ஆன்ரூ சம்சய பிரதானராய் அனுஷ்டித்தாலும் ஏறிட்ட கட்டி ஆகாசத்திலே நில்லாதது போலே
அவையும் ஒரு பலத்தோடே சந்திப்பிக்கக் கடவது –
ஆகையால் அவையும் பாப சப்த வாச்யமாகக் கடவது -என்று இறே
தனி சரமத்தில் இவர் தாமே அருளிச் செய்கிறார் –

————————————————-

கலங்கி உபாய புத்த்யா பிரபத்தியும் பாதகத்தோடு ஒக்கும் –சூரணை -253-

அது தானே ஆகிறது -புன ப்ரபத்திக்கு தோஷம் எது என்ன -அருளிச் செய்கிறார் –

அதாவது
சக்ருத் அனுஷ்டானம் ஒழிய புனர் அனுஷ்டானத்தை சஹியாத பிரபத்தி
ஸ்வாபத்தை அறியாதே கலங்கி அநிஷ்ட நிவ்ருத்திகாக வாதல் -இஷ்ட ப்ராப்த்திக்காக வாதல் –
உபய புத்த்யா மீண்டு பண்ணும் பிரபத்தியும் -அத பாதக பீதஸ்த்வம்-என்று
உபாயாந்தரம் போலே பாதக சமம் -என்கை –

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முமுஷுப்படி -சரம ஸ்லோஹ பிரகரணம்-ஸூர்ணிகை –211–235–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் –ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் அரும்பத விளக்கம் —

January 11, 2024

மாம்-சர்வ ரஷகனாய் –
உனக்கு கை ஆளாய் –
உன் இசைவு பார்த்து –
உன் தோஷத்தை போக்யமாக் கொண்டு –
உனக்கு புகலாய்-
நீர் சுடுமா போலே சேர்ப்பாரே பிரிக்கும் போதும் விடமாட்டாதே ரஷிக்கும்
என்னை –சூரணை-211-

அநந்தரம்-த்ருதீய பதத்தை உபாதானம் பண்ணுகிறார் -அதுக்கு அர்த்தம் அருளிச் செய்கிறார் –

அதாவது –
நம்முடைய ரஷணம் இவன் பண்ணுமோ  -பண்ணானோ -என்று சம்சயிக்க வேண்டாதபடி
சர்வருடைய ரஷணத்தில் தீஷிதனாய் -தன் பெருமையும் நம் சிறுமையும் பார்த்து நம்மோடு
கலப்பற்று இருக்குமோ -என்ன வேண்டாதபடி –

சேநயோர் உபயோர் மத்யே ரதம் ஸ்தாபய-என்று ஏவிக் கொள்ளலாம் படி உனக்கு கையாளாய் –
உன்னை ரஷிக்கையில் உண்டான நசையால்-ரஷ்ய அபேஷாம் ப்ரதீஷதே -என்கிற படியே

ரஷ்ய பூதனான உன் இசைவு பார்த்து -நம் குற்றம் கண்டு இகழுமோ -என்று அஞ்ச வேண்டாத படி –
அஸ்தான சிநேக காருண்ய தர்ம அதர்மாதி யாகுலனான -உன் தோஷத்தை போக்யமாகக் கொண்டு –
அசரண்ய சரண்யன் ஆகையால் ஜலம் ஔஷண்யத்தைப் பஜிக்குமா  போலே அபராத ஷாமணம் பண்ணி
கடிப்பிக்கும் புருஷகார பூதரே -தாமரையாள் ஆகிலும் சித குரைக்குமேல்-என்கிறபடியே

குற்றத்தைக் காட்டி அகற்றும் போதும் விட ஷமண் அன்றிக்கே -என் அடியார் அது செய்யார் -என்று
மறுதலித்து ஒருதலை நின்று ரஷிக்கும் என்னை-என்கை-

————————————————————-

இத்தால் பர வ்யூஹங்களையும்
தேவதா அந்தர்யாமித்வத்தையும்
தவிர்க்கிறது –சூரணை -212-

மாம்-என்று விபவ ரூபத்தைக் காட்டுகையாலே வ்யாவர்த்திக்கப் படுகிறவற்றை
அருளிச் செய்கிறார் –

அதாவது –
என்னை -என்று அவதரித்து
கண்ணுக்கு இலக்காகாய்  அணுகி நிற்கிற தன்னை
வரணி யனாகச் சொன்ன இத்தால் -தேச விப்ரக்ருஷ்டதையாலே -காணவும் கிட்டவும்
ஒண்ணாத படி இருக்கிற பர வ்யூஹங்களையும் –
அசாதாரண விக்ரக யுக்தம் அன்றிக்கே -உபாயாந்தர நிஷ்டருக்கு உத்தேச்யமாய் இருக்கிற
அக்நி இந்த்ராதி தேவத அந்தர்யாமித்வத்தையும் வ்யாவர்த்திக்கிறது -என்கை –

—————————————————————–

தர்மம் சமஸ்தானம் பண்ணப் பிறந்தவன் தானே -சர்வ தர்மங்களையும் விட்டு
என்னைப் பற்று -என்கையாலே -சாஷாத் தர்மம் தானே என்கிறது –சூரணை -213-

தர்மங்களை எல்லாம் விட்டு தன்னைப் பற்றச் சொல்லுகையாலே பலிதமான
தொரு அர்த்த விசேஷத்தை அருளிச் செய்கிறார் –

அதாவது –
தர்ம சம்ஸ்தபநார்த்தாய சம்பவாமி யுகே யுகே -என்கிறபடியே –
ஸ்வ ப்ராப்திக்கு உடலான தர்மத்தை ஸ்தாபிக்கப் பிறந்தவன் தானே –
சர்வ தர்மான் பரித்யஜ்ய -என்று மோஷ சாதனதயா சாஸ்தர சித்தங்களான
சர்வ தர்மங்களையும் விட்டு என்னைப் பற்று -என்று சொல்லுகையாலே –
அவை சாஷாத் தர்மங்கள் அன்று –
ஸ்தாப நீயமான சாஷாத் தர்மம் க்ருஷ்ணம் தர்மம் சநாதனம்-என்று
சனாதன தர்மமான தானே என்னும் இடம் சொல்லுகிறது -என்கை –

———————————————————-

இத்தால் விட்ட ஸ்தானங்களில் ஏற்றம் சொல்லுகிறது –சூரணை -214-

இத்தால் என் சொல்லுகிறது என்ன -அருளிச் செய்கிறார் –

அதாவது –
இப்படி சொன்ன இத்தால் கீழ் விட்ட ஸ்தானங்களில் காட்டில் இந்த
சாதனத்துக்கு  உண்டான ஏற்றம் சொல்லுகிறது -என்கை –

——————————————————-

அதாவது
சித்தமாய்-பரம் சேதனமாய்-சர்வ சக்தியாய்-
நிர் அபாயமாய்-ப்ராப்தமாய்-சஹாயாந்தர நிர் அபேஷமாய்-இருக்கை –சூரணை -215-

அது தான்  எது -என்ன-அருளிச் செய்கிறார் –
இத்தால் கீழ் விட்ட சாதனங்களில் காட்டில் இதுக்கு ஏற்றம் ஆவது-
சேதன பிரவ்ருத்தியாலே தன ஸ்வரூப சித்தி யாம்படி இருக்கை அன்றிக்கே –
சனாதன தர்மம் ஆகையாலே -சித்தமாய் –
யஸ் சர்வஞ்ஞஸ் சர்வவித் -இத்யாதிகளில் சொல்லுகிற
சர்வஞ்ஞ விஷயம் ஆகையாலே
பரம சேதனமாய் –
பராஸ்ய சக்திர் விவிதைவ ச்ரூயதே -என்கிறபடியே

சர்வ சக்தியாய்
சேதன சாத்யமாய்
நடுவே அபாயங்கள் புகுருகைக்கு அவகாசம் உண்டாகும் படி இருக்கை அன்றிக்கே
சித்த வஸ்துவாய் இருக்கையாலே
நிர் அபாயமாய்
பர தந்த்ரனான இச் சேதனனுடைய ஸ்வரூபத்துக்கு அப்ராப்தமாய் இராதே
ப்ராப்தமாய் –
கீழ்ச் சொன்ன பரம சேதனத்வாதிகளாலே சஹாயாந்தர நிர் அபேஷமாய் இருக்கை -என்ற படி-

————————————————————–

மற்றை உபாயங்கள் சாத்தியங்கள் ஆகையாலே –
ஸ்வரூப சித்தியில் சேதனனை அபேஷித்து இருக்கும் –
அசேதனங்களுமாய்-அசக்தங்களாய் -இருக்கையாலே கார்ய சித்தியிலே
ஈஸ்வரனை அபேஷித்து இருக்கும் –
இந்த உபாயம் அவற்றுக்கு எதிர் தட்டாய் இருக்கையாலே
இதர நிர பேஷமாய் இருக்கும்-சூரணை -216-

மற்றை உபாயங்கள் -என்று தொடங்கி- மேல் மூன்று வாக்யத்தாலே
அதாவது –

இத்தை ஒழிந்த உபாயங்கள் சேதன பிரவ்ருத்தியாலே சாதிக்கப் படுமவை யாகையாலே –
தம்முடைய ஸ்வரூப சித்தியில் பிரவ்ருத்தி கரனான சேதனனை அபேஷித்து இருக்கும் –
இவனுக்கு செய்ய வேண்டுமவை அறிகைக்கும்
அது தன்னை செய்து தலைக் கட்டுகைக்கும்
யோக்யதை இல்லாத அசேதனங்களுமாய் -அசக்தங்களுமாய் -இருக்கையாலே

சேதனனுடைய இஷ்ட அநிஷ்ட பிராப்தி பரிஹார ரூபமான கார்யத்தினுடைய சித்தியில் –
பலமத  உபபத்தே -என்கிறபடியே பல பிரதத்வ உப யோகியான சர்வ சக்தித்வாதி
உபபத்தி உடையவனான ஈஸ்வரனை அபேஷித்து இருக்கும் –
இந்த உபாயம் சித்தத்தவ -பரம சேதனத்வ-சர்வ சக்தித்வங்களாலே அவற்றுக்கு
எதிர் தட்டாய் இருக்கையாலே அந்ய நிர பேஷமாய் இருக்கும் -என்கை –

——————————————————————

இதில் வாத்சல்ய -ஸ்வாமித்வ-சௌசீல்ய -சௌலப்யங்கள் -ஆகிற
குண விசேஷங்கள் நேராக பிரகாசிக்கிறது –சூரணை -217-

இனி இப் பதத்தில் ஆஸ்ரயண சௌகர்ய ஆபாதங்களான குண விசேஷங்கள் எல்லாம்
பிரகாசிக்கிற படியை அருளிச் செய்கிறார் –

அதாவது
அதர்ம புத்தியாலே தர்மத்தில் நின்றும் நிவ்ருத்தனான அர்ஜுனனுக்கு குற்றம் பாராதே –
அபேஷித்த அர்த்தங்கள் அருளிச் செய்கையாலே -வாத்சல்யம் பிரகாசிக்கிறது –
தன்னுடைய பரத்வத்தை பலகாலம் அருளிச் செய்த அளவன்றிகே அர்ஜுனன்
பிரத்யஷிக்கும் படி பண்ணுகையாலே -ஸ்வாமித்வம் பிரகாசிக்கிறது –

ஹே கிருஷ்ண ஹே யாதவ -என்று அர்ஜுனன் தானே சொல்லும்படி
இவனோடு கலந்து பிரியமான திரு மேனியை கண்ணுக்கு இலக்காகும் படி
பண்ணுகையாலே -சௌசீல்யம் பிரகாசிக்கிறது –

அப்ராக்ருதமான திரு மேனியை கண்ணுக்கு இலக்காகும் படி பண்ணுகையாலே
சௌலப்யம் பிரகாசிக்கிறது -என்கை-

குண விசேஷங்கள் -என்றது ஆஸ்ரயணதுக்கு அபேஷிதங்கள் ஆனவை என்று
தோற்றுகைக்காக-
நேராக பிரகாசிக்கிறது -என்றது -ஸ்புடமாக பிரகாசிக்கிறது -என்றபடி-

—————————————————–

கையும் உழவு கோலும்
பிடித்த சிறு வாய் கயிறும்
சேநா தூளி தூ சரிதமான திருக் குழலும்
தேருக்கு கீழே நாற்றின திரு அடிகளுமாய் நிற்கிற
சாரத்திய வேஷத்தை -மாம்-என்று காட்டுகிறான் –சூரணை -218-

இவை எல்லாவற்றிலும் வைத்து கொண்டு மிகவும் அபேஷிதம் சௌலப்யம் ஆகையாலே
அவதார பிரயுக்தமான சௌலப்யத்து அளவு அன்றிகே -சாரத்திய அவஸ்திகனாய் நிற்கிற
சௌலப்ய அதிசயத்தை தர்சிப்பத்தமையை அருளிச் செய்கிறார் –

அதாவது –

குதிரைகளை பிரேரித்து நடத்துகைக்காக திருக் கையிலே தரித்த உழவு கோலும்
அவற்றை இடவாய் வலவாய் திருப்புகைக்காகவும்
நிறுத்தருள வேண்டும் இடத்தில் தாங்கி நிறுத்துகைக்காகவும் பிடித்த சிறு வாய் கயிறும் –
திருமுடியில் ஓன்று ஆச்சாதியாமல் நிற்க்கையாலே சேநா தூளியாலே புழுதி படைத்த திரு குழலும்
தேர் தடவிய பெருமான் கனை கழல் -திரு வாய் மொழி -3-6-10–என்கிறபடியே
சாத்தின சிறு  சதங்கையும் தானுமாக தேருக்கு கீழே நாற்றின திரு அடிகளுமாய் நிற்கிற
சாரத்திய வேஷத்தை-என்னை-என்று காட்டுகிறான்-என்கை –
ஆக
த்ருதீய பதார்த்தை அருளிச் செய்தார் ஆயிற்று –

(கடல் வண்ணன் கண்ணன் விண்ணவர் கருமாணிக்கம் எனது ஆர் உயிர்
பட அரவின் அணைக் கிடந்த பரஞ்சுடர் பண்டு நூற்றுவர்
அடவரும் படை மங்க ஐவர்கட்கு ஆகி வெஞ்சமத்து அன்று தேர்
கடவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொல் கண்களே?–3-6-10-)

———————————————————–

ஏகம்–சூரணை -219-

அநந்தரம் சதுர்த்திய பதத்தை உபாதானம் பண்ணுகிறார் -ஏகம்-என்று –

———————————————————–

இதில் -ஏக -சப்தம் ஸ்தான பிரமாணத்தாலே அவதாரணத்தைக் காட்டுகிறது –சூரணை -220-

அதுக்கு அர்த்தம் அருளிச் செய்கிறார் –

அதாவது
இவ் உபாய விசேஷத்தை சொல்லும் இடங்களில் பல இடங்களிலும் அவதாரண பிரயோகம்
உண்டு ஆகையாலே -உகாரம்-போலே இந்த சப்தமும் -ஸ்தான பிரமாணத்தாலே அவதாரணம் ஆகிற
அர்த்தத்தைக் காட்டுகிறது -என்கை-

————————————————————–

மாம் ஏவ  யே  ப்ரபத்யந்தே –
தமேவ சாத்யம்-
த்வமே வோபாய பூதோ மே பவ –
ஆறு எனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய்-என்றும்
சொல்லுகிறபடியே-சூரணை -221-

இவ் உபாயத்தை நிர்த்தேசித்த அநந்தரம் அவதாரண பிரயோகம் பண்ணின வசனங்கள்
பலவற்றையும் இதுக்கு உதாரணமாக அருளிச் செய்கிறார் –

அதாவது
மாமேவ யே ப்ரபத்யந்தே -பகவத் கீதை –7-14-என்று என்னையே யாவர் சிலர்
பிரபத்தி பண்ணுகிறார்கள் என்றும் –
தமேவ சாத்யம் புருஷம் ப்ரபத்யே -பகவத் கீதை -15-4–என்று
அந்த புருஷனையே பிரபத்தி பன்னுகிறேன் என்றும் –
த்வமே வோபாய பூதோ மே பவ -என்று நீயே எனக்கு உபாயமாக வேணும் என்றும்
ஆறு எனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய் -திரு வாய் மொழி -5-7-10–என்று எனக்கு
உபாயம் தருகிற இடத்தில் -உன் திரு அடிகளையே உபாயமாக தந்தாய் -என்றும்
சொல்லுகிற இவ் இடங்களில் -மாமேவ -தமேவ -த்வமேவ -நின் பாதமே -என்று
ஸ்வீகார வஸ்து நிர்த்தேச அநந்தரம் அவதாரணத்தை சொல்லுகிற பிரகாரத்தில் -என்கை-

(ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் உனக் கோர் கைம்
மாறு நான் ஒன்றிலேன் என தாவியும் உனதே
சேறு கொள் கரும்பும் பெருஞ் செந்நெலும் மலி தண் சிரீவர மங்கை
நாறு பூந்தண் துழாய் முடியாய்! தெய்வ நாயகனே!–5-7-10-)

———————————————————————-

இத்தால் -வ்ரஜ-என்கிற ஸ்வீகாரத்தில்  உபாய பாவத்தைத் தவிர்க்கிறது –சூரணை -222-

ஏதத்-வ்யாவர்த்தம் எது -என்ன -அருளிச் செய்கிறார் –

அதாவது –
உபாயாந்தரங்கள் வ்யாவர்த்தமாம் அளவில் பௌநருக்த்யம் பிரசங்கிக்கை ஆகையாலும் –
தேவதாந்த்ரங்கள் வ்யாவர்த்தமம் அளவில் -மாம்-என்று அசாதாரண ஆகாரத்தைச் சொல்லுகையாலே –
அது கீழே சித்தம் ஆகையாலும் -இந்த அவதாரணத்தால் -வ்ரஜ-என்று மேல் சொல்லுகிற -ஸ்வீகாரத்தில்
உபாய பாவத்தைக் கழிக்கிறது-என்கை –
இந்த ஸ்வீகாரம் தானும் அந்வய வ்யதிரேகத்தாலே சாதனம் என்று நினைக்கலாய் இருக்கையாலே
இதன் சாதனத்வம் அவசியம் கழிக்க வேணும் இறே-

———————————————————

ஸ்வீகாரம் தானும் அவனாலே வந்தது –சூரணை -223-

ஸ்வீகார அநந்தரம் ஒழிய உபாயம் கார்யகரம் ஆகாயமையாலே பேற்றுக்கு இது
அவசியம் வேண்டி இருக்க -இதில் உபாயத்வத்தை கழித்த படி தான் எங்கனே என்ன -அருளிச் செய்கிறார் –

அதாவது
ஸ்வீகார அநந்தரம் இவனுக்கு அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிரபத்தியும் பண்ணுகையாகிற இது –
அவனாலே ஆனால் போலே -தத் பூர்வபாவியான ஸ்வீகாரம் தானும் அவனாலே உண்டானது என்கை –
இத்தால் ஸ்வீகாரத்துக்கு உபாய கார்யத்வம் ஒழிய உபாயத்வம் இல்லை என்றது ஆயிற்று –

—————————————————–

ஸ்ருஷ்டி அவதாராதி முகத்தாலே க்ருஷி பலம் –சூரணை -224-

அவனாலே வருகையாவது என் -என்ன -அருளிச் செய்கிறார்

அதாவது –
கரண களேபர விதுரனாய்–போக மோஷ சூன்யனாய் -அசித விசேஷிதனாய்-கடக்கிற தசையிலே –
கரண களேபர விசிஷ்டனாய் -ஞான விகாச யுக்தனாம் படி சிருஷ்டித்து –
எதிர் சூழல் புக்கு –திரு வாய் மொழி -2-7-6-என்கிறபடி  -இவனை அங்கீகரிக்கைக்காக அநேக அவதாரங்களைப் பண்ணி –
அவதரித்த இடங்களிலே ஆஸ்ரயண ருசி விசுவாச ஜனகமான தன் குண சேஷ்டிதாதிகளை
பிரகாசிப்பித்தது -இவ் வழியாலே அவன் பண்ணின க்ருஷியாலே பலித்தது  இது -என்கை-

(மது சூதனை யன்றி மற்றிலேன் எத்தாலும் கருமமின்றி
துதி சூழ்ந்த பாடல்கள் பாடியாட நின்றூழி யூழி தொறும்
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே யருள்கள் செய்ய
விதி சூழ்ந்ததால் எனக்கேல் யம்மான் திரிவிக்ரமனையே –2-7-6-)

————————————————————

அதுவும் அவனது இன்னருளே –சூரணை -225-

இவ் அர்த்தத்தில் பிரமாணம் காட்டுகிறார் –

அதாவது
உணர்வில் உம்பர் ஒருவனை அவனது அருளால் உறற் பொருட்டு
என் உணர்வில் உள்ளே இருத்தினேன் –திரு வாய் மொழி -8-8-3–என்று உணர்வு மிக்கு இருக்கக் கடவரான
நித்ய ஸூரிகளுடைய சத்தாதிகளுக்கு நிர்வாஹனான அத்வதீயன் ஆனவனை -அவனுடைய
அருளாலே ப்ராபிக்கைகாக -என்னுடைய அபேஷா ரூப ஞானத்துக்கு உள்ளே இருத்தினேன்
என்று -தம்முடைய ஸ்வீகாரத்தை அருளிச் செய்த அநந்தரம் -அதுவும் அவனது இன்னருளே –
என்று அந்த ஸ்வீகாரம் தானும் அவனுடைய நிர்ஹேதுக கிருபையினாலே உண்டானது -என்று
ஆழ்வார் அருளிச் செய்கையாலே
ஸ்வீகாரமும் அவனுடைய க்ருஷி பலம் என்று கொள்ள வேணும் -என்கை-

(உணர்விலும் உம்பர் ஒருவனை அவனது அருளால் உறல் பொருட்டு என்
உணர்வினுள்ளே யிருத்தினேன் அதுவுமவன தின்னருளே
உணர்வும் உயிரும் உடம்பும் மற்று உலப்பினவும் பழுதேயாம்
உணர்வைப் பெற ஊர்ந்திறவேறி யானும் தானாய் ஒழிந்தானே–8-8-3-)

———————————————————-

இத்தை ஒழியவும் தானே கார்யம் செய்யும் என்று நினைக்கக் கடவன் –சூரணை -226-

இப்படி யாகில் இந்த ஸ்வீகாரத்தில் சரக்கற நினைக்கக் கடவன் என்கிறார் –

அதாவது
இந்த ஸ்வீகாரத்துக்கும் தானே க்ருஷி பண்ணுபவன் ஒருவன் ஆகையாலே -இதுக்காக அன்று அவன்
நமக்கு கார்யம் செய்கிறது -இத்தை ஒழியவும் இவ் ஆத்மா உஜ்ஜீவகரனான தானே நம்முடைய
இஷ்ட அநிஷ்ட ப்ராப்தி பரிஹார ரூபமான கார்யத்தை செய்யும் என்று பிரதிபத்தி பண்ணக் கடவன்-என்கை–

——————————————————————

அல்லாத போது உபாய நைர பேஷ்யம் ஜீவியாது –சூரணை -227-

இப்படி நினைக்க வேண்டுகிறது என் -என்ன அருளிச் செய்கிறார் –
அதாவது
இத்தை ஒழியவும் கார்யம் செய்யும்-என்று நினையாதே -இதுவும் வேணும் அவன்  கார்யம் செய்கைக்கு –
என்று நினைக்கும் அளவில் உபாயத்தினுடைய சஹாயாந்தர நைரபேஷ்யம் ஜீவிக்கப் பெறாது என்கை –

—————————————————-

இது சர்வ முக்தி பிரசங்க பரிஹாரார்த்தம்
புத்தி சமாதாநார்த்தம்
சைதன்ய கார்யம்
ராக ப்ராப்தம்
ஸ்வரூபநிஷ்டம்
அப்ரதிஷேதத்யோதகம் –சூரணை -228-

ஆனால் இந்த ஸ்வீகாரம் தான் ஏதாவது என்ன -அருளிச் செய்கிறார் –

அதாவது
இந்த ஸ்வீகாரம் -இத் தலையில் ஒன்றும் இன்றிக்கே இருக்க
ஈஸ்வரன் தானே உஜ்ஜீப்பிக்கும் அளவில் எல்லாரும் பின்னை முக்தராக வேண்டாமோ -என்கிற
சர்வ முக்தி பிரசங்க பரிஹாரத்துக்கு உறுப்பு –

இது தான் -நெடும் காலம் நம்மை ரஷியாதவன் இன்று நம்மை ரஷிக்கும் என்று இருக்கிறது
நாம் என் கொண்டு -என்று இவன் தளும்பாமல் புத்தி சமாதானம் பிறந்து இருக்கைக்கு உறுப்பு –
இவன் தான் அசேதனம் அன்றிக்கே சேதனன் ஆகையாலே அவனே உபாயம் என்கிற அத்யவசாயம்
இவன் சைதன்யத்தினுடைய கார்யமாவது அன்றிக்கே இதில் ரசஞ்ஞனான இவனுடைய ராகத்தாலே
ப்ரப்தமாக இது ஸ்வரூபாதிரேகி அன்றிக்கே ததேக ரஷ்யத்வ ரூபமான ஸ்வரூபத்திலே நிற்குமது
அநாதி காலம் ஸ்வ ரஷணாதிகளாலே அவன் பண்ணும் ரஷணத்தை விலக்கிப் போந்த இவன்
அது தவிர்ந்தமைக்கு பிரகாசம்-என்கை –

——————————————————————-

கீழ் தானும் பிறருமான நிலையைக் குலைத்தான் –
இங்கு
தானும் இவனுமான நிலையைக் குலைக்கிறான்-சூரணை -229-

இனி -மாம் -என்கிற பதத்துக்கு கீழும் -இங்கும் -ஈஸ்வரனுடைய செயல்களை அருளிச் செய்கிறார் –

அதாவது –
சர்வ தர்மான் பரித்யஜ்ய -என்ற இடத்தில் சகல உபாயங்களையும் விடச் சொல்லுகையாலே
பல பிரதானனான தானும் உபாயாந்தரங்களுமாய்  கூடி நிற்கிற நிலையைக் குலைத்தான் –
ஏகம்-என்கிற இடத்தில் ச்வீகாரத்தில் உபாய பாவத்தை கழிகையாலே-உபாய பூதனான தானும்
தான் ஸ்வீகாரத்தில் உபாய புத்தி பண்ணி நிற்கிற இவனுமான நிலையைக் குலைக்கிறான் -என்கை
உபயாந்தரங்களை பிறர் என்றது -உன்னால் அல்லால் யாவராலும் –திரு வாய் மொழி –5-8-3-என்றால் போலே

(என்னான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
கன்னார் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அரு வாணாள்
செந்நாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக் காணே.–5-8-3-)

———————————————————

அவனை இவன் பற்றும் பற்று அஹங்கார கர்ப்பம் -அவத்யகரம் –சூரணை-230-

இனி சாதனா புத்யா இவன் பண்ணும் ஸ்வீகாரத்தினுடைய தோஷத்தை -அருளிச் செய்கிறார் –

அதாவது
நிருபாதிக ரஷகனான அவனை -தத் ரஷ்ய பூதனான இவன் -தன் ரஷணத்துக்கு
உறுப்பாக ஸ்வீகரிக்கிற ஸ்வீகாரம் ஸ்வ கர்த்ருத்வ  ரூப அஹங்கார கர்பமுமாய் –
பிதாவுக்கு புத்திரன் எழுத்து வாங்குமா போலே அவத்ய கரமுமாய் இருக்கும் -என்கை –

—————————————————–

அவனுடைய ஸ்வீகாரமே ரஷகம்–சூரணை -231

ஆனால் ரஷகம் ஆவது தான் எது -என்ன  -அருளிச் செய்கிறார் –

அதாவது
இவ் ஆத்மாவினுடைய ரஷணத்துக்கு கடவனான அவன்-இவனை நாம் ரஷிக்க கடவோம் -என்று
அபிமானித்து கொள்கையாகிற ஸ்வீகாரமே இவனை ரஷகமாய் அறுவது -என்கை-

—————————————————

மற்றை உபாயங்களுக்கு நிவ்ருத்தி தோஷம் –
இதுக்கு பிரவ்ருத்தி தோஷம் –சூரணை -232-

சேதன பிரவ்ருத்தியில் ஒன்றையும் இவ் உபாயம் சஹியாது என்னுமத்தை
தெளிவிக்கைக்காக -உபாயாந்தரங்களுக்கும் இவ் உபாயத்துக்கும் உண்டான
விசேஷத்தை அருளிச் செய்கிறார் –

அதாவது
சித்த உபாயமான இத்தை ஒழிந்த உபாயங்களுக்கு சேதன பிரவ்ருத்தியாலே
ஸ்வரூப சித்தி ஆக வேண்டுகையாலே -இவனுடைய ஸ்வ யத்ன நிவ்ருத்தி
தோஷமாய் இருக்கும் -இந்த உபாயத்துக்கு சஹாயாந்திர சம்சர்க்கம்
அசஹ்யம் ஆகையாலே இச் சேதனனுடைய  பிரவ்ருத்தி எனபது ஒன்றுமே
தோஷமாய் இருக்கும் -என்கை –

———————————————————

சிற்ற வேண்டா–சூரணை -233

சேதன வியாபாரம் ஒன்றும் வேண்டா என்னும் இடத்துக்கு பிரமாணம் காட்டுகிறார் –

அதாவது
சித்த உபாய ஸ்வீகாரம் சொல்லுகிற -மற்று ஓன்று இல்லை -திரு வாய் மொழி -9-1-7-என்கிற பாட்டிலே –
சிற்ற வேண்டா -என்று சிற்றுதல் சிதறுதலாய்-பரக்க ஒரு வியாபாரம் பண்ண வேண்டா –
என்கையாலே இவ் உபாயத்தில் இழியும் அவனுக்கு ஒரு வியாபாரம் பண்ண வேண்டா
என்னும் இடம் சொல்லிற்று  இறே -என்கை –

(மற்று ஓன்று இல்லை சுருங்கச் சொன்னோம் மா நிலத்து எவ் உயிர் க்கும்
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் கண்டீர்கள் அந்தோ
குற்றம் அன்று எங்கள் பெற்றத் தாயன் வட மதுரைப் பிறந்தான்
குற்றமில் சீர் கற்று வைகல் வாழ்தல் கண்டீர் குணமே–9-1-7-)

————————————————————-

நிவ்ருத்தி கீழே சொல்லிற்று–சூரணை -234-

இதுதான் இஸ் ஸ்லோகம் தனக்குள்ளே சொல்லிற்று என்கிறார் –

அதாவது –
சர்வ தர்மான் பரித்யஜ்ய -என்று சகல பிரவ்ருத்தி யினுடையவும் நிவ்ருத்தி யினுடையவும்
நிவ்ருத்தியே இவனுக்கு வேண்டுவது என்னும் இடம் கீழே சொல்லிற்று -என்கை –

———————————————————–

உபகார ஸ்ம்ருதியும் சைதன்யத்தாலே வந்தது –
உபாயத்தில் அந்தர்பவியாது –சூரணை-235-

ஆனால் உபகார ஸ்ம்ருதி தான் வேணுமோ -அது உபாயத்தில் முதலிடாதோ-என்ன
அருளிச் செய்கிறார் –

அதாவது
என்னை தீ மனம் கெடுத்தாய் -திரு வாய் மொழி 2-7-8-
மருத் தொழும் மனமே தந்தாய் – திரு வாய் மொழி -2-7-7
இத்யாதியாலே இவ் உபாய விஷயத்தில் இவன் பண்ணும் உபகார ஸ்ம்ருதியும்
இவனுடைய சைதன்ய பிரயுக்தமாய் வந்தது இத்தனை -இது உண்டாகை யாலே அன்றோ
ஈஸ்வரன் கார்யம் செய்தது என்று உபாயத்தில் உள் புகாது -என்கை
ஆக சதுரத்த பதார்த்தத்தை  அருளிச் செய்தார் ஆயிற்று –

(வாமனன் என் மரகத வண்ணன் தாமரைக் கண்ணினன்
காமனைப் பயந்தாய் என்று என்று உன் கழல் பாடியே பணிந்து
தூ மனத்தனனாய் பிறவித் துழதி நீங்க என்னைத்
தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே –2-7-8-)

(திரிவிக்ரமன் செந்தாமரைக் கண் எம்மான் என் செங்கனி வாய்
உருவில் பொலிந்த வெள்ளிப் பளிங்கு நிறத்தனன் என்று என்று உள்ளி
பரவிப் பணிந்து பல்லூழி யூழி நின் பாத பங்கயமே
மருவித் தொழும் மனமே தந்தாய் வல்லை காண் என் வாமனனே –2-7-7-)

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முமுஷுப்படி -சரம ஸ்லோஹ பிரகரணம்-ஸூர்ணிகை –199–210–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் –ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் அரும்பத விளக்கம் —

January 11, 2024

பரித்யஜ்ய –சூரணை -199-

அநந்தரம்-த்வதீய பதத்தை உபாதானம் பண்ணுகிறார்-

———————————————

த்யாகம் ஆவது –
உக்த உபாயங்களை அநு சந்தித்து சுக்திகையிலே ரஜதா புத்தி பண்ணுவாரைப் போலேயும் –
விபரீத திசா கமனம் பண்ணுவாரைப் போலேயும் –
அநு பாயங்களிலே உபாய புத்தி பண்ணினோம் என்கிற புத்தி
விசேஷத்தோடே த்யஜிக்கை –சூரணை-200-

இதுவும் த்யாகமும் ல்யப்பும் உபசர்க்கமுமாய் -த்ரி பிரகாரமுமாய் இருக்கையாலே –
அதில் த்யாக வேஷத்தை முந்துற அருளிச் செய்கிறார் –

அதாவது
இவ் விடத்தில் சொல்லுகிற  த்யாகம் ஆவது -கேவலம் விடுகை அன்று –
கீழ் சொல்லப் பட உபாயங்களின் படியை அநு சந்தித்து –
ரஜதமல்லாத சுக்திகையிலே ரஜத புத்தி பண்ணுவாரைப் போலேயும் –
ஸ்வ கார்ய சித்திக்கு உடலான ஒரு திக்கிலே போகக் கோலி தத் விபரீதமான
திக்கை அதுவாக நினைத்து போவாரைப் போலேயும் –
பகவத் ப்ராப்தி உபாய அபேஷரான நாம் -உபாயம் அல்லாதவற்றில் உபாய புத்தி பண்ணினோம்
என்கிற புத்தி விசேஷத்தோடே விடுகை -என்றபடி-

———————————————————————-

பரி -என்கிற உபசர்க்கத்தாலே -பாதகதிகளை விடுமா போலே –
ருசி வாசனைகளோடும்
லஜ்ஜையோடும் கூடே
மறுவலிடாத படி விட வேணும் என்கிறது –சூரணை -201-

இனி உபசர்க்கார்த்தத்தை அருளிச் செய்கிறார் –

அதாவது
பரி சாகல்யே -என்று சாகல்ய பரமாக கொள்ளும் அளவில் அது சர்வ -சப்தத்திலே
உக்தம் ஆகையாலே -அபேஷிதம் அல்லாமையாலே -மிகுதிக்கு வாசகமான -பரி-என்கிற இந்த
உபசர்க்கத்தாலே -ப்ரஹ்மஹத்யா -சூராபானம் ஸ்தேயம் குர்வங்கனாமாக -என்கிற பாதகங்கள்
முதலானவற்றை விடும் அளவில் அவற்றில் புனர் அன்வயதுக்கு உருப்பான ருசி வாசனைகளோடு
கூடே -நாம் இதைச் செய்வதே -என்கிற லஜ்ஜா சஹிதனாய் கொண்டு விடுமா போலே –

(மிகுதிக்கு வாசகமான–அவ்யயாநாம் அநேகார்த்தத்வாத் –என்கிற நியாயத்திலே -பரி சேஷ என்று சேஷத்வத்துக்கு வாசகமான என்றபடி)

அத பாதக பீதஸ் த்வம் -என்று தர்ம தேவை பாதகமாகச் சொன்ன உபாயாந்தரங்களை விடும் அளவில் –
புத்தி பூர்வகமாக அவற்றில் ப்ரவர்த்திக்கைக்கு உறுப்பான ருசியும் –
அபுத்தி பூர்வகமாக மூளுகைக்கு உறுப்பான வாசனையும் ஆகிற அவற்றோடே கூட
பகவத் ஏக சாதன தைக வேஷமான  ஸ்வ ஸ்வரூபத்துக்கு அத்யந்த வ்ருத்தமானவற்றை நாம் செய்வதே –
என்கிற லஜ்ஜா சஹிதனாய் கொண்டு மீளவும் அவற்றில் அந்வயம் வாராத படி விட வேண்டும் என்று
சொல்லுகிறது -என்கை –

———————————————————————–

ல்யப்பாலே -ஸ்நாத்வா புஞ்சீத-என்னுமா போலே
உபாயந்தரங்களை விட்டே பற்ற வேணும் -என்கிறது–சூரணை -202

இனி லயப் அர்த்தத்தை அருளி செய்கிறார் –

அதாவது –
பரித்யஜ்ய -என்கிற ல்யப்பாலே -புக்த்வா சந்த்ராயணம் சரேத்-என்னுமா போல் அன்றிக்கே
ஸ்நாத்வா புஞ்சீத -என்கிற விதி -புஜிக்கும் அளவில் ஸ்நானம் பண்ணியே புஜிக்க வேணும் –
என்கிற நியமத்தைச் சொல்லுமா போலே -சித்தோ உபாயத்தை பரிக்ரகிக்கும் அளவில்
த்யாஜ்யமான உபாயாந்தரங்களை த்யஜித்தே பரிக்ரஹிக்க வேணும் என்கிற
நியமத்தைச் சொல்லுகிறது -என்கை-

—————————————————————

சசால சாபஞ்ச முமோச வீர -என்கிறபடியே இவை அநு பாயங்களான மாத்ரம் அன்றிக்கே
கால் கட்டு -என்கிறது –சூரணை -203-

இப்படி விட்டே பற்ற வேணும் என்கிற அதன் கருத்தை அருளிச் செய்கிறார் –
அதாவது -யோ வஜ்ர பாதாச நிசன்னி பாதான் ந சுஷுபே சசால சாபஞ்ச முமோச வீர -என்கிற
ஸ்லோகத்தில் -ராவணன் ராம சரங்களால் மிகவும் ஈடு பட்டு நிலை கலங்கிப் போக
பார்த்த அளவிலும் -கையில் வில் இருக்கும் அளவும் பெருமாள் போக ஒட்டாமையாலே –

பின்பு பொகட்ட வில்லு கையில் இருந்த  போது பிரதி பஷ ஜெயத்துக்கு சாதனம்
ஆகாத மாத்ரம் அன்றிக்கே- கச்ச நு ஜாமி-என்று பின்பு பண்ணின அனுமதி -பெருமாள்
அப்போது பண்ணக் காணாமையாலே -போகவும் ஒண்ணாத படி கால் கட்டு ஆனமையை
சொல்லுகிற படியே -உபாயாந்தரங்களான இவற்றிலே -ஈஷத்  அந்வயம் கிடக்கிலும் -இவை-

——————————————————————–

சக்கரவர்த்தி போலே இழைக்கைக்கு  உறுப்பு –சூரணை-204-

இன்னமும் இவற்றில் அந்வயம் இழவுக்கு உடலாம் என்னுமத்தை
சத்ருஷ்டாந்தமாக அருளிச் செய்கிறார் –

அதாவது
முன்பே வர பிரதானத்தைப் பண்ணி வைத்து -இப்போதாக மறுக்க ஒண்ணாது என்று
ஆபாசமான சத்ய தர்மத்தைப் பற்றி நின்று -ராமோ விக்ரஹவான் தர்ம -என்கிற
பெருமாளோடு கூடி வாழ இருந்த பேற்றை இழந்த சக்கரவர்த்தியைப் போலே –
ஆபாசமான உபாயாந்தரங்களில் அன்வயித்து நிற்கை ஆகிறது –
க்ருஷ்ணம் தர்மம் சனாதனம் -என்று சனாதன தர்மமான பகவத் விஷயதோடே கூடி
வாழுகை யாகிற பேற்றை இழைக்கைக்கு உறுப்பாய் விடும் -என்கை-

————————————————————–

சர்வ தர்மங்களையும் விட்டு என்று சொல்லுகையாலே -சிலர் -அதர்மங்கள் புகுரும் –
என்றார்கள் –சூரணை -205-

இனி இங்கு சொன்ன சர்வ தர்ம பரித்யாகத்தின் கருத்து அறியாதார் சொல்லும்
தூஷணத்தை பரிஹரிக்கைக்காக தத் பஷத்தை உத்ஷேபிக்கிறார் –

அதாவது
த்யாஜ்யமான தர்மம் தான் -இதம் குரு இதம் மாகர்ஷீ -என்று விதி  நிஷேததாத்மகமாய்
இருக்கையாலே -சர்வ தர்மங்களையும் விட்டு என்று சொல்லுகையாலே -விஹித அனுஷ்டானத்தோபாதி
நிஷித்த பரிஹாரமும் ஒக்கத் தள்ளுண்ணும் அளவில் -அடைத்த கதவைத் திறந்தால்-நிஹீன பதார்த்தங்கள்
புகுருமா போலே -அதர்மங்களான நிஷித்த பிரவ்ருத்திகள் புகுரும் என்று சிலர் சொன்னார்கள்-என்கை-

—————————————————

அது கூடாது -அதர்மங்களை செய் -என்று சொல்லாமையாலே –சூரணை -206-

அத்தை பரிஹரிக்கிறார் –

அதாவது
சர்வ தர்மங்களையும் விடச் சொன்ன இத்தால் அதர்மங்கள் புகுரும் என்கிற இது
சம்பவியாது -தர்மங்களை விடச் சொன்ன மாத்ரம் ஒழிய -அதர்மங்களை செய் -என்று
சொல்லாமையாலே -என்கை –

—————————————————–

தன் அடையே சொல்லிற்று ஆகாதோ என்னில் –சூரணை -207-

அதர்ம நிவ்ருத்தியும் தர்ம சப்த வாச்யம் ஆகையாலே அத்தை விடச் சொன்னால் –
அதர்மத்தை செய் என்னும் இடம் அர்த்தாத் உக்தமாகாதோ -என்கிற
பிரதிவாத யுக்தியை அனுவதிக்கிறார் –

————————————————–

ஆகாது -தர்ம சப்தம் அதர்ம நிவ்ருதியைக் காட்டாமையாலே –சூரணை -208-

அதுக்கு உத்தரம் அருளிச் செய்கிறார் –

அதாவது –
தர்மங்களை விடச் சொன்ன இத்தால் -அதர்மங்களை செய்-என்னும் இடம் தன்னடையே
சொல்லிற்று ஆகாது -தர்ம சப்தம் அதர்ம நிவ்ருத்யாதி அங்க சஹிதமாய் பிரதானமாய் இருந்துள்ள
விஹித அனுஷ்டானத்தை காட்டுமது ஒழிய -சாமான்யேன அதர்ம நிவ்ருத்தி மாத்ரத்தைக் காட்டாமையாலே -என்கை–

———————————————————

காட்டினாலும் அத்தை ஒழிந்தவற்றைச் சொல்லிற்றாம் இத்தனை –சூரணை -209-

அதர்ம நிவ்ருத்திக்கு தர்ம சப்த வாச்யத்வம் விசேஷண பூதமான இது தன்னையும்
காட்டாதோ -என்ன -அருளிச் செய்கிறார் –

அதாவது
அப்படி காட்டிற்று ஆகிலும் அது இவ் இடத்தில் விவஷிதம் அல்லாமையாலே-அத்தை ஒழிந்த
விஹித அனுஷ்டான ரூப தர்மங்களானவற்றைச் சொல்லிற்றாம் இத்தனை -என்கை –

———————————————————–

தன்னையும் -ஈஸ்வரனையும் -பலத்தையும் பார்த்தால் அது புகுர வழி இல்லை –சூரணை -210-

இங்கன் ஒதுக்குகிறது என் கொண்டு -என்ன அருளிச் செய்கிறார் –

அதாவது
அதர்ம அனுஷ்டானம் சேஷிக்கு அநிஷ்டம் ஆகையாலே -அவனுக்கு அதிசயகரமாவது
ஒழிய அநிஷ்டகரனாகை சேராதபடியான ஸ்வரூபத்தை உடைய தன்னைப் பார்த்தாலும் –
சஹாயாந்தர சம்சர்க்க அசஹை ஆகையாலே இத்தலையில் ஸ்வ யத்ன நிவ்ருத்தி ஒழிய
பிரவ்ருத்யம்சத்தில் ஒன்றையும் பொறாத உபாய பூதனான ஈஸ்வரனைப் பார்த்தாலும் –
இவனுடைய பிரவ்ருத்திக்கு பலம் அவனுடைய ப்ரீதி ஆகையாலே தாத்ருசமான பலத்தைப் பார்த்தாலும் –
இம் மூன்றுக்கும் விருத்தங்களான அவை புகுர வழி இல்லை என்கை –

ஆகையால் தர்ம சப்தம் அதர்ம நிவ்ருத்தியை காட்டிறிற்று ஆகிலும் அத்தை ஒழிந்தவற்றை
சொல்லிற்றாகக்  கொள்ள வேணும் என்று கருத்து –

——————————————————————————————————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முமுஷுப்படி -சரம ஸ்லோஹ பிரகரணம்-ஸூர்ணிகை –185–198–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் –ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் அரும்பத விளக்கம் —

January 11, 2024

அவதாரிகை –
மத்யம ரகஸ்யமான த்வயத்தின் உடைய அர்த்தத்தை அருளிச் செய்த அநந்தரம் –
அதில் பூர்வ வாக்யத்தில் சொல்லுகிற உபாய வர்ணம் சர்வேஸ்வரன் தானே விதிக்கையாலே –

தத் அபிமதம் -என்னும் அத்தையும் –
வரண அங்கமான சாதனாந்தர பரித்யாகத்தையும் –
வரணத்தில் சாதனத்வ புத்தி ராஹித்யத்தையும் –
சாப்தமாக -பூர்வ அர்த்தத்தாலே பிரதிபதிக்கையாலும் –

உத்தர வாக்யத்தில் சொல்லுகிற கைங்கர்யத்துக்கு பூர்வ பாவியான ப்ராப்தி பிரதிபந்தக
சகல பாப விமோசனத்தையும்
உத்தர அர்த்தத்தாலே சாப்தமாக பிரதி பாதிக்கையாலும் –

த்வயதுக்கு விவரணமாய் –
பஞ்சம வேத சார பூத கீதோ உபநிஷத் தாத்பர்யமாய் –
சரம ரஹஸ்யமாய்
இருந்துள்ள சரம ஸ்லோகத்தின் உடைய அர்த்தத்தை
சம்சயம்  விபர்யயம் அற அருளிச் செய்கிறார் –

இதில் அர்த்தம் கேட்க்கைக்காக இறே -எம்பெருமானார் பதினெட்டு பர்யாயம்
திரு கோஷ்டியூர் நம்பி பக்கல் எழுந்து அருளிற்று -நம்பி தாமும் இதில் அர்த்தத்தின் உடைய
கௌரவத்தையும் -இதுக்கு அதிகாரிகள் இல்லாமையும் பார்த்து இறே -இவருடைய
ஆஸ்திக்ய ஆதா பரீஷார்த்தமாக பல கால் நடந்து துவளப் பண்ணி சூளுரவு கொண்டு -மாச உபவாசம் கொண்டு –
அருமைப் படுத்தி அருளிச் செய்து அருளிற்று –

(உடையவர் பெரிய நம்பி திருமாளிகைக்கு எழுந்து அருளி தண்டம் சமர்ப்பித்து ஆளவன்ஹார் திரவடிகளிலே சேவியாத இழவு எல்லாம் தீர்க்கும்படி
தேவரீர் திருவடிகளில் ஆஸ்ரயிக்கப் பெற்றேன் -தேவரீர் திரு உள்ளத்தில் உண்டான அர்த்த விசேஷங்களை அடியேனுக்குப் பிரஸாதித்து அருள வேண்டும் என்று விண்ணப்பம் செய்ய
நம்பியும் அப்படியே யாகிறது என்று மந்த்ர ரத்னமான த்வயார்த்தைத்ப் ப்ரஸாதித்து அருளி இன்னமும் சில அர்த்த விசேஷங்கள் உண்டு
அவற்றை ஆளவந்தார் அபிமான பூத அந்தர் பூதரான திருக்கோஷ்டியூர் நம்பி ஸ்ரீ பாதத்தை சென்று கேளும் என்று அருளிச் செய்ய

ராமானுஜரும் அப்படியே நம்பி ஸ்ரீ பாதத்தில் சென்று சேவித்து ரஹஸ்யார்த்த விசேஷங்களை எல்லாம் பிரஸாதித்து அருள வேணும் என்று விண்ணப்பம் செய்ய
நம்பியும் இவருடைய ஆஸ்திக ஆதர பரிஷார்த்தமாக 18 ஆர்த்தி நடத்தி திருமந்த்ரார்த்தை அருளிச் செய்தாராய் இருக்க
இங்கு சரம ஸ்லோக அர்த்தமாக அருளிச் செய்தது -அப்போதே அநந்தரம் வாரீர் எம்பெருமானாரே இன்னும் ஒரு சரம ரஹஸ்யார்த்த விசேஷம்
சொல்லுவதாகப் பாரா நின்றோம் -இவ்வளவில் நீர் திருப்பித்தராகா நின்றீர் -உம்முடைய அத்யவசாயத்தைச் சொல்லிக் காணீர் -என்ன
எம்பெருமானாரும் -தவறீர் அருளிச் செய்த அர்த்தத்தை மேல் ஓர் அர்த்தம் உண்டு என்று இருந்தேனாகில் அவிஸ்வாசி ஆவேன்

கேளாது இருந்தேனாகில் அருளிச் செய்த அர்த்தம் நெஞ்சில் பட்டது இல்லை விரகு அறியாமல் ஸ்ரோதவ்ய சாபேஷனாய் இரா நின்றேன் என்று விண்ணப்பம் செய்ய
நம்பியும் இப்போது போய் ஏகாந்தமாக ஒருவராய் வாரும் என்ன எம்பெருமானாரும் ஒருவராய் வந்து நம்பி பாதத்தில் தண்டன் சமர்ப்பித்து நிற்க
நம்பியும் கையைப் பிடித்துக் கொண்டு போய் ஏகாந்தமான மேல் தளத்திலே படிக்கதவை விழ விட்டு எழுந்து அருளி இருந்து ஒருவருக்கும் செல்லாதபடி
திருவடிகளைத் தொடுவித்து சூழரவு கொண்டு தம்முடைய நிர்ஹேதுக கிருபையாலே ஸர்வ குஹ்ய தர்மமான சரம ஸ்லோகார்த்தத்தை அருளிச் செய்து
பகவத் விமுகரான நாஸ்திகர் செவிப்படாத படி பேணிக்கொண்டு போரும் என்று நியமித்து அருளி
இவரும் அப்படிப்பட்டவருக்குச் சொல்லக் கடவேன் அல்லேன் பகவத் ப்ரவணரான கூரத்தாழ்வானுக்குச் சொல்லாமல் நிற்க்க கூடாது என்று விண்ணப்பம் செய்ய

நம்பியும் இவ்வர்த்தம் கேட்க்கைக்கு அதிகாரம் உண்டாகில் ஸூஸ் ருஷை கொண்டு சொல்லும் என்று நியமித்து அருளினார்
18 தடவை நடத்தியது 18 அத்தியாயத்தில் அர்த்தம் ப்ரசாதிக்கைக்காக என்று கருத்து
ஆகவே இதில் அர்த்தம் கேட்க்கைக்காக இறே -எம்பெருமானார் பதினெட்டு பர்யாயம்
திரு கோஷ்டியூர் நம்பி பக்கல் எழுந்து அருளிற்று என்று அருளிச் செய்தது
இதில் அர்த்தத்தின் உடைய கௌரவத்தையும்–என்றது ஏதத் வை மஹோ உபநிஷதம் தேவா நாம் குஹ்யம் -என்ற கௌரவத்தையும்—என்றபடி)

நிஷ்க்ருஷ்ட சத்வ நிஷ்டனாய் –
பரமாத்மநி ரக்தனாய் –
அபராதமநி வைராக்கியம் உடையனாய் –
பிரமாண பரதந்த்ரனாய் –
பகவத் வைபவம் ஸ்ருதமானால் அது உபபன்னம் என்னும் படியான
விஸ்ரம்ப பாஹுள்யம் உடையனாய் –
ஆஸ்திக அக்ரேசனாய் இருப்பான் ஒருவன் உண்டாகில்
அவன் இந்த ஸ்லோகார்த்த ஸ்ரவண அனுஷ்டானதுக்கு அதிகாரி ஆகையாலே –
அதிகாரி  துர்லபத்வத்தாலும்
அர்த்த கௌரவத்தாலும் –
இத்தை வெளி இடாதே மறித்து கொண்டு போந்தார்கள்-எம்பெருமானார்க்கு முன்பு உள்ளார் –

சம்சாரிகள் துர்கதி கண்டு பொறுக்க மாட்டாத படி கிருபை கரை புரண்டு இருக்கையாலே –
அர்த்தத்தின் சீர்மை பாராதே அனர்ததத்தையே பார்த்து வெளி இட்டு அருளினார் எம்பெருமானார் –

அப்படி உபதேசித்து விடுகிற மாதரமும் இன்றிக்கே -இவ் அர்த்தத்தை எல்லாரும் அறிந்து
உஜ்ஜீவிக்க வேணும் என்னும் பரம கிருபையாலே -இது தன்னை பல
பிரபந்தங்களிலும் -ஸங்க்ரஹ விஸ்தர ரூபேண இவர் அருளிச் செய்தது –

மற்று உள்ள  பிரபந்தங்கள் எல்லா வற்றிலும் போல் அன்றிக்கே -ஸ்திரீ பாலர்களுக்கும் –
அதிகரிக்கலாம் படி தெளிய அருளிச் செய்தது இப் பிரபந்தத்தில் இறே –

————————————————————-

கீழே சில உபாய  விசேஷங்களை உபதேசிக்க அவை துச் சகங்கள் என்றும் –
ஸ்வரூப விரோதிகள் என்றும் -நினைத்து சோக விசிஷ்டனான அர்ஜுனனைக்
குறித்து -அவனுடைய சோக நிவ்ருத்தி அர்த்தமாக -இனி இதுக்கு அவ் அருகு இல்லை –
என்னும் படியான சரம உபாயத்தை அருளிச் செய்கையாலே -சரம ஸ்லோகம் என்று
இதுக்கு பேராய் இருக்கிறது–சூரணை -185-

இதில் பிரதமத்தில் இந்த ஸ்லோக அர்த்தத்தினுடைய கௌரவத்தை எல்லாருடைய
நெஞ்சிலே படுதுக்கைக்காக -இது தனக்கு சரம ஸ்லோகம் என்று திரு நாமம் ஆகைக்கு
ஹேதுவை அருளிச் செய்கிறார் –

அதாவது –
இந்த ஸ்லோகத்துக்கு கீழே அநேக அத்யாயங்களிலே கர்ம ஞாநாதிகளான சில
உபாய விசேஷங்களை -ஸ்வ ப்ராப்தி லஷண மோஷ சாதனமாக விஸ்தரேண-
இந்திரிய ஜெயம் அரிதாகையாலும்
சாவதானமாக சிர காலம் சாதிக்க வேண்டி இருக்கை யாலும் –

(கர்ம ஞாநாதிகளான சில–உபாய விசேஷங்களை–இங்கு ஆதி பதத்தாலே அவதார ரஹஸ்ய ஞானமும் புருஷோத்தம வித்யையும் சொன்னவாறு)

அவை அனுஷ்டிக்க அசக்யங்கள் என்றும் –
ஸ்வ சரீரத்வ கதநாதிகளாலே பிரதிபாதிக்கப் பட்ட பரதந்த்ரமான ஸ்வரூபத்துக்கு  ஸ்வ யத்ன
ரூபங்களான இவை விரோதிகள் என்று புத்தி பண்ணி -இவற்றாலே எம்பெருமானைப் பெற எனபது
ஓன்று இல்லை -இனி இழந்தே போம் இத்தனை ஆகாதே என்கிற சோகத்தால் ஆவிஷ்டனான அர்ஜுனனைக் குறித்து –
அவனுடைய அந்த சோகம் போகைக்காக –

ஸூசகத்வாலும் ஸ்வரூப அநு ரூபதையாலும் இனி இதுக்கு மேல் இல்லை –
என்னும்படியான சரம உபாயத்தை அருளிச் செய்கையாலே -சரம ஸ்லோகம் -என்று இதுக்கு
திருநாமமாய் இருக்கிறது -என்கை-

—————————————————————-

இதில் பூர்வ அர்த்தத்தாலே அதிகாரி க்ருத்யத்தை அருளிச் செய்கிறார் –சூரணை-186-

அதாவது –
அர்த்த த்வயயாத்மகமான இந்த ஸ்லோகத்தால் பூர்வ அர்த்தத்தாலே இவ் உபாயதுக்கு
அதிகாரி ஆனவன் செய்யும் அம்சத்தை அருளிச் செய்கிறான்-

உத்தர அர்த்தத்தாலே -உபாய பூதனான தான் இவருக்கு செய்யும் அம்சத்தை
அருளிச் செய்கிறான் -என்கை-

—————————————————–

அதிகாரிக்கு  க்ருத்யமாவது -உபாய பரிக்ரஹம் –சூரணை -187-

அதிகாரி க்ருத்யமாவது என் -என்ன அருளிச் செய்கிறார் –

அதாவது –
அதிகாரி ஆனவனுக்கு இங்குச் செய்யத் தக்கது
இவ் உபாயத்தை ஸ்வீகரிக்கை-என்கை-

—————————————

அத்தை சாங்கமாக விதிக்கிறான் –சூரணை -188

ஆனால் அவ்வளவை விதியாதே உபாயாந்தர பரித்யாகம் சொல்லுவான் என்ன -அருளிச் செய்கிறார்

அதாவது –
அந்த உபாய ஸ்வீகாரத்தை உபாயாந்தர பரித்யாகமாகிற அங்கத்தோடே கூட விதிக்கிறான் -என்கை
ப்ரஷால்ய பாதா வாசா மேத் ஸ்நாத்வா விதி வதர்ச்ச யேத் ஸ்தித்வார்க்யம்
பானவே தத்யாத் த்யாத்வா தேவம் ஜபேன்மனும்-என்று
ஆசமநாதிகளுக்கு அங்கமாகச் சொன்ன -பாத ப்ரஷாலாநதி ஒழிய அவை அனுஷ்டிக்க
ஒண்ணாது போலே இங்கும் -ல்யபந்த பதத்தாலே அங்கமாகச் சொல்லுகிற உபாயாந்தர த்யாகத்தை
ஒழிய ஸ்வீகாரம் அநு பபன்னம் என்னும் இடம் சித்தம் இறே-

ஆகையால்-சர்வ தர்மான் பரித்யஜ்ய ஸ்தி தச்சேத்-என்று துஷ்கரத்வ புத்தியாலே –
ஸ்வத ப்ராப்தமான உபாயாந்தர பரித்யாகத்தை அனுவதித்து -சித்தோ உபாய ஸ்வீகாரத்தை
விதிக்கிறது என்கிற அநு வாத பஷம் ஆயுக்தம் -என்றது ஆயிற்று –

——————————————————-

ராக ப்ராப்தமான உபாயம் தானே வைதமானால் கடுக பரிக்ரகைக்கு உடலாய் இருக்கும் இறே –சூரணை -189-

ஆனால் ஸூசகத்வாதிகளாலே ராக ப்ராப்தமான இதுக்கு விதி தான் வேணுமோ -என்ன அருளிச் செய்கிறார் –

அதாவது –
போக்யதையாலே ராக ப்ராப்தமான ஷீரத்தை பித்த ரோகத்துக்கு மருந்தாகக் கொடுக்கச்
சொல்லி விதித்தால் சீக்கிரம் கைக் கொள்ளுகைக்கு உடலாமா போலே -உபாயாந்தரங்களில் காட்டில் இதுக்கு
உண்டான வைலஷண்யத்தாலே -சேதனுடைய ராகத ப்ராப்தமாய் இருந்துள்ள உபாயம் தானே இத்தை
ஸ்வீகரி என்னும் விதி பிரயுக்தமுமானால் சீக்ரமாக ஸ்வீகரிக்கைக்கு உடலாய் இருக்கும் இறே -என்கை-

————————————————————

இதில் பூர்வார்த்தம் ஆறு பதம்–சூரணை -190 

இனி இதுக்கு பிரதிபதம் அர்த்தம் அருளிச் செய்வதாக -பூர்வார்த்த
பத சங்கையை அருளிச் செய்கிறார் –

————————————————

சூரணை -191
சர்வ தர்மான்-

எல்லா தர்மங்களையும் –
அதில் பிரதம பதத்தை உபாதானம் பண்ணுகிறார் –

————————————————-

சூரணை -192
தர்மம் ஆவது பல சாதனமாய் இருக்குமது –

இது தான் தர்மமும் -பஹு வசனமும் -சர்வ சப்தமுமாய் –
த்ரி பிரகாரமுமாய் இருக்கையாலே -இம் மூன்றுக்கும் அர்த்தம்
அருளிச் செய்வதாக -ப்ரதமம் தர்ம லஷணத்தை அருளிச் செய்கிறார் –

—————————————————-

சூரணை -193
இங்குச் சொல்லுகிற -தர்ம -சப்தம் -த்ருஷ்ட பல சாதனங்களைச் சொல்லுகை அன்றிக்கே
மோஷ பல சாதனங்களைச் சொல்லுகிறது –

தர்ம சப்தம் த்ருஷ்ட பல சாதனத்திலும் வ்யாப்தம் ஆகையாலே அத்தை வ்யாவர்த்திக்கிறார் –

அதாவது –
பூர்வ உபாயங்கள் தன்னை உபதேசிக்கிற போதே த்ருஷ்ட பல சாதனங்கள் வ்யாவ்ருத்தம் ஆகையாலும் –
மோஷ உபாயங்களை உபதேசித்து வருகிற பிரகரணம் ஆகையாலும் –
இவ் இடத்தில் சொல்லுகிற -தர்ம-சப்தம் –
புத்ர பச்வந்தாதி ஐ ஹிகமாகவும்
ஸ்வர்க்காதி ஆமுஷ்மிகமாயும் –
இருந்துள்ள த்ருஷ்ட பலங்களுக்கு சாதனங்கள் ஆனவற்றை சொல்லுகை இன்றிக்கே –
பகவத் ப்ராப்தி ரூபமான மோஷ பலத்துக்கு சாதனமாய் உள்ளவற்றைச் சொல்லுகிறது -என்கை-

———————————————————-

சூரணை -194
அவை தான் ஸ்ருதி ஸ்ம்ருதி விஹிதங்களாய் -பலவாய் இருக்கையாலே
பஹு வசனம் பிரயோகம் பண்ணுகிறது -என்கை –

இனி மேல் பஹு வசன அர்த்தத்தை அருளிச் செய்கிறார் –

அதாவது –
அந்த மோஷ பல சாதனங்கள்  தாம் பல -உப ப்ரஹ்ம உப ப்ரஹ்மணங்களாய்
இருந்துள்ள ஸ்ருதி ஸ்ம்ருதிகளாலே விஹிதங்களாய்க் கொண்டு -அநேகங்களாய் இருக்கையாலே –
தர்மான்-என்று பஹு வசனம் பிரயோகம் பண்ணுகிறது –

————————————————————

சூரணை -195
அவை யாவன –
கர்ம ஞான பக்தி யோகங்களும் –
அவதார ரகஸ்ய ஞானமும் –
புருஷோத்தம வித்யையும் –
தேச வாசம்
திரு நாம சங்கீர்த்தனம் –
திரு விளக்கு எரிக்கை –
திரு மாலை எடுக்கை –
தொடக்கமான உபாய புத்தியா செய்யும் அவையும் –

அப்படி இருந்துள்ளவை தாம்  எவை என்ன -அருளிச் செய்கிறார் –

அதாவது –
கீழ் பலவாக சொல்லப் பட்ட அவை யாவன –
கர்மணைவ ஹி சம்சித்தி மாஸ்திதா ஜநகாதய
தஸ்மாத் அசக்தஸ் சததம் கார்யம் கர்ம சமாசார -என்று
ஸ்வதந்திர சாதனமாக உக்தமான கர்ம யோகமும்

(கர்மணைவ ஹி ஸம் ஸித்தி மாஸ்திதா ஜநகாதய–.
லோக ஸங்க்ரஹமேவாபி ஸம் பஸ்யந் கர்துமர்ஹஸி—-৷৷3.20৷৷

ஜநகாதய-ஜனகர் முதலானோர்
கர்மணைவ -ஞான யோகத்தால் அல்லாமல் கர்மயோகத்தாலேயே
ஹி ஸம் ஸித்திம் ஆஸ்திதா -ஆத்ம பிராப்தி யாகிய பயனைப் பெற்றார்கள் அன்றோ–.
லோக ஸங்க்ரஹம் ஏவ-சாமான்ய ஜனங்களை இசையை வைக்கும் வழியாகிய லோக ஸங்க்ரஹம் ஒன்றையே
ஸம் பஸ்யந் அபி -கருத்தில் கொண்டும்
கர்துமர்ஹஸி—-நீ கர்மத்தையே செய்வது தக்கது –

ஜனகர் முதலானோர் கர்ம யோகத்தாலேயே ஆத்ம பிராப்தி யாகிற பயனை அடைந்தார்கள் அன்றோ –
உலகத்தை இசையை வைப்பதில் கருத்தைக் கொண்டும் நீ கர்மத்தைச் செய்வதே தக்கது
ஜனகன் கர்ம யோகத்தால் ஆத்ம சாஷாத்காரம் -மேலையார் செய்வனகள் சிஷ்டாசாரம் உண்டே –)

சர்வம் கர்மாகிலம் பார்த்த ஞானே பரிசமாப்யதே-என்றும்
ந ஹி ஞானேன சத்ருசம் பவித்ரமிஹா வித்யதே-என்றும்
ஞாநாக்னிஸ் சர்வ கர்மாணி பச்மசாத் குருதே ததா -என்றும் சொல்லப்பட்ட
கர்ம சாத்தியமான ஞான யோகமும் –

(ஸ்ரேயாந் த்ரவ்ய மயாத் யஜ்ஞாத் ஜ்ஞாந யஜ்ஞ பரந்தப.–
ஸர்வம் கர்மாகிலம் பார்த்த ஜ்ஞாநே பரி ஸமாப்யதே—৷৷4.33৷৷

பரந்தப–எதிரிகளை அழிப்பவனே
த்ரவ்ய மயாத் –பொருள்களால் செய்யப்படும் கிரியைகளை முக்கியமாகக் கொண்ட
யஜ்ஞாத் –கர்மயோக அம்சத்தைக் காட்டிலும்
ஜ்ஞாந யஜ்ஞ .–கர்மயோகத்தில் உள்ள ஞான அம்சம்
ஸ்ரேயாந் –சிறந்தது
பார்த்த-குந்தீ புத்ரனே
ஸர்வம் -எல்லாப் பிரகாரங்களுடன் கூடியதாய்
அகிலம் -எல்லா அங்கங்களுடன் கூடியதான
கர்ம -கர்ம வடிவமான அம்சம்
ஜ்ஞாநே -ஸாத்யமான -ஆத்ம யாதாத்ம்ய ஞானத்தில்
பரி ஸமாப்யதே—முடிவடைகின்றது அன்றோ –

எதிரிகளை அழிப்பவனே -த்ரவ்ய சாத்தியமான கிரியைகளை முக்கியமாகக் கொண்ட கர்ம யோக
அம்சத்தைக் காட்டிலும் -கர்ம யோகத்தில் உள்ள ஞான அம்சமே சிறந்தது -குந்தீ புத்திரனே –
சர்வம் எல்லா பிரகாரங்களோடு கூடியதாய் -எல்லா அங்கங்களோடும் கூடியதான கர்ம ரூபமான அம்சம்)

(ந ஹி ஜ்ஞாநேந ஸத்ருஸம் பவித்ரமிஹ வித்யதே.—
தத் ஸ்வயம் யோக ஸம் ஸித்த காலேநாத்மநி விந்ததி—৷৷4.38৷৷

இஹ -இவ்வுலகில்
ஜ்ஞாநேந ஸத்ருஸம் –ஆத்ம ஞானத்தை ஒத்ததாக
பவித்ரம் -சுத்தி அளிப்பதாக
ந வித்யதே.—வேறே ஒன்றும் இல்லையே
தத் –அத்தகைய ஞானத்தை
ஸ்வயம் யோக ஸம் ஸித்த -முற் கூறிய கர்மயோக ஸித்தி பெற்றவன்
காலேந-காலக் கிரமத்தில்
ஆத்மநி –தன் ஆத்மாவைப் பற்றி
விந்ததி—அடைகிறான் –

இவ் உலகில் ஆத்ம ஞானத்தை ஒத்ததாக சுத்தி அளிப்பது வேறு ஒன்றும் இல்லை –
அத்தகைய ஞான யோகத்தை கர்ம யோக சித்தி பெற்றவன் காலக் கிரமத்தில் தன் ஆத்மாவில் அடைகிறான்
கொளுத்தும் -அக்னி -பாவானத்வமும் உண்டே -புனிதமாக்கும் -மங்களம் உண்டாக்கும் -தானே நடக்கும் –)

(யதைதாம் ஸி ஸமித்தோக்நிர் பஸ்ம ஸாத்குருதேர்ஜுந—
ஜ்ஞாநாக்நி ஸர்வ கர்மாணி பஸ்ம ஸாத்குருதே ததா—-৷৷4.37৷৷

அர்ஜுந–அர்ஜுனா
ஸமித்தோக்நிர்-கொழுந்து விட்டு எரியும் நெருப்பு
ஏதாம் ஸி -விறகுகளை
யதா பஸ்மஸாத் குருதே—எப்படி சாம்பல் ஆக்குகிறதோ
ததா -அப்படியே
ஜ்ஞாநாக்நி -ஞானம் ஆகிற அக்னி
ஸர்வ கர்மாணி -எல்லாக் கர்மங்களாகிற விறகுகளையும்
பஸ்மஸாத் குருதே— சாம்பல் ஆக்குகிறது

அர்ஜுனா கொழுந்து விட்டு எரியும் நெருப்பு விறகுகளை எப்படி சாம்பல் ஆக்குகிறதோ
அப்படியே ஞானம் ஆகிய நெருப்பு எல்லாக் கர்மங்கள் ஆகிய விறகுகளை சாம்பல் ஆக்குகிறது
கடலை தாண்டினால் திரும்ப வரலாமே சங்கை வந்தது -ஒரு வினாடி ஞானத்தால் இவை போகுமோ –
விறகு கட்டை போலே பாபங்கள் -திரும்பாதே -பஸ்மம் ஆகுமே -தீயினில் தூசாகும் செப்பு –)

பக்த்யா த்வனன்யாசக்யா-
மன்மனா பவ மத் பக்த -இத்யாதிகளாலே சொல்லப் பட்ட
கர்ம ஞான சஹ்ருதமான பக்தி யோகமும் -ஆகிற இவையும் –

(புருஷ ஸ பர பார்த்த பக்த்யா லப்யஸ் த்வநந்யயா.–
யஸ்ய அந்த ஸ்தாநி பூதாநி யேந ஸர்வமிதம் ததம்—-৷৷8.22৷৷

பார்த்த –குந்தீ புத்ரனே
பூதாநி–எல்லாப் பொருள்களும்
யஸ்ய-எந்தப் பரம புருஷனுடைய
அந்தஸ்தாநி –உள்ளே இருக்கின்றனவோ
யேந -எவனால்
ஸர்வமிதம் -இவை அனைத்தும்
ததம்–வியாபிக்கப்பட்டுள்ளதோ
புருஷ ஸ பர து -அந்தப் பரம புருஷனோ என்னில்
பக்த்யா அநந்யயா.–வேறு பயன் கருதாத பக்தியினால்
லப்யஸ்–அடையத் தக்கவன்

குந்தீ புத்திரனே எல்லாப் பொருள்களும் எந்தப் பரம புருஷனுடைய உள்ளே இருக்கின்றனவோ –
எவனால் இது அனைத்தும் வியாபிக்கப் பட்டு உள்ளதோ -அந்த பரம புருஷனோ என்னில்
வேறு பயன் கருதாத பக்தியினால் அடையத் தக்கனாவான்)

(பக்த்யாத் த்வ அநந்யா ஸக்ய அஹமேவ விதோர்ஜுந ஞாதும் த்ரஷ்டும் சதத்வேந பிரவேஷ்டும் ச பரத ருஷப
அநந்ய யான பக்தியாலேயே அறியவும் காணவும் அடையவும் ஸக்யன்)

(மந்மநா பவ மத் பக்தோ மத் யாஜீ மாம் நமஸ்குரு.–
மாமேவைஷ்யஸி யுக்த்வைவ மாத்மாநம் மத் பராயண—৷৷9.34৷৷

என்னிடத்தில் இடைவிடாமல் நெஞ்சு செலுத்தியவனாக ஆவாயாக –
அதிலும் என்னிடம் மிகவும் ப்ரீதி உடையவனாக ஆவாயாக
அதிலும் என்னை ஆராதிப்பவனாக ஆவாயாக -யஜ தேவ பூஜா
என்னை வணங்குவாயாக
என்னையே மேலான ஆஸ்ரயமாகக் கொண்டவனாய் இவ் வண்ணமாக
நெஞ்சைப் பழக்குவதன் மூலம் என்னையே அடைவாயாக

மந்மநா பவ -என்னிடத்தில் இடைவிடாமல் நெஞ்சு செலுத்தியவனாக ஆவாயாக
மத் பக்தோ பவ-அதிலும் என்னிடம் மிகவும் ப்ரீதி யுடையவனாக ஆவாயாக
மத் யாஜீ பவ–அதிலும் என்னை ஆராதிப்பவனாக ஆவாயாக
மாம் நமஸ்குரு.–என்னை வணங்குவாயாக
மத் பராயண–என்னையே மேலான ஆஸ்ரயமாய்க் கொண்டவனாய்
ஏவம் -இவ்வண்ணமாக
ஆத்மாநம் யுக்த்வா –நெஞ்சைப் பழக்குவதன் மூலம்
மாமேவைஷ்யஸி —என்னையே அடைவாய்)

ஜன்ம கர்ம ச மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்வத த்யாக்வா
தேஹம் புனர் ஜன்ம நைதி மாமேதி சொர்ஜுனா-என்று
விரோதி நிவ்ருத்தி பூர்வமான பகவத் ப்ராப்திக்கு சாதனமாகச் சொல்லப் பட்ட
அவதார ரகஸ்ய ஞானம்

(ஜந்ம கர்ம ச மே திவ்யமேவம் யோ வேத்தி தத்த்வத–
த்யக்த்வா தேஹம் புநர் ஜந்ம நைதி மாமேதி ஸோர்ஜுந—৷৷4.9৷৷

அர்ஜுந–அர்ஜுனனே
மே திவ்யம் -என்னுடைய அப்ராக்ருதமான
ஜந்ம கர்ம ச –பிறப்பையும் செயலையும்
ஏவம் தத்த்வத-முற்கூறியபடி உள்ளபடி
ய வேத்தி –எவன் ஒருவன் அனுசந்திக்கிறானோ
ச -அந்த மனிதன்
த்யக்த்வா தேஹம் -இப்போது உள்ள தேஹத்தைக் கைவிட்டு
புநர் -மறுபடியும்
ஜந்ம -மற்ற ஒரு ஜென்மத்தை எடுத்துக் கொள்ளுகையாகிற பிறப்பை
ந ஏதி -அடைகிறான் அல்லன்
ஆனால் அவன்
மாம் ஏதி —என்னையே அடைகிறான்

அர்ஜுனா என்னுடைய திவ்யமான பிறப்பையும் செயலையும் எவன் ஒருவன் இவ்வாறு உள்ளபடி அறிகிறானோ
அவன் இப்போது உள்ள உடலை விட்டு நீங்கியதும்
மறுபடியும் மற்று ஒரு உடலைக் கொள்ளும் பிறப்பை அடைவது இல்லை -என்னையே அடைகிறான் –)

ஏதத் புத்த்வா புத்திமான் ஸ்யாத் கருத க்ருத்யச்ச பாரத -என்று
அபிமத பல லாபத்தாலே -க்ருதக்ருத்யனாய் ஆகும் என்கிற புருஷோத்தம வித்யை –

(இதி குஹ்ய தமம் ஸாஸ்த்ர மிதமுக்தம் மயாநக–
ஏதத் புத்த்வா புத்திமாந் ஸ்யாத் க்ருத க்ருத்யஸ்ச பாரத–৷৷15.20৷৷

இதி = இதுவே-இவளை போல் இங்கு இதம்
குஹ்ய தமம் = இரகசிய ஞானம். மறை பொருள்
ஸாஸ்த்ரம் = சாஸ்திரம்
இதம் = இது
யுக்தம்மு = சொல்லப்பட்டது
மயா = என்னால்
அநக = பாவம் இல்லாதவனே
ஏதத் = இதுவே
புத்த்வா = அறிந்தவன்
புத்திமான் = அறிவுள்ளவன்
ஸியாத் = அவனால்
க்ருத க்ரித்யஸ் = அவனால் செய்யத் தக்கது செய்வோன்
ச = மேலும்
பாரத = பாரத குலத்தவனே

அநக:-குற்றமற்றோய்,
இதி இதம் குஹ்யதமம் ஸாஸ்த்ரம்-இங்ஙனம் இந்த-இவளை போல் இங்கு இதம் -மிகவும் ரகசியமான சாஸ்திரத்தை,
மயா உக்தம்-என்னால் கூறப் பட்டது,
ஏதத் புத்த்வா புத்திமாந் க்ருதக்ருத்ய: ச-இதை யுணர்ந்தோன் புத்திமானாவான். செய்யத்தக்கது செய்பவன்
ஸ்யாத்-ஆகிறான்.-செய்த வேள்வியர் ஆவாய் –)

தேசோயம் சர்வ காம துக் -என்று சர்வ காம பல பிரதமாகச் சொல்லுகிற புண்ய ஷேத்திர வாசம் –

சர்வ பாப விசுத்தாத்மா யாதி பிரதம சனாதனம் -என்று
சர்வ பாப விமோசன பூர்வகமான பகவத் ப்ராப்தியை பலமாகச் சொல்லுகிற திரு நாம சங்கீர்த்தனம் –

க்ருதேன வாத தைலேன தீபம் யோ ஜ்வாலயேன் நர விஷ்ணவே
விதிவத் பக்த்த்யா தஸ்ய புண்ய பலம் ஸ்ருணு விஹாய சகலம் பாபம்
சஹஸ்ர ஆதித்ய சன்னிப ஜ்யோதிஷ்மதா விமோநேன விஷ்ணு லோகே மகீயதே -என்று
பாப நிவ்ருத்தி பூர்வகமான பகவத் ப்ராப்தி சாதனமாகச் சொல்லப் படுகிற திரு விளக்கு எரிக்கை –

அப்படி -விரோதி நிவ்ருத்தி பூர்வக பகவத்  ப்ராப்தி சாதனமாகச் சொல்லப் படும் -திரு மாலை எடுக்கை
முதலாக சாதனா புத்த்யா செய்யப் படும் அவையும் -என்கை-

(எப்பொழுதும் எழுந்து இருந்து நாம ஸஹஸ்ரத்தாலே ஸ்தோத்ரம் பண்ணுகிற புருஷனானவன் வாஸூ தேவனை ஆஸ்ரயித்து
வாஸூ தேவ பராயணனாய் ஸர்வ பாபங்களையும் விட்டு பரி ஸூத்தமான ஸ்வரூபத்தை யுடையனாய்க் கொண்டு
ஸ நாதனமான ப்ரஹ்மத்தைப் பிராபியா நிற்கும்
சாதன புத்தியா செய்யுமவை என்பதால் கைங்கர்ய புத்தியா பண்ணுமவற்றை வ்யாவிருத்திக்கிறது)

————————————————-

சர்வ சப்தத்தாலே அவ்வவ சாதன விசேஷங்களை அனுஷ்டிக்கும் இடத்தில்
அவற்றுக்கு யோக்யதா பாதகங்களான நித்ய கர்மங்களைச் சொல்லுகிறது –சூரணை-196-

இனி சர்வ சப்தார்த்தை அருளிச் செய்கிறார் –

அதாவது –
தர்ம விசேஷணமான-சர்வ சப்த்தாலே -பஹு வசநோக்தமான அவ்வோ சாதன
விசேஷங்களை அனுஷ்டிக்கும் இடத்தில் –
சந்த்யாஹின அசுசிர் நித்யம் அனர்ஹஸ் சர்வ கர்மஸூ -என்கிறபடியே
அயோக்யன் ஆகாமல் தன்னை அனுஷ்டிக்கையாலே அவற்றுக்கு யோக்யனாகையை
உண்டாக்கிக் கொடுக்கும் –
சந்த்யா வந்தன பஞ்ச மகா யஞ்ஞாதிகளான-நித்ய கர்மங்களைச் சொல்லுகிறது -என்கை –

(பஞ்ச மகா யஞ்ஞம் -ப்ரஹ்ம -தேவ -பிதா -பூத -மனுஷ்ய யஞ்ஞங்கள்)

————————————–

ஆக ஸ்ருதி ஸ்ம்ருதி சோதிதங்களாய் -நித்ய நைமித்திகாதி ரூபங்களான
கர்ம யோகாத்ய உபாயங்களை -என்ற படி –சூரணை -197-

உக்தத்தை நிகமிக்கிறார் –

அதாவது
கீழ் சொன்ன எல்லாவற்றாலும் சோதனா லஷண அர்த்தோ தர்ம -என்று
சோதனை யாகிற விதி வாக்யத்தை பிரமாணமாக உடைத்தான அர்த்தம் தர்மம் -என்கையாலே –
ஸ்ருதி ஸ்ம்ருதிகள் ஆகிற பிரமாணங்களாலே விதிக்கப் பட்டுள்ளவையாய் –
நித்யம் நைமித்திகம் முதலானவற்றை வடிவாக உடைதான கர்ம யோகம் தொடக்கமான
உபாயங்களை என்றபடி -என்கை –

————————————————————

இவற்றை -தர்மம் -என்கிறது பிரமித்த அர்ஜுனன் கருத்தாலே –சூரணை -198-

ஸ்வரூப வ்ருதத்வாத் அதர்மமாகச் சொல்ல வேண்டும் அவற்றை -தர்மம்-
என்கிறதுக்கு ஹேதுவை அருளிச் செய்கிறார் –

அதாவது
பாகவத் அத்யந்த பாரதந்த்ர்யம் ஆகிற உத்தேச்யத்துக்கு விரோதியாய் இருக்கையாலே –
அதர்ம சப்த வாச்யங்களாக -அப்ராப்தங்களாய் இருக்கிற இவற்றை தர்மம் என்று சொல்லுகிறது –
ஸ்வ தர்மமான யுத்தத்தை அதர்மம் என்றும்
இவற்றை தர்மம் என்றும்
பிரமித்த அர்ஜுனனுடைய நினைவாலே இத்தனை -என்கை –

(யஸ் ஸர்வஞ்ஞஸ் ஸர்வ வித் -என்கிறபடியே ஸாமான்ய விசேஷ ஞானவானான கிருஹனன் தர்மம் எண்டு சொல்கிறது)

ஆக-பிரதம பதார்த்தத்தை அருளிச் செய்தார் ஆயிற்று .

——————————————————————————————————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முமுஷுப்படி -த்வய பிரகரணம்-ஸூர்ணிகை –160–184–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் –ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் அரும்பத விளக்கம் —

January 11, 2024

இனி உத்தர வாக்யத்துக்கு அர்த்தம் அருளிச் செய்வதாக உபக்ரமிக்கிறார் –

உத்தர வாக்யத்தாலே ப்ராப்யம் சொல்லுகிறது –சூரணை -160-

ப்ராப்யமாவது –
ஸ்ரீ யபதியாய்-சர்வ ஸ்வாமியாய் -இருக்கிற சர்வேஸ்வரன் திரு அடிகளில் பண்ணும் கைங்கர்யம் –

———————————————————

பிராபக வர்ணம் அநந்தரம் ப்ராப்யம்  சொல்லுகிற இதுக்கு அபிப்ராயம் அருளிச் செய்கிறார் 

ப்ராப்யாந்தரத்துக்கு அன்று என்கை-சூரணை -161-

பூர்வ வாக்யத்தில் பிரதி பாதிதமான சாதனம் பல சதுஷ்டய சாதாரணம் ஆகையாலே –
கீழ் பண்ணின பிராபக வர்ணம் ப்ராப்யாந்தரதுக்கு அன்று என்னும் இடம் சொல்லுகை -இப்போது
ப்ராப்யம் சொல்லுகிற  இதுக்கு பிரயோஜனம் என்றபடி –

——————————————————

ப்ராப்யாந்தரங்களை விட்டு இந்த ப்ராப்யத்தை அபேஷிக்க வேண்டுவான் என் என்கிற
சங்கையிலே அருளிச் செய்கிறார் –

உபாயாந்தரங்களை விட்டு சரம உபாயத்தை பற்றினார் போலே
உபேயாந்தரமான ஐஸ்வர்ய கைவல்யங்களை விட்டு எல்லையான
ப்ராப்தியை அர்த்திக்கிறது –சூரணை -162-

அதாவது
உபாய வர்ணம் பண்ணுகிற அளவில் அநந்ய சரணத்வ ரூபமான ஸ்வரூபத்துக்கு அநு குணமாக கர்ம ஞான பக்திகளாகிற உபயாந்தரங்களை விட்டு சரமமான சித்தோ உபாயத்தைப் பற்றினாப் போலே –
உபேய பிரார்த்தனை பண்ணுகிற அளவிலும் அநந்ய போகத்வ ரூபமான ஸ்வரூபத்துக்கு அநு குணமாக உபேயாந்தரமான ஐஸ்வர்ய கைவல்யங்களை விட்டு சரமமான ப்ராப்யத்தை அர்த்திக்கிறது -என்கை –

——————————————————

நினைவறியும் ஈஸ்வரன் பக்கல் பிரார்த்தனை மிகை என்று இருப்பார் பண்ணும்
பிரஸ்னத்தை அநு வதிக்கிறார்-

இவன் அர்த்திக்க வேணுமோ -சர்வஜ்ஞ்ஞன் இவன் நினைவு அறியானோ -என்னில்–சூரணை -163-

இவன் அர்த்திக்க வேணுமோ -சர்வஜ்ஞ்ஞன் இவன் நினைவு அறியானோ என்னில் -என்று
தனியாக ஏதும் இல்லை-

——————————————-

அதுக்கு உத்தரம் அருளிச் செய்கிறார் –

இவன் பாசுரம் கேட்டவாறே திரு உள்ளம் உகக்கும் –சூரணை -164–

அதாவது
ருக்ணதை ஆகையாலே சோற்றில் ஆசை அற்று கிடந்த பிரஜை ரோகம் தீர்ந்து –
பசி விளைந்து -சோறு-என்று அபேஷிக்கும் பாசுரம் கேட்டால் பெற்ற தாய் உகக்குமாப் போல் –
அநாதி காலம் ப்ராப்யாந்தர ப்ராவண்யம் ஆகிற நோய் கொண்டு இந்த ப்ராப்யத்தில்
நசை அற்றுக் கிடந்தவன் -இதிலே ருசி பிறந்து -தன் பக்கலிலே வந்து -இத்தை
அபேஷிக்கிற பாசுரம் கேட்டவாறே -சேஷியான அவன் திரு உள்ளம் உகக்கும் –
அதுக்காக அர்த்திக்கிறான் இத்தனை -என்கை-

———————————————-

இனி இவ் வாக்யத்துக்கு பிரதி பதம் அர்த்தம் அருளிச் செய்வதாக திரு உள்ளம்
பற்றி பிரதம பதத்தை உபாதானம் பண்ணுகிறார் –
அதுக்கு அர்த்தம் அருளி செய்கிறார் –

ஸ்ரீ மதே-பெரிய பிராட்டியாரோடு கூடி இருந்துள்ளவனுக்கு –சூரணை -165-

பெரிய பிராட்டியாரோடு கூடி இருந்து உள்ளவனுக்கு என்று இங்கும் ஸ்ரீ சப்தத்துக்கு
பூர்வ வாக்யத்தில் சொன்ன வ்யுத்புத்தி த்வ்யமும் -அதில் அர்த்தமும் -மதுப்பர்த்தமான
நித்ய யோகமும் அனுசந்தேயம் –

———————————————————-

இரண்டு இடத்திலும் நித்ய யோகம் ஒத்து இருக்கச் செய்தே அவ்வவதச அநு குணமாக
இவள் இருக்கும் இருப்பை அருளிச் செய்கிறார் – 

அவன் உபாயமாம் இடத்தில் தான் புருஷ காரமாய் இருக்கும் –
அவன் ப்ராப்யனாம் இடத்தில் தான் ப்ராப்யையுமாய் -கைங்கர்ய வர்த்தகையுமாய் -இருக்கும் –சூரணை -166-

அதாவது
அவன் சேதனர்க்கு அநிஷ்ட நிவ்ருத்தி -இஷ்ட ப்ராப்திகளுக்கு உபாயமாம் இடத்தில்
சஹாயாந்தர சம்சர்க்கத்தை சஹியாமையால்-தானுபாய பாவத்தில் அன்வயம் இன்றிக்கே 
சாபராத சேதனருடைய அபராதங்களைப் பார்த்து அவன் சீரும் அளவில் -அத்தை சஹித்து
அங்கீகரிக்கும் படியாக பண்ணும் புருஷாகாரமாய் இருக்கும் –

அவன் சேதனருக்கு கைங்கர்ய பிரதி சம்பந்திதயா ப்ராப்யனாம் இடத்தில்
அவனோபாதி கைங்கர்ய பிரதி சம்பந்தயாய்க் கொண்டு தான் ப்ராப்யையுமாய் –
இவர்கள் செய்யும் கைங்கர்யத்தை அவன் திரு உள்ளத்திலே ஓன்று பத்தாகப் படுத்தி
உகப்பிக்கையாலே கைங்கர்ய வர்தகையுமாய் இருக்கும் -என்கை-

இது தன்னை பரந்தபடியில் -பூர்வ வாக்யத்தில் ஸ்ரீ மச் சப்தம் சேதனருடைய அபராதத்தையும் –ஈஸ்வரனுடைய ஸ்வாதந்த்ர்யத்தையும் கண்டு -இவர்கள் அவனுடைய குரோதத்துக்கு விஷய பூதராய் நசித்துப் போகாதே -இவனைக் கிட்டி உஜ்ஜீவித்துப் போக வேணும் -என்று சாபராதமான சேதனரை ஈஸ்வரனோடு சேர்க்கைக்கான என்றுமொக்க விடாதே இருக்கும் இருப்பைச் சொல்லுகிறது –

இங்குத்தை ஸ்ரீ மச்  சப்தம் -கைங்கர்ய பிரதி சம்பந்த்வத்தை  பற்றவும் -இவர்கள் பண்ணும் கைங்கர்யத்தை ஈஸ்வரன் திரு உள்ளத்திலே ஓன்று பத்தாக படுத்துகைக்காகவும் -அனுபவ விச்சேதத்தில் தனக்கு சத்தா ஹானி பிறக்கும் படி இருக்கையாலே -நிரந்தர சம்ஸ்லேஷதுக்காகவும் -அவனை ஷண காலமும் பிரியாதே சர்வ காலமும் சம்ஸ்லிஷ்டயாய்  இருக்கும் -இருப்பைச் சொல்கிறது -என்று விஸ்தரேண அருளிச் செய்தார் 

———————————————————

திரு மந்த்ரத்தில் உத்தர பதத்துக்கு இவ்  உத்தர வாக்கியம் விவரணமாய் இருக்கும் படியை
அருளிச் செய்கிறார் –

இதிலே திரு மந்த்ரத்திலே சொன்ன ப்ராப்யத்தை விசதமாக அனுசந்திக்கிறது –சூரணை-167-

அதாவது –
கைங்கர்ய பிரதி சம்பந்தி ஒரு மிதுனம் என்னும் இடத்தை சாப்தமாக பிரதிபாதிக்கிற
இந்த வாக்யத்திலே -நாராயணா -என்று கைங்கர்ய பிரதி சம்பந்தி ஒரு மிதுனம் என்னும் இடம் ஆர்த்தம்  ஆகையாலே -அவிசதமாக சொன்ன ப்ராப்யத்தை விசதமாக அனுசந்திக்கிறது -என்கை-

அங்கு -நாராயணனுக்கே அடிமை செய்ய பெறுவேனாக வேணும் -என்கிற இவ்வளவு ஒழிய அடிமை கொள்ளுமவன் ஸ்ரீ மானாகாக வேணும் -என்றும்
அடிமை செய்பவன் நிர்மமனாக வேணும் -என்றும் சொல்லாமையாலும் -அவை இரண்டும்
இங்குச் சொல்லுகையாலும் இறே அந்த பதத்துக்கு இவ் வாக்கியம் விவரணம் ஆயிற்று –

————————————————-

இம் மிதுனத்திலே  அடிமை செய்ய வேணும் என்ற நிர்பந்தம் தான் ஏன் –என்ன
அருளிச் செய்கிறார்

இளைய பெருமாளைப் போலே -இருவருமான சேர்த்தியிலே
அடிமை செய்கை முறை –சூரணை -168-

அதாவது
பவாம்ஸ் து சஹா வைதேஹ்யா கிரி ஸாநிஷூ ரம்ஸ்யதே
அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரதஸ் ஸ்வபதஸ் தே -என்று
பெருமாளும் பிராட்டியுமான சேர்த்தியிலே அடிமை செய்த இளைய பெருமாளைப் போலே –
இருவருமான சேர்த்தியிலே அடிமை செய்ய இளைய பெருமாளைப் போலே -இருவருமான சேர்த்தியிலே அடிமை செய்கை இவ் வாத்மாவுக்கு ஸ்வரூப ப்ராப்தம்-என்கை
மிதுன சேஷத்வம் ஸ்வரூபம் ஆனால் மிதுன கைங்கர்யம் இறே ஸ்வரூப ப்ராப்தம் –

———————————————————–

இன்னும் அச் சேர்த்தியிலே அடிமை செய்யும் அளவில் உள்ள வாசியை அருளிச் செய்கிறார் 

அடிமை தான் சித்திப்பதும் ரசிப்பதும் இச் சேர்த்தியிலே –சூரணை -169-

அதாவது –
ஸ்வாதந்த்ரனான ஈஸ்வரன் உபேஷியாமல் கைங்கர்யம் கொண்டு அருளும் படி
பண்ணுமவள் இவள் ஆகையாலே –
சீதாமுவாச சீதாசமஷம் காகுத்ஸ்தமிதம் வசனம் அப்ரவீத் -என்று
இவள் முன்னிலையாக தம்முடைய ஸ்வரூப அநு ரூபமான அடிமையை
அபேஷித்துப் பெற்ற இளைய பெருமாளைப் போலே -இவன் ப்ரார்த்திக்கிற அடிமை தான்
சித்திப்பதும் -மாதா பிதாக்கள் இருவருமான சேர்த்தியிலே ஸூஸ்ருஷை பண்ணும்
புத்ரனுக்குப்  போலே -செய்கிற அடிமை ரசிப்பதும் -பிராட்டியும் அவனும் ஆன சேர்த்தியிலே என்கை –

————————————————-

இனி இரண்டாம் பதத்தை உபாதானம் பண்ணுகிறார் -நாராயணாய -அதுக்கு
அர்த்தம் அருளிச் செய்கிறார்

நாராயணாய -சர்வ சேஷியாய் உள்ளவனுக்கு –சூரணை-170-

நாரயணத்வம்-உபய விபூதி நாதத்வம் ஆகையாலே -சர்வ சேஷியாய் உள்ளவனுக்கு -என்கிறார் –கைங்கர்ய ப்ரதி சம்பந்தியாவான் சேஷி இறே –

————————————————

கைங்கர்யம் தான் அனுபவ ஜனித ப்ரீதி கார்யம் ஆகையாலும் -அந்த ப்ரீதி தான்
அனுபாவ்ய விஷய அதீனை ஆகையாலும் -அனுபாவ்ய விஷயம் சொல்ல வேண்டுகையாலே அருளிச் செய்கிறார் –

இதில் திரு மேனியையும் குணங்களையும் சொல்லும்–சூரணை -171-

அதாவது –
கைங்கர்ய பிரதி சம்பந்தியைச் சொல்லுகிற இப் பதத்தில் கைங்கர்யத்துக்கு பூர்வ பாவியாய் இருக்கும் அனுபவத்துக்கு விஷயமான திவ்ய மங்கள விக்ரகத்தையும் -கல்யாண குணங்களையும் -சொல்லும் -என்கை –
சதா பஸ்யந்தி-என்றும் –
சோஸ்நுதே சர்வான் காமான் -என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
திவ்ய மங்கள விக்கிரகமும் கல்யாண குணங்களும் –
ரசம் ஹ்யேவாயம் லப்த்வா ஆனந்தீ பவதி -என்கிற ஸ்வரூபதோ  பாதி –
கைங்கர்ய வர்தகங்களுமாய்-போக்யங்களுமாய் இறே இருப்பது –

குணங்கள் என்று சாமான்யேன சொல்லுகையாலே -ஞான சக்த்யாதிகளோடு –
வாத்சல்யாதி குணங்களோடு -ஸௌர்யாதி  குணங்களோடு -வாசி அற எல்லா குணங்களும் –அனுபாவ்யங்களாய் இருக்கையாலே -பூர்வ வாக்யத்தில் -நாராயண  பதத்தில் -உபாய வர்ணத்துக்கு உபயுக்த்தயா அநு சந்தேயங்களான குண விசேஷங்களும் -இப் பதத்தில் ப்ராப்யதயா அநு சந்தேயங்கள் –

ஆஸ்ர்யமான ஸ்வரூபத்துக்கு ஆகார த்வயம் உண்டாய் இருக்கிறார் போலே -ஆஸ்ரயிகளான குண விசேஷங்களுக்கும் ஆகார த்வ்யமும் உண்டாய் இறே இருப்பது –
இவை எல்லாம் பரந்தபடியில் அருளிச் செய்தார்

—————————————————–

இனி இப் பதத்துக்கு தாத்பர்யம் இன்னதிலே என்கிறார் –

சேஷித்வத்திலே நோக்கு –சூரணை -172-

அதாவது –
அநுபாவ்யத்வம் அவிசிஷ்டம் ஆகையாலே சகல குணங்களும் பிரதிபாதிதமாய் இருந்ததே ஆகிலும் சதுர்த்தி அம்சத்தில் சொல்லுகிற வ்ருத்தி விசேஷத்துக்கு மிகவும் அந்தரங்கமாய் இருப்பது சேஷித்வம் ஆகையாலே அது இப்  பதத்துக்கு நோக்கு -என்கை-

—————————————————–

இந்த சேஷித்வ கதனத்துக்கு  பிரயோஜனம் அருளிச் செய்கிறார் –

ப்ராப்த விஷயத்தில் கைங்கர்யம் இறே ரசித்து இருப்பது –சூரணை -173-

அதாவது
சர்வம் பரவசம் துக்கம்-என்றும் –
சேவா ஸ்வ வ்ருத்தி -என்றும்-சொல்லுகிற படி
நிஷித்தமான அப்ராப்த விஷயத்தில் கைங்கர்யம் போல் அன்றிக்கே –
சாயா வா சத்வ மநு கச்சேத்-என்றும்
சா கிமர்த்தம் ந சேவ்யதே-என்றும் சொல்லுகிற படியே
விஹிதமான ப்ராப்த விஷயத்தில் பண்ணும் கைங்கர்யம் இறே இவன் ரசிப்பது -என்கை –

——————————————–

இனி இப் பதத்தில் விபக்தி அம்சத்துக்கு அர்த்தம் அருளிச் செய்கிறார் –

இந்த சதுர்த்தி கைங்கர்யத்தைப் பிரகாசிப்பிக்கிறது –சூரணை -174-

அதாவது –
சேஷத்வ ஞான கார்யமான உபாய பரிக்ரஹதுக்கு அநந்தரம் ப்ராப்தமாய் உள்ளதாகையாலே – தாதர்யா பிரதி பாதகம் அன்றிக்கே -இந்த சதுர்த்தி பரிக்கிரஹித்த உபாயத்தினுடைய பலமான கைங்கர்யத்தைப் பிரதி பாதிக்கிறது -என்கை –

கைங்கர்யத்தைப் பிரகாசிப்பிக்கை ஆவது -கைங்கர்ய பிரார்த்தனையைப் பிரதி பாதிக்கை கைங்கர்யம் ஆவது -பகவன் முக விகாச ஹேதுவான வ்ருத்தி விசேஷம் –
இக் கைங்கர்யம் தான் -ஏதத் சாம காயன் நாஸ்தே -என்றும்
நம இத்யேவ வாதின -என்றும் –
யேன யேன ததா கச்சதி தேன தேன சஹா கச்சதி -என்றும்
இத்யாதிகளில் சொல்லுகிற படியே -வாசிக காயிக ரூபமாய் இருக்கும்-

(ஏதத் சாம காயன் நாஸ்தே–தொடங்கி அஹம் விஸ்வம் புவநம் அபய பவாம் என்னும் அளவும்
இந்த ஸாம கானத்தைப் பாடிக்கொண்டே இருக்கும்
ஹாவு ஹாவு ஹாவு என்று ஆச்சர்யப்படும்
அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் என்று போக்யதையைப் பலகாலும் சொல்லா நிற்கும்
அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத என்று தனது அப்ரதான போகத்தருவத்தையும் பலகாலும் சொல்லா நிற்கும்
நான் ஸூஹ்ருதத்துக்கு முற்பாடானாக நின்றேன் என்றும்
நித்ய ஸூரிகளுக்கு முன்னே நடுவாக நின்றேன் என்னும்
நான் எல்லா புவனத்தையும் அமுக்கி மேலானேன் என்றும் இப்படிகளால் ஆச்சர்யப்பட்டு ஸ்தோத்ரம் பண்ணினபடி சொல்கிறது)

(யேன யேன ததா கச்சதி தேன தேன சஹா கச்சதி–ஸர்வேச்வரன் யாதொரு நினைவாலே நடக்கிறான்-அந்த நினைவோடு கூட நடவா நிற்பன்)

——————————————-

இக் கைங்கர்யம் பிரார்தன ஆதீனம் ஆகையாலே -காதாசித்தம் ஆகாதோ என்ன –
அருளிச் செய்கிறார் –

கைங்கர்யம் தான் நித்யம் –சூரணை -175-

அதாவது
சேஷத்வமே ஆத்மாவுக்கு ஸ்வரூபம் ஆகையாலும் –
அகிஞ்சித்கரஷ்ய சேஷத்வ அநு பாபத்தி -என்கிறபடி கிஞ்சித்காரபாவத்தில் அது தான்
அநு பபன்னம் ஆகையாலும் கைங்கர்யம் ஆத்மாவுக்கு நித்யம் -என்கை
ஆகையால் இறே -நித்ய கிங்கரர் ப்ரஹர்ஷ இஷ்யாமி -என்றும்
நித்ய கிங்கரோ பவானி -என்றும்
ஆச்சார்யர்கள் அருளிச் செய்தது-

————————————————

நித்தியமாய் இருக்குமாகில் பிரார்த்திக்க வேணுமோ என்ன -அருளிச் செய்கிறார் –

நித்யமாக பிரார்த்தித்தே பெற வேணும் –சூரணை -176-

அதாவது –
விஷயம் உத்துங்கமாய் இருக்கையாலும் -ஆஸ்ரய பூதனான சேதனன் அத்யந்த
பரதந்த்ரனாய் இருக்கை யாலும் -பிரார்த்தனா விசேஷம் இல்லாத போது கைங்கர்யம்
சித்தியாமையாலும் -நித்யமாக பிரார்த்தித்தே பெற வேணும் -என்கை-

———————————————

இது நித்ய பிரார்த்தனை அநீயமாக்கைக்கு நிதானத்தை அருளிச் செய்கிறார் –

சேஷிக்கு அதிசயத்தை விளைக்க சேஷ பூதனுக்கு
ஸ்வரூப லாபமும் ப்ராப்யமும் –சூரணை -177-

அதாவது
ந கிஞ்சித் குர்வதச் சேஷத்வம் -என்கிறபடியே
சேஷிக்கு அதிசயகரம் இல்லாத வஸ்துக்கு சேஷத்வம் இல்லாமையாலே –
சேஷியான ஈஸ்வரனுக்கு தன்னுடைய வ்ருத்தி விசேஷங்களாலே
ப்ரீதி ரூபமான அதிசயத்தை விளைக்க சேஷ பூதனானவனுக்கு தன் ஸ்வரூப லாபமாய்
அவனுடைய முகோல்லாசானுபவதுக்கு உறுப்பாய் இருக்கையாலே ப்ராப்யமுமாயுமாய் இருக்கும் -என்கை
ஆகையால்-நித்ய ப்ராதனநீயமாய் இருக்கும் என்று கருத்து–

—————————————————————

நம-கைங்கர்யத்தில் களை அறுக்கிறது –சூரணை-178-

அநந்தரம் சரம பதத்தை உபாதானம் பண்ணுகிறார் -நம -என்று
அதுக்கு அர்த்தம் அருளிச் செய்கிறார் –

அதாவது
நமஸ்-சப்தம் சாமான்யேன அஹங்கார மமகாரங்களை  கழிக்கையாலே-
திரு மந்த்ரத்தில் மத்யம பதமான -நமஸ் சப்தம் போலே -ஸ்வரூப உபாய புருஷார்த்த –
விரோதிகள் மூன்றையும் கழிக்க வற்றாய் இருந்ததே ஆகிலும் -இங்கு -அங்கன் இன்றிக்கே கைங்கர்ய பிரார்தன அனந்தரோக்தம் ஆகையாலே -இந்த கைங்கர்யத்தில் விரோதியைக் கழிக்கிறது -என்கை-

————————————————

கைங்கர்யத்துக்கு களை எது -என்ன -அருளிச் செய்கிறார் –

களை யாவது தனக்கு என்னப் பண்ணும் அது –சூரணை -179-

தனக்கு என்னப் பண்ணுகையாவது-போக்தாஹம்  மம போகோயம்-என்கிறபடியே
இத்தை தன்னுடைய ரசத்துக்கு உறுப்பாக நினைத்துப் பண்ணுகை –
பகவன் முக விகாச ஹேதுவாகையாலே இது நமக்கு ஆதரணீயம் என்கிற பிரதிபத்தி
ஒழிய -இதில் போக்த்ருத்வ பிரதி பத்தியும் -மதீயத்வ பிரதி பத்தியும் -நடக்குமாகில் –
அபுருஷார்தமாய் இறே இருப்பது –

—————————————————–

இன்னம் இந்த கைங்கர்ய ப்ராப்திக்கு விரோதிகள் ஆனைவையும் இதிலே தள்ளுண்ணும் என்கிறார் –

இதில் அவித்யாதிகளும் கழி உண்ணும் –சூரணை -180-

அதாவது
அஹங்கார மமகார நிவ்ருத்தியை ப்ரார்த்திக்கிற இந் நமஸ்சிலே-
அநாத் மன்யாத்ம புத்திர் யா அஸ்வே ஸ்வ மிதி யா மிதி
அவித்யா தரு சம்பூதி பீஜம் ஏதத் த்விதா ஸ்திதம் -என்கின்றபடியே

அநாத்மன்யாத்மா புத்யாதிகளை -வடிவாக உடைத்தாய் -கர்மோத்புத்தி காரணமாய் இருந்துள்ளஅவித்யையும் -தத் கார்யமான கர்மங்களும் –
தத் கார்யமாக வரும் பிரகிருதி சம்பந்தமும் -எல்லாம் கழி உண்ணும் -என்கை –

ஆகை இறே -த்வய விவரணமான கத்யத்தில் நமஸ் சப்தார்த்தை அநு சந்தித்து அருளுகிற அளவிலே –
மநோ வாக் காயை  -இத்யாதி சூர்ணையாலே-அக்ருத்ய கர்ணாத்யகில கர்ம நிவ்ருத்தியையும்  –
அநாதி கால ப்ரவ்ருத்த -இத்யாதி சூர்ணையாலே -அவித்யா நிவ்ருத்யையும் –
மதீயாநாதி இத்யாதி சூர்ணையாலே -பிரகிருதி சம்பந்த நிவ்ருத்தியையும் –
பாஷ்யகாரர் பிரசாதித்து அருளிற்று –

(மநோவாக்காயைঃ * அநாதி³கால ப்ரவ்ருʼத்த * அநந்த அக்ருʼத்யகரண க்ருʼத்யாகரண * ப⁴க³வத³பசார பா⁴க³வதாபசார
* அஸஹ்யாபசாரரூப * நாநாவித⁴ * அநந்த அபசாராந் * ஆரப்³த⁴கார்யாந், * அநாரப்³த⁴கார்யாந்,
* க்ருʼதாந், * க்ரியமாணாந், * கரிஷ்யமாணாம்ஶ்ச ஸர்வாந் * அஶேஷத: க்ஷமஸ்வ ॥)

(அநாதி³காலப்ரவ்ருʼத்தம் * விபரீதஜ்ஞாநம் * ஆத்மவிஷயம் * க்ருʼத்ஸ்ந ஜக³த்³விஷயம் ச
* விபரீத வ்ருʼத்தம் ச * அஶேஷ விஷயம் * அத்³யாபி வர்த்தமாநம் வர்திஷ்யமாணம் ச * ஸர்வம் க்ஷமஸ்வ ॥)

(மதீ³யாநாதி³கர்ம ப்ரவாஹ ப்ரவ்ருʼத்தாம் * ப⁴க³வத்ஸ்வரூபதிரோதா⁴நகரீம் * விபரீத ஜ்ஞாந ஜநநீம்
* ஸ்வவிஷயாயாஶ்ச போ⁴க்³யபு³த்³தே⁴ர் ஜநநீம் * தே³ஹேந்த்³ரியத்வேந போ⁴க்³யத்வேந
* ஸூக்ஷ்மரூபேண ச அவஸ்தி²தாம் * தை³வீம் கு³ணமயீம் மாயாம் *
தா³ஸபூ⁴தம் “ஶரணாக³தோঽஸ்மி தவாஸ்மி தா³ஸ:” * இதி வக்தாரம் * மாம் தாரய ।)

———————————————————

ஆனாலும் இதுக்கு பிரதான அர்த்தம் கைங்கர்யத்தில் ஸ்வ பிரயோஜன நிவ்ருத்தி ஆகையாலே –
அத்தை உபபாதிக்கிறார் மேல் –
அதில் பிரதமத்தில் கைங்கர்யம் பண்ணும் போது நாம் எப்படியாக வேணும் என்ன -அருளிச் செய்கிறார் –

உனக்கே நாம் ஆள் செய்வோம் -என்னும்படியே ஆக வேணும் –சூரணை -181-

அதாவது –
கைங்கர்யம் பண்ணும் அளவில் -உனக்கே நாம் ஆள் செய்வோம் –திருப்பாவை -29-என்று
உனக்கும் எங்களுக்குமாய் இருக்கும் இருப்பைத் தவிர்ந்து –
உனக்கே உகப்பாக நாங்கள் அடிமை செய்ய வேணும் -என்கிறபடியே –
சேஷிக்கே உகப்பாக பண்ண வேணும் -என்கை –
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே –திரு வாய் மொழி –2-9-4-என்று இறே ஆழ்வாரும் அருளிச் செய்தது –

(சிற்றம் சிறுகாலே  வந்து உன்னைச் சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாதே
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்–29-)

(மனக்கே ஆட்செய்எக் காலத்தும்’ என்று,என்
மனக்கே வந்துஇடை வீடுஇன்றி மன்னித்
தனக்கே யாக எனைக்கொள்ளும் ஈதே;
எனக்கே கண்ணனை யான்கொள் சிறப்பே.–2-9-4)

—————————————————

இனி இந்த கைங்கர்யத்துக்கு விக்னங்களை அருளிச் செய்கிறார் –

சௌந்தர்யம் அந்தராயம் -கீழ் சொன்ன கைங்கர்யமும் அப்படியே –சூரணை -182-

அதாவது –
அவனுடைய விக்ரஹ சௌந்தர்யமும் சித்த அபஹாரியாய் கை சோரப்
பண்ணுகையாலே -கைங்கர்யத்துக்கு விக்னம் –

இந் நமஸுக்கு கீழே சதுர்த்தியில் சொன்ன கைங்கர்யமும் -அபிமத விஷய
பரிசர்யை போலே ஸ்வ ரசத்துக்கு உடலாய் இருக்கையாலே அவனுடைய முக மலர்த்தியே
பிரயோஜனம் ஆக இருக்கும் அதுக்கு அதுவும் விக்னம் -என்கை-

——————————————————

இப்படி ஆகையால் இவ் விரோதி நிவ்ருத்தி பிரார்த்தனை இடை விடாமல்
நடக்கும்படியே அருளிச் செய்கிறார் –

கைங்கர்ய பிரார்த்தனை போலே -இப் பதத்தில் பிரார்த்தனையும் என்றும் உண்டு –சூரணை -183-

அதாவது –
சதுர்த்தியில் சொல்லுகிற கைங்கர்ய பிரார்த்தனை காதா சித்தம் அன்றிக்கே –
நித்தியமாய் செல்லுமா போலே -இப் பதத்தில் சொல்லுகிற கைங்கர்ய விரோதி
நிவ்ருத்த பிரார்த்தனையும் -இங்கு இருக்கும் காலத்தோடு -ப்ராப்ய பூமியில்
போன காலத்தோடு வாசியற எல்லா காலமும் நடக்கக் கடவதாய் இருக்கும் -என்கை .

——————————————————–

கந்தல் கழிந்த அந் நிலத்திலும் ஸ்வ போக்த்ருத்வ உதயம் உண்டாமோ என்ன -அருளிச் செய்கிறார் –

மருந்தே நாங்கள் போக மகிழ்ச்சிக்கு-திரு வாய் மொழி -9-3-4–என்னா நின்றது இறே –சூரணை -184-

அதாவது –
உன்னுடைய அனுபவத்தாலே எங்களுக்கு வரும் ஆனந்தத்துக்கு ஸ்வ போக்த்ருத்வ புத்தியை விளைத்து -ஸ்வரூபத்தை அழியாதபடி சாத்மிப்பிக்கும் பேஷஜம் ஆனவனே -என்று நித்ய ஸூரிகள் பேசும் பாசுரமாக சொல்லா நின்றது இறே -என்கை –

(மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கு என்று
பெரும் தேவர் குழாங்கள் பிதற்றும் பிரான்
கருந்தேவன் எம்மான் கண்ணன் விண்ணுலகம்
தருந்தேவனை சோரேல் கண்டாய் மனமே–9-3-4-)

ஆகையால் -அவ் விஷய வைலஷண்ய பிரயுக்தமாய் வரும் ஸ்வ போக்த்ருத்வ புத்தி
அங்கும் விளைகையாலே -இப் பதத்தில் பிரார்த்தனை என்றும் உண்டு என்னும் இடம்
சித்தம் என்றது ஆயிற்று –
ஆகை இறே முக்தருக்கு லஷணம் சொல்லுகிற இடத்தில் -நம இத்யேவ வாதின -என்றது –

ஆக –
புருஷகாரதையும்
தந் நித்ய யோகத்தையும்
தத் உத்பாவிதமான வாத்சல்யாதி குணங்களையும்
அந்த குண பிரகாசமான திவ்ய மங்கள விக்ரகத்தையும்
குண விக்ரக விசிஷ்ட வஸ்துவினுடைய உபாயத்வத்தையும்
அவ் உபாய ஸ்வீகாரத்தையும்
தத் பலமான கைங்கர்யத்துக்கு பிரதி சம்பந்தி ஒரு மிதுனம் என்னும் அத்தையும்
அவ் வஸ்துவினுடைய சர்வ சேஷித்வத்தையும்
தத் விஷய கைங்கர்யத்தையும்
கைங்கர்ய விரோதி நிவ்ருத்தியையும்
சொல்லிற்று ஆயிற்று –

———————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –