நண்ணாதார் முறுவலிப்ப” என்ற திருவாய்மொழியிலே சம்சாரிகள் படுகிற துக்கத்தை அநுசந்தித்து, அதற்குப் பரிஹாரமாகப் ‘பகவானுடைய பரத்துவ ஞானத்தை உண்டாக்குவோம்’ என்று பகவானுடைய பரத்துவத்தை உபதேசித்தார் மேல் திருவாய்மொழியிலே; இரண்டு கிட்டம் தம்மிலே சேரக் கிடக்க அவற்றிலேஒன்று பொன்னாய் இருக்குமாறு போலே அவர்களிலே ஒருவராக இருக்கிற தாம், அவர்களையும் திருத்தும்படி தமக்குப் பிறந்த நன்மைக்கு ‘அடி என்?’ என்று பார்த்து, அதற்குக் காரணம் தம்பக்கல் ஒன்றும் காணாமையாலே தன்னுடைய 1நிர்ஹேதுகமான கிருபையாலே செய்தானத்தனை என்கிறார் இத் திருவாய்மொழியில்
அமுதம் இருக்க விஷத்தை விரும்புவாரைப் போலே ஆராவமுதை விட்டு இனிய அமுதம் என்னும்படி இனியபொருளாகத் தோன்றின ஐம்புல இன்பங்களை விரும்பிப் போந்தபடியையும்
மணி வண்ணனே! – 2பெருவிலையனான இரத்தினம் போலே சிலாக்கியமான வடிவை எனக்கு உபகரித்தவனே!
உன்னை விட்டு என் கொள்வன் என்னும் வாசகங்கள் சொல்லியும் – 1பரமைகாந்திகளைப் போலே உன்னை ஒழிய நான் எதனைக் கொள்வன்? என்று இங்ஙனே வாயாலே சொல்லா நிற்கச்செய்தேயும். வன் கள்வனேன் – களவாவது – பிறருடைய பொருளை அவர் அறியாமலே கொள்வது
ஆத்மாவுக்குச் சரீரத்தின் சேர்க்கை அநாதியாக இருக்கச் செய்தேயும், அது ஒளபாதிகமாய்த் தோற்றுகையாலே ‘நடுவே ஓர் உடம்பு’ என்கிறார். 2சலகில் கிடந்த முத்துக்கும் பொன்னுக்கும் அழுக்கு ஏறின நாள் அறிவார் இல்லை, பின்பு கழியக் காண்கையாலே ‘இது வந்தேறி’ என்று தோற்றாநின்றதே அன்றோ? அப்படியே, பகவானை அடைவதனாலே கழியக் காண்கையாலே ‘இது வந்தேறி’ என்று தோற்றுமே அன்றோ? 4இராஜ புத்திரன் வழியிலே போகாநிற்கச் செய்தே வேடர் கையிலே அகப்பட்டுத் தன்னை வேடனாகவே எண்ணுமாறு போலே இருப்பது ஒன்றே அன்றோ, சேதனன் தேகத்திலே அஹம் புத்தி பண்ணி “நான் தேவன்” என்று இருக்கும் இருப்பு?
போர வைத்தாய் புறமே – 2ஏகாந்த போகத்துக்காகப் போந்த பிராட்டி அசோகவனத்திலே இருந்தாற்போலே தோன்றாநின்றதாயிற்று, சொரூப ஞானம் பிறந்த பிறகு தேகத்திலே இருக்கிற இருப்பு. புறமே – உன் குணங்கள் நடையாடாத சம்சாரத்திலே வைத்தாய். 3தம்முடைய சொரூபத்தைப் போன்று ‘கர்மங்களும் அவனைக் குறித்தபோது பரதந்திரங்கள்’ என்று இருக்கும் பரமவைதிகர் ஆகையாலே ‘போரவைத்தாய்’ என்று அவன் செய்தானாகச் சொல்லுகிறார்.
திறந்து கிடந்த வாசல்தோறும் நுழைந்து திரியும் பொருள் போலே, கர்மங்களுக்குத் தகுதியாகத் தேவர்கள் முதலான சரீரங்கள் தோறும் பிரவேசித்துத் திரியும்
அந்தத் துவாரத்தின் மத்தியில் பரமாத்மாவினது அப்ராகிருதமான சரீரமானது மெல்லியதாயும் மேல் நோக்கின பிரகாசத்தையுடையதாகவும் இருக்கிறது; அத் திருமேனி எங்ஙனம் இருக்கிறது? எனின், –கரிய மேகத்தை நடுவிலுடையதான மின்னற்கொடி போன்று மெல்லியதாகவும் உருக்கின தங்கம் போன்ற காந்தியை யுடையதாயுமிருக்கிற ஒரு சிகை இருந்தால் அது போன்று இருக்கிறது” என்கிறபடியே, இருதயத்திலே இருக்கிற படி. முன்பு 2இவ்வுடம்பு அவ்வுடம்பை மறப்பித்தாற் போலே இப்போது அவ்வுடம்பு இவ்வுடம்பை மறப்பித்தது.
முட்பாய்ந்தவாறே ‘அம்மே!’ என்பாரைப் போலே நோவுபட்டவாறே திருவடிகளை நினைக்க, சர்வாதிகனான தான் தன் மேன்மை பாராமல் மடுவின் கரையிலே அரைகுலையத் தலைகுலைய வந்து காப்பாற்றிய நீர்மையை நினைத்து, ‘இது ஓர் உபகாரம் இருக்கும்படியே!’ என்று அந்த உபகாரத்தின் நினைவாலே அன்புள்ளவர்கள் சொல்லும் பாசுரத்தை அன்பு இல்லாத நான் சொன்னேன்.
எம்பிரானும் என் மேலோனே-எனக்கு உபகாரகனானவனும், கலியர் சோறு கண்டாற்போலே என் பக்கலிலே வந்து மேல் விழுந்தான்.
திருமாலார் – 1இளையபெருமாளும், இடக்கை வலக்கை அறியாத குரங்குகளும் ஒக்க அடிமை செய்தாற்போல, இரண்டு உலகங்களில் உள்ளவர்களும் ஒரு மிடறாகச் சேர்ந்து அடிமை செய்யும் சர்வாதிகனானவன்.
இவர் தாம் 2பூவேளைக்காரரைப் போலே,(அரசர்களுக்கு அவ்வக்காலங்களில் பூ இடாவிடில் குத்திக்கொண்டு முடியுமவர்கள்.) இவை காணாதபோது கைமேலே முடிவார் ஒருவரேயன்றோ
ஸ்ரீ ராமபிரான் தன் திருமேனியின் ஒளியாலே தண்டகாரண்யத்தை விளங்கச் செய்துகொண்டு அப்போது தோன்றிய இளஞ்சந்திரனைப் போன்று காணப்பட்டார்
கமலத் தடங்கண்ணன் தன்னை – 2மலர்ந்த தாமரைத் தடாகம் போலே குளிர்ந்து செவ்வியை யுடைத்தான திருக்கண்களை யுடையவன்-அன்றிக்கே, வடிவு முழுதும் கண்களாய் இருக்கிறபடி. கமலத்தடம்” என்பதற்கு, இரு வகையான பொருள் அருளிச் செய்கிறார். ஒன்று, மலர்ந்த தாமரைகளையுடைய தடாகம் என்பது. மற்றொன்று, தடம் – விரிவு. கமலம் – தாமரை.
பொலிந்தே அடிக்கீழ்ப் புகுவார் – 4நம்பிக்கை மாத்திரமேயாய் ருசி இன்றிக்கே இருக்கப் போய்ப் புகுதல் அன்றிக்கே, எம்பெருமானாரைப் போலே நூறு ஆண்டுகள் ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயோடே இருந்து, பின்பு தாய் நிழலிலே ஒதுங்குவாரைப் போலே அவன் திருவடிகளிலே புகப் பெறுவர்.
உயிர் வல் சாபம் போயிற்று-உயிரினுடைய வலிய சாபம் போயிற்றது. 3சாபத்தாலே பற்றப்பட்டவரைப்போலே அநுபவித்தால் அல்லது அழியாதது ஆகையாலே, பாபத்தைச் ‘சாபம்’ என்கிறார்
பகவானுடைய அநுபவத்திற்கு மேட்டுமடையான சம்சாரத்தில் மருபூமியில் தண்ணீர் போலே எங்கேனும் ஒருவர் இருவர் உண்டாமத்தனையன்றோ? என்ன, மலியப் புகுந்து- 2“அடியார்கள் குழாங்கள்” என்கிறபடியே, நெருங்கப் புகுந்து. இசை பாடி ஆடி உழிதரக் கண்டோம்-சந்தோஷத்தின் மிகுதியாலே பாடுவது, உடம்பு இருந்த இடத்திலே இராமல் ஆடுவதாய்க் கொண்டு, 3யமன் முதலானோர்கள் தலை மேலே அடியிட்டுச் சஞ்சரிக்கக் கண்டோம்.
இடம் கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலே – பயிர் தேயும்படி களை வளருமாறு போலே சத்துவ குணத்தையுடைய பெரியோர்கள் ஒதுங்கும்படி வளருகின்ற புறச் சமயங்களை எல்லாம் பறித்துப் போகடுவாரைப் போலே
நெற் செய்யப் புற்றேயுமா போலே, இவர்கள் ஊன்ற ஊன்ற அவர்கள் தாமாகவே தேய்வார்கள் அத்தனை
நாடகம் செய்கின்றன – இவர்கள் செய்யும் காரியம் இவர்க்கு வல்லார் ஆடினாற் போலே இருக்கை. 3“எம்பெருமானாருடைய நிற்றல் நடத்தல் படுத்தல் முதலியவைகளை நாம் கொண்டாடுமாறு போலேயும், ஆளவந்தாருடைய நடையை அரசன் கொண்டாடினாற் போலேயும் இவர் கொண்டாடுகிறபடி” என்று அருளிச்செய்வர் நஞ்ஜீயர்.ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய செயல்கள் இவர்க்கு மனக் கவர்ச்சியாக இருப்பதற்குத் திருஷ்டாந்தங்கள்
அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல் உய்யும்வகை இல்லை – இராக்கதத்தன்மை வாய்ந்தவர்களாயும் ஆசுரத்தன்மை வாய்ந்தவர்களாயும் இருப்பார் மனித சரீரத்தை ஏறிட்டுக்கொண்டு, 1ஸ்ரீ வானர சேனையின் நடுவே சுக சாரணர்கள் புகுந்தாற்போலே புகுரப் பார்த்தீர் உளராகில் உங்களுக்கு உஜ்ஜீவிக்க விரகு இல்லை. என்றது, “ஒன்றும் தேவும்” என்ற திருவாய் மொழியைக் கேட்டுச் சம்சாரம் திருந்தினபடி
செய்த பயிருக்குக் 1கடமை இறுக்குமாறு போன்று, உங்களுடைய புண்ணிய பாவங்களுக்குத் தகுதியாக அவ்வவ் தேவதைகளுக்குக் கொடுக்கும் திரவியங்களைக் கொடுத்து ஜீவிக்கைக்காக, எல்லா உலகங்களிலும் தனக்குச் சரீரமாக இருக்கிற தேவதைகளை நிறுத்தினான். என்றது, இராஜாக்கள் ஊர்தோறும் 2கூறு செய்வார்களை (வரி வசூலிக்கும் மணியக்காரர்களை.)வைக்குமாறு போன்று நிறுத்தி வைத்தான் என்பார் ‘நிறுத்தினான்’ என்கிறார்.
மேவித் தொழும் அடியாரும் பகவரும் மிக்கது உலகம்-அவனை விடாமல் நின்று அடிமை செய்யுமவர்களாலும், குணங்களை அநுசந்தானம் செய்வதற்கு அவ்வருகு ஒன்றுக்கும் ஆற்றல் இல்லாதே இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களாலும் மிக்கது உலகம். என்றது, தொடர்ந்து அடிமை செய்யும் இளைய பெருமாளையும், கிடந்த இடத்தே கிடந்து குணாநுபவம் செய்யும் ஸ்ரீ பரதாழ்வானையும் போலே இருப்பாரே ஆயிற்று உலகம் அடைய என்றபடி. ஆதலால், நீங்களும் மேவித் தொழுது உய்ம்மின் என்க.
கலிதோஷங்கள் ஒன்றும் வாராதபடி தன் அடியார்க்கு அருள் செய்யும். 1நாட்டுக்கு இட்ட அஃகம் அல்லவே யன்றோ அந்தப் புரத்துக்கு இடுவது.
மடல் எடுத்தல் என்பது, துணிவுள்ள காரியமுமாய், மிகச்சிறிய பலமுமாயிருக்கும் என்பதனைக் காட்டுகிறார்–மடல் எடுக்கையாவது, போர் சுட்டுப் பொறி கொறிக்கையைப் போன்றது ஒன்றாம்
அவ்விஷயங்கள் கிடையாவிட்டால் ‘அவற்றை அப்போதே பெறவேணும்’ என்னும்படியான மனோவேகம் பிறந்தால், பின்பு அவ்விஷயங்கள் இருந்த இடங்களிலே புகை சூழ்ந்து புறப்பட வேண்டி இருப்பது ஒரு சாகசத்தைச் செய்து புறப்பட விடுவித்து முகத்திலே விழிப்பாரைப் போலே, ‘அத்தலைக்குப் பழியை விளைத்தாகிலும் முகத்திலே விழிக்குமத்தனை’ என்று சாகசத்திலே ஒருப்பட்டு, தனக்கு இவ்வளவாகப் பிறந்த நிலையை அந்யாப தேசத்தாலே பேசுகிறார்.
அலக்குப் போர் போலே ஒருவர்க்கு ஒருவர் புகலாய் அங்ஙனம் கூடுதல், தோழிமார் கூட்டக் கூடுதல், ஆற்றாமை கூட்டக் கூடுதல், தலைவியானவள் குணங்களால் சிறந்தவளாயிருப்பாளேயாகில் பழிக்கு அஞ்சிக் கூடக் கூடுதல், இவை இத்தனையும் இல்லையாகில், முடிந்து போதல் செய்கையாகிற சாகசமானதொரு தொழில் விசேடமாயிற்று.
சிறைக்கூடத்திலே பிறந்து அங்கே வளருமாறு போலே. 2பிரிவினாலே ஊகிக்கப்படுமித்தனை காணும் புணர்ச்சி
‘என்னை நிறைகொண்டான்’ என்கிறாள். என்றது, கடலைத் தறை காணுமாறு செய்வது போன்று, என்னைச் செய்தான் என்றபடி
செய்யவாயும் கருங்கண்ணும் பயப்புஊர்ந்த-1கடலும் மலையும் குடியிருப்புமான இடங்கள் எல்லாம் பிரளய காலத்தில் ஒரே வெள்ளமாய் இருக்குமாறு போலே எங்கும் ஒக்க வைவர்ண்யமேயாயிற்று.-ஒரே வெளுப்பு ஆயிற்று. 2விஷம் பரந்தாற்போலே காணக் காண வண்டல் இட்டு வைவர்ண்யமானது பரப்பு மாறிற்று.
இரண்டு சகடத்தை இரண்டு அருகும் இழுத்து நடுவே தொட்டிலை இட்டு வளர்த்திப் போனாள் தாயார்; பாடி காப்பாரே களவு காணுமாறு போலே, காவலாக வைத்த சகடமே அசுர ஆவேசத்தாலே ஊர்ந்து வந்ததாயிற்று.
சகடம் வந்து கிட்டினபோது சிலராலே நீக்கப்படலாம்; பூதனை தாய் வடிவுகொண்டு வந்து நலியப் புக்கால் அதற்குப் பரிஹாரம் இல்லையே அன்றோ, ஈன்றோரே நஞ்சு இட்டாற்போலே இருப்பது ஒன்றே அன்றோ
தீ்ர்ந்த என் தோழி – தாய்மார் சொல்லுகிற நல்வார்த்தைகளை நீயும் சொல்லுகையாலே, ‘நீயும் அவர்களைப் போன்று விலக்குகிறாய்’ என்று இருந்தேன், உன் நினைவு இதுவாகப் பெறுவதே! 1நீ நீயேயாம்படி இருந்தாய் வர இரு என்கிறாள். 2“இராவணன் வரவிட்ட ஆள்” என்று ஐயம் உற்று இருந்தவள், “பெருமாள் பக்கல் நின்றும் வந்தவன்” என்று அறிந்த பின்பு அவனைக் கொண்டாடிற் போலே. என்றது, “பெருமாளால் அநுப்பப் பட்டவனாயிருப்பதனாலே, ஓ வானர உத்தமனே! என்னுடன் இரஹசியமான சமாசாரங்களைச் சொல்லுவதற்கும் தகுதியுள்ளவன் ஆகிறாய்” என்றாள் என்றபடி
சிறியதைப் பெரியது நலியுமாறு போலே, ஒருவன் செய்த புண்ணியத்தினுடைய பலத்தை வேறு ஒருவன் பறித்துக்கொள்ளாமல், அப்புண்ணியத்தைச் செய்தவனே அநுபவிக்கும்படி செய்யும் போதும் அவன் திருவருள் வேணுமே.
அறிவு அரு மேனி-கிட்டினால், ‘இத்தலைக்கு எல்லாச் செல்வத்தையும் தர நினைக்கின்றானோ, எல்லாச் செல்வத்தையும் கொள்ளை கொள்ள நினைக்கின்றானோ, என்று அறிய ஒண்ணாதபடியான 1வடிவையுடையவன். 2‘என்னுடைய ஆத்மாவும் என்னுடைமைகளும் நீ இட்ட வழக்கு’ என்பாரைப் போலே சொல்லி ஆயிற்று இத் தலையில் ஆத்மாவையும் மற்றைச் செல்வத்தையும் கொள்ளை கொள்வது. என்றது, தன்னையும் தன்னுடைமையையும் இவள் இட்ட வழக்கு ஆக்கி, பின்னை யாயிற்று இவளைத் தனக்கு ஆக்கிற்று என்றபடி
நீ எல்லா நிலைகளிலும் அவரை ஆதரித்துப் போருவாய்’ என்று அவர் என்னைக் குறித்துச் சொல்லிவிட்டார்; நானும் அப்படியே செய்து போராநிற்க, கிண்ணகத்தில் குமிழிக் கீழே சாவி போமாறு போலே, தாம் என்னுடைய ரக்ஷணத்தில் நெகிழ நின்றது அவர் நினைவு குறைவுபட்டது ஆகவோ என்று சொன்னேன் என்று சொல்லு
நான் கையும் மடலுமாகச் சென்றவாறே அஞ்சி எதிரே புறப்பட்டு நிற்கக் கடவன், அப்போதாக அவன் காலிலே குனியக் கடவன். 2“வட்டிக்குமேல் வட்டி ஏறின கடன் போலே” என்னும்படி தொட்டுவிடக் கடவேன்
ஆபத்திலே உதவும் தன்மையனுமாய் எல்லாப் பொருள்களையும் காப்பாற்றுகின்றவனான புருஷோத்தமனுடைய குணங்களை நினைக்க, அவைதாம் பிரிவிலே நினைக்கையாலே மிகவும் ஆற்றாமைக்கு உறுப்பாய், சடையினால் தூக்கிட்டுக் கொள்ளுதல் முதலியவைகளிலே 1ஒருப்பட்டவரைப் போன்று முடிந்து பிழைக்கவேண்டுமளவாய், அது தன்னைப் பெறுகை மடல் ஊரப் பெறுகையைப் போன்று தேட்டமாய்;
திருவடி செல்லுகிற கணத்திலே அரக்கியர்கள் முழுதும் உறங்கினாற் போன்று பழிசொல்லுவார் முழுதும் உறங்கினார்களாயிற்று.
இவள் பிறந்த ஊர் ஆகையாலே இவள் நிலையைக் கண்டு சோகித்து, கோரை சாய்ந்தாற் போன்று எல்லோரும் ஒரு சேர உறங்கினபடியைச் சொல்லிற்று
உலகு எல்லாம் நள் இருளாய் – பிரளயம் கோத்தாற் போலே உலகமடைய இருளே ஆயிற்று.
வாரானால் – வயிற்றிலே வைத்துக் காக்க வேண்டா, உடம்போடே அணைய வேண்டா, வந்து முகம் காட்ட அமையுமே அன்றோ. 5“உதிக்கின்ற சூரியன் ஆனவன், உலகம் எல்லாவற்றிலும் உள்ள இருளைப் போக்குவதைப் போன்று, பெருமாள் பார்க்கப்பட்டவுடனேயே நமது வருத்தத்தைப் போக்குவார்”
காவி சேர் வண்ணன் – 2“அலர்ந்த கருநெய்தல் இதழ் போன்ற நிறத்தையுடையவர்” என்கிறபடியான நிறத்தையுடையவன். என்றது, இருளோடு ஒரு கோவையான நிறம் என்றபடி. 3இருள் அன்ன மா மேனி அன்றோ. 4கறுப்பு உடுத்து வருவாரைப் போன்று வரலாமே அன்றோ
சாத்தன், கூத்தன்’ என்பது போன்று சில பெயர்களையுடையவர்களாய், அவர்கள் தாங்கள் ஜீவிக்கப் புக்கவாறே சிறுபேர் தவிர்ந்து ‘சோழக்கோனார்’, ‘தொண்டைமானார்’ என்று பட்டப் பெயர் பெற்று வாழுமாறு போன்று, இரவு என்ற பெயர் நீங்கிக் ‘கல்பம்’ என்னும் பெயரையுடைத்தாகா நின்றது என்பாள் ‘ஊழியாய்’ என்கிறாள்
எல்லார்பக்கல் செய்யும் அன்பையும் என்பக்கலிலே ஒரு மடையாகச் செய்து வைக்கையாலே, எல்லாம் செய்தாலும், கடலை அணை செய்து பகைவர் கூட்டத்தைக் கிழங்கு எடுத்துத் ‘தண்ணீர் தண்ணீர்’ என்று வருகை தவிரார்; தாபத்தாலே வருந்தினவன் விடாய்ப்பட்டுப் பந்தல் ஏறவரக்கொண்டு தண்ணீர்ச்சால் உருண்டு கிடந்தால் பிழையாதாமாறு போன்று, அவர் இப்படி வரக்கொண்டு நான் இன்றிக்கே இருப்பேனாகில் பின்னை அவரைக் கிடையாது என்று, அவருக்காக என்னை நோக்கிக் கொண்டிருந்தேன்
கார் அன்ன மேனி நம் கண்ணனும் வாரானால் – ஒரு நீர்ச் சாவியிலே ஒரு பாட்டம் மழை பெய்தாற்போலே குளிரும்படியான வடிவையுடையனுமாய், 3“அந்தக் கோப ஸ்திரீகளுக்கு மத்தியில் வந்து தோன்றினான்
பேர் என்னை மாயாதால் – அவனோடு ஒத்திருக்கின்றதே! பேரும். 2அவன் வருகின்றிலன், இது போகிறதில்லை. 3நான் காரியத்திலே முடிந்தேனாயிருக்கச் செய்தேயும் ‘இன்னாள், இன்னாள்’ என்கிற இப்பெயர் என்னை முடிந்தேனாக ஒட்டுகிறது இல்லை-ஆழ்வாருடைய திருநாமம் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்குச் சத்தைக்குக் காரணமாக இருப்பது போன்று அவர் தமக்கும் சத்தைக்கு ஏதுவானபடி. 5அடியுடைய பெயர் ஆகையாலே எல்லார்க்கும் தாரகமாக இருக்குமே. இதனுடைய அடியுடைமையே அன்றோ எல்லாரும் தலை மேல் தாங்குவது.
காதல் நோயும் இரவாகிய கல்பமும் தம்மிலே சங்கேதித்துக்கொண்டு வந்தாற் போலே இராநின்றது. 4‘நான் பின்னிட்டு வருகிறேன், நீ முன்னே தப்பாமல் சூழ்ந்துகொள்’ என்று வருவாரைப் போன்று வந்தன என்றபடி-எதிரிகள் எளியரானால் அவர்கள் கைகளில் விற்களைப் பறிப்பது பரிகசிப்பதாய்க் கொண்டு பரிபவம் செய்வாரைப் போன்று 6இத்தலையில் எளிமை கண்டு இரவாகிய ஊழி, முன்னே நின்று கண்களை மறையா நின்றது. 7உட்கண்ணினைக் காதல் மறையா நின்றது, கட்கண்ணை இரவு மறைத்தது.
தமிழர்க்கு அகத்தியரைப் போன்று இருப்பான் தமிழாசிரியன் ஒருவன், செல்கின்ற கங்குல் வாய் என்பதற்குச் செல்கின்ற நாளகத்து என்று உரை எழுதி வைத்தான்
தூப் பால வெண்சங்கு சக்கரத்தன் தோன்றானால் – இருளைப் போக்கும்போது சந்திர சூரியர்கள் சேர உதித்தாற்போன்று இருக்கின்ற திவ்விய ஆயுதங்களையுடையவன் வருகின்றிலன்
உண்டோ கண்கள் துஞ்சுதல்” என்றிருப்பவள். அதற்குமேல் இப்போது இருளுக்கு அஞ்சியும் உறங்காள். தன் நிலையைக் கண்டு அதற்கு அவர்கள் உறங்காதே இருக்கிறார்களாகக் கொண்டு, அவர்களைத் தஞ்சமாக நினைத்துக் கேட்கிறாள், சிறை உறவு போன்று. தோழிமாருங்கூட உறங்கா நிற்கச் செய்தே அவர்கள் உறங்காதிருக்கையாலே, அவர்களைக்காட்டிலும் இவர்களை அன்னிய உறவாக நினைத்துச் சொல்லுகிறாள். “ஆயும் அமருலகுந் துஞ்சிலும்” என்று தாய்மாரோடு ஒரு சேர எடுத்துப் பேசப்படுகிறதே அன்றோ தேவர்களையும். துன்பம் மிக்கால் ‘அம்மே! என் செய்வேன்’ என்றாற்போலே இருக்கிறது காணும்.
ஊழியாய்’ என்றது, இராத்திரி மாத்திரமேயாய் நின்று நலிந்தது என்னும்படி, இது பல கல்பமாக நலியாநின்றது. 1சௌபரி, இன்பத்தை அனுபவிப்பதற்குப் பல வடிவுகள் கொண்டாற்போன்று, இதுவும் துன்புறுத்துவதற்குப் பல வடிவுகள் கொள்ளாநின்றது என்றபடி.
மெய் வந்து நின்று–2ஈச்வரன் கட்டின மர்யாதை குலைக்க ஒண்ணாமை வந்தது மாத்திரம் அன்றிக்கே, தனக்கே சீற்றமுடையாரைப் போலே மெய்யே முன்னே வந்து நின்று. 3இராவணன் இடம் பார்த்து வந்தாற்போன்று, விரகநிலை என்று அறிந்து நலியாநின்றது என்பாள் ‘வந்து நின்று’ என்கிறாள்
எனது ஆவி மெலிவிக்கும் – 4மோர்க்குழம்பு கொடுத்துத் தேற்றி விடுநகம் கட்டி நலிவாரைப் போன்று, ‘சென்றற்றது’ என்னும்படி இருக்கிற என்னுடைய உயிரை உண்டாக்கி நலியாநின்றது. என்றது, போன உயிரை மீளக்கொடுத்து நலியா நின்றது என்றபடி.
தர்மாத்மா-ஐயரும் ஒருவரே! தாம் பரமதார்மிகர் கண்டீர்; தாம் இருந்த நாளும் நமக்கு வேண்டும் ரக்ஷணங்களைச் செய்து, தாம்சென்ற பின்னரும் தண்ணீர்ப் பந்தலை வைப்பாரைப் போன்று உம்மை வைத்துப் போவதே!
வெம் சுடரில் தான் அடுமால் வீங்கு இருளின் நுண் துளியாய் – இராவணன் மாரீசனைத் துணையாகக் கொண்டு வந்து தோற்றினாற் போலே ஆயிற்று, நுண்ணிய துளியோடே செறித்த இருள் வந்து தோன்றினபடி
இது, (இது’ என்றது, அணிநெடுந்தேர் தோன்றாதே அகல நின்றதனை. அன்றி, சூரியன் மறைந்ததனை என்னலுமாம்.)இளைய பெருமாள் அகல நின்றாற்போலே ஆயிற்று
பிரளயத்தில் சிறிது தூரம் எஞ்சி இருக்க நீந்தி, ‘கரையைக் கிட்டினோமோ, கிட்டினோமோ!’ என்று பார்ப்பாரைப் போலே காணும், இரவு முழுவதும் நோவுபட்டு, ‘விடிந்ததோ, விடிந்ததோ, என்று பார்க்கிறபடி.
சூரிய மண்டலத்திலே எழுந்தருளியிருக்கிறவனும் வருகின்றிலன். என்றது, 1சூரியனுடைய வரவுக்கு அருணோதயம் போலே இருப்பது ஒன்றே அன்றோ, அந்தச் செல்வத் திருமாலுடைய வரவுக்குச் சூரியனுடைய தோற்றரவு என்றபடி.
புழுக்குறியிட்டது எழுத்தானாற் போன்று எதுவோ ஒரு காலத்தில் வந்தது ஒன்று, அது அவனுக்கு என்றைக்கும் உள்ளது ஒரு தன்மை அன்று காண்” என்று சொல்லுகிறார் இலர்
பிரான்’ என்னாநிற்கச்செய்தே அன்றோ ‘வாரான்’ என்கிறது. என்றது, “உலக முழுதினையும் அளந்துகொண்ட உபகாரகன் அன்றோ என்று நினைக்கிறாயாகில், பெருக்காறு பெருகினாற்போலே அது அங்ஙனே ஒருகால் செய்து போன இத்தனை, வாராமையே காண் ஸ்வபாவம்” என்கிறார் இலர் என்றபடி. ஒன்று-‘வரும்’ என்ன வேண்டா, ‘வாரான்’ என்ன அமையும். 3‘இன்னம் வருவான்’ என்னும் நசைகொண்டு ஜீவிக்க இருப்பார்க்கே அன்றோ ‘வரும்’ என்றே சொல்ல வேண்டுவது. ‘வரும்’ என்னவுமாம், ‘வாரான்’ என்னவுமாம்
பிராட்டி, திருவடி வார்த்தையைக் கேட்டபோது (அம்ருதம் விஷஸம்ஸ்ருஷ்டம் த்வயா வாநர பாஷிதம் யச்ச நாந்யமநா ராமோ யச்ச ஸோக பராயண:”(ஸ்ரீராமா. சுந். 37 : 2.)2“வாநர! உன்னால் சொல்லப்பட்ட பெருமாள் என்னை அல்லது அறியார், பிரிவாலே தளர்கின்றார் என்ற இரண்டு வார்த்தைகளும் விஷத்தோடு கூடின அமுதம் போல் இருக்கிறது” என்று, பெருமாள் என்னைப் பிரிந்த இடத்தில் என்னை அல்லது அறிந்திலர் என்று சொன்னது எனக்கு இனியதாயிருந்தது, அவர் பிரிவாலே தளர்கின்றார் என்று சொன்னபடியாலே வெறுப்பாய் இருந்தது என்றாளே அன்றோ. 1அப்படியே, இவர்க்கும் பிரீதி அப்ரீதிகள் சமமாகச் செல்லுகின்றன.
சங்கினோடும் – “செங்கமல நாண் மலர் மேல் தேன் நுகரும் அன்னம் போல்” என்கிறபடியே, கருநிறமான திருமேனிக்குப் பரபாகமான வெளுத்த நிறத்தையுடைத்தான ஸ்ரீ பாஞ்சசன்யத்தோடும்
செம்கனிவாய் – கண்டபோது, நான் உன் சரக்கு அன்றோ, “தவாஸ்மி-உன்னுடையவன் ஆகிறேன்” என்ற முறுவலோடும், ஒன்றினோடும் – 3சம்சார யாத்திரையை முக்தன் மறக்குமாறு போலே, இவ்வருகுண்டானவற்றோடு அவ்வருகுள்ளவற்றோடு வேற்றுமை அற எல்லாவற்றையும் மறக்கும்படி செய்ய வல்லதான திரு அதரத்தோடும். 4அன்றிக்கே, சாதி, பொருள்கள்தோறும் நிறைந்து இருக்குமாறு போலே, நெஞ்சு அழகுதோறும் சொல்லாநின்றது
சங்கினோடும்-2 ஸ்ரீ பாஞ்சசன்யத்தோடே விசேடித்து ஒரு சம்பந்தம் உண்டு காணும் இவளுக்கு; திருவாயின் அமிர்த இனிமையை அறிந்திருக்கையாலே; ஒரு கலத்திலே ஜீவிப்பாரைப் போலே.
மின்னுநூலும் – மேகத்தில் மின்னியது போன்றிருக்கின்ற திரு யஜ்ஞோபவீதமும்.குண்டலமும்-பரந்த மின் ஓரிடத்திலே சுழித்தாற்போலே இருக்கிற திருமகரகுண்டலமும்.
நான்கு தோளும்–2“எல்லா ஆபரணங்கட்கும் அழகினைக் கொடுக்கக் கூடியதான” என்கிறபடியே, ஆபரணங்கட்கு ஆபரணமாய்க் கல்பகதரு பணைத்தாற் போலே இருக்கிற திருத்தோள்கள் நான்கும்.
மரவுரி, மான்தோல் இவற்றை உடுத்திருப்பவரும், வில்லைத் தரித்திருப்பவருமான ஸ்ரீ ராமபிரானை, பாசக்கயிற்றைக் கையிலேயுடைய யமனைப்போன்று ஒவ்வொரு மரத்திலும் பார்க்கிறேன்” என்பது போலே, உகப்பார்க்கும் உகவாதார்க்கும் பலம் ஒன்றாய்விட்டது. நான் எங்கே ஒதுங்குவேன், சொல்லிக் 4காணீர்கோள்.
நால்தோள் எந்தாய் – கல்பக தருபணைத்தாற்போலே இருக்கிற திருத்தோள்களைக் காட்டி என்னைத் தனக்கே உரியவனாக எழுதிக்கொண்டவனே! 3‘திருவடி தோற்ற துறையிலே ஆயிற்று இவரும் தோற்றது.
நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனியொடும்–கங்கையின் அலைகளின் நடுவே வசிப்பாரைப் போலே ஒளிகளாகிய அலைகளின் நடுவே ஆயிற்று இருப்பது. 3ஒளிகளின் நடுவே வடிவு ஊகிக்கப்படுவதாயாயிற்று இருப்பது. அவ்வடிவுதான் எவ்வளவு போரும் என்னில், அளவிட்டு அறிதற்கு அரியதாய்ச் சிலாக்கியமாய் இருக்கும்.
மை கொள் மாடம்-பழைமையாலே யாதல்; 2“ஸ்ரீராமபிரான் தன்னுடைய திருமேனியின் ஒளியாலே தண்டகாரண்யத்தை விளங்கச் செய்துகொண்டு’ என்னுமாறு போன்று உள்ளே நிற்கின்றவனுடைய நிழலீட்டாலேயாதல்
எந்தச் சீதாபிராட்டி முன்பு ஆகாயத்தில் வசிக்கின்ற பூதங்களாலும் பார்ப்பதற்கு முடியாதவளோ” என்று சொல்லப்பட்ட பிராட்டியைப் போலே இருக்குமவள் அன்றோ இவள்தான்.ஒருவர் முன்பும் நின்று அறியாமைக்குப் பிரமாணம்-யா நஸக்யா புரா த்ரஷ்டும் பூதைராகாஸகைரபி டதாமத்ய ஸீ தாம் பஸ்யந்தி ராஜமார்க்ககதாஜநா:” ஸ்ரீராமா. அயோத். 33 : 8.
குழுமித் தேவர் குழாங்கள் கைதொழ – திரள் திரளான நித்தியசூரிகள், கிண்ணகத்தில் இழிவாரைப் போலே கைகோத்துக்கொண்டு இழியும்படி. சோதி வெள்ளத்தினுள்ளே எழுவது ஓர் உரு-4“ஒளிகளின் திரள்” என்கிறபடியே, தேஜஸ்ஸின் நடுவே ஊகிக்கப்படுவதாயன்றோ வடிவு இருப்பது. என் நெஞ்சுள் எழும் – நித்திய சூரிகள் நடுவே தோன்றுமாறு போலே என் நெஞ்சுக்குள்ளே பிரகாசியா நின்றது. ஆர்க்கும் அறிவு அரிது – 5எனக்கு மறக்க ஒண்ணாதாப் போல ஆயிற்று, தம் முயற்சியால் அறிவார்க்கும் அறிய ஒண்ணாதிருக்கிறபடியும்.
ஒவ்வோர் அர்த்தத்தைப்பற்றி உபந்யாசங்கள் செய்ய இருப்பாரைப் போலே ஞான முத்திரையும் தானுமாய்க் கீதோபநிடத ஆசாரியனைப் போலே இருந்தாள்; இதனைக் கண்ட திருத்தாயார், ‘இது ஏதேனும் மணிமந்திர ஒளஷதம் முதலியவைகளாலே வந்த விகாரமோ’ என்று ஐயங்கொண்டு, அத்தன்மைகள் காணாமையாலே ‘அவை அல்ல’ என்று அறிந்தாள்.
கடல் ஞாலம் கொண்டேனும் யானே என்னும்-மஹாபலி போல்வார், பருந்து இறாஞ்சினாற்போன்று இதனை அபஹரித்து ‘என்னது’ என்னும் அன்று, இதனை எல்லை நடந்து மீட்டுக்கொண்டேன் நான் என்னாநின்றாள். என்றது, இவற்றைப் படைத்து, ‘மேல் உள்ளன தாமே நடக்கின்றன’ என்று விடுகை அன்றிக்கே, இவற்றை அடி ஒற்றிக்கொண்டு சென்று காத்தலைத் தெரிவித்தபடி
திறம்பாமல் கடல் கடைந்தேனே என்னும்-ஒருதாழிக்கு உட்பட்ட தயிரை ஒன்றும் பிரிகதிர்ப்படாதபடி கடைவாரைப் போலே, சமுத்திரம் என்கிற மஹாதத்துவத்தின் நடுவே மந்தரத்தை நட்டுக் கடைகிற இடத்துக் கீழே விழுதல் மேலே கொந்தளித்தல் செய்யாதபடி கடலைக் கடைந்தேனும் நான் என்னும்.
இன வேய் மலை ஏந்தினேன் யானே என்னும்-2அணுக்கனைக் கவிழ்த்துப் பிடித்தாற்போலே, திரள்திரளான மூங்கிலையுடைத்தான மலையை வருத்தம் இன்றியே தரித்தேன் நான் என்னாநின்றாள்.
இன ஆநிரை காத்தேனும் யானே என்னும் – முன்பு பிரஹ்மசர்யம் அநுஷ்டித்துப் பின்பு இல்லற தர்மம் அநுஷ்டிப்பாரைப் போலே, இளமைப் பருவத்தில் கன்றுகளை மேய்த்து, பருவம் நிரம்பின பின்பு பசுக்களை மேய்த்தேனும் நான் என்னும்
கோலம் கொள் உயிர்களும் யானே என்னும்-நாடகம் கட்டி ஆடுவாரைப் போலே தேவனாகவும், மனிதனாகவும், இப்படிப் பல வகையான சரீரங்களை மேற்கொள்ளுகிற ஆத்மாக்களும் யானே என்னும். அன்றிக்கே, கோலம் கொள் உயிர்கள் – 1ஞான ஆனந்த லக்ஷணமான உயிர்கள் என்னுதல்.
கடற்கரையின் வெளியில் மஹாராஜரை உள்ளிட்ட முதலிகளோடும், (லக்ஷ்மணம் புண்ய லக்ஷ்மணம்” ஸ்ரீராமா. யுத். 18:7.)3“புண்ணியத்தையே இலக்ஷணமாகவுடைய இளையபெருமாள்” என்கிற தம்பியோடுங்கூட எழுந்தருளியிருக்க, ஸ்ரீவிபீஷணாழ்வான்(ராவணோ நாம துர்வ்ருத்தோ ராக்ஷஸோ ராக்ஷஸேஸ்வர: தஸ்ய அஹம் அநுஜோ ப்ராதா விபீஷண இதி ச்ருத:” ஸ்ரீராமா. யுத். 17:10.) 4“கெட்ட ஒழுக்கத்தையுடையவன், இராவணன் என்று பிரசித்தி பெற்றவன், அரக்கர்களுக்கெல்லாம் அரசனான அரக்கன் இருக்கிறான்; நான் அவனுக்குப் பின் பிறந்த தம்பி; விபீஷணன் என்று பிரசித்தி பெற்றவன்” என்று தன்னுடைய தாழ்ச்சியை முன்னிட்டுக்கொண்டு பெருமாள் திருவடிகளிலே விழுந்தாற்போலே, இவரும், அவன் கடற்கரையிலே தனி இருந்த இழவு தீர, பிராட்டிமாரோடும் 1நித்திய பரிகரத்தோடுங் கூடச் சிரீவரமங்கல நகரிலே திருவனந்தாழ்வான்மேலே எழுந்தருளியிருக்கின்ற வானமாமலை திருவடிகளிலே, வேர் அற்ற மரம் போலே புகல் அற்று விழுந்து சரணம் புகுகிறார்.
சிரீவரமங்கல நகரிலே எழுந்தருளியிருக்கின்ற வானமாமலை திருவடிகளிலே, வேர் அற்ற மரம் போலே வீழ்ந்து வேறு கதி இல்லாதவராய்க் கொண்டு சரணம் புக்கார்; இவர் அப்படிப் பெரிய ஆர்த்தியோடே சரணம் புகச் செய்தேயும் வந்து முகங்காட்டாதிருக்க; 2கடலில் அமிழ்ந்துவார் அங்கே ஒரு மிதப்புப் பெற்றுத் தரிக்குமாறு போலே, “இவ்வளவிலும் ‘வேறு ஒன்றாலே பேறு’ என்றிருத்தல், மற்றொருவர் வாசலிலே சென்று கூப்பிடுதல் செய்தல் என்னும் மயக்கத்தைத் தவிர்த்தானே அன்றோ” என்று கொண்டு தரித்தார்;
ஆறு எனக்கு நின்பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்” என்றதனைக் கடாக்ஷித்து, ‘இவ்வளவிலும்’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார். இங்கே, ‘வேறு
ஒன்றாலே பேறு என்றிருத்தல், மற்றொருவர் வாசலிலே சென்று கூப்பிடுதல் செய்தல்’ என்றிருக்கையாலே, “ஆறு எனக்கு நின்பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்” என்பதற்கு, மேல் அருளிச்செய்த மூன்று யோசனைகளையும் தவிர, இன்னமும் ஒரு யோசனை உண்டு என்று தோற்றுகிறது. அதாவது, எனக்கு உன் பாதமே உபாயமாகவும், ரக்ஷகமாகவும் தந்தாய் என்பது. “நின் பாதமே ஆறாக” என்கையாலே வேறு ரக்ஷகங்களை நீக்குகிறது; “நின் பாதமே சரணாக” என்கையாலே வேறு உபாயங்களை நீக்குகிறது; ஆக, “ஆறு” என்றதனால், ஆகிஞ்சந்யமும், “சரண்” என்கையாலே, அநந்யகதித்வமும் போதரும். இத்தால், இந்த நிலையிலும், ஆகிஞ்சந்ய அநந்யகதித்வங்களுக்கு ஒரு ஹாநி வராதபடி செய்தான் என்றபடி.
நோன்பிலேன்’ என்ன அமையாதோ? ‘நோற்ற நோன்பிலேன்’ என்ன வேண்டுமோ? என்ன, சாதனங்களைச் சமைய அநுஷ்டித்து, பலத்தோடே கூடியிருப்பதாகப் பார்த்திருக்கலாவது ஒன்று இல்லை என்கைக்காகச் சொல்லுகிறார். என்றது, 3சக்கர்வர்த்தி, ஸ்ரீ வசுதேவரைப் போலே பேற்றுக்கு அடியாக நினைத்திருக்கலாவது ஒன்றில்லை என்றபடி
சேற்றுத் தாமரை செந்நெலூடு வளர் சிரீவரமங்கல நகர் – சேறுகளிலே தாமரைகளானவை செந்நெலூடே அவற்றுக்கு அணுக்கன் இட்டாற்போலே அலரா நிற்கின்ற தேசம்
வீற்றிருந்த-‘அங்கே இருக்கக்கூடிய நமக்கு, இவ்விருப்பு இருக்க வேண்டாநின்றதே!’ என்னும் வெறுப்போடு அன்றிக்கே, 5தட்டியிலிருந்தவன் முடி சூடினாற்போலே தன் வேறுபாடு தோற்ற இருக்கை.
தவச அர்த்த: ப்ரகல்பதே-தேவரீருக்கே பிரயோஜனம் கிடைக்கப் போகிறது” என்கிறபடியே, இத்தால் வரும் பிரயோஜனமும் தேவரீருடையதே–இவரை அடிமை கொள்வது அவன் பேறாயிருக்கும் என்னுமதனைத் திருஷ்டாந்த முகத்தால் காட்டுகிறார். ‘. 5பால்குடிக்கும் குழந்தையை, பால்குடித்து வயிறு நிறையக்கண்டு உகக்கும் தாயைப் போலே, அடிமையாக இருப்பவன் ஸ்வரூபம் பெற்று அடிமைசெய்கை சேஷிக்குப் பேறே அன்றோ.
அங்குற்றேன் அல்லேன் – 2முக்தர் இந்தச் சம்சாரத்திலே உலாவினாற்போன்று சித்த சாதனனாய்த் திரிகிறேன் அல்லேன்- இங்குற்றேன் அல்லேன் – 1இங்கே இருந்து சாதனங்களைச் செய்கின்றவர்களிலே ஒருவனாய் இருக்கிறேன் அல்லேன்
உபாசகர், ஆரப்தயோகர் என்றும், ஆரூடயோகர் என்றும் இரு வகையர். அவர்களில் ஆரூடயோகர் படி தமக்கு இல்லை என்கிறார் என்று கூறத் திருவுள்ளம்பற்றி அதனை அருளிச்செய்கிறார் ‘முக்தர்’ என்று தொடங்கி. ‘சித்தசாதனனாய்’ என்றது, சாதனங்கள் எல்லாம் அநுஷ்டித்துப் பலத்தினை
அநுபவிப்பதற்காக அங்கே செல்ல இருக்கிற ஆரூடயோகனாய் என்றபடி-ஆரப்தயோகர் படி தமக்கு இல்லை என்கிறார் என்று கூறத் திருவுள்ளம்பற்றி அதனை அருளிச்செய்கிறார் ‘இங்கே இருந்து’ என்று தொடங்கி. ‘சாதனங்களைச் செய்கின்றவர்களிலே’ என்றது, சாதன அநுஷ்டானம் செய்ய ஆரம்பித்த ஆரப்தயோகரிலே என்றபடி. ஆக, மேல் திருப்பாசுரத்தில் “நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன்” என்று சொன்ன உபாயம் இன்மையை, இத்திருப்பாசுரத்தில் “அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன்” என்று வேறு வகையாக அநுபாஷிக்கிறார் என்பதாம்.
இலங்கை செற்ற அம்மானே – 1தம் தலையில் ஒன்றும் இல்லாமையைக் கண்டார், ஒன்றும் இல்லாதார் பெற்ற இடத்தைப் பார்க்கிறார்; கைம்முதல் அற்றவன் முன்பு ஈட்டி வைத்த செல்வத்தை வாங்கிப் பார்க்குமாறு போலே. 2தன்பேறாகக் கொள்ளுமவன் என்பார் ‘அம்மானே!’ என்கிறார்
மங்க – மாள. 2விளக்குப்பிணம் போலே காண ஒண்ணாதவாறு செய்தபடி.
எய்தக் கூவுதல் ஆவதே – நீ எனக்குக் கைப்படும்படியாக விரும்புதல் ஆவதே. எனக்கு-வலி இல்லாதான் ஒருவன் தலையிலே ஒரு மலையை வைத்தாற்போலே இருக்கிறது காணும் இவர்க்கு
நெஞ்சிடம் கொண்ட’ என்றதனால் திரவிய குணங்கள் போலே சேர்ந்தான் என்பதனைத் தெரிவித்தபடி. 4திரவியமாக இருக்கச்செய்தேயும் குணங்களைப் போன்று சிலபொருள்கள் சேரக் காணா நின்றோமே யன்றோ.
பூதாநாம் ய : அவ்யய: பிதா” என்பது, மஹாபாரதம் ஸஹஸ்ர நாமம்.–உயிர்களுக்கு எவன் அழியாத தந்தையோ” என்கிறபடியே, நாலு நாட்கள் மணற்கொட்டகம் இட்டு விளையாடுமாறு போலே அழியும் தாயும் தமப்பனும் அன்றோ அவர்கள், ஒருநாளும் அழியாத மாதா பிதாக்கள் அன்றோ இவர்கள்.
சர்வேஷாம் ஏவ லோகாநாம் பிதா மாதா ச மாதவ:
கச்சத்வமேநம் ஸரணம் ஸரண்யம் புருஷர்ஷபா:”- என்பது, மஹாபாரதம் ஆரண்ய பர்வம். பாண்டவர்களைப் பார்த்து மார்க்கண்டேயர் கூறியது
வேத வேள்வி அறா – வேத ஒலியும் வைதிக கார்யங்களின் கோலாகலமும் மாறாதே செல்லுகை. 3பிராப்பிய விரோதியாதல் பிராபகவிரோதியாதல் இல்லாமையாலே, நாய்ச்சி மாருடைய கலவியைப் போன்று நித்தியமாய்ச் செல்லாநிற்கும். 1காதலியை அணைக்கிறதற்கு வேறு ஒரு பலம் உண்டாகில் அன்றோ இதற்கு வேறு ஒரு பலம் உண்டாய் அவ்வளவிலே தலைக்கட்டுவது.
புள்ளின்வாய் பிளந்தாய் மருதிடை போயினாய் எருது ஏழ் அடர்த்த – 2கலியர் சோறு இட்ட நாட்களை எண்ணுமாறு போன்று, பண்டு உபகரித்த படிகளைச் சொல்லுகிறார். பகாசுரனை அழித்தாய், இரட்டை மருதமரங்களைப் பொடிபடுத்தினாய், இடபங்கள் ஏழனையும் ஊட்டியாக நெரித்தாய்.
தாய்முகமே பார்த்துக் கிடக்கும் குழந்தையைப் போலே, 2“வத்யதாம் – கொல்லுதற்குரியவன்” என்கிற மஹாராஜரையும், அவரிலும் கொடிய முதலிகளையும் அழகிதாகப் பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீ விபீஷணாழ்வான் தெளிவு போன்ற தெளிவினையுடையவர்கள் என்னுதல்.
ஆத்ம சமர்ப்பணம் செய்கையாவது, 5இராஜமகேந்திரன் படியை (நம் பெருமாள் திருமார்பில் அணிந்துகொள்ளும் ஒரு பதக்கம்.)எடுத்து ‘என்னது’ என்று கொண்டு பெருமாளுக்குக் கொடுப்பாரைப் போன்று களவு வெளிப்படுதலே அன்றோ.
தமப்பன் இல்லாத இழவுதீரச் சக்கரவர்த்திக்குப் பிள்ளையானாற் போன்று, வேதமும் இவர்பக்கல் வந்து பிறந்தது ஆதலின் ‘செய்த ஆயிரம்’ என்கிறது-வேதமும் இவர் பக்கல் வந்து பிறந்து நிறம்பெற வேண்டும் என்றபடி.
வைகலும் வானோர்க்கு ஆராவமுதே – காலம் என்னும் ஒரு பொருள் உள்ள வரையிலும் நித்தியசூரிகளுக்கு இனியபொருளாகப் பெறுவர். 5தேவசாதிகள் அமுதம்பெற்றுக் கிருதார்த்தராமாறுபோலே, நித்தியசூரிகள் ‘இவர்களைப் பெற்றோம்’ என்று கிருதார்த்தராவர் என்பார் ‘அமுதே’ என்கிறார்.
கடலில் அமிழ்ந்துவார் அங்கே ஒரு மிதப்புப் பெற்றுத் தரிக்குமாறு போலே, “இவ்வளவிலும் ‘வேறு ஒன்றாலே பேறு’ என்றிருத்தல், மற்றொருவர் வாசலிலே சென்று கூப்பிடுதல் செய்தல் என்னும் மயக்கத்தைத் தவிர்த்தானே அன்றோ” என்று கொண்டு தரித்தார்;
அம்பு எய்வார் படை திரட்டிக்கொண்டு போமாறு போல, திருவயோத்தியிலுள்ளாரில் மரங்கள் அகப்பட ஆர்த்தியில் தன்னில் குறைந்த பொருள்கள் இல்லை அன்றே, நம் ஆர்த்தி கண்டு மீண்டிலராகிலும் ஆர்த்தர் பலரையும் கண்டால் மீளாமை இல்லை என்று பார்த்து
இனிமையாலும் ஈடுபட்டு, அழகு முதலாயினவற்றாலும் போர நொந்து, பால் குடிக்கும் குழந்தை தாய் பக்கலிலே கிட்ட முகம் பெறாவிட்டால் அலமந்து நோவு படுமாறு போலே, அவன் சந்நிதியிலே தளர்ந்து கிடந்து கூப்பிட்டு, 2இன்னம் எத்தனைத் திருவாசல் தட்டித் திரியக்கடவேன் என்னும் ஆர்த்தியோடே தலைக்கட்டுகிறார்.
ஆராஅமுதே – 1“ஸஹபத்நியா – பத்திநியோடு கூட” 2ஆழங்காலிலே இழிவார் ஒரு கொம்பை ஒரு கொடியைப் பிடித்துக்கொண்டு இழியுமாறு போலே. கிண்ணகத்தில் இழிவார் அறிந்தவர்களைக் கைப்பிடித்துக் கொண்டு இழியுமாறு போலே, பெருமாள் பெரிய பெருமாளை அநுபவிக்கும்போது பிராட்டியைக்கூடக் கொண்டாயிற்று இழிவது
அழிக்கிறவன் ‘ஆபரணங்கள்’ என்று பாராதே உருக்கி அழிக்குமாறு போலே காணும் இவனும் உருக்கி அழிக்கிறபடி
கருத்து அறிந்து அடிமை செய்வாரைப் போலே. அன்றிக்கே, 2சேஷ வஸ்துக்களின் தொழில்கள் முழுதினையும் சேஷி தனக்கு அடிமையாக நினைத்திருக்கிறபடியால் ‘கவரி வீசும்’ என்கிறார் -அஹ்ருத ஸஹஜ தாஸ்யரான நித்தியசூரிகளுடைய அவதாரமாகையாலே கூடும் என்றபடி. அஹ்ருத – அபகரிக்கப்படாத.
கர்மம் அடியாக இவன் பிறக்குமாறு போலே அன்றோ அநுக்கிரஹம் அடியாக அவன் பிறக்கும்படி என்பார் “வேண்டுமாற்றால் ஆவாய்” என்கிறார்.
சாதநாநுஷ்டானம் செய்து வாரும்’ என்று நளன் தமயந்திக்கு வழி காட்டினாற்போலே கைவிடப் பார்த்தாயோ?
பெறுவது உன்னையேயாகிலும் உன்னாலே பெறுமன்று வேண்டுவன், என்னாலும் பிறராலும் பெறும் உன்னையும் வேண்டேன். 2மற்றையவற்றிற்கும் அபிமத சித்தி உண்டேயாகிலும் காலன் கொண்டு மோதிரம் இடுமாறு போலே ஸ்வரூபவிரோதியானது எனக்கு வேண்டாம். 3கடல் கடத்தப் பெற இருத்தல், சபித்துப் பெற இருத்தல் செய்யாத பிராட்டியைப் போலே. என்றது, இரண்டு தலைகளையும் அழிக்கையே அன்றோ. ஒருவராலும் ஒருகுறை நிரம்புவதாக வேண்டி இரேன்
விஷயம் அண்மையில் இருக்கச்செய்தே ஆகாசத்தைப் பார்க்கிறது. நினைத்த பரிமாற்றம் பெறாமையாலே. ‘ஸ்ரீகஜேந்திராழ்வானுக்கு வந்து தோற்றினாற் போலே தம் தசையைப் பார்த்துத் தோற்றுகிறானோ’ என்று பார்த்து.
ஆடிக் காண்பன் – ‘இத்தனை சோறு இடுகிறோம், ஆட வல்லையோ’ என்றால், கலியர் ஆடுமாறு போலே ஆடியும் பார்ப்பன்
செந்தாமரைக்கண்ணா–2கையிலே நிதி உண்டாயிருக்க வறியர்க்கு இடாதாரைப் போலே. வேறு முகத்தாலே என் ஜீவனமாய்க் கிடக்கிறாய் இல்லை, என் ஜீவனம் ஒருமுகம் செய்து கிடக்கிறதன்றோ
உன் சரணம் தந்து என் சன்மம் களையாயே – முலை கொடுத்துச் சிகித்சிப்பாரைப் போலே, முற்படத் திருவடிகளைத் தந்து, பின்பு பிறவியின் சம்பந்தத்தை அறுக்க வேண்டும்.
நிழலும் அடிதாறும் ஆனோம்” என்கிறபடியே, மிதிஅடியாம்படி ஸ்ரீசடகோபன் ஆக்கி. 2பெருங்காற்றில் பூளைபோலே யாதானும்பற்றி நீங்கும் விரதமாய் அன்றோ முன்பு போந்தது.
ஆளை யாவுனக் கமைந்தன மாருத மறைந்த
பூளை யாயின கண்டனை இன்றுபோய்ப் போர்க்கு
நாளை வாவென நவின்றனன் நாகிளங் கமுகின்
வாளை தாவுறு கோசலை நாடுடை வள்ளல்.- என்பது, கம்பராமாயணம்
அசைவில்லாத அமரர் – நித்தியசூரிகள். அசைவில்லாமையாவது, பிரமன் முதலியோருடைய அழியாமை போலே 3ஆபேக்ஷகமன்று. கல்ப காலத்தை எல்லையாக உடையது அன்று என்றபடி.-ஆபேக்ஷிகமன்று’ என்றது, நம்மைக்காட்டிலும் நாலுநாள் சாவாதிருக்கிற தன்மையையிட்டு, அவர்களை ‘அமரர்’ என்னாநின்றதேயன்றோ; அப்படி அன்று என்றபடி.
முடிவில், 1இப்பத்தைப் பழுது அறக் கற்க வல்லவர்கள், காமினிகளுக்குக் காமுகரைப்போலே ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு இனியர் ஆவர் என்கிறார்.
மேல் கொடிதான நரகம்” என்னாநிற்கச்செய்தேயும், விஷயத்தில் ஈடுபாடுடையவர்கள் அது பாராதே மேல் விழுமாறு போலே, இது கற்றாரை எம்பெருமானும் ஸ்ரீவைஷ்ணவர்களும் மேல்விழுந்து இனியராகக் கொள்ளுவர்கள் என்றபடியாம்
ஏகதத்விதத்ரிதர்கள் சுவேதத்தீபத்தைச் சென்று கிட்டி, உள்ளுப் புகுகைக்குத் தகுதியில்லாமையாலே புறம்பே நின்று, அங்குள்ளார் எம்பெருமானைக் கண்டு படுகிற சம்பிரமத்தைச் செவியாலே கேட்டு நிற்பது, கண்ணாலே காணப் போகாதொழிவதாய்க் கிடந்து பட்டாற்போலே கிடந்து கூப்பிடுகிறாராயிற்று இவரும்.
அவ்வூரிற் சோலைக்கு நீர் இத்தலையில் மெலிவு போலே காணும். ஆகாயத்தைக் கண்செறி இட்டாற் போல் இருத்தலின் ‘வானார்’ என்கிறது
காட்சிக்கு இனியதாக இருத்தலின் ‘வண்கமுகு” என்கிறது. “குலையார்ந்த பழுக்காயும் பசுங்காயும் பாளை முத்தும், தலையார்ந்த இளங்கமுகு” என்னுமாறு போலே இருத்தல்
மனத்தினை உள் முகமாக்கி அநுபவிக்க மாட்டாதார்க்கு, தன்னை அவர்கள் கண்களுக்கு இலக்காக்கிக்கொண்டு உபாயவஸ்து நிற்கிறாப் போலே காணும் இவையும். யாவர்க்கும் தொழுகுலமான சர்வேச்வரனுடைய உபாய பாவத்தில் நிலை போலே. நித்தியப் பிராப்பியனாய்க் கொண்டு அங்கே இருக்கிறவன்,
இயல்பாயமைந்த சேஷத்வத்தையுடைய நித்தியசூரிகளும், சம்சார சம்பந்தம் நீங்கப்பெற்ற முக்தர்களும், பாவங்கள் எல்லாம் நீங்கி இனிமேல் சரீர சம்பந்தம் இல்லை என்னும்படி முடிவான சரீரமுடையவர்களான முமுக்ஷு க்களும் ஆகிய இவர்கள், மனிதப்பிறவியையும் விலங்கின் பிறவியையும் தாவரப் பிறவியையும் விரும்பினவர்களாய்க் கொண்டு ஸ்ரீரங்கத்தை எப்போதும் பற்றியிருக்கிறார்கள் என்று பௌராணிகர்கள் சொல்லிவைத்தார்கள்; இப்படிப்பட்ட மனித விலங்கு தாவரங்களின்பொருட்டு நமஸ்காரம் ஆகுக” என்றார் பட்டர். 2இராமாவதாரத்திலும் ஒரு இலக்குமணன் முதலியோர்கள், வானரங்களின் உருவத்தை அடைந்தார்கள், விபீஷணன் முதலியோர் பற்றிக் கிடந்தார்கள். அது போன்று. 1அதிலும் நடையாடித் திரிகின்றவர்கட்குப் போகைக்கும் தகுதி உண்டேயன்றோ, அதுவும் இல்லையே அன்றோ தாவரங்களுக்கு.
அஹ்ருத ஸஹஜ தாஸ்யா: ஸூரய: ஸ்ரஸ்தபந்தா:
விமல சரம தேஹா இத்யமீ ரங்கதாம”
மஹித மநுஜதிர்யக் ஸ்தாவரத்வா: ஸரயந்தே
ஸுநியதம் இதி ஹஸ்ம ப்ராஹு: எப்யோ நம: ஸ்தாத்”– என்பது, ஸ்ரீ ரங்கராஜஸ்தவம்
இலக்குமணன் முதலியோர்கள்-நித்தியர்கள். வானரங்களின் உருவத்தையடைந்தவர்கள் -தேவர்கள். விபீஷணன் முதலியோர்-முமுக்ஷு க்கள்.
வானுளோ ரனைவரும் வான ரங்களாக்
கானினும் வரையினும் கடித டத்தினும்
சேனையோ டவதரித் திடுமின் சென்றென
ஆனன மலர்ந்தனன் அருளின் ஆழியான்.
வளையொடு திகிரியும் வடவை தீதர
விளைதரு கடுவுடை விரிகொள் பாயலும்
இளைஞர்கள் எனவடி பரவவேகி நாம்
வளைமதில் அயோத்தியில் வருதும் என்றனன்.– என்பன, கம்பராமாயணம்
நாராயண சப்தத்திலும் பிரணவத்திலும் போலே, ‘கோனாரை அடியேன்’ என்கிறாள். 3அவனைச் சொல்லும் போது தம்மையிட்டல்லது சொல்லப் போகாது; தம்மைச் சொல்லும்போதும் அவனையிட்டல்லது சொல்லப்போகாது. 4‘கோனாரை’ என்ற இடம், நாராயண சப்தார்த்தம்; ‘அடியேன்’ என்ற இடம், பிரணவார்த்தம். பிரணவம், ஜீவப்பிரதானம்; நாராயண பதம், ஈச்வரப் பிரதானம். ‘அடி கூடுவது என்று கொலோ’ என்ற இடம், நான்காம் வேற்றுமையின் பொருள்; 5‘என்று கொலோ’ என்று பிரார்த்தனையோடு தலைக்கட்டுகிறதன்றோ.
அடியேன் அடிகூடுவது என்று கொலோ – 1ஸ்வரூபத்துக்குத் தகுதியாக வேற்றுமையின் பொருளோடே தலைக்கட்டுகிறபடி. 2எல்லா அளவிலும் சொரூபம் அழியாதன்றோ. தாமாகவுமாம், பிராட்டிமார் தசையை அடைந்தவராகவுமாம், அதற்கும் அவ்வருகே சில அவஸ்தைகளையுடையராகவுமாம், எல்லாக் காலத்திலும் ஸ்வரூபம் மாறாது; 3பிண்டத்வ கடத்வ கபாலத்வ சூர்ணத்வங்களாகிற நிலை வேறுபாடுகளை அடைந்தாலும் மண்ணான வடிவுக்கு அழிவில்லையன்றோ. 4தாமான தன்மையில் 5“அடி தொழுது எழு” (திருவாய். 1. 1 : 1.)என்பர்; பரோப தேசத்தில் 6“திண்கழல் சேர்” (திருவாய். 1. 2 : 10.)என்பர்; தூதுவிடப்புக்கால் 7“திருவடிக்கீழ்க் குற்றேவல்” (திருவாய். 1. 4 : 2.)என்பர்; பிறரைச் சொல்லப் புக்கால் 8“தாட்பட்ட தண்துழாய்த் தாமம் காமிற்றாயே” (திருவாய். 2. 1 : 2.)என்பர்; கலங்கி மடல் எடுக்குமளவானாலும் 9“தலையில் வணங்கவுமாங்கொலோ” (திருவாய். 5. 3 : 7.)
என்பர்; பித்தேறிச் சொல்லும்போதும் 10“கண்ணன் கழல்கள் விரும்புமே” (திருவாய். 4. 4 : 8.)என்னுதல், 11“ஏறிய பித்தினொடு எல்லா உலகும் கண்ணன் படைப்பு” (திருவாய். 4. 4 : 7)என்னுதல் சொல்வார் இத்தனை.
அத்தலையில் உள்ளவை அடங்கக்கொண்டு தந்தாமது ஒன்றும் கொடாதே போருகை அந்நிலத்துள்ள பொருள்கட்கெல்லாம் ஸ்வபாவம் கண்டீர். 3கலம்பகன் அல்லது சூடப்பொறாத சுகுமாரரைப் போலே காணும் தென்றலின் ஸ்வபாவம் என்பாள். ‘பொன்திகழ் புன்னை மகிழ் புது மாதவி மீதணவித் தென்றல் மணம் கமழும்’ என்கிறாள். இதனால், பூவில் பரிமளத்தைத் தேடுவாரைப் போலே காணும் இது பரிமளத்தில் கலம்பகன் தேடுகிறபடி என்பதனைத் தெரிவித்தபடி. 4செருக்கராயிருக்கும் இராஜபுத்திரர்கள் முலைசரிந்தாரைப் ‘போகத்திற்குத் தகுதியுள்ளவரல்லர்’ என்று கழிக்குமாறு போன்று, கழிய அலர்ந்தவற்றைப் பாராமல் போருகிறது என்பாள் ‘புது மாதவி மீதணவும்’ என்கிறாள்
வாஹி வாத யத: காந்தா”( ஸ்ரீராமா. யுத். 5 : 6.)காற்றே வீசுக” என்று, ( ரசோக்தியாக அருளிச்செய்கிறார் ‘காலைப்பிடித்து’ என்று தொடங்கி. காலை – காற்றை.)இவர் கையாலே தொட வேண்டாதபடி இடைச்சுவரான கடல் கிடந்தேயாகிலும், ஒரு படுக்கையிலே இருப்பாரைப் போலே அவள் இருந்த பூமியிலே இருக்கப் பெற்றோமே என்றாரேயன்றோ பெருமாள். 2காலைப் பிடித்து ‘நீ இப்படிச் செய்ய வேணும்’ என்று வேண்டிக்கொள்ளுகிறாரேயன்றோ இவருடைய செல்லாமை. நின்ற பிரான் அடிநீறு அடியோம் கொண்டு சூடுவது என்றுகொல் – 3பூவில் சுண்ணம் பெறுவது என்றோ. மயிர் கழுவிப் பூச்சூட இருப்பாரைப் போலக் காணும். 4இவர்கள், இப்போது பிரிய நின்றார்களேயாகிலும் கலக்கும்போது அநுபவம் இவர்களுக்கும் ஒத்திருக்குமாதலின் ‘அடியோம்’ என்கிறாள். 5அவன் வந்தாலும் இவளுக்கு முன்னே கொண்டாடுவது இவர்களையன்றோ
அவன்தான் வந்து இவள் பக்கல் பாவபந்தம் உறைக்க உறைக்கக் கொண்டாடுவது இவர்களையாகையாலே, பெரிய திருநாள் சேவித்தார் இரட்டைகள் அழுக்கானாலும் மடிகுலையாமல் வைக்குமாறு போன்று, இவர்களும் அவன் கொடுத்த மாலையின் செவ்வியழிந்ததேயாகிலும் மாறாதே வைத்துக்கொண்டிருப்பர்களே அன்றோ; அது இவளுக்கு நினைவூட்டுவதாய் நலியாநின்றதாதலின் ‘சூடு மலர்க் குழலீர்’ என்கிறாள் என்னுதல்.
தொண்ணூற்றைந்து வயதுக்கு மேலாய் ஆசையற்றவர்களாய் இருப்பாரை அன்றோ அந்தப்புரங்களுக்கு வைப்பது. “வேத்ர பாணீந்-பிரம்பைக் கையிலுடையவர்களை;” பெருமாள் விற் பிடித்தாற்போல அவர்கள் பிரம்பு பிடித்தபடி. விற்பிடித்து ரக்ஷகராயிருப்பாரும் பிரம்பு பிடித்து ரக்ஷகராயிருப்பாரும் காணும்.
இவள் தனக்கு வேத ஒலியைக் கேட்டவாறே, நாயகன் பேர் வைத்துப் புணர்த்த புணர்ப்பினைக் கேட்டாற்போலே காணும் அஸஹ்யமாயிருக்கிறபடி. 5இருவரும்கூட இருந்து கேட்கக்கூடியதனைத் தனியிருந்து கேட்கப் புக்கால் பொறுக்க ஒண்ணாதேயன்றோ
திருவல்லவாழ் நீடு உறைகின்ற பிரான் – அவதாரம் போலே தீர்த்தம் பிரசாதியாதே பிற்பாடர்க்கு உதவும்படி சிரமஹரமான திருவல்லவாழிலே நித்தியவாசம் செய்கிற உபகாரகன். நீடு உறைகின்ற பிரான் நிலம் தாவிய நீள் கழலே – 1குணாகுண நிரூபணம் பண்ணாதே (சௌலப்யம். ஸ்ரீ வாமனனுக்கும் இவனுக்கும் ஒக்கும்,)எல்லார் தலைகள் மேலும் பொருந்தும்படி சுலபமான திருவடிகளைக் கொண்டு, அவதாரம் போலே தீர்த்தம் பிரசாதியாமல் நித்தியவாசம் செய்கிற உபகாரமே இங்குத்தைக்குத் தன்னேற்றம்
நிச்சலும் நலிந்து”–எனக்கு ‘அவனைக் காண வேண்டும்’ என்னும் ஆசை எப்பொழுதும் செல்லுகிறாப்போலே, உங்களுக்கும் ‘என்னை மீட்க வேண்டும்’ என்கிற இந்த நினைவு மாறாதே செல்லுகிறப
மச்சு அணி மாடங்கள் – 4பல நிலங்களையுடைத்தாகையாலே அலங்காரத்தையுடைத்தான மாடங்கள். மச்சு-மேல்தளம். மீது அணவும் – செல்வப் பிள்ளைகளுக்கு அணுக்கன் இட்டாற்போலே காணும் கவிந்துகொண்டு நிற்கிறபடி.
நஞ்சு அரவின் அணை–1படுக்கையும் தானேயாய்க் காத்து ஊட்டவும் வற்றாயிருக்கை- போகிகளாய் இருப்பார் விடாமல் வசிக்கக்கூடிய தேசம் என்பது.(ரம்யம் ஆவஸதம் க்ருத்வா ரமமாணா வநே த்ரய:” என்பது, சங்க்ஷேப ராமா. 31.) 2இளையபெருமாள் கையும் வில்லுமாய் வெளிக்காவல் நிற்க, பெருமாளும் பிராட்டியுமாய்க் காட்டிலே இன்பம் அநுபவித்தாற்போலே. மூவரும் காட்டிலே இன்பத்தை அநுபவித்தார்களேயன்றோ, அப்படியே இங்கும் காவல் உண்டாயிருக்கிறபடி. அநந்த முகமான காவலே (சிலேடை.)யன்றோ.
தண் திருவல்லவாழ் கன்னல் அம் கட்டிதன்னை – கரும்பினுடைய கோது அற்ற கட்டியை. ‘இன்னமலையின் கட்டி’ என்னுமாறு போலே,
தேவர்களுடைய உப்புச்சாறு போலன்றிக்கே, ஆத்ம உஜ்ஜீவனம் பண்ணிக் கொடுக்கவற்றதாயிருத்தலின் ‘இன்னமுதம்’ என்கிறாள்.
என்றுகொல் கண்கள் காண்பதுவே-‘நான்பட்டதுபட, குழந்தை ஜீவிக்கப்பெறுவது காண்’ என்பாரைப் போலே, என் கண்களின் விடாய் தீர்வது என்றோ? என்கிறார். “முடியானே” என்கிற திருவாய்மொழியிற்கூறிய கரணங்களையுடையவர் அன்றோ. இந்திரியங்களும் தாமும் தனித்தனியே சேதன சமாதியாலே விடாய்கொள்ளுகின்றவர் அன்றோ
திருவடிகளைக் காண்பது எஞ்ஞான்றுகொலோ? அப்போது அலர்ந்த தாமரை போலே எல்லையற்ற போக்யமான திருவடிகள் என்பாள் ‘மலர்த்தாமரைப் பாதங்கள்’ என்கிறாள். 1அடியிலே இவர்க்குத் தானே அன்றோ ருசியை உண்டாக்கினான்(தமக்குத் திருவடிகளிலே ருசி பிறந்தது வாமனன் திருவருளாலே
என்பது கருத்து.). 2‘அடிகள் அடிகள்’ என்று வாய்புலற்றும்படி அன்றோ திருவடிகளில் இனிமை இருப்பது.
பாவை நல்லீர் – 1இவளை விலக்குவதற்கு ஆற்றல் இல்லாதவர்களாய் மரப்பாவைகளைப் போன்று இருந்தபடி. அன்றிக்கே, எழுதின பாவை போன்று இருந்தார்கள் என்னுதல். அன்றிக்கே, விலக்காமையாலே மகிழ்ந்து பெண்களில் நல்லரானவர்களே! என்று விளிக்கிறாள் என்னுதல்-பாவை” என்பதற்கு, மரப்பாவை என்றும், கொல்லிப்பாவை என்றும், பிரதிமை என்றும் மூன்று வகையாகப் பொருள் அருளிச்செய்கிறார் ‘இவளை விலக்குவதற்கு’ என்று தொடங்கி. முதற்பொருள், விலக்குதற்கு ஆற்றல் இல்லாமையைக் குறித்தது. இரண்டாவது பொருள், அழகிய உறுப்புகளையுடையவர்கள் என்பதனைக் குறித்தது. மூன்றாவது பொருள், ஸ்வாதந்திரியம் இல்லாதவர்கள் என்பதனைக் குறித்தது.
நாடொறும் வீடின்றி”–நித்திய அக்நிஹோத்ரத்தைப் பிரிக்கிறது. 1“ஒழிவில் காலமெல்லாம்” என்கிறபடியேயன்றோ இவர் பிரார்த்திப்பது. 2ஆசாரிய உபதேசத்தை நம்பி விரும்புகிற நம்மைப்போல் அன்றியே, அடிமை ரசித்து ஆசையாலே விரும்புகிறாரே அன்றோ.
நல்லுதலீர் – 3அவன் வந்த உபகாரத்துக்கு அவன் திருவடிகளிலே விழுந்து வணங்கிய வணக்கத்தினால் புழுதி படிந்த நெற்றியுடையவர்களாக உங்களைக் காண வல்லேனோ.-தலையில் வணங்கவுமாங்கொலோ” (திருவாய். 5. 3 : 7.)என்று தொழக் கடவளே, அப்போது இவர்களும் தொழுவர்களே; இவளுக்குக் கைங்கர்யத்தில் உகப்புப்போலே, இவள் பேறே தங்களுக்கு உகப்பாயிருக்குமவர்களே.
கழல்வளை பூரிப்ப 1“வெள்வளை” (திருவாய். 10. 3 : 7.)என்னுமாறு போலே. ‘கழல்வளை’ என்று, வளைக்கு விசேடணமாய் விட்டது காணும். 2இவளைக் கைவிடுகையாலே அன்றோ இது விசேடணமாக வேண்டிற்று. (இவளை அவன் கைவிடுகையாலே என்றும், இந்த வளை கையை விடுகையாலே என்றும் இரு பொருள்படும்.)
குழல் என்ன யாழும் என்ன குழல் என்னவுமாய் யாழ் என்னவுமாய் இருக்கை. 5நாட்டில் இனியவற்றை எல்லாம் சேரக் கேட்டாற்போலே இருக்கை. 6(விஷ்ணுநா ஸத்ருஸோ வீர்யே ஸோமவத் ப்ரியதர்ஸந:” , ஸ்ரீ ராமா. பால. 1 : 18.)“வீரியத்தில் விஷ்ணுவை ஒத்தவர், பிரியமாகப் பார்க்கப்படுவதில் சந்திரனை ஒத்தவர்”என்னுமாறு போலே
மழலை வரி வண்டுகள் இசைபாடும் திருவல்லவாழ் – இளமையோடு கூடியதாய்க் காண்பதற்கு இனியதாயிருக்கின்ற வண்டுகள், பிரீதிக்குப் போக்குவிட்டுப் பாடாநின்றுள்ள திருவல்லவாழ். செருக்கருமாய் ஸுகுமாரருமாயிருப்பார், ‘மரம்’ என்று சந்தனத்தைக் கழித்துப் புழுகு நெய்யை ஏறிட்டுக்கொண்டு திரியுமாறு போலே, இவையும் இயலைவிட்டு இசையையே பாடுகின்றனவாதலின் ‘இசை பாடும்’ என்கிறது.
ஆராய்ந்து அருளிச்செய்யப்பட்ட திருநாமங்களைப் போன்ற ஆயிரம் திருப்பாசுரங்களுள்,
சிறந்தார் பிறந்தே – 2ஒருவனுக்குப் பிறக்கை போக்கித் தாழ்ச்சி இன்றிக்கே இருக்க, அவனுக்குப் பல பிறப்பாய் ஒளி வருமாறு போலே, இவர்களும் இங்கே பகவானுடைய குணங்களை அநுபவம் பண்ணுகையாலே சீரியர்கள். 3“சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியர்” (திருவிருத்தம்.79.) என்னக் கடவதன்றோ
இரகு வம்சத்தில் அவதரித்தவரே! உம்மை நீங்கினால் சீதா பிராட்டி உயிர் வாழாதது போன்று, நானும் உயிர் வாழ மாட்டேன்” என்கிறபடியே, லாபாலாபங்களில் பிராட்டியையும் தம்மையும் ஒரு தன்மையராகச் சொன்னாரன்றோ இளையபெருமாள். (நச ஸீதா த்வயா ஹீநா நச அஹமபி ராகவ
முஹூர்த்தமபி ஜீவாவ: ஜலாந்மத்ஸ்யாவிவ உத்ருதௌ: ஸ்ரீராமா. அயோத், 53 : 31.)(ஸ்நேஹோ மே பரமோ ராஜந் த்வயி நித்யம் ப்ரதிஷ்டித:
பக்திஸ்ச நியதா வீர பாவோ நாந்யத்ர கச்சதி” ஸ்ரீராமா. உத். 40 : 16.)4“சுவாமியே! சிறந்த பிரீதியானது எப்பொழுதும் தேவரீரிடத்திலேயே நிலைத்து விட்டது, பக்தியும் நியதமாக இருக்கிறது, என் எண்ணமும் வேறிடத்தில் எனக்குச் செல்வது இல்லை” என்று, திருவடி ஸ்ரீராமாவதாரம் ஒன்றிலும் சக்தனாயிருக்குமாறு போன்று, இவர் எல்லா அவதாரங்களிலும் எல்லாச் செயல்களிலும் அகப்பட்டிருப்பார் ஒருவர். 1அர்ச்சாவதாரத்தில் தம் அபேக்ஷிதம் பெற ஆசைப்பட்டவர், அது கிடையாமையாலே அவதாரங்களிலே போகிறார்; ‘விபவம் உள்ள இடத்தே சென்றால் சிறிது அபேக்ஷிதம் கிடைக்கும்’ என்று இருப்பரே. நன்று; அவதாரங்களிலே இழந்தார்க்கும் 2இழவு தீர்க்கிற இடம் அர்ச்சாவதாரமாயிருக்க, இதனை விட்டு, ‘பெறலாம்’ என்று அவதாரமுள்ள இடம் தேடிப் போகையாவது என்? என்னில், அர்ச்சாவதாரத்தில், கண்களால் காண முடியாதவனான தன்னை, சம்சாரிகள் கண்களுக்கு விஷயமாக்குகையும் விரும்பினவை அனைத்தையும் கொடுக்கையும் ஒழிய, குளிர நோக்குதல், வினவுதல், அணைத்தல் செய்யக் கடவோம் அல்லோம் என்று சங்கல்பித்திருக்கையாலே, 3‘சத்திய சங்கல்பனுடைய சங்கல்பம் குலையும்படி அதிநிர்ப்பந்தம் செய்யக் கடவோமல்லோம்’என்று,(ஸோப்யேநம் த்வஜ வஜ்ராப்ஜ க்ருத சிஹ்நேந பாணிநா ஸம்ஸ்ப்ருஸ்ய ஆக்ருஷ்யச ப்ரீத்யா ஸுகாடம் பரிஷஸ்வஜே” ஸ்ரீவிஷ்ணுபுரா. 5. 18 : 2.) 1“அந்தக் கிருஷ்ணனும் துவஜம், வஜ்ஜிரம், தாமரை என்னும் இந்த ரேகைகளை அடையாளமாகவுடைய கைகளாலே நன்றாகத் தொட்டு இழுத்து அன்போடு கெட்டியாக ஆலிங்கனம் செய்துகொண்டார்” என்னும் கிருஷ்ணாவதாரத்திலே போந்தார் அண்மைக் காலமாகையாலே.
இவ்விடத்திலே, “கூரத்தாழ்வான் ஆர்த்தராய்ச் சரணம் புக, பெருமாளும் இரங்கி ‘மூன்றாம் நாளைக்கு வீடு தந்தோம்’ என்ன, ‘ஆழ்வான் திருமதிளுக்குப் புறம்பானார்’ என்னக் கேட்டு உடையவர் ஓடிச்சென்று, ‘ஆழ்வான் நாம் இங்கே இருக்க உமக்குப் பரமபதத்தே போக வேண்டிற்றோ’ என்ன, அடியேன்
சம்சாரத்திலே அடிக்கொதிப்பாலே மறந்தேன்’ என்ன, ‘ஆகில் நாமும் சரணம் புக்கால் இன்னம் சிலநாள் ஆழ்வானை இங்கே வைக்க இரங்குவர்’ என்று திருவாசலளவும் சென்று, ‘சத்திய சங்கல்பனுடைய சங்கல்பத்தைக் குலைக்க வேண்டா’ என்று மீண்டு எழுந்தருளினார்” என்ற சரிதம் அநுசந்திக்கத் தகும். என்றது, நான் ஒருவன் தோன்றிப் பெருமாளை இரண்டு வார்த்தை சொல்லுவாராகச் செய்யலாமோ என்றபடி. ‘அதி நிர்ப்பந்தம் செய்யக்கடவோம் அல்லோம்’ என்கையாலே, நிர்ப்பந்தித்தால் செய்வர் என்பது கருத்து.
கல் கண்ட குழியிலே இரவிலே விழுவாரைப் போன்று, பருவம் முற்றினவளவிலே “எத்திறம்” என்று மோஹித்து விழக்கடவ இவர், அதற்கும் அவ்வருகே சென்று இழிகிறாரன்றோ, கலக்கம் இருக்கிறபடி. ‘எத்திறம்’ என்று அங்கே ஆறு மாதங்களும், ‘பிறந்தவாறும்’ என்று இங்கே ஆறு மாதங்களும் மோஹித்துக் கிடந்தார் என்று பிரசித்தமன்றோ! (ததவஸ்தம் து பரதம் ஸத்ருக்ந: அநந்தரஸ்தித:” ஸ்ரீராமா. அயோத். 87 : 4.)2ஸ்ரீபரதாழ்வான் ஸ்ரீராமபிரானுடைய பிரிவாலே மோஹித்துத் தறைப்பட்டுக் கிடக்க, தாய்மார் அடங்கலும் சுற்றும் பார்த்து நிற்க, “சத்ருக்நாழ்வான் செயலற்று நின்றான்” என்கிறபடியே, ஸ்ரீ சத்துருக்நாழ்வான் கிட்டவுங்கூடப் பயப்பட்டுச் செயலற்றவனாய் நின்றானன்றோ. 3அப்படியே, நல்லார் நவில் குருகூரன்றோ, உலகத்தில் அறிவுடையாரங்கடலும் திரண்டு இவர் படிகளைக்கண்டு அறிவு கெடும்படி அன்றோ இவர் கலங்கிக் கிடந்த கிடை.
(க்ருத்வா பாராவதரணம் ப்ருதிவ்யா: ப்ருதுலோசந: மோஹியித்வா ஜகத்ஸர்வம் கத:ஸ்வம் ஸ்தாநமுத்தமம்” பாரதம்).நீண்ட கண்களையுடைய ஸ்ரீ கிருஷ்ணன், பூமியின் பாரத்தை நீக்கி உலகத்தையெல்லாம் மோஹிக்கச் செய்து மேலான இடமான தன் பரமபதத்தை அடைந்தார்” என்று, வந்து திருவவதாரம் செய்து, அநுகூலர் காரியங்கள் அடையத் தலைக்கட்டி, பிரதிகூலரையடைய முட்கோலுக்கு இரையாக்கி, அனுகூலரையடையக் கண்களாலே விழவிட்டு, இரு திறத்தாரையும் நோவுபடுத்தி, இங்கு நின்றும் போய்த் தப்பப் பெறுவதே! என்கிறது. “ஸ்வம் ஸ்தாநம் உத்தமம் – தன்னுடைய உத்தமமான ஸ்தானத்தை” என்கிறபடியே, இங்குள்ளாரடங்கலும் எதிரம்பு கோக்குமாறு போலேயன்றோ அங்குள்ளாரடங்கலும் எதிர் ஏற்கப் போனபடி
ஏறு“பாய்ந்ததும் பொய்கையிலே பாய்ந்தாற்போலே இரா நின்றதாயிற்று-“பாய்ந்ததும் –அவன் சௌகுமார்யத்தையும் அவற்றின் கொடுமையையும் நினைக்கையாலே, யமன் வாயிலே விழுந்தாற்போலே இருந்தது இவர்க்கு; அவனுக்கு அவளுடைய கலவிக்குக் காரணமாகையாலே பொய்கையிலே பாய்ந்தாற்போலே சுகரூபமாய்த் தோன்றியது என்றபடி
(வ்யாதிதாஸ்ய: மஹாரௌத்ர: ஸ: அஸுர: கிருஷ்ணபாஹுநா நிபபாத த்விதாபூத: வைத்யுதேந யதா த்ரும:” என்பது ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 16 : 7).நன்கு திறந்த வாயையுடையவனும் மஹா பயங்கரமானவனுமான அந்த அசுரன் இடியினாலே பிளக்கப்பட்ட மரம் போலே கிருஷ்ணனுடைய திருக்கையாலே இரண்டு கூறு செய்யப்பட்டவனாய்க் கீழே விழுந்தான்” என்பது ஸ்ரீ விஷ்ணுபுராணம்
நெய் உண் வார்த்தையுள் அன்னை கோல் கொள்ள நீ உன் தாமரைக்கண்கள் நீர் மல்க பையவே நிலையும் – பருவம் நிரம்புவதற்கு முன்பு, தான் பிரதிகூலரை அஞ்சப்பண்ணுமாறு போலே காணும் பருவம் நிரம்ப நிரம்ப அநுகூலர்க்குத் தான் அஞ்சும்படியும்
சேதனனைக் கொண்டு காரியங் கொண்டதோடு, அசேதனத்தைக்கொண்டு காரியங் கொண்டதோடு வாசி இல்லை இவனுக்கு. சிவன் தன்னோடு அவன் கையில் வில்லோடு வாசியில்லை இவனுக்கு. 3காரண நிலையில் சித்து அசித்துக்களைக் கொண்டு காரியங்கொண்டதைப் போன்றதாயிற்று. 4முன்பு அவன்தானே செய்வானாகக்கொண்டு எடுத்துப்பார்த்தான் அன்றோ; அது முடியாதொழிய, பின்னர் இவன் உள்ளீடாய் நிற்கையாலன்றோ செய்து தலைக்கட்டவல்லனாயிற்று. 1பண்டு ஓர் அரசன் “சிவனே பரம்பொருள்” என்று எழுதி, ‘எழுத்திட்டுத் தாருங்கோள்’ என்ன, அப்படிப் பலரும் எழுதி எழுத்திடா நிற்கச்செய்தே, ஒருவர் வாராய், நீ இந்த ஓலை கெடாமே நோக்கி வைத்தால் அன்றோ இவனுடைய பரத்துவம் சாதிக்கலாவது; நீ நினைக்கிற தேவதைக்கு உண்டாவ உயர்வுகள் ‘சர்வேச்வரனாலே’ என்று பிரமாணங்கள் சொல்லா நின்றன; ஆனபின்னர், இன்று, நீ சொல்ல நான் எழுந்திட்டுப் போகிறேன்; நாளை ஒரு விவக்ஷிதன் தோன்றி ‘இவன் அறிவீனனாயிருந்தானே!’ என்னக் கேட்பதில் இன்று நீ நினைத்ததைச் செய்துகொள்ள மாட்டாயோ” என்றார்.
விஷ்ணுராத்மா பகவதோ பவஸ்ய அமித தேஜஸ:
தஸ்மாத் தநுர்ஜ்யா ஸம்ஸ்பர்ஸம் ஸ விஷேஹே மஹேஸ்வர: , பாரதம் கர்ண பர்வம்.
மலைபோற் பொறுத்தாரும் தாஅம், பணிவில்சீர்ச்
செல்விடைப் பாகன் திரிபுரம் செற்றுழிக்
கல்லுயர் சென்னி இமயவில் நாணாகித்
தொல்புகழ் தந்தாரும் தாம்”– , பரிபாடல்.
அவத்தப்புன் சமயச்சொற் பொய்யை மெய்யென்று அணிமிடறு புழுத்தான்தன் னவையின் மேவிச்
சிவத்துக்கு மேற்பதக்குண் டென்று தீட்டும் திருக்கூர வேதியர்கோன் செவ்வி பாடப்
பவத்துக்கம் பிணிநீங்க நரகந் தூரப் பரமபதம் குடிமலியப் பள்ளி கொள்ளும்
நவத்துப்புச் செங்கனிவாய்க் கரிய மேனி நம்பெருமாள் அரங்கேசர் ஆடி ரூசல்.
எண்ணுந்தோறும் என் நெஞ்சு எரிவாய் மெழுகு ஒக்கும் நின்றே 2அவனுடைய ரக்ஷணத்திலும் பரப்பு உண்டாகாதே இவருடைய பாரிப்பு. 3எண்ண மாட்டார், எண்ணாதிருக்க மாட்டார்; ரக்ஷணத்திற்கு அவன் சமைந்தாற்போலே காணும் அழிகைக்கு இவர் சமைந்தபடி. 4இதனை நினைத்தே நாட்டார் உண்டு உடுத்துக் காலம் போக்கா நின்றார்களாதலின் ‘என் நெஞ்சு’ என்கிறார். நெருப்பின் அருகில் இருக்கும் மெழுகு போலே உருகா நின்றது என்பார் ‘எரிவாய் மெழுகு ஒக்கும்’ என்கிறார். அது ஒருகாலே உருகுதல் கரிதல் செய்யுமன்றோ, இது உருகினபடியே இராநின்றதாதலின் ‘நின்றே’ என்கிறார்.
தண்ணீர் குடிக்கக் கல்லின ஏரியிலே கல்லைக் கட்டிக்கொண்டு விழுந்து முடிந்துபோவாரைப் போலே கொடிய தன்மையனானவாறே முடிந்துபோனான் வாலி;
அஞ்சலிம் ப்ராங்முக: க்ருத்வா ப்ரதிஸிஸ்யே மஹோததே:” , (ஸ்ரீராமா. யுத். 21 : 1.)ஸ்ரீ ராமன் கடற்கரையில் கடலை நோக்கிக் கிழக்கு முகமாகக் கையைக் கூப்பிக்கொண்டு படுத்தார்” என்கிறபடியே, கடற்கரையிலே கிடந்த கிடையும். “ப்ரதிஸிஸ்யே-எதிர்நோக்கிப் படுத்தார்” என்கிறதன்றோ, ஒரு கடலோடே ஒருகடல் பொறாமைகொண்டு கிடந்தாற்போலே இருக்கையாலே; “கருணையங்கடல் துயின்றனன் கருங்கடல் நோக்கி” என்றான் அன்றோ
தருண மங்கையை மீட்பதோர் நெறிதரு கென்னும்
பொருள் நயந்துநன் னூல்நெறி யடுக்கிய புல்லில்
கருணை யங்கடல் துயின்றனன் கருங்கடல் நோக்கி
வருண மந்திரம் எண்ணினன் விதிமுறை வணங்கி.
ஒன்று நன்கு உரையாய்-5அருச்சுனனுக்குச் சொன்னாற்போலே எனக்கும் உரையாய்
திண்கொள்ள – ‘மானசாநுபவத்தைப் பிரத்யக்ஷசமாநாகாரமாகப் பண்ணினோமே’ என்று நீ சொல்லுமது எனக்கு வார்த்தையன்று காண். 5கனாவில்கண்ட காட்சி போன்று மானசாநுபவம் ஆக ஒண்ணாது; நன்கு கண்கூடாகக் காண வேண்டும்.
கண்ட கனாவின் பொருள்போல யாவும்பொய்; காலனென்னும் கண்டக னாவி கவர்வதுவே மெய்” திருவரங்கத்தந்தாதி.
ஒருநாள் அருளாய் – 2ஒரு நாள் அமையும் என்கிறாரல்லர், விடாயின் பெருமை சொல்லுகிறார்; விடாய்கொண்டவன் ‘ஒருகால் நாக்கு நனைக்க அமையும்’ என்றாற்போலே. ‘கிட்டினால் பின்னை விடும்படி சொல்லுகிறோம் என்று.
வீற்றிருத்தலாவது, தன் ஐஸ்வர்யத்தால் உள்ள மேன்மை தோன்ற இருத்தல். 1பொற்குப்பியில் மாணிக்கம் போலே-பரபாகத்தால் வந்த அழகு
பொருவில் உன் தனி நாயகம் அவை கேட்குந்தோறும் என் நெஞ்சம் நின்று நெக்கு அருவி சோரும் கண்ணீர்-ஒப்பின்றிக்கே அத்விதீயமாய் ஐஸ்வர்யப் பிரகாசமான உன் குணங்களையும் செயல்களையும் கேட்குந்தோறும் என் நெஞ்சமானது மலைநெகிழ்ந்தாற்போன்று நெகிழ்ந்து, கண்ணநீர் அருவியாய்ப் பாயாநின்றது
——————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –