ஸ்ரீ திருவடி மஹாத்ம்யம் —

ஸ்ரீ வேதங்களில் ஸ்ரீ திருவடி –ஸ்ரீ மந்த்ர ராமாயணம்

தே வாஸ ஆயந் பர சூ ர பி ப் ரந் 
வநா வ்ருக்ஷந்தோ அபிவிட் பி ராயந் 
நி ஸுத்ருவம் தத தோ லக்ஷணாஸு 
யத்ரா க்ருபீட மநு தத்த ஹந்தி

ஸீதையைத் தேடிச் சென்ற ஹநுமான் லங்கையிலே அசோக வனத்திலே ஸீதையைக் கண்டு பிடித்த
ஆனந்தத்தில் பல பெரிய மரங்கஷீமீ அடர்ந்த அசோக மரங்களை அழித்து விடுகிறார்.
இதைக் கண்ட அரக்கர்கள் எட்டத்தில் இருந்தபடியே வனம் நாசமாவதைக் கண்டு -ராவணனிடம் சென்று முறையிடுகிறார்கள்

தேவர்கள் கோடாலிகளை தூக்கி வந்தார்கள். அங்கே காவல் காக்கின்ற எங்களையும் சேர்த்து காட்டை அழித்துக் கொண்டே வந்தார்கள்
வெகு வேகமாகப் பரவுகின்ற காட்டுத் தீ போல கட்டிடங்களுக்கு தீ வைத்துக் கொண்டு –
பின்னால் உயர்ந்த மர அடுக்குகளையும் எரித்து தொடர்ந்து மற்ற மரங்களையும் கொளுத்துகிறார்கள்
ஹநுமான் ஒருவன் செய்த காரியத்தை பல தேவர்கள்கூடிச் செய்ததாக புகார் செய்கிறார்கள்.

ச ச : க்ஷுரம் ப்ரத்யஞ்சம் ஜகாரா த்ரிம்
லோகே ந வ்ய பே த மாராத் ।
ப்ருஹந்தம் சிதூ ஹதே ரந்தயாநி
வயத் வத்ஸோ வ்ருஷப ம் சூ சு வாந: ॥

ராவணன் அலட்சியமாகச் சிரிக்கிறான். கூறுகிறான்.குட்டி முயல் பட்டாக் சக்தியை விழுங்கிவிடுமோ?
தூரத்திலிருந்த மணல் முட்டைக் கலைத்துவிட்டதனால் பர்வதத்தையே உடைத்ததாகி விடுமோ?
இப்போது தான் பிறந்த காளைக் கன்று வளர்ந்து காளை ஆகி பெரிய காளையைச் சீண்ட முடியுமா?
ஆனாலும் நான் பரமாத்மாவை சிற்றின்ப வேட்கையினால் துன்புறுத்தி பெரிய பாவத்தைக் கட்டிக் கொள்கிறேன்
ராவணன் தன் தவற்றை உணருகிறான் என்று பொருள்

ஸுபர்ண இத்தா நக மா ஸிஷாயா வருத்த :பரிப தம் – ந ஸிம்ஹ: ।
நிருத்தச் சிந்மஹிஷஸ் தர்ஷ்யாவாந் கோ தா தஸ்மா அயத ம் கர்ஷதே தத்

பட்சி போல ஆகாசத்திலே ஸஞ்சரிக்கின்ற ராவணன் எவ்வளவு அடிபட்டும் கூட அயராதவன்.
கம என்றால் வேதனை, துக்கம் என்று பொருள் .“ந கம்” என்றால் துயரப்படாதவன் ஹநுமான்.
அந்த ஹநுமானை பிரம்மாஸ்திரத்தினால் கட்டிப் போடச் சொன்னான் .
ஹநுமான் சிங்கம் போலே அங்கும் இங்கும் தாவிக் குதித்தான்
“ந”என்றால் வேதத்தில் சில இடங்களில் ‘‘போலே’’ என்று பொருள் .
அவரை அடக்கிப் போட முடியவில்லை. தண்ணீர் வேட்கை கொண்ட எருமை தண்ணீரை நோக்கித் தாறுமாறாக ஓடுமே
அது போல தரி கெட்டு ஒடுகின்ற ஹநுமானை அரக்கர்கள் கயிற்றினால் கட்டி இழுத்துச் சென்றார்கள் .

பிரஹ்மாஸ்த்ர பாசத்தினால் கட்டி இழுத்துச் சென்ற போது -ஹநுமானை தேவ கணங்கள் பிராத்தனை புரிந்தனர்.

அக்ஷா நஹோ நஹ்யதநோத ஸோம்யா
இஷ்க்ருணுத்வம் ரசநா ஓத பிம்சத

அஷ்டாப ந்துரம் வஹதா பிதோ ர தம்
யேந தே வாஸோ அநயந்நபி ப்ரியம் ॥

ராம பக்தரான ஹனுமான் அவர்களே! (இங்கு
ஹனுமானை அழைக்கின்ற தேவர்கள் அவரைப் பன்மையில் அழைக்கிறார்கள்

(ஏகத்துவம் ந ச தாத்வ்யம் கு ராவாத்மநி சேச்வரே)

குருவையும் தன்னையும் ஈச்வரனையும் பற்றிக் கூறும் போது -ஏகவசனத்தில் ஒருமையில் பேசக்கூடாது என்று ஒரு சாஸ்திரம் கூறுகிறது.
அது போல அரக்கர் கூட்டம் ஹநுமானைச் சுற்றி வளைத்தாலும் கூட்டம் கூடி அடக்க முடியவில்லை. அநுமானைப் பாசத்தினால் கட்டி இழுத்தனர்.

அக்ஷா நஹோ நஹ்யத நோத ஸோம்யா
இஷ்க்ருணுத்4 வம் எச + நா ஞத பிம்சத
அஷ்டா பந்து4ரம் வஹதா பி4 தோ ரத 2 ம்
யேந தே வாஸோ அநயடந்நபி ப்ரியம்

ராமாயணத்தில் இந்திரஜித்து தான் ஹநுமானை¨பிரஹ்மாஸ்திரத்தினால் கட்டி வீதி வழியே ஊர்வலமாக
இழுத்துப் போனான் -என்று வருகிறது.
இங்கு ராவணனுடைய இளைய குமாரன் அக்ஷன் இழுத்துப் போவதாக ஸூசனை
உங்களைக் கட்டி இழுக்கின்ற அக்ஷன். போன்ற அரக்கன் (ராமாயணத்தில் வரும் இந்திரஜித் பெயர்)
தன்னையே ம்ருத்யு பாசத்தினால் கட்டிக் கொண்டு விட்டான்.
தற்போது தயவு செய்து இந்த ப்ரஹம்ம பாசத்திற்கு மதிப்புகொடுங்கள் -(ராவணன் முன் சென்றவுடன்) விரும்பினால்
ப்ரஹ்ம பாசத்தைத் துண்டு துண்டாக அறுத்து எறியுங்கோள்
இரண்டு கைகள். இரண்டு கால்கள். இரண்டு முஷ்டிகள். இரண்டு முழங்கால் இவ்விதம் எட்டு இடங்களில்
கட்டப் பட்டிருக்கின்றன.
தேர் போன்ற உங்கள் திருமேனியே லங்கையில் ஊர்வலமாக வரட்டும். அதனால் தேவதைகள்
தமது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வார்கள் .
ராவணன் அநுமானின் வாலில் தீ வைத்து ஊர் முழுவதும் இழுத்துப் போகிறான் -என்று கேள்விப்பட்ட
ஸீதாதேவி அக்நி தேவனை வேண்டுகிறாள்

ரக்ஷோஹணம் வாஜிநமா ஜிகர்மி
மித்ர ப்ரதிஷ்ட ணிாயாமி ச ர்ம ।
சி சா னோ அக்னி: க்ரதுபி:
ஸ நோ தி வா ஸ ரிஷ: பாது நக்தம் ॥

அரக்கர்களை வதைக்கின்ற வேகமுடைய ஸ்ரீராம தூதனை இந்த நிலையில் கண்டு -துயரத்தினால் கண்ணீர் வடிக்கின்றேன். –
வாயு தேவனின் பரம மித்ரன் அக்நி தேவன். அவரிடம் ஹநுமானுக்கு க்ஷேமத்தை பிராத்திக்கிறேன்.
என்கணவரால் பல யாகங்கள் செய்யப் ப்பெற்று நன்கு வளர்க்கப்பட்டிருக்கிறார். –
அந்த அக்னி நமக்கு நம் ஹனுமானை இரவு பகலாகக் கொடுமை செய்கின்ற அரக்கர்களிடமிருந்து காப்பாற்றட்டும்.

அயோ த ம்ஷ்ட்ரோ அர்சிஷா யாதுதா நான் உப
ஸ்ப்ருச ஜாதவேத : ஸமித்த :
ஆ ஜிஹ்வயா மூரதேவாந் ரப ஸ்வ
க்ரவ்யாதோவ்ருக்வ்யபி தத்ஸ்வாஸந்

இரும்பினால் ஆன -கடைவாயில் பல கோரைப் பற்களை உடைய அக்நி தேவனே! தீ நாக்கினால் அரக்கர்களைத் தீண்டுங்கள் :
நடந்ததெல்லாம் (ராவணன் ஸீதா தேவியை கொண்டு வந்ததெல்லாம்) உங்களுக்குத் தெரியுமே!
கொழுந்து விட்டு எரிகின்ற -தீ நாக்கினால் தேவர்களுக்கு
மூத்தவர்களான அசுரர்களை நாலாபுறமும் சூழ்ந்து கொண்டு எரித்து விடுங்கள் . அவர்கள் மாமிசம்
சாப்பிடுபவர்கள் தானே! -ஒரு சுருட்டாகச் சுருட்டி வாயில் அடைத்துக் கொள்ளுங்கள்

ஹரிம் ம்ருஜந்த்யருஷோ ந யுஜ்யதே
ச ஸம் தேநுப: கல ஸோமோ அஜ்யதே
உத்வாச மீரயதி ஹிந்வதே மதீ
புருஷ்ருதஸ்ய கதிசிக் பரிப்ரிய:

ஸீதையைக் கண்டுபிடித்து விட்டு திரும்பிய ஹநுமான் ஸ்ரீராமனிடம் வருகிறார்.
சத்ருவிடம் கூட பகை கொண்டாடாத (ரிபூணவமபி வத்ஸல:=வால்மீகி ) ராமன் ஹநுமானின் தோளில் அன்புடன்
கைபோட்டுக் கொண்டார்.
பசுவினிடம் கிடைக்கின்ற பஞ்சகவ்யம் கலந்த கலசத்தில் ஸோமக் கொடியின் ரஸம் நன்கு கலக்கப்படுகிறதே
அதுபோல ஹநுமான் பவித்திரமான ப்ரேமையே நிரம்பிய ஸ்ரீ ராமனுடைய இதய கலசத்தில் ஸீதா தேவியின் அன்புச் சேதியை நிரப்புகிறார்.
ராமனுடைய திரு உள்ளம் பூரிக்கிறது. ப்ரம்ஹ தேவன் சிவபெருமான் முதலியோர் ராமனைக் கொண்டாடுகிறார்கள்
இப்படி கொண்டாடப்படுகின்ற ராமனுக்கு ஹநுமானுடைய ஸீதாதேவியின் ப்ரேம வசனங்களுக்கு முன்னால்
அவையெல்லாம் நிறைவு பெறவில்லை.

நீலகண்ட ஸூரியின் இந்த விளக்க உரை பெருமளவு வலிந்து கூறப்பட்டதுதான்.
அவரே ‘‘ஸூசனை தெரிகிறது’’ என்று சொல்லுகிறாரே தவிர, ஹநுமானுடைய சரிதம்
ருக்வேதத்தில் கூறப்பட்டிருக்கிறது -என்று சொல்லவில்லை.

———————–

ருக்வேதத்தில் முதல் மந்த்ரமே ஹநுமானைத்தான்
குறிப்பிடுகிறது. என்று ருக்வேதத்தின் சாந்த்ரபாஷ்யத்தின்
ஆதாரத்தில் எடுத்துக் கூறுகிறார்.

அக்நிம் ஈளே புரோஹிதம்
யஜ்ஞஸ்ய தே வம் ருத்விஜடி
ஹோதாரம் ரத்ந தாதமம்
புரோஹிதம் -யஜ்ஞஸ்ய என்ற
பதங்களுக்கு முதலில் என்ன அர்த்தம் என்று தெரிந்து கொள்வோம்

அக்நிம் தூ தம் வ்ருணீமஹே
ஹோதாரம் விச்வ வேதஸம்
அஸ்ய யஜ்ஞடய ஸுக்ரதும்

இந்த மந்த்ரத்தில் ஸுக்ரீவன் ஸ்ரீராமனுடைய
நட்பைப் பெறுவதற்காக ஹநுமானை அனுப்புகிறான்
என்பதை தூதம் என்ற சொல் ஸூசனை செய்கிறது.

புரோஹிதம் -என்ற பதம் கார்யத்துவக்கத்திலே
அநுகூலமாக இருப்பவன் என்ற கருத்தை கூறுகிறது.
இங்கு ஸீதாதேவியை தேடுவதற்காக ஸ்ரீராமன் ஹநுமானை அனுப்பினார்.
ஹநுமான் செய்த இந்த முதல் உதவி தான் தேவியை அடைவதற்கு முதலில் கிடைத்தது. ஆகவே ஹநுமான் புரோகிதன்.

யாகத்தில் ஹோதா -தேவதைகளை அழைப்பவர். ஹநுமான் முன்னே இலங்கை சென்று அரக்கர்களை போருக்கு அறைகூவி அழைக்கிறார்.
அதனால் ஹோதா என்ற மந்த்ரத்தின் சொல் ஹநுமானைக் குறிக்கிறது.
ரித்விஜம் -ருத்வா ஏஜம் கடலைக் கடந்து சென்று
அரக்கர்களின் உள்ளங்களை கலக்கினார்.
ஆகவே ருத்விஜம் என்ற சொல் ஹநுமானைக் குறிக்கிறது.

இந்த மந்த்ரத்தில் –உஷீமீள ரத்நதா4தமம் -என்ற சொல் ஹநுமானைக் குறிக்கும் விஷயத்தில் மிகவும் அர்த்த புஷ்டி உடையது.
ராமன் அடையாளமாக ஹனுமானிடம் ரத்நக்கணையாழியை அளித்தார். அதை ஏந்திச் சென்றார் ஹநுமான்.
இந்த ஒருசொல்லே இந்த மந்த்ரம் ஹநுமானைக் குறிப்பது என்பதற்கு முக்கியச் சான்று. சங்கமும் சக்ரமும் கதாயுதமும்
ஏந்தியவர் சங்க சக்ர கதாதர : என்ற அடைமொழி –
ஹரி என்று சொல்லுக்கு பல பொருள்கள் இருந்தாலும் -இங்கு நாராயணனையே குறிப்பிடுமோ அதுபோல
யஜ்ஞஸ்ய தேவம்& ஸ்ரீராமனுக்கும் ஸுக்ரீவனுக்கும் -தோழமை -என்ற வேஷீமீவியை –
அக்நி ஸாக்ஷியாக நடத்தி வைத்தவர் அல்லவா ஹநுமான் இந்த அடைமொழிகளால் அக்நிம் -என்ற சொல் ஹநுமானையே குறிக்கிறது -என்று ஊர்ஜிதம் செய்யலாம்.

அக்ரே நயதி அக்நி: ஒரு கார்யத்தை முன் நின்று நடத்துபவன் -அக்நி. ஸீதையை மீட்பது -என்ற காரியத்தை
முன்னே நின்று நடத்திக் கொடுத்தவர் ஹநுமான்.
ஈளே அவனைத் துதிக்கிறேன். என்று ருக் வேதம் ஆரம்பிக்கிறது.
அக்நிம் தூதம் என்ற மந்த்ரம் இதே கருத்தை விவரமாகக் கூறுகிறது.
அஸ்ய யஜ்ஞடய தூ தம் ஸீதையை மீட்பது – என்ற வேஷீமீவிக்கு -தூதனாக அமைந்தவர் ஹநுமான்.

அரக்கர் நகரத்தையே கொளுத்திய அக்நி. -அஸ்ய யஜ்ஞஸ்ய தூதம் -யஐஞம் என்ற சொல் நாராயணனைக் குறிக்கும்.
டீஐளதீவயஜ்ஞபதி: யஜ்வா- என்று ஸ்ரீவிஷ்ணுஸஹஸ்ர நாம ஸ்தோத்ரம் ராமனாக அவதாரம் செய்த விஷ்ணுவை வேஷீமீவிகளின் ஸகல வடிவங்களாகவும் குறிப்பிடுகிறது.
அந்த யஜ்ஞ புருஷனுடைய தூதன் ஹநுமான் அஸ்ய யஜ்ஞஸ்ய ஸுக்ரதும் ராமன் எடுத்துக்கொண்ட ஸீதையை மீட்பது என்ற – வேஷீமீவியை செவ்வனே நடத்திக்
கொடுத்தவன் ஹநுமான். எப்படி அவனால் அதை சாதிக்க
முடிந்தது?
அவன் விச்வவேதா: அவன் எல்லாச் செயல்களையும் நன்கு அறிந்து செம்மையாகச் செய்வதில் ஸமர்த்தன். அதனால் முடிந்தது.

வ்ருணீமஹே -அவனையே நாமும் -நமது
நல்ல கார்யங்களைச் செவ்வனே நடைபெறுவதற்கு துணையாக ஏற்போம்.

இந்த மந்த்ரத்தில் வருகின்ற அக்நி என்ற சொல்
பொருட் செரிவு உள்ளது.
அஞ்ஜனை பெற்ற பிள்ளைக்கு ஹநுமான் . என்ற
பெயர் எப்படி வந்தது. இதையும் ருக்வேதம்
ஸூசிப்பிக்கிறது.
மமச்சந தே மகவன் வ்யம்ஸோ
நிவி வி த்வாம் அபஹந¨ஜகாந
அதா நிவித்த உத்தரோ
ப பூவாந் சி ரோ தாஸஸய
ஸம் பிணக் வதே ந ॥

இந்திரனே ! நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்
போதே விசாலமான தோஷங்களை உடைய ஹநுமான்
ஸூர்யனை விழுங்க முனைந்தான்.
அவனைத் தடுப்பதற்காக அவனுடைய தாடைகளை வஜ்ராயுதத்தினால் = ராமதூதனாக வரப் போகிறவனுடைய = தலையின் பகுதியான தாடையை -நன்றாக தாக்கிவிட்டீர்கள்
விரிந்த தோள்களுடைய ஹநுமான் இப்படி அடிபட்டு
சிறந்த வீரன் ஆனான்.
வேதங்களை முக்கியமான செய்திகளை
மறைத்துத் தான் சொல்லும் ‘‘பரோக்ஷப்ரியா இவ ஹி தேவா ’’ தேவர்களும் மறைந்திருப்பதையே விரும்புவார்கள் .
அடுத்த மந்த்ரத்தில் இது நன்கு விளங்கும்.

அநுஸ்வதாம க்ஷரந்நாபோ
அஸ்யா வர்த் த மத் ய ஆநாவ்யாநாம
ஸத் ரீ சீநேந மநஸா தமிந்த்ர
ஓஜிஷ்டே ந ஹந்மநா ஹந் நபி. த்யூந்

ஆகாயத்தில் ஒரு நீலக்கடல் (மேகம்) அந்தக் கடலின்
உஷீமீள நீல நீர் தேவர்களுக்கு யாகத்தில் ஹோமம்
செய்யப் படுகின்ற ஹவிஸ்.
நெல் போன்ற தானியங்களை உற்பத்தி செய்கின்ற தண்ணீர் நிறைந்த ஆகாயத்தில் கப்பல்கள்
போகின்ற அளவுக்கு பெருத்த மேக வெள்ளத்தின் இடையே
ஹநுமான் மூழ்கிவிடாமல் மிதந்தார்.
இந்திரன் மேக மண்டலத்தில் மிதந்த ஹநுமான் மீது தன் வாஹனமான ஐராவதத்தை ஏவினார். ஐராவதத்தையே கபளீகரம் செய்த மனதினுடைய வேகத்தை மிஞ்சுகின்ற ஹநுமான்
(இங்கு ஹனுமநா என்ற சொல்லுக்கு – ஹநுமானால் என்று பொருளில் -ஹநுமதா என்ற சொல் மருவி ஹந்மநா என்று
ஆகியிருக்கிறது.)
துரத்தப்பட்ட இந்திரன் வஜ்ராயுதத்தால் அடித்தான்.

இவ்விதம் ருக் வேதத்தில் நூற்றுக்கு மேற்பட்ட
ஹநுமானைப் பற்றிய குறிப்புகளைக் காணலாம்.

ஹிரண்ய ரூப : ஸ ஹிரண் யஸம்த் ருக்
அபாம் ந பாத் ஸேதுஹிரண்ய வர்ண:

ஹிரண்ய யாத் டரி யோநேர் நிஷக்யா
ஹிரண்யதா த த த்யத்ர மஸ்மை ॥

தங்க மயமான சரீரம் உடையவர் ஹநுமான்-ஹிரண்ய, தங்க மயமான புலன்களை உடையவர். கண்களும்
காதுகளும் மூக்கு முதலியன தங்கமயமானவை.

அபாம் நபாத்& முன் மந்த்ரத்தில் கூறிய படி
ஆகாயக்கடல் நீரை அபாம் என்று சொல் குறிப்பிடுகிறது.
ஆகாசத்தின் குமாரன் வாயு. ‘‘ஆகாசாத் வாயு:’’ வாயுவின்
குமாரன் ஹநுமான். ஆகவே ஹநுமான் ஆகாசத்தின் பேரன்
அபாம் நபாத் (நப்தா என்பது நபாத்). ஸேது ஹிரண்ய வர்ண = உண்மையான ஹநுமான் ஸ்வர்ண காந்தி உடையவன்.
தங்கமயமான ஸூர்யமண்டலத்தின் மீது உட்கார்ந்து தங்கத்தை வழங்குபவன் ஹநுமான். அவனுக்கு சாப்பிட
கொழுக்கட்டைகளை அளிப்போம். அஸ்மை அத்ரம்
(அன்னடி) மருத்பி: என்ற ஒன்பது தடவை வருகின்ற
மந்த்ரங்களில் -வாயுவின் குமாரன். அக்நி -ஹநுமான் என்றே பொருள் .
இதையே மருத்பி : அக்ந என்ற தொடர்
குறிப்பிடுகின்றது

இவ்வாறு கேசவாநந்தஜீ அழுத்தமாக
‘‘வேதங்கள் ஹநுமானின் அவதாரத்தை சிறப்பிக்கின்றன’’
என்று ஸித்தாந்தம் கூறுகிறார்.

————–

புராணங்கள் -ஏழு மஹநீயர்களை சிரஞ்ஜீவிகள் என்று கூறுகின்றன.

அச்வத்தாமா பலி: வ்யாஸ : ஹநுமான்- ச விபீஷண: । க்ருப : பரசுராம ஸப்த ஏதே சிரஜீவிந

அச்வத்தாமா-துரோணாசாரியரின் குமாரன்-பலி சக்ரவர்த்தி-வ்யாஸ: பகவான் -பராசரமுனிவரின் குமாரர்.

க்ருப:  மஹா பாரதத்தில் கௌரவர்களுக்கு ஆசார்யராக இருந்தவர். பரசுராம: -ஜமதக்நி முனிவரின் குமாரர்.

———-

.1. தேஜோ –நல்ல முக விலாஸம்-கபடமில்லாத
வனிடம் மட்டுமே இந்த முக விலாஸம் பளீர் என்று
துலங்கும்.
2.த் ருதி: -மன உறுதி. எடுத்துக் கொண்ட காரியம் உலகுக்கு
நன்மை தரும் என்பதில் உறுதியாக நம்பிக்கையோடு பிறந்த தைரியம்.
3.யசோ -இத்தகைய நல்லெண்ணம் கொண்டவன் இவன் என்ற புகழ் பெற்றிருக்க வேண்டும்.
4.தாக்ஷ்யம் -செயல் திறன்-ஒரு கருவியைக் கையாளுவதில் கூட லாகவம் வேண்டும்
5. ஸாமர்த்த் யம் -இந்த செயல்திறன் பயிற்சியினால் பழகிப் போன பின்பு செய்யும் போது லகுவாகத் தெரியும்.-இதுதான் ஸாமர்த்தியம் எனப்படுவது.
6. விநயோ –இத்தனை இருந்தாலும் அவற்றை
படாடோபமாகக் காட்டிக் கொள்ளக்கூடாது. இயல்பாக
இருப்பது போல நடந்து கொள்ள வேண்டும்.
7.நய: -செய்வதில் நியாயம் இருக்க வேண்டும்.யாரும்
தவறு கண்டு பிடிக்கக்கூடாது.
8.பௌருஷ -ஆளுமை வேண்டும்
9.விக்ரம்:-பணிகளில் பணியாளர்கள் அலட்சியம்
காட்டினால்-எதிர்ப்பு காட்டினால் அவர்களை உறுதியாக
அடக்க அதிகார தோரணை வேண்டும்.
10. பு த்தி : இந்த ஒன்பது திறன்களையும் வரிசையாக
முறைப்படி வெளிப்படுத்துவதற்கு முன்கூட்டியே திட்டம்
யஸ்மிந்நேதாநி நித்யதா ॥ :
இவ்வனைத்தும் ஹனுமானிடம் இருந்தது என்கிறார்
ராமன்

———————————-

ருச்யமூகப் பர்வதம்

(1)ருச்யமூகப் பர்வதம் கர்நாடகாவில் ஹம்பிக்கு அருகே உள்ளது -.
பெல்லாரி மாவட்டத்தில் ஹாஸ்பெட்டிலிருந்து பனிரெண்டு கிலோமீட்டர் தொலைவு.
ஹம்பியில் தான் விரூபாட்ச பரமேச்வரன் ஆலயம். அதற்கு முன்னே ஸந்நிதி வீதியில் -நேரே சென்றால் ருச்யமூக அடிவாரத்தில் கொண்டுவிடும்.
இங்கு தானே வாலிக்கு பயந்து கொண்டு சுக்ரீவன் ஒளிந்து கொண்டிருந்தான்?
அதன் அடிவாரத்தில் தானே ஹநுமான் ஸ்ரீராம லட்சுமணர்களை முதலில் கண்டார்
இங்கு இந்த மலையை பிரதட்சிணமாக வில் வளைவாக துங்க பத்ராநதி ஓடுகிறது. அங்கே அதற்குச் சக்கர தீர்த்தம் என்று பெயர்.
அதன் கரையில் மலை அடிவாரத்தில் ஸ்ரீராம மந்திர் உள்ளது.
அங்கே ஸீதா லட்சுமண ராமர்களை ஸேவித்துக் கொண்டு
ஹநுமான் ஸேவார்த்திகளுக்கு வரம் அருளுகிறார்.

கிஷ்கிந்தை
ஹம்பிப் பிரதேசத்திலேயே விட்டல நாத ஆலயத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் சென்றால்
சாலை வடக்கே திரும்புகிறது.
ஸ்படிக சிலா – என்ற இடத்திலிருந்து வருகின்ற சாலை இந்தச் சாலையில் சேருகிறது.
அதே வழியில் சற்று தூரம் போனால் துங்கபத்ரா நதி. அதன் அக்கரையில் அரைமைல் தூரத்தில் அநாங்குடி
என்ற கிராமம்.
இது தான் ராமாயண காலத்திய கிஷ்கிந்தை.
இங்கு பக்கத்தில் தான் ஸ்ரீராமன் ஒரே அம்பினால் துளைத்த ஏழு மாமரங்கஷீமீ இருந்தன.
சுக்ரீவன் ராமனுடைய அபார திறமையை மெச்சி வணங்கினான். அங்கு ஸ்ரீராமன் தன்னுடைய அடிபுறாத் தூணியை கழற்றி வைத்திருக்கிறார்.
அந்த அடையாளம் தெரிகிறது அங்கு தான் வாலி சுக்ரீவ
போர்கள் நிகழ்ந்தன. துங்க பத்ரா நதிக்கரையில் வாலி
ராமபாணத்தில் அடிபட்டு வீழ்ந்தான்.
அங்கெல்லாம் பாறைக பளீரென்று கண்களைப் பறிக்கின்றன. அதன் பக்கத்தில் ஒரு குகை.
அங்கு ராமன் மழை நாட்களில் தங்கி இருந்திருக்கிறார்.

ஹநுமான் பஹாடீ
அந்த குகையின் பக்கத்தில் ஹநுமான் பஹாடீ என்ற
ஸ்தலம். பக்கத்தில் குன்று -சுக்ரீவன் குன்று.
ஹாஸ்பெட் அருகில் கமலாபுரத்தில் மதுவனம் என்ற கிராமம். லங்கையிலிருந்து ஸீதையைக் கண்டு திரும்பிய பின்பு வாநரப்படை அங்கு தான் வெற்றி கொண்டாடி தேன் குடித்தது.
இனிய பலாப் பழங்களைச் சுவைத்தது. அங்கு ஒரு ஹநுமான் ஆலயம். பம்பா ஸரஸ். நினைத்து நினைத்து மேனி சிலிர்த்து ஆஞ்ஜநேயரை தர்சித்து பிறவிப் பயன் பெறலாம்.
பக்கத்தில் ஆஞ்ஜநேய மலை சற்று உயரமான இடத்தில்
ஒரு குகை. அதில் அஞ்ஜனி -பால ஹநுமான் தர்சனம்.

மால்யவான் மலை
மால்யவான் மலை -அதற்கு இன்று ஸ்படிக சிலா
என்று பெயர். விரூபாக்ஷ ஆலயத்திலிருந்து ஆறு
கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
பக்கத்தில் ப்ரவர்ஷண கிரி. மால்யவான் மலையில் ஸ்படிக சிலை மீது அமர்ந்து ஸ்ரீராமன் ஸீதையின் பிரிவு தாங்காமல் -ஓயாமல் கண்ணீர் விட்ட இடம்.
ப்ரவர்ஷணக் குன்றிலிருந்து ஒரு சிற்றருவி கலகல
வென்று நீரைப் பெருக்குகின்றது.
ஸ்ரீமத் ராமாயணம் கிஷ்கிந்தா காண்டம் 27,28 ஸர்க்கங்களின் ஸ்லோகங்களை வரிவரியாக நிறுத்திப் படித்தால் புலம்பிய ராமன் தோன்றுவான்.
அவருடைய கண்களைத் துடைத்து விடலாம். அந்தப் பெரும் பேறு கிடைக்கும். நான்கு மாதங்கள் அங்கே ராம லட்சுமணர்களைத் தாங்கி இருந்திருக்கிறார்களே.
ஹநுமான் லங்கையிலிருந்து திரும்பி வந்து இங்கு தான் ‘‘ஸீதாதேவி உயிருடன் இருக்கிறாள் ’’ என்று மங்களச்சேதி கூறியிருக்கிறார்.
அந்த ஹநுமானை அங்கு தர்சிப்பவர் பெரும் புண்ணியம் செய்தவர்களாகும்

———

பொதுவாக தென்னாட்டில் பக்தர்கள் மார்கழி க்ருஷ்ண சதுர்தசி மூல நக்ஷத்திரத்தில் ஸ்ரீ ஹநுமத் ஜயந்தி கொண்டாடுகிறார்கள்

வட நாட்டில் சித்ரா பூர்ணிமையன்றும் -சைத்ர சுக்ல ஏகாதசியிலும் சில இடங்களில் மாறுதலாக ஸ்ரீ ஹநுமத் ஜயந்தி கொண்டாடப்படுகிறது.

மைவார் நறும் கூந்தல் அஞ்சனை அமைந்த திருமஞ்சறூக்களை மாட்டி
வார் நறும் சுண்ணம் திமிர்ந்து, திருநெற்றி மிசைமணிநிலக்காப்பு மிட்டு
கைவார் நறும் குஞ்சிசூட்டி, மணிநூபுரக் காலணிகலன்களைப் பூட்டிக்
கைவிரல் சுவைத்தன்னை, மெளிணி விரற்சிந்தூர காந்தி கொஷீமீ இரேகை தீட்டிப்
பெளிணி வாளிணி நறுத் தேறல் ஒழுக, ஒழுக்கக்கால்பெயர்த்த முலை உண்டு, விம்பிப்
பெரு விழிக்கடை சிவந்தங் காந்து குறுநதை பெருக்கி மணி முத்தமாடிச்
செவ்வாளிணி திறந்து, பலர் சீராட்ட வளர் குழவி செங்கீரை யாடி அருளே
தீர திரி நேத்ரம் உள வீர அநுமந்தனே? செங்கீரை ஆடி அருளே –அருணாச்சலக் கவிராயர். பிள்ளைத் தமிழ் பாடல்

பிறந்த நாற்பது நாட்களுக்குள் கமகம வென்று நறும் கூந்தல் அழகியான அஞ்ஜனை – குழந்தையை கணுக்கால்களிடையே போட்டுக் கொண்டு –
தரையில் அமர்ந்து -கஸ்தூரிகோரோசனை கலந்து காளிணிச்சிய நல்லெண்ணையை தலையிலும் கண்களிலும் பார்த்து வழித்துக்
கை கால்களைப் பிடித்து விட்டுக் களபமாட்டி குழந்தையை பூந்துகில் கொண்டு ஒத்தி ஒத்தித் துடைத்து விட்டு, கண்களுக்கு மைதீட்டி –
நெற்றியில் பொடித்த முத்துத்துகளால் திலக மிட்டு -சுருஷீமீ சுருளான கேசங்களை கை விரலினால் கோதிவிட்டுப் பதிய வைத்து
ரத்தினச்சரம் சூட்டி கால்களில் மணி நூபுரக் காலணிகளைப் பூட்டி குழந்தையின் பிஞ்சு விரல்களைத் தம் வாயினால் சுவைத்து முத்தமிட்டு
விரல்களில் சிந்தூரம் தீட்டி உள்ளங்கைகளில்
சிந்தூர ரேகை எழுதி வாயில் விரலிட்டுக் குதப்பும் கடை வாளிணி வழியே நறும் தேன் ஒழுக –
அப்படி ஒழுக்கக்கால் – குழந்தை கையினால் குச கலசத்தைப் பெயர்த்து முலை உண்ணத் தாளிணி
விடுகிறாள்
குழந்தை பரபரப்பாக பெரு விழிக்கடை சிவந்து, அண்ணாந்து தாயின் முகம் பார்த்து குறு நகை பெருக்குகிறது.
தாய் குழந்தை வாயில் முத்தமிடுகிறாள் குழந்தை கால்களை உதைத்து -கைகளை ஆட்டி ஆட்டி அங்கிங்கு உங்க என்றெல்லாம்
செவ்வாயினைத் திறந்து மழலை பேசும் போது – ஓடி
வந்து சிறு பெண்கள் கை கொட்டி குழந்தை என்னோடு
பேசுகிறான் – என்று குலவும் போது
தீரனே – த்ரிநேத்ரம் உள்ள முக்கண்ணனின் அவதாரமே! வீர அநுமந்தனே -என்று அழைத்து செங்கீரை பாடி அருளே -என்று பாடுகிறார்

————–

ஸீதாராம பதாம் புஜே மதுபவத் யந் மாநஸம் லீயதே
ஸீதாராம கு ணாவளீ நிசி திவா யஜ்ஜிஹ்வயாssச்ரீயதே
ஸீதாராம ஸுபத்ர ரூபம நிசம் யச்சக்ஷுஷோ: பூஷணம்
ஸீதாராம ஸுநாம தேய ரஸிகம் தம் வாதஸூநும் பஜே ॥

ஸீதாராமர்களுடைய திவ்ய சரணத் தாமரைகளில் தேன் வண்டுகளே போல மனது எப்போதும் மொய்த்துக் கொண்டே உள்ளது
ஸீதாராம கல்யாண குணங்களை நாக்கு இரவு பகலாகப் பாடிக் கொண்டே இருக்கிறது –
ஸீதா ராமர்களுடைய மங்கள ஸ்வரூபம் கண்களுக்கு அழகூட்டுகின்றது.
ஸீதாராமர்களுடைய திருநாமத்தையே சொல்லிச் சொல்லிச் சுவைத்துக் கொண்டிருக்கின்ற அந்த வாயு குமாரனை சரண் புகுகின்றேன்.

அஞ்ஜநா கேஸரீ புண்யாய மங்களம்
ஸ்ரீராம பக்தாக்ர கண்யாய மங்களம்
ஸ்ரீராம நாமைக வத நாய மங்களம்
ஜாநகீ சோகாத் ரி தமநாய மங்களம்
ஸஞ்ஜீவிதாநுஜ ராமமோதாய மங்களம்
த்வம் ஜீவஸர்வதேத்யாசி ஷே மங்களம்
காத்ராச்லிஷத்ராம ப த்ராய மங்களம்
ஆத்ரேய ஸாபல்யதாயிநே மங்களம்

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading