(1) ஸ்ரீ ஆளவந்தார் –
என்னால் தன்னை இன்தமிழ் பாடிய’ என்பதற்குத் திருஷ்டாந்தம் காட்டுகிறார்,-கிருஷ்ணத்வைபாயநர் என்னும் பெயரையுடைய வியாசரைச் சுவாமியான நாராயணன் என்று தெரிந்துகொள்; செந்தாமைரக் கண்ணனான அவனைத் தவிர வேறு யார்தான் மஹாபாரதம் செய்தவர் ஆவார்?’ என்றாற்போலே இருக்கிறதாயிற்று.-க்ருஷ்ணத்வைபாயநம் வ்யாஸம் வித்தி நாராயணம் ப்ரபும் கோஹ்யந்ய: புண்டரீகாக்ஷாத் மஹாபாரதக்ருத் பவேத்’
என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 3. 4 : 4.இதற்கு ஆளவந்தார் அருளிச்செய்யும்படி: ‘சர்வேஸ்வரன் செய்யப் புக்கால் அரியதும் ஒன்று உண்டோ?’ என்றாம். அங்ஙன் அன்றிக்கே, எம்பெருமானார், ‘இவர் தாம் சொன்னாராகிலும் ஒருபடி போகச் சொல்லித் தலைக்கட்டுவர்: அவனும் தானே சொன்னானாகில் ஒரு குற்றுமும் இல்லாதபடி தலைக்கட்டுவான்: சிறு குழந்தை எழுத்திடப் புக்கார் தானே ஏதேனும் ஒருபடி இட்டுத் தலைக்கட்டும்; தந்தையாதல் உபாத்யாயனாதல் இடப்புக்கால்தானே எழுத்தாய் இருக்கும்? அங்ஙன் அன்றிக்கே, இவன் கையைப் பிடித்து இடுவிக்கப் புக்கவாறே, இவன் ஓரிடத்தே இழுக்க அவன் ஓரிடத்தே இழுக்கக் குதறிக் கொட்டியாய் உருவம் அழிந்து சிதறிப்போம்; அப்படியே, என்னை உபகரணமாகக் கொண்டு கவி பாடாநிற்கச் செய்தேயும, என்னால் வரும் குற்றம் தன் பக்கல் தீண்டாதபடி பாடுவித்தான் என்கிறார்’ என்று அருளிச்செய்வர்.
ஸ்ரீ ஆளவந்தார் நிர்வாஹத்துக்கு, ‘இன்தமிழ் பாடிய ஈசன்’ என்றதிலே நோக்கு. ஈசன் – ‘சமர்த்தன்’ என்றபடி.
எம்பெருமானார் நிர்வாஹத்துக்கு ‘என்னால் தன்னை இன்தமிழ் பாடிய ஈசனை’ என்றதிலே நோக்கு. ஈசன்-குற்றங்கட்கு எல்லாம் எதிர்த்தட்டானவன்.
(2) திருமலையாண்டான் –
மூவுலகாளியே! கடிகமழ் கொன்றைச்சடையனே! நான்முகக் கடவுளே’ என்று சொல்லப்படுகிற, வடிவுடை வானோர்க்குத் தலைவனே!’ என்னும் என்று, 2திருமலையாண்டான் வையதிகரண்யமாக்கிப் பொருள் நிர்வஹிப்பர். ‘என்னும்’ என்பதற்கு ‘என்னுமவனாய்’ என்பது பொருள். இதனை எம்பெருமானார் கேட்டருளி, ஸாமாநாதிகரண்யாத்தாலே அருளிச்செய்தருளினார்: ‘மூன்று உலகத்திற்கும் உரியனான இந்திரனுக்கு அநதர்யாமியாய் நின்று அவனுடைய அதிகாரத்தை நிர்வஹிக்கிறவனே!’ என்னும்: ‘வாசனையையுடைத்தான கொன்றையைச் சடையிலேயுடைய சிவபிரானுக்கு அந்தர்யாமியாய் நின்று அவனுடைய பதத்தை நிர்வஹிக்கிறவனே!’ என்னும்; ‘அவர்களோடு இவ்வருகுள்ளரோடு வாசி அற எல்லார்க்கும் நிர்வாஹகனாயிருக்கிற நான்முகனாகிய தெய்வத்துக்கு அந்தர்யாமியானவனே!’ என்னும் என்று.
திருமலையாண்டான் நிர்வாஹத்திற்கு, ‘என்று சொல்லப்படுகின்ற வடிவோடு கூடிய வானோர்களுக்குத் தலைவனே!’ என்பாள் என்பது பொருள். ஏகாரங்கள்: எண்ணுப் பொருளன. ஈற்றிலேயுள்ள ‘என்னும்’ என்பது மாத்திரம் முற்று. வையதிகரண்யம் – வெவ்வேறான பொருள்களைக் கூறுகின்ற சொற்கள், சாமாநாதிகரணயம் – ஒரே பொருளைக் கூறுகின்ற வெவ்வாறான பல சொற்கள். திருமாலையாண்டான் அருளிச்செய்த பொருள், அத்துணைச் சிறப்புடைத்தன்று என்பது எம்பெருமானார் திருவுள்ளம். ‘என்னும், என்னும்’ என்பதற்குத் திருமாலையாண்டான் அருளிச்செய்த பொருளில், மகள் வார்த்தையைத் திருத்தாயார் அநுபாஷிக்கிற தன்மை தோன்றாமை காண்க. மேலும், இவ்விடத்தில், ஏகாரங்களை விளியாகக் கோடலே ஏற்புடைத்தாம்.
மேலும், திருமாலையாண்டான் நிர்வாஹத்தில், லீலாவிபூதிக்கு மாத்திரம் நாதன் என்பது போதரும்; எம்பெருமானார் நிர்வாஹத்தில் இரண்டு உலகங்கட்கும் நாதன் என்பது போதரும்.
(3)எம்பெருமானார்

(4)திருக்குருகைப்பிரான் பிள்ளான்
எண் இலாப் பெருமாயனே – 3‘ஈஸ்வரன் இந்த மூலப் பிரகிருதியினின்றும் இந்த உலகத்தைப் படைக்கிறான்,’ என்றும், ‘என்னுடைய மாயை தாண்ட முடியாதது,’ என்றும் சொல்லுகிறபடியே, எண்ணிறந்த செயல்களைச் செய்யவற்றாய், நீ வேண்டாதாரைச் சிறை இட்டு நலியக்கடவதான பிரகிருதியைப் பரிகரமாகவுடையவனே! அன்றிக்கே, ‘எண்ணிறந்த மஹா ஆச்சரியமான குணங்களையுடையவனே!’ என்று பிள்ளான் பணிக்கும்படி
அஸ்மாந்மாயீ ஸ்ருஜதே விஸ்வமேதத்’--உபநிடதம். ‘மம மாயா துரத்யயா’--ஸ்ரீ கீதை, 7 : 14.
ஸ்ரீஜனகராஜன் திருமகள் காட்டிலே கூடப் போய் அவர் இருந்த இடம் நின்ற இடம் உலாவின இடந்தோறும் கூட இருந்து அனுபவித்தாற்போலே, நானும் அவன் இருந்த இடத்தே போய்ப் புக்கு அல்லது நில்லேன்,’ என்றாள்; அதனைக் கேட்ட அவர்கள், ‘உன் தலைமைக்கு இது போராது: நீ சொல்லுகிறது வார்த்தை அன்று,’ என்ன, அவர்கள், ‘அதற்கு நாங்கள் வழிப்படோம்’ என்ன, ‘ஆகில், 3நானேயாகிலும் போகை தவிரேன்,’ என்கிறாள் என்று 4பிள்ளான் பணிப்பர்.
அணுகியடைந்தான்’ என்றதனால், கலவி நிகழ்ந்தது என்பது பிள்ளான் திருவுள்ளம்; கலவி உண்டானால் தனியே ஒரு திருவாய்மொழி அருளிச்செய்வார்; அது செய்யாமையாலே பிள்ளான் நிர்வாஹம் அத்துணைச் சிறப்புடைத்து அன்று என்பர்.
அம் கள் மலர்த் தண் துழாய் முடி அச்சுதனே – அழகிதாய்த் தேனோடு கூடின மலரையுடைத்தாய்க் குளிர்ந்திருந்துள்ள திருத்துழாயைத் திருமுடியிலேயுடையையாய், 3அந்த ஒப்பனையால் வந்த அழகுக்கு ஒரு நாளும் ஒரு வேறுபாடும் இன்றிக்கே என்றும் ஒக்க நித்தியாம்படி இருக்கிறவனே! 4வைத்த வளையத்தைப் போன்றும் போக்கியமாகிறதாயிற்று விபூதி அனுபவம் இவர்க்கு. 5‘மேல் திருவாய்மொழியிலே ‘விள்கின்ற பூந்தண் துழாய் விரை நாற வந்து’ என்று சொன்னதை நினைக்கிறார்’ என்று. பிள்ளான் பணிப்பர். 1மாயன் குழல் விள்கின்ற பூந்தண் துழாய் உருவு வெளிப்பாடாய்த் துன்புறுத்தல் தவிர்ந்து, நேரே கண்டு அனுபவிக்கிறார் அன்றோ-மேல் திருவாய்மொழியிலே துன்பத்தைச் செய்வனவாக அருளிச்செய்த பொருள்களை, தாரகமாக அனுபவிக்கிற இத்திருவாய்மொழியிலே நினைத்தல் தகுமோ?’ என்ன, ‘மாயன் குழல்’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
கள் அவிழ் தாமரைக்கண் கண்ணனே – அப்போது அலர்ந்த தாமரைப்பூப்போலே இருக்கின்ற திருக்கண்களையுடையவனாய்ப் பவ்யனாய் இருக்கிறவனே! 2அவனுடைய திருக்கண்கள் போலே ஆயிற்று, இவர்க்கு விபூதியும் கவர்ச்சியாய் இருக்கிறபடி. அன்றிக்கே, ‘திருக்கண்களைப் போன்று துன்பத்தைச் செய்வதாகா நின்றது ஆயிற்று விபூதி அனுபவமும் இவர்க்கு,’ என்னுதல். 3‘துன்பத்தைச் செய்வதாவது என்?’ என்னில், ‘இன்னது’ என்று நிச்சயிக்கமாட்டாதே ஐயுற்றுப் பட்டது ஒரு துக்கம் உண்டே அன்றோ? அதுவும் துன்பத்தைச் செய்வதாக இருக்குமே? அதனைச் சொல்லுகிறது. (முடிச்சோதியாய்’ என்ற திருவாய்மொழியிற் கூறியபடியே சந்தேகமாய்க்கொண்டு பாதகமாகிறது என்றபடி.)அன்றிக்கே, ‘மேல் திருவாய்மொழியிலே, ‘சூழவும் தாமரை நாண்மலர்போல் வந்து தோன்றும்’ என்றதனை நினைக்கிறார,்’ என்று பிள்ளான் பணிக்கும். 4அதனைச் சீயர் கேட்டருளி, ‘மேலே ஓடுகிறரீதியின்படியே இதுவும் ஆகப்பெற்றதாகிர் அழகிது!அங்ஙன் அன்றிக்கே, இது வேறு ரசமாய் அறிவுண்டான பின்பு இவ்விடத்தோடு பொருந்தமாட்டாது’ என்று அருளிச்செய்தாராம்.
துயரங்கள் செய்யும் கண்ணா-துக்கங்களைச்செயக்கூடிய கிருஷ்ணனே! ‘எதனாலே நலிவது?’ என்னில், ‘முடிச்சோதி’ என்ற திருவாய்மொழியிற்கூறியபடியே திருமுடியில் அழகைக் காட்டியாயிற்று. சுடர் நீள் முடியாய்– 1விபூதியைச் சொல்லுவதும் திருமுடியைப் போன்று பாதகம் ஆகாநின்றதாயிற்று. (திருமுடியைப் போன்று’ என்றது, ‘நிற்றி முற்றத்துள்’ (7. 7 : 10.) என்ற திருப்பாசுரத்தைத் திருவுள்ளம் பற்றி.)அன்றிக்கே, ‘‘முற்ற இம்மூவுலகும் விரிகின்ற சுடர்முடிக்கே ஒற்றுமை கொண்டது’ என்றது, ‘பின்னாட்டுகிறது,’ என்று பிள்ளான் பணிப்பர்
தன்னை உறப் பல இன்கவி சொன்ன – 1‘சொல்ல மாட்டாது அந்த ஆனந்த குணத்தினின்றும் எந்த வேத வாக்கியங்கள் மீண்டனவோ’ என்கிறபடியே, 2‘வேதங்கள் மீண்ட விஷயத்தை மறுபாடு உருவச் சொன்ன’ என்று சீயர் அருளிச்செய்வர். அன்றிக்கே, ‘சர்வேஸ்வரனுக்குச் சால உற்றது என்கிறார்’ என்று பிள்ளான் அருளிச்செய்வர்.-உற’ என்பதற்கு, ‘மறுபாடுருவ’ என்பதும், ‘தகுதியாக’ என்பதும் இரு பொருள்;
இதுதான் ஒரு வார்த்தை மாத்திரமேயாய் உம்முடைய நெஞ்சு பரமபதத்தை விரும்பினாலோ?’ என்ன, ‘அதனை. என் நினைவிற்கு வாய்த்தலையிலே இருக்கிற சர்வேஸ்வரனைக் கேட்டுக்கொள்வது’ என்று இங்ஙனே அருளிச்செய்வர் சீயர். (அறியும்’ என்கையாலே ‘கேட்டுக்கொள்வது’ என்கிறார். வாய்த்தலை – மூலம். ‘இவ்வர்த்தத்திற்குச் சாக்ஷியாக அவனைக் கேட்டுக் கொள்ளுங்கோள்,’ என்பது நஞ்சீயர் திருவுள்ளம்.)அன்றிக்கே, ‘நீர் திருவாறன்விளையை பிராப்பியம் என்று இருக்கிறீர்; ஈஸ்வரன் சுவதந்திரன் அல்லனோ? அவன் பரமபதத்தைத் தரிலோ?’ என்ன, ‘அவன் முற்றறிவினன் அல்லனோ? அறியானோ?’ என்கிறார் என்று பிள்ளான் பணிப்பர்;
5 (கூரத்தாழ்வான்)
ஆழ்வான் ஒருகால், இத்திருவாய்மொழி பத்துப் பாசுரங்களையும் இராமாவதார விஷயமாக்கி நிர்வஹித்தாராம். 2அதற்குக் காரணம்: ஆயிரத்தில் ஒன்றும் கடலில் குளப்படியும் போலே, பெருமாளுடைய குணத்தில் ஒரு பகுதியே அன்றோ? அல்லாத அவதாரங்கள் எல்லாவற்றிலும் உள்ளது ஆதலின். 3‘பேரெயில் சூழ்கடல் தென்னலங்கை செற்ற பிரான்’ என்றும், ‘மாறு நிரைத்து இரைக்கும் சரங்கள்’ என்றும், மேலே சொல்லிப் போந்த இராமாவதாரத்தினுடைய செயலை அநுசந்தித்து, அவ்வழியாலே அன்றோ அவதாரங்களை அநுசந்திக்கிறது? மற்றைய அவதாரங்களிலே ஈடுபட்டவர்களும் இராமாவதாரம் பிராசங்கிகமாகச் சொல்ல வேண்டி வந்தால், 4‘மனத்துக்கு இனியானை’ என்றே அன்றோ சொல்லுவது?
6-எம்பார் –
என் ஆகிய தப்புதல் இன்றித் தனைக்கவி தான் சொல்லி – என்னைக் கருவியாகக்கொண்ட கவிபாடுகிற இடத்து, என்னுடைய சம்பந்தத்தால் வந்த குற்றமும் தட்டாதபடி கவி பாடினான். என் ஆகியே – ‘என் பக்கலிலே தானாய்’ என்றவாறு. 1இவ்விடத்தில் ‘தான் பாடினானாகில் ஒரு குற்றமும் இல்லாமல் தலைக்கட்டும்; நான் பாடினேனாகிலும் வருந்தி ஒருபடி தலைக்கட்டுவேன்; என்னைக் கருவியாகக் கொண்டு கவி பாடாநிற்கச்செய்தேயும் என்னுடைய சம்பந்தத்தால் வந்த குற்றம் தட்டாதபடி கவி பாடித் தலைக்கட்டினான்’ என்று எம்பார் அருளிச்செய்வர். விஷயத்துக்குத் தகுதியாகக் கவி பாடினான் ஆதலின், ‘தனைக் கவி தான் சொல்லி’ என்கிறார்.
7–பட்டர்
கிரமப் பிராப்தி பொறுக்காமாட்டாமல் படுகிறார்; 2ஈஸ்வரனுடைய முற்றறிவிற்கும் அவ்வருகான இவருடைய மிருதுத்தன்மையின் சொரூபம் இருக்கிறபடி. 3பிராட்டியைப் போலே ‘அவ்வாறு செய்தல் அவருக்கு ஒத்தாகும்’ என்று இருக்கமாட்டார், ருசி அளவு இல்லாமையாலே. 4சம்சாரத்தினுடைய தோஷத்தையும் நினைத்து, எம்பெருமானுடைய குணங்களின் உயர்வையும் நினைத்தால் ஆறி இருக்கப் போகாதே அன்றோ? 5பகவத் விஷயம் அறியாத சம்சாரிகள் இவர்க்குக் கூட்டு அல்லர்; பகவானுடைய பிரிவு அறிய வேண்டாத நித்தியசூரிகளும் இவரக்குக் கூட்டு அல்லர்; பிரிவில் நோவுபடுகைக்கு இவர் ஒருவருமே உள்ளார்.
6பட்டர், இத்திருவாய்மொழி (7-2)அருளிச்செய்யும் போதெல்லாம் ‘ஆழ்வார்க்கு ஓடுகிற நிலை அறியாதே அவருடைய உள்ளக்கிடையும் இன்றிக்கே இருக்கிற நாம் என் சொல்லுகிறோம்?’ என்று திருமுடியிலே கையை வைத்துக்கொண்டிருப்பார்.(இப்படி இருக்கிற இவருடைய ஆரித்தியைக் காட்டுகிற இத்திருவாய்மொழிக்குப் பொருள், கரைமேலே நிற்கிற நம் போன்றார் சொன்னால் சுவை இராது என்பதனை ஆப்த வாக்கியத்தாலே காட்டுகிறார், )
5‘பட்டர் இராமாவதாரத்தில் போரப் பக்ஷிபதித்து இருப்பர்’ என்று, அவர் அருளிச்செய்யுமது கேட்கைக்காகச் சிறியாத்தான் ஒருநாள் ‘பெருமாளுக்கு எல்லா நன்மைகளும் உளவாகிலும், கழுத்திலே ஒலை கட்டித் ‘தூது போ’ என்ன, தூது சென்ற கிருஷ்ணன் நீர்மை இல்லையே?’ என்ன, ‘அது அங்ஙன் அன்று காண்; கழுத்திலே ஒலை கட்டித் ‘தூது போ’ என்பார் இல்லாமையாலே தவிர்ந்தார் அத்தனைகாண்,’ என்று அருளிச்செய்தார். 1நாடுடை மன்னர் வேறே சிலர் இலரே. முடி சூடிய க்ஷத்திரிய குலத்திலே பிறக்கையாலே போக விடுவாரைப் பெற்றது இல்லை. முடியைத் தவிர்ந்து சடையைப் புனைந்து நாட்டினை விட்டுக் காடு ஏறப் போனவர், தூது போகாமை இல்லை அன்றோ?
8-பிள்ளை உறங்காவில்லி தாசர்
‘ஸம்ஸ்ப்ருசந் ஆஸநம் ஸௌரே: விதுரஸ்ஸ மஹாமதி:’( என்பது, பாரதம், உத்யோக.)–துரியோதனன் கோட்டியிலே கிருஷ்ணன் எழுந்தருளின போது அவர்கள் செய்த வஞ்சனத்தைக் கண்டு, அச்சங்கொண்டு, தம்முடைய திருமாளிகையில் படுக்கையையும் தடவிப் பார்த்தாரே அன்றோ ஸ்ரீவிதுராழ்வான்? ‘மஹாபுத்திமானான அந்த விதுரர் கண்ணனுடைய படுக்கையைத் தடவிப் பார்த்தார்,’ என்கிறபடியே, கடல் கலங்குவது தன்னளவிலே அன்றோ? 3பிள்ளையுறங்காவில்லிதாசர் ‘மஹாமதி என்றது, மதிகேடர் என்றபடியோ?’ என்றார், 4பிள்ளைதாம், ‘பெருமாள் எழுந்தருளும் போது எங்கேனும் ஒரு சலனம் பிறக்கில் நம் பிராணனை விடுமத்தனை’ என்று சொட்டையை உருவிப் பிடித்துக்கொண்டு சேவிப்பாராம். நம்முதலிகள் அதனைக் கண்டு, இவரை ‘மஹாமதிகள்’ என்று அழைப்பார்கள். 5அறிவு உண்டாகையாவது, பகவத் விஷயத்தில் அறிவு கெடுகை அன்றோ?
9-நஞ்சீயர்
வட்கு இலள் இறையும் – இதற்குச் சீயர் அருளிச்செய்வது. ‘இவள் முடிந்தாள்’ என்று. 2நாணத்தைக்கொண்டே அன்றோ பெண்மையை அறிவது? சொரூபத்தைப் பற்றி வரும் குணம் போனால் சொரூபமும் போயிற்றாமத்தனை அன்றோ? 3நிரூபகத்தை ஒழிய நிரூபிக்கப்படும் பொருளின் சித்தி இல்லையே! இவள் நாணம் நீங்கினமைக்கு அறிகுறி என்?’ என்னில், மணிவண்ணா என்னும் – 4கணவனுடைய திருப்பெயரைச் சொல்லாநின்றாள்
தெளிதல் அச்சங்கொடுக்கும் அன்றோ? முடிவு காலத்தில் பிறக்கும் தெளிவிற்குமு அஞ்சவேணுமே? 1உய்ந்த பிள்ளை பாடும் போது, ‘கெட்டேன், இவள் ‘தேறும்’ என்பதே’ என்று சீயர் அருளிச்செய்வராம்
என்னுடையக் கோமளக்கொழுந்து – கலக்கப் பொறாத மிருதுத் தன்மையையுடைவள் பிரியப் பொறுக்குமோ? 5‘தசை முறுகினால் வைத்தியர்கள் முகம் பாராதவாறு போலே, மகள் அவஸ்தையைக் கண்டு தளர்ந்து பெரிய பெருமாள் முகம் பாராமலே வார்த்தை சொல்லுகிறாள்’ என்று அருளிச்செய்வர் சீயர். கொழுந்து – 1கொள் கொம்பு தேட்டமான அளவிலே தரையிலே படர விடுவதே(பதி ஸம்யோக ஸூலபம் வய;’-என்பது, ஸ்ரீராமா. அயோந். 118 : 34.). ‘நாயகனுடைய கலவிக்குத் தகுந்த என்னுடைய வயதை’ என்கிறபடியே, 2இப்பாசுரத்தில் ஒரு தலைக்கட்டு இன்றிக்கே இருக்குமிதற்குக் கருத்து, ‘பரிஹரிக்கும் எல்லை கழிந்தாள், நாம் இவர்க்குச் சொல்லுவது என்?’ என்று தன்னிலே நோவு படுகிறாள் என்று வங்கிப்புரத்து நம்பி பணிக்கும்.
கண்களோடு திவ்விய ஆயுதங்களைக் கூட்டுகிறது அழகுக்கு. 2இவ்விடத்தே நிலாத்துக் குறிப்பகவர் வார்த்தையை அருளிச்செய்வர் சீயர். 3கைக்கு ஆழ்வார்கள் ஆபரணமாய் இருக்குமாறு போலே ஆயிற்று, முகத் திருக்கண்கள் ஆபரணமாய் இருக்கும்படியும். (திவ்விய ஆயுதங்களைப் பற்றிய பிரசங்கத்திலே, ‘சர்வேஸ்வரன் இருதோளனோ, நாற்றோளனோ?’ என்ற சங்கைக்கு விடை அருளிச்செய்கிறார், ‘இவ்விடத்தே’ என்று
தொடங்கி. என்றது, ‘நிலாத்துக் குறிப்பகவர் கேட்ட வினாவிற்குப் பட்டர் அருளிச்செய்த திருவார்த்தையை அருளிச்செய்வர் நஞ்சீயர்’ என்றபடி)
ஏழையர்க்கும் அசுரர்க்கும் அரக்கர்கட்கும் உய்விடம் எவ்விடம் என்று இலங்கி மகரம் தழைக்கும் தளிர்கொல் – ‘அசுரர்கட்கும் அரக்கர்கட்கும் பெண்களுக்கும் தப்பிப்போய்ப் பிழைக்கும் இடம் எவ்விடம்?’ என்று விளங்குகின்றனவாய்க் கொண்டு மகரம் தழைக்கின்ற தளிரே? 2அசுரரும் அரக்கரும் அழகு கண்டால் பொறுக்கமாட்டாமல் முடிவர்கள்; பெண்கள் அடையப் பெறாமல் முடிவர்கள். ‘பெண்களை நலியுமாறு போலே அசுரர்கட்கும் அரக்கர்கட்கும் சினேகத்தை விளைத்துப் பாதகம் ஆகாநின்றன’ என்று ஒரு தமிழன் கூறிவைத்தான் என்று கூறியதனைச் சீயர் கேட்டருளி, 3‘இப்பொருள் அழகிது: ஆனாலும். அபக்ஷதர்மம்;-(பிரகரணத்துக்குச் சேராதது’ என்றபடி.) அசுரர்களுக்கும் அரக்கர்களுக்கும் பாதகம் ஆகாநின்றது என்று இப்போது இது சொல்லுகை, தேட்டம் அன்றே? ஆன பின்பு அது வேண்டா,’ என்று அருளிச்செய்தாராம். (அசுரர்களுக்குப் பாதகம் எனபதனை இங்குச் சொல்ல வேண்டவே’ என்றபடி. ‘அசுரர்கட்கும் அரக்கர்கட்கும் பாதகமாமாறு போன்று, பெண்களுக்கும் பாதகமாம்’ என்பதே முதல் அடிக்குப் பொருளாம்.)
கள் அவிழ் தாமரைக்கண் கண்ணனே – அப்போது அலர்ந்த தாமரைப்பூப்போலே இருக்கின்ற திருக்கண்களையுடையவனாய்ப் பவ்யனாய் இருக்கிறவனே! 2அவனுடைய திருக்கண்கள் போலே ஆயிற்று, இவர்க்கு விபூதியும் கவர்ச்சியாய் இருக்கிறபடி. அன்றிக்கே, ‘திருக்கண்களைப் போன்று துன்பத்தைச் செய்வதாகா நின்றது ஆயிற்று விபூதி அனுபவமும் இவர்க்கு,’ என்னுதல். 3‘துன்பத்தைச் செய்வதாவது என்?’ என்னில், ‘இன்னது’ என்று நிச்சயிக்கமாட்டாதே ஐயுற்றுப் பட்டது ஒரு துக்கம் உண்டே அன்றோ? அதுவும் துன்பத்தைச் செய்வதாக இருக்குமே? அதனைச் சொல்லுகிறது. (முடிச்சோதியாய்’ என்ற திருவாய்மொழியிற் கூறியபடியே சந்தேகமாய்க்கொண்டு பாதகமாகிறது என்றபடி.)அன்றிக்கே, ‘மேல் திருவாய்மொழியிலே, ‘சூழவும் தாமரை நாண்மலர்போல் வந்து தோன்றும்’ என்றதனை நினைக்கிறார,்’ என்று பிள்ளான் பணிக்கும். 4அதனைச் சீயர் கேட்டருளி, ‘மேலே ஓடுகிறரீதியின்படியே இதுவும் ஆகப்பெற்றதாகிர் அழகிது!அங்ஙன் அன்றிக்கே, இது வேறு ரசமாய் அறிவுண்டான பின்பு இவ்விடத்தோடு பொருந்தமாட்டாது’ என்று அருளிச்செய்தாராம்.
தன்னை உறப் பல இன்கவி சொன்ன – 1‘சொல்ல மாட்டாது அந்த ஆனந்த குணத்தினின்றும் எந்த வேத வாக்கியங்கள் மீண்டனவோ’ என்கிறபடியே, 2‘வேதங்கள் மீண்ட விஷயத்தை மறுபாடு உருவச் சொன்ன’ என்று சீயர் அருளிச்செய்வர். அன்றிக்கே, ‘சர்வேஸ்வரனுக்குச் சால உற்றது என்கிறார்’ என்று பிள்ளான் அருளிச்செய்வர்.-உற’ என்பதற்கு, ‘மறுபாடுருவ’ என்பதும், ‘தகுதியாக’ என்பதும் இரு பொருள்;
இதுதான் ஒரு வார்த்தை மாத்திரமேயாய் உம்முடைய நெஞ்சு பரமபதத்தை விரும்பினாலோ?’ என்ன, ‘அதனை. என் நினைவிற்கு வாய்த்தலையிலே இருக்கிற சர்வேஸ்வரனைக் கேட்டுக்கொள்வது’ என்று இங்ஙனே அருளிச்செய்வர் சீயர். (அறியும்’ என்கையாலே ‘கேட்டுக்கொள்வது’ என்கிறார். வாய்த்தலை – மூலம். ‘இவ்வர்த்தத்திற்குச் சாக்ஷியாக அவனைக் கேட்டுக் கொள்ளுங்கோள்,’ என்பது நஞ்சீயர் திருவுள்ளம்.)அன்றிக்கே, ‘நீர் திருவாறன்விளையை பிராப்பியம் என்று இருக்கிறீர்; ஈஸ்வரன் சுவதந்திரன் அல்லனோ? அவன் பரமபதத்தைத் தரிலோ?’ என்ன, ‘அவன் முற்றறிவினன் அல்லனோ? அறியானோ?’ என்கிறார் என்று பிள்ளான் பணிப்பர்;
10-பிள்ளை திருநறையூர் அரையர்
பிள்ளை திருநறையூர் அரையர் 1‘இப்பாசுரங்களில் முன் அடிகள் இரண்டும், புலியின் வாயிலே அகப்பட்ட குழந்தை தாய் முகத்திலே விழித்துக்கொண்டு புலியின் வாயிலே கிடந்து நோவுபடுமாறு போலே இருக்கிறது,’ என்று குணாநுசந்தான பரமாக பணிப்பர்
பவாமி த்ருஷ்ட்வாச புந: யுவேவ-அறுபதினாயிரம் ஆண்டு வயது நிறைந்து கிழவனான சக்கரவர்த்தி, பெருமாளைக் கண்ட பின்பு, பெருமாளுக்கும் தனக்கும் வாசி தெரியாதபடியானான்.’ 2‘காமனைப் பயந்த காளை’ என்னுமாறு போலே 3தன்னை அனுபவிப்பாரையும் தன்னைப் போலே ஆக்கி உஜ்ஜீவிப்பிக்கும் விஷயம் போலேகாணும்.- (மஹோத்ஸவமிவ ஆஸாத்ய புத்ராநந விலோகநம் யுவேவ வஸூதேவ: அபூத் விஹாய அப்யாகதாம் ஜராம்’ என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 5. 20 : 52.)4‘ஸ்ரீவசுதேவர்’ பெரிய திருவிழாவை அடைந்தாற்போலே பிள்ளைகளின் திருமுகங்களைப் பார்ப்பதை அடைந்து, தமக்கு உண்டாய் இருந்த முதுமை நீங்கி யௌவனம் உடையவரானார்’ என்னும்படி ஆனாரே அன்றோ ஸ்ரீவசுதேவரும்?
3அன்றிக்கே, ‘மேலே, ‘கண்ணபிரானுக்கு என் பெண்மை தோற்றேன்’ என்று கொண்டு இத்தலையில் தோல்விக்கு எதிர்த்தலையான அத்தலையில் வெற்றிச் செயல்களை அநுசந்திக்கிறார்’ என்று பிள்ளை திருநறையூர் அறையர் பணிக்கும்படி.
11-வங்கிப்புரத்து நம்பி –
கோலம் மா மலர்க்கண் பனிமல்க இருக்கும் – காட்சிக்கு இனியானவாய்ப் பரந்து. சிரமஹரமான கண்கள் நீர் மல்க இராநின்றாள். கண்ணும் கண்ணநீருமான அழகு, காட்டில் எறித்த நிலா ஆவதே! 4இக்கண்ண நீருக்குச் சாதனத்தைச் செய்து பல வேளையிலே இழப்பதே! (தண்புனல் சூழ் திருவரங்கத்தாய்’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி, ‘இக்கண்ணநீருக்கு’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.) என்னுடையக் கோமளக்கொழுந்து – கலக்கப் பொறாத மிருதுத் தன்மையையுடைவள் பிரியப் பொறுக்குமோ? 5‘தசை முறுகினால் வைத்தியர்கள் முகம் பாராதவாறு போலே, மகள் அவஸ்தையைக் கண்டு தளர்ந்து பெரிய பெருமாள் முகம் பாராமலே வார்த்தை சொல்லுகிறாள்’ என்று அருளிச்செய்வர் சீயர். கொழுந்து – 1(பதி ஸம்யோக ஸூலபம் வய;’, ஸ்ரீராமா. அயோந். 118 : 34.)கொள் கொம்பு தேட்டமான அளவிலே தரையிலே படர விடுவதே. ‘நாயகனுடைய கலவிக்குத் தகுந்த என்னுடைய வயதை’ என்கிறபடியே, 2இப்பாசுரத்தில் ஒரு தலைக்கட்டு இன்றிக்கே இருக்குமிதற்குக் கருத்து, ‘பரிஹரிக்கும் எல்லை கழிந்தாள், நாம் இவர்க்குச் சொல்லுவது என்?’ என்று அவனை விளித்துக் கூறியது போன்று
கூறாமல், தன்னிலே நோவு படுகிறாள் என்று வங்கிப்புரத்து நம்பி பணிக்கும்.
12-நம்பிள்ளை
பெரிய பெருமாள் திருவடிகளிலே, திருவாய்மொழி ஆயிரமும் சொல்லிற்று; 2‘திருமோகூர்க்கு ஈத்து பத்து’. ‘திருவேங்கடத்துக்கு இவை பத்து’ என்று பிரித்துக்கொடுத்த இத்தனை; பெருமாள் திருப்பலகையில் அழுதுபடியிலே மற்றைத் திருப்பதிகள் நாயன்மார்கட்கும் அளந்து கொடுக்குமாறு போலே’ என்று பிள்ளை அருளிச்செய்வர்
தேவ குமார ரூபம் – 5அது-எனக்கு ஹிதத்தைச் செய்து போந்தவளாயிருக்கிற தன்மை- கிடக்க; இவரையே நீ தான் ‘காடு ஏறப்போக’ என்கிறது? ‘இவர்க்கும் அவ்வளவேயோ?’ என்று சிறியத்தான் பிள்ளையைக் கேட்க, ‘கண்ணெச்சில் ஆம்’ என்று தரம் போராதாரை ஒப்பாகச் சொல்லி இருடிகரிபூசுகிறான் என்றார்
13-அம்மாள்
அப்பன் ஊளி எழ-ஒலி உண்டாக. என்றது, ‘ஒவ்வொரு காலத்தில் கலகங்கள் உண்டானால் நம்முடைய 2அடைய வளைந்தானுக்குள்ளே புகும் போது திருவாசலில் பிறக்கும் ஆரவாரம் போலே, திருவயிற்றிற்புகுகிற போது பிராணிகளுக்கு உண்டான பரபரப்பான ஒலிகள் கிளர’ என்றபடி. அன்றிக்கே, ‘‘இவற்றை உரிஞ்சுகிற போதை ஒலிகாண்!’ என்று அம்மாள் பணிக்கும்படி’ என்று அருளிச்செய்வர்’ அதனால் நினைக்கிறது, 3ஈஸ்வரத்வப் பிடரால் அன்றியே பத்தும் பத்தாக அடியார்களைக் காப்பாற்றுதலேயாய் இருக்கிறபடி.
14-தமிழ்ப்புலவர்
எனது ஆவியுள்ளே – என் மனதிற்குள்ளே. மாட்டிய – ‘சுடர்வெட்டிய’ என்னுதல்: ‘ஏற்றிய’ என்னுதல், வல் விளக்கின் சுடராய்-விரக தாபத்தாலே அவியாத விளாக்காயிற்று. 2‘‘ஏற்றிய பெருவிளக்கு’ என்று ஒரு தமிழ்புலவன் இட்டு வைத்தான்’ என்று அருளிச்செய்வர். நிற்கும் வாலியதே – வலிதாய் நின்று நலியாநிற்கும். 3‘விளக்காகிறது தான் சிறிது நேரம் இருப்பதுமாய் ஓர் இடத்திலே இருப்பதுமாய் அன்றோ இருப்பது? இது அங்ஙன் அன்றிக்கே, எப்போதுமாய் எங்கும் உண்டாய் இராநின்றது: பாதகத்துவத்தில் உறைப்பை நினைத்துச் சொல்லுகிற வார்த்தை அன்றோ இது?
ஏழையர்க்கும் அசுரர்க்கும் அரக்கர்கட்கும் உய்விடம் எவ்விடம் என்று இலங்கி மகரம் தழைக்கும் தளிர்கொல் – ‘அசுரர்கட்கும் அரக்கர்கட்கும் பெண்களுக்கும் தப்பிப்போய்ப் பிழைக்கும் இடம் எவ்விடம்?’ என்று விளங்குகின்றனவாய்க் கொண்டு மகரம் தழைக்கின்ற தளிரே? 2அசுரரும் அரக்கரும் அழகு கண்டால் பொறுக்கமாட்டாமல் முடிவர்கள்; பெண்கள் அடையப் பெறாமல் முடிவர்கள். ‘பெண்களை நலியுமாறு போலே அசுரர்கட்கும் அரக்கர்கட்கும் சினேகத்தை விளைத்துப் பாதகம் ஆகாநின்றன’ என்று ஒரு தமிழன் கூறிவைத்தான் என்று கூறியதனைச் சீயர் கேட்டருளி, 3‘இப்பொருள் அழகிது: ஆனாலும். அபக்ஷதர்மம்;-(பிரகரணத்துக்குச் சேராதது’ என்றபடி.) அசுரர்களுக்கும் அரக்கர்களுக்கும் பாதகம் ஆகாநின்றது என்று இப்போது இது சொல்லுகை, தேட்டம் அன்றே? ஆன பின்பு அது வேண்டா,’ என்று அருளிச்செய்தாராம். (அசுரர்களுக்குப் பாதகம் எனபதனை இங்குச் சொல்ல வேண்டவே’ என்றபடி. ‘அசுரர்கட்கும் அரக்கர்கட்கும் பாதகமாமாறு போன்று, பெண்களுக்கும் பாதகமாம்’ என்பதே முதல் அடிக்குப் பொருளாம்.)
15-உடாலி
கைகேசியின் உறவினர்களுக்கு வேலைக்காரியும் எங்கேயோ பிறந்தவளும்’ என்கிறது அன்றோ? ‘இதற்குக் கருத்து என்?’ என்னில், ‘இந்த அயோத்தியிலே பிறந்தாளாகில் பெருமாளுக்கு விரோதம் செய்யாள் ஆகையாலே, எங்கேனும் ஓரிடத்தே பிறந்தநாள் ஒரு விழுந்தான் கிடக்கை’ என்றது. 2‘யத: குதஸ்சித்ஜாதா – யாதாம் ஓரிடத்தில் பிறந்தாள்’ என்று வியாக்கியானம் செய்தான் உடாலி. ‘இந்த நிலத்திற்பிறவாமை இவளுக்குக் கொடுமை விளைந்தது,’ என்கிறான் அன்றோ?
———————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply