ஸ்ரீ ஈட்டில் பூர்வாச்சார்யர்களின் விலக்ஷண நிர்வாஹங்கள் –ஆறாம் பத்து –

1-அனந்தாழ்வான்

பொன்னுலகு ஆளீரோ புவனிமுழுது ஆளீரோ–இவள் தான் உபயவிபூதியையும் கொடாநின்றாளாகில், அவன் வந்தால் தானும் அவனும் எங்கே இருப்பது?’ என்ன, ‘இக் குருவி காட்டின இடத்தே’ என்று அனந்தாழ்வான் அருளிச்செய்வர்.

2-ஆளவந்தார்

சிலவண்டுகளைக் குறித்து, அவர் இத்தலையில் சத்தையும் இல்லை என்று இருப்பர், அவளும் உளள் என்று சொல்லுங்கோள் என்று சொல்லுகிறாள்” என்று ஆளவந்தார் அருளிச்செய்வர். “இத்தலை இல்லையாகில் அத்தலை உண்டாகக் கூடாது; ‘பெண்பிறந்தார் காரியம் எல்லாம் செய்தோம்’ என்று கிருதக்கிருத்யராயிருக்குமவர்க்கு, ரக்ஷ்யவர்க்கத்திலே நானும்ஒருத்தி உண்டு என்று சொல்லுங்கோள்” என்று   எம்பெருமானார் அருளிச் செய்வர்.
அருளிச் செய்வர்.

என்னையும் உளள் என்மின்கள் – இன்னமும் நோவுபடுகிறார் உண்டு என்று சொல்லுங்கோள். இதற்கு, “‘இத்தலையைப் பிரிந்தாரில் இருப்பார் இல்லை’ என்று இருக்கையாலே வாராது ஒழிந்தார் அத்தனை; இத்தலையில் சத்தை உள்ளமையைஅறிவியுங்கோள்” என்று ஆளவந்தார் அருளிச்செய்தாராகத் திருமாலையாண்டான் பணிப்பர். இதனை, எம்பெருமானார் கேட்டருளி, “அழகிது ஆகிலும், இன்றியமையாமை என்று தமிழரது ஒரு 1பிரவாதம்(பொதுவான வார்த்தை.) உண்டு; அதாகிறது, ஒருதலை உண்டானால் ஒருதலை இன்றிக்கே இராது; இரண்டு தலையும் உண்டாதல், இரண்டு தலையும் இன்றிக்கே ஒழிதல் இத்தனையாயிற்று. அதில், தாம் உளராகையால் இத்தலையும் உண்டு என்கை நிச்சிதம்; ஆனபின்பு, பிரதி கூலித்தாரைக் கிழங்குஎடுத்துப்பொகட்டு அநுகூலித்தார் தலையிலே முடியை வைத்துக் கிருதக்கிருத்யராய், ‘இனிச் செய்ய வேண்டிய குறை ஒன்றும்இல்லை” என்றிருக்கிறவர்க்கு, இன்னமும் ரக்ஷ்யவர்க்கம் ஒன்று உண்டு என்று சொல்லுங்கோள் என்கிறாள் என்று அருளிச்செய்தார்.

நையா நின்றனென் நானிருந் திங்ஙன்
மெய்வானோர் திருநாடு மேவினாய்
ஐயா! நீ என தாவி யென்றதும்
பொய்யோ! பொய்யுரையாத புண்ணியா!– என்ற கம்பராமாயண–கிட்கிந். அரசியற். 9

இத் திருத் தாயார்க்கு மகளைப் பிரிந்த துக்கமும், தனிவழியே போன  துக்கமுமாகிய இரண்டும் உண்டாகையாலே, அவற்றுள், பிரிவால் வந்த துக்கத்தை மேல் திருவாய்மொழியில் அருளிச்செய்து, தனி வழி  சென்றமையால் வந்த துக்கத்துக்குச் சூசக சம்வாதம் காட்டுகிறார்–ஆளவந்தார் கோஷ்டியில், “உண்ணுஞ்சோறு” என்ற திருவாய்மொழியில் வருகின்ற பிராட்டிக்கோ அஞ்சவேண்டுவது” என்று கேட்க, “இருவராகப் போனவர்கட்கு வயிறு எரியவேணுமோ? தனிவழியே போனவளுக்கன்றோ வயிறு எரியவேண்டுவது!” என்று இருந்த முதலிகள் சொல்ல, “அங்ஙன் அன்று காணுங்கோள்! (கள்வன்கொல்” , பெரிய  திருமொழி, 3. 7 : 1.)இருவராகப் போனவர்கள் ஆகையாலே, இருவர்க்கும் அஞ்சவேணும்; தனியே போனவளுக்கு அச்சம் உண்டோ?” என்று அருளிச்செய்தார். அதற்கு அடி, இருவரும் இருவர்க்கும் 2ஊமத்தங்காயாய், கடித்ததும் ஊர்ந்ததும் அறியார்கள்(அந்யோந்ய  வைலக்ஷண்யங்களாலே ஒருவர்க்கு ஒருவர் மயக்கத்தை  உண்டுபண்ணுமவராய்-அகலகில்லேனிறையும்”, “பித்தர்  பனிமலர்மேல் பாவைக்கு” ): 3இவள் அங்கே புக்கல்லது தரியாள் (திண்ணம்” என்றதனைத் திருவுள்ளம்பற்றி.)என்பதாம்.-அள்ளல் அம்பூங்கழனி அணி ஆலி புகுவர்கொலோ!” அன்றியே, இலங்கையின் வாசலிலே புகுவர்கொலோ! என்றே அன்றோ அங்கே -கொலோ” என்றது, ஐயம்.

3-உய்ந்தபிள்ளை

இன்னம் என் கையகத்து ஈங்கு ஒருநாள் வருதியேல் என் சினம் தீர்வன் நானே”( பெருமாள் திருமொழி, 6 : 8.) என்று, இதனை உய்ந்தபிள்ளை பாடா நிற்கச் செய்தே, காலாலே உதைப்பது கையாலே தள்ளுவதாய் அபிநயித்துக் காட்டினார். இதனை எம்பார் கேட்டருளி, ‘அங்ஙன் அன்று, அது, பின்னைப் பெற்றானாகில் அவன் நெடுநாள் பிரார்த்தித்துக்கிடந்தது அன்றோ; ஆன பின்னர், அதுவன்று பொருள்’ என்று முகத்தைத் திரிய வைத்துக் காட்டினார். 2“நீ அகல நின்று செய்தவை எல்லாம் உன் சந்நிதியிலே உன்னைச் செய்வேன் என்கிறாள்’ என்று அருளிச்செய்தார். 3எம்பார், புறம்பான விஷயங்களிலே ருசி இல்லாமையாலே பதார்த்த ஞானம் இன்றிக்கே இருப்பர். இப்படி இருக்கையாலே ‘பெண்களுக்கு அசாதாரணமான சிந்நங்கள் எங்ஙனே இருக்கும்படி?’ என்று, சிங்கப்பிரானைக் கேட்டருளினார் என்பது பிரசித்தம். 4இப்படி இருக்கிறவர் தாம் “மின்னிடை மடவார்” என்ற இத்திருவாய்மொழி அருளிச் செய்யப்புக்கால், ‘இந்தச் சந்நியாசி பிரட்டுப் பாடத் தொடங்கினார்’ என்பாராம் பிள்ளையுறங்கா வில்லிதாசர். 5பக்வத் விஷயத்தில் இவருடைய உட்புகுவு இருக்கும்படி. ஒரு க்ஷுத்ர விஷயத்திலே நான்கு நாள்கள் வாசனை பண்ணினவர்கள் போர விதக்தராய் இராநின்றார்கள்; அவ்வளவு அல்ல அன்றோ சமஸ்த கல்யாண குணாத்மகனோடே நெடுநாள் வாசனை பண்ணினார்க்கு இருக்கும்படி. 1எம்பார் ‘ஈசுவரன் முன்னே வந்து நின்றாலும் ‘வா’ என்பாரையும் கிடையாத சம்சாரத்திலே, அவன் சிறிது தாழ்த்தான் என்னா ‘போ’ என்பாரைப் பெறுவதே! என்பர்.

4-எம்பார்

5-எம்பெருமானார்

சிலவண்டுகளைக் குறித்து, அவர் இத்தலையில் சத்தையும் இல்லை என்று இருப்பர், அவளும் உளள் என்று சொல்லுங்கோள் என்று சொல்லுகிறாள்” என்று ஆளவந்தார் அருளிச்செய்வர். “இத்தலை இல்லையாகில் அத்தலை உண்டாகக் கூடாது; ‘பெண்பிறந்தார் காரியம் எல்லாம் செய்தோம்’ என்று கிருதக்கிருத்யராயிருக்குமவர்க்கு, ரக்ஷ்யவர்க்கத்திலே நானும்ஒருத்தி உண்டு என்று சொல்லுங்கோள்” என்று எம்பெருமானார் அருளிச் செய்வர்.

6-சிறியாத்தான்

தர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே ஸமவேதா யயுத்ஸவ:   மாமகா: பாண்டவாஸ்சைவ கிம் அகுர்வத ஸஞ்ஜய”–  என்பது, ஸ்ரீ கீதை. 1 : 1.
என்னுடைய புத்திரர்களான துரியோதனன் முதலியோர்களும், பாண்டவர்களும்” என்கிறவிடத்துச் சிறியாத்தான் சொல்லும்படி: “என்னுடையவர்கள் என்றும், பாண்டவர்கள் என்றும் பிரித்தான், அதுவன்றோ விநாசபர்யந்தம் ஆகிவிட்டது” என்று. 2இதுதான் உண்மை நிலையை மாத்திரம் பற்றிய வார்த்தை அன்று, பிரணய கோஷ்டியிலும் கலவியிலே வந்தால் ‘உன்னது, என்னது’ என்கையன்றோ உறவு அறுகையாவது. என்னுடைய பந்தும் கழலும்3“தான் என்றே பரமாத்மாவைத் தியாநிக்கக் கடவன்” என்கிறபடியே, ஒன்றை ஒன்று உபாசியாநிற்கச்செய்தே, தன்னை உபாசித்தது என்று சொல்லலாம்படி அன்றோ இரண்டு வஸ்துக்களுக்கும் தொடர்பு இருக்கிறபடி. 4சொரூபம் தெளிவானால் ‘நான்’ என்னவுமாய், ‘அடியேன்’ என்னவுமாய்க் காணும் இருப்பது.

  “ஆத்மேத்யேவது க்ருஹ்ணீயாத் ஸர்வஸ்ய தந் நிஷ்பத்தே:”என்பது, வாக்யகாரர் வசனம். என்றது, இவ்வுயிரானது சர்வேசுவரனை
வழிபடாநிற்கச்செய்தே தன்னையே வழிபட்டது என்னலாம்படியன்றோ சரீர  சரீரி பாவத்தால் வந்த சம்பந்தம் இருக்கிறபடி. இப்படிச் சரீர பூதனாய்
அவனுடைய அபிமானத்திலே அடங்கியவனாயிருக்கை உறவு அறாமையாம்  என்றபடி.

7-திருமாலையாண்டான்

8-நஞ்சீயர்

சர்வேசுவரன் இவரிடத்தில் மிகுந்த பிரீதியுள்ளவனாயிருக்கச் செய்தேயும்,  இவர் இடைவிடாது நோவுபடுகிறபடியை அநுசந்தித்து நஞ்சீயர்
ஈடுபட்டருளுகிற விதத்தை அருளிச்செய்கிறார்–சீயர், இத்திருவாய்மொழி அருளிச்செய்யப் புக்கவாறே, உருத்தோறும் அருளிச்செய்யும் வார்த்தை: ‘பாண்டவர்கள் காரியத்துக்காகத் தன்னை ஓக்கி அவர்கள் கழுத்தைக் கட்டிக்கொண்டு கூடத் திரியச்செய்தேயும் அவர்கள் பட்ட வியசனமெல்லாம் படுகிறார் காணும் இவரும். 4அவர்கள்தாம் ஒரு தர்மஆபாசம் உண்டு என்று இருக்கையாலே வியசனப்பட்டார்கள்; இவர்க்கு அதுவுமின்றிக்கே இருக்க என்செய்யப்படுகிறார்’ என்று அருளிச்செய்வர்

பாதம் கைதொழுது – கண்டு, திருவடிகளிலே தண்டன் இட்டு2“‘கைகள் கூப்பி’ என்றதே; தொழுதார்க்கு நிற்க ஒண்ணாதே யன்றோ. உண்ணாநிற்க, மிடற்றைப் பிடித்தாற் போலே இருப்பது ஒன்று அன்றோ தொழுதுவைத்து விழாதே ஒழியுமது” என்று பூர்வர்கள் நிர்வஹிப்பர்கள். 3“மதித்தான் ஒரு ஸ்ரீவைஷ்ணவன் ஸ்ரீபாதத்தே தலைபடத் தண்டன் இட்ட அன்று, எனக்கு உண்டு பசி கெட்டாற்போலே இருக்கும்” என்று அருளிச்செய்வர் சீயர். அன்றிக்கே, கிலாம்தோற்றும்படி அவர் திருவடிகளிலே கைசென்று தாக்கும்படி விழுந்து கிடவுங்கோள் என்னுதல்; என்றது, தீர்க்கப் பிரணாமம் பண்ணுங்கோள் என்றபடி.

இப்படித் தாழநின்றவன் சர்வேசுவரன் என்கிறார் என்று பிள்ளான் பணிக்கும்’ என்று அருளிச்செய்வர். அதாகிறது, “யாவையும் யாவரும் பிழையாமல் பிணக்கி” என்று மேலே சொல்லிய சர்வேசுவரத்வத்தை அருளிச்செய்கிறார் என்றபடி. ‘இதிலே 2ஒரு வேறுபாடு தோன்ற பட்டர் அருளிச்செய்வர்’ என்று சீயர் அருளிச் செய்வர். 3அதாவது, “சேரோம்” என்ற எண்ணத்தைக் குலைத்துத் தம்மைச் சேரவிட்டுக்கொண்ட ஆச்சரியத்தைக் கண்டு ஆச்சரியப்படுகிறார் என்பதாம்

நல்குரவும்போகு நம்பி”, “கழகம்ஏறேல் நம்பி” என்னலாம்படி –இப்படித் தாழநின்றவன் சர்வேசுவரன் என்கிறார் என்று பிள்ளான் பணிக்கும்’ என்று அருளிச்செய்வர். அதாகிறது, “யாவையும் யாவரும் பிழையாமல் பிணக்கி” என்று மேலே சொல்லிய சர்வேசுவரத்வத்தை அருளிச்செய்கிறார் என்றபடி. ‘இதிலே 2ஒரு வேறுபாடு தோன்ற பட்டர் அருளிச்செய்வர்’ என்று சீயர் அருளிச் செய்வர். 3அதாவது, “சேரோம்” என்ற எண்ணத்தைக் குலைத்துத் தம்மைச் சேரவிட்டுக்கொண்ட ஆச்சரியத்தைக் கண்டு ஆச்சரியப்படுகிறார் என்பதாம்-(நல்குரவும் செல்வும்” என்றது முதலாக  முரண்பட்ட தன்மையை அருளிச்செய்கையாலே ஒரு விசேடம் தோற்ற  என்றபடி.)

திருவிண்ணகரிலே நின்ற உபகாரகன்- தன் ஒப்பார் இல் அப்பன் – சிலர்க்கு ஒன்றைக் கொடுக்குமிடத்தில், தன்னோடு ஒக்கக் கொடுக்கவல்லார் இல்லாதபடியான மஹோபகாரகன். இதற்கு, 1‘மின்னிடை மடவார்’ என்ற திருவாய்மொழியிலே, அவன் மேல் வந்து விழ, ‘நீ எனக்கு வேண்டா’ என்று நான் தள்ளத் தள்ள, ‘நீ உனக்கு ஹிதம் அறிந்தாயோ? நான் உனக்கு வேணுங்காண் என்று தன்னை எனக்குத் தந்தவன்’ என்று சீயர் அருளிச்செய்வர். தன தாள் நிழல் தந்தனன் – 2‘உன்னை ஒழிந்த வெய்யிலே எனக்கு அமையும்’ என்று நான் அகலப் புக, “அழித்தாய் உன் திருவடியால்” என்று தன்னுடைய திருவடிகளாலே என் செருக்கைப் போக்கி, திருவடிநிழலை எனக்குத் தந்தான்–அடிபட்டவாறே, ‘எனக்கு’ என்று வைத்தவற்றையும் பொகடுவர்களே. (ரசோக்தியாக  அருளிச்செய்கிறார் ‘அடிபட்டவாறே’ என்று தொடங்கி. திருவடிகள்  என்றும், தண்டனை என்றும் பொருள்.)

என்னை இன்னவாறு இவள் காண்மின் என்று – 5பேச்சுக்கு நிலமன்று போலே காணும். என்னை – அச்சேர்த்தியிலே அடிமைசெய்ய ஆசைப்பட்டிருக்கிற என்னை. ‘இப்படி சீர்கேட்டினை அடைந்தாள் இவள் என்று, 6இவள் பசலை நிறத்தைத் தம்முடம்பிலே காட்டவும் வற்றாகாதே இவை’ என்று நஞ்சீயர் அருளிச்செய்வர். (அன்னம் வெண்மையாக இருக்கும் ஆகையாலே, அதனைக்கொண்டு இப்படி வெளுத்த பிரகாரத்தையுடையவள் என்பதனைக்
காட்ட வற்றாயிருத்தலைக் குறித்தபடி.)7அன்றிக்கே, உம்முடைய தேவாரமோ! (அர்ச்சக பரதந்திரமான  வீட்டில் உள்ள அர்ச்சாவதாரம்போலே உமக்குப் பரதந்திரமோ? என்றபடி.-  தேவாரம் – வீட்டில் அர்ச்சிக்கும் இறைவனுடைய வடிவு.)இவள் அந்தப்புர பரிகரம் அன்றோ என்னுங்கோள் என்னுதல்.

நஞ்சீயர் ஸ்ரீ பாதத்திலே அடைந்த ஒருவன், ‘;எம்பெருமானே உபாயமாகில் சரணாகதிகொண்டு இங்குச் செய்கிறது ஒன்றும் கண்டிலேன்’ என்ன, செவியைப் புதைத்து ‘நாதமுனிகள் தொடங்கி இவ்வளவும் வர நம் ஆசாரியர்கள் பரம ரஹஸ்யமாக உபதேசித்து ஓரான் வழியாய்க் கொண்டு போந்த இதனை, இதன் சீர்மை அறியாத உனக்கு மஹாபாபியேன் இதனை வெளியிடுவதே!’ என்று திருமுடியிலே அடித்துக்கொண்டு திருப்பள்ளியறையிலே புக்கருளினார். 1திவ்வியமங்கள விக்கிரஹமும் விக்கிரஹ குணங்களும் திவ்வியாத்ம சொரூப குணங்களும் நித்திய முக்தர்கட்குப் பிராப்யமானாற் போலே, முமுக்ஷுவாய்ப் பிரபந்நனான இவ்வதிகாரிக்குச் சரணாகதியே பிராப்பியமாய் இருக்கும் அன்றோ.-உபாயம் சித்தமானாலும் ஸ்வீகாரம் வேண்டுகையாலே  முதல்தசையிலே அதிகாரி விசேஷணமாய், உத்தர உத்தர தசையிலே  பிராப்பியமாயிருக்கும் என்றபடி. திருப்பள்ளி அறையிலே புக்கதற்குக்  கருத்து, துக்கத்தையுடைய ஒருவன் ஆப்தபந்து உள்ள இடத்திலே  போமாறுபோலே போனார் என்பது. அன்றிக்கே, இவனுக்கு நல்ல  புத்தியைக் கொடுப்பதற்குப் பிரார்த்திக்கப் போனார் என்னுதலுமாம்.  திருப்பள்ளியறை – பெருமாளது.

9-நம்பிள்ளை

பெற்றி நிர்வாகத்தில், “கூவி’ என்பதற்குக் கூவும்படி செய்து  என்றும், “எழும்” என்பதற்குச் சந்தோஷிக்கும் என்றும் பொருள்.ஊரும்நாடும் உலகமும் தன்னைப்போல்’ என்கிறபடியே, இவை தாம் திருநாமத்தைச் சொல்லினவானால் ஆகாதோ’ என்று, பெற்றி, நம்பிள்ளையைக் கேட்க, “அதற்குக் குற்றம் உண்டு, ‘பந்து தூதை புட்டில்’ என்கிற விடத்தில் தட்டுப் பிறக்கும்” என்ன, அங்ஙனேயோ என்று இசைந்து போனார். நன்று;

அருளாளப்பெருமாள் எம்பெருமானாருடைய அந்திம தசையிலே, ‘திருவுள்ளத்தில் ஓடுகிறது என்?’ என்ன, ‘ஒரு பறவை பெருமாளுடைய திருவுள்ளத்தைப் 1புண்படுத்தியபடி என் என்று கிடந்தேன்’ என்றார் என்பது. இதற்குக் கருத்தாக நம்பிள்ளை அருளிச்செய்யும் வார்த்தை: 2‘நாம் பண்ணின சரணாகதி, ஆகையாலே பலத்தோடு அவ்யபிசாரியாக மாட்டாது; இனி, சரண்யன் நீர்மையின் ஏற்றத்தாலே நமக்கு ஒருகுறை இல்லை என்கிறது’ என்பது.(வேடுவனது  சரணாகத ஆநுகூல்யாதிகளால் அன்றிக்கே சரண்யமான புறாவினது  குணாதிக்யத்தாலே பலம் சித்தித்தது போன்று, நம்முடைய ஆநுகூல்ய
சங்கல்பாதிகளாலன்றிக்கே சரண்யனான சர்வேசுவரனுடைய குணாதிக்யத்தாலே பலிக்கும் என்பது. அவ்யபிசாரியாகமாட்டாது  பலத்தோடே கூட்டு விக்க மாட்டாது.)

10-பட்டர்

குருகினங்காள்! கைகள் கூப்பிச் சொல்லீர் என்று கூட்டுக. பண்டை முதலிகள், ‘பத்தாம் பாசுரத்திலே, பிரணயரோஷம் தோற்றச் சொல்லுகிறாள்’ என்று நிர்வஹிப்பர்கள். 4‘பாசுரந்தோறும், கிலாம்தோற்றச் சொல்லுகிறாள்’ என்று பட்டர் அருளிச்செய்யும்படி. வந்து மேயும் குருகினங்காள்! கைகள் கூப்பிச் சொல்லீர்-5என்றும் பிறர்க்கு உதவிசெய்யவே தேடித்திரியுமித்தினையோ, உங்கள் காரியமும் செய்யவேண்டாவோ!-பட்டர் நிர்வாகத்துக்குக் காரணம், “உணர்த்தல் ஊடல் உணர்ந்து”  (பா. 5.) என்ற பிரணய ரோஷத்தைக் கூறுகிற பாசுரம். கிலாம் –  பிரணயரோஷம்.

புணர்த்த பூந்தண் துழாய் முடி நம்பெருமானைக் கண்டு – தொடுக்கப்பட்டு அழகியதாய்ச் சிரமத்தைப் போக்கக்கூடியதான திருத்துழாயினைத் திருமுடியிலேயுடையவனாய், அதனாலே என்னைத் தனக்கே உரிமையாக்கினவனைக் கண்டு. என்றது, 1நீங்கள் சென்று அறிவிக்குமித்தனையே வேண்டுவது; இங்குத்தைக்கு வருகைக்கு ஒப்பித்தபடியே இருக்கிறவன் என்பதனைத் தெரிவித்தபடி. அன்றிக்கே, இத்தலையைத் தோற்பித்த வேண்டப்பாடு தோற்றும்படி வளையம் வைத்து முதன்மை கொண்டாடி இருக்கின்றவனைக் கண்டு என்று பணிப்பர் பட்டர். என்றது, தம் ஒப்பனையையும் முதன்மையையும் நம்மோடே காட்டியிருக்கிறவனைக் கண்டு என்றபடி-புணர்த்த கையினராய் – 2(பட்டர் நிர்வாஹத்திலே பாவம் அருளிச்செய்கிறார்)அங்கே சென்றால் தொழப் பார்த்திராமல், கைஒத்துச்  (அஞ்சலி செய்துகொண்டு.) செல்லுங்கோள் 3-வழியே பிடித்துத் தொழுது கொடு போங்கோள்

‘உயர “போற்றி” என்கிறாள்’ என்று, தாம் மேலே அருளிச் செய்ததற்குச்   சம்வாதம் காட்டுகிறார் -போற்றி” என்றது, எடுத்தல் ஒசையாகையாலே, “வானார் வண்கமுகு”,  “சேண்சினை ஓங்குமரச் செழுங்கானல்” என்றபடியே, அங்குள்ள   புன்னைகளும் உயர்ந்து ஓங்கி இருக்கும் என்கிறபடி‘-பிள்ளையமுதனார், திருவிருத்தவரைமார்வனை, ‘புன்னை மேல் என்னும் இப் பதங்கட்குப் பட்டர் அருளிச்செய்தது என்?’ என்ன, ‘தன் துன்பஒலி அவற்றின் செவியிலே படும்படி உயரச் சொல்லுகிறாள் என்று அருளிச் செய்தார்’ என்ன, ‘நெய்தல் நிலத்திலே 3புன்னை படர்ந்தன்றோ கிடப்பது, இங்ஙனே சொல்லக் கூடுமோ?’ என்ன, அவன் பட்டர்பாடே வந்து, ‘இங்ஙனே பணித்தார்’ என்ன, 1‘இவ்வர்த்தத்துக்கு நிர்ணாயகம், இசையாயிற்று; அது, ‘போற்றி’ என்று, உயரச் சொல்லி யிருக்குமோ? தாழச் சொல்லி இருக்குமோ’ என்று அருளிச்செய்தார்.

ஆற்றல் ஆழி அம் கை அமரர் பெருமானைக் கண்டு-அடியார்கள் விஷயத்தில் எல்லாம்செய்தாலும் ‘ஒன்றும் செய்யப்பெற்றிலோம்’ என்று நோவுபட்டு இருப்பான் ஒருவனுமாய், அவர்கள் இரக்ஷணத்துக்குக் கருவியான திருவாழியைக் கையிலே யுடையனாய், நான் காண ஆசைப்பட்ட கையும் திருவாழியுமான அழகை விருப்பமில்லாதார்க்குக் காட்சி கொடுத்துக் கொண்டிருக்குமவனை. அன்றிக்கே, ‘ஆற்றல்’ என்பதனைத் திருவாழிக்கு அடைமொழியாகக் கொண்டு, அடியார்களைக் காப்பாற்றுவதில் அவனைக்காட்டிலும் கிருபையையுடைய திருவாழியைக் கையிலேயுடையவனை என்னுதல்  ஆற்றல்’ என்பதனை, அவன் தனக்கே அடையாகக்கொண்டு, பிரிவுக்குச் சிளையாதே ஆறியிருப்பானாய்க் கையும் திருவாழியுமான சர்வேசுவரனை என்று பட்டர் அருளிச்செய்வர்(பூர்வர்கள் நிர்வாஹத்திலே ஆற்றல்” என்பதற்கு, அருள்  என்பது பொருள்.-பட்டர் நிர்வாஹத்திலே பொறை’ என்பது பொருள்.

 ஒரு வண்ணம் சென்று புக்கு – இதற்கு இரண்டுபடியாக அருளிச்செய்வர்கள். இத்தலையில் தனிமை நினையாதே போய் நிற்கையாலே, போர முதலிகளாய் இருப்பர்; மேன்மேலெனப் பிரம்புகள் விழும்; அதனைப் பொறுத்துப் போய்ப் புகுங்கோள் என்று அருளிச் செய்வர் பட்டர். அன்றிக்கே, செல்லும் வழி, நெஞ்சினைக் கொள்ளை கொள்ளும்படியான இனிமை நிறைந்திருக்கும்; அதிலே கால்தாழாதே வருந்தி ஒருபடி சென்று புகுங்கோள் என்பது முன்புள்ள முதலிகள் நிர்வாஹம்.

நிறமித்தனையும் கண்டீர் மேகத்துக்கு ஒப்பு, அகவாயில் திண்மை இவர்க்குத் தன்னேற்றம். கறுத்து அகவாய் திண்ணியதாயிருப்பதொரு மேகம் பெறிலாயிற்று இவர்க்கு நேரே ஒப்பாவது என்று அருளிச் செய்வர் பட்டர். திருமேனி அடிகளையே – 1வேறு ஒன்று சொல்ல வேண்டாதபடி வடிவு கண்டபோதே ‘இவனே இவற்றிற்கெல்லாம் கடவன்’ என்று தோற்றும்படி இருக்கை. அன்றிக்கே, அவ் வடிவினைப் படைத்துத் தமக்கு என்றிருக்கிற ஸ்வாமிகளை என்று பட்டர் அருளிச்செய்வர்.

கண்ணனை நெடுமாலை – எளிமை ஒரு காலவிசேஷத்தில் உள்ளது, முதன்மையே கண்டீர் பெருத்திருப்பது 1இனி, எளியனானதுவும் வேண்டிச் செய்தான் அல்லன், இத்தலையை நலிகைக்காகச் செய்த செயல் கண்டீர் என்று அருளிச்செய்வர் பட்டர்.

இத்திருவாய்மொழி தன்னை, பூர்வாசாரியர்கள், ‘பகவத் விஷயத்தில் பிரணயரோஷம் தோற்ற வார்த்தை சொல்லுகை சேஷத்வ லக்ஷணமன்று; “வளவேழ் உலகு” என்ற திருவாய்மொழியைப் போன்று தம் தாழ்ச்சியை அருளிச்செய்கிறார்’ என்று நிர்வஹிப்பர்கள். இதனைப் பட்டர் கேட்டு ‘என் சொன்னாரானார்கள்! இவர்க்குப் பகவத்விஷயத்தில் உண்டான ருசிக்குப் பிரகாசம் இத்திருவாய் மொழியாயிருக்கும்; இதற்கு வேறே ஒருவழி இடுவதே! ஆனபின்பு இதுவே பொருளாமித்தனை’ என்று அருளிச்செய்தார். 1“சத்தியத்தினின்றும் பிறழ்ந்த உன்னையோ உறவினர்களுடன் கொன்றுவிடுவேன்” என்று மஹாராஜரோடே பெருமாளுக்குக் கிலாய்க்கைக்கும் உறவு உண்டாயிற்று அன்றோ

சேஷத்வ லக்ஷணம் அன்று’ என்றதற்குக் கருத்து, “உன்தன் திருவுள்ளம்  இடர் கெடுந்தொறும் நாங்கள் வியக்க இன்புறுதும்” என்று இருக்கிற இவர்,
ஸ்ரீ வைஷ்ணவர்களோடே கலத்தலைத் தமக்கு அஸஹ்பமாகச் சொல்லுதல்  சேஷத்வத்திற்கு விரோதம் என்பது. ‘இதுவே பொருளாமித்தனை’ என்றது,
இத்திருவாய்மொழியிற் சொல்லுகிற பிராவண்ய காரியமான  பிரணயரோஷமே சுவாபதேசத்திலும் பொருளாம் என்றபடி.

ஏக ஏவ ரணே வாலீ ஸரேண நிஹதோ மயா
   த்வாம் து ஸத்யாத் அதிக்ராந்தம் ஹநிஷ்யாமி ஸபாந்தவம்”– என்பது, ஸ்ரீராமா. கிஷ். 30 : 82.

இப்படித் தாழநின்றவன் சர்வேசுவரன் என்கிறார் என்று பிள்ளான் பணிக்கும்’ என்று அருளிச்செய்வர். அதாகிறது, “யாவையும் யாவரும் பிழையாமல் பிணக்கி” என்று மேலே சொல்லிய சர்வேசுவரத்வத்தை அருளிச்செய்கிறார் என்றபடி. ‘இதிலே 2ஒரு வேறுபாடு தோன்ற பட்டர் அருளிச்செய்வர்’ என்று சீயர் அருளிச் செய்வர். 3அதாவது, “சேரோம்” என்ற எண்ணத்தைக் குலைத்துத் தம்மைச் சேரவிட்டுக்கொண்ட ஆச்சரியத்தைக் கண்டு ஆச்சரியப்படுகிறார் என்பதாம்.

வலம் கை ஆழி இடம் கைச் சங்கம் இவையுடை மால் வண்ணனை மலக்கு நாவுடையேற்கு – 2இவ்விடத்தைப் பட்டர்அருளிச்செய்யா நிற்கச்செய்தே கஞ்சனூரில் இருந்தவரான வண்டு வரைப்பெருமாள் என்பவர், மால்வண்ணனை ‘மலக்கு நாவுடையேன்’ என்ன அமையாதோ? ‘வலக்கை ஆழி இடக்கைச் சங்கம் இவையுடை’ என்று விசேடித்ததற்குக் கருத்து என்? என்ன, 1“சோளேந்திரசிங்கனை உளுக்காக்கப் பண்ணுகிறேன் என்கிறார் காணும்” என்று அருளிச்செய்தார்.(சோளேந்திர சிங்கன்’ என்பது, பெருமாளுடைய யானை. உளுக்காக்க  – இருக்கும்படி. என்றது சர்வேசுவரனாகிற மத்த யானையானது பணிந்து  கொடுக்கும்படி செய்கிறேன் என்கிறார் என்றபடி.) 2அறப் பெரியவனுக்கு லக்ஷணம் அன்றோ சங்க சக்கரங்கள்

பிள்ளை திருநறையூர் அரையரும், பட்டருமாக உள்ளே பிரதக்ஷணம் செய்யாநிற்க, இட்டஅடி மாறி இட மாட்டாதே கண்களாலே பருகுவாரைப் போலே பார்த்து வாழ்ந்து கொண்டு போகிறபடியைப் பின்னே நின்று கண்டு அநுபவித்தேன்’ என்று நஞ்சீயர் அருளிச்செய்வர். ஆச்சானும் ஆண்டானுமாகக் கிழக்கே நடக்கிறபோது, திருப்பேர் நகருக்குக் கிழக்குப் போகவும் மாட்டாதே, ஏறித் திருவடி தொழவும் மாட்டாதே, திருப்பேர் நகரான் கோயிலைப்பார்த்துக் கொண்டு இருந்தார்களாம்.

ஆவி உள்குளிர – இவ்விடத்தைப் பட்டர் அருளிச்செய்யாநிற்கச்செய்தே மேல்எழ அருளிச்செய்தாராய், அங்கே இருந்தவரான 2சீராமப்பிள்ளை, ‘சீயா! எம்பார் அருளிச்செய்யும்படி கேட்டறிகை இல்லையோ?’ என்று அருளிச்செய்தார். கமர் பிளந்த பரப்பு அடங்கலும் மறுநனையும்படியா யிருக்கை. எங்ஙனே உகக்கும்கொல் – 3இவள் பருவம் நிரம்பாதிருக்கச் செய்தே புறம் புள்ளவற்றை விட்டு அவனை நினைத்து உருக்குலைகிறபோது அவ்வழகு கண்டு அநுபவிக்கப் பெற்றேன்; அவனைக் கண்டு அநுபவிக்கிறபோதை அழகு நான் கண்டு வாழப்பெற்றிலேன் என்கிறாள்

தன்மன்னு நீள் கழல்மேல் தண்துழாய் நமக்கு அன்றி நல்கான்” என்கிறபடியே, அசாதாரணமானது அன்றே வடிவு; அடியார்களோடு ஏகரசன் ஆகையன்றோ என்று பார்த்து ஐகரஸ்யம் பற்றாசாகத் தூதுவிடுகிறாள் என்று பட்டர் அருளிச்செய்வர். “பல பாசுரங்களிலும் ‘இதுவோ தக்கவாறு’ என்கையாலே, உயிர்கள் மாட்டு அருளுடைமை பற்றாசாகத் தூது விடுகிறாள்” என்று பிள்ளான் பணிப்பர்.(ஐகரஸ்யம் – ஒரே  இன்பம். ஜீவாத்மா அநுபவிக்கிற இன்பத்தையே பரமாத்மாவும் தனக்கு  இன்பமாகக் கொள்ளுகிறான் என்றபடி. )

ஸமா த்வாதஸ தத்ராஹம் ராகவஸ்ய நிவேசநே
   புஞ்ஜாநா மாநுஷான் போகாந் ஸர்வகாம ஸம்ருத்திநீ”  என்பது, ஸ்ரீராமா. சுந். 33 : 18.

பிராட்டியைக் கண்டதனாலுண்டான உவகை, நடுவில் மதுவனம் இன்றாகில் இராஜபுத்திரர்கள் முதுகோடே போம்’ என்று பட்டர் அருளிச்செய்வர்.

தன் மன்னு நீள் கழல்மேல் தண்துழாய் நமக்கு அன்றி நல்கான் – 7எல்லாம் செய்தாலும் “அவன் திருமேனியும் பக்தர்களுக்காகவே இருக்கிறது” என்று இருக்கிற திருமேனியைப் பிறர்க்கு ஆக்கான். 1இத் திருவாய்மொழிக்கு, நிதானமான பாட்டு அன்றோ இது. 2அடியார்கட்குப் பரதந்திரப்பட்டவனாகையாலே, ‘அடியார்கட்குச் செல்வமான பின்பு அறிவிக்க வரும்’ என்று ஐகரஸ்யம் பற்றாசாகத் தூதுவிடுகிறாள். தன் நீள் கழல்மேல் மன்னு தண்துழாய் நமக்கு அன்றி நல்கான்-இனிமை அளவிறந்த திருவடிகளிலே பொருந்திச் சிரமத்தைப் போக்கக்கூடிய திருத்துழாயை எவ்வகையிலும் பிறர்க்கு ஆக்கான்.

11-பண்டைய முதலிகள்

பண்டை முதலிகள், ‘பத்தாம் பாசுரத்திலே, பிரணயரோஷம் தோற்றச் சொல்லுகிறாள்’ என்று நிர்வஹிப்பர்கள். 4‘பாசுரந்தோறும், கிலாம்தோற்றச் சொல்லுகிறாள்’ என்று பட்டர் அருளிச்செய்யும்படி.

பாதம் கைதொழுது – கண்டு, திருவடிகளிலே தண்டன் இட்டு. 2“‘கைகள் கூப்பி’ என்றதே; தொழுதார்க்கு நிற்க ஒண்ணாதே யன்றோ. உண்ணாநிற்க, மிடற்றைப் பிடித்தாற் போலே இருப்பது ஒன்று அன்றோ தொழுதுவைத்து விழாதே ஒழியுமது” என்று பூர்வர்கள் நிர்வஹிப்பர்கள். 3“மதித்தான் ஒரு ஸ்ரீவைஷ்ணவன் ஸ்ரீபாதத்தே தலைபடத் தண்டன் இட்ட அன்று, எனக்கு உண்டு பசி கெட்டாற்போலே இருக்கும்” என்று அருளிச்செய்வர் சீயர். அன்றிக்கே, கிலாம்தோற்றும்படி அவர் திருவடிகளிலே கைசென்று தாக்கும்படி விழுந்து கிடவுங்கோள் என்னுதல்; என்றது, தீர்க்கப் பிரணாமம் பண்ணுங்கோள் என்றபடி.

இத்திருவாய்மொழி தன்னை, பூர்வாசாரியர்கள், ‘பகவத் விஷயத்தில் பிரணயரோஷம் தோற்ற வார்த்தை சொல்லுகை சேஷத்வ லக்ஷணமன்று; “வளவேழ் உலகு” என்ற திருவாய்மொழியைப் போன்று தம் தாழ்ச்சியை அருளிச்செய்கிறார்’ என்று நிர்வஹிப்பர்கள். இதனைப் பட்டர் கேட்டு ‘என் சொன்னாரானார்கள்! இவர்க்குப் பகவத்விஷயத்தில் உண்டான ருசிக்குப் பிரகாசம் இத்திருவாய்மொழியாயிருக்கும்; இதற்கு வேறே ஒருவழி இடுவதே! ஆனபின்பு இதுவே பொருளாமித்தனை’ என்று அருளிச்செய்தார்

ஆளவந்தார் கோஷ்டியில், “உண்ணுஞ்சோறு” என்ற திருவாய்மொழியில் வருகின்ற பிராட்டிக்கோ அஞ்சவேண்டுவது” என்று கேட்க, “இருவராகப் போனவர்கட்கு வயிறு எரியவேணுமோ? தனிவழியே போனவளுக்கன்றோ வயிறு எரியவேண்டுவது!” என்று இருந்த முதலிகள் சொல்ல, “அங்ஙன் அன்று காணுங்கோள்! இருவராகப் போனவர்கள் ஆகையாலே, இருவர்க்கும் அஞ்சவேணும்; தனியே போனவளுக்கு அச்சம் உண்டோ?” என்று அருளிச்செய்தார்.

12-பிள்ளான்

 அப்பன் தன் மாயங்களே காணும் நெஞ்சுடையேன் – 2“‘முடியானே’ என்ற திருவாய்மொழியிற் கூறிய கரணங்களையுடைய ஆழ்வார் ஆகையாலே, நெஞ்சுதானே நினைக்கவும் வற்றாய்க் காணவும் வற்றாயிருக்கும் என்று பிள்ளான் பணிப்பர்” என்று அருளிச்செய்வர். அன்றிக்கே, ‘கட்கண்’ என்றும், ‘உட்கண்’ என்றும் சொல்லுகிறபடியே, நெஞ்சு தன்னையும் கண்ணாகச் சொல்லக்கடவதன்றோ; அது ஆகவுமாம்.

இராகவனுடைய மனையில் அனைத்துப் பொருள்களையு முடையவளாய்ப் பன்னிரண்டாண்டு தேவபோகங்களை நுகர்ந்தவளான நான்” என்கிறபடியே, பன்னிரண்டு ஆண்டு தண்ணீர்த்துரும்பு அறக் கலந்து பிரிந்த பிராட்டியைப் போலே, அங்கேபுக்கு நெடுங்காலம் அவனை அநுபவித்துப் பிரிந்து தூது விடுகிறாள் என்று பிள்ளான் பணிப்பர். 4‘புறப்பட்டவள் முடியப் போகமாட்டாதே நகரத்தை அடுத்த வனத்திலே கிடந்து தூதுவிடுகிறாள்’ என்று பட்டர் அருளிச்செய்யும்படி. 1“கீர்த்தியையுடைய ஸ்ரீராமபிரான் என்னைப் பிழைத்திருக்கின்றவளாக எப்படிக் கௌரவிப்பாரோ அப்படியே உம்மால் வார்த்தை சொல்லத்தக்கது” என்கிறபடியே, பிறர் இழுக்கினைப் பொறாத குடிப்பிறப்புடையவரன்றோ. அதிலே தமக்கு வந்த துக்கத்தை நீக்குவதற்குச் சொல்ல வேண்டாவே. கடலை அணை செய்து இராவணாதிகளை அழித்துத் தாம் வரக்கொள்ள, இத்தலை வெறுந்தறையாய்க் கிடவாமே செய்ய நினைத்தாராகில் ஏற்கவே நீக்கித் தம்புகழை நோக்கிக்கொள்ளச் சொல் என்று சொன்னாள் அன்றோ; அப்படியே இவளும் தன் நிலையை அறிவித்து விடுகிறாளாயிருக்கிறது.

மெய் அமர்காதல் – 2‘தம்மைப்போலே (தம்முடைய காதலைப்போலே.)பொய்யுமாய் நிலைநில்லாததுமான காதல் அன்று எங்களது என்று சொல்லுங்கோள்’ என்று பிள்ளான் அருளிச்செய்வர். சத்தியமான காதல் என்றபடி.

13-பிள்ளையமுதனார்

பிள்ளையமுதனார், திருவிருத்தவரைமார்வனை, ‘புன்னைமேல் என்னும் இப் பதங்கட்குப் பட்டர் அருளிச்செய்தது என்?’ என்ன, ‘தன் துன்பஒலி அவற்றின் செவியிலே படும்படி உயரச் சொல்லுகிறாள் என்று அருளிச்செய்தார்’ என்ன, ‘நெய்தல் நிலத்திலே 3புன்னை படர்ந்தன்றோ கிடப்பது, இங்ஙனே சொல்லக் கூடுமோ?’ என்ன, அவன் பட்டர்பாடே வந்து, ‘இங்ஙனேபணித்தார்’ என்ன, 1‘இவ்வர்த்தத்துக்கு நிர்ணாயகம், இசையாயிற்று; அது, ‘போற்றி’ என்று, உயரச்சொல்லியிருக்குமோ? தாழச் சொல்லி இருக்குமோ’ என்று அருளிச்செய்தார்.

என்னப்படுமவனும் புறம்பானான், உங்களைப்பார்க்க. 4உங்கள் நீர்மை அறியாதே, என் செல்லாமையாலே ‘அதனைக் கொள், இதனைக் கொள், என்று நலிந்தேன் அன்றோ! 5உங்கள் தரத்துக்கு அது ஓர் அறுகும் தாளிப்பூவும் அன்றோ’ என்பராம் பிள்ளையமுதனார்

தேஜ: க்ஷமா த்யுதி: ஸ்தைர்யம் விநீதத்வம் ந ஸம்ஸய:
   ஏதேச அந்யேச பஹவோ குணா: த்வயிஏவ ஸோபநா:”-, ஸ்ரீராமா. யுத். 116 : 28. இராவணனைக் கொன்றபின் வந்து சேர்ந்த
திருவடியைப் பார்த்துப் பிராட்டி கூறியது. என்னப்படுமவன் – திருவடி.

  அறிவு மீதே உருவீதே ஆற்ற லீதே அரும்புலத்தின்
  செறிவுமீதே செயலீதே தேற்ற மீதே தேற்றத்தின்
  நெறியு மீதே நினைவீதே நீதி யீதே நினக்கென்றால்
  வெறிய ரன்றோ குணங்களால் விரிஞ்சன் முதலா மேலானோர்.-  , கம்பராமாயணம், உருக்காட்டுப்பட. 111.

14-பிள்ளையுறங்காவில்லிதாசர்

இன்னம் என் கையகத்து ஈங்கு ஒருநாள் வருதியேல் என் சினம் தீர்வன் நானே” என்று, இதனை உய்ந்தபிள்ளை பாடா நிற்கச்செய்தே, காலாலே உதைப்பது கையாலே தள்ளுவதாய் அபிநயித்துக் காட்டினார். இதனை எம்பார் கேட்டருளி, ‘அங்ஙன் அன்று, அது, பின்னைப்பெற்றானாகில் அவன் நெடுநாள் பிரார்த்தித்துக்கிடந்தது அன்றோ; ஆன பின்னர், அதுவன்று பொருள்’ என்று முகத்தைத் திரிய வைத்துக் காட்டினார். 2“நீ அகல நின்று செய்தவை எல்லாம் உன் சந்நிதியிலே உன்னைச் செய்வேன் என்கிறாள்’ என்று அருளிச்செய்தார். 3எம்பார், புறம்பான விஷயங்களிலே ருசி இல்லாமையாலே பதார்த்த ஞானம் இன்றிக்கே இருப்பர். இப்படி இருக்கையாலே ‘பெண்களுக்கு அசாதாரணமான சிந்நங்கள் எங்ஙனே இருக்கும்படி?’ என்று, சிங்கப்பிரானைக் கேட்டருளினார் என்பது பிரசித்தம். 4இப்படி இருக்கிறவர் தாம் “மின்னிடை மடவார்” என்ற இத்திருவாய்மொழி அருளிச்செய்யப்புக்கால், ‘இந்தச் சந்நியாசி பிரட்டுப் பாடத் தொடங்கினார்’ என்பாராம் பிள்ளையுறங்கா வில்லிதாசர். 5பக்வத் விஷயத்தில் இவருடைய உட்புகுவு இருக்கும்படி. ஒரு க்ஷுத்ர விஷயத்திலே நான்கு நாள்கள் வாசனை பண்ணினவர்கள் போர விதக்தராய் இராநின்றார்கள்; அவ்வளவு அல்ல அன்றோ சமஸ்த கல்யாணகுணாத்மகனோடே நெடுநாள் வாசனை பண்ணினார்க்கு இருக்கும்படி. 1எம்பார் ‘ஈசுவரன் முன்னே வந்து நின்றாலும் ‘வா’ என்பாரையும் கிடையாத சம்சாரத்திலே, அவன் சிறிது தாழ்த்தான் என்னா ‘போ’ என்பாரைப் பெறுவதே! என்பர்.

பிறந்ததும் வீங்கு இருள்வாய் – 1“எல்லா உலகங்கட்கும் ஆதாரனான ஸ்ரீ கிருஷ்ணன் நடு இரவில் அவதரித்தார்” என்னும் படி அன்றோ. 2‘இவனும் விழுக்காடு அறியாதே அகப்பட்டுக் கொடு நின்றான், கம்ச பயமும் ஏற்பட்டதாயிரா நின்றது, இருளாலே அன்றோ நாம் பிழைத்தது. இனி, இந்த இருளைச் சரணம்புகுமித்தனை அன்றோ’ என்று பிள்ளையுறங்காவில்லிதாசர் பணிப்பாராம்.

15-விக்கிரமசோழன்

தடுமாறுகிற நிலைக்குச் சம்வாதம் காட்டுகிறார்-இராஜகோஷ்டியிலே “உகும், இறும்” என்று சிலர்பொருள் சொல்ல, விக்கிரமசிங்கன் என்பான் ஒருவன், ‘அங்ஙன் அன்று,கன்றைக் கடக்கக் கட்டிவைத்தால் முலைக்கண் கடுத்துப் பசு அலமந்து படுமாறுபோலே, உள்ளோடுகிற கிலேசம் வாய்விடமாட்டாதே நோவுபடுகிற இவளுக்கு இது வார்த்தையோ?’ என்றான். 1பெருவெள்ளத்தில் சுழிக்குமாறுபோலே, அகவாயில் உள்ளது வெளியிடமாட்டாள்; உள்ளே நின்று சுழிக்கிறபடி.

16-மற்றையோர்

நோக்கும் பக்கம் எல்லாம் – 2பார்த்த பார்த்த இடமெல்லாம். “திருப்பொருநல் நோக்கும் பக்கமெல்லாம்” என்று கூட்டிப் பொருள் கூறுவாரும் உளர். கரும்பொடு செந்நெல் ஓங்கு செந்தாமரை – கரும்பும், அதனோடே இசலி வளர்கிற செந்நெலும், இரண்டற்கும் நிழல்செய்கின்ற செந்தாமரையும். வாய்க்கும் – நிறைந்திருக்கும் என்னுதல்; இட்டன எல்லாம் நூறு கிளைகளாகப் பணைக்கும் என்னுதல்.

———————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading