ஸ்ரீ ஈட்டில் வியாக்கியானத்தில் வந்துள்ள உவமைகள் –ஆறாம் பத்து –

பம்பையின் கரையிலே அநுமானோடு கூடினார்” என்பதுபோலே, ஆள்இட்டு அறிவிக்கவேண்டிய நிலையிலே நீங்களே வந்து. 2வழி பறி உண்டவிடத்தே தாய் முகம் காட்டினாற்போலே காணும் பிராட்டியைப் பிரிந்து நோவுபடுகிற சமயத்திலே திருவடி வந்து முகங்காட்டினபடி. ஹநூமதா தளர்ந்து, 3“ஆவாரார் துணை” என்று தடுமாறுகிற சமயத்திலே, 4வெற்றித் தழும்பு சுமந்த ஆண்பிள்ளையோடே கூடப்பெற்றது என்கிறது. வாநரேணசந்நியாசி வேடம்கொண்டுவந்து பிரிவைவிளைத்து நலிவு பண்ணுமவனைப் போலன்றிக்கே, செவ்வியான் ஒருவனோடே சேரப் பெறுவதே.

ஒரு கலத்திலே ஒக்க உண்டு திரிவாரைப்போலே6இனித்தான் போகப் பிரகாரந்தான் மூன்று வகைப்பட்டாயிற்று இருப்பது. அவை : ஊடல், உணர்தல், புணர்தல் என்பனவாம்.

எங்கள் கையில் பாவை பறிப்பது – இவர்கள் கையிலே பாதிகொடுத்துப்போலே காணும் பறிப்பது! 1அவர்கள் விட்டுக் கடக்க நிற்குமதில் ஒரு பிரயோஜனம் இல்லையே; அதனை அவர்கள் ஒருதலை பற்றத் தானும் ஒரு தலை பற்றும்போதேயன்றோ ஒருகலத்திலே உண்பாரைப்போலே இன்பமாயிருப்பது. கையில் பாவை பறிப்பது

வந்து மேயும் இனங்காள்-3நிருபாதிக பாந்தவமுடையார்பக்கலிலே மனைவி மக்களோடே சென்று ‘சோறுஇடும்’ என்று உண்பாரைப் போலே காணும் இவற்றின்படி-தரும புத்திராதிகள்.-கிருஷ்ணனைப்  போலே என்றபடி.

கை கொள் சக்கரத்து என் கனிவாய்ப் பெருமான் – இராஜ புத்திரர்கள் கையில் 2இடைச்செறி கடைச்செறிகட்குத் தோற்றிருக்குமாறு போலே, திருவதரத்தில் பழுப்புக்கும் கையும் திருவாழியுமான சேர்த்திக்குமாயிற்று இவள் எழுதிக்கொடுத்தது.(இடைச்செறி கடைச்செறிகளாவன -ஒரு விரலிலே கீழும் மேலும் இடுகிற  மோதிரங்கள்.)

உடன் மேயும் கருநாராய் – 2அதற்கு ஒரு குற்றம் தேடிச் சொல்லுவாரைப்போலே சொல்லுகிறாள் தன் காரியம் செய்கைக்காக. 3அடுகுவளத்தைத் தடுப்பாரைப்போலே4தன் துயர் ஒலி செவிப்பட்டால் அவற்றுக்கு மிடற்றுக்குக் கீழ் இழியாது என்று இருக்கிறாள் காணும்

 பாதம் கைதொழுது – கண்டு, திருவடிகளிலே தண்டன் இட்டு. 2“‘கைகள் கூப்பி’ என்றதே; தொழுதார்க்கு நிற்க ஒண்ணாதே யன்றோ. உண்ணாநிற்க, மிடற்றைப் பிடித்தாற் போலே இருப்பது ஒன்று அன்றோ

மதித்தான் ஒரு ஸ்ரீவைஷ்ணவன் ஸ்ரீபாதத்தே தலைபடத் தண்டன் இட்ட அன்று, எனக்கு உண்டு பசி கெட்டாற்போலே இருக்கும்” என்று அருளிச்செய்வர் சீயர்

திறங்களாகி எங்கும் – 4பிராட்டியைப் பிரிந்து பெருமாள் நோவுபடுகிற சமயத்திலே முதலிகள் அடங்கலும் நாலு திக்குகளிலும் புகுந்து அங்கும் இங்கும் திரிந்தாற் போலே காணும் இவையும் திரிகிறபடி,

போற்றி – 2சம்சார வெக்காயம் தட்டாதபடி, வைமாநிகர் விமானங்களிலே உயர இருக்குமாறு போலே, புன்னைமரத்திலே உயர இருந்தன சிலகுயில்கள்; அவற்றின் செவிகளிலே தன் துயரத்தைக் காட்டுகின்ற ஒலி படும்படி உயர ‘போற்றி’ என்கிறாள்

போற்றி இரந்தேன் – 1பெருமாளும் பிராட்டியுமாகக் காட்டிற்கு ஏகாந்த போகத்துக்குப் போகாநிற்கச்செய்தே நடுவே இராவணன் வந்தாற்போலே, உங்கள் போகத்துக்குப் பிரிவு உண்டாக்க நான் தோற்றினேன் போலே இருந்தது. இத்தால் ஒரு வியசனம் இன்றிக்கே ஒழிந்திடுக உங்கள் போகத்துக்கு என்கிறாள் என்றபடி

நால் தடம் தோள் – அவளை அணைந்து அத்தாலே கல்பகதரு பணைத்தாற்போலே இருக்கிற திருத்தோள்கள்.

வேறுகொண்டு – 2திக்குகள்தோறும் முதலிகளைப் போகவிடா நிற்கச்செய்தே திருவடி கையில் திருவாழிமோதிரம் கொடுத்து விட்டதுபோலே காணும்

வேறுகொண்டு உம்மை யான் இரந்தேன் –5நம் ஆசாரியர்கள் வியாபக மந்திரங்கள் மூன்றிலும் துவயத்தையே ஆதரிக்குமாறுபோலே.

பல்வலாநி ஸராம்ஸிச – சிறு குழிகளோடு பெருங்குளங்களும்”. 4மரங்களோடு வசிஷ்டர் முதலானவர்களோடு வாசியற அழியுமாறு போலே இப்படியேயன்றோ இவள் இருக்கிற இடம். வடபாலைத் திருவண் வண்டூர் -ஊரும் ஆறும் இன்ன இடத்திலே என்னுமிடம் நெஞ்சிலே பட்டுக்கிடக்கிறது காணும் இவளுக்கு. வடபால் – வடதிசை. கடலுக்குத் தென்பால் இருக்கிற பிராட்டியைப்போலேயாயிற்று இவள் இருக்கிற இருப்பு.

இத்திருவாய்மொழி வல்லவர்கள், காமினிகளுக்குக் காமுகர் இனிய பொருளாயிருக்குமாறுபோலே, சர்வேசுவரனுக்கு விரும்பத் தக்க பொருளாவர் என்கிறார்.மடவார்க்கு மதனர் – 1காமினிகளுக்குக் காமுகர் எவ்வளவு, ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அவ்வளவு ஆவர்-காமினிகளுக்குக் காமுகரைப் போலே 3அபிமதவிஷயத்திற்கு இனியராவர் என்கிறார். 4திருவடியைச் சொல்லப்புக்குத் தாமரையைச் சொல்லாநின்றதன்றோ. எல்லாவகையிலும் ஒத்திருப்பனவற்றிற்கு உபமானத்தையே சொல்லக்கடவது. ‘அதுபோல’ என்றும், ‘அதுதான்’ என்றும் சொல்லக்கடவதாயிருக்கும்.

மின்னிடை மடவார்க்குக் கிழக்கு வெளுக்கிறபடி. 2அதாவது மஹாபலியினுடைய செருக்கினைப் போக்கி ஒன்று ஒழியாமல் கைக்கொண்டாற்போலே, பிரணயரோஷத்தாலே வந்த இவளுடைய அபிமானத்தைப் போக்கிச் சேரவிட்டுக் கொண்டபடி. 3எதிரியாய் வந்தவனுடைய செருக்கினைப் போக்கினாற் போலே அன்று, காதலியுடைய மானம்4அது அழிக்கலாம், இது அழிக்க ஒண்ணாதே. 5விஷயமில்லாமலே கோபிக்கின்றவர்கள் இலக்குப் பெற்றால் மிகைப்பர்களத்தனையன்றோ. அவன் சந்நிதியிலும் அழியாதது ஒன்றேயன்றோ இது.

நீலக் கரு நிற மேக நியாயற்கு – 2மஹாபலியை வடிவைக் காட்டி அபகரித்தாற்போலே காணும் இவளையும் வடிவைக்காட்டி அபகரித்தபடி. 3இவள் பிச்சு ஏறுகைக்கு இட்ட மை இருக்கிறபடி. 4மைப் படி மேனி அன்றோ.

பண் கொள் ஆயிரத்துள் இவை பத்தும் திருவண்வண்டூர்க்கு – 5‘ஈழம் பிரம்புகொண்டது’ என்னுமாறு போலே பண்ணே மிக்கிருத்தலின் ‘பண்கொள் ஆயிரம்’ என்கிறது. (ஈழதேசம் பிரம்பு மிகுந்தது.)

தூதுவிட்டார்; விட்ட ஆள் சென்று அத்தலைப்பட்டு அவனுக்கு அறிவிக்க, அவனும் இழவாளனாய், யானைக்கு அருள்செய்ய வந்து தோற்றினாற் போலே பதறி நடந்து வராநிற்க, அவ்வளவு பற்றாமே கிடந்து துடித்து அலமந்து, ‘இனி இவ்வளவில் நாம் செய்ய அடுப்பது என்?’ என்று பார்த்து, ‘முடிந்து போவதற்கு மேற்பட்ட பரிஹாரம் இல்லை’ என்று அறுதியிட்டு முடியப் பார்க்கிறாள்

புக்த ஸேஷம் இவ் உதகம்-குடித்த பிறகு எஞ்சியுள்ள தண்ணீரைப் போன்று; 1இவையும் அப்படி யாகாதேதான்–இவையும்’ என்றது, பொறாமை கோபம் இவற்றை. ‘அப்படியாகாதே’  என்றது, குடித்து எஞ்சியுள்ள தண்ணீரைப் போன்று தள்ளத் தக்கவை  ஆகாவோ என்றபடி.-“ஈர்ஷ்யா ரோஷௌ பஹிஷ்க்ருத்ய புக்தஸேஷம் இவோதகம்   நய மாம் வீர விஸ்ரப்த: பாபம் மயி நவித்யதே”  , ஸ்ரீராமா. அயோத். 27 : 6.

ஸுபாம் – 4மண் தின்று வந்த நகடுபோல் அன்றே குணாதிகவிஷயத்தைப் பிரிந்தால் இருக்கும்படி; கடலேறி வடிந்தாற்போலே இருக்கிற அவ்விருப்பு தனக்கே ஆலத்தி வழிக்கவேண்டும்படி இருக்கை

நரம் ஸ்ரியாஜு ஷ்டம் இவ உபஜீவந:- அர்த்திகளாயிருப்பார் உதாரர்பக்கலிலே சென்று தங்கள் தங்கள் பிரயோஜனம்பெற்று உவகையினராமாறுபோலே. இப்படியாயிருந்தன நிமித்தங்களின் அளவு.

இனி, அவன் அளவு பார்த்தால், “ஆர்த்தோவா யதிவாதிருப்த:-ஆர்த்தனாய்ச் சரணம் புகவுமாம்; அன்றிக்கே, நாம் திருநாமங்களைச் சொன்னால் சேவகர் நம்மைப் பரிகசித்துச் சொல்லுமாறுபோலே செருக்காலே சொல்லவுமாம்2இங்ஙனம் விகல்பிப்பான் என்? 3ஆர்த்தனுக்கு அன்றோ பலத்தை அடைதல் உள்ளது? மற்றையோனுக்கு உண்டாகச் சொல்லுகிறஇடம் பிரசித்தம் அன்றே? என்னில், 4இந்தச் சுலோகம் சரணாகதத்தின் லக்ஷணம் சொல்லுகிறதன்று;-நிமித்தங்கள் மாத்திரமே யல்லாமல், ‘அவன்தான் பேரருட்கடல்  ஆகையாலும், அவனுடைய வரவு தப்பாது என்றுகொண்டு இருந்தாள்’  என்று, இரண்டாவது பரிஹாரம் அருளிச்செய்கிறார்

ஆர்த்தோவா யதிவா த்ருப்த: பரேஷாம் ஸரணாகத:  அரி: ப்ராணாந் பரித்யஜ்ய ரக்ஷிதவ்ய: க்ருதாத்மநா”  ஸ்ரீராமா. யுத். 18 : 28.

சுலோகத்திலுள்ள  “த்ருப்த:” என்றதற்குப் பொருள் அருளிச்செய்கிறார் ‘நாம் திருநாமங்களை’  என்று தொடங்கி. திருப்தனாவான், சம்சாரதோஷ ஞானமும்
பகவத்வைலக்ஷண்ய ஞானமுமுடையவனாய், நல்லாசிரியனை அடைதலை  முன்னாகக்கொண்டு ஈசுவரனே உபாயோபேயம் என்று அறுதியிட்டு,
இனிவரும் பிறவியினைப் பொறுக்காதவனாய், இப்பிறவி முடியுமளவும்  ஆறியிருக்குமவனாய் இருக்க, ‘சேவகர் நம்மைப் பரிகசித்துச்  சொல்லுமாறு போலே’ என்று, அவனை எளிமைப் படுத்துதல் என்? எனின்,  சரண்யனுடைய வைபவத்தைச் சொல்லும் இடமாகையாலே நஹிநிந்தா   நியாயத்தாலே எளிமைப்படுத்துகிறார் என்று அருளிச்செய்வர்.

பூவை கிளி பந்து தொடக்கமான சேதனமாயும் அசேதனமாயுமுள்ள விளையாட்டுக் கருவிகளை ஊரழி பூசலில் அரண் உள்ள கோட்டைகளிலே சரக்கு வாங்குவாரைப் போலே ஓரிடத்தே திரள வாங்கி

அசுரத்தன்மை வாய்ந்தவர்களாய் உகவாத இரணியன் முதலானோர் கோஷ்டிகளில் 2திருநாமம் சொல்லுகை பொறுக்கமுடியாதவாறு இருப்பது போன்று, இவர்கள்கோஷ்டியிலும் உகவை தலைமண்டையிட்டு, திருநாமம் சொல்லில் நெஞ்சு சிவிட்கு என்னும்படியாய்க் கொண்டு இருந்தார்கள் இவர்கள். இது இத்தலை இருந்தபடி

பின்னர் என் மனம் அவரிடம் சென்றது” என்கிறபடியே, அம்புப்படுக்கையில் படுத்திருப்பவரான ஸ்ரீவீடுமர்க்கு முற்பட்டவராய் உதவவேண்டியிருக்கப் பிற்பாடரானோம் என்று நோவுபட்டாற்போலேயும் பிற்பாட்டுக்கு நோவுபடுமவன் அன்றோ

இனி, சேர்ந்து குளிர்ந்த தண்ணீர் அண்மையிலிருக்க, பெருவிடாயனானவன் அழிஞ்சுக்காடு ஏறப்போகமாட்டானே. என்றது, ‘இவன் சிறிது தாழ்த்தான்’ என்று வெறுத்து, ‘புகுருவான் அல்லன் நம் கோஷ்டியில்’ என்று இருக்கிற இவர்களைவிட்டு நாட்டாரோடு உறவு செய்யப்போவான் அல்லனே என்றபடி.

ஆற்றாமை கரைபுரண்டு கால் தரையில் பாவாதபடியாய்க்கொண்டு தடுமாறி வருகிற சமயத்திலே, இவனுடைய ஜீவன அதிருஷ்டத்தாலே இவர்கள் மறந்து போன பந்தும் கழலும் இவன் காலிலே தாக்கின. தாக்கவே, இருட்டு அறைகளிலே தடவிக்கொண்டு வாராநின்றால் உறியும் வெண்ணெயும் கையிலே தாக்கினால் உவகையனாமாறுபோலே, பெரிய உவகையோடு விழுந்து அவற்றை எடுத்துக்கொண்டான். எடுத்துக் கொண்டு, அத்தலையில் செய்த வியாமோகம் அடங்கலும் அவற்றிலே தோற்றும்படி கண்களிலே ஒற்றிக்கொள்வது தலையிலே வைத்துக் கொள்வதாய், பிராட்டி திருவாழி மோதிரங் கண்டு பட்டனவெல்லாம் பட்டான்.

க்ருஹீத்வா ப்ரேக்ஷமாணா ஸா பர் து: கர விபூஷணம்
   பர்தாரமிவ ஸம்ப்ராப்தா ஜாநகீ முதிதாபவத்”—  என்பது, ஸ்ரீராமா. சுந். 36 : 4.

க்ருஹீத்வா ப்ரேக்ஷமாணா ஸா – ‘இராவணன் மாயையாலே வந்ததோ’ என்னும் பயத்தாலே முற்படக் கண்வைக்கமாட்டாதே இருந்தாள்; ‘அத் தலையாலே வந்தது’ என்று தெளிந்த பின்பு கண் மாறவைக்க அரிதாம்படி இருந்தாள். ஸா – ப்ரேக்ஷமாணா – 2“பஸ்யதேவி – தேவியே! பார்க்க்” என்றுகொண்டு முன்பு பார்வைக்குக் கிருஷி பண்ணவேண்டும்படி இருந்தவள் தானே, கண் மாற வைக்கைக்குக் கிருஷி பண்ணவேண்டும்படியாய் இருந்தாள். பர்த்து: கரவிபூஷணம் – முதல் கைப்பிடிக்கிறபோது உறுத்தினபடியை நினைத்தாள். கரவிபூஷணம் – அணி மிகு தாமரைக்கை யன்றோ. ஆபரணத்துக்கு ஆபரணங் காணும். பர்த்தாரம் இவ3இவன் இத்தைத் திருக்கையில் கொடுத்தவாறே, இதனோடே சேர்ந்த விரலையும் தோளையும் நினைத்தாள்; அந் நினைவுதான், தான் இக்கரையில் ஆளாகவும், அவர் அக்கரையில் ஆளாகவும், கடல் இடையிலே கிடக்கிற தாகவும் அறிந்திலள்; ஒருபடுக்கையிலே கூட இருந்ததாக நினைத்தாள்; ஒரு 1சூது சதுரங்கங்களிலே தோற்றுத் தன்கையில் இருந்ததாக நினைத்தாள். 2இவ” என்கிறான் இருடி, 3உலகமாதா என்ற கருத்தாலே. இவள் உணர்ந்தால் என்படக் கடவள் என்று. ஜாநகீ-இன்ப துன்பங்களுக்கு இளையாத குடியிலே பிறந்தவள். முதிதாபவத்- உவகையளானாள். அப்படியேயாயிற்று இவனும் இவைபெற்ற பின்பு. 4சம்சாரி முக்தனானால் அவனுடைய லீலோபகரணமும் போகோபகரணமும் சமமாகத் தோற்றக் கடவது. வேறு ஆகாரமான நினைவு இல்லையே. ததீயத்வ ஆகாரத்தாலே நித்தியவிபூதியோடு ஒக்கத் தோற்றுமித்தனை. அப்படியே இவளுடைய லீலோபகரணமும் போகோபகரணமுமாகத் தோற்றக்கடவது.

மன்னுடை இலங்கை அரண் காய்ந்த – 1நிலமிதிதான் எதிரிகள் மண்ணுண்ணும்படியாய், அதற்குமேலே “இராவணனாலே காப்பாற்றப்படுகின்ற இலங்கை” என்று கொண்டு, சிங்கம் கிடந்த முழஞ்சு போலே பையல் உணர்ந்து நோக்குகிற ஊரை அழியச்செய்த, மாயவன்-வஞ்சனை பொருந்திய செயல்களை யுடையவன்

உயிரை வைத்துப்போம்” என்பாரைப்போலே ‘தந்துபோகு’ என்கிறாள்

சர்ப்பயாகத்தில் சர்ப்பங்கள் வந்து விழுமாறு போலே, நீ குழல் ஊதவே பெண்கள் அடங்கலும் உன்காற்கீழே வந்து விழுவார்கள் காண்

நெடும் கண் இளமான் இனிப்போய் – 6விழுக்காடு அறியாமையாலே புறப்பட்டுப் போனாளத்தனை கண்டீர்! 7இந்தக் கண்ணுக்கு இலக்கானவர்கள் சர்ப்பயாகத்தில் சர்ப்பங்கள் சுருண்டு வந்து விழுமாறு போலே, தந்தாம் முதன்மையோடே வந்து விழவேணும் கண்டீர்!

மந்தரத்தை நட்டுக் கடலை நெருக்கிக் கடைந்து பெரிய பிராட்டியாரைப் பெற்ற அன்றும் இந்த வேறுபாடு கண்டோம் இல்லையே! பழையாரைப் பெற்றாற்போல் அன்றே புதியாரைப் பெற்றால் இருக்கும்படி.

சூட்டு நான்மாலைகள் தூயன ஏந்தி” என்றுகொண்டு அவர்கள் சமாராதனத்துக்கு வேண்டுவன கொண்டு நிற்க, ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ணப் போந்தான் அன்றோ. அதுதன்னையும் விட்டு அன்றோ அடல் ஆயர்தம் கொம்பினுக்குக் கோட்டிடை ஆடினான். 2பழையாரை எல்லாம் காற்கடைக் கொள்ளுகிற இடமாய் இருக்கிறதன்றோ. நவப்பிரியைகளை விரும்புவாரைப் போலே காணும்.–பழையார்’ என்றது, இங்கே, ஊடுகிறவர்களை. ‘புதியார்’
 என்றது, அவன் மின்னிடை மடவாரை. நவப் பிரியைகள் – விருப்பத்திற்கிடமான புதியர்கள்.

கொம்பை இழந்த தளிர்போலேகாண் அவர்கள் நெஞ்சுகள் வாடும்படி. ‘கொங்கைமேல் குங்குமத்தின் குழம்பு அழியப் புகுந்து ஒருநாள், தங்குமேல் என் ஆவி தங்கும்’ என்று இருக்குமவர்கள் அலரோ அவர்கள்.

இத் திரு அருள்கள் 1எம்பரமே-நீ எங்கள் அளவல்லாத ஆசையை வைத்து, குளப் படியிலே கடலை மடுத்தாற் போலே நீ செய்கிறவை எல்லாம் எங்களால் பொறுக்கப் போமோ? நீ செய்கிறவை எல்லாம் பொறுக்கவல்லார் வேறே சிலவர்கள் என்கிறார்கள்.

சாது கோட்டியுள் கொள்ளப்படுவார்’ என்று சொல்லுவது, 5வைஷ்ணவர்களுடைய திரளிலே ஒருவன் வந்து புகுந்தால் செருக்காலே மலையிட்டு அமுக்கினாற் போலே இருக்கை அன்றிக்கே, நீரும் நீரும் கலந்தாற் போலே இவன் புகுந்தமை தெரியாதபடி இருந்து, அவர்கள் இடம் கொடுத்து அவர்கள் ஏற்றுக்கொள்ள இருத்தல் அன்றோ ஒருவனுக்கு நன்மையாவது. இவர்களுக்கே அன்றியே, அவனுக்கும் ஒத்திருக்கிறபடி; 6“அந்த இராமனும் மற்றவர்களோடு கூட இருந்து அநுபவிக்கவேண்டும் என்னும் விருப்பத்தால் மெதுவாகச் சபையை அடைந்தவனாய்க் குசலவர்களின் கானத்தைக் கேட்பதில் மனமுடையவனாய் இருந்தான் என்று, மஹரிஷி ஆச்சரியப்படுகிறார்”

தத:து தௌ ராமவச: ப்ரசோதிதௌ
   அகாயதாம் மார்க விதாந ஸம்பதா
   ஸ சாபி ராம: பரிஷத்கத: ஸநை:
   புபூஷயா ஸக்த மநா பபூவ”— என்பது, ஸ்ரீராமா. பால. 4 : 31.

தடி பிணக்கே – பின்னைக் குத்தும் பூசலுமாயன்றோ தலைக்கட்டுவது. 2இராமாவதாரத்தில் எல்லாக் காரியங்களையும் வில்லினைக் கொண்டே செய்யுமாறுபோலே, கிருஷ்ணாவதாரத்திலே தடிகொண்டே காரியம் கொள்ளுமத்தனை.

குழலை ஊதவே பசுக்கள் வயிறு நிறையும். 2சக்கரவர்த்தித் திருமகனுக்கு வில் கைவந்திருக்குமாறுபோலே யாயிற்று, கிருஷ்ணனுக்குக் குழல் கைவந்திருக்கும்படி.

ஒவ்வொரு கலகத்திலே அமர்ந்த நிலங்களிலே குடிவாங்கிப் பின்பு தெளிந்தவாறே தம்தம் இடங்களிலே புகுந்து, விட்ட காரியங்களிலே அதிகரிப்பாரைப் போலே5ஒருவன் செய்த கர்மம் வேறு ஒருவன் சென்று அநுபவியாதபடி தன்பக்கல் நின்றும் பிரித்தும். பேதியாதது

இவன் ‘போகவொட்டேன்’ என்று வளைத்துக் கிடந்ததற்குப் பிரயோஜனம் உள்ளது இவன் நினைத்தபடி பரிமாறப் பெற்றால் அன்றோ? ஒருதேச விசேடத்திலே முக்தர் சம்சாரிகளோடு உறவு அற்று இருக்குமாறுபோன்று இவன் முகம் பாராதே இருக்கிறோம்” என்று அறுதியிட்டுப் பேசாதே இருந்தார்கள்;

 ஜன்னி ஜு ரத்தாலே பீடிக்கப்பட்டவர்களைப் போலே பிதற்றுமித்தனை அன்றோ. “தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை” என்பதன்றோ மறைமொழி.

தன் சிற்றிலை அன்றோ சங்கல்பத்தால் அழிக்கலாவது; 2இவர்களுடைய சிற்றிலைத் தொட்டு அழிக்க வேணுமே; 3உன் சிற்றில் அழிக்கும் பரிகரம் அமையாதோ இதற்கு? உலகத்தை அழிப்பது சங்கல்பத்தாலே அன்றோ. 4அடியவர்களுக்குத் திருவடிகள் உத்தேசியமாமாறு போன்று காதலிமார்கட்கும் உத்தேசியமாய் அன்றோ திருவடிகள் இருப்பன.

 நின்று இலங்கு முடியினாய் – 1இவர்களை வெல்வதற்கு முன்பு தலைச்சுமையாய்க் காணும் கிடந்தது; இப்போதாயிற்று நற்றரித்து ஒளிவிடத் தொடங்கிற்று. 2இராசாக்கள் சிலர் தந்தாம் பகைவர்களை அழித்து வீர அபிடேகமும், விஜய அபிடேகமும் பண்ணிநிற்குமாறு போலே. முன்பே முடிசூடி இருக்கச் செய்தேயும் இவர்களைத் தோற்பிப்பதற்கு முன்பு இல்லாததற்குச் சமமாகக் காணும் இருந்தது

சீற்றம் உண்டு அழு கூத்த அப்பன் தன்னை – 4தாயார் பொடியப் பொடியுண்டு அழுகிற நிலையில் “பையவே நிலையும்” என்கிறபடியே நிற்கிற நிலை, வல்லார் ஆடினாற்போலே இருந்தபடி

பரந்த பெருமான் என்னை ஆள்வானை – இங்ஙனம் பரந்து இருத்தல் எல்லாம் தம்மை அகப்படுத்த என்று இருக்கிறார்; 4ஒருவனை அகப்படுத்த நினைத்தார் ஊரை வளையுமாறு போலே

செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர்க் கண்டேன்-5மருபூமியிலே பொய்கை கண்டாற்போலே இருக்கிறபடி. மிக்க செல்வத்தை யுடைத்தான குடிகளையுடைய திருவிண்ணகர் என்பார் ‘செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர்’ என்கிறார்.(மருபூமி – நீரும் நிழலும் அற்ற பாலை நிலம்)

எனக்கு என் அப்பன் ஆய் – எனக்கு அசாதாரணனாய்ச்சத்தைக்குக் காரணமாயுள்ள பிதாவாய். 3பஞ்சகாலத்திலே குழந்தைகளைவிற்று உண்ணும் தமப்பனைப்போல் அன்றியிலே, தன்னை அழிய மாறியும் என்னை நோக்கக்கடவ தமப்பனாய்.

என்னைப் பெற்றவளாய் – வளர்த்துக் கொள்ளியான தாயைப் போல் அன்றியே, பத்து மாசம் வயிற்றிலேவைத்து நோக்கிப் பெற்ற தாயாய்.-தன் உகப்பே எனக்கு உகப்பாக இருக்குமவளன்றோ நான். இவளுடைய காதலனுக்குக் கடகையும் தானே அன்றோ

கொடு வாருங்கோள்’ என்றால், இசையார் என்று பார்த்து, நான் காட்டப் புகுவது ஓர் ஆச்சரியத்தைப் பாருங்கோள் என்பாரைப் போலே இவர்கள் கண்முகப்பே நிமிர்ந்த திருவடித் தாமரைகளையுடையவனை

பரநிலையும் கூட வேண்டேன்’ என்ற திருவடியைப் போலே யாயிற்று இவரும் கிருஷ்ணாவதாரம் ஒழிய வேறு ஒன்று அறியாதபடி

அநுபவத்திற்குத் தக்கதான காலமாகையாலே, நல்ல இரவும் நல்ல பகலும் என்கிறார். பிரிந்த காலத்திலே அன்றோ நெருப்பை உருக்கி ஏறட்டினாற் போலே இருப்பது

மேவி-பகவானுடைய குணங்களிலே நெஞ்சினை வைத்து. நைந்துநைந்து – 4தான் பற்றியிருக்கும் பொருள்களை அழிக்கும் நெருப்புப்போலே குணங்கள்தாம் அழிக்குமே

இராமாவதாரத்தில் எல்லாக்காரியங்களையும் வில்லினைக் கொண்டே செய்யுமாறுபோலே, கிருஷ்ணாவதாரத்திலே தடிகொண்டே காரியம் கொள்ளுமத்தனை.சக்கரவர்த்தித் திருமகனுக்கு வில் கைவந்திருக்குமாறுபோலே யாயிற்று, கிருஷ்ணனுக்குக் குழல் கைவந்திருக்கும்படி

கெண்டை ஒண்கண் – கெண்டை போலே மிக இளமையினையுடையனவாய், அமிருதத்தைப் பெய்தாற்போலே குளிர நோக்குகிற திருக்கண்கள்.

புழுக்குறித்தது எழுத்தானாற்போலே இங்ஙனே வாய்த்துக்கொண்டு நிற்கக்கண்ட தித்தனை. 2இல்லையாகில், இளைஞர் சிலருடைய செயல்களாக மாட்டாதே அன்றோ.-குணாக்ஷர நியாயம் என்பர். “மானத்து வண்டல் உழ ஓர் எழுத்தின்  வடிவுற்ற சீர்மான” என்பது, திருவரங்கத்தந்தாதி.

தறியார்ந்த கருங்களிறே போல நின்று தடங்கண்கள் பனிமல்கும் தன்மையானை” என்கிறபடியே, ஒரு மத்தயானையைத் தறியோடே சேர்த்தாற்போலே காணும் இவன் கட்டுண்டு நின்ற நிலை.

யசோதைப்பிராட்டியின் முலை உண்ணும்போதும் தான் உயிர்பெற உண்ணுமாறுபோலே காணும், இவள் முலை உண்கிறபோதும் தான் உயிர்பெற முலையுண்டபடி; ஆதலின், ‘உண்டதும்’ என்கிறார்

மனப் பரிப்போடு அழுக்கு மானிடசாதியில் தான் பிறந்து – 1நாட்டாரை அழுக்கு உடம்பு கழிக்குமவன்தான் கண்டீர் அழுக்கு மானிடச் சாதியில் வந்து பிறந்தான்; 2குழந்தை கிணற்றிலே விழுந்தால் எடுக்க வரும் தாய் நெஞ்சு நொந்து வந்து எடுக்குமாறு போலே3‘இவற்றிற்கு உதவப் பெற்றிலோம்’ என்னும் திருவுள்ளத்தில் தளர்த்தியோடேவந்து பிறந்தவனாதலின் ‘மனப் பரிப்போடு பிறந்து’ என்கிறது

தான் தன சீற்றத்தினை முடிக்கும் – 3அடியார்களுடைய விரோதியைப் போக்கினானாய் இருக்கையன்றிக்கே, தன் சினம் தீர்ந்தானாய் இருக்கை; தாயானவள், குழந்தையை நலிந்தவர்களைத் தான் நலிந்து தன்சினம் தீருமாறுபோலே.

1தேஹாத்மாபிமாநிகளாய் இருப்பார்க்கு எத்தனையேனும் அறிவு பிறந்தாலும் ‘நான் பருத்தவன், நான் இளைத்தவன்’ என்கிற நிலைமாற்றப் போகாதவாறுபோலே, இவரையும் எல்லா வகையாலும் உகந்தருளின நிலங்களிலே நின்றும் திருஷ்டத்தில் குறைசொல்லி மீட்கப் போகாது

கிருஷ்ணனுடைய குணங்களை அநுபவியாநிற்கச்செய்தே, குடிக்கிற தண்ணீர் விக்கி அதுதானே பரவசமாந் தன்மையை விளைப்பிக்குமாறு போலே, அந்த அநுபவம்தானே வேறு ரசத்திலே மூட்டத் தமக்குப் பிறந்த துன்பத்தை அந்யாபதேசத்தாலே பேசுகிறார்.

குமுறும் ஓசை விழவொலி” -கன்றைக் கடக்கக் கட்டிவைத்தால் முலைக்கண் கடுத்துப் பசு அலமந்து படுமாறுபோலே, உள்ளோடுகிற கிலேசம் வாய்விடமாட்டாதே நோவுபடுகிற இவளுக்கு இது வார்த்தையோ?’ என்றான். 1பெருவெள்ளத்தில் சுழிக்குமாறுபோலே, அகவாயில் உள்ளது வெளியிடமாட்டாள்; உள்ளே நின்று சுழிக்கிறபடி

குமுறும் ஓசை விழவு ஒலித் தொலை வில்லிமங்கலம் கொண்டு புக்கு–பாவியேன்! இந்த ஒலி செவிப்பட்டால் கொண்டு மீள அன்றோ அடுப்பது! ‘இவ்விடம் பிள்ளை கொல்லி’ என்று கூப்பிடுமாறுபோலே காணும் ஒலி இருக்கிறது

நெக்கு – கட்டுக்குலைந்தவளுமாய். ஒசிந்து – பரவசப்பட்டவளாய். கரையும் – நீராகாநின்றாள். நெக்கு ஒசிந்து கரையும்-3பெருவெள்ளத்தில் கரையானது நெகிழ்ந்து ஒட்டுவிட்டு ஒசிந்து பொசிந்து அவயவி ஆகாதபடி கரைந்துபோமாறுபோலே, ஓர் அவயவியாக்கிக் காண ஒண்ணாதபடி கரைந்து போகாநின்றாள்.

பொருநல் வடகரை – விரஜைக்கு அக்கரை என்னுமாறு போலே. 

இவள் பேச்சுக் கற்கை என்றும், திருநாமம் சொல்லுகை என்றும் இரண்டு இல்லை. 2கோயிலிலுள்ளார் “கோயில்” என்றும், “பெருமாள்” என்றும் கற்குமாறு போலே3தோழி, தன்வாயாலே ‘திருத்தொலைவில்லிமங்கலம்’ என்றால், இவள்சொன்ன இனிமை பிறவாமையாலே, ‘அவ்வூர்’ என்கிறாள் காணும். என்தான்! முன்பு சொன்னாளே? என்னில், அது அப்படி இராமையால் அன்றோ ‘அவ்வூர்’ என்கிறது

அவன் முன்னி வந்து நின்று இருந்து உறையும் – தன்னுடைய வியாமோகத்துக்கும் அவன் கிருஷி செய்தபடி. முற்பாடனாய் வந்து அவன் நிற்பது இருப்பதாய்க் கொண்டு நித்தியவாசம் செய்கிற ஊர். 1பசியன், சோறு தாழ்த்தால் படுமாறுபோலே. சென்னியால் வணங்கும் – தன்கரங்கள் கூப்பித் தொழுகையும் 2வேண்டத் தக்கதானபடி. இருந்த இடத்தே இருந்து தலைசாய்க்கும்படி ஆனாள்

பழையதான வேதார்த்தத்தை அருளிச்செய்கையாலே. சர்வேசுவரன் இதர சஜாதீயனாய் அவதரித்தாற் போல, வேதமும் தமிழாய் வந்து இவர் பக்கலிலே அவதரித்தபடி என்னுதல்.

பெருமாளும் பிராட்டியும் சேர இருக்க இளையபெருமாள் அடிமை செய்தாற்போலே, சேர்த்தியிலே அடிமை செய்யப் பெறுவர் என்பார் 2திருமாலுக்கு அடிமை செய்வார்’ என்கிறார்.

இவளைப் பிழைப்பதற்குரிய விரகுகளை எண்ணுகையாலே தரித்திருக்கிற திருத்தாயார் இவளுடைய வளயம் முதலானவைகள் காணக் காண உருக்குலைகிறபடியைக் கண்டு, அவற்றைத் தனித் தனியே சொல்லிக் கூப்பிடுகிறாள். 2ஒவ்வொரு நகரம் பத்தநம் முதலானவைகள் வேவப்புக்கால், ‘ஒருமாடம் முறிந்தது, மாளிகை முறிந்தது’ என்பாரைப்போலே

மஹாபலியினுடைய செருக்கினைப் போக்கி ஒன்று ஒழியாமல் கைக்கொண்டாற்போலே, பிரணயரோஷத்தாலே வந்த இவளுடைய அபிமானத்தைப் போக்கிச் சேரவிட்டுக் கொண்டபடி

நீலக் கரு நிற மேக நியாயற்கு – 2மஹாபலியை வடிவைக் காட்டி அபகரித்தாற்போலே காணும் இவளையும் வடிவைக்காட்டி அபகரித்தபடி. 3இவள் பிச்சு ஏறுகைக்கு இட்ட மை இருக்கிறபடி. 4மைப் படி மேனி அன்றோ.

இவள் மயிர்முடி ஒன்றுக்குத் தோற்றுக் குமிழிநீர் உண்ணும் அவன் கண்டீர் இவளை அழித்தான்! பங்களப்படைகொண்டு, தனிவீரம் செய்வாரை அழிக்குமாறுபோலே- இழந்தது சங்கே – 2இவள் மயிர்முடி கண்டு அவன் இழக்கக்கடவதனை இவள் இழந்தாள்.

என் வில்புருவம் கொடி – வில்போலே இருக்கிற என்பெண். 3பிரஹ்மாஸ்திரத்தைக்கொண்டிருந்தும் பட்டுக் கிடப்பாரைப்போலே, வெற்றிக்குக் காரணமான பரிகரத்தைக் கொண்டிருந்தும் கண்டீர் தோற்றது! தோற்றது மெய்யே

அபஸ்யத்பவநம் ராஜா நஷ்ட சந்த்ரம் இவாம்பரம் – 4நிலவோடும் நக்ஷத்திரதாரா கணங்களோடும் கூட சந்திரன் குடிவாங்கின ஆகாசம்போலே கிடந்தது. அப்படியே ஆயிற்று இத் திருமாளிகை கிடக்கிறது

ஆஹ்லாத ஸீதநே்த்ராம்பு:-விரகத்தாலே கொதித்துப் புறப்படும் துக்கக்கண்ணீர் போலன்றிக்கே, பகவானை அநுபவிப்பதனால் உண்டான மிகுந்த உவகையினாலே குளிர்ந்த கண்ணீரையுடையனாவது-பரகுணாவிஷ்ட:-பகவானுடைய குணங்களாலே ஏறப்பட்டிருப்பவனாவது, தெய்வம் ஏறினவரைப்போலே. 

பூ அலரும்போதைச் செவ்வி போலே ‘திருக்கோளூர் எத்தனை இட்ம போரும்’ என்று கேட்கும் போதைத் திருப்பவளத்தில் செவ்வி காணப்பெற்றிலேன் என்று காணும் திருத்தாயார்தான் நோவுபடிகிறது.

புகுமூர் – 3காட்டுத் தீயிலே அகப்பட்டவன் பொய்கையும் பொழிலும் தேடிப் புகுமாறு போலே, சம்சாரமாகிற பாலை நிலத்தில் காட்டுத் தீயிலே அகப்பட்டவனுக்கு உகந்தருளின நிலங்களானவை பொய்கையும் பொழிலும் போலே அன்றோ. புகும் ஊர் என்கையாலே, புக்கார் போகும் ஊர் அன்று என்கை.

அவன் அங்குள்ளாரைத் தன்னோடு ஒத்தவர்களாயிருக்கும்படி செய்தாற்போலே அன்றோ, இங்குள்ளாரை இவள் தன்னோடு ஒக்கப் பண்ணினபடி. ஊரும் நாடும் உலகமும்-2 தான் இருந்த ஊரும் அதனோடு தோள் தீண்டியான நாடும் அதனோடு சேர்ந்த உலகமும்.

ஸ்ரீராமாவதாரத்திலும் ஓர் ஊரேயன்றோ திருந்திற்று; இங்குச் சம்சாரமாகத் திருந்நிற்றுக் கண்டீர் என்கை. 3இன்று நம்மளவும் வர வேறிப் பாயும்படி அன்றோ இவள் சம்பந்தம் வெள்ளம் இட்டபடி. 4பகவத் பக்திக்கு மேட்டுமடையான சம்சாரத்திலே ஈசுவர அவதாரம் போலே ஸ்வயம் பிரயோஜனமாக அவதரித்தவராய்ப் பரமப் பிரயோஜன ரூபமாய் நிறைவுற்றிருக்கின்ற பக்தி யோகத்தையுடையவர்’ என்னும்படியே, எல்லா மேடுகளிலும் ஏறிற்று என்கை

வான்கற்புஇடறி-4 வானான கற்பை இடறி. சூருவரால் கடக்க ஒண்ணாத மரியாதையைக் கடந்து. மலை போல இருக்கிற மரியாதையை, காற்கீழே அகப்பட்ட தொரு சிறிய கல்லை இடறுமாறு போலே இடறி5பெருவெள்ளமானது, சிறிய கரைகளோடு பெரிய கரைகளோடு வாசி அற ஏறுமாறுபோலே, நாணம் மடம் அச்சம் தொடக்க மானவற்றை மதியாதே போதல்.

கொடி-கொள் கொம்பை ஒழியில் தறைப்படும். 2கோல் தேடி ஓடும் கொழுந்ததே போன்றதே மால் தேடி ஓடும்மனம் அன்றோ. அன்றிக்கே, 3பெற்ற என்னையும் விட்டு வேறேயும் ஒரு பற்றுக்கோடு உண்டாம்படியான பாவத்தைச் செய்துள்ளேன் என்பாள் ‘கொடியேன்கொடி’ என்கிறாளாகவுமாம்

ஸ்ரீ பரதாழ்வானுடைய ராஜ்ய தரிசனம் அவனுக்குப் பொறுக்க முடியாமற்போனது போலே-திருநாமச் சுவடு அறிந்த பின்பு விளையாட்டுக்குரிய கருவிகளைப் பார்த்தல்

ஜகர்ஹேச-சந்தியா வந்தனத்துக்குப் பிற்பட்டாரைப் பெரியோர்கள் பழிக்குமாறு போலே.

நைந்துநைந்து – 4தான் பற்றியிருக்கும் பொருள்களை அழிக்கும் நெருப்புப்போலே குணங்கள்தாம் அழிக்குமே:

மா மணிக் கோயிலே வணங்கி” என்கிறபடியே, அவனிலும் அவன் விரும்பி வாழ்கிற கோயிலையும் கண்களாரக் கண்டு. 6திவ்யாத்ம சொரூபத்துக்குப் பிரகாசகமான திவ்வியமங்கள விக்கிரஹம்போலே, அவை இரண்டுக்கும் பிரகாசகமான கோயில்

1‘பிள்ளை திருநறையூர் அரையரும், பட்டருமாக உள்ளே பிரதக்ஷணம் செய்யாநிற்க, இட்டஅடி மாறி இட மாட்டாதே கண்களாலே பருகுவாரைப் போலே பார்த்து வாழ்ந்து கொண்டு போகிறபடியைப் பின்னே நின்று கண்டு அநுபவித்தேன்’ என்று நஞ்சீயர் அருளிச்செய்வர்

ஓர் ஆபரணம்தானே எல்லா ஆபரணங்களுக்கும் நிறம் கொடுக்குமாறு போலே, திருக்கோளூர் உண்டாகையாலே திக்கு முழுதும் சிலாக்கியமானபடி;

நின்று நின்று நையும் – மாறாமல் உருக்குலையாநின்றாள். கிண்ணகத்தில் இளகின கரைபோலே உடைகுலைப் படுகிறபடி

வண்டாலே எடுக்கப்பட்ட சாரத்தையுடைய பூப்போலே காணும் நித்யசம்ச்லேஷத்தாலே துவண்டிருக்கும்படி

தெய்வங்காள் – 3இதனை, ‘கொல்லை’ என்பார் முகம் பார்த்துச் சொல்ல ஒண்ணாதே; 4பழிசொல்லாமையையும், சிறை உறவு போலே தன்னோடு ஒக்க உறங்காமையையும் பார்த்துச் சொல்லுகிறாள்

இராகவனுடைய மனையில் அனைத்துப் பொருள்களையு முடையவளாய்ப் பன்னிரண்டாண்டு தேவபோகங்களை நுகர்ந்தவளான நான்” என்கிறபடியே, பன்னிரண்டு ஆண்டு தண்ணீர்த்துரும்பு அறக் கலந்து பிரிந்த பிராட்டியைப் போலே, அங்கேபுக்கு நெடுங்காலம் அவனை அநுபவித்துப் பிரிந்து தூது விடுகிறாள் என்று பிள்ளான் பணிப்பர்

பாண்டவர்களுக்குத் தூதுபோன கிருஷ்ணன் படியும், ஆளவந்தார்க்குப் பச்சை இட்ட 1மணக்கால்நம்பி படியும் போலே இருந்ததே உங்கள்படி! 

கிளிகாள் விரைந்து ஓடி வந்து – 7பிராட்டியைக் கண்டு மீண்ட பின்பு முதலிகள் வந்து பெருமாளை உகப்பித்தாற்போலேயும், பெருமாள் மீண்டு எழுந்தருளுகிறபோது திருவடி முன்னே வந்து ஸ்ரீபரதாழ்வானை உகப்பித்தாற்போலேயும், நீங்கள் முன்னே வரவேணும். கிளிகாள் விரைந்து ஓடி வந்து – 1அறிவித்துக் கூட வர இராதே கொள்ளுங்கோள்

சூடிய தண் துளபம் உண்ட தூ மதுவாய்கள் கொண்டு ஓடி வந்து என் குழல்மேல் ஒளி மா மலர் ஊதீரோ என்பான் என்? காரியம் செய்து சமைந்தால் கைக்கூலி கொடுப்பாரைப்போலே? என்னில், இவற்றுக்கு இவள் குழலிலே 1விஷயம் உண்டாகவேணுமே. இப்போது மது மாறிச் சருகாய் அன்றோ கிடக்கிறது; இவை மீண்டால் அன்றோ இத் தலையில் செவ்வி பிறப்பது

நுங்கட்கு யான் உரைக்கேன் – 2யாருக்குச் சொல்லும் வார்த்தையை யாருக்குச் சொல்லுகிறது? 3தனக்கு முன்னே ஆற்றாமையோடே அன்றோ அவைதாம் இருக்கின்றன; 4ஆற்றாமை சொல்லுவியாதது இல்லையன்றோ. நுங்கட்கு யான் உரைக்கேன் – 5உங்களுக்குச் சொல்லுமது அன்று; நான் சொல்லுமது அன்று. வியசனத்துக்கு உரியவர்கள் இருக்க, வேறே சிலர் வார்த்தை சொல்லுமாறு போலே

வெம்கண் புள் ஊர்ந்து வந்து – 2பட்டம் கட்டின யானையிலே ஏறிக் காதலியைக் கிட்டும் இராஜபுத்திரனைப் போலே3“அருளாழிப் புட் கடவீர் அவர் வீதி ஒருநாள்” என்றே அன்றோ அடியிலே தூதுவிட்டது, அப்படியே வந்தபடி.

பூவைகள்போல் நிறத்தன்-3ஆண் பெண்ணாம்படியான நிறம் படைத்தவன். 4“பார்க்கின்ற ஆடவர்களுடைய கண்ணையும் மனத்தையும் கவர்கின்றவன்” என்னும்படியே. 5பேற்றுக்குப் பாவையின் காலிலே விழும்படியான வடிவுபடைத்தவன். பூவைப்பூ போன்ற வடிவையுடையவன். புண்டரீகங்கள் போலும் கண்ணன் – 6ஒருபூ ஒருபூவினைப் பூத்தாற்போலே காணும் வடிவும் கண்ணும் இருக்கும்படி;

வந்திருந்து-4மஹாராஜருடைய இடரைப் பெருமாள் வினவிக்கொண்டு சென்று தீர்த்தாற்போலே என் துன்பத்துக்கெல்லாம் உடன்கேடராயிருந்து

மணிச்சேவல் – 2இதுவும் ஒரு சேவலேதான்! 3தன்னுடைய மணிச்சேவல் கடக்க இருந்து இவளை உடம்பு வெளுப்பித்துத் தான் குறியழியாதேயன்றோ இருக்கிறது. எல்லாம் – 4புத்திர பௌத்திரர்களோடு மற்றுமுள்ள கூட்டத்தோடு” என்னுமாறு போலே. 5மனைவி புத்திரர்கள் முதலாயினார்களோடே கூடப் பிறர் காரியம்செய்ய ஒருப்பட்டிருப்பாரைப்போலே. அந்தரம் ஒன்றும் இன்றி – 6என்னைப் போலே பிரிவோடேகூடி இருக்கிற கலவி இன்றிக்கே இருக்கப் பெறுவதே

மந்திரங்களை இருடிகள் காணுமாறு போலே2“சொல் பணி செய் ஆயிரம்” என்று ஆழ்வாருடைய திருவாக்கிலேபுக்கு ‘அங்கிட்டுப் பிறந்து நாம் தூயராய் அடிமை செய்யவேணும்’ என்று அச்சொற்கள் தாம் ‘என்னைக்கொள், என்னைக்கொள்’ என்று வந்து அடிமை செய்கிறபடி

இவர் படுகிற வியசனத்துக்குக் காரணம் சொல்லப்போகாது, பிராட்டி சிறை இருந்தமைக்குக் காரணம் சொல்லப்போகாதவாறு போலே2அவள் இருப்பு பிறர்மேல் வைத்த திருவருளாலே ஆனாற்போலே, இவருடைய வியசனமும் பிறர்மேல் வைத்த திருவருளுக்குக் காரணமாய் இருக்கிறபடி

அவள் சிறையிருந்தபடியை ஸ்ரீ வால்மீகி பகவான் எழுதிவைக்க இன்று நாடு எல்லாம் வாழுமாறு போலே, அன்று இவர்தாம் வியசனப் பட்டாரேயாகிலும் இவர் அருளிச்செய்த பிரபந்தங்கள் உலகத்திற்குத் தண்ணீர்ப்பந்தலாயிற்றது.

இவைதாம் ஒருபொருளும் அன்றே; பல பொருள்களாக இருக்கச் செய்தே ஒரே பொருளாக்கி ஒரு காரியம் கொள்ளவேணும் அன்றோ: 2அது செய்யும்போது, குலாலனானவன் மண்ணும் நீரும் செதுகும் கூட்டிச் சேரத் துகைத்துக் குடம் முதலான பொருள்களாய்க்கொண்டு தோற்றுவிக்குமாறுபோலே, தண்ணீரை உண்டாக்கி, 3அது நீர்ப்பண்டமாகையாலே அதனோடு கடினமான பொருளைக் கூட்டி, பின்னையும் நெகிழ்ந்திருக்கையாலே அதனைச் சிறிது வலிக்கைக்காக ஒளிப்பொருளை உண்டாக்கி, அதுதான் மிகைத்துத் தீயுமளவானவாறே அதனை ஆற்றுகைக்குக் காற்றினை உண்டாக்கி, அது தனக்குச் சஞ்சரிக்கைக்காக இடத்தைக்கொடுக்கின்ற ஆகாசத்தை உண்டாக்கி. இவ்வளவும் முதலில் சங்கல்பந்தன்னையே கொண்டு அண்டசிருஷ்டியைப் பண்ணி நின்றது. 4இனி, பெரியதொரு மாளிகையைச் சமைத்து இருள் உறைய விட்டுவைக்க ஒண்ணாதே அன்றோ; அதற்கு இரண்டு விளக்குகள் இட்டாற்போலே சந்திர சூரியர்களை உண்டாக்கி. 5நீர்க்களிப்பு அறுகைக்கும் வளர்ச்சி பெறுகைக்குமாக இருவரையும் உண்டாக்கினபடி.

ஒருநாள்-விடாயர் ‘ஒரு கால் நாக்கு நனைக்கத் துளி தண்ணீர்’ என்னுமாறு போலே ‘ஒருநாள்’ என்கிறார்.

மண்ணும் விண்ணும் மகிழவே7எனக்காக வந்திலையாகிலும் உன் விபூதி அழியாமைக்கு வா என்கிறார். 8மானாவிச்சோலைபோலே ஆவது அழிவதான இதுபோனால் என்செய்யவேணும்?’ என்று இருக்கிறாயாகில், அவ்விபூதியும் அழியுங்காண்; இது அழியவே 1அதுவும் அழிந்ததாமன்றோ

மண்ணும் விண்ணும் மகிழக் குறளாய் – 1இவ்வளவில் ஸ்ரீ வாமனனாய் வந்து தோற்றிற்றிலையாகில், உபய விபூதியும் அழியுமாகாதே. ஒரு பாட்டம் மழை விழுந்தால் பொருள்களெல்லாம் செவ்வி பெறுமாறு போலே.

இங்கே கொடுவந்து இதர சஜாதீயமாக்கிக் காட்டிற்றிலையோ என்றார் இரண்டாம் பாசுரத்தில்; அது ஒரு நாள் சற்றுப்போது காட்டாறு பெருகினாற்போலே செய்தோம் என்ன, ‘அது ஒரு காலத்திலே நிகழ்வது’ என்ன ஒண்ணாதபடி யுகந்தோறும் இராமன் கிருஷ்ணன் முதலிய அவதாரங்களைச் செய்து காப்பாற்றுதல் உன்னுடைய சுபாவமாக இருக்க, நான் நோவுபடக் கடவேனோ என்கிறார்.

ஞாலத்தூடே நடந்தும் – 1எப்பொழுதும் காணக்கூடியவர்கள் முன்னே நடக்கக்கடவ நடையை, யாதானும் ஒரு காலத்தில் வந்தாலும் பாராதவர்கள் முன்னே காணும் நடப்பது; குருடர்களுக்கு முன்னே நடக்குமாறு போலே2“ஸ்ரீராமபிரான் முன்னே நடந்து சென்றார்” என்றும், 3“பின்னர் விஷ்ணுவானவர் மனித உருவத்தோடு சக்கரவர்த்தித் திருமகனாய் வீரராய் மஹாபல முள்ளவராய் இராமன் என்ற பிரசித்தியுடையவராக இந்தப் பூமியில் சஞ்சரித்தார்” என்றும் சொல்லுகிறபடியே, நடந்தும்.

தண்ணீர் குடிக்கக் கல்லின ஏரியிலே தலைகீழதாக விழுந்து சாவாரைப்போலே தன் குற்றத்தால் கெட்டானத்தனை காண் வாலி என்றாள் அன்றோ!

ராமேண ஸரை: நிஹதம் த்ரஷ்டும் ந இச்சாமி”–இருத்திப் பிடித்த வில்லும், தெரித்துப் பிடித்த பகழியுமாய்க் கொண்டு நிற்கும்போது அபிராமராய் அன்றோ இருப்பது; அவ்வழகைக் கண்டு அநுபவிக்கமாட்டாமல், தண்ணீர் குடிக்கக் கல்லின ஏரியிலே தலைகீழதாக விழுந்து முடிவாரைப்போலே, தயரதன்பெற்ற மரகத மணித்தடத்தை எதிரிட்டு முடிந்துபோக நான் காணமாட்டுகிறிலேன்.

திருக்கையைத் தலைக்கு அணையாகக்கொண்டு பகைவர்களை அழிக்கும் பெருமாள் கிழக்குமுகமாகக் கையைக் கூப்பிக்கொண்டு சமுத்திரத்திற்கு நேர்முகமாகப் படுத்தார்” என்கிறபடியே, கடலை வேண்டி நின்று கிடக்கிற கிடைதானே இலங்கை குடிவாங்க வேண்டும்படி இருக்கை. “பிரதிசிஸ்யே-எதிராகப் படுத்தார்” என்கிறதாயிற்று, அரிஸூதந: “மஹோததே”-கடல்தன்னைப் போர அளவு உடைத்தாக நினைத்திருக்குமாயிற்று, அதற்காக, ஒரு கடல் ஒரு கடலோடே பொறாமை கொண்டு கிடந்தாற்போலே இருக்கை; “கருணையங் கடல் கிடந்தது கருங்கடல் நோக்கி” என்னும்படி அன்றோ. இருந்தும் உபவிஷ்டம் ஸ்வலங்கிருதம்– 1“அலங்காரஞ்செய்து உட்கார்ந்திருக்கிறவரை” என்றும், 2“பர்ண சாலையில் எழுந்தருளியிருக்கிற சடையோடு கூடிய இராமனை” என்றும் சொல்லுகிறபடியே இருக்கை.அபித: பாவகோபமம்”- 2திருவயோத்தியி லிருக்கும் பேரோலக்கம் சிறியது” என்னும் படியன்றோ தனியிடத்தில் ஓலக்கம் இருந்தபடி. அந்த ஓலக்கத்தில் கிட்டும் தம்பிக்கும் கிட்ட ஒண்ணாதபடி அன்றோ இந்த ஓலக்கம் இருந்தபடி: “சுற்றிலும் நெருப்புப்போல் இருக்கிறவரை” என்கிறபடியே, நெருப்பு எரியா நின்றால் கிட்டப்போகாதவாறு போலே கிட்டுதற்கு அரியராயிருந்த இருப்பு.

அஞ்சலிம் ப்ராங்முக: க்ருத்வா ப்ரதிஸிஸ்யே மஹோததே:
   பாஹு ம் புஜகபோகாபம் உபதாய அரிஸூதந:”  என்பது, ஸ்ரீராமா. யுத். 21 : 1.

உடஜேராமமாஸீநம் ஜடாமண்டலதாரிணம்
  க்ருஷ்ணாஜிநதரம் தம்து சீரவல்கலவாஸஸம்
  ததர்ஸ ராம மாஸீநம் அபித: பாவகோபமம்”–  என்பது, ஸ்ரீராமா. அயோத். 99 : 25.

தம்பிமார் மஹாராஜர் மைந்தர் துவிவிதர்கள் உள்ளிட்ட முதலிகள் எல்லாரும் இலங்கையிலே கிட்ட, ஆகாசம் எல்லாம் வெளிக் காவல் அடைத்து, நிதி நோக்குவாரைப்போலே பெருமாளை நோக்கிக்கொண்டு கிடக்க, இவர்கள் இத்தனைவரும் கண் சோர்ந்த அளவிலே, பெருமாள், தாம் கையும் வில்லுமாய்க் கொண்டு இவர்களுக்குப் புறம்பே நின்று உலாவினார் அன்றோ.

கோலம் திருமாமகளோடு உன்னைக் கூடாதே – 2தாயும் தமப்பனும் கூட இருக்கக் கிட்டப்பெறாதே, பால் குடிக்கும் குழந்தை நாக்கு ஒட்டிக் கிடந்து துடிக்குமாறு போலே இருக்கிறது காணும். 3“வேறாகாதவள்” என்கிறபடியே, அவனும் அவளுமான சேர்த்தி யன்றோ இவர்க்குப் பேறு.

இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய் – 3கண்ணாலே காணில் சிவிட்கு என்னுமவர்களுக்கு, அவர்கள் காண ஒண்ணாதபடி மறைந்து வசிக்கின்றவனே! சிற்றின்பத்திலே ஈடு பாடுடைய ஒருவன் ‘தாய் முகத்திலே விழியேன்’ என்றால், தான் மறைய நின்று அவன் உகந்தாரைக்கொண்டு ரக்ஷிக்கும் தாயைப்போலே4“அதாவது, சிசுபாலன் முதலாயினோர் நறுகுமுறுகு என்றால், அவர்கள் கண்களுக்குத் தோற்றாதபடி அந்தர்யாமியாய் நின்று நோக்கும்படி-மறைந்து–கோபிக்கும்; அல்லது,  அசூயைப்படும்.

அசுணமா என்று சில பறவைகள் உள்ளன; அவை பிடிகொடா ஒன்றுக்கும்; அவற்றைப் பிடிக்க நினைத்தார் முற்படப் பாடுவார்கள்; அதுகேட்டு நெஞ்சுநெகிழும்; பின்பு பறையை அடிப்பார்கள்; இதன் வன்மையாலே பட்டுக் கிடக்குமாம். அதுபோலே, இவர் பகவானுடைய குணங்களிலே நைந்தபடி. இதர விஷயங்களைக் கேட்ட அளவிலே முடியும்படி ஆனார்

சீறா எறியும்’ என்கிறார். என்றது. இவை முடிந்துபோகச் செய்தேயும் கொண்ட 1குதை (உத்யோகம்; முயற்சி.)மாறாமல், இரை பெறாத பாம்புபோலே ஒளி விடாநிற்கும். 

செந்தீ மலரும் திருவேங்கடத்தானே – சேறுகள் ஆர்ந்துள்ள சுனைகளிலே தாமரைகளானவை செந்தீப்போலே மலராநிற்கும். 1எண்ணெயாலே எரியும் விளக்கு ஒழிய, நீராலே எரியும் விளக்குக் கண்டு அநுபவிக்கக் காணும் இவர் ஆசைப்படுகிறது; 2நீரிலே நெருப்பு எழுந்தாற்போலே காணும் இருக்கிறது. 

இமையோர் அதிபதியே – 2மதுவிரதம் போலே, இந்த அமிருதமே ஜீவனமாக இருக்குமவர்கள்.

தீ வாய் வாளி – 1பெருமாள் தொடுத்து விடும்போதாயிற்று அம்பு என்று அறியலாவது; படும்போது நெருப்புப் பட்டாற்போலே இருக்கை. ஸ்ரீகோதண்டத்தில் நாணினின்றும் கழிந்து செல்லும் போது காலாக்னி கவடுவிட்டாற் போன்று எரிந்துகொண்டு செல்லாநிற்கும். குணஹீநமானால் இருக்கும்படி அன்றோ இது.

தீப்த பாவக ஸங்காஸை: ஸிதை: காஞ்சநபூஷணை:
   ந்த்வாம் இச்சாமி அஹம் த்ரஷ்டும் ராமேண நிஹதம்ஸரை:”– என்பது, ஸ்ரீராமா. யுத். 16 : 22. இராவணனைப் பார்த்து விபீடணன் கூறியது.

வைதேஹீ – உபாத்தியாயர்கள் பெண்பிள்ளைகளுக்குச் செவி ஏற்றாலே ஓத்து போயிருக்குமாறு போலே, வீரவாசி அறியும்

பொருந்துமாறு புணராயே – 2அசோகவனத்திலே இருந்த பிராட்டியைப் போலே காணும் தம்மை நினைத்திருக்கிறது; புணராய் – உன்னைக்கிட்டும் வழி கல்பிக்கவேணும் என்னுதல்; நான் கிட்டும்படி செய்யவேணும் என்னுதல்.

இமையோர்கள் இனம் இனமாய் நின்று எந்நாளும் ஏத்தி இறைஞ்சி – நித்தியசூரிகள் காலமெல்லாம் நின்று துதிசெய்து பின்னைத் திருவடிகளிலே விழுந்து, கிண்ணகத்தில் இழிவாரைப் போலே திரள்திரளாய்.

உன பாதம் காண நோலாது ஆற்றேன்3உன் திருவடிகளைக் காண்கைக்கு ஒரு சாதன அநுஷ்டானம் செய்யாதிருக்க, கணநேரமும் ஆற்றமாட்டுகிறிலேன். என்றது, சாதனத்தைக் கண்ணழிவு அறச் செய்து பலம் தாழ்ப்பாரைப் போலே படாநின்றேன் என்றபடி

கறைகொண்ட கண்டத்தான் சென்னிமேல் ஏறக் கழுவினான் – அடக்கமில்லாமல் செருக்குக்கொண்டு திரியும் பிள்ளைகள் தலைகளிலே ஸ்ரீ பாத தீர்த்தம்கொண்டு தெளிப்பாரைப் போலே’.

அலர்மேல்மங்கை5அவனை, (நஜீவேயம்க்ஷணமபி” என்பது, ஸ்ரீராமா. சுந். 66 : 10.)“பிரிந்து கணநேரமும் ஜீவித்திருக்கமாட்டேன்” என்னப் பண்ணவல்ல இனிமையையும் பருவத்தையுமுடையவள். 6பரிமளந்தான் ஒரு வடிவு கொண்டாற்போலே இருக்கை.

மலரில் தள்ளத் தக்கனவான தாதும் சுண்ணமும் கழிந்த பரிமளமே வடிவானாற்போலே இருந்துள்ள மிருதுத்தன்மையும், எப்பொழுதும் அநுபவிக்கத் தக்கதான பருவமுமுடையவள். 4அவனை ‘அகலகில்லேன்’ என்னச் செய்யவல்ல பரிகரத்தையுடைய இவள், ‘அகலகில்லேன்’ என்கிறாள் அன்றோ. 5அவன் மார்வின் சுவடு அறிந்த பின்பு, பிறந்தகமான பூவும் நெருஞ்சி முள்ளினைப் போன்றதாயிற்றாதலின் ‘உறைமார்பா’ என்கிறது. என்றது

ஒளி, ஒளியையுடைய பொருளுக்குச் சேஷமாய் நின்றே அத் தலைக்கு நிறம் கொடுக்குமாறு போலவும், வாசனை, மலருக்குச் சேஷமாய் நின்று பெருவிலையன் ஆக்குமாறு போலவும், ஈசுவரன், சுவாதந்திரியம் குலையாமலே பரதந்திரன் ஆமாறு போலவும் அன்றோ, இவளும் அத்தலைக்கு அநந்யார்ஹ சேஷமாய்க்கொண்டே நிறம் கொடுக்கும்படி

இறையும் அகலகில்லேன்” என்னப் பண்ணுமோ? என்ன, விலை உயர்ந்ததான இரத்தினம் ஒன்று கிடைத்தால் ‘இது நமக்குத் தொங்குமோ?’ என்று துணுக்குத் துணுக்கு என்னுமவனைப்போலே ‘அவன் மார்விலே இருந்து அகலிற் செய்வது என்?’ என்று 4அஸ்தாநேபயசங்கை பண்ணுகிறாள்

புணர்ச்சிக்கு அங்கமான பிரிவும் (இறுகத் தழுவுவதற்காக  நெகிழ்த்து அணைக்கை. )பொறுக்கமாட்டேன் என்பாள் ‘இறையும் அகலகில்லேன்’ என்கிறாள். என்றது, அவன் உபாயமாமிடத்தில் அங்கத்தைச் (ஆநுகூல்ய சங்கல்பம் முதலானவைகளை)சஹியாத சுணையுடைமை போன்று, புணர்ச்சிக்கு அங்கமான பிரிவும் பொறாத மிருதுத் தன்மையைத் தெரிவித்தபடி.

இவள் பூவினைக் காணாதவாறு போன்று- ஸ்ரீ ஜனகராஜன் திருமகள் பெருமாளைக் கைப்பிடித்த பின்பு ஸ்ரீ மிதிலையை நினையாதவாறு போலே. திருமார்விற்கு அவ்வருகே வேறு அவயவங்களைக் காணாளாதலின் ‘உறைமார்பா’ என்கிறது.

இருட்டு அறையிலே விளக்குப்போலே, பரமபதத்திற் காட்டிலும் 2“கானமும் வானரமும்” என்கிறபடியே, எத்தனையேனும் தாழ்ந்தார்க்கும் முகம் கொடுக்கிற சீலம் முதலான குணங்கள் இங்கே உள்ளன ஆகையாலே, அங்கே இல்லாததும் இங்கே பெறுகையாலே, ‘விரும்பும் திருவேங்கடத்தானே’ என்கிறது,

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading