ஸ்ரீ ஈட்டில் வியாக்கியானத்தில் வந்துள்ள உவமைகள் –ஏழாம் பத்து –

சம்சாரத்தின் சுபாவத்தை நினைத்துப் போக்கடி அற்று அவ்வடியைப் பற்றிச் சரணம் புக்கார்; புக்க இடத்திலும் தாம் விரும்பிய காரியத்தைச் செய்யாமையாலே, சரணம் புக்கார் மேலே வேல்காரரை ஏவித் துன்புறுத்தும் அருளற்றவரைப்போலேயாக அவனை நினைத்து அஞ்சினவராய், இவ்வளவிலும் பலிக்கக் காணாமையாலே, ‘வைப்பனாக வைத்த பிரஹ்மாஸ்திரம் வாய்மடிந்ததுகாண்! என்று கூப்பிடுகிறார்.

இங்ஙனே இருக்கக்கடவ இவர், அவன் தலையிலே குறையை ஏறிட்டுக் கூப்பிடுகிறார் அன்றோ அந்த நிலை விளைகையாலே? 2‘இவர் தாம் தம்மாலே வந்ததனை அவன் தலையிலே ஏறிடுவான் என்?’ என்னில், சம்பந்தத்தை உணர்ந்தால், இத்தலையாலே வந்ததனையும் அவன் பக்கலிலே ஏறிடலாய் இருக்கும் அன்றோ? குழந்தை கிணற்றிலே விழுந்தால், ‘தாயானவள் தள்ளினாள்’ என்னககடவாதாயிருக்கும். என்றது. ‘தாயானவள் கண்களிலே வெண்ணெய் இட்டுப் பார்த்திருந்தாளாகில் இக்குழந்தை விழுமோ? இவள் நோக்காமை அன்றோ கேடுற்றது?’ என்று கொண்டு அவள் தலையில் குறை சொல்லக் கடவதாய் இருக்கும் என்றபடி. 3உதங்கன் கிருஷ்ணன் பக்கலிலே வந்து, ‘உனக்கு இரு திறத்தாரோடும் சம்பந்தம் ஒத்திருக்கச் செய்தே, பாண்டவர்களை அழிக்காமல் துரியோதனாதியர்களை அழித்தாய்; இப்படிச் சார்வு செய்யப்போமோ?’ என்றாற்போலே வார்த்தைகள் சிலவற்றை அவன் சொல்ல, கிருஷ்ணனும் அவர்கள் குறைகளை எல்லாம் சொல்லி, ‘அவர்கட்குத் தருமத்தில் ருசி இல்லைகாண் என்ன, ‘நீ பின்னை அவர்களுக்குத் தருமத்தில் ருசி உண்டாக்கிக் கொடாது ஒழிவான் என்?’ என்றான் அன்றோ?

முதலிகள் அடங்கலும் அரக்கர்கள் வாயிலே கிடந்து பெருமாளைச் சரணம் புக்காற்போலே, இவரும் மனம் ஆளும் ஓர் ஐவர் வன்குறும்பரான இந்திரியங்களுக்குப் பயப்பட்டுக் கூப்பிடுகிறார். 2பிரியமான ஜனங்களைப் பாராதவளும், அரக்கியர்களின் கூட்டத்தைப் பார்ப்பவளும், தன் கூட்டத்தால் விடப்பட்டதும் நாய்க்கூட்டத்தால் சூழப்பட்டதுமான பெண் மான் போன்றிருப்பவளும்’ என்கிறபடியே, ஸ்ரீஜனகராஜன் திருமகள் பட்டது படுகிறார்.

ராக்ஷஸை: வத்யமாநாநாம் வாநராணாம் மஹாசமூ:
        ஸரண்யம் ஸரணம் யாதா ராமம் தஸரதா த்மஜம்’–என்பது, ஸ்ரீராமா. யுத். 94 : 17.

ப்ரியம்ஜநம் அபஸ்யந்தீம் பஸ்யந்தீம் யராக்ஷஸீகணம்
        ஸ்வகணேந ம்குகீம் ஹீநாம் ஸ்வகணை; ஆவ்ருதாமிவ’–என்பது, ஸ்ரீராமா. சுந். 15 : 24.

  ‘மயிலி யற்குயின் மழலையாள் மானினம் பேடை
        அயிலெ யிற்றுவெம் புலிக்குழாத் தகப்பட்ட தன்னாள்’–என்பது, கம்பரா. சுந். காட்சிப். 4.

பிள்ளை திருநறையூர் அரையர் 1‘இப்பாசுரங்களில் முன் அடிகள் இரண்டும்(குணாநுசந்தான பரமாக), புலியின் வாயிலே அகப்பட்ட குழந்தை தாய் முகத்திலே விழித்துக்கொண்டு புலியின் வாயிலே கிடந்து நோவுபடுமாறு போலே இருக்கிறது,’ என்று பணிப்பர்

விடுநகம் கட்டுவாரை ‘நெகிழக்கட்டினாய்’ என்று உறுக்கிக் கட்டுவிப்பாரைப் போலே, ‘இந்திரியங்கள் தண்ணளி செய்யாமே ஒக்க இருந்து நலிவிக்கிறான்’ என்றிருக்கிறார். —விடுநகம் – கிட்டிக்கோல். இவை
நலிகிறபோது இறைவன் அண்மையிலிருக்கிறானாகையாலும், இருடிகேசனாகையாலே  தடுப்பதற்கு ஆற்றலுள்ளவனாகையாலும், துன்புறுத்தாதபடி செய்தல் தகுதியாயிருக்க,  அது செய்யாமையாலே, ‘இவனே துன்புறுத்துகிறான்’ என்னலாம் என்பது  இவ்வாக்கியங்களுக்குக் கருத்து.விடுநகங்கட்டி நலியாநிற்கச்செய்தே ‘தண்ணீர்’ என்பாரைப்போலே, அவன் குணங்களைச் சொல்லுகிறபடி. இமையோர்கள் ஏத்தும்–தன்னால் அல்லது செல்லாதாரை ஒருவன் போகட வல்லபடியே என்று’ கொண்டாட ஒரு விபூதி உண்டாவதே! 3அவர்கள் முகங்கொடுக்கையாலன்றோ அவன் இங்கு வாராதிருக்கிறது?’ என்றிருக்கிறார். 4திரிசங்குவினுடைய ஓலக்கம் கிளர்ந்தாற்போலே கிளர்ந்ததாகில், அவனுக்கு என்னை விட்டிருக்கப்போமோ?

என்னை ஆளும் வன் கோ – 1என்னை நோக்குவாய் நீயாய், பணி கொள்வார் வேறே சிலர் ஆவதே! அத்தலை இத்தலை ஆயிற்றுக் காண். 2ஈஸ்வரன் என்பான் ஒருவன் உண்டாய், அவனுக்கு ஆத்துமா சேஷமாய், அவனுக்கு மனம் அந்தரங்கத் துணையாய், அதற்கு இந்திரியங்கள் சேஷமாகை தவிர்ந்து கலகத்தில் பள்ளிகள் போலே என்னை இந்திரியங்கள் ஆளும்படி ஆவதே!

இவை பெய்து 2அவற்றின் பக்கல் குறை உண்டோ? அவற்றை இட்டு நலிவிக்கிறாய் நீ அல்லையோ? 3ஸ்ரீபிரஹ்லாதனை பாம்புகளைக் கூட விட்டுக் கட்டி நலிந்தாற்போலே இருக்கிறதுகாணும், இவற்றை உண்டாக்கி என் பக்கலிலே நீ விட்டது

உன்னை அனுபவிக்க வேணும் என்று போந்த பிராட்டியை மாயமானைக் காட்டிப் பிரித்து, ஒற்றைக்கண்ணன் ஒற்றைக்காதள் இவர்கள் கைகளிலே காட்டிக்கொடுத்து, உன்னைக் கொண்டு அகன்றாற்போலே

உன்னடிப்போது நான் அணுகா வகை செய்து – உன் திருவடிகளாகிற செவ்விப்பூக்களை நான் கிட்டாதபடி செய்து. என்றது, 4மயிர் கழுவி இருக்கிறவனைச் செவ்விப்பூச் சூடாமல் தடுப்பாரைப் போலே’ என்றபடி

ஆழ்வாராகிய தாம் திருவடிகளை  அடைவது எப்போதோ என்று பிரபத்தி செய்திருக்கிற தன்மையை நினைத்து, ‘மயிர்  கழுவி இருக்கிறவனை’ என்கிறார். இப்படி இருக்கிற தமக்கு, ஈஸ்வரன் தன்   திருவடிகளில் அனுபவ கைங்கரியங்களைக் கொடாமையைத் திருவுள்ளம் பற்றிச்  ‘செவ்விப்பூச்சூடாமல் தடுப்பாரைப் போலே’ எனகிறார்.

போதி கண்டாய் – 1கூட நிற்கில் இவை எல்லாம் பட வல்லேன்காண்! 2கூடநிற்கில் கண்ணோட்டம் பிறக்கும்’ என்று கடக்கப் போவாரைப் போலே போனாள். 

விண்ணுளார் பெருமானேயோ– 2ஒருவன் சிறை இருக்க, தாயும் தந்தையும் உடன் பிறந்தார்களுமாய்க் கலியாணம் செய்யக்கண்டு தான் கூடப் பெறாதே நோவுபடுமாறு போலே நித்தியசூரிகளும் அவனும் பிராட்டியுமாகப் பரமபதத்திலே இருக்கிறபடியே நினைத்து அங்கே கேட்கும்படி கிடந்து கூப்பிடுகிறார். 3ஹா ராம! ஹா லக்ஷ்மண! ஹா ஸூமித்ரே!’ என்று பிராட்டி தனியே கிடந்து கூப்பிட்டாற்போலே, பரமபதத்திலே இருப்பும் அணி கலங்கும்படி கூப்பிடுகிறார்.

ஹா ராம ஹா லக்ஷ்மண ஹா ஸூமித்ரே
         ஹா ராமமாத: ஸஹமே ஜநந்யா’–
என்பது, ஸ்ரீராம. சுந். 28:8.

‘நிருதாதியர் வேரற நீண்முகில்போல்
        சரதாரைகள் வீசினர் சார்கிலிரோ?
        வரதா! இளை யோய்! மறு வேதுமிலாப்
        பரதா! இளை யோய்! பழி பூணுதிரோ?’–என்பது, கம்ப, சடாயு உயிர் நீத்த பட. 79.

சுமுகன் என்கிற பாம்பு திருவடிகளிலே சென்று கிட்ட, பெரிய திருவடி ஓடிச்சென்று, ‘எனக்கு உணவாக இருக்கிற இதனைக் கைக்கொண்டு நோக்குவதே!’ என்று வெறுத்து, ‘தேவரீரையும் நாய்ச்சிமாரையும் நெடுங்காலம் தாங்கிக் கொண்டு திரிந்தேன்: நான் ஏன் பெற்றேன்?’ என்றதனைத் தெரிவித்தபடி. 4இதுவன்றோ சம்சாரத்தின் தன்மை இருக்கிறபடி? 5அவன் தான் அவதரித்துச் சோகிப்பது மோகிப்பதானாற்போலே ஆயிற்று இவர்களும்.

நஞ்சு சோர்வதோர் வெஞ்சின அரவம்
        வெருவி வந்துநின் சரணெனச் சரணா
        நெஞ்சில் கொண்டுநின் அஞ்சிறைப் பறவைக்கு
        அடைக்கலம் கொடுத்து அருள் செய்த தறிந்தும்’–என்னும் திருப்பாச்சுரத்தால் உணர்தல் தகும். பெரிய திருமொழி, 5. 8:4.

இரட்சகனான நீ விட்டிலையாகில், மஹாராஜர் வாலியை வென்றாற்போலே நானும் இந்திரியங்களை வெல்லேனோ?’ 6‘அந்த மனத்தினை அடக்குதல் காற்றை அடக்க முடியாதது போலச் செய்ய முடியாத காரியமாக நான் நினைக்கிறேன்,’ என்றான் அன்றோ? என்றது, ‘காற்றை ஓரிடத்தில் கட்டிவைக்கில்,’ அன்றோ மனத்தினை நியமிக்கலாவது?’ என்றபடி.

சுமடு தந்தாய் – உன் பக்கலினின்றும் அகற்றி விஷயங்களிலே கொடுபோய் மூட்டக் கூடியதான சரீரத்தைத் தந்தாய்; என்னை அனுபவிக்கைக்கு உறுப்பாக போமாறுபோலேயாயிற்று, பகவானுடைய அனுபவத்துக்கு ஈடாகக் கொடுத்த சரீரம் இந்திரியங்களுக்குப் பணி செய்யும்படியாய்விட்டது. சுமடு – சும்மாடு. சரீரமாகிற சும்மாட்டைத் தந்தாய்.ச் சரீரத்தைத் தந்தாயானாய் நீ; அதுதானே எனக்கு இழவுக்கு உடலாயிற்று. 2இராஜபுத்திரன் தலையில் முடியை வாங்கிச் சும்மாட்டைக் கொண்டு வழியிலே நின்றால், அடி அறியாதார் சுமை எடுத்துக்கொண்டு போமாறுபோலேயாயிற்று, பகவானுடைய அனுபவத்துக்கு ஈடாகக் கொடுத்த சரீரம் இந்திரியங்களுக்குப் பணி செய்யும்படியாய்விட்டது.

திசை திசை வலித்து-இவர்கள் அனைவரும் ஒரு திக்கிலே போக இழுத்தார்களாகில்தான் மெள்ளப் போகேனோ? எற்றுகின்றனர்-உடையவனாகிலன்றோ போக்குவிட்டு நலிவது? வலியில்லாதான் ஒருவன் தலையிலே மிக்க பாரத்தைச் சுமத்திச் சுற்றும் நின்று தந்தாம் வழியே இழுத்துக்கொண்டுபோகத் தேடுமாறு போலே காணும் இவையும்.

தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் – 1விஷயங்களையும் இந்திரியங்களையும் நினைத்த நெஞ்சாரல் தீர, சேஷத்துவத்தினுடைய எல்லை நிலத்திலே போய் நிற்கிறார்; 2தாபத்தாலே வருந்தினவன் மடுவிலே தாழ இழியுமாறு போலே.

பிற்பாடு பொறுக்கமாட்டாத இவரை வைக்கப் போருமோ?’ என்னில், குழந்தைகளைப் பட்டினி இட்டு வைத்தும் வந்த விருந்தினரைப் பேணுவாரைப் போல, ‘இவர்தாம் நான்கு நாள்கள் நோவு பட்டாராகில் படுகிறார்; இவருடைய பிரபந்தத்தைக் கொண்டு உலகத்தை வாழ்விப்போம்,’ என்றிருந்தான்

பெருமாளும், மீளாமைக்குக் காரணமாயிருப்பன பலவற்றை அவனுக்குச் சொல்லி, ‘பிள்ளாய்! நீ நிர்ப்பந்திக்கக் கடவையல்லை: உன்னைச் சுவதந்திரனாக்கி வார்த்தை சொன்னார் எதிரே, உன் சொரூபத்திற்குத் தகுதியான பாரதந்திரியத்தைப் பெற்று நீ போ,’ என்று சொன்னாற்போலே, இவர் விரும்பியது ஒழிய ஏதேனும் ஒன்றனைக் கொடுத்துப் போகட்டுப் போக வல்லான் ஒரு சுவதந்திரன் அல்லனோ? ஆகையாலே, தான் நினைத்த போது காரியம் செய்யக் கடவனுமாய் இருப்பன் அன்றோ

இப்பெண் பிள்ளை மோகித்துக் கிடக்க, இவளைக் கண்டு உறவு முறையார் அடங்கலும் மோகித்துக் கிடக்க; 3பெருமாளைக் காட்டிலும் இளையப்பெருமாளுக்குத் தளர்த்தி உண்டாயிருக்கச் செய்தே, பெருமாளுடைய இரட்சணத்துக்காக இளையப்பெருமாள் உணர்ந்திருக்குமாறு போலே, திருத்தாயாரும் இவளுடைய இரட்சணத்துக்காக உணர்ந்திருந்து, எந்த நிலையிலும் தங்கள் காரியம் தலைக்கட்டும் குடியாகையாலே, பெரிய பெருமாள் திருவடிகளிலே இவளை இட்டு வைத்துக்கொண்டிருந்து, ‘இவள் அழுவது, தொழுவழு. மோகிப்பது, பிரலாபிப்பது, அடைவு கெடப் பேசுவது, நெடுமூச்சு எறிவது, அது தானும் மாட்டாது ஒழிவது, தன்னை மறந்திருப்பது, இப்படி அரதி விஞ்சிச் செல்ல நின்றது; இவள் திறத்தில் நீர் என் செய்யக் கடவீர்?’ என்று கூப்பீடாய்ச் செல்லுகிறது, 4எல்லா அளவிலும் அவனையே பரிகாரம் கேட்கும் குடியே அன்றோ?

என்றும் சிறைக்கூடத்திலே பிறந்து வளர்ந்தாரைப் போலே பிரிந்த நாள்களில் இழவேகாணும் இவள் நெஞ்சிலே பட்டுக்கிடக்கிறது.

கூரார் ஆழி வெண்சங்கு ஏந்தி வாராய். என்னக் கணிசித்து, வலி இல்லாமையாலே தலைக்கட்ட மாட்டாதே, விடாயன் கையை மடுத்துத் தண்ணீரை வேண்டுமாறு போலே, குறையும் அஞ்சலியாலே தலைக்கட்டாநின்றாள்.

இவள்படி பேச்சுக்கு நிலம் அல்லாமையாலே காட்டுகிறாள். என்றது, ‘இராக்கதர்கள் தின்ற உடம்பைக் காட்டினாற்போலே, விரஹம தின்ற உடம்பைக் காட்டுகிறாள்’ என்றபடி

வானமே நோக்கும் – 4‘மணிவண்ணா’ என்னும் துயர ஒலி கேட்டிருப்பதற்குச் சத்தன் அல்லன், ஒலி வழியே ஸ்ரீகஜேந்திராழ்வானுக்கு வந்து தோன்றினாற் போலே தோன்றி யருள்வான் என்று ஆகாயத்தையே பாரா

ஒருகால் செய்தது கொண்டோ?’ என்ன, கண்ணனே – ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமியர்களுக்கு உன்னைக் காட்டிற்றிலையோ? 4தாஸாம் ஆவிரபூத்ஒரு நீர்ச்சாவியிலே ஒரு பாட்டம் மழை விழுந்தாற்போலே இருக்கை. 

தாஸாம் ஆவிரபூத் சௌரி: ஸ்மயமாக முகாம்புஜ:
        பீதாம்பரதர: ஸ்ரக்வீ ஸாக்ஷாத் மந்மத மந்மத;’–என்பது, பாகவதம், 10. 32:2.

வாராக வாமன னேயரங் காவட்ட நேமிவல
    வாராக வாஉன் வடிவுகண் டால்மன் மதனும்மட
    வாராக ஆதரம் செய்வன்என் றால்உய்யும் வண்ணமெங்கே
    வாராக வாச முலையேனைப் போலுள்ள மாதருக்கே?’–
என்பது, திருவரங்கத்தந்தாதி.

எழுந்து உலாய் மயங்கும்- 1அவியும் விளக்குக் கிளர்ந்து எரியுமாறு போலே அடி அற்ற எழுச்சியும் அடி அற்ற உலாவுகையுமாய் இராநின்றது; 2அது கிளர்ந்து எழுந்தவுடனே அவியுமாறு போலே மயங்காநின்றாள்

கடல் வண்ணா கடியைகாண் என்னும்-6‘கடல் எல்லாப் பொருள்களையும் தன்னுள்ளே அடக்கி, ஒன்றை ஒன்று நலியாதபடி நோக்குமாறு போலே, எல்லாப்பொருள்களையும் காப்பாற்றுகின்ற நீ அருள் இல்லாதவன் ஆனாய்’ என்னும். அன்றிக்கே, ‘பிரிந்தார்க்குத் தரிக்க ஒண்ணாதபடியான வடிவு படைத்த நீ கொலைஞன் ஆகாநின்றாய்’ என்னும் என்னுதல்.

பிரஹ்ம ஹத்தியைகளைச் செய்து பூணூலை வெளுக்கவிட்டுக் கையிலே பவித்திரத்தையுமிட்டு ஓத்துச் சொல்லித் திரிவாரைப்போலே இருந்ததே உம்முடைய படி’ என்றபடி. செழுநீர்த் திருவரங்கத்தாய் – சிரமத்தைப் போக்கும்படியான நீரையுடைய கோயில். 2தண்ணீர்ப் பந்தலிலே கொலைஞர் தங்கினதைப் போன்றதேயன்றோ நீர் இவ்வூரில் சாய்ந்ததும்?

புழுகூற்றிச் சட்டம் போகடுவாரைப் போலே

வெய்ய வாள் தண்டு சங்கு சக்கரம் வில் ஏந்தும் விண்ணோர் முதல் என்னும்- 3திவ்ய ஆயுதங்கள் பகைவர்களை அழிப்பதற்கு உடலாக இருக்குமாறு போலே காதலிகளை அழிக்கைக்கும் உடலாக இருக்குமன்றோ உகப்பாரையும் உகவாதாரையும் ஒக்கத் தோற்பிக்குமவை? 4முன்னே கைகண்டு வைக்கிறவை அன்றோ?

என்னுடையக் கோமளக்கொழுந்து – கலக்கப் பொறாத மிருதுத் தன்மையையுடைவள் பிரியப் பொறுக்குமோ? 5தசை முறுகினால் வைத்தியர்கள் முகம் பாராதவாறு போலே, மகள் அவஸ்தையைக் கண்டு தளர்ந்து பெரிய பெருமாள் முகம் பாராமலே வார்த்தை சொல்லுகிறாள்’ என்று அருளிச் செய்வர் சீயர்.

அறா-தீர்த்தம் கொடுத்த பிற்றை நாளே திருமுளைச் சாத்தாநிற்குமத்தனை. 7சமந்தகமணி கைப்பட்ட பின்பு அக்குரூரன் அடுத்து அடுத்து அஸ்வமேதம் செய்தாற் போலே, அவர்க்கும் அடுத்து அடுத்துத் திருவிழாவாகச் சொல்லுகிறதித்தனை

‘மாட்டேன்’ என்ற உறைப்பாலே. 5சம்சாரிகள் ஐம்புல இன்பங்களினின்றும் மீளமாட்டாதவாறு போலே அன்றோ, இவர் பகவத் விஷயத்தினின்றும் மீளாமாட்டதபடி?

செங்கனி வாயின் திறத்ததுவே – 5கிண்ணகத்தில் ஒரு சுழியிலே அகப்படுவாரைப்போலே, வாய்க்கரையிலே அகப்பட்டது; 6ஆசைப்பட்ட விஷயத்தைக் கரை கண்டது ஆகில் அன்றோ மீளுவது?(கிண்ணகம் – ஆற்றுப்பெருக்கு.
வாய்க்கரை-அதரம். ‘மேல்’ என்பது, தொனிப்பொருள்.)

‘செங்கனி வாயின் திறத்ததாயும், செஞ்சுடர் நீண்முடி தாழ்ந்ததாயும், சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும், தாமரைக்கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும், நெஞ்சும் நாணும் நிறையும் இழந்ததுகாண்!’ என்கிறாள் திருப்பாற்கடல் கடைகிற காலத்தில் தான் எட்டு வடிவு கொண்டாற்போலேகாணும், இதுவும் விஷயத்திற்குத் தகுதியாகப் பல வடிவு கொள்ளுகிறபடி,’

இழந்த எம் மாமைத் திறத்துப் போன என் நெஞ்சினரும் அங்கே ஒழிந்தார் – (திறம்’ என்பதற்குக் கூட்டம் என்று பொருள் அருளிச்செய்யத் திருவுள்ளம் பற்றிப்   பதப்பொருள் அருளிச்செய்கிறார்)5நிறம் தொடக்கமாக இழந்தவை அடைய மீட்பதாகச் சொல்லிப் போன நெஞ்சினரும் அங்கே கால் தாழ்ந்தார். 6வினைத்தலையிலே படை அறுக்குமாறு போலே, வரிசையும் கொடுத்துத் தம்மோடு ஒப்புமையையும் கொடுத்தார். 1‘இந்த விபீஷணன் இராஜாவன்றோ?’ என்னுமாறு போலே, வரிசை பெற்றுத் திரியாநின்றார்.  (வினைத்தலை – போர்த்தலை. படையறுத்தல் – எதிர்த்தலையில் சேனையைத் தன்   வசமாக்கிக்கொள்ளுதல்.)

அவ்விருப்பைக் கண்டு முத்தர் சாமகானம் பண்ணிப் பிரீதிக்குப் போக்கு விடுமாறு போலே. முழங்கு சங்கக் கையன் – 6வேத ஒலியானது ஸ்ரீபாஞ்சஜன்யத்தைக் கிட்டி எதிர் ஒலி எழாநிற்கும்.

ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர் என்னும் இவை மூன்றும் கூடி இருக்கையாலே தண்ணீர் நிறைந்திருத்தலின் ‘கூடுபுனல் திருப்பேரெயில்’ என்கிறது. திருப்பேரெயிற்கே காலம் பெற என்னைக் காட்டுமின்கள் – 3என் விடாய் தீரச் சிரமத்தைப் போக்கும்படியான தேசத்திலே கொடுபோய்ப் போகடப் பாருங்கோள். அன்றிக்கே, ‘அங்குள்ள செந்நெல்லுக்குத் தண்ணீர் தாரகமாய் இருக்குமாறு போலே, இவளுக்கும் அவ்வூரில் காட்சியே தாரகமாய் இருக்கிறபடி’ என்னுதல்.

சிகரம் மணி நெடு மாடம் நீடு தென்திருப்பேரெயில் வீற்றிருந்த – மலைகளின் சிகரங்களைக் கொடுவந்து வைத்தாற்போலே ஓக்கமுடைத்தாய், இரத்தின மயமான மாடங்களையுடைய பெரிதான தென்திருப்பேரெயில் வீற்றிருந்த.

ஆ வ்ரஜந்தம் – 3மலர் மலரும்போது எங்கும் ஒக்கப் பிறக்கும் மலர்ச்சி போலே4அதுவும் வண்டினை நோக்கி அன்றோ மலர்வது? இவரும் அனுபவிக்கின்றவர்களைக் குறித்தே அன்றோ?

ஆழி எழ – 7‘ஆயிரக்காதம் பறப்பதன் குட்டி ஐந்நூற்றுக்காதம் சிறகு அடிக்கொள்ளும்’ என்னுமாறு போலே முற்கோலி வளர்ந்தபடி.

ஆழி எழ – 5தோற்றத்திலே அரசு போராயிற்று; 1ஹேதி ராஜன் அன்றோ? திவ்விய ஆயுதங்களுக்கெல்லாம் பிரதானம் அன்றோ திருவாழி? 2பரிகரம் நிற்க மஹாராஜர் இராவணன் மேலே பாய்ந்தாற்போலே; 3‘பையல் முடியுந்தானுமாய்ப் பெருமாள் திருமுன்பே நிற்பதே! ஈர் அரசு ஆயிற்றோ?’ என்று பொறாமையாலே மேல் விழுந்தார் அன்றோ?

அத ஹரிவரநாத: ப்ராப்ய ஸங்க்ராம கீர்த்திம்
    நிஸிசரபதிம் ஆஜௌ யோஜயித்வா ஸ்ரமேண,
    ககநமதிவிஸாலம் லங்கயித்வா அர்க்கஸூநு:
    ஹரிவரகணமத்யே ராமபார்ஸ்வம் ஜகாம.’–  என்பது, ஸ்ரீராமா. யுத். 40:29

சங்கும் வில்லும் எழ-தூசி ஏறினவர்கள் பொரப் புக்கவாறே நின்ற 2இளவணி கலங்கி மேலே நடக்குமாறு போலே, மற்றை ஆழ்வார்களும் மற்றைக் கைகளிலே ஏறினார்கள்

தண்டும் வாளும் எழ– ‘தூசித்தலையில் அவர்களே 2கை தொடராய்த் தரம் பெற்றுப் போக ஒண்ணாது’ என்று நின்று பேரணியும் குலைந்து மேல் விழுமாறுபோலே; ‘பிற்பட்டோம், கெட்டோம்’ என்று ஒருவருக்கு ஒருவர் படுகிறபடி

அரவு ஊறு சுலாய் மலை தேய்க்கும் ஒலி – வாசுகியினுடைய உடலைச் சுற்றிக் கடைகிற போதைச் சரசரவென்கிற ஒலியும். ஊறு – உடம்பு. சுலாய் – சுற்றி. கடல் மாறுசுழன்று அழைக்கின்ற ஒலி – மந்தர மலைய்க் கொடுபுக்கு நட்டுத் திரித்த போது, 4கீழ்க்கடல் மேற்கடலாய்க் கிடாய்ப் பாய்ச்சல் போலே திரையோடு திரை தாக்கிக் கிளருகிற ஒலியும்

  ஊணுடை மல்லர் ததர்ந்த ஒலி-வலியைப் போரப் பொலியச் சொல்லி வைத்து, ‘ததர்ந்த’ என்கிறார்காணும், 3பசளைக்கலம் நெரித்தாற்போலே வருத்தம் இன்றியே நெரித்தபடியைப் பற்ற.

தன்னோடு ஒக்க ஆறல்பீறலாய் இருப்பது ஒரு தேவதையைப்பற்றி, அரணுக்குள்ளே இருப்பாரைப் போலே திண்ணியனாய் இருந்தானாயிற்று. புருடோத்தமனைப் பற்றி இருப்பாரைப் போலே, கபாலிகந்தரைப் பற்றி நிர்ப்பரனாய் இருந்தான். 4சர்வேஸ்வரனைப் பற்றி ‘எதினின்றும் அஞ்சுகிறான் அல்லன்’ என்று இருப்பாரைப் போன்று எண்ணினான்.

இடராக வந்தென்னைப் புன்சிறு தெய்வங்கள் என்செயுமான்
        இடாரக வன்பிணி மாநாக மென்செயும் யான்வெருவி
        இடராக வன்னி புனல்இடி கோள்மற்று மென்செயும்வில்
        இடராக வன்அரங் கன்திருத் தாள்என் இதயத்ததே.’–
என்பது, திருவரங்கத்தந்தாதி, 39.

இதர ஸஜாதீயனோ!’ என்று இருந்தேன்; ‘கழுத்திலே கயிறு இட்ட பின்புகாண் நான் பூனை என்று அறிந்தேன்’ என்பாரைப் போலே. 

சுனை வாய் நிறை நீர் பிளிறிச் சொரிய-சுனையிடத்து நிறைந்து நிற்கிற நீரானது, நிறைகுடத்தைக் கவிழப் பிடித்தாற்போலே ஒலித்துக் கொண்டு சொரிய. 3ஒரு மழை காக்கப் புக்கு அங்கே பல மழையை உண்டாக்கினபடி

பாதுகாப்பதற்கே உரியனவான பிறவிகளிலே வந்து பிறந்த படியையும், தன் சொரூபம் ரூபம் குணம் முதலானவைகளையும் பிறர்க்கு ஆக்கி வைக்கிறபடியையும், அதற்குக் காரணமான கிருபையைத் தனக்கு வடிவாகவுடைனாய் இருக்கிறபடியையும், கிருபையின் காரியமான செயல்களையும் நினைத்து, முற்றத்திலே பொற்குவியல் புைதைந்து கிடக்க, அதனை அறியாதே மேலே சஞ்சரித்துப் புறங்கால் வீங்குவாரைப் போலே இச்செல்வம் தங்களுக்காக இருக்கச் சம்சாரிகள் புறம்பே போது போக்குவதே!’ என்று ஆச்சரியப்படுகிறார்.

புல் எறும்பு – ஆதி பிறிவிகளிற் கடையான எறும்பு தொடக்கமாக. 4பிரமனை எண்ணினால் பின்பு முடிவில் நிற்கக்கடவது அன்றோ எறும்பு? 5‘புற்பா முதலாப் புல் எறும்பு ஆதி’ என்று இவற்றுக்கு ஒரு முதன்மை சொல்லுகிறார் அல்லர்; ‘ஸ்ரீராமபிரானுடைய திருவுள்ளத்துக்கு முற்பட்டன இவை,’ என்கிறார்; 1வெள்ளமானது தாழ்ந்த இடத்திலே ஓடுமாறு போலே

நான்முகனார் பெற்ற நாட்டுளே நற்பாலுக்கு உய்த்தனன் – 4அரசன் தன் னுடையான் ஒருவனுக்கு ஒரு நாட்டைக் கொடுத்தால் அவனுடைய ஆணையும் ஆஜ்ஞையுமாக அவனுடைய சுவாதந்திரியமே நடக்கும்படி செய்து கொடுக்குமாறு போலே, சம்சாரி சேதநர்க்குத் தலையான பிரமனுக்குக் கையடைப்பான நாட்டுக்குள்ளே, அவன் சுவாதந்திரியத்தையும் தவிர்த்து, இவற்றின் கர்ம பாரதந்திரியத்தையும் தன் குணத்தாலே பதஞ்செய்து, தன்னைப் பெற்ற போது ஜீவிக்கும்படியாய்ப் பெறாத போது உறாவும்படியான தன்மையை உண்டாக்கினான். ஆன பின்பு அவனை ஒழிய வேறேயும் சிலவற்றைக் கற்பரோ?

கோயில் கந்தாடை நாயன், ‘திருவடியும் திருப்பாணாழ்வாரும்  தொண்டரடிப்பொடியாழ்வாரும் கூடி இருக்கிறதற்குக் கருத்துத் தெரியுமோ?’  என்று ஸ்ரீபாதத்து முதலிகளைக் கேட்க, ‘அடியோங்களுக்குத் தெரிந்தது இல்லை,’
என்ன, ஆனால், ‘ந அந்யத்ர கச்சதி’ என்றும், ‘மற்று ஒன்றினைக் காணாவே’  என்றும், ‘அச்சுவை பெறினும் வேண்டேன்’ என்றும் மூவரும் ஏக ப்ரகிருதிகள்  ஆகையாலே கூட எழுந்தருளியிருக்கிறார்கள் என்று அறியக்கடவீர்,’ என்று  பிரசாதித்தருளினார்.

பிரமன் முதலான தேவர்களும், 1‘நீவிர் நாராயணரான தேவர் ஆவீர்’ என்றார்களே அன்றோ? 2ஒருவன் சோற்றை உண்டவர்கள் அவனை ஒழிய வேறு ஒருவர்க்குக் காரியம் செய்வார்களோ?’ என்னுமாறு போலே.

‘கேளாச் செவிகள் செவி அல்ல கேட்டாமே’ என்னா நின்றதே அன்றோ? 5எறும்பு வளையைப் போன்றதே அன்றோ?

இழிந்த துறைகள்தோறும் அழுந்த வல்லார் ஒருவர் அன்றோ? 3ஒவ்வொரு குணத்தை அனுபவிக்கப் புக்கால் வேறு குணங்களில் கால் வாங்கமாட்டாதவாறு போலே ஆயிற்று

ஈஸ்வரன் உலகத்தை அழித்து நெடுங்காலம் பாழ் கூவிக் கிடக்கும்படி இட்டு வைப்பான். பயிர் செய்கிறவன் விளைநிலம் உவர் கழியும்படி நீரைத் தேக்கி வைக்குமாறு போலே, இவற்றினுடைய துர்வாசனை போகைக்காகப் படைத்ததைப் போன்ற காலம் அழித்திட்டு வைப்பன்

தன்பால் ஒரு கோட்டிடைத் தான் கொண்ட – பெரிய பூமியைத் தன் எயற்றிலே 1நீலமணி போலே கொண்ட2தன் திரு எயிற்றிலே ஒரு கூற்றிலே கொண்ட. 3உதாரராய் இருப்பார் நாற்பது பேருக்குச் சோறு இட நினைத்து நூறு பேருக்குச் சோறு சமைக்குமாறு போலே, பாதுகாக்கப்படுகிற பொருள்களின் அளவு அன்று காணும் கொண்ட எயிற்றின் பெருமை

போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பு இவை – பரணி, கூடு வரிந்தாற்போலே, இவ்வாத்துமாவை அறிய ஒண்ணாதபடி சூழப் பொதிந்து கிடக்கிற பிறவிகள், அவை புக்க இடத்தே புகக்கடவ நோய், அங்ஙனேயாகிலும் சிலநாள் செல்லாதபடி இடி விழுந்தாற்போலே நிற்கிற முதுமை, அங்ஙனேயாகிலும் இருக்க உண்ணாதபடி இவனுக்கு விருப்பம் இல்லாத இறப்பு, இவற்றை எல்லாம். பேர்த்து – 5ஈஸ்வரனுக்கு ஒரு விரகு பார்த்துத் தள்ள வேண்டும்படி அன்றோ அவற்றின் கனம், விரகர் நெடுஞ்சுவர் தள்ள மாறுபோலே தள்ளி?

அவனுக்கு அல்லது ஆள் ஆவரோ1மேலே கூறிய குணங்கள் எல்லாம், ‘மண் தின்ன வேணும்’ என்று அழுத குழந்தைக்கு அதனை இட்டு அதற்குப் பரிஹாரம் பண்ணுமாறு போலே ஆயிற்று; இங்கு, இவற்றினுடைய ஹிதமே பார்த்துச் சம்சாரம் தொடக்கமான எல்லாத் துன்பங்களும் மறுவலிடாதபடி போக்கித் தன் திருவடிகளின் கீழே வைத்துக் காத்த பெரிய நீர்மைக்குப் போருமோ மேலே கூறியவை அடங்கலும்?
-மேலே செய்த பரிஹாரங்கள் கிரந்தி கிடக்கச் செய்யும் பரிஹாரம் போலே சம்சாரம் கிடக்கச் செய்த பரிஹாரங்கள் அன்றோ? அது புண் இல்லாதபடி அறுத்து நோக்குவாரைப்போலே இதிற் சொல்லுகிற குணம். 3மேற்கூறியவை சம்சாரிகள் இச்சையாலே செய்தவை; இது ஈஸ்வரன் தன்னிச்சையாலே செய்ததன்றோ?

தெளிவுற்ற ஆயிரம் – 3மலையிலே கலங்கின நீரானது ஒரோ பிரதேசங்களில் வந்து தெளிந்து உபயோகத்திற்குத்தகுதியாமாறு போலே ஒரு சிலரே ஓதத் தகுந்ததாய்க் கூளமும் பாலப்பசினும்போலே ஒன்றே அறுதியிட்டுப் பிரிக்க ஒண்ணாதபடியாயிருக்கிற வேதார்த்தாமானது, எல்லாரும் படிக்கத்தகுந்ததாய் எல்லா ஐயங்களும் தீர்ந்து தெளிந்தது அவர் பக்கலிலே வந்தவாறே.

மிகவும் துக்கித்தவராய்ச் சர்வேஸ்வரனுக்குப் பரமபதத்திலும் இருப்பு அரிதாம்படி ஆர்த்தியாலே நிரம்பிற்று. ஒரு கடல் கையெடுத்துக் கூப்பிடுமாறு போலே கூப்பிடுகிற கூப்பீடு கேட்டு அவ்விருப்புக் குலைந்து வந்து முகங்காட்ட வேண்டும்படி, அவன் 1பிராப்பியனாய் இருக்கிறபடியையும் பிராபகனாய் இருக்கிறபடியையும் விரோதிகளை அழிக்கும் தன்மையனாய் இருக்கிறபடியையும் சொல்லி, கேட்டாரடைய நீராகும்படி பெருமிடறு செய்து கூப்பிடுகிறார்.

படுகொலைக்காரர் கையிலே அகப்பட்டார், ‘தப்ப வேணும்’ என்று பார்க்குமாறு போலே நீங்கள் இங்ஙன் கூப்பிடுகைக்கு நான் செய்த குற்றம் என்?’

தாதுக்களுக்கு இமயமலை போன்று குணங்களுக்குப் பிறப்பிடமாய் இருக்கின்றான், ஒருவராலும் அசைக்கக்கூடாத ஆற்றலையுடையனாயும் இருக்கிறான்,’ என்கிறபடியே, 4தாதுக்களானவை ‘இன்ன மலையிற்பொன்’ என்றவாறே விலை போமாறு போலே, புறம்பே குணங்கள் சிலவற்றைக் கண்டால், பெருமாள் பக்கல் குணம்’ என்று இட்டாயிற்று அங்கு விலை போவது,

ஜ்ஞாந விஜ்ஞான ஸம்பந்நோ நிதேஸே நிரத: பிது:
     தாதுநாம் இவ ஸைலேந்த்ரோ குணாநாம் ஆகரோ மஹாந்’–என்பது, ஸ்ரீராமா. கிஷ். 15 : 21.

என் தாயே’ என்பாரைப் போலே ‘படைத்த பற்ப நாபாவோ!’ என்கிறார்–பாமரு மூன்று உலகும் அளந்த பற்ப பாதாவோ – 5இவற்றை உண்டாக்கி ‘மேல் பட்டது படுகிறது’ என்று இருந்தாயாகில்தான் ஆறி இரேனோ? பெற்ற தாய் வளர்க்குமாறு போலே இவற்றைக் கண்களிலே வெண்ணெய் இட்டுக்கொண்டு நோக்குமவன் அல்லையோ-மஹாபலி போன்றவர்கள் இறாஞ்சினாற்போலே இதனைக் கவர்ந்து கொண்டால் எல்லை நடந்து மீட்டுக் கொள்ளுமவன் அன்றோ நீ?

நிலம் நீர் எரி கால் விண் உயிர் என்ற இவை முதலா முற்றுமாய் நின்ற1பெற்ற பின்பு நோக்குகை அன்றிக்கே, ‘குழந்தையைப் பெற வேணும்’ என்று ஏற்கவே வருந்தும் தாயைப் போலே, படைப்பதற்கு முன்பே இவற்றை உண்டாக்குகைக்காகத் 2திருவ்ருத்கரணத்தை நினைத்துப் பஞ்சீகரணத்தைச் செய்து, இவற்றை அடையப் படைத்து

என்னுடையக் கோவலனே(இன்னார்  தூதன் என நின்றான்) – 2பாண்டவர்களுடைய கோவலன் ஆனாற்போலே ஆயிற்று: இது சீலம் இருந்தபடி.

கருமாணிக்கமே-இது வடிவழகு இருந்தபடி. 1 ‘அழகிது’ என்னில், உலகத்தோடு ஒப்பாம் என்று பார்த்து, வேறு சொல்லாலே சொல்லுகிறாராதல்; அன்றியே ‘தொளையா மணி’ என்கிறாராதல். பொல்லல்-தொளைத்தல். 2 ‘அனுபவிக்கப்படாத இரத்தினம் போலே’ என்றபடி

குறைவு அற்ற நீலப் புகரானது தழைப்ப5கர்மம் காரணமாக வந்தது அல்லாமையாலே மேன்மேலென மிக்கு வருதலின், ‘தழைப்ப’ என்கிறார். –மல்கு நீலம்’ என்றவர், மீண்டும் ‘தழைப்ப’என்றது, ‘இவ்வளவு என்ன ஒண்ணாதபடி மேன்மேலென வளராநிற்கின்றது’ என்றபடி. நெஞ்சுடர்ச் சோதிகள் பூத்து-சிவந்த சுடரையுடைத்தான ஒளியானது காலப்பூ அலர்ந்தாற் போலே பூத்து. ஒரு மாணிக்கம் சேர்வது போல் –அனுபவத்திற்குத் தகுதியாம்படி ஒரு மாணிக்கமானது சாய்ந்தாற்போலே.மல்கு நீலம் சுடர் தழைப்ப’ என்கையாலே, நிறம் இருந்தபடி சொல்லிற்று; ‘நெஞ்சுடர்ச் சோதிகள் பூத்து’ என்கையாலே, திவ்விய அவயங்கள் இருந்தபடி சொல்லிற்று; ‘ஒரு மாணிக்கம் சேர்வது போல்’ என்கையாலே, இரண்டும் பற்றுக்கோடான திருமேனியைச் சொல்லுகிறது.

புற்றுகள் எப்போதும் ஒக்கப் பாம்பு பற்று அறாதவாறு போலே என்றும் ஒக்கு அரக்கர்கள் மாறாதே, ‘மாலி, சுமாலி, மால்யவான்’ என்றாற்போலே சொல்லப்படுகிறவர்கள் வாழ்ந்து போந்தவர்களாய், பெரிய திருவடி முதுகிலே வந்து தோன்றி, அவர்களை அழித்தானாகச் சொல்லக்கடவது அன்றோ? அதனை இங்கே அருளிச்செய்கிறார்

கடிய வினையே முயலும் –கடிய வினைதாயையும் தமப்பனையும் இரண்டு இடங்களிலே ஆக்குவாரைப் போலே அன்றோ, பெருமாளையும் பிராட்டியையும் இரண்டு இடங்களிலே ஆக்கிற்று?

அரி ஏறுபசுக்களின் கூட்டத்தின் நடுவே ஓர் இடபம் செருக்கித் திரியுமாறு போலே, நித்தியசூரிகள் கொண்டாட, அவர்கள் நடுவே அதனாலே செருக்கி மேனாணித்திருக்கும் இருப்பைச் சொல்லுகிறது. 1நித்தியசூரிகள் திரளிலே அந்த ஓலக்கத்தின் நடுவே இருக்கும் இருப்பைக் காண்கை அன்றோ பிராப்பியமாகிறது?

அந்தக் கண்ணபிரான், கிரீடம் கீழே விழும்படி மயிரைப் பிடித்து இழுத்துப் பூமியிலே தள்ளினார்’ என்றதற்குக் கருத்து என்னையோ?’ எனின், ‘இராஜத் துரோகிகளைக் கொல்லும்போது இராஜ சிந்நங்களை வாங்கிக் கொல்லுவாரைப் போலேகாண்’ என்று அம்மாள் பணிப்பர்

சூழவும் தாமரை நாண்மலர் போல் வந்து தோன்றும் கண்டீர் – 2மூலபலத்தின் அன்று பார்த்த இடமெல்லாம் பெருமாளே ஆனாற் போலே ஆயிற்று; 3இராம பாணத்துக்கு இராக்கதர்கள் தப்பலாம் அன்றாயிற்று, இக்கண்களின் அழகின்கீழ் அபலைகளாய் இருப்பார்க்குத் தப்பலாவது? 4‘புண்டரீக நெடுந்தடங்கள் போலப் பொலிந்து (திருவிருத்தம், 39.)எமக்கு எல்லா இடத்தவும்’ என்னக் கடவது அன்றோ? 5பாம்பைக் கண்ட அச்சம் போலே இருக்கை6இறாய்க்க நினைத்த இடம் எங்கும் தானேயாய் இராநின்றது.

அன்னைமீர் என்னை நீர் நலிந்து என் – 3ஹிதத்திலே நடக்கும் தமப்பனைப் போலே, என் பிரியத்திலே நடக்கும் நீங்கள் என்னை நலிகிறது என்?

யானை அணி செய்து வந்து தோன்றினாற்போலே இருத்தலின், ‘அணிமுத்தம்’ என்கிற்று. (தீமை செய்தலின்  உறைப்பைக் காட்டினபடி. அணி செய்து-நிரை செய்து.)அன்றிக்கே, ‘அழகிய முத்தம்’ என்னுதல்

பிரளயம் கோத்தாற்போலே, கண்ணைக் கண் கோத்து அன்றோ கிடக்கிறது (கண்ணைக்கண் கோத்துக்   கிடக்கையாவது, தம்முடைய கண்ணை அவனுடைய கண் கோத்துக் கிடக்கிறது என்றபடி.)

முடியவும் ஒட்டாதே வாழவும் ஒட்டாதே நடுவே இருத்தி நலிகிறபடி நினைத்து, ‘எனக்கு இதில் பொருந்தாமை உண்டாய் இருக்கச் செய்தேயும் இச்சம்சாரத்திலே வைத்து என்னை நடத்திக்கொடு போருகிற இவ்வாச்சரியத்தை எனக்கு அருளிச்செய்ய வேண்டும்,’ என்ன ஒன்றைக் கேட்க, வேறே சிலவற்றைச் சொல்லுவாரைப் போலே, ‘இது ஒன்று கண்டோ நீர் ஆச்சரியப்படுகிறது? இவ்வளவு அல்லாத நம்முடைய விசித்திர உலக உருவமாய் இருக்குந் தன்மையைப் பாரீர்!’ என்று தன்னுடைய ஆச்சரியமான உலக உருவமாய் இருக்குந் தன்மையைக் காட்டிக்கொடுத்தான்.

உம்மைக்கொண்டு, ஸ்ரீ வீடுமரைப் பாணங்களாகிய படுக்கையிலே இட்டு வைத்து நாட்டுக்கு வெளிச்சிறப்பைப் பண்ணிக்கொடுத்தாற்போலே, நமக்கும் 3நம்முடையார்க்கும் போது போக்காகச் சில பிரபந்தங்கனைப் பண்ணுவிக்கப் பார்த்தோம்: அது தலைக்கட்டுந்தனையுங்காணும் உம்மை இங்கு வைப்பது,’ என்று நேரான பரிகாரத்தை அருளிச்செய்தான்

என் சோதியை – 2பிடாத்தை விழவிட்டுத் தன் வடிவழகைக் காட்டினான். ‘திருத்திரை எடுத்தாற் கூப்பிடுமாறு போலே கூப்பிட்டேன்; அது கவியாய்த் தலைக்கட்டிற்று.

இதனை இனிய கவி என்று நாட்டிலே பிரசித்தம் ஆக்கினான். 3‘பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரம்’ என்கிறபடியே. 4தான் வென்று மற்றையாரோடு ஒருசேர நின்று அருச்சுனனைப் புகழுமாறு போலே

அருகு இருந்த தேன் கலந்து – 4திருமஞ்சனத்துக்கு உபகரணங்கள் சமைந்திருக்குமாறு போலே, அருகே மலை முழைஞ்சுகளிலே நிரம்பியிருக்கிற தேன்களிலே வாங்கித் தோய்த்து

தன்னை என் ஆக்கி – என்னைத் தன்னோடு ஒக்கச் செய்து. அன்றிக்கே, ‘தனக்கு ஆம்படி செய்து’ என்னுதல். என்னால் தன்னை வைகுந்தனாகப் புகழ – தந்தையானவன் மகனுக்கு ஒரு பசுவை நீர் வார்த்துக் கொடுத்து மீண்டு அவன் பக்கலிலே பசுவை நீர் ஏற்றுப் பெறுமாறு போலே இருப்பது ஒன்றாயிற்று இதுவும்

ஆகையாலே, ‘ஸ்ரீவால்மீகி பகவான் பாடின ஸ்ரீராமாயணம் கேட்கைக்குத் திருவயோத்தியையிலே திருத்தம்பிமாரும் தாமுங்கூடப் பெருமாள் பேரோலக்கம் இருந்தாற்போலே, சர்வேஸ்வரனும் நாம் பாடின திருவாய்மொழி கேட்கைக்காகத் திருவாறன்விளியிலே 2பரியங்க வித்தியையிற்சொல்லுகிறபடியே திருவனந்தாழ்வான் மேல்3நாய்ச்சிமாருடனே கூடி நித்திய பரிஜனங்களோடே கூட எழுந்தருளியிருந்தான்

மநஸ்வீ – 4பிரணயதாரையில் வந்தால், அவள் பாரித்த பாரிப்புக்கு எல்லாம் யானைக்குக் குதிரை வைக்கைக்கு ஈடான நெஞ்சில் அகலமுடையவராயிற்று–    தத்கத: – திரவியம் திரவியத்தோடு சேர்ந்தாற்போல அன்றிக்கே, சாதி குணங்கள் திரவியத்தோடு சேர்ந்தாற்போலே சேர்ந்தார்;அநந்யா ராகவேணாஹம் பாஸ்கரேண ப்ரபா யதா’--என்பது, ஸ்ரீராமா. சுந். 21 : 16–அநந்யா ஹி மயா ஸீதா பாஸ்கரேண ப்ரபா யதா’ ஸ்ரீராமா. யுத். 122 : 19.

ஆவார் ஆர்?’ என்ன, ‘ஆழ்வானைப் போக விடலாகாதோ?’ என்றாராம். ஆக, பல முதலிகள் இருக்க, ஆழ்வானைக் கொடுத்தாற்போலே

அவனுடைய கல்யாணகுணங்களைப் பிரீதியினாலே தூண்டப்பட்டவராய்க்கொண்டு பாட. நம் மேல் வினை ஒன்றும் நில்லா கெடும் – 2பாபம் போகைக்காகத் தனித்து ஒரு முயற்சி செய வேண்டா; பால் குடிக்க நோய் தீருமாறு போலே நம்முடைய பாபங்கள் தாமே நசித்துப் போம்.

தத்கத – என்கையாலே, இவர் தம்மை அவள் பக்கலிலே 1ஓக்கினபடி சொல்லிற்று, ‘நித்யம் ஹ்ருதி ஸமர்ப்பித:’  என்கையாலே. அவள், தன்னை இவர் பக்கலிலே ஓக்கினபடி (ஆக்கினபடி; பரதந்திரர் ஆக்கினபடி.)சொல்லுகிறது. 3இப்படி இருவருமான சேர்த்தியிலே, இதற்கு முன்பு ஆனந்தம் புதியது உண்டு அறியாதான் ஒருவனுக்கு ஆனந்தம் உண்டாமாறுபோலே ஆயிற்று, கணந்தோறும் உண்டாம்படி.’

எழில் மலர் மாதரும் – 3ராகவன் வைதேவியை ஒக்கின்றான்’ என்னுமாறு போலே ஆயிற்று இத்தலை. தானும் – ‘எவனுக்குச் சீதை மனைவியாக ஆவாளோ’ என்றும் ‘ஜனகனுடைந பெண்ணாகிய சீதை எவனுடைய மனைவியோ’ என்றும் சொல்லலாம்படி ஆயிற்று.

‘ராகவோர்ஹதி வைதேஹீம்’–என்பது, ஸ்ரீராமா. சுந். 16 : 5. 

‘யஸ்ய ஸீதா பவேத் பார்யா’–என்பது, ஸ்ரீராமா. ஆரண்ய. 34 : 18.

 ‘யஸ்ய ஸா ஜநகாத்மஜாஎன்பது, ஸ்ரீராமா. ஆரண்ய. 37 : 18.

  ஆக, ‘ராகவோர்ஹதி’ என்கையாலே, ‘எழில் மலர் மாதர்’ என்று பிராட்டி வைலக்ஷண்யமும், ‘யஸ்ய ஸீதா பவேத் பார்யா’ என்று ‘பார்யா’   என்கையாலும், ‘யஸ்ய ஸா ஜநகாத்மஜா’ என்பதில் ‘யஸ்ய’ என்பது,
அடிமைப் பொருளில் ஆறாம் வேற்றுமையாகையாலும், ‘தானும்’ என்று   பெருமாள் வைலக்ஷண்யமும் சொல்லுகிறது என்றபடி

இராமர் சீதையைப் பெற்றுப் பின்னர் இராச்சியத்தை அடைந்தார்; உலகம் மிக்க உவகையை அடைந்தது’ என்கிறபடியே, தந்தை தாயார் இருவரும் சேர இருந்து பரியப் புக்கால் குழந்தைகளுக்கு ஒரு குறையும் பிறாவாதே அன்றோ? 2ஆக, இருவருமான சேர்த்தியாலே தங்களுக்கு ஆனந்தம் உண்டாக, அச்சேர்த்தியைக் காண்கையாலே உலகத்துக்கு ஆனந்தம் உண்டாக, அதனைக் கண்டு குழந்தை பால் குடிக்கக் கண்டு உகக்கும் தாயைப்போலே இவர்களுக்கு உண்டான பிரீதியைக் கண்டு அதனாலே தாங்ஙள் இனியராய் இருப்பர்களாயிற்று

‘ராம: ஸீதாம் அநுப்ராய ராஜ்யம் புந: அவாப்தவாந்
    ப்ரஹ்ருஷ்டமுதிதோ லோக: துஷ்ட: புஷ்ட: ஸூதார்மிக:’–என்பது, சந்க்ஷேப ராமா. 1. : 89.

யானைக்கும் தனக்குத் தக்க வாதம்’ என்னுமாறு போலே, தேவதைகளுக்கு நம்மைக் காட்டிலும் அறிவு கேடு விஞ்சியிருக்கும்

‘நினைக்கவும் சத்தி இல்லாத யானை ஏத்துதல் எப்படி?’ என்ன-ஏத்திய – 2முட் பாய்ந்தால் ‘அம்மே!’ என்பாரைப்போலே, வாசனையாலே சொன்ன இத்தனை

இராசபுத்திரனைச் சிறையிலே இட்டு வைத்தால் கைக்கூட்டனுக்கும் (காவற்காரனுக்கும்)பாலுஞ்சோறும் இடுவாரைப்போலேகாண்,’ என்று இதற்குப்(இரண்டின் வீடு’ என்றதற்கு.) பட்டர் அருளிச்செய்வர். 2இரண்டும் மோட்சத்தைப் பெற்றதே! முதலை சாப மோட்சமும், ஸ்ரீகஜேந்திராழ்வான் சாக்ஷாத் மோட்சமும் பெற்றமையைத் தெரிவித்தபடி.

பருவம் அல்லாத மற்றைக் காலங்களில் கடல் தீண்டலாகாது,’ என்றாற்போலே, அதற்கு ஒரு நியதி இல்லை ஆதலின், ‘வைகலும் பூசித்து-என்கிறார். வைகல் – காலம். ‘ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி’ என்று அவன் விஷயத்தில் இவர் பிரார்த்தித்ததை இது கற்ற அடியார் விஷயத்திலே நித்தியசூரிகள் அடிமை செய்வார்கள் என்றபடி.

—————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading