- அக்ராஹ்ய: ஶாஶ்வத: க்ருஶ்ணோ லோஹிதாக்ஷ: ப்ரதர்தன:|
ப்ரபூதஸ்த்ரிககுப்தாம பவித்ரம் மங்களம் பரம் ||
இந்த ஏழாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன:
56-அக்ராஹ்ய:, 57. ஶாஶ்வத:, 58. க்ருஷ்ண:, 59. லோஹிதாக்ஷ:, 60. ப்ரதர்தன:|
61.ப்ரபூத:, 62.த்ரிககுப்தாம:, 63.பவித்ர:, 64. மங்களம் பரம் ||
இறைவன் பிறர் கைக்கு அப்பாற்பட்டவன், சாதாரண புலன்களால் அடைய முடியாது. அவர் நித்தியமானவர் மற்றும் நிரந்தரமான பேரின்ப நிலையில் இருக்கிறார், அவருக்குப் படைப்பே விளையாட்டு. அவருடைய கண்கள் தாமரை மலரைப் போல சிவந்திருக்கும். அவர் பிரபஞ்சத்தை அழிப்பவர் மற்றும் பிரளயம் அல்லது பிரளயத்தின் போது உலகத்தை அவருக்குள் அடக்குகிறார். அவர் செல்வச் செழிப்பும், மகத்துவமும் உடையவர். அவர் மூன்று உணர்வு நிலைகளிலும் பாதுகாவலராக இருப்பவர், தூய்மையானவர் மற்றும் மிகவும் மங்களகரமானவர்.
அக்ராஹ்ய: – எவ்விதத்திலும் எந்தக் கரணத்தினாலும் சிக்காதவர் என்னும்படி அனைத்துக்கும் முதற்காரணமாகவும் நிமித்த காரணமாகவும் இருப்பவர்.
சாச்வத: – மாறி மாறி வரும் படைப்பு ஒடுக்கம் ஆகியவைகளில் ஓய்வின்றி ஒரே படித்தாய் இருப்பவர்.
க்ருஷ்ண: – தம் லீலையாகிய சிருஷ்டி ஸ்திதி லயம் ஆகியவைகளில் மாறாத ஆனந்த மூர்த்தியாய் இருப்பவர்.
லோஹிதாக்ஷ: – தம் மாறாத மகிழ்ச்சிக்கு அடையாளமாகச் செந்தாமரை நிறமான கண்களைப் படைத்தவர்.
ப்ரதர்தன: – பிரளயகாலத்தில் அனைத்தையும் நாம ரூபங்களை நீக்கி ஸம்ஹரிப்பவர்.
ப்ரபூத: – பிரபஞ்சத்தில் அனைத்தும் ஸம்ஹரிக்கப்பட்டாலும் மாற்றமும் அளவும் அற்ற போக ஸ்தானமாகப் பரமபதத்தை உடையவர்.
த்ரிககுப்தாமா – மும்மடங்கு பிரபஞ்சத்தினும் பெரிது என்னும் அளவிலாத பெருக்கம் உடைய த்ரிபாத் விபூதி என்னும் பரமபதத்தை உடையவர்.
பவித்ரம் – தோஷங்கள் அனைத்துக்கும் எதிர்த்தட்டான பரிசுத்த ஸ்வரூபம் உடையவர்.
மங்களம்பரம் – தம்மைத் தியானிப்பவர்களுக்கு அனைத்து மங்களங்களையும் அருளும் பரம்பொருளாய் இருப்பவர்.
(புலன்களாலோ, மனத்தாலோ) பற்றப்பட முடியாதவன் {அக்ராஹ்யன்},
நித்தியமானவன் {சாஸ்வதன்},
கிருஷ்ணன், சிவந்த கண்களைக் கொண்டவன் {லோஹிதாக்ஷன்},
அண்ட அழிவின் போது அனைத்து உயிரினங்களையும் கொல்பவன் {ப்ரதர்த்தநன்},
அறிவு, வலிமை மற்றும் பிறவகைக் குணங்களில் பெரியவன் {பரப்பூதன்},
ஒவ்வொரு உயிரினத்தின் (மேல், நடு மற்றும் கீழ் என) மூன்று பகுதிகளில் வசிப்பவன் {த்ரிககுப்தாமா},
தூய்மைப்படுத்துபவன் {பவித்ரம்},
மங்கலம் நிறைந்த உயர்ந்தவன் {மங்களம்பரம்};(20)
அனைத்தும் தானே –ஆனால் அவற்றிலும் உயர்ந்தவன் –
56-அக்ராஹ்ய -யாருடைய உணர்த்தலுக்கும் அப்பால் பட்டவர் -புத்தியால் பிடிக்க முடியாதவர் –
57-சாஸ்வத -படைத்தல் காத்தல் அழித்தல் ஆகியவை விடாமல் தொடர்வதால் ஒய்வில்லாதவர்
58-கிருஷ்ண -முத் தொழில் விளையாட்டாலேயே இன்புறுவர்
59-லோஹிதாஷா–இவ் விளையாட்டாலாயே சிவந்த மலர்ந்த கண் உடையவர் –
60-பிரதர்தன -பிரளயத்தின் போது அனைத்தையும் அழித்து தன்னுள் ஒடுக்குபவர் –
61-ப்ரபூத -உலகமே அழிந்த போதும் நிலையான வைகுந்தச் செல்வத்தால் நிரம்பியவர்
62-த்ரிககுத்தாமா –லீலா விபூதியை விட மூன்று மடங்கு பெரிய நித்ய விபூதி –
63-பவித்ரம் -குற்றம் அற்ற தூய்மை உடையவன் –
64-மங்களம் பரம் -தீமைகளுக்கு எதிரான சிறந்த மங்களங்களின் இருப்பிடம் –
———————-
56-அக்ராஹ்ய –
க்ரஹிக்க முடியாதவன் –
ம்ருத் தந்த்வாதிரிவ குலால குவிந்தாதிநா அநதிஷ்டேய: அக்ராஹ்ய:
புத்தியால் மனத்தால் என்று சொல்ல வந்தது இல்லை -காரணத்வம் பிரகரணம்
மண் நூல் பொருள்களைக் கொண்டு குயவன் நெசவாளி பண்ணுவது போல் அல்லவே
கர்த்தா கார்யம் காரணம் வேறே வேறே இங்கு
இவனே த்ரிவித காரணம்
*ஹலோயத் இதி ண்யதந்த : । ஏவம் வேத்ய, மாந்ய:, இத்யாதயயோ அபி । யதா
* நைநமூர்த்வம் ந திர்யஞ்சம் ந மத்தய பரிஜக்ரபத், தைத்ரியம்
* ப்ரஹ்மாத்ய திஷ்டத்
* அதி திஷ்டத் யேக:-ஸ்வேதாஸ்வர, (அனைத்தையும் அதிஷ்டானம் செய்பவன் இவன் ஒருவனே )இத்யாதி ॥ 56 ॥
தானே காரணமாயும் கர்த்தாவாகவும்
வளவேழு உலகின் முதலாய வானோர் இறை -1-5-1-
ஆர்ந்த ஞானச் சுடராகி கீழ் மேல் அளவிறந்து -1-5-10-
மண் நூல் போன்ற காரணங்கள் குயவன் சேணியன் போன்றோரால் கையாளப் படுவது போலே
மற்று ஒருவரால் கையாளப் படாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
கர்ம இந்த்ரியங்களால் அறிய முடியாதவர் -ஸ்ரீ சங்கரர் –
முழுவதுமாக எவராலும் அறியப்பட முடியாதவர் -அவாப்த சமஸ்த காமர் -எவராலும் எளிதில் அடைய முடியாதவர் –
குணங்களால் வியாபித்து இருப்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–
ஓம் அக்ராஹ்ய நம
கிரஹிக்க முடியாதவன்
—————
ஓம் அக்ராஹ்யாய நம:
கர்மேந்த்ரியைர் ந க்ருஹ்யதே இதி அக்ராஹ்ய:
கர்மேந்த்ரியைர் வாக்கு, கை, கால் முதலிய செயற்புலன்களால் ந க்ருஹ்யதே அறிந்துகொள்ளவோ (உணரவோ) இயலாததால் இதி அக்ராஹ்ய: பகவான் ‘அக்ராஹ்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
வாக்கு, கை, கால் முதலிய செயற்புலன்களால் அறியமுடியாதவராய் இருப்பதால் பகவான் ‘அக்ராஹ்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ’ (தைத்ரீய உபநிஶத் 2.9)
தைத்ரீய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:
எதனிடமிருந்து மனதுடன் சொற்கள் அடைய முடியாமல் திரும்புகின்றனவோ…
இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.
——–
ஆக்ராஹ்யா – எளிதில் கிரகிக்க முடியாதவர்
ஆக்ராஹ்யாஹ் என்றால் ‘கர்மேந்திரியிஹி ந க்ரிஹ்யதே இதி ஆக்ராஹ்யாஹ்‘ என்று ஸ்ரீ ஆதி சங்கரர் சொல்வது போல் செயல் உறுப்புகளால் ‘பிடிக்க முடியாதவர்’ என்று பொருள். தைத்ரிய உபநிஷத் ‘யதோ வாசோ நிவர்தந்தே அப்ராப்ய மனஸா சஹ – அவரை பேச்சின் மூலம் விவரிக்க முடியாது, மனத்தால் கருத்தரிக்க முடியாது’ என்று கூறுகிறது
‘யத் சக்ஷுஷா ந பஷ்யதி யேன சக்ஷூம்ஸி பஶ்யந்தி ததேவ ப்ரஹ்ம த்வம் வித்தி’
57-சாஸ்வத
நிரந்தரமாய் இருப்பவன்(கீழே ஸ்தவிர -த்ருவ -பார்த்தோம் -காலத்தால் மாறாமல் -ஸ்வரூபத்தில் உறுதி )
ஏவம்
ஸாஶ்வத : ।
அநவரத ஜகத் வ்யாபார ப்ரவாஹத்வேந நித்ய: ; யதா
* அப்யுச் சிந்நா ததஸ்து ஏதே சர்க்க(ஸ்ருஷ்டி )ஸ்தித் யந்தஸம்யமா–ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-26- :, இத்யாதி ॥57 ॥
சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரங்கள்-தடை இன்றி லீலையாக
அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே -ஸ்ரீ பாஷ்யம்
என்றுமோர் இயல்வோடு நின்ற என் திடரே -1-1-6-
நிலையான வேத பிரதிபாத்யன்
தாதா யதா பூர்வம் கல்பமதி –ப்ரஹ்ம ஸூத்ரம்
படைத்தல் -காத்தல் -அழித்தல்-இடையறாமல் செய்து ஒய்வில்லாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
எல்லாக் காலங்களிலும் இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
எப்போதும் மாறாத ரூபத்தை உடையவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–
ஓம் ஸாஸ்வதா நம
நித்யமானவன்
————
ஓம் ஶாஶ்வதாய நம:
ஶஷ்வத் ஸர்வேஶு காலேஶு பவதீதி ஶாஶ்வத:
ஶஷ்வத் ஸர்வேஶு காலேஶு ‘ஶஷ்வத்’ என்றால் அனைத்து காலங்களிலும் பவதீதி தோன்றுவதால் (அல்லது, இருப்பதால்) ஶாஶ்வத: பகவான் ‘ஶாஶ்வத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அனைத்துக் காலங்களிலும் தோன்றுவதால் (அல்லது, இருப்பதால்) பகவான் ‘ஶாஶ்வத:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘ஶாஶ்வதம் ஶிவம் அச்யுதம்’ (நாராயண உபநிஶத் 13.1)
நாராயண உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:
எக்காலத்திலும் உள்ளவர், மங்களமானவர், தன்னிலையினின்று வழுவாதவர்…
இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.
———–
ஷாஸ்வதா – அவர் நிரந்தரமானவர்
சாஸ்வதா என்றால் வற்றாத மற்றும் நிரந்தரமான ஒருவர் என்று பொருள். ஸ்ரீ ஆதி சங்கரரின் வார்த்தைகளில் ‘ஷாஷ்வத் ஸர்வேஷு காலேஷு பவதி இதி ஷாஷ்வதா – அவர் எல்லா நேரங்களிலும் இருக்கிறார்’.
மஹா நாராயண உபநிஷத் ( 13 வசனம் 3) கூறுகிறது–‘பதிம் விஸ்வஸ்யாத்மேஸ்வரம் ஷாஷ்வதம் சிவம் அச்யுதம்
நாராயணம் மஹாக்யேயம் விஸ்வாத்மானம் பராயணம்’ — அவர் பிரபஞ்சத்தின் பாதுகாவலர் மற்றும் தனிப்பட்ட ஆத்மாக்களின் ஆட்சியாளர்; நிரந்தரமான மற்றும் உயர்ந்த மங்களகரமான மற்றும் மாறாதவர். அவர் அறியப்படுவதற்கு மிகவும் தகுதியானவர், பிரபஞ்சத்தின் அவதாரம் மற்றும் உயர்ந்த இலக்காக இருப்பவர்.
‘நித்யம் ச ஷாஷ்வதம்சுத்தம் த்ருவம் அக்ஷரம் அவ்யயம்‘ என்கிறது
58- கிருஷ்ண –
ஆனந்தம் அடைபவன் -சிருஷ்டி யாதிகளால்
ஏவம் வித(கீழ் சொன்ன அனைத்தாலும் )லீலா ரஸேந நிதாந்த நிர் வ்ருத :
க்ருஷ்ண: ।
ஆர்ஷம் நிருக்தம் க்ருஷி பூர்வாசகஶ் ஸப்தோ ணஶ்ச நிர்வ்ருதி வாசக: ।
க்ருஷ்ணஸ் தத் பாவ யோகாச்ச இதி –உத்யோக பர்வம்-॥ 58 ॥
இன்புறும் இவ்விளையாட்டு உடையானைப் பெற்று -3-10-9
கன்று மேய்த்து இனிது உகக்கும் காளை-
பூ இருப்பிடம் தான் மகிழ்ச்சிக்கு இருப்பிடம்
பூ பூமிக்கு ஆனந்தம் கொடுப்பவன் என்றுமாம்
இந்த ஸ்ருஷ்டி முதலிய லீலைகளின் ரசத்தினால் எப்போதும் மகிழ்ந்து இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
பெருமாள் அழுத இடங்கள் உண்டு
இவன் பெருமை அறியாத மூடர்கள் இருந்தாலும் சிரித்துக் கொண்டே இருப்பவன்
ஆனந்த பாவம் கூடியே
லீலையாலும் போக்கத்தாலும் ஆனந்தம்-நாம் லீலா ரஸத்துக்கு விஷயமாகால் போக ரஸத்துக்கு விஷயம் ஆக வேண்டும்
சச்சிதானந்த ரூபமாக இருப்பவர் -கருமை நிறம் உள்ளவர் -ஸ்ரீ சங்கரர் –
தனது கட்டளையிடும் சாமர்த்தியத்தினால் உலகை ஈர்ப்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–
ஓம் க்ருஷ்ணா நம
கரியான் ஒரு காளை
ஆனந்தமயன் -நீல மேக ஸ்யாமளன்
லீலா ரசம் அனுபவிப்பவன் -கார் முகில் வண்ணன்
—————
ஓம் க்ருஶ்ணாய நம:
க்ருஶிர்பூவாசக: ஶப்தோ ணஸ்ச நிர்வ்ருதிவாசக: |
விஶ்ணுஸ்தத்பாவயோகாஸ்ச க்ருஶ்ணோ பவதி ஶாஶ்வத: || (மஹாபாரதம் உத்யோக பர்வம் 70.5)
மஹாபாரதம் உத்யோக பர்வத்தில் கூறப்பட்டுள்ளது:
“க்ருஶி” என்றால் இருத்தல் (என்றும் இருத்தல்) என்று பொருள், ‘ண’ ஆனந்தத்தைக் குறிக்கும். பகவான் விஶ்ணுவிடம் இந்த இரண்டு குணங்களும் ஒருங்கிணைந்து இருப்பதால் அவர் ‘க்ருஶ்ணன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இதி வ்யாஸ வசனாத் ஸச்சிதானந்தாத்மக: க்ருஶ்ண:
இதி வ்யாஸ வசனாத் ஸ்ரீவ்யாஸரின் இந்தக் (மஹாபாரதத்தில் உள்ள) கூற்றின்படி ஸச்சிதானந்தாத்மக: ஸச்சிதானந்த சொரூபனான (அறிவும், இன்பமும் என்றும் நிலைபெற்றுள்ள) பகவான் விஶ்ணுவே க்ருஶ்ண: ‘க்ருஶ்ண’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் என்றும் ஆனந்தத்துடன் கூடியுள்ளார்; ஆனந்தத்துடன் என்றும் நிலைபெற்றுள்ளார். எனவே, அவர் ‘க்ருஶ்ணன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் க்ருஶ்ணரின் திருநாமமே ஆனந்தம்; அவரது திருநாமத்தை உச்சரிப்பதும் ஆனந்தம்; அதை அன்றாடம் உச்சரிப்போரின் வாழ்க்கையிலும் ஆனந்தமே; அவரது சரித்திரமும், லீலைகளும் அவரது பெயருக்கேற்ப ஆனந்தமே உருவாக உள்ளது. அவரது சரித்திரமே ஆனந்தம், படிப்பவருக்கும் ஆனந்தம், கேட்பவருக்கும் ஆனந்தம். க்ருஶ்ணனே ‘ஆனந்த மயன்’ என்றால் அது மிகையாகாது.
க்ருஶ்ணவர்ணாத்மகத்வாத்வா க்ருஶ்ண:
க்ருஶ்ணவர்ணாத்மகத்வாத்வா பகவான் கருமை நிறமானத் திருமேனியை உடையவராதலால் க்ருஶ்ண: ‘க்ருஷ்ண’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
(அல்லது) கருமை நிறமானத் திருமேனியை உடையவராதலால் பகவான் ‘க்ருஶ்ண’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘க்ருஶாமி ப்ருதிவீம் பார்த்த பூத்வா கார்ஶ்ணாயஸோ ஹல: |
க்ருஶ்ணோ வர்ணஸ்ச மே யஸ்மாத்தஸ்மாத் க்ருஶ்ணோSஹமர்ஜுன’ || (மஹாபாரதம் ஶாந்தி பர்வம் 342.79)
மஹாபாரதம் ஶாந்தி பர்வத்தில் பகவான் கூறுகிறார்:
ஒ அர்ஜுனனே (பார்த்தனே)!!! நான் கரிய நுனி கொண்ட கலப்பையைப் போல பூமியை உழுகிறேன். மற்றும், கருமையான திருமேனியைக் கொண்டிருக்கிறேன். எனவே, நான் ‘க்ருஶ்ணன்’ என்று அழைக்கப்படுகிறேன்.
இதி மஹாபாரதே | இவ்வாறு மஹாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது.
————
கிருஷ்ணா – எப்போதும் ஆனந்த நிலையில் இருப்பவர்
எப்பொழுதும் பேரின்ப நிலையில் இருப்பவர் (அவரது படைப்பு போன்றவற்றுடன்)
ஸ்ரீ ஆதி சங்கரரின் கூற்றுப்படி, ‘கிருஷ்‘ என்பது இருப்பு அல்லது சத் மற்றும் ‘ந‘ என்பது ஆனந்தம் அல்லது ஆனந்தத்தைக் குறிக்கிறது. எனவே கிருஷ்ணர் சச்சிதானந்த ஸ்வரூபியை அல்லது நிரந்தரமாக பேரின்ப நிலையில் உள்ளவரைக் குறிக்கிறது.
ஸ்ரீ பராசர பட்டர் ‘கிருஷி‘ என்பது ஒரு பாத்திரம் அல்லது கொள்கலன் அல்லது நிலம் (பூ அல்லது பூமி அதாவது நிலம்) மற்றும் ‘ந‘ என்பது பேரின்பத்தைக் குறிக்கிறது. எனவே கிருஷ்ணர் என்பது படைப்பின் விளையாட்டில் அவர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளதால் மகிழ்ச்சியை அடைவதாக பொருள்படும்.
துன்பமும்இன்பமும்ஆகியசெய்வினை ஆய், உலகங்களும்ஆய்
இன்பம்இல்வெம்நரகுஆகிஇனியநல் வான்சுவர்க்கங்களும்ஆய்,
மன்பல்உயிர்களும்ஆகிபலபல மாயமயக்குகளால்
இன்புறும்இவ்விளையாட்டுஉடயானைப்பெற்று ஏதும் அல்லல்இலனே.–நம்மாழ்வார் திருவாய் மொழி 3.10.7ல் இறைவனின் படைப்பின் செயலை விளையாட்டாக விவரிக்கிறார்.
கிருஷ்ணா ‘ என்ற சொல்லுக்கு அடர் நிறம் என்று பொருள். தியான ஸ்லோகங்களில் இறைவனை ‘மேக ஷ்யாமம் அல்லது மேக வர்ணம் அல்லது அம்புதா ஷ்யாமம் – மழை பொழியும் மேகம் போன்ற கருநீலம்’ என்று வர்ணிப்பதைப் பார்த்தோம். ஆண்டாள் தனது திருப்பாவையில் தனது முதல் பாசுரத்தில் இறைவனை ‘கார் மேனி செங்கண் கதிர் மத்தியம் போல் முகத்தான்’ என்று வர்ணிக்கிறாள் – கருமேகம் போன்ற நிறமும், தாமரை சிவந்த கண்களும், சூரியனைப் போல பிரகாசிக்கும், சந்திரனைப் போல அமைதியான பளபளப்பான முகமும் கொண்டவள்.
‘கிருஷ்ணா’ என்ற நாமத்தை ‘ஆகர்ஷனா’ அல்லது காந்த ஈர்ப்பு உள்ளவர் என்றும் பொருள் கொள்ளலாம்!
59-லோஹிதாஷா –
சிவந்த கண்களை யுடையவன் –
மே ராம ராஜீவ லோசனன் –
வராஹ புட பத்ர லோசனன்
ஈத்ருந் (இதுபோன்று)நிர்வ்ருதிபி ஸூ நரம்ய ராஜீவதாம் ரநயந:
லோஹிதாக்ஷ: ॥ 59 ॥
ஐஸ்வர்ய செருக்கு –ஸமஸ்த காரணத்தால் -சேஷித்வத்தால் -வாத்சல்யத்தால் -சிவந்த -செங்கண் மால்
அநலோசித அசேஷ விசேஷ லோக சரண்யன்
சிக்கென பிடித்தேன் செங்கண் மால் -ஸ்ருஷ்ட்டி பிரயோஜனமானாலும் சிவக்கும்
கண்கள் சிவந்து
செய்ய கோலத்தடம் கண்ணன்
ஸ்வாபாவிக செந்தாமாரைக் கண்ணன் -முன் சொல்லிய ஆனந்தத்தால் மேலும் சிவக்கும்
கண்கள் சிவந்து பெரியவை -8-8-1-
வாத்சல்யத்தாலும் கண்கள் சிவக்கும்-
இந்த மகிழ்ச்சிக்கு அடையாளமாக சிவந்த தாமரைக் கண்களை யுடையவர்-ரக்த ராஜீவ லோசனன் -ஸ்ரீ பராசர பட்டர் –
சிவந்த கண்களை யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –
விரோதிகளிடத்தில் கோபத்தினால் சிவந்த கண்களை யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–
ஓம் லோகிதாஷா நம
செந்தாமரைக் கண்ணன் -புண்டரீகாக்ஷன்
——————–
ஓம் லோஹிதாக்ஷாய நம:
லோஹிதே அக்ஷிணீ யஸ்யேதி லோஹிதாக்ஷ:
லோஹிதே சிவந்த அக்ஷிணீ திருக்கண்கள் யஸ்யேதி உடையவர் ஆதலால் லோஹிதாக்ஷ: பகவான் ‘லோஹிதாக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
சிவந்த திருக்கண்களைக் கொண்டிருப்பதால் பகவான் ‘லோஹிதாக்ஷ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘அஸாவ்ருஶபௌ லோஹிதாக்ஷ:‘
அவர் உயர்ந்தவர்; சிவந்த திருக்கண்களை உடையவர்.
இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.
———–
லோஹிதாக்ஷா – கண்கள் சிவந்திருக்கும்
லோஹிதா என்றால் சிவப்பு மற்றும் அக்ஷ என்றால் கண், எனவே லோஹிதாக்ஷ என்றால் தாமரை மலரில் உள்ள கண்கள் சிவப்பாக இருக்கும். ஸ்ரீ ஆதி சங்கரர் சொல்வது போல், ‘லோஹிதே அக்ஷிணீ யஸ்ய இதி லோஹிதாக்ஷ: கண்கள் சிவந்திருக்கும்’.
தைத்ரிய ஆரண்யம் கூறுகிறது ‘ஸமா விருஷபோ லோஹிதாக்ஷஹ் – அவர் உயர்ந்தவர் மற்றும் சிவந்த கண்களை உடையவர்.’
ஸ்ரீ பராசர பட்டர் இரண்டு அர்த்தங்களைக் கூறுகிறார், ஒன்று அதீத மகிழ்ச்சியின் விளைவாக அவரது கண்கள் சிவந்தன, மற்றொன்று தீயவர்கள் மீதான கோபத்தின் விளைவாக.
இதற்கு முன் ஸ்லோகம் 5 இல் இதே அர்த்தத்துடன் ‘புஷ்கரக்ஷ‘ என்ற பெயரை ஏற்கனவே பார்த்தோம்.
60-ப்ரதர்தந-
சம்ஹரிப்பவன் -பிரளய காலத்தில் எல்லா வற்றையும் அழிப்பவன்-
ஸர்வேஷாம் ஸம்ஹத்ருத்வ ச ஆஹ
ப்ரதர்தந: ।
தர்திர் ஹிம்ஸா கர்மா । யதா
* யஸ்ய ப்ரஹ்ம ச க்ஷத்ரம் (ப்ராஹ்மணன் க்ஷத்ரியர் நான்கும் உப லக்ஷணம் )ஸ உபே பவத ஓதந-கட -2-24-:,
* அத்தா சராசர க்ரஹணாத்-1-2-9- இதி ॥ 60 ||
யாவகை உலகமும் யாவரும் அகப்பட -ஒரு பொருள் புறப்பாடு இன்றி முழுதும் அகப்படக் கரந்து
ஓர் ஆலிலைச் சேர்ந்த எம் பெரு மா மாயன் -திரு வாசிரியம் -7-
பிரளய காலத்தில் எல்லாவற்றையும் அழிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
பிரளய காலத்தில் பூதங்களை அழிப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
சத்ருக்களைத் துன்புறுத்துவர் – ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–
ஓம் ப்ரதர்தன நம
பிரளய காலத்திலும் அனைத்தையும் திரு வயிற்றிலே வைத்து ரக்ஷிப்பவன்
ஸம்ஹாரமும் ரக்ஷணத்தில் ஒரு வகையே கரந்து –
——————
ஓம் ப்ரதர்தனாய நம:
ப்ரளயே பூதானி ப்ரதர்தயதி ஹினஸ்தீதி ப்ரதர்தன:
ப்ரளயே ப்ரபஞ்சத்தின் அழிவுக் காலத்தில் (ப்ரளயம்) பூதானி ஜீவராசிகளை ப்ரதர்தயதி ஹினஸ்தீதி அழிப்பதால் (ப்ரதர்தன என்றால் அழிப்பது என்று பொருள்) ப்ரதர்தன: பகவான் ‘ப்ரதர்தன’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இந்தப் ப்ரபஞ்சம் அனைத்தும் (நான்முகரின் நாள் முடிவிலும், அவரது ஆயுள் முடிவிலும்) அழிக்கப்படும் காலத்தில் பகவான் அனைத்து ஜீவராசிகளையும் அழிப்பதால் அவர் ‘ப்ரதர்தன’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பிரதர்தனா – பிரபஞ்சம் கரையும் நேரத்தில் உலகை அழிப்பவர்
அடிப்படையில் இந்த வார்த்தைக்கு ‘அழிப்பவர்’ என்று பொருள். இந்த நாமம் ‘தார்திஹ்‘ என்ற மூலச் சொல்லிலிருந்து உருவானது – அழிவை உண்டாக்கும். பிரதர்தா என்றால் மொத்த அழிவு.
ஸ்ரீ பட்டர், கதா உபநிஷத்தில் இருந்து பின்வருவனவற்றைத் தருகிறார் – ‘யஸ்ய பிரம்ம ச க்ஷத்ரம் ச உபே பவதா ஓதனா‘ – மகா பிரளயத்தின் போது (பிரளய) பிராமணர்களையும் க்ஷத்திரியர்களையும் (அதாவது பிரபஞ்சத்தின் அனைத்து உயிரினங்களையும்) உணவாகக் கொண்டவர். .
61-ப்ரபூத –
சம்ருத்தன் -நிரம்பியவன் -போக்ய போக ஸ்தான போக உபகரணங்களால் நிரம்பிய -பரமபதம் உடையவன் –
அழியாத சம்பத்தை உடையவன்
ஸர்வ ஸம்ஹாரே அபி
ப்ரபூத : – –
ஸம்ருத்த :, நித்ய நிர் மர்யாத (அளவிறந்த )போக உபகரண பரம பதத்வாத் ॥ 61 ||
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான்
கொள்ளக் கொள்ளக் கோதிலா மணி வண்ணன்
அழியாதவையும் அளவற்றவையுமான போக சாதனங்கள் நிரம்பிய பரமபதத்தை யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
ஞானம் ஐஸ்வர்யாதி குணங்களால் நிறைந்தவர் -ஸ்ரீ சங்கரர் –
மேலான ஆகாசாதி பூதங்களைப் படைத்தவர் -உயர்ந்தவன் -குணங்களால் பரவியிருப்பவன்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-
ஓம் ப்ரபூத நம
ஸமஸ்த கல்யாண குணங்களை உடையவன்
——————
ஓம் ப்ரபூதாய நம:
ஞான ஐஶ்வர்யாதி குணை: ஸம்பன்ன: ப்ரபூத:
ஞான ஐஶ்வர்யாதி குணை: ஞானம், செல்வம் முதலிய குணங்கள் ஸம்பன்ன: நிரம்பியவராதலால் ப்ரபூத: பகவான் ‘ப்ரபூத’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் ஞானம், செல்வம் முதலிய குணங்கள் நிரம்பியவர். எனவே, அவர் ‘ப்ரபூத’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
————
பிரபூதா – மகத்துவம் கொண்டவர்
ஐசுவரியமும், எப்பொழுதும் நிறைந்தவர், ஞானம், மகத்துவம் மற்றும் பிற குணங்கள் கொண்டவர்.
உண்மையில் இதன் பொருள் ‘முழுமையாக அல்லது நிறைவாக பிறந்தது’ அல்லது ‘சூப்பர்-பீயிங்’. ஸ்ரீ ஆதிசங்கரர் கூறுகிறார் ‘ஞான ஐஸ்வர்யாதிபிஹ் குணைஹி ஸம்பன்னஹ் பிரபூதா – ஞானம் மற்றும் தெய்வீகம் போன்ற தெய்வீக பண்புகளால் வளப்படுத்தப்பட்டவர்’. அவர் ஞானம், ஐஸ்வர்யம், பலா, வீர்யம், சக்தி மற்றும் தேஜஸ், அதாவது ஷட்-குணங்கள், பிரபஞ்சம் கலைக்கும் நேரத்தில் கூட அனைத்தையும் அப்படியே பெற்றுள்ளார்.
62-த்ரி ககுத தாமா –த்ரிக குப்தாமா –
த்ரிபாத் விபூதியான -பரம பதத்தை இருப்பிடமாக உடையவன்
மூன்று மடங்கு -அளவிறந்த என்ற அர்த்தத்தில் -‘ த்ரி ககுப் தாமா-பாட பேதம்
தத்ர பரமாணு மாத்ரம் ஹி ஸ்ருஷ்டி ஸம்ஹார கோசர மிதம் விஶ்வம் । ததேவத் ஸ்பஷ்டயதி
த்ரிககுத்தாமா இதி । ‘ த்ரி ககுப் தாமா ” இதி கேசித் ।
உபய தாப்ய வயவா லக்ஷ்யந்தே । த்ரிககுத் த்ரிபாத் விபூதி லக்ஷணம்
பரமம் தாம யஸ்ய ஸ த்ரிககுத்தாமா ।
ஆம்நாயதே ஹி
* பாத அஸ்ய விஸ்வா பூதாநி த்ரிபதாஸ் யாம்ருதம் திவி -புருஷ ஸூக்தம் இதி ।
த்ரிபாத் பாத இதி பரம மஹத் பரமாணு பரிமாணௌ வ்யாக்யா தவ் ।
* யஸ்ய அயுதாயுத (பத்தாயிரத்தில் பத்தாயிரத்தில் ஒரு லேசம் )அம்சாம்ஸோ விஸ்வ சக்திர் இயம் ஸ்திதா –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-53- ,
* மேரோரி வாணுர் யஸ்யை தத் இதி ।
அதவா
த்ரி ககுச் சந்தோ ஜ்ஞாநாதி குண ஷட்க யுகல த்ரி கல க்ஷக(மூன்று இரட்டைகள் ):, தஸ்ய தாம தர்மீ, பூர்ண ஷாட் குண்ய இத்யர்த : ।
அதோ ஹ்யேநம் த்ரியுக மாஹு: ।
யத்வா, ஆர்ஷ நிருக்தம் த்ரிககுத் (மூன்று திமில் கொம்புகள் )। யதா மோக்ஷ தர்மே ஸ்வயம்
*ததை வார்ஸ த்ரி ககுதோ வாராஹம் ரூப மாஸ்தித : ।
த்ரி ககுத்தேந விக்யாதஶ் ஸரீரஸ்ய ப்ரமா பணாத் இதி । அஸ்மிந் பஷே தாமேதி நா மாந்தரம், ஜ்யோதிரிதி சார்த : (இந்த பக்ஷத்தில் தாமம் ஒளி என்று பிரித்து அர்த்தம் கொள்ள வேண்டும் )॥ 62 ||
தனிமாத் தெய்வம் -அமரர்கள் அதிபதி -விண்ணவர் பெருமான் –
த்ரி யுகம் மூன்று இரட்டைகள் ஞான பல -ஐஸ்வர்ய வீர்யம் -சக்தி தேஜஸ் –
க்குத் -கெட்டியான முகப்பு -மூன்று முகப்புகள் உள்ள மஹா வராஹம்
த்ரிக குப்தாம ஒளி உடைய -பெரும் கேழலார் -திருவிருத்தம் -45
கோல வராஹம் ஒன்றாய் -10-10-7-
த்ரிபாத் விபூதி என்னும் பரம பதத்தை உடையவர் -த்ரிககுத் -மூன்று கொண்டைகளுடன் கூடிய வராகமாக அவதரித்தவர்-
தாம -ஒளியுள்ளவர்-என்று இரண்டு திரு நாமம் ஆகவுமாம் –
இப்படி ஸ்ருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் எல்லாம் அவனுடைய விபூதியிலே அணு அளவேயான லீலா விபூதியை அன்றோ –
த்ரிககுத்தாமா என்றும் த்ரிககுப்தாமா என்றும் சொல்வர் -இரண்டாலும் அவயவங்கள் குறிக்கப் படுகின்றன –
அன்றிக்கே -த்ரிககுப் -எனபது ஞானம் பலம் -ஐஸ்வர்யம் வீர்யம் சக்தி தேஜஸ் -என்று மூவிரண்டுகளாய்-அதற்குத் தர்மியானவன் –
ஆறு குணங்களால் பூரணமானவன் -அதனாகே த்ரி யுகம் என்று கூறப்படுகிறான் -ஸ்ரீ பராசர பட்டர் –
மேரோர் இவ அணு யஸ்யைத்
ததைவ ஆஸம் த்ரி ககுதோ வாராஹம் ரூபம் ஆஸ்தித த்ரிக குத தேந விக்யாத சரீரஸ்ய பிரமாண பாத் –என்று தேஜஸ்ஸையும் சொல்லும்
மேல் கீழ் நடு ஆகிய மூவுலகங்களுக்கும் இருப்பிடமானவர் த்ரிககுப்த்தாம -என்று பாடம் -ஸ்ரீ சங்கரர் —
த்ரிககுப்தாம -மூன்று உலகங்களை உடையவர் -த்ரி க்குத் தாம -க்குத் -திமில் –இரு தோள்கள் ஆகியவற்றுடன் கூடிய
வராஹமாக அவதரித்தவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-
ஓம் –த்ரிக குப்தாமா நம
ஸ்ரீ மஹா வராஹ திருவவதாரம் எடுத்தவன்
மூன்று கொம்புகள்
திரிபாத் விபூதி உடையவன்
——————
61.ஓம் த்ரிககுப்தாம்னே நம:
ஊர்த்வாதோமத்யபேதேன திஸ்ருணாம் ககுபாமபி தாமேதி த்ரிககுப்தாம இத்யேகமிதம் நாம
ஊர்த்வாதோமத்யபேதேன மேல், நடு, கீழ் என்று பிரிக்கப்படும் திஸ்ருணாம் மூன்று ககுபாமபி இடங்களையும் தாமேதி தமது இருப்பிடமாகக் கொண்டிருப்பதால் த்ரிககுப்தாம பகவான் ‘த்ரிககுப்தாம’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார் இத்யேகமிதம் நாம (த்ரிககுப், தாம என்று இரண்டாகப் பிரிக்காமல் ‘த்ரிககுப்தாம’ என்ற) இது ஒரே திருநாமமாகும்.
ஸ்வர்க்கம் முதலான மேல் உலகங்களையும், பூமி முதலான மத்திய உலகங்களையும், அதலம் முதலான கீழ் உலகங்களையும், ஆகிய இந்த மூன்று உலகங்களையும் தனக்கு இருப்பிடமாகக் கொண்டிருப்பதால் பகவான் ‘த்ரிககுப்தாம’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
———
திரிககுப்தாமா – அவர் உணர்வு மூன்று நிலைகளின் ஆதரவாளர்
- திரி என்றால் மூன்று;
- ககுப் என்றால் திசை அல்லது ககுட் என்றால் கூம்பு (காளை, ஒட்டகம் அல்லது சிகரம் அல்லது மலையின் முதுகில் உள்ள கூம்பு போன்றவை) அல்லது விலங்கின் கொம்பு; அல்லது kakub மற்றும் kakut ஆகியவை ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்தப்படுகின்றன
- தாமா என்பது தங்குமிடம் அல்லது குடியிருப்பு, மேலும் ஒளி அல்லது பிரகாசத்தின் கதிர்
ஜாக்ரத், ஸ்வப்னா மற்றும் சுஷுப்தி (விழிப்பவர், கனவு காண்பவர் மற்றும் உறங்குபவர்) ஆகிய மூன்று உணர்வு நிலைகளுக்கும் அவர் அடிப்படை அல்லது ஆதரவு
த்ரி-ககுப்-தாமா என்றால், இந்த பிரபஞ்சத்தைப் போல் மூன்று மடங்கு பெரிய பரம-பதமாகத் தன் இருப்பிடத்தைக் கொண்டவன் என்று ஸ்ரீ பட்டர் விளக்கம் தருகிறார்
த்ரி-ககுத் என்பது பகவானின் அவதாரமான வராஹா, மூன்று கொம்புகள் கொண்ட பன்றி என்று குறிப்பிடுகிறது. த்ரி-ககுத்துக்கான இந்த விளக்கத்தை மஹாபாரதத்தில் உள்ள மோக்ஷ தர்மத்திலிருந்து பின்வரும் ஸ்லோகம் ஆதரிக்கிறது –
‘ததைவ ஆசம் த்ரி-ககுடோ வராஹம் ரூபம் ஆஸ்திதா |
த்ரிககுத் தேன விக்யாதஹ் ஷரீரஸ்ய பிரமாபனாத் || (மோட்ச தர்மம் 343-63)’ “பின்னர் நான் மூன்று கொம்புகள் கொண்ட ஒரு பன்றியின் வடிவத்தை எடுத்தேன். அதனால் நான் ‘திரி-ககுட்‘ என்று அறியப்பட்டேன். அந்த வடிவில் நான் ராட்சசனை (ஹிரண்யாக்ஷனை) கொன்றேன்.
63-பவித்ரம் –
பரிஸூத்த ஸ்வரூபம்-பவித்ரமான இருந்து பவித்ரத் தன்மை அளித்து அருளுபவர்
வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் -புனிதன்
ஈத்ருக் குண விபவ ரூப நிரூபக ஸோபாநேந தந் நிரூப்யம்
ஸ்வரூப மநுப்ரவிஸதிம்
பவித்ரம் । புவ :
* அஶித்ராதிப்ய இத்ரோத்ரவ், இதீத்ர ப்ரத்யய:,
*கர்தரி சர்ஷி தேவேதயோ :, இதி வா ॥ 63 ॥
இவ்வாறு குணங்கள் சேஷி ப்ராப்யம் ப்ராபகம் -சொல்லி -வைபவம் விபவம் -ரூபம் சொல்லி
படிக்கட்டில் ஏறி ஸ்வரூபம் விளக்கம் தொடக்கம்
பன்னலார் பயிலும் பவித்ரனே -நித்யர் அனுபவம் அழுக்கு உள்ளம் கொண்ட நமக்கும் அருளும்
அமலங்களாக விளிக்கும்
பூதராக்கும் –
தீர்த்தன்
அமலன் விமலன் நிமலன் நின்மலன் -அரங்கத்தம்மான் –
பவித்ராணாம் பவித்ரம் -மங்களா நாஞ்ச மங்களம்
தீர்த்தன் -உலகு அளந்த -2-8-6-
பன்னலார் பயிலும் பரனே பவித்ரனே -2-3-7-
அனுபவ விரோதி போக்கும் சுத்தி
விண்ணவர் பெருமான் படிவானமிறந்த பவித்ரன் -2-3-9-
அமலங்களாக விழிக்கும் -1-9-9-
ச்ரமணீ விதுர ரிஷி பத்நிகளை பூதராக்கின புண்டரீ காஷன்
குணங்கள் -மகிமைகள் -ரூபம் இவைகளைப் படிகளாகக் கொண்ட பரிசுத்த ஸ்வரூபத்தை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
குணங்கள் ஐஸ்வர்யம் ரூபம் இவற்றை விளக்கி இது முதல் ஸ்வரூபத்தை விளக்கத் தொடங்குகிறார்
பரிசுத்தப் படுத்துபவர் -பரிசுத்தப் படுத்தும் ரிஷி -தேவதை -வஜ்ராயுதத்திலிருந்து-இடியில் இருந்து – காப்பவர் -ஸ்ரீ சங்கரர் —
புனிதமாக்குபவர் -வஜ்ராயுதத்தைப் போலே காப்பவர் -சக்ராயுதத்தை யுடையவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-
ஓம் பவித்ரம் நம
பவானத்தவமே உரு எடுத்தவன் -சர்வத்தையும் பரிசுத்தம் ஆக்கி அருளுபவர்
—————
ஓம் பவித்ரே நம:
யேன புனாதி யோ வா புனாதி ரிஶிர்தேவதா வா தத் பவித்ரம்
யேன புனாதி எவர் மூலமாக (அனைத்தும், அனைவரும்) தூய்மை படுத்தப்படுகின்றனரோ யோ வா புனாதி (அல்லது) எவர் அனைத்தையும் தூய்மையாக்க வல்லவரோ ரிஶிர்தேவதா வா தத் அந்த முனிவரையோ, தேவதையையோ பவித்ரம் ’பவித்ரம்’ என்று அழைப்பர். பகவான் தானும் தூய்மையாய் இருந்து, அனைவரையும் தூய்மையாக்குவதால் அவர் ‘பவித்ர’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘புவ: சம்ஞாயாம்’ (பாணினி சூத்ரம் 3.2.185)
பாணினி சூத்திரத்தில் கூறப்பட்டுள்ளது:
‘பூ’ (புனிதம்) என்ற வேர்ச்சொல்லுடன் ‘இத்ர’ என்ற விகுதி சேர்ந்து, தூய்மையாக்கவல்ல என்ற பொருளில் (அந்த செயலின் காரணியைக் குறிக்கும் வகையில்), பவித்ர என்ற சொல்லாக உருவெடுக்கிறது.
Leave a Reply