ஸ்ரீ பகவத் குண தர்ப்பணம்–ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம வியாக்கியானங்கள் –முதல் ஸ்லோகம்–

விஶ்வம் விஷ்ணுர் வஷட் காரோ பூத பவ்ய பவத் ப்ரபு: |
பூத க்ருத் பூத ப்ருத் பாவோ பூதாத்மா பூத பாவந: || 1 ||

பகவான் பிரபஞ்சத்தைப் படைத்தவர் மற்றும் எல்லா இடங்களிலும் எங்கும் வியாபித்திருக்கிறார். அவர் பிரபஞ்சத்தை கட்டுப்படுத்துகிறார் மற்றும் அவர் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தின் எஜமானர். அவர் அனைத்து உயிரினங்களையும் உருவாக்குபவர், பராமரிப்பவர் மற்றும் அழிப்பவர். அவர் முழு மகிமையுடன் இருக்கிறார் மற்றும் அனைத்து உயிரினங்களின் சாரமாக இருக்கிறார் மற்றும் அனைத்து உயிரினங்களையும் வளர்க்கிறார்.

இந்த ஸ்லோகத்தில் பின்வரும் 9 நாமங்கள் உள்ளன:

  1. விஸ்வம்
  2. விஷ்ணு
  3. வஷட்காரஹ்
  4. பூத  பவ்ய பவத் ப்ரபுஹ்
  5. பூதகிருதம்
  6. பூதபிரித்
  7. பாவாஹ்
  8. பூதாத்மா
  9. பூதபாவன

 

 

விச்வம் – அனைத்தும் ஆனவர்
விஷ்ணு: — அனைத்தின் உள்ளும் உயிரானவர்
வஷட்கார: — அனைத்தையும் தன்பால் வசீகரிப்பவர்
பூத பவ்ய பவத் ப்ரபு: — சென்றது நின்றது வருவது அனைத்தின் பிரபுவும் அவரே
பூதக்ருத் – அனைத்தையும் உருவுடையதாய் ஆக்குபவர் அவரே
பூதப்ருத் — உண்டான அனைத்தையும் தாங்குபவர் அவரே
பாவ: — இருப்பது என்பதே அவர்தான்
பூதாத்மா — உயிர்களின் உள்ளுயிராய் இருப்பவர்
பூதபாவன: — உயிர்களை உருவு கொண்டவையாய் இலங்கச் செய்பவர்

அவை, ஓம்! தன்னையும் தவிர அனைத்துப் பொருட்களிலும் நுழைந்திருப்பவன் {விஸ்வம்},
அனைத்துப் பொருட்களையும் மறைப்பவன் {விஷ்ணு},
வேள்வி ஆகுதிகள் அனைத்தும் ஊற்றப்படும் இடமாக இருப்பவன் {வஷட்காரன்},
கடந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றின் தலைவன் {பூதபவ்யபவத்ப்ரபு},
இருப்பிலுள்ள அனைத்துப் பொருட்களையும் படைத்து அழிப்பவன் {பூதக்ருத், பூதப்ருத்},
அனைத்துப் பொருட்களையும் நிலைநிறுத்துபவன் {பாவன்},
அனைத்துப் பொருட்களின் ஆன்மாவாக இருப்பவன் {பூதாத்மா},
அனைத்துப் பொருட்களையும் தோற்றுவித்தவன்{பூதபாவநன்};(14)

குணத்தால் நிறைந்தவன் -எங்கும் பரந்து ஆள்பவன் –

1- விஸ்வம் -மங்களமான குணங்களால் முழுதும் நிரம்பியவர் -all in one
2-விஷ்ணு -அனைத்துக்குள்ளும் நுழைந்து நீக்கமற நிறைந்து இருப்பவர் -one in all
3-வஷட்கார -அனைத்தையும் தாம் நினைத்தபடி நடத்தி தன் வசத்தில் வைத்து இருப்பவர் –
4-பூத பவ்ய பவத் ப்ரபு–முக்காலங்களில் உள்ளவர்களுக்கு எல்லாம் தலைவர் -ஸ்வாமி –

தானே உலகு எல்லாம் –தானே படைத்து அழித்துக் காப்பவன்

5-பூதக்ருத் -தன் நினைவாலே அனைத்தையும் படைப்பவர் –
6-பூதப்ருத்–படைத்த அனைத்தையும் தானே தாங்குபவர் –
7-பாவ -பிரபஞ்சத்தையே தன்னை விட்டுப் பிரியாமல் சார்ந்து இருப்பதாகக் கொண்டவர் -மயிலுக்குத் தோகை போலே
8-பூதாத்மா -அனைத்துக்கும் ஆத்மாவாக இருப்பவர் -அனைத்தும் அவருக்கு உடல்
9-பூத பாவன-அனைத்தையும் பேணி வளர்ப்பவர் -ஆகையால் அவரே ஸ்வாமி

————

இத் யுபோத்தாத ப்ரகரணம்
அத பஞ்ச ஸித்தாந்த நிஷ்டா நிர்ணயேந, பர வ்யூஹ விவிஸேஷேஷு ஸ்வ நாம -பவ அர்த ப்ரகரண ஒவ்சித்ய-அபௌந ருக்த்ய-ப்ரப்ருதிபி:
ந்யாயைஸ் : வ்யவஸ்தாப்ய, வ்யாகரண-நிருக்த -ஆர்ஷ நிர்வசந ப்ரஸ்தா நேந நாமாநி நிருச்யந்தே |

பாஞ்சராத்ரம் அருளிய –
விண் மேல் இருப்பாய் இத்யாதி

முதல் 122-பரத்வம் -அந்தர்யாமியும் இதில் சேரும்
அடுத்த 24-வ்யூஹம்
மேல் 147-1000 விபவம்-அர்ச்சையும் இதில் சேரும்

அர்த ப்ரகரண ஒவ்சித்ய-அபௌந ருக்த்ய-ப்ரப்ருதிபி:
ந்யாயைஸ் –பொருள் –
இடம் சுட்டி பொருள் -பிரகரணம்
பொருத்தம் -உசிதமான
புனர் யுக்தி இல்லாமல்

வ்யாகரண-
நிருக்த -யவ்வ்கிகம் ரூடி இரண்டும்
ஆர்ஷ நிர்வசந-ரிஷிகள் பிரயோகம்

இனி பஞ்ச ஸித்தாந்த நிஷ்டா நிர்ணயப்படி
பரம் வ்யூஹம் விபவம் அந்தர்யாமி அர்ச்சை என்பவற்றுள்
ஸ்ருதி
லிங்கம்
பிரகரணம் தகுதி
கூறியது கூறாமை
முதலிய நியாயங்களைக் கொண்டு வியவஸ்தை செய்து
வியாகரணம்
நிருத்தம்
ரிஷிகளுடைய நிர்வசனம்
ஆகிய இவற்றின் முறையாக பகவன் நாமங்களுக்குப் பொருள் கூறப்படும்
என்று ப்ரதிஜ்ஜை செய்து அருளுகிறார் –

1-1- வ்யாப்தி -சர்வேஸ்வரத்வம்—முதல் நான்கு திரு நாமங்கள்

தத்ர பூர்வம் ஸர்வதோமுகம் பகவத : பூர்ணத்வமாஹ – விஶ்வமிதி (எல்லா வகையிலும் பூர்ணம்) |
விஸதி (அவர் நுழைகிறார் -கரந்து எங்கும் பரந்துளன் விஷ்ணு மேல் -)அவயவாந் இத்யர்தே “அஸூ ப்ருஷி லடி கணி கடி விஶிப்ய: க்வந்” இதி கவந் ப்ரத்யய: |
யதா மோக்ஷ தர்மே ஸம்யமாய பஞ்சஶிக: –
“வேஸநாத் விஶ்வம் இத்யாஹு: லோகாநாம் காஶி ஸத்தமே |
லோகாம்ஶ்ச விஶ்வ மேவேதி ப்ரவதந்தி நராதிப ||” இதி |
ஸ்வபாவிக-அநவதிக அதிஸய- மாங்கல்யை கதாநை : ஸ்வரூப ரூப குண விபவை : பரிபூர்ண இத்யர்த :;

பரம் வ்யூஹம் விபவம் என்னும் அவதாரங்களினால் ஏற்பட்ட நாமங்களில்
பர ஸ்வரூப நாமங்கள் முதலில் சொல்லப்படுகின்றன

எல்லாவற்றிலும் பிரவேசித்து
எங்கும் நிரம்பி இருப்பவர்
இயற்கையாகவே மங்கள ரூபங்களாகவே உள்ளவையும்
தமது சிறப்புக்கு மேல் வரை அற்றவையுமான
திவ்ய ஆத்ம ஸ்வரூபம்
திவ்ய மங்கள விக்ரஹம்
கல்யாண குணங்கள் மஹிமை
ஆகிய இவை பரிபூர்ணமாக நிரம்பி இருப்பவர்

இந்த நாமத்தால் பூர்ணர் என்பது ஏற்படுகிறது
இதுவே மற்ற நாமங்களினால் சிறப்பிக்கப் படுகின்றது

அளவற்ற பெரு விபூதிகளை யுடையவராய் இருப்பதால்
இது முதலில் சொல்லப்பட்டது –

இந்த நாமத்துக்கு நான்காம் வேற்றுமையில்
விஸ்வாய-என்றும்
விஸ்வஸ்மை நம -என்றும்
இரண்டு ரூபங்கள் வழங்கி வருகின்றன –
பாணினி மஹரிஷி -ஸர்வாதீநி ஸர்வ நாமானி -என்று பெரும் பேர் வைத்து இருத்தலாலும்

அந்தப்பேருக்குத் தக்கபடி உசிதமான ஸப்தங்களையே அந்த வகையில் சேர்த்து இருத்தலாலும்
விஸ்வம் என்னும் இந்த ஸப்தமும்
இதே போல் மேலே வரும் ஸர்வ நாம ஸப்தங்களும்
இந்நூலில் ஸம் ஜ்ஜை யாதலாலும்
ஸம் ஜ்ஜைகள் ஸர்வ நாம ஸப்தங்கள் அல்லவாகையாலும்
இவை ஸர்வ நாமங்களில் சேரா
ஆகையால் இவை ஸர்வ நாம ஸப்தம் போலே நான்காம் வேற்றுமையில்
விஸ்வஸ்மை -முதலியன ஆகாமல்
விஸ்வாய முதலியவையாகவே யாகும் என்பதே பட்டர் பாஷ்யத்தில் நிர்வசனத்தின் கொள்கை

விஸ்வம் முதலிய ஸப்தங்கள் பகவான் ஒருவருக்கே பேர்கள் ஆயினும்
அவை ஸம்ஜ்ஜா நாமங்கள் ஆகா என்றும்
ஸம் ஜ்ஜை -அநாதி ஸம் ஜ்ஜை-என்றும் ஆதுநிக ஸம் ஜ்ஜை என்றும் இருவகைப்படும் என்றும்
ஆதுநிக ஸம் ஜ்ஜையே –ஸம் ஜ்ஜையில் சேரும் என்றும்
அநாதி ஸம் ஜ்ஜை ஸம் ஜ்ஜை வகையில் சேராது என்றும்
ஆகையால் விஸ்வஸ்மை -முதலிய ரூபங்கள் கொள்ளப்பட வேண்டும் என்றும் மாத்வ பாஷ்யம் கூறும்

சங்கர பாஷ்யத்தில் விசேஷ விதி ஒன்றும் சொல்லப்படாமையால் இந்த நாமங்களை ஸர்வ நாம ஸப்தங்களாகவே கொள்வது வழக்கத்தில் இருக்கிறது –

நீக்கமற நிறைந்த வ்யாப்தி அடுத்த விஷ்ணு
இங்கு குணங்களால் நிறைந்த -இயற்கையாகவே -மேம்பட்டதாக வேறே எங்கும் இல்லை –
மங்கள குணங்களுக்கு இருப்பிடம்
ஸ்வரூபம் ரூபம் குணம் விபூதி உடைமை விபவம் பெருமை-இவற்றால் பூர்ணம்

இந்த பூர்ணம் -விளக்கம் மேல்-உயர்வற உயர் நலம் உடையவன் -விஸ்வம் -மேல் எல்லாம் இதன் விளக்கம் -பொய் நின்ற -முதல் பாட்டு திரு விருத்த சுருக்கம் போல் –

கார்த்ஸ்ந்ய வசநத்வாதஸ்ய, ஆதவ் அநவச்சேத்ய மஹா விபூதி த்வஸ்ய ஸம்கீர்தந யோக்யத்வாச்ச |
“தத ஶிஷ்யம் ஸம்ஜ்ஞா ப்ரமாணத்வாத்” இதி, யதோபலம்பம் ஸர்வத்ர லிங்க நியம : |(நபும்ஸக லிங்கம் புருஷோத்தமனை விஸ்வம்-ஆண் அல்லன் பெண் அல்லன் அல்லா அலியும் அல்லன் -லிங்கம்- வசனம்- விபக்தி வேற்றுமை உருபு -விசேஷ்யம் பொறுத்தே சமஸ்க்ருதம் படி
மேக வர்ணம் உடையவராய் –இருக்கும் விஷ்ணுவை வணங்குகிறேன்
விஸ்வம் -உலகம் -நபும்ஸக லிங்கம்
ஓம் விஸ்வாயா நம )

கார்ய வாசி விஶ்வ ஸப்த : காரணே வர்தத இதி கேசித் |
தத்வாரத்தம் ; (ஜகத்தானவர் -ஜகத்தும் இவரும் வேறே அல்ல -கார்யம் விஸ்வம் -காரணத்துக்கு பிரயோகம் -சங்கரர் )

ஸர்வேஷாம் நாம்நாம் யோக ரூடிப்யாம் பகவதி ஸ்வ ஸப்தத்தவ உபபாதநாத் ஜகந்யவ்ருத்தே: அயுக்தத்வாச்ச |

அந்யே , விஶ்வமிதி ப்ரஹ்ம ப்ரபஞ்சயோ : அபேத பரம் ப்ரபஞ்சித வந்த :, தத் வஞ்சந மாத்ரம் |

அபேத வாதம் -ஸர்வம் கல் இதம் ப்ரஹ்மம் –
ஆனால் மேல் தத் ஜலான் -அவனிடம் பிறந்து அவனால் காக்கப்பட்டு அவன் இடம் லயம் -நினைந்து சாந்தி அடைவாய் –
ஆகவோ உண்மையில் வேறே வேறே ஜகத்தும் ப்ரஹ்மமும்

ததா ஹி ந ஸாவத் விஶ்வ பதம் அபேத வாசி (நுழைதல் என்றாலும் யார் எங்கு பலவும் உண்டாகும் -ஆகவே பேதம் ஸித்தம்) |

ந ச தத்த்வ மஸ்யாதி வத் ஸாமாநாதி கரண்யேந ஐக்ய பரம், ஸம்ஜ்ஞாநாம்
ஸ்வாேந்த்ர்யேண ஐக்ய பரத்வ அவிவக்ஷணாத்; அத ஏவ ஹி விஶ்வம் விஷ்ணு: இதி அவிஸேஷ்ய லிங்கத்வம் |
நிரஸ்தஶ்ச அயம் அர்வாகேவ பக்ஷ:; அந்யத்ர ச அநேகத்ர | இத மேவ பூர்ணத்வம் ஸர்வைர் நாமபி: விஷ்ணு: இத்யாதிபி: விஶிஷ்யதே || 1 ||

ஒன்றை அறிந்தால் கார்யம் எல்லாம் அறிந்ததாகும் -மற்றவை இல்லை என்பது அல்லவே
மண் குடம் -பொற் குடம் –
பின்ன பிரவ்ருத்தி நிமித்தானாம் –-சாமானாதி கரண்யம் –
நான் புத்தகம் சொல்ல மாட்டோம் -என்னுடைய புத்தகம் வேற்றுமை உறுப்புடன் சொல்வோம்
தத்வ மஸி ஸ்வேத கேதோ –
நேக நா நாஸ்தி –
ஏகமேவ அத்விதீயம்
தனி முதல் வித்து
உபாதானம் நிமித்தம் ஸஹகாரி -வேதாந்த கால ஷேபம் உண்டே
தத் -அது தவம் நீயாகவே இருக்கிறாய்
ஜகத்துக்கு அந்தர்யாத்மாவாய் இருப்பவனே உனக்கும் அந்தர்யாமி -காரணம் என்று சொல்ல வந்தது
அந்த ப்ரஹ்மமே நீ -தப்பாக -லக்ஷணம் விட்டு அர்த்தம் சொல்லக் கூடாதே
ஓம் -சாதர்த்த சதுர்த்தி இல்லாமல் -அகாரம் -ஏவ உகாரம் -மகாரம் -பரமாத்மாவே ஜீவாத்மா
ஸ்தான ப்ரமாணத்தாலே -ஆய -மேல் இருப்பதால் லுப்த சதுர்த்தி வரவழைத்துக் கொண்டு
அகாரத்துக்கே ஜீவாத்மா சேஷ பூதன் என்று கொள்ளுகிறோம்

1-விச்வம் –
ஸ்வரூபம் ரூபம் குணம் அனைத்திலும் பூரணன்
உயர்வற உயர் நலம் உடையவன் –1-1-1-
ஒத்தார் மிக்கார் இலையாய மா மாயன்
திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
படர் பொருள் முழுவதுமாய் அவையவை தொறும் உடன் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன் -1-1-7-

செய்ய தாமரைக் கண்ணனாய் -3-6-1-
உலகமுண்ட -தடம் கடல் கிடந்தான் தன்னை -வ்யூஹம்
இலங்கை -செற்ற வில்லி -விபவம்
நாராயணனே பாற் கடலில் பையத் துயின்ற பரமன் -ஓங்கி உலகு அளந்த உத்தமன்
ஏஷ நாராயணன் -ஷீராப்தி நிகேதன் -ஆகதோ மதுராம் புரிம்
பூர்ணம் –இதம் -அர்ச்சை –அது பூர்ணம் –இதுவே முதல் திரு நாமம்

விஸ்வம்-
ஸ்வரூபம் ரூபம் குணம் மகிமை ஆகியவற்றால் பரிபூர்ணர்-ஸ்வா பாவிக-சர்வ வித பூரணத்வம் –
அசங்க்யேய உயர்வற -மங்களங்களுக்கு எல்லாம் ஒரே இருப்பிடம் –
ஸ்வரூபம் ரூபம் குணம் விபவம் முதலியவற்றால் பூர்ணர்–ஸ்ரீ பராசர பட்டர் -all in one
விஸ்வம் -ஸ்வரூப ரூப குண விபைவைகி பரி பூர்ண இத்யர்த்த -குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா -என்பதைப் பின்பற்றி

வேச நாத் விஸ்வம் இத்யாஹு லோகாநாம் காசி சத்தம லோகம்ச்ச விஸ்வம் ஏவ இதி ப்ரவதந்தி நராதிப -மோக்ஷ தர்மம்

மங்களகரமான ஸ்வரூபம் ரூபம் குணம் விபவம் இவற்றை ஸ்வா பாவிகமாக கொண்டவன் என்று முதலில் மங்களகரமாக திரு நாமம்

உலகுக்குக் காரணமாக இருப்பவர் -யதஸ் சர்வாணி பூதாணி-கார்யமாகவும் காரணமாகவும் -உலகம் ப்ரஹ்மம் விட வேறு அல்லாமையாலே –
விசதி-உலகைப் படைத்து பிரவேசிக்கிறான்
விசந்தி -சம்ஹார காலத்தில் சகல பூதங்களும் இவன் இடம் பிரவேசிக்கின்றன
விச்வம் -ஓம் என்கிற பிரணவம் -சொல்லுக்கும் பொருளுக்கும் வேறுபாடு இல்லை -ஓங்காரமான ப்ரஹ்மத்தையே குறிக்கும்–ஸ்ரீ சங்கரர்

1-விஸ்வம்
சங்கர பாஷ்யம் -உலகம் அனைத்தும் தாமாகவே இருப்பவர்
எல்லாப் பொருள்களுக்கும் காரணமும்
எல்லாவுமாய் இருக்கிறதும்
எல்லாப் பொருள்களுக்கும் முடிவில் ஒடுங்கும் இடமானதும்
எல்லாவற்றிலும் பிரவேசித்து இருப்பதும்
ஸப்த பிரபஞ்சம் அனைத்தையும் தன்னுள் அடக்கிக் கொண்டு இருக்கும் ப்ரணவத்தால் சொல்லப் படுவதும்
எல்லாவுமாகவுமாய் இருப்பது பற்றி விருப்பு வெறுப்பு முதலியவற்றை விடுத்து
எதையும் ஹிம்ஸியாது
ஸ்துதி நமஸ்காராதிகளால் கொண்டாடத் தக்கதும்
எவ்வித நன்மைக்கும் ஸ்ரத்தையே காரணம் ஆகின்றது பற்றி எல்லாவித நன்மையையும் அளிக்கும்
ஸ்ரத்தை யுடன் பூஜிக்கத் தக்கதாயும்
ப்ரஹ்மம் என்பது பொருள்

ஆகவே பதினான்கு வித்யா ஸ்தானங்களாலும் சொல்லப்படும் ஒரே தெய்வம் எது என்பது முதல்
எதை ஜெபிப்பவன் முக்தியைப் பெறுவான் என்பது வரையில் வினவிய ஆறு வினாக்களுக்கும் விடையாக
எல்லாப் பொருளுக்கும் காரணமும் -என்பது முதலியவற்றால் கூறப்பட்ட ப்ரஹ்ம வஸ்துவே
இங்கு உள்ள விஸ்வம்
என்றதால் கூறப்பட்டது என்பது ஏற்பட்டது

கார்ய வாசகமாகிய விஸ்வ சப்தத்தால்
காரணமான ப்ரஹ்மத்தைச் சொல்லியதனால்
மற்றக் காரிய வாசகங்களாகிய
பிரமாதி சப்தங்களும்
ஸர்வேஸ்வரனையே குறிப்பது ஆகும் –

எல்லா இடத்திலும் உட் புகுந்து இருப்பவர் -கருடாரூடன் -சர்வ வியாபி -விசேஷமாக வளர்பவர் -வாயுவுக்கு அந்தர்யாமியாக நடத்துபவர்
உலகை நடத்துபவர் -உலகிற்குக் காரணமானவர் -ஜீவர்களை நியமிப்பவர்
விசேஷமான ஸூக ஜ்ஞான ரூபமாக இருப்பவர் -விசேஷமான ஸூகமே பல ரூபமாக இருப்பவர் -ஜ்ஞான ஸ்வரூபர் -ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்

ஸ்ரீ நரஸிம்ஹனையே சொல்ல வந்தது – -ஆதி மத்யம் அந்தம் -சொல்வதால்
விச்வம்-
நகமும் ஆயுதம்
நடுவிலும் அவனைச் சொல்ல வந்தது
விச்வம்-ஓம் விசவாய நம ஆதி சங்கரர் ஓம் விச்வச்மை நம –
புள்ளின் வாய் கீண்டானை- பகாசுரனை
சீதை -பொல்லா அரக்கன்- கம்சன்-கிள்ளிக் களைந்தவன் — கண்ணன்
நாமம் ஆயிரமுடைய நம்பி நாராயணன் ஸ்ரீ கண்ணன்-
ஸ்ரீ ராமன் -சொல்லும் ஸ்ரீ ராம ராமேதி
ஸ்ரீ ராமனும் இல்லை -ஸ்ரீ கிருஷ்ணனும் இல்லை –ஸ்ரீ நரஸிம்ஹனையே இல்லை நாராயணன் தானே அனைவரும் –
கிள்ளுவது நகம் கார்யம்
புள் ஜடாயு-கோபம் வர காரணம் -கச்ச லோகா -மயா–ஸ்ரீ லஷ்மி நியமனம் –
சரப பஷி கிளித்த ஸ்ரீ நரஸிம்ஹன்-தப்பான பிரசாரம் – மேட்டு அழகிய சிங்கன்-
ஹிரண்ய கசிபு -ஹிரண்ய ரஷன் -ராகவ ஸிம்ஹன்- யாதவ ஸிம்ஹன் – -மூன்று தடவை ஜெய விஜயரை
சிசுபாலன் தந்தவத்திரன்- காலே சடக்கென ஸ்ரீ நரஸிம்ஹன் போல் வர வேண்டும் ஸ்ரீ ருக்மிணி எழுதி அனுப்பிய —
அழகியான் தான் அரி உருவம் தான்-
நர லோக மனோபிராமம்
ராஜ சூய யாகம்- சிசுபாலன்-கோப சரிகள் காமத்தால் சிசு பாலன் த்வேஷத்தால்-
ஸ்ரீ நரசிம்மர் விருத்தாந்தம் பரிஷித் நாரதர் அருளுகிறார் பத்தாவது ஸ்கந்தம்
மனத்துக்கு இனியன்
விச்வம்-வியாப்தி -குணங்களால் உயர்ந்த வள்ளல்
காரணமான பிர பஞ்சம்-காரியம் பிரமத்தை -குறிக்கும் சங்கரர்
அவதாரம் பூர்ணம் -மத்வர்

விஸ்வம் –
விஸ் –நுழைதல்
விஸ்வம் -விஸ்வம் அனைத்துக்கும் த்ரிவித காரணன்
விஸ்வம் –ஸமஸ்த கல்யாண குண பூர்ணன் –
பர வாஸூ தேவன்
ஓம் விஸ்வாய நம –மந்த்ரம்

1. விஸ்வம் – பிரபஞ்சம்

விஸ்வம் என்பது பிரபஞ்சம் மற்றும் படைப்பின் மொத்தத்தை குறிக்கிறது. இது ‘விஷ்‘ என்ற மூல வார்த்தையிலிருந்து வந்தது, அதாவது ‘உள்ளே’ அல்லது ‘ஊடுருவல்’. பிரபஞ்சம் முழுவதும் வியாபித்திருப்பதால் விஸ்வம் என்று அழைக்கப்படுகிறது. பிரபஞ்சத்தின் ஒரு பகுதியாக இல்லாத எதுவும் நம்மைச் சுற்றி இல்லை. விஷ்ணு பகவான் விஸ்வத்தின் மூலகாரணமாக இருப்பதால், அவரே விஸ்வம் என்று அழைக்கப்படுகிறார்.

ஸ்ரீஆதிசங்கரரின் வார்த்தைகளில் ‘விஷ்வஸ்ய ஜகதஹ் காரணத்வேன விஷ்வமித்யுச்யதே ப்ரஹ்ம – பிரபஞ்சத்தின் காரணமாயிருப்பதால், பரமாத்மா பிரபஞ்சம்’ என்றும் குறிப்பிடப்படுகிறது.

விஸ்வம் என்றால் எங்கும் என்று பொருள். புருஷ ஸூக்தம் இறைவனைப் பற்றி கூறுகிறது ‘ஸ பூமிம் விஷ்வதோ விருத்வா அத்யதிஷ்டத்தஷாங்குலம் – அவர் உலகம் எங்கும் ஊடுருவி, உடல் அளவீடுகளுக்கு அப்பாற்பட்டவர்’

நாராயண ஸூக்தத்தில் நமக்கு உள்ளது:-ஸஹஸ்ரஷீஷம் தேவம் விஸ்வக்ஷம் விஸ்வஸம்புவம் விஸ்வம் நாராயணம் தேவம் அக்ஷரம் பரமம் பதம்‘  : எண்ணற்ற தலைகளை உடையவனும், எங்கும் கண்களை உடையவனும், பிரபஞ்சம் முழுவதையும் ஆசீர்வதிப்பவனும், பிரபஞ்சமாகத் திகழ்பவனுமான நாராயணனை நான் வணங்குகிறேன்.

ஸ்ரீ பராசர பட்டர், விஷ்ணுவின் முதல் நாமமே அவனது மகத்தான மகிமையையும், இயற்கையான, அசாத்தியமான, மங்களகரமான, மேன்மையான அவனுடைய அத்தியாவசிய இயல்பு, வடிவம், குணங்கள் போன்றவற்றின் விளிம்பிற்கு முழுமையையும் எடுத்துரைப்பது மிகவும் பொருத்தமானது என்று குறிப்பிடுகிறார்.

ஸ்ரீ விஷ்ணு புராணம் – ‘ஸ ஏவ ஸர்வ பூதாத்மா விஷ்வ ரூபோ யதோ அவயயா’ – அவர் இருக்கும் அனைத்திற்கும் ஆன்மா, மற்றும் அனைத்தும் அவரது உடல்.

“விஸ்வேஸ்வரம் அஜம் தேவம் ஜகதஹ் பிரபுமவ்யயம் – அவர் பிரபஞ்சத்தின் இறைவன் ஆனால் அவர் தோற்றமும் முடிவும் இல்லாதவர்” என்று பல ஸ்ருதி குறிப்பிடுகிறது.

———–

அத ஸஹஸ்ரநாம

(இனி) சஹஸ்ரநாம உரை தொடங்குகிறது

அத்ர நாமஸஹஸ்ரே இந்த ஆயிரம் திருநாமங்களில் ஆதித்யாதி ஶப்தாநாமர்தாந்தரே ஆதித்ய முதலான நாமங்கள் ப்ரஸித்தானாமாதித்யாத்யர்த்தானாம் சூரியன் போன்ற வேறு பெயர்களில் ப்ரஸித்தி அடைந்திருந்தாலும் தத்விபூதித்வேன அந்த ஒரே பரம்பொருளின் அதிசய சக்தியின் ஒரு வெளிப்பாடு ஆனதாலும் ததபேதாத்அந்த பரம்பொருளினின்று வேறானதில்லையாதலாலும் (ப்ரஹ்மம் ஒன்றே என்பது அத்வைதக் கொள்கையாகும்எனவேஅந்தப் பரம்பொருளினின்று வேறானது எதுவுமில்லை) தஸ்யைவ ஸ்துதிரிதி ப்ரஸித்தார்த்தக்ரஹனேSபி தத்ஸ்துதித்வம் அந்த திருநாமங்களின் ப்ரஸித்தி பெற்ற அர்த்தங்களை ஏற்கும் பொழுதும் அந்த பரம்பொருளின் பெருமையே போற்றப்படுகிறது |

இந்த ஆயிரம் திருநாமங்களில் ஆதித்ய முதலான நாமங்கள் சூரியன் போன்ற வேறு பெயர்களில் ப்ரஸித்தி அடைந்திருந்தாலும், அவையும் (அந்த சூரியன் முதலானவையும்) அந்த ஒரே பரம்பொருளின் அதிசய சக்தியின் (விபூதியின்) வெளிப்பாடேயாகும். பரம்பொருளுக்கும், இந்த உலகில் நாம் காணும் மற்ற பொருள்களுக்கும் வேறுபாடு எதுவும் இல்லாததால், அந்த (ஆதித்ய முதலான) திருநாமங்களின் (சூரியன் முதலான) ப்ரஸித்தி பெற்ற அர்த்தங்களை ஏற்கும் பொழுதும் அந்த பரம்பொருளின் பெருமையே போற்றப்படுகிறது.

பூதாத்மா சேந்தரியாத்மா ச ப்ரதானாத்மா ததா பவான் | ஆத்மா ச பரமாத்மா ச த்வமேக: பஞ்சதா ஸ்தித: || (விஶ்ணு புராணம் 5.18.50)

ஸ்ரீ விஶ்ணு  புராணத்தில் கூறப்பட்டுள்ளது:-பஞ்ச பூதங்கள், இந்த்ரியங்கள், பருப்பொருள், ஜீவாத்மா மற்றும் பரமாத்மா ஆகிய ஐந்து வடிவங்களாகவும் தாங்களே இருக்கிறீர்.

ஜ்யோதீம்ஶி விஶ்ணுர்புவனானி விஶ்ணுர்வனானி விஶ்ணுர்கிரயோ திஶஸ்ச | நத்ய: ஸமுத்ராஸ்ச ஸ ஏவ ஸர்வம் யதஸ்தி யன்னாஸ்தி ச விப்ரவர்ய || (விஶ்ணு புராணம் 2.12.38)

ஸ்ரீ விஶ்ணு  புராணத்தில் கூறப்பட்டுள்ளது:-நக்ஷத்திரங்கள் விஶ்ணு, உலகம் விஶ்ணு, வனம், மலைகள், திசைகள், ஆறுகள், கடல்கள் அனைத்தும் விஶ்ணுவேயாகும். ஹே அந்தணரில் சிறந்தோரே! இங்கு உள்ளவை, அல்லவை அனைத்தும் அந்த ஒரே பரம்பொருளே ஆகும்.

இதி விஶ்ணு புராணே இவ்வாறு ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

ஆதித்யானாம் அஹம் விஶ்ணு: (ஸ்ரீமத் பகவத்கீதை 10.21) ஆதித்தியர்களில் நான் விஶ்ணு

இத்யாரப்ய இது தொடக்கமாக

அதவா பஹுனைதேன கிம் ஞாதேன தவார்ஜுன |-விஶ்டப்யாஹமிதம் க்ருத்ஸ்னமேகாம்ஷேன ஸ்திதோ ஜகத் || (ஸ்ரீமத் பகவத்கீதை 10.42)

அன்றி, இதைப் பலவாறாகத் தெரிவதில் உனக்கு பயன் யாது அர்ஜுனா? எனது கலையொன்றால் இவ்வையகத்தை நிலை நிறுத்தியுள்ளேன்.

இதி பர்யந்தம் கீதாயாம் இது (1௦.42 ஸ்லோகம்) ஈறாக, ஸ்ரீமத் பகவத்கீதையிலும் இவ்வாறே கூறப்பட்டுள்ளது.

ப்ரஹ்மைவேதம் விஶ்வமிதம் வரிஷ்டம் (முண்டக உபநிஶத் 2.2.12) இந்த உலகம் மேலான இந்த ப்ரஹ்மனாகவே உள்ளது.

புருஶ ஏவேதம் விஶ்வம் (முண்டக உபநிஶத் 2.1.10) இந்த உலகம் (புருஶனான) ப்ரஹ்மனாகவே உள்ளது.

இதி ஸ்ருதிஸ்ச இவ்வாறு ஸ்ருதியிலும் (வேதங்களிலும்) கூறப்பட்டுள்ளது.

புனருக்தி தோஷம்: ஸஹஸ்ரநாமம் எனும்போது ஆயிரம் நாமங்களை கூறவேண்டும். ஒரே நாமத்தை ஆயிரம் முறை கூறலாகாது. ஆனால், ஸஹஸ்ரநாமத்தில் சில திருநாமங்கள் மீண்டும் மீண்டும் வருகின்றன (உதாரணத்திற்கு விஶ்ணு). அவற்றிற்கு உரை எழுதும் பொழுது அர்த்தத்தில் வேறுபாடு காண்பிக்க வேண்டும். இல்லையேல் அவை தனித்த திருநாமமாக ஏற்றுக்கொள்ள படமாட்டாது (ஆயிரம் எண்ணிக்கையும் வராது). இதை புனருக்தி தோஷம் என்பர். எனவே, இங்கு ஆதிசங்கர பகவத்பாதர், தமது சஹஸ்ரநாம உரையில் அவ்வாறு புனருக்தி தோஷங்கள் இல்லை என்பதை பல்வேறு உதாரணங்கள் மூலம் தெளிவு படுத்துகிறார்.

மேலும், இவ்வாறு பலமுறை வரும் திருநாமங்களுக்கு உரை எழுதுகையில், முதன் முறை வரும்பொழுதே அதன் மற்ற பொருள்களையும் கொடுத்துள்ளார். அந்த பொருட்களில் ஒரு சிலவற்றை அதே திருநாமம் பின்னர் வரும்பொழுது எடுத்தாள்கிறார். இதை புனருக்தி தோஷமாக கருத இயலாது. முதன் முறை வரும் திருநாமத்திற்கு (அவர் கூறியுள்ள பல பொருட்களில்) முதல் பொருளையும், மற்ற பொருள்களை பின்வரும் இடங்களுக்குமாக நாம் கருதவேண்டும். 

விஷ்ண்வாதிஷப்தானாம் புனருக்தானாமபி வ்ருத்திபேதே-நார்த்தபேதான்ன பௌனருக்த்யம் |

விஶ்ணு முதலிய திருநாமங்கள் மீண்டும் மீண்டும் வரும்போதும், அந்த திருநாமத்தின் பொருளில் (ஒவ்வொரு இடத்திலும்) வேறுபாடுகள் உள்ளதால் புனருக்தி தோஷம் இல்லை.

ஸ்ரீபதிர்மாதவ இத்யாதீனாம் வ்ருத்யேகத்வேSபி ஶப்தபேதான்ன பௌனருக்த்யம் |

ஸ்ரீபதி, மாதவ முதலிய திருநாமங்களின் பொருள் ஒன்றை இருப்பினும் அந்த நாமங்கள் வெவ்வேறாய் இருப்பதனால் புனருக்தி தோஷம் இல்லை.

அர்த்தைகத்வேSபி ந பௌனருக்த்யம் தோஷாய, நாம்னாம் ஸஹஸ்ரஸ்ய கிமேகம் தைவதமிதி ப்ருஶ்டேரேக-தைவதவிஶயத்வாத்|

இந்த விஶ்ணு சஹஸ்ரநாமமே, “உலகத்தின் ஒரே முழுமுதற் கடவுள் யார்?” என்ற கேள்வியிலிருந்து ஒரே பரம்பொருளின் விஷயமாகப் பிறந்தது. எனவே, பல திருநாமங்களின் பொருள் ஒன்றாய் இருப்பினும் புனருக்தி தோஷம் வருவதில்லை.

யத்ர ஃபுல்லிங்கஶப்தப்ரயோகஸ்தத்ர விஶ்ணுர்விஶேஶ்ய:

(இந்த சஹஸ்ரநாமத்தில்) ஆண்பால் திருநாமங்கள் பரப்ரஹ்மத்தின் விஶ்ணு ஸ்வரூபத்தையும்

யத்ர ஸ்திரீலிங்கஶப்தஸ்தத்ர தேவதா விஶேஶ்யதே

பெண்பால் திருநாமங்கள் மற்ற பரப்ரஹ்மத்தின் மற்ற தேவதை ஸ்வரூபத்தையும்

யத்ர நபும்ஸகலிங்கஶப்தஸ்தத்ர ப்ரஹ்மேதி விஶேஶ்யதே |

(ஆண்பாலும் இல்லாமல் பெண்பாலும் இல்லாமல்) பொதுவான திருநாமங்கள் (நேரடியாக) பரப்ரஹ்மத்தை குறிப்பிடுவதாகக் கொள்ளவேண்டும்.

யத: ஸர்வாணி பூதானி (ஸ்ரீ விஶ்ணு சஹஸ்ரநாமம் 11) எவரிடமிருந்து, கல்பத்தின் தொடக்கத்தில் ஜீவராசிகள் தோன்றினவோ…

இத்யாரப்ய ஜகதுத்பத்தி ஸ்திதிலயகாரணஸ்ய ப்ரஹ்மண ஏக தைவதத்வேனாபிஹிதத்வாதாதாவுபயவிதம் ப்ரஹ்ம விஶ்வஶப்தே-நோச்யதே

(ஸ்ரீ விஶ்ணு சஹஸ்ரநாம ஸ்லோகம் 11) இது தொடக்கமாக இந்த உலகின் தோற்றம், காத்தல் மற்றும் அழிவின் காரணமாய் உள்ள ப்ரஹ்மமே ஒரே முழுமுதற் கடவுளாக (ஸ்ரீ பீஷ்மாச்சார்யரால்) கூறப்பட்டுள்ளது. எனவே (காரண  மற்றும் காரிய) ப்ரஹ்மம் முதலில் “விஶ்வ” எனும் திருநாமத்தால் (ஸ்ரீ பீஷ்மாச்சார்யரால்) அழைக்கப் படுகிறார்.

ஓம் விஶ்வஸ்மை நம:

விஶ்வம் என்ற இந்த முதல் திருநாமத்திற்கு ஆதிசங்கரர் கீழ்கண்ட 5 விளக்கங்களை அளித்துள்ளார்.

ஜகத: காரணத்வேனவிஶ்வம்இத்யுச்யதே ப்ரஹ்ம |

(விஶ்வம் எனும்) இந்த பிரபஞ்சத்தின் காரணமாய் இருப்பதால் பகவான் ‘விஶ்வம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

1. விஶ்வஸ்ய ஜகத: காரணத்வேன விஶ்வம் இத்யுச்யதே ப்ரஹ்ம ஆதௌ து விஶ்வமிதி கார்யஶப்தேன காரணக்ரஹனம் கார்யபூத-விரிஞ்ச்யாதிநாமபிரபி உபபன்னா ஸ்துதிர்விஶ்ணோரிதி தர்ஶயிதும்

(விஶ்வம் எனும்) இந்த பிரபஞ்சத்தின் காரணமாய் இருப்பதால் பரப்ரஹ்மமான பகவான் ‘விஶ்வம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். விஶ்வம் எனும் காரியத்தால் (வினைப்பயனால்), முழுமுதல் காரணத்தை (பிரபஞ்ச உற்பத்தி எனும் வினை புரிபவரை) அறிந்து கொள்ளலாம். இந்த உலகின் உற்பத்திக்கு நேரடி (ப்ரத்யக்ஷ) காரணமாய் இருக்கும் ப்ரஹ்மா முதலிய திருநாமங்களும் பகவான் ஸ்ரீவிஶ்ணுவின் புகழையேப் பாடுகின்றன (ஏனெனில், ப்ரஹ்மாவும் பரப்ரஹ்மமான விஶ்ணுவே)

விஶ்வஸ்ய ஜகத: விஶ்வம்என்றுஅழைக்கப்படும்இந்தபிரபஞ்சத்தின்காரணத்வேனகாரணமாய்இருப்பதால்விஶ்வம் இத்யுச்யதே ப்ரஹ்ம பரப்ரஹ்மத்தைவிஶ்வம்என்றுஅழைக்கின்றனர் |

(விஶ்வம் எனும்) இந்த பிரபஞ்சத்தின் காரணமாய் இருப்பதால் பகவான் ‘விஶ்வம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஆதௌ து முழுமுதல் விஶ்வமிதி கார்யஶப்தேன விஶ்வம் எனும் காரியத்தால் (வினைப்பயனால்காரணக்ரஹனம் காரணத்தை (பிரபஞ்ச உற்பத்தி எனும் வினை புரிபவரை) அறிந்து கொள்ளலாம் கார்யபூத-விரிஞ்ச்யாதிநாமபிரபி இந்த உலகின் உற்பத்திக்கு நேரடி (ப்ரத்யக்ஷ) காரணமாய் இருக்கும் ப்ரஹ்மா முதலிய திருநாமங்களும் உபபன்னா ஸ்துதிர்விஷ்ணோரிதி தர்ஶயிதும் பகவான் ஸ்ரீவிஶ்ணுவின் புகழையேப் பாடுகின்றன |

  1. யத்வாபரஸ்மாத் புருஶான்ன(அ)பின்னமிதம் விஶ்வம்பரமார்த்த தஸ்தேன விஶ்வம் இத்யபிதீயதே ப்ரஹ்ம|

அல்லது, இந்த பிரபஞ்சமானது உண்மையில் பரமபுருஶனான பரமாத்மா பரப்ரஹ்மத்தினிடம் ஒன்றியே (அதனின்று வேறுபடாது) இருப்பதால் பகவான் ‘விஶ்வம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

யத்வா,அல்லது பரஸ்மாத் புருஶான்னபரமபுருஶனான பரமாத்மா பரப்ரஹ்மத்தினிடம் (அ)பின்னமிதம்ஒன்றியே (அதனின்று வேறுபடாதுவிஶ்வம்இந்த பிரபஞ்சமானது இருப்பதால் பரமார்த்ததஸ்தேன விஶ்வம் இத்யபிதீயதே ப்ரஹ்மவிஶ்வம் என்று பரப்ரஹ்மத்தை அழைக்கின்றனர் |

  1. அதவா விஶதீதி விஶ்வம்ப்ரஹ்ம |

அல்லது, இந்த ப்ரபஞ்சத்தினுள் புகுவதனால் பகவான் ‘விஶ்வம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ப்ரஹ்மைவேதம் விஷ்வமிதம் வரிஷ்டம் (முண்டக உபநிஶத் 2.2.12)

முண்டக உபநிடதத்தில் கூறப்பட்டுள்ளது: இந்த உலகம் மேலான இந்த ப்ரஹ்மனாகவே உள்ளது.

புருஶ ஏவேதம் விஷ்வம் (முண்டக உபநிஶத் 2.1.1௦)

முண்டக உபநிடதத்தில் கூறப்பட்டுள்ளது: இந்த உலகம் (புருஶனான) ப்ரஹ்மனாகவே உள்ளது.

இத்யாதி ஸ்ருதிப்யஸ்தத்பின்னம் ந கிஞ்சித் பரமார்த்தத: சதஸ்தி |

இந்த (முண்டகோபனிஷத்) ஸ்ருதி வாக்கியங்களின் மூலம், ப்ரஹ்மத்தைத் தவிர்த்து (இந்த பிரபஞ்சத்தில்) வேறொன்றும் இல்லை என்பது விளங்கும்.

அதவா அல்லது விஶதீதி புகுவதனால் விஶ்வம்இந்த ப்ரபஞ்சத்தினுள் ப்ரஹ்ம பரப்ரஹ்மமான பகவானை “விஶ்வம்” என்ற திருநாமத்தால் அழைக்கின்றனர்.

அல்லது, இந்த ப்ரபஞ்சத்தினுள் புகுவதனால் பகவான் ‘விஶ்வம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘தத் ஸ்ருஶ்டா ததேவானுப்ராவிஶத்’ (தைத்ரீய உபநிஶத் 2.6)

தைத்ரீய உபநிடதத்தில் கூறப்பட்டுள்ளது:​ (பரப்ரஹ்மம்) அவற்றைப் படைத்து அதிலேயே நுழைந்தார்.

இதி ஶ்ருதே இவ்வாறு (தைத்ரீய உபநிஶத்) வாக்கியம் கூறுகின்றது.

  1. கிஞ்ச ஸம்ஹ்ருதௌ விஶந்தி ஸர்வாணி பூதான்யஸ்மின் இதி விஶ்வம்ப்ரஹ்ம |

பிரளய காலத்தில் இந்த பிரபஞ்சமும், அதிலுள்ள அனைத்து ஜீவராசிகளும் அந்த ப்ரஹ்மத்தை சென்று லயமடைவதால் பகவான் ‘விஶ்வம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கிஞ்ச ஸம்ஹ்ருதௌ பிரளய காலத்தில் விஶந்தி சென்று லயமடைவதால் ஸர்வாணி பூதான்யஸ்மின்னிதி இந்த பிரபஞ்சமும், அதிலுள்ள அனைத்து ஜீவராசிகளும் விஶ்வம் ப்ரஹ்ம பரப்ரஹ்மமான பகவானை “விஶ்வம்” என்ற திருநாமத்தால் அழைக்கின்றனர்.

‘யத் ப்ரயந்த்யபிஸம்விஶந்தி’ (தைத்ரீய உபநிஶத் 3.1)

தைத்ரீய உபநிடதத்தில் கூறப்பட்டுள்ளது:​ இறப்பவை அனைத்தும் எதை (எந்த ப்ரஹ்மத்தை) சென்றடைகின்றனவோ…

இதி ஶ்ருதே இவ்வாறு (தைத்ரீய உபநிஶத்) ஸ்ருதி வாக்கியம் கூறுகின்றது.

  1. ததா ஹி ஸகலம் ஜகத்கார்யபூதமேவிஶத்யத்ர ச அகிலம் விஶதீத்யுபயதாபி விஶ்வம் ப்ரஹ்ம இதி |

மேலும், அதனுள் பிரவேசித்து பிரபஞ்சத்தை உருவாக்கியும், பிரளய காலத்தில் அனைத்து பிரபஞ்சத்தையும் தன்னுள்ளே லயமடையச் செய்வதாலும், இவ்வாறு, பல வழிகளாலும் பகவான் ‘விஶ்வம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ததா ஹி ஸகலம் ஜகத் அனைத்து பிரபஞ்சத்தையும் கார்யபூதமே விஶத்யத்ர சாகிலம் அதனுள் பிரவேசித்து பிரபஞ்சத்தை உருவாக்கியும் விஶதீத்யுபயதாபி பிரளய காலத்தில் அனைத்து பிரபஞ்சத்தையும் தன்னுள்ளே லயமடையச் செய்வதாலும்விஶ்வம் ப்ரஹ்ம இதி பரப்ரஹ்மமான பகவானை “விஶ்வம்” என்ற திருநாமத்தால் அழைக்கின்றனர்.

  1. யத்வாபரஸ்மாத் புருஶான்ன(அ)பின்னமிதம்விஶ்வம்பரமார்த்த தஸ்தேன விஶ்வம் இத்யபிதீயதே ப்ரஹ்ம|

அல்லது, இந்த பிரபஞ்சமானது உண்மையில் பரமபுருஶனான பரமாத்மா பரப்ரஹ்மத்தினிடம் ஒன்றியே (அதனின்று வேறுபடாது) இருப்பதால் பகவான் ‘விஶ்வம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

  1. அதவா விஶதீதி விஶ்வம்ப்ரஹ்ம |

அல்லது, இந்த ப்ரபஞ்சத்தினுள் புகுவதனால் பகவான் ‘விஶ்வம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

  1. கிஞ்ச ஸம்ஹ்ருதௌ விஶந்தி ஸர்வாணி பூதான்யஸ்மின் இதி விஶ்வம்ப்ரஹ்ம |

பிரளய காலத்தில் இந்த பிரபஞ்சமும், அதிலுள்ள அனைத்து ஜீவராசிகளும் அந்த ப்ரஹ்மத்தை சென்று லயமடைவதால் பகவான் ‘விஶ்வம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

  1. ததா ஹி ஸகலம் ஜகத்கார்யபூதமேவிஶத்யத்ர ச அகிலம் விஶதீத்யுபயதாபி விஶ்வம் ப்ரஹ்ம இதி |

மேலும், அதனுள் பிரவேசித்து பிரபஞ்சத்தை உருவாக்கியும், பிரளய காலத்தில் அனைத்து பிரபஞ்சத்தையும் தன்னுள்ளே லயமடையச் செய்வதாலும், இவ்வாறு, பல வழிகளாலும் பகவான் ‘விஶ்வம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்

‘அன்யத்ர தர்மாதன்யத்ராதர்மாத்’ (கடோபநிஶத் 1.2.14) இத்யாரப்ய கடோபநிஷத்தில் (அந்த ப்ரஹ்மானது) தர்மத்திற்கும் வேறான, அதர்மத்திற்கும் வேறான என்று (ப்ரஹ்மத்தை) விவரிக்கத் தொடங்குமிடத்து,

‘ஸர்வே வேதா யத்பதமாமனந்தி

தபாம்ஸி ஸர்வாணி ச யத் வதந்தி |

யதிச்சந்தோ ப்ரஹ்மச்சர்யம் சரந்தி

தத்தே பதம் ஸங்க்ரஹேன ப்ரவீம்யோமித்யேதத்’ || (கடோபநிஶத் 1.2.15)

கடோபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:

எல்லா வேதங்களும் எந்த இலக்கைப் பற்றி பேசுகின்றனவோ, எதற்காக அனைத்து தவங்களையும் கூறுகின்றனவோ, எதை அடைவதற்கு ஆசை கொண்டு ஸாதகர்கள் ப்ரஹ்மச்சர்யத்தை அனுஷ்டிக்கிறார்களோ, அந்த இலக்கை உனக்கு சுருக்கமாக உரைக்கிறேன்: அது “ஓம்” என்பதே ஆகும்.

‘ஏதத்த்யேவாக்ஷரம் ப்ரஹ்ம ஏதத்த்யேவாக்ஷரம் பரம் |

ஏதத்த்யேவாக்ஷரம் ஞாத்வா யோ எதிச்சதி தஸ்ய தத்’ || (கடோபநிஶத் 1.2.16)

கடோபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:

(ஓம்) என்ற இந்த ஒரு எழுத்தே சகுணப்ரஹ்மம், இந்த எழுத்தே நிர்குண ப்ரஹ்மம். இந்த எழுத்தையே த்யானித்து ஒருவன் எதை விரும்புகிறானோ, அவனுக்கு அது அமைகிறது (கிடைக்கிறது).

இதி காடகே இவ்வாறு கடோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது.

‘ஏதத்வை சத்யகாம பரம் சாபரம் ச ப்ரஹ்ம யதோங்கார’ (ப்ரஶ்ன உபநிஶத் 5.2) 

ப்ரஶ்ன உபநிஶத் கூறப்பட்டுள்ளது: ‘ஹே சத்யகாமனே!! இந்த ஓம்காரமே பர (நிர்குண) மற்றும் அபர (ஸகுண) ப்ரஹ்மமாகும்’.

இத்யுபக்ரம்ய இவ்வாறு தொடங்கி,

‘ய: புனரேதம் த்ரிமாத்ரேனோமித்யேதேனைவாக்ஷரேன பரம் புருஶமபித்யாயீத’ (ப்ரஶ்ன உபநிஶத் 5.5)

எவரொருவர் மூன்று மாத்திரை அளவுள்ள இந்த ஓம் எனும் அக்ஷரத்தால் பரம புருஶனை த்யானிக்கின்றனரோ (அவர்கள் முக்தியை அடைகின்றனர்).

இதி ப்ரஶ்னோபநிஶதி இவ்வாறு  ப்ரஶ்னோபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது.

‘ஒமிதி ப்ரஹ்ம | ஒமிதீதம் ஸர்வம் |’ (தைத்ரீய உபநிஶத் 1.8)

தைத்ரீய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது ‘ஓம் என்ற ப்ரணவமே ப்ரஹ்மமாகும். ஓம் என்ற ப்ரணவமே அனைத்துமாகும்’.

இதி யஜுர்வேதாரண்யகே இவ்வாறு யஜுர் வேத ஆரண்யகத்தில் (தைத்ரீய உபநிஶத்தில்) கூறப்பட்டுள்ளது.

‘தத்யதா ஷங்குனா ஸர்வாணி பர்னாணி ஸந்த்ருண்ணான் யேவமோங்காரேன ஸர்வா வாக் ஸந்த்ருணா | ஓம்கார ஏவேதம் ஸர்வம்’ (சாந்தோக்ய உபநிஶத் 2.23.3)

சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது ‘எவ்வாறு இலைகள் அதன் மத்தியில் உள்ள காம்பால் தாங்கப்படுகின்றனவோ, அவ்வாறே அனைத்து ஒலிகளும், வார்த்தைகளும் தாங்கப்படுகின்றன. எனவே, இங்கு அனைத்தும் ஓம்காரமே!!’

இதி சாந்தோக்யே இவ்வாறு சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது.

ஒமித்யேததக்ஷரமிதம் ஸர்வம் (மாண்டுக்ய உபநிஶத் 1)

மாண்டுக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது ‘ஓம் என்கின்ற இந்த எழுத்து இவை அனைத்துமாக உள்ளது’

ஒமித்யேததக்ஷரமிதம் ஸர்வம் (மாண்டுக்ய உபநிஶத் 1)

மாண்டுக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது ‘ஓம் என்கின்ற இந்த எழுத்து இவை அனைத்துமாக உள்ளது’

இத்யுபக்ரம்ய இவ்வாறு தொடங்கி,

‘ப்ரணவோ ஹ்யபரம் ப்ரஹ்ம ப்ரணவச்ச பர: ஸ்ம்ருத: |

அபூர்வோSனந்தரோSபாஹ்யோSநபர: ப்ரணவோSவ்யய’ || (மாண்டுக்ய காரிகா 1 | 26)

மாண்டுக்ய காரிகையில் கூறப்பட்டுள்ளது:

(ஓம் என்னும்) ப்ரணவமே அபர (சகுண) மற்றும் பர (நிர்குண) ப்ரஹ்மம் ஆகும். ஓம் என்ற இந்த ப்ரணவத்திற்கு தொடக்கம் (காரணம்) இல்லை, அது தனித்தன்மை வாய்ந்தது, அதனின்றி வேறொன்றும் இல்லை, எந்த காரண காரியங்களுடனும் தொடர்பு அற்றது.

‘ஸர்வஸ்ய ப்ரணவோ ஹ்யாதிர்மத்யமந்தஸ்தததைவ ச |

ஏவம் ஹி ப்ரணவம் ஞ்யாத்வா வ்யஶ்னுதே ததனந்தரம்’ || (மாண்டுக்ய காரிகா 1 | 27)

மாண்டுக்ய காரிகையில் கூறப்பட்டுள்ளது:

(ஓம் என்னும்) ப்ரணவமே அனைத்தின் தொடக்கம், இடை மற்றும் முடிவுமாகும். இந்த பிரணவத்தை இவ்வாறு அறிபவர் ஐயமின்றி அதையே (அந்த பிரணவமாகிய பரப்ரஹ்மத்தையே) அடைவர்.

‘ப்ரணவம் ஹீஶ்வரம் வித்யாத் ஸர்வஸ்ய ஹ்ருதயே ஸ்திதம் |

ஸர்வவ்யாபினமோங்காரம் மத்வா தீரோ ந ஶோஶதி’ || (மாண்டுக்ய காரிகா 1 | 28)

மாண்டுக்ய காரிகையில் கூறப்பட்டுள்ளது:

(ஓம் என்னும்) ப்ரணவமே அனைவரின் இதயத்தினுள்ளிருக்கும் இறைவனாக அறிவாய். இதை இவ்வாறு உணரும் பகுத்தறிவுடையவர் எக்காலத்திலும் வருத்தமுறுவதில்லை.

‘அமாத்ரோSனந்தமாத்ரஸ்ச த்வைதஸ்யோபஷம: ஶிவ: |

ஒம்காரோ விதிதோ யேன ஸ முனிர்நேதரோ ஜன:’ || (மாண்டுக்ய காரிகா 1 | 29)

மாண்டுக்ய காரிகையில் கூறப்பட்டுள்ளது:

ஒலியற்றதும், அனைத்து ஒலியாக இருப்பதையும், இருமைகள் அற்றதாயும், மங்களகரமானதாயும் (ஓம் என்னும்) இந்த ப்ரணவத்தை அறிபவரே முனிவராவர். மற்றையோர் (முனிவர்) அல்ல.

இத்யந்தா மாண்டூக்யோபநித் இது ஈறாக மண்டுக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது.

‘ஓம் தத்ப்ரஹ்ம | ஓம் தத்வாயு: | ஓம் ததாத்மா | ஓம் தத்ஸத்யம் | ஓம் தத்ஸர்வம் | (நாராயண உபநிஶத் 68)

நாராயண உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (ஓம் என்னும்) ப்ரணவமே ப்ரஹ்மம், ப்ரணவமே வாயு (காற்று), ப்ரணவமே ஆத்மா, ப்ரணவமே உண்மைப்பொருள், ப்ரணவமே அனைத்துமாகும்.

இத்யாதி ஶ்ருதிபி: இவ்வாறு ஸ்ருதிகளான வேதத்திலும் கூறப்பட்டுள்ளது.

‘ஒமித்யேகாக்ஷரம் ப்ரஹம வ்யாஹரன் மாமனுஸ்மரன் |

ய: ப்ரயாதி த்யஜன் தேஹம் ஸ யாதி பரமாம் கதிம்’ || (ஸ்ரீமத் பகவத்கீதை 8.13)

ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது:

‘ஓம்’ என்ற ப்ரஹ்ம எழுத்து ஒன்றையே ஜபித்துக்கொண்டு என்னை ஸ்மரிப்பவனாய், உடம்பைத் துறப்போன் பரமகதி பெறுகிறான்.

‘யதக்ஷரம் வேதவிதோ வதந்தி விந்தி யத்யதயோ வீதராகா: |

யதிச்சந்தோ ப்ரஹ்மச்சர்யம் சரந்தி தத்தே பதம் ஸங்க்ரஹேன’ || (ஸ்ரீமத் பகவத்கீதை 8.11)

ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது:

எந்த நிலையை (ஓம் என்னும் அக்ஷரத்தை) வேதமுணர்ந்தோர் அழிவற்றதென்பர், (மற்ற உலகியல் விஷயங்களில்) விருப்பமற்ற முனிவர் எதனுட் புகுவர், எதை விரும்பி ப்ரஹ்மச்சர்ய விரதம் காக்கப்படும், அந்த நிலையை உனக்குச் சுருக்கமாகச் சொல்லுகிறேன்.

‘ரஸோSஹமப்ஸு கௌந்தேய ப்ரபாஸ்மி ஶஶிஸூர்யயோ: |

ப்ரணவ: ஸர்வவேதேஶுப்த: கே பௌரும் ந்ருஶு’ || (ஸ்ரீமத் பகவத்கீதை 7.8)

ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது:

நான் நீரில் சுவை; குந்தி மகனே, நான் ஞாயிறிலும் திங்களிலும் ஒளி; எல்லா வேதங்களிலும் நான் ப்ரணவம்; வானில் ஒலி நான்; ஆண்களிடத்து நான் ஆண்மை.

‘மஹர்ஶீனாம் ப்ருகுரஹம் கிராமஸ்ம்யேகமக்ஷரம் |

யக்ஞானாம் ஜபயக்ஞோSஸ்மி ஸ்தாவராணாம் ஹிமாலய:’ || (ஸ்ரீமத் பகவத்கீதை 10.25)

ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது:

மஹரிஷிகளில் நான் ப்ருகு; வாக்குகளில் நான் ‘ஓம்’ என்ற ஓரெழுத்து; யக்ஞங்களில் நான் ஜபயக்ஞம்; ஸ்தாவரங்களில் நான் ஹிமாலயம்.

‘ஆத்யம் ச த்ரயக்ஷரம் ப்ரஹ்ம த்ரயீ யஸ்மின் ப்ரதிஶ்டிதா |

ஏகாக்ஷரம் பரம் ப்ரஹ்ம ப்ராணாயாம: பரம் தப:’ || (அத்ரி ஸ்ம்ரிதி 1.11)

அத்ரி ஸ்ம்ரிதியில் கூறப்பட்டுள்ளது:

மூன்றெழுத்துடைய ப்ரஹ்மமே (ப்ரணவமாகிய ஓம்காரமே) ஆதியில் இருந்தது; இதில் (இந்த ப்ரணவத்தில்) மூன்று வேதங்களும் நிலைபெற்றிருந்தன. ஓரெழுத்தான ஓம்காரமே பரப்ரஹ்மம், ப்ராணாயாமமே சிறந்த தவமாகும்.

‘ப்ரணவாத்யாஸ்த்ரயோ வேதா: ப்ரணவே பர்யவஸ்திதா: |

வாங்க்மயம் ப்ரணவம் ஸர்வம் தஸ்மாத்ப்ரணவமப்யஸேத்’ || (அத்ரி ஸ்ம்ரிதி 1.9)

அத்ரி ஸ்ம்ரிதியில் கூறப்பட்டுள்ளது:

மூன்று வேதங்களும் ப்ரணவத்தில் தொடங்கி ப்ரணவத்துடனே முடிகின்றன. அனைத்து சொற்களும் ப்ரணவ ரூபமேயாகும், எனவே ப்ரணவத்தையே நாம் உபாசிக்க வேண்டும்.

இத்யாதிஸ்ம்ருதேஶ்ச்ச விஶ்வஶப்தேனோங்காரோSபிதீயதே வாச்யவாசகயோரத்யந்தபேதாபாவாத் விஶ்வமித்யோங்கார ஏவ ப்ரஹ்மோத்யர்த்த: |

இவ்வாறு ஸ்ம்ருதிகளிலிருந்தும் ‘விஶ்வ’ எனும் நாமத்திற்கு ஓம்காரம் என்ற பொருளே நிரூபிக்கப்பட்டுள்ளது. சொல்லும், பொருளும் இணைபிரியாது இருத்தல்லால், விஶ்வம் அல்லது ஓம்காரமே ப்ரஹ்மம் என்பதே இதன் தேர்ந்த கருத்தாகும்.

‘ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம தஜ்ஜலானிதி சாந்த உபாஸீத’ || (சாந்தோக்ய உபநிஶத் 3.14.1)

சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:

ஐயமின்றி இங்கு அனைத்தும் ப்ரஹ்மமேயாகும்; அனைத்தும் அதனின்றே உருவாகி, அதனுள்ளேயே லயமடைந்து, அதிலேயே செயல்புரிகின்றன, எனவே, அனைத்தும் ப்ரஹ்மமேயாகும். இவ்வாறு, அமைதியான மனத்துடன் ப்ரஹ்மத்தை உபாஸிப்போமாக!!

இதி ஏததுக்தம் பவதி யஸ்மாத் ஸர்வமிதம் விகாரஜாதம் ப்ரஹ்ம தஜ்ஜத்வாத்தல்லயத்வாத்ததனத்வாச்ச | ந ச ஸர்வஸ்யைகாத்-மத்வே ராகாதய: ஸம்பவந்தி | தஸ்மாச்சாந்த உபாசீத இதி ஶ்ருதே: |

இந்த ஸ்ருதி வாக்கியத்திலிருந்து, “இங்குள்ள அனைத்தும் மாற்றங்களும் ப்ரஹ்மத்தில் இருந்தே உருவாவதாலும், ப்ரஹ்மத்திலேயே லயமடைவதாலும், ப்ரஹ்மத்திலேயே அனைத்து செயல்களையும் புரிவதாலும், (இங்குள்ள) அனைத்தும் ப்ரஹ்மமேயாகும். இங்கு அனைத்தும் (இரண்டின்றி) ஒன்றாகவே இருப்பதால், இதில் (ப்ரஹ்மத்தில்) விருப்பு, வெறுப்பாகிய தோஷங்கள் இல்லை. எனவே, அமைதியான உள்ளத்துடன் இந்த ப்ரஹ்மத்தை உபாசிப்பாயாக.” என்ற கருத்து புலனாகிறது.

ஶ்ரூயதாம் தர்மஸர்வஸ்வம் ஶ்ருத்வா சைவாவதார்யதாம் |

ஆத்மன: ப்ரதிகூலானி பரேஶாம் ந ஸமாசரேத்’ || (விஶ்ணுதர்மம் 3.255.44)

விஶ்ணுதர்மத்தில் கூறப்பட்டுள்ளது:

அனைவரும் தர்மத்தின் சாரத்தை கேளுங்கள்; கேட்டதை உங்கள் உள்ளத்தில் நன்கு நிலைநிறுத்துங்கள் – எந்த செயல் நமக்கு விரோதமானதோ, எதிரிடையானதோ, அதை (அந்த செயலை) மற்றவருக்கு எதிராக நாம் செய்தல் கூடாது.

‘ஆத்மௌபம்யேன ஸர்வத்ர ஸமம் பஶ்யதி யோSர்ஜுன |

ஸுகம் வா யதி வா துக்கம் ஸ யோகி பரமோ மத:’ || (ஸ்ரீமத் பகவத்கீதை 6.32)

ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது:

இன்பமாயினும், துன்பமாயினும் எதிலும் ஆத்மசமத்துவம் பற்றி சம பார்வை செலுத்துவானாயின், அவன் பரம யோகியாகக் கருதப்படுவான்.

‘நிர்குண: பரமாத்மாத்ர தேஹே வ்யாப்ய வ்யவஸ்தித: |

தமஹம் ஞானவிஞ்யேயம் நாவமன்யே ந லங்கயே’ || (மஹாபாரதம் வன பர்வம் 146 | 8)

மஹாபாரதம் வன பர்வத்தில் கூறப்பட்டுள்ளது:

குணங்களற்ற பரமாத்மா உடல் முழுவதிலும் இருக்கிறான். ஞானத்தால் அறியத்தக்க அவனை என்னால் அவமதிக்க இயலாது. எனவே, நான் உன்னைத் தாண்டிச் செல்ல மாட்டேன்.

‘யத்யாகமைர்ன விந்தேயம் தமஹம் பூதபாவனம் |

க்ரமேயம் த்வாம் கிரிம் சேமம் ஹனூமானிவ சாகரம்’ || (மஹாபாரதம் வன பர்வம் 146 | 9)

மஹாபாரதம் வன பர்வத்தில் கூறப்பட்டுள்ளது:

அனைத்து உயிர்களிலும் உறைந்திருக்கும் அவனை (பரமாத்மாவை) நான் அறியாதிருந்தால், கடலைத் தாண்டிய ஹனுமானைப்போல, உன்னையும் இந்த மலையையும் நான் தாண்டி இருப்பேன்.

‘பத்தவைராணி பூதானி த்வேஶம் குர்வந்தி சேத்தத: |

ஶோச்யான்யஹோSதிமோஹேன வ்யாப்தானீதி மநீஶிணாம் ||

ஏதே பின்னத்ருஶா தைத்யா விகல்பா: கதிதா மயா |

க்ருத்வாSப்யுபகமம் தத்ர சக்ஷேப ஶ்ரூயதா மம ||

விஸ்தார: ஸர்வபூதஸ்ய விஶ்ணோ: ஸர்வமிதம் ஜகத் |

த்ரஶ்டவ்யமாத்மவத்தஸ்மாதபேதேன விசக்ஷணை: ||

ஸமுத்ஸ்ருஜ்யாஸுரம் பாவம் தஸ்மாத்யூயம் ததா வயம் |

ததா யத்னம் கரிஶ்யாமோ யதா ப்ராப்ஸ்யாம நிர்வ்ருதிம் ||’ (ஸ்ரீ விஶ்ணு புராணம் 1.17.82 – 85)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:

(ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் ப்ரஹலாதன் அஸுர குழந்தைகளிடம் கூறினான்): பிறருடன் பகைமை பாராட்டி அவரை வெறுக்கும் மனிதரைக்கண்டு அறிஞர்கள் “ஒ!! இவர்கள் இவ்வாறு மோக வசப்பட்டுள்ளனரே!” என்று வருந்துவர். ஹே தைத்யர்களே (அஸுர குழந்தைகளே)! தன்னிலிருந்து பிறரை வேறொன்றாகப் பார்ப்பவரே வெறுப்பையும், பகைமையையும் அடைகின்றனர். எனவே, அவற்றை (வெறுப்பையும், பகைமையையும்) விட்டொழிக்க வேண்டும். நானறிந்த நல்லனவற்றை உங்களுக்குக் கூறுகின்றேன், கேளுங்கள். இந்த உலகம் அனைத்தும் பகவான் ஸ்ரீ விஶ்ணுவின் விரிவாக்கமாகும். இங்கு அவரைத்தவிர வேறொன்றும் இல்லை.  அறிவுடையோர் இங்கு அனைத்தையும் தமது ஆத்மாவின் வெளிப்பாடாகவே, வேறுபாடின்றி காண முயல வேண்டும். எனவே, நாம் நமது அஸுர தன்மையை விட்டொழித்து, இவ்வாறு (வேறுபாடின்றி காண்பதற்கு) முயற்சி செய்ய வேண்டும். இதுவே, நமக்கு அமைதியையும் நிம்மதியையும் அளிக்கும்.

ஸர்வத்ர தைத்யா: ஸமதாமுபேத ஸமத்வமாராதனமச்யுதஸ்ய|| (ஸ்ரீ விஶ்ணு புராணம் 1.17.90)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:

(ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் ப்ரஹலாதன் அஸுர குழந்தைகளிடம் கூறினான்): ஹே தைத்யர்களே (அஸுர குழந்தைகளே)!! அனைத்தையும் ஒன்றாகவே (வேறுபாடுகள், வெறுப்புக்கள் இன்றி) பார்க்கப் பழகுங்கள். இதுவே பகவான் ஸ்ரீ அச்யுதருக்கு நாம் செய்யும் ஆராதனையாகும்.

ந மந்த்ராதிக்ருதம் தாத ந ச நைஸர்கிகோ மம |

ப்ரபாவ ஏ ஸாமான்யோ யஸ்ய யஸ்யாச்யுதோ ஹ்ருதி || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 1.19.4)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:

(ப்ரஹலாதன் தனது தந்தை ஹிரண்யகசிபுவிடம் கூறினான்) தந்தையே!! இது (தன்னைக் கொல்ல தன் தந்தை ஹிரண்யகசிபு எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்தது) மந்திர சக்தியினாலும் நிகழவில்லை. இது என்னிடமுள்ள இயற்கையான சக்தியினாலும் அல்ல. பகவான் ஸ்ரீ அச்யுதரிடம் மனதை நிலைநிறுத்தியவருக்கு இவை அனைத்தும் மிக எளிதானதாகும்.

அன்யேஶாம் யோ ந பாபானி சிந்தயத்யாத்மனோ யதா |

தஸ்ய பாபாகமஸ்தாத ஹேத்வபாவான்ன வித்யதே || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 1.19.5)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:

தன்னைப் போலவே பிறரையும் நேசித்து, அவர்களுக்குக் கேடொன்றும் நினைக்காதவனைப் பாவங்கள் தீண்டுவதில்லை. (துன்பத்தை விளைவிக்கும்) மூல காரணம் இல்லாததால் அவனுக்குத் துன்பங்களும் விளைவதில்லை.

கர்மணா மனஸா வாசா பரபீடாம் கரோதி ய: |

தத்பீஜம் ஜன்ம ஃபலதி ப்ரபூதம் தஸ்ய சாஶுபம் || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 1.19.6)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:

மனதாலும், செயலாலும், வாக்காலும் பிறருக்குத் துன்பம் இழைப்பவன், அந்த பாபமென்னும் விதையின் பயனாய் மறுபிறப்பு மற்றும் பெருந்துன்பன்களைப் பயனாய் (பழமாய்) அடைகிறான்.

சோஹம் ந பாபமிச்சாமி ந கரோமி வதாமி வா |

சிந்தயன்ஸர்வபூதஸ்தமாத்மன்யபி ச கேவம் || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 1.19.7)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:

நான் எவருக்கும் துன்பம் இழைப்பதில்லை. அவ்வாறு பேசுவது கூட கிடையாது. நான் எப்பொழுதும், என் நெஞ்சினுள்ளும் அனைத்துயிர்களுக்குள்ளும்  வீற்றிருக்கும் பகவான் ஸ்ரீ கேசவனைத் த்யானிக்கின்றேன்.

ரீரம் மானஸம் துக்கம் தைவம் பூதபவம் ததா |

ஸர்வத்ர ஸுபசித்தஸ்ய தஸ்ய மே ஜாயேத குத: || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 1.19.8)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:

இவ்வாறு அனைத்தையும் சமநோக்குடன் பார்க்கும் எனக்கு சரீரம், மனம், வாக்கு ஆகியவற்றுக்கு தெய்வங்களாலோ, இயற்கையாலோ என்ன துன்பம் வரக்கூடும்?

இந்த உலகில் பிறக்கும் அனைவரும் மூவகைத் துன்பங்களுக்கு உட்படுத்தப் படுகிறோம்இவை தாபத் த்ரயங்கள் என்று அழைக்கப்படும்அவையாவன ஆதி தைவிகம் (தேவர்களால் வரும் துன்பங்கள்), ஆதி பௌதிகம் (இயற்கை உபாதைகள்), ஆத்யாத்மிகம் (நமது பூர்வ கர்ம வினைகளால் ஏற்படுவன).

ஏவம் ஸர்வேஶு பூதேஶு பக்திரவ்யபிசாரிணீ |

கர்தவ்யா பண்டிதைர்ஞாத்வா ஸர்வபூதமயம் ஹரிம் || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 1.19.9)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:

இவ்வாறு, பகவான் ஸ்ரீ ஹரியானவர் எவ்வுயிரிலும் நிறைந்துள்ளார் என்பதை உணர்ந்து கற்றறிந்தோர் அனைத்துயிர்களிடமும் அன்பு செலுத்த வேண்டும்.

சாம சோபப்ரதானம் ச பேததண்டௌ ததாபரௌ |

உபாயா: கதிதா: ஸர்வே மித்ராதினாம் ச ஸாதனே || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 1.19.35)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:

நண்பர்களையும், எதிரிகளையும் அடக்கியாள்வதற்கு (எனது குருமார்கள்) நான்கு உபாயங்களைக் கூறினார்கள். அவையாவன – சாம (நயம்பட பேசுதல்), பேத (இருவரிடையே கலகத்தை உண்டாக்குதல்), தான (பொருள், பணம் முதலியவற்றால் வசப்படுத்துதல்), தண்டம் (வலிமையால் அடக்குதல்).

தானேவாஹம் ந பஶ்யாமி மித்ராதீம்ஸ்தாத மா க்ருத: |

ஸாத்யாபாவே மஹாபாஹோ ஸாதனை: கிம் பிரயோஜனம் || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 1.19.36)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:

ஆனால் தந்தையே, தாங்கள் சினமடையாது கேட்கவேண்டுகிறேன். எனக்கு நண்பர்கள் என்றோ எதிரிகள் என்றோ யாரும் தெரிவதில்லை (எந்தபாகுபாடும்இல்லைஎன்றுபொருள்). ஹே பெருந்தோளுடையோரே!! எப்பொழுது (நண்பனையும்பகைவனையும்அடக்கியாளவேண்டும்என்ற) அடையவேண்டியது ஒன்றும் இல்லையோ, அப்பொழுது அத்தகைய முயற்சியால் என்ன பயன்?

ஸர்வபூதாத்மகே தாத ஜகன்னாதே ஜகன்மயே |

பரமாத்மனி கோவிந்தே மித்ராமித்ரகதா குத: || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 1.19.37)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:

தந்தையே!! ஜகன்னாதனான பகவான் ஸ்ரீ கோவிந்தன் அனைத்துயிர்களுக்குள்ளும் நீக்கமற நிறைந்தும், இந்த பிரபஞ்சமாகவே வ்யாபித்தும் இருக்கையில், (சிலரை) நண்பனென்றும், (சிலரை) பகைவரென்றும் கருதுவது பயனற்றது.

ஜடானாமவிவேகானாமஸுரானாமபி ப்ரபோ |

பாக்யபோஜ்யானி ராஜ்யானி சந்த்யனீதிமதாமபி ||

தஸ்மாத்யதேத புண்யேஶு ய இச்சேன்மஹதீம் ஶ்ரியம் |

யதிதவ்யம் ஸமத்வே ச நிர்வாணமபி சேச்சதா || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 1.19.44-45)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:

பிரபுவே (தந்தையே)!!! அரசாளும் பேறு அறிவிலிகளுக்கும், கோழைகளுக்கும், அரசாளத் தகுதியற்றவருக்கும் கூட அவர்களின் முன்ஜென்ம கர்மவினைக்கேற்பக் கிடைக்கக் காண்கிறோம். எனவே, புகழையும், பேற்றையும் விழைபவர்கள் நற்செயல்களைப் புரியவேண்டும். (இந்த சம்ஸாரத் தளையிலிருந்து) முக்தியை விழைபவர்கள் அனைத்துயிர்களையும் (தன்னுயிர்போல) சமநோக்குடன் பார்க்க வேண்டும்.

தேவா மனுஷ்யா: பவ: பக்ஷிவ்ருக்ஷசரீஸ்ருபா:|

ரூபமேததனந்தஸ்ய விஶ்ணோர்பின்னமிவ ஸ்திதம் ||

ஏதத் விஜானதா ஸர்வம் ஜகத் ஸ்தாவரஜங்கமம் |

த்ரஶ்டவ்யமாத்மவத் விஶ்ணுர்யதோSயம் விஶ்வரூபத்ருக் ||

ஏவம் ஞாதே ஸ பகவானனாதி: பரமேஶ்வர: |

ப்ரஸீதத்யச்யுதஸ்தஸ்மின் ப்ரஸன்னே க்லேஶஸம்க்ஷய: ||

(ஸ்ரீ விஶ்ணு புராணம் 1.19.46-48)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:

தேவர்கள், மனிதர், மிருகங்கள், பறவைகள் மற்றும் பாம்பு முதலான அனைத்தும் எல்லையற்ற பகவான் ஸ்ரீ விஶ்ணுவின் உருவமாகும். அதுவே (அந்த பகவான் ஸ்ரீ விஶ்ணுவின் உருவமே) இங்கு வெவ்வேறாகத் தெரிகின்றது என்பதை அறிபவன் இங்குள்ள அசையும், மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தையும் தனக்கு நிகராகவே பார்க்கவேண்டும். ஏனெனில், இவை அனைத்தும் பிரபஞ்சத்தையே தன் உருவமாகக் கொண்டுள்ள பகவான் ஸ்ரீ விஶ்ணுவேயாகும். இவ்வாறு அறிவதன் மூலம் தனக்கொரு தொடக்கம் இல்லாதவரும், அழிவற்றவருமான பரமேஸ்வரன் மனமகிழ்கிறார். அவர் மனமகிழ்ந்தால் நமது அனைத்துத் துன்பங்களும் அழிந்துவிடும்.

பஹூனாம் ஜன்மனாமந்தே ஞானவான் மாம் ப்ரபத்யதே |

       வாஸுதேவ: ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுதுர்லப: || (ஸ்ரீ பகவத்கீதை 7.19)

ஸ்ரீ பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது:–பல பிறவிகளின் இறுதியில் ஞானவான், ‘எல்லாம் வாசுதேவனே’ என்று கருதி என்னை அடைக்கலமாகப் பற்றுகிறான். அவ்வித மஹாத்மா கிடைத்தற்கரியவன்.

இத்யாதிவசனைச்ச | இத்தகைய வாக்கியங்களால் இதுவே (பகவான் விஶ்வம் என்று அழைக்கப்படுகிறார்) என்பது புலனாகிறது

ஹிம்ஸாதிரஹிதேன ஸ்துதிநமஸ்காராதி கர்தவ்யமிதி தர்யிதும் விஷ்வஶப்தேன ப்ரஹமாபிதீயத இதி வா |

அல்லது, மற்ற உயிர்களுக்குத் துன்பமின்றி விஷ்வமாகிய இந்த பிரபஞ்சத்திற்கு நமது போற்றுதலும், வணக்கங்களும் உரித்தாக வேண்டும். இதைக் குறிப்பதற்காகவே, பரப்ரஹ்மத்தை “விஶ்வம்” என்று அழைக்கின்றனர்.

மத்கர்மக்ருன்மத்பரமோ மத்பக்த: ஸங்கவர்ஜித: |

நிர்வைர: ஸர்வபூதேஶு ய: ஸ மாமேதி பாண்டவ || (ஸ்ரீ பகவத்கீதை 11.55)

ஸ்ரீ பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது:-என்தொழில் செய்வான், எனைத் தலைக்கொண்டோன், என்னுடைய அடியான், பற்றெலாம் இற்றான், எவ்வுயிரிடத்தும் பகைமை யிலாதான், யாவன், பாண்டவா, அவனென்னை எய்துவான்!!!

இதி | இவ்வாறுக் கூறப்பட்டுள்ளது.

ந சலதி நிஜவர்ணதர்மதோ ய:

ஸமமதிராத்மஸுஹ்ருத்விபக்ஷபக்ஷே |

ந ஹரதி ந ச ஹந்தி கிஞ்சித்துச்சை:

ஸ்திதமனஸம் தமவேஹி விஶ்ணுபக்தம் || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 3.7.2௦)

ஸ்ரீ விஶ்ணுபுராணத்தில் கூறப்பட்டுள்ளது:

(யமதர்மராஜன் தனது யமதூதர்களிடம் கூறினார்) எவரொருவர் தமது வர்ணத்தின் கடமைகளிலிருந்து பிறழாதவரோ, எவர் தமது நண்பர் மற்றும் பகைவரிடத்தில் சமனோக்குடையவரோ, எவர் எதையும் (மற்றவரிடமிருந்து களவு வழியில்) பறிக்காமலும், மற்றுயிரைத் துன்புறுத்தாமலும், (இன்பமாயினும், துன்பமாயினும்) எல்லா காலங்களிலும் நிலையான அறிவு படைத்தவரோ, அவரை பகவான் ஸ்ரீ விஶ்ணுவின் பக்தனாக அறிவீர்களாக.

விமலமதிராமத்ஸர பிரஶாந்த:

ஸுசிசரிதோSகிலஸத்த்வமித்ரபூத: |

ப்ரியஹிதவசனோSஸ்தமானமாயோ வஸதி

ஸதா ஹ்ருதி தஸ்ய வாஸுதேவ: || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 3.7.24)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:-(யமதர்மராஜன் தனது யம தூதர்களிடம் கூறினார்) எவரொருவர் தூய்மையான மனதுடையவரோ, வன்மம் அற்றவரோ, அமைதியான உள்ளம் கொண்டவரோ, அப்பழுக்கற்ற குணமுடையவரோ, அனைத்துயிர்களுக்கும் நண்பரோ, அனைத்துயிர்களுக்கும் இன்பமும், நன்மையையும் தரும் மொழிகளை கூறுபவரோ, அகந்தையும், மமதையும், மாயையும் அற்றவரோ அவரது உள்ளத்தில் பகவான் ஸ்ரீ வாசுதேவர் வசிக்கின்றார்.

வஸதி ஹ்ருதி ஸநாதனே ச தஸ்மின்

பவதி புமாஜ்ஜகதோSஸ்ய ஸௌம்யரூப: |

க்ஷிதிரஸமதிரம்யமாத்மனோSந்த

கதயதி சாருதயைவ சாலபோத || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 3.7.25)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:-எவ்வாறு சால மரத்தின் இளமையானது அதனுள்ளே நிரம்பியிருக்கும் சாற்றினை பறைசாற்றுகின்றதோ, அதைப்போலவே அனைவருக்கும் பிரியமான ஒருவர், தனது மனத்தினுள் நித்தியமான பகவான் ஸ்ரீ விஶ்ணு வசிப்பதை பறைசாற்றுகிறார்.

சகலமிதமஹம் ச வாஸுதேவ

பரமபுமான்பரமேஸ்வர: ஸ ஏக |

இதி மதிரசலா பவத்யனந்தே

ஹ்ருதயகதே வ்ரஜ தான்விஹாய தூராத் || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 3.7.32)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:-எவரொருவர் பரமபுருஶரும், அனைத்தையும் ஆள்பவருமான பகவான் ஸ்ரீ வாசுதேவரே இந்த உலகம் அனைத்துமாக இருப்பதை தமது தூய அறிவால் உணர்ந்து, தமது உள்ளத்தில் பகவான் ஸ்ரீ அனந்தரை நிலைநிறுத்தியவரோ அவரை விட்டு நீங்கள் விலகிச் செல்லுங்கள்.

யமநியமவிதூதகல்மஶானாமனுதினமச்யுதஸக்தமானஸானாம் |

அபகதமதமானமத்ஸரானாம் வ்ரஜ பட தூரதரேன மானவானாம் ||–(ஸ்ரீ விஶ்ணு புராணம் 3.7.26)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:-ஒ (யம) தூதர்களே!!! எவரொருவரின் குற்றங்கள் மனம் மற்றும் புலனடக்கத்தின் மூலம் நீங்கிவிட்டனவோ, எவரொருவர் எப்பொழுதும் பகவான் ஸ்ரீ அச்யுதரிடம் மனதை நிலை நிறுத்தியவரோ, எவரொருவர் மமதை, அகந்தை மற்றும் வன்மங்கள் அழியபெற்றவரோ அத்தகைய மனிதரிடமிருந்து விலகியே இருங்கள்.

இத்யாதிவசனைர்வைஷ்ணவலக்ஷணஸ்யைவம்பிரகாரத்வாச்ச ஹிம்ஸாதிரஹிதேன விஶ்ணோ: ஸ்துதிநமஸ்காராதி கர்தவ்யமிதி |

இந்த புராண வாக்கியங்களிலிருந்து, மற்ற உயிர்களுக்குத் துன்பம் விளைவித்தல் போன்ற குற்றங்கள் இல்லாமல் இருத்தலும், பகவான் ஸ்ரீ விஶ்ணுவை போற்றுவது, தொழுவது போன்ற  நற்செயல்களைப் புரிவதுமே ஒரு வைணவனுக்கு (பகவான்ஸ்ரீவிஶ்ணுவின்பக்தனுக்கு) அடையாளம் என்பது விளங்கும்.

ஶ்ரத்தயா தேயம் அஶ்ரத்தயா (அ)தேயம் (தைத்ரீய உபநிஶத் 1.11.3)

தைத்ரீய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: எந்த ஒரு தானத்தையும் ஈடுபாட்டுடன் கொடுக்கவேண்டும். ஈடுபாடு இல்லாமல் எந்த தானத்தையும் கொடுக்கக்கூடாது.

ஶ்ரத்தயாக்னி ஸமித்த்யதே அர்ப்பணிப்பாலேயே (ஈடுபாட்டாலேயே) நெருப்பானது சுடர்விடுகின்றது

இத்யாதிஸ்ருதேஇது போன்ற வேத வாக்கியங்களாலும்,

ஶ்ரத்தாபூதம் வதான்யஸ்ய ஹதமஶ்ரத்தயேதரத் |

கொடையளிப்பவர் (கொடையளிப்பதில் உள்ள) ஈடுபாட்டாலேயே தூய்மையடைகிறார். ஈடுபாடில்லாமல் (கொடையளித்தால், அதனால் நற்பயன்கள் ஏதும் கிட்டாமல்) நஷ்டமடைகிறார்.

இமம் ஸ்தவமதீயான ஶ்ரத்தா பக்தி ஸமன்வித: (ஸ்ரீ விஶ்ணு சஹஸ்ரநாமம் 132)

ஸ்ரீ விஶ்ணு சஹஸ்ரநாமத்தின் ஃபல ஸ்ருதியில் கூறப்பட்டுள்ளது:

(ஸ்ரீ விஶ்ணு சஹஸ்ரநாமமென்னும்) இந்த துதியை ஈடுபாட்டுடனும், பக்தியுடனும் படிப்பவர் (ஆத்ம சுகம்மன அமைதிதிருமகளின் கருணைதைரியம்வேத அறிவு மற்றும் மேன்மையை அடைகின்றனர்)

ஶ்ரோத்ரியம் ஶ்ராத்தமதீதமவ்ரதமதக்ஷிணம் யஞ்யமன்ரித்விஜாஹுதம் |

ஶ்ரத்தயா தத்தமஸம்ஸ்க்ருதம் ஹவிர்பாகாடேதே தவ தைத்யஸத்தம ||

ஹே அசுரர்களின் தலைவனே!!! தகுந்த வேத மந்திரங்கள் இன்றி நிறைவேற்றப்படும் நீத்தார் கடனும், தவமின்றி கற்கப்படும் கல்வியும், தக்க காணிக்கையின்றி நிறைவேற்றப்படும் வேள்வியும், தகுந்த ரிக் வேத வல்லுனர்கள் இன்றி உண்டாக்கப்படும் வேள்வித்தீயும், ஈடுபாடின்றிக் கொடுக்கப்படும் கொடையும், தூய்மையின்றி வேள்வித்தீயில் அர்ப்பணிக்கப்படும் பொருட்களும், ஆகிய இந்த ஆறும் உன்னைச் சேர்ந்தவையாகும்.

புண்யம் மத்த்வேஶிணா யச்ச மத்பக்தத்வேஶிணாம் ததா |

க்ரயவிக்ரயஸக்தானா புண்ய யச்சாக்னிஹோத்ரிணாம் ||

 ஶரத்தயா ச யத்தான யஜதாம் தததா ததா |

தத்ஸர்வம் தவ தைத்யேந்தர மத்ப்ரஸாதாத்பவிஶ்யதி ||

ஓ அசுரர்களின் தலைவனே!!! என்னையும், எனது பக்தர்களையும் வெறுப்போர் செய்யும் நற்செயல்களின் பலனும், செய்முறையின்றித் தவறுதலாகச் செய்யப்படும் அக்னிஹோத்ரத்தின் பலனும், ஈடுபாடின்றி செய்யப்படும் வேள்வி மற்றும் தானத்தின் பலனும் எனது அருளால் உன்னை வந்து அடையும்.

(மேற்கண்டமூன்றுஸ்லோகங்களின்தேர்ந்தபொருள்:மேற்கூறியசெயல்கள்யாவும்அசுரத்தன்மைவாய்ந்தவையாகும்இவ்வாறுதவறாகச்செய்வதால்நமக்குநற்பயன்எதுவும்கிட்டாது)

ஶ்ராத்தயா ஹுதம் தத்தம் தபஸ்தப்த க்ருதம் ச யத் |

அஸதித்யுச்யதே பார்த்த ந ச தத்ப்ரேத்ய நோ இஹ || (ஸ்ரீ பகவத்கீதை 17.28)

ஸ்ரீ பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது:-எவ்வித ஈடுபாடுமின்றி (அசிரத்தையுடன்) செய்யும் வேள்வியும், தானமும், தவமும், கர்மமும், ‘அஸத்’ எனப்படும். பார்த்தா, அவை மறுமையிலும் பயன்படா, இம்மையிலும் பயன்படா.

இத்யாதிஸ்ம்ருதிபிஸ்ச ஶ்ரத்தயா ஸ்துதிநமஸ்காராதி கர்த்தவ்யம் அஶ்ரத்தயா ந கர்த்தவ்யம் |

மேற்கண்ட ஸ்ம்ருதி வாக்கியங்களிலிருந்து (நாம் அறியவேண்டியது என்னவெனில், பகவான் ஸ்ரீ விஶ்ணுவை) போற்றுவதும், தொழுவதும் ஈடுபாட்டுடன் செய்யப்படவேண்டும். ஈடுபாடின்றி செய்வது கூடாது.

ஓம்தத்ஸதிதி நிர்தேஶோ ப்ரஹ்மணஸ்த்ரிவித: ஸ்ம்ருத: | (ஸ்ரீ பகவத்கீதை 17.23)

ஸ்ரீ பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது:

“ஓம் தத் ஸத்” என்ற மும்மைப் பெயர் ப்ரஹ்மத்தைக் குறிப்பதென்பர்.

இதி பகவத்வசனாத் ஸ்துதிநமஸ்காராதிகம் கர்மாஸாத்விகம் விகுநமபி ஶ்ரத்தாபூர்வகம் ப்ரஹ்மனோSபிதானத்ரயப்ரயோகேன ஸகுணம் ஸாத்விகம் ஸம்பாதிதம் பவதி |

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இந்த கீதை ஸ்லோகத்திலிருந்து, “பகவானைப் போற்றுவது, திருவடித்தொழுவது போன்ற செயல்களை தூய்மையற்ற மனதுடனோ, அல்லது குறைபாடுகளுடனோ செய்தாலும், ப்ரஹ்மத்தின் இந்த (ஓம், தத், ஸத் என்ற) மூன்று பெயர்களை ஈடுபாட்டுடன் ஓதுவதன் மூலம் ஒருவர் நற்குணங்களை அடைகிறார்” என்பது புலனாகிறது.

ஆத்மானம் விஶ்ணும் த்யாத்வாS(அ)ர்ச்சன ஸ்துதி நமஸ்காராதி கர்த்தவ்யம் |

பகவான் ஸ்ரீ விஶ்ணுவிற்கு, போற்றுதல்களும், வழிபாடும், திருவடித்தொழுதலும் ஆத்மார்த்தமாகவே (அவரை நமது ஆத்மாவின் உருவமாகவே எண்ணிப்) புரிதல் வேண்டும்.

நாவிஶ்ணு: கீர்த்தயேத்விஶ்ணும் நாவிஶ்ணும் விஶ்ணுமர்ச்சயேத் |

நாவிஶ்ணு: ஸம்ஸ்மரேத் விஶ்ணு நாவிஶ்ணுர்விஶ்ணுமாப்னுயாத் ||–(ஸ்ரீ மஹாபாரதம்)

இதி மஹாபாரதே கர்மகாண்டே |-ஸ்ரீ மஹாபாரதம் கர்மகாண்டத்தில் கூறப்பட்டுள்ளது:

நாம் விஶ்ணுவாக மாறாது (நமக்குள் இருக்கும் ஆத்மா, பரமாத்மாவான விஶ்ணுவே என்று உணராது) பகவான் ஸ்ரீ விஶ்ணுவின் புகழ் மாலைகளைப் பாடவேண்டாம், அவருக்கு வழிபாடுகள் செய்யவேண்டாம், நாமே விஶ்ணு என்று உணராது அவரைப் பற்றி நினைக்கவேண்டாம். நாம் விஶ்ணுவாக நம்மை உணராவிடில், நாம் பகவான் ஸ்ரீ விஶ்ணுவை அடைய முடியாது.

ஸர்வான்யேதானி நாமானி பரஸ்ய ப்ரஹ்மனோSநக | (ஸ்ரீ விஶ்ணு தர்மம் 1.123.13)

ஸ்ரீ விஶ்ணு தர்மத்தில் கூறப்பட்டுள்ளது:

ஒ தூய்மையானவரே!!! இந்த அனைத்துத் நாமங்களும் பரப்ரஹ்மத்தின் திருநாமங்களே ஆகும்.

யம் யம் காமமபித்யாயேத்தம் தமாப்னோத்யஸம்யம் |

ஸர்வகாமானவாப்னோதி ஸமாராத்ய ஜகத்குரும் || (ஸ்ரீ விஶ்ணு தர்மம்)

ஸ்ரீ விஶ்ணு தர்மத்தில் கூறப்பட்டுள்ளது:

ஒரு அடியவர், எந்தெந்தப் பொருளை அடைய விழைகிறாரோ, ஐயமின்றி அப்பொருளையே அடைகிறார். அந்த உலகிற்கு குருவான (பகவான் ஸ்ரீ விஶ்ணுவை) வழிபடுவதன் மூலம் (அடியவரது) அனைத்து விருப்பங்களும் நிறைவேறுகின்றன.

தன்மயத்வேன கோவிந்தமேத்யேதத் தால்ப்ய நான்யதா |

தன்மயோ வாஞ்சிதான் காமான் யதவாப்னோதி மானவ: || (ஸ்ரீ விஶ்ணு தர்மம்)

ஸ்ரீ விஶ்ணு தர்மத்தில் கூறப்பட்டுள்ளது:

ஒ தால்ப்யரே!!! (பரமாத்மா) ஸ்ரீ கோவிந்தருடன் ஐக்கியமடைந்து, அவர் மயமாக மாறுவதன் மூலமே ஒருவரால் அவரை அடையமுடியும். எவரொருவர் பரமாத்மாவுடன் ஐக்கியமாகிறாரோ அவரால் அனைத்துப் பொருட்களையும் அடையமுடியும். இதில் மாற்றுக்கருத்து ஒன்றும் இல்லை.

இதி விஶ்ணுதர்மே | இவ்வாறு ஸ்ரீ விஶ்ணு தர்மத்தில் கூறப்பட்டுள்ளது,

ஸர்வபூதஸ்திதம் யோ மாம் பஜத்யேகத்வமாஸ்தித: |

ஸர்வதா வர்த்தமானோSபி ஸ யோகி மயி வர்த்ததே || (ஸ்ரீமத் பகவத்கீதை 6.31)

ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது:

ஒருமையில் நிலைகொண்டவனாய் எல்லா உயிர்களிடத்திலுமுள்ள என்னைத் தொழுவோன், யாங்கணும் சென்றபோதிலும், அந்த யோகி என்னுள்ளேயே இயலுகிறான்.

இதி பகவத்கீதாயாம் | இவ்வாறு ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது,

அஹம் ஹரி: ஸர்வமிதம் ஜனார்தனோ நான்யத்தத: காரணகார்யஜாதம் |

ஈத்ருங் மனோ யஸ்ய ந தஸ்ய பூயோ பவோத்பவா த்வந்த்வகதா பவந்தி || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 1.22.87)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:

“நானே ஸ்ரீ ஹரியாவேன். இந்த உலகனைத்தும் பகவான் ஜனார்தனரே!! அந்த பரமாத்மாவைத் தவிர்த்து இங்கு எதுவும் செயலோ, காரணமோ இல்லை”. இவ்வாறான அறிவு படைத்தவரை பிறப்பு, இறப்பினால் உண்டாகும் இருமைகள் என்ற நோய் பற்றுவதில்லை.

இதி விஶ்ணுபுராணே | இவ்வாறு ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது,

குரோர்யத்ர பரீவாதோ நிந்தா வாபி ப்ரவர்த்ததே |

கர்ணௌ தத்ர பிதாதவ்யௌ கந்தவ்யம் வா ததோSன்யத ||

தஸ்மாத் ப்ரஹ்மைவாசார்யஸ்வரூபேணாவதிஷ்டே ||

(ஸ்ரீ விஶ்ணு தர்மம் 3.233.92)

ஸ்ரீ விஶ்ணு தர்மத்தில் கூறப்பட்டுள்ளது:

எங்கு குருவின் (ஆசார்யரின்) நிந்தை மற்றும் அவமதிப்பு நிகழ்கிறதோ அங்கு நமது காதுகளை மூடிக்கொள்ளவேண்டும். அல்லது, அங்கிருந்து வெகு தொலைவு சென்றுவிட வேண்டும். ஏனெனில், அங்கு ப்ரஹ்மமே குருவின் (ஆசார்யரின்) வடிவில் இருக்கிறது.

இதி ஸ்ம்ருதே | இவ்வாறு ஸ்ம்ருதிகளில் கூறப்பட்டுள்ளது,

வரம் ஹுதவஹஜ்வாலாபுஞ்சஸ்யாந்தர்வ்யவஸ்திதி: |

ந செளரிசிந்தாவிமுகஜனஸம்வாஸவைஷஸம் ||

எங்கு பகவான் ஸ்ரீ ஹரியை நினைக்காத மக்கள் உள்ளனரோ, அங்கு வசிப்பதைக் காட்டிலும், கொழுந்து விட்டெரியும் தீயின் சுடர்களுக்குள் வசிப்பது மேலானதாகும்.

இதி காத்யாயனவசனாத் ‘யத்ர தேஶே வாஸுதேவநிந்தா தத்ர வாசோ ந கர்தவ்ய: | இந்த காத்யாயனரின் வாக்கின் மூலம், எங்கெங்கெல்லாம் பகவான் ஸ்ரீ வாசுதேவரின் நிந்தனை நடக்கிறதோ, அங்கெங்கெல்லாம் வசிப்பதை தவிர்க்க வேண்டும்.

யஸ்ய தேவே பரா பக்தி: யதா தேவே ததா குரௌ |

தஸ்யைதே கதிதா ஹ்யர்தா: ப்ரகாந்தே மஹாத்மன: ||

எவர் பகவானிடத்திலும், (அந்த பகவானிடம் பக்தி புரிவது போன்றே) தனது குருவினிடத்திலும் பக்தி உடையவரோ, அவருக்கே மேற்கூறிய அர்த்தங்கள் அனைத்தும் தெளிவாகப் புரியும்.

இதி ஶ்வேதாஶ்வதரோபநிஶன்மந்த்ரவர்ணாத் ஹரௌ குரௌ ச பரா பக்தி: கார்யேதி | இந்த ஶ்வேதாஶ்வதரோபநிஶத் வாக்கியத்தின் மூலம், பகவான் ஸ்ரீ ஹரியினிடத்திலும், அந்த பகவானுக்கு சமமாக குருவினிடத்திலும் பக்தி கொள்ளுதல் வேண்டும் (என்று புலனாகிறது).

அவஶேனாபி யன்நாம்னி கீர்த்திதே ஸர்வபாதகை: |

புமான் விமுச்யதே ஸத்ய: ஸிம்ஹத்ரைஸ்தைர்வ்ருகைரிவ||

(ஸ்ரீ விஶ்ணு புராணம் 6.8.19)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: அவரது திருநாமங்களை (நாம சங்கீர்த்தனம் செய்கிறோம் என்ற நினைவில்லாமலேயே) அனிச்சையாக கூறுபவனுக்குக் கூட அவனது சகல பாவங்களும் அவனைவிட்டு சிங்கத்தைக் கண்டு ஓநாய்கள் பயந்து ஓடுவதைப்போல ஓடிவிடுகின்றன.

ஞானதோ(அஞ்)ஞானதோ வாபி வாஸுதேவஸ்ய கீர்த்தனாத் |

தத் ஸர்வம் விலயம் யாதி தோயஸ்தம் லவணம் யதா ||

எவ்வாறு நீரில் இட்ட உப்பானது (அந்த நீரில்) கரைந்து விடுகின்றதோ, அவ்வாறே, அறிந்தோ அறியாமலோ பகவான் ஸ்ரீ வாசுதேவரை நாம சங்கீர்த்தனம் செய்வதால் அனைத்து பாவங்களும் கரைந்துவிடுகின்றன.

கலிகல்மஶமத்யுக்ரம் நரகார்த்திப்ரதம் ந்ருணாம் |

ப்ரயாதி விலயம் ஸத்ய: ஸக்ருத் க்ருஷ்ணஸ்ய ஸம்ஸ்ம்ருதே || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 6.8.21)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: இந்த கலியுகத்தில் நரகத்தை அடைவிக்கவல்ல எப்பேர்பட்ட கொடிய தோஷங்களும், பகவான் ஸ்ரீ க்ருஷ்ணரை      ஒரு முறை நினைப்பதன் (த்யானிப்பதன்) மூலம் அழிந்துவிடுகின்றன.

ஸக்ருத்ஸ்ம்ருதோSபி கோவிந்தோ ந்ருணாம் ஜன்மதை: க்ருதம் |

பாபராஶிம் தஹத்யாஶு தூலராஶிமிவானல: ||

எவ்வாறு நெருப்பானது பஞ்சுப்பொதிகளை உடனே எரித்து விடுமோ, அவ்வாறே நூற்றுக்கணக்கான ஜன்மங்களாய் சேர்த்துவைத்த பாபக்கூட்டங்கள் பகவான் ஸ்ரீ கோவிந்தனை ஒரு முறை நினைப்பதன் (த்யானிப்பதன்) மூலம் எரிக்கப்படுகின்றன.

சேயம் வதனவல்மீகவாஸினி ரசனோரகீ |

யா ந கோவிந்த கோவிந்த கோவிந்தேதி ப்ரபாஶதே ||

எவரது நாக்கு ‘கோவிந்தா! கோவிந்தா! கோவிந்தா!’ என்று கூறுவதில்லையோ அந்த நாக்கு வாயென்னும் புற்றுக்குள் வாழும் பாம்பாகும்.

பாபவல்லி முகே தஸ்ய ஜிஹ்வாரூபேன திஷ்டதி |

யா ந வக்தி திவா ராத்ரௌ குணான் கோவிந்தஸம்பவான் ||

எந்த நாக்கு பகலும், இரவும் பகவான் ஸ்ரீ கோவிந்தரின் குணங்களைப் போற்றப்பாடவில்லையோ, அது (அந்த) மனிதனின் வாயினுள் நாக்கின் வடிவத்தில் இருக்கும் பாவக்குவியலாகும்.

ஸக்ருதுச்சரிதம் யேன ஹரிரித்யக்ஷரத்வயம் |

பத்த: பரிகரஸ்தேன மோக்ஷாய கமனம் ப்ரதி ||

எவரொருவர் ஒருமுறையேனும் “ஹரி” என்ற இந்த இரு அக்ஷரங்களை (எழுத்துக்களை) உச்சரிக்கின்றாரோ அவர் மோக்ஷத்தை நோக்கி செல்லத் தொடங்கிவிட்டார் என்றே கொள்ளவேண்டும்.

ஏகோSபி க்ருஷ்ணஸ்ய க்ருத: ப்ரணாமோ தசாஶ்வமேதாவப்ருதேன துல்ய: |

தசாஶ்வமேதி புனரேதி ஜன்ம கிருஷ்ணப்ரணாமி ந புனர்பவாய ||

(மஹா பாரதம், ஶாந்தி பர்வம் 47.90)

மஹாபாரதம் ஶாந்திபர்வத்தில் கூறப்பட்டுள்ளது: பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை ஒரு முறை வணங்குதல், பத்து அஸ்வமேத யாகங்கள் புரிந்து, முடிவில் (அந்த யாகத்தின் முடிவில் அவப்ருத ஸ்நானமாக) குளிப்பதற்கு சமமானது. அதிலும் பத்து அஸ்வமேத யாகங்களில் (அந்த யாகத்தின் முடிவில் அவப்ருத ஸ்நானமாக) குளிப்பவனுக்குக்கூட மறுஜென்மம் உண்டு; ஸ்ரீ கிருஷ்ணரை வணங்குபவர்களுக்கு மறுஜென்மம் இல்லை.

ஏவமாதிவசனைஶ்ரத்தாபக்த்யோரபாவேSபி நாமஸங்கீர்த்தனம் ஸமஸ்தம் துரிதம் நாசயதீத்யுக்தம் கிமுத ஶ்ராத்தாதிபூர்வகம் ஸஹஸ்ரநாமஸங்கீர்த்தனம் நாசயதீதி |

மேற்கண்ட (இதிஹாஸபுராண) வாக்கியங்களிலிருந்து ஈடுபாடு மற்றும் பக்தி இன்றி செய்யப்படும் நாம சங்கீர்த்தனமே அனைத்துப் பாவங்களையும் ஒழித்துவிடும் என்று புலனாகிறது. எனில், ஈடுபாட்டுடனும், பக்தியுடனும் கூறப்படும் சஹஸ்ரநாமசங்கீர்த்தனம் அவற்றை (அந்தப் பாபக்குவியல்களை) அழித்துவிடும் என்று கூறவும் வேண்டுமா?

மனஸா வா அக்ரே ஸங்கல்ப்யத்யத வாசா வ்யாஹரதி

முதலில் மனதிற்குள் முடிவெடுக்கிறார். பின்னர் வாக்கினால் (அதையே) பேசுகிறார்

யத்தி மனஸா த்யாயதி தத்வாசா வததி

மனம் எதை நினைக்கின்றதோ, வாக்கு அதையே பேசுகின்றது

இதி ஸ்ருதிப்யாம் ஸ்மரணம் த்யானம் ச நாமஸங்கீர்த்தனேSந்தர்பூதம் |

மேற்கண்ட இந்த இரு வேதவாக்கியங்களால் (மனதால்) நினைத்தல், மற்றும் த்யானித்தல் ஆகிய இரண்டும் நாம சங்கீர்த்தனத்திற்குள் அடங்கும் என்பது புலனாகிறது.

யஸ்மின்ன்யஸ்தமதிர்ன யாதி நரகம் ஸ்வர்கோSபி யச்சிந்தனே

விக்னோ யத்ர நிவேஶிதாத்மமனஸோ ப்ராஹ்மோSபி லோகோSல்பக: |

முக்திம் சேதஸி ய: ஸ்திதோSமலதியாம் பும்ஸாம் ததாத்யவ்யய:

கிம் சித்தம் யதகம் ப்ரயாதி விலயம் தத்ராச்யுதே கீர்த்திதே || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 6.8.56)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:

எவரிடம் தங்கள் மனதை லயித்தவர்களுக்கு, நரகவாசம் இல்லையோ, சுவர்க்கத்தைப் பற்றிய நினைவுகளும் (அவர்களது முக்திப்பாதைக்குத்) தடைக்கற்களோ, அந்த ப்ரஹ்மாவின் ஸத்யலோகமும் துச்சமானதோ, எந்த அழிவற்றக் கடவுளானவர் தனது அடியவர்களின் தூய்மையான மனதிற்குள் வசித்து அவர்களுக்கு முக்தியை அளிப்பவரோ, அந்த பகவான் ஸ்ரீ அச்யுதரை நாம சங்கீர்த்தனம் செய்வதால் நமது பாவங்கள் அழிவதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? (முக்தியையே அளிக்க வல்லவரால் பாவங்களை அழிக்கப்படுவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை).

இதி விஶ்ணுபுராணாந்தே ஸ்ரீபராஶரேணோபஸம்ஹ்ருதம் |

இவ்வாறு ஸ்ரீவிஶ்ணுபுராணத்தின் முடிவில் ஸ்ரீபராசர மஹரிஷி (அந்தப் புராணத்தின் மூலக்கருத்தாக) முடிவுரையாகக் கூறுகிறார்.

ஆலோட்ய ஸர்வசாஸ்த்ராணி விசார்ய ச புன: புன: |

இதமேகம் ஸுனிஷ்பன்னம் த்யேயோ நாராயண: ஸதா ||

ஸ்ரீ மஹாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது:

அனைத்து சாஸ்திரங்களின் சாரத்தையும் கடைந்தெடுத்து, அதை மீண்டும் மீண்டும் ஆராய்ந்து பார்த்தால் முடிவில் பகவான் ஸ்ரீமன் நாராயணரையே த்யானிக்க வேண்டும் என்பதே (அனைத்து சாஸ்திரங்களின் முடிவான கருத்தாகப்) புலனாகும்.

இதி ஸ்ரீமஹாபாரதாந்தே பகவதா ஸ்ரீவேதவ்யாஸேண உப ஸம்ஹ்ருதம் |

இவ்வாறு ஸ்ரீமஹாபாரதத்தின் முடிவில் ஸ்ரீவேதவ்யாஸர் கூறுகிறார்.

ஹரிரேக: ஸதா த்யேயோ பவத்பி: ஸத்வஸம்ஸ்திதை: |

ஒமித்யேவம் ஸதா விப்ரா: படத த்யாத கேஶவம் || (ஹரிவம்ஶம் 3.89.9)

ஸ்ரீஹரிவம்சத்தில் கூறப்பட்டுள்ளது:

நீங்கள் அனைவரும் ஸத்வ குணத்தில் நிலைநின்று, எப்பொழுதும் பகவான் ஸ்ரீ ஹரியையே த்யானியுங்கள். ஒ அந்தணர்களே!!! ‘ஓம்’ என்று உச்சரித்து, பகவான் ஸ்ரீ கேசவரைத் த்யானிப்பீர்களாக.

கைலாசயாத்ராயாம் ஹரிரேகோ த்யாதவ்ய இத்யுக்தம் மகேஸ்வரேணாபி |

இவ்வாறு ஸ்ரீஹரிவம்சம் கைலாச யாத்திரை பகுதியில் பகவான் சிவனும் ‘பகவான் ஸ்ரீ ஹரி ஒருவரையே த்யானிக்க வேண்டும்’ என்று கூறுகிறார்.

ஏதத்ஸர்வமபிப்ரேத்ய ‘ஏஷ மே ஸர்வ தர்மானாம் தர்மோSதிகதமோ மத:’ இத்யாதிக்யமுக்தம் |

இந்த வாக்கியங்களில் இருந்து “அனைத்து தர்மங்களிலும் பகவான் வாசுதேவரை பக்தியுடன் துதிகளாலும், அர்ச்சனைகளாலும் எப்பொழுதும் தொழுவதையே சிறந்த தர்மம் என்று நான் கருதுகிறேன்” என்பதே (என்னும் பீஷ்மரின் கருத்தே) அனைத்திலும் மேலானதாக கூறப்படுகிறது.

‘கிமேகம் தைவதம் லோகே’இத்யாரப்ய ‘கிம் ஜபன் முச்யதே ஜந்து:’இதி ட்ப்ரஶ்னேஶு‘யத: ஸர்வாணி’இதி ப்ரஶ்னோத்தராப்யாம்யத்ப்ரஹ்மோக்தம் தத்விஶ்ப்தேனோச்யத இதி வ்யாக்யாதம் |

‘உலகத்தின் ஒரே முழுமுதற் கடவுள் யார்?’ என்று தொடங்கி ‘யாரை நாம சங்கீர்த்தனம் செய்யவேண்டும்’ வரைக் (யுதிஷ்டிரனால்) கேட்கப்பட்ட ஆறு கேள்விகளுக்கு விடையாக ‘எவரிடமிருந்து, கல்பத்தின் தொடக்கத்தில் ஜீவராசிகள் தோன்றினவோ’ என்று (பீஷ்மாசார்யார்) எந்த ப்ரஹ்மத்தை பற்றி விவரித்தாரோ அந்த ப்ரஹ்மமே ‘விஶ்வம்’ என்ற திருநாமத்தினால் விரித்துரைக்கப்பட்டுள்ளது.

————–

1. விஸ்வம் – பிரபஞ்சம்

விஸ்வம் என்பது பிரபஞ்சம் மற்றும் படைப்பின் மொத்தத்தை குறிக்கிறது. இது ‘விஷ்‘ என்ற மூல வார்த்தையிலிருந்து வந்தது, அதாவது ‘உள்ளே’ அல்லது ‘ஊடுருவல்’. பிரபஞ்சம் முழுவதும் வியாபித்திருப்பதால் விஸ்வம் என்று அழைக்கப்படுகிறது. பிரபஞ்சத்தின் ஒரு பகுதியாக இல்லாத எதுவும் நம்மைச் சுற்றி இல்லை. விஷ்ணு பகவான் விஸ்வத்தின் மூலகாரணமாக இருப்பதால், அவரே விஸ்வம் என்று அழைக்கப்படுகிறார்.

ஸ்ரீஆதிசங்கரரின் வார்த்தைகளில் ‘விஷ்வஸ்ய ஜகதஹ் காரணத்வேன விஷ்வமித்யுச்யதே ப்ரஹ்ம – பிரபஞ்சத்தின் காரணமாயிருப்பதால், பரமாத்மா பிரபஞ்சம்’ என்றும் குறிப்பிடப்படுகிறது.

விஸ்வம் என்றால் எங்கும் என்று பொருள். புருஷ ஸூக்தம் இறைவனைப் பற்றி கூறுகிறது ‘ஸ பூமிம் விஷ்வதோ விருத்வா அத்யதிஷ்டத்தஷாங்குலம் – அவர் உலகம் எங்கும் ஊடுருவி, உடல் அளவீடுகளுக்கு அப்பாற்பட்டவர்’

நாராயண ஸூக்தத்தில் நமக்கு உள்ளது:-ஸஹஸ்ரஷீஷம் தேவம் விஸ்வக்ஷம் விஸ்வஸம்புவம் விஸ்வம் நாராயணம் தேவம் அக்ஷரம் பரமம் பதம்‘  : எண்ணற்ற தலைகளை உடையவனும், எங்கும் கண்களை உடையவனும், பிரபஞ்சம் முழுவதையும் ஆசீர்வதிப்பவனும், பிரபஞ்சமாகத் திகழ்பவனுமான நாராயணனை நான் வணங்குகிறேன்.

ஸ்ரீ பராசர பட்டர், விஷ்ணுவின் முதல் நாமமே அவனது மகத்தான மகிமையையும், இயற்கையான, அசாத்தியமான, மங்களகரமான, மேன்மையான அவனுடைய அத்தியாவசிய இயல்பு, வடிவம், குணங்கள் போன்றவற்றின் விளிம்பிற்கு முழுமையையும் எடுத்துரைப்பது மிகவும் பொருத்தமானது என்று குறிப்பிடுகிறார்.

ஸ்ரீ விஷ்ணு புராணம் – ‘ஸ ஏவ ஸர்வ பூதாத்மா விஷ்வ ரூபோ யதோ அவயயா’ – அவர் இருக்கும் அனைத்திற்கும் ஆன்மா, மற்றும் அனைத்தும் அவரது உடல்.

“விஸ்வேஸ்வரம் அஜம் தேவம் ஜகதஹ் பிரபுமவ்யயம் – அவர் பிரபஞ்சத்தின் இறைவன் ஆனால் அவர் தோற்றமும் முடிவும் இல்லாதவர்” என்று பல ஸ்ருதி குறிப்பிடுகிறது.

————————————–—————-

2-விஷ்ணு –

விபவ அநு ப்ரவேஸேந தாவத் விஶிநஷ்டி – விஷ்ணுரிதி | ஸ்வ விபூதி பூதம்சித் அசித் ஆத்மகம் ஸர்வம் விஸ தீதி |
யதா “விவேஸ பூதாநி சராசராணி”,(தைத்ரியம் நாராயண வல்லி )
“தத் ஏவ அநு ப்ராவிஸ (தைத்ரியம் ஆனந்த வல்லி) =த்” இத்யாதி |

கண்ணன் நெற்றி உளானே -உச்சி உளானே –
ஆகியும்-உபாதான ஆக்கியும் -நிமித்த -காக்கும் -தத் -அவையுள் -தனி -முதல் -எம்மான் -த்வம் அஸி
சுவையன் -திருமகள் கேள்வன்
திரு முடி சேவை ஆழ்வாருக்கு பொலிந்து நின்ற பிரான்

“வ்யாப்ய ஸர்வாந் ல்லோகாந் ஸ்திதஸ் : ஸர்வத்ர கேஸவ: |
ததஶ் ச விஷ்ணு நாமாஸி விஸேர் தாதோ: ப்ரவேஸநாத்(நுழைதல்)  ||”.
விஸ ப்ரவேஸ இதி தாது: | தத்ர வநுப்ரத்யயாத் விஷ்ணுரிதி |
ஶ்ரீவராஹே தாச் சீல்யாதி விஷயேண வநுப்ரத்யயேந அஸ்ய மஹிம்ந: ஸ்வாபாவிகத்வ முச்யதே(வந்தேறி அல்ல இயற்க்கை )| பூர்ணத்வ-வ்யாப்தி-விஷயத்வேந நாம்நோ : அபுநருக்தி: || 2 ||(கீழ் குணங்களால் பூர்ணன்- இங்கு இடத்தால் நிறைந்து வியாப்தி விஷயம் )

எங்கும் வியாபித்து உள்ளவன்
ஸ்வ விபூதி பூதி பூதம் சித் அசிதாத்மகம் சர்வம் விசதி இதி
யாவையும் யாவரும் தானாய்-
விச்வம் -பூர்த்தியில் நோக்கு
விஷ்ணு – வ்யாப்தியில் நோக்கு
பரந்த தண் பரவையுள் நீர் தொறும் பரந்துளன் பரந்த வண்டமிதென -1-1-10-

தம் உடைமைகளான சேதன அசேதனங்கள் எல்லாவற்றிலும் உட்புகுந்து இருப்பவர் —
விஷ்ணு திருவவதாரத்தில்-one in all
அனுபிரவேசித்து இருப்பவர் -விச்வம் பூரணத்வம் விஷ்ணு வ்யாதியையும் சொல்வதால்
கூறியது கூறல் குறை ஆகாது -ஸ்ரீ பராசர பட்டர் –

விவேச பூதாநி சராசராணி —-தைத்ரியம் நாராயண வல்லி
ததேவா னு ப்ரவிஸத்
வியாப்ய சர்வான் இமான் லோகான் ஸ்தித ஸர்வத்ர கேசவ ததச்ச விஷ்ணு நாமா அஸி விசேர்த்தாதோ பிரவேச நாத்

முதலில் விபவமான பிரபஞ்சத்தில் அநு பிரவேசித்து இருப்பது கூறப்படுகிறது
விஷ்ணு என்னும் அவதாரத்தில்
விபூதிகளான சேதன அசேதனங்களில் அந்தர்யாமியாய் பிரவேசித்து இருப்பவர்
இதனால் விஷ்ணு என்னும் அவதாரம் கூறப்படுகிறது

எங்கும் வியாபித்து இருப்பவர் -தேச கால வஸ்து பரிச்சேத ரஹிதர்-ஸ்ரீ சங்கரர்

சர்வ வியாபி -ஓங்கி உலகளந்த உத்தமர் –ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்-

ஓம் விஷ்ணவே நம
கரந்து எங்கும் பரந்துளன்

மீண்டும் 259/663 விஷ்ணு திருநாமம் உண்டு
மீண்டும் -259- நாமாவளியாக —ஐஸ்வர்ய பூர்த்தி -எங்கும் தானாய் -நங்கள் நாதனே -1-9-9-
நமக்கும் அவனுக்கும் நெருப்புக்கும் புகைக்கும் உள்ள சம்பந்தம் போலே -விட்டுப் பிரியாமல் -அனைத்தும் ப்ரஹ்மாத்மகமே
புகை இருந்தால் நெருப்பு இருக்கும் -சூடான இரும்பு இருந்தால் புகை இருக்காதே
உள்ளே புகுந்து நியமிக்கிறான்-நிரவதிக ஸுவ்சீல்யம் தயா குணம் அடியாகவே உகந்து அருளின நிலங்களை
சாதனமாக கொண்டு நம் ஹ்ருதயத்துக்குள் வருவதை சாத்தியமாக கொள்கிறான்
இளங்கோவில் கைவிடேல் என்று பிரார்த்திக்க வேண்டுமே
நீர் நிலம் இவை மிசை படர் பொருள் முழுவதுமுவை அவை அவை தொறும் உடல் மிசை உயிர்
எனக் கரந்து எங்கும் பரந்துளன் -1-1-7-
பஞ்ச பூதங்களையும் படைத்து அவை உள்ளும் புகுந்து

மீண்டும் -663-நாமாவளியாக வரும் –சர்வ சகதீசன்
மூவடி இரந்து இரண்டடியால் அளந்தவன்
என்னைக் கொண்டு என் பாவம் தன்னையும் பறக்கைத்து எமர் ஏழு ஏழு பிறப்பும் மேவும்
தன் மயம் ஆக்கினான் வல்லன் எம்பிரான் -2-7-4-
முதல் திருநாமம் – விஸ்வம் -பூர்த்தியைச் சொல்லி இதில் -விஷ்ணு -வியாப்தியைச் சொல்லிற்று
சாத்விகர்கள் அனைத்தும் விஷ்ணு மயம் என்று உணர்வார்கள்

————–

  1. ஓம் விஶ்ணவே நம:

தத்கிமித்யாகாங்க்ஷாயாமாஹ விஶ்ணு:’ இதி |

பிறகு, ‘அந்த விஶ்வம் யார்?’ என்று அறிய முற்படும்பொழுது (அந்த விஶ்வமே) ‘விஶ்ணு’ என்று (பீஷ்மாசார்யார்) கூறுகிறார்.

ததா ச ரிக்வேதே – ரிக் வேதத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தமு ஸ்தோதாரபூர்வ்யம் யதாவித ரிதஸ்ய கர்ப்பம் ஜனுஶா பிபர்தன ஆஸ்ய ஜானந்தோ நாம சித்விவக்தன மஹஸ்தே விஶ்ணோ ஸுமதிம் பஜாமஹே

இத்யாதிஶ்ருதிபி: விஶ்ணோ: நாமஸங்கீர்த்தனம்ஸம்யக்ஞானப்ராப்தயேவிஹிதம் |

மேற்கண்ட ஸ்ருதி வாக்கியங்களில் பூரண ஞானத்தைப் பெற பகவான் ஸ்ரீ விஶ்ணுவின் நாமசங்கீர்த்தனமே வழிமுறையாக கூறப்பட்டுள்ளது.

தமேவஸ்தோதாரபுராணம்யதாஞானேனஸத்யஸ்யகர்ப்பம்ஜன்மஸமாப்திம்குருத |

ஒ துதிகள் செய்வோரே!!! உண்மையே உருவமாம் அந்த பழம்பெரும் கடவுளின் (பகவான்ஸ்ரீவிஶ்ணுவின்) உண்மைத் தன்மையை உள்ளவாறு அறிந்து கொண்டு பிறப்பு, இறப்பென்னும் இந்த சம்சார சுழற்சியை முடித்து விடுங்கள் (அதனின்றுவிடுதலைப்பெறுங்கள்).

ஜானந்தஆஅஸ்யவிஶ்ணோநாமாபிஆவததஅன்யேவதந்துமாவாஹேவிஶ்ணோவயம்தேஸுமதிம்சோபனம்மஹபஜாமஹேஇதிஶ்ருதேர் அபிப்ராய: |

ஒ துதிகள் செய்வோரே!!! இந்த விஶ்ணுவின் நாமங்களை அறிந்துகொண்டு அதை உச்சரிப்பீராக. ஒ விஶ்ணுவே!!! மற்றவர்கள் இதை (இந்த நாமங்களை) ஓதினும், ஒதாவிடினும், நாங்கள் உங்களது அழகு, ஒளி மற்றும் பேரறிவைப் போற்றி பாடுவோம். இதுவே மேற்கண்ட வேத வாக்கியத்தின் உள்ளுறைப் பொருளாகும்.

வேவேஶ்டி வ்யாப்னோதீதி ‘வேவேஷ்டி’ அதாவது எங்கும் பரவியிருப்பவரின் விஶ்ணு:திருநாமம் “விஶ்ணு” வாகும்விஶ்வ்யாப்யத்யபிதாயினோ‘விஶ்’ என்ற வேர்சொல்லின் பொருள் “எங்கும் பரவியிருத்தலாகும்” நுக்ப்ரத்யயான்தஸ்யஅதனுடன் “நுக்” என்ற விகுதி சேர்ந்து ரூபம் விஶ்ணுரிதி‘விஶ்ணு’ என்ற பெயர் உருவாகிறது. |

‘வேவேஶ்டி’ அதாவது எங்கும் பரவியிருப்பதால், பகவான் விஶ்ணு என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தேகாலவஸ்துபரிச்சேத ஶூன்ய இத்யர்த்த: |

இடம், தன்மை, காலம் போன்ற எல்லைகள் இல்லாதவர் என்று பொருள்.

வ்யாப்தே மே ரோதஸி பார்த்த க்ராந்திஸ்சாப்யதிகா ஸ்திதா |

ஒ பார்த்தனே!!! இந்த பூமியும், ஆகாயமும் என்னுள் நிலைபெற்றுள்ளது, அவை எனது விரிவாக்கமாகும்.

க்ரமணாச்சாப்யஹம் பார்த்த விஶ்ணுரித்யபிசம்ஞித: ||

ஒ பார்த்தனே!!! இவ்வாறு பரந்து, விரிந்திருப்பதனால் நான் விஶ்ணு என்று அழைக்கப்படுகிறேன்.

இதி மஹாபாரதே (ஶாந்தி பர்வம் 342.42-43)

இவ்வாறு மஹாபாரதம் ஶாந்தி பர்வத்தில் கூறப்பட்டுள்ளது.

யச்ச கிஞ்சித் ஜகத் ஸர்வம் த்ருஷ்யதேஶ்ரூயதேSபி வா |

அந்தர்பஹிச்ச தத் ஸர்வம் வ்யாப்ய நாராயண: ஸ்தித: ||

நாம் கண்ணால் கண்டும், காதால் கேட்டும் அறிந்து கொள்ள முடிந்த எத்தனை உலகங்களும், பிரபஞ்சங்களும் உள்ளனவோ, அவற்றுள் எல்லாம் பகவான் ஸ்ரீமன் நாராயணர் உள்ளும், புறமும் நீக்கமற பரவியுள்ளார்.

இத்யாதிஶ்ருதேர்ப்ருஹண்நாராயணே (13.1.2) 

இவ்வாறு ப்ருஹண்நாராயண உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது.

‘ஸர்வபூதஸ்தமேகம் நாராயணம் காரணபுருஶமகாரணம் பரம் ப்ரஹ்ம சோகமோஹவினிர்முக்தம் விஶ்ணும் த்யாயன்ன ஸீததி’

அனைத்திற்கும் காரணமாகவும், தனக்கு ஒரு காரணமின்றியும், எவ்வித துயரமும், பற்றுதலுமின்றியும், அனைத்து ஜீவராசிகளிலும் நீக்கமற பரந்து, நிறைந்துள்ள பரப்ரஹ்மமான ஸ்ரீமன்நாராயணனாகிய, விஶ்ணுவைத் த்யானிப்பவர் துயருறுவதில்லை.

இத்யாத்மபோதோபநிதி (1)

இவ்வாறு ஆத்மபோத உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது.

விஶதேர்வா‘விஶ்’ என்ற வேர்சொல்லின் மற்றொரு பொருள் “உட்புகுதலாகும்” நுக்ப்ரத்யயாந்தஸ்யஅதனுடன் “நுக்” என்ற விகுதி ரூபம் விஶ்ணுர்இதி ‘விஶ்ணு’ என்ற பெயர் உருவாகிறது|

அனைத்துப் பொருட்களிலும் உட்புகுந்து இருப்பதால், பகவான் ‘விஶ்ணு’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

யஸ்மாத்விஶ்டமிதம் ஸர்வம் தஸ்யஶ  க்த்யா மஹாத்மன: |

தஸ்மாதேவோச்யதே விஶ்ணோர்விஶேர்தாதோப்ரவேநாத் || (ஸ்ரீவிஶ்ணு புராணம் 3.1.54)

ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது:

அந்த பரமாத்மாவின் சக்தியானது இந்த பிரபஞ்சம் அனைத்திலும் உட்புகுந்துள்ளது. ‘விஶ்’ என்ற வேர்சொல்லிற்கு ‘உட்புகுதல்’ என்று பொருள். எனவே, அவர் விஶ்ணு என்று அழைக்கப்படுகிறார்.

இதிஸ்ரீவிஶ்ணுபுராணே | இவ்வாறு ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

—————–

2. விஷ்ணு – அவர் அனைத்தையும் வியாபித்திருக்கிறார்

விஸ்வம் போன்ற விஷ்ணுவும் ‘விஷ்‘ என்ற மூல வார்த்தையிலிருந்து வந்தது, அதாவது ‘நுழைவது’ அல்லது ‘ஊடுருவுவது’. விஷ்ணு எல்லா இடங்களிலும் ஊடுருவி எல்லா இடத்தையும் ஆக்கிரமித்துள்ளார். அவர் ‘சர்வ வியாபி‘ மற்றும் ‘சர்வ அந்தர்யாமி’. ‘யச்ச கிஞ்சித் ஜகத் ஸர்வம் த்ரிஷ்யதே ஷ்ரூயதேபி வா அந்தர்பஹிஶ்ச தத்ஸர்வம் வ்யாப்ய நாராயணஸ்திதா – பிரபஞ்சத்தின் எந்தப் பகுதியைப் பார்த்தாலும், கேட்டாலும், இறைவன் உள்ளேயும் வெளியேயும் ஊடுருவிச் செல்கிறான்’ என்று நாராயணசூக்தம் கூறுகிறது. அவருக்கு இடம், நேரம் அல்லது பொருள் வரம்பு இல்லை

“ஏகோ விஷ்ணுர் மஹாத் பூதம் ப்ரிதக் பூதானி அநேகாஷா : ஒரே சர்வவல்லமையுள்ள அனைத்தையும் தழுவிய விஷ்ணு தன்னை எண்ணற்ற தனிப்பட்ட பொருட்களாக வெளிப்படுத்துகிறார்”.

—————————

3-வஷட்க்காரா

அனைத்தையும் நிர்வகித்து ஆட்சி செய்பவர் -ஆகாசம் அரசன் -வியாபித்து நியமித்து –

ஆகாஸாதி வை லக்ஷண்யேந ஏதத் வ்யாப்தே: ப்ரயோஜநமுச்யதே –
வஷட்கார: |
ஸர்வம் வஸம் —ஸ்வ இச்சா அநுவர்தி- கரோதீதி கரோதே: கர்மணி அண் |(அனைத்தும் தன் வஸம் -விருப்பப்படி நடக்கும் படி செய்கிறார்)
வஸ காந்தவ் இத்யஸ்மாத் தாதோ:,
“ப்ரச்சி”,
“தம்ஸே :” இதி,
அத்ர பாஹுலகா அநு வ்ருத்தே: அட் ப்ரத்யய:, வஸேஷ் ஷாதேதஶ்ச |
“ஸர்வஸ்ய வஶீ ஸர்வஸ் யேஸாந:”,
“ஜகத் வஸே வர்ததே இதம்” இதி || 3|

எல்லாப் பொருள்களையும் தனது நினைவின்படி நடக்குமாறு வசப்படுத்தி இருப்பவர் –
ஆகாசம் போலன்றி வியாபித்து இருப்பதன் பயன் கூறப்படுகிறது -ஸ்ரீ பராசர பட்டர் –
the charming inner controller

ஜகத் வஸே வர்த்தேதம்-மஹா பாரதம்

ராஜ்யஞ்ச அஹஞ்ச ராமஸ்ய -ஆளுகைக்கு உட்பட்டவை

தேவர்களை மகிழ்விக்கும் வஷட்காரம் முதலிய மந்த்ரமாய் இருப்பவர் –
வஷட்காரம் சமர்ப்பிக்கப் படுபவர் -வஷட்காரம் சமர்ப்பிக்கப்படும் யாகமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்

ஐஸ்வர்யம் வீர்யம் புகழ் செல்வம் ஞானம் வைராக்கியம் -ஷட் குணங்களை யுடையவர் –
ஆறு குணங்களோடு கூடி வஷட் என்று கூறப்படுபவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்-

ஓம் வஷட்க்காரா நம

சர்வச்ய வசீ சர்வச்ய ஈசான -பிருஹத் –6-4-22
வ்யாப்தியின் பிரயோஜனம் -நியமித்தல்
கர விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை வரனவில் திறல் வழி யளி பொறையாய் நின்ற பரன் -1-1-11-

————

  1. ஓம் வஶட்காராய நம:

யதுத்தேஶேனாத்வரே எவரைக்குறித்துஶட் வேள்விகளில் “வஶட்” என்று சொல்லி க்ரியதே ஆகுதி செய்யப்படுகிறதோ ஸ ஶட்கார:அவரே “வஶட்காரர்” ஆவார்|

அனைத்து வேள்விகளிலும் பகவானைக் குறித்தே ‘வஶட்’ என்று சொல்லி ஆகுதி செய்யப்படுகிறது. எனவே, பகவான் ‘வஶட்கார:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

யக்ஞ்யோ வை விஶ்ணு: | (தைத்ரிய சம்ஹிதை 1.7.4)-வேள்விகள் விஶ்ணுவேயாகும்.

இதி ஸ்ருதேர்யக்ஞ்யோ வஶட்கார: | இந்த ஸ்ருதி வாக்கியத்தின் படி எந்த வேள்வியில் “வஶட்” என்று சொல்லி ஆகுதி செய்யப்படுகிறதோ அந்த வேள்வியே வஶட்காரமாகும் (வேள்விகள்விஶ்ணுவேஎன்பதால்விஶ்ணுஶட்காரர்எனப்படுகிறார்).

யேன வஶட்காராதிமந்த்ராத்மனா வா தேவான்ப்ரீனயதி ஸ வஶட்கார: | தேவதாவா‘ப்ரஜாபதிஸ்ச வஶட்காரஸ்ச’ இதிஸ்ருதே: |

மேற்கண்ட ஸ்ருதி வாக்கியங்களின்படி, வஶட்கார மந்திர உருவமாக எந்த தெய்வத்தை திருப்தி செய்கிறார்களோ அவர் (அந்ததெய்வமே) வஶட்காரர்.

சதுர்பிஸ்ச சதுர்பிஸ்ச த்வாப்யாம் பஞ்சபிரேவ ச |

ஹூயதே ச புனர்த்வாப்யாம் ஸ மே விஶ்ணு: ப்ரஸீதது ||

நான்கு (ஒஶ்ராவய), நான்கு (அஸ்து ஸ்ரௌஶட்), இரண்டு (யஜ), ஐந்து (யே யஜாமஹே) மற்றும் இரண்டு (வஶட்) எழுத்துக்கள் கொண்ட மந்திரங்களினால் எவரைக் குறித்து வேள்விகள் செய்கின்றோமோ அந்த பகவான் ஸ்ரீ விஶ்ணு என்னிடம் மகிழ்ச்சி அடையட்டும்.

இத்யாதிஸ்ம்ருதேஸ்ச |-இத்தகைய ஸ்ம்ருதி வாக்கியங்களின் படியும் பகவான் ஸ்ரீ விஶ்ணு ‘வஶட்கார’ என்று அழைக்கப்படுகிறார்.

———————-

3. வஷட்கார – பிரபஞ்சத்தை கட்டுப்படுத்துபவர்

வஷட்காரா என்பது கட்டுப்படுத்துவதற்காக ‘வஷ்’ என்ற மூலத்திலிருந்து பெறப்பட்டது. எனவே வஷட்காரர் என்பவர் பிரபஞ்சத்தை அவர் விரும்பியபடி கட்டுப்படுத்துபவர்.

வஷட்காரம் என்பது பகவானின் ஆறு குணங்களைக் குறிக்கிறது, அதாவது ஞானம் (அறிவு), பலம் (வலிமை), ஐஸ்வர்யம் (செல்வம்), வீர்யம் (வீரம்), சக்தி  மற்றும் தேஜஸ் (பிரகாசம்).

———

32 எழுத்துக்கள் அனுஷ்டுப் ஸ்லோகம்
முதல் ஸ்லோகம் -முதல் வரியில் 4 திரு நாமங்கள் –
முதல் திருநாமம் விளக்கம் -அடுத்த மூன்றும்
இத்தை விவரிக்க 5-11
12 விவரிக்க மேல் 13-17-
அடுத்த வரியில் ஐந்து திரு நாமங்கள்
அடுத்த ஸ்லோகம் 8 திரு நாமங்கள்
விஸ்வம் பூர்ணன் -விவரிக்க விஷ்ணு- வஷட்க்கார -பூத பவ்ய பவத் பிரபு
பரத்வம் முதலில் சொல்லி
காரணத்வம்
வியாபகத்வம்
நியந்த்ருத்வம் -அடுத்த மூன்றில் -இந்த குணங்களால் பரத்வம் ஸ்தாபனம்
கல்யாண குணங்களால் பூர்ணன் வியாபித்து -அனைத்தையும் வசத்தில் வைக்கும் நியந்தா –
இத்தை முக்காலத்திலும் செய்பவன் -அடுத்த நாமம் -சேஷித்வம் நிலை நாட்டி –
இத்தை விளக்கி
பூத க்ருத் -படைத்து தாங்கி பாவ -கூடவே இருந்து -உண்ணும் சோறு –இத்யாதி -ஐந்தும் -அவன் க்ருத்யம்
வியாப்தி கத தோஷம் தட்டாதவன் என்பதைக் காட்டவே அடுத்த இரண்டு திரு நாமங்கள்
பூதாத்மா பரமாத்மா –
இவனுக்கு வேறே ஆத்மா இல்லை என்பதையும் காட்டி –
முகம் அறிந்தவர் கோக்குமா போல் –
பீஷ்மர் கருத்தை -கண்ணன் திரு உள்ளம் அறிந்தே -பட்டர் -ஆழ்வார் அருளிச் செயல்களில் ஆழ்ந்து இப்படி சங்கதி காட்டி அருளுகிறார் –
பரத்வம் சேஷித்வம் -1-11-வரை –
12-யார் சேஷியோ அவனே ப்ராப்யம் –
முக்தா நாம் பரமாம் கதி -ப்ராப்யத்வம் சொல்லி
அத்தை விவரிக்க மேல் ஐந்து திரு நாமங்கள்
மூன்றாம் ஸ்லோகம் -யோக இத்யாதி – -உபாயமும் இவனே –
இதுவே திரு மந்த்ரார்த்தம் –
இந்த பேடிகை அறிந்தால் ரஸமே அதி அத்புதம் –

———————

4-பூத பவ்ய பவத் பிரபு

அத : (அதனால் -இவ்வாறு சங்கதி காட்டி அருளுகிறார் பட்டர் )பூத பவ்ய பவத் ப்ரபு:, கால த்ரய வர்திநாம்
ப்ரபு: – ஸ்வாமீ, ஸேஷீதி யாவத் |

ஸ்வாமி -சொத்து நாம் ஆத்மனி ஸஞ்சாதம் -தாஸ பாவம் –
சேஷீ -சேஷ பாவம் பரகத அதிசய ஆதேய இத்யாதி –

“விப்ர ஸம்ப்யோ ங்வ ஸம்ஜ்ஞாயாம்” இதி டு: |
ஸமுதாயஸ்ய ஸம் ஜ்ஞாத்வாத் ப்ரத்யய அவிராேத : |(பெயரின் பகுதி பிரபு இருப்பதால்-டு ப்ரத்யயம் வந்தது விரோதம் இல்லை -)
குஷ்யந்தி ஹி ஸாஸ்த்ராணி “பதிம் விஶ்வஸ்ய”, “பதிம் பதீநாம்”(திக் பாலர்கள் போல்வாருக்கும் இவனே பதி ,) “பூதஸ்ய ஜாத : பதிரேக ஆஸீத்”,
“தத் புருஷஸ்ய விஶ்வம்”,
“யஸ்யேமா : ப்ரதிஸ :”, “க்ருஷ்ணஸ்ய ஹி க்ருதே பூத மிதம் விஶ்வம் சராசரம்”,(பாரதம்)
“பூத பவ்ய பவந் நாத:(பாரதம்)
கேஸவ: கேஶி ஸூதந:”,
“ஜகந் நாதஸ்ய பூபதே” இத்யாதீநி || 4 ||

பதிம் விச்வச்ய -பூத பவ்ய பவன்நாத கேசவ கேசி ஸூத ராஜ்யஞ்சா அஹஞ்சா ச ராமஸ்ய –

வருங்காலம் நிகழ்காலம் கழி காலமாய் உலகை ஒருங்கா அளிப்பாய் -3-1-5-
உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது -திருப்பாவை –

கால சக்கரத்தாய் -முக்காலத்திலும் உள்ள அனைத்துக்கும் அனைவருக்கும் சேஷீ
ஆதி அந்தம் இல்லா நித்யன்
ஒன்றும் தேவும் –மற்றும் யாதும் இல்லா அன்றும் சத்தாக இருந்து -அனைத்தும் ஸூஷ்ம ரூபமாக அவன் இடம் இருக்குமே

வரும் காலம் நிகழ் காலம் கழி காலமும் உலகம் ஒருங்காக அளிப்பாய் –ஆழ்வார்

முக் காலங்களுக்கும் இறைவர் -கால வேறுபாடு இன்றி என்றும் இருப்பவர் -கால பேதத்தை எதிர்பாராமல்
சத்தா மாத்ரமாக இருக்கும் ஐஸ்வர்யம் ஆக  இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பதிம் பதீ நாம்
பூதஸ்ய ஜாத பதிரேக ஆஸீத்
தத் புருஷஸ்ய விஸ்வம்
யஸ் யேமா ப்ரதிஸ
கிருஷ்ணஸ்ய ஹி க்ருதே பூதம் இதம் விஸ்வம் சராசரம் –சபா பர்வம்
பூத பவ்ய பவந் நாத கேசவ கேசி ஸூதந
ஜெகந்நாதஸ்ய பூ பதே

முக் காலங்களிலும் உள்ள பொருள்கள் அனைத்திற்கும் தலைவர் -ஸ்ரீ சங்கரர்

முக் காலத்திலும் மங்களங்களை யுண்டாக்குபவர் –
முக் காலத்திலும் உள்ளவற்றுக்குத் தலைவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்-

—————————————————

  1. ஓம் பூதபவ்யபவத்ப்ரபவே நம:

பூதம்  கடந்த காலம் பவ்யம்  எதிர் காலம் பூதபவ்யபவந்தி (நிகழ்காலமும் சேர்ந்து) முக்காலங்களிலும் தேஶாம் ப்ரபுஎவரொருவர் தலைவரோ (ப்ரபுவோ பூதபவ்யபவத்ப்ரபு: அவர் “பூதபவ்யபவத்ப்ரபு” ஆவார்.

முக்காலங்களிலும் ஆட்சி செலுத்துபவராக இருப்பதால் பகவான் “பூதபவ்யபவத்ப்ரபு:” என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

காலபேதமனாத்ருத்ய ஸன்மாத்ர ப்ரதி யோகிக மைஶ்வர்ய மஸ்யேதி ப்ரபுத்வம் |

(ஏன் அவருக்கு மட்டும் இந்த) ப்ரபுத்வம்? அவர் முக்காலங்களையும் கடந்து, என்று நிரந்தரமாக இருக்கிறார். அதுவே அவரது ஐஸ்வர்யமாகும். எனவே, அவர் முக்காலங்களுக்கும் (முக்காலங்களிலும்) ப்ரபு ஆவார்.

——————

4-பூத பவ்ய பவத் பிரபு – கடந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர் காலத்தின் தலைவன்

கடந்த, நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் அனைத்திற்கும் அவர் இறைவனாக இருப்பதற்காக, அவர் எதுவும் இருப்பதற்கு முன்பு இருந்தார், இப்போது இருக்கிறார், எதிர்காலத்தில் என்றென்றும் இருக்கிறார். அவர் தொடக்கமும் முடிவும் இல்லாதவர்.


1-2-சர்வ சேஷித்வம் -சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் நிர்வஹிக்கை -5-9 -ஸ்வாமித்வம் – சொல்லும் திரு நாமங்கள்

5–பூத க்ருத் –
எல்லாவற்றையும் படைப்பவன் –

புந: ஸேஷித்வ உபபாதகாநி பஞ்ச நாமாநி |
ஸர்வாணி ஸ்வதந்த்ர: ஸ்ருஜதீதி -பூத க்ருத் |
யதா “ஸர்வம் ஹ்யேதம் ப்ரஹ்மணா ஹைவ ஸ்ருஷ்டம்”,
“யதோ வா இமாநி” இத்யாதி || 5 ||

யாதேவா இமாநி பூதாநி ஜாயந்தே –தத் ப்ரஹ்ம-
முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே -3-2-1-

முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன்
வெந்நாள் நோய் வீய வினைகளை வேர் அறப் பாய்ந்து
எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவேன் –3-2-1-

வருணன் பிள்ளை பிருகு -ப்ரஹ்மம் யார் -யார் இடம் இருந்து படைக்கப்படுகிறதோ -காக்கப் படுகிறதோ -லயம் அடைகிறதோ -அவனே ப்ரஹ்மம்

இவையும் அவையும் உவவையும் இவரும் அவரும் உவரும்
எவையும் எவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனி முதல் எம்மான் கண்ணபிரான் என்னமுதம்
சுவையன் திருவின் மணாளன் என்னுடைச் சூழல் உளானே –1-9-1-

எல்லாப் பொருள்களையும் தம் சங்கல்பத்தினால் படைப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
சர்வானி பூதானி ஸ்வ தந்தரத ஸ்ருஜதி இதி பூதக்ருத் –

சர்வம் ஹி ஏதம் ப்ரஹ்மணா ஹி ஏவ ஸ்ருஷ்டம்
யாதோ வா இமாநி பூதாநி –தைத்ரியம்

ரஜோ குணத்தைக் கைக்கொண்டு பிரம்மா ரூபியாகப் படைப்பவர் –
தமோ குணத்தைக் கைக்கொண்டு ருத்ர ரூபியாக பூதங்களை அழிப்பவர்-ஸ்ரீ சங்கரர்-

எல்லாப் பிராணிகளையும் படைப்பவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்-

ஓம் பூத க்ருத நம
சஹகார நிரபேஷமாக சகல ஸ்ருஷ்ட்டி செய்பவன்

————-

  1. ஓம் பூதக்ருதே நம:

ரஜோகுணம் ஸமாஶ்ரித்ய (அந்த விஶ்ணுவானவர்) ரஜோ குணத்தை ஏற்றுக்கொண்டு விரிஞ்சிரூபேண ப்ரஹ்மாவின் வடிவத்தில் பூதானி அனைத்து உயிர்களையும் கரோதீதி படைப்பதால் பூதக்ருத் ‘பூதக்ருத்’ என்று அழைக்கப்படுகிறார்.||

(அந்த விஶ்ணுவானவர்) ரஜோ குணத்தை ஏற்றுக்கொண்டு (நான்முகக் கடவுள்) ப்ரஹ்மாவின் வடிவத்தில் அனைத்து உயிர்களையும் படைப்பதால் பகவான் ‘பூதக்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தமோகுணமாஸ்தாய  (அந்த விஶ்ணுவானவர்) தமோ குணத்தை ஏற்றுக்கொண்டு ருத்ராத்மனா ருத்ரனின் வடிவத்தில் பூதானி அனைத்து உயிர்களையும் க்ருந்ததி அழித்தும் க்ருணோதி கொன்றும் ஹிநஸ்தீதி துன்புறுத்துவதால் பூதக்ருத் ‘பூதக்ருத்’ என்று அழைக்கப்படுகிறார் |

அல்லது, (அந்த விஶ்ணுவானவர்) தமோ குணத்தை ஏற்றுக்கொண்டு (சம்ஹாரக் கடவுள்) ருத்ரனின் வடிவத்தில் அனைத்து உயிர்களையும் (பிரளய காலத்தில்) துன்புறுத்துவதால் பகவான் ‘பூதக்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

——————-

6-பூத ப்ருத்—
எல்லாவற்றையும் தரிப்பவன் -தாங்குபவன்
விபர்தி அவ்யய ஈஸ்வர -ஸ்ரீ கீதை

பூதாநி பிபர்தி இதி பூத ப்ருத் |
“விஶ்வம் பிபர்தி புவநஸ்ய நாபி:”,(தைத்ரியம்-நாபி கொப்பூழ் ஆதாரம் )
“தத்யதா ரதஸ்ய அரேஷு நேமிரர்பிதா நாபாவரா அர்பிதா : ஏவமே வைதா பூத மாத்ரா: ப்ரஜ்ஞா மாத்ராஸு அர்பிதா ப்ரஜ்ஞா மாத்ரா: ப்ராணேஷு அர்பிதா :”,(கௌஷீகம் -சக்கரம் -மேல் வட்டம் -நேமி அரம் நாபி புருஷன் ஜ்வாலை -ஒன்றுக்கு ஓன்று ஆதாரம் -ஸுதர்சன சதகம் -பிரஞ்ஞா ஆத்மா பிராணா பரமாத்மா )
“ஸ தாதார ப்ருதிவீம்”,
“பிபர்தோ அவ்யய ஈஶ்வர:” இதி(ஸ்ரீ கீதை -15-17-) || 6

எல்லாப் பொருள்களையும் தாங்குபவர் –ஸ்ரீ பராசர பட்டர் —
பூதானி விபர்த்தாதி -அனைத்து சிருஷ்டிகளுக்கும் போஷணம் அளிப்பவன் –

விஸ்வம் பிபர்த்தி புவநஸ்யநாபி –தைத்ரியம் -உலகை தாங்குபவன் -நாபியாக உள்ளான்
தத் யதா ரதஸ்யா ரேஷு நேமிர்பிதா நாபாவரா அர்பிதா ஏவம் ஏவ ஏதா பூதமாத்ரா பிரஞ்ஞா மாத்ரா ஸூ அர்பிதா
ப்ராஞ்ஞா மாத்ரா ப்ராணேஷ் வர்ப்பிதா –கௌஷீதகீ –3-9-
தேர் சக்கரம் -குறுக்குக் கம்பி -சக்கரத்தின் அச்சு போலே உடலில் உள்ள பஞ்சபூதங்கள் ஜீவனால் தாங்கப்பட்டு-
ஜீவன் பிராணனான எம்பெருமானால் தாங்கப்படுகிறான்
ச தாதார ப்ருதிவீம் -தைத்ரியம்
பிபர்த்தி அவ்யய ஈஸ்வர –ஸ்ரீ கீதை -15-17-ஸ்வாமித்வம் -தரித்து -வியாபகம் -புருஷோத்தமன்

அசின் மிஸ்ராத் விஸூத்தாச்ச சேத நாத் புருஷோத்தம
வ்யாபநாத் பரணாத் ஸ்வாம் யாத் அந்ய பஞ்சத சோதித–ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம் –19-

அசின் மிஸ்ராத் சேதநாத்– அசித் உடன் கூடிய சேதனர்கள் -பத்தாத்மா
விஸூத்தாச்ச சேத நாத்—அசித் நீக்கி சுத்த -முக்தாத்மா சேதனர்கள் –
புருஷோத்தம –
வ்யாப நாத்-வியாபிக்கிற படியால்
பரணாத்-தரிக்கிற படியால்
ஸ்வாம் யாத்-நியமிக்கிறபடியால்
அந்ய-வேறுபட்ட புருஷோத்தமன் -ஸமஸ்த ஸூவ இதர விலக்ஷணன் –
வேறு பட்டு –உயர்ந்த — சம்பந்தம் கொண்டே –பிரவ்ருத்தி நிவ்ருத்தி ஸ்திதிகள் –
ஆகாசம் -வியாபகம் மட்டும் -பூ தேனை தரிக்கும் -ராஜா சிலரை நியமிக்கலாம் -இவனோ சர்வரையும் சர்வத்தையும் –

சத்வ குணத்தைக் கொண்ட அனைத்தையும் தாங்குபவர் -போஷிப்பவர் -ஸ்ரீ சங்கரர்-

எல்லாப் பொருள்களையும் தாங்குபவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்-

ஓம் பூத ப்ருத் நம
அனைத்துக்கும் ஆதாரம் -சக்கரத்தின் அச்சு போலே
ஸ்ருஷ்டிக்கப்பட்ட அனைத்தையும் ரஷிக்கும் பொறுப்பையும் தானே கொள்பவன்
ஆதி கூர்மாவதாரம் போலவே அனைத்தையும் தாங்குபவன்

—————-

  1. ஓம் பூதப்ருதே நம:

ஸத்வகுணமதிஷ்டாய ஸத்வ குணத்தை ஏற்றுக்கொண்டு பூதானி அனைத்து உயிர்களையும் பிபர்த்தி வளர்த்துபாலயதி காத்துதாரயதி தாங்கி போஷயதீதி ஊட்டமளிப்பதால் வா பூதப்ருத் ‘பூதப்ருத்’ என்று அழைக்கப்படுகிறார் |

பகவான் ஸ்ரீ விஶ்ணுவானவர் ஸத்வ குணத்தை ஏற்றுக்கொண்டு அனைத்து உயிர்களையும் வளர்த்து, காத்து, தாங்கி, ஊட்டமளிப்பதால் ‘பூதப்ருத்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

——————-

5.    பூதக்ருத் – படைப்பாளி மற்றும் அழிப்பவர்

6. பூத ப்ருத் – பிரபஞ்சத்தை நிலைநிறுத்துபவர்

அவர் எல்லா உயிர்களையும் தாங்குபவர், தாங்குபவர், போஷிப்பவர் மற்றும் பாதுகாப்பவர். எல்லா உயிர்களுக்கும் பராமரிப்புப் பாத்திரத்தை ஆற்றுவதற்காக பகவான் விஷ்ணு சத்வ குணத்தை ஏற்றுக்கொள்கிறார் என்று ஸ்ரீ ஆதி சங்கரர் கூறுகிறார்.

ஸ்ரீ பராசர பட்டர், அவர் அளிக்கும் ஆதரவு ஒரு சக்கரம் மற்றும் அதன் ஸ்போக்குகளின் மையம் போன்றது என்று விளக்குகிறார். இந்த மைய ஆதரவு இல்லை என்றால், மீதமுள்ள ஸ்போக்குகள் மற்றும் சக்கரம் சரிந்துவிடும். எனவே, அவர் உருவாக்கும் அனைத்து பொருட்களின் இருப்புக்கான முக்கிய காரணமாக இந்த ஆதரவை ஒருவர் நினைக்கலாம்.

————

7-பாவ –
அனைத்துடன் கூடி -பிரிக்க முடியாத -பிரகாரங்கள் -ஐஸ்வர்யங்கள்
வண் புகழ் நாரணன் -1-2-10-

உக்த வக்ஷ்யமாண ஸர்வ விபூதிபி: கலாபீவ ப்ரசலாகேந விஶிஷ்ட தயா பவதீதி பாவ: |
“பவதேஶ் சேதி வக்தவ்யம்” இதி ண ப்ரத்யய: |
தஸ்மிந் பகவதி ப்ரகாரதயா அந்தர்பாவாதேவ (பிரகாரமாயும் அவனையே ஆதாரமாகவும் கொண்டு )ஹி ஸர்வஸ்ய தத் விபூதித்வ வ்யபதேஸே: || 7 ||||

நான் உன்னை அன்றி இலேன் நீயும் என்னை விட்டு இல்லையே
நாரங்கள் இருக்கவே நாராயணன்
விட்டுப் பிரியாமல் சார்ந்தே இருக்கும் –பாவ -அப்ருதக் ஸித்த விசேஷணம்

கலாபீவ ப்ரசலாகேந-விரிக்கப்பட்ட மயில் தோகை போல் -சுருங்கியது பிரளய -லயம் தசையில் ஒட்டியே இருப்பதை அறிவோம்
இங்கு ஸ்ருஷ்ட்டிக்கப் பட்ட நிலையிலும் பிரியாமல் இருப்பத்தைச் சொல்லும்

கடலும் கடல் அலைகளும் போல்-தன்னுள்ளே திரைத்து எழும் இத்யாதி -ஆழ்வார்

சிலந்தி பூச்சி -கூடு உதாஹரணம்

விபூதி 10 அத்யாயம் -அர்ஜுனன் கேட்டு அனைத்துமாய் பார்க்க ஆசை கொண்டு –
விபூதிமான் -திவ்ய சஷுஸ் கொடுத்துக் காட்டி அருளினான்

தோகையும் மயிலும் வேறே வேறே தான் -விட்டுப் பிரியாமல்
சேதன அசேதன விஸிஷ்ட ப்ரஹ்மம் -கூடியே இருப்பதால் இருக்கிறார் –

மஹாத்மா விரஹம் சஹியாத மார்த்வம் -களத்திலே கூடு பூரிக்கும் -நாயனார்-

எல்லாப் பொருள்களையும் மயிலுக்குத் தோகை போலே தமக்கு அணியாகக் கொண்டவர் –
பிரகாரி இவன் -பிரகாரம் அவை -விபூதிமான் -ஸ்ரீ பராசர பட்டர் –
உக்த வஷ்ய மான சர்வ –விபூதிஅபிகி கலாபீவ பிரசாரகேன விஷ்டதையா பவதீதி பாவகி
மயில் தோகை விரிக்குமா போலே -தன்னுள்ளே அடக்கி வைத்து இருக்கும் சேதன அசேதனங்களை ஸ்ருஷ்டிக்குமா போலே —

பவதேச்ச இதி வக்த்வயம்–அனைத்தும் அவனது பிரகாரம் விபூதிகள்

உலக ரூபமாக இருப்பவர் -தனித்தே இருப்பவர் -எல்லாவற்றிற்கும் இருப்பாய் இருப்பவர் –ஸ்ரீ சங்கரர்-

உலகைப் படைப்பவர் -சந்தரன் -நஷத்ரங்கள் முதலியோருக்கு ஒளி தருபவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்–

ஓம் பாவ நம
ஸ்வா பாவிக -அப்ரதிஹத — நிரவதிக தேஜோ மயன்

———–

  1. ஓம் பாவாய நம:

ப்ரபஞ்சரூபேண அனைத்துலகங்களின் வடிவாக பவதீதி வெளிப்படுவதால் கேவலம் முழுவதுமாக பவதீத்யேவ வா ப்ரபஞ்சமாகவே உருவாவதால் பாவ: “பாவ:” என்று அழைக்கப்படுகிறார் | பவனம் வெளிப்படுவது அல்லது உருவாவது பாவ: ‘பாவ:’ என்று அழைக்கப்படுவது (எதனால்) ஸத்தாத்மகோ வா அவரின்றி வேறுதுவுமில்லை என்பதால் |

பகவான் ஸ்ரீ விஶ்ணுவானவர் அனைத்துலகங்களின் வடிவாக, அவரின்றி வேறுதுவுமில்லை என்னும்படி ப்ரபஞ்சமாகவே உருவாவதால் “பாவ:” என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

7.    பாவா – முழுச் சிறப்புடன் இருப்பவன்

ஸ்ரீ ஆதிசங்கரர் இந்த நாமத்திற்கு இரண்டு அர்த்தங்களைத் தருகிறார். :

1. பிரபஞ்சத்தின் வடிவில் சகல சிறப்புடனும் இருப்பவர். (‘பிரபஞ்ச ரூபேண பவதி’)

2. எப்போதும் இருப்பவர், எதையும் அல்லது யாரையும் சாராதவர். (‘கேவலம் பவதி’)

——–

8-பூதாத்மா –
உலகுக்கு உயிராய் இருப்பவன் –

இமம் விபூதி விபூதிமத் பாவம் ஸரீராத்ம பாவ லக்ஷணம் விஶிநஷ்டி –
பூதாத்மா இதி |
ஸர்வேஷாம் பூதாநாம் ஆத்மா |
அவ ராத்மநோ அபி இத மேவ ஸ்வ ஸரீரம் ப்ரதி ஆத் மத்வம் யத் வ்யாப்ய ஸாக்ஷாத் ப்ரவ்ருத்த்யாதிஷு நியச்சதி; ஏவம் பர: ஸர்வமிதி விஸேஷ: |
தாராகார கேதாராதி விலக்ஷணேந அத்யந்த பாரதந்த்ர்யேண அந்தரம் கோஹி தேஹஸ்ய ஆத்ம விபூதி பாவ: |

தேஹமே ஆத்மா -பிரமை -நமது ஆத்மாவும் தேகமும் வேறே வேறே தானே
ஆத்மாவே தேஹம் -அவனுக்கு சரீரம் -முற்றிய ஞானம்-ஏவம் பர: ஸர்வமிதி விஸேஷ-சர்வமும் அவனுக்கு தேஹமே

“ய: ப்ருதிவ்யாம் திஷ்டந்”,
“ய ஆத்மநி திஷ்டந்”,
“யஸ்ய ப்ருதிவீ ஸரீரம்”,
“யஸ்யாத்மா ஸரீரம்”,
“ஏஷ ஸர்வ பூத அந்ராத்மா ”,
“ஜகத் ஸர்வம் ஸரீரம் தே”,யுத்த காண்டம் 
“தாநி ஸர்வாணி தத் வபுஸ் :”,
“தத் ஸர்வம் வை ஹரேஸ் தநு:-விஷ்ணு புராணம் ” இத்யாதி உதாஹார்யம் || 8 ||

யஸ்ய ப்ருதிவீ சரீரம் யஸ்ய ஆத்மா சரீரம்
ஏஷ சர்வ பூதாந்தராத்மா –
உலகுக்கே ஓர் உயிருமானாய் -6-9-7-
ஒத்தாய் எப்பொருட்கும் உயிராய் -2-3-2-

எல்லாப் பொருள்களுக்கும் ஆத்மாவாக இருப்பவர் -ஸ்வம்-ஸ்வாமி சம்பந்தம்
ஜீவாத்மா சரீரத்தை -வியாபித்து நியமித்து -பிரவ்ருத்தி நிவ்ருத்தி செய்வது போலேவும் அந்தரங்கமாகவும் இருப்பது போலே –
சரீர சரீரி பாவம் -ஸ்ரீ பராசர பட்டர் -பூ பாத யஸ்ய நாபி -அந்தஸ்தம் —
உலகமே உடம்பு சர்வேஷாம் பூதானாம் ஆத்மா -அந்தர்யாமி -அனைத்தைக்கும்

ய ப்ருதிவ்யாம் திஷ்டன் ய ஆத்மநி திஷ்டன் -யஸ்ய ப்ருத்வீ சரீரம் -யஸ்ய ஆத்மா சரீரம் –பிருஹத்
ஏஷ சர்வ பூத அந்தராத்மா ஸூபால
ஜகத் சர்வம் தே -யுத்த -120-25–
தாநி சர்வாணி தத் வபூ –ஸ்ரீ விஷ்ணு புராணம் –
தத் சர்வம் வை ஹரேஸ் தனு -ஸ்ரீ விஷ்ணு புராணம் —

பிராணங்களுக்கு அந்தர்யாமியாய் இருப்பவர் –ஸ்ரீ சங்கரர்-

பிராணிகளுக்கு கட்டளை இடுபவர் -உலகில் வியாபித்து ஆத்மாவாக இருப்பவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்-

ஓம் பூதாத்ம நம

அனைத்துக்கும் ஆத்மா -அனைத்தும் ப்ரஹ்மத்துக்கு சரீரமே –
உள்ளே புகுந்து நியமித்து -ஸ்வரூப ஸ்திதி -பிரவ்ருத்தி நிவ்ருத்தி -அனைத்தும் தனது அதீனமாகக் கொண்டவன்

———————

  1. ஓம் பூதாத்மனே நம:

பூதானாமாத்மாந்தர்யாமீதி அனைத்து ஜீவராசிகளின் உள்ளுறை அந்தராத்மாவாக இருப்பதனால் பூதாத்மா பூதாத்மா” என்று அழைக்கப்படுகிறார் |

பகவான் ஸ்ரீ விஶ்ணுவானவர் அனைத்து ஜீவராசிகளின் உள்ளுறை அந்தராத்மாவாக இருப்பதனால் “பூதாத்மா” என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஏஷ தா ஆத்மாந்தர்யாம்யம்ருத:’ (ப்ருஹதாரண்யக உபநிஶத் 3.7.3-22)

உனக்குள் உள்ளுறைந்திருக்கும் இந்த ஆத்மா அழிவற்றதாகும்.

இதி ஸ்ருதே: | இவ்வாறு வேதங்களில் (உபநிஶத்துக்களில்) கூறப்பட்டுள்ளது.


8.    பூதாத்மா – அனைத்து உயிரினங்களின் சாரம்

அவர் ஒவ்வொரு உயிரினத்திலும் பொதிந்துள்ள ஆத்மா அல்லது ஆத்மா. எல்லாப் பொருட்களும் அவருடைய உடல், அவர் எல்லாவற்றின் ஆத்மாவும் ஆவார். ஆன்மா உடல்களுக்குள் நுழைந்து, அவற்றின் அனைத்து செயல்பாடுகளையும் நேரடியாகக் கட்டுப்படுத்தி இயக்குகிறது.

பிருஹதாரண்யக உபநிஷத் கூறுகிறது ‘ஏஷா தா ஆத்மாந்தர்யாம்மிருத- அவர் ஆத்மாவின் ஆழமான இடைவெளியில் உள்ள அமிர்தம்.

———

9-பூத பாவன –
வ்ருத்தி அடையும் படி பரிபாலிப்பவன் –

தாநி தாரக போஷக போக்ய ப்ரதாநேந வர்தயதீதி
பூத பாவந: |(உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாமே கண்ணன் )
“நந்த்யாதிப்யோ ல்யு:” | “க்ருத்யல்யுதடா பஹுலம்” இதி வா கர்தரி ல்யுட்|
ஏவம் பாவந:, ப்ரதர்ந: இத்யாதயோ அபி ல்யுட் ப்ரத்யயாந்தா : |
யதா “பூதா பாவந பூதேஸ ”,
“ஏஷ பூத பால: இதி |ஸேஷித்வம் உபபாதிதம் |
உத்பாதந போஷணாதிபி: உபாதீய மாநம் ப்ரதி உத்தேஶ்யம் ஹி ஸேஷீதி
“ஸேஷ: பரார்தத்வாத்” இதி ஸ மர்திதம் || 9 ||

பூத பாவன பூதேச -ஸ்ரீ கீதை-10-15-
ஓர் ஆயிரமாய் உலகு ஏழ் அளிக்கும் -9-1-1-

பார் இடந்து இத்யாதி –பேராளன் -அனைத்தும்

32-60 பாவன– ப்ரதர்ன அங்கும் பிரத்யயம் வரும்

நான் உன்னை அன்றி இலேன் நீ என்னை அன்றி இலை -நான் முகன் -7-
ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதுமில்லா வன்று –
நான் முகன் தன்னோடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்-4-10-1

எல்லாப் பொருள்களையும் தாங்குவது -போஷிப்பது -போகங்களைக் கொடுப்பது -ஆகிய வற்றால்
வளர்ப்பவர் -ஸ்வரூபம் ஸ்திதி பாலனம் -செய்து அருளி -சேஷி -சேஷ பாவம் -ஸ்ரீ பராசர பட்டர் —
தாரக போஷாக போக்ய பிரதானேன வர்த்தயதி-

ஏஷ பூத பால –பிருஹத்
சேஷ பரார்த்தத்வாத்–பூர்வ மீமாம்சை -3-3-1-

பிராணிகளை உண்டாக்குபவர் -அவற்றை விருத்தி செய்பவர் -ஸ்ரீ சங்கரர்-

பிராணிகளின் மனங்களைத் தம் நினைவின்படி நடத்துபவர் -இருப்புக்கு காரணம் –
உலகில் பரவிய ஒளியானவராய்க் காப்பவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்-

ஓம் பூத பாவந நம
ஸ்ருஷ்டித்த அனைத்தையும் வ்ருத்தி அடையச் செய்து பாலனம் பண்ணுபவன்

————————–

  1. ஓம் பூதபாவனாய நம:

பூதானி அனைத்து உயிர்களையும் பாவயதீதி உருவாக்குவதால் ஜனயதி பிறப்பித்து வர்த்தயதீதி வா வளர்ப்பதால் பூதபாவன: “பூதபாவன” என்று அழைக்கப்படுகிறார் |

பகவான் ஸ்ரீ விஶ்ணுவானவர் அனைத்து உயிர்களையும் உருவாக்குவதால், அதாவது பிறப்பித்து, வளர்ப்பதால் “பூதபாவன” என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

——————————

 9.    பூத பாவனா – எல்லா உயிர்களையும் வளர்ப்பவன்

தான் படைத்த அனைத்து உயிரினங்களையும் போஷித்து வளர்த்தவர். பூதானி பாவயதி, ஜனயதி, வர்தயதி வா – எல்லா உயிர்களையும் படைத்து வளர்க்கிறார்’ என்கிறார் ஸ்ரீ ஆதி சங்கரர். எனவே வெறும் படைப்பு மட்டும் போதாது; அதை தொடர்ந்து வளர்த்து வளர்க்க வேண்டும்.


1- விஸ்வம்-
ஸ்வரூபம் ரூபம் குணம் மகிமை ஆகியவற்றால் பரிபூர்ணர்-ஸ்வா பாவிக-சர்வ வித பூரணத்வம் –
அசங்க்யேய உயர்வற -மங்களங்களுக்கு எல்லாம் ஒரே இருப்பிடம் –
ஸ்வரூபம் ரூபம் குணம் விபவம் முதலியவற்றால் பூர்ணர்–ஸ்ரீ பராசர பட்டர் -all in one
விச்வம் -ஸ்வரூப ரூப குண விபைவைகி பரி பூர்ண இத்யர்த்த -குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா -என்பதை பின்பற்றி

உலகுக்குக் காரணமாக இருப்பவர் -யதஸ் சர்வாணி பூதாணி-கார்யமாகவும் காரணமாகவும் -உலகம் ப்ரஹ்மம் விட வேறு அல்லாமையாலே –
விசதி-உலகைப் படைத்து பிரவேசிக்கிறான்
விசந்தி -சம்ஹார காலத்தில் சகல பூதங்களும் இவன் இடம் பிரவேசிக்கின்றன
விச்வம் -ஓம் என்கிற பிரணவம் -சொல்லுக்கும் பொருளுக்கும் வேறுபாடு இல்லை -ஓங்காரமான பிராமத்தையே குறிக்கும்–ஸ்ரீ சங்கரர்

எல்லா இடத்திலும் உட் புகுந்து இருப்பவர் -கருடாரூடன் -சர்வ வியாபி -விசேஷமாக வளர்பவர் -வாயுவுக்கு அந்தர்யாமியாக நடத்துபவர்
உலகை நடத்துபவர் -உலகிற்குக் காரணமானவர் -ஜீவர்களை நியமிப்பவர்
விசேஷமான ஸூக ஜ்ஞான ரூபமாக இருப்பவர் -விசேஷமான ஸூகமே பல ரூபமாக இருப்பவர் -ஜ்ஞான ஸ்வரூபர் -ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்-

————————————————————————————————–

2- விஷ்ணு –

தம் உடைமைகளான சேதன அசேதனங்கள் எலாவற்றிலும் உட்புகுந்து இருப்பவர் –விஷ்ணு திருவவதாரத்தில்-one in all
அனுபிரவேசித்து இருப்பவர் -விச்வம் பூரணத்வம் விஷ்ணு வ்யாக்தியையும் சொல்வதால் கூறியது கூறல் குறை ஆகாது -ஸ்ரீ பராசர பட்டர் –

எங்கும் வியாபித்து இருப்பவர் -தேச கால வஸ்து பரிச்சேத ரஹிதர்-ஸ்ரீ சங்கரர்

சர்வ வியாபி -ஓங்கி உலகளந்த உத்தமர் –ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்-

———————————————————————————————————–

3- வஷட்கார

எல்லாப் பொருள்களையும் தனது நினைவின்படி நடக்குமாறு வசப்படுத்தி இருப்பவர் –
ஆகாசம் போலன்றி வியாபித்து இருப்பதன் பயன் கூறப்படுகிறது -ஸ்ரீ பராசர பட்டர் -the charming inner controller

தேவர்களை மகிழ்விக்கும் வஷட்காரம் முதலிய மந்த்ரமாய் இருப்பவர் –
வஷட்காரம் சமர்ப்பிக்கப் படுபவர் -வஷட்காரம் சமர்ப்பிக்கப்படும் யாகமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்

ஐஸ்வர்யம் வீர்யம் புகழ் செல்வம் ஞானம் வைராக்கியம் -ஷட் குணங்களை யுடையவர் –
ஆறு குணங்களோடு கூடி வஷட் என்று கூறப்படுபவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்-

—————————————————————————————————-

4-பூத பவ்ய பவத் ப்ரபு

முக் காலங்களுக்கும் இறைவர் -கால வேறுபாடு இன்றி என்றும் இருப்பவர் -கால பேதத்தை எதிர்பாராமல்
சத்தா மாத்ரமாக இருக்கும் ஐஸ்வர்யம் ஆக  இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

முக்காலங்களிலும் உள்ள பொருள்கள் அனைத்திற்கும் தலைவர் -ஸ்ரீ சங்கரர்

முக்காலத்திலும் மங்களங்களை யுண்டாக்குபவர் –
முக்காலத்திலும் உள்ளவற்றுக்குத் தலைவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்-

———————————————————————————————————–

5-பூதக்ருத் –

எல்லாப் பொருள்களையும் தம் சங்கல்பத்தினால் படைப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
சர்வானி பூதானி ஸ்வ தந்தரத ஸ்ருஜதி இதி பூதக்ருத –

ரஜோ குணத்தைக் கைக்கொண்டு பிரம்மா ரூபியாகப் படைப்பவர் –
தமோ குணத்தைக் கைக்கொண்டு ருத்ரரூபியாக பூதங்களை அழிப்பவர்-ஸ்ரீ சங்கரர்-

எல்லாப் பிராணிகளையும் படைப்பவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்-

———————————————————————————————————

6- பூத ப்ருத்-
எல்லாப் பொருள்களையும் தாங்குபவர் –ஸ்ரீ பராசர பட்டர் —
பூதானி விபர்த்தாதி -அனைத்து சிருஷ்டிகளுக்கும் போஷணம் அளிப்பவன் –

சத்வ குனந்த்தைக் கொண்ட அனைத்தையும் தாங்குபவர் -போஷிப்பவர் -ஸ்ரீ சங்கரர்-

எல்லாப் பொருள்களையும் தாங்குபவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்-

———————————————————————————————————

7- பாவ –

எல்லாப் பொருள்களையும் மயிலுக்குத் தோகை போலே தமக்கு அணியாகக் கொண்டவர் –
பிரகாரி இவன் -பிரகாரம் அவை -விபூதிமான் -ஸ்ரீ பராசர பட்டர் –
-உகத வஷ்ய மான சர்வ –விபூதிஅபிகி கலாபீவ பிரசாரகேன விஷ்டதையா பவதீதி பாவகி
மயில் தோகை விரிக்குமா போலே -தன்னுள்ளே அடக்கி வைத்து இருக்கும் சேதன அசேதனங்களை ஸ்ருஷ்டிக்குமா போலே —

உலக ரூபமாக இருப்பவர் -தனித்தே இருப்பவர் -எல்லாவற்றிற்கும் இருப்பாய் இருப்பவர் –ஸ்ரீ சங்கரர்-

உலகைப் படைப்பவர் -சந்தரன் -நஷத்ரங்கள் முதலியோருக்கு ஒளி தருபவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்–

——————————————————————————————————-

8-பூதாத்மா

எல்லாப் பொருள்களுக்கும் ஆத்மாவாக இருப்பவர் -ஸ்வம்-ஸ்வாமி சம்பந்தம்
ஜீவாத்மா சரீரத்தை -வியாபித்து நியமித்து -பிரவ்ருத்தி நிவ்ருத்தி செய்வது போலேவும் அந்தரங்கமாகவும் இருப்பது போலே –
சரீர சரீரி பாவம் -ஸ்ரீ பராசர பட்டர் -பூ பாத யஸ்ய நாபி -அந்தஸ்தம் —
உலகமே உடம்பு சர்வேஷாம் பூதானாம் ஆத்மா -அந்தர்யாமி -அனைத்தைக்கும்

பிராணங்களுக்கு அந்தர்யாமியாய் இருப்பவர் –ஸ்ரீ சங்கரர்-

பிராணிகளுக்கு கட்டளை இடுபவர் -உலகில் வியாபித்து ஆத்மாவாக இருப்பவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்-

——————————————————————————————————-

9-பூத பாவந

எல்லாப் பொருள்களையும் தாங்குவது -போஷிப்பது -போகங்களைக் கொடுப்பது -ஆகிய வற்றால்
வளர்ப்பவர் -ஸ்வரூபம் ஸ்திதி பாலனம் -செய்து அருளி -சேஷி -சேஷ பாவம் -ஸ்ரீ பராசர பட்டர் —
தாரக போஷாக போகய பிரதானேன வர்த்தயதி-

பிராணிகளை உண்டாக்குபவர் -அவற்றை விருத்தி செய்பவர் -ஸ்ரீ சங்கரர்-

பிராணிகளின் மனங்களைத் தம் நினைவின்படி நடத்துபவர் -இருப்புக்கு காரணம் –
உலகில் பரவிய ஒளியானவராய்க் காப்பவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்-


1-விஸ்வம் -நற் செல்வன் -கைங்கர்ய நிஷ்டன்-கற்றுக் கறவை கன்றுக்கு இரங்கி -பால் வெள்ளம் –
பால் வழிந்தால் -செல்வம் வராதே -கார்க்காச்சார்யார் –
விஸ்வம் -பரிபூர்ணன் -ஸ்வரூபம் ரூபம் குணம் ஐஸ்வர்யம் இத்யாதிகளால் -சாம்யா பத்தி அருளி –
ஓம் விச்வாயா நம-ஓம் விஸ்வம் நம

விச்வம் என்றால் ஸ்வபாவம், வடிவம், குணங்கள், பெருமை என அனைத்திலும் முழுமையானவன், பரிபூர்ணமானவன் என்று பொருள்.

2-விஷ்ணு
பால் கறக்கும் போதே ஏலக்காய் பால் -புஷ்டிமதி -நறை கமழ் பால் -புண்ணாக்கு கூட ஏலக்காய் மாட்டுக்கு கொடுக்க
அடிக்கும் -பதினாலு உலகும் அடி பட்டவே -அவனது உடல் தானே -unuverse-
எங்கும் நிறைந்து -உள்ளே உயிராக இருப்பவன்
ஓம் விஷ்ணவே நம-விருப்புடன் அனைவருடன் இருப்போம்

எம்பெருமான் எங்கும் நிறைந்திருப்பதால்
ஸஹஸ்ரநாமத்தின் இரண்டாவது திருநாமத்தில் வ்யாஸர் அவனை ‘விஷ்ணு’ என்றழைக்கின்றார்.
எங்கும் நிறைந்த இறைவனின் திருவருளை எங்கும் என்றும் எப்போதும் பெறுவதற்கு
“விஷ்ணவே நம:” என்ற இந்த திருநாமத்தைச் சொல்லுவோம்!

3-வஷட்க்கார
பாண்டவர் தூதன் -எழுந்து நின்றானே துரியோதனனும் -சகுனி கர்ணன் இத்யாதிகளும்-
நியமிப்பவன் -internal-controlar –

இதற்கு “அனைவரையும் இயக்குபவன்” என்று பொருள்.

நாமும் “வஷட்காராய நம:” என்ற திருநாமத்தைத் தினமும் சொல்லி வந்தால், எம்பெருமான்
நம் உள்ளங்களை நல்வழியில் இயக்கி வழிநடத்திச் செல்வான்.

4-பூத பவ்ய பவ பிரபு
ரோமசர் -ரோமங்களால் உடைய உடல் -ப்ரம்மா விட ஆயுஸ்-கேட்க -திவ்ய தேச அனுபவத்துக்காக -அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதம் -அன்றோ –
இந்த மந்த்ரம் சொல்லி பெருமாள் சாஷாத்காரம் -ஒரு ப்ரம்மா ஆயுஸ் காலம் முடிந்தால் ஒரு முடி
கலியன் -பாடல் உண்டே -ரோமசர் பற்றி

ஸஹஸ்ரநாமத்தின் நான்காவது திருநாமம் – பூத பவ்ய பவத் ப்ரபு:
இதன் பொருள் – கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என முக்காலங்களிலும் வாழும் அனைவருக்கும் தலைவனாக எம்பெருமான் விளங்குகிறான்.
“பூத-பவ்ய-பவத்-ப்ரபவே நம:” என்ற இத்திருநாமத்தைச் சொல்லி எம்பெருமானைப் போற்றினால்,
நாமும் நீண்ட ஆயுளோடும் ஆரோக்கியத்தோடும் வாழலாம்.

5-பூத க்ருத்
த்ரிவித காரணம் -உபாதான -நிமித்த -ஸஹ காரி –சிலந்தி வலை
மூல பிரகிருதி -படைப்பாளியும் இவனே -கருவிகளும் இவனே –
ஓம் பூத க்ருத் நம

உலகிற்கு மூன்று விதமான காரணங்களாகவும் தானே இருந்து உலகினைப் படைப்பதால்,
நாராயணன் “பூதக்ருத்” என்று அழைக்கப்படுகிறான்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் ஐந்தாவது திருநாமமாக அமைந்துள்ளது.
“பூதக்ருதே நம:” என்ற திருநாமத்தைச் சொல்லி எம்பெருமானின் திருவடித் தாமரைகளைத் தூமலர் தூவித் தொழுதோமாகில்,
படைத்தவனான அவன் தரும் பாதுகாப்பை நாம் முழுமையாகப் பெறலாம்.

6-பூத ப்ருத்
ராமானுஜரின் சத்துணவு தட்டம் -குடும்பி பிரசாதம் -ஓம் பூத ப்ருத் நம-ரெங்கநாதன் சிஷ்யன் என்று சொல்லி வழங்கிய வ்ருத்தாந்தம்
படைத்த உயிர்களுக்கு தானே உணவு அளித்து ரஷிக்கிறான்

‘பூதப்ருத்’ என்ற திருநாமத்துக்கு எல்லா உயிர்களுக்கும் உணவளிப்பவன் என்று பொருள்

“பூதப்ருதே நம:” என்று விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் ஆறாவது திருநாமத்தை ஜபிக்கும் அடியார்களுக்கெல்லாம்
அரங்கனே நல்ல உணவளித்து அவர்களைச் சத்துள்ளவர்களாக ஆக்கிடுவான். இதுவே ராமாநுஜர் காட்டிய சத்துணவுத் திட்டம்.

7-பாவ –
பாண்டவ தூதன் -ஆசனம் -பாண்டவர்கள் எனது உயிர் -விஸ்வரூபம் -அனைவரையும் துரியோதனன் பார்த்தான் –
அஞ்சி நடுங்கினான் -மயில் தோகை விரிப்பது போலே பிரபஞ்சம் ஸ்ருஷ்ட்டி -தன்னிடம் இருந்து விரிப்பவர்
ஓம் பாவாய் நம-நம் சிந்தனையும் பரந்து விரிவடைய சங்கீர்த்தனம் செய்வோம்

இப்படி உலகு மற்றும் அதன் மேன்மை, சீர்மை யாவையும் மயிலின் தோகை போல் தன்னகத்தே கொண்டிருக்கும் இறைவன்
“பாவ:” என்றழைக்கப்படுகிறான். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் ஏழாவது திருநாமமாக அமைந்துள்ளது.
நாமும் “பாவாய நம:” என்ற இத்திருநாமத்தைச் சொல்லிக் கண்ணபிரானை வணங்கினால்,
நம் வாழ்வில் மேன்மேலும் மேன்மையும் சீர்மையும் பெறலாம்

8-பூதாத்மா
ஜனகர் யாகம் -ஐநூறு மாடுகள் -தங்க குப்பி கொம்புகளில் -யாஜ்ஞ வர்க்யர் –
அனைத்துக்குள்ளும் உள்ளிருந்து தாங்கி இயக்குபவர் -பூமிக்குள் வானத்துக்குள்–ஜீவாத்மாக்குள் -அனைத்துக்குள்ளும்
இருந்து உடலாக நியமித்து -அவை அறியாமல் -இப்படி அனைத்துக்கும் ஆத்மா அவனே
ஓம் பூதாத்மா நம -வாக்கு வன்மை பெறுவோம்

உலகிலுள்ள அனைத்துப் பொருட்களையும் தனக்கு உடலாகக் கொண்டு,
அவைகளுக்குள் உயிராக விளங்கும் எம்பெருமான் “பூதாத்மா” என்றழைக்கப்படுகிறான்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் எட்டாவது திருநாமமாக அமைந்துள்ளது.
உயிர், உடலை இயக்குவது போல, எம்பெருமான் நம் உயிருக்கும் உயிராய் இருந்து நம்மை இயக்குகிறான்.
“பூதாத்மனே நம:” என்ற இத்திருநாமத்தைத் தினமும் சொல்லி வந்தால், யாக்ஞவல்கியர் போலச்
சிறந்த அறிவாளியாக நாம் விளங்கலாம்.

9-பூத பாவன
திரு மழிசை ஆழ்வார் -ஆராவமுதன் -அமுது செய்த பிரசாத சேஷம் -உடம்புக்கு பசிக்கு உணவு கொடுப்பது ஆத்மா தானே
ஜீவர்களுக்கும் உடலுக்கும் அந்தராத்மா அவன் தாமே -உடலுக்கும் உணவும்
ஜீவாத்மா உணவாக அழகையும் அனுபவிக்க
ஆராமுதாழ்வார் திரு மழிசைப் பிரான் -மாறி
ஓம் பூத பாவன நம -நோய் அற்ற வாழ்வு பெறுவோம்

தன் பக்தர்கள் உடல் ஆரோக்கியமும்
ஆன்மிக முன்னேற்றமும் பெறுவதற்காக அவர்களுக்கு உயிராக இருந்து உணவளிக்கும் எம்பெருமான் ‘பூதபாவந:’ என்றழைக்கப்படுகிறான்.
‘பூதபாவநாய நம:’ என விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் ஒன்பதாவது திருநாமத்தைத் தினமும் சொல்லி வந்தால்,
திருமழிசைப் பிரானின் பசியைப் போக்கியது போல, நமது வயிற்றுப்பசி, அறிவுப்பசி உள்ளிட்ட
அனைத்துப் பசிகளையும் எம்பெருமான் போக்கியருள்வான்.

———-—————————————-

விஸ்வம் விஷ்ணு வஷட்கரோ பூத பவ்ய பவத் ப்ரபோ
பூத க்ருத பூத ப்ருத் பாவ பூதாத்மா பூத பாவந
இந்த நவரத்ன நாமாவளி தொடர் அழகு அவனைப் போலே ஒப்பற்றதே

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பீஷ்மாச்சார்யர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸூகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வியாஸ பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading