யோகோ யோகவிதாம் நேதா ப்ரதானபுருஶேஶ்வர: |நாரஸிம்ஹவபு: ஸ்ரீமான் கேஶவ: புருஶோத்தம: || 3 ||
இந்த ஸ்லோகத்தில் 7 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,
- யோக: 19.யோகவிதாம் நேதா 20. ப்ரதானபுருஶேஶ்வர: |
- நாரஸிம்ஹவபு: 22.ஸ்ரீமான் 23. கேஶவ: 24. புருஶோத்தம: ||
யோக தியானத்தின் போது மனம் ஓயும் இடமாக இருப்பவன் {யோகன்},
யோகம் அறிந்தோர் அனைவருக்குமான வழிகாட்டி அல்லது தலைவன் {யோகவிதாம்நேதா},
பிரதானம் (அல்லது பிரகிருதி) மற்றும் புருஷன் ஆகிய இரண்டின் தலைவன் {ப்ரதாநபுருஷேஸ்வரன்},
சிங்கத்தலையுடன் கூடிய மனித வடிவினன் {நாரஸிம்மவபு},
அழகிய சிறப்புக் கூறுகளையும், செய் கருவிகளையும் கொண்டவன் {ஸ்ரீமாந்},
அழகுமயிர் படைத்தவன்{கேசவன்},
புருஷர்களில் முதன்மையானவன் {புருஷோத்தமன்};(16)
யோக: — தம்மை அடையத் தாமே வழியானவர்
யோகவிதாம் நேதா — தம்மை அடைய வழியறிந்து நடத்தும் தலைவர்
ப்ரதாநபுருஷேச்வர: — உலகமும் உயிர்களும் தாமேயாளும் ஈச்வரர்
நாரஸிம்ஹவபு: — நரம் கலந்த சிங்கமாய் அடியார்களைக் காப்பாற்றுபவர்
ஸ்ரீமாந் — திருமகள் எப்பொழுதும் உறையும் வடிவினர்
கேசவ: — அழகிய கேசம் திகழும் உருவம்
புருஷோத்தம: — ஜீவர்கள் அனைவரை விடவும் மிகவுயர்ந்தவர்
முக்திக்கு வழி –
18-யோக -முக்தியை அடையும் வழி உபாயமாகவும் இருப்பவர்
19-யோக -வேறு உபாயம் ஆகிற பக்தி யோகத்தை செய்பவர்களை வழி நடத்துபவர்
20-பிரதான புருஷேச்வர -மூல பிரக்ருதிக்கும் அதில் கட்டுண்ட ஜீவர்களுக்கும் ஸ்வாமி –
அனைத்தும் தானே –ஆனால் அவற்றிலும் உயர்ந்தவன் –
21-நாரசிம்ஹ வபு -நிகர் அற்ற நரம் கலந்த சிங்க உருவமாய்ப் பிறந்தவர் –
22-ஸ்ரீ மான் -ஒளி மிக்க -மனித -சிங்க உருவங்கள் பொருந்திய அழகிய திருமேனி உடையவர் –
23-கேசவ –இவ் வுருவில் அழகிய திருக் குழலும் பிடாரியும் உடையவர் –
24-புருஷோத்தம -பத்தர் முக்தர் நித்யர் -ஆகிய மூவகை ஆத்மாக்களை விட உயர்ந்தவர்
———
1-5-பரத்வம்- முக்திக்கு உபாயமாய் உள்ளவை -18/19-
18-யோக –
அஸ்யைவ நிருபாதிக முக்த்யுபாயத்வமபி வக்தி —
யோக:
* யுஜ்யதே ப்ராப்யதே அநேநேதி ।(இவனால் அடைகிறான் -கருவி)
(இவனால் அடைகிறேன் மூன்றாம் வேற்றுமை உருபு பிராபகம்
இவனை அடைந்தேன் மூன்றாம் வேற்றுமை ப்ராப்யம்)
(யோகம் உபாயம் மார்க்கமும் கூடி இருத்தல் மூன்று அர்த்தங்கள்
கர்ம யோகாதிகள் அசேதனம்
இங்கு அவனே உபாயம் -வழியாகவும் தானேயாய் இருக்கிறார் )
* அகர்தரி ச காரகே ஸம்ஜ்ஞாயாம் இதி கஞ் । ஏவம் அமோக : ஸர்க: இத்யாதீநி கஞந்நாநி । ஸ
ஸாயுஜ்யஸ்ய அநந்யாபேக்ஷ:, ஸாக்ஷாத் ஹேதுரித்யர்த : ।
* ஏஷ ஹ்யேவாநந்த யாதி –தத் தேது வ்யபதேஸாச்ச,(2-1-15)
* அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி இதி ॥18 ॥
மோஷ சாயுஜ்யத்துக்கு தானே உபாயம் -நிருபாதிக
மாம் ஏகம் சரணம் வ்ரஜ
தனியேன் வாழ் முதலே கனிவார் வீட்டின்பமே-2-3-5-
கடுவினை நஞ்சே என்னுடை அமுதே சேர்ந்தார் தீ வினைகட்கு
அரு நஞ்சைத் தண் மதியை தீர்ந்தார் தம் மனத்துப் பிரியாதவர் உயிராய் அடியேன் அடைந்தேன் -2-3-6-
பக்தி உழவன் –
யோக –
சாயுஜ்யமாகிய முக்திக்கு வேறோர் உபாயம் வேண்டாதபடி தானே உபாயமாக இருப்பவர் –
முக்திக்கு உபாயமும் முக்தர்களுக்கு உபேயமும் அவனே -ஸ்ரீ பராசர பட்டர் —
ததி பாண்டத்துக்கும் கூட முக்தி அளித்தானே –
சேவிக்க சாமர்த்தியம் இல்லா இடங்களுக்கும் -தானே காட்டக் கண்டு அனுபவிக்கலாம்
யுஜ்யதே பிராப்யதே –அநேநேதி சாயுஜ்ய -நான்யாபேஷ -சாஷாத் ஹேது இத்யர்த்த
யோக -யுஜ்யதே -யாருடைய உதவியால் குறிக்கோள் அடையப்படுகிறது –
மோக்ஷம் அடைய தானே நிருபாதிக சஹகாரி நிரபேஷ உபாயம்
ஏஷ ஹி ஏவ ஆனந்தயாதி –தைத்ரியம்
தத் தே து வியபதேசாத் ச -1-1-15-
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி –ஸ்ரீ கீதை -18-66–
ஐக்ய சிந்தனையாகிற யோகத்தினால் அடையத் தக்கவர் –ஸ்ரீ சங்கரர்—
யோகிகளால் தம் இதயத்தில் த்யானம் செய்யப்படுபவர் -அனைத்து குணங்களும் சேர்ந்து இருப்பவர் –
பக்தர்களுக்கு உலகைக் கடக்க வழியாக இருப்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—
ஓம் யோகாய நம
தன்னை அடைய தானே ஒரே உபாயமாக இருப்பவன் –
யோகிகளால் அடையத் தக்கவன்
———–
- ஓம் யோகாய நம:
‘ஞானேந்த்ரியாணி ஸர்வாணி நிருத்ய மனஸா ஸஹ |
ஏகத்வபாவனா யோகா: க்ஷேத்ரஞ்யபரமாத்மனோ: ||’
மனம் உட்பட அனைத்து அறிவுப்புலன்களையும் (ஞானேந்த்ரியங்கள்) ஒடுக்கி, க்ஷேத்ரஞ்யான ஜீவாத்மா பரமாத்மாவுடன் ஒன்றி இருத்தலே யோகம் எனப்படும்.
தத் இவ்வாறு (மனம், புலன்களை அடக்கி யோகத்தில் ஒன்றுவதன் மூலம்) அவாப்யதயா அடையப்படுவதால் யோக: அவர் ‘யோக:’ என்று அழைக்கப்படுகிறார் |
மனம், மற்றும் அறிவுப்புலன்களை அடக்கி, அவருடன் ஒன்றுபடுதலே யோகமாகும். இத்தகைய யோகத்தால் அடையப்படுவதால், பகவான் “யோக:” என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
——————–
யோகம் – யோகாவின் மூலம் அடையக்கூடியவர்
சமஸ்கிருதத்தில் யோகா என்ற வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உள்ளன: அதாவது, தியானம், தொழிற்சங்கம், உடற்பயிற்சி, பரிகாரம் போன்றவை.
ஸ்ரீ பராசர பட்டர் இதை ‘ஒரு முடிவுக்கு அல்லது வெறுமனே ஒரு செயல்முறை’ என்று விளக்குகிறார். அவரைப் பொறுத்தவரை, இந்த நாமம் என்பது முக்தி அல்லது முக்தியை அடைவதற்கான ஒரே வழி பகவானைத் தியானிப்பதாகும்
ஸ்ரீ ஆதிசங்கரர் இந்த நாமத்தை ‘ஒற்றுமை’ அல்லது ‘ஒருமை’ என்பதை உணர்த்துவதற்காக விளக்குகிறார். இந்திரியங்களையும் மனதையும் கட்டுப்படுத்துவதன் மூலம் பகவான் யோகம் என்று அழைக்கப் படுகிறார். இந்த செயல் முறையின் மூலம் நாம் பரமாத்மா மற்றும் க்ஷேத்ரஞ- அதாவது ஜீவாத்மாவின் ஒருமையை உணர்கிறோம்.
—————-
19-யோக விதாம் நேதா –
வ்யவஹித உபாயநிஷ்டாநாம் அபி யோக விதாம் நேதா । நயதேஸ் த்ருச் ।(இங்கு யோக -உபாயாந்தரங்கள் -அவர்களுக்கும் பல பிரதன் இவனே-வ்யவஹித உபாயம் கீழே இடையில் ஒன்றும் இல்லாமல் அவனே உபாயம் )
பர்தா தாதா இத்யாேதயோ அபி த்ருஜந்தா : । பல பர்யந்த நிர்வாஹக: ।
* தேஷாமேவா அநுகம்பார்தம், (ஸ்ரீ கீதை 10-11)
* தேஷா மஹம் ஸமுத்தர்தா (ஸ்ரீ கீதை-12-7-)
* ஸம்ஸார பாரம் பரமீப்ஸ மாநை ராராதநீயோ ஹரிரேக ஏவ, (ஸ்ரீ விஷ்ணு தர்மம் )
* பராம்ருதத் பரிமுச்யந்தி ஸர்வே ,
* ஜுஷ்டஸ் ததஸ்தே- நாம்ருதத்வமேதி இதி ॥ 19॥
மற்ற உபாயங்களை பற்றியவர்களையும் பல பர்யந்தம் -நடத்திச் செல்பவன்
பக்தி யோக நிஷ்டனையும் பலனை அடையச் செல்பவன்
ப்ரீதி பூர்வகம் புத்தி யோகம் ததாமி-
யோக விதாம் நேதா
வேறு உபாயம் ஆகிய பக்தி யோகத்தைப் பற்றியவர்களுக்கும் பலன் யு ண்டாம்படி நிர்வகிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
நயதி வினை உடன் த்ருச் சேர்ந்து நேதா –இதே போலே பர்த்தா -33-/ தாதா -43–/951-
யோகத்தை அனுஷ்டிப்பவர்களை வழி நடத்துபவன்
தேஷாம் ஏவ அநு கம்பார்த்தம் –ஸ்ரீ கீதை -10-11–
தேஷாம் அஹம் சமுத்தர்த்தா –ஸ்ரீ கீதை-12-7-
சம்சாரம் பார்ம பரம் ஈப்சமானை ஆராதநீயோ ஹரி ஏக ஏவம் -ஸ்வேதாஸ்வர
பரம் அம்ருதாத் பரிமுச்சந்தி சர்வே -தைத்ரியம்
ஜுஷ்டஸ் ததஸ்தேந அம்ருதத்வம் ஏதி –ஸ்வேதாஸ்வர
ஞானிகளின் யோக ஷேமங்களை வகுத்து நடத்துபவர் -யோகத்தை விசாரிப்பவர்கள் –
அறிபவர்கள்-அடைபவர்கள் யோக வித்துக்கள் -ஸ்ரீ சங்கரர்—
த்யான யோகம் அறிந்த பக்தர்கள் மோஷ பலத்தை அடையும்படி செய்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–
ஓம் யோக விதாம் நேதாய நம
உபாசகர்களை வழி நடத்தி தன்னை அடையும் படி செய்பவன்
பக்தர்களுக்கும் நசபுநராவ்ருத்தி மோக்ஷம் அடையச் செய்பவன்
———————————————————————————
- ஓம் யோகவிதாம் நேத்ரே நம:
யோகம் விதந்தி விசாரயந்தி லபந்த இதி வா யோகவிதஸ்தேஶாம் நேதா ஞாநினாம் யோகக்ஷேமவஹனாதிநேதி யோகவிதாம் நேதா |
யோகம் யோகத்தை விதந்தி கற்று விசாரயந்தி ஆராய்ந்து ஜானந்தி அறிந்து லபந்த இதி வா அதை அடைந்த யோகவிதஸ்தேஶாம் யோகத்தை உள்ளபடி உணர்ந்த சிறந்த யோகிகளின் நேதா தலைவர் ஞாநினாம் (அத்தகைய) அறிவிற்சிறந்த யோகிகளின் யோகக்ஷேமவஹனாதிநேதி நன்மை, தீமைகளுக்குப் பொறுப்பேற்று அவற்றை நிர்வகித்து அவர்களை வழிநடத்துவதால் யோகவிதாம் நேதா அவர் “யோகவிதாம் நேதா” என்று அழைக்கப்படுகிறார் |
யோகத்தை கற்று, ஆராய்ந்து, உள்ளபடி உணர்ந்த சிறந்த யோகிகளிக்கு, அவர்களின் நன்மை, தீமைகள் ஆகிய அனைத்திற்கும் பொறுப்பேற்று அவர்களை வழிநடத்துவதால் பகவான் “யோகவிதாம் நேதா” என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘தேஶாம் நித்யாபியுக்தானாம் யோகக்ஷேமம் வஹாம்யஹம்’ || (ஸ்ரீமத் பகவத்கீதை 9.22)
ஸ்ரீமத் பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது:
அந்த நித்திய யோகிகளின் நன்மை, தீமைகளை நான் பொறுப்பேன்.
இதி பகவத்வசனாத் | இவ்வாறு, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறியுள்ளார்.
————
யோகவிதம் நேதா – யோகாவில் நிலைநிறுத்தப்பட்டவர்களின் தலைவன்
யோகவித் என்பது யோகாவை விசாரிப்பவர், பெற்றவர் அல்லது உணர்ந்தவர் மற்றும் நேதா ஒரு தலைவர். பகவான் ‘யோகவிடாம்நேதா’ என்று அழைக்கப்படுகிறார், ஏனென்றால் அவர் யோகா பயிற்சியாளர்களை அவர்களின் இலக்கை அடைய வழி நடத்துகிறார்.
அனன்யாஷ் சிந்தயந்தோ மாம் யே ஜனாஹா பர்யுபாஸதே
தேஷாம் நித்யாபி யுக்தானாம் யோக க்ஷேமம் வஹாம் யஹம்–9-22-
என்ற ஒற்றை முனை தியானத்தால், தொடர்ந்து எனது வழிபாட்டில் ஈடுபடுபவர்கள், அவர்களின் தேவைகளைப் பெறுதல் மற்றும் பாதுகாத்தல் ஆகியவற்றின் சுமையை நான் சுமக்கிறேன்.
———————-
1-6-பரத்வம்-நியாமகன்
20-ப்ரதாந புருஷேஶ்வர: –
பிரகிருதி -ஆத்மா -அனைத்தையும் நியமித்து நடத்துபவன் –
இத மேவோப பாத்யதே (இவனே யோகம் யோக விதம் நேதா செலுத்துபவன் என்பதையே விவரிக்கிறார் )- ப்ரதாந புருஷேஶ்வர: ; ப்ரதாநஸ்ய பந்த ஹேதோ: புருஷாணாம் ச பத்ய மாநாநாம்- ஸர்வதா நியாமக: ।
* ஸ்தேஸ பாஸ இத்யாதிநா வரச் । ஏவம் ஸ்தாவர: । (ஸ இருப்பது பாஸ் -விளங்குவது ஈஸ் நியமிப்பது இவற்றுடன் வரஸ் சேர்ந்து இயல்பாக கொண்டவன் -ஏவம் ஸ்தாவர)
யதா* ஸம்யுக்த மேதத் க்ஷர க்ஷரம் ச வ்யக்த அவ்யக்த பரதே விஶ்வமீஸ :।
அநீஸஶ்சாத்மா பத்யதே போக்த்ரு பாவாத் ஜ்ஞாத்வா தேவம் முச்யதே ஸர்வபாஸை : ॥ (அனுபவித்து கட்டுப்படுகிறான் -அறிந்தாலே விடுதலை )
* ப்ரதாந ஷேத்ரஜ்ஞ பதிர்குணேஸ :,
* க்ஷராத்மா நாவீஸதே தேவ ஏக:, இதி । ஏவமீஶ்வரோஹி ஸ்வ மாயயா ஜீவாந் அபராத்யதோ பத்நந் ப்ரபத்ய மாநாம்ஶ்ச முஞ்சந் க்ரீடிதும் ப்ரபவதி ।(இன்புறும் இவ்விளையாட்டுடையவன் )
*ஈஶ்வரஸ் ஸர்வ பூதாநாம்
* தைவீ ஹ்யேஷா குண மயீ,
* தைவீ தேவஸ்ய க்ரீடத :,
* க்ரீடநகம்,
* ஸம்ஸார மோக்ஷ ஸ்திதி பந்த ஹேது:
ஶ்ரீவிஷ்ணுதத்வே * தத் க்ருதா யாஸ்து மாயாயாஸ் தத் ப்ரஸதாம் விநா க்வசித் ।
நாஸ்தி நிர்ணாஸதந ஹேது: ஸம் க்ஷிப்யை தத் ப்ரபாஷிதம் ॥ இதி।
(அவனால் செய்யப்பட இந்த ப்ரக்ருதியை அவன் அருளாலே தான் விடுவித்துக் கொள்ள வேண்டும்-சுருக்கமாக இதைச் சொல்கிறேன் )
*பராமித்யாநாத் (உன் மனத்தினால் என் நினைந்து இருந்தாய் )து திரோஹிதம் ததோ ஹ்யஸ்ய பந்த விபர்யயௌ,
* தேஹ யோகாத் வா ஸோ அபி இதி ச ஸூத்தர ।(தேஹம் ஸ்ருஷ்டியில் கட்டுப்படுத்தும் பிரளயத்தில் பிரக்ருதியால் கட்டுப்படுத்தி உள்ளான்)
தாச் சீல்ய விஷயேண வரசா தத்த்வ த்ரய பேத ஈஶ்வரே ஶிதவ்ய பாவஶ்சா நௌபாதிகோ ஜ்ஞாப்யதே ॥ 20 ॥(வரஸ் ப்ரத்யயம் இயற்க்கை- உபாதியால் அல்ல )
ஈச்வரஸ் சர்வ பூதாநாம் -ஸ்ரீ கீதை
உடல் ஆழிப் பிறப்பு வீடு உயிர் முதலாய் முற்றுமாய் அடல் ஆழி யம்மான் -1-4-10-
பிரதான புருஷேஶ்வர –
ஜீவர்களைக் கட்டுப் படுத்தும் பிரக்ருதியையும் அதில் கட்டுண்ட ஜீவர்களையும் நடத்துபவர் –
தனது மாயையினால் அபராதம் செய்பவர்களை சம்சாரத்தில் கட்டி வைத்தும் சரணம் =அடைந்தவர்களை விடுவித்தும் விளையாடுகிறான்
ஈஸ்வர -வரச் பிரத்யயத்தால் இத் தன்மை இயற்கை என்பதும் -சித் அசித் ஈஸ்வரன் தத்வ த்ரய பேதமும் கூறப்படுகிறது
நியமிப்பவன் ஒருவன் -நியமிக்கப்படுபவை இரண்டும் -இயற்கையாக செய்பவன் -ஸ்ரீ பராசர பட்டர் —
வ்ரச் என்கிற எச்சம் ஸ்தா தாது உடன் சேர்ந்து ஈஸ்வர / இதே போல் ஸ்தாவர -428-திரு நாமம்
சம்யுக்தம் ஏதத் அக்ஷரம் அக்ஷரம் ச வ்யக்த அவ்யக்தம் பரதே விஸ்வம் ஈஸா அநீசச் சாத்மா பத்யதே
போக்த்ர பாவாத் ஞாத்வா தேவம் முச்யதே சர்வ பாஸை-ஸ்வேதாஸ்வர
பிரதான ஷேத்ரஞ்ஞ பதி குணேச -ஸ்வேதாஸ்வர
ஷராத்மாநவ் ஈஸதே தேவ ஏக -ஸ்வேதாஸ்வர
தைவீ தேவஸ்ய க்ரீடத
கிரீட நகம்
சம்சார மோக்ஷ ஸ்திதி பந்த ஹேது
தத் க்ருதா யாஸ்தி மாயாயா தத் பிரசாதம் விநா க்வசித் நாஸ்தி நிர்ணாசநே ஹேது சங்க்ஷிப்யேதத் பிரபாஷிதம் –ஸ்ரீ விஷ்ணு தர்மம்
பராபித்யாநாத் து திரோஹிதம் ததா ஹி அஸ்ய பந்த விபர்யயவ் -3-2-4-
தேஹ யோகாத் வா ஸோ அபி -3-2-5–
ஈஸ்வர சர்வ பூதாநாம்
தைவீ ஹி ஏஷா குணமயீ–ஸ்ரீ கீதை -7-14-
பிரதானம் ஆகிய மாயைக்கும்- புருஷனாகிய ஜீவனுக்கும் ஈஸ்வரர் –ஸ்ரீ சங்கரர்—
பிரதானமாகிய பிரக்ருதிக்கும் புருஷர்களாகிய ஜீவர்களுக்கும் ஈஸ்வரர்
எல்லாருக்கும் தாரண போஷணங்களைத் தருபவர் –
நான்முகனுக்கு ஹயக்ரீவராக இருந்து வேதங்களை அருளுபவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—
ஓம் பிரதான புருஷேஸ்வராஹ நம
பிரகிருதி ஜீவர்கள் இருவருக்கும் ஒரே ஈஸ்வரன்
———————-
- ஓம் ப்ரதானபுருஶேஶ்வராய நம:
ப்ரதானம் ப்ரக்ருதிர்மாயா புருஶோ ஜீவஸ் தயோரீஶ்வர: ப்ரதானபுருஶேஶ்வர: |
ப்ரதானம் ‘ப்ரதானம்’ என்றால் ப்ரக்ருதிர்மாயா ‘ப்ரக்ருதி’ அல்லது மாயையைக் குறிக்கும்; புருஶோ ‘புருஶ’ என்றால் ஜீவஸ் ஜீவாத்மாவைக் குறிக்கும் தயோரீஶ்வர: இவை இரண்டையும் தனது ஆளுகைக்குள் வைத்திருப்பதால் ப்ரதானபுருஶேஶ்வர: அவர் ‘ப்ரதானபுருஶேஶ்வர:’ என்று அழைக்கப்படுகிறார் |
ப்ரக்ருதி எனும் ப்ரதானத்தையும், ஜீவாத்மாவாகிய புருஶனையும் தனது ஆளுகைக்குள் வைத்திருப்பதால் (இவை இரண்டிற்கும் ஈஸ்வரனாக இருப்பதால்), பகவான் “ப்ரதானபுருஶேஶ்வர:” என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அனைத்து உயிரினங்களின் உடல்களும் ப்ரக்ருதி, மஹான், அஹங்காரம், பஞ்ச பூதங்கள், பஞ்ச தன்மாத்திரைகள், ஐந்து அறிவுப்புலன்கள், ஐந்து செயல் புலன்கள், மனம் ஆகிய 24 தத்துவங்களால் ஆக்கப்பட்டுள்ளது. இந்த உடலின் உள்ளே உறையும் ஜீவாத்மா 25வது தத்துவமாவார். மனம் உட்பட, முதல் 24 தத்துவங்களும் அசித் (அறிவற்றவை). ஜீவாத்மா மட்டுமே அறிவுடையவர். இந்த சித் (ஜீவாத்மா), மற்றும் அசித் ஆகிய இரண்டிற்கும் ஈஸ்வரன் பகவான்.
————–
ப்ரதானபுருஷேஸ்வரா – அவர் பிரகிருதி மற்றும் புருஷர்களின் அதிபதி
பிரதானா என்பது முதன்மையான இயற்கை அதாவது பிரகிருதி அல்லது நமது புலன்களால் உணரப்படும் நம்மைச் சுற்றியுள்ள உலகம். இது மாயா அல்லது வெளிப்படையான உண்மை என்றும் அழைக்கப்படுகிறது. புருஷன் க்ஷேத்ரக்னா அல்லது ஜீவாத்மா.
ஈஸ்வரன் இறைவன் மற்றும் எஜமானர் மற்றும் பிரதானபுருஷேஸ்வரா என்றால் பிரகிருதி மற்றும் புருஷன் இரண்டிற்கும் இறைவன் மற்றும் எஜமானர் அதாவது மகா விஷ்ணு.
21- நார சிம்ஹ வபு –
ஸ்வ பக்த் யந்தராய நிவாரண மபி ப்ரதர்ஸயதி –
நாரஸிம்ஹ வபுஸ் :;
பக்த பயா பஹ தத பேக்ஷாஸம க்ஷண ப்ரதிபந்நயதா காம
திவ்ய மஹா ந்ருஸிம்ஹ ஸம்ஹநந: ॥ 21 ॥
தானவன் மார்வகலம் இரு கூறா நகந்தாய் நரசிங்கமதாய உருவே -3-4-7-
யாருக்கு அருளினாலும் தனக்காகப் பண்ணியதாகவே ஆழ்வார்கள் திரு உள்ளம்-
அழகியான் தானே சொல்லி அரி உருவம் தானே போல் இங்கும் இந்த திரு நாமமும் ஸ்ரீ மான் திரு நாமமும் அடுத்து
பக்தனுடைய பயத்தைப் போக்க அவன் விரும்பிய காலத்திலே திவ்ய நரசிம்ஹ உருவத்தைக் கொண்டவன் –
பக்தர்களின்-அந்தராயம் -தடங்கல் உபாய – காலத்தில்- தசையில் – தடைகளைப் போக்கி அருளுபவன்–அதுக்கு த்ருஷ்டாந்தம் இந்தத் திரு நாமம் -ஸ்ரீ பராசர பட்டர் —
மனித சிம்ம லஷணங்களும் ஒரே தேகத்தில் பொருந்தி இருந்தவர் –ஸ்ரீ சங்கரர்—
மனிதன் சிம்கம் இரு உருவங்களையும் சேர்த்து தரித்தவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—
ஓம் நரஸிம்ஹ வபுஷே நம
பாலும் சக்கரையும் போலே மனுஷ்ய ஸிம்ஹ உரு கொண்டு
அப்பொழுதே அவன் வீயத் தோன்றி
சிறுக்கனுக்கு அருளி ஹிரண்யன் மேலே சீறினவன்
திருத் தூணே இவனை ஈன்ற திருத் தாயார்
———–
- ஓம் நாரஸிம்ஹவபுஶேநம:
நரஸ்ய ஸிம்ஹஸ்ய சாவயவா யஸ்மின் லக்ஷ்யந்தே தத்வபுர்யஸ்ய ஸ நாரஸிம்ஹவபு:|
நரஸ்ய மனிதர் ஸிம்ஹஸ்ய சிங்கம் சாவயவா ஆகிய இந்த இரண்டின் உடலுறுப்புகளும் யஸ்மின் எங்கு லக்ஷ்யந்தே சேர்ந்து உள்ளதோ தத்வபுர்யஸ்ய ஸ அத்தகைய உடல் உள்ளவர் நாரஸிம்ஹவபு: ‘நாரஸிம்ஹவபு:’ என்று அழைக்கப்படுகிறார் |
(நரசிம்ம அவதாரத்தின் பொழுது) அவருடைய உடலில் மனிதர் மற்றும் சிங்கத்தின் உறுப்புகள் ஒன்று சேர்ந்து இருப்பதால் பகவான் ‘நாரஸிம்ஹவபு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
—————–
நரசிம்மவபு – மனிதனும் சிங்கமும் இணைந்திருப்பவர்.
வபு என்றால் உடல், நரசிம்மம் என்றால் மனிதனும் சிங்கமும் சேர்ந்தது; எனவே நரசிம்மவபு மனிதனையும் சிங்கத்தையும் இணைக்கும் உடலை உடையவர். இது பகவானின் நரசிம்ம அவதாரத்தைக் குறிக்கிறது.
—————
22-ஸ்ரீ மான் –
அழகியவன் –
அத : பரஸ்பர துர்கட|பூர்வ விக்ருத ரூப பரிக்ரஹாதபி-
ஶ்ரீ மாந்,
ஸௌந்தர்ய லாவண்ய அதி பிரதி மநோ ஹர திவ்ய ரூப: ।
தத்ர ந்ருஸிம்ஹ த்வயோ : ஸுகடிதத்வம் பஶ்யதாம் ஸூத்தி மத் அந்யந் ந்ரு மாத்ரம்
ஸிம்ஹ மாத்ரம் வா த்ருஷ்ட்வா ஜுகுப்ஸா ஜாயேதாபி, தாத் ரும்ரா பரிக்ரஹ மாத்ரே ணைவ ஹி ஜகத் த்ராதாம் ।
* தம்ஷ்ட்ராகரால ஸுர பீதி நாஸநம் க்ருத்வா வபுர் திவ்ய ந்ருஸிம்ஹ ரூபிணா । த்ராதம் ஜகத்யேந, இதி -(ஸ்ரீ விஷ்ணு தர்மம் )॥ 22 ॥
இமையோர் பெருமான் அரி பொங்கிக் காட்டும் அழகு -நான் திரு -21
அழகியான் தானே அரி யுருவன் தானே -நான் -திரு 22-அரியும் மானிடமும் உடனாயத் தோன்றி -கலியன்
180-222 மேலும் இதே திரு நாமம் வரும் –
180-திவ்ய ஆபரண செல்வம்
உள்ளே வெண் பல் இலகு சுடர் இலகு விலகு மகர குண்டலத்தன் கொண்டல் வண்ணன்
சுடர் முடியன் நான்கு தோளன் குனி சாரங்கன் ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவனே -8-8-1-
222-தாமரைக் கண்ணன் -மத்ஸ்ய கமல லோஷண
மீனாய் ஆமையாய் –கார் வண்ணனே –கமலத் தடம் கண்ணன் -5-1-11
மீனாகி மானிடமாம் தேவாதி தேவ பெருமான் என் தீர்த்தன் -2-8-5-
ஒன்றுக்கு ஓன்று முரண்பட்ட வடிவங்களைச் சேர்த்துக் கொண்ட போதும் அழகு மிக்க மநோ ஹரமான வடிவை யுடையவர்
அப்போது கலந்த அழகைக் கண்டவர்கள் பிறகு மனிதனை மட்டுமோ சிங்கத்தை மட்டுமோ
கண்டால் அருவெறுப்பு யுண்டாகும் படி அழகன் –
அப்படிப்பட்ட ரூபத்தைக் கொண்டதால் மட்டுமே யன்றோ உலகம் காக்கப்பட்டது -ஸ்ரீ பராசர பட்டர் —
ஸ்ரீ மான் –பரஸ்பர -துர்கடா பூர்வ விக்ருத ரூப பரிக்ருத சௌந்தர்ய லாவண்ய அதிபி மநோஹர திவ்ய ரூப
தம்ஷ்ட்ரா கராளம் ஸூர பீதி நாசநம் க்ருத்வா வபூஸ் திவ்ய நரஸிம்ம ரூபிணா த்ராதம் ஜகத் யேந — ஸ்ரீ விஷ்ணு தர்மம் -43-21-
திருமார்பில் திரு மகள் நித்யமாக பொருந்தி இருக்கப் பெற்றவர் —ஸ்ரீ சங்கரர்—
சாந்த ரூபனான வாயுவினிடம் பற்றுள்ளவர் -ஸ்ரீ லஷ்மி தேவிக்கு பதி –ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—
ஓம் ஸ்ரீ மான் நம
அழகியான்–ஸுவ்ந்தர்ய லாவண்ய சாகரம் –
திருமகள் கேள்வன் -ஸ்ரீ யபதி
————-
- ஓம் ஸ்ரீமதே நம:
யஸ்ய வக்ஷஸி நித்யம் வஸதி ஸ்ரீ: ஸ ஸ்ரீமான் |யஸ்ய எவருடைய வக்ஷஸி திருமார்பில் நித்யம் எப்பொழுதும் வஸதி வாழ்கின்றாளோ ஸ்ரீ: திருமகள் ஸ அவர் ஸ்ரீமான் ‘ஸ்ரீமான்’ என்று அழைக்கப்படுகிறார் |
பகவானுடைய திருமார்பில் திருமகள் எப்பொழுதும் நிரந்தரமாக வாழ்வதால் அவர் ‘ஸ்ரீமான்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
மற்றவர்களுக்கு ‘ஸ்ரீமான்’ என்பது ஒரு அடைமொழி மட்டுமே. பகவானுக்குத்தான் அது பொருத்தமான திருநாமமாகும். திருவண்பரிசாரம் என்னும் திவ்யதேசத்தில் பகவான், இந்தத் திருநாமத்தின் தூய தமிழாக்கமான ‘திருவாழ்மார்பர்’ என்ற பெயருடனேயே சேவை சாதிக்கிறார்.
—————
ஸ்ரீமான் – யாருடைய மார்பில் லட்சுமி தேவி வசிக்கிறார்
ஸ்ரீ லக்ஷ்மி தேவி மற்றும் அவள் பகவானின் மார்பில் நித்தியமாக வாசம் செய்கிறாள். ஸ்ரீ என்றால் அழகு என்று பொருள் மற்றும் ஸ்ரீ பராசர பட்டர் ஸ்ரீமானை “மிக அழகான மற்றும் வசீகரமான ஆளுமை” என்று விளக்குகிறார்.
——————
23-கேசவ –
ஏவம் வித ஐஶ்வர்ய ஸௌந்ர்ய ஐகாந்த லக்ஷணாந் யுப லக்ஷயதி
கேஸவ:,
ப்ரஸஸ்த ஸ்நிக்த நீல குடில குந்தல: ।
*கேஸாத்வோ அந்ய தரஸ்யாம், இதி ப்ரஸம்ஸாயாம் வ: ॥ 23 ॥
அழகிய கேசாபாசங்களை உடையவன் -இங்கு திரு மேனியின் அழகிலே நோக்கு
கொள்கின்ற கோளிருளைச் சுகிர்ந்திட்ட கொழும் சுருளின் உள் கொண்ட நீல நன்னூல் தழை கொல் அன்று மாயன் குழல் -7-7-9-
பிரமனுக்கும் ஈசனுக்கும் நிர்வாஹகன்
கேசி -அசுரனைக் கொன்றவன்
கேசவ -654- க்லேச நாசன -க்லேசங்களைப் போக்கும் கண்ணன்
ஸ்வரூப குணங்கள் சொல்லி திரு மேனி குணங்களைச் சொல்லும் பிரகரணம்
பார்த்தவன் -அழகன் -ஐஸ்வர்யமும் சவுந்தர்யமும் லாவண்யமும் சொல்லி –
இங்கு ஸுந்தர்யம் -அவயவ சோபை குழல் அழகன்-கேஸ பாஸம் -தனித் தனியாகவும் கூட்டமாகவும் குழல் அழகு
திருவடி பெருமாள் குழல் வர்ணனையில் பத்து விசேஷணங்கள் அருளிச் செய்கிறார்
செல்ல உணர்ந்தவர் செல்வன் தன் சீர் அன்றிக் கற்பரோ?
எல்லை இலாத பெருந் தவத்தால் பல செய்மிறை
அல்லல் அமரரைச் செய்யும் அரணியன் ஆகத்தை
மல்லல் அரி யுரு வாய்ச் செய்த மாயம் அறிந்துமே.-7-5-8-
கறுத்துச் சுருண்டு சேர்ந்து இணங்கி இருக்கும் கூந்தலை யுடையவர் –
இப்படிப்பட்ட அழகுக்கு யுரிய தனிப்பட்ட அடையாளம் -ஸ்ரீ பராசர பட்டர் –
பிரசஸ்த மிக நீள குடில குந்தள –
க-எனப்படும் பிரம்மா-அ எனப்படும் விஷ்ணு -ஈசன் எனப்படும் ருத்ரன் மூவரையும் தம் வசத்தில் யுடையவர் –
அழகிய கேசத்தை யுடையவர் -கேசியை வதம் செய்தவர் -ஸ்ரீ சங்கரர்—
பிரமன் ருத்ரன் ஆகியோரை படைத்தல் அழித்தல் செய்யும் படி தூண்டுபவர் –
அழகிய கேசங்களை யுடையவர் -கேசியை அழித்தவர் –
அம்சுமானாக இருப்பவர்–ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—
ஓம் கேசவா நம
ப்ரசஸ்த கேச பாசன் -கேசி ஹந்தா
—————-
- ஓம் கேஶவாய நம:
அபிரூபா: கேஶா யஸ்ய ஸ கேஶவ: |
அபிரூபா: மிகவும் அழகியதான கேஶா தலைமுடியுடன் யஸ்ய இருப்பதால் ஸ அவர் கேஶவ: ‘கேசவன்’ என்று அழைக்கப்படுகிறார்|
மிகவும் அழகிய தலைமுடியுடன் இருப்பதால் பகவான் ‘கேசவன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘கேஶாத்வோSன்யதரஸ்யாம்’ (பாணினி ஸூத்ரம் 5.2.109)
பாணினி ஸூத்திரத்தில் கூறப்பட்டுள்ளது:-“கேச” என்ற சொல்லின் பின்னே வரும் “வ:” என்ற விகுதி, புகழ்ச்சியைக் குறிக்கிறது.
யத்வா கஸ்ச அஸ்ச ஈஶஸ்ச த்ரிமூர்த்தய: யத்வஶேன வர்தந்தே ஸ கேஶவ: |
யத்வா அல்லது கஸ்ச ‘க’ என்று அழைக்கப்படும் ப்ரஹ்மா அஸ்ச ‘அ’ என்று அழைக்கப்படும் விஶ்ணு ஈஶஸ்ச ‘ஈசன்’ என்று அழைக்கப்படும் சிவன் த்ரிமூர்த்தய: ஆகிய இந்த மும்மூர்த்திகளும் யத்வஶேன எவருடைய ஆணைக்குட்பட்டு வர்தந்தே இருக்கின்றனரோ ஸ அவர் கேஶவ: கேசவன் என்று அழைக்கப்படுகிறார்.
ப்ரஹ்மா, விஶ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் எவருடைய ஆணைக்குட்பட்டு இருக்கின்றனரோ அந்த பரம்பொருள் ‘கேசவன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
- அத்வைதத்தின்படி மும்மூர்த்திகளும் ஞானமே வடிவான பரப்ரஹ்மத்தின் உருவங்களாகும்.
- க+அ+ஈஶ+வ (வஷேன, வர்தந்தே) = கேஶவ:
கேஶிவதாத்வா ‘கேசி’ என்ற அசுரனைக் கொன்றபடியால் கேஶவ: பகவான் கேசவன் என்று அழைக்கப்படுகிறார்.
‘கேசி’ என்ற அசுரனைக் கொன்றபடியால் பகவான் கேசவன் என்று அழைக்கப்படுகிறார்.
கேசி என்பவன் பகவான் கிருஷ்ணரைக் கொல்வதற்காக கம்சனால் ஏவப்பட்ட ஒரு அசுரன். இவன், குதிரை வடிவில் வந்து பிருந்தாவனத்தில் மக்களை துன்புறுத்த, பகவான் தனது கைகளை அவன் வாயினுள் நுழைத்து, கழுத்தை நெரித்துக் கொன்றார்.
‘யஸ்மாத்வயைஶ துஶ்டாத்மா ஹத: கேசீ ஜனார்தன |
தஸ்மாத்கேஶவநாம்னா த்வம் லோகே க்யாதோ பவிஶ்யஸி ||’ (ஸ்ரீ விஶ்ணு புராணம் 5.16.23)
இதி விஶ்ணுபுராணே ஸ்ரீக்ருஶ்ணம் ப்ரதி நாரதவசனம் |
ஸ்ரீ விஶ்ணுபுராணத்தில் நாரத முனிவர், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் கூறுகிறார்:
ஒ ஜனார்தனா!!! தங்களுடைய கரங்களால் இந்த தீய எண்ணம் கொண்ட கேசி கொல்லப்பட்டான். எனவே, நீங்கள் உலகில் கேசவன் என்ற திருநாமத்தால் புகழ்பெற்று விளங்குவீர்கள்.
ப்ருஶோதராதித்வாச்சப்தசாதுத்வகல்பனா | (பாணினி சூத்திரம் 6.3.109)
பாணினி சூத்திரத்தில் கூறப்பட்டுள்ளது:
ப்ருஷோதரா வர்க்கத்தை சேர்ந்த சொற்கள் இலக்கணப் புணர்ச்சி விதிகளின்படி பொருந்தாது இருப்பினும், முனிவர்களும், பெரியோர்களும் இந்த பெயரை உச்சரித்திருந்தால் அதை (இலக்கண விதிகளின்படி ஆராயாமல்) அவ்வாறே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
புணர்ச்சி விதிகளின்படி கேசி + வ, கேசவ என்ற சொல்லாக உருவாகாது. எனினும், நாரதர் முதலிய முனிவர்கள் இவ்வாறு கூறியிருப்பதால் இந்த நாமத்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த விதிவிலக்கை மேற்கண்ட பாணினி சூத்திரம் நமக்கு அளிக்கிறது.
——————
கேசவா – திரித்துவத்தை கட்டுப்படுத்துபவர்
கேசவா என்பதற்குப் பல அர்த்தங்கள் உள்ளன:
- “அபிரூபா கேஷா யஸ்ய சஹ் – வசீகரிக்கும் முடியைப் பெற்றவர்”
- கேஷி என்ற அரக்கனைக் கொன்றவன். இது விஷ்ணு புராணத்தில் (5.16.23) வருகிறது. நாரதர் கிருஷ்ணரிடம் கூறுகிறார், நீ துரோகியான கேசியைக் கொன்றதால், நீ உலகில் ‘கேசவா’ என்ற பெயரால் அறியப்படுவாய்.
- திரிமூர்த்திகளைக் கட்டுப்படுத்துபவர். இதை ஸ்ரீ ஆதி சங்கரர் இவ்வாறு விளக்குகிறார்: “கச்ச அச்ச ஈஷஸ்ச த்ரிமூர்த்தயாஹ் கேஷா, யத்வஷேன வர்தந்தே ச கேசவா”.
‘க’ என்றால் பிரம்மா, ‘அ’ என்றால் விஷ்ணு, ‘இசா’ என்றால் ருத்ரன்; எனவே ‘கேசா’ என்பது திரிமூர்த்தியின் (மூன்று உருவங்கள்) அவரது கட்டுப்பாட்டில் இருக்கும் அதாவது ‘வாச’ என்பதைக் குறிக்கிறது.
எனவே படைப்பாளர், பாதுகாவலர் மற்றும் அழிப்பவர் ஆகிய 3 செயல்பாட்டு நிறுவனங்களைக் கட்டுப்படுத்துபவர் கேசவா.
—————
24-புருஷோத்தம –
ஸா லக்ஷண்ய ப்ரஸக்த்யா (குணங்கள் அடையாளம் லக்ஷண்யம் சொல்லி-இங்கு ஞானம் ஆனந்தம் லக்ஷணம் பேசும் இடத்தில் )
பரமம் வைலக்ஷண்ய மாஹ—புருஷோத்தம : ; புருஷேப்ய உத்க்ருஷ்ட தம : ।
புருஷ ஸப்தேந சேதந வாசிநா -(சைதன்யம் உடையவர்களைக் குறிக்கும் புருஷ பதம் )அசேதய மாநா வ்யக்த
அவ்யக்த ரூபா ப்ரக்ருதிர் வ்யாவர்த்யதே;
உதித் யுத்க்ருஷ்ட வாசிதயா பத்தா: ; ஸாமர்த்ய ப்ராப்தேந தரபா முக்தா:,
தமபா நித்ய முக்தா ]: ஸூரயோ அநந்த வைநதேயாதய: ।
(புருஷ -அசேதன வ்யாவ்ருத்தி வேறு பாடும் -வை லக்ஷண்யமும் சிறந்ததாயும்
உத் –பத்த புருஷ -வ்யாவ்ருத்தி வேறு பாடும் -வை லக்ஷண்யமும் சிறந்ததாயும்
உத்தர -முக்த புருஷ -வ்யாவ்ருத்தி வேறு பாடும் -வை லக்ஷண்யமும் சிறந்ததாயும்
உத்தம நித்யர்களைக் காட்டிலும் வ்யாவ்ருத்தி வேறு பாடும் -வை லக்ஷண்யமும் சிறந்ததாயும் )
இதம் ச தேப்யோ வைலக்ஷண்யம் அவத்ய ப்ரதிபட தயா (குற்றங்களுக்கு எதிர்த்தட்டாயும் )வ்யாபந (மற்றவை வியாப்பியம் )பரணாத் யுபகாரை : ஸ்வாம்யேந ச ஸ்வபாவத ஏவ உத்கர்ஷாத் ।
இதம் ஹி பஹுபிஸ் தாத்பர்ய லிங்கைஸ் : பரமம் குஹ்ய மகீயத ,
* த்வாவிமவ் புருஷௌ லோகே இத்யத்ர(ஸ்ரீ கீதை -15-16-புருஷௌ–பத்தாத்மாவையும் முக்த்தாத்மாவையும் சொன்னபடி ) ।
* பூமிர் ஆபோ அநலோ வாயு:,( ஸ்ரீ கீதை -7-4-)
* யோ மாம் அஜம் அநாதிம் ச,( ஸ்ரீ கீதை -10-3-)
* அவிகாராய ஸூத்தாய (அவிகாராய அசித் விலக்ஷணன் –ஸூத்தாய பக்த விலக்ஷணன் நித்யாய முக்த விலஷணன் பரமாத்மா நித்ய விலக்ஷணன் )
* பர: பராணாம் பரம :,–இத்யாதி பஹிம்த பரம் த்ரஷ்டவ்யம் ।
அத்ராபி போக்த்ரு போக்ய நியத்ருந்ணாம் அத்யந்த பேத ஸ்பஷ்ட: ।
அதோ ப்ர்ஹ்ம பரிணாம பக்ஷஶ்ச ப்ரதி க்ஷிப்த। (நானே சேதன அசேதனமாக உருவானால் நான் உயர்ந்தவன் என்று சொல்ல முடியாதே )
ப்ரஹ்மண: ஸர்வ விகாரஸ்ய ப்ரஹ்ம ஸம்ஸாரஸ்(ப்ரஹ்மதுக்கு பிரமம் வாதம் நிரஸனம் )
யேஶ்வராதிரிக்த முக்தேஶ்வராணாம் ப்ரஹ்மணி ப்ரலயோத் வாதயோஶ் சாப்யுபகமோ ஹி யதோக்த புருதஷாத்த மத்வேந ஸர்வேண வேத ஸித்தாந்தேந ச விருத்யதே ॥ 24 ॥
ஷரன் -சம்சாரி அஷரன்-முக்த நித்யர்
மலர்ந்து எழுந்து அணவி மணிவண்ண உருவின் மால் புருடோத்தமன் -பெரியாழ்வார் -4-7-2-
ஜீவாத்மாக்களைக் காட்டிலும் உயர்ந்தவன் -புருஷர்களுக்குள் என்பது அல்ல
நஷத்ரங்களைக் காட்டிலும் சந்திரனாக நான் -தலைவன் -27 நக்ஷத்ரங்களை மணம் புரிந்த ஏற்றம் போல் இங்கும்
பக்தர் முக்தர் நித்யர் ஆகிய மூவகைப் புருஷர்களிலும் உயர்ந்தவர் -லஷணம் கூறத் தொடங்கி
புருஷ -என்று அசேதனத்தை காட்டிலும் சிறப்பு கூறி
உத் -என்ற சொல்லால் சேதனர்களை விட சிறப்பு கூறி
தர -என்பதால் முக்தர்களைக் காட்டிலும் சிறப்பு சொல்லி
உத்தம -என்று நித்யர்களை விட ஏற்றம் சொல்கிறது
இத்தால் போக்யமான அசேதனமும் -போக்தாவான சேதனனும் -நியமிப்பவன்மான பகவானும்
ஒன்றுக்கு ஓன்று வேறுபட்டமை தெளிவு
இத்தால் ப்ரஹ்மமே வேறுபாடு அடைகின்றது என்ற கொள்கை மறுக்கப் பட்டு
ப்ரஹ்மம் மாறுபாட்டை அடைகின்றது -ப்ரஹ்மம் சம்சாரத்தை அடைகிறது -நாராயணனைக் காட்டிலும் யாதொரு தன்மையும் இல்லாத
மற்ற ஓன்று ப்ரஹ்மம் என்றும் அவ்யக்தமும் அதில் இருந்து விடுபட்ட முக்தரும் ப்ரஹ்மத்தில் லயித்து
அதில் இருந்து யுண்டாகுகிறார்கள் என்று இப்படி எல்லாம் கூறப்படும் கொள்கைகள் அனைத்தும்
இந்த புருஷோத்தமத்வத்தோடும் சகல வேதாந்த சித்தத்தோடும் மறுக்கப் படுகின்றன -ஸ்ரீ பராசர பட்டர் —
த்வா விமவ் புருஷவ் லோகே –ஸ்ரீ கீதை -15-16-
பூமிர் ஆபவ் அநலோ வாயு –ஸ்ரீ கீதை -7-4-
யோமாம் அஜம் அநாதிம் ச –ஸ்ரீ கீதை -10-3-
அவிகாராய ஸூத் தாய
பர பராணம் பரம –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-10-
புருஷர்களுக்குள் உயர்ந்தவர் -ஸ்ரீ சங்கரர்—
புருஷர்களுக்குள் உயர்ந்தவர் -புருஷர்களைக் காட்டிலும் -ஐந்தாம் வேற்றுமையில் -உயர்ந்தவர்–ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—
ஓம் புருஷோத்தம நம
பரம புருஷன் -பக்த முக்த நித்யர்கள் அனைவருக்கும் சர்வேஸ்வரன்
———————————–
- ஓம் புருஶோத்தமாய நம:
புருஶானாம் உத்தம: புருஶோத்தம: |
புருஶானாம் புருஶர்களில் உத்தம: தலைசிறந்தவர் புருஶோத்தம: ‘புருஷோத்தம:’ என்று அழைக்கப்படுகிறார் |
புருஶர்களில் உயர்ந்தவர் என்பதால் பகவான் ‘புருஶோத்தம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இந்த திருநாமத்தில் புருஶ என்ற பெயர்ச்சொல்லும், உத்தம என்ற பெயர்ச்சொல்லும் இணைந்து புருஶோத்தம: என்று உருவாகியுள்ளது. பொதுவாக, ஒரு சமூகத்திலிருந்து ஒன்றை மட்டும் உயர்த்திக் கூறும்பொழுது (புருஶர்களில் உத்தமன்) இவ்வாறு இணைக்கக்கூடாது என்பது பாணினி ஸூத்ரத்தில் உள்ள ஒரு விதியாகும். அந்த விதி இங்கு பொருந்தாது என்று ஆதிசங்கரர் ‘ந நிர்த்தாரணே’ (பாணினி ஸூத்ரம் 2.2.10) என்ற பாணினி ஸூத்திரத்தின் விளக்குகிறார்.
ததா ச இதை விளக்கும் வண்ணம் பகவத் வசனம் ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கூறியுள்ளார்.
யஸ்மாத்க்ஷரமதீதோSஹமக்ஷராதபி சோத்தம: |
அதோSஸ்மி லோகே வேதே ச ப்ரதித: புருஶோத்தம: || (ஸ்ரீமத் பகவத்கீதை 15.18)
ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்:
நான் அழிவு கடந்தோனாதலாலும், அக்ஷர புருஶனைக் (ஜீவாத்மாவைக்) காட்டிலும் சிறந்தோனாதலாலும், உலகத்தாராலும், வேதங்களாலும் புருஷோத்தமனென்று கூறப்படுகிறேன்.
இந்த விளக்கத்தின் தேர்ந்த பொருளாவது: பகவான் புருஶர்களைக் காட்டிலும் உயர்ந்தவர், புருஶர்களில் உத்தமர் என்று கூறுவது பிறப்பாலோ, பண்பாலோ அல்லது செயலாலோ அல்ல. அவரது இயற்கையான வல்லமையாலேயே அவர் புருஶர்களுக்குள் உத்தமாராக இருக்கிறார்.
————————
புருஷோத்தம – எல்லா புருஷர்களிலும் பெரியவர்
இது ‘புருஷானாம் உத்தம’ அல்லது ‘புருஷேஷு உத்தம’ அல்லது ‘புருஷேப்யோ உத்தம’ என்று விளக்கப்படுகிறது. பயன்படுத்தப்படும் வடிவத்தைப் பொறுத்து, இதை ‘புருஷர்களில் (ஜீவாக்கள்) உயர்ந்தவர்’ அல்லது ‘புருஷர்களை விட உயர்ந்தவர்’ என்று விளக்கலாம்.
‘யஸ்மாத் க்ஷரம் அதீதோஹம் அக்ஷராதாபி சோத்தமஹ
அதோஸ்மி லோகே வேதே ச ப்ரதித: புருஷோத்தம:–15-18-
நான் விஷயத்தை விட உயர்ந்தவன் மற்றும் தனிப்பட்ட ஆத்மாவை விட உயர்ந்தவன்; அதனால் உலகத்திலும் வேதங்களிலும் நான் புருஷோத்தமன் என்று அழைக்கப்படுகிறேன்.
—————————
18-யோக –
சாயுஜ்யமாகிய முக்திக்கு வேறோர் உபாயம் வேண்டாதபடி தானே உபாயமாக இருப்பவர் –
முக்திக்கு உபாயமும் முதர்களுக்கு உபேயமும் அவனே -ஸ்ரீ பராசர பட்டர் —
ததி பாண்டத்துக்கும் கூட முக்தி அளித்தானே –சேவிக்க சாமர்த்தியம் இல்லா இடங்களுக்கும் -தானே காட்டக் கண்டு அனுபவிக்கலாம்
-யுஜ்யதே பிராப்யதே –அநேநேதி சாயுஜ்ய -நான்யாபேஷ -சாஷாத் ஹேது இத்யர்த்த
ஐக்ய சிந்தனை யாகிற யோகத்தினால் அடையத் தக்கவர் –ஸ்ரீ சங்கரர்—
யோகிகளால் தம் இதயத்தில் த்யானம் செய்யப்படுபவர் -அனைத்து குணங்களும் சேர்ந்து இருப்பவர் –
பக்தர்களுக்கு உலகைக் கடக்க வழியாக இருப்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—
——————————————————————————————————-
19-யோக விதாம் நேதா
வேறு உபாயம் ஆகிய பக்தி யோகத்தைப் பற்றியவர்களுக்கும் பலன் யுன்டாம்படி நிர்வகிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்
ஞானிகளின் யோக ஷேமங்களை வகுத்து நடத்துபவர் -யோகத்தை விசாரிப்பவர்கள் –
அறிபவர்கள்-அடைபவர்கள் யோக வித்துக்கள் -ஸ்ரீ சங்கரர்—
த்யான யோகம் அறிந்த பக்தர்கள் மோஷ பலத்தை அடையும்படி செய்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்–
———————————————————————————————————
20-பிரதான புருஷேச்வர –
ஜீவர்களைக் கட்டுப் படுத்தும் பிரக்ருதியையும் அதில் கட்டுண்ட ஜீவர்களையும் நடத்துபவர் –
தனது மாயையினால் அபராதம் செய்பவர்களை சம்சாரத்தில் கட்டி வைத்தும் சரணம் அடைந்தவர்களை விடுவித்தும் விளையாடுகிறான்
ஈஸ்வர -வரச் பிரத்யயத்தால் இத் தன்மை இயற்கை என்பதும் -சித் அசித் ஈஸ்வரன் தத்வத்ரய பேதமும் கூறப்படுகிறது
நியமிப்பவன் ஒருவன் -நியமிக்கப்படுபவை இரண்டும் -இயற்கையாக செய்பவன் -ஸ்ரீ பராசர பட்டர் —
பிரதானம் ஆகிய மாயைக்கும் புருஷனாகிய ஜீவனுக்கும் ஈஸ்வரர் –ஸ்ரீ சங்கரர்—
பிரதானமாகிய பிரக்ருதிக்கும் புருஷர்களாகிய ஜீவர்களுக்கும் ஈஸ்வரர்
எல்லாருக்கும் தாரண போஷணங்களைத் தருபவர் -நான்முகனுக்கு ஹயக்ரீவராக இருந்து வேதங்களை அருளுபவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—
———————————————————————————————————
21-நாரசிம்ஹவபு –
பக்தனுடைய பயத்தைப் போக்க அவன் விரும்பிய காலத்திலே திவ்ய நரசிம்ஹ உருவத்தைக் கொண்டவன் –
பக்தர்களின் தடைகளைப் போக்கி அருளுபவன் -ஸ்ரீ பராசர பட்டர் —
மனித சிம்ம லஷணங்களும் ஒரே தேகத்தில் பொருந்தி இருந்தவர் –ஸ்ரீ சங்கரர்—
மனிதன் சிம்கம் இரு உருவங்களையும் சேர்த்து தரித்தவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—
————————————————————————————————————–
22-ஸ்ரீ மான் –
ஒன்றுக்கு ஓன்று முரண்பட்ட வடிவங்களைச் சேர்த்துக் கொண்ட போதும் அழகு மிக்க மநோஹரமான வடிவை யுடையவர்
அப்போது கலந்த அழகைக் கண்டவர்கள் பிறகு மனிதனை மட்டுமோ சிங்கத்தை மட்டுமோ கண்டால் அருவெறுப்பு யுண்டாகும் படி அழகன் –
அப்படிப்பட்ட ரூபத்தைக் கொண்டதால் மட்டுமே யன்றோ உலகம் காக்கப்பட்டது -ஸ்ரீ பராசர பட்டர் —
ஸ்ரீ மான் –பரஸ்பர -துர்கடா பூர்வ விக்ருத ரூப பரிக்ருத சௌந்தர்ய லாவண்ய அதிபி மநோஹர திவ்ய ரூப
திருமார்பில் திரு மகள் நித்யமாக பொருந்தி இருக்கப் பெற்றவர் —ஸ்ரீ சங்கரர்—
சாந்த ரூபனான வாயுவினிடம் பற்றுள்ளவர் -ஸ்ரீ லஷ்மி தேவிக்கு பதி –ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—
————————————————————————————————————
23-கேசவ –
கறுத்துச் சுருண்டு சேர்ந்து இணங்கி இருக்கும் கூந்தலை யுடையவர் –
இப்படிப்பட்ட அழகுக்கு யுரிய தனிப்பட்ட அடையாளம் -ஸ்ரீ பராசர பட்டர் –
பிரசஸ்த மிக நீள குடில குந்தள –
க-எனப்படும் பிரம்மா-அ எனப்படும் விஷ்ணு -ஈசன் எனப்படும் ருத்ரன் மூவரையும் தம் வசத்தில் யுடையவர் –
அழகிய கேசத்தை யுடையவர் -கேசியை வதம் செய்தவர் -ஸ்ரீ சங்கரர்—
பிரமன் ருத்ரன் ஆகியோரை படைத்தல் அழித்தல் செய்யும் படி தூண்டுபவர் -அழகிய கேசங்களை யுடையவர் -கேசியை அழித்தவர் –
அம்சுமானாக இருப்பவர்–ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—
———————————————————————————————————–
24- புருஷோத்தம –
பக்தர் முக்தர் நித்யர் ஆகிய மூவகைப் புருஷர்களிலும் உயர்ந்தவர் -லஷணம் கூறத் தொடங்கி
புருஷ -என்று அசேதனத்தை காட்டிலும் சிறப்பு கூறி
உத் -என்ற சொல்லால் சேதனர்களை விட சிறப்பு கூறி
தர -என்பதால் முக்தர்களைக் காட்டிலும் சிறப்பு சொல்லி
உத்தம -என்று நித்யர்களை விட ஏற்றம் சொல்கிறது
இத்தால் போக்யமான அசேதனமும் -போக்தாவான அசேதனனும் -நியமிப்பவன்மான பகவானும் ஒன்றுக்கு ஓன்று வேருபட்டமை தெளிவு
இத்தால் ப்ரஹ்மமே வேறுபாடு அடைகின்றது என்ற கொள்கை மறுக்கப் பட்டு
ப்ரஹ்மம் மாறுபாட்டை அடைகின்றது -ப்ரஹ்மம் சம்சாரத்தை அடைகிறது -நாராயணனைக் காட்டிலும் யாதொரு தன்மையும் இல்லாத
மற்ற ஓன்று ப்ரஹ்மம் என்றும் அவ்யக்தமும் அதில் இருந்து விடுபட்ட முக்தரும் ப்ரஹ்மத்தில் லயித்து
அதில் இருந்து யுண்டாகு கிறார்கள் என்று இப்படி எல்லாம் கூறப்படும் கொள்கைகள் அனைத்தும்
இந்த புருஷோத்தமத்வத்தோடும் சகல வேதாந்த சித்தத்தோடும் மறுக்கப் படுகின்றன -ஸ்ரீ பராசர பட்டர் —
புருஷர்களுக்குள் உயர்ந்தவர் -ஸ்ரீ சங்கரர்—
புருஷர்களுக்குள் உயர்ந்தவர் -புருஷர்களைக் காட்டிலும் -ஐந்தாம் வேற்றுமையில் -உயர்ந்தவர்–ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply