ஸர்வ: ஶர்வ: ஶிவ: ஸ்தாணுர் பூதாதிர் நிதிரவ்யய: |
ஸம்பவோ பாவனோ பர்தா ப்ரபவ: ப்ரபு ரீஶ்வர: ||
இந்த நான்காவது ஸ்லோகத்தில் மொத்தம் 12 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,
- ஸர்வ: 26.ஶர்வ: 27. ஶிவ: 28. ஸ்தாணு: 29. பூதாதி: 30. நிதி: அவ்யய: |
- ஸம்பவ: 32.பாவன: 33. பர்தா 34. ப்ரபவ: 35. ப்ரபு: 36. ஈஶ்வர: ||
அவர் பிரபஞ்சத்திற்கும், அதன் வாழ்வாதாரத்திற்கும், அழிவிற்கும் இறுதிக் காரணம், மேலும் அவர் தர்மத்தை மீண்டும் நிலைநிறுத்துவதற்காக மீண்டும் மீண்டும் வெளிப்படுகிறார். அவர் தூய்மையானவர், தனது பக்தர்களிடம் எப்போதும் கருணை காட்டுபவர், பிரபஞ்சத்தை ஆதரிப்பவர் மற்றும் மிகவும் சக்தி வாய்ந்தவர், எவருடைய உதவியும் இல்லாமல் தான் விரும்பியதைச் செய்யக் கூடியவர்.
ஸர்வ: — ஒவ்வொன்றும் அவரே
சர்வ: — பாபம் அனைத்தையும் அழிப்பவர்
சிவ: — மங்களம் அனைத்தின் உறைவிடம்
ஸ்தாணு: — நிலையாக நமக்கு மங்களத்தை அருள்பவர்
பூதாதி: — பூதங்கள் அனைத்தின் முதல்
நிதிரவ்யய: — அழியாப் பெருநிதியம்
ஸம்பவ: — அவதாரங்கள் எடுத்து அருள்பவர்
பாவன: — சாதுக்களைக் காப்பவர்
பர்த்தா — அனைத்தையும் தாங்கி வளர்ப்பவர்
ப்ரபவ: — ஒளிமிகும் பிறப்பு உடையவர்
ப்ரபு: — மனிதராய்ப் பிறந்தும் முக்தி தரும் பிரபு அவர்
ஈச்வர: — அவதாரத்தால் மிகுந்து விளங்கும் ஈச்வரர் அவரே
அனைத்துப் பொருட்களின் உடல் வடிவமாக இருப்பவன் {ஸர்வன்},
அனைத்தையும் அழிப்பவன் {சர்வன்},
சத்வம், ரஜஸ் மற்றும் தமோ குணங்கள் மூன்றையும் கடந்திருப்பவன் {சிவன்},
அசைவற்றவன் {ஸ்தாணு},
அனைத்தின் தொடக்கமாக இருப்பவன் {பூதாதி},
அண்ட அழிவின்போது அனைத்தும் மூழ்கும் கொள்ளிடமாக இருப்பவன் {நிதிரவ்யயன்},
மாற்றமில்லாதவன் {ஸம்பவன்},
விரும்பியது போலப் பிறப்பவன் {பாவநன்},
உயிரினங்கள் அனைத்தின் செயல்களையும் (மகிழ்ச்சி அல்லது துன்பத்தின் வடிவில்)
கனியச் செய்பவன் {பர்த்தா},
அனைத்துப் பொருட்களையும் தாங்கிப் பிடிப்பவன் {ப்ரபவன்},
அடிப்படை பூதங்கள் அனைத்தும் உண்டாகும் மூலமாக இருப்பவன், பலமிக்கவன் {ப்ரபு/பிரபு},
அனைத்தின் மீதும் கட்டற்ற தலைமையைக் கொண்டவன் {ஈஸ்வரன்};(17)
—
அனைத்தும் தானே –ஆனால் அவற்றிலும் உயர்ந்தவன் –
25-சர்வ -அனைத்துப் பொருள்களையும் தன் உடலாகக் கொண்டு அவற்றை நடத்துபவர் –
26-சர்வ -தன் உடலாக இருக்கும் அனைத்தின் தீமைகளையும் விலக்குபவர்-
27-ஸிவ -மங்களமாக இருப்பவர் –
28-ஸ்தாணு -அடியவர்களுக்கு நிலை நின்ற பயனைக் கொடுப்பதில் ஸ்திரமானவர் –
29-பூதாதி -அனைத்து பிராணிகளாலும் இறுதியான பயனாக அடையப் படுபவர் –
30-நிதிரவ்யய–எத்தனை பயன்படுத்தினாலும் அழியாத செல்வம் –
31-சம்பவ -புதையல் போலே மறைந்து இருந்து சரியான நேரத்தில் அடியார்களுக்காக அவதரிப்பவர் –
32-பாவன -அவதரிக்கும் போது அடியார்கள் துன்பங்களை நீக்கிக் காப்பவர் –
33-பர்த்தா -தன்னையே அழித்து தாங்குபவர்
34-பிரபவ -அவனை நினைந்தாலே பாபங்களைப் போக்கும் குற்றமற்ற சிறந்த பிறப்பை உடையவர் –
35-ப்ரபு -மனிதனான எளிய பிறப்பிலும் சிந்தயந்தி சிசூபாலன் போன்றோருக்கு முக்தி கொடுத்த மேன்மை உடையவர்
36-ஈஸ்வர -எளியவராக பிறந்த போதும் அனைவரையும் ஆள்பவர் –
————-
25-சர்வ –எல்லாமும் எல்லாரும் அவனே
கரந்து எங்கும் பரந்து உளன் -1-1-10-
தன்னில் வேறுபட்டவன் அல்லயே -யாரையும் விட்டுக் கொடுக்காமல் -ஆத்மா சரீரம் ரக்ஷணம் போல் சர்வரையும் ரக்ஷித்து அருளுகிறான்
ஏவம் ஸர்வ நிர் வ்யபேஷோ அப்யநுபேக்ஷமாண:
ஸர்வம் ஸ்வரூப ஸ்தித்யா திபி:
ஸ்வ நிர்வாஹ்ய தயா ஸரீரமிவாத் மாநுஸம்தத்தே; அத :
ஸர்வ: ।
ஸரதே:
*இண்ஶீப்யாம் வந்
* ஸர்வ நிக்ருஷ்வ, இத்யாதிநா ஸரத்ய வயவாநித் யர்தே வந் ப்ரத்யய: ।
ஸ ரதி: கத்யர் தத்வாத் அத்ர புத்யர்த : ।
* அஸ தஶ்ச ஸதஶ்ஸைவ ஸர்வஸ்ய ப்ரபவாப்யய: ।(உத்பத்தியும் வி நாசமும் இவனால் )
ஸர்வஸ்ய ச ஸதா ஜ்ஞாநாத் (புத்யர்த)ஸர்வ மேநம் ப்ரசக்ஷதே–மஹா பாரதம் ॥ இதி நிர்வசநாத் ।
ஈத்ருஶீ வ்யாப்திரேவ ஸர்வ ஸாமாநாதி கரண்ய நிபந்தந முக்தம்
* யேந ஸர்வமிதம் ப்ராேதம், இத்யாரப்ய
* ஸ வை ஸர்வமிதம், இதி ஶ்ருதே: ;
* ச வை ஸர்வம் ஸமாப்நோஷி ததோ அஸி ஸர்வ:(ஸ்ரீ கீதை11-40)’ இதி ச ॥ 25 ॥
சராசரங்களையும் உடலாக நினைத்து -ஆத்மாகவே வியாபித்து -அவற்றைத் தாமாகவே நினைத்து நடத்துபவர் –
நிர்ஹேதுகமாக -அபிமானித்து இருப்பவன் -ஸ்ரீ பராசர பட்டர் —
சர்வ -சரீரம் தானே சேதன அசேதனங்கள் -அவனுக்கு –
ஸ்வரூப ஸ்தித்யாதி பிஹி ஸ்வ நிர்வாஹதய சரீரிவ ஆத்மாநுசந்ததே அதக
அசதச்ச சதச்சைவ ஸர்வஸ்ய பிரபவாப்யய ஸர்வஸ்ய ச சதா ஞானாத் சர்வம் ஏனம் ப்ரசக்ஷதே –மஹா பாரதம்
தேந சர்வம் இதம் க்ரோதம் –தைத்ரியம்
ச வை சர்வம் இதம் சர்வம் ஸமாப்நோஷி ததோ அஸி சர்வ –ஸ்ரீ கீதை -11-40-
அனைத்து உத்பத்தி நாசங்களுக்கும் காரணமே இருப்பதாலும் -எல்லாவற்றையும் எப்பொழுதும் அறிவதானாலும்
எல்லாமுமாய் இருப்பவன் -ஸ்ரீ சங்கரர்—
வேதத்தில் அனைத்து சொற்களாலும் அறியப்படுபவர் -எங்கும் வியாபித்திருப்பவர் -எல்லாவற்றையும் அடைந்து –
எல்லோரையும் படைப்பவர்–ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—
ஓம் சர்வ நம
ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்ஹாரம் அனைத்துக்கும் த்ரிவித காரணமும் இவனே
சர்வ ஞ்ஞன் சர்வ வித்
——————–
- ஓம் ஸர்வஸ்மை நம:
அஸதஸ்ச ஸதஸ்சைவ ஸர்வஸ்ய ப்ரபவாப்யயாத் |
ஸர்வஸ்ய ஸர்வதா ஞானாத் ஸர்வமேன ப்ரசக்ஷதே || (மஹா பாரதம் உத்தியோக பர்வம் 7.11)
மஹா பாரதம் உத்யோக பர்வத்தில் பகவான் வியாசர் கூறுகிறார்:
அல்லதும், உள்ளதும் ஆகிய அனைத்தின் பிறப்பிடமாகவும், அவை நிலை பெற்றிருக்கும் இடமாகவும், அழியும் காலத்தில் சென்றும் லயமடையும் இடமாக இருப்பதாலும், அனைத்தையும் (அனைவரையும்) அனைத்து காலங்களிலும் உள்ளபடி அறிவதாலும் அவரை ‘ஸர்வ’ என்று அழைக்கின்றனர்.
இதி இந்த பகவத் வ்யாஸ வசனாத் வ்யாஸ பகவானின் கூற்றின்படி ஸர்வ: பகவான் ‘ஸர்வ’ என்று அழைக்கப் படுகிறார் |
மஹா பாரதத்தில் உள்ள இந்த வ்யாஸ பகவானின் கூற்றின் படி, அனைத்தின் பிறப்பிடமாகவும், அனைத்தையும் அறிவதாலும், பகவான் ‘ஸர்வ’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.
———
ஸர்வா – அவர் சர்வ ஞானி
சர்வா என்றால் அனைத்தும் அல்லது அனைத்தும். அவர் எங்கும் நிறைந்தவர், எல்லாவற்றுக்கும் காரணமானவர். ரத்தினங்களையும் முத்துக்களையும் ஒரு கழுத்தில் இணைக்கும் சரம் போல, விஷ்ணு அனைத்து ஜீவாத்மாக்களையும் ஒரு கழுத்தில் உள்ள சரம் போல வைத்திருக்கிறார்.
மகாபாரதத்தில் “அசதச்ச சதச்சைவ ஸர்வஸ்ய ப்ரபாவாப்யாயாத் ஸர்வஸ்ய ஸர்வதா ஞானாத் ஸர்வமேனாம் பிரசக்ஷதே – அவனே எல்லாவற்றின் தோற்றமும் முடிவும். அவர் எல்லா விஷயங்களையும் எல்லா நேரங்களிலும் அறிந்திருக்கிறார். எனவே அவர் சர்வா என்று அழைக்கப்படுகிறார்.
அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ மத்தஹ் ஸர்வம் ப்ரவர்ததே
இதி மத்வா பஜந்தே மாம் புத பவ-ஸமன்விதா–10-8-
நான் எல்லா படைப்புகளுக்கும் ஆதாரமாக இருக்கிறேன், எல்லாமே என்னிடமிருந்து வெளிப்படுகிறது. இதைப் பூரணமாக அறிந்த ஞானிகள், என்னுடைய பக்தித் தொண்டில் ஈடுபட்டு, முழு மனதுடன் என்னை வணங்குகிறார்கள்.
———
26-சர்வ –
ஸ்வ ஸரீர பூதாநாம் அ ஸூபமபி ஶ்ருணாதீதி -ஸர்வ: பூர்வவத் வந் ॥26॥
அழிப்பவன்-சர்வ சிவ ஸ்தாணு -இவை எல்லாமும் விஷ்ணோர் நாம சஹஸ்ராணி –கௌணாநி –
ச ப்ரஹ்மா சசிவ சேந்தர-
அசுபத்தை நீக்கி சுபத்தை -மங்களத்தை தருமவன் –
வைகுந்தா மணி வண்ணனே செய்குந்தா வரும் தீமைகள் உன்னடியார்க்குத் தீர்த்து -2-6-1-
தமது சரீரங்களாக உள்ளவற்றின் விரோதிகளை சிதறச் செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
திருக் கண்டியூர் -அரன் சாபம் தீர்த்து –
ஸாஷாத் பர திரு நாமம் பட்டர் –சிவன் குற்றமும் போக்குபவர் இவரே
சங்கரர் -அவனே அவனும் அவனும் அவனும் அந்தராத்மா -ஆத்மா அளவில் பர்யவசிக்கும்
சம்ஹார காலத்தில் எல்லா பிராணிகளையும் அழிப்பவர் -அழிப்பிப்பவர்-ஸ்ரீ சங்கரர்—
அனைவரையும் -அயோக்யருக்கு சுகம் கிட்டாமல் செய்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—
ஓம் சர்வ நம
சரீர மாக உள்ள ஸமஸ்த த்ரிவித சேதன அசேதனங்களின் பிரதிபந்தகங்களை போக்கி அருளுபவர்
எனது உடம்பின் அழுக்கை நானே போக்கிக் கொள்வேன் -அனைவரும் அவனுக்கு சரீர பூதர்
——————–
- ஓம் ஶர்வாய நம:
ஶ்ருணாதி ஸம்ஹார ஸமயே ஸம்ஹரதி ஸகலா: ப்ரஜா: இதி ஶர்வ:
ஶ்ருணாதி ‘ஶ்ருணாதி’ என்றால் ஸம்ஹார ஸமயே பிரளய (அழிக்கும்) காலத்தில் ஸம்ஹரதி கொல்வதால் ஸகலா: ப்ரஜா: அனைத்து உயிர்களையும் இதி ‘ஶர்வ:’ பகவான் ‘ஶர்வ:’ என்று அழைக்கப் படுகிறார்.
பிரளய (அழிக்கும்) காலத்தில் அனைத்து உயிர்களையும் கொல்வதால் பகவான் ‘ஶர்வ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.
—————
ஷர்வா – அவர் அழிப்பவர்
எல்லா உயிர்களையும் உரிய நேரத்தில் அழிப்பவர். ஸ்ரீ ஆதிசங்கரர் கூறுகிறார் ” ஷ்ருணாதி சம்ஹாரஸமயே சம்ஹாரதி ஸம்ஹாரயதி ஸகலாஹ் ப்ரஜா இதி – அழிவுக்கான நேரம் வரும்போது அவர் எல்லா உயிரினங்களையும் தன்னிடம் திரும்பப் பெறுகிறார்”.
“சர்வ பூதானி கவுந்தேய ப்ரகிருதிம் யாந்தி மாமிகாம்,
கல்பக்ஷயே புனஸ்தானி கல்பாதௌ விஸ்ரிஜாம்யஹம்”–9-7-
அனைத்து உயிரினங்களும், அர்ஜுனா, படைப்பின் இறுதிச் சுழற்சியில் என் பிரக்ருதிக்குச் செல்கின்றன. மீண்டும், (அடுத்த) சுழற்சியின் தொடக்கத்தில், நான் அவற்றை உருவாக்குகிறேன்.
ஸ்ரீ பராசர பட்டரின் வியாக்யானம், உடலால் உண்டாகும் தீமைகளை நீக்குவதால், இறைவன் ஷர்வா என்று அழைக்கப்படுகிறார் என்று கூறுகிறது (ஸ்வ ஷரீர பூதாநாம் அசுபமபி ஶ்ரீணாதி இதி ஷர்வா). பகவான் தனது பக்தர்களின் அனைத்து பாவங்களையும் அழிப்பதால் ஷர்வா என்று அழைக்கப்படுகிறார் என்பது இதன் பொருள்.
———
27-சிவ-
மங்களங்களை அளிப்பவன்-(இஷ்டப் பிராப்தி இது கீழ் அநிஷ்ட நிவ்ருத்தி )
ஸூபாவஹஶ் ச ஶிவ:, ஶீங: ஸூபார்தத்வாத் ।
* ஸர்வ நிக்ருஷ் வரிப்வ லப்வ ஶிவ, இத்யாதிநா வந்ப்ரத்யய:, ஹரஸ்வத்வம், குண அபாவஶ்ச நிபாத்யதே । யதா
* ஸாஶ்வதம் ஶிவம் அச்யுதம்,
* ஸ்ம்ருதே ஸகல கல்யாண பாஜநம், (நினைத்தாலே மங்களகரமாக இருக்கும் )
* மங்கலம் பகவாந் விஷ்ணு:
*மங்கலாயதநம் ஹரி:
* மங்கலாநாம் ச மங்கலம்
* மங்கல்யம் மங்கலம் விஷ்ணும் இத்யாதிநா(மங்களமாகவும் மங்கள காரியங்களுக்கு விஷயமாகவும் இவனே )॥ 27 ॥
ஞாலத்து உயிர்க்கு எல்லாம் அருள் செய்யும் -3-6-11
607–சிவ -மங்கள பிரதன் மீண்டும் வரும் -சரீர சம்பந்தம் போக்கி –
அருளொடு பெரு நிலம் அளிக்கும் நாரணன் -பெரிய திரு மொழி -1-1-9-
செடியார் ஆக்கை அடியாரைச் சேர்த்தல் தீர்க்கும் திருமால் -1-5-7-
நன்மைகளைச் செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –சுபாவஹா தத் சிவா –
சாஸ்வதம் சிவம் அச்யுதம்–தைத்ரியம்
ஸ்ம்ருதி சகல கல்யாண பாஜநம் –ஸ்ரீ விஷ்ணு தர்மம்
மங்களம் பகவான் விஷ்ணு
மங்களாய தநம் ஹரி
மங்களா நாஞ்ச மங்களம்-மஹா பாரதம்
மங்கல்யம் மங்களம் விஷ்ணு -ஸ்ரீ விஷ்ணு தர்மம்
ஸாஷாத் இவனே என்று பட்டரும் -அந்தராத்மாவாகையால் இவன் என்றும் சங்கரரும் வியாக்யானம்
முக் குணங்கள் இல்லாமையால் பரிசுத்தர் -சிவன் முதலிய நாமங்களாலும் விஷ்ணுவே ஸ்துதிக்கப் படுபவர் -ஸ்ரீ சங்கரர்—
மங்களமாக இருப்பவர் -மங்களைத்தையும் செய்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—
ஓம் சிவா நம
அனைத்து மங்களங்களும் அளிப்பவர்
—————-
- ஓம் ஶிவாய நம:
நிஸ் த்ரை குண்ய தயா ஶுத்தத்வாத் ஶிவ:
நிஸ் த்ரை குண்ய தயா முக்குணங்களின் சேர்க்கை இன்றி ஶுத்தத்வாத் தூய்மையானவராக இருப்பதால் ஶிவ: பகவான் ‘ஶிவ:’ என்று அழைக்கப் படுகிறார்.
முக் குணங்களின் சேர்க்கை இன்றி தூய்மையானவராக இருப்பதால் பகவான் ‘ஶிவ:’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.
ஶிவ என்றால் தூய்மை என்று ஒரு பொருள் உண்டு
‘ஸ ப்ரஹ்மா ஸ ஶிவ:’ (கைவல்ய உபநிஶத் 8)
கைவல்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:-அவரே ப்ரஹ்மா (நான்முகக்கடவுள்), அவரே சிவன்…
இதி இங்கு அபேத (அனைத்தும் ஒன்றே என்ற) அத்வைத உபதேஶா தத்துவத்தின் படி ஶிவா ‘ஶிவ’ ஆதி முதலிய நாமபிர் நாமங்களாலும் ஹரிரேவ பகவான் ஹரி ஒருவரே ஸ்தூயதே துதிக்கப்படுகிறார் |
கைவல்ய உபநிஶத்தில் சிவபெருமானைப் போற்றிக் கூறும் வாக்கியமே மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. சிவனை போற்றும் அனைத்தும் பகவான் ஹரியையே போற்றும் என்பது அத்வைதத் தத்துவம். இதை ஆசார்யர் தொடக்கத்திலேயே விளக்கி யுள்ளார். எனவே, சிவ முதலிய திருநாமங்களும் பகவான் ஹரியையே போற்றுவதாகக் கொள்ள வேண்டும்.
————
சிவா – தூய்மையானவர்
இந்த பெயரை 2 வழிகளில் விளக்கலாம்.
- அவர் தூயவர் மற்றும் ரஜஸ், தமஸ் மற்றும் சத்வ ஆகிய 3 குணங்களிலிருந்து விடுபட்டவர். ஸ்ரீ ஆதி சங்கரர் கூறுகிறார் “நிஸ்த்ரைகுண்யாதயா சுத்தத்வாத் சிவா – அவர் தூய்மையானவர் மற்றும் மூன்று குணங்கள் (சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் ஆகிய இயற்கையான குணங்கள்) இல்லாததால் அவர் சிவன் என்று அழைக்கப்படுகிறார்.
- அனைவருக்கும் ஐஸ்வர்யத்தை அளிப்பவர். மகாபாரதத்தில், “தன் பக்தர்களால் விரும்பிய அனைத்தையும் அருளுபவர் சிவன் என்று அழைக்கப்படுகிறார்” என்று ஒரு வசனம் உள்ளது.
இந்தப் பெயரின் பின்னணியில், நாராயண உபநிஷத் கூறுகிறது:
- “சாஸ்வதம் சிவம் அச்யுதம்” – நித்தியமானவர், மங்களகரமானவர், மற்றும் தம் பக்தர்களை ஒருபோதும் விழ விடாதவர்.
- “ச ப்ரஹ்ம ச சிவஹ் சென்ரஹ் ஸோக்ஷரஹ பரம ஸ்வராட்” – அவனே பிரம்மா, அவனே சிவன், அவனே இந்திரன், அவனே நித்தியமானவன், அவனே உன்னதமானவன், அனைத்திற்கும் இறைவன்.
———
28-ஸ்தாணு
நிலையானவன் –அனுக்ரஹம் அளிப்பதில் ஸ்திரமானவன் –
தத்ர ச ஸ்தாணு:। திஷ்டதே:,
* ஸ்தோணுரிதி ணு; த்ருடாநுக்ரஹ இதி பாவ: । நஹி பகவத : ஸ்பர்ஸ :(கேசவா என்ன கெடும் இடராய வெல்லாம் )
ப்ராயஶ்சித்தாதி ஸாமாந்ய தர்ம வத் உபாத்த துரித ஷேபேண காரீரீ–
சித்ரா -தர்ஸ பூர்ண மாஸாதி வத் தேவதாந்தரவத்வா காம்யமாந ஏக காம
ப்ரதாநேந வா அந்ருதகோ விரமதி, ப்ரபலைர் வா அந்தராயை : ப்ரதிபத்யேத ஹீயேத , அவஹ்நியேத வா ।
கிம்து அஸேஷமஶிவம் ஸம்ஸ மய்ய
அகில மபிலஷிதம் ச பஹுமுக விஶ்ராண்யாபி, ந ஜாதுசித் விஶ்ராம்யதி ।யதா
* ஏகோ பஹூநாம் யோ வித தாதி காமாந்;
* ஏதத்த்யேவாக்ஷரம் ஜ்ஞாத்வா யோ யதிச்சதி தஸ்ய தத்,
* தஸ்மிந் ப்ரஸந்நே கிமிஹ அஸ்த்யலப்யம்,
* ஸகல பல ப்ரதோ ஹி விஷ்ணு:,
*ரத்ந பர்வத மாருஹ்ய யதா ரத்நம் நரோ முநே ।
ஸத்த்வாநுரூப மாதத்தே ததா க்ருஷ்ணாந் மநோ ரதாந் ॥
* பௌமம் மநோரதம் ஸ்வர்கே ஸ்வர்கி வந்த்யம் ச யத் பதம் । ப்ராப்நோத்யாராதிதே விஷ்ணௌ முக்தி மப்யதி துர்லபாம் ॥
* யத் துர்லபம் யத் அப்ராப்யம் மநஸோ யதகோசரம் । ததப்ய ப்ரார்திதிம் த்யாதோ ததாதி மதுஸூதந: ॥ இதி ॥ 28 ॥
மாதவன் என்று ஓத வல்லீரேல் தீதொன்றும் அடையா –ஏதம் சாராவே -10-5-7-
அடியார்க்கு இன்னும் என் செய்வன் என்றே இருத்தி –
428-ஸ்தாவர ஸ்தாணு -மீண்டும் வரும்
வன்மை யுடைய வரக்கர் அசுரரை மாளப் படை பொருத நன்மை யுடையவன் -3-10-1-
நிலைத்து நிற்பர் -அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி செய்து அருளி மேன்மேலும் அருளுபவர் –
பகவத் சம்ச்லேஷம் குறிப்பிட்ட பாவங்களைப் போக்குவிக்கும் பிரயச்சித்தம் போலே இல்லை
காரீரீ சித்ரம் தார்ச பூர்ண மாசம் போன்ற யாகங்கள் போலேயோ தேவ தாந்த்ரங்களைப் போலேயோ
குறிப்பிட்ட பலன்களை மட்டும் கொடுத்து நிற்பது இல்லை –
பலமான தடைகளால் தடுக்கப் படுவது இல்லை -அழிவதில்லை -மாறாக மேன்மேலும் அருளுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
திஷ்டதே -அசேஷமவ சிவம் சம்ஷமய்ய -அகிலம் அகில பஹூ முகம் விஸ்ரான்யபி -ந ஜாது சிதது – விஸ்ராம்யதி –ஸ்திரமாக அருளுபவன்
யாதவ பிரகாசர் திருந்தி எம்பெருமானார் திருவடி சேர்ந்து -கோவிந்த நாதர் -திரு நாமம் பெற்று எதி தர்ம சமுச்சயம் கிரந்தம் -அருளி உள்ளார் –
ஏகோ பஹு நாம் யோ விததாதி காமாந் -ஸ்வேதாஸ்வர -கட உபநிஷத்
ஏதத்தி ஏவ அக்ஷரம் ஞாத்வா யோ யாதிச்சதி தஸ்ய தத் –கட உபநிஷத்
தஸ்மிந் ப்ரசன்னே கிமிஹாஸ்தி அலப்யம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-17-91-
சகல பல ப்ரதோ ஹி விஷ்ணு –ஸ்ரீ விஷ்ணு தர்மம் -42-47-
ரத்ன பர்வதம் ஆருஹ்ய யதா ரத்னம் நரோ முனே சத்தவானு ரூபம் ஆதத்தே ததா கிருஷ்ணாத் மநோ ரதாம்-ஸ்ரீ விஷ்ணு தர்மம் -7-3-
பீமம் மநோ ரதம் ஸ்வர்க்கம் ஸ்வர்க்கி வந்த்யம் ச யத் பதம் ப்ராப்நோதி ஆராதிதே விஷ்ணவ் முக்திம்
அபி அதி துர்லபாம்–ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-8-6–
யத் துர்லபம் யத் அப்ராப்யம் மனசோ யத் அகோசரம் ததாபி அபிரார்த்திதம்
த்யாதோ தாதாபி மது ஸூதந
ஸ்திரமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்—
எங்கும் பரவி இருப்பவர் -அணு அளவுள்ளவர் -சிவனுக்கு அந்தர்யாமியாய் இருப்பவர் –
சிவ ஸ்தாணு -ஒரே பதமாக கொண்டு-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்
ஓம் ஸ்தாணு நம
ஊற்றமுடையவன்.–அடியவரை ரக்ஷிப்பதிலே விரதம் கொண்டவன்
——————
- ஓம் ஸ்தாணவே நம:
ஸ்திரத்வாத் ஸ்தாணு:
ஸ்திரத்வாத் (நிரந்தரமாக) நிலையாக இருப்பதால் ஸ்தாணு: பகவான் ‘ஸ்தாணு:’ என்று அழைக்கப் படுகிறார்.
(நிரந்தரமாக) நிலையாக இருப்பதால் பகவான் ‘ஸ்தாணு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.
———
ஸ்தாநுஹ் – நிலையான மற்றும் மாறாதவர்
இதன் பொருள் உறுதியான மற்றும் அசையாதவர். இந்த பெயர் ஸ்தா-திஷ்டதி என்ற மூல வார்த்தையிலிருந்து உருவானது, இது உறுதியான தன்மை அல்லது நிலைத்தன்மையைக் குறிக்கிறது. சுவாரஸ்யமாக, இது பொதுவாக சிவபெருமானுக்குச் சொல்லப்படும் மற்றொரு பெயர்.-இறைவன் தன் பக்தர்களுக்கு அளவற்ற நன்மைகளை வழங்குகிறான் என்பதும் இதன் பொருள்.
———
29-பூதாதி –
அபி ச ஸ்ப்ருஹணீய தமத்வாத் பூதை ருபாதீயதே இதி
பூதாதி: । (ஸ்ப்ருஹணீய –ஸ்ப்ருஹணீய தர -ஸ்ப்ருஹணீய தம-ஆதி -காரண த்வம் சொல்லும் பிரகரணம் அல்லவே -ஆதரிக்கப் படுபவர் என்றவாறு )
*உபஸர்கேகோ : கி: । ஏவம் ஸர்வாதிர் நிதிரித்யாதய: । (இதே போல் ப்ரத்யயம் வந்த திரு நாமங்களையும் காட்டி அருளுகிறார் )
* கிம் ப்ரஜயா கரிஷ்யாமோ யேஷாம் நோ அயமாத்மா , உபபம்ஹ்யதே ச
* ஏதே வயம் ஸர்வ ஸம்ருத்த காமா யேஷாமயம் நோ பவிதா ப்ரஸாஸ்தா , இத்யாதிபி: ॥ 29
சர்வ தோஷங்கள் போக்கி -சுபங்களை அளித்து –சிவ -இவற்றை நிலைத்து ஸ்தாணு -இதனால் சர்வராலும் ஆதரிக்கப் படுபவன்
எல்லா யுலகு முடையான் தனை நன்று சூட்டும் விதி எய்தினம் என்ன குறை நமக்கே -4-5-7-
மிகவும் விரும்பப்படும் தன்மை உள்ளவராதளால் பிராணிகளால் அடையப் படுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
ஸ்ப்ருஹணீயது -மத்வாது —பூதைகி உபாதீயது –
கிம் ப்ரஜயா கரிஷ்யாமோ யேஷாம் ந அயம் ஆத்மா –பிருஹத்
ஏதே வயம் சர்வ சம்ருத்த காமா ஏஷா மயம் நோ பவிதா பிரசாஸ்தா –அயோத்யா -16-49-
எல்லா பொருள்களுக்கும் காரணமாய் இருப்பவர் –ஸ்ரீ சங்கரர்—
எல்லா பூதங்களுக்கும் காரணமானவர் -சம்ஹார காலத்தில் யுண்பவர்-
பூதங்களால் ஏற்க அடையப் படுபவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—
ஓம் பூதாதி நம
அனைவராலும் வேண்டப்படுபவன் -அனைத்து புருஷார்த்தங்களையும் வேண்டியவர்க்கு வேண்டியதை அளிப்பவன்
பஞ்ச பூதங்களுக்கு காரண பூதன்
———————
- ஓம் பூதாதயே நம:
பூதானாம் ஆதி காரணத்வாத் பூதாதி:
பூதானாம் அனைத்து ஜீவராசிகளுக்கும் ஆதி காரணத்வாத் மூல காரணமாய் இருப்பதால் பூதாதி: பகவான் ‘பூதாதி:’ என்று அழைக்கப் படுகிறார்.
அனைத்து ஜீவ ராசிகளுக்கும் மூல காரணமாய் இருப்பதால் பகவான் ‘பூதாதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.
——
பூதாதிஹ் – எல்லா காரணங்களுக்கும் அவரே ஆதாரம்
ஸ்ரீ பராசர பட்டர், “பூதைஹி ஸ்ப்ர்ஹநீயதனதாயா ஆதீயதே – எல்லா உயிர்களாலும் ஆவலுடன் தேடப்படுபவர்” என்று விளக்கம் தருகிறார்.
ஸ்ரீ ஆதிசங்கரர் “பூதாநாம் ஆதி காரணத்வாத் பூதாதிஹ் – எல்லா உயிர்களுக்கும் முதல் காரணகர்த்தாவாக இருப்பதால் பகவான் பூதாதி என்று அழைக்கப்படுகிறார்” என்று விளக்கம் தருகிறார்.பூதானாம் ஆதிஹ் – பஞ்ச பூதங்கள் – விண்வெளி, காற்று, நெருப்பு, நீர் மற்றும் பூமி.”
———
30-நிதிரவ்யய –
அத: (விரும்பப்படும் பிரகரணம் -ஆகையால் )
நிதிரவ்யய:;
மாஹா லோபேந ஆபத் தநவந் நிதேயத்வாத் । யதா ச
*தத் யதா ஹிரண்ய நிதிம் நிஹிதம், இத்யாதி ।
ஸர்வதா ஸர்வதோபஜீவ்ய மாநம் த்வே அபி கலயா அப்யநுபக்ஷயாத் அவ்யய: ।
நிதி விஸேஷண மேதத், ந ஸ்வதந்த்ரம் நாம । அந்யதா அவ்யய: புருஷ: இதி பௌநருக்தயாத் ॥ 30 ॥॥
அழிவற்ற நிதி -ஆபத் தனம் –அவ்யய -13 திரு நாமம் பார்த்தோம் முன்பு
வைத்த மா நிதியம் மது சூதனன் -4-7-11
தனம் மதியம் தவ பாத பங்கஜம்
நிதியினைப் பவளத் தூணை -திருக் குறு-1-
எல்லா காலமும் எல்லா வகைகளாலும் அனுபவித்தாலும் குறையாத ஆபத்துக்கு உதவும் வைத்த மா நிதி –
நிதி என்பது அவ்யய என்பதற்கு விசேஷணம்-தனித் திரு நாமம் அல்ல –
இல்லா விடில் அவ்யய புருஷ -சொல்லப் பட்டதே மீண்டும் சொன்ன குற்றம் வரும் -ஸ்ரீ பராசர பட்டர் —-
மகா லோபேன ஆபத்வத் நிதியேத்வாத் சர்வதா சர்வதோப ஜீவா மானத் அபிகலயாபி அனுபஷயாதி
தத் யதா ஹிரண்ய நிதிம் நிஹிதம் –சாந்தோக்யம்
அவ்யய -என்றது நிதிக்கு விசேஷணம் -தனியான திரு நாமம் இல்லை
பிரளய காலத்தில் எல்லாம் தம்மிடம் வைப்பதால் நிதியாக இருப்பவர் -அவ்யய நிதி -அழியாத நிதி –ஸ்ரீ சங்கரர்—-
நல்லோர்களால் இதயத்தில் வைக்கப் படுபவர் -நிதி –ஞானிகளால் அன்புடன் நோக்கிச் செல்லப்படுபவர் –
அவ்யய -இரண்டு திருநாமங்கள்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-
ஓம் நிதிரவ்யயா நம
வைத்த மா நிதி அன்றோ
சாஸ்வத நிதி
—————–
- ஓம் நிதயேSவ்யயாய நம:
ப்ரளய காலேஸ்மின் ஸர்வம் நிதீயத இதி நிதி: அவ்யய: அவினஶ்வரோ நிதிரித்யர்த்த:
ப்ரளய காலேஸ்மின் அழிக்கும் (ப்ரளய) காலத்தில் ஸர்வம் அனைத்தும் நிதீயத (அவருக்குள்) சென்று உள்ளடங்குவதால் இதி அவர் நிதி: ‘நிதி:’ என்று அழைக்கப் படுகிறார்.
‘கர்மண்யதிகரணே ச’ (பாணினி ஸூத்ரம் 3.3.93)
இதி கி ப்ரத்யய:-இந்த பாணினி ஸூத்ரத்தின் படி இங்கு ‘கி’ விகுதி கூட்டப் பட்டுள்ளது.
ஸ ஏவ இப்பொழுது நிதிர்விஶேஶ்யதே ‘நிதி’யை மேலும் ப்ரத்யேகமாக அடையாளப் படுத்திக் காட்டுகிறார்.
அவ்யய: அவினஶ்வரோ எக்காலத்திலும் அழிவே இல்லாத நிதிரித்யர்த்த: நிதி என்று இதற்குப் பொருள்.
அழிக்கும் (ப்ரளய) காலத்தில் அனைத்தும் (அவருக்குள்) சென்று உள்ளடங்குவதா லும், எக்காலத்திலும் அழிவே இல்லாததாலும், பகவான் “நிதி: அவ்யய:” என்ற திருநாமத்தால் அழைக்கப் படுகிறார்.
————
நிதிஹ் அவ்யயா – அவர் மாறாதவர் மற்றும் நித்தியமானவர்
இது ஒற்றைப் பெயராகக் கொள்ளப்படுகிறது. நிதி என்றால் பொக்கிஷம் என்றும், அவ்யயா என்றால் அழியாதது அல்லது என்றும் என்றும் பொருள். அவர் பக்தர்களுக்கு நிரந்தரமான மற்றும் வற்றாத பொக்கிஷம். பௌதிகப் பொக்கிஷங்கள் வரம்புக்குட்பட்டவை மற்றும் காலப்போக்கில் தீர்ந்துவிடும். பகவான் என்றும் அழியாத பொக்கிஷம்.
பரஸ் தஸ்மாத் து பவோ ‘நியோ வ்யக்தோ’ வ்யக்தாத் சநாதனஹ்
யஹ் ச ஸர்வேஷு பூதேஷு நஸ்யாத்ஸு ந வினஸ்யதி :–8-20-
இன்னும் இன்னுமொரு இயல்பு உள்ளது, இது நித்தியமானது மற்றும் இந்த வெளிப்படும் மற்றும் வெளிப்படுத்தப்படாத விஷயத்திற்கு அப்பாற்பட்டது. அது உன்னதமானது மற்றும் அழியாதது. இவ்வுலகில் உள்ள அனைத்தும் அழிந்தால், அந்த பகுதி அப்படியே இருக்கும். எல்லா உயிர்களும் அழிந்தாலும் தெய்வீகப் பொருள் அழியாது”
———–
31- சம்பவ –
அவதாரம் செய்பவன் -ஸம் யக் பவதி–நன்றாகக் பிறந்து தனது பெருமைகளை வெளிப்படுத்தி அருளுபவர் -ப்ரகாஸயந்-
நிதியினை பவளத் தூணை -எங்கும் எப்போதும் அங்கே அப்பொழுதே அவன் வீயத் தோன்றி -சமந்தாத் -வேண்டித் தேவர் இரக்க வந்து தோன்றியதும்
என் நின்ற யோனியுமாய் பிறந்தாய் ஸம்பவ
ஏவம் நிஹித அப்யாத்மாநம் தத் ஸம்ஶ்லேஷ த்வரயா அர்திப்ய: ப்ரகாஸயந்
ஸம்பவ:।
ஸமந்தாத் பவோ யஸ்யேதி; தத்ர தத்ர
ஸர்வ தேச காலாதிஷு மத்ஸ்ய, கூர்ம , வராஹ, ந்ருஸிம்ஹ, வாமந, ராம , க்ருஷ்ணாதிபீ
ரூபைர் ஏகைக புநருக்தைர் அஸங்க்யேயைர் அபீக்ஷ்ண மாவிர்பவதீத்யர்த : ।யதா பஹுதா விஜாயதே,
* பஹூநி மே வ்யதீதாநி, ஜன்மாநி –
* யதா யதா ஹி தர்மஸ்ய, இத்யாதி ॥ 31 ॥
நிதியாக பொக்கிஷமாக அடியார் காப்பாற்றினாலும்
பவித்ராணாம் –தர்ம சம்ஸ்தாபநார்த்தாய சம்பவாமி யுகே யுகே –
தொழும் காதல் களிறு அளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே -3-1-9-
பஹூநிமே வ்யதீதாநி ஜன்மாநி –
ஒருத்தி மகனாய் பிறந்து –
அப்படி மறைத்து வைத்து இருந்த போதும் தம்மை அனுபவிக்க ஆவல் கொண்டு பிரார்த்திக்குமவர்களுக்கு
அவதாரங்களினால் வெளிப்படுத்துபவர் –
சம்பவாமி யுகே யுகே -மத்ஸ்ய கூர்ம வராஹ நரசிம்ஹ வாமன ராம கிருஷ்ணாதி அவதாரங்களால் பல முறையால்
எல்லா இடங்களிலும் எல்லா காலத்திலும் அவதரிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —-
ஏவம் லிகிதமபி ஆத்மானம் தம் சம்ச்லேஷத் தவரையா அர்தித்த்வய கதாசயத் சம்பவ
பஹுதா விஜாயதே -புருஷ ஸூக்தம்
பஹுநி மே வியதீதாநி –ஸ்ரீ கீதை -4-5-
யதா யதா ஹி தர்மஸ்ய –ஸ்ரீ கீதை -4-7–
———————————————————-——————————————————————————————————–
36-ஈஸ்வர –
சுத்த ஸ்வரூபத்தில் இருப்பதைக் காட்டிலும் அவதாரங்களில் ஈஸ்வரத் தன்மை முகவும் பயன்படும் படி இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் —
அதக ஜன்மசூ அதிகதம பிரயோஜன ஐஸ்வர் யாதி –
இயற்கையான ஐஸ்வர்யம் உள்ளவர் -ஸ்ரீ சங்கரர்—-
கட்டளை இடுபவர் -ஈசர்களில் சிறந்தவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—-
———-
சர்வ உலகங்களையும் தன் உடலாகக் கொண்டு, சர்வத்துக்கும் உயிராக விளங்கும்
எம்பெருமான், ‘ஸர்வன்’ என்றழைக்கப்படுகிறான்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் இருபத்தைந்தாவது திருநாமம்.
“ஸர்வாய நம:” என்று தினமும் ஜபம் செய்யும் அடியார்கள் வாழ்வில் எப்போதும்
நிம்மதியோடும் திருப்தியோடும் வாழ்வார்கள்.
உலகையும் உயிர்களையும் தனக்கு உடலாகக் கொண்டு நமக்கு நேரும் துன்பங்களை எல்லாம் தனக்கு
நேர்வதாகக் கருதிப் போக்கும் திருமால் “சர்வ:” என்றழைக்கப்படுகிறார்.
‘சர்வ:’ என்றால் துன்பங்களைப் போக்குபவர் என்று பொருள்.
“சர்வாய நம:” என்று தினமும் சொல்லிவரும் அன்பர்களுக்கு வாழ்வில் துன்பம் நேராமல் எம்பெருமான் காத்தருள்வான்.
அமங்களங்களைப் போக்கி மங்களங்களை அருளும் திருமால் “சிவ:” என்று அழைக்கப்படுகிறார்.
“சிவாய நம:” என்று தினமும் சொல்லி வருவோர்க்கு வாழ்வில் அனைத்து மங்களங்களும் உண்டாகும்.
எல்லையில்லாத, அழிவில்லாத தன் அருட்பார்வையால் ஈ, எறும்பு முதலிய உயிரினங்களுக்குக் கூட கருணை புரிந்து
அவற்றை ஜனன-மரண சுழற்சியிலிருந்து விடுவிப்பவனான எம்பெருமான் ‘ஸ்தாணு:’ என்றழைக்கப்படுகிறான்.
“ஸ்தாணவே நம:” என்று தினமும் சொல்லி வந்தால் நாமும் திருமாலின் எல்லையற்ற கருணையை அநுபவிக்கலாம்.
உலகிலுள்ள அனைவரையும் ஈர்ப்பவனாக எம்பெருமான் விளங்குவதால் அவன் ‘பூதாதி:’ என்றழைக்கப்படுகிறான்.
அனைவரையும் ஈர்க்கும் திறமையைப் பெறுவதற்கு “பூதாதயே நம:” என்ற
விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 29-வது திருநாமத்தைத் தினமும் சொல்லி வருவோம்.
அடியார்களுக்குக் குறையாத செல்வமாக எம்பெருமான் விளங்குவதால் “அவ்யய நிதி:” என்றழைக்கப்படுகிறான்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 30-வது திருநாமம். “அவ்யயநிதயே நம:” என்று தினமும் சொல்லி
வருபவர்களுக்கு நீங்காத செல்வம் நிறையும்.
திரேதா யுகத்தில் ராமனாகவும், துவாபர யுகத்தில் கண்ணனாகவும் வந்த இறைவன், கலியுகத்தில் பாலாஜியாக வந்து
அடியார்களைக் காக்கிறான். இவ்வாறு யுகம்தோறும் தன் அடியார்களுக்கு அருள்புரிவதற்காக வெவ்வேறு வடிவங்களில்
எம்பெருமான் அவதரிப்பதால் அவன் ‘ஸம்பவ:’ என்றழைக்கப்படுகிறான்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 31-வது திருநாமம்.
“ஸம்பவாய நம:” என்று தினமும் சொல்லி வருபவர்களின் மேல் சிலுக்கூர் விஸா பாலாஜி பெருமாள்
தன் அருள் பார்வையைச் செலுத்துவார்.
தன் பக்தனின் தியானம் கலையாதிருக்க, தானே அந்த பக்தனின் வடிவில் தோன்றினான் எம்பெருமான்.
இவ்வாறு தன் அடியார்களுக்கு நேரும் துன்பங்களிலிருந்து அவர்களைக் காக்கப் பல வடிவங்கள்
எடுத்துக் கொண்டு வருவதால் ‘பாவ:’ என்றழைக்கப்படுகிறான் எம்பெருமான்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 32-வது திருநாமம்.
“பாவாய நம:” என்று தினமும் சொல்லி வந்தால், ஏதோ ஒரு வடிவில் வந்து நம்மையும் இறைவன் காத்தருள்வான்.
தன் அடியார்களுக்கு வசப்பட்டு, காந்தத்துடன் இரும்பு ஒட்டிக் கொள்வது போல அடியார்களை விட்டுப்
பிரியாதிருக்கும் எம்பெருமான் ‘பர்தா’ என்று அழைக்கப்படுகிறான்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 33-வது திருநாமம்.
“பர்த்ரே நம:” என்று தினமும் சொல்லி வருபவர்களை இறைவன் என்றும் விட்டுப் பிரியவே மாட்டான்.
பிற மனிதர்கள், தேவர்கள் முதலியோரைக் காட்டிலும் வேறுபட்டதான, சிறப்பான, உயர்ந்ததான பிறப்பை எம்பெருமான்
தன் கருணையால் எடுப்பதால் அவன் ‘ப்ரபவ:’ என்று அழைக்கப்படுகிறான். அதனால் தான் 60 வருடங்களில் முதல் வருடத்துக்கு
‘ப்ரபவ’ என்று நம் முன்னோர்கள் பெயர் சூட்டியுள்ளார்கள். ‘ப்ரபவ’ என்றால் உயர்ந்த பிறப்பு என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 34-வது திருநாமம்.
“ப்ரபவாய நம:” என்று தினமும் சொல்லி வந்தால், நம்மையும் வாழ்வில் எம்பெருமான் உயர்த்துவான்.
நினைத்த நேரத்தில் நினைத்த செயலைச் செய்வதால் எம்பெருமானுக்கு ‘ப்ரபு:’ என்ற திருநாமம் ஏற்பட்டுள்ளது.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 35-வது திருநாமம்.
‘ப்ரபு:’ என்றால் அறம், பொருள், இன்பம், வீடு என அனைத்தையும் நினைத்த நேரத்தில் அருளவல்லவன் என்று பொருள்.
“ப்ரபவே நம:” என்று தினமும் சொல்லி வந்தால் சரியான நேரத்தில் நமக்குத் தேவையானதை எம்பெருமான் அருளுவான்.
மனிதனாய் அவதரிக்கும் காலத்திலும் இயற்கையாகத் தனக்கு உள்ள ஆளுமையோடு
ஈஸ்வரனாக விளங்குவதால் ‘ஈஸ்வர:’ என்று அவனுக்குப் பெயர்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 36-வது திருநாமம். “ஈஸ்வராய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள்
ஆளுமைத் திறனோடும், தலைமைப் பண்புகளோடும் விளங்குவார்கள்.
——————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply