ஸ்ரீ பகவத் குண தர்ப்பணம்–ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம வியாக்கியானங்கள் — ஸ்லோகம் –5–

  1. ஸ்வயம்பூ: ஶம்புராதித்ய: புஷ்கராக்ஷோ மஹாஸ்வன: |
    அனாதிநிதனோ தாதா விதாதா தாதுருத்தம: ||

    இந்த ஐந்தாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன:

    37. ஸ்வயம்பூ: 38. ஶம்பு: 39. ஆதித்ய: 40. புஷ்கராக்ஷ: 41. மஹாஸ்வன: |
    42. அநாதிநிதன: 43. தாதா 44. விதாதா 45. தாதுருத்தம: |

பகவான் ஸ்வயம்பூஹ், அதாவது தன்னால் இருப்பவர். அவர் மற்றவர்களைச் சார்ந்து இருக்கவில்லை, அவர்  தனது பக்தர்களுக்கு மகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் தருகிறார். அவர்  சூரியனில் உள்ள அனைத்து பிரகாசம் மற்றும் பிரகாசத்தின் ஆற்றல் மற்றும் ஆதாரமாக இருக்கிறார். அவரது கண்கள் தாமரை மலரைப் போன்றது, அதன் மகிமை வேதங்களில் விவரிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பிறப்பு, சிதைவு அல்லது இறப்பு இல்லை, மேலும் அவர் இந்த பிரபஞ்சத்தை ஆதரிக்கிறார். அவர் செயல்களின் பலனை உருவாக்குகிறார், முழு பிரபஞ்சத்தையும் நிலைநிறுத்துகிறார் மற்றும் அதன் உச்ச கட்டுப்பாட்டாளராக இருக்கிறார்

ஸ்வயம்பூ: — கருணையால் பிறந்து அருள்பவர்
சம்பு: — ஆனந்தம் அளிப்பவர்
ஆதித்ய: – ஸூர்ய மண்டலத்தில் உறைபவர்
புஷ்கராக்ஷ: — மலர்ந்த தாமரைக் கண்ணினர்
மஹாஸ்வன: — வேதமெங்கும் பெருக ஒலிக்கும் புகழினர்
அநாதிநிதந: — அவதரித்தாலும் ஆதியோ அந்தமோ அற்ற உருவினர்
தாதா — இயற்கைக்கு உயிர் நல்கும் பிரான்
விதாதா — உயிர்களை முக்தியை நோக்கிப் போற்றி வளர்ப்பவர்
தாதுருத்தம: — படைக்கும் நான்முகர்க்கும் பெரியவர்

தானாகத் தோன்றியவன் {ஸ்வயம்பூ},
தன்னை வழிபடுபவர்களுக்கு மகிழ்ச்சியளிப்பவன் {சம்பு},
சூரிய வட்டிலுக்கு மத்தியில் (பொன்வடிவில் உள்ள) தலைமை மேதை {ஆதித்யன்},
தாமரைக்கண்ணன் {புஷ்கராக்ஷன்},
உரத்த குரல் கொண்டவன் {மஹஸ்வநன்},
தொடக்கமும் முடிவுமற்றவன் {அநாதிநிதநன்},
(அனந்தன் மற்றும் பிறரின் வடிவில்) அண்டத்தைத் தாங்கிப் பிடிப்பவன் {தாதா},
செயல்கள் மற்றும் அவற்றின் கனிகள் அனைத்தையும் விதிப்பவன் {விதாதா},
பெரும்பாட்டனான பிரம்மனையும் விட மேன்மையானவன் {தாதுருத்தமன்};(18)

அனைத்தும் தானே –ஆனால் அவற்றிலும் உயர்ந்தவன் –

37-ஸ்வயம்பூ -வினைகளின் பயனாகப் பிறவாமல் தன் கருணை மற்றும் விருப்பத்தினால் பிறப்பவர் –
38-சம்பு -தன் அழகாலும் பண்புகளாலும் அடியார்களுக்குப் பெருக்கு எடுக்கும் இன்பத்தை அளிப்பவர் –
39-ஆதித்ய -சூர்ய மண்டலத்தின் நடுவே இருப்பவர் -உருக்கிய தங்கம் போலத் திகழ்பவர் –
40-புஷ்கராஷ-தாமரைக் கண்ணன் -இதுவே முழு முதல் கடவுளுக்கு அடையாளம் –

41-மஹாஸ் வன -உயர்ந்த ஒலியை உடையவர் -அதாவது வேதங்களால் போற்றப் படுபவர் –
42-அநாதி நிதன-முதலும் முடிவும் அற்றவர் –
43-தாதா- -உலகைப் படைக்க முதலில் நான்முகனை தன் கர்ப்பமாகப் படைத்தவர் –
44-விதாதா -பிரமனாகிய கர்ப்பத்தை வளர்த்து உத்பத்தி செய்பவர் –
45-தாதுருத்தம -நான்முகனைக் காட்டிலும் உயர்ந்தவர் –

—————

37-ஸ்வயம்பூ –
தானே பிறப்பவன் –

குத இதம் ஸர்வம் வைபவம் ? யத : ஸ்வயம்பூ: ।(இந்த வைபவம் தானே இச்சையால் தோன்றுவதால் )
* புவஸ் ஸம்ஜ்ஞாந்தஶ்யோ : இதி க்கிப் । ஸ்வ லீலாதி ப்ரயோஜநாய
ஸ்வேச்சயா ஸ்வ அஸாதாரணீம் (தனக்கே உரித்தான )பரம ஸத்த்வ மயீம் ப்ரக்ருதிமேவ
ஸுர நர ஸஜாதீய ஸந்நிவேஸாம் அதிஷ்டாய, ஸ்வயமேவ பவதீதி;
ந சதுர்முகாதிவத் ஈஶ்வராந்தரேண (நாராயனானால் படைக்கப்பட்டது போல் இவன் அல்லவே )கர்மாதிபிர்வா (கர்ம வசத்தாலும் அல்லவே )பரவத்தயேத்யர்த : ।யதா ,
* ஸ்வயம்பு ப்ரஹ்ம பரமம் கவீநாம்
* ப்ரக்ருதிம் ஸ்வா மதிஷ்டாய ஸம்பவாம் யாத்ம மாயயா । த்ரி குண ஜீவ ப்ரக்ருத்யோரபி ஸ்வத்வே அபி (ஸூ த்த ஸத்வ மிஸ்ர தத்வ இரண்டு பிரக்ருதியும் இவனதே )ஸ்வ போக விபூதித்வ அஸாதாரண்ய த்விஶிநஷ்டி ப்ரக்ருதிம், ஸ்வாமிதி ।

ததா ச
ஸ்ரீ ஹரி வம்சே – வைதிக புத்ராநயநே லீலோபகரண ப்ரக்ருதித்வ யோபந்யாஸோபரி — ப்ரஹ்ம தேஜோ மயம் திவ்யம் ஆஶ்சர்யம் த்ருஷ்டவாநஸி ।
அஹம் ஸ (நான் அவனே )பரத ஶ்ரேஷ்ட மத் தேஜஸ் தத் ஸநாதநம் ॥
ப்ரக்ருதிஸ் ஸா மம பரா வ்யக்தா அவ்யக்தா ச —பாரத ।
தாம் ப்ரவிஶ்ய பவந்தீஹ முக்தா பரத ஸத்தம ॥ இதி । வ்யக்தம் ஹி

ஶ்ரீவிஷ்ணுதத்வே பஞ்ச சக்தி முக்த்வா,
*மத்ஸ்ய கூர்ம வராஹாணாம் ஆவிர்பாவோ மஹாத்மந: ।
அநயைவ த்விஜ ஶ்ரேஷ்ட ந அந்யதா தத் விரோதத : ॥ இதி ।

(வ்ருத்த விபூதி -பரஞ்சுடர் சோதி உடம்பாய் அழுக்கு பதித்த உடம்பாய்
அவன் இனி சரீரம் நாம் -இந்த அழுக்கே தீண்டாதே அவனுக்கு)

வைஷ்ணவே —* ஸமஸ்தாஸ் ஸக்தயஶ் சைதா :,இத்யாதிநா ப்ராதுர்பாவ ப்ரயோஜந நிமித்தே-
உபாதாந கால சங்க்யாதி வைலக்ஷண்யம் ஸுவ் யஞ்ஜிதம் ।

ஶ்ரீமதி ராமாயணே , ஸர்வ- லோகேஶ்வரஸ் ஸாக்ஷால் லோகாநாம் ஹித காம்யயா,
* ஸ ஹி தேவை ருதீர்ணஸ்ய ராவணஸ் வதார்திபி: ।
அர்திதோ மாநுஷே லோகே ஜஜ்ஜே விஷ்ணுஸ் ஸநாதந:॥
ஸ ஏக ஸ்வயமுத்பபௌ, இத்யாதவ் ச ॥ 37 ॥

ப்ரக்ருதிம் ஸ்வாம திஷ்டாய சம்பவாமி ஆத்மமாயயா
பிதரம் ரோசயமாச–தசரதம்
தானே தனித் தோன்றல் -பெரிய திரு -24
ஆதி அம் சோதி யுருவை அங்கு வைத்து இங்குப் பிறந்தவன்

தம் மகிழ்ச்சிக்காக தம் இச்சையினால் தமக்கே சிறப்பாக உள்ள சத்வ திருமேனியை தேவாதி யோனிகளில் அமைத்துக் கொண்டு அவதரிப்பவர் –
ப்ரஹ்மாதிகள் இவரது வசம் -பிரகிருதி ஜீவன் இவரது யுடைமையாக இருந்தாலும் சுத்த சத்வம் அசாதாரணம் –
அனைத்தும் அவனுடைய போகத்திற்காக இருப்பதால் என்னுடைய பிரகிருதி -என்று அவனால் கூறப்பட்டது -ஸ்ரீ பராசர பட்டர் —
ஸ்வ லீலாபரம –பிரயோஜனாதி ஸ்வேச்சாயா ஸ்வ சாதாரணீம் பரம சத்வ மயம் பிரக்ருதிமீவ
ஸூர நர ஜாதீய சந்நிவேசாம் அதிஷ்டாய ஸ்வயமேவ பவதி –

ஸ்வயம்பூ ப்ரஹ்ம பரமம் கவீ நாம் –தைத்ரியம் -6-11–
ப்ரக்ருதிம் ஸ்வாம் அதிஷ்டாய சம்பவாமி ஆத்மமாயயா –ஸ்ரீ கீதை -4-6-
ப்ரஹ்ம தேஜோ மயம் திவ்யம் ஆச்சர்யம் த்ருஷ்ட்வான் அஸி அஹம் ச பரத ஸ்ரேஷ்ட மத் தேஜஸ் தத் சனாதனம் ப்ரக்ருதி
சா மம பரா வ்யக்த அவ்யக்த ச பாரத தாம் பிரவிஸ்ய பவந்தீஹ முக்தா பரம சத்தம
மத்ஸ்ய கூர்மம் வராஹானாம் அவிர்பாவோ மஹாத்மன அநந் யைவ த்விஜ ஸ்ரேஷ்ட நாந் யதா தத் விரோதித
சமஸ்த்தா சக்தயச்ச ஏதா –ஸ்ரீ விஷ்ணு புராணம்
ஐந்து சக்திகள் -தோற்றம் -காரணம் -காரியம் -காலம் -எண்ணிக்கை -இவற்றால் மேன்மை
சர்வ லோகேஸ்வர சாஷாத் லோகா நாம் ஹித காம்யயா –யுத்த -144-17-
ச ஹி தேவை உதீர்ணஸ்ய ராவணஸ்ய வதார்த்திபி அர்த்திதோ மானுஷே லோகே ஜஜ்ஜே விஷ்ணு சனாதன –அயோத்யா -1-7-
ச ஏவ ஸ்வயம் உத்பபவ் –அவன் தன்னை வெளிப்படுத்துகிறான் –அஷ்டாத்யாயி

தாமே யுண்டானவர் -எல்லாவற்றுக்கும் மேலாக தாமே இருப்பவர் -ஸ்வ தந்த்ரர் -பரதந்த்ரர் அல்ல –
எல்லாவுமாய் இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்—-

தாமே யுண்டாகுபவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—

ஓம் ஸ்வயம்புவே நம
தானே இச்சையால் -காருண்யம் அடியாக அவதரிப்பவர்

அவதாரங்கள் பற்றிய திருநாமங்கள் போல் இருந்தாலும் -இது பரத்வ மஹிமை சொல்லும் ப்ரகரணம்
நாரஸிம்ஹ வபுஸ் -இதுவும் விபவம் சொல்ல வந்தது அல்ல -அழகு எவ்வாறு செல்வமாக இருக்கும் என்பதுக்கு த்ருஷ்டாந்தம்
அதே போல் இங்கும் –122-திரு நாமங்கள் வரையிலும் ஸ்ரீ வைகுண்டநாதன் பெருமைக்கு குறைவில்லை என்று சொல்ல வந்தவையே

————

  1. ஓம் ஸ்வயம்புவே நம:

ஸ்வயமேவ பவதீதி ஸ்வயம்பூ: |

ஸ்வயமேவ (தான் மட்டும்) தனியொருவராய் பவதீதி இருப்பதால் ஸ்வயம்பூ: அவர் ‘ஸ்வயம்பூ’ என்று அழைக்கப்படுகிறார்.

(வேறொரு காரணமின்றிதான் மட்டும்) தனியொருவராய் இருப்பதால், பகவான் ‘ஸ்வயம்பூ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஸ ஏவ ஸ்வயமுத்பபௌ’ (மனு ஸ்ம்ரிதி 1.7)

மனுஸ்ம்ரிதியில் மனு பகவான் கூறுகிறார்அவர் தானே (தன்னிச்சையாலே) வெளிப்பட்டார்

இதி இவ்வாறு மானவம் வசனம் மனு மனுஸ்ம்ரிதியில் கூறியுள்ளார் |

ஸர்வேஶாமுபரி பவதி ஸ்வயம் பவதீதி வா ஸ்வயம்பூ: |

ஸர்வேஶாமுபரி அனைவருக்கும் மேலே பவதி இருப்பதாலும் ஸ்வயம் பவதீதி வா தன்னிச்சையால் தோன்றுவதாலும் ஸ்வயம்பூ: அவர் ‘ஸ்வயம்பூ’ என்று அழைக்கப்படுகிறார்.

அனைவருக்கும் மேலே இருப்பதாலும், தன்னிச்சையால் தோன்றுவதாலும் பகவான் ‘ஸ்வயம்பூ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

யேஶாமுபரி பவதி யஸ்சோபரி பவதி ததுபயாத்மனா ஸ்வயமேவ பவதீதி வா ஸ்வயம்பூ: |

யேஶாமுபரி பவதி எவருக்கு மேலானவரோ (ஜீவாத்மா) யஸ்சோபரி பவதி எவர் மேலானவரோ (பரமாத்மா) ததுபயாத்மனா இப்படி இருவாறாகவும் ஸ்வயமேவ அவரே பவதீதி வா தோன்றுவதால் ஸ்வயம்பூ: அவர் ‘ ஸ்வயம்பூ’ என்று அழைக்கப்படுகிறார்.

எவருக்கு மேலானவரோ (ஜீவாத்மாவும் அவரே), எவர் மேலானவரோ (ஜீவாத்மாவிற்கு மேலானவரும் அவரே), இப்படி இருவாறாகவும் அவரே தோன்றுவதால் பகவான் ‘ஸ்வயம்பூ’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பரிபூ: ஸ்வயம்பூ: (ஈசாவாஸ்ய உபநிஶத் 8)

ஈசாவாஸ்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளதுஎல்லாமாக இருப்பவர்; தானே தோன்றியவர்.

இதி மந்த்ரவர்ணாத் இந்த மந்திரத்தின் படி அதவா அல்லது ஸ்வயம்பூ: ஸ்வயம்பூ என்றால் பரமேஶ்வரஅந்த பரம்பொருள் ஸ்வயமேவ தன்னிச்சையாலே ஸ்வதந்த்ரோ சுதந்திரமாக பவதி இருப்பவர் ந பரதந்த்ர(என்றுமே) பிறருக்கு அடங்கி இருப்பவரல்ல.

‘பராஞ்சி கானி வ்யத்ருணத் ஸ்வயம்பூ:’ (கதோபநிஶத் 2.1.1)

கதோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளதுஈஸ்வரன் இந்த்ரியங்களை வெளிநோக்கு உடையனவாக (படைத்திருப்பதன் மூலம்) நாசப்படுத்திவிட்டார்.

இதி மந்த்ரவர்ணாத் இந்த மந்திரத்தின் படியும் (மேலே கூறப்பட்ட ஈசாவாஸ்ய உபநிஶத் மந்த்ரத்தின் படியும் பகவான் ஸ்வயம்பூ என்று அழைக்கப்படுகிறார்).

————

ஸ்வயம்பூஹ் – சொந்தமாக வெளிப்படுபவர்

ஸ்வயம்பூஹ் என்றால் சுயமாக பிறந்தவர் என்று பொருள். ஸ்வயம் ஏவ பவதி இதி ஸ்வயம்பூஹ் – வெளிக் காரணமின்றித் தானே வெளிப்படுபவர்’. மனு ஸ்மிருதி ( 1, 7) ‘ஸ ஏவ ஸ்வயம் உத்வபௌ – அவர் மட்டுமே சொந்தமாக பிறந்தார்’ என்று கூறுகிறது.


38-சம்பு –
இன்பம் உண்டாக்குமவன்

இங்கும் பர்யவசாய வ்ருத்தி இல்லாமல் ஸாஷாத்தாக -இவனுக்கே பொருந்தும்

ஏவம் ஸ்வ ஸௌந்தர்ய ஸௌஶீல்யாதி குணாவிஷ்காரேண -ஸம்– ஸுகம் பாவயதீதி
ஸம்பு: । டுப்ரகரணே
* மிதத்வாதிப்ய உபஸம்க்யாநம் இதி டு: । யதா
* விச்வாஷம் விஸ்வ சம்புவம் –தைத்ரியம் ।

அழகையும் எளிமையையும் காட்டு ஸூகம் நன்கு அளிப்பவன்

உப ப்ரும்ஹிதம் ச
ரூப ஒவ்தார்ய குணை : பும்ஸாம் த்ருஷ்டி சித்தாபஹாரிணம் -அயோத்யா -3-29-।
சந்த்ர காந்தாநநம் இராமம் அதீவ பிரிய தர்சனம் -அயோத்யா -3-28- । இத்யாதிபி: ॥ 38 ॥

புழுதி அளைந்த பொன் மேனி காணப் பெரிதும் உகப்பன் -பெரியாழ்வார் -2-4-9-

அழகு எளிமை குணங்களை வெளிப்படுத்தி பேரின்பத்தை விளைப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
ஏவம் ஸ்வ சௌந்தர்யாதி சௌசீல்யாதி குணாவிஷ்காரேண் ஸூ கம் பாவயதியாதி –

பக்தர்களுக்கு இன்பத்தைத் தருபவர் -ஸ்ரீ சங்கரர்—

சுகத்தை அளிப்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—

ஓம் சம்புவே நம
தனது கல்யாண குணங்களால் நிரவதிக அந்தமில் பேர் இன்பம் அளிப்பவன்

————-

ஓம் ஶம்பவே நம:

ஶம் ஸுகம் பக்தனாம் பாவயதீதி ஶம்பு: |

ஶம் ‘ஶம்’ என்றால் ஸுகம் சுகம் அல்லது இன்பம் பக்தனாம் தனது அடியவர்களுக்கு பாவயதீதி உருவாக்குவதால் (அளிப்பதால்) ஶம்பு: அவர் ‘ ஶம்பு:’ என்று அழைக்கப்படுகிறார் |

தனது அடியவர்களுக்கு இன்பத்தை அளிப்பதால் (சுகத்தை உருவாக்குவதால்) பகவான் ‘ஶம்பு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

ஷம்பு – தன் பக்தர்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பவர்

‘ஷாம்’ என்றால் மகிழ்ச்சி அல்லது மகிழ்ச்சி மற்றும் ‘புஹ்’ என்பது படைப்பவர். எனவே ஷம்பு என்றால் பக்தர்களின் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்துபவர் என்று பொருள். ‘ஷாம் பக்தானாம் பாவயதி இதி ஷம்புஹ். பக்தர்களை மகிழ்விப்பவர்


39-ஆதித்ய-ஸூர்ய மண்டல மத்ய வர்த்தி -ஸூர்யனில் இருக்கும் புருஷோத்தமன் 

அதைஷாம் ப்ராதுர் பாவாநா முதாஹரணம் பூஷ்ணி புருஷமாஹ –
ஆதித்ய: |
ஆதித்யோ அஸ்ய நிவாஸ இதி; வாழுமிடம் -இடத்தின் பெயரே இவனுக்கும் 
* தித்யதித் யாதித்ய இத்யாதிநா ண்ய: ।

ஏவம் ஹி ப்ரஹ்ம மீமாம்ஸிதம்,*அந்தஸ் தத் தர்மோபதேஸாத் இதி ।(பர ப்ரஹ்மம் அடையாளங்கள் இவனுக்கும் சொல்லி இருப்பதால் )
* ய ஏஷோ அந்தராதித்யே ஹிரண்மய புருஷ த்ருச்யதே தஸ்ய யதா கப்யாசம் புண்டரீக மேவ மஷிணீ —
* த்யேயஸ் ஸதா ஸவித்ரு மண்டல மத்யவர்தீ இத்யுதா ஹ்ருத்ய, ஆதித்யாந்தரஸ்ய
* தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகமேவ மக்ஷிணீ இத்யாம்நாதம் ॥ 39 ॥

தஸ்ய உதிதி நாமா -சாந்தோக்யம்
உத் -என்று அவன் திரு நாமம்

த்யேய: ஸதா ஸவித்ரு மண்டல மத்யவர்த்தி
நாராயண: ஸரஸிஜாஸன ஸன்னிவிஷ்ட: I
கேயூரவான் மகர குண்டலவான் கிரீடி
ஹாரீ ஹிரண்யவபு: த்ருத சங்க சக்ர: II

நீள் சுடர் இரண்டும் என்கோ -3-4-1-

568-ஆதித்ய-மீண்டும் வரும் தேவகி புத்திரன் –
அதிதியே தேவகியாக பிறந்தபடியால் அவள் கர்ப்பத்தில் உண்டானவனை ஆதித்யன்
ஆ- அஷரத்தினால் உபாசிக்கத் தகுந்தவன்
தேவகி தன் வயிற்றில் அத்தத்தின் பத்தா நாள் தோன்றிய அச்சுதன் -பெரியாழ்வார் -1-2-6
தேவகி சிங்கமே -பெரியாழ்வார் -1-3-4-

ஸூர்ய மண்டலத்தில் வசிப்பவர் -அவதாரங்களுக்கு எல்லாம் உதாரணமாக ஸூர்ய மண்டலத்தில் உள்ள
புருஷனைக் கூறுகிறார் -ஸ்ரீ பராசர பட்டர் —

அந்தஸ்த தர்ம உபதேசாத்-1-1-21-
ய ஏஷ அந்தராதித்யே ஹிரண்மய புருஷோ த்ருச்யதே –சாந்தோக்யம்
ச யச்சாயம் புருஷே யச்சா சா வாதித்யே ச ஏக –தைத்ரியம்
த்யேய யதா ஸவித்ரு மண்டல மத்ய வர்த்தீ
தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அஷிணி–சாந்தோக்யம்

பக்தர்களுக்கு இன்பத்தைத் தருபவர் -ஸ்ரீ சங்கரர்—
சூர்ய மண்டலத்தில் இருப்பவர் -ஒரே ஸூர்யன் பிரதிபலிப்பது போலே பரமாத்மா ஒருவரே
பல உடல்களில் தோற்றுவதால் ஸூர்யன் போன்றவர் –
பன்னிரண்டு ஆதித்தியர்களில் விஷ்ணுவாக இருப்பவர் -அதிதியாகிய பூமிக்கு பதியாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்—

ஸூர்ய மண்டலத்தில் இருப்பவர் -அங்கே இருந்து கொண்டு பூமியின் நீரை ஆவியாக வற்றச் செய்பவர்-
உபேந்திர ரூபத்துடன் அதிதிக்கு மைந்தனாக அவதரித்தவர் -க்ரஹிப்பவர் -செல்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—-

ஓம் ஆதித்யாய நம
ஸவித்ரு மண்டல மத்திய வர்த்தி

—————–

  1. ஓம் ஆதித்யாய நம:

ஆதித்யமண்டலாந்த:ஸ்தோ ஹிரண்மய: புருஶ: ஆதித்ய: |

ஆதித்யமண்டலாந்த:ஸ்தோ சூர்யமண்டலத்தின் நடுவே ஹிரண்மயதங்கமயமான புருஶபுருஶராய் வீற்றிருப்பதால் ஆதித்ய: அவர் ‘ஆதித்யன்’ என்று அழைக்கப்படுகிறார் |

சூர்யமண்டலத்தின் நடுவே தங்கமயமான புருஶராய் வீற்றிருப்பதால் பகவான் ‘ஆதித்யன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அன்றாட சந்த்யா வந்தனத்தில் வரும் ஒரு பகுதி: த்யேயஸ்ஸதா ஸவித்ரு மண்டல மத்ய வர்த்தி நாராயண ஸரஸிஜாஸன ஸந்நிவிஷ்ட.

த்வாதஸாதித்யேஶூ விஶ்ணுர்வா ஆதித்ய: |

த்வாதஸாதித்யேஶூ பன்னிரண்டு ஆதித்யர்களுக்குள் விஶ்ணுர்வா ‘விஶ்ணு’ என்ற பெயருடைய ஆதித்யனாக பகவான் இருப்பதால் ஆதித்ய: அவர் ‘ஆதித்யன்’ என்று அழைக்கப்படுகிறார் |

பன்னிரண்டு ஆதித்யர்களுக்குள் விஶ்ணு என்ற பெயருடைய பகவான் இருப்பதால் பகவான் ‘ஆதித்யன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஆதித்யானாமஹம் விஶ்ணு:’ (ஸ்ரீமத் பகவத்கீதை 10.21)

ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்:

ஆதித்யர்களில் நான் விஶ்ணு.

இத்யுக்தே இவ்வாறு பகவான் கூறியுள்ளார்.

பன்னிரண்டு ஆதித்யர்களின் பெயர்கள்: சக்ர, அர்யமா, தாதா, த்வஷ்டா, பூஶா, விவஸ்வான், சவிதா, மித்ர, வருண, அம்சுமான், பக மற்றும் விஶ்ணு.

அதிதேர் அகண்டிதாயா மஹ்யா அயம் பதிரிதி வா ஆதித்ய: |

அதிதேர் ‘அதிதி’ என்றால் அகண்டிதாயா மஹ்யா பரந்து விரிந்துள்ள இந்த பூமி அயம் அந்த நிலமகளின் பதிரிதி வா கணவன் ஆதலால் ஆதித்ய: அவர் ‘ஆதித்யன்’ என்று அழைக்கப்படுகிறார் |

‘அதிதி’ என்றால் பரந்து விரிந்துள்ள இந்த பூமியைக் குறிக்கும். அந்த நிலமகளின் கணவன் ஆதலால், பகவான் ‘ஆதித்யன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘இயம் வா அதிதி:’ ‘மஹீம் தேவீம் விஶ்ணுபத்னீம்’

‘இது (இந்த பூமி) அதிதி’

‘இந்த பூமிதேவியானவள் விஶ்ணுவின் மனைவியாவாள்’

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

யதா ஆதித்ய ஏக ஏவாநேகேஶூ ஜலபாஜனேஶூ அனேகவத் ப்ரதிபாஸதே ஏவமனேகேஶூ ஶரீரேஶூ ஏக ஏவாத்மானேகவத் ப்ரதிபாஸத இதி ஆதித்ய ஸாதர்ம்யதா ஆதித்ய: |

யதா எவ்வாறு ஆதித்ய சூரியன் ஏக ஏவாநேகேஶூ ஒன்றாக இருப்பினும் ஜலபாஜனேஶூ வெவ்வேறு நீர்நிலைகளில் அனேகவத் பலவாறாக ப்ரதிபாஸதே பிரதிபலிக்கின்றதோ, ஏவமனேகேஶூ தான் ஒருவர் மட்டுமே இருப்பினும் ஶரீரேஶூ பல்வேறு உடல்களில் ஏக ஏவாத்மானேகவத் ஒரே ஆத்மாவானது பல ஆத்மாக்களாக ப்ரதிபாஸத பிரதிபலிப்பதால் இதி ஆதித்ய ஸாதர்ம்யதா இவ்வாறு (பிரதிபலிப்பதில்) சூரியனை ஒத்து இருப்பதால் ஆதித்ய: அவர் ‘ஆதித்யன்’ என்று அழைக்கப்படுகிறார் |

ஒரே சூரியன், பல நீர்நிலைகளில் பலவாக பிரதிபலிக்கிறது. அது போன்றே, ஒரே பரமாத்மா பல்வேறு உடல்களில் பற்பல ஜீவாத்மாக்களாக தோன்றுகிறார். இவ்வாறு, சூரியனைப் போன்ற தன்மை உடையவராதலால் பகவான் ‘ஆதித்யன்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

ஆதித்யா – சூரியனின் கோளத்தில் தங்க நிறத்தில் இருப்பவர்

இந்த நாமத்தை 3 விதமாக விளக்கலாம்.

அ) சூரியனில் உள்ள புருஷன் – மகாவிஷ்ணு சூரியனின் மைய ஆற்றல். ஆதிசங்கரர் இதை விளக்குகிறார் “’ஆதித்ய மண்டலாந்தஸ்தா ஹிரண்மய புருஷா – சூரியனின் சுற்றுப்பாதையின் மையத்தில் இருக்கும் தங்க நபர்”;

ஆ) பன்னிரண்டு ஆதித்யர்களில் ஒருவர். காஷ்யப முனிவரின் மனைவி அதிதிக்கு ஆதித்யஸ் என்ற 12 மகன்கள் இருந்தனர். அவை விவஸ்வான், ஆர்யமா, பூஷா, த்வஷ்டா, சவிதா, பக, தாதா, விதாதா, வருணா, மித்ரா, ஷக்ரா மற்றும் உருக்ரமா. இவற்றில் கடைசியாக பெயரிடப்பட்ட உருக்ரமா விஷ்ணுவின் அவதாரம்.

பகவத் கீதை, அத்தியாயம் 10 வது வசனம் 21 இல், பகவான் ” ஆதித்யானாம் அஹம் விஷ்ணுஹ்” – ஆதித்யாக்களில் நான் விஷ்ணு (உருக்ரம்) என்று கூறுகிறார்.

c) சூரியனைப் போல அனைத்தையும் தாங்கி வளர்த்தவர்.


40-புஷ்கராஷ –
தாமரைக் கண்ணன்

ஸர்வ ஐஶ்வர்ய அஸாதாரண லக்ஷணம் புண்டரீகாக்ஷத்வம் ஸம்கமயதி-
புஷ்கராக்ஷ: |
* அக்ஷ்ணோ அதர்ஸநாத் இத்யச் ஸமா ஸாந்த(பார்வை பொருளில் வராமல் அச் சேர்ந்து வந்துள்ளது )॥ 40 ॥

புருஷ -புஷ்கரேஷண-ராம கமல பத்ராஷ -மகா வராஹ ஸ்புட பத்ம லோசன –
பெரும் கேழலார் தன் பெரும் தண் மலர்ப் புண்டரீகம் -திரு விருத்தம் -45
கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண்ணினையும் அரவிந்தம் அடியும் அக்தே -திருநெடும் தாண்டகம் -21
மீண்டும் -561-வரும் புஷ்டி அளிக்கும் கண்ணை உடையவன்
அனுக்ரகம் வர்ஷிக்கும் கண்களை உடையவன் –
மீன் கண்ணாலே குஞ்சுகளை வளர்ப்பது போலே
அல்லிக் கமலக் கண்ணனை -8-10-11
செய்ய தாமரைக் கண்ணன் -3-6-

கஶ்ஶ்ரீ: ஶ்ரிய: பரமஸத்வ ஸமாஶ்ரய: க:
க: புண்டரீகநயந: புருஷோத்தம: க: |
கஸ்யாயுதாயுத ஶதைக கலாம்ஶகாம்ஶே
விஶ்வம் விசித்ர சிதசித் ப்ரவிபாக வ்ருத்தம்||–ஸ்தோத்ர ரத்னம் 12

ஸ்ரீ: என்று சொல்லப்படும் ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் செல்வம் யார்? யாரிடத்தில் சுத்த ஸத்வம் உள்ளது?
யார் புண்டரீகாக்ஷன்? யார் புருஷோத்தமன் என்று சொல்லப்படுபவன்? யாருடைய ஸங்கல்பத்தின் ஒரு சிறு பகுதி,
பலவகைப்பட்ட சேதனர்கள் மற்றும் அசேதனப்பொருள்களாக விரிந்திருக்கும் இவ்வுலகத்தைத் தாங்குகிறது?

இது திவ்ய ரூப திரு நாமம் -மற்றவை ஸ்வரூப பாரமான திருநாமங்கள்

புஷ்கராஷா-
சர்வேஸ்வரனுக்கு உரிய இலக்கணமான தாமரை கண்களை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
சர்வ ஐஸ்வர்ய அசாதாராண லஷணம் புண்டரீகாஷத்வம் சங்கமயதி

தாமரையை ஒத்த திரு கண்களை யுடையவர் -ஸ்ரீ சங்கரர்—

தாமரை போன்ற இரு கண்களை யுடையவர் -எண்ணற்ற கண்களை யுடையவர் –
புஷ்டியைத் தருபவர் -அழிவில்லாதவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—-

ஓம் புஷ்காராஷாய நம
செந்தாமரைக் கண்ணன்

—————

  1. ஓம் புஶ்கராக்ஷாய நம:

புஶ்கரேண உபமிதே அக்ஷிணீ யஸ்யேதி புஶ்கராக்ஷ: |

புஶ்கரேண தாமரை இதழ்களை உபமிதே ஒத்த அக்ஷிணீ கண்களை யஸ்யேதி உடையவராதலால் புஶ்கராக்ஷ: அவர் ‘புஷ்கராக்ஷ’ என்று அழைக்கப்படுகிறார் |

தாமரை இதழ்களை ஒத்த கண்களை உடையவராதலால் பகவான் ‘புஷ்கராக்ஷ’ (தாமரைக்கண்ணன்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———

புஷ்கராக்ஷ – தாமரை மலரைப் போன்ற அழகிய கண்களை உடையவர்

புஷ்கரம் என்றால் தாமரை என்றும் அக்ஷ என்றால் கண் என்றும் பொருள். எனவே தாமரை மலரைப் போன்ற அழகிய கண்களை உடையவர் என்பது இதன் பொருள். இந்த யோசனையை நாம் ஏற்கனவே தியான ஸ்லோகங்களில் பார்த்தோம், உதாரணமாக “புண்யோபேதம் புண்டரீகாயதாக்ஷம்”.

நம்மாழ்வார் இறைவனின் கண்களை விவரிக்கும் போது
“தாமரை மலர்கள் போல இருக்கும் பெருமாளின் இரண்டு கண்களும் நம் உயிரை குடிக்க வந்த இரண்டு யமன்களோ?” என்கிறார்.


41-மகாஸ்வந-
பூஜிக்கத் தக்க ஸ்வந -சப்தம் திரு நாமம் உடையவன்

தஸ்யைவ சிஹ்நாந்தரம் ச ஸூசயதி –
மஹாஸ்வந: ।
மஹாந் – பூஜ்ய: ஸ்வந: – ஸப்தோ யஸ்யேதி; ஆந் மஹத : இத்யாதிநா ஆத்த்வம் ।

(ஒரே வேற்றுமையில் மஹாந் ஸ்வந இருந்ததால்)

ஆமநந்தி ஹி,
*தஸ்யோதிதி நாம இதி । தஸ்யை தஸ்ய நாம ரூபம் ஸைப்தம், (நாமம் ரூபம் இவற்றுக்கு பிரமணம் வேதமே -அவரே வேதம் -வேதத்தால் விளக்கப்பட்டு- வேத ஒலியாகவே உள்ளவன் )
* ஸைஷா த்ரய்யேவ வித்யா தபதி
ய ஏஷோ அந்தராதித்யே ஹிரண் மய: புருஷ: இதி த்ரயீரூபம் வா;
பூஜ்யதமம் ஸாவித்ரீ ப்ரதிபாத்யதயா வா ।

அதோ ஹி மோக்ஷ தர்மேஷு
* வித்யாஸஹாயவந்தம் மாமிதித்யஸ்தம் ஸநாதநம் இதி ॥ 41 ॥

வித்யை விட்டு விலகாமல் -ஆதித்ய மண்டலத்தில் இருந்து -சனாதனமாக
ஊற்றம் உடையாய்
பன்னலார் பயிலும் பவித்ரன்
வேதைக சமைதி கம்யன்

தஸ்ய உதிதி நாம -உத் –
உயர்வற -உ வில் தொடங்கி–உயர்ந்தே -தே யில் முடியும் திருவாய்மொழி யான மஹா சப்த வாச்யன்
சப்தம் -வேதம் -காயத்ரியால் சொல்லப்படும் பூஜ்யன் –

மிகவும் உயர்ந்த சப்தங்களை திரு நாமமாக யுடையவர் -வேத சப்தத்தை யுடையவன் -பூஜ்யமான சாவித்ரி
மந்தரத்தால் பிரதிபாதிக்கப் படுபவன் -ஸ்ரீ பராசர பட்டர் —-மஹா பூஜ்யான ஸ்வ நக சப்த யச்யேதி-மஹாஸ்வந-

தஸ்ய உத் இதி நாம –சாந்தோக்யம் -அவனது பெயரும் ரூபமும் சப்தத்தை -வேதத்தை அடிப்படையாகக் கொண்டவை
சாஷா த்ரயீ ஏவ வித்யா தபதி ய ஏஷ அந்தர் ஆதித்யே ஹிரண்மய புருஷ –
வித்யா ஸஹாயவந்தம் மாம் ஆதித்யஸ்தம் சநாதநம் –மோக்ஷ தர்மம்

மிகவும் உயர்ந்த சப்தமாகிய வேதத்தை லஷணமாக யுடையவர் -ஸ்ரீ சங்கரர்—

ஆதரவற்ற நல்லோரை தம்மிடத்துக்கு அழைத்துச் செல்லும் மேன்மை யுடையவர் –
மேன்மை கொண்ட வாயுவைத் தூண்டுபவர் –
கம்பீரமான குரலுடையவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—-

ஓம் மஹா ஸ்வாந நம
சிறந்த வேத ஒலி உடையவன்

———————-

  1. ஓம் மஹாஸ்வனாய நம:

மஹான் ஊர்ஜித: ஸ்வனோ நாதோ வா ஶ்ருதிலக்ஷணோ யஸ்ய ஸ மஹாஸ்வன: |

மஹான் ஊர்ஜித‘ மஹத்’ என்றால் மிக உயர்ந்த ஸ்வனோ நாதோ வா ‘ஸ்வனம்’ என்றால் ஒலி ஷ்ருதிலக்ஷணோ வேதங்களாகிய யஸ்ய எவருக்கு உள்ளதோ  மஹாஸ்வன: அவர் ‘ மஹாஸ்வன:’ என்று அழைக்கப்படுகிறார் |

வேதங்களாகிய மிக உயர்ந்த ஒலியை உடையவராதலால் பகவான் ‘மஹாஸ்வன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, மிக உயர்ந்த வேதங்களையே தனக்கு ஒலியாகக் கொண்டிருப்பதால் பகவான் ‘மஹாஸ்வன:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ஸன்மஹத்’ (பாணினி ஸூத்ரம் 2.1.61)

இந்த பாணினி ஸூத்ரத்தின் படி ஸத், மஹத் (மஹான்) போன்ற வார்த்தைகள் தனிப்பட்ட ஒருவரைக் குறிக்கும் பொழுது அவரது மேன்மையை சுட்டிக் காட்டுகிறது.

‘ஆன்மஹத: ஸமானாதிகரணஜாதீயயோ:’ (பாணினி ஸூத்ரம் 6.3.46)

இந்த பாணினி ஸூத்ரத்தின் படி: மஹத் என்ற சொல்லின் பின்னே, ஒன்றை மற்றொண்டுடன் தொடர்பு படுத்தும் சொல் வந்தால், மஹத் என்னும் சொல்லில் உள்ள ‘த’காரம் ‘ஆ’காரமாக மாறுகிறது.

எனவேதான், மஹத்+ஸ்வன: = மகாஸ்வன என்று (த், ஆவாக மாறி) உருவாகிறது.

இத்யாத்வம் | இவ்வாறு, மஹத்+ஸ்வன: = மஹாஸ்வன என்று (த், ஆவாக மாறி) உருவாகிறது.

‘அஸ்ய மஹதோ பூதோ நி:ஸ்வஸிதமேதத் ரிக்வேதோ யஜுர்வேத:’ (ப்ருஹதாரண்யக உபநிஶத் 2.4.10)

அந்த பரப்ரஹ்மம் (தனது) மூச்சுக்காற்றை உள்ளிழுத்தல், மற்றும் வெளியிடுதலே ரிக்வேதம் மற்றும் யஜுர்வேதமாகும்.

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

————

 மஹாஸ்வனா – யாரிடமிருந்து பெரிய ஒலி வருகிறது

இந்த நாமத்தை 2 விதமாக விளக்கலாம்.

அ) ஆழமான மற்றும் எதிரொலிக்கும் குரல் கொண்ட நபர். “மஹாநூர்ஜிதா ஸ்வானா நாதா – அவருக்கு ஆழ்ந்த குரல் உள்ளது”;

b) வேதங்களின் உருவகம். பிருஹதாரண்யக உபநிஷதம் கூறுகிறது “அஸ்ய மஹதோ பூதஸ்ய நிஷ்வசிதம் ஏதத் ரிக்வேதோ யஜுர்வேதா – வேதங்கள் பகவானிடமிருந்து வெளிப்படும் சுவாசங்கள்”; வேதங்கள் இறைவனின் பிரகாசத்தையும் பிரகாசத்தையும் விவரிக்கின்றன; காயத்ரி மந்திரம் சூரியனுக்கான முக்கிய சக்தியான விஷ்ணுவை அழைக்கிறது.


42- அநாதி நிதந –
ஆதியும் அந்தமும் இல்லாதவன் –

புஷ்காராஷன்-திவ்ய  ரூப-இதிலும் முதலும் முடிவும் இல்லாதவன்
மஹாஸ்வானா-திவ்ய நாம  -இதிலும் முதலும் முடிவும் இல்லாதவன்
பச்சை மா மலை போல் மேனி -இதில் அச்யுதன் -நழுவுதல் இல்லாதவன்-

இதுவும் திருமேனி பரமான திரு நாமம்

ஏதத் திவ்ய நாம ரூப விஶிஷ்ட ஏவ
அநாதிநிதந: ।
நித்ய யௌவந தயா ஜநி ஜராதித துரித தூர நித்ய விக்ரஹ: ।
ந தத்க ஸ்வரூப நித்யத்வ பரமே தத், தஸ்ய சதுர்முகாதீநா மபி துல்யத்வாத் ।
* பாரூபஸ் ஸத்ய ஸங்கல்ப:, (ரூபத்துக்கும் ஸ்வரூபத்துக்கும் இரண்டாக உள்ள பிரமாணங்கள் )
* ஹிரண் மய:, புருஷ:,
* வித்யுத : புருஷாததி,
* ஆதித்ய வர்ணம் தபஸஸ் : பரஸ்தாத்
* ஸர்வ கர்மா ஸர்வ கந்தஸ் ஸர்வ ரஸ:,

* ருக்நாபம் ஸ்வப்ந தீ கம்யம் வித்யாத் து புருஷம் பரம்,
* புருஷ: புண்டரீகாக்ஷ:
*இத்யாதி ஶ்ருதி ஸ்ம்ருதி ஸஹஸ்ரை :,

அமல நீலோஜ்ஜ்வல மத்யஸ்த நீல தோயத வித்யுல்லேகா ப்ரக்யம்
அதி ஸௌந்ர்ய லாவண்ய யௌவநாத் யபிமத குண கதயா ஸ்வஸ்யாபி நித்யமிச்சா க்ருஹீதம் ரூபம் தாவத் ஸமர்த்யதே ।

மின்னல் வரிசைக்குள் உள்ள கருப்பு மேகம் போல் ப்ரஹ்மம்
நாம் பார்க்கும் கருத்த மேகத்தில் உள்ள மின்னல் போல் அல்லவே

அத்ய ச
* ஸதைக ரூப ரூபாய, (நித்ய ஸ்வரூபத்துக்கும் ரூபத்துக்கும் இரண்டு பதங்கள் )
* ஶ்ரீவத்ஸ வக்ஷா நித்யஶ்ரீ:;(மண்டோதரி சதுஸ் ஸ்லோகம் )

பாராஶர்வய
* ஸ ஏவ பகவாந் காலஸ் ஸர்வ மாத்ம வஸம் நயேத்,
*நாஸ்தி விஷ்ணோ : பரம் தத்த்வம் தஸ்ய காலாத்வரா தநு:, இத்யாதி கண்டோக்தே(ஒரு மிடறாக ):,

ஸம்ஸாரமும் பிரவாஹாத்வேன நித்யம்-திவ்ய மங்களம் ஸ்வரூபம் போல் நித்யம் -பல ஹேதுக்கள்

1-ஸதா காரணத்வாத் -2-ஜ்ஞாநாதிவத் ஸ்வரூப நிரூபண அநு ப்ரவேஸாத்,
3-தமஸ: பரத்வேந (அப்ராக்ருதம் )ஜந்மாதி விகார அநிவர்தித்வாத்,
4-அக்ஷரத்வ காலாதீ தத்வாதி விஸேஷணாத் –தத் க்ரது ந்யாயாச்ச, (யதோ உபாஸனம் ததோ பலம் )நித்யத்வம் ச ஸுத்ருடம் ।

ஈத்ருக் பலவத் ஆகம ந்யாய விராேத தோஷ மூஷிகாக்ரா தமஸ்ய ரூபஸ்ய கால்ப நிக ஆகந்துகத்வ அநு மாநம் ந ப்ரரோஹேத் ।
அத ஏவ நீரூபவாதா அபி (ரூபம் இல்லை என்ற வாதிகள் )பௌதிக ஹயதேஹ நிஷேதகா நேதவ்யா: (பஞ்சபூத மய ரூபம் இல்லை -என்று சொல்ல வந்தவை -ஸூ த்த ஸத்வ மாயம் அப்ராக்ருதம் )।

நீதாஶ்ச (அதற்குப் பிரமாணங்கள் )
* ந பூத ஸம்க ஸம்ஸ்தாநோ தேஹோ அஸ்ய பரமாத்ம ந:;
* ந தஸ்ய ப்ராக்ருதா மூர்திர் மாம்ஸமே தோஸ்தி ஸம்பவா । இத்யாதி பிரஶ் ஸாஸ்த்ரைரவ–(நீதாஶ்ச )।

ஸூத்ர காரவத் வாக்ய தத் பாஷ்யகாராப்யா மபி ஆதித்யாந்தரம் பரம் ப்ரஹ்ம நித்ய ரூபம் ந்யரூபி
* ரூபம் வா அதீந்த்ரயம் அந்த :கரண ப்ரத்யக்ஷ நிர்தேஸாத், (போதாயனர் ஸ்ரீ ஸூக்தி )
* அஞ்ஜஸைவ விஶ்வ ஸ்ருஜோ ரூபம், இதி (த்ரமிடர்  ஸ்ரீ ஸூக்தி)।

அத்ர, அவதாரேஷு ச நாஸ்யாத் யந்தவ் யதா லௌகிகம், கிந்து யவநிகாயா
இவ பரம வ்யோம்நோ நிர்கம ப்ரவேஸ மாத்ர மேவ(திரைக்குப்பின் இருந்து போவது போல் அவதாரங்கள் )।
* புஜைஶ் சதுர்பி ஸமுபேதம் மமேதம் ரூபம் விஶிஷ்டம் திவி ஸம்ஸ்திதம் ச।
பூமவ் கதம் பூஜயதா ப்ரமேயம் ஸதா அபி தஸ்மிந் நிவஸாமி தேவா: (பாரதத்தில் பகவானே சொல்வது )॥
* ஸ்வர்லோகம் ஆகச்ச கத ஜ்வரஶ் சிரம் ஸுரேந்த்ர குப்தம் கத தோஷ கில்பிஷம்,
* விவேஸ வைஷ்ணவம் தேஜஸ் ஸ ஸரீரஸ் ஸஹாநுக:,இதி ஹி முநி குஹ்யம் (அன்று சராசரங்களுடன் திரு மேனியுடன் ஸ்ரீ வைஷ்ணவ தேஜஸ் அடைந்தார் பெருமாள் )॥ 42 ॥

பரமாத்மா ஸ்வரூபம் ரூபம் நித்யம்
அவிகாராய ஸூத்தாய நித்யாய பரமாத்மனே சதைக ரூபா ரூபாயா
ஆதி அம் சோதி யுருவை அங்கு வைத்து இங்குப் பிறக்கிறான்
தோற்றக் கேடவை இல்லவன் -3-6-6-

நித்ய யுவா -ஷட்பாவம் இல்லாத திருமேனி யுடையவர் -ஆத்ம ஸ்வரூபத்தை சொல்லுவது அல்ல –
சகல ஆத்மாக்களும் நித்யம் ஆகையாலே –
திவ்ய மங்கள விக்ரஹ ஸ்வரூபத்தை சொல்கிறது -தோஷமற்ற -நீலக் கடலில் உள்ள மின்னல் போன்ற
அழகிய இளமை பொருந்திய -எல்லாக் காலத்திலும் காரணமாக இருப்பதாலும்
ஞானத்தைப் போலே அவன் ஸ்வரூபத்தை காட்டும் அடையாளமாக இருப்பதாலும்
தமஸ் ஸூக்கு அப்பால் -அஷரம் -கால அதீதம் அப்பால் பட்டு –
உபாசிப்பவர் பெரும் நித்யமான சாரூப்யம் -நித்யமாக விளங்கும் திரு மேனி –
உருவம் இல்லை என்கிற சுருதி வாக்யங்கள் உலகோர் போல தாழ்ந்த உருவம் இல்லை -என்பதைச் சொல்ல வந்ததே –
ப்ரஹ்ம ஸூத்ரகாரர் வாக்யகாரர் பாஷ்யகாரர்கள் நித்தியமான சரீரம் காட்டி அருளி யுள்ளார்கள் –
அவதாரங்களிலும் தோற்றம் முடிவு இல்லை -திரைக்குள் இருந்து வெளியே வந்து உள்ளே போவதைப் போலே
பரம பதத்தில் இருந்து வந்து மீண்டும் தன்னுடைச் சோதி எழுந்து அருளுகிறான் -ஸ்ரீ பராசர பட்டர் —

பா ரூப ஸத்ய சங்கல்ப –சாந்தோக்யம்
ஹிரண்மய புருஷ –தைத்ரியம் -சாந்தோக்யம் –
வித்யுத் புருஷாததி –தைத்ரியம்
ஆதித்யவர்ண தமச புரஸ்தாத் -புருஷ ஸூக்தம்
சர்வ காமாந் சர்வ கந்த சர்வ ரஸ –சாந்தோக்யம்
ருக்மாபம் ஸ்வப்நதீ கம்யம் வித்யாத் து புருஷம் பரம் –மனு ஸ்ம்ருதி
புருஷ புண்டரீகாக்ஷ -ஸ்ரீ வராஹ புராணம்
சவைக ரூப ரூபாய –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-1-
ஸ்ரீ வத்ஸ வஷா நித்ய ஸ்ரீ –யுத்த -114-15-
ச ஏவ பகவான் கால சர்வம் ஆத்மவாசம் நயேத்
நாஸ்தி விஷ்ணு பரம் தத்வம் தஸ்ய காலாத் பரா தனு
ஆக திருமேனி இல்லை என்பது பிறர்களைப் போலே ப்ரக்ரிதி சம்பந்த திரு மேனி இல்லை –
அப்ராக்ருதம் -ஆதி யம் சோதி உரு

ந பூத சந்த சமஸ்தாநோ தேஹ அஸ்ய பரமாத்மன–சாந்தி பர்வம்
ந தஸ்ய பிராக்ருதா மூர்த்தி மாம்ஸ மேதி அஸ்தி ஸம்பவா–ஸ்ரீ வராஹ புராணம்
ரூபம் வா அதீந்த்ரியம் அந்தக்கரண ப்ரத்யக்ஷ நிர்தேசாத் –த்ரமிட பாஷ்யம்
அஞ்ஞசைவ விஸ்வஸ்ருஜோ ரூபம்
பூஜை சதுர்ப்பிஸ் சமுபேதம் மம இதம் ரூபம் விசிஷ்டம் திவி ஸம்ஸ்திதம் ச பூமை கதம்
பூஜயத அப்ரமேயம் –மவ்சல பர்வம்
ஸ்வர்கலோகம் ஆகச்ச கதஜ்வர சிரம் ஸூரேந்த்ர குப்தம் கத தோஷ கில்பிஷம் –பால -15-33-
விவேச வைஷ்ணவம் தேஜஸ் ச சரீர சஹானுக –உத்தர -110-12-

பிறப்பு இறப்பு இரண்டும் இல்லாதவர் -ஸ்ரீ சங்கரர்—
பிறப்பு இறப்பு அற்றவர் -முக்ய பிராணனைத் தூண்டுபவர்-
ருத்ரனின் அந்தர்யாமி ந்ருசிம்மனாக இருந்து மன்மதனை எரித்தவர்

தம்மைப் பற்றிய கானத்தைக் செய்பவர்களை அழிக்காதவர் -வாழ்விப்பவர் –
கானத்தில் பிரியம் யுடையவர் ஆதலால் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—-

ஓம் அநாதி நிதந –
ஆதியும் அந்தமும் இல்லா நித்ய யுவாயாய் இருப்பவன் -யுவா குமாரா

தோற்றம் கேடு அவை இல்லாதவன்

————————

  1. ஓம் அநாதிநிதனாய நம:

ஆதிர்ஜன்ம: நிதனம் விநாஶ: தத்த்வயம் யஸ்ய ந வித்யதே ஸ அநாதிநிதன: |

ஆதிர்ஜன்ம‘ஆதி’ என்றால் பிறப்பு நிதனம் விநாஶ‘நிதனம்’ என்றால் அழிவு தத்த்வயம் இந்த இரண்டும் யஸ்ய ந வித்யதே எவருக்கு இல்லையோ  அநாதிநிதன: அவர் ‘அநாதிநிதன’ என்று அழைக்கப்படுகிறார் |

எவருக்கு பிறப்பு மற்றும் இறப்பு இல்லையோ அந்த பகவான் ‘அநாதிநிதன’ (பிறப்பு, இறப்பு அற்றவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

————

42.   அனாதிநிதானா – நித்தியமானவர்

ஆதி ஆரம்பம் நிதானம். எனவே இந்த நாமம் என்பது தொடக்கமும் முடிவும் இல்லாதவர் என்று பொருள்படும். அவனே அனாதி அவனே அனந்தன். அவர் நித்தியமானவர் மற்றும் காலத்திற்கு அப்பாற்பட்டவர். மகாபாரத யுத்தத்தின் முடிவில், பீஷ்மர் யுதிஷ்டிரனிடம், விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் முன்னுரையில், ‘அனாதிநிதானம் விஷ்ணும் சர்வலோக மஹேஸ்வரம்’ என்று பகவான் விஷ்ணுவை ஆரம்பமும் முடிவும் இல்லாத ஒருவராகவும், உயர்ந்தவராகவும் விவரிக்கிறார்.


43-தாதா –
சிருஷ்டிப்பவன் –

இது காரணத்வம்
சேஷித்வம் 4திரு நாமம்
ப்ராப்யம் 12திரு நாமம்
பிராபகம் 18திரு நாமம் சொல்லி–இனி காரணத்வம்
முதல் திருவாய் மொழியில் பரத்வம் சொல்லி காரணத்வம் அடுத்த திருவாய் மொழி

அநிருத்தவ ரூப விளக்கம் இங்கு இல்லை
காரணத்வம் சொல்லும் பிரகரணம்

காரணத்வே நாபி ப்ரஹ் மாதிப்யோ வைலக்ஷண்ய மாஹ –தாதா । த்ருந் । ஏவம் பர்தேத்யாதய: ।
அநிருத்வ ஸ்வரூப: ஸர்வ யோநாவ
சித் ஸமஷ்டி பூதாயாம் ப்ரக்ருதவ் சித் ஸமஷ்டி பூதம் விரிஞ்சாத் மகம் கர்பம் ததாதீதி;

யதா
* மம யோநிர் மஹத் ப்ரஹ்ம தஸ்மிந் கர்பம்
ததாம் யஹம் । மௌல ஸம்ஹிதாயாம்
* தாதா ஷேத்ரே கர்ம பீஜ பூதம் கர்பம் ததாதி, இதி ।
* அப ஏவ ஸ ஸர்ஜ ஆதவ் தாஸு வர்ய மபா ஸ்ருஜத் இத்யாதி ॥ 43 ॥

ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா வன்று நான் முகன் தன்னோடு
தேவர் உலகோடு உயிர் படைத்தான் -4-10-1
தஸ்மின் கர்பம் ததாம் யஹம் –
மீண்டும் -951-தாதா -தர்மத்தை உபதேசிப்பவன்
உலகத்து அற நூல் சிங்காமை விரித்தவன் எம்பெருமான் -பெரிய திருமொழி -10-6-1-

எல்லா அசேதனங்களின் தொகுதியும் -எல்லாவற்றுக்கும் விளைநிலமான மூல பிரக்ருதியில்
சேதனர்களின் தொகுதியாகிய பிரமன் எனும் கர்பத்தைத் தாங்குபவர் –
காரணமாக இருக்கும் போதும் பிரம்மா முதலியவர்களைக் காட்டிலும் வேறுபட்டவர் –ஸ்ரீ பராசர பட்டர் —-
அநிருத்த ஸ்வரூபேண் சர்வ யோனௌ அசித் சமஷ்டி பூதானாம் பிரக்ருதௌ சித் சமஷ்டி பூதம்
பீஞ்சாத்மகம் கர்ப்பம் ததாதி –
அநிருத்தன் வடிவு எடுக்கும் பகவான் நான்முகனை அனைத்துக்கும் இருப்பிடமான ப்ரக்ருதியில்
கருவாக விதைத்து அசேதனம் தோன்ற காரணம்
மம யோநி மஹத் ப்ரஹ்ம தஸ்மிந் கர்ப்பம் ததாம்யஹம் –ஸ்ரீ கீதை -14-3-
தாதா க்ஷேத்ரே கர்ம பீஜ பூதம் கர்ப்பம் ததாதி –மவ்ல சம்ஹிதை
அத ஏவ ச சர்ஜ ஆதவ் தாஸூ வீர்யம் அபாஸ்ருஜத் –மனு ஸ்ம்ருதி

ஆதிசேஷன் முதலிய உருவங்களால் உலகத் தாங்குபவர் -ஸ்ரீ சங்கரர்—

அனைத்து உலகங்களையும் தரித்துக் காப்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—-

ஓம் தாதா நம
நான்முகனை சரீரமாகக் கொண்டவன்

—————

  1. ஓம் தாத்ரே நம:

ஆனந்தாதிரூபேண விஶ்வம் பிபர்தீதி தாதா |

ஆனந்தாதிரூபேண ஆதிசேஷன் முதலான உருவங்களைக்கொண்டு விஶ்வம் இந்த பிரபஞ்சத்தைத் பிபர்தீதி தாங்குவதால் தாதா அவர் ‘தாதா’ என்று அழைக்கப்படுகிறார்.

ஆதிசேஷன் முதலான உருவங்களைக்கொண்டு இந்த பிரபஞ்சத்தைத் தாங்குவதால் பகவான் ‘தாதா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———

தாதா – பிரபஞ்சத்தை உருவாக்கியவர்

தாதா என்பதற்கு கீழே பல அர்த்தங்கள் உள்ளன:

அ) பிரபஞ்சத்தை உருவாக்கியவர் (தா – உற்பத்தி செய்ய, அல்லது தா – மீது வைக்க).

b) ஆதரிப்பவர் மற்றும் நிலைநிறுத்துபவர் (தா – தாரன் போஷணயோய்ச்ச).

c) தன்னைத் தவிர வேறு ஆதரவு இல்லாதவர். இங்கே அடிப்படைப் பெயர் தாதா என்பதை விட அதாதா என்று எடுத்துக் கொள்ளப்படுகிறது.

யாருடைய உதவியும் தேவைப்படாத படைப்பாளி அவர் என்பதால், அவர் தாதா.

————–

44-விதாதா –
கர்ப்பத்தை போஷித்து உற்பத்தி செய்பவன்

படைத்து விட்டு விடாமல் -உந்தி சொல்லி உடனே சங்கு சக்ரம் பாலநத்துக்கு –
லீலா பத்மம் தேன் சொட்டி -பிறந்த நான்முகன் குழந்தைக்கு –
பாலாடை மூலம் பிராட்டி போஷணம்

தம் கர்பம் பரிணமய்ய ஆவிர்பாவயதீதி ச
விதாதா । (விவிதமாக பாலநம் )
* யோ ப்ரஹ் மாணம் விததாதி பூர்வம், இதி;
* அத புநரேவ நாராயண: இத்யுபக்மே ,
* தத்ர ப்ரஹ்மா சதுர்முகோ அஜாயே,
* ஹிரண்ய கர்பம் பஶ்யே ஜாயமாநம்,
*தஸ்மாத் விராட ஜாயத,
* தஸ்மிஞ் ஜஜ்ஜே ஸ்வயம் ப்ரஹ்மா ஸர்வ லோக பிதாமஹ:, இத்யாதி வசநேப்ய: ॥ 44 ॥

யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம்
தஸ்மாத் விராட் அஜாயத
அந்தி போல் நிறத்தாடையும் அதன் மேல் அயனைப் படைத்த தோர் எழில் உந்தி
தாமரை யுந்தி தனிப் பெரு நாயக -திருவாசிரியம் -1
மீண்டும் -485-வரும் விதிப்பவன் -அடக்கி ஆள்பவன்
சாதுவராய்ப் போதுமின்கள் என் தான் நமனும் தந் தூதுவரைக் கூவிச் செவிக்கு -நான் முகன் -68
பரிஹர மது ஸூதன பிரபன்னான் பிரபுர ஹ மன்யன்ருணாம் ந வைஷ்ணவாநாம் –
எம் கோன் அவன் தமர் நமன் தமரால் ஆராயப் பட்டறியார் கண்டீர் –
நமன் தமர் பாசம் விட்டால் அலைப் பூண் உண்ணும் அவ்வவை எல்லாம் அகல கலைப் பல் ஞானத்து என் கண்ணன் -3-2-1-

அந்த கர்ப்பத்தை முதிர வைத்து உற்பத்தி செய்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் —-

தம் கர்ப்பம் பரிணமய ஆவிபாவாவயதிச்ச –

யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் –ஸ்வேதாஸ்வர
அத புநரேவ நாராயண –தத்ர ப்ரஹ்மா சதுர்முகோ அஜாயத்–மஹா உபநிஷத்
ஹிரண்ய கர்ப்பம் பஸ்யத் ஜாய மானம்–தைத்ரியம்
தஸ்மாத் விராட் அஜாயத் -புருஷ ஸூக்தம்
தஸ்மிந் ஜஜ்ஜே ஸ்வயம் ப்ரஹ்மா சர்வ லோக பிதா மஹ–மனு ஸ்ம்ருதி

ஆதி சேஷன் முதலிய உருவங்களால் உலகத் தாங்குபவர் -ஸ்ரீ சங்கரர்—
கர்மங்களையும் அவற்றின் பலன்களையும் உண்டாக்குபவர் –
பூமியைத் தாங்கும் அனந்தன் முதலானோரையும் தாங்குபவர் -ஸ்ரீ சங்கரர்—

கருடனால் தரிக்கப்படுபவர் -தமக்கு ஒரு தாரக போஷகர்கள் இல்லாதவர் -முக்தர்களைத் தாங்குபவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—-

ஓம் விதாதா நம
நான்முகனையும் படைத்து அவன் மூலம் உலகைப் படைத்தவன்

—————

  1. ஓம் விதாத்ரே நம:

கர்மணாம் தத்ஃபலானாம் ச கர்த்தா விதாதா |

கர்மணாம் செயல்களையும் தத்ஃபலானாம் அதன் பலன்களையும் ச கர்த்தா உருவாக்குவதால் விதாதா அவர் ‘விதாதா’ என்று அழைக்கப்படுகிறார் |

செயல்களையும், அவற்றின் பலன்களையும் உருவாக்குவதால் பகவான் ‘விதாதா’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———

விதாதா – அவர் உச்ச கட்டுப்பாட்டாளர்

விதாதா என்றால் உச்ச கட்டுப்பாட்டாளர். அவர் பிரபஞ்சத்தின் விதிகளை வகுத்தார். அவனே விதிகளை வகுத்து ஒருவனுடைய செயலின் பலனை வழங்குபவன். அவர் எல்லோருடைய தலைவிதியையும் ஆள்பவர்.


45-தாதுருத்தம
பிரமனில் சிறந்தவன் –

அதோ
தாதுருத்ம : –
ஸ்ரஷ்டு ருத்க்ருஷ்ட தம :, தண்டா பூபிகயா
தத் ஸ்ருஷ்டேப்ய: ப்ரஜாபதி ப்ரப்ருதிப்யஶ்ச

ப்ரஹ்மாவிட உயர்ந்தவன் தக்ஷனை விட உயர்ந்தவன் சொல்லவும் வேண்டுமோ –
குச்சியை போனபின்பு வடை இருக்குமோ

யதா
* தத்த்வம் நாராயண: பர:,
* ஏதேஷாம் கதமோம் தேவ: பர: கோ வா அதவா அபர:; இதி ப்ருஷ்டே
*பரோ நாராயணோ தேவஸ் தஸ்மாஜ் ஜாதஶ் சதுர்முக: இத்யாதி। ப்ரஹ்ம ருத்ர ஸம்வாத யஜ்ஞ  அக்ரஹணாதாவிதம் ஸ்பஷ்டம் ॥ 45 ॥

பிதா தெய்வக் குழாங்கள் கை தொழக் கிடந்த தாமரை யுந்தி தனிப் பெரு நாயகன் -திருவாசிரியம் -1
தத்வம் நாராயண பர பரோ நாராயணோ ததேவ தஸ்மாத் ஜஜ்ஞே சதுர்முக
நான்முகனை நாராயணன் படைத்தான்
நாத்தழும்ப நான்முகனும் ஈசனுமாய் முறையால் ஏத்த -பெரிய திருமொழி -1-7-8-

உயர்ந்த படைப்பாளி -நான்முகனில் காட்டிலும் முகச் சிறந்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் —-

ஸ்ரஷ்டு உத்க்ருஷ்ட தம தண்டா பூபிகா தத் ஸ்ருஷ்டப்ய க பிரஜாபதி
பூமி முதலிய தாதுக்களைக் காட்டிலும் சிறந்த ஞான வஸ்து –
விசேஷணத்துடன் கூடிய ஒரே நாமம் -சாமாநாதிகரண்யத்தால் -பிரமன் முதலியவர்களில் காட்டிலும் மேம்பட்டவர்
அல்லது -வையதிகரண்யத்தால் இரண்டு நாமமாகவும் கொள்ளலாம் –
கார்யம் காரணம் இரண்டுமாக இருக்கின்ற பிரபஞ்சத்தை தாங்கும்

தத்வம் நாராயண பர –தைத்ரியம்
ஏதேஷாம் கதமோ தேவ பர கோ வா அதவா அபரா –பரோ நாராயண தேவ தஸ்மாத் ஜாத சதுர்முக -ஸ்ரீ வராஹ புராணம்

சித்த ஸ்வரூபி -ஸ்ரீ சங்கரர்—
நான்முகனை விட மிக உயர்ந்தவர் -வினையடியை யுடைய சொற்களுக்கு பொருளாக உள்ளவர்களில் மிக உயர்ந்தவர் –

வினைச் சொற்கள் பெயர்ச் சொற்கள் முதலியவற்றைப் பயன்படுத்துவதில் வல்லவரான
ஸ்ரீ ஹனுமானால் விரும்பப் படுபவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—-

ஓம் தாதுருத்தம நம
அந்த நான்முகனைக் காட்டிலும் உயர்ந்தவன்

————-

  1. ஓம் தாதவ உத்தமாய நம:

அனந்தாதீனாமபி தாரகத்வாத் விஶேஶேண ததாதீதி வா தாதுருத்தம இதி நாமைகம் ஸமானாதிகரண்யேன ஸர்வதாதுப்ய: ப்ருதிவ்யாதிப்ய: உத்க்ருஷ்டஸ்சித்தாதுரித்யர்த்த: |

அனந்தாதீனாமபி ஆதிசேஷன் முதலானவர்களையும் தாரகத்வாத் தாங்குபவர் விஶேஶேண குறிப்பாக, அவர்களுக்குத் தாங்கும் சக்தியைத் ததாதீதி வா தருபவர் தாதுருத்தம இதி ‘தாதுருத்தம’ என்று அழைக்கப்படுகிறார் நாமைகம் இது ஒரே திருநாமமாகும் விஶேஶேணம் பகவானின் தனிப்பட்ட சக்தியால் ஸமானாதிகரண்யேன முன்னர் கூறப்பட்ட (தாதா என்ற) திருநாமத்துடன் தொடர்புடையதாகப் பொருள் கொள்ளவேண்டும்.

ஸர்வதாதுப்ய: (இந்த ப்ரபஞ்சத்தையும், அதிலுள்ளவைகளையும் தாங்கும் ஆதிசேஷன் முதலான) அனைத்துத் தாதுக்களைக் (தாங்குபவர்களைக்) காட்டிலும் ப்ருதிவ்யாதிப்ய: பூமி முதலானவைகளைக் காட்டிலும் உத்க்ருஷ்டஸ்சித்தாதுரித்யர்த்த: சிறந்தவர் என்பதே இந்த திருநாமத்தின் தேர்ந்த பொருளாகும்.

(முன்னர் தாதா என்ற திருநாமத்தில் கூறப்பட்டுள்ள) ஆதிசேஷன் முதலானோருக்கும் (பிரபஞ்சத்தை) தாங்கும் சக்தியை அளித்து, அவர்களையும் (அந்த சக்தியை அளிப்பதன் மூலம்) தாங்குவதால் பகவான் ‘தாதுருத்தம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஆதிசேஷன், பூமி முதலானோர் ‘தாதா’; அவர்களையும் தாங்குவதால் பகவான் தாதுக்களில் சிறந்தவர், ‘தாதுருத்தம:’.

தாதுர் விரிஞ்சேருத்க்ருஶ்ட (விரிஞ்சேர் உத்க்ருஶ்ட) (தாதுருத்தம:) இதி வா வையதிகரண்யேன |

தாதுர் அனைத்தையும் படைக்கும் விரிஞ்சேருத்க்ருஶ்ட (விரிஞ்சேர் உத்க்ருஶ்ட) (நான்முகக்கடவுள்) ப்ரஹ்மாவை விட மேலானவர் (தாதுருத்தம:) இதி வா வையதிகரண்யேன இவ்வாறு, மேலே கூறப்பட்ட (தாதா என்ற) திருநாமத்துடன் தொடர்பு கொள்ளாமல், இந்த திருநாமத்திற்கு இவ்வாறும் பொருள் கொள்ளலாம்.

(முன்னர் கூறப்பட்ட தாதா என்ற திருநாமத்துடன் சேர்க்காமல் தனித்துப் பொருள் கொண்டால்): அனைத்தையும் படைக்கும் (இந்த உலகில் உள்ள அனைத்திற்கும் மூல காரணமாய் இருக்கும்) நான்முகக் கடவுளாகிய ப்ரஹ்மாவைக் காட்டிலும் உயர்ந்தவர் என்பதால் பகவான் ‘தாதுருத்தம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நாமத்வயம் வா அல்லது (தாது, உத்தம என்று) இரண்டு திருநாமங்களாகக் கொண்டால்;

கார்யகாரணப்ரபஞ்சதாரணாச்சிதேவ இந்த ப்ரபஞ்சம் அனைத்திற்கும் காரணமாகவும், அதில் நடைபெறும் செயல்களாகவும் உள்ள அறிவாக இருப்பதால் தாது: அவர் தாது (அனைத்திற்கும் காரணம்) என்று அழைக்கப்படுகிறார்.

இந்த ப்ரபஞ்சத்தின் காரணமாகவும் அதில் நடைபெறும் அனைத்துக் காரியங்களாகவும் அறிவின் வடிவாக பகவானே இருப்பதால் அவர் தாது என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அத்வைதத்தின் படி பரப்ரஹ்மம் ஒன்றே தத்துவம். இந்த ப்ரபஞ்சம் அனைத்துமே அந்த ப்ரஹ்மம் மாயையில் பட்டு ப்ரதிபலிப்பதால் உருவாகிறது. இந்த ப்ரஹ்மம் சின்மயமாக (அறிவு வடிவாக) உள்ளது.

உத்தம: ஸர்வேஷாம் அனைத்து உத்கதானாம் சிறப்புடையவர்கள் மற்றும் சிறந்த பதார்த்தங்களைக் காட்டிலும் அதிஶயேனோத்கதத்வாத் மிகச்சிறந்தவரானபடியால் உத்தம: அவர் ‘உத்தமர்’ என்று அழைக்கப்படுகிறார்.

அனைவரையும், அனைத்தையும் காட்டிலும் சிறந்தவரானபடியால் பகவான் ‘ உத்தமர்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

———–

தாதுருத்தமா – ஒவ்வொரு விஷயத்திற்கும் இறுதி ஆதரவு

அ) பிரம்மத்தை விட மிக உயர்ந்தவர் (தாதர்)

b) அனைத்து அடிப்படைக் கூறுகளிலும் சிறந்தது

முதல் விளக்கம் சுய விளக்கமளிக்கும் மற்றும் இது முந்தைய இரண்டு நமஸ் தாதா மற்றும் விதாதாவின் நீட்டிப்பு மட்டுமே. மற்ற விளக்கம் தாது என்ற வார்த்தையின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது, அதாவது – அடிப்படை உறுப்பு அல்லது அடிப்படைக் கூறு. அவர் எல்லாவற்றின் இறுதியான அங்கமாக இருக்கிறார், எனவே அவர் தாதுருத்தமாவார்.

ஸ்ரீ ஆதி சங்கரர் இதை 2 வெவ்வேறு நாமங்களாகக் கருதுகிறார் – தாது மற்றும் உத்தமா. தாது என்பது பிரபஞ்சத்தின் அடிப்படை கட்டுமானப் பொருள். உத்தமம் என்றால் பிரபஞ்சத்தின் மிக உயர்ந்த சக்தி என்று பொருள்.


37-ஸ்வயம்பூ –
தம் மகிழ்ச்சிக்காக தம் இச்சையினால் தமக்கே சிறப்பாக உள்ள சத்வ திருமேனியை தேவாதி யோனிகளில் அமைத்துக் கொண்டு அவதரிப்பவர் –
ப்ரஹ்மாதிகள் இவரது வசம் -பிரகிருதி ஜீவன் இவரது யுடைமையாக இருந்தாலும் சுத்த சத்வம் அசாதாரணம் –
அனைத்தும் அவனுடைய போகத்திற்காக இருப்பதால் என்னுடைய பிரகிருதி -என்று அவனால் கூறப்பட்டது -ஸ்ரீ பராசர பட்டர் —
ஸ்வ லீலாபரம –பிரயோஜனாதி ஸ்வேச்சாயா ஸ்வ சாதாரணீம் பரம சத்வ மயம் பிரக்ருதிமீவ
ஸூ ர நர ஜாதீய சந்நிவேசாம் அதிஷ்டாய ஸ்வயமேவ பவதி –

தாமே யுண்டானவர் -எல்லாவற்றுக்கும் மேலாக தாமே இருப்பவர் -ஸ்வ தந்த்ரர் -பரதந்த்ரர் அல்ல -எல்லாவுமாய் இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்—-

தாமே யுண்டாகுபவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்—-

————————————————————————————————————

38-சம்பு –
அழகு எளிமை குணங்களை வெளிப்படுத்தி பேரின்பத்தை விளைப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
ஏவம் ஸ்வ சௌந்தர்யாதி சௌசீல்யாதி குணாவிஷ்காரேண் ஸூ கம் பாவயதியாதி –

பக்தர்களுக்கு இன்பத்தைத் தருபவர் -ஸ்ரீ சங்கரர்—

சிகத்தை அளிப்பவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்—-

————————————————————————————————————-

39-ஆதித்ய –
சூர்ய மண்டலத்தில் வசிப்பவர் -அவதாரங்களுக்கு எல்லாம் உதாரணமாக சூர்ய மண்டலத்தில் உள்ள புருஷனைக் கூறுகிறார் -ஸ்ரீ பராசர பட்டர் —

பக்தர்களுக்கு இன்பத்தைத் தருபவர் -ஸ்ரீ சங்கரர்—
சூர்ய மண்டலத்தில் இருப்பவர் -ஒரேசூர்யன் பிரதிபலிப்பது போலே  பரமாத்மா ஒருவரே பல உடல்களில் தோற்றுவதால் சூர்யன் போன்றவர் –
பன்னிரண்டு ஆதித்தியர்களில் விஷ்ணுவாக இருப்பவர் -அதிதியாகிய  பூமிக்கு பதியாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்—

சூர்ய மண்டலத்தில் இருப்பவர் -அங்கே இருந்து கொண்டு பூமியின் நீரை ஆவியாக வற்றச் செய்பவர்-
உபேந்திர ரூபத்துடன் அதிதிக்கு மைந்தனாக அவதரித்தவர் -க்ரஹிப்பவர் -செல்பவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்—-

—————————————————————————————————————-

40-புஷ்கராஷா-
சர்வேஸ்வரனுக்கு உரிய இலக்கணமான தாமரை கண்களை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
-சர்வ ஐஸ்வர்ய அசாதாராண லஷணம் புண்டரீகாஷத்வம் சங்கமயதி

தாமரையை ஒத்த திரு கண்களை யுடையவர் -ஸ்ரீ சங்கரர்—

தாமரை போன்ற இரு கண்களை யுடையவர் -எண்ணற்ற கண்களை யுடையவர் –
புஷ்டியைத் தருபவர் -அழிவில்லாதவர்  -ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்—-

————————————————————————————————————

41- மஹாஸ்வந-
மிகவும் உயர்ந்த சப்தங்களை திரு நாமமாக யுடையவர் -வேத சப்தத்தை யுடையவன் -பூஜ்யமான சாவித்ரி
மந்தரத்தால் பிரதிபாதிக்கப் படுபவன் -ஸ்ரீ பராசர பட்டர் —-மஹா பூஜ்யான ஸ்வ நக சப்த யச்யேதி-மஹாஸ்வந-

மிகவும் உயர்ந்த சப்தமாகிய வேதத்தை லஷணமாக யுடையவர் -ஸ்ரீ சங்கரர்—

ஆதரவற்ற நல்லோரை தம்மிடத்துக்கு அழைத்துச் செல்லும் மேன்மை யுடையவர் -மேன்மை கொண்ட வாயுவைத் தூண்டுபவர் –
கம்பீரமான குரலுடையவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்—-

————————————————————————————————————-

42-அநாதி நிதந –
நித்ய யுவா -ஷட்பாவம் இல்லாத திருமேனி யுடையவர் -ஆத்ம ஸ்வரூபத்தை சொல்லுவது அல்ல -சகல ஆத்மாக்களும் நித்யம் ஆகையாலே –
திவ்ய மங்கள விக்ரஹ ஸ்வரூபத்தை சொல்கிறது -தோஷமற்ற -நீலக் கடலில் உள்ள மின்னல் போன்ற
அழகிய இளமை பொருந்திய -எல்லாக் காலத்திலும் காரணமாக  இருப்பதாலும்
ஞானத்தைப் போலே அவன் ஸ்வரூபத்தை காட்டும் அடையாளமாக இருப்பதாலும்
தமஸ் ஸூக்கு அப்பால் -அஷரம் -கால அதீதம் அப்பால் பட்டு -உபாசிப்பவர் பெரும் நித்யமான சாரூப்யம் -நித்யமாக விளங்கும் திரு மேனி –
உருவம் இல்லை என்கிற சுருதி வாக்யங்கள் உலகோர் போல தாழ்ந்த உருவம் இல்லை -என்பதைச் சொல்ல வந்ததே –
ப்ரஹ்ம  ஸூத்ரகாரர் வாக்யகாரர் பாஷ்யகாரர்கள் நித்தியமான சரீரம் காட்டி அருளி யுள்ளார்கள் –
அவதாரங்களிலும் தோற்றம் முடிவு இல்லை -திரைக்குள் இருந்து வெளியே வந்து உள்ளே போவதைப் போலே
பரம பதத்தில் இருந்து வந்து மீண்டும் தன்னுடைச் சோதி எழுந்து அருளுகிறான் -ஸ்ரீ பராசர பட்டர் —-

பிறப்பு இறப்பு இரண்டும் இல்லாதவர் -ஸ்ரீ சங்கரர்—
பிறப்பு இறப்பு அற்றவர் -முக்ய பிராணனைத் தூண்டுபவர்-ருத்ரனின் அந்தர்யாமி நருசிம்மனாக இருந்து மன்மதனை எரித்தவர்

தம்மைப் பற்றிய கானத்தைக் செய்பவர்களை அழிக்காதவர் -வாழ்விப்பவர் -கானத்தில் பிரியம் யுடையவர் ஆதலால் -ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்—-

——————————————————————————————————————

43- தாதா-
எல்லா அசேதனங்களின் தொகுதியும் -எல்லாவற்றுக்கும் விளைநிலமான மூல பிரக்ருதியில் சேதனர்களின் தொகுதியாகிய
பிரமன் எனும் கர்பத்தைத் தாங்குபவர் –
காரணமாக இருக்கும் போதும் பிரம்மா முதலியவர்களைக் காட்டிலும் வேறுபட்டவர் –ஸ்ரீ பராசர பட்டர் —-
அநிருத்த ஸ்வரூபேண் சர்வ யோனௌ அசித் சமஷ்டி பூதானாம் பிரக்ருதௌ சித் சமஷ்டி பூதம் பீஞ்சாத்மகம் கர்ப்பம் ததாதி –

ஆதிசேஷன் முதலிய உருவங்களால் உலகத் தாங்குபவர் -ஸ்ரீ சங்கரர்—

அனைத்து உலகங்களையும் தரித்துக் காப்பவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்—-

————————————————————————————————————–

44-விதாதா –
அந்த கர்ப்பத்தை முதிர வைத்து உற்பத்தி செய்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் —-தம் கர்ப்பம் பரிணமய ஆவிபாவாவயதிச்ச –

ஆதி சேஷன் முதலிய உருவங்களால் உலகத் தாங்குபவர் -ஸ்ரீ சங்கரர்—
கர்மங்களையும் அவற்றின் பலன்களையும் உண்டாக்குபவர் -பூமியைத் தாங்கும் அனந்தன் முதலானோரையும் தாங்குபவர் -ஸ்ரீ சங்கரர்—

கருடனால் தரிக்கப்படுபவர் -தமக்கு ஒரு தாரக போஷகர்கள்  இல்லாதவர் -முக்தர்களைத் தாங்குபவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்—-

——————————————————————————————————-

45-தாதுருத்தம –
உயர்ந்த படைப்பாளி -நான்முகனில் காட்டிலும் முகச் சிறந்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் —-
ஸ்ரஷ்டு உத்க்ருஷ்ட தம தண்டா பூபிகா தத் ஸ்ருஷ்டப்ய க பிரஜாபதி
பூமி முதலிய தாதுக்களைக் காட்டிலும் சிறந்த ஞான வஸ்து -விசேஷணத்துடன் கூடிய ஒரே நாமம் -சாமாநாதிகரண்யத்தால் -பிரமன்
முதலியவர்களில் காட்டிலும் மேம்பட்டவர்
அல்லது -வையதிகரண்யத்தால் இரண்டு நாமமாகவும் கொள்ளலாம் -கார்யம் காரணம் இரண்டுமாக இருக்கின்ற பிரபஞ்சத்தை தாங்கும்

சித்த ஸ்வரூபி -ஸ்ரீ சங்கரர்—
நான்முகனை விட மிக உயர்ந்தவர் -வினையடியை யுடைய சொற்களுக்கு பொருளாக உள்ளவர்களில் மிக உயர்ந்தவர் –

வினைச் சொற்கள் பெயர்ச் சொற்கள் முதலியவற்றைப் பயன்படுத்துவதில் வல்லவரான
ஸ்ரீ ஹனுமானால் விரும்பப் படுபவர்-ஸ்ரீ சத்ய  சந்த தீர்த்தர்—-

——–

மனித உடலைப் போலல்லாத திவ்ய மங்களத் திருமேனியைத்
தனது விருப்பப்படி தானே எம்பெருமான் உருவாக்கிக்கொண்டதால், அவன் ‘ஸ்வயம்பூ:’ என்று அழைக்கப்படுகிறான்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 37-வது திருநாமம்.
“ஸ்வயம்புவே நமஹ:” என்று தினமும் ஜபம் செய்பவர்கள் குன்றாத இளமையோடும் ஆரோக்கியத்தோடும் திகழ்வார்கள்.

தன் அழகாலும் குணங்களாலும் அடியார்களுக்கு ஆனந்தம் தரும் எம்பெருமான் ‘சம்பு:’ என்றழைக்கப்படுகிறான்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 38-வது திருநாமம்.
“சம்பவே நமஹ:” என்று தினமும் சொல்லி வந்தால், நமக்கும் நீங்காத ஆனந்தம் வாழ்வில் கிட்டும்.

உலகில் துன்பத்தால் வாடும் அடியவர்கள் ஒவ்வொருவரையும் காப்பதற்காக
சூரிய மண்டலத்தின் மத்தியில் நாராயணன் எழுந்தருளியுள்ளான்.
தினமும் சந்தியாவந்தனம் செய்யும் போது “த்யேயஸ் ஸதா ஸவித்ரு மண்டஸ மத்யவர்த்தி நாராயண:” என்று
இந்த எம்பெருமானை தியானிக்கச் சொல்கிறது வேதம். ஆதித்தியனுக்குள்ளே (சூரியனுக்குள்ளே) எழுந்தருளியிருப்பதால்
அவ்வெம்பெருமான் ‘ஆதித்ய:’ என்று அழைக்கப்படுகிறான்.
“ஆதித்யாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அடியார்களை ஆபத்திலிருந்து அவன் காத்தருள்வான்.

ஆளுமை செலுத்தும் அசாதாரணமான தாமரைக் கண்களை உடைய ‘அண்ணல் கண்ணனாக’ விளங்குவதால்
எம்பெருமானுக்கு ‘புஷ்கராக்ஷ:’ என்று திருநாமம்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 40-வது திருநாமம்.
“புஷ்கராக்ஷாய நமஹ:” என்று தினமும் சொல்லி வந்தால், அவனது தாமரைக் கண்களின் நோக்குக்கு நாமும் இலக்காகலாம்.

தன்னுடைய கனைப்பு ஒலியினுள்ளே வேத மந்திரங்களைப் பொதித்து வைத்திருக்கும்
ஹயக்ரீவப் பெருமாள் ‘மஹாஸ்வன:’ என்றழைக்கப்படுகிறார்.
‘ஸ்வன:’ என்றால் ஒலி என்று பொருள். வேத ஒலிகளைத் தன்னுள் ஒளித்து வைத்துள்ள ஒளிமிக்க திருமேனியை உடைய
ஹயக்ரீவரைத் தியானித்தபடி “மஹாஸ்வனாய நம:” என்று தினமும் ஜபித்துவரும் மாணவ மாணவிகள்
பரிமுகப் பெருமாளின் பரமானுக்கிரகத்துக்குப் பாத்திரமாகிக் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

ஆதியந்தம் இல்லாத மாறாத திருமேனியோடு விளங்குவதால் எம்பெருமான் ‘அனாதிநிதன:’ என்றழைக்கப்படுகிறான்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 42-வது திருநாமம்.

நாமும் உடலாலும் உள்ளத்தாலும் இளைஞர்களாக வாழ ஸ்ரீலக்ஷ்மீ நரசிம்மரின் மறுவடிவமாகவே விளங்கிய
முக்கூர் ஸ்ரீமத் அழகிய சிங்கரையும், கண்ணபிரானையும் எண்ணியபடி, “அனாதிநிதனாய நம:” என்று தினமும் சொல்வோம்.

உலகுக்கு மூலப்பொருளான மூலப்பிரகிருதியில் நான்முகனைக் கருவாக விதைத்து அதன் மூலம் உலகையே
படைக்கும் திருமால் ‘தாதா’ (Dhaathaa) என்று அழைக்கப்படுகிறான்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 43-வது திருநாமம்.
“தாத்ரே நம:” என்று தினமும் சொல்லி வருபவர்களுக்கு விதுரரைப் போன்ற நல்ல பிள்ளைகளும், பேரன்களும் பிறப்பார்கள்.

“மூலப் பிரகிருதியில் பிரம்மாவைக் கருவாகத் திருமால் விதைப்பதால் அவர் ‘தாதா’ என்றழைக்கப்படுகிறார்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 43-வது திருநாமம்.
தான் விதைத்த கருவை நான்கு முகங்கள் கொண்ட பிரம்மதேவராகத் தன் அருட்பார்வையால் வளரச் செய்கிறார்.
அவ்வாறு கருவை வளரச்செய்வதால் ‘விதாதா’ என்று ஸஹஸ்ரநாமத்தின் 44-வது திருநாமத்தால் போற்றப்படுகிறார்.
கருவை விதைப்பவர் தாதா, விதைத்த கருவை வளர்ப்பவர் விதாதா.
காந்தாரியின் கருவிலிருந்து வந்த மாமிசத் துண்டுகளைக் குழந்தைகளாக வளரச் செய்ய வேண்டுமென்று திருமாலைப் பிரார்த்தித்து
“விதாத்ரே நமஹ:” என்று ஜபித்தார் வியாசர். அவ்வாறே அவையும் குழந்தைகளாக உருவெடுத்து வந்தன.”
“விதாத்ரே நம:” என்று சொல்லிவரும் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆரோக்கியமான பிள்ளைகள் பிறப்பார்கள்.

படைப்புக் கடவுளான பிரம்மாவுக்கு “தாத்ரு” (Dhaathru) என்று பெயருண்டு.
அந்த தாத்ருவான பிரம்மாவைக் காட்டிலும் உயர்ந்தவனாக இருந்துகொண்டு, அவர் நம் தலைகளில் எழுதும் தலையெழுத்தையே
மாற்றவல்லவனாக விளங்கும் எம்பெருமான் ‘தாதுருத்தம:’ –
பிரம்மாவைக் காட்டிலும் உயர்ந்த படைப்பாளி என்று போற்றப்படுகிறான். நம் தலையெழுத்தையும் நல்ல விதமாக மாற்றி அமைக்க
ஸ்ரீராமனையும் அவனது பாதுகைகளையும் வேண்டிக் கொண்டு “தாதுருத்தமாய நம:” என்று தினமும் சொல்வோம்.

———————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading