Archive for November, 2022

ஸ்ரீ திருவாய் மொழி -8-10—நெடுமாற் கடிமை செய்வேன்– ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

November 14, 2022

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழி -8-9–கரு மாணிக்க மலை மேல்— ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

November 14, 2022

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழி -8-8—கண்கள் சிவந்து— ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

November 14, 2022

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழி -8-7—இருந்தும் வியந்து– ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

November 14, 2022

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழி -8-6–எல்லியும் காலையும்– ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

November 14, 2022

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழி -8-5–மாயக் கூத்தா! வாமனா!– ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

November 13, 2022

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழி -8-4–வார்கடா அருவி யானைமா மலையின்– ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

November 13, 2022

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழி -8-3–அங்கும் இங்கும் வானவர் தானவர்– ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

November 13, 2022

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழி -8-2—நங்கள் வரிவளை யாயங்காளோ- ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

November 13, 2022

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழி -8-1–தேவிமாராவார்– ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

November 13, 2022

***- பிரிவில் தரித்திருக்க வொண்ணாதபடி பரம போக்யதை வாய்ந்திருக்கிற நீ உன்னை நான் காணும்படி. அருள்புரியவேணு மென்கிறார். இப்பாட்டில்.

தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார்
மேவிய வுலகம் மூன்றவை யாட்சி வேண்டு வேண்டுருவம் நின்னுருவம்
பாவியேன் தன்னை யடுகின்ற கமலக் கண்ணது ஓர் பவளவாய் மணியே
ஆவியே அமுதே அலை கடல் கடைந்த அப்பனே காணுமாறு அருளாயே–8-1-1-

பதவுரை

தேவிமார் ஆவார்

(உன் அழகுக்கும் பெருமைக்கும் தகுதியான) தேவிகளாயிருப்பவர்கள் (யாவரென்னில்)
திரு மான் பூமி மற்று

ஸ்ரீதேவியும் பூதேவியுமாவர் அதற்கு மேலே
ஏவ ஆட்சிசெய்வார்

(நீ அந்த திவ்ய மஹிஷிதனோடுகூட) ஆஜ்ஞாபிக்க (அக்கட்டளையின்படி) அடிமைசெய்பவர்கள் யாரென்னில்)
அமரர்

நித்யஸூரிகள்
ஆட்சி

உனது ஆளுகைக்கு உட்பட்ட பொருளோவென்னில்
மேவிய ன்று உலகம் அவை

பொருந்திய மூவுலகங்களுமாம்
நின் உருவம்

உனக்கு அஸாதாரணரூபங்களோ வென்னில்,
வேண்டு வேண்டு உருவம்

இஷ்டப்படி பரிக்ரஹிக்கிற திவ்ய வுருவங்களாம் (இப்படிகளை அடியேனுக்குக் காட்டிக்கொடுத்த வளவேயன்றிக்கே)
பாவியேன்தன்னை அடுகின்ற

பாவியான என்னை முடிக்க  வந்தது போன்றிருக்கின்ற
கமலம் கண்ணது

செந்தாமரை கண்களும்
ஓர் பவளம் வாய்

ஒப்பற்ற பவளம் போன்ற அதர சோபையுமுடைய
மணியே

பரஞ்சோதியானவனே!
அமுதே

ஆராவமுதமே!
அலை கடல் கடைந்த அப்பனே

அலையெறிகின்ற கடலைக் கடைந்த அமுதமளித்தபிரானே!
காணும் ஆறு அருளாய்

(உன்னை நான்) கண்ணாரக்காணும் வகை அருளவேணும்.

தேவிமாராவார் திருமகள் பூமி – திருமகளும் மண்மகளும் எம்பெருமானுக்குத் தேவிமார் என்பது அனைவருமறிந்ததே,

அதனை இங்கு சொல்லுவதற்கு ப்ரயோஜனம் என்னென்னில், குற்றங்களைப் பொறுப்பிந்தது, சீற்றத்தை யாற்றுவித்துப் புருஷகாரஞ செய்யக் கடமைப்பட்ட திவ்யமஹிஷிகள் அருகேயிருக்கச் செய்தேயும் நான் கிலேசப்பட வேண்டியிருக்கிறதே! இது தகுதியோவென்று காட்டுகிறபடி.

ஏவ மற்றமரர் ஆட் செய்வார் – “அமரர்கள் ஆட்செய்பவர்கள்“ என்றால் போராதோ? “ஏவ“ என்றும் கூறவேணுமோ யென்னில், ஆம், கூறவேணும், ஆட்செய்தலாகிற போராதோ?எப்படி உத்தேச்யமோ, அப்படியே ஏவிக்கொள்ளுகையும் உத்தேச்ய மென்பது சரஸ்த்ரார்த்தம்.

* ஸ்வயம் துருசிரே தேசே க்ரியதாமிதி மாம் வத * என்று இளையபெருமாள் கூறினது காண்க, ஏவிக்கொள்ள வேணுமென்றன்றோ அவர் வேண்டினது.

ஏவுகிறகாலத்தில் கம்பீரமான திரு தேவனுமான சேர்த்ததில் கிட்டி நின்று அடிமை செய்வா நித்யஸூரிகள். இவர்களும் புருஷகார பூதர்களென்னுங் கருத்தானால் இங்குக் கூறப்படுகிறார்கள்.

* வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிந்து * என்பவாதலால்.

ஆக, தேவிமாரும் நித்ய ஸூரிகளுமாகிற புருஷகார பூதர்களிருக்கவும் நான் இழக்கலாமோ? என்பது உள்ளுறை.

புருஷகாரஞ் செய்யவல்லவர்கள் குறையற இருந்தாலும் காரியஞ் செய்யவேண்டியவனுக்கு ஐச்வர்யத்தில் குறையிருந்தால் பயனில்லையே, அக்குறையுமில்லை யென்கிறது மேவியவுலகம் மூன்றவையாட்சி என்பதனால்,

மூவுலகங்களையுங் காப்பதற்காகத் தன் விருப்பத்தின்படியே அபரிமிதமான விக்ரஹங்களைப் பரிக்ரஹிக்கவல்லவன் என்கிறது வேண்டு வேண்டுருவம் நின்னுருவம் என்பதனால்,

ரக்ஷணத்திற்கு வேண்டிய (இன்றியமையாத) உருவம் என்றாவது தன் திருவுள்ளத்திற்கு இசைந்த வுருவம் என்றாவது பொருள் காண்க.

ஆக முன்னடிகளிற்சொன்ன பெருமைகளெல்லாம். பொருந்தியிருந்தும் தமக்கு இழவேயான வருத்தந்தோன்றப்பாவியேன் என்கிறார்.

அப்பெருமானுடைய கமலக்கண்களும் பவளவாயும் வடிவுமே தமக்குத் தாரம்மென்னுமிடம் தோற்றப்பின்னடிகள் அருளிக்செய்கிறார்.

அலைகடல் கடைந்தவப்பனே! காணுமாறருளாய் – உன்னை விரும்பாமல் பிரயோஜநாந்தரங்களையே விரும்புமவர்களுக்குங் காரியம் செய்யுமவனன்றோ நீ,

எனக்கு, தேவர்களுக்குப்போலே கடல் கடைய வேண்டா, கமலக்கண்ணும் பவளவாயும் வடிவுமான அழகைக் காட்டினால் போதும் –என்றாராயிற்று

———

காணுமாறு அருளாய் என்று என்றே கலங்கிக் கண்ண நீர் அலமர வினையேன்
பேணுமாறு எல்லாம் பேணி நின் பெயரே பிதற்றுமாறு அருள் எனக்கு அந்தோ
காணுமாறு அருளாய் காகுத்தா !கண்ணா !தொண்டனேன் கற்பகக் கனியே !
பேணுவாரமுதே !பெரிய தண் புனல் சூழ் பெரு நிலம் எடுத்த பேராளா !–8-1-2-

பதவுரை

காணும் ஆறு அருளாய் என்று என்றே

(உன்னை நான்) காணும் வகை செய்தருளவேணுமென்று பலகாலும் சொல்லிக்கொண்டே
கலங்கி

(ஆசைப்பட்டபடி காணப்பெறாமையாலே) கலக்கங்கொண்டு
கண்ண நீர் அலமா

கண்ணீர் பரவாநிற்க,
வினையேன்

(காணப்பெறாத) பாவத்தை யுடையேனான நான்
பேணும் ஆறு எல்லாம் பேணி

(தூதுவிடுகை மடலெடுக்கை முதலாக) எதுஎது செய்யலாமென்று நினைத்தேனோ அதுவெல்லாம் செய்தும் (கிடையாமையாலே)
நின் பெயரே பிதற்றும் ஆறு எனக்கு அருள்

உனது திருநாமங்களையே பிதற்றிக்கொண்டிருக்கம்படியான விதுலேயன்றோ எனக்கு நீ செய்து கொடுத்தவருள்
அந்தோ

ஐயோ! (இவ்வளவேயோ நான் பெற்ற பாக்கியம்!)
காகுத்தர்

இராமனாய்த் தோன்றி எளியனானவனே!
தொண்டனேன் கற்பகம் கனியே

அடியேனக்குக் கல்பவ்ருக்ஷ பலனாகத்தோன்றியிருப்பவனே!
டேணுவார் அமுதே

ஆசைப்பட்டவர்களுக்கு அமுதம் போன்றவனே!
பெரிய தண் புனல் சூழ் பெரு நிலம் எடுத்த பேராளா

விசாலமாய்க் குளிர்ந்த பிரளய வெள்ளத்திலே யழுந்தின மஹாபூமியை உயரவெடுத்த மஹாநுபாவனே!
காணும் ஆறு அருளாய்

(உன்னைநான்) காணும்படி க்ருபை பண்ணவேணும்.

***- “காணுமாறருளாய்“ என்று பிரார்த்தித்தவளவிலும் அருள்செய்யாவிடில் “இவ்வருள் கிடக்கட்டும், நாம் நமது முயற்சியாலே காணப்பெறுவோம்“ என்று நினைத்து ஸ்வப்ர வ்ருத்தியிலே ஊன்றுமவரல்லலே ஆழ்வார்.

எத்தனையுகமானாலும் அவனே காட்டக் காணவேணுமென்கிற விருப்பமொன்றே உடையாரன்றோ.

* எத்தனையும் வான்மறந்த காலத்தும் பைங்கூழ்கள் மைத்தெழுந்த மாமுகிலே பார்த்திருக்கும் * என்றாப்போலே அத்தலையில் அருளையே பார்த்து “காணுமாறருளாய், காணுமாறருளாய், காணுமாறருளாய்“ என்றே இந்த வாக்கியத்தையே உருப்போடுமவரன்றோ

அப்படி உருப்போட்டும் காணப்பெறாதவாறே கலங்குவர், கலங்கிய கலக்கம் உள்ளடங்காமல் கண்ணீராய்ப் பெருகும்,

ஆக இப்படி துடித்துக் கொண்டிருக்கின்றேனே, இவ்வருளேயன்றோ என் திறத்தில் நீ செய்திருப்பது,

இதற்குமேல் ஒன்று செய்யத் திருவுள்ளமில்லையோ? இவ்வளவேயோ என் திறத்தில் அருள் செய்யலாவது? என்கிறார்.

வினையேன் என்கிறவிடத்து நம்பிள்ளையீடு காண்மின் – “இதுக்குமின்பு இவ்வஸ்துவைக் காண ஆசைப்பட்டாரில் கலங்கிக் கண்ணநீர் பாய்ந்தறிவாரில்லைகிடீர், காணவேணுமென்கிற ஆசாலேமுடையார்க்குத் தன்னைக்காட்டி அவர்கள் கண்ணநீரையும் துடைக்குமவனை ஆசைப்பட்டுக்கிடையாதே கண்ணுங் கண்ணிருமாம்படியான பாபத்தைப் பண்ணினேன்.“ என்று.

பேணுமாறெல்லாம் பேணி என்ற தன் கருத்தாவது – ஆர்த்தியின் கனத்தாலே நான் எது எது செய்ய ஆசைப்பட்டேனோ அதையெல்லாஞ் செய்து முடித்தும், அதாவது தூது விட்டும் அயோக்யதாநுஸந்தானம் பண்ணி அகன்றும், அவன் விரும்பாத நானும் என்னுடைமையும் வேண்டாவென்று வெறுத்தும், மடலெடுக்க முயன்றும், பலகால் ப்ரபத்திபண்ணியும் ஆக இவையெல்லாஞ் செய்தும் என்றபடி.

இவ்வளவாக நான் செய்தும் பெற்ற பயன் உன்னுடைய திருநாமங்களையே பிதற்றுவது தவிர வேறொன்றில்லையே! அந்தோ! என்கிறார்.

என் பெயரையே பிதற்றுமாறு அருளினது அருளன்றோ? ஸம்ஸாரிகளிற்காட்டில் இதுவன்றோ வைலக்ஷண்யம், இது செய்து கொடுத்தோமாகில் இன்னமும் என் செய்யச் சொல்லுகிறீர் ஆழ்வீர்! என்று எம்பெருமான் திருவுள்ளமாக, காணுமாறருளாய் என்கிறார்.

ஸம்ஸாரிகளிற்காட்டில் விலக்ஷணன் என்னும்படியான இவ்வளவு பெறுவித்தால் போதுமோ?

(காகுத்தா கண்ணா!) இராமபிரானாயும் கண்ணபிரானாயும் வந்து தோன்றிக் காட்சி தந்தாப்போலே தரவேணுமென்றன்றோ நான் வேண்டுவது. உன்னுடைய பரமபோக்யதையையும் பரமோபகாரசீலத்தையும் காட்டித்தந்த நீ தானே உன்னையுங் காட்டித்தரவேணுமென்றாராயிற்று.

—————-

***- அடியவர்க்கு எளியவனென்று பேர்பெற்றிருக்கிற நீ இன்றுவந்து உதவாதொழியில் நீ ஆச்ரித

ரக்ஷகனென்னுமிடத்தை உன்னடியார்கள் எப்படி நம்பமுடியுமென்கிறார். இப்பாசுரத்திற்கு உயிரானது.

எடுத்த பேராளன் நந்தகோபன் தன் இன்னுயிர்ச் சிறுவனே ! அசோதைக்கு
அடுத்த பேரின்பக் குல விளங்களிறே ! அடியனேன் பெரிய வம்மானே !
கடுத்த போர் அவுணன் உடல் இரு பிளவாக் கை யுகிராண்ட எம் கடலே !
அடுத்த தோர் உருவாய் இன்று நீ வாராய் எங்கனம் தேறுவரும் உமரே ?–8-1-3-

பதவுரை

எடுத்த பேராளன்

நிதி யெடுத்த மஹாநுபாவனென்று கொண்டாடப்படுகிற
நந்தகோபன் தன்

நந்தகோபனுடைய
இன் உயிர் சிறுவனே

இனிமையான உயிர்போன்ற திருக்குமாரனே!
அசோதைக்கு அடுத்த பேர் இன்பம்

(தேவதிப்பிராட்டி வயிறெறிந்து கிடக்க) யசோதைப்பிராட்டியிடம் வந்து சேர்ந்த அளவிறந்த ஆனந்தவடிவனாகி.
குலம் இளங் களிறே

அக்குலத்திற்கு யானைக்குட்டி போன்றவனே!
அடியனேன் பெரிய அம்மானே

அடியேனுக்கு உன் பெருமைகளெல்லாம் காட்டின பிரானே!
கடுத்த போர் அவுணன் உடல்

போர்புரிவதில் தினவு விஞ்சின இரணீயாசுரனுடைய உடலை
இரு பிளவு ஆ

இரு துண்டமாகும்படி
கை உகிர் ஆண்ட

திருக்கையிலுள்ள நகங்களைக் கொண்டு காரியஞ்செய்த
எம் கடலே

எம்போல்வார்க்குக் கடல் போன்றவனே!
இன்று

நான் விரும்புமிக்காலத்ல்
அடுத்தது ஓர் உரு ஆய்

தகுதியான வொரு உருவைக் கொண்டவனாகி
நீ வாராய்

நீ வருகின்றிலையே! (இப்படி நீ உபேக்ஷித் திருந்தாயாகில்)
உமர்

என்போன்றவர்களான (உம்மைச்சேர்ந்த) பக்தர்கன்
எங்ஙனம் தேறுவர்

(உன்னை ஸர்வரக்ஷகனென்று) எப்படி நம்புவர்கள்?

உமர் எங்ஙனம் தேறுவர்? என்பதற்கு இரண்டு படியாகப்பொருள் கூறுவர்,

தேறுகையாவது தரித்திருத்தலும் நம்பிக்கை கொள்ளுதலும். நீ முகங்காட்டாவிட்டால் உன்னுடையவர்கள் பிழைப்பர்களோ?

(அல்லது) இதுவரை நீ செய்த செயல்களாக இதிஹாஸபுராணங்களில் எழுதப்பட்டுள்ள செய்கைகளை எப்படி நம்புவர்கள்? என்று இரண்டுபடியாகவும் நிர்வாஹமுளது.

நந்தகோபனுக்கு எடுத்தபேராளனென்று விருதுசாத்துகிறாராழ்வார், நிதியெடுத்தவனென்றபடி.

எம்பெருமான் நம்மனையிலே வந்து சேரவேணுமென்கிற நினைவு கனவிலுமின்றி யிருக்கச் செய்தேனும் பரகதஸ்வீகாரமாகத் தானே வந்துநின்று ஸகலகோங்களையும் பரிபூர்ணாபெற்றிலனே“ என்று தேவகீப் பிராட்டியும் வயிறெரியும்படியாக நேர்ந்ததனால் நிதியெடுத்த மஹாநுபாவனென்கை மிகவும் பெருந்தும்.

பிறவியே தொடங்கி ஏழையாயிருந்தவன் திடீரென்று ஒரு நாளில் கனத்த வாழ்வு பெற்றிருக்கக் கண்டால் “இவன் நிதி கண்டெடுத்தான்“ “ம்ருதிமபரே பாரதமபரே பஜந்து பவபீதா, அஹமிஹ நந்தம் வந்தே யஸ்யாளிந்தே பரம்ப்ரஹ்ம. என்றார் ஒரு பக்க பண்டிதர்,

பிறவிக்கடலைக் கடக்கவேண்டி எம்பெருமானையறிவதற்காக உபநிஷத்துக்களையும் ஸ்மிருதிகளையும் இதிஹாஸ புராணங்களையும் தஞ்சமாக அடைவார் அடைக அவை யொன்றுமெனக்கு வேண்டா, யாவனொரு நந்தகோபனுடைய மனைக் கடையிலே அடைவதே அடியேனுக்கு வேண்டுவது -ச்லோகத்தின் கருத்து.

இதனால் நந்தகோபாலன் யெனக்குத் தஞ்சம் – என்பது இந்த ஹிதா நிதிரஸித்வம் அசேஷடம்ஸாம் லப்போஸி புண்யபுருஷை *(ஸ்ரீ வைகுண்டஸ்தவம்) என்று கூரத்தாழ்வனருளிச்செய்தபடியே ஒவ்வொருவருடைய உள்ளிலும் உறைந்து கிடைக்கச் செய்தேயும் பாக்யஹீநர்களால் வெளிக்கண்டு அநுபவிக்கப்பெறாமல் சில பரமபாக்யசாலிகளுக்கே அநுபவிக்கலாம்படியிருக்கும் எம்பெருமான் நிதியாகவே பேசத்தகுந்தவன்,

இந்த நிதியை நன்றாக வெடுத்து  அநுபவிக்கப் பெற்றவன் நந்தகோபனேயாதலால் இவனை எடுத்த பேராளனென்றது மிகவும் பொருந்தும்.

அவனுடைய நந்சீவனே கண்ணுக்கு தோற்ற வொகுவடிவுகொண்டு திரிகிறதோ! என்னலாம்படி அனமந்தவனாம் கண்ணபிரான்.

அசோதைக்கு அடுத்த பேரின்பம் – நந்தகோபன் நிதியெடுத்த மஹாநுபாவனானாலும் அதிகமாகப் பேரின்பமநுபவித்தது யசோதைப் பிராட்டியே யாவள். * அழுகையு மஞ்சி நோக்குமந் நோக்கும் அணிகொள் செஞ்சிறுவாய் –நெளிப்பதும், தொழுகையுமிவைகண்ட வசோதை தொல்லையின்பத்திறுதி கண்டானே * (பெருமாள் திருமொழி) என்றபடி –

அவளுக்கு அடுத்த பேரின்பமென்க. அடுத்த – நினைவின்றியேயிருக்க, தானேவந்து கிட்டினபத்தைச் சிற்றின்பமாக்கினால்“ என்று.

அதாவது இந்நிலத்திலுண்டாகும் இன்பமெல்லாம் சிற்றின்பை மென்றும் திருநாட்டிலுண்டாகும் இன்பமொன்றே பேரின்பமென்றும் இருந்த ப்ரஸித்தியை மாற்றி விட்டான் என்றபடி. பரமபதாநுபவத்திற் காட்டிலும் பதின்மடங்கு வீறுபெற்றதாம் யசோதைக்கு ஸ்ரீக்ருஷ்ணாநுபவானந்தம்.

குலவிளங்களிறு – இடைக்குலவத்தில் தோன்றிய ஆனைக்கன்று,

“வாரணம் பையநின்றூர்வதுபோல்“ என்றும்

“வேழப்போதக மன்னவன்“ என்றும்

“காய்சினமாகளிறன்னாள். என்றுமுள்ள பாசுரங்களை நினைப்பது.

யானையானது மிகவும் பலிஷ்டமான பிராணியாயிருக்கச் செய்தேயும் ஒரு கட்டுத்தறியிலே கட்டுண்டிருந்து வருந்துமா போலே ஸர்வசக்னான தான் அசத்தனைப் போலே கட்டுண்டிருந்ததற்குச் சேர குலவிளங்களிறே! என்றது.

“ஆய்ச்சி உரலோடார்க்கத் தறியார்ந்த கருங்களிறே போலநின்று தடங்கண்கள் பனிமல்குந் தன்மையானை“ என்ற திருமங்கையாழ்வார் பாசுரம் இங்குப் பொருந்தமாக நினைக்கத்தக்கது.

அடியனேன் பெரியவம்மானே! இங்கு ஈடு – “உன்னை மகனென்றிருப்பார்க்கோ உதவலாவது? முறையுணர்ந்திருப்பார்க்கு உதவலாகாதோ? முறையுணர்ந்திருப்பார்க்கு உதவலாகாதோ? நான் முறையிலே நின்றவாறே நீயும் முறையிலே நில்லாநின்றாய், அடியனேனென்று நான் சொல்ல நீ ஈச்வரனாயிராநின்றாய்“ என்பதாம்.

இதனால், “நந்தகோபனாயும் யசோதையாயுமிருந்து இவனை நியமித்து அநுபவிக்கப் பெற்றிலோமே“ என்கிற நிர்வேதமும் ஆழ்வார்க்கு உள்ளதாகத் தோன்றும்.

ஒரு சிறுக்கனுக்கு உதவினாப்போலேயாகிலும் அடியேனுக்கு உதவலாகாதோ என்னுங் கருத்துப்படப் பின்னடிகளருளிச் செய்கிறார். ப்ரஹ்லாதாழ்வானுக்காக, எங்குங் கண்டறியாத விலக்ஷ்ணமாக ஒரு திருவுருவத்தைப் பரிக்ரஹித்துக் கொண்டுவந்து விரோதியைக் கீண்டு அருள் செய்தாய், அப்படி அடியேனுக்காகவும் ஒரு திருவுருவெடுத்து வரலாகாதோ? அன்று உதவின நீ இன்று உதவாததென்?

எங்ஙனம் தேறுவர் உமரே – இதற்கு இரண்டுபடியாகப் பொருள் காண்க, பிரானே நீ வந்து தோன்ற மாட்டாயாகில் என்னைப் போன்றவர்கள் எப்படி ஜீவித்திருக்முடியும்? முடிந்துபோக வேண்டியதே.

(அல்லது) ஆபத்காலங்களிலே அடியார்களுக்கு நீ உதவ வருமவன் என்பதே என்னைப்போன்றவர்கள் எப்படி நம்பியிருக்கமுடியும்

ஆபத்ஸகன், ப்ரணதார்த்திஹரன் இத்யாதி திருநாமங்களை மஹர்ஷிகளுக்குக் என்பதாக. நான் தரிக்கும்படிக்கும் உன்னிடத்தில் நான் அவிஸ்வாஸம் கொள்ளாதபடிக்கும் ஒருருவெடுத்து வரவேணுமென்றாராயிற்று.

———–

***- (உமருகந்துகந்தவுருவம்) பிரானே! நீ  உன்னை அடியார்களுக்கு விதேயனாக ஆக்கிவைத்திருக்குமிருப்பு ஒன்று உண்டன்றோ,

அதையே நான் சிந்தித்து ஆறியிருப்பது. இப்போது அந்தக் குணத்திலும்

அதிசங்கை செல்லாநின்றமையால் தரிக்க மாட்டுகின்றிலேனே! என்செய்வேனென்கிறார்.

உமர் உகந்த உகந்த வுருவம் நின்னுருவமாகி உன் தனக்கு அன்பரான
இவர் உகந்து அமர்ந்த செய்கை யுன் மாயை அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன்
அமரது பண்ணி யகலிடம் புடை சூழ் அடுபடை யவித்த அம்மானே
அமரர் தம் அமுதே ! அசுரர்கள் நஞ்சே ! என்னுடை யார் உயிரேயோ !–8-1-4-

பதவுரை

அமர் அது பண்ணி

அப்படிப்பட்ட பாரதயுத்தத்தை நடத்தி,
அகல் இடம் புடை சூழ்

பூமிப்பரப்பெங்கும் நிறைந்திருந்த
அடு படை

தொலைத் தொழிலில் வல்ல சேனையை
அலித்த

தொலைத்த
அம்மானே

பெருமானே!
அமரர் தம் அமுதே

தேவர்களுக்கு அமுதம் போன்று உயிர்ப்பிச்சையளிக்குமவனே!
அசுரர்கள் நஞ்சை

அசுரர்கட்கு விஷம் போன்றவனே!
என்னுடை ஆர் உயிரே ஓ

எனக்கு அருமையான உயிர் போன்றவனே!
உமர் உகந்து உகந்த உருவம்

உன்னடியார்கள் எப்போதும் விரும்பிய ரூபமே
நின் உருவம் ஆகி

நீ கொண்டருளும் ரூபமாகி.
உன் தனக்கு அன்பர் ஆனார் அவர்

உன்னுடைய அந்த பகதர்கள்
உகந்து அகர்ந்த செய்கை

உகந்து ஈடு படுகைக்கு இடமாக நீ செய்த செயல்கள்
உன் மாயை

உனது ஆச்சர்ய சேஷ்டிதங்கள் (என்று கொண்டிருக்கையாகிற)
அறிவு ஒன்றும்

இந்த வொரு அத்யவஸாயத்திலுங்கூட
வினையேன் சங்கிப்பன்

பாவியேன் (இவை பொய்யோவென்று) கஙகைகொள்ள வேண்டியவனாகிறேன்.

எம்பெருமான் அடியார்களுக்கு விதேயனாயிருக்குமிருப்பை விளங்கச் செய்யவல்ல சரிதைகளைப் பின்னடிகளில் பேசுகின்றார்.

பூமிப் பரப்படங்கலும் நெளியும்படி மண்ணின் பாரமான சேனைகள் வந்து சூழ்ந்துகொள்ள,

மெச்சூது சங்கமிடத்தான் நல்வேயூதி, பொய்ச்சூதில் தோற்ற பொறையுடை மன்னர்க்காய், பத்தூர் பெறாதன்று பாரதங்கைசெய்த அத்தூதன் * என்கிறபடியே ஆனைத்தொழில்கள் செய்து சேனைத்தொகையைச் சாவடினவனே!

தேவர்களுக்காக ஆஸுரப்ரக்ருதிகளோடே அம்பேற்றுப்பண்ணின வியாபாரங்களாலே அவர்களுக்குப் பரமபோக்யனானவனே!

பிறப்பாலும் இயல்வாலும் அசுரர்களாயுள்ளவர்களுக்கு ப்ரதீகாரமில்லாத நஞ்சுபோன்றவனே!

என்னுடைய ஸத்தைக்கு ஹேதுவானவனே! என்று பின்னடிகளில் ஏத்தி, முன்னடிகளில் தம்முடைய அதிசங்கையை விண்ணப்பஞ் செய்கிறார்.

உமர் – உன்னைச் சேர்ந்தவர்கள் என்றபடி. பக்தர்கள் என்றவாறு. அவர்கள் உகந்த வுருவத்தையே உனக்கு உருவமாகக் கொள்ளுகின்றாய்,

அன்றியும், அப்படிப்பட்ட அன்பர்கள் மிகவுகந்து ஈடுபடும்படியான செயல்களையே உனது செயலாகக் கொள்ளுகின்றாய் என்று நான் அறிந்திருப்பதுவே இதுவரையில் நான் தரித்திருப்பதற்கு ஹேதுவாயிருந்தது.

இந்த அறிவுக்கும் நழுவுதல் நேரும்போலிருக்கின்றதே, பாவியேன் என்செய்வேன்! என்பது முன்னடிகளின் தாற்பரியம்.

உகந்துகந்த என்றது மிகவுமுகந்த என்றபடி,

அறிவொன்றும் சங்கிப்பன் – இந்தவொரு அறிவுக்கும் ஹாநிவிளைந்திடுகிறதோவென்று அதிசங்கை கொள்ளா நின்றேனென்றபடி.

இவ்வறிவு ஒன்றே என்னுடைய தரிப்புக்கு ஹேதுவாதலால் இவ்வறிவும் கலங்கிற்றாகில் பிறகு தரிக்க விரகில்லையேயென்பது உள்ளுறை.

————

***- (ஆருயிரேயோ) ஆழ்வீர்! பேறுபெறுமவர் நீரான பின்பு அதற்குரிய ஸாதநானுஷ்டானமும் உம்முடைய தலையிலேயாக வேண்டாவோ?

அஃது ஒன்றுமின்றிக்கே “அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன்“ என்றால் இதுவொரு வார்த்தையோவென்று

எம்பெருமான் திருவுள்ளமாக, நானொரு ஸாதநானுஷ்டானம் பண்ணிவந்து காண்பதென்று ஒன்றுண்டோ வென்கிறாரிதில்.

ஆருயிரேயோ ! அகலிடமுழுதும் படைத்திடந்துண்டு மிழ்ந்த ளந்த
பேருயிரேயோ ! பெரிய நீர் படைத்து அங்குறைந்தது கடைந்தடைத்துடைத்த
சீருயிரேயோ !மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவாவோ !
ஒருயிரேயோ ! உலகங்கட் கெல்லாம் உன்னை நான் எங்கு வந்துறுகோ ?–8-1-5-

பதவுரை

ஆர் உயிரே ஓ

அருமையான உயிராயிருப்பவனே!
அகல் இடம் முழுதும் படைத்து

விசாலமான உலகம் முழுவதையும் ஸ்ருஷ்டித்து
இடந்து

(ஒருகால்) பிரளயாரணவத்தில் மங்கிப்போகாதபடி இடந்தெடுத்து
உண்டு

(ஒருகால்) திருவயிற்றிலே வைத்து நோக்கி
உமிழ்ந்து

பிறகு வெளிப்படுத்தி
அளந்த

(ஒருகால்) மாவலிபக்கல் நீரேற்று அளந்துகொண்ட
பேர் உயிரே ஓ

ஸர்வஸ்மாத் பரனே!
பெரிய நீர் படைத்து

மஹாஜலமான ஏகார்ணவத்தை ஸ்ருஷ்டித்து
அங்கு உறைந்து

அங்கே கண்வளர்ந்தருளி
அது கடைந்து

அதுபோன்ற வொரு பாற்கடலைக் கடைந்து
(அது) அடைத்து உடைத்த

அதுபோன்ற மற்றொரு கடலிலே ஸேதுபந்தம் பண்ணி தநுஷ்கோடியாலே அதனையுடைத்த
சீரியரே ஓ

பரபரனே!
மனிசர்க்கு தேவர் போல தேவர்க்கும் தேவா ஓ

மனிசர்கும் தேவர்க்கும் எவ்வளவவாசியோ அவ்வளவவாசி தேவர்க்கும் உனக்கும் போரும்படியாகவுள்ளவனே!
உலகங்கட்டு எல்லாம் ஓர் உயிரே ஓ

எல்லா வுலகங்களுக்கும் ஓர் உயிராயிருப்பவனே!
நான் உன்னை எங்க வந்து உறுகோ

அடியேன் உன்னை எங்கு வந்து கிட்டப்பெறுவேன்?

ஆருயிரேயோ –உயிர் நீயாயிருக்க நான் என்ன ஸாதநானுஷ்டானம் பண்ணி வந்து கிட்டுவேன்? சரீரத்தை ரக்ஷிப்பது எதுவோ அதுவன்றோ உயிர், சரீரம் தான் தன்னை ரக்ஷித்துக்கொள்வதுண்டோ? கருதரிய வுயிர்க்கு உயிரான நீயிருக்க, சரீரபூதனான நான் ஒரு ஸாதனமனுஷ்டிக்க யோக்யதையுண்டோ? என்பது கருத்து.

“அகலிட முழுதும் படைத்திடந்து உண்டுமிழ்ந்தளந்த“ என்றது –நீ தானே படைத்த வுலகுக்கு நன்மை செய்யவேண்டிய காலங்களில் ஒவ்வொன்றும் நீயேயன்றோ செய்து போகின்றாய் என்று எடுத்துக் காட்டுகிறபடி.

பூமிப்பரப்படங்கலும் நீயே படைத்தாய், படைக்கப்பட்டவது பிரளயத்திலே நோவுபழ மஹாவராஹமாய் எடுத்துக்கொண்டேறினாய், மற்றுமொருகால் திருவயிற்றிலே வைத்து நோக்கினாய், உள்ளே கிடந்து தளராதபடி வெளிநாடுகாண வுமிழ்ந்தாய், மஹாபலி அபஹரித்துக்கொண்டபோது எல்லை நடந்து மீட்டுக் கொண்டாய், இங்ஙனே ஒவ்வொரு துர்தசையிலும் நீயேயுணர்ந்து நோக்கினாயல்லேயோ? என்று கருத்தை விரிக்க.

பேருயிரேயோ! – பெரியோனே! என்று வியாக்கியானம் காண்கிறது

“பேரியரேயோ“ என்று பாடமிருந்திருக்கலாமென்று சிலர் எழுதியுள்ளார்கள்,

“பெரியரேயென்றது நீட்டலாய் பேரியரேயென்று பாடமாகில் ஸ்வரஸம்“ என்றார்கள்.

முதலடியிலே கூறின செயல்கள் ஸர்வஸாதாரணமாகச் செய்தனை, இரண்டாமடியில் கூறுவன – பிராட்டியாக்காக விசேஷித்துச் செய்தவை. * விண்ணவரமுதுண அமுதில்வரும் பெண்ணமுதுண்டலெம்பெருமானே! * என்றும்

* பலேக்ரஹிர்ஹி கமலாலாபேந ஸர்வச் ச்ரம * என்றும் சொல்லுகிறபடியே கடல்கடைந்ததும் பிராட்டிக்காக, கடலில் திருவணை கட்டினதும் பிராட்டிக்காக.

மனிசர்க்குத் தேவர்போலத் தேவர்க்குந் தேவாவோ – சோறும் தண்ணீரும் தாரகமான மனிதர்களுக்கும் அம்ருதமேதாரகமான தேவர்களுக்கும் எத்தனைவாசி போருமோ அத்தனைவாசி போருமாயிற்று அந்தத் தேவர்களுக்கும் எம்பெருமானுக்கும்.

தேவர்களை மநுஷ்ய கோடியிலே யெண்ணலாம்படி பரமவிலக்ஷணனானவனே! என்றபடி.

ஓருயிரேயோ உலகங்கட்கெல்லாம் – ஸகல சேதநாசேதநங்களுக்கும் ஏகாத்மாவானவனே! ஆத்மா சரீரத்துக்கு ஹிதசிந்தை பண்ணுமதொழிய சரீரம் தன்னைத்தானே ரக்ஷித்துக் கொள்வதென்பதுண்டோவென்கை.

உன்னை நான் எங்குவந்து உறுகோ? – உன்னை நான் எந்த இடத்திலே வந்து கிட்டுவேனென்று கேட்கிறபடியன்று.

“உன்னை நான் என்னுடைய யத்நத்தாலே எங்ஙனே ப்ராபிக்கும்படி. யென்கிறார்“ என்பது ஆறாயிரப்படி.

“உயிராயிருக்கிற வுன்னை சரீரபூதனான நான் என்ன ஸாதநானுஷ்டானத்தைப் பண்ணி வந்து கிட்டுவேன்? ஆத்மாசரீரத்துக்கு ஹிதசிந்தைபண்ணுமதொழிய, சரீரம் ஸ்வரக்ஷணத்தைப் பண்ண வென்பதொன்றுண்டோ?“ என்பது ஈடு.

எங்கு என்றது எங்ஙனே யென்றபடி.

உறுகோ – உறுகு ஓ என்று பிரிக்க. உறு என்னும் பகுதியினடியாய் பிறந்த தன்மையொருமை யெதிர்கால வினைமுற்று உறுகு என்பது.

இதில் கு விகுதி காலத்தையும் இடத்தையும் காட்டும். ஓகாரம் இரக்கப்பொருளில் வந்தது.

———-

எங்கு வந்துறுகோ !என்னை யாள்வானே ! ஏழு லகங்களும் நீயே
அங்கவர்க்கமைத்த தெய்வமும் நீயே அவற்றவை கருமமும் நீயே
பொங்கிய புறம் பாற் பொருளுளவேலும் அவையுமோ நீ யின்னே யானால்
மங்கிய அருவாம் நேர்ப்பமும் நீயே வான் புலன் இறந்ததும் நீயே—8-1-6-

பதவுரை

என்னை ஆள்வானே

(இதுவரையில்) என்னை நிர்வஹித்துக்கொண்டு போருமவனே!
எழ் உலகங்களும் நீயே

ஸப்தலோகங்களும் நீயிட்ட வழக்கு,
அங்கு

அந்த லோகங்களில்
அவர்க்கு அமைந்த

(பலன்களைக் கோருகின்ற) அவரவர்களுக்கு ஆராதிக்கும்படி ஏற்படத்தின
தெய்வமும்

தைவங்களும்
நீயே

உன் அவயபூதங்கள்
அவற்றவை கரும்மும் நீயே

அத்தெய்வங்களைக் குறித்து ஆராதனையாகப் பண்ணும் காரியங்களும் நீயிட்ட வழக்கு.
பொங்கிய புறம்பால் பொருள் உள ஏலும்

இவ்வுலகங்களிற் காட்டிலும் விஞ்சிப் புறம்பட்ட பொருள்கள் எவ்வனவிருந்தாலும் அவ்வளவும்
அவையும் நீ

அவையும் நீயிட்டவழக்கு
மங்கிய அரு ஆம் நேர்ப்பமும் நீயே

காரணாவஸ்தையில் சுருங்கிக் கிடக்கிறஸூக்ஷ்மசிதசித் வஸ்துக்களும் நீயிட்ட வழக்கு
வான் புலன் இறந்ததும் நீயே

அவ்யக்தத்தையும் வியாபிக்கக்கூடியதாய் கண்முதலிய இந்திரியங்களுக்குப் புலப்படுத்தன்மையற்ற தான ஜீவஸமஷ்டியும் நீ யிட்ட வழக்கு.
இன்னே ஆனால்

இப்படியாமளவில், (உன்னை நான் எங்குவந்து உறுகோ? என்று கீழ்ப்பாட்டோடே அந்வயம்)

***- (எங்கு வந்துறுகோ) இது கீழ்ப்பாட்டுக்கே விவரணமானது.

ஸகல்லோகங்களும், அவ்வுலகங்களினால் ஆராதிக்கப்படுகிற இந்திரன் முதலிய தெய்வங்களும், அவற்றினுடைய க்ரியைகளும், உலகத்துக்குப் புறம்புள்ள பதார்த்தங்களும் எல்லாம் நீயிட்ட வழக்கு,

ஆதலால் என்னுடைய முயற்சியினால் உன்னை நான் எங்ஙனே வந்தடையும்படி?

இதற்கு முன்பு நிர்ஹேதுகமாக என்னை நீ விஷயீகரித்தாப்போலே இன்னமும் அந்த க்ருபையினாலேயே விஷயீகரித்தருளாய் என்கிறார்.

எங்கு வந்து உறுகோ? ஒருவன் மேருமலையிலுச்சியில் நின்றால் அவனை யொருநொண்டி. சென்று கிட்டுவதென்றுண்டோ?

சென்றுகிட்டுகைக் குறுப்பாக சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்ட ஸாதனங்களை யனுஷ்டிக்கத் தமக்கு சக்தியில்லாமை தெரிவிக்கப்பட்டதாமிங்கு.

என்னையாள்வானே! – ஆதிமுதல் என்னையாண்டது நீயேயன்றோ. இதுவரை எனக்கு நேர்ந்த நிலைகள் எனது முயற்சியினாலல்லவே, இவ்வளவும் வர நிறுத்தின நீ இனி என்கைபார்த்திருக்கவொண்ணுமோ? என்பது கருத்து.

“ஏதாவதீம் கமயிது பதவீம் தயாளோ சேஷாத்வலேசநயநே க இவாதிபார“ என்ற தேசிக ஸ்ரீஸூக்தி இங்குக் காணத்தக்கது.

ஏழுலகங்களும் நீயே –“என்னையாள்வாளே!“ என்ற வளவேயேர்? ஸகலலோகங்களுக்கும் ஆவன செய்பவன் நீயேயன்றோ? அபிமுகனான என்னோடு விமுகர்களான மற்றையாரோடு வாசியற எல்லாரையும் நிர்வஹிப்பது நீயேயன்றோ என்றபடி.

“ஏழுலகங்களையும் நானா நிர்வஹிக்கிறேன், ஒவ்வொருவரும் ஒவ்வொரு தெய்வத்தைப் பணிந்து அந்தந்த தெய்வத்தினாலன்றோ

“அங்கவர்க்கமைத்த தெய்வமும் நீயே அவற்றவை கருமமும் நியே“ என்று.

“வணங்குந் துறைகள் பலபலவாக்கி மதிவிகற்பால் பிணங்குஞ்சமயம் பலபலவாக்கி, அவையவைதோறு அணங்கும் பலபலவாக்கி நின் மூர்த்தி பரப்பிவைத்தாய்“ என்ற திருவிருத்தப்பாசுரம் இங்கே நினைக்கத்தக்கது.

“இறுக்குமிறையிறுத்துண்ண எவ்வுலகுக்குந்தன் மூர்த்தி நிறுத்தினான் தெய்வங்களாக அத்தெய்வநாயகன்தானே“ (5-2-8) என்று கீழெ ஸுவ்யக்தமாகவுமருளிச்செய்தார்.

ஸகல தெய்வங்களும் நீயிட்டவழக்கு, அந்தத் தெய்வங்கள் செய்துபோருகிற செயல்களும் உன்னுடைய அநுப்ரவேசத்தினாலாமவையேயன்றி அவைதாமே செய்யுமவையல்ல என்றபடி.

பொங்கிய புறம்பால் பொருளுளவேலும் அவையுமோ நீ – “பொங்கிய“ என்பதைப் புறம்பிலேயும் அந்வயிக்கலாம், பொருளிலேயும் அந்வயிக்கலாம்.

இந்த லோகங்களிற்காட்டில் விஞ்சிப் புறம்பான மஹதாதிஸமஸ் தபதார்த்தங்களும் நீ யிட்டவழக்கு (அல்லது) அண்டத்துக்குப் புறம்பேயுள்ளதாய், “தசோத்தராண்யாவரணாநி யாநிச“ என்று ஆளவந்தார்ருளிச் செய்தபடியே ஒன்றுக்கொன்று பத்துமடங்கு விஸ்த்ருதமானவையும் நீயிட்டவழக்கு பொங்கிய ஒன்றுக்கொன்று விஸ்த்ருதமாய் அண்டத்துக்குப் புறம்பாய் அதுக்குக் காரணமான மஹதாதிகளென்று சிலவுண்டில் அவையும் உன்னதீனம்.“

மங்கிய அருவாம் நேர்ப்பமும் நீயே –கார்யப் பொருளாய்க் காணப்படும் நிலைமை யழிந்து காரணப்பொருளுக்குரிய ஸூக்ஷமாவஸ்தையை யடைந்திருக்கிற அவ்யக்தமும் நீயிட்ட வழக்கு என்றபடி.

வான்புலனிறந்ததும் நீயே – வான் என்றது வியாபிக்கக்கூடியது என்றபடி. புலனிறந்தது என்றது. இந்திரியங்களுக் கெட்டாமல் அதீந்த்ரியமானதென்றபடி.

அவ்யகத்தையும் வியாபிக்ககூடியதாய் கண் முதலிய கரணங்களுக்கு எட்டாத்தாய்க் காரணமான ஜீவஸமஷ்டியும் நீயிட்ட வழக்கு என்றதாயிற்று.

வான் என்பதனால் சொல்லப்பட்ட வ்யாபகத்வம் ஸவரூபத்தினாலன்று, ஞானத்தினால் என்று உணர்க.

ஜீவாத்மாக்களுக்கு ஞானத்தால் விபுத்வமுள்ளதேயன்றி ஸ்வரூபத்தினால் விபுத்வமில்லையென்பது நூற்கொள்கை என்றுரைப்பாருமுளர்.

அதுவுமொக்கும். ஆக, கார்யாவஸ்தையோடு காரணாவஸ்தையோடு முக்தாவஸ்தையோடு வாசியற உன்கை பார்த்திருக்கவேண்டின பின்பு

நான் என் காரியத்திற்குக் கடவேனாக ப்ரஸக்தியுண்டோ? என்றதாயிற்று.

————

***- எல்லா பொருள்களும் உனக்கு வடிவாய்க்கொண்டு சேஷமாய் நீயே அவற்றுக்கு ப்ரகாரியாய் – சேஷியாயிருக்கிறாயென்கிற

அறிவு ஒன்று கொண்டு தரித்திருக்கிற நான் என்பாபத்தாலே அதிலும் அதிசங்கைபண்ண நேர்ந்துவிட்டதேயென்று நோகிறார்.

இறந்ததும் நீயே எதிர்ந்ததும் நீயே நிகழ்வதோ நீ யின்னே யானால்
சிறந்த நின் தன்மை யது விது வுது வென்று அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன்
கறந்த பால் நெய்யே ! நெய்யின் சுவையே ! கடலினுளமுதமே !அமுதிற்
பிறந்த இன் சுவையே ! சுவையது பயனே பின்னை தோள் மணந்த பேராயா !–8-1-7-

பதவுரை

கறந்த பால்

அப்போது கறந்தபால் போல் இனியனானவனே!
நெய்யே

அதில் ஸாரமான நெய் போன்றவனே!
நெய்யின் இன் சுவையே

நெய்யின் இனிமையான சுவைதானே வடிவெடுத்ததுபோன்றவனெ!
கடலினுள் அமுதமே

கடலில் தோன்றிய அமுதம் போன்றவனே!
அமுதில் பிறந்த இன் சுவையே

அமுதிலுள்ள இனிமையான சுவைதானே வெடுத்தவனே!
சுவை அது பயனே

அவ்வினிமையினுலுண்டாகும்  ஆனந்தமே!
பின்னை தோள் மணந்த பேர் ஆயா

நப்பின்னைப்பிராட்டியை மணம்புணர்ந்து கோபால க்ருஷ்ணனே!
இறந்ததும் நீயே எதிர்ந்ததும் நீயே நிகழ்வதோ நீ

முக்காலங்களிலுமுள்ள பொருள்களும்ந யிட்ட வழக்கு
இன்னே ஆனால்

இப்படியான பின்பு
அது இது உது

தூரஸ்தமாயும் ஸமீபஸ்தமாயும் மத்யஸ

தமாயுமுள்ள ஸகல பரார்த்தங்களும்

சிறந்த நின் தன்மை

பரபரனான உன்னுடைய ஸவபாவங்கள்
என்ற அறிவு ஒன்றும்

என்கிற இவ்வறிவு தன்னிலும்
வினையேன் சங்கிப்பன்

பாவியேன் அதிசங்கை கொள்பவனாயிரா நின்றேன்.

இறந்த காலத்திலுள்ளவையென்ன எதிர்காலத்திலுள்ளவையென்ன நிகழ்காலத்திலுள்ளவையென்ன ஆக முக்காலங்களிலுமுள்ள ஸகல பதார்த்தங்களும் நீயிட்டவழக்காகையாலே அவையெல்லாம் உனக்கு ப்ரகாரமாயிருக்கும், அவற்றுக்கு நீ ப்ரகாரியாயிருப்பாய்,

ஆகையாலே அவற்றுக்கு வந்தது உனக்குவந்ததாக நினைத்திருப்பாய் –என்கிறவிந்த வுணர்வுகொண்டு தரித்திருந்த வெனக்கு இந்த வுணர்வையும் நெகிழப்பண்ணா நின்றது உன்னைக் கிட்டப்பெறாத விழவு என்றுவாறு.

சரீரத்திற்கு வரும் துக்கம் ஆத்மாவுக்கு ஆகிறாப்போலே எல்லாருடைய துக்கங்களும் சரீரியான வுன்னது என்கிற ஸம்பந்தஜ்ஞானமொன்றைக்கொண்டு ஜீவித்திருந்ததாகவும் இந்த ஸம்பந்தத்தைக்கொண்டு என்னை நீ நோக்கியருளவே வேணுமென்கிற பிரார்த்தனையிலே முடிந்துநிற்குமத்தனை.

பின்னடிகளிரண்டும் எம்பெருமானுடைய பரமபோக்யதையைப் பேசுவன. இப்படிப்பட்ட போக்யதையையறிந்த நான் உன்னைவிட்டுத் தரிக்கவும் முடியவில்லையே யென்றவாறு.

கறந்தபால்! என்பது தனிப்பட்ட விளி. கறந்தபோதே இயற்கையான ரஸத்தையுடைத்தான பால்போல் பரமபோக்யனே! என்றபடி.

பாலின் ஸாரமான நெய்யே! நெய்யினுடைய இனி சுவைதானே வடிவெடுத்த தென்னலாம்படி. யுள்ளவனே!,

கடலிடைத் தோன்றிய அமுதமே! அவ்வமுதத்தின் இனிமைதானே வடிவெடுத்ததென்னலாம்படியள்ளவனே! என்று இத்தனை சொல்லியம் த்ருப்தி பிறவாமையாலே பின்னைதோள் மணந்த பேராயா! என்று அவன் தன்னையே சொல்லித் தலைக்கட்டுகிறார்.

நப்பின்னைப் பிராட்டியும் நீயுமான சேர்த்திதானே ஸ்வயம் போக்யமன்றோ? இந்த போக்ய வமையிட்டுக் கூறவேணுமோ? என்றவாறு. நப்பின்னையை மணந்ததுபோல என்னையும் மணக்க ப்ராப்தியில்லையோ வுனக்கு என்ற கருத்துக்கொள்ளலாம்.

————

***- ஆழ்வீர்! உம்முடைய அபேக்ஷிதம் நாம் செய்ய வேணுமாகில் அதற்கு உறுப்பாக ஓர் அஞ்ஜலியாவது பண்ணமாட்டீரோவென்ன,

பிரானே! நானாகச் செய்வதென்று ஒரு செயலுண்டோ? மனமும் வாசகமும் செய்கையும் யானும் நீயிட்டவழக்கான பின்பு என்னாலொரு செயலுண்டோ?

நீ தானே என்னை வணங்குவித்துக்கொள்ளவேணுமே யல்லது நான் வணங்குவதாக ஒன்று அறியேன் என்றார்.

மணந்த பேராயா !மாயத்தால் முழுதும் வல்வினையேனை ஈர்கின்ற
குணங்களை யுடையாய் !அசுரர் வன்கையர் கூற்றமே ! கொடிய புள்ளுயர்த்தாய் !
பணங்கள் ஆயிரம் உடைய பைந்நாகப் பள்ளியாய் ! பாற் கடல் சேர்ப்பா !
வணங்குமாறு அறியேன் மனமும் வாசகமும் செய்கையும் யானும் நீ தானே–8-1-8-

பதவுரை

மாயத்தால் மணந்த பேர் ஆயா

மிகுந்த ஆசையினால் நப்பின்னையே மணந்து கொண்ட பெருமை தங்கிய கோபாலனே!
முழுதும்

உன்னுடைய ஒரு குணமும் தப்பாதபடி
வல்வினையேனை ஈர்கின்ற குணங்களை உடையாய்

பாவியேனை இருபிளவாக்குகின்ற திருக்குணங்களை யுடையவனே!
வன்கையர் அசுரர் கூற்றமே

வன்மையை யுடையவர்களான அசுரர்களுக்கு யமன் போன்றவனே!
கொடிய புள் உயர்த்தாய்

அவ்வசுரர்களுக்குக் கொடுமைபுரியுமியல்லின்னான் பெரிய திருவடியை த்வஜமாகக் கொண்டவனே!
ஆயிரம் பணங்களும் உடைய பை நாகம் பள்ளியாய்

ஆயிரம் படங்களையுடைய பரந்த ஆதிசேஷனைப் படுக்கையாகக்கொண்டு
பால் கடல் சேர்ப்பா

திருப்பாற்படலில் கண் வளர்ந்தருளுகிறவனே!
மனமும் வாசகமும் செய்கையும் யானும் நீ தானே

மநோவாக் காயங்களாகிற கரணங்களும் அவற்றை யுடைய நானும் நீயிட்ட வழக்காயிருக்க
வணங்கும் ஆறு அறியேன்

சுதந்திரமாக வணங்கும் வழயறிகின்றிலேன்.

மாயத்தால் மணந்த பேராயா! என்று அந்வயிப்பது. மாயத்தால் – அபிநிவேசத்தினால் என்றபடி. நப்பின்னைப் பிராட்டியை மணந்ததுதானே அநுபாஷிக்கப்படுகிறது.

வல்வினை யேனைமுபுதும் ஈர்கின்ற குணங்களையுடையாய் – என்னையுங்கூட ஈடுபடுத்துகின்ற ஸௌசீல்யம் ஸௌலப்யம் முதலான திருக்குணங்களையுடையவனே! என்றபடி.

ஒவ்வொரு திருக்குணத்தையும் நினைத்து உருகிநைந்து குழைந்து கரைந்தொழிகின்றேனென்றவாறு. “மாயத்தால் முழுதும் மணந்த பேராயா!“ என்று அந்வயித்து “ஆச்சர்ய சேஷ்டிதங்களாலே அகில பதார்த்தங்களையும் உகப்பிக்கும் பெருமையையுடைய க்ருஷ்ணனே!“ என்றுரைப்பர் பன்னீராயிரவுரைகாரர்.

ஈர்கின்ற குணங்களையுடையாய்! என்கிற விளி இன்சுவைமிக்கது. ஆண்டாள் “குளிரருவி வேங்கடத்து என் கோவிந்தன் குணம்பாடி –ஆவி காத்திருப்பேன்“ என்றாள். இவர் “ஈர்கின்ற குணங்களை யுடையாய்“ என்கிறார். குணாநுஸந்தானம் சிலர் தரிக்கைக்கு ஹேதுவும் சிலர் தளருகைக்கு ஹேதுவுமாமென்றபடி.

இங்கு நம்பிள்ளையீடு காண்மின் – “சிலர் குணஜ்ஞானத்தாலே ஜீவித்திருக்க, அது பாதகமாம்படி பாபத்தைப்பண்ணினேன், அம்புபட்ட புண் மருந்திட்டு ஆற்றலாம். குணத்தால்வந்த நோய்க்குப் பரிஹாரமில்லையே.“

அசுரர்வன்கையர் கூற்றமே! கண்பாராதே நலிகின்ற அஸுரர்களுக்கு யமனானவனே! இது இங்கு எதற்காகச் சொல்லுகிறதென்னில் பிரதிகூலர்களான அசுரர்களை அழிக்கிறாப்போலவே அநுகூலர்களான எங்கயுமழிக்கிறாய். அவர்களை ஆயுதத்தாலே யழிக்கிறாய். எங்களைக் குணத்தாலே யழிக்கிறாய் என்கைக்குச் சொல்லுகிறது.

கொடிய புள்ளுயர்த்தாய்! பண்கொண்ட புள்ளின் சிறகொலி பாவித்துத் திண்கொள்ளவோர்க்குங்கிடந்தென்செவிகளே என்றிருக்குமெம்போலியரைச் சிலபோது வாழ்விப்பதுஞ் செய்பவனே! என்றபடி.

பணங்களாயிரமுமுடைய பைந்நாகப்பள்ளியாய்! தன்னுடைய சேர்த்தியாலே விகஸிதமான பணங்களையுடையனாய், தன்னை யநுபவிப்பதனாலுண்டான மகிழ்ச்சிக்குப் போக்குவீடாகப் பல தலைகளையுமுடையனாய், தனக்கும் பிராட்டிமார்க்கும் நினைத்தபடி பரிமாறுகைக்கீடான பரப்பையுடையனாயிருக்கிற திருவனந்தாழ்வான் மேலே திருக்கண்வளர்ந்தருளுமவனே!

பாற்படல் சேர்ப்பா! பரமபதத்தைவிட்டுத் திருப்பாற்கடலிலே வந்து சாய்ந்து என்னுடைய ரக்ஷணத்திற்கு முற்கோலியிருக்குமவனே!

வணங்குமாறு அறியேன்! நானாக வணங்குவமோ? உமக்கு மனமொழி மெய்களுண்டு, அவற்றுக்கு ஆச்ரயமான நீருண்டு, வணங்குகைக்குத்தட்டு என்? என்று எம்பெருமான் கேட்பதாகக் கொண்டு மனமும் வாசகமும் செய்கையும் யானும் நீதானே என்கிறார்.

எனக்காயிருப்பதொரு நெஞ்சும் வாக்கும் செய்கையும், எனக்காயிருப்பதொரு நானுமிருந்தாலன்றோ நான் வணங்கினேனாவது, இவையெல்லாம் நீயிட்ட வழக்காயன்றோ விருக்கிறது. வணங்கவேணுமென்னும் நினைவுண்டு, வணங்கும் விதமறிகின்றிலேனென்றாராயிற்று.

————

***- ஸர்வபூதாத்மதே தாத! ஜகந்நாதே ஜகந்மயே, பரமாத்மநி கோவிந்தே மித்ராமித்ரகதாகுத, * என்ற ப்ரஹ்லாதாழ்வானுடைய அத்யவஸாயமுள்ளவர்களுக்கு எல்லாம் எம்பெருமானுடைய விபூதியாகவே தோற்றக் குறையில்லையாதலால் இப்படிப்பட்ட அத்யவஸாயம் ஆழ்வார் தமக்கும் குறையற உண்டாகி யிருக்கும்போது இவர் ஓரிடத்தை த்யாஜ்யபூமியாகவும் மற்றோரிடத்தை ப்ராப்யபூமியாகவும் கொள்வதற்கு நியாயமில்லையே, இவ்வுலகத்திலிருப்பைக் கழித்து அவ்வுலகத்தில் கொண்டுபோய்ச் சேர்த்து அங்கேயே வைக்கவேணுமென்று நிர்ப்பந்திப்பதானது மேற்சொன்ன அத்யவாஸயத்திற்கு இணங்காதே என்றொரு சங்கை தோன்றக்கூடிய துண்டு, அதற்குப் பரிஹாரமாக அவதரித்தது இப்பாசுரமென்க.

யானும் நீ தானே யாவதோ மெய்யே அரு நரகவையும் நீ யானால்
வானுயரின்பம் யெய்திலென் மற்றை நரகமே யெய்திலென் எனினும்
யானும் நீ தானாய்த் தெளி தோறும் நன்றும் அஞ்சுவன் நரகம் நானடைதல்
வானுயரின்பம் மன்னி வீற்று இருந்தாய் அருளு நின் தாள்களை எனக்கே–8-1-9-

பதவுரை

யானும் நீ தானே ஆவது மெய்யே

(எல்லாமும் நீயாகையாலே) யானும் நீதானே யென்கிறவிது உண்மையே, (இதில் ஒரு ஸந்தேஹமில்லை)
அரு நரகு அவையும் நீ

என்னால் பொறுக்கமுடியாத ஸம்ஸாரத்திலுள்ளவையெல்லாம் நீயிட்ட வழக்கே,
ஆனால்

ஆனபின்பு
வான் உயர் இன்பம் எய்தில் என்

திருநாட்டிலே போய்ச் சிறந்த ஆனந்தத்தைப் பெற்றிருந்தாலென்ன?
மற்றை நரகமே எய்தில் என்

அதற்கெதிர்த்தட்டான ஸம்ஸாரநரகத்தை யடைந்தால் தானென்ன?
எனிலும்

என்று இப்பொருளுண்டேயாகிலும்,
யானும் நீ தான் ஆய் தெளிதொறும்

நான் உனக்கடியேனென்பதை யுணரும்போதெல்லாம்
நரகம் நான் அடைதல் நன்றும் அஞ்சுவன்

ஸம்ஸார நரக வாழ்க்கைக்கு மிகவும் பயப்படா நின்றேன்,
நான் உயர் இன்பம்

பரமபதப் பேரின்பத்தை நிரந்தரமாகவுடையையாய்க்கொண்டு எழுந்தருளி யிருக்குமவனே!
நின் தாள்களை எனக்கு அருளு

உன் திருவடிகளை எனக்குத் தந்தருளவேணும்.

யானும் நீதானேயாவதோ மெய்யே – “ஸர்வம் கலும் இதம்ப்ரஹ்ம* என்கிற சாஸ்த்ரார்த்தத்தில் ஒரு ஸந்தேஹமும் இல்லை யென்றவாறு.

சாஸ்த்ராத்தம் இதுவானபின்பு அருநரகவையும் நீ என்பதும் சாஸ்த்ரார்த்தமாகத் தேறிநிற்கும். இங்கு அருநரகு என்கிறது ஸம்ஸாரநிலம்.

இந்நிலத்திலுள்ள பொருள்களை யெல்லாம் உன்னைப்பார்ப்பது போலவே பார்க்கத் தடையில்லை யென்றவாறு.

இப்படியான பின்பு, ஸம்ஸாரவிபூதி ஹேயமென்றும் நித்யவிபூதி உபாதேயமென்றும் கொள்வதற்குப் பொருத்தமில்லாமை கூறப்படுகிறது. இரண்டாமடியினால்.

ஆனாலும் இந்த ஸம்ஸாரவாழ்க்கையில் அருவருப்புத்தானுள்ளது என்கிறார் மூன்றாமடியினால்.

வானுயரின்பமெய்தினாலென்ன, மற்றைநரகமேயெதினாலென்ன? என்று இரண்டையும் துல்யமாகப் பாவிப்பதற்கு எந்தத் தெளிந்தஞானம் (அத்யவஸாயம்) ஹேதுவோ, அந்தஞானம் நிலைநின்றிருந்தாலன்றோ ஒன்றில் விருப்பும் ஒன்றில் வெறுப்பும் இல்லாதிருக்கலாம்.

அந்த ஞானம் நிலைத்திருப்பதற்கு இந்த நரகநிலம் மிகவும் விரோதாயாகையாலு இந்நிலத்திலிருப்புக்கு மிகவும் அஞ்சவேண்டியதாயிருக்கின்றது என்பது மூன்றாமடியின் தேர்ந்த கருத்து.

இங்கே இருபத்தினாலாயிரப்படி ஸ்ரீஸூக்தி காண்க, – சேஷத்வஜ்ஞானத்துக்கு விருத்தமான ஸம்ஸாரத்திலேயிருக்கில் அகப்பட்ட இந்த ஞானத்தையுமிழப்பனென்று நான் மிகவும் அஞ்சாநின்றேன்“ என்று.

ஆகவே தம்முடைய பிரார்த்தனையைத் தலைக்கட்டியேயாகவேணுமென்கிறது ஈற்றடி.

————-

***- நானாசைப்பட்டபடியே திருவடிகளை யெனக்குத் தந்தருளின சிறந்தவுதவிக்குத் கைம்மாறாக

இவ்வாத்மவஸ்துவை எம்பிரானே! உனக்கு அர்ப்பணஞ் செய்தேனென்கிறார்.

தாள்களை எனக்கே தலைத் தலைச் சிறப்பத் தந்த பேருதவிக் கைம்மாறா
தோள்களை யாரைத் தழுவி என்னுயிரை அறவிலை செய்தனன் சோதீ
தோள்கள் ஆயிரத்தாய் !முடிகள் ஆயிரத்தாய் ! துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய் !
தாள்கள் ஆயிரத்தாய் !பேர்கள் ஆயிரத்தாய் ! தமியனேன் பெரிய வப்பனே !–8-1-10-

 

பதவுரை

தாள்களை எனக்கே தலைத்தலை சிறப்ப தந்த

(உனது) திருவடிகளை எனக்கே அஸாதாரணமாகத் தலைமேல் சிறக்கும்படி தந்தருளின
பேர் உதவி

மஹோபகாரத்திற்கு
கைம்மாறு ஆ

பிரதியுபகாரமாக,
என் உயிரை

எனது ஆத்மவஸ்துவை
தோள்களை ஆர தழுவி

தோள்களை நன்றாகத் தடவிக் கொடுத்து
அறவிலை செய்தனன்

பரிபூரண விக்ரயம் செய்து விட்டேன்
சோதீ!

நான் தந்தவிதனைப்பெற்று அபூர்வலாபம் பெற்றதாகக் களித்து விளங்குமவனே!
தோள்கள் ஆயிரத்தாய்

(அந்தக்களிப்பினாலே பணைத்த) பலபலதிருத்தோள்களையுடையவனே!
முடியன் ஆயிரத்தாய்

பலபல திருமுடிகளையுடையவனே!
துணை மலர் கண்கள் ஆயிரத்தாய்

ஒன்றோடொன்றொத்த மலர் போன்ற பலபல திருக்கண்களையுடை வனே!
தாள்கள் ஆயிரத்தாய்

பலபல திருவடிகளையுடையவனே!
பேர்கள் ஆயிரத்தாய்

பலபல திருநாமங்களை யுடையவனே!
தமியனேன் பெரிய அப்பனே

அகிஞ்சநனான வெனக்கு இன்னமும் எவ்வளவோ செய்யப் பாரித்திருக்குமவனே!

“தாள்களை எனக்கே தலைத்தலைச் சிறப்பத்தந்த பேருதவி“ என்கிறாரே, எம்பெருமானுடைய திருவடிகள் இவர்க்குப் பரிபூர்ணத்ருப்தியாகக் கிடைத்து விட்டனவோ? என்னில்

ஸம்ஸாரிகளெல்லோரும் உண்டியே உடையே உகந்தோடித் திரியாநிற்க, தாம்மாத்திரம் அப்படியல்லாமல் எம்பெருமானது திருவடிகளையே தாரகபோஷக போக்யமாகக்கொண்டிருக்கும்படி பெற்றவோருதவியையே இங்குப் பேசுகிறாரென்க.

ஆறாயிரப்படி யருளிச்செயல் – “ஸம்ஸாரிக்களெல்லாரும் பராக்ருதவிஷயைக தாரக போஷக போக்யராயிருக்கச் செய்தே என்னை உன் திருவடிகளையே தாரகபோஷக போக்யமாயிருக்கும்படி பண்ணியருளினாய், இந்த மஹோபகாரமே அமையாதோ? இவ்வுபகாரத்துக்குக் கைம்மாறாக என்னுடைய ஆத்மாவை உனக்கே அடிமையாகத்தந்தேன“ என்பதாம்.

“இப்போது திருவடிகளைக் கொடுக்கையாவது ஸம்ஸாரத்தோடு பொருந்தாதபடியையும் தன்னையொழியச் செல்லாதபடியையும் தமக்குப்பிறப்பித்த தசையைப்ரகாசிப்பிக்கை ஸ்ரீ வால்மீகி பகவான் முதலாழ்வார்கள் தொடக்கமானாருண்டாயிருக்க என்பக்கலிலே விசேஷகடாக்ஷம் பண்ணி என்பது ஈட்டு ஸ்ரீஸூக்தி.

இப்பேருதவிக்குக் கைம்மாறாக எம்பெருமானுக்கு ஆத்ம வஸ்துவைக் கன்யகாதானம் பண்ணுகிறாராயிற்று ஆழ்வார்.

ஒருவனுக்கொருவன் கன்னிகையைக் கொடுக்கும்போது தோள்களையாரத் தழுவிக் கொடுப்பது வழக்கம்,

ஆத்மவஸ்துவுக்கு அவயவமொன்றுமில்லையாகிலும் தம்முடைய அபிநிவேசாதிசயத்தாலே அது தாளுந்தோளும் முடியுமாய்ப் பணைத்ததாகக்கொண்டு “தோள்களையாரத் தழுவியென்னுயிரை அறவிலைசெய்தனன்“ என்கிறார்.

பரம ஸந்தோஷத்தோடே கொண்டாடிக்கொண்டு ஆத்ம ஸமர்ப்பணம் பண்ணுகிறேனென்றவாறு.

“எனதாவியாவியும். நீ – எனதாவியார் யானார்“ “மனமும் வாசகமும் செய்கையும் யானு நீதானே“ என்றவற்றை மறந்தார் ஹர்ஷத்தாலே.

“என்னுயிரை அறவிலை செய்தனன்“ என்று ஆழ்வார் சொன்னவாறே எம்பெருமான் தனக்கொரு அபூர்வவஸ்து கிடைத்ததுபோலவே புகர்பெற்று விளங்கினானாயிற்று,

அதைக் கீழ்க்கண்ணாலே கண்டறிந்தவாழ்வார் சோதீ! என்று நெஞ்சுகுளிர விளிக்கிறார். இவ்வளவு மாத்திரமேயோ?

அவபவங்களும் சதசாகமாகப் பனைக்கத் தொடங்க, பிரானே! என்னுடைய அற்பவாக்கியத்தைக் கொண்டு இப்படியும் உடல்பூரிப்பாய்யோ? இது என்ன பித்து! என்கிறார் பின்னடிகளால்.

இங்கு நம்பிள்ளையருளிச் செய்யும் ஸ்ரீஸூக்திகள் காணீர், – “ஒரு ஸம்ஸாரியை லபித்து அவாப்தஸமஸ்த காமனானவன் இப்படி ஹ்ருஷ்டனானானென்கிறவிது கூடுமோவென்னில், ஸார்வபௌமனான க்ஷத்ரியனுக்கு ஒருபர்த்தியுண்டென்னா, அபிமதையான மஹிஷிபக்கலிலே சாபலமின்றிக்கே யொழியுமோ? அவாப்தஸமஸ்தகாமத்வமும் ப்ரமாணஸித்தமானால் அப்படியே கொள்ளுமத்தனையன்றோ“

——-

***- இப்பதிகத்திற் சொன்ன பொருள்களையெல்லாம் சுருங்கச் சொல்லி இப்பதிகம் கற்றார்க்கு

எம்பெருமானைப் பெற்று உஜ்ஜீவிக்கை எளிதாமென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.

பெரிய வப்பனைப் பிரமனப்பனை உருத்திரனப்பனை முனிவர்க்
குரியவப்பனை யமரரப்பனை உலகுக்குகோர் தனியப்பனை தன்னை
பெரிய வண் குருகூர்ச் சடகோபன் பேணின ஆயிரத்துள்ளும்
உரிய சொல் மாலை இவையும் பத்து இவற்றால் உய்யலாம் தொண்டீர் ! நம் கட்கே–8-1-11-

பதவுரை

பெரிய அப்பனை

எல்லாரினும் பெருமை பெற்றஸ்வாமியும்
பிரமன் அப்பனை

உலகங்களைப்படைத்தவனான பிரமனையும் படைத்தவனும்
உருத்திரன் அப்பனை

ஸம்ஹாரக்கடவுளாகிய ருத்ரனுக்கு தலைவனும்
முனிவர்க்கு உரிய அப்பனை

ஸநகர் முதலிய முனிவர்கட்கும் தகுதிவாய்ந்த ஸ்வாமியும்
அமரர் அப்பனை

ஸகல தேவர்களுக்கும் ஸ்வாமியும்
உலகுக்கு ஓர் தனி அப்பன் தன்னை

ஸகல வோகங்களுக்கும் ஒப்பற்ற நாயகனுமான வனைக்குறித்து,
பெரியவண்குருகடர் வண் சடகோபன்

ஆழ்வார்
பேணின ஆயிரத்துள்ளும்

ஆதரித்துச்சொன்ன ஆயிரத்தினுள்ளும்
உரிய சொல் மாலை இவை பத்தும் இவற்றால்

தகுந்த சொற்சேர்த்தீவாய்ந்த இப்பத்துப்பாசுரங்களினால்
தொண்டீர்நங்கட்கு உய்யலாம்

தொண்டர்களே! நாம் உஜ்ஜீவிக்கவமையும்.

உபயவிபூதிநாதனாய் நான்முகனுக்குத் தந்தையாய் உருத்திரனுக்கு நிர்வாஹகனாய் ஸநகஸநந்தநாதி மஹர்ஷிகளுக்கும் அஸாதாரண சேக்ஷியாய் மற்றுள்ள தேவர்களுக்குமப்பனாய்,

கிம் பஹுநா? ஸகல்லோகங்களுக்கும் ஏகநிர்வாஹகனான எம்பெருமானைக் குறித்து ஆழ்வார்ருளிச் செய்தவாயிரத்தில் இப்பத்துப் பாசுரங்களை யோதவே,

நெடுநாள் பகவத்விஷய விமுகராய் விஷயாந்தரப்ரவணராய்ப் போந்த நமக்கும் உஜ்ஜீவிக்கப் பெறலாகுமென்றாராயிற்று.

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-