***- என்னுடைய ஆர்த்தியைத் தீர்த்தருள்பவன் ஸர்வேச்வரன், அவனூர் திருக்கடித்தானம் என்கிறார்.
எல்லியும் காலையும் தன்னை நினைத்து எழ
நல்ல வருள்கள் நமக்கே தந்தருள் செய்வான்
அல்லி யந்தண்ணந்துழாய் முடி அப்பனூர்
செல்வர்கள் வாழும் திருக்கடித் தானமே–8-6-1-
பதவுரை
| எல்லியும் காலையும் தன்னை நினைத்து எழ |
– |
இரவும் பகலும் உபசாரகனான தன்னையே நினைத்து உஜ்ஜீவிக்கும்படியாக |
| நல்ல அருள்கள் |
– |
பரம க்ருபைகளை |
| நமக்கே தந்து |
– |
நமக்கே அஸாதாரணமாகச் செய்து |
| அருள் செய்வான் |
– |
அனுக்கிரஹம் செய்வானாய் |
| அல்லி அம் தண் அம் துழாய் முடி |
– |
பூந்தாரையுடைத்தாய் அழகிய குளிர்ந்த திருத்துழாயணிந்த திருமுடியை யுடையனான |
| அப்பன் |
– |
எம்பெருமானுடைய |
| ஊர் |
– |
திவ்ய தேசம் (எது வென்னில்) |
| செல்வர்கள் வாழும் திருக்கடித்தானம் |
– |
பகவத் கைங்கர்ய ஸம்பந்தங்கள் வாழப்பெற்ற திருக்கடித்தானமாகும். |
ஐயோ! எம்பெருமானுடைய அருளை என்ன சொல்லுவேன்! பகலென்றும் இரவென்றும் பாராமல் எக்காலத்திலும் தன்னையே நினைத்து உஜ்ஜீவிக்கும்படி செய்து போருமிவ்வருளை என் சொல்லவல்லேனென்வாய் கொண்டே யென்று திணறுகிறார்.
என்னுடைய குற்றங்களைப் பார்த்தானாகில் அவன் அருளுகைக்கு ப்ரஸக்தியுண்டோ? நான் அகிஞ்சநன் என்று என்னுடைய வெறுமையையே பார்த்துத் தன்பேறாக அருளுமிவ்வருள் என்னோவென்கிறார்.
கீழே * மாயக்கூத்தன் பதிகத்திலே தாம்பட்ட வ்யஸனத்திற்காக அருள் செய்கிறானென்று நினைக்கின்றிலர், தன்பேறாக அருள் செய்வதாகவே நினைக்கிறார்.
உண்மையில் இப்படித்தானே நினைக்கவேண்டும். இதுவுமன்றி, இப்படிப்பட்டவருள் வேறொருவருக்குமன்றிக்கே தம்மொருவர்க்கே செய்வதாகவும் காட்டுகிறார் நமக்கே தந்தருள் செய்வான் என்று.
தாம் பெற்றபேறு நித்யஸூரிகளும் பெற்றிலர் என்பதே ஆழ்வாருடைய திருவுள்ளம்.
கீழ்த் திருவாய்மொழியில் *மொய்பூந்தாமத் தண்டுழாய்க் கடிசேர்கண்ணிப பெருமானே! * என்று இவர் ஆசைப்பட்டபடியே காட்டிக் கொடுத்தருளினதைப் பேசுகிறார் அல்லியந்தண்ணந்துழாய் முடியப்பன் என்று.
இப்படிப்பட்ட மஹோபகாரகன் எழுந்தருளியிருக்கு மிடமாகையாலே நமக்கு உத்தேச்ய ஸ்தலம் திருக்கடித்தானம் என்கிறார்.
செல்வர்கள் வாழும் –தனிகர்கள் வாழுமிடம் என்கிறதன்று, நிரந்தரபகவதநுபவமேயாய்க் காலங் கழிக்கையே செல்வமாம், இளையபெருமானை யொத்தவர்கள் வாழுமிடம் என்றபடி.
————
*** – என்னிடத்தே வருகைக்கு இடையூறா யுள்ளவற்றையும் தானே தவிர்த்து, திருக்கடித்தானத்திலும் என்னுடைய ஹ்ருதயத்திலும் ஒருங்கே அபிநிவேசத்தைப்பண்ணி என்னுள்ளே யெழுந்தருளியிரா நின்றானென்கிறார்.
திருக்கடித்தானப்பதியையும் இவருடைய திருவுள்ளத்தையும் ஒக்க நினைக்கையாவது என்னென்னில், ஸ்ரீவசந பூஷணத்தில் – (171). “அங்குத்தைவாஸம் ஸாதநம், இங்குத்தை வாஸம் ஸாத்யம். * கல்லுங் கனைகடலு மென்கிறபடியே இது வித்தித்தால் அவற்றில் ஆகாம் மட்டமாயிருக்கும்.
* இளங்கோயில் கைவிடேலென்று இவன் ப்ரார்த்திக்கவேண்டும்படியா யிருக்கும்.
ப்ராப்யப்ரீதி விஷயத்வத்தாலும் க்ருதஜ்ஞதையாலும் பின்பு அவை அபிமதங்களாயிருக்கும்“ என்றருளிச் செய்யப்படுகிறது.
இந்த ஸ்ரீஸூக்திகளின் கருத்தாவது திவ்யதேசங்களிற் காட்டிலும் ஞானிகளின் திருமேனியில் எம்பெருமான்பண்ணும் ஆதரம் அளவற்றது,
எம்பெருமான் திவ்ய தேசங்களில் எழுந்தருளி யிருப்பதானது தக்கவுபாயங்களாலே சேதநரை அகப்படுத்திக் கொள்ளுகைக்காகவாகையாலே அந்த திவ்ய தேச வாஸம் ஸாதனம், இந்த சேதநன் திருந்தி இவனுடைய ஹ்ருதஙத்தினுளே தான் வஸிக்கப்பெற்றவது அத்திவ்யதேச வாஸமாகிய க்ருஷியின் பயனாகையாலே ஞானிகளிடத்தில் வாஸமே எம்பெருமானுக்கு பரம ப்ரயோஜனம்.
திருக் கடித்தானமும் என்னுடைச் சிந்தையும்
ஒருக்கடுத்துள்ளே உறையும் பிரான் கண்டீர்
செருக்கடுத்தன்று திகைத்த வரக்கரை
உருக்கெட வாளி பொழிந்த வொருவனே–8-6-2-
பதவுரை
| அன்று |
– |
முன் பொருகாலத்தில் |
| செரு கடுத்து |
– |
யுத்தத்திலே செருக்கு விஞ்சி |
| திகைத்த அரக்கரை |
– |
ஆரைச் சண்டைக்கிழுக்கலாமென்று திசைத்திருந்த ராக்ஷஸர்கள் |
| உரு கெட |
– |
உருவம் கெடும்படியாக |
| வாளி வொழிந்த ஒருவன் கண்டீர் |
– |
அம்புகளைப் பொழிந்த மஹா வீரனன்றோ |
| திருக்கடித்தானமும் என்னுடைய சிங்கையும் |
– |
திருக்கடித்தானப்பதியையும் எனது நெஞ்சையும் |
| ஒருக்கத்து |
– |
ஒருசேரப்பிடித்து |
| உள்ளே உறையும் பிரான் |
– |
இரண்டினுள்ளும் வர்த்திக்கிற பெருமான். |
* மலைமேல் தான்னின்று என்மனத்துளிந்தானை * என்றும்,
* பனிக்கடலில் பள்ளி கோளைப் பழக விட்டோடிவந்து என்மனக்கடலில் வாழவல்ல மாய மணாளநம்பி
* கல்லுங் கனைகடலும் வகுந்த வானாடும் புல்லென்றொழிந்தன கொல் எபாவம், வெல்ல நெடியான் நிறங்கரியான் உள்புகுந்து நீங்கான் அடியேனதுள்ளத்தகம் * என்ற பெரிய திருவந்தாதிப் பாசுரத்தினால் விளங்கும்.
எம்பெருமான் புராதன திவ்ய தேசங்களில் நெடுநாளாகப் பண்ணிக் கொண்டிருந்த ஆதாரத்தைக் குலைத்துக்கொண்டு இன்று தன் ஹ்ருதயத்திலே அளவு கடந்த ஆதரத்தைப் பண்ணிக் கொண்டிருக்கும்படியைக் காணும்
ஞானியானவன் “பிரானே! என்னுள்ளத்தனுள் புகுருகைக்கு பாலாலயம் போன்றிருந்த திருப்பாற்படல் முதலியவற்றில் ஆதரத்தைக் குறைத்துக்கொள்ளக் கூடாது“ என்று எம்பெருமானை நோக்கி பிரார்த்திக்க வேண்டும்படியாகும்.
பரமபதம் திருப்பாற்கடல் அர்ச்சாவதாரங்கள் முதலிய ஸ்தானங்களிற் காட்டிலும் ஞானிகளின் ஹ்ருதயமே எம்பெருமானுக்குப் பரமபுருஷார்த்த மாகில், பரமபதம் முதலியவற்றை எம்பெருமான் விட்டுவிட வேண்டாவோ? அப்படி விட்டுவிட்டதாகத் தெரியவில்லையே, அவற்றிலும் உகந்து வர்த்திப்பதாகத் தெரிகிறதே, இதற்கு ஹேதுவென்? என்ன
எம்பெருமான் தனக்கு ப்ராப்யபூதரான ஞானிகள் அந்த ஸ்தலங்களிலே போரவுகப்புக் கொண்டிருப்பதனாலே அவர்களுகந்த ஸ்தலம் நமக்கு முத்தேச்யமாகவேணும் என்கிற எண்ணத்தினாலும்,
இத்தேசங்களில் நாம் வாஸம் செய்தபடியாலன்றோ நமக்கு ஞானிகளின் ஹ்ருதயத்தில் வாஸமாகிற மஹத்தான லாபம் செய்தபடியாலன்றோ நமக்கு ஞானிகளின் ஹ்ருதயத்தில் வாஸமாகிற மஹத்தான லாபம் கிடைத்தது“ என்கிற நன்றியுணர்க்கியினாலும் எம்பெருமானுக்கு திவ்யதேசவாஸமும் அபிமதமாகின்றனது – என்பதாம்.
ஆகவே தமிருக்கும் கடித்தானப் பதியையும் தம்முடைய உள்ளத்தையும் ஓக்க நினைத்துப் பரிமாறுவதாக இங்கு அருளிச் செய்யப்பட்டதென்க.
————–
***- இப்பாட்டு தனிப்பட அந்வயிக்கமாட்டாது, கீழிரண்டாம் பாட்டுக்கு சேஷபூதமாகியே அந்வயிக்கும்.
அப்பாட்டின் பின்னடிகள் “செருக்கடுத்தன்று திகைத்தவர்க்கரை உருக்கெட வாளியொழிந்த வொருவனே” என்றுள்ளது.
அப்படி வாளியொழிந்த காலத்தில் சக்ரவர்த்தி திருமகனார் இருந்தவிதம் இப்படிப்பட்ட தென்கிறது இப்பாட்டில்.
“வாளிபொழிந்தபடி எங்ஙனே யென்ன ஈங்ஙனே யென்கிறார்“ என்பது ஈட்டு அவதாரிகை.
ஒருவர் இருவர் ஓர் மூவர் என நின்று
உருவு கரந்து உள்ளும் தோறும் தித்திப்பான்
திருவமர் மார்பன் திருக் கடித் தானத்தை
மறவி யுறைகின்ற மாயப்பிரானே–8-6-3-
பதவுரை
| ஒருவர் இருவர் ஓர் மூவர் என நின்று |
– |
(இலங்கையில் மூல பலத்தை முடிக்குமிடத்து) முதலில் ஒருவனாய், பின்பு இருவராய், பின்னையும் மூவராய்த் தோன்றி நின்று (பின்னையும்) |
| உருவு காத்து |
– |
ரூபம் இலக்குக் குறிக்க வொண்ணாதபடி இந்திரியத்திற்கு அவிஷயமாகி |
|
செருக்குத்தன்சு திகைத்த வரைக்கரை உருக்கெட வாளி யொழிந்த வொருவன் |
||
| திரு அமர் மார்வன் |
– |
லக்ஷிமியைத் திருமார்பிலே யுடையனாய்க் கொண்டு |
| திருக்கடித்தானத்தை மருவி உறைகின்ற மாயப்பிரான் |
– |
திருக்கடித்தானத்தே பொருந்தி நித்யவாஸம் பண்ணுகிற ஆச்சர்ய சீலனான எம்பெருமான் |
| உள்ளுந்தோறும் தித்திப்பான் |
– |
நினைக்குந்தோறும் இனியனாகா நின்றான். |
ஒருவரிருவரோர் மூவரென நின்று உருவு கரந்து – ஸ்ரீ ராமாயண யுத்தகாண்டத்தில் (ஸர்க்கம் -94) மூல பல வதம் சொல்லுமிடத்து இந்த நிலைதெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருமாள் காந்தர்வாஸ்த்ர ப்ரயோகம் பண்ணின வளவிலே (ச்லோ-26). ••• தத்ருசிரே ராமம் தஹந்த மரிவாஹிநீம், மோஹிதா பரமாஸ்க்ரேண காந்தர்வேண மஹாத்மநா.) என்று அரக்கர்கள் இராமனை அடியோடு காணவில்லையென்று முதலிலே சொல்லிற்று.
இங்கு இருபத்தினாலாயிரப்படி வியாக்கியான ஸ்ரீ ஸூக்திகள் காண்மின் – “ஒருவரிருவரோர் மூவரென நின்று உருவுகரந்து உருக்கெட வாளிபொழிந்த வொருவன் என்று கீழோடே அந்விதமாகக் கடவது. மூல பலம் சாகும்படி. அருளுகிறவன்று முந்துற வொருவனாய்த் தோற்றி, சாரிகையில் வேகம் மிகமிக இருவரும் மூவருமாய்த் தோற்றி வேகம் மிக்கவாறே இந்த்ரிய ஸம்யோகத்துக்கு இடமில்லாதபடியாகையாலே ரூப்க்ரஹணம் அரிதாய் – உருக்கெட வாளிபொழிந்த வொருவன் என்று அந்வயம்.“
(திருவமர் மார்வன் திருக்கடித்தானத்தை மருவியுறைகின்ற மாயப்பிரான் உள்ளுந்தோறும் தித்திப்பான்) பெரிய பிராட்டியாரோடு கூடியிருக்கச் செய்தேயும் அவளைவிட்டு அவள் பரிகரமான என்னிடத்தலே ப்ராவண்யங்கொண்ட பெருமான் நானுகந்தவிடமென்று திருக்கடித்தானப் பதியை யுகந்து எனக்குப் பரமபோக்யனாயிரா நின்றானென்கை.
—————-
***- எம்பெருமான் திருக்கடித்தானத்தைப் பகலிருக்கை மாத்திரமாகக் கொண்டு என்னெஞ்சை
நிரந்தர வாஸஸ்தானமாகக் கொண்டருளினானென்கிறார்.
மாயப்பிரான் என் வல்வினை மாய்ந்தற
நேசத்தினால் நெஞ்ச நாடு குடி கொண்டான்
தேசத்தமர் திருக் கடித் தானத்தை
வாசப் பொழில் மன்னு கோயில் கொண்டானே-8-6-4-
பதவுரை
| தேசம் அமரர் |
– |
தேஜஸ்விகளான நித்ய ஸூரிகளுக்கும் ப்ராப்யமாய் |
| வாசம் பொழில் மன்னு |
– |
பரிமளம் மிக்க பொழில்கள் சேர்ந்தான |
| திருக்கடித் தானத்தை |
– |
திருக்கடித்தான மென்னும் தலத்தை |
| கோயில் கொண்டான் மாயப்பிரான் |
– |
கோயிலாகக் கொண்டவனான எம்பெருமான் |
| என வல் வினை மாய்ந்து அற |
– |
என்னுடைய வலிய கருமங்கள் ஒழிந்து போம்படியாக |
| நேசத்தினால் |
– |
அன்புடனே |
| நெஞ்சம் நாடு குடி கொண்டான் |
– |
என்னெஞ்சாகிற நாட்டைத் தனக்குக் குடியிருப்பாகக் கொண்டான் |
ஆச்சரியமான குணசேஷ்டிதங்களையுடைய பெருமான் தன்னைப்பிரிந்து நான் பட்ட கிலேசமெல்லாம் தீரும்படி,
(அதாவது) கீழ் * மாயக் கூத்தாவென்கிற பதிகத்தில் * காணவாராயென்றென்று கண்ணும் வாயும் துவர்ந்துபட்ட விடாயெல்லாம் தொலையும்படி என்னுடைய நெஞ்சமாகிற நாட்டிலே குடிகொண்டான் – நித்யவாஸம் பண்ணாநின்றான்,
நானுகந்த விடமென்று திருக்கடித்தானத்தையும் கோயில்கொண்டிராநின்றான்.
திவ்யதேசங்களில் பகலுமிரவும் பூர்த்யாக ஸேவை தந்தருளாமையாலே பகலில் மாத்திரமே அங்கு வாஸமென்னவேண்டியிருந்தது.
என்னெஞ்சில் அப்படியன்றிக்கே நிரந்தரவாஸமுள்ளது.
நெஞ்சநாடு – சோழநாடு தொண்டைநாடு பாண்டிநாடு மலைநாடு தென்னாடு வடநாடு என்கிறாப்போலே நெஞ்சநாடென்றும் ஒரு நாடு உண்டாயிற்றுப்போலும்.
இங்கு ஈடு, “ஸம்ச்லேஷ விச்லேஷங்களாலே ஒரு த்ரிபாத் விபூதியாக்கினானாயிற்று இவர் திருவுள்ளத்தை“
மூன்றாமடியில் தேசம் – தேஜஸ் என்னும் வடசொல் விகாரம்.
————-
***- என்பக்கவிலுண்டான ப்ர்ரேமோதியத்தாலே திருக்கடிகத்தானத் திருப்பதியோடே கூடவந்து என் ஹ்ருதயத்திலே புகுந்தருளினானென்கிறார்.
கோயில் கொண்டான் தன் திருக் கடித் தானத்தை
கோயில் கொண்டான் அதனோடும் என்நெஞ்சம்
கோயில் கொள் தெய்வமெல்லாம் தொழ
வைகுந்தம் கோயில் கொண்ட குடக் கூத்த வம்மானே–8-6-5-
பதவுரை
| கோயில் கொள் தெய்வம் எல்லாம் தொழ |
– |
தங்களுக்கென்று விமானங்கயுடையரான நித்ய ஸூரிகளெல்லாரும் தொழும்படியாக |
| வைகுந்தம் கோயில் கொண்ட |
– |
ஸ்ரீ வைகுண்டத்தை வாஸஸ்தானமாகவுடையனாய் |
| குடக்கூத்த அம்மான் |
– |
(அவதரித்த விடத்தே) குடகூத்தாடும் பெருமானைவன் |
| திருக்கடித் தானத்தை தன் கோயில் கொண்டான் |
– |
திருக்கடித்தானத்தை தனது கோயிலாக ஸ்வீகரித்துக் கொண்டவனாய் |
| அதனோடும் |
– |
அது தன்னோடே |
| என் நெஞ்சகம் கோயில் கொண்டான் |
– |
என்னெஞ்சையும் தனக்குக் கோயிலாகக் கொண்டான். |
திருக்கடித்தானத்தைத் தனக்கு அஸாதாரணமான கோயிலாகக் கொண்டவன் ஆழ்வார் நெஞ்சிலுள்ளே வந்து புகவிரும்பினான்,
அப்போது திருக்கடித்தானத்தை விட்டுத் தான் மாத்திரமே வந்து புகுவதாக முதலில் நினைத்தானாம்.
அப்படியாகில் செருப்புவைத்துத் திருவடி. தொழுவாரைப் போலேயாகுமென்று தோன்றிற்றாம்.
அப்படியாக வொண்ணாதென்று அத்திருப்பதியையும் கூட்டிக் கொண்டு வந்து புகுந்தானாம்.
* அரவத் தமளியினோடு மழகிய பாற்கடலோடும் அரவிந்தப் பாவையுந்தானும் அகம்படிவந்து புகுந்து, பரவைத் திரைபலமோதப் பள்ளிகொள்கின்ற பிரானை * என்ற பெரியாழ்வார் திருமொழி இங்கே அநுஸந்திக்கத்தக்கது.
திருக்கடித்தானத்தோடு மாத்திரமே வந்தானல்லன், ஸ்ரீ வைகுண்டத்து வைபவங்களோடும் க்ருஷ்ணாவதார வைபவங்களோடுங் கூடிவந்து புகுந்தா னென்கிறார் பின்னடிகளில்.
“தெய்வமெல்லாந் தொழ வைகுந்தங் கோயில்கொண்ட“ என்றதும் “குடக்கூத்தவம்மான்“ என்றதும் ஸாபிப்ராயம்.
நித்யஸூரிகளோடுகூட வைகுந்தத்தையுங் கூட்டிக் கொண்டுவந்தான்,
குடக்கூத்து முதலான அவதார சேஷ்டிதங்களுக்குக் கருவியாயுள்ளவற்றையும் கையிலே கொண்டுவந்தான் என்பது உட்கருத்து.
————–
கூத்த வம்மான் கொடியேன் இடர் முற்றவும்
மாய்த்த வம்மான் மது சூத வம்மான் உறை
பூத்த பொழில் தண் திருக் கடித் தானத்தை
ஏத்த நில்லா குறிக் கொண்மின் இடரே–8-6-6-
பதவுரை
| கூத்த அம்மான் |
– |
மநோஹரி சேஷ்டிதங்களையுடைய ஸர்வேச்வரனாய் |
| கொடியேன் இடர் முற்றவும் மாய்த்த அம்மான் |
– |
பாவியேனுடைய துக்கங்களை யெல்லாம் போக்கின ஸ்வாமியாய் |
| மதுசூத அம்மான் |
– |
மதுஸூதனப் பெருமானானவன் |
| உறை |
– |
எழுந்தருளியிருக்குமிடமாய் |
| பூத்த பொழில் |
– |
பூத்த சோலைகளையுடைத்தான |
| தண் திருக்கடித்தானத்தை |
– |
குளிர்ந்த திருக்கடித்தானப்பதியை |
| ஏத்த |
– |
துதித்த வளவிலே |
| இடர் நில்லா |
– |
துக்கங்கள் நிலைகுலைந்துபோம் |
| குறிக்கொண்மின் |
– |
இதைத்திண்ணமாக அறிமின். |
***- திருக்கடித்தானத் தோடும் எம்பெருமான் தம் திருவுள்ளத்திலே புகுந்தானென்றவாறே அத் திருப்பதியானது ஆழ்வார் திருவுள்ளத்திலே அந்தர்த்தானமாகிவிட்ட தென்றும்
தனியே அதிருப்பதி கிடையாதென்றும் சிலர் நினைக்கக் கூடமாதலால் அந்த நினைவு நீங்குமாறு, திருக்கடித்தானத்தை எல்லாரும் ஆச்ரயியுங்கோளென்கிறார்.
ப்ராப்யப்ரீதி விஷயத்வத்தாலும் க்ருதஜ்ஞதையாலும் பின்பு அவை அபிமதங்களாயிருக்கும்“ என்கிற ஸ்ரீ வசநபூஷண திவ்ய ஸூக்தியின்படியே எம்பெருமானுக்கு திவ்ய தேசாபிமாநமும் குறையற்றதேயன்றோ.
————–
***- திருக்கடித்தானத்தை ஏத்துங்கோளென்றார் கீழ்ப்பாட்டில்,
ஏத்த வேண்டா, அத்தலத்தை நெஞ்சாலே நினைத்தாலும் போது மென்கிறார் இதில்.
கொண்மின் இடர்கெட உள்ளத்துக் கோவிந்தன்
மண் விண் முழுதும் அளந்த ஒண் தாமரை
மண்ணவர் தாம் தொழ வானவர் தாம் வந்து
நண்ணு திருக் கடித் தான நகரே-8-6-7-
பதவுரை
| கோவிந்தன் |
– |
கோவிந்தனான பெருமானுடைய |
| மண் விண் முழுதும் அளந்த ஒண்தாமரை |
– |
மண்ணுலகையும் விண்ணுலகையும் ஒன்றொழியாமல் அளந்து கொண்ட அழகிய திருவடித்தாமரைகளை |
| மண்ணவர் தாம் தொழ |
– |
இந்நிலத்திலுள்ளார் தொழா நிற்க. |
| வானவர் தாம் வந்து நண்ணு |
– |
ப்ரமபதத்திலுள்ளார் தாங்களும் (சீலகுணாநுபவம் பண்ண) வந்து சேருமிடமான |
| திருக்கடித்தானம் நகர் |
– |
திருக்கடித்தானப்பதியை |
| இடர் கெட |
– |
துக்கமெல்லாம் தொலைய |
| உள்ளத்து கொண்மின் |
– |
நெஞ்சிலே கொண்டு சிந்தியுங்கோள் |
கோவிந்தன் மண்விண் முழுதுமளந்த வொண்டாமரை மண்ணவர்தாம்தொழ வானவர்தாம் வந்து நண்ணுதிருக்கடித்தான நகரை இடர்கெட உள்ளத்துக் கொண்மின் என்று அந்வயிப்பது.
கோவிந்தன் என்பது ஸர்வஸுலபனென்னும் பொருளில் பிரயோகிக்கப்பட்டது.
தாமரைபோன்ற திருவடியென்ன வேண்டுமிடத்து, திருவடியைச் சொல்லாதே தாமரையென்றே சொல்லிவைத்தது –உவமவாகுபெயர், * தாவி வையங்கொண்ட தடந்தாமரை கட்கே * (6-9-10) என்றார் கீழும்.
மண்ணவர்தாந் தொழ வானவர்தாம் வந்து நண்ணு –இடக்கை வலக்கையறியாத ஸம்ஸாரிகள் தொழ அவர்களுக்கு முகங்கொடுத்துக் கொண்டு நிற்கிற நிர்மையைக்காண வாசைப்பட்டு நித்ய ஸூரிகளும் வந்துகிட்டுகிற திருப்பதியாமிது.
“பரமபதம் நித்யர்க்கேயா யிருக்குமாபோலே உகந்தருளின தேசம் ஸம்ஸாரிகளுக்கேயா யிருக்கை“ என்பது நம்பிள்ளையீடு.
“இங்குள்ளார் அங்குப்போவது மேன்மையை யநுபவிக்க, அங்குள்ளார் இங்கு வருவது சீல குணாநுபவம் பண்ணுகைக்கு“ என்கிற ஸ்ரீ ஸூக்தியுங் காண்க.
—————–
***- எம்பெருமானுக்கு ஸ்தானமான விலக்ஷண நகரங்கள் பல பல வுண்டா யிருக்கச் செய்தேயும் என்னுடைய நெஞ்சையும்
திருக்கடித்தானத திருப்பதியையும் தனக்கு தாய ப்ராப்தமான ஸ்தானமாகக் கொண்டு விரும்பி யிருப்பதாக அருளிச் செய்கிறாரிதில்.
தான நகர்கள் தலைச் சிறந்து எங்கும்
வானிந்நிலம் கடல் முற்றும் எம் மாயற்கே
ஆனவிடத்தும் என்நெஞ்சம் திருக் கடித்
தான நகரும் தனதாய்ப் பதியே–8-6-8-
பதவுரை
| வான் இ நிலம் கடல் எங்கெங்கும் |
– |
பரமபதம் இவ்வுலகம் திருப்பாற்படல் ஆகிய எல்லாவிடத்தும் |
| தானம் நகர்கள் முற்றும் |
– |
வாஸஸ்தானமான நகரங்கள் முற்றவும் |
| தலை சிறந்து |
– |
மிக்க சிறப்பமைத்து |
| எம்மாயற்கே ஆன இடத்தும் |
– |
எம்பெருமானுக்கே ஆயிருக்கைச் செய்தேயும் |
| என் நெஞ்சும் |
– |
எனது நெஞ்சமும் |
| திருக்கடித்தானம் நகரும் |
– |
திருக்கடித்தான மென்கிற திருப்பதியும் |
| தன தாயம் பதியே |
– |
தனக்கே அஸாதாரண ப்ராப்தமான தலமாயிரா நின்றது. |
எம்பெருமானுக்குப் பரமபோக்யமாக அமைந்த வாஸ ஸ்தானங்களுக்கு ஒரு குறையுண்டோ? கணக்கு வழக்குண்டோ?
மேலுலகங்களிலும் இந்நிலவுலகத்திலும் கடலிலும் ஆகக் கண்டவிடங்களிலுமெல்லாம் மிகச் சிறந்த இருப்பிடங்கள் இருக்கச் செய்தேயும் அவற்றில் ஆத்ரமுடையனல்லன் எம்பெருமான்,
என்னெஞ்சையும் என்னெஞ்சில் வாஸத்திற்கு ஸாதனமாயிருந்த தீருக்கடித்தானப் பதியையுமே தனக்கு தாயப்ரப்தமான ஸ்தானமாக விரும்பியிரா நின்றான் என்றாராயிற்று.
முறையிலே வந்ததாய் அவச்யமநுபவிக்கத் தக்கதான பொருள் தாயப்ராப்தமெனப்படும்.
————–
***- திருக்கடித்தாமொன்றேயோ அவனுக்கு தாய்ப்ராப்தம்? எல்லாத் தலங்களுமே தாயப்ராப்தமன்றோவென்ன,
அன்றென்று சொல்லமுடியாது, ஆனாலும் என்னோடே கிட்டுகைக்குறுப்பான தலமென்று
திருக்கடித்தானத்திலே விசேஷாபிமானங் கொண்டிருக்கிறானென்கிறார்.
தாயப்பதிகள் தலைச் சிறந்து எங்கும் எங்கும்
மாயத்தினால் மன்னி வீற்று இருந்தான் உறை
தேசத்தமரர் திருக்கடித் தானத்துள்
ஆயர்க்கதிபதி அற்புதன் தானே–8-6-9-
பதவுரை
| தேசம் அமரர் திருக்கடித்தானத்துள் உறை |
– |
தேசுபொலிந்த நித்யஸூரிகளுக்கும் பிராப்ய மான திருக்கடித்தானப் பதியிலே வாழ்பவனாய் |
| ஆயர்க்கு அதிபதி |
– |
கோபாலர் தலைவனாய் |
| அற்புதன் தான் |
– |
ஆச்சர்யபூதனான பெருமான் தான் |
| தாயப் பதிகள் எங்கெங்கும் தலை சிறந்து |
– |
தனக்கு அஸாதாரணமான திருப்பதிகள் எல்லாவிடத்திலும் சிறப்பமைந்து |
| மாயத்தினால் |
– |
தன்னுடைய இச்சையினாலே |
| மன்னி வீற்றிருந்தான் |
– |
பொருந்தியெழுந்தருளி யிருப்பவன் |
தலைச்சிறந்த தாயப்பதிகள் எங்கெங்கும் மாயத்தினால் மன்னி வீற்றிருந்தான் –திவ்ய தேசங்களில் சிறியது பெரியதென்கிற வாசியின்றிக்கே எந்தத் திருப்பதியானாலும் அது மிகச் சிறந்தது,
அவை ஒவ்வொன்றும் தாயப்பதியே. (அதாவது-அஸாதாரணஸ்தலமே யென்றபடி)
அப்படிப்பட்ட எல்லாத் திருப்பதிகளிலுமே பொருந்தி வாழ்பவன்தான் எம்பெருமான், ஆனாலும், திருக்கடித்தானத்திலிருப்பு அத்புதம்! அத்புதம்! என்னவேண்டுமத்தனை.
————
***- ஆழ்வார் தம்மைப் பெறுமளவும் எம்பெருமான் திருக்கடித்தானத்திலே நின்றருளினான்,
இவர் தம்மைப் பெற்று ஸம்ச்லேஷித்த பிறகு நிற்பதுமிருப்பதும் இவர்தம் நெஞ்சிலேயாயிற்று என்கிறது இப்பாட்டு.
அற்புதன் நாரணன் அரி வாமனன்
நிற்பது மேவியிருப்பது என்னெஞ்சகம்
நற்புகழ் வேதியர் நான்மறை நின்றதிர்
கற்பகச் சோலைத் திருக் கடித்தானமே-8-6-10-
பதவுரை
| அற்புதன் |
– |
அத்புத சேஷ்டிதனாய் |
| நாராயணன் |
– |
நாராயணனாய் |
| அரி வாமனன் |
– |
ஹரியாய் வாமனனான எம்பெருமான் |
| மேவி இருப்பது என் நெஞ்சகம் |
– |
பொருந்தியிருப்பது என்னெஞ்சினுள்ளே, |
| நிற்பது |
– |
அதற்காகவந்து நிற்பது (எவ்விடத்திலென்னில்) |
| நல் புகழ் வேதியர் |
– |
புகழ்மிக்க வைதிகருடைய |
| நால் மறை |
– |
நான்கு வேதங்களும் |
| நின்று அதிர் |
– |
நிலைநின்று முழங்கும்படியாய் |
| கற்பகம் சோலை |
– |
கற்பகம் போன்ற மரங்கள் நிறைந்ததான |
| திருக்கடித்தானம் |
– |
திருக்கடித்தானத்திலே |
அற்புதன் நாராயணன். அரி வாமணன் நிற்பது – (எங்கேயென்றால்) நற்புகழ்வேதியர் நான்மறை நின்றதிர் கற்பகன் சோலை திருக்கடித்தானமே, (அவன்றான்) மேவியிருப்பது (எங்கேயென்றால்) என்னெஞ்சகம் –என்றிங்ஙனே ஒரு அந்வயக்ரமம்.
நற்புகழ்வேதியர் நான்மறை நின்றதிர் கற்பகச் சோலைத் திருக்கடித்தானத்து அற்புதன். நாராயணன் அரிவாமனன் நிற்பதும் மேவியிருப்பதும் என்னெஞ்சகம் – என்றிங்ஙனே மற்றோரந்வயக்ரமம்.
மூன்றாவதான வொரு யோஜனையுமுண்டு, அற்புதன் நாராயணன் அரி வாமனன் நிற்பதும் மேவியிருப்பதும் என்னெஞ்சகத்திலும் திருக்கடித்தானத்திலும் – என்று.
—————
***- இப்பதிகமானது தன்னைக் கற்றவர்களைத் தானே திருநாட்டிலே கொண்டு போய்வைக்குமென்று பயனுரைத்துத் தலைகட்டுகின்றார்.
சோலைத் திருக் கடித் தானத்துறை திரு
மாலை மதிட் குருகூர்ச் சடகோபன் சொல்
பாலோடு அமுதன்ன ஆயிரத்திப் பத்தும்
மேலை வைகுந்தத்து இருத்தும் வியந்தே-8-6-11-
பதவுரை
| சோலை திருக்கடித் தானத்து உறை திருமாலை |
– |
சோலைமிக்க திருக்கடித்தானப்பதியில் வாழும் திருமாலைக்குறித்து |
| மதிள் குருகூர் சட கோபன் |
– |
நம்மாழ்வார் |
| சொல் |
– |
அருளிச்செய்ததாய் |
| பாலோடு அமுது அன்ன |
– |
பாலும் அமுதும் கலந்தாற்போல் பரம போக்யமான |
| ஆயிரத்து |
– |
ஆயிரத்தினுள்ளே |
| இ பத்தும் |
– |
இப்பதிகம் |
| மேலை வைகுந்தத்து |
– |
ஸர்வோத்தமான ஸ்ரீ வைகுண்டத்திலே |
| வியந்து இருத்தும் |
– |
உகந்து இருக்கச் செய்யும். |
இப்பாட்டின் ஆறாயிரப்படி ஸ்ரீஸூக்தி பரம போக்யம், – “சோலைத் திருக்கடித்தானத்துறை திருமால் கவிக்கு ப்ரதி பாத்யன், மதிள் குருகூர்ச்சடகோபன் கவிப்பாடுகிறானானால் இவை எங்ஙனே யிருக்கின்றன!, இவை வல்லாரை எம்பெருமான ஒரு க்ஷணம் பிரியில் தரிக்கமாட்டானென்கிறார்.“ என்று.
பாலோடமுதன்ன என்ற விடத்திற்கு ஆளவந்தார் அருளிச் செய்வதொரு இன்சுவைப் பொருள்கேளீர், எம்பெருமான் விஷயமும் ஆழ்வார் ஸ்ரீஸூக்தியுமாகவன்றோ திருவாய் மொழியுள்ளது, இதில் எம்பெருமான் விஷயமானது பால், ஆழ்வார் ஸ்ரீஸூக்தியானது அமுது. இப்படி வாச்யவாசகங்கள் சேர்ந்திருப்பதானது பாலும்முதும் சோந்தாற்போன்றதாம்.
இப்பத்தும் வியந்து மேலைவைகுந்தத்திருத்தும் – “ஸம்ஸார நிலத்திலே இத்தை அப்யஸிப்பானொருவணுண்டாவதே!“ என்று வியப்பாம்.
அசேதமாகிய பதிகத்திற்கு வியப்புண்டாகுமோவென்று சங்கிக்கவேண்டா, பதிகத்தினால் ப்ரஸன்ன்னாகின்ற எம்பெருமானுடைய செயலே பதிகத்தின் மேலேற்றிக் கூறப்பட்டதென்க.
————————————————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
Related
This entry was posted on November 14, 2022 at 12:19 am and is filed under திரு வாய் மொழி. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
Leave a Reply