***- நான் அர்த்தியாய்க் கூப்பிட்டழைக்க விடாயெல்லாம் தீரும்படி. தான் அர்த்தியாய்
என்னெஞ்சிலே பெறாப்பேறு பெற்றானாகப் புகுந்திராநின்றானென்கிறார்.
இருத்தும் வியந்து என்னைத் தன் பொன்னடிக் கீழ் என்று
அருத்தித் தெனைத்தோர் பல நாள் அழைத்தேற்கு
பொருத்தமுடை வாமனன் தான் புகுந்து என்தன்
கருத்தை யுற வீற்றிருந்தான் கண்டு கொண்டே-8-7-1-
பதவுரை
| என்னை |
– |
அடியனை |
| வியந்து |
– |
திருவுள்ளமுவந்து |
| தன் பொன் அடி கீழ் இருத்தும் என்று |
– |
தன் திருவடிகளின் கீழே இருத்தியருள்வானாக வென்று |
| அருத்தித்து எனைத்தோர் பல நாள் |
– |
அனேக காலம் நாள்தோறும் |
| அழைத்தேற்கு |
– |
அழைத்துக் கூப்பிட்ட வென் விஷயத்தில் |
| பொருத்தம் உடை வாமனன் தான் புகுந்து |
– |
ப்ராவண்யமுடையனான எம்பெருமான் தானே வந்து புகுந்து |
| என் தன் கருத்தை உற |
– |
என்னுடைய கருத்தைத் தானுடையனாய்க்கொண்டு |
| கண்டு கொண்டு |
– |
என்னையே பார்த்துக்கொண்டு |
| வீற்றிருந்தான் |
– |
எழுந்தருளியிரா நின்றான் |
அடியேனைத் தன்னுடைய திருவடிகளின் கீழே சேர்த்துக் கொண்டருள வேணுமென்று அவனைப் பிரார்த்தித்து நான் பலகாலும் கதறிக் கொண்டிருந்தேன், என்னுடைய இரப்பு இப்படியிருக்க, தான் பண்டு மாவலிதன் பெருவேள்வியில் இரப்பாளனாய்ச் செற்றதுபோல இன்று என் பக்கலிலே, என்னுடைய அர்த்தித்வத்தைத் தான் ஏறிட்டுக் கொண்டு வந்து என்னுள்ளே புகுந்து, என்னைப் பெற்றதனாலுண்டான வேறுபாடு தன் வடிவிலே தோற்ற விருந்து க்ருத க்ருத்யனாய் நின்றான்.
(கண்டுகொண்டே வீற்றிருந்தான்) மஹா வ்யாதிக்குத் தப்பிப்பிழைத்த புத்திரனைப் பார்த்துக்கொண்டிருக்கும் பிதாபோலே, கீழே * மாயக்கூத்தாவென்னுந் திருவாய்மொழியிலாற்றாமைக்குத் தப்பிப்பிழைத்தவரென்று வைத்தகண் வாங்காதே பார்த்துக் கொண்டிராநின்றான்.
மூன்றாமடியில் பொருத்தமுடை யென்றது ஸாபிப்ராயம், ஐயோ! இவனையன்றோ நான் கீழே “இதுவோபொருத்தமே“ என்றேன் என்று நொந்து சொல்லுகின்றார்போலும்.
————–
***- பிரபல விரோதிகளான இந்திரியங்கள் வலிமாண்டொழியும்படி தன்னழகாலே செய்து
என்னை விஷயீகரித்தருளின பேருதவிக்கு, கஜேந்திராழ்வான் திறந்துச் செய்த உதவியும் ஒவ்வாதென்கிறார். “
இருந்தான் கண்டு கொண்டே எனதேழை நெஞ்சாளும்
திருந்தாத வோரைவரைத் தேய்ந்தற மன்னி
பெருந்தாட் களிற்றுக்கு அருள் செய்த பெருமான்
தருந்தானருள் தான் இனி யானறியேனே-8-7-2-
பதவுரை
| எனது ஏழை நெஞ்சு ஆளும் |
– |
என்னுடைய சபலமான நெஞ்சைத் தங்களிஷ்டப்படி நடத்திக் கொண்டு போகிற |
| திருந்தாக ஓர் ஐவரை |
– |
துஷ்டபஞ்சேந்திரியங்களும் |
| தேய்ந்து அறமன்னி |
– |
க்ஷயித்து முடியும் படியாக என்பால் பொருந்தியிருந்து |
| கண்டு கொண்டு இருந்தான் |
– |
(நிதியெடுத்தவன் நிதினய்யே கண்டு கொண்டிருக்குமா போலே) என்னையே கண்டு கொண்டிருக்கின்றான். |
| பெரு தாள் களிற்றுக்கு அருள் செய்த பெருமான்தான் |
– |
பெரிய தாளையுடைய யானைக்கு அருள் செய்து ஸர்வாதிகனானவ்வன் |
| தரும் அருள் தான் |
– |
அந்த யானைக்கத் தந்த வருளை |
| இனி யான் அறியேன் |
– |
என்பக்கல் பண்ணின வருளைக்கண்ட பின்பு அருளாக மதிக்கின்றிலேன். |
இருந்தான் கண்டு கொண்டே“ என்று கீழ்ப்பாட்டிலுஞ் சொல்லிற்று, இப்போது மறுபடியும் அது சொல்லுகிறது. அந்தாதித் தொடைக்காகவன்று, ஜன்மதிரித்ரன் நிதிகண்டால் கண்ணிமைத்தலின்றியே பார்த்துக் கொண்டிருக்குமாபோலே பார்த்தபடியே யிராநின்றானென்கிறது.
இராமபிரானும் ஸுக்ரீவனும் நட்பான பின்பு * அந்யோந்யமபிவீக்ஷந்தௌ ந த்ருப்தி முபஜக்மது * (ஒருவரையொருவர் கண் கொட்டாமல் பார்த்தபடியேயிருந்து த்ருப்தியடையாமலே யிருந்தார்கள்) என்று சொல்லிற்று, இருவருமாக்க் கண்டு கொண்டிருந்தபடி அங்கு, ஒரு தலையேயிங்கு.
அவனாலே தாமடைந்த வுதவியாதெனில், (எனதேழை நெஞ்சாளுந் திருந்தாத வோரைவரைத் தேய்ந்தர) கண்டதெல்லாவற்றிலும் சபலமாயிருக்குமே நெஞ்சு, அப்படிப்பட்ட நெஞ்சை இந்திரயங்கள் தம்வழியே யிழுத்துக் கொண்டு கிடக்குமே, நமக்கு சேஷமான நெஞ்சை இந்திரியங்கள் பணி கொள்ளுகையாவதென்? என்று எம்பெருமான் அவற்றை முஞ்சிதறப்புடைத்தானாயிற்று.
தம்முடைய ஸர்வகரணங்களும் விஷயாந்தரவாஸநையுமறியாதே பகவத் விஷயத்திலேயே ப்ரவணமானபடி சொன்னவாறு.
ஸர்வசக்தியான எம்பெருமான் அநாதிகாலமாகத் திருத்தப் பார்த்தவிடத்திலும் தருந்தாமலிருந்தனவாம் அவை. அசேதனங்களான இந்திரியங்களை ஐந்து என்று சொல்லவேண்டுமிடத்து ஐவர் என்றது –அவை அசேதனங்களைப் போலன்றிக்கே சேதநர்கள். போலவே நின்று நலியுந்தன்மையைப் பற்ற. திருமங்கையாழ்வாரும் * உடனின்றைவரென்னுள் புகுந்து * என்றருளிச் செய்த்து காண்க.
இப்படிப்பட்ட வருளைத் தம் பக்கல் செய்தததைக் கண்ட ஆழ்வார், பண்டு கஜேந்திராழ்வானுக்குச் செய்த அருளும் இதற்கீடல்லவென்று துணிந்து பின்னடியருளிச் செய்கிறார்.
ஒரு முதலையின் வாய்ப்பட்டகளிறன்றோ அது, ஐந்து முதலைகளினாலன்றோ தாம் பட்டது. இவ்விடரைப்போக்கினது நிகரற்றபகாரமன்றோ.
இங்கே ஈட்டு ஸ்ரீ ஸூக்தி, -“ஆனை நோவுபட்டது ஆயிரம் வத்ஸரம், அகப்பட்ட பொய்கை பரிச்சிந்நம், முதலை அஞ்சு, இத்தை மீட்டுக்கொண்ட மஹா குணத்துக்கு அதொரு குணமாறிற்றதோ?“
————–
அருள் தான் இனி யான் அறியேன் அவன் என்னுள்
இருள் தானற வீற்றிருந்தான் இதுவல்லால்
பொருள் தான் எனில் மூ வுலகும் பொருள் அல்ல
மருள் தானீதோ மாய மயக்கு மயக்கே–8-7-3-
பதவுரை
| அருள் தான் இனியான் அறியேன் |
– |
இவ்வருளல்லது மற்றோரருளை நானோர்ருளாக மதியேன் |
| அவன் தான் |
– |
அப்பெருமான் |
| என் உன் இருள் அற |
– |
எனது உள்ளிருள் தொலையும்படி |
| வீற்றிருந்தான் |
– |
(எண்ணுள்ளே) எழுந்தருளியிராநின்றான், |
| இது அல்லால் |
– |
இவ்விருப்புத்தவிர |
| பொருள் தான் எனில் |
– |
(அவனுக்கு) வேறு புருஷார்த்த முண்டோவென்னில் |
| மூ உலகும் பொருள் அல்ல |
– |
த்ரிலோகாதிபதித்வமும் ஒரு பொருளாகவுள்ள தன்று |
| ஈது மருள் தானோ |
– |
இது தான் என்ன ப்ரம்மோ! |
| மாயம் மயக்கு மயக்கே |
– |
(அவன் தான்) ஆச்சரியமான ப்ர்ரமகசேஷ்டிதங்களாலே மயக்குகிற படியோ? |
***- ஸர்வேச்வரன் தம் பக்கலிலே இப்படி அளவு கடந்த வியாமோஹத்தைப் பண்ணுகையாகிறவிது. ஆலோசித்துப் பார்த்தால் அஸம்பாவிதம்போல் தோன்றுகையாலே இது மெய்யாயிருக்க வழியில்லை, மருளோ? மாயமயக்கோ? என்று அலைபாய்கிறார்.
அருள்தான் இனியானறியேன் –என்னுடைய இந்த்ரியச் செருகையடக்கினதையும் ஒரருளாக மதிக்கமாட்டே னென்றபடி. “என்னுள்ளே யிருந்தருளின விவ்வருளல்லது மற்றோருளை நான ஒர்ருளாக மதியேன்“ என்பது ஆறாயிரப்படி.
அவன் என்னுள் இருள்தானற –வீற்றிருந்தான் –அப்பெருமான் என்னுடைய ஹ்ருதயத்தில் அஜ்ஞாநாந்தரகாரமெல்லாம் போம்படி, பெறாப்பேறு பெற்றானாய் அப்பெருமை தோற்ற விராநின்றான், இனியெனக்கு வேறொன்று தோற்றுமோ வென்றபடி.
இதுவல்லால் பொருள்தானெனில் மூவுலகும் பொருள் அல்ல – இதற்கு இரண்டு வகையான நிர்வாஹங்களுள்ளன.
மூவுலகங்களையும் ஆளப்பெறுகையாகிற செல்வத்தை நாட்டார் பெருஞ் செல்வமென்று நினைத்திருப்பர்கள்,
எம்பெருமான் என் ஹ்ருதயத்தில் புகுந்த பின்பு. இதையே பெருஞ் செல்வமாகக் கொண்ட நான் அந்த த்ரிலோகாதிபத்யத்தை ஒரு பொருளாக மதிக்கமாட்டேனென்கிறார் என்று திருமாலையாண்டானருளிச் செய்ததாம்,
இப்படி ஆழ்வாருடைய எண்ணமாகச் சொல்லுவதிற்காட்டிலும் எம்பெருமானுடைய எண்ணமாகச் சொல்லுவதே பிரகரணத்திற்குச் சேருமென்று திருவுள்ளம்பற்றிய எம்பெருமானார் –“என்னுடைய ஹ்ருதயத்திலே புகுந்தெழுந்தருளியிருக்கிற விருப்பொழிய * வீற்றிருந்தேழுலகும் தனிக்கோல் செல்லவிருக்குமிருப்பையும் தனக்கொரு சரக்காக நினைத்திருக்கின்றிலன் எம்பெருமான்” என்றருளிச் செய்வராம்.
மருள் தானீதோ? –ஸர்வேச்வரன் ஒரு ஸம்ஸாரி சேதனைப்பெற்று இங்ஙனே களித்திருத்தானென்றால் இது கூடுவதன்றே, நம்பத்தகுந்த்தன்றே, ஆகவே இது என் அவிவேகத்தாலே சொல்லுகிறேனோ?
* ஸ்வப்நோ நு மாயா நு மதிப்ரமோநு. *
மாயமயக்குமயக்கே – அல்லது அந்த மாயப்பிரான் தானே தன்னுடைய மயக்குகளை யிட்டு இங்ஙனே மயக்கிப் பேசுவிக்கிறானோ?
இங்கே ஈடு, “நெடுநாள் ப்ரக்ருதியையிட்டு அறிவு கெடுத்தான், இப்போது தன் வ்யாமோஹத்தாலே என்னை ப்ரமிப்பித்தான்.“
————-
***- கீழ்ப்பாட்டில் * மருள்தானீதோ மாயமயக்கு மயக்கே* என்றாரே, ஆராய்ந்து பார்த்து இது மருளன்று,
மயக்கன்று மெய்யாகவே அவனென்னுள்ளே கலந்து களிப்புற்றான், இதிலொரு ஸந்தேஹமில்லையென்கிறார்.
மாய மயக்கு மயக்கான் என்னை வஞ்சித்து
ஆயன் அமரரர்க்கு அரி ஏறு எனதம்மான்
தூய சுடர்ச் சோதி தனதென்னுள் வைத்தான்
தேசந்திகழும் தன் திருவருள் செய்தே-8-7-4-
பதவுரை
| ஆயன் |
– |
கோபலக்ருஷ்ணனாயும் |
| அமரர்க்கு |
– |
நித்யஸூரிகளுக்கு |
| அரி ஏறு |
– |
அளவிடமுடியாத மேன்மையையுடையனாயு மிருக்கிற |
| எனது அம்மான் |
– |
எம்பெருமான் |
| தேசம் திகழும் தன்திரு அருள் செய்து |
– |
தேசப்ரஸித்த மாம்படியான தன் அஸாதாரண க்ருபையைப்பண்ணி |
| தனது தூய சுடர் சோதி |
– |
தன்னுடைய நிர்மல தேஜோமய திவ்யமங்கள விக்ரஹத்தை |
| என் உள் வைத்தான் |
– |
எனது நெஞ்சினுள்ளே ஸுப்ரதிஷ்டிதமாக்கினான், (இது மெய்யேயாதலால்) |
| என்னை வஞ்சித்து மாயமயக்கு மயக்கான் |
– |
என்னிடத்தில் வஞ்சகனாய் ப்ரமிக்கச்செய்கிறானல்லன் |
ஆறாயிரப்படி யருளிச் செயல் காண்மின், -“நிரவதிக வாத்ஸல்ய ஸௌசீல்யத்தை யுடையனாயிருந்தவனே என்னுடைய நிகர்ஷத்தைப் பார்த்து என்று திறத்துப் பொய் செய்தருளான், ஹேய ப்ரத்யநீகமான தன் திருவடிவை என்னுள்ளே ஸர்வலோகமு மறியும்படி மெய்யே வைத்தருளினானென்கிறார்.“
ஆயன் அமரர்கரியேறு எனதம்மான் தேசந்திகழும் தன் திருவருள் செய்து தனது தூயசுடர்ச்சோதி என்னுள் வைத்தான், என்னை வஞ்சித்து மாயமயக்கு மயக்கான் – என்று அந்வயக்ரமம்.
அநாச்ரிதரான துர்யோதநாதிகள் திறத்திலே ஆயுதமெடேனென்று ஆயுதமெடுத்தும் பகலை யிரவாக்கியும் வஞ்சித் தானித்தனையல்லது பாண்டவர்கள் விஷயத்தில் அத்தைச் செய்தானோ?
தனக்கே அற்றுத்தீர்ந்த என்னை வஞ்சிப்பனோ? ப்ரமஸாதனங்களாலே ப்ரமிக்கச் செய்வனோவென்னை? வஞ்சித்தானுமல்லன், ப்ரமிக்கச் செய்தானுமல்லன்.
வஞ்சிக்கமாட்டானென்பதற்கு ஹேது சொல்லுகிறார் ஆயனமரர்க்கரியேறு எனதம்மான் என்று.
இப்படிப்பட்டவன் லோகமெல்லாமறியும்படி என் பக்கலிலே நிர்ஹேதுக க்ருபையைப்பண்ணி, ஹேயப்ரதிபடமாய் விலக்ஷண தேஜோரூபமாய் சுத்த ஸத்வமயமாய் தனக்கே அஸாதாரணமான வடிவை என்னுள்ளே வைத்தான், இது மெய்யே, வஞ்சனையன்று மருளன்று.
—————–
***- “தேசந் திகழுந்தன் திருவருள் செய்தே“ என்று கீழ்ப்பாட்டிலருளிச்செய்த்தை இதில் விவரித்தருளுகிறார்.
திகழும் தன் திருவருள் செய்து உலகத்தார்
புகழும் புகழ் தானது காட்டித் தந்து என்னுள்
திகழும் மணிக்குன்றம் ஒன்றே ஒத்து நின்றான்
புகழும் புகழ் மற்று எனக்கும் ஓர் பொருளே–8-7-5-
பதவுரை
| திகழும் தன் திரு அருள் செய்து |
– |
மிகப்பொலிகின்ற தன் திருவருளைப்பண்ணி |
| உலகத்தார் புகழும் புகழ் அது தான் காட்டி தந்து |
– |
லோகத்தார் இதுகண்டு புகழுகிற அப்புகழையும் பிரபலப்படுத்தி |
| என்னுள் திகழும் மணி குன்றம் |
– |
என்னுள்ளே, விளங்கரநின்றதொரு மாணிக்க மலைபோலே நின்றான், |
| எனக்கு மற்று புகழும் புகழ் ஓர் பொருளே |
– |
எனக்கு இந்நிலையொழிய வேறு விதமாக அவனைப் புகழ்வதும் ஒரு பொருளோ. |
(திகழுந்தன் திருவருள்செய்து) உலகத்திலும் சிலர் சிலரிடத்தே அருள் செய்வதுண்டு, அதுதான் ஓரளவிலே நின்றிருக்குமே, என்பால் எம்பெருமான் செய்தவருள் இரண்டு தலைக்கும் நிறமாம்படியமைந்தது,
அதாவது –இன்னானுக்கருள் செய்தோமென்று அவனும் பெருமைபொங்கி, “இவ்வருளுக்கு நாமிலக்காககப் பொற்றோமே! என்று நானும் பெருமைபொங்கி நிற்கை.
ஆக இப்படிப்பட்ட மஹாக்ருபையைச் செய்ததனாலே என்னுடைய பேற்றைக் குறித்து உலகத்தார் செய்யும் புகழ்ச்சியைத் தான் காட்டித்தந்தான்.
அதாவது -* எதற்கும் பெரும்புகழ் வண்குருகூர்ச் சடகோபன் * என்றும்,
* என்னில் மிகுபுகழார் யாவரே? பின்னையும் மற்றெண்ணில் மிகுபுகழேன்யானல்லால் * என்றும்
* பாலேய் தமிழரிசைகாரர் பத்தர் பரவுமாயிரம் * என்றும் என் வாயில் வரும்படி பண்ணிவைத்தானென்கை.
என்னுள் திகழுமணிக்குன்றமொன்றே யோத்து நின்றான் –பளபளவென்று விளங்காநின்றதொரு நீல மலைபோலே என்னுள்ளேவந்து புகுந்து நிலைப்பெற்றுக் கால்வாங்கிப் போகமாட்டாதே யிராநின்றான்.
புகழும் புகழ் மற்றெனக்குமோர்பொருளே – என்னுள்ளேநின்றாருளாகையாகிற இந்த மஹா குணத்தையல்லது மற்றுள்ள புகழை ஒரு புகழாக மதிக்க மாட்டேனென்கை.
————-
***- உலகத்தார் எம்பெருமான் பக்கலில் அபேக்ஷிப்பது இரண்டு வகைப்பட்டது,
ஐச்வர்ய கைவல்யாதிகளான இதர புருஷார்த்தங்களை யபேக்ஷிப்பதென்பதொன்று,
அவையொன்றும் வேண்டாதே “எமக்கு நீயே வேணும்“ என்று அவன்றன்னையே அபேக்ஷிப்பது மற்றொன்று.
இவ்விதமாகவே, எம்பெருமான் உபகரித்தருளுகிறவிதமும் இரண்டுவகைப்பட்டது,
சிலர்க்கு இதர புருஷார்த்தங்களைக் கொடுத்துவிடுதல், சிலர்க்குத் தன்னையே கொடுத்துவிடுதல்.
ஆழ்வார்க்கு அவன் உபகரிப்பது இதர புருஷார்த்தங்களையன்றே, தன்னையே யன்றோ கொடுப்பது.
அது கிடைத்ததாகவன்றோ ஆழ்வாரும் களிப்பது. இப்படி, தன்னையே தமக்குத் தந்தருளினதானது, தன்னை வேறு யாரும் கொள்வாரில்லையென்பதனாலன்று, என் பக்கலுள்ள அபிநிவேசத்தாலே தந்தானென்கிறாரிப்பாட்டில்.
பொருள் மற்று எனக்கும் ஓர் பொருள் தன்னில் சீர்க்கத்
தருமேல் பின்னை யார்க்கவன் தன்னைக் கொடுக்கும்
கரு மாணிக்கக் குன்றத்துத் தாமரை போல்
திரு மார்வு கால் கண் கை செவ்வாய் யுந்தியானே–8-7-6-
பதவுரை
| கரு மாணிக்கம் குன்றத்து |
– |
கருமாணிக்க மலையின் மேலே |
| தாமரை போல் |
– |
தாமரைக்காடு அவர்ந்தாற்போன்ற |
| திரு மார்வு கால் கண் கை செம்வாய் உந்தியான் |
– |
திருமார்பு முதலிய திவ்யாவயவங்களையுடையனான பெருமான் |
| மற்று பொருள் தன்னில் |
– |
மற்றுள்ள புருஷார்த்தங்களிலே |
| எனக்கும் ஓர் பொருள் சீர்க்கதரும் எல் |
– |
எனக்கும் ஒரு புருஷார்த்தத்தைத் தந்து விட்டானாகில் |
| பின்னை அவன் |
– |
பின்னே அவன் உயர்ந்த |
| தன்னை ஆர்க்கு கொடுக்கும் |
– |
புருஷார்த்தமான தன்னை ஆருக்குக் கொடுப்பான். |
பொருள் தன்னில் மற்றுமோர் பொருள் எனக்குச் சீர்க்கத் தருமேல் –எம்பெருமான் தந்தருளும் புருஷார்த்தங்கள் பலபலவுண்டே, அவற்றுள் வேறேயொரு கனத்த புருஷார்தத்தை எனக்குத் தந்துவிட்டால், அவன் பின்னை யார்க்குத் தன்னைத் கொடுக்கும் – தானாகிற பொருளைக் கொடுப்பதற்கு வேறுயாருமில்லையா என்ன? ஏனில்லை? அவனும் கொடுப்பன், கொள்வாரும் பலருளர், அப்படியிருக்க எனக்குத் தன்னைக் கொடுத்தது தன்னுடைய அபிநிவேசாதியத்தாலே என்று சேஷ பூரணம் செய்துகொள்க.
பின்னடிகள் எம்பெருமானுடைய இயற்கை யழகைக் கூறுவனவல்ல, தம்மோடுண்டான கலவியாலே அவனுடைய திவ்யாவயவங்களிற் பிறந்த புதுக்கணிப்பைப் பேசுவன் “கருமாணிக்கக் குன்றத்துத் தாமரைபோல்“ என்றது இல்பொருளுவமை (அபூதோபமை)
—————
***- எம்பெருமான் ஆழ்வாரோடே கலந்து முறுவல் செய்து நிற்க, அத் திருப்பவளத்திலழகை யனுபவித்துப் பேசுகிறார்
செவ்வாய் யுந்தி வெண் பல் சுடர்க் குழை தம்மோடு
எவ்வாய்ச் சுடரும் தம்மில் முன் வளாய்க்கொள்ள
செவ்வாய் முறுவலோடு எனதுள்ளத்திருந்த
அவ்வாயன்றி யானறியேன் மற்றருளே–8-7-7-
பதவுரை
| செம் வாய் உந்தி வெண் பல் சுடர் குழை தன்னோடு |
– |
சிவந்தவாய் திருநாபி வெளுத்த திருமுத்து அழகிய மகரக்குழை ஆகிய அவற்றோடே கூட |
| எவ்வாய் சுடரும் |
– |
மற்றெல்லா அவயவங்களின் தேஜஸ்ஸும் |
| தம்மில் முன்வளாய்க் கொள்ள |
– |
ஒன்றுக் கொன்ன முற்பட்டுச் சூழ்ந்துகொள்ள |
| செம் வாய் முறுவரோடு |
– |
சிவந்த திருப்ப வளத்தின் முறுவலோடே கூட |
| எனது உள்ளத்து இருந்த |
– |
என்னெஞ்சினுள்ளே யிருக்கின்ற |
| அவ்வாய் அன்றி |
– |
அவ்வித மொழுய |
| மற்று அருள் யான் அறியேன் |
– |
வேறொன்றையும் நான் நினைக்கின்றிலே. |
இவ்வழகோடே என்னுள்ளே முறுவல் செய்திருக்கிறவிருப்பொழிய வேறொன்றையும் அறிகின்றிலேனென்கிறார்.
சிவந்த திருவதரமும் சிவந்த திருவுந்தியம் வெளுத்த திருமுத்தும் திருமகரக்குழையுமாகிற இவற்றோடே கூட மற்றைத் திவ்யாவயவ தேஜஸ்ஸும் ஒன்றுக்கொன்று முற்கோலிவந்து என்னை வளைத்துக்கொள்ள,
இங்ஙனே பலபல அவயவங்களின் அழகு வில்வீசினாலும் என்னை நோக்கி அவன் முறுவல் செய்கையாகிறவிதொன்றே என்னுள்ளத்தை ஆகர்ஷியா நின்றது. என்றாராயிற்று.
————–
***- இப்படி தம்மிடத்திலே எம்பெருமான் நிர்ஹேதுகமாகச் செய்தருளின அருளையிட்டு நிர்ஹேதுகமாக
அருள் செய்கையே அவனுக்கு இயல்பு என்று அவன்றன்படியை நிஷ்கர்ஷிக்கிறாரிப்பாட்டில்.
அறியேன் மற்றருள் என்னை யாளும் பிரானார்
வெறிதே யருள் செய்வர் செய்வார்கட்குகந்து
சிறியேனுடைச் சிந்தையுள் மூவுலகும் தன
நெறியா வயிற்றில் கொண்டு நின்று ஒழிந்தாரே–8-7-8–
பதவுரை
| மற்று அருள் அறியேன் |
– |
வேறொன்றையும் உபகாரமாக நினைத்தருக்கின்றிலேன், |
| என்னை ஆளும் பிரானார் |
– |
என்னை அடிமை கொண்ட ஸ்வாமியானவர் |
| செய்வார்கட்கு |
– |
தாம் அருள் செய்ய நினைத்தவர்கட்கு |
| வெறிதே |
– |
நிர்ஹேதுகமாகவே |
| உகந்து அருள் செய்வர் |
– |
திருவுள்ளமுகந்து க்ருபை பண்ணுவர் |
| மூ உலகும் நெறி ஆ |
– |
மூவுலகங்களையும் முறைதப்பாதபடி. |
| தம் வயிற்றில் கொண்டு |
– |
தமக்குள்ளே கூடக் கொண்டு |
| சிறியேனுடை சிந்தையுள் நின்றொழிந்தாரே |
– |
க்ஷுத்ரனான என்னெஞ்சிலே நின்று விட்டாரே. |
என்னையாளும் பிரானார் செய்வார்கட்கு வெறிதே யருள்செய்வர் – என்னையாளும் பிரானார்“ என்று எம்பெருமானுக்கு ஒரு திருநாமம் சாத்துகிறார்போலும். தம்மையடிமைகொள்ளுதலே அவனுக்கு நிரூபகமென்றிருக்கிறார்.
செய்வார்கட்கு என்றது –தாம் விஷயீகரிக்க நினைத்தார்க்கு என்றபடி.
எந்தவ்யக்தியை விஷயீகரிக்கவேணுமென்று தாம் திருவுள்ளம் பற்றுகிறாரோ அந்த வ்யக்தியினிடத்தில் (வெளிதே) நிர்ஹேதுகமாகவே அருள் செய்வர்.
ஸ்ரீ வசநபூஷணம் நான்காம் பிரகரணத்தில் பகவந்நிற்ஹேதுகக்குருபாவைபவ நிருபண ஸ்தலத்தில் (393) “*வெறிதேயருள் செய்வரென்று இவ்வர்த்தத்தை ஸுபஷ்டமாக அருளிச் செய்தாரிறே, செய்வார்கட்கு“ என்று அருளுக்கு ஹேது ஸுக்ருதமென்னா நின்றதேயென்னில், அப்போது வெறிதே என்கிற விடம் சேராது“ என்றருளிச் செய்த சூர்ணைகள் இங்கே அநுஸந்தேயம். ஏதேனுமொரு நன்மையைச் செய்பவர்களுக்கு“ என்னும் பொருளை விவக்ஷித்து “செய்வார்கட்கு என்று ஆழ்வார் பிரயோகித்தாரல்லர், அப்படியாகில், வெறிதேயருள்செய்வர் என்றது பொருந்தாது என்க.
ஆழ்வார் இப்போது இந்த நிர்ஹேதுக க்ருபா வைபவத்தை அருளிச் செய்வதானது, தம்மிடத்தில் எம்பெருமான் இப்போது நிர்ஹேதுகமாக வருள் செய்தானென்பதைத் தெரிவிக்கவேயாதலால் அது பின்னடிகளில் தெரிவிக்கப்படுகிறது.
இப்படி நிர்ஹேதுகமாகவருள எங்கே கண்டீ ரென்ன, வேறோரிடம் தேடிப்போக வேணுமோ? என் பக்கல் செய்தமைபாரீர்,
மிகவும் அற்பனான என்னுடைய ஹ்ருதயத்தினுள்ளே அவன் பண்ணுமபிநிவேசம் ஒரு ஹேதுவைக் கொண்டோ வென்கிறார்.
“சிறியேனுடைச் சிந்தையுள் நின்றொழிந்தாரே“ என்று அந்வயம்.
த்ரிலோகாதிபதியான அவன் தம்முள்ளே நின்றொழிந்தால் உலகத்தையெல்லாம் நோக்கவேணுமேயென்ன, ஜகந்நிர்வாஹமும் என்னுள்ளே யாகிறது என்கிறார் மூவுலகுமித்யாதியால்.
கீழே “சிக்கனச் சிறிதோரிடமும் பயப்படாத் தன்னுள்ளே உலகுகளொக்கவே விழுங்கிப் புகுந்தான்“ என்றருளிச் செய்தது இங்கே நினைக்கத்தக்கது.
————–
***- எம்பெருமான் நிர்ஹேதுகமாகத் தம்மை விஷயீகரித்தமையைக் கீழ்ப்பாட்டிலருளிச் செய்த ஆழ்வாரை நோக்கி
ஆழ்வீர்! ஒரு வ்யாஜமாத்ரமுமில்லாமல் எம்பெருமான் விஷயீகரிப்பனோ?
ஏதேனுமொரு வ்யாஜ மிருக்குமே, அதைச் சொல்லிக்காணீர், என்று சிலர் கேட்பதாகக் கொண்டு,
அவனுடைய விஷயீகாரத்தை விலக்காமையாகிற அனுமதிமாத்திரமே நான் பண்ணினது. இவ்வளவேயென்கிறாரிப்பாட்டில்.
“மன்னவைத்தேன் மதியாலே“ என்ற ஈற்றடி இப்பாட்டுக்கு உயிரானது.
ஆசார்ய ஹ்ருதயத்தில் இரண்டாம் ப்ரகரணத்தில் (110) “மதியால் இசைந்தோமென்னும் அநுமதீச்சைகள் இருத்துவ
மென்னாத வென்னை இசைவித்த என்னிசைவினது“ என்ற சூர்ணையின் பொருள் இங்கே அறியத்தக்கது.
வயிற்றில் கொண்டு நின்று ஒழிந்தாரும் யவரும்
வயிற்றில் கொண்டு நிற்றொரு மூவுலகும் தம்
வயிற்றில் கொண்டு நின்ற வண்ணம் நின்ற மாலை
வயிற்றில் கொண்டு மன்ன வைத்தேன் மதியாலே—8-7-9-
பதவுரை
| வயிற்றில் கொண்டு நின்றொழிந்தாரும் |
– |
தாயானவள் வயிற்றிலே வைத்து நோக்குமா போலே ரக்ஷகராகின்ற இந்நிலத்தரசர்களையும் |
| யவரும் |
– |
அவர்களுக்கும் மேலான பிரமன் முதலானாரையும் |
| வயிற்றில் கொண்டு நின்று |
– |
தம்முடைய ஸ்வரூபைக தேசத்திலே கொண்டு நின்று |
| ஒரு மூ உலகும் |
– |
மூவுலகங்களையும் |
| தன் வயிற்றில் கொண்டு நின்ற வண்ணம் நின்ற மாலை |
– |
தன்னுடைய வயிற்றிலே கொண்டு அநாயாஸமாக இருக்கின்ற திருமாலை |
| மதியாலே |
– |
அவர் தந்த அனுமதியாலே |
| வயிற்றில் கொண்டு |
– |
என்னுள்ளே கொண்டு |
| மன்ன வைத்தேன் |
– |
பேராதபடி வைத்தேன். |
முதலடியில் “வயிற்றில்கொண்டு நின்றொழிந்தாரும்“ என்பதனால் இந்நிலவுலகில் ரக்ஷகரென்று பேர்பெற்றுள்ள அரசர்கள் சொல்லப்படுகிறார்கள்
எப்படி யென்னில், தாயானவள் ப்ரஜையை வயிற்றிலே வைத்து நோக்குமாபோலே ஜகத்தை நோக்குமவர்கள் என்னுங் காரணத்தினால். அதற்குமேல், யவரும் என்பதனால் அவர்களிற்காட்டிலும் மேம்பட்டவர்களான ப்ரஹ்மாதிகள் சொல்லப்படுகிறார்கள்.
இனி இரண்டாமடிக்குப் பொருள் இரண்டு வகையாகக் கொள்ளலாம்,
“வயிற்றில் கொண்டு நின்று“ என்று பிரித்துத் திருமாவிடத்திலே அந்வயிப்பது ஒருவகை.
அன்றியே, நின்ற ஒரு நின்றொரு என்று தொகுத்தல் விகாரமாகக் கொண்டு, முதலடியிலே சொன்ன க்ஷத்ரியாதிகளையும் ப்ரஹ்மாதிகளையும் தன்னுள்ளே கொண்டிருந்துள்ள மூவுலகையும் என்று கொள்ளுவது மற்றொருவகை.
ஆக இவ்வளவையும், தன்வயிற்றில் கொண்டு –தன்னுடைய ஸங்கல்ப ஸஹஸ்ரைக தேசத்தாலே நடத்திக்கொண்டு, (அல்லது) வயிற்றிலே கொண்டு.
(நின்ற வண்ணம் நின்றமாலை) இவற்றையெல்லாம் தம் வயிற்றிலே கொண்ட விடத்திலும் ஒரு விகார மின்றிக்கே முன்புபோலே நின்ற ஸர்வேச்வரனை என்றபடி.
(வயிற்றில் கொண்டு மன்னவைத்தேன்) விபூதி விசிஷ்டனான ஸர்வேச்வரனை என்னுடைய ஹ்ருதயத்திலே பேராதபடி வைத்தே னென்கை.
————–
***- இப்படி யென்னுள்ளே புகுந்தவனை நான் இனியொரு நாளும் விட்டு வருத்தகில்லேனென்கிறார்.
வைத்தேன் மதியால் எனது உள்ளத்தக்கத்தே
எய்த்தே ஒழிவேன் அல்லேன் என்றும் எப்போதும்
மெய்த்தேய் திரை மோது தண் பாற் கடலுளால்
பைத்ததேய் சுடர்ப் பாம்பணை நம் பரனையே –8-7-10-
பதவுரை
| மொய்த்து ஏய் திரை மோது |
– |
செறித்து ஏய்த்த அலைகள் மோதப்பெற்ற |
| தண் பாற்கடலுள் |
– |
குளிர்ந்த திருப்பாற்கடலிலே |
| வைத்து ஏய் சுடர் பாம்பு அணை நம்பரனை |
– |
படமெடுத்துத் தகுதியான தேஜஸ்ஸையுடைய திருவனந்தாழ்வானைப் படுக்கையாகவுடைய எம்பெருமானை |
| மதியால் |
– |
அனுமதியாலே |
| எனது உள்ளத்து அகத்தே |
– |
என்னெஞ்சிலுள்ளே |
| வைத்தேன் |
– |
பொருந்த வைத்தேன், |
| என்றும் எப்போதும் எய்த்தே ஒழிவேன் அல்லேன் |
– |
இனி யொருநாளும் இளைத்துத் தளரமாட்டேன் |
பின்னடிகளை முன்னே அந்வயித்துக்கொண்டு பிறகு முன்னடிகளை அந்வயிப்பது.
* அரவத்தமளியினோடும் அழகிய பாற்கடலோடும் அரவிந்தப்பாவையுந்தானும் அழகிய பாற்கடலோடும் அரவிந்தப்பாவையுந்தானும் அகம்படி வந்து புகுந்து, பரவைத்திரை பலமோத்தப்பள்ளி கொள்கின்ற பிரான் * என்று பெரியாழ்வார் பெற்றபேறு
இவ்வாழ்வார் தாமும் பெற்றபேறு இவ்வாழ்வார் தாமும் பெற்றதாக விளங்கிற்று.
————–
***- இத்திருவாய்மொழி கற்கைக்குப் பயனாக ஜன்ம ஸம்பந்த நிவ்ருத்தியை யருளிச் செய்கிறார்.
சுடர்ப் பாம்பணை நம் பரனைத் திருமாலை
அடிச்சேர் வகை வண் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன வாயிரத்து இப்பத்தும் சன்மம்
விட தேய்ந்தற நோக்கும் தன் கண்கள் சிவந்தே–8-7-11-
பதவுரை
| சுடர் பாம்பு அணை நம் பரனை திருமாலை |
– |
தேசுமிக்கசேஷயனனாய் அஸ்மத் ஸ்வாமியான திருமாலை |
| அடி சேர் வகைவண் குருகூர் சடகோபன் |
– |
திருவடி பணிகையையே இயல்வாகவுடையரான ஆழ்வார் |
| முடிப்பான் சொன்ன |
– |
ஸம்ஸாரஸம்பந்தத்தை முடிப்பதற்காக அருளிச்செய்த |
| ஆயிரத்து |
– |
ஆயிரத்தினுள் |
| இ பத்தும் |
– |
இப்பதிகம் |
| சன்மம் அற தேய்ந்து விட |
– |
பிறப்பானது நன்றாகத் தொலைந்துபோம்படி |
| தன் கண்கள் சிவந்து நோக்கும் |
– |
தன் கண்கள் சிவக்கப்பார்க்கும் |
பர்யங்க வித்யையிற் சொல்லுகிறபடியே திருவனந்தாழ்வான் மடியிலே பெரியபிராட்டியாரோடே யெழுந்தருளியிருக்கக் கண்டநுபவிக்கையே முக்தர்கள் பெறும் பெறாதலால் அது முதலடியால் ஒருவாறு ஸூசிதமாகிறது.
“அடிச்சேர்வகை“ என்பதைச் சடகோபனிடத்தே அந்வயித்து “திருவடிகளிற்சேருகையே தமக்கு ஸ்வபாவமான ஆழ்வார்“ என்பது ஒரு யோஜநை.
“அடிச்சேர்வகை முடிப்பான் வண்குருகூர்ச் சடகோபன் சொன்ன“ என்று இயைத்து, திருவடிகளிலே சேரும்படியைத் தலைக்கட்டிக் கொள்ளுகைக்காக அருளிச் செய்த ஆயிரம் –என்பது மற்றொரு யோஜநை.
அசேதநமான பதிகத்திற்குக் கண்களிருப்பதாக வைத்து “தன்கண்கள் சிவந்து நோக்கும்“ என்றது –ஜந்ம விநாச ஹேதுத்வத்தால் திருவாய்மொழியைப் புருஷ ஸமாதியாலே சொன்னபடி.
————————————————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
Related
This entry was posted on November 14, 2022 at 1:43 am and is filed under திரு வாய் மொழி. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
Leave a Reply