Archive for April, 2015

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத்ரம் –701-750——-மும்மத விளக்கம் —

April 23, 2015

மநோஜவஸ் தீர்த்தகரோ வஸூ ரேதா வஸூப்ரத
வஸூப்ரதோ வாஸூதேவோ வஸூர் வஸூமநா ஹவி –74
சத்கதிஸ் சத்க்ருதிஸ் சத்தா சத்பூதிஸ் சத்பராயண
ஸூரசேனோ யது ஸ்ரேஷ்டஸ் சந்நி வாஸஸ் ஸூ யா முன –75
பூதா வாஸா வாஸூதேவஸ் சர்வா ஸூ  நிலயோ அநல
தர்ப்பஹா தர்ப்பதோத்ருப்தோ துர்த்தரோ தாபாராஜித –76
விஸ்வமூர்த்திர் மஹா மூர்த்திர் தீபத மூர்த்திர்  அமூர்த்தி மான்
அநேக மூர்த்திர்  அவ்யக்தஸ் சதமூர்த்திஸ் சதாநன–77
ஏகோ நைகஸ் சவ க கிம் யத்தத்த் பதம நுத்தமம்
லோக பந்துர் லோக நாதோ மாதவோ பக்தவத்சல
ஸூ வர்ண வர்ணோ ஹே மாங்கோ வராங்கஸ் சந்த நாங்கதீ
வீரஹா விஷமஸ் ஸூ ந்யோ க்ருதாஸீ ரசலஸ் சல –79-

———————————————————–

ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் -697-786—-90 திரு நாமங்கள்

—————————————————–

701-வஸூ –
திரு வவதாரத்திற்குக் காரணமாகிய திருப் பாற் கடலில் வசிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்-

எல்லாம் தம்மிடம் வசிக்கப் பெற்றவர் -தாம் எல்லாவற்றிலும் வசிப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

எங்கும் வசிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————-

702-வஸூ மநா –
ஸ்ரீ லஷ்மி பிறந்தவிடமான பாற் கடலில் வாசம் செய்தும் வ ஸூ தேவரிடம் மனம் வைத்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாவற்றிலும் வசிக்கும் மனம் உள்ளவர் -ஸ்ரீ சங்கரர் –

ச்யமந்தக மணியில் அல்லது பக்தர்கள் அளிக்கும் தீர்த்தத்தில் மனம் உள்ளவர் -வஸூ என்ற பெயருள்ள
அரசனுடைய அல்லது அஷ்ட  வஸூக்களின் மனத்தைத் தம்மிடம் கொண்டவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————–

703-ஹவி –
தேவகி வஸூதேவர்களிடம் வசிக்க விருப்பம் உள்ளவரானபோதும் -அவர்கள் கம்சனால் தீங்கு வரும் என்று அஞ்சியதால்
நந்த கோப யசோ தைகள் இடம் வளர்ப்பதற்குக் கொடுக்கப்பட்டவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ப்ரஹ்மமே ஹவிஸ் -என்று ஸ்ரீ கீதை-4-24–சொல்லியபடி ஹவிஸ்ஸாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்  –

ஹோமம் செய்யப்படுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————-

704-சத்கதி-
திரு வவதரிக்கும் போதே அசுரர்களால் விளையும் ஆபத்துக்களை அழித்து சாதுக்களைக் காப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ப்ரஹ்ம ஞானிகளான சத்திக்களால் அடையப் பெறுபவர் -உயர்ந்த ஞானம் உள்ளவர் -ஸ்ரீ சங்கரர் –

சத்தையை -இருப்பை அளிப்பவர் -நஷத்ரங்களுக்கு வழியாக இருப்பவர் -நல்லோர்களுக்கு அடையும் இடமாக இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————

705-சத்க்ருதி –
தயிர் வெண்ணெய் களவு செய்தது -உரலில் கட்டுண்டு தவழ்ந்தது -ராசக்ரீடை செய்தது முதலிய செய்கைகளும்
சம்சார விலங்குகள் எல்லாவற்றையும் போக்குபவைகளாகச்    சிறந்து இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஸ்ருஷ்டி முதலிய சிறந்த செயல்களை உடையவர் -ஸ்ரீ சங்கரர் –

சிறந்த முயற்சி உள்ளவர் -க்ருதி என்னும் தேவியைப் பிரத்யும்னன் முதலிய ரூபத்தில் அடைந்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————————–

706-சத்தா –
தாமே சாதுக்களுக்கு இருப்பாக உள்ளவர் -அவரின்றி எதுவும் இல்லை யன்றோ -ஸ்ரீ பராசர பட்டர் –

எவ்வித பேதமும் இல்லாத ஞானமாய் இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

ஆனந்தத்தின் இருப்பிடம் -ஆனந்தத்தை யுண்டாக்குபவர்-எப்போதும் இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————-

707-சத்பூதி –
சாதுக்களுக்கு மகன் -நண்பன் -உறவினன் -தூதன் தேரோட்டி முதலிய எல்லா வகைகளாகவும் தாமேயாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சத்தாக இருந்தே பல பல பொருள்களாகத் தொற்றுகிறவர் -ஸ்ரீ சங்கரர் –

நல்லோர்க்குச் செல்வம் அளிப்பவர் -சிறந்த செல்வம் யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————————

708-சத் பராயண-
சத் பராயணம் -சாதுக்கள் முடிவாகச் சேரும் இடமாக இருப்பவர் –
சத் பாராயண -சாதுக்களைத் தமக்கு ஆதாரமாக யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தத்துவ ஞானிகளுக்கு அடையும் இடமாக இருப்பவர் -சத்பராயணம் -எனபது பாடம் -ஸ்ரீ சங்கரர் –

சத் பராயண -நல்லோர்களுக்குப் புகலிடமாக இருப்பவர் -வாயு தேவனிடம் பற்றுள்ளவர்களுக்குப் புகலிடமாக இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————————————–

709-ஸூரசேன-
பூ பாரம் தீர்ப்பதற்காக திருவவதரித்த செயலில் யாதவர் பாண்டவர் முதலிய சூரர்களை துணையான
சேனையாகக் கொண்டவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஹனுமான் முதலிய சூரர்களை  சேனையாக உடையவர் -ஸ்ரீ சங்கரர் –

சூரர்களான ஜராசந்தன் முதளியவருடைய சேனைகளைத் தோற்ப்பித்தவர்-
சூர்யனாகிய தலைவனுடன் கூடியவர்கள் எனப்படுகின்ற சூரர்களை யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————————————–

710-யது ஸ்ரேஷ்ட –
முழுகிப் போன யது வம்சத்தை உயர வைத்ததனால் யதுக்களில் சிறந்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

யதுக்களில் சிறந்தவர் -ஸ்ரீ சங்கரர்

எல்லோரைக் காட்டிலும் மேம்பட்ட ரமாதேவியைக் காட்டிலும் மேம்பட்டவர் –யது குலத்தவர்களில் உயர்ந்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————-

711-சந்நிவாச –
மானிட தர்மத்தை உடையவராக இருந்த போதும் சனகர் முதலியோர் வந்து இளைப்பாறும் இடமாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

வித்வான்களுக்கு ஆதாரமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

நற்குணங்கள் நிறைந்தவர் -நல்லோர்க்கு இடமாக இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————

712-ஸூயாமுன –
இனிமையானதும் பாவங்களைப் போக்குவதுமாய் யமுனையில் செய்த ஜலக்ரீடை ராசக்ரீடை முதலிய செய்கைகளை யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சுபமானவர்களும் யமுனைக் கரையில் வசிப்பவர்களுமான நந்த கோபர் யசோதை பலராமன் சுபத்ரை முதலியோரால் சூழப் பெற்றவர் -ஸ்ரீ சங்கரர் –

காளியனை வெளியேற்றி யமுனையைச் சுத்தமாக்கி மங்களம் உள்ளதாகச் செய்தவர் -ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் யமுனைக் கரையில்
வந்திருந்த மங்களத்தைத் தருபவரான பிரம்மா முதலியவர்களால் சூழப் பெற்றவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————–

713-பூதா வாஸ-
ஸ்ரீ கிருஷ்ணனாகத் தம் பரத்வத்தை மறைத்து எல்லாப் பிராணிகளுக்கும் தங்கும் இடமாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பிராணிகள் தம் அருட்பார்வையில் வசிக்கும்படி இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

பூதங்களைக் காத்து எங்கும் சஞ்சரிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————————–

714-வாஸூதேவ –
வசுதேவர் பிள்ளையாக பன்னிரண்டு எழுத்துக்களை உடைய வாஸூ தேவ மந்திரத்தை வெளியிட்டவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

மாயையினால் உலகத்தை மறைக்கும் தேவராக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

வாயுவிற்கு தேவன் –அறிவிற்க்காகப் பிறக்கும் பிராண தேவனை யுண்டாக்கியவர்-
அவாஸூதேவ  -என்று ஸ்ருகால வாஸூ தேவனை அழித்தவர் –  ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————–

715-சர்வா ஸூ நிலய-
எல்லோருடைய பிராணங்களுக்கும் இருப்பிடமானவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லா பிராணன்களும் லயமடையும் ஆத்மாவாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

எல்லாப் பிராணிகளுக்கும் தஞ்சமாக இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————————–

716-அநல –
அடியவர்களுக்கு எல்லாம் செய்தாலும் திருப்தி அடையாமல் ஒன்றும் செய்ய வில்லையே என்று இருப்பவர் –
அடியவரிடம் பிறர் செய்யும் பிழையைப் பொறுக்காதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தம்முடைய சக்திக்கு அளவில்லாதவர் -ஸ்ரீ சங்கரர் –

பக்தர்களுக்கு வேண்டியவற்றைத் தருவதில் போதும் என்ற எண்ணமே இல்லாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————-

717-தர்ப்பஹா –
கோவர்த்தன மலை எடுத்தது -பாரி ஜாதத்தை கவர்ந்தது -பாணாசூரன் தோள்களைத் துணித்தது முதலியன செய்த போதும்
தேவர்களின் உயிர்களைக் கவராமல் கர்வத்தை மட்டும் போக்கியவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தர்மத்திற்கு விரோதமான வழியில் செல்பவர்களுடைய கர்வத்தைப் போக்குபவர் -ஸ்ரீ சங்கரர் –

அசுரர்களின் அஹங்காரத்தை அழிப்பவர்-ஸ்ரீ சத்ய சந்தர்-

————————————————————

718-தர்ப்பத-
யாதவர்களுக்கு மதுபானம் முதலியவற்றால் மதத்தைக் கொடுத்தவர் -விரோதிகளை அழித்தும் வெல்ல முடியாத த்வாரகையை யுண்டாக்கியும்
சங்க பத்ம நிதிகள் பாரிஜாதமரம் -தேவர்களின் மண்டபமான ஸூ தர்மா ஆகியவற்றைக் கொண்டு வந்து கொடுத்தான்
யாதவர்களுக்கு கொடுத்தவர் –   ஸ்ரீ பராசர பட்டர் –

தர்ம மார்க்கத்தில் இருப்பவர்களுக்குப் பெரிய கர்வத்தை அளிப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

அயோக்யர்களுக்கு அஹங்காரத்தை உண்டு பண்ணுபவர் -கர்வமுள்ளவர்களை அழிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————-

719-அத்ருப்த –
அத்ருப்த -தாம் சிறிதும் கர்வம் அடையாதவர் -த்ருப்த-யசோதை நந்த கோபரால் சீராட்டப் பெற்று மகிழ்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஆத்மானந்த அனுபவத்தினால் எப்போதும் மகிழ்ந்து இருப்பவர் -த்ருப்த -என்ற பாடம் -ஸ்ரீ சங்கரர் –

செருக்குள்ளவர்   -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————-

720-துர்த்தர-
குழந்தை விளையாட்டுக்களிலும் குறும்பு செய்யும் பிள்ளையாக மதயானை போலேப் பெற்றோர்களால் அடக்க முடியாதவர் –
தீயவர்களால் பிடிக்க முடியாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

நிர்க்குணர் ஆகையால் த்யானம் முதலியவற்றால் மனத்தில் நிறுத்த முடியாதவர் ஆயினும் -பல பிறவிகளில் விடாமல் பாவனை செய்து
அவர் அருள் பெற்ற சிலராக் மட்டும் மிக்க சிரமத்தினால் மனத்தில் நிறுத்தக் கூடியவர் -ஸ்ரீ சங்கரர் –

சுமக்க முடியாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————–

721-அபராஜித –
பாரதப் போரில் பாண்டவர் வேறு சகாயம் இல்லாமல் இருந்தபோதும் தம் சகாயத்தால் துர்யோதனாதியர் நூற்றுவராலும்
வெல்லப் படாதபடி செய்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

காம க்ரோதங்கள் முதலிய உட் பகைகளாலும் அசுரர்கள் முதலிய வெளிப் பகைவர்களாலும் வெல்ல முடியாதவர் -ஸ்ரீ சங்கரர் –

பிறரால் தோற்கடிக்கப் படாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————

722-விஸ்வ மூர்த்தி –
எல்லாம் தமது உடலாக இருத்தலின் தம் உடல் தமக்கு அநிஷ்டம் செய்யாமையால்
பலவான்களும் துர்பலர்களை வெல்ல முடியாமல் செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

உலகமே தமக்கு உடலாக உள்ளவர் -ஸ்ரீ சங்கரர் –

வாயுதேவனைச் சரீரமாக யுடையவர் -அனைத்துமே தம் வடிவானவர் -எண்ணற்ற வடிவங்கள் உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————————

723-மஹா மூர்த்தி –
உலகங்கள் அனைத்தையும் தம் திரு மேனியில் யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர்

ஆதிசேஷன் மேல் சயனித்த பெரிய உருவமுடையவர் -ஸ்ரீ சங்கரர் –

மிகப் பெரிய ரூபத்தை யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————

724-தீப்த மூர்த்தி –
சிறந்த குணங்களால் விளங்கும் பொருள் அனைத்தும் தம் உடலாக யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஞான மயமாக ஒளிரும் ரூபமுள்ளவர் -தம் விருப்பத்தால் ஒளியுருக் கொண்டவர் -ஸ்ரீ சங்கரர் –

ஒளிரும் ரூபம் யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————–

725-அமூர்த்தி மான் –
உருவமற்ற மூல பிரகிருதி ஜீவாத்மா முதலியவற்றையும் தம் சொத்தாக இருப்பவர் –
இதற்கு முன்னும் பின்னும் பகவானுக்கு உருவம் யுண்டு என்பதாலும்
அமூர்த்தி மான் -மதுப் பொருள் அற்றதாகி விடக் கூடாதே என்பதாலும்
உருவமற்றவர் என்ற பொருள் கொள்ள முடியாது -ஸ்ரீ பராசர பட்டர் –

கர்மத்தினால் ஏற்பட்ட உருவம் இல்லாதவர் -ஸ்ரீ சங்கரர் –
பிராக்ருதமான உருவம் இல்லாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————

726-அநேக மூர்த்தி –
ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் வாஸூ தேவ சங்கர்ஷண பலராம பிரத்யும்ன அநிருத்தர்களாகப் பல வடிவுகள் கொண்டவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அவதாரங்களில் தம் விருப்பத்தினால் உலகுக்கு உபகாரமாகப் பல திரு மேனிகளைக் கொள்பவர் -ஸ்ரீ சங்கரர் –

பல அவதாரங்களில் அநேகம் ரூபங்களைக் கொண்டவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————

727-அவ்யக்த –
மனுஷ்யவதாரத்தால் தம் பெருமை மறைக்கப் பெற்றவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

இப்படிப் பட்டவர் என்று எவராலும் அறிய முடியாதவர் -ஸ்ரீ சங்கரர் –

தம் அருள் இன்றி அறிய முடியாதவர் -விசேஷமாகப் புலப்படாதவர் -தோஷங்களால் தெளிவாகாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————————

728-சத மூர்த்தி –
தன்னைக் காண விரும்பிய  அர்ஜூனனுக்கு தம் விஸ்வரூபம் காட்டியவர் -ஸ்ரீ பராசர பட்டர்

ஞான ரூபியாய் இருந்தும் மாயையினால் பல உருவங்களாகத் தொடருபவர் -ஸ்ரீ சங்கரர் –

நூற்றுக் கணக்கான வடிவங்களை  யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————————

729-சதா நந –
அர்ஜூனன் கூறியபடி அநேக முகங்களும் கண்களும் யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் —

பல உருவங்கள் உள்ள படியால் பல முகங்கள் யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

நூற்றுக் கணக்கான முகங்கள் யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————

730-ஏக –
இப்படிப்பட்ட மஹிமையினால் தமக்கு  ஒப்பாக ஒருவரும் இல்லாத ஒருவர் -அத்விதீயர் -என்றபடி -ஸ்ரீ பராசர பட்டர் –

உண்மையில் எந்தவித பேதமும் இல்லாமையினால் ஒருவரே சத்தியமாய் இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

ஒரே கர்த்தாவாக இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————-

731-நைக-
தமது விபூதிகளில் எல்லையற்றும் இருப்பவர் -இங்கு ஏகம் என்றது ப்ரஹ்மத்தைத் தவிர ஒன்றும் இல்லை என்றோ
அல்லது எல்லாம் அவனுடைய விகாரமே என்றோ சொல்வது அல்ல -ஸ்ரீ பராசர பட்டர் –

மாயையினால் பல ரூபங்களை யுடையவர் -ஸ்ரீ சங்கரர் –

பல ரூபங்கள் யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————-

732-ஸ-
ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் சிறுவர் முதல் யாவருக்கும் தம்மைப் பற்றிய ஞானத்தை உண்டாக்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சோமயாக ரூபியாக இருப்பவர் -ஸவ-என்று ஒரே திரு நாமம் -ஸ்ரீ சங்கரர் –

தமக்காக எல்லாம் யுன்டாக்கப் பெற்றவர் -ஜ்ஞானம் யுடையவர் -ஸவ-என்று ஒரே திரு நாமம் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————

733-வ –
எல்லாம் தம்மிடம் வசிக்கும்படி இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

———————————————————————

734-க-
அழுக்கான வற்றில் வசித்தாலும் பிரகாசிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சுகம் எனப் பொருள்படும் க என்ற சொல்லால் துதிக்கப் படுபவர் -ஸ்ரீ சங்கரர் –

பிரகாசம் யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————————-

735-கிம் –
தத்தம் விருப்பங்களை அடைவதற்கு யாவரும் தெரிந்து கொள்ள விரும்பும்படி இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

உயர்ந்த பயனாதலின் எது என்று விசாரிக்கப் படும் பிரமமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

புராணச் சொற்களைப் படைத்தவர் -அனைத்து வேதங்களின் விசாரத்துக்கும் விஷயமாக யுள்ளவர் -ஸ்ரீசத்ய சந்தர் –

——————————————————————————

736-யத் –
அடியவர்களைக் காப்பதற்கு முயல்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

யத் என்ற சொல்லால் கூறப்படும் ப்ரஹ்மமாக உள்ளவர் -ஸ்ரீ சங்கரர் –

எல்லாவற்றையும் அறிபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————————

737-தத் –
அடியவர்களுக்குத் தம்மைப் பற்றிய ஞானமும் பக்தியும் தருபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாவற்றையும் படைக்கும் ப்ரஹ்மம் -ஸ்ரீ சங்கரர் –

வேதங்களில் உள்ளவர் -குணங்கள் யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————–

738-பத மநுத்தமம் –
அடியவர்களால் அடையப்படும் மிக உயர்ந்த பயனாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

முமுஷூக்களால் அடையப்படும் மிக உயர்ந்த பயனாக இருப்பவர்-ஸ்ரீ சங்கரர் –

அடியவர்களால் அடையப் படும் மிக உயர்ந்த பயனாக இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————–

739-லோக பந்து –
வேறுபாடின்றி எல்லோருக்கும் அருள்வதால் உலகத்தவர் யாவருக்கும் விட முடியாத உறவாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

உலகம் எல்லாம் தம்மிடம் கட்டப் பட்டு இருக்கும்படி ஆதாரமாக இருப்பவர் –சிருஷ்டித்து தந்தை போன்றவர் –
நன்மை தீமைகளை உபதேசிக்க வேதங்கள் தர்ம சாஸ்திரங்கள் முதலியவற்றைக் கொடுத்தவர் -ஸ்ரீ சங்கரர் –

அனைத்து உலகிற்கும் பந்துவானவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————-

740-லோக நாத –
இந்த ஸ்வா பாவிக உறவால் உலகோர் அனைவருக்கும் ஸ்வாமியாய் இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

உலகங்களால் யாசிக்கப் படுபவர் – உலகங்களை பிரகாசிக்கச் செய்பவர் -ஆசீர்வதிப்பவர் -உலகங்களுக்கு ஈஸ்வரர் -ஸ்ரீ சங்கரர் –

அனைத்து உலகிற்கும் நாதரானவர் -அறிவின் வடிவமாக வேண்டப் படுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————

741-மாதவ –
உலகங்களுக்கு லஷ்மி தாயும் தாம் தந்தையுமான உறவாக இருப்பவர் -மது குலத்தில் பிறந்தவர் –
மௌனம் த்யானம் யோகம் ஆகியவற்றை உடையவர் மாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

யாதவ -மது -குலத்தில் பிறந்தவர் -ஸ்ரீ சங்கரர்-

மதுவின் புத்திரர் -சுகத்தைத் தருபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————————

742-பக்த வத்சல –
அடியவர்களைப் பெற்ற பரபரப்பில் மற்ற எல்லா வற்றையும் மறந்தவர் -தம்மை ஸ்வாமி – பந்துவாகவும் உணர்ந்து
பக்தி பண்ணுபவர்களின் சிறப்பு கூறப்படுகிறது – ஸ்ரீ பராசர பட்டர் –

பக்தர்களிடம் அன்பு யுடையவர் -ஸ்ரீ சங்கரர் –

பக்தர்களாகிய கன்றுகளைக் காப்பவர் -அன்பு யுடையவர் —
அன்னத்தை உடையவர்களான அந்தணர்கள் இடம் செல்பவர் ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————-

743-ஸூவர்ண வர்ண –
மாற்று ஏறின தங்கம்  போல் குற்றம் இன்றி விளங்கும் திவ்ய வர்ணம் உள்ளவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தங்கத்தின் நிறம் போன்ற நிறம் யுடையவர் -ஸ்ரீ சங்கரர் –

பொன் போன்ற நிறம் யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————-

744-ஹே மாங்க-
பொன் நிறமான சுத்த சத்வ மயமான அங்கத்தை யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பொன் போன்ற திருமேனி யுடையவர் -ஸ்ரீ சங்கரர் –

பொன் மயமான அங்கங்கள் உடையவர் -ஸ்ரீசத்ய சந்தர் –

——————————————————————-

745-வராங்க –
தேவகியின் பிரீதிக்காக மறைக்காமல் அவதரித்த உப நிஷத்தில் கூறப்பட்ட திவ்ய மங்கள  விக்ரஹத்தை  உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சிறந்த அழகிய அங்கங்கள் உடையவர் -ஸ்ரீ சங்கரர் –

வராங்க -உத்தமமான அங்கங்களை யுடையவர் -அவராங்க -ஸ்ரீ ரெங்கத்தை அடைந்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————–

746-சாந்த நாங்கதீ –
மகிழ்ச்சி அளிக்கும் தோள் வளை முதலிய திவ்ய ஆபரணங்களை மிகுதியாக அணிந்து இருப்பவர் –
திருமேனியே திரு ஆபரணம் -அழகிய வஸ்துக்கள் திவ்ய ஆபரணமாக இவரால் ஆகும் –
கேயூரம் முதலிய திவ்ய ஆபரணங்களைக் கொண்டவர் என்றுமாம் -ஸ்ரீ பராசர பட்டர் –

மகிழ்ச்சி தரும்  தோள்வளைகளை அணிந்தவர் -ஸ்ரீ சங்கரர் –

சந்தனத்துடன் கூடிய தோள் ஆபரங்களை யுடையவர் -சந்தனம் போன்ற பூஜைக்கு உரிய பொருள்கள் யுடையவர் –
வாலியின் மைந்தன் அங்கதனை பக்தனாக உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————

747-வீரஹா –
முலைப் பால் உண்ணும் சிறு பருவத்திலும் பூதனை சகடாசுரன் இரட்டை மருதமரங்கள் போன்ற அசுரர்களை
வேரோடு களைந்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தர்மத்தைக் காப்பாற்றும் பொருட்டு வீரர்களான அசுரர்களை அழிப்பவர்-ஸ்ரீ சங்கரர் –

வீரர்களை அழிப்பவர் -முக்ய பிராணன் அற்றவரை அழிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————————-

748-விஷம –
நல்லவர்க்கு நன்மையையும் தீயவருக்கு பயத்தையும் தருவதனால் வேற்றுமை உள்ளவர் -ஸ்ரீ பராசர பட்டர்

அனைவரையும் காட்டிலும் வேறுபட்டவர் ஆதலின் தமக்கு ஒப்பு இல்லாதவர் -ஸ்ரீ சங்கரர் –

சிவனால் அருந்தப்  பட்ட விஷத்தின் துன்பத்தையும் நாம ஸ்மரணத்தாலே போக்கியவர் -ஒப்பற்றவர் –
அவிஷம -என்ற பாடத்தில் பாரபஷம் இல்லாதவர் என்றுமாம் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————-

749-ஸூ ந்ய-
மனிதராக திரு வவதரித்த போதிலும் குற்றங்கள் ஏதும் இல்லாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எவ்வித விசேஷணமும் அற்றவர் ஆதலின் சூன்யம் போல் இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

பிரளய காலத்தில் எல்லாப் பொருள்களையும் இல்லாமல் செய்பவர் -தீயவர்களின் சுகத்தை அழிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

———————————————-

750-க்ருதாஸீ-
ஆயர் இல்லங்களில் உள்ள வெண்ணெய் நெய் இவற்றில் ஆசை உள்ளவர் –
தமது திருக் கல்யாண குணங்களாலே உலகை வாழ்விப்பவர் என்றுமாம் –ஸ்ரீ பராசர பட்டர் –

ஆசைகள் அற்றவர் -ஸ்ரீ சங்கரர் –

ஹவிஸ்ஸின் ரூபத்தில் உள்ள நெய்யில் ஆசை உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத்ரம் -651-700——மும்மத விளக்கம் —

April 23, 2015

கால நேமி நிஹா சௌரிச் ஸூ ரஸ் ஸூ ர ஜநேச்வர
த்ரிலோகாத்மா த்ரிலோகேச கேசவ கேசி கேசிஹா ஹரி –69
காம தேவ காம பால காமி காந்த க்ருதாகம
அநிர்தேச்யவபுர் விஷ்ணுர் வீரோ அனந்தோ தனஞ்சய –70
ப்ரஹ்மண்யோ ப்ரஹ்மக்ருத் ப்ரஹ்மா ப்ரஹ்ம ப்ரஹ்ம விவர்த்தன
ப்ரஹ்ம வித் ப்ராம்மணோ ப்ரஹ்மீ ப்ரஹ்மஜ்ஞோ ப்ராஹ்மண ப்ரிய–71
மஹாக்ரமோ மஹாகர்மா மஹா தேஜா மஹோரக
மஹாக்ரதுர் மஹாயஜ்வா மஹாயஜ்ஞோ மஹாஹவி–72
ஸ்தவ்யஸ் ஸ்தவ ப்ரியஸ் ஸ்தோத்ரம் ஸ்துதஸ் ஸ்தோதா ரணப்ரிய
பூர்ண பூரயிதா புண்ய புன்யகீர்த்தி ரநாமய –73-
மநோஜவஸ் தீர்த்தகரோ வஸூ ரேதா வஸூப்ரத
வ ஸூப்ரதோ வா ஸூதேவோ வஸூர் வஸூமநா ஹவி -74-

———————————————————-

புண்ய ஷேத்ரங்கள் —644-660—17 திரு நாமங்கள்
சக்திபரம் ————661-696—36 திரு நாமங்கள்
ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் -697-786—90 திரு நாமங்கள்

—————————————————–

651-ஸூர ஜநேச்வர –
அவரே -ஸூ க்ரீவன் அனுமான் முதலிய சூர ஜனங்களுக்கு ஈஸ்வரர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சூரர்களான இந்திரன் முதலியவர்களுக்கும் ஈஸ்வரர் -ஸ்ரீ சங்கரர் –

சூர குலத்தில் உதித்தவர் -மற்றும் தமக்கு ஒரு ஈஸ்வரன் இல்லாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————-

652-த்ரிலோகாத்மா –
மகத தேசத்தில் த்ரிலோக நாதன் என்று பிரசித்தமாக எழுந்து அருளி யுள்ளவர் –
பக்தர்களை அனுக்ரஹிக்க அடிக்கடி மூவுலகும் செல்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

மூன்று உலகங்களுக்கும் அந்தர்யாமியாக இருப்பவர் -மூ வுலகங்களும் தம்மைக் காட்டிலும் வேறு படாதவர் –ஸ்ரீ சங்கரர் –

மூ வுலகங்களுக்கும் உயிராக இருப்பவர் – -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————-

653-த்ரிலோகேச –
ப்ராக்ஜ்யோதிஷ புரத்தில் விஸ்வேஸ்வரன் என்ற திரு நாமத்துடன் எழுந்து அருளி யுள்ளவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

மூ வுலகங்களையும் தம் தம் கருமங்களில் ஈடுபடுத்துபவர் –ஸ்ரீ சங்கரர் –

மூ வுலகங்களுக்கும் ஈசன் – -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————–

654-கேசவ –
மதுரா நகரத்திலும் வாரணாசியிலும் கேசவன் என்னும் திருநாமத்துடன் எழுந்து அருளி இருப்பவன் -ஸ்ரீ பராசர பட்டர் –

க-என்று பிரமனுக்கு பெயர் எல்லாப் பிராணிகளுக்கும் ஈசன் நான் -நாங்கள் இருவரும் உமது அம்சத்தில் யுண்டானவர்கள்-
ஆகையால் நீர் கேசவன் என்ற பெயருடையவன் -சிவன் சொல்வதாக ஹரி வம்சம் சொல்லும் –
சூர்யன் முதலியவர்களுடைய கிரணங்களுக்கு உரியவர் – க -அ-ஈச -எனப்படும் பிரம்மா -விஷ்ணு -சிவ சக்திகள்
மூன்றுக்கும் இருப்பிடமானவர் –ஸ்ரீ சங்கரர் –

வெள்ளை மற்றும் கருப்பு முடிகளை பூமியில் ஸ்ரீ பலராமன் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணன் ரூபத்தில் வைத்துக் கொண்டு இருந்தவர் –
ஸ்ரீ கிருஷ்ண கேச ரூபத்தால் அசுரர்களை அழிப்பவர் – -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————–

655-கேசிஹா –
கேசி என்னும் அசுரனை அழித்தவர் -என்று வியாசரே கூறியபடி கேசியை அழித்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

கேசி என்னும் அசுரனைக் கொன்றவர் –ஸ்ரீ சங்கரர் –

திரௌபதியின் கூந்தலை இழுத்தவனான துச்சாசனனை-பீமனைக் கொண்டு அழித்தவர் –
கேசி என்னும் அசுரனை அழித்தவர் – -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————

656-ஹரி –
கோவர்த்தன மலையில் ஹரி என்னும் திரு நாமத்துடன் எழுந்து அருளி இருப்பவர் -வீடுகளில் யாகம் செய்து கொடுக்கப்படும்
ஹவிர்பாகத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன் -என் நிறமும் உயர்ந்த பச்சை நிறம் –
ஆகையால் நான் ஹரி என்று சொல்லப் படுகிறேன் -மஹா பாரதம் -ஸ்ரீ பராசர பட்டர் –

சம்சாரத்தை அதன் காரணத்தோடு போக்குபவர் –ஸ்ரீ சங்கரர் –

பாவங்களைப் போக்குபவர் – -ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————

657-காமதேவ-
எல்லோருக்கும் விரும்பியவற்றைக் கொடுப்பவராய் சங்கராலய ஷேத்ரத்தில் காமதேவன்
என்னும் பெயர் பூண்டு அப்சரஸ் ஸூக்களால் பூஜிக்கப் பட்டு விளங்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

நான்கு புருஷார்த்தங்களை விரும்புவர்களால் விரும்பப்படும் ஈஸ்வரர் –ஸ்ரீ சங்கரர் –

மன்மதனைப் போல் பிரகாசிப்பவர் – -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————

658-காமபால –
அவரே தாம் கொடுத்த பலன்களைக் காப்பாற்றுபவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

விரும்பியவர்களின் விருப்பங்களைக் காப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

பக்தர்களின் ஆசைகளைக் காப்பவர் -நான்முகனால் அல்லது வாயுவினால் அடையப்படுபவர் –
மற்றும் ஜனங்களைக் காப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————-

659-காமீ-
கொடுப்பதற்குக் குறைவற்ற பலன்கள் யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

விரும்பினவை எல்லாம் நிரம்பி இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்-

உலகைக் காத்தல் முதலியவற்றை விரும்புவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————–

660-காந்த –
யாவராலும் விரும்பத் தக்கவர் –அதனாலேயே அப்சரஸ் ஸூக்களால் அர்ச்சிக்கப் படுபவர் –
திருநாமங்களின் அர்த்தங்களைக் கொண்டு அந்தந்த ஷேத்ரங்களை ஊஹித்துக் கொள்ள வேண்டும் – ஸ்ரீ பராசர பட்டர் –

அழகான உடல் உள்ளவர் -த்விபரார்த்தத்தின் முடிவில் பிரமனுக்கும் முடிவைச் செய்பவர் -ஸ்ரீ சங்கரர்-

மனத்தைக் கவரும் அழகுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————-

661-க்ருதாகம –
இனி சக்தீசாவதாரம் -நிர்மல மனம் உள்ளவர்களுக்கு அநேக மந்த்ரங்கள் அடங்கிய
சாஸ்த்ரங்களை வெளியிட்டவர் — ஸ்ரீ பராசர பட்டர் –

சுருதி ஸ்ம்ருதி முதலிய சாஸ்த்ரங்களை வெளியிட்டவர் –ஸ்ரீ சங்கரர்-

புராணங்கள் முதலிய ஆகமங்களை யுண்டாக்கியவர்-கர்மங்களால் அடைய முடியாதவர் –
ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் யமள அர்ஜூன மரங்களை அழித்தவர்-
பாரிஜாத மரத்தை பூமிக்குக் கொணர்ந்த ஸ்ரீ சத்யபாமா தேவியை யுடையவன்–ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————

662-அநிர்தேச்யவபு-
அந்தந்த யுகங்களின் குணங்களை அபிவருத்தி செய்யும் பல ரூபங்களை யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

இன்னது இப்படிப்பட்டது என்று நிரூபிக்க முடியாத ரூபம் உள்ளவர் -ஸ்ரீசங்கரர் –

இப்படிப் பட்டது என்று வர்ணிக்க முடியாத திரு மேனி உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————–

663-விஷ்ணு –
ஸ்வரூபத்தினாலும் நடத்துவது முதலிய சக்தியினாலும் எல்லாவற்றையும் வியாபித்து இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லா வற்றையும் வியாபித்துள்ள மிக்க ஒளியையுடையவர் –ஸ்ரீசங்கரர் –

எங்கும் பரவியிருப்பவர் -எல்லையற்றவர் -என்றபடி -பலவகையாக விஷ்ணு சப்தம் விளக்கப் படும் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————–

664-வீர –
தமது கட்டளையை எதிர்பார்த்து இருக்கும் கதை சக்கரம் மூலமாக விரைவில் நல்லோர்களை துன்புறுத்தும்
துஷ்டர்களை அழிப்பவர்-வீரமுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

கதி படைப்பு ஒளி இருப்பிடம் போஜனம் இவற்றை உடையவர் -ஸ்ரீ சங்கரர் –

தம்முடைய நினைவுக்கு ஏற்றபடி சுகம் உடையவர் -அல்லது சாமர்த்தியம் உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————–

665-அநந்த-
தேசம் காலம் வஸ்து இவற்றால் அளவுபடாதவர் -எப்பொழுதும் எங்கும் எல்லா வழிகளிலும் செயல்படுபவர் –
வஸ்து பரிச்சேதம் இல்லாதவர் என்று வஸ்துவிற்கும் அவருக்கும் பேதம் இல்லை என்ற பொருளில் இல்லை -ஸ்ரீ பராசர பட்டர் –

தேசம் காலம் வஸ்து இவற்றால் அளவுபடாதவர் –குணங்களுக்கு எல்லை இல்லாதவர் –
ஆதலால் அனந்தர் அழிவில்லாதவர் -ஸ்ரீ விஷ்ணு பிராணம் -ஸ்ரீ சங்கரர் –

அழிவற்றவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————-

666-தனஞ்சய –
பொன் ரத்தினம் இவற்றையும் வெறுத்து பெறுவதற்கும் அனுபவிப்பதற்கும் மிக விரும்பத் தக்கவராக இருப்பவர் –
எல்லையற்ற குணம் செல்வம் யுடையவன் -ஸ்ரீ பராசர பட்டர் –

திக் விஜயம் செய்து பெரும் செல்வத்தை வென்ற அர்ஜூனனாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

செல்வத்தை வென்றவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————–

667-ப்ரஹ்மண்ய-
ப்ரஹ்மம் எனப்படும் சேதனங்களுக்கு இருப்பு சுகம் முதலிய எல்லாவற்றுக்கும் காரணமாக இருப்பவர் –
ப்ரஹ்மம் -பெரியன -எல்லாவற்றையும் அனுபவிக்கும் போக்தாவாகையால் சேதனங்களும் -அனுபவிக்கும் அசேதனங்களும் –
ப்ரஹ்மம் -எனப்பட்டன -ஸ்ரீ பராசர பட்டர் –

தவம் வேதம் சத்யம் ஞானம் ஆகிய இவற்றை அறிபவர் -ஸ்ரீ சங்கரர் –

பிரஹ்மண்ர்களுக்குப்  பிரியமானவர் -முக்தர்களின் மகிழ்ச்சியைப் பெருக்குபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————-

668-ப்ரஹ்மக்ருத் ப்ரஹ்மா-
பிரம்மாவும் எல்லா விதங்களாலும் தம்மால் நியமிக்கும்படி நடக்கும்படி செய்பவர் —
பிரக்ருதியினால் யுண்டாகும் மஹத் அஹங்காரம் உலகைப் படைப்பவர்- ஸ்ரீ பராசர பட்டர் –

ப்ரஹ்மக்ருத் -தவம் முதலியவற்றை ஏற்படுத்துபவர் -பிரம்மா -பிரமனாக உலகைப் படைப்பவர் –
இரண்டு திரு நாமங்கள் -ஸ்ரீ சங்கரர் –

ஆலோசனையுடன் கூடிய தவம் புரிபவர் -பக்தர்களைப் பெருக்குபவர் -இரண்டு திருநாமங்கள் —
அப்ரஹ்மக்ருத்-என்று பிரித்து -ஷத்ரியர்களை அழித்த பரசுராமர் –
நிரீச்வரவாதிகளை அழித்தவர் -என்றுமாம் -ஸ்ரீ சத்ய சந்தர்

———————————————————

669-ப்ரஹ்ம-
சேதனர்கள் எல்லாரையும் ஒப்புயர்வற்ற தமது திருக் கல்யாண குணங்களினால் மேன்மேலும் அபிவருத்தி செய்து தமது
ஸ்வரூபமும் குணங்களும் விபவங்களும் மேலும் அபிவ்ருத்தியாகி நிரம்பியிருப்பதும்
ஸ்வ தந்த்ரமானதும்  வேதாந்தங்களில் அறியப் படுவதுமாகிய பரப்ரஹ்மம் -ஸ்ரீ பராசார பட்டர் –

பெரிதாக இருப்பதாலும் பெருக்கச் செய்வதாலும் ப்ரஹ்மம் எனப்படுபவர் -ஸ்ரீ சங்கரர் –

அனைத்தும் பூரணமாக நிறைந்தவர் -நிறைப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

———————————————————-

670-ப்ரஹ்ம விவர்த்தன –
தவம் முதலிய தர்மங்களை வளர்ப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தவம் முதலியவற்றை விருத்தி செய்பவர் -ஸ்ரீ சங்கரர் –

வியாச ரூபத்தினால் வேதத்தைப் பெருக்கியவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————–

671-ப்ரஹ்மவித்-
முடிவில்லாத வேதங்களின் முடிவை அறிந்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

வேதத்தையும் அதன் பொருளையும் உள்ளபடி அறிந்தவர் -ஸ்ரீ சங்கரர் –

வேதங்களை அறிந்தவர் -தம் ஸ்வரூபத்தை அறிந்தவர் -ஸ்ரீ கீதையில் ப்ரஹ்ம சப்தம் ஸ்ரீ லஷ்மியை குறிப்பதால்
ஸ்ரீ லஷ்மியை அடைந்தவர் என்றுமாம் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————

672-ப்ரஹ்மண-
வேதார்த்தத்தை நிலை நாட்டுவதற்காக பிராம்மண குலத்தில் தத்தாத்ரேயராக திருவவதரித்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பிராம்மண ரூபியாக   உலகு அனைத்திற்கும் வேதத்தை இறைவசனம் செய்வித்தவர் -ஸ்ரீ சங்கரர் –

வேதங்களால் அறியப் பெறுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————-

673-ப்ரஹ்மீ-
ப்ரஹ்மம் எனப்படும் பிரமாண பிரமேயங்கள் அனைத்தையும் யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

ப்ரஹ்மம் என்று கூறப்பட்டவைகளை தமக்கு உட் பட்டவையாக யுடையவர் – -ஸ்ரீ சங்கரர் –

ஜீவர்களை யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————–

674-ப்ரஹ்மஜ்ஞ-
வேதங்களை அவற்றின் உட்பொருளுடன் அறிபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

வேதங்களைத் தம் ஸ்வரூபமாக அறிந்தவர் -ஸ்ரீ சங்கரர் –

அறிவாளியான பிரம்மாவாக இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————-

675-ப்ரஹ்மண ப்ரிய –
வேத அதிகாரிகளான ப்ராஹ்மணர்களைத் தமக்கு அன்பர்களாக யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பிராஹ்மணர்களுக்குப் பிரியமானவர் -ப்ராஹ்மணர்களிடம் பிரியம் யுள்ளவர் -ஸ்ரீ சங்கரர் –

பிரஹ்மத்தை அறிந்த ஞானிகளுக்குப் பிரியமானவர் -முக்தர்களுக்கு பிரியமானவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————-

676-மஹாக்ரம-
மிக்க ஆழமான உலக வாழ்க்கை என்னும் பாதாளத்தில் அமிழ்ந்து கிடக்கும் சேதனர் மிக உயர்ந்தவரான தம்மிடத்தில்
சேர்வதற்குப் பற்பல படிகளை யுடையவர் –
தாய் முலையூட்டி பால் புகட்டி உகவு கொடுப்பது போலே விலக்காமை-முதலில் யுண்டாக்கி
தம்மை நோக்கி பின்பற்றி ஞானம் பக்தி வைராக்கியம் மன யுறுதி கொண்டு உயர்த்துபவர் –  ஸ்ரீ பராசர பட்டர் –

மிகப் பெரிய காலடிகளை யுடையவர்-ஸ்ரீ சங்கரர் –

அக்னிமீளே -போன்ற வேத க்ரமத்தைத் தம் புத்தியில் யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————————

679-மஹோரக-
தாம் மிகப் பெரியவராக இருந்தும் மிக்க அற்பர்களுக்கு அந்தர்யாமியாக இதயத்தினுள் பிரவேசித்து இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

மகா சர்ப்பமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

ஆதிசேஷன் காளியன் முதலிய பாம்புகளை தமக்கு அடியவர்களாக யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————–

680-மஹாக்ரது-
சிறந்த எளிய ஆராதனங்களை யுடையவர் -எல்லா செயல்களும் அவனுக்கே அர்ப்பணம் என்பதால்
அனைத்தும் இனிய சுவை யுள்ளன என்பதால் ஆராதனைக்கு எளியவன் -ஸ்ரீ பராசர பட்டர் –

சிறந்த க்ரதுவாக -அஸ்வமேத யாகமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

சிறந்த ஞான ரூபமான க்ரதுவாக இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் —

—————————————————————————–

681-மஹா யஜ்வா
பிற தேவதைகளைப் பூஜிப்பவர்களைக் காட்டிலும் தம்மைப் பூஜிப்பவர்கள் சிறந்தவர்களாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

யாகமுரையை உலகிற்கு அறிவிப்பதற்காக சிறந்த யாகம் செய்பவராக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

பிரம்மா முதலியவர்களால் தம்மைக் குறித்து யாகம் செய்யப் படுபவர் -ஸ்ரீ சத்யா சந்தர் –

——————————————————————————–

682-மஹா யஜ்ஞ-
தம்மை ஆராதிப்பது அஷ்டாங்க பூஜை முதலியவற்றைக் காட்டிலும் மேம்பட்டதாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சிரஞ்ச ஜப யஜ்ஞ்மாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

அஸ்வ மேதம் முதலிய சிறந்த யஜ்ஞங்கள் தம்மைக் குறித்துச் செய்யப்படுபவர் —
மஹா -அயஜ்ஞ-சுபத்தை உண்டு பண்ணும் விதியைத் தெரிந்த மஹான்-என்றும்
அமஹா-அயஜ்ஞ –  என்ற பாடத்தில் நோய்களை அளிக்கக் கூடியவர் மற்றும்
சுபத்தை உண்டு பண்ணும் விதியைத் தெரிந்தவர் –  ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————

683-மஹா ஹவி –
ஹிம்சை யற்ற சாத்விக உபநிஷத்துக்களை ஹவிஸ்ஸாக யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தம்மிடம் ஹோமம் செய்யப்பட உலகம் என்னும் பெரிய ஹவிஸ்ஸாக இருப்பவர் —
மஹா க்ரதுக்கள் -680-மஹா யஜ்வாக்கள் -681-மஹா யஜ்ஞங்கள் -682-மஹா ஹவிச்சூக்கள் -683- ஆகியவற்றால்
ஆராதிக்கப் படுபவர் என்று பஹூவ்ரீஹி சமாசத்திலும் அன்மொழித் தொகையிலும் பொருள் கொள்ளலாம் -ஸ்ரீ சங்கரர் –

உத்சவங்களில் கருடனை வாகனமாக கொண்டு இருப்பவர் -சிறந்த ஹவிஸ்ஸாக இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————————-

684-ஸ்தவ்ய-
வாக்கினால் துதி -துதிக்கப் படுவதிற்கு உரியவராக இருப்பவர் -பகவான் ஒருவரே- மங்களம் -நித்யம் –
எல்லையற்ற -தோஷங்கள் அற்ற -கல்யாண குணங்களை யுடையவர்
ஆகையால் அவர் ஒருவரே ஆயிரம் திரு நாமங்களால் துதிக்கப் பட உரியவர் –
பிற தெய்வங்கள் எதிர் தட்டு -ஆகையால் துதிக்க உரியர் அல்லர் – ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லோராலும் துதிக்கப் பட்டு யாரையும் தாம் துதிக்காதவர் -ஸ்ரீ சங்கரர் –

துதிக்கப் படுவதற்கு உரியவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

—————————————————————————

685-ஸ்தவப்ரிய-
எவராலும் எந்த மொழியாலும் எவ்வகையாலும் செய்யப்படும் துதிகளை சொற் பிழை பொருட் பிழை இருந்தாலும்
அன்புடன் அங்கீ கரிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அதனாலேயே துதியில் விருப்பமுள்ளவர் -ஸ்ரீ சங்கரர் –

ஸ்துதியில் விருப்பம் உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————

686-ஸ்தோத்ரம் –
தம்மைத் துதிப்பதும் தம் அனுக்ரஹத்தாலேயே ஆகையினால் தாமே ஸ்தோத்ரமாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

குண சங்கீர்த்தனமான ஸ்தோத்ரமும் தானேயாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

துதிக்கப் படுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————————

687-ஸ்துத-
அநந்தன்-கருடன் முதலிய நித்ய சூரிகளாலும் பிரமன் முதலிய தேவர்களாலும் நம் போன்ற மனிதர்களாலும்
அவரவர் தங்கள் விருப்பம் நிறைவேற எப்போதும் துதிக்கப் பெறுபவர் -ஸ்ரீ பராசர  பட்டர் –

ஸ்துதி -துதிக்கும் செய்கையும் தாமேயாக இருப்பவர் -ஸ்துத -என்ற பாடத்தில் துதிக்குத் தாமே விஷயமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

ஜீவன் செய்யும் ஸ்தோத்ரத்திற்கு கட்டளை இடுபவர் -ஸ்துதி -என்று பாதாம் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————————–

688-ஸ்தோதா-
தம்மைத் துதிப்பவரை தாம் துதிக்கும் தன்மை உள்ளவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லோருக்கும் ஆத்மா ஆகையால் துதிப்பவரும் தாமேயாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

ஸ்தோத்ரத்தை செய்விப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————————————-

689-ரணப்ரிய –
ஸ்ரீ மத் ராமாயணம் மஹா பாரதம் முதலியவற்றால் கூறியபடி தம் அன்பர்களுக்காக யுத்தம் முதலியன செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

உலகைக் காப்பதற்காக பஞ்ச ஆயுதங்களை தரிப்பதால் யுத்தத்தில் விருப்பம் யுள்ளவர் -ஸ்ரீ சங்கரர் –

யுத்தத்தில் விருப்பம் யுள்ளவர் -வேதாத்மகமான சப்தங்களில் பிரியம் உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————-

690-பூர்ண –
அதிகப் பொருளினாலும் உடல் சிரமத்தினாலும் செய்யப்படும் ஆராதனங்கள் தேவைப்படாமல்
ஸ்தோத்ரத்தினாலேயே வசப்ப்படும்படி எல்லாம் நிரம்பி இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாப் பலன்களும் எல்லா சக்திகளும் நிறைந்தவர் -ஸ்ரீ சங்கரர் –

குணங்களால் நிறைந்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————

691-பூரயிதா –
தாம் பூர்ணராயின் துதிகளை எதிர்பார்ப்பது ஏன் என்னில் தம்மைத் துதிக்க வேண்டும் என்று விரும்பும் அடியவர்களின்
விருப்பத்தை நிறைவேற்றுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் —

எல்லாம் நிறைந்தவராக இருப்பதோடு அல்லாமல் பக்தர்களுக்காக எல்லா செல்வங்களையும் நிறைப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

அவரவர் தகுதிக்குத் தகுந்தவாறு பூர்த்தி செய்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————

692-புண்ய –
பாவிகளும் தம்மைத் துதிப்பதற்கு உரியவராகும்படி பாவங்களைப் போக்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தம்மை நினைத்த மாத்ரத்திலே பாவங்களைப் போக்குபவர் -ஸ்ரீ சங்கரர் –

புனிதமாக ஆக்குபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————–

693-புண்ய கீர்த்தி –
தமது திரு நாம சங்கீர்த்தனம் செய்பவருடைய பாவங்களைப் போக்குபவர் –
இதனாலே அவரைப் பற்றிய ஸூக்தங்கள் பாவனமானவை என்று வேதம் புகழும்  -ஸ்ரீ பராசர பட்டர் –

மனிதர்களுக்குப் புண்ணியம் தரும் புகழ் உள்ளவர் -ஸ்ரீ சங்கரர் –

புண்ணியத்தை உண்டாக்கும் புகழ் உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————–

694-அநாமய –
தன்னோடு தொடர்பு உடையவர்களுக்கு சம்சாரம் ஆகிய பெரும் பிணியைப் போக்குபவர் –
பகவத் அனுபவத் தடை என்பதால் உலக வாழ்க்கை வியாதி அன்றோ -ஸ்ரீ பராசர பட்டர் –

கர்மங்களினால் உண்டாகும் மன நோய்களினாலும் வெளி நோய்களாலும் பீடிக்கப் படாதவர் -ஸ்ரீ சங்கரர் –

நோயற்றவர் -முக்கியப் பிராணனால் அடைய முடிந்தததை கிடைக்கச் செய்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————————-

695-மநோஜவ-
மேற் சொல்லியவற்றை விரைவாகச் செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எங்கும் பரவியிருப்பதால் மனத்தின் வேகத்தை ஒத்த வேகமுடையவர் -ஸ்ரீ சங்கரர்-

மனத்திற்கு வேகத்தை அளிப்பவர் -ஸ்ரீ சத்ய சங்கரர் –

——————————————————————————

696-தீர்த்தகர –
தம்மைப் போலவே நினைப்பது சொல்வது முதலிய செய்தவுடன் எல்லாப் பாவங்களையும் போக்கும்
கங்கை புஷ்கரம் முதலிய தீர்த்தங்களை உண்டாக்கியவர் -சுருதி ஸ்ம்ருதி முதலிய சத் சம்ப்ரதாயங்களை ஏற்படுத்தியவர் –
கடல் போலே இறங்க முடியாத தம்மிடம் பக்தர்கள் இறங்கும்படி படிகளை ஏற்படுத்தியவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பதினான்கு வித்யைகளையும் -அசுரர்களை  வஞ்சிக்க வேதத்திற்கு புறம்பான வித்யைகளையும் உண்டாக்கி வெளியிட்டவர் –
ஹயக்ரீவ ரூபியாக மது கைடவர்களைக் கொன்று பிரமனுக்கு உபதேசித்து -அசுரர்களை வஞ்சிக்க வேதத்திற்கு
புறம்பான மதங்களையும் உபதேசித்தவர் -ஸ்ரீ சங்கரர் –

சாஸ்த்ரங்களை கையில் யுடையவர் -சாஸ்த்ரங்களை படைப்பவர் –ஸ்ரீ சத்ய சங்கரர் –

———————————————————

697-வஸூ ரேதா-
ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் -தம் திவ்ய தேஜச்சையே திரு  அவதாரத்திற்குக் காரணமாக யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஸூ வர்ணமாகிய வீர்யத்தை யுடையவர் -ஸ்ரீ சங்கரர் –

தண்ணீரில் ஒளியை யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————-

698-வஸூ ப்ரத-
சிறந்த நிதியாகிய தம்மை தேவகிக்கும் வஸூ தேவருக்கும் கொடுத்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

செல்வத்தை மிகுதியாகக் கொடுப்பவர் -குபேரனுக்கும் செல்வம் கொடுப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

செல்வம் ரத்தினங்கள் இவற்றை பக்தர்களுக்கு மிகுதியாகக் கொடுப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————————–

699-வஸூ ப்ரத –
உலகிற்குத் தந்தை யாகிய தமக்கும் பெற்றோர்கள் ஆகும்படி பெரிய பெருமையை
தேவகி வஸூ தேவர்களுக்கு அளித்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பக்தர்களுக்கு உயார்ந்த பலனாகிய மோஷத்தை அளிப்பவர்
தேவர்களின் விரோதிகளான அசுரர்களின் செல்வங்களை அழிப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

அர்ஜூனனுக்காக வஸூ அவதாரம் ஆகிய பீஷ்மனை நன்கு அலஷ்யம் செய்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————————-

700-வாஸூ தேவ –
வஸூ தேவருக்குப் புத்திரர் –

வஸூ தேவருக்குப் புத்திரர் –

வஸூக்களில் சிறந்த பீஷ்மருக்குத் தலைவர் -தேவர்களால் -அல்லது ஞானம் முதலியவற்றால் பிரகாசிப்பவர் என்ற
பொருள் கொண்ட வஸூ தேவ சப்தத்தினால் சொல்லப்படும் ப்ரஹ்ம சரீரத்தினால் அறியப்படுபவர் –
ப்ரஹ்ம சரீரத்துக்கு ஆதாரமாக இருப்பவர் – -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத்ரம் -601-650——மும்மத விளக்கம் —

April 22, 2015

ஸூபாங்கஸ் சாந்திதஸ் ஸ்ரஷ்டா குமுத குவலேசய
கோஹிதோ கோபதிர் கோப்தா வ்ருஷபாஷோ வ்ருஷப்ரிய —63
அனுவர்த்தீ நிவ்ருத்தாத்மா சம்ஷேப்தா ஷேமக்ருச்சிவ
ஸ்ரீவத்சவ ஷாச் ஸ்ரீ வாசச் ஸ்ரீ பதிச் ஸ்ரீ மதாம் வர –64
ஸ்ரீதச் ஸ்ரீ சஸ்  ஸ்ரீ நிவாசஸ் ஸ்ரீ நிதிஸ் ஸ்ரீ விபாவன
ஸ்ரீ தரஸ் ஸ்ரீ கரஸ் ஸ்ரேயஸ் ஸ்ரீ மான் லோகத்ரயாஸ்ரய–65
ஸ்வ ஷஸ் ஸ்வங்கஸ் சதா நந்தோ நந்திர் ஜ்யோதிர் கணேஸ்வர
விஜிதாத்மா விதேயாத்மா சத்கீர்த்திஸ் சின்ன சம்சய –66
உதீர்ணஸ்   சர்வதஸ் சஷூர நீஸஸ் சாச்வத்தஸ் ஸ்திர
பூசயோ பூஷணோ பூதி ரசோகஸ் சோக நாசன–67
அர்ச்சிஷ் மா நர்ச்சித கும்போ விஸூத்தாத்மா விசோததந
அநிருத்தோ அப்ரதிரத பிரத்யும்னோ அமிதவிக்ரம–68
கால நேமி நிஹா சௌரிச் ஸூ ரஸ் ஸூ ர ஜநேச்வர
த்ரிலோகாத்மா த்ரிலோகேச கேசவ கேசி கேசிஹா ஹரி –69-

——————————————

வியாசர் ————576-607—-33 திரு நாமங்கள்
சுபத் தன்மை ——-608-625— 18 திரு நாமங்கள்
அர்ச்சாவதாரம் ——626-643—-18 திரு நாமங்கள்
புண்ய ஷேத்ரங்கள் –644-660—17 திரு நாமங்கள்

—————————————————————-

601-வ்ருஷ பாஷ-
தர்மத்தின் வழியாகவே கர்ம பலன்களைக் காப்பவர் –
தர்மத்தின் அச்சாணியாக இருந்து தர்மத்துக்கு ஏற்ப பலனை அளிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்-

விரும்பியவற்றைப் பொழியும் இரு திருக் கண்கள் யுடையவர் -தர்மத்தைக் கண்ணாக யுடையவர் -ஸ்ரீ சங்கரர் –

எருதின் கண்களைப் போல் இரு திருக் கண்கள் யுடையவர் -தர்மத்தால் பிரகாசிக்கும் நல்லோரிடம் அருள் கடாஷம் அளித்து
பக்தர்கள் வேண்டுபவற்றை பொழிபவர் -அழிவற்றவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————-

602-வ்ருஷ ப்ரிய –
ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி தர்மங்களில் அன்புடையவர் -அவனுக்கு இரண்டு தர்மங்களும் பிரியம் என்பதால்
தர்மங்கள் ஆகும் -விதிகளும் அவனுடைய பிரியத்தைத் தெரிவிப்பாவனவேயாகும்–ஸ்ரீ பராசர பட்டர்-

தர்மத்தில் பற்றுள்ளவர் -தர்மமாகவும் பிரியமானவராகவும் இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

தர்மத்தில் பற்று உள்ளவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————-

603-அநிவர்த்தீ –
பிரவ்ருத்தி தர்மத்தில் இருப்பவர்களை தூமாதி மார்க்கத்தினால் பித்ருலோகம் சேர்த்து மறுபடியும்
உலகில் பிறப்பதனால் உலகை விட்டு நீங்காமல் இருத்துபவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

தேவாசுர யுத்தங்களில் புறம் காட்டித் திரும்பாதவர் தர்மத்தில் உள்ள ப்ரீதி காரணமாக அதிலிருந்து விலகாதவர் –ஸ்ரீ சங்கரர் –

ஒரு போதும்  பின் வாங்காதவர் -முக்ய பிராணனின் அடியவர்களில் இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————–

604-நிவ்ருத்தாத்மா –
நிவ்ருத்தி மார்க்கத்தில் இருப்பவர்களுக்கு ஈஸ்வரர் –ஸ்ரீ பராசர பட்டர்-

விஷயங்களில் செல்லாத மனத்தை யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

பிரளயத்தில் ஜீவர்களை மோஷம் அடைவிப்பவர் -ஆத்மாவின் மனமானது எண்ண முடியாமல் பின் திரும்பும்படி
இருப்பவர் -மனத்தால் அளவிடமுடியாதவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————–

605-சம்ஷேப்தா –
பிரவ்ருத்தி தர்மத்தில் இருப்பவர்களுடைய இயற்கையான ஞானத்தைக் குறுகும்படி செய்பவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

பரந்த உலகை பிரளய காலத்தில் ஸூ ஷ்ம ரூபமாகக் குறுக்குபவர்–ஸ்ரீ சங்கரர் –

நன்கு காப்பவர் -கால் கட்டை விரலால் துந்துபியின் உடலை வெகுதூரம் தூக்கி எறிந்தவர் –
சிருஷ்டியில் விரிவாக்கிய ஜகத்தை பிரளயத்தில் சுருக்குபவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————

606-ஷேமக்ருத் –
நிவ்ருத்தி தர்மத்தில் இருப்பவர்களுக்கு ஞானம் சுருங்காமல் விரிவாகும்படி ஷேமத்தைச் செய்பவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

தம்மால் ஏற்கப் பட்டவர்களுக்கு ஷேமத்தைச் செய்பவர் –ஸ்ரீ சங்கரர் –

ஷேமத்தைச் செய்பவர் -அஷேமக்ருத் -என்ற பாடத்தில்   ஷேமம் இன்மையை அழிப்பவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————

607-சிவ-
இப்படி எல்லா முமுஷூக்களுக்கும் புபுஷூக்களுக்கும் அவரவர்க்கு உரிய நன்மைகள் செய்பவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

தம்முடைய நாமத்தை நினைத்த மாத்திரத்தில் பாவத்தைப் போக்குபவர் –ஸ்ரீ சங்கரர் –

சுகமே வடிவானவர் -மங்களத் தன்மை உள்ளவர் -முக்தர்களைப் போஷிப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————

608-ஸ்ரீ வத்ஸ வஷா-
தம்மால் நியமிக்கப் படுபவைகள் இடமிருந்து தம்மை   வேறு படுத்திக் காட்டும் –
திருமகள் கேள்வன் -அடையாளமான ஸ்ரீ வத்சம்-மார்பில் யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

தமது மார்பில் ஸ்ரீ வத்சம் என்னும் சின்னத்தை யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

மஹத்வ லஷணமான திருமகளுடன் கூடிய வெள்ளை நிறத்தின் சுருள் முடி மச்சத்தை யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————-

609-ஸ்ரீ வாஸ-
திருமகள் எப்போதும் விரும்பி விளையாடுவதற்கு உரிய கற்பக வனமாக விளங்குபவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

திரு மார்பில் திருமகள் அகலாமல் வசிக்கப் பெற்றவர் –ஸ்ரீ சங்கரர் –

திருமகள் வசிக்கப் பெற்றவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————

610-ஸ்ரீபதி –
திருமகள் தனக்குத் தகுந்த கணவர் என்று ஸ்வயம் வரம் செய்யும் பதியாக இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

அமுதம் கடைந்த போது தேவாசுரர்களை ஒதுக்கி லஷ்மியால் வரிக்கப் பட்டவர் –ஸ்ரீ சங்கரர் –

திருமகள் கேள்வர் -உயர்ந்த சக்தியான ஸ்ரீ லஷ்மி தேவிக்கு பதி–ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————-

611-ஸ்ரீ மதாம் வர –
திரு மகளின் சிறிது கடாஷம் பெற்ற பிரமன் முதலிய மற்ற தேவர்கள் போல் அன்றி
அவளுடைய பூர்ண கடாஷம் பெற்றவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

ருக் யஜூஸ் சாமம் -என்னும் செல்வம் பொருந்திய பிரம்மாதிகளிலும் முதன்மையானவர் –ஸ்ரீ சங்கரர் –

ஸ்ரீ சரஸ்வதி தேவி போன்றவர்களைப் பெற்ற பிரமன் முதலானவர்களைக் காட்டிலும் மேன்மை
யுள்ளவர் -திருமகளுக்கு விருப்பமான ஆகாசத்திற்கும் ஆதாரமாக யுள்ளவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————–

612-ஸ்ரீத-
எப்போதும் புதிதாகத் தோன்றும் காரணம் அற்ற அன்பை ஸ்ரீக்கு அளிப்பவர்-அவளுடைய  உயிராக இருப்பவர் –
அவரை ஆஸ்ரயித்ததால் அன்றோ ஸ்ரீ எனப்படுகிறாள் –ஸ்ரீ பராசர பட்டர்-

பக்தர்களுக்கு செல்வத்தைக் கொடுப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

செல்வத்தைத் தருபவர் -ருக்மிணிக்கு பிரத்யும்னனைப் பிள்ளையாகத் தந்தவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————–

613-ஸ்ரீச-
ஸ்ரீ க்கும் அவ்வளவு பெருமைகள் வந்ததற்குக் காரணமானவர் –
எல்லா நிலைகளிலும் ஸ்ரீ யை தமக்கு ஈஸ்வரியாக வைப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

திரு மகளுக்கு நாயகர் –ஸ்ரீ சங்கரர் –

திருமகளுக்கு சுகத்தைக் கொடுப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————–

614-ஸ்ரீ நிவாச –
கொடிக்குக் கற்பக மரம் போலே பிராட்டிக்குக் கொழு கொம்பாக இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

செல்வம் யுடையவர்களிடம் நித்யமாக வசிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

திரு மகளுக்கு அந்தர்யாமியாக வசிப்பவர் -லஷ்மியை நடத்துபவர் –
ஜீவன்கள் தம்மிடம் வசிக்கும்படி இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————-

615-ஸ்ரீ நிதி –
ரத்னத்திற்குப் பேழை போலே பிராட்டி தங்கும் இடமாக இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

எல்லா சக்திகளும் வைக்கப்படும் இடமாய் இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

அனைத்து ஒளிகளுக்கும் புகலிடமாக இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————

616-ஸ்ரீ விபாவன-
பிராட்டியாலேயே தமக்குப் புகழும் மகிமையும் யுண்டாக்கப் பட்டு இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

எல்லாப் பிராணிகளுக்கும் பல செல்வங்கள் அளிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

ஸ்ரீ லஷ்மியின் எண்ணங்களை விசேஷமாகத் தூண்டுபவர் -சிறந்த பிரகாசத்தை யுடைய சீதையுடன் ரமித்தவர் –
செல்வத்தைப் பலவகைகளால் வளர்ப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————

617-ஸ்ரீ தர –
மணிக்கு ஒளி போலேவும் மலருக்கு   மணம் போலவும் அமுததிற்குச் சுவை போலேவும் இயற்கையாக
உள்ள தொடர்பினால் தமக்கு லஷ்மியின் சேர்த்தியை யுடையவர்–ஸ்ரீ பராசர பட்டர்-

உலக மாதாவான ஸ்ரீ லஷ்மியைத் திரு மார்வில் தரிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

ஸ்ரீ தேவியைத் தரிப்பவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————–

618-ஸ்ரீ கர –
பரத்வத்தில் போல் வியூகத்திலும் அவதாரங்களிலும் தமக்கு ஏற்றபடி ஸ்ரீ லஷ்மியை திரு வவதரிக்கச் செய்பவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

தம்மை தியானித்து துதித்து அர்ச்சிக்கும் பக்தர்களுக்கு செல்வங்கள் அனைத்தையும் அளிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

ஸ்ரீ தேவியைத் தம் வசத்தில் யுடையவர் -செல்வத்தை அளிக்கும் திருக் கைகளை யுடையவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————-

619-ஸ்ரேய ஸ்ரீ மான் –
எல்லாப் பயன்களுக்காகவும் எல்லாராலும் பற்றப்படும் பிராட்டி தம்மிடம் எப்போதும் சேர்ந்து இருக்கப் பெற்றவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

ஸ்ரேய -நித்ய ஸூ கமான பிரம்மானந்த ரூபமாக இருப்பவர் –
ஸ்ரீமான் -எல்லாச் சிறப்புக்களும் தம்மிடம் பொருந்தி இருக்கப் பெற்றவர் -இரண்டு திரு நாமங்கள் –ஸ்ரீ சங்கரர் –
ஸ்ரேய -மிகவும் உயர்ந்தவர் -ஸ்ரீ மான் -செல்வத்தை அளிப்பவர் -இரண்டு திரு நாமங்கள் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————

620-லோக த்ரய ஆஸ்ரய –
உலகத் தாயான பிராட்டியும் தாமுமாக தாய் தந்தை போல் எல்லா உலகிற்கும் ஆதரவாக இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

மூவுலகங்களுக்கும் ஆதாரமாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

உலகங்களைக் காப்பவராயும் ஸ்ரீ தேவிக்கு புகலிடமாயும் இருப்பவர் -மூ வுலகங்களுக்கும் புகலிடமாக இருப்பவர் –
லிங்க அநிருத்த ஸ்தூல தேகங்களில் அபிமானம் கொண்ட ஜீவர்களுக்குத் தஞ்சமாக இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————-

621-ஸ்வஷ-
அவள் வடிவு அழகு என்னும் அமுதக் கடலில் கரை கண்ட திருக் கண்கள் முதலிய திவ்ய இந்த்ரியங்கள் உள்ளவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

தாமரை போன்ற அழகிய இரு திருக் கண்களை யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

மங்களகரமான இந்த்ரியங்கள் யுள்ளவர் -அர்ஜூனனுக்கு தமது விஸ்வரூபம் காண திவ்ய சஷூஸ் கொடுத்தவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————-

622-ஸ்வங்க-
அவளாலும் ஆசைப் படத் தக்க திவ்யமான திருமேனி யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

மிகவும் அழகிய அங்கங்கள் யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

அழகிய அங்கங்கள் யுள்ளவர் -பக்தர்களைத் தம்மை அடையச் செய்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————–

623-சதா நந்த –
ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள அன்பின் மிகுதியால் அளவற்ற ஆனந்தம் யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

ஒரே ஆனந்தம் பல காரணங்களால் பல வகைகளாய்ப் பிரிந்து இருப்பதால் அநேக ஆனந்தம் யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

எல்லையற்ற ஆனந்தம் யுடையவர் -நான்முகனுக்கு ஆனந்தத்தை அளிப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————

624- நந்தி –
இவ்வாறு எல்லா இடங்களிலும் எல்லாக் காலங்களிலும் எல்லா வகைகளிலும் லஷ்மி நிறைந்து இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

பரமானந்த வடிவாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

ஆனந்தம் யுடையவர் -ஆனந்தத்தைத் தருபவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————

625-ஜ்யோதிர் கணேஸ்வர –
இருவர்க்கும் அனுகூலர்களும் ஒளியுருவம் உள்ளவர்களுமான ஆதிசேஷன் விஸ்வக்சேனர்
முதலியோர் எப்போதும் திருவடி பணிந்து தொண்டு செய்யப் பெற்றவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

சூரியன் முதலிய ஒளிப்   பொருள்கள் அனைத்திற்கும் தலைவராக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

சூரியன் முதலியவர்களுக்குத் தலைவர் -உண்டாக்கிய பூதங்கள் அனைத்திற்கும் காரணமானவர் –
பிரகாசம் யுடையவர் -தேவர்களுக்கும் தலைவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————

626-விஜிதாத்மா –
பிராட்டியும் விரும்பும் செல்வம் யுடையவராயினும் திருவடி பணிந்து இருப்பவர்களுக்கு தாழ்ந்து இருப்பவர் -பரத்வத்தில்
எல்லை இது வரை சொல்லி சௌலப்யத்தின் எல்லையாக ரஹச்யம் கூறப்படுகிறது –ஸ்ரீ பராசர பட்டர்-

மனத்தை அடக்கியவர்–ஸ்ரீ சங்கரர் –

ஜீவர்களின் மனத்தை வெல்பவர் -கருடனால் அடியைப் பெற்ற திரு மேனி யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————-

627-விதேயாத்மா –
அடியவர்கள் இங்கு வா இங்கு நில் இங்கு அமர் இங்கு உண் என்று கட்டளை இடுவதற்கு உரிய தன்மை யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

யாருக்கும் அடிமைப் படாத தன்மை யுள்ளவர் -அவிதேயாத்மா -என்று பாடம் –ஸ்ரீ சங்கரர் –

ஸ்நானம் தானம் முதலிய விதிகள் விஷயங்களில் மனமுள்ளவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————–

628-சத்கீர்த்தி –
இப்படிப் பட்ட சௌலப்யம் இருப்பதாலேயே உண்மைப் புகழுடையவர்–ஸ்ரீ பராசர பட்டர்-

உண்மையான புகழ் யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

உண்மையான புகழ் யுடையவர் -வாமன திருவவதாரத்தில் கீர்த்தி என்ற மனைவியைப் பெற்றவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————-

629-சின்ன சம்சய –
இந்த எளிமை பற்றிய புகழினாலேயே -இவரை அறியக் கூடுமோ கூடாதோ -வசப்படுவாரோ வசப்படாரோ –
ஸூ லபரா துர்லபரா-என்பவை முதலிய சந்தேஹங்களை அறுப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

எல்லாவற்றையும் உள்ளங்கை நெல்லிக்கனி போல் பார்ப்பவர் ஆதலால் சந்தேகம் அற்றவர் –ஸ்ரீ சங்கரர் –

எல்லா ஐயங்களையும் போக்குபவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————

630-உதீர்ண –
வெளிக் கண்ணாலும் காணும்படி வெளிப்படையாக திருவவதரிப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

எல்லாப் பிராணிகளுக்கும் மேலானவர் –ஸ்ரீ சங்கரர் –

பிரளய காலத்தில் ருத்ரனை சம்ஹரிப்பவர் -உயர்ந்தவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————-

631-சர்வதஸ் சஷூ –
நம்முடைய கண்களுக்குப் புலப்படுபவர் -ஐயம் அற்றபடி கூறுகிறது –
தெளிவாய் பிரத்யஷமான விஷயத்தில் சந்தேஹம் இல்லை அன்றோ –ஸ்ரீ பராசர பட்டர்-

தமது ஞானத்தினால் எல்லாவற்றையும் பார்ப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

முழுமையான கண்கள் யுடையவர் -எல்லா இடங்களிலும் கண்கள் உள்ளவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————-

632-அநிச-
ஸ்நானம் அலங்காரம் கோஷ்டி முதலிய எல்லாவற்றிலும் அடியவர்களுக்கு ஆட்பட்டு இருப்பதால்
சுதந்தரம் இல்லை –ஸ்ரீ பராசர பட்டர்-

தமக்கு மேல் ஈசன் இல்லாதவர்–ஸ்ரீ சங்கரர் –

தமக்கு ஈசன் இல்லாதவர் -பிராணிகளுக்கு ஈஸ்வரர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————-

633-சாஸ்வத ஸ்திர-
பலவிதமான அர்ச்சா ரூபங்களை எடுத்து அடியவர்கள் எக்காலமும் சேவிக்கும்படி இருப்பதால் எக்காலமும் நீங்காதவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

எல்லாக் காலங்களிலும் இருப்பவராயினும் எந்த வித மாறுதலும் இல்லாதவர் என்று ஒரே திரு நாமம் –ஸ்ரீ சங்கரர் –

எப்போதும் ஒரே நிலையில் இருப்பவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————

634-பூசய-
பக்தர்கள் அர்ச்சா விக்ரஹங்களில் எழுந்து அருளும்படி பிரார்த்திப்பதை ஏற்றுக் கொண்டு அவர்களால் காண்பிக்கப் பட்ட
ஸ்வயம் வ்யக்தம் சித்தம் மானுஷம் முதலிய திருத் தளங்களில் அவர்களை அனுக்ரஹிக்க சுகமாக எழுந்து அருளி இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

ஸ்ரீ ராமாவதாரத்தில் சேது பந்தனத்திற்காக கடல்கரையில் தர்ப்ப சயனத்தில் சயநித்தவர் –ஸ்ரீ சங்கரர் –

பூமியைக் கையிலே உள்ளவர் -பூ ரூபியான ஸ்ரீ லஷ்மியுடன் சயநிப்பவர் -பூமியில் சயனித்து இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————————

635-பூஷண-
இப்படி யாவர்க்கும் அனுகூலமான எளிமைக் குணத்தால் ஸ்ரீ யபதியான தம்மை அலங்கரிப்பவர் –
செல்வந்தர்களாக இருப்பவர்கள் ஏழைகளின் இல்லத்திற்கு விருந்தாளியாக வந்து அவர்கள் தரும் உணவை உண்டு
அவர்களோடு சமமாக இருத்தல் என்பது அவர்களுக்குப் பழி யாகாது -மாறாக புகழே யாகும் –ஸ்ரீ பராசர பட்டர்-

தம் இச்சையினால் மேற்கொள்ளும் அவதாரங்களில் பூமியை அலங்கரிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

அலங்கரிப்பவர் -பூரணமான செயல்களையும் ஆனந்தத்தையும் யுடையவர் -ஆபரணங்களை   யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————-

636-பூதி –
வெளி உபாயங்கள் ஆகிய செல்வம் உள் உபாயங்கள் ஆகிய பக்தி இவை இல்லாதவர்களுக்கு அவற்றை நிரப்பும் செல்வமாக  இருப்பவர் –
அவர்களுக்கு பிள்ளை கறவைப் பசு நண்பர்கள் போன்ற செல்வமாக இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

இருப்பு அல்லது செல்வமாக இருப்பவர் -எல்லாச் செல்வங்களுக்கும் காரணம் ஆனவர் –ஸ்ரீ சங்கரர் –

ஐஸ்வர்ய ரூபமாக இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————–

637-அசோக -விசோக-
நாதன் அற்றவன் எவனையும் காப்பாற்றாது விடாமையினால் அவன் விஷயமாகப் பின்னர் சோகப் படாதவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

ஆனந்த ரூபி யாதலின் சோகம் இல்லாதவர் -விசோக என்பது பாதாம் –ஸ்ரீ சங்கரர் –

சோகம் இல்லாதவர் -விசோக -என்பது பாடம் –
அசோக -விசேஷமான சுகமுள்ள ஸ்ரீ வைகுண்டம் முதலியவற்றை இருப்பிடமாக யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————-

638-சோக நாசன –
அவர்களுக்குத் தம் சம்பந்தம் இல்லாமையால் வரும் துன்பத்தைப் போக்குபவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

தம்மை நினைத்தவுடன் பக்தர்களின் துன்பத்தைப் போக்குபவர் –ஸ்ரீ சங்கரர் –

துன்பங்கள் அழியப் பெற்ற முக்தர்களை நடத்துபவர் -சோகத்தை அழிப்பவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————————

639-அர்ச்சிஷ்மான் –
பக்தர்களுக்கு மறைந்து இருக்கும் தம் பெருமையை அறியும்படி அவர்கள் உட் கண்களையும்  வெளிக் கண்களையும்
திறக்கும் திறமை உள்ள பேரொளி யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

ஒளியுள்ள சந்திர சூரியர்களுக்கும் ஒளி கொடுக்கும் சிறந்த ஒளி யுள்ளவர் –ஸ்ரீ சங்கரர் –

ஒளிக் கதிர்கள் யுள்ளவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————-

640-அர்ச்சித-
எக்காலமும் எல்லாப் புண்ய ஷேத்ரங்களிலும் உள்ள கோவில்களிலும் வீடுகளிலும் பக்தர்கள் கண்ணால் கண்டு பூஜிப்பதற்கு எளிய
அர்ச்ச்சாவதாரம் செய்து இருப்பவர் -பரத்வம் போலே தூர தேசம் இல்லை -விபவம் போலே காலாந்தரம் இல்லை -பாஞ்சராத்ரம்
போதாயன  ஸ்ம்ருதி ஸ்ரீ வைஷ்ணவ புராணம் முதலியவற்றால் அர்ச்சாவதார தத்வ ரகச்யம் அறியப் பட வேண்டியதாகும் –ஸ்ரீ பராசர பட்டர்-

எல்லோராலும் பூஜிக்கப் படும் பிரம்மா முதலான தேவர்களாலும் பூஜிக்கப் படுபவர் –ஸ்ரீ சங்கரர் –

பிரம்மா முதலானவர்களால் அர்ச்சிக்கப் படுபவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————

641-கும்ப –
அவரவர் கண்ணால் கண்டு பழகிய உருவங்களுக்கு ஒப்பான வடிவழகு முதலியவற்றால் பக்தர்களால் விரும்பப் படுபவர் –
கு -எனப்படும் பூமியாகிய ஷேத்ரங்கள் கோயில்கள் முதலியவற்றில் த்யானம் ஆராதனம் முதலியவற்றுக்கு விஷயமாகும்படி பிரகாசிப்பவர் –
பிறப்பு இறப்புகளினால் சம்பந்தம் உள்ள பூமியில் யமபடர்களால் ஏற்படும் பயன்களைப் போக்கும் மகா பிரபாவத்துடன் பிரகாசிப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

உடலை விட்டவர்களுக்கு அவர்களுடைய புன்யங்களுக்கு ஏற்ப பகவானுக்குக் கைங்கர்யம் செய்வதால் அல்லது
புண்ணியப் பிறவிகளில் பிறப்பதனால் பகவானை அடைவது தெரிவிக்கப் படுகிறது –ஸ்ரீ சங்கரர் –

குடம் போலே எல்லாம் தம்மிடத்தில் வைக்கப் பட்டவர் -ஆதாரமாக இருப்பவர் –
பூமியைப் பிரகாசமாக விளங்கும்படி செய்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————————

642-விஸூத்தாத்மா-
தமது வைபவத்தை எல்லாம் பக்தர்களுக்கே வழங்கி இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

முக் குணங்களையும் கடந்த பரிசுத்த ஸ்வரூபம் யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

தெளிவான தன்மை யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————–

643-விசோதன-
திவ்ய ஷேத்ரங்களில் உடலை விட்டவர்கள் தம்மை அடைவதற்குத் தகுதி உடையவர்களாகும் படி பரிசுத்தராக ஆக்குபவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

தம்மை நினைத்த மாத்திரத்தில் பாவங்களைப் போக்குபவர் –ஸ்ரீ சங்கரர் –

வேதங்களை விசேஷமாகச் சோதிப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————-

644-அநிருத்த-
ஜனார்த்தனர் என்னும் பெயருடன் பூமியில் வஸூ பாண்டம் என்னும் ஷேத்ரத்தில் அநிருத்தர் நித்யமாக இருக்கிறார் என்றபடி
அநிருத்தராக இருப்பவர் -பிறகு சில ஷேத்ரங்களில் முன் சொன்ன வ்யூஹ அவதாரங்களிலும் விபவ அவதாரங்களிலும்
சில இருப்பதைக் கூறுகிறது –ஸ்ரீ பராசர பட்டர்-

வ்யூஹங்களில் நான்காமவரான அநிருத்தர் –ஸ்ரீ சங்கரர் –

தடையற்றவர் -சம்சாரத்தில் இருந்து விடுபட்டவர்களை-முக்தர்களை தரிப்பவர் -போஷிப்பவர் –
தள்ளப்படாதராதலால் உத் என்னும் பெயர் யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————————-

645-அப்ரதிரத –
ஜனார்த்தனர் என்னும் பெயருக்குத் தக்கபடி விரோதிகளை அழிப்பதில் தடுப்பவர் யாரும் இல்லாதவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

எதிரிகள் எவரும் இல்லாதவர் –ஸ்ரீ சங்கரர் –

எதிரிகள் அற்றவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————–

646-பிரத்யும்ன –
சிறந்த ஆத்ம ப்ரகாசம் உள்ளவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

பிரத்யும்னன் என்னும் வ்யூஹமாக இருப்பவர் -சிறந்த செல்வம் உள்ளவர்–ஸ்ரீ சங்கரர் –

உயர்ந்த புகழ் யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————-

647-அமித விக்ரம-
த்ரிவிக்ரம திரு வவதாரத்தில் மூவுலகங்களிலும் அமது திருவடிப் பதிப்பு அடங்காதவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

அளவற்ற மகிமை யுடையவர் -யாராலும் பீடிக்கப் படாத பராக்கிரமம் உள்ளவர் –ஸ்ரீ சங்கரர் –

எல்லையற்ற வீரம் யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————

648-கால நேமி நிஷா –
கலியின் கொடுமையை அழிப்பதற்காக திவ்ய ஷேத்ரங்களில் இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

கால நேமி என்னும் அசுரனை அழித்தவர் –ஸ்ரீ சங்கரர் –

காலநேமியை அழித்தவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————-

649-சௌரி-
உத்பால வர்த்தகம் -திருக் கண்ணபுரம் -என்னும் ஸ்தலத்தில் சௌரி என்னும் திரு நாமத்துடன் எழுந்து அருளி இருப்பவர் —
சூரர் என்னும் வசுதேவருடைய மகன் –ஸ்ரீ பராசர பட்டர்-

சூர குலத்தில் பிறந்த ஸ்ரீ கிருஷ்ணனாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

சூர குலத்தில் பிறந்த ஸ்ரீ கிருஷ்ணனாக இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————

650-ஸூ ர –
சித்ர கூட மலையில் ராஷசர்களை அழிப்பவரும் தாமரை இதழ் போன்ற நீண்ட கண்களை யுடையவருமான
ஸ்ரீ ராமபிரான் இருக்கிறார் -என்றபடி சூரரான ஸ்ரீ ராமபிரானாக இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

வீரராக இருப்பவர் -வீர -என்பது பாடம் –ஸ்ரீ சங்கரர் –

மேன்மை யுள்ளவரை நோக்கிச் செல்பவர் -வீர என்பது பாடம் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத்ரம் -551-600—–மும்மத விளக்கம் —

April 22, 2015

வேதாஸ் ச்வாங்கோ சித்த க்ருஷ்னோ த்ருடஸ் சங்கர்ஷண அச்யுத
வருணோ வாருணோ வ்ருஷபுஷ்கராஷோ மஹா மன —59-
பகவான் பகஹா நந்தி வன மாலீ ஹலாயுத
ஆதித்யோ ஜ்யோதித்யஸ் சாஹிஷ்ணுர் கதி சத்தம–60-
ஸூதந்வா கண்ட பர ஸூர் தாருணோ த்ரவிண ப்ரத
திவிஸ் ப்ருக் சர்வத்ருக் வாசோ வாசஸ்பதி ரயோ நிஜ -61
த்ரிசாமா சாமகஸ் சாம நிர்வாணம் பேஷஜம் பிஷக்
சந்யா சக்ருச் சமஸ் சாந்தோ நிஷ்டா சாந்தி பராயணம் –62
ஸூபாங்கஸ் சாந்திதஸ் ஸ்ரஷ்டா குமுத குவலேசய
கோஹிதோ கோபதிர் கோப்தா வ்ருஷபாஷோ வ்ருஷப்ரிய —63-

—————————————————

சுத்த சத்வம் —————–544-562—–19 திரு நாமங்கள்
மஹ நீய கல்யாண குணங்கள் -563-574—-12 திரு நாமங்கள்
வியாசர் ———————575-607— 33 திரு நாமங்கள்

——————————————————-

551-வேதா –
அளவற்ற மங்களமான பலவகைப்பட்ட பெருமைகளை பக்தர்களுக்கு எக்காலமும் வழங்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

படைப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

விசேஷமாகத் தாங்குபவர் -காப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————

552-ஸ்வாங்க-
தமது சர்வேஸ்வரத் தன்மைக்கு இலக்கணமாக குடை -சாமரம் முதலிய ராஜ்ய அங்கங்கள்
எப்போதும் உள்ளவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

தாமே காரணங்களின் சஹகாரியாகவும் இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

படைப்புக் காரியத்தில் தாமே அங்கமாக இருப்பவர் -தனக்கேற்ற அங்கங்களை உடையவர் –
சுதந்திரமான அங்கங்களை உடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————-

553-அஜித –
உற்பத்தி அழிவு முதலிய பிரகிருதி தர்மங்களால் வெல்லப்படாத அஜிதா என்னும் ஸ்ரீ வைகுண்டத்துக்கு அதிபதி –ஸ்ரீ பராசர பட்டர் –

அவதாரங்களிலும் எவராலும் வெல்லப் படாதவர் –ஸ்ரீ சங்கரர் –

ஒருவராலும் வெல்லப் படாதவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————

554-கிருஷ்ண –
கார் முகில் போல் அழகிய கருமை நிறம் உள்ளவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

கிருஷ்ண த்வைபாயனர் என்னும் வியாச ரூபியானவர் –ஸ்ரீ சங்கரர் –

கரிய நிறமுடையவர் -அக்னி ரூபமாக இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————–

555-த்ருட-
தம்மை உபாசிப்பவர்களை அனுரஹிப்பதற்காக வ்யூஹத்தில் ஸ்தூலமாக இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

ஸ்வரூபத்தின் சக்தியால் தன்மை மாறாதவர் –ஸ்ரீ சங்கரர் –

உறுதியானவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————

556-சங்கர்ஷண-
சேதன அசேதனங்களைத் தம்மிடத்தில் ஓன்று சேரும்படி ஆகர்ஷிப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

சங்கர்ஷண -சம்ஹார காலத்தில் பிரஜைகளைச் சேர்த்து இழுப்பவர் -அச்யுத -தம் ஸ்வரூபத்தை விட்டுத் தவறாதவர் –
சங்கர்ஷணோச்யுத ஒரே திருநாமம் –ஸ்ரீ சங்கரர் –

எல்லோரையும் நன்றாக இழுத்துக் கொள்பவர் -அழிவற்றவர் –சங்கர்ஷணோச்யுத ஒரே திருநாமம் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————–

557-அச்யுத –
வ்யூஹத்திலும் தமது ஸ்தானத்தில் இருந்து நழுவாதவர்–ஸ்ரீ பராசர பட்டர் –

————————————————————————–

558-வருண –
பூமி ஆகாயம் முதலிய எல்லாவற்றையும் மறைத்துக் கொண்டு இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

மாலையில் கிரணங்களை மறைத்துக் கொள்ளும் சூரியனாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

உத்தமமான ஜீவர்களை மேலே உயர்ந்த கதிக்கு அழைத்துச் செல்பவர் -தம்மை மறைப்பவர் -ஆனந்தம் உடையவர் பக்தர்களை
விரும்புபவர் -பக்தர்களால் விரும்பப் படுபவர் -அறிபவராய்-அருணா ரூபத்தில் உள்ளவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————————

559-வாருண-
தம்மை ஸ்வாமியாக வரிக்கும் பக்தர்களிடத்தில் இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

வருண புத்திரரான வசிஷ்டர் அல்லது அகஸ்த்யராக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

வருண புத்திரர் –வாரண -என்ற பாடமானால் பக்தர்களுக்கு வேண்டாதவற்றைத்  தவிர்ப்பவர் –
சமுத்ரத்திற்கு சுகத்தை தருபவர் -உயர்ந்தவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————–

560-வ்ருஷ-
நிழலுள்ள மரம் போலே அடியவர்கள் வந்து அடைந்து எல்லாப் பலன்களையும் அனுபவிக்கும்படி இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

மரம் போல் அசையாமல் இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

பக்தர்களுக்கு வேண்டியவற்றைக் கொடுப்பதில் கற்பக மரம் போன்றவர் -விரும்பப் படுபவர் –
அவ்ருஷ –  என்று தம்மை வெட்டுபவர் இல்லாதவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————-

561-புஷ்கராஷ-
கருணை பொழிந்து அடியவர்களைப் போஷிக்கும் இரு திருக் கண்களை யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

சிந்திப்பவர்களுக்கு ஹ்ருதய கமலத்தில் பிரகாசிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

தாமரை போன்ற திருக் கண்களை யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————–

562- மஹாமநா –
அடியவர்கள் திறத்தில் பெரிய மனம் உள்ளவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

சிருஷ்டி முதலியவற்றை நினைவினாலேயே செய்பவர் –ஸ்ரீ சங்கரர் –

மேன்மையான மனம் அல்லது ஞானம் உள்ளவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————–

563-பகவான் –
குற்றங்கள் அனைத்தும் தவிர்ந்து கல்யாண குணங்களே நிரம்பியவர் ஆதலின் மிகவும் பூஜிக்கத் தக்கவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

ஐஸ்வர்யம் முதலிய ஆறு குணங்கள் யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

ஐஸ்வர்யம் முதலிய ஆறு குணங்கள் உள்ளவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————–

564-பகஹா –
நிரம்பிய ஐஸ்வர்யம் வீர்யம் கீர்த்தி லஷ்மி ஞானம் வைராக்கியம் ஆகிய ஆறு குணங்கள் யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

சம்ஹார காலத்தில் ஐஸ்வர்யம் முதலிய குணங்களை அழிப்பவர்–ஸ்ரீ சங்கரர் –

அசுரர்களுடைய ஐஸ்வர்யத்தை அழிப்பவர் -ஒளியுடைய சூரிய சந்திரர்களை நெருங்கும் ராகுவை அழிப்பவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————-

565-நந்தீ-
வ்யூஹத்தில் சங்கர்ஷணராக இருந்த தாமே பல ராமனை அவதரித்து நந்தகோபரைத் தந்தையாக அடைந்து இருப்பவர் –
மதுவைப் பருகியதாலும் கோபிகைகள் உடன் கூடியதாலும் மகிழ்ந்து இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

ஸூக ரூபியாக இருப்பதால் -அல்லது -எல்லாச் செல்வங்களும் நிரம்பி இருப்பதால் ஆனந்திப்பவர் –
ஆநந்தீ -என்ற பாடம் –ஸ்ரீ சங்கரர் –

ஆநந்தீ -ஆனந்தம் யுடையவர் -நந்தீ -என்ற பாடத்திலும் அதுவே பொருள்–ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————-

566-வநமாலீ –
தம்மால் படைக்கப் பட்ட பஞ்ச பூதங்களில் உள்ள பரிமளங்களின் அபிமானி தேவதை யாகிய வைஜயந்தீ என்னும்
வனமாலையை எக்காலமும் அணிந்தவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

பஞ்சபூத தன் மாத்ரை ஸ்வரூபமான வைஜயந்தீ  என்னும் வனமாலையை தரிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

திருவடி வரை நீண்ட மாலையை அணிந்தவர் -ஸ்ரீ லஷ்மியைத் தோழியாக யுடையவர் –
தண்ணீர் அல்லது சோற்றைத் தாங்கும் சீலம் உள்ளவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————

567-ஹலாயுத –
பஞ்ச பூதங்களை அபிவருத்தி செய்யும் உழவன் போல் கலப்பையை யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

பல ராமனாகக் கலப்பையை ஆயுதமாக யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

திரி புரத்தை அழித்த போது சிவனுக்கு ஆயுதமாக இருந்தவர் -பல ராமனாகக் கலப்பையை ஆயுதமாக யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————

568-ஆதித்ய –
முற்பிறவியில் அதிதியாக இருந்த தேவகியின் புதல்வர் -ஆகார எழுத்தினால் அடையத் தக்கவர் –
ஆகாரம் சங்கர்ஷண மந்திர பீஜ எழுத்து –ஸ்ரீ பராசர பட்டர் –

அதிதிக்கும் கச்யபருக்கும் மகனாக ஸ்ரீ வாமனனாகப் பிறந்தவர்–ஸ்ரீ சங்கரர் –

பிரஜைகளை உண்ணும் அசுரர்களைக் கை விடுபவர் -அநாதி காலமாகவே ஞான ஆனந்தங்களை யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————

569-ஜ்யோதிராதித்ய –
சூர்யன் இருள் அடைந்து போகும்படி அப்ராக்ருதமான ஆச்சர்ய தேஜோ மயமாய் பேரொளியான சூர்யன் –ஸ்ரீ பராசர பட்டர் –

சூர்ய மண்டலத்தில் இருப்பவர் -பிரகாசிப்பவராயும் சூர்யனாகவும் இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

ஒளிகளில் முதல்வனான சூர்யனில் இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————

570-சஹிஷ்ணு –
அபராதத்தைப் பொறுத்துக் கொள்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

குளிர்ச்சி வெப்பம் முதலிய இரட்டைகளைச் சகித்துக் கொள்பவர் –ஸ்ரீ சங்கரர் –

அடியவர்கள் செய்யும் பிழைகளைப் பொறுப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————

571-கதிசத்தம –
தர்ம மார்க்க உபதேச விஷயத்தில் மிகச் சிறந்தவர் —ஸ்ரீ பராசர பட்டர் –

அனைவருக்கும் கதியாயும் உயர்ந்தவராயும் இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

அறிவுடன் கூடிய நல்லோரால் வேண்டப்படுபவர் -அடையப் படுபவரே மிகவும் உயர்ந்தவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————

572-ஸூதந்வா-
அமுதத்தைப் பற்றிய தேவா ஸூ ரப்போரை முடித்த சிறந்த வில்லை யுடையவர் —ஸ்ரீ பராசர பட்டர் –

இந்த்ரிய ரூபமான சார்ங்கம் என்னும் வில்லை யுடையவர் -ஸ்ரீ சங்கரர் –

அழகிய வில்லை யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————

573-கண்ட பரஸூ –
சிவனுடைய யுத்தத்தை முடித்த கோடாலி யுடையவர் —ஸ்ரீ பராசர பட்டர் –

பரசுராம அவதாரத்தில் விரோதிகளை அழித்த கோடாலியை யுடையவர் –
அகண்ட பரசு -யாராலும் வெல்லப்படாத பரசுவை யுடையவர் -ஸ்ரீ சங்கரர் –

எதிரிகளைப் பிளக்கும் கோடாலி யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————

574-தாருண-
இப்படி வெளிப் பகைவர்களையும் உட் பகைவர்களையும் பிளப்பவர் —ஸ்ரீ பராசர பட்டர் –

நல் வழியைக் கெடுப்பவரை அழிப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

மரப் பொம்மை போல் ஸ்வ தந்த்ரம் இல்லாத உலகைத் தூண்டி நடத்துபவர் -எதிரிகளைப் பிளப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————-

575-த்ரவிணப்ரத-
வியாசராக சாஸ்திரங்களும் அவற்றின் அர்த்தங்களும் ஆகிய செல்வத்தை மிகக் கொடுப்பவர் —ஸ்ரீ பராசர பட்டர் –

பக்தர்களுக்கு விரும்பியவற்றைக் கொடுப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

கல்வி பணம் முதலிய செல்வங்களை வழங்குபவர் –
உருகிய சித்தம் கொண்ட ஹரி பக்தர்களுக்கு ஸ்வரூப ஸூ கத்தைத் தருபவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————–

576-திவி ஸ்ப்ருக்-
பர விதையினால் பரம பதத்தில் இருக்கும் ரகசியமான ஸ்வரூபத்தைத் தொடுபவர் —ஸ்ரீ பராசர பட்டர் –

ஆகாசத்தைத் தொடுபவர் -திவ ஸ்ப்ருக்–என்று பாடம் -ஸ்ரீ சங்கரர் –

ச்வேதத்வீபம் அனந்த ஆசனம் ஸ்ரீ வைகுண்டம் ஆகிய இடங்களில் இருப்பவர் –
திவ ஸ்ப்ருக்-என்று பாடம் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————-

577-சர்வத்ருக்-
மற்றுமுள்ள மகிமைகள் அனைத்தையும் காண்பவர் —ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாவற்றையும் அறிந்தவரும் -வேதங்கள் புராணங்கள் -முதலியவற்றை விஸ்தரித்தவருமான வியாசர்  –
சர்வத்ருக் வியாச -என்று ஒரு திரு நாமம் -எல்லாமாகவும் கண்ணாகவும் எல்லா ஞானமாகவும் இருப்பவர் –
ருக்காதி வேதங்களை வகுத்தவர் -ருக்வேதம் -21 சாகைகள் -யஜூர் வேதம் -101 சாகைகள் –
வேதம் -1000 சாகைகள் -அதர்வண வேதம் 9 சாகைகள் –
இப்படியே புராணங்கள் முதலியவற்றையும் பிரித்த ப்ரஹ்மாவாகவும் இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

அனைத்தையும் நேரடியாகக் காண்பவர் -எல்லோரைக் காட்டிலும் மேன்மை கொண்டவர் —
சர்வத்ருக் வியாச -என்று ஒரு திரு நாமம் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————

578-வியாச –
வேதங்களை நான்காக வகுத்த வியாசர்—ஸ்ரீ பராசர பட்டர் –

——————————————————————-

579-வாசஸ்பதி –
ஐந்தாம் வேதமாகிய மஹா பாரத வாக்குக்கு ஸ்வாமி—ஸ்ரீ பராசர பட்டர் –

வாசஸ்பதிர யோஜின-என்று ஒரு திரு நாமம் -வித்யைக்கு அதிபதியாகவும் கர்ப்பத்தில் பிறவாதவராகவும் இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

அனைத்து வாக்கு மனம் ஆகியவற்றின் தேவதைகளுக்குத் தலைவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————–

580-அயோநிஜ-
சாரஸ்வதர் என்னும் அவதாரத்தில் பகவானுடைய வாக்கில் இருந்து பிறந்தமையால் கர்ப்பத்தில் பிறவாதவர் —ஸ்ரீ பராசர பட்டர் –

அடியவர் அல்லாதோரை சங்கிலி முதலியவைகளால் பிணைப்பவர்-கற்பத்தில் பிறவாதவர் -கம்பம் முதலியவற்றில் இருந்து
தோன்றியவர் -கர்ப்பத்தைக் காட்டிலும் வேறுபட்ட தம் நாபி கமலத்தில் இருந்து பிரமனை யுண்டாக்கியவர்—ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————–

581-த்ரிசாமா –
தம்மைப் பாடும் ப்ருஹத் -ரதந்த்ரம் -வாமதேவ்யம் -என்னும் மூன்று சாமான்களால் கானம் செய்யப் படுபவர் —ஸ்ரீ பராசர பட்டர் –

தேவ வ்ரதங்கள்என்றுபெயருள்ள மூன்று சாமங்களினால் துதிக்கப் படுபவர் –ஸ்ரீ சங்கரர் –

நிதன உத்கீத ப்ரதீஹார என்னும் மூன்று சாமங்களை யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————-

582-சாமக –
தம்மை அனுபவிக்கும் ஆனந்தத்தினால் தாமும் அந்த சாமங்களைப் பாடுபவர் —ஸ்ரீ பராசர பட்டர் –

சாம கானம் செய்பவர் –ஸ்ரீ சங்கரர் –

சாம வேதத்தால் அடையப் படுபவர் -சாம சப்தத்தினால் சொல்லப்படும் சரஸ்வதீ மற்றும்
வாயு தேவனிலும் அக்னியுள்ளும் இருப்பவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————–

583-சாம –
தம்மைப் பாடுபவர்களின் பாவத்தை அழிப்பவர்—ஸ்ரீ பராசர பட்டர் –

வேதங்களில் சாமவேதம் ஆகிறேன் என்றபடி சாமவேதமாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

அனைத்துப் பூதங்களிலும் சமமாக இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————-

584-நிர்வாணம் –
இப்படி பாவம் அற்றவர்களுக்கு பரம கதிக்குக் காரணம் ஆனவர் —ஸ்ரீ பராசர பட்டர் –

ஒரு துக்கமும் இல்லாத பரமானந்த ரூபமாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

திருப்பி யடிக்க முடியாத பாணங்களை யுடையவர் -ப்ராக்ருதமான உடல் இல்லாதவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————-

585-பேஷஜம் –
சிகிச்சை யளிக்க முடியாத சம்சாரம் ஆகிய வியாதிக்கு மருந்தானவர் —ஸ்ரீ பராசர பட்டர் –

பிறவி என்னும் நோய்க்கு மருந்தாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

பிறவி என்னும் நோய்க்கு மருந்தாக இருப்பவர் -நோய்களை வென்றவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————–

586-பிஷக் –
வியாதியின் காரணம் அறிந்த மருத்துவர்—ஸ்ரீ பராசர பட்டர் –

சம்சார ரோகத்தை விடுவிக்கும் பரவித்யையை ஸ்ரீ கீதையில் உபதேசித்தவர் –ஸ்ரீ சங்கரர் –

சம்சாரம் ஆகிய நோய்க்கு மருத்துவர் -சிகிச்சை செய்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————

587-சந்யாசக்ருத்-
பிறவி நோய் தீருவதற்குக் காரணமான சாத்விக தாகத்தைச் செய்விப்பவர் —ஸ்ரீ பராசர பட்டர் –

மோஷத்திற்காக நான்காவதான சன்யாச ஆஸ்ரமத்தை ஏற்படுத்தியவர் –ஸ்ரீ சங்கரர் –

பலன்களில் ஆசையுடைய செயல்களை தியாகம் செய்விப்பவர் -நன்றாக தோஷங்களை விடுபவர் –
சம்ந்யாசக்ருத்-அசுரர்களை அழிப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————

588-சம –
காமம் குரோதம் பயம் முதலியவற்றை அடக்கும் உபாயத்தை உபதேசிப்பவர் —ஸ்ரீ பராசர பட்டர் –

சன்யாசிகளுக்கு சாந்தியை ஞான கரணம் என்று உபதேசிப்பவர் -எல்லா பிராணிகளையும் அடக்குபவர் –ஸ்ரீ சங்கரர் –

ஆனந்த ரூபர் -பிரம்மா முதலியவர்களின் சுகத்தை அறிபவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————-

589-சாந்த –
தம் மகிமை பெருகியிருந்தும் அலையற்ற கடல் போலே அடங்கி இருப்பவர் —ஸ்ரீ பராசர பட்டர் –

விஷய சுகங்களில் பற்றில்லாதவர் –ஸ்ரீ சங்கரர் –

அசுரர்கள் சுகத்திற்கு அழிவை உண்டாக்குபவர் -சுகத்திற்கு எல்லையானவர் –
தம்மைப் பற்றிய ஞானம் வரும் முன்னர் சுகம் கிட்டாமல் செய்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————-

590-நிஷ்டா –
மனத்தை அடக்கியவர் -நெஞ்சங்களில் நிலைத்து இருக்கும் திருமேனி யுடையவர் —ஸ்ரீ பராசர பட்டர் –

பிரளயத்தில் எல்லாப் பொருள்களும் ஒடுங்கும் இடமாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

நிலையான தன்மை யுடையவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————-

591-சாந்தி –
சமாதி நிலையில் எல்லாவற்றையும் மறந்து தம்மையே அனுபவித்துக் கொண்டு இருக்கச் செய்பவர் —ஸ்ரீ பராசர பட்டர் –

அனைத்து அவித்யைகளும் நீங்கிய பிரம்மமாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

உயர்ந்த சுகமானவர் -சுகத்தை யுடையவர் –

——————————————————

592-பராயணம் –
மோஷத்திற்குச் சிறந்த வழியான பக்தியைத் தாமே அளிப்பவர்—ஸ்ரீ பராசர பட்டர் –

சம்சாரத்திற்குத் திரும்பாமல் இருக்கும் உயர்ந்த இடமாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

முக்தர்களால் அடையப் பெறுபவர் -உயர்ந்த அடைக்கலமாக இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————–

593- ஸூ பாங்க –
யோகத்தின் அங்கங்களான யமம் முதல் சமாதி வரை நிறைவேற்றுபவர் —ஸ்ரீ பராசர பட்டர் –

அழகிய உருவத்தை தரிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

மங்களமான அவயவங்கள் உள்ளவர் -மங்களத் திற்கான ஞானம் அளிப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————-

594-சாந்தித –
பக்தியோகம் தலைக் கட்டியவர்களுக்கு சம்சாரத் துன்பங்களைக் களைந்து
தமது சாயுஜ்யமாகிய சாந்தியைக் கொடுப்பவர் —ஸ்ரீ பராசர பட்டர் –

ஆசை வெறுப்பு முதலியவற்றில் இருந்து விடுவித்து சாந்தி அளிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

மோஷத்தை அளிப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————–

595- ஸ்ரஷ்டா –
மோஷத்தில் ஆசை உள்ளவர்களை விடுவித்து உலக வாழ்க்கையில் ஆசை உள்ளவர்களை வெகு காலமாக
அவரவர் புண்ய  பாபங்களுக்கு ஏற்பப் படைப்பவர் —ஸ்ரீ பராசர பட்டர் –

ஆதியில் எல்லாவற்றையும் படைத்தவர் –ஸ்ரீ சங்கரர் –

உலகைப் படைப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————–

596-குமுத –
கு எனப்படும் பிரகிருதி மண்டலத்தில் உள்ள சேதனர்களுக்கு போகங்களை அளித்து மகிழ்பவர் –
இப்படிப் படைக்கப் பட்ட பிரம்மா முதல் புல் வரை உள்ள ஏற்றத் தாழ்வுகளை யுடையதாய் -சப்தம் ஸ்பர்சம் முதலியவற்றை
அனுபவிக்கின்ற –சேதனர்களுக்கு போகங்களை அளித்து மகிழ்பவர் —ஸ்ரீ பராசர பட்டர் –

பூமியில் மகிழ்பவர் –ஸ்ரீ சங்கரர் –

பூமியில் மகிழ்பவர்-பூமியின் பாரத்தைத் தொலைத்து பூமிக்கு ஆனந்தத்தை அளிப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————

597-குவலேசய-
சம்சாரம் உள்ளவரை கு என்னும் பிரக்ருதியில்  பிறந்து உழன்று  -தம் உடல்களுக்கும் இந்த்ரியங்களுக்கும் தாமே தலைவர்கள் என்று
நினைத்து இருக்கும் சேதனர்களை அப்படியே நடத்தும் அந்தர்யாமியாக இருப்பவர் —ஸ்ரீ பராசர பட்டர் –

ஜலத்தில் சயனித்து இருப்பவர் -இலந்தைப் பழத்தின் நடுவில் சயனித்து இருக்கும் தஷகனை தனக்கு விபூதியாக யுடையவர் -அல்லது
ஆதி சேஷனுடைய மடியில் சயனித்து இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

பதரிகாஸ்ரமத்தில் சயனித்து இருப்பவர் -அல்லது பூமியின் பலத்திற்காக ஸ்வேத த்வீபத்தில் சயனித்து இருப்பவர் –
பூமியில் பலத்தின் வடிவமான ஹனுமானால் அடையப் பெறுபவர் –பூமியின் மாற்றத்தில் ஆசை யுள்ளவர் –
பூமியையும் சக்தியையும் கையில் பெற்று இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————-

598-கோஹித –
சம்சாரம் ஆகிய வித்து விளையும் உடமான ப்ரக்ருதிக்கு நன்மை செய்பவர்—ஸ்ரீ பராசர பட்டர் –

கோவர்த்தன மலையைத் தாங்கிப் பசுக்களைக் காத்தவர் -எல்லா பிராணிகளையும் அடக்குபவர் –
பூ பாரம் குறைக்க அவதரித்து அனுகூலித்தவர்–ஸ்ரீ சங்கரர் –

கண்ணுக்குள் ஜலத்தினுள் மறைந்து இருப்பவர்-பசுக்களுக்கும் வேத வாக்யங்களுக்கும் முறையே
ஸ்ரீ கிருஷ்ணனாகவும் வேத வியாசராகவும் நன்மை செய்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————

599-கோபதி –
போக பூமியான ச்வர்க்கத்திற்கும் தலைவர் —ஸ்ரீ பராசர பட்டர் –

பூமிக்குத் தலைவர் –ஸ்ரீ சங்கரர் –

பசு -ஸ்வர்க்கம் -செல்வம் முதலியவற்றைக் காப்பவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————–

600-கோப்தா –
கர்மபலங்கள் அனைத்தையும் காப்பவர் —ஸ்ரீ பராசர பட்டர் –

தமது ஸ்வரூபத்தைத் தம் மாயையால் மறைப்பவர் -உலகைக் காப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

அனைவரையும் பாதுகாப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத்ரம் -501-550—–மும்மத விளக்கம் —

April 21, 2015

உத்தரோ கோபதிர் கோப்தா  ஜ்ஞானகம்ய புராதன
சரீர பூதப்ருத் போக்தா கபீந்த்ரோ பூரி தஷிண ————-53
சோமப அம்ருதபஸ் சோம புருஜித் புருசத்தம
விநயோ ஜயஸ   சத்ய சந்தோ தாசார்ஹஸ் சாத்வதாம் பதி—54
ஜீவோ விநயிதா சாஷி முகுந்தோ அமிதவிக்ரம
அம்போ நிதி ர நந்தாத்மா மகோததிச யோந்தக –55
அஜோ மகார்ஹஸ் ஸ்வா பாவ்யோ ஜிதாமித்ர ப்ரமோதன
ஆனந்தோ நந்த நோ நந்தச் சத்ய தர்மா த்ரிவிக்ரம ——–56
மஹர்ஷி கபிலாசார்யா க்ருதஜ்ஞோ  மேதிநீ பதி
த்ரிபதஸ் த்ரிதசாத்யஷோ மகாஸ்ருங்க க்ருதாந்தக்ருத் –57
மஹா வராஹோ கோவிந்தஸ் ஸூ ஷேண கனகாங்கதீ
குஹ்யோ கபீரோ கஹநோ குப்தஸ்  சக்ர கதாதர –58-

———————————————————————

தர்ம ஸ்வரூபி -471-528—–58 திரு நாமங்கள்
கபில மூர்த்தி -529-543—–15 திரு நாமங்கள்
சுத்த சத்வம் -544-562——19 திரு நாமங்கள்

——————————————————————-

501-சரீர பூதப்ருத்-
தம் சரீரமாக உள்ள பிரகிருதி முதலிய தத்துவங்களைத் தாங்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சரீரத்திற்குக் காரணமான பஞ்ச பூதங்களை பிராண ரூபியாகத் தாங்குபவர் -ஸ்ரீ சங்கரர் –

சரீரங்களையும் பூதங்களையும் தாங்குபவர் -பிரளயத்தின் போது-தம்முடைய சரீரத்தில் பூதங்களைத் தரித்தவர் –
சரீர பூதப்ருத் என்ற பாடத்தில் சரீரம் உடையவர் -பூதங்களைத் தரிப்பவர் -என்று இரண்டு திரு நாமங்கள் –
அல்லது தம்முடைய சரீரங்களாக அந்தர்யாமி பிராமணத்தில் பிருத்வி முதலிய சப்தங்களால் கூறப் பட்ட
ஸ்ரீ கருடன் முதலியோரை தரிப்பவர்– ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————

502-போக்தா –
ஹய சிரஸ் ரூபமாக ஹவ்ய கவ்யங்களை புஜிப்பவர் – ஸ்ரீ பராசர பட்டர் –

காப்பவர் -தம்முடைய ஸ்வரூபம் ஆகிய ஆனந்தத்தை அனுபவிப்பவர் – -ஸ்ரீ சங்கரர் –

எல்லாவற்றையும் உண்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————

503-கபீந்திர –
வானர உருவத்தை எடுத்துக் கொண்ட தேவர்களுக்குத் தலைவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

வானரர்களுக்குத் தலைவராகிய ஸ்ரீ ராமனாக திரு வவதரித்தவர் – -ஸ்ரீ சங்கரர் –

வானரனான வாலியின் செல்வத்தை அழித்தவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————

504-பூரி  தஷிண –
உலகில் ஆசாரத்தை நிலை நாட்டுவதற்காகச் செய்யப்பட அஸ்வமேதம் முதலிய யாகங்களில் தஷிணைகள் அளித்தவர்-ஸ்ரீ பராசர பட்டர் –

தர்மத்தை நிலை நிறுத்தும் பொருட்டு யாகம் செய்து மிகுந்த தஷிணைகள்   தருபவர் – -ஸ்ரீ சங்கரர் –

பூரி தானத்திற்கு அபிமானியான ஸ்ரீ லஷ்மீ தேவியைத் தம் வலது பக்கத்தில் உடையவர் -தங்கத்தை தஷிணையாக உடையவர் –
மிகுதியாகக் கொடுப்பவர் -மிகுந்த சாமர்த்தியம் உடையவர் -எஜமானர்கள் பலரை உடைய சத்ர யாகத்தினால் சுகமுள்ளவர்– ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————————————-

505-சோமப –
அந்த யாகங்களில் சோம பானம் செய்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லா யாகங்களிலும் அந்தந்த தேவதா ரூபியாக -தர்மத்தைத் தெரிவிப்பதற்காக –
யாகங்களின் எஜமானனாக -சோமபானம் செய்பவர் – -ஸ்ரீ சங்கரர் –
உமையுடன் கூடிய ருத்ரனைக் காப்பவர் -சோம ரசத்தைப் பருகுபவர் -சந்திர கிரணத்தைப் பருகுபவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————————————–

506-அம்ருதப –
தம் அனுஷ்டானத்தைப் பின்பற்றுபவர்க்குத் தம்மை பரம பதத்தில் அனுபவிப்பதாகிய அமுதத்தைத் தருபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஆத்மானந்தமாகிய அமுதத்தைப் பருகுபவர் -அசுரர்களால் அபகரிக்கப் பட்ட அமுதத்தைக் காத்து
அவ்வமுதத்தை தேவர்கள் பருகும்படி செய்து தாமும் பருகியவர் – -ஸ்ரீ சங்கரர் –

அமுதத்தைப் பருகுபவர் -அமுதத்தை அசுரர்கள் இடம் இருந்து காப்பவர் –
அமுதமாகப் பரிணமித்த ஹவிஸ்ஸைத் தாமே உண்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————————————

507-சோம –
தம்மை அனுபவிப்பவர்களுக்குத் தாமே அமுதமாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சந்தரன் வடிவில் ஔஷாதிகளை வளரும்படி செய்பவர்-உமையோடு கூடிய சிவன் – -ஸ்ரீ சங்கரர் –

ஸ்ரீ லஷ்மியோடும் ருத்ரனோடும் சேர்ந்து இருப்பவர் -சௌம்யமானவர்-அளவிட முடியாத சாரமாக இருப்பவர் –
உயர்ந்த ஆனந்தத்தை யுடையவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————————————-

508-புருஜித் –
பலரையும் வென்றவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பலரை வென்றவர் – -ஸ்ரீ சங்கரர் –

பகைவர் பலரை வென்றவர் -பல பொருள்களை குணங்களை   வெல்பவர் -அடைபவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————————————-

509-புருசத்தம –
தமது குணங்களாகிய அமுதக் கடலைப் பருக விரும்பும் அனுமன் முதலிய பெரியவர்களிடம்
நிலைத்து இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

விச்வ ரூபியாகவும் மிக உயர்ந்தவராகவும் இருப்பவர் – -ஸ்ரீ சங்கரர் –

பிரம்மா முதலியவர்களுக்கு அந்தர்யாமியாக உள்ளிருப்பவர் -உயர்ந்தவர் -பூர்ணர் -அழிவைப் போக்கடிப்பவர் –
உயர்ந்த ஸ்ரீ லஷ்மீ தேவியை யுடையவர்– ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————————————–

510-வி நய –
மாரீசன் முதலியவர்களையும் தம் பராக்ரமத்தினால் அடக்கியவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

துஷ்டர்களைத் தண்டிப்பவர் – -ஸ்ரீ சங்கரர் –

விநியோஜ்ய -ஒரே திரு நாமம் -கட்டளை இடப் படாதவர் -பலவித உலகை நியமிப்பவர் –
சிலர் விநய -தண்டிப்பவர் -ஜய -வெல்பவர் -என்று இரண்டு திரு நாமமாக கொண்டு பொருள் கூறுவர்– ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————————————————

511-ஜய –
அடியவர்களால் ஏவப்படும்படி இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்

எல்லாப் பிராணிகளையும் வெல்பவர் –ஸ்ரீ சங்கரர் –

———————————————————————————————-

512-சத்ய சந்த-
அடியவர்கள் இடத்தில் சொன்ன சொல் தவறாதவர் -ஸ்ரீ பராசர பட்டர்

தாம் சங்கல்பிப்பது தவறாதவர் –ஸ்ரீ சங்கரர் –

சத்யமான சப்தமுள்ளவர்-உண்மையைச் சேர்ப்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————————————

513-தாசார்ஹ-
அடியவர்களுக்குத் தம்மையே தானமாகத் தருபவர் –
தாசர்ஹ-யாதவ -குலத்தில் ஸ்ரீ கிருஷ்ணனாக திருவவதரித்தவர் -ஸ்ரீ பராசர பட்டர்

தானத்திற்கு உரியவர் -தாசர்ஹ-யாதவ -குலத்தில் திருவவதரித்தவர் –ஸ்ரீ சங்கரர் –

தாசர்ஹ-யாதவ -குலத்தில் திருவவதரித்தவர் -தானத்திற்கு தகுதியானவர் –
தாசராஜன் மகள் -சத்யவதி -புத்ரனாக வியாசராக தோன்றியவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————————

514-சாத்த்வதாம் பதி –
ஸ்ரீ ப்ரஹ்மத்தை அறிந்த சாத்வதர்களான பாகவதர்களின் சாஸ்த்ரமான பாஞ்சராத்ரத்தைப் பின்பற்றுபவர்களுக்குத் தலைவர் –
யாதவர்களின் தலைவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சாத்வதம் என்னும் சாஸ்திரத்தைப் பின்பற்றுபவர்களுக்கு யோக ஷேமத்தை நடத்துபவர் –ஸ்ரீ சங்கரர் –

பக்தர்களைக் காப்பவர் -சாத்வதர்களான பாஞ்ச ராத்ரிகளுக்கும் ஸ்ரீ முதலிய நவ மூர்த்திகளுக்கும் பதி –
ஆதி மூர்த்தியானவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————————————-

515-ஜீவ-
தமக்கு ஆராதனம் செய்யும் அந்த பாகவதர்களை ஆத்ம நாசத்தில் இருந்து காத்து உய்விப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஜீவ ரூபியாக எல்லா உயிர்களையும் தாங்குபவர் –ஸ்ரீ சங்கரர் –

ஜனங்களை ஜீவிக்கச் செய்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————————————–

516-விநயிதா –
அந்த பாகவதர்களை ராஜ குமாரர்களைப் போல் ஆதரித்துக் காப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஜனங்களின் அடக்கத்தை நேரில் காண்பவர் -விநயிதா சாஷி என்று ஒரு திரு நாமம் –
எல்லாவற்றையும் நடத்துபவர் -தம்மைக் காட்டிலும் வேறு பொருளைப் பாராதவர் –ஸ்ரீ சங்கரர் –

ஜீவர்களின் பணிவு முதலியவற்றை நேராகக் காண்பவர் -விநயிதா சாஷி என்று ஒரு திருநாமம் — ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————————————–

517-சாஷி –
அதற்காக அவர்களுடைய ஒழுக்கங்களைப் பிரத்யஷமாகப் பார்ப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

——————————————————————————————-

518-முகுந்த –
அவர்களால் வேண்டப் பெற்றவராய் முக்தியைத் தருபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

முக்தியைத் தருபவர் –ஸ்ரீ சங்கரர் –

முக்தியைத் தருபவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————————————-

519-அமித விக்ரம –
அவர்கள் தியானத்திலும் ஆராதனத்திலும் நினைக்கும் தத்வங்கள் எல்லாவற்றையும் தாங்கும் ஆதார சக்தியாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

திரிவிக்ரம அவதாரத்தில் அளவிட முடியாத மூன்று அடிகளை உடையவர் -அளவற்ற பராக்கிரமம் யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

அளவிட முடியாத பராக்கிரமம் யுடையவர் -முழுவதுமாக அறியப்படாதவர் -கருடனைக் கொண்டு சஞ்சரிப்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————————

520-அம்போ நிதி –
பாதாளக் கடலில் எல்லா உலகங்களையும் தாங்கும் பீடம் போல் கூர்ம ரூபியாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அம்பஸ்ஸூக்களான தேவர் மக்கள் பித்ருக்கள் அசுரர்கள் ஆகியோரைத் தாங்குபவர் -கடல் போன்றவர் –ஸ்ரீ சங்கரர் –

ஸ்ரீ விஷ்ணு லோகமான பரம பதத்தைத் தம்மிடம் யுடையவர் –கடல் போன்றவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————————————

521-அனந்தாத்மா-
ஸ்ரீ கூர்ம ரூபத்தின் மேல் உலகங்களுக்கு ஆதாரமான ஸ்தம்பம் போல் நிற்கும் ஆதி சேஷனுக்கு ஆதாரமாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தேசம் காலம் பொருள் இவற்றால் வரையரை யற்றவர் –ஸ்ரீ சங்கரர் –

எண்ணிக்கை இல்லாத அமுக்தர்களுக்கும் முக்தர்களுக்கும் தலைவர் -அளவற்ற உடல்களை உடையவர் -கட்டுப்படாதவராய்
ஆத்மாவாக இருப்பவர் -ஆதி சேஷன் மீது தம் திருமேனியை வைத்து இருப்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————————-

522-மஹோததிசய-
பிரளய காலத்தில் ஆதிசேஷன் ஆகிற சயனத்தில் பெரும் கடலில் சயனித்து இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அனைத்தையும் அழித்து பிரளய சமுத்ரத்தில் சயனித்து இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

மேன்மை கொண்ட ஸ்ரீ வாமன ஸ்ரீ கிருஷ்ண ரூபங்களில் கையிலே தயிரை உடையவர் -பெரிய கடலில்
சயனித்து இருப்பவர் -ப்ரஹ்மாதிகளைத் தம் வசத்தில் உடையவர்– ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————————-

523-அந்தக –
பிரளய காலத்தில் எல்லாவற்றையும் அழிப்பவர்–ஸ்ரீ பராசர பட்டர் –

பிராணிகளுக்கு முடிவைச் செய்பவர் –ஸ்ரீ சங்கரர் –

ஸ்ரீ ராமனாக சமுத்திர ஜலத்தை -அணை-கட்டியவர் -ஜராசந்தன் போன்ற அசுரர்களால் சிறைப் பட்ட அரசர்களுக்கு
விடுதலை அளித்து சுகம் அளித்தவர் -எல்லாவற்றையும் அழிப்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————————————

524-அஜ –
பிரணவத்தின் முதலாகிய ஆகாரத்தின் பொருளாக எண்ணப் படுபவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

அகாரப் பொருளாகிய ஸ்ரீ விஷ்ணுவிடம் பிறந்த மன்மதனாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

நான்முகனுக்குத் தந்தை — ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————————————-

525-மஹார்ஹ-
பிரணவத்தை உச்சரித்து ஆத்மாவைப் பரமாத்மாவிடம் ஒப்படைப்பதாகிய பூஜைக்கு உரியவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

பூஜைக்கு உரியவர் –ஸ்ரீ சங்கரர் –

பூஜை முதலிய உத்சவங்களுக்கு உரியவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————

526-ஸ்வா பாவ்ய-
தமது பொருள்களான ஜீவாத்மாக்கள் பிரணவத்தைச் சொல்லி ஸ்வாமி யாகத் தம்மை த்யானிப்பதற்கு உரியவர் –
ஸ்வாபாவிக நித்ய ஸ்வாமி-சொத்து -சம்பந்தம் இருப்பதால் ஜீவர்களால் எப்போதும் த்யானிக்கத் தக்கவராக இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

எப்போதும் ஒரே ஸ்வ பாவத்துடன் கூடியே இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

மங்களகரமான பொருள் அனைத்தையும் உடையவர் -சுதந்த்ரமானவர் – ஸ்வ தந்த்ரமானவர் -அவாப்த சமஸ்த காமர் -தம்மைப் போலவே
ஞான ஆனந்தங்கள் உடைய நல்ல ஜீவர்களைக் காப்பவர் -தாமாகவும் முழுவதும் அனுபவிக்கத் தக்கவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————–

527-ஜிதா மித்ர-
தாம் ஸ்வாமியாக உள்ள ரஹச்யத்தைக் கண்டு அறிவதற்கு விரோதிகளான அஹங்காரம் மமகாரம் காமம் குரோதம்
முதலியவற்றை வென்றவர்–ஸ்ரீ பராசர பட்டர் –

உட் பகைகளான ஆசை வெறுப்பு போன்றவற்றையும் வெளிப் பகைவர்களான ராவண கும்பகர்ண
சிசுபாலாதிகளையும் வென்றவர் –ஸ்ரீ சங்கரர் –

விரோதிகளை வென்றவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————–

528-ப்ரமோதன-
தம் மடியவர்கள் தம்மை தியானிக்க தொடங்கும் போதே மகிழ்விப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

ஆத்மாவாகிய அமுத ரசத்தை அனுபவிப்பதனால் எப்போதும் மகிழ்ந்து இருப்பவர் –
தியானிப்பவர்களுக்கு தியானித்த  அளவிலே மகிழ்ச்சி அளிப்பவர்–ஸ்ரீ சங்கரர் –

உயர்ந்த ஸ்ரீ லஷ்மியையும் உயர்ந்த வாயுவையும் உடையவர் -தாம் ஆனந்திப்பவர் –
ஜனங்களை ஆனந்தப் படுத்துபவர் -மகிழ்ச்சியை உண்டாக்குபவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————-

529-ஆனந்த –
உபநிஷத் -ஆனந்த வல்லியில் சொல்லியபடி வாக்குக்கும் மனத்துக்கும் எட்டாத ஆனந்தமுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

ஆனந்த ஸ்வரூபமாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

ஆனந்த ஸ்வரூபம் யுடையவர் -ஆனந்திப்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————

530-நந்தன –
தம் பரமானந்தத்தை மோஷத்தில் அளித்து மகிழ்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

பக்தர்களை மகிழ்விப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

மகிழ்விப்பவர்– ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————

531-நந்த –
அனுபவிப்பதற்கு உரிய பொருள்கள் கருவிகள் அனுபவங்கள் அனுபவிப்பவர்கள் தம்மிடம் நிரம்பியவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

நந்த வேண்டியவை எல்லாம் நிரம்பியவர் -அனந்த விஷய சுகங்களைக் கடந்தவர் –ஸ்ரீ சங்கரர் –

எல்லாம் நிறைந்து இருப்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————–

532-சத்ய தர்மா –
ஆரம்பம் முதல் தம்மை அடையும் வரை தம் தர்மத்தை தவறாது நடத்துபவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

உண்மையான ஞானம் முதலியவற்றை உடையவர் –ஸ்ரீ சங்கரர் –

உலகைத் தாங்குபவர் -உண்மையான ஞானம் முதலிய தர்மங்கள் யுடையவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————–

533-த்ரி விக்ரம-
இச் சிறந்த மகிமையினால் மூன்று வேதங்களையும் வியாபித்து இருப்பவர் —ஸ்ரீ பராசர பட்டர் –

மூன்றடிகளால் மூன்று உலகங்களை வியாபித்தவர் -மூவுலகங்களையும் அளந்தவர் –ஸ்ரீ சங்கரர் –

மூன்று லோகங்களிலும் கருடன் மூலம் சஞ்சரிப்பவர் -திரி விக்ரம அவதாரத்தில் மூன்றடிகளை யுடையவர் –
மூன்று வேதங்கள் அல்லது முக்குணங்கள் அல்லது மூன்று உலகங்கள் அல்லது தேவர் மனிசர் அசுரர் ஆகிய மூவர்
அல்லது சேதனம் அசேதனம் இரண்டும் கலந்தது ஆகிய மூன்று ஆகியவற்றில் மூன்றடிகளை வைத்தவர் –
அத்ரி விக்ரம-என்று பாடம் கொண்டால் -அத்ரி மகரிஷியின் புதல்வரான தத்தாத்ரேயராக திருவவதரித்தவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————-

534-மஹர்ஷி –
வேதங்கள் அனைத்தையும் நேராகக் கண்ட கபில மகரிஷி –ஸ்ரீ பராசர பட்டர் –

மகரிஷி -கபிலாசார்யா -என்று ஒரே திரு நாமம் -வேதத்தைப் பார்த்தவரான கபிலாசார்யராக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

சிறந்த ரிஷி -சம்சார நடுக்கத்தை அழிப்பவர்-பிரமனையும் ருத்ரனையும் சீராட்டுபவர் –
மஹர்ஷி கபிலாசார்யா -ஒரே திரு நாமம் — ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————-

535-கபிலாசார்யா –
கபிலர் என்னும் ஆச்சார்யராக இருப்பவர்–ஸ்ரீ பராசர பட்டர் –

————————————————————

536-க்ருதஜ்ஞ-
சகர புத்ரர்கள் அபராதம் செய்திருப்பினும் அம்சுமான் தன்னை வணங்கிய நல்வினையை மட்டுமே அறிந்து இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

கார்யமான உலகமாகவும் ஆத்மாவாகவும் இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

பக்தர்கள் செய்பவைகளை அறிபவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————

537-மேதி நீ பதி –
பூமிக்கு நாதர் -இந்தப் பூமி முழுதும் எந்த வாசு தேவருடையதோ அவரே கபில மூர்த்தியாய் பூமியை எக்காலமும்
தாங்கிக் கொண்டு இருக்கிறார் –ஸ்ரீ பராசர பட்டர் –

பூமிக்கு நாதர் –ஸ்ரீ சங்கரர் –

பூமிக்குப் பதி– ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————

538-த்ரிபத-
போக்கியம் -அசேதனம் போக்தா -சேதனம் -நியந்தா -ஈஸ்வரன் -ஆகிய மூன்று தத்தவங்களை அறிவிப்பவர் –
மூன்று பதங்களை உடைய பிரணவம் ஆனது தம்மைக் குறிப்பதாக இருப்பவர் –
ஸ்ரீ வராஹாவதாரத்தில் மூன்று ககுத் திமில் முசுப்பு களை யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

ஸ்ரீ வாமனாவதாரத்தில் மூன்றடிகளை உடையவர் –ஸ்ரீ சங்கரர் –

ஸ்ரீ வைகுண்டம்  -அனந்தாசனம்-ச்வேதத்வீபம் -என்னும் மூன்று இடங்களை யுடையவர் -காயத்ரி மந்த்ரத்தின் மூன்று
பாதங்களாலும் தெரிவிக்கப் படுபவர் -மூன்று பாதங்களால் ஞானத்தை அருள்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————-

539-த்ரித சாத்யஷா –
பிரளய ஆபத்தில் பிரம்மா முதலியவர்களை உட்பட ஸ்ரீ பூமி தேவியை – ஸ்ரீ வராகமாய் திருவவதரித்து காத்தவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

ஜாக்ரத் ஸ்வப்ன ஸூஷுப்தி என்னும் மூன்று நிலைகளையும் நடத்துபவர் –ஸ்ரீ சங்கரர் –

படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய முத் தொழில்களுக்குத் தலைவர் -மூன்றடிகளை அளந்தவர் -மூன்றாவது
நிலையான யௌவன பருவத்தை எப்போதும் யுடைய தேவர்களுக்குத் தலைவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————

540-மஹா ஸ்ருங்க –
பூ மண்டலம் அனைத்தும் ஒரு மூலையில் ஒட்டிக் கொண்டு இருக்கும்படி பெரிய கோரைப் பல்லை யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

மத்ஸ்ய ரூபத்தில் பிரளய சமுத்ரத்தில் ஓடமாகிய பூமியைக் கட்டி விளையாடிய சிறந்த கொம்பு யுள்ளவர் –ஸ்ரீ சங்கரர் –

மிகுந்த ஞானம் உள்ளவர் -மிகவும் பிரதானமானவர் -மத்ஸ்ய திரு வவதாரத்தில் பெரிய கொம்பை யுடையவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————

541-க்ருதாந்தக்ருத் –
யமனைப் போன்ற ஹிரண்யாஷனை அழித்தவர்-ஸ்ரீ வராஹ ஸ்ம்ருதி புராணங்களில் தம்முடைய-
-சரண் அடைந்தவர்களை ரஷித்தே தீருவேன் -சித்தாந்தத்தை காட்டியவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

தம்மால் செய்யப்பட உலகைத்   தாமே அழிப்பவர்-எமனை வெல்பவர்–ஸ்ரீ சங்கரர் –

தீய கர்மங்களை அழிப்பவர் -ஜீவர்கள் செய்த கர்மங்களின் பலன்களை நிர்ணயம் செய்பவர் -கர்ம பந்தங்களை
உண்டாக்குபவர் – ப்ரஹ்ம ஸூத்ரங்களை ஏற்படுத்தி சித்தாந்தம் செய்பவர் -மரணத்தை அழிப்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————

542-மஹா வராஹ –
மிகப் பெரிய ஸ்ரீ வராக ரூபம் எடுத்தவர் -புண்டரீகாஷனாயும் கரு நெய்தல் இதழ் போன்றவருமான ஸ்ரீ மஹா வராஹமானவர்
கோரப் பல்லினால் பூமியை ஏந்திக் கொண்டு பெரிய கருமலை போலே
பாதாளத்தில் இருந்து புறப்பட்டார் -ஸ்ரீ விஷ்ணு புராணம் –ஸ்ரீ பராசர பட்டர் –

பெரிய ஸ்ரீ வராஹ ரூபி –ஸ்ரீ சங்கரர் –

கொடிய அரக்கர்களை அழிப்பவர்-ஸ்ரீ ருக்மிணி தேவியின் ஸ்வயம் வரத்தில் சிசுபாலனை அடக்கியவர் -மிகச் சிறந்தவர்களால்
ஒதுக்கப் படாதவர் -மிகவும் தாழ்ந்த கலி புருஷன் போன்றவர்களை அடக்குபவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————–

543-கோவிந்த –
நஷ்டமாய்ப் போன பூமியை மீண்டும் அடைந்தவர் -ஸ்ரீ பராசர பட்டர்

வேதாந்த வாக்குகளால் அறியப் படுபவர் -ஸ்ரீ சங்கரர்

த்ருதராஷ்ரானுக்கு கண்களை அளித்தவர் -சமுத்திர ஜலத்தை   அடைந்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

—————————————————

544-ஸூ ஷேண-
பத்த முக்த நித்யர்களை வசப்படுத்துவதற்குச் சேனை போலச் சிறந்த கருவியான
பஞ்ச உபநிஷத்துக்களைத் திரு மேனியாக உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர்

தம் கணங்கள் ஆகிய சிறந்த சேனை உடையவர் -ஸ்ரீ சங்கரர்

நல்ல சேனையை உடையவர் -மிகவும் அதிகமாகக் கொடுப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

——————————————————————

545-கனகாங்கதீ –
அப்ராக்ருதமான தோள் வளை முதலிய திவ்ய ஆபரணங்களை எப்போதும் அணிந்து இருப்பவர்-
கனகம் -தங்கம் -பஞ்ச உபநிதத்துக்களைக் குறிக்கும் -ஸ்ரீ பராசர பட்டர்

பொன் மயமான தோள் வளைகளை  உடையவர் -ஸ்ரீ சங்கரர்

பொன் மயமான தோள் வளைகளை  உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

—————————————————————

546-குஹ்ய –
வெளிப்படையாகப் புலப்படாத ரஹச்யமான பஞ்ச உபநிஷத் எனப்படும் திரு மேனியை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர்

ரஹச்யமான உபநிஷத்தினால் அறியக் கூடியவர் -உதய குகையில் மறைந்து உள்ளவர் -ஸ்ரீ சங்கரர்

மறைந்து இருப்பவர் -குஹனால் அர்ச்சிக்கப் பட்டவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

————————————————————————-

547-கபீர –
யாருக்கும் புலப்படாத ஈஸ்வர மகிமை உடையவர் -கலங்கிய தண்ணீர் கதக விதையினோடு -தேற்றாங்க கொட்டையோடு –
சேர்ந்தால் சுத்தமாவது போலே-அநாதியான அவித்யை யாதியால் கலங்கிய ஜீவனும் பகவானுடன் சேர்ந்தால்
தெளிவை அடைகிறான் என்னும் போது ஸ்வாபாவிக பிரகாசத்வம் விளங்கும் -ஸ்ரீ பராசர பட்டர்

ஞானம் ஐஸ்வர்யம் பலம் முதலிய அளவற்ற குணங்களால் அகாதமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்

ஸ்ரீ லஷ்மி தேவியுடன் ரமிப்பவர் -அசுரர்களுக்கு பயத்தை அளிப்பவ்வர் –
அகபீர -பாடம் -கோவர்த்தன மலை யால் மழை பயத்தை போக்கியவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

—————————————————————————–

548-கஹன-
உள்ளிருக்கும் பொருள் தெளிவாகத் தெரிந்தாலும் இறங்குவதற்கு அரிய கடல் போல அரியவர் -ஸ்ரீ பராசர பட்டர்

இறங்க முடியாதவர் -ஜாக்ரத் ஸ்வப்ன  ஸூ ஷுப்தி நிலைகளில் இருக்கின்ற போதும்
இல்லாத போதும் சாஷியாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்

அறிய முடியாதவர் -அகஹன-பாடம் -மலைகளின் இறக்கைகளை வெட்டியா இந்திரனை நடத்துபவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

———————————————————————–

549-குப்த-
இம் மகிமை அறிந்த பூர்வாச்சார்யர்களால் காக்கப் பட்டவர்-ஸ்ரீ பராசர பட்டர்

வாக்குக்கும் மனத்திற்கும் எட்டாமல் மறைந்து இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்

அயோக்யர்களால் அறிய முடியாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

—————————————————————-

550-சக்ர கதாதர –
மேற் சொன்ன திவ்ய பூஷணங்களைப் போலே பஞ்ச உபநிஷத் மயமான
திவ்ய ஆயுதங்களை எப்போதும் உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர்

மனஸ் தத்வமாகிய சக்ரத்தையும் புத்தி தத்வமாகிய கதையையும் உலகைக் காப்பதற்காக தரிப்பவர் -ஸ்ரீ சங்கரர்

சக்ரம் கதைகளைத் தரிப்பவர் -நரகாசுரனை அழித்தவர்-எவராலும் தாங்கப் படாதவர் –
எல்லோரையும் நன்கு தாங்குபவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத்ரம் -451-500—-மும்மத விளக்கம் —

April 20, 2015

யஜ்ஞ இஜ்யோ மஹேஜ்யஸ்ஸ க்ரதுஸ்  சத்ரம் சதாம்கதி
சர்வ தர்சீ நிவ்ருத்தாத்மா சர்வஜ்ஞோ ஜ்ஞானமுத்தமம் -48
ஸூவ்ரதஸ் ஸூ முகஸ் ஸூ ஷ்மஸ் ஸூ கோஷஸ் ஸூ கதஸ் ஸூ ஹ்ருத்
மநோஹரோ ஜிதக்ரோதோ வீர பாஹூ ர் விதாரண –49
ஸ்வாபன ஸ்வ வஸோ வியாபி நைகாத்மா நைக கர்மக்ருத்
வத்சரோ வத்சலோ வத்சீ ரத்னா கர்ப்போ தனேஸ்வர –50
தர்மகுப் தர்மக்ருத் தர்மீ சதஷரம சத்ஷரம்
அவிஜ்ஞாதா சஹஸ்ராம்   ஸூர் விதாதா க்ருதலஷண–51
கபஸ்தி நேமிஸ்  சத்வஸ்தஸ் சிம்ஹோ பூத மகேஸ்வர
ஆதிதேவோ மஹாதேவோ தேவேசோ தேவப்ருத்குரு–52
உத்தரோ கோபதிர் கோப்தா ஜ்ஞானகம்ய புராதன
சரீர பூதப்ருத் போக்தா கபீந்த்ரோ பூரி தஷிண –53-

————————————————————————

பகவானின் முயற்சி —-436–452—–17  திரு நாமங்கள் –
நரன் —————–453-456——-4  திரு நாமங்கள் –
அம்ருத மதனம்———457–470—–14  திரு நாமங்கள் –
தர்ம ஸ்வரூபி ———471-528——58  திரு நாமங்கள் –

————————————————————-

451-சதாம்கதி –
இந்த்ரியங்களை வென்றவர்களான சாதுக்கள் சேருமிடமாக இருப்பவர் –
இதுவரை பிரவ்ருத்தி தர்ம நிஷ்டர்களுடைய நிலை கூறப்பட்டது -இனி சாதுக்கள் நிலை -ஸ்ரீ பராசர பட்டர் –

மோஷம் விரும்புவகளுக்கு அடையும் இடமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

நல்லோர்களால் அடையைப் பெறுபவர் -நஷத்ரங்களை நடத்துபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————-

452-சர்வ தர்சி-
இருவகை பிரவ்ருத்தி நிவ்ருத்தி தர்மங்களைக் கண் கூடாகக் காண்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லா பிராணிகளின் நல்வினை தீவினைகளை இயற்கையாக அறிபவர் –ஸ்ரீ சங்கரர் –

தர்சம் முதலிய யஜ்ஞ விசேஷங்களை யுடையவர் -எல்லாவற்றையும் பார்ப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————

453-நிவ்ருத்தாத்மா –
நிவ்ருத்தி தர்மத்தை உபதேசிப்பதற்காகவும் சிறந்த வைராக்யத்தை அனுஷ்டானத்தினால் வெளிப்படுத்துவதற்காகவும்
நர நாராயண அவதாரம் எடுத்து சப்தாதி விஷயங்களை மனத்தினால் துறந்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

இயற்கையாகவே எல்லாப் பற்றுகளையும் விட்ட ஆத்மாவாகவே இருப்பவர் -சம்சாரத்தில் இருந்து விடுபட்ட
ஆத்மா என்றுமாம் -விமுக்தாத்மா -என்ற பாடம் –ஸ்ரீ சங்கரர் –

ஜீவாத்மாக்களை முக்தி  அடையும்படி அனுக்ரஹிப்பவர் -விசேஷமாக முக்தர்களுக்கு தலைவராக இருப்பவர் –
விமுக்தாத்மா என்ற பாடம்-ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————————

454-சர்வஜ்ஞ-
தம்மை சர்வ அந்தர்யாமி என்று அறிந்து இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாமாகவும் ஞானமாகவும் இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

எல்லோரையும் அறிபவர் -எல்லாம் அறிந்த ஜீவர்களை யுண்டாக்கியவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————————

455-ஜ்ஞான முத்தமம் –
எல்லாவற்றிலும் சிறந்த ஸ்ரீ வைஷ்ணவ தர்மத்தை யாவரும் தெரிந்து கொள்ளக் காரணமாக இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

நித்யமும் அளவுபடாததும் எல்லாப் பயன்களையும் சாதிப்பதுமாகிய சிறந்த ஞானமாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

தன்னைப் பற்றிய அறிவால் பெருமையுடன் மிக மகிழ்பவர் – -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————

456-ஸூ வ்ரத-
தம்மைப் பார்த்து மற்றவர்கள்  பயன் பெறுவதற்காகவே தாம் தர்மங்களை விடாமல் பற்றுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அடியவர்களைக் காக்கும் சிறந்த விரதம் யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

உலகைக் காத்தல் முதலிய மங்களமான விரதத்தை யுடையவர் –
தம்மைக் குறித்த மங்களகரமான வ்ரதமுடையவர்-ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————–

457-ஸூமுக –
ஜபம் முதலியவற்றால் யுண்டாகும் வருத்தம் இல்லாத மலர்ந்த முகமுடையவர் –
457-463- நர நாராயண வ்ருத்தாந்தம் –கடல் கடைந்த சரித்ரம் என்கிற இரண்டு நிர்வாகம் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஆனந்தமும் அமுதமும் நிறைந்ததாய் சந்தரன் போலே பிரகாசிப்பதாய் கையிலே வைத்து இருக்கும்
கலசம் போன்றதாயத் திகழ்ந்தவர் -அழகிய திரு முகம் –ஸ்ரீ சங்கரர் –

அழகிய முகம் உள்ளவர் -தசரத ராமனாக வன வாசத்தில் மகிழ்ந்தவர் -எல்லா வித்யைகளையும் அளித்து மகிழ்பவர் –
மங்களகரமான முகம் யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————

458-ஸூஷ்ம-
ஸ்வயம் பிரயோஜனமாகச் செய்யப்படும் தியானத்தால் மட்டும் புலப்படும் முக நுட்பமான ஸ்வரூபம் யுடையவர் –
அசுரர்கள் அறியா வண்ணம் மறைத்த எண்ணத்தை யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

சப்தம் முதலிய ஸ்தூல காரணங்கள் போல் அல்லாமல் -ஆகாசம் முதலிய வற்றிற்கு காரணமானவை –
அப்படி  அல்லாதவர் —சூஷ்ம காரணமாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

ஸூஷ்ம ரூபம் யுடையவர் -மங்களமும் மேன்மையும் கொண்ட பூமி தேவியை யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————————-

459-ஸூகோஷ –
அழகிய உபநிஷத் முதலிய வேதங்களினால் முழங்கப் பெறுபவர் –
தேவாசுரர்களின் கோஷத்தோடு கடைகிற கோஷமும் கூடி அற்புதமான கோஷமுடையவர்-ஸ்ரீ பராசர பட்டர் –

சோபனமான வேத கோஷத்தை யுடையவர் -மேகம் போன்ற குரலுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

மங்கள வேத ரூபமான பாஞ்சஜன்யம் என்ற சங்கின் ஒலியுள்ளவர்-ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————–

460-ஸூகத –
சதாசாரங்களையும் தானங்களையும் அனுஷ்டிப்பவர்களுக்கு பரம சுகமாகிய பலம் தருபவர் –
தேவர்களுக்கு அமுதம் அளித்து சுகத்தைக் கொடுப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

நல்லோர்களுக்கு சுகத்தைக் கொடுப்பவர் -அல்லது தீயவர்களுக்கு சுகத்தைக் கெடுப்பவர்–ஸ்ரீ சங்கரர் –

முக்தி சுகத்தை அளிப்பவர் -அல்லது -அயோக்யரின் சுகத்தை அழிப்பவர்-ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————

461-ஸூ ஹ்ருத் –
தமக்கு உபகாரம் செய்யாதவனுக்கும் இவனுக்கு நான் என்ன செய்வேன் என்று நன்மையே கருதும் சிறந்த மனமுள்ளவர் –
அதற்குக் காரணமான அன்பை யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

கைம்மாறு எதிர்பாராமல் உபகாரம் செய்பவர் –ஸ்ரீ சங்கரர் –

மங்களமான இதயம் உள்ளவர் -பக்தர்கள் செய்யும் மங்களமான கர்மங்களின் பயன்களைப் பெற்றுக் கொள்பவர் –
பயன் எதிர்பாராமல் உதவுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————-

462-மநோ ஹர –
இந்த இயற்கையான அன்பினால் அவர்களின் மனங்களைக் கவர்பவர் –
அசுரர்களின் மனங்களை மயக்கிய உருவமுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லையற்ற ஆனந்த ஸ்வரூபியாகையால் மனங்களைக் கவர்பவர் –ஸ்ரீ சங்கரர் –

பக்தர்களுடைய மனங்களினால் கவரப் படுகிறவர்-ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————————————–

463-ஜிதக்ரோத –
அவர்களுடைய க்ரோதங்கள் முதலியவற்றைப் போக்குபவர் -இவருடைய அழகிய உருவைக் கண்டு மயங்கிக் குழம்பும்படி அசுரர்களைச்
செய்து அசுரர்களுக்கு தேவர்கள் இடமிருந்த க்ரோதத்தை வென்றவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

கோபத்தை வென்றவர் -கோபத்தினால் அல்லாமல் வேத மரியாதையைக் காப்பதற்கே அசுரர்களை அழிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

கோபத்தை  வென்றவர் -கோபத்தின் உருவான அசுரர்களை அழித்தவர்-ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————————————-

464-வீர பாஹூ-
வளை தோள்வளை மாலை முதலியவற்றால் அலங்கரிக்கப் பட்டுக் கடல் கடையும் காலத்தில் நான் நான் என்று
ஒன்றன்பின் ஒன்றாக முன்வரும் ஆயிரம் தோள்களை யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தேவர்களின் விரோதிகளை அழித்து வேத மரியாதையை நிலை நாட்டும் பராக்ரமுடைய கைகளை யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

வீரர்களான ஷத்ரியர்கள் தோன்றிய தோள்களை யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————————————–

465-விதாரண –
திவ்ய ஆயுதங்களால் ராகு முதலியவர்களைச் சிதைத்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அதர்மம் புரிபவர்களை அழிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

விசேஷமாக பத்னிகளான கோபிகைகளுக்கு சுகத்தை தருபவர் -ஸ்ரீ நரசிம்ஹ திருவவதாரத்தில் இரணியனைப் பிளந்தவர் –
ஞானிகளான வித்வான்களால் அடையப் பெறுபவர் -எல்லாம் அறிபவர் -ஜராசந்தன் முதலியவர்களுடன்  போர் புரிந்தவர் –
அரணிக் கட்டையில் அக்னிரூபத்தில் இருப்பவர் -ஞானத்தால் மகிழ்பவர் –
மனைவி அற்ற சன்யாசிகளுக்கு ஸூகம் தருபவர்-ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————————————-

466-ஸ்வாபன-
மற்றவர்களை அழகிய புன்சிரிப்பு இனிய நோக்கு புருவ நெறிப்பு இவற்றால் வசீகரித்து மயக்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பிராணிகளை  மாயையினால் ஆத்ம ஜ்ஞானம் இன்றித் தூங்கச் செய்பவர்  –ஸ்ரீ சங்கரர் –

கனவு நிலையைத் தருபவர் -அல்லது தூங்கும் படி செய்பவர் -தண்ணீரை நன்கு நடத்துபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————-

467-ஸ்வ வஸ-
அவர்கள் மயங்கிய போது தம் அடியார்களுடன் விருப்பப்படி கூடி மகிழ்ந்தவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

உலகைப் படைத்தல் காத்தல் அழித்தல் இவற்றில் ஸ்வ தந்தரமாக இருப்பவர் —ஸ்ரீ சங்கரர்-

செல்வத்தைத் தம் வசத்தில் கொண்டவர் -பிரளய காலத்தில் தம் வயிற்றில் வைத்து சுகத்தை தருபவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————-

468-வ்யாபீ-
தேவர் அசுரர் மந்தரமலை வாசுகி நாகம் -போன்றவர்கள் இடம் வியாபித்து கடல் கடைய வலிமை கொடுத்தவர்–ஸ்ரீ பராசர பட்டர் –

ஆகாசத்தைப் போலே எங்கும் பரந்து -காரணமாக -எல்லா வற்றிலும் பரவி இருப்பவர் —ஸ்ரீ சங்கரர்-

எங்கும் எல்லா வற்றிலும் பரவி இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————–

469-நைகாத்மா –
அப்போது விஷ்ணு ஆமை மோஹிநீ முதலிய பல உருக் கொண்டவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

சிருஷ்டி முதலிய வற்றிற்காக பல சக்திகள் பல உருவங்கள் கொண்டவர் —ஸ்ரீ சங்கரர்-

கணக்கற்ற உருவம் யுடையவர் -கணக்கற்ற ஜீவர்களுக்குத் தலைவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————————

470-நைக கர்மக்ருத் –
கடைவது-மலையைத் தாங்குவது -பகைவரை அழிப்பது -அமுதம் அளிப்பது-முதலிய பல செயல்களைச் செய்தவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

உலகைப் படைத்தல் -காத்தல் -அழித்தல்-முதலிய பல செயல்களைச் செய்பவர் —ஸ்ரீ சங்கரர்-

படைத்தல் -காத்தல் முதலிய பல செயல்களைச் செய்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————————

471-வத்சர-
தர்மாத்மா -அவரவர் வேண்டியவற்றைக் கொடுப்பதற்காக எல்லாரிடமும் அந்தர்யாமியாக இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாவற்றிற்கும் தாமே இருப்பிடமானவர் —ஸ்ரீ சங்கரர்-

ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் கன்றுகளுடன் சேர்ந்து மகிழ்பவர் -வத்சாசூரனை அழித்தவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————————–

472-வத்சல-
நெடுநாள் தம்மைப் பற்றி இருப்பவர்களிடத்தில் காட்டிலும் அப்போதே தம்மைச் சரணம் அடைந்தவர் விஷயத்தில் பசுக்கள் அன்று
ஈன்ற கன்றை நினைத்துக் கனைத்துக் குமுறி முலை கடுத்துப் பாலைச் சொரிந்து என் செய்வது என்று படுவது போலே இருப்பவர் –
அடியவர்களைக் காப்பதற்காக பகவான் இக் குணத்தை உப கரணமாகக் கொண்ட படியால் அன்றோ
இக் குணம் மிகவும் புகழை அடைந்தது –ஸ்ரீ பராசர பட்டர் –

பக்தர்கள் இடத்தில் அன்பு யுடையவர் —ஸ்ரீ சங்கரர்-

அடியவர்கள் இடத்தில் தயை யுள்ளவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————————

473-வத்சீ-
இப்படி எல்லாக் காலமும் தம்மால் போஷிக்கப் படத் தக்க ஆத்மாக்களை மிகுதியாக யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

மக்களைக் காப்பவர் -உலகிற்குத் தந்தையாதளால் உலகத்தவர்களைக் குழந்தைகளாக யுடையவர் –ஸ்ரீ சங்கரர்-

ஸ்ரீ வத்சத்தை -மருவை -யுடையவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————–

474-ரத்ன கர்ப்ப –
அவர்களில் செல்வம் வேண்டுபவர்களுக்குக் கொடுக்கத் தக்க செல்வம் மிகுதியாக யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

ரத்னங்களைக் கொண்ட கடலாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர்-

வயிற்றிலே ரத்னங்களை யுடையவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————–

475-தநேச்வர-
அவரவர் விரும்பிய செல்வத்தை உடனே தருபவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

செல்வங்களுக்கு அதிபதி –ஸ்ரீ சங்கரர்-

செல்வங்களுக்குப் பிரபுவாக இருப்பவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————–

476-தர்ம குப் –
தம்மால் அளிக்கப்பட அர்த்த கர்மங்களை தீய வழிகளில் செல்லாமல் தடுத்து தர்மத்தைக் காப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

தர்மங்களைக் காப்பவர் –ஸ்ரீ சங்கரர்-

தர்மபுத்ரரை -அல்லது புண்யத்தைக் காப்பவர் -தர்ம  சாதனங்களான வேத வாக்குகளைக் காப்பவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————-

477-தர்மக்ருத்
காரணம் அற்ற அருளால் எல்லோரையும் தருமத்தைப் பின்பற்றும்படி செய்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

தர்ம அதர்மங்கள் அற்றவர் ஆயினும் தர்மத்தைக் காப்பதற்காக அதை அனுஷ்டிப்பவர் –ஸ்ரீ சங்கரர்-

தர்மத்தைச் செய்பவர் -பக்தர் அல்லாதோரின் தர்மத்தை அழிப்பவர்—ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————–

478-தர்மீ –
எல்லாவற்றையும் காப்பதற்கு தர்மத்தையே உபகரணமாகக் கொண்டவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

தர்மங்களைத் தாங்குபவர் –ஸ்ரீ சங்கரர்-

யமதர்மனை நியமிப்பவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————-

479-சத் –
சிறந்த வஸ்துவாகிய தர்மமே வடிவாக இருப்பவர் -இந்த தர்மத்தையே சத் என்று கொண்டாடுவது இதனால் சாதிக்கப்படும் பகவான்
சத்தாக இருப்பதாலேயே ஆகும் -அவனுடைய சத்தாய் இருக்கும் தன்மை இயற்கையாகவே அமைந்துள்ளது –
எப்போதும் சத்தாய் இருப்பது –ஸ்ரீ பராசர பட்டர் –

சுத்த ப்ரஹ்மம் –ஸ்ரீ சங்கரர்-
அழிப்பவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————–

480-சத் அஷரம்-
இப்படி எல்லாக் காலத்திலும் குணங்களும் ஸ்வரூபமும் குறைவுபடாது இருப்பவர் -அஷரம் என்றது சத் என்பதற்கு அடை மொழி –
அழியாத சத் -எனபது பொருள் -ஷரம் எனபது ஏதோ ஒரு காலத்தில் அல்லது தேசத்தில் அழிவதைக் குறிக்கும் –ஸ்ரீ பராசர பட்டர் –

அழியாத ப்ரஹ்மம் –ஸ்ரீ சங்கரர்-
அழியாத ஸ்ரீ வைகுண்டம் முதலிய இட்டங்களில் மகிழ்பவர் -அழிவற்றவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————

481-அசத்-
பாபிகளிடம் நில்லாமல் இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

வேறு ப்ரஹ்மம் -பெயர் வடிவம் முதலிய அவித்யையோடு கூடிய ப்ரஹ்மம் –ஸ்ரீ சங்கரர்-

அழிவற்றவர் -அறிய முடியா ரூபத்தை யுடையவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————

482-அசத் ஷரம் –
பாபிகளுக்கு முடிவற்ற சம்சார துக்கத்தை கொடுப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

ஷரம் -அழியும் எல்லா பூதங்களுமாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர்-

எப்போதும் கொடுப்பவர் -உலகை அழிப்பவர்—ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————————

483-அவிஜ்ஞாதா –
அடியவர்கள் செய்யும் குற்றங்களைக் கண்டும் தண்டியாதவர் மட்டும் அல்லாமல் குற்றங்களையே அறியாதவர் -ஸ்ரீ பராசர பட்டர்

எவர்கள்  ப்ரஹ்மாமானது ஞான மாத்ரமே என்று கூறி அது ஞானம் என்ற குணத்தைக் கொண்டதன்று என்று கூறுகிறார்களோ –
வேதங்களின் பொருள் ஆசார்யர்களுடைய முடிவுகள் நியாயம் ஆகிய விஷயங்களில் செவிடர்களாகவே உள்ள அவர்கள்
பகவானுடைய இந்த உயர்ந்த குணங்களை அறிந்து கொள்ள வில்லையே என்று
வருந்தத் தக்கவர்களே அன்றி கண்டிக்கத் தகுதி யுள்ளவர்கள் அல்லர் -ஸ்ரீ சங்கரர்

ஆத்மாவில் செயல் உண்டு என்று தவறாக அறிபவன் ஜீவன் -அவ்வாறு தவறாக அறியாதவர் விஷ்ணு –
முழுவதுமாக அறியப் படாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

————————————————————

484-சஹஸ்ராம்ஸூ-
அடியவர்கள் குற்றங்களைத் தவிர மற்று எல்லாவற்றையும் அறியும் அளவற்ற ஞானங்களை யுடையவர் –
சர்வஜ்ஞ்ஞன் என்பதும் அடியவர்களின் தோஷங்களை அறியாதவன் என்பதும் முரண்பட்டது அல்ல –
அபராதங்களை ஒரு பொருட்டாக நினையாமல் அவற்றை உபேஷித்து கண்டு கொள்ளாமல் விடுதலேயாகும் -ஸ்ரீ பராசர பட்டர்

சூரிய கிரணங்களைத் தம் உடையவையாக யுடையவர் -ஸ்ரீ சங்கரர்

ஆயிரம் கிரணங்கள் உள்ள சூரியனில் இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

—————————————————-

485-விதாதா –
பாவங்களுக்குப் பலன் கொடுக்கும் யமனும் அவனுடைய தண்டனைகளும் தம் அடியவர்களைப் பாதிக்காமல் இருக்கும்படி நடத்துபவர் –
இங்கு ஸ்ரீ ப்ரஹ்ம புராணம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -ஸ்ரீ வாமன புராணம் -ஸ்ரீ நரசிம்ஹ புராணம் -ஸ்ரீ லிங்க புராணம் –
ஸ்ரீ வைஷ்ணவ தர்மம் -ஸ்ரீ விஷ்ணு தத்வம் -ஸ்ரீ பாகவத புராணம் -முதலியவற்றில் யமனுக்கும் அவனுடைய கிங்கரனுக்கும் இடையே
நடைபெற்ற உரையாடல்கள் பார்க்கத் தக்கன -ஸ்ரீ பராசர பட்டர்

ஆதி சேஷன் திக் கஜங்கள் முதலியோர் பூமியைத் தாங்கும்படி செய்பவர் -ஸ்ரீ சங்கரர்

உலகைத் தாங்குபவர் -கருடனை விசேஷமாக வாகனமாகக் கொண்டவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

—————————————————————

486-க்ருத லஷண –
தம்மை அடையக் கூடிய அடியார்களுக்குத் தகுந்த அடையாளம் செய்து இருப்பவர் -தோஷங்களைப் பொறுத்துக் கொள்ள
தீயவர்கள் இடம் இருந்து நல்லவர்களை வேறுபடுத்தி அவர் அறிவது இதனால் -ஸ்ரீ பராசர பட்டர்

தம் மார்பில் ஸ்ரீ வத்சம் என்னும் அடையாளம் யுடையவர் -நித்ய சைதன்ய ரூபியாக இருப்பவர் –
லஷணங்கள் ஆகிய சாஸ்த்ரங்களை செய்தவர் -எல்லா வஸ்துக்களும் ஒன்றோடு ஓன்று வேறு பட்டவைகளாக
இருக்கும் இலக்கணங்களைச் செய்தவர் -ஸ்ரீ சங்கரர்

முழுமையான லஷணங்கள் உள்ளவர் -பக்தர்கள் செய்த கர்மங்களைப் பெறுவதில் மகிழ்ச்சி
உள்ளவர் -பூரணமான -இயல்பான -லஷணங்கள் உடைய சுகத்தை யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

—————————————————-

487-கபஸ்தி நேமி –
கிரணங்களால் பிரகாசிக்கும் ஆயிரம் முனைகளோடு கூடிய சக்கரம் உடையவர் -இப்படிப்பட்ட அடையாளங்கள் உள்ளவர்களை
ஆயிரம் ஆரங்களுடைய சக்ராயுதத்தை ஏந்தியுள்ள பகவான் காக்கின்ற படியால்
யமனும் அவனுடைய கிங்கரர்களும் நெருங்க முடியாது -ஸ்ரீ பராசர பட்டர்

வட்டமான கிரணங்களின் நடுவில் ஸூர்ய ரூபமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்

சக்கரத்தின் நேமியில் உள்ளது போல் வட்டமான ஒளியை உடையவர்-ஸ்ரீ சத்ய சந்தர்

——————————————————————————

488-சத் வஸ்த-
பக்தர்களின் இதயத்தில் இருப்பவர் -யமனும் கிங்கரர்களும் நெருங்காமல் இருக்க காரணம் அவர்கள் இடம்
பாவங்கள் இல்லாததே யாகும் -அவ்வடியவர்கள் மட்டும் கர்மங்கள் இல்லாதவர்களாக இருப்பதற்குக் காரணம்
பகவான் அவர்களிடம் எழுந்து அருளி இருப்பதே காரணம் -ஸ்ரீ பராசர பட்டர்

எல்லா பிராணிகள் இடத்திலும் இருப்பவர் –
எல்லாவற்றையும் பிரகாசிக்கச் செய்யும் சத்வ குணத்தை முக்யமாகக் கொண்டவர் -ஸ்ரீ சங்கரர்

வலிமையுடன் திகழ்பவர் -ஜீவனுக்குள் அந்தர்யாமியாக இருப்பவர் -சத்வம் உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

—————————————————————–

489-சிம்ஹ –
பகவத் பக்தர்களையும் பிறரைப் போலே யமன் முதலியோர் துன்புறுத்துவராயின்
அவர்களை ஹிம்சிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்

பராக்ரமத்தில் சிம்மம் போன்றவர் -ஸ்ரீ நரசிம்ஹ  திருவவதாரம் செய்தவர் -ஸ்ரீ சங்கரர்

உயர்ந்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

——————————————————————

490-பூத மகேஸ்வர –
எல்லாரையும் நடத்தும் பிரமன் யமன்  முதலியவர்களையும் நடத்துபவர் –
இதுவே கீழ்ச் சொன்ன விஷயங்களில் சமர்த்தராக இருப்பதற்குக் காரணம் -ஸ்ரீ பராசர பட்டர்

உண்மையில் பரமாத்மாவும் பெரிய ஈஸ்வரும் தாமே யானவர் -பிராணிகளுக்கு பெரிய ஈஸ்வரர் -ஸ்ரீ சங்கரர்

பிராணிகளுக்கு ஈஸ்வரர் -மிக அதிகமான உத்சவங்களை உடையவராய் –
ஸ்ரீ லஷ்மீ ஸ்ரீ வாயுதேவன் ஆகியோருடன் மகிழ்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

———————————————————————–

491-ஆதி தேவ –
அவர்களுக்கும் காரணமாய் -பிரகாசிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்

எல்லோரையும் தம்மிடம் சேர்த்துக் கொள்ளும் தேவதை -ஸ்ரீ சங்கரர்

பக்தர்களைத் தம்மிடம் சேர்த்துக் கொள்ளும் தேவதை -ஸ்ரீ சத்ய சந்தர்

———————————————————–

492- மஹா தேவ —
அவர்களைப் பந்து முதலிய விளையாட்டுக் கருவிகளைப் போலே வைத்து விளையாடுபவர் -ஸ்ரீ பராசர பட்டர்

ஞான ஸ்வரூபமாக உள்ள பெரிய தேவதை -ஸ்ரீ சங்கரர்

நன்கு உண்பவர் -லஷ்மியை வழி நடத்துபவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

————————————————————–

493-தேவேச-
அவர்களுக்குத் தலைவராக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்

தேவர்களுக்குத் தலைவர் -ஸ்ரீ சங்கரர்

தேவர்களுக்குத் தலைவர் -தேவர்களுக்கும் லஷ்மி தேவிக்கும் சுகம் அளிப்பவர்-ஸ்ரீ சத்ய சந்தர்

—————————————————–

494-தேவ ப்ருத்-
அவர்களுக்குத் தம் விருப்பப்படி நடத்துபவரே -அவர்களைத் தாங்குபவர் -தேவர்களைத் தாங்குபவர் –
எல்லா வித்யைகளையும் உபதேசிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்

தேவர்களைக் காக்கும் இந்திரனையும் நியமிப்பவர் -தேவப்ருத்  குரு -என்று ஒரே திரு நாமம் -ஸ்ரீ சங்கரர்

தேவர்களைக் காக்கும் பிரமனுக்கும் உபதேசிக்கும் குருவானவர் –
தேவப்ருத்  குரு -என்று ஒரே திரு நாமம் -ஸ்ரீ சத்ய சந்தர்

———————————————————————-

495-குரு –
வேதங்களினால் அவரவர் அதிகாரங்களை உபதேசித்தமையால் அவர்களுக்கு குருவானவர் -ஸ்ரீ பராசர பட்டர்

————————————————————————-

496-உத்தர –
அசுரர்களால் உண்டான ஆபத்தில் இருந்து பிரம்மாதிகளைக் கரை ஏற்றுபவர் -ஸ்ரீ பராசர பட்டர்

சம்சாரக் கடலில் இருந்து கரை ஏற்றுபவர் -மிக உயர்ந்தவர் –ஸ்ரீ சங்கரர்

உயர்ந்த தகுதி உள்ளவர்களை சம்சாரத்தில் இருந்து கரை ஏற்றுபவர் -மிகவும் உயர்ந்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

———————————————————————–

497-கோபதி –
வேதங்களும் மொழிகளும் ஆகியவற்றை நடத்துபவர் -ஸ்ரீ பூமி தேவியின் கணவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் பசுக்களைக் காத்தவர் -ஸ்ரீ சங்கரர்

பூமி பசுக்கள் வாக்கு இவற்றைக் காப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

———————————————————–

498-கோப்தா –
இப்படி எல்லா வித்யைகளையும் காப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்

உலகங்கள் அனைத்தையும் காப்பவர்-ஸ்ரீ சங்கரர்

காப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

—————————————————–

499-ஜ்ஞான கம்ய –
பரவித்யை யாகிற சமாதி ஞானத்தால் அறியத் தக்கவர் -ஸ்ரீ பராசர பட்டர்

கர்மத்தால் ஞான கர்மங்களால் அன்றி ஞானத்தால் மட்டுமே அடையத் தக்கவர் -ஸ்ரீ சங்கரர்

ஞானத்தாலும் ஞானிகளாலும் அடையைப் பெறுபவர்-ஸ்ரீ சத்ய சந்தர்

——————————————————-

500-புராதன –
முந்தைய கல்பங்களிலும் இப்படியே வித்யைகளை வெளிப்படுத்தியவர் -ஸ்ரீ பராசர பட்டர்

கால வரையரை யில்லாமல் முந்தியும் இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்

தேஹத்தில் அல்லத்து ஸ்ரீ வைகுண்டம் முதலிய இடங்களில் வசிப்பவர் -தொன்மையானவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத்ரம் -401-450—-மும்மத விளக்கம் —

April 20, 2015

ராமோ விராமோ விரதோ மார்கோ நேயோ நயோ அநய
வீரஸ் சக்தி மதாம் ஸ்ரேஷ்டோ தரமோ தர்ம விதுத்தம –43
வைகுண்ட புருஷ ப்ராண பிராணத பிரணம ப்ருது
ஹிரண்ய கர்ப்பஸ்  சத்ருக்நோ வ்யாப்தோ வாயுரதோஷஜ-44
ருதுஸ் ஸூ தர்சன கால ப்ரமேஷ்டீ பரிக்ரஹ
உக்ரஸ் சம்வத்ஸ்ரோ தஷோ விஸ்ராமோ விஸ்வ தஷிண –45
விஸ்தார ஸ்தாவர ஸ்தாணு பிரமாணம் பீஜமவ்யயம்
அர்த்தோ அநர்த்தோ மஹா கோஸோ மஹா போகோ மஹா தன-46-
அநிர்விண்ண ஸ்தவிஷ்டோ பூர்தர்மயூபோ மஹா மக
நஷத்ர நேமிர் நஷ்திரீ ஷம ஷாமஸ் சமீஹன–47
யஜ்ஞ இஜ்யோ மஹேஜ்யஸ்ஸ க்ரதுஸ்  சத்ரம் சதாம்கதி
சர்வ தர்சீ நிவ்ருத்தாத்மா சர்வஜ்ஞோ ஜ்ஞானமுத்தமம் -48-

————————————————————————-

ஸ்ரீ ராமாவதாரம் ——380–421——-32 திரு நாமங்கள் –
ஸ்ரீ கல்கி அவதாரம் —422-435——–14 திரு நாமங்கள் –
பகவானின் முயற்சி —-436–452——17 திரு நாமங்கள் –

———————————————————————

401-அநய-
விரோதிகளால்  நடத்தப்பட முடியாதவர் -உலகிற்கு நன்மை செய்பவர் தம்மைத் தவிர வேறு எவரும் இல்லாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தாம் யாவராலும் நடத்தப் படாதவர் -ஸ்ரீ சங்கரர் –

முக்கிய பிராணனை பூமிக்கு அனுப்பி வைப்பவர் -தாமே மிக உயர்ந்தவர் -தம்மை நடத்தும் மற்று ஒருவர் இல்லாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————————–

402-வீர –
அரக்கர்களை மிகவும் பயத்தினால் நடுங்கும்படி செய்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

பராக்கிரமம் உள்ளவர் –ஸ்ரீ சங்கரர் –

ஞானத்தால் மகிழ்பவர் -விளையாடுபவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————————-

403-சக்தி மதாம் ஸ்ரேஷ்ட –
சக்தியுடைய தேவர்கள் முதலியோர்க்கும் சிறந்தவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

சக்தியுள்ள பிரம்மாதி தேவர்களைக் காட்டிலும் சக்தி யுள்ளவர் –ஸ்ரீ சங்கரர் –

சக்தியுடையவர்களில் மேன்மையுள்ளவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————————–

404-தர்ம –
செல்வத்தையும் மோஷத்தையும் கொடுத்து ஜீவர்களைத் தாமே நேரில் தாங்குபவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாவற்றையும் தாங்குபவர் –ஸ்ரீ சங்கரர் –

எல்லாவற்றையும் தாங்குபவர் -அடையப்படும் தர்மமாக இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————————————-

405-தர்மவிதுத்தம –
தர்மம் அறிந்தவர்களில் சிறந்தவர் வசிஷ்டர் வாம தேவர் மார்க்கண்டேயர்  முதலியவர்களின் சிஷ்யராக இருந்தும்
அவர்களுக்கும் தர்மம் தெளிவிப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

வேதங்களும் தர்ம சாஸ்திரங்களும் அவரது கட்டளையாக இருப்பதால் தர்மம் அறிந்தவர்களில் சிறந்தவர் –ஸ்ரீ சங்கரர் –

தர்மம் அறிந்தவர்களில் மேலானவர் -தர்மமான தன்னை அறிந்தவர்களை உயர்ந்தவர்களாகச் செய்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

———————————————————————————–

406-வைகுண்ட –
தம்மை அடைவதற்கு உள்ள தடைகளை நீக்கித் தம்மிடம் சேர்த்துக் கொள்பவர் –
குடி என்ற தாது -வினையடி –வழியைத் தடை செய்தல் -பகவானோடு கூடும் வழியைத்-தடையை -நீங்கியவர்கள் விகுண்டா –
அவர்களை யுடையவன் பகவான் என்பதால் வைகுண்ட எனப்படுகிறான் –ஸ்ரீ பராசர பட்டர் –

பஞ்ச பூதங்களை ஓன்று சேர்த்து சிருஷ்டியில் பயன்படுத்துபவர் அவற்றின் செயல்களைக் கட்டுப் படுத்துபவர் –ஸ்ரீ சங்கரர் –

விகுண்டா என்பவளின் மகனாக திரு அவதரித்தவர் -ஸ்ரீ வைகுண்டத்தில் இருப்பவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————

407-புருஷ –
புனிதத் தன்மை  யுள்ளவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

பாவங்களை எரிப்பவர் -எல்லோர்க்கும் முற்பட்டவர் -சரீரம் -புரம் -அதில் வசிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

பூர்ணர் -காப்பவர் -எல்லோருக்கும் முன்னவர் -எல்லா தோஷங்களை அளிப்பவர் -எல்லா சரீரங்களில் வசிப்பவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————————–

408-பிராண –
எல்லாவற்றையும் உய்விப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

ஜீவ ரூபியாய் இருப்பவர் -பிராணனாக இருந்து செயல் படுத்துபவர் –ஸ்ரீ சங்கரர் –

முக்தர்களைக் காட்டிலும் மேலானவர் -உயர்ந்த பெயர்களைக் கொண்டவராக செயல்படுபவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————————————–

409-பிராணத-
பிரசித்தமான பிராணனை எல்லோருக்கும் தருபவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

சிருஷ்டியில் பிராணிகளுக்கு அந்தர்யாமியாகி உயிரைக்கொடுப்பவர் –
பிரளய காலத்தில் பிராணிகளின் பிராணன்களை நீக்குபவர் –ஸ்ரீ சங்கரர் –

துன்பத்தை அழிப்பவர்-பக்தர்களுக்கு முக்ய பிராணனைக் கொடுப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————————

410-ப்ரணம –
தம் குணங்களினால் சராசரங்கள் அனைத்தும் தம்மை வணங்கும்படி இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

தேவர்களால் வணங்கப் படுபவர் -பிரணவ என்ற பாடம் -புகழப் படுபவர் –ஸ்ரீ சங்கரர் –

நன்றாகத் தூண்டுபவர் -பிரணவ என்று பாடம் -தம்மைத் தாமே புகழ்ந்து கொள்பவர் –
மிகவும் புதியவர் -நன்றாக வணங்கப் படுபவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————————

411-ப்ருது-
மிகவும் விரிந்த புகழை யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

பிரபஞ்ச ரூபமாகத் தாமே விரிந்து இருப்பவர் —ஸ்ரீ சங்கரர் –

பிரசித்தமாக இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————-

412- ஹிரண்ய கர்ப்ப –
தமக்கு ஹிதமாகவும் -இனிமையாகவும் உள்ள தியானிப்பவர் மனங்களினால் அமுதம் போலே அனுபவிக்கப் பெறுபவர் –
பொற் புதையல் போல் போன்றவர் -அவதார காலத்திற்குப் பிறபட்டவர்களுக்கும் அவர்கள் செய்யும் தியானம் முதலியவற்றால்
உபகாரம் செய்வது கூறப்படுகிறது –ஸ்ரீ பராசர பட்டர் –

பிரம்மாவின் உற்பத்திக்குக் காரணமான பொன் அண்டத்தைத் தம்முள் வைத்து இருப்பவர் —ஸ்ரீ சங்கரர் –

பொன் மயமான பிரம்மாண்டத்தைத் தன் வயிற்றிலே தரித்தவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————

413-சத்ருகன –
விஷயங்களில் ஈடுபடுவதால் ராவணன் போலப் பகைகளாக உள்ள இந்த்ரியங்களை விவேகம் என்னும்
அம்பினால் அழிப்பவர்–ஸ்ரீ பராசர பட்டர் –

தேவர்களின் எதிரிகளை அழிப்பவர் —ஸ்ரீ சங்கரர் –

விரோதிகளை அழிப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————

414-வ்யாப்த –
தியானிப்பவர்களிடம்-இளையவன் முதியவன் தலைவன் அடிமை பகைவன் நண்பன் முதலிய வேறுபாடு இல்லாமல்
ஒரே விதமான அன்பால் நிரம்பி இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

காரணமாதலால் எல்லாக் காரியங்களிலும் வியாபித்து இருப்பவர் —ஸ்ரீ சங்கரர் –

பிரம்மா முதலிய தேவர்களுக்கு வேண்டியவர் -கருடனுக்கு வேண்டியவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————-

415-வாயு –
தம்மைத் தியானிப்பவர் இருக்குமிடம் தேடி ஆங்காங்கு செல்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

நல்ல மனத்தை உண்டாக்குபவர் —ஸ்ரீ சங்கரர் –

உயிரைத் தாங்கக் காரணமாக இருப்பவர் -வலிமை கொண்டவராய் சஞ்சரிப்பவர் -எல்லாவற்றையும் அறிபவர் –
பரவுபவர் -விரும்பப் படுபவர் -எல்லாரும் இயங்கக் காரணமானவர் -உயர்ந்தவர் -சம்சாரத்தில் கட்டுபவர் –
சம்சாரத்தில் இருந்து விடுவிப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————————

416-அதோஷஜ-
யாவரும் அனுபவித்து உபயோகித்தாலும் அமுதக் கடல் போலே ஒரு காலும் வற்றிக் கீழே போகாமல் இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

மேல் உலகத்திற்கும் பூமிக்கும் இடையில்   விராட் ரூபத்துடன் வியாபிப்பவர் –
ஒருபோதும் தாழ்ந்து அழியாதவர் ஆதலின் அதோஷஜர் எனபது உத்யோகபர்வம் —ஸ்ரீ சங்கரர் –

இந்த்ரியங்களை அடக்கிய வஸூ தேவர் முதலியோர்க்கு மகனாக திரு வவதரித்தவர் –
அஷகுமாரனை வென்ற ஹனுமானால் தெரியப் படுத்தப் பெற்றவர் –
தம்மைத் தாழ விட்டு அனைவருக்கும் காட்டியவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————

417-ருது –
எப்போதும் புதிதாகத் தோன்றி உகப்பிக்க வல்ல திருக் குணங்கள் ஒன்றுக்கு மேல் ஓன்று விசேஷமாக வளரும்படி பக்தர்களின்
உள்ளங்களில் செல்பவர் -இதே குணம் இருப்பதால் அன்றோ வசந்த ருது சிசிரருது முதலியவைகளும்
ருதுக்கள் என்று கூறப் படுகின்றன –ஸ்ரீ பராசர பட்டர் –

ருது என்னும் காலச் சொல்லால் கூறப்படுபவர் —ஸ்ரீ சங்கரர் –

மோஷத்திற்கு சாதனமாக இருப்பவர் -தம் ஸ்வரூபத்தை தாமே தெரிவிப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————-

418-ஸூ தர்சன –
குணங்களின் பெருமை அறியாதவர்களும் பார்த்தவுடன் நன்மை பெறும்படி அழகிய திருமேனியுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

தாமரை இதழ் போல் நீண்டு அழகிய இரு கண்கள் யுடையவர் -பக்தர்களால் சுகமாகக் காணப்படுபவர் –
தம்மைப் பற்றிய ஞானமானது மோஷ பலம் தருவதாக இருப்பவர் —ஸ்ரீ சங்கரர் –

ஸூதர்சனம் என்னும் சக்கராயுதத்தை யுடையவர் -நல்ல தரிசனத்தைத் தருபவர் –
அழகிய கண்கள் யுடையவர் -நன்கு பார்ப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————-

419-கால –
இப்படிப்பட்ட குண விசேஷங்களினால் சராசரங்களைத் தம்மிடம் சேர்த்துக் கொள்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாவற்றையும் எண்ணுபவர் —ஸ்ரீ சங்கரர் –

அவரவர் தகுதிக்கு ஏற்ற சுகத்தை அழிப்பவர் -உலகைக் காலத்தினால் கட்டுப்படுத்துவதனாலும் பிரிப்பதனாலும் அறிவதனாலும்
காலமாக இருப்பவர் -சுகத்தை முழுமையாக தருபவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————————–

420-பரமேஷ்டீ-
இப்படி அரக்கர்களை வேட்டையாடியும் உலகைக் காத்தும் விளையாடிய பின்பு உயர்ந்த ஸ்தானமான
பரமபதத்தில் இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

தமது சிறந்த சக்தியில் ஹ்ருதயாகாசத்தில் இருப்பவர் —ஸ்ரீ சங்கரர் –

உயர்ந்ததான ஹ்ருதயத்தில் இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————-

421-பரிக்ரஹ –
நகர மக்கள் தேச மக்கள் அவர்களுடைய சுற்றத்தார் அவர்களுடைய தேவதைகள் தோட்டத்தில் உள்ள மரம் புல்
முதலியவற்றையும் பரமபதம் சேரும்படி அங்கீ கரித்தவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

சரணம் அடைபவர்களால் எல்லாவகைகளாலும் கொள்ளப் படுபவர் -பல வழிகளால் அறியப் பெறுபவர் –
அடியவர் சமர்ப்பிக்கும் இலை பூ முதலியவற்றை ஏற்பவர் –ஸ்ரீ சங்கரர் –

பக்தர்களை அனுக்ரஹித்து ஏற்றுக் கொள்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————————

422-உக்ர –
யுகத்தின் முடிவில் அதிக பாவம் செய்தவர்கள் விஷயத்திலும் வர்ணாஸ்ரம கலப்பு விஷயத்திலும் கொடியவராக இருப்பவர் –
இனி -தம்முடைய சீலத்தால் வெல்ல முடியாத தீயவர்களை அளிப்பதும் பாதாளத்தில் சயனித்து இருப்பதுமான
ஸ்ரீ கல்கி திருவவதாரமானது கூறப்படுகிறது –ஸ்ரீ பராசர பட்டர் –

சூரியன் முதலியவர்களும் தம்மிடம்  பயப்படும்படி இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

ருத்ரனை அழிப்பவர் -உயர்ந்த பிரம்மா முதலியவர்களை மகிழ்விப்பவர் என்றும் கூறுவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————————————-

423-சம்வத்சர –
சம்சாரத்துக்கு  உரிய கருவிகளுடன் காலத்தை எதிர்பார்த்து பாதாள லோகத்தில் ஆதிசேஷன் மீது
சயனித்து இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாப் பொருள்களும் தம்மிடம் நன்கு வசிக்கும்படி இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் கன்றுக் குட்டிகளிடம் நன்கு விளையாடியவர் –
தம் குழந்தைகள் போன்ற பிரம்மா முதலியவர்களை மகிழ்விப்பவர் –
ஸ்வாமி புஷ்கரிணி -திருமலை -முதலிய இடங்களை யுடையவர் -வருடங்களை நடத்துபவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————————-

424-தஷ –
மிலேச்சர்களை விரைவில் வதம் செய்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

பல உலக வடிவங்களாக விருத்தி அடைபவர் –ஸ்ரீ சங்கரர் –

தொல்லை தருபவரை அழிப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————

425-விஸ்ராம –
பாவங்களும் அவற்றின் பயன்களும் அதிகமாக வருத்துவதனால் களைப்பு அடைந்தவர்களுக்கு
இளைப்பாறும் இடமாக இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

பிறவிக்கடல் பசி தாகம் முதலியவைகளால் அலைப்புண்டு இளைப்பாற விரும்புவர்க்கு மோஷம் கொடுப்பவர் –
ஆறு வகைகளான சம்சாரக் கடலின் அலைகளாலும்
அவித்யை முதலிய பெரும் துன்பங்களாலும் மதம் முதலிய துன்பங்களாலும் அலைப்புண்டவர்களுக்குமாம் –ஸ்ரீ சங்கரர் –

களைப்பு அற்றவர் -பக்தர்கள் சிரமம் அற்று இருக்கும்படி செய்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————-

426-விஸ்வ தஷிண –
நல்லவர்க்கும் தீயவர்க்கும் நன்மையை அளிபபவர்-அபகாரம் செய்பவர்களையும் பொறுத்தல் அன்றோ தாஷிண்யம் –
அன்றிக்கே -ஸ்ரீ ராமபிரான் செய்த அஸ்வமேத யாகத்தில் பூமி முழுவதையும் தஷிணயாகக் கொடுத்தவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாவற்றையும் காட்டிலும் அதிக சக்தி யுள்ளவர் -எல்லாச் செயல்களிலும் மேம்பட்டவர் –ஸ்ரீ சங்கரர் –

உலகப் படைப்பு முதலிய செயல்களில் திறமை யுள்ளவர் -வாயுவிற்குக் காரணம் ஆனவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————————

427-விஸ்தார –
கலியை அழித்து கிருதயுகத்தை உண்டாக்குவதால் வேதக் கட்டளையை வெளிப்படுத்துபவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

உலகங்கள் அனைத்தும் தம்மை ஆதாரமாகக் கொண்டு விரிவாகும்படி இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

உலகம் விரிவடையக் காரணமானவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————————–

428-ஸ்தாவரஸ் தாணு –
இப்படி தர்மம் நிலை நிறுத்தப் பட்ட பிறகு ஓய்வாக இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

தாம் நிலை பெற்றவராகவும் பூமி முதலியவை தம்மிடம் நிலை நிற்கும்படியாகவும் இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

சத்ய லோகத்தில் இருக்கும் பிரமன் முதலியவர்களை விட மேம்பட்டவர் –
ருத்ரனுக்கு அந்தர்யாமியாக இருப்பவர் -இரண்டு திரு நாமங்கள் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————————–

429-பிரமாணம் –
நான்கு யுகத்தில் யுகத்தில் உள்ளவர்களுக்கு நன்மை தீமைகளைப் பகுத்து அறிவிப்பவர்-அவனது இந்த சக்தியின்
லவலேசத்தால் பிரத்யஷம் முதலியவைகளும் பிரமாணங்கள் ஆகின்றன  –ஸ்ரீ பராசர பட்டர் –

ஞான ரூபியாக பிரமாணமாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

சிறந்த வேதங்களைப் பிரமாணமாக யுடையவர் -த்ரிவிக்ரம ரூபத்தில் சிறந்த திருமேனி வளர்ச்சி யுடையவர் –
உயர்ந்த இருவித சுகத்தை யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————————————————-

430-பீஜமவ்யயம்-
கலியின் இறுதியில் மீண்டும் மீண்டும் தர்மத்தை முளைக்கச் செய்வதால் அழியாத விதையாக இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

சிருஷ்டியில் முன் போலவே இருந்து கார்யங்களை உண்டாக்கும் காரணமாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

வ்யாசாதி உருவத்துடன் அழியாத அறிவை யுண்டாக்குபவர்-ஞானிகளால் அடையப் படுபவர் -அழிவில்லாதவர் –
குறைவற்றவர் –இரு திரு நாமங்கள் – -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————

431-அர்த்த –
செம்மையாக அறிந்து தம்மிடம் உறுதியாக பக்தி செய்யும் அதிகாரிக்குத் தாமே பயனாக இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

சுக ரூபியாதலால் யாவராலும் விரும்பப் படுபவர்–ஸ்ரீ சங்கரர் –

பக்தர்களால் அறியப் பெறுபவர் -பூரணமான அன்னம் உள்ளவர் -பக்தர்களால் பிரார்த்திக்கப் படுபவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————

432- அநர்த்த-
அற்ப பயன்களை விரும்பும் பாக்ய ஹீனர்களால் வேண்டப் படாதவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லா வற்றையும் அடைந்து இருப்பதால் தாம் விரும்பத் தக்கது எதுவும் இல்லாதவர் –ஸ்ரீ சங்கரர் –

அயோக்யர்களுக்கு அனர்த்தத்தை -அழிவைக் -கொடுப்பவர் -முக்ய பிராணனை யுடையவர் –
முக்ய பிராணனால் பிரார்த்திக்கப் படுபவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————–

433-மஹா கோச –
வேண்டுபவர்களுக்கு எல்லாம் எக்காலமும் எல்லா வகைகளாலும் தானம் செய்தாலும் அழியாதவைகளான
சங்கநிதி -பத்மநிதி -ரத்னாகரம் -ரோஹண்  மலை முதலியவை பொக்கிஷங்களாக இருக்கப்பெற்றவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

அன்னமய பிராணமய மனோமய விஜ்ஞானமய ஆனந்தமய கோசங்களினால் மறைக்கப்படுபவர் –ஸ்ரீ சங்கரர் –

மிக்க சுகத்துடன் விளங்கும் ஸ்ரீ லஷ்மி தேவியால் விரும்பப் பெறுபவர் -பிரம்மாவின் சிறந்த சுகத்திற்கு காரணம் ஆனவர் –
மிகவும் உயர்ந்த பொக்கிஷமாக உள்ளவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————

434-மஹா போக –
செல்வத்தால் பெரும் இன்பங்களையும் தருபவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

சிறந்த ஸூஎ ரூபமாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

நிறைந்த ஆனந்தம் யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————

435-மஹா தன-
மிக்க ஏழைகளுக்கு எண்ணாமல் கொடுக்கத் தக்க அளவற்ற செல்வம் யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

போகத்திற்கு சாதனமான செல்வங்களை யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

மிகுந்த செல்வத்தை யுடையவர் -தம்மை நன்கு பூஜிப்பவருக்கு உயர்ந்த செல்வத்தை அளிப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————–

436-அநிர்விண்ண-
உலகைப் படித்தும் அவரவர் வேண்டியவற்றை அடிக்கடி கொடுத்தும்   கூட உலக விஷயங்களில் பித்துப் பிடித்துத்
தம்மை அணுகாமல் பயனற்றவர்களை மீண்டும் வசப்படுத்த பெரு முயற்சி செய்வதில் சிறிதும் சோர்வு அற்றவர் –
அதனாலன்றோ தொடக்கமும் முடிவும் இல்லாமல் படைத்தலைச் செய்கிறார் –ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாவற்றையும் அடைந்து இருப்பவராதலின் துன்பமில்லாதவர் –ஸ்ரீ சங்கரர் –

களைப்பு வேதனை இல்லாதவர் -ஞானம் சுகம் இவற்றில் இருந்து ஒய்வு பெறாதவர் –
அவற்றை எப்போதும் யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————–

437-ஸ்தவிஷ்ட-
நஷத்ர மண்டலமாகிய சிம்சுமார சக்ர ரூபியாக மிக விரிவாக இருப்பார் -இனி துன்பமற்று இருப்பதற்கு உதாரணமாக
உத்தம அனுவாகமான ஸ்வாத் யாய ப்ராஹ்மண்யத்திலும் ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும் கூறப்பட்ட பிரசித்தமான
சிம்சுமார நஷத்ர மண்டல ரூபம் கூறப்படுகிறது –ஸ்ரீ பராசர பட்டர் –

விராட் ரூபியாக மிக விரிவாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

பருத்து இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————-

438-பூ –
த்ருவ நஷத்த்ரத்தில் சேர்ந்து அனைத்தையும் தாங்குபவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

அபூ -பிரப்பில்லாதவர் –பூ -பூமி ரூபியாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

அபூ -ஆதாரம் அற்றவர் தமக்கோர் இருப்பிடம் இல்லாதவர் -பூ -எல்லா வற்றாலும் நிறைந்தவர் -எல்லோரையும் படைப்பவர் –
எல்லோரும் தம்மை அடையும்படி இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————-

439-தர்மயூப –
தர்மத்தைத் தலைமையாக வைத்து இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

யூப ஸ்தம்பத்தில் பசுவைப் போலே தர்மங்கள் தம்மிடம் கட்டப் பெற்றவர் –ஸ்ரீ சங்கரர் –

தர்ம சாதனமான யூப ஸ்தம்பத்தைத் தருபவர் -எல்லாவற்றிற்கும் ஆதாரமாக இருப்பவராய்-பக்தர்கள் மனம்
தம்மிடம் லயித்து இருக்கும்படி செய்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————-

440-மஹா மக –
தர்மத்தை சரீரமாக யுடையவர் ஆதலின் யாகத்தை அவயவமாக யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

தமக்கு அர்ப்பணம் செய்யப் படுவதால் யாகங்களைச் சிறப்பிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

மேன்மை கொண்ட யாகங்களைத் தம் விஷயமாக யுடையவர் -துன்பம் அற்றவர் -மிக உயர்ந்தவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————–

441-நஷத்ர நேமி –
நஷத்ரங்கள் எனப்படும் ஜ்யோதிச் சக்கரத்தை நடத்துபவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

சிம்சுமாரசக்ரம் என்னும் ஜ்யோதிச் சக்கரத்தை நடத்துபவர் –ஸ்ரீ சங்கரர் –

ஷத்ரியர்களைக் காட்டிலும் வேற்பட்ட அந்தணர்களுக்கு ஆதாரமானவர் -சிம்சுமார ரூபத்தில் ஜ்யோதிச் சக்கரத்திற்கு
ஆதாரமாக இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————–

442-நஷதிரீ –
அவைகளுக்கு நஷத்ரங்களுக்கு ஆதாரமாக இருப்பவர் —ஸ்ரீ பராசர பட்டர் –

நஷத்ரங்களுக்குத் தலைவனான சந்திரனாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

நஷத்ரங்களை நியமிப்பவராக இருப்பவர் -பரசுராம ரூபத்தில் ஷத்ரியர்களைக் கொன்றதால்
ஷத்ரியர்களுடன் சேராது இருப்பவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————-

443-ஷம-
இப்படி எல்லா உலகங்களின் பாரங்களையும் எளிதில் சுமப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாச் செயல்களிலும் திறமையுள்ளவர் -பொறுமை யுள்ளவர் என்றுமாம் –ஸ்ரீ சங்கரர் –

அழியாப் பொருள்களின் அழிவைத் தவிர்ப்பவர் -துஷ்டர்களை நரகத்தில் கட்டுப்படுத்துபவர் –
எல்லாக் காரியங்களையும் செய்வதில் சமர்த்தர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————

444-ஷாம –
அவாந்தர பிரளயத்தில் நான்கு நட்சத்திரங்களோடு இளைத்து இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாம் அழிந்த போது தாம் மட்டும் தனித்து இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

ஸ்ரீ வராஹ ரூபத்தால் பூமியைத் தாங்கியவர் -வாமன ரூபத்தில் பூமியை யாசித்து பெற்றவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————–

445-சமீஹன-
படைக்கும் காலத்தில் எல்லாரையும் அவரவர் அதிகாரங்களில் செயல்படச் செய்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

படைப்பு முதலிய செயல்களைச் செய்வதற்காக நன்றாகச் செயல்படுபவர் –ஸ்ரீ சங்கரர் –

பகவத் பூஜை முதலிய நற்செயலை புரிவோரை ஸ்ரீ வைகுண்டத்திற்கு அழைத்துச் செல்பவர் –
எல்லாவிடத்திலும் சமமான ரூபம் உள்ளவராய் எல்லோரையும் செயல்கள் புரியும்படி செய்பவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————-

446-யஜ்ஞ-
யஜ்ஞம் அதன் சாதனம் அதன் பலன் எல்லாம் தாமேயாய் இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

யஜ்ஞ ஸ்வரூபியாக இருப்பவர்  –ஸ்ரீ சங்கரர் –

அனைத்து யஜ்ஞங்களிலும் பலன் பெறுபவர் ஸ்ரீ கிருஷ்ண ரூபத்தில் தம்மைக் குறித்துத் தாமே யஜிப்பவர்-
ஸ்ரீ ராமாவதாரத்தில் அஹல்யையை கௌதமரோடு சேர்ப்பித்தவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————-

447-இஜ்ய –
காம்ய பலன்களைக் கருதுபவர்களால்  இந்த்ரன் முதலிய தேவதா ரூபியாக ஆராதிக்கப் படுபவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

யஜ்ஞங்களினால் ஆராதிக்கப் பெறுபவர் –ஸ்ரீ சங்கரர் –

பூஜையை யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————–

448-மஹேஜ்ய-
மற்றப் பலன்களை விரும்பாதவர்கள் தம்மையே ஆராதிப்பதைச் சிறந்த ஆராதனமாக யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

தம்மைக் குறித்துச் செய்யும் யாகமே மோஷத்தைத் தருவதால் அந்த யாகமே சிறந்ததாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

ஸ்ரீ சீதா பிராட்டிக்காக வில்லில் நாண் ஏற்றியவர் -உயர்ந்த யஜ்ஞங்களில் ஆராதிக்கப் பெறுபவர் –
ஸ்ரீ தேவி பூமி தேவி சமேதன்–ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————

449-க்ரது-
பஞ்ச மகா யஜ்ஞங்கள் -ஔபாசனம் முதலிய ஏழு பாக யஜ்ஞங்கள் -ச்ரௌத்ராக்னி ஹோத்ரம் முதலிய ஏழு ஹவிர் யஜ்ஞங்கள் –
யஜ்ஞபதத்தால் கூறப்படும் அக்னிஷ்டோமம் முதலிய ஏழு சோம யாகங்கள் இவற்றால் ஆராதிக்கப் படுபவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

யூபஸ்தம்பம் நாட்டிச் செய்யப்படும் யஜ்ஞமாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

படைத்தல் முதலிய செயல்களைச் செய்பவர் -தன்மையாக யுடையவர் -ஞானரூபியானவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————–

450-சத்ரம்-
சத்ரம் என்னும் யாகத்தால் ஆராதிக்கப் படுபவர்
பல யஜமானர்களால் நீண்ட காலம் செய்யப்படும் யாகம் சத்ரம் –ஸ்ரீ பராசர பட்டர் –

சாதுக்களைத் திரட்டிச் செய்யும் சத்ரயாகமாக இருப்பவர் -சாதுக்களைக் காப்பவர் -என்றுமாம் –ஸ்ரீ சங்கரர் –

நல்லோர்களைக் காப்பவர் -நல்லோர்களை மகிழ்விப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத்ரம் -351-400—-மும்மத விளக்கம் —

April 19, 2015

பத்ம நாபோ அரவிந்தாஷ பத்ம கர்ப்பஸ் சரீரப்ருத்
மஹர்த்திர்ருத்தோ வ்ருத்தாத்மா மஹாஷோ கருடத்வஜ –38
அதுலஸ் சரபோ பீமஸ் சமயஜ்ஞோ ஹவிர்ஹரி
சர்வ லஷண லஷண்யோ லஷ்மீ வான் சமிதிஜ்ஞய –39
விஷரோ ரோஹிதோ மார்கோ  ஹேதுர் தாமோதரஸ் சஹ
மஹீதரோ மஹா பாகோ வேகவா நமிதாசன –40
உத்பவ ஷோபணோ தேவாஸ் ஸ்ரீ கர்ப்ப பரமேஸ்வர
கரணம் காரணம் கர்த்தா விகாரத்தா கஹநோ குஹ –41
வ்யவசாயோ வ்யவஸ்தாநஸ் சமஸ்தான ஸ்தா நதோ த்ருவ
பரர்த்தி பரம ஸ்பஷ்ட ஸ்துஷ்ட புஷ்டஸ் ஸூ பேஷண–42
ராமோ விராமோ விரதோ மார்கோ நேயோ நயோ அநய
வீரஸ் சக்தி மதாம் ஸ்ரேஷ்டோ தரமோ தர்ம விதுத்தம –43-

———————————————————————–

பகவானின் ஐஸ்வர்யம் ———-351–360——10 திரு நாமங்கள்
ஸ்ரீ லஷ்மீபதி ——————361–384——-24 திரு நாமங்கள்
த்ருவ நாராயணன் ————-385–389——–5 திரு நாமங்கள்
ஸ்ரீ ராமாவதாரம் —————380–421——-32 திரு நாமங்கள் –

—————————————————————————

351-மஹர்த்தி-
பக்தர்களின் யோக ஷேமங்களைக் குறைவின்றி நடத்தும் அளவற்ற செல்வம் யுடையவர் –
இனி அவனுடைய செல்வத்தை விளக்குகின்றார் -ஸ்ரீ பராசர பட்டர் –

பெரும் செல்வத்தை யுடையவர் -ஸ்ரீ சங்கரர் –

மிகுந்த செல்வம் யுடையவர் -யஜ்ஞம் முதலியவற்றால் நிறைவான செல்வம் யுடையவர் –
மகாபலி யஜ்ஞத்தில் த்ரிவிக்ரம ரூபத்துடன் வளர்ச்சி பெற்றவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————————–

352-ருத்த –
பக்தர்களின் சம்ருத்தியால்- நிறைவால் -தாமும் சம்ருத்தி அடைபவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

பிரபஞ்ச ரூபமாக விரிவடைந்தவர் – -ஸ்ரீ சங்கரர் –

ஞானம் ஆனந்தம் முதலிய குணங்களால் மிக்கவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————————————

353-வ்ருத்தாத்மா –
இவ்வளவு மகிமைகளும் உள்ளங்கையில் அடங்கியது போல் தோன்றும்படி பெரிய ஸ்வரூபம் உடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

மிகவும் தொன்மையான ஆத்மாவாக இருப்பவர் – -ஸ்ரீ சங்கரர் –

மிக வளர்ந்த தேகம் உள்ளவர் -மிக்க குணங்களுடைய பிரம்மா முதலியவர்களுக்கு அந்தர்யாமியாக இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————————–

354-மஹாஷ-
யாவராலும் பூஜிக்கப் படும் கருடனை வாகனமாக யுடையவர் -வகிக்கும் தன்மை கொண்டு தேரின் அவயவத்தை
ஒத்து இருப்பதால் அஷம் என்று வேத மயமான கருடனைக் கூறி அவனை வாகனமாக யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

பெரிய இரு கண்களை அல்லது சிறந்த புலன்களை யுடையவர் – -ஸ்ரீ சங்கரர் –

மகிமை உள்ள இரு கண்களை யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————

355-கருடத்வஜ –
அந்தக் கருடனையே கொடியாக உடையவர் -அதுவே பரம் பொருளின் அசாதாராண -தனிப்பட்ட அடையாளம் –ஸ்ரீ பராசர பட்டர் –

கருடனை அடையாளைமாக வுடைய கொடியுள்ளவர்- -ஸ்ரீ சங்கரர் –

கருடனைக் கொடியாக யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————-

356-அதுல –
இவ்வாறு ஒப்பற்றவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

உவமை இல்லாதவர் – -ஸ்ரீ சங்கரர் –

ஒப்பற்றவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————–

357-சரப –
வரம்பு  மீறுபவர்களை அழிப்பவர்–ஸ்ரீ பராசர பட்டர் –

அழியும் உடல்கள் தோறும் ஆத்மாவாகப் பிரகாசிப்பவர் – -ஸ்ரீ சங்கரர் –

பிரளய ஜலத்தில் பிரகாசிப்பவர் -முப்புரம் எரித்த அம்பில் பிரகாசிப்பவர் என்றும் கூறுவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————-

358-பீம-
வரம்பு மீறுபவர்க்கு பயத்தைக் கொடுப்பவர் -இவரிடத்தில் பயத்தால் அன்றோ வாயு முதலிய தேவர்கள்
தம் தம் அதிகாரங்களை மீறாது இருக்கிறார்கள் –ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லோரும் பயப்படும்படி இருப்பவர் -நல்வழியில் செல்பவர்களுக்கு பயப்பட வேண்டாதவர் – -ஸ்ரீ சங்கரர் –

பக்தர்களுடைய பயங்களைப் போக்குபவர் -வியாசர் முதலான ரூபங்களில் பிரமாணங்களைத் தரித்து இருப்பவர் –
தம்மிடம் ஜனங்கள் அச்சம் கொள்ளும்படி இருப்பவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————–

359-சமயஜ்ஞ-
பக்தர்களுக்குத் தம்மைத் தவறாமல் தரும் காலம் அறிபவர் -நெருப்பு முதலியவை மேல் நோக்கியே எரிய
வேண்டும் எனபது போன்ற  அதிகார நியமத்தைக் கண்டறிந்தவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

சிருஷ்டி ஸ்திதி சம்ஹார காலங்களை அறிபவர் -ஆறு சமயங்களை அறிந்தவர் -எல்லா பூதங்களிலும்
சமமாக இருத்தலையே யஜ்ஞமாக உடையவர் – -ஸ்ரீ சங்கரர் –

பக்தர்களுக்கு சுபம் தரும் முறையை அறிந்தவர் – ஸ்ரீ லஷ்மியுடன் சேர்ந்து இருப்பவராய் எல்லாம் அறிந்தவர் -பக்தர்கள்
வேண்டுமவற்றைக் கொடுப்பதற்கு உரிய காலம் அறிந்தவர் -சாஸ்த்ரங்களை அறிந்தவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————————–

360-ஹவிர்ஹரி –
பக்தர்களுக்குத் தம்மைக் கொடுப்பவர் -அதற்குள்ள தடைகளைப் போக்குபவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

யஜ்ஞத்தில் ஹவிர் பாகத்தைப் பெறுபவர் -ஹவிஸினால் ஹோமம் செய்யப் படுபவர் -தம்மை நினைத்த மாதரத்தில் அனைவருடைய
பாவங்கள் அவித்யை அதன் கார்யமான சம்சாரம் ஆகியவற்றைப் போக்குபவர் -மஞ்சள் நிறம் உள்ளவர் – -ஸ்ரீ சங்கரர் –

யஜ்ஞத்தில் வழங்கப்படும் ஹவிஸ்சைப் பெறுபவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————————–

361-சர்வ லஷண லஷண்ய-
திருமகள் எப்போதும் ஆலிங்கனம் செய்யும் சௌபாக்யத்திற்கான எல்லா லஷணங்களும் உடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாப் பிரமாணங்களாலும் அறியப் படுபவர் -அவர் ஒருவரே உண்மைப் பொருள் – -ஸ்ரீ சங்கரர் –

உலகப் படைப்பிற்கும் காரணம் முதலிய எல்லா வித லஷணங்களும் பொருந்தியவர் –
மிகச் சிறந்தவர் -என்று அறியத் தக்கவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————————–

362-லஷ்மீவான் –
எப்போதும் திருமகளுடன் கூடி இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

எப்போதும் திருமகள் மார்வில் தங்கப் பெற்றவர் – -ஸ்ரீ சங்கரர் –

பக்தர்களை நன்கு பார்ப்பவர் -லஷ்மீ செல்வம் பிரகாசம் ஆகியவற்றை யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————————–

363-சமிதிஞ்ஜய –
பிதாவான தமக்கு அடிமை செய்வதில் விவாதம் செய்யும் ஜீவர்களை தாயான லஷ்மியைக் கொண்டு வசப்படுத்துபவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

போர்களில் வெல்பவர் – -ஸ்ரீ சங்கரர் –

போர்களில் வெல்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————–

364-விஷர-
அடியவர்களிடம் நீங்காத அன்புடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

அழிவு இல்லாதவர் – -ஸ்ரீ சங்கரர் –

பக்தர்கள் வேண்டுவதை விசேஷமாக கொடுப்பவர் -அழிவற்றவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————————

365-ரோஹித –
தாமரையின் உட்புறம் போல் சிவந்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தம் விருப்பத்தினால் சிவந்த மத்ஸ்ய மீன் வடிவைக் கொண்டவர் –ஸ்ரீ சங்கரர் –

சிவந்த நிறம் உள்ளவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————–

366-மார்க்க –
உபாசகர்களால்  தேடப் பெறுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

மோஷத்தை விரும்புவர்களால் தேடப்படுபவர் -பரமானந்தத்தை அடைவதற்கு வழியாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

ஞானிகளால் சாஸ்திர விசாரங்களில் தேடப்படுபவர் -லிங்க சரீரத்தை அழித்து மோஷம் தருபவர் என்றும் கூறுவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————————

367-ஹேது –
பக்தர்களுக்குப் பயன் கிடைக்கக் காரணம் ஆனவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

உபாதான நிமித்த காரணங்களாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

உலகிற்குக் காரணமாக இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————

368-தாமோதர –
யசோதை கட்டிய கயிற்றை வயிற்றிலுடையவர்-எம்பெருமானுடைய சாதுர்யமானது லஷ்மியாலும் கொண்டாடப் படுவதாக இருந்த போதிலும்
யசோதையினால் உரலில் கட்டப் பட்ட போது-அவள் மீது உள்ள அன்பால் கட்டை அவிழ்த்துக் கொள்ளாமல்
கண்ணீர் விட்டு அழுது கொண்டு நின்றானே -ஸ்ரீ பராசர பட்டர் –

உயர்ந்த மதியினால் அறியப் படுபவர் -யசோதையினால்   வயிற்றில் கயிற்றினால் கட்டப் பெற்றவர் -தாம -என்று
கூறப்படும் உலகங்களை தம் வயிற்றிலே கொண்டவர் -என்று வியாசர் கூறின படியால் தாமோதரர் –ஸ்ரீ சங்கரர் –

வள்ளல்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பவர்-பிரளய ஜலத்தில் விளையாடி மகிழ்பவர் -இந்த்ரியங்களை அடக்கிய முனிவர்களிடம் மகிழ்பவர் –
துன்பத்தை விளைக்கும் அசுரர்களுக்குத் துன்பம் தருபவர் -கிருஷ்ணாவதாரத்தில் யசோதை வயிற்றில்
கட்டிய கயிற்றை யுடையவர் -பொறுமை யுள்ள ஜீவர்களிடம் மகிழ்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————————–

369-சஹ –
இப்படிக் கட்டுவது -மிரட்டுவது அடிப்பது முதலிய வற்றைப் பொறுத்துக் கொள்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லா வற்றையும் வெல்பவர் –ஸ்ரீ சங்கரர் –

எல்லா வற்றையும் பொறுத்துக் கொள்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————————

370-மஹீதர-
அவரே பூமியைத் தாங்குபவராக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பூமியை மலை வடிவில் தாங்குபவர் –ஸ்ரீ சங்கரர் –

பூமியைத் தாங்குபவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————————–

371-மஹா பாக-
ஆயர்குலப் பெண்கள் -பதினாறாயிரம் பெண்கள் நப்பின்னை ருக்மிணி சத்யபாமை ஜாம்பவதீ  முதலியோர்
தாமே விரும்பி வந்து அடையும் வடிவழகு யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

தமக்கு விருப்பமான உடலைக் கொண்டு உயர்ந்த உணவுகளை உண்பவர் –
அவதாரங்களில் சிறந்த போகங்களை அனுபவிப்பவர் —ஸ்ரீ சங்கரர் –

யஜ்ஞங்களில் உயர்ந்த ஹவிர்ப்பாகம் உள்ளவர் -உயர்ந்த ஒளியுள்ள கோவர்த்தன மந்தர மலைகள் உடையவர் –
ஐஸ்வர்யம் முதலிய ஆறு குணங்களுக்கு ஆதாரமாக உள்ளவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————————-

372-வேகவான்
மனிதக் குழந்தையாக விளையாடும் போதும் தமது பரமேஸ்வர சக்தியின் வேகம் குறையாதவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

வேகத்தை யுடையவர் —ஸ்ரீ சங்கரர் –

கஜேந்த்திரன் முதலிய பக்தர்களைக் காப்பதில் வேகம் உள்ளவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————–

373-அமிதாசந-
ஆயர்கள் இந்திரனுக்கு என்று வைத்து இருந்த அளவற்ற சோற்றை உண்டவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

சம்ஹார காலத்தில் அளவற்ற உலகங்களை உண்பவர் —ஸ்ரீ சங்கரர் –

அளவுபட்ட மகிழ்ச்சியை அனுபவிக்கும் ஜீவர்களைக் காட்டிலும் மாறுபட்டவர் –
பிரளயத்தில் அளவில்லாமல் உண்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————-

374-உத்பவ –
கயிற்றினால் கட்டப்பட்ட அவரை தியானிப்பவர்களுக்கு உலக வாழ்க்கை யாகிய கட்டைப் போக்குபவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

உலகிற்கு உபாதான காரணமாக இருப்பவர் -சம்சாரத்திற்கு அப்பால் பட்டவர் —ஸ்ரீ சங்கரர் –

உயர்ந்தவர்களாகச் சொல்லப்படும் பார்வதியின் பதியான ருத்ரன் முதலியவர்களைப் படைத்தவர் –
சம்சாரத்தைத் தாண்டுவிப்பவர் -சம்சாரத்தைக் கடந்தவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————–

375-ஷோபண-
கட்டுப் படுவதற்கு உரிய பிற ஜீவர்களையும் உலகையும் கலக்குபவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

சிருஷ்டி காலத்தில் ஜீவனையும் மாயையும் பிரவேசித்துக் கலக்குபவர் —ஸ்ரீ சங்கரர் –

பிரகிருதி புருஷர்களைக் கலங்கும்படி செய்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————————–

376-தேவ –
புலி பன்றி முதலியவற்றைக் கட்டி விளையாடுவது போலே ஜீவர்களை மாயை என்னும்
கயிற்றினால் கட்டி விளையாடுபவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

சிருஷ்டி முதலிய செயல்களால் விளையாடுதல் முதலிய செயல்களைச் செய்பவர் -தேவர்களின் விரோதிகளை வெல்பவர் –
எல்லா பூதங்களிலும் செயல்படுபவர் -ஆத்மாவாக பிரகாசிப்பவர் -ஸ்தோத்ரங்களால்  துதிக்கப் படுபவர் –
எல்லா இடங்களிலும் செல்பவர் —ஸ்ரீ சங்கரர் –

விளையாடுபவர் -போற்றப் படுபவர் -அடையப் படுபவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————————-

377-ஸ்ரீ கர்ப்ப –
இவ் வகைகளான விளையாட்டுகளிலும் அகலாமல் இருக்கும் திருமகளை கர்ப்பத்தைப் போல் காப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

தமது செல்வமாகிய உலகம் அனைத்தையும் வயிற்றில் வைத்து இருப்பவர் —ஸ்ரீ சங்கரர் –

லஷ்மீ தேவியின் கர்ப்பத்திற்குக் காரணம் ஆனவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————————-

378-பரமேஸ்வர –
இப்படித் திரு மகளே விரும்பும்படி இருப்பதால் தம் மேன்மை பயன் பட்டு இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லா வற்றிற்கும் மேலான ஈஸ்வரர் —ஸ்ரீ சங்கரர் –

உலகத்தைக் காப்பவராகவும் ஸ்ரீ லஷ்மி தேவிக்கு பதியாகவும் இருப்பவர் –
தமக்கு மேம்பட்டவர் இல்லாத ஈஸ்வரர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————

379-கரணம் –
தம்மை அடைவதற்குத் தாமே சிறந்த கருவியாக இருப்பவர் -ஞான இந்த்ரியங்களான காது கண் முதலியன
கர்ம இந்த்ரியங்களான கை கால் முதலியன ஆகிய இவைகளும் எம்பெருமானுடைய இச் சக்தியில் லவலேசம் இருப்பதால்
கரணங்கள் எனப் படுகின்றன –ஸ்ரீ பராசர பட்டர் –

உலகின் உற்பத்திக்கு முழு முதல் கருவியாக இருப்பவர் —ஸ்ரீ சங்கரர் –

சுகம் அல்லது பலம் தரும் கை உள்ளவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————

380-காரணம் –
அந்தந்த இந்த்ரியங்களால் ஜீவர்களுக்கு எல்லா அறிவையும் கொடுப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

உபாதான நிமித்த காரணமாக இருப்பவர் —ஸ்ரீ சங்கரர் –

வாயுவுக்கும் நான்முகனுக்கும் புகலிடமானவர்- உலகைப் படைத்தவர் -ஜலத்தை இருப்பிடமாக உடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————————————-

381-கர்த்தா –
அப்படிச் செய்விப்பதில் தாமே சுதந்திரராக இருப்பவர் -ஒரு செயலைச் செய்யும் அதிகாரியான ஜீவன் அதற்குரிய பலனை
புஜிக்கும் ஜீவன் எப்படித் தனது இன்ப துன்பங்களுக்கு அபிமானியாக இருக்கிறானோ அப்படியே எம்பெருமானும் அந்த ஜீவர்களை விட
அதிகமாக அவர்களுடைய இன்ப துன்பங்களுக்குத் தான் அபிமானியாக இருக்கின்றார்  –ஸ்ரீ பராசர பட்டர் –

சுதந்திரமானவர் –ஸ்ரீ சங்கரர் –

அனைத்தையும் நடத்துபவர் -பந்தத்தை அழிப்பவர்- -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————————-

382-விகர்த்தா-
பிறருடைய இன்ப  துன்பங்களைத் தாமும் அடைந்து மாறுகிறவர் -இது குற்றம் ஆகாது –
பரதுக்க துக்கித்வம் கல்யாண குணமே –ஸ்ரீ பராசர பட்டர் –

விசித்திரமான உலகங்களைப் படைத்தவர் —ஸ்ரீ சங்கரர் –

பலவிதமான செய்கைகள் உடையவர் -தனக்கு ஒரு கர்த்தா இல்லாதவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————————-

383-கஹந-
இப்படி ஜீவர்களுடைய இன்ப துன்பங்களைத் தம்முடையவையாக நினைப்பதாகிய மஹா குணத்தில் கரை கடந்தவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

தம்முடைய தன்மை சக்தி செயல்களை ஒருவரும் அறிய முடியாதவர் —ஸ்ரீ சங்கரர் –

அறிந்து கொள்ள முடியாதவர் – -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————————————-

384-குஹ-
இவ்வாறு எல்லோரையும் காப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

மாயையினால் தம் ஸ்வரூபத்தை மறைப்பவர் —ஸ்ரீ சங்கரர் –

தன் ஸ்வரூபத்தை மறைப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————————-

385-வ்யவஸாய-
நஷத்ரங்கள் முதலியன தம்மிடம் கட்டுப் பட்டு இருக்கப் பெற்றவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

ஞான ஸ்வரூபியாக இருப்பவர் —ஸ்ரீ சங்கரர் –

உறுதியான தன்மை அல்லது வடிவம் உடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————————

386-வ்ய்வஸ்தாந –
கலை முஹூர்த்தம் முதலிய காலப் பிரிவுகளின் நிலைக்குக் காரணம் ஆனவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லா வற்றுக்கும் ஆதாரமாக இருப்பவர் -லோகபாலர்களுடைய அதிகார் வ்யவஸ்தை-கர்ப்பத்திலிருந்து பிறப்பவைகள் முட்டையில்
இருந்து பிறப்பவைகள் -வியர்வையில் இருந்து பிறப்பவைகள் -பூமியில் இருந்து பிறப்பவைகள் ஆகியோருடைய
ஜன்ம வ்யவஸ்தை பிராமணர்கள் ஷத்ரியர்கள் வைச்யர்கள் சூத்ரர்கள் கலப்பினங்கள் ஆகியோருடைய ஜாதி வ்யவஸ்தை
ப்ரம்மசர்ய கார்ஹச்த்ய வானப்ரஸ்த சன்யாச ஆகிய ஆஸ்ரம வ்யவஸ்தை அவற்றின் தர்ம வ்யவச்தைகள்
ஆகிய வியவஸ்தைகளை-கட்டுப்பாடுகளை பகுத்து ஏற்படுத்தியவர் —ஸ்ரீ சங்கரர் –

அசுரர்களுக்கு விரோதமாக இருப்பவர் -விழிப்பு கனவு துக்கம் முதலிய நிலைகளை நடத்துபவர் –
தேவர்களுக்கு அனுக்ரஹம் செய்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————————-

387-சமஸ்தாந-
எல்லாம் தம்மிடத்தில் முடிவு பெறும்படி இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

சிறந்த ஸ்தானத்தை உடையவர் -பிரளயத்தில் பூதங்கள் அடையுமிடமாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

வாயுக்கள் நிலை பெற்று இருக்கச் செய்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————————–

388-ஸ்தாநத-
உயர்ந்த ஸ்தானத்தைக் கொடுப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

த்ருவன் முதலியவர்க்கு அவரவர் கருமத்திற்கு ஏற்ற ஸ்தானத்தைக் கொடுப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

பக்தர்க்கு வைகுண்டம் முதலிய ஸ்தானம் தருபவர் -அயோக்யர்களின் இருப்பிடத்தை அழிப்பவர் –  -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————-

389-த்ருவ-
கீழ்ப்பட்டவனான த்ருவனுக்கும் அழியாத உயர்ந்த நிலை கொடுத்தவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

அழியாதவர் –ஸ்ரீ சங்கரர் –

அழிவில்லாதவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————–

390-பரர்த்தி
சர்வேச்வரத் தன்மைக்கும் மேம்பட்ட திருக் கல்யாண குணங்களால் நிறைந்தவர் -இனி மிருத சஞ்சீவினியான ராம சரிதம் கூறப்படுகிறது —
அதனாலேயே அவர் எல்லாருக்கும் மேம்பட்டவராயினும் சோமன் -சந்தரன் -முதலிய தாழ்ந்த தேவதைகளோடும் ஒப்பிடப் படுகிறார் –ஸ்ரீ பராசர பட்டர் –

சிறந்த ஐஸ்வர்யம் உடையவர் –ஸ்ரீ சங்கரர் –

பிறருடைய வளர்ச்சிக்குக் காரணமானவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————–

391- பரம ஸ்பஷ்ட –
தம் மகிமையை யாவரும் வெளிப்படையாகக் காணும்படி திருவவதரித்து இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

வேறு ஒன்றின் உதவி இல்லாமல் ஞான ஸ்வரூபியாக பிரகாசிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

மேன்மை கொண்ட தம்மைத் தாமே வெளிப்படுத்துபவர் -மிகவும் உயர்ந்தவராய் -அறிய ஒண்ணாதவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————————-

392-துஷ்ட –
உயர்ந்தவர் மட்டுமே அறிவதற்கு உரிய பரத்வத்தில் காட்டிலும் மனிதர் முதலிய யாவரும் அறியும்படி தசரதன் மகனாக
திருவவதரித்து அரசாண்டது முதலியவற்றால் மகிழ்ந்தவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

பேரானந்த  வடிவமாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

அடியவர்கள் செய்யும் தொண்டினால் மகிழ்பவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————–

393-புஷ்ப –
இவ்வாறு மஹா குணங்களால் நிறைந்தவர் -ஸ்ரீ பராசர பட்டர்

எல்லாவற்றாலும் நிறைந்து இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்

பக்தர்களை போஷிப்பவர் -வளர்ப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

————————————————————————————

394-ஸூ பேஷண-
தாம் கடாஷிப்பதும் தம்மைப் பிறர் காண்பதும் மங்கள கரமாக இருப்பவர் –
குளிர்ந்த நீண்ட பெரிய தாமரை கண்கள்  -பரத்வ லஷணம்-ஸ்ரீ பராசர பட்டர்

மங்கள கரமான கடாஷம் யுடையவர் -மோஷம் ஐஹிக ஆமுஷ்கிக இன்பம் பாவனத்வம் அளித்தும் -ஐயங்களைப் போக்கியும்
ஹிருதயத்தின் முடிச்சையும் கர்மங்கள் அவித்யை போக்கி அருளியும் செய்யும் கடாஷம்-ஸ்ரீ சங்கரர்

தாம் காண்பதும் தம்மைப் பிறர் காண்பதும் மங்கள கரமாக இருப்பவர் -மங்கள கரமான இரண்டு கண்கள் யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

—————————————————————————–

395-ராம –
குணங்களாலும் அழகாலும் யாவரும் தம்மிடம் மகிழும்படி இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்

நித்ய ஆனந்த ரூபியான தம்மிடம் யோகிகள் மகிழும் படி இருப்பவர் –
தம் இச்சையால் மிகவும் அழகிய திருமேனியைக் கைக் கொண்டவர் -ஸ்ரீ சங்கரர்

ஸ்ரீ லஷ்மீ தேவியின் மணவாளர் -யோகிகள் மகிழும்படி இருப்பவர் -மகிழ்பவர் –
அளவிடமுடியாதவர் -லீலை புரிபவர் -பூர்ணர் -ஆனந்த ரூபம் -ஸ்ரீ சத்ய சந்தர்

————————————————————————————–

396-விராம –
வரங்களை அளிக்கும் பிரம்மாதி தேவர்களும் -அந்த வரங்களும் -அவற்றைப் பெற்ற ராவணாதிகளும்
தம்மிடம் ஓய்ந்து போகும்படி இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்

அனைத்துப் பிராணிகளும் முடிவில் அடையும் இடமாய் இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்

மேன்மையுடைய லஷ்மியை உடையவர் -கோபிகைகள் பலரை யுடையவர் –
பிரளயத்தில் ஜனங்களை முழுகச் செய்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

——————————————————————————————–

397-விரத –
ராஜ்யம் முதலியவற்றில் ஆசையற்று இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்

விஷய ஸூகங்களில் ஆசையில்லாதவர் -ஸ்ரீ சங்கரர்

தோஷங்கள் அற்றவர் -விரஜ -என்ற பாடம்-ஸ்ரீ சத்ய சந்தர்

———————————————————————————-

398-மார்க்க –
பரத்வாஜர் முதலிய முனிவர்களால் தேடப்படுபவர் –
விரஜோ மார்க்க -ஒரே திரு நாமமாக கொண்டு தோஷம் அற்ற வழியைக் காட்டுபவர் -ஸ்ரீ பராசர பட்டர்

தம்மை அறிவதே முக்திக்கு வழியாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்

ஸ்ரீ நரசிம்ஹம்-திருவவதரித்து சிங்க  திரு முகம் யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

———————————————————————–

399-நேய –
தம்மிடத்தில் அன்பு உடையவர்களால் கட்டளை இடப்படுபவர் -ஸ்ரீ பராசர பட்டர்

தத்வ ஞானத்தினால் ஜீவனைப் பரமாத்மா ஆக்குபவர் -ஸ்ரீ சங்கரர்

சிஷ்யர்களில் உபதேசத்தால் நடத்தத் தகுதியானவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

———————————————————————–

400-நய –
அந்த ரிஷிகளையும் காப்பவர் –

எல்லாவற்றையும் நடத்துபவர் -வழி-நடத்தப் படுபவர் -நடத்துபவர் ஆகிய மூன்று ரூபங்களில் அறியப் படுபவர் –

மேலான இடத்திற்கு நடத்துபவர் -ஸ்ரீ சத்ய சந்தர்

———————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத்ரம் -301-350—-மும்மத விளக்கம் —

April 18, 2015

யுகதிக்ருத் யுகாவர்த்த நைகமாயோ மஹாஸந
அத்ருச்யோ வ்யக்த ரூபஸ்ஸ சஹஸ்ரஜித நந்தஜித் –33
இஷ்டோ விசிஷ்டஸ் சிஷ்டேஷ் டஸ் சிகண்டீ நஹூ ஷோ வ்ருஷ
க்ரோதஹா க்ரோதக்ருத் கர்த்தா விஸ்வ பாஹூர் மஹீ தர -34
அச்யுத ப்ரதித ப்ராண பிராணதோ வாசவா நுஜ
அபான் நிதிரஷ்டா நம் அப்ரமத்த ப்ரதிஷ்டித –35
ஸ்கந்தஸ் ச்கந்ததரோ துர்யோ வரதோ வாயுவாஹன
வாஸூதேவோ ப்ருஹத்பாநு ராதிதேவ புரந்தர -36
அசோகஸ் தாரணஸ் தாரஸ் ஸூ ரஸ் சௌரிர் ஜநேச்வர
அநு கூலஸ் சதாவர்த்த பத்மீ பத்ம நிபேஷண –37
பத்ம நாபோ அரவிந்தாஷ பத்ம கர்ப்பஸ் சரீரப்ருத்
மஹர்த்திர்ருத்தோ வ்ருத்தாத்மா மஹாஷோ கருடத்வஜ –38-

—————————————————————

வடபத்ரசாயீ —————301–313—–13 திரு நாமங்கள் –
பரசுராமாவதாரம் ———-314-321——-8 திரு நாமங்கள் –
கூர்மாவதாரம் ————-322–332—–11 திரு நாமங்கள் –
வாஸூ தேவன் ————333–344—–12 திரு நாமங்கள் –
திவ்ய மங்கள விக்ரஹம் —-345–350——6 திரு நாமங்கள் –

————————————————————–

301-யுகாதிக்ருத் –
அகடுகடந சாமர்த்யம் -உள்ளவன் -உதாரணம் -ஆலினிலைப் பள்ளியானாகவும் -பிரளயத்தின் போதும் யுகங்களுக்கு
ஆதியான சிருஷ்டியைச் செய்தவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

யுகம் முதலிய கால பேதங்களைத் தொடங்குபவர் -ஸ்ரீ சங்கரர் –

யுகங்கள் முதலிய கால வேறுபாடுகளைப் படைப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————

302-யுகாவர்த்த –
நான்கு யுகங்களையும் அவற்றின் தர்மங்களோடு மீண்டும் மீண்டும் படைப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

கால ரூபியாக யுகங்களைத் திருப்புபவர் -ஸ்ரீ சங்கரர் –

கிருத யுகம் முதலியவற்றை மீண்டும் சுழற்றுபவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————-

303-நைகமாய-
சிறு குழந்தையாக உலகங்களை விழுங்குவது -ஒரே நீரில் பிடிப்பில்லாத ஆலிலையிலே படுப்பது முதலிய
அகத்கடிதந செயல்களை உடையவர் -மாயா என்று பொய் எனபது இல்லை -உண்மையான விஷயங்களிலும் மாயா என்ற சொல்
அதிகமாகப் பயன்படுத்தப் பட்டுள்ளதால் -ஸ்ரீ பராசர பட்டர் –

பெரு மாயை அல்லாமல் பல மாயைகளைத் தரிப்பவர் -ஸ்ரீ சங்கரர்-

பலவிதமான இச்சைகள் உள்ளவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————————

304-மஹாசந-
உலகு அனைத்தையும் விழுங்கியவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

கல்பத்தின் முடிவில் எல்லாவற்றையும் உண்பவர் -ஸ்ரீ சங்கரர்-

மிக அதிகமான உணவு உண்பவர் -அதிக உணவில் ஆசையுள்ள துர்வாச முனிவருக்கு உணவு அளித்தவர் –
யஜ்ஞத்தில் ஆசை உள்ளவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————————–

305-அத்ருச்ய-
நினைவிற்கு எட்டாத செய்கை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லோருடையவும் புத்தி இந்த்ரியங்களுக்கு புலப்படாதவர் -ஸ்ரீ சங்கரர்-

தம் தயை இன்றிக் காண முடியாதவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————————–

306-வ்யக்தரூப –
தம்மை அடைந்த மார்க்கண்டேயர் முதலிய வர்களுக்குத் தெளிவாகக் காட்டிய திரு மேனி யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

கண்ணுக்குப் புலப்படும் பிரபஞ்ச ரூபம் யுடையவர் -ஸ்வயம் பிரகாசமானவர் -யோகிகளுக்கு பிரகாசிப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

தம் தயை இன்றி காண முடியா உருவம் உடையவர் -அவ்யக்த ரூபம் -என்ற பாடம் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————————————-

307-சஹஸ்ரஜித் –
ஆயிரம் யுகங்களாக எண்ணப்படும் பிரளய காலத்தை சயனித்துக் கொண்டே வெல்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஆயிரக் கணக்கான அசுரர்களை வெல்பவர் –ஸ்ரீ சங்கரர் –

ஆயிரக் கணக்கான அசுரர்களை வெல்பவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————-

308-அனந்தஜித்-
சிறு குழந்தையாக இருக்கின்ற  போதும் யாரும் எப்போதும் எப்படியும் தமது மகிமையை அறிய முடியாதபடி இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தம் அளப்பரிய சக்தியினால் எல்லோரையும் போர் முதலியவற்றில் வெல்பவர் –ஸ்ரீ சங்கரர் –

எண்ணற்ற பொருள்களை அடைந்து இருப்பவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————-

309-இஷ்டோ அவிசிஷ்ட –
தம் வயிற்றில் தாங்கப்பட்ட யாவராலும் வேறுபாடு இன்றி தாய் போலே விரும்பும் படி இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

இஷ்ட -ஆனந்த ரூபியாதலால் விரும்பப்படுபவர் –
அவிசிஷ்ட -அனைவருக்கும் அந்தர்யாமி -இரண்டு திரு நாமங்கள் -யஜ்ஞங்களால் பூஜிக்கப் படுபவர் –ஸ்ரீ சங்கரர் –

இஷ்ட -யஜ்ஞத்தால் பூஜிக்கப் படுவதால் அனைவருக்கும் பிரியமானவர் -விசிஷ்ட -பிரளயத்தில் விசேஷமாக மிஞ்சி
இருப்பவர் -இரண்டு திரு நாமங்கள் -பிரியமானவர் -சிஷ்டர்களை –நல்லோர்களை -படைப்பவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————————-

310-சிஷ்டேஷ்ட-
மார்க்கண்டேயர் முதலிய பெரியோர்களால் உயர்ந்த பயனாக விரும்பப் படுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஞானிகளுக்குப் பிரியமானவர் -ஞானிகளால் பூஜிக்கப் படுபவர் –ஸ்ரீ சங்கரர் –

நல்லோரால் பூஜிக்கப் படுபவர் -பிரளய காலத்தில் அழியாத  லஷ்மி யுடையவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————————

311-சிகண்டீ-
யாராலும் வெல்ல முடியாத மகிமையையே சிரோபூஷணமாக உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

மயிலின் தோகையை அணிந்த கோபாலன் –ஸ்ரீ சங்கரர் –

உலக சுகங்களில் ஈடுபடுபவர்களைக் கண்டிப்பவர் –
ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் சிறுவனாக மயில் பீலியைத் திரு முடியில் அணிந்தவர் – –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————————–

312-நஹூஷ-
தமது மாயையினால் ஜீவர்களைக் கட்டுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தமது மாயையினால் பிராணிகளைக் கட்டுபவர் –ஸ்ரீ சங்கரர் –

அசுரர்களைக் கட்டுபவர் – –ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————

313-வ்ருஷ-
கடலில் அலைந்து வருந்தும் மார்க்கண்டேயரை அமுதம் போன்ற தேக ஒளியினாலும் இன்சொல்லாலும் நனைப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

விரும்புவற்றைத் தருபவர் –ஸ்ரீ சங்கரர் –

பக்தர்களுக்கு விருப்பமானவற்றைத் தந்து உதவுபவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————

314-க்ரோதஹா-
ஷத்ரியர்களை இருப்பத்தொரு  தலைமுறை வதம் செய்த பிறகு காச்யபர் வேண்டியவுடன் அந்தக் கோபம் தணிந்தவர் –
பார்கவ பரசு ராமனைப் பற்றி கூறத் தொடங்குகிறார் –ஸ்ரீ பராசர பட்டர் –

நல்லோர்களுக்குக் கோபத்தை அழிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

கோபமே வடிவெடுத்த அசுரர்களை அழிப்பவர் -பொறுமை நிறைந்தவர் ஆதலால் கோபத்தை அடக்கியவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————

315-க்ரோதக்ருத்-
அதற்கு முன் ஷத்ரியர் மீது கோபம் கொண்டவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தீயவர்கள் மீது கோபத்தைக் கொள்பவர் —ஸ்ரீ சங்கரர் –

தீயவரிடம் கோபம் கொள்பவர் -கோபத்தை ஒழித்தவர்—ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————

316-கர்த்தா –
தம் கோபத்திற்குக் காரணமான கார்த்த வீர்யனை அழித்தவர்-ஸ்ரீ பராசர பட்டர் –

உலகைப் படைப்பவர் -குரோதமுள்ள அசுரர்களை அழிப்பவர் -க்ரோத க்ருத்கர்த்தா-என்று ஒரே திருநாமமாகக் கொள்ளலாம் –ஸ்ரீ சங்கரர் –

சுதந்தரத் தன்மை யுடையவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————————-

317-விஸ்வ பாஹூ-
விரோதிகளை அழிப்பதால் உலகுக்கு நன்மை செய்யும் கரங்கள் யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

உலகங்களுக்கு எல்லாம் ஆதரவான கைகள் யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

வாயுதேவனுக்கு ஆதாரமான கைகளை யுடையவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————————

318-மஹீதர-
இப்படி துஷ்டர்களை அளித்தது பூமியைத் தாங்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பூமியை அல்லது பூஜையைத் தாங்குபவர் –ஸ்ரீ சங்கரர் –

பூமியைத் தாங்குபவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————————–

319-அச்யுத –
பிரமன் முதலியவர்க்கு சமமாக அவதரித்த போதும் தம் இறைமை குன்றாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ஆறுவித விகாரங்கள் அற்றவர் –ஸ்ரீ சங்கரர் –

தேசம் காலம் குணம் முதலியவற்றில் நழுவுதல் இல்லாதவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————————-

320-ப்ரதித-
அத் தன்மையால் புகழ் பெற்றவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

உலகப் படைப்பு முதலிய செயல்களால் புகழ் பெற்றவர் –ஸ்ரீ சங்கரர் –

பிரசித்தமானவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————————————–

321-ப்ராண-
தன்னை அண்டிய ஜீவர்களுக்கு உயிரானவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

வாயு ரூபியாக பிராணிகளைப் பிழைப்பிப்பவர்–ஸ்ரீ சங்கரர் –

பக்தர்களை மோஷ லோகம் அழைத்துச் செல்பவர் -சரஸ்வதியைக் காட்டிலும் மிகவும் மேம்பட்டவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————————————

322-பிராணத-
ஸ்ரீ கூர்மமாக தேவர்களுக்குக் கடல் கடைவதற்கு உரிய பலத்தைக் கொடுப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தேவர்களுக்கு பலம் கொடுப்பவர் -அசுரர்களுக்கு பலத்தைக் கெடுப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

பிராணனை அழிப்பவர்—ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————

323-வாசவா நுஜ-
அமுதம் வேண்டிய இந்திரனுக்கு அளிப்பதற்காகப் பின் பிறந்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

காச்யபருக்கு அதிதியினிடம் இந்திரனுடைய தம்பியாகப் பிறந்தவர் –ஸ்ரீ சங்கரர் –

இந்த்ரனுக்குத் தம்பியாக அவதரித்தவர் -வசுதேவருக்கு மகனாக அவதரித்தவர் –
செல்வங்கள் ரத்னங்கள் யுடையவர் -அசுரர்களின் இருப்பிடங்களை நாசம் செய்பவர்—ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————————

324-அபாம் நிதி –
கடல் கடைந்த போது அக் கடலைத் தாங்கியவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

நீர் நிரம்பும் கடலாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

தேவர்களுக்குத் தஞ்சமாக இருப்பவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————————-

325-அதிஷ்டா நம் –
கடல் கடைந்த போது மந்திர மலையைத் தாங்கியவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பிராணிகளுக்கு எல்லாம் உபாதான காரணமானவர் –ஸ்ரீ சங்கரர் –

இங்கு ஆதாரமாக இருப்பவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————

326-அப்ரமத்த-
இப்படி அடியவர்களைக்  காப்பதில் மிகவும் ஊக்கம் கொண்டவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அவரவர் கர்மங்களுக்குத் தக்க பலன்களைத் தருவதில் தவறாதவர் –ஸ்ரீ சங்கரர் –

சிறிதும் செருக்கு இல்லாதவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————–

327-ப்ரதிஷ்டித –
பிறரை எதிர்பாராமல் தம் மகிமையில் நிலைத்து இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தமது மகிமையில் நிலைத்து இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

நிலைத்து இருக்கும் தன்மை யுடையவர்—-ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————

328-ஸ்கந்த –
அசுரர் முதலியவர்களை அழிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அமுதமாகப் பெருகுபவர் –ஸ்ரீ சங்கரர் –

பெருகுபவர் அல்லது வளர்பவர் —-ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————-

329-ஸ்கந்த தர –
தேவ சேனாதிபதியான குமாரனைத் தாங்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தர்ம மார்க்கத்தைத் தாங்குபவர் –ஸ்ரீ சங்கரர் –

ஷண்முகனைத் தரிப்பவர்—-ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————

330-துர்ய-
உலகங்களைத் தாங்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சர்வ பிராணிகளின் உத்பத்திகளைத் தாங்குபவர் –ஸ்ரீ சங்கரர் –

பாரங்களைத் தாங்குபவர் —-ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————–

331-வரத-
உலக பாரங்களை வகிக்கும் தேவர்களுக்கும் அந்தந்த சாமர்த்யமாகிய வரங்களை அளிப்பவர்-ஸ்ரீ பராசர பட்டர் –

விரும்பிய வரங்களைக் கொடுப்பவர் -யஜமான ரூபியாக தஷிணைகளைக் கொடுப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

மோஷம் அளிப்பவர் ருத்ரன் முதலிய வர்களால் கொடுக்கப்பட்ட வரங்களை அழிப்பவர்-
கணவன் அற்ற சூர்பணகையின் மூக்கை அறுத்தவர் –
அவரதர் -என்ற பாடத்தில் அசுரர்களை ஹிம்சிப்பவர் என்றுமாம் —–ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————–

332-வாய்வாஹந-
உலகத்திற்குப் பிராணனான வாயுவை நடத்துபவர்-ஸ்ரீ பராசர பட்டர்-

ஏழு மருத்துக்களை நடத்துபவர் -ஸ்ரீ சங்கரர் –

மூச்சுக் காற்றைத் தாங்கி இருக்கும் ஜீவர்களை நடத்துபவர் – —ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————————-

333-வாஸூ தேவ –
பறவைகள் குஞ்சுக்களை சிறகினால் அணைத்துக் காப்பது போலே உலகங்களைத் தமக்குள்ள வைத்துக் காத்தும் –
அவற்றில் தாமந்தர்யாமியாக இருப்பதாலும்  வாஸூ என்றும்
இதை விளையாட்டாகச் செய்வது ஆகியவற்றால் தேவ -என்றும் கூறப் பெறுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாவற்றிலும் வசித்தும் -எல்லாவற்றையும் தம்மிடம் வைத்தும் -மறைத்தும் இருப்பதனால் வாஸூ என்றும்
விளையாடுவது வெல்வது பிரவ்ருத்தி நிவ்ருத்திகள் உண்டாக்குவது பிரகாசிப்பது
துதிக்கப் பெறுவது முதலிய வற்றால் தேவ என்றும் கூறப் பெறுபவர் -ஸ்ரீ சங்கரர் –

வாஸூ தேவ புத்திரர் -எல்லா இடங்களிலும் வசிப்பதனாலும் எல்லாவற்றையும் வசிக்கச் செய்வதனாலும் –
எல்லாவற்றின் வாசத்திற்கும் ஆதாரமாக இருப்பதாலும் வாஸூ என்றும் –
பிரகாசிப்பதனால் தேவ என்றும் கூறப் பெறுபவதனால் வாஸூ தேவர் என்று போற்றப் பெறுபவர் —-ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————————————

334-ப்ருஹத் பாநு –
பிரகாசிக்கும் கிரணங்களை யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சந்திர சூரியர்களினால் உலகங்களைப் பிரகாசிக்கச் செய்பவர் -ஸ்ரீ சங்கரர் –

மேன்மையான ஒளி யுள்ளவர் —-ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————————————-

335-ஆதி தேவ –
உலகைப் படைப்பை விளையாட்டாக உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

உலகத்திற்குக் காரணமான தேவர் -தானம் -பிரகாசித்தல் முதலிய குணங்களை உடையவர் -ஸ்ரீ சங்கரர் –

எல்லாவற்றிற்கும் காரணமான தேவர் —-ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————–

336-புரந்தர –
அசுரர்களின் பட்டணங்களைப் பிளப்பவர் -இனி நான்கு திரு நாமங்களில் துஷ்டர்களால் ஏற்படும் துன்பங்களை விலக்குதலும் –
அசுரர்கள் பிசாசங்கள் இடி சாபம் முதலிய ஆதிதைவிகங்களில் இருந்து காத்தல் கூறப்படுகிறது -ஸ்ரீ பராசர பட்டர் –

அசுரர்களின் பட்டணங்களைப் பிளந்தவர் -ஸ்ரீ சங்கரர் –

அசுரர்களின் புரங்களைப் பிளப்பவர் —-ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————-

337-அசோக-
ஆத்யாத்மிகங்களான சோகம் மோஹம் முதலிய துன்பங்களைப் போக்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சோகம் முதலிய ஆறு ஊர்மிகள் அற்றவர்-ஸ்ரீ சங்கரர் –

சோகம் இல்லாதவர் —-ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————–

338-தாரண –
ஆதி பௌதிகங்களான பகைவர் கள்வர் பிணிகள் முதலியவற்றைப் போக்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சம்சாரக் கடலைத் தாண்டுவிப்பவர் –
சூர்ய மண்டலத்தின் நடுவில் இருப்பவர் -சூர்ய குலத்தில் உதித்தவர் –சம்சாரத்தைத் தாண்டுவிப்பவர்-ஸ்ரீ சங்கரர் –

தார என்னும் ஓங்காரத்தின் மூலமாய் சுகம் தருபவர் —-ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————————

339-தார –
உலக வாழ்க்கை யாகிய பயத்தை தாண்டுவிப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

கர்ப்பம் பிறப்பு மூப்பு மரணம் முதலிய பயங்களில் இருந்து கரை ஏற்றுபவர் -ஸ்ரீ சங்கரர் –

சம்சாரத்தில் இருந்து தாண்டச் செய்பவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————————-

340-ஸூர –
வெற்றியை உடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

பராக்கிரமம் உடையவர் -ஸ்ரீ சங்கரர் –

பயந்தவர்களால் அடையப்படுபவர் -போருக்குச் செல்பவர் -சுகத்தைத் தருபவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————————-

341-சௌரி-
சூரர் எனப்படும் வாசுதேவனுடைய புத்திரர் -அடியவர்கள் இடம் செல்லும் விசேஷ குணமானது கூறப் படுகிறது –ஸ்ரீ பராசர பட்டர் –

சூரா குலத்தில்  பிறந்தவர் -ஸ்ரீ சங்கரர் –

சூரா ராஜனின் கோத்திரத்தில் பிறந்தவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————————

342-ஜநேஸ்வர-
பிறந்தவர் யாவர்க்கும் ஈஸ்வரராக இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

பிராணிகளுக்கு ஈஸ்வரர் -ஸ்ரீ சங்கரர் –

பிறப்பற்றவர்-ஸ்ரீ லஷ்மி தேவிக்கு நாதர்-ஜனங்களுக்கு ஈஸ்வரர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————————

343-அநுகூல –
இயற்கையான பெருமை இருப்பதால் அதைப் பற்று வியப்பு கர்வம் அற்றவர் -கரை கடவாதவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

ஆத்மாவாதலால் யாவர்க்கும் அநு கூலராக இருப்பவர் -தமக்குப் பிரதிகூலமானதைத் தாமே செய்யார் -ஸ்ரீ சங்கரர் –

பக்தர்களுக்கு நன்மையைச் செய்பவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————————–

344-சதா வர்த்த –
அளவற்ற ஐஸ்வர்ய பெருக்காகிய சூழல்களை உடையவர் -அளவற்ற ஐஸ்வர்யம் உடையவராயினும் கரை கடந்து
பெருகாதவராய் அணுகுவதற்கு எளிதாக -நதியின் சுழல் சிறிய
இடைவெளியின் மூலம் வெளிவருவது போலே விளங்கும் –ஸ்ரீ பராசர பட்டர் –

தர்மத்தைக் காக்கும் பொருட்டு அநேக அவதாரங்களைச் செய்பவர் -நூறு நாடிகளில் பிராண ரூபத்தில் இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

எல்லோரையும் தேவர் முதலான ரூபங்களில் நடத்துபவர் -படைப்பவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————–

345-பத்மீ-
விளையாட்டுத்  தாமரை மலரை எப்போதும் யுடையவர் -இப்படி வாஸூதேவனுடைய குணங்களை வர்ணித்த பின்பு
அவனுடைய திவ்ய ரூபத்தை விளக்குகிறார் –ஸ்ரீ பராசர பட்டர் –

கையில் தாமரையை யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

நாபியில் தாமரையை யுடையவர் -நான் முகனைப் பிள்ளையாக யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————

346-பத்ம நிபேஷண-
தாமரை போலே மலர்ந்து அழகிய சிரமத்தைப் போக்கும் கடாஷம் யுள்ளவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

தாமரை போன்ற இரண்டு திருக் கண்களை யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

தாமரை போன்ற திருக் கண்களை யுடையவர் -தாமரைகளுக்கு நண்பனான சூரியன் ஒளியுள்ள சந்திரன்
ஆகியவர்களைக் கண்களாக யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————

347-பத்ம நாப –
தாமரை போன்ற நாபியை யுடையவன் –ஸ்ரீ பராசர பட்டர் –

தாமரையின் நாபியாகிய உள்காயில் இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

தாமரையை மலர்த்தும் சூரியன் போன்ற ஒளியுள்ளவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————–

348-அரவிந்தாஷ-
தாமரை போல் அழகிய இரு திருக் கண்களை யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

தாமரை போல் அழகிய இரு திருக் கண்களை யுடையவர்   –ஸ்ரீ சங்கரர் –

தாமரை போல் அழகிய இரு திருக் கண்களை யுடையவர்   -ஞானாத்மகமான திருக் கண்களை யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————-

349-பத்மகர்ப்ப –
தமக்குத் தகுதியான மனமும் மென்மையும் உள்ள பத்மாசனத்தில் இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

இதயமாகிய தாமரையில் உபாசிக்கப் படுபவர் –ஸ்ரீ சங்கரர் –

நாபியில் கமலம் யுடையவர் -நான் முகனை பிரளயத்தில் உண்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————————–

350-சரீரப்ருத்-
உபாசகனுடைய இதயத்தில் இருந்து கொண்டு அவனைப் போஷிப்பவர் –
பரம புருஷனுடைய குணங்களே அன்றோ உபாசகனுக்குப் போஷணம் –
உபாசகன் தான் அவனுக்கு ஆத்மாவும் உடலும் போன்றவன் அன்றோ –ஸ்ரீ பராசர பட்டர் –

தமது மாயையினால் சரீரங்களைக் கொள்பவர் -அன்ன ரூபத்தால் பிராண ரூபத்தால் சரீரங்களை போஷித்து தரிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

சரீரமாகிய உலகத்தைத் தாங்குபவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத்ரம் -251-300—மும்மத விளக்கம் —

April 18, 2015

அசங்க்யேயோ அப்ரமேயாத்மா விசிஷ்ஸ் சிஷ்டக்ருச் சுசி
சித்தார்த்தஸ் சித்த சங்கல்பஸ் சித்திதஸ் சித்தி சாதன –27-
வ்ருஷாஹீ வ்ருஷபோ விஷ்ணுர் வ்ருஷபர்வா வ்ருஷோதர
வர்த்த நோ வர்த்தமா நச்ச விவிக்தஸ் ஸ்ருதிசாகர –28
ஸூ புஜோ துர்த்தரோ வாக்மீ மஹேந்த்ரோ வஸூதோ வஸூ
நைகரூபோ ப்ரருஹத்ரூபஸ் சிபிவிஷ்ட ப்ரகாசன–29
ஒஜச்தேஜோ த்யுதிதர பிரகாசாத்மா பிரதாபன
ரித்தஸ்  ஸபஷ்டாஷரோ மந்த்ரஸ் ந்த்ராம்ஸூர் பாஸ்கரத்யுதி–30
அம்ருதாம் ஸூத்பவோ பாநுஸ் சசபிந்துஸ் ஸூ ரேச்வர
ஔஷதம் ஜகதஸ் சேதுஸ் சத்ய தர்ம பராக்ரம –31
பூத பவ்ய பவன்னாத பவன பாவநோ அநல
காமகா காமக்ருத் காந்த காம காமப்ரத ப்ரபு–32-

———————————————————————

நாராயணன் ———————247–271—–25 திரு நாமங்கள் –
விஸ்வரூபன் ———————272–300—–29 திரு நாமங்கள் –

—————————————————————————

251-சிஷ்டக்ருத் –
தமது சம்பந்தம் பெற்றவர்களைத் தம்மிடம் சேரத்தக்க கல்யாண குணங்கள் உள்ளவர்கள் ஆக்குபவராய் -ஸ்ரீ பராசர பட்டர் –

கட்டளை இடுபவர் -நல்லோர்களைக் காப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

திறமை உள்ளவர்கள் எல்லாரும் கூடிச் செய்ததை முடிக்க முடியாத போது அதை முழுமை செய்து முடிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

————————————————————————————-

252-ஸூசி –
தமக்குத் தாமே தூய்மை பெற்றவர் -சிஷ்டக்ருத் ஸூ சி -ஒரே திரு நாமம் -ஸ்ரீ பராசர பட்டர் –

மாயையாகிய குற்றம் அற்றவர் –ஸ்ரீ சங்கரர் –

தூய்மையானவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

————————————————————————————

253-சித்தார்த்த –
வேண்டியவை தமக்குத் தாமே அடைந்து இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அடைய வேண்டியவை எல்லாம் அடைந்து இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

அடியவர் விருப்பங்களை   வழங்க ஆயத்தமாக இருப்பவர் -சித்த புருஷர்களுக்குச் செல்வமாக இருப்பவர் –
அயோக்யர்களின் அழிவுக்கு காரணமானவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

————————————————————————————–

254-சித்த சங்கல்ப –
நினைத்தவை நினைத்த மாத்திரத்தில் அடைந்து இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தம் சங்கல்பங்கள் நிறைவேறப் பெற்றவர் –ஸ்ரீ சங்கரர் –

அடியவர் விருப்பங்களைச் செயல்படுத்த முனைபவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

———————————————————————–

255-சித்தித-
அணிமா கரிமா முதலிய அஷ்ட சித்திகளைத் தருபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அவரவர் தகுதிப்படி கேட்ட பலன்களைத் தருபவர் –ஸ்ரீ சங்கரர் –

தகுதி யுள்ளவர்களுக்கு சித்தியைத் தருபவர் -அயோக்யர்களுக்கு சித்தியைத் தடுப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

—————————————————————————–

256-சித்தி சாதன-
தம்மை உபாசிப்பதும் பலன் போல் ஸூகமாகத் தோன்றும்படி இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சித்திகளை நிறைவேற்றுபவர் –ஸ்ரீ சங்கரர் –

மோஷ ரூபமான பலனை சாதிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

—————————————————————————–

257-வ்ருஷாஹீ –
தம்மை முதன் முதலில் அடையும்  தினமே எல்லா மங்களங்களுக்கும் வித்திடும் நாள் போலே இருப்பதால் அந்த ஆரம்ப தினம்
சிறப்பாக இருக்கப் பெற்றவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பகல் போலே பிரகாசிக்கும் தர்மங்களை உடையவர் -த்வாதசாஹம் முதலிய யஜ்ஞ  விசேஷமாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

தர்மத்தின் மூலமாகப் பரவி இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

———————————————————————

258-வ்ருஷப-
சம்சாரத் தீயினால் தகிக்கப் பட்டுத் தம்மை  வந்து அடைந்தவர் மீது அமுதமன்ன அருளைப் பொழிபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பக்தர்கள் விரும்பியவற்றை வர்ஷிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

அருளைப் போல்பவர் -தர்மத்தால் பிரகாசிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

———————————————————————————–

259-விஷ்ணு –
அப்படி அருளைப் பெற்றவர்களை விட்டு நீங்காதவர் -கடாஷத்தைப் பொழிந்ததும் மற்றும் பல உபகாரங்கள் செய்தும்
தமது உயர்வையும் தாழ்வையும் பாராமல் என்றும் அவர்களை விட்டுப் பிரியாமல் பரவி இருப்பவர் –
தார்க்கிகர்களின் வியாப்தியானது இங்கே கருதப்படுகிறது -ஸ்ரீ பராசர பட்டர் –

உலகங்களை வியாபித்தவர் –ஸ்ரீ சங்கரர் –

நதிகள் பாயும்படி செய்பவர் -காண முடியாதவர் -அறிய முடியாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

——————————————————————–

260-வ்ருஷ பர்வா –
தம்மை அடைவதற்கு வர்ணாஸ்ரம தர்மங்களைப் படிகளாக யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
தர்ம ரூபமான படிகளை யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –
புண்ய சாதனங்களான அமாவாஸ்யை முதலிய பர்வ தினங்களுக்கு  யஜமானர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

——————————————————————

261-வ்ருஷோதர –
அடியவர் இடும் எளிய உணவையும் ஏற்பதனாலும்-பிரளயத்தில் துன்புற்றவர்களை வைத்துக் காப்பதனாலும்
தரும மயமான வயிறு யுள்ளவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

பிரஜைகளை வர்ஷிக்கும் -சிருஷ்டிக்கும் -வயிறு யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

திரி விக்ரமாவதாரத்தில் கங்கை  நீரை பிரம்மாண்டத்தில் உள்ளவர்களுக்குத் தந்தவர் -புண்ணிய  தீர்த்ததால் மகிழ்பவர்-அருளைப் பொழிபவர் –
மற்றும் தோஷங்களுக்குத் தொலைவில் இருப்பவர் – -ஸ்ரீ சத்ய சந்தர்-

——————————————————-

262-வர்த்தந-
அவர்களைத் தாய் போல் வயிற்றில் வைத்து வளர்ப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

அனைத்தையும் விருத்தி செய்பவர் -வளர்ப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

தன்னைச் சார்ந்தவரை வளரச் செய்பவர் -உயர்ந்த செல்வத்தை யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

———————————————————————–

263-வர்த்தமாந-
அவர்களை வளர்ப்பதனாலேயே தாமும் வளர்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

உலக வடிவாக விருத்தி அடைபவர் –ஸ்ரீ சங்கரர் –

நாடோறும் விருத்தி ஆக்குபவர் – அல்லது இவ்வாறு அளவிட முடியாத சம்ருத்தியை யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

———————————————————————

264-விவிக்த –
தமக்கே உரிய சிறந்த சரித்ரங்களை உடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

உலகவடிவாக இருந்தாலும் தனித்து நிற்பவர் –ஸ்ரீ சங்கரர் –

உலகைக் காட்டிலும் வேறுபட்டவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

————————————————————————-

265-ஸ்ருதி சாகர –
நதிகளுக்கு கடல் போலே இக்குணங்களை உரைக்கும் ஸ்ருதிகளுக்கு முடிவான இடமாக இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

வேதங்களுக்குக்   கடல் போலே இருப்பிடமானவர் –ஸ்ரீ சங்கரர் –

வேதங்களைக் கொடுப்பவர் -வேதங்களைத் தம்மிடம் வைத்துக் கொள்பவர் -வேதங்கள் ஆகிற கடலை வெளியிட்டவர் -வேதக்கடல்
மற்றும் கோவர்த்தன மலை முதலியன மூலம் மகிழ்பவர்–ஸ்ரீ சத்ய சந்தர்-

—————————————————————————-

266-ஸூபுஜ-
சரணம் அடைந்தவர்களின் பாரத்தைத் தாங்குவதால் விளங்கும் கைகள் யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

உலகைக் காக்கும் அழகிய புஜமுள்ளவர்–ஸ்ரீ சங்கரர் –

அழகிய தோள்கள் உள்ளவர் -இன்பத்தை அனுபவிக்கும்படி செய்பவர்–ஸ்ரீ சத்ய சந்தர்-

——————————————————————

267-துர்த்தர-
இச் சிறந்த கை வன்மையினால் -பிரளய சமுத்ரம் போல் வேகம் உடைமையினால் பிறர் சக்திகள் மணல் அணைகள்
போலத் தடுக்க மாட்டாமல் உடைந்து போம்படி இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

மோஷத்தை விரும்புகிறவர்கள் தியானிக்கும் போது மனத்தில் நிறுத்துவதற்கு அரிதாக இருப்பவர் –
பூமி முதலிய எல்லாவற்றையும் தாங்குகின்ற தம்மைத் தாங்குபவர் இல்லாதவர் –ஸ்ரீ சங்கரர் –

பிறரால் தாங்க முடியாதவராக இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

————————————————————–

268-வாக்மீ-
சிறந்த வாக்கை யுடையவர் -சிறப்பாவது வேதத்தில் கூறப் பட்டதாகவும் வெற்றியை யுடையதாகவும் இனிமையாகவும்
கம்பீரமாகவும் பிரியமாகவும் ஹிதமாகவும் இருப்பதாகும் –ஸ்ரீ பராசர பட்டர் –

வேத ரூபமான சிறந்த வாக்கை உடையவர் –ஸ்ரீ சங்கரர் –

வேத ரூபமான சிறந்த வாகை யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

———————————————————————-

269-மஹேந்த்ர-
யாவராலும் கொண்டாடப் படும் பரமேச்வரத் தன்மை யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

உயர்ந்த இந்திரர் ஈச்வரர்களுக்கும் ஈஸ்வரர் –ஸ்ரீ சங்கரர் –

விரும்பியவற்றைக் கொடுக்கும் மேன்மை யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

————————————————————————-

270-வஸூத-
தடையற்ற பெரும் செல்வம் இருந்தபோதும் பொருளை விரும்பும் சிறியோர்க்கும் அப் பொருளைக் கொடுப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

செல்வத்தைக் கொடுப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

ஜனங்களை  அவரவர்க்கு உரிய  இடங்களில் வைப்பவர் -தம் ஸ்வரூபத்தை மறைப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

———————————————————————–

271-வஸூ –
உயர்ந்தவர்களுக்குத் தாமே செல்வமாக இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

தம் ஸ்வரூபத்தை மாயையினால் மறைப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

எங்கும் வசிப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

————————————————————–

272-நைகரூப –
பலவகையினருக்காகப் பல உருவங்கள் கொள்பவர் –
இனி கீழே கூறப் பட்டதற்கு ஏற்ப எம்பெருமானுடைய விஸ்வரூபம் கூறப்படுகிறது –ஸ்ரீ பராசர பட்டர் –

ஒரே ரூபம் இல்லாதவர் -அநேக ரூபம் யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

அநேக உருவங்கள் உள்ளவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

—————————————————————————

273-ப்ருஹத்ரூப –
அவ் வுருவங்கள் ஒவ்வொன்றும் எல்லாத் திசைகளையும் மேலுலகங்களையும் -இடை வெளியையும்
வியாபிக்கும்படி பெரியவராய் இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

பூமியைத் தாங்கும் பெரிய வராஹம் உள்ளவர் –ஸ்ரீ சங்கரர் –

பெரிய உருவம் உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

——————————————————————————-

274-சிபிவிஷ்ட –
கிரணங்களுள் பிரவேசித்து வியாபிப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

யாக பசுக்கள் இடத்தில் யாக ரூபியாக இருப்பவர் -கிரணங்களுக்குள் இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

மறக்கட்டைக்குள் அக்னியாய் இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

————————————————————————-

275-பிரகாசந-
இத் திவ்ய ரூபத்தைக் காணக் கருதும் அர்ச்சுனன் முதலியோர்க்கு காட்டுபவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாவற்றையும் பிரகாசிக்கச் செய்பவர் –ஸ்ரீ சங்கரர் –

பிரகாசப்படுத்துபவர் -சுகத்தை நன்கு அனுபவிப்பவர் -சூரியன் முதலியோர்க்கு பிரகாசத்தைக் கொடுப்பவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

—————————————————————————————————-

276-ஓஜஸ் தேஜோத் யுதிதர –
பலம் பராக்கிரமம் கீர்த்தி ஒளி ஆகியவற்றை யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

பலம் பராக்கிரமம் ஒளி ஆகியவற்றை யுடையவர் -ஓஜ-தேஜ இரண்டு திருநாமங்களாக கொண்டு ஞானத்தின்
அடையாளமான ஒளியைத் தரிப்பவர் -ஆதலால் த்யுதி  தரர் –ஸ்ரீ சங்கரர் –

பராக்கிரமம் பிரதாபம் பிரகாசம் ஆகியவற்றை யுடையவர்-ஸ்ரீ சத்ய சந்தர்-

———————————————————————–

277-பிரகாசாத்மா –
மூடர்களுக்கும் வெளிப்படையாகத் தெரியும் சிறந்த பிரபாவம் உடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

பிரகாசமான ஸ்வரூபம் யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

நன்றாக சுகத்தை அனுபவிக்கும் ஆத்மாவாக இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

———————————————————

278-பிரதாபந-
எல்லாவற்றையும் தபிக்கும்படி செய்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

சூரியன் முதலியவற்றால் தகிக்கும்படி செய்பவர் –ஸ்ரீ சங்கரர் –

நன்கு பரவி இருப்பவர் -ஜலத்தைத் தூண்டுபவர் -சூரியன் முதலானோரில் நின்று  நன்கு தஹிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

————————————————————————

279-ருத்த –
பருவ காலங்களில் கரை புரளும் கடல் போல  எப்போதும் நிரம்பி இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

தர்மம் ஞானம் வைராக்யம் முதலிய குணங்கள் நிரம்பியவர் –ஸ்ரீ சங்கரர் –

இயற்கையாக முழுமையானவர் –
ருத்தஸ் பஷ்டாஷர-என்ற பாடத்தில் ஓம் நமோ நாராயணாய -எட்டு அக்ஷரங்களை உடையவர் -என்றுமாம் –  ஸ்ரீ சத்ய சந்தர்-

————————————————————————

280-ஸ்பஷ்டாஷர-
தமது பெருமையைத் தெளிவாகக் கூறும் வேத அஷரங்களை வெளியிட்டவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

ஓங்காரம் என்னும் அஷரத்தினால் வெளிப்படும் மகிமை உள்ளவர் –ஸ்ரீ சங்கரர் –

ஸ்பஷ்டமான வேத சாஸ்திர எழுத்துக்களால் அறியப்படுபவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

—————————————————————————————-

281-மந்த்ர-
தம்மை த்யானம் செய்பவர்களைக் காப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ருக் யஜூஸ் சாம வேத மந்த்ர ரூபமாய் இருப்பவர் -மந்தரத்தால் தெரிவிக்கப் படுபவர் –ஸ்ரீ சங்கரர் –

அறிவைத் தந்து காப்பவர் -தம்மை மனநம் செய்யும்படி செய்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

————————————————————————————

282-சந்த்ராம் ஸூ –
த்யானிப்பவர்களுக்கு களைப்பை நீக்கி செழிப்பை யுண்டாக்குவதால் சந்தரன் போன்ற ஒளி யுள்ளவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சம்சார தாபத்தினால் வருந்தியவர்க்கு சந்திர கிரணம் போல் மகிழ்ச்சி அளிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

சந்த்ரனுக்கு ஒளியை  அளிப்பவர் -சந்திர கிரணம் போலே குளிர்ச்சி தருபவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

—————————————————————————————–

283-பாஸ்கரத் யுதி-
பகைவரை விரட்டும் பெருமை யுள்ளவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சூரியனது ஒளியைப் போலே ஒளி யுள்ளவர் –ஸ்ரீ சங்கரர் –

சூரியனுக்கு ஒளியை அளிப்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

————————————————————-

284-அம்ருதாம் ஸூத்பவ-
அமுதக் கிரணங்களை யுடைய சந்திரனும் தம் மனத்தில்   தோன்றப் பெற்றவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பாற்கடல் கடைந்த போது அமுதக் கிரணமுடைய சந்தரன் தோன்றக் காரணம் ஆனவர் –ஸ்ரீ சங்கரர் –

அமுத கிரணங்களை யுடைய சந்திரனுக்குக் காரணம் ஆனவர் -தன்வந்தரி ரூபத்தில் அமுதக் கிரணங்களை  யுடையவர் -மற்றும்
உலகில் இருந்து மேம்பட்டவர் அல்லது ருத்ரன் இந்திரன் முதலானோரைக் காட்டிலும் மேம்பட்டவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

—————————————————————————–

285-பாநு –
மிக்க ஒளியை யுள்ள சூரியனுக்கும் ஒளியை அளிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பிரகாசிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

பிரகாசிப்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

——————————————————————

286-சசபிந்து –
தீய வழிகளில்  செல்பவரை அழிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

முயல் போல் அடையாளம் யுடைய சந்த்ரனாய் இருப்பவர் -சந்தரனைப் போலே பிரஜைகளைப் போஷிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

மிகவும் சுக  ரூபம் உடைய ஞானியாக இருப்பவர் -வேட்டையில் தீயவரை அழிப்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

————————————————————————–

287-ஸூ ரேஸ்வர-
நல்வழியில் செல்பவரை உயர்கதிக்குச் செலுத்துபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தேவர்களுக்கும் நன்மை தருபவர்களுக்கும் ஈஸ்வரர் –ஸ்ரீ சங்கரர் –

தேவர்களுக்குத் தலைவர் -நன்கு பிரகாசிப்பவர் -மற்றும் அனைவருக்கும் தலைவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

———————————————————————————–

288-ஔஷதம் –
உலக வாழ்க்கை என்னும் கொடிய விஷத்தைப் போக்கும் மருந்தாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

உலக வாழ்க்கையாகிய கொடிய நோய்க்கு மருந்தாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

தாப த்ரயத்தினால் வருந்தியவர்க்கு தஞ்சமான மருந்தாக இருப்பவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

—————————————————————————

289-ஜககஸ் சேது-
உலகில் நல்லவை தீயவைகளைப் பிரிக்கும் அணையாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

உலகைக் கரையேற்றும் அணையாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

உலகிற்கு அணையாக ஆஸ்ரயம் அளிப்பவர் -வர்ணாஸ்ரம தர்மங்களை குழப்பம் இல்லாமல் நிலை நிறுத்துபவர் –

——————————————————————————–

290-சத்ய தர்ம பராக்ரம –
தர்மங்கள் எனப்படும் தம் கல்யாண குணங்களும் பராக்ரமங்கள் எனப்படும் தம் திவ்ய சேஷ்டிதங்களும்
பழுது படாமல் உலகை உய்விப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
ஞானம் முதலிய குணங்களும் பராக்ரமமும் வீணாகாமல் இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
தன்னுடைய தர்ம பராக்ரமங்கள் வீணாகாதவர்- ஸ்ரீ சத்ய சந்தர்-

———————————————————————————

291-பூத பவ்ய பவன் நாத-
இப் பெருமைகள் இக் காலத்தில் மட்டும் இல்லாமல் முக் காலங்களிலும் உள்ளவர்-ஸ்ரீ பராசர பட்டர் –

முக் காலங்களிலும் உள்ளவர்களால் யாசிக்கப் படுபவர் அவர்களைக் கட்டுப் படுத்துபவர் -ஆசீர்வதிப்பவர் –ஆள்பவர்-ஸ்ரீ சங்கரர் –

நித்ய சம்சாரிகள் -அறிவீனர்கள் -பக்தர்கள் இவர்களால் வேண்டப்படுபவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

—————————————————————-

292-பவன –
எல்லா காலங்களிலும் எல்லா இடங்களிலும் இயற்கையாகவே செல்பவர் —
அனைத்தையும் தூய்மையாக்கும் இக் குணத்தின் லேசம் இருப்பதால் தான்-பவன எனப்படும் காற்றும் எங்கும் சஞ்சரிக்கின்ற்றது-ஸ்ரீ பராசர பட்டர் –

பரிசுத்தப் படுத்துபவர் -ஸ்ரீ சங்கரர் –

அரசர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்து காப்பவர்- ஸ்ரீ சத்ய சந்தர்-

———————————————————————————-

293-பாவன-
உலகைத் தூய்மை யாக்கும் கங்கை முதலியவற்றுக்கும் அத் தூய்மை தம் தொடர்பால் உண்டாகும்படி இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

காற்றை வீசும்படி செய்பவர் –ஸ்ரீ சங்கரர் –

அரசர்கள் காப்பதற்கு காரணமாக இருப்பவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

—————————————————————-

294-அநல –
பல வகைகளால் அடியவர்க்கு அனுக்ரஹித்தும் அது போதாது என்று நினைப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அனம் எனப்படும் பிராணனை அலங்கரிக்கும் ஜீவாத்மாவே இருப்பவர் -அளவிட முடியாதவர் –ஸ்ரீ சங்கரர் –

தடுக்க முடியாதவர் -முக்ய பிராணனை  பக்தனாகக்  கொண்டவர் -உலகப் படைப்பு முதலியவகைகளில்
போதும் என்ற நினைவு இல்லாதவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

——————————————————————-

295-காமஹா –
தம் குணங்களில் ஈடுபட்டவர்க்குப் பிற விஷயங்களில் ஆசையைத் தவிர்ப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

மோஷத்தை விரும்பும் பக்தர்களுக்கு பிற விஷயங்களில் ஆசையைத் தவிர்ப்பவர் -விரோதிகளை அழிப்பவர் –ஸ்ரீ சங்கரர்-

காமத்தை அழிப்பவர் -நல்லோர்களின் ரோகங்களைப் போக்குபவர்-ஸ்ரீ சத்ய சந்தர்-

——————————————————————————–

296-காமக்ருத்-
அவரவர் விருப்பப்படி போகம் மோஷம் முதலியவற்றைத் தருபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சாதுக்கள் விரும்பியவற்றைக் கொடுப்பவர் -பிரத்யும்னனாகப் பிறந்த மன்மதனின் தந்தையே கண்ணபிரான் -ஸ்ரீ சங்கரர் –

பக்தர்கள் விரும்பியவற்றைக் கொடுப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

————————————————————————————–

297-காந்த –
தமது அழகு மென்மை முதலிய குணங்களால் யாவராலும் விரும்பப் படுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

மிகவும் அழகியவர் -ஸ்ரீ சங்கரர் –

பிரம்மாதிகளுக்கு சுகத்தைக் கொடுப்பவர் -அசுரர்களின் சுகத்தை அழிப்பவர் -ஸ்ரீ ராமாவதாரத்தில் அணை கட்டியவர்-ஸ்ரீ சத்ய சந்தர்-

————————————————————–

298-காம –
சீலம் ஔதார்யம் தயை முதலிய குணங்களாலும்  யாவராலும் விரும்பப் படுபவர் –
இதன் லவலேசம் உள்ளதால் மன்மதனும் -காமனும்  -உலகை மயக்குகிறான் -ஸ்ரீ பராசர பட்டர் –

புருஷார்த்தங்களை விரும்புபவர்களால் விரும்பப் பட்டவர் -ஸ்ரீ சங்கரர் –

ஜனங்களால் விரும்பப் படுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

————————————————————————

299-காமப்ரத –
தம்மை விரும்புபவர்க்கும் தாழ்ந்த பயன்களை விரும்புபவர்க்கும் அவரவர் விரும்பியபடி கொடுப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பக்தர்கள் விரும்பியவற்றை விசேஷமாகக் கொடுப்பவர்-ஸ்ரீ சங்கரர் –

பக்தர்கள் விரும்புவற்றை நன்கு கொடுப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

—————————————————————————-

300-பிரபு –
இக் குணங்களினால் அனைவருடைய மனங்களையும் கவரும் சக்தியுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

உயர்ந்தவராக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

உயர்ந்தவராக இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

—————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –