கால நேமி நிஹா சௌரிச் ஸூ ரஸ் ஸூ ர ஜநேச்வர
த்ரிலோகாத்மா த்ரிலோகேச கேசவ கேசி கேசிஹா ஹரி –69
காம தேவ காம பால காமி காந்த க்ருதாகம
அநிர்தேச்யவபுர் விஷ்ணுர் வீரோ அனந்தோ தனஞ்சய –70
ப்ரஹ்மண்யோ ப்ரஹ்மக்ருத் ப்ரஹ்மா ப்ரஹ்ம ப்ரஹ்ம விவர்த்தன
ப்ரஹ்ம வித் ப்ராம்மணோ ப்ரஹ்மீ ப்ரஹ்மஜ்ஞோ ப்ராஹ்மண ப்ரிய–71
மஹாக்ரமோ மஹாகர்மா மஹா தேஜா மஹோரக
மஹாக்ரதுர் மஹாயஜ்வா மஹாயஜ்ஞோ மஹாஹவி–72
ஸ்தவ்யஸ் ஸ்தவ ப்ரியஸ் ஸ்தோத்ரம் ஸ்துதஸ் ஸ்தோதா ரணப்ரிய
பூர்ண பூரயிதா புண்ய புன்யகீர்த்தி ரநாமய –73-
மநோஜவஸ் தீர்த்தகரோ வஸூ ரேதா வஸூப்ரத
வ ஸூப்ரதோ வா ஸூதேவோ வஸூர் வஸூமநா ஹவி -74-
———————————————————-
புண்ய ஷேத்ரங்கள் —644-660—17 திரு நாமங்கள்
சக்திபரம் ————661-696—36 திரு நாமங்கள்
ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் -697-786—90 திரு நாமங்கள்
—————————————————–
651-ஸூர ஜநேச்வர –
அவரே -ஸூ க்ரீவன் அனுமான் முதலிய சூர ஜனங்களுக்கு ஈஸ்வரர் -ஸ்ரீ பராசர பட்டர் –
சூரர்களான இந்திரன் முதலியவர்களுக்கும் ஈஸ்வரர் -ஸ்ரீ சங்கரர் –
சூர குலத்தில் உதித்தவர் -மற்றும் தமக்கு ஒரு ஈஸ்வரன் இல்லாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
—————————————————-
652-த்ரிலோகாத்மா –
மகத தேசத்தில் த்ரிலோக நாதன் என்று பிரசித்தமாக எழுந்து அருளி யுள்ளவர் –
பக்தர்களை அனுக்ரஹிக்க அடிக்கடி மூவுலகும் செல்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
மூன்று உலகங்களுக்கும் அந்தர்யாமியாக இருப்பவர் -மூ வுலகங்களும் தம்மைக் காட்டிலும் வேறு படாதவர் –ஸ்ரீ சங்கரர் –
மூ வுலகங்களுக்கும் உயிராக இருப்பவர் – -ஸ்ரீ சத்ய சந்தர் –
———————————————-
653-த்ரிலோகேச –
ப்ராக்ஜ்யோதிஷ புரத்தில் விஸ்வேஸ்வரன் என்ற திரு நாமத்துடன் எழுந்து அருளி யுள்ளவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
மூ வுலகங்களையும் தம் தம் கருமங்களில் ஈடுபடுத்துபவர் –ஸ்ரீ சங்கரர் –
மூ வுலகங்களுக்கும் ஈசன் – -ஸ்ரீ சத்ய சந்தர் –
——————————————————–
654-கேசவ –
மதுரா நகரத்திலும் வாரணாசியிலும் கேசவன் என்னும் திருநாமத்துடன் எழுந்து அருளி இருப்பவன் -ஸ்ரீ பராசர பட்டர் –
க-என்று பிரமனுக்கு பெயர் எல்லாப் பிராணிகளுக்கும் ஈசன் நான் -நாங்கள் இருவரும் உமது அம்சத்தில் யுண்டானவர்கள்-
ஆகையால் நீர் கேசவன் என்ற பெயருடையவன் -சிவன் சொல்வதாக ஹரி வம்சம் சொல்லும் –
சூர்யன் முதலியவர்களுடைய கிரணங்களுக்கு உரியவர் – க -அ-ஈச -எனப்படும் பிரம்மா -விஷ்ணு -சிவ சக்திகள்
மூன்றுக்கும் இருப்பிடமானவர் –ஸ்ரீ சங்கரர் –
வெள்ளை மற்றும் கருப்பு முடிகளை பூமியில் ஸ்ரீ பலராமன் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணன் ரூபத்தில் வைத்துக் கொண்டு இருந்தவர் –
ஸ்ரீ கிருஷ்ண கேச ரூபத்தால் அசுரர்களை அழிப்பவர் – -ஸ்ரீ சத்ய சந்தர் –
—————————————–
655-கேசிஹா –
கேசி என்னும் அசுரனை அழித்தவர் -என்று வியாசரே கூறியபடி கேசியை அழித்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
கேசி என்னும் அசுரனைக் கொன்றவர் –ஸ்ரீ சங்கரர் –
திரௌபதியின் கூந்தலை இழுத்தவனான துச்சாசனனை-பீமனைக் கொண்டு அழித்தவர் –
கேசி என்னும் அசுரனை அழித்தவர் – -ஸ்ரீ சத்ய சந்தர் –
—————————————
656-ஹரி –
கோவர்த்தன மலையில் ஹரி என்னும் திரு நாமத்துடன் எழுந்து அருளி இருப்பவர் -வீடுகளில் யாகம் செய்து கொடுக்கப்படும்
ஹவிர்பாகத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன் -என் நிறமும் உயர்ந்த பச்சை நிறம் –
ஆகையால் நான் ஹரி என்று சொல்லப் படுகிறேன் -மஹா பாரதம் -ஸ்ரீ பராசர பட்டர் –
சம்சாரத்தை அதன் காரணத்தோடு போக்குபவர் –ஸ்ரீ சங்கரர் –
பாவங்களைப் போக்குபவர் – -ஸ்ரீ சத்ய சந்தர் –
————————————————
657-காமதேவ-
எல்லோருக்கும் விரும்பியவற்றைக் கொடுப்பவராய் சங்கராலய ஷேத்ரத்தில் காமதேவன்
என்னும் பெயர் பூண்டு அப்சரஸ் ஸூக்களால் பூஜிக்கப் பட்டு விளங்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
நான்கு புருஷார்த்தங்களை விரும்புவர்களால் விரும்பப்படும் ஈஸ்வரர் –ஸ்ரீ சங்கரர் –
மன்மதனைப் போல் பிரகாசிப்பவர் – -ஸ்ரீ சத்ய சந்தர் –
——————————————————
658-காமபால –
அவரே தாம் கொடுத்த பலன்களைக் காப்பாற்றுபவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
விரும்பியவர்களின் விருப்பங்களைக் காப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
பக்தர்களின் ஆசைகளைக் காப்பவர் -நான்முகனால் அல்லது வாயுவினால் அடையப்படுபவர் –
மற்றும் ஜனங்களைக் காப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
——————————————————-
659-காமீ-
கொடுப்பதற்குக் குறைவற்ற பலன்கள் யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
விரும்பினவை எல்லாம் நிரம்பி இருப்பவர் -ஸ்ரீ சங்கரர்-
உலகைக் காத்தல் முதலியவற்றை விரும்புவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
——————————–
660-காந்த –
யாவராலும் விரும்பத் தக்கவர் –அதனாலேயே அப்சரஸ் ஸூக்களால் அர்ச்சிக்கப் படுபவர் –
திருநாமங்களின் அர்த்தங்களைக் கொண்டு அந்தந்த ஷேத்ரங்களை ஊஹித்துக் கொள்ள வேண்டும் – ஸ்ரீ பராசர பட்டர் –
அழகான உடல் உள்ளவர் -த்விபரார்த்தத்தின் முடிவில் பிரமனுக்கும் முடிவைச் செய்பவர் -ஸ்ரீ சங்கரர்-
மனத்தைக் கவரும் அழகுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
————————————————-
661-க்ருதாகம –
இனி சக்தீசாவதாரம் -நிர்மல மனம் உள்ளவர்களுக்கு அநேக மந்த்ரங்கள் அடங்கிய
சாஸ்த்ரங்களை வெளியிட்டவர் — ஸ்ரீ பராசர பட்டர் –
சுருதி ஸ்ம்ருதி முதலிய சாஸ்த்ரங்களை வெளியிட்டவர் –ஸ்ரீ சங்கரர்-
புராணங்கள் முதலிய ஆகமங்களை யுண்டாக்கியவர்-கர்மங்களால் அடைய முடியாதவர் –
ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் யமள அர்ஜூன மரங்களை அழித்தவர்-
பாரிஜாத மரத்தை பூமிக்குக் கொணர்ந்த ஸ்ரீ சத்யபாமா தேவியை யுடையவன்–ஸ்ரீ சத்ய சந்தர் –
———————————————
662-அநிர்தேச்யவபு-
அந்தந்த யுகங்களின் குணங்களை அபிவருத்தி செய்யும் பல ரூபங்களை யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
இன்னது இப்படிப்பட்டது என்று நிரூபிக்க முடியாத ரூபம் உள்ளவர் -ஸ்ரீசங்கரர் –
இப்படிப் பட்டது என்று வர்ணிக்க முடியாத திரு மேனி உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
——————————————–
663-விஷ்ணு –
ஸ்வரூபத்தினாலும் நடத்துவது முதலிய சக்தியினாலும் எல்லாவற்றையும் வியாபித்து இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
எல்லா வற்றையும் வியாபித்துள்ள மிக்க ஒளியையுடையவர் –ஸ்ரீசங்கரர் –
எங்கும் பரவியிருப்பவர் -எல்லையற்றவர் -என்றபடி -பலவகையாக விஷ்ணு சப்தம் விளக்கப் படும் -ஸ்ரீ சத்ய சந்தர் –
———————————————–
664-வீர –
தமது கட்டளையை எதிர்பார்த்து இருக்கும் கதை சக்கரம் மூலமாக விரைவில் நல்லோர்களை துன்புறுத்தும்
துஷ்டர்களை அழிப்பவர்-வீரமுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
கதி படைப்பு ஒளி இருப்பிடம் போஜனம் இவற்றை உடையவர் -ஸ்ரீ சங்கரர் –
தம்முடைய நினைவுக்கு ஏற்றபடி சுகம் உடையவர் -அல்லது சாமர்த்தியம் உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
——————————————–
665-அநந்த-
தேசம் காலம் வஸ்து இவற்றால் அளவுபடாதவர் -எப்பொழுதும் எங்கும் எல்லா வழிகளிலும் செயல்படுபவர் –
வஸ்து பரிச்சேதம் இல்லாதவர் என்று வஸ்துவிற்கும் அவருக்கும் பேதம் இல்லை என்ற பொருளில் இல்லை -ஸ்ரீ பராசர பட்டர் –
தேசம் காலம் வஸ்து இவற்றால் அளவுபடாதவர் –குணங்களுக்கு எல்லை இல்லாதவர் –
ஆதலால் அனந்தர் அழிவில்லாதவர் -ஸ்ரீ விஷ்ணு பிராணம் -ஸ்ரீ சங்கரர் –
அழிவற்றவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
————————————-
666-தனஞ்சய –
பொன் ரத்தினம் இவற்றையும் வெறுத்து பெறுவதற்கும் அனுபவிப்பதற்கும் மிக விரும்பத் தக்கவராக இருப்பவர் –
எல்லையற்ற குணம் செல்வம் யுடையவன் -ஸ்ரீ பராசர பட்டர் –
திக் விஜயம் செய்து பெரும் செல்வத்தை வென்ற அர்ஜூனனாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
செல்வத்தை வென்றவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
—————————————–
667-ப்ரஹ்மண்ய-
ப்ரஹ்மம் எனப்படும் சேதனங்களுக்கு இருப்பு சுகம் முதலிய எல்லாவற்றுக்கும் காரணமாக இருப்பவர் –
ப்ரஹ்மம் -பெரியன -எல்லாவற்றையும் அனுபவிக்கும் போக்தாவாகையால் சேதனங்களும் -அனுபவிக்கும் அசேதனங்களும் –
ப்ரஹ்மம் -எனப்பட்டன -ஸ்ரீ பராசர பட்டர் –
தவம் வேதம் சத்யம் ஞானம் ஆகிய இவற்றை அறிபவர் -ஸ்ரீ சங்கரர் –
பிரஹ்மண்ர்களுக்குப் பிரியமானவர் -முக்தர்களின் மகிழ்ச்சியைப் பெருக்குபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
———————————————————-
668-ப்ரஹ்மக்ருத் ப்ரஹ்மா-
பிரம்மாவும் எல்லா விதங்களாலும் தம்மால் நியமிக்கும்படி நடக்கும்படி செய்பவர் —
பிரக்ருதியினால் யுண்டாகும் மஹத் அஹங்காரம் உலகைப் படைப்பவர்- ஸ்ரீ பராசர பட்டர் –
ப்ரஹ்மக்ருத் -தவம் முதலியவற்றை ஏற்படுத்துபவர் -பிரம்மா -பிரமனாக உலகைப் படைப்பவர் –
இரண்டு திரு நாமங்கள் -ஸ்ரீ சங்கரர் –
ஆலோசனையுடன் கூடிய தவம் புரிபவர் -பக்தர்களைப் பெருக்குபவர் -இரண்டு திருநாமங்கள் —
அப்ரஹ்மக்ருத்-என்று பிரித்து -ஷத்ரியர்களை அழித்த பரசுராமர் –
நிரீச்வரவாதிகளை அழித்தவர் -என்றுமாம் -ஸ்ரீ சத்ய சந்தர்
———————————————————
669-ப்ரஹ்ம-
சேதனர்கள் எல்லாரையும் ஒப்புயர்வற்ற தமது திருக் கல்யாண குணங்களினால் மேன்மேலும் அபிவருத்தி செய்து தமது
ஸ்வரூபமும் குணங்களும் விபவங்களும் மேலும் அபிவ்ருத்தியாகி நிரம்பியிருப்பதும்
ஸ்வ தந்த்ரமானதும் வேதாந்தங்களில் அறியப் படுவதுமாகிய பரப்ரஹ்மம் -ஸ்ரீ பராசார பட்டர் –
பெரிதாக இருப்பதாலும் பெருக்கச் செய்வதாலும் ப்ரஹ்மம் எனப்படுபவர் -ஸ்ரீ சங்கரர் –
அனைத்தும் பூரணமாக நிறைந்தவர் -நிறைப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-
———————————————————-
670-ப்ரஹ்ம விவர்த்தன –
தவம் முதலிய தர்மங்களை வளர்ப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
தவம் முதலியவற்றை விருத்தி செய்பவர் -ஸ்ரீ சங்கரர் –
வியாச ரூபத்தினால் வேதத்தைப் பெருக்கியவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
———————————————————–
671-ப்ரஹ்மவித்-
முடிவில்லாத வேதங்களின் முடிவை அறிந்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
வேதத்தையும் அதன் பொருளையும் உள்ளபடி அறிந்தவர் -ஸ்ரீ சங்கரர் –
வேதங்களை அறிந்தவர் -தம் ஸ்வரூபத்தை அறிந்தவர் -ஸ்ரீ கீதையில் ப்ரஹ்ம சப்தம் ஸ்ரீ லஷ்மியை குறிப்பதால்
ஸ்ரீ லஷ்மியை அடைந்தவர் என்றுமாம் -ஸ்ரீ சத்ய சந்தர் –
————————————————————
672-ப்ரஹ்மண-
வேதார்த்தத்தை நிலை நாட்டுவதற்காக பிராம்மண குலத்தில் தத்தாத்ரேயராக திருவவதரித்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
பிராம்மண ரூபியாக உலகு அனைத்திற்கும் வேதத்தை இறைவசனம் செய்வித்தவர் -ஸ்ரீ சங்கரர் –
வேதங்களால் அறியப் பெறுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
———————————————-
673-ப்ரஹ்மீ-
ப்ரஹ்மம் எனப்படும் பிரமாண பிரமேயங்கள் அனைத்தையும் யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
ப்ரஹ்மம் என்று கூறப்பட்டவைகளை தமக்கு உட் பட்டவையாக யுடையவர் – -ஸ்ரீ சங்கரர் –
ஜீவர்களை யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –
————————————————–
674-ப்ரஹ்மஜ்ஞ-
வேதங்களை அவற்றின் உட்பொருளுடன் அறிபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
வேதங்களைத் தம் ஸ்வரூபமாக அறிந்தவர் -ஸ்ரீ சங்கரர் –
அறிவாளியான பிரம்மாவாக இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
——————————————————-
675-ப்ரஹ்மண ப்ரிய –
வேத அதிகாரிகளான ப்ராஹ்மணர்களைத் தமக்கு அன்பர்களாக யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
பிராஹ்மணர்களுக்குப் பிரியமானவர் -ப்ராஹ்மணர்களிடம் பிரியம் யுள்ளவர் -ஸ்ரீ சங்கரர் –
பிரஹ்மத்தை அறிந்த ஞானிகளுக்குப் பிரியமானவர் -முக்தர்களுக்கு பிரியமானவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
——————————————————————-
676-மஹாக்ரம-
மிக்க ஆழமான உலக வாழ்க்கை என்னும் பாதாளத்தில் அமிழ்ந்து கிடக்கும் சேதனர் மிக உயர்ந்தவரான தம்மிடத்தில்
சேர்வதற்குப் பற்பல படிகளை யுடையவர் –
தாய் முலையூட்டி பால் புகட்டி உகவு கொடுப்பது போலே விலக்காமை-முதலில் யுண்டாக்கி
தம்மை நோக்கி பின்பற்றி ஞானம் பக்தி வைராக்கியம் மன யுறுதி கொண்டு உயர்த்துபவர் – ஸ்ரீ பராசர பட்டர் –
மிகப் பெரிய காலடிகளை யுடையவர்-ஸ்ரீ சங்கரர் –
அக்னிமீளே -போன்ற வேத க்ரமத்தைத் தம் புத்தியில் யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
—————————————————————————
679-மஹோரக-
தாம் மிகப் பெரியவராக இருந்தும் மிக்க அற்பர்களுக்கு அந்தர்யாமியாக இதயத்தினுள் பிரவேசித்து இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –
மகா சர்ப்பமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
ஆதிசேஷன் காளியன் முதலிய பாம்புகளை தமக்கு அடியவர்களாக யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
———————————————————————–
680-மஹாக்ரது-
சிறந்த எளிய ஆராதனங்களை யுடையவர் -எல்லா செயல்களும் அவனுக்கே அர்ப்பணம் என்பதால்
அனைத்தும் இனிய சுவை யுள்ளன என்பதால் ஆராதனைக்கு எளியவன் -ஸ்ரீ பராசர பட்டர் –
சிறந்த க்ரதுவாக -அஸ்வமேத யாகமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
சிறந்த ஞான ரூபமான க்ரதுவாக இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் —
—————————————————————————–
681-மஹா யஜ்வா
பிற தேவதைகளைப் பூஜிப்பவர்களைக் காட்டிலும் தம்மைப் பூஜிப்பவர்கள் சிறந்தவர்களாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
யாகமுரையை உலகிற்கு அறிவிப்பதற்காக சிறந்த யாகம் செய்பவராக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
பிரம்மா முதலியவர்களால் தம்மைக் குறித்து யாகம் செய்யப் படுபவர் -ஸ்ரீ சத்யா சந்தர் –
——————————————————————————–
682-மஹா யஜ்ஞ-
தம்மை ஆராதிப்பது அஷ்டாங்க பூஜை முதலியவற்றைக் காட்டிலும் மேம்பட்டதாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
சிரஞ்ச ஜப யஜ்ஞ்மாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
அஸ்வ மேதம் முதலிய சிறந்த யஜ்ஞங்கள் தம்மைக் குறித்துச் செய்யப்படுபவர் —
மஹா -அயஜ்ஞ-சுபத்தை உண்டு பண்ணும் விதியைத் தெரிந்த மஹான்-என்றும்
அமஹா-அயஜ்ஞ – என்ற பாடத்தில் நோய்களை அளிக்கக் கூடியவர் மற்றும்
சுபத்தை உண்டு பண்ணும் விதியைத் தெரிந்தவர் – ஸ்ரீ சத்ய சந்தர் –
————————————————————
683-மஹா ஹவி –
ஹிம்சை யற்ற சாத்விக உபநிஷத்துக்களை ஹவிஸ்ஸாக யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
தம்மிடம் ஹோமம் செய்யப்பட உலகம் என்னும் பெரிய ஹவிஸ்ஸாக இருப்பவர் —
மஹா க்ரதுக்கள் -680-மஹா யஜ்வாக்கள் -681-மஹா யஜ்ஞங்கள் -682-மஹா ஹவிச்சூக்கள் -683- ஆகியவற்றால்
ஆராதிக்கப் படுபவர் என்று பஹூவ்ரீஹி சமாசத்திலும் அன்மொழித் தொகையிலும் பொருள் கொள்ளலாம் -ஸ்ரீ சங்கரர் –
உத்சவங்களில் கருடனை வாகனமாக கொண்டு இருப்பவர் -சிறந்த ஹவிஸ்ஸாக இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
——————————————————————————-
684-ஸ்தவ்ய-
வாக்கினால் துதி -துதிக்கப் படுவதிற்கு உரியவராக இருப்பவர் -பகவான் ஒருவரே- மங்களம் -நித்யம் –
எல்லையற்ற -தோஷங்கள் அற்ற -கல்யாண குணங்களை யுடையவர்
ஆகையால் அவர் ஒருவரே ஆயிரம் திரு நாமங்களால் துதிக்கப் பட உரியவர் –
பிற தெய்வங்கள் எதிர் தட்டு -ஆகையால் துதிக்க உரியர் அல்லர் – ஸ்ரீ பராசர பட்டர் –
எல்லோராலும் துதிக்கப் பட்டு யாரையும் தாம் துதிக்காதவர் -ஸ்ரீ சங்கரர் –
துதிக்கப் படுவதற்கு உரியவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-
—————————————————————————
685-ஸ்தவப்ரிய-
எவராலும் எந்த மொழியாலும் எவ்வகையாலும் செய்யப்படும் துதிகளை சொற் பிழை பொருட் பிழை இருந்தாலும்
அன்புடன் அங்கீ கரிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
அதனாலேயே துதியில் விருப்பமுள்ளவர் -ஸ்ரீ சங்கரர் –
ஸ்துதியில் விருப்பம் உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
———————————————————————
686-ஸ்தோத்ரம் –
தம்மைத் துதிப்பதும் தம் அனுக்ரஹத்தாலேயே ஆகையினால் தாமே ஸ்தோத்ரமாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
குண சங்கீர்த்தனமான ஸ்தோத்ரமும் தானேயாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
துதிக்கப் படுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
—————————————————————————
687-ஸ்துத-
அநந்தன்-கருடன் முதலிய நித்ய சூரிகளாலும் பிரமன் முதலிய தேவர்களாலும் நம் போன்ற மனிதர்களாலும்
அவரவர் தங்கள் விருப்பம் நிறைவேற எப்போதும் துதிக்கப் பெறுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
ஸ்துதி -துதிக்கும் செய்கையும் தாமேயாக இருப்பவர் -ஸ்துத -என்ற பாடத்தில் துதிக்குத் தாமே விஷயமாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
ஜீவன் செய்யும் ஸ்தோத்ரத்திற்கு கட்டளை இடுபவர் -ஸ்துதி -என்று பாதாம் -ஸ்ரீ சத்ய சந்தர் –
———————————————————————————–
688-ஸ்தோதா-
தம்மைத் துதிப்பவரை தாம் துதிக்கும் தன்மை உள்ளவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
எல்லோருக்கும் ஆத்மா ஆகையால் துதிப்பவரும் தாமேயாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
ஸ்தோத்ரத்தை செய்விப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
—————————————————————————————-
689-ரணப்ரிய –
ஸ்ரீ மத் ராமாயணம் மஹா பாரதம் முதலியவற்றால் கூறியபடி தம் அன்பர்களுக்காக யுத்தம் முதலியன செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
உலகைக் காப்பதற்காக பஞ்ச ஆயுதங்களை தரிப்பதால் யுத்தத்தில் விருப்பம் யுள்ளவர் -ஸ்ரீ சங்கரர் –
யுத்தத்தில் விருப்பம் யுள்ளவர் -வேதாத்மகமான சப்தங்களில் பிரியம் உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
—————————————————————-
690-பூர்ண –
அதிகப் பொருளினாலும் உடல் சிரமத்தினாலும் செய்யப்படும் ஆராதனங்கள் தேவைப்படாமல்
ஸ்தோத்ரத்தினாலேயே வசப்ப்படும்படி எல்லாம் நிரம்பி இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
எல்லாப் பலன்களும் எல்லா சக்திகளும் நிறைந்தவர் -ஸ்ரீ சங்கரர் –
குணங்களால் நிறைந்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
—————————————————————
691-பூரயிதா –
தாம் பூர்ணராயின் துதிகளை எதிர்பார்ப்பது ஏன் என்னில் தம்மைத் துதிக்க வேண்டும் என்று விரும்பும் அடியவர்களின்
விருப்பத்தை நிறைவேற்றுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் —
எல்லாம் நிறைந்தவராக இருப்பதோடு அல்லாமல் பக்தர்களுக்காக எல்லா செல்வங்களையும் நிறைப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
அவரவர் தகுதிக்குத் தகுந்தவாறு பூர்த்தி செய்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
——————————————————
692-புண்ய –
பாவிகளும் தம்மைத் துதிப்பதற்கு உரியவராகும்படி பாவங்களைப் போக்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
தம்மை நினைத்த மாத்ரத்திலே பாவங்களைப் போக்குபவர் -ஸ்ரீ சங்கரர் –
புனிதமாக ஆக்குபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
—————————————————–
693-புண்ய கீர்த்தி –
தமது திரு நாம சங்கீர்த்தனம் செய்பவருடைய பாவங்களைப் போக்குபவர் –
இதனாலே அவரைப் பற்றிய ஸூக்தங்கள் பாவனமானவை என்று வேதம் புகழும் -ஸ்ரீ பராசர பட்டர் –
மனிதர்களுக்குப் புண்ணியம் தரும் புகழ் உள்ளவர் -ஸ்ரீ சங்கரர் –
புண்ணியத்தை உண்டாக்கும் புகழ் உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
——————————————————————–
694-அநாமய –
தன்னோடு தொடர்பு உடையவர்களுக்கு சம்சாரம் ஆகிய பெரும் பிணியைப் போக்குபவர் –
பகவத் அனுபவத் தடை என்பதால் உலக வாழ்க்கை வியாதி அன்றோ -ஸ்ரீ பராசர பட்டர் –
கர்மங்களினால் உண்டாகும் மன நோய்களினாலும் வெளி நோய்களாலும் பீடிக்கப் படாதவர் -ஸ்ரீ சங்கரர் –
நோயற்றவர் -முக்கியப் பிராணனால் அடைய முடிந்தததை கிடைக்கச் செய்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
————————————————————————-
695-மநோஜவ-
மேற் சொல்லியவற்றை விரைவாகச் செய்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
எங்கும் பரவியிருப்பதால் மனத்தின் வேகத்தை ஒத்த வேகமுடையவர் -ஸ்ரீ சங்கரர்-
மனத்திற்கு வேகத்தை அளிப்பவர் -ஸ்ரீ சத்ய சங்கரர் –
——————————————————————————
696-தீர்த்தகர –
தம்மைப் போலவே நினைப்பது சொல்வது முதலிய செய்தவுடன் எல்லாப் பாவங்களையும் போக்கும்
கங்கை புஷ்கரம் முதலிய தீர்த்தங்களை உண்டாக்கியவர் -சுருதி ஸ்ம்ருதி முதலிய சத் சம்ப்ரதாயங்களை ஏற்படுத்தியவர் –
கடல் போலே இறங்க முடியாத தம்மிடம் பக்தர்கள் இறங்கும்படி படிகளை ஏற்படுத்தியவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
பதினான்கு வித்யைகளையும் -அசுரர்களை வஞ்சிக்க வேதத்திற்கு புறம்பான வித்யைகளையும் உண்டாக்கி வெளியிட்டவர் –
ஹயக்ரீவ ரூபியாக மது கைடவர்களைக் கொன்று பிரமனுக்கு உபதேசித்து -அசுரர்களை வஞ்சிக்க வேதத்திற்கு
புறம்பான மதங்களையும் உபதேசித்தவர் -ஸ்ரீ சங்கரர் –
சாஸ்த்ரங்களை கையில் யுடையவர் -சாஸ்த்ரங்களை படைப்பவர் –ஸ்ரீ சத்ய சங்கரர் –
———————————————————
697-வஸூ ரேதா-
ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் -தம் திவ்ய தேஜச்சையே திரு அவதாரத்திற்குக் காரணமாக யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
ஸூ வர்ணமாகிய வீர்யத்தை யுடையவர் -ஸ்ரீ சங்கரர் –
தண்ணீரில் ஒளியை யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
——————————————————-
698-வஸூ ப்ரத-
சிறந்த நிதியாகிய தம்மை தேவகிக்கும் வஸூ தேவருக்கும் கொடுத்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
செல்வத்தை மிகுதியாகக் கொடுப்பவர் -குபேரனுக்கும் செல்வம் கொடுப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
செல்வம் ரத்தினங்கள் இவற்றை பக்தர்களுக்கு மிகுதியாகக் கொடுப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
——————————————————————————–
699-வஸூ ப்ரத –
உலகிற்குத் தந்தை யாகிய தமக்கும் பெற்றோர்கள் ஆகும்படி பெரிய பெருமையை
தேவகி வஸூ தேவர்களுக்கு அளித்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
பக்தர்களுக்கு உயார்ந்த பலனாகிய மோஷத்தை அளிப்பவர்
தேவர்களின் விரோதிகளான அசுரர்களின் செல்வங்களை அழிப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
அர்ஜூனனுக்காக வஸூ அவதாரம் ஆகிய பீஷ்மனை நன்கு அலஷ்யம் செய்தவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –
———————————————————————————-
700-வாஸூ தேவ –
வஸூ தேவருக்குப் புத்திரர் –
வஸூ தேவருக்குப் புத்திரர் –
வஸூக்களில் சிறந்த பீஷ்மருக்குத் தலைவர் -தேவர்களால் -அல்லது ஞானம் முதலியவற்றால் பிரகாசிப்பவர் என்ற
பொருள் கொண்ட வஸூ தேவ சப்தத்தினால் சொல்லப்படும் ப்ரஹ்ம சரீரத்தினால் அறியப்படுபவர் –
ப்ரஹ்ம சரீரத்துக்கு ஆதாரமாக இருப்பவர் – -ஸ்ரீ சத்ய சந்தர் –
—————————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply