ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத்ரம் -251-300—மும்மத விளக்கம் —

அசங்க்யேயோ அப்ரமேயாத்மா விசிஷ்ஸ் சிஷ்டக்ருச் சுசி
சித்தார்த்தஸ் சித்த சங்கல்பஸ் சித்திதஸ் சித்தி சாதன –27-
வ்ருஷாஹீ வ்ருஷபோ விஷ்ணுர் வ்ருஷபர்வா வ்ருஷோதர
வர்த்த நோ வர்த்தமா நச்ச விவிக்தஸ் ஸ்ருதிசாகர –28
ஸூ புஜோ துர்த்தரோ வாக்மீ மஹேந்த்ரோ வஸூதோ வஸூ
நைகரூபோ ப்ரருஹத்ரூபஸ் சிபிவிஷ்ட ப்ரகாசன–29
ஒஜச்தேஜோ த்யுதிதர பிரகாசாத்மா பிரதாபன
ரித்தஸ்  ஸபஷ்டாஷரோ மந்த்ரஸ் ந்த்ராம்ஸூர் பாஸ்கரத்யுதி–30
அம்ருதாம் ஸூத்பவோ பாநுஸ் சசபிந்துஸ் ஸூ ரேச்வர
ஔஷதம் ஜகதஸ் சேதுஸ் சத்ய தர்ம பராக்ரம –31
பூத பவ்ய பவன்னாத பவன பாவநோ அநல
காமகா காமக்ருத் காந்த காம காமப்ரத ப்ரபு–32-

———————————————————————

நாராயணன் ———————247–271—–25 திரு நாமங்கள் –
விஸ்வரூபன் ———————272–300—–29 திரு நாமங்கள் –

—————————————————————————

251-சிஷ்டக்ருத் –
தமது சம்பந்தம் பெற்றவர்களைத் தம்மிடம் சேரத்தக்க கல்யாண குணங்கள் உள்ளவர்கள் ஆக்குபவராய் -ஸ்ரீ பராசர பட்டர் –

கட்டளை இடுபவர் -நல்லோர்களைக் காப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

திறமை உள்ளவர்கள் எல்லாரும் கூடிச் செய்ததை முடிக்க முடியாத போது அதை முழுமை செய்து முடிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

————————————————————————————-

252-ஸூசி –
தமக்குத் தாமே தூய்மை பெற்றவர் -சிஷ்டக்ருத் ஸூ சி -ஒரே திரு நாமம் -ஸ்ரீ பராசர பட்டர் –

மாயையாகிய குற்றம் அற்றவர் –ஸ்ரீ சங்கரர் –

தூய்மையானவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

————————————————————————————

253-சித்தார்த்த –
வேண்டியவை தமக்குத் தாமே அடைந்து இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அடைய வேண்டியவை எல்லாம் அடைந்து இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

அடியவர் விருப்பங்களை   வழங்க ஆயத்தமாக இருப்பவர் -சித்த புருஷர்களுக்குச் செல்வமாக இருப்பவர் –
அயோக்யர்களின் அழிவுக்கு காரணமானவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

————————————————————————————–

254-சித்த சங்கல்ப –
நினைத்தவை நினைத்த மாத்திரத்தில் அடைந்து இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தம் சங்கல்பங்கள் நிறைவேறப் பெற்றவர் –ஸ்ரீ சங்கரர் –

அடியவர் விருப்பங்களைச் செயல்படுத்த முனைபவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

———————————————————————–

255-சித்தித-
அணிமா கரிமா முதலிய அஷ்ட சித்திகளைத் தருபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அவரவர் தகுதிப்படி கேட்ட பலன்களைத் தருபவர் –ஸ்ரீ சங்கரர் –

தகுதி யுள்ளவர்களுக்கு சித்தியைத் தருபவர் -அயோக்யர்களுக்கு சித்தியைத் தடுப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

—————————————————————————–

256-சித்தி சாதன-
தம்மை உபாசிப்பதும் பலன் போல் ஸூகமாகத் தோன்றும்படி இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சித்திகளை நிறைவேற்றுபவர் –ஸ்ரீ சங்கரர் –

மோஷ ரூபமான பலனை சாதிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

—————————————————————————–

257-வ்ருஷாஹீ –
தம்மை முதன் முதலில் அடையும்  தினமே எல்லா மங்களங்களுக்கும் வித்திடும் நாள் போலே இருப்பதால் அந்த ஆரம்ப தினம்
சிறப்பாக இருக்கப் பெற்றவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பகல் போலே பிரகாசிக்கும் தர்மங்களை உடையவர் -த்வாதசாஹம் முதலிய யஜ்ஞ  விசேஷமாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

தர்மத்தின் மூலமாகப் பரவி இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

———————————————————————

258-வ்ருஷப-
சம்சாரத் தீயினால் தகிக்கப் பட்டுத் தம்மை  வந்து அடைந்தவர் மீது அமுதமன்ன அருளைப் பொழிபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பக்தர்கள் விரும்பியவற்றை வர்ஷிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

அருளைப் போல்பவர் -தர்மத்தால் பிரகாசிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

———————————————————————————–

259-விஷ்ணு –
அப்படி அருளைப் பெற்றவர்களை விட்டு நீங்காதவர் -கடாஷத்தைப் பொழிந்ததும் மற்றும் பல உபகாரங்கள் செய்தும்
தமது உயர்வையும் தாழ்வையும் பாராமல் என்றும் அவர்களை விட்டுப் பிரியாமல் பரவி இருப்பவர் –
தார்க்கிகர்களின் வியாப்தியானது இங்கே கருதப்படுகிறது -ஸ்ரீ பராசர பட்டர் –

உலகங்களை வியாபித்தவர் –ஸ்ரீ சங்கரர் –

நதிகள் பாயும்படி செய்பவர் -காண முடியாதவர் -அறிய முடியாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

——————————————————————–

260-வ்ருஷ பர்வா –
தம்மை அடைவதற்கு வர்ணாஸ்ரம தர்மங்களைப் படிகளாக யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
தர்ம ரூபமான படிகளை யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –
புண்ய சாதனங்களான அமாவாஸ்யை முதலிய பர்வ தினங்களுக்கு  யஜமானர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

——————————————————————

261-வ்ருஷோதர –
அடியவர் இடும் எளிய உணவையும் ஏற்பதனாலும்-பிரளயத்தில் துன்புற்றவர்களை வைத்துக் காப்பதனாலும்
தரும மயமான வயிறு யுள்ளவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

பிரஜைகளை வர்ஷிக்கும் -சிருஷ்டிக்கும் -வயிறு யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

திரி விக்ரமாவதாரத்தில் கங்கை  நீரை பிரம்மாண்டத்தில் உள்ளவர்களுக்குத் தந்தவர் -புண்ணிய  தீர்த்ததால் மகிழ்பவர்-அருளைப் பொழிபவர் –
மற்றும் தோஷங்களுக்குத் தொலைவில் இருப்பவர் – -ஸ்ரீ சத்ய சந்தர்-

——————————————————-

262-வர்த்தந-
அவர்களைத் தாய் போல் வயிற்றில் வைத்து வளர்ப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

அனைத்தையும் விருத்தி செய்பவர் -வளர்ப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

தன்னைச் சார்ந்தவரை வளரச் செய்பவர் -உயர்ந்த செல்வத்தை யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

———————————————————————–

263-வர்த்தமாந-
அவர்களை வளர்ப்பதனாலேயே தாமும் வளர்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

உலக வடிவாக விருத்தி அடைபவர் –ஸ்ரீ சங்கரர் –

நாடோறும் விருத்தி ஆக்குபவர் – அல்லது இவ்வாறு அளவிட முடியாத சம்ருத்தியை யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

———————————————————————

264-விவிக்த –
தமக்கே உரிய சிறந்த சரித்ரங்களை உடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

உலகவடிவாக இருந்தாலும் தனித்து நிற்பவர் –ஸ்ரீ சங்கரர் –

உலகைக் காட்டிலும் வேறுபட்டவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

————————————————————————-

265-ஸ்ருதி சாகர –
நதிகளுக்கு கடல் போலே இக்குணங்களை உரைக்கும் ஸ்ருதிகளுக்கு முடிவான இடமாக இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

வேதங்களுக்குக்   கடல் போலே இருப்பிடமானவர் –ஸ்ரீ சங்கரர் –

வேதங்களைக் கொடுப்பவர் -வேதங்களைத் தம்மிடம் வைத்துக் கொள்பவர் -வேதங்கள் ஆகிற கடலை வெளியிட்டவர் -வேதக்கடல்
மற்றும் கோவர்த்தன மலை முதலியன மூலம் மகிழ்பவர்–ஸ்ரீ சத்ய சந்தர்-

—————————————————————————-

266-ஸூபுஜ-
சரணம் அடைந்தவர்களின் பாரத்தைத் தாங்குவதால் விளங்கும் கைகள் யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

உலகைக் காக்கும் அழகிய புஜமுள்ளவர்–ஸ்ரீ சங்கரர் –

அழகிய தோள்கள் உள்ளவர் -இன்பத்தை அனுபவிக்கும்படி செய்பவர்–ஸ்ரீ சத்ய சந்தர்-

——————————————————————

267-துர்த்தர-
இச் சிறந்த கை வன்மையினால் -பிரளய சமுத்ரம் போல் வேகம் உடைமையினால் பிறர் சக்திகள் மணல் அணைகள்
போலத் தடுக்க மாட்டாமல் உடைந்து போம்படி இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

மோஷத்தை விரும்புகிறவர்கள் தியானிக்கும் போது மனத்தில் நிறுத்துவதற்கு அரிதாக இருப்பவர் –
பூமி முதலிய எல்லாவற்றையும் தாங்குகின்ற தம்மைத் தாங்குபவர் இல்லாதவர் –ஸ்ரீ சங்கரர் –

பிறரால் தாங்க முடியாதவராக இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

————————————————————–

268-வாக்மீ-
சிறந்த வாக்கை யுடையவர் -சிறப்பாவது வேதத்தில் கூறப் பட்டதாகவும் வெற்றியை யுடையதாகவும் இனிமையாகவும்
கம்பீரமாகவும் பிரியமாகவும் ஹிதமாகவும் இருப்பதாகும் –ஸ்ரீ பராசர பட்டர் –

வேத ரூபமான சிறந்த வாக்கை உடையவர் –ஸ்ரீ சங்கரர் –

வேத ரூபமான சிறந்த வாகை யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

———————————————————————-

269-மஹேந்த்ர-
யாவராலும் கொண்டாடப் படும் பரமேச்வரத் தன்மை யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

உயர்ந்த இந்திரர் ஈச்வரர்களுக்கும் ஈஸ்வரர் –ஸ்ரீ சங்கரர் –

விரும்பியவற்றைக் கொடுக்கும் மேன்மை யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

————————————————————————-

270-வஸூத-
தடையற்ற பெரும் செல்வம் இருந்தபோதும் பொருளை விரும்பும் சிறியோர்க்கும் அப் பொருளைக் கொடுப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

செல்வத்தைக் கொடுப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

ஜனங்களை  அவரவர்க்கு உரிய  இடங்களில் வைப்பவர் -தம் ஸ்வரூபத்தை மறைப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

———————————————————————–

271-வஸூ –
உயர்ந்தவர்களுக்குத் தாமே செல்வமாக இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

தம் ஸ்வரூபத்தை மாயையினால் மறைப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

எங்கும் வசிப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

————————————————————–

272-நைகரூப –
பலவகையினருக்காகப் பல உருவங்கள் கொள்பவர் –
இனி கீழே கூறப் பட்டதற்கு ஏற்ப எம்பெருமானுடைய விஸ்வரூபம் கூறப்படுகிறது –ஸ்ரீ பராசர பட்டர் –

ஒரே ரூபம் இல்லாதவர் -அநேக ரூபம் யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

அநேக உருவங்கள் உள்ளவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-

—————————————————————————

273-ப்ருஹத்ரூப –
அவ் வுருவங்கள் ஒவ்வொன்றும் எல்லாத் திசைகளையும் மேலுலகங்களையும் -இடை வெளியையும்
வியாபிக்கும்படி பெரியவராய் இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

பூமியைத் தாங்கும் பெரிய வராஹம் உள்ளவர் –ஸ்ரீ சங்கரர் –

பெரிய உருவம் உள்ளவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

——————————————————————————-

274-சிபிவிஷ்ட –
கிரணங்களுள் பிரவேசித்து வியாபிப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

யாக பசுக்கள் இடத்தில் யாக ரூபியாக இருப்பவர் -கிரணங்களுக்குள் இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

மறக்கட்டைக்குள் அக்னியாய் இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

————————————————————————-

275-பிரகாசந-
இத் திவ்ய ரூபத்தைக் காணக் கருதும் அர்ச்சுனன் முதலியோர்க்கு காட்டுபவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாவற்றையும் பிரகாசிக்கச் செய்பவர் –ஸ்ரீ சங்கரர் –

பிரகாசப்படுத்துபவர் -சுகத்தை நன்கு அனுபவிப்பவர் -சூரியன் முதலியோர்க்கு பிரகாசத்தைக் கொடுப்பவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

—————————————————————————————————-

276-ஓஜஸ் தேஜோத் யுதிதர –
பலம் பராக்கிரமம் கீர்த்தி ஒளி ஆகியவற்றை யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

பலம் பராக்கிரமம் ஒளி ஆகியவற்றை யுடையவர் -ஓஜ-தேஜ இரண்டு திருநாமங்களாக கொண்டு ஞானத்தின்
அடையாளமான ஒளியைத் தரிப்பவர் -ஆதலால் த்யுதி  தரர் –ஸ்ரீ சங்கரர் –

பராக்கிரமம் பிரதாபம் பிரகாசம் ஆகியவற்றை யுடையவர்-ஸ்ரீ சத்ய சந்தர்-

———————————————————————–

277-பிரகாசாத்மா –
மூடர்களுக்கும் வெளிப்படையாகத் தெரியும் சிறந்த பிரபாவம் உடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

பிரகாசமான ஸ்வரூபம் யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

நன்றாக சுகத்தை அனுபவிக்கும் ஆத்மாவாக இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

———————————————————

278-பிரதாபந-
எல்லாவற்றையும் தபிக்கும்படி செய்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

சூரியன் முதலியவற்றால் தகிக்கும்படி செய்பவர் –ஸ்ரீ சங்கரர் –

நன்கு பரவி இருப்பவர் -ஜலத்தைத் தூண்டுபவர் -சூரியன் முதலானோரில் நின்று  நன்கு தஹிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

————————————————————————

279-ருத்த –
பருவ காலங்களில் கரை புரளும் கடல் போல  எப்போதும் நிரம்பி இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

தர்மம் ஞானம் வைராக்யம் முதலிய குணங்கள் நிரம்பியவர் –ஸ்ரீ சங்கரர் –

இயற்கையாக முழுமையானவர் –
ருத்தஸ் பஷ்டாஷர-என்ற பாடத்தில் ஓம் நமோ நாராயணாய -எட்டு அக்ஷரங்களை உடையவர் -என்றுமாம் –  ஸ்ரீ சத்ய சந்தர்-

————————————————————————

280-ஸ்பஷ்டாஷர-
தமது பெருமையைத் தெளிவாகக் கூறும் வேத அஷரங்களை வெளியிட்டவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

ஓங்காரம் என்னும் அஷரத்தினால் வெளிப்படும் மகிமை உள்ளவர் –ஸ்ரீ சங்கரர் –

ஸ்பஷ்டமான வேத சாஸ்திர எழுத்துக்களால் அறியப்படுபவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

—————————————————————————————-

281-மந்த்ர-
தம்மை த்யானம் செய்பவர்களைக் காப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

ருக் யஜூஸ் சாம வேத மந்த்ர ரூபமாய் இருப்பவர் -மந்தரத்தால் தெரிவிக்கப் படுபவர் –ஸ்ரீ சங்கரர் –

அறிவைத் தந்து காப்பவர் -தம்மை மனநம் செய்யும்படி செய்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

————————————————————————————

282-சந்த்ராம் ஸூ –
த்யானிப்பவர்களுக்கு களைப்பை நீக்கி செழிப்பை யுண்டாக்குவதால் சந்தரன் போன்ற ஒளி யுள்ளவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சம்சார தாபத்தினால் வருந்தியவர்க்கு சந்திர கிரணம் போல் மகிழ்ச்சி அளிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

சந்த்ரனுக்கு ஒளியை  அளிப்பவர் -சந்திர கிரணம் போலே குளிர்ச்சி தருபவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

—————————————————————————————–

283-பாஸ்கரத் யுதி-
பகைவரை விரட்டும் பெருமை யுள்ளவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சூரியனது ஒளியைப் போலே ஒளி யுள்ளவர் –ஸ்ரீ சங்கரர் –

சூரியனுக்கு ஒளியை அளிப்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

————————————————————-

284-அம்ருதாம் ஸூத்பவ-
அமுதக் கிரணங்களை யுடைய சந்திரனும் தம் மனத்தில்   தோன்றப் பெற்றவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பாற்கடல் கடைந்த போது அமுதக் கிரணமுடைய சந்தரன் தோன்றக் காரணம் ஆனவர் –ஸ்ரீ சங்கரர் –

அமுத கிரணங்களை யுடைய சந்திரனுக்குக் காரணம் ஆனவர் -தன்வந்தரி ரூபத்தில் அமுதக் கிரணங்களை  யுடையவர் -மற்றும்
உலகில் இருந்து மேம்பட்டவர் அல்லது ருத்ரன் இந்திரன் முதலானோரைக் காட்டிலும் மேம்பட்டவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

—————————————————————————–

285-பாநு –
மிக்க ஒளியை யுள்ள சூரியனுக்கும் ஒளியை அளிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பிரகாசிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

பிரகாசிப்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

——————————————————————

286-சசபிந்து –
தீய வழிகளில்  செல்பவரை அழிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

முயல் போல் அடையாளம் யுடைய சந்த்ரனாய் இருப்பவர் -சந்தரனைப் போலே பிரஜைகளைப் போஷிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

மிகவும் சுக  ரூபம் உடைய ஞானியாக இருப்பவர் -வேட்டையில் தீயவரை அழிப்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-

————————————————————————–

287-ஸூ ரேஸ்வர-
நல்வழியில் செல்பவரை உயர்கதிக்குச் செலுத்துபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தேவர்களுக்கும் நன்மை தருபவர்களுக்கும் ஈஸ்வரர் –ஸ்ரீ சங்கரர் –

தேவர்களுக்குத் தலைவர் -நன்கு பிரகாசிப்பவர் -மற்றும் அனைவருக்கும் தலைவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

———————————————————————————–

288-ஔஷதம் –
உலக வாழ்க்கை என்னும் கொடிய விஷத்தைப் போக்கும் மருந்தாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

உலக வாழ்க்கையாகிய கொடிய நோய்க்கு மருந்தாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

தாப த்ரயத்தினால் வருந்தியவர்க்கு தஞ்சமான மருந்தாக இருப்பவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

—————————————————————————

289-ஜககஸ் சேது-
உலகில் நல்லவை தீயவைகளைப் பிரிக்கும் அணையாக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

உலகைக் கரையேற்றும் அணையாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

உலகிற்கு அணையாக ஆஸ்ரயம் அளிப்பவர் -வர்ணாஸ்ரம தர்மங்களை குழப்பம் இல்லாமல் நிலை நிறுத்துபவர் –

——————————————————————————–

290-சத்ய தர்ம பராக்ரம –
தர்மங்கள் எனப்படும் தம் கல்யாண குணங்களும் பராக்ரமங்கள் எனப்படும் தம் திவ்ய சேஷ்டிதங்களும்
பழுது படாமல் உலகை உய்விப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –
ஞானம் முதலிய குணங்களும் பராக்ரமமும் வீணாகாமல் இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –
தன்னுடைய தர்ம பராக்ரமங்கள் வீணாகாதவர்- ஸ்ரீ சத்ய சந்தர்-

———————————————————————————

291-பூத பவ்ய பவன் நாத-
இப் பெருமைகள் இக் காலத்தில் மட்டும் இல்லாமல் முக் காலங்களிலும் உள்ளவர்-ஸ்ரீ பராசர பட்டர் –

முக் காலங்களிலும் உள்ளவர்களால் யாசிக்கப் படுபவர் அவர்களைக் கட்டுப் படுத்துபவர் -ஆசீர்வதிப்பவர் –ஆள்பவர்-ஸ்ரீ சங்கரர் –

நித்ய சம்சாரிகள் -அறிவீனர்கள் -பக்தர்கள் இவர்களால் வேண்டப்படுபவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

—————————————————————-

292-பவன –
எல்லா காலங்களிலும் எல்லா இடங்களிலும் இயற்கையாகவே செல்பவர் —
அனைத்தையும் தூய்மையாக்கும் இக் குணத்தின் லேசம் இருப்பதால் தான்-பவன எனப்படும் காற்றும் எங்கும் சஞ்சரிக்கின்ற்றது-ஸ்ரீ பராசர பட்டர் –

பரிசுத்தப் படுத்துபவர் -ஸ்ரீ சங்கரர் –

அரசர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்து காப்பவர்- ஸ்ரீ சத்ய சந்தர்-

———————————————————————————-

293-பாவன-
உலகைத் தூய்மை யாக்கும் கங்கை முதலியவற்றுக்கும் அத் தூய்மை தம் தொடர்பால் உண்டாகும்படி இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

காற்றை வீசும்படி செய்பவர் –ஸ்ரீ சங்கரர் –

அரசர்கள் காப்பதற்கு காரணமாக இருப்பவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

—————————————————————-

294-அநல –
பல வகைகளால் அடியவர்க்கு அனுக்ரஹித்தும் அது போதாது என்று நினைப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

அனம் எனப்படும் பிராணனை அலங்கரிக்கும் ஜீவாத்மாவே இருப்பவர் -அளவிட முடியாதவர் –ஸ்ரீ சங்கரர் –

தடுக்க முடியாதவர் -முக்ய பிராணனை  பக்தனாகக்  கொண்டவர் -உலகப் படைப்பு முதலியவகைகளில்
போதும் என்ற நினைவு இல்லாதவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-

——————————————————————-

295-காமஹா –
தம் குணங்களில் ஈடுபட்டவர்க்குப் பிற விஷயங்களில் ஆசையைத் தவிர்ப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

மோஷத்தை விரும்பும் பக்தர்களுக்கு பிற விஷயங்களில் ஆசையைத் தவிர்ப்பவர் -விரோதிகளை அழிப்பவர் –ஸ்ரீ சங்கரர்-

காமத்தை அழிப்பவர் -நல்லோர்களின் ரோகங்களைப் போக்குபவர்-ஸ்ரீ சத்ய சந்தர்-

——————————————————————————–

296-காமக்ருத்-
அவரவர் விருப்பப்படி போகம் மோஷம் முதலியவற்றைத் தருபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

சாதுக்கள் விரும்பியவற்றைக் கொடுப்பவர் -பிரத்யும்னனாகப் பிறந்த மன்மதனின் தந்தையே கண்ணபிரான் -ஸ்ரீ சங்கரர் –

பக்தர்கள் விரும்பியவற்றைக் கொடுப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

————————————————————————————–

297-காந்த –
தமது அழகு மென்மை முதலிய குணங்களால் யாவராலும் விரும்பப் படுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

மிகவும் அழகியவர் -ஸ்ரீ சங்கரர் –

பிரம்மாதிகளுக்கு சுகத்தைக் கொடுப்பவர் -அசுரர்களின் சுகத்தை அழிப்பவர் -ஸ்ரீ ராமாவதாரத்தில் அணை கட்டியவர்-ஸ்ரீ சத்ய சந்தர்-

————————————————————–

298-காம –
சீலம் ஔதார்யம் தயை முதலிய குணங்களாலும்  யாவராலும் விரும்பப் படுபவர் –
இதன் லவலேசம் உள்ளதால் மன்மதனும் -காமனும்  -உலகை மயக்குகிறான் -ஸ்ரீ பராசர பட்டர் –

புருஷார்த்தங்களை விரும்புபவர்களால் விரும்பப் பட்டவர் -ஸ்ரீ சங்கரர் –

ஜனங்களால் விரும்பப் படுபவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

————————————————————————

299-காமப்ரத –
தம்மை விரும்புபவர்க்கும் தாழ்ந்த பயன்களை விரும்புபவர்க்கும் அவரவர் விரும்பியபடி கொடுப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

பக்தர்கள் விரும்பியவற்றை விசேஷமாகக் கொடுப்பவர்-ஸ்ரீ சங்கரர் –

பக்தர்கள் விரும்புவற்றை நன்கு கொடுப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

—————————————————————————-

300-பிரபு –
இக் குணங்களினால் அனைவருடைய மனங்களையும் கவரும் சக்தியுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

உயர்ந்தவராக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

உயர்ந்தவராக இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

—————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading