ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத்ரம் -401-450—-மும்மத விளக்கம் —

ராமோ விராமோ விரதோ மார்கோ நேயோ நயோ அநய
வீரஸ் சக்தி மதாம் ஸ்ரேஷ்டோ தரமோ தர்ம விதுத்தம –43
வைகுண்ட புருஷ ப்ராண பிராணத பிரணம ப்ருது
ஹிரண்ய கர்ப்பஸ்  சத்ருக்நோ வ்யாப்தோ வாயுரதோஷஜ-44
ருதுஸ் ஸூ தர்சன கால ப்ரமேஷ்டீ பரிக்ரஹ
உக்ரஸ் சம்வத்ஸ்ரோ தஷோ விஸ்ராமோ விஸ்வ தஷிண –45
விஸ்தார ஸ்தாவர ஸ்தாணு பிரமாணம் பீஜமவ்யயம்
அர்த்தோ அநர்த்தோ மஹா கோஸோ மஹா போகோ மஹா தன-46-
அநிர்விண்ண ஸ்தவிஷ்டோ பூர்தர்மயூபோ மஹா மக
நஷத்ர நேமிர் நஷ்திரீ ஷம ஷாமஸ் சமீஹன–47
யஜ்ஞ இஜ்யோ மஹேஜ்யஸ்ஸ க்ரதுஸ்  சத்ரம் சதாம்கதி
சர்வ தர்சீ நிவ்ருத்தாத்மா சர்வஜ்ஞோ ஜ்ஞானமுத்தமம் -48-

————————————————————————-

ஸ்ரீ ராமாவதாரம் ——380–421——-32 திரு நாமங்கள் –
ஸ்ரீ கல்கி அவதாரம் —422-435——–14 திரு நாமங்கள் –
பகவானின் முயற்சி —-436–452——17 திரு நாமங்கள் –

———————————————————————

401-அநய-
விரோதிகளால்  நடத்தப்பட முடியாதவர் -உலகிற்கு நன்மை செய்பவர் தம்மைத் தவிர வேறு எவரும் இல்லாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

தாம் யாவராலும் நடத்தப் படாதவர் -ஸ்ரீ சங்கரர் –

முக்கிய பிராணனை பூமிக்கு அனுப்பி வைப்பவர் -தாமே மிக உயர்ந்தவர் -தம்மை நடத்தும் மற்று ஒருவர் இல்லாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————————–

402-வீர –
அரக்கர்களை மிகவும் பயத்தினால் நடுங்கும்படி செய்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

பராக்கிரமம் உள்ளவர் –ஸ்ரீ சங்கரர் –

ஞானத்தால் மகிழ்பவர் -விளையாடுபவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————————-

403-சக்தி மதாம் ஸ்ரேஷ்ட –
சக்தியுடைய தேவர்கள் முதலியோர்க்கும் சிறந்தவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

சக்தியுள்ள பிரம்மாதி தேவர்களைக் காட்டிலும் சக்தி யுள்ளவர் –ஸ்ரீ சங்கரர் –

சக்தியுடையவர்களில் மேன்மையுள்ளவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————————–

404-தர்ம –
செல்வத்தையும் மோஷத்தையும் கொடுத்து ஜீவர்களைத் தாமே நேரில் தாங்குபவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாவற்றையும் தாங்குபவர் –ஸ்ரீ சங்கரர் –

எல்லாவற்றையும் தாங்குபவர் -அடையப்படும் தர்மமாக இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————————————-

405-தர்மவிதுத்தம –
தர்மம் அறிந்தவர்களில் சிறந்தவர் வசிஷ்டர் வாம தேவர் மார்க்கண்டேயர்  முதலியவர்களின் சிஷ்யராக இருந்தும்
அவர்களுக்கும் தர்மம் தெளிவிப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

வேதங்களும் தர்ம சாஸ்திரங்களும் அவரது கட்டளையாக இருப்பதால் தர்மம் அறிந்தவர்களில் சிறந்தவர் –ஸ்ரீ சங்கரர் –

தர்மம் அறிந்தவர்களில் மேலானவர் -தர்மமான தன்னை அறிந்தவர்களை உயர்ந்தவர்களாகச் செய்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-

———————————————————————————–

406-வைகுண்ட –
தம்மை அடைவதற்கு உள்ள தடைகளை நீக்கித் தம்மிடம் சேர்த்துக் கொள்பவர் –
குடி என்ற தாது -வினையடி –வழியைத் தடை செய்தல் -பகவானோடு கூடும் வழியைத்-தடையை -நீங்கியவர்கள் விகுண்டா –
அவர்களை யுடையவன் பகவான் என்பதால் வைகுண்ட எனப்படுகிறான் –ஸ்ரீ பராசர பட்டர் –

பஞ்ச பூதங்களை ஓன்று சேர்த்து சிருஷ்டியில் பயன்படுத்துபவர் அவற்றின் செயல்களைக் கட்டுப் படுத்துபவர் –ஸ்ரீ சங்கரர் –

விகுண்டா என்பவளின் மகனாக திரு அவதரித்தவர் -ஸ்ரீ வைகுண்டத்தில் இருப்பவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————

407-புருஷ –
புனிதத் தன்மை  யுள்ளவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

பாவங்களை எரிப்பவர் -எல்லோர்க்கும் முற்பட்டவர் -சரீரம் -புரம் -அதில் வசிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

பூர்ணர் -காப்பவர் -எல்லோருக்கும் முன்னவர் -எல்லா தோஷங்களை அளிப்பவர் -எல்லா சரீரங்களில் வசிப்பவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————————–

408-பிராண –
எல்லாவற்றையும் உய்விப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

ஜீவ ரூபியாய் இருப்பவர் -பிராணனாக இருந்து செயல் படுத்துபவர் –ஸ்ரீ சங்கரர் –

முக்தர்களைக் காட்டிலும் மேலானவர் -உயர்ந்த பெயர்களைக் கொண்டவராக செயல்படுபவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————————————–

409-பிராணத-
பிரசித்தமான பிராணனை எல்லோருக்கும் தருபவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

சிருஷ்டியில் பிராணிகளுக்கு அந்தர்யாமியாகி உயிரைக்கொடுப்பவர் –
பிரளய காலத்தில் பிராணிகளின் பிராணன்களை நீக்குபவர் –ஸ்ரீ சங்கரர் –

துன்பத்தை அழிப்பவர்-பக்தர்களுக்கு முக்ய பிராணனைக் கொடுப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————————

410-ப்ரணம –
தம் குணங்களினால் சராசரங்கள் அனைத்தும் தம்மை வணங்கும்படி இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

தேவர்களால் வணங்கப் படுபவர் -பிரணவ என்ற பாடம் -புகழப் படுபவர் –ஸ்ரீ சங்கரர் –

நன்றாகத் தூண்டுபவர் -பிரணவ என்று பாடம் -தம்மைத் தாமே புகழ்ந்து கொள்பவர் –
மிகவும் புதியவர் -நன்றாக வணங்கப் படுபவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————————

411-ப்ருது-
மிகவும் விரிந்த புகழை யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

பிரபஞ்ச ரூபமாகத் தாமே விரிந்து இருப்பவர் —ஸ்ரீ சங்கரர் –

பிரசித்தமாக இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————-

412- ஹிரண்ய கர்ப்ப –
தமக்கு ஹிதமாகவும் -இனிமையாகவும் உள்ள தியானிப்பவர் மனங்களினால் அமுதம் போலே அனுபவிக்கப் பெறுபவர் –
பொற் புதையல் போல் போன்றவர் -அவதார காலத்திற்குப் பிறபட்டவர்களுக்கும் அவர்கள் செய்யும் தியானம் முதலியவற்றால்
உபகாரம் செய்வது கூறப்படுகிறது –ஸ்ரீ பராசர பட்டர் –

பிரம்மாவின் உற்பத்திக்குக் காரணமான பொன் அண்டத்தைத் தம்முள் வைத்து இருப்பவர் —ஸ்ரீ சங்கரர் –

பொன் மயமான பிரம்மாண்டத்தைத் தன் வயிற்றிலே தரித்தவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————

413-சத்ருகன –
விஷயங்களில் ஈடுபடுவதால் ராவணன் போலப் பகைகளாக உள்ள இந்த்ரியங்களை விவேகம் என்னும்
அம்பினால் அழிப்பவர்–ஸ்ரீ பராசர பட்டர் –

தேவர்களின் எதிரிகளை அழிப்பவர் —ஸ்ரீ சங்கரர் –

விரோதிகளை அழிப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————

414-வ்யாப்த –
தியானிப்பவர்களிடம்-இளையவன் முதியவன் தலைவன் அடிமை பகைவன் நண்பன் முதலிய வேறுபாடு இல்லாமல்
ஒரே விதமான அன்பால் நிரம்பி இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

காரணமாதலால் எல்லாக் காரியங்களிலும் வியாபித்து இருப்பவர் —ஸ்ரீ சங்கரர் –

பிரம்மா முதலிய தேவர்களுக்கு வேண்டியவர் -கருடனுக்கு வேண்டியவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————-

415-வாயு –
தம்மைத் தியானிப்பவர் இருக்குமிடம் தேடி ஆங்காங்கு செல்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

நல்ல மனத்தை உண்டாக்குபவர் —ஸ்ரீ சங்கரர் –

உயிரைத் தாங்கக் காரணமாக இருப்பவர் -வலிமை கொண்டவராய் சஞ்சரிப்பவர் -எல்லாவற்றையும் அறிபவர் –
பரவுபவர் -விரும்பப் படுபவர் -எல்லாரும் இயங்கக் காரணமானவர் -உயர்ந்தவர் -சம்சாரத்தில் கட்டுபவர் –
சம்சாரத்தில் இருந்து விடுவிப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————————

416-அதோஷஜ-
யாவரும் அனுபவித்து உபயோகித்தாலும் அமுதக் கடல் போலே ஒரு காலும் வற்றிக் கீழே போகாமல் இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

மேல் உலகத்திற்கும் பூமிக்கும் இடையில்   விராட் ரூபத்துடன் வியாபிப்பவர் –
ஒருபோதும் தாழ்ந்து அழியாதவர் ஆதலின் அதோஷஜர் எனபது உத்யோகபர்வம் —ஸ்ரீ சங்கரர் –

இந்த்ரியங்களை அடக்கிய வஸூ தேவர் முதலியோர்க்கு மகனாக திரு வவதரித்தவர் –
அஷகுமாரனை வென்ற ஹனுமானால் தெரியப் படுத்தப் பெற்றவர் –
தம்மைத் தாழ விட்டு அனைவருக்கும் காட்டியவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————

417-ருது –
எப்போதும் புதிதாகத் தோன்றி உகப்பிக்க வல்ல திருக் குணங்கள் ஒன்றுக்கு மேல் ஓன்று விசேஷமாக வளரும்படி பக்தர்களின்
உள்ளங்களில் செல்பவர் -இதே குணம் இருப்பதால் அன்றோ வசந்த ருது சிசிரருது முதலியவைகளும்
ருதுக்கள் என்று கூறப் படுகின்றன –ஸ்ரீ பராசர பட்டர் –

ருது என்னும் காலச் சொல்லால் கூறப்படுபவர் —ஸ்ரீ சங்கரர் –

மோஷத்திற்கு சாதனமாக இருப்பவர் -தம் ஸ்வரூபத்தை தாமே தெரிவிப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————-

418-ஸூ தர்சன –
குணங்களின் பெருமை அறியாதவர்களும் பார்த்தவுடன் நன்மை பெறும்படி அழகிய திருமேனியுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

தாமரை இதழ் போல் நீண்டு அழகிய இரு கண்கள் யுடையவர் -பக்தர்களால் சுகமாகக் காணப்படுபவர் –
தம்மைப் பற்றிய ஞானமானது மோஷ பலம் தருவதாக இருப்பவர் —ஸ்ரீ சங்கரர் –

ஸூதர்சனம் என்னும் சக்கராயுதத்தை யுடையவர் -நல்ல தரிசனத்தைத் தருபவர் –
அழகிய கண்கள் யுடையவர் -நன்கு பார்ப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————-

419-கால –
இப்படிப்பட்ட குண விசேஷங்களினால் சராசரங்களைத் தம்மிடம் சேர்த்துக் கொள்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாவற்றையும் எண்ணுபவர் —ஸ்ரீ சங்கரர் –

அவரவர் தகுதிக்கு ஏற்ற சுகத்தை அழிப்பவர் -உலகைக் காலத்தினால் கட்டுப்படுத்துவதனாலும் பிரிப்பதனாலும் அறிவதனாலும்
காலமாக இருப்பவர் -சுகத்தை முழுமையாக தருபவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————————–

420-பரமேஷ்டீ-
இப்படி அரக்கர்களை வேட்டையாடியும் உலகைக் காத்தும் விளையாடிய பின்பு உயர்ந்த ஸ்தானமான
பரமபதத்தில் இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

தமது சிறந்த சக்தியில் ஹ்ருதயாகாசத்தில் இருப்பவர் —ஸ்ரீ சங்கரர் –

உயர்ந்ததான ஹ்ருதயத்தில் இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————-

421-பரிக்ரஹ –
நகர மக்கள் தேச மக்கள் அவர்களுடைய சுற்றத்தார் அவர்களுடைய தேவதைகள் தோட்டத்தில் உள்ள மரம் புல்
முதலியவற்றையும் பரமபதம் சேரும்படி அங்கீ கரித்தவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

சரணம் அடைபவர்களால் எல்லாவகைகளாலும் கொள்ளப் படுபவர் -பல வழிகளால் அறியப் பெறுபவர் –
அடியவர் சமர்ப்பிக்கும் இலை பூ முதலியவற்றை ஏற்பவர் –ஸ்ரீ சங்கரர் –

பக்தர்களை அனுக்ரஹித்து ஏற்றுக் கொள்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————————

422-உக்ர –
யுகத்தின் முடிவில் அதிக பாவம் செய்தவர்கள் விஷயத்திலும் வர்ணாஸ்ரம கலப்பு விஷயத்திலும் கொடியவராக இருப்பவர் –
இனி -தம்முடைய சீலத்தால் வெல்ல முடியாத தீயவர்களை அளிப்பதும் பாதாளத்தில் சயனித்து இருப்பதுமான
ஸ்ரீ கல்கி திருவவதாரமானது கூறப்படுகிறது –ஸ்ரீ பராசர பட்டர் –

சூரியன் முதலியவர்களும் தம்மிடம்  பயப்படும்படி இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

ருத்ரனை அழிப்பவர் -உயர்ந்த பிரம்மா முதலியவர்களை மகிழ்விப்பவர் என்றும் கூறுவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————————————-

423-சம்வத்சர –
சம்சாரத்துக்கு  உரிய கருவிகளுடன் காலத்தை எதிர்பார்த்து பாதாள லோகத்தில் ஆதிசேஷன் மீது
சயனித்து இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாப் பொருள்களும் தம்மிடம் நன்கு வசிக்கும்படி இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் கன்றுக் குட்டிகளிடம் நன்கு விளையாடியவர் –
தம் குழந்தைகள் போன்ற பிரம்மா முதலியவர்களை மகிழ்விப்பவர் –
ஸ்வாமி புஷ்கரிணி -திருமலை -முதலிய இடங்களை யுடையவர் -வருடங்களை நடத்துபவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————————-

424-தஷ –
மிலேச்சர்களை விரைவில் வதம் செய்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

பல உலக வடிவங்களாக விருத்தி அடைபவர் –ஸ்ரீ சங்கரர் –

தொல்லை தருபவரை அழிப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————

425-விஸ்ராம –
பாவங்களும் அவற்றின் பயன்களும் அதிகமாக வருத்துவதனால் களைப்பு அடைந்தவர்களுக்கு
இளைப்பாறும் இடமாக இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

பிறவிக்கடல் பசி தாகம் முதலியவைகளால் அலைப்புண்டு இளைப்பாற விரும்புவர்க்கு மோஷம் கொடுப்பவர் –
ஆறு வகைகளான சம்சாரக் கடலின் அலைகளாலும்
அவித்யை முதலிய பெரும் துன்பங்களாலும் மதம் முதலிய துன்பங்களாலும் அலைப்புண்டவர்களுக்குமாம் –ஸ்ரீ சங்கரர் –

களைப்பு அற்றவர் -பக்தர்கள் சிரமம் அற்று இருக்கும்படி செய்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————-

426-விஸ்வ தஷிண –
நல்லவர்க்கும் தீயவர்க்கும் நன்மையை அளிபபவர்-அபகாரம் செய்பவர்களையும் பொறுத்தல் அன்றோ தாஷிண்யம் –
அன்றிக்கே -ஸ்ரீ ராமபிரான் செய்த அஸ்வமேத யாகத்தில் பூமி முழுவதையும் தஷிணயாகக் கொடுத்தவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாவற்றையும் காட்டிலும் அதிக சக்தி யுள்ளவர் -எல்லாச் செயல்களிலும் மேம்பட்டவர் –ஸ்ரீ சங்கரர் –

உலகப் படைப்பு முதலிய செயல்களில் திறமை யுள்ளவர் -வாயுவிற்குக் காரணம் ஆனவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————————

427-விஸ்தார –
கலியை அழித்து கிருதயுகத்தை உண்டாக்குவதால் வேதக் கட்டளையை வெளிப்படுத்துபவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

உலகங்கள் அனைத்தும் தம்மை ஆதாரமாகக் கொண்டு விரிவாகும்படி இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

உலகம் விரிவடையக் காரணமானவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————————–

428-ஸ்தாவரஸ் தாணு –
இப்படி தர்மம் நிலை நிறுத்தப் பட்ட பிறகு ஓய்வாக இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

தாம் நிலை பெற்றவராகவும் பூமி முதலியவை தம்மிடம் நிலை நிற்கும்படியாகவும் இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

சத்ய லோகத்தில் இருக்கும் பிரமன் முதலியவர்களை விட மேம்பட்டவர் –
ருத்ரனுக்கு அந்தர்யாமியாக இருப்பவர் -இரண்டு திரு நாமங்கள் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————————–

429-பிரமாணம் –
நான்கு யுகத்தில் யுகத்தில் உள்ளவர்களுக்கு நன்மை தீமைகளைப் பகுத்து அறிவிப்பவர்-அவனது இந்த சக்தியின்
லவலேசத்தால் பிரத்யஷம் முதலியவைகளும் பிரமாணங்கள் ஆகின்றன  –ஸ்ரீ பராசர பட்டர் –

ஞான ரூபியாக பிரமாணமாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

சிறந்த வேதங்களைப் பிரமாணமாக யுடையவர் -த்ரிவிக்ரம ரூபத்தில் சிறந்த திருமேனி வளர்ச்சி யுடையவர் –
உயர்ந்த இருவித சுகத்தை யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————————————————-

430-பீஜமவ்யயம்-
கலியின் இறுதியில் மீண்டும் மீண்டும் தர்மத்தை முளைக்கச் செய்வதால் அழியாத விதையாக இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

சிருஷ்டியில் முன் போலவே இருந்து கார்யங்களை உண்டாக்கும் காரணமாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

வ்யாசாதி உருவத்துடன் அழியாத அறிவை யுண்டாக்குபவர்-ஞானிகளால் அடையப் படுபவர் -அழிவில்லாதவர் –
குறைவற்றவர் –இரு திரு நாமங்கள் – -ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————

431-அர்த்த –
செம்மையாக அறிந்து தம்மிடம் உறுதியாக பக்தி செய்யும் அதிகாரிக்குத் தாமே பயனாக இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

சுக ரூபியாதலால் யாவராலும் விரும்பப் படுபவர்–ஸ்ரீ சங்கரர் –

பக்தர்களால் அறியப் பெறுபவர் -பூரணமான அன்னம் உள்ளவர் -பக்தர்களால் பிரார்த்திக்கப் படுபவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————

432- அநர்த்த-
அற்ப பயன்களை விரும்பும் பாக்ய ஹீனர்களால் வேண்டப் படாதவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லா வற்றையும் அடைந்து இருப்பதால் தாம் விரும்பத் தக்கது எதுவும் இல்லாதவர் –ஸ்ரீ சங்கரர் –

அயோக்யர்களுக்கு அனர்த்தத்தை -அழிவைக் -கொடுப்பவர் -முக்ய பிராணனை யுடையவர் –
முக்ய பிராணனால் பிரார்த்திக்கப் படுபவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————–

433-மஹா கோச –
வேண்டுபவர்களுக்கு எல்லாம் எக்காலமும் எல்லா வகைகளாலும் தானம் செய்தாலும் அழியாதவைகளான
சங்கநிதி -பத்மநிதி -ரத்னாகரம் -ரோஹண்  மலை முதலியவை பொக்கிஷங்களாக இருக்கப்பெற்றவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

அன்னமய பிராணமய மனோமய விஜ்ஞானமய ஆனந்தமய கோசங்களினால் மறைக்கப்படுபவர் –ஸ்ரீ சங்கரர் –

மிக்க சுகத்துடன் விளங்கும் ஸ்ரீ லஷ்மி தேவியால் விரும்பப் பெறுபவர் -பிரம்மாவின் சிறந்த சுகத்திற்கு காரணம் ஆனவர் –
மிகவும் உயர்ந்த பொக்கிஷமாக உள்ளவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————

434-மஹா போக –
செல்வத்தால் பெரும் இன்பங்களையும் தருபவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

சிறந்த ஸூஎ ரூபமாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

நிறைந்த ஆனந்தம் யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————

435-மஹா தன-
மிக்க ஏழைகளுக்கு எண்ணாமல் கொடுக்கத் தக்க அளவற்ற செல்வம் யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

போகத்திற்கு சாதனமான செல்வங்களை யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

மிகுந்த செல்வத்தை யுடையவர் -தம்மை நன்கு பூஜிப்பவருக்கு உயர்ந்த செல்வத்தை அளிப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————–

436-அநிர்விண்ண-
உலகைப் படித்தும் அவரவர் வேண்டியவற்றை அடிக்கடி கொடுத்தும்   கூட உலக விஷயங்களில் பித்துப் பிடித்துத்
தம்மை அணுகாமல் பயனற்றவர்களை மீண்டும் வசப்படுத்த பெரு முயற்சி செய்வதில் சிறிதும் சோர்வு அற்றவர் –
அதனாலன்றோ தொடக்கமும் முடிவும் இல்லாமல் படைத்தலைச் செய்கிறார் –ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாவற்றையும் அடைந்து இருப்பவராதலின் துன்பமில்லாதவர் –ஸ்ரீ சங்கரர் –

களைப்பு வேதனை இல்லாதவர் -ஞானம் சுகம் இவற்றில் இருந்து ஒய்வு பெறாதவர் –
அவற்றை எப்போதும் யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————–

437-ஸ்தவிஷ்ட-
நஷத்ர மண்டலமாகிய சிம்சுமார சக்ர ரூபியாக மிக விரிவாக இருப்பார் -இனி துன்பமற்று இருப்பதற்கு உதாரணமாக
உத்தம அனுவாகமான ஸ்வாத் யாய ப்ராஹ்மண்யத்திலும் ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும் கூறப்பட்ட பிரசித்தமான
சிம்சுமார நஷத்ர மண்டல ரூபம் கூறப்படுகிறது –ஸ்ரீ பராசர பட்டர் –

விராட் ரூபியாக மிக விரிவாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

பருத்து இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————-

438-பூ –
த்ருவ நஷத்த்ரத்தில் சேர்ந்து அனைத்தையும் தாங்குபவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

அபூ -பிரப்பில்லாதவர் –பூ -பூமி ரூபியாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

அபூ -ஆதாரம் அற்றவர் தமக்கோர் இருப்பிடம் இல்லாதவர் -பூ -எல்லா வற்றாலும் நிறைந்தவர் -எல்லோரையும் படைப்பவர் –
எல்லோரும் தம்மை அடையும்படி இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————-

439-தர்மயூப –
தர்மத்தைத் தலைமையாக வைத்து இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

யூப ஸ்தம்பத்தில் பசுவைப் போலே தர்மங்கள் தம்மிடம் கட்டப் பெற்றவர் –ஸ்ரீ சங்கரர் –

தர்ம சாதனமான யூப ஸ்தம்பத்தைத் தருபவர் -எல்லாவற்றிற்கும் ஆதாரமாக இருப்பவராய்-பக்தர்கள் மனம்
தம்மிடம் லயித்து இருக்கும்படி செய்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————-

440-மஹா மக –
தர்மத்தை சரீரமாக யுடையவர் ஆதலின் யாகத்தை அவயவமாக யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

தமக்கு அர்ப்பணம் செய்யப் படுவதால் யாகங்களைச் சிறப்பிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

மேன்மை கொண்ட யாகங்களைத் தம் விஷயமாக யுடையவர் -துன்பம் அற்றவர் -மிக உயர்ந்தவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————–

441-நஷத்ர நேமி –
நஷத்ரங்கள் எனப்படும் ஜ்யோதிச் சக்கரத்தை நடத்துபவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

சிம்சுமாரசக்ரம் என்னும் ஜ்யோதிச் சக்கரத்தை நடத்துபவர் –ஸ்ரீ சங்கரர் –

ஷத்ரியர்களைக் காட்டிலும் வேற்பட்ட அந்தணர்களுக்கு ஆதாரமானவர் -சிம்சுமார ரூபத்தில் ஜ்யோதிச் சக்கரத்திற்கு
ஆதாரமாக இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————–

442-நஷதிரீ –
அவைகளுக்கு நஷத்ரங்களுக்கு ஆதாரமாக இருப்பவர் —ஸ்ரீ பராசர பட்டர் –

நஷத்ரங்களுக்குத் தலைவனான சந்திரனாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

நஷத்ரங்களை நியமிப்பவராக இருப்பவர் -பரசுராம ரூபத்தில் ஷத்ரியர்களைக் கொன்றதால்
ஷத்ரியர்களுடன் சேராது இருப்பவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————-

443-ஷம-
இப்படி எல்லா உலகங்களின் பாரங்களையும் எளிதில் சுமப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாச் செயல்களிலும் திறமையுள்ளவர் -பொறுமை யுள்ளவர் என்றுமாம் –ஸ்ரீ சங்கரர் –

அழியாப் பொருள்களின் அழிவைத் தவிர்ப்பவர் -துஷ்டர்களை நரகத்தில் கட்டுப்படுத்துபவர் –
எல்லாக் காரியங்களையும் செய்வதில் சமர்த்தர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————

444-ஷாம –
அவாந்தர பிரளயத்தில் நான்கு நட்சத்திரங்களோடு இளைத்து இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாம் அழிந்த போது தாம் மட்டும் தனித்து இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

ஸ்ரீ வராஹ ரூபத்தால் பூமியைத் தாங்கியவர் -வாமன ரூபத்தில் பூமியை யாசித்து பெற்றவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————–

445-சமீஹன-
படைக்கும் காலத்தில் எல்லாரையும் அவரவர் அதிகாரங்களில் செயல்படச் செய்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

படைப்பு முதலிய செயல்களைச் செய்வதற்காக நன்றாகச் செயல்படுபவர் –ஸ்ரீ சங்கரர் –

பகவத் பூஜை முதலிய நற்செயலை புரிவோரை ஸ்ரீ வைகுண்டத்திற்கு அழைத்துச் செல்பவர் –
எல்லாவிடத்திலும் சமமான ரூபம் உள்ளவராய் எல்லோரையும் செயல்கள் புரியும்படி செய்பவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————-

446-யஜ்ஞ-
யஜ்ஞம் அதன் சாதனம் அதன் பலன் எல்லாம் தாமேயாய் இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

யஜ்ஞ ஸ்வரூபியாக இருப்பவர்  –ஸ்ரீ சங்கரர் –

அனைத்து யஜ்ஞங்களிலும் பலன் பெறுபவர் ஸ்ரீ கிருஷ்ண ரூபத்தில் தம்மைக் குறித்துத் தாமே யஜிப்பவர்-
ஸ்ரீ ராமாவதாரத்தில் அஹல்யையை கௌதமரோடு சேர்ப்பித்தவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————-

447-இஜ்ய –
காம்ய பலன்களைக் கருதுபவர்களால்  இந்த்ரன் முதலிய தேவதா ரூபியாக ஆராதிக்கப் படுபவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

யஜ்ஞங்களினால் ஆராதிக்கப் பெறுபவர் –ஸ்ரீ சங்கரர் –

பூஜையை யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————–

448-மஹேஜ்ய-
மற்றப் பலன்களை விரும்பாதவர்கள் தம்மையே ஆராதிப்பதைச் சிறந்த ஆராதனமாக யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

தம்மைக் குறித்துச் செய்யும் யாகமே மோஷத்தைத் தருவதால் அந்த யாகமே சிறந்ததாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

ஸ்ரீ சீதா பிராட்டிக்காக வில்லில் நாண் ஏற்றியவர் -உயர்ந்த யஜ்ஞங்களில் ஆராதிக்கப் பெறுபவர் –
ஸ்ரீ தேவி பூமி தேவி சமேதன்–ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————

449-க்ரது-
பஞ்ச மகா யஜ்ஞங்கள் -ஔபாசனம் முதலிய ஏழு பாக யஜ்ஞங்கள் -ச்ரௌத்ராக்னி ஹோத்ரம் முதலிய ஏழு ஹவிர் யஜ்ஞங்கள் –
யஜ்ஞபதத்தால் கூறப்படும் அக்னிஷ்டோமம் முதலிய ஏழு சோம யாகங்கள் இவற்றால் ஆராதிக்கப் படுபவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

யூபஸ்தம்பம் நாட்டிச் செய்யப்படும் யஜ்ஞமாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

படைத்தல் முதலிய செயல்களைச் செய்பவர் -தன்மையாக யுடையவர் -ஞானரூபியானவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————–

450-சத்ரம்-
சத்ரம் என்னும் யாகத்தால் ஆராதிக்கப் படுபவர்
பல யஜமானர்களால் நீண்ட காலம் செய்யப்படும் யாகம் சத்ரம் –ஸ்ரீ பராசர பட்டர் –

சாதுக்களைத் திரட்டிச் செய்யும் சத்ரயாகமாக இருப்பவர் -சாதுக்களைக் காப்பவர் -என்றுமாம் –ஸ்ரீ சங்கரர் –

நல்லோர்களைக் காப்பவர் -நல்லோர்களை மகிழ்விப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading