ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத்ரம் -601-650——மும்மத விளக்கம் —

ஸூபாங்கஸ் சாந்திதஸ் ஸ்ரஷ்டா குமுத குவலேசய
கோஹிதோ கோபதிர் கோப்தா வ்ருஷபாஷோ வ்ருஷப்ரிய —63
அனுவர்த்தீ நிவ்ருத்தாத்மா சம்ஷேப்தா ஷேமக்ருச்சிவ
ஸ்ரீவத்சவ ஷாச் ஸ்ரீ வாசச் ஸ்ரீ பதிச் ஸ்ரீ மதாம் வர –64
ஸ்ரீதச் ஸ்ரீ சஸ்  ஸ்ரீ நிவாசஸ் ஸ்ரீ நிதிஸ் ஸ்ரீ விபாவன
ஸ்ரீ தரஸ் ஸ்ரீ கரஸ் ஸ்ரேயஸ் ஸ்ரீ மான் லோகத்ரயாஸ்ரய–65
ஸ்வ ஷஸ் ஸ்வங்கஸ் சதா நந்தோ நந்திர் ஜ்யோதிர் கணேஸ்வர
விஜிதாத்மா விதேயாத்மா சத்கீர்த்திஸ் சின்ன சம்சய –66
உதீர்ணஸ்   சர்வதஸ் சஷூர நீஸஸ் சாச்வத்தஸ் ஸ்திர
பூசயோ பூஷணோ பூதி ரசோகஸ் சோக நாசன–67
அர்ச்சிஷ் மா நர்ச்சித கும்போ விஸூத்தாத்மா விசோததந
அநிருத்தோ அப்ரதிரத பிரத்யும்னோ அமிதவிக்ரம–68
கால நேமி நிஹா சௌரிச் ஸூ ரஸ் ஸூ ர ஜநேச்வர
த்ரிலோகாத்மா த்ரிலோகேச கேசவ கேசி கேசிஹா ஹரி –69-

——————————————

வியாசர் ————576-607—-33 திரு நாமங்கள்
சுபத் தன்மை ——-608-625— 18 திரு நாமங்கள்
அர்ச்சாவதாரம் ——626-643—-18 திரு நாமங்கள்
புண்ய ஷேத்ரங்கள் –644-660—17 திரு நாமங்கள்

—————————————————————-

601-வ்ருஷ பாஷ-
தர்மத்தின் வழியாகவே கர்ம பலன்களைக் காப்பவர் –
தர்மத்தின் அச்சாணியாக இருந்து தர்மத்துக்கு ஏற்ப பலனை அளிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்-

விரும்பியவற்றைப் பொழியும் இரு திருக் கண்கள் யுடையவர் -தர்மத்தைக் கண்ணாக யுடையவர் -ஸ்ரீ சங்கரர் –

எருதின் கண்களைப் போல் இரு திருக் கண்கள் யுடையவர் -தர்மத்தால் பிரகாசிக்கும் நல்லோரிடம் அருள் கடாஷம் அளித்து
பக்தர்கள் வேண்டுபவற்றை பொழிபவர் -அழிவற்றவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————-

602-வ்ருஷ ப்ரிய –
ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி தர்மங்களில் அன்புடையவர் -அவனுக்கு இரண்டு தர்மங்களும் பிரியம் என்பதால்
தர்மங்கள் ஆகும் -விதிகளும் அவனுடைய பிரியத்தைத் தெரிவிப்பாவனவேயாகும்–ஸ்ரீ பராசர பட்டர்-

தர்மத்தில் பற்றுள்ளவர் -தர்மமாகவும் பிரியமானவராகவும் இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

தர்மத்தில் பற்று உள்ளவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————-

603-அநிவர்த்தீ –
பிரவ்ருத்தி தர்மத்தில் இருப்பவர்களை தூமாதி மார்க்கத்தினால் பித்ருலோகம் சேர்த்து மறுபடியும்
உலகில் பிறப்பதனால் உலகை விட்டு நீங்காமல் இருத்துபவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

தேவாசுர யுத்தங்களில் புறம் காட்டித் திரும்பாதவர் தர்மத்தில் உள்ள ப்ரீதி காரணமாக அதிலிருந்து விலகாதவர் –ஸ்ரீ சங்கரர் –

ஒரு போதும்  பின் வாங்காதவர் -முக்ய பிராணனின் அடியவர்களில் இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————–

604-நிவ்ருத்தாத்மா –
நிவ்ருத்தி மார்க்கத்தில் இருப்பவர்களுக்கு ஈஸ்வரர் –ஸ்ரீ பராசர பட்டர்-

விஷயங்களில் செல்லாத மனத்தை யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

பிரளயத்தில் ஜீவர்களை மோஷம் அடைவிப்பவர் -ஆத்மாவின் மனமானது எண்ண முடியாமல் பின் திரும்பும்படி
இருப்பவர் -மனத்தால் அளவிடமுடியாதவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————–

605-சம்ஷேப்தா –
பிரவ்ருத்தி தர்மத்தில் இருப்பவர்களுடைய இயற்கையான ஞானத்தைக் குறுகும்படி செய்பவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

பரந்த உலகை பிரளய காலத்தில் ஸூ ஷ்ம ரூபமாகக் குறுக்குபவர்–ஸ்ரீ சங்கரர் –

நன்கு காப்பவர் -கால் கட்டை விரலால் துந்துபியின் உடலை வெகுதூரம் தூக்கி எறிந்தவர் –
சிருஷ்டியில் விரிவாக்கிய ஜகத்தை பிரளயத்தில் சுருக்குபவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————

606-ஷேமக்ருத் –
நிவ்ருத்தி தர்மத்தில் இருப்பவர்களுக்கு ஞானம் சுருங்காமல் விரிவாகும்படி ஷேமத்தைச் செய்பவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

தம்மால் ஏற்கப் பட்டவர்களுக்கு ஷேமத்தைச் செய்பவர் –ஸ்ரீ சங்கரர் –

ஷேமத்தைச் செய்பவர் -அஷேமக்ருத் -என்ற பாடத்தில்   ஷேமம் இன்மையை அழிப்பவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————

607-சிவ-
இப்படி எல்லா முமுஷூக்களுக்கும் புபுஷூக்களுக்கும் அவரவர்க்கு உரிய நன்மைகள் செய்பவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

தம்முடைய நாமத்தை நினைத்த மாத்திரத்தில் பாவத்தைப் போக்குபவர் –ஸ்ரீ சங்கரர் –

சுகமே வடிவானவர் -மங்களத் தன்மை உள்ளவர் -முக்தர்களைப் போஷிப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————

608-ஸ்ரீ வத்ஸ வஷா-
தம்மால் நியமிக்கப் படுபவைகள் இடமிருந்து தம்மை   வேறு படுத்திக் காட்டும் –
திருமகள் கேள்வன் -அடையாளமான ஸ்ரீ வத்சம்-மார்பில் யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

தமது மார்பில் ஸ்ரீ வத்சம் என்னும் சின்னத்தை யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

மஹத்வ லஷணமான திருமகளுடன் கூடிய வெள்ளை நிறத்தின் சுருள் முடி மச்சத்தை யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————-

609-ஸ்ரீ வாஸ-
திருமகள் எப்போதும் விரும்பி விளையாடுவதற்கு உரிய கற்பக வனமாக விளங்குபவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

திரு மார்பில் திருமகள் அகலாமல் வசிக்கப் பெற்றவர் –ஸ்ரீ சங்கரர் –

திருமகள் வசிக்கப் பெற்றவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————

610-ஸ்ரீபதி –
திருமகள் தனக்குத் தகுந்த கணவர் என்று ஸ்வயம் வரம் செய்யும் பதியாக இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

அமுதம் கடைந்த போது தேவாசுரர்களை ஒதுக்கி லஷ்மியால் வரிக்கப் பட்டவர் –ஸ்ரீ சங்கரர் –

திருமகள் கேள்வர் -உயர்ந்த சக்தியான ஸ்ரீ லஷ்மி தேவிக்கு பதி–ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————-

611-ஸ்ரீ மதாம் வர –
திரு மகளின் சிறிது கடாஷம் பெற்ற பிரமன் முதலிய மற்ற தேவர்கள் போல் அன்றி
அவளுடைய பூர்ண கடாஷம் பெற்றவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

ருக் யஜூஸ் சாமம் -என்னும் செல்வம் பொருந்திய பிரம்மாதிகளிலும் முதன்மையானவர் –ஸ்ரீ சங்கரர் –

ஸ்ரீ சரஸ்வதி தேவி போன்றவர்களைப் பெற்ற பிரமன் முதலானவர்களைக் காட்டிலும் மேன்மை
யுள்ளவர் -திருமகளுக்கு விருப்பமான ஆகாசத்திற்கும் ஆதாரமாக யுள்ளவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————–

612-ஸ்ரீத-
எப்போதும் புதிதாகத் தோன்றும் காரணம் அற்ற அன்பை ஸ்ரீக்கு அளிப்பவர்-அவளுடைய  உயிராக இருப்பவர் –
அவரை ஆஸ்ரயித்ததால் அன்றோ ஸ்ரீ எனப்படுகிறாள் –ஸ்ரீ பராசர பட்டர்-

பக்தர்களுக்கு செல்வத்தைக் கொடுப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

செல்வத்தைத் தருபவர் -ருக்மிணிக்கு பிரத்யும்னனைப் பிள்ளையாகத் தந்தவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————–

613-ஸ்ரீச-
ஸ்ரீ க்கும் அவ்வளவு பெருமைகள் வந்ததற்குக் காரணமானவர் –
எல்லா நிலைகளிலும் ஸ்ரீ யை தமக்கு ஈஸ்வரியாக வைப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

திரு மகளுக்கு நாயகர் –ஸ்ரீ சங்கரர் –

திருமகளுக்கு சுகத்தைக் கொடுப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————–

614-ஸ்ரீ நிவாச –
கொடிக்குக் கற்பக மரம் போலே பிராட்டிக்குக் கொழு கொம்பாக இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

செல்வம் யுடையவர்களிடம் நித்யமாக வசிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

திரு மகளுக்கு அந்தர்யாமியாக வசிப்பவர் -லஷ்மியை நடத்துபவர் –
ஜீவன்கள் தம்மிடம் வசிக்கும்படி இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————-

615-ஸ்ரீ நிதி –
ரத்னத்திற்குப் பேழை போலே பிராட்டி தங்கும் இடமாக இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

எல்லா சக்திகளும் வைக்கப்படும் இடமாய் இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

அனைத்து ஒளிகளுக்கும் புகலிடமாக இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————

616-ஸ்ரீ விபாவன-
பிராட்டியாலேயே தமக்குப் புகழும் மகிமையும் யுண்டாக்கப் பட்டு இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

எல்லாப் பிராணிகளுக்கும் பல செல்வங்கள் அளிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

ஸ்ரீ லஷ்மியின் எண்ணங்களை விசேஷமாகத் தூண்டுபவர் -சிறந்த பிரகாசத்தை யுடைய சீதையுடன் ரமித்தவர் –
செல்வத்தைப் பலவகைகளால் வளர்ப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————

617-ஸ்ரீ தர –
மணிக்கு ஒளி போலேவும் மலருக்கு   மணம் போலவும் அமுததிற்குச் சுவை போலேவும் இயற்கையாக
உள்ள தொடர்பினால் தமக்கு லஷ்மியின் சேர்த்தியை யுடையவர்–ஸ்ரீ பராசர பட்டர்-

உலக மாதாவான ஸ்ரீ லஷ்மியைத் திரு மார்வில் தரிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

ஸ்ரீ தேவியைத் தரிப்பவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————–

618-ஸ்ரீ கர –
பரத்வத்தில் போல் வியூகத்திலும் அவதாரங்களிலும் தமக்கு ஏற்றபடி ஸ்ரீ லஷ்மியை திரு வவதரிக்கச் செய்பவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

தம்மை தியானித்து துதித்து அர்ச்சிக்கும் பக்தர்களுக்கு செல்வங்கள் அனைத்தையும் அளிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

ஸ்ரீ தேவியைத் தம் வசத்தில் யுடையவர் -செல்வத்தை அளிக்கும் திருக் கைகளை யுடையவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————-

619-ஸ்ரேய ஸ்ரீ மான் –
எல்லாப் பயன்களுக்காகவும் எல்லாராலும் பற்றப்படும் பிராட்டி தம்மிடம் எப்போதும் சேர்ந்து இருக்கப் பெற்றவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

ஸ்ரேய -நித்ய ஸூ கமான பிரம்மானந்த ரூபமாக இருப்பவர் –
ஸ்ரீமான் -எல்லாச் சிறப்புக்களும் தம்மிடம் பொருந்தி இருக்கப் பெற்றவர் -இரண்டு திரு நாமங்கள் –ஸ்ரீ சங்கரர் –
ஸ்ரேய -மிகவும் உயர்ந்தவர் -ஸ்ரீ மான் -செல்வத்தை அளிப்பவர் -இரண்டு திரு நாமங்கள் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————

620-லோக த்ரய ஆஸ்ரய –
உலகத் தாயான பிராட்டியும் தாமுமாக தாய் தந்தை போல் எல்லா உலகிற்கும் ஆதரவாக இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

மூவுலகங்களுக்கும் ஆதாரமாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

உலகங்களைக் காப்பவராயும் ஸ்ரீ தேவிக்கு புகலிடமாயும் இருப்பவர் -மூ வுலகங்களுக்கும் புகலிடமாக இருப்பவர் –
லிங்க அநிருத்த ஸ்தூல தேகங்களில் அபிமானம் கொண்ட ஜீவர்களுக்குத் தஞ்சமாக இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————-

621-ஸ்வஷ-
அவள் வடிவு அழகு என்னும் அமுதக் கடலில் கரை கண்ட திருக் கண்கள் முதலிய திவ்ய இந்த்ரியங்கள் உள்ளவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

தாமரை போன்ற அழகிய இரு திருக் கண்களை யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

மங்களகரமான இந்த்ரியங்கள் யுள்ளவர் -அர்ஜூனனுக்கு தமது விஸ்வரூபம் காண திவ்ய சஷூஸ் கொடுத்தவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————-

622-ஸ்வங்க-
அவளாலும் ஆசைப் படத் தக்க திவ்யமான திருமேனி யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

மிகவும் அழகிய அங்கங்கள் யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

அழகிய அங்கங்கள் யுள்ளவர் -பக்தர்களைத் தம்மை அடையச் செய்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————–

623-சதா நந்த –
ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள அன்பின் மிகுதியால் அளவற்ற ஆனந்தம் யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

ஒரே ஆனந்தம் பல காரணங்களால் பல வகைகளாய்ப் பிரிந்து இருப்பதால் அநேக ஆனந்தம் யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

எல்லையற்ற ஆனந்தம் யுடையவர் -நான்முகனுக்கு ஆனந்தத்தை அளிப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————

624- நந்தி –
இவ்வாறு எல்லா இடங்களிலும் எல்லாக் காலங்களிலும் எல்லா வகைகளிலும் லஷ்மி நிறைந்து இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

பரமானந்த வடிவாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

ஆனந்தம் யுடையவர் -ஆனந்தத்தைத் தருபவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————

625-ஜ்யோதிர் கணேஸ்வர –
இருவர்க்கும் அனுகூலர்களும் ஒளியுருவம் உள்ளவர்களுமான ஆதிசேஷன் விஸ்வக்சேனர்
முதலியோர் எப்போதும் திருவடி பணிந்து தொண்டு செய்யப் பெற்றவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

சூரியன் முதலிய ஒளிப்   பொருள்கள் அனைத்திற்கும் தலைவராக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

சூரியன் முதலியவர்களுக்குத் தலைவர் -உண்டாக்கிய பூதங்கள் அனைத்திற்கும் காரணமானவர் –
பிரகாசம் யுடையவர் -தேவர்களுக்கும் தலைவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————

626-விஜிதாத்மா –
பிராட்டியும் விரும்பும் செல்வம் யுடையவராயினும் திருவடி பணிந்து இருப்பவர்களுக்கு தாழ்ந்து இருப்பவர் -பரத்வத்தில்
எல்லை இது வரை சொல்லி சௌலப்யத்தின் எல்லையாக ரஹச்யம் கூறப்படுகிறது –ஸ்ரீ பராசர பட்டர்-

மனத்தை அடக்கியவர்–ஸ்ரீ சங்கரர் –

ஜீவர்களின் மனத்தை வெல்பவர் -கருடனால் அடியைப் பெற்ற திரு மேனி யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————-

627-விதேயாத்மா –
அடியவர்கள் இங்கு வா இங்கு நில் இங்கு அமர் இங்கு உண் என்று கட்டளை இடுவதற்கு உரிய தன்மை யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

யாருக்கும் அடிமைப் படாத தன்மை யுள்ளவர் -அவிதேயாத்மா -என்று பாடம் –ஸ்ரீ சங்கரர் –

ஸ்நானம் தானம் முதலிய விதிகள் விஷயங்களில் மனமுள்ளவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————–

628-சத்கீர்த்தி –
இப்படிப் பட்ட சௌலப்யம் இருப்பதாலேயே உண்மைப் புகழுடையவர்–ஸ்ரீ பராசர பட்டர்-

உண்மையான புகழ் யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

உண்மையான புகழ் யுடையவர் -வாமன திருவவதாரத்தில் கீர்த்தி என்ற மனைவியைப் பெற்றவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————-

629-சின்ன சம்சய –
இந்த எளிமை பற்றிய புகழினாலேயே -இவரை அறியக் கூடுமோ கூடாதோ -வசப்படுவாரோ வசப்படாரோ –
ஸூ லபரா துர்லபரா-என்பவை முதலிய சந்தேஹங்களை அறுப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

எல்லாவற்றையும் உள்ளங்கை நெல்லிக்கனி போல் பார்ப்பவர் ஆதலால் சந்தேகம் அற்றவர் –ஸ்ரீ சங்கரர் –

எல்லா ஐயங்களையும் போக்குபவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————

630-உதீர்ண –
வெளிக் கண்ணாலும் காணும்படி வெளிப்படையாக திருவவதரிப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

எல்லாப் பிராணிகளுக்கும் மேலானவர் –ஸ்ரீ சங்கரர் –

பிரளய காலத்தில் ருத்ரனை சம்ஹரிப்பவர் -உயர்ந்தவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————-

631-சர்வதஸ் சஷூ –
நம்முடைய கண்களுக்குப் புலப்படுபவர் -ஐயம் அற்றபடி கூறுகிறது –
தெளிவாய் பிரத்யஷமான விஷயத்தில் சந்தேஹம் இல்லை அன்றோ –ஸ்ரீ பராசர பட்டர்-

தமது ஞானத்தினால் எல்லாவற்றையும் பார்ப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

முழுமையான கண்கள் யுடையவர் -எல்லா இடங்களிலும் கண்கள் உள்ளவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————-

632-அநிச-
ஸ்நானம் அலங்காரம் கோஷ்டி முதலிய எல்லாவற்றிலும் அடியவர்களுக்கு ஆட்பட்டு இருப்பதால்
சுதந்தரம் இல்லை –ஸ்ரீ பராசர பட்டர்-

தமக்கு மேல் ஈசன் இல்லாதவர்–ஸ்ரீ சங்கரர் –

தமக்கு ஈசன் இல்லாதவர் -பிராணிகளுக்கு ஈஸ்வரர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————-

633-சாஸ்வத ஸ்திர-
பலவிதமான அர்ச்சா ரூபங்களை எடுத்து அடியவர்கள் எக்காலமும் சேவிக்கும்படி இருப்பதால் எக்காலமும் நீங்காதவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

எல்லாக் காலங்களிலும் இருப்பவராயினும் எந்த வித மாறுதலும் இல்லாதவர் என்று ஒரே திரு நாமம் –ஸ்ரீ சங்கரர் –

எப்போதும் ஒரே நிலையில் இருப்பவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————

634-பூசய-
பக்தர்கள் அர்ச்சா விக்ரஹங்களில் எழுந்து அருளும்படி பிரார்த்திப்பதை ஏற்றுக் கொண்டு அவர்களால் காண்பிக்கப் பட்ட
ஸ்வயம் வ்யக்தம் சித்தம் மானுஷம் முதலிய திருத் தளங்களில் அவர்களை அனுக்ரஹிக்க சுகமாக எழுந்து அருளி இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

ஸ்ரீ ராமாவதாரத்தில் சேது பந்தனத்திற்காக கடல்கரையில் தர்ப்ப சயனத்தில் சயநித்தவர் –ஸ்ரீ சங்கரர் –

பூமியைக் கையிலே உள்ளவர் -பூ ரூபியான ஸ்ரீ லஷ்மியுடன் சயநிப்பவர் -பூமியில் சயனித்து இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————————

635-பூஷண-
இப்படி யாவர்க்கும் அனுகூலமான எளிமைக் குணத்தால் ஸ்ரீ யபதியான தம்மை அலங்கரிப்பவர் –
செல்வந்தர்களாக இருப்பவர்கள் ஏழைகளின் இல்லத்திற்கு விருந்தாளியாக வந்து அவர்கள் தரும் உணவை உண்டு
அவர்களோடு சமமாக இருத்தல் என்பது அவர்களுக்குப் பழி யாகாது -மாறாக புகழே யாகும் –ஸ்ரீ பராசர பட்டர்-

தம் இச்சையினால் மேற்கொள்ளும் அவதாரங்களில் பூமியை அலங்கரிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

அலங்கரிப்பவர் -பூரணமான செயல்களையும் ஆனந்தத்தையும் யுடையவர் -ஆபரணங்களை   யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————-

636-பூதி –
வெளி உபாயங்கள் ஆகிய செல்வம் உள் உபாயங்கள் ஆகிய பக்தி இவை இல்லாதவர்களுக்கு அவற்றை நிரப்பும் செல்வமாக  இருப்பவர் –
அவர்களுக்கு பிள்ளை கறவைப் பசு நண்பர்கள் போன்ற செல்வமாக இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

இருப்பு அல்லது செல்வமாக இருப்பவர் -எல்லாச் செல்வங்களுக்கும் காரணம் ஆனவர் –ஸ்ரீ சங்கரர் –

ஐஸ்வர்ய ரூபமாக இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————–

637-அசோக -விசோக-
நாதன் அற்றவன் எவனையும் காப்பாற்றாது விடாமையினால் அவன் விஷயமாகப் பின்னர் சோகப் படாதவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

ஆனந்த ரூபி யாதலின் சோகம் இல்லாதவர் -விசோக என்பது பாதாம் –ஸ்ரீ சங்கரர் –

சோகம் இல்லாதவர் -விசோக -என்பது பாடம் –
அசோக -விசேஷமான சுகமுள்ள ஸ்ரீ வைகுண்டம் முதலியவற்றை இருப்பிடமாக யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————-

638-சோக நாசன –
அவர்களுக்குத் தம் சம்பந்தம் இல்லாமையால் வரும் துன்பத்தைப் போக்குபவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

தம்மை நினைத்தவுடன் பக்தர்களின் துன்பத்தைப் போக்குபவர் –ஸ்ரீ சங்கரர் –

துன்பங்கள் அழியப் பெற்ற முக்தர்களை நடத்துபவர் -சோகத்தை அழிப்பவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————————

639-அர்ச்சிஷ்மான் –
பக்தர்களுக்கு மறைந்து இருக்கும் தம் பெருமையை அறியும்படி அவர்கள் உட் கண்களையும்  வெளிக் கண்களையும்
திறக்கும் திறமை உள்ள பேரொளி யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

ஒளியுள்ள சந்திர சூரியர்களுக்கும் ஒளி கொடுக்கும் சிறந்த ஒளி யுள்ளவர் –ஸ்ரீ சங்கரர் –

ஒளிக் கதிர்கள் யுள்ளவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————-

640-அர்ச்சித-
எக்காலமும் எல்லாப் புண்ய ஷேத்ரங்களிலும் உள்ள கோவில்களிலும் வீடுகளிலும் பக்தர்கள் கண்ணால் கண்டு பூஜிப்பதற்கு எளிய
அர்ச்ச்சாவதாரம் செய்து இருப்பவர் -பரத்வம் போலே தூர தேசம் இல்லை -விபவம் போலே காலாந்தரம் இல்லை -பாஞ்சராத்ரம்
போதாயன  ஸ்ம்ருதி ஸ்ரீ வைஷ்ணவ புராணம் முதலியவற்றால் அர்ச்சாவதார தத்வ ரகச்யம் அறியப் பட வேண்டியதாகும் –ஸ்ரீ பராசர பட்டர்-

எல்லோராலும் பூஜிக்கப் படும் பிரம்மா முதலான தேவர்களாலும் பூஜிக்கப் படுபவர் –ஸ்ரீ சங்கரர் –

பிரம்மா முதலானவர்களால் அர்ச்சிக்கப் படுபவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————

641-கும்ப –
அவரவர் கண்ணால் கண்டு பழகிய உருவங்களுக்கு ஒப்பான வடிவழகு முதலியவற்றால் பக்தர்களால் விரும்பப் படுபவர் –
கு -எனப்படும் பூமியாகிய ஷேத்ரங்கள் கோயில்கள் முதலியவற்றில் த்யானம் ஆராதனம் முதலியவற்றுக்கு விஷயமாகும்படி பிரகாசிப்பவர் –
பிறப்பு இறப்புகளினால் சம்பந்தம் உள்ள பூமியில் யமபடர்களால் ஏற்படும் பயன்களைப் போக்கும் மகா பிரபாவத்துடன் பிரகாசிப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

உடலை விட்டவர்களுக்கு அவர்களுடைய புன்யங்களுக்கு ஏற்ப பகவானுக்குக் கைங்கர்யம் செய்வதால் அல்லது
புண்ணியப் பிறவிகளில் பிறப்பதனால் பகவானை அடைவது தெரிவிக்கப் படுகிறது –ஸ்ரீ சங்கரர் –

குடம் போலே எல்லாம் தம்மிடத்தில் வைக்கப் பட்டவர் -ஆதாரமாக இருப்பவர் –
பூமியைப் பிரகாசமாக விளங்கும்படி செய்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————————

642-விஸூத்தாத்மா-
தமது வைபவத்தை எல்லாம் பக்தர்களுக்கே வழங்கி இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

முக் குணங்களையும் கடந்த பரிசுத்த ஸ்வரூபம் யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

தெளிவான தன்மை யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————–

643-விசோதன-
திவ்ய ஷேத்ரங்களில் உடலை விட்டவர்கள் தம்மை அடைவதற்குத் தகுதி உடையவர்களாகும் படி பரிசுத்தராக ஆக்குபவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

தம்மை நினைத்த மாத்திரத்தில் பாவங்களைப் போக்குபவர் –ஸ்ரீ சங்கரர் –

வேதங்களை விசேஷமாகச் சோதிப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————-

644-அநிருத்த-
ஜனார்த்தனர் என்னும் பெயருடன் பூமியில் வஸூ பாண்டம் என்னும் ஷேத்ரத்தில் அநிருத்தர் நித்யமாக இருக்கிறார் என்றபடி
அநிருத்தராக இருப்பவர் -பிறகு சில ஷேத்ரங்களில் முன் சொன்ன வ்யூஹ அவதாரங்களிலும் விபவ அவதாரங்களிலும்
சில இருப்பதைக் கூறுகிறது –ஸ்ரீ பராசர பட்டர்-

வ்யூஹங்களில் நான்காமவரான அநிருத்தர் –ஸ்ரீ சங்கரர் –

தடையற்றவர் -சம்சாரத்தில் இருந்து விடுபட்டவர்களை-முக்தர்களை தரிப்பவர் -போஷிப்பவர் –
தள்ளப்படாதராதலால் உத் என்னும் பெயர் யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————————-

645-அப்ரதிரத –
ஜனார்த்தனர் என்னும் பெயருக்குத் தக்கபடி விரோதிகளை அழிப்பதில் தடுப்பவர் யாரும் இல்லாதவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

எதிரிகள் எவரும் இல்லாதவர் –ஸ்ரீ சங்கரர் –

எதிரிகள் அற்றவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————–

646-பிரத்யும்ன –
சிறந்த ஆத்ம ப்ரகாசம் உள்ளவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

பிரத்யும்னன் என்னும் வ்யூஹமாக இருப்பவர் -சிறந்த செல்வம் உள்ளவர்–ஸ்ரீ சங்கரர் –

உயர்ந்த புகழ் யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————-

647-அமித விக்ரம-
த்ரிவிக்ரம திரு வவதாரத்தில் மூவுலகங்களிலும் அமது திருவடிப் பதிப்பு அடங்காதவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

அளவற்ற மகிமை யுடையவர் -யாராலும் பீடிக்கப் படாத பராக்கிரமம் உள்ளவர் –ஸ்ரீ சங்கரர் –

எல்லையற்ற வீரம் யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————

648-கால நேமி நிஷா –
கலியின் கொடுமையை அழிப்பதற்காக திவ்ய ஷேத்ரங்களில் இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

கால நேமி என்னும் அசுரனை அழித்தவர் –ஸ்ரீ சங்கரர் –

காலநேமியை அழித்தவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————-

649-சௌரி-
உத்பால வர்த்தகம் -திருக் கண்ணபுரம் -என்னும் ஸ்தலத்தில் சௌரி என்னும் திரு நாமத்துடன் எழுந்து அருளி இருப்பவர் —
சூரர் என்னும் வசுதேவருடைய மகன் –ஸ்ரீ பராசர பட்டர்-

சூர குலத்தில் பிறந்த ஸ்ரீ கிருஷ்ணனாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

சூர குலத்தில் பிறந்த ஸ்ரீ கிருஷ்ணனாக இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————

650-ஸூ ர –
சித்ர கூட மலையில் ராஷசர்களை அழிப்பவரும் தாமரை இதழ் போன்ற நீண்ட கண்களை யுடையவருமான
ஸ்ரீ ராமபிரான் இருக்கிறார் -என்றபடி சூரரான ஸ்ரீ ராமபிரானாக இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர்-

வீரராக இருப்பவர் -வீர -என்பது பாடம் –ஸ்ரீ சங்கரர் –

மேன்மை யுள்ளவரை நோக்கிச் செல்பவர் -வீர என்பது பாடம் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading