Archive for May, 2014

ஸ்ரீ பெரிய திருமொழி-6-1—-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

May 5, 2014

ஸ்ரீ திருவரங்கம் -உலகம் அளந்த பொன்னடி -சரணாகதி போல் அடுத்து
ஸ்ரீ திரு விண்ணகர் பெருமாள் திருவடிகளில் சரணாகதி உண்டே
இங்கு பிரதிபந்தகங்கள் போக்கி அருள விண்ணப்பம் செய்து அருளுகிறார்

வண்டுணு நறு மலர் -பிரவேசம்

இவருக்கு உகந்து அருளின நிலங்களில் உண்டான
ருசியைப் பற்ற ஈஸ்வரன் இங்கே வைத்தான் –
சப்தாதி விஷயங்களும் இந் நிலத்திலேயாய் இருந்தது –
(உம்மைத் தொகையால் உகந்து அருளினை நிலங்களும் )

நீர்  மனிசரைக் கரையினிலே நிறுத்தினால்
பழைய வாசனையாலே நீரிலே போய்ப் புகுமா போலே
உகந்து அருளின நிலங்கள் இங்கே உண்டானாலும்
விஷயங்கள் பரிமாறுகிற இடத்தில் உண்டான இருப்பு
அவற்றில் கை கழிய போகைக்கும் உடலாய் இருக்கையாலே
ஈஸ்வரனுக்கும்
இவருக்கு இங்கனேயும்   ஒரு நினைவு உண்டோ  -என்று
கை கழிய விடுகைக்கு உடலாய் இருக்கையாலே
(போகம் நீ எய்தி பின்னும் வந்து எய்தி -கோவிந்த ஸ்வாமிக்குப் போல் )

சாஷாத் கரித்து அல்லது நிற்க ஒண்ணாத படி
பகவத் விஷயத்தில் தமக்கு உண்டான ருசியையும்
விட்டு அல்லது நிற்க ஒண்ணாத படி சம்சாரத்தில் பிறந்த அருசியையும்
அவன் திரு உள்ளத்தில் படும்படி
விண்ணப்பம் செய்கிறார் –

ஆத்ம வஸ்து பகவத் அர்ஹம் அல்லாமை அன்று இறே
அநாதி காலம் சம்சரித்தது அசித் ப்ரத்யா சத்தியாலே  இறே –
ஆன பின்பு
இத்தை தவிர்த்துக் கொள்ள வேணும் இறே –

இத்தால் –
வேண்டேன் மனை வாழ்க்கையை -ஒரு கால் சொன்னால் போலே
ஒன்பதின் கால் சொல்லிக் கூப்பிடுகிறார் –

த்யக்த்வா புத்ரான் ச தாராம் ச மித்ராம் ச தனா ச -போல் இங்கு
ராமம் சரணம் கதி–பிராட்டி முன் சரண் அடுத்து

ஆண்டாய் யுன்னைக்  காண்பதோர் அருள்-அவன் பக்கல் ருசியையும் –
மால் பால் மனம் சுளிப்ப -பரமாத்ம ரக்தம்
வேண்டேன் மனை வாழ்க்கையை-சம்சார அருசியையும் சொல்லிக் கொண்டு
மங்கையர் தோள் கை விட்டு -அபர வற்றில் விரக்தியும்
கீழ் நந்தி புர நண்ணு மனமே
என்றவர் இங்கு பூ லோக -மனை வாழ்க்கை வேண்டாம் என்கிறவர் -ஸம்ஸார பீதியால் –
காந்தாரம் பஞ்சமம் -பா இலக்கணம் -நாலடி வைத்து

நாயிகா பாவம் இல்லாத ஆறாம் பத்தில் திருமொழி முதல் பத்து போல்
6-3- திரு விண்ணகர் -திருவாய் மொழியிலும் -அகடித கட நா –
பொன் அப்பன் மணி அப்பன் முத்து அப்பன் என் அப்பன் –
இங்கும் 6-3- திரு விண்ணகர் பதிகம் –

———————————————————

வண்டுண் மலர் இண்டை கொண்டு பண்டை நம் வினை கெட வென்று அடியேன்
தொண்டரும் அமரரும் பணிய நின்று அங்கு அண்டமொடு அகலிடம்   அளந்தவனே
ஆண்டாய் யுன்னைக்  காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே –6-1-1-

வினை கெட-தேவர்களுக்கும் பாபங்கள் உண்டே -சஞ்சித கர்மாக்கள் உண்டே
நின்று-யஜ்ஞ வாடத்திலே நின்று அன்றோ அளந்தான் -வாமனன் –
அகலிடம் அளந்தவன் திருவிக்ரமன்
ஆண்டாய்-சேஷத்வம் காட்டி அருளி அடிமை ஆக்கிக் கொண்ட ஸ்வாமி
உன்னைக்  காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்-காண்பதற்கு வேண்டிய நிர்ஹேதுகமான
கிருபையைப் பண்ணி அருள வேணும் -செய்ய வேண்டும் –
உமது கிருபையை கிளப்ப ஹேது ஒன்றும் அடியேன் இடம் இல்லை
அதனால் அதற்கும் கிருபை வேண்டுமே இதுவே நிர்ஹேதுக கிருபை –
ஆகவே இரண்டு தடவை அருள் இங்கு -கேவலம் மதீயைவ தயையா —தயையாலேயே மட்டுமே –போல் இங்கும் –
எங்கு ருசி -எங்கு அருசி -முதல் இரண்டு அடிகளில் சொல்லி பின்பு –
ஆண்டாய் யுன்னைக்  காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே-எல்லா பாசுரங்களிலும்
விட்ட எல்லா வற்றுக்கும் மாம் ஏகம்
நட -நடக்கை ஆகிய செயல் என்னும் படி -கர்மா வியக்தியில் இருக்குமே
மனை வாழ்க்கையை-இல்லற ஸூகம் -ஸம்ஸார ஸூகம்

வண்டுண் மலர் இண்டை கொண்டு பண்டை நம் வினை கெட வென்று அடியேன்
செவ்விப் பூ மாலையை கையிலே கொண்டு
முன்பு நாம் பண்ணி வைத்த பாபங்களை அடையப் போக்க வேணும்
என்று திருவடிகளின் மேலே

தொண்டரும் அமரரும் பணிய நின்று அங்கு அண்டமொட அகலிடம்   அளந்தவனே
சங்கைஸ் ஸூ ராணாம்-(ஸ்ரீ விஷ்ணு தர்மம் -மங்களங்களை வளர்க்க )-என்கிறபடியே
தேவர்களும்
மற்றும்
திருவடிகளுக்கு நல்லாராய் இருப்பாரும்
ஆஸ்ரயிக்க
நின்று –
அர்த்தித்து நின்று
பெற்ற அவ்விடம் தன்னிலே நின்றே
அண்டங்கள் உடன்  கூட   பூமிப் பரப்பை அளந்து கொண்டவனே –

ஆண்டாய் யுன்னைக்  காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
ஆண்டாய்
நான் இதர விஷயங்களில் பிரவணனாய்
உன் பக்கலிலே வைமுக்ய்யம் பண்ணிப் போரா நிற்கச் செய்தேயும்
இவ்வளவும் வர
என் சத்தை அழியாமல் நோக்கிக் கொண்டு போந்தவனே –
(படிக்கு அளவாக நின் பாத பங்கயமே வைத்து சேஷத்வம் அறிவித்தாய் —
சேஷ பூதன் என்று உணர்ந்தேன் -இதனால் ஆண்டாய் –
ஆத்மாவை சேஷம் என்றே ஆதரிக்கும் மாணிக்கத்துக்கு தேஜஸ்ஸு போல் -பூவுக்கு மணம் போல்
ஸ்வரூப நாசம் அடையாமல் உள்ளே எழுந்து அருளி ஆண்டாய் -)

யுன்னைக்  காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
அநாதி காலம் சத்தையை நோக்கி கொடு போந்ததின் பலம்
நீயே பெற வேண்டி இருந்தாய் ஆகில்
என் பக்கலிலே கிருபையைப் பண்ணி அருள வேணும் –
(உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் -ப்ராப்தாவும் ப்ராப்யமும் பிராப்திக்கு உகப்பானும் நீயே
போக்தாவும் நீயே )

வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே –
இன்னும் இவனுக்கு சம்சார வாசனை கழிந்தது இல்லை
என்று இருக்க வேண்டா
எனக்கு லோக யாத்ரையில் ருசி இல்லாமையைத்
திரு வுள்ளம் பற்ற வேண்டும் –

(அருசி போக்குவதும் உனது கர்தவ்யமே -இதுக்கும் உன் அருள் வேண்டும்
எனக்கு -ஒரே சொல் மட்டும் -அனுக்ரஹத்துக்கு பாத்திரமாக -அதிகாரியாக –
ஒன்றே வேண்டுவது -கொள்கலமாக இருக்க வேண்டும்
வேண்டேன் -நான் வேண்டேன் -தானே நான் இருக்கும் -அசித் சம்சார ருசி போக
வேண்டியதும் எனக்கே தான்
இந்த இரண்டையுமே அழகாக காட்டி அருளுகிறார் –
தத்வமஸி ஸ்வேதகேது
நச புந பார்த்ததே
போல் இங்கும் ஒன்பது தடவை இத்தை அருளிச் செய்கிறார்
இந்திரனுக்கு மனை வாழ்க்கை ஆசை -உன்னை பிச்சை எடுக்கவும் விட்டான்
அடியேன் நடை அழகைக் காண பிரார்த்திக்கிறேன் )

——————————————–

இந்திரனுக்கு இடத்தில் சுவர்க்கத்தில் ஆசை
எனக்கு அது இல்லை என்றார் கீழ்
இந்திரனுக்கு சாகா வரம் ஆசை
எனக்கு அது இல்லை என்கிறார் இதில்
அவனுக்கு இரந்து நிலை நிறுத்தினாய்
தேவ ஜாதிக்கு சாகா வரம் – உப்புச் சாறு கொடுத்தாய்
அப்படி தேக சாபல்யம் இல்லை
இந்த நன்மையையும் உன்னாலே வந்தது

அண்ணல் செய்து அலை கடல் கடைந்து அதனுள் கண்ணுதல் நஞ்சுண்ணக் கண்டவனே
விண்ணவர் அமுதுண்ண வமுதில் வரும் பெண்ணமுது உண்ட எம்பெருமானே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே —6-1-2-

ஒரு கால் சொன்னத்தை ஒன்பதின் கால் சொல்லுகிறார் –
பகவத் விஷய ருசியையும்
தம்முடைய இந்த சம்சார அருசியை ஸ்திரம் என்னும் இடத்தை
அவன் திரு உள்ளத்தே படுத்துகைக்காக –

அண்ணல் செய்து –
ஔதார்யத்தை பண்ணி -என்னுதல்
ஸ்வாமித்வத்தை நிர்வஹித்து -என்னுதல்

அலை கடல் கடைந்து –
பெரிய  ஷோபத்தை உடைத்தாய் இருந்துள்ள கடலை கடைந்து –

அதனுள் கண்ணுதல் நஞ்சுண்ணக் கண்டவனே
அதனுள் -நஞ்சை கண் நுதல் -உண்டாக -கண்டவனே
அதில் உண்டான விஷத்தை புஜித்து
தேவர்கள் முடியாதே இருக்கும் படியாக பார்த்தவனே –
(ருத்ரனுக்கு அந்தராத்மாவாக நிர்வகித்தவனே )

விண்ணவர் அமுதுண்ண வமுதில் வரும் பெண்ணமுது உண்ட எம்பெருமானே –
தேவ ஜாதி அம்ருதத்தை புஜித்து உஜ்ஜீவிக்க
அந்த அம்ருதம் தான் கோதாம் படியாக வந்து
தோற்றின பெரிய பிராட்டியாரை லபித்தது
அவ்வழி யாலே ஆஸ்ரித வர்க்கத்துக்கு உபகரித்தவனே –
ஜனனி பக்கல் பண்ணும் உபகாரம்
பிரஜைகளுக்காய் இருக்கும் இறே
(எம்பெருமானே-இது அன்றோ நமக்கு அருளிச் செய்த பரம உபகாரம்
சத்ரு ஹந்தாரம் –ஆலிங்கனம் )

ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
அச் சேர்த்தியை நான் கண்டு அனுபவிக்கும் படி –
என் பக்கலில் கிருபையைப் பண்ணி அருளி வுதியாகில்
(கீழே உலகம் தாண்டி வாமனன் ப்ரஹ்மசாரி சேவிக்க அருள் பிரார்த்தனை
இங்கு சேர்த்தி -சேவிக்க அருள் பிரார்த்தனை )

வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே
அத்தேவ ஜாதி உன்னைக் கொண்டு பூண் கட்டிக் கொள்கிற
சம்சார யாத்ரையை வேண்டேன் –
(உன்னைக் கொண்டு சம்சாரம் கெட்டிப்பட தேவர்கள்
வெட்டிக் கொள்ள அடியேன் )

—————————————————————–

சிர காலம் ஜீவிக்க யத்னம் கீழ்
இதில் ஜீவித்து இருந்தால் இன்னான் இனியன் கொண்டாட ருத்ரனுக்கும்
திரிபுர சம்ஹாரம் -பேர் வாங்கிக் கொடுக்க
எனக்கு அப்படி புகழ் பேறு வேண்டாம்
இப்படி ஒவ் ஒன்றுக்கும் அதே வார்த்தைகள் கொண்டு அருளிச் செய்கிறார் –

குழல் நிற வண்ண நின் கூறு கொண்ட தழல் நிற வண்ணன் நண்ணார் நகரம்
விழ நனி மலை சிலை வளைவு செய்து அங்கு அழல் நிறம் அம்பது வானவனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே —6-1-3-

அம்பது வானவனே-பாண நாராயணன் -சர நாராயணன் செவி உண்டே

நனி-பெருத்த –

குழல் நிற வண்ண நின் கூறு கொண்ட தழல் நிற வண்ணன் நண்ணார் நகரம்
திருக் குழலில் நிறத்தை உடைய
திரு மேனியின் நிறத்தை உடையவனே
கூறாளும் தனி உடம்பன் -என்கிறபடியே
உன் திரு மேனியில் கூறு உடையவனாய்
அக்னி கல்பமான நிறத்தை உடையவன்
கண்ணுக்கு குளிர்ந்து இருக்கும் சர்வேஸ்வரன் திரு மேனி
கண் கொண்டு பார்க்க ஒண்ணாத படி எரிந்து இருக்கும் இவன் மேனி –

விழ நனி மலை சிலை வளைவு செய்து அங்கு அழல் நிறம் அம்பது வானவனே
ஆசுர  பிரகிருதிகள் உடைய த்ரிபுரமான படை வீடு
நசிக்கும்படியாக
பெருத்து மேரு கல்பமான வில்லை வளைத்து
விஷ்ணுர் ஆத்மா தஸ்மாத் (பாரதம் -கர்ண பர்வம் ) -என்கிறபடியே
அதுக்கு உள்ளீடாய்ப் புக்கு நின்றான் ஆய்த்து-

இவ் வபதானத்துக்கு ஹேது என் என்ன
விஷ்ணுர் ஆத்மா தஸ்மாத் (பாரதம் -கர்ண பர்வம் )-என்றது இறே
அம்புக்கு  கூர்மையாய்  போய்ப் புக்கு
பிரதி பஷத்தை அழியச் செய்து
அந்த விஷய அபதானத்தை அவன் செய்தான் -என்று
விருது ஊதித் திரியும்படி பண்ணினவனே –

ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
ஓர் அபதானம் பண்ணினேன் என்று
விருது ஊதித் திரியும்படி பண்ண வேண்டா-

வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே –
ஸ்வரூப விரோதியைக் கழித்து
ஸ்வரூப அனுரூபமான பேற்றை
பண்ணித் தர வேணும் –
(விருதூதுவதோ அஹங்கரிப்பதோ ஈஸ்வரோஹம் என்று இருப்பதோ வேண்டேன் )

———————————————-

ருத்ரன் தலையில் விஜயம் ஏறிட்டு அருளியதை கீழ்
நீர் நினைத்த போதே செய்ய வேண்டுமோ
பிரதிபந்தகங்கள் கிடக்க
அகடி தகட நா சக்தன் அன்றோ –
பண்ணிக் காட்ட வேண்டா
மார்க்கண்டேயர் காண ஆசைப் பட்டார் போல் இல்லை
நம்மாழ்வாருக்கு காட்டி சேர்த்துக் கொண்டாயே விருத்த விபூதிகளைக் காட்டி
அத்தைக் காணும் படி அருள வேண்டும்

நிலவோடு வெயில் நில விருசுடர் உலகமும் உயிர் களும் உண்டு ஒரு கால்
கலை தரு குழவியின் உருவினையாய் அலை கடல் ஆலிலை வளர்ந்தவனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே —6-1-4-

உருவினையாய்-இப்படிப்பட்ட உருவைக் கொண்டு
கலை தரு-கலா மாத்திரம்

நிலவோடு வெயில் நில விருசுடர் உலகமும் உயிர்களும் உண்டு ஒரு கால்
நிலவோடு கூட வெய்யில் நிலவுகிற
சஞ்சரிக்கிற
சந்திர சூர்யர்களுக்கு நிர்வாஹகனாய்
வர்த்தியா நின்றுள்ள நிலாவையும் வெய்யிலையும் உடைய
இரு சுடர் -என்னுதல்
லோகங்களும்
அவற்றில் உண்டான பிராணிகளும்
ஆகிய இவற்றை ஒரு கால் வயிற்றிலே வைத்து –

கலை தரு குழவியின் உருவினையாய் அலை கடல் ஆலிலை வளர்ந்தவனே
கலா மாத்ரமாய் இருந்துள்ள
குழவியினுடைய வடிவை உடையையாய்
ஷோபத்தை உடைத்தான கடலிலே
ஒரு பவனான ஆலந்தளிரிலே கண் வளர்ந்து அருளுகிற
அகடிதகடநா சாமர்த்யத்தை உடையவனே  –

ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
என் பக்கல் அகடிதகடங்களை
கடிப்பிக்க வேண்டா
உன்னைக் காண்பதொரு வகை
அருள வமையும் –

வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே —
என் தலையால் வரும் அம்சத்தில் கண் அழிவு இல்லை –

——————————————————

சேராதவற்றை சேர்த்துக் கொண்டது உமக்கு ஒரு பொருட்டே இல்லையே
அகில ஸமஸ்த வஸ்துக்களும் சகல வித காரணம் நீ அன்றோ –

பாரெழு கடலெழு மலை ஏழு மாயச் சீர் கெழும் இவ் உலகு ஏழும் எல்லாம்
ஆர் குழு வயிற்றினில் அடக்கி நின்று அங்கோர் எழுத்து ஓர் உரு வானவனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே —6-1-5-

எழுத்து ஓர் உரு வானவனே-அகார -வாஸ்யம் -உரு வாசகம் –
சொல்லுக்கு காரணம் போல் பொருள்களுக்கு காரணம் -அகாரார்தோ விஷ்ணு –

பாரெழு கடலெழு மலை ஏழு மாயச் சீர் கெழும் இவ் உலகு ஏழும் எல்லாம்
பூமிகள் ஏழும்
கடல்கள் ஏழும்
மலைகள் ஏழுமான
இவற்றுக்கு நிர்வாஹகனாய்
அழகு செய்து இருந்துள்ள இந்த லோகங்கள் ஏழும் அடைய –

ஆர் குழு வயிற்றினில் அடக்கி நின்று அங்கோர் எழுத்து ஓர் உரு வானவனே –
அழகு மிக்கு இருந்துள்ள வயிற்றிலே அடக்கி நின்றாய் –
இத்தால்
வாச்யங்களுக்கு  எல்லாம் தன் பக்கலிலே இருப்பாம்படி
இவற்றுக்கு ஆதார பூதனாய் நிற்கும்படி
சொல்லிற்று
வாசக ஜாதத்துக்கு எல்லாம்
பிரதானமாய் இருக்கிற
அகார சப்த வாச்யன் ஆனவனே –

ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே –

———————————————————-

ஜகத் காரணம் கீழே
ஜகத் அனைத்தும் சரீரம் இதில்
சரீரீ யான தேவரீரைக் காணுமாறு அருள வேண்டும் –

கார் கெழு கடல்களும் மலைகளுமாய் ஏர்  கெழும் உலகுமுமாகி முத
லார்களும் அறிவரும் நிலையினாய்ச் சீர் கெழு நான்மறை யானவனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே —6-1-6-

கார் -இத்யாதி –
மேகங்கள் படிந்த சமுத்ரமும்
பூமிக்கு ஆணி அடித்தால் போலே இருக்கிற மலைகளும்
இங்கன் பிரித்துச் சொல்லுகிறது என்
கட்டளைப் பட்டு இருந்துள்ள லோகங்களுமாய்  –
இத்தால்
ஜகதாதாரனாய்
ஜகத் சரீரனாய்
நிற்கும் நிலையைச் சொல்லுகிறது –

முதலார்களும் அறிவரும் நிலையினை யாய் –
சதுர் தச புவநேஸ்வரனான சதுர்முகன் தொடக்கமான
ப்ரதானர் ஆனவர்களாலும்
இவ்வளவு என்று பரிச்சேதிக்க ஒண்ணாத
ஸ்வ பாவத்தை உடையையாய்
(யஸ்ய ஆத்மா சரீரம் ந வேத இத்யாதி )

சீர் கெழு நான்மறை யானவனே-
ப்ராமாண்யத்துக்கு போருமாம் படி
யதாபூதவாதியாய் இருக்கிற நாலு வகைப் பட்ட
வேதங்களாலே பிரதிபாத்யனாய் இருக்கிறவனே –

ஆண்டாய் இத்யாதி
நீ ஜகதாரரானாய்  சர்வாதிகனாய் இருப்புதி என்று
பிரமாணங்களிலே கேட்டுப் போகை அன்றிக்கே
உன்னுடைய அசாதாராண ஆகாரத்தை நான்
சாஷாத் கரிக்கும் படி என் பக்கலிலே கிருபையைப் பண்ணி
யருளிதி யாகில் –

நானும் மெய்யே இத்தை அருவருத்தேன் –

—————————————————–

ஜகத் சரீரீயாய் வேத ப்ரதிபாத்யன் கீழ்
இதில் யாகங்களில் ஆராதனாய்
வேத சாரமான பிரணவ -பிரதிபாத்யன் நீர்
காணுமாறு அருள பிரார்த்தனை

உருக்கு நறு நெய் கொண்டு ஆர் அழலில் இருக்கு உறும் அந்தணர் சந்தியின் வாய்
பெருக்கமோடு அமரர்கள் அமர நல்கும் இருக்கினில் இன்னிசை யானவனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே—-6-1-7-

இருக்கு உறும்- ருக்குகளை உற்று இருக்கும் –
இருக்கினில் இன்னிசை-வேதத்தில் ஸ்வரம் -பிரணவம் –

உருக்கு நறு நெய் கொண்டு ஆர் அழலில் இருக்கு உறும் அந்தணர் சந்தியின் வாய்
உருக்கின நறு நெய்யைக் கொண்டு
அக்னியிலே
இருக்குறும் பிராமணர்
சந்த்யைகள் தோறும்  –

பெருக்கமொட அமரர்கள் அமர நல்கும்படி
சந்தியின் வாய்
உருக்கு உறு நறு  நெய் கொண்டு ஆர் அழலிலே
ஹவிஸஸூக்களை கொடா நின்றுள்ள

இருக்கு உறும் அந்தணர் உடைய
இருக்கினில் இன்னிசை யானவனே -என்று அந்வயம்-

பெருக்கமோடு அமரர்கள் அமர நல்கும் இருக்கினில் இன்னிசை யானவனே –
பரஸ்பரம் பாவயந்தஸ் ஸ்ரேய பரமவாப்ச்யாத-ஸ்ரீ கீதை –என்கிறபடியே
பெருக்கத்தோடே கூட
தங்களுக்கு உபகரண சம்பத்தி  உண்டாகும்படி
தேவர்கள் பண்ணுகைக்காக
அவர்களுக்கு தாரகமான ஹவிஸ்ஸை
அவர்களுக்கு கொடா நின்றுள்ள   பிராமணருக்கு
தனமான வேதத்தில் இன்னிசை உண்டு
ஸ்வர ரூபமான பிரவணம் -அத்தால் பிரதிபாத்யனாய் உள்ளவனே –

சாஹிஸ்ரீர் அம்ருதாச தாம் -என்று
வேத தமர் என்னக் கடவது இறே பிராமணரை
ஸ்வரம் -என்று -பிரணவத்தைச் சொல்லக் கடவது இறே

யத் வேதாதௌ ஸ்வர ப்ரோக்த -என்று (ஆதியில் சொல்லப்படும் ஸ்வரம் -பிரணவம் )
பிரணவம் பர ஸ்வரூபத்தை ஒன்றையும் சொல்லுகிறதோ
ஆத்ம வஸ்து ஸ்வரூபத்தையும் சொல்லுகிறதோ -என்றால்
இரண்டையும் சொல்லா  நின்றது இறே
ஆத்மா நம் யுஞ்ஜீத -என்றும்
ஓங்காரோ பகவான் விஷ்ணு -என்றும்

ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே-

———————————————

யாகங்களால் ஆராத்யன் என்றார் கீழ்
யாகங்களை பண்ணி ஸ்வர்க்காதி பெறுகிறார்களே
நீரோ வேண்டேன் என்கிறார் எதனால் என்ன
ஹேதுவை அருளிச் செய்கிறார் இதில்

காதல் செய்து இளையவர் கலவி தரும் வேதனை வினையது வெருவுதலாம்
ஆதலில் உனது அடியன் அணுகுவன்  நான் போதலர் நெடு முடிப் புண்ணியனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே—6-1-8-

காதல் செய்து இளையவர் கலவி தரும் வேதனை வினையது வெருவுதலாம்
இளையவர் காதலைப் பண்ணிக் கொண்டு
ஸ்திரீகள் ஆனவர்கள் சங்கத்தை உடையராய்க் கொண்டு
தருகிற துக்காத்மகமான
சம்ஸ்லேஷத்துக்கு ஹேதுவாய் இருக்கிற
கர்மத்தை அனுசந்திக்க  அநுசந்திக்க
எனக்கு பயமாகா நின்றது –

ஆதலில் உனது அடியன் அணுகுவன்  நான்
ஆன பின்பு இப்படிப் பட்ட அபாயங்களை
தப்புவிக்கும் உன் திருவடிகளை கிட்டுவன் நான் –
அந்த சம்ஸ்லேஷம் தான் துக்காத்மகமாய் இறே இருப்பது –
அனுபவிக்கப் புக்கால் ஒரு நாள் வரையில்
பர்யாப்தனாக விரகு இன்றிக்கே
தம்முடைய பும்ஸ்தவத்தை அழிய மாற வேண்டும்படியாய்
இனித் தான் கண்டார்க்கு கவிழ்தலை இட்டு திரிய வேண்டும்படியாய்
மேல் நரகமாம் படி ஸ்வரூப ஹானியை விளைக்கக் கடவதான
சம்ஸ்லேஷதுக்கு ஹேதுவான கர்மத்தை அனுசந்திக்கிற இது
அச்சத்துக்கு ஹேதுவாகா நின்றது
ஆன பின்பு எங்கேனும் திரியிலும் யமாதிகள் மேலே அடியிட்டு
திரியும்படியான திருவடிகளை அணுகுவன் நான்-

போதலர் நெடு முடிப் புண்ணியனே –
வைத்த வளையமும்  நீயுமாய் இருக்கிற இருப்பைக் காட்டி
என்னுடைய இதர விஷயத்தில் பிராவண்யத்தை தவிர்த்த
சுத்தியை உடையவனே –
நாட்டாருக்கு இது பிறக்கிறது இல்லை இறே
இவர்க்கே இது உண்டாய்த்து –

ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
உன்னை ஒழிந்த விஷயங்களில்
ருசியை போக்கின நீயே
நான் கண்ணாலே காணலாம் படி
என் பக்கலிலே கிருபையை பண்ணுவுதியாகில்

வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே
எனக்கு இவற்றில் அருசி உண்டு –

—————————————————–

இளையவர் கலவியையே புருஷார்த்தம் நாட்டார் ஆசைப்பட
நீர் இவற்றை வேண்டாம் என்று இருப்பத்துக்கு மூலம் என்ன
பயத்துக்கு ஹேது இதுவே என்கிறார் இதில்

சாதலும் பிறத்தலும் என்று இவற்றை காதல் செய்யாது உன் கழல் அடைந்தேன்
ஓதல் செய் நான்மறையாகி யும்பராதல் செய் மூவுருவானவனே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே –6-1-9-

சாதலும் பிறத்தலும் என்று இவற்றை காதல் செய்யாது உன் கழல் அடைந்தேன்
மரண சமயத்தில் படும் வியசனம்
பின்பு நரகானுபவம் பண்ணப்படும் வியசனம்
பஞ்சாக்னி வித்யையில் சொல்லுகிறபடியே  கர்ப்ப ரூபத்தாலே படக்  கடவ வியசனம்
இவற்றை அனுசந்தித்து
ஜன்மாதிகளில் ஆசை பண்ணாதே
இவற்றைத் தவிர்த்து அருளும் தேவரீர் திருவடிகளை
வந்து கிட்டினேன்

இவற்றை ஆதரிப்பார் உண்டோ  என்னில்
அநிஷ்டாவஹமான ஜன்மாதிகளை கழித்துக் கொள்வான்
பகவத் சமாஸ்ரயணம் பண்ணி –
என்று சாஸ்திரங்கள் சொல்லா நிற்க
அது செய்யாத போதே
இத்தை ஆதரித்தார்களாம் இத்தனை இறே –

ஓதல் செய் நான் மறையாகி –
என்றும் ஒக்க ஓதியே போரக்  கடவது ஆகையாலே
நிர்த் தோஷமாய் இருந்துள்ள வேதங்களை
விபூதியாக உடையையாய்

யும்பராதல் செய் மூவுருவானவனே-
தேவர்களுக்கு எல்லாம் பிரதானராய்
அதிகாரி புருஷர்களாய் இருக்கிற ப்ரஹ்ம ருத்ராதிகளை
சரீர தயா சேஷமாக உடையவனே –

ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
எனக்கு இங்கனே இருப்பதொரு
அதிகாரத்தைத் தந்து
கால் கட்டாம் அது எனக்கு வேண்டா-

வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே
அவர்கள் அதிகாரங்களில் எனக்கு ருசி இல்லை –

—————————————————–

வாமன அவதாரம் உபக்ரமித்து
இங்கும் வாமனன் அவதாரத்தோடு சம்ஹரித்து அருளுகிறார் –

பூ மரு பொழில் அணி விண்ணகர் மேல்
காமரு சீர்க் கலி கன்றி சொன்ன
பாமரு தமிழ் இவை பாட வல்லார்
வாமனன் அடி இணை மருவுவரே—-6-1-10-

பூ மரு பொழில் அணி விண்ணகர் மேல்
பூ மாறாத பொழிலாலே அலங்க்ருதமாய் இருந்துள்ள
திரு விண்ணகர் மேலே சொல்லிற்று –
நித்ய வசந்தமான திரு விண்ணகரம் மேலே-

காமரு சீர்க் கலி கன்றி சொன்ன –
காமரப் படுவதாய்
எல்லார்க்கும் ஸ்ப்ருஹை பண்ண வேண்டும்படியான
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயை உடையரான ஆழ்வார்
அருளிச் செய்த –

பாமரு தமிழ் இவை பாட வல்லார் –
நல்ல சந்தஸ்ஸூக்களை உடைத்தான
இவற்றை அப்யசிக்க வல்லார்கள்

வாமனன் அடி இணை மருவுவரே
இவர் வேண்டேன் என்றதை தவிர்ந்து
அருளுதியேல் -என்ற பேற்றைப் பெறுவார் –

———-

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

வண்டாம் தெய்வத்தாளில் விஞ்சு விருப்பம் மிக்க
வண்டார் குழலார் பால் தான் வெறுப்பும் கொண்டமையை
விண்ணகரானுக்குச் செஞ்சொல்லால் கலியன் செய்
விண்ணப்பம் பொற்பே பொறு –51-

பொற்பு -அழகு / பொறு -தாங்கு /
எம்பெருமான் பால் ஆதாரஅதிசயமும் பிராக்ருத பதார்த்தங்களில் வெறுப்பும் வளர
ஓவுதல் இல்லாமல் ஆழ்வார் அருளிச் செயல்களை மனனம் செய்ய நெஞ்சை இரக்கிறார் –

————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரிய திருமொழி-5-10—-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

May 5, 2014

ஸ்ரீ நாதன் உறைகின்ற நகர் நந்தி புர விண்ணகரம்
ஸ்ரீ நாதன் கோயில்
ஸ்ரீ ஜகந்நாதன்
ஸ்ரீ போக ஸ்ரீ நிவாஸன்
தாயாரால் பெருமை பெற்ற -ஸ்ரீ லஷ்மி நாத
பூரி ஜகந்நாதன்
தக்ஷிண ஜெகந்நாத க்ஷேத்ரம் –
பஞ்சாயுதம் தரித்த க்ஷேத்ரம்
ஜெகந்நாத பெருமாள் மேற்கு நோக்கி
கிழக்கு நோக்கி தாயார் தவம்
போக ஸ்ரீ நிவாஸன்
நாதன் கோயில்
கோலாப்பூர் தவம் போல் இங்கு தவம்
ஐப்பசி சுக்ல பாஷா வெள்ளிக்கிழமை திருமணம்
செண்பக வல்லி தாயார்
செண்பகாரண்யம் -மன்னார்குடி போல் இங்கும்
அதிகார நந்தி -திரு பாற் கடலில் நுழைய
த்வபாரக பாலர் சாபம் வயிர் எரிய
அவர் சாபம் போக்கி
பிரயோக சக்கரம் -வீற்று இருந்த திருக்கோலம்
மந்தார விமானம்
நந்தி விமானம்

அரிமேய விண்ணகரம்
வைகுண்ட விண்ணகரம்
காழிச் சீராம விண்ணகரம்
திரு விண்ணகரம்
ஸ்ரீ வைகுண்டம்

தீதறு பிரவேசம்

தான் உகந்த ஊர் எல்லாம் தன் தாள் பாடி -திரு நெடும் தாண்டகம் -என்று இறே இவர் பாரிப்பு –
(திருவடி தன் நாமம் -தாள் -திருவடி -அவரையே சொல்லும் தாத பாதர் -தந்தை போல் )
சர்வான் காமான் -என்னக் கடவது இறே –
(முக்த ஜீவன் எல்லா குணங்களையும் அனுபவிப்பது போல் திவ்ய தேச எம்பெருமான் பூர்ணமாக
இருந்தாலும் சில குணங்களை பிரகாசித்து அருளுவான்
ஆஸ்ரித பாரதந்தர்யம்
ஸுசீல்யம்
கண்ணன் ராமனுக்கு சொல்வது போல்
திருப்பேர் நகரானை அனுபவித்தது போதாதே
எல்லாம் அபேக்ஷிதம் இவருக்கு )

சர்வ அந்தராத்மாவாய்–முதல் பாசுரம் –
சர்வ ஆபத்துக்களையும் போக்கி
(சர்வ பாபங்களையும் போக்கி )
உதவுமவனாய்
ஆஸ்ரிதருக்கு அபுநாரா வ்ருத்தி லஷணமான
மோஷத்தைக் கொடுக்கும்  ஸ்வ பாவனான
சர்வேஸ்வரன்
திரு நந்தி புர விண்ணகரிலே
வந்து சந்நிஹிதன் ஆனான்
அங்கே போய் அனுபவிப்போம் என்று  திரு உள்ளத்தோடே கூட்டுகிறார் –
(நண்ணு மனமே-பாசுரங்கள் தோறும் உண்டே -நேராக உபதேசிக்காமல்
திரு உள்ளத்துக்கு அருளிச் செய்து நாம் அனுசந்தித்து அறிவதற்காக )

————————————————————

தீதறு  நிலத்தோடு எரி காலினொடு நீர் கெழு விசும்பு மவையாய்
மாசறு மனத்தினொடு உறக்கமொடு இறக்கை யவையாய பெருமான்
தாய் செற வுளைந்து தயிருண்டு குடமாடு தடமார்வர் தகை சேர்
நாதன் உறைகின்ற நகர் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே —5-10-1-

தகை சேர்-கல்யாண குணங்களால் பூர்ணன் –

(பொய் நின்ற ஞானம் -குற்றம் இல்லை என்னலாமோ என்னில் –
இங்கு வந்து தானே கர்மங்களைத் தொலைத்து அவனுடன் சேரலாம் –
கெழு விசும்பு-முதலில் படைக்கப்பட்டு -இறுதியில் லயம் -என்பதால் இந்த விசேஷணம் –
ஸர்வ வியாபகம் -உள்ளே இருக்குமவர் -ஆத்மாவாக இருக்குமவர் –
ஆத்மாக்களை சரீரமாகக் கொண்டு அசேதனங்களுக்குள் உறைபவர்
ஸ்வரூபத்தால் எங்கும் வியாபகம் அன்றோ -)

தீதறு  நிலத்தோடு எரி காலினொடு நீர் கெழு விசும்பு மவையாய்
சேதனருக்கு போக மோஷங்களை விளைத்துக் கொள்ளலாய் இருக்கையாலே
குற்றம்  அற்று இருக்கிற பிருதிவ்யாதி பூத  பஞ்சகத்துக்கும்
அந்தராத்மாவாய்

மாசறு மனத்தினொடு உறக்கமொடு இறக்கை யவையாய பெருமான்
நிர்த் தோஷமான மனஸ் உடன் கூட
ஸ்வப்ன  ஸூஷூப்திகள் மரணம் என்று சொல்லப் படுகிற
இவற்றுக்கு நிர்வாஹகனாய் இருக்கிற சர்வேஸ்வரன்  –
(ஜாக்ரத ஸ்வப்னம் ஸூ ஷூப்தி துர்யா நான்கில் இரண்டு இங்கே
ஆத்மாவுக்கு மாசு கர்மங்கள்
மனசுக்கு மாசு காம க்ரோதாதிகள் – )

அந்தராத்மதயா நின்று ரஷகனாம் படி சொல்லிற்று கீழ்
கண்ணுக்கு இலக்காம்படி வந்து அவதரித்து ரஷகனாம்படி சொல்லுகிறது மேல்
(கீழே பரத்வ எல்லை -இனி ஸுவ்லப்ய எல்லை )

தாய் செற இத்யாதி –
தாயான யசோதைப் பிராட்டி சீறித் தாம்பு எடுக்க
அதுக்கு முன்னே படுமது சொல்லுகிறது
எல்லாம் செய்தாலும் அவன் தாரகத்தை விட்டு இரானே-

தயிர் உண்டு  –
ஸ்வ அனுபவத்தாலே த்ருப்தனாய் இருக்கக் கடவன்
(நித்யோதித -சாந்தோதித
இரண்டு தசைகள் -ஸ்வரூப அனுபவம் -குண அனுபவம் நினைத்து திருப்தனாக அங்கு இருக்க )
அனுகூல ஸ்பர்சம் உள்ள வெண்ணெயைப் புஜிக்க பெறுகையாலே ஹ்ருஷ்டனாய்
அந்த ஹர்ஷம் எல்லாம் தோற்றும்படி
அதுக்கு போக்கு வீடாக குடக் கூத்தாடி
அந்த பௌஷ்கல்யம் தான்  வடிவிலே தோற்ற இருக்கிறவர்
(தட மார்பர் -இயற்கையாக அகன்ற திரு மார்பு -உள்ளத்துக்கு தற் குறிப்பு ஏற்றம் போல் -இங்கும் -)

தகை சேர் நாதன் –
த்ரை லோக்யம் அபி நாதேன யேன ஸ்யான் நாதவத்தாம் (அயோத்யா காண்டம் இரண்டாம் சர்க்கம் )-என்கிறபடியே
(அநு ரூபன் லஷ்மீ சம்பத் -நாதனாக கொள்ள சக்கரவர்த்தி மக்களுக்கு சொல்வது )
ஒதுங்குவார் அளவு பட்டு
இத் தோள் நிழலே மிக்கு இருக்கிற சர்வேஸ்வரன்
அவதாரங்கள் போலே தீர்த்தம் பிரசாதியாதே
நித்ய வாஸம் பண்ணுகிற  –

————————————————–

ஆபத் ஸகத்வம் இதில் –

உய்யும் வகை யுண்டு சொன செய்யில் உலகு ஏழும் ஒழியாமை முன நாள்
மெய்யின் அளவே யமுது செய்ய வல ஐயன் அவன் மேவு நகர் தான்
மைய வரி வண்டு மதுவுண்டு கிளையோடு மலர் கிண்டி யதன் மேல்
நைவளம் நவிற்று பொழில் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே —5-10-2-

சொன செய்யில்-சொன்னதைச் செய்தால் உய்யும் வகை யுண்டு-அது எது என்னில்
நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே
அது எப்படி இருக்கும் -விளக்கம் மீதி பாசுரம்
வல-வல்ல என்றபடி
ஐய -நிருபாதிக பந்துவான சர்வேஸ்வரன்-ஸ்வாமி
மலர் கிண்டி-பூக்களைக் கோதி
நைவளம்-நட்ட பாடி – நாட்டுக் குறிஞ்சி

நான் சொன்னவற்றைச் செய்யப் பார்க்கில்
நமக்கு இனி உஜ்ஜீவிக்கைக்கு உபாயம் உண்டு
முடிந்து போம் இத்தனை அன்றோ என்று இருக்க வேண்டா
சகல லோகங்களிலும் ஒன்றும் பிறி கதிர் படாத படி
முன்பு ஒரு நாள் பிரளயம் தேடி வந்தால்
எங்குற்று என்று இளைத்துக் காட்டலாம் படி
திரு மேனி அளவிலே அமுது செய்ய வல்ல
நிருபாதிக பந்துவான சர்வேஸ்வரன்
நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் –

ஸ்யாமமான நிறத்தையும் வரியையும் உடைத்தாய் இருக்கிற வண்டுகள்
தன் பந்து வர்க்கத்தோடே கூட மது பானத்தைப் பண்ண
கழுத்தே கட்டளையாக
மது பானம் பண்ணின படியாலே
கால் வாங்கிப் போக மாட்டாமை
அவ்விடத்திலே இருந்து பூக்களைக் கோதி
அதின் மேலே இருந்து நைவளம் என்கிற பண்ணைப்
பாடா நின்றுள்ள பொழிலை உடைத்தான தேசம்  –

——————————————————-

ஆபத் சக்தத்வம் ச பிரகாரமாக விளக்கி இதில் –

உம்பர் உலகு ஏழு கடல் ஏழு மலை எழும் ஒழியாமை முன   நாள்
தம் பொன் வயிராரளவும் உண்டவை உமிழ்ந்த தட மார்வர் தகை சேர்
வம்பு மலர்கின்ற பொழில் பைம் பொன் வரு தும்பி மணி கங்குல் வயல் சூழ்
நம்பன் உறைகின்ற நகர் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே —-5-10-3-

பொன்-ஹிரண்ய -ஸ்லாக்யமான –
தகை-இங்கு பெருமை -கீழே கல்யாண குணங்கள் –
தும்பி -வண்டுகளின் அவாந்தரம் –

உபரிதன லோகங்கள் ஏழும்
கடல்கள் ஏழும்
மலைகள் ஏழும்
இவற்றில் ஒன்றும் பிறி கதிர் படாதபடி
முன்பு ஒரு நாள்
தன்னுடைய ஸ்லாக்கியமான வயிறு நிறையும் அளவும் உண்டு
உள்ளே கிடந்தது தளர ஒண்ணாது -என்று உமிழ்ந்து
இது தன் பேறு என்னும் இடம்
வடிவிலே தோற்ற இருக்கிறவர் –
தகை -பெருமை

பூவா நின்றுள்ள மலரை உடைத்தான பொழில்
அது தன்னில் பொன் படுமா போலே காணும் சஞ்சரியா நின்றுள்ள தும்பிகள்
மணி -அழகு
எப்பொழுதும் ஒக்க கருவடைந்த பயிரேயாய் இருக்கையாலே
இருண்டு இருந்துள்ள வயலாலே சூழப் பட்டு

ஏதேனும் தசையிலும்
விஸ்வச நீயனாய் இருக்கிறவன்
நித்ய வாஸம் பண்ணுகிற
தேசம் –

————————————————————

விரோதிகளை போக்கி ஆபத் ஸகத்வம் அடுத்த இரண்டு பாசுரங்கள்

பிறையின் ஒளி எயிறு இலக முறுகி யெதிர் பொருதுமென வந்த வசுரர்
இறைகளவை நெறு நெறு என   வெறிய வவர் வயிறு அழல நின்ற பெருமான்
சிறை கொள் மயில் குயில் பயில மலர்களுக வளி முரல அடி கொள் நெடு மா
நறை செய் பொழில் மழை தவழும் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே —5-10-4-

பல் தெரித்தாலும் யுத்தம் பண்ணுவோம் என்று வந்த அசுரர் –
என-அநுவாதம்
எறிதல்-வில்லை பொகட்டுதல் -முஷ்டி பிரஹாரம்-என்றுமாம்

பிறை போலே இலகா நின்றுள்ள எயிறானது விளங்கும்படியாக
மிகைத்துக் கொண்டு ஆபிமுக்யம் பண்ணி
(பக்தி உடன் போவது ஆபி முக்யம்
அத்வேஷம் வெறுப்பு
அதே போல் போர் புரிய ஆபி முக்யத்துடன் எதிர்த்து வரும் அசுரர்கள் )
எதிரே பொரும் இத்தனை என்று வந்த அசுரர்கள் உடைய சரீரம் ஆனது
சந்திகளிலே நெறு நெறு என்று முறியும்படி யாகவும் –

வெறியவவர் என்னலாம் படி -கையில் திவ்ய ஆயுதங்களை
சசால சாபஞ்ச முமோச -என்கிறபடியே பொகட்டு
(ராவணன் வில் நழுவிற்று -ராமன் வீரம் அறிந்தோம்
அர்ஜுனன் வில்லும் -காண்டீபம் நழுவிற்று -பகவத் கீதை பெற்றோம் )
ஹிருதயங்களிலே பய அக்னி கொளுத்தும் படி –

அதவா
நெறு நெறு என விட
எறிதல் இடுதல் -முஷ்டி பிரஹாரம் என்றுமாம் –

சிறகை உடைத்தாய் இருக்கிற மயில்கள்
குயில்கள் இவை நெருங்க
அத்தாலே பூக்கள் உதிர
வண்டுகள் ஆளத்தி வைக்க –
பரந்த தாளை உடைத்தாய்
ஓங்கி இருந்துள்ள மாக்களில் தேனை உடைத்தான
பொழிலிலே
மேகங்கள் வந்து சஞ்சரியா நின்றுள்ள
தேசம் –

——————————————————

பஞ்சாயுதம் தரித்த க்ஷேத்ரம்
ஜெகந்நாத பெருமாள் மேற்கு நோக்கி
கிழக்கு நோக்கி தாயார் தவம்
போக ஸ்ரீ நிவாஸன்
நாதன் கோயில்
கோலாப்பூர் தவம் போல் இங்கு தவம்
ஐப்பசி சுக்ல பாஷா வெள்ளிக்கிழமை திருமணம்
செண்பக வல்லி தாயார்
செண்பகாரண்யம் -மன்னார்குடி போல் இங்கும்
அதிகார நந்தி -திரு பாற் கடலில் நுழைய
த்வபாரக பாலர் சாபம் வயிர் எரிய
அவர் சாபம் போக்கி
பிரயோக சக்கரம் -வீற்று இருந்த திருக்கோலம்
மந்தார விமானம்
நந்தி விமானம்

விபீஷனையும் ராவணனையும் பிராட்டி அநுக்ரஹித்தாள்
விபீஷணன் உடைய நல்ல வார்த்தை ராவணன் காதில் ஏற வில்லை –
ஜீவ ஸ்வா தந்தர்யம் உண்டே
கையில் இருந்து வில் நழுவ கையால் ஆகாத நிலையில் நிறுத்தினாள்
அந்த நிலையிலும் இவன் சரண் அடையாமல் மீண்டும் போருக்கு வந்தானே
கீழே இன்று போய் நாளை வா
இதில் ராவண வதம்

மூள வெரி சிந்தி முனி வெய்தி யமர் செய்தும் என வந்த வசுரர்
தோளு மவர் தாளும் முடியோடு பொடியாக   நொடியாம் அளவெய்தான்
வாளும் வரி வில்லும்  வளை யாழி கதை சங்கம் இவை யங்கை யுடையான்
நாளும் உறைகின்ற நகர் நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே—5-10-5-

மூள வெரி சிந்தி முனி வெய்தி யமர் செய்தும் என வந்த வசுரர்
புகையும்படி அதுக்கடியான அக்னியை சிந்தி சீறி
பூசல் பொரும் இத்தனை -என்று வந்த
அசுர வர்க்கத்தின் உடைய

தோளு மவர் தாளும் முடியோடு பொடியாக   நொடியாம் அளவெய்தான்-
தாளைக் குறையா
தோளைக் குறையா
முடியைத் தள்ளா
ஒரு ஷண காலத்திலே எய்தவன்  –

வாளும் வரி வில்லும்  வளை யாழி கதை சங்கம் இவை யங்கை யுடையான்-
அப்படி இன்னமும்
யுத்தத்துக்கு பரிகரமான வாளும்
தர்ச நீயமான வில்லும்
வளைந்த வாயை உடைத்தான திரு ஆழியும்
கதையும்
இவற்றை அழகிய திருக் கையிலே உடையவன்

நாளும் உறைகின்ற நகர் நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே-
அவதாரங்கள் போலே
இப்போது சந்நிதி இல்லை என்ன வேண்டாத  படி
நித்ய வாஸம் பண்ணுகிற
தேசம் –

—————————————————-

ராவண வதத்துக்கு ஹேது இதில்

தம்பியொடு தாமொருவர் தன் துணைவி காதல்  துணையாக முன நாள்
வெம்பி யெரி கானக முலாவுமவர் தாம் இனிது மேவு நகர் தான்
கொம்பு குதி கொண்டு குயில் கூவ மயில் ஆலும் எழிலார் புறவு சேர்
நம்பி உறைகின்ற நகர் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே —-5-10-6-

தம்பி இத்யாதி –
சௌகுமார்யத்துக்கு அத்விதீயரான
தம்பியோடு கூட
வெம்பி யெரி கானத்திலே
உலாவினார் ஆய்த்து-
(எவ்வாறு நடந்தினையோ இராமா ஓ )
அங்கு ஆலம்பனம் என் என்னில் –

தன் துணை
பிராட்டியோடு கூடப் போகை
நில வெம்மை தோற்றிற்று இல்லை யாய்த்து –
துன்னு வெயில் வறுத்த வெம் பரல் மேல் பஞ்சடி யால்–பெரிய திருமடலில்
பெருமாளைப் பற்றாசாகக் கொண்டு பிராட்டி என்று
அவள் தனக்கு இருக்குமா போலே
நெருங்கின வெய்யிலை வறா நிற்கும் யாய்த்து  -வெவ்விய பரர்கள் யானவை –

அவற்றின் மேலே-பஞ்சடியால் -பூவிலே அடியிடிலும் கொப்பளிக்கும் படியான திருவடிகளாலே –

மன்னன் இராமன் பின்
அந்நிலை வெம்மைக்கு நீரும் நிழலும் இருக்கிறபடி –

வெம்பி  எரி கானகம் உலாவுமவர் –
வெம்மையை உடைத்தாய்
நிலம் தன்னையே விறகாகப் பற்றி எரிகிற
காட்டிலே உலாவினவர்
அப் பிராட்டியோடே புணர்ந்து வர்த்திக்கிற தேசம் ஆய்த்து-

கொம்பு இத்யாதி
கொம்புகளில் நின்றும் குதித்து
குயில்கள் ஆனவை முக்தர் சாம கானம் பண்ணுமா போலே கூவ
மயில்கள் ஆனவை ஆட –
அழகு மிக்கு இருக்கிற பர்யந்தங்களை யுடைத்தாய் இருந்துள்ள –

நம்பி உறைகின்ற நகர் –
சமஸ்த கல்யாண குணாத்மகன்
வர்த்திக்கிற தேசம் –

————————————————-

நந்திகேஸ்வரர் கைங்கர்யம் செய்த தேசம்
நந்தி என்னும் அரசன் என்றுமாம்
விரோதி நிரசனம் கீழ்
இங்கு நந்த கோபனுக்கு குழந்தை பேறு இல்லா துக்கம் தீர்த்து அருளிய உபகாரம்

தந்தை மனமுந்து துயர் நந்தவிருள் வந்த விறல் நந்தன் மதலை
எந்தை யிவன் என்று அமரர் கந்த மலர் கொண்டு தொழ நின்ற நகர் தான்
மந்த முழ வோசை மழையாக  வெழுகார் மயில்களாடு பொழில் சூழ்
நந்தி பணி செய்த நகர் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே—5-10-7-

ஸ்ரீ நந்தகோபர் உடைய ஹிருதயத்தை
தள்ளா நின்ற துக்கமானது நசிக்கும்படியாக
ஆசூர பிரக்ருதிகள் கண்ணுக்குத் தோற்றாதபடி
இருளிலே வந்த
பெரு மிடுக்கனான ஸ்ரீ நந்த கோபர் பிள்ளை –

பிறந்தது அங்கே ஆகில்
மீண்டும் போய் வளர்ந்தது அங்கே யாகில் –
கம்ச பயத்தாலே நாலு நாள் வளர்ந்த இத்தனையும் கொண்டு
அறிவு குறைய நின்றார் சொல்லுகை அன்றிக்கே
அறிவில் தலை நின்ற நம் போல்வார் இங்கன் சொல்லுகிற இதுக்கு ஹேது என்-என்று
ஜீயர் பட்டரைக் கேட்க –
நாமே அன்று காணும்
அவதார காலத்துக்கு முன்பே அறிவுடையராய் இருப்பாரும்
இப்படி சொன்னார்கள் காணும் –

அயம் ச கத்யதே ப்ராஜ்ஞை-இத்யாதிகளாலே
(கோபாலன் யாதவ வம்சம் மக்நமாகாமல் தூக்கி நிற்க)
அவர்களுக்கு முலை சுரவா நின்றது ஆகில்
இவன் தான் அஞ்சா நின்றான்  ஆகில்
உமக்கு இவ் வாராய்ச்சி என் தான் -என்று அருளிச் செய்தார் –

நமக்கு ஸ்வாமி இவன் என்று
தேவர்கள் கல்ப வ்ருஷத்தில் பூக்களைக் கொண்டு
ஆஸ்ரயிக்கும் படி நின்ற நகர் –

மந்தமான வாத்திய கோஷத்தை
மேக த்வனி என்று கருதி
அதுக்கு ஈடாக கார் காலத்தில்
மயில்கள் ஆனவை ஆடா நின்றுள்ள
பொழில் களாலே சூழப்பட்டு இருப்பதாய் –

நந்தி பணி செய்த நகர்
அந்ய பரன் ( தேவதாந்த்ர -சிவ பக்தன் )
அநந்ய பரனாய்
அடிமை செய்து வர்த்திக்கிற தேசம் –
அதாவது
நந்தி என்பான் ஒருவன்
அக் காலத்தில் அங்கே அனுகூலித்து
வர்த்தித்தான் போலே –

———————————————

மோக்ஷ ப்ரதன் இவனே
உபாசகர்களுக்கு இதில்
சரணாகதர்களுக்கு அடுத்த பாசுரம்

எண்ணில் நினைவெய்தி யினியில்லை இறையென்று  முனியாளர் திருவார்
பண்ணில் மலி கீதமொடு பாடி யவராடலொடு கூட வெழிலார்
மண்ணி லிது போலு நகரில்லை என வானவர்கள் தாம் மலர்கள் தூய
நண்ணி யுறைகின்ற நகர் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே —-5-10-8-

ரஜஸ் தமஸ்  ஸூக்களாலே அபிபூதராய்
ஆராயாதே சிலர் காலிலே குனியும் இத்தனை போக்கி –
எண்ணில் –
ஆராயில்
த்யானத்துக்கு விஷய பூதனான  ஈஸ்வரன்
இவனை ஒழிய வேறு ஒருவர் இல்லை என்று
சனகாதிகள்
அழகு மிகு இருந்துள்ள பண்ணிலே
மிக கானத்தோடு பாடி –
அவ் வவருடைய ஆடலோடே கூட –

எழிலார் -இத்யாதி
பூமியிலே பாரத வர்ஷமே உத்தேச்யம்
பண்ணின புண்யமானது
சாலில் எடுத்த நீர் போலே ஷயித்தவாறே
முகம் கீழ்ப் படத் தள்ளுகிற
ஸ்வர்க்கமும் ஒரு தேசம் ஆய்த்தோ –
கோலின பலங்களுக்கு எல்லாம்  சாதன அநுஷ்டானம் பண்ணலாம்
பாரத வர்ஷத்தை ஒழிய -என்றார்கள் இறே

அப்படியே
பூமிப் பரப்பில்
ஸ்லாக்கியமாய் இருந்துள்ள இந்த நகரத்தோடே ஒக்க
கடவது இல்லை என்று தேவர்கள்
புஷ்பாதி உப கரணங்களைக் கொண்டு
ஆஸ்ரயித்து நித்ய வாஸம் பண்ணுகிற
தேசம் –

————————————————-

வங்க மலி பௌவ மது மா முகட்டின் உச்சி புக மிக்க பெரு நீர்
அங்கம் அழியார் அவனது ஆணை தலை சூடும் அடியார் அறிதியேல்
பொங்கு புனல் உந்து மணி கங்குல் இருள் சீறும் ஒளி எங்கும் உளதால்
நங்கள் பெருமான் உறையும் நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே –5-10-9-

பௌவமது-கடலானது
பெரு நீர்-பிரளய ஜலம்
ஆணை தலை சூடும் அடியார்-வார்த்தை அறிபவர் மாயவன் அவனுக்கு அன்றி ஆவரோ
இருள் சீறும் ஒளி-அஞ்ஞானத்தைப் போக்கும் ஞானம்

மரக் கலங்களால் மிக்கு இருக்கிற கடலானது –
பாதுகாப்பாரே களவு காணுமா போலே
பூமிக்கு ரஷகமாக இட்டு வைத்த இது தானே
அண்ட பித்தி அளவும் சென்று
நூக்கும்படி  மிக்க ஜலத்தில் –

அவனுடைய வார்த்தையை சிரசா வஹிக்கக் கடவ
சேஷ பூதர் ஆனவர்கள்
பிரளய ஆபத்துக்கு ஹேதுவான கர்மம்
அனுபவியார்கள்
சர்க்கேபி நோபஜாயந்தே பிரளயே நவ்ய தந்திச -ஸ்ரீ கீதை -14- -என்கிறபடியே
(இதம் ஞானம் –மம சாதர்மயம் அடைந்து பிறக்கவும் மாட்டார்கள் -பிரளயத்தில் துன்பம் இல்லை –
வார்த்தை அறிபவர் பிறப்பு இறப்பு அடியார்கள் )

அறிதியேல் –
சைதன்ய பிரசுரமாகில் –

பொங்கு இத்யாதி –
பெருகின நீரானது கொடு வந்து தள்ளுகிற
ரத்னமானது ராத்ரியில் இருளானது
தன் கிரணம் கொண்டு தள்ளுகிற -ஒளி எங்கும் ஒக்க பரந்து இருக்கும் ஆய்த்து –

நங்கள் பெருமான் உறையும் –
பர அவஸ்தை நித்ய ஸூரிகளுக்காய் இருக்கும்
வ்யூஹம் ப்ரஹ்ம ருத்ராதிகள் பரிபவத்தைப் போக்கவாய் இருக்கும்
அவதாரங்கள் ஸ்ரீ வசுதேவர் சக்கரவர்த்திகள்
தொடக்கமான பாக்யாதிகருக்காய் இருக்கும்
பிற்பாடரான நம் போல்வாருக்காய் இருக்கும் இறே உகந்து அருளின நிலங்கள்
(பின்னானார் வணங்கும் சோதி அன்றோ )

நித்ய ஸூரிகளும் இங்கே வரும் போது
குறைவாளராய் வர வேணும்
அந்தகருக்கு வைத்த சாலையில்
விளித்தாருக்கு கண்ணை மறைத்து வர வேணும் இறே –

————————————————–

நறை செய் பொழில் மழை தவழும் நந்தி புர விண்ணகரம் நண்ணி யுறையும்
உறை கொள் புகராழி  சுரி சங்கமவை அங்கை யுடையானை ஒளி சேர்
கறை வளரும் வேல் வல்ல கலியன் ஒலி மாலை யிவை ஐந்தும் ஐந்தும்
முறையிலிவை பயில வல வடியவர்கள் கொடு வினைகள் முழுதகலுமே—5-10-10-

உறை கொள் புகராழி-ஆழ்வார் கையில் வேல் உறை போட முடியாதபடி பரர்களுக்கு
காலனாக இருக்க இவர் ஆழிக்கு உறை கொள்ள வேண்டுமே

மது மிக்க பொழிலே மேகங்கள் வந்து சஞ்சரிக்கிற
ஸ்ரீ நந்தி புர விண்ணகரிலே கிட்டி
நித்ய வாஸம் பண்ணுவதும் செய்து
விரோதி நிரசனத்துக்கு திரு மங்கை ஆழ்வார் கையில் வேல் உண்டான பின்பு
திரு ஆழி உறை இட்டு இருக்கும் காண்  –

உறை கொண்டு இருப்பதாய்
புகரை உடைத்தாய் இருக்கிற திரு ஆழி தொடக்கமான
திவ்ய ஆயுதங்களை
அழகிய திருக் கையிலே உடையவனை கவி பாடிற்று
(பஞ்சாயுதங்களை தரித்து அன்றோ சேவை )

ஒளி சேர் கறை வளரும் –
உறையில் கிடக்க அவசரம் இல்லை யாய்த்து
திரு மங்கை ஆழ்வார் வேலுக்கு
சத்ரு நிரசனம் பண்ணி
கறை கழற்ற அவசரம் இன்றிக்கே இருக்கும்

இப் பத்தையும் முறையில் இவை பயில
நண்ணு மனமே என்று உத்தேச்யமாக சொன்ன
தேசம் ஆகையாலே
இவ் விடம் நமக்கு ஆஸ்ரயணீய ஸ்தலம்
என்னும் பிரதிபத்தியோடே கூட
அப்யசிக்க வல்ல
அடியவர்கள் உடைய
க்ரூரமாய் அனுபவித்தால் அல்லது நசிக்கக் கடவது அன்றிக்கே
இருக்கிற பாபங்கள் ச வாசனமாகப் போம் –

———-

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

தீதறத் தொண்டர் துயர் தீர்த்து அவர்க்கு மீளுதலாம்
ஏதமில் வான் ஈந்து கரந்து எங்கும் உறை ஏதமில்லா
நந்தி புர விண்ணகரான் நண்ண நீலன் தானுரை செய்
செந்தேன் பருகு வண்டாய் –50-

ஏதமில் வான் -ஸ்ரீ வைகுண்டம் -கைவல்யத்தில் வ்யாவ்ருத்தி
நீலன் உரை செந்தேன் பருகு வண்டாய் தேனிலும் இனிதான திருமொழி –

—————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரிய திருமொழி-5-9—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

May 5, 2014

ஸ்ரீ கோயில் அடி அப்பக்குடத்தான் -கோயிலுக்கு கிழக்கே
சயன திருக்கோலம்
அப்பால ரங்கர்
வியாக்ரபாதர் பிள்ளை உபமன்யு துர்வாசர் சாபம்
இங்கு வந்து லக்ஷம் பேருக்கு ததீயாராதானம்
பெருமாளே எழுந்து அருளி தானே அமுது செய்து அப்பம் கேட்டு –
உண்ட மயக்கம் -வலது திருக்கையால் அப்பக்குடம் அணைத்துக் கொண்டே சயனம்
கமல வல்லித் தாயார்
இந்திரா தீர்த்தம்
இந்திரா விமானம்
நம்மாழ்வார் இறுதி பதிகம் இதற்கு
போம் மானை எய்து பொரும் ஆனை கொம்பு ஓசித்து -அம்மானை -திரு மாலை சிந்தித்து
எழுந்து இருப்பார்க்கு உண்டோ இடர் -பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்

பஞ்ச ரெங்க
ஆதி ஸ்ரீ ரெங்க பட்டணம்
மத்திய ரெங்கம்
ஸ்ரீ ரெங்கம்
அப்பால ரெங்கம்
பரிமள ரெங்கன்
அங்கீ கரிக்க அவகாசம் பார்க்கும் ஸ்வாமித்வம் பெரு நகரிலே பேர் பெற்றது -ஆச்சார்ய ஹ்ருதயம் -186-

பெரு நகர ரவணை மேல் கருவரை வண்ணன் தன் பேர் கருதி நான் உய்ந்தவாறே –5-9-3-
கமல வல்லித் தாயார்
நான்கு ஆழ்வார் மங்களா சாசனம்
நம்மாழ்வார் திரு மங்கை ஆழ்வார் இருவரும் பதிகம் அருளி உள்ளார்கள்

ஸ்ரீ பெரிய பெருமாள் திருவடிகளில் பிரபத்தி பண்ணினார் -கீழ் திருமொழிகளில்
இப் பிரபத்திக்கு பல அவ்வியபச்சாரம் உண்டாய் இருக்கும் இறே –
ஆழ்வாருக்கு கைங்கர்யம் ஒன்றே குறிக்கோள்
அதிகாரி பூர்த்தி இருந்தாலும் -சர்வேஸ்வரனுக்கு ஸ்வாதந்தர்யம் என்று ஓன்று உண்டே
கோவிந்த ஸ்வாமி பகவத் ப்ராவண்யம் இருந்தாலும் ஷூத்ர விஷயங்களை அனுபவித்து பின்னே
நம் இடம் வாரும் என்று அவர் கருத்தை அறிந்து கிருபை செய்தான்

அப்படியே உகந்து அருளின நிலங்களில் இவருக்கு வாசனை
உம்முடைய அபிநிவேச அனுரூபமாக திவ்ய தேசங்கள் எங்கும் புக்கு அனுபவித்து வாரும் என்று விட –
அநந்தரம் திருப்பேர் நகர் புக்கு அனுபவித்து பிரியர் ஆகிறார்
கோவிந்த ஸ்வாமிக்கு ஸூத்ர விஷய ப்ராவண்யம் போல் போரும் ஆய்த்து
இவருக்கு உகந்து அருளின நிலங்களிலே ப்ராவண்யம்-

அபி நிவேசம் இருக்க மடை மாற்றினால் போதுமே
அவனை நோக்கி ருசியை பெருக்க
கீழ் பாட்டில் ஐந்தாம் ஆறாம் -என்னுடைய கருத்து அறிந்து
உன் பேறாகச் செய்ய வேண்டும் என்று பிரார்த்தித்து இருக்க
சர்வ சக்தன் -அங்கனம் செய்யாமல்
ஆர்த்த ப்ர பின்னராக இருந்தாலும்
நம் பேறாக உம் கருத்தின் படி
அடி தொடங்கி உகந்து அருளின நிலங்களில் ப்ராவண்யம் கொண்டு
நமக்கு முகம் கொடுத்து
இங்கேயே இருப்பது நமக்கும் பேறு என்று காட்டி அருள
பேறு பெற்றவர்கள் நாம் தானே
இதுவே சங்கதி
தன் பேறாக வைக்கை ஆகிற ஸ்வாதந்திரம் மேலே ஆஸ்ரித நினைவின் படி செய்யும்
ஆஸ்ரித பாரதந்தர்யமும் உண்டே அவனுக்கு
இதுவும் ஹேது

கையிலங்கு ஆழி சங்கன் கருமுகில் திரு நிறத்தன்
பொய்யிலன் மெய்யன் தன் தாள் அடைவரேல் அடிமையாக்கும்
செய்யலர் கமலம் ஓங்கு செறி பொழில் தென் திருப் பேர்
பையரவணையான் நாமம் பரவி நான் உய்ந்தவாறே –5-9-1-

கையிலங்கு ஆழி சங்கன் -திருக் கையில் விளங்கும் திரு ஆழி -ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் உடையவனாய்
கருமுகில் திரு நிறத்தன்- இருண்ட மேகம் போல் அழகிய வர்ணம் உடையவனாய் –
கரு முகில் போல்வதோர் மேனி கையான ஆழி சங்கன் -திருச் சித்ர கூட பாசுரம் –
பொய்யிலன்-சாஸ்திரம் ப்ரதிபாதிக்கும் ஸ்வ வைலக்ஷண்யம்-அவை சொல்லும் விஷயங்களில் பொய் இல்லாமல் –
சுவர்க்கத்தில் பசு மாடு தலை கீழாக நடக்கும் வேதம் சொல்வது அர்த்த வாதம்
மெய்யன் -அவற்றை மறைக்காமல் ஆஸ்ரிதற்கு கடாக்ஷித்து அருளும்
தன் தாள் அடைவரேல் அடிமையாக்கும்–தன் திருவடி சேர்வார்களை -ஆஸ்ரியத்தவர்களை -சேஷ பூதராக்கி
கைங்கர்யம் கொடுத்து அருளும்
ஏல் -துர்லபம்
அரக்கர் அசுரர் உள்ளீரேல் -நம்மாழ்வார்
வாழாட் பட்டு உள்ளீரேல் -பெரியாழ்வார் –
செய்யலர் கமலம் ஓங்கு -கழனியில் விகசியா நிற்கும் தாமரை மலர்கள் ஊக்கம்
செறி பொழில் தென் திருப் பேர்-நெருங்கிய சோலைகள் -அழகிய திருப் பேர்
பையரவணையான் -பரந்த படங்கள் உடைய திரு அநந்தாழ்வானை படுக்கையாகக் கொண்டு
நித்ய வாஸம் செய்து அருளுபவனுடைய
நாமம் பரவி நான் உய்ந்தவாறே –திரு நாமங்களைப் பேசி உஜ்ஜீவித்த பிரகாரம் –
வாறே–என்ன ஆச்சர்யம்
பரவுதல் -பேசுதல்

கையிலங்கு ஆழி சங்கன் கருமுகில் திரு நிறத்தன்
சங்கம் -பாட வேதம்
வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும் படியான திருக்கையிலே
விளங்கா நின்றுள்ள திரு ஆழியையும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும் உடையவன்
அழகான வர்ணம் உடையவனாய்
ஆழி போல் மின்னி-திருப்பாவை – என்கிற படி திரு மேனியில்
கருத்த மேகத்தில் மின்னல் போல் சேர்த்தி அழகு
திவ்யாயுதங்கள் உடன் சேர்ந்த திவ்ய மங்கள விக்ரஹம்
நீல தோய்த மத்யஸ்தா வித்யுத் லேகா பாஸ்வரா

பொய்யிலன் –
இதர வி சஜாதீயமான விக்ரஹங்கல் தொடக்கமான வை லக்ஷண்யம் -அப்ராக்ருதம் –
அர்த்த வாத சங்கை இல்லாமல் –
புகழ்வதற்க்காக சொல்வது இல்லை -ஸ்வ இதர சகல-வைலக்ஷண்யம்

மெய்யன்
இவை அடைய பக்தாநாம் ஜிதந்தே -என்னும் படி ஆஸ்ரித அர்த்தமாக்கி அடிமையாக்கும்
என்னும் இது உண்மையாய் இருக்கும்

தன் தாள் அடைவரேல்
தேஹி மே தாதாமி தே யஜுர் வேதம் கடாக ப்ரஸ்னம் -கொடு -செய்கிறேன்
பிரயோஜனந்தர் போல் -கொண்டு அகல்வார் போல் இல்லாமல்
திருவடிகளுக்கே அசாதாரணமமாக வந்து கிட்டினார்கள் ஆகில்
ப்ரயோஜனாந்தரங்களைக் கொடுத்து அகல விடாதே நித்ய கைங்கர்யம் கொடுப்பவன்
மெய்யானாகும் விரும்பித் தொழுவார்க்கு எல்லாம் பொய்யனாகும் புறம்பே தொழுவார்க்கு எல்லாம்
நம்மாழ்வார் அங்கி பாசுரம் அது அங்க பாசுரம் இது

செய்யலர் கமலம் ஓங்கு
செய்கள் நிலங்கள்- நெல்லை விதைக்க தாமரை ஆயிற்று விளைவது -அலரா நின்று –
அவற்றின் ஓக்கத்தையும்

செறி பொழில்
செறிந்த சோலைகள்

தென் திருப் பேர்-
அழகிய நிரந்தர நித்ய வாஸம் செய்து அருளும்

பையரவணையான்
நிரந்தர பகவத் அனுபவத்தால் உண்டான ஹர்ஷத்தாலே விகசிதமான பணங்களை உடைய
திரு அனந்தாழ்வானை படுக்கையாக உடைய ஸர்வேஸ்வரன்

நாமம் பரவி நான் உய்ந்தவாறே
திரு நாமங்களை சொல்லி உஜ்ஜீவனம் அடைந்தேன்
ஒரு தேச விசேஷத்திலே போனால்
அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அந்நாதா அஹம் அந்நாதா அஹம் அந்நாதா
ஸோஸ் நு தே சேரவான் காமான் ஸஹ ப்ராஹ்மணா வி பச்சுதா-களித்து சொல்லும் பாசுரங்களை
இங்கேயே சொல்லி ஒருவன் வாழும் படி கிட்டிற்றே
வாழ்ந்து போகும் படியே என்று வித்தாராகிறார்

அன்னம் -போக்ய வஸ்து
போக்த்ருத்வம் -கூடி பாலே போல் சீர் அனுபவம்
இரண்டுக்கும் இரண்டு பிரமாணங்கள்
தானே அங்கு உள்ளவற்றை இங்கே திருப்பேர் நகரிலே வாழ்ந்து போனமை இவருக்கே ஆச்சர்யம் –

————————————————

தாள் அடையாதார் -பிரளய காலத்தில்
உதவி -திரு வயிற்றில் ரஷித்தது இதில் –

வங்கமார் கடல்கள் ஏழும் மலையும் வானகமும் மற்றும்
அங்கண் மா ஞாலம் எல்லாம் அமுது செய்து உமிழ்ந்த வெந்தை
திங்கள் மா முகிலணவு செறி பொழில் தென் திருப்பேர்
எங்கள் மால் இறைவன் நாமம் ஏத்தி நான் உய்ந்தவாறே –5-9-2-

வங்கமார் கடல்கள் ஏழும் -மரக் கலங்களால் நிறைந்த ஸப்த சமுத்ரங்களும்
மலையும் -ஸப்த குல பர்வதங்களும்
வானகமும் -ஆகாசமும்
மற்றும்-அதுக்கும் மேலே
அங்கண் மா ஞாலம் எல்லாம் -அழகிய இடம் உடைத்தான பரந்த பூமி இவை எல்லாவற்றையும்
அமுது செய்து -பிரளய காலத்தில் விழுங்கி
உமிழ்ந்த -ஸ்ருஷ்ட்டி காலத்தில் வெளிப்படுத்திய
வெந்தை–எங்களது ஸ்வாமியாய்
திங்கள் மா முகிலணவு -சந்த்ர மண்டலம் – பெரிய மேக மண்டலம் -அளாவி இருக்கும்
செறி பொழில் தென் திருப்பேர்-செறிந்த பொழில்கள் சூழ்ந்த திவ்ய தேசம்
எங்கள் மால் இறைவன் நாமம் -ஆஸ்ரிதரான எங்கள் விஷயத்தில் வ்யாமோஹம் உடைய சர்வேஸ்வரன் விஷயத்தில்
ஏத்தி நான் உய்ந்தவாறே -ஸ்துதித்து உஜ்ஜீவனம் அடைந்தேன் –
(எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்த தோர் கிடக்கை போல் இங்கும் )

வங்கமார் கடல்கள் ஏழும் மலையும் வானகமும் மற்றும் அங்கண் மா ஞாலம் எல்லாம்
மரக் கலங்களை கடல்களுக்கு ஏற்றமாக சொல்வது உண்டே –
மிக்கு இருக்கும் கடல்கள் எழும்
பூமிக்கு ஆணி அடித்தால் போல் குல பர்வதங்கள்
அவற்றுக்கு அவகாச பிரதானம் பண்ணும் ஆகாசமும்
இவற்றை வேலியாக கொண்ட பூமிப் பரப்பு முழுவதையும்

அமுது செய்து உமிழ்ந்த வெந்தை
பிரளய காலத்தில் திரு வயிற்றில் வைத்து ரக்ஷித்து
உள்ளே கிடந்தது தளர ஒண்ணாது என்று நிதியை விழுங்கி உமிழ்ந்து பார்ப்பாரைப் போலே
உமிழ்ந்து வெளி நாட காண என்னுடைய ஸ்வாமி

திங்கள் மா முகிலணவு செறி பொழில் தென் திருப்பேர்
சந்த்ர பதம் மேக பதம் அளவும் செல்ல ஓங்கி இருப்பதாய் செறிந்த பொழில்கள் சூழ்ந்த திவ்ய தேசம்

எங்கள் மால் இறைவன் நாமம் ஏத்தி நான் உய்ந்தவாறே
நம் போல் ஆஸ்ரிதர் பக்கல் வியாமோஹம் கொண்டு -வ்யாமுக்தனாய் –

இறைவன்
வியாமோஹம் இல்லை என்றாலும் விட ஒண்ணாத பிராப்தி உடையவன்
ஒழிக்க ஒழியாத சம்பந்தம் உண்டே –

நாமம் ஏத்தி நான் உய்ந்தவாறே
திரு நாமங்களைச் சொல்லி உஜ்ஜீவனம் அடைந்தேனே –
அசந்நேவ -தைத்ரியம் என்னும் படி இருந்த அஸத் கல்பனாய் போந்த அடியேன்
உஜ்ஜீவிக்கும் படி -ஆனேனே

கீழ் நான் -தாள் அடைந்தார்
அவ்விபூதியில் உள்ளார் போல்
இங்கு ஞாலம் பாதத்தை கடாக்ஷித்து -லீலா விபூதியில் உள்ளார் உடன் ஒரு கோவையாக
இருப்பதாக அருளிச் செய்கிறார்

————————————————

ஞாலத்துக்கு எல்லாம் உதவினமை கீழே
அதிலும் ஏற்றமாக
ஈஸ்வரோஹம் என்பாருக்கும் உபகரித்தமைக்கு இங்கு
இது அன்றோ அதிக ஆச்சர்யம் –
அங்கீ கரிக்க அவகாசம் பார்க்கும் ஸ்வாமித்வம் பெரு நகரிலே பேர் பெற்றது -ஆச்சார்ய ஹ்ருதயம் -186-
பஞ்ச ரெங்க
ஆதி ஸ்ரீ ரெங்க பட்டணம்
மத்திய ரெங்கம்
ஸ்ரீ ரெங்கம்
அப்பால ரெங்கம்
பரிமள ரெங்கன்

ஒருவனை யுந்திப் பூ மேல் ஓங்குவித் தாகம் தன்னால்
ஒருவனைச் சாபம் நீக்கி உம்பராள் என்று விட்டான்
பெரு வரை மதிள்கள் சூழ்ந்த பெரு நகர ரவணை மேல்
கரு வரை வண்ணன் தன் பேர் கருதி நான் உய்ந்தவாறே –5-9-3-

ஒருவனை -அத்விதீயனான பிரமனை
யுந்திப் பூ மேல் ஓங்குவித் -திரு நாபிக் கமலத்தில் உண்டாக்கியும்
ஆகம் தன்னால் ஒருவனைச் சாபம் நீக்கி -திரு மார்பில் உள்ள ஸ்வேத பிந்துவினால்
கை ஓட்டில் தெளித்து -சாபம் போக்கி
உம்பராள் என்று விட்டான்-தேவர்களை ஆளக் கடவாய் என்று விட்டு அருளி
பெரு வரை மதிள்கள் -மலை போன்ற மதிள்கள்
கரு வரை வண்ணன் -நீல மலை பர்வதம் போன்ற வண்ணன்
தன் பேர் கருதி நான் உய்ந்தவாறே-புக்கு சென்று போய் அனுபவிக்க ஆசைப் பட்ட அளவிலேயே
உஜ்ஜீவிக்கப் பெற்றேன் -என்ன ஆச்சர்யம்

ஒருவனை
தன்னை எண்ணினால் பிறகு ஒருவரை எண்ண ஒண்ணாதபடி -சதுர் தச புவனங்களுக்கும்
நிர்வாஹனாய் இருக்கும் பிரம்மாவை

உந்திப் பூ மேல் ஓங்குவித்து
திரு நாபிக் கமலத்தில் உண்டாக்கி

ஆகம் தன்னால் ஒருவனைச் சாபம் நீக்கி உம்பராள் என்று விட்டான்
திரு மார்பில் ஸ்வேத ஜலத்தால் ருத்ரனுக்கு சாபம் போக்கி அருளி
தேவ ஜாதிக்கு நியாந்தாவான மேன்மையில் ஒன்றும் குறை இல்லாமல் நடத்துவீர் என்று -விட்டான் ஆயிற்று
உபரிதன லோகங்களை ஆள விட்டு அருளி

பெருவரை மதிள்கள் சூழ்ந்த பெரு நகரில் –
பெரு வரை என்னலாம் படி மதிள்களால் சூழப்பட்டு கலங்கா பெரு நகர் உடன்
ஒக்கச் சொல்லலாம் படி உள்ள திருப்பேர் என்னும் பெரு நகரில்

அரவணை மேல் கருவரை வண்ணன்
திரு அனந்தாழ்வான் மேல் அஞ்சன மலை போல் சாய்ந்து அருளி

தென் பேர் கருதி நான் உய்ந்தவாறே
அழகிய

தன் பேர் -பாட பேதம்

தன் பேர் கருதி நான் உய்ந்தவாறே
புக்கு அனுபவிக்க மநோ ரதித்த அடியேன் உஜ்ஜீவித்த படியே
வடிவு அழகுக்கு வாசகமான திரு நாமம் சொல்லி உஜ்ஜீவிக்கப் பெறுவதே
எப்படிப்பட்ட வாழ்வு என்று வித்தர் ஆகிறார் –

—————————————————–

ஆகம் தன்னால் ஒருவனை சாபம் தீர்த்தத்தை விவரித்து அருளுகிறார்

ஊனமர் தலை யொன்று ஏந்தி உலகெலாம் திரியும் ஈசன்
ஈனமர் சாபம் நீக்காய் என்ன ஒண் புனலை யீந்தான்
தேனமர் பொழில்கள் சூழ்ந்த செறி வயல் தென் திருப் பேர்
வானவர் தலைவன் நாமம் வாழ்த்தி நான் உய்ந்தவாறே –5-9-4-

ஊனமர் தலை யொன்று -மாம்சம் நிறைந்த கபாலம் -அத்விதீய கபாலம் –
ஏந்தி உலகெலாம் திரியும் ஈசன்-கையில் தரித்துக் கொண்டு ஸமஸ்த லோகங்களிலும்
பிஷார்த்தமாக சஞ்சரியா நின்ற
ஈனமர் சாபம் நீக்காய் என்ன -தண்மை உடைய சாபம் போக்க வேண்ட பிரார்த்திக்க
ஒண் புனலை யீந்தான்-திரு மார்பில் அழகிய – சாபத்தைப் போக்க வல்ல – ஸ்வேத ஜலத்தைக்
கபாலத்தில் தெளித்து அருளி
தேனமர் பொழில்கள் சூழ்ந்த செறி வயல் தென் திருப் பேர்-வண்டுகள் நிறைந்த சோலைகள் -நெருங்கிய கழனிகள் சூழ்ந்த
வானவர் தலைவன் நாமம் வாழ்த்தி நான் உய்ந்தவாறே -நித்ய ஸூரிகளுக்கு ஸ்வாமியானவன் –
திரு நாமம் சொல்லி ஸ்துதித்து நான் உஜ்ஜீவித்தேன் –

ஊனமர் தலை யொன்று ஏந்தி உலகெலாம் திரியும் ஈசன்
மாம்ச பிரசுரமாய் இருக்கும் தலை ஓட்டைத் தரித்து
கூறு செய்த ஊரில் கையும் கைத் தலையுமாக திரிவாரைப் போலே –
மதிப்போடே திரிந்த பூமி எல்லாம் தட்டித் திரிய

ஈனமர் சாபம் நீக்காய் என
அவத்யாவஹமாய் -தண்மையை விளைக்கக் கடவதாய் இருக்கும் சாபத்தை போக்க
திருவடிகளில் சரணம் புக

ஒண் புனலை யீந்தான்
திரு மார்பில் ஸ்வேத ஜலம் தெளித்து அருளி
கீழே சாபம் போக்கி அருளியதை விளக்கி இங்கு அருளிச் செய்கிறார்

தேனமர் பொழில்கள் சூழ்ந்த செறி வயல் தென் திருப் பேர்
தேன் -வண்டுகள் மிக்கு இருக்கும் பொழில்களால் சூழப்பட்டு -செறிந்த வயல்களாலும் சூழப்பட்டு-
உள்ள அழகிய திவ்ய தேசம்

வானவர் தலைவன் நாமம் வாழ்த்தி நான் உய்ந்தவாறே
பாலைக் குடித்து நோயைப் போக்குவரைப் போல்
அயர்வறும் அமரர்கள் அதிபதி திரு நாமத்தை சொல்லி ஒருவன் வாழ்ந்து போவதே
விநாசத்தை சலிப்பிக்கிலும் -கொடுத்தாலும் – விட ஒண்ணாத இனிமை அன்றோ இவை

—————————————————-

சக்கரைச் செல்வன் -அப்பக்குடத்தான்
புக்க வரி உருவாய் அவுணன் உடல் கீண்டு உகந்த சக்கரச் செல்வன் தன்னை-திருவாய் -7-6-11-

கீழே பிரதான இருவருக்கும்
இதில் தேவர்களுக்கும்
சிறுக்கனுக்கும் உதவினமை

வக்கரன் வாய் முன் கீண்ட மாயனே என்று வானோர்
புக்கு அரண் தந்து அருளாய் என்னப் பொன்னாகத் தானை
நக்கரி யுருவமாகி நகம் கிளர்ந்து இடந்து உகந்த
சக்கரச் செல்வன் தென் பேர்த் தலைவன் தாள் அடைந்து உய்ந்தேனே —5-9-5-

வக்கரன் வாய் முன் கீண்ட மாயனே என்று -தண்டவக்கரன்-வாயை முன் காலத்தில் கிழித்துப் புகட்ட
ஆச்சர்ய பூதனே என்று
வானோர்-புக்கு அரண் தந்து அருளாய் என்ன–தேவதைகள் திரண்டு வந்து -ரக்ஷிக்க பிரார்த்திக்க –
ஹிரண்ய கசிபு இடம் இருந்து ரக்ஷித்து அருள
பொன்னாகத் தானை-ஹிரண்யனை
நக்கரி யுருவமாகி -நரசிம்ஹ உருவம் கொண்டு நன்றாக சிரித்து விருத்தி அடைந்து -நகு நகுதல்
நகம் கிளர்ந்து இடந்து உகந்த-நகங்களால் கிழித்துப் பொகட்டு ஆஸ்ரித ப்ரஹ்லாத சிறுவனை ரஷித்தோம் என்று உகந்து
சக்கரச் செல்வன் -ஸ்ரீ ஸூதர்சனம் தரித்த ஸ்ரீ மான் -செல்வம் -அலங்காரமாகவே இருப்பதால்
தென் பேர்த் தலைவன் -அழகிய திவ்ய தேசத்தில் எழுந்து அருளி உள்ள நம் ஸ்வாமி-
ஸ்வாமித்வம் தானே இங்கே காட்டி அருளிய கல்யாண குணம்
தாள் அடைந்து உய்ந்தேனே-திருவடிகளில் ஆஸ்ரயித்து உஜ்ஜீவித்துப் போனேனே –

வக்கரன் வாய் முன் கீண்ட மாயனே என்று வானோர்
தேவர்களை எல்லாரையும் நெருக்கி நலிந்து திரிந்தான் ஆயிற்று இந்த தந்தவக்கரை அசுரன்
அவன் வாயை அநாயாசேந கிழித்துப் பொகட்டி அருளிய சக்தி உக்தனே
வேறே ஒரு அசுரன் -கிருஷ்ணாவதாரத்தில் உள்ளவன் என்றுமாம்

புக்கு அரண் தந்து அருளாய் என்னப் –
தேவர்கள் எல்லாரும் திரண்டு

பொன்னாகத் தானை-
ஹிரண்யனை

நக்கரி யுருவமாகி –
நரசிம்ம வேஷம் கொண்டு சிரித்து

நகம் கிளர்ந்து இடந்து உகந்த-
பெரிய கிளர்த்தி உடன் திரு உகிராலே பிரஹலாதன் விரோதி போகப் பெற்றோமே என்று உகந்து

சக்கரச் செல்வன் –
ஹிரண்யன் உடல் திரு உகிருக்கு போந்தது இல்லை –
திரு ஆழி அழகுக்கு பத்திரம் கட்டுவரைப் போல் –ஆபரணமாகவே ஆயிற்று இங்கு

தென் பேர்த் தலைவன் தாள் அடைந்து உய்ந்தேனே
தென் திருப்பேர் திவ்ய தேசத்தில் நித்யவாஸம் பண்ணி அருளும் சர்வாதிகனான ஸர்வேஸ்வரனைக்
கிட்டி உஜ்ஜீவனம் அடைந்தேன் –

——————————————————-
சீதாப்பிராட்டிக்கு உதவியது
கீழே சிறுவனுக்கு
ஒரு பெண் பிள்ளைக்காக அகடி தங்களைச் செய்தவன்

விலங்கலால் கடலடைத்து   விளங்கு இழை பொருட்டு வில்லால்
இலங்கை மா நகர்க்கு இறைவன் இருவது புயம் துணிந்தான்
நலங்கொள் நான்மறை வல்லார்கள் ஓத்தொலி யேத்தக் கேட்டு
மலங்கு பாய் வயல் திருப்பேர் மருவி நான் வாழ்ந்த வாறே—5-9-6-

இறைவன்-அபிமானித்து இருக்கிற ராவணன் நினைவின் படி
நலங்கொள்-ஸதாசாரம் உள்ள பிராமணர் -வேதங்களுக்கும் விசேஷணம்
மலங்கு -மத்ஸ்யங்கள்

விலங்கலால் கடலடைத்து விளங்கு இழை பொருட்டு வில்லால்
நீரிலே ஆழக் கடவதான மலைகளாலே
கடலை அடைத்து
விளங்கா நின்றுள்ள ஆபரணத்தாலே அலங்க்ருதையான
பிராட்டி உடைய ஒப்பனையிலே தோற்று
ஷத்ரியத்வத்துக்கு ஏகாந்தமான வில்லாலே   –

இலங்கை மா நகர்க்கு இறைவன் இருவது புயம் துணிந்தான்
ப்ரஹ்மாஸ்த்ரத்துக்கும் அழியாத இலங்கை அன்றோ எனக்குப் படை வீடு
நான் இவ் ஊருக்கு நிர்வாஹகன் அன்றோ -என்று
அபிமானித்து இருக்கிற ராவணன் உடைய
அவ் ஊருக்கு கணையம்-உழல் தடி -ரக்ஷகம் – போலே இருக்கிற
தோள்களைத் துணித்தான் ஆய்த்து –

நலங் கொள் நான்மறை வல்லார்கள் –
நிர்த் தோஷமாய்
நாலு வகைப் பட்டு இருந்துள்ள வேதங்களையும் அதிகரித்து இருக்கிற
பிராமணர் -என்னுதல்

ஆசாரத்தால் மிக்கு
நாலு வகைப் பட்டு இருக்கிற வேதங்களும்
கை வந்து இருக்கிற பிராமணர் -என்னுதல் –

ஓத்தொலி யேத்தக் கேட்டு –
அவர்கள் உச்சமாக உச்சரிக்கிற த்வநியைக் கேட்டு

மலங்கு பாய் வயல் திருப்பேர் மருவி நான் வாழ்ந்த வாறே –
நம்மைக் குறித்து உண்டான ஆரவாரம் என்று
மலங்குகள் பாயா நின்றுள்ள
வயலை உடைத்தான திருப் பேரை
மருவி நான் வாழ்ந்தவாறே –

——————————————————-

நாரீணாம் உத்தமைக்கு அகடி தங்களை செய்தமை கீழே
இடைப்பெண்களுக்கு கட்டவும் அடிக்கவும் ஆனபடி இதில்

வெண்ணெய் தான் அமுது செய்ய வெகுண்டு மத்தாய்ச்சி ஓச்சிக்
கண்ணியார் குருங் கயிற்றால் கட்ட வெட்டென்று இருந்தான்
திண்ண மா மதிள்கள் சூழ்ந்த தென் திருப் பேருள் வேலை
வண்ணனார் நாமம் நாளும் வாய் மொழிந்து உய்ந்தவாறே —5-9-7-

வெட்டென்று-சம்மதித்து –

வெண்ணெய் தான் அமுது செய்ய வெகுண்டு மத்தாய்ச்சி ஓச்சிக்-
கவ்யம் பாழ் போக ஒண்ணாது
இத்தை உபஜீவிக்கைக்கு ஒரு பிள்ளை வேணும்
என்று ஆய்த்து இவள் நோன்பு நோற்று பிள்ளை பெற்றது –
ஆனாலும் அது சாத்மியாதபடி
அமுது செய்யப் புக்கால் சம்வதியார்களே –
அவர்கள் மறைக்க மறைக்க
இவனுக்கு அதிலே ஆதரம் மிகுமே –
தன் தாரகம் இழக்க மாட்டானே –
அவர்கள் உடம்பு நோவக் கடைந்து
உறிகளிலே சேமித்து வைத்த வெண்ணெயை அமுது செய்ய –

வெகுண்டு -சீறி
யசோதை பிராட்டியானவள் மத்தைக் கொண்டு அடிக்கக் கோலி-

கண்ணியார் குருங்கயிற்றால் கட்ட –
பல பிணைகளை உடைத்தாய்
குறளாய் இருந்துள்ள தாம்பாலே கட்ட –
தாம்பை நெடுகப் பண்ண ஒண்ணாதே
திருமேனியிலே இடம் காணும் இத்தனை இறே –
அப்படிக் கட்ட –

வெட்டென்று இருந்தான் —
சாமான்யன் என்று இடுமீடு எல்லாம் இட அமையும் -என்று இருப்பாரைப் போலே
(சோழியன்-சாமான்யன் -திருமாலிருஞ்சோலை தீர்த்தம் வாங்கும் பொழுது அடித்த ஐதிகம் )
வேறு ஒரு ஹேதுவைச் சொல்லி அன்றியே
இது சொல்லியே நம்மைக் கட்டுவதே
என்று இசைந்து இருந்தான் ஆய்த்து –

திண்ண மா மதிள்கள் சூழ்ந்த தென் திருப் பேருள் –
அரணாகப் போரும்படியான மதிள்களாலே
சூழ்ந்த தென் திருப் பேருள்  –

வேலை வண்ணனார் நாமம் நாளும் வாய் மொழிந்து உய்ந்தவாறே –
கடல் போலே ஸ்ரமஹரமான வடிவை உடையவரானவர்  உடைய
அவ்வடிவு அழகுக்கு வாசகமான திரு நாமங்களை சொல்லி
ஒருவன் உஜ்ஜீவிக்கும் படியே –

————————————————————

இடைப்பெண்களுக்கு உபகாரம் கீழ்
நப்பின்னை பிராட்டியை லபிக்கச் செய்தமை இதில்

அம் பொனார் உலகம் ஏழும் அறிய ஆய்ப்பாடி தன்னுள்
கொம்பனார் பின்னை கோலம் கூடுதற்கு ஏறு கொன்றான்
செம்பொனார் மதிள்கள் சூழ்ந்த தென் திருப்பேருள் மேவும்
எம்பிரான் நாமம் நாளும் ஏத்தி நான் உய்ந்தவாறே—5-9-8-

ஓர் இடைச் சேரி மாதரம் அன்றிக்கே
ஸ்லாக்கியமான ஏழு லோகங்களும் அறிய
திரு வாய்ப்பாடியிலே
வஞ்சிக் கொம்பு போலே இருக்கிற வடிவை உடைய
நப்பின்னை பிராட்டி உடைய ஒப்பனையோடே சேருகைக்காக
ருஷபங்கள் ஏழையும் நிரசித்தான்  –
(கோவை வாயாள் பொருட்டு ஏறு ஏழும் இறுத்தாய் )
தர்ச நீயமான மதிள்களாலே சூழப் பட்ட
திருப் பேரிலே நித்ய வாஸம் பண்ணுகிற
எனக்கு உபகாரகர் ஆனவர் உடைய
திரு நாமத்தை ஏத்தி நான் உய்ந்தவாறே –

———————————————————

அப்பால ரங்கர்
வியாக்ரபாதர் பிள்ளை உபமன்யு துர்வாசர் சாபம்
இங்கு வந்து லக்ஷம் பேருக்கு ததீயாராதானம்
பெருமாளே எழுந்து அருளி தானே அமுது செய்து அப்பம் கேட்டு –
உண்ட மயக்கம் -வலது திருக்கையால் அப்பக்குடம் அணைத்துக் கொண்டே சயனம்
கமல வல்லித் தாயார்
இந்திரா தீர்த்தம்
இந்திரா விமானம்
நம்மாழ்வார் இறுதி பதிகம் இதற்கு
போம் மானை எய்து பொரும் ஆனை கொம்பு ஓசித்து -அம்மானை -திரு மாலை சிந்தித்து
எழுந்து இருப்பார்க்கு உண்டோ இடர் -பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்

சகல வித்யா உபாஸகர்க்கு விஷயம்
நம் சிந்தையில் தானே வந்து இருந்த ஆச்சர்யம் இதில்

நால்  வகை வேதம் ஐந்து வேள்வி யாறங்கம் வல்லார்
மேலை வானவரில் மிக்க வேதியர் ஆதி காலம்
சேலுகள் வயல் திருப்பேர் செங்கண் மாலொடும் வாழ்வார்
சீல மா தவத்தர் சிந்தை யாளி யென் சிந்தையானே—5-9-9-

நெஞ்சு நிறைய புகுந்தான் -நம்மாழ்வார்

நாலு வகைப் பட்ட வேதம்
பஞ்ச மகா யஞ்ஞங்கள்
அங்கங்கள்   ஆறும்
இவற்றில் வந்தால்
ப்ரஹ்மாதிகளிலும் காட்டில் கை வந்து இருக்கிற பிராமணர் ஆனவர்கள்
சிருஷ்டி காலம் தொடங்கி
சர்வேஸ்வரன் உடன்  ஒக்கக் குடி ஏறி
ஜீவித்துப் போருகிறவர்கள் ஆய்த்து –
சீலகுண பிரசுரராய்
மிக்க தபஸ்சை உடையராய்
இருக்கிற பிராமணர்  ஹிருதயத்தை
தனக்காக்கிக் கொண்டு இருக்கிறவன்
என்னுடைய ஹிருதயஸ்தன் ஆனான்   –

————————————————–

வண்டறை பொழில் திருப்பேர் வரி வரவு அணையில் பள்ளி
கொண்டு உறைகின்ற மாலைக் கொடி மதிள் மாட மங்கை
திண் திறல் தோள் கலியன் செஞ் சொலால் மொழிந்த மாலை
கொண்டிவை பாடி யாடக் கூடுவர் நீள் விசும்பே—-5-9-10-

வண்டுகள் மதுபான மத்தமாய்க் கொண்டு
த்வனியா நின்றுள்ள பொழிலை உடைத்தான திருப் பேரிலே
வரிகளை உடையனான திரு வநந்த ஆழ்வானைப்
படுக்கையாகக் கொண்டு கண் வளர்ந்து அருளுகிற
சர்வேஸ்வரனை கவி பாடிற்று –

கொடியோடு கூடின மதிள்களையும்
மாடங்களையும் உடைத்தான
திரு மங்கைக்கு நிர்வாஹகராய்
திண்ணிய திறலை உடைத்தான
தோளை உடையரான ஆழ்வார்

அதி கிருதாதிகாரமான வேதார்த்தத்தை
சர்வ அதிகாரமான சொல்லாலே
அருளிச் செய்தார் ஆய்த்து –

இவற்றைக் கொண்டு பாடுவது ஆடுவதாக
இவ் வனுபவத்துக்கு மேலே
நித்ய அனுபவம் பண்ணப்
பெறுவார்-

————

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

கை கூப்புவார் கூப்பாதார் இறை தாமாய் நினைவார்
ஐயன் அசோதை நப்பின்னைக்கு பொய்யிலானாம்
பேரான் உள்ளம் புகுந்த வாழ்த்தி உயு நீலன்
பேரே தீர்க்கும் நந்தம் தீது -49-

—————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரிய திருமொழி-5-8—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

May 5, 2014

த்வயார்த்தம் விரித்து உரைக்கும் பதிகம் இது
பிராட்டி விஷயீ காரம் தொடங்கி-மான் மட நோக்கி –
ஒன்பதாம் பாசுரம் பெருமாள் -உலகம் அளந்த பொன்னடி அடைந்து உய்ந்தேன் –

கீழே இரண்டு திரு மொழிகளிலும் பெரிய பெருமாளால் ஸமாஹிதராய் -ஹ்ருஷ்டராய்
அடியேனுக்கு அணியனாய் -துக்கம் போக்கவே -வந்து -என் சிந்தையுள் -வெந்துயர் அறுக்கும் மாயன்
அனுசந்தித்து இருக்கச் செய்தேயும்
அனந்த கிலேச பாஜனம் சம்சாரத்தில் -இன்னும் இருக்கக் கண்டார்
1-விரோதி தேக சம்பந்தம் போகாமல் ஆர்த்தி மிகுந்து
ஸ்ரீ பெரிய பெருமாளை சரணம் புகுகிறார்
2-ஆர்த்தி மிக இவருக்கு வந்த ஞானம் பிறந்ததும் மூலம் எது என்பதை ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை
3-பரத்வாதிகள் இருக்க அர்ச்சாவதாரத்தில் சரணாகதி –
4-கீழேயும் மேலும் பல இடங்களில் சரணாகதி செய்வதில் இதில் வாசி
5-பிரயோஜனாந்தர பரர்களைப் போல் த்ருஷ்டாந்தமாக அருளிச் செய்வதற்கும் ஹேதுக்களை அருளிச் செய்கிறார்
சங்கா பஞ்சகங்கள் பரிகாரம் –

ஏழை ஏதலன் -பிரவேசம் –

இவ்வாழ்வார் ஆகிறார்
1-சாஸ்திர வாசனை யாலே யாதல்
2-தபஸாலே யாதல்
அன்றிக்கே
3-பகவத் பிரசாதத்தாலே
தத்வ த்ரயத்தையும் யதா தர்சனம் பண்ணி இருப்பார் ஒருவர் ஆய்த்து –
பர ஸ்வரூபத்தை யதா தர்சனம் பண்ணுகையாவது ஏது என்றால் –
ஸ்ரீயபதியாய் –
அகில ஹேய ப்ரத்ய நீகனாய் –
சமஸ்த கல்யாண குணாத்மகனாய்   –
(உபய லிங்கத்வம் இவை இரண்டும் )
அந்த குணங்களுக்கும் பிரகாசகமாய் –
சௌந்தர்ய சௌகுமார்யாத்யாகரமாய்  இருந்துள்ள -திவ்ய விக்ரஹத்தை உடையனாய் –
உபய விபூதி நாதனாய் –
நிரதிசய போக்யனாய் –
இருக்கும் என்று அறிகை –

(இந்த மூன்றை விட ஆச்சார்ய உபதேச ஜன்ய ஞானம் நமக்கு -அதுக்காகவே –
ராமானுஜர் தந்த அருள் -அற்புதன் செம்மை -அப்பொழுது ஒரு சிந்தை செய்து -)

ஸ்வ ஸ்வரூபத்தை யதா தர்சனம் பண்ணுகை யாவது –
அனந்யார்ஹமாய்-
ஸ்வ ரஷணத்தில் ப்ராப்தி இன்றிக்கே
பர தந்த்ரமாய் இருக்கும் என்று அறிகை   –

அசித் ஸ்வரூபத்தை யதா தர்சனம் பண்ணுகை யாவது
ஸ்வ  ஸ்வரூப பர ஸ்வரூபங்களை
யதா தர்சனம் பண்ண ஒண்ணாத படி
இடைச் சுவராய்க் கொண்டு விரோதித்வமே ஸ்வரூபமாய் இருக்கும் என்று அறிகை –
இவ் விரோதியைக் கழித்து
இச் சேதனன் விலஷண வஸ்துவை லபிக்கும் போது
அதுக்கு அநு ரூபமாய் இருப்பதொரு
உபாய பரிக்ரஹம் பண்ணிக் கொள்ள வேணும் இறே

இம் மூன்றின் உடைய ஸ்வரூபத்தை அனுசந்தித்தால்
அவனையே பற்ற வேணும்
1-விரோதி பிரபலம் ஆகையாலே அவனைக் கொண்டே கழித்துக் கொள்ள வேணும் –
2-ஸ்வ ஸ்வரூபத்தைப் பார்த்தால் ஸ்வ ரஷணத்தில் பிராப்தி இல்லாத படி
பர தந்த்ரம் ஆகையாலே அவனையே பற்ற வேணும்
3-அவ் வஸ்து தான் அநந்ய சாத்யம் ஆகையாலும் அவ் வஸ்துவையே பற்ற வேணும் –

இப்படி அவனே உபாயமாகப் பரிக்ரஹிக்கும் இடத்தில்
பரத்வம் -தேச விப்ரக்ருஷ்டமாய் கழிந்தது
வியூஹம் -தத் ப்ராப்யமாய் சம்சாரிகள் உடைய சிறுமையாலும்
பகவத் வைபவத்தாலும்  கழிந்தது
ஆபத்து உண்டான போது ப்ரஹ்மாதிகளுக்கு ஆஸ்ரயணீயம் ஆதல்
சனகாதிகளுக்கு  காதாசித்கமாக ஆஸ்ரயணீயம் ஆதல் அத்தனை இறே
விபவமும் -கால விப்ரகர்ஷத்தாலே  மண்டல வர்ஷம் போலேயாய்க் கழிந்தது
அக்குறைகள் தீர
ஸ்வ சத்தா ஸ்திதி பிரவ்ருத்திகளும்
ஆஸ்ரித அதீனமாம்படி பண்ணிக் கொடு நிற்கிற நிலை இறே
அர்ச்சாவதாரம்

அதாவது
ஆஸ்ரிதர் உகந்த த்ரவ்ய விசேஷத்தையே திரு மேனியாய்க் கொண்டு நிற்கையும்
தன் கிருஹத்தில் ஒரு பிரதேசத்தில் திருப் பள்ளி யறை யாக்கி
இங்கே எழுந்து அருளி இருக்க வேணும்
அமுது செய்து அருள வேணும் -என்றால்
அப்போதே அமுது செய்து அருளுகையும்
அவற்றை இவன் அநாதாரிக்கும் போது தானும் அநாதாரிக்கையும்
அவதாரங்களில் போலே அஜஹத் ஸ்வ பாவனாய்
( ஜஹத்-விட்டு /அஜஹத்-ஒன்றும் விடாமல் )
ஆஸ்ரிதர்க்கு அபிமத பல பிரதானம் பண்ணுகைக்கும்
ஆஸ்ரயணீயன் ஆகைக்கும் உண்டான ஜ்ஞான சக்த்யாதி குணங்கள் உடன்
ஆஸ்ரித பராதீனன் ஆகையுமாய் இறே  இருப்பது   –

ஆகையாலே அர்ச்சாவதாரத்தை யாய்த்து
இவர் ஆஸ்ரயணீய  ஸ்தலமாக நினைத்து இருப்பது –
முதல் தன்னிலே
சூழ் புனல் குடந்தையே தொழுது -என்றும்
தஞ்சை மா மணிக் கோயிலே வணங்கி -என்றும் இறே இவர் இழிந்தது –
ஆகையாலே
தம்முடைய ஆகிஞ்சன்யத்தை முன்னிட்டுக் கொண்டு
சரண்யரான பெரிய பெருமாள்
திருவடிகளிலே சரணம் புகுகிறார் –

இவர் தாயே தந்தையே தொடங்கி
பல இடங்களிலும் சரணம் புக்குப் போந்தார்

பகவல் லாபத்துக்கு சக்ருத் க்ருதம் அமைந்து இருக்கச் செய்தே
பல காலும் சரணம் புகுகிறது
த்வரா திசயத்தாலே இறே

இப் பிரபந்தத்துக்கு ஏற்றம்
நீர்மையை உடைய பெரிய பெருமாள் சரண்யர் ஆகையும் –
ஆழ்வார் அனுஷ்டாதாவாகையும்-
சர்வாதிகாரமான திராவிட பாஷையாலே அருளிச் செய்கையும்-
திருப்த  பிரபன்னரான நமக்கு இவ்வார்த்தி இல்லை யாகிலும்
இவர் பாசுரத்தைச் சொல்லவே
இவர்  அளவிலே இவருக்கு இரங்கினால் போலே
பெரிய பெருமாள் இரங்குவர் -என்கிறதும் –

பிரயோஜனாந்தரத்துக்காகவும்
துக்க நிவ்ருத்திகாகவும்
சரணம் புகுகிறவர்கள் பாசுரத்தை முன்னிட்டுக் கொண்டு சரணம் புகுகிறார் –
அதுக்கடி என் என்னில்
அவ்வோ பிரயோஜனங்களில் அவர்களுக்கு உள்ள ஆதரம்
இவ் விஷயத்தே  தமக்கு உண்டாகையாலும்
அவர்களுக்கு அகப்பட இரங்குமவர் தமக்கு இரங்காமை இல்லை
என்று நினைத்து இருக்கையாலும் –

திரு மாலையில் -பிராப்ய பிராபகங்கள் சொல்லிற்று-
அமலனாதி பிரானில் -பிராப்யம் சொல்லிற்று-
இத் திரு மொழியில் பிராபகம் சொல்லுகிறது –

———————————————————————-

பரிஷ்வங்கம் -வேண்டியே சரணாகதி –
ஸ்ரீ ராமாயணம் படி குக ஸஹ்யம் ஆன பின்பே திருவடிக்கு ஆலிங்கனம் –
திருவடியை விஷயீ கரிக்கும் முன்பு குகப் பெருமாள் விஷயீ கரித்தது முன்பே அன்றோ –

ஏழை  ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி மற்று அவர்க்கு இன்னருள் சுரந்து
மாழை மான் மட நோக்கி யுன் தோழி உம்பி யெம்பி என்று ஒழிந்திலை  உகந்து
தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்ற சொற்கள் வந்து அடியேன் மனத்து இருந்திட
ஆழி வண்ண நின்னடி இணை  அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத் தம்மானே –5-8-1-

இரக்கம் முதல் படி -அருள் அடுத்து – இன்னருள் அடுத்து -இத்தை உபபாதிக்கிறது மேல் –
இங்கு ஒழி-பிரிவு இருந்தால் தானே சேர்க்கையில் சுகம் உண்டு இங்கேயே நில்
சொற்கள் வந்து-கர்ணா கர்ணிகையாய் வந்து

ஏழை –
அஞ்ஞன்
ஏழை என்ன அஞ்ஞன் என்று காட்டுமோ என்னில் -சபலன் என்ற படி –
விஷய சாபல்யம் -அஞ்ஞான கார்யம் இறே –
அஞ்ஞானம் தான் -ஜ்ஞான அநுதயம்-அந்யதா ஜ்ஞானம் – விபரீத ஜ்ஞானம் –
என்று த்ரி பிரகாரமாய் இறே இருப்பது –
ஜ்ஞானம்   பிறந்தவாறே ஜ்ஞான அநுதயம் போம் –
யதா ஜ்ஞானத்தாலே அந்யதா ஜ்ஞானம் போம் –
விஷய ப்ராவண்ய ரூபமான விபரீத ஜ்ஞானம் இறே போக்க வரிது
தர்மஞ்ஞா -யசஸ் வீ -ஜ்ஞான சம்பன்ன -என்கிற தேவர்க்கு எதிர் தட்டாய் இருக்கிறபடி –
(மற்ற வேறே பெண்ணை ஏர் எடுத்துக் பார்க்காத யசஸ்ஸூ )
இத்தால் ஜ்ஞான கொத்தையைச்   சொல்லிற்று –

(விஷய சாபல்ய ஹேதுவான அஞ்ஞானம்
அபோக்யங்களில் போக்யதா புத்தி பண்ணுவது –
கீழ் இரண்டையும் -அவாந்தர பேதங்களைச் சொன்னது இதன் குரூரம் அறிவதற்காக
விஷய ப்ராவண்யமாக பரிணமிக்கும் விபரீத ஞானம் -)

ஏதலன் –
சத்ரு
தாயைச் சோறு வேண்டும் போது
வாளை விதிர்த்த வேண்டும்படியான  சாத்ரவத்தை சொல்லுகிறது –
ரிபூணாம் அபி வத்சல-என்கிறதுக்கு எதர் தட்டாய் இருக்கிறபடி
(யுத்த காண்ட ஸ்லோகம் -கருட இறக்கையால் நாக பாசம் –
விரோதிகள் இடம் வாத்சல்யம் -குகன் தாய் இடம் விரோதி )
மர்யாதா நாஞ்ச-என்கிறவர்க்கு   எதிர் தட்டாம்படி
மர்யாதா பங்கம் பண்ணி இறே இருப்பது
இத்தால் வ்ருத்தத்தில் கொத்தை சொல்லுகிறது-
(ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் -அனுஷ்டானத்தைச் சொன்னவாறு )

கீழ் மகன் -இவை இத்தனையும் பூஷணமாம் படியான ஜென்மத்தை உடையவன்
கீழ்ச் சொன்னவை இரண்டும் ஜ்ஞான சாத்யமாயும்
பிராயச்சித்த சாத்யமாயும் இருக்கும் இறே –
இது வேறு ஒன்றால் கழிக்க ஒண்ணாதே
இஷ்வாகு வம்ச பிரபவ -என்கிறவர்க்கு எதிர் தட்டாய் இருக்கும் படி –
இத்தால் ஜன்மத்தின் கொத்தை சொல்லுகிறது –

இம் மூன்றாலுமாக
பெருமாள் உடைய நீர்மையின் ஏற்றம் சொல்லிற்று ஆய்த்து –

ஏழை  ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி-
இவை ஒன்றும் பாராதே யாய்த்து இரங்கிற்று –
ருஷீணாம் அக்னி கல்பா நாம் -என்று
ஜன்ம வித்யா வ்ருத்யங்களை உடையராய் இருக்கும்
உபாசகரான ருஷிகளுக்கும்
அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்னும் இளைய பெருமாளுக்கும்
சாதன சித்த்யர்த்தமாகவும்
போக சித்யர்த்தமாகவும்
இரங்கும் இரக்கத்தை இறே
இவர் அளவில் இரங்கிற்று –
(சாதனா நிஷ்டர்களுக்கும் கைங்கர்யமே பிரார்த்திக்கும் இளைய பெருமாளுக்கும்
இவர் இரக்கமே உபாயம் )

அதவா
என்னாது இரங்கி –
இப் பாசுரம் சொல்லாது இருக்க -இரங்கி –
ந தர்ம நிஷ்டோஸ்மி-ந ஆத்மவேதி –
அமர்யாதா-
(நல்லவை இல்லை தீயவை சகலமும் உண்டு என்பதுக்கு இரண்டு பிரமாணங்கள் ஸ்தோத்ர ரத்னம் )
ராவணே நாம -இத்யாதிகளில்
சரணம் புகுவார் ஸ்வ நிகர்ஷத்தை  முன்னிட்டு
கொள்ளக் கடவர்கள் என்னா நின்றது இறே –

ஸ்ரீ குகப் பெருமாள் சொல்லக் கடவ பாசுரத்தை
இவர் சொல்லுவான் என் என்னில்
அவருடைய கருத்தாலே-

மற்று அவர்க்கு –
அவனுக்கு அதுக்கு மேலே –

இன்னருள் சுரந்து –
இவ் விஷயீ காரத்துக்கு மேலே
இனிய அருளைச் சுரந்து
இன்னருள் –
தன் பேறான அருள்

சுரந்து –
வத்ச சகாசத்தில் தேனு வானது ஷீரத்தை
சுரக்குமா போலே
குணங்களைச் சுரந்து –

இத்தை உபபாதிக்கிறது மேல் –
மாழை மான் மட நோக்கி-
நிகர்ஷம் சொன்னால்
பிரதமத்தில் முன்னிடக் கடவ
அர்த்தத்தைச் சொல்லுகிறது –
முக்த்தமான மானின்  உடைய மிருதுவான நோக்குப் போலே
உள்ள நோக்கை உடையவள் –
இத்தால் சம்பந்தம் இருவரோடும் ஒத்து இருக்கச் செய்தே
இவளுடைய கடாஷத்தின் உடைய முற்பாடு சொல்லுகிறது –
இவனைப் பாரா அவனைப் பார்க்கும் –
ப்ரேஷிதாஜ்ஞாச்து கோசலா இறே –
பிரணயினி பிரணயிகளுக்கு வாயால் சொல்லுவது இல்லை இறே –
(உள்ளே ஓடும் எண்ணத்தை அறிபவர் கோசல தேசத்தார்
அதுக்கும் மேலே அபிமத அநுரூப பிரணயி )
இத்தனை குறைவாளனை  விஷயீ கரியாது ஒழிகிறது என் –
என்னாப் போலே யாய்த்து பார்வை இருக்கிறது –
இவள் பருவத்தையும் நோக்கையும் கண்டால்
இவள் வழியே போவான் ஒருவன் இறே –

யுன் தோழி –
உனக்கு ஸ்வாமிநி- என்னாதே
தோழி என்கிறார் -நீர்மையாலே
சீரியார் சேஷ பூதரையும் -அண்ணா ஆச்சி -என்னா நிற்பார்கள் இறே
இவர்கள் தான் இங்கன் அல்லது சொல்லா நிற்க மாட்டார்கள்
மித்ர பாவேன-
(சர்வ லோக சரண்யனாக வந்தவனை -நண்பனாகக் கொண்டு )
மித்ர மௌபயிகம்-
தேன மைத்ரீ பவதுதே –
(காலைப் பிடிக்கவும் யோக்யதை இல்லா ராவணனுக்கு உபதேசம் நட்பு கொள்வாய்
உன் குடி இருப்பு நிலைக்க -சரணாகத வத்சலன் என்று சொல்லியும் )

இவ் வார்த்தை போழ்க்கனாய் இருக்கை
(உபசார வார்த்தையாக கபடமாக இல்லாமல்
பிராப்தி சமயத்தில் நிரஞ்சனம்- சாம்யா பத்தி-ஸாதர்மம் ஆகதா
சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே )
குண சாம்யத்தையும்
போக சாம்யத்தையும்
தேக சாம்யத்தையும்
போக்ய சாம்யத்தையும்
கொடுத்து இறே வைப்பது –

உம்பி யெம்பி –
உன்னுடைய தம்பி என்னுடைய தம்பி –
இங்கனே சொல்லுவான் என் என்னில்
பெருமாள் விஷயீ கரித்து இருக்குமவர்களை
அவரோபாதியாக நினைத்து இருக்கும்
இளைய பெருமாள் கருத்தாலே

பக்தி ரஷ்டவிதா ஹ்யேஷா யஸ்மின் ம்லேச்சேபி வர்த்ததே
தஸ்மை தேயம் ததோ க்ராஹ்யம் சச பூஜ்யோ யதாஹ்யஹம் -என்றும்
தொழுமின் கொடுமின் கொண்மின் என்று நின்னோடும் ஒக்க வழிபட வருளினாய் -என்றும்
சொல்லுகிறபடியே
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர் -என்று
சம்சாரத்தில் நின்றும் ஒருவன் முக்தனாய்ச் சென்றால்
ஸ்ரீ பாதம் விளக்கி ஸூரிகள் ஆதரிக்கக் கடவர்கள்
என்னா நின்றது இறே
அவர்களிலே பிறி கதிர் பட்டு  போந்தவர் இறே இளைய பெருமாள்

இத்தால்
ஸ்ரீ வைஷ்ணவ அங்கீ காரம் பண்ணிக் கொடுத்த படி-
தன் தாளிணைக் கீழ் சேர்த்து அவன் செய்யும் சேமம் -என்றும்
அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் -என்றும் –
சொல்லக்  கடவது இறே  –
(பாகவத அபிமானம் பெற்றுக் கொடுப்பதே சேமம் விமலத்வம் )

என்று ஒழிந்திலை-
அவ்வளவிலே விட்டிலை
பிராட்டியை தோழி என்றும்
இளைய பெருமாளை தம்பி என்றும் சொன்ன போதே
ஆர்த்தமாக வரும் இறே தம்முடைய தோழமை –

உகந்து –
உகப்பாலே -தோழன் நீ -எனக்கு என்கிறார்
உகப்பு ஓர் அளவில் நிற்குமது அன்றே
(உனக்கு நான் தோழன் என்றால் தனது ப்ராதான்யம் சித்திக்கும் -ஆகவே இப்படி )

தோழன் நீ எனக்கு –
ஸ்வ நிகர்ஷத்தைச் சொல்லி
புருஷகாரத்தை முன்னிட்டு
ஸ்ரீ வைஷ்ணவ அங்கீ காரம் உண்டானால்
அநந்தரம்
உபாய ஸ்வரூபம் அனுசந்தேயமாகக் கடவது இறே
அத்தைச் சொல்லுகிறது –
(நாலடி வந்ததே இவற்றுக்கு சமம் )

இங்கு ஒழி –
பின்பு தொடர்ந்து போகப் புக்கால் காணும் இவரும் ( கலியனும் )-
படை வீடு கெடாமைக்கு ஒருவனை வைத்தோம்-
வழி யடி கெடாத படி   இங்கே இரும்-
ஸ்வ இச்சா அனுரூபமாக வன்றியிலே
க்ரியதாம் இதி – யிலே அங்கும் உள்ளது-
(சிஷ்யச்ச தசஸ் ச என்று சொல்லி பரதாழ்வான் -வருவான் அவனுக்கு வழி காட்ட வேண்டுமே
இதுவும் பாகவதருக்கு சேஷமாக்குதல்
தான் ஆசைப்பட்ட -இஷ்ட விநியோக அர்ஹனாக்கி )

என்ற சொற்கள் –
அவ் வர்த்தங்கள் அன்றிக்கே
அப் பாசுரம் காணும் இவரை வருத்துகிறது

வந்து –
ஒரு கால விசேஷத்திலேயாய் இருக்க
கர்ண பரம்பரையாக வந்து
இவர் நெஞ்சிலே யாய்த்து ஊற்றி இருந்தது
இப் பாசுரம் தன்னை
குஹே  ந சஹிதோ ராமோ லஷ்மணனேன  ச சீதயா-என்று
ஸ்ரீ வால்மீகி பகவான் சொல்லி வைத்தான் இறே –
( வேதம் தமிழ் செய்த பரகாலன் )

அடியேன் மனத்து இருந்திட-
சம்ஸ்மராம் யஸ்ய வாக்யாநி -என்னுமா   போலே
இவர் நெஞ்சிலே யாய்த்து வேர் விழுந்தது
சேஷ பூதன் உடைய தய நீயமான பாசுரம்
சேஷி நெஞ்சிலே வேர் விழுந்து ரஷணத்துக்காய்க் கிடைக்குமா போலே
சேஷி பாசுரம் சேஷ பூதன் உடைய நெஞ்சிலே கிடக்கக் கடவது இறே கைங்கர்யத்துக்காக –

(சம்ஸ்மராம் யஸ்ய வாக்யாநி பிரியாணி மதுரானி அம்ருதாணி பரதன் பேச்சைப் பற்றி பெருமாள் –
எப்பொழுது நான் சேருவேனோ என்று எல்லாம் பிதற்றி
சேஷன் வார்த்தை சேஷி திரு உள்ளத்தில் அது
இங்கு ஒழி -பரதன் கைங்கர்யத்துக்காக சொன்னது போல் எனக்கும் கொடுத்து அருள வேணும் )

ஆழி வண்ண –
ரத்னங்களால் கடல் நிரம்பி இருக்குமா போலே
ஆஸ்ரயநீயத்துக்கு ஏகாந்தமான  குணங்களால் நிரம்பின கடல் –
அபார காருண்யா -இத்யாதி
யதா ரத் நாநி ஜலதேர சந்க்க்யே யானி புத்ரக
ததா குணாஹ்ய நந்தச்ய
அஸங்யேய மகாத்மான
உத்பத்தியும் அங்கேயுமாய்
வாசமும் அங்கேயுமாய்
புறம்பு ஓர் இடத்தில் அன்றிக்கே
எல்லாரும் ஆதரிக்கும்படி ரத்னங்கள்
இருக்குமாப் போலே யாய்த்து குணங்கள் இருக்கும்படி

அதவா
கடல் போலே ஸ்ரமஹரமான வடிவை உடையவனே
வடிவைக் கண்ட போதே
சாம்சாரிகமான தாபங்கள் உடைய ஆறும்படி யாய்த்து இருப்பது –

நின்னடி இணை  –
அனந்தரத்தில் சரணவ் என்கிற பதத்தை நினைக்கிறது –
(பூர்வ வாக்ய அர்த்தமே இப்பாசுரம் -ஆழி வண்ண நாராயண -)

அடைந்தேன்
பிரபத்யே வர்த்தமான கிரியா பதம் அமுக்கியம் இவருக்கு

அணி பொழில் திருவரங்கத் தம்மானே
ராமாவதாரத்தைச் சொல்லி இங்கே சேர்க்கையாலே
நம் சேவகனார் மருவிய பெரிய கோயில் -என்கிறபடியே
அவரே இங்கே சாய்ந்தார் என்கிறது

அணி -என்று
பொழிலுக்கு விசேஷணமுமாய்
கோயிலுக்கும் விசேஷணுமுமாய்  இருக்கிறது
அதாகிறது
சம்சாரத்துக்கு ஆபரணம் போலே இருக்கை
சோலை வாய்ப்புக் கண்டு சாய்ந்தால் போலே இருக்கச் செய்தேயும்
ஆஸ்ரிதர் தேட்டமாய் அன்றோ இங்கு சாய்ந்து அருளிற்று

அம்மானே -உடையவன் ஆகையாலே
உடைமை தேட்டமாய் அன்றோ
இங்கு வந்து சாய்ந்து அருளிற்று –

——————————————

(பரிஷ்வ்ங்கம் -ஆலிங்கனம் யாம் பெரும் பரிசு
கீழ் பகவத் விஷயீ காரம்
ஆனபின்பு நிரதிசய கைங்கர்யம் பிரார்த்திக்கக் கூடுமோ
இவர் இடம் கைம்முதல் வேண்டும் அன்றோ
நேராக பிரார்த்திக்கிறார்
திருவடியும் கைம்முதலாக கூடப் பிரார்த்திக்க வில்லையே என்பதற்கு வியாக்யானம் )

ஜன்ம வ்ருத்தங்களால் குறைய நின்ற ஸ்ரீ குஹப் பெருமாள்
பக்கல் பண்ணின
விஷயீ காரத்தை என் பக்கலிலே பண்ண வேணும் என்று சரணம் புக்கார் -கீழில் பாட்டில்
மனுஷ்ய சஜாதீயத்வம் கிடக்கச் செய்தே வந்த நிகர்ஷம் இறே -கீழ்ச் சொல்லிற்று
இங்கு விசஜாதியமான திர்யக்கை அகப்பட
தத் கத நிகர்ஷம் பாராதே
விஷயீ கரித்த மாத்ரம் அன்றிக்கே
அந்தபுர  கைங்கர்யத்திலே ஏவி அடிமை கொண்டால் போலே
என் அளவிலும் கைங்கர்யத்தைக் கொள்ள வேணும் -என்கிறார் –
இவ்வதிகாரிக்கு விஷயீகார அநந்தரம்
கைங்கர்யத்தில் அன்வயிக்கும் அத்தனை போக்கி
சாதனத்தில் அன்வயிக்க வேண்டியது இல்லை போலே காணும்
இங்கு ஒழி என்கிற இடத்தில் சொல்லிற்று இத்தனை இறே –

வாத மா மகன் மற்கடம் விலங்கு மற்றோர் சாதி என்று ஒழிந்திலை உகந்து
காதலாதரம் கடலினும் பெருகச் செய் தகவினுக்கு இல்லை கைம்மாறு என்று
கோதில் வாய்மையினோடும் உடனே உண்பன் நான் என்ற ஒண் பொருள் எனக்கும்
ஆதல் வேண்டும் என்று அடியிணை யடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே –5-8-2-

அர்த்த க்ரமம் படி சப்த க்ரமம் மாற்றி -மற்றோர் சாதி-விலங்கு-மற்கடம்-வாத மா மகன்-
காதலாதரம்-பற்று -அப்புறம் பெரு விருப்பு –
உடனே-கூடி இருந்து தழுவிக் கொண்டே
உண்பன் -அனுபவிப்பேன் -உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
வாரிக் கொண்டு உன்னை விழுங்குவான் —
என்னில் முன்னம் பாரித்து என்னை முற்றும் விழுங்கினான் -அனுபவம் தானே

வாத மா மகன் மற்கடம் விலங்கு மற்றோர் சாதி –
மற்றோர் சாதி-விலங்கு-மற்கடம்-வாத மா மகன்-
மற்றோர் சாதி-
விஷயீ காரத்துக்கு நிகர்ஷத்தை முன்னிடுகிறவோ பாதி
கைங்கர்யத்துக்கும் நிகர்ஷத்தை முன்னிட வேணும் இறே –
விசஜாதியர் நிகர்ஷம் சொல்லும் போதும் -மற்றோர் சாதி -என்ன அமையும் இறே

(குகப் பெருமாளுக்கு -நிகர்ஷம் த்ருஷ்டாந்தம் -தம்மை விஷயீ கரிக்க
கைங்கர்யம் பிரார்த்திக்க நிகர்ஷம் முன்னிட்டு
ஏழை ஏதலன் கீழ் மகன் உத்தர உத்தர நிகர்ஷ ஆதிக்யம் வேண்டுமோ என்னில்
அதே போல் இங்கும்
வாத மா மகன் அகங்கார ஹேது எனவே இறுதியில் )

விலங்கு-
அது தன்னிலே வருகிற நிகர்ஷம்  சொல்லுகைக்காக -விலங்கு -என்கிறது -திர்யக்கு
ஜ்ஞானத்திலே விலங்குதலை இட்டுச்  சொல்லுகிறது –
யஸ்து திர்யக் ப்ரவ்ருத்தி ஸ் ஸ்யாத் திர்யக்கோ நிஸ்ஸ  உச்யதே –
என்னக் கடவது இறே -(இரு கால் மாடு – பசு ப்ராப்யர் )
ஜ்ஞானத்துக்கு விலங்குதல் வருவது
ஆஹார நியதி இல்லாமையாலும்
ஜன்ய ஜனக பாவத்தில் முறையிலே பரிமாறாமை யாலும் இறே

மற்கடம் –
அதிலும் தண்ணியது ஓன்று சொல்லுகிறது
தானே இரங்கிக் கொடுக்கும் அத்தையும்
ஸ்வ சமார்த்யத்தாலே அபஹரித்துக் கொண்டதாய் இறே  இருப்பது
வானரேன மயா சஹ -என்னுமா போலே

வாத மா மகன் –
வாயுவினுடைய ஸ்லாக்கிய புத்திரன்
நிகர்ஷம் சொல்லுகிற பிரகரணத்தில்
உத்க்ருஷ்ட ஜன்மத்தைச் சொல்லுகிறது   எதுக்கு உறுப்பாக என்னில்
ஜாதியைப் பற்ற அன்றிக்கே ஸ்வ பாவத்தைப் பற்ற இறே

கீழ் உக்த நிகர்ஷம் போல் அன்றே -வாயு புத்திரன்-என்கிற
அஹங்காரத்தால் வந்த நிகர்ஷம்
அர்த்த காமங்களுக்கு அடி – அஹங்காரம் இறே
ஸ்வரூப நாசத்தைப் பலிப்பிக்கும் இறே
(நீர் நுமது என்னும் இவை வேர் முதல் மாய்த்து அன்றோ பற்ற வேண்டும் )
இந்த அஹங்காரத்துக்கு அடி -அந்த உத்க்ருஷ்ட ஜன்மம் –
புண்ய  பாப விதூய -என்னுமா போலே
த்யாஜ்யத்தில் முற்பட வேண்டுவது இது இறே
ஆகை இறே தர்மான் பரித்யஜ்ய -என்கிறது –
(பொன் விலங்கு -புண்யம் முதலில் சொன்னதே -அதனால் வரும் அஹங்காரம் ஹேது என்பதால்
பிதரம் மாதரம் இத்யாதிகளில் சர்வ தர்மான் ஸந்த்யஜ்ய -இதிலே பாபங்களையே சொல்ல வில்லையே )

என்று ஒழிந்திலை –
இவை ஓர் ஒன்றே போரும் இறே கை விடுகைக்கு
இவை பார்த்து கை விட்டில்லை
இரக்கம் உடையவனுக்கு இவை பார்த்து
கை விட ஒண்ணாது இறே –

கை விடாத அளவே அன்று –
உகந்து-
அதாவது சேஷ பூதனுக்கு கைங்கர்யத்தை உண்டாக்குக்கையும்
அவனுக்கு பிராப்தம் என்று நினைத்து இருக்கையும் அன்றிக்கே
தன் பேறாக நினைத்து இருக்கையும்
பிரத்யுபகாரம் தேடித் தடுமாற வேண்டாமையும்
உகப்பை உபபாதிக்கிறது மேல் –

காதலாதரம் –
இது புனர் உக்தம் அன்றோ என்னில் –
அவ்யாப்தி அதிவ்யாப்தி ரஹீதமான லஷண வாக்யத்தில்
புனருக்தி தோஷமாவது
ஆற்றாமையும் ஆதரமும் சொல்லுவிக்கச் சொல்லுகிறது ஆகையாலே தட்டில்லை –
கிஞ்ச அபிசந்தி பேதத்தாலே புனர் உக்தமும் அன்று –

செந் தாமரைத் தடங்கண்; செங் கனி வாய் செங் கமலம்;
செந் தாமரை அடிகள்; செம் பொன் திரு உடம்பே–ஸ்ரீ திருவாய் மொழி–2-5-1-
செந்தாமரை தடங்கண்-என்கிறது தன்னையே பல காலும் சொல்லுகிறதுக்கு
தாத்பர்யம் இது இறே
காதலின் உடைய கார்யம் இறே ஆதரம் ஆகிறது

சங்காத் சஞ்ஜாயதே காம -என்கிறபடியே
கர்ம நிபந்தனமாக சிலவர்க்கு வருமத்தை இறே
பெருமாளுக்கும் பிராட்டிக்கும் சொல்லுகிறது
பிராட்டிக்கு பெருமாளைக் கண்ட போதே
வில்லை முறித்துக் கைப் பிடிக்க வல்லவரே -என்று சங்கம் பிறந்தது
பின்பு அனுபவித்து அல்லது நிற்க ஒண்ணாத தசை -காமம்
அவருக்கு பித்ரு க்ருத தாரம் -என்று பிறந்தது சங்கம்
குணேண ரூபேண விலாஸ சேஷ்டிதை-என்கிறபடியே
குண ரூப சேஷ்டிதங்களை பற்றப் பிறந்தது காமம் –

கடலினும் பெருக
கடல் குளப்படியுமாம் படி பெருகுகிற சமயத்திலே
இரண்டு ஆஸ்ரயமும் கடல் போலே காணும்

பெருகுகை யாவது  –
மர்யாதா பங்கம் பிறக்கை இறே
அதாவது தத் தஸ்ய -என்கிற நிலை குலைந்து
வேண் யுத் க்ரத நத்திலே ஒருப்படுகையும் –
அவாக்ய அநாதர-என்னும் நிலை கழிந்து
அவகாஹ்ய அர்ணவம்  ஸ்வப்ஸ்யே-என்னும்படி யாகையும்-

செய் தகவினுக்கு –
தகவாகிறது -தர்மம் -அதாகிறது
ஒரு பிரயோஜனத்தை கணிசியாது  செய்யுமது இறே
தர்மத பரி ரஷிதா -என்கிறபடியே
பிரயோஜன நிரபேஷமாக எங்களை எல்லாரையும் ரஷித்தவன் அல்லையோ –

இல்லை கைம்மாறு என்று –
சேஷ பூதன் சேஷியைப் பார்த்து சொல்லுகிற பாசுரத்தை
சேஷி சொல்லுகிறான் நீர்மையினாலே
(செய்வது ஒன்றும் இல்லை இங்கும் அங்கும் -நம்மாழ்வார்
முயல்கிறேன் உன் தன் மொய் கழற்கு அன்பையே -மதுரகவி ஆழ்வார் )
என் கையிலே திரு வாழி மோதிரத்தை தந்து
எல்லாரும் தேடிக் கொடு திரியா நிற்க
யதா ரூபம் யதா வர்ணம் சேய மாசாதி தாமயா-என்று நான் இப் பேறு பெறும்படி  பண்ணுவதே
என்று நான் சொல்லக் கடவ பாசுரத்தை இவர் சொல்லுவதே
என்று இறே இவருடைய அபிப்ராயம் –
(ராகவஸ்ய வாக்கால் கேட்டபடி கண்டேன் -சேவித்தது எனக்கு அன்றோ பாக்யம் -திருவடி )

கோதில் வாய்மையினொடும்
வாய்மை -வாக் இந்த்ரிய வியாபாரம் அதாகிறது வசனம்
அதுக்கு கோது இல்லாமை யாவது
சம்ஸ்ரவே மதுரம் வாக்கியம் -என்று
பிராட்டி உடைய திரு உள்ளத்தை மெய் என்று பட்டு
அவள் தரிக்கும்படி சொல்லுகையும்
த்ருஷ்டா சீதா -என்று இவர் தரிக்கும்படி சொல்லுகையும் –
( கண்டேன் சீதையை -கம்பரும்-தரிக்க சொன்னவாறு )

உடனே உண்பன் நான் என்று –
இனி நாம் ஒக்க ஜீவிக்கக் கடவோம்
இவ்வர்த்தம் -ஏஷ சர்வஸ்வ  பூதஸ்து-என்கிறத்தைப் பற்றச் சொல்லுகிறது
(சோஸ்நுதே ஸர்வான் காமான் -ப்ரஹ்ம குண சேஷ்டிதங்களை அனுபவிக்கிறோம்
பாலே போல் சீர் -அங்கு தான் நாம் சரீரம் அவன் சரீரீ என்பதை முற்றுமாக உணர்கிறோம் )
ஒரு கலத்தில் உண்பாரைப் போலே
சேஷ சேஷிகள் இருவருக்கும் அனுபாவ்யம் இறே திரு மேனி –

சர்வஸ்வ பூத -ஸ்வரூப ரூப குணங்களிலும் பிராட்டி மாரிலும் அபிமதமாய் இருக்கையாலே
அதாவது
ருசி ஜனகமாய் இருக்கையாலும்
தானே சாதனமாயுமாய் இருக்கையாலும்
சதா தர்சன விஷயமுமாய் இருக்கையாலும்
ரஷகனுக்கு ரஷணத்துக்கு பிரதான பரிகரம் திரு மேனி இறே
அவ் வுடம்போடே அணைந்த உடம்பு என்று இறே
தன் உடம்பையும் அவன் விட மாட்டாதே இருக்கிறது –
(பாவோ நான்யத்ர கச்சதி -பக்தியும் ஸ்நேகமும் உண்டே –
என் அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே -இதுவே பூமா )

ஒண் பொருள் –
சீரிய அர்த்தம்

எனக்கும் ஆதல் வேண்டும் என்று –
இப் பெரிய பேற்றை ஆசைப் படுவது யாகை என் -என்று
கை வாங்கார்கள் இறே
க்ருபணராய் ( கை முதல் இல்லாதவர் ) இருப்பார் –

அடி இணை அடைந்தேன் –
சரணாகதிக்கு பலி யாதாது ஒன்றும் இல்லை -என்று இருக்கிறார் –
அத் தலையாலே வரும் அன்று எல்லாம் கை புகுரும் இறே

அடி இணை அடைந்தேன் –
உன்னுடைமை கண்டேன் என்று வந்தவனில் வ்யாவ்ருத்தி –

அணி பொழில் திருவரங்கத்து அம்மானே –
ஆபி முக்கியம் பிறந்தால்
கைங்கர்யத்தில் அன்வயிப்பைக்காக   அன்றோ
இங்கு வந்து கண் வளர்ந்து அருளுகிறது –

——————————————————-

(விரோதி நிரசனத்துக்கு நிகர்ஷம் சொல்ல வேண்டாவோ என்னில்
இங்கு அருளிச் செய்கிறார் )

விஷயீகாரத்தையும்
விஷயீகார பலமான கைங்கர்யத்தையும்
சொல்லிற்று கீழ்
கைங்கர்யத்துக்கு இடைச் சுவரான விரோதியைப் போக்கி
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானை கைங்கர்யத்திலே அன்வயித்தால் போலே
என்னுடைய விரோதியைப் போக்கி
என்னைக் கைங்கர்யத்தில் அன்வயிப்பிக்க வேணும் -என்கிறார் –
விஷயீகாரத்துக்கும் கைங்கர்யத்துக்கும் நிகர்ஷம் முன்னிட வேண்டுகையாலே
சொன்னார் கீழ்
விரோதி நிரசனத்துக்கு நிகர்ஷம் முன்னிட வேண்டியது இல்லை இறே

விஷயீகாரம் ஆகிறது -உபாயத் தளவும் செல்ல பலிக்குமது இறே
அவன் உபாயம் ஆனால் பின்னை கைங்கர்யத்தில் அன்வயிப்பிக்கும் இத்தனை
அதுக்கு விரோதி அறுகை இறே  பின்னை உள்ளது

அந்த விரோதி தான் உபய ஆகாரமாய் இருக்கக் கடவது
அவை ஆகிறன
இந்த்ரிய வஸ்யதையும்
யம வஸ்யதையும் இறே
மேலில் பாட்டில் யம வஸ்யததை
இங்கு இந்த்ரிய வஸ்யதை சொல்லுகிறது

எங்கனே என்னில்
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு விரோதியான முதலையை நிரசித்தால் போலே
எனக்கு விரோதியான இந்த்ரியங்களை நிரசித்து அருள வேணும் -என்கிறார்
இவ் வதிகார்க்கு இந்த்ரிய வஸ்யதையாவது
விஷயாந்தர ப்ராவண்யம் முதலாய்
கைங்கர்ய ஸ்பர்சியான அஹங்காரம் மமகாரம்
முடிவாய் இறே இருப்பது  –
(மற்றை நம் காமங்கள் மாற்று -களை அறுப்பது கடைசி விரோதி )

கடி கொள் பூம் பொழில் காமரு பொய்கை வைகு தாமரை வாங்கிய வேழம்
முடியும் வண்ணமோர் முழு வலி முதலை பற்ற மற்றது நின் சரண் நினைப்பக்
கொடிய வாய் விலங்கின் உயிர் மலங்கக் கொண்ட சீற்றம் ஓன்று உண்டு உளது அறிந்து உன்
அடியனேனும் வந்து அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத்து அம்மானே–5-8-3-

ஓர் முதலை -அத்விதீயம் -பாகவதர் காலைப் பற்றிய முதலை –
ஜித க்ரோதா -கோப வசம் -ஏறிட்டுக் கொண்ட கோபம் –
கடி கொள் பூம் பொழில்
பூம் பொழில் காமரு பொய்கை
காமரு பொய்கை வைகு தாமரை–
வைகு தாமரை வாங்கிய வேழம்–இப்படி முழுவதும் கொண்டு கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும்

கடி கொள் பூம் பொழில் காமரு பொய்கை வைகு தாமரை வாங்கிய வேழம்
பொய்கை வைகு தாமரை -என்ன அமையும் இறே இவன் அதிகரித்த கார்யத்துக்கு
பொழிலையும்  பொய்கையும் வர்ணனை செய்வதற்கு கருத்து என் என்னில்
அநாவ்ருஷ்டியாலே ஜகத் எல்லாம் நோவு பட்டு
ஓர் இடத்திலும் ஒரு புஷ்பமும் இன்றிக்கே
தட்டித் திரியா நிற்க
இவனுக்கு முற்பட கண்ணிலே படுமது இறே சோலை
அந்த சோலை தான் தளிரும் முறியும் செருந்துமாய் நிற்கையாலே
கீழே ஒரு பொய்கை உண்டு என்று தோற்றிற்று-

கடி கொள்  பூம் பொழில் –
பரிமள பிரசுரமாய் பூவை உடைத்தான பொழில்
அச் சோலையை நோக்கிப் போக -என்று புக்கவாறே
பரிமளம் வந்து பிராண விஷயமாய்
அங்கே புஷ்பம் உண்டு என்று தோற்றிற்று    –

காமரு பொய்கை –
ஆகர்ஷகமான பொய்கை
ஆகர்ஷகமாக இருக்கை யாவது
அகாதமாய்
துஷ்ட சத்வங்களும் உண்டாய் இருக்குமோ -என்று விவேகியாதே
மேல் விழும்படியாய் இருக்கை –

வைகு தாமரை –
அநாவ்ருஷ்டியாலே தாமரைப் பூக்கள் எங்கும் ஒக்க

முடியும் வண்ணமோர் முழு வலி முதலை பற்ற மற்றது நின் சரண் நினைப்பக்
இவ்வாதரத்தோடே புக்கு
தாமரைப் பூவை பறித்த அளவிலே
ஓர் ஆனைக் கால் காண வல்லோமே -என்று பார்த்துக் கொடு கிடக்கிற
முதலை ஆனைக் கால் பற்றிற்று

வேழம் முடியும் வண்ணம் –
ஆனையை முடிக்க வேணும்
என்று அன்று இறே அது பற்றிற்று
தன்னுடைய சாப விமோசனத்துக்காக இறே
இவர் பொறுக்க மாட்டாமையாலே சொல்லுகிற பாசுரம்  இறே இது –

ஓர் முதலை –
அத்விதீயமான முதலை
இதுக்கு முன்பு ஸ்வ உஜ்ஜீவனத்துக்காக
அநு கூலனை வந்து பற்றிற்று ஒரு முதலை அல்லை இல்லை இறே –

முழு வலி –
தன்னிலம் இல்லாமையாலே ஆனைக்கு மிடுக்கு குறைந்தது
தன்னிலம் ஆகையாலே முதலைக்கு மிடுக்கு மிக்கு இருக்கை –

பற்ற –
சரனௌ காடம் நிபீட்ய-என்னுமா போலே
தன்னுடைய அபிமதம் தலைக் கட்டுகைக்காக
அதின் காலை உறைக்கப் பற்றுகை
கரண அந்தரம் இல்லை யாகையாலே உள்ளத்தைக் கொண்டு பற்றும் இத்தனை இறே உள்ளது –

மற்றது –
பின்னை அந்த ஆனை யானது
கஜ  ஆகர்ஷதே தீரே க்ராஹா ஆகர்ஷதே ஜலே -என்கிறபடியே
அநேக காலம் முதலை நீருக்கு இழுக்க
ஆனை கரைக்கு இழுக்க
நோவு பட்டு மிடுக்கு அற்றது
அஹங்காரம் இறே பல ஹானிக்கு அடி –
அத்தைப் பொகட்டு ஈஸ்வரனைப் பற்றினவாறே  பலவானாம் இறே –
(பலம் அற்றுப் போய் திருவடி பற்றுகிறோம் என்று தவறாக நினைக்கிறோம்
வில்லை கீழே போட்டதும் ராவணன் வீரன் -வெறும் கை வீரன்
அஞ்சலி பரமாம் முத்ரா )

நின் சரண் நினைப்ப –
இப்படி நோவு படா நிற்க இவன் நினையாது ஒழிந்தது
ஒரு நீர்ப் புழுவுக்காக சர்வேஸ்வரனை அழைக்கவோ
நாமே வெல்லுவோம் -என்று இருந்தான்
இவன் இப்படி நெடு நாள் நோவு படுகிறபடி அறியாது இருக்கிறான் அன்றே
இவனுடைய அஹங்கார ஸ்பர்சம் அற்றால்
முகம் காட்டுகிறோம் -என்று இருந்தான் அத்தனை இறே-
(கை முதல் எதிர்பார்க்காத நின் சரண்
சது நாராயண ஸ்ரீ மான் -பற்றிய செல்வம் )

சரண் நினைப்ப –
இவன் மிடுக்கு அற்று
மனஸா சிந்தயத்தரிம் -என்கிறபடியே திருவடிகளை நினைக்க
தான் -நெடு நாள் நோவு படா நிற்க முகம் காட்டாது ஒழிவதே
என்று கிலாய்க்கப் பிராப்தம் இறே-அது செய்தது இல்லை  –

பரமாபதமாபன்ன -ஆபத்துக்கு உத்கர்ஷமாவது
சர்வேஸ்வரன் வந்து உதவும்படியாய் இருக்கை-
அடிக் கழஞ்சு பெற்று இருக்கை  –

நாராயண பராயணா-
ப்ரஹ்மாதிகள் போலே பிரயோஜனாந்தரத்துக்காக சரணம் புகுகை அன்றிக்கே
இவன் தன்னையே பிரயோஜனமாக பற்றுகை
நெடு நாள் வ்யாபரித்த சரீரமானது மிடுக்கு அற்றது –

நாராயணா ஒ மணி வண்ணா –
என்கிற வாக் இந்த்ரிய வியாபாரமும் ஓவி
வாங்மனஸி சம்பத்யதே -என்கிறபடியே
நெஞ்சாலே நினைக்கும் படி யாய்த்து –
(பிரளய காலத்தில் லயிக்கும் முறை போல் வாக்கு மனசிலே லயிக்கும் தசை
நினைக்க தான் முடிந்தது )

கொடிய வாய் விலங்கு-
முதலை ஆனையின் காலை அன்றோ பற்றிற்று
புண் படுகிறது திரு உள்ளம் இறே
ஒரு வைஷ்ணவனுக்கு வந்த ஆபத்து தனக்கு வந்ததாக நினையாத அன்று
வைஷ்ணத்வம் இல்லை என்று இருக்க அடுக்கும் –
புத்ராதிகளுக்கு வந்த விரோதம் தனக்கு வந்ததாக நினையாத போது
தேஹாபிமானத்துக்கு கொத்தையாமா போலே  –

உயிர் மலங்க –
தேஹமாதல் இந்த்ரியமாதல் அன்றிக்கே
பிராண ஸ்தானம் அகப்பட மலங்க

கொண்ட சீற்றம் –
சச நித்யம் பிரசாந்தாத்மா -என்கையாலே ஆஸ்ரயத்தில் இன்றிக்கே
க்ரோதமாஹாரயத் -என்கிறபடியே
கார்ய காலத்தில் ஏறிட்டுக் கொண்ட சீற்றம்
தத இத்யாதி கோபச்ய வசமே யிவான்-சரீரம் புண் பட்டால்
சரீரி பேசாது இரானே
வந்தேறியான தேக சம்பந்தத்தைப் பற்றி சேதனன் பின்னே போமா போலே
இவன் கர்மம் இட்ட வழக்கமா போலே
அவன் அனுக்ரஹம் இட்ட வழக்காய்-அதன் பின்னே போகா நிற்கும்   –

ஓன்று உண்டு
தரித்ரனானவன் தநிகனை அடையுமா போலே
சீற்றம் உண்டு என்று ஆய்த்து இவர் பற்றுகிறது –
ஆஸ்ரயிப்பாருக்கு உறுப்பான  குணங்கள் இறே சௌலப்யாதிகள்
விரோதி நிரசனத்துக்கு பரிகரம் இறே சீற்றம்   –

உன் அடியேனும் வந்து அடி இணை அடைந்தேன்
ஸ்வரூப ஞானம் பிறந்தவாறே
ஸ்வரூப அனுரூபமான உபாயத்தைப் பரிக்ரஹிக்கும் இத்தனை இறே –

அணி பொழில் இத்யாதி –
த்வராயை நம-என்கிறபடியே
மடுவின் கரை  தேடி வர வேண்டாதே
நான் அகப்பட்ட மடுவிலே அன்றோ வந்து சாய்ந்து அருளுகிறது
(காமரு பூம் பொழில் அங்கு இங்கு அணி பொழில் )

அங்கு முதலை ஓன்று
இங்கு ஐந்து
திவ்யம் வர்ஷ சஹஸ்ரகம் -என்கிறபடியே
காலம் அளவு பட்டு இருக்கும் அங்கு-1000 தேவ வர்ஷம் –
இங்கு காலம் அநாதி
அங்கு பொய்கை அளவுபட்டு இருக்கும்
இங்கு சம்சாரார்ணவம் –

———————————————-

விஷயீ கார பலமான கைங்கர்யம் தான் இரண்டு வகை உண்டே -இங்கும் அங்கும் –
அதில் இவ்விபூதி பிரதிபந்தகம் இந்திரிய வஸ்தை தவிர்க்க கீழ்
இதில் அவ்விபூதி பிரதிபந்தகம் தேக சம்பந்தம் போக்கி அருள பிரார்திக்கிறார்

விஷயீகாரம் சொல்லி-
விஷயீகார கார்யமான கைங்கர்யம் சொல்லி-
அதுக்கு இடைச் சுவரான தேக சம்பந்தத்தை அறுத்துத் தர வேணும்
என்கிறதாய் -இரண்டு பாட்டாலே –
அதில் தேக சம்பந்தம் கிடக்கச் செய்தே
அனுபவ விரோதியான பாபைகதேச பலமான இந்த்ரிய வஸ்யதையைப்
பரிகரித்துத் தர வேணும் என்று -கீழ் மூன்றால் அருளிச் செய்து –

இதில் சரீர சம்பந்தம் அற்றால்
சர்வ பாப பலமாய்
அனுபவ விரோதியாய்க் கொண்டு வரும் யம வஸ்யதையைத்
தவிர்க்க வேணும் -என்கிறார் –

ஸூமுகனுக்கு பெரிய திருவடியால் வந்த பயத்தை தவிர்த்துக் கொடுத்தால் போலே
எனக்கு எம வஸ்யதையால் வந்த பயத்தை அறுத்து
அவனை இட்டே பரிஹர மது ஸூதன ப்ரபந்நான் -என்னும்படி பண்ணித் தர வேணும் -என்கிறார்

சரணம் புகுவார் தாம்தாம் உடைய நிகர்ஷத்தை முன்னிட்டுக் கொண்டு இறே சரணம் புகுவது –
அந்நிகர்ஷம் தான்
ஆகிஞ்சந்ய ரூபமாயும்
அபராத ரூபமாயும் இறே இருப்பது
அதாகிறது
அது தன்னை அனுசந்தித்தார் இறே அடைவே
ந தர்ம நிஷ்டோஸ்மி-ஸ்தோத்ர ரத்னம் -22-
ந நிந்திதம் கர்ம-ஸ்தோத்ர ரத்னம் -23-
ஜ்ஞான கிரியாச பஜநாம் அலப்ய அந்ய-ஸ்ரீ கூரத்தாழ்வான் -ஸ்ரீ வரதாஜஸ்தவம் -69-
இத்யாதிகளும்

ஆகிஞ்சன்யத்தை முன்னிட்டது கீழ்
இதில் அபராதத்தை முன்னிடுகிறது   –
(இப்படி பல கோணங்களில் பிரவேசம் )

(குளித்து மூன்று அனலை தொடங்கி ஐந்து பாசுரங்கள் நன்மை இல்லை என்றும்
தீமைகள் எல்லாம் உண்டு என்றும்-ஆகிஞ்சந்ய ரூபமாயும்
அபராத ரூபமாயும் இருப்பதை அனுசந்தித்தார் இறே)

நஞ்சு சோர்வதோர் வெஞ்சின வரவம் வெருவி வந்து நின் சரண் எனச் சரணாய்
நெஞ்சில் கொண்டு நின் அஞ்சிறைப் பறவைக்கு அடைக்கலம் கொடுத்து அருள் செய்தது அறிந்து
வெஞ்சொல் ஆளர்கள் நமன் தமர் கடியர் கொடிய செய்வன யுளவதற்கு அடியேன்
அஞ்சி வந்து நின்னடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே –5-8-4-

நஞ்சு சோர்வதோர் வெஞ்சின வரவம் வெருவி வந்து நின் சரண் எனச் சரணாய்
நஞ்சு அரவம் என்ன அமைந்து இருக்க
நஞ்சு சோர்வதோர் வெஞ்சின அரவம் -என்கிறது என் என்றால் –
வாய் அவனை அல்லது வாழ்த்தாது -என்றும்
சா ஜிஹ்வா -என்றும்
பிறர் உடைய நாசத்துக்கு பரிகரமான
நஞ்சை உமிழ்ந்து கொண்டு ஆய்த்து வருகிறது –
இவ் வாக்கைக் கொண்டு கிடீர் -சரணம் -என்றது என்கைக்காக –
இதில் பலித்தது என் என்னில்
சரணாகதிக்கு அர்ஹர் அல்லாதார் இல்லை என்கைகாக –

வெஞ் சினம் –
அத்விதீயமான சினம்
ஹிருதயத்திலே கிடந்த போது பாதகம் ஆகாது இறே
சினம் உண்டானால் இறே உமிழ்வது-
கொண்ட சீற்றம் ஓன்று உண்டு என்பதுக்கு எதிர் தட்டு –

அரவம் –
கீழ் சொன்னவை பூஷணம் ஆம்படியான ஜன்மம்-
சர்ப ஜாதி  ரியம் க்ரூரா

வெருவி வந்து –
சத்ரு பய பீதனாய் கிடீர் வந்தது

நின் சரண் என –
நீ எனக்கு புகலாக வேணும் என்ன
அது தான் உக்தி மாதரம்-
(சரணம் இதி வாசோபி அதுவும் உனது இன்னருளால் -ஸ்ரீ கூரத்தாழ்வான் )

சரணாய் –
பெரிய திருவடிக்கு பஷ்யமாக பிராப்தமாய் இருக்க
அத்தையும் தவிர்த்தான்
பண்ணிய சரணா கதி தான் ஏது என்று நெகிழாதே
மித்ர பாவமே அமையாதோ -என்று ரஷகனாய்  –

நெஞ்சில் கொண்டு –
இத்தனை  தண்ணியனாய் இருக்கிறவனுக்கு
நாம் அல்லது வேறு புகல் இடம் இல்லை
என்று நெஞ்சில் கொண்டு –
அதிகார பூர்த்தியும்
சரணாகதி பூர்த்தியும் அன்றே பல ப்ரதம் ஆவது
சரண்யன் உடைய நினைவே இறே
இங்கன் அல்லாத அன்று -ஸ்ரீ பரத ஆழ்வான் பிரபத்தியும் பலிக்க வேணுமே –

(உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் என்கிறபடி பேற்றுக்கு அவன் நினைவே –
அது என்றும் உண்டே -அது கார்யகரம் ஆவது நமது விலக்காமை அன்றோ
யாம் வந்த கார்யம் ஆராய்ந்து அருள் –23 பாசுரம் -அத்தை சிற்றம் சிறு காலைக்கு வைத்தார்கள் அன்றோ
நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது -உனக்கே நாம் ஆள் செய்வோம்
பரத்தாழ்வான் போல் அசத்தள் அல்லவே )

நின் அஞ்சிறைப் பறவைக்கு அடைக்கலம் கொடுத்து அருள் செய்தது அறிந்து –
பெரிய திருவடி கையிலே காட்டிக் கொடுத்து
அவனை இட்டு ரஷிப்பித்தாய்-
ஈஸ்வர ஹிருதயத்துக்கு ஒரு பிரியம் இறே இது
ந ஷமாமி
நத்யஜேயம்
என்கிற இவ்விரண்டும் சேர விட வேணுமே இவனுக்கு

நத்யஜேயம்-சரணாகதரைக் கை விட ஒண்ணாது
ந ஷமாமி-ஆஸ்ரித விஷயத்தில் அபராதம் பொறுக்க ஒண்ணாது

தன்னை பஷிக்க வந்த திருவடியை எதிரிடுவதும் செய்யாதே
வேறு ஓர் இடத்தில் போவதும் செய்யாதே
தன்னைச் சரணம் புக்க ஸூமுகன் பண்ணிற்று
ஏதேனும் அபராதம் உண்டோ
ந ஷமாமி யாவது என் என்னில்
ஈஸ்வர ஹிருதயம் என்று ஓன்று உண்டு என்று ஆராய்ந்து பார்த்தால்
ஜகத்தை அடைய ஆஸ்ரிதார்த்தம் என்று ஆய்த்து இருப்பது
அப்படி இருக்க
பெரிய திருவடிக்கு தான் நியதாஹாரனாய் இருக்கச் செய்தே
அது தலைக் கட்டாதே போருவதே -என்று திரு உள்ளம் சிவிக் என்று இருக்கும் இறே

வாலி  -நீர் என்னைக் கொன்றது என் என்ன –
பிராத்ரு பார்யாபஹாரம் பண்ணினாய் என்று அவனுக்கு குற்றமாய்ச் சொன்னவர் தாமே
அக் குற்றம் மகா ராஜர் பக்கலிலே உண்டாய் இருக்க
அது சொன்னார் உண்டாகில் கண்டவிடம் எங்கும் கழுமலை யாக்குவேன் -என்றார் இறே
(கழு மலை -வெட்டி போட்டால் கழுகு மலையாக வந்து உண்டு போகும் )

ந ஷமாமி –நத்யஜேயம் -என்றும் இரண்டும் சேருகிறபடி என் என்னில்
நம்மைச் சரணம் புகுந்த இவன் நம் கீழே கிடக்கிறான் என்று
இருக்கை அன்றிக்கே
(நான் க்ஷமிக்க மாட்டேன் என்று)பெரிய திருவடி கையிலே காட்டிக் கொடுத்து
அவனை இட்டு இறே ரஷித்தது
தான் ஏறிட்டுக் கொண்டு ரஷித்தாலும் அவன் துணுக் துணுக் என்கை போகாது இறே
தானே ரஷிக்க வல்லனாய் இருக்க- நம் கையிலே காட்டித் தருவதே என்று
இவனைக் கைக் கொண்ட போதே அவன் பசியும் தீர்ந்தது

இனி இருவருக்கும் அந்யோந்யம்
ரஷ்ய ரஷக பாவம்  இறே உள்ளது-
பாத்ய பாதக சம்பந்தம் போய்த்தே-
முன்பு சஹஜ சாத்ரவம் உண்டே யாகிலும்
பகவத் ஆஸ்ரயணம் பண்ணினால் ஒரு நீராய் விடும் இத்தனை இறே –

நின் அஞ்சிறைப் பறவை
தன் கையிலே காட்டிக் கொடுத்தால்
ரஷிக்க வேண்டுகிறது சேஷியினுடைய நினைவே நடக்க வேண்டுகை யாலே இறே-
சேஷ பூதர் இருவருக்கும் வந்த விரோதத்துக்கு சேஷி உடைய முகம் இறே வாடுவது-
ராம மேவாநு பஸ்யந்தோ நாப்ய ஹிம்சன் பரஸ்பரம் -என்னக் கடவது இறே –
(நாட்டு மக்கள் ஆனந்தமாக தர்ம சிந்தனை உடன் பெருமாளையே பார்த்து இருந்தார்கள் -ராம ராஜ்யத்தில் )

அடைக்கலம் கொடுத்து அருள் செய்தது அறிந்து –
உணர்ந்து நோக்கும்படி பண்ணி

அருள் –
அவன் செய்யும் சேமம் -என்கிறபடியே
ஒரு நாளும் பிரியாத படி யாய்த்து செய்து கொடுத்தது –
(பாகவதருக்கு ஆள் படுத்துவதே அவன் செய்யும் சேமம் -நம்மாழ்வார் )

அவன் சத்ரு பீதனாய் வந்து சரணம் புக அவனை நோக்கினோம்
நீர் ஆர்க்கு பயப்பட்டு நம்மை சரணம் புகுகிறீர்-என்ன –
வெஞ்சொல் ஆளர்கள் –
அவர்கள் செய்யும் செயல்கள் பொறுக்கலாம்
அவர்கள் பாசுரம் கிடீர் பொறுக்க அரிது –

நமன் தமர் –
நாலு மூன்று சாசனம் மறுக்கும்படி
அவனுக்கு அந்தரங்கர் ஆனவர்கள் –

கடியர் –
வேஷம் பொறுக்கப் போகாது –

கொடிய செய்வன யுளவதற்கு –
ஆஸ்ரய அனுரூபமாக அன்றிக்கே
பாப அனுரூபமாக நலியா நிற்பர்கள் –

உள-
பாபத்துக்கு அவதி உண்டாகில் இறே
இவர்கள் செயலுக்கு அவதி யுண்டாவது –

அதற்கு –
யம படர் உடைய கொடும் தொழில்களுக்கு –

அடியேன் அஞ்சி வந்து-
சேஷ பூதன் ஆகைக்கும்
யமாதிகளுக்கு அஞ்சுகைக்கும்
என்ன சேர்த்தி உண்டு
பயம் பயாநாம் இத்யாதி –
(ப்ரஹ்லாதன் வார்த்தை -பெருமாள் உள்ளே இருக்க எதைப் பற்றி பயப்பட வேண்டும் )

நின் அடி இணை அடைந்தேன் –
யமன்  தான் அஞ்சி
மதுசூதன பரிகாரம் -என்னும்படி யான
உன் திருவடிகளை ஆஸ்ரயித்தேன்-

அணி பொழில் திரு வரங்கத் தம்மானே
அனுபவ விரோதிகளைப் போக்கி
ஆஸ்ரிதரை அனுபவிப்பைக்காக அன்றோ
இங்கு வந்து சாய்ந்து அருளிற்று –

———————————————————–

விஷயீ காரத்தைச் சொல்லி
கைங்கர்யத்தைச் சொல்லி
கைங்கர்யத்தின் உடைய உபய ஆகாரமான விரோதிகளைப் போக்கி தந்து அருள வேணும் –
என்றார் கீழ்-நான்கு பாசுரங்களால் –
இதில் கோவிந்த ஸ்வாமி உடைய கருத்து அறிந்து செய்தால் போலே
என்னுடைய கருத்து அறிந்து கார்யம் செய்ய வேணும் -என்கிறார் –

கீழ் நின்ற நிலைக்கு இவர்க்கு கருத்தாவது
இந்த்ரிய வஸ்யதைக்கும் யம வஸ்யதைக்கும் அடியான
தேக சம்பந்தத்தை அறுத்து
தர வேணும் என்கை
மரணமானால் -என்கிறபடியே தன்னடையே சரீர விச்லேஷம் சித்திக்குமாகில்
அபேஷிககிறது என் என்னில்-
க்ரம ப்ராப்தி பற்றாத த்வேரா திரேகத்தாலே –
(மரணமாக்கி இருந்து இருந்தால் அபேக்ஷிக்க மாட்டேன் )

கோவிந்த ஸ்வாமி-என்பான் ஒரு பிராமணன்
இதிஹாச புராண ஸ்ரவணத்தாலே
கிருஷ்ணன் உடைய பால்ய சேஷ்டிதங்களையும் ராச க்ரீடாதிகளையும்
சாஷாத்கர்த்து காமனாய்
முன்பு காண வாராய் -திருவாய் -8-5-2–என்று எண்ணி இருப்பார்க்கு
பரித்ராணாயா சாது நாம் -என்கிறபடியே காட்டிக் கொடுத்து போருமவன் அன்றோ
(மற்ற இரண்டுக்கும் வர வேண்டாமே )

நமக்கும் அவ்வாசை உண்டானால் சித்தியாமை இல்லை
ததர்த்தமாக அர்த்திப்போம் -என்று
சரீரத்தை ஒறுத்து தபஸை பண்ண
இவன் நினைவின் படியே கிருஷ்ண அவதாரத்தின் படிகளை
அடைய சிருஷ்டித்துக் காட்டி  அனுபவிப்பித்து
உனக்கு வேண்டுவது என் என்று கேட்டு அருள
கூடப் போந்து இப்படி தேவரை அனுபவிக்கும் அத்தனை -என்ன

நீ தபஸ் பண்ணுகிற போது
விஷய விதுரனாய்
அன்ன பாநாதிகளையும் கழித்து
உடம்பையும் நாரும் நரம்புமாய் ஆக்கிக் கொடு போந்தாய்
இங்கே இருந்து நெகிழ்ந்த போகங்களையும் களித்து வா
என்று அவன் கருத்து அறிந்து அருளிச் செய்தால் போலே
என் கருத்து அறிந்து கார்யம் செய்ய வேணும் -என்கிறார் –

இவ் வர்த்தம் சாப்தம் அன்றிக்கே இருக்க
இவருக்கு இது கருத்தாக சொல்லுகிறது
பிரகரண பலத்தாலும்
அர்த்த க்ரமத்தாலும்
நாசமான பாசம் -என்றும்
போந்தேன்-பெரிய திருமொழி -6-3-4- -என்றும் சொல்லுகிற  இவருக்கு இது கருத்தாக வேணும் இறே-

(த்ருஷ்டாந்த பலம் திருஷ்ட அபேக்ஷை
த்ருஷ்ட போகங்களில் மூட்டி இருக்க
தேக சம்பந்தம் போக்க அருளிச் செய்வது என்பது எப்படி பொருந்தும் -என்ன
விரோதி போக்கும் பிரகரண பலத்தாலும்
அர்த்த க்ரமத்தாலும்-இந்திரிய எம வஸ்யத்தைக்கும் பின்பு அருளிச் செய்வதால்
தேக சம்பந்த நிவ்ருத்தியே ஆக வேண்டும் )

மாக மா நிலம் முழுதும் வந்து இறைஞ்சும் மலரடிக் கண்ட மா மறையாளன்
தோகை மா மயில் அன்னவர் இன்பம் துற்றிலாமையில் அத்த விங்கு ஒழிந்து
போகம் நீ எய்திப் பின்னும் நம்மிடைக்கே போதுவாய் என்ற  பொன்னருள் எனக்கும்
ஆக வேண்டும் என்று அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே—5-8-5-

அத்த -கூப்பிட்டு விளி சொல்
பெருமாள் -கோவிந்த ஸ்வாமியைப் பார்த்து சொன்னதாகவும்
18 நாடார் பெரும் கூட்டம் -மா மறையாளன் -வார்த்தையால் –

மாகம் இத்யாதி –
உபய விபூதியில் உள்ளாரும் வந்து ஆஸ்ரயிக்கும் படியான திருவடிகளைக் கண்ட
இவ் வாஸ்ரயணம் தர்மி பிரயிக்தம் அல்ல -கிருஷ்ணாவதார பிரயுக்தம்
பரம பத நிலயரான ஸூரிகள் ஆஸ்ரயிக்கும் படி என் என்றால் –
ஆச்சாத்யா நுயயௌ சேஷ பணைரா நக நுந்துபிம் -என்றும் ( சேஷன் குடை பிடிக்க )
வினதை சிறுவன்  சிறகு என்னும் மேலாப்பின் கீழ் வருவானை -என்றும்
சொல்லா நின்றது இறே
திவ்ய ஆயுதங்களும் கூட கர்ப்ப வாசம் பண்ணி இறே பிறந்தது –
(கர்ப்பத்தில் கைங்கர்யம் திவ்ய ஆயுதங்கள் )

மா நிலம் –
இடையரோடு
அவர்கள் தான் வசிஷ்டாதிகள் என்னும்படி யான பசுக்களோடு
கன்றுகளோடு
பீஷ்மாதிகளோடு
வாசி அற ஆஸ்ரயித்தது இறே

முழுதும் –
உபரிதன லோகங்களில் உள்ளாரும்
மத்ய ராத்ரத்திலே பால் அமுது செய்து சாய்ந்து அருளப் புகுகிற அளவிலே
இந்த்ரன் திரு வாசலிலே வந்து நின்று புறப்பட்ட தாசிகளுக்கு
நான் வந்தேன் என்று விண்ணப்பம் செய்ய வேணும் -என்று உள்ளே புகுந்த இந்த்ரன்
நரகன் என்னுடைய சதுர்த் தந்தியையும் தர வேணும் என்று நெருக்கா நின்றான் -என்ன
(சதுர்த் தந்தியையும்–ஐரா வதம் தாயார் குடை அனைத்தையும் )
கையைத் தா -என்று எழுந்து இருந்து
சத்ய பாமைப் பிராட்டியோடும் கூட
பெரிய திருவடி தோளிலே ஏறி
எழுந்து  அருளி நரக வதம் பண்ணினான்  என்னா நின்றது  இறே

பாதேன கமலா பேன-இத்யாதிகளால்
ப்ரஹ்ம ருத்ர ஆர்சனம் சொல்லா நின்றது இறே
ப்ரஹ்மானாம் ஈசம் கமலாச  நஸ்த்தம் -என்று
திரு மேனியில் காட்டுவதும் செய்தான் இறே –

மலரடி
நிரதிசயமான போக்யமான திருவடிகள்
பசுக்களின் பின்னே போவது
தேர்த் தட்டிலே நிற்பது
தூது நடப்பது ஆகிற அளவிலே கிடீர் சர்வ சமாஸ்ரயணீயன் ஆய்த்து

கண்ட –
எல்லாரும் ஒக்க இருந்த இடத்தே சென்று ஆஸ்ரயிக்க
வேண்டும்படியான
திருவடிகளை யாய்த்து
தானே வர இவன் கண்டது –

மா மறையாளன் –
சாஸ்த்ரத்தாலே யாதல்
உபதேசத்தால்  யாதல்
அன்றிக்கே
கண்ணால் காணப் பெற்ற வைதிக அக்ரேசரன்  –

தோகை இத்யாதி –
கண்ட அளவிலே கூடப் போரும் இத்தனை -என்ன
அது பின்னை செய்கிறாய் என்ன
அதுக்கடி என் என்ன

இழந்த போகங்களை புஜிக்க வேணும் காண் என்ன –
அது தான் வேண்டுகிறது என் என்ன
நீ தபஸ் பண்ணுகிற போது
இதர விஷயங்களில் சங்கம் கிடக்கச் செய்தே
அவற்றைச் செறுத்து புஜியாதே போந்தாய் காண் -என்றான்
மோஷ பிரதனான சர்வேஸ்வரனை ஒழியச் செல்லாமை உடையராய்
கூடப் போவோம் என்பார் அளவில்
போதரே என்னும் இத்தனை போக்கி
விட்டுப் போவான் ஒருவன் அல்லன்
அவன் பக்கல் அதி பிரவணனாய் இருக்குமவன்
அவனை ஒழிய விஷய பிரவணமாக்கும் சம்சாரத்தில் இருப்பை இசையான்

ஆனால் இவனை இரு என்கைக்கும்
இவன் இருப்பை இசைகைக்கும் ஒரு கருத்து உண்டாக வேணும்
அதாவது என் என்னில்-ஈஸ்வரன் நினைத்தால்
விஷய ப்ரவணரையும் இவ்வாசனை அறுத்துக் கொடு போக சக்தன் என்னும் இடமும்
எத்தனையேனும் பகவத் ப்ரவணரையும் தேக சம்பந்தின் வழியே கொடு போய்
விநாசத்தைப் பலிப்பிக்கும் என்னும் இடமும்  வெளியிட்டது –

சாதுக்கள் உடைய உபமான பூமியாய் இருக்கிற ஸ்ரீ பிரகலாத ஆழ்வான்
இறே எதிரம்பு கோத்தான்
(வாமனன் -அளக்க -திருவடிகளை பிடித்து தடுக்க -பிரகிருதி படுத்திய பாடு )
இதுக்கு நேரே உதாஹரணம் ஸ்ரீ மாலா காரர் அளவில் செய்தது இறே
மாலா காரர் கிரஹத்திலே புக்கு பூ தொடுக்கிறவனை
அய்யே நீ எங்களுக்கு பூ இட வல்லையே -என்ன
அவனும் இவ்வடிவு கண்ட போதே
கம்சன் வெட்டி வைத்தான் ஆகில் வெட்டி வைக்கிறான்
இம் மாலைகளை இங்கேயே சாத்துவோம் -என்று சாத்த
ப்ரீதனாய்
இவனை சூட்டு நன் மாலைப் படியே
ஒரு தேச விசேஷத்தே கொடு போய் பூ இடுவித்துக் கொள்வோமோ
இங்கே வைப்போமோ என்று விமர்சித்து
கம்சனை மதியாதே நம்மை ஆதரித்த இவனை
ஐஹிக போகங்களை புஜிப்பித்து
பின்னை அவ்வருகே கொடு போகிறோம் -என்று வைத்தான் இறே  –
(இத்தால் கருத்து அறிந்து செய்பவன் -உள்ளத்தே இருந்து அறியும் மால் அன்றோ )

புக்த்வாச விபுலான் போகான்
கம்சன் இட்ட சோற்று அளவன்று காண் நான் தருவது
த்வமந்தே –
இவன் கொடுக்கிற போகங்கள் தான் அளவு பட்டு அல்லாமையாலும்
போக்தா வானவன் ஓர் அளவிலே மீளுமவன் அல்லாமையாலும்
இதுக்கு ஒரு முடிவு இல்லை இறே
ந ஜாதுகாம காமா நாமுப போகேன சாம்யதி
ஹவிஷா கிருஷ்ண வர்தமேவ பூய ஏவாபி வர்த்ததே -என்றும்
யத் ப்ருதிவ்யாம் வ்ரீஹி யவம் ஹிரண்யம் பசவஸ் ஸ்த்ரிய
ஏகஸ்யாபி நபர்யாப்த மிதிமத்வா சமம் வ்ரஜேத் -பாரத ஸ்லோகம் -என்கிறபடியே
இவற்றின் உடைய ஸ்வ பாவத்தை அனுசந்தித்தால்
பிரியலாம் படி யன்றிக்கே யாய்த்து இருப்பது –
இங்கனே இருக்கச் செய்தேயும் பகவத் ப்ரவணனாய் இருக்குமவனுக்கு
நினைத்த போதே கால் வாங்கலாய் இருக்கும்

சௌபரி மத்ஸ்ய தர்சனத்திலே ஐம்பது வடிவு கொண்டு புஜித்து
தானே ஓர் அளவிலே அருவருத்து மீண்டான் இறே

கர்மமும் ஜ்ஞானமும் இரண்டும் கூட நடக்கிறது இறே
கர்ம வாசனை விஷயங்களிலே மூட்டும்
ஜ்ஞானம் அருவருத்து மீளப் பண்ணும்
ஔபாதிக கர்மத்தை ஸ்வாபாவிக ஜ்ஞானம் மேலிடும் இறே –
(ஞானம் இயற்க்கை கர்மம் வந்தேறி தானே -ஞான ஸ்வரூபம் ஜீவாத்மா அன்றோ )

மத் ப்ரசாதத மம அநு ஸ்மரணம் ப்ராப்ய
உபாசகனுக்கு நம் பிரசாதத்தாலே அந்திம ஸ்ம்ருதி உண்டாமா போலே
நீயும் நம்முடைய அந்திம ஸ்ம்ருதியைப்  பெற்று -என்னுதல்
நீ நினைக்க மாட்டாத குறை தீர நாமே நினைக்கக் கடவோம்
ஸ்வீ கார அத்யவாச்யம் இறே அத்தலைக்கு வேண்டுவது-

தோகை மா மயில் அன்னவர் இன்பம் –
தோகையை உடைத்தான சுந்தரமான மயில் போலே இருக்கிற ஸ்திரீகள்
இத்தால்
தூரஸ்தரையும் ஆகர்ஷிக்கும் படியான மயிர் முடியையும் நடையையும் சொல்லுகிறது –
இப்படி அனுபவித்தால் அது தன்னில் ஒன்றும் காண ஒண்ணாதே
ஸ்நான உப கரணங்களைக் கொண்டு மீளும்படி இறே இருப்பது –

அன்னவர் இன்பம் –
ஆராய்ந்தால் அனுபாவ்யம் ஒன்றும்   இல்லை
தோகை மா மயில் அன்னவர் இன்பம் -என்று ஒன்றாக ஆஷேபித்துச் சொல்லுகிறார்
தாயே தந்தை என்றும் தாரமே கிளை மக்கள் என்றும் நோயே பட்டு ஒழிந்தேன் -என்றவர் வார்த்தை இறே –
முரிக்கு கிழக்கு என்னிலும் இவர் நா வீறு தான்
இங்கன் அல்லாது இராமையாலே யாதல் –
( முரிக்கு கிழக்கு-கரைக்கு கிழக்கு வழக்கு வார்த்தை )

துற்றிலாமையால் –
கலவி ரசத்தை அனுபவியாமையால் –

அத்த –
தான் நியமித்த படி அவன் செய்கைக்காக அப்பனே என்று அநு நயித்துச் சொல்லுகிறார்

இங்கு ஒழிந்து –
இந் நிலத்திலே சில நாள் இருந்து

போகம் நீ எய்தி –
இழந்த போகங்களை அடைய புஜித்து

நீ எய்தி-
நினைத்த போது கால் வாங்க வல்ல அளவுடைய நீ அல்லையோ
இதில் அதிகரிக்கிறாய்
நீ தபஸ் பண்ணுகிற நாளில் விட்ட விஷயங்கள் இப்போது
உனக்கு பிரதிபந்தகங்கள் ஆக வற்றோ-

பின்னை நம்மிடைக்கே போதுவாய்-
நினைத்த போது மீட்க வல்ல
தன் வை லஷண்யம் தோற்ற சொல்லுகிறார்
நேரே வகுத்த விஷயமான நம் பக்கலில் வரக் கடவை –

என்ற பொன்னருள் –
ஸ்ப்ருஹணீயமான அருள்

எனக்குமாக வேண்டும் என்று அடி இணை அடைந்தேன் –
அவன் கருத்து அறிந்து கார்யம் செய்தால் போலே
என் கருத்து அறிந்து கார்யம் செய்ய வேணும் –

அணி பொழில் இத்யாதி –
ஆஸ்ரிதர் அனுரூபமாக அபேஷிதங்கள் ஆராய்ந்து செய்கைக்காக அன்றோ
இங்கே வந்து சாய்ந்து அருளிற்று
ஐஸ்வர்யம் வேணும் என்பார்க்கு அத்தை கொடுக்கவும்
தேகத்தை பூண் கட்டிக் கொடுப்பார்க்கு அத்தைச் செய்யவும்
தேக சம்பந்தத்தை அறுத்து தர வேணும் என்பார்க்கு அத்தைச் செய்யவும் அன்றோ
இங்கே வந்து சாய்ந்து அருளிற்று –

———————————————–

த்வயார்த்தம் விரித்து உரைக்கும் பதிகம் இது
பிராட்டி விஷயீ காரம் தொடங்கி-மான் மட நோக்கி –
ஒன்பதாம் பாசுரம் பெருமாள் -உலகம் அளந்த பொன்னடி அடைந்து உய்ந்தேன்

அடியேன் கருத்துப்படி
சேஷத்வ பாரதந்தர்யத்துக்கு கொத்தை ஆக்க கூடாதே
நீயே இத்தை விரும்பி திரு உள்ளம் கொண்டு அருள வேண்டும்
தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே வேண்டுமே
அருள் தருவான் அமைகின்றன அது நமது விதி வகையே -எனது பிரார்தனைப்படியா
மாற்றி -வான் ஏற வழி தந்த வாட்டாற்றான் பணி வகையே
போல் இங்கும் கீழ்ப் பாட்டும் இதுவும்
ப்ராப்தன் இடம் எதுவும் கேட்டுப் பெறலாமே –
தேக சம்பந்தம் அறுத்து தருவதும் தனக்காக இல்லாமல்
தனக்கே யாக எனைக் கொள்ள வேண்டுமே
எம்மா வீட்டில் எம்மா வீட்டு பாசுரம்
எனக்காக கொடுக்காதே
எனக்கும் பிறருக்காம கூடாது
எனக்கும் உனக்குமாக கூடாதே
உனக்காகவே ஏற்றுக் கொள்ள வேண்டுமே
இப்படி சங்கதி –

கோவிந்த ஸ்வாமி கருத்து அறிந்து அவனுடைய கார்யம் செய்தாப் போலே
என் கருத்து அறிந்து என்னுடைய அபிமதம் செய்ய வேணும் என்றார் -கீழ் –
மார்கண்டேயன் மிருத்யு பய பீதனாய் சரணம் புக
அவனுக்கு மிருத்யுவை நிரசித்து
அந்த பய நிவ்ருதியை பண்ணிக் கொடுத்த அளவன்றிக்கே
ஒரு காலமும் உன் திருவடிகளைப் பிரியாதபடியான பேற்றை
அவனுக்குப் பண்ணிக் கொடுத்தால் போலே
என் சம்சார பயத்தை பரிக்ரஹித்து
உன் திருவடிகளை நான் பிரியாத படியான பேற்றை பண்ணித் தந்து
அது நான் அர்த்திக்க இரப்புக்குக் கார்யம் செய்ததாய்
காலன் கொண்டு மோதிரம் இடுமா போலே பண்ணப் பெற ஒண்ணாது
என் ஸ்வரூப அநு ரூபமான   பேறாகிறது
நீ தரப் பெறுமது -அது வேணும் என்கிறார்  –

மன்னு நான்மறை மா முனி பெற்ற மைந்தனை மதியாத வெங்கூற்றன்
தன்னை யஞ்சி நின் சரண் எனச் சரணாய்  தகவில் காலனை யுக முனிந்து ஒழியாப்
பின்னை என்றும் நின் திருவடிப் பிரியா வண்ணம் எண்ணிய பேரருள் எனக்கும்
அன்னதாகும் என்று அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே –5-8-6-

இன்றும் அநேக கர்ப்ப க்ருஹங்களில் மார்க்கண்டேயர் பிருகு மஹ ரிஷிகள்
இவன் திரு உள்ளப் படியே பிரியாமல் சேவை சாதிக்கிறார்கள்

மன்னு நான்மறை மா முனி பெற்ற மைந்தனை மதியாத வெங்கூற்றன்
முனி பெற்ற -என்ன அமையும்
மன்னு நான்மறை என்றதுக்கு கருத்து என் என்னில்
இப்படிப் பட்ட ஆபிஜாத்யத்தை மதியாதே கிடீர்
வந்து கிட்டிற்று -என்கை-
நித்தியமாய்
நாலு வகைப் பட்ட வேத அத்யயன பரனாய்
அதில் சொல்லுகிறபடியே பகவத் உபாசன பரனாய் போருகிறவன்-
(சாஸ்திரங்களில் சொல்லாத படி )அவைதிகமாக உக்த் உபபக்திகளாலே  உபாசிப்பாரும் உண்டு இறே
(பலனை சமர்ப்பித்து -வெட்கப்பட்டு நீசன் என்ற நினைவுடன் -டாம்பீகமாக இல்லாமல்
தானாதிகளைச் செய்ய வேண்டுமே )
அங்கன் இன்றிக்கே
வேதைஸ்ஸ சர்வை ரஹமேவ  வேத்ய -என்கிற வஸ்து உபாஸ்யம் என்று அறிந்து
உபாசன பரனாய் போருகிறவன் –

மஹத்தை யாவது –
பிரயோஜனாந்தர விதுரமாக
வாசுதேவஸ் சர்வம் என்கிறபடியே
எல்லாம் அவனே -என்று உபாசிக்கை –

நான்மறையில் மன்னிப் போருகிறவன் –
உபாசகனுக்கு அத்யயனம்
ஸ்வாத்யாய ஜ்ஞான யஜ்ஞ்ஞாச -ஸ்ரீ கீதை -4-28–என்கிறபடியே
உருவ அனுவர்த்திக்கும் இறே –
ஸ்வாத்யாயாத் யோகமாசீத யோகாத் ஸ்வாத்யாய மாம நேத்
ஸ்வாத்யாய யோக சம்பத்த்யா பரமாத்மா பிரகாசதே -என்கிறபடியே
வேத விஹிதமான படியே யோகாரூடனாக கடவனாய்
யோகத்திலே சாஷாத் கரிக்கிற வஸ்து கர்ம அனுரூபமாக
அந்யதவாகத் தோற்றுகிறதோ அன்றிக்கே யதாவாகவோ என்று அறிகைக்காகப்
பின்னையும் அத்யயன பரனாகை –

ஆசார்யன்  சிஷ்யனைப் பார்த்து -யதோவா இமானி பூதானி -இத்யாதிகளை உபதேசித்து
(பிருகு வல்லி -தைத்ரியம் -பிருகு பிள்ளை வருணனுக்கு உபதேசம் )
இதில் சொல்லுகிறபடியே உபாஸ்ய வஸ்து  பிரகாசிக்கும் தனையும் போய் தபஸ் பண்ணு -என்
அவனும் தபஸ் பண்ண
அன்னம் ப்ரஹ்மேதி வ்யஜா நாத் -என்கிறபடியே
அன்னமோ ப்ரஹ்மம்-என்ன
அதுவும் போதாது -இன்னமும் தபஸ் பண்ணு என்ன
ஆனந்த மய அளவும் தபஸ் பண்ணின வாறே
அது காண் ப்ரஹ்மம் என்று விட்டான் இறே –
(அன்னம் -பிராணன் -மனோ -விஞ்ஞான மயம் -ஆனந்த மயம் பஞ்ச கோசம் )

முனி பெற்ற –
ஜ்ஞான விபாக தசையிலே பிறந்தவன் –

மதியாத –
பகவத் சம்பந்தம் உடையராய் இருக்குமவர்கள்
பங்க்தியிலும்  அகப்பட
பரிஹர மது ஸூதன ப்ரபந்நான் என்ன வேண்டி இருக்க
ஸ்ரீ வைஷ்ணவ் சம்பந்தம் உடையார் பக்கலில் கிட்ட ஒண்ணாது இறே
அப்படி இருக்க மதியாதே வந்து கிட்டினான் –
ந அஸ்யாஸ் அவர புருஷா ஷீயந்தே –
பாகவதனுக்கு வித்யையாலும் ஜன்மத்தாலும் சந்தான த்வயம் உண்டாய்ப் போரக் கடவது இறே
இரண்டு திறத்தாருக்கும் ஷயம் இல்லை என்கிறது
அணுவாய் நித்தியமான ஆத்மாவுக்கு ஷயம் ஆகிறது ஜ்ஞான சங்கோசம் –
அது வாராது
இதன் உடைய உப ப்ரும்ஹணம் இறே
குலம் தாரயதே-(பாரதம் பீஷ்மர் வார்த்தை -குளம் வெட்டி நல்ல கார்யம் செய்தால்
குலத்தையே ரஷிக்கும் என்றார் அன்றோ சப்த சப்தச சப்தச )
இத்தை அனுவர்த்திக்குமவர்களும் எமர் ஏழு ஏழு பிறப்பும் என்னா நின்றார்கள் இறே –

வெங்கூற்றம்
இவனுடைய உத்கர்ஷம் பாராதே
தங்களையே பார்த்து -க்ரௌர்யத்தை முன்னிட்டுக் கொண்டு யாய்த்து வந்தது –

வெங்கூற்றம் தன்னை யஞ்சி நின் சரண் எனச் –
மிருத்யு பய பீதனாய் கொண்டு
நீயே எனக்குப் புகலாக வேணும் -என்று –

நின் சரண் என –
மமாஸ்தி சக்ர பிரதிஹத வீர்ய பலஸ்ய -என்று
எமாதிகள் அஞ்சும்படியான பரிகரத்தை உடைய நீ புகலாக வேணும் –
வசதி மனஸி பஸ்ய சோவ்ய யாத்மா –
இவை வைமுக்யம் பண்ணிப் போரும் அன்றும்  விட மாட்டாதே
நித்ய அந்தராத்மாவாய்க் கொண்டு போருமவன்
புருஷ வரஸ்ய -அவனே உபாயம் என்று இருக்கை
ந தஸ்ய த்ருஷ்டி பாதே  தவ கதி -அப்படி இருக்குமவனுடைய கண் வட்டத்திலும் நீ சஞ்சரியாதே கொள்
வ்ரஜ பரிஹ்ருத்ய யதாக்னி மாஜ்ய சிக்தம் -என்னும்படியே
அழல் உடையராய் இறே இருப்பது –

அதவா
மமாஸ்தி சக்ர பிரதிஹத வீர்ய பலஸ்ய
அவனுடைய பெருமையை பார்த்தால் எனக்கும் கிட்ட ஒண்ணாத படியாய் அன்றோ இருப்பது
அதுக்கடி
அவ்யஹதானி க்ருஷ்ணஸ்ய சக்ராதீன் யாயுதானி தம்
ரஷந்தி சகலாபத்ப்யோ யேன விஷ்ணு  ருபாசித -என்கிறபடியே
திவ்ய ஆயுதங்களுக்கு அஞ்சின படி
கொடுமை செய்யும் கூற்றமும் என் கோலாடி குறுகப் பெறா
தடவரைத் தோள் சக்ர பாணீ சார்ங்க வில் சேவகனே   –
கிட்டினான் ஆகில் திரு ஆழியாலே தலையை அறுத்தல்
தூரத்திலே யாகில் நெட்டம்பாலே உருட்டுதல் செய்யுமவன்
சரீரி அன்றோ என்ன
அவன் இத் தேசத்தில் நடையாடுவார் ஒருத்தன் அல்லன் காண்
நேமிப் பிரான் தமர் போந்தார் -என்னக் கடவது இறே –

சரணாய் –
சரண்யர் அல்லாதாரைப் பற்றினேனோ

மன்னி இத்யாதி –
ஆபி ஜாத்யத்தால் வந்த  உத்கர்ஷத்தைச் சொல்லி
அவன் சரணம் புக்கான் என்றது இங்கு –
ஏழை எதலன் என்றும்
வாத மா மகன் என்றும்
நஞ்சு சோர்வதோர் -என்றும்
நிகர்ஷத்தை சொல்லிற்று கீழ்
இரண்டுக்கும் சேர்த்தி என் என்னில்
உத்கர்ஷ அபகர்ஷங்கள் இரண்டும் சரணா கதிக்கு அப்ரயோஜனம் -என்கை
வேல் வெட்டி நம்பியார்க்கு பிள்ளை அருளிச் செய்த வார்த்தை –
(ராமன் அஞ்சலி பிராங் முகம்- விபீஷணன் முழுக்கு போடாமல் -இரண்டும் உண்டே –
ஆச்சார்யம் பிரதானம் இஷ்வாகு குலம் -கிருபை ஒன்றே காரணம் -நம்பிள்ளை வார்த்தை )

தகவில் காலனை –
இரங்க வேண்டும் தசையிலும் இரக்கம் அற்று இருக்கை –
இவனுடைய பாபத்தையும்
தன்னுடைய நியாமகத்வத்தையுமே
யாய்த்து பார்ப்பது –

யுக முனிந்து –
(உக்கிப் போகும் படி முனிந்து )
அவன் தான் இவன் அளவிலே நினைத்ததை
அவன் தன்னோடே போக்கினான்
நாளையும் ஸ்ரீ வைஷ்ணவ பரிகரமாய் இருப்பாரை  நலிய ஒண்ணாது என்று
உரு மாய்த்து விட்டான் –

ஒழியா –
இவனை நலிந்த மிருத்யுவை அழியச் செய்து
இவனை பரிஹரித்தோம் ஆகில் அமையாதோ
என்று விடாதே –

பின்னை என்றும் நின் திருவடிப் பிரியா வண்ணம் –
சம்சார  சம்பந்தத்தை அறுத்து
திருவடிகளை ஒரு நாளும் பிரியாத படியான
பேற்றைப் பண்ணிக் கொடுத்தாய் –

நின் திருவடிப் பிரியா வண்ணம் –
சம்சார சம்பந்தம் அறுகை கேவலனுக்கும் ஒக்கும் இறே
அங்கன் அன்றிக்கே
திருவடிகளை கிட்டும்படியான பேற்றை யாய்த்து பண்ணிக் கொடுத்தது  –

எண்ணிய பேரருள் –
கிருபையை அன்றிக்கே ஔதார்யத்தைப் பற்றச் சொல்லுகிறது
இவன் பிரயோஜனாந்தரத்துக்கு வந்து கிட்டினாலும்
சகல பல பரதன் ஆகையாலே
விலக்காத சமயம் பெற்றால் விடான் இறே
ஆஸ்ரயிக்குமவனுக்கும் ஔதார்ய குணம் அனுசந்தேயம்
அபார காருண்யா -இத்யாதி  –( கத்யம் )

எனக்கும் –
அவனைப் போலே ஜன்ம நிபந்தனமான
ஏற்றம் அன்றிக்கே இருக்கும் எனக்கும்
அதாகிறது
பாவமே செய்து பாவியானேன்
எப் பாவம் பலவும் இவையே செய்து
என்று சொல்லுமவர் இறே –

அன்னதாகும் என்று அடி இணை அடைந்தேன் –
அவன் நினைவு இன்றிக்கே இருக்கச் செய்தே
நாம் கொடுத்தால் இவன் விலக்கான்-என்னும் இதுவே பற்றாசாக
உன்னைப் பிரியாத பேற்றைப் பண்ணி அவனுக்கு கொடுத்தால் போலே
உன் விருப்பத்தாலே நானும்
அப் பேறு பெற வேணும் என்று சரணம் புகுந்தேன் –

அணி பொழில் திரு வரங்கத் தம்மானே –
பிரயோஜனாந்தரங்களுக்கு வந்து ஆஸ்ரயித்த வர்களுக்கும்
விலக்காமை உண்டாகில்
ஸ்வரூப அனுரூபமான பிரயோஜனத்தை கொடுக்கைக்காக வன்றோ
இங்கு வந்து கண் வளர்ந்து அருளுகிறது –

(மார்க்கண்டேயர் -சிவ பக்தன் –
இவரே சென்று பெருமாள் இடம் சேர்த்து –
புருஷகாரமாக சிவபிரான்
புக்கு அடிமை -திருவாய் மொழி பாசுரம் படி )

———————————–

ஆர்ஜூனி சம்பவம் பரிக்ஷித்துக்கு உதவி -இந்த வரிசையில் -வானர முதலி களுக்கு –
சாந்தீபன் பிள்ளை -வைதிக புத்திரர்கள் மீட்டுக் கொடுத்த அழகரே திரு அரங்கம் சென்று
உடையவர் திருவடிக்கீழ் அமர்த்த பிரார்த்தனை -ஸ்ரீ கூரத்தாழ்வான்

1-விஷயீ காரத்தை சொல்லி
2-கைங்கர்யத்தை சொல்லி
3-அதுக்கு விரோதியாய் வருமதில் இந்த்ரிய வஸ்யதையைத் தவிர்த்து தர வேண்டுமேன்று சொல்லி
4-அதுக்கடியான பாபமடியாக வந்த யம வஸ்யதையை பரிஹரிக்க வேணும் என்று சொல்லி
5-அதுக்கடியான பிரகிருதி சம்பந்தத்தை அறுத்துத் தர வேணும் என்று சொல்லி
6-கருத்து அறிந்து செய்யும் அளவு அன்றிக்கே உன் பரிவாலே செய்ய வேணும் என்று நின்றது -கீழ் –

இதுக்கு அவ்வருகு அபேஷிக்கலாவது இல்லாமையாலே
மேலில் பாட்டுக்களுக்கு உதயம் இல்லை
ஆனால் மேல் செய்கிறது என் என்னில்
ஆழ்வீர்-சேஷியும் சேஷ   பூதனும் ஆனால்
சேஷி செய்தபடி கண்டு
தத் தஸ்ய சத்ருசம் பவேத் -என்று சேஷ பூதன் இருக்கும் அத்தனை அல்லது
இத்தனை த்வரிக்க கடவது அல்ல காணும் -என்ன
தன்னைப் பார்த்தால் தன் சரீர அவசானத்தில் தான் பேறு உண்டோ-
உன் சர்வ சக்தித்வத்தாலே த்வரிக்கிறேன் இத்தனை அன்றோ-
அவனுடைய போக்யதை போலே
சர்வ சக்தித்வமும் த்வரிப்பிக்கும் இறே-
சாந்தீபிநீ புத்ரனை கடல் கொள்ள மீட்டுக் கொடுத்த
அகடி தகடநா சாமர்த்த்யத்தையும் விஞ்சி இருப்பது ஓன்று இறே-
சம்சார ஆர்ணவத்திலே அகப்பட்டு நோவு படுகிற என்னையும்
மீட்டு உன் திருவடிகளை தருகை யாவது-
தேவரீர் உடைய சர்வ சக்தித்வத்தாலே
அத்தை செய்து அருள வேணும் -என்கிறார் –

ஒது வாய்மையும் உவனியப் பிறப்பும்  உனக்கு முன் தந்த அந்தணன் ஒருவன்
காதல் என் மகன் புகலிடம் காணேன் கண்டு நீ தருவாய் எனக்கு என்று
கோதில் வாய்மையினான் உனை வேண்டிய குறை முடித்தவன் சிறுவனைக் கொடுத்தாய்
ஆதலால் வந்து உன் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே —5-8-7-

ஒது வாய்மையும்-
வாய்மை –
வாக் இந்த்ரிய வியாபாரம் -அதாகிறது -வசனம்
ஒரு வசனத்தில் அர்த்தத்தை நினைத்து பாசுரம் இடுகிறார் மர்யாதா ஸ்தாபன அர்த்தமாக-
அந்தர்யாமி ப்ராஹ்மணம் திரு உள்ளத்திலே அனுவர்த்தியா நிற்கச் செய்தேயும்
உடல் மிசை உயிர் என கரந்து எங்கும் பரந்துளன்  சுடர் மிகு சுருதியுள் -என்றார் இறே
சப்த உச்சாரணம் பண்ணுவது இல்லை
அர்த்தத்தில் ஒன்றும் விடுவது இல்லை

ஒது வாய்மை -என்கிறது –
பூர்வே பூர்வேப்யோ வச ஏத தூசு -என்கிறத்தை
புஸ்தக நிரீஷணம் பண்ணுதல்
செவி ஏறாக வருகை யாதல் அன்றிக்கே
ஆசார்ய உச்சாரண அனந்தரமாக அனுச்சாரணம் பண்ணிப் போருகை
சப்த ராசி க்ரஹணத்துக்கு உச்சாரண அனுச்சாரண அபேஷை என் என்னில்
அப்படி அல்லது அர்த்தப் பிரகாசம் இல்லாமையால் –
அர்த்தம் தம் தம் அனர்த்த ரூபம் -இத்யாதிப் படியே
அக்னி சாஷிகமாக கைப் பிடித்த ஸ்திரீ யானவள் தன்னுடைய பர்த்தாவுக்கு
தன்னை ஆமூல சூடமாக காட்டுமா போலே
சதாசார்யா உபதேச ஜ்ஞான பூர்வகமாக கைப் பிடித்தவனுக்கு யாய்த்து
வித்யை தன்னை உள்ளபடி காட்டுவது –

உவனியப் பிறப்பும்  –
பிராமணனுக்கு ஜன்மம் இரண்டு இறே
பஷிக்கும் உண்டு இறே த்விஜத்வம் –
பஷியினுடைய பூர்வ அவஸ்தை போலே இவன் உடைய யோனி ஜன்மம்
(அண்டஜம் முட்டைக்குள்ளே போல் )
இரண்டாம் ஜன்மத்திலே இறே நீட்டி முடக்க வல்லது
கம்ச வத அநந்தரமாக இறே  த்விஜத்வம்
பின்பு செய்ததும் யாதவர்களோடு சஜாத்யம் உண்டாகைக்காக இறே
உக்ர சேனனை அபிஷேகம் பண்ணி
சர்வ தர்மாரூடனாக்கி
ராஜ்யமும் அடி பட்ட பின்
அவந்தி புரத்திலே ( உஜ்ஜைன் ) சந்தீபினி பக்கலிலே போய்
உபநய நாதி சம்ஸ்க்ருதர் ஆவோம் என்று அவனைச் சென்று கிட்டி
முன்பே கர்க்கன் வந்து ஜாத கர்ம நாம கரணாதிகளை அடையப் பண்ணினான்
உத்தர தந்த்ரம் அனுஷ்டிப்பிக்க வேணும் -என்ன
மேல் உள்ளது எல்லாம் செய்தான் இறே –

உனக்கு –
யோவை வேதாம்ச ப்ரஹினொதி  தஸ்மை என்கிறபடியே
பிரம்மாவை சிருஷ்டித்து
அவனுக்கு வேதத்தைக் கொடுத்த உனக்கு அன்றோ தந்தது –

அனேன ஜீவே நாத்ம நானு ப்ரவஸ்ய -சாந்தோக்யம் -என்கிற வாக்யத்தில் படியே
ஜீவ த்வாரா அசித்திலே   அனு பிரவேசித்து
நாம ரூப விபாகம் பண்ணினான் தானே இறே
நாம ரூபஞ்ச பூதா நாம் -இத்யாதி

த்வாபராந்தத்திலே இறே இது
இவர் இப்போது பெரிய பெருமாளைப் பார்த்து சொல்லுகையாலே
அவரும் இவரும் ஒருவர் என்றபடி –
(கற்றினம் மேய்த்த எந்தை -கொண்டல் வண்ணன் கோவலனாய் அன்றோ இவன் )

முன் தந்த அந்தணன் –
அத்யயனம் பண்ணுகைக்கு அதிகாரி-

ஒருவன் –
அத்விதீயன்
வித்யா ஸ்தலங்களுக்கு அடைய தானே யாம்படி சமைந்தவன்
அத்யயனத்திலே அந்தர்பூதம்  அல்லாத வித்யா ஸ்தலங்களும்
சீஷாயாம் -( ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் )-இத்யாதி
தநுர் வேதமும் ஆயுர் வேதமும் அகப்பட அங்கே இறே அதிகரித்தது
(64-ஆய கலைகள் –64 -நாள்களில் கற்றானே )

முற்பட த்வ்யத்தைக் கேட்டு
இதிஹாச புராணங்களையும் அதிகரித்து
பர பஷ பிரதி ஷேபத்துக்கு உடலாக  நியாய மீமாம்சைகளும் அதிகரித்து
போது போக்கும் அருளிச் செயலிலே யாம்படி –
நம் பிள்ளையைப் போலே அதிகரிப்பிக்க வல்லானை இறே -ஒருத்தன் -என்பது —
(கார்த்திகையில் கார்த்திகை -ஆவணி ரோகிணி -பெரியவாச்சான் பிள்ளை -இவர் அதனாலே ஒருவன் )

இப்படி அப்யசித்த அளவிலே
க்ரஹண  வேளையிலே ஜ்ஞானத்தையும்
அதிகரிக்கிற சக்தி யோகத்தையும் கண்டு
தஷிணையாக இவனை எத்தை வேண்டிக் கொள்வோம் -என்று
என் புத்திரன் கடலிலே புக்கான்
அவன் எங்கே போனான் என்று அறிகிறிலேன்
ஆராய்ந்து அவனை உரு அழியாதபடி கொடு வந்து தர வேணும் -என்ன

கையில் வில்லை வாங்கி கடல் கரையிலே சென்ற போதே அஞ்சி
வருணன் முகம் காட்ட
ஆச்சார்ய புத்திரன் இங்கே புக்கான் காட்டித் தா -என்ன
அவனும் போக்கற்ற வாறே
பஞ்ச ஜனன் பஜித்தான் -என்ன
முன நாள் உண்ட சோற்றை வாங்க ஒண்ணாது இறே
கடலிலே நீர் நீங்கிக் கொடுக்க
சங்க ரூபியான இவனை யகற்றின அளவிலே
ஸ்ரீ பாஞ்ச ஜன்ய ஆழ்வான் வந்து  ஆவேசிக்க
(கடலில் பிறந்து பாஞ்ச ஜன்யன் உடலிலே வளர்ந்து –கை ஏறினவன் –இத்யாதி )
திருப் பவளத்தே வைத்து முழக்கிக் கொடு எம புரத்தே எழுந்து அருள
அவனும் அர்க்யாதிகளைக் கொடுத்து
எழுந்து அருளிற்று என் என்ன
ஆச்சார்ய புத்திரன் இங்கே வந்தான் அவனைக் காட்டித் தா -என்ன
அவனும் நரக விசேஷத்தில் நின்றும் அவனைக் கொடு வந்து காட்ட
என் புத்திரன் என்று அவன் பிரத்யபிஞ்ஞை பண்ணும்படி
அவனைக் கொடு வந்து காட்டிக் கொடுத்தான் இறே –

காதல் என் மகன்-
காதல் தான் வடிவு கொண்டது என்னும் படியான புத்திரன்

புகலிடம் காணேன் –
நரகத்திலேயோ -கர்ப்பஸ்தனோ-எங்கே புக்கான் -என்று அறிகிறிலேன் –

கண்டு நீ தருவாய் -எனக்கு என்று –
சர்வ சக்தியான நீ ஆராய்ந்து தர வேணும்
வித்யா க்ரஹண தாரணத்திலே கண்டான் இறே சக்தி மத்தையை-

கோதில் வாய்மையினான் –
காதல் என் மகன் என்ற இவனை இறே-கோதில் வாய்மையினான் -என்கிறது
அதுக்கு கருத்து என் என்னில் -குரு வசன மலங்க நீயம்
என்கிற கிருஷ்ண அபிப்ராயத்தாலே –
இருவரும் பிரிந்து இருக்கிற அளவில் -த்ருஷ்டா சீதா -என்கிற திருவடி அளவில்
சொல்லும் வார்த்தையை இறே இவன் அளவில் சொல்லுகிறது –
(பிரயோஜனந்த பரராயும் அத்தையே கண்ணன் இடம் கேட்டதால் கோதில் வாய்மையினான் என்றுமாம் )

உனை வேண்டிய –
சிஷ்யன் என்று இறே அவனுக்கு பிராப்தி-பிரதிபத்தி –
மோஷ ப்ரதன் என்று அன்று இறே
அபிஜன வித்யா  வ்ருத்தங்களால் வருமது அன்றே மோஷ ருசி –
நைர்தோஷம் அடியாக பகவத் பிரசாதத்தாலே வர வேணுமே
அது உண்டாகில்  இறே இத்தை அபேஷிபபது –
(விஷயாந்தர ப்ராவண்யம் ஆகிற தோஷம் உண்டே இவனுக்கு )

குறை முடித்து-
என் பிள்ளையைக் கொடு வந்து காட்டித் தர  வேணும் -என்ன
அப்படியே செய்கிறோம் -என்ற போதே
அற்றது இறே அவன் குறை –

அவன் சிறுவனைக் கொடுத்தாய் –
மோந்து பார்த்தாலும் குடல் துடக்கு தோன்றும்படி இறே கொடுத்தது
மாதவத்தோன்-புத்திரன் போய் மரி கடல் வாய்-இத்யாதி -பெரியாழ்வார் –

உருவுருவே கொடுத்தான் –
இப்போது கொடுக்கிற வடிவு தான் பழைய வடிவு தான் என்னும்படி யாய்த்துக் கொடுத்தது

தக்கணையா –
சிஷ்யத்வ சித்திக்காக

உருவுருவே –
அசந்நேவ-என்னும்படியான-வஸ்துவுக்கு சேஷத்வ ஞானத்தை பிறப்பித்து
உருவுண்டாக்கி
சேஷத்வ அனுரூபமான வ்ருத்தி விசேஷத்தை கொடுக்கை   –
(இதுவே ஸ்வா ப தேசம் இந்தப் பாசுரத்துக்கு )

ஆதலால் வந்து உன் அடி இணை அடைந்தேன் –
சரீர அவஸா நத்திலே பேறு தப்பாது இறே
நீர் சர்வ சக்தியான பின்பு அவ்வளவு தான் ஆறி இருக்கிறது என்
என்னும் த்வரையாலே சரணம் புகுந்தேன்  –

அணி பொழில் இத்யாதி –
கடல் கொண்ட வஸ்துவை மீட்டு
உருவுருவே கொடுத்தால் போலே
சம்சார ஆர்ணவம் கொண்ட என்னை மீட்டு
வ்ருத்தி பர்யந்தம் ஆக்கி
தருகைக்கு அன்றோ தேவரீர்
இங்கே வந்து சாய்ந்து அருளிற்று –

——————————————–

கங்கா ஸாம்யம் புரா ப்ரோக்தம் – காவேரிக்கு முன் தேவ தேவ ப்ரஸாதத்தால் – –
ஸ்ரீ அரங்கன் வந்த பின்பு திருவடிகளை வருடிக் கொண்டே இருந்து ஆதிக்யம் அவாப்த்தி
தெண்ணீர் பொன்னி அடி வருட -பள்ளி கொண்டு அருளி இருக்கும்
நுரை காட்டி சிரிக்கும் படி -ஹஸந்தி -பரிஹாஸ சிரிப்பு
லோக முத்ரா -தலைக்காவேரி -பொன்னி -சூழ் அரங்கம் மேய -ஹேமா பகா –
காவேரி மஹாத்ம்யம்
ஆதி ரெங்கம் -மத்யம ரெங்கம் அப்பால ரெங்கம் -பரிமள ரெங்கம்
பெரிய பிராட்டியார் தாயார் காவேரி -பாற் கடல் தகப்பன் -தெண்ணீர் பொன்னி
வரும் பொழுதும் போகும் பொழுதும் தெளிவிலா கலங்கல் -காவேரி –
அம்மா மண்டபம் -தவராசன் படித்துறை –
பாலம் மீது கடந்து போகாமல் இறங்கியே தாண்டுவார்
வட திருக் காவேரி தென் திருக்காவேரி -நான்கு கரைகளும் நான்கு புருஷார்த்தங்கள்
தாமரை கர்ணிகை போல் சந்த்ர புஷ்கரணி —
திவ்ய தேச பெருமாள் இங்கேயே சயனம்
ஸ்ரீ மத் ரெங்கம் ஜெயது -அடியார்கள் வாழ –மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
மதிள் திரு அரங்கம் என்னாது காலம் கழிக்கிறீர்களே
கோயில் -காட்டினான் திரு அரங்கம் -நல்லதோர் அருள் -நாட்டினான் தெய்வம் எங்கும் இது அருள்
போக மண்டபம்
பெரிய அனைத்தும்
ஸ்ரீரெங்கே ஸூகமாக வாழ கத்யத்தில் ஆணை
வேர் பற்று புவி ரெங்க தனம் –
பொன் அரங்கம் என்றால் மயலே பெருகும் ராமானுஜன்
திரு அரங்கம் நம்மூர்
அவன்தூர் அரங்கம் என்னாது –
ரெங்க யாத்ரா தினே தினே -ராஜாநாம் குலசேகரம்
சேஷ பீடம் முன்னே
பெண்ணாளன் பேணுமூர் பேரும் அரங்கமே
ந்ருத்த ஸ்தானம்
உல்லாச –மங்கள தீப ரேகம்
ஜகந்நாதன் -நாராயணன் -முன்பு
பிராணாவாகார விமானம் –
நான்கு பெரிய ப்ரஹ்ம உத்சவங்கள்
சப்த பிரகார மத்யே -காவேரி மத்திய தேசே -தர்ம வர்மா திருச் சுற்று முதலில்
1323–1371- 48 வருஷம் வெளியே சென்று கடாக்ஷித்து
செஞ்சி கோட்டை விருப்பண்ண உடையார் –

வைதிக புத்ர இதிகாசத்தை
முன்னிட்டுக் கொண்டு சரணம் புகுகிறார் –
இப் பாட்டிலும் சொல்லுகிறது -கீழ்ச் சொன்ன சர்வ சக்தி யோகத்தை-
ஆனால் வாசி என் என்னில்
தேச கால விப்ரகர்ஷம் கிடக்கச் செய்தே
கார்யம் செய்த சக்தி மத்தையைச் சொல்லுகிறது –

வேத வாய் மொழி யந்தணன் ஒருவன் எந்தை நின் சரண் என்னுடை மனைவி
காதல் மக்களைப் பயத்தலும் காணாள் கடியதோர் தெய்வம் கொண்டு ஒளிக்கும் என்று அழைப்ப
ஏதலார் முன்னே இன்னருள் அவர்க்குச் செய்து உன் மக்கள் மற்று இவர் என்று கொடுத்தாய்
ஆதலால் வந்து உன் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே –5-8-8-

வேத வாய் மொழி அந்தணன் ஒருவன் –
அந்தணன் ஒருவன் என்னாதே
கீழ்ச் சொன்ன விசேஷணத்துக்கு தாத்பர்யம் என் என்னில்
ஈஸ்வரனுக்கு தீரக் கழிய இவன் கார்யம் செய்ய வேண்டும்படியான
இவன் வஸ்துதை சொல்லுகிறது –
(ஸ்வரூபம் உள்ளபடி அறிகை ஆகிற சத்தை )
வேதத்தை விஷயீ கரித்த வாக் இந்த்ரிய வியாபாரத்தை உடையவன்
வேத பாராயண பரன்
இத்தால் இஸ் ஸ்வரூப-( ஆத்ம ஸ்வரூபம் ) ஜ்ஞானம் உடையவன் -என்கை
வேத தாத்பர்யத்தை நிர்ணயித்து
அதுக்கு வாசகமான பாராயணத்தை பண்ணுமவன் –
(பிரணவ யுக்த ஞானம் -அநந்யார்ஹ சேஷ பூதன் உணர்ந்து )

அந்தணன் ஒருவன் –
அறவனை ஆழிப் படை அந்தணனை-திருவாய் -1-7-1- -என்னுமா போலே சுத்தி யோகத்தைச் சொல்லுகிறது
ஆத்மாவுக்கு சுத்தி யாவது
நஹி ஜ்ஞாநேன சத்ருசம் பவித்ரமிஹ வித்யதே -ஸ்ரீ கீதை  -என்னுமா போலே
பிரணவோக்த ஜ்ஞான சுத்தி இறே
தபஸ் தீர்த்த யாத்ரா சேவனம் அன்றே
(திருமந்த்ரார்த்தம் அடுத்து ஒன்பதாம் பாசுரம்
அதுக்கு பொசிந்து காட்டும் பிரணவ அர்த்தம் இதில் )

கீழ் அந்தணன் -என்றது -சாந்தசன் என்றபடி
இங்கு வைதிகன் என்றபடி
சாந்தசராவார் -பிரயோஜநார்த்தமாக ஓதுவது ஒத்துச் சொல்லுவது ஆமவர்கள்
(ஏழாம் பாட்டில் தாமச குணம் உடைய அந்தணன் -ப்ரயோஜனாந்தர பரர் )
வைதிகராவார் -வைதிகக என்றபடி
வேத தாத்பர்யம் அறியுமவர்கள்
சுத்திக்கு அத்விதீயன்
ஸ்வரூப ஜ்ஞானத்தை விசதீ கரிக்கிறது -இரண்டு பதத்தாலும் –

எந்தை
எனக்கு உத்பாதகன்
மாதா பிதாக்களைப் போலே தோற்றி மாய்ந்து போகை அன்றிக்கே
அவ்யய பிதா -என்கிறபடியே அழியாத பிதா -என்றபடி –
அடியிலே இத்தை உண்டாக்கி
ஸ்வரூப ஜ்ஞானத்தை பிறப்பித்த உபகாரகன் என்று ஆய்த்து
அனுசந்திப்பது இவன் –

நின் சரண் –
நீயே எனக்கு உபாயமாக வேணும் –
அநந்ய சாதனனாய்
அநந்ய பிரயோஜனனாய்
இருப்பான் ஒருவன் –
(இரண்டு தூய்மை திருப்பாவையில் உண்டே )

நாமே ஆஸ்ரயணீயர் என்றும்
நாமே உபாயம் என்றும்
அத்யவசித்தாய் யாகில்
உனக்கு இனி குறை என் என்ன –
எனக்கு ஒரு குறை இல்லை

என்னுடைய மனைவி –
என்னுடைய கிருஹிணி
என்னோடு சஹ தர்ம சாரிணி யானவள்
பிதரம் மாதரம் தாரான் -என்று த்யாஜ்யை யானவள் அல்லள்
அவள் கண்ணில் கண்ண நீரைக் கண்டால் ஆன்ரு சம்சயத்தாலே
கார்யம் செய்ய வேண்டும்படி இருக்கிறவள் –
(மம ஸூ தா போலே-என்னுடைய மனைவி )

காதல் மக்களை –
பிள்ளைகள் பக்கலில்  ஸ்நிக்த்தையாய் போரும்

பயத்தாலும் காணாள் –
செய்வது எல்லாம் செய்து
பத்து மாசம் வயிற்றிலே தரித்துப் பெற்ற அளவிலே
காணப் பெறுகிறிலள்
(மாயன் மணிவண்ணன் தாள் பணியும் மக்களைப் பெற்றால் ஆசைப்படலாமே )
அதுக்கடி என் என்னில் –

கடியதோர் தெய்வம் கொண்டு ஒளிக்கும் –
இப்படி இருப்பதொரு தேவதையை
இதுக்கு முன்பு நான் கண்டு அறியேன்
யமனும் உடல் கிடக்க இறே கொண்டு போவது
(இங்கு சரீரத்தோடு -பஸ்யதோ ஹரத்வம் )
பெற்று முகத்திலே விழிப்பதற்கு முன்னே
பார்த்துக் கொண்டு நின்று கொண்டு போவாரைப் போலே
வடிவோடே கொண்டு போய் ஒளியா நின்றது
கிருஷ்ணன் உடைய வடிவு அழகைக் காண வேணும் என்று நாச்சிமார் செய்தது இறே –
(சூட்டு நன் மாலைகள் -இத்யாதிப்படி –திரு அவதரிக்க -காண ஆசைப்பட்ட பிராட்டிமார் கார்யம் அன்றோ -)

அழைப்ப –
இப்படி விண்ணப்பம் செய்ய
அதாவது
கிருஷ்ணன் ஒரு யாக விசேஷத்திலே தீஷித்து உறுப்புத் தோலும்
போர்த்துக் கொடு நிற்கிற நிலையிலே இவன் சென்று
என் பார்யை யானவள் மூன்று பிரஜைகளைப் பெற்றாள்
பெற்ற போதே முகத்திலும் விழியாத படி தைவம் கொண்டு போகா நின்றது
அவள் இப்போது ஆசன்ன ப்ரசவை
இப் பிரஜையை நோக்கித் தர வேணும் -என்ன
அப்படியே செய்கிறோம் -என்று எழுந்து அருளப் புக்க அளவிலே
தீஷிதரான தேவரீர் எழுந்து அருள வேணுமோ
நான் போய் பரிஹரித்துப் போகிறேன் -என்று அர்ஜுனன் சொல்ல
அப்படியே செய்யலாகாதோ -என்று ஸ்மிதம் பண்ணி அருளிச் செய்ய
அவனும் கர்ப்ப க்ருஹத்தைச் சுற்றும் சரக் கூட்டமாக கட்ட
அதுக்கு மேலே
பிரஜையினுடைய அழுகைக்  குரல் கேட்டவாறே   -பிராமணன்
கிருஷ்ணன் வந்து நோக்குப் புக நீ ஒரு ஷத்ரிய அதமன்
அடை கொடு பாழ் போக்கினாய் -என்று
அர்ஜுனன் முன் மடியைக் கொத்துப் பிடித்து
கிருஷ்ணன் பாடே இழுத்துக் கொண்டு வர
பின்னையும்
வைதிகனையும் அர்ஜுனனையும் தேரிலே ஏற்றிக் கொடு போய்
(திருவாய் -3-10-5-ஒரு பொழுதில் எல்லா உலகும் கழிய –பார்த்தனும் வைதிகனும் உடன் ஏறத் திண் தேர்
கடவி சுடர் ஒளியாய் உடலோடும் கொண்டு கொடுத்தவனை பற்றி ஒன்றும் துயர் இலனே )
காரணத் தளவும் நிறுத்தி பரம பதத்திலே சென்று
பிள்ளைகளை நால்வரையும் மீட்டு
பூசின சாந்தும் மஞ்சளும் காதில் தோடுமான வடிவோடே கொடு வந்து காட்டிக் கொடுத்தான்
(ரிஷி புத்ரன் ஆகையால் பிறந்த போதே தோடு இருந்ததே -ஈடு )
கால க்ருத பரிணாமம் இல்லாத தேசம் ஆகையாலே
அவ் வடிவோடே கொடு வந்து காட்டிக் கொடுத்தான் ஆய்த்து  –
(காமம் தொலைத்து -ருசி உடன் – போக வில்லையே -ஆகவே மீளலாமே
பிராட்டி உடைய ஸ்வா தந்தர்யம் அடியாக பிள்ளைகள் போனார்கள் -ஆகவே மீளலாம் -)

ஏதலார் முன்னே –
பிரஜைகள்  தான் போய் நெடும் காலம் உண்டாம்
இன்னவிடத்திலே புக்கார்கள் என்று தெரியாதாம்
இப்படி இருக்க கிருஷ்ணனைக்  கொண்டு மீட்டுக் கொள்ளப் புகுகிறானாம்
என்று சொல்லுமவர்கள் முன்னே  கிடீர் மீட்டுக் கொடுத்தது

ஏதலர் –
ஆழ்வார் வார்த்தை இருக்கிற படி -ப்ரத்யா சன்ன சத்ருக்கள்
அதாவது
சாஸ்திர பலம் பிரயோக்தரி அன்றோ
தன் கையில் ஒரு முதல் இல்லையாம்
வேறு ஒருவரால் பெற இருக்கிறானாம்
என்று இறே தங்களுக்கு என்ன முதல் உடையார்கள் சொல்லுவது –
(உபாசன -உபாயாந்தர பரர்கள் -ஏதலர் )

இன்னருள் இத்யாதி –
தன் பேறாயாய்த்து இறே செய்தது
இரங்கி என்றபடி –

உன் மக்கள் மற்று இவர் என்று கொடுத்தாய் –
உன் மக்கள் இவர்களே -என்று தேறும்படியாக
அவயவப்படியே கொடு வந்து கொடுத்தாய் –

ஆதலால் வந்து உன் அடி இணை அடைந்தேன் –
இப்படிப் பட்ட உன் அதிசய சக்தியை அனுசந்தித்து சரணம் புகுந்தேன்
அங்கு உள்ளாரை இங்கே மீட்டுக் கொடு வந்து கொடுத்தமை உண்டு
உமக்கு அங்கன் இருப்பது ஓன்று உண்டோ -என்ன
அதிலும் அரியது ஓன்று அன்றோ
இங்கு உள்ளாரை அங்கு ஏறக் கொடு போகை
அது செய்யலாம் -தன் நினைவாலே செய்யுமது ஆகையாலே
இத் தலையை இசைவித்து அத் தலை ஏறக் கொடு போகை அன்றோ அரிது    –

அணி பொழில் இத்யாதி –
இங்கு உள்ளாரை அக் கரைப் படுத்துக்கைகாக அன்றோ
இங்கு வந்து சாய்ந்து அருளிற்று
தேகாத்ம அபிமானியாய்
விஷய ப்ரவணனாய்
அநந்த கிலேச பாஜனம்–ஜிதந்த -என்கிற சம்சாரத்திலே அழுந்துகிற என்னை
ஸ்வரூப ஜ்ஞானத்தைப் பிறப்பித்து
உன் பக்கலிலே ப்ராவண்யத்தை  உண்டாக்கி
அந்தமில் பேரின்பத் தடியரோடே வைக்காக அன்றோ
தேவரீர் இங்கே வந்து கண் வளர்ந்து அருளுகிறது –

————————————————————————

கீழ் இரண்டு பாட்டாலே அவனுடைய
சக்தி யோகத்தைச் சொல்லி
உபாய  பூர்த்தியைச் சொல்லிற்றாய் நின்றது –
இப் பாட்டுக்கு உதயம் என் என்னில்
சம்சாரத்தின் உடைய தண்மையையும்
நம்முடைய அதிசய சக்தித்வத்தையும் அனுசந்தித்து 
த்வரிக்கை யாகிற் இது ஔபாதிகம் காணும்
நாம் செய்தபடி கண்டிருக்குமது காணும் உமக்கு ஸ்வரூபம் -என்ன
உன்னை அல்லது அறியாத தொண்டைமான் சக்கரவர்த்திக்கு
ஸ்வரூப ஜ்ஞானத்தை உண்டாக்கினால் போலே
எனக்கும் ஸ்வரூப ஜ்ஞானத்தை உண்டாக்க வேணும்
என்று சரணம் புகுகிறார் –
(பாகவத பர்யந்தமான சேஷத்வமே ஸ்வரூப ஞானம்
கொடு என்று மேல் வீட்டில் பிரார்த்தது
கீழ வீட்டில் -இது அறிந்தால் அவனைப் பெற த்வரிக்க வேண்டாமே -)

கீழே
நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் -என்று
திரு மந்த்ரத்தை சார்த்தமாக லபித்து
உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -என்று
ததீய சேஷத்வ பர்யந்தமாக அனுசந்தித்தார் –
அதின் முன்பு ஸ்வரூப ஜ்ஞானம் பிறந்தது இல்லையோ -என்னில்
தம்தாமுக்கு பிறக்கும் ஜ்ஞானம் விச்வச நீயம் அன்று  என்று காணும் இருக்க அடுப்பது
ஸ்ரீ நாரத பகவானை இட்டு ஸ்ரீ புண்டரீகனுக்கு-( நாரத கல்ப ஸ்லோகங்கள் )
கிந்தத்ர-என்றும்
நராஜ்ஜா தாநி–(பாரதம் அனுசாசன பர்வம் )என்றும்
திரு மந்த்ரத்தை சார்த்தமாக உபதேசித்து
பிராப்தி வேளையில் உனக்கு வேண்டுவது என் என்று ஈஸ்வரன் கேட்க
க்வாஹ மத்யந்த துர்ப்புத்தி எது ஹிதம் ஆஜ்ஜை மாதவ -( ஜிதந்தே )-என்றான் இறே
சர்வ அபிமத சாதனம் இறே சரணா கதி யாகிறது –

துளங்கு நீண் முடி யரசர் தம் குரிசில் தொண்டை மன்னவன் திண் திறல் ஒருவற்கு
உளம் கொள் அன்பினோடு இன்னருள் சுரந்து அங்கோடு நாழிகை ஏழு உடன் இருப்ப
வளம் கொள் மந்திரம் மற்று அவர்க்கு அருளிச் செய்தவாறு அடியேன் அறிந்து உலகம்
அளந்த பொன்னடியே அடைந்து உய்ந்தேன் அணி பொழில் திருவரங்கத் தம்மானே –5-8-9-

துளங்கு –
மழுங்குதல் இன்றிக்கே
பளபளத்து இருக்கை
இத்தால் -தேஜஸ்சை சொல்லுகிறது அன்று –
அந்யோந்யம் விரோதம்   வாராத படி
நாட்டை யாண்ட தேஜஸ்சை சொல்லுகிறது

நீண் முடி –
ஒக்கம் அல்ல
ராஜ்யத்தில் பரப்பை இட்டுச் சொல்லுகிறது

யரசர் தம் குரிசில் —
ராஜா
மனுஷ்யர்களுக்கு ராஜா என்னுமா போலே
ராஜாக்களுக்கு ராஜா
ராஜாதி ராஜஸ் சர்வேஷாம்
நாட்டில் பரப்பாலே -இத் தேசத்துக்கு அபிஷிக்தன் -என்று தெரியாது இறே
அதுக்காக –

தொண்டை மன்னவன் –
தொண்டை மண்டலத்திலே அபிஷேகம் பண்ணி இருந்த காலத்து
நாடு எங்கும் ஒக்க தனதாக்கிக் கொண்டது –

அதுக்கடி சொல்லுகிறது
திண் திறல் ஒருவற்கு-
வீர போகய வஸூந்தரா -என்னுமா போலே
தன் மிடுக்காலே எங்கும் ஒக்க எறிந்து கொண்டு
மிடுக்குக்கு அத்விதீயனாய் இருக்கிறவனுக்கு
மருவலர் தம் உடல் துணிய வாள் வீசும் பரகாலன் -என்று
இவர் மதித்த மிடுக்கு இறே

ஸ்வரூப ஜ்ஞானம் பிறக்க வேணும் -என்று
சரணம் புகுகிறதுக்கு நிதர்சனமாக சொல்லுகிறது ஆகில் –
துர்மானத்துக்கு ஹேதுக்கள் ஆனவற்றை  சொல்லுகிறது என் என்னில்
ஸ்வரூப ஜ்ஞானம் உண்டானால் இவ் விசேஷணங்கள்
அனுகூல ரஷணத்துக்கும்
பிரதிகூல நிரசனத்துக்கும்
ஏகாந்தமாய் இருக்கையாலே ஸ்வரூபாவயாம் இறே என்று –

உளம் கொள் அன்பினோடு –
ஹித உபதேசத்துக்காக பண்ணின அன்பாகையாலே
திரு உள்ளத்தைப் பற்றி இருக்கும் இறே

இன் னருள் –
தன் பேறான அருள்
உதாரா -என்று பிரயோஜனாந்தர பரர் அளவிலும்  இருக்கச் செய்தே
ஜ்ஞாநீத் வாத்மைவ -என்கிற விசேஷணம் உண்டு இறே

சுரந்து –
முலைக் கடுப்பு தீர
தரையிலே பீச்சுவாரோ பாதி

அங்கோடு நாழிகை ஏழு
ராஜ்ய தூரோடு கூட
வ்யர்த்தமே கழிக்கிற காலத்தில்

ஏழு  உடன் இருப்ப  –
ஏழு அர்த்தத்தைப் பற்ற ஏழு காலம் என்கிறது இறே –

1-தேகாத்ம அபிமான நிவ்ருத்தியும்
2-ஸ்வாதந்த்ர்ய நிவ்ருத்தியும்
3-அந்ய சேஷத்வ நிவ்ருத்தியும்
4-ஸ்வ யத்ன நிவ்ருத்தியும்
5-அபந்துஷூ பந்துத்வ பிரதிபத்தி நிவ்ருத்தியும்
6-விஷய நிவ்ருத்தியும் –
7-நமஸ் ஆர்த்தமான ததீய சேஷத்வம்

(அஷ்ட ஸ்லோஹி
ஏழும் சொல்லுமே
இங்கு ஆறு
தேகமே ஆத்மா -மகாரம் -ஞானம் -உள்ளது -அறிந்து தேக ஆத்ம அபிமான நிவ்ருத்தி
ஸ்வா தந்தர்யம் நிவ்ருத்தி -பிரதமம் அகாரம் ஆய –
இதர சேஷத்வம்-நிவ்ருத்தி உகாரம்
ஸ்வ யத்ன நிவ்ருத்தி -நம -எனக்கு நான் அல்லேன்
பாந்தவ ஆபாசம் -நிவ்ருத்தி -நாராயண -அவனே சகல விந்து
ஆபத்துக்கள் இடம் பந்துத்வ பிரதிபத்தி நிவ்ருத்தி
விஷய சபல நிவ்ருத்தி -ஆய -பிரார்த்தனாயாம் சதுர்த்தி
ஆறும்
நம -ஆழ்ந்த பாகவத சேஷத்வம் ஏழாவது – )

வளம் கொள் மந்திரம்-
அழகாதல் –
சஞ்சாரித்வமாதல் –

வளம் ஆகிறது
சகல பல பிரதனான ஈஸ்வரனைப் போலே எல்லார் பக்கலிலும் சஞ்சரிக்கை
கர்மாதிகளுக்கு உபகாரகமாய்
பிரபன்னனுக்கு ஸ்வரூப ஜ்ஞானத்தை உண்டாக்கி
அக்கரைப் படுத்தும் இறே

மற்று அவர்க்கு அருளிச் செய்தவாறு –
அவனுக்கு திரு மந்த்ரத்தை உபதேசித்து
ததீய சேஷத்வத்தை உண்டாக்கின படி
குறும்பறுத்த நம்பி யோடு சேர்த்து விட்ட படியைச் சொல்லுகிறது
(பணிப்பூவும் -முடி மன்னவன் -அனுவர்த்தித்தானே -நாயனார் )

பதி வ்ரதையோடு உண்டான ஏகாந்தத்தில் அனுபவத்தை
திரளிலே வெளியிடுவாரைப் போலே
தானும் நானும் அறிய அனுபவித்த இத்தை
இங்கன் வெளியிடுவதே
திருவேங்கடமுடையான் அலவலை யாகாதே என்கிறார் இறே –
(அலவலை–பஹு ஜல்பம் ஓட்டை வாய் உளறுவது )

அடியேன் அறிந்து –
இவர் உடைய நான் இருக்கிற படி
(நாம் அடியேன் சொன்னாலும் நான் அர்த்தம்
ஆழ்வாராதிகளுக்கு மாற்றியே உண்டே )

உலகம் அளந்த –
விமுகர் தலையிலும் அகப்பட இருந்த திருவடிகள்

பொன்னடியே –
சர்வைஸ் ஸ்ப்ருஹணீயம்
அதாகிறது
ஸ்வர்ண ஸ்வ பாவத்தாலே பொன் கிண்டியில்
தண்ணீர் வசிஷ்ட சண்டாளர் விபாகம் அற விநியோகம்  கொள்ளலாம் இறே –

அடைந்து உய்ந்தேன் –
ஸ்வரூப ஜ்ஞானத்தை பிறப்பிக்க வேணும் -என்று
சரணம் புக்கு உஜ்ஜீவித்தேன்

அணி பொழில் திரு வரங்கத் தம்மானே –
திரு வேங்கடமுடையான் அளவிலே பிறந்த அர்த்தத்தைச் சொல்லி
பெரிய பெருமாள் திருவடிகளில் சரணம் புகுகிறார்

திருமலையில் நிலையிலே ஒரு உத்யோகம் உண்டு என்று தோற்றும் இறே
பின்பு போய்ந்து சாய்ந்த இடம் அது இறே

மாழை மான் மட நோக்கி -என்று தொடங்கி
உலகம் அளந்த பொன்னடியே அடைந்து உய்ந்தேன் -என்று
தலைக் கட்டுகையாலே
ஒன்பது பாட்டிலும் ஏகார்த்தத்தைப் பற்றவே
சரணாகதியாய் இருக்கிறது -( த்வயார்த்தப்படியே சரணாகதி )

—————————————————

இவருடைய பாவ வ்ருத்தி இல்லையாகிலும்
இவருடைய பாசுரத்தைச் சொல்லவே
ப்ராப்தி பிரதிகந்தகங்கள் போம்
என்கிறது –

மாட மாளிகை சூழ் திரு மங்கை மன்னன் ஒன்னலர் தங்களை வெல்லும்
ஆடல் மா வலவன் கலிகன்றி அணி பொழில் சூழ் திரு வரங்கத் தம்மானை
நீடு தொல் புகழ் ஆழி வல்லானை  எந்தையை நெடுமாலை நினைந்த
பாடல் பத்திவை பாடுமின் தொண்டீர் பாட நும்மிடைப் பாவம் நில்லாதே —-5-8-10

மாட மாளிகை சூழ் திரு மங்கை மன்னன் –
நமக்கு இந்த நன்மை எல்லாம்
இவ் ஊரில் பிறப்பாலே வந்தது என்கிறார்
இத்தால் பிறந்தகத்தில் ஏற்றம் சொன்னபடி –

ஆப்தன் சொன்னான் என்ன வேணும் இறே லோக பரிக்ரஹத்துக்கு
வால்மீகிர் பகவான் ருஷி
சஹோவாச வியாச பராசர்யா
குருகூர்ச் சடகோபன்
என்னுமா போலே  –

ஒன்னலர் தங்களை வெல்லும் ஆடல் மா வலவன்-
எதிரிகள் திருமங்கை ஆழ்வார் அழகு செண்டு ஏறப்  புறப்பட்ட வாறே
முழுக் காயாக தன்னிலே அவியும் இத்தனை
இவருக்கு சத்ருக்கள் ஆகிறார்
பிரமாண  தூஷகரான பாஹ்யரும்
பிரமேய தூஷகரான குத்ருஷ்டிகளும் இறே

இவர்களை வெல்லுகை யாவது
ஜித பாஹ்ய -இத்யாதி படியே
பாஹ்யர் உடைய பிரதிமையை இட்டு  திரு மதிள் உள்ளிட்டவை செய்தும் –
ஆகமிகர் பர தேவதையாக சொல்லுகிற ருத்ரன் உடைய பரத்வத்தை அறுத்து
அது தன்னையும் எடுத்து பொகட்டார் இறே –

கலி கன்றி –
பாப பிரதிபடர்
பகவத் பிரபாவங்களை மதித்துச் சொன்ன பாசுரங்கள் இறே –

கவி பாட்டுண்ட விஷயம் இருக்கிற படி சொல்லுகிறார் மேல்
அணி பொழில் சூழ் திரு வரங்கத் தம்மானை -என்று
மாட மாளிகை சூழ் திரு மங்கை மன்னன் -என்றவாறே
அணி பொழில் சூழ் திருவரங்கம்
எங்கே புக்கு ஒளித்தது -என்று அருளிச் செய்தார் பட்டர் –

நீடு தொல் புகழ் ஆழி வல்லானை –
நீடு –புகழ்
அனுகூல ரஷணத்தில் வந்தால் திரு உள்ளத்தையும் முன்னோடி  நடத்துகை
அற முயலாளி -என்னக் கடவது இறே

தொல் புகழ்
இது தான் ஆகந்துகம் அல்ல

1-ஆழி வல்லானை
திரு ஆழியை ஸ்வ வசமாக்கிக் கார்யம் கொள்ள வல்லவன்
என்னும் இது போலே காணும் ஏற்றம் –

2-எந்தையை –
பரிகரம் உண்டானாலும் பிறர் கார்யம் செய்ய வேண்டுவது இல்லை இறே
ப்ராப்தி இல்லை யாகில் –
கார்யம் செய்கைக்கு ஈடான ப்ராப்தி சொல்லுகிறது

3-நெடுமாலை
ப்ராப்தன் ஆனாலும் பிரயோஜனம் இல்லை இறே வ்யாமுக்தன் அன்றாகில்
அதுக்காக நெடுமாலை -என்கிறது

இத்தால் ஆஸ்ரயணத்துக்கு ஏகாந்தமான-மூன்று – ஸ்வ பாவங்கள் சொல்லுகிறது –

நினைந்த பாடல் –
தந் நிஷ்டர் ஆனவர் பாசுரம்
அனுபவம் வழிந்து புறப்பட்ட பாசுரமான சொற்கள் –

பத்திவை –
முகம் அறிவார் முத்தைச் சேரக் கோத்து
கையிலே இட்டுக் காணுமா போலே –
(அர்த்த புஷ்ட்டி உள்ள -நவ ரத்ன மாலை யன்றோ இதுவும் )

பாடுமின் தொண்டீர்
பகவத் விஷயத்தில் சபலராய் இருப்பார் –

பாட நும்மிடைப் பாவம் நில்லாதே –
பால் குடிக்க நோய் தீருமா போலே
இவருடைய பாசுரத்தைச் சொல்ல
ப்ராப்தி பிரதிபந்தகங்கள் தன்னடையே விட்டுப் போம்
சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி போலே

நீடு தொல் புகழ் ஆழி வல்லானை -என்று
அஹம் சப்தத்தில் சக்தியைப் பற்றச் சொல்லுகிறது –

———

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

ஏழைமை சூழ் பிறப்பு கூற்றத்து இழிவு ஒழிய
வாழ்வாம் ஆட் செய்வு அவன் சிந்தையதாய் -ஆழியான்
ஆராமம் சூழ் அரங்கன் ஆடகத்தான் ஆறாய்ச் சேர்
சீரார் நீலன் தொழும் என் கை -48-

சரணாகதிக்கு அபேக்ஷிதமான ஐந்து அங்கங்களையும் அருளிச் செய்து சரண் அடைகிறார் அரங்கன் திருவடிகளில் –
அடக்கம் -பொன் -உலகம் அளந்த பொன்னடியாகையாலே-
ஆழியான் -கம்பீர ஸ்வ பாவன்-ஆழி நீர் வண்ணன் -கருமை நிறமுடையவன் –

—————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரிய திருமொழி-5-7—-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

May 5, 2014

பண்டை நான்மறையின் –பிரவேசம்

1-ஜகத் காரண பூதனாய்
2-ப்ரஹ்மாதிகளுக்கும் ஆஸ்ரயநீயனாய்
3-சகல சேதனர்க்கும் துக்க நிவர்த்தகனாய்
4-ஆஸ்ரிதர்க்கு அபேஷித சமயங்களிலே வந்து உதவும் ஸ்வபாவனான
சர்வேஸ்வரன்
(முதல் நான்கு பாசுரங்களின் அர்த்தங்கள் இவை )

அவ்வவதாரங்களில் பண்ணி அருளுகிற காலங்களிலும்
உதவாதாருக்கு இழக்க  வேண்டாதபடி
அவதாரங்கள் போலே தீர்த்தம் பிரசாதியாதே
கோயிலிலே வந்து
நித்ய வாஸம் பண்ணி யருள
கண்டு அனுபவிக்கப் பெற்றேன் -என்று
இனியராய்ப் பேசுகிறார் –

(மேல் ஒவ் ஒரு பாசுரமும் ஒவ் ஒரு அவதார விவரணம் -அன்று –இழந்தோம் –
இன்று -அரங்க மா நகர் அமர்ந்து -நித்ய வாசம்
அடியேனும் கண்டு கொண்டேன்
கீழ் கண்டு களித்தமை அனுபவித்து
ஸ்தாவர ப்ரதிஷ்டையாக -சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது பேரேன்-என்று இருப்பதைக் கண்டு இனியராகிறார் )

——————————————————————-

பரே சப்தம் பொலிய நின்றதை நம்மாழ்வார் –4-10- போல் இங்கு இவரும் இதில் –
சதேவ சோம்ய ஏகமேவ அத்விதீயம் -என்பதை அருளிச் செய்கிறார் -இதில் –
அரையர் சேவை இந்த பாசுரம் பிரசித்தம் –

பண்டை நான்மறையும் வேள்வியும் கேள்விப் பதங்களும் பதங்களின் பொருளும்
பிண்டமாய் விரிந்த பிறங்கு ஒளி அனலும் பெருகிய புனலொடு நிலனும்
கொண்டல் மாருதமும்  குரை கடல் ஏழும் ஏழு மா மலைகளும் விசும்பும்
அண்டமும் தானாய் நின்ற  எம்பெருமான் அரங்க மா நகர் அமர்ந்தானே –5-7-1-

பண்டை நான்மறையும் –
பூர்வே பூர்வேப்யோ வச ஏத தூசு -என்கிறபடியே
பூர்வ பூர்வ உச்சாரண க்ரமத்தைப் பற்ற
உத்தர உத்தர உச்சாரணம்   ஆகையாலே
புருஷ புத்தி அதீனம் ஆனால் வரக் கடவ தோஷங்கள் ஒன்றும் இல்லாத
வேதங்களும் –

வேள்வியும் –
அவ் வேதங்களால் விதிக்கப் படுகிற
யாகாதி கிரியைகளும் –

கேள்விப் பதங்களும் –
பத ரூபத்தாலும்
அஷர ரூபத்தாலும்
ஸ்ரவணம் பண்ணி அறிய வேண்டும் படி  இருக்கிற
வியாகரண சாஸ்திரமும் –

பதங்களின் பொருளும் –
அவ்வோ பதங்களால் அறியப் படுகிற
ஜீவ சமஷ்டியும் –
(நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும் போலே பொருள் ஜீவ சமஷ்டியைக் குறிக்கும் இங்கும் )

(மூல பிரகிருதி –விக்ருதமாவதற்கு மூலம் அவித்யா-திரோதானம் -மாயா -ஆச்சார்யம் -விசித்திர ஸ்ருஷ்ட்டி -ஆகவே
அவிபக்த தமஸ் -விபக்த தாமஸ் -அக்ஷரம் -அவ்யக்தம் -நான்கு அவஸ்தைகள் இதற்கு -பின்பே
மஹான் அப்புறம் ஆகும்
பிருத்வி -தண்ணீரில் லயித்து –இப்படியாகக்கடைசியில் –மஹான் -அவ்யக்தத்தில் –
அது அக்ஷரத்தில் -அது தமஸ்ஸில் லயித்து -ஏகி பாவமாக ப்ரஹ்மத்துடன் ஒன்றிக் கிடைக்கும்
நாம ரூப அநர்ஹம் -பிரிவு இல்லாமல் -இப்படி லயம்
ஸ்ருஷ்ட்டி பொழுது மாறி வரும் )

(பூமியில் விதைக்கப்பட்ட விதை போன்றது அவிபக்த தமஸ்
மண்ணில் இருந்து கிளம்பிய விதை விபக்த தாமஸ்
நீர் உடன் கலந்து ஊறி பெருத்த விதை அக்ஷரம்
பருத்து வெடித்த விதை -அவ்யக்தம்
பின்பு
முளை போல் மஹான்)

பிண்டமாய் விரிந்த பிறங்கு ஒளி அனலும் பெருகிய புனலொடு நிலனும்
நாநா வான கார்யங்களுக்கு எல்லாம்
காரணமாய் இருக்கிற அசித் சமஷ்டியில் நின்றும்
விஸ்த்ருமாகா நின்றுள்ள தேஜோ பதார்த்தம்
ஜல தத்வம்
பூமி என்றால் போலே இருக்கிற ப்ருதிவ்யாதி பூத பஞ்சகமும்

கொண்டல் மாருதமும்  குரை கடல் ஏழும் ஏழு மா மலைகளும் விசும்பும்
சேதனருக்கு அபேஷித சமயங்களில் முகம் காட்டி
உபகரிக்கக்   கடவ மேகங்கள்
அப்படி உபகரிப்பதான வாயு தத்வமும்
பூமிக்கு வேலி இட்டால் போலேயாய்
மிக்க கோஷத்தை யுடைத்தான சப்த சமுத்ரங்களும்
பூமிக்கு ஆணி அடித்தால் போலே இருக்கிற
குல பர்வதங்களும்
இத்தனைக்கும் அவகாச பிரதானம் பண்ணுகிற ஆகாசமும்

அண்டமும் தானாய் நின்ற  எம்பெருமான் அரங்க மா நகர் அமர்ந்தானே –
இவை எல்லாமுமாய் இருக்கிற அண்டம்
எங்கும் புக்கு அனு பிரவேசித்து
தா நி சர்வாணி தத் வபு-ஸ்ரீ விஷ்ணு புராணம் -என்கிறபடி
இவற்றைச் சொன்ன பாசுரம்
தன்னளவும் வரும்படியாய் இருக்கையாலே
இவை அடைய -தான் -என்று சொல்லும்படி
சரீரதயா சேஷமாகத் தான்  சேஷியாய் இருக்கிற
சர்வேஸ்வரன்
கோயிலிலே வந்து கண் வளர்ந்து அருளக் கண்டு
அனுபவிக்கப் பெற்றேன் –
என்கிறார் –

——————————————————

ஜகத் காரணத்வம் சொல்லிற்று ஆயிற்று கீழே
ப்ரஹ்மாதிகளுக்கும் ஆஸ்ரயணீயன் இவனே என்கிறார் இதில்

இந்திரன் பிரமன் ஈசன் என்று இவர்கள் எண்ணில் பல் குணங்களே யியற்ற
தந்தையும் தாயும் மக்களும் மிக்க சுற்றமும் சுற்றி நின்று அகலாப்
பந்தமும் பந்தம் அறுப்பதோர் மருந்தும் பான்மையும் பல் உயிர்க்கு எல்லாம்
அந்தமும் வாழ்வுமாய எம்பெருமான் அரங்க நகர் அமர்ந்தானே —5-7-2-

அந்தம் -லய ஸ்தானம் –
வாழ்வு ஸூகம் –

இந்திரன் பிரமன் ஈசன் என்று இவர்கள் எண்ணில் பல் குணங்களே யியற்ற
தன்னாலே ஸ்ருஜ்யரான இந்த்ரன் ப்ரஹ்மா ருத்ரன்
என்று பிரதானராக சொல்லுகிற இவர்கள்
இதில் இந்த்ரனை முற்பட எடுத்து
பின்னை இவர்களைச் சொல்லுகையாலே
இவனோடு அவர்களுக்கு வாசி இல்லை –
சதுர் முகனை ஈஸ்வரன் என்று சிலர் சொல்லுமன்று
ருத்ரன் பக்கல் ஈஸ்வரத்வம் உள்ளது -(என்று சிலர் சொல்லு வார்கள் )
இப்படி ஜகத்துக்கு பிரதானராய் இருக்கிற இவர்கள்
பக்ன அபிமானராய்க் கொண்டு
அஸங்யேயமான பல குணங்களைச் சொல்லி
ஸ்துதியா நின்று கொண்டு ஆஸ்ரயிக்க-

தந்தையும் தாயும் மக்களும் மிக்க சுற்றமும் சுற்றி நின்று அகலாப் பந்தமும்-
பிராணிகளுக்கு எல்லாம் ஹித பிரவர்த்தகராய் இருக்கக் கடவ பிதாவும்
பிரியத்திலே நடக்கக் கடவ தாயும்
நிரய நிஸ்தாரகரான புத்ரர்களும்
அளவிறந்து இருந்துள்ள ஜ்ஞாதி வர்க்கமும்
கிட்டி விடாதே நிற்கக் கடவ பந்து வர்க்கமும்

பந்தம் அறுப்பதோர் மருந்தும் பான்மையும்
இப்படிப் பட்ட சம்சார சம்பந்தத்தை போக்கக் கடவதான பேஷஜமும்
( நிர்வாணம் பேஷஜம் பிஷக் அவனே )
இஸ் சம்சார பந்தம் அற்றால்  இருக்கக் கடவ
நிஷ்கல ஸ்வபாவமும்

பல் உயிர்க்கு எல்லாம் அந்தமும் வாழ்வுமாய
சகல சேதனருக்கும் லயத்தில் இருப்பிடமாய்
இருக்குமவனும்
பாலநத்தால் வரக் கடவதான  சுகமும்
இவ்விரண்டாலும் சிருஷ்டியை நினைக்கிறது-

இப்படி சகல பிராணிகள் உடைய
சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரங்களுக்கும்
கடவனாய் இருக்கிற
சர்வேஸ்வரன் –
எம்பெருமான் அரங்க நகர் அமர்ந்தானே –

—————————————————————————

மன்னு மா நிலனும் மலைகளும் கடலும் வானமும் தானவருலகும்
துன்னு மா இருளாய்த் துலங்கு ஒளி சுருங்கித் தொல்லை நான்மறைகளும் மறைய
பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கிப் பிறங்கிருள்  நிறம் கெட ஒரு நாள்
அன்னமாய் அன்று அருமறை பயந்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே —5-7-3-

மன்னு மா நிலனும் மலைகளும் கடலும் வானமும் தானவருலகும்
கடிநையான பிருதுவியும்
குல பர்வதங்களும்
சமுத்ரமும்
ஆகாசமும்
அசுரர்கள் உடைய குடி இருக்கும் –

துன்னு மா இருளாய்த் துலங்கு ஒளி சுருங்கித் தொல்லை நான்மறைகளும் மறைய
இவை அடைய நெருங்கின பேர் இருளாய்
பிரகாச தத்வம் தான் போய்
சங்குசிதமாய்
பிரகாசத்தைப் பண்ணித் தரக் கடவதான
வேதங்களும் மறைய

பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கிப் பிறந்கிருள்  நிறம் கெட ஒரு நாள்
பின்னையும்
யோவை வேதாம்ச ப்ரஹிணோதி -என்கிறபடியே
ஒரு கால் ஓதுவித்து விட்டோமாகில்
அத்தைப் பறி கொடுத்த பின்பு
இனி நம்மால் செய்யல் ஆவது உண்டோ
என்று கை வாங்குகை அன்றிக்கே
தேவர்கள் பக்கலிலும் பிராமணர்கள் பக்கலிலும்
ஸ்நேஹத்தைப் பண்ணி
மிக்க இருளானது கழியும் படியாக –

அன்னமாய் அன்று அருமறை பயந்தான்-
தன்னைப் பேணாதே
கேட்கிறவனுக்கு ஆச்சார்ய அநுவர்த்தனம்
பண்ண வேண்டுகிறதோ -என்று
கூச வேண்டாத வடிவைக் கொண்டு
தன்னைப் பெறிலும் பெற ஒண்ணாத
வேதங்களை வெளியிட்டவன் –

அரங்க மா நகர் அமர்ந்தானே –
அன்று பிரமாணத்தை வெளி இட்டுத் தந்தவன்
இன்று பிரமேய பூதனான தன்னை
வெளி இட்டுக் கொண்டு வந்து
கண் வளர்ந்து அருளினான் –

————————————————————-

(அம்ருத மதனம் –எட்டாம் நாள் அரையர் சேவை- -அழகிய மணவாளர்-அம்ருத மதனம் செய்து அருளியபடி
ஏழாம் நாள் -மண் அளந்த தாளாளர் -அழகிய மணவாளர் திரு உலகு அளந்த படி
இரண்டாம் அரையர் சேவை
தண் குடந்தை நகராளா தொடங்கி சேவை ஆகும் )

(வேத பிரதான முகம் துக்கம் போக்கினது கீழே
அம்ருதம் கொடுத்து துக்கம் போக்கினது இதில் )

மாயிரும் குன்றம் ஓன்று மத்தாக மா சுணம் அதனோடும் அளவி
பாயிரும் பௌவம் பகடு விண்டலறப்  படுதிரை விசும்பிடைப் படர
சேயிரு விசும்பும் திங்களும் சுடரும் தேவும் தாமுடன் திசைப்ப
ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே–5-7-4-

நான்கு தோள்களால் கடைய -அதன் வேகம் ஆயிரம் தோளால் கடைந்து போல் –

மாயிரும் குன்றம் ஓன்று மத்தாக மாசுணம் அதனோடும் அளவி
அகலத்தாலும் அளவாலும் குறைவற்று இருந்துள்ள
மந்தர பர்வதமானது மத்தாக
வாசுகியினுடைய உடம்பை அத்தோடே சுற்றி –

பாயிரும் பௌவம் பகடு விண்டலறப்  படுதிரை விசும்பிடைப் படர
பரந்து நீண்டு இருந்துள்ள கடலானது
ஆனை பிளிருமா போலே கிடந்தது கோஷிக்க –
அப்போதை ஷோபத்தில் உண்டான திரைகள்
ஆகாசத்தை
இடம் அடைத்துக் கொண்டு படர –

சேயிரு விசும்பும் திங்களும் சுடரும் தேவும் தாமுடன் திசைப்ப
தூரஸ்தமாய்
விஸ்த்ருதமாய்
இருந்துள்ள
ஸ்வர்க்காதி லோகங்களும்
சந்திரனும்
மற்றும் உண்டான தேஜோ பதார்த்தங்களும்
மற்றும் உண்டான தேவ ஜாதியும்
ஏக காலத்திலே
விஸ்மயப்படச் செய்த கார்யம்

ஆயிரம் தோளால் அலைகடல் கடைந்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே
(நால் தோள் அமுதான அவன் )நான்கு தோள்கள் கொண்டு வ்யாபரித்த படி தான்
ஆயிரம் தோள் கொண்டு
வ்யாபரித்தான் என்னலாம்படி யாய்த்து –

————————————————

எங்கனே யுய்வர் தானவர் நினைந்தால் இரணியன் இலங்கு பூண் அகலம்
பொங்கு வெங்குருதி பொன் மலை பிளந்து பொழி தரும் அருவி ஒத்து இழிய
வெங்கண் வாள் எயிற்று ஓர் வெள்ளி மா விலங்கல் விண்ணுறக் கனல் விழித்து எழுந்தது
அங்கனே ஒக்க வரி யுருவானான் அரங்க மா நகர் அமர்ந்தானே —5-7-5–

அருவி ஒத்து-வெண்மையான நீராக இருந்தாலும் தாதுக்களின் சேர்க்கையால் சிவந்து இருக்குமே

எங்கனே யுய்வர் தானவர் நினைந்தால் –
நம்மைப் போலே அனுகூலித்து
ப்ரஹ்லாதனைப் போலே  -இது நமக்காக செய்த செயல் -என்று
இருப்பார் உஜ்ஜீவிக்கும் அத்தனை போக்கி
சத்ரு பஷமான அசுர  வர்க்கம்
இவ் வபதானத்தை ஸ்மரித்தால் எங்கனே உஜ்ஜீவிக்கும் படி –

இரணியன் இலங்கு பூண் அகலம் –
ஹிரண்யன் உடைய ஆபரணங்களால் அலங்க்ருதமாகா
நின்றுள்ள மார்வானத்தில் –

பொங்கு வெங்குருதி பொன் மலை பிளந்து பொழி தரும் அருவி ஒத்து இழிய
போக்கிடம் காணாமையாலே
பெரிய கிளர்த்தியோடே கோஷித்துக் கொண்டு வருகிற
ருதிர வெள்ளமானது
மேருவைப் பிட்டுக் கொடு வெள்ளம் இடா நின்றுள்ள
அருவி போலே வந்து இழிய –
அவனும் ஹிரண்யன் இறே
நாநாவான தாதுக்களாலே கலங்கி மேருவைப் பிட்டுக் கொடு
இழிகிறது
ஹிரண்யன் உடலைப் பிளந்து கொடு
இழிகிற
ருதிரம் போலே இரா நின்றது ஆயத்து-

வெங்கண் வாள் எயிற்று ஓர் வெள்ளி மா விலங்கல் விண்ணுறக் கனல் விழித்து எழுந்தது
வெவ்விதான கண்ணையும்
ஒளியை உடைத்தான எயிற்றையும் உடைத்தாய்
வெள்ளியாலே சமைந்த தொரு பெரிய மலையானது
ஆகாசத்தை ஊடுருவி
அக்னி கல்பமாக பாரா நின்று கொண்டு

அங்கனே ஒக்க வரி யுருவானான் அரங்க மா நகர் அமர்ந்தானே
தோற்றினது போலே இருக்க
நரசிம்ஹ வேஷத்தைக் கொண்டவன்
இன்னம் அப்படிக்கொத்த விரோதி வர்க்கம்
வந்து கிட்டினால் போக்குகைக்காக
இங்கே வந்து சந்நிஹிதன் ஆனவன்-

———————————————————-

ஆயிரம் குன்றம் சென்றது தொக்கு அனைய அடல் புரை எழில் திகழ் திரள் தோள்
ஆயிரம் துணிய அடல் மழுப்பற்றி   மற்று அவன் அகல் விசும்பு அணைய
ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச அறி துயில் அலைகடல் நடுவே
ஆயிரம் சுடர் வாய் அரவணைத் துயின்றான் அரங்க மா நகர் அமர்ந்தானே —5-7-6-

ஆயிரம் குன்றம் சென்றது தொக்கு அனைய அடல் புரை எழில் திகழ் திரள் தோள்
ஆயிரம் மலைகள் தன்னிலே திரண்டு சென்றால் போல்
யுத்தத்துக்கு தகுதியாய்
எழில் விளங்கா நிற்பதாய்

ஆயிரம் துணிய அடல் மழுப்பற்றி   மற்று அவன் அகல் விசும்பு அணைய
திரண்டு இருந்துள்ள தோள்கள் ஆயிரமும்
துணியும்படியாக
யுத்தத்திலே கையிலே மழுவைத் தரித்து
மற்று அவன் உண்டு -சஹஸ்ர பாஹ் வர்ஜுனன் –
ஸ்வ ஹஸ்த வதத்தாலே
வீர ஸ்வர்க்கத்தை பிராபிக்க –

ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச அறி துயில் அலை கடல் நடுவே
அவனாலே  பீடிதரான தேவர்கள் அடங்கலும்
அநந்தரம்
திரு நாமங்கள் ஆயிரமும் சொல்லி ஆஸ்ரயிக்க
யோக நித்ரையை ஸ்வ சந்நிதானத்தாலே கழித்து
திரை மோதா நின்றுள்ள கடலின் நடுவே

ஆயிரம் சுடர்  வாய் அரவணைத் துயின்றான் அரங்க மா நகர் அமர்ந்தானே
நித்ய அனுபவம் பண்ணுகையால் வந்த
ஹர்ஷத்துக்குப் போக்கு வீடாக
புகரை உடைத்தான பல வாய்களையும் உடைய
திரு வநந்த வாழ்வான் மேலே கண் வளர்ந்து அருளினவன்
அப்படியே காணலாம்படி இங்கே வந்து
சந்நிஹிதன் ஆனான் –
(ஓம் நமோ பகவத் வாஸூ தேவாயா -ஸ்வரூபியாய் இங்கே )

————————————————————-

கடலைக் கடைந்து அம்ருத பிரதானம் கீழே
இதில் கடலை அடைத்தது –

சுரி குழல் கனி வாய்த் திருவினைப் பிரித்த கொடுமையில் கடு விசை யரக்கன்
எரி விழித்து இலங்கு மணி முடி பொடி செய்து இலங்கை பாழ் படுப்பதற்கு எண்ணி
வரி சிலை வளைய வடு சரம் துரந்து மறி கடல் நெறி பட மலையால்
அரி குலம்  பணி கொண்டு அலை கடல் அடைத்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே—5-7-7-

சுரி குழல் கனி வாய்த் திருவினைப்
ஸூ கேச்யா-என்றும்
சாரு கேசீம் – என்றும்
சொல்லுகிறபடியே அழகிய திருக் குழலையும்
கனிந்த அதரத்தையும் உடையளான பிராட்டியை –

பிரித்த கொடுமையில் –
அனந்யா ராகவேணாஹம்-என்றும்
அனந்யா ஹி மயா சீதாபாஸ்கரேண ப்ரபா தயா -என்றும்
இரண்டு தலையும் சொல்லாம்படி இருக்கிற இருவரையும்
இரண்டு இடத்திலே யாம்படி பண்ணி

கடு விசை யரக்கன் எரி விழித்து இலங்கு மணி முடி பொடி செய்து
க்ரௌர்யத்தையும் பெரிய வேகத்தையும் உடையனான
ராவணன் உடைய அக்னி கல்பமாய்க் கொண்டு
விளங்கா நின்றுள்ள  ரத்னங்களாலே
செய்யப் பட்ட முடிகளை பொடி செய்து -என்னுதல்
அன்றிக்கே
எரி விழித்து –திருவினைப் பிரித்த என்னுதல் –

இலங்கை பாழ் படுப்பதற்கு எண்ணி –
இலங்கை மூலையடியே நாயும் நரியும் போம்படியாக
பாழ் படுத்தும்படி மநோ ரதித்து

வரி சிலை வளைய வடு சரம் துரந்து மறி கடல் நெறி பட
தர்ச நீயமான வில்லு  வளைய
கொலை யம்புகளை நடத்தி
பெரிய ஷோபத்தை   உடைத்தான கடல் வந்து முகம் காட்டி
நான் முதுகு காட்டிச் செறிந்து தருகிறேன்
அடைத்துக் கொடு போவது என்று வழி பட –

மலையால் அரி குலம்  பணி கொண்டு அலை கடல் அடைத்தான்-
எதேனுமாக இட்டது அ.டையைக் கொண்டு
ஆழக் கடவ கடல் வழி பட
நீரிலே புக்கு அமிழக் கடவ மலைகள் மிதந்து அணையாக
கணக்கு வழக்குப்பட ஒரு வியாபாரம் பண்ண மாட்டாத வானர ஜாதியைக் கொண்டு
அடிமை கொண்டு
நீர்க் கிளப்பத்தை உடைத்தான
கடலை அடைத்தான் –

அரங்க மா நகர் அமர்ந்தானே –

————————————————-

ஊழியாய் ஓமத்து உச்சியாய் ஒரு காலுடைய தேர் ஒருவனாய் உலகினில்
சூழி மால் யானைத் துயர் கெடுத்து இலங்கை மலங்க வன்று வடு சரம் துரந்து
பாழியால் மிக்க பார்த்தனுக்கு அருளிப் பகலவன் ஒளி கெடப் பகலே
ஆழியால் அன்று அங்கு ஆழியை மறைத்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே —5-7-8-

ஊழியாய் ஓமத்து உச்சியாய் ஒரு காலுடைய தேர் ஒருவனாய்
காலோ பல ஷிதமான சகல பதார்த்தங்களுக்கும் நிர்வாஹகனாய்
அஹம் ஹி சர்வ யஞ்ஞாநாம் போக்தா பிரபு – என்றும்
போக்தாம் யஜ்ஞ  தபஸாம் -என்கிறபடியே
சர்வ கர்ம சமாராத்யனாய்
ஏக சக்கரமான ரதத்தை உடைய ஆதித்யனுக்கு
அந்தராத்மாவாகக் கொண்டு
அவ் வழியாலே உபாஸ்யனாய்-

உலகினில் சூழி மால் யானைத் துயர் கெடுத்து –
லோகத்திலே முகப் பட்டத்தை உடைத்தாய்
மத முதிதமாய்க் கொண்டு சஞ்சரியா நின்றுள்ள
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் உடைய துக்கத்தைப் போக்கி

இலங்கை மலங்க வன்று வடு சரம் துரந்து-
இலங்கை யானது ஒருவர் கூறை எழுவர் உடுக்கும்படி
கொலை யம்பு நடத்தி

பாழியால் மிக்க பார்த்தனுக்கு அருளிப் பகலவன் ஒளி கெடப்
பலத்தால் மிக்கு இருந்துள்ள அர்ஜுனனுக்கு கிருபை பண்ணி
ஆதித்யனாவனன் ஒளி மழுங்கும்படி

பகலே ஆழியால் அன்று அங்கு ஆழியை மறைத்தான் –
அவனுடைய பிரகாசத்துக்கு அடைத்த காலம் தன்னிலே
அநேக ஆயிரம் ஆதித்யர்கள் சேர உதித்தால் போலே
இருந்துள்ள புகரை உடைய திரு ஆழியைக் கொண்டு
அந்த ஆதித்யனை மறைத்தவன் –
இந்த ஆதித்யன் உடைய தேஜஸ்ஸூ கண்ணாலே
முகக்கலாம் படி
அளவு பட்டு இருக்கையாலே தமஸ்ஸூ  போம்படியாய் இருக்கும் –
அங்கன் அன்றிக்கே
திரு ஆழி ஆழ்வான் தேஜஸ்ஸூ
நேர் கொடு நேர் கண் கொண்டு பார்க்க ஒண்ணாத படி
மிக்கு இருக்கையாலே
பளபளத்து கண்ணை இருளைப் பண்ணிற்று
பகலே -பகலவன் ஒளி கெட –

அரங்க மா நகர் அமர்ந்தானே –

—————————————————–

பேயினார் முலை யூண் பிள்ளையாய் ஒரு கால் பெரு நிலம் விழுங்கி யது உமிழ்ந்த
வாயனாய் மாலாய் ஆலிலை வளர்ந்து மணி முடி வானவர் தமக்குச்
சேயனாய் அடியேற்கு  அணியனாய் வந்து என் சிந்தையுள் வெந்துயர் அறுக்கும்
ஆயனாய் அன்று குன்றம் ஓன்று எடுத்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே —5-7-9-

பேயினார் முலை யூண் பிள்ளையாய் –
பேயினுடைய விஷத்தாலே நிறைந்த முலையை –
தாய் முலைக்கும் வேற்று முலைக்கும்
வாசி அறியாதே உண்ட முக்த்தனாய் –

ஒரு கால்
ஒரு கால் விழுக்காடு அறியாமை என்றும் ஒக்கும் ஆய்த்து-
(தாய்க்கும் பேய்க்கும் வாசி அறியான்
மண்ணுக்கும் வெண்ணெய்க்கும் வாசி அறியான் )

பெரு நிலம் விழுங்கி யது உமிழ்ந்த வாயனாய்-
ஒரு கால் பரப்பை உடைத்தான பூமியை வயிற்றிலே வைத்து
அது சாத்மியாமையாலே உமிழ்ந்த திரு வதரத்தை உடையனாய்

மாலாய் –
சர்வாதிகனான சர்வேஸ்வரனாய் –

ஆலிலை வளர்ந்து –
சிறு வடிவைக் கொண்டு
பெரிய லோகங்களை வயிற்றிலே வைத்து
ஒரு பவனான ஆலந்தளிரிலே கண் வளர்ந்து அருளி

மணி முடி வானவர் தமக்குச் சேயனாய்
ப்ரஹ்மாதிகளுக்கு தூரஸ்தனாய்-

அடியேற்கு  அணியனாய் வந்து என் சிந்தையுள் வெந்துயர் அறுக்கும்
என் போல்வாருக்கு கையாளாய்-
என் பக்கல் அபேஷா மாத்ரமும் இன்றிக்கே   இருக்கத்
தானே வந்து
என்னுடைய மானஸ வ்யசனத்தைப் போக்கும் –

ஆயனாய் அன்று குன்றம் ஓன்று எடுத்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே
ஆயனாய்
கோவர்த்தன கிரியைத் தரித்து
பண்ணின உபகாரம் அறியாத
பசுக்களையும் இடையரையும் நோக்கினவன் –
(தானே வந்து அபேஷா நிரபேஷமாக உதவினத்துக்கு த்ருஷ்டாந்தம் இது )

———————————————

பொன்னு மா மணியும் முத்தமும் சுமந்து பொரு திரை மா நதி புடை சூழ்ந்து
அன்னம் மாடுலவு மலை புனல் சூழ்ந்த வரங்க மா நகர் அமர்ந்தானை
மன்னு மா மாட மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள்
பன்னிய பனுவல்  பாடுவார் நாளும் பழ வினை பற்று அறுப்பாரே —-5-7-10-

பொன்னு மா மணியும் முத்தமும் சுமந்து பொரு திரை மா நதி புடை சூழ்ந்து
பொன்னும்
பெரு விலையனான ரத்னங்களும்
முத்துக்களும் சுமந்து
தன்னில் தான் பொரா நின்றுள்ள திரைகளை உடைய
மகா நதி உண்டு -காவேரி
அது பர்யந்தத்திலே சூழப் பட்டு இருப்பதாய்

அன்னம் மாடுலவு மலை புனல் சூழ்ந்த வரங்க மா நகர் அமர்ந்தானை
அருகே அன்னங்கள் சஞ்சரியா நின்றுள்ள
ஸ்ரீ சந்திர புஷ்கரணி தொடக்கமான பொய்கைகள்
சூழ்ந்த கோயிலிலே வந்து
கண் வளர்ந்து அருளுகிற சர்வேஸ்வரனை –
(சுற்றிலும் -அஷ்ட தீர்த்தங்கள் உண்டே சந்த்ரபுஷ்கரணி கர்ணிகை போல் நடுவாக
அன்னங்கள் பொய்கையில் தானே இருக்கும் )

மன்னு மா மாட மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள்
பிரளயங்களுக்கும் அழியாத
மாடங்களால் சூழப் பட்ட திரு மங்கையில் உள்ளாருக்கு
நிர்வாஹகராய்
அளவுடைத்தான வேலைப் பரிகரமாக உடைய ஆழ்வார்
அருளிச் செய்த –

பன்னிய பனுவல்  பாடுவார் நாளும் பழ வினை பற்று அறுப்பாரே
லஷணங்களில் ஒன்றும் குறையாத படி
விஸ்ருதமான வித்தை அப்யசிக்க வல்லார்
ப்ராரப்தமான கர்மங்களை வாசனையோடு
போக்கப் பெறுவார் –

——–

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

பண்டைய காரணன் அண்டர் அல்லல் விண்டு ஒழித்து
தொண்டர்க்காய்த் தான் தரணியில் திண்ணம் அண்டர் கோன்
வந்து இருக்கும் கோயில் எண்ணித் தான் உய்க்கும் நீலன் தாள்
வந்தியாதார் தாம் ஏழையர் -47-

காரணன் -காரணம் ஸ்து த்யேய-
தரணி -உலகம் -திண்ணம் வந்திருக்கும் -சம்சாரம் வேரோடு கிழங்கு அறுத்தால் அன்றி பேரேன்-என்று இருக்கும் சீர் –

——————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரிய திருமொழி-5-6—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

May 5, 2014

தீர்ப்பாரை –த்வாராபதி மன்னனை ஏற்றுமின்
ஏற்றுதலும் தொழுது ஆடுமே சொன்னதும்
தொழுதாள்
எழுந்தாள்
ஆடினாள்
அதே போல் இங்கும்

கைம்மானம் பிரவேசம் –

மறவாதே எப்பொழுதும் மாயவனே மாதவனே என்கின்றாள் -என்று
திரு நாமங்களைப் பல காலும் தானே சொல்லியும்
திருத் தாயார் அவற்றை அனுபாஷித்து கேட்டும்
ஆக
இப்படி திரு நாமங்களிலே வாசனை பிறந்தது –
சத்தா தாரகமாய் இறே திரு நாமங்கள் தான் இருப்பது  –
அத்தாலே உணர்ந்து தரித்தார் –

தரித்த அநந்தரம்
நீர் இங்கனே கிடந்து படுகிறது என் –
பரம பதம் கலவிருக்கையாய் இருக்க
நாம் இங்கே வந்து ஸூலபர் ஆகிறது உமக்காக அன்றோ -என்று
அவதார சௌலப் யங்களையும்  காட்டி
அங்கன் காதாசித்கமாக அன்றிக்கே
கோயில்களில்  வந்து சந்நிஹிதர் ஆகிறதும் உமக்காக
(ஆராமம் சூழ்ந்த அரங்கம் )

அந்தப் பொதுவும் அன்றிக்கே
விசேஷித்து கோயிலிலே வந்து
சந்நிஹிதர் ஆய்த்ததும் உமக்காக –
நம்முடைய சந்நிதியால் உள்ள பலம் தானே நீர் பெறுவதும் செய்தீர் –
நாமே உம்முடைய கார்யத்துக்குக் கடவோம் என்று
நம் தலையிலே ந்யஸ்த பரராய் இருக்கப் பெற்றீர் இறே
இனி அலமாக்கிறது என் -என்ன –
(நம் தலையிலே-திருவடியில் சொல்லாமல் -நாம் சமர்ப்பிப்பதை தலையால் தாங்குபவன் அன்றோ )

ஸ்ரீ கௌசலையையார் பெருமாள் காடேறப் போகிற போது
ஏக புத்ரையாய் இருக்கிற நான் உம்மை விட்டு இருக்க மாட்டேன் -என்று புறப்பட
ஒரு கால் அவர் முகத்தைப் பார்த்து
ஆச்சீ நீர் சொல்லுகிறது தர்ம ஹானி கிடீர்
இனி பர்த்தா இருக்க புத்ரனை அநுவிதானம் பண்ணவும் கடவதல்ல
ஆன பின்பு இனி மீளும் -என்ன
அவள் காப்பிட்டு மீண்டாள் இறே

அப்படியே இவர்
அவ் வார்த்தையாலே ஹ்ருஷ்டராய்
பெற்றதிலே லாப அம்சத்தைச் சொல்லி
க்ருதாரத்தராகிறார் –

—————————————

கைம்மான மழ களிற்றைக் கடல் கிடந்த கரு மணியை
மைம்மான மரகதத்தை மறை யுரைத்த திரு மாலை
எம்மானை எனக்கு என்றும் இனியானைப் பனி காத்த
வம்மானை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே –5-6-1-

பனி-கல் மழை அன்றோ வர்ஷித்தான் -ஆகவே கல் எடுத்துக் காத்தான்

கைம்மான மழ களிற்றை –
ஆனையில் கிடந்த கிடக்கை -என்று
ஓர் ஆனை கைகளையும் கால்களையும்
பரப்பிக் கொடு கிடக்குமா போலே
கிடக்கிற கிடை –
நீண்ட துதிக்கையை உடைத்தாய்
பருவத்தால் இளையதாய்
இருப்பதொரு ஆனை சாய்ந்தாப் போலே
இருக்கிறவனை –

கடல் கிடந்த கரு மணியை-
(திருப் பாற் கடலிலே )கடலில் பாழ் தீரும்படி
ஒரு நீல ரத்னம் சாய்ந்தால் போலே
இருக்குமவனை –

மைம்மான மரகதத்தை –
ஸ்யாமத்வம் மிக்கு இருந்துள்ள
மரகத ரத்னம் போலே இருக்குமவனை  –
(ஸ்யாமம் நீலம் பசகு பசகு என்று இருக்கும் கறுமை )

மறை யுரைத்த திரு மாலை –
வேதங்களாலே ஒரு மிடறு செய்து
பேசப் பட்ட ஸ்ரீயபதியை –
ஹ்ரீஸ்சதே-அஸ்யே சா நா  –
(மறைகளால் உரைக்கப்படும்
மாதவன் பெயர் சொல்வதே வேதத்தின் சுருக்கு
நால் வேதம் கண்டானை கண்ண புரத்தம்மானே -அங்கு வெளியிட்டு அருளினவன் )

திரு மாலை எம்மானை –
இருவருமான சேர்த்தியைக் காட்டி
என்னை அனந்யார்ஹன் ஆக்கினவனை –

எனக்கு என்றும் இனியானைப் –
ஏதேனும் நொந்த தசையிலும் தன்னை அனுசந்தித்தால்
எனக்கு இனியனாய் இருக்குமவனை –

பனி காத்த வம்மானை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே
இப்படியே தான் அல்லது ரஷகர் அல்லாதாரை
அரியன செய்தும் ரஷிக்குமவனை –
(கீழே விஸ்லேஷ வியசனம் தடுத்ததுக்கு திருஷ்டாந்தம் இது )

கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே
ஒரு கால் மலையை எடுத்து பசுக்களையும் இடையரையும் ரஷித்தான் –
திருப் பாற் கடலிலே கிடந்தான் -என்று
கேட்டார் வாய் கேட்கை அன்றிக்கே
நான் கோயிலிலே காணப் பெற்றேன் –

———————————————-

கீழே கிடை அழகு
துக்க விசனம் போக்கினத்துக்கு பனி காத்ததையும் அனுசந்தித்து
அத்தோடு தோள் தீண்டி
கிடந்தபடி
தெற்கு வீட்டில் அபேக்ஷிதம் தருவதாக சொல்ல ( திருக்குறுங்குடி திருவரசு)
போகும் வழியில் திருத் தண் கால்
திருக்குறுங்குடி
அனுபவிக்கிறார்

பேரானைக் குறுங்குடி எம்பெருமானைத் திருத் தண் கால்
ஊரானைக் கரம்பனூர் உத்தமனை முத்திலங்கு
காரார் திண் கடல் ஏழும் மலை ஏழ் இவ்வுலகு ஏழு உண்டும்
ஆராது என்று இருந்தானைக் கண்டது தென்னரங்கத்தே —5-6-2-

(ஏழு உண்டும் ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேன் -10-8-2–நம்மாழ்வாரும் திருப்பேர் நகர் பதிகம் )

பேரானைக் –
ஆற்றங்கரையிலே
சர்வ போக்யமாம் படி
திருப் பேரிலே சந்நிஹிதன் ஆனவனை –

குறுங்குடி எம்பெருமானைத் –
திருக் குறுங்குடியிலே ஒரு விசேஷ பிராப்தி உண்டு இறே இவருக்கு –
ஆழ்வார் ஸ்வா தந்த்ர்யம் இறே அங்கு நடப்பது

(மங்க ஒட்டு உம் மா மாயம்
சரம விமல திருமேனி –
திருவாணை கண்டாய்
உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
பாகம் முதிர்ந்தவாறே
இங்கே காண மாட்டாமல் தெற்கு வீட்டுக்கு அருள் பாடிட்டு
அவர் ஆஸ்ரித பாரதந்தர்யம் தானே எனக்கு கர்தவ்யம்
என்று ஆழ்வார் ஸ்வா தந்தர்யம் படி சரீரம் தள்ளி கூட்டிப் போனதால் )

திருத் தண் கால் ஊரானைக் –
அவ் ஊரில் உள்ளாவர்களில் தானும் ஒருவனாய்
தன் வ்யாவ்ருத்தி தோற்றாதபடி  இருந்தவனை –

கரம்பனூர் உத்தமனை –
வழிக் கரையிலே திரு வாசலுக்கு ஒரு கதவு
இடாதே வந்து கிடக்கிறவனை-

முத்திலங்கு காரார் திண் கடல் ஏழும் மலை ஏழ் இவ்வுலகு ஏழு உண்டும் ஆராது என்று இருந்தானைக் கண்டது தென்னரங்கத்தே
முத்துக்கள் ஒளி விடா நிற்பதாய்
கருமை மிக்கு
தான் கரையை அதிக்ரமிக்க கடவது அன்றிக்கே
நிற்கிற நிலையை ஒருவரால்
கொலைக்க ஒண்ணாத படி
அதில் திண்ணியதாய் இருக்கிற கடல்கள் ஏழும்
பூமிக்கு ஆணி அடித்தால் போலே இருக்கிற மலைகள் ஏழுமான
இந்த லோகங்கள் ஏழையும்
தன் வயிற்றிலே வைத்து ரஷிக்கச் செய்தேயும்
ஒன்றும் செய்திலனாய் இருக்கையாலே
உபகாரம் கொண்டார்க்கு
பிரத்யுபகாரம் தேடி
நெஞ்சாறல் பட வேண்டாத படி
இருந்தவனை –

———————————————–

திருக் குறுங்குடி நம்பி தம்மை
சம்சார பிரளயத்தில் இருந்து எடுத்ததும் த்ருஷ்டாந்தம்
ஸ்ரீ வராஹ நாயனார்
நம் பாடுவான் -பாகவதனுக்கு போக்ய பூதனாய் அங்கு போல்
நமக்கும் இருப்பார் என்று சங்கதி

ஏனாகி உலகிடந்து  அன்று இரு நிலமும் பெரு விசும்பும்
தானாய பெருமானைத் தன் அடியார் மனத்து என்றும்
தேனாகி அமுதாகித் திகழ்ந்தானை மகிழ்ந்து ஒரு கால்
ஆனாயன் ஆனானைக் கண்டது தென்னரங்கத்தே—5-6-3-

ஏனாகி உலகிடந்து  அன்று  –
பூமியை பிரளயம் கொண்ட அன்று
ஏனமாய் இத்தை  இடந்து எடுத்து –

இரு நிலமும் பெரு விசும்பும் தானாய பெருமானைத்-
பூம் யந்தரிஷாதிகள் அடைய தான் என்ற சொல்லில் அடங்கும்படி
இத்தை பிரகாரமாக உடைய
சர்வேஸ்வரனை –

தன் அடியார் மனத்து என்றும் தேனாகி அமுதாகித் திகழ்ந்தானை
ஒருவன் காலில் முள் பாய்ந்தால்
சரீரி யானவன் நோவு படுமா போலே
ஜகத்துக்கு வந்த ஆபத்து தன்னதாம்  படி
இதுக்கு அபிமானியாய் இருக்கிற
இருப்பை அனுசந்தித்து இருக்கும்
தனக்கு அசாதாராணர் ஆனவருக்கு
சர்வ வித போக்யனாய்
அத்தாலே உஜ்ஜ்வலனாய்
இருக்குமவனை –

மகிழ்ந்து ஒரு கால் ஆனாயன் ஆனானைக் கண்டது தென்னரங்கத்தே –
கிருஷ்ணனாய் அவதரித்து
பரமபதம் கலவிருக்கையாய் இருக்க
நமக்கு இங்கே வந்து குறைய நிற்க வேண்டா நின்றது
என்னும் இன்னாப்போடு அன்றிக்கே
இப்படி யாகிலும் இவர்களுக்கு உறுப்பாக பெற்றோம் என்னும்
ப்ரீதி பிரகர்ஷத்தோடே பண்டு ஒரு கால் பசுக்களையும்
கன்றுகளையும் மேய்க்கும் இடையனாய்
அதில் புரையற வர்த்தித்தவனை   –

——————————————–

ஆனாயானான் ஏனம் கீழே அனுபவம்
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீராப்தி ஆகதோ மதுராம் புரிம்-
கடல் கிடைத்து
கண்ணனாய்
ஏனம் அடுத்த
நரசிம்ம வாமனன் த்ரிவிக்ரமன் அனுபவம் இதில் என்று சங்கதி –
உமக்காகவே அவதாரம் கோயில் சந்நிதி சொன்னதுக்கு பாட்டு தோறும் உண்டே –

வளர்ந்தவனைத் தடம் கடலுள் வலி யுருவில் திரி சகடம்
தளர்ந் துதிற யுதைத்தவனைத் தரியாதன்றி ரணியனைப்
பிளந்தவனைப் பெரு நிலம் ஈரடி நீட்டி நீட்டிப் பண்டு ஒரு நாள்
யளந்தவனை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே –5-6-4-

வளர்ந்தவனைத் தடம் கடலுள் –
பரப்பை உடைய கடலில்
அவதாரங்களுக்கு நாற்றங்கால் ஆம்படி வந்து கண் வளர்ந்தவனை –

வலி யுருவில் திரி சகடம் தளர்ந் துதிற யுதைத்தவனைத்
பின்பு அசுரர்கள் மிகைத்தார்கள் என்று கேட்டவாறே வந்து அவதரித்து
அசூராவேசத்தாலே திண்ணிய வடிவை உடைத்தாய்
ஊர்ந்து வருகிற சகடம் சின்னம் பின்னமாய் போம்படி
திருவடிகளாலே உதைத்தவனை –

தரியாதன்றி ரணியனைப் பிளந்தவனைப்-
சிறுக்கனை கடலிலே தள்ளுவது
மலையிட்டு அமுக்குவது ஆகப் புக்கவாறே
நரசிம்ஹமாய் ஹிரண்யனைப் பிளந்து பொகட்டவனை –

பெரு நிலம் ஈரடி நீட்டி நீட்டிப் பண்டு ஒரு நாள் யளந்தவனை –
பரைப்பை உடைய பூமி இரண்டு அடியாலே அடங்கும்படி
திருவடிகளை
நீட்டி அளந்து கொண்டவனை –

யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே  –

—————————————

வாமனனாய் மண் அளந்து
காரண அவஸ்தை வியாப்தி ஸூஷ்ம
கார்ய அவஸ்தை வியாபித்து ஸ்தூல
அனுசந்தித்து
அந்தர்யாமித்வம்
நரஸிம்ஹ கீழே -கொல்லப்பட்ட ஹிரண்ய கசிபு அடுத்த அவதாரம் ராவணன்
ராம அவதாரம்
நற்பால் உய்த்தவன்
சாதந பூதயா கர்ம -ஆராதிக்கப் படுபவனையும் சொல்லி
இதில் உண்டே

நீர் அழலாய் நெடு நிலனாய் நின்றானை அன்று அரக்கன்
ஊர் அழலால் உண்டானைக் கண்டார் பின் காணாமே
பேர் அழலாய்ப் பெரு விசும்பாய்ப் பின் மறையோர் மந்த்ரத்தின்
ஆர் அழலால் உண்டானைக் கண்டது தென்னரங்கத்தே –5-6-5-

மந்த்ரத்தின்-இன் சரிகை

நீர் அழலாய் நெடு நிலனாய் நின்றானை –
த்ரிவ்ருத் கரணத்தாலே
பஞ்சீ கரணத்தைச் சொன்ன படி

அன்று அரக்கன் ஊர் அழலால் உண்டானைக் கண்டார் பின் காணாமே
ராவணன் மிகைத்த அன்று
அவனூரை அரணும் அட்டாலையும் தெருவுமாய் கண்டவர்கள்
அனந்தர ஷணத்திலே
அப்படிக் காணாதே -ஸ்மசான சத்ருசமாக காணும்படி
அக்நியாலே அத்தை முடித்தவனை –

பேர் அழலாய்ப் –
படபாமுக அக்னியாய்

பெரு விசும்பாய்ப் –
இங்குத்தை மர்யாதைகளைத் தப்பி
அவ்வருகே பட்டார்க்கு
பிராப்யமான பரம பதமுமாய் –

பின் மறையோர் மந்த்ரத்தின் ஆர் அழலால் உண்டானைக் –
அத்தை அவர்கள் பெறுகைக்கு உறுப்பாக
பிராமணர்கள் உடைய யாகங்களிலே
மந்திர பூர்வமான ஹவிஸ் ஸூக்களை
த்ரேத அக்னி முகத்தாலே புஜிக்குமவனை –
அஹம் ஹி சர்வ யஞ்ஞானாம் போக்தா பிரபு ச –

கண்டது தென்னரங்கத்தே –

——————————————

கீழே மோக்ஷ சாதனம் ஆராதனை
அந்தர்யாமித்வம் -மோக்ஷம் பூரி தானம் பண்ணின ராமன்
இப்பாட்டில்
தானே உபாயம்
விரோதி சீலன்
ஆபத் சகன்
ஸ்ரீ கிருஷ்ண அனுபவம்

தஞ்சினத்தை தவிர்த்து அடைந்தார் தவ நெறியைத் தரியாது
கஞ்சனைக் கொன்று அன்று உலகம் உண்டு உமிழ்ந்த கற்பகத்தை
வெஞ்சினத்த கொடும் தொழிலான் விசை யுருவை யசைவித்த
அஞ்சிறைப் புட்பாகனை யான் கண்டது தென்னரங்கத்தே–5-6-6-

அஞ்சிறைப் புட்பாகனை-பாணாசுரன் நரகாசுரன் இரண்டிலும் கருடாரூடனாய் வந்தானே-

தஞ்சினத்தை தவிர்த்து அடைந்தார் தவ நெறியைத்
அநசூயவே-என்று
உந்தனை அதிகாரிகளைக் கண்டிலேன் காண்-
என் வைபவத்தைச் சொன்ன விடத்தில்
சிவீல் என்று இருந்திலை –
இன்னமும் எனக்கு வைப்பான வற்றைச் சொல்லுகிறேன்
செவி தாழ்த்து கேட்டுக் காண் -என்றான் இறே

பிரத்வேஷம் பண்ணாது ஒழிவது அத்தனையே யாய்த்து வேண்டுவது
த்வேஷத்தை தவிர்ந்து
தன்னை அடைந்தவர்கள் உடைய
ஸ்வ பிராப்தி உபாயத்தை
தானே நிர்வஹித்துக் கொடுக்குமவனை –

(அசூயை குணத்தை தோஷமாகப் பார்ப்பது
வாத்சல்யம் தோஷமே குணமாகக் கொள்வது)

தரியாது கஞ்சனைக் கொன்று –
த்வேஷமேயாய் இருப்பார் அளவில் இருக்கும் படி –
ஸ்ரீ தேவகியாரையும் ஸ்ரீ வசுதேவரையும் நலியப் புக்க வாறே
அத்தைப் பொறாதே
இனி அரை ஷணம் இவனை வைக்க ஒண்ணாது
என்று அவனைக் கொன்றான் ஆய்த்து-

அன்று உலகம் உண்டு உமிழ்ந்த –
த்வேஷமும் பண்ணாதே
தன்னை அடைவதும் செய்யாதே
இருப்பார் அளவில் இருக்கும் படி
ஆபத்தை அடையாளமாக ரஷிக்கும் இத்தனை யாய்த்து
தான் அறிந்த சம்பந்தத்தையே பார்க்கும் இத்தனை –

கற்பகத்தை –
இப்படி உபகரித்தோம் என்று நினைத்து இராதவனை-

வெஞ்சினத்த கொடும் தொழிலான் விசை யுருவை யசைவித்த அஞ்சிறைப் புட்பாகனை –
வெவ்விய சினத்தை உடையவனாய்
பிராணி ஹிம்சா ரூபமான உப சம்ஹாரத்தை
தொழிலாக உடைய ருத்ரன் உடைய
பெரிய வேகத்தை உடைய வடிவை
அசைவித்தான் யாய்த்து

ருஷபம் வாலை எடுத்துக் கொண்டு ஓட
தான் ஜடையை விரித்துக் கொண்டு முதுகு  காட்டி
கிருஷ்ண கிருஷ்ண மஹா பாஹோ -என்றாப் போலே சொல்லிக் கொண்டு
ஓடும்படி பண்ணின
திருவடியை வாகனமாக உடையவனை –

இது பாணனை -என்றும் சொல்லுவார்கள்
நரகனை என்றும் சொல்லுவார்கள் –

யான் கண்டது தென்னரங்கத்தே –

—————————————

திருவேங்கடம் -திருவிக்ரமன் -திருக்கோவலூர் -திருவரங்கம்
உபாயத்தை ச பிரகாரமாக அனுசந்திக்க
ப்ராப்யமும் பெறு விக்கும் அவள் சேர்த்தியும் திரு உள்ளத்தில் ஓட
காணலாம்படி
வட வேங்கடம் இருந்து
திருவடிக்கீழ் இட்டபடியும்
த்வய பதங்கள் இதில் உண்டே –
சிந்தனை -ப்ராப்யம்
தவ நெறி -பிராபகம்
இரண்டுமே திரு மால் ஒரு மிதுனமே ப்ராப்ய ப்ராபகம் என்று காட்டி அருளிய
திரு அரங்கனுக்கு க்ருதஜ்ஜை இதில்

சார்வே தவ நெறிக்கு தாமோதரன் தாள்கள்
த்வயம் சொன்னாலே திருவேங்கடம் உண்டே ஆழ்வார்கள் அருளிச் செயல்களில்

சிந்தனையைத் தவ நெறியைத் திருமாலைப் பிரியாது
வந்து எனது மனத்து இருந்த வடமலையை வரி வண்டார்
கொந்து அணைந்த பொழில் கோவல் உலகு அளப்பான் அடி நிமிர்த்த
வந்தணனை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே –5-6-7-

சிந்தனையைத்-
வழு  விலா அடிமை செய்ய வேண்டும் நாம் என்று
உண்டான என்  மநோ ரதத்துக்கு விஷயமாய்
பிராப்யமாய் உள்ளவனை –

தவ நெறியைத் –
அத்தை பெறுவிக்கும் உபாயமும் தானேயாய் உள்ளவனை –

இப்படி பிராப்ய
பிராபகங்கள்
இரண்டும் தானேயாய் இருக்கிற வஸ்து தான் ஏது என்ன –
திருமாலைப் –
பிராபகத்தில் புருஷகாரமுமாய்
பிராப்யத்துக்கு அவனோபாதி இறே
இருப்பது –

பிரியாது வந்து எனது மனத்து இருந்த வட மலையை –
திருமலையை தனக்கு வாசஸ் ஸ்தானமாக
உடையவனாய்  இருந்து வைத்து
இவ் வவஸ்தைகளை என் நெஞ்சிலே பிறப்பிக்கைக்கு
தானே வந்து
மனசிலே விடாதே
பொருந்தி இருக்கிறவனை –

வரி வண்டார் கொந்து அணைந்த பொழில் கோவல் உலகு அளப்பான் அடி நிமிர்த்த வந்தணனை-
நல்ல நிறத்தை உடைய வண்டுகள்
படிந்து இருக்கும் பூங்கொத்துக்கள்
நெருங்கின பொழிலை உடைய
திருக் கோவலூரிலே
இந்த லோகங்களை அளைக்கைக்காக
திருவடியை நீட்டிக் கொடு நிற்கிற
விநீத வேஷத்தைக் காட்டி
இத்தை அடைய தன்னதாக்கிக் கொண்டவனை –

யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே
தானே அர்த்தியாய் கொண்டு இருக்க
நான் கண்டது தென்னரங்கத்தே-

——————————————–

கீழ் பாட்டில் த்வய நிஷ்டர்
கிருபையை அனுசந்தித்து
பரம வைதிகர்
கேசவன் தமர் படி திரு மேனி சம்பந்தம் -சிஷ்யாதிகளுக்கும்
நித்ய ஸூரிகள் படி போலே அனுக்ரஹம் உபகாரன்
எதிரிட்ட புத்தாதிகளை நிரசித்தபடியும் –

துவரித்த உடையவர்க்கும் தூய்மை இல்லா சமணர்க்கும்
அவர்கட்கு அங்கு அருள் இல்லா அருளானைத் தன் அடைந்த
எமர்கட்கும் அடியேற்கும் எம்மாற்க்கும் எம்மனைக்கும்
அமரர்க்கும் பிரானாரைக் கண்டது தென்னரங்கத்தே –5-6-8-

துவரித்த உடையவர்க்கும் தூய்மை இல்லா சமணர்க்கும் அவர்கட்கு அங்கு அருள் இல்லா அருளானைத்
சிவந்த அஸ்தரத்தை தரிக்கக் கடவ பௌத்தருக்கும்
வைதிகர் அல்லாமையாலே ஸ்பர்ச யோக்யதை அல்லாத சமணர்க்கும்
வேதோக்தமான கர்மத்தாலே
தன்னை ஆஸ்ரயியாதார் அளவில் ஒரு காலும் கிருபை பண்ணக்
கடவது அன்றிக்கே இருக்கும் அருளை உடையவனை –

பால் மரமே யாகிலும் அகாலத்திலே குத்தினால்
பால் மறுத்து இருக்குமா போலே யாய்த்து இருப்பது –

தன் அடைந்த எமர்கட்கும் அடியேற்கும் எம்மாற்க்கும் எம்மனைக்கும்
தன்னையே பற்றின என்னோடு
சம்பந்தம் உடையாருக்கும்
வைஷ்ணவர்களுக்கும் -என்றபடி
எனக்கும்
எனக்கு தாயும் தமப்பனும் என்று இருக்கிற இவர்களுக்கும்

அமரர்க்கும் பிரானாரைக் கண்டது தென்னரங்கத்தே
நித்ய ஸூரிகளுக்கும் ஒக்க
தரம் வையாதே சேஷியாய்
இருக்குமவனை –

—————————————————

புத்தாதிகள் இடம் பொய்யன்
மெய்யர்க்கு மெய்யானாமை அனுசந்தித்து
நிரதிசய பக்தி நிஷ்டர் ஆழ்வார்கள்
அரவத்து அமளியினோடும் உள்ளத்தில் இருந்தமை
சாதனா நிஷ்டர் போல் இருக்கும் அளவு என்னிடம் என்றுமாம் –

பொய் வண்ணம் மனத்தகற்றிப் புலன் ஐந்தும் செல வைத்து
மெய் வண்ணம் நினைந்தவர்க்கும் மெய் நின்ற வித்தகனை
மை வண்ணம் கரு முகில் போல் திகழ் வண்ண மரகதத்தின்
அவ் வண்ண வண்ணனை யான் கண்டது தென்னரங்கத்தே –5-6-9-

பொய் வண்ணம் மனத்தகற்றிப் புலன் ஐந்தும் செல வைத்து
பொய் என்றது -பிரகிருதி பிராக்ருதங்களை-(அஸ்திரம் மாறிக் கொண்டே இருப்பதால் பொய் )
சத்யஞ்சா ந்ருதஞ்ச   -பொய்யினுடைய வண்ணத்தைப் பற்றின மனசை அகற்றி –
பிரகிருதி பிராக்ருதங்களை -நன்று ஸ்திரம் -என்றாப் போலே
நினைத்து இருக்கும் அவற்றை விட்டு

புலன் இத்யாதி –
மனசை அகற்றினாலும்
பின்னையும் அவற்றிலே கொடு போய்
மூட்டுமவை இறே  -பாஹ்யேந்திரங்கள்
அவை விஷயங்களில் போகாதபடி பண்ணி –

மெய் வண்ணம் நினைந்தவர்க்கும் மெய் நின்ற வித்தகனை
ஆத்மா யாதாம்ய ஜ்ஞான பூர்வகமாக
தன் பக்கலிலே பக்தியைப் பண்ணுமவர்களுக்கு-
தன் ஸ்வரூபாதிகளை
உள்ள படியே காட்டிக் கொடுக்கும் விஸ்மய நீயனை  –
(ஆழ்வாராதிகளுக்கும் சாதனா நிஷ்டர்களுக்கும் இவை பொருந்தும்)

அவர்களுக்கு உள்ள படியே காட்டிக் கொடுப்பதை எத்தை -என்ன –
மை வண்ணம் கரு முகில் போல் திகழ் வண்ண மரகதத்தின் அவ் வண்ண வண்ணனை –
விவ்ருனுதே தநூம் ஸ்வாம்-
அஞ்சனத்தின் உடைய நிறம் இருண்ட மேகம் போலே விளங்கா நின்றுள்ள  நிறத்தை உடைய
மரகதத்தின் உடைய
அந்த நிறம் போலே இருக்கிற நிறத்தை உடையவனை –

யான் கண்டது தென்னரங்கத்தே –
( அவன் காட்ட நான் கண்டது )

————————————————-

ஆ மருவி நிரை மேய்த்த வணி யரங்கத்து யம்மானைக்
கா மரு சீர்க் கலிகன்றி யொலி செய்த மலி புகழ் சேர்
நா மருவு தமிழ் மாலை நால் இரண்டோடு  இரண்டினையும்
தா மருவி வல்லார் மேல் சாரா தீ வினை தானே —5-6-10-

ஆ மருவி நிரை மேய்த்த வணி யரங்கத்து யம்மானைக்
ஸ்வ ரஷணத்துக்கு ஒரு கைம் முதல் இல்லாத
பசுக்களை அவற்றோடு பொருந்தி ரஷித்து (கோ சகன் ஆ மருவி அப்பன் )
அது தான் பர தசை-என்னும்படி
கோயிலிலே வந்து சந்நிஹிதன் ஆனவனை -சுலபன் ஆனவனை –
(மதிள் அரங்கர் கற்றினம் மேய்த்த எந்தை -திருமாலை தனியன் )

கா மரு சீர்க் கலிகன்றி யொலி செய்த மலி புகழ் சேர்
எல்லாருக்கும் ஸ்ப்ருஹை பண்ண வேண்டும்படியான
ஸ்ரீ வைஷ்ணவ லஷ்மியை உடைய ஆழ்வார்
ஒலி உடைத்தாய் செய்த தமிழ் மாலை  –

நா மருவு தமிழ் மாலை நால் இரண்டோடு  இரண்டினையும்
மனஸ் சஹகாரம் வேண்டாதே
இத்தை ஒரு கால் நாக்கிலே இட்டால்
பின்னை நா விடாதே இருக்கும் ஆய்த்து

தா மருவி வல்லார் மேல் சாரா தீ வினை தானே
மனஸ் சோடே இத்தை அனுசந்தித்துக்
கற்றவர்கள் மேல்
இவர்கள் போக்க வேணும் -என்று நினையாதே இருக்க
துஷ் கர்மங்கள் தாமே
இது நமக்கு நிலம் அல்ல -என்று
விட்டு ஓடிப் போம் –

————-

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

கை கழிந்த அன்பர் முன் கை கட்டித் தான் நின்றும்
கையர் நலிந்தும் வையம் நலம் எண் ஐயன்
அரங்கனைக் கைக்கனியாய்க் காண் கலியன் பாதம்
பரவ வினைப் பாறிடுமே பண்டு -46-

கை கழிந்த அன்பார் -மிக்க பெரும் சீர் தொண்டர் என்றபடி -பரத்வம் வந்தேறி அன்றோ அரங்கனுக்கு
கையர் -கயவர்
வையம் நலம் எண் -உறங்குவான் போலே யோகு செய்யும் -வ்யூஹ ஸுஹார்த்தம் –

———————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரிய திருமொழி-5-5—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

May 5, 2014

போக புஷ்ப தியாக ஞான மண்டபங்கள் கோயில் திருமலை பெருமாள் கோயில் திரு நாராயண புரம்
ஸந்நிஹிதனாக இருந்ததே – நம் போல்வாரைக் கைக் கொள்ளவே
குழந்தைகள் இல்லாத படுக்கையில் பள்ளி கொள்ள திரு உள்ளம் பொருந்துமோ –
நாயிகா பாவ பதிகங்கள் —
2-7- தாய் திரு விட வெந்தை
2-8-அஷ்ட புஜப் பெருமாள் மகள்
3-6-மகள் பாசுரம் திருவாலி
3-7-தாய் பாசுரம் திருவாலி
4-8-தாய் பாசுரம் பார்த்தன் பள்ளி பாடுவாள்
இது ஆறாவது -இதுவும் தாய் பாசுரம்

வெருவாதாள் பிரவேசம் –

தன்னைப் பேணாதே ரஷிக்குமவன்
(ஸ்ரீ யபதியாய் இருந்தும் வாமன -நரசிம்ம -மத்ஸ்ய -அன்னமாயும் -ராம கிருஷ்ணாதி அவதரித்து )
சந்நிஹிதனாய் இருக்க
அபேஷை உண்டாய் இருக்க
அபிமதமான கைங்கர்யம் பெறாமையாலே
தமக்குப் பிறந்த அவஸாத அதிசயத்தை

பகவத் விரஹத்தால் வந்த ஆற்றாமை யோடே இருக்கிறாள் ஒரு பிராட்டி
தசையை அனுசந்தித்து –
அவனை இவளோடு கூட்ட மாட்டு கிறிலேன்-
நோவு படாத படி பண்ண மாட்டு கிறிலேன் –
என்று நோவு படுகிறாள் ஒருத் திருத் தாயார் பாசுரத்தாலே
அருளிச் செய்கிறார் –

(கீழ் பஹு பிரகாரமாக உபகரித்த அனுசந்தானம்
நினைத்தபடி முகம் காட்டப் பெறாமையால்
பார்த்தன் பள்ளி தொடங்கி -துன்பம்
பல திவ்ய தேசங்களில் புகுந்தும் பெறாமையால்
தருகிறேன் என்று முன் பதிகத்தில் சமாதானம் செய்தாலும்
பெறாமையால்
அபேக்ஷிதம் அனைத்தையும் அருளுபவர் எனக்கு உதவ வில்லையே என்று
நாயிகா பாவம்
அதுவும் திருத்தாயார் வார்த்தை யாக அருளிச் செய்கிறார்
என் மகளைச் செய்தனவை
கங்குலும் பகலும் நம்மாழ்வாருக்கு நாயிகா பாவம் திருத்தாயார்
திருவேங்கடம் – நாயிகா பாவம் இல்லை இருவருக்கும்
பேயாழ்வார் –69- நாயிகா பாவம் இருக்கும் சங்கை உண்டே
“முலையோ முழு முற்றும் போந்தில–பெருமான் மலையோ இவள் பரமே திருவேங்கடமென்று
கற்கின்ற வாசகமே” -திருவிருத்தம்,-60– தாய் பாசுரம்
பூர்வ உத்தர வாக்ய சரணாகதி நம்மாழ்வாரும் திரு மங்கை ஆழ்வாரும்
போக மண்டபம் அழகிய மணவாளன் இடம் தானே நாயகி பாவம் ஸ்பஷ்டமாகும் )

(பட்டர் -அனந்தாழ்வான் -தும்மிய ஸ்ரீ வைஷ்ணவர் வ்ருத்தாந்தம் உண்டே இங்கு
திருவரங்கத்தில் திரு வேங்கடம் சொல்ல -தாய் சொன்னதே –
மகள் திருவரங்கம் சொல்ல வயசான தாய் இப்படி சொன்னாள் என்றாரே
தர்மி ஐக்யம் உண்டே )

————————————————-

பெருமாள் உடைய இங்குத்தை வரவாறே பிடித்து
ஆற்றாமைக்கு உடலாம்படி காணும்
பிறந்த ப்ராவண்ய அதிசயம் –
திருப் பாண் ஆழ்வார் -அன்று நேர்ந்த நிசாசரரை -என்று ராவண வதம் தொடங்கி
பெருமாளை அடி ஒத்தினார் –
அது தெற்கு திரு வாசலாலே (நான்முகன் கோட்டை வாசல்)புகுந்து கிடந்தது –
மந்தி பாய் -என்று பரம பதமே தொடங்கி அடி ஒத்தினார் -(விண்ணவர் கோன் -நீதி வானவர் )
திரு மலையிலே புகுந்து கிடந்தது
அங்கே பார்த்த வாறே நின்ற படியைக் கண்டார் -(வானவர்கள் சந்தி செய்ய நின்றான் )
இன்னமும் போக்கிலே ஒருப்பாடு தோற்றி இருந்தது என்று
அவ்விடமே தொடங்கி
அடி ஒத்தினவாறே வடக்குத் திரு வாசலாலே புகுந்து
படுக்கை இங்கேயாய்  இருந்தது -என்று
பட்டர் அமலனாதி பிரான் அருளிச் செய்யா நிற்க
நான் கேட்டேன் என்று பிள்ளை(நம்பிள்ளை ) அருளிச் செய்தார் –
(அரையர் திருவேங்கட யாத்திரை செல்ல திரு உள்ளம் -பாசுரம் பாடச் சொல்லி –
போகாமல் ஒழிந்த ஐ திக்யம்
வட திரு வேங்கடம் -அரங்கம் -நின்றான் அணையான் )

(கீழே அரங்கத்தை
கோயிலை அன்றோ வாய் வெருவுவது
இஷுவாகு லப்தாய–விபீஷண -குலதனம் -உண்டே -அது தானே வரவாறு
இதற்கு திருப்பாண் ஆழ்வார் பாசுரம் பிரமாணம்
முதல் பாட்டில் -விண்ணவர் கோன் -விரையார் பொழில் வேங்கடவன் -அரங்கன் -நீதி வானவன் பரமபதம்
திரு உலகு அளந்து -காகுஸ்தன் இரண்டாம் பாட்டு
மந்தி பாய் -திரு வேங்கை அனுபவம்
அரி உருவையும்
ஆல பாலகனாய்
வெண்ணெய் உண்ட வாயனையும்
அனுபவித்து போந்து எல்லாம்
மற்று ஒன்றைக் காணாவே-என்று நிகமனம் –
இவரே அவராக இருந்து இங்கே வந்து சேர்ந்தவர் என்பதைக் காட்டியவாறே
இவரும் ஆலிலை மேய –ராம கிருஷ்ணாதிகளை -பெரிய பெருமாளாகவே அவதாரங்களைக்
கீழேயே அனுபவித்து
சேஷமாக திரு வேங்கடமும் சொல்ல வேண்டியதால் இங்கும் வேங்கடமே வேங்கடமே என்கிறாள்
அதிமாத்ர ப்ராவண்யத்துக்குச் சேர அடி ஒத்தின அவ்வளவு தான்
ப்ரேமம் இங்கேயே தான் என்றவாறு
ஆகவே பட்டர் திரு வாசல்களில் புகுந்து வந்தமை அருளிச் செய்கிறார் )

வெருவாதாள் வாய் வெருவி வேங்கடமே  வேங்கடமே என்கின்றாளால்
மருவாளால் என் குடங்கால் வாள் நெடுங்கண் துயில் மறந்தாள் வண்டார் கொண்டல்
உருவாளன் வானவர் தம் உயிராளன் ஒலி திரை நீர்ப் பௌவம் கொண்ட
திருவாளன் என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் சிந்திக்கேனே—-5-5-1-

என்கின்றாளால்-என்கின்றாள் ஆல் -விஷாத ஸூசகம் –
மருவாள் என் குடங்கால் -குடங்கால் இருக்க கில்லாள் -திரு நெடும் தாண்டகத்திலும்-11- உண்டே
துயில் மறந்தாள்-பள்ளி கொள்ளாள்-திரு நெடும் தாண்டகத்திலும்-11- உண்டே

வெருவாதாள் –
அஞ்சாதாள் -என்றபடி
நெஞ்சில் களவு கலவாமையாலே
தனக்கு ஓடுகிறது சிலருக்கு அஞ்சி மறைத்தல்
சிலருக்கு வெளி இடுதல் செய்யும் பருவம் அல்லாதவள் –
அஞ்ச அறியாதவள் -என்கை –
தன்னால் மறைக்கல் ஆவது எல்லாம் மறைத்தாள் -மறைக்க முடியாமை

வாய் வெருவி வேங்கடமே  வேங்கடமே-
அவ்வளவேயோ
பரத்வத்தை விட்டு
வ்யூஹத்தை விட்டு
விபவங்களை விட்டு
உகந்து அருளின தேசத்தையே
வாய் வெருவி இருக்கும்படியாய் விழுந்தது
ஒரு கால் திருமலை -என்னா-பின்னையும் உள்ளுப் புக அறிகிறிலள்
(வேங்கடத்து அம்மா அப்பா என்றும் இல்லாமல் திவ்ய தேசத்திலே பிராவண்யம் இவளுக்கு )
காட்கரை ஏத்தும் அதனுள் கண்ணா -9-6-7–என்கிறிலள்  –
(திருக் காட்கரை மருவிய மாயன் தன் மாயம் -9-6-1-என்பவர் போல் அன்றே இவர் )

என்கின்றாளால் –
அப்பேச்சு தனக்கு ஆகர்ஷகமாய் இருக்கிற படி –
சீதேதி மதுராம் வாணீம் -என்று சொல்லுகிறவர் தாம்
தீமதாம் -வரராய்
வார்த்தை தான் பிராட்டி விஷயமான பேச்சாய்
பிரிவால் வந்த மிடற்றில் துவட்சியாலே சொல்லுகிறது
சால மதுரமாய் இருக்கும் இறே
(அத்தலை இத்தலை யாயிற்று
இங்கு இவளோ அவனை நினைக்காமல் அவன் இருக்கும் இடம் )

பட்டர் -அழகிய மணவாள பெருமாள் -என்னும் போதும்
அனந்தாழ்வான் -திரு வேங்கடமுடையான் -என்னும் போதும்
பாவ பந்தம் அடையத் தோற்றி இருக்கும்படி காண்-என்று ஜீயர் –
(திரு மங்கை ஆழ்வார் கண்ணபுரம்
சோமாசி ஆண்டான் எம்பெருமானார்
நம்மாழ்வார் திருத் தொலை வில்லி மங்கலம் )

மருவாளால் என் குடங்கால்
மற்று ஒன்றை வாய் வெருவாள்
ஏதேனும் அளவிலும் முன்பு உன் மடியிலே வைத்து ஆற்றப் பார்க்கில் ஆறும் –
நீ அப்படி ஆஸ்வசிப்பித்தாலோ என்ன
பண்டு மருவிப் போந்தவள்
என் மடியிலே இப்போது மருவு கிறிலள்
அது தான் செய்யாமையும் இல்லை –
இவள் இசையாமையும் இல்லை –
அப்படி இவளால் செய்து தலைக் கட்டப் போகிறது இல்லை
தாய் மடி என்று மனிச்சடித்து -மனிச்சடித்து -முறையாலே சலிகை பண்ணி -செல்வாக்கு பண்ணி —
நெருப்பிலே இருக்கப் போகாது இறே –
தாய் மடியும் பொருந்தாத படி ஆர் மடி இவளை இப்படி
துஸ் சிஷை பண்ணி விட்டதோ
அறிகிறிலேன்
என் மடி அல்லது அறியாதவள்
என் மடியில் பொருந்து கிறிலள்  –

மடியில் இராள் ஆகில் படுக்கையிலே வளர்த்தி
உறங்குமாகில் பார்த்தாலோ என்ன –
வாள் நெடுங்கண் துயில் மறந்தாள் –
அது முதலிலே பிடித்து வ்யுத்புத்தி பண்ணுவிக்க வேணும் –

வாள் –
ஓர் ஆளும் ஓர் நோக்கும் நேராய் இருக்கை –

நெடுங்கண்-
போக்தாவால் புஜித்துக் கரை காண ஒண்ணாது காண் –
பெரிய ஊர் குடி வாங்கினாப் போலே
கண்ணில் பரப்பு இத்தனையும் நித்தரை குடி போன படி
ஆகையால் கண்ணில் பரப்பு இத்தனையும் தலைச் சுமை யாய்த்து –
(கரிய வாகி புடை பரந்து மிளிர்ந்து செவ்வரியோடி –நீண்ட அப் பெரிய வாய –
இத்தனை விசேஷணங்கள் வேண்டாத படி நெடுங்கண் இவளுக்கு )

நோ பஜனம் ஸ்மரன்-என்னப் பண்ணினாரைச் சொல்லுகிறது மேல் –
வண்டார் கொண்டல் உருவாளன்
வடிவு அழகாலும்
சேஷ்டிதங்களாலும் ஆகவாய்த்து இப்படி பண்ணிற்று
அகவாயில் ஜலத்தின் உடைய ரஸ்யத்தையாலே
மேகத்தில் வண்டுகள் படிந்து இருக்கும் என்றுமாம் –

(கரை புரண்டு ஓடிடும் காவேரி –அரவம் சுமப்பதும் அஞ்சன மலையே –
அம்மலை பூத்தது அரவிந்த வனமே -அரவிந்த மலர் தோறும் அதிசயம் உளதே )

வண்டு –
செங்கட் கரு முகுலின் திரு உருப் போலே மலர் மேல் தொங்கிய வண்டினங்காள் -( நாச்சியார் திருமொழி )-என்று
வண்டி வடிவுக்கு போலியாச் சொல்லிற்று இறே –

வானவர் தம் உயிராளன் —
இவ்வடிவு தன்னை அரை ஷணம் கண்ணுக்கு இலக்காகாத  படி
மாற வைக்கில் ஒரு நாடாக ஜீவியாத படி பண்ணுமவன்

ஒலி திரை நீர்ப் பௌவம் கொண்ட திருவாளன்
கடலைக் கடைந்து பிராட்டியை லபித்தவன் —

என் மகளைச் செய்தனகள் –
அவளைப் பெறுகைக்கு செய்தது இத்தனையும்
போருமாய்த்து
இவளை நோவு படுத்துகைக்கு செய்ததுவும் –

எங்கனம் நான் சிந்திக்கேனே-
இவள் தன் சர்வ ஸ்வத்தையும் நேர்ந்து செய்தத்தை
என்னாலே நினைக்கப் போமோ

அவன் அகப்படுத்த
இவள் குமிழி நீர் உண்ணும் இத்தனை ஒழிய
கரையிலே நிற்கிற என்னால்
இன்னபடி -என்று நினைக்கப் போமோ –

——————————————-

மெய்ய மலையாளன்
மெய் மறந்தாரா மெய்யையே மறந்தாரா
கீழ் வட வேங்கடம்
தெற்கில் திரு மெய்யம்
பொய்ய மலை என்று எண்ணி
விரஹத்தால் இளைத்து வாய் வெருவுகிறாள்

கலையாளா வகலல்குல்  கன வளையும் கை யாளா என் செய்கேன்  நான்
விலையாளா வடியேனை வேண்டுதியோ  வேண்டாயோ என்னும் மெய்ய
மலையாளன் வானவர் தம் தலையாளன் மராமரம் ஏழு எய்த வென்றிச்
சிலையாளன் என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் சிந்திக்கேனே –5-5-2-

கன-கனக -ககாரம் குறைந்து உள்ளது –
விலையாளா-கிரய விக்ரய அர்ஹதை – கைங்கர்யம் கொள்ள

கலையாளா வகலல்குல்  –
அடியில் அகன்று இருக்கும்  நிதம்ப பிரதேசம் ஆனது -அடியில் -விச்லேஷத்துக்கு  முன்பு –
இப்போது விரஹ க்ருசம் ஆகையாலே
பரியட்டத்தை ஆளுகிறது இல்லை

கன வளையும் கை யாளா –
ஸ்லாக்கியமான வளை கையிலே தங்குகிறது இல்லை –

என் செய்கேன்  நான்-
இவள் பர்யட்டப் பண்பும்
கையும் வளையுமே ஜீவனமாய் இருக்கக் கடவ
நான் எத்தைச் செய்வேன் –

1-பர்யட்டத்தையும் வளையும் தங்கும்படி பண்ணுவேனோ-
2-இவளை ஈடுபடாதபடி பண்ணுவேனோ-
3-அவனை ஆளாகக் கொள்ளும்படி பண்ணுவேனோ-
எத்தைச் செய்வேன் –

விலையாளா வடியேனை வேண்டுதியோ  வேண்டாயோ என்னும் –
இது இரண்டு படி –
விலையை ஆளாத அடியேனை
உன்னாலும் பிறர்க்கு ஆக்க ஒண்ணாத படி அனந்யார்ஹை யான என்னை

அன்றிக்கே
விலை யாளாக –
உனக்கு க்ரய விக்ர யர்ஹையாக
இஷ்ட விநியோஹ அர்ஹையாக
என்னை (ஜீவிக்கும் படி )கொள்வுதியோ (ஜீவிக்காதபடி )கொள்ளாயோ
நான் ஜீவியாது ஒழிய என்னும்
தாவத்த்யஹம்( ஸூந்தர –31)-இத்யாதிவத்  –
(ஸ்நேஹம் காட்டுவதில் எனக்கு சமமாக மேம்பட்டவர் இல்லை-அவர் முடிவு
அறியும் வரை உயிர் உடன் இருப்பேன் -தூதர் இடம் பிராட்டி )

மெய்ய மலையாளன் வானவர் தம் தலையாளன் –
அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்து வைத்து –
தன் சௌலப்யத்தைக் காட்டி
விலையாளா யடியேனை வேண்டுதியோ -என்று
இவளை இட்டு சொல்லுவித்துக் கொள்ளுகைகாக
திரு மெய்யத்திலே வந்து சந்நிஹிதன்   ஆனான்

மெய்ய மலையாளன் வானவர் தம் தலையாளன்
இமையோர்க்கு என்னும் முன்னானாய் பின்னானார் வணங்கும் சோதியில் போலே –
யத்ர பூர்வே சாத்யாஸ் சந்தி தேவ -என்கிறபடியே
முற்பாடரான ஸூரிகளுக்கும் அவ்வருகாய் இருந்து வைத்து
இவ்வருகு உண்டான பிற்பாடருக்கும்
உதவுகைக்காக இறே இங்கு வந்ததும் –
(வைகுண்ட நாதன் அவனே மராமரம் எய்த ராமன்-ஸுவ்லப்யம் காட்டி )

மராமரம் ஏழு எய்த வென்றிச் சிலையாளன்
தன்னைக் கொண்டு கார்யம் கொள்ளாதார்க்கும்
மழு ஏந்திக் கொடுத்துக் கார்யம் செய்யுமவன் அன்றோ

என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் சிந்திக்கேனே
மகா ராஜரை விஸ்வசிப்பைக்காக செய்தது இத்தனையும்
போரும் யாய்த்து
இவளை விஸ்வாசம் குலைக்குக்கு செய்ததுவும்
தானே ரஷகன் என்று இருக்கும் இவளை
வாய் விட்டுக் கூப்பிடும்படி பண்ணினானே
பெறுவிக்குமதைப் பார்த்தால் –
நமக்கு ஓன்று செய்யப் பிராப்தி உண்டோ -என்று இருக்கிறாள் இவள்
பெறுவது அவனை யானால் இருந்த இடத்தே இருக்கப் போமோ -என்று இருக்கிறாள் மகள் –

(வெறுத்து உள்ள திருத்தாயார்
விச்வாஸ ஹேது சொன்னது
அவ்வளவும் இவளை நோவு படுத்த
சுக்ரீவனுக்கு இஷ்ட அநிஷ்ட பிராப்தி பரிகர்த்வம் உபாயமாக கையில் வில் பிடித்து நிலை நாட்டிக் கொண்டவர்
இது எல்லாம் சத்ய பர்வதம் வந்து ப்ராப்ய வைலக்ஷண்யம் காட்டி -இவளது அத்யாவசியம் போக்கி
இங்கு இவள் தவிக்க
உறுதியை குலைத்து-ப்ராப்ய த்வரையால் கதற
வேண்டுதியோ வேண்டாதாயோ
இவள் புருஷார்த்தம் பெற துடிக்க
தாயார் உபாயம் என்று நினைப்பானோ என்ற கவலை
சுக்ரீவன் -உபாயம் அறியாமல் இருக்க -செய்தது அத்தனையும் இவளது விசுவாசம் குலைக்க வே
தானே ரக்ஷகன் -என்று இருப்பவள் வாய் விட்டு கூப்பிடும்படி பண்ணி
அவனைப் பார்த்தால் நமக்கு ஒன்றும் செய்ய வேண்டாம் தாய்
அடைவது அவன் ஆகில் இருக்கும் இடத்தில் இருக்க ஒட்டுமோ
உபாயம் என்று நினைப்பானோ அதி சங்கை தாயாருக்கு )

———————————————————

பதினாறாயிரம் பெண்களை உஜ்ஜீவிப்பித்தவன்
வாசி அறிந்து வருவான்
சொல்லி உறங்கப் பண்ணி இருக்கலாகாதோ என்று சொல்ல
அவர்களைக் குறித்து காடு வாழ் சாதியானவன் அன்றோ எவ்வாறு சொல்வேன் என்கிறார் –

மானாய மென்னோக்கி வாள் நெடுங்கண் கண்ணீர் மல்கும் வளையும் சோரும்
தேனாய நறுந்துழாய் அலங்கலின் திறம் பேசி  யுறங்காள் காண்மின்
கானாயன் கடி மனையில் தயிர் உண்டு நெய் பருக நந்தன் பெற்ற
ஆனாயன் என் மகளைச் செய்தனகள் அம்மனைகீர் அறிகிலேனே–5-5-3-

பெற்ற-லபித்த -எடுத்த பேராளன் -புதையல் போல் அன்றோ லபித்தான் –

மானாய மென்னோக்கி –
முக்தமாய்
மிருதுவான நோக்கை உடையவள் –

வாள் நெடுங்கண் கண்ணீர் மல்கும் –
எதிர் தலையில் கண்ண நீரை உண்டாக்கக் கடவ
வாள் -என்று ஒளியாகவுமாம்
ஓர் ஆளும் ஓர் நோக்கும் நேரானது என்றுமாம்
நெடும் –
போக்தாவின் அளவில்லாத கண்
கண்ண நீரையும் தாங்கப் போகிறது இல்லை –

வளையும் சோரும்-
வளையையும் தாங்கப் போகிறது இல்லை –

நித்ரையாலே போது போக்கப் பார்த்தாலோ என்ன –
தேனாய நறுந்துழாய் அலங்கலின் திறம் பேசி  யுறங்காள் காண்மின்
ஒரு தேன் வெள்ளமே
ஒரு செவ்வியே
ஒரு தொடை அழகே
ஒரு குளிர்த்தியே
ஒரு மணமே
என்னா நின்றாள்  –

கானாயன் கடி மனையில்
தான் என்ன கார்யத்துக்காக வந்தான்
இப்போது செய்து திரிகிறது என்னம்புது என்று ஒன்றும் அறிகிலேன்
கானாயன் –
கானம் சேர்ந்து -என்னும்படி காட்டிலே தங்குமவன்
நாகரிகர் செயலிலே அன்வயிப்பதே
காட்டிலே மரங்களின் வாசி அறியக் கடவன்
பெண்களின் வாசி அறிவதே
கடி –
என்று அரண்
துன்னு படல்களை இட்டடைத்து சேமித்து  வைப்பார்கள் இறே

தயிர் உண்டு நெய் பருக நந்தன் பெற்ற –
நெய் உண்ணோம் பால் உண்ணோம் -கோபிமார் வார்த்தை
இது தாயார் வார்த்தை

மஹதா தபஸா சாபி தேவர்கள் அமிருதம் பெற்றால் போலே -என்று
சக்கரவர்த்தி நாடாள ஒரு பிள்ளை பெற வேணும் என்று
ஒரு நோன்பு நோற்று பெற்றால் போலே
கவ்யங்கள் பாழ் போக ஒண்ணாது
இவற்றை புஜிப்பான் ஒரு பிள்ளை வேணும்
என்று இதுக்கு அன்றோ இவனைப் பெற்றது –

ஆனாயன் என் மகளைச் செய்தனகள் அம்மனைகீர் அறிகிலேனே
பசுக்களை மேய்க்கும் அவனோ தான்
யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா சஹா-என்கிற
பகவத் உத்கர்ஷத்தை சிறிது அறியலாம்
ப்ரணய தாரையில் அவன் செய்து நிற்கிற இவை
என்னால் ஒன்றும் அறியப் போகிறன வில்லை   –
அறிகிறிலேனே-

கீழ் சொன்னவை ஒரு திங் மாத்ரம் இத்தனை
என்னால் அறியப் போகாது –
திங் மாத்ரம்-திக்கு ஏக தேசம் அல்பம் என்றபடி

——————————————————

அறிகிலேன் சொல்லக் கடவையோ
ஹித பரையான நீரும் பிரிய பரையான தோழிகளும் இருக்க வசப்படுத்தக் கூடாதோ -என்னில்
எங்கள் இருவரையும் த்யாஜ்ய கோடியில் ஆக்கி
வெண்ணெய் உண்ட வாயன் பள்ளி கொண்ட கோயிலையே பிதற்றுகிறாள் –

தாய் வாயில் சொல் கேளாள் தன் ஆயத்தோடு அணையாள்  தட மென் கொங்கை
யே யாரச் சாந்து அணியாள் எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும்
பேய் மாய முலை உண்டு இவ் வுலகுண்ட பெரு வயிற்றன் பேசில் நங்காய்
மா மாயன் என் மகளைச் செய்தனகள் மங்கைமீர் மதிக்கிலேனே —5-5-4

தாய் வாயில் சொல் கேளாள் –
ஏதேனும் தசையிலும் தாய் சொல்லிற்று செய்ய வேணும் இறே
ஜீவதோர் வாக்ய கரனாத்
(ப்ரத்யர்த்தம் பூரி போஜனாதி கயாயாம் பிண்ட தானாயா -இருக்கும் பொழுது சொன்ன சொல் படி கேட்கணும்)
தனக்கு ஓடுகிற பிரேமத்துக்கு அபிமதமாக
நான் வார்த்தை சொல்லினும்
தாய் வார்த்தை அன்றோ என்று இரா நின்றாள்
(தாய் வாயில் -விசேஷித்து சொன்னது தாய் என்பதே ஹேதுவாக
என் வாய் சொல்லாமல் தாய் வாய்
தாய் சொல் இல்லாமல் வாயில் அஹ்ருதயமாகப் பிரியமானத்தைச் சொன்னாலும் கேட்க மாட்டாள் )

கேளாள் –
அனுஷ்டியாது ஒழிய வமையாதோ
ஹிதம் சொல்லும் த்யாஜ்ய கோடியை விடுகிறாள்
பிரியம் சொல்லும் உபாதேயரை உபேஷிக்க வேணுமோ

தன் ஆயத்தோடு அணையாள்  –
தோழி மாறும் தாய்மாரோ பாதியாய் விட்டது
மாதரம் -என்றவோபாதி சகீன் இறே-( பிதரம் மாதரம் –ஸகீன் குரூன் -த்யஜ்ய )
இங்கே வந்தால் அன்னை பக்கல் அணை உண்டு
வார்த்தை கேளாது ஒழிகிறது இத்தனை
அவர்கள் பக்கல் அணைகையே பிடித்து செய்கிறிலள்
அவர்களை இட்டு வளைத்துக் கொள்ளலாம் என்னும் இடமும் போய்த்து –

தட மென் கொங்கையே யாரச் சாந்து அணியாள் –
தாய்மாரையும் தோழி மாரையும் விட்டால்
அவனை உபேஷிக்க வேணுமோ
அவன் வரக் கடவனே -ததர்த்தமாக பண்ணும் வியாபாரங்களை
தவிர்ந்தாள் என்றபடி –

போக்யதையாலும் பெருத்து
விரஹ சஹம் அல்லாத படி மிருதுவாயுமாய் இருக்கையாலே
அத்தையே பேணும் ஆய்த்து அல்லாத காலங்களில் –
கொங்கையே  ஆர-
அவன் வந்து இருந்தாலும் அவனை த்ருணீகரித்து
இத்தனையே பேணும் இத்தனை காண் –

கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழிய புகுந்து ஒரு நாள் தங்குமேல் – 
என்கிறபடியே விரஹ தசையிலும்
அவன் வருவான் என்று அலங்கரித்து இருப்பாள்

எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும்-
தாயையும் அல்லாதாரையும் ஒக்க அபேஷிக்கும் படி
நிருபாதிக பந்துவான தன் பக்கலிலே பாவ பந்தத்தை
பிறப்பிக்கிறவன்
வர்த்திக்கிற தேசம் எங்கே -என்னா நின்றாள்
ஸ்வாமித்வம் இவை போலே ஔபாதிகம் அல்ல இறே
(இவை போலே-தாய் தோழி கர்மாதீனம் தானே
நிருபாதிக பந்து கிட்டிய பின் சோபாதிகம் விட்டேன்
திரு வரங்கம் போகாமல் இருப்பதால் கொங்கையில் சிறிதும் சாந்தி அணிய வில்லை )
எம்பெருமான் -என்னைத் தோற்பித்தவன் என்றே காணும் அவனை அறிவது
இது இறே நமஸ் சப்தார்த்தம் –

பேய் மாய முலை உண்டு -இவ்வுலகுண்ட பெரு வயிற்றன் பேசில் –
பேயினுடைய தாய் முலையாக வஞ்சித்து
கொடு வந்த முலை என்னுதல் –
பேய்  மாயும்படியாக என்னுதல் –
அனுகூல ரஷணத்தோடு
விரோதி நிரசனத்தோடு
வாசி இல்லை யாய்த்து அவனுக்கு ஊணாக –

நங்காய்-
மைத்ரேய -என்னுமா போலே

மா மாயன் என் மகளைச் செய்தனகள் –
பிரிவில் முடிய ஒண்ணாத ஆஸ்ரயங்களை உடையவன் –
ஒரு பால்யத்திலே பேய் முலை உண்பதாம்
செய்வது அறியாதே என் மகளைச் செய்தன

மங்கைமீர் –
நீங்களும் எல்லாம் ஒரு பருவம் ஸ்த்ரீத்வம்
உடையிகோளாய்  இருக்கிறிகோள் இறே –

மதிக்கிலேனே-
என்னால் இவ்வளவு என்று பரிச்சேதிக்கப் போகிறது இல்லை –

———————————————–

தாயும் தோழியும் த்யாஜ்யம் என்றால்
தானே ஆதரித்த லீலா உபகரணங்களைக் காட்டி ஆற்ற ஒண்ணாதோ என்ன
அதுவும் கார்யகரம் ஆகிறது இல்லை –

பூண் முலை மேல் சாந்தணியாள் பொரு கயல் கண் மை எழுதாள் பூவை பேணாள்
ஏண் அறியாள் எத்தனையும் எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும்
நாண் மலராள் நாயகனாய் நாம் அறிய வாய்ப்பாடி வளர்ந்த நம்பி
ஆண் மகனாய்  என் மகளைச் செய்தனகள் அம்மனைமீர் அறிகிலேனே —5-5-5-

எம்பெருமான்-கீழே ஸ்வாமித்வம் இங்கு அபகரித்த சர்வேஸ்வரன் –

பூண் முலை மேல் சாந்தணியாள் பொரு கயல் கண் மை எழுதாள் பூவை பேணாள்
பூண் முலை –
முத்தாரம் பூண்டு இருக்கிற -என்னுதல்
தானே ஆபரணமான முலை -என்னுதல் –
பொரு –
வேறு ஒன்றால் தன்னேற்றம் செய்ய ஒண்ணாத கண்களில்
மங்கள அர்த்தமாகவும் அஞ்சனம் எழுது கிறிலள்
பூவை –
தன்னது என்னத் தொடங்குவதுக்கு முன்னே
பேணிப் போரும் அவற்றையும் பேணு கிறிலள் –
(உன்னது என்னது என்று எம்பெருமான் இடம் சீறு பாறு சண்டை இப்பொழுது தானே –
அதுக்கு முன்பே பேணி இருக்கும் இவற்றையும் )

ஏண் அறியாள் –
அனுசந்தேய பதார்த்தம் இன்னது என்று
லோக யாத்ரையில் ஒன்றும் அனுசந்திக்கிறிலள்

எத்தனையும் எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும்
அதில் மனஸ் சஹகாரமும் வேண்டுகிறது இல்லை

(ஏக தேசமும் -பெருமானையும் லோக யாத்திரையும் எண்ண மாட்டாள்
ஆனால் திருவரங்கம் -மனஸ் ஸஹகாரம் வேண்டாதபடி வாயே கேட்க்கும்
மனோ பூர்வ வாக் உத்தரம் நிலை கடந்து மனாஸ் அவன் இடம் போனதே )

நாண் மலராள் நாயகனாய் நாம் அறிய வாய்ப்பாடி வளர்ந்த நம்பி
நாண் மலராள் –
ஸ்ரீ யபதி என்று ஒருத்தியை இட்டு அன்றோ
தம்மை வ்யபதேசிப்பது
(தன்னைப் படுத்தின -அவன் ஸ்ரீ யபதித்தவம் வெறுப்பாக தாத்பர்யம்
இப்படி படுத்தினால் அவள் முகம் கொடுப்பாளோ என்றபடி
இவனது ஸ்வரூப நிரூபகமே அவளாலே தான் )

நாம்  அறிய –
இது ஒரு பழங்கிணறு காண வர வேணுமோ
இவ்விசை இருந்தபடி எல்லாரும் அறியாமோ
(தூறு வார வேண்டுமோ
ஸ்ரீ பூமி நீளா தேவிமார் உடன் அமர் காதல் மகளிர்
ஆஷேபமே இல்லையே )

நம்பி-
பெண்களுக்கு கையாளாய்
அத்தாலே தன்னைப் பூர்ணனாக நினைத்து இருக்குமவன் அன்றோ

ஆண் மகனாய்
இவ்வளவில் வந்த வாறே -பதிம் விஸ்வஸ்ய -என்று
பிரபுத்வம் கொண்டாடா நின்றான் –
பெண் அடியான் முதன்மை கொண்டாடுவதே-

என் மகளைச் செய்தனகள் -அம்மனைமீர் அறிகிலேனே
இவள் ஒருத்தி அளவும் குறையும் காட்டில்
தம்முடைய முதன்மை ஒறுவாய்ப் போமோ  –

————————————————-

லீலா உபகரணங்களை உபேக்ஷிக்கும் படி கை கழிய விடலாமா
நா நா விதமாக ஹிதம் சொல்ல வேண்டாமோ என்ன
காதில் ஒன்றுமே ஏறாமல் திருவரங்கம் என்றே சொல்கிறாளே –

தாதாடு வன மாலை தாரானோ என்று என்று தளர்ந்தாள் காண்மின்
யாதானும் ஓன்று உரைக்கில் எம்பெருமான் திருவரங்கம் என்னும் பூ மேல்
மாதாளன் குடமாடி  மது சூதன் மன்னர்க்காய் முன்னம் சென்ற
தூதாளன் என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் சொல்லுகேனே–5-5-6-

தாதாடு வனமாலை தாரானோ என்று என்று தளர்ந்தாள் காண்மின்
தாது மாறாத –
ஆடுகை யாவது -நடை யாடுகை
காட்டிலே தானும் தன்னேராயிரம் பிள்ளைகளும்
கூடப் பறித்து செவ்வி அழியாத மாலையை –
அது பரார்த்தம் என்று இருந்தோம் –

என்று என்று தளர்ந்தாள்-
அத்தை தாரானோ -என்று வெண்கலத் த்வநி போலே
ஒரு சொல்லுக்கு   ஒரு சொல்லு  ஓயா நின்றாள் –
இனி இந்த த்வனி தானும் கேளாது ஒழியப் புகுகிறேனோ –

யாதானும் ஓன்று உரைக்கில் எம்பெருமான் திருவரங்கம் என்னும்
இத்தனை அதி மாத்ர ப்ராவண்யம் ஆகாது காண்
இது குடிப் பிறப்புக்கு போராது காண்
இது தர்மி லோபத்தைப் பலிப்பிக்கும்  காண்
அவன் ஸ்த்ரரைணன் காண் ( பெண்கள் இடத்தில் காமுகன் காண்) -என்று ஒரு ஹித வசனம் பண்ணினால்
அதுக்கு உத்தரமாக என்னை அனந்யார்ஹை ஆக்கினவன் வர்த்திக்கிற தேசம் என்னா நின்றாள் –

பூ மேல் மாதாளன் –
ஒருத்தியை அநபாயினி யாம்படி பண்ணுவிக்கிறவன் அன்றோ –
பிரிவு என்று அறியாதபடி பண்ணுவிக்கிறவன் அன்றோ   –
(அபாயம் பிரிவி -அநபாயம் -பிரிவு இல்லாதபடி )

குடமாடி  –
பெண்களுக்காக மன்றிலே
தன்னை ஸ்வ ஸ்தானம் பண்ணினவன் அன்றோ
மங்கையர் தன் கண் களிப்ப கொன்னவிலும் கூத்தனாய் -பெரிய திரு மடல்
(கொன்னவிலும்–கொல்லுகையை நவிலும் கூத்தன் ஆட்டம் பார்க்கும் பர கால நாயகியை )
அவன் கையில் படுமது நன்று ஆய்த்து –

மது சூதன் –
ஆஸ்ரித விரோதி நிரசனமே என்றும் ஒக்க
யாத்ரையாய் போருமவன் –

மன்னர்க்காய் முன்னம் சென்ற தூதாளன் –
உகந்தாருக்கு தன்னை அழிவுக்கு இடுமவன் –

என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் சொல்லுகேனே
இப்போது இவளை அழிவுக்கு இட்டு
தன்னைக் கொண்டு எழ நிற்கிற படியை
என்ன பாசுரம் இட்டுச் சொல்லுவேன் –

——————————————-

ஹித வசனம் பலியாத படி
மெய் மறந்தாளோ
நாங்களும் பெண்ணைப் பெற்றுள்ளோம் என்ன
இவளைப் போல் அன்றே உமது பெண்கள் –

வாராளும் இளம் கொங்கை வண்ணம் வேறாயின  வாறு  எண்ணாள் எண்ணில்
பேராளன் பேரல்லால் பேசாள் இப் பெண் பெற்றேன் என் செய்கேன் நான்
தாராளன் தண் குடந்தை நகராளன் ஐவர்க்காய் அமரில் உய்த்த
தேராளன் என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் செப்புகேனே—5-5-7-

இப் பெண் -உள்ளே சந்தோஜம் தோன்ற சொல்கிறாள் –

வாராளும் இளம் கொங்கை வண்ணம் வேறாயின  வாறு  எண்ணாள் –
போக யோக்யமாய் -இலக்கைக் காட்டு காட்டு -என்று கிளர்ந்து வருகிற
சொல் கேளாப் பருவமான முலையானது-
வாராலே தாங்க வேண்டும்படியாய்
காட்டு காட்டு என்று வளருகிற முலை யானது
அபேஷிதம் பெறாமையாலே
தன்னிறம் மாறி விவரணம் ஆகிறபடி ஒன்றும் எண்ணு கிறிலள் –

ஸ்வ விஷயத்தில் ஞானம் ஒன்றும் இல்லை
விஸஸ்மார ததாத்மானம் -தன் தசையை எண்ணாதவள்
வேறு ஒன்றை எண்ணுகை இல்லை இறே-

எண்ணில்-பேராளன் பேரல்லால் பேசாள் –
எண்ணாது இருக்கும் போதாய்த்து பெரிது
அர்த்தாத் ஒன்றை எண்ணில்
சர்வாதிகனான சர்வேஸ்வரன் திரு நாமம் அல்லது சொல்லாள் –
அவாப பரமாம் காஷ்ட்டாம் மனசாஸ் சாபி சமயமே -இறே
ஆகையால் எண்ணுவதும் இல்லை
மன பூர்வகமாகச் சொல்லுவதும் இல்லை –

இப் பெண் பெற்றேன் என் செய்கேன் நான்    –
புறம்பு ஒன்றை நினையாமையும்
பகவத் விஷயத்தில் நினைவும் சொலவும் மாறாது இருக்கிற படியையும்
அனுசந்தித்து
பிறருக்கு  வெறுக்கிறாளாய்
தன் களிப்பு தோற்ற வார்த்தை சொல்லுகிறாள் –

ஸ்வ விஷயத்திலும் இதர விஷயத்திலும் விரக்தியும்
பகவத் விஷயத்தில் ப்ரீதியும் மாறாதே
செல்லும்படியாய் இருப்பாள் ஒரு பெண் பிள்ளையை
என்னைப் போலே புறம்பு பெற்றார் உண்டோ –
என்கிறாள் –

தாராளன் –
ரஷணத்துக்கு தனி மாலை இட்டு இருக்கிறவன் கிடீர்
ஸ்திரீ வதம் பண்ணுகிறான்

தண் குடந்தை நகராளன் –
குறைவற்றாரான நித்ய ஸூரிகளுக்காக அன்றிக்கே
குறைவாளர் உடைய ரஷணத்துக்காக கிட்டப்
படை வீடு செய்து கொடு கிடக்கிறவன் கிடீர் –

ஐவர்க்காய் அமரில் உய்த்த தேராளன் –
அத்தை அனுஷ்டான பர்யந்தம் ஆக்கி
உகந்தார்க்கு தன் மார்வில் அம்பு ஏற்குமவன் கிடீர்
தேசம் அறிய ஓர் சாரதியாய் திருவாய் மொழி -என்று
எல்லாரும் காண தன்னை சாரதி யாக்கி
ஆஸ்ரிதர்க்காக தன்னை அழிய மாறுமவன் இறே
(தேசம் அறிய ஓர் சாரதியாய்-ஆத்மாநாம் சாரதிம் பார்த்தன் ரதிம் சர்வ லோக
சாக்ஷியாக சகார- ராமானுஜர் இத்தையே வடமொழியாக்கி )

என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் செப்புகேனே
அப்போது பீஷ்மாதிகள் அம்புக்கு தன்னை இலக்கு ஆக்கினால் போலே
இப்போது தனக்காக இவளை காம ரசத்துக்கு இலக்கு ஆக்குகிறான்
இப்போது இவளை அழிவுக்கு இட்ட படி
என்னாலே பேசப் போமோ -என்கிறாள் –

———————————————————–

இப்பெண் பெற்றேன் பூட பாவமாக உகப்பு உள்ளிருக்க
அவர்கள் பாவஞ்ஞாராய் -பாவம் அறியாமல் –
உன்னையே நாட்டார் பழி சொல்லாரோ நீ உபேக்ஷிக்கலாமோ என்ன
பழி ஊர் பேச்சையே எருவாக காதல் பெருகிற்றே என்கிறாள்

உறவு ஆதும் இலள் என்று என்று ஒழியாது பலர் ஏசும் அலர் ஆயிற்று ஆல்
மறவாதே எப்பொழுதும் மாயவனே மாதவனே என்கின்றாளால்
பிறவாத பேராளன் பெண்ணாளன் மண்ணாளன் விண்ணோர் தங்கள்
அறவாளன் என் மகளைச்   செய்தனகள் அம்மனைமீர் அறிகிலேனே—-5-5-8-

பிறவாத-பிறப்பிலி என்றும் நம் ஜென்மம் போக்குபவனாயும் –

உறவு ஆதும் இலள் என்று என்று ஒழியாது பலர் ஏசும் அலர் ஆயிற்று ஆல்-
பெற்றாரோடு தோழி மாரோடு வாசி அற இவள் இப்படி
கண்ணுருவதே என்பார்கள் –
பழைமைகள் பார்த்து ஒன்றும் உறவுடையாளாய் இருக்கிறிலள்

பிதா நாம மூர்த்தஸ் சிரோரோக -என்றாய்த்து இருக்கிறது –
(தலை வேதனையின் உருவமே அப்பா )
த்ருஷ்ட்வா ஸ்த்தித்வா பஹிர் குரும்-(சிந்தயந்தி பற்றியது )-இதுக்கு பட்டர்
இவள் கிருஷ்ண விஷய பிரேமத்தில் புதியது உண்டிலள் காண்-என்று
அருளிச் செய்தார் -சிலரைக் கண்ணுக்கு தோற்றிற்று
இறே என்று
காசித் -ஒருத்தி புறப்பட்டு கிருஷ்ணன் பாடேறப் போனாள்
வழி காட்டினார் ஆர் என்ன
ப்ரேமாந்தா -பிரேமத்தால் இருண்டது
அவ்விருட்சி வழி காட்டப் போனாள்
இத்தையே சொல்லி விடாதே
பலர் ஏசும்படி
பழியாய் விழுந்தது –

மறவாதே எப்பொழுதும் –
ஸ்மாரகர் உண்டாக மறுப்பு வாராதே இறே
இவளையும் அவனையும் சொல்லி அடுத்து இறே பழி சொல்லுவது –
(நினைவு படுத்துகிறார்கள் அன்றோ இவர்கள் )

இப்படி பழி சொல்லுகிற போது
அவள் செய்கிறது என் எண்ணில் –

மாயவனே-
ஆசர்ய குண சேஷ்டிதங்களை உடையவனே

மாதவனே –
பிரணய தாரையிலே அவளுக்கு
ஆனைக்கு குதிரை வைக்கையாலே
பரம ரசிகன் ஆனவனே

என்கின்றாளால் –
என்னா நிற்கும்
அதாவது
கலக்கிற இடத்தில் தாழ நின்று பரிமாறின  படியையும்
அதுக்கடியான சீலத்தையும்
கலந்த போதை பரிமாற்றத்தின் வகைகளையும் –
இதில் ஸ்ரோத்ரியன் ஆகைக்கு வ்யுத்புத்தி பண்ணின இடத்தையும்
சொல்லா நிற்கும் –

பிறவாத பேராளன்-
ஆஸ்ரித அர்த்தமாக நூறாயிரம் படி
பிறவா நிற்கச் செய்தேயும்
ஒன்றும் செய்திலனாய்
ருணம் பிரவர்த்தமிவ -என்னும்படியான
ஆஸ்ரித விஷயத்தில் வ்யாமோஹாதிசயத்தை உடையவன்
பெரியோன் என்றபடி –

அன்றிக்கே
பிறவியை அறுப்பதான திரு நாமத்தை உடையவன்
துக்க நிவர்தகமான திரு நாமங்கள் கிடீர்
இவளுக்கு துக்கத்தை பண்ணுகிறது –

பெண்ணாளன் –
பெண் பிறந்தார் அடைய இப்படி பண்ணுமவன்
நங்கைமீர் -இத்யாதி –

மண்ணாளன் –
ரஷிதா ஜீவ லோகஸ்ய -ஸ்ரீ இராமாயண ஸ்லோகம் –

விண்ணோர் தங்கள் அறவாளன்-
நித்ய ஸூரிகள் தன் ஆன்ரு சம்சயத்தைக் கொண்டாட
அவர்களுக்கு ஓலக்கம் கொடுக்குமவன் –

என் மகளைச்   செய்தனகள் அம்மனைமீர் அறிகிலேனே –
இவள் அளவில் அவன் பண்ணின ஆன்ரு சம்சய பிரவ்ருத்திகள்
எனனால் பேசி முடிக்கப் போகாது  –

ஆன்ரு சம்சய பிரவ்ருத்திகள்-விபரீத லக்ஷணையால்
இவள் தீர்க்க சிந்தயந்தி அன்றோ

————————————————–

வேதங்கள் எல்லாம் சொல்லப்படுபவர்
வேத வித் -வேதங்களை அறிந்தவனுக்கு அவனே
பெண் பிள்ளை பழியே ஹேதுவாக
யார் குற்றம்
வெறுப்பது எதற்கு
குற்றம் பெண்ணது தானே ஆறி இருக்க வேண்டாமோ
சர்வஞ்ஞன் அறியானோ
வெட்கம் விட்டு பேச வைக்கும் படி காலம் தாழ்த்துவானோ
உபேக்ஷித்தவன்-ஆதலால் குற்றம் கூறினேன் என்கிறாள்

பந்தோடு கழல் மருவாள் பைங்கிளியும் பாலூட்டாள் பாவை பேணாள்
வந்தானோ திருவரங்கன் வாரானோ  என்று என்றே வளையும் சோரும்
சந்தோகன் பவுழியன் ஐந்து அழல் ஓம்பு தைத்ரியன் சாம வேதி
அந்தோ என் மகளைச் செய்தனகள் அம்மனைமீர் அறிகிலேனே —5-5-9-

வந்தானோ-வாரானோ-இரண்டு ஓ சந்தோஷத்தாலும் வருத்தத்தாலும் –
சந்தோகன்-சாம விசேஷ சாந்தோக்யம் – சந்தஸ்-பொதுவான வேதத்தைச் சொன்னதாகவும்

பந்தோடு கழல் மருவாள்
நித்ரா சமயத்திலும்
ஓன்று அல்லா ஓன்று கை விடாதவள்
இரண்டையும் விட்டாள் –

பைங்கிளியும் பாலூட்டாள் –
பெற்றோரை உபேஷிக்கை அன்றிக்கே
பிறந்தாரையும் உபேஷியா நின்றாள் –

பாவை பேணாள்  –
முன்பு இவளுக்கு சிலர் அநபிமதம் செய்கை யாவது
பாவை பேணாது ஒழிகை யாய்த்து
அத்தை தானே செய்யா நின்றாள் –
தஸ்மாத் பால்யே விவேகாத்மா யதேத ஸ்ரேயசே நர -ஆனபடியைச் சொல்லிற்று ஆய்த்து
ஆக பழைய யாத்ரையை அடையக் கை விட்டாள் -என்றபடி
பரித்யக்தா மயா லங்கா -பிராபக விஷயத்தில் தன்னையே உபாயமாகப் பற்றினால்
இதர உபாயங்களோபாதி
பிராப்ய விஷயத்திலும் அல்லாதவை பிராப்ய ஆபாசமாய்
த்யாஜ்யமாய் இருக்கும் இறே  –

(உறவு யாதும் இலள் கீழேயே பார்த்தோம் -அனைத்தையும் ஆகவே பைங்கிளியும் உம்மைத் தொகை
மரப்பாவையை ஆதரிக்காமல்
பந்து கழல் பாவை
ஸ்வா பதேசம் -பால்யத்தில் க்ரீடன -விளையாட்டு புத்தி யவ்வனம் விஷய சுகம் –
அஞ்ஞானம் அசக்தி வயசு ஆனதும் -தவிர்த்து –
ஸ்ரேயஸ்ஸுக்காக பகுத்தாத்மா -ப்ரஹ்ம விஷயத்திலே இருக்க வேண்டுமே
ப்ரஹ்லாதன் அசுரர் சிறுவர்களுக்கு சொல்லிக் கொடுத்தானே இத்தையே )

(பரித்யக்தா மயா லங்கா-பிராபக விஷயத்தில் தன்னையே உபாயமாகப் பற்றினால்
இதர உபாயங்களோபாதி
பிராப்ய விஷயத்திலும் அல்லாதவை பிராப்ய ஆபாசமாய்
த்யாஜ்யமாய் இருக்கும் இறே  –ரஹஸ்யரார்த்தம்
லங்கா -ப்ராப்யம் -ஆபாசம்
தனம்-உபாயம் -சிலருக்கு ப்ராப்யம் -ஆபாசம்
இவற்றை விட்டு வந்து
உபாயாந்தரங்களையும் ப்ரயோஜனாந்தரங்களையும் விட வேண்டுமே
யாவையும் திருமால் திரு நாமமே கூவும் நம்மாழ்வார் )

புறம்பு உள்ளவற்றை அடையக் கை விட்டாள்
அவன் வரவு நிச்சிதம் என்று இருந்தாள்-தன் தசையே செப்பேடாக

வந்தானோ திருவரங்கன் –
புறம்பு உள்ள பற்று அறுக்க வந்து இருக்கிறவன்
பற்று அற்றாலும் வந்து முகம் காட்டானோ என்னும் ஆய்த்து –
(சர்வ தர்மான் பரித்யஜ்ய விட்டே பற்ற வேண்டும் கீதாச்சார்யனை
திருவரங்கனோ பற்று அறுக்க அன்றோ இங்கே நித்ய சந்நிதி பண்ணி அருளுகிறது )

வாரானோ –
நான் இத் தசையோடே முடியும் இத்தனையோ
குணாதிகர் அல்லாத விஷயத்தில் பற்றோபாதியாய் விழுந்ததே
நமக்கு இவ்விஷயத்தில் பற்றும் -என்னும் –

என்று என்றே வளையும் சோரும்
பந்து கழல்கள் பாவையோ பாதியாய்
விழுந்தது வளையும்
சைதில்யம் உபயாந்த்யாசு –
(அநு ராகம் -உள்ளே காதல் – கண்ணன் சற்றே நகர்ந்ததும் உடல் இளைத்து
வளையல்கள் கழன்றனவே கோபிமார்களுக்கு )

இத்தை ஒரு அஞ்ஞன் செய்தாகில்
பொறுக்கல் யாய்த்து இறே
வேத விதேவசாஹம் -என்றவன் கிடீர் இத்தைச் செய்கிறான் –

சந்தோகன் –
சந்தோக சாமத்தை பிரித்துச் சொல்லுகிறதாகவுமாம் –
அன்றிக்கே
இத்தால் -வேதைக சமதி கம்யன் என்ற படியாய் –

பவுழியன் ஐந்து அழல் ஓம்பு தைத்ரியன் சாம வேதி
மேல் வேதாந்த வித்தமன் என்றதாகவுமாம் –

அந்தோ என் மகளைச் செய்தனகள் அம்மனைமீர் அறிகிலேனே
ஒரு சர்வஞ்ஞன் அஞ்ஞன் செய்வதைச் செய்தால்
இதுக்கு மேல் என்னால்
போக்கடி தேடப் போமோ

வந்து –
இவள் தன் திறத்து படாது இருக்க
தானே வந்து
இப்படி பண்ணி
தானே உபேஷிப்பதே
முன் தீமை செய்வானும் தானேயாய்
உபேஷிப்பானும் தானே யாவதே –
(பரம பக்தியை அன்றோ தீமை என்கிறாள் இத்தசை இருப்பதால் )

என் பொன் மகள் என்ற பாடம் ஆன போது
ஸ்லாக்யையான பெண் பிள்ளை என்ற படி –

—————————————————-

சேலுகளும் வயல் புடை சூழ் திருவரங்கத்து அம்மானைச் சிந்தை செய்த
நீல மலர்க் கண் மடவாள் நிறைவழிவைத் தாய் மொழிந்த வதனை நேரார்
கால வேல் பரகாலன் கலி கன்றி ஒலி மாலை கற்று வல்லார்
மாலை சேர் வெண் குடைக் கீழ் மன்னவராய்ப் பொன் உலகில் வாழ்வர் தாமே–5-5-10-

சேலுகளும் வயல் புடை சூழ் திருவரங்கத்து அம்மானைச் சிந்தை செய்த
திர்யக்குகளும் கூட களித்து வர்த்திக்கும் படியான
வயல் சூழ்ந்த கோயிலிலே
வர்த்திக்கிற சர்வேஸ்வரனை
சிந்தை செய்த படி யாய்த்து –

நீல மலர்க் கண் மடவாள் –
எதிர்த்தலை சிந்திக்கும்படியான
வடிவு அழகை உடையவள் –

நிறைவழிவைத் –
ஸ்த்ரீத்வம் அழிந்த படியை –

தாய் மொழிந்த வதனை –
அவள் தான் அறிவு நிறைவுகள் அழிந்து கிடக்க
திருத் தாயார்
அவள் தசையை சொன்ன பாசுரம் யாய்த்து

நேரார் கால வேல் பரகாலன் கலி கன்றி ஒலி -மாலை கற்று வல்லார்-
நான் எதிரி -என்று மார் தட்டி
நேரே நிற்கும் எதிரிகளுக்கு
ம்ருத்யுவான வேலை யுடையராகையாலே
பர காலன் என்று பேர் பெற்ற ஆழ்வார் அருளிச் செய்த
சொல் தொடையைக் கற்று வல்லார்கள் –
(இவரைப் போல் )
கைப்பறி பறிக்கை அன்றிக்கே
இதன் பொருளை ஆசார்யர்களோடே கற்று அறியுமவர்கள்

மாலை சேர் வெண் குடைக் கீழ் மன்னவராய்ப் பொன் உலகில் வாழ்வர் தாமே –
தனி முத்துக் குடைக் கீழே
இதில் அபேஷை உண்டாகில் ஐஸ்வர்யத்தை அனுபவித்து
பரம பதத்திலே நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்கள்-
(இங்கே-நாடு பரிபாலனம் – கடமை நிறைவேற்றி அங்கு ஸூக அனுபவம் )

———–

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

வெருவித் தான் தன்னது தன்பால் அரங்கன் அன்பை
இருத்த ஆட் செய்யா கூடாத்தன்னின் வருத்தம் போம்
ஆறு அறியாது ஆற்றாமைத் தாய்க் கூற்றாய் நீலனுரை
கூறல் வாய்க்குற்ற வகை -45-

அரங்கன் அன்பைத் தன்பால் இருத்த ஆறு அறியாமலும்
தன்னின் ஆட் செய்யா வருத்தம் போம் ஆறு அறியாமலும்
தன்னின் கூடா வருத்தம் போம் ஆறு அறியாமலும் -என்று அன்வயம் –

—————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரிய திருமொழி-5-4—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

May 5, 2014

திருவரங்கம் பெரிய கோயில் –
காவேரி விராஜா –பூ லோக ஸ்ரீ வைகுண்டம் -ஸப்த பிரகார மத்யே –
ஆதி சேஷ பீடம் -பிராணாவாகார விமானம்
பெரிய பிராட்டியார் -ஸ்ரீ ரெங்க தாமநி மோததே
பெரிய திரு மண்டபம் பெரிய அவசரம் பெரிய திரு நாள்
பெரிய கோயில் பெரிய பெருமாள் பெரிய ஜீயர் -அத்விதீயம் –50 பாசுரங்கள் இவருக்கே
அரங்கன் என்னில் மயலே பெருகும் ஸ்ரீ ராமானுஜன்
ஆலி நாடன் அமர்ந்து உறையும் வீதியும் உண்டே
பாடிய வாளன் படித்துறை
247 அருளிச் செயல்கள் மங்களா சாசனம்
பதின்மர் பாடும் பெருமாள் –
அருள் மாரி இவர்
இன்ப மாரி -இராப்பத்து தொடங்கி வைத்த பெருமை இவருக்கே –

——–

உந்தி மேல் பிரவேசம் –

நின் குரை கழல் தொழுவதோர் வகை எனக்கு அருள் புரியே
என்றார் கீழில் திரு மொழியிலே
அருள் புரியே என்று நீர்  இங்கன் இழவாளராய் பிரார்த்திக்கிறது என்
நாமும் உமக்கு என்றும் உபகரித்திலோமோ
( அப்படியே மேலும் )
உபகரிக்க வன்றோ நாம்
கோயிலிலே வந்து
சந்நிஹிதர் யாய்த்து -என்று
இங்கனே சந்நிஹிதன் ஆன படியைக் காட்டிக் கொடுத்தான் –
அத்தை அனுசந்தித்து
ஹிருஷ்டராய்
இனித் தான் அறிவுடையார் அடங்கலும் பிராப்ய புத்தி பண்ணி
விடாதே வர்த்திக்கிற தேசம் என்று
அது தன்னைப் பேசி இனியர் ஆகிறார் –
( பரமனை அறிவிக்கும் அதுவே அறிவு வித்யை
பிராப்யம் கைங்கர்யம் போக்யம் அனைத்தும் தென்னரங்கமே )

கீழே எனக்கு அருள் புரியே-ஒரு கால் போல் ஒன்பதில் கால் சொல்லியும்
இன்னொரு தேசத்தில் முகம் கொடுப்பார் நசையால் வர
சித்த சமாதானம் பண்ண
ஹ்ருஷ்டரானார்

——————————————

உந்தி மேல் நான் முகனைப் படைத்தான் உலகுண்டவன்
எந்தை பெம்மான் இமையோர்கள் தாதைக்கு இடம் என்பரால்
சந்தினொடு மணியும் கொழிக்கும் புனல் காவிரி
அந்தி போலும் நிறத்தார் வயல் சூழ் தென்னரங்கமே –5-4-1-

காவேரி ராஜன் மகள் -கா பொழில் விரிக்கும் காவிரி -பொன்னி -ஹேமா பதா –
தென் -அழகு என்றும் தெற்கு என்றும்
பெரிய பெருமாள் திரு நாபியில் பிரமதேவன் இங்கு இல்லை –
சதுர்முகன் அர்ச்சித்த பெரிய பெருமாள்

உந்தி மேல் நான் முகனைப் படைத்தான் –
பிரம்மா ஸ்ருஷ்டிக்கு அவ்வருகு உள்ளது அடங்கலும்
தானே கை தொட்டு ஆக்கி -பின்னை
இவ் வருகு உண்டான கார்ய வர்க்கத்தை
இவன் வழியாலே உண்டாக்க வேணும் -என்று
தன்னுடைய திரு நாபீ கமலத்திலே
சதுர் முகனை சிருஷ்டித்தவன் –
(கரண களேபர பிரதானம் பண்ணி அருளினதே கைங்கர்யம் கொள்ளவே தானே
கொடுக்காமல் போவேனோ என்ன சமாதானம் அடைந்து ஹ்ருஷ்டரானார் )

உலகுண்டவன் –
அப்படி கார்யம் கொள்ளுமவர்களை
பிரளயம் கொண்டவாறே
பூமியை எடுத்து வயிற்றிலே வைத்து நோக்கினவன்
(அப்படி கார்யம் கொள்ளுபவர்களை -என்றது கைங்கர்யம் செய்பவர்களை என்றவாறு )

எந்தை பெம்மான்-
சர்வ ஸ்ரஷ்டாவாய்
ஆபத் சகனுமாய் இருக்கும் இருப்பைக் காட்டி
என் குலத்துக்கு நாதன் ஆனவன் –

இமையோர்கள் தாதைக்கு இடம் என்பரால்
அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான நித்ய ஸூரிகளுக்கு
நாதன் ஆனவன் வர்த்திக்கிற தேசம் என்னா நிற்பார்கள் –
அடியார்களை குழாங்களை– உடன் கூடுவது என்று கொலோ -என்று
சொல்லும் நித்ய ஸூரிகளும் இவ்விடத்தை விரும்பி
இங்கே படுகாடு கிடப்பார்கள் ஆய்த்து –
( அளப்பரிய ஆரமுதே அரங்கம் மேயும் அந்தணன்
ஏதேனுமாக ஜனிக்க பாரிப்பார்களே )

இவர்களைக் கொண்டு கைங்கர்யம் கொள்ளுமா போலே ருசி உடைய
தம்மையும் கொண்டு கைங்கர்யம் கொள்ளுவர் என்று ஹ்ருஷ்டர் ஆகிறார் –

சந்தினொடு மணியும் கொழிக்கும் புனல் காவிரி
சந்தனத்தோடே கூட மணிகளையும்
கொழித்து  எறடா நின்றுள்ள புனலை  உடைத்தான காவிரி

அந்தி போலும் நிறத்தார் வயல் சூழ் தென்னரங்கமே
அந்தி உண்டு சந்த்யை
அது போலே இருண்ட நிறத்தை உடைத்தான வயல்
இவற்றாலே சூழப் பட்ட தென்னரங்கமே

கரு நெல் சூழ் கண்ண மங்கை -என்னுமா போலே
கரு வடைந்த பயிர் ஆகையாலே
எங்கும் ஒக்க இருண்டு தோற்றுமாய்த்து –

சந்த்யை சிவந்து அன்றோ இருப்பது என்னும் நிர்பந்தம் உண்டாகில்
நுனி நெல் பழுத்த வயலாலே சூழப் பட்ட -என்கிறது  –

————————————————–

இமையோர் தாதை சேஷ சாயி தானே
உலகு உண்டவன் ஆபத் சகன் அனுசந்தித்து
வ்யூஹ மூர்த்தி தானே இங்கே -வியூஹ ஸுவ்ஹார்த்தம் காட்டி அருளுகிறார் –

வையம் உண்டு ஆலிலை மேல் மேவு மாயன் மணி நீண் முடிப்
பை கொள் நாகத் தணையான் பயிலும் இடம் என்பரால்
தைய நல்லார் குழல் மாலையும் மற்றவர் தட முலைச்
செய்ய சாந்தும் கலந்து இழி புனல் சூழ் தென்னரங்கமே —5-4-2-

வையம் உண்டு ஆலிலை மேல் மேவு மாயன்
பிரளயத்திலே பூமிப் பரப்பு அடங்க  எடுத்து
வயிற்றிலே வைத்து
ஒரு பவனான ஆலந்தளிரிலே
கண் வளர்ந்து அருளின
ஆச்சர்ய சக்தி உக்தன் –

மணி நீண் முடி –
ஆதி ராஜ்ய பிரகாசகமான
திரு அபிஷேகத்தை உடையனாய் -(ஆதி ராஜ்ய ஜல்பிதா )

பை கொள் நாகத் தணையான் பயிலும் இடம் என்பரால் –
கண் வளர்ந்து அருளுகைக்கு ஈடான
பரப்பை உடையனாய் இருக்கிற திரு வநந்த ஆழ்வான் மேலே
கண் வளர்ந்து அருளுகிறவன்
விடாதே வர்த்திக்கிற தேசம் என்று
சொல்லா நிற்பர்கள் –
(கங்குலும் பகலும் பதிகம் முழுவதும் சேஷ சாயித்தவம் இல்லையே
திரு விருத்தம் தான் முகில் வண்ணன் சேஷ சாயி என்று உண்டு )

தைய நல்லார் குழல் மாலையும் மற்றவர் தட முலைச் செய்ய சாந்தும் கலந்து இழி புனல் சூழ் தென்னரங்கமே –
குழலிலே பூக்களை வைத்து
முலையை குங்குமத்தால் அலங்கரித்து
இருந்துள்ளவர்கள்
படுக்கையை விட்டு ப்ரஹ்ம முகூர்த்தத்தில்
ஸ்நாநார்த்தமாக இழிவார்கள்
குழலிலே மாலையும் குங்குமுமாய்க் கலங்கி
ஓடா நிற்கும் யாய்த்து –

நல்லார் -என்கையாலே
வெள்வரைப் பதன் முன்னம் துறை படிந்து -என்கிறபடியே
சாத்விக காலத்திலே துறை படிந்தமை   நன்மை –

————————————————–

கரண களேபரங்கள் பிரதானம்
வயிற்றில் வைத்து ரஷித்த
எந்தை பெம்மான் என்று என்னைத் தனக்காக்கிக் கொண்டதுக்கு
த்ருஷ்டாந்தம் இந்த பாசுரம்
திருக் குறளப்பன் சந்நிதி இன்றும் சேவிக்கலாம் இங்கு –

பண்டு இவ் வையம் அளப்பான் சென்று மாவலி கையில் நீர்
கொண்ட வாழித் தடக் கை குறளன் இடம் என்பாரால்
வண்டு பாடும் மதுவார் புனல் வந்திழி காவிரி
அண்ட நாறும் பொழில் சூழ்ந்து அழகார் தென்னரங்கமே —5-4-3-

பண்டு இவ் வையம் அளப்பான் சென்று மாவலி கையில் நீர் கொண்ட வாழித் தடக் கை குறளன் இடம் என்பாரால்
மகா பலியாலே அபஹ்ருதமான பூமியை
மீட்டுக் கொள்ளுகைக்காக
அவனுடைய யஞ்ஞ வாடத்திலே சென்று
திரு ஆழியைப் பிடிக்கக் கடவ கையாலே
நீரை ஏற்ற ஸ்ரீ வாமனன்
வர்த்திக்கிற தேசம் என்னா நிற்பார்கள் –

வண்டு பாடும் மதுவார் புனல் வந்திழி காவிரி அண்ட நாறும் பொழில் சூழ்ந்து அழகார் தென்னரங்கமே
ஜலத்தில் உண்டான ரஸ்யதையாலே
வண்டுகள் ஆனவை மொய்த்துக் கிடக்கும் யாய்த்து –
வண்டுகள் ஆனவை மது பான மத்தமாய்க் கொண்டு
பாடுகைக்கு ஈடான
மது ஒழுகா நின்றுள்ள புனல் ஆனது வந்திழி காவிரியாலும்
அண்ட அவகாசம் அடைய காந்தியா நின்றுள்ள பொழிலாலும்
சூழப் பட்டு
தர்ச நீயமான தென்னரங்கமே

அண்ட நாறும் என்று –
நாவி கஸ்தூரி துடக்கமானவற்றைச் சொல்லவுமாம் –
(அண்டம் – ஆகாச வாசகம் இல்லாமல் கஸ்தூரி வாசனைத் த்ரவ்யங்கள் என்றபடி )

———————————————————-

நம் பெருமாளே நானே ராமன் உடையவர் இடம் சோதி வாய் திறந்து அருளிச் செய்தார்
ஒன்பது இடங்களில் ராமர் கிருஷ்ணர் சந்நதிகள் உண்டே இங்கு –
என்னை தனக்காகக் கொண்டு
த்ருஷ்டாந்தம் இலங்கை பெற்றது
சம்சார சமுத்திர மத்யகதனான
மனோ ரஜனீயன் அந்நாள் நீ தந்த ஆக்கை வழி உழன்ற என்னை மாற்றி
இவ்வளவும் செய்தவன் கைங்கர்யம் கொடுக்காமல் போவேனோ
ஸஹ பத்நயா விசாலாஷ்யா -பெருமாளுக்கு உபாஸ்யரான பெரிய பெருமாளை
அவராகவே சொன்னவர் திரு மாலையிலும் உண்டே

விளைத்த வெம்போர் விறல் வாளரக்கன் நகர் பாழ் பட
வளைத்த வல் வில் தடக்கை யவனுக்கு இடம் என்பரால்
துளைக்கை  யானை மருப்பும் அகிலும் கொணர்ந்து உந்தி முன்
திளைக்கும் செல்வப் புனல் காவிரி சூழ் தென்னரங்கமே –5-4-4-

காவேரிக்கு லீலா ரசமாகிய ஐஸ்வர்யம் –

விளைத்த வெம்போர் விறல் வாளரக்கன் நகர் பாழ் பட
வெம்போரை விளைப்பானாய்
பெரு மிடுக்கனாய்
அத்தாலே வழி கெட வர்த்திப்பானாய்
சாயுதனாய் உருக்கிற
ராஷசன்  உடைய நகரமானது
ஸ்மசான சத்ருசியாக வேணும்( ஸூந்தர –26-24)-என்கிறபடியே
பாழ் பட்டுப் போம் படி யாக

வளைத்த வல் வில் தடக்கை யவனுக்கு இடம் என்பரால் –
வளைத்த பெரும் மிடுக்கை உடைத்தான வில்லையும்
அதுக்கு ஆஸ்ரயமாக போரும்படியான கையையும்
உடைய சக்கரவர்த்தி திருமகன்
சாய்ந்து அருளுகிற தேசம் என்னா நிற்பார்கள்
செருவிலே அரக்கர் கோனைச் செற்ற நம் சேவகனார் மருவிய பெரிய கோயில் -என்பர்கள் இறே –

துளைக்கை   யானை மருப்பும் அகிலும் கொணர்ந்து உந்தி முன்
துளையை உடைத்தான கையை உடைத்தான ஆனைக் கொம்பும்
அகிலும்
துடக்கமான வற்றைக் கொடு வந்து
கொள்வார் உண்டோ என்று கொடுப்பாரைப் போலே தள்ளி –

திளைக்கும் செல்வப் புனல் காவிரி சூழ் தென்னரங்கமே
தன் செருக்காலே லீலா ரசம்
அனுபவியா நின்றுள்ள புனலை உடைத்தான –

சக்கரவர்த்தி திருமகன் படி உண்டாய்த்து காவிரிக்கும் –

————————————————————

என்னை தீ மனம் கெடுத்தாய் என்பதுக்கு திருஷ்டாந்தம்
மனோ ரஜனீசியன்
உபகாரம் எந்தை பெம்மான்
தசேந்த்ரியன் கோரம்-த்ருஷ்டாந்தம் –

வம்புலாம் கூந்தல் மண்டோதரி காதலன் வான் புக
அம்பு தன்னால் முனிந்த வழகன் இடம் என்பரால்
உம்பர் கோனும் உலகு ஏழும் வந்து ஈண்டி வணங்கும் நற்
செம்பொனாரும் மதிள் சூழ்ந்து அழகார் தென்னரங்கமே —5-4-5-

மண்டோதரி காதலன்-பேர் அழகி – நல்லவள் – இவளை விட்டு வந்த ராவணன் –
வழகன்-வீர ஸ்ரீ யைச் சொன்னவாறு –

வம்புலாம் கூந்தல் மண்டோதரி காதலன் வான் புக
பிராட்டியோடு சக்கரவர்த்தி திருமகன் அனுபவிக்க
தானும் மண்டோதரி கூட அனுபவிக்கை அன்றிக்கே
வழி கெட
அனுபவிப்பதாகப் பாரித்த ராவணன் ஆனவன்
சித்ர வதத்தாலே  வீர ஸ்வர்க்கத்தை பிராபிக்க

அம்பு தன்னால் முனிந்த வழகன் இடம் என்பரால்
அவர்களைப் போலே வழி கெட அன்றிக்கே
நேர் கொடு நேரே அம்பாலே
அழியச் செய்த வீர ஸ்ரீ யால்
குறை வற்ற சக்கரவர்த்தி திரு மகன்  வர்த்திக்கிற தேசம்
என்னா நிற்பர்கள்
எதிரிகளும் ரஜ்ஞ நீயச்ய விக்ரமை -என்னா நிற்பார்கள் இறே –

உம்பர் கோனும் உலகு ஏழும் வந்து ஈண்டி வணங்கும் –
தேவர்களுக்கு நிர்வாஹகனான ப்ரஹ்மாவும்
அவனாலே ஸ்ருஷ்டமான ஜகத்தில் உள்ளாரும்
திரண்டு ஆஸ்ரயிக்கும் படியாய் –

நற் செம்பொனாரும் மதிள் சூழ்ந்து அழகார் தென்னரங்கமே
ஸ்ப்ருஹநீயமாய்
உள்ளுச் சாய்ந்த வஸ்துவுக்கு அரணாக  போரும்படியான
மதிளாலே
சூழப் பட்டு
தர்ச நீயமான தென்னரங்கமே –

——————————————————

கள்ளத்தே –தொண்டுக்கே கோலம் பூண்ட கள்ளன்
தாயைப் போலே வேஷம்
அத்தையும் தவிர்ந்து
மருவித் தொழும் மனமே தந்ததுக்கு த்ருஷ்டாந்தம் இது

கலை யுடுத்த வகலல்குல் வன் பேய் மகள் தாயென
முலை கொடுத்தாள் உயிர் உண்டவன்  வாழும் இடம் என்பரால்
குலை எடுத்த கதலிப் பொழிலூடும் வந்துந்தி முன்
அலை எடுக்கும் புனல் காவிரி சூழ் தென்னரங்கமே—5-4-6-

கலை யுடுத்த வகலல்குல் வன் பேய் மகள் தாயென
யசோதை பிராட்டியைப் போலே
அலங்கரித்துக் கொண்டு
கலையை உடுத்து
அகன்ற நிதம்ப பிரதேசத்தை உடைய

வன் பேய் மகள் –
யசோதை பிராட்டியில் இவளுக்கு ஓர் ஏற்றம் -வன்மை யாய்த்து

தாய் என –
யசோதை பிராட்டியைப் போலே
பரிவு எல்லாம் தோற்ற
ஒசழக்காக தூக்கி எடுத்து –

முலை கொடுத்தாள் உயிர் உண்டவன்  வாழும் இடம் என்பரால்
இவனும் முலை உண்ணா விடில் தரியாதானாய்
அவள் உயிரை முடித்தவன்

இன்னும் இங்கன் ஒத்த விரோதிகளைப் போக்குகைகாக
அணித்தாக வந்து வர்த்திக்கிற தேசம்
என்னா நிற்பர்கள் –

குலை எடுத்த கதலிப் பொழிலூடும் வந்துந்தி முன்
ஓங்கின குலைகளை உடைத்தாய் இருந்துள்ள
வாழைச் சோலைக்கு உள்ளே வந்து புகுந்து
அவற்றை அடையப் பறித்து கொடு போந்து
சுமை தள்ளுவாரைப் போலே தள்ளா நின்றுள்ள

அலை எடுக்கும் புனல் காவிரி சூழ் தென்னரங்கமே
புனலை உடைத்தான காவிரி சூழ் தென்னரங்கமே

கிருஷ்ணன் விரோதிகளை போக்குமா போலே
நேரே நின்ற மரங்களை
பறித்துக் கொடு வந்து
பொகடா நிற்கும் ஆய்த்து –

———————————————

திருவடி பலத்தால்
திருக்கால் ஆண்ட பிரகாரங்கள் மூன்றும்
சகடாசுரனும் கஞ்சனையும் மல்\லர்களையும்
கைங்கர்ய விரோதியையும் போக்கி அருளுவான் –
இவர்களுக்கு எல்லாம் திருவடி சம்பந்தம் கொடுத்தவன் உமக்கு தர மாட்டேனோ –

கஞ்சன் நெஞ்சும் கடு மல்லரும் சகடமும் காலினால்
துஞ்ச வென்ற சுடர் ஆழியான் வாழும் இடம் என்பரால்
மஞ்சு சேர் மாளிகை நீடு அகில் புகையும் மறையோர்
செஞ் சொல் வேள்விப் புகையும் கமழும் தென்னரங்கமே –5-4-7-

நெஞ்சும்-மனசில் உள்ள குரூரம் –

கஞ்சன் நெஞ்சும் கடு மல்லரும் சகடமும் –
கஞ்சன் உடைய திண்ணிய நெஞ்சும்
அவன் தன் கார்யத்தில் அவன்  தன்னிலும் பரிவர் ஆகையாலே
கடியராய் இருக்கிற மல்லரும்
கடுமை தோன்றாதபடி மறைய நின்ற சகடமும் –

காலினால் துஞ்ச வென்ற சுடர் ஆழியான் வாழும் இடம் என்பரால்
திரு ஆழியும் கையிலே உண்டாய் இருக்கச் செய்தே
அது கொண்டு வ்யாபாரிக்கப் பற்றாமையாலே
திருக் காலாண்ட பெருமான் -என்கிறபடியே
திருவடிகளாலே அழியச் செய்தவன்
வர்த்திக்கிற தேசம் -என்பர்கள்

தலை மயிரைப் பிடித்து கீழே விழ விட்டு
முதுகிலே திருவடிகளாலே பாய்ந்ததும்
மல்ல வர்க்கத்தைத் தானே திருவடிகளாலே நெருக்கியும்
முலை வரவு தாழ்த்து நீட்டின வ்யாஜத்தாலே உதைத்தும்
திருவடிகளாலே இறே நிரசித்தது –

மஞ்சு சேர் மாளிகை நீடு அகில் புகையும் –
மேக பதத்து அளவும் செல்ல ஓங்கின
மாளிகைகளிலே அகில்களாலே
ப்ரவர்த்திப்பித்த ஓங்கின புகையும் –

மறையோர்-செஞ்சொல் வேள்விப் புகையும் கமழும் தென்னரங்கமே
வேத விஹிதமான படியே
அங்குத்தை ப்ராஹ்மணர் யாகாதிகளிலே உண்டாக்கின
ஹோம தூமமும்
இவை தன்னிலே விரவிக் கொண்டு
கமழா நின்றுள்ள தென்னரங்கமே –

———————————————

பஹு வித உபகாரங்கள் கீழே
அதுவும் போராது என்று பல அவதாரங்கள் இவருக்கு உபகரிக்கவே

அநேக அவதாரங்களைப் பண்ணிக் கொண்டு வந்து
ரஷகன் ஆனவன்
அவ்வவதார காலங்களிலே பிற் பாடர்க்கும் இழக்க
வேண்டாத படி
வந்து சந்நிஹிதனான தேசம் கோயில் -என்கிறார்-
(நரசிங்கம் ரெங்கேந்திர சிங்கம்
அமலன் -ஒரே தூண் இல்லை ஒருவனுக்கா இல்லை )

ஏனம் மீன் ஆமையோடு அரியும் சிறு குறளுமாய்த்
தானுமாய தரணித் தலைவன் இடம் என்பரால்
வானும் மண்ணும் நிறையப் புகுந்து ஈண்டி வணங்கும் நல்
தேனும் பாலும் கலந்து அன்னவர் சேர் தென்னரங்கமே —5-4-8-

கலந்து அன்னவர் -ஏக ரசம் -பஞ்சாம்ருதம் பக்த ஜனங்கள்
அவதாரங்கள் ஐந்தைச் சொல்லி தானுமாய் போல் இங்கும்

ஏனம் மீன் ஆமையோடு அரியும் சிறு குறளுமாய்த்
பிரளயம் கொண்ட ஜகத்தை எடுத்துக் கொண்டு  ஏறுகைக்காக
வராஹ வேஷத்தை பரிக்ரஹித்தும்

அப்படிப் பட்ட பிரளயம் தன்னை தன் செலுவிலே அடக்க வற்றான மத்ஸ்யமாயும்

மந்தரம் கீழ் விழாதபடி தரிக்க வல்ல ஆமையாயும்

இப்படி ஒரு வடிவு கொண்டு உதவுகை அன்றிக்கே
சேராத வடிவைச் சேர்த்துக் கொடு வந்து தோற்றின நரசிம்ஹமாயும்

நாட்டில் வாமனர்கள் அடங்கலும் வளர்ந்து அருளின இடம்
என்னும்படி குறள் வடிவைக் கொண்டும் –

தானுமாய தரணித் தலைவன் இடம் என்பரால் –
முன்னும் இராமனாய் தானாய் பின்னும் இராமனாய் -என்னக் கடவது இறே –

அல்லாத இடங்கள் சக்தி  ஏக தேசம்
அவன் தானே வந்தான் என்னக் கடவது இறே ராமாவதாரத்தை
(பூர்ணனாய் சகல கல்யாண பூர்ணன்
சக்தி அவதாரம் என்றது கல்யாண குணங்கள் எல்லாம் ஸ்பஷ்டம் இங்கேயே என்றவாறு )

அப்படியே பூமிப் பரப்பு அடங்கலும் நிர்வாஹகனான
சக்கரவர்த்தி திருமகன் வர்த்திக்கிற தேசம் என்பர்கள் –

வானும் மண்ணும் நிறையப் புகுந்து ஈண்டி வணங்கும் –
பரம பதத்தில் நித்ய ஸூரிகளும்
பூமியில் உள்ள சம்சாரிகளும்
நிறையப் புகுந்து திரண்டு ஆஸ்ரயிக்க-

நல் தேனும் பாலும் கலந்து அன்னவர் சேர் தென்னரங்கமே
நன்றான தேனும் பாலும் கலந்தால் போலே யாய்த்து
இங்கு உள்ளார் எல்லாரும் தங்களிலே
ஒரு மிடறாக இனியராய் இருக்கும் படி –

விஜாதீய த்ரவ்யம் கலந்தால் போல் அன்றியே
சஜாதீயம் கலந்தால் போலே யாய்த்து –
நித்ய ஸூரிகள் சம்சாரிகள் என்கிற வாசி தெரியாதே
ஒரு நீராய்ப் பரிமாறா நிற்பர்கள் –

தேசாந்தரங்களில் முன்பு கண்டு அறியாதார்
வந்து போகப் புக்கால்
பிரிந்துபோகா நின்றோம் -என்று
கண்ணும் கண்ண நீருமாய் இறே இருப்பது –
(தேசாந்தர நித்யர்கள் கண்ணநீராய் செல்வார்கள் என்றதாயிற்று )

—————————————————–

சர்வ வியாப்தி ஆனதும் உமக்காகவே என்கிறார் இத்தால் –

சேயன் என்றும் மிகப் பெரியன் நுண் நேர்மையினாய விம்
மாயையை யாரும் யறியா வகையான் இடம் என்பரால்
வேயின் முத்தும் மணியும் கொணர்ந்தார் புனல் காவிரி
ஆய பொன் மா மதிள் சூழ்ந்த அழகார் தென்னரங்கமே—5-4-9-

சேயன் என்றும் மிகப் பெரியன் நுண் நேர்மையினாய விம் மாயையை –
தூரஸ்தனாய்
சர்வேஸ்வரனாய்
இருக்கும் இருப்பு
ஸூஷ்மத்வத்தில் அதி ஸூஷ்மமான பதார்த்தங்கள் எங்கும் புக்கு
வியாபித்து தரித்துக் கொடு நிற்கை யாகிற
இந்த ஆச்சர்ய சக்தி யோகம் –

யாரும் யறியா வகையான் இடம் என்பரால் –
எத்தனை ஏலும் அளவுடையராலும் ஒரு நாளும் அறிய ஒண்ணாத படி
இருக்கிறவன் வர்த்திக்கிற தேசம் –

வேயின் முத்தும் மணியும் கொணர்ந்தார் புனல் காவிரி
சஹ்ய பர்வதத்தில் உண்டான வேய்கள் உதிர்த்த முத்தும்
அதில் உண்டான மணிகளையும் கொண்டு வந்து
எறடா நின்றுள்ள
மிக்க புனலை உடைத்தான காவிரி –

ஆய பொன் மா மதிள் சூழ்ந்த அழகார் தென்னரங்கமே  –
உள்ளுச் சாய்ந்த வஸ்துவுக்கு
அரணாகப் போரும்படியான
ஸ்ப்ருஹநீயமாய் இருந்துள்ள
மதிள்களாலே சூழப்பட்ட
தர்ஸ நீயமான கோயில் –

——————————–

அல்லி மாதர் அமரும் திரு மார்வன் அரங்கத்தைக்
கல்லின் மன்னு மதிள் மங்கையர் கோன் கலி கன்றி சொல்
நல்லிசை மாலைகள் நாலிரண்டும் இரண்டும் உடன்
வல்லவர்   தாம் உலகாண்டு பின் வானுலகு ஆள்வரே –5-4-10-

அல்லி மாதர் அமரும் திரு மார்வன் அரங்கத்தைக்
அல்லி மாதர் அமரும் திரு மார்வன் அரங்கத்தை
யாய்த்துக் கவி பாடிற்று

இம் மார்வை விட்டு பழைய தாமரைப் பூவிலே
போய் இருக்க வேண்டில் செய்வது என்
என்று அஞ்சும்படியான மார்வைப் படைத்தவன் –
அகலகில்லேன் -என்று இறே வார்த்தை –

கல்லின் மன்னு மதிள் மங்கையர் கோன் கலி கன்றி சொல்
அரணாகப் போரும்படியான
மதிளாலே சூழப் பட்ட
திரு மங்கையில் உள்ளாருக்கு
நிர்வாஹகரான ஆழ்வார் அருளிச் செய்த

நல்லிசை மாலைகள் நாலிரண்டும் இரண்டும் உடன்
நன்றான இசையோடு கூடின
தொடை நாலிரண்டு இரண்டினையும் –
இதில் உண்டான ஆதரத்தாலே சேர்த்து அனுபவிக்கிறார்

உந்தி – வையம் -இரண்டும் உலகுண்ட வடதள சாயி விஷயம்
விளைத்த -வம்பு -ராமன் விஷயம்
கலை -கஞ்சன் -கிருஷ்ண விஷயம்
சேயன் -அல்லி -ஸ்ரீ யபதி விஷயம்
இப்படி நாலு இரண்டும்
இப்படி இவற்றில் ஒரு ப்ரேமமும் ஆசையும்

பண்டு -திருக் குறளன் விஷயம்
ஏனம் -சகல அவதார சமுதாய விஷயம்
இப்படி இரண்டும்-
இப்படி இவற்றில் ஒரு ப்ரேமமும் ஆசையும்

வல்லவர்   தாம் உலகாண்டு பின் வானுலகு ஆள்வரே
இவற்றை சாபிப்ராயமாக அப்யசிக்க வல்லார்கள்
கோயிலிலே இருந்து அனுபவித்து
(உலகாண்டு-அரங்கத்து திரு முற்றத்து அடியாராகி உலகு என்றாலே அரங்கம் தானே )
பின்னை சரீர சமனந்தரம்
பரம பதம் தாங்கள் இட்ட வழக்காக பெறுவர்கள் –

————–

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

உந்தி அயன் ஓங்குவித்து வையமாக்கிக் காத்து அழித்து
எங்கும் கரந்து உறையும் மாயமுடை எந்தை தன்மை
தன் நன்மைக்கு என்று எண்ணித் தென்னரங்கம் பாடு நீலன்
சொல் மறவாமல் வாய் வெருவு -44-

மாயம் -ஆச்சர்யம் -மித்யை பொய் அன்று –
எந்தை தன்மை -எம்பெருமானுக்கு நமக்கும் உள்ள ஒழிக்க ஒழியாத சம்பந்தம் அறிவதற்கு மேல் ஒரு ஸூஹ்ருதம் உண்டோ
பெருமாள் அடியார்க்கு அருள் செய்தமை தனது நன்மைக்கு என்று யார் ஒருவன் எண்ணுகிறானோ
அவனே உண்மையான உத்தம ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணம் உடையவன் –

——————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரிய திருமொழி-5-3–ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

May 5, 2014

உயிருக்கு எல்லாம் தாயாய் அளிக்கும் தண் தாமரைக் கண்ணன் -புண்டரீகாக்ஷனே
கம்பீராம்ப ஸமுத்பூத -ஸ்ம்ருஷ்ட நாள – ரவி கர விகசித -புண்டரீக தல-அமலாய தேக்ஷிண –
அசேஷ சித் அசித் இத்யாதி
ஜகத் ரஷகம் அறிந்ததும் கைங்கர்ய பிரார்த்தனை வேண்டுமே
எனக்கு அருள் புரியே -பாட்டுத் தோறும் கைங்கர்ய பிரார்த்தனை இதில்
கைங்கர்யம் கொடுத்து அருளுவதே ரக்ஷணம்

ஸ்வேத கிரி
மஹா லஷ்மீ பிரதானம்
பங்கயச்செல்வி
தாமரைக்கண்ணன்
பிரயோக சக்கரம்
சிபி சக்ரவர்த்தி -புதருக்குள் வெள்ளைப் பன்றி
மார்கண்டேயர் சொல்ல பால் அபிஷேகம்
அந்திக்காப்பு பெரியாழ்வார் பதிகம்
விமலா கிரி விமானம் சூர்யன் சந்திரன் கவரி வீச
ராமானுஜர் இங்கேயே இருக்க இன்னுயிர் சேவல் பாடல் சொல்லி ஸ்ரீ ரெங்கம் கூட்டி சென்ற ஐதீகம்
ஸ்வஸ்திகா குளம் பிரசித்தம்

வென்றி  மா மழு–பிரவேசம் –

அடியேன் உள்ளம் உருகப் புகுந்த
ஒருவரூர் போல் -என்று
தம்முடைய ஹிருதயத்தில் புகுந்திருந்த
உபகாரத்தை அனுசந்தித்து ஹிருஷ்டரானார் -கீழில் திரு மொழியிலே –
அவ் விருப்புத் தான் பேறாய்த் தோற்றுகிறது -திருவடிகளிலே ஸ்வரூப அனுரூபமான
கைங்கர்யத்தைப் பண்ணி வர்த்திக்கப் பெறில் இறே-
அது பெறாமையாலே
கிலேசத்துக்கு உடலாய் தோற்றிற்று-

முதலிலே செய்யாது ஒழி ந்து இருந்தது அல்ல
குறைவறச் செய்தது அல்ல
ஒரு வாசி செய்தருளப் பார்த்தால்
அது முடியச் செய்து தலைக் கட்ட வேண்டாவோ –
ஆன பின்பு
த்வத் ப்ராப்தி பிரதிபந்தகத்தைப் போக்கி தேவர்
திருவடிகளில் உண்டான கைங்கர்யத்தை
நான் பெறுவேனாம்படி என் பக்கலிலே கிருபை பண்ணி அருள வேணும் –
என்கிறார் –

(வேண்டாவோ என்று -திருக் கூடலூரில் கைங்கர்யம் பெற வில்லை -இங்கு கொடுத்து அருளக் கூடாதோ
இவ்வளவு பாசுரங்கள் பாட வைத்த அளவு போதாதே
உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
நாட்டாரை விட இவர் வேறே -வாசி –
முடிய செய்து அருள வேணுமே
ஆன பின்பு ஸ்வ பிராப்தி பிரதிபந்தகங்களைப் போக்கி -தேவரீர் திருவடிகளில் கைங்கர்யம்
பண்ண கிருபை பண்ணி அருள வேண்டும்
அங்கும் கைங்கர்ய ஸ்ரீ க்காக அன்றோ போகிறோம்

———————————————————-

விரோதி கழிந்த பின்பே கைங்கர்யம் -நம முன்பு- நாராயணாயா பின்பு –
ஆகவே விரோதி நிரசனம் முதல் பாசுரத்தில்
முன் – நீ தான் விரோதியைப் போக்கப் புக்கது இன்றோ-

பூமிக்கு ராஜாக்களால் வரும் நலிவைப் போக்கி
ரஷித்த அருமை வேணுமோ
என்னுடைய பிரதிபந்தகத்தைப் போக்கி
என்னை அடிமை கொள்ளுகைக்கு -என்கிறார்

வென்றி மா மழு வேந்தி முன் மண் மிசை மன்னவரை மூ வெழு கால்
கொன்ற தேவ நின் குரை கழல் தொழுவதோர் வகை எனக்கு அருள் புரியே
மன்றில் மாம் பொழில் நுழை தந்து மல்லிகை மௌவலின் போது அலர்த்தித்
தென்றல் மா மணம் கமழ் தர வரு திரு வெள்ளறை நின்றானே —-5-3-1-

மௌவலின்-முல்லையின்
முன் – நீ தான் விரோதியைப் போக்கப் புக்கது இன்றோ
தேவ – திவு – காந்தி ஒளி மயம்
கமலபாதம் வந்து போல் தென்றல் மணங்களைக் முகர்ந்து இங்கே வருமாம் –
நின் குரை கழல் தொழுவதோர் வகை -கைங்கர்யம் செய்யும் பிரகாரம் இங்கு -சரணாகதிக்கு பின்பு உள்ள கிருத்யம் இங்கு –

வென்றி மா மழு வேந்தி முன் மண் மிசை மன்னவரை மூ வெழு கால் கொன்ற தேவ –
ஆரேனும் கையில் கொடுக்கிலும்
வெற்றியை பண்ணிக் கொடுக்கக் கடவதாய்
எதிரிகள் அளவு அல்லாத படியான பெருமையை உடைத்தாய் இருக்கிற மழுவை
அழகுக்கு தரிப்பாரைப் போலே தரித்து –
(ஏந்தி -அநாயாசேன தரித்து -)

முன்பு ஒரு நாள் –
பூமியில்  ராஜாக்களை இருப்பதொரு படி கால்
வாரி அறுத்துப் பொகட்டு
பிரதிபந்தகத்தைப் போக்கின இது
பிறருக்கு உபகரித்தது ஆகை அன்றிக்கே
உன் பேறு என்னும் இடம்
வடிவில் புகரிலே தோற்றும்படி இருக்கிறவனே
விஜ்வர பிரமுமோதஹ -என்கிறபடியே  –
(ஓர் கூர் மழுவால் போக்கிய தேவனைப் போற்றும் புனிதன் அங்கும் தேவன் )

அப்போது அது செய்தமை உண்டு
உமக்குச் செய்ய வேண்டுவது என் என்ன –
நின் குரை கழல் தொழுவதோர் வகை எனக்கு அருள் புரியே
உன்னுடைய ஆபரணங்களால் அலங்க்ருதமாய்
அவற்றால் உண்டான த்வனியை உடைத்தான
திருவடிகளிலே
நான் என்னுடைய ஸ்வரூப அனுரூபமான
வ்ருத்தி விசேஷத்தை
பண்ணுவது ஒரு பிரகாரம் என் பக்கலிலே
கிருபை பண்ணி அருள வேணும் –

மன்றில் மாம் பொழில் நுழை தந்து மல்லிகை மௌவலின் போது அலர்த்தித்
அவ் ஊரில் பதார்த்தங்கள் அடங்கலும்
பரார்த்தமாய் யாய்த்து இருப்பது –
தனக்காய் இருக்குமது இன்றிக்கே
பிறர்க்காய் இருக்கையே தனக்கு பேறாய் இருக்கை –
மன்றில்களிலே செறியப் பூத்து
பழங்களை உடைத்தான மா மரங்களிலே போய் புக்கு
அதில் உண்டான பரிமளத்தை வாசிதமாக்கிக் கொண்டு
மல்லிகை மௌவல் என்கிற இவற்றின் புஷ்பங்களை அலர்த்தி
அவற்றில் உண்டான பரிமளத்தை தன் உடம்பிலே ஏறிட்டுக் கொண்டு

தென்றல் மா மணம் கமழ்   தரவரு திரு வெள்ளறை நின்றானே –
தென்றல் ஆனது மிக்க பரிமளத்தை
உடைத்தாய் கொண்டு வந்து உலாவுகிற
திரு வெள்ளறையிலே நின்றானே –

அவ் ஊரில் உள்ளாருக்கு  அபிமத சித்திக்கு
நின்ற நிலையில் நின்றும் போக வேண்டாதபடி
அன்றோ இருக்கிறது –
சைத்ய
சௌரப்ய
சௌகந்த்ய
மார்த்தவங்களை
உடைத்தாய் இறே காற்று இருப்பது –

பத்ம கேசர சம்ஸ்ருஷ்ட –கிஷ்கிந்தா 1-71-
துராலான அம்சத்தைக் கழித்து
பூத் தன்னிலும் சம் சர்க்கத்துக்கு   மேற்பட
ஆழ விழியுமது   அன்றிகே இருக்கை –
வ்ருஷாந்தர விநிஸ் ஸ்ருத  –
வெய்யில் படப் பெறாத செல்வாலே
சோலைக்கு உள்ளீட்டாய் யாய்த்து வழி போந்தது –

குன்றூடு பொழில் நுழைந்து   -பெரியாழ்வார் திருமொழி-4-8-9- -சந்தனகிரில் போய்ப் புக்கு
கொடி இடையார் முலை யணவி-கறுவின விடத்தில் முகம் காட்டி
மன்றூடு தென்றல் உலாம் மதிள் அரங்கம் என்பதுவே -அது கை புகுந்த கர்வத்தாலே
வெளி நிலத்திலே புறப்பட்டு உலவா நின்றது யாய்த்து –
சேதன சமாதியாலே சொல்லுகிறார் யாய்த்து –

(கைங்கர்யம் பிரார்த்திக்கும் இவர்
நாயிகா தசை இல்லாமல் காமுகர் அபிமான தென்றல் இத்யாதி அருளிச் செய்வது பெரியாழ்வார்
திருவரங்கம் அதிசயமாக வர்ணித்தது போல் க்ஷேத்ரம் எழிலைச் சொல்ல அருளிச் செய்கிறர் )

——————————————————

வேதம் அருளினை நீர்
வேதத்தில் சொல்லப்பட்ட கைங்கர்யம் தர வேண்டாவோ
விரோதிகளை கிழங்கு எடுத்தது மட்டும் போதாதே
அதிகாரி புருஷணனான அயனுக்கு கண் கொடுத்தது போல் வேதங்களைக் கொடுத்தீரே
அதில் சொல்லப்பட்ட கைங்கர்ய பிரார்த்தனை இதில்

வசையில் நான்மறை கெடுத்த அம் மலர் அயற்கு அருளி முன் பரி முகமாய்
இசை கொள் வேத நூல் என்று இவை பயந்தவனே எனக்கு அருள் புரியே
உயர் கொள் மாதவிப் போதொடு உலாவிய மாருதம் வீதியின் வாய்த்
திசை எல்லாம் கமழும் பொழில் சூழ் திரு வெள்ளறை நின்றானே –5-3-2-

இசை கொள் வேதம் -சாம வேதம் -சாந்தோக்யம் -நாயனார் இந்த ஸூக்தியையே அருளிச் செய்கிறார்

வசையில் நான்மறை கெடுத்த
விப்ரலம்பாதி தோஷ சம்பாவனை இல்லாத
நாலு வேதத்தைக் கொடுத்து
தாதா யதபூர்வ மகல்பயத்-என்று
முன்பு போலே இவற்றை உண்டாக்கு -என்று விட
அவனும் வேதத்தை அசுரர்கள் கையில் பறிகொடுத்து
வேதா மே பரமஞ் சஷூர் வேதா மே பரமம் தனம் -என்று
கண்ணும் கண்ண நீருமாய் நின்று கூப்பிட
அவன் பக்கலிலே கிருபையைப் பண்ணி  –

அம் மலர் அயற்கு அருளி –
அவன் தன் அதிகாரத்தில் குலையாது நின்று யாய்த்து அபேஷித்தது-
(தாய் கையில் சேய் போல் அதிகாரி -அப்படிப்பட்ட அவன் -அஜன் -லோக ஸஜாதீய ஜென்மம் விவஷிதம் )

முன் பரி முகமாய் —
ஓர் ஆச்சார்ய அனுவர்த்தனம் பண்ணிக் கேட்க என்றால்
இவன் இறாய்க்கும்-என்று
இவன் தன்னை தாழ விட்டு  ஹயக்ரீவனாய்
நின்று யாய்த்து உபதேசித்தது –
சாரதியாய் நின்று உபதேசித்தால் போலே யாய்த்து –

இசை கொள் வேத நூல் என்று இவை பயந்தவனே எனக்கு அருள் புரியே
நல்ல நாதத்தை உடைத்தாய் இருந்துள்ள வேதம் இதிஹாசாதிகள்
இவற்றை உண்டாக்கினவனே
என் பக்கலிலே கிருபையை பண்ணி யருள வேணும் –
நூல் -என்று சாஸ்த்ரங்களை சொல்லவுமாம்
அன்றிக்கே –
அல்லாத இதிஹாச புராணங்களை சொல்லிற்றான போது
தத் சர்வம் வை ஹரேஸ் தநு -என்கையாலே
அவர்களை சரீரமாகக் கொண்டு நின்று தான்
சொல்லுகையாலே அவன் சொன்னான் என்னத் தட்டு இல்லை –
(முனிவரை இடுக்கி -ஹயக்ரீவர் கொடுத்ததாக சொன்னதுக்கு இந்த பிரமாணம் )

உயர் கொள் மாதவிப் போதொடு உலாவிய மாருதம்
ஆகாச அவகாசம் இடம் அடையும்படி
வளர்ந்த குருக்கத்தியிலே
காலங்களிலே

வீதியின் வாய்த் –
வீதியிலே

திசை எல்லாம் கமழும்
சஞ்சரியா நின்றுள்ள காற்றானது
திக்குகள் தோறும் கமழா நிற்பதாய்
பொழிலாலே  சூழப் பட்டு இருப்பதாய் –

——————————————————

பரி முகமாய் இரண்டு வடிவம் -ஹயக்ரீவன்
சிருக்கனுக்கு அரி முகமாய் இரண்டு வடிவு கொண்டு
திரு உகிறாள் விரோதி போக்கி அருளினவன்

வெய்யனாய் உலகு ஏழு உடன் நலிந்தவன் உடலகம் இரு பிளவாகக்
கையில் நீள் உகிர் படையது வாய்த்தவனே எனக்கு அருள் புரியே
மையினார் தரு வரால் இனம் பாய வண் தடத்திடைக் கமலங்கள்
தெய்வம் நாறும் ஒண் பொய்கைகள் சூழ் திரு வெள்ளறை நின்றானே –5-3-3-

மையினார்-மையார்-கருப்பு மிக்கு இருந்துள்ள -இன் சரிகை

வெய்யனாய் உலகு ஏழு உடன் நலிந்தவன் உடலம் இரு பிளவாகக்
மிக்க க்ரௌர்யத்தை உடையனாய்
சகல லோகங்களையும் ஒரு காலே நலிந்த ஹிரண்யன் உடைய
சரீரமானது இரண்டு கூறாம் படியாக –

கையில் நீள் உகிர் படையது வாய்த்தவனே எனக்கு அருள் புரியே –
திரு வாழியைக் கொண்டு கார்யம் செய்யப் பெறாத படி
அவன் வரம் பெற்று இருக்கையாலே
திரு உகிரே ஆயுதமாகக் கொண்டு வ்யாபரித்தவனே –

எனக்கு அருள் புரியே –
என்னுடைய விரோதியைப் போக்கி
என் பக்கலிலே கிருபையைப் பண்ணி அருள வேணும் –

மையினார் தரு வரால் இனம் பாய வண் தடத்திடைக் கமலங்கள்
கருப்பு மிக்கு இருந்துள்ள வரால் இனம் உண்டு
இவற்றின் உடைய திரள்கள் ஆனவை பூக்களைக் கிழித்துக் கொண்டு
அழகிய தடாகங்களில் பாய

தெய்வம் நாறும் ஒண் பொய்கைகள் சூழ் திரு வெள்ளறை நின்றானே   –
தெய்வம் -ஸ்லாக்கியமான –
அக் கமலங்கள் மணம் நாறா நின்றுள்ள
பொய்கைகள் சூழ்ந்த
திரு வெள்ளறை நின்றானே –

————————————————

பிரலாதனுக்கு உதவியது
அவ்வளவு அன்றிக்கே
ராஜ்யார்த்தி பாண்டவர்களுக்கு
ஆதி யம் சோதி உருவைக் கொண்டே தூத்ய சாரத்யங்களைப் பண்ணி
அவ்வளவு அன்றிக்கே
அனைத்தையும் த்ருஷ்டார்த்திகளுக்கும் உதவ திருவேங்கடத்தில்
எல்லாக் காலத்திலும் எல்லாருக்கும் கண் கண்ட பிரயோஜனம்
அதே போல் கைங்கர்யம் -சேஷ வ்ருத்தி
பகவத் அனுபவ ப்ரீதி காரித கைங்கர்யம்
-கைங்கர்யத்துக்கு பூர்வ ஷண  வர்த்தியான
பரம பக்தியை எனக்கு பண்ணி அருள வேணும்
அந்த ப்ரீதிக்கு பிரார்த்தனை
அஞ்சன கிரி-கிருஷ்ண கிரி
ஸ்வேத கிரி -இரண்டையும் சேர்த்து அனுபவம்
ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாஸே சேமுஷி பக்தி ரூபா -பவது மம -இத்தைக் கொண்டே ஸ்ரீ பாஷ்ய காரர்
மதி நலம் அருள பிரார்த்தனை

வாம்பரி யுக மன்னர் தம் உயிர் செக ஐவர் கட்கு அரசளித்த
காம்பினார் திரு வேங்கடப் பொருப்ப நின் காதலை யருள் எனக்கு
மாம் பொழில் தளிர் கோதிய மடக் குயில் வாயது துவர்ப்பு எய்த
தீம் பலங்கனி தேனது நுகர்   திரு வெள்ளறை நின்றானே—5-3-4-

காம்பினார்-காம்பார்-மூங்கில் மிக்கு இருந்துள்ள -இங்கும் இன் சாரிகை

வாம்பரி யுக மன்னர் தம் உயிர் செக ஐவர்கட்கு அரசளித்த
தாவி வாரா நின்றுள்ள
குதிரைகள் உக்கிப் போம் படியாக
அவற்றை மேற்கொண்டு தோற்றின ராஜாக்கள் முடியும்படியாக
பாண்டவர்களுக்கு பக்கலிலே ஓரத்தைப் பண்ணின

காம்பினார் திரு வேங்கடப் பொருப்ப –
மூங்கில் மிக்கு இருந்துள்ள
திருவேங்கடம் ஆகிய மலையை உடையவனே –

நின் காதலை யருள் எனக்கு –
தேவர் திருவடிகளில் உண்டான
கைங்கர்யத்துக்கு
பூர்வ ஷண  வர்த்தியான
பரம பக்தியை எனக்கு பண்ணி அருள வேணும் –

மாம் பொழில் தளிர் கோதிய மடக் குயில் –
மாம் பொழிலிலே போய் புக்கு
அதில் உண்டான தளிரை செருக்காலே தன் வாயாலே கோதின
மடக் குயிலானது -பெண் குயிலானது

வாயது துவர்ப்பு எய்த –
அத்தை ரசாந்தரத்தை   இட்டு மாற்ற வேணும் -என்று

தீம் பலங்கனி தேனது நுகர்   திரு வெள்ளறை நின்றானே
இனிய பலாப் பழத்திலே சென்று
அதில் உண்டான தேனை புஜியா நின்றுள்ள  தேசம் –

———————————————–

திரௌபதியா சக நமஸ்கரித்த -பிரார்த்தவர்களுக்கு செய்தமை கீழ்
பூமி அர்த்தியாகி இல்லாமல்
ஆபத்தே செப்பேடாக ரஷித்தது இதில்

மான வேல் ஒண் கண் மடவரல் மண் மகள் அழுங்க முந்நீர்ப் பரப்பில்
ஏனமாகி அன்று இரு நிலம் இடந்தவனே எனக்கு அருள் புரியே
கான மா முல்லை கழைக் கரும்பு ஏறி வெண் முறுவல் செய்து அலர்கின்ற
தேனின் வாய் மலர் முருகு குக்கும் திரு வெள்ளறை நின்றானே —5-3-50

முருகு குக்கும்-வண்டின் உடைய வாயிலே தேனை ஒழுக்கா நின்றுள்ள தேசம்-
புண்டரீகாக்ஷன் தானே -அதே போல் தேனை வண்டுகளின் வாயில் கொட்டும் –
சமைத்த மடுவும் எல்லாம் சாய் கரம் போல்

மான வேல் ஒண் கண் மடவரல் மண் மகள் அழுங்க –
இலை யகன்ற வேல் போலேயாய்
தர்ச நீயமாய் இருக்கிற  திருக் கண்களை உடையாளாய்
ஷமை துடக்கமான ஆத்ம குணங்களால் மிக்கு இருக்கிற
ஸ்ரீ பூமிப் பிராட்டி
தன் விபூதி முகத்தாலே புக்கு அழுந்த –

முந்நீர்ப் பரப்பில் –
பிரளயத்தில் அகப்பட
நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத
ஸ்ரீ வராஹ வேஷத்தைப் பரிக்ரஹித்து

ஏனமாகி அன்று இரு நிலம் இடந்தவனே –
அண்ட பித்தியிலே ஒட்டின பூமியை இடந்து எடுத்துக் கொண்டு  ஏறினவனே –

எனக்கு அருள் புரியே –
அர்த்திக்கவும் மாட்டாதே பூமியை ரஷித்த உனக்கு
அர்த்தித்த என்னுடைய ரஷணம் பண்ணுகை
பெரிய பணியோ –

கான மா முல்லை கழைக் கரும்பு ஏறி வெண் முறுவல் செய்து அலர்கின்ற
நெய்தல் மருதம் குறிஞ்சி  பாலை முல்லை -என்கிற
நிலங்கள் எல்லாம்
தன்னிலே கலந்தாய்த்து இருப்பது
ஊரை அணைந்த வயல் அருகு உண்டான காட்டில்
பெரிய முல்லை யானது
கரும்பின் நுனி அளவும் மூடப் படர்ந்து
ஏறின ஒக்கத்தால் உண்டான ஹர்ஷத்தாலே
ஸ்மிதம் பண்ணினாப் போலே
அலருகிற மலரானது –

தேனின் வாய் மலர் முருகு குக்கும் திரு வெள்ளறை நின்றானே
தன்னிலே மது பானார்த்தமாக படிந்த
வண்டின் உடைய வாயிலே தேனை
ஒழுக்கா நின்றுள்ள தேசம் –

——————————————————–

பூ தரன் -ஸ்ரீ வராஹம்
பூ தர தரன் -ஸ்ரீ கூர்மம்
பூமிப் பிராட்டிக்கு
பிரயோஜனாந்தரருக்காக பூ தரம் மந்த்ரம் தரித்து ஸ்ரீ கூர்மம்
ஸ்ரீ வராஹ முன் அவதாரம் இதில் அனுபவம்
தொழுது எழ இல்லாமல் அமுதத்துக்காக தொழுமவர்கள் தேவர்கள் –

பொங்கு நீண் முடி யமரர்கள் தொழுது எழ அமுதினைக் கொடுத்து அளிப்பான்
அங்கு ஒர் ஆமையதாகிய வாதி நின்னடிமையை யருள் எனக்கு
தங்கு பேடை யோடூடிய மது கரம் தையலார் குழல் அணைவான்
திங்கள் தோய் சென்னி மாடம் சென்று அணை திருவெள்ளறை நின்றானே—5-3-6-

பொங்கு நீண் முடி யமரர்கள் தொழுது எழ அமுதினைக் கொடுத்து அளிப்பான்
விஸ்த்ருதராய்
நிலை நின்ற முடியை உடையராய் இருக்கிற தேவர்கள் –
திருவடிகளிலே விழுந்து உஜ்ஜீவிப்பதாக
மநோ ரதிக்க
அவர்களுக்கு அசுரர்களால் வந்த
வினையைப் போக்கி ரஷிகைக்காக
(அம்ருத ரூப பலத்துக்கு தொழுது எழுவது சாதனம் இவர்களுக்கு )

அங்கு ஒர் ஆமையதாகிய வாதி நின்னடிமையை யருள் எனக்கு
மந்தரத்தை தரிக்க வல்ல
ஆமையின் வேஷத்தை பரிக்ரஹித்து
அவர்களை ரஷித்து
அவர்களுக்கு சத்தா ஹேது வானவனே –

ஆதி நின்னடிமையை யருள் எனக்கு
அடியேனுக்கு கைங்கர்யம் அருளி சத்தையை அருள வேணும் –
எனது சத்தையை அருள வல்ல ஆதியும் நீயே

தங்கு பேடை யோடூடிய மது கரம் தையலார் குழல் அணைவான்
பூவிலே தங்கின பேடையோடே
அத்தை இத்தைச் சொல்லி ஊடின  வண்டானது
இதுக்கு தெரியாத தோர் இடம் தேடி மறைய வேணும் -என்று அதுக்காக
ஸ்திரீகள் உடைய குழலிலே மறையக் கோலி

(நான் ஒரு பூவில் நின்றும் வேறே ஒரு பூவில் புறப்பட்டால்
அக்ர- முன்னே போன சீதாப் பிராட்டி போல் இல்லாமல்
கிளம்பின பின்பும்
பூவில் கால் தங்கிற்றோ
என்னிலும் தேன் இனிதோ போன்ற ஊடல் )

திங்கள் தோய் சென்னி மாடம் சென்று அணை திருவெள்ளறை நின்றானே  –
சந்திர பதத்து அளவும் செல்ல
ஓங்கின சிகரத்தை உடைத்தான
மாடங்களிலே சென்று அணையா நிற்கும் யாய்த்து –

——————————————————-

ராஜா ராமனே ரக்ஷகன்
தேவர்களுக்கு அமுதம் கீழ்
அவர்களுக்கு குடி இருப்பு அரிதாம் படி தலை பத்து கொண்ட அவனை நிரசித்து
ரஷித்து அருளிய குணம் அனுபவம்

ஆறினோடு ஒரு நான்குடை நெடு முடி யரக்கன் தன் சிரம் எல்லாம்
வேறு வேறு உக வில்லது வளைத்தவனே எனக்கு அருள் புரியே
மாறில் சோதிய மரகதப் பாசடைத் தாமரை மலர் வார்ந்த
தேறல் மாந்தி வண்டு இன்னிசை முரல் திரு வெள்ளறை நின்றானே –5-3-7-

அரக்கன் ராவணாசூரன் ஸ்வபாவத்தால் ராக்ஷஸனும் அரக்கனும் ஒருவரே-

ஆறினோடு ஒரு நான்குடை நெடு முடி யரக்கன் தன் சிரம் எல்லாம் வேறு வேறு உக வில்லது வளைத்தவனே –
பத்து தலையை உடைய ராவணன் உடைய
தலை பத்தையும்
சின்னம் பின்னமாய் போம் படியாக
வில்லை வளைத்தவனே –

எனக்கு அருள் புரியே –
என் பக்கலில் கிருபையை பண்ணி யருள வேணும் –
(பத்து இந்திரியங்கள் -மனஸ் ஞான இந்திரியங்கள் -ஆறு -கர்ம இந்திரியங்கள் –
விவேக சர ஜாலேன கொண்டு போக்கி கைங்கர்யம் அருள வேணும் )

மாறில் சோதிய மரகதப் பாசடைத் தாமரை மலர் வார்ந்த –
ஒப்பிலாத புகரை உடைய வாய்
மரகதம் போலே இருந்துள்ள
பச்சை இலையை உடைத்தான தாமரை மலரில் நின்றும் –

தேறல் மாந்தி வண்டு இன்னிசை முரல் திரு வெள்ளறை நின்றானே-
ஒழுகா நின்றுள்ள தேனைப் பருகி
வண்டுகள் ஆனவை
இனிய இசையைப் பாடா நின்றுள்ள தேசம் –

—————————————————–

தேவர்களுக்கு அமுதம்
ஹம்ஸ அவதாரம்
ஊண் கொடுத்து
குடி இருப்பும் கொடுத்த அளவு அன்றிக்கே
தேவர்களுக்கு ஓதுவித்தவனும் நீயே
வேத அர்த்தமான கைபகார்யம் அருள வேணும்
இரண்டாம் பாட்டில் ஹயக்ரீவர்
இங்கு ஹம்சம்
கல்ப பேதத்தால் கூடும்
இரண்டும் வித்யா பிரத அவதாரம்
ஒருவர் வேதம் கொடுத்து இருந்தாலும்
தர்மி ஐக்கியம் பற்ற ஒன்றே

முன்  இவ் யெழ் உலகு உணர்வு இன்றி இருள் மிகு யும்பர்கள் தொழுது ஏத்த
அன்னமாகி அன்று அரு மறை பயந்தவனே எனக்கு அருள் புரியே
மன்னு கேதகை சூதகம் என்று இவை வனத்திடை சுரும்பு இனங்கள்
தென்ன வென்று வண்டு இன்னிசை முரல் திரு வெள்ளறை நின்றானே –5-3-8-

முன்  இவ் யெழ் உலகு உணர்வு இன்றி இருள் மிகு யும்பர்கள் தொழுது ஏத்த
பண்டு இவ் லோகங்கள் ஏழும் வெளிச் சிறப்பு இன்றியே
இருளானது மிக
ப்ரஹ்மாதிகள் திருவடிகளிலே விழுந்து ஸ்தோத்ரம் பண்ண –
அசுரர்களோடு கலந்து
உரு மாய்ந்து போன  வேதத்தை

அன்னமாகி-
பிரிக்கைக்கு உடலாக
நீரையும் பாலையும் பிரிக்க வல்ல   அன்னத்தின் வடிவினைக் கொண்டு

அன்று அரு மறை பயந்தவனே –
தன் படிகளை அடங்க லும் பேச வற்றாய் இருக்கிற
வேதத்தை உண்டாக்கினவனே-
(தன்னைப் பெறிலும் பெற அரிதான தன் படிகளை அடங்கலும் பேச வற்றாய் இருக்கும் வேதம் )

எனக்கு அருள் புரியே –
என் பக்கலிலே கிருபையை பண்ணி அருள வேணும் –

மன்னு கேதகை சூதகம் என்று இவை வனத்திடை சுரும்பு இனங்கள்
மாறாத பூக்களை உடைத்தான தாழை தேமா
என்கிற இவற்றாலே
நெருங்கின சோலையின் உள்ளே
சுரும்புகள் ஆனவை

தென்ன வென்று வண்டு இன்னிசை முரல் திரு வெள்ளறை நின்றானே
மதுபானம் பண்ணி
உள்ளுப் புக்க த்ரவ்யம் இருந்த இடத்தே இருக்க ஒட்டாமையாலே
தென்ன தென்ன -என்று ஆளத்தி வைக்க
வண்டுகள் ஆனவை அதில் முறுகின பாட்டை -பரி பக்குவமான பாட்டை-
பாடா நிற்கும் ஆய்த்து –

———————————————

ஸ்வேத கிரி
மஹா லஷ்மீ பிரதானம்
பங்கயச்செல்வி
தாமரைக்கண்ணன்
பிரயோக சக்கரம்
சிபி சக்ரவர்த்தி -புதருக்குள் வெள்ளைப் பன்றி
மார்கண்டேயர் சொல்ல பால் அபிஷேகம்
அந்திக்காப்பு பெரியாழ்வார் பதிகம்
விமலா கிரி விமானம் சூர்யன் சந்திரன் கவரி வீச
ராமானுஜர் இங்கேயே இருக்க இன்னுயிர் சேவல் பாடல் சொல்லி ஸ்ரீ ரெங்கம் கூட்டி சென்ற ஐதீகம்
ஸ்வஸ்திகா குளம் பிரசித்தம்

தேவர்களுக்கு
அமுதூட்டி
குடி இருப்பு
வேதம் கொடுத்தது
போதாது என்று
அவர்களுக்காக இரந்து ரஷித்தது அனுபவம் இதில் –

ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று அகலிடம் முழுதினையும்
பாங்கினில் கொண்ட பரம நின் பணிந்து எழுவன் எனக்கு அருள் புரியே
ஓங்கு பிண்டியின் செம்மலர் ஏறி வண்டுழி தர மா  வேறித்
தீங்குயில் மிழற்றும் படைப்பைத் திரு வெள்ளறை நின்றானே—5-3-9-

படைப்பை-கொடித் தோட்டம்
ஆங்கு சென்று -மஹா சபையில் தடுப்பவர்கள் இருந்த இடத்திலும் சென்று

ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று அகலிடம் முழுதினையும்
மகாபலியினுடைய யஞ்ஞ வாடமான அவ்விடத்தில்
தன்னை இரப்பாளனாக்கிக் கொண்டு சென்று
பூமிப் பரப்பை அடங்கலும்

பாங்கினில் கொண்ட பரம
அவனது ஆக்கிக் கொண்ட சர்வாதிகனே
ராவணாதிகளைப் போலே தலையை அறுத்துப் பொகட்டு
வாங்கிக் கொள்ளலாய்   இருக்கச் செய்தே
ஔதார்யத்துக்கு சமைந்து இருந்த படியால்
தன்னை இரப்பாளனாக்கி அவனதாக்கிக் கொண்டான் ஆய்த்து –

(அவனதாகவே நம்பிக் கொண்டான் -கொடுப்பவனாக இருந்தால் கொள்வானாக –
ஸ்வாமியாக கொண்டால் தாசனாக துவம் மே அஹம் மே போல் )

நின் பணிந்து எழுவன் எனக்கு அருள் புரியே  –
இந்த்ரன் உடைய ஆஸ்ரயணத்தோ பாதி
போராதோ என்னுடைய ஆஸ்ரயணம் –

ஓங்கு பிண்டியின் செம்மலர் ஏறி வண்டுழி தர –
ஆகாச அவகாசம் வெளி யடையும் படி
வளர்ந்த அசோகம் ஆனது
சிவக்கப் பூத்துக் கிடக்க
இதிலே மது பானம் பண்ணலாம் என்று -அதுக்காக வண்டுகள் சஞ்சரிக்க

மா  வேறித் தீங்குயில் மிழற்றும் படைப்பைத் திரு வெள்ளறை நின்றானே –
அத்தைக் கண்ட குயில்கள் ஆனவை-நெருப்பு என்று
அருகே செல்ல அஞ்சி நின்ற மாவிலே ஏறி
இவை நெருப்பிலே அகப்பட்டனவாகக் கொண்டு
அந ஷர ரச பேச்சாலே -அவ்யக்தமான பேச்சாலே -படு கொலை கிடி கோள் -என்றாப் போலே
கூப்பிடா நின்றது யாய்த்து –
இதில் வாசமும் நித்யமாய் இருக்கச் செய்தே
பயமும் நித்தியமாய் செல்லா நிற்கும் யாய்த்து -படப்பை –கொடித் தோட்டம் –

ஓதி ஆயிரம் நாமங்கள் உணர்ந்தவர்க்கு உறு துயர் அடையாமல்
ஏதம் இன்றி நின்று அருளும் நம் பெருந்தகை இருந்த நல்லிமயத்து
தாது மல்கிய பிண்டி விண்டலர்கின்ற தழல் புரை எழில் நோக்கி
பேதை வண்டுகள் எரி என வெருவரு பிரிதி சென்று அடை நெஞ்சே —1-2-9-

உரு துயர் -அனுபவ விநாஸ்ய பிரதிபந்தகங்கள்
பிண்டி -அசோகா புஷ்பம்
தேனைக் குடித்து பூ என்று உணரும் -முன்பு நெருப்பு -பயக்ருத் பய நாசன் –
அவனை நினைக்க பயம் போகும் நம்மை நினைக்க பயம் வருமா போலே

வியாக்யானம்-
ஓதி ஆயிரம் நாமங்கள் உணர்ந்தவர்க்கு-
ஆயிரம் திரு நாமங்களையும் வாயாலே சொல்லி
அவற்றின் உடைய அர்த்த அனுசந்தானம் பண்ணா நின்று உள்ளவர்களுக்கு –
ஒரு திரு நாமத்தைச் சொல்லி -அவ்வளவில் பர்யவசிக்க மாட்டாதே
ஆயிரம் திரு நாமங்களையும் அடைவு படச் சொல்லி
அந் நாமத்வாரா நாமி யானவனை மனனம் பண்ணா நின்று உள்ளவர்களுக்கு –

உறு துயர் அடையாமல்-
உறக் கடவதாய் நிற்கிற பாபங்கள் பல அனுபவத்துக்கு இவனைத் தொடராதபடியாக
அவஸ்யம் அநு போக்தவ்யம் -என்றும் –
ந புக்தம் ஷீ யதே -என்றும் சொல்லுகிறபடியே அனுபவித்தால் அல்லது நசியாத பாபங்கள்
பல அனுபவத்துக்கு வந்து கிட்டாதபடியாக

ஒரு பிசாசம் -கண்டா கர்ணன் – நரகாத ஜகந்நாத நாராயண பராயண என்று சொல்ல
ஆத்மாநாம் வாசுதேவோ ஸ்லாக்கியம் சிந்தயந்த் -என்று ஸ்வ அனுபவம் பண்ணி
அந்ய பரதையாய் இருக்கிற அளவிலே இத்தைக் கேட்டு
கஸ்ய முக்தி கரேஸ்திதா -என்று நம் பேரைச் சொல்லி நம்மை எழுதிக் கொண்டவர் -என்றான் இறே
(தாம் சென்று அடிமை செய்யும் படி -என்றவாறு )

ஏதம் என்று துக்கமாய் – வருத்தத்தை நினைக்கிறது
இத் திரு நாமத்தை சொன்னால் இத்தை உடையவன் செவிப்ப்படும்படி அண்ணியானாய் நிற்க –
ஆஸ்ரயிப்பாருக்கு வருத்தம் இன்றிக்கே ஒழிகைக்கு உடலாய் இருக்கும் இறே
இவர்களுக்கும் வருத்தம் இல்லாதபடி இருக்கும்-

உறு துயர் இத்யாதி
வாக்குத் தூய்மை இலாமையினாலே மாதவா உனை வாய்க் கொள்ள மாட்டேன் -என்று
அசித் சம்சர்க்கத்தை அனுசந்தித்து -நாம் அங்குத்தைக்கு யோக்யராய் பரிமாறுகை யாவது என் -என்று
தன் அயோக்யதையை அனுசந்திக்கைக்கு அவகாசம் இல்லாதபடி
(நின்று அருளும் நம் பெரும் தகை -)ஆஸ்ரயணீயனான தான் சந்நிஹிதன் ஆகையாலே
ஆஸ்ரயிப்பாருக்கு ஒரு வருத்தமும் வாராத படி இருக்கிற
மஹா ப்ரபாவன் வந்து வர்த்திக்கிற விலஷணமான ஹிமவானில்-

தாது இத்யாதி
தாது மிக்கு இருந்துள்ள அசோக புஷ்பம் ஆனது விட்டலருகிற போதை
அக்னி கல்பமான எழிலைப் பார்த்து
பேதை வண்டுகள்
அசோக புஷ்பங்களை நித்ய அனுபவம் பண்ணா  நிற்கச் செய்தேயும்
நித்யமாக பிரமிக்க வல்ல மௌக்யத்தை உடைய வண்டுகள் ஆயிற்று

தானும் நித்ய வாசம் பண்ணா நிற்கச் செய்தேயும்-
அதுவும் நாள் தோறும் மலரா நிற்கச் செய்தேயும்-
எப்போதும் ஒக்க இது நெருப்பு  இது நெருப்பு -என்று ப்ரமிக்கும்படியாய் இருக்கும்
முன்னாள் இது அக்னி என்று சங்கித்து விசாரித்து -அன்று என்று நிர்ணயித்து
பிற்றை நாள் அது அன்று என்று இருக்க மாட்டாதே -நெருப்பு -என்றே அஞ்சி இரா நிற்கும்
அதுக்கடி
பய நிவ்ருத்தியும் நித்தியமாய் பயமும் நித்தியமாய் இருக்கையாலே-

இதுக்கு திருஷ்டாந்தமாக திரு வெள்ளறை திரு மொழியில் -5-3-9-ஒரு பாசுரம் அருளிச் செய்வர்

ஆங்கு மாவலி வேள்வியில் சென்று இரந்து
மஹா பலியினுடைய யஞ்ஞா மாடத்திலே தன்னை அர்த்தியாக்கிச் சென்று

அகலிடம் முழு தினையும் இத்யாதி
பூமிப் பரப்பதைய வாங்குகிற அன்று
அவனை எதிரிட்டு கொண்டு வாங்குகை  அன்றிக்கே ஏறிட்டுக் கொண்டு இருக்கிற
ஔதார்யத்துக்கு அநு ரூபமாக வாங்கினான்
ராவணாதிகளைப் போலே தலை அறுக்க வேண்டிற்று இல்லை
ஔ தார்யம் என்று ஒரு அனுகூல லேசம் கிடைக்கையாலே
இவன் கொடுக்க உகந்து இருந்தான் என்று தன்னை இரபபாளன் ஆக்கி
அவனோடு இசைய கொண்டான்
தன்னைதான பூமியை இறே அவன் தந்ததாக கொண்டான்
ஆக நம்முடைய ஆத்ம சமர்ப்பணம் போலே இருப்பது ஓன்று இறே அவனுடைய தானமும்

அதவா
கின்நு  சமர்ப்பயாமி -அநந்தரம் அநுசயிக்க வேண்டும்படி இறே இது இருப்பது –
விழுக் காட்டில் ஆத்ம சமர்ப்பணத்தோடு ஆத்ம அபஹாரத்தோடு வாசி அற்று இறே இருப்பது –
ஆகை இறே உபாய நிரபேஷ்யம் சொல்லுகிறது

பரம நின் பணிந்து எழுவேன் எனக்கு அருள் புரியே –
சர்வாதிகனே -உன்னை வணங்கி உஜ்ஜீவிக்கிற எனக்கு பிரசாதத்தை பண்ணி அருள வேணும் –
ஆஸ்ரயணத்துக்கு பல வ்யாப்தி உண்டு இறே

ஓங்கு பிண்டியின் செம்மலர் ஏறி வண்டுழிதர மா வேறி தீம் குயில் –
ஆகாசம் இடம் அறும்படி வளர்ந்து பரப்பு மாறப் பூத்த
அசோகத்தின் உடைய சிந்திய பூக்களில் –
மது பான அர்த்தமாக வண்டுகள் சஞ்சரிக்க
தர்சநீயமான குயில்கள் ஆனவை -இவை நெருப்பிலே புகை என்றே நிச்சயித்து
அது தன்னைத் தட்டாதபடி மாவிலே போய் ஏறி கூப்பிடா நிற்கும் ஆயிற்று –
சிவந்த பூப் பூவாத மாத்தேடி ஏறி நின்று –
மிழற்றும் –
எழுத்தும் சொல்லும் தெரியாதபடி கூப்பிடா நிற்கும்
இவற்றின் உடைய தயநீய தசையைக் கண்டு இன்னது என்று பாசுரம் இட்டு
சொல்ல மாட்டாதே -கடக்க நின்று -தர்ம ஹாநி கிடி கோள் -என்பாரைப் போலே
அவ்யக்தமாக கூப்பிடா நிற்கும் –
படைப்பை –
இது ஆயிற்று ஊரில் கொடித் தோட்டங்கள் இருக்கும்படி-

இத்தால்
அவனுடைய சர்வாதிகத்வத்தையும்
அவனை அனுபவிப்பதாக சொல்லுகிற தங்களுடைய சம்சாரித்வத்தையும்
அனுசந்தித்து
நான் சென்று கிட்டுகை  யாவது என் என்று துணுக் துணுக் என்னா நிற்பர்கள் -ப்ரஹ்மாதிகள் –
இவ்வண்டுகள் ஆனவை புஷ்ப சாமான்யத்தைக் கொண்டு மது பான அர்த்தமாக
மேல் விழா நிற்பது அக்னி என்று கிட்ட மாட்டாதே இறாய்த்து வெருவதாக நிற்கும் ஆயிற்று —
அன்றிக்கே
ஆஸ்ரயிப்பாருக்கு -அதசோ பயம் கதோ பவதி -என்னும் இதுவும் உண்டாய்
போக்யதையால் வந்த பயம் என்றும் உண்டாய் இருக்கும் என்னுதல் –
ஆஸ்ரயணீய வஸ்து சுலபன் ஆகையாலே ஆஸ்ரயிப்பாருக்கு
தம் தாமுடைய அநுபவ விநாச்யமான பாபங்களை அனுசந்தித்து
பயப்படவும் வேண்டா –
அசோக புஷ்பத்தை அக்னியாய் கொண்டு வண்டுகள் அஞ்சுகிற அச்சம்
நித்யமாக செல்லா நிற்கும்-

—————————————————–

மஞ்சுலா மணி மாடங்கள் சூழ் திரு வெள்ளறை அதன் மேய
அஞ்சனம் புரையும் திரு வுருவனை யாதியை யமுதத்தை
நஞ்சுலாவிய வேல் வலவன் கலி கன்றி சொல் ஐ  இரண்டும்
எஞ்சலின்றி நின்று ஏத்த வல்லார் இமையோர்க்கு அரசர் ஆவர்களே –5-3-10-

மஞ்சுலா மணி மாடங்கள் சூழ் திரு வெள்ளறை அதன் மேய
மேக பதத்தளவும் செல்ல ஓங்கி இருப்பதாய்
மணி மயமான மாடங்களாலே சூழப் பட்ட
1-திரு வெள்ளறை யில் நித்ய வாஸம் பண்ணுகிற –

அஞ்சனம் புரையும் திரு வுருவனை யாதியை யமுதத்தை
2-மைப்படி மேனியன் -அசந்நிஹிதனே யாகிலும் விட ஒண்ணாதது யாய்த்து வடிவழகு –
3-ஆதியை-அழகு இல்லை யாகிலும் விட ஒண்ணாதது ஆய்த்து பிராப்தி –
4-அமுதத்தை-பிராப்தி இல்லை யாகிலும் விட ஒண்ணாதது யாய்த்து போக்யதை –

நஞ்சுலாவிய வேல் வலவன் கலி கன்றி சொல் ஐ  இரண்டும்
திருஷ்டி விஷம் போலே இருக்கிற வேலை உடைய
ஆழ்வார் அருளிச் செய்த இப் பத்தையும்

எஞ்சலின்றி நின்று ஏத்த வல்லார் இமையோர்க்கு அரசர் ஆவர்களே –
ஒன்றும் விடாதே ஏத்த வல்லவர்களை
நித்ய ஸூரிகள் ஸ்ரீ வைகுண்ட நாதனை விட்டு
இவர்களை ஆதரியா நிற்பர்கள் –

————–

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

வென்று விளங்கு வினை வீயச் செய் மாலடிக்கே
என்றும் அன்பால் ஏவல் இசைந்து ஆட்செய்ய ஓன்று நீலன்
வெள்ளறையானை வேண்டும் பாடலை உள்ளத்துள்
உள்ள உகந்து நெஞ்சே உந்து -43-

ஓன்று நீலன் -ஒருமைப்பாட்டை -இசைந்த நீலன் ஏவ மற்றமரர் ஆட் செய்வார்-என்கிறபடியே
பெருமான் சோதி வாய் திறந்து பணித்தபடியே ஆட் செய்தல் உற்றதாகும் –

———————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய திருமொழி-5-2—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

May 5, 2014

வையம் காத்த பெருமாள்
ஜகத் ரக்ஷகன்
அம்பரீஷ வரதன்
காவேரி வெள்ளம் வந்து
வேறே இடத்தில் மறைந்து
ராணி மங்கம்பாள் ஸ்வப்னம் சேவை
ஸ்ரீ வராகப் பெருமாள் இடந்து ஸ்ரீ முஷ்ணம் வழியாக வந்ததாகச் சொல்வர்
புகுந்தானூர் இங்கு உண்டே

நந்தகர் மகரிஷியை முன்னிட்டு தேவர்கள் கூடி
ஆதி வராஹ அவதாரம் இங்கே
மடியில் பூமா தேவி
பிரயோக சக்கரம்
வையம் காத்த பெருமாள்
உய்ய வந்தார் உத்சவர்
அம்பரீஷன் -கை சக்கரம் -கொடுத்து -துர்வாசர் -அம்பரீஷ வரதன்
நின்ற திருக்கோலம்
பத்மாசினி தாயார்
நெல்லிக்காய் பலா மரம்
சுத்த சத்வ விமானம்
நர்த்தன ஆஞ்சநேயர் இங்கே சேவை
ராணி மங்கம்மாள் பெரிய விக்ரஹம் இங்கே உண்டே

—–

தாந்தம் – பிரவேசம் –

வெள்ளியார் வணங்க விரைந்து அருள் செய்வான் -என்றார் கீழில் திரு மொழியில்
பிறர் ஆஸ்ரயிக்க விரைந்து அருள் செய்வான் -என்று
இது ஒரு பழம் கதை சொல்ல வேணுமோ
தானே வந்து
என் ஹிருதயத்தில் புகுந்து
விரைந்து அருள் செய்தவன் -அன்றோ -என்று
அவன் படிகளை அனுசந்தித்து
இப்படிப் பட்டவன் தான் திருக் கூடலூரிலே
வந்து சன்னிஹிதன் ஆனான் –
அவன் ஆகிறான்
சர்வாதிகனாய் இருந்து வைத்து
தன் மேன்மை பாராதே
ஆஸ்ரிதர்க்காக தாழ நின்று கார்யம் செய்யும் ஸ்வ பாவன்
அவன் வர்த்திக்கிற தேசம் தான் நிரதிசய போக்கியம் என்று
அத்தை பேசி அனுபவிக்கிறார் –

(அறிவது அரியான் -இதுக்கும் கீழ்
யாராலும் தங்கள் ப்ரயத்னத்தால் அடைய முடியாமல்
என்னை ஆளுடையான் -ஸ்வாமித்வத்தை நிர்ஹேதுகமாக காட்டி அருளினான்
இத்தை அனுசந்தித்து முதல் பாட்டில் பிரமேயத்தை இங்கு அருளிச் செய்கிறார்
ஆடுதுறை பெருமாள் இவர்
மதுரை கூடலூர் வேறே )

———————————————————

தாந்தம் பெருமை அறியார் தூது
வேந்தர்க்காய வேந்தரூர் போல்
காந்தள் விரல் மென்கலை நன் மடவார்
கூந்தல் கமழும் கூடலூரே  –5-2-1-

வேந்தரூர்-ராஜாதி ராஜன் -அரசருக்குத் தூது போன சர்வேஸ்வரன் –

தாம் –
ஸ்வதஸ் சர்வஞ்ஞராய் இருந்தாரே யாகிலும்
யஸ் சர்வஞ்ஞஸ் சர்வவித் -( முண்டகம் ஸ்வரூபம் ஸ்வ பாவங்களை அறிந்தவர் -)
பராஸ்ய சக்திர்  விவிதைவ ஸ்வாபாவி கீ ஜ்ஞான பல கிரியா ச -( ஸ்வேதாஸ்வரம் )-என்று
ஸ்ருதி ஸ்ம்ருதிகள் ஓதா நின்றனவே யாகிலும்

தம் பெருமை அறியார் –
ஆஸ்ரிதராய் இருப்பவர் தம்மை அனுபவித்து
ஆஸ்ரிதர்க்காக தாழ நிற்கும் இதுவும் ஒரு நீர்மையே
என்று ஆழங்கால்
படுமது ஒழிய தம்மால் அறியப் போகாது –

தூது வேந்தர்க்காய –
இன்னார் தூதன் என நின்றான் -2-2–என்றும்
நாடுடை மன்னர்க்குத் தூது செல் நம்பி -திருவாய்-என்றும் சொல்லுகிற படியே
பிறருக்காக தன்னை தாழ விட்டு
தூது போகா நிற்கும் யாய்த்து –
எத்தனையேனும் தாழ்ந்தாரும் பிறருக்காக
தாங்கள் தூது போக இசையார்கள் இறே –
அங்கன் இன்றியே
இவன் அறிவித்து திரிகிற ராஜாக்களுக்காக
தூது போகா நிற்கும் ஆய்த்து –

(கிருஷ்ண ஆஸ்ரய கிருஷ்ணனே பலம் கிருஷ்ணனே நாதனாக கொண்டவர்கள்
மெய்யானாகும் விரும்பித் தொழுவார்க்கு எல்லாம்
சமோஹம் சர்வ பூதேஷு -ஆஸ்ரிதர்களுக்குள் பக்ஷ பாதம் இல்லாதவன்
ந த்வேஷம்)

(விஸ்வ ரூபம் பார்த்தும் திருந்தாதவர்கள் அன்றோ அவர்கள்
சமமாக இருப்பார்களுக்குள் சமம்
தான் தம் பெருமை அறியார் -பிராமண கதன பூர்வகம்
பெருமை உண்டு என்று அறிந்தவர் யார்
ஆஸ்ரிதர்
மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் பரத்வம் கரை கண்டு
ஸுலப்யம் கரை காண முடியாமல் எத்திறம் மோஹித்தாரே
அவன் பெருமை அறிவார் உண்டே
அங்கன் அன்றியே
தாழ்மை இல்லாமை மட்டும் இல்லாமல்
ரிஷிகள் வாக்யங்களாலும் அறிந்தவர் பாண்டவர்கள்
அதி மானுஷ சேஷ்டிதங்களை அறிந்து அறிவித்து திரிகிறார்கள்
பகவானே சதுர்புஜத் வாதிகளால் அறிவித்தமையும் உண்டே
சஹஸ்ர பாஹோ -தேனைவ ரூபேண சதுர் புஜேன என்றானே அர்ஜுனன் )

வேந்தரூர் போல் –
இவன் இப்படியே தன்னை தாழ விட்டாலும்
இவனைத் தாழ நினைத்து இருப்பாரைக் கிடையாதே
ராஜாதி ராஜன் என்கிற பெருமையாலும் மிக்குத் தோன்றுகிறது –

காந்தள் விரல் மென்கலை நன் மடவார்
செங்காந்தள் போல் இருந்துள்ள விரலை உடையருமாய்
மிருதுவான பரியட்டத்தையும் உடையராய்
சர்வ பிரகாரத்தாலும் விலஷணைகளான ஸ்திரீகள் உடைய –

கூந்தல் கமழும் கூடலூரே  –
சர்வ கந்த என்கிற வஸ்து நித்ய வாஸம்
பண்ணுகிற தேசமாய் இருக்கச் செய்தேயும்
அத்தை யமுக்கி
இவர்கள் உடைய குழலில் பரிமளமே விஞ்சி
வாரா நிற்கும் யாய்த்து –

——————————————-

தூது போனது முன்
நப்பின்னைக்காக செய்தமை இதில் –

செறும் திண் திமில் ஏறு உடைய பின்னை
பெறும் தண் கோலம்  பெற்றாரூர் போல்
நறும் தண் தீன் தேனுண்ட வண்டு
குறிஞ்சி பாடும் கூடலூரே—-5-2-2-

செறும் திண் திமில் ஏறு உடைய
எதிரிகள் மேலே செறா நிற்பனவாய்
திண்ணியதான ககுத்துக்களை உடைய
ருஷபங்கள் உடைய –
(ககுஸ்தன் -காளை உருவில் வந்து உதவினவன் )

பின்னை பெறும் தண் கோலம்  பெற்றாரூர் போல் –
நப்பின்னை பிராட்டி ஒருத்திக்குமேயாய்
வேறு ஒரு ஆஸ்ரயத்தில் கிடவாத படியான அழகை லபித்து
பெறாப் பேறு பெற்றானாய்
அவன் வர்த்திக்கிற தேசம் போலே –

நறும் தண் தீன் தேனுண்ட வண்டு குறிஞ்சி பாடும் கூடலூரே
நறுவியதாய்
குளிர்ந்து
இனிதாய்
இருந்துள்ள
தேனைப் பானம் பண்ணின வண்டுகள்
உள்ளுப் புக்க த்ரவ்யம் இருந்த இடத்தில் இருக்க ஒட்டாமையாலே
கால நியதி பாராதே
எப்போதும் ஒக்க குறிஞ்சி என்கிற பண்ணைப்
பாடா நிற்கும் ஆய்த்து –

————————————

வெண்ணையும்
அடியார் உள்ளங்களையும்
கோபிகள் மனங்களையும் கொண்டவன் –
புகுந்த -ஒன்பதாம் பாட்டில் இது தான் உயிர் பாசுரம் அங்கு அருளிச் செய்வார் –

பிள்ளை உருவாய்த் தயிர் உண்டு அடியேன்
உள்ளம் புகுந்த ஒருவரூர் போல்
கள்ள நாரை வயலுள் கயல் மீன்
கொள்ளை கொள்ளும் கூடலூரே —5-2-3-

கொள்ளை கொள்ளும்-நாரைக்கும் நாரணன் கள்ளத்தனம் உண்டே –

பிள்ளை உருவாய்த் தயிர் உண்டு –
சர்வேஸ்வரனாய் இருந்து வைத்து
வெண்ணெய் அமுது செய்யப் பார்த்தல் இசைவார் இல்லை –
அதுக்காக
பிள்ளை வடிவு கொண்டு
தயிர் அமுது செய்து –

அடியேன் உள்ளம் புகுந்த ஒருவரூர் போல் –
இப்படி ஆஸ்ரித ஸ்பர்சம் உடைய த்ரவ்யத்தால் அல்லது
செல்லாத நீர்மையைக் காட்டி
அனந்யார்ஹன் ஆக்கி
விலக்காத ஓர் அவகாசம் பெற்றவாறே
ஹிருதயத்திலே வந்து
அவன் வர்த்திக்கிற தேசம் போலே

கள்ள நாரை வயலுள் கயல் மீன் கொள்ளை கொள்ளும் கூடலூரே –
அங்குத்தை நாரைகள் ஆனவை
காலிலே மத்ஸ்யங்கள் குத்தா நிற்கச் செய்தேயும்
அவற்றில் ஓர் அபேஷை இல்லாதாப் போலே
அநாதரித்து இருந்து
தான் கணிசித்த ஆமிஷம் வந்து கிட்டினவாறே
மேல் விழுந்து கொள்ளை கொள்ளும் ஆய்த்து

யசோதை பிராட்டி தயிரையும் வெண்ணையையும் சேமிக்கும் போது
ஒராதவன் போல் உறங்கி
அவள் பேர நின்றவாறே
(அறிவுற்று தாரார் தடம் கைகள் உள்ள அளவும் கை நீட்டி )
தான் கண்டபடி கொள்ளை கொள்ளுமா போலே
யாய்த்து இவற்றின் உடைய ஸ்வபாவமும் –
அவன் நகர சோபத்தை விளைக்குமா போலே யாய்த்து இவையும் –

———————————————

இரவாளனாக-ஆக்கி -தம் பெருமை அறியாமல் –
அறிந்தவராக இருந்தால் வெண்ணெய் திருடுவாரா
தனது சொத்து இவை என்று அறியாதவர்

கூறு ஏர் உருவில் குறளாய் நில நீர்
ஏற்றான் எந்தை பெருமானூர் போல்
சேறு ஏர் உழவர் கோதைப் போதூண்
கோல் தேன் முரலும் கூடலூரே –5-2-4-

கூறு ஏர் உருவில் குறளாய் –
மமேதம் என்னும் அபேஷை உடைய வாமன வேஷத்தை பரிகிரஹித்து என்னுதல்-
(மாவலி மூவடி மண் கொடு -கேட்க்கைக்குத் தகுதியான உருவம் )
அன்றிக்கே –
கண்டார் அடங்கலும் -இது ஓர் குறள் வடிவு இருக்கும் படியே
என்று கூறப் பட்ட வடிவை உடையவன் -என்னுதல் –

நில நீர் ஏற்றான் எந்தை பெருமானூர் போல்
தன்னது அல்லாதது ஒன்றை பெற்றால் போலே இருக்கிற
பூமிப் பரப்படைய நீர் ஏற்று
அச் செயலாலே
என்னை எழுதிக் கொண்ட
என் குல நாதன் ஆனவன்
வர்த்திக்கிற தேசம் போலே இருந்தது –

சேறு ஏர் உழவர் கோதைப் போதூண் கோல் தேன் முரலும் கூடலூரே –
மிக்க சேறுகளிலே ஏரை நடத்த வல்லராய் இருந்துள்ள
உழவர் உடைய
மயிர் முடியிலே வைத்த மாலையில் பூக்களில் உண்டான
மதுவைப் பானம் பண்ணின வண்டுகள் ஆனவை
மரத்தில் நின்று அலர்ந்த போதைச் செவ்வியிலே
மது பானம் பண்ணினதில் காட்டிலும்
இவர்கள் குழலில்  போதைச் செவ்வியிலே
மது பானம் பண்ணி ஆலத்தி வையா நிற்கும் –

கோல் தேன் –
சோலையிலே படிந்த வண்டு -என்றபடி –

——————————————–

வாமனன் கீழ்
திரி விக்ரமம் இதில்
கையில் நீர் விழுந்த உடன் அல்பம் பெற்றது அறியாமல் பெறாதது பெற்றதாக
ஹர்ஷத்தால் வளர்ந்தது -ஏக ரூபனாய் இருப்பவன் -குறுகியும் வளர்ந்தும் –
இதுவும் தனது பெருமை அறியாததும் ஸூசகம்

தொண்டர் பரவச் சுடர் சென்று அணவ
அண்டத்து அமரும் அடிகளூர் போல்
வண்டல் அலையுள் கெண்டை மிளிரக்
கொண்டல் அதிரும் கூடலூரே —5-2-5-

சுடரை திரு மேனி சென்று
அடிகளூர்-ஸ்வாமியான கிருஷ்ணனுடைய
ஊராகத் தீண்டியவன் இவன் உலகமாகத் தீண்டியவன்
தொண்டர் பரவ–தேவர்கள் கூடி நின்ற ஊர் கூடலூர்

தொண்டர் பரவச் சுடர் சென்று அணவ-அண்டத்து அமரும் அடிகளூர் போல்
சங்கைஸ் ஸூராணாம்-என்கிறபடியே
ஆஸ்ரிதர் ஆனவர்கள் திரண்டு ஏத்த
திரு மேனியில் ஏக தேசமானது ( திருவடி கதிரவனைத் தாண்டி ஓடிற்றே )
ஆதித்ய பத்தைத் தளவில் சென்று ஸ்பர்சிக்க
ஆகாச அவகாசம் உள்ள இடமடையத்
தன் திரு மேனியாலே
பாரித்த ஸ்வாமிகள் வர்த்திக்கிற ஊர் போலே –
(விபு வேறே
இங்கு பாரித்து வளர்ந்தது )

அண்டத்து அமரும் -அண்ட பித்தியிலே செல்ல வளர்ந்த -என்னுதல் –

வண்டல் அலையுள் கெண்டை மிளிரக் –
வண்டலை மிக்கு இருந்துள்ள
நீர் நிலங்களிலே கெண்டை யானது
செருக்காலே மிளிர –

கொண்டல் அதிரும் கூடலூரே –
உடம்பிலே புகரைக் கண்ட மேகமானது
தன் உடம்பின் மின்னாகக் கொண்டு
அதுக்கு அனந்தரமான   முழக்கத்தை
முழங்கா நிற்கும் ஆய்த்து-

நீர் விழுகிற போது இங்கே கண்டு
கார்ய காலத்தில் அங்கே கண்ட
ஸ்ரீ வாமனைப் போலே யாய்த்து இவையும் –

—————————-

பெருமை அறியாத இந்திரனுக்காக இரப்பாளனாகி
தக்ஷ பிரஜாபதி யாகம் -பார்வதி போக -அவமரியாதை
நெருப்பில் விழ
ருத்ர தாண்டவம்
யஜ்ஜ விக்னம்
சாபம் தீர்த்தும் -இதனாலும் தம் பெருமை அறியாதது ஸூ சகம்
அவன் தன்னை ஈஸ்வரோஹம் என்று இருந்தாலும் துக்கமே ஹேதுவாக
ஈஸ்வரத்வ பிடாராலே நிக்ரஹிக்காமல் ஆபத்தே செப்பேடாக உதவும் ஸ்வபாவன் அன்றோ

தக்கன் வேள்வித் தகர்த்த தலைவன்
துக்கந்துடைத்த துணைவரூர் போல்
எக்கலிடு நுண் மணல் மேல் எங்கும்
கொக்கின் பழம் வீழ் கூடலூரே–5-2-6-

தக்கன் வேள்வித் தகர்த்த தலைவன் துக்கந்துடைத்த துணைவரூர் போல் –
தஷாத்வர த்வம்சன் -என்னக் கடவது இறே-ருத்ரனை –
எல்லாரையும் கீழ் ஆக்கி தானே மேலாக வேணும் -என்று
அபிமானித்து இருக்கிறவன் உடைய
துக்கத்தைப் போக்கின ஆபத் சகன் ஆனவன்
வர்த்திக்கிற ஊர் போலே இருந்தது –

எக்கலிடு நுண் மணல் மேல் எங்கும் கொக்கின் பழம் வீழ் கூடலூரே –
வண்டலிட்ட நுண்ணிய மணல்களிலே
மாம்பழங்கள் விழுந்து சேரக் கிடக்கிற போது
(மாம் பழம் நுண் மணல் வரிசையாக ஒன்றின் மேல் ஓன்று )
பழுக்கைக்கு சேரப் பதித்து வைத்தால் போலே
இருந்தது ஆய்த்து –

—————————————

துர் அபிமானி துக்கம் போக்கினது கீழ்
மண்ணும் கல்லுமான லோகத்தை திரு வயிற்றிலே வைத்து ரஷித்தமை
ஸுவ்குமார்யம் அறியாதவன்

கரும் தண் கடலும் மலையும் உலகும்
அருந்தும் அடிகள் அமருமூர் போல்
பெரும் தண் முல்லைப் பிள்ளையோடிக்
குருந்தம் தழுவும்  கூடலூரே —5-2-7-

கரும் தண் கடலும் மலையும் உலகும் அருந்தும் அடிகள் அமருமூர் போல் –
கறுத்து
ஸ்ரமஹரமாய் இருந்துள்ள கடலும்
பூமிக்கு ஆணி அடித்தால் போலே நிற்கிற பர்வதங்களும்
மற்றும் உண்டான லோகங்களும்
இவற்றை அடையக்
கட்டளை குலையாதபடி
புஜித்த ஸ்வாமி யானவன் –

(கடலும் மலையும் சொல்வான் என்
அடைமொழி சொல்வான் என்
கலங்காமல் கட்டளை அமைப்பு குலையாதபடி புஜித்தமை
சாமர்த்தியம் சொன்னபடி )

இன்னும் இங்கனம் ஒத்த ஆபத்துக்களைப் போக்கி
ரஷிப்பதாக பொருந்தி வர்த்திக்கிற
தேசம் போலே இருந்தது –

பெரும் தண் முல்லைப் பிள்ளை யோடிக் குருந்தம் தழுவும்  கூடலூரே
பெருத்து
ஸ்ரமஹரமாய் இருந்துள்ள
முல்லைக் கொடியானது ஓடிக் குருந்தை
முட்டாக்கிடப் படரா நின்றுள்ள தேசம் –

———————————————-

நந்தகர் மகரிஷியை முன்னிட்டு தேவர்கள் கூடி
ஆதி வராஹ அவதாரம் இங்கே
மடியில் பூமா தேவி
பிரயோக சக்கரம்
வையம் காத்த பெருமாள்
உய்ய வந்தார் உத்சவர்
அம்பரீஷன் -கை சக்கரம் -கொடுத்து -துர்வாசர் -அம்பரீஷ வரதன்
நின்ற திருக்கோலம்
பத்மாசினி தாயார்
நெல்லிக்காய் பலா மரம்
சுத்த சத்வ விமானம்
நர்த்தன ஆஞ்சநேயர் இங்கே சேவை
ராணி மங்கம்மாள் பெரிய விக்ரஹம் இங்கே உண்டே

இந்த பிராகிருத பூமி உண்டது மட்டும் இல்லாமல்
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் -செய்து ஆகர்ஷிப்பவன்
இவற்றால் ஈடுபாடு வளர்க்க
அதுவும் போதாது என்று இங்கும் நித்ய சந்நிதி

கலை வாழ் பிணை யோடு அணையும் திரு நீர்
மலை வாழ் எந்தை மருவுமூர் போல்
இலை தாழ் தெங்கின் மேல் நின்று இளநீர்
குலை தாழ் கிடங்கின் கூடலூரே—-5-2-8-

கலை வாழ் பிணை யோடு அணையும் திரு நீர்மலை வாழ் எந்தை மருவுமூர் போல்
கலைகளானவை
பிணை யோடு -மானோடே அணைந்து வாழா நின்றுள்ள
திரு நீர் மலையைத் தனக்கு
வாசஸ் ஸ்தானமாகக் கொண்டு வர்த்திக்கிற என் ஸ்வாமி யானவன்
அத் தேசமும் தனக்கு உண்டாய்  இருக்க
பொருந்தி வர்த்திக்கிற தேசம் போலே இருந்தது –
(புருஷோத்தமன் தான் இந்தப் பெண்கள் உடன் ஸம்ஸ்லேஷிக்க குருகுல வாசம் திரு நீர்மலை
மான் இடம் கற்றுக் கொண்டானாம் )

இலை தாழ் தெங்கின் மேல் நின்று இள நீர் குலை தாழ் கிடங்கின் கூடலூரே—
படர்ந்த இலைகளை உடைத்தான
அவற்றில் உண்டான இள நீர்க் குலைகள் ஆனவை
தாழ்ந்து நிற்கிற போது
கிடங்கை (வெத்தலை தோட்டத்தை )இள நீராலே நிறைத்து இலையாலே
மறைத்து வைத்தால் போலே இருக்கும் யாய்த்து –

———————————-

பெருமை பாராமல் அடியேன் உள்ளம் புகுந்தமை மூன்றாம்பாட்டில்
அது உயிர் பாசுரம்
உள்ளம் ஈடுபட்டு மீண்டும் இங்கே அருளிச் செய்கிறார்

பெருகு காதல் அடியேன் உள்ளம்
உருவப் புகுந்து ஒருவரூர் போல்
அருகு கைதை மலரக் கெண்டை
குருகு என்றும் அஞ்சும் கூடலூரே–5-2-9-

பெருகு காதல் அடியேன் உள்ளம் உருவப் புகுந்து ஒருவரூர் போல் –
நாள் செல்ல நாள் செல்ல
ஆற்றுப் பெருக்கு போலே பெருகா நின்றுள்ள
காதலை உடைய அடியேனுடைய
ஹிருதயமானது உருகும்படி யாகப் புகுந்த
அத்விதீயனானவன் வர்த்திக்கிற தேசம் போலே இருந்தது –
( உருக்கவே புகுந்தார் )

அருகு கைதை மலரக் கெண்டை குருகு என்றும் அஞ்சும் கூடலூரே-
அருகே தாழை யானது மலர –
கெண்டைகள் ஆனவை அத்தைக் கண்டு
குருகு என்று அஞ்சா நிற்கும் ஆய்த்து –

இரண்டும் நித்தியமாய் இருக்கச் செய்தே
பயமும் நித்தியமாய் செல்லா நிற்கும் ஆய்த்து –

(அஞ்சா நிற்கும்
ஒரு கால் அஞ்சினால் மறுநாள் அஞ்ச வேண்டாமே என்னில்
சம தர்மத்தால் பாதித அனுவர்த்தி தொடருமே
கானல் நீர் போல் ஜகம் மித்யை அத்வைதம்
ஓன்று அறிந்தாலும் வாசனையால் தொடரும் என்பர்
தெரிந்தாலும் தீர்த்தம் சாப்பிட போக மாட்டானே -இப்படி அத்வைத கண்டனம் )

———————————————

காவிப் பெரு நீர் வண்ணன் கண்ணன்
மேவித் திகழும் கூடலூர் மேல்
கோவைத் தமிழால் கலியன் சொன்ன
பாவைப் பாடப் பாவம் போமே –5-2-10-

கோவை-கோக்கப்பட்ட வரிசையாக -லக்ஷண க்ரமம் –
மேவித் திகழும்–ஆழ்வார் திரு உள்ளத்திலும் திவ்ய தேசத்திலும் பொருந்தி -அத்தாலே உஜ்ஜவலமாய் –

காவிப் பெரு நீர் வண்ணன் கண்ணன் மேவித் திகழும் கூடலூர் மேல் –
காவி போலேயும்
பெரும் கடல் போலேயும்
இருந்துள்ள வடிவை உடைய கிருஷ்ணன்
திரு உள்ளத்தோடு பொருந்தி
உஜ்ஜ்வலனாய் வர்த்திக்கிற திருக் கூடலூர் மேல் –

கோவைத் தமிழால் கலியன் சொன்ன
அடைவே ஆழ்வார் அருளிச் செய்த

பாவைப் பாடப் பாவம் போமே –
பால் குடிக்க நோவு போம் -என்பாரைப் போலே –

———–

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

தாம் அறியாத் தன்னுள் புகுமவன் தன் பெருமை
தான் அறியான் தொண்டர்க்கு அறியுமாறு தான் அருளும்
கூடலூரான் ஊர் எழிலுடன் சொல் கலியனைக்
கூடி வானில் விளங்கும் வென்று -42

யாதோ வாசோ நிவர்த்தந்தே என்ற வேதம் போல் அன்றிக்கே-எம்பெருமானுடைய கல்யாண குணங்களை
அருளிச் செய்வதில் விளாக்குலை கொள்வதால்
தன் பெருமை தான் அறியா விடிலும் தன் அடியார் அறியும்படி அருளுபவன் அன்றோ –
வானில் சென்று விளங்கும் -என்றும் வானை விட வாழ்ச்சி இங்கு என்றும் கொள்ளலாம் –

———————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்