என் அப்பன் -பொன் அப்பன் -மணி அப்பன் -முத்து அப்பன்
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் -எனக்கும் அப்பன் –
மிருகண்டு புத்திரர் மார்க்கண்டேயர் க்ஷேத்ரம்
துளஸீ க்ஷேத்ரம்
மஹா லஷ்மி போல் சாம்யம்
ஸ்ரீ தேவி பூமா தேவியாக பிறந்து
தாயாருக்கும் தாயார்
நெஞ்சிலும் திருமுடியிலும் வைக்கும் படி பெருமை
மநோ வாக் காயங்கள் கைங்கர்யம் -பெரு விண்ணகரம் பேறும் வேண்டாம் -ஐயங்கார் பாசுரம்
ஐப்பசி சிரவணம் திருக்கல்யாணம்
முத்தப்பன் பலி பேரர்
பொன் அப்பன் உத்சவர்
என் அப்பன் -தனி சந்நிதி -பிரயோக சக்கரம் தான ஹஸ்தம்
அஹோ ராத்திரி புஷ்கரணி
தக்ஷிண கங்கா யமுனா தீர்த்தம்
புறப்பாடு சேர்த்தியிலே எப்பொழுதும்
ஆகவே பெருமான் திரு மார்பா-6-2-2- -என்கிறார்
கீழே ஒரு கால் போல் ஒன்பதில் கால் வேண்டேன் மனை வாழ்க்கை அருளிச் செய்தவர்
இதில் பூர்வ விருத்தம் சொல்லி சரணம் புகுவது எதனால் -என்ன
அநாதி காலம் சம்சாரத்தில் இருந்து வாசனை பண்ணி இப்பொழுது வேண்டேன் என்றால்
இது ச ஹ்ருதய யுக்தியாக இருக்குமோ
உதட்டு அளவு வார்த்தையாக -வெறுப்பு வந்த சமயத்தில் மட்டும் சொல்லும் வார்த்தையாக இருக்குமோ –
நமக்கும் இவர் பாசுரம் சொல்ல வேண்டேன் என்று சொல்லாத தோன்றுமே
உள்ளத்தில் இருந்து உள்ளுவதை எல்லாம் அறிபவன் அன்றோ
காம்யமாக செய்ய தேவர்கள் உடன் பலமாக கொடுக்க
நான் மோக்ஷம் அப்படி அருளுவது இல்லை
பக்குவ நிலை அடைந்த பின்பே -என்றானே ஸ்ரீ கீதையில்
அந்த நினைவாலே வைத்தானாக இருக்கும் என்று பூர்வ வ்ருத்தாந்தம் சொல்லி பிராட்டி முன்னாக சரண் அடைகிறார் –
சரண வரண வாக்கு ஒன்றே இருந்தாலும் நம்மை ருசி பெருக்கி கூட்டிக் கொண்டு போகிறேன் –
பொறுத்தேன் பிரவேசம் –
சம்சாரத்தில் தமக்கு உண்டான அருசியை விண்ணப்பம் செய்தார் –
விண்ணப்பம் செய்யச் செய்தேயும்
கடுக வந்து அத்தைத் தவிர்த்து
தன்னைக் கொடு நிற்கக் கண்டிலர்
காணாமையாலே
முன்பு அநாதி காலம் அவற்றை விரும்பி தன்னை நெகிழ்ந்து போந்தோம்
இப்போதும் அவ் வாசனையைக் கொண்டு
அவற்றை விரும்பி தன்னை நெகிழ்ந்து இருந்தோம்
இப்பொழுதும் அவற்றை விரும்பி தன்னை நெகிழ்ந்து இருந்தோம் என்று
நினைத்து இருந்தானாக வேணும் என்று -என்று
(பொய் நின்ற ஞானமும் –மெய் நின்று கேட்டு அருளாய்
மெய் சரீரம் உண்மை அங்கும் உண்டே
உண்மையே நின்று கேட்டு அருளாய் போல் இங்கும் )
பூர்வ வருத்தத்தை ஸ்மரிப்பித்து
அதில் எனக்கு ருசி இல்லை என்னும் இடத்தை
சர்வஞ்ஞன் திரு உள்ளத்திலே படுத்தி
கடுக கிட்டலாவது ஒரு சாதனத்தை பரிக்ரஹித்து கொடு நிற்க வேணும் -என்று பார்த்து
அதுக்கு உறுப்பாக
அநாதி காலம் தாம் சம்சரித்து போந்த படியையும்
அது தன்னில் ஜன்ம பரம்பரைகளில் கை கழிந்த படியையும்
அர்த்த காமங்களை விரும்பிப் போந்த படியையும்
இந்த்ரிய வஸ்யனாய் போந்த படியையும்
இப்போது மேல் வரக் கடவ
நரகாநுபவத்தை நினைத்து அஞ்சுகிற படியையும்
விண்ணப்பம் செய்து
இவை என்னால் கழித்துக் கொள்ளல் ஆவது அன்றிக்கே இருந்து
என்னுடைய இக் குற்றங்கள் ஒன்றையும் பாராதே
தேவரோடு உண்டான நிருபாதிக சம்பந்தத்தையே பார்த்து
பிராட்டி புருஷகாரமாக
என்னை ஸ்வீகரித்து அருள வேணும்
என்று திருவடிகளிலே விழுந்து சரணம் புகுகிறார் –
———————————————–
பொறுத்தேன் புன் சொல் நெஞ்சில் பொருள் இன்பம் என இரண்டும்
இறுத்தேன் ஐம்புலன் கட்கனாயின வாயிலொட்டி
யறுத்தேன் யார்வச் செற்றமவை தன்னை மனத் தகற்றி
வெறுத்தேன் நின் அடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே —6-2-1-
பொருள் இன்பம் என இரண்டும்-அர்த்தம் காமம் -மட்டுமே விரும்பினேன் –
யார்வச் செற்றமவை-விருப்பு வெறுப்பு -ராகம் த்வேஷம் -இரட்டை –
ஐம்புலன் கட்கனாயின-ஐம்புலன்களை கடன் போல் -வைதமாய் -அனுபவம் பண்ணும் படி –
இவற்றுக்கு அர்த்தம் காமம் புருஷார்த்தம்
நமக்கு அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யமே பிராப்தி
வாயிலொட்டி யறுத்தேன் -ப்ரதிஜ்ஜை பண்ணி அனுஷ்டான பர்யந்தமாக செய்தேன்
மனத் தகற்றி வெறுத்தேன்-மனத்தை அகலப்படுத்தி விறுப்பையும் வெறுப்பையும் விஸ்தரித்து பின்பு துக்கப் பட்டேன்
பொறுத்தேன் புன் சொல் நெஞ்சில்
சம்சாரிகளை பந்துக்கள் என்று நினைத்து இருந்தால்
அவர்கள் தாங்கள் சத்ருக்களாய் இருக்கச் செய்தேயும்
அண்ணியாரைப் போலே வர்த்தித்து
இவன் பண்ணின உபகாரங்களைக் கொண்டு
உபகரியாதானாக வார்த்தை சொன்னால்
இவர்கள் வேறு சிலரை இவ்வார்த்தை சொல்லா நின்றார்களோ
நம்மை இவ்வார்த்தை சொல்லிற்று நம்மோடு உண்டான உறவில் ஊற்றம் அன்றோ -என்று
அவர்கள் சொல்லும் புல்லிய சொற்களை சஹித்துப் போந்தேன் -என்னுதல்
அன்றிக்கே
சமஸ்த கல்யாண குணாத்மகனாய்
புண்டரீ காஷனாய் இருக்கிற
சர்வேஸ்வரனை ஸ்துதிக்கக் கடவ பாசுரங்களைக் கொண்டு
பாரிலோர் பற்றையை -என்கிறபடியே
த்ருண சமனாய் இருக்கிற ஷூத்ரனை
பனியிரும் குழல்கள் -திருவாய் -9-9-3–என்றும்
சுந்தரத் தோள்-நாச்சியார் -9-1- -என்றும் சொல்லிக் கவி பாடும்படி
புல்லிய சொற்களை நெஞ்சிலே தரித்து போந்தேன் -என்னுதல்
சொல்லுக்கு புன்மை விஷயத்தைப் பற்ற வருமது இறே-
(அவனைப் பற்றிச் சொன்னால் தானே அருளிச் செயல்கள் ஆகும்
இல்லாது சொன்னேனுக்கு இல்லை என்றாய் -இன்றாவது சொன்னாய் என்று மகிழ்ந்தது உண்டே )
பொருள் இன்பம் என இரண்டும் இறுத்தேன் –
(இறுத்தேன் -கொடுத்தேன்
உறவுக்காரர்களுக்கு கொடுத்ததும்
இந்திரியங்களுக்கு கொடுத்ததும் )
சிலரை பந்துக்களாக நினைத்து இருந்தால்
அவர்களுக்கு உபகரிக்கும் போது அர்த்தம் வேணுமே –
பிறரைக் கவி பாடுவது அர்த்தத்துக்காக விறே
ஆகையால் ஸ்தோத்ராதிகளுக்கு பிராப்தமாய் இருக்கிற
அர்த்த காமங்கள் என்று சொல்லப் படுகிற இரண்டையும்
கடமை இருப்பாரைப் போலே
அவற்றாலே பரி பூதனாய்க் கொடுத்துப் போந்தேன்
யார்வச் செற்றமவை-வாயிலொட்டி யறுத்தேன்
இப்படி அர்த்த க்ரஹணம் பண்ணப் புக்கால்
அதுக்கு சஹாகரித்தவர்களுக்கு ஸ்நேஹித்து வாழ்விக்கக் கடவன் என்றும்
அதுக்கு விரோதத்தை பண்ணினாரைச் செற்று முடிக்க கடவன் என்றும்
பிரதிஞ்ஞை பண்ணி
அந்த சங்கல்பத்தை அனுஷ்டானம் பர்யந்தம் ஆக்கி
தலைக் கட்டிப் போந்தேன்
பொருள் இன்பம் இரண்டும் இறுத்தேன் –
அவை தன்னை மனத்து அகற்றி வெறுத்தேன்-
(அவை தன்னை -பொருள் இன்பம் என்றும் ஆர்வம் செற்றம் )
இப்படி நெடு நாள் வாசனை பண்ணிப் போந்த இவற்றை
கழித்துக் கொள்ளப் பார்த்து
அது என்னால் செய்து தலைக் கட்டப் போகாதாகையாலே
வெறுத்து வந்து உன் திருவடிகளைப் பற்றினேன் -என்னுதல்
அன்றிக்கே
இவை தன்னை சங்கல்ப்பிக்கும் இத்தனை போக்கி
இவனால் அனுஷ்ட்டித்து தலைக் கட்டப் போகாதே
வாசனையால் அவை தான் நெஞ்சிலே பட்டுக் கிடக்குமே
அவற்றை ஹிருதயத்திலே விரிய (அகல -பருக்க -விஸ்திருதமாக )விட்டு கூடு பூரித்து
அவை தன்னை -என்று ராக த்வேஷங்களை
வெறுத்தேன் –
அது தான் பின்னை சோகம் மோகங்கள் உடன் தலைக் கட்டும் இறே
அத்தாலே வந்து
தேவர் திருவடிகளிலே வந்து சரணம் புகுந்தேன் –
திரு விண்ணகர்
இவன் இப்போது செய்கிற இவை விபாகத்தில்
அனர்த்தத்தோடே தலைக் கட்டக் கடவது
அப்போதாகா சுக்கிடத்திட்டு உண்டோ என்பாரைப் போலே
நமக்கு தஞ்சமாவார் யார் -என்று ஆராயக் கடவன்
அவ்வளவில் நாம் தூரஸ்தராக ஒண்ணாது என்று
நான் விபரீதத்திலே கை வளருகிற நாளே தொடங்கி எண்ணித்
திரு விண்ணகரிலே வந்து சந்நிஹிதன் ஆகையாலே
திருவடிகளில் வந்து சரணம் புகுந்தேன் என்னும் அளவாய் ஆய்த்து இறே
இங்கே வந்து நின்றது –
(சுக்கு வியாபாரி செட்டியார் அக்கரை போகா நிற்க
ஓடக்காரன் காசு கேட்க
நான் நடந்து போவேன்
நட்டாற்றில் மார்பு மாட்டு கழுத்து மாட்டாய்
அப்போது பயப்பட்டு
திட்டா திடரா இருக்க சொன்னது போல்
வருவார் என்று அன்றோ இங்கே நித்ய ஸந்நிஹிதன் ஆனாய் )
——————————————————–
ஸ்ரீ விஷ்ணு தர்மம் -கேசவன் வைத்தியர் மேரு பாபக் கூட்டங்கள் போகும்
பெருமான் திரு மார்பா சிறந்தேன் நின்னடிக்கே திரு விண்ணகர் மேயவனே-
புருஷகாரம் -லஷ்மீ ஸஹ -காருண்யம் கிளப்ப – பிராட்டி முன்னாக சரண் –
மறந்தேன் உன்னை முன்னம் மறந்த மதியில் மனத்தால்
இறந்தேன் எத்தனையும் அதனால் இடும்பை குழியில்
பிறந்தே எய்த்து ஒழிந்தேன் பெருமான் திரு மார்பா
சிறந்தேன் நின்னடிக்கே திரு விண்ணகர் மேயவனே —6-2-2-
மறந்த மதியில்-நினைக்காமல் விட்டேன் ஞானமும் இல்லை -அநு தாபமும் இல்லை –
இறந்தேன்-அசித் கல்பம் ஆனேன் –
இத்தனையோ செய்த குற்றம் –
மறந்தேன் உன்னை முன்னம் –
அந்த பொருள் இன்பங்களோ பாதி உன்னையும் ஒரு மூலையிலே
ஆதரித்துக் கொடு போரப் பெற்றிலேன் –
அது செய்து போந்தார் ஆகில்
அப்போதைக்கு இப்போது அவற்றுக்கு இப்போது பரிஹாரம் பண்ணினார் ஆவரே –
மறந்தேன் –
யாதொரு விஷயம் விடாதே நினைக்க வடுக்கும்
அது ஒன்றையும் மறந்து போனேன்
நம்பிள்ளை மதுரையிலே நிர்வஹியா நிற்கச் செய்தே
ஒப்பிலாத பெருமாள் -த்யேயோ நாராயணஸ் சதா –
என்கிற விஷயத்தை யாகாதே மறந்து போந்தது -என்றார் –
(கங்கை கொண்ட சோழ புரம் -குருகைகே காவல் அப்பன் நினைக்க வழி கேட்டவர்களுக்கு –
நீங்கள் -மறக்க வழி சொல்லில் அன்றோ நான் சொல்ல முடியும்
எங்கும் நீக்கமற நிறைந்து இருப்பவன் அன்றோ)
அல்லாதவை செய்தபடி செய்ய உன்னை முந்துற முன்னம் மறந்து
மறந்து கொடு நின்றேன் -என்னுதல்
அன்றிக்கே
அநாதி காலம் மறந்து போனேன் -என்னுதல்
இம்மறப்பு போருகிறது நெடு நாள் உண்டாகில்
உன்னை முன்னம் மறந்திலேன் என்று அன்றோ சொல்ல அடுப்பது என்னில்
அது வேண்டா யாய்த்து
(பல நாள்களாக மறந்தேன் என்றால் அதுக்கு முன்னம் மறந்திலேன் சொல்ல வழி இல்லாமல் –
முன்னம் என்று அநாதியாகவே என்றத்தைச் சொன்னவாறு _
உன்னை
என்கிற இடத்தில் சம்பந்தத்தை ஸ்மரித்தவர் ஆகையாலே
சம்பந்தம் ஸ்வா பாவிகமே யாகையாலே
முன்பு நெடு நாள் மறந்து போரச் செய்தேயும்
சில நாள் ஸ்மரித்து
மறந்தால் போலே இருக்கத் தோற்றிற்று –
(உறவில் உறைப்பு தோன்ற உன்னை என்கிறார்
என்னைப் பார்த்தால் அநாதி –
உன்னைப் பார்த்தால் நினைத்து இருந்த காலமும் உண்டு என்று தோன்றுமே )
கலங்கா பெரு நகரம் தன்னிலே இருந்து மறுக்கிறது அன்று இறே
சம்சாரத்த்லே இருந்து மறக்கை குற்றமோ என்ன -அவ்வளவே என்று
நான் சேதனாகப் பெற்றிலேன் -என்கிறார்
சேதனன் ஆகில் மறந்தோம் என்னும் அனுதாபம் பிறக்க வேணும் இறே மறந்தால் –
மறந்தோம் என்கைக்கு யோக்யதை இல்லை இறே அசித்துக்கு-
சித்துக்கு ஞாத்ருத்வம் ஆகிறது -ஜ்ஞான குணங்களுக்கு ஆஸ்ரயம் ஆகை இறே-
அக் குணங்கள் தன பக்கல் காணாமையாலே
அவற்றுக்கு ஆஸ்ரயம் உண்டாகப் பெற்றது இல்லை
(அசித் சமமாக அன்றோ இருந்தேன் )
மறந்தோம் என்கிற மதி இல்லாத நெஞ்சை உடையேன் என்கையாலே
அனுதாப ரூப ஜ்ஞானமும் த்வாரம் மனஸ் இறே
அது இல்லாமையால் -உண்டாய் இருக்கச் செய்தேயும்
இல்லை என்று வ்யவரிக்கலாம் படி நசித்தேன்
மறந்த மதி இல் மனத்தால் இறந்தேன் இத்தனையும் –
அசித்துக்கு அவ்வருகே ஆனேன்
முதலிலே நினைக்கைக்கும் யோக்யதை இல்லை இறே அசித்துக்கு
சித்துக்கு யோக்யதை உண்டாயிருக்கச் செய்தேயும்
நினையாமையாலே
அசித்துக்கும் அவ்வருகே கை கழியப் போனேன்
அசந்நேவ என்று பிரமாணங்களும் சொல்லும்படி யானேன்
(ப்ரஹ்மம் இல்லது என்றால் இல்லாமல் -உண்டு என்றால் உளனாகி இருப்பானே –
ஆத்மா இருந்தால் ஞானம் இருக்க வேண்டும்
மறந்தேன் -மறந்த மதி இல்லாமல் அனுதாபமும் படாமல் இருக்கவே இறந்ததுக்கே சமம் )
மறந்த மதியில் –
நினையாது ஒழிந்தேன் என்கிற ஜ்ஞான அனுதாபமும் இல்லாதாகையால்
மனத்தால் -மனசை உடையேனாக
எத்தனையும் -மிகவும் அசித்தைக் காட்டிலும்
இறந்தேன் -கை கழியப் போந்தேன்-
அதனால் –
அவித்யா தருசம்பூதி பீஜமே தத்த்விதா ஸ்த்திதம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -என்கிறபடியே
அநாத்ம ந்யாத்ம புத்தியும் அஸ்வே ஸ்வ புத்தியும்
சம்சாரத்துக்கு பீஜம் என்று இருப்பார்கள்
இவர் அனுதாபம் இல்லாமை சம்சார பீஜம் என்று இருக்கிறார் –
(அஹங்காரம் மமகாராம் வேர் முதல் ஆழ்வார் -பீஜம் இங்கு
இருந்தேன் -அனுதாபம் கூட இல்லாமல் இருந்தேன்
அதனால் இடும்பை குழியில் பிறந்தேன் என்கிறார் அன்றோ -ஆகவே இதுவே பீஜம் )
இடும்பை -குழியில்
துக்கம்
துக்கத்தை விளைக்கக் கடவதான கர்ப்பத்திலே போய் புக்கு
சாவது பிறப்பதாகக் கொண்டு
கிலேசப் பட்டே போந்தேன்
(ஜனன மரணம் -ஸ்ருஷ்ட்டி சம்ஹாரம்-சொல்வைதை விட சாவது பிறப்பது இங்கே
லவ குசர் குசலவர் மாற்றி அன்றோ சொல்லுகிறோம் )
பிறந்தே-
இப்படி சாவது பிறப்பதாய் போரா நின்றால்
நடுவில் காதாசித்கமாக
பகவத் சமாஸ்ரயணம் பண்ணினால் இறே
அது ஒரு ஜென்மத்துக்கு பிரதி பந்தமாக வற்றாவது –
அப்படி புருஷகாரம் காட்டி மீண்டது இல்லை –
எய்த்து ஒழிந்தேன்-
இன்னும் பிறக்கைக்கு அடியான கர்ம வாசனை உண்டே யாகிலும்
பிறக்கைக்கு த்ரவ்யம் இல்லாத படி ஆனேன்
கர்ம வாசனை கிடந்தது பிறக்க வேண்டினாலும்
பிறக்கைக்கு ஷமன் அல்லேன்
ஒழிந்தேன் -நானே –எய்த்தேன் –
இனி உடையவர்களுக்கு எடுத்துக் கொள்ள நல்ல காலம் என்கிறார் –
உடையவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள் என்கிறது
நீர் தாம் எது நினைத்து என்ன –
பெருமான் –
உம்மை நினைத்து கை கழிந்தீர் ஆகில் செய்யலாவது உண்டோ என்ன –
பெருமான் –
எனக்கு நானேயோ உளன்
நீ அல்லையோ
சேஷித்வ பிராப்தியைப் பற்றி சொல்லுகிறீர் ஆகில்
சேஷிகள் ஆவாருக்கு ஸ்வா தந்த்ர்யம் உண்டாய் இருக்குமே
ஸ்வ தந்த்ரரான நம்மை சொல்லுகிறது நீர் என்ன
திரு மார்பா –
உன்னுடைய ஸ்வா தந்த்ர்யத்தை அழித்து
ஸ்வீகரிப்பிக்கும் பிராட்டி அன்றோ அருகே இருக்கிறாள் –
நகச்சின் நபராத்யதி-என்பார் அன்றோ அருகே –
சிறந்தேன் -நின்னடிக்கே-
அவள் ஏதேனும் தப்புச் சொல்லிலும்
விடேன் என்னும் நீயும்
(தன் அடியார் திறத்தகத்து -என் அடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் என்னுமவன் அன்றோ நீர் )
உன் ஸ்வா தந்த்ர்யத்தை அழித்து உன்னை இட்டு ஸ்வீகரிப்பிக்கும் அவளும்
இருவரும் இங்கே சந்நிதி பண்ணுகையாலே
தேவர் திருவடிகளுக்கு தகுதி யானேன் –
( பெருமான் -திரு மார்பா -சிறந்தேன் -தகுதி உடையவன் ஆனேன் )
திரு விண்ணகர் மேயவனே –
கலங்கா பெரு நகரம் இருப்பாய் இருக்க
அவ்விடத்தை விட்டு
பிராட்டியோடு கூட
எய்த்தாரை எடுக்கைக்காக திரு விண்ணகரிலே சந்நிஹிதனாய் –
நான் எய்த்துக் கொடு நின்றேன் –
எய்த்தாருக்கும் எய்த்தாரை எடுக்க வந்து நிற்கிறவர்களுக்கும்
ஒரு சேர்த்தி இல்லையோ –
——————————————————–
கர்ப்ப வாசம் எண்ணி பயப்பட்டேன்
ஈஸ்வராய நிவேதிதே -என்று அன்றோ உம்மை ஸ்ருஷ்டித்தது
கைங்கர்யம் செய்யவே என்றாலும் அப்படி உதவ வில்லையே -என்று வருந்துகிறேன் –
மானேய் நோக்கியர் தம் வயிற்றுக் குழியில் உழைக்கும்
ஊனேர் ஆக்கை தன்னை யுதவாமை உணர்ந்து உணர்ந்து
வானே மா நிலமே வந்து உவந்து என் மனத்து இருந்த
தேனே நின்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே –6-2-3-
வானே-நித்ய விபூதிக்கு நிர்வாஹகனே
மா நிலமே-லீலா விபூதிக்கு நிர்வாஹகனே
ஊனேர் ஆக்கை-புருஷார்த்தத்துக்கு சாதனமாக இருக்கும் ஏர் -சீர்மை உண்டே சரீரத்துக்கு
மானேய் நோக்கியர் –
மானேய்ந்த நோக்கை உடையராய் இருக்கிற
ஸ்திரீகள் உடைய –
தம் வயிற்றுக் குழியில் உழைக்கும்-
ஒரு தேச விசேஷத்திலே போய்
யமனுடைய தண்டலிலே உழைக்குமது கிடக்கச் செய்தே
கர்ப்பத்திலே புக்குப் படும்
கிலேசத்துக்கு அவதி இல்லையாய்த்து இருப்பது –
தங்கள் உடைய பருவமும்
மௌக்த்யமும் கிடக்கச் செய்தே
ஒரு பிரஜை உண்டாக வேணும் என்று நோன்பு நோற்பார்கள் ஆய்த்து –
இவனுடைய விநாசத்துக்கு ஆய்த்து யத்தனிப்பது –
ஊனேர் ஆக்கை தன்னை
ஊனே ஆக்கை -என்னவுமாம்
ஊனேர் ஆக்கை-என்னவுமாம் –
மாம்ச பிரசுரமான சரீரம் -என்றபடி
உள்ளும் புறமும் ஒக்க த்யாஜ்யமாய் இருக்கை
இதுக்கு இரண்டு ஆகாரம் உண்டு
தன்னை விரும்பினாரைத் தானும் விரும்பி
தன்னை வேண்டாதாராய் தானும் வேண்டாதது
ஆகையாலே
புருஷார்த்த சாதனமான ஆகாரம் கிடக்கச் செய்தே
பந்தகமான ஆகாரமே யாய்த்து சித்திப்பது-
யுதவாமை உணர்ந்து உணர்ந்து –
காண்கிற தேஹத்தில் விருப்பத்தைப் பண்ணி
இது தன்னையே ஆத்மாவாக அபிமானித்து
ஆத்மாவையும்
அதுக்கு சேஷியான ஈஸ்வரனையும் நெகிழ்ந்து போந்தால்
பின்னை பந்தமாய் யாய்த்து தலைக் கட்டுவது
நல்வழி போகைக்கு உடலாமது கிடக்க
அனர்த்தத்தை விளைக்கு மதாய்
த்யாஜ்யமாய் இருக்கும் என்னும் இடத்தை விசதமாக அறிந்து –
வானே மா நிலமே –
உபய விபூதி யோகத்தாலே வந்த உயர்த்தியும் கிடக்கச் செய்தே
என்னைப் பெறுகை தனக்குப் பெறாப் பேறு என்னும் இடம் தோற்ற இரா நின்றான் –
வானே -என்கிறது -நித்ய விபூதியை
மா நிலம் -என்கிறது லீலா விபூதியை
ஆக உபய விபூதி உக்தன் -என்றபடி
விபூதி த்வயத்தையும் தனக்கு பிரகாரமாக உடையனாய் இருந்து வைத்து
என்னைப் பெறுகை தனக்கு தேட்டமாக வந்தான் ஆய்த்து –
வந்து வந்து –
முன்பு அநாதி காலம் இவரைப் பெறுகைக்கு உறுப்பாக வந்து
இவர் பக்கல் முகம் பெறாமையாலே போனமை அடையத் தோற்றி இருக்கிறது
எதிர் சூழல் புக்கு இறே அவன் திரிந்தது
(எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள் செய்ய விதி சூழ்ந்ததால்-திருவாய் –2-7-6-)
அன்றிக்கே
வந்து உவந்து -என்னவுமாம்
அதாகிறது
கலங்கா பெரு நகரத்தை இருப்பிடமாக உடையவன்
தனக்கு என ஒரு குடி இருப்பு இல்லாதாரைப் போலே
இருக்க வந்து த்ருப்தனான் ஆய்த்து
ஆவாசந் த்வஹ மிச்சாமி ப்ரதிஷ்ட மிஹகா நனே-போலே யாய்த்து
( மஹா முனே-ரிஷிகளின் பார்ஸ்வத்தில் இருக்க இச்சை பெருமாளுக்கு )
லோக நாத புரா பூத்வா ஸூக்ரீவம் நாதம் இச்சதி –
ஸூக்ரீவ மகா ராஜரை நாதராகப் பெறுகைக்கு யோக்யதை
சம்பாதித்த படி யாய்த்து-லோக நாதர் ஆனது-
(உபய விபூதி நாதத்வம் பயிற்சி செய்து ஆழ்வார் திரு உள்ளம் உவந்து வந்தது போல் )
நாதம் இச்சதி -இச்சைக்கு விதேயத்வம் இல்லை-
பெறுவார் பெறாது ஒழிவார்-முந்துற இச்சியா நின்றார்
(நாம் விலக்கினாலும் அவன் இச்சை உண்டே -அத்தை தடுக்க முடியாதே )
ச ராமோ வானரேந்தரஸ்ய பிரசாதேம்பி காந்ஷதே –
(யஸ்ய பிரசாதம் -யார் பிரசாதம் சர்வரும் எதிர் பார்த்து இருக்க பெருமாள்
இவர் பிரசாதம் எதிர் பார்த்து அன்றோ இருக்கிறார் )
என் மனத்து இருந்த –
இன்னும் வரத்தும் போக்கும் உண்டு
என்று தோற்றாதபடி
ஸ்தாவர ப்ரதிஷ்டையாக இருந்தான் ஆய்த்து –
தேனே –
தன்னைப் பெறுகைக்கு
அவன் வருவது போவதாய்ப் போந்த படியை அனுசந்தித்தவாறே
தமக்கு இனிதாய் இருக்கிறபடி
நிவேசிதாத்மா-ஸ்தோத்ர ரத்னம் –
(திருவடித் தாமரையில் தேன் இருக்க கள்ளிச் செடிக்குப் போகுமோ வண்டு )
விஷ்ணோ பதே பரமே மத்வ உத்ச -என்கிறபடியே –
நின்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே –
அறு காத பயணத்துக்கு பொதி சோறு கொண்டு போம் விஷயம்
இங்கே சந்நிஹிதம் ஆய்த்து –
—————————————–
உமக்கு தர்ம சாதனமான தேகம் உதவாமல் போனால்
பந்து வர்க்கங்கள் உண்டே
அவர்களால் சித்திக்கலாமே என்ன
விட்டேன்
விட்டு விட்டு பற்றினேன்
பரித்யஜ்ய -எறிந்தேன்
செறிந்தேன் -ராகவம் சரணம் கதா -விட்ட அனைத்தும் நீயே என்று பெற்றினேன் –
பிறிந்தேன் பெற்ற மக்கள் பெண்டிர் என்று இவர் பின்னுதவாவது
அறிந்தேன் நீ பணித்த வருள் என்னும் ஒள் வாள் உருவி
எறிந்தேன் ஐம்புலன்கள் இடர் தீர வெறிந்து வந்து
செறிந்தேன் நின்னடிக்கே திரு விண்ணகர் மேயவனே —6-2-4-
நீ-ஆபத் சகனான நீ
வருள்-சரம ஸ்லோகத்தையே அருள் என்கிறார் இதில் -இரக்கமே உபாயம் -இதுவே ஒள் வாள் –
ஐம்புலன்கள்-சப்தாதிகளும் -இவற்றுக்கு தீனி போடும் விஷயங்களும்
செறிந்தேன்-இடை வெளி இல்லாமல் பொருந்தினேன் –
பிறிந்தேன் பெற்ற மக்கள் பெண்டிர் என்று இவர் பின்னுதவாவது –
பிறிந்தேன் –
சம்சாரத்தில் சிலரை பந்துக்களாக நினைத்து
தான் உபகரித்து போருகிறது
தனக்குத் தான் உதவாத வன்று இவன் செவியில் திரு நாமத்தைச் சொல்லுதல்
இவனுக்கு நல் வழி போகைக்கு விரகு பார்த்தல் செய்கைக்காக இறே
அதில் அவர்கள் செய்வது -சோர்வினால் பொருள் வைத்தது
உண்டாகில் சொல்லு சொல்லு
என்னா நிற்பார்கள் ஆய்த்து
இவன் தான் தனக்கு உணர்த்தி உண்டான வன்றே தன்னுடைய
சர்வஸ்த்தையும் இவர்கள் இட்ட வழக்காக்கி யாய்த்து வைப்பது
நீ மறந்து ஏதேனும் வைத்தது உண்டாகில்
அத்தை சொல்லு என்னா நிற்பார்கள் ஆய்த்து –
இவன் தனக்கும் அவர்களோபாதி புன்மை போரும் காணும்
இவன் தன்னுடைய சர்வஸ்வத்தையும் அவர்களுக்கு ஆக்கா நிற்கச் செய்தேயும்
சிறிது இவன் பக்கலில் உண்டு என்று தோற்ற வாய்த்து வர்த்திப்பது
சுற்றும் இருந்து –
எமபடர் ஒரு திரளும்
இவர்கள் ஒரு திரளும் யாய்த்து இருப்பது
இவர்கள் அலையா நின்றால் அவன் செய்வது என் என்னில்
ஆர் வினவிலும்
தன் உடைமையை அடைய எழுதிக் கொடுத்து
ஸ்வீகரித்த இளையாளைக்
கொடு வந்து முன்னே நிறுத்திலும் வாய் திறவான் ஆய்த்து –
பெற்ற மக்கள் பெண்டிர் என்று இவர் பின்னுதவாவது —
வயிற்றிலே பிறந்த புத்திரன்
பார்யை-இவர்கள் இறே அண்ணிய உறவாய் போருவர்-
அவர்களும் இவன் பக்கல் முன்பு உபகாரம் கொள்ளும் நாள் கொண்டு
பின்பு இவனுக்கு உதவ வேண்டும் அளவானவாறே போகா நிற்பார்கள்
ஸ்வப்னத்தில் பதார்த்த தர்சனம்- உணர்ந்தால் இன்றியே இருக்குமா போலே-
யாய்த்து இவர்களோட்டை சம்பந்தமும் –
(அறிந்தேன் -பிறிந்தேன் -செறிந்தேன் –மூன்று வினைச் சொற்களால் சித்தாந்தம்
சரம ஸ்லோக வார்த்தை எப்பொழுதும் உண்டே -இருள் நீங்கிய பின்பு அறிவது போல் அறிந்து செறிந்தேன் )
அறிந்தேன் –பிறிந்தேன் –
ஜ்ஞானம் பிறக்கைக்கு ஒரு காலமும்
த்யஜிகைக்கு ஒரு காலமும் வேண்டுகிறது இல்லை –
இவ்வருக்கு உண்டான பந்துக்கள் நமக்கு உபகாரகர் அல்லர்கள்
இனி இவ்வளவுக்கு தஞ்சமாவார் ஆர் -என்று நெஞ்சிலே பட்டவாறே
என்னையே தஞ்சமாக நினைத்து இரு -என்று அருளிச் செய்த ஒரு வார்த்தை உண்டு இறே
அது இப்போது வாரா உதவிற்று
நீ பணித்த வருள் என்னும் ஒள் வாள் உருவி
அவன் பணித்த மாமேகம் -என்ற வார்த்தை ஆய்த்து
அருள் என்கிறது என் என்றால்
என்னுடைய பிரசாதத்தையே உன்னுடைய உஜ்ஜீவன ஹேதுவாக அத்யவசி என்றான் இறே
ஒள் வாள்
சம்சயங்களை அடைய துணித்துப் பொகட்டு
நஷ்டோ மோஹ -ஸ்ம்ரித் லப்த -ஸ்திதி தோஸ்மி கத சந்தேக கரிஷ்யே -என்னப் பண்ண வற்றாய் இருக்கை
மருவலர் தம் உடல் துணிய வாள் வீசும் -என்றது உபாய விஷயம் உண்டாய் இருக்கிறது –
(நீயோ புத்ராதிகளோ ரக்ஷகம் என்கிற சம்சயம் தீர்ந்தேன்
சத்ருக்களை தமது வாள் வீசும் ஆழ்வார்
இப்பொழுது இவர் பெற்ற வாள்-ஐயத்தை வெட்டும் வாள் )
ஐம்புலன் இடர் –
பிராப்ய ஆபாசங்களாயும் பிராபக ஆபாசங்களாயும்
வருமவை அடைய நினைக்கிறது
அஹங்கார மமகார கர்ப்பமான கிரியா கலாபங்கள் கிட்டாத படியாகவும்
தன் பக்கலிலே உத்தேஸ்யதா புத்தியை பிறக்கக் கடவதான விஷயங்கள் கிட்டாத படியாகவும் –
(ஐந்து புலன்களால் அனுபவிக்கும் ஐஸ்வர்யாதிகள் -ப்ராப்யா ஆபாசங்கள்
இவற்றைக் கொண்டு உபாயாந்தரங்கள் -ப்ராபக ஆபாசங்கள் -கிரியா கலாபங்கள் )
செறிந்தேன் –
இனி அவன் தானே நான் அல்லேன் என்னிலும்
அன்னத்தின் மூக்காலும் பிரிக்க ஒண்ணாத படி
செறிந்தேன் –
அன்னம் போன்ற பிராட்டியாலும் சிதகுரைத்துப் பிரிக்கப் போகாது –
(அன்ன நடையான அணங்கு -பிராட்டி )
நின் இத்யாதி –
இவருக்கு இப் புத்தி விசேஷத்தை பண்ணுவித்து
திரு விண்ணகரிலே வந்து சந்நிதி பண்ணி யாய்த்த்து-
அர்ஜுனன் உடைய தேர்த் தட்டு போலே யாய்த்து திரு விண்ணகர்-
அர்ஜுனனுக்கு அருளிச் செய்த வார்த்தை
அவனோடு ஒத்த சம்பந்தம் உடையார்க்கு எல்லாமாம் இறே-
—————————————————
பந்துக்கள் உதவாதார் என்றால்
ஐஸ்வர்யம் -பொருள் கையில் இருந்தால் -உதவுவார்களோ என்ன
அது ஸ்திரமாக இருந்தால் அன்றோ இது உண்டாவது
ஆகவே பந்துக்களும் அஸ்திரம்
(ஒரு நாயகமாய் ஓட உலகுடன் ஆண்டவர் –பாசுரம் போல் )
பாண் தேன் வண்டு அறையும் குழலார்கள் பல்லாண்டு இசைப்ப
ஆண்டார் வையம் எல்லாம் அரசாகி முன் ஆண்டவரே
மாண்டார் என்று வந்தார் அந்தோ மனை வாழ்க்கை தன்னை
வேண்டேன் நின்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே —6-2-5-
ஆண்டவர் ஆட்சி மாண்டார் -என்றுமாம் –
ராஜ்ஜியம் இழந்து கரு நாய் கவர பிச்சை தாமே கொள்ளும் படி
பாண் தேன் வண்டு அறையும் குழலார்கள் பல்லாண்டு இசைப்ப
ஆனை குதிரை தேர் காலாள் கூட்டி
அவை கொண்டு பிரதி பஷத்தை அழியச் செய்து
அவ் வழியாலே ஐஸ்வர் யத்தையும் தன்னதாக்கிக் கொள்ள வேண்டும் அது அன்றிக்கே
சித்தமான ஐஸ்வர் யத்துக்கு மங்களா சாசனம் பண்ணுவார் தேட்டமாய் இருக்கை-
இன்றாக ஒரு ஐஸ்வர்யம் சம்பாதிக்க வேண்டாதே
முன்பே உண்டானதுக்கு மங்களா சாசனம் பண்ணுவார் தேட்டமாய் இருக்கை –
பாட்டையும் தேனையும் உடைத்தான வண்டுகள்
மதுபான மத்தமாய்க் கொண்டு
த்வனியா நின்றுள்ள குழலை உடைய ஸ்திரீகள் ஆனவர்கள் மங்களா சாசனம் பண்ண –
ஆண்டார் வையம் எல்லாம் அரசாகி முன் ஆண்டவரே –
ஒரு பிரதேசத்துக்கு கடவர் அன்றிக்கே
ஒரு நாயகமாய் -என்கிறபடியே
ஒரு முத்தின் குடையாம்படி பூமிப் பரப்பை அடங்கலும்
நிர்வஹித்து போந்தவர்கள் -முன்பு இப்படி நடத்திப் போந்தவர்கள் தாங்களே –
மாண்டார் என்று வந்தார் –
முடி சூடினார் என்று ஒரு ஓலையிலே இட்டால்
துஞ்சினான் என்று வேறு ஒரு ஓலையிலே இட்டு வரக் காட்டுகைக்கு
அவசரம் இல்லாதபடி முடிந்து நிற்கையாலே
அவ்வோலையிலே மறு புறத்திலே துஞ்சினான் என்று இட்டு யாய்த்து வருவ்து –
ஆண்டவன் ஆண்டே வந்தான் என்று சொல்லப் படுவது இல்லை யாய்த்து
என்று வந்தார்-
இப்படி யாய்த்து முடியச் சொல்லிப் போருவது
ஆண்டார் மாண்டார் என்கிற சொல்லும் இடை ஒத்து இருக்கும் ஆய்த்து-
ததா தேஹாந்தர ப்ராப்தி
உத்பத்தி விநாசங்கள் ஆக்கின ஆத்மாவுக்கு அவஸ்தாந்த்ரா பத்தி இறே –
ஆண்டவரே மாண்டார்
இப் பரப்பு அடங்கலும் தனக்கு நிலை நிற்கும் என்று அவன் விசாரியா நிற்கச் செய்தே
ஆயுஸ்ஸூ அடி அற்று இருக்கும் ஆய்த்து –
இவருடைய பாரிப்பையும்
அதின் உடைய நிலை இல்லாமையும் அனுசந்தித்து
தயை பண்ணிப் பொறுக்க மாட்டாமையாலே
அந்தோ -என்கிறார் –
நந்தந்த்யுதித ஆதித்யே -இத்யாதி
(வாள்களாக நாள்கள் செல்ல )
அபிமத விஷயங்களை பிறர் காணாத படி
புஜிக்கைக்கு காலம் வந்தது என்று உகவா நிற்பார்கள்
உதித்த வாறே அதுக்கு த்ரவ்யார்ஜன காலம் வந்தது என்று ஹிருஷ்டராகா நிற்பார்கள் –
சாலில் எடுத்த நீர் போலே தங்கள் ஆயுஸ்ஸூ
கழிகிற படியை அறிந்து
நடுவு பட்ட நாளிலே அவ் வருகில் எளிவரவு வராதபடி
பரிஹரித்து கொள்ள வேணும் என்று இருப்பார் ஒருவரும் இல்லை-
(சாலில் எடுத்த நீர் போலே-ஏத்த சாலில் நீரை இறைப்பதே கொட்டத்தானே )
மனை வாழ்க்கை தன்னை
ஆள ஆசைப் பட்டில் இறே மாலை வேண்டுவது
ஐஸ்வர்யம் பிரத்யஷம்
நீர் ஆசைப்படுகிறது அதீந்த்ரம்
என்ன ஒண்ணாத படி திரு விண்ணகரிலே வந்து நிற்கிறது –
கைங்கர்ய சாம்ராஜ்யத்தை தருகைக்கு அன்றோ இந்நிலை தான்
(இந்த சாம்ராஜ்யம் நித்யம் அன்றோ -மாளாதே )
நீயே சரண்யனாய் வந்து நிற்கப் பெற்ற எனக்கு
ஆண்டார் மாண்டார் என்கிற இவை இரண்டும் இரண்டு வியக்தியிலேயாகப் பெற்றது இல்லை –
பெருக்காறு அடி சுட்டாப் போலே
பட்ட தர்ம ஹானியை கண்டு ஐயோ என்கிறார்
மனை வாழ்க்கை தன்னை வேண்டேன் –
ஆள ஆசைப் படில் இறே
மாளாமையை ஆசைப் படுவது
இது ஸ்த்திரமாகிலும் வேண்டேன்
நின்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே –
—————————————————–
ஐஸ்வர்யம் பல ஸ்ருதியாக பல பதிகங்கள் உண்டே
அவை எல்லாம் பாகவத சேஷத்வம் உணர்ந்து ப்ராப்த விஷயத்தில் செலவிட்டால் அன்றோ
ஈஸ்வராய நிவேதிதம் -இந்திரியங்கள் ப்ராப்த விஷயத்தில் இல்லாமல் பட்டி மேய்கின்றனவே
பதிம் விஸ்வஸ்ய -என்று அறிந்து -க்ருஹஸ்த தர்மம் அனுபவிக்கலாகாதோ என்ன
ராஜ போகமும் வேண்டாம் என்றவர் இதில்
இல்லற சுகமும் வேண்டாம்
கல்லா ஐம் புலன்கள் வவை கண்டவாறே செய்ய கில்லேன்
மல்லா மல் அமருள் மல்லர் மாள மல்லடர்த்த
மல்லா மல்லல் அஞ்சீர் மதிள் நீர் இலங்கை அழித்த
வில்லா நின்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே –6-2-6-
கல்லா-சாஸ்திரம் படி செல்லாமல்
மல்லல்-சம்ருத்தமாய்
நீர் போய் கார்ஹஸ்யத்துக்கு எடுத்துப் போன இந்த்ரியங்களின் -வழியே -வகையே
(அவை உகந்த விஷயத்தை கொடுத்து )போய் மாட்டீரே
இங்கனே என் செய்ய கிலேசப் படுகிறீர் என்ன
அவை உன்னைக் காண வேணும் என்றும் கேட்க வேண்டும் என்றும்
உடன் பட்ட அன்று இறே எனக்கு உடலாய்தின வாவது
அவை இங்கன் அன்றிக்கே
எல்லாம் கல்லா ஐம் புலன்கள் ஆயத்தே -கல்லா சாஸ்திர மார்க்கத்தில் நடவாத ஐம்புலன்கள்
ராவணனுடன் ஒக்கும் ஆய்த்து
மூலையடியே போக்கி முடிக்கப் பார்க்கும் இத்தனை
அல்லது நல் வழி போக ஒட்டாதது ஆய்த்து
அவை பார்த்து வைத்த வழி போக ஷமன் ஆகிறிலேன்
அதாகிறது
சப்தாதி விஷயங்களை அனுபவிக்கை இறே
அதுக்கு நான் ஷமன் ஆகிறிலேன்
மேல் வரும் அனர்த்தத்தை அனுசந்தித்த வாறே –
(நெருப்பு எரிய மேலே விறகு போட மேலும் பற்றி எரியும் -அதே போல்
இந்திரியங்களுக்கு தீனி கொடுத்து பின்பு வைராக்யம் வளர்க்க முடியாதே )
இந்திரியங்கள் ஆனவை சிலரால் திரிய விடுவிக்க ஒண்ணாத படி
மூலை யடியே நடப்பன சில உண்டாகில்
நம்மால் செய்யலாவது உண்டோ என்ன
மல்லா –
இந்த்ரிய வஸ்யதையை தவிர்க்கைக்கு ஈடான சக்தி உனக்கு இல்லையோ –
இந்த்ரியங்களை நியமிக்க போகாது ஆகில்
என் பக்கலிலே நெஞ்சை வை என்றாயே
நம் சக்தி எங்கே வ்யபரிக்கக் கண்டு நீர் இவ்வார்த்தை சொல்லுகிறது என்ன
மல் அமருள் மல்லர் மாள மல்லடர்த்த
மல்ல யுத்தத்திலே
மல்லர் முடியும்படி
அவர்கள் மிடுக்கை அழித்த மல் தொழில் வல்லவனே –
மல்லா மல்லல் அஞ்சீர் மதிள் நீர் இலங்கை அழித்த வில்லா
முன் கை மிடுக்காலே அழியச் செய்யவும் வல்லவன் –
செவ்வைப் பூசலிலே அழியச் செய்யவும் வல்லவன்-
ஜனனி என்று வாசி அறியாதே ராவணனை அழியச் செய்த
அருமை உண்டோ
என்னுடைய இத்ரிய வஸ்யதையை தவிர்கைக்கு-
நிரவதிக சம்பத்தை உடைத்தான
ஊர் அரணையையும் ஐஸ்வர்யத்தையும் கண்டு திருவடி
அஹோ வீர்ய மஹோதைர்ய மஹோ சத்வ மஹோத்யுதி
அஹோ ராஷச ராஜஸ்ய சர்வ லஷண யுக்ததா -என்றும்
யதீத் ருசீ ராகவ தர்ம பத்னீ–சாது புத்யா -என்றும்-
ராவணன் தானும் ஸ்த்ரீக்களுமான இருப்பைக் கண்டு
இவ் விருப்பை
பெருமாளும் பிராட்டியுமாக சேர விருக்க சம்வதித்தான் ஆகில்
இவ் வைஸ்வர்யம் குலையாத படி இருக்கலாய்த்து கிடீர்
மதிளையும் அரணாகப் போம் படி கடலையும் உடைய
இலங்கையை அழியச் செய்த –
வில் வலிமை உடையவனே –
நின்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே
அந்த வில் கொண்டு வியாபாரிக்க
அங்கே வந்து முகம் காட்டப் பெற்றது இல்லை என்ன
அந்த பிரதி பஷத்தை அழியச் செய்து
அங்கனே போனாயோ
போக்குக் காட்டி இங்கே அன்றோ வந்து புகுந்தது –
(ஸ்ரீ சுமந்திரனை அயோத்யா நோக்கி போவதாக –
தேர் தடம் பதியாமல் சிங்கி பேர புரம் போகச் சொல்லி -போக்கு காட்டுவதில்
வல்லவர் அன்றோ இவர்-இந்த வில்லி
விண்ணகரம் போவதாக சொல்லி திரு விண்ணளர் மேயவனே )
———————————————–
ஐஸ்வர்யம் படுத்தும் பாடு
கல்லா ஐம்புலன்கள் நலியும் வகை என் என்ன
அவற்றின் கொடுமையை விவரிக்கிறார் இதில்
வேறாய் யான் இரந்தேன் வெகுளாது மனக்கொள் எந்தாய்
ஆறா வென் நரகத்து அடியேனை இடக் கருதிக்
கூறா வைவர் வந்து குமைக்கக் குடி விட்டவரைத்
தேறாது உன்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே–6-2-7-
வேறாய்-திருப்தனாய் காட்டிலும் வேறாக -ஆர்த்த பிரபன்னன் –
வென் நரகத்து-அதி குரூரமான சம்சாரம் –
கூறு -பாகமாக -அவித்த சோறாகக் கொண்டு –
குடி விட்டவரை-நீர் வைத்த இந்திரியங்கள் -நல் வழிப்பட வைத்த கரணங்கள் –
வேறாய் யான் இரந்தேன் –
இரந்த கார்யம் க்ரமத்தாலே செய்யலாம் படியாய் இருப்பனவும் சில இரப்புக்கள் உண்டு-
(இரப்பு-பிரார்த்தனை -சரணாகதி என்றவாறு )
அப்போதே செய்து தலைக் கட்ட வேண்டும் படியான சில இரப்புக்கள் உண்டு-
க்ரமத்தால் கார்யம் செய்து தலைக் கட்டும் அளவும் இவன் பொறுக்கும் என்று
தோற்றி இருக்கும் இடத்தில் அந்த க்ரமமும் பொறுக்கும் இறே
அப்போதே செய்யா விடில் இவனைக் கிடையாது என்று தோற்றின இடத்தில்
அப்போதே செய்து தலைக் கட்ட வேண்டும்படியாய் இருக்கும் இறே
அதில் செய்தே அற வேண்டும்படி
அர்த்தித்வத்தை உடையேனாய்க் கொண்டு
இரந்தேன் வேறாக -என்றபடி –
யான் இரந்தேன்
அத்தலை இத்தலையான படியை திரு உள்ளம் பற்ற வேணும்
நீ எதிர் சூழல் புக்கு இரந்து திரிய
நான் அதை மறுத்து வைமுக்க்யம் பண்ணி திரிந்த காலத்தின் நீட்சியும்
திரு உள்ளம் பற்றுகை உண்டே
நீ இரக்க மறுத்துத் திரிந்த நான் அன்றோ இப்போது இரக்கிறேன் –
வெகுளாது –
என்னுடைய பாசுரம் கேட்டால்
தேவர் திரு உள்ளத்துக்கு சிவீல் என்ன வேண்டும்படியாய் இருக்கும்
இன்று அநந்ய கதியாய் வந்து நிற்கிறவன்
முன்பு -நான் அநாதி காலம் பிடிக்க மறுத்துப் போந்தவன் அன்றோ -என்று
என்னுடைய பூர்வ வ்ருத்தத்தைப் பார்த்தால்
தேவர் சீற வேண்டும்படியாய் இருக்கும்
நான் சர்வ தோஷ உக்தனாய் இருந்தேன்
நீ சர்வஞ்ஞனாய் இருந்தாய்
ஆனபின்பு -நம்மையும் தன்னையும் பாராதே
இவன் நிர் தோஷரைப் போலே நம் காலைப் பிடிப்பதே என்று சீறாதே –
மனக் கொள்-
கார்யம் செய்ய வேண்டும் அளவில்
ஆனைக் குப்பாடுவாரைப் போலே-( சதுரங்க விளையாட்டு போலே-பாராமுகமாய் – )
அநாதரித்து இருக்க ஒண்ணாது
இத்தை திரு உள்ளம் பற்றி அருள வேணும் –
சீறாமை போராது
இத்தை திரு உள்ளத்தே கொண்டு அருள வேணும்-
உம்மை ச தோஷராக சொல்லி வைத்து
ஸ்வ தந்த்ரனாய் இருக்கிற என்னை
சீறாதே திரு உள்ளம் பற்ற வேணும் என்று
நீர் சொல்லுகிறது என்ன ஹேது கொண்டு -என்ன
எந்தாய் –
என்னால் அழித்துக் கொள்ள ஒண்ணாத பிராப்தியைக் கொண்டு
பொறுக்கை ஒழிய -செய்த குற்றத்தைக் கணக்கிட்டு
கை விடலாம்படியோ தேவரோடு உண்டான பிராப்தி இருப்பது
தஸ்மாத் ப்ரணம்ய –பிதேவ் புத்ரஸ்ய-என்னா நின்றது இறே –
(ஸ்ரீ அர்ஜுனன் -விஸ்வரூபம் கண்டதும் -பிரார்த்தனை -இத்தையே கத்யத்திலும் உண்டே )
பொறுப்பிக்கிற இடத்தில் வந்தவாறே செய்த குற்றத்தை பார்த்துச் சீறாதே
பிராப்தியைப் பார்த்து கைக் கொள்ள வேண்டும்படி
உமக்கு இப்போது வந்தது என் என்ன -(என்ன ஆபத்து என்ன)
ஆறா வென் நரகத்து –
இந்த்ரியங்களின் உடைய சாலப் பொல்லாதாய் இருந்தது
செய்த பாபம் அகஞ்சுரிப் பட்ட அளவிலே விட்டடிக்கவும் கூடும் இறே யமனுடைய தண்டல்
அங்கன் ஓர் அளவு அல்ல மாறாத நரகம் ஆயத்து சம்சாரம் –
அடியேனை இடக் கருதிக்
கோமுற்றவர் படுக்கைப் பற்றிலே நலியக் கோலுமா போலே-கோமுற்றவர் -மணியகாரர் –
அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்னுமா போலே அங்குத்தைக்கு எல்லா அடிமையும் செய்து
வர்த்திக்கைக்கு ஈடான பிராப்தியை உடைய என்னை
அஹங்கார மமகாரங்களுக்கு அடிமை செய்யும் சம்சாரத்திலே
போகத் தள்ளுவதாக நினையா நின்றது –
கூறா வைவர் வந்து குமைக்கக் –
இது ஐவருக்கு பொது இறே என்று இருக்கிறன வில்லை –
அஹம் அஹமிகயா பற்றி நலியா நின்றன –
ஐவர் –
சைதன்ய பிரசர த்வாரம் மாத்ரம் இறே -என்று இருக்கிறிலர்
சேதனர் என்றே இருக்கிறார் ஆய்த்து பாதகத்தில் உறைப்பாலே
ஐவர் குமைக்க –
ஒரு துர்பலனை பிரபலராய் இருப்பார் ஐந்து சேவகர் ஐந்து திக்கிலே
வலித்து கலங்கப் பண்ணி நெருக்குமா போலே –
குடி விட்டவரைத்
நீ குடி புகுர விட்டவர்களை
அதுக்கடி
இத்தைக் கொண்டு நம் காலிலே குனிந்து
அவ்வழியாலே நம்மைப் பெற வேண்டாவோ
என்னும் கருத்தாலே இத்தைத் தந்தாய் நீ
அது உன் நினைவே ஒழிய
மற்றப் படியே உன் பக்கலில் நின்றும் அகற்றி
விஷயங்களிலே மூட்டி முடிக்குமவையாய் இரா நின்றன –
தேறாது –
உன் நினைவின் படி நடக்குமவை அன்றிக்கே ஒழிகையாலே
அவற்றை விஸ்வசிக்கப் போருகிறது இல்லை –
நின்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே –
விஸ்வச நீயனான நீ
சந்நிஹிதனாய் இருக்க
பயாவஹமான பதார்த்தங்களுக்கு
அடிமை செய்து திரிய வேணுமோ –
———————————————
நம் காலில் -கைங்கர்யம் செய்யவே இவற்றை நாமே குடி வைத்தோம் என்று அறிந்தால்
அவை வேறே குமைக்கும் காரணம் என்ன -என்ன
வல் வினையார் -கர்மமே காரணம் என்கிறார் –
தீவாய் வல் வினையார் உடன் நின்று சிறந்தவர் போல்
மேவா வென் நரகத்து இட உற்று விரைந்து வந்தார்
மூவா வானவர் தம் முதல்வா மதி கோள் விடுத்த
தேவா நின்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே –6-2-8-
தீவாய்
அனல் ஆஸ்ரயராய்த்து
நெருப்பை உமிழா நின்ற வாயை உடைய –
வல் வினையார் –
பிராயச் சித்தத்தால் பரிஹரிக்கப் படுமவை அல்ல –
அவசியம் அனுபோக்தவ்யம் -என்கிறபடி
அனுபவித்தால் அல்லது போக்கி நசியாதவை யாய்த்து-
உடன் நின்று சிறந்தவர் போல்
நிருபாதிக பந்துக்களைப் போலே விடாதே நின்று கலந்து
கலந்து நலியும் கடும் துயர் -பெரிய திருவந்தாதி -65–என்னக் கடவது இறே
சிறந்தவர் போலே
ஒரு காலும் விடாத ப்ராதாக்கள் மற்றையாரைப் போலே-
மேவா வென் நரகத்து –
ஆனந்த மய என்கிற வஸ்துவை அனுபவிக்கைக்கு யோக்யமான வஸ்துவுக்கு
பொருந்தாத படி இருக்கிற நரகத்திலே தள்ளுவதாக வந்தன
இங்கு உள்ள துக்கங்களை அனுபவி
இப்போது நரகம் என்கிறது இந் நரகம் தன்னையே-
விரைந்து வந்தார் –
இத்தால் இக் காலத்தில் ஒரு ஸூஹ்ருதம் நுழைகைக்கு அவகாசம் இன்றிக்கே போந்த படி சொல்கிறது
கர்மத்துக்கு பிரவாஹ அநாதித்வம் உண்டு இறே –
(இந் நரகம் தன்னையே-இந்த சம்சாரம்
விரைந்து -வேகம் -ஸ்தாயியாக நின்றால் தானே விரைய முடியும்
கங்கை வேகமாக ஓடும்-ஓடிந்தே வேகமாக ஓடுவது போலே பாபங்கள் )
இது நீர் பண்ணின கர்மத்தின் உடைய பலன் அன்றோ
தம் தாமின் கர்ம பலன் தந்தாம் அனுபவிக்க வேண்டாவோ
இப்போதாக செய்யலாவது உண்டோ என்ன
மூவா வானவர்-
அகர்ம வஸ்யராய் உன்னை அனுபவிக்கும்படி பண்ணி வைத்தாயே
ஒரு விபூதியாக எப்போதும் ஒக்க பஞ்ச விம்சதி வார்ஷிகராய் இருப்பார்களே
புஜியா நிற்கச் செய்தே -இது நமக்குக் குலைகிறதோ -என்று இருக்க வேண்டா வாய்த்து –
(மூவா-வயசானவர் -வருத்தம் இல்லாதவர் )
முதல்வா –
அவர்களை அகர்ம வஸ்யராக்கி
அவர்களுக்கு உன்னை அனுபவிக்க கொடுத்து
அவ் வழியாலே அவர்கள் சத்தையை நிர்வஹித்துக் கொண்டு போர நின்றாய்-
விண்ணுளார் பெருமானேயோ-திருவாய் -7-1-5–என்றால் போலே யாய்த்து
பிராதாக்களில் ஒருவன் முடி சூடி வாழா நிற்க
ஒருவன் சிறைப் பட்டு கிடந்தால் போலே தோற்றா நின்றது யாயிற்று –
ஹா ராமா ஹா லஷ்மணா ஹா சுமித்ரே–ஸூந்தர காண்டம் –
இப்படிப் பட்ட அவர்க்கும்
இது மாயா மிருகம் கிடீர் என்று உணர்த்தி நோக்கும் இளைய பெருமாள் என்னும்
ஹா சுமித்ரே -அவர் தமக்கும் ஸ்ருஷ்டஸ்த்வம் வனவாசாய –பிரமாதம் மா கார்ஷீ -என்ற சுமித்ரையாரைச் சொல்லும் –
(வெறுப்புத் தோற்ற -சம்பந்தம் உடையவர் பேரைச் சொல்லி விஷாதம் இங்கும் -சீதாப் பிராட்டி )
அப் பரிமாற்றம் உள்ளது அவ் விபூதியிலே காணும்
இங்கு இல்லை என்று அவனுக்கு சொல்ல ஒண்ணாத படி
மதி கோள் விடுத்த தேவா –
ஸ்வரூப லாபம் பெற வேணும் என்று இருப்பாருக்கு அத்தைப் பண்ணிக் கொடுப்பது
(மதி கோள் விடுத்த-ஸ்வரூப ஞானம் ஷயம் அடையாமல் )
இஸ் சரீரத்தில் கைவல்யம் போக வேணும் என்று இருப்பாருக்கு அத்தைப் பண்ணிக் கொடுப்பது –
தேவா –
ஆர் உடம்பில் ஷயம் தான் தீர்ந்ததாய் இருக்கிறது-
நின்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே –
என்னுடைய ஷயத்தை போக்குகைகாக நீயே வந்து
சந்நிஹிதனாய் இருக்க
நான் பிறருக்கு அடிமை செய்து திரியவோ –
—————————————————————–
இன்னும் பரத்வம் காட்டி கேள்விகளே கேட்டு இருக்காமல் இருக்க
புருஷகாரம் உண்டே
பிராட்டி மூலம் சரண் அடைகிறார் –
பிராட்டிமாரும் நித்ய ஸூரிகளும் புருஷகாரமாக சரணம் புகுகிறார் –
போதார் தாமரையாள் புலவிக் குல வானவர் தம்
கோதா கோதில் செங்கோல் குடை மன்னரிடை நடந்த
தூதா தூ மொழியாய் சுடர் போல் என் மனத்து இருந்த
வேதா நின்னடைந்தேன் திரு விண்ணகரம் மேயவனே —6-2-9-
போதார் தாமரையாள் –
காலத்திலே அலர்ந்த செவ்விப் பூவை இருப்பிடமாக உடையவள் -என்னுதல்
அன்றிக்கே –
செவ்விப் பூவை உடைத்தான தாமரையை வாசஸ் ஸ்தானமாக உடையவள் -என்னுதல் –
போது என்று காலம் ஆதல் புஷ்பம் சொல்லிற்று ஆதல்-
(போது எல்லாம் போது கொண்டு உன் பொன் அடி புனைய மாட்டேன் )
புலவி-
ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு திரு நாமம் ஆகவுமாம் –
அன்றிக்கே
போதார் தாமரையாள் புலவி இடத்தில் குல வானவர் தம் கோதா -என்றுமாம்
புலவிக் குல வானவர் தம் கோதா
அப்போது சர்வேஸ்வரனுக்கும் பிராட்டிக்கும் சம்ஸ்லேஷ வர்த்தகமான
விஸ்லேஷங்கள் உண்டானால்
அப்போது ர ரஷ தர்மேண—கிஷ்கிந்தா -என்கிறபடியே -இளைய பெருமாள் ஆஸ்வசிப்பிக்குமா போலே
(பலத்தாலும் தர்மம் உபதேசத்தால் ரஷித்தார் -இளைய பெருமாள் )
அவ் ஊடலைத் தீர்த்து ஆஸ்வசிப்பிக்கிற நித்ய ஸூரிகள் உடைய
கௌதூலஹத்துக்கு விஷய பூதன் ஆனவனே –
குல வானவர் தம் கோதா
பகவத் அனுபவம் வ்யபிசாரம் இல்லாதவர்கள்
வடிவுடை வானவர் -என்னுமா போலே -யாய்த்து
பெரிய பிராட்டியார் உடன் உண்டான ஊடல் இடையாட்டத்தில் அத்தைப் பரிஹரித்து ஆஸ்வசிப்பிக்கிற
நித்ய ஸூரிகள் உடைய கொண்டாட்டத்துக்கு விஷய பூதன் ஆனவனே
கோது குலம் என்கிற இடத்தில் கோதா என்கிறது –
அங்கன் அன்றிக்கே
புலவிக் குல வானவர் –
என்று நித்ய ஸூரிகளுக்கு விசேஷணமாய்
அந்தப் பஷத்தில்
பிராட்டி உடைய பின்பு கூடாதபடி பிரித்த பிரிவை யாய்த்து புலவி என்கிறது
அத்தாலே
நித்ய வாஸம் பண்ணா நிற்கச் செய்தேயும்
இதுக்கு முன்பு ஒரு காலமும் அனுபவித்து அறியாரைப் போலே உண்டாகிற அத்ருப்தியை பற்ற
அவர்கள் சொல்லிற்று ஆகவுமாம் –
இப்படி சர்வாதிகனான சர்வேஸ்வரனாய் இருந்து வைத்து
ஆஸ்ரித அர்த்தமாக தன்னை அழிய மாறி தூது போன படியைச் சொல்லுகிறது
கோதா கோதில் செங்கோல் குடை மன்னர்-இடை நடந்த தூதா-
துர்யோத நாதிகளைச் சொல்லிற்று என்னவுமாம்
பாண்டவர்களைச் சொல்லுகிறது -என்றும் அருளிச் செய்வர்
பாண்டவர்கள் உடைய சத்ர சாமாராதிகள் அடையப் பறித்துக் கொண்டு
ஒருவரால் பிரதிஹதி பண்ண ஒண்ணாத ஆஞ்ஞையை உடையராய்க் கொண்டு
முத்தின் குடை நிழல் கீழ் இருந்து பூமிப் பரப்புக்கு எல்லாம் தாங்களே ராஜாக்களாக நிர்வஹித்துக் கொண்டு
போருகிற
துரியோத நாதிகளின் நடுவே
கழுத்திலே ஓலையைக் கட்டிக் கொண்டு தூது போனவனே
அன்றிக்கே
கிருஷ்ணன் உடைய அபிப்ராயத்தாலே
கோதில் செங்கோல் குடை மன்னர் -என்று பாண்டவர்களையே சொல்லுகிறது ஆகவுமாம் –
தூ மொழியாய் -சுடர் போல் என் மனத்து இருந்த –
பாண்டவர்களும் நீங்களும் செய்யப் பார்த்தது என் என்ன -என்று கேட்க
அவர்களுக்கு தர்மமும் தர்ம பலமான ஸ்வர்க்கமும் உண்டு
அவர்கள் ஐவர்-நாங்கள் நூற்றுவர்
ஆகையாலே பூமிப் பரப்பு அடைய எங்களுக்கு இடம் போரும் இத்தனை
நாங்கள் ஒரு ஸூஸி (ஊசி) அக்ரமும் கொடுப்பது இல்லை -என்று அவன் வார்த்தை சொல்ல
உன் அபிப்ராயம் இதுவான பின்பு
உண்பன உண்டு உடுப்பன உடுத்துப் பூசுவன பூசி எல்லா வழியாலும்
ஆஸ்வசித்து ஒருப்பட்டு இருக்கிற ராஜாவானவன்
ஜெயத்திலே த்வரியா நின்றான் என்று
ஆஸ்ரித விஷயத்தில் உண்டான ஓரம் தோற்ற சொன்ன வார்த்தை ஆகையாலே
மறுக்க ஒண்ணாத படி உஜ்ஜ்வலனாய் கொண்டு என் ஹிருதயத்தில் பிரகாசித்தவனே –
(இவர்களை கடகராக -கங்குலும் பகலும் வடிவுடை வானோர் தலைவனே போல்
இங்கும் புருஷகாரமாகப் பற்றுகிறார் )
வேதா –
இப்படி பிரகாசிக்கிறவன் தான் ஆர் என்னில்
வேதைக சமதிகம்யன் –
நின்னடைந்தேன் திரு விண்ணகரம் மேயவனே –
ஓலைப் புறத்தில் கேட்டுப் போகை அன்றிக்கே
கண்ணாலே காணலாம் படி
திரு விண்ணகரிலே வந்து சந்நிதி பண்ணின
உன் திருவடிகளிலே சரணம் புகுந்தேன்
என்கிறார் –
———————————————————
தேனார் பூம் புறவில் திரு விண்ணகர் மேயவனை
வானாரும் மதிள் சூழ் வயல் மங்கையர் கோன் மருவார்
ஊனார் வேல் கலியன் ஒலி செய் தமிழ் மாலை வல்லார்
கோனாய் வானவர் தம் கொடி மா நகர் கூடுவரே –6-2-10-
தேனார் பூம் புறவில் திரு விண்ணகர் மேயவனை
தேன் மிக்கு இருந்துள்ள பூக்களை உடைத்தான பர்யந்தத்தை உடைத்தான
திரு விண்ணகரிலே நித்ய வாஸம் பண்ணுகிறவனை –
தேன் -என்று வண்டைச் சொல்லிற்று ஆகவுமாம் –
வானாரும் மதிள் சூழ் வயல் மங்கையர் கோன் –
ஆகாச அவகாசம் இடம் அடையும்படியான ஒக்கத்தை உடைய மதிளாலே சூழப் பட்டு இருப்பதாய் –
வயலை உடைத்தான திரு மங்கைக்கு நிர்வாஹகரான ஆழ்வார் –
மருவார் ஊனார் வேல் கலியன் ஒலி செய் தமிழ் மாலை வல்லார் –
திருமங்கை ஆழ்வார் கையில் வேல் உருவிய சத்ரு சரீரங்கள் ஆயத்து
சத்ரு சரீரங்களிலே குளித்த வேலை உடையரான
ஆழ்வார் அருளிச் செய்த இப்பத்தும் வல்லார் –
கோனாய் வானவர் தம் கொடி மா நகர் கூடுவரே –
அங்கே போய் சிலருக்கு பரதந்த்ரராய் இருக்கை அன்றிக்கே
ஆண்மின்கள் வானகம் -திருவாய் -10-9–என்கிறபடியே
தாங்கள் அங்குத்தைக்கு நிர்வாஹகராய்க் கொண்டு
ஸ்ரீ வைகுண்டத்தைப் பிராபிக்கப் பெறுவார் –
——–
ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.
பொறுக்க ஓணாச் சுற்றம் பொருள் புலன்கள் தம்மைத்
துறந்து விண்ணாட்டுச் சீர் நீலன் பெற மா முன்
ஆர்த்தனாய் விண்ணகரான் சீர்த்தாள் சரண் அடைந்தான்
சீர்த்தாள் சேர் மற்ற துறந்து -52-
பொறுக்க ஓணா–சுற்றம் பொருள் புலன்கள் மூன்றிலும் அன்வயம்
பொறுத்துக் கொண்டு இருந்தால் பொறுக்க ஓணாப் போகாமே நுகர்வான் புகுந்து ஐவர் அறுத்துத் தின்றிட -7-7-1-
————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-