Archive for May, 2014

ஸ்ரீ பெரிய திருமொழி-5-1—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

May 5, 2014

ஆபதாம் –ஸ்ரீ ராம சந்த்ரன்
பரத்வம் பரம ஸ்பஷ்டமாக -ஜடாயு மோக்ஷம்
ஆரோக்யம் பாஸ்கரன் செல்வம் அக்னி சங்கரன் ஞானம்
வல் வில் ராமன் புஜங்க சயனம் இரண்டு திருக்கரங்கள்
கர்ப்ப க்ருஹத்திலே ஜடாயு
பூமி தேவி திருவடி வருட
பொன் தாமரையாள்
வில் -ரக்ஷணம் -அழகு -அடையாளம்
சார்ங்கம் உடைய அடிகளை இன்னார் என்று அறியேன்
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
வில்லாண்டான் -அடக்குவதை
ஜடாயுவை வைகுந்தத்து ஏற்றி
அவ் வல் வில் ராமன் என்பான் -கம்பர் சூர்ப்பணகை வார்த்தையால்
முறிந்த வில் -ஜனக் புரியிலும் தனுஷ்கோடியிலும் விழுந்தவை என்பார்

அறிவது அரியான் பிரவேசம் –

(இந்த வண்ணம் காட்டீர் கிலாய்த்தார்
திரு வெள்ளியங்குடியில் அனுபவம் பெற போனவர் -அங்கும் அர்ச்சா சமாதி குலையாமல் இருக்க
கிட்டாதாகில் மறக்க முடியாமல்
கை விட மாட்டாதே தொடர்ந்து அதுக்கு ஹேதுவை அருளிச் செய்கிறார் )

ஒரு கால் ஓர் இடத்தே நசை பண்ணிப் பெறா விட்டால்
கிடைத்தது அல்லை என்று மீளலாம் படி அன்று இறே
இவர் நசை இருப்பது –
நசை பண்ணாமல் இருக்க ஒண்ணாத படி இருக்கும் இறே
விஷய ஸவபாவத்தை பார்த்தாலும்  –
இனித் தான்
உகந்து அருளின நிலங்களில் வந்து நிற்கிறது
தன் பக்கலில் ருசி உடையாரோடே நினைத்த படிகளில் எல்லாம் பரிமாற விறே
ராஜாக்கள் தோப்புக்கள் பல சமைத்தால்
இன்ன தோப்பிலே இன்னானுக்கு முகம் கொடுக்கக் கடவோம்
என்று அறுதி இட்டு இருக்குமா போலே
உகந்து அருளின நிலங்களில் பல இடங்களிலும் நிற்கிறது –
ஓன்று அல்லா ஓர் இடத்திலே ஓர் ஒருத்தருக்கு முகம் கொடுக்கைகாக –
ஆன பின்பு நமக்கு இவ்விடத்திலே  முகம் தர நினைத்திலன் ஆகில்
மற்று ஓர் இடத்திலே யாகிறது என்று
உகந்து அருளின நிலங்கள் தோறும் புக்குத் திரிவர்
இன்ன இடத்திலே முகம் தரும் என்று அறியார் இறே –

ஆகையால்
திரு புள்ளம் பூதங்குடியிலே சந்நிஹிதன் ஆனான்
அங்கு நிற்கிறவன் தான் ஆஸ்ரிதருக்கு தானே அர்த்தியாய்க் கொண்டு
கார்யம் செய்யும் ஸ்வபாவன் ஆவான் -(மாண்  உருவாகிய கூத்தன் மன்னி யமரும் இடம்- பாசுரம் -)
ஆஸ்ரிதரோடு பிராட்டியோடு வாசி அற முகம் கொடுப்பான் ஒருத்தன் -(வெற்பால் மாரி  -பாசுரம் -)
தன்னை அறிக்கைக்கு ஈடான ஸூஹ்ருதம் பிறக்கைக்கும் தான் பிரவர்தகன் ஆவான்  –
(அன்னமாகி அருமறைகள் அருளிச் செய்த அமலன் பாசுரம் )
அதுக்கு மேலே
நிரதிசய போக்யனும் ஆவான் என்று -(கூத்தன் -நேமி யங்கை மாயன் -பாசுரங்கள் -)
அவன் படிகளைப் பேசி அனுபவிக்கிறார் –

—————————————————————-

வல் வில் ராமன்- த்ருட தன்வீ -முன்பு கோல வில் ராமன் பார்த்தோம் –
புள்–ஜடாயு
அம் -அழகிய
திரு புட் குழி சாகேத் -நாசிக் அருகில் -நடந்தாலும் ரிஷிகளுக்கு சேவை சாதித்த இடங்கள் –

கிலாய்த்து பின்பு செய்வான் என்று எண்ணி திரு வெள்ளியங்குடி புக அங்கும் செய்யாமல்
இருந்ததால் அறிவது அரியான் என்கிறார்

அறிவது அரியான் அனைத்து உலகும் உடையான் என்னை யாளுடையான்
குறிய மாண் உருவாகிய கூத்தன் மன்னி யமரும் இடம்
நறிய மலர் மேல் சுரும்பார்க்க எழிலார்  மஞ்ஞை நடமாடப்
பொறி கொள் சிறை வண்டிசை பாடும் புள்ளம் பூதங்குடி தானே –5-1-1-

அறிவது அரியான் –
ஸ்வ யத்னத்தாலே அறியப் பார்ப்பாருக்கு அப்பால் பட்டவன்
என்றும் ஒக்க அறிய அரியதாம் படி இருக்கும் ஸ்வ பாவன்
அகில ஜகத் ஸ்வாமி அஸ்மின் ஸ்வாமி -உடையான் வேறே ஆளுடையான் வேறே
அடியேன் இடம் கைங்கர்யம் பெற்றுக் கொண்டவன் –

மன்னி யமரும்-
மன்னி உறையும் -அமர்ந்து வர்த்திக்கும்

அனைத்து உலகும் உடையான் –
அறிகையும் அறியாது ஒழிகையும் ஆகிற இவ்வர்த்தம் கிடக்க
சர்வ லோகேஸ்வரனாக
சர்வருக்கும் சம்பிரதி பன்னன்

என்னை யாளுடையான் –
விசேஷித்து என்னை அடிமை கொண்டவன்
அஸ்மத் ஸ்வாமின் –
(தத் தவம் அஸி -அனைத்து உலகும் உடையான் தத் -என்னை ஆளுடையான் -த்வம்
அறிய முடியா விடில் விடலாகாதோ
இங்கும் தொடர்வான் என் என்ன அருளிச் செய்கிறார்
அனைத்து உலகில் தானும் இருந்தாலும் அகில ஜகத் ஸ்வாமின் அஸ்மத் ஸ்வாமின் )

குறிய மாண் உருவாகிய கூத்தன் மன்னி யமரும் இடம்
இப்படி சர்வாதிகன் ஆனவன்
வாமன வேஷத்தை பரிக்ரஹித்து
இரப்பிலே தகண் ஏறின வடிவோடே கூட
மகா பலி யஞ்ஞ வாடத்திலே புக்கு
மநோ ஹாரியான சேஷ்டிதத்தை உடையவன்
மன்னி–நித்ய வாஸம் பண்ணி
யமரும்-விடேன் -என்று வர்த்திக்கிற தேசம் –
யஞ்ஞ வாடத்திலே நடந்த போது
கூத்தன்-வல்லார் ஆடினால் போலே யாய்த்து இருந்தது –

நறிய மலர் மேல் சுரும்பார்க்க எழிலார்  மஞ்ஞை நடமாடப்
பரிமளத்தை உடைத்தான மலரின் மேலே
சுரும்பு -என்று வண்டிலே ஒரு அவாந்தர ஜாதி
அவை ஆரவாரத்தைப் பண்ண
அழகு மிக்கு இருந்துள்ள மயில்கள் ஆட
பூதங்குடி தானே
வரியையும் சிறகையும் உடைத்தான வண்டுகள் ஆனவை
அவற்றின் காலுக்கு ஈடாகப்
பாடா நிற்கும் ஆயத்து –

———————————————————-

தேவர்களுக்காக தன்னை இரப்பாளானாக்கிய விருத்தாந்தத்தில்
நப்பாசையால் மீளவும் சொல்லி
திர்யக்குக்காக -அர்த்திக்க உதவியமை இதில்-

கள்ளக் குறளாய் மாவலியை வஞ்சித்து உலகம் கைப்படுத்துப்
பொள்ளைக் கரைத்த போதகத்தின்  துன்பம் தவிர்ந்த புனிதன் இடம்
பள்ளச் செறுவில் கயல் உகள பழனக் கழனி யதனுள் போய்
புள்ளுப் பிள்ளைக்கு இரை தேடும் புள்ளம் பூதங்குடி தானே–5-1-2-

கள்ளக் குறளாய் மாவலியை வஞ்சித்து உலகம் கைப்படுத்துப்
இவன் சர்வேஸ்வரன்
தேவர்கள் ஹிதம் செய்ய வந்தான்
அகப்படாதே கிடாய் -என்று சுக்ராதிகள் சொன்ன வார்த்தை
அவன் நெஞ்சில் படாத படியான
வாமன வேஷத்தைப் பரிக்ரஹித்து
தன்னது அல்லாததை தன்னது என்று இருந்தவன் பக்கல் நின்றும்
தன்னதாக்கிக் கொண்டான் ஆய்த்து -( இதனாலே புனிதன் )

பொள்ளைக் கரைத்த போதகத்தின்  துன்பம் தவிர்ந்த புனிதன் இடம்
துளைக்கை யை உடையனான
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் உடைய துக்கத்தை போக்கித்
தன் துக்கம் தீர்ந்தானாய் இருக்கிறவன் வர்த்திக்கும் தேசம்  –

பள்ளச் செறுவில் கயல் உகள பழனக் கழனி யதனுள் போய்
தாழ்ந்த செய்களிலே கயல்கள் ஆனவை
செருக்கு போக்கு வீடு விட்டு உகள
நீர் நிலையை உடைத்தான கழனிகளின்
உள்ளிட்டுப் போய்

புள்ளுப் பிள்ளைக்கு இரை தேடும் புள்ளம் பூதங்குடி தானே
ஆலவாய் உடையான் கேட்க பட்டர் அருளிச் செய்தார்
என்று நாம் பிரசித்தமாக சொல்லிப் போருமது  இறே
கயல் உகளா நின்றதாகில்
புள்ளுக்குத் தேடித் போக வேண்டுகிறது என் -என்ன
பிள்ளை -அவ்விடம் அறிந்தது இல்லையோ
பிள்ளைக்கு அன்றோ தேடுகிறது
நில மிதியாலே அவை தான்
தூணும் துலாமும் ( உத்தரமும் ) போலே வளர்ந்து இருக்கும்
அதில் இதுக்கு சாத்மிக்கும் அவை தேடித் போகா நிற்கும் –

————————————————————————-

நீர் புழுவுக்கும் யானைக்கும் -பரிகரித்து புனிதனான அளவு அன்றிக்கே
பத்து தலை நிரசித்த
பருவம் நிறைந்த எதிர்த்த ராவணனை வெற்றி கொண்டது இருக்கட்டும்
திரியக்காயும்
ஸ்தாவரமாயும்
எதிரி தோன்றாமல்
பிள்ளைத்தனத்தில் கையாலும் காலாலும் நிரசித்த
இது விஞ்சினாதாகையால் சேர்த்து அனுபவிக்கிறார்

மேவா வரக்கர் தென்னிலங்கை வேந்தன் வீயச் சரந்துரந்து
மாவாய் பிளந்து மல்லடர்த்து மருதம் சாய்த்த மாலதிடம்
காவார் தெங்கின் பழம் வீழக் கயல்கள் பாயக் குருகிரியும்
பூவார் கழனி எழிலாரும் புள்ளம் பூதங்குடி தானே –5-1-3-

மேவா வரக்கர் தென்னிலங்கை வேந்தன் வீயச் சரந்துரந்து
ஒரு உபாதியால் அன்றிக்கே
த்வேஷமே பிரக்ருதியாக இருக்கிற ராஷசர்
வர்த்திக்கிற இலங்கைக்கு
நிர்வாஹகனான ராவணன் முடியும் படியாக
அம்பை யோட்டி –

மாவாய் பிளந்து மல்லடர்த்து மருதம் சாய்த்த
கேசி வாயைக் கிழித்து
மல்ல வர்க்கத்தை அடர்த்து
ஒன்றோடு ஓன்று சேர்ந்து நின்ற மருதுகளை முறித்து அருளின -மருதம்- ஏக வசனத்துக்கு அர்த்தம்

மாலதிடம் –
பிராட்டி பக்கலிலும் ஆஸ்ரிதர் பக்கலிலும் ஒக்க வ்யாமோஹம்
பண்ணுகிறவன் வர்த்திக்கிற தேசம்  –

காவார் தெங்கின் பழம் வீழக் கயல்கள் பாயக் குருகிரியும்
செறிந்த சோலையிலே தெங்கின் பழம் விழ
அது தன்னை உத்தேசித்து விழுவதாகக் கொண்டு
கயல்கள் ஆனவை பாய
அக் கயல் தன்னை உத்தேசித்து பாய்கிறதாகக் கொண்டு
குருகுகள் நாரைகள் -சிதறி ஓடா நிற்கும் ஆய்த்து –
இரண்டுக்கும் ஒக்குமாய்த்து கலக்கம்

தன்னைக் குறித்து அன்றிக்கே  இருக்கச் செய்தே
அஞ்சா நிற்கும் யாய்த்து கயல் –

குருகு-அது தனக்கு ஆமிஷமாய்
தான் அதுக்கு பாதகமாகா நிற்கச் செய்தேயும்
அஞ்சி ஓடா நிற்கும் யாய்த்து –

பூவார் கழனி எழிலாரும் புள்ளம் பூதங்குடி தானே   –

———————————————————–

கிருஷ்ண அவதாரம் திர்யக் ஸ்தாவரம்
தேவன் இந்திரன் -அநுகூலன் -விரோதம் -மலையை சுமந்து ஆகிலும் கை ஓங்கி நிற்கும் வரை
காத்து அருளிய விருத்தாந்தத்தையும்
ராமாவதாரத்தில் -கை விஞ்சி சர வர்ஷம் பொழிந்தவனை ஒரே அம்பால் முடிக்காமல் –
அனுகூலிக்குமோ என்ற நசையால் எதிர்பார்த்து
அவதார த்வயத்தையும் அனுபவிக்கிறார்

வெற்பால் மாரி பழுதாக்கி விறல் வாள் அரக்கர் தலைவன் தன்
வற்பார் திரள் தோள் ஐ நான்கும் துணித்த வல் வில் ராமனிடம்
கற்பார் புரிசை  செய் குன்றம் கவினார் கூடம் மாளிகைகள்
பொற்பார் மாடம் எழிலாரும் புள்ளம் பூதங்குடி தானே —5-1-4-

வெற்பால் மாரி பழுதாக்கி
மலையால் இந்த்ரன் அபிசந்தி பூர்வகமாக
வர்ஷித்த வர்ஷத்தை வ்யர்த்தமாம் படி பண்ணி –

விறல் வாள் அரக்கர் தலைவன் தன்-
பெரும் மிடுக்கராய்
சாயுதருமாய்
இருந்துள்ள
ராஷசர்க்கு எல்லாம் வழி யடித்துப் புக்கு
ஒதுங்கலாம் படி
அஞ்சினான் புகலிடமாய் இருந்துள்ள வனுடைய
(பயந்தவர்களுக்கு அபய பிரதானம் பண்ணுபவன் )

வற்பார் திரள் தோள் ஐ நான்கும் துணித்த வல்வில் ராமனிடம்
வன்மை மிக்கு திரண்டு இருந்துள்ள
தோள்கள் இருபதையும் துணித்த
மிடுக்கை உடைத்தான வில்லை உடைய
சக்கரவர்த்தி திரு மகன் வர்த்திக்கிற தேசம் –

கற்பார் புரிசை  செய் குன்றம் கவினார் கூடம் மாளிகைகள் பொற்பார் மாடம் எழிலாரும்
தொழில் மிக்கு இருந்துள்ள-( அழகான வேலைப்பாடு )
மதிள் செய் குன்றங்கள்
அழகு மிக்கு இருந்துள்ள கூடங்கள்
மாளிகைகள்
அழகு மிக்கு இருந்துள்ள மாடம்
இவற்றின் உடைய எழில் மிக்கு இருந்துள்ள

புள்ளம் பூதங்குடி தானே –

ஆபதாம் –ஸ்ரீ ராம சந்த்ரன்
பரத்வம் பரம ஸ்பஷ்டமாக -ஜடாயு மோக்ஷம்
ஆரோக்யம் பாஸ்கரன் செல்வம் அக்னி சங்கரன் ஞானம்
வல் வில் ராமன் புஜங்க சயனம் இரண்டு திருக்கரங்கள்
கர்ப்ப க்ருஹத்திலே ஜடாயு
பூமி தேவி திருவடி வருட
பொன் தாமரையாள்
வில் -ரக்ஷணம் -அழகு -அடையாளம்
சார்ங்கம் உடைய அடிகளை இன்னார் என்று அறியேன்
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
வில்லாண்டான் -அடக்குவதை
ஜடாயுவை வைகுந்தத்து ஏற்றி
அவ் வல் வில் ராமன் என்பான் -கம்பர் சூர்ப்பணகை வார்த்தையால்
முறிந்த வில் -ஜனக் புரியிலும் தனுஷ்கோடியிலும் விழுந்தவை என்பார்

———————————————————

ஆஸ்ரிதர் கர ஸ்பர்ச த்ரவ்யம் தேவதாந்த்ரருக்கு கூடாது கீழே
ஆஸ்ரித கர ஸ்பர்ச வெண்ணெய் உண்டமை இதில் –

மையார் தடங்கண் கருங்கூந்தல்  யாய்ச்சி மறைய வைத்த தயிர்
நெய்யார் பாலோடு அமுது செய்த நேமி யங்கை மாயனிடம்
செய்யார் ஆரல் இரை கருதிச் செங்கால் நாரை சென்று அணையும்
பொய்யா நாவில் மறை யாளர் புள்ளம் பூதங்குடி தானே –5-1-5-

மையார் தடங்கண் –
பிள்ளை பக்கல் உள்ள வாத்சல்யத்தாலே
அவன் அனுங்காமைக்கா ( வேற்று உரு கண்டு பிள்ளை அஞ்சாமைக்காக )
எப்போதும் ஒக்க அஞ்சனம் கொண்டு
கண்களை அலங்கரித்தும்

கருங்கூந்தல்  –
மயிர் முடியைப் பேணியும்
போரும் ஆய்த்து

யாய்ச்சி மறைய வைத்த தயிர் –
இவன் அறியாத தோர்
இடம்
தேடி வைக்கும் யாய்த்து
சாந்துப் பரணியிலே தயிரை வைக்கும் யாய்த்து –

(தன்னிலே தான் மறைத்து வைத்ததாக இவள் நினைத்து இருக்க )
நேமி யம் கையனான நாராயணனுக்கு ஒளிக்கப் போமோ
பூசும் சாந்து என் நெஞ்சமே -என்னும்படி
நெஞ்சுக்கு ஆஸ்ரயமான தம் உடம்பிலே
சிநேகத்தையும் போக்யதா புத்தியையும்  பண்ணினாலும்
அவன் விடாதே
தனக்கு ஆக்கிக் கொள்வன் என்னுமது ஸ்புரிக்க -சாந்துப் பரணியிலே -என்கிறார் –

நெய்யார் பாலோடு அமுது செய்த –
நெய்யும் பாலும் அமுது செய்த

நேமி யங்கை மாயனிடம் –
யசோதை பிராட்டியைப் பேணியும் போரும் யாய்த்து –
கையும் திரு ஆழியுமாய் அவள் முன்னே கூத்தாடி உகப்பிப்பான் –
(பேணியும் -மறைய வைத்ததையும் கண்டு கொள்ளாமல் பேணி )

செய்யார் ஆரல் இரை கருதிச் செங்கால் நாரை சென்று அணையும்
செய்கள் நிறைந்து இருந்துள்ள
ஆரல் ஆகிற மத்ஸ்ய விசேஷத்தை
கலியர் -கல வரிசிச்  சோறு உண்ண வேணும் -என்னுமா போலே
ஆமிஷம் என்று புத்தி பண்ணி
சிவந்த காலை உடைத்தான
நாரைகள் சென்று கிட்டா நிற்கும் யாய்த்து –

பொய்யா நாவில் மறை யாளர்
யதாபூத வாதிகளான பிராமணர் வர்த்திக்கிற

புள்ளம் பூதங்குடி தானே –

————————————————–

வெண்ணெய் அமுது உண்டமை கீழ்
பெண் அமுதை உண்டமை இதில்

மின்னின் அன்ன நுண் மருங்குல் வேயேய் தடந்தோள்   மெல்லியற்காய்
மன்னு சினத்த மழம்  விடைகள் ஏழு அன்று அடர்த்த மாலதிடம்
மன்னு முதுநீர் அரவிந்த மலர் மேல் வரி வண்டு இசை பாட
புன்னை பொன்னேய் தாது உதிர்க்கும் புள்ளம் பூதங்குடி தானே —5-1-6-

பொன்னேய் தாது உதிர்க்கும்-இசை பாடுவார்க்கு பொன் பொடி சம்பாவனை

மின்னின் அன்ன நுண் மருங்குல் வேயேய் தடந்தோள்  மெல்லியற்காய்
மின்னொடு ஒத்த நேரிய விடையையும்
வேய் போல் இருந்துள்ள பெரிய தோளையும்
உடையவளான
நப்பின்னை பிராட்டிக்காக
கரு மாரி பாய்ந்தும் -குளத்தில் இரண்டு குச்சுகள் நடுவே குதிக்கை -அணைய வேணும் யாய்த்து
வடிவு அழகு –

மன்னு சினத்த மழம்  விடைகள் ஏழு அன்று அடர்த்த மாலதிடம்
மாறாத சினத்தை உடைத்தாய்
காட்டு காட்டு என்று வருகிற இளைமையை உடைத்தான
ருஷபங்கள் ஏழையும்
ஊட்டியாக நெரித்த  பரம பிரணயி யானவன் வர்த்திக்கிற தேசம் –

மன்னு முதுநீர் அரவிந்த மலர் மேல் வரி வண்டு இசை பாட
மாறாத முது நீரில்
தாமரைப் பூவின் மேலே
வரியை உடைத்தான வண்டு
மது பான மத்தமாய்க் கொண்டு
இசை பாட –

புன்னை பொன்னேய் தாது உதிர்க்கும்
புன்னை யானது பொன்னை ஒத்த தாதுக்களை
உதிரா நிற்கும் ஆய்த்து
பொன் பொடிகளைக் கொண்டு
தூவுவாரைப் போலே பாடுவார்க்கு –

புள்ளம் பூதங்குடி தானே –

—————————————————-

இடைச்சிக்காக விடை கொண்டபடி
இடைச்சாதிக்காக குடை பிடித்ததும்
விடையோன் அபிமானம் கொண்டவனை கடகாகக் கொண்ட வாணன் கர வனம் முறித்த விருத்தாந்தங்கள்

குடையா விலங்கல் கொண்டு ஏந்தி மாரி பழுதா நிரை காத்து
சடையானோடே  வடல் வாணன் தடந்தோள் துணித்த தலைவனிடம்
குடையா வண்டுகள் உண்ணக் கோல நீலம் மட்டுகுக்கும்
புடையார் கழனி எழிலாரும் புள்ளம் பூதங்குடி தானே –5-1-7-

குடையா விலங்கல் கொண்டு
கல் வர்ஷத்துக்கு பரிஹாரமாக
கல்லைக் குடையாகத் தரித்து –

ஏந்தி
ஏந்தி -பரார்தமான வியாபாரம் ஆகையாலே
வருத்தம் அற்று இருந்தபடி –

மாரி பழுதா நிரை காத்து –
பிரதானனான இந்த்ரன் வியாபாரம் வ்யர்த்த மாம்படி –
பண்ணின உபகாரம் அறியாத பசுக்களை  ரஷித்து –

சடையானோடே  வடல் வாணன் தடந்தோள் துணித்த தலைவனிடம் –
ஈஸ்வர அபிமானி யானவன் முதுகு காட்டி ஓட
யுத்த கண்டூதியை உடைய பாணன் உடைய தோள்களைத் துணித்த

ரஷகனும் பொகட்டுப் போனான்
நாம் இவனைத் தலை அறுக்கல் ஆகாது -என்று இரங்கி
தோள்களைக் கழித்து விட்டான் ஆய்த்து
அவன் விட்டுப் போனதாய்த்து
இவனுக்கு இரக்கத்துக்கு அடி –
(நன்மையால் மிக்க நான்மறையாளர்கள் புன்மையாக கருதுவர் ஆதலால் –
அதனாலே கைக்கொண்டார் போல் இங்கும் )

முண்டன் நீறன் இத்யாதி
பஸ்மத்தாலே உடம்பு அடங்கலும்
அலங்கரித்துக் கொண்டு வந்து தோற்றின ருத்ரன்
அவனுடைய மக்கள்
ஜ்வரம்
பிடாரி
அக்னி
இவை அடங்க மடங்க கண்டு
நாணி -எதிரியைக் கண்டவாறே ஓடுகிறவர்களைப்பற்றி
வந்தவனையோ நாம் அழியச் செய்யப் பார்ப்பது
என்று லஜ்ஜித்து
பாணனுக்கு இரங்கினான்
பர்த்ரு ஹீநையான ஸ்திரீயைக் கண்டு இரங்குவாரைப் போலே    –

தலைவன் இடம் –
மாறாத இவ் வாதிக்யத்தை உடையவன்
வர்த்திக்கிற தேசம் –

குடையா வண்டுகள் உண்ணக் கோல நீலம் மட்டுகுக்கும்
புத்ர பௌத்ராதிகள் உடனும்
பார்யாதிகள் உடனும்
வண்டுகள் ஆனவை மது பானத்தைப் பண்ண
ஒரு கொசுகு கடலிலே இழிந்தது என்னா
அதிலே ஒரு மூலை சுவராது இறே
தர்ச நீயமான நீலமானது
மது வெள்ளம் இடா நின்றுள்ள –

புடையார் கழனி எழிலாரும்
பரந்த கழனியில் உண்டான
எழில் மிக்கு இருந்த –

புள்ளம் பூதங்குடி தானே  –

————————————–

இந்திரன் எதிர் இடவும்
அவனில் விஞ்சின ருத்ரனை ஆஸ்ரயித்த வாணன்
இதில் இந்திரன் சிறுவனுக்கு உதவியதும்
சடையான் உடன் கையில் கபாலம் போக்கிய விருத்தாந்தங்கள் –

கறையார் நெடுவேல் மற மன்னர் வீய விசயன் தேர் கடவி
இறையான் கையில் நிறையாத முண்டம் நிறைந்த வெந்தை விடம்
மறையால் முத் தீயை வளர்க்கும் மன்னு புகழால் வண்மையால்
பொறையால் மிக்க வந்தணர் வாழ் புள்ளம் பூதங்குடி தானே—5-1-8-

கறையார் நெடுவேல் மற மன்னர் வீய விசயன் தேர் கடவி
சத்ரு நிரசனத்தால்  வந்த கறை கழுவ
அவசரம் இல்லாமையாலே
மாறாத கறையை உடைய நெடிய வேலையும்
மறத்தையும் உடையரான ராஜாக்கள் அடைய முடியும்படி –
அர்ஜுனனுக்கு சாரத்தியம் பண்ணி

இறையான் கையில் நிறையாத முண்டம் நிறைந்த வெந்தை விடம்
ஈஸ்வர அபிமானியான ருத்ரன் கையில்
ப்ரஹ்மா வினுடைய சாபத்தாலே
ஒரு காலும் நிறையாது இருக்கிற தலை யோட்டையைத்
தன் திரு மேனியில்
ஜல பிந்துவாலே நிறைத்த
என் ஸ்வாமி வர்த்திக்கிற தேசம் –

மறையால் முத்தீயை வளர்க்கும் மன்னு புகழால் வண்மையால் பொறையால் மிக்க வந்தணர் வாழ்-
வேதத்தால் அக்னி த்ரயத்தையும் வளர்க்கும் மாறாத
புகழால்
ஔதார்யத்தால்
ஷமையால்
இவை எல்லா வற்றாலும் மிக்கு இருந்துள்ள பிராமணர்
வர்த்திக்கிற தேசம் –

புள்ளம் பூதங்குடி தானே  –

——————————————————

இறையான் குரு பாதக விமோசனம் கீழே
இதில் அவனுக்கும் கூட ஜனகனான நான்முகனுக்கு வேத பிரதானம்

துன்னி மண்ணும் விண்ணாடும் தோன்றாது இருளாய் மூடிய நாள்
அன்னமாகி அருமறைகள் அருளிச் செய்த அமலன் இடம்
மின்னு சோதி நவ மணியும் வேயின் முத்தும் சாமரையும்
பொன்னும் பொன்னி கொணர்ந்து அலைக்கும் புள்ளம் பூதங்குடி தானே—5-1-9-

துன்னி மண்ணும் விண்ணாடும் தோன்றாது இருளாய் மூடிய நாள்
மண்ணும் விண்ணும் தோன்றாது துன்னி –
இருள் தானே மூடின நாள் –

அன்னமாகி அருமறைகள் அருளிச் செய்த –
ஆச்சார்ய அனுவர்த்தனம் பண்ணிக்
கேட்கைக்கு அநாதிகாரிகளாய் இருக்கவும் கூடும் -என்று
திர்யக் வேஷ பரிக்ரஹம் பண்ணினான் ஆய்த்து –
(தேவ சஜாதீயனாய் வராமல் ஹம்சமாய் வந்தமைக்கு ஹேது
ஈஸ்வரோஹம் என்று இருப்பாரில் தலைவன்
ஆச்சார்ய அனுவர்த்தனம் பண்ணான் அன்றோ
இப்படி தாழ்ந்து ஆகிலும் உபதேசித்த இடம் வேறே உண்டோ எண்ணில்
திர்யக்காய் மத்ஸயமாய் வராமல்
அசுரர்களால் ஸ்பர்சம் -பிரிக்க ஹம்சம் வேண்டுமே
ஸூரம் =மாற்றும் அ ஸூரர்கள்
வேதம் அபகரிப்பது அபிமானி தேவதையை கொண்டு போக
அசுரர் சகவாசத்தால் வேத புருஷன் கலங்கி இருக்க
பலாத்காரத்தால் உரு மாய
அபிமானியை மீட்டு வரிசையை மீட்டுக் கொடுத்தார் )

சாரதியாய் நின்று உபதேசித்தால் போலே –
அசூரர்களோடே கலந்து உரு மாய்ந்து போனத்தை பிரிக்கைக்காக
நீரையும் பாலையும் பிரிக்கும் பதார்த்தத்தின் வடிவைக் கொண்டான் ஆய்த்து –

அமலன் இடம்-
பிரத்யுபகார நிரபேஷமாகவும்
உபகரித்த சுத்தியும்
ஒரு சுத்தியே –
சிலர் அபேஷிக்க அன்றிக்கே தன் பேறாக உபகரித்தான் ஆய்த்து –

மின்னு சோதி நவ மணியும் வேயின் முத்தும் சாமரையும் பொன்னும் பொன்னி கொணர்ந்து அலைக்கும்
பிரத்யுபகார நிரபேஷமாக உப்கரிக்குமவன் படி
உண்டாய்த்து காவேரிக்கும்
புகரை உடைத்தாய் உள்ளு மண் பற்று அன்றிக்கே இருக்கும்
நவ ரத்னங்களும் –

புறம்பே புகரூட்டி
உள்ளு மண் பற்றாய் இருக்கை யன்றிக்கே
எங்கும் ஒக்க ஒளியாய் இருக்கும் –
ஞாதாவும் ஜ்ஞானமும் போலே
இரண்டும் ஸ்வயம் பிரகாசமாய் இறே இருப்பது –

வேய்கள் உதிர்க்கிற முத்தையும்
சாமரத்தையும்
பொன்னையும்
பொன்னி
கொணர்ந்து அலைக்கும்
இவற்றைக் கொள்ளு கொள்ளு என்று கொடு வந்து
தள்ளா நிற்கும் –

புள்ளம் பூதங்குடி தானே

——————————————

தாயார் திரு நாமமும் இதில்

கற்றா மறித்துக் காளியன் தன் சென்னி நடுங்க நடம் பயின்ற
பொற்றாமரையாள் தன் கேள்வன் புள்ளம் பூதங்குடி தன் மேல்
கற்றார் பரவும் மங்கையர் கோன் காரார் புயல் கைக் கலிகன்றி
சொல் தான் ஈரைந்து இவை பாடச் சோரா நில்லா துயர் தானே –5-1-10-

கற்றா மறித்து-ஆ கன்று -கற்றா -மேய்த்து

கற்றா மறித்துக் காளியன் தன் சென்னி நடுங்க நடம் பயின்ற –
பசு மேய்க்கை-நித்ய ஸூரிகளுக்கு ஓலக்கம்
கொடுத்தவோ பாதியாய் –
கன்றுகளை மேய்க்கிற விடத்திலே –
நல்லதோர் பொய்கை காளியனால் தூஷிதமாகக் கிடக்க –
அவனை அங்கு நின்றும்  ஓட்ட வேணும் -என்று
அவன் தலை நடுங்கும் படி கூத்துக்களை யாடின –

பொற்றாமரையாள் தன் கேள்வன் –
தன்னைப் பாராதே யாய்த்து
அழிவுக்கு இட்டது
ஸ்ரீ யபதியான தன் சௌகுமார்யத்துக்குச் சேராது இறே
இஸ் சாஹசம் –

புள்ளம் பூதங்குடி தன் மேல் –

கற்றார் பரவும் மங்கையர் கோன் காரார் புயல் கைக் கலிகன்றி
ராமோ ராமோ ராம -என்கிற படியே
இரண்டு அஷரம் பிணைக்க வல்லார் எங்கும் உண்டு –
(ராம பக்தர் நாமம் சொல்ல வல்லவர் ஆழ்வார் ஒருவரே )
ஆழ்வாரும் ஒருவரே -என்னா நிற்கும் அத்தனை யாய்த்து –
நீர் கொண்டு எழுந்த காள மேகம் போலே
யாய்த்து கொடை இருப்பது –
இத் திரு மொழியை உபகரித்தவர் இறே –

சொல் தான் ஈரைந்து இவை பாடச் –
இதுக்கு மேற்பட்டது இல்லை இறே ரஸ்யதைக்கு-

சோரா நில்லா துயர் தானே
இவ்வாத்ம வஸ்துவை சோரக் கொடுக்கும் வினை நில்லாது –

———–

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

அறிவது அரியான் அடியார் தேவிமார் உய்யத்தான்
கிறி செய்வான் தேர்வார்க்கு அமுதில் அறிவினியன்
புள்ளம் பூதங்குடியான் என்னும் பரகாலன்
உள்ளூர் உம்பர் தாம் -41-

கோலா வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்டதும்
அழகைக் காட்டி தன்பால் ஆழ்வாராதிகளின் ஆதரம் பெறுக வைப்பதும் போன்ற கிறிகள்
அறிவினியன்-அறிவதற்கே இனியவன் -அறிந்த பின்பு கண்டு அனுபவிக்க இனியவன் –
அவனைப் பற்றிய அறிவே இனிக்குமே
உம்பர் -நித்ய ஸூரி கள் என்றவாறு-

—————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய திருமொழி-4-10—-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

May 5, 2014

ஸ்ரீ கோல வல்லி ராமன் -சேவை
திரு சேங்கனூர் இதன் அருகில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திரு அவதாரம்
சுக்ர புரம்
செவ்வாழை ஸ்தல வ்ருக்ஷம்

கோல வல்லி ராமன்
புஜங்க சயனம் வர்ண கலாபம்
கருடன் சங்கு சக்கரத்துடன் சேவை
தேவ தச்சன்-மயன் ஆசைப்பட்ட படி
மரகத வல்லி
புஷ்கலா வர்த்த விமானம்
சுக்ராச்சாரியார் -பாபம் போக்கிக் கொள்ள-
வெள்ளியால் ஆபத்தைப் போக்கி
கண் நோய் நேத்ர தீபம் அணையா விளக்கு
வெள்ளியானின் குடி பார்கவர் பிருகுவின் பிள்ளை சுக்ராச்சாரியார்

ஆய்ச்சியர் பிரவேசம் –

நினைத்த வகைகள் எல்லாம் பரிமாறப் பெற்றிலோம்
என்று இன்னாதானார் கீழ்
நீர் இப்படி இன்னாதாகிறது என் என்ன
நம்மை ஆசைப் பட்டாருக்கு நினைத்த வகைகளில் எல்லாம் பரிமாறலாம் படி
ஸ்ரீ ராம கிருஷ்ணாதி யாவதாரங்களைப் பண்ணி
முகம் கொடுத்த நாம் அன்றோ
திரு வெள்ளி யங்குடியிலே வந்து சந்நிஹிதர் ஆனோம்
ஆன பின்பு நினைத்த வகைகளில் எல்லாம் பரிமாறத் தட்டு என்ன
என்று சமாதானம் பண்ண
சமாஹிதராய்
அவனைப் பேசி அனுபவிக்கிறார்

(கோபிகளுக்கு காதலன்
ஆயர் புத்ரன் ஆலன் யரும் தெய்வம்
யசோதாதிகளுக்கு மகன்
மாலாகாராதிகளுக்கு
பாண்டவர்களுக்கு சஹா
யார் யார் நினைக்கும் படி அப்படியே சேவை )

ததேவ கோபாய யத பிரசாதாயச ஜாயதே -ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-6– இறே
ஒரு குண ஆவிஷ்காரத்தை தோற்றுவித்தார் -என்கை –
(கோபம் ஏற்படுத்தும் பொருளே பிரசாதமும் இன்பமும் துன்பமும் கொடுக்கும்
பக்தியை வளர்த்து ப்ராப்ய ருசியை வளர்க்கவே
இன்பமும் துன்பமும் பகவத் விஷயத்திலே தானே ஆழ்வார்களுக்கு )

————————————————————————

ஆய்ச்சியர் அழைப்ப வெண்ணெய் உண்டு ஒரு கால் ஆலிலை வளர்ந்த எம்பெருமான்
பேய்ச்சியை முலை உண்டு இணை மருது இறுத்துப் பெரு நிலம்  அளந்தவன் கோயில்
காய்த்த நீள் கமுகும் கதலியும் தெங்கும் எங்குமாம் பொழில்களின் நடுவே
வாய்த்த நீர் பாயும் மண்ணியின் தென் பால்  திரு வெள்ளியங்குடி யதுவே –4-10-1-

கதலி-செவ்வாழை ஸ்தல வ்ருக்ஷம்
மண்ணி ஆற்றின் தெற்கு கரையில்

ஆய்ச்சியர் அழைப்ப வெண்ணெய் உண்டு-
பஞ்ச லஷம் குடியில்
இடக்கை வலக்கை வாசி அறியாதே
இடைச்சிகள் கை எடுத்துக் கூப்பிடும்படி
வெண்ணையை அமுது செய்து

ஒரு கால் ஆலிலை வளர்ந்த
அப்பருவத்தில் ஜகத்தை அடங்கலும்
வயற்றிலே வைத்து
கூப்பிடுகைக்கு ஒருவரும் இல்லாத சமயத்திலே
ஒரு பவனான ஆலம் தளிரிலே
கண் வளர்ந்து அருளின –

எம்பெருமான் –
ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ள த்ரவ்யம் ஒழிய செல்லாமையும்
அகடிதகடநா சாமர்த்யத்தையும் காட்டி
என்னை அனந்யார்ஹன் ஆக்கினவன் –
(ஊடின தன்னையும் சேர்த்துக் கொண்டது-ஜகத்தை உண்டு ஆலிலை
கண் வளர்ந்தது வ்ருத்தாந்தம் த்ருஷ்டாந்தம் )

பேய்ச்சியை முலை உண்டு இணை மருது இறுத்துப் –
துரபிசந்தியோடே வந்து
பூதனையை உடைய
முலையை உண்டு
அவளை முடித்து
பொல்லாத அபிசந்தியை யுடைத்தாய்
தன்னிலே புணர்ந்து நின்ற
மருதுகளை முறித்து –

பெரு நிலம்  அளந்தவன் கோயில்
மகா பலியாலே அபஹ்ருதமான பூமிப் பரப்பை யடைய
அநாயாசேன
அளந்து கொண்டவன் வர்த்திக்கிற தேசம் –

காய்த்த நீள் கமுகும் கதலியும் தெங்கும் எங்குமாம் பொழில்களின் நடுவே
ஆஸ்ரயநீய வஸ்து சந்நிஹிதமான இடம்
என்று தோற்றும்படி யாய்த்து
அத் தேசத்தில் போக்யதை இருப்பது
எல்லாம் எங்கும் ஒக்க பக்வமாய்த்து அங்கு இருப்பது –

வாய்த்த நீர் பாயும் மண்ணியின் தென் பால்
சேர்ந்து குளிர்ந்த தண்ணீரையே குடிக்கும் செருக்கரை போலே யாய்த்து –

திரு வெள்ளியங்குடி யதுவே
அவன் கோயில் அதுவே என்கையாலே
ஆஸ்ரயநீய வஸ்து ஸ்தலம் அதுவே -என்கை –

————————————————————

வாமன
வட தள சாயி
அகடி கடனா சாமர்த்தியம் சேர்த்து கிருஷ்ண அனுபவம் கீழ்
இங்கு கிருஷ்ண அவதாரத்தையும்
அப்படியே நீரில் கற்கள் மிதக்கும் படி சேராதத்தை சேர்த்ததையும் சேர்த்து
விரோதி நிரசன சீலம் அனுபவம்
க்ஷேத்ர பெருமாளே ஸ்ரீ ராமர் தானே –

ஆநிரை மேய்த்து அன்று அலை கடல் அடைத்திட்டு அரக்கர் தம் சிரங்களை யுருட்டிக்
கார் நிறை மேகம் கலந்ததோர் உருவக் கண்ணனார் கருதிய கோயில்
பூ நிரைச் செருந்தி புன்னை முத்தரும்பிப் பொதும்பிடை வரி வண்டு மிண்டித்
தேநிரைத்துண்டு அங்கு இன்னிசை முரலும் திரு வெள்ளியங்குடி யதுவே —4-10-2-

ஆநிரை மேய்த்து அன்று
கோ ரஷணம் பண்ணி
(திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி – செங்கண் ஆயர் தேவு
இஷ்டமான கன்றுகளை இனிது மறித்து நீரூட்டி )

அலை கடல் அடைத்திட்டு அரக்கர் தம் சிரங்களை யுருட்டிக்
ஷூபிதமான கடலை அணை செய்து
வர பலத்தாலே திண்ணிதான ராஷசர் உடைய தலைகளை உருட்டி –

கார் நிறை மேகம் கலந்ததோர் உருவக் கண்ணனார் கருதிய கோயில்
கார் காலத்திலே நிறைந்த மேகம் போலே இருக்கிற வடிவை உடைய கிருஷ்ணன்
ரஷணத்துக்கு பாங்கான இடம் -என்று திரு உள்ளம் பற்றி வர்த்திக்கிற கோயில் –

பூ நிரைச் செருந்தி புன்னை முத்தரும்பிப் பொதும்பிடை வரி வண்டு மிண்டித்
நிரை நிரையான பூக்களை உடைத்தான செருந்தி
அரும்பின முத்தை உடைத்தான புன்னை
இவற்றில் உண்டான -பொதும்புகளிலே -த்வாரங்களிலே –
தர்ச நீயமான வடிவை உடைய வண்டுகள் நெருங்கிக் கொண்டு

தேநிரைத்துண்டு அங்கு இன்னிசை முரலும் திரு வெள்ளியங்குடி யதுவே   –
மது வனத்தில் புக்க முதலிகள் போலே
(மது வனத்தால் ராமன் முதுகு பிழைத்ததே )
பெரிய ஆரவாரத்தோடு மது பானத்தைப் பண்ணி
உள்ளுப் புக்க த்ரவ்யம் இருந்த இடத்தே இருக்க ஒட்டாதே
ஆலத்தி வையா நிற்கும்
ஸ்வேச்சையிலே பாடா நிற்கும் யாய்த்து –

————————————————-

மற்ற ஒரு அவதாரத்தில் போக ஒட்டாமல் முடியாத ஒன்றை பண்ணிய
காளியன் தலைகள் மேல் நாட்டியம் சேராததை சேர்ப்பது தானே –
காளியன் உச்சியில் நட்டம் பயின்றான் –

கடுவிடமுடைய காளியன் தடத்தைக் கலக்கி முன் அலக்கழித்தவன் தன்
படமிறப் பாய்ந்து   பன் மணி சிந்தப் பல் நடம் பயின்றவன் கோயில்
படவரவல்குல் பாவை நல்லார்கள் பயிற்றிய நாடகத்து ஒலி போய்
அடை புடை தழுவி அண்ட நின்று அதிரும்  திருவெள்ளியங்குடி யதுவே —4-10-3-

கடுவிடமுடைய –
நாலைந்து யோஜனத்துக்கு அவ்வருகே
பறக்கிற பஷிகள் சிறகு அற்று விழும்படியே
குரூரமான விஷத்தை உடைய –

காளியன் தடத்தைக் கலக்கி முன் அலக்கழித்து –
காளியன் உடைய தடாகத்தில்
மதியாதே போய்ப் புக்கு
அது குழம்பாம்படி பண்ணி
அலமந்து
கிலேசப் படும்படி யாக்கி –

அவன்  தன்படமிறப் பாய்ந்து –
கரையிலே நிற்கிற கடம்பின் உச்சியிலே போய் ஏறி
அவனுடைய பணங்கள் இறும்படியாக பாய்ந்து –
(பூத்த கடம்பு ஏறி -கிளையாக இருந்து இருக்கக் கூடாதோ என்று ஆசைப்படும் படி -அணைய இத்யாதி –
பெருமக்கள் -தாஸ்ய சுகம் அறிந்த பாகவதர் திரு மாளிகையில் புழுவாக பிறக்கவும் ஆசைப்படுவார்கள் )

பன் மணி சிந்தப்-
அதில் உண்டான பல வகைப் பட்ட
ரத்னங்கள் சிதறும் படி –

பல் நடம் பயின்றவன் கோயில் –
அன்று துடங்கி பரத சாஸ்தரத்துக்கு வேண்டும்
லஷணங்கள் எல்லாம்
எழுதிக் கொள்ளலாம் படி
பல வகைப் பட்ட  ந்ருத்தங்களைப் பண்ணினவன்
வந்து வர்த்திக்கிற தேசம் –

படவரவல்குல் பாவை நல்லார்கள் பயிற்றிய நாடகத்து ஒலி போய்
படத்தை உடைத்தான பாம்போடு ஒத்து இருக்கிற
நிதம்பப் பிரதேசத்தி உடைய
ஸ்திரீகள் ஸ்ரமம் செய்கிற போதை -ஸ்ரமம் செய்வது பழகுவது –
நாடக த்வநியானது போய்

அடை புடை தழுவி அண்ட நின்று அதிரும்  திருவெள்ளியங்குடி யதுவே
அஹோ ராத்ரம் அணைந்து
ஆகாசத்தில் நின்று
கோஷியா நிற்கும் ஆய்த்து  –

—————————————————

ஏஷ நாராயண ஸ்ரீ மான் –இத்யாதி
கிருஷ்ண அவதாரத்துக்கு அடியான ஷீராப்தி அனுபவம் –

கறவை முன் காத்துக் கஞ்சனைக் காய்ந்த காள மேகத் திரு வுருவன்
பறவை முன் உயர்த்துப் பாற் கடல் துயின்ற   பரமனார் பள்ளி  கொள் கோயில்
துறை துறை தோறும் பொன் மணி சிதறும் தொகு திரை மண்ணியின் தென் பால்
செறி மணி மாடக்  கொடி கதிர் அணவும் திரு வெள்ளியங்குடி யதுவே –4-10-4-

பறவை முன் உயர்த்து-கருட புள் கொடி -ஆடு புள் கொடி

கறவை முன் காத்துக் கஞ்சனைக் காய்ந்த
கோ ரஷணத்தைப் பண்ணி
அந்த கோ சம்ருதியைப் பொறாத கம்சனை அழியச் செய்த  –

காள மேகத் திரு வுருவன்-
அழிவுக்கு இட்ட வடிவு தான் இருக்கிற படி –
(கரிய திருமேனி வாட பசு மேய்க்கைக்கு சென்றான் )

பறவை முன் உயர்த்து-
ரஷணத்துக்கு ஈடாக பெரிய திருவடியை
த்வஜமாக எடுத்து –
(உள்ளே இருக்கும் வஸ்துவை கோள் சொல்லிக் கொடுக்கும் கொடி )

பாற் கடல் துயின்ற   பரமனார் பள்ளி  கொள் கோயில்
ப்ரஹ்மாதிகள் கூக்குரல் கேட்கும் படியாக
அடுத்து அணியாக
திருப் பாற் கடலிலே
கண் வளர்ந்து அருளின
சர்வாதிகன்
வந்து சாய்ந்து அருளின கோயில் –
(பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் அன்றோ )

துறை துறை தோறும் பொன் மணி சிதறும் தொகு திரை மண்ணியின் தென் பால்
துறைகள் தோறும் துறைகள் தோறும்
பொன் மணிகள் கொழித்துக் கொடு வந்து
எறடா நின்றுள்ள திரண்ட திரைகளை உடைத்தான
மண்ணியின் தென் பால் –

செறி மணி மாடக்  கொடி கதிர் அணவும் திரு வெள்ளியங்குடி யதுவே –
செறிந்த அழுத்தின மணிகளை உடைத்தான மாடங்களிலே
கட்டின கொடிகளானவை
ஆதித்ய பதத்தளவும் சென்று
அவனுக்கு இதஸ்தத சஞ்சரிக்க ஒண்ணாத படி
தகையா நிற்கும் ஆய்த்து

——————————————–

கிருஷ்ண அவதாரம் பிரதான ப்ரயோஜனம் பூ பாரம் குறைக்கவே
பூமிக்கு உதவியவற்றை இங்கு அருளிச் செய்கிறார் –

பாரினை யுண்டு பாரினை யுமிழ்ந்து பாரதம் கை எறிந்து ஒரு கால்
தேரினை  யூர்ந்து  தேரினைத் துரந்த செங்கண் மால் சென்றுறை கோயில்
ஏர் நிறை வயலுள் வாளைகள் மறுகி எமக்கு இடம் அன்று இது என்று எண்ணிச்
சீர்மலி பொய்கை சென்று அணைகின்ற திருவெள்ளியங்குடி யதுவே —4-10-5-

பாரினை யுண்டு பாரினை யுமிழ்ந்து பாரதம் கை எறிந்து
பரப்பை உடைத்தான பூமியை
திரு வயிற்றிலே வைத்து
உள்ளுக் கிடந்து தளராதபடி வெளிநாடு காணப்
புறப்பட விட்டு
பாரத சமரத்திலே கையும் அணியும் வகுத்து –

ஒரு கால் தேரினை  யூர்ந்து  தேரினைத் துரந்த –
ஒரு கால் ஆஸ்ரிதன் பக்கல்
வாத்சல்யத்தாலே சாரத்தியம் பண்ணி
அதி ரத மகா ரதரான பீஷ்மாதிகள்
தேரை விட்டு ஒடும்படியாக துடர்ந்த –

செங்கண் மால் சென்றுறை கோயில் –
ஆஸ்ரித வாத்சல்யம் அடங்கலும்
கண்ணிலே தோற்றும்படி இருப்பானாய்
ஆஸ்ரித வ்யாமுக்தன் ஆனவன்
வந்து வர்த்திக்கிற தேசம் –

ஏர் நிறை வயலுள் வாளைகள் மறுகி எமக்கு இடம் அன்று இது என்று எண்ணிச்
ஏரியினுடைய நிரையை உடைத்தான
வயலில் உண்டான வாளைகள் அஞ்சி
எப்போதும் மாறாதே உழப் புக்கவாறே
இப்படி சாபாயமான இடம் நமக்கு வாசஸ் ஸ்தானம் அல்ல
என்று எண்ணி நிரபாயமாக வர்த்திகலாம் படியான
தேசத்திலே  போய் புகுவோம் என்று –

சீர்மலி பொய்கை சென்று அணைகின்ற திருவெள்ளியங்குடி யதுவே  –
சீர் மலி பொய்கை சென்று அணையும் ஆய்த்து
ஏர்கள் விட்டுக் கொடு போய்
பொய்கைகளில் உழுவார் இல்லையே –

சம்சாரம் அநித்தியம் துக்கம் -என்று அத்தை விட்டு
விரஜையைச் சென்று பற்றுவாரைப் போலே –
(ப்ரஹ்மாதிகள் காளைகள்
உழவன் அவன்
ஏர் கர்ம பாசங்கள்
லீலா விபூதியை விட்டு -ஜனன மரண விட்டு
பகவத் கிருபா ஜலஜம் பிறந்த பாகவதர்கள் விரஜைக்கு போவது போல் )

—————————————————

கோல வில்லி ராமனை கிருஷ்ண சேஷ்டிதங்களை சொல்லி கீழ்
ராமனாகவே இங்கு அனுபவம்

காற்றிடைப் பூளை கரந்தன வரந்தை யுறக் கடல் அரக்கர் தம் சேனை
கூற்றிடைச் செல்லக் கொடுங்கணை துரந்த கோல வில்லி ராமன் தன் கோயில்
ஊற்றிடை நின்ற வாழையின் கனிகள் ஊழ்த்து  வீழ்ந்தன வுண்டு மண்டிச்
சேற்றிடைக் கயல்கள் உகள் திகழ் வயல் சூழ்   திருவெள்ளியங்குடி யதுவே –4-10-6-

காற்றிடைப் பூளை கரந்தன –
பெரும் காற்றிலே
பூளைப் பூவானது
பறந்து உரு மாய்ந்து போமா  போலே

வரந்தை யுறக் –
துன்பம் உற

கடல் அரக்கர் தம் சேனை –
ஓதம் கிளர்ந்த -ஓங்கிக் கிளர்ந்த கடல் போல்
மிகைத்து வந்து தோற்றின
ராஷச சேனை எல்லாம் –

கூற்றிடைச் செல்லக் –
முன்பு யமனைத் திறை கொண்டு -ஜெயித்து –
பர தந்த்ரனாக்கி வர்த்தித்தவர்கள்
இப்போது அவனுக்கு குடி மக்களாக
திக் விஜயம் பண்ணுகிற போது
முந்துற அழியச் செய்வது யமனை இறே

கொடுங்கணை துரந்த –
பெருமாள் கண் பார்க்கிலும்
கண் பாராத க்ரௌர்யத்தை உடைய
அம்பை விட்ட

கோல வில்லி ராமன் தன் கோயில் –
கையில் வில் பிடித்த பிடியிலே
முடிந்து போகிற ராஷசர் அடங்க
இவன் கையில் நாம் பட்டுப் போனால் ஆகாதோ -என்னும்படி
தர்ச நீயமான வில்லை உடைய
சக்கரவர்த்தி திரு மகன் வர்த்திக்கிற திருக் கோயில்
(கோலம் வில்லுக்கு விசேஷணம் )

ரஞ்ச நீயச்ய விக்ரமை -என்றான் இறே
சாபஞ்ச முமோச
கறுவி வேணும் என்று பொகடுவாரைப் போலே
அங்கனே யாக வேணும் இறே பொகட்ட இடத்திலே வீர என்னும் போது –

(சத்ருவாலும் கொண்டாடப் படுபவன்
யுத்தத்தில் பேராசை கொண்ட என்னை கோழை ஆக்கினாய் என்று தனது சாரதியைக் கறுவி-கடிந்தான்
வஜ்ரத்தாலும் அசையாத ராவணன் வார்த்தை -ராம பானத்தால் தபித்து- அசைந்து ஆடி –
கை வில்லை விட்டு வீரன் ஆனான் –
வெறும் கை வீரன் -வில்லைக் கையில் வைத்த அளவும் ரஷிக்கும் என்ற எண்ணம் –
போட்டதும் ரக்ஷகன் -அஞ்சலி ஹஸ்தத்துடன் வந்து இருந்தால் ராமன் தோற்று இருப்பார்
யதி வா ராவணஸ்யம் என்ற பெருமாள் அன்றோ )

ஊற்றிடை நின்ற வாழையின் கனிகள் ஊழ்த்து  வீழ்ந்தன வுண்டு மண்டிச்
நீர் நிலைகளில் நின்ற வாழைகள் ஆனவை முற்றிப் பழுத்து
அந்த பழங்கள் பேர்த்து வீழும் -ஊழ்த்து  இற்று-
ஆமிஷமானது கிடந்த விடத்தே வந்து கிட்ட
அத்தை மேல் விழுந்து புஜித்து –

சேற்றிடைக் கயல்கள் உகள் திகழ் வயல் சூழ்  திருவெள்ளியங்குடி யதுவே –
சேற்றிலே உண்டான வாளைகள் ஆனவை
தன் செருக்குப் போக்கு விட்டு
உகளா நின்றுள்ள விளங்குகின்ற
வயலாலே சூழப் பட்ட
நீர் நிலத்திலே போலே யாய்த்து சேற்றிலும் சஞ்சரிக்கும் படி
பிரளயத்தில் விடிலும் சேறு ஆக்க  வற்றாய்த்து
இவை தான் தம் செருக்காலே –

——————————————————-

கோல வல்லி ராமன்
புஜங்க சயனம் வர்ண கலாபம்
கருடன் சங்கு சக்கரத்துடன் சேவை
தேவ தச்சன்-மயன் ஆசைப்பட்ட படி
மரகத வல்லி
புஷ்கலா வர்த்த விமானம்
சுக்ராச்சாரியார் -பாபம் போக்கிக் கொள்ள-
வெள்ளியால் ஆபத்தைப் போக்கி
கண் நோய் நேத்ர தீபம் அணையா விளக்கு
வெள்ளியானின் குடி பார்கவர் பிருகுவின் பிள்ளை சுக்ராச்சாரியார்

ஒள்ளிய கருமம் செய்வன் என்று உணர்ந்த மாவலி வேள்வியில் புக்குத்
தெள்ளிய குறளாய் மூவடி கொண்டு திக்குற வளர்ந்தவன் கோயில்
அள்ளியம் பொழில் வாய்  இருந்து வாழ் குயில்கள் அரி அரி என்று அவை அழைப்ப
வெள்ளியார் வணங்க விரைந்து அருள் செய்வான் திருவெள்ளியங்குடி யதுவே–4-10-7-

உணர்ந்த-உணர்ந்து பாட பேதம் -தானம் -இந்திரன் கார்யம் முடிப்பது ஒள்ளிய கருமம்
தெள்ளிய குறளாய்-தெள்ளிய சிங்கர் போல் இவனும் –
வாழ்-வாசம் செய்து ஸூ கியாய் இருக்கும்
வெள்ளியார்-சாத்விகர் என்றும் சுக்ராச்சாரியார் என்றும்

ஒள்ளிய கருமம் செய்வன் என்று உணர்ந்த மாவலி வேள்வியில் புக்குத்
யாகம் என்ற ஒரு வியாஜ்யத்தை இட்டு
என்னுடைய சர்வ தனத்தையும் பரார்தமாக்க கடவேன்
என்று அனுசந்தித்த மகா பலி உடைய வேள்வியில் புக்கு -என்னுதல்

உணர்ந்து -என்ற பாடமாகில்
என்னை இரந்த இந்த்ரனுக்காக
நான் என்னை இரப்பாளன் ஆக்குவேன் -என்று
மகா பலி யஞ்ஞ வாடத்திலே போய்ப் புக்கு  –

தெள்ளிய குறளாய் மூவடி கொண்டு திக்குற வளர்ந்தவன் கோயில்
சுக்ரன் மற்றை யார் -இவன் தேவ கார்யம் செய்ய வந்தான் இத்தனை –
அகப்படாதே கிடாய் -என்று உபதேசித்தால்
நான் கொண்டு அல்லது போகேன்
புக்க கார்யம் தலைக் கட்டாதே மீளுவேனோ -என்னும்
தெண்மையை உடைய வாமனனாய்
அவன் நிரோதித்தாலும்-இவன் கொடேன் -என்றாலும்
நான் கொண்டு அல்லது போகேன் -என்று போய் புக்கான் ஆய்த்து

மூன்று அடி தர வேணும் என்று அபேஷித்து
அநந்தரம்
திக்குகளை அடைய
தன் வடிவாலே பாரித்தான் ஆய்த்து –  –

அள்ளியம் பொழில் வாய் இருந்து வாழ் குயில்கள் அரி அரி என்று அவை அழைப்ப
அள்ளி -என்று அல்லியாய்-தாதுக்களை உடைத்தாய்
அழகியதாய் இருந்துள்ள பொழில் இடத்தே என்னுதல்

அன்றிக்கே
அளியை அள்ளி என்னுதல்  -அத்தாலே தண்ணளி யாய்
குளிர்ந்து தர்ச நீயமான பொழில் இடத்திலே இருந்து
அங்கு உள்ள பலாதிகளை புஜித்து வர்த்திக்கிற குயில்கள் ஆனவை
சத்வ நிஷ்டர் ப்ரஹ்ம முகூர்த்தத்திலே எழுந்து இருந்து
ஹரி ஹரி
என்னுமா போலே திரு நாம  சங்கீர்த்தனம் பண்ணும் ஆய்த்து
(மெள்ள எழுந்து அரி என்ற பேர் அரவம் )

பிராமணர் உடைய யாத்ரையாய் இருக்கும் ஆய்த்து
அங்குத்தை திர்யக்குகளுக்கும் –

வெள்ளியார் வணங்க விரைந்து அருள் செய்வான் திருவெள்ளியங்குடி யதுவே
சுத்த ஸ்வாபாவம் உள்ளவர்கள் ஆஸ்ரயிக்கும்  -என்னுதல்

அன்றிக்கே
சுக்ரன் அத்தேசத்தை உபாசித்தான் என்று ஒரு பிரசித்தி உண்டு
அத்தை சொல்லிற்று ஆகவுமாம்
வெள்ளியார் -என்றது அவனை ஆதரித்து சொன்ன படி

அன்றிக்கே –
வெள்ளியார் வணங்க —
வெள்ளி மலையை உடைய -ருத்ரன் வந்து ஆஸ்ரயிக்க
ஸ்வப்ன லப்த்தம் தனம் யதா -என்கிறபடியே
சடக்கென அவன் பாதகத்தைப் போக்கினவன்

விரைந்து அருள் –
வணங்கி எழுந்து இருப்பதற்கு முன்னே
அவர்களுக்கு பலத்தைக் கொடுக்கும் யாய்த்து   –

————————————————————

ஈர் அடியைச் சொல்லி
ஈர் படி கொண்ட நரஸிம்ஹ அனுபவம் இதில் –

முடியுடை அமரர்க்கு இடர் செய்யும் அசுரர் தம் பெருமானை அன்று அரியாய்
மடியிடை வைத்து மார்வை  முன் கீண்ட மாயனார் மன்னிய கோயில்
படியிடை மாடத்து அடியிடைத் தூணில் பதித்த பன் மணிகளின் ஒளியால்
விடி பகல் இரவு என்று அறி வரிதாய திருவெள்ளியங்குடி யதுவே —4-10-8-

முடியுடை அமரர்க்கு இடர் செய்யும் அசுரர் தம் பெருமானை
ஈஸ்வரோஹம் என்று அபிமானித்து இருக்கிற –
தேவ ஜாதிக்கு கிலேசத்தை விளைக்கிற
அசூரேந்த்ரன் உண்டு -ஹிரண்யன்  -அவனை

அன்று –
சிறுக்கனுக்கு அவன் நலிவைப் பண்ணின அன்று –

அரியாய் –
நர  சிம்ஹமாய் –

மடியிடை வைத்து மார்வை  முன் கீண்ட மாயனார் மன்னிய கோயில்-
பிராட்டி போல்வாரை ஏறிட்டுக் கொள்ளக் கடவ மடியிலே
துஷ் ப்ரக்ருதியான ஹிரண்யனை ஏறிட்டு

தன்னுடைய தாள் மேல் கிடாத்தி-பெரிய திருமடல் -என்கிற இடத்துக்கு பட்டர் அருளிச் செய்ய
நான் கேட்டேன் என்று பிள்ளை அருளிச் செய்வர்
பிரதி கூல்யனான ஹிரண்யனை விட்டு
ஆசை உடைய என்னை அன்றோ
அம்மடியிலே ஏறிட்டுக் கொள்ள அடுப்பது -என்று
தம்மைப் பார்த்து அருளிச் செய்தாராக –
(பூமியிலோ ஆகாசத்திலோ மரணம் கூடாதே ஆகவே மடியிடை -சொல்லலாமே
ப்ரேமத்துடன் இருப்பவர் வரத்தைக் காண மாட்டார்களே )

அவனுடைய பரந்த மார்வை கிழித்துப் பொகட்ட
ஆஸ்ரித வ்யாமோஹத்துக்கு அவதி இல்லாதவர்
நித்ய வாஸம் பண்ணுகிற தேசம்   –

படியிடை மாடத்து அடியிடைத் தூணில் பதித்த பன் மணிகளின் ஒளியால்
பூமியிலே உண்டான மாடங்களிலே
நட்ட தூண் அடியிலே
அழுத்தின நாநாவான ரத்னங்களின் ஒளியாலே

விடி பகல் இரவு என்று அறிவரிதாய திருவெள்ளியங்குடி யதுவே
அங்கு உள்ளாருக்கு திவாராத்ரா விபாகம்
பண்ண ஒண்ணாத படியாய் இருக்கும் ஆய்த்து
இவை தான் ஒரு கால விசேஷங்களிலே உண்டாகையாலே சொல்லிற்று ஆகவுமாம்

அன்றியே
இவருடைய உகப்புக்கு அவதி இல்லாமையாலே ஆகவுமாம்
உகந்த விஷயங்களில் எல்லா நன்மைகளும் உண்டாகத் தோற்றும் இறே –

—————————————————

அஸுர நிரஸனம் கீழ்
அசுரர்கள் அழிந்தால் தேவர்கள் ஸ்தோத்ரம் பண்ணுவார்கள்
அதையே இதில் அனுபவிக்கிறார் –

குடி குடியாகக் கூடி நின்று அமரர் குணங்களே பிதற்றி நின்று ஏத்த
அடியவர்க்கு அருளி யரவணைத் துயின்ற வாழியான் அமர்ந்து உறை கோயில்
கடியுடைக் கமலம் அடியிடை மலர கரும்போடு பெரும் செந்நெல் அசைய
வடிவுடை அன்னம் பெடையோடு சேரும் வயல் வெள்ளியங்குடி யதுவே —4-10-9-

குடி குடியாகக் கூடி நின்று அமரர் குணங்களே பிதற்றி நின்று ஏத்த
ப்ரஹ்மாதிகள் -உமயா சார்த்த மீசாநா மாஹாத்ம்யம் -என்கிறபடியே
பார்யா புத்ராதிகளோடே திரண்டு
நாங்கள் ஆபந்னரான அன்றைக்கு
தேவரை ஒழிய ஒரு புகலிடம் உண்டோ என்று
அவன் உடைய குணங்களை சொல்லி நின்று ஏத்த –

அடியவர்க்கு அருளி யரவணைத் துயின்ற –
தன் திருவடிகளிலே அசாதாரணராய் இருப்பார் பக்கலிலே
கிருபையைப் பண்ணி
இவர்கள் கூக்குரல் கேட்கைக்கு அடுத்து அணித்தாக
திருப் பாற் கடல் கோயிலிலே
கண் வளர்ந்து அருளினவன் -என்னுதல்-

வாழியான் அமர்ந்து உறை கோயில்-
அன்றிக்கே
ரஷணத்துக்கு பரிகரமான திரு வாழியை   உடையவன்
பொருந்தி வர்த்திக்கிற தேசம் -என்னுதல்

கடியுடைக் கமலம் அடியிடை மலர கரும்போடு பெரும் செந்நெல் அசைய
பரிமள பிரசுரமான தாமரை யானது
கரும்புக்கும் செந்நெலுக்கும்  அடியிலே மலர
அத்தாலே கரும்பும் செந்நெல்லும் அசைய –

வடிவுடை அன்னம் பெடையோடு சேரும் வயல் வெள்ளியங்குடி யதுவே
அதன் மேலே தர்ச நீயமான வடிவை உடைத்தான அன்னம்
பேடை யோடே வர்த்திக்கிற போது
ஓங்கின சிம்ஹாசனத்தின் மேலே
சாமரம் இரட்ட மகிஷியோடே கூட இருக்கும் ராஜ புத்ரனைப் போலே
இரா நின்றது ஆய்த்து –

————————————————–

ஸ்வேத கல்ப ஸ்ரீ வராஹ அவதார அனுபவத்துடன் நிகமிக்கிறார்

பண்டு முன் ஏனமாகி அன்று ஒரு கால் பார் இடந்து எயிற்றினில்  கொண்டு
தெண் திரை வருடப் பாற் கடல் துயின்ற  திருவெள்ளியங்குடியானை
வண்டறை சோலை மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள்
கொண்டிவை பாடும் தவம் உடையார்கள் ஆள்வர் இக் குரை  கடல் உலகே—4-10-10-

பண்டு காலத்தை
முன் -அழிந்து போவதற்கு முன்
அன்று ஒருகால் -இவருக்கு உள்ள இன்னாப்பு -உதவப் பெற்றிலேனே

பண்டு  –
வராஹ கல்பத்தின் ஆதியிலே

முன்
அண்ட பித்தியிலே ஒட்டின பூமி
உரு மாய்வதற்கு முன்பே

ஏனமாகி –
மகா வராஹமாகி

அன்று –
அன்றைக்கு நான் உதவப் பெற்றிலேன் என்னும் அர்த்தத்திலே

ஒரு கால் பார் இடந்து எயிற்றினில்  கொண்டு தெண் திரை வருடப் பாற் கடல் துயின்ற திருவெள்ளியங்குடியானை-
பூமியை இடந்து
திரு எயிற்றினில் கொண்டு
அந்த ஸ்ரமம் ஆறும்படியாக
கடல் திரைகளில் குருந்  திவலைகள்
துடை குத்தி உறக்கத் திருப் பாற் கடலிலே
கண் வளர்ந்து அருளினவன் ஆய்த்து
திரு வெள்ளியங்குடியிலே  சந்நிஹிதன் ஆனான் –

வண்டறை சோலை மங்கையர் தலைவன்
மது பான மத்தமான வண்டுகள்
த்வனியா நின்றுள்ள சோலையை உடைத்தாய்
திரு மங்கையில்  உள்ளாருக்கு நிர்வாஹகன் –

மான வேல் –
அளவுடைய வேல் -என்னுதல்
வைஷ்ணவ அபிமானத்தை பண்ணிக் கொடுக்கும் வேல் -என்னுதல்
(மானமிலா பன்றி உவமானம் இல்லாத அபிமானம் இல்லாத போல்
இங்கு மான அளவும் அபிமானமும் )

கலியன் வாய் ஒலிகள் கொண்டிவை பாடும் தவம் உடையார்கள் ஆழ்வர் இக் குரை  கடல் உலகே  —
இவற்றை ஆதரித்துக் கொண்டு
அப்யசிக்க ஈடான பாக்யாதிகர்
கடல் சூழ்ந்த பூமியை தாங்கள் இட்ட வழக்காம்படி ஆளப் பெறுவர் –

பரிந்து பாகவத சேஷம் ஆக்கப் பெறுகையாலே
ஐஸ்வர்யத்தை  தாம் புருஷார்த்தமாக நினைத்தார்
அத்தாலே
இது கற்றாருக்கும் அப்படி கூடல் இது தானே அமையும்
என்று இருந்த படியாலே ராஜ்யஸ்ரீ யைப் பெறுவார் என்கிறார்

அன்றிக்கே
இது தன்னை சர்வாதிகாரம் ஆக்குகைக்கு சொல்லிற்று ஆகவுமாம் –
ஐஸ்வர்ய காமர் இல்லை யாகில் இத்தை அதிகரி யார்களே
அவர்கள் இழக்க ஒண்ணாது என்னு முகப்பாலே சொல்லுகிறார் –

———-

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

ஆய்ச்சியர் அன்பர் கைப்பொருளை உகக்கும் தான் சேரா
சேர்க்கும் அழிய மாருதி தொண்டர் இடர் தீர்க்கும்
திரு வெள்ளியங்குடியான் வாழ்த்தும் கலியன்
திரு மொழி ஏத்தும் அறிந்து -40-

அகடிதகடநா சமர்த்தன் -ஆலிலை -நரஸிம்ஹம்-போன்று
பரத்வத்தை அழிய மாறி ஸ்தாவர திர்யக் மனுஷ்ய யோனிகளில் திருவவதாரம்

————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய திருமொழி-4-9—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

May 5, 2014

ப்ரணய ரோஷம் -மட்டை அடி உத்சவம் -ஊடல்-ப்ரேமம் விஞ்சி
நாயகி நிலையில் பலர்
இங்கு தானான ஆணான தன்மையில் -இதுவே இதன் வைலக்ஷண்யம்
கண்ணன் இடத்தில் நம்மாழ்வார்
குலசேகரப் பெருமாள் வாஸூதேவன் இடத்தில்
காதில் கடிப்பிட்டு நாயகி பாவத்தில் கண்ணன் இடத்தில்
இங்கு அர்ச்சாவதாரத்தில்
ஸ்ரீ ரெங்க பட்டினம் ஆதி ரெங்கம்
மத்ய ரெங்கம் ஸ்ரீ ரெங்கம்
அப்பால ரெங்கம்
பரிமள ரெங்கன்
ஸூகந்த வன நாயகன்
ஸூகந்த வன நாயகி –
இந்து புஷ்கரணி
நமக்காகவே இங்கு -பின்னானார் வணங்கும் சோதி அன்றோ –

இந்து சந்த்ர சாப விமோசனி தாயார்
பரிமள ரெங்க தாயார்
இந்து புஷ்காரணி
நான்கு திருக்கைகள்
கங்கை காவேரி சூர்ய சந்திரன் கர்ப்ப க்ருஹம்
வீர சயனம்
நாபியில் நான்முகன்
வேத அபகாரம் மது கைடபர்
துர் நாற்றம் வேதங்களுக்கும் போக்கி உபதசம் ஆமோத விமானம் வாசனை கொடுத்ததால்
அகண்ட கர்ப்ப க்ருஹம்

நும்மைத் தொழுதோம் பிரவேசம் –

(ப்ராப்யத்தைப்) பெற வேணும் என்னும் அபேஷையிலே கண் அழிவு இல்லாமை சொல்லிற்று இறே
கீழில் திரு மொழியிலே-( பகவத் அனுபவ ப்ரீதி காரித கைங்கர்யமே பேறு )
பார்த்தன் பள்ளி பாடுவாள் -என்று உகந்து அருளின நிலங்களைச் சொல்லி
வாய் வெருகைக்கு மேற்பட இல்லை இறே அபேஷைக்கு

மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் என்னும் திருவாய் -என்றும்
கண்ணன் விண்ணூர் தொழவே சரிகின்றன சங்கம் -திரு விருத்தம் 47–என்றும்
சொல்லுகிற இவை அடைய
இவருக்கு உகந்து அருளின நிலங்களிலே யாய்த்து

ஆகையால்
பரம பதம் கலவிருக்கையாக இருக்க
(ஸ்ரீ வைகுண்ட விரக்த்தாயா ரமயா ரம மாணாயா )
அவ் விடத்தை விட்டு ஆஸ்ரிதர்க்கு
சர்வ அபேஷித ப்ரதன் ஆகைகாக
திருவிந்தளூரிலே வந்து  சந்நிஹிதன் ஆனான்
நாம் அங்கே போகப் புகவே நினைத்தவைகள் எல்லாம் பெறலாம் -என்று
பெரிய பாரிப்போடே போய்ப் புக்க விடத்து

ஒரு ஸ்ரீ புண்டரீகன் அக்ரூரன் என்றால் போலே சொல்லுகிற இவர்கள் பக்கலில் பண்ணின
விசேஷ கடாஷத்தை
தம் பக்கலிலேயும் பண்ணி
திருக் கண்களாலே குளிர நோக்குதல்
அணைத்தல்
வினவுதல்
இவர் -வழு விலா அடிமை செய்ய வேண்டும் நாம் -என்று
பாரித்து கொடு புக்க படியே

அடிமையில் ஏவுதல் –
பண்டை நாளால் திரு வாய் மொழி போலே
நம்மை ஒருகால் காட்டி நடந்தால்
சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய்
நின் பாத பங்கயமே தலைக்கு அணியாய் -போன்ற பரிமாற்றங்கள் –
செய்யக் கண்டிலர்

அத்தாலே
மிகவும் அவசந்னராய்
ஒரு மின்னிடை மடவார்-6-2-
காதில் கடிப்பில்
பிராட்டிமார் தசை பிறந்தால்
பிரணய கலஹத்தாலே கிலாய்த்துச் சொல்லும் பாசுரம் அடைய
ஆழ்வார் தாமான தன்மையிலே சொல்லலாம் படி யான பாவம் பிறந்து

சந்நிதியும் உண்டாய்
எனக்கு அபேஷையிலும் கண் அழிவு அற்று
பிராப்தனுமாய் இருக்க (சகலவித பந்து அன்றோ )
என்னை அடிமை கொள்ளாது ஒழிவதே -என்னும் இன்னாப்புடனே
சிவட்கு பிறந்து வார்த்தை சொல்லுகிறார்

கீழே காவளம் பாடியில் -4-6-சரணம் புக்கு
இடரை நீக்கு பிரகிருதி சம்பந்தம் போக்க-4-7 பிரார்த்தித்து ப்ராப்யத்தில்
ஆசை உட்கடமான அபேக்ஷை கீழே -4-8-கைங்கர்ய பிரார்த்தனை
செய்த அளவிலும்
வந்த உடன் -அடைவே செய்த அனைத்தும் வீணா என்று கோபம் விஞ்சி
உகந் து அருளின நிலங்களில் பிராவண்யம் பிறந்து
இவர் அபேக்ஷித்தபடி கொடுக்கக் கடவனாய்
சரீர முடிவில் -அந்தத்தில் -பிரகிருதி சம்பந்தம் நிவர்த்திப்பிக்க நினைத்து
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
திவ்ய தேச நிலையைக் காட்டிக் கொடுக்க
இவரோ அர்ச்சா அவஸ்தையில் சமாதி குலைய மாட்டாமையால் இருக்க
அத்தை இவர் -சர்வ அபேக்ஷிதா ப்ரதன் அன்றோ -என்று நினைத்து –
எனது அபேக்ஷித்தையும் தலைக்கட்டிக் கொடுக்கக் கூடாதோ
கர்மம் தொலைந்து அங்கு தானே என்னில்
நம்மாழ்வாருக்கு -மாக வைகுந்தம்
பண்டை நாளில் -நடந்து காட்டக் கூடாதோ
நம்மாழ்வார்
காண வாராய் -நடந்து காட்ட வேண்டும் –
அடியேனும் பிடிக்க கூவுதல் வருதல் செய்யாயே பிரார்தித்தாரே கிருஷ்ண
த்ருஷ்ணா தத்துவமும்
உன் தாமரைக் கண்களால் நோக்காய்
இத்யாதி பரிமாற்றத்தில் ஆசை அங்கமான இவருக்கும் உண்டே
ஏவுதல் -என்றது -சட்டு என்று கைங்கர்யம் கொடுக்க வேண்டும் -கடிதாக் கருமம் அருளி-
கலக்கத்தில் மிகுதி யாக -தலைக்கு மேல் பிறந்த இச்சையால் வந்த கலக்கம்
ஆண் தனிமையிலே ஊடி அருளிச் செய்கிறார்

————————————————————–

நும்மைத் தொழுதோம் நுந்தம் பணி செய்து இருக்கும் நும் அடியோம்
இம்மைக்கு இன்பம் பெற்றோம் எந்தாய் இந்தளூரீரே
எம்மைக் கடிதாக் கருமம் அருளி யாவா வென்று இரங்கி
நம்மை ஒரு கால் காட்டி நடந்தால் நாங்கள் உய்யோமே —-4-9-1-

நுந்தம் பணி செய்து இருக்கும் நும் அடியோம்–கைங்கர்யம் செய்து இருக்கும் சேஷ பூதன் –
இன்பம்-ஞான லாபம்
கருமம்-பரம பிரயோஜனமாக கைங்கர்யம் –

நும்மைத் தொழுதோம் –
இதர தேவதைகளுக்கு அந்தர்யாமியாய்
இருக்கிற நிலையைப் புத்தி பண்ணித் தொழுதோமோ
ஆறி இருக்கைக்கு-
யோயோ யாம் யாம் தநும் பக்த -இத்யாதி
இந்த்ராதி தேவர்கள் அவனுக்கு அனுபூதர்
(பரன் திறம் அன்றி தெய்வம் மற்று இல்லை -சரீர பூதர்
அவரவர் இறையவர் இத்யாதி )
அவர்களுக்கு இவன் அந்தர்யாமி -என்று ஆஸ்ரயித்தால்
அவ்வவருடைய அதிகாரத்து அளவிலே பலம் ஆகையாலே
விளம்பம் பிறந்து இருக்கவுமாம் இறே

(நும்மை
ப்ராபகத்வ விவஷை -உபாயமாக ஆஸ்ரயித்தோம்
தொழுகையே சரணாகதி
இங்கே வந்து ஸந்நிஹிதனான நும்மையே தொழுதோம்
தேவதாந்த்ர -சாதாரண அந்தர்யாமி –
ஸ்வரூப வியாப்தி -எங்கும்
உபாசகனுக்கும் விக்ரஹத்துடன்
அசாதாரண விக்ரஹ விசிஷ்டதை -ஆசை
தேவதை அந்தர்யாமி -விளம்பம் -ஸ்ரத்தை ஏற்பட்டு
கர்மயோக நிஷ்டன் அக்னி இந்திரன் -இவனுக்கு சரீரம்
கர்மயோகம் செய்து பக்தி பிறந்து -இவை பக்திக்கு அங்கங்கள்
முதல் ஆறு அத்தியாயங்கள்
பின்பு பக்தியில் மூட்டும்
உபாசனம் பண்ணுபவனுக்கு -விளம்பம் சித்தம்
எந்தாய்
சேஷத்வ நிபந்தம்
நேராகத் தான் தொழுதோம் )

அன்றிக்கே
நும்மைத் தொழுதோம்
படுகுலைப் பட்டோம் -என்னவுமாம்
அதாவது பிரிந்தாலும் ஒரு சூது சதுரங்கத்திலே போது போக்கி
தரிக்கலாவது   ஒரு விஷயத்தை ஆஸ்ரயிக்கப் பெற்றிலோமே –

தொழுதோம்
முன்பு எல்லாம் ஈரசு என்று இருந்து (ஸ்வ தந்த்ரன் என்ற நினைவுடன் தொழுது )
கார்ய காலத்திலே கைங்கர்யமே அமையும் என்று
இருப்பார்க்கு அன்றோ தாழ்த்து இருக்கலாவது –

(பூத நிர்த்தேசம் தொழுதோம் -அடியேன் அடைந்தேன் முதல் முன்னம் –
அநாதியாக தொழுதோம் என்று தோற்றுகையால்
இருவரையும் ஸேஷி என்று புத்தி பண்ணி ஸ்வார்த்தமாக கைங்கர்யம்
கைங்கர்யம் பண்ணி தான் ஆனந்தம் படுதல் முன்பு எல்லாம்
ஸ்வ அதிசயத்தை தான் பெற்று
இப்பொழுது ஆஸ்ரயிக்கும் விதம் வியாவ்ருத்திக்கிறார் )

நுந்தம் பணி செய்து இருக்கும் நும் அடியோம்
கைங்கர்யத்தை ஒழியச் செல்லுவது ஆதல்
கைங்கர்யம் பண்ணுகைக்கு ஈடான பிராப்தி இன்றிக்கே ஒழிதல்
செய்யில் அன்றோ தரித்து இருக்கல் ஆவது
தேவரீர் திருவடிகளில் உண்டான கைங்கர்யத்தைப் பண்ணி
அது பெறில் ஜீவித்தல்
இல்லை யாகில் முடிதல்
செய்யும்படி தேவர்க்கு அனன்யார்ஹர்

(மயர்வு அற்றார் ஆகையால் பரார்த்தமாக -ஸ்வா தந்தர்ய லே சமும் இல்லை
நம்மையே ப்ராப்யமாகவும் ப்ராபகம் ஆகவும் எண்ணி இராசு தவிர்ந்தீர் ஆகில்
எதற்கு கோபம் என்ன
நும் தம் பணி செய்து இருக்கும் நும் அடியோம் என்கிறார்
கைங்கர்ய சித்தி பெற வேணுமே
அநந்யார்ஹ சேஷ பூதன் கர்தவ்யம்
கைங்கர்யம் ஒழிய செல்லுதல் ஆதல்
கைங்கர்யம் பண்ணுகைக்கு ஈடான பிராப்தி இன்றிக்கே ஒழிதல் செய்யில் அன்றோ தரித்து இருக்கலாவது
இரண்டுமே இருக்க தரிக்க முடியாமல்
கைங்கர்யம் இல்லை என்றால் முடியும் படி அநந்யார்ஹன் ஆகி இருக்கிறோமே
நும் தம் பணி செய்து இருக்கும் நும் அடியோம்)

ந ச சீதேத்யாதி -தேவரை ஒழிந்த அன்று பிராட்டியும் உளள் ஆகாள்
அடியேனும் உளன் ஆகேன்
தேவரை ஒழிந்த அன்று முதலில் ஜீவிக்கும் அது தான் இல்லை
அபி ஜீ வாவ –எதி ஜீ வாவ -முஹூர்த்தம் ஒரு ஷண  காலம்
ஜலான்   மத்ஸ்யா விவ
ஜலத்தை பிரிந்த மத்ஸ்யம் ஜீவிப்பது
அந்நீர் நசை அறும் அளவு இறே

அப்படியே நில் என்று சொன்ன வார்த்தை உம்முடைய திரு உள்ளத்திலேயும் உண்டு என்று
என்று அறியும் அளவும் காணும் நாங்கள் ஜீவித்து இருப்பது
இவருடைய சத்தை உண்டு உண்மை
அது நிலா தென்றல் சந்தனம் தண்ணீர் போலே
பரார்த்தமாய் யாய்த்து இருப்பது
சேஷிக்கு அதிசயத்தை பண்ணி யாய்த்து இவருக்கு ஸ்வரூப சித்தி-

அடியோம்
அத் தலைக்கு அதிசயத்தை பண்ணுகையே
ஸ்வரூபமாம் படி யாய்த்து  ப்ராப்தி இருப்பது –
(பர கத அதிசய ஆதேயானே இச்சையா -அதிசயம் பண்ணி நியமிக்கப்பட்டு இருப்பதே சேஷ லக்ஷணம்
கைங்கர்ய அலாபத்தால் கிலாய்க்கிறார்
பணி செய்தால் தரிப்பதும் இல்லை என்றால் இல்லாமல் இருப்பதோ ஸ்வரூபம்
மணம் புஷபம் ஒளி மணி சேஷத்வம் ஆத்ம
அஹம் அபி -ச அர்த்தம்
சீதாபிராட்டி போல் நானும் இல்லை
ஆழ்வார் ஸ்வரூபமும் பரார்த்தம்
ஏன் என்றால் தண்ணீர் தென்றல் சந்திரன் போல் )

இம்மைக்கு இன்பம் பெற்றோம் –
அடிமையாலே ஸ்வரூப லாபமாம் படி இருக்கும் எங்களுக்கு
அழகிதாக விடாய்த்த விடத்தே தண்ணீர் வார்த்தீர்
(இவர் தாகமே கைங்கர்யம் தானே விபரீத லக்ஷணை
அனுகூல ரூப ஞானம் இன்பம் )

அன்றிக்கே
ஞான லாபத்தால் வந்த தரிப்பைச் சொல்லிற்று ஆகவுமாம்-

அலாபத்தையே சொல்லா நிற்க
இப்போது இந்த திருப்தி கூடுமோ என்னில்
இந்த ஞான லாபம் தான் இறே கிலாய்க்கப் பண்ணுகிறது
இல்லையாகில்
அல்லாதாரோபாதி உண்டு உடுத்து போது போக்கித் திரியலாமே

எந்தாய் இந்தளூரீரே
அதுக்கடியாக ஸ்ரீ வைகுண்டத்தை விட்டு
திரு இந்தளூரிலே வந்து சந்நிதி பண்ணின ஸ்வாமி-
எந்தாய்-
இவ் வஸ்து உனக்கு சேஷம் -என்னும் இம் முறையை அறிவித்தவனே
இன்று இப்படி ஆறி இருக்கிற நீ
முன் தீம்பு செய்து
சம்பந்த ஞானத்தை எனக்கு பிறப்பிப்பான் என்

சம்பந்த ஞானத்தை பிறப்பித்தோம் என்றீர்
பெற்றது இவ்வம்சம் ஆகில் நீர் பெறாததாகச் சொல்லுகிற அம்சம் என்ன-
எம்மைக் கடிதாக் கருமம் அருளி –
சேஷத்வ ஞானத்தை பிறப்பித்து அருளிற்று
அந்த சேஷத்வ அனுரூபமான வ்ருத்தியை
என்னைக் கொண்டு அருள வேணும் –

எம்மை –
க்ரமத்திலே
ஒரு தேச விசேஷத்தே கொடு போய் கார்யம் செய்கிறோம் என்று
ஆறி இருக்கலாம் படியோ என் தசை
ஷிப்ரம் நிவேதயத மாம் விபீஷணஸ்ய உபஸ்திதம் -என்னுமா போலே
ராவண பவனத்திலே பொருந்தாமையும்
(சர்வ லோக சரண்யன் ராகவன் மஹாத்மா -)ராம கோஷ்டியிலே புகுரப் பெறாமையும்
இரண்டாலும் நோவு பட்ட ஸ்ரீ விபீஷண ஆழ்வானைப் போலே
ஞான லாபத்தாலே சம்சாரத்திலே பொருந்தாமை உண்டாகப் பெறுவது
ப்ராப்தி பலமான கைங்கர்யத்தில் அந்வயிக்கப் பெறாது ஒழிவதாய்
நோவு படுகிற படி

கடிதாக் கருமம் அருளி –
சர்வஞ்ஞன் ஆனவனுக்கும் அறிவிக்க வேண்டும்படி இருக்கிறது காணும்
க்ரம ப்ராப்தி பற்றாத படியான   இவருடைய சௌகுமார்யம்-

அது செய்யும் இடத்திலும்
யாவா வென்று இரங்கி
அடிமை பெறாமை யாலே உறாவின   அகிஞ்சனன் அநந்ய கதி  -என்று
என்னுடைய தய நீய தசையை புத்தி பண்ணி
ஐயோ ஐயோ என்று கிருபை பண்ணி அருளி
தொழுதோம் -என்று வளைப்பிட ஒண்ணாது காணும்
அபிமதம் பெரும் போது அவனுடைய இரக்கமே வேணும் –
(இரக்கமே உபாயம் – இனிமையே ப்ராப்யம் – இச்சையே அதிகாரி ஸ்வரூபம் )

நம்மை –
உம்மை நீர் கண்ணாடிப் புறத்திலே கண்டு அறியாமை இல்லையே
நம்மைப் பிரிந்தார் பிழையார்கள்-என்று இருக்க வேண்டாவோ

ஒரு கால் காட்டி நடந்தால் –
ஒரு கால் காட்டினால் பின்னை இவன்
வளைப்பு இடுகிறான் என்று இருக்க வேண்டா
ஜ்வர சன்னி பதிதர்-ஒரு கால் நாக்கு நனைக்க அமையும் -என்னுமா போலே
(எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில் மற்று எக்காலத்திலும் யாது ஒன்றும் வேண்டேன் –
உள்ளத்தில் இருப்பதைத் தவிர வேறு ஒன்றும் வேண்டேன் )

காட்டி –
ஏஷ சர்வஸ்வ பூதஸ்து பரிஷ்வங்கோ ஹநுமதோ -என்கிற படி
நாம் இருந்த படி கண்டாயே -என்று வடிவைக் காட்டி
(இரண்டு உயிர் காத்ததுக்கு ஆலிங்கனம் ஒன்றே இப்பொழுது என்னால் முடியும் –
என்னையே பரிசாகக் காட்டிக் கொடுக்கிறேன்)

நடந்தால் -என்கிறது
போனால் என்கிறது அல்ல
என் முன்பே நாலடி இட்டு நடந்து காட்டினால்
அக்ரத ப்ரயயௌ  ராம சீதா மத்யே ஸூ மத்மமா -என்கிறபடியே
பிராட்டிக்கு இட்ட விருந்து இட வேணும் காணும் இவருக்கு
(லஷ்மணனை நடை அழகைப் பார்க்காதே கைங்கர்யம் இழப்பாய் சுமந்தரை
பிரணவமே நடந்து சம்பந்தம் அறிவித்து நும் அடியோம் அறிந்தோம்
நாராயணாயா கைங்கர்யம் பிரார்த்தித்து நிற்கிறேன் கொடுத்து அருள வேண்டாமோ
உன் கோயில் நின்று இங்கனே போந்து அருளி -போதருமா போலே
நீ பூவைப் பூ வண்ணா –யாம் பெரும் சம்மானம் நாடு புகழும் பரிசு )

இப்படி நடந்தால் பெரும் பேறு என் என்னில்
நாங்கள் உய்யோமே
போன உயிர் மீளும்
உறாவின பயிரிலே ஒரு பாட்டம் மழை விழுந்தால்
அது ஜீவிக்கச் சொல்ல வேணுமோ –

————————————————-

நும் அடியோம் –
நடந்து காட்ட விடில் முடியோம் என்கைக்கு அடி
கர்மாதி உபாயாந்தரங்கள் மூலம் அடைய வேண்டியது என்ன
நிரதிசய போக்யனாய் இருப்பை நீ காட்டிய பின்பு
நான் செய்வது ஏதாவது உண்டோ
குறையும் நீயே செய்து அருள வேணும் என்கிறார் –

சிந்தை  தன்னுள் நீங்காது இருந்த திருவே மருவினிய
மைந்தா அம் தண் ஆலி  மாலே சோலை மழ களிறே
நந்தா விளக்கின் சுடரே நறையூர் நின்ற நம்பீ என்
எந்தாய் இந்தளூராய் அடியேற்கு இறையும் இரங்காயே—4-9-2-

சிந்தை  தன்னுள் நீங்காது இருந்த திருவே –
அகவாயில் பிரகாசிக்கிற இதுக்கு நான் ஏதேனும்
கிருஷி பண்ணிற்று உண்டாகில் அன்றோ
பிராப்திக்கு என்னால் கிருஷி பண்ணலாவது-
ஹிருதயத்தில் எப்போதும் ஒக்க பிரகாசியா நின்றான் ஆய்த்து-

திருவே –
இவருடைய சம்பத்து அவன் ஆயிற்று
திருவுக்கும் திருவாகிய  திரு இறே

மருவினிய –
அவ்விருப்பு தான் இவருக்கு இனிதாகிற படி
மருவ மருவ விட்டு பற்ற வேண்டும்படி இருக்கை அன்றிக்கே
நிரதிசய போக்கினாய் நின்றான் ஆய்த்து

மைந்தா –
நித்தியமான யௌவனத்தை உடையவனே
யுவா குமாரன் அன்றோ –

அம் தண் ஆலி  மாலே சோலை மழ களிறே
தர்ச நீயமான ஸ்ரமஹரமான
திரு வாலியிலே நித்ய வாஸம் பண்ணி
வ்யாமோஹத்தை தெரிவித்தவனே –
கள்வன் கொல் என்னும் படி கைப்பிடித்து வ்யாமோஹத்தை அறிவிப்பித்தவனே

சோலை மழ களிறே-
சோலைக்கு உள்ளே வளர்ந்த தொரு
இள வானைக் கன்று போலே யாய்த்து -செய்தது அடைய இனியதாய் இருக்கிறபடி –

நந்தா விளக்கின் சுடரே –
ஒரு விச்சேதம் இல்லாத தீபத்தில்
திரியும் எண்ணையும்
புகையுமான அழுக்கு இன்றிக்கே
புகர் தானே ஒரு வடிவு கொண்டால் போலே
இருக்கிற ஸ்வரூபத்தை உடையவனே –

நறையூர் நின்ற நம்பீ –
திரு நறையூரில் வந்து சந்நிஹிதனாய்
ஆஸ்ரயநீய வஸ்துவுக்கு இன்னம் ஓன்று கூட்டுப் பெற்றது இல்லை
என்னும் குறை தீரும்படி இருக்கிற பூரணன் ஆனவனே

என் எந்தாய் இந்தளூராய் –
திரு இந்தளூரிலே வந்து சந்நிதி பண்ணி
எனக்கு சம்பந்த ஞானத்தைப் பிறப்பித்தவனே

திருவாலி யானைக் கைப்பிடித்து
திரு நறையூர் நம்பியானை உபாய பூதனாகவும் -நண்ணு நறையூர் நான் தொழுதும் எழு நெஞ்சமே
திரு இந்தளூரானை சேஷித்வ சம்பந்த ஞானம் அறிவிப்பித்தவன்

அடியேற்கு இறையும் இரங்காயே   –
சம்பந்த ஞானத்தை பிறப்பித்த உனக்கு
என்னுடைய ஸ்வரூப அனுரூபமான வ்ருத்தி விசேஷத்தை
கொள்கை யாகிற
இம் மாத்ரம் இத்தனையும் செய்கை பெரிய பணியோ –

(சங்கு சக்கரம் பிடித்த சயன திருக்கோலம் காட்டி அருளினான் )

——————————————————

அந்தர்யாமி விபுத்வம் ஜெகதாகாரம் அர்ச்சா திரு மேனி சேவை இவை மட்டும் போதாது
நடந்து வீற்று இருந்து பேசிக் காட்டி அருள வேணும்
நிர்பந்திக்க –
விருப்பம் கொழுந்து விட்டு இருக்கும் தனியேன்-
இறையும் இரங்காயே –
ஸ்வரூபம் காட்டி அடியோம் புரிய வைத்தீர்
ஸ்வரூப அனுரூப விருத்தி கைங்கர்யம் வேண்டும் என்றார் கீழே
சம்பந்த ஞானம் கொடுத்து
உபாய உபேயங்களும் நானேயாய் என்னும் அத்தையும் அறிவித்து
சிந்தை தன்னில் நீங்காது இருக்கிறேன் என்றும் சொன்னீர்
இவ்வளவும் செய்த பின்பும் இறையும் இரங்காதே
உம்மைக் கண்டு பரமபதத்தில் போல் இங்கே அனுபவிக்கக் கூடுமோ
லீலா விபூதியில் கொடுத்தால் வேறுபாடு இல்லாமல் போகுமே
அப்பால் அப்ராக்ருத ம் இப்பால் லீலா விபூதி
சேது -அவன் -அணை -இரண்டும் கலக்காமல் காக்கும் அதே போல் அவன்
இங்கேயே கொடுத்தால் நமக்கு அவத்யம் ஆகுமே என்ன
உமக்கு வரும் அவத்யம் பரிகரிக்கவே இரங்கச் சொல்கிறேன் என்கிறார் இதில்

பேசுகின்றது இதுவே வையம் ஈரடியால் அளந்த
மூசி வண்டு முரலும் கண்ணி முடியீர் உம்மைக் காணும்
ஆசை என்னும் கடலில் வீழ்ந்து இங்கு அயர்த்தோம் அயலாரும்
ஏசுகின்றது இதுவே காணும் இந்தளூரீரே—-4-9-3-

பேசுகின்றது இதுவே –
உமக்கு வரும் அவத்யத்தை
பரிஹரிக்க வேணும் என்னும் இதுவே நாங்கள் சொல்லுகிறது

வையம் ஈரடியால் அளந்த மூசி வண்டு முரலும் கண்ணி முடியீர்-
நீர் குணார்ஜ்ஜனம் பண்ணுகைக்கு பட்ட பாடு எல்லாம் அறிவீரே
இப்போது ஒரு வ்யக்தியிலே அல்பம் நெகிழ நின்று
அப் பெரிய குணம் எல்லாம் இழக்க அன்றோ புகுகிறீர்-
(நல்கித்தான் காத்து அளிக்கும் பொழில் ஏழும் -நல்கத்தான் ஆகாதோ நாரணனைக் கண்டக்கால்
கௌசல்யா லோக பார்த்தாராம் -லோக பார்த்தாவாக இருக்கவே பெற்றாள் -)

வரையாதே நோக்கின உமக்கு
இப்போது ஒருவனை நெகிழ நின்றீர் என்றால்
குண ஹானி விளையாதோ
பூமிப் பரப்பை ஈரடியால் அளந்து கொண்ட உமக்கு

மூசுகையாவது -மொய்க்கை
வண்டுகள் ஆனவை மது பானம் பண்ணி அத்தாலே
ஆளத்தி வையா நின்றுள்ள மாலையை
உடைய திரு அபிஷேகத்தை உடையீர்
உம்முடைய வடிவு பரார்த்தம் என்று அன்றோ  பிரசித்தம்
நீர் சர்வ ரஷகராய் அன்றோ முடி சூடிற்று-
(நதே ரூபம் நதே ஆயுதம் பக்தானாம் த்வாம் பிரகாசத )

அது எல்லாம் அப்படியே
அதுக்கு இப்போது வந்தது என் என்ன
அதுக்கு வந்தது அன்றோ இது –

உம்மைக் காணும் ஆசை என்னும் கடலில் வீழ்ந்து இங்கு அயர்த்தோம் –
உம்மைக் காண வேண்டும் என்று ஆசைப் பட்டு
பெறாமையாலே சிலர் முடிந்தார்கள் என்றால்
உமக்கு இது போக்கி அவத்யம் உண்டோ
உம்மைக் காண வேணும் என்கிற ஆசை ஆகிற
பெரும் கடலிலே புக்கு அகப்பட்டு அறிவு கெட்டோம்

இத்தால் நமக்கு வருவதோர் அவத்யம் உண்டோ என்ன –
அயலாரும் ஏசுகின்றது இதுவே காணும் இந்தளூரீரே-
புறம்புள்ளார் அழகியதாக ஆசை பட்டான்
ஆசைப் பட்டவனுக்கு அழகிதாக முகம் கொடுத்தார்
இதுவோ தான் சிலர் ஆசைப் பட்டால் பலிக்கும் படி என்று
உம்மைப் பழி சொல்லா நின்றார்
அயலாரும் ஏசு கின்றது இதுவே
நான் பேசுகின்றதுவும் இதுவே –

இந்தளூரீரே–
உகவாதார் சொல்லும் பழியை பரிஹரிகைக்கும்
உகப்பார் நினைத்த வகைகள் எல்லாம் பரிமாறுகைக்கும் அன்றோ
திரு இந்தளூரிலே வந்து நித்ய வாஸம் பண்ணுகிறது –

———————————————————-

கீழ் பாட்டோடு சங்கதி இதுக்கு –
நமக்கு அவத்யம் வரும் என்று இறே நீர் தாம் இப்படிப் படுகிறது
நாம் அத்தைப் பொறுக்கிறோம் என்ன
உமக்கு பொறுக்க ஒண்ணாததும் ஓன்று உண்டு
எங்களுக்கும் அவத்யம் என்கிறார்
நதே நுரூபே-ஜிதந்தே -என்னக் கடவது இறே-

ஆசை வழுவாது ஏத்தும் எமக்கு இங்கு இழுக்காயாய்த்து அடியோர்க்குத்
தேசம் அறிய வுமக்கே ஆளாய்த் திரிகின்றோமுக்குக்
காசின் ஒளியில் திகழும் வண்ணம் காட்டீர் எம்பெருமான்
வாசி வல்லீர் இந்தளூரீர் வாழ்ந்தே போம் நீரே —4-9-4-

காசின் ஒளியில்-உருக்கி வார்த்த தங்கத்தின் ஒளியை விட உயர்ந்த தேஜஸ்ஸூ –
சுட்டு உரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது –
வாசி வல்லீர்-தார தம்யம் அறிந்தவர் அன்றோ –

ஆசை வழுவாது ஏத்தும் எமக்கு இங்கு இழுக்காயாய்த்து
நாள் செல்ல செல்ல அஹன் யஹநி வர்த்ததே -என்கிறபடியே
ஆசையானது கரை புரண்டு
ஏத்துகையே ஸ்வபாவம் ஆம் படியான
மகா பாபத்தைப் பண்ணின
எங்களுக்கு இழுக்கு ஆய்த்து

அடியோர்க்குத் தேசம் அறிய வுமக்கே ஆளாய்த் திரிகின்றோமுக்குக்
சேஷ பூதன் சேஷியை ஆசைப் பட்டு ஏத்துகை முறை அன்றோ என்று இருக்கை அன்றிக்கே
இது தன்னை அவத்யமாய் உப பாதிக்கும் படியாக வந்து விழுந்தது

எமக்கு –
உமக்கு வருமதில் வேணுமாகில் ஆறி இருக்கிறீர்
எங்களுக்கு வருமதில் உமக்கு ஆறி இருக்கப் போமோ-

தேசம் அறிய வுமக்கே ஆளாய்த் திரிகின்றோமுக்குக்-
பாவியோம் விழுக்காடு அறியப் பெற்றிலோம்
இப்படி விளைவது அறிந்தோம்  ஆகில்
நீரும் நாங்களும் அறிந்தது அறிவாக ஸ்நேஹித்து விடலாய்த்தே
லோகம் அடங்க இருந்ததே குடியாக அறியும் படி
வுமக்கே ஆளாய்த் திரிகின்றோமுக்குக்-
இன்னமும் வேறு ஒரு ரஷகன் உண்டாய் அவன் வாசலிலே சென்று தான்
தன் கார்யம் குறையும் தலைக் கட்டிக் கொள்கிறான் என்று தான்
ஆறி இருக்கிறீரோ
(அகாரத்துக்கே மகாரம் அநந்யார்ஹன் என்று உகாரத்தால் சொல்லிக் கொடுத்தீரே )

காசின் ஒளியில் திகழும் வண்ணம் காட்டீர் –
உமக்கே அனந்யார்ஹராய் இருக்கிற எங்களுக்கு
சுட்டுரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது -என்கிறபடியே
பொன் ஒளியில் காட்டிலும் விளங்கா நின்றுள்ள
வடிவழகைக் காட்டு கிறிலீர்-

எம்பெருமான் வாசி வல்லீர் –
உன்னுடைய வடிவில் வீறும்
ஆசைப் பட்ட எங்கள் சிறுமையும்
நேராகக் கணக்கிட   வல்லீர்
(அறிந்த பின்பு இரக்கம் பீறிட்டு வர வேண்டாவோ )

இந்தளூரீர் –
நித்ய ஸூரிகளுக்கு படி விடும் வடிவை
சம்சாரிகளுக்கும் ஒக்க படி விடுகைக்கு அன்றோ
திரு இந்தளூரிலே வந்து நிற்கிறது
வாசி யற முகம் கொடுக்க வந்து நிற்கிற இடத்தே
வாசி வையா நின்றீர்

வாழ்ந்தே போம் நீரே –
உம்முடைய உடம்பு உம்மை ஆசைப் பட்டாருக்காக கண்டது என்று இருந்தோம்
அங்கன் அன்றாகில்
அத்தை நீரே கட்டிக் கொண்டு வாழும் –

————————————————-

விராட் ஸ்வரூபம் த்யானம் -ஸூ கர் சொல்ல பரிக்ஷித் -முடியாமல் –
சங்கு சக்ர கதாதர பெருமாளைத் த்யானம் சொல்ல முடிந்தது
அது முடியாது என்று அறிந்தபின்பே இதன் அருமை தெரிய வரும் என்றால் போல் இங்கும் –
இவரை பஹு முகமாக சமாதானம் பண்ண வர
எம்பெருமான் அபிப்ராயம் வெளிப்படா நின்று கொண்டு சங்கதி

இங்கே சந்நிஹிதர் ஆனோமாகில்
ஜகதாகாரனாய் இருக்கிற இருப்பைக்  காட்டித் தந்தோம் ஆகில்
நாம் உம்முடைய விஷயத்தில் ஒன்றும் செய்யாதோமாக
நீர் இங்கனே கிடந்து படா நிற்கிறது என் என்ன –

கண்ணாலே குளிர நோக்கி
வாயாலே வினவி
அடிமை கொள்ள  வேணும் என்று ஆசைப் பட்ட
எனக்கு
இத்தால் என் செய்தது யாய்த்து
என்கிறார் –

தீ எம்பெருமான் நீர் எம்பெருமான் திசையும் இரு நிலனுமாய்
எம்பெருமானாகி நின்றால் அடியோம் காணோமால்
தாய் எம்பெருமான் தந்தை தந்தையாவீர் அடியோமுக்கே
எம்பெருமான் அல்லீரோ நீர் இந்தளூரீரே —4-9-5-

இவற்றுக்கு அந்தர்யாமியாய் -நிர்வகிப்பவனாய் –
நீராய் நிலனாய் –இத்யாதி -கூரார் ஆழி வெண் சங்கு ஏந்தி –ஒரு நாள்
மண்ணும் விண்ணும் மகிழவே -நம்மாழ்வார்

தீ எம்பெருமான் நீர் எம்பெருமான்-
இவை இரண்டும் ஐந்துக்கும் உப லஷணமாய்
இத்தாலே காரண வர்க்கத்தை அடைய நினைத்து
காரண பூதனாய் இருக்கும் இருப்பை  சொல்லுகிறது –

திசையும் இரு நிலனுமாய் எம்பெருமானாகி நின்றால்
இத்தால் கார்ய வர்க்கத்தை நினைக்கிறது

இப்படி காரண பூதனாயும்
கார்ய பூதனாயும்
இருக்கிற இவ் வாகாரததாலே
நீ உன்னுடைய ஸ்வாம்யத்தை-( சொத்தை -) நிர்வஹிப்பதாக ஒருப் பட்டால்
(சத்தாகவே ஒன்றாகவே இரண்டாவது இல்லாமல்
சதேவ சோம்ய ஏகமேவ அத்விதீயம்
வியாபநாத் தாரணாத் ஸ்வாம்யாத் அந்நிய -புருஷோத்தமன் -15 அத்யாய சுருக்கம் )

அடியோம் காணோமால்-
தேவரோடு கலந்து அனுபவிக்க வேணும்
என்று ஆசைப் பட்ட அடியோங்கள்
என் பெற்றோம் ஆவுதோம் –

தாய் எம்பெருமான் –
தேவர் நெகிழ இருந்தால்
புறம்பு போகைக்கு ஓரிடம் உண்டோ –
(தரு துயரம் –அவள் நினைந்தே அழும் குளவி )

தந்தை தந்தையாவீர் –
இது தான் என் அளவிலேயுமாய் இருந்ததோ –
(எந்தை தந்தை தந்தைக்கும் முந்தை அன்றோ )

அடியோமுக்கே எம்பெருமான் அல்லீரோ நீர் இந்தளூரீரே   –
அநந்ய கதிகளாய் இருக்கிற எங்களுக்கு
ருசி பிறந்த போதே
நினைத்த படிகள் எல்லாம்
அனுபவிக்கைக்கு அன்றோ
தேவரீர் திரு இந்தளூரிலே வந்து கிட்டி நிற்கிறது –

பூ அலறும் போதை செவ்வி பார்த்து பறித்து கொடு வாரா நிற்பாரைப் போலே
ருசி பிறந்த போதே அடிமை கொள்ளுகைக்கு ஈடாக
காலம் பார்த்து அன்றோ தேவரீர் இங்கே வந்து நிற்கிறது –

பரத்வம் நித்ய ஸூரிகளுக்கு அனுபாவ்யமாய் இருக்கும்
வ்யூஹம் ப்ரஹ்மாதிகள் உடைய கூக்குரல் கேட்கைக்கு ஈடாக இருக்கும்
ராம கிருஷ்ணாதி அவதாரம் தசரத வசுதேவாதிகள் உடைய பாக்ய பலமாய் இருக்கும்

உகந்து அருளின நிலங்கள் –
தங்களுக்கு ஹிதம் இன்னது என்று அறியாதே
சம்சாரம் த்யாஜ்யம் என்று அறியாதே
சர்வேஸ்வரன் பிராப்யன் என்று அறியாதே
இருக்கிற சம்சாரிகளுக்கே முகம் கொடுக்கைகாகவாய் இருக்கும் இறே

குருடருக்கு வைத்த இறையிலியில்
விழித்தாருக்கு பிராப்தி இல்லை இறே
பின்னானார் வணங்கும் சோதி -என்னக் கடவது இறே

———————————————

நீரே வாழ்ந்தே போம்
அடியோமுக்கே எம்பெருமான் அல்லீரோ என்று எல்லாம்
இப்படி ஸ்வரூபத்துக்கு சேராதவற்றைச் சொல்லக் கடவீரோ என்ன
அருளிச் செய்கிறார் இதில் –

சொல்லாது ஒழிய கில்லேன் அறிந்த சொல்லில் நும் அடியார்
எல்லாரோடும் ஒக்க எண்ணி இருந்தீர் அடியேனை
நல்லார் அறிவீர் தீயார் அறிவீர் நமக்கு இவ் உலகத்து
எல்லாம் அறிவீர் ஈதே அறியீர் இந்தளூரீரே —4-9-6-

நல்லார் அறிவீர் தீயார் அறிவீர்
விரஹ அஸஹிஷணத்வம் உடைய நன்மை ஸஹிஷணத்வம் உடைய தீமை அறிவீர்
நமக்கு-விரஹ அஸஹிஷணத்வம் உடைய மென்மை மார்த்வம்

சொல்லாது ஒழிய கில்லேன் –
சேஷி சந்நிதியில் சேஷ பூதன் பரிமாறும் முறையில்
பரிமாற ஷமன் ஆகிறிலேன்
சேஷி செய்த படி கண்டு இருக்கைக்கு மேற்பட
சேஷ பூதன் நிர்பந்திக்கக் கடவன் அன்று இறே
இப்படி இருக்க மாட்டு கிறிலேன்

அறிந்த சொல்லில்-
அறிந்தவற்றைச் சொல்லில்
முறை செய்யக் கடவது அல்லாதாகப் பார்த்த பின்பு
இனி அதுக்கு ஈடாக பிரதிபன்னங்களைச் சொல்லில்

நும் அடியார் எல்லாரோடும் ஒக்க எண்ணி இருந்தீர் அடியேனை
உம்மை பிரிந்து
பின்னையும் காணலாம் என்னும் நசையாலே
பத்து மாசம் தரித்து இருக்கைக்கு ஈடான
எலும்பு  முற்றின பிராட்டியோ பாதியாக நினைத்து  இரா நின்றீர்
அவள் ஏகோந சேஷி யாகையாலே அவன் வரும் வரை காத்து இருக்க வேணும்
உம்மை அரை ஷணமும் காணாவிடில் ஜீவிக்க மாட்டாத அடியேனையும்
அவள் முன்னாகப் பற்றினார்க்கு இத்தனை வாசி உண்டு போலே காணும்
(ஸூ கந்த வன நாயகியைப் பற்றி அன்றோ பரிமள ரெங்கனைப் பற்றினார் இவர்
அவன் ஸ்வா தந்தர்யம் அறிந்து வேறே கடகர் இல்லாமையால் அவன் வரும் வரை ஆறியே இருக்க வேண்டும் )

ஜீவிக்கிலும் சில நாள் தரித்து இருக்கும்படி ஜீவித்து
பட்டினி விடிலும் சில நாள் பொறுக்க வல்லாரைப் போலே
யாய்த்து நம் ஆழ்வார் போல்வார் ப்ரக்ருதி-
(மலையாள ஊட்டு போல் உடைய நங்கை திரு மகன் அன்றோ )
உண்ணவும் பொறாது
பட்டினி விடவும் பொறாது
என்னும் சுகுமாரரைப் போலே யாய்த்து
இவருடைய சௌகுமார்யம்-

தூது விடப் புக்கு
தூது அத்தலைப் பட்டு மீளுவதற்கு முன்பே
பற்றாமை தாம் கிடந்து கூப்பிடுகிறார் இறே
தூ விரிய மலருழக்கியிலே  –

நல்லார் அறிவீர் –
தேவரை ஒழியச் செல்லாதார் பிரகிருதியும் அறிவீர்

தீயார் அறிவீர் –
தேவரை ஒழியவும் ஜீவித்து இருப்பார் பிரகிருதியும் அறிவீர்

இங்கன் தனித் தனி பிரித்து சொல்லுகிறது என்
நமக்கு இவ் உலகத்து எல்லாம் அறிவீர் –
அஞ்ஞாதன் நாஸ்தி தே கிஞ்சித் த்ரிஷூ லோகேஷூ ராகவ -(ஸூக்ரீவன் வார்த்தை அபய பிரதான கட்டம் )
இந்த லோகத்தில் உம்முடைய ஞானத்துக்கு அவிஷயமாய்
இருப்பது ஓன்று இல்லை –

ஈதே அறியீர் –
சர்வஞ்ஞனையும் அஞ்ஞன் ஆக்க வேண்டும்படி காணும்
இவருடைய பிரகிருதி மார்த்தவம்

இந்தளூரீரே –
தம்மை ஆசைப் பட்டார் பருவம் அறிந்து
முகம் காட்டிற்றிலர் என்னும்
அவத்யத்தை பரிஹரிகைக்கு  அன்றோ
நீர் திரு இந்தளூரிலே வந்து நிற்கிறது
போந்த கார்யத்தை மறக்கிறது என் –

—————————————————–

கீழ்ப் பாட்டோடு இதுக்கு சங்கதி
கீழே ஞானத்தில் குறைவு இதில் சக்தியில் குறைவு –

நமக்கு ஒரு குற்றம் இல்லையாக வன்றோ
யஸ் சர்வஞ்ஞஸ் சர்வ வித் -முண்டக -இத்யாதி பிரமாணங்கள் சொல்லுகிறது
நம்மை சர்வஞ்ஞன் சர்வ சக்தன் என்று பிரமாணங்கள் சொல்லா நிற்க
நீர் நமக்கு ஞான சக்திகளில் வைகல்யம் சொல்லுகிறது
என் கொண்டு என்னில்
அது ஒரு வ்யக்தியிலே பலிக்கக் கண்டேன் என்கிறார்
பருவம் அறிந்து வந்து முகம் காட்டாமையைக் கொண்டு
சர்வஞ்ஞனை அஞ்ஞனாக உப பாதித்தார்
தம் தசைக்கு ஈடாக உதவாமையைக் கொண்டு
சர்வ சக்தனை அசக்தனாக உபபாதிக்கிறார்-

மாட்டீர் ஆனீர் பணி நீர் கொள்ள வெம்மைப் பணி யறியா
வீட்டீர் இதனை வேறே சொன்னோம் இந்தளூரீரே
காட்டீர் ஆனீர் நுந்தம் அடிக்கள் காட்டில் உமக்கு இந்த
நாட்டே வந்து தொண்டரான நாங்கள் உய்யோமே —4-9-7-

பணி யறியா வீட்டீர்-கைங்கர்ய ரசம் தெரிவித்து கை விட்டீர் –
இந்த நாட்டே-சேஷத்வம் அறியாத லீலா விபூதியில் –

மாட்டீர் ஆனீர் பணி நீர் கொள்ள –
சேஷத்வத்தை இப்போது உம்மாலே உண்டாக்குதல்
ஒழித்தல் செய்ய ஒண்ணாதே
(திருமாலே நானும் உமக்கு பழ அடியேன் )
இதனுடைய ஸ்வரூப அனுரூபமான வ்ருத்தி விசேஷத்தை
பண்ணுவித்துக் கொள்ள மாட்டீர் ஆனீர்  –

வெம்மைப் பணி யறியா வீட்டீர் –
உம்மை ஒழியச் செல்லாத ஸ்வபாவத்தை உடைய எங்களை
உம்முடைய திருவடிகளில் அடிமைச் சுவட்டை அறிவித்து
பொகட்டீர் –

இதனை வேறே சொன்னோம் –
இத்தை அல்லாதவை போல் அன்றியே
வ்யாவ்ருத்தமாகச் சொன்னோம்-
(கீழே அறியீர் மாட்டீர் இங்கு வீட்டீர் -பெரும் குற்றம் அன்றோ )

இதனை வேறே சொன்னோம் –
நம் ஆற்றாமைக்கு வேண்டும் அளவு அன்றியே
கண்ணாஞ்சுழலை இட்டு இனி இவ்வஸ்துவை
பிறர் நம்பாதபடி சொன்னோம்-

இந்தளூரீரே-
பரம பதம் கலவிருக்கையாய் இருக்க
அடிமை கொள்ளுகைக்கு   ஈடாக
திரு இந்தளூரிலே வந்து சந்நிதி பண்ணின உம்மை அன்றோ
நான் இவ்வார்த்தை சொல்லுகிறது –

இவ் உபகார ஸ்ம்ருதியும் அனுவர்த்தியா நின்றதாகில்
பின்னை நீர் இப்படி சொல்லுவான் என் என்னில்
அதுக்கு ஹேது உண்டு

காட்டீர் ஆனீர் நுந்தம் அடிக்கள்-
பரார்த்தமான வஸ்துவை
உமக்கு என்று இரா நின்றீர்
உம்முடைய திருவடிகளை காட்டாமையே ஸ்வபாவமாம் படி யானீர் –
(சகலமேதது சம்ஸ்ரயார்த்தம்
அரங்கனும் தன் சரண் தந்திலன் தான் அது தந்து உடையவர் )

அவ் வபிசந்தியைக் குலைத்து அத்தை அப்படி செய்யப் பெறில்
இந்த நாட்டே வந்து தொண்டரான நாங்கள் உய்யோமே –
நான் உபேஷித்தால் தான்  இவற்றுக்கு அவ்வருகு போக்குண்டோ
ஆன பின்பு நான் நினைத்த போது கார்யம் செய்கிறோம் -என்று
ஆறி இருக்கைக்கு  உம்முடைய பரம பதத்தில் நித்ய ஸூரிகளோ

மரு பூமியிலே தண்ணீர் போலே
உம்மை ஒழிய உண்டு உடுத்துப் போது போக்குகிற
இஸ் சம்சாரத்தில்
உம்மால் அல்லது செல்லாத படி இருக்கிற நாங்கள்
உஜ்ஜீவீயாமோ-

நீர் அவாக்ய அநாதர என்று இங்கு இருந்தால்
நாங்கள் ஸ்வரூப ஞானத்தால் அதிலே துவக்குண்டு
கண்டு கொண்டு இருக்க மாட்டோமே
வாய் திறந்து சொல்லி கார்யம் கொண்டால் தான் உஜ்ஜீவிப்போம் –

————————————————-

இங்கே வந்ததே காட்டத் தானே
வேறே அபேக்ஷிதம் உண்டோ என்ன
இது அன்றிக்கே வேறே ஏது என்று அருளிச் செய்கிறார்

சேதனர் உகந்ததையே நிறமாகக் கொள்ளும் ஸ்வ பாவரான
நம் பக்கல்
உம்முடைய அபேஷிதம் பெற்று போகையிலே குறை உண்டோ –
உம்முடைய அபேஷிதம் தன்னைச் சொல்லீர் என்ன –
நீ உகந்தார் உகந்த வடிவுகளைக் கொண்டு வந்து
அவர்களுக்கு காட்டிக் கொடுத்தாயே யாகிலும்
உன்னுடைய இச்சா க்ருஹீதமான அசாதாரண விக்ரஹத்தை
இது காண் இருக்கும் படி -என்று கொடு வந்து
எனக்குக் காட்ட வேணும் -என்கிறார் –

முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும் நிலை நின்ற
பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் வண்ணம் எண்ணும் கால்
பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையும் திருமேனி
இன்ன வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே —-4-9-8-

முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும்  நிலை நின்ற பின்னை வண்ணம்
கொண்டல் வண்ணம் பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையும்
க்ருத யுகத்தில் புருஷர்கள்
சத்வ பிரசுரர் ஆகையால்
வெளுத்த நிறத்தை உகப்பவர்கள் என்று
அதுக்காக வெளுத்த நிறத்தை கொண்டான் ஆய்த்து-
அவர்கள் உகந்ததை நாம் செய்யவே
நாம் உகந்ததை இவன் செய்தான்
நாமும் இவன் தன்னை உகப்போம் -என்று
ஆதரிப்பார்கள் என்று பார்த்து –
அவ் வழியாலே
அனந்தரத்தில் உள்ளாருக்கு ரஜோ குணம் அளாவி இருக்கையாலே
அவர்கள் உகந்த சிவந்த நிறத்தை உடையவன் ஆனான்
அதுக்கு அனந்தரம்
மணியின் வண்ணத்தை உடையவன் ஆனான்-

வண்ணம் எண்ணும் கால்
இவனுடைய வடிவை ஆராயப் புக்கால்
நித்தியமான அசாதாராண விக்ரஹம்
நீர் கொண்டு எழுந்த காள மேகம் போலே யாய்த்து இருப்பது –

திருமேனி இன்ன வண்ணம் என்று காட்டீர்
இவன் யுகங்கள் தோறும் அவ்வவர் உகந்த
வடிவுகளைக் கொள்ளும்
இவனுடைய அசாதராண விக்ரஹம் காள மேகம் போலே இருக்கும்
என்று சாஸ்த்ரங்களிலே கேட்டுப் போகை அன்றிக்கே
நீ இப்படி சாஸ்த்ரங்களில் கேட்டுப் போந்த வடிவு தான்
இருக்கும்படி இது காண்
என்று ஒரு வார்த்தை அருளிச் செய்து
அவ் வடிவைக் காட்ட வேண்டும்

இந்தளூரீரே –
நீர் கொள்ளும் வடிவுகளுக்கு எல்லாம் சாஸ்திரங்கள் இல்லையோ
பிரமாணங்களால் கேட்டுப் போக ஒண்ணாது
நம்முடையாருக்கு இவ் வடிவு தான் இது காணும் கோள்
என்று காட்ட வேணும்
என்று அதுக்காக அன்றோ நீர்
திரு இந்தளூரிலே வந்து நிற்கிறது  –

————————————-

அவ்வவ காலம் அனுகுணமாக உருவம் கொண்டும்
உம்முடைய பேராசை ஒருவரால் திருப்தி செய்ய முடியாது
உமக்காக அர்ச்சாவதாரம் காட்டவும் திருப்தி இல்லை
நீ பிரயோஜனாந்தர பரர்களுக்காக மீனாய் இத்யாதி செய்தீர்
குடி குடி வந்து ஆட் செய்யும் எங்களுக்குத் தொட்டுகாட்டாமல்
நெஞ்சில் பிரகாசித்து ஆசையை எதற்க்காக வளர்த்தீர்
சிறிதும் காட்டாமல் உள்ளீர் என்கிறார்

எந்தை தந்தை தம்மான் என்று எமர் ஏழு அளவும்
வந்து நின்ற தொண்டரோர்க்கே வாசி வல்லீரால்
சிந்தை தன்னுள் முந்தி நிற்றீர் சிறிதும் திருமேனி
இந்த வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே —4-9-9-

எந்தை தந்தை தம்மான் என்று எமர் ஏழு அளவும் வந்து நின்ற தொண்டரோர்க்கே வாசி வல்லீரால்
என்னுடைய் குலகுரு என்று ஏழு படி கால் தேவரீர் திருவடிகளில்
கைங்கர்யத்தை பேதித்துச் செல்லாதே வந்து நிற்கிற எங்களுக்கே
நேராக கணக்கிட வல்லீராகா நின்றீர்

சிந்தை தன்னுள் முந்தி நிற்றீர் சிறிதும் திருமேனி இந்த வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே   –
அணைக்கைக்கு ஈடாக கைக்கு எட்டாதே இருக்கிற நீர்
இத்தைப் போர
வளர்க்கிறது என் -என்று பிள்ளான்
நாம் என்ன வாசி வைத்தோமாக தான் இப்படி சொல்லுகிறது   என் என்ன
இவருக்கு ஹிருதய பிரகாசமே அமையும் என்று ஆறி இராதே
நெஞ்சிலே பிரகாசிக்கிறவோபாதி அணைக்குக்கும் எட்டுதல்
அணைக்கு எட்டாதா போலே
ஹிருதயத்தில் பிரகாசியா இருத்தல் செய்யப் பெற்றிலோம் –
அரவத்தமளிப் படியே ச விக்ரஹனாய் விளங்குகை-

சிறிதும் –
நெஞ்சுக்கு குறைவற காட்டுகிறாப் போலே யாய்த்து
கண்ணுக்கு ஓன்று காட்டாது ஒழிகிறபடி-

பண்டு ஒரு ராஜா விஷய பிரவணனாய்
நாட்டாருக்கு காட்சி கொடாது ஒழிய
இவனுடைய சத் பாவத்திலே அதி சங்கை பண்ணின ராஜ லோகத்தைக் கண்ட
மந்த்ரிகள் வாசலில் வந்து கூப்பிட
ஜாலக த்வாரத்தாலே காலை நீட்டி விட்டான் இறே-

இந்தளூரீரே   —
நெஞ்சில் பிரகாசத்தை ஒழியவே
நித்ய ஸூரிகளுக்கு காட்சி கொடுக்கும் வடிவை
அங்கு உள்ளாரோபாதி முழுக்க காட்சி கொடுக்கைக்கு அன்றோ
இங்கு வந்து நிற்கிறது –

——————————————————-

இந்து சந்த்ர சாப விமோசனி தாயார்
பரிமள ரெங்க தாயார்
இந்து புஷ்காரணி
நான்கு திருக்கைகள்
கங்கை காவேரி சூர்ய சந்திரன் கர்ப்ப க்ருஹம்
வீர சயனம்
நாபியில் நான்முகன்
வேத அபகாரம் மது கைடபர்
துர் நாற்றம் வேதங்களுக்கும் போக்கி உபதசம் ஆமோத விமானம் வாசனை கொடுத்ததால்
அகண்ட கர்ப்ப க்ருஹம்

ஏரார்  பொழில்  சூழ் இந்தளூரில் எந்தை பெருமானைக்
காரார் புறவில் மங்கை வேந்தன் கலியன் ஒலி செய்த
சீரார் இன் சொல் மாலை கற்றுத் திரிவார் உலகத்து
ஆராரவரே யமரர்க்கு என்றும் அமரர் ஆவாரே —4-9-10-

ஏரார்  பொழில்  சூழ் இந்தளூரில் எந்தை பெருமானைக்
அழகு மிக்கு இருந்துள்ள
பொழிலாலே சூழப் பட்ட
திரு இந்தளூரிலே வந்து சந்நிஹிதனாய்
எனக்கு ஸ்வாமி யான சர்வேஸ்வரனை  கவி பாடிற்று –

காரார் புறவில் மங்கை வேந்தன் கலியன் ஒலி செய்த
நிரந்தர மேக சஞ்சாரத்தை உடையான
பர்யந்தத்தோடே கூடின திரு மங்கைக்கு
நிர்வாஹகரான ஆழ்வார் அருளிச் செய்தார் –

கவி தானோ என்றால் –
சீரார் இன் சொல் மாலை கற்றுத் திரிவார் உலகத்து
பகவத் குணங்களை நிறையத் தொடுத்த தொடை

அஹம் வக்தா பவான் ஸ்ரோதா வாச்யோ யோகோ விமுக்த்தித – -ஸ்ரீ விஷ்ணு தர்மம்
ரகுவர சரிதம்-
ரகு குலத்தில் ரஷகரான பெருமாள் உடைய விருத்தாந்தம் சொல்லிற்று –
முனி ப்ரனீதம்-
ஆப்த தமன் ஆனவன் ஆய்த்துச் சொன்னான் –
தச சிரசஸ்ச வதம் –
நாட்டுக்குக் களை அறுத்துக் கொடுத்த படி யாய்த்து சொல்லிற்று  –

கற்றுத் திரிவார் –
இவற்றை அப்யசித்து
அந்த கர்வத்தாலே யமாதிகள் தலைமேலே அடி இட்டுத் திரியுமவர்கள்
(நாவலிட்டு உழி தருகின்றோம் நமன் தமர் )

ஆரார்-
இவற்றை அப்யசிக்கும் அத்தனையே வேண்டுவது
அவர்களுக்கு ஜன்ம வ்ருத்தாதிகள் ஏதேனும் ஆகவுமாம்-

அவரே  யமரர்க்கு என்றும் அமரர் ஆவாரே –
அந்த ஜன்மத்திலே
அந்த வ்ருத்தத்திலே
அந்த ஞானத்திலே
அந்த ஜன்மாதிகளால் வரும் உத் கர்ஷம் வேண்டாதே
ஸ்வத உத் கர்ஷத்தை  உடையரான
நித்ய ஸூரிககளால் சிரஸா வஹிக்கப் பெறுவர் –

———

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

நும்மடியோமுக்கு நும்மைக் காட்டாது அடியேனை
நும்மடியாரோடொப்ப எண்ணுதிரென் – நம்கலியன்
இந்தளூரானுக்கு இயம்பினான் தன் இன்னாமையைத்
தந்நிலை மாறாத வனாய் (39)

தன்னிலை மாறாதவனாய் –தானான தன்மையில் ஊடுகிறார் –
பக்தானாம் தவம் ப்ரகாஸஸே-என்றதின் எதிர்த்தட்டாய் இருந்தமையால் –
தம்முடைய மார்த்தவத்தையும் வெளியிட்டு அருளுகிறார் இந்த பதிகத்தில்
எம்பெருமானைப் போல் அல்லாமல் நமக்காக எப்பொழுதும் சேவை என்பதால் நம் கலியன்
தூது விடுவதும் அணுகரிப்பதும் ஊடுவதும் அர்ச்சாவதார பெருமாள் இடம் தானே நம் கலியனுக்கு –

———————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய திருமொழி-4-8- –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

May 5, 2014

நாராயணன் நரன் -திருமந்திரம்
கண்ணன் அர்ஜுனன் சரம ஸ்லோகம் -ஸ்ரீ கீதா உபதேசம்
விஜயன் வேதாந்தம் -சொன்னாலும்
விஜய சஹன் -பார்த்த சாரதி பெயர் பெறவே –
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமம் -குரு க்ஷேத்ரம் ஸ்ரீ கீதா -இன்றும் அந்த இடங்களை சேவிக்கலாம்
கீதை அறியாவிடில் ஏதிலராம் மெய் ஞானம் இல்லாமல் -திருமழிசைப் பிரான்
பின்னானார் சேவிக்கவே அர்ச்சாரூபம் -திருவல்லிக் கேணி பார்த்தன் பள்ளி பாண்டவ தூதன்
வர்ண பகவான் பிரார்தனைப்படி இங்கு சேவை –

சாரதி -தானே ஆச்சார்யர்
பிரகாரத்தில் சேர்ந்தே சேவை -அர்ஜுனனும் கண்ணனும்
லஷ்மீ நாதன் தேர் தட்டு கீதாச்சார்யர்
அடியவன் பெயராலே திவ்ய தேசம்
யாத்ர யோகேஸ்வர கிருஷ்ண –விஜய ஸ்ரீ
வருணன் ஆசைப்பட சேவை சாதிக்கிறார்
பாத்ம புராணம் இத் திவ்ய தேசம் பற்றி உண்டே
அர்ஜுனன் வர -தாக்கம் எடுக்க அகஸ்தியர் இடம் தீர்த்தம் கேட்க
கமண்டலத்தில் தீர்த்தம் இல்லை
கண்ணனை கேட்கத் தோன்றி
இட்டமான பசுக்களை இனிது மறித்து நீரூற்றி யவன்
மோழை எழுதுவித்தவன்
தனது வாளைக் கொடுத்து -அர்ஜுனன் கீற -கட்க புஷ்கரணி
மேற்கு நோக்கி திருக்கோலம்
செங் கமல வல்லித் தாயார்
தாமரையாள் கேள்வன் மூலவர்
திருவடி பாடகத்துடன் சேவை
உத்சவர் பார்த்தசாரதி
தாயார் தாமரையாள்
கண்ணனுக்கு பக்கம் கோல வில்லி ராமன் தனி ஆசனத்தில் சேவை
நாராயண விமானம்

நாயிகா பாவம் -தாய் பாசுரம் இங்கு
2-7-3-7 தாய் பாசுரம் கீழே பார்த்தோம்
2-8- 3-6- மகள் பாசுரம் கீழே பார்த்தோம்
5-5- திருவரங்கம் பதிகம் தாய் பாசுரம் அப்புறம் வரும்

சரம ஸ்லோக முன் பின் வாக்கியம் கீழே இரண்டு திரு மொழிகளில் பார்த்தோம்
அத்தை அருளிய -பிரமாணம் முன் பிரமேயம் இதில்

கவள யானை பிரவேசம் –

திருவடிகளிலே விழுந்து சரணம் புக்கு
அடியேன் இடரைக் களையாய் -என்று
தேவரோட்டை அனுபவத்துக்கு விரோதியைப் போக்கித் தர வேணும்
என்று அபேஷித்தார்
அவனும் அப்படியே செய்வானாக ஒருப்பட
அது பற்றாமல்
ப்ராப்தியால் உண்டான த்வரையாலே
தாமான தன்மை போய்
பிரிந்து
பிரிவாற்றாமையாலே நோவு பட்டு

மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏக எண்ணும் போல்
நம்மாழ்வார் க்ருஷ்ண த்ருஷ்ணா தத்துவமாக இருந்தாலும் அதிலே ஆசை -உத்கட இச்சை -போல்
இவருக்கு உகந்து அருளினை தேசங்களில்
இவருக்கும் ஸ்ரீ பரமபத உத்கட இச்சை பிறப்பிக்க ஓருப்பட
ப்ராப்ய த்வரையால் ஆணான தன்மை போய்
இயற்கையில் கலந்து பிரிந்து பிரிவாற்றாமையால் நோவு பட்டு
அவன் படிகளை பேசி வாய் புலற்றும் ஒரு பிராட்டி
அப்படி புலம்பும் பாசுரங்களை திருத் தாயார் கண்டு அருளிச் செய்யும் பாசுரங்கள்

———————————————-

கவள யானை கொம்பு ஒசித்த கண்ணன் என்றும் காமரு சீர்க்
குவளை மேகம் அன்ன மேனி கொண்ட கோன் என் ஆனை என்றும்
தவள மாட நீடு நாங்கைத் தாமரையாள்  கேள்வன் என்றும்
பவள வாயாள் என் மடந்தை   பார்த்தன் பள்ளி பாடுவாளே –4-8-1-

பவள வாயாள் என் மடந்தை-
கவள யானை கொம்பு ஒசித்த கண்ணன் என்றும் -அதிகமாக பஷிக்க வல்ல குவலயா பீடம்
காமரு சீர்க் குவளை மேகம் அன்ன மேனி கொண்ட கோன் என் ஆனை என்றும்-கறு நெய்தல் மேகம் போல்
திவ்ய மங்கள விக்ரஹம்-ஸ்வாமி -மத்தகஜம் போல் -கதிர் பொருக்கி புரிய வைக்கப் பார்க்கிறார்
தவள மாட நீடு நாங்கைத் தாமரையாள்  கேள்வன் என்றும்-வெண்மையான மாடங்கள்
இது நாலாவது நாங்கை திவ்ய தேசம்
பார்த்தன் பள்ளி பாடுவாளே -இதுக்கும் மேல் திவ்ய தேசம் பெயரைச் சொல்லி பாடுகிறாள்
கீழ் சொன்ன மூன்றும் ஒரு தட்டு -இது ஒரு தட்டு
லோக உஜ்ஜீவன அர்த்தமாக அவதரித்து மாஸூச அருளி
அது எனது விஷயத்தில் பொய்யாகலாமோ என்றவாறு

பவள வாயாள் என் மடந்தை
அவள் வாய் புலத்தும் படி அவயவ சோபை –
இவள் உகப்பு மிகுந்த படி
அவன் இடம் ஆசை முதல் படி -திவ்ய தேச திரு நாமம் சொல்லி அதிலே இழிவது சரம பர்வம் –

கவள யானை கொம்பு ஒசித்த கண்ணன் என்றும்
கண்டார் மேல் விழும்படி ஆசை
மத முதிதமாய்
குவலயபீடம் -அனாயாசன அநாயாசேன நிரசித்தவன்

காமரு சீர்க்-
விரோதியை போக்கா விட்டாலும் விட ஒண்ணாத வடிவு அழகு

குவளை மேகம் அன்ன மேனி கொண்ட கோன் என் ஆனை என்றும்
கண்டாருக்கு பெரு விருப்பம் கொள்ளும் படி
குவளை மேகம் போன்றவற்றை இன்னும் இப்புடைகளில் –
கடல் மணி போன்ற -வடிவை பரிக்ரஹித்த ஸ்வாமி
வடிவு அழகுக்கு ஓன்று உவமானம் போகாமல் அங்கும் இங்கும் கதிர் பொறுக்குகிறார்

என் ஆனை
எனக்கு எப்பொழுதும் பார்த்துக் கொண்டே இருக்கும் படி வியாபாரம்

தவள மாட நீடு நாங்கைத் தாமரையாள்  கேள்வன் என்றும்-
மாடங்கள் எப்பொழுதும் ஓக்க சாந்து பூசியே
தளம், வெண்மை
ஓக்கமான மாடங்கள்
நித்ய ஸந்நிஹிதனான ஸ்ரீ யபதி

பார்த்தன் பள்ளி பாடுவாளே
தனது வாயை பழுப்பு கண்டு அவன் வாய் புலற்றும் படி
கோவை வாயாள்-
சாரு – பெருமாள் சீதாபிராட்டியை நினைத்து புலம்பியது -இவை எல்லாம் இருக்க
இவளோ அவனது ஊரைச் சொல்லி வாய் புலாற்றுகிறாள்

————————————————-

மதுரையில் பெண்களுக்கு உதவினமை மீண்டும்
இடைச் சேரியில் பூதனை கொன்றபடியை சொன்னபடியே தாயார் சொல்கிறாள்

கஞ்சன் விட்ட வெஞ்சினத்த களிறு  அடர்த்த காளை என்றும்
வஞ்சி மேவி வந்த பேயின் உயிரை யுண்ட மாயன் என்றும்
செஞ்சொல் ஆளர் நீடு நாங்கைத் தேவ தேவன் என்று என்று ஓதி
பஞ்சி யன்ன மெல்லடியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே —4-8-2-

நித்ய ஸூரிகள் பரிய இருக்கிறவன் தன்னைப் பேணாதே விரோதிகளை நிரசித்த படி
மார்த்வத்தை உடைய என் பெண் அவன் இருந்த ஊரைச் சொல்லா நின்றாள்

பஞ்சி யன்ன மெல்லடியாள்
பஞ்சோடு ஒத்த மெதுவான பாதங்கள்
கஞ்சன் விட்ட வெஞ்சினத்த களிறு  அடர்த்த காளை என்றும்-குரூரமான குவலயாபீடத்தை நிரசித்த
வஞ்சி மேவி வந்த பேயின் உயிரை யுண்ட மாயன் என்றும்-கபட புத்தி -பொருந்திய மனம் -ஆச்சர்ய பூதன்
செஞ்சொல் -அழகான சொல் -உண்மையான சொல் இரண்டும்
ஆளர் நீடு நாங்கைத் தேவ தேவன் என்று என்று ஓதி-விஸ்வ ரூபம் காட்டி உத்தம புருஷோத்தமன் -பல காலும் சொல்லி
பார்த்தன் பள்ளி பாடுவாளே

கஞ்சன் விட்ட வெஞ்சினத்த களிறு  அடர்த்த காளை என்றும்-உபகார ஸ்ம்ருதி
பின்பும் கிருஷ்ணாவதாரத்தில் மூட்டி
சிறு வயசில் சேஷ்டிதங்கள்
துஷ் ப்ரக்ருதி ஏவி
ஒருவன் ஏவ வேண்டாதபடி வெவ்விய சினம் உள்ள குவலயாபீடம் வந்து மேல் விழுகிறது
இரண்டாலும் தப்ப விரகு இல்லை

பருவம் நிரம்பாத சிறு சேவகங்கள் மேல் –
வஞ்சி மேவி வந்த பேயின் உயிரை யுண்ட மாயன் என்றும்
வஞ்சனை ஒழியவே பிறப்பால் பேய் -பிரகிருத்தியே பேய் –
அதுக்கும் மேல் வஞ்சனை உடன் பொருந்தி
உயிரை முடித்த ஆச்சர்ய பூதன்
தனக்கே என்று எத்தைக் கொடுத்தாலும்
கண்டாகர்ணன் போல்
அவள் கோலி வந்த காரியத்தை அவள் தன்னுடன் போக்கிய
ஆச்சர்ய குண -மாயம் -சேஷ்டிதங்கள் பெயின் உயிரை முடித்தான்

செஞ்சொல் ஆளர் நீடு நாங்கைத் தேவ தேவன் என்று ஓதி
செவ்விய சொற்கள்
சத்யம் -பிரியம் -பேசுபவர்கள் பூத ஹிதம்
ஊரில் உள்ளார் படியும் இவனுக்கும் வேண்டுமே
பிரியேன் என்று சொல்லி பிரியாதவர்கள்
நம்பி அத்தையே பற்றாசாக பாடுகிறாள்
நேர்மையான அந்தணர்

தேவ தேவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி தேவதேவன்
மனிசர்க்குத் தேவர் போல் தேவர்க்கும் தேவன்

பார்த்தன் பள்ளி பாடுவாளே
தனது காலில் மார்த்வம் பற்றி அவன் வாய் புலத்த வேண்டி இருக்க எனது மகள்
படும் பாடு பார்த்தீர்களே

————————————————-

நித்ய ஸூரிகளுக்கு அவ் வருகு உள்ள தேவதேவன் என்று பரத்வம் சொல்லி
ப்ரஹ்மாதிகள் ஸ்தோத்ரம் பண்ண
செண்டும் கையுமாக இடைப் பெண்களுடன் ஸம்ஸ்லேஷிக்க
சாபல்யத்தால் அத்தை வாய் புலற்றி -அந்த இடைப் பெண்களில் ஒருத்தியாகக் கொள்ள மாட்டீரோ –

அண்டர் கோன் என் ஆனை என்றும் ஆயர் மாதர் கொங்கை புல்கு
செண்டன் என்றும் நான் மறைகள் தேடி யோடும் செல்வன் என்றும்
வண்டு உலவு பொழில் கொள் நாங்கை மன்னு மாயன் என்று என்று ஓதி
பண்டு போல் அன்று என் மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே –4-8-3-

நான் மறைகள் தேடி யோடும் செல்வன் என்றும்-விசாரித்து ஓடும் ஐஸ்வர்யம் யதோ வாசோ நிவர்த்தந்தே மீளும் படி
வண்டு உலவு பொழில் கொள் நாங்கை மன்னு மாயன் என்று என்று ஓதி-நித்ய வாசம் -செய்து அருளுபவர்
ஸ்வரூப ரூபம் குணம் விபூதி ஆச்சர்யம்
பண்டு போல் அன்று என் மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே-சிறிய வயசு போல் இல்லாமல் பருவம்

அண்டர் கோன் என் ஆனை என்றும்
நியாமகன் என்றும்
தர்சனீயமான -ஆனை -வியாபாரம் உடையவன்

ஆயர் மாதர் கொங்கை புல்கு செண்டன் என்றும் -லீலா பரிகாரம் காட்டி தன்னோடு ஒத்த வசீகரிக்கும்

நான் மறைகள் தேடி யோடும் செல்வன் என்றும்-இடைப் பெண்களுக்கு கையாளாக இருப்பவன்
பண்ணலார் பயிலும் பவித்ரனே பரமனே
ஊற்றம் உடையாய் பெரியாய்
எட்ட ஒண்ணாத ஐஸ்வர்யம்

வண்டு உலவு பொழில் கொள் நாங்கை மன்னு மாயன் என்று என்று ஓதி-வண்டுகள் சஞ்சரிக்கும்
அவதாரங்கள் போல் தீர்த்தம் பிரசாதியாதே நித்ய ஸந்நிஹிதனாய் அருளுபவன் அன்றோ

பண்டு போல் அன்று என் மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே
பால்யத்தில் ஓர் ஓர் வூர்களை சொல்லிப் பாடுவார்கள்
இவள் ஓர் இடத்தில் அடி உடமை -நாயகன் வர்த்திக்குமூர் என்று தோற்றப் பாடுகிறாள்

———————————————————–

நீ ஒருவனுக்கும் மெய்யன் அல்லன் –
ஒருத்தி தன்பால் மருவி மனம் வைத்து -அவளுக்கும் மெய்யன் இல்லை –
(வளைத்து வைத்தேன் இனி  போகல் ஒட்டேன் உன் தன் இந்திர ஞாலங்களால்
ஒளித்திடில் நின் திருவாணை கண்டாய்  நீ ஒருவருக்கும் மெய்யன் அல்லை
அளித்து எங்கும் நாடும் நகரமும் தம்முடை தீவினை தீர்க்கலுற்றுத்
தெளித்து வலம் செய்யும் தீர்த்தமுடை திரு மால் இரும் சோலை எந்தாய் -ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி- 5-3 2- )
என்னும்படி ஏசு வாங்கும் பட்டி மேய்க்கும் அவன் படிகளை அனுசந்திக்கை தவிர்ந்து
உண்ணாது உறங்காது ஒலி கடலை ஊடறுத்த மனத்துக்கு இனியானை -பாடத் தொடக்கி
இவள் வரம்பு அழிந்தாள் என்கிறாள்

கொல்லை யானாள் பரிசு அழிந்தாள் கோல் வளையார் தம் முகப்பே
மல்லை முந்நீர் தட்டிலங்கை  கட்டழித்த மாயன் என்றும்
செல்வ மல்கு மறையோர் நாங்கைத் தேவ தேவன் என்று என்று ஓதி
பல்வளையாள் என் மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே–4-8-4-

பரிசு அழிந்தாள் -ஸ்த்ரீத்வம் அழிந்தாள்
கோல் வளையார் — ஸூந்தரமான வளையல்கள்

கொல்லை யானாள்
வரம்பு மீறி

பரிசு அழிந்தாள்
ஸ்த்ரீத்வமே பிரகாரமாய் இருந்த இவள் மரியாதை -மடம் அச்சம் நாணம் இத்யாதி -அழிந்தாள்

கோல் வளையார் தம் முகப்பே
தனது பருவத்துக்கு ஒத்த பெண்கள் நடுவில்

மல்லை முந்நீர் தட்டிலங்கை  கட்டழித்த மாயன் என்றும்
சம்ருத்தமான மிக பழைமையான கடலை அடைத்து
ஒருவர் கூறை எழுவர் உடுக்கும் படி பண்ணின பரம பிரணயினி –
நாயகி இடத்தில் பிச்சேறிய பெருமாள்

செல்வ மல்கு மறையோர் நாங்கைத் தேவ தேவன் என்று என்று ஓதி
ஐஸ்வர்யம் கரை புரண்டு வாரா நின்றுள்ள –
வேதம் ஞானம் பக்தியாதிகள்

பல் வளையாள் என் மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே
கையில் ஒரு வளை கொண்டு அவனை இப்பாடு படுத்த வல்லவள்
எல்லா வற்றையும் பூண்டு தான் வாய் புலம்பா நின்றாள்
(பல் வளையாள் முன் பரிசு அழிந்தேன் -நம்மாழ்வார் )

——————————————————–

இலங்கை கட்டளித்த பிரகாரமே இவளுடைய நெஞ்சில் ஊற்று இருந்து அது தன்னையே இங்கும்
கோல வில்லி ராமனும் இங்கே
திரு வெள்ளியங்குடியிலும் இங்கு
ராம கிருஷ்ண சேவை இங்கேயே

அரக்கராவி மாள வன்று  ஆழ்  கடல் சூழ் இலங்கை செற்ற
குரக்கரசன் என்றும் கோல வில்லி என்றும் மா மதியை
நெருக்கு மாட நீடு நாங்கை  நின்மலன் என்று என்று ஓதி
பரக்கு அழிந்தாள் என் மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே —4-8-5-

குரக்கரசன் என்றும் -சுக்ரீவன் -பெருமாளையே இங்கு சொன்னபடி -வானரங்களுக்கு ஸ்வாமி –
நின்மலன் -குற்றம் அற்றவர் -ப்ரயோஜன நிரபேஷனான –குற்றம் இல்லாதவன் -அவாப்த ஸமஸ்த காமன்-
அநந்ய பிரயோஜனம் ஸூ த்த ஸ்வ பாவன் –
மா மதியை நெருக்கு மாட நீடு -சந்திரன் போக வழி இல்லாமல் ஓங்கிய மாடங்கள்

அரக்கராவி மாள வன்று  ஆழ்  கடல் சூழ் இலங்கை செற்ற குரக்கரசன் என்றும்
பிரித்த பையல் ஒருவனை அழித்த மாத்ரம் இல்லாமல்
ராக்ஷஸ ஜாதி அடங்க மாளும் படி
ராவணன் எதிர்த்த அன்று
அகாதமான கடலால் -இதுவே அரண் -அத்தை அழியச் செய்த வானவர் ஜாதிக்கு நிர்வாகன் –
வானர ஜாதியைக் கொண்டு வென்றவன் –
அரசன் -நிர்வாககன்
ப்ரஹ்மாதிகள் குடி இருப்பை அழித்த ராவணன் குடி இருப்பை அழித்து
இடக்கை வலக்கை அறியாத வானர ஜாதிகளை பரிகரமாகக் கொண்டு ஆய்த்து

கோல வில்லி என்றும்
ஆண் பிள்ளைத் தனத்துக்கு அபிமானிகளாய் இருப்பர் அடங்கலும் தோற்று மதிக்கும் படி
தர்ச நீயமான வில்லைக் கையில் உடையவன் –
கோதண்ட ராமன்
சார்ங்க பாணி
தோற்றோம் மட நெஞ்சம்

மா மதியை நெருக்கு மாட நீடு நாங்கை  நின்மலன் என்று என்று ஓதி
இத ஸ்வதா சஞ்சரியா நின்றுள்ள -இங்கும் அங்கும் சஞ்சரிப்பதை ஸ்வபாவமாக கொண்டுள்ள
சந்திரனை சஞ்சரிக்க ஒட்டாத மாடங்கள் ஓக்கம்

நின்மலன்
பிரயோஜன நிரபேஷனாய் உதவும் ஸ்வ பாவம் உடையவன்
உபாசனத்துக்கு முகம் காட்டுதல் இல்லாமல்
அர்த்தித்தவ நிரபேஷமாக -பிரார்த்தனையும் கூட வேண்டாத படி உதவுபவன்

பரக்கு அழிந்தாள் என் மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே
கெட்டேன்
என் கொண்டு அறிந்தேன் என்னில் –
நானும் கேட்க்கும்படி அவன் இருக்கும் தேசத்தை சொல்லும்படி வாய் விட்டு பாடா நின்றாள்
அவன் வடிவை அழகைக் கண்ணால் கண்டு கவிழ்ந்து நின்று இருக்கும் -கண்ண நீரை வெளியிடுமவள் –
ஒன்றுமே பேச முடியாத ராஜ புத்ரி
சுமந்திரன் -சக்கரவர்த்திக்கு சொல்லும் வார்த்தை –
அதிருஷ்ட பூர்வ வியசனம் -ராஜ புத்ரி-யசஸ்வினீ கர்ப்ப சம்பந்தம் இல்லாதவள் –
துக்கத்தால் -ஒரு வார்த்தையும் சொல்லாமல் மலங்க மலங்க
இவளோ இப்பொழுது எனக்குக் கேட்க்கும் படி வெட்கம் விட்டு பாடா நிற்கிறாள்

———————————————————–

சாரதி -தானே ஆச்சார்யர்
பிரகாரத்தில் சேர்ந்தே சேவை -அர்ஜுனனும் கண்ணனும்
லஷ்மீ நாதன்- தேர் தட்டு கீதாச்சார்யர்
ஈஸ்வரன் தானும் ஆச்சார்ய ஸ்தானம் விரும்பி இருப்பானே –
அடியவன் பெயராலே திவ்ய தேசம்
யாத்ர யோகேஸ்வர கிருஷ்ண –விஜய ஸ்ரீ
வருணன் ஆசைப்பட சேவை சாதிக்கிறார்
பாத்ம புராணம் இத் திவ்ய தேசம் பற்றி உண்டே
பாரத போர் முடிந்த பின்பு அர்ஜுனன் வர -தாகம் எடுக்க அகஸ்தியர் இடம் தீர்த்தம் கேட்க
கமண்டலத்தில் தீர்த்தம் இல்லை
கண்ணனை கேட்கத் தோன்றி
இட்டமான பசுக்களை இனிது மறித்து நீரூற்றி யவன்
மோழை எழுதுவித்தவன் மலை –
தனது வாளைக் கொடுத்து -அர்ஜுனன் கீற -கட்க புஷ்கரணி
மேற்கு நோக்கி திருக்கோலம்
செங் கமல வல்லித் தாயார்
தாமரையாள் கேள்வன் மூலவர்
திருவடி பாடகத்துடன் சேவை
உத்சவர் பார்த்தசாரதி
தாயார் தாமரையாள்
கண்ணனுக்கு பக்கம் கோல வில்லி ராமன் தனி ஆசனத்தில் சேவை
நாராயண விமானம்

ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகளுக்கு ஸூஜனங்கள் கூட இல்லாமல் இருக்க உதவினான்
உனக்கு நாங்கள் இருக்கிறோமே வாய் புலத்துவது எதற்கு என்ன
ஜகத்துக்கு வந்த பிரளய ஆபத்து போல் அல்லாமல் மிக்க விரஹதாபம் உள்ள –
கோல மேனி காணாத எனக்கு –
அவனே ரக்ஷகன் -ஆபத் ஸகத்வம் தோன்ற அருளிச் செய்கிறார்

ஞாலம் உற்றும் உண்டு உமிழ்ந்த நாதன் என்றும் நானிலம் சூழ்
வேலை யன்ன கோல மேனி வண்ணன் என்றும் மேல் எழுந்து
சேல் உகளும் வயல் கொள் நாங்கைத் தேவ தேவன் என்று என்று ஓதி
பாலின்  நல்ல மென் மொழியாள் பார்த்தான் பள்ளி பாடுவாளே —4-8-6-

பாலின்  நல்ல மென் மொழியாள் -பால் போல் மிருதுவான என்றும் -பாலை விட மதுரம் என்றும்
ஞாலம் உற்றும் உண்டு உமிழ்ந்த நாதன் என்றும் –
சொத்தை ஸ்வாமி தானே ரஷிக்க வேண்டும்
நானிலம் சூழ்-முல்லை மருதம் குறிஞ்சி நெய்தல்
வேலை யன்ன கோல மேனி வண்ணன் என்றும்
கடலைப் போன்ற வண்ணம்
சேல் மேல் எழுந்து உகளும் –
துள்ளி மேலே எழுந்து வர்த்திக்குமாம் –
ஜலத்தை விட தேசம் குளிர்ந்து இருக்கும் தேசம்

ஞாலம் உற்றும் உண்டு உமிழ்ந்த நாதன் என்றும்
ஆபத்து உடையவராக இருப்பதுவே வேண்டுவது
ரக்ஷிக்க சாதனாந்தரம் ஒன்றும் செய்பவராக இல்லாமல்
வரையாதே சர்வ வித ரக்ஷணம் பிரார்த்திக்காமலே இருக்க செய்யும் ஸ்வாமி
ஆபத்துக்கு மேற்பட்ட இவற்றின் பக்கல் ஒன்றும் வேண்டாமே
பிரளய ஆபத்தில் லோகம் பிரார்த்தித்ததோ –
ரஷிக்கைக்கு அடி நிருபாதிக சேஷியாய் இருப்பதால்
உடையவன் தானே உடைமையைத் தேடுவான்
சேஷித்வமே ஹேது

நானிலம் சூழ் வேலை யன்ன கோல மேனி வண்ணன் என்றும் –
முல்லை மருதம் குறிஞ்சி நெய்தல் -சூழ் சமுத்திர– படியை -தர்ச நீயமான நிறம் வடிவு

மேல் எழுந்து சேல் உகளும் வயல் கொள் நாங்கைத் தேவ தேவன் என்று என்று ஓதி
ஜலத்துடன் ஸ்பர்சம் இன்றிக்கே மேலே துள்ளி வர்த்திக்கும் மீன்கள்
ஜல சர ஜந்துக்களும் கூட களித்து இருக்கும் திவ்ய தேசம்
மேல் எழுந்து –
தண்ணீர் சுடும் என்னும்படி நிலம் குளிர்ந்து
உங்கள் உடன் இருப்பு அடிக் கொதிப்பாம் படியாய் இருப்பதுக்கு இது த்ருஷ்டாந்தம்
அவன் வர்த்திக்கும் தேசமே ஸ்ரமஹரமாய் இருக்கும் இவளுக்கு
மீன் தாவுவது போல் நானும் திவ்ய தேசம் நாமம் சொல்லி தரிக்கிறேன் என்கிறாள்

பாலின்  நல்ல மென் மொழியாள் பார்த்தான் பள்ளி பாடுவாளே
அவன் வாய் வெருவ வேண்டி இருக்க
மதுரா மதுரா லாபா என்று இவள் பேச்சு கேட்டு வாய் புலத்துபவன் அன்றோ

———————————————————–

வேதமே சொல்ல முடியாமல் மீள
ஜகத்துக்கு வந்த ஆபத்தை அவனே வந்து ரஷித்தான்
ஆறி இருக்க ஒண்ணாதோ
வாய் புலற்ற வேண்டுமோ
அப்படி இருக்க ஒட்டாமல் நெஞ்சைக் கைக் கொண்டான்

நாடி என் தன் உள்ளம் கொண்ட நாதன் என்றும் நான் மறைகள்
தேடி என்றும் காண மாட்டாச் செல்வன் என்றும் சிறை கொள் வண்டு
சேடுலவு பொழில் கொள் நாங்கைத் தேவ தேவன் என்று  என்று ஓதிப்
பாடகம் சேர் மெல்லடியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே —4-8-7-

நாடி என் தன் உள்ளம் கொண்ட நாதன் என்றும்
உள்ளம் பறிக்கவே எதிர் சூழல் புக்கு வளைத்து வந்தான்
சிறை கொள் வண்டு சேடுலவு-வந்து கூட்டங்கள் உலவும்

நாடி என் தன் உள்ளம் கொண்ட நாதன் என்றும் –
எதிர் சூழல் புக்கு
என்னைத் தேடி
என் நெஞ்சைத் தனக்கு ஆக்கிக் கொண்ட சேஷி என்றும் –

நான் மறைகள் தேடி என்றும் காண மாட்டாச் செல்வன் என்றும் –
என்னைத் தேடி வருந்தித் தனக்கு ஆக்குகிறவன்
தன்னை வேதங்கள் தேடி காணப் போகாத
ஸ்ரீயை  உடையவன் என்றும்

சிறை கொள் வண்டு சேடுலவு பொழில் கொள் நாங்கைத்
சிறகை உடைத்தாய் இருந்துள்ள
வண்டுகள்
சோலைத் தலையிலே உலவா நின்ற
திரு நாங்கையிலே வர்த்திக்கிற –
சேடு -திரட்சி யானது-

தேவ தேவன் என்று  என்று ஓதிப்

பாடகம் சேர் மெல்லடியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே
காலும் பாடகமும் பொருந்தின படியை
அவன் பாடா இருக்குமவள்
அவனூரைப் பாடா  நின்றாள்

———————————————-

நாண் எனக்கும் இல்லை நிகரில் முகில் வண்ணன் அன்றோ அவன் நம்மாழ்வார்
ஊரவர் கவ்வை எரு இட்டு போல் இங்கும்
உள்ளம் கொண்டான் என்று நீ புலம்பினால் உலகோர் ஏச மாட்டார்களோ என்ன
நான் ஒருத்தியோ அவனைப் பாடுகிறேன்
ப்ரஹ்மாதிகளால் கிட்ட ஒண்ணாத ஆழியான்
பிரிந்து இருக்கக் கூடுமோ
பலரும் ஏசுதலே பாடுக்கைக்கு உடல்

உலகம் ஏத்தும் ஒருவன் என்றும் ஒண் சுடரோடு உம்பர் எய்தா
நிலவும் ஆழிப் படையான் என்றும் நேசன் என்றும் தென் திசைக்குத்
திலதம் அன்ன மறையோர் நாங்கைத் தேவ தேவன் என்று என்று ஓதிப்
பலரும் ஏச என் மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே—4-8-8-

உலகம் ஏத்தும் ஒருவன் என்றும்
லோகமாக ஆஸ்ரயிக்கைக்கு அத்விதீயனான
சர்வ சமஸ்ரயநீயன் என்றும்

ஒண் சுடரோடு உம்பர் எய்தா நிலவும் ஆழிப் படையான் என்றும் –
சந்திர ஆதித்யர்களோடு கூடின
தேவர்களால் கிட்டப் போகாதே இருக்கிற்
திரு ஆழியை
எப்போதும் கை கழலா நேமியான்-பெரிய திருவந்தாதி -என்னும்படி
உடையவனாய் இருகிறவன் என்றும்

நேசன் என்றும் –
ஆஸ்ரிதர் பக்கல் ஸ்நேஹம் ஒரு வடிவு கொண்டவன் என்றும்

தென் திசைக்குத் திலதம் அன்ன மறையோர் நாங்கைத் தேவ தேவன் என்று என்று ஓதிப்
தெற்குத் திக்குக்கு திலக பூதரான
பிராமணர் வர்த்திக்கிற திரு நாங்கையிலே நின்று அருளின
தேவ தேவன் என்று என்று ஓதி

பலரும் ஏச என் மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே
பலரும் தன்னைப் பழிக்க
அவர்களை தனக்கு கூட்டு என்று
அவனூரைப் பாடுவாள் ஆனாள்
ஊரவர் கவ்வை எரு விட்டு -ஏசுவதே பாடுகைக்கு உடல்

———————————————————–

இவன் நேசன் என்று நீ கண்டது எங்கே
உலகோர் ஆஸ்ரயித்தார்களோ -என்று கேட்க
பெண் பித்தனான கண்ணன் தன்னையே
தமது துறையான கிருஷ்ண அவதாரத்தில் மண்டி
இவனே ஸ்ருஷ்ட்டி யாதிகளுக்கு காரணம்

கண்ணன் என்றும் வானவர்கள் காதலித்து மலர்கள் தூவும்
எண்ணன் என்றும் இன்பன் என்றும் ஏழு உலகுக்கு ஆதி என்றும்
திண்ண மாடு நீடு நாங்கைத்  தேவ தேவன் என்று என்று ஓதிப்
பண்ணின் அன்ன மென் மொழியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே—4-8-9-

எண்ணன்-எண்ணத்தில் -மநோ ரதத்தில் -இருப்பவன் –

கண்ணன் என்றும் வானவர்கள் காதலித்து மலர்கள் தூவும் எண்ணன் என்றும்
கிருஷ்ணன் என்றும்
ப்ரஹ்மாதிகள் ஸ்நேஹத்தைப் பண்ணி
புஷ்பாதி உபகரணங்களைக்  கொண்டு
ஆஸ்ரயிக்கும் படியாக
அவர்கள் மநோ ரதத்தே நிற்கிறவன் என்றும்

இன்பன் என்றும் –
ஆனந்தாவஹன் என்றும்-

ஏழு உலகுக்கு ஆதி என்றும் –
ஜகத் காரண பூதன் என்றும்-
கிருஷ்ண ஏவஹி லோகாநாம் இத்யாதி

திண்ண மாடு நீடு நாங்கைத்  தேவ தேவன் என்று என்று ஓதிப்
திண்ணமான மாடங்கள் நீடின
நாங்கை யிலே வர்த்திக்கிற தேவ தேவன் என்றும் ஓதி

பண்ணின் அன்ன மென் மொழியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே

————————————————–

பாருள் நல்ல மறையோர் நாங்கைப் பார்த்தன் பள்ளி செங்கண் மாலை
வார் கொள் நல்ல முலை மடவாள் பாடலைத் தாய் மொழிந்த மாற்றம்
கூர் கொள் நல்ல வேல் கலியன் கூறு தமிழ் பத்தும் வல்லார்
ஏர் கொள் நல்ல வைகுந்தத்துள் இன்பம் நாளும் எய்துவாரே—-4-8-10-

நல்ல-அவிஸ்லேஷம் ஆகிய நன்மை –

பாருள் நல்ல மறையோர் நாங்கைப் பார்த்தன் பள்ளி செங்கண் மாலை
பூமியில் நல்ல விலஷணமான பிராமணர் எல்லாம் திரண்ட
திரு நாங்கை யிலே பார்த்தன் பள்ளியிலே வர்த்திக்கிற
வாத்சல்யத்தையும் -வ்யாமோஹத்தையும் உடையவன் ஆனவனை

செங்கண் -என்றதால் வாத்சல்யம்
மாலை–என்றதால் வ்யாமோஹத்தையும்
உடையவன் ஆனவனை

வார் கொள் நல்ல முலை மடவாள் பாடலைத் தாய் மொழிந்த மாற்றம்
ப்ராப்த யௌவனை  யானவள் பாடலைத்
தாயார் சொன்ன மாற்றத்தை

கூர் கொள் நல்ல வேல் கலியன் கூறு தமிழ் பத்தும் வல்லார்
அப் பிராட்டி
தசை வந்து
ஆழ்வார் அருளிச் செய்த இப் பத்தும் வல்லார்

ஏர் கொள் நல்ல வைகுந்தத்துள் இன்பம் நாளும் எய்துவாரே —
ஒருத்தி வாய் வெருவ
ஒருத்தி கூப்பிட்ட எளிவரவு தீர
ஒரு நாளும் பிரிய வேண்டாதே இருக்கிற
தேசத்திலே இருக்கப் பெறுவார்-

———-

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

கவளக் களிறு அரக்கர் பேய் தம் உயிரைக்
கவர்ந்தான் மறை நால் தொடர் பவன் பார்த்தன்
பள்ளி காயா வண்ணனைக் கூடாமை கூறு நீலன்
நள்ள நலம் நல்கும் நுமக்கு –38-

மறை நால் -நான்மறை என்று மாற்றிப் பொருள் –
நான் மறைகள் தேடியோடும் செல்வன் -நான்மறைகள் தேடி என்றும் காண மாட்டாச் செல்வன் –
வேத பாராயண கோஷ்ட்டி பின் தொடருவதையும் -வேதங்கள் அவனை சொல்லி முடிக்காமையும் குறிக்கும்
காயா வண்ணன் -காமரு சீர் குவளை மேகமென்ன மேனி -வேலையன்ன கோல மேனி வண்ணன்
பார்த்தன் பள்ளிப் பெருமாளைக் கூடாமையால் வந்த துன்பத்தை கூறும் ஆழ்வாரை –
நள்ளி -அணுகி -வாழ்பவர் நல் வாழ்வைப் பெறுவர் என்றபடி–

———————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய திருமொழி-4-7—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

May 5, 2014

நீலன் கலியனாக காரணம்
திரு வெள்ளக் குளத்தில் குமுதவல்லி நாச்சியாரைக் கண்டு
வைத்தியர் வளர்க்க –
பஞ்ச ஸம்ஸ்காரமும் ததீய கைங்கர்யமும் -நாள் தோறும் 1000 பேருக்கு ஒரு சம்வத்சரம்
வயலாலி மணவாளன் -கலியன் பெயர்
மந்த்ர வாதமோ கேட்க –
அரச மரம் அடியில் தெய்வங்களுக்கு அரசன் ஆலி நாட்டு அரசனான இவருக்கு
மந்த்ர அரசான திரு மந்த்ர உபதேசம் பெற்று
திருமங்கை ஆழ்வார் ஆனார்
ஆத்மாவை வெய்யில் வைத்தவர் நிழலில் வைத்து தேகத்தை வெய்யிலில் வைத்து வாடா
இன்றும் குமுத வல்லி நாச்சியார் உடனே சேவை
இங்கும் சரணாகதி -நான்காவது திவ்ய தேசம்
ஒன்றின் இரண்டு பகுதியாக வியாக்யானம்
கீழே அவனே ரக்ஷகன்
இதில் இடரைக் களைய பிரார்த்தனை –

அண்ணன் பெருமாள் மூலவர் கிழக்கு நோக்கி
அலர்மேல் மங்கை
ஸ்ரீ நிவாசன் உத்சவர்
பத்மாவதி தாயார் உத்சவர் பூவார் திரு மா மகள்
ஐப்பசி சுக்ல தசமி கார்த்திகை சுக்ல பாஷா ஏகாதசி தவம் சுவேதன் இருந்தான்
இருவரும் விடாய் தீர்ந்த இடம் -பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்

கண்ணார் கடல் பிரவேசம்

காவளம்பாடி மேய கண்ணா களை கண் நீயே -என்று சரணம் புக்க இடத்திலும்
சம்சாரத்திலே
சப்தாதி விஷயங்கள் நடையாடுகிற இடத்திலே
தம்மை இருக்கக் கண்டார்
ப்ரியஞ்சனம் அபஸ்யந்தீம்  பஸ்யந்தீம் ராஷசீ கணம்
ஸ்வ கணேன ம்ருகீம் ஹீநாம் ஸ்வ கணை ராவ்ருதாமிவ -ஸூந்தர காண்டம் -என்னும்படியே
இழக்கிறது நித்ய ஸூரிகள் உடன் இருக்கிற இருப்பையும்
பெறுகிறது -சப்தாதி விஷயங்களையும்
அவற்றுக்கு பணி செய்து திரிகையுமாய் இரா நின்றது
நீ அசக்தனாய் இருந்து என் அபிமதம் இழக்கிறேன் அன்று
நீ சக்தனாய் இருக்க நான் இழப்பதே -என்ன
உனக்கு அபிமதம் ஏது என்ன –
த்வத்  பிராப்தி விரோதியான
பிரகிருதி சம்பத்தத்தை அறுத்துத் தர வேணும்
என்கிறார்-

(மாம் ஏகம் சரணம் வ்ரஜ கீழ்
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -அவன் கிருத்யம் உணர்த்துகிறார்
அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வக இஷ்ட பிராப்தி தானே செய்வானே
இவர் பிரார்த்திக்க வேண்டியது என்ன
வ்ருத்த கதனம் -வரத்திஷ்யமான கதனம் -இரண்டையும் சொல்லி
வாடினேன் வாடினேன் தொடங்கி திருமந்திரம் கற்ற ஹர்ஷத்தால்
தத் அர்த்த அனுசந்தான பூர்வகமாக திருப்பதிகள் தோறும் மண்டி
ப்ராப்யதயா -ஸ்ரீ வைஷ்ணவர்கள் தான் ப்ராப்யம் என்று திரு உள்ளத்துக்கும் சம்சாரிகளும் அறியும்படி உபதேசித்து வந்தவர்
திருக் காவளம் படி ஒரு கால் போல் ஒன்பதில் கால் சரணம் புக்கு அவன் அருளிச் செய்தவற்றை திரு உள்ளத்தில் படுத்த
அவனும் சர்வஞ்ஞன் ஆகிலும் இவர் பாசுரம் கேட்டு உகக்குமவன் ஆகையால்
இத்தனை நாளும் திவ்ய தேசங்களில் மண்டி இருந்த உமக்கு வேறே அபேக்ஷிதம் என்ன என்று கேட்டு -ப்ரஸ்ன ரூபத்தால்
பதிலாக அவன் அருளிச் செய்த சரம ஸ்லோக அர்த்தத்தை இவரை இட்டு வெளியிடப் பண்ணி அருளுகிறார் –
கத்யத்தில் இதே போல் ஸ்ரீ உடையவரும் பிரார்த்தித்து அருளுகிறார் -)

———————————–

கண்ணார் கடல் போல் திருமேனி கரியாய்
நண்ணார் முனை வென்றி கொள்வார் மன்னு நாங்கூர்த்
திண்ணார் மதிள் சூழ் திரு வெள்ளக் குளத்து
வண்ணா வடியேன் இடரைக் களையாயே –4-7-1-

நாங்கூர் ஏழாவது திவ்ய தேசம் இது
நாங்கை -மூன்றும் பார்த்தோம் அடுத்த பார்த்தன் பள்ளி நாலாவது
சரீரத்தில் இடர் இல்லை சரீரமே இடர் என்றவாறு –

கண்ணார் கடல் போல் திருமேனி கரியாய்
இவ்வடிவை அனுபவிக்கையை இழக்கப் போமோ
வைத்த கண் வாங்கப் போகாத படியான
கடல் போலே இருக்கிற திருமேனியை உடையவனே
அன்றிக்கே
இடம் உடைத்தான கடல் போலே இருந்துள்ள திருமேனியை  உடையவனே -என்றுமாம்

ஒரு கால் அழகிலே
ஒரு கால் கம்பீர ஸ்வ பாவத்திலே
(சமுத்திர இவ காம்பீர்யம் ராமன் -சிசுபாலனுக்கும் பேறு தசரதனுக்கு இழவு –
காம்பீர்யம் -ஆழம் காண மாட்டாமை
களை கண் நீயே சொன்னாலும் உன் திரு உள்ளம் அறிய முடியாதே -)

நண்ணார் முனை வென்றி கொள்வார் மன்னு நாங்கூர்த்
சத்ருக்கள் உடைய யுத்தத்தில் முதுகு  காட்டாதே
வென்றி கொண்டு அல்லது மீளாதவர்கள்
மன்னுகிற திரு நாங்கூர்

திண்ணார் மதிள் சூழ் திரு வெள்ளக் குளத்து வண்ணா
பய பிரசங்கம் இல்லாத தேசத்திலே இருக்கிற
நிருபாதிக பந்துவே

அடியேன் இடரைக் களையாயே –
புறம்பு புகல் உண்டு என்று இருக்கில் அன்றோ  ஆறி இருக்கலாவது
அநந்ய கதியாய் இருக்கிற என் இடரைக் களையாய் –

———————————————

கீழே திருமேனி அழகு
இதில் ஒப்பனை அழகு
அண்ணா -இடரைக் களையாய் என்றாலும் இவர் இன்னும் சொல்லும் வார்த்தை கேட்க ஆசை
ஆஸ்ரித ரக்ஷணத்துக்கு தனி மாலை இட்டு
ஆஸ்ரித ரக்ஷணம் செய்பவர் உள்ள திவ்ய தேசத்தில் நித்ய வாஸம் செய்து அருளி
ஆஸ்ரிதர்களில் ஒருவனான அடியேனை ரஷிக்க வேண்டாவோ என்கிறார் –

கொந்தார் துளவ மலர் கொண்டு அணிவானே
நந்தாத பெரும் புகழ் வேதியர்  நாங்கூர்ச்
செந்தாமரை நீர்த் திரு வெள்ளக் குளத்துள்
எந்தாய் அடியேன் இடரைக் களையாயே —4-7-2-

கொந்தார் துளவ மலர் கொண்டு அணிவானே
ரஷணத்துக்கு வளையம் வைத்து இருக்கிறாயே
திருக் குழலில் ஸ்பர்ச்த்தாலே கொந்தாரா நின்றுள்ள
துளவ மலரை அணிந்தவனே

நந்தாத பெரும் புகழ் வேதியர்  நாங்கூர்ச்
விச்சேதியாதே
சாவதி அன்றிக்கே இருந்துள்ள
புகழை உடைய பிராமணர் உடைய  திரு நாங்கூர்
அவ் ஊரில் உள்ளார் படி உனக்கு வேண்டாவோ -என்கை
(நந்தா விளக்கே -3-8-கீழே பார்த்தோம் )

செந்தாமரை நீர்த் திரு வெள்ளக் குளத்துள் எந்தாய் அடியேன் இடரைக் களையாயே
திருமேனிக்கும் அவயவ சோபைக்கும்
ஒப்பாய் இரா நின்றது
ஊரில்  பொய்கையில் நீரும் தாமரையும்

(கடல் போல் திருமேனி
முடியில் திருத்துழாய் போல்
நீரில் செந்தாமரை )

—————————————————

ரக்ஷணத்துக்கு தனி மாலை இட்டது என்றது
கோவர்த்தன வ்ருத்தாந்தத்தால் சொன்னபடி –

குன்றால் குளிர் மாரி தடுத்து உகந்தானே
நன்றாய பெரும் புகழ் வேதியர் நாங்கூர்
சென்றார் வணங்கும் திரு வெள்ளக்  குளத்துள்
நின்றாய் நெடியாய் அடியேன் இடர்  நீக்கே –4-7-3-

நெடியாய் –நினைவால் நெடியவன் -அபரிச்சின்ன ஸ்வரூபம் ரூபம் குணங்கள்

குன்றால் குளிர் மாரி தடுத்து உகந்தானே
இன்னத்தால் இன்னத்தை காப்பது என்னும் நியதி இல்லை –
மலையைக் குடையாகக் கொண்டு
மழையை காத்து
இவற்றுக்கு உறுப்பாகப் பெற்றோமே என்று  உகந்தவனே
மழையில் அகப்பட்ட இடையர் இடருக்கும்
என் இடருக்கும் வாசி பார்த்துக் கொள்ளாய்
(சம்சார சாகரம் -அவர்களுக்கு மழை
விலகி உள்ள அடியேன் பக்தி இல்லாமல் திரிந்த
ஏழு நாள்கள் அவர்களுக்கு அநேக சம்சார ஜென்மங்கள் எனக்கு )

நன்றாய பெரும் புகழ் வேதியர் நாங்கூர்
சர்வேஸ்வரனுக்கு ஹேய பிரத்ய நீகமாய்
கல்யாணை கதாநமான   புகழாய் இருக்கும்
அப்படியே அவ் ஊரில் பிராமணர் புகழும்

சென்றார் வணங்கும் திரு வெள்ளக்  குளத்துள் நின்றாய்
யதார்ஹம் கேசவே வ்ருத்திம் அவசா ப்ரதி பேதிரே-
துரியோதனன் பாண்டவர்கள் பக்கல் பஷபாதத்தாலே
கிருஷ்ணன் வாரா நின்றான் என்று
தானும் தன்னுடைய பரிகரமுமாக ஒப்பித்துக் கொண்டு இருந்து
ஒருத்தன் எழுந்து இருத்தல் வணங்குதல் செய்யக் கடவது அன்று என்று
வ்யவஸ்த்தை பண்ணிக் கொண்டு இருக்க
அவசா-
தம் தாம் வசம் அன்றிக்கே வணங்கினார்கள்
சருகு எல்லாம் கூடி -காற்று அடித்தால் பறக்கக் கடவோம் அல்லோம்
என்று பண்ணும் வ்யவஸ்தை போலே இறே
சேஷி முன்பு சேஷ பூதர் அனுகூலிக்கக் கடவோம் அல்லோம் -என்னும் வ்யவஸ்தை
அப்படியே சென்றார் எல்லாரும் வணங்கா நின்ற
திரு வெள்ளக் குளத்துள் நின்றாய்

நெடியாய் –
ஸ்வரூப ரூப குணங்களால் எல்லை காண  ஒண்ணாதவனே
(அனோர் அணீயான் மஹதோ மஹான்
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம்
தோள்கள் ஆயிரத்தாய்
சமஸ்த கல்யாண குண சாகரம் )

அடியேன் இடர்  நீக்கே
இரண்டு தலையும் ஒக்க ஆற்றாமை உண்டாகில் அன்றோ
ஆறி இருப்பது

————————————————

இடையர் இடர் தீர்க்க மலையை எடுத்த அளவோ
ஆனையை நிரசித்த சக்திமான் அன்றோ
கிருபையை பொழிய வேணும்
ரக்ஷணத்துக்கு மாலை இட்டத்துக்கு இதுவும் ஸூ சகம்

கானார் கரி கொம்பது ஒசித்த களிறே
நாநா வகை நல்லவர் மன்னிய நாங்கூர்
தேனார் பொழில் சூழ் திரு வெள்ளக் குளத்துள்
ஆனாய் அடியேனுக்கு அருள் புரியாயே—4-7-4-

கானார் கரி கொம்பது ஒசித்த களிறே
பொற்றை உற்ற முற்றல் யானை -திருச்சந்த -என்னும்படியே
புகும் வயஸ் எல்லாம் காட்டிலே புக்கு
மனிசரோடே முகம் பழகாதே இருக்கிற
ஆனையினுடைய கொம்பை முறித்த களிறே
ஒரு மத்த கஜம் ஒரு யானையின் கொம்பை முறித்தது

நாநா வகை நல்லவர் மன்னிய நாங்கூர்
ஜன்மத்தால்
வ்ருத்தத்தால்
ஞானத்தால்
ஆண் பிள்ளைத் தனத்தால்
எல்லா வற்றாலும் கரை புரண்டு வருகிற
நன்மையை உடையவர்கள் மன்னுகிற திரு நாங்கூர்

தேனார் பொழில் சூழ் திரு வெள்ளக் குளத்துள் ஆனாய்
வண்டுகள் ஆர்ந்த பொழில் சூழ்ந்து இருந்துள்ள
திரு வெள்ளக்  குளத்தானாய்
செல்ல நின்றதுவும்
வர நின்றதுவும்
ஆகர்ஷமாய் இருக்கைக்கும்
கிட்டினார் குற்றம் காணாக் கண் இட்டு இருக்கும்படி யாலேயும் –
ஆனாய் -என்கிறார்-

(கீழே களிறு
இங்கு மீளவும் ஆனாய்
கமன ஆகமன -செல்வதும் வருவதும் ஆகர்ஷகமாய் ஈர்க்கும்
மத்த கஜம் -இன்னது என்று நிர்தேசிக்க முடியாமல் திரும்பவும் யானையே என்கிறார் )

அடியேனுக்கு அருள் புரியாயே

——————————————————————-

கண்ணார் கடல் சூழ் -அண்ணா அடியேன் இடரைக் களையாய் –1-10-1-
இங்கு திருவேங்கடம் மேய விளக்கே –
நான் விபவ அவதாரத்தில் செய்ததைக் கொண்டு நீர் வளைப்பது என் என்ன
திரு வெள்ளக்குளத்தில் ஜென்ம வ்ருத்தாதிகளில் குறை உள்ளாருக்கு முகம் காட்டி இருப்பவர் அன்றோ
நாடார் -புகழ் -தர்மங்களைச் செய்து விரோதியைப் போக்கிக் கொள்ளும் என்ன
கானகமும் வானரம் வேடுவர்களுக்கும் முகம் காட்டுபவன் அன்றோ
அடியேன் தர்மம் செய்து கிட்டுவது முடியாதே –

வேடார் திருவேங்கடம் மேய விளக்கே
நாடார் புகழ் வேதியர் மன்னிய நாங்கூர்
சேடார் பொழில் சூழ்  திரு வெள்ளக் குளத்தாய்
பாடா வருவேன் வினையாயின பாற்றே —4-7-5-

வேடார் திருவேங்கடம் மேய விளக்கே
பரிவுக்கும் ஆண் பிள்ளைத் தனத்துக்கும் குறைவற்று
திருமலையில் நின்றும்
பூமியிலே இழயில் குடிப் பழியாய் இருக்கும்
திரு வேடுவராலே நிறையப் பெற்ற
திருமலையிலே மேவின விளக்கே
தன் ஸ்வரூப ரூப குணங்களுக்கு  தானே பிரகாசன் ஆனவனே

நாடார் புகழ் வேதியர் மன்னிய நாங்கூர்
குளப்படியிலே கடலை மடுத்தால் போலே
அவ் ஊரில் பிராமணர் உடைய
புகழுக்கு பூமியில் இடம் போராது என்கை-

சேடார் பொழில் சூழ்  திரு வெள்ளக் குளத்தாய்
சேடு -திரட்சியும் தளிரும்

பாடா வருவேன் வினையாயின பாற்றே
உன்னுடைய குணங்கள் பாடி வருகிற என்னுடைய வினைகளை
பாற்றே –
அவயவியாய் காணப் போகாத படி சிதறப் பண்ணு
அன்றிக்கே
பாடா வருவேன் –
நீ எதிர் சூழல் புக்குத் திரியா நின்றால்
இறாயாதே -பார்ஸ்வத்தில் ஆம்படி -பாங்காக வருவேன் –

———————————————-

வேடுவர் அங்கு பாப விநாசம் போன்ற புண்ய தீர்த்தங்களில் நீராடி நிரஸ்த பாபங்கள் போக்க பெற்றனர்
நீர் அவ்வாறு செய்தவர் அல்லீரே என்ன –
கல்லை நீரில் மிதக்கப் பண்ணின உனக்கு எனது பாபங்களைப் போக்க அரிதோ
ஸமஸ்த பிரதிபந்தகங்களை போக்கி அருள வேணும் என்கிறார் –

கல்லால் கடலை யணை கட்டி யுகந்தாய்
நல்லார் பலர் வேதியர் மன்னிய நாங்கூர்ச்
செல்வா திரு வெள்ளக் குளத்து உறைவானே
எல்லாவிடரும் கெடுமாறு அருளாயே —4-7-6-

கல்லால் கடலை யணை கட்டி யுகந்தாய்
நீரில் ஆழும் கல்லாலே கடலிலே  அணை கட்டி
சம்சாரிகளுக்கு உறுப்பாக செய்யப்  பெற்றோம்
என்று உகந்தாய் –

நல்லார் பலர் வேதியர் மன்னிய நாங்கூர்ச்
பர சம்ருத்த ஏக பிரயோஜனராய்
ஆன்ரு சம்சய பிரதானரான
பிராமணர் மன்னுகிற திரு நாங்கூர்

செல்வா திரு வெள்ளக் குளத்து உறைவானே எல்லாவிடரும் கெடுமாறு அருளாயே
அவித்யா கர்மா வாசனா ருசி
பகவத் அபசாராதிகள்
பிராரப்த கர்மம்
இவை துடக்கமான எல்லா இடரும் கெடுமாறு அருளாயே
(சர்வ பாபேப்யோ என்பதையே எல்லா இடரையும் )

—————————————————

திரு அணை அணித்தாய் இருக்க அங்கு சென்று பாப நிரஸ்தம் செய்து கொள்ள மாட்டீரோ
என்னையே நிர்பந்தம் செய்வது என்
நான் எளியனோ என்ன எம் கோவலர் கோவே-
நாட்டார் போல் சிலவற்றைக் போக்கி சிலவற்றை போக்கிக் கொள்ளவது போல்
இடையர் சொன்னதைச் செய்தவன் அன்றோ

கோலால் நிரை மேய்த்த எம் கோவலர் கோவே
நாலாகிய வேதியர் மன்னிய நாங்கூர்
சேலார் வயல் சூழ் திரு வெள்ளக்  குளத்துள்
மாலே யென் வல் வினை தீர்த்து அருளாயே —4-7-7-

மாலே -பெரியவரே –
கோவலர் கோவே-திரு நாமம் சாத்துகிறார்

கோலால் நிரை மேய்த்த எம் கோவலர் கோவே
சிருஷ்டி சம்ஹாரங்களை சங்கல்ப்பத்தாலே செய்யும் நீ
அந்த ஈஸ்வரத்வ பிடாரால் அன்றிக்கே
கையிலே கோலைக் கொண்டு ஜாதி உசிதமான
வ்ருத்தியைச் செய்தாய் என்று
இடைச் சாதியாக எழுதிக் கொடுத்து இருக்குமத்தாலே
என்னை அனன்யார்ஹனாகப் பண்ணினவனே

நாலாகிய வேதியர் மன்னிய நாங்கூர்
நாலு வகைப் பட்ட வேதத்தை கரை கண்டு இருக்கிற பிராமணர்
மன்னுகிற திரு நாங்கூர்

சேலார் வயல் சூழ் திரு வெள்ளக்  குளத்துள் மாலே –
நீர் மாறாமையாலே சேல்கள் ஆர்ந்து இருந்துள்ள
வயல் சூழ்ந்த
திரு வெள்ளக் குளத்திலே நிற்கிற பெரியோனே

யென் வல் வினை தீர்த்து அருளாயே –
என்னால் பொறுக்க ஒண்ணாத பாபத்தை
போக்கி அருளாய்

————————————————————

இடையரும் இங்கு உள்ள அந்தணரும் இந்த விபூதியில் இருந்தவாறே
நீரும் நம்மை அனுபவித்துக் கொண்டு இருக்கலாகாதோ என்ன
சம்சார பிரளயத்தில் அகப்பட்டுள்ளேன்
நீர் வத்சலன் அல்லையோ
இடையர் உனது குணம் சேஷ்டிதங்களால் மண்டி தரித்து இருக்க
அந்தணர் வேதங்களால் உன்னை மன்னி இருந்தார்
எனக்கு அப்படியான திடல் கிடைக்க வில்லையே –

வராக மதாகி யிம் மண்ணை யிடந்தாய்
நாராயணனே நல்ல வேதியர் நாங்கூர்ச்
சீரார் பொழில் சூழ் திரு வெள்ளக்  குளத்துள்
ஆராவமுதே யடியேற்கு அருளாயே –4-7-8-

வராக மதாகி யிம்மண்ணை யிடந்தாய்
பூமியை பிரளயம் கொள்ள
பிறப்பே பூமியை யிடக்க வல்ல -ஒட்டு விடுவிக்க வல்ல-வராஹமாய்
பூமியை இடந்தாய்-

நாராயணனே –
பிரஜை அறியாதே இருக்கக் கட்டிக் கொண்டு கிடக்கும் தாயைப் போலே
சம்சாரிகள் அறியாதே இருக்க வத்சலன் ஆனவனே-

நல்ல வேதியர் நாங்கூர்ச்
ஆசார பிரதானரான பிராமணர் வர்த்திக்கிற திரு நாங்கூர்

சீரார் பொழில் சூழ் திரு வெள்ளக்  குளத்துள் ஆராவமுதே
ஊரில் ஐஸ்வர்யத்தை கோள் சொல்லா நின்ற பொழில் சூழ்ந்த
திரு வெள்ளக் குளத்திலே அபூர்வ வத் போக்யன் ஆனவனே-
(அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதன் )

யடியேற்கு அருளாயே –
ஆருடைய வஸ்து இங்கன் அலமாக்கிறது
(உனக்கு ஆட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ )

இடையர் உனது குணங்களில் மண்டி இருக்க
பிராமணர் வேதங்களில் மண்டி இருக்க
நான் சம்சாரத்தில் மக்நன் ஆகி நிற்க
அருளாய் -என்கிறார்

———————————————

சம்சாரம் பிரளயம் தீர்க்க
ஸ்ரீ மான் –பிராட்டியை முன்னிட்டுக் கொண்டு -சரணம் புகுகிறார் –

அண்ணன் பெருமாள் மூலவர் கிழக்கு நோக்கி
அலர்மேல் மங்கை
ஸ்ரீ நிவாசன் உத்சவர்
பத்மாவதி தாயார் உத்சவர் பூவார் திரு மா மகள்
ஐப்பசி சுக்ல தசமி கார்த்திகை சுக்ல பாஷா ஏகாதசி தவம் சுவேதன் இருந்தான்
இருவரும் விடாய் தீர்ந்த இடம் -பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்

பூவார் திரு மா மகள் புல்கிய மார்பா
நாவார் புகழ் வேதியர் மன்னிய நாங்கூர்த்
தேவா திரு வெள்ளக் குளத்து உறைவானே
ஆவா வடியான் இவன் என்று அருளாயே –4-7-9-

தேவா -ஸுசீல்யம் கீழே வாத்சல்யம்

பூவார் திரு மா மகள் புல்கிய மார்பா
பூவிலே பிறந்தவள்
பூ அடிக் கொதித்து விரும்பி அணைக்கும் படி
மார்வு படைத்தவனே

நாவார் புகழ் வேதியர் மன்னிய நாங்கூர்த்
கண்ட போது புகழ்ந்து
காணாத போது -என் செய்தோம் -என்று  வெறாதே
இவர்கள் குணங்களை புகழப் பெற்று
நாப் படைத்த பிரயோஜனம் பெற்றோம்
என்னும்படியான பிராமணர் வர்த்திக்கிற திரு நாங்கூர் –

தேவா திரு வெள்ளக் குளத்து உறைவானே
பரம பதத்தில் நின்றும் வந்து
சம்சாரிகள் பக்கலிலே உறைகையாலே
தீப்யமாநனாய் இருக்கிறவனே

ஆவா வடியான் இவன் என்று அருளாயே
சம்சாரத்தில் வர்த்திக்கிறான்
ஐயோ ஐயோ என்று அருள் புரியாயே

————————————-

நல் லன்புடை வேதியர் மன்னிய நாங்கூர்ச்
செல்வன் திரு வெள்ளக் குளத்து உறைவானைக்
கல்லின் மலி தோள் கலியன் சொன்ன மாலை
வல்லர் யென வல்லவர்  வானவர் தாமே —-4-7-10-

அன்பு -பக்தி
நல் அன்பு -பரம பக்தி

நல் லன்புடை வேதியர் மன்னிய நாங்கூரச் செல்வன் திரு வெள்ளக் குளத்து உறைவானைக்
பரம பக்தி உக்தரான பிராமணர் வர்த்திக்கிற
திரு நாங்கூர்ச் செல்வன்
திரு வெள்ளக் குளத்து உறைவானை

கல்லின் மலி தோள் கலியன் சொன்ன மாலை
தோள் வலி போலே கவி பாட வல்ல வலியும்

வல்லர் யென வல்லவர்  வானவர் தாமே
தங்களுக்கு போய்த்தில்லை யாகிலும் -விசதமாக வாராதே போனாலும் –
பிறர் போம் என்னும்படியாக
வல்லவர்கள்
நித்ய ஸூரிகளோடு ஒரு கோவை ஆவர்கள்-

———

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

கண் நா நாட்டார் புகழ் அன்பார் வேதியர் வாழும்
கண் அழிவில் வண் திரு வெள்ளக் குளத்து அண்ணனைப்
பேற்றுக்கு ஆக்கை நீக்க மா முன் சரண் அடையும்
நால் கவியார் சேர்க்க வளம் –37-

கண்ணார் புகழ் -நாவார் புகழ் -நாட்டார் புகழ் -என்று அந்வயிக்கலாம்
கண் –எண் சாண் உடம்புக்கும் தலை பிரதானம் -அதற்கு கண் பிரதானம் -கண் ஞானத்தையும் குறிக்கும்
கண் இடம் -தாம் இருக்கும் இடம் புகழ் பாடும்படி யுள்ளதாய் இருத்தல் –
கண் அழிவில் -திண்ணமாக
வண்மை-திவ்ய தேசத்துக்கும் பெருமாளுக்கும் அன்வயம் –
நால் கவியார் -சதுஷ்கவி ப்ரதானாய பரகாலாய மங்களம் –
ஆசுகவி -சித்திர கவி-மதுர கவி -விஸ்தர கவி –

——————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய திருமொழி-4-6—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

May 5, 2014

நாங்கை 4 திவ்ய தேசங்கள் -நாங்கூர் 7 திவ்ய தசங்கள்
திருக் காவளம் பாடி -மூன்றாவது திவ்ய தேசம்
இங்கும் சரணாகதி -நைமிசாரண்யம் -திரு வேங்கடம் போல் –
ஸக்ருத் என்று சொல்லி இருந்தாலும் 10 இடங்களில் இவரும் 5 இடங்களில்
நம்மாழ்வாரும் சரணாகதி உண்டே

பூ வளம் பொழில்கள் சூழ்ந்த புரந்தரன் செய்த-4-6-8-
தர்ச நீயமான பூக்களை உடைத்தான
பொழிலாலே  சூழப் பட்ட இந்த்ரன் ஏற்றின திரு நாங்கூரிலே
ஸ்வர்க்கத்தில் உண்டான வேண்டப்பாடு
பூமிக்கும் உண்டாக வேணும் என்று
அக் கட்டளையாலே இந்த்ரனாலே சமைக்கப் பட்டது
திரு நாங்கூர் என்று சொல்லக் கடவது

கா பொழில் வளம் நிறைந்த பாடி –
சு மாடு கன்று உடன் த்வாராகாதீசன் சேவை அவனே இங்கே சேவை
ராஜ கோபாலன்
செங்கமல நாச்சியார்
தட வாய்ப் பொய்கை தீர்த்தம்
பாரிஜாதம் -இங்கு வந்து ஒய்வு -கா வளம்
மடவரல் மங்கை தன்னை மார்வகத்து இருத்தினானே–4-6-5-இந்த திவ்ய தேச திருத்தாயார் –
ஆத்ம குணோ பேதையாய்–நித்ய யவ்வனம் –

பிரவேசம் –

ஸூகுமாரராய்  இருப்பார் வழி போகப் புக்கால்
நீர் கண்ட இடம் எங்கும் மேலே ஏறிட்டுக் கொள்ளுமா போலே
இவரும்
தம்முடைய மார்த்தவத்தாலே அவனை ஒழியச் செல்லாமையாலே
(விரஹ அஸஹிஷ்ணுத்வம் )
சம்சாரத்தில் பொருந்தாமை உடையராய்
இவ் விரோதியைப் போக்கி அவனைப் பெறுகைக்கு உடலாக
பல காலும் பிரபத்தி பண்ணா நிற்பராய்த்து

கடுக பலிப்பதொரு உபாயத்தை பற்ற வேணும் இறே
(சாதனாந்தரங்களைப் பற்ற மாட்டார்-மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் அன்றோ )
ஒரு வ்யபிசாரமாதல் -விளம்பமாதல் -இல்லாத சாதனத்தைப் பரிக்ரஹிக்க  வேணும் இறே
அதாகிறது
த்வமேவ உபாய பூதோ மேபவ -என்கை இறே
(சம்ஹிதையிலும் பாஞ்ச ராத்ரத்திலும் உள்ள பிரமாணம் )
அஹம் அஸ்ம்ய அபராதாநாம் ஆலய அகிஞ்சன அகதி-என்கையாலே –

அகிஞ்சன -என்கையாலே
தான் உபாயம் அல்லாமை சொல்லிற்று
அகதி -என்கையாலே
பிறர் உபாயமாக மாட்டார்கள் என்கிறது
தன்னை முற்படச் சொல்லுவான் என் என்னில்
தன் அனர்த்தத்துக்கு ஹேது தானே இறே
இவ்வளவும் வர சம்சரிகைக்கு கார்யம் பார்த்தான் தானே அன்றோ –
இனி பிறர் தானே அனுக்ரஹம் பண்ணுவாரைப் போலே இருந்து
அனர்த்தத்தை விளைக்கும் அத்தனை அல்லது ரஷகர் ஆக மாட்டார்களே

பித்தோபஹதன் உணர்த்தி உண்டான அளவிலே
நானே என் தலை மயிரைப் பறித்துக் கொள்ளுதல்
கண்ணைக் கலக்கிக் கொள்ளுதல் செய்து
என் விநாசத்தைச் சூழ்த்துக் கொள்ளுவன்
அவ்வளவில் நீ எனக்கு ரஷகன் ஆக வேணும் -என்று
தெளிந்து இருப்பான் ஒருவன் கையிலே தன்னைக் காட்டிக் கொடுக்குமா போலே
இருப்பது ஓன்று இறே பிரபத்தி பண்ணுகை யாவது தான்-

மத்யம பதத்தாலே தன்னைக் கழித்து இறே பிரபத்தி பண்ணுவது
ஆகையாலே நானும் எனக்கு இல்லை
பிறரும் எனக்கு இல்லை
நீயே ரஷகனாக வேணும் என்று
திருக் காவளம் பாடி நாயனார் திருவடிகளிலே
சரணம் புகுகிறராய்  இருக்கிறது

கீழ்த் திரு மொழி யோடு இதுக்கு சேர்த்தி என் என்னில்
சரண்யன் ஆனவன் பிராட்டிமாரோடே கூடத்
திரு மணிக் கூடத்திலே வர்த்தியா நின்றான் என்றார்
(தன்னோடும் பிரிவிலா பெருமகள் )
ஸ்ரீ லஷ்மீ பதி இறே  ஆஸ்ரயநீயன் ஆனவன்
இங்கே சரணம் புகுகிறார்

(மடவரல் மங்கை –4-6-5- இந்த திவ்ய தேசத்திலும் உண்டே
தாயார் திருநாமம்
சரணாகதிக்கு முன்பே பிராட்டியைப் பற்ற வேண்டுமே
அதனால் தான் கீழ் உள்ள பாசுரம்

——————————————————–

தா வளந்துலகம் முற்றும் தட மலர்ப் பொய்கை புக்கு
நா வள நவின்று அங்கே ஏத்த நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய்
மா வளம் பெருகி  மன்னு மறையவர் வாழும்  நாங்கைக்
கா வளம் பாடி மேய கண்ணனே களை கண் நீயே -4-6-1-

தாவி ஆனை தேடிற்று என்றும் திரிவிக்ரமன் தாவி உலகம் அளந்தத்தையும் சொல்லிற்று
கா பொழில் வளம் நிறைந்த பாடி –
முதலை காலில் அடர்ப்பட்ட என்றது இங்கு இல்லை
நா -நாக்குக்கு அலங்காரம் நவிலுதலே
நாகபுரி அன்றோ இது –

முதலையாலே இடர்பட்ட யானை தன்னை நோக்கிக் கொள்ளுதல்
அம் முதலை இத்தை நோக்குதல் செய்ததோ
பாதகமானது ரஷகம் ஆக மாட்டாதே
அந்த ஆனையினுடைய ஸ்தானே யாய்த்து நான்
முதலையினுடைய ஸ்தானே யாய்த்து பிறர்

(முதலை எப்படி விரோதியோ அதே போல் தானும் தனக்கு விரோதி தான் என்பதை
ஆணித்தரமாக உணர்த்தவே இந்த வியாக்கியான ஸ்ரீ ஸூக்திகள்
முதலை ரக்ஷிக்குமா என்று கேட்க்கும் ஸ்வரம் போல் நாமும் ரக்ஷகர் அல்லவே
எனவே ஒரே தட்டில் நானும் முதலையும் பாதகம் ரக்ஷகர் அல்லர் –
நாம் தானே முதல் பாதகர் -1000 வருஷம் கால விளம்ப காரணம் –
கையில் தன் முகம் வைக்கும் நையும் என்று அன்னையரும் முனிவர் போல் )

தா வளந்துலகம் முற்றும் தட மலர்ப் பொய்கை புக்கு
இது தன்னையும் ஆனை தனக்கே யாக்கி
ஓர் இடத்தில் ஒரு பூ மலர் காணாமையாலே
பூமிப் பரப்பு அடங்கலும் தாவித் திரிந்தது -என்னவுமாம்
அன்றிக்கே
திரு உலகளந்து அருளின படியை யாக்கி
பூமிப் பரப்பு அடங்கலும் அநாயாசேன அளந்து கொண்டான் -என்னுதல்

நீ பூமி அளந்து கொள்ளுகைக்கு
அந்த பூமியில் உள்ளார் தாங்கள் ஏதேனும் யத்நிதித்தது உண்டோ
ஒரு பூ மலர் காணலாமோ என்னும் ஆசையாலே பூமிப் பரப்பு அடங்கலும் தட்டித் திரிந்து
பின்பு ஒரு பிரதேசத்திலே பெரிய மலரை உடைத்தாய் இருப்பதொரு
பொய்கைகைக் கண்டு -அதிலே
முதலை உண்டு என்று அறியாதே போய்ப் புக்கு அதின் வாயிலே அகப்பட்டு
ஒரு போக்கடி அறியாதே தடுமாறி

நா வள நவின்று அங்கே ஏத்த- நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய்
முள் பாய்ந்தால் அம்மே -என்னுமா போலே
பூர்வ ஜன்ம வாசனையாலே
நாவுக்கு அலங்காரமான திரு நாமத்தைச் சொல்லி

நா வாயில் உண்டே
நமோ நாராயணா என்று ஓவாது உரைக்கும் உரை உண்டே -பொய்கையார் -95–என்னக் கடவது இறே
அதுவும் நாராயணாவோ ஓ மணி வண்ணா –என்று இறே கூப்பிட்டது

அங்கு –
தான் அகப்பட்ட பொய்கையிலே நின்று
திரு நாமத்தைச் சொல்லுகிற ஆனையினுடைய அச்சத்தை போக்கினவனே
ஆனை தான் தனக்கு உதவுதல்
முதலை உதவுதல் செய்ததோ
நீயே அன்றோ மடுவின் கரையிலே
அரை குலைய தலை குலைய வந்து உதவினாய்

(பூவை சமர்ப்பிக்க முதல் இடர்-நடுக்கம் -அத்தை விட
ஆதி மூலமே -வராமல் போல் சுடர் ஜோதி மறையும் -மழுங்காத இத்யாதி -தொழும் காதல் களிறு அளிப்பான்
மூன்று பரீஷைகளில் ஓன்று அன்றோ இவனுக்கு இது )

மா வளம் பெருகி  மன்னு மறையவர் வாழும் நாங்கைக் காவளம் பாடி மேய கண்ணனே-
நிரவதிக சம்பத்தானது
ஆற்று வாயில் நீர் மேன் மேல் நெடுகுமா போல் பெருகி வாரா நிற்பதாய்
அது தனக்கு ஒரு விச்சேதம் இன்றிக்கே இருக்கிற பிராமணர்
வேதைக  சமைதி கம்யனானவனைக் கண்ணாலே கண்டு
வர்த்திக்கிற திரு நாங்கூரிலே
திருக் காவளம் பாடியிலே நித்ய வாஸம் பண்ணுகிற  கிருஷ்ணன் ஆனவனே

மேய –
அவதாரங்களில் வ்யாவ்ருத்தி
ஒரோ கால விசேஷங்களிலேயாய்
தீர்த்தம் பிரசாதித்தது என்னாமே
நித்ய வாஸம் பண்ணுகிற

கண்ணனே களை கண் நீயே
உன்னை உகந்தாரை விட மாட்டாதே வர்த்திக்கிற நீயே
ரஷகன் ஆக வேணும்
அவன் மாம் ஏகம்-என்ற வார்த்தை
இவர் தாமே அருளிச் செய்கிறார்

—————————————-

ஸ்ரீ கஜேந்திர ரக்ஷணம்
பெரிய திருவடி மேல் சங்கு சக்கரம் ஏந்தி பெருமை குறையாமல் வந்து ரக்ஷணம்
இங்கு தன்னை அழிய மாறி ரக்ஷணம்

மண் இடந்து ஏனமாகி மாவலி வலி தொலைப்பான்
விண்ணவர் வேண்டச் சென்று வேள்வியில் குறை இரந்தாய்
துண்ணென மாற்றார் தம்மைத் துலைத்தவர் நாங்கை மேய
கண்ணனே காவளந் தண் பாடியாய் களை கண் நீயே –4-6-2-

துண்ணென-சீக்கிரமாக
தண்-குளிர்ச்சி அதிகம் இந்த பாசுரத்தில் –

மண் இடந்து ஏனமாகி –
காவலாக இட்டு வைத்த கடல் தானே பாதகம் ஆனவாறே
நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வடிவைக் கொண்டு
பூமியை இடந்து எடுத்து

மாவலி வலி தொலைப்பான் –
மகாபலி பக்கலிலே ஔதார்யம் என்று ஒரு குணம் கிடைக்கையாலே
ராவணாதிகளைப் போலே தலையை அறுக்க வேண்டிற்று இல்லை
ஆனாலும் தேவர்களை நெருக்குகையாலே
ராவணன் செயல் உண்டாய் இருந்தது
நிரசிக்க வேண்டி இருக்கச் செய்தே மாட்டிற்று இலன்
அவனை அழிக்க மாட்டாதே தன்னை  அழித்தான் ஆய்த்து-
கொடுத்து வளர்ந்த கையைக் கொண்டு தான் இரந்தான் ஆய்த்து
மஹாபலியினுடைய மிடுக்கை அழிக்கைகாக

விண்ணவர் வேண்டச் சென்று –
அவனாலே நோவு பட்ட தேவர்கள் அர்த்திக்க

சென்று –
அவனுடைய யஞ்ஞ வாடத்திலே சென்று

சென்று வேள்வியில் குறை இரந்தாய்-
தனி இருப்பில் அன்றிக்கே
அவாப்த சமஸ்த காமனான தான் குறைப் பட்டு இரந்தான் ஆய்த்து
தேவர்கள் குறை கண்டவாறே
தான் குறைவாளனாய் இரந்தான் ஆய்த்து

துண்ணென மாற்றார் தம்மைத் துலைத்தவர் நாங்கை மேய
அவ் ஊரில்  உள்ளாருக்கு இந்த்ராதிகள் படி இல்லை யாய்த்து-
அவனை இரப்பாளன் ஆக்கி தாங்கள் வயிறு வளரார்கள் ஆய்த்து-
மகா ராஜரைப் போலே தங்களை அழிய மாறி நோக்குவர்கள்-
அத ஹாரி வர நாத ப்ராப்ய சங்க்ராம கீர்த்திம் நிசி சர பதி மாஜௌ யோஜ யித்வா ஸ்ரமேன
அவன் கண்டு அறியாத பயத்தோடே துணுக்கு  என்னும்படி பண்ணி

கண்ணனே காவளந் தண் பாடியாய் களை கண் நீயே
அவ் ஊரில் உள்ளாரில் ஒருவனாய்
புகுந்து இருக்கிற நீயே
எனக்கு ரஷகனாக வேணும்

———————————————————

கஜேந்திரன் கூப்பிட ரஷித்தான்
இந்திராதி தேவர்கள் கூப்பிட
உலகம் கூப்பிடாமல்
ஸூ க் ரீவன் ரக்ஷகனா சங்கை தீர்த்து ரஷித்தது இதில் –

உருத்தெழு வாலி மார்வில் ஒரு கணை யுருவ வோட்டிக்
கருத்துடைத் தம்பிக்கு இன்பக் கதிர் முடி யரசளித்தாய்
பருத்தெழு பலவும் மாவும் பழம் விழுந்து ஒழுகு நாங்கைக்
கருத்தனே காவளந் தண் பாடியாய் களை கண் நீயே –4-6-3-

எழு உருத்து வாலி -வ்ருத்தி அடையா நின்ற கோபத்தை உடையனான வாலி

உருத்தெழு
உருவென்று சீற்றம்
வெஞ்சினத்த  வேழ வெண்  மருப்பு ஒசித்து உருத்த மா கஞ்சனைக் கடந்து -திருச்சந்த -என்றது இறே
மிக்க சீற்றத்தை உடையனாய்
அகாலத்திலே வந்து அறை கூறுகிறவன் தான் யார் -என்று
பெரிய கிளர்த்தியோடே வந்து தோற்றின
(அங்கே நாமி பலம் இங்கே நாம பலம் திருமாலை வியாக்யானத்தில் )

வாலி மார்வில் ஒரு கணை யுருவ வோட்டிக்
விட்டார் விட்ட அம்புகள் அடங்கலும் வாய் மடிந்து போம் இத்தனையாய்
தனக்கு ஓர் அழிவு இல்லாதபடி இருக்கிற வாலியுடைய திண்ணிய மார்விலே-
ஏகேந மகேஷூணா-என்கிறபடியே கைக்கு எட்டிற்று ஓர் அம்பை வாங்கி
மறுபாட உருவும்படி நடத்தி
ஒசழக்காக -அஸ்ரத்தையாக-விட்ட அம்பு தானே மறுபாடு உருவம்படி நடத்தி
(ஏழு பெயர் உள்ள மலைகள் கடல்கள் பாதாள லோகங்கள் நடுங்கும் படி )

கருத்துடைத் தம்பிக்கு இன்பக் கதிர்முடி யரசளித்தாய்
வாலி செலுத்திப் போந்த ராஜ்யத்தை
அப்படி நடத்துகைக்கு ஈடான கருத்தை உடையவன் -என்னுதல்

வாலி பேர் கேட்க வனம் அடைந்து கிடந்த சுக்ரீவன் தன்னையே (ஆளாக்கி ஜெயிப்பித்தாய் )
(இதே போலவே அர்ஜுனனுக்கு உதவினவன் )

ந காங்ஷே விஜயம் கிருஷ்ண -என்னச் செய்தே இறே
பின்னையும் அவர்களை ஜெயிப்பித்தது உனது திரு உள்ளம் படியே
உன் திரு உள்ளம் உடைய மகா ராஜர்க்கு என்றுமாம்

ஸூக்ரீவம் ஏவ -தத் ராஜ்யே –
சிம்ஹம் நின்ற முழைஞ்சிலே மான் பேடையை கொடு புக்கு
நிறுத்தினால் போலே யாய்த்து
ராகவ –
அளவுடையார் அளவில்லாதார் என்று ஒரு வாசி இன்றிக்கே
ஆரேனுமாக
தாங்கள் கொடுத்தாரது ராஜ்ஜியம்  ஆம்படி
மதிப்புடைய குடியில் பிறந்தவர்

ஸ்ரீ மதா ராஜ ராஜேன லங்காயாம் அபிஷேசித-என்றார்கள் இறே 
அவன் தன் பரிகரமான சுக சாரணர் தாங்களே-

ஸ்ரீ மதா
உனக்கு முடி தந்த ப்ரஹ்மாதிகள் உடைய ஐஸ்வர்யம் போல் அன்றிக்கே
ஊற்று மாறாத சம்பத்து உடையவன் ஆகையாலே காண் அவன் முடி பெற்றது

ராஜ ராஜேன
உனக்கு முடி தந்தவர்களுக்கு முடி கொடுக்கப் பிறந்தவன் ஆகையாலே காண் –

லங்காயாம்  அபிஷேசித –
இனி உனக்கு ஒரு குடி இருப்பு தேடிக் கொள்ளாய்
அவன் பரிகரமாய் இருந்து வைத்து
அவன் மிடுக்கையும் ஐஸ்வர்யத்தையும் காணா நிற்கச் செய்தே
இப்படி சொல்லுகைக்கு அடி
அவர் கையும் வில்லும் கண்டு போந்த நாள் அணுமையாலே
இக் கொசுகு நம்மை என் செய்யப் புகா நின்றதோ  -என்று இவன் மதிப்பற நினைத்து இருந்த படியாலே

இன்பக் கதிர் முடி அரசு அளித்தாய்
இன்பத்தை விளைப்பதாய்
ஆனந்தாவஹமாய்
மதிப்புடைத்தான முடியையும்
அதுக்கு விஷயமான ராஜ்யத்தையும் கொடுத்து அருளினாய்-

பருத்தெழு பலவும் மாவும் பழம் விழுந்து ஒழுகு நாங்கைக்
ஸ்ரீ வாமனன் படி யாய்த்து
அங்கு உள்ளவை எல்லாம் இருப்பது
அதாவது
தோற்றத்தில் கார்யப்பாடு உண்டாய் இருக்கை-
முளைத்த உடனே பல பர்யந்தமாய் ஸ்ரீ வாமனன் உடன் சாம்யம் இவற்றுக்கு

பழம் –
போக்யம் குறைவற்று
போக்தாக்கள் தேட்டமாய்த்து இருப்பது

கருத்தனே –
அசக்தன் சக்தனை அன்றோ
அபாஸ்ரயமாகப் பற்றுவது

காவளந் தண் பாடியாய் களை கண் நீயே
இப்படி சக்தனான நீயே
சந்நிஹிதனான பின்பு
நீயே ரஷகனாக வேணும்

——————————————————

வாலியை எதிர் இடாமல் தம்பிக்கு அரசு அளித்தது கீழ்
இதில் எதிர் இட்டு தம்பிக்கு அரசு அளித்தது —

முனை முகத்து அரக்கன் மாள முடிகள் பத்து அறுத்து வீழ்த்து ஆங்கு
அனையவற்கு இளையவற்கே யரசு அளித்து அருளினானே
சுனைகளில் கயல்கள் பாயச்  சுரும்பு தேனுகரு நாங்கைக்
கனை கழல் காவளந் தண் பாடியாய் களை கண் நீயே –4-6-4

முனை முகத்து –
பூசல் நெற்றியிலே

அரக்கன் மாள –
வஞ்சனத்தாலே பொருது அழிக்கப் பார்க்குமவர்கள்
தங்களைப் போல் அன்றியே
பூசல் நெற்றியிலே அவன் அழியும்படியாக

முடிகள் பத்து அறுத்து வீழ்த்து –
தலைகளை அறுத்து
ஹோமம் பண்ணி
அவ்வழியாலே பூண் கட்டின தலைகளை அறுத்து விழ விட்டு

ஆங்கு –
அந்த யுத்த பூமி தன்னிலே

அனையவற்கு இளையவற்கே-
உயிரையும் உடலையும் பிரித்தால் போலே
இருவரும் இரண்டு இடத்திலே யாம்படி
ப்ராதிகூல்யத்தில் கை வளர்ந்த
அப்படிப் பட்டவனுக்கு  இளையவனுக்கே

யரசு அளித்து அருளினானே-
ராஜத் துரோகத்தைப் பார்த்தால்
சம்பந்தம் உள்ள இடம் எங்கும் அழியச் செய்ய வேண்டி இருக்க
அவன் தம்பிக்கே கொடுத்தான் ஆய்த்து –

அவன் தானும் தோஷத்துக்கு –
தஸ்யாஹம் அநுஜோ ப்ராதா  -என்று இறே சொல்லுவது
மகா ராஜர் அருளப் பாடிட்ட அநந்தரம்
அந்த பரிதியிலே நெஞ்சு செல்லாதே
ஆர் பின்னே பிறந்த என்னை இப்படி அருளப் பாடிடுவது -என்று அதிலே தரைப் பட்டான் இறே

(விபீஷணஸ்து தர்மாத்மா என்று இருக்க
அவன் தானும் -தோஷம் சொல்வது போல்
இவரும் சரணாகதி பண்ணுகிறார் என்பதால் தோஷம் சொல்லிக் கொள்வதை காட்டுகிறார் இங்கே
அபய பிரதானம்-தோஷம் சொல்லியே சரணாகதி என்று கருத்து )

சுனைகளில் கயல்கள் பாயச்  சுரும்பு தேனுகரு நாங்கைக்
சுனைகளிலே வர்த்தியா நின்றுள்ள கயல்கள் ஆனவை
சுரும்புகள் மதுபானம் பண்ணுகிற போதை
ஆர்ப்பரவத்தை அனுசந்தித்து
தன் மேலே விழுகிறவனாகக் கொண்டு பாயா நின்றுள்ள
திரு நாங்கூரிலே

கனை கழல் காவளந்தண் பாடியாய் களை கண் நீயே
ஆபரண ஒலியைச் சொல்லுதல்
செறிந்த வீரக் கழலை உடையவன் என்னுதல்

ஏதத் வ்ரதம் மம-என்கிறபடியே
ரஷிக்கைக்கு   ஈடாக  வீரக் கழலை இட்டு
அதுக்கு ஈடாக சந்நிஹிதனுமாய் இருக்கிற
உன்னை ஒழிய எனக்கு சுபாஸ்ரயம் உண்டோ

———————————————————–

மடவரல் மங்கை-திருத்தாயார் -நித்ய யவ்வனம் –
எதிரிட்ட ஐந்து காளிங்கன் விருத்தாந்தம் –
இஷ்ட பிராப்தி மிதுனம் சேவையும்
அநிஷ்ட நிவ்ருத்தியும் இதில்
கடவுள் -நாலாயிரத்தில் இங்கே தான்

பட வரவுச்சி தன்னில் பாய்ந்து பன்னடங்கள் செய்து
மடவரல் மங்கை தன்னை மார்வகத்து இருத்தினானே
தடவரை தங்கு மாடத் தகு புகழ் நாங்கை மேய
கடவுளே காவளந் தண்  பாடியாய் களை கண் நீயே –4-6-5-

பட வரவுச்சி தன்னில் பாய்ந்து பன்னடங்கள் செய்து
மடுவின் கரையிலே சென்று
உவப்புத் தட்டி ஆர்த்துக் கொண்ட போது
ஆர் தான் என் கலவிருக்கையிலே  நின்று
என்னைத் துரந்து வருகிறான் -என்று சீறி
படம் விரித்துக் கொண்டு வந்து தோற்றின
காளியினுடைய உச்சியிலே இலக்காகப் பாய்ந்து
பரத சாஸ்த்ரத்திலே இத்தைக் கொண்டே இன்னும் வேண்டும் லஷணங்கள்
எழுதிக் கொள்ளலாம் படி பல வகைப் பட்ட கூத்துக்களை ஆடி

மடவரல் மங்கை தன்னை மர்வகத்து இருத்தினானே
ஆஸ்ரித சம்ரஷணத்துக்கும்
அநாஸ்ரித சம்ஹாரத்துக்கும் உறுப்பாக பிராட்டியோடே
நித்ய சம்ச்லேஷமாய் செல்லா நிற்கும்
அன்றியே
அவளோடே அணைகைக்கு   ஈடான  சௌகுமார்யத்தை உடையவன் கிடீர்
பிரதிகூலனான காளியன் தலையிலே பாய்ந்தான் -என்னுதல்
ஆத்ம குணோ பேதையாய்
நித்ய யௌவன  ஸ்வபாவையான
பெரிய பிராட்டியாரைத் திரு மார்விலே வைத்தவனே

தட வரை தங்கு மாடத் தகு புகழ் நாங்கை மேய
அவ் ஊரில் மாடங்களைக் கண்டால்
குல கிரிகள் தீஸ்தமாம் படி இருக்கும் ஆய்த்து
அன்றிக்கே
தடவரை போலே இருந்துள்ள மாடங்கள் தங்கா நிற்பதாய்
சொன்ன சொன்ன ஏற்றங்கள் எல்லாம் தகும்படி இருக்கிற
திரு நாங்கூரிலே

கடவுளே காவளந்தண்  பாடியாய் களை கண் நீயே
கடவுள் என்று பர தேவதை என்ற படியாய்
சர்வாதிகனான நீயே
சந்நிஹிதனாய் இருக்க நான்
வேறு ஒருவரைத் தேடித் போகவோ

——————————————–

சு மாடு கன்று உடன் த்வாராகாதீசன் சேவை அவனே இங்கே சேவை
ராஜ கோபாலன்
செங்கமல நாச்சியார்
தட வாய்ப் பொய்கை தீர்த்தம்
பாரிஜாதம் -இங்கு வந்து ஒய்வு -கா வளம்

ஸர்வம் சஹ-பொறுக்க ஒண்ணாத
முறையிட்ட பூமா தேவிக்காக
செய்த பல சேஷ்டிதங்கள் இதில் –

மல்லரை யட்டு மாளக் கஞ்சனை மலைந்து கொன்று
பல்லரசவிந்து வீழப் பாரதப் போர் முடித்தாய்
நல் லரண் காவின் நீழல் நறை கமழ் நாங்கை மேய
கல் லரண் காவளந் தண் பாடியே களை கண் நீயே –4-6-6-

மல்லரை யட்டு மாளக் கஞ்சனை மலைந்து கொன்று
பெரிய கிளர்த்தியோடே வந்து தோற்றின
சாணூர முஷ்டிகாதி மல்ல வர்க்கத்தைப் பொருது
இளைப்பித்து விடுகை அன்றிக்கே
முடியும்படி அழியச் செய்து –
மல்லர் முடிந்தார் என்று கேட்ட அநந்தரம்
பெரிய சீற்றத்தோடு வந்து தோற்றின
கம்சனை எதிரிட்டு சென்று கொன்று

இது பருவம் நிரம்புவதற்கு முன்பு செய்த கார்யம்
இனி மேல்  பருவம்  நிரம்பிய பின் செய்த கார்யம் சொல்லுகிறது

பல்லரசவிந்து வீழப் பாரதப் போர் முடித்தாய்
பல்லரசு  அவிந்து வீழ
துர் வர்க்கம் அடையக் கூடு கொண்டாய்த்து
துர்யோதநாதிகள் உடன் ஷத்ரியர் என்று பேர் பெற்றவர் அடங்கலும்
முடிந்து போம்படியாக பாரத சமரத்தை நடத்தி
பூ பாரத்தைப் போக்கினவனே-

நல் லரண் காவின் நீழல் நறை கமழ் நாங்கை மேய
செறிந்த நிழலை உடைத்தான சோலை நிழலிலே
சர்வ கந்த -என்கிற வஸ்து நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் என்று
தோற்றும்படியாக
மிக்க பரிமளத்தை உடைய திரு நாங்கூரில்  –
நிறை -பரிமளம்

கல் லரண் காவளந் தண் பாடியே களை கண் நீயே
இவருடைய உபாயம் ஸூரஷிதமாக பெற்றது ஆய்த்து
ஸூரஷிதமான உபாயத்தை   விட்டு
வேறு ஒன்றைத் தேடித் போகவோ

———————————————————

பாரதப்போர் முடிக்க முன்பு செய்த
ஆஸ்ரித பாரதந்தர்யத்தையும்
மல்லரை அட்டத்திற்கு முன் செய்த குவலயா பீட நிரசனம் இதில்

மூத்தவருக்கு அரசு வேண்டி முன்பு தூது எழுந்து அருளி
மாத்தமர் பாகன் வீழ மத கரி மருப்பு ஒசித்தாய்
பூத்தமர் சோலை யோங்கிப் புனல் பரந்து ஒழுகு நாங்கைக்
காத்தனே காவளந் தண் பாடியாய் களை கண்நீயே –4-6-7-

மாத்து -ஆனையின் மேல்

மூத்தவருக்கு அரசு வேண்டி முன்பு தூது எழுந்து அருளி
ப்ராப்தனானவன் இருக்க அப்ராப்தன் தலையிலே முடியை வைக்க ஒண்ணாது
ஜ்யேஷ்டன் ஆனவனுக்கு ராஜ்ஜியம் வேணும் -என்று அதுக்காக முன்பு தூது போய் அருளி

த்ருத்ராஷ்டரன் ஜ்யேஷ்டனாய் இருக்கச் செய்தேயும்
ராஜ்ஜியம் பண்ணுகைக்கு யோக்யதை இல்லாத படி
அவயவத்திலே கைவல்யம் பிறந்து இருக்கையாலே
பாண்டு ராஜ்ஜியம் பண்ணிப் போந்தான்
அவனுடைய அனந்தரத்திலே
எங்களது  இறே ராஜ்ஜியம் என்று தாங்கள் பண்ணத் தொடங்கினார்கள்
அங்கன் மர்யாதா  பங்கம் பண்ண ஒண்ணாது
பிதாவினுடைய ராஜ்ஜியம் புத்திரன் பண்ண வேணும் -என்று
அதுக்காக தூது எழுந்து அருளினான்

மாத்தமர் பாகன் வீழ மதகரி மருப்பு ஒசித்தாய்
தான் முடிந்தாலும் ஆனைக் கழுத்தில் இருப்பு இளகாத படி
அதிலே மிகவும் பொருந்தின பாகனானவன்
விழுந்து முடிந்து போம்படி
மத முதிதமாய் இருந்துள்ள குவலயா பீடத்தின் கொம்பை
அநாயாசேன முறித்தாய்

பூத்தமர் சோலை யோங்கிப் புனல் பரந்து ஒழுகு நாங்கைக்
மிக்க பூக்களை உடைத்தாய்
ஓங்கி இருந்துள்ள சோலையும்
அத்தை வளர்க்கைக்கு ஈடான ஜலமும் பரந்து பாயா நின்றுள்ள
திரு நாங்கூரிலே

காத்தனே காவளந் தண் பாடியாய் களை கண் நீயே —
ஏதத் விரதம் மம -என்கிறபடியே
இத்தை அடைய ரஷிக்கைக்காக காவல்  பூண்டு  இருக்கிறவனே

ரஷிக்கக் கடவதாக ஏறிட்டுக் கொண்டு
அசந்நிஹிதனாய் இருக்கை அன்றிக்கே
திருக் காவளம் பாடியிலே சந்நிஹிதனான
நீயே எனக்கு ரஷகனாக வேணும்

————————————————————

பூ பார நிரசனம்
சத்ய பாமை பிராட்டிக்காக தேவர்கள் அபிமானம் போக்கிய வ்ருத்தாந்தம் இதில்
புரந்தரன் – அவன் ஆணைப் படி இந்திரன் ஏற்படுத்திய நாங்கூர் தேசம் –

ஏ விளம் கன்னிக்காகி இமையவர் கோனைச் செற்று
கா வளம் கடிது இறுத்துக் கற்பகம் கொண்டு போந்தாய்
பூ வளம் பொழில்கள் சூழ்ந்த புரந்தரன் செய்த நாங்கைக்
கா வளம் பாடி மேய கண்ணனே களை கண் நீயே –4-6-8-

ஏவ இளம் கன்னிக்காக
ஏவு -யுத்தம் –

ஏ விளம் கன்னிக்காகி இமையவர் கோனைச் செற்று
ஏவிலே-யுத்தத்திலே
எல்லாம் பட்டும் அபேஷிதம் செய்து கொடுக்க வேண்டும் படி இருக்கிற
ஸ்ரீ சத்ய பாமை பிராட்டிக்காக -என்னுதல்

அன்றிக்கே
சசியும்-இந்திராணியும் – ஸ்ரீ சத்யா பாமை பிராட்டியும் கூட இருக்கச் செய்தே
கல்பக வருஷத்தின் பூ வந்ததாய்
அத்தை அவள் கையிலே வாங்கி
தேவ ஸ்திரீயான அபிமானம் தோற்ற
நீங்கள் மனுஷ்யர் இறே
உங்களுக்கு இது பொறாது
தலை நோம் -என்றாப் போலே சில அநாதர உக்திகளைப் பண்ண
அநந்தரம் அவளும் போந்து
இப்படிச் செய்தால் என்னா
நீ இப்போதே அந்த கல்பக வருஷத்தை கொடு வந்து
என் முற்றத்திலே நட்டுத் தர வேணும்
என்று அவள் ஏவ -என்னவுமாம்

இமையவர் கோனைச் செற்று
தேவ ஜாதிக்கு எல்லாம்
நியாமனாய் இருக்கிற இந்த்ரனை அழியச் செய்து

காவளம் கடிது இறுத்துக் கற்பகம் கொண்டு போந்தாய்-
சோலை அழகை சடக்கென  அழியச் செய்து
கல்பக விருஷத்தை கொண்டு போந்தாய்

பூ வளம் பொழில்கள் சூழ்ந்த புரந்தரன் செய்த
தர்ச நீயமான பூக்களை உடைத்தான
பொழிலாலே  சூழப் பட்ட இந்த்ரன் ஏற்றின திரு நாங்கூரிலே

ஸ்வர்க்கத்தில் உண்டான வேண்டப்பாடு
பூமிக்கும் உண்டாக வேணும் என்று
அக் கட்டளையாலே இந்த்ரனாலே சமைக்கப் பட்டது
திரு நாங்கூர் என்று சொல்லக் கடவது

காவளம் பாடி மேய கண்ணனே களை கண் நீயே
அன்று அப்படி ஸ்ரீ சத்ய பாமை பிராட்டிக்கு உதவினது
எல்லாருக்கும் ஒக்க உதவுகைக்காக
திருக் காவளம் பாடியிலே வந்து
சந்நிஹிதனான நீயே ரஷகனாக வேணும்

———————————————————————–

சரண்யனானவனுடைய ஆஸ்ரித உபயோக -கார்ய உபயோக
விரோதி நிரசனம் அபேக்ஷித பல ப்ரதத்துக்கு உபயோகிகள்
கார்ய ஆபாத குணங்களையும்
ஸுவ்கர்ய ஆபாத குணங்களையும் சொல்லி
இதில் நிகரில் புகழான வாத்சல்யத்தை
நிகரில் பாசம் வைத்த வாத்சல்யம் -சர்வாந்தராத்மா -இதில்

சந்தமாய்ச் சமயமாகிச் சமய வைம்பூதமாகி
அந்தமா யாதியாகி யரு மறை யவையும் ஆனாய்
மந்தமார் பொழில்கள் தோறும் மட மயிலாலு நாங்கைக்
கந்தமார் காவளந் தண் பாடியாய் களை கண் நீயே –4-6-9-

சந்தமாய்ச்
சந்தஸ் ஸூக்கு நியந்தாவாய்

சமயமாகிச்-
இன்னதனை அஷரங்கள் கூடினது அனுஷ்டுபு த்ருஷ்டுபு ஜகதி காயத்ரி பந்தி என்றால் போலே
சொல்லப் படுகிற இந்த வ்யவஸ்தைக்கு நியாமகனாய்

சமய வைம்பூதமாகி-
எல்லாவற்றுக்கும் அடியாய்
வ்யவஸ்த்தித ஸ்வபாவமான பிருத்வ்யாதி பூத பஞ்சகத்துக்கும் நியாமகனாய்

அந்தமாய் –
இவ் வருகு உண்டான கார்ய வர்க்கம் அடைய அழிந்து  கிடந்த அன்று
சதேவ சோம்ய ஏக மேவ அத்விதீயம்-என்கிறபடியே இவை அடங்க தன் பக்கலிலே லயித்து
தான் ஒருவனே என்னும்படி இருக்குமவனாய்

யாதியாகி –
இவற்றை அடைய விபக்தமாக்கி
கார்யம் கொள்ள நினைத்த அன்றைக்கு
அப்படி கார்யம் கொள்ளலாம்படி
இவற்றுக்கு அடங்கலும் காரண பூதனுமாய்

ஆதி யந்தங்களுக்கு நியாமகனாய் -என்றபடி –

யரு மறை யவையும் ஆனாய்
இப்படி கார்யாவஸ்தமாயும் காரணாவஸ்தமாயும்
போருகிறது ப்ரஹ்மம் ஒன்றுமே என்று
வேதங்களால் பிரதிபாதிக்கப் படுபவனுமாய்

மந்தமார் பொழில்கள் தோறும் மட மயிலாலு நாங்கைக்
பொழில்கள் எங்கும் பேடை மயிலானது ஆலியா நின்றுள்ள
திரு நாங்கூரிலே

கந்தமார் காவளந் தண் பாடியாய்
சர்வ கந்த -என்கிற வஸ்து நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் என்று
தோற்றும்படி இருக்கும் ஆய்த்து

களை கண் நீயே
இப்படி நிரதிசய போக்யனான நீயே
ரஷகனாக வேணும்

———————————————————-

மா வளம் பெருகி மன்னு மறையவர் வாழு நாங்கைக்
கா வளம் பாடி மேய கண்ணனை கலியன் சொன்ன
பா வளம் பத்தும் வல்லார் பார் மிசை அரசராகிக்
கோ விள மன்னர் தாழக் குடை நிழல் பொலிவர் தாமே –4-6-10-

மா வளம் பெருகி மன்னு மறையவர் வாழு நாங்கைக்
நிரவதிகமான சம்பத்து மேன்மேலும் கரை புரண்டு
அது ஒரு நாள் வரையில் மாறுகை அன்றிகே
நித்யமாகப் போருகிற பிராமணர்
வேதார்த்த பூதனான சர்வேஸ்வரனை
கண்ணாலே கண்டு வாழா நின்றுள்ள
திரு நாங்கூரிலே

கா வளம் பாடி மேய கண்ணனை
திருக் காவளம் பாடியிலே வந்து நித்ய வாஸம் பண்ணுகிற கிருஷ்ணனை
கிருஷ்ண அவதாரம் பர தசையோடு ஒக்கச் சொல்லலாம் படி இறே இங்குத்தை சௌலப்யம்

கலியன் சொன்ன பா வளம் பத்தும் வல்லார் பார் மிசை அரசராகிக்
ஆழ்வார் அருளிச் செய்த இது தன்னை
வாயாலே சொல்லுமது  தானே பிரயோஜனமாகப் போரும்
என்னும்படி நல்ல சந்தஸ்ஸை உடைத்தான
இப் பத்தையும் வல்லவர்
பா வளம் பத்தும் வல்லார் பூமியிலே அரசராகி
(பா வளம் பா இனம் என்றபடி )

கோ விள மன்னர் தாழக் குடை நிழல் பொலிவர் தாமே
மோஷத்தை பலமாகச் சொல்லில் அதிகாரிகள் கிடையாது -என்று
அபிமத சாதனம் என்னவே கற்பர்கள்
பின்னை மோஷத்தில் கொடு போய் மூட்டுகிறோம் -என்று
ஐஸ்வர்யத்தை பலமாகச் சொல்லிற்று-

————

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

தா வளந்து தான் உழலும் ஊன் குரம்பை தான் ஒழிய
காவல் தானும் பிறரும் அன்று என்று காவளம்
பாடி கண்ணன் பாதம் அடையும் பரகாலன் பாதம்
நாடி நீர் நீங்கும் இடுக்கண் –36-

தாவளந்து –தாவி அளந்து -தட்டித்திரிந்து -பல் யோனிகள் தோறும் புகுந்து ஆக்கையில் ஆப்புண்டு தடுமாறும் உயிர்
பெருமாள் திருவடி அடையும் ஆழ்வார் திருவடி அடைவதே நமக்கு கர்த்தவ்யம் –

————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய திருமொழி-4-5—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

May 5, 2014

ஸ்ரீ கஜேந்திர வரதனே இங்கு சேவை
தொடங்கும் பொழுது மணி மாடக்கோயில் பார்த்தோம்
இங்கும் மணிக்கூடம்
மணியான எம்பெருமானே சேவை
பெரிய திருவடிக்கு சேவை இங்கு
கஜேந்திர மோக்ஷம்
கோப பிரசாதங்கள்
மணி -திரு -கோயில் அமைப்பும் மணி போல்
தேவர்களுக்காக -அமிர்தம் கொடுக்க வேஷம் -சந்திரன் சூர்யன் காட்டிக் கொடுக்க
ராகு கேது -சாயா க்ரஹம் -கற்பனை
நேர் எதிராக சுத்தும்
கீழ் திருத் தெற்றி அம்பலத்தில் சூர்யன்
இங்கே சந்திரன் ஒளிந்து
நான்கு திருக்கைகள்
சந்த்ர புஷ்கரணி
கனக விமானம் –

தூம்புடை பிரவேசம்

சர்வ நிர்வாஹகனாய்-( 7-8-9-பாசுரங்கள் )
சர்வ அபேக்ஷித ப்ரதனாய் ( 6 பாசுரம்-சர்வ ரக்ஷகத்வத்தால் வந்த சர்வ அபேக்ஷித ப்ரதன்)
ஆஸ்ரித விரோதி நிரசன சீலனாய்-
விரோதியைப் போக்கும் இடத்தில் தானே வந்து அவதரித்து போக்குமவன் ( 2-3-4-5-பாசுரங்கள் )
திரு மணிக் கூடத்தில் நின்றான் என்று
க்ருதஞ்ஞர் ஆகையாலே -இவை எல்லாம் தமக்கு செய்கைக்கு
வந்து இருக்கிறான் என்று ஹ்ருஷ்டர் ஆகிறார்

சர்வ நிர்வாகத்வமும் சர்வ ரக்ஷகமும் தமக்காக என்று நினைக்கும்
பரந்த திரு உள்ளம் -அரங்கம் ஆளி என் ஆளி போல்

———————————————————-

தூம்புடைப் பனைக்கை  வேழம் துயர் கெடுத்தருளி மன்னு
காம்புடைக் குன்றம் ஏந்திக் கடு மழை காத்த எந்தை
பூம் புனல் பொன்னி முற்றும் புகுந்து பொன் வரண்ட வெங்கும்
தேம பொழில் கமழ்  நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே–4-5-1-

கடு மழை-கல் மாரி -கல் எடுத்து கல் மாரி காத்தான் அன்றோ –
முற்றும் புகுந்து-முற்றம் புகுந்து-பாட பேதம் –

தூம்புடைப் பனைக்கை  வேழம் துயர் கெடுத்தருளி
துளையை உடைத்தாய்
பனைத்தாள் மத களிறு அட்டவன் பாதம் பணிமினோ -திருவாய் மொழி -4-1-4-என்னுமா போலே
பனை போலே இருந்துள்ள கையை உடைய ஆனையின்  உடைய
துயர் கெடுத்தருள்

பணைக் கை என்ற பாடமாகில்
(பருமனனான )அகப்பட்டாரை இடையற (இடையற –நடு ஓடிய) வீசும் கையை உடைய ஆனை-
பணைக்கை– தழைக் கை  -அத்தால் பருமனை சொல்லுகிறது

இத்தால் என்றும் மதித்துப் போந்த இத்தனை
பரிபவப் பட்டு அறியாத ஆனை என்று கருத்து

மன்னு காம்புடைக் குன்றம் ஏந்திக் கடு மழை காத்த எந்தை -காம்பு -மூங்கில்
பூமியிலே வேர் பாய்ந்த
மூங்கிலை உடைத்தான மலையை ஏந்தி
பரிஹரிக்கப் போகாத மழையைக் காத்த
என் ஸ்வாமி

பூம் புனல் பொன்னி –
பூத்த புனலை உடைத்தான பொன்னி யானது
அழகிய என்றுமாம்

முற்றும்  புகுந்து –
ஒரு காலால் (வாய்க்காலால் )புகுருகை அன்றிக்கே
அடையப் பரந்து புகுந்து

முற்றம் என்ற பாடமாகில்
வெளி உள்ள இடம் எல்லாம் புகுந்து

பொன் வரண்ட வெங்கும் –
கிடந்த பொன்னை எல்லாம் உருட்டிக் கொண்டு தள்ள

தேம் பொழில் கமழ்  நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே
நீர் மாறாதே பாய்கையாலே
பொழில் ஆனது பரிமளம் கமழா நின்ற திரு நாங்கூர்

———————————————————-

தனக்கும் –பூதநா நிரஸனம்
தனது தேவியான சீதாபிராட்டி இருவருக்கும் உதவினவன்

கவ்வை வாள் எயிறு வன் பேய்க் கதிர் முலை சுவைத்து இலங்கை
மன்னிய விடும்பை தீரக் கடுங்கணை துரந்த வெந்தை
கொவ்வை வாய் மகளிர் கொங்கைக் குங்குமம் கழுவிப் போந்த
தெய்வ நீர்க் கமழு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே -4-5-2-

கவ்வை-ஆர்ப்பு அரவம் -பேர் ஒலி
இடும்பை-துர் வர்க்கம் இடைவிடாமல் மன்னிய துக்கம் –தாரித்யம் என்றுமாம்
தெய்வ நீர்-விலக்ஷணம் அப்ராக்ருதம் விரஜா போல் இதுவும் –

கவ்வை வாள் எயிறு வன் பேய்க்கதிர் முலை சுவைத்து –
கவ்வை -பேரொலியை உடையளாய்
யசோதைப் பிராட்டி விக்ருதையாய்
வாயாலே ஏத்தும் என்று கொண்டு
அவளை அனுகரித்து ஆர்ப்பரவத்தை உடையளாய்
வாள் போலே இருந்த எயிற்றை உடைய
திண்ணிய பேய்ச்சி உடைய
விஷத்தாலே விம்மிப் புகரை உடைய முலையைச் சுவைத்து

இலங்கை மன்னிய விடும்பை தீரக் கடுங்கணை துரந்த வெந்தை
இலங்கைக்கு நித்யமாய் இருப்பதொரு தாரித்ர்யம் உண்டு
புற்று பாம்பு அறாதாய்  இருக்குமா போலே
துர்வர்க்கமான ராஷச ஜாதி மாறாதே  இருக்கை ஆகிற தாரித்ர்யம் தீர

ஓர் ஊருக்கு நன்மை யாவது -வஸ்து பூதர் வர்த்திக்கை
கீழ்மை யாவது -அவஸ்துக்கள் வர்த்திக்கை

கூர-என்ற பாடம் ஆய்த்தாகில் –
இடும்பை மிக-
அத்தை அம்பாலே போக்கின எந்தை

கடுங்கணை துரந்த வெந்தை –
பிரதி பஷத்தின் மேலே
கண் பாராதே அம்பை விட்ட ஸ்வாமி

வவ்விய இடும்பை தீர -என்ற பாடம் ஆய்த்தாகில்
இலங்கையைப் பற்றின துக்கமானது போம் படியாக
ராவண சம்பந்தத்தால் வந்த துக்கம் போம்படியாக

கொவ்வை வாய் மகளிர் கொங்கைக் குங்குமம் கழுவிப் போந்த
கோவைப் பழம் போலே இருக்கிற வாயை உடையரான
ஸ்திரீகள் உடைய
கொங்கையில் குங்குமத்தை–குங்குமப் பூவை – கழுவிக் கொண்டு போந்து

தெய்வ நீர்க் கமழு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே
அப்ராக்ருதமான நீரானது-காவேரீ விரஜா சேயம்-என்று இருக்கையாலே அப்ராக்ருதமான நீர்
பரிமளத்தைப் புறப்பட விடா நின்றுள்ள
திரு நாங்கூர்

————————————————————-

இதில் நப்பின்னை பிராட்டிக்கு செய்த -எருதுகளை அடக்கி
மருத -கேசி-நிரசித்த-
திரியக் ஸ்தாவரங்களை நிரசித்த

மாத் தொழில் மடங்கச் செற்று மருதிற நடந்தவன் தாள்
சேத் தொழில் சிதைத்துப் பின்னை செவ்வித் தோள் புணர்ந்த வெந்தை
நாத் தொழில் மறை வல்லார்கள் நயந்தறம் பயந்த  வண் கைத்
தீத் தொழில் பயிலு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே-4-5-3

மாத் தொழில் மடங்கச் செற்று மருதிற நடந்த வன் தாள்
கேசியினுடைய வியாபாரம் அடங்கும்படி நிரசித்து
நடை கற்கிற போதே
மருதுகள் இற்றுப் போம்படி நடை கற்று

வன் தாள்
வலிய தாளை உடைத்தாய் இருக்கிற

சேத் தொழில் சிதைத்துப் பின்னை செவ்வித் தோள் புணைந்த வெந்தை
சேக்கள் உடைய வியாபாரத்தை
மணல் கொட்டகம் அழிக்குமா போலே அழித்து
நப்பின்னை பிராட்டியார் உடைய
செவ்வியை உடைத்தான தோள்களோடு
புணர்ந்த என் ஸ்வாமி-

நாத் தொழில் மறை வல்லார்கள் நயந்தறம் பயந்த  வண் கைத்
நாவுக்குத் தொழிலான மறை வல்லார்கள்
ஆதரித்துக் கொண்டு தர்மத்தை உத்பாதித்த
உதாரமான கையைக் கொண்டு

தீத் தொழில் பயிலு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே
தீத் தொழில் பயிலா நிற்பார்கள் ஆய்த்து
வ்ருத்தவானாய்ப் போந்தவன் வ்ருத்த ஹீனன் ஆனான் -என்னுமா போலே
தீத் தொழில் என்ற த்வனி என்ற விசேஷத்தைப் பற்றி சொன்ன வார்த்தை -என்று அருளிச் செய்தார்
தீயினுடைய தொழில் என்ற படி
(எதுகை மோனைக்காக த்வனி -தீம் தொனி என்னாமல் -தீ தொனி
தீ தொழில் எரித்தலைச் சொல்லாமல் -அத்யயனம் பண்ணி ஹோமாதிகள் )

அத்யயனத்தைப் பண்ணி
அத்யயனத்தால் விதேயமாய் இருக்கிற கர்மங்களையும்
அனுஷ்டியா நிற்பார்கள் ஆய்த்து

அத்யயனத்தைப் பண்ணி ஆன்ருசம்சய பிரதாணர் ஆகையாலே
ஆர்த்த விஷயங்களிலே இரக்கத்தை உடையராய்
தர்மங்களை உத்பாதிக்கிற உதாரமான கையைக் கொண்டு
அக்னி த்ரயங்களையும் அனுஷ்டியா நிற்பார்கள்
(குளித்து மூன்று அனலை ஓம்பும் -அக்னி ஹோத்ராதிகள் –
செய்த வேள்வியர் -செய்வதற்கு காரணம் லோகம் இவர்களைப் பார்த்து பின்பற்ற –
லோக ஸங்க்ரஹம் அர்த்தமாக என்றபடி )

அவ் ஊரில் உள்ளாருக்கு  அத்யயனமும் அனுஷ்டானமும்
யாத்ரையாய் இருக்குமா போலே யாய்த்து
அவனுக்கு விரோதி நிரசனம் யாத்ரையாய் இருக்கும் படி

———————————————————

இதில் வடமதுரை பெண்களுக்கு உதவின வ்ருத்தாந்தம்

தாங்கரும் சினத்து வன் தாள்  தடக்கை மா மருப்பு வாங்கிப்
பூங்குருந்து ஒசித்துப்  புள் வாய் பிளந்து எருது அடர்த்த எந்தை
மாங்கனி நுகர்ந்து மந்தி வந்து வண்டிரிய வாழைத்
தீங்கனி நுகரு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே-4-5-4

தாங்கரும் சினத்து வன் தாள்  தடக்கை மா மருப்பு வாங்கிப்
ஒருவரால் தாங்க அரிதான
சினத்தை உடைத்தாய்
வலிய தாளை உடைத்தாய்
பெரிய கையையும் உடைத்தாய்
இருக்கிற குவலயா பீடத்தின் உடைய
பெரிய கொம்புகளை அநாயாசேன
குப்பைக் கீரை போலே வாங்கி
(தாங்கரும் சினத்து வன் தாள்  தடக்கை மா மருப்பு நான்கு அடை மொழிகள்
இவருக்கு பயம் மிக்கு இருப்பதைக் காட்ட )

பூங்குருந்து ஒசித்துப்  புள் வாய் பிளந்து எருது அடர்த்த எந்தை
அடியே பிடித்து தலை அளவும் செல்லப் பூத்து
தர்ச நீயமாம்படி  நின்ற குருந்தை முறித்து
பகாசுரன் உடைய வாயைக் கிழித்து
எருதுகள் ஏழையும் அடர்த்த என் ஸ்வாமி

மாங்கனி நுகர்ந்து மந்தி வந்து வண்டிரிய வாழைத் தீங்கனி நுகரு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே
மாம்பழத்தை புஜித்த மந்தியானது
இனி ரசாந்தரத்திலே போது போக்க வேணும் என்று பார்த்து
மது பானத்துக்காக படுத்த வண்டுகள் ஆனவை
சிதறிப் போம்படியாக
வாழையினுடைய இனிய கனியை புஜியா நின்றுள்ள

அவன் விரோதி நிரசனத்தால் அல்லது
போது போக்க மாட்டாதாப் போலே யாய்த்து
இவையும் ரச அனுபவத்தால் அல்லது
போது போக்க மாட்டாதே  இருக்கும் படியும்

———————————————

கீழ் மூன்றும் இதுவும் விரோதி நிரசனம் –
சூர்ப்பணகை -அங்க பங்கம் இதில் –

கருமகள் இலங்கையாட்டி பிலம் கொள் வாய் திறந்து தன் மேல்
வருமவள் செவியும் மூக்கும் வாளினால் தடித்த வெந்தை
பெருமகள் பேதை மங்கை தன்னொடும் பிரிவிலாத
திருமகள் மருவு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே –4-5-5-

பெருமகள் -ஸ்ரீ தேவி
பேதை-ஆஸ்ரித தோஷம் அறியாத பூமி பிராட்டி
தனிக்கோயில் நாச்சியார் இல்லை -பிரிவே இல்லாத
கஜேந்திர மோக்ஷம்
கோப பிரசாதங்கள்
மணி -திரு -கோயில் அமைப்பும் மணி போல்
தேவர்களுக்காக -அமிர்தம் கொடுக்க வேஷம் -சந்திரன் சூர்யன் காட்டிக் கொடுக்க
ராகு கேது -சாயா க்ரஹம் -கற்பனை
நேர் எதிராக சுத்தும்
கீழ் திருத் தெற்றி அம்பலத்தில் சூர்யன்
இங்கே சந்திரன் ஒளிந்து
நான்கு திருக்கைகள்
சந்த்ர புஷ்கரணி
கனக விமானம்

அநந்யா -பாஸ்கரன் -பிரபை போல் சீதாபிராட்டி மேல் வந்தாலும் தன் மேல் தானே
தடித்த வெந்தை=ராமஸ்ய தஷினோ பாஹு

கருமகள் இலங்கையாட்டி பிலம் கொள் வாய் திறந்து
தண்ணிய ஸ்திரீ
ராவணன் உடன் பிறந்தவள் ஆகையாலே
இலங்கையில் உள்ளார் அடையக் கொண்டாடும்படி இருக்கிறவள்
பிலம் போலே இருக்கிற வாயைத் திறந்து

தன் மேல் வருமவள் -அனன்யை யானவளை நோக்கி வந்த படியாலே
தன் மேலே வந்ததாய் இருந்தபடி

செவியும் மூக்கும் வாளினால் தடித்த வெந்தை
ஏறிட்டுக் கொடு வந்த துர்மானத்தைப் போக்கி
தானான படியே யாக்கி விட்ட படி

இவனை புஜிக்கைக்கு விரோதி இவள் இறே என்று
பிராட்டியை நலிவதாக
வாயை அங்காந்து கொண்டு வந்தாள் ஆய்த்து    –
அவளுடைய செவியையும் மூக்கையும்
வாளாலே அறுத்த என் ஸ்வாமி –
(இரண்டாம் பாட்டில் கடும் கணை விட்டதுக்கு இவள் தானே காரணம்
இத்தால் அநன்யாரை அநாதரித்து -தன்னை ஆசைப்பட்டாருக்கு முகம் கொடாதவன் என்றது காட்டிற்று
இந்த அர்த்தத்தை எனக்கு அறிவித்தார் -பாகவத அபசாரம் குரூரம் என்றவாறு )

பெருமகள் பேதை மங்கை
நிருபாதிக ஸ்த்ரீத்வத்தை உடையவள் -பெருமகள்
பிறர் குற்றம் அறிகைக்கு அறிவு இல்லாதபடி இருக்கிறவள் -பேதை -மங்கை
ஸ்ரீ பூமிப் பிராட்டியை சொன்னபடி (வஞ்சப்புகழ்ச்சி )

தன்னொடும் பிரிவிலாத திருமகள் மருவு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே
அகலகில்லேன் இறையும் -என்கிறபடியே
ஒருகாலும் பிரியக் கடவள் அன்றிக்கே இருக்கிற
பெரிய பிராட்டியார்
ஸ்ரீ பூமிப் பிராட்டியாரும் பெரிய பிராட்டியாரும்
நித்ய வாசம் பண்ணா நின்றுள்ள
திரு நாங்கூர்

——————————————-

அவதாரிகை
தனக்குப் போராத ஜன்மங்களிலே வந்து பிறந்து
ரஷகன் ஆனவன்
தானான நிலையிலே காணலாம் படி
திரு மணிக் கூடத்திலே
வந்து சந்நிஹிதன் ஆனான்
என்கிறார்
(கீழே சொன்ன ராம அவதாரங்கள் பரத்வம் என்னலாம் படி உள்ள மீனாதி அவதாரங்கள் அனுபவம் )

கெண்டையும்  குறளும் புள்ளும்  கேழலும் அரியும் மாவும்
அண்டமும் சுடரும் அல்லா ஆற்றலும் ஆய வெந்தை
ஒண் திறல் தென்னனோடே வடவரசு ஓட்டம் கண்ட
திண் திறலாளர் நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே  –4-5-6-

ஆய வெந்தை-பிரகாரி பிரகார பாவம் -சர்வ நிர்வாகத்தவம் சொல்லிற்று இத்தால்
அதனாலே சர்வ அநிஷ்ட நிவர்த்தகம் கீழ் சொல்லி
இஷ்ட பிரதன் மேல்
வடவரசு–பாண்டிய தேசத்துக்கு வடக்கான சோழ அரசு

கெண்டையும்  குறளும் புள்ளும்  கேழலும் அரியும் மாவும்
மத்ஸ்யமும்
ஸ்ரீ வாமனனும்
அன்னமும்
ஸ்ரீ வராஹமும்
ஸ்ரீ நரசிம்ஹமும்
ஸ்ரீ ஹயக்ரீவரும்

அண்டமும் சுடரும் அல்லா ஆற்றலும் ஆய வெந்தை
விபூதியும்
அது தனக்கு பிரகாசம் பண்ணக் கடவ சந்திர சூர்யர்களும்
மற்றும்
யத்யத் விபூதி மத் சத்வம் ஸ்ரீ மதூர் ஜிதமேவவா -என்கிற படியே
(ஸ்ரீ கீதை -உயர்ந்த பதார்த்தங்கள் எல்லாம் எனது தேஜஸ்ஸின் சிறு திவலையே )
விபூதியில் உச்சரிதமான பதார்த்தங்களும்
எல்லாம் தான் என்று சொல்லலாம்படி இருக்கிறவன்
வலி  உடைத்தாய்
நித்தியமான பதார்தங்களாய் நின்ற என் ஸ்வாமி-

ஒண் திறல் தென்னனோடே
ஒள்ளிய திறலை  உடைய பாண்டியன் ஒடும்படியாக

வடவரசு ஓட்டம் கண்ட
வடவரசான ராஜாவை ஓட்டம் கண்ட
(ப்ராஹ்மணர் பலம் க்ஷத்ரியர் பலத்தை விட பெரியது தானே )

திண் திறலாளர் நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே
திண்ணிய மிடுக்கையும் உடைய பிராமணர் வர்த்திக்கிற

அவன் அவதரித்து செய்தது எல்லாம் தாங்களே செய்ய வல்லார் ஆய்த்து
அவ் ஊரில் உள்ளார் இருப்பது
(ஈஸ்வரன் அவதரித்து செய்த ஆனைத் தொழில்கள் எல்லாம் பாகவத அபசாரம் பொறாமையால்
இவர்களே செய்ய வல்லவர்கள் )

———————————————

பரார்தமான பதார்த்தங்களுக்கு நியந்தாவான
சர்வேஸ்வரன்
இங்கே வந்து வர்த்தியா நின்றான்
என்கிறார்

குன்றமும் வானும் மண்ணும் குளிர் புனல் திங்களோடு
நின்ற வெஞ்சுடரும் அல்லா நிலைகளுமாய வெந்தை
மன்றமும் வயலும் காவும் மாடமும் மணம் கொண்டு எங்கும்
தென்றல் வந்துலவு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே–4-5-7-

அல்லா நிலைகளுமாய–27 நக்ஷத்திரங்கள் -வாழ்க்கை நிலையை அறிவிப்பதே இவைகள் தானே
மாடமும் மணம்-பெண்கள் பத்ம கந்தினிகள் -இயற்கையிலே மணம் உள்ளவர்கள் –

குன்றமும் வானும் மண்ணும் குளிர் புனல் திங்களோடுநின்ற வெஞ்சுடரும் அல்லா நிலைகளுமாய வெந்தை
சேதனருக்கு போக்ய போக உபகரண போக ஸ்தானங்களைப்
பண்ணிக் கொடுக்கக் கடவதான மலைகளும்
அவர்களுக்கு அவகாச பிரதானம் பண்ணுகிற ஆகாசமும்
போக்யங்களைத் தரக் கடவ தான பூமியும்
சைத்யத்தைப் பண்ணக் கடவதான  ஜலமும்
சந்திரனும்
அவனால் வந்த வவ்வலை ஆற்றும் ஆதித்யனும்
சேதனர் உடைய ஜீவனத்துக்கு உறுப்பான நன்மை தீமைகளை
தெரிவியா நின்றுள்ள நஷத்ரங்களுமாய் நின்ற

மன்றமும் வயலும் காவும் மாடமும் மணம் கொண்டு எங்கும் தென்றல் வந்துலவு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே
மன்றிலே தானே சோலை உண்டாய் இருக்குமே
வயலிலே பொய்கைகளும்  உண்டாய் இருக்குமே
சோலையிலும் மாடங்களிலும் ஸ்திரீகள் இருப்பர்களே
அவ்வோ இடங்களில் உண்டான பரிமளத்தைக் கொண்டு வந்து எங்கும்
தென்றல் உலவா நின்றுள்ள -என்னுதல்
எங்கும் உண்டான பரிமளத்தைக் கொண்டு வந்து
உலவா நின்றுள்ள -என்னுதல்

————————————————————–

சர்வ நிர்வாகத்தவம் விளக்கமே கீழ்ப் பாட்டும் இதுவும் மேல் பாட்டும்

த்யாஜ்யமாயும் உபாதேயமாயும் பௌதிகமாயும் உள்ள
பதார்த்தங்களுக்கு நியந்தா வானவன்
இங்கே வந்து வர்த்தியா நின்றான்
என்கிறார்

(பொய்யும் மெய்யும் சொல்லித் திரிவாராய்
ஜீவிப்பாரும் முடிவாராயுமாய்
நாடு கிடப்பது எதனால்
சேதனர் கர்மாதீனமாக அவன் நிர்வகிக்கிறார் என்றபடி )

சங்கையும் துணிவும் பொய்யும் மெய்யும் இத்தரணி ஓம்பும்
பொங்கிய முகிலும் அல்லாப் பொருள்களுமாய வெந்தை
பங்கயம் உகுத்த தேறல் பருகிய வாளை பாயச்
செங்கயல் உகளு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே -4-5-8-

வாளை-பெரிய மீன்
கயல் -சிறிய மீன் –

சங்கையும் –
சம்சயாத்மா விநச்யதி -ஸ்ரீ கீதை 2 அத்யாயம் -41–என்கிறபடியே
விநாசத்தைப் பண்ணக் கடவதான சம்சயமும்
(அவனுக்கு இங்கும் அங்கும் ஸூ கம் இல்லை )

துணிவும்-
வ்யவசாயாத் மிகாபுத்திரேகா—2-41-என்கிற துணிவும்
(ஒருபடிப்பட்டு முன்னேறுவான் -)

பொய்யும் –
பிரயோஜன நிரபேஷமாகச் சொல்லும் அஹிதமான பொய்யும்
(அஹிதமான பொய் கூடாதே )

மெய்யும் –
ஹித ரூபமான மெய்யும்

இத் தரணி ஓம்பும் பொங்கிய முகிலும் –
பிரயோஜன நிரபேஷமாக பூமியை ரஷிக்கக் கடவதாய்
விஸ்ருதமாய் இருக்கிற மேகங்களும்

அல்லாப் பொருள்களுமாய வெந்தை
மற்றும் இடி மின் தொடக்கமானவை எல்லா வற்றுக்கும் நியந்தாவான சர்வேஸ்வரன்

பங்கயம் உகுத்த தேறல் பருகிய வாளை பாயச்
தாமரைப் பூவானது நிறைந்து
உகுத்த தேனைப் பருகின வாளையானது
களிப்பாலே பாய

செங்கயல் உகளு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே
சிவந்த கயலானது அஞ்சி
ஸ்வ ஸ்தானத்தில் நின்றும்
பேரா நின்றுள்ள  திரு நாங்கூர்

வாளை -பெரிய  மீன்
கயல் -சிறிய மீன்

——————————————–

அவதாரிகை
நிஷித்த அனுஷ்டானம்
விஹித அனுஷ்டானம்
மோஷம்
மோஷத்துக்கு உபயோகியான ஆத்ம குணங்கள்
அதுக்கு விரோதியான அநாத்ம குணங்கள்
இவற்றுக்கு எல்லாம் நியந்தா வானவன்
இங்கே வந்து வர்த்தியா நிற்கிறான்
என்கிறார்

பாவமும் அறமும் வீடும் இன்பமும் துன்பமும் தானும்
கோவமும் அருளும் அல்லாக் குணங்களும் ஆய வெந்தை
மூவரில் எங்கள் மூர்த்தி இவன் என முனிவரோடு
தேவர் வந்து இறைஞ்சு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே-4-5-9-

பாவமும் அறமும் –
நிஹித அனுஷ்டானமும் விஹித அனுஷ்டானமும்

வீடும் இன்பமும் –
மோஷமும் சுகமும்

துன்பமும் தானும் –
இது தான் நிலை இல்லாமையாலே வரக் கடவதான துக்கமும்

கோவமும் –
அறிவுடையாருக்கு த்யாஜ்யமான கோவமும்

அருளும் –
பிரசாதமும்

அல்லாக் குணங்களும் ஆய வெந்தை –
மற்றும் சத்வாதி குணங்களும்  எல்லாம்
தான் என்று சொல்லலாம் படி இருக்கிற என் ஸ்வாமி
(வெல்லும் வ்ருத்த ஸ்வபாவன் திரு விண்ணகர் அப்பன் )

மூவரில் எங்கள் மூர்த்தி இவன் என –
ப்ரஹ்மாதிகளுக்கு அந்தராத்மாவாக நின்றும்
ஸ்வேன ரூபேண நின்றும்
ரஷித்துப் போருகையாலே ஜகத்துக்கு பிரதானராயத் தோற்றுகிற மூவரில்
சத்வ பிரசுரரான எங்களுக்கு ஆஸ்ரயனியன் இவன் என்று

முனிவரோடு தேவர் வந்து இறைஞ்சு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே
சனகாதிகளோடே தேவர்கள் வந்து
ஆஸ்ரயிக்கும் படி  நிற்கிற திரு நாங்கூர்

(சேதனர் -கர்மாதீனமாக -இருக்க நிர்வாகம் இவனே -பிரதம பிரயத்தன அபேக்ஷிதனாயக்
கொண்டு அவற்றுக்கும் அவனே நிர்வாகனன் )

————————————————

சர்வ அபேக்ஷித ப்ரதன் என்கிறார்
சர்வ நிர்வாகன் -சர்வ அநிஷ்ட நிவ்ருத்தி -இஷ்ட பிராப்தி
அவனைப் போல் இந்த பத்தும் செய்து அருளும் என்கிறார்

திங்கள் தோய் மாட நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானை
மங்கையர் தலைவன் வண்டார் கலியன் வாயொலிகள் வல்லார்
பொங்கு நீருலகம் ஆண்டு பொன்னுலகு ஆண்டு பின்னும்
வெங்கதிர்ப் பருதி வட்டத்தூடு போய் விளங்குவாரே –4-5-10-

திங்கள் தோய் மாட நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானை
சந்திர பதத்தளவும் செல்ல ஓங்கின
மாடங்களை உடைத்தான
திரு நாங்கூரிலே திரு மணிக் கூடத்திலே
வந்து சந்நிஹிதன் ஆனவனை

மங்கையர் தலைவன் வண்டார் கலியன் வாயொலிகள் வல்லார்
திரு மங்கையில் உள்ளாருக்கு பிரதானர்
வண்மையை உடைத்தான தாரை உடையரான
ஆழ்வார் அருளிச் செய்த இத்தை  வல்லவர்கள்

பொங்கு நீருலகம் ஆண்டு பொன்னுலகு ஆண்டு பின்னும்
கடல் சூழ்ந்த பூமியை ஆண்டு
ஸ்வர்க்கத்தை நிர்வஹித்து

வெங்கதிர்ப் பருதி வட்டத்தூடு போய் விளங்குவாரே    –
அதுக்கு மேலே ஆதித்ய மண்டலத்தின்
நடுவிட்டு அர்ச்சிராதி மார்க்கமே போய்
பரமபதத்திலே சென்று ஸ்வ ஸ்வரூபத்தை பெற்று
உஜ்ஜ்வலராவர்

சர்வ நிர்வாஹகன் -சர்வ அபேஷித ப்ரதன் -விரோதி நிரசன சீலன்
விரோதி நிவ்ருத்த பூர்வக பல ப்ரதத்வம்
அதிகாரிகள் பேதம் பற்ற அருளிச் செய்கிறார்-

——-

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

தூம்புகை மா துயர் தீர்த்துத் தொண்டர் காமுற்ற
சோம்பாது ஈந்து யாரையும் யாவையும் ஓம்புமவன்
நங்கை மணிக்கூடத்தான் என்னும் நீலன்
யாம் இன்பம் சேர தா வளம் -35-

தூம்புகை மா துயர் -தூம்பு துளை-தூம்பு காய் மா -விலங்கு -ஆனை-
ஸ்ரீ கஜேந்த்ரனுடைய பெரிய துயர் -யானையின் நெஞ்சிடர் தீர்த்த பிரான்-

——————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய திருமொழி-4-4- –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

May 5, 2014

திருவுக்கு அரங்கம் -போல் -ஸ்ரீ லஷ்மீ அரங்கம் -பள்ளி கொண்ட பெருமாள் என்றே பிரசித்தம்
அம்பலம் -கோயில்
தெற்றி -உயர்ந்த ஸ்தலம்
திரு -பெரிய பிராட்டிக்கு
அங்கு இரண்டு காவேரி கொள்ளிடம் நடுவில் திடல் உயர்ந்து
அதே போல் இங்கும் –
சூர்யன் இங்கே வந்து சாப விமோசனம்
செங்கமல வல்லித் தாயார்
கிழக்கு நோக்கி சயனம்
வேத விமானம்

மாற்றரசர் பிரவேசம்

ஆஸ்ரித விரோதி நிரசன சீலனாய்
சர்வ ரஷகனாய் இருக்கிற
சர்வேஸ்வரன்
திருத் தெற்றி அம்பலத்திலே
நம்முடைய விரோதியைப் போக்கி-( அஹங்காராதி காமாதி விரோதிகள் )
நம்மை அடிமை கொள்ளுகைக்காக
வந்து நின்றான் என்று ஹ்ருஷ்டர் ஆகிறார் –

திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண்மால் -என்று பாட்டு தோறும் அருளுகிறார்
கடாக்ஷம் பெற்ற ஹர்ஷம் –

———————————————-

மாற்றரசர் மணி முடியும் திறலும் தேசும் மற்றவர் தம் காதலிமார் குழையும் தந்தை
கால் தளையும் உடன் கழல வந்து தோன்றிக் கத நாகம் காத்தளித்த கண்ணர் கண்டீர்
நூற்று இதழ் கொள் அரவிந்தம் நுழைந்த பள்ளத்து இளம் கமுகின் முது பாளை பகுவாய் நண்டின்
சேற்றளையில் வெண் முத்தம் சிந்து நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண்மாலே–4-4-1-

நாகம்-நாக பூரி -நாங்கூர் -நாங்கை -ஸ்ரீ கஜேந்திர ரக்ஷணம் –
உடன் கழல –அது பிறந்ததும் -இது பின்பு -சடக்கென -பிறந்ததால் தானே இதுவும் –
எங்கள் ஓராமாநுசன் வந்து தோன்றிய அப்பொழுதே நாரணனுக்கு ஆயினரே போல் இங்கும்

மாற்றரசர் மணி முடியும் திறலும் தேசும்
த்விஷத் அன்னம் ந போக்தவ்யம் த்விஷந்தம் நைவ போஜயேத்-என்று
பாண்டவர்களுக்கு சத்ருக்களான துர்யோ நாதிகளை
நீங்கள் என் சத்ருக்கள்
உங்கள் சோறும் எனக்கு உண்ணல் ஆகாது
உங்களுக்கு என்னை புஜிப்பிக்கலும் ஆகாது -என்று
அருளிச் செய்த படி

தனக்கு மாற்றாரான துர்யோ நாதிகள் உடைய
ரத்னங்களாலே சமைக்கப் பட்ட முடியும்
மிடுக்கும்
திக் விஜயம் பண்ணிப் பெற்ற மதிப்பும்

மற்றவர் தம் காதலிமார் குழையும் –
சந்தமல் குழலாள் அலக்கண் நூற்றுவர் தம் பெண்டிரும் எய்தி நூல் இழப்ப- என்னும்படி
அவர்கள் ஸ்திரீகள் உடைய மங்கள ஸூத்ரமும்

தந்தை கால் தளையும் உடன் கழல –
ஸ்ரீ வசுதேவர் காலில் தளையும்
இவை எல்லாம் போம் படியாக

வந்து தோன்றிக் –
வந்து அவதரித்து

கத நாகம் காத்தளித்த கண்ணர் கண்டீர் –
சீற்றத்தை உடைய ஆனையை ரஷித்த கண்ணர் கிடீர்

சீற்றம் ஆவது -முதலையாலே இடர் பட்ட அளவிலே
வந்து உதவிற்று இலன் என்று
எனக்கு நான் கடவேனாய் இடர் பட்டேனோ
ஒருவர் இல்லாதாப் போலே -இடர் படுவதே -என்று
(உனக்கு ஆட்பட்டும் இன்னம் உழல்வேனோ நம் ஆழ்வார் போல் )

நூற்று இதழ் கொள் அரவிந்தம் நுழைந்த பள்ளத்து இளம் கமுகின் முது பாளை பகுவாய் நண்டின்
பள்ளத்திலே அநேகம் இதழ்கள் உடைத்தாய் இருந்துள்ள
தாமரையிலே நுழைந்த பகு வாய் நண்டின் உடைய

சேற்றளையில் வெண் முத்தம் சிந்து நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண்மாலே
சேற்றளையிலே-இளம் கமுகின் உடைய
முது பாளையானது
வெண் முத்தைச் சிந்தா நின்றுள்ள திரு நாங்கூர்

பகவத் சரணார விந்தங்களிலே புக்க ஜந்துவின் சம்பந்திகள் இடத்தில்
பஞ்ச விம்சதி வார்ஷிகரான ஸூரிகள் பிரசாதத்தை பண்ணுவர் -ஸ்வாபதேசம்

பகவத் சரணார விந்தங்களிலே புக்க ஜந்து-நண்டு தாமரைக்குள் போவது
ஜந்துவின் சம்பந்திகள் பிரசாதம் -அங்கே முத்து சிந்தா நின்றுள்ள
இளைய கமுகு -25 வயசு
மிகப் பழமையானவர் முது பாளை

அன்றிக்கே
பகுவாய் இளம் கமுகின் முது பாளை
பக்வமான வாயை உடைத்தாய் இருந்துள்ள இளம் கமுகின் உடைய முது பாளை -என்று
கமுகுக்கு விசேஷணமாய்
நண்டின் உடைய சேற்றளையிலே -என்னவுமாம்

இதுக்கும் முந்திய ஸ்வாபதேசம் –

அன்றிக்கே
பள்ளத்திலே உண்டாய் இருந்துள்ள நூற்று இதழ் கொள் அரவிந்தம் ஆனது
நுழைந்த பகுவாய் நண்டின் சேற்றளையிலே
தாமரை யானது நண்டின் உடைய சேற்றளையிலே நுழைந்து
அலர்ந்து தன் பரிமளத்தைக் கொடுக்க
இளம் கமுகின் முது பாளை வெண் முத்தத்தைச்
சிந்துகிற திரு நாங்கூர் -என்னவுமாம்

பகவத் சரணாரவிந்த திவ்ய பரிமளம் யாதொரு ஜந்துவின் இடத்தில் உண்டாகிறதோ
அங்கு ஸூரிகள் பிரசாதமும் குறைவற உண்டாம்-ஸ்வாபதேசம்

—————————————————————–

பூ பார நிரசன அர்த்தமாக அவதரித்து -கீழ்
இதில் பூதனா மோக்ஷம்

பொற்றொடித் தோள் மட மகள் தன் வடிவு கொண்ட பொல்லாத வன் பேய்ச்சி கொங்கை வாங்கிப்
பெற்றெடுத்த தாய் போல் மடுப்ப யாரும் பேணா நஞ்சுண்டு உகந்த பிள்ளை கண்டீர்
நெற்றோடுத்த மலர் நீலம் நிறைந்த சூழல் இரும் சிறைய வண்டொலியும் நெடும் கணார் தம்
சிற்றடி மேல் சிலம்பொலியும் மிழற்று நாங்கூர் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே –4-4-2-

மடமகள் வடிவு கொண்ட -என்னாமல் மடமகள் தன் வடிவு கொண்ட -அசாதாரணமான வேஷம்
நிறைந்த சூழல் -புஷ்பங்கள் நிறைந்த பர்யந்தங்களில்
மிழற்று-அவ்யக்தமாக கலந்து-

பொற்றொடித் தோள் -பொன்னாலே பண்ணப் பட்ட முன் கையில் வளையை உடைய
தோளை உடையளாய்

மட மகள் தன் வடிவு கொண்ட பொல்லாத வன் பேய்ச்சி
ஆத்ம குணோ பேதையாய் இருந்துள்ள யசோதை பிராட்டி
பிள்ளை மனசு வாடும் என்று
மாறாதே ஒப்பித்த ஒப்பனையை அநுகரித்த

வடிவு கொண்ட பொல்லாத வன் பேய்ச்சி -எவ் வடிவை எவ் வடிவுடையவள் அனுகரிக்கிறாள்
பொல்லாத வன் பேய்ச்சி தான்
அவள் பொற்றொடித் தோள் மட மகள்

கொங்கை வாங்கிப் பெற்றெடுத்த தாய் போல் மடுப்ப
தன் முலையைப் பிடித்து
பெற்றெடுத்த தாய் போல் கொடுக்க

யாரும் பேணா நஞ்சுண்டு உகந்த பிள்ளை கண்டீர்
ஒருத்தரும் விரும்பாத நஞ்சை
யுண்டு அறிவு குடி புகுராமையாலே
உகந்த பிள்ளை கண்டீர்
அறிவு நடையாடில் செய்யுமது அன்று இறே

நெற்றோடுத்த மலர் நீலம் நிறைந்த சூழல் இரும் சிறைய வண்டொலியும் நெடும் கணார் தம் சிற்றடிமேல் சிலம்பொலியும்
நெல்லின் மேல் தொடுத்த பூக்களை உடைத்தான குவளையானது
நிறைந்த சூழலிலே
அழகிய சிறகை உடைத்தான வண்டின் உடைய ஒலியும்
விலஷணமான கண்ணை உடையரான
ஸ்திரீகள் உடைய சிற்றடிமேல் சிலம்பு ஒலியும்

மிழற்று நாங்கூர் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே
இரண்டும்
எழுத்தும் சொல்லும் பொருளும் தெரியாத நிரம்பா மென் சொற்கள் ஆகையாலே
சிலம்பு ஒலிக்கும் வண்டின் உடைய ஒலிக்கும் வாசி தெரிக்கப் போகிறது இல்லை-

————————————————————

நஞ்சுண்டது கீழ்
வெண்ணெய் உண்டது இதில்
இரண்டுக்கும் அவனுக்கு வாசி இல்லையே –

படல் அடைத்த சிறு குரம்பை நுழைந்து புக்குப் பசு வெண்ணெய் பதமாரப் பண்ணை முற்றும்
அடல் அடர்த்த வேற்கணார் தோக்கை பற்றி அலந்தலைமை செய்து உழலும் ஐயன் கண்டீர்
மடலெடுத்த நெடும் தெங்கின் பழங்கள் வீழ மாங்கனிகள் திரட்டு உருட்டா வரு நீர்ப் பொன்னி
திடலெடுத்து மலர் சுமந்து அங்கு இழியும் நாங்கூர் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே–4-4-3

பசு வெண்ணெய்-அப்போது கடைந்த வெண்ணெய்
தோக்கை– முந்தானை
அடல் அடர்த்த –யுத்த உந்முகமான
அலந்தலைமை –அலமாப்பை
பண்ணை முற்றும் –இடைச் சேரி எங்கும்
திடலெடுத்து-மேடுகளை எடுத்து விட்டு -தெற்றி அம்பலம் இதனாலே
மாடக்கோயில் -திரு வாட்டாறு போல் –
சிறு -விபரீத லஷனை

படல் அடைத்த சிறு குரம்பை நுழைந்து புக்குப்
இடைச்சிகள் சிறு குடில்களின் வாசலிலே
படலைத் திருக்கி வைத்துப் போனால்
படலை திறந்து நுழைந்து புக்கு
இவனுக்கு நுழைந்து புகுகை யாகை இறே குடிலின் உடைய பெருமை
(துன்னு படல் திறந்து புக்கு –பெரிய திரு மடல் )

பசு வெண்ணெய் பதமாரப் –
அன்று கடைந்த வெண்ணெய் செவ்வி அழியாமல்
அமுது செய்கைக்காக

பண்ணை முற்றும்
இடைச் சேரி எங்கும்

அடல் அடர்த்த வேற்கணார் தோக்கை பற்றி
யுத்த உந்முகமான
வேல் போன்ற கண்ணை உடையவர்கள்
ஓர் ஆளும் ஓர் நோக்கும் நேரான கண்ணை உடையவர்கள் உடைய
பண்ணை முற்றும் -திரள் அடங்கலும்

தோக்கை பற்றி -அவர்கள் கண்ணாலே யொடி எறிவர்கள்
முந்தானையைப் பற்றி

அலந்தலைமை செய்து உழலும் ஐயன் கண்டீர்
ஓர் ஊராக ஒருவர் கூறை எழுவர் உடுக்க பண்ணு மவன் கிடீர்

மடலெடுத்த நெடும் தெங்கின் பழங்கள் வீழ மாங்கனிகள் திரட்டு உருட்டா வரு நீர்ப் பொன்னி
ஓங்கின மடல்களை உடைத்தான நெடிய தெங்கின் உடைய பழம் மாவிலே விழ
மாம் பழங்கள் எல்லாம் உதிர
அவற்றை வாரித் திரள விட்டு
உருட்டிக் கொண்டு வருகிற நீரை உடைத்தான பொன்னி யானது

திடலெடுத்து மலர் சுமந்து அங்கு இழியும் நாங்கூர் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே—
திடர்களை எடுத்து பொகட்டு-திடர்களை -மேடுகளை –
பூக்களைப் பரப்பா நின்றுள்ள
திரு நாங்கூர்

—————————————————

வேல் கண்ணார் ஒரு தட்டு
நப்பின்னைப் பிராட்டி ஒரு தட்டு
விடை கொண்டது -காளைகளை -பக்கத்தில் உள்ளார் இடம் விடை கொன்று சென்றானாம் –

வாராரும் முலை மடவாள் பின்னைக்காகி வளை மருப்பில் கடுஞ்சினத்து வன் தாள் ஆர்ந்த
காரார் திண் விடை யடர்த்து வதுவை யாண்ட கருமுகில் போல் திரு நிறத்து என் கண்ணர் கண்டீர்
ஏராரும் மலர்ப் பொழில்கள் தழுவி எங்கும் எழில் மதியைக் கால் தொடர விளங்கு சோதிச்
சீராரு மணி மாடம் திகழு நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே–4-4-4-

வாராரும் முலை மடவாள் பின்னைக்காகி வளை மருப்பில் கடுஞ்சினத்து வன் தாள் ஆர்ந்த
பிராப்த யௌவநை யாகையாலே
வாராலே தாங்கப் பட்ட முலையை உடைய நப்பின்னை பிராட்டிகாக
வளைந்த கொம்புகளை உடைத்தாய்
கடிய சினத்தை உடையதாய்
வலிய தாள்களை உடைத்தாய்

காரார் திண் விடை யடர்த்து வதுவை யாண்ட கருமுகில் போல் திரு நிறத்து என் கண்ணர் கண்டீர்
கறுப்பு ஆர்ந்த
திண்ணியதான
ருஷபங்களை அடர்த்து
விவாஹ மங்களத்தை
நிர்வஹித்த கரு முகில் போல்
திரு நிறத்து என் கண்ணர்

ஏராரும் மலர்ப் பொழில்கள் தழுவி எங்கும் எழில் மதியைக் கால் தொடர விளங்கு சோதிச்
அழகார்ந்து இருந்துள்ள பூக்களை உடைத்தான
பொழில் எங்கும் தழுவி
பரிமளத்தை ஏறிட்டுக் கொண்டு
காற்று சந்த்ரனைக் கால் கட்ட –
கால் கட்ட -பரிமளத்தில் நச்சிப் போக மாட்டாமல் கிடக்கும்படி பண்ண -அத்தால்
விளங்கா நின்றுள்ள ஜ்யோதீஸ்ஸை உடைத்தாய் –

சீராரு மணி மாடம் திகழு நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே
சம்பத்து ஆர்ந்து
மாணிக்கங்களால் அலங்கரிக்கப் பட்ட
மாடங்கள் திகழுகிற திரு நாங்கூர்

———————————————————-

இடைக்குல தேவி கீழ்
யதுகுல ருக்மிணி பிராட்டி இதில்
இருவருடன் ஸம்ஸலேஷித்து -எல்லாம் இரண்டு
இரண்டு ஜென்மம் மாதாக்கள் பிதாக்கள் குலம் ஊரும் சொல் உட்பட இரண்டு -ஏலாப் பொய்கள் உரைப்பான் –

கலை இலங்கும் அகல் அல்குல் கமலப் பாவை கதிர் முத்த வெண்ணகையாள் கரும் கண் ஆய்ச்சி
முலை இலங்கும் ஒளி மணிப் பூண் வடமும் தேய்ப்ப மூவாத வரை நெடும் தோள் மூர்த்தி கண்டீர்
மலை இலங்கு நிரைச் சந்தி மாட வீதி யாடவரை மட மொழியார் முகத்திரண்டு
சிலை விலங்கி மனம் சிறை கொண்டு இருக்கும் நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே—4-4-5-

கலை-மேகலை வத்ஸரம்
மட மொழி-இனிய அவ்யக்த மொழி –
மூவாதே-செவ்வி அழியாத –

கலை இலங்கும் அகல் அல்குல் –
கலைகள் இலங்கா நின்றுள்ள
அகன்ற
நிதம்ப பிரதேசத்தை யுடையளாய்

கமலப் பாவை கதிர் முத்த வெண்ணகையாள்
ஒளியை உடைய முத்துப் போலே
வெளுத்த தந்த பங்க்தியை உடைய பெரிய பிராட்டியார்-
நகை -தந்த பங்க்தி –

கரும் கண் ஆய்ச்சி –
அவன் திருமேனியைப் பார்த்த படியே இருக்கையாலே
திருமேனியிலே கறுப்பு கண்ணிலே ஊறின
நப்பின்னைப் பிராட்டி
(யமுனை -கிருஷ்ண துளசி பிராட்டி திருக்கண் -இவனைப்பார்த்து மூன்றும் –
அவற்றால் இவனும் கறுத்து இருக்கிறான் -தேசிகன் )

முலை இலங்கும் ஒளி மணிப் பூண் வடமும் தேய்ப்ப மூவாத வரை நெடும் தோள் மூர்த்தி கண்டீர்
இருவருடைய முலைகளிலும் விளங்கா நின்றுள்ள
ஒளியை உடைத்தான
மாணிக்கங்களாலே சமைக்கப் பட்ட ஹாரமானதுவும்
திரிசரம் பஞ்ச சரமான முத்து வடமும் உரச
அத்தால்
மூவாதே இருக்கிற மலை போன்ற
நெடும் தோள் மூர்த்தி கண்டீர்

நீளா குலேன சத்ருசீ தவ ருக்மிணி ச -சுந்தர பாஹுஸ்தவம்-107-ருக்மிணி நப்பின்னை இருவர் உடன்
சம்ஸ்லேஷித படியை அனுசந்திக்கிறார்

மூவாதே –
முற்றிப் போகாமல் இளகிப் பதித்த படி

மலை இலங்கு நிரைச் சந்தி மாட வீதி யாடவரை மட மொழியார் முகத்திரண்டு சிலை
மலை போலே இலங்கா நின்ற
நிரையாய் ஒன்றோடு ஓன்று சந்தித்து
செறிந்து இருந்துள்ள மாடங்களை உடைத்தாய் இருந்துள்ள வீதியிலே
மட மொழியார் முகத்திலே நின்ற சிலைகள்-புருவங்கள் –

சிலை விலங்கி மனம் சிறை கொண்டு இருக்கும் நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே
ஆடவரை -காந்தரை
விலங்கி
மனஸ்ஸை சிறை இட்டு வைக்கிற திரு நாங்கூர் என்னவுமாம்

சிலை விலங்கி -என்றது -புருவம் வளைகை

—————————————————————-

சீதாபிராட்டி ரஷித்த அனுபவம் இதில் –

தான் போலும் என்று எழுந்தான் தரணியாளன் அது கண்டு தரித்து இருப்பான் அரக்கர் தங்கள்
கோன் போலும் என்று எழுந்தான் குன்றம் அன்ன இருபது தோளுடன் துணித்த ஒருவன் கண்டீர்
மான் போலும் மென்னோக்கில் செய்ய வாயார் மரகதம் போலே மடக்கிளியைக் கை மேல் கொண்டு
தேன் போலும் மென் மழலை பயிற்று நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே –4-4-6-

தரணியாளன்-பூ பதி –

தான் போலும் என்று எழுந்தான் தரணியாளன் அது கண்டு தரித்து இருப்பான் அரக்கர் தங்கள்
ஆப்பான் திருவழுந்தூர் அரையரும்
மற்றும் உள்ள முதலிகளுமாக
இப் பாட்டில் சொல்லுகிறது என் -என்று பட்டருக்கு விண்ணப்பம் செய்ய
ஒரு கால் இயலைக் கேளா
ராவணன் வார்த்தை காண்-என்று அருளிச் செய்தார்

(ராஜா தான் போலே வந்தான் -ராஜா இல்லையா -சங்கை வருமே
எம்பெருமான் பக்கல் தாழ்மை
ராவணன் பக்கம் பெருமையும்
ஸ்வரத்தால் -தான் பதத்தாலும் தாழ்ச்சி தோன்றும்
கோன் பதத்தால் உத்கர்ஷம் தோன்றும்
இருக்க எப்படி பொருந்தும்
துணித்த ஒருவன் -என்று இருப்பதால் இப்படியே பொறுத்த வேண்டும்
துர்மானத்தால் சொன்ன வார்த்தை )

தான் போலும் -ஷத்ரியன் போலே எதிரி என்று வந்தான்
அது கண்டு தரித்து இருப்பான்
ராஷசராஜானாம் -என்று கிளர்ந்து எழுந்த ராவணன் உடைய

கோன் போலும் என்று எழுந்தான் குன்றம் அன்ன இருபது தோளுடன் துணித்த ஒருவன் கண்டீர்
மலை போல் இருக்கிற இருபது தோளையும்
துணித்த தனி வீரன் கிடீர்

மான் போலும் மென்னோக்கில் செய்ய வாயார் மரகதம் போலே மடக்கிளியைக் கை மேல் கொண்டு
ஒரு கிளியை ஒரு கிளி கற்பித்தால் போலே இருக்கிறது
கற்ற கிளியினுடைய பேச்சில் காட்டில்
கற்ப்பிக்கிறவள பேச்சு இனிது என்கை-

தேன் போலும் மென் மழலை பயிற்று நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே
மான் போலே மிருதுவான நோக்கையும்
சிவந்த அதரத்தையும் உடையவர்கள்
மரகதம் போன்று மடப்பத்தை யுடைத்தான கிளியை
கை மேல் கொண்டு
தேன் போலே இனியதாய்
மிருதுவான பேச்சை
பயிற்றுகிற திரு நாங்கூர்

————————————————-

பிராட்டியையும் மறைத்து வாமனனாய் -கிருஷ்ணாஜினம் -வைத்து -ப்ரஹ்மாச்சார்யம் -பிரதம ஆஸ்ரம -அனுபவம் –

பொங்கு இலங்கு புரி நூலும் தோலும் தாழப் பொல்லாத குறள் உருவாய் பொருந்தா வாணன்
மங்கலம் சேர் மறை வேள்வி யதனுள் புக்கு மண்ணகலம் குறை இரந்த மைந்தன் கண்டீர்
கொங்கு அலர்ந்த மலர்க் குழலார் கொங்கை தோய்ந்த குங்குமத்தின் குழம்பு அளைந்த கோலம் தன்னால்
செம் கலங்கல் வெண் மணல் மேல் தவழு நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே-4-4-7-

தோலும் -மான் தோலும்
பொல்லா -ஸூந்தர -விபரீத லஷணை-

பொங்கு இலங்கு புரி நூலும் தோலும் தாழப் –
மிக்கு இலங்கா நின்றுள்ள
ஒளி விடா நின்ற திரு யஞ்ஞோ  பவீதமும்
கிருஷ்ணா ஜிநமும் தாழ

பொல்லாத குறள் உருவாய் –
அழகிது என்றால் நாட்டார் கண் எச்சில் படுவர்  என்று
விபரீத லஷணையால் சொல்லிற்று  ஆகவுமாம்

பொருந்தா வாணன்-
ஆஸூரம் பாவம் ஆஸ்ரித என்று
ஹிருதயம் தண்ணியதாகை அன்றிக்கே
ஜன்மமே தண்ணிதானவன்

மங்கலம் சேர் மறை வேள்வி யதனுள் புக்கு
சர்வேஸ்வரன் செல்லும்படியான யாகம் இறே
மங்கலங்கள் சேரத் தட்டு இல்லை இறே

மண்ணகலம் குறை இரந்த மைந்தன் கண்டீர்
மகா பலி உடையனாய்
தான் குறைவாளனாய் இரந்த
என்ன பிள்ளை தான்

கொங்கு அலர்ந்த மலர்க் குழலார் கொங்கை தோய்ந்த குங்குமத்தின் குழம்பு அளைந்த கோலம் தன்னால்
பரிமளம் மாறாதே இருந்துள்ள
மலரை உடைத்தான குழலை உடைய ஸ்திரீகள் உடைய
கொங்கை தோய்ந்த கும்குமத்தின் உடைய
குழம்பை அளைந்த
கோலம் தன்னாலே

செம் கலங்கல் வெண் மணல் மேல் தவழு நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே–
செங்கலங்கள்
வெண் மணலிலே தவழும் நாங்கூர்
தாரை ஸ்க்கலித்து நடந்தால் போலே ச ப்ரசக் கலந்தீ-என்னும்படியே
(தேற்றமாய் வந்து திற -தாரையைப் போல் வராமல் )

————————————————–

மண் அளந்தது கீழ்
மண் கிடந்தது இங்கு
ஸ்ரீ தேவி கீழ்
பூமா தேவி இங்கு

சிலம்பினிடைச் சிறு பரல் போல் பெரிய மேரு திருக் குளம்பில் கண கணப்பத் திருவாகாரம்
குலுங்க நில மடந்தை தனை இடந்து  புல்கிக் கோட்டிடை வைத்து அருளிய என் கோமான் கண்டீர்
இலங்கிய நான் மறையனைத்தும் அங்கம் ஆறும் ஏழு இசையும் கேள்விகளும் எண் திக்கும் எங்கும்
சிலம்பிய நல் பெரும்  செல்வம் திகழு நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே –4-4-8

சிலம்பினிடைச் சிறு பரல் போல் பெரிய மேரு திருக் குளம்பில் கண கணப்பத்
சிலம்பினிடை இட்ட சிறு பரல் போலே
பெரிய மகா மேருவானது
திருக் குளம்பிலே-மேரு கணா கணாயதே-என்னும்படியே கண கணப்ப
(பெரும் கேழலார்
மஹா வராஹ ஸ்புட பத்ம விலோசன )

திருவாகாரம் குலுங்க -அகலகில்லேன் இறையும் என்று பிராட்டி
இருக்கும் இருப்பு குலுங்கும்படிக்கு ஈடாக

நில மடந்தை தனை இடந்து  புல்கிக் கோட்டிடை வைத்து அருளிய என் கோமான் கண்டீர்
பூமியை இடந்து அதுக்கு அபிமானியான
ஸ்ரீ பூமிப் பிராட்டியை புல்கி
கோட்டிடையிலே நீல மணி அழுத்தினால் போலே
வைத்த செயலாலே என்னை அடிமை கொண்டவன் கிடீர்

இலங்கிய நான் மறையனைத்தும் அங்கம் ஆறும் ஏழு இசையும் கேள்விகளும் எண் திக்கும் எங்கும்
பிரமாணிய பலத்தாலே ஒளி விடா நின்றுள்ள வேதங்கள் நாலும்
ஆறு அங்கமும்
சப்த ஸ்வரங்களும்
இதிஹாச புராணங்களும்
எட்டுத் திக்குகளும்

சிலம்பிய நல் பெரும்  செல்வம் திகழு நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே
சப்திக்கக் கடவதாய்
நன்றாய்ப்
பெரிய செல்வம்
(ப்ராஹ்மணானாம் தனம் வேதா -அந்தணர் மாடு )

—————————————————————

ஏழு உலகும் தாள் வரையும் எங்குமூடி எண் திசையும் மண்டலமும் மண்டி அண்டம்
மோழை எழுந்து ஆழி மிகு மூழி வெள்ளம் முன் அகட்டில் ஒடுக்கிய எம் மூர்த்தி கண்டீர்
ஊழி தொறும் ஊழி தொறும் உயர்ந்த செல்வத்து ஓங்கிய நான்மறை யனைத்தும் தாங்கு நாவர்
சேழுயர்ந்த மணி மாடம்  திகழு நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து எண் செங்கண் மாலே -4-4-9-

அகட்டில் ஒடுக்கிய- திரு உதரத்தில் அடக்கிய
சேழுயர்ந்த-மிகவும் உயர்ந்த –

ஏழு உலகும் தாள்வரையும் எங்குமூடி எண் திசையும் மண்டலமும்   மண்டி அண்டம்
சப்த த்வீபங்களும்
தாள்களை உடைத்தான மலைகளும் எங்கும் ஏறி
எட்டுத் திக்குகளும்
மண்டலமும் அண்டமும் மிக்கு

மோழை எழுந்து ஆழி மிகு மூழி வெள்ளம் முன் அகட்டில் ஒடுக்கிய எம் மூர்த்தி கண்டீர்
மோழை எழுந்து
ஆழியானது மிக்கு இருந்துள்ள
ஊழி வெள்ளத்தைப் பண்டு
திருமேனியிலே ஏக தேசத்தில்
அடக்கின சர்வேஸ்வரன் கிடீர்

ஊழி தொறும் ஊழி தொறும் உயர்ந்த செல்வத்து ஓங்கிய நான்மறை யனைத்தும் தாங்கு நாவர்
காலம் செல்லச் செல்ல
குறைந்து காட்டாதே
கலௌ க்ருத யுகம் தஸ்ய (ஸ்ரீ விஷ்ணு தர்மம் -இருதயத்தில் அவனை வைத்தால்
கிருத யுகமாக இருந்தாலும் கலி யுகம் இருதயத்தில் அவனை வைக்காமல் இருந்தால் )-என்னும்படியே
உயர்ந்த செல்வத்தை உடையராய்

சேழுயர்ந்த மணி மாடம்  திகழு நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து எண் செங்கண் மாலே
ஓங்கி இருந்துள்ள நான்மறையை நாவாலே
தாங்க வல்ல பிராமணரை உடைத்தாய்
ஆகாசத்திலே தட்ட உயர்ந்த மணி மாடங்களை உடைத்தான
திரு நாங்கூர்

சூர்யன் இங்கே வந்து சாப விமோசனம்
செங்கமல வல்லித் தாயார்
கிழக்கு நோக்கி சயனம்
வேத விமானம்

————————————————————-

சீரணிந்த மணி மாடம் திகழு திரு நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து எண் செங்கண் மாலைக்
கூரணிந்த வேல் வலவன் ஆலி நாடன்  கொடி மாட மங்கையர் கோன் குறையல் ஆளி
பாரணிந்த தொல் புகழான் கலியன் சொன்ன பாமாலை இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்
சீரணிந்து உலகத்து மன்னராகிச் சேண்  விசும்பில் வானவராய்த் திகழ்வர் தாமே  –4-4-10-

சீரணிந்த மணி மாடம் திகழு திரு நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து எண் செங்கண் மாலைக்
ஐஸ்வர்யம் அணிந்த மணிமயமான மாடத்தை
உடைய திரு நாங்கூர்த்
திருத் தெற்றி அம்பலத்தில் நிற்கிற
புண்டரீகாஷனான சர்வேஸ்வரனை

கூரணிந்த வேல் வலவன் ஆலி நாடன்  கொடி மாட மங்கையர் கோன் குறையல் ஆளி
வேலில் கூர்மை போலே இருக்கும் கவி பாட்டில் கூர்மை -என்கை
திரு வாலிக்கு நிர்வாஹகர் ஆனவர்
கொடிகளை உடைத்தான
மாடங்களை உடைய திரு மங்கைக்கு ராஜா வானவர்
குறையல் ஆளி

பாரணிந்த தொல் புகழான் கலியன் சொன்ன பாமாலை இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்
இட்டளத்தில் வெள்ளம் போலே-இட்டளம் -நெருங்கின இடம்
பூமி எல்லாம் நெருங்கின
புகழை உடைய ஆழ்வார் அருளிச் செய்த

பாமாலை இவை ஐந்தும் ஐந்தும் வல்லார் –
கிருஷ்ண அவதாரம் அபதானங்கள் ஐந்தும்
அது கலசாத ஐந்தும்

சீரணிந்து உலகத்து மன்னராகிச் சேண்  விசும்பில் வானவராய்த் திகழ்வர் தாமே
ஐஹிகத்தில் ஐஸ்வர்யமும்
குறைவற புஜித்து
பரம பதத்தில் நித்ய ஸூரிகளோடு
ஒரு கோவையாக விளங்குவர்

———–

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

மாற்றில் இடர் மாற்றி அடியர்க்கு மாகம் மா நிலம்
போற்ற அளித்துத் தடையாவும் பற்றி ஆட்கொள்
வான் தெற்றி யம்பலத்தான் என்றுரை மங்கையர் கோன்
தான் போக்கும் நம் பவத்தூறு -34-

மாகம் -பரமாகாசம் / மா நிலம் -வையம் //இட ஆகுபெயர் -அங்குள்ளாரை சொன்னபடி -/

————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய திருமொழி-4-3—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

May 5, 2014

க்ஷேத்ரம் -ஸ்ரீ ராமனுக்கு ப்ரஹ்ம ஹத்தி தோஷம் போக்க
தங்க பசு செய்து உள்ளே அமர்ந்து நான்கு நாள்கள் தபஸ்
அத்தாலே செய்யப்பட கோயில்
கஸ்யபர் –அஷ்டாக்ஷரம் –32000 ஜபித்து பெற்ற ஐஸ்வர்யம்
செம் பொன் அரங்கன் மூலவர் நின்ற திருக்கோலம்-ஹேம அரங்கன்-

பேரணிந்து பிரவேசம்

ஞானானந்த ஸ்வரூபனாய் -(பேதியா-விகாரம் அற்ற – இன்ப வெள்ளத்தை)
நிரதிசய போக்யனாய்-(ஏழ் இசையின் சுவை தன்னை – உள்ளத்துள் ஊறிய தேனை)
என்றும் ஒக்க உளனாய் இருக்கிற -(இறப்பு எதிர் காலக் கழிவும் ஆனானை)
சர்வேஸ்வரன்
தன்னை ஆஸ்ரயிக்கும் இடத்தில் புருஷகாரமாம் பிராட்டிமாரோடு கூட வந்து -(மலர் மகளோடு மண் மகளும் உடன் நிற்ப )
நித்ய வாசம் பண்ணுகிற
செம்பொன் செய் கோயிலின் உள்ளே நான் காணப் பெற்றேன் என்று
தாம் பெற்ற பேற்றை அனுபவித்து இனியர் ஆகிறார்

ஹர்ஷ பிரகர்ஷம் -பெரிய ஆனந்தத்துடன் அருளிச் செய்கிறார் –
(உணர் முழு நலம் –முழு உணர்வு முழு நலம் -கட்டடங்க ஞானம் கட்டடங்க ஆனந்தம் )

————————————————————

கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே/ வாழ்ந்து ஒழிந்தேனே /அல்லல் தீர்ந்தேனே —
பாசுரங்கள் தோறும் உண்டே -கண்களால் தரிசித்து -காதால் மட்டும் கேட்டுப் போகாமல் க்ருதார்த்தன் ஆனேன் –

நாங்கையில் நடுவில் உள்ள திவ்ய தேசம் –4–நாங்கூர் 7-முன்பே பார்த்தோம் –
ஹேம ரேங்கர் -செம் பொன் கோவில் -பேர் அருளாளன் -ஸ்ரீ காஞ்சி தேவ ராஜனே இங்கு –

பேரணிந்து உலகத்தவர் தொழுது ஏத்தும் பேரருளாளன் எம்பிரானை
வாரணி முலையாள் மலர் மகளோடு மண் மகளும் உடன் நிற்ப
சீரணி மாட நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
காரணி மேகம் நின்றது ஒப்பானைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே–4-3-1-

மலர் மகளோடு மண் மகளும்-மகளோடும் உம்மைத் தொகை இல்லாதது மண் மகளின் சிறப்பை சொன்னவாறு
யுவா குமாரா -யுவதிஸ்ய குமாரிணி -நித்ய யவ்வனம்

பேரணிந்து உலகத்தவர் தொழுது ஏத்தும் பேரருளாளன் எம்பிரானை
லௌகிகர் அடங்கலும் திரண்டு
என்றும் அவன் திருவடிகளில் விழுந்து திரு நாமத்தைச் சொல்லி
ஸ்தோத்ரத்தை சொல்லி ஆஸ்ரயிக்க
அவர்கள் ஆஸ்ரயித்த அளவு அல்லாதபடி பிரசாதத்தை அவர்கள் பக்கலிலே பண்ணி
அப்படியே எனக்கு உபகாரகன் ஆனவனை
(புருஷோத்தமன் -வார்த்தை -ஆஸ்ரிதர் என்னிடம் மிகப்ரியம்-அவர் அளவு என்னால் பண்ண முடியவில்லை
தூய்மையோடு -வேறு பலன் இன்றி எதுவும் விசேஷணம் இல்லை ஏத்துதத்துக்கு
அவனது அருளோ பேர் அருள் )

வாரணி முலையாள் மலர் மகளோடு
நித்தியமான யவனத்தை உடையவளாய்
அத்தாலே சர்வேஸ்வரன் திரு உள்ளத்தை தன் பக்கலிலே துவக்கி
ஆஸ்ரிதர் உடைய குற்றத்தை ந கச்சின் ந அபராத்யதி -என்னும் பெரிய பிராட்டியார் உடன் கூட

மண் மகளும் உடன் நிற்ப
முதல் தன்னிலே குற்றத்தை காண்கிறது என்
பொறுத்தோம் என்று தலை துலுக்குகிறது என் -என்று
இவ் வழியாலே அவன் தனக்கும் கூடப் பொறைக்கு உவாத்தாய் -உசாத் துணையாக இருக்கும்
ஸ்ரீ பூமிப் பிராட்டியாரும் கூட நிற்க-மண் மகளும் -உம்மைத் தொகை காட்டும் பிரதான்ய அர்த்தம் –

சீரணி மாட நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
முதல் தன்னில் லோகத்தில் காட்டிலும் ஐஸ்வர்யம் விஞ்சி இருக்கும் ஆய்த்து அவ் ஊரில் –
அது அடைய தோற்றும்படி தர்ச நீயமான மாடங்களை உடைய
திரு நாங்கூரில்
நன்றான நடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே

காரணி மேகம் நின்றது ஒப்பானைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே
கார் காலத்திலே வர்ஷ உந்முகமாய்க் கொண்டு
அழகிய வடிவை உடைத்ததாய் இருப்பதொரு மேகம் போலே
இருககிறவனைக்
கண்ணாலே கண்டு அனுபவிக்கப் பெற்று
அசந்நேவ-என்னும் நிலை தீர்ந்து
சந்தமேனம் -என்கிறபடியே உஜ்ஜீவித்து
க்ருதார்த்தன் ஆனேன் -என்கிறார்

————————————————-

முதல் பாட்டில் திவ்ய மங்கள விக்ரஹம் -ரூபம்
இதில் ஸ்வரூபம்
சாஸ்திரம் ஸ்வரூபம் நிறையச் சொல்லும்
ஆழ்வாராதிகளோ ரூபத்தையும் குணத்தையும் நிறைய அருளிச் செய்வார்கள் –

பிறப்பொடு மூப்பு ஓன்று இல்லவன் தன்னைப் பேதியா இன்ப வெள்ளத்தை
இறப்பு எதிர் காலக் கழிவும் ஆனானை ஏழு இசையின் சுவை தன்னைச்
சிறப்புடை மறையோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
மறைப் பெரும் பொருளை வானவர் கோனைக் கண்டு நான் வாழ்ந்து ஒழிந்தேனே—4-3-2-

பேதியா-குறைவோ நிறையா வேறுபாடு இல்லாத எப்பொழுதும் ஒரே மாதிரி –
இன்ப வெள்ளத்தை–ஆனந்த சாகரம் –
மறைப் பெரும் பொருளை-வேத ப்ரதிபாத்யன் -பெரும் பொருள் என்றது
வேதம் சொல்லும் சேதன அசேதனங்களில் உயர்வு உண்டே பரமாத்மாவுக்கு -பிரதான அர்த்தம் இவனே

பிறப்பொடு மூப்பு ஓன்று இல்லவன் தன்னைப்
பிறப்பது மூப்பது ஆகைக்கு ஹேது இல்லாமையாலே
ஜன்ம ஜராதிகள் ஆகிற பிரசங்கமும் இன்றிக்கே இருக்கிறவனை
பிறப்பது மூப்பது ஆகா நிற்கச் செய்தே ஒரு ப்ரஹ்ம கல்பம் மாத்ரம்
இருந்து முடிகிறத்தைக் கொண்டு
பிறப்பும் மூப்பும் இல்லை என்று சொல்லா நின்றது இறே ப்ரஹ்மாதிகளை-
முதலிலே அவ் விடையாட்டமும் சொல்ல ஒண்ணாது இருக்கிறவனை
(இந்திரன் -நான்முகன் போல்-கர்ம வஸ்யன்-இல்லையே -பிறப்பு மூப்பு ஒன்றுமே இல்லையே இவனுக்கு
பிறப்பொடு மூப்பு ஓன்று இல்லவன் தன்னை-துளியும் இல்லை என்று காட்ட ஓன்று பத பிரயோகம் )

பேதியா இன்ப வெள்ளத்தை –
பேதியாத ஆனந்த சமுத்ரத்தை-
ஆனந்த மய -என்னக் கடவது இறே
ஆனந்த ப்ராசுர்யத்தைச் சொல்லுகிறது
உணர் முழு நலம் –முழு உணர்வு முழு நலம் –

ஜீவாத்மாவின் உடைய ஸ்வரூபமும் நித்தியமாய்
தர்ம பூத ஞானமும் நித்யமுமாய்
இருக்கச் செய்தேயும்
ஞான ப்ரசர த்வாரத்தின் உடைய சங்கோச விகாசத்தைப் பற்ற
ஞானத்துக்கு உதய அஸ்தமய வ்யவஹாரம் பண்ணா நின்றது இறே

அவ்வோபாதி ஸ்வரூபமும் நித்தியமாய் இருந்ததே யாகிலும்
கர்ம நிபந்தனமாக உண்டான அசித் சம்சர்க்க வியோகங்களால்
பிறந்தான் முடிந்தான் என்கிற வ்யபதேசத்துக்கு அர்ஹமாகா நின்றது இறே
அப்படி இருப்பதொரு கர்மம் இல்லாமையாலே
ஒரு நாளும் பேதிக்கக் கடவது அன்றிக்கே
என்றும் ஒக்க ஏக ரூபமான ஸ்வரூபத்தை உடையவனை –

இறப்பு எதிர் காலக் கழிவும் ஆனானை
இப்படி இருக்கையாலே காலத் த்ரயத்திலும் உள்ளவனை
இறந்த என்கிற இது பூத காலத்தை
எதிர் -பவிஷ்யமான காலத்தை
கழிவு -வர்த்தமான காலத்தை
கால த்ரயத்திலும் உளன் ஆனவனை

ஜன்ம ஜராதிகளை உடையவன் அன்றிக்கே
என்றும் ஒக்க ஏக ரூபமான ஸ்வரூபத்தை உடையனாய்க் கொண்டு
காலத் த்ரயத்திலும் உளன் ஆனவனை

ஏழு இசையின் சுவை தன்னைச்
சப்த ஸ்வரங்களிலும் உண்டான
ரச வஸ்து தான் ஒரு வடிவு கொண்டாப் போலே
நிரதிசய போகய பூதனாய் இருந்துள்ளவனை

பேதியா இன்ப வெள்ளம் -என்ற இடம் ஸ்வரூபத்தின் போக்யதை சொல்லிற்று
இங்கு-ஏழு இசையின் சுவை தன்னை- குண யோகத்தினால் வந்த போக்யதை சொல்லுகிறது

சிறப்புடை மறையோர்
சிறப்பால் மிகுதியைச் சொல்லுகிறது
ஆக ப்ராஹ்மண்யத்தால் வந்த ஆதிக்யத்தை உடைய
ப்ராஹ்மணர் உடைய

நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
திரு நாங்கூரில் நன்றான நடுவுள்
பரம பதத்தில் போய் அன்றிக்கே
செம் பொன் செய் கோயிலின் உள்ளேயே

மறைப் பெரும் பொருளை –
மறைக்கு பொருளாய் இருப்பவர்கள் இறே
ஜீவாத்மாக்களும் -ப்ரஹ்மாதிகளும்
அவர்களைப் போல் அன்றிக்கே
ஸ்வ இதர சமஸ்த வஸ்துக்களும் தனக்கு பிரகாரமாய்
தான் பிரகாரியாய் இருக்கையாலே
வேதத்துக்கு பிரதான தயா வாஸ்ய பூதனாய் உள்ளவனை –
வேதைஸ்ஸ சர்வைர் அஹமேவ வேத்ய
சர்வே வேதா யத் பதம் ஆமநந்தி

வானவர் கோனைக்
இப்படி இருக்கிறவன் தான்
அயர்வறும் அமரர்கள் அதிபதி ஆய்த்து
இனி வேதம் தானும்
தத் விப்ராசோ விபந்யவோ ஜாக்ருவாகம் சஸ் சமிந்ததே -என்று இறே ஓதுவது
இப்படி இருக்கிறவனை

கண்டு நான் வாழ்ந்து ஒழிந்தேனே
வேதைக சமாதி கம்யனாக கேட்கை அன்றிக்கே
கண்ணாலே காணப் பெற்று
இனி வாழுகைக்கு ஒரு தேச விசேஷம் தேடித்
பொதி சோறு கட்டி
அறுகாத பயணம் போக வேண்டாதே
க்ருதார்த்தனாய் பெற்றேன் என்கிறார்

கீழ் திரு மேனி திவ்ய மங்கள விக்ரஹத்தை அனுபவித்து
இதில் திவ்ய ஆத்ம ஸ்வரூபம் திவ்ய குண ஸ்வரூபம் அனுபவிக்கிறார்
மூப்பு இல்லை என்னாமல் மூப்பு ஓன்று இல்லை -பிறப்பது மூப்பது ஆகா நிற்க

—————————————————-

கீழே ரூபம்
ஸ்வரூபம் குணம்
இதில் சர்வ வியாபகத்வம் அருளிச் செய்கிறார் –

திட விசும்பு எரி நீர் திங்களும் சுடரும் செழு நிலத்து உயிர்களும் மற்றும்
படர் பொருள்களுமாய் நின்றவன் தன்னைப் பங்கயத்தயன் அவன் அனைய
திட மொழி மறையோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
கடல் நிற வண்ணன் தன்னை நான் அடியேன் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே –4-3-3-

ஆய் நின்றவன்-அந்தராத் மாவாய் -சரீரியாய் -அனைத்தும் சரீரம் பிரகாரம் -இவன் பிரகாரி
திட மொழி-அவி சால்யமான -அசைக்க முடியாத ப்ரஹ்மா வரம் பொய்யாகாத படி நரஸிம்ஹ —
இவர்கள் அவனே உபாயம் உபேயம் என்கிற அழகிய கொழ்கையில் அசைக்க முடியாத வர்கள்

திட விசும்பு -எரி நீர்
லோகாயதிகன் -முதலிலே ஆகாசம் என்று ஒரு தத்வம் இல்லை -என்றான்
அவனுடைய மதத்தை நிரசிக்கைகாக
வைதிக பிரக்ரியையின் படியே -ஆகாசாத் வாயு -என்கிற
கிரமத்திலே
அல்லாதவை எல்லாம் உண்டாவதுக்கு முன்னே உண்டாவதுமாய்
அவை அழிந்தாலும் சில நாள் நின்று அழியுமதுவுமாய் இருக்கையாலும்
திட விசும்பு -என்கிறார் -ஆகவுமாம் –

அன்றிக்கே
பதார்த்தங்களுக்கு எல்லாம் ஒரோ ஸ்வபாவம் நியதமாய் இருக்கையாலே
வ்யவஸ்தித ஸ்வபாவமான பூத பஞ்சகத்தை சொல்லுதல்
திட விசேஷணம் ஒவ் ஒன்றுக்கும் கொள்ள வேண்டும் என்றபடி
இம் மூன்றும் ஐந்துக்கும் உப லஷணமாய்
இது தன்னில் ஒன்றில் சொன்ன ஸ்வபாவம் மற்றை நாலில் ஏறக் கடவதுமாய் இருக்கும் ஆய்த்து

திங்களும்-சுடரும் –
கார்ய வர்க்கத்து எல்லாம் உப லஷணம்
கார்ய கோடியில் சந்திர சூர்யர்களும்

செழு நிலத்து உயிர்களும்
பூமியில் மனுஷ்யர்களும்

மற்றும் -படர் பொருள்களுமாய் நின்றவன் தன்னைப்
மற்றும் அனுக்தமான தேவ திர்யக் ஸ்தாவரங்களுமாய்க் கொண்டு
விஸ்த்ருதனாய் நின்றவனை

தத் த்ருஷ்ட்வா ததேவ அநு பிராவிசத் -இத்யாதிப் படியே இவற்றை அடைய உண்டாக்கி
இவற்றின் உள்ளே தான் அனுபிரவேசித்து
அத்தாலே இவை எல்லாம் தான் என்னலாம் படி நிற்கிறவனை
தத்வமஸி ஸ்வேதகேதோ –
அயமாத்மா ப்ரஹ்ம
ப்ரஹ்ம தாஸா
என்றும் சொல்லுகிறபடியே ( அப்ருத் சித்த விசேஷணமாய் )

பங்கயத்தயன் அவன் அனைய
திரு நாபி கமலத்தை பிறப்பிடமாக உடைய ப்ரஹ்மாவைப் போலே

திட மொழி மறையோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே-
பழுது போகாத வார்த்தையை உடையராய் இருப்பவர்கள்

தான் ஒன்றைச் சொன்னால்
தன்னாலும் அது பேதிக்க போகாதே -ராவணாதிகளுக்கு வரம் கொடுக்கை
வேறு அதுக்கு ஒரு போக்கடி தேட வேணும் இறே
நீ சொன்னது பழுது போகாமையாலே
நாங்கள் மிறுக்குப் படா நின்றோம் இறே என்றார்கள் தேவர்கள்

கடல் நிற வண்ணன் தன்னை நான் அடியேன் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே
காணவே தாபத் த்ரயம் ஆறும்படி ஸ்ரமஹரமான
வடிவை உடையவனை
கண்டு அனுபவித்து
நான் உஜ்ஜீவிக்கப் பெற்றேன் -என்கிறார்

——————————————————

கீழ்ப் பாட்டில் அந்தராத்மாவை அனுபவித்தவர் இதில்
விபவத்தையும்
அதுக்கடியான வ்யூஹத்தையும் அனுசந்தித்து உகக்கிறார்

வசையறு குறளாய் மாவலி வேள்வியில் மண் அளவிட்டவன் தன்னை
அசைவறும் அமரர் அடி இணை வணங்க வலை கடல் துயின்ற வம்மானைத்
திசை முகனனை யோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
உயர் மணி மகுடம் சூடி நின்றானைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே—4-3-4-

ப்ரஹ்மாதிகள் கூப்பிடுவார்கள் -உதவிக்கு
கைங்கர்யம் நித்யர்களே பண்ணுவார்கள் திருப் பாற் கடலிலும் –

வசையறு குறளாய் மாவலி வேள்வியில் மண் அளவிட்டவன் தன்னை
வாமன வேஷத்தை
பரிக்கிரஹிக்கிற இடத்தில் ஒரு குறை சொல்ல ஒண்ணாத படியான
குறள் வடிவை உடையனாய்
மகா பலியின் உடைய யஞ்ஞ வாடத்திலே
பூமிப் பரப்படைய அளந்தவன் தன்னை –
(ஸ்ரீ யபதியாக இருந்தும் -பிச்சை எடுக்க -அழகிய மாண் உருவாக-
அழகைக் கண்டவர் குறை சொல்ல முடியாதபடி அன்றோ கோலம் )

அசைவறும் அமரர் அடி இணை வணங்க வலைகடல் துயின்ற வம்மானைத்
ப்ரஹ்மாதிகள் திருப் பாற் கடலிலே சென்று கூப்பிட்டால்
இக்கரையில் நின்று கூப்பிடுகை ஒழிய
உள்ளுப் புக்கு ஒரு பரிசர்யை பண்ண ஒண்ணாதபடி இருக்கையாலே
அஸ்ப்ருஷ்ட தோஷ கந்தரான நித்ய ஸூரிகள் வந்து அடிமை செய்யும்படி
அலை எறியா நின்றுள்ள திருப் பாற் கடலிலே
கண் வளர்ந்து அருளினவனை

அசை வறுகை யாவது –
ஒரு நாள் உத்க்ருஷ்டராகா
ஒரு நாளாகத் தாழ்ச்சி செய்யுமது
அன்றிக்கே இருக்கை-( நீதி வானவர் அன்றோ )

திசை முகனனை யோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
தனித் தனியே சிருஷ்டி ஷமராய் இருக்கிற
ப்ராஹ்மணர் வர்த்திக்கிற

உயர் மணி மகுடம் சூடி நின்றானைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே
பசுக்களையும் இடையரையும் நோக்குகைக்காக
கோவிந்த அபிஷேகம் பண்ணி நின்றாப் போலே
சம்சாரிகள் உடைய ரஷணத்துக்காக
முடி சூடி நிற்கிறவனை

—————————————————————–

ஸ்ரீ விபவத்தில் நெஞ்சு சென்று
ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ண அவதாரங்களைப் பேசி அனுபவிக்கிறார்
இரண்டு பாசுரங்கள் ஸ்ரீ ராமாவதாரம்
அடுத்த மூன்றும் ஸ்ரீ கிருஷ்ண அவதார அனுபவம்

தீ மனத்து அரக்கர் திறல் அழித்தவனே என்று சென்று அடைந்தவர் தமக்குத்
தாய் மனத்து இரங்கி யருளினைக் கொடுக்கும் தயரதன் மதலையைச் சயமே
தே மலர்ப் பொழில் சூழ் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலினுள்ளே
காமனைப் பயந்தான் தன்னை நான் அடியேன் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே —4-3-5-

அடைந்தவர் தமக்கு-அடைந்தவர் க்கு எண்ணாமல் -உபாயம் உபேயம் அவனே என்று இருக்கும் அதிகாரி ஸ்வரூபம்
ஆகிஞ்சன்யம் அநந்ய கதித்வம் உள்ளவர்கள் –
சயமே–ஸ்வயம் -ஜெயம் -சயம் கூட்டமாக மூன்று அர்த்தங்கள்

தீ மனத்து அரக்கர் திறல் அழித்தவனே என்று
தண்ணிய நெஞ்சை உடைய
ராஷசர் உடைய
ஜனனி என்று வாசி வைத்து பிரதிபத்தி பண்ண மாட்டாத
பொல்லாத நெஞ்சை உடைய
ராஷசர் மிடுக்கைப் போக்கினவனே-என்று

சென்று அடைந்தவர் தமக்குத் –
அப்படியே எங்கள் பிரதிபந்தங்களைப் போக்கி ரஷிக்க வேணும் –
என்று கிட்டினவர்களுக்கு

தாய் மனத்து இரங்கி யருளினைக் கொடுக்கும் தயரதன் மதலையைச்
தாயினுடைய நெஞ்சின் படியே இரங்கி
புறம்பு ஒரு புகல் இன்றிக்கே நம் பக்கலில் வந்து கிட்டினவர்கள் இறே
என்று பிரசாதத்தைப் பண்ணி அருளும்
சக்கரவர்த்தி திரு மகனை

சயமே -ஸ்வயம் என்ற படியாய்
அவன் தானே வந்து வர்த்திக்கிற -என்னுதல்
அன்றிக்கே
ஜய சப்தமாய் சொன்ன சொன்ன விஜயங்கள் எல்லாம்
பொறுக்கும் படி இருக்கிற
திரு நாங்கூர் -என்னுதல்

சயமே தேமலர்ப் பொழில்-
சமூஹமான தே மலர்ப் பொழிலை உடைய என்னுதல்

சூழ் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலினுள்ளே
காமனைப் பயந்தான் தன்னை நான் அடியேன் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே
நாட்டில் அழகுக்குத் தன்னை மதிக்கும்படி திரிவான் காமன் இறே
அவனுக்கும் கூட உத்பாதகன் ஆனவனை
சேஷ பூதனான நான்
கண்டு கொண்டு உஜ்ஜீவிக்கப் பெற்றேன்

———————————————

மல்லை மா முந்நீர் அதர்பட மலையால் அணை செய்து மகிழ்ந்தவன் தன்னை
கல்லின் மீது இயன்ற கடி மதிள் இலங்கை கலங்க ஓர் வாளி தொட்டானைச்
செல்வ நான் மறையோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
அல்லி மா மலராள் தன்னோடும் அடியேன் கண்டு கொண்டு அல்லல் தீர்ந்தேனே–4-3-6

கல்லின் மீது இயன்ற திரிகூடம் என்கிற மலையால் கட்டப் பட்ட ரஷை

நிரவதிகமான சம்பத்தை உடையதாய்
பரந்து இருந்துள்ள முந்நீர் உண்டு -கடல்
அது வழிபடும்படியாக
ரத்னாதிகளாலே குறைவற்று இருக்கும் இறே

நீரிலே ஆழக் கடவ மலையாலே
மல்லை மா முந்நீர் அதர்பட அணை செய்து
லீலா ரசம் அனுபவித்து ஹிருஷ்டன் ஆனவனை

திரிகூட சிகரத்திலே இறே இலங்கை
அதுக்கு மேலே அரணாகப் போரும்படி மதிளை உடைத்தான இலங்கை
ஒருவர் கூறை எழுவர் உடுக்கும்படி
கைக்கு எட்டிற்று ஓர் அம்பை விட்டவனை

நிரவதிக சம்பத்தை உடைய பிராமணர் உடைய
அவர்கள் ஐஸ்வர்யத்துக்கு நிதான பூதையான
பெரிய பிராட்டியார் உடன் கூடக் காணப் பெற்று
சாம்சாரிக சகல துரிதங்களும் தீரப் பெற்றேன் –

——————————————–

இதுவும் அடுத்த இரண்டும் ஸ்ரீ கிருஷ்ண அனுபவம்
பாலும் சக்கரை போல் திருவேங்கடமும் கண்ணனும் அடுத்த பாடல்

வெஞ்சினக் களிறும் வில்லோடு மல்லும் வெகுண்டு இருத்து அடர்த்தவன் தன்னைக்
கஞ்சனைக் காய்ந்த காளை யம்மானைக் கரு முகில் நிறத்தவனைச்
செஞ்சொல் நான் மறையோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
அஞ்சனக் குன்றம் நின்றது ஒப்பானைக் கண்டு கொண்டு அல்லல் தீர்ந்தேனே–4-3-7

வெவ்விய சினத்தை உடைத்தாய் இருக்கிற குவலயா பீடத்தையும்
அதுக்கு அவ்வருகே இட்டு வைத்த வில்லையும்
அதுக்கு உள்ளே நிறுத்தின மல்ல வர்க்கத்தையும்
குவலயா பீடத்தைச் சீறி
வில்லை முறித்து

மல்லை அடர்த்தவன் -தன்னை
அதுக்கு உள்ளே நின்ற கம்சனை நிரசித்த காளை
பருவம் நிரம்பாத அளவிலே ஆய்த்து ஈஸ்வரன் செய்ததைச் செய்தது
கம்சனை நிரசித்து -ஆஸ்ரித விரோதி போகப் பெற்றோம் -என்று
ஸ்ரமஹரமான என்ற வடிவோடு நின்றவனை

செவ்விய சொல்லை உடையராய் ஆய்த்து அவ் ஊரில் பிராமணர் இருப்பது
கண்டபடி சொல்லக் கடவராய்
பூத ஹிதமே சொல்லக் கடவரான பிராமணர்

அஞ்சனம்
கண்டார் கண் குளிரும்படியாக
ஓர் அஞ்சன கிரி நின்றாப் போலே நிற்கிறவனை

—————————————————–

அரங்கத்து வந்தவன் -மந்தி பாய் வட வேங்கட மா மலையில் இருந்து தானே வந்தவன்-

அன்றிய வாணன் ஆயிரம் தோளும் துணிய அன்று ஆழி தொட்டானை
மின் திகழ் குடுமி வேங்கடமலை மேல் மேவிய நல் வேத விளக்கைத்
தென் திசை திலதம் அனையவர் நாங்கைச் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
மன்றது பொலிய மகிழ்ந்து நின்றானை வணங்கி நான் வாழ்ந்து ஒழிந்தேனே–4-3-8-

அன்றிய -கோபித்த
மன்றது -பாகவத கோஷ்டியானது

அன்றிய வாணன் ஆயிரம் தோளும் துணிய அன்று ஆழி தொட்டானை-
தன் பேரனோடு பகைத்த பாணனுடைய ஆயிரம் தோள்களும் கழியும்படி
அன்று திரு வாழியை ஸ்பர்சித்தவனை

மின் திகழ் குடுமி வேங்கடமலை மேல் மேவிய நல் வேத விளக்கைத்
இன்னமும் பாணன் போல்வார் விரோதிகள் வந்து முளைக்கில் செய்வது என் என்று
மின் விளங்கா நின்றுள்ள சிகரத்தை உடைத்தான திருமலையில் நித்ய வாசம் பண்ணுகிற
வேதைக சமதி கம்யனாய்
ஸ்வயம் பிரகாசமான ஸ்வரூபத்தை உடையனாய் உள்ளவனை

தென் திசை திலதம் அனையவர் நாங்கைச் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
தெற்குத் திக்குக்கு திலகம் போல் இருக்கிறவர்கள் உடைய

மன்றது பொலிய மகிழ்ந்து நின்றானை வணங்கி நான் வாழ்ந்து ஒழிந்தேனே
எல்லாரும் திரளும் இடத்திலே
அவ்விடம் சம்ருதமாம்படி
பரமபத விபூதியில் போலே
நிரவதிக ப்ரீதி உக்தனாய் உள்ளவனை

பாலோடு சக்கரை சேர்த்து பருகுவாரைப் போலே
கிருஷ்ண அவதாரத்துடன் திருவேம்கடமுடையானை சேர்த்து அனுபவிக்கிறார்

——————————————————-

பாலும் சக்கரையும் அனுபவித்து
தமக்கு இனித்தாகையாலே எல்லாருக்கும் ரசித்தவன் என்று கொண்டு அருளிச் செய்கிறார்

களம் கனி வண்ணா கண்ணனே என்தன் கார் முகிலே என நினைந்திட்டு
உளம் கனிந்து இருக்கும் அடியவர் தங்கள் உள்ளத்து ஊறிய தேனைத்
தெளிந்த நான்மறையோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
வளம் கொள் பேரின்பம் மன்னி நின்றானை வணங்கி நான் வாழ்ந்து ஒழிந்தேனே–4-3-9-

களம் கனி வண்ணா கண்ணனே -என் தன் கார் முகிலே-
சிவந்து இருத்தல்
வெளுத்து இருத்தல்
செய்கை அன்றிக்கே
கண்ணுக்கு குளிர்ந்து
களாப் பழம் போலே இருக்கிற வடிவை உடையவனே
கிருஷ்ணனே

என நினைந்திட்டு உளம் கனிந்து இருக்கும் அடியவர் தங்கள் உள்ளத்து ஊறிய தேனைத்
ஸ்ரமஹரமான வடிவை எனக்கு
முற்றூட்டாக்கினவனே -என்று நினைத்து
ஹிருதயமானது பக்வமாய் இருக்கும்
சேஷ பூதர் இடைய ஹிருதயத்தில்
ஊறிய தேன் போலே நிரதிசய போக்யன் ஆனவனை

தெளிந்த நான் மறையோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
ஒரு கால் சர்வேஸ்வரன் ரஷகன் -என்று இரா
மற்று ஒரு போது-வேறு ஓன்று ரஷகம் -என்று இருக்கை அன்றிக்கே
என்றும் ஒக்க சர்வேஸ்வரனே நமக்கு ரஷகன் -என்று தெளிந்து இருக்கிற பிராமணர்

வளம் கொள் பேரின்பம் மன்னி நின்றானை வணங்கி நான் வாழ்ந்து ஒழிந்தேனே
அழகியதாய்
நிரவதிகமான ஆனந்தத்தை
உடையவனாய் நிற்கிறவனை

———————————————————-

தேனமர் சோலை நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலினுள்ளே
வானவர் கோனைக் கண்டமை சொல்லும் மங்கையார் வாள் கலிகன்றி
ஊனமில் பாடல் ஒன்பதோடு ஒன்றும் ஒழிவின்றிக் கற்று வல்லார்கள்
மான வெண் குடைக் கீழ் வையகம் ஆண்டு வானவர் ஆகுவர் மகிழ்ந்தே–4-3-10-

தேனமர் சோலை நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலினுள்ளே
வண்டுகள் நெருங்கி இருந்துள்ள சோலையை உடைத்தான
திரு நாங்கூரில் செம் பொன் செய் கோயிலின் உள்ளே

வானவர் கோனைக் கண்டமை சொல்லும் –
அயர்வறும் அமரர்கள் அதிபதியை
கண்டமை யாய்த்து சொல்லிற்று

மங்கையார் வாள் கலிகன்றி-
திரு மங்கையில் உள்ளாருக்கு மிடுக்கான வாளை உடையரான ஆழ்வார்

ஊனமில் பாடல் ஒன்பதோடு ஒன்றும் ஒழிவின்றிக் கற்று வல்லார்கள்
லக்ஷணங்களில் குறை அறச் சொன்ன பத்தும்
ஒன்றும் வழுவ விடாதே
அப்யசிக்க வல்லார்கள்

மான வெண் குடைக் கீழ் வையகம் ஆண்டு வானவர் ஆகுவர் மகிழ்ந்தே
பரப்பை உடைத்தான
வெண் கொற்றக் குடைக் கீழே
பூமியை அடைய பாகவத சேஷம் ஆக்குகைகாக நிர்வஹித்து
அநந்தரம்
நிரவதிக ப்ரீதி உக்தராய்
நித்ய ஸூரிகளோடு ஒரு கோவையாகப் பெறுவர்

பேரருளாளன் எம்பிரான் -என்று உபக்ரமித்து
வானவர் கோனை -என்று உபசம்ஹரிக்கிறார்
தேவ ராஜா பிதாமகர் தனம் -அயர்வறும் அமரர்கள் அதிபதி
அவரையே இங்கே கண்டார்
நலமுடையவன் –கோயில்
அருளினன் திருமலை
அயர்வறும் அமரர்கள் அதிபதி – பெருமாள் கோயில்
கோயில் திருமலை பெருமாள் கோயில்-அனுபவம் என்றதாயிற்று

இப்படி அல்லையாகில் கண்டமையை சொல்லிற்று என்ன ஒண்ணாதே
தொழுது என்னவும் ஒண்ணாதே
உய்ந்து ஒழிந்தேன் வாழ்ந்து ஒழிந்தேன் அல்லல் தீர்ந்தேன் -ஒன்பது பாட்டும் ஒரு தட்டு
இந்த பல சுருதி ஒரு தட்டு -ஒன்பதோடு ஒன்றும்

————

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

பேரணி சீர் பால் கார் அமுதம் தேன் பான்மையான்
பேர் அறிவன் இன்பன் மாறில் மாலை -சீர் மறையோர்
செம்பொன் செய் கோயிலுள் மாவோடு கண்டுய்ந்த நீலன்
நம் பிறவியாம் வினைக்கு மாற்று -33-

நாங்கை நன்னடுவுள் உள்ள திவ்ய தேசம்
பேர் அணி சீர் -அணி அணியாகத் திரண்ட கல்யாண குணங்கள்
அவை தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதமுமாய் தித்திக்கும் பான்மை -தன்மை அன்றோ
பேர் அறிவன்-சர்வஞ்ஞன்
மாறில் மால் -அவிகாராய ஸூத்தாய-சதைக ரூப ரூபாய
மாறில் ஒப்பில்லாத அத்விதீயன் என்றுமாம்
கண்டு உய்ந்தமை ஒவ் ஒரு பாட்டிலும் இறுதியில் உண்டே –

—————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய திருமொழி-4-2—-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

May 5, 2014

வண் புருஷோத்தம்–வள்ளன்மை -புருஷர்களில் உத்தமன்
வியாபித்து தாங்கி ஸ்வாமியாக –
புருஷோத்தம வித்யை –15 -அவதார ரஹஸ்ய ஞானம் –4 -இரண்டாலும்
அதே பிறவியிலே பேறு -உபாசகனுக்கு
புருஷோத்தம தாயார் உடன் சேவை இங்கு

கிழக்கு நோக்கி சேவை
ராமனே இங்கு சேவை
புருஷோத்தம நாயகி தாயார்
சஞ்சீவ விக்ரஹ விமானம்
பாற் கடல் தீர்த்தம்
உதங்க முனிவர் ப்ரச்னம் உத்தரம் இல்லையே
துவாரகா தீசன் இங்கு பிள்ளைப் பெருமாள் ஐ யங்கார்

கம்ப மா கடல் பிரவேசம்

ப்ரஹ்மாதிகளுக்கும் உத்பாதகனுமாய் -இந்துவார் சடை பாசுரம் -4-2-9–
அவர்கள் தங்கள் தங்களுக்கு அனர்த்தத்தை சூழ்த்துக் கொள்ளும் அன்று
அவற்றைப் போக்கி ரஷிக்கும் ஸ்வ பாவனுமாய் -வாளையார் பாசுரம் -4-2-8-
அவர்கள் தாங்கள் அசுரர்கள் உடன் வரும் அன்றும்
அவர்களை ஜெயித்து-ஈசன் தன் பாசுரம்
ஜகத்தை ரஷிக்குமவன் –
வந்து எழுந்து அருளி இருக்கிற தேசம்
வண் புருஷோத்தம் என்று
அத்தேசத்தின் உடைய வைலஷண்யத்தை
அனுசந்தித்து அத்தைப் பேசி அனுபவிக்கிறார்

———————————————————

கம்பா மா கடல் அடைத்து இலங்கைக்கு மன் கதிர் முடி யவை பத்தும்
அம்பினால் அறுத்து அரசு அவன் தம்பிக்கு அளித்தவன் உறை கோயில்
செம்பலா நிரை செண்பகம் மாதவி சூதகம் வாழைகள் சூழ்
வம்புலாங்கமுகு ஓங்கிய நாங்கூர் வண் புருடோத்தமே—4-2-1-

கம்பா மா கடல் அடைத்து -இட்ட தடையைக் கரைந்து போம்படி-(அகம்பனன் -நடுக்கம் இல்லாதவன் )
அலை எறியா நின்றுள்ள பெரிய கடலை அணை செய்து-
இக் கரையிலே அரசு அளித்து பரத்வம் பீரிட்டு
மர்யாதா புருஷோத்தமன் —
மாதவி -குருக்கத்தி மரம்
சூதகம்-மாம் பழ மரம்
இதுவும் இப்படிப்பட்ட திவ்ய தேசம்
முதல் மூன்று பதிகங்கள் நெஞ்சுக்கு –

இலங்கைக்கு மன்-
அரண் உடைத்தான இலங்கைக்கு நான் நிர்வாஹகன் அல்லனோ
என்று அத்தாலே துர்மானத்தை பண்ணி இருக்கிற ராவணன் உடைய
(அஹங்காரம் தொலைக்கவே கடலில் அணை காட்டினார் )

கதிர் முடி யவை பத்தும் –
திக் விஜயம் பண்ணிச் சூடின
முடியை உடைத்தான
தலை பத்தையும்
(அவை என்று இவற்றைக் காட்ட )

அம்பினால் அறுத்து –
ப்ரஹ்மாஸ்த்ராதிகளுக்கும் கேளாத படி
வர பலத்தாலே பூண் கட்டி இருக்கிற தலைகளை
ஷத்ரியத்துவத்துக்கு ஏகாந்தமான அம்பாலே அழியச் செய்து
(சத்யமே -கொண்டு வென்றான் -)

அரசு அவன் தம்பிக்கு அளித்தவன் உறை கோயில்
ராஷசர் உடைய ஐஸ்வர்யத்தை
நம்முடையான் ஒருவன் கடவனாகப் பெற்றோம் இறே என்று
அந்த ஐஸ்வர்யத்தை அவன் தம்பியான விபீஷணனுக்கு
கொடுத்து அருளினவன் வந்து நித்ய வாசம் பண்ணுகிற தேசம்
(கிருதக்ருத்யா ததா ராம விஜ்வர -ஜுரம் நீங்கப்பெற்றார் பெருமாள் )

செம்பலா நிரை செண்பகம் மாதவி சூதகம் வாழைகள் சூழ்
பலாக்கள் உடைய செவ்விய நிரை
செண்பகம்
குருக்கத்தி
தேமா
வாழைகள்
இவை சூழ்ந்து இருக்கும் ஆய்த்து புறச் சோலைகள் –
உள் சோலைகள் இருக்கும்படி

வம்புலாங்கமுகு ஓங்கிய நாங்கூர் வண்
உடைத்தான திரு நாங்கூரிலே

——————————————————-

ரண அரங்கத்தில் கீழே
அதில் இருந்து இதில் பண அரங்கம் -காளியன் உச்சியில் நட்டம் ஆடி

பல்லவம் திகழ் பூங்கடம்பு ஏறி அக் காளியன் பணம் அரங்கில்
ஒல்லை வந்து உறப் பாய்ந்து அரு நடம் செய்த உம்பர் கோன் உறை கோயில்
நல்ல வெந்தழல் மூன்று நால் வேதம் ஐ வேள்வியோடு ஆறங்கம்
வல்ல வந்தணர் மல்கிய நாங்கூர் வண் புருடோத்தமமே—4-2-2-

நல்ல-கர்ம அனுஷ்டான யோக்கியமான

பல்லவம் திகழ் பூங்கடம்பு ஏறி அக்காளியன் பணம் அரங்கில் ஒல்லை வந்து உறப் பாய்ந்து
காளியன் உடைய விஷத்தாலே
தக்தமாய்க் கிடந்து
திருவடிகளின் ஸ்பர்சத்தாலே
தளிரும் பூவுமாய் தழைத்தது ஆய்த்து –

தளிர் விளங்கா நிற்பதாய்
பூத்த கடம்பின் மேலே ஏறி காளியன் உடைய
பணங்கள் ஆகிற ரெங்கத்தின் மேலே
அவன் தப்பாதபடியாக நினைவு இன்றிக்கே
இருக்கச் செய்தே வந்து கடுகப் பாய்ந்து

அரு நடம் செய்த –
அந்த நிருத்தத்திலே
வன்மைக் கூத்து என்றும்
மென்மைக் கூத்து என்றும்
சில உண்டு -அவற்றை அடையப் பண்ணின

உம்பர் கோன் உறை கோயில்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன் வந்து
வர்த்திக்கிற கோயில்

நல்ல வெந்தழல் மூன்று நால் வேதம் ஐ வேள்வியோடு ஆறங்கம் வல்ல
அக்னி த்ரயம்
நாலு வகைப் பட்ட தேவம்
பஞ்ச மகா யஞ்ஞம்
அங்கங்கள் ஆறும்
இவற்றை தாங்கள் வருந்தி அநுஷ்டித்தார்கள் ஆகை அன்றிக்கே
வந்தணர் மல்கிய நாங்கூர் வண் புருடோத்தமமே
பிறரையும் அனுஷ்டிப்பைக்குக்கு
ஷமரான ப்ராஹ்மணர் வர்த்திக்கிற தேசம்

ஆச்சார்யர் -தாங்களும் ஆசரித்து சிஷ்யர்களை ஆச்ரயிக்கச் செய்பவர் போல் ஆறு தொழில் அந்தணர்

————————————————————–

திர்யக்-காளியன் நிரசனம் கீழ்
தேவ ஜாதிக்கு கடவன் -கை ஓயும் படி செய்த கோவர்த்தன உத்தாரணம் இதில்

அண்டரானவர் வானவர் கோனுக்கு என்று அமைத்த சோறது எல்லாம்
உண்டு கோனிரை மேய்த்தவை காத்தவன் உகந்து இனிது உறை கோயில்
கொண்டலார் முழவில் குளிர் வார் பொழில் குல மயில் நடமாட
வண்டு தான் இசை பாடிடு நாங்கூர் வண் புருடோத்தமமே—4-2-3-

அண்டரானவர் வானவர் கோனுக்கு என்று அமைத்த சோறது எல்லாம்
பசுக்களுக்கும் நமக்கும் முகம் தோற்ற நின்று
வர்த்திக்கிற இவனுக்கு மேல்பட ஒரு தேவதை உண்டோ என்று
கண்டத்துக்கு அவ்வருகு அறியாதபடி
செவ்வியராய் இருக்கிற இடையர் ஆனவர்கள்
தேவ ஜாதிக்கு எல்லாம் நியாமகனாய்ப் போந்தவனான
இந்தரனுக்கு என்று
சமைத்த சோற்றை எல்லாம்

உண்டு –
(அஹம் கோவர்த்தனோஸ்மி -என்று )தான் அமுது செய்து

கோனிரை மேய்த்தவை காத்தவன்-
அனந்தரம் அவற்றின் உடைய
ரஷணமும் தனக்கே பரம் ஆகையாலே
அவற்றை மேய்த்து அவற்றின் உடைய ஆபத்தை
போக்கி ரஷிக்கிறவன்
(திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி எங்கள் செங்கனிவாய் ஆயர் கோவே )

உகந்து இனிது உறை கோயில்
இன்னமும் இப்படி ரஷிக்கைக்கு பாங்கான தேசம் என்று
அவன் உகந்து நித்ய வாசம் பண்ணுகிற தேசம்

கொண்டலார் முழவில் குளிர் வார் பொழில் குல மயில் நடமாட
மேகங்களின் உடைய மிக கோஷமான அதுவே வாத்தியமாக
ஸ்ரமஹரமாய் பரந்து இருந்து உள்ள
பொழிலின் நடுவே மயிலின் உடைய சங்கமானது ஆட

வண்டு தான் இசை பாடிடு நாங்கூர் வண் புருடோத்தமமே
அங்கே மது பானம் பண்ணுகிற வண்டுகள் ஆனவை
இவற்றின் இடைய காலுக்கு ஈடாக
இசை பாடா நின்றுள்ள திவ்ய தேசம்

————————————————————

பசி கோபத்தால் வந்தவனை கை ஓயும் படி செய்தது கீழ்
கை விஞ்சின கைம்மாவையும் எதிரிட்ட முருடரையும்
ஜென்ம சத்ருவான கம்சனையும் கை ஓயும் படி செய்தது-
கீழே அண்டர் அ காரம்
ஏழாம் பாசுரம் உ காரம்
பத்தாம் பாசுரம் மகாரம்

பருங்கை யானையின் கொம்பினைப் பறித்து அதன் பாகனைச் சாடி புக்கு
ஒருங்க மல்லரைக் கொன்று பின் கஞ்சனை உதைத்தவன் உறை கோயில்
கரும்பினூடு உயர் சாலிகள் விளை தரு கழனியில் மலி வாவி
மருங்கு எலாம் பொழில் ஓங்கிய நாங்கூர் வண் புருடோத்தமமே-4-2-4-

மலி வாவி-பெரிய கிணறுகள் மலிந்த -கழனியில்-வயலுக்குள் –

பருங்கை யானையின் கொம்பினைப் பறித்து –
பெரிய துதிக்கை உடைத்தான குவலயா பீடத்தின் உடைய
கொம்பை முறித்து

அதன் பாகனைச் சாடி புக்கு
அது முடிந்தாலும் நடத்த வல்ல சக்தியை உடைத்தான
பாகனை அழியச் செய்து

ஒருங்க மல்லரைக் கொன்று –
அநந்தரம் சாணூர முஷ்டிகாதி மல்ல வர்க்கத்தை
அழியச் செய்து

பின் கஞ்சனை உதைத்தவன் உறை கோயில்
உள்ளே போய் புக்கு
கம்சன் தலை மயிரைப் பிடித்து
முகம் கீழ் பட வலித்து
திருவடிகளாலே யுதைத்து முடித்தவன்
இன்னும் இப்படிப் பட்ட விரோதி அம்சத்தை
போக்குகைக்காக நித்ய வாசம் பண்ணுகிற தேசம்

கரும்பினூடு உயர் சாலிகள் விளை தரு கழனியில் மலி வாவி
மருங்கு எலாம் பொழில் ஓங்கிய நாங்கூர் வண் புருடோத்தமமே
கரும்பின் உள்ளே அத்தோடு ஒத்து இசலி வளரா நின்றுள்ள
செந்நெல்லை உடைத்தான வயலிலே மிக்க பொய்கைகளிலே
பரிசரம் எல்லாம் ஆகாச அவகாசம் வெளி யடையும் படி
ஓங்கின பொழிலாய் கிடக்கும் ஆய்த்து

—————————————————-

விரோதி நிரசன சீலத்தவம் அடி தொடங்கி சித்தம்
ஈஸ்வர அபிமானிகளில் தலைவன் ருத்ரன் – கை விஞ்சின துரபிமானி பாணாசுரன் கூடி எதிர்த்து வர
கெட்டு ஓடவும் -கை கழியவும் பண்ணி அருளிய விருத்தாந்தம் இதில்

சாடு போய் விழத் தாழ் நிமிர்த்து ஈசன் தன் படை யோடும் கிளையோடும்
ஓட வாணனை யாயிரம் தோள்களும் துணித்தவன் உறை கோயில்
ஆடு வான் கொடி யகல் விசும்பு அணைவிப் போய் பகலவன் ஒளி மறைக்கும்
மாட மாளிகை சூழ் தரு திரு நாங்கூர் வண் புருடோத்தமமே-4-2-5-

சாடு போய் விழத் தாழ் நிமிர்த்து –
முலை வரவு தாழ்த்த சமயத்திலே
சகடாசுரன் வந்து கிட்ட
அவன் முடியும்படியாக திருவடிகளை நிமிர்த்த

ஈசன் தன் படை யோடும் கிளையோடும் ஓட –
ஈஸ்வர அபிமானியான ருத்ரன்
முண்ட நீறன் -திருச்சந்த விருத்தம் -71-தொடக்கமான பரிகரத்தோடே வந்து எதிரிட்டு
பின்னை அவற்றை அடையைக் கொண்டு கெட்டோட

வாணனை யாயிரம் தோள்களும் துணித்தவன் உறை கோயில்
இதர சமாஸ்ரயணம் பண்ணின பாணன் உடைய ஆயிரம் தோளையும் தரித்தவன்
இன்னும் ஆஸ்ரித விரோதிகளை போக்குகைக்கு ஈடாக
வந்து வர்த்திக்கிற தேசம்

ஆடு வான் கொடி யகல் விசும்பு அணைவிப் போய் பகலவன் ஒளி மறைக்கும்
அசையா நின்று உள்ள பெரிய கொடிகள் ஆனவை
பரப்புடைய ஆகாசத்தை தழுவிக் கொண்டு போய்
ஆதித்ய கிரணங்களை மறையா நின்று உள்ள

மாட மாளிகை சூழ் தரு திரு நாங்கூர் வண் புருடோத்தமமே
மாடங்களாலும் மாளிகைகளாலும் சூழப் பட்ட தேசம்

—————————————————————–

ஈஸ்வர அபிமானி தேவதாந்த்ர ஸமாச்ரயணம் பண்ணின –
அவனுக்கும் ஜனகனான நான்முகன் அபிமானம் தொலைந்து
எல்லாரையும் அடிக்கீழ் இட்டு அளந்ததை அனுசந்தித்து
சகடாசுரன் -தாள் நிமிர்த்த படி -அத்தையும் அனுபவிக்கிறார் இதில்

அங்கையால் அடி மூன்று நீர் ஏற்று அயன் அலர் கொடு தொழுது ஏத்த
கங்கை போதரக் கால் நிமிர்த்து அருளிய கண்ணன் வந்து உறை கோயில்
கொங்கை கொங்கு அவை காட்ட வாய் குமுதங்கள் காட்ட மா பதுமங்கள்
மங்கைமார் முகம் காட்டிடு  நாங்கூர் வண் புருடோத்தமமே-4-2-6

அங்கையால் அடி மூன்று நீர் ஏற்று அயன் அலர் கொடு தொழுது ஏத்த
கோ சகஸ்ர ப்ரதாதாரம் -யுத்த -21-7-என்கிறபடியே
கொடுத்து வளர்ந்த அழகிய கையைக் கொண்டு
மூவடியை நீர் ஏற்று
திருக் கையிலே நீர் விழுந்த அநந்தரம் வளர்ந்து அருளுகிற போது
ப்ரஹ்ம பதத்து அளவும் சென்று
அவன் கையிலே திருவடிகள் இருக்க
அவன் புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு ஆஸ்ரயிக்கும்படி யாகவும்

கங்கை போதரக் கால் நிமிர்த்து அருளிய கண்ணன் வந்து உறை கோயில்
கங்கை புறப் படும் படியாகவும் திருவடிகளை நிமிர்த்து அருளின
சர்வேஸ்வரன் -(ஆஸ்ரித ரக்ஷண அர்த்தமாக )வந்து நித்ய வாசம் பண்ணுகிற தேசம்

கொங்கை கொங்கு அவை காட்ட வாய் குமுதங்கள் காட்ட மா பதுமங்கள் மங்கைமார் முகம் காட்டிடு
அங்குத்தை கோங்குகளின் உடைய அரும்புகள் ஆனவை
அவ் ஊரில் ஸ்திரீகளின் உடைய ஸ்தனங்களைக் காட்ட
அங்கே அலர்ந்து நிற்கிற அரக்காம்பல் ஆனவை அவர்கள் உடைய அதரத்தைக் காட்ட
செவ்வி பெற அலர்ந்த செந்தாமரைப் பூக்கள் முகங்களைக் காட்டா நிற்கும் ஆய்த்து

இத்தால் சொல்லிற்று ஆய்த்து என் என்னில்
ஊருக்கும் வயலுக்கும் வாசி தெரிந்து பிரதிபத்தி
பண்ணுகை அரிதாய் இருக்கும் என்றபடி
(மங்கைக்கும் மரங்களுக்கும் வாசி இல்லையே -ஸூகர் போல் -அனைத்தும் பகவத் விபூதி )

நாங்கூர் வண் புருடோத்தமமே
இத்தால் இவருக்கு திவ்ய தேச மரங்களும் ஸ்திரீகளும் வாசி இல்லாமல் உத்தேச்யம் என்றது ஆய்த்து

————————————————————————-

திரிவிக்ரமன் அனுபவம் கீழ்
எங்கும் உளன் கண்ணன் -வியாபகத்வம்
உளைய-உகாரம் இதில்

உளைய ஒண் திறல் பொன் பெயரோன் தனது உரம் பிளந்து உதிரத்தை
யளையும் வெஞ்சினத் தரி பரி கீறிய அப்பன் வந்து உறை கோயில்
இளைய மங்கையர் இணை அடிச் சிலம்பினோடு எழில் கொள் பந்தடிப்போர் கை
வளையில் நின்றொலி மல்கிய வண் புருடோத்தமமே–4-2-7-

உளைய ஒண் திறல் பொன் பெயரோன் தனது உரம் பிளந்து
ஒரு நாளும் அச்சம் இருக்கும்படி
புதியது உண்டு அறியாதானாய்
மிக்க மிடுக்கை உடையானாய் இருக்கிற ஹிரண்யன் ஆனவன்
நெஞ்சு உளையும்படியாக
அவன் மார்வை இரு கூறாம் படியாக பிளந்து

உதிரத்தை யளையும் வெஞ்சினத் தரி-
அவன் முடிந்து போகச் செய்தேயும்
சிறுக்கன் பக்கல் உண்டான வாத்சல்யத்தாலே சீற்றம் மாறாதே
ருதிர வெள்ளத்தை வெண்ணெய் போலே அளந்த நர சிம்ஹம்

பரி கீறிய அப்பன் வந்து உறை கோயில்
எல்லாரும் ஒக்க அஞ்சும் படி வந்து தோற்றின கேசி வாயை
கிழித்து தன்னைத் தந்த
மகா உபகாரகன் வந்து வர்த்திக்கிற தேசம்

இளைய மங்கையர் இணை அடிச் சிலம்பினோடு எழில் கொள் பந்தடிப்போர் கை
அவ் ஊரில் பாலைகள் ஆன ஸ்திரீகள் ஆடுகிற காலில்
சிலம்பின் உடைய த்வநியோடே கூட
அழகிய பந்துக்களை அடியா நின்றுள்ளார் கைகளில்

வளையில் நின்றொலி மல்கிய வண் புருடோத்தமமே
ஆபரணங்கள் உடைய த்வநியானது மிக்கு
மற்றும் உண்டான நகர கோஷத்தை அபிபவித்துத்
தான் மேற்பட நிற்கும் ஆய்த்து

—————————————————

ஹிரண்யம் இரத்தத்தை அலைந்தது கீழ்
பரமசிவனுக்கு -தனது இரத்தத்தை கொடுத்து கபாலம் போக்கி அருளிய விருத்தாந்தம் இதில்
ஹர சாப நிவர்த்தகன் –
மேகம் போன்ற ஸ்வ பாவம் காட்டி நமக்கு உபகாரம் –

வாளையார் தடம் கண் உமை பங்கன் வன் சாபம் மற்றது நீங்க
மூளையார் சிரத்து ஐயம் முன் அளித்த எம் முகில் வண்ணன் உறை கோயில்
பாளை வான் கமுகு ஊடு உயர் தெங்கின் வன் பழம் விழ வெருவிப் போய்
வாளை பாய் தடம் சூழ் தரு நாங்கூர் வண் புருடோத்தமமே—4-2-8-

மூளை-எலும்பு –
உமா -அப்படி செய்யாதே -பட்டினி இருக்காதே ஹிமாவான் சொல்லி இந்த பெயர் –

வாளையார் தடம் கண் உமை பங்கன் வன் சாபம் மற்றது நீங்க
மிக்க ஒளியை உடைத்தாய்
பரந்து இருந்துள்ள கண்களை உடைய தேவிக்கு தன் உடம்பில்
ஒரு பார்ஸ்வத்தைக் கொடுத்துக் கொண்டு இருக்கிற
தேவன் உடைய வலிய சாபம் நீங்க

மூளையார் சிரத்து ஐயம் முன் அளித்த எம் முகில் வண்ணன் உறை கோயில்
லோக குருவுமாய்
பிதாவுமாய் இருக்கிற வனுடைய தலையை
ஒரு ஹேது இன்றிக்கே இருக்க அறுக்கையாலே
ஒன்றால் பரிகரிக்க அரிதாம் படியான பாதகமானது
அவனை விட்டுப் போம் படியாக

ரக்த ஸ்பர்சம் ஒன்றும் இன்றிக்கே
வெறும் அஸ்தியேயாய் இருக்கிற தலை ஓட்டிலே -மூளை ஆர் எலும்பானது பூரணமாய் இருக்கும் படியாக –
பிஷையை முன்பு அருளின
மகா உதாரனானவன் வர்த்திக்கிற தேசம்

பாளை வான் கமுகு ஊடு உயர் தெங்கின் வன் பழம் விழ
பாளையாய் உடைத்தாய்
ஆகாச அவகாசம் இடம் அடையும் படியாக ஓங்கின கமுகின் நடுவே
உண்டான தெங்குகளின் உடைய பெரிய பழங்கள்
ஆனவை
பொய்கைக்கும் தெங்குக்கும் உண்டான அண்மையாலே
பொய்கையிலே வந்து விழ
(கரண்ட மாடு பொய்கை -திருக்குறுங்குடி கோயிலுக்கு உள்ளே )

வெருவிப் போய் வாளை பாய் தடம் சூழ் தரு நாங்கூர் வண் புருடோத்தமமே
தன்னை உத்தேசித்து விழுகிறதாகக் கொண்டு
வாளையானது அவ்விடத்தை விட்டுத் தனக்கு அரண்
உடைத்தாய்
இருப்பதொரு பிரதேசத்தை அடையா நிற்கும் ஆய்த்து –

—————————————————————-

பேரனுக்கு உதவின விருத்தாந்தம்
நான்முகனை நாராயணன் படைத்தான் –சங்கரனைப் படைத்தான்
கிழக்கு நோக்கி சேவை
ராமனே இங்கு சேவை
புருஷோத்தம நாயகி தாயார்
சஞ்சீவ விக்ரஹ விமானம்
பாற் கடல் தீர்த்தம்
உதங்க முனிவர் ப்ரச்னம் உத்தரம் இல்லையே
துவாரகா தீசன் இங்கு பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்

இந்துவார் சடை ஈசனைப் பயந்த நான்முகனைத் தன் எழிலாரும்
உந்தி மா மலர் மீ மிசைப் படைத்தவன் உகந்து இனிது உறை கோயில்
குந்தி வாழையின் கொழும் கனி நுகர்ந்து தன் குருளையைத் தழுவிப் போய்
மந்தி மாம்பணை மேல் வைகு நாங்கூர் வண் புருடோத்தமமே–4-2-9-

இந்துவார் சடை ஈசனைப் பயந்த நான்முகனைத் தன் எழிலாரும் உந்தி மா மலர் மீ மிசைப் படைத்தவன்
சந்த்ரனை உடைத்தான சடையை உடைய ருத்ரனை
சிருஷ்டித்த சதுர் முகனை
தன்னுடைய அழகு மிக்கு இருந்துள்ள திரு உந்தியிலே
பெரிய மலரின் மேல் சிருஷ்டித்தவன்

உகந்து இனிது உறை கோயில்
தன்னாலே ஸ்ருஷ்டனான
சதுர்முகனாலே ஸ்ருஷ்டமான ஜகத் என்று
அதன் உடைய ரஷணத்துக்கு உறுப்பாக
அவன் விரும்பி வர்த்திக்கிற தேசம்

குந்தி வாழையின் கொழும் கனி நுகர்ந்து தன் குருளையைத் தழுவிப் போய்
மந்தி மாம்பணை மேல் வைகு நாங்கூர் வண் புருடோத்தமமே
அங்கு உண்டான வாழைகள் ஆனவை தரையிலே தட்ட
பழுத்துக் கிடந்த படியாலே
அங்கு உண்டான மந்திகள் உண்டு -பெண் குரங்கு
இது அணித்து இறே என்னா
வாராக் கிட்டத் துடங்கும்
அது தான் பின்னையும் தனக்கு எட்டாதே ஓங்கி நிற்கையாலே-தாழ்ந்து இருக்கையாலே –
காலைக் குந்தி அதன் உடைய அழகிய பழங்களை புஜித்து

அநந்தரம்
தன் குட்டியை அணைத்துக் கொண்டு போய்
மாம்பழங்களை புஜிப்பதாக
உத்யோகித்த இது
அந்தக் குட்டியின் உடைய ஸ்பர்சத்தாலும்
புக்க த்ரவ்யம் சாத்மிக்கைகாகவும்
மாம்பணைகளிலே உறங்கா நின்று உள்ள தேசம் –

———————————————————————

மண்ணுளார்-ம காரம் இதில்
தத்வம் –வண் புருடோத்தமன்-
ஹிதம் -அண்ணல் சேவடிக் கீழ் அடைந்து-
புருஷார்த்தம் -அடைந்து உய்ந்தவன்-
ஸங்க்ரஹம் இதில்

மண்ணுளார் புகழ் வேதியர் நாங்கூர் வண் புருடோத்தமத்துள்
அண்ணல் சேவடிக் கீழ் அடைந்து உய்ந்தவன் ஆலிமன் அருள் மாரி
பண்ணுளார் தரப் பாடிய பாடல் இப்பத்தும் வல்லார் உலகில்
எண்ணிலாத பேரின்பம் உற்று இமையவரோடும் கூடுவரே–4-2-10-

சேவடி-ஸூ ந்தரமான திருவடி
அருள் மாரி இவர்
இன்ப மாரி -நம்மாழ்வார்

மண்ணுளார் புகழ் வேதியர் நாங்கூர் வண் புருடோத்தமத்துள்
மண்ணுள் ஆர் புகழ் வேதியர் என்னுதல்
மண்ணுளார் புகழ் வேதியர் என்னுதல்

பூமியிலே மிக்க புகழை உடையராய் இருக்கிற ப்ராஹ்ணர் என்னுதல்
பூமியில் உள்ளவரால் புகழப் பட்டவர் என்னுதல்

அண்ணல் சேவடிக் கீழ் அடைந்து உய்ந்தவன்
சர்வேஸ்வரன் திருவடிகளிலே கிட்டி
அசந்நேவ–ச பவதி -என்னும் நிலை தவிர்ந்து
உஜ்ஜீவிக்கப் பெற்றவர்

ஆலிமன் -திருவாலியில் உள்ளவருக்கு பிரதானரான ஆழ்வார்

அருள் மாரி-ஆஸ்ரிதருக்கு பிரசாதம் பண்ணும் இடத்தில்
மேகம் போலே உதாரரான ஆழ்வார்

பண்ணுளார் தரப் பாடிய பாடல் இப் பத்தும் வல்லார் உலகில்
பண்ணிலே ஆரும்படியாக பாடிய இப் பாடல் இப் பத்தையும் வல்லவர்கள் லோகத்திலே

எண்ணிலாத பேரின்பம் உற்று இமையவரோடும் கூடுவரே
நிரவதிகமான ஆனந்தத்தை உடையராய்
அநந்தரம்
நிரவதிக ப்ரீதி உக்தரான நித்ய ஸூரிகளோடு
ஒரு கோவையாக பெறுவர்

————–

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

கம்பத்தின் தோன்றல் அயன் அரனைத் தோற்றுவித்து
உம்பர் இடர் நீக்க அவர் எதிர் அம்பு கோக்க
வென்று அளிக்கும் வண் புருடோத்தமனைக் கூறு நீலன்
பன்னு தமிழ் நம் பேரணி -32-

பேரணி -ஆழ்வார் ஸ்ரீ ஸூக் திகளே நமக்கு சிறந்த ஆபரணம் –

———————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்