(திரு மந்த்ர அர்த்தம் முதல் பத்திலேயே பெற்று
மீண்டும் அத்தைப் பாடி அருளினார் கீழ்
நானே பெற்றேனே நமரும் உரைமின் -ஒன்பதின் கால்
சம்பந்த ஞானம் திரு உள்ளத்தில் உறைக்க
ப்ராப்ய த்வரை மிக்கு
இதில் முதல் இரண்டு பாசுரத்தால் -கூப்பிட
மூன்றாம் பாசுரம் பெருமாள் சமாதானம் –
உமக்கு எல்லாம் பெற உறுப்பாக அன்றோ நாம் இவ்வோ இடங்களில்
என்று
இதில் பல திவ்ய தேசங்களைக் கொத்து கொத்து அருளிச் செய்கிறார்
இவ்வாறு உகந்து அருளினை நிலங்களைக் காட்ட இவரும் எல்லாம் பெற்றாராய் க்ருதார்த்தர் ஆகிறார்
கீழே சரணம் புகுந்தார்
கைங்கர்ய பிரார்த்தனை தலை எடுத்து -விருப்பம் மிக
கூப்பிட்ட கூப்பாட்டுக்கு சமாதானம் பண்ண ஸமாஹிதர் ஆகிறார் என்று சங்கதி
கண்கள் சிவந்து திருவாய் மொழி முதல் இரண்டும் மூன்றாம் பாசுரம் பாதியும் போல்
இங்கு முதல் இரண்டும் அடுத்த எட்டும் -)
கறவா பிரவேசம் –
கீழே சம்பந்த ஞானம் பிறக்கை யாலே
கைங்கர்ய லாபத்துக்கு கூப்பிட்டார் –
நீர் இங்கனே கிடந்தது படுகிறது என்ன
உமக்கு எல்லாம் பெறுகைக்கு உறுப்பாக அன்றோ
நாம் இவ்வோ இடங்களிலே நிற்கிறது என்று
உகந்து அருளின நிலங்களில் நிலையைக் காட்ட
இவரும் எல்லாம் பெற்றாராய்
க்ருதார்த்தர் ஆகிறார் –
———————————————–
அனுபவ விரோதியான சம்சார சம்பந்தத்தை
கழித்து அருள வேணும் -என்கிறார் –
கறவா மட நாகு தன் கன்றுள்ளினால் போல்
மறவாது அடியேன் உன்னையே அழைக்கின்றேன்
நறவார் பொழில் சூழ் நறையூர் நின்ற நம்பி
பிறவாமை என்னைப் பணி எந்தை பிரானே –7-1-1-
நம்பி-கல்யாண குண பூர்ணனே சம்வாதம் இதில்-
கறவா மட நாகு தன் கன்றுள்ளினால் போல் –
கறக்கப் பெறாத நாகினுடைய கன்று தன் தாயை நினைக்கும போலே –
கறவா மட நாகானது-தன் கன்றை உள்ளினால் போலே
என்று சொல்ல நினைத்து
அர்த்தத்துச் சேராமையாலே
மிடி பட்டார் பிள்ளை அமுதனார் –
அது தான் அபஷ தர்மமாம் இறே –
ஆகையால் பட்டர் அருளிச் செய்யும் படி -கறவா மட நாகை (தாய் பசுவை ) தன் கன்று உள்ளினால் போலே என்று –
கறக்கப் பெறாமையாலே முலைக் கடுப்பாலே வந்த நோவு உண்டு இறே அதுக்கு –
அத்தாலே அவன் உடைய ஆற்றாமை எல்லாம் தோற்றும் இறே –
(இரண்டு இடத்திலும் ஆற்றுமை உண்டே -பெருமாளுக்கும் ஆழ்வாருக்கும் -நாகுக்கும் கன்றுக்கும் )
(வேத சதுஷ்ட்ய அங்க உப அங்கங்கள் 14 போல் -18 என்று இல்லாமல் –
மா முனிகள் -வேத சதுஷ்ட்யத்துக்கு – உருபு சேர்த்தது போல்
இங்கு நாகு -நாகை -உருபு சேர்த்து பட்டர் அருளிச் செய்யும் படி)
தன் கன்றுள்ளினால் போல் –என்கையாலே
முலை உண்ணப் பெறாமையாலே வந்த நாக்கு ஓட்டுதல் தோற்றும் இறே –
அத்தாலே இத்தலை ஆற்றாமை எல்லாம் தோற்றும் இறே
கறக்கப் பெறாத நாகின் உடைய கன்று தன் தாயை நினைக்குமா போலே –
மறவாது அடியேன் உன்னையே அழைக்கின்றேன்-
மறைக்கைக்கு சம்பாவனை உள்ள சம்சாரத்தே இருந்து
அனந்யார்ஹனான நான்
ஸ்வாமியான உன்னையே
சொல்லிக் கூப்பிடா நின்றேன் –
நறவார் பொழில் சூழ் நறையூர் நின்ற நம்பி –
தேன் மிக்கு இருந்து உள்ள பொழிலாலே சூழப் பட்ட
நறையூரிலே வந்து நிற்கிற
கல்யாண குண பூரணன் ஆனவனே –
பிறவாமை என்னைப் பணி –
பிறக்கை மறுப்போடு வ்யாப்தமாய்த்து இருப்பது –
அந்த மறப்பு வருகைக்கு ஈடான பிறப்பு -பிறவாமையை நான் பெறும்படி
பண்ணி அருள வேணும் –
எந்தை பிரானே –
கடவ நீயே என்னுடைய விரோதியைப் போக்கா விட்டால்
வேறு சிலர் கடவார் உண்டோ –
நீயே நினைத்து கார்யம் செய்யில் உளேனாய்
இல்லையாகில் இல்லை யாம் படி
அநந்ய கதியாய் இருக்கிற நான்
ஸ்வாமியான உன்னையே
நினைத்துக் கூப்பிடா நின்றேன் –
என்னுடைய விரோதியை நீயே போக்கா விடில்
வேறு சிலர் போக்குவார் உண்டோ –
————————————————–
கீழ் பாட்டிலும் இதிலும் கூப்பிடுகை –
இது தான் மிகை அன்றோ –
(கன்றுக்குட்டி அம்மா நாகை கூப்பிட்டதே கீழ் )
பிரளயம் கொண்ட பூமியை நீ எடுத்தது ஆர் கூப்பிட –
நீ அறிந்த ஆபத்தும்
விலக்காமையும்
அன்றோ வேண்டுவது உனக்கு ரஷிக்கைக்கு –
பிரளயம் கொண்ட பூமி ஆழ்ந்த இத்தனை அல்லது
என்னை எடுக்க வேண்டும் -என்றதோ –
வற்றா முது நீரொடு மால் வரை ஏழும்
துற்றாக முன் துற்றிய தொல் புகழானே
அற்றேன் அடியேன் உன்னையே அழைக்கின்றேன்
பெற்றேன் அருள் தந்திடும் எந்தை பிரானே —7-1-2-
அற்றேன் -அநந்யார்ஹ சேஷ பூதன் -தத் ஏக உபாயத்வ அத்யவசாயம் –
அடியேன்-ஸ்வரூபத்தை உணருகையும் –
வற்றா முது நீரொடு மால் வரை ஏழும் துற்றாக முன் துற்றிய தொல் புகழானே –
வற்றாத ஜலத்தை உடைத்தான சமுத்திர ஜலத்தோடே கூட
குல பர்வதங்கள் ஏழையும்
அதுக்கு ஆஸ்ரயமான பூமியும்
ஓர் அவதாநமாக அமுது செய்து
இப்படி பழையதாக நீ ஆர்ஜித்த குணங்களை
நான் கூப்பிட
அரை ஷணம் தாழ்த்து இழக்க விறே புகுகிறாய் –
அற்றேன் அடியேன் உன்னையே அழைக்கின்றேன் –
பிரளயத்தில் அகப்பட்ட பூமியில் காட்டில் இவருக்கு உண்டான வாசி
அவன் பக்கல் வ்யவசிதன் ஆகையும்-( தத் ஏக உபாயத்வ அத்யவசாயம் )
ஸ்வரூபத்தை உணருகையும் –
அநந்ய கதிகளாகக் கூப்பிடுகையும் –
பெற்றேன் –
ஆபன்னனான போதாக என்னுடைய ரஷணத்துக்காக
நான் நாலடி இடத் தேடாதே (தொடாதே)
உன்னையே சொல்லிக் கூப்புடுகை யாகிற
இப் பேறு பெற்றேன் –
(கைங்கர்ய பேற்றைச் சொல்ல வில்லை -அவனையே கூப்பிடுகை யாகிய பேறு )
அருள் தந்திடும் எந்தை பிரானே –
இனி உன்னுடைய அருளுக்கு தண்ணீர் துரும்பு இல்லை இறே –
நாம் எல்லாம் செய்வோமாக இருக்கச் செய்தே
நீ ஒட்டுகிறலை என்ன வேண்டாவே –
நான் கை வாங்கினேன் –
அருள் தந்திடு எனக்கு என் குல நாதனே –
(பெற்றேன் சாதனமாக கொள்வானோ
உன் அருள் தான் உறுதி -இது அதிகாரி விசேஷணம் தானே
நீ தந்திடு -இதுவே சாதனம் )
—————————————-
திருப் பாற் கடல் கிடந்ததும்
திரு மலை நின்றதும்
திருக் கோட்டியூர் -கிடந்ததும்
அநேக வடிவம் கொண்டு-இங்கு எல்லாம் நின்ற நிலையைக் காட்டி
அதீத பிரத்யேக பரிமாற்றம்
தந்திடு என்றவர் அருளை வைத்தீர்
ஹ்ருஷ்டராய் வேறு ஒருவருக்கும் தாரேன் என்கிறார் =
தாரேன் பிறர்க்கு உன் அருள் என்னிடை வைத்தாய்
ஆரேன் அதுவே பருகிக் களிக்கின்றேன்
காரேய் கடலே மலையே திருக் கோட்டி
ஊரே உகந்தாயை உகந்தேன் அடியேனே–7-1-3-
அதுவே-களிப்பதும் ஆராமல் இருப்பதும் அதையே –
தாரேன் பிறர்க்கு உன் அருள் என்னிடை வைத்தாய் –
வேறு ஒருவருக்குக் கொடேன் –
தேவர் உடைய பிரசாதத்தை வேறு ஒருவருக்கு விட்டுக் கொடேன் –
இவர் கொடாதே ஒழிகை யாவது என் என்றால்
விஷய ஸூசகமான-(ஹர்ஷ ஸூசகமான-என்றுமாம் ) உக்தி இருக்கிற படி –
இதனுடைய கண் அழிவு அற்ற கிருபையை என் பக்கலிலே வைத்தாய் –
(பிரயோஜனாந்தர பரர்களும் வந்து வணங்கும் படி எங்கும் நித்ய வாசம்
ஸூ ஹ்ருதம் சர்வ பூதா நாம்
இதுவே அருள்
இவர் தாரேன் என்பது
நானே விஷயம் உனது அருளுக்கு -என்றபடி
இவர் ஒருவர் இடத்தில் தான் க்ருஷி பலித்தது )
ஆரேன் அதுவே பருகிக் களிக்கின்றேன் –
உன்னுடைய கிருபையை புஜித்து
பர்யாப்தனாய் இருக்கை அன்றிக்கே
மேன் மேல் என அபி நிவிஷ்டனாய்க் கொண்டு
உன்னுடைய கிருபையை புஜித்து
அத்தாலே வந்த ஹர்ஷத்தாலே செருக்கி
யமாதிகள் தலையிலே அடி இட்டு திரியும்படி ஆனேன் –
(அதுவே உபயத்திலும் அந்வயம் )
காரேய் கடலே மலையே திருக் கோட்டி ஊரே உகந்தாயை உகந்தேன் அடியேனே
என்னை உகந்து வந்த உன்னை
நான் உகந்து
மேகங்களால் நெருங்கி இருந்துள்ள
சௌபரி பல வடிவு கொண்டால் போலே
அநேக வடிவம் கொண்டு
அவ்வோ இடங்கள் தோறும் இனி இதுக்கு அவ்வருகு இல்லை என்னும்படி
வர்த்தியா நின்றான் –
திருப் பாற் கடலில் கிடந்ததும்
திரு மலையில் நின்றதும்
திருக் கோட்டியூரிலே வந்ததும் தமக்காக -என்று அறிந்த ஹர்ஷம்
அதுவே பருகி ஆரேன் -அதுவே பருகிக் களிக்கின்றேன் -என்கிறார் –
உகந்தாயை உகந்தேன் -களை அற்ற கைங்கர்யம் -எனக்கே உகந்தாயை முதலில்
————————————————–
உகப்பு தலை மண்டியது கீழ்
அது தெகுட்டி மறக்கத் தேட
மறக்காமல் உள்ளே புகுந்ததை அனுசந்தித்து
மறப்பற என்னுள்ளே மன்னினான் தன்னை மறப்பனோ
புள் வாய் பிளந்த புனிதா என்று அழைக்க
உள்ளே நின்று என்னுள்ளம் குளிரும் ஒருவா
கள்வா கடல் மல்லைக் கிடந்த கரும்பே
வள்ளால் உன்னை எங்கனம் நான் மறக்கேனே –7-1-4-
வள்ளால்-உதாரனான –
பகாசுரன் உடைய வாயைக் கிழித்து
ஆஸ்ரித விரோதியை ஆளிட்டு அந்தி தொழாதே
தானே கை தொட்டுப் போக்கினான் என்னும் சுத்தியை
உடையனாய் இருக்கிறபடி –
புள் வாய் பிளந்த புனிதா என்று -ஆய்த்து இவர் கூப்பிட்டது-
இவர் இப்படி அழைக்க
பின்னை அவன் செய்தது என் என்னில்
உள்ளே நின்று என்னுள்ளம் குளிரும் ஒருவா –
புறப்பட்டு வந்து தோற்ற இவருக்குப் பற்றாது என்று பார்த்து
ஹிருதயத்திலே நின்று
கமர் பிளந்த இடம் எங்கும் வவ்வல் இடும்படி பண்ணினான் ஆய்த்து –
கள்வா –
ஆஸ்ரித விஷயத்தில் இவன் செய்யுமவை
பரிச்சேதிக்கப் போகாதது ஆய்த்து –
கடல் மல்லைக் கிடந்த கரும்பே –
திருக் கடல் மல்லையிலே வந்து சாய்ந்து அருளின பரம ரசிகனே –
கரும்பே -என்கிறது
கை தொட்டு நெருக்குதலால் வரும் செவ்வி அழிகை இன்றிக்கே இருக்கை –
(ரசிக அஸ்ய -ரஸவான் ரஸம் உடையவன்
பாலே சொல்லாமல் கரும்பே என்றது
கைப்பட்டால் திரிந்து போகுமே பால்
திரியாத ரஸவான் )
வள்ளால் –
தஸ்யைஷ ஆத்மா விவ்ருணதே தநூம் ஸ்வாம்-என்கிறபடியே
தன் வடிவு அழகை முற்றூட்டாக சர்வ ஸ்வ தாநம் பண்ணின படி –
உன்னை எங்கனம் நான் மறக்கேனே –
மகா உபகாரகனாய் இருக்கிற உன்னை
உன்னாலே உபகாரம் கொண்டு இருக்கிற நான்
எத்தைச் சொல்லி மறப்பது –
(புனிதன் இல்லை என்று மறக்கவோ
உள்ளத்தில் இல்லை என்று மறக்கவோ
குளிரப் பண்ண வில்லை என்று மறக்கவோ
ஆஸ்ரித பவ்யன் இல்லை என்று மறக்கவோ
பக்கத்தில் இல்லை என்று மறக்கவோ
ரசம் இல்லை என்று மறக்கவோ
உதாரம் இல்லை என்று மறக்கவோ
எம்பிரானை என் சொல்லி மறப்பேன் -நம்பியை -செம் பொன்னே திகழும் -இத்யாதி போல் இங்கும் -)
—————————————————
மறக்கவே முடியாத அனுபவம் கீழே
அனுபவ ஜெனித ப்ரீதி -உந்த -கைங்கர்யம் பண்ணும் விரகை அருளிச் செய்ய வேண்டும் –
வில்லேர் நுதல் வேல் நெடுங்கண்ணியும் நீயும்
கல்லார் கடுங்கானம் திரிந்த களிறே
நல்லாய் நர நாரணனே எங்கள் நம்பி
சொல்லாய் யுன்னை யான் வணங்கித் தொழுமாறே –7-1-5-
வில்லேர் நுதல் வேல் நெடுங்கண்ணியும் நீயும் –
வில்லோடு ஒத்த நுதலையும்
வேலோடு ஒத்த கண்களையும் உடையளுமாய்
உனக்கும் கூட ஆகர்ஷகமான சௌகுமார்யத்தை உடைய பெரிய பிராட்டியாரும்-
நீயும்-
அவள் தானும் கூடத் துணுக் துணுக் என்னும்படியான சௌகுமார்யத்தை உடைய நீயும் –
கல்லார் கடுங்கானம் திரிந்த களிறே –
துஷ்ட சத்வ பிரசுரமாய்
சஞ்சார யோக்யதை இல்லாத காட்டிலே
ஒரு களித்த யானை பிடியோடு கூட
ஸ்வைரமாக சஞ்சரிக்குமா போலே
ஆள் பார்த்து உழி தருவானாய்க் கொண்டு திரிந்தவன் –
நல்லாய்-
பிரஜைகள் விஷயத்தில் அவர்கள் – (மாதா பிதாக்கள்) – தங்களில் காட்டிலும்
வாத்சல்யத்தை உடையவனே -வத்சல்யனாய் இருக்குமவனே –
நர நாரணனே –
ஸ்த நந்தய பிரஜைகாகா தாய் குடி நீரை-மருந்து கஷாயம் – குடிக்குமா போலே
இவர்களுக்காக தபஸ்ஸூ பண்ணுமவனே-
எங்கள் நம்பி-
குறைவாளரான எங்கள் குறையை நிரப்புகைக்கு ஈடான
பௌஷ்கல்யத்தை உடையவனே –
சொல்லாய் யுன்னை யான் வணங்கித் தொழுமாறே –
உன்னுடைய கைங்கர்யத்துக்கு நானே விரோதிகளை
நானே போக்கித் தருகிறேன்
அஞ்சாதே கொள் -என்று
மாஸூச என்றாப் போலே ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேணும் –
சர்வ பூதேப்ய அபயம் ததாமி -என்றாப் போலே
இருப்பதொரு வார்த்தை அருளிச் செய்ய வேணும் –
(கிருஷ்ணனாகவும் ராமனாகவும் அருளிச் செய்த சரம ஸ்லோகம் போல் )
————————————————————
சொல்லாய் என்று சொல்ல வேண்டுமோ
வட திசைக்கு எல்லை தொடக்கமாக ஸ்ரீ பதிரி தொடங்கி
ஸ்ரீ ரெங்கம் -ஆராமங்கள் எங்கும்
கைங்கர்யம் கொள்ளவே என்றதும்
கேட்டு ஹ்ருஷ்டர் ஆகிறார் –
திரு மூழிக் களத்து விளக்கு -விபவ சரம ஸ்லோக மொழி களை
அருளிச் செய்ததைக் காட்டி அருளவே நித்ய சேவை
பனியேய் பரங்குன்றின் பவளத் திரளே
முனியே திரு மூழிக் களத்து விளக்கே
இனியாய தொண்டரோம் பருகு இன்னமுதாய
கனியே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே –7-1-6-
பனியேய் பரங்குன்றின் பவளத் திரளே-
பனி மிக்கு இருந்துள்ள ஹிமா வானிலே திருப் பிரிதியிலே
சர்வைஸ் ஸ்ப்ருஹணீயனாய்க் கொண்டு
சந்நிஹிதன் ஆனவனே –
முனியே –
இச் சேதனர் அறியாது இருக்கச் செய்தே
எப்போதும் ஒக்க இவர்களுக்கு
ஹிதத்தை அனுசந்திக்குமவனே –
திரு மூழிக் களத்து விளக்கே –
திரு மூழிக் களத்திலே வந்து உன்னுடைய
ஸ்வரூப ரூப குணங்களுக்கு
நீயே பிரகாசகனாய்க் கொண்டு நிற்கிறவனே –
இனியாய –
இனிமைக்கு பிரகாசத்தைப் பண்ணுகை
அன்றிக்கே
இனிமை தானேயாய் இருக்கை –
தொண்டரோம் பருகு –
தேவர்கள் பருகும் அமிர்தம் போல் அன்றிக்கே
கைங்கர்ய ருசி உடையராய் இருக்கும்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் பருகும் அம்ருதமாய் –
இன்னமுதாய கனியே-
அப்போதே எடுத்து நுகரலாம் படி
கனி போலே இருக்கிறவனே –
உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே –
காணப் பெறாமையாலே
அசந்நேவ-என்கிறபடியே
உரு மாய்ந்த நான்
கண்டு
உஜ்ஜீவிக்கப் பெற்றேன் –
————————————————————-
ப்ராப்யமும் ப்ராபகமும் நீயே
கதி முதலில் உபாயம் -இறுதியிலும் கதி
கீழ் பாட்டில் பிறந்த போக்யதா ப்ரகரஷத்தாலே
நீயே இரண்டாகவும் பெற்றேன்
க்ருதார்த்தராய் அருளிச் செய்கிறார் –
கதியேல் இல்லை நின் அருள் அல்லது எனக்கு
நிதியே திரு நீர் மலை நித்திலத்தொத்தே
பதியே பரவித் தொழும் தொண்டர் தமக்குக்
கதியே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே –7-1-7-
நித்திலத்தொத்தே-முத்து மாலை –
கதியேல் இல்லை நின் அருள் அல்லது எனக்கு –
கதியாகிலும் உன்னுடைய
பிரசாதம் ஒழிய எனக்கு வேறு ஓன்று இல்லை –
கதி -என்றது புகல் என்றபடி –
பிராப்யம் ஆகிலும் உன் திருவடிகளை ஒழிய வேறு ஓன்று இல்லை –
நான் அநந்ய கதி –
நிதியே –
வைப்பான தனமே –
திரு நீர் மலை நித்திலத்தொத்தே –
திரு நீர் மலையிலே வந்து
முத்து மாலையை உடம்பிலே அள்ளி ஏறிட்டுக் கொள்ளுமா போலே –
குளிர உடம்பிலே எறட்டு அணைத்துக் கொள்ளலாம் படி இருக்கிறவனே –
நித்திலம் -பனி ஸ்தலம் -முத்து
தொத்து -மாலை –
ஆஸ்ரிதர்க்கு வாஸஸ் ஸ்தானமாய் உள்ளவனே –
பதியே- பரவித் தொழும் -தொண்டர் தமக்குக் கதியே-
அடைவு கெட ஏத்தித் தொழும்
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு பிராப்யனாய் உள்ளவனே –
அன்றிக்கே –
பதியே பரவித் தொழும் -தொண்டர் தமக்குக் கதியே-என்று
என்னோடு ச கோத்ரிகளாய்
தான் உகந்த ஊர் எல்லாம் -திரு நெடும் தாண்டகம் -என்கிறபடியே
உகந்து அருளின நிலங்கள் எல்லாம் புக்கு அனுபவிக்கும் அவர்களுக்கு
பிராப்யனாய் உள்ளவனே –
உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே –
நீ உகந்து அருளின நிலங்களிலே வந்து சந்நிஹிதன் ஆகையாலே
உன்னைக் கண்டு கொண்டு உஜ்ஜீவிக்கப் பெற்றேன் –
————————————————
ஒருகால் சொன்னதையே ஒன்பதில் கால்
தேன் குடித்த நரி போல் கண்டு களித்தீர் ஆகில்
உம்மை இந்த நாளிலே
ஆசையை குறைத்து ஆனந்தம் மட்டுப்படுத்த
ஏதம் தோஷம் சொல்லி ஆதரவை மட்டுப்படுத்த வேண்டி இருக்கும்
பேசினாலும் விடும் படியாகவோ உனது போக்யதை -படி இருப்பது
ஒரு நாளும் விட முடியாதே –
அத்தா அரியே என்று உன்னை அழைக்கப்
பித்தா என்று பேசுகின்றார் பிறர் என்னை
முத்தே மணி மாணிக்கமே முளைக்கின்ற
வித்தே உன்னை எங்கனம் நான் விடுகேனோ –7-1-8-
அத்தா அரியே என்று உன்னை அழைக்கப் –
என் ஸ்வாமியே –
என்னுடைய விரோதியைப் போக்கினவனே-என்று உன்னை நான் சொல்லிக் கூப்பிட –
பித்தா என்று பேசுகின்றார் பிறர் என்னை –
அத்தா என்று அசங்கத பாஷணம் பண்ணிக் கூப்பிடா நின்றான்
இவன் பித்தனாய் இரா நின்றான் -என்னா நின்றார்கள் –
இவர்கள் அசங்கத பாஷணம் பண்ணா நின்றார்கள்
பிச்சராய் இரா நின்றார்கள் -என்று
நான் நினைத்து இருக்கும் அவர்கள் என்னை -பித்தா என்று பேசுகின்றார் –
பிறர் என்னை பேசா நின்றார்கள் என்று
கை விடலாம்படி இருக்கிறாய் அல்லையே நீ –
முத்தே-
முத்துப் போலே ஸ்ரமத்தைப் போக்குமவனே –
மணி மாணிக்கமே-
பெரு விலையனான மாணிக்கம் போலே இருக்கிறவனே
முளைக்கின்ற வித்தே-
பலத்தோடு வ்யபசரியாதவனே –
முளையாத வித்து – நிஷ்பலம் என்பதால் –
முளைக்கின்ற வித்தே -என்கிறார்
உன்னை எங்கனம் நான் விடுகேனோ –
உன்னை எத்தைச் சொல்லி நான் விடுவது –
————————————————
ப்ரத்யக்ஷமாய் இருக்கும் மாதா பிதாக்கள் அன்றோ என்று பிறர் ஏசத் தொடங்க
சாஸ்திரத்தில் சொல்லிய என்னை விட வேண்டி வரும்
ஹர்ஷம் பிரயோஜனம் ஆகாதே என்ன
நீ சர்வ பிரகாரத்தாலும் சர்வ வித பந்துவாக இருந்தாலும்
நீ மாத்ராதிகளைக் காட்டிலும் அணித்தாக இருந்தாலும்
பாஹ்ய ஹீனர்கள் அறியாதபடி அன்றோ உள்ளார்கள் –
தூயாய் சுடர் மா மதி போல் உயிர்க்கு எல்லாம்
தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணா
ஆயா அலை நீர் உலகு ஏழும் முன்னுண்ட
வாயா உன்னை எங்கனம் நான் மறக்கேனோ –7-1-9
தூயாய் –
ஸூஹ்ருதம் சர்வ பூதா நாம் -என்கிறபடியே
சர்வ பூத ஸூ ஹ்ருதாய்
ஆனுகூல்யம் பண்ணினாரோடு
பிரதி கூல்யம் பண்ணினாரோடு
வாசி அற-எல்லாருக்கும் ஒக்க நன்மையைப் பண்ணுகையால்
வந்த பாவ சுத்தியை உடையவனே –
சுடர் மா மதி போல் உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணா-
சகல தாபங்களும் ஆறும்படி ஸீதமான கிரணங்களை உடைய
பூர்ண சந்தரனைப் போலே -சர்வ பிராணிகளையும்
தாயாய் கொண்டு அளிக்கின்ற குளிர்ந்த
திருக் கண்களை உடையவனே -என்று
திருக் கண்களுக்கு விசேஷணம் ஆதல் –
அன்றிக்கே
சுடர் மா மதி போல் உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிப்பவனுமாய் –
அவ் வாத்சல்யம் எல்லாம் தோற்றும்படியாக இருக்கும்
திருக் கண்களை உடையவனே -என்னுதல் –
ஆயா –
இப்படி இருந்து வைத்து
உன்னுடைய விபூதி பூதரிலே சிலர் -இவன் என் புத்திரன் -என்று
அபிமாநிக்கலாம் படி கிருஷ்ணனாய் வந்து அவதரித்தவனே –
அலை நீர் உலகு ஏழும் முன்னுண்ட வாயா உன்னை எங்கனம் நான் மறக்கேனோ –
ஆபத்து கரை புரண்டால் வரையாதே எல்லாரையும் ஒக்க ரஷிக்கும் ஸ்வபாவன் ஆனவனே –
திரைக் கிளர்த்தி உடைய கடல் சூழ்ந்த பூமியை அமுது செய்த
திருப் பவளத்தை உடையவனே –
(முற்று உவமை -பவளம் போல் வாயை உடையவன் என்னாமல் பவளத்தை உடையவனே)
இப்படி ஆபத் சகனான உன்னை
எங்கனே மறக்கும் படி –
—————————————–
வண்டார் பொழில் சூழ் நறையூர் நம்பிக்கு என்றும்
தொண்டாய் கலியன் ஒலி செய் தமிழ் மாலை
தொண்டீர் இவை பாடுமின் பாடி நின்றாட
உண்டே விசும்பு உந்தமக்கு இல்லை துயரே -7-1-10-
வண்டார் பொழில் சூழ் நறையூர் நம்பிக்கு என்றும் –
மது வெள்ளத்தாலே வண்டுகள் ஆனவை
பரிமளம் போலே படிகிற பொழில்களை உடைத்தான
திரு நறையூரிலே நிற்கிற கல்யாண குண பரிபூர்ணனைக் கவி பாடிற்று –
தொண்டாய் கலியன் ஒலி செய் தமிழ் மாலை –
அவன் திருவடிகளில் நித்ய கைங்கர்யத்தை அதிகரித்த
திருமங்கை ஆழ்வார்
ஒலி உடைத்தாம் படி அருளிச் செய்த தமிழ் தொடை –
தொண்டீர் இவை பாடுமின் பாடி நின்றாட உண்டே விசும்பு உந்தமக்கு இல்லை துயரே –
என்னைப் போலே நீங்களும்
இவ் விஷயத்திலே ருசியை உடையி கோளாய்
பாடுவது ஆடுவதாகவே
பரம பதம் தன்னடையே சித்திக்கும் படியாம் –
அதுக்கு விரோதியான பாபம் தன்னடையே போம் –
(முதலில் உம் தமக்கு விசும்பு உண்டு
பின்பு துயர் இல்லை
க்ரமம் மாறி பேறு )
———-
ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.
கறவையாய் நம்பியைத் தான் மற்ற ஊர் சீரோடு
மறவாது அழைத்துச் சிறையாம் பிறவி அற
தாய் கரும்பு வள்ளல் கதியாய்க் கலியன் காண்
மாயன் ஆனான் புள் ஏனம் -61-
தாய் நினைந்த கன்றே ஓக்க என்னையும் தன்னையே நினைக்கச் செய்து -7-3-2-கறவை எம்பெருமானே –
தாயாய் உலகு அளித்தும் -கரும்பின் சுவை போலே போக்யனாயும் அபேக்ஷிதங்கள் அருளும் வள்ளலாயும்-
அடையும் கதியாகவும் –
ஆக உபாய உபேயமாக இருக்கும் தன்மையைக் காட்டிக் கொடுத்து அருளுகிறான்
புள் ஏனம் ஆனான் -அன்னமாய் அருமறை பயந்து –
வென்று சேர் திண்மை விலங்கல் மா மேனி வெள்ளெயிற்று ஒள்ளெரித்தறு கண் பன்றியாய்
யன்று பார்மகள் பயலை தீர்த்தவனாய் -இவ்வாறு பல பல திருவவதாரங்கள் மூலம் உபகரித்து அருளுபவர்
இவற்றைக்காட்டக் கண்ட கலியன் தானே நமக்கு இவை எல்லாம் –
————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply