தெள்ளியீர் பிரவேசம் –
உண்டிவர் பால் அன்பு எனக்கு -8-1-9–என்று தன் மகள் பாசுரத்தைக் கேட்ட திருத் தாயார்
இவள் அபஹ்ருத சித்தையானாள் போலேயாய் இருந்தது –
பும்ஸாம் திருஷடி சித்த அபஹாரிணாம் -என்கிற சக்கரவர்த்தி திருமகனைக் கண்டாள் அல்லள்-
கண்டவர் தம் மனம் வழங்கும் கண்ண புரத்தம்மானைக் கண்டாளாம் இத்தனை
என்று நினைத்து –
முன்னிலையாய்
சௌரிப் பெருமாள் முகத்தைப் பார்த்து
இவள் நெஞ்சைப் பறிக்கை அன்றிக்கே
கையில் வளையையும் பறிக்க வேணுமோ -என்கிறாள் –
கண்டவர் தங்கள் உடைய கண்ணையும் நெஞ்சையும் பறித்துக் கொண்டு போமவர் இறே சக்கரவர்கி திரு மகன் –
கண்ட போதே தம்தாமுடைய நெஞ்சுகளைக் கொள்ளலாகாதோ என்று
எழுதிக் கொடுக்கும் படி இறே கிருஷ்ணனன் வடிவு அழகு இருக்கும்படி –
(தாயாரே மனம் மாறி -நெஞ்சைப் பறி கொடுத்து
வினவ வந்தவர்களுக்குச் சொல்வதாகவும் கொள்ளலாம்
கை வளை -அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு கொள்ளை கொண்டு
லஜ்ஜை அற்றுப் போகும்படி பண்ணி அருளினான்
மாலுக்கு– இழந்தது சங்கே மாண்பே -பராங்குச நாயகி பார்த்தோம் )
கீழே எற்றே காண்
ஆரானும் காண்மின்கள் -அம்பள வாய்
இவள் உபதேசம் பலித்து
திருத்தாயாருக்கும் பாவனா பிரகர்ஷம்
இதுவரை வினவ வந்தவர்களுக்கு சொன்னவள்
அவனையே முன் ஸந்நிஹிதனாய் இருக்க
விரஹம் இல்லையே
சக்ரவர்த்தி திருமகனை விட இங்கு உள்ள ஆதிக்யம் உண்டே இவனுக்கு
அவன் இடமே நேராகவே கேட்க்கிறாள் இதில்
——————————————–
கை வளை கொள்ளுவது தக்கதே என்ன -என்றாள்
நமக்குக் கை வளை கொள்ளத் தகாமை என் -என்று சௌரிப் பெருமாள் கேட்க –
தகாது என்னும் இடத்தை உபபாதிக்கிறாள் கீழ் –
தெள்ளியீர் தேவர்க்கும் தேவர் திருத் தக்கீர்
வெள்ளியீர் வெய்ய விழு நிதி வண்ணரோ
துள்ளு நீர் கண்ணபுரம் தொழுதாள் இவள்
கள்வியோ கை வளை கொள்வது தக்கதே –8-2-1-
1-தெள்ளியீர் -ஸர்வஞ்ஞத்வம் -இவள் கை வளை கொள்வது தக்கதே-
2-தேவர்க்கும் தேவர் -மனிசர்க்குத் தேவர் போல் தேவர்க்கும் தேவர் -சஷுஸ் அனைவருக்கும் –
இவள் கை வளை கொள்வது தக்கதே
3-திருத் தக்கீர்–பெரிய பிராட்டியாருக்குத் தக்க -திருவுக்கும் திருவாகிய செல்வர் -இவள் கை வளை கொள்வது தக்கதே
4-வெள்ளியீர் -ஸூ த்த ஸ்வபாவம் -இவள் கை வளை கொள்வது தக்கதே
5-வெய்ய விழு நிதி வண்ணரோ-சுட்டு உரைத்த நன் பொன் இவர் ஒளி ஒவ்வாது -இவள் கை வளை கொள்வது தக்கதே
ஐந்து பதங்களும் தக்கதே என்ற பத்துடன் சேர்த்து அன்வயித்து கொள்ள வேண்டும்
துள்ளுநீர் கண்ணபுரம் தொழுதாள் -உம்மைத் தொழாமல் திவ்ய தேசம் தொழும் இவளை
அசேதனமான நீரும் களித்து வர்த்திக்க -இவள் கை வளை கொள்வது தக்கதே
கள்வியோ -அஞ்சலி பண்ணுவது குற்றமா -இவள் கை வளை கொள்வது தக்கதே-
போன்று கேள்வி கணைகளைத் தொடுக்கிறாள் –
ப்ராப்ய த்வரை மிக்கு தொழும் இவளா கள்வி –
தெள்ளியீர் –
தெள்ளிமை -அறிவுடைமை –
நீர் தான் சால வாசி அறிவீர் ஒருவர் அன்றோ –
லோகே புருஷ சாரஜ்ஞ புருஷாந்தர கோவித -அயோத்யா காண்டம் -என்று இறே பெருமாளைச் சொல்லுவது –
அப்படியே லோகத்தில் புருஷர்களைக் கண்டால்
இவன் இன்னான் -இவனுடைய அளவிது-என்று வாசி அறிந்து போரக் கடவ நீர் –
பெண் பிறந்தார் வாசி அறிய வேண்டாவோ –
உம்முடைய சர்வஞ்ஞதைக்குப் போருமோ இவள் கையில் வளையை அபஹரிக்கை –
(இவள் கை வளை பறித்து -லஜ்ஜை போகும்படி பண்ணி இவள் அத்யாவசாயத்தைக் குலைத்து
காரார் திருமேனி காணும் அளவும் மடல் எடுக்கப் பண்ண வேண்டுமோ )
(சர்வஞ்ஞனாக இருந்தால் உமது பெண் உடன் கூடவே அண்டியே இருக்க வேண்டுமோ
ஸதா பஸ்யந்தி -இருந்தது இல்லையோ என்று அவன் சொல்வதாகக் கொண்டு
அதையே பிடித்துக் கொண்டு திருத்தாயார் அடுத்த கேள்வி )
அது கிடக்கட்டும் –
தேவர்க்கும் தேவர் –
தெள்ளியார் பலர் கை தொழும் தேவனார் -நாச்சியார் திருமொழி -என்கிறபடியே
அக்லிஷ்ட ஜ்ஞானரான நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹகராய் இருக்கக் கடவ நீர்
ஒரு அபலை கையில் வளையை அபஹரிக்கை உம்முடைய மேன்மைக்கு போருமோ –
நாட்டில் ஷூத்ர தேவதைகளும் -நாதாதும் தேவா வரம் அர்ஹந்தி -என்கிறபடியே
மனுஷ்யர்க்கு பிரத்யஷ த்ருஷ்டர் ஆனால்
வரம் கொடுத்து அல்லது போகார் இறே –
அத் தேவதைகள் தாங்களும் மனுஷ்யர் ஸ்தாநீயர் என்னும்படி இறே நித்ய ஸூரிகள் படி இருப்பது –
யத்ர பூர்வே சாத்யாஸ் சந்திதேவ -என்னக் கடவது இறே –
அவர்களுக்கும் அபேஷித பலங்களை கொடுக்கக் கடவீராய் இறே தேவரீர் இருப்பது –
அந்த ஷூத்ர தேவதைகள் படி இதுவானால் உமக்குக் கொடுக்கத் தகுமோ கொள்ளத் தகுமோ -என்கிறாள் –
(தேவர்க்கும் -உம்மைத் தொகை -அப்ரதானமாக -ஷூத்ர தேவதைகளும் கொடுப்பதே
ஸ்வ பாவமாக இருக்க -நீர் கொள்ளலாமோ )
பெருமாள் திரு அயோத்யையில் நின்றும் போந்து ஸ்ருங்கி பேர புரத்திலே எழுந்து அருளி
ஸ்ரீ குஹப் பெருமாள் மலைத் தேனையும் காட்டுப் பழமும் கொண்டு சென்று உபகாரமாகக் கொடுக்க –
நாம் கொள்ளப் பிறந்தோம் அல்லோம் காணும்
கொடுக்கப் பிறந்தவர் காணும் -என்று அருளிச் செய்தார் இறே
ஆனால் பிறர் உடைமை கொள்ளத் தகுமோ -கொடுக்கத் தகுமோ -என்கிறாள் –
(அது சக்ரவர்த்தி திரு மகன் படி -நாம் கிருஷ்ணன் அன்றோ என்ன
அம்பரமே தண்ணீரே சோறே உமது தாமப்பனுக்கும் கொடுப்பதே ஸ்வ பாவம் அன்றோ )
(நாம் கொடுக்கவே பிறந்தோமே ஆகிலும்
மேன்மை உடையவராக இருந்தாலும்
நாரீணாம் உத்தமையான இவளைப் பிரியோமே என்று அவன் சொல்ல
இவளைத் திசை திருப்பப் பார்த்துச் சொல்லும் வார்த்தை
அதையே பிடித்து திருத்தாயார் அடுத்த கேள்வி )
உம்முடைய மேன்மை கிடக்கட்டும் –
திருத் தக்கீர் –
அஸ்யே ஸாநா ஜகதோ விஷ்ணு பத்நீ–யஜுர் வேதம் -என்றும் –
ஈஸ்வரீம் சர்வ பூதா நாம் -யஜுர் வேதம் -(ஏகோந சேஷித்வம் )-என்றும்
சொல்லுகிற பிராட்டிக்குத் தகுதாய் அன்றோ தேவரீர் இருப்பது –
(பெரும் தேவி கேட்டு அருளாய் -பெருமைக்குத் தக்க அவனுக்குப் பெருமை கொடுக்கும் பெரும் தேவி )
லோகத்தில் சேதனர் மூன்று கோடியாய் இறே இருப்பது
நித்யரும் முக்தரும் முமுஷூக்களும் -என்று த்ரிவிதமாய் இறே இருப்பது –
சம்சாரிகள் -அசந்நேவ-இறே –
அதில் நித்ய ஸூரிகளுக்கும் அவ்வருகாய் தேவரோடு ஒப்புச் சொல்லலாம்படி இறே பிராட்டி இருப்பது –
அலர் மேல் மங்கை -என்றும்
துல்ய சீல வயோ வ்ருத்தாம் -துல்ய அபி ஜன லஷணாம் -ராகவோ அர்ஹதி -என்றும்
சொல்லுகிறபடியே தகுதியாய் இறே இருப்பது –
ஆனால் உம்முடைய பிரணயித்வத்துக்கு நமஸ்காரம் –
ஒரு பெண் பெண்டாட்டியை மார்விலே வைத்து பார்த்துக் கொண்டு இருக்கிற நீர்
ஒரு அபலை கையில் வளையை அபஹரிகைக்கு தகுதியோ -என்கிறாள் –
(தகுதியை உப பாதிக்கிறார் –
நித்யர்களை விட சிறப்பாக -உள்ள பெரிய பிராட்டியார்
நீர் அவளை பிரியாமல் இருப்பதும் நமஸ்காரம் கும்பீடு
பிரணயித்வத்துக்கு நமஸ்காரம்
அபலையிடன் கை வளை கொண்டு தவிக்க விட்டால் அவள் என்ன நினைப்பாள் –
முன்பு ஜனக குல ஸூந்தரியை பத்து மாதம் இலங்கையில் இருக்க வைத்து பிரிய விட்டதை நாம் அறிவோம் )
(ந க்ஷணம் அபி ஜீவிதம் என்று இருந்தோமே என்ன
வண்ணான் சொன்னதை கேட்டு பிரித்தீரே
லோக அபவாதம் வரக்கூடாதே என்று அன்று என்ன
அந்த பிரணயித்வத்துக்கு நமஸ்காரம் –
தொழுது வந்த இவள் கை வளை பறிப்பது தக்கதோ 0
(நமது ஸ்வரூபம் ஸ்வ தந்திரம் அன்றோ
ஸத்யம் ஞானம் அநந்தம்ப்ரஹ்மம் என்ன
அதுக்கு
உன் ஸ்வரூபத்துக்குத் தான் இது சேருமோ என்று அடுத்த கேள்வி )
வெள்ளியீர் –
உம்முடைய பிரணயித்வம் கிடக்கட்டும் –
நீர் தான் ஹேய பிரதி படர் அன்றோ
ஒருத்தி கையில் வளையை அபஹரிக்கை ஹேயம் அன்றோ –
அதவா
நீர் தான் சுத்த ஸ்வ பாவர் அன்றோ
பர த்ரவ்ய அபஹாரம் பண்ணுகை உம்முடைய சுத்திக்குப் போருமோ –
யோர்த்தேசு சிஸ் சஹி ஸூசிர் ந ம்ருத் வாரி சுசிஸ் ஸூசி -என்கிறபடியே
த்ரவ்ய சுத்தியே சுத்தி என்றும்
மண்ணாலும் நீராலும் பிறக்கும் சுத்தி
சுத்தி அல்லது என்றது இறே
அதவா –
வெண்மை என்று ஆர்ஜவமாய் இருக்கிறது –
மநோ வாக் காயங்களின் உடைய சத்யதை வருகிற போது
பிரியேன் -பிரியில் தரியேன் -என்று சொன்ன சொலவுக்கும்
பொகட்டுப் போகைக்கும்-என்ன சேர்த்தி உண்டு –
(ஸ்வரூப கத ஸூ த்தி தெள்ளியீர் முதலில்
குண ஸூத்தி -தெள்ளியீர் -நேர்மை -அடுத்து
ரூப ஸூத்தி மேல் -வெய்ய விழு நிதி வண்ணரோ
அப்ரஹ்மாத்மக தத்துவமே இல்லையே
பெண் இருக்க நான் பிரியவில்லையே
நேர்மை போக வில்லை என்றானாம்
ந தே ரூபம் ந ஆயுதாநி உண்டே
ஆகவே பதார்த்தமாக உள்ள உனது வடிவு என்பதை மறந்தாய் -என்று திருத் தாயார் கேள்வி
ரூபம் பற்றி பேசுகிறாள் )
வெய்ய விழு நிதி வண்ணரோ –
உம்முடைய ஸ்வரூபம் கிடக்கட்டும்
இவ் வடிவைப் படைக்கவும் கொடாது இருக்கவும் தகுமோ –
இவ் வடிவை அபேஷித்தாருக்கு கொடுக்க அன்றோ தகுவது -என்கிறாள்
வெய்ய -காய்ச்சின
விழு நிதி -நல்ல பொன்
இத்தால் சுட்டுரைத்த நன்பொன் உன் திருமேனி -என்கிறாள்
வெய்ய -என்கையாலே சுட்டுரைத்த -என்றது
விழு நிதி -என்கையாலே நன் பொன் என்கிறது –
(இது அன்றோ அங்கி அங்க ஸ்ரீ ஸூ க்திகளின் சாம்யம் )
அதவா
வண்ணம் -என்றது ஸ்வ பாவமாய் -நிதியான ஸ்வ பாவத்தைச் சொல்லுகிறது –
அப்போது பிறர்க்கு உடைமையாம் இத்தனை போக்கி
பிறர் உடைமையை அபஹரிக்குமோ -என்கிறாள்-
இவன் படியை நேராகப் பேசினாள்-
தன் மகள் படியை முன்னுருக் கொண்டாள் –
இவன் படி இதுவாவதாம்
இவள் படி இதுவாவதாம்
இது என்ன அந்யாயம் -என்கிறாள் –
(தெள்ளியீர் –இத்யாதி பதங்களையும் -தொழுதாள் என்றதையும் கடாக்ஷித்து -ஓ -என்கிறாள்
துள்ளுநீர் கண்ணபுரம் தொழுதாள் இவள் கள்வியோ-என்கிறாள் )
இப்படி இவள் கூப்பிட்ட வாறே –
அயர்வறும் அமரர்கள் அதிபதியான பெரிய மேனாணிப்போடே இருக்கிற சௌரிப் பெருமாள்
ஒரு பெண் பெண்டாட்டி கூப்பிடா நின்றாள் -அதுக்கடி என் –
என்று விட்ட வாசலாலே புறப்பட்டு எதிரே வந்து
வாரீர் எம்மை நீர் கூப்பிடுகிறது என் -என்ன
கை வளை கொள்வது தக்கதே -என்கிறாள்-
நீயே சொன்னாய் இறே திருத் தக்கீர் -என்று
அத் திருவின் ஸ்வ பாவம் இவளுக்கு உண்டான போது அன்றோ
கையில் வளையை கொள்ளத் தகாது ஒழிவது-
அவளுக்கு ஸ்வ பாவம் ஏது என்னில்
ஸ்வ லாபத்துக்கு -தத் தஸ்ய சத்ருசம் பவேத் -என்று அன்றோ அவள் இருப்பது –
இவள் ஸ்வ பாவம் -ஸ்வ யத்ன சாத்தியம் -என்று இருந்தாளே-
இன்னமும் விழி நிதி வண்ணர் -என்று ஸ்வ பாவம் சொன்னாயே
அந் நிதியை உடையவன் கொடுக்க கொள்ளுமது ஒழிய
மேல் விழுந்து கொள்ளுதல் ஆத்மா அபஹாரிகள் கிருத்தியம் அன்றோ
ஆன பின்பு இக் கை வளையை கொள்ளத் தகும் காண்-என்று
சௌரிப் பெருமாள் இதுக்கும் உறைக்க நின்றார்-
துள்ளு நீர் கண்ண புரம் தொழுதாள் இவள் கள்வியோ -ஒ –
படு குலை படு குலை என்கிறாள் –
தாப ஹரமான தேசம் ஆகையாலே அத் தேச ஸ்வ பாவத்தாலே
ஓர் அஞ்சலி பண்ணினாள் என்னா-இவளை ஆனைக்கு இட வேணுமோ
துள்ளு நீர் –
அசேதனமான ஜலமும் தன் அபிமதம் பெற்று களித்து
(அனுகூல ஞானமே தானே ஆனந்தம் )
வர்த்திக்கிற தேசத்திலே
தன் சைதன்யம் தோற்ற
ஓர் அஞ்சலி பண்ணினாள் என்ன
இது குறையாக வேணுமோ –
(உபாய பாவமாக இல்லை -ஞானத்தின் வெளிப்பாடே தானே இது )
கண்ண புரம் தொழுதாள்-
பர அவஸ்தையைத் தொழுதாளோ
வ்யூஹங்களைத் தொழுதாளோ
அவதாரங்களைத் தொழுதாளோ –
(அர்ச்சாவதாரத்தைத் தொழுதாளோ )
அர்ச்சாவதாரத்தில் நீர் நின்ற ஊரை அன்றோ இவள் தொழுதது —
(உறைக்க -சலியாமல் நின்றான்
பிரதிபதம் சொன்னதை -பிரத்யுக்தி சொல்லி -நிற்க
அவன் பக்கலில் களவை இவள் ஏற்ற
அவன் இவள் பேரிலே களவைச் சுமத்த
அதுக்கு தொழுத இவளா கள்வி
தொழுகை -அஞ்சலி -சாதனமாய் -மாம் நமஸ் குரு -சாதனா பக்தி –
அத்தாலே ஸ்வா தந்தர்யம் கோள் சொல்லப்படும்
ஆகவே ஆத்மா அபஹாரத்தையும்
ஸ்வர்ணம் போல் அவனையும் -பர த்ரவ்யத்தையும் அபஹரித்து
ஆகவே இரண்டு குற்றங்களைச் சுமத்தி
அபராதிகளை ஆனைக்காலில் இடுவது போல் அந்தப்புர பரிகரத்தைச் செய்யலாமோ
சர்வ ஸஹிஷ்ணுத்வம் அன்றோ அர்ச்சாவதார –
அவள் தலையில் குற்றம் சுமத்தலாமோ
பூத நிர்த்தேச தாத்பர்யம் -)
தொழுதாள் –
ஆத்மா அபஹாரி என்று இறே நீர் சொல்லிற்று
ந நமேயம் -என்று இருக்கை அன்றோ தொழாதவர்கள் கிருத்தியம் –
யஸ்யாஸ்மி -என்று அன்றோ இவள் ஸ்வரூபம்
பக்தா நாம் -ந தே ரூபம் – என்று அன்றோ உன் ஸ்வரூபம்
உன் உடைமை யானது தோற்ற அஞ்சலி பண்ணினாளே
இவள் உடைமையை கட்டிக் கொண்டு கிடக்கிற நீ அன்றோ ஆத்மா அபஹாரி
அவ்வளவேயோ
ஸ்வர்ண அபஹாரமும்
ஆத்மா அபஹாரமும்
பரமாத்மா அபஹாரமும்
மூன்றும் பண்ணினாய் நீ அன்றோ என்கிறாள் –
(இவள் கள்வி யோ -என்றது
கை கூப்பின இவளா
இவள் இல்லை நீரே
வளை -ஸ்வர்ணம்
வண்ணம் -திரு மேனி -ஸ்வ பாவம் இரண்டும் அர்த்தம்
ஸ்வர்ணம் போல திருமேனி –
நிதியின் ஸ்வ பாவம் -போனதே
தெளிவுடைமை போனதே
மேன்மையார் இருப்பதும் போனதே
ஆகவே மூன்று அபஹாரங்கள் )
இவள் கள்வியோ
இவளோ களவி
நீ அன்றோ -என்கிறாள் –
கை வளை கொள்வது தக்கதே –
பிள்ளாய்
தொழத் தொழ வெட்டுவாரைப் போலே
தொழுத கையில் ஆபரணத்தை கழற்றுவார் உண்டோ
கீழ் சொன்ன சிலை இலங்கு பொன்னாழி-என்கிற தன் கையில்
வளைகளைக் கழற்றி
இவள் கையில் இட்டு பார்த்து கொண்டு இருக்க அன்றோ தகுவது –
தக்கதே
நாட்டில் ஷூத்ர பிரணயிகளும் பிரணயிநிகளாய் இருப்பார்க்கு
சில உபகாரங்களைக் கொடுத்துக் கொடு போரக் கடவதாய் இருக்கும்-
பரம பிரணியியாய் இருக்கிற உனக்கு கொடு போகை தகுமோ
(கை -விசேஷித்து –
கையில் வளை
தொழுத கையில் -உள்ள வளையை -பறிப்பாரோ
நின் பிள்ளை தானே -இல்லம் புகுந்து என் மக்களை கூவி கையில் வளையைக் கொண்டமைக்கு
நினைவாக –
அன்று யசோதை இடம் -இங்கு திருத் தாயார்
அதே கண்ணன் இங்கே -ஆகவே பிள்ளாய் என்று இங்கும் கூப்பிடுகிறாள்
தக்கதே -ஏவகாரத்தால்
லௌகிக காதலர்களும் கொடுக்கிறார்களே
கொள்வது தக்கது இல்லை என்றால் எது தான் தக்கது )
சங்கு தங்கு முன்கை நங்கை -என்கிற ( கை கொள்ளாத ) அவனைப் போலே
இருக்கை அன்றோ தகுவது
தக்கது அல்ல
நதே ரூபம் -என்கிறாள் –
(தொழுதால் சரணாகதன் அன்றோ
அவனைப் பரிபவம் செய்யலாமோ
அவனுக்கு ஆபரணம் பூண்டு பார்த்துக் கொண்டே இருப்பது அன்றோ அடுத்து )
(தெள்ளியீர் அனுபவம்
நீணிலா முற்றம் அனுபவம்
பெற நீர் மலி வையகத்து நீடு இருந்து அனுபவிக்கலாம்
அச்சுவை பெறினும் வேண்டேன் என்று அன்றோ இருப்போம் )
—————————————–
சம்சாரக்க தோஷம் என்றது -பாணனார் -திரு நறையூர் நம்பி சம்பந்தம் ஏற்பட்டு விட்ட படியால்
இவளுக்கு நாணம் இல்லை -தென்று சங்கதி
ஒழிக்க ஒழியாத ஸம்பந்தம் மறந்து உள்ளோம்
நமக்கு சம்பந்த ஞானம் ஆச்சார்யர் அறிவித்து அருள -உகார -அர்த்தம் –
பகவத் சம்பந்தம் பாகவத சம்பந்தம் ஆச்சார்ய சம்பந்தம் நன்றாக விளக்கிக் காட்டும் பாசுரம்
ந நமேயம் -என்கிற பிரதிஞ்ஞை குலைந்து
ஷிப்ரம் தேவ பிரசாதி நீ -என்கிறபடியே
அபிவாதம் தோற்ற ஓர் அஞ்சலி பண்ணினாள் ஆகில் இது குறையோ -என்று இறே கீழ்ச் சொல்லிற்று –
இத்தைக் கேட்ட சௌரி பெருமாள் -நீ நம்மைக் குறை சொல்லக் கடவையோ
உன் மகளை நியமித்துக் கொள்ள மாட்டாயோ
ஸ்திரீகளுக்கு நாண மடம் அச்சம் பயிர்ப்பு -என்கிற ஆத்மா குணங்களில் பிரதான குணம் அன்றோ லஜ்ஜை –
அது உன் மகளுக்கு இல்லையான பின்பு
அவளை நியமிக்க வன்றோ அடுப்பது -என்ன
அவளுடைய உக்தி வியாபாரங்கள் இருந்தபடியாலும் –
சம்சர்க்க தோஷம் இருந்த படியாலும் –
அவளை நியமிக்க என்பதும் ஓன்று உண்டோ
இவளை அடியிலே அலை வலை யாக்கி புறப்பட விட்ட
இவர் கார்யமே தலை காட்டிற்று -என்கிறாள் –
நீணிலா முற்றத்து நின்றிவள் நோக்கினாள்
காணுமோ கண்ண புரம் என்று காட்டினாள்
பாணனார் திண்ணம் இருக்க வினி யிவள்
நாணுமோ நன்று நன்று நறையூரர்க்கே –8-2-2-
பாணனார் -திருப்பாண் ஆழ்வார் -நம் பாடுவான் போல் பாடும் ஆச்சார்யர் என்றபடி
இந்தப் பெண்ணின் நாணம் முடிக்க சங்கல்பித்த திரு நறையூர் நம்பியுடைய க்ருத்யமே பலித்தது –
நீணிலா முற்றத்து நின்றிவள் நோக்கினாள்-
மனுஷ்ய சஞ்சாரம் இல்லாத பிர தேசத்திலே இவளைக் கொடு போய் இட்டு வைக்கவே
மீளக் கூடும் என்று நினைத்து
நீணிலா முற்றத்து வைத்துக் கொடு போய் வைத்தாள் –
(கை வளை கழலும்படியான தசை பிறந்து இருக்க
நீணிலா முற்றம் போனது எப்படி என்ன –
திருத்தாயார் கொடு வைத்தாள் )
நீணிலா முற்றம் –
அம் மனுஷ்யர்கள் உடைய வார்த்தையும் கூட செவிப் படாதபடி ஒக்கத்தை உடைத்தான நிலா முற்றம் –
முமுஷுவானவன் சரீர சம்பந்தாதிகள் உள்ள இடத்து
குத்சையும் பயமும் வர்த்தியா நிற்கச் செய்தேயும்
பதார்த்தங்களின் உடைய சந்நிதியில் கால் தாழ்கைக்கு யோக்யதை உண்டாம் இறே-
சரீர சம்பந்தம் கிடைக்கையாலே –
தத் பரிஹார அர்த்தமாக விவிக்த சேவியாய் வர்த்திப்பான் என்று சொல்லிற்று இறே
அப்படியே தானும் பூர்வார்த்த நிஷ்டையாகையாலே
தன் மகளுக்கு இந்த அதி பிராவண்யம் உண்டாகைக்கு அடி
சம்சர்க்க தோஷம் இறே என்று நினைத்து
நிர்மானுஷ்யமான நீணிலா முற்றத்திலே வைத்தாள் –
(பகவத் அலாப கிலேசத்தில் இருந்து மீள
நீணிலா -மூன்றாம் மாடி
அன்யா பதேசம் அருளிச் செய்து
ஸ்வாப தேசம் -அறிவின் நிலை முதிர முதிர மாடி
பகவத் ஏக உபாயம் ப்ரஞ்ஞா முதல் நிலை
பாகவத நிலை அடுத்து நிலை
ஆச்சார்ய நிஷ்டை அதுக்கும் மேல் -ஆகவே மூன்றாம் மாடி
பாகவதரே உபாயம் என்று –
சம்சர்க்கம் கிடைக்காமல் இட்ட கால் இட்ட கையாக இருந்த இவளை இப்படி ஏற்றிய பின்பு
வந்த நிலையால் நின்றாள் -ஸ்திரமாக -அவனைப் போல் ஸ்வா தந்தர்யம் இல்லையே-
திருநகரி -இன்றும் நீணிலா முற்றம் -மனுஷ்யர் யாரும் குறுக்கே போக விட மாட்டார்கள் )
நின்று இவள் நோக்கினாள் –
அந் நிலா முற்றத்தைக் கண்டவாறே
கொற்றப் புள் ஓன்று ஏறி மன்றூடே வந்து -8-1-8-அனந்யார்ஹம் ஆக்கி
பிரதம சம்ஸ்லேஷம் பண்ணின இடம் போலே இருந்ததீ -என்று
இட்ட கால் இட்ட கைகளாய் இருந்த இவள் எழுந்து இருந்து தரித்து நின்றாள்
இதுவே போலே காணும் -ஆச்சார்ய உபதிஷ்டமான யதார்த்த ஞானம் பிறப்பதற்கு முன்பு
விஷயாந்தரங்களில் படும் கண் கலக்கமும் –
பின்பு வகுத்த விஷயத்தில் வந்து புகுந்தால்
அதஸோ அபயம் கதோ பவதி -என்று
நிர் பயனாய் தரித்து நிற்கும் நிலையும் –
இவள் நோக்கினாள் –
அவ்வளவே அன்றிக்கே
லோக தர்சனமும் பண்ண ஷமை யானாள் –
காணுமோ கண்ண புரம் என்று காட்டினாள்-
சுற்றும் கண்ணை யோட்டிப் பார்த்தவாறே திருக் கண்ண புரம் கண்ணுக்கு விஷயம் ஆயிற்று –
அல்லாத பிரதேசங்கள் கிடக்க திருக் கண்ண புரம் கண்ணுக்கு விஷயமாக வேண்டுவான் என் என்னில் –
இவளுக்கு அபிமதம் சௌரிப் பெருமாள் பக்கலிலே ஆகையாலும் –
இவள் தான் லஷ்யத்தை உடையாள் ஆகையாலும்
திருக் கண்ண புரம் கண்ணுக்கு விஷயம் ஆயிற்று –
திரௌபதியை ஸ்வயம் வரிக்க வந்த ராஷாக்களுக்கு லஷ்யத்தைக் காட்டி
அதின் கழுத்தற எய்ய வல்லார்க்கு இவளைக் கொடுக்க கடவன் என்ன
அவர்களும் அதின் கால் கண்டேன் வயிறு கண்டேன் என்றாப் போலே சொன்னார்கள் –
அர்ஜுனன் -அதின் கழுத்தைக் கண்டேன் -என்றான் இறே
லஷ்யம் உடையான் ஆகையாலும்
இவள் உடைய ஸ்வயம் வரத்திலே மிகவும் ஸ்ரத்தை உடையான் ஆகையாலும் –
(பாகவத நிஷ்டை யில் உள்ள இவளுக்கு
லோக தர்சனம் -லோக சாஸ்திரம் -விசேஷ சாஸ்திரம் பாகவர்களே -ப்ரதிபாதித என்ற ஸாஸ்த்ரம்
லஷ்யம் -இலக்கு பட நோக்கினாள்
பாகவதர்கள் எங்குமே உண்டே எண்ணில்
இவள் இலக்கு திருக்கண்ணபுரம் பாகவதர்கள் தானே என்றவாறு
தாயைக்காட்டிலும் மகள் சொன்னது சிறப்பு என்பதுக்கு த்ருஷ்டாந்தம் சொல்லி இந்த நிலையை ஸ்தாபிக்கிறார்
எல்லாம் வகுத்த இடமே என்று இருக்கக் கடவன்
நின்ற –என் தனக்கு இராமானுசா உம் இணை மலர்த் தாலே திவ்ய தேசம் -அமுதனார் )
காணுமோ கண்ண புரம் என்று காட்டினாள்-
தொண்டீர் எல்லீரும் வாரீர் -திருவாய் -5-2-2-என்றாப் போலே கண்ணால் கண்டவர்கள் அடங்க
நீங்கள் கண்ண புரத்தை காணி கோள்-என்னா நின்றாள் –
உனக்கு அதி மாத்ர பிராவண்யம் ஆகாது காண் என்று நிஷேதிக்கிற தாயையும் கூட
திருக் கண்ண புரத்தைப் பாராய் -என்றால்
நல்லது கண்டால் தனியே அனுபவிக்கும் பிரகிருதி அன்றே –
கண்ண புரம் என்று காட்டினாள்-
பிரான் இருந்தமை காட்டினீர் -திருவாய்-6-5-5–என்று அவனைக் காட்டினாள் தாயார் –
அவன் இருந்த ஊரை காட்டுகிறாள் இறே இவள் –
இது போலே காணும் சதாசார்யானில் காட்டில் சத் சிஷ்யனுக்கு உண்டான வாசி –
உனக்கு பிராப்ய பிராபகங்கள் இரண்டும் ஈஸ்வரன் திருவடிகளே -என்று காட்டிக் கொடுக்கும் ஆசார்யன் –
அவ்விரண்டு அர்த்தைத்தையும் என் நெஞ்சில் பிரதிஷ்டிப்பித்த
உன் திருவடிகள் அன்றோ என் புருஷார்த்தம் -என்று இறே சச் சிஷ்யன் இருப்பது –
(அன்யா பதேசத்துக்கு ஸ்வா பதேசம் இது -மதுரகவி நிலை அன்றோ )
அதவா –
காணுமோ கண்ண புரம் என்று காட்டினாள்–
திருக் கண்ண புரத்தை காணி கோள்
அஞ்சலியைப் பண்ணி கோள்
என்று சொல்லப் புக்கு-முடியும் சொல்ல மாட்டாதே
குறையும் ஹஸ்த முத்ரையாலே காட்டினாள் –
அதவா –
காணுமோ -என்கிறாள் –
இக் கண்ணால் கொள்ளும் பிரயோஜனம் திருக் கண்ண புரத்தை காண்கை அன்றோ –
இத்தை நிஷேதிப்பாரும் சிலர் உண்டாவதே -என்று
விஷண்ணை யாகிறாள் -என்றுமாம் –
(காணும் ஓ பன்மை பத பிரயோகம்
தொண்டீர் போல் இங்கும்
ஓ போக்யதையால் வந்த ஹர்ஷ ஸூ சகம்
பாருங்கோள் -அஞ்சலி பண்ணுங்கோள் சொல்ல முடியாமல் காட்டினாள் -கைகளைக் கூப்பிக் காட்டினாள்
தனது கையைக் காட்டினாள் என்றுமாம் –
அடுத்து மூன்றாவது நிர்வாகம்
காணப் பெறுமோ
கையை நெரித்து தன் வெறுப்பைக் காட்டினாள்
இக்கண்ணால் பிரயோஜனம் காண்பதுக்கு அன்றோ
இத்தை வேண்டாம் என்று சொல்வாரும் உண்டே என்று வெறுப்பு )
வட மதுரைப் பிறந்தான் மகன் கோயில் ஆழ்வார் சன்னதியிலே கண்ணை செம்பளித்துக் கொண்டு இருந்து ஜபித்தான் –
பட்டர் திருவடி தொழ எழுந்து அருளினவர் இத்தைக் கண்டு
கோயில் ஆழ்வார் கண்ணுக்கு விஷயமாய் இருக்க கண்ணைச் செம்பளித்து இருப்பதே
இவன் கண்ணால் பிரயோஜனம் கொள்ள மாட்டான் ஆகாதே -என்று வெறுத்து எழுந்து அருளினார் –
அவனுக்கு ஓன்று இரண்டு மாசத்துக்கு உள்ளே கண் கெட்டது இறே
இது இவளுடைய உக்தி வியாபாரம் இருந்தபடி –
(காணுமோ யுக்தி
காட்டினாள் வியாபாரம் )
பாணனார் திண்ணம் இருக்க வினி யிவள்-
சம்சர்க்கஜ பிராவண்யம் சொல்லுகிறாள் –
பாணனார் –
தலை மகன் பிரிந்தால் எதிர் தலையில் உண்டான மறத்தைப் போக்கி
சேர விடுகைக்காக பாணனைக் கொடுத்து வர விடும்
அவர்களும் இன் சொற்களாலே அவர்கள் நெஞ்சத்தில் மறத்தைப் போக்கி சேர விடுவர்கள் –
இங்கு பாணனார் ஆகிறார் –
சேதனருக்கு ஸ்வாதந்த்ர்யத்தால் வரும் மறத்தைப் போக்கி
சேஷத்வ ஞானத்தை உணர்த்தி
சேர விடும் ஆச்சார்யன் இறே
(ஸ்வ அபிமானத்தால் ஈஸ்வர அபிமானத்தைக் குலைத்த இவனுக்கு ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் )
பாணனார் -என்கிறாள் காணும் இவள் –
பேராளன் பேரோதும் பெரியோர் -என்று தன் மகள் சொல்லக் கேட்டவள் ஆகையால்
இன்னார் இன்னாருக்கு சொல்ல என்பது இல்லை யாகாதே
சமித் பாணிஸ் ஸ்ரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம் -முண்டகம் -என்கிறபடியே
தந் நிஷ்டனானம் இதுவே யாகாதே வேண்டுவது –
திண்ணம் இருக்க –
அவர்கள் அசல பிரதிஷ்டராய் இருக்க –
(மகள் சொன்னதையும் தாயார் கேட்கலாமே என்பதற்கு பிரமாணம் காட்டினார்
உனது மகளை அடக்கு என்றதற்கு
இனி நாணுமோ
இவளுக்கு நாணுமோ
நாணுமோ )
வினி யிவள் நாணுமோ-
இப்படி இடைவிடாமல் இருந்து துஸ் சிஷை பண்ணச் செய்தேயும்
இவள் மீள என்பது ஓன்று உண்டோ –
இனி இவள் நாணுமோ –
சம்சர்க்கஜ ப்ராவண்யத்தாலும் மீள மாட்டாள் –
ஸ்வ கத பிராவண்யத்தாலும் மீள மாட்டாள் –
உனக்கு இது வாகாது காண்-என்று சொல்லுகிற நான் லஜ்ஜித்து மீளும் இத்தனை போக்கி
இவள் மீளுமோ என்கிறாள் –
ஆசார்யனாலும் பசை இல்லை இறே-
நாம் அவர் வசப்பட்டு ஸத் ப்ரக்ருதியாக இல்லா விட்டால்
இரண்டும் வேண்டி அன்றோ இருப்பது
(பாணனார் திண்ணம் என்றும்
இவள் என்றும்
இரண்டால் இவற்றைக் காட்டி அருளுகிறார்
ஆகவே இவள் நாணுமோ என்கிறாள்
இவள் ஸத் ப்ரக்ருதி )
நன்று நன்று நறையூரர்க்கே –
இவள் காரியமும் கிடக்கிடும்
அச் சௌரி பெருமாள் காரியமும் கிடக்கிடும்
அடியிலே இவள் கையிலே மடலைக் கொடுத்து
கொல்லை யாக்கி
புறப்பட விட்ட-அந் நறையூரார் கார்யமே நன்றாய் தலைக் காட்டிற்று -என்கிறாள் –
———————————————————-
கீழே கண்ணபுரத்து அம்மானைக் குற்றம் சொல்வான் என்ன
உமது பெண்ணை அடக்கலாகாதோ
திரு நறையூர் நம்பி நாணம் அறப்பண்ண என்ன
எனது மேல் குற்றம் இல்லை என்று அவன் விலகி விட
தனியே இருந்த திருத்தாயார் வினவ வந்தர்வர்கள் இடம் சொல்லி புலம்புகிறாள் –
இனி இவள் நாணுமோ என்று இறே கீழ் சொல்லிற்று
அந்த லஜ்ஜை தான் உண்டாவது சத்தை உண்டானால் இறே
தான் பண்ணுகிற சிசுரோபசாரங்கள் கார்யமாய்த் தலைக் கட்ட காண்கிறிலோம்
என்னாய் முடியப் போகிறதோ -என்கிறாள்
தாபார்த்தராய் இருப்பார்
தாப ஹரனான ஜல நிலையனை இறே பற்றுவது
அவனைப் பற்றுமவள் அல்லை இறே இவள்
அவனைப் பற்றுவார் முக்த ப்ராயரான சநகாதிகள் இறே
இவள் பற்றுவது அர்ச்சாரூபத்திலே இறே
அதில் தனக்கு தாப ஹராமான திருப்பதிகளிலே சிலவற்றைச் சொல்லுகிறாள் –
அருவி சோர் வேங்கடம் நீர் மலை என்று வாய்
வெருவினாள் மெய்யம் வினவி இருக்கின்றாள்
பெருகு சீர்க் கண்ண புரம் என்று பேசினாள்
உருகினாள் உள் மெலிந்தாள் இது என் கொலோ –8-2-3-
அருவி சோர் வேங்கடம் –
இதுக்கடி யான சஹ்யம் மாறாமையாலே
பிரவாஹமும் மாறாதே செல்லும்
தெண்ணீர் பாய் வேங்கடம் -நாச்சியார் -என்கிறபடியே ஸ்ரமஹரமான தேசம் –
நீர் மலை-
அந்த அருவி விழுந்தால் போக்கு உண்டாய் இறே இருப்பது –
அங்கன் அன்றியே சுற்றும் நீராய்
அதன் நடுவே திரு மலையாய்
அதன் நடுவே இறே கண் வளர்ந்து அருளுவது –
என்று வாய் வெருவினாள் –
அபஹ்ருதய ஹ்ருதையை யாகையாலே அஹ்ருதய உக்திகளை பண்ணா நின்றாள் –
மெய்யம் வினவி இருக்கின்றாள்-
ஆஸ்ரிதர்க்கு மெய்யே நின்று கார்யம் செய்த இடம் என்று
அன்றோ திரு மெய்யம் என்று பேர் ஆயிற்று -என்று கேட்கும் –
மறு மாற்றம் சொல்வார் இல்லை –
ஸ்தப்தோசி–சாந்தோக்யம் -என்று இரா நின்றாள் –
பெருகு சீர்க் கண்ண புரம் என்று பேசினாள் –
இவ்வோ திருப்பதிகள் போலே யுள்ளவளவும் சம்பத்தாய் இருக்கை அன்றிக்கே
ஆற்றுப் பெருக்குப் போலே மேன்மேல் என வரை யிட்டுக் காட்டும் ஐஸ்வர்யத்தை உடைத்தான –
வரையிட்டு -அந்த அந்த மலைகளை இட்டு -திருமலை -நீர்மலை -திரு மெய்ய மலை –
அங்கு உள்ள கல்யாண குணங்கள் நிறைந்த –
திருக் கண்ண புரத்தை வாய் விட்டுப் பேசா நின்றாள் –
கண்ண புரம் என்று பேசினாள் -உருகினாள் –
பேசுவதோர் அவஸ்தையும்
உருகுவதோர் அவஸ்தையும்
இன்றிக்கே பேசின வாயோடு நீர்ப் பண்டம் ஆகா நின்றாள் —
உள் மெலிந்தாள்-
அச்சேத்யேயோ மதாஹ்யோயம்-என்கிற ஆத்ம வஸ்து
நின்ற நிலையிலே வாடிற்று என்கிறாள் –
அதவா
சரீரம் உருகுவது அந்தக் கரணம் உருகினால் இறே-
நெஞ்சம் உருகிற்று என்கிறாள் —
இது என் கொலோ –
இவ் வாற்றாமைகளுக்கு அடி பாபம் இறே –
மதுரா நாம நகரீ புண்யாபாபா ஹரீ சுபா -என்று
அநவத்யம் நின்ற தேசத்தை பேசவே பாபங்களும் போம் –
போகங்களும் உண்டாம் -என்றது இறே சாஸ்த்ரம்
அது இவள் அளவும் காணாது ஒழிகிறது என் பாபம் இறே -என்கிறாள் –
——————————————————————–
வாய் வெருவினாள்
வினவி இருக்கின்றாள்
பேசினாள்
உருகினாள்
என்கிற இவ்வாற்றாமை தான் உண்டானது தாரகம் உண்டானால் இறே
அது இருந்தபடி என் என்ன
அது தானே இல்லை -என்கிறாள் –
கீழ் உண்டான தசைகள் ஸ்வஸ்த்த தசைகள் என்னும்படி இருந்ததீ -என்கிறாள்
ஊணும் உறக்கமும் உண்டானால் இறே கீழ்ப் பிறந்த அவஸ்தைகளுக்கு அவகாசம் உள்ளது –
உண்ணும் நாளில்லை உறக்கமும் தான் இல்லை
பெண்மையும் சால நிறைந்திலள் பேதை தான்
கண்ணனூர் கண்ணபுரம் தொழுங்கார்க் கடல்
வண்ணர் மேல் எண்ணம் இவட்கு இது என் கொலோ —8-2-4-
ஊணும் இல்லை உறக்கமும் இல்லை -அஹோ ராத்ரி
உண்ணும் நாளில்லை –
உபவாச க்ருசையாய் இரா நின்றாள் –
ஊண் இல்லை -என்கை அன்றிக்கே -உண்ணும் நாள் இல்லை -என்கிறாள்
பிராட்டி பெருமாளைப் பிரிந்து பத்து மாசம் உபவாச க்ருசையாய் இருந்த போதே
தேவேந்தரன் அம்ருத மயமான அன்னத்தைக் கொடு வந்து
ராஷசரும் ராஷசிகளும் காணாமே கொடுக்க
அத்தை அமுது செய்தாள் என்று ருஷி எழுதி வைத்தான் –
இவளுக்கு அங்கன் இருப்பது ஒரு நாளும் இல்லை -என்கிறாள் –
உறக்கமும் தான் இல்லை-
அஹோராத்ரம் கூடி இறே ஒரு நாள் ஆவாது –
அதில் பகலுக்கு க்ருத்யமான ஊண் இல்லை யாகில்
ராத்ரிக்கு கிருத்யமான உறக்கம் உண்டோ என்னில் இல்லை அதுவும் இல்லை என்கிறாள் –
உறக்கம் இல்லை என்கை அன்றிக்கே உறக்கமும் தான் இல்லை -என்கிறது
உறங்குகை தான் வேணும் இறே -அது இல்லை என்கிறாள் –
பெருமாள் காட்டிலே எழுந்து அருளின போது கண் வளர்ந்து அருளப் புக்க தசையிலே
இளைய பெருமாளைப் பார்த்து
மைதிலியான குழைச் சரக்கு கூடப் போந்தாள்
உம்முடைய உறக்கத்தையும் சோம்பலையும் வழி நடந்தத்தால் வந்த ஸ்ரமத்தையும்
பொகட்டு காவல் சோர்வு படாமல் நோக்கும் கிடீர் என்று பெருமாள் அருளிச் செய்ய
ஜஹௌ நித்ராஞ்ச தந்த்ரீஞ்ச பிரசக்தஞ்ச பதி ஸ்ரமம் -அயோத்யா -என்கிறபடியே
அவற்றை எல்லாம் பொகட்டார் இறே
அவற்றைப் போலே உண்டாய் விட்டவள் அன்று இறே இவள் –
பெண்மையும் சால நிறைந்திலள் பேதை தான்-
பர்த்ரு சம்ஸ்லேஷத்தில் அவகாஹனம் உண்டாகில் ஊணும் உறக்கமும் தவிரலாம் இறே –
அப் பருவம் அல்ல கிடீர் -என்கிறாள் –
பெண்மை -ஸ்த்ரீத்வம் –
ஸ்த்ரீதவத்தில் ஏக தேசமும் புதியது உண்டிலள் –
அதவா –
பெண்மையும் சால நிறைந்திலள்-
பர்த்ரு சம்ஸ்லேஷ ரச ஜ்ஞானம் உண்டு இத்தனை -அதில் தலை நிரம்பிற்று இலள் –
பேரிளம் பெண்ணான அந்நிரப்பம் இல்லை யாகிலும்
மங்கையான பருவம் தான் உண்டோ -என்ன
பேதை தான் –
அதி முக்த்தை என்கிறாள் –
பேதை -பெதும்பை -தெரிவை -அரிவை -மடந்தை -மங்கை -பேரிளம் பெண் -ஏழு பருவத்திலும் முற்றாப் பருவம் –
கண்ணனூர் கண்ணபுரம் தொழும் –
இப் பருவமாய் இருக்கிற இவளுக்கு
தாரக போஷகங்கள் வேண்டாவோ
இவை இருந்தபடி என் என்ன –
கண்ணபுரம் தொழும் –
இது இவளுடைய தாரகம் –
அது என்னம்புது -ஒருவரைத் தொழுதால் என்றால் தாரகம் ஆமோ -என்ன –
கண்ணனூர் –
எல்லாம் கண்ணன் -என்கிற கிருஷ்ணன் அன்றோ உள்ளே நின்றான் –
பத்தாஞ்சலி புடா ஹ்ருஷ்டா -என்று இறே ஸ்வேத தீப வாசிகள் இருப்பது –
தோற்றோம் -என்றும்
ஜிதம் -என்றும் –
அஞ்சலி மாறாதே இவர்கள் இருப்பது –
அஞ்சலி மாறுவது சந்நிதி மாறில் இறே –
அஞ்சலியால் சர்வ அவயவங்களும் புஷ்டமாய் இறே அவர்களுக்கு இருப்பது –
கார்க் கடல்-வண்ணர் மேல் எண்ணம் –
அவ் ஊருக்கு உள்ளே கடல் தேங்கினால் போலே நிற்கிற கிருஷ்ணன் உடைய
வடிவை அணைக்க வேண்டும் என்று மநோ ரதியா நின்றாள் –
அவன் ஊரைத் தொழுகையாலே ஊண் போயிற்று –
அவன் வடிவை மநோ ரதிக்கையாலே உறக்கம் போயிற்று இவளுக்கு –
பெண்மையும் சால நிறைந்திலள் -பேதை தான் -எண்ணம் இவட்கிது –
ஆரூட யோகராய் இருப்பார்க்கு பிறக்கும் அளவும் இவளுக்குப் பிறந்தபடி என் –
இது என்ன ஆச்சர்யம் -என்கிறாள்
என் கொலோ –
ஆரூட யோகிகளான ருஷிகள் பக்கல் கண்டிலோம் –
சாஷாத் கரித்து அனுபவித்த ஆழ்வார் பக்கல் கண்டிலோம் –
(நம்மாழ்வார் எல்லாம் கண்ணன் என்று இருப்பவர்
இவளோ கண்ணபுரம் அன்றோ )
இருபத்தைந்து சம்வத்சரம் பகலொடு இரவோடு வாசி அற
அறுபது நாழிகையும் கூட இருந்து அனுபவித்து
பின்பு பத்து மாசம் பிரிய ஷமை யானாள் இறே-பிராட்டியும் -அவளுக்கும் இது கண்டிலோம் –
பருவம் இதுவாவதாம்
தாரக போஷங்கள் இவை யாவதாம்
இது என்ன ஆச்சர்யம் இருந்த படி -என்கிறாள் –
————————————————————
(பசலை நோய் போகிறது -பொன்னிறம் மாறி தன்நிறம் ஆனதே
சிலை இலங்கு -இத்யாதிகளால் -இவளை அடக்கி விடலாம் என்று இருந்தவர்கள்
ஸம்ஸ்லேஷம் வார்ப்பித்து விடலாம்
பேதை யாய் இருப்பதால் -ஸ்த்ரீத்வம் நிறையாமல் இருக்க
அடக்கத்துடன் இருக்கிறாளோ என்று வினவ வந்தவர்கள் வினவ
என்னுடன் நன்றாக பேசுகிறாள் -அவற்றின் படிகளை வாய் வெருவுகிறாள்
வெட்கமும் விட்டு மறைக்கவும் தோன்றாமல் இருக்க
இவளுக்கு அடக்கமும் இல்லை என்கிறாள் -என்று சங்கதி – )
பெண்மையும் சால நிறைந்திலள் -என்று இறே கீழ்ப் பாட்டில் சொல்லிற்று –
அது காலாந்தரேண உண்டாகிறது –
அதுக்கடியான பெண்மை தான் உண்டோ -என்ன
அது தானே இல்லை என்கிறாள் –
நீ எது கொண்டு அறிந்தாய் என்ன
கரண த்ரயங்களும் அவனை நினைத்த மாத்ரத்திலே விக்ருதமாகா நின்றன
இவளுக்கு என்ன பெண்மை -என்கிறாள் –
கண்ணனூர் கண்ணபுரம் தொழும் காரிகை
பெண்மையும் தன்னுடை யுண்மை யுரைக்கின்றாள்
வெண்ணெய் உண்டு ஆப்புண்டு வண்ணம் விளம்பினால்
வண்ணமும் பொன்னிறம் ஆவது ஒழியுமே —-8-2-5-
காரிகை–ஸ்வா பாவிக அழகுக்கும் மேலே கண்ணபுரம் தொழுதலால் வந்த கூடுதல் அழகு
கண்ணனூர் கண்ணபுரம் தொழும் –
உக்தத்தை அனுபாஷிக்கிறாள் –
முன்பே சொன்னேன் இறே –
அவனைத் தொழும் அளவன்றியே அவனூரைத் தொழும் இவளுக்கு என்ன பெண்மை -என்கிறாள் –
(அநுபாஷணம் என்பதுக்கு சொல் இல்லையே என்றாலும்
கீழே சொன்னதை சொன்னாள் என்றுமாம்
கண்ணனூர் கண்ணபுரம்-மேலே சொல்ல மாட்டாமல் தொழுகிறாள் மகள்
சொன்னதையும் செய்ததையும் திரும்பி சொல்கிறாள் என்றுமாம் )
கண்ணனூர் கண்ணபுரம் –
ஸ்ரீ மதுரை -திருவாய்ப்பாடி -ஸ்ரீ மத் த்வாரகை -என்கிற இவை எல்லாம்
கண்ணன் விண்ணூர் -என்கிற பரம பதத்தோபாதி கலவிருக்கை இறே –
(கலவிருக்கை -கொலு வைத்து -கொலு சாவடி -களைவது போல்
அங்கு எல்லாம் இருந்து தீர்த்தம் பிரசாதித்து போனானே
இங்கே 64 சதுர்யுகமாக நித்ய வாசம்
த்யக்த்யா வைகுண்டம்
ஸ்ரீ வைகுண்டம் விரக்த்யா ஸ்வாமி புஷ்காரணி தடம் போல் இங்கே தானே
கண்ணன் ஸ்வ பாவம் விட ஊரின் ஸ்வ பாவம் இருக்க ஓட்டவில்லையே )
தார நிதியோபாதி -பிறந்ததும் ஓர் இடத்திலேயே
வளர்ந்ததும் அங்கேயாய் இறே சக்கரவர்த்தி திருமகன் -இருப்பது –
அதுக்கு பிரதி சிரசியாய் இறே இவனுக்கு இருப்பது –
பிறந்த அன்றே போர வேண்டும்படி இறே ஊர்களின் ஸ்வபாவம் இருப்பது –
அவற்றை விட்டு திருக் கண்ண புரத்தே புகுந்த பின்பு
இத்தையே யாயிற்று ஊராக நினைத்து இருப்பது –
தொழும் –
அவனுக்கு அவ் ஊர் நிரூபகம் ஆனாப் போலே யாயிற்று
இவளுக்கு தொழுகையே நிரூபகமாய் இருக்கிறபடி –
ப்ராஞ்சலிம் ப்ரஹ்வ மாஸீநம் -என்கிறபடியே
பெருமாள் அந்தப்புரம் நின்றும் புறப்படுகிற போது
இரண்டாம் வாசலில் நின்ற இளைய பெருமாள்
தலை மேல் வைத்த கையும் முக்குணுக்கு இட்ட உடம்புமாய்
பெருமாள் கண் படும்படி நின்றார் இறே
அப்படியே இறே இவள் கையும் அஞ்சலியுமாய் இருப்பது –
காரிகை -என்று அழகு
இவ் வழகைக் கண்டால் -அவன் மேல் விழுந்து கையும் அஞ்சலியுமாய் நிற்க அன்றோ அடுப்பது –
அத்தலை இத்தலையாய் இருக்கிற இவளுக்கு என்ன பெண்மை -என்கிறாள்
இத்தால் காயிக வியாபாரம் சொல்லிற்று –
பெண்மையும் தன்னுடை யுண்மை யுரைக்கின்றாள்-
வாசிக வியாபாரம் சொல்லுகிறாள் –
(மனம் பூர்வோ வாக் உத்தர
உரைக்க மனசில் சிந்தித்து இருக்கவும் வேண்டுமே
ஆகவே மானஸ வியாபாரம் இத்தால் சொல்லிற்று என்றபடி
பெண்மையும் இல்லை என்பது நாலாவது மேல் )
பெண்மை -ஸ்த்ரீத்வம்
அதாகிறது ஏதேனும் ஓர் அவஸ்தை பிறந்தாலும்
உயிர் தோழிக்கும் கூட மறைக்கும் படி இறே இருப்பது –
அவளும் இவளுடைய வ்யாபாரங்களைக் கண்டு –
இவளுக்கு ஓடுகிற தசை இதுவாகாதே -என்று அறியும் இத்தனை இறே
ஆயிருக்கப் பெற்ற தாயான எனக்கும் வாய் விடா நின்றாள்
இவளுக்கு என்ன பெண்மை -என்கிறாள் –
தன்னுடை யுண்மை யுரைக்கின்றாள்–
தன்னுடைய உள்ளில் உண்டான வியாபாரம்
அதவா
தன்னுடைய உண்மை உண்டு சத்பாவம் -அத்தை சொல்லா நின்றாள் –
(பெண்மையும் -ச காரம் -உரைக்கப் போகாததை பேசி
பெண்மை யாவது
சம்ஸ்லேஷ ரஸஜ்ஜத்தை யாய் -அறிந்து –
தத் அனுகுணமான சத்தான வ்ருத்தி விசேஷங்களை
பெண்மையும் உண்மையும் -தன்னுடைய இருப்பையும் என்றபடி –
சொல்லக் கூடாதவற்றை அல்லாதது
கேளாமல் இருக்க தானே உரைக்கின்றாள்
இதே போல் நடந்த விஷயம் உண்டே –
என் இடத்தில்
என் மகளான இவள்
ஸத்பாவம்
சொல்கிறாளே
யார் யார் இடத்தில் எதை பேசக் கூடாதோ அத்தை அன்று
குகன் பரதனுக்கு இளைய பெருமாள் வைபவம் சொன்னான்
கழியின் பிரபாவத்தை கடல் இடத்தில் சொல்லுமா போல்
அதுவும் குகன் அன்றோ சொன்னான்
உண்மை -சத் பாவம் -அதே சொல் உள்ள ஸ்லோகம் நினைவுக்கு வர அதன் விளக்கம் மேல் )
ஆச சஷேத சத்பாவம் -இத்யாதி
ஸ்ரீ பரத ஆழ்வான் வாரா நின்றான் என்று ஸ்ரீ குகப் பெருமாள் கேட்ட அநந்தரம்
இளைய பெருமாள் செய்தது எல்லாம் சொல்லத் தொடங்கினார் –
வந்த போது செய்யும்படி சொல்லுகிறது என் –
ஓடம் நின்றதே
கோல் இருந்ததே –
தானும் தன் பரிகரமும் அக்கரைப் படும்படி காண்கிறேன் -என்று
ஆக்ரஹ சித்தனாய் இருந்தான் –
அநந்தரம் சுமந்தரன் உள்ளிட்டார் வந்து இளைய பெருமாள்
ஸ்வ பாவம் போலே காண்
பரத ஆழ்வான் உடைய ஸ்வ பாவம் இருப்பது –
அவனை நீ காண வேணும் காண் -என்ன
இவனும் போய் கண்ட அநந்தரம்
இவருடைய ஸ்வ பாவம் இருந்த படி என் -என்று
ஆச்சர்யப் பட்டு
இவருக்கு நம்மால் கொடுக்கலாம் உபஹாரம் என் என்று பார்த்து
இவருக்கு சத்ருசமான உபஹாரம் -இளைய பெருமாள் ஸ்வ பாவங்கள் இத்தனை என்று
அவற்றைச் சொல்லத் தொடங்கினான் –
ஆச சசேஷ சத்பாவம் –
சத்பாவம் ஆகிறது -சத்துக்கள் உடைய ஆசாரம் –
சச் சப்தஸ் சாது வாசக –
சாதவ ஷீண தோஷாஸ்து -என்கிறபடியே
சத்துக்கள் ஆவார் ஷீண தோஷர் இறே
பாவம் -ஆசாரம்
ஒருவன் -அர்த்தாவான் -அபிஜாதன் -வித்வான் -என்று அறிவது அவர்கள் அனுஷ்டானம் கொண்டு இறே
அப்படியே இறே இவருடைய அனுஷ்டானமும் –
பெருமாள் கண் வளர்ந்து அருளுகைக்கு புல்கள் அறுப்பது –
படுக்கை படுப்பது
தாமரை இலையைப் பறித்து தண்ணீரை முகந்து திருவடிகளை விளக்குவது –
பின்னையும் தண்ணீரை முகந்து அமுது செய்யப் பண்ணுவது –
சேஷித்ததை பிராட்டி அமுது செய்யப் பண்ணுவது –
கண் வளர்ந்து அருளப் பண்ணி கையும் வில்லுமாய்க் கொண்டு
நம்மையும் கூட அசிர்த்து நோக்குவதாய் காணும் அவர் உடைய ஆசாரம் இருந்தபடி -என்று
அவர் விருத்தாந்தத்தை சொல்லத் தொடங்கினான் –
லஷ்மணஸ்ய மஹாத்மான –
கடலைக் கையாலே இறைக்கத் தொடங்கினான் –
(கழியின் பிரபாவத்தை கடல் இடத்தில் சொன்னான்
இவனோ சேஷன் -அவனோ பரதந்தர்யன் )
லஷ்மணஸ்ய மஹாத்மான –சத்பாவம் -அப்ரமேயாய -பரதாய ஆசசஷே-
சேஷ பூதன் ஆனால் நான் பணி செய்யக் கடவன் என்று சொல்லியோ பணி செய்வது –
அது கிடக்க
அஹம் சர்வம் கரிஷ்யாமி -சொல்லிற்று எல்லாம் செய்வேன் என்று பிரதிஞ்ஞை பண்ணி
ராஜ்யத்தில் இரீர் என்ன
மாட்டேன் என்று பின் போகை-சேஷத்வ க்ருத்யமோ –
நெருப்பிலே புகச் சொன்னாராகில் -அத்தைச் செய்தல்
அதில் நன்றாம்படி ராஜ்யத்தில் இருக்கச் சொன்னால் -அத்தைச் செய்தல் –
பின் போகச் சொன்னார் ஆகில் -அத்தைச் செய்தல் –
இப்படி சொல்லிற்று செய்கை அன்றோ சேஷத்வ க்ருத்யம் –
குஹ-
நெடு நாள் பரிசயித்த பரதனுக்கு ஒரு நாள் சீலித்த குஹன் சொல்லும்படி ஆவதே
இன்னான் இன்னாருக்குச் சொல்லுகை என்று இல்லை யாகாதே
கற்றவர்களாம் இத்தனை யாகாதே வேண்டுவது –
கஹன கோசர –
காட்டில் மரத்திலும் மட்டையிலும் பழகிப் போந்த இவன்
இளைய பெருமாள் படிகளைப் பேசி போந்த படி கண்டதே
என்று ருஷி கொண்டாடுகிறான் –
அங்கன் அன்றிக்கே
பெருமாள் உடைய வ்யதிரேகத்திலே
தூற்றிலே தலை மடுத்துக் கொண்டு கிடந்தவன்
பரதனைக் கண்டவாறே புறப்பட்டான் –
வெண்ணெய் உண்டு ஆப்புண்டு வண்ணம் விளம்பினால் -வண்ணமும் பொன்னிறம் ஆவது ஒழியுமே –
வாயாலே சொல்லும் அளவேயோ –
சகல கரணங்களாலும் சொல்லா நின்றாள் –
இவளுக்கு என்ன பெண்மை -என்கிறாள் –
கீழ்ப் பாட்டில் -கார்க்கடல் வண்ணர் மேல் எண்ணம் -என்று
அவன் வடிவோடு அணைய வேண்டும் என்று மநோ ரதித்து
முலையிலங்கு பூம் பயலை முன்போட விறே இவள் இருக்கிறது –
அவன் ஆகிறான் ஒருத்தி உடைய உடைமையிலே சபலனாய்
அது கிட்டாமையாலே களவிலே இழிந்து
அது தன்னிலும் வாயது கையதாக அகப்பட்டு
கட்டுண்டான் காண்–11-5-5- என்று சிலர் சொன்னால்
அங்கனம் ஒரு ஸ்திரீ உடைமையிலே சபலனாவான் ஒருவனாகப் பெற்றோம் இறே
அது கிட்டாது என்று விட்டுப் போகை அன்றிக்கே
களவிலே இழியப் பெற்றோமே –
அது தன்னிலும் அகப்பட்டு கட்டுண்ணும்படி எளியனாகப் பெற்றோமே -என்ற
வ்யபதானங்களைக் கேட்ட மாத்ரத்திலே
(ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ணப் போந்து அன்றோ அவதரித்தது )
அவ் உடம்போடு அணைந்தால் பிறக்கும் ஆஸ்வாசங்கள் அடைய பிறந்து சந்துஷ்டை யானாள் –
(கணை ஆழி வாங்கி -விரல் -கை -தோள் -திரு மார்பு -பார்த்தாவையே அணைத்த வாறே
வீணையை தடவி பரகால நாயகி -அவனாகவே நினைத்தது போல்
இங்கும் இவ்வார்த்தை கேட்டதும் அணைந்தது போல் )
அவாப்த சமஸ்த காமனானவன்
ஒருத்தி உடைமையை ஆசைப் படுவதாம்
சர்வ சக்தனானவன் களவிலே இழிவதாம்
அது தன்னிலும் அகப்பட்டு கட்டுண்ணும்படி எளியன் ஆவதாம்
இனி நமக்கு ஒரு குறை உண்டோ -என்கிறாள் –
———————————————————
அர்ச்சாவதாரத்தில் அனுகரித்து –
உண்மை கீழே சதவிருத்தி -சத் பாவம் –
அது தானும் பிரகார பிரகாரி பாவ அனுசந்தானம்
அதன் உறைப்பாலே -அபேத -விட்டுப்பிரியாத -சரீரம் சரீர பாவமாகவே தோன்றும் –
அபேத அனுசந்தானத்தால் -ஐக்யம் இல்லை -அங்கும் ஸ்வாமி தாஸ சொத்து அனுசந்தானம் உண்டே
இந்திரன் -அந்தராத்மா மாம் உபாஸ்யே -சொன்னது போல்
ஆண்டாள் கோபிகள் பிரகலாதன் நம்மாழ்வார் இவர்களும் அணுகரித்தார்கள் அன்றோ –
விரஹ தசையில் அப்படி அனுசந்தானம் வர ப்ரஸக்தி உண்டோ
கண்ணனூர் என்றாளே –
கோபிகா அவஸ்தை வந்து
சவுரி பெருமாளே கண்ணன்
இது திருவாய்ப்பாடி
கோபிகள் கண்ணனாக நினைத்து
ஆண்டாள் -கோபிகளாகவே நினைத்து -மார்கழி நோன்பு அனுஷ்டானம்
இவர் கண்ணனாகவே நினைத்து அனுகரித்து –
கீழ்ப் பாட்டிலே
தன்னுடை உண்மை உரைக்கின்றாள் -என்றும்
வெண்ணெய் உண்டு ஆப்புண்ட வண்ணம் விளம்பினால்
வண்ணமும் பொன்னிறம் ஆவது ஒழியும் -என்றும் சொன்னாய்
அதில் உண்மை எது
பொன்னிறம் போனபடி என் -என்ன -அத்தைச் சொல்லுகிறாள் –
கண்ணனூர் -என்றாள் இறே கீழ்
அந்தக் கண்ணனூரான திரு வாய்ப்பாடியிலெ பெண்கள் அடைய
குரவ கிம் கரிஷ்யந்தி தக்த்தா நாம் விரஹாக்னி நா -என்று
இக் குருக்கள் நம்மைச் செய்யப் புகுகிறது என் –
விரஹ அக்னியால் வெந்து கிடக்கிற நம்மை ஆற்றி ஒரு குடம் நீர் சொரிவார்களோ -என்று
பந்து வர்க்கங்களை நேராக விட்டு
கிருஷ்ணனை அனுபவிக்கக் கடவதாக யமுனா தீரத்தேற வந்தார்கள் –
அங்கு கிருஷ்ணனைக் கண்டிலர்கள் –
பின்பு அனுகாரத்திலே இழிந்து
நான் நடவா நின்றேன் -நீ நடைச் சக்கரவத்து பிடித்துக் காண் -என்பது
துஷ்ட காளிய திஷ்டாத்ரா கிருஷ்ணோஹமிதி சாபரா-ஸ்ரீ விஷ்ணு புராணம் -என்று
பாரடா காளியனே -நான் உன் மேல் ஏறி ஆடப் புகா நின்றேன் -என்பது
இப்படிகளாலே அனுகரித்தார்கள் இறே
இவளும் -திரு ஆய்ப்பாடி -திருக் கண்ணபுரம் ஆகவும்
கிருஷ்ணன் சௌரிப் பெருமாள் ஆகவும் –
அச் சௌரிப் பெருமாள் தான் ஆகவும்
அனுகரித்து பேசுகிறாள் –
சர்வம் கல்விதம் ப்ரஹ்ம தஜ் ஜலான் சாந்திம் உபாஸீத -சாந்தோக்யம்
அஹம் பிரஹ்மாஸ்மி-ப்ரஹதாரண்யம் –
என்று தான் அவனாய்-அவன் தானாய்-இறே இருப்பது
இது இறே இவளுடைய வைதிக லோகாயுத மதம் இருக்கிறபடி –
வேறே அனுகரித்தாரும் சிலர் உண்டு இறே
கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்-5-6- -என்று
அவளைப் போலே ஜகத் காரண ரூபியை பற்றுமவள் அன்று இறே இவள் –
அர்ச்சாவதார ரூபியை இறே இவள் அனுகரிப்பது
இவ் வர்ச்சாவதார ரூபத்தால் பிறக்கும் அனுபவம் ஒழிய
அந்த அந்த அவதாரங்களால் பிறக்கும் அனுபவத்தை நாய்க்கு இட என்று இருக்குமவள் இறே இவள் –
(அர்ச்சாவதார அனுபவிப்பாள் என்றால்
வட வரை நின்றேனும் யானே என்னும் -இத்யாதி சொல்லாமல் இப்படி அருளிச் செய்தமைக்கு காரணம்
வந்தது இன்னிடத்தில் நின்றும் –வந்த கார்யம் இன்னது -என்கிறாள் )
ஆப்பான் திருவழுந்தூர் அரையரும் ஆழ்வார் திரு நறையூர் அரையரும் இப்பாட்டை அனுசந்தித்து
இப்பாட்டுக்கு ஒரு சேர்த்தி கண்டிலோம் -என்று பட்டர் பாடே வந்து
இப்பாட்டு இருக்கிறபடி என் -என்று கேட்க –
மகள் அனுகாரத்தை தாய் அநு பாஷிக்கிறாள் -என்று அருளிச் செய்தார் –
ஆரூட யோகராய் இருப்பார் சிலர் வந்தால்
யோபவான் யன்நிமித்தம் வா யதாகமந காரணம் -என்கிறபடியே
நீ யார்
வந்தது எங்கு நின்றும் -என்று கேட்கக் கடவது இறே
அப்படியே -நீ எங்கு நின்றும் வந்தது -வந்த காரணம் ஏது -என்ன
வந்தது இன்னிடத்தில் நின்றும் –
வந்த கார்யம் இன்னது -என்கிறாள் –
வட வரை நின்றும் வந்தின்று கணபுரம்
இட வகை கொள்வது யாம் என்று பேசினாள்
மடவரல் மாதர் என் பேதை யிவர்க்கிவள்
கடவதென் கண் துயில் இன்று இவர் கொள்ளவே —8-2-6-
வடவரை நின்றும் வந்து –
வடக்கில் திரு மலையில் நின்றும் வந்து –
திருமால் வைகுந்தமே தண் திருவேங்கடமே -என்று
அத் தலையைப் பற்றி வருமவள் அன்றே இவள் –
அர்ச்சாவதாரத்தை பற்றுமவள் இறே
அர்ச்சாவதாரத்துக்கு கொண்டக்கோல் நாட்டின தேசம் இறே திருமலை –
(அதுக்கும் அடி ஸ்ரீ வைகுண்ட விரக்தாயா சொல்ல மாட்டாரே இவர்
அவனே விரக்தாயா-த்யக்த்வா என்று விட்டுவிட்டு வந்த பின்பு )
வந்த கார்யம் என் என்ன –
இன்று கணபுரம் இடவகை கொள்வது யாம் –
இன்று திருக் கண்ண புரத்திலே நித்ய வாஸம் பண்ணுவதாக வந்தது –
இது காண் நாம் வந்த கார்யம்
இது என்னுடைய உண்மை இருந்தபடி –
(செஞ்சொற் கவிகாள் -தெற்குத் திருமலை ஆழங்கால் பட்டு நம்மாழ்வார் அருளிச் செய்தார் அன்றோ)
என்று பேசினாள்-
உரைக்கின்றாள் -என்றாள் இறே கீழ்
அத்தை பேசினாள் என்று தாயார் சொல்லுகிறாள் –
மடவரல் மாதர் என் பேதை யிவர்க்கிவள்-
திரு வாய்ப் பாடியில் பெண்களைப் போலேயோ
அலவலைகளாய் புறப்பட்டு பழி தூற்றி அநு கரித்தவர்களைப் போலேயோ –
இவள் பந்துக்கள் சொன்னத்தை செய்து போந்தவள் அன்றோ –
மடவரல் மாதர்-
பவ்யையான பெண்
என் பேதை-
பந்துக்களுக்கு பவ்யையாய் போந்தாள் என்னும் அளவேயோ
பெற்று எடுத்த என் வார்த்தை அல்லது அறியாதவள் அன்றோ-
பேதை
பிராப்த யௌவநை யாகையாலே என் வார்த்தை கொள்ளாது ஒழியவும் கூடும் இறே
பெற்ற தமப்பனுக்கும் பர்த்தாவுக்கும் வாசி அறியாத பருவம் கிடீர் இவளுக்கு
யிவர்க்கு-
அத திருவாய்ப் பாடியிலே பெண்களோடு அனுபவித்து
வைதக்த்த்ய மூர்த்த அபிஷிக்தராய் இருக்கிற இவர்க்கு
இவள்-
ஆரு ருஷூவாய் இருக்கிற இவள்
கடவதென் –
தனிசுடையார் பணயம் எடுப்பாரைப் போலே (கடன் உள்ளவர் பிச்சை எடுப்பது போல்)
இவள் கண்ணுறக்கத்தைக் கொள்ளுகைக்கு என்ன பிராப்தி உண்டு –
கண் துயில் இன்று இவர் கொள்ளவே —
அவர்களைப் போலே அலவலையானால் பின்பு வேணுமாகில் கொள்ளுகிறார் –
இன்று இவள் கண்ணுறக்கத்தை கொள்ளுகைக்கு என்ன பிரயோஜனம் உண்டு என்கிறாள்
(பொன்னிறம் –தேஹாத்ம பிரமம் -அதை நீக்கினார் – உறக்கம் அஞ்ஞானம் பறித்தார்
இங்கே தானே அவன் சொல்லும் பொழுதே இப்படிச் சொல்வதால் இது லௌகிக லோகாயுதம் மதஸ்தர் இல்லை
வைதிக லோகாயுத மதஸ்தர் அன்றோ )
கீழ் (பாட்டில் ) வண்ணமும் பொன்னிறம் ஆவது ஒழியும் -என்றாள்
அந்த பொன்னிறம் ஆவது எது
ஸ்வா பாவிகமான தன்னிறம் ஆவது எது-என்ன
ய ஆத்மநி திஷ்டந ஆத்ம நோந்தர -ப்ரஹதாரண்யம் -என்றும்
யஸ் ஆத்மா சரீரம் -என்று
ஸ்ருதிகள் சொல்லுகிறபடியே
சரீர சேஷத்வமும்
சேஷ சேஷி ஜ்ஞானமும்
அந்த ஜ்ஞானத்தால் பிறக்கும் ஆனந்தமும்
ஆக -சேஷத்வ ஞான ஆநந்தங்கள் -தன்னிறம் ஆகிறது
பொன்னிறம் ஆகிறது
தேவோஹம் மனுஷ்யோஹம் என்று
ப்ரவிஷ்ட ( கர்மாதீனமாக பிரவேசித்த )சரீரங்களிலே ஆத்ம புத்தியைப் பண்ணி
துக்க அஞ்ஞான அமல அதர்ம-ஸ்ரீ விஷ்ணு புராணம் – என்கிற
தர்மங்களை ஏறிட்டுக் கொள்ளுகை
ஆரூட யோகராய் இருப்பார்க்கு ( பிரகலாதன் மனு பகவான் போல்வார் ) கிட்டாத ஸ்வ பாவங்கள் அடைய
ஆரு ருஷூவாய் (யோகத்தில் பேதை ) இருக்கிற இவளுக்குப் பிறப்பதே
இது ஓர் ஆச்சர்யம் இருந்தபடி என் -என்கிறாள் –
—————————————-
இவர்க்கு இவள் கடவது என் -என்று
இவள் கண்ணுறக்கத்தை இவர் கொள்ளுகைக்கு பிராப்தி உண்டோ என்றாய்
இப்படி இவரோடும் இவளோடும் கொள் கொடை அற்றோ இருக்கிறது
கார்க் கடல் வண்ணர் மேல் எண்ணம் என்றும்
கண்ண புரம் தொழும் என்றும்
கண்ண புரம் என்று பேசினாள் என்றும்
சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் அவனேயாம் படி அன்றோ அவள் இருக்கிறது –
அவரோடு அவளோடு பிராப்தி இல்லை என்று சொல்லக் கடவையோ
அது கிடக்கட்டும்
உன் மகள் தான் இவ்வீடுபாடுகள் தானே பொறுக்க ஷமையோ-என்ன
இவற்றுக்கு இவள் இளைக்குமவளோ -என்கிறாள் –
தரங்க நீர் பேசிலும் தண் மதி காயினும்
இரங்குமோ வெத்தனை நாள் இருந்து எள்கினாள்
துரங்கம் வாய் கீண்டு கந்தானது தொன்மையூர்
அரங்கமே எனபது இவள் தனக்காசையே —8-2-7-
தரங்க நீர் பேசினும் தண் மதி காயினும்
உறக்கம் போய் கண் விழித்து பார்த்தாள்-
பிரிந்தார் இரங்கும் நிலம் கடல் கரை யாகையாலே
சமுத்திர தீரத்திலே இருந்து அவன் தன்னோடு சம்ச்லேஷிக்கிற போது பெரிய அபி நிவேசத்தோடு மேல் விழுந்து
அணைத்த தோள்களுக்கு ஸ்மாரகமாயும் –
சம்ச்லேஷிக்கிற போது -அடியேன் குடியேன் -என்றாப் போலே சொன்ன நீச பாஷணங்களுக்கும் ஸ்மாரகமாயும் –
அணைக்கிற போதை ஸ்பர்ச சௌக்யத்தால் வந்த குளிர்த்திக்கு ஸ்மாரகமாயும் –
இவை நலியா நின்றால் இளைக்குமோ –
தரங்க நீர் பேசிலும் –
திரைக் கிளர்த்தியை உடைத்தான
சமுத்ரம் கோஷிக்கிலும்-
தண் மதி காயினும்-
அந்த கடலிலே பிறந்தவன் இறே சந்தரன்
சர்வ பூத் ஸூ க்ருத்தான அவன் இவள் அளவிலே பாதகன் ஆனாப் போலே
சர்வ பிராணிகளுக்கும் ஆஹ்லாத காரனான சந்தரன்
நெருப்பை முகந்து தூவிலும்
அவன் படி இதுவானால் -இவர்கள் படி சொல்ல வேண்டா விறே
யச் சீல ஸ்வாமி தச் சீலா பிரகிருதி இறே –
இரங்குமோ –
இளைக்குமோ -என்றாள்-
இவள் இளையாமைக்கு ஹேது என் -என்ன –
வெத்தனை நாள் இருந்து எள்கினாள்-
முன்பே நெடுநாள் இவற்றின் கையிலே அடி யுண்டு தகண் ஏறின
இவள் இவற்றுக்கு ஈடுபடுமா -எள்குதல் -ஈடுபடுதல்
விடு நகத்தைப் பூட்டினால் அதில் பழக்கம் இல்லாதவன் நோவு படும் இறே
அதிலே பழகிப் போந்தவன் விடு நகம் பூட்டினால் கட்டிக் கொள்ளாய் என்று கிடக்கும் இறே –
துரங்கம் வாய் கீண்டு கந்தானது தொன்மையூர்
இவள் இப்படி நோவு படா நின்றால்
இதுக்கு பரிஹாரம் பண்ண வேண்டாவோ
பெற்ற நீ யன்றோ பரிஹாரம் பண்ணுவாய்
அத்தைச் சொல்லிக் காணாய் என்ன –
அவளுக்கு பரிஹாரம் அறிவேன் நானே இறே-
அரங்கமே எனபது இவள் தனக்கு ஆசையே –
திரு வரங்கம் திரு வரங்கம் -எனபது இவளுக்கு ஆசை –
ஆனால் அது சொல்லத் தட்டு என் -என்ன
இவள் சத்பிரக்ருதி யாகையாலே வாய் விடில் சிதிலை யாகக் கூடும் என்று
வாய்க்காவல் இட்டு வைப்பார்கள் பந்துக்கள் –
ஆசையே –
வருந்திச் சொல்லப் புகில் -அருகே இருந்து -வாய் வாய் -என்பர்கள் இறே –
திருக் கண்ண புரத்திலே நிற்கிற கிருஷ்ணனே அன்றே இங்கும்
அவனில் காட்டில் இவனுக்கு வாசி உண்டோ -என்னில்
துரங்கம் வாய் கீண்டு உகந்தானது தொன்மையூர் –
கேசவ கிலேச நாசன -என்று போக விரோதியான கேசியை அழித்தவன் அன்றோ –
ஸ்ரீ பிருந்தாவனத்திலே பெண்களும் தானுமாய் அனுபவியா நிற்க
இதுக்கு விரோதியாய் வந்த கேசியின் வாயைக் கிழித்து
பெண்களுக்கு ஒரு கார்யம் செய்தானாக இருக்கை அன்றிக்கே
தன்னுடைய போக விரோதி போயிற்று-என்று உகந்தான் –
தொன்மையூர் –
பழையதான கோயில்
கண்ணனூர் என்கிற திரு வாய்ப்பாடி போலே பழையதாய்
புராண பந்தமுமாய் இறே இருப்பது –
திருக் கண்ண புரம் ஆகிறது சமுத்திர மத்யத்திலே புதியதாக குடி ஏறின த்வாராவதி போலே ஆயிற்று
வேலை மோதும் மதிள்
வெள்ளி ஏய்ந்த மதிள் -என்றது
தனக்கு ஸ்மாரகமாய்
நலிந்த சந்த்ரனுக்கும் கடலுக்கும் தோள் தீண்டியாய் இறே இருப்பது –
தன்னை நோவு படுத்தின கடலின் வாயை அடக்கும் போது கேசியின் வாயைக் கிழித்தவன் ஆக வேண்டாவோ –
நெருப்பைத் தூவின சந்த்ரனை ஆற விடும் போது
தஷ சாபத்தாலே நோவு பட
தன்னுடைய சந்திர புஷ்கரணியிலே பரிசயிப்பித்து
அவனுடைய ஷயத்தை போக்கினவன் ஆகவேண்டாவோ –
அரங்கமே எனபது இவள் தனக்கு ஆசையே –
திருக் கண்ண புரம் என்று சொன்னாள் இத்தனை –
தானான தன்மை கோயிலையே சொல்லுகிறாள் -என்கை-
கண்ணனூரே அது
இது ஸ்ரீ ரெங்கம் இ றே
ந கச்சின் ந அபராத்யதி-என்னும் பெண் அரசி இறே –
மயர்வற்ற யதா ஜ்ஞானம் பிறந்தால் ஆரூட யோகராய் இருப்பார்க்கும்
அபஏவச சர்ஜா தௌ -என்கிற அப்ஸ்ருஷ்டி வாசகமான மூல பிரக்ருதியும்
அதின் கார்யமான சப்தாதிகளும் போனால் அல்லது அனுபவம் பூர்ணம் ஆகாது இறே
இங்கே கடலின் உடைய ஸ்தானத்திலே பிரக்ருதி
அதில் பிறந்த சந்தரன் ஸ்த்தானே சப்தாதிகள் –
————————————————————–
முதல் பாட்டிலே -தெள்ளியீர் தொழுத இவள் கை வளை கொள்வது தக்கதே -என்று
தொழுத இவள் கையில் வளையை வாங்குகை தகுதி அல்ல தப்பச் செய்தோம் -என்று இசைந்து நின்றார் சௌரிப் பெருமாள் –
பின்பு தன்னிலே
இவர்க்கு இவள் கடவது என் கண் துயில் இன்றி இவர் கொள்ள -என்றும் –
அரங்கமே இவள் தனக்கு ஆசையே -என்றும் சொன்னதை சௌரிப் பெருமாள் கேட்டார் –
சர்வதஸ் ஸ்ருதி மல்லோகே -என்று இருக்குமவர் இறே அவர்
இப்படி இவள் சொன்னவாறே
வளை கொடுப்பதாக நினைத்து இருந்தோம் –
இனி கொண்டு அது கொடுக்கிறது என் –
இன்னம் எட்டுமது உண்டாகில் வாங்க அமையாதோ -என்று
சௌரிப் பெருமாள் சிவட்கு என்று
உன் மகளுக்கு அரங்கமே எனபது ஆசை என்றாய் –
அவளோடு நம்மோடு பிராப்தி இல்லை என்றும் சொன்னாய் –
ஆனால் நம்மூருக்கு இவள் வருவான் என்
நாம் இவளை அழைத்தோமோ
ஆசைப் பட்ட இடத்தேறப் போகல் ஆகாதோ -என்ன
அதில் சம்சயம் இல்லை -அரங்கமே இவள் தனக்கு ஆசை -நினைவும் அதுவே
ஸ்வ அபிமத சித்திக்கு உறுப்பாக நாட்டார் செய்கிறதைக் கண்டு
தனக்கும் தன் அபிமதம் சித்திக்குமோ -என்று தன் ஆசையாலே
செய்வான் முறைமை கண்டு போனாள் இத்தனை -என்கிறாள் –
கார்க்கடல் வண்ணர் மேல் எண்ணம் என்று என்றே இவளுக்கு மநோ ரதம்
இலங்கொலி நீர் பெரும் பௌவம் மண்டி யுண்ண பெரு வயிற்ற கரு முகிலே ஒப்பர் வண்ணம் -என்று
கடலைப் பருகின காள மேகம் போலே இறே பெரிய பெருமாள் வடிவு இருப்பது –
ஆகையாலே நினைவும் அங்கே என்னும் இடம் சித்தம் இறே –
தொண்டெல்லாம் நின்னடியே தொழுது உய்யுமா
கண்டு தான் கண்ண புரம் தொழப் போயினாள்
வண்டுலாம் கோதை என் பேதை மணி நிறம்
கொண்டு தான் கோயின்மை செய்வது தக்கதே —8-2-8-
தொண்டெல்லாம் நின்னடியே –
இப்பரப்பு எல்லாம் என்கிறாள் –
தொண்டர் -பகவத் பக்தர் -எல்லாம்
ஆர்த்தராயும்
ஆத்மபிராப்தி காமராயும்
பகவத்பிராப்தி காமராயும் -இருக்குமவர்கள் –
இவர்களுக்கு பந்தத்திலும் ஆஸ்ரயணத்திலும் பேதம் இல்லை இறே –
பலத்திலே இறே பேதம் -ஆகையால் -எல்லாம் -என்கிறாள் –
தொண்டெல்லாம் -என்று -பக்தரைக் காட்டுமோ என்னில் –
மஞ்சா க்ரோசந்தி -என்னுமா போலே –
தொழுது உய்யுமா-கண்டு-
சதுர்வித புருஷார்த்திகளும்
உன் திருவடிகளை ஆஸ்ரயித்து
தம்தாம் அபிமதங்களை பெறக் கண்டு –
தொழுது –
பத்தாஞ்சலி புடா -என்று காயிகமான வ்ருத்தி இறே அஞ்சலி –
தான் கண்ண புரம் தொழப் போயினாள்-
நமக்கும் இங்கே கோயிலிலே சென்று புகலாமாகில்
திருக் கண்ண புரத்தை தொழுவோம் என்று போயினாள் –
நின் அடியே தொழுது -என்று உன்னை அன்றே இவள் தொழுதது
திருக் கண்ண புரத்தை இறே –
யதோ உபாசனம் அன்றோ பலம் –
ஐஸ்வர் யார்த்திகள் ஐஸ்வர்ய விசிஷ்டனை இறே பற்றுவது –
ஆத்மபிராப்தி காமன் சுத்தி விசிஷ்டனை இறே பற்றுவது
பகவத்பிராப்தி காமனும் -சோஸ்நுதே சர்வான் காமான் -என்று குண விசிஷ்டனை இறே பற்றுவது –
இவளும் இவ் ஊரை ஆசைப் பட்டவள் ஆகையாலே இவ் ஊரைத் தொழுகிறாள் –
யத் விசிஷ்ட வஸ்துவைப் பற்றினால் தத் விசிஷ்ட வஸ்து இறே பிராப்யம்
கிருஷ்ணனை ஆசைப் பட்ட பெண்கள் கிருஷ்ணன் மகனான காமன் காலிலே விழுந்தார்கள் இறே
உடையவர் பெருமாளுக்கு நெடுநாள் திரு மஞ்சனம் எடுத்து
அவரை ஆஸ்ரயமாகப் பற்றி
பின்பு இறே கோயிலிலே வந்தது –
தொண்டெல்லாம் என்பவர்களைப் போலே சாதன பேதம் கொள்ளுமவள் அன்றே இவள் –
பிராபக வஸ்துவே பிராப்யம் -என்று
தானுகந்த ஊர் எல்லாம் தன் தாள் பாடித் திரியுமவள் இறே –
ஒருவர்க்கு உரியேனோ -என்றதும் சாதனாந்தரங்கள் இல்லை என்றது அத்தனை இறே –
தான் போயினாள் –
தொழுதாப் போலே குறி அழியாமல் போர வல்லள் ஆகில் அன்றோ போவது –
தொழப் புக்கு நிறத்தைக் கொடுத்து போருவார் போருவர்களோ –
போயினாள் –
ஸ்ரீ மதுரையில் பிறந்தாரிலும்
குண்டின புரத்தில் பிறந்தாரிலும்
போனார் உண்டோ –
வரக் கண்ட வித்தனை யன்றோ செய்தது –
போயினாள் –
வேயின தோள் விசிறிப் பெடையன்னம் என நடத்த வவள் போக்கு
நீ காணப் பெற்றதில்லை காண் -என்கிறாள் –
இப்படி இருக்கிற இவள் போனால்-தன்னோடு ஒக்க ரூப சாம்யத்தை கொடுக்க அன்றோ அடுப்பது –
நிவாரகர் அல்லாத தேசத்திலே
தனி நிலத்திலே அடித்துப் பறிப்பாரைப் போலே
இவள் நிறத்தையும் கொள்ள வேணுமோ -என்கிறாள்
வண்டுலாம் கோதை என் பேதை –
இவள் மயிரைப் முடித்து பூவைச் சுற்றி விட்டால்
வண்டுகள் பறந்து வர்த்திக்குமதுக்கு வெருவி உள்ளே புகுரும் பருவம் -என்கிறாள்
தொண்டெல்லாம் –
தொண்டெல்லாம் பண்டு இவன் அடியைப் பற்றி கிடக்குமா போலே கிடீர்
தானுகந்த ஊரிலே வண்டுகள் இவள் மயிரைப் பற்றி கிடக்கும் படி -தெய்வ வண்டுகளான எம்பெருமான்களை –
இது ஒப்பனை அழகு இருந்தபடி –
என் பேதை –
மமசுதா-என்கிறபடியே அபிஜாதை -என்கிறாள்
பேதை -முக்த்தை —
மணி நிறம் கொண்டு தான் –
உன் மகள் முக்த்தை யன்றே –
விதக்த்தைகளும் அவ்வருகே அன்றோ இவள் பரிமாற்றம்
இவள் நிறம் கொள்ளக் குறை என் என்ன
நன் மணி வண்ணன் -என்கிறபடியே உம்முடைய நிறத்தை கொடுக்கை அன்றோ தகுவது
அது கிடக்க –
முக்த்தை அன்றோ
ஸ்வரூப ஜ்ஞானம் இல்லாதவள் அன்றோ –
உமக்கு ஸ்வரூப ஜ்ஞானம் இன்றியிலே ஒழிய வேணுமோ –
கொண்டு தான் –
இவள் ஒப்பனை அழகையும் கண்டால் ஆசைப் படுக்கை பிராப்தம் –
அது குற்றம் அல்ல –
கொண்டால் பின்னை கொடாது ஒழிகை க்ருத்யமோ –
கோயின்மை செய்வது தக்கதே-
ராஜ நீதி இல்லாதார் செய்யவற்றை நீர் செய்யக் கடவரோ –
இழந்தவற்றை மீட்டுக் கொடுக்கை அன்றோ ராஜ க்ருத்யம்
ராஜாக்களே வழி பறிக்கை-ராஜ நீதியோ –
அமர்ந்த நிலத்திலே கொடு போய் அனுபவிக்கை அன்றோ தகுதி என்கிறாள் –
இவள் அடியிலே தொழுத போதே அமர்ந்த நிலத்திலே கொடு போனால் -இத் திரு மொழி முடிய அருளிச் செய்விக்க வேண்டுமே-
இங்கு நாமும் நம்முடையாரும் வாயிலே மண்ணைப் பொகட்டு கொள்ளவோ என்று இறே அவன் இருக்கிறது –
—————————————
ஸ்ரீ பராசர பட்டர் திருப் பாத தீர்த்தம் ஸ்ரீ ஆண்டாள் ஸ்வீ கரித்துக் கொண்ட ஐதிக்யம் –
பிள்ளை என்று எண்ணப் பெறுவரே -என்பதைக் கடாக்ஷித்து சங்கதி –
கீழ்ப் பாட்டிலே -என் பேதை மணி நிறம் கொண்டு தான் கோயின்மை செய்வது தக்கதே -என்று
நிவாரகர் இல்லாத தேசத்திலே வழி யடிப்பாரைப் போலே முக்த்தையான இவள்
நிறத்தைக் கொள்ள வேணுமோ என்று இவள் சொன்ன வார்த்தையைக் கேட்ட சௌரிப் பெருமாள் –
நீர் நம்மை நியமிக்கக் கடவையோ –
சர்வஸ்ய வஸி சர்வஸ்ய ஈஸானா -என்று சர்வர்க்கும் நியாமகராய் நம்மை நியமிக்கக் கடவையோ
மடவரல் மாதர் என் பேதை -என்று
உன் மகள் என்றும்
உனக்கு பவ்யை என்றும் -சொன்னாய்
அவளை நியமித்துக் கொள்ள மாட்டாயோ –
நீ நம்மை நியமிக்க போராய் காண் -என்ன
இவள் பருவம் இது
பாவம் இது
ஆன பின்பு என்னால் நியமிக்கலாயோ இருப்பது -என்கிறாள் –
(பூர்த்தியையும் ஸ்வா தந்த்ரத்தையும் குறைத்துக் கொண்டு அர்ச்சக பராதீனமாய் இருக்கும் உம்மை
நியமிக்கலாமே ஒழிய -உமது ஊரைத் தொழுதவளை நியமிக்கப் போகுமோ -என்று கருத்து –
பல் எழாத பருவம்
கை தொழும் அவகாஹத்தில் ஆதிக்யம் உண்டே
இதுக்கு வியாவ்ருத்தம் காட்ட திரு விருத்த பாசுரம் )
இவள் அளவு இதுவாய் இருக்க
இவளைப் போலே அவஹாகித்தாள் ஒரு பெண் பிள்ளை வார்த்தையாலே சொன்னாள் இறே
அவள் உடைய திருத் தாயார் –
முலையோ முழு முற்றும் போந்தில மொய் பூம் குழல் குறிய
கலையோ அரையில்லை நாவோ குழறும் கடல் மண்ணெல்லாம்
விலையோ வென மிளிரும் கண் இவள் பரமே பெருமான்
மலையோ திருவேம்கடம் என்று கற்கின்ற வாசகமே –ஸ்ரீ திரு விருத்தம்- 60-
அங்கு வாசிகம் -இங்கு காயிகம் –
முலையோ -இத்யாதி –
இவள் அளவு இதுவாய் இருக்க -அவகாஹனம் இருந்த படி என் –
அளவன்றி இருந்ததீ-என்றாள் இறே –
முலையோ முழு முற்றும் போந்தில –
முலை புரைகிற வித்தனை –
வளரும் அளவும் செல்ல வரையிட்டதில்லை –
இது பருவம் இருந்தபடி –
திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகமே –
திருமலையை விடாமல் சொல்லா நின்றாள்
இது அவகாஹனம் இருந்த படி –
இவள் பரமே –
இவள் அளவன்றிக்கே இருந்ததீ-என்றாள் இறே –
அவளுடைய பருவம் இல்லையே இவளுக்கு
அவகாஹனத்திலும் வாசிக மாத்ரமே இறே அவளுக்கு உள்ளது –
காயிகத்தால் வந்த அவகாஹனம் உண்டே இவளுக்கு –
பங்குக்களாய் இருப்பார்க்கும் -முடவருக்கும் – அந்தகரராய் இருப்பார்க்கும் போக ஒண்ணாதபடி
பரமபதத்துக்கு அடுத்து அணித்தாய்
அர்ச்சிராதி போலே பெரிய ஏற்றம் ஏற வேண்டி இறே திருமலை இருப்பது
அத்தனை துஷ் ப்ராப்யமாய் அன்றே திருக் கண்ண புரம் இருப்பது
இருந்தபடியே எல்லார்க்கும் புக்கு அனுபவிக்கலாம் படி இறே திருக் கண்ண புரம் இருக்கிற படி –
ஆகையால் இவள் அளவு இதுவாய் இருந்தது –
அவகாஹநத்தில் எல்லை இதுவாய் இருந்தது
ஆன பின்பு இவளை நியமிப்பார் உண்டோ என்று பொதுவிலே சொல்லுகிறாள் –
(காயிகம் அவகாஹன ஏற்றமும் அன்றிக்கே
மானஸ அவகாஹனத்திலும் -எளிமையான திருக் கண்ண புரம்
பெறுவேனோ என்னாதே பெறுவரே -பொதுவிலே
மம மத் பக்த பக்தேஷூ ப்ரீதிரப்யதி காபவேத் -என்ற உன்னாலும்
என்னாலும் தோழிகளாலும் நியமிக்கப் போகுமோ -)
முள் எயிற்று ஏய்ந்திலக் கூழை முடி கொடா
தெள்ளியள் என்பதோர் தேசிலள் என் செய்கேன்
கள்ளவிழ் சோலைக் கணபுரம் கை தொழும்
பிள்ளையை பிள்ளை என்று எண்ணப் பெறுவரே —8-2-9-
முள் எயிற்று ஏய்ந்திலக் –
எயிறு -தந்தம்
முள் எயிறு -தந்தாங்குரம்
எயிறு நிரம்பிற்று இல்லை –
கூழை முடி கொடா-
இவள் குழலை வாரி எடுத்து பிடித்து கலிக்கட்டாக கட்டு என்று
புக்கால் அதுக்கு பிடி கொடாது –
தெள்ளியள் என்பதோர் தேசிலள் –
இப்படி இருந்தாலும்
தன் வல்லபனை பத்து இருபது பட்டினி கொண்டாள் என்னும் சொல் படைத்திலள் –
சர்வஞ்ஞன் ஆனவன் மதி மயங்கும்படியான தேஜசை பெற்றிலள்-
(கோபிகள் இவனை பத்து இருப்பது நாள்கள் பட்டினி கொள்வார்களே –
இப்படிப் படுத்தினாலும் அவனையே நினைத்து இருக்கிறாளே –
ஜனக குல ஸூந்தரி -தெளிந்து -மாசானனே ஜீவிஷ்யே நாள் இட்டு இருந்தாள்
தத் தஸ்ய ஸத்ருசம் பவதி -என்னுமவள் போல் இல்லையே இவள் )
என் செய்கேன் –
கீழில் இவள் உடைய முக்த்யை சொல்லி
மேல் இவளுடைய பிரபாவத்தை நினைத்து
என் செய்கேன் -என்கிறாள் –
என் செய்கேன் –
இவளை நியமிக்க அடுக்குமோ-
அனுவர்த்திக்க அடுக்குமோ –
என்கிறாள் –
கள்ளவிழ் சோலைக் கணபுரம் கை தொழும்-
பூர்வ அவஸ்தைப் பார்த்து நியமிக்க அடாது –
உத்தர அவஸ்தையைப் பார்த்து அனுவர்த்திக்க அடுக்கும் -என்கிறாள் –
இவளை அனுவர்த்திக்க அடுக்கும் என்று சித்தாந்திக்கிறது எது கொண்டு என் என்ன
இப்படிப் பட்ட பேர் அளவுடையாளான பெரியவள் -என்கிறாள் –
கள்ளவிழ் சோலைக் கணபுரம்-
நித்ய வசந்தமான தேசம் –
புஷ்பங்களில் கட்டவிழ்ந்து மதுவைப் பிரவஹிக்கும் சோலையை உடைத்தான தேசம் –
கணபுரம் கை தொழும்-பிள்ளையை –
பால்யாத் ப்ருப்ருதி ஸூஸ் நிக்த்த -என்று பிறந்த அன்றே
கால்கடையிலே தொட்டிலிட்டு வளரும்படி
ஸூஸ் நிக்தராய் இறே இளைய பெருமாள் இருப்பது –
இப்படி இருந்த அவரும் -ப்ராஞ்சலீம் ப்ரஹ்வமாசீ நம் -என்று
அவனைத் தொழுதார் இத்தனை இறே
அவனூரைத் தொழுமவள் இறே இவள் –
பிள்ளையை –
இப்படிப் பட்ட பெரிய முதன்மை உடையவளை –
பிள்ளை என்று எண்ணப் பெறுவரே –
தன் வயிற்றில் பிறந்தாள் என்கிற பந்தத்தைக் கொண்டு
நியமிக்கப் பெறுவர்களோ-
எண்ணப் பெறுவரே —
நினைகத் தான் பெறுவார்களோ –
நினைத்தாள் ஆகில் -ஹரிசம் ஸ்மரணம் பரம் -என்கிறபடியே
பிராயச் சித்தம் பண்ண வேண்டி இறே இருப்பது –
க்ருதேபாபே அநுதாபோவை யஸ்ய பும்ஸ பிரஜாயதே
ப்ராயச்சித் தந்து தஸ்ய ஏகம் ஹரிசம் ஸ்மரணம் பரம்-ஸ்ரீ விஷ்ணு புராணம்
க்ருதேபாபே –
ஒருத்தன் ஒரு பாவத்தை புத்தி பூர்வகமாக பண்ணுவது
அநுதாப –
அநந்தரம்-தப்பைச் செய்தோம் -புருஷோத்தமன் அறியில் செய்வது என் -என்று
அனுதபவித்தவன் பிராயச் சித்தத்துக்கு அதிகாரி –
யஸ்ய பும்ஸ பிரஜாயதே-
இதுக்கு இன்னார் என்று இல்லை
ஆரேனும் ஆகவுமாம் –
ப்ராயச்சித் தந்து தஸ்ய ஏகம் ஹரிசம் ஸ்மரணம் பரம்–
சர்வ பாபங்களையும் போக்குமவனை நெஞ்சாலே ஒரு கால் நினைக்க அமையும்
பரம்
பிராயச் சித்தங்களில் தலையான பிராயச் சித்தம் இதுவே -என்கிறது –
பெரிய திருவடி எழுந்தருளச் செய்தே ஒரு பர்வதாக்ரத்திலே வைகித் தங்கப் புக்கான் –
அந்த பர்வத சிகரத்திலே ஒரு பெண் பெண்டாட்டி பகவத் குணங்களைப் பேசக் கேட்டு
தான் ஸ்திரீயாய் இருக்க பகவத் பஜனத்திலே இத்தனை ருசி உண்டாவதே
இவள் ஒரு புண்ய ஷேத்ரத்திலே இருக்கப் பெற்றது இல்லையே -என்று வெறுக்க
அநந்தரம்
விடிந்த அளவிலே இவன் போக நினைக்க
இவன் சிறகுகள் உதிர்ந்து எழுந்து இருக்க மாட்டாதே இருந்தான் -என்று
மகா பாரதத்திலே ஆரண்ய பர்வதத்திலே எழுதிற்று –
ஆக இத்தால் சொல்லிற்று ஆய்த்து-
பகவத் விஷயத்தில் ஒரு கீற்றுப் புகுர நின்றான் யாவன் ஒருவன்
அவன் பூர்வ வ்ருத்தத்தை பார்த்துக் குறைய நினைக்கக் கடவன் அல்லன் –
அவன் இருந்தபடியே உத்தேச்யம் பண்ணிக் கொண்டாட அடுக்கும் -என்கிற அர்த்தத்தை வெளியிடுகிறது –
துராசாரோபி -இத்யாதி –
(துராசாரனாகவும் -நாஸ்திகனாகவும் -இருந்தாலும் ஹரி நாம சங்கீர்த்தனம்-
புருஷோத்தமனை சரணம் அடைந்தால் – உஜ்ஜீவிக்கும் )
————————————————–
இத்தால்
1-கவி பாடிற்று இன்னாரை
2-பாடினேன் இந் நான்
3-என் கவி தான் இன்னது
4-இது கற்றார்க்கு பலம் இன்னது -என்று
இவை நாலையும் சொல்லுகிறார் –
(வக்த்ரு -வக்தா -விஷய -பல வைலக்ஷண்யம் )
கார்மலி கண்ண புரத்து எம் அடிகளை
பார்மலி மங்கையர் கோன் பரகாலன் சொல்
சீர்மலி பாடல் இவை பத்தும் வல்லவர்
நீர்மலி வையத்து நீடு நிற்பார்களே –8-2-10-
( கார்மலி கண்ண புரத்து எம் அடிகளை-நீல மேகப்பெருமாள் அன்றோ மூலவர்
சீர் மலி -காம்பீரம் -அர்த்தங்கள் பொதிந்தவை அன்றோ )
கார்மலி கண்ண புரத்து –
ஸ்ரமஹரமாய்
தர்ச நீயமுமாய்
உபகாரகமுமான
மேக சஞ்சாரங்களை உடைத்தான தேசம் –
கார்மலி கண்ண புரத்து எம் அடிகளை –
அம் மேகங்களைப் போலே தர்ச நீயமான வடிவை உடையனாய்
ஸூலபனுமாய்
பரம உதாரனுமாய்
தன்னை உகவாதார் தலையிலே இடி விழக் கடவனுமான
என் ஸ்வாமியை
குணைர் தாஸ்யம் உபாகதா -என்று
குணங்களுக்கு தோற்று அடிமை புகுகிறார் அல்லர் –
என் குடி நாதன் -என்கிறார் –
(ஸ்வரூப ப்ரயுக்த தாஸ்யமே குண க்ருத தாஸ்யத்தை விட ஸ்ரேஷ்டம் )
பார்மலி மங்கையர் கோன் பரகாலன் சொல் –
லோகத்திலே இருவர் கூடின இடம் எல்லாம்
இதோர் அவகஹானமே
இதோர் கவித்வமே
இவருக்கு ருஷிகள் ஒப்போ
வேதங்கள் தான் ஒப்போ
அல்லாத ஆழ்வார்கள் தான் ஒப்போ -என்று
நின்றார் நின்றபடி கொண்டாடும்படியான பெரிய புகழை உடையவர் –
பரகாலன் -என்று பெயர் படைத்தவர் –
சீர்மலி பாடல் இவை பத்தும் வல்லவர் –
தன்னைப் பொதிய வைக்கோல் இல்லாத படி விளையும் செய் போலே
சப்தம் அல்பமாய்
பகவத் குணங்கள் பிரசுரமாய் -இருக்கிற பாடல் –
இவை பத்தும் –
என்று கையிலே இட்டுப் பார்ப்பாரைப் போலே சொல்லுகிறார் –
வல்லவர் –
இயலாகவுமாம் –
இசை யாகவுமாம் -ஏதேனும் ஒரு பிரகாரத்திலே வல்லவர்கள் –
நீர்மலி வையத்து நீடு நிற்பார்களே –
கடல் சூழ்ந்த பூமியிலே சிரகாலம் வாழப் பெறுவார்கள் –
இது கற்றார்க்கு பலம் சம்சாரத்தில் இருக்கையோ -என்ன
பரம பதத்தில் தெள்ளியீர் இல்லையே
தெள்ளியீர் உள்ளது இங்கேயே அன்றோ-
பாவோ நான்யத்ர கச்சதி -என்று திருவடி ராம குணங்களைக் கேட்டு
அத்தாலே பூர்ணனாய் –
அத் தேசத்தே இருந்தால் போலே
தெள்ளியீரை இங்கே பாடக் கேட்டு பூர்ணராய் இருக்கப் பெறுவர்கள் –
———–
ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.
சிலை முதலா ஐந்து பூணாச் சீராகும் சேர் பல்
கலன் கலியன் கண்டு பிரியா நிலை எய்திக்
கண்ணபுரத்தான் பால் அவா மிகுதல் தான் கூறும்
தண் தமிழ் கற்பார் தெள்ளியார் -71-
ஐந்து பூண் — ஆழி சங்கு தண்டு வாள் வில் -பஞ்சாயுதங்கள் –
திவ்யாயுதங்கள் அநுகூலருக்கு திவ்ய ஆபரணங்கள் ஆகுமே
ஆக்கம் -திரு மார்பி -திரு மேனிக்கு உப லக்ஷணம்
ஒரு காலும் பிரிகின்றலேன் என்கின்றாளால் -தாய் வார்த்தையால் –
தெள்ளியார் -தெளிந்த ஞானத்தர்–
———
ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.
தெள்ளிதாத் தான் கண்ணபுரம் உள்ள வெம்மை நீங்க தொழில்
உள்ள அணுக்கரித்தல் ஆறு பேறாய் கொள்வது என
இன்னாமை கூறும் இரும் தமிழ் நூல் புலவன்
தன் தாள் வானாம் இக்கரை -72-
உள்ள வெம்மை -உள்ளத்தில் தோன்றும் ஆற்றாமை
நீர் மலி வையத்து நீடு நிற்பார்கள் -பல சுருதி -அங்கே தெள்ளியார் அனுபவம் இல்லையே –
———————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-