பாகவதர்கள் உடைய கலவி இன்பம் வேண்டும் என்றார் மேல்
அது தான் வேண்டுமோ
அவர்கள் திரளை கண்களால் காண அமையும் –
என்கிறார் இதில் –
——————————————————————————————————————————————————-
நாளும் வாய்க்க நங்கட்கு
நளிர் நீர்க் கடலைப் படைத்து தன்
தாளும் தோளும் முடிகளும்
சமன் இலாத பல பரப்பி
நீளும் படர் பூங்கற்பகக்
காவும் நிறை பல் நாயிற்றின்
கோளும் உடைய மணி மலை போல்
கிடந்தான் தமர்கள் கூட்டமே
————————————————————————————————————————————————————–
நாளும் வாய்க்க நங்கட்கு-
இதுவே புருஷார்த்தம் என்று இருக்கிற நமக்கு
இது நாள் தோறும் வாய்க்க வேண்டும் –
நளிர் நீர்க் கடலைப் படைத்து –
குளிர்ச்சியையே தன்மையாக உடைய கடலை உண்டாக்கி –
திருக் கண் வளர்க்கைக்கு ஒத்ததான தண்ணீர் -என்கை –
தன்-தாளும் தோளும் முடிகளும் சமன் இலாத –
சமன் இலாத -தன்-தாளும் தோளும் முடிகளும்-
உபமானம் இல்லாதவையான திவ்ய அவயவங்கள் –
பல பரப்பி-
அந்த கடலிலே பாழ் தீரும்படி
வடிவாலே அலங்கரித்து –
நீளும் படர் பூங்கற்பகக் காவும் –
எல்லை இல்லாத இனிய பொருளான
பூ போலே இருக்கிற தாளும்
கற்பகக் காவைப் போலே இருக்கிற தோளும்-
தாளும் தோளுமிருக்கிறபடி –
நிறை பல் நாயிற்றின் கோளும் –
முடிகள் ஆயிரத்தாய் –8-1-10-என்றதனைச் சொல்லுகிறது –
பல நாயிறு -ஒவ் ஒரு திரு முடிக்கும் ஒரு நாயிறு
அன்றிக்கே
ஆயிரம் கோடி சூரியர்களை திரட்டி முடியாக வகுத்தாப் போலே இருக்கிற முடி -என்னுதல் –
கொள் -என்பன கிரஹங்கள்
அவை தான் ஒளி பொருள்கள் ஆகையால் ஒளியைக் காட்டுகிறது இலக்கணை –
உடைய மணி மலை போல் கிடந்தான் –
ஓர் இரத்தின மலை சாய்ந்தாப் போலே ஆயிற்று
கண் வளர்ந்து அருளிய படி –
தமர்கள் கூட்டமே-நாளும் வாய்க்க –
இப்படி வைத்த கண் வாங்க ஒண்ணாத படி
கண் வளர்ந்து அருளா நிற்குமவனை
அன்று நாளும் வாய்க்க -என்கிறது
கிடந்தோர் கிடக்கை -திருமாலை -23–என்று கிடை அழகிலே தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர் கள் திரளிலே
நானும் ஒருவனாய் சேர வேண்டும் என்கிறார் ஆதல்
அன்றிக்கே –
அத் திரளை கண்களால் காண அமையும் என்கிறார் -என்னுதல்
பசியர்-கல் அரிசிச் சோறு உண்ண வேண்டும் என்னுமா போலே –
தம் காதல் எல்லாம்தோற்ற அருளிச் செய்கிறார் –
பெரியோர்கள் கூட இருக்க வேண்டும் -என்றும் –
சத்பிரேவ சஹாசீத சத்பி குர்வித சங்கமம்
சத்பி விவாதம் மைத்ரம்ச ந அசத்பி கிஞ்சித் ஆசரேத் -மார்கண்டேய புராணம் –
ஈட்டம் கண்டிடக் கூடுமேல் -பெருமாள் திருமொழி -2-1-
என்றும் சொல்லக் கடவது அன்றோ –
அவன் செய்த உபகாரத்துக்கு தோற்று இருக்கும்
ஸ்ரீ வைஷ்ணவர்களோடே கூடி இருக்க வேண்டும் -என்றார் மேல் –
கிடை அழகிலே தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரளை
கண்களாலே காண அமையும் -என்கிறார் இதில் –
திரளை கண்ணாலே காண அமையும்
ஒப்பூண் உண்ண வேண்டாம்
தமர்கள் கூட்டமே -நாளும் வாய்க்க –
எம்பெருமான் தமர்கள்
தாளும் தோளும் முடிகளும் பரப்பி
கற்பக கா போலே சயனித்து
மாணிக்க மலை
சூர்யா பிரகாசம்
பாகவத சமாகதம்
பகவானை இட்டே பாகவதர்கள்
பிரதம பர்வதம் ஆச்சார்யா கைங்கர்யம் –
ஒன்றை விட்டு ஓன்று இல்லையே
ஆச்சார்யன் பிரீதிக்காக -தேவ பிரான் கரிய உரு காண்பான்
சக்கரம் போலே ஒன்றை விட்டு ஓன்று இல்லையே
கடலை படைத்தது
குளிர்ந்த கண் வளர சதுர்சமான
சமன் இல்லாத திவ்ய அவயவங்கள்
பாழ் தீரும் படி பரப்பி
தோள்கள் கற்பகப் பூ
திருவடிகள் பூ
ஆயிரம் கோடி ஆதித்யர் ஜோதி உள்ள முடி
தேஜஸ் -கோள் போலே உள்ள திரு முடி
ரத்ன பர்வதம் போலே
செக்கர் மா -மரகத குன்றம் -திருவாசிரியம்
வைத்த கண் வாங்க ஒண்ணாத படி
கிடந்ததோர் கிடக்கை -அனுபவிக்கும் அடியவர்
திரளை கண்ணாலே காண
பசியர் நாக்கு நனைக்க கவளம் சொட்டு நீர்
பரி பூர்ண அனுபவம் தான் ஆழ்வாருக்கும் ஆசை
ஈட்டம் கண்டிட கூடுமேல்
கண்ணாலே காண அமையும் என்கிறார் இதிலும் –
—————————————————————————————————————————————————–
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply