(வையத்து வாழ்வீர்கள் -உபக்ரமம் இங்கு அங்கு அப்பறை கொண்ட வாற்றை-திருவாய்ப்பாடியிலே
கற்பார் -ராமபிரானை -புற்பா -நான்முகன் பெற்ற நாட்டுள்ளே -இங்கேயே பரமபதம் போல் வாழ்ச்சி போல்
நான்கு பாகம் -அனுஷ்டித்த -அனுகரித்த -அப்யஸிக்கும் -அனுசந்திக்கும் அவர்கள் பாசுர ஸ்ரவணத்தாலே-ஏந கேநாபி -ஏதோ ஒரு வித சம்பந்தத்தால் பேறு துல்யம் )
(லஷ்மீ கல்யாணமே பாடி நிகமனம் இப் பாசுரம்-வங்கக் கடல்-வைகுந்தன் என்பானோர் தோணி–விஷ்ணு போதம் கூப்பீடு கேட்க கிடக்கும் திருப் பாற் கடல் )
(கேசவன் -பிள்ளை பேரன் ஸத் சந்தானத்துடன் வாழ்ச்சி)
(அங்கு ஒரு தாயார் இங்கு பஞ்ச லக்ஷம் -தேவர் கார்யம் போல் செய்து -விண்ணவர் அமுது உண அமுத்தினாள் வந்த பெண்ணமுதம் உண்டவன்
இங்கு நோன்பு வியாஜ்யம் நாட்டாருக்கு மழை -இவனுக்கு பஞ்ச லக்ஷம் கோபிகள்-)
(அங்கு அப்பறை -கதிர் த்ரய மூலத் வாத் -வ்வ்வ்ர் இடத்தில் உள்ள வெவ்வேறு அதிகாரிகள் அபேக்ஷித்த அனைத்தையும் -கொண்டவாற்றை)
(ஏல் ஓர் இதில் இல்லை -இனி கேட்டு ஆராய வேண்டாமே -எங்கும் திருவருள் பெற்று அனுபவிப்பதே வேண்டியது
அவனது மட்டுமே இருந்தால் சீறி அருளாகவே இருக்கும் -மிதுனமாக -இவர்களது சீரிய அருள் ஆகுமே)
அவதாரிகை –
நிகமத்தில்
இப்பிரபந்தம் கற்றாருக்கு உண்டாகும்
பலத்தை சொல்கிறார்கள்-
வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திரு முகத்து சேயிழையார் சென்று இறைஞ்சி
அங்கு அப்பறை கொண்ட வாற்றை யணி புதுவை
பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப் பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால் வரைத் தோள்
செங்கண் திரு முகத்து செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்-
பதவுரை
வங்கம் கடல்–கப்பல்களை யுடைய (திருப்பாற்) கடலை
கடைந்த–(தேவர்களுக்காகக்) கடைந்த ஸ்ரீ ய:பதியான
கேசவனை–கண்ண பிரானை
திங்கள் திரு முகத்து சே இழையார்–சந்திரன் போன்ற அழகிய முகத்தையும் செவ்விய ஆபரணங்களையுமுடைய ஆய்ச்சிகள்
சென்று–அடைந்து
இறைஞ்சி–வணங்கி
அங்கு–அத் திருவாய்ப் பாடியில்
பறைகொண்ட ஆ ஆற்றை–(தங்கள்)புருஷார்த்தத்தைப் பெற்ற அந்த விருத்தாந்தத்தை.
அணி புதுவை–அழகிய ஸ்ரீவில்லிபுத்தூரில் (திரு வவதரித்த)
பை கமலம் தண் தெரியல் பட்டர் பிரான்–பசுமை பொருந்திய தாமரை மலர்களினாலான
குளிர்ந்த மாலையை யுடைய பெரியாழ்வாருடைய (திருமகளான)
கோதை–ஆண்டாள்
சொன்ன–அருளிச் செய்த
சங்கம் தமிழ் மாலை முப்பதும்-திரள் திரளாக அநுபவிக்க வேண்டிய தமிழ் மாலையாகிய இம் முப்பது பாசுரங்களையும்
தப்பாமே–தப்பாமல்
இங்கு–இந் நிலத்தில்
இ பரிசு–இவ் வண்ணமே
உரைப்பார்–ஓதுமவர்கள்
ஈர் இரண்டு மால் வரை தோள்–பெரிய மலை போன்ற நான்கு திருத் தோள்களை யுடையவனும்,
செம்கண் திருமுகத்து-சிவந்த திருக் கண்களை யுடைய திரு முகத்தை யுடையவனும்
செல்வம்–ஐஸ்வர்யத்தை யுடையனும்
திருமாலால்–ஸ்ரீ ய:பதியுமான எம்பெருமானாலே
எங்கும்–எவ்விடத்தும்
திருஅருள் பெற்று-(அவனுடைய) க்ருபையைப் பெற்று
இன்புறுவர்-ப்ரஹ்ம ஆனந்த சாலிகளாக
ஏல் ஓர் எம் பாவாய்–.
வியாக்யானம் –
வங்கம் -இத்யாதி –
மரக்கலத்துக்கு ஒரு சலனம் பிறவாதபடி
பாற்கடலை
மந்தரத்தை மத்தாக நாட்டி
வாசுகியால் சுற்றி
தன் கையாலே கடைந்து
பிராட்டியை லபித்தால் போலே
(பெண்ணமுதம் தான் கொண்டு உகந்தது போல்)
சேதனர் பரிக்ரஹித்த சரீரத்துக்கு ஒரு வாட்டம் வாராமல்
சம்சாரம் ஆகிற மகா சமுத்ரத்தை
தன் சங்கல்பம் ஆகிற மந்த்ரத்தை நாட்டி
கிருபையாகிற கயிற்றாலே சுற்றி
கடாஷம் ஆகிற கைகளால் கடைந்து
பிராட்டியிலும் பிரேம விஷயமான ஆத்ம வஸ்துவை லபித்தவன் –
(விஷ்ணு கடாக்ஷம் -சபரியாதிகளைப் பூதராக்கிய நெடு நோக்கு-பிராட்டியிலும் பிரேம விஷயமான ஆத்ம வஸ்துவை லபித்தவன்-கிம் கார்யம் சீதயா மம என்பவன் அன்றோ -)
இத்தால் இந்த சரீரத்தோடு இருக்கும் போது
அவனை சந்தமேனும் விது என்ன பண்ணுபவன்
(வையத்தில் வாழ்ச்சி)
கேசவனை
கேசியை நிரசித்தாப் போலே
ஆத்ம வஸ்துவை அனுபவிக்கும் போது
அவ்வனுபவ விரோதியாய் இச் சேதனனுக்கு பிறக்கும்
போக்ருத்வாதிகளுக்கு நிவர்தகனாவனை-
(என்னில் முன்னம் பாரித்து பருக வந்தாலும் -வாரிக் கொண்டு விழுங்க-நாம் பாரித்து இருந்தாலும் – எதிர் விழி கொடுக்க வேண்டுமே)
திங்கள் -இத்யாதி –
சந்தரனைப் போலே ஆஹ்லாத கரமான
திருமுக மண்டலம் உடையவர்களாய்
தத் ஏக விஷயமான ஞான பக்தி வைராக்ய பூஷிதராய்
அனந்யார்ஹரான பாகவதர்கள்
ஆற்றாமை யாலே அவனிருந்த இடத்தே சென்று
பூஜித்து
த்வாபர யுகத்திலே நாட்டாருக்கு -பறை -என்ற வ்யாஜ மாத்ரமாய்
தங்களுக்கு உத்தேச்யமான கைங்கர்யத்தை பரிக்ரஹித்த பிரகாரத்தை –
பூமிக்கு ஆபரணமான ஸ்ரீ வில்லி புத்தூரிலே எழுந்து அருளி இருக்கிற
விஸ்த்ருதமாய் குளிர்ந்துள்ள தாமரை மணிகளாலே
செய்யப் பட்ட மாலைகளை உடைய
பெரியாழ்வார் திரு மகளாரான சூடிக் கொடுத்த நாச்சியார் அருளிச் செய்த
சங்கா நுபாவ்யமாய் -கூட்டம் கூட்டமாய் இருக்கிறதாய் –
தமிழாலே செய்யப் பட்ட
மாலை போலே போக்யமாய்
சிரசாவாஹ்யமாய்
ஸ்லாக்கியமான இப்பிரபந்தத்தை
ஒரு பாட்டு குறையாதே
பிற்பட்ட காலத்திலே
இப் பிரபந்த ரூபமான பாரத்தை அனுசந்திக்கும் அவர்கள்
இப் பாசுர ஸ்ரவணத்தாலே
பணைத்து-பலிஷ்டமான-பெரிய மலை போலே இருக்கிற நாலு திருத் தோள்களை உடையவனாய்
வாத்சல்யத்தாலே சிவந்த திருக் கண்களை உடையவனாய்
விகசிதமான திரு முக மண்டலத்தை உடையனாய்
உபய விபூதி ஐஸ்வர்ய சம்பன்னனான
ஸ்ரீயபதியாலே
த்ருஷ்ட அத்ருஷ்டங்கள் இரண்டிலும்
பிறந்த ஞானத்துக்கு விச்சேதம் வாராதபடி
கிருபையை லபித்து
ஆனந்த நிர்பரராய் இருப்பார்கள்-
(பிற்பட்ட காலத்திலே-கோபிமார்களுக்கு -ஆண்டாளுக்கு -பட்டருக்கு பிற்பட்ட காலத்திலே-நமக்கும் -தோல் கன்று போல்வாருக்கும்
ஈரிரண்டு -பணைக்கும் இரண்டு மடங்காகப் பாசுரம் தோறும் –
ஏந கேநாதி பிரகாரமாக இதில் ஸம்பந்தமே ஹேதுவாக -பேறு துல்யம் அன்றோ -ஏந கேநாபி -ஏதோ ஒரு வித சம்பந்தத்தால் பேறு துல்யம்)
(த்ருஷ்ட விஷய ஞானம் த்யாஜ்ய புத்தியில் உறுதி -தோஷ ஞானம்
அதிருஷ்ட விஷய ஞானம் -அவன் குண விஷயம் -உபா தேயத்துக்கு ஸ்வீ காரத்துக்கு வேண்டுமே
பாதம் அடையும் பாசத்தினால் மற்ற வன் பாசங்கள் முற்ற விட வேண்டுமே-இசைவித்து அவன் தனது தாளிணைக் கீழ் இருத்தும் பொழுது விலக்காமை வேண்டுமே )
——————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சுத்த சத்வம் தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply