திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -8-10-9-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

ஸ்ரீ வைஷ்ணவர்களோடு சேர்ந்து இருக்கும் சேர்க்கை தான் வேண்டுமோ –
அவர்களுடைய அடிமையிலே முடிந்த நிலமாக அமையும் என்கிறார் –

—————————————————————————————————————————————————————

தமர்கள் கூட்ட வல்வினையை
நாசம் செய்யும் சதிர் மூர்த்தி
அமர் கொள் ஆழி சங்கு வாள்
வில் தண்டாதி பல்படையன்
குமரன் கோல வைங்கணை வேள் தாதை
கோதில் அடியார் தம்
தமர்கள் தமர்கள் தாமர்களாம்
சதிரே வாய்க்க தமியேற்கே

—————————————————————————————————————————————————————

தமர்கள் கூட்ட வல்வினையை நாசம் செய்யும் –
ஸ்ரீ வைஷ்ணவர்கள் உடைய திரளுக்கு வரும் வல்வினையை
நாசம் செய்யும்
அன்றிக்கே –
தமர்களுடைய திரண்ட வல்வினையை நாசம் செய்யும் -என்னுதல்
அன்றிக்கே –
தமர்கள் வல்வினையைக் கூட்ட
அத வல்வினைகளை நாசம் செய்யும் -என்னுதல் -என்றது –
இவர்களுக்கு வல் வினையை கூட்டுகையே தன்மை ஆனாப் போலே
அவனுக்கு அந்த வல்வினைகளை நாசம் செய்கையே யாத்ரையாய் இருக்கும்படி யைத் தெரிவித்தவாறு –

சதிர் மூர்த்தி –
விரோதிகளை போக்குகைக்கு தக்கனவான
பல வடிவுகளையும் கொள்ளா நிற்கும் -என்றது
இவர்கள் கைங்கர்யம் செய்வதற்கு பல வடிவுகள் கொள்ளுமாறு போலே ஆயிற்று
அவன் காத்தல் நிமித்தம் பல வடிவுகளை கொள்ளுகிறபடி
என்பதனை தெரிவித்தவாறு –

அமர் கொள் ஆழி சங்கு வாள்வில் தண்டாதி பல்படையன் –
விரோதிகளை அழிப்பதற்கு உறுப்பாக
போரை நோக்கி உள்ள திரு ஆழி தொடக்கமான
திவ்ய ஆயுதங்களை உடையவன் –
குமரன் –
எப்பொழுதும் இளையோனாய் இருப்பவன் –

கோல வைங்கணை வேள் தாதை –
ஐந்து பானங்களை உடையனான காமனுக்கும் தந்தை யானவன் என்றது –
அழகுக்கு தனக்கு மேல் இல்லை என்று இருக்கும் காமனுக்கும்
அழகுக்கு தோற்றுவாயாய் இருக்கும் -என்றபடி –

கோதில் அடியார் தம் தமர்கள் தமர்கள் தாமர்களாம் சதிரே வாய்க்க –
அப்பருவத்துக்கும்
அழகுக்கும் தோற்று இருக்கும்
வேறு பிரயோஜனம் ஒன்றையும் கருதாதவரான
ஸ்ரீ வைஷ்ணவர்கள் உடைய அடிமையில்
முடிந்த நிலமாக வேண்டும் -என்கிறார் –
இந்த மிக உயர்ந்த புருஷார்த்தம் என்றும் ஒக்க வாய்க்க வேண்டும்
என்பார் -சதிரே வாய்க்க -என்கிறார் –

தமியேற்கே –
சென்ற காலத்திலும் ஸ்ரீ சத்ருகன ஆழ்வானைத் தேடித் பிடிக்க வேண்டி
இருக்கையாலே -இப்பொழுது நடக்கும் காலத்திலும்
தமக்கு உபமானம் இன்றிக்கே இருக்கை –
கேசவன் தமர் -என்ற திருவாய் மொழிக்கு பின்பு தனியார் அல்லாமையாலே
மேல் நங்கட்கு -என்றார்
இங்கு தமியேற்கு -என்கிறது சம்சாரிகளில் தமக்கு உபமானம் இல்லாமையாலே –

அவர்களின் அடியவர் அடியவர் -பிடித்தார் பிடித்தாரைப் பற்றி
தேர் பிடிப்பாரை பிடிக்க
குரங்குகள் மலையை நோக்க
பன்மை
குரங்குகள்
மலை -ஒருமை
ஒரே குரங்கே பல மலையை தூக்க சாமர்த்தியம்
குரங்குகள் நிறைய
கைங்கர்யம் ஆசையால் தொட்டு கொண்டு இருக்குமே
பாகவத சேஷத்வ பெருமை அருளி –
கோதில் அடியார் –
கோது குற்றம்
தமர்கள் தமர்கள் —
தமர்கள் கூட்ட வல்வினை –
பாபக் கூட்டங்கள் நாசம் செய்யும் சதிர மூர்த்தி -சாமர்த்தியம்-
திவ்ய பஞ்சாயுதங்கள் ஏந்தி போக்கி
யுவாகுமாரா
யுவா அகுமாரா -அர்த்தம் நாடு பருவம்
மன்மதன் தாதை -அழகுக்கு ஊற்றுவாய்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரளுக்கு வரும் வல்வினை
தமர்கள் உடைய கூட்டமான வல்வினை
தமர்கள் வல்வினையை கூட்ட கூட்ட நசிப்பிக்கும்
அடுத்த ஷணம்
கூட்டுகையே ஸ்வாபம்
நசிப்பதே ஸ்வாபம் அவனுக்கு
சதுர மூர்த்தி பல வடிவு -நாலு விதம் பல விதம்
கைங்கர்யத்துக்கு பல வடிவு போலே
காப்பதற்கும் அவன் பல வடிவு கொண்டு
குமரன்-
காமனுக்கும் உத்பாதகன்
காமனைப் பயந்த காளை –
பிரசவம் ஆனா பின்பு பெற்ற யௌவனம்
பருவத்துக்கும் அழகுக்கும் தோற்ற அடியவர் அடியவர்
என்றும் ஒக்க வாய்க்க வேண்டும்
தமியேற்கே
தனிப்பட்டார்
தாச தாச –கடைசி-சரமாவதௌ யக தது தாச -மா முனிகள் –
முதல் தீர்த்த காரர் அப்புறம் தீர்த்தம் சாதிக்க கேட்டு கடைசியில் பெற்ற கதை –
இப்படி தமியேற்கே
மனப்பான்மை கிடைப்பது
அடியார் -அடியோங்களே
பூத காலத்திலும் சத்ருக்ன ஆழ்வானை தேடித் பிடிக்க
மதுர கவி ஆழ்வார்
வடுக நம்பி
போல்வார்
வர்த்தமான காலத்தில் யாரும் இல்லை
நம் கட்கே -கீழே சேர்த்து
இங்கே தமியேற்கு

———————————————————————————————————————————————————-

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading