ஸ்ரீ திருப்பாவை -கூடாரை வெல்லும் சீர் -ஸ்ரீ சுத்த சத்வம் தொட்டாசார்யர் ஸ்வாமிகள் அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் –

அவதாரிகை –

இப் பாட்டில்
நோற்றால் -அவன் பக்கல் பெருமவற்றைச்
சொல்கிறார்கள்

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா வுன்தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம் பெரும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள் வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்
ஆடை யுடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்

பதவுரை

கூடாரை–தன் அடி பணியாதவர்களை
வெல்லும் சீர்–வெல்லுகின்ற குணங்களை யுடைய
கோவிந்தா–கண்ண பிரானே!
ஊன் தன்னை–உன்னை
படி-(வாயாரப்)பாடி
பறை கொண்டு–(உன்னிடத்து யாம் வேண்டுகின்ற) பறையைப் பெற்று
யாம் பெறு சம்மானம்–(பின்னும்) நங்கள் பெறும் படியான ஸம்மாநமாவது
நாடு புகழும் பரிசினால்–நாட்டார் புகழும்படியாக
சூடகம்–(கையிலணியும் ஆபரணமான) சூடகங்களும்
தோள் வளை–தோள் வளைகளும்
தோடு–(காதுக்கிடும் ஆபரணமான) தோடும்
செவிப் பூ–கர்ணப் பூவும்
பாடகம்–பாதகடகமும்
என்றனையப் பல் கலனும்–என்று சொல்லப்படும் இவ்வாபரணங்கள் போன்ற மற்றும் பல ஆபரணங்களும்
(உன்னாலும் நப்பின்னைப் பிராட்டியினாலும் பூட்டப்பட்ட யாம் நன்றாக அணிவோம்–,
ஆடை–சேலைகளை
உடுப்போம்–(நீ உடுத்த) உடுத்துக் கொள்வோம்;
அதன் பின்னே–அதற்குப் பின்பு
பால் சோறு–பாற் சோறானது (க்ஷிராந்நம்)
மூட–மறையும் படியாக
நெய் பெய்து–நெய் பரிமாறி
முழங்கை வழி–முழங்கையால் வழியும் படியாக (உண்டு)
கூடி–(நீயும் நாங்களுமாகக்) கூடி யிருந்து
குளிர்ந்து–குளிர வேணும்:
ஏல் ஓர் எம் பாவாய்–

வியாக்யானம்

கூடாரை வெல்லும் சீர் –
கரண களேபர பிரதானம் –
முதலாக சாங்க சாஸ்திர பிரதானம் பண்ணின விடத்திலும்
ந நமேயம் என்று இருப்பாரை
தன்னுடைய சௌர்யாதி குணங்களாலும்
சீலாதி குணங்களாலும் வெல்லும் இத்தனை –

(ஐயப்பாடு அறுத்துத் தோன்றும் அழகன் -ஆதாரம் பெறுக வைத்த அழகன்)

வில் பிடியைக் காட்டி ராவணனை ஜெயித்தான் -(ச சால சாபஞ்ச விமோச -வெறும் கை வீரன்-ஸுசீல்யம் காட்டி வெல்லப் பார்த்தான் )

இது பிரதம யுத்தத்திலே இவனும் அதுக்கு எதிர்பார்த்து போந்தவன் தோலாமை இல்லை இறே
ஆனால் மறுபடியும் யுத்தமுண்டான படி எங்கனே என்னில்(கச்சாநு ஜாநாமி-இன்று போய் நாளை வா – என்று )
பெருமாளுடைய நிரதிசய சௌர்யத்தை
பிரகாசிப்பிக்கைக்காக மறுபடியும் யுத்தம் பண்ணினான் இத்தனை
என்று நம்முடைய ஆச்சார்யர் அருளிச் செய்வர்

(ராமத்வம் உலகுக்கு காட்டவே -வீரம் காட்டவே -ஒருவர் இருவர் மூவர் என்று -உருவு கரந்து -இறுதி யுத்தம்
சத்ருக்களும் புகழும் வீரம் -மனோ ரஞ்சனம்(

தன்னுடைய வடிவு அழகைக் காட்டி கோபிமார்களை ஜெயித்தான்(ஸாஷாத் மன்மதன் )
ஸ்வரூப ரூப குண விபூதிகளாலே சர்வ ஸ்மாத் பரனான தன்னுடைய
வை லஷண்யத்தைக் காட்டி ஆழ்வார்களை ஜெயித்தான்

இவை ஒன்றிலும் ஈடுபடாத நம் போல்வாரை ஆழ்வார்
சம்பந்தத்தை வ்யாஜீ கரித்து ஜெயிக்கும் இத்தனை –

கோவிந்தா –
சர்வ ஸூலபன் ஆனவனே -(மாடுகளின் பின்னே போகும் எளியவன் )

வுன் தன்னைப் பாடிப் –
சர்வ ஸ்மாத் பரனாய்
சர்வ ஸூலபனான உன்னை(தன்னை -ஸூ லபன் -இயற்க்கை)
த்வத் அனுபவ ஜனித ப்ரீதிக்கு போக்கு வீடாக பாடி –

பறை கொண்டு –
புருஷார்த்தத்தை லபித்து –

யாம் பெரும் சம்மானம் நாடு புகழும் பரிசினால் நன்றாக-
நாடு ஸ்வ அபிப்ராயத்தால் கொண்டாடும் பிரகாரத்தாலே
உன் பக்கல் கை பார்த்து இருக்கும் நாங்கள் லபிக்கிற பஹூமானம்
உன் பக்கல் நன்றாக யாம் பெரும் சம்மானம் -என்றுமாம் –

(முனிவர் யோகிகள்- வைகுந்தத்து அமரரும் முனிவரும் -கைங்கர்ய நிஷ்டர்களும் குண அனுபவம்
யோகத்தால் ஞானம் -ஸாஸ்த்ர ஜன்ய ஞானம் -ஆச்சார்ய உபதேச ஞானம் –
ஆச்சார்யருக்கு ஸாஸ்த்ர ஜன்ய ஞானம் தனது ஆச்சார்ய உபதேச ஞானமும் வேண்டும்
யோகத்தால் -மீண்டும் மீண்டும் த்யானம் -தபஸ் -பலம் கொடுக்கவும் ப்ரஹ்மம் வேண்டுமே –
அதீந்த்ர -இந்திரியங்களுக்கு அப்பால் பட்ட ஆத்மா பரமாத்மா த்யானம் -வற்றைச் சொல்ல ஸாஸ்த்ரம் வேண்டுமே
யோகம் பற்றி அறியவும் ஸாஸ்த்ரம் வேண்டும் ஆகவே எல்லா ஞானமும் வேண்டுமே
அனைவரும் அவன் இடம் கை பார்த்தே இருக்க வேண்டுமே)

(பல அடியார் முன்பு அருளிய -பாம்பணை அப்பன் அமர்ந்து உறையும்-
பெரியநம்பி பின்பு கூரத்தாழ்வான் கோயில் வலம் வந்த விருத்தாந்தம்
எங்கும் பக்கம் நோக்கம் அறியாமல் கடாக்ஷம் ஒருமடையாக ஆழ்வார் பெற்றது போல்)

சூடகமே –
காப்பே

(கைத்தலம் பற்றி உபக்ரமம் –திருவடியில் விழுந்தது பர்யந்தம்)

(திருவெள்ளறை காப்புப்பதிகம்)

தோள் வளையே –
திரு இலச்சினையே

தோடு –
திரு மந்த்ரமே

செவிப்பூவே
த்வயமே(அனுபவத்துக்கு )

பாடகமே
சரம ஸ்லோகமே

இவை
ஸ்வரூபஞ்ஞனான முமுஷுவான அதிகாரிக்கு அவஸ்ய அபேஷிதங்களாய் –
பகவத் சம்பந்த த்யோதகங்களாய் -இருப்பன

(முமுஷுவுக்கு அறிய வேண்டிய ரஹஸ்யங்கள் ரஹஸ்ய த்ரயங்கள் அன்றோ)

(வளையாதி பூஷணங்கள் சம்பந்தத்துக்கு அடையாளம் போல் இவையும் -அம் தண் துழாய் கமழ்தல் குட்டநாட்டுத் திருப்புலியூர் உடன் ஸம்ஸ்லேஷ அடையாளம் போல்)

இதில் தோடு –
மண்டல ஆகாரமாய் -மந்திர சேஷ விவரிணி யான
பிரணவ ஆகாரத்துக்கு த்வதோகமாய் -இருக்கையாலே –
திருமந்த்ரத்தை சொல்லுகிறது –

(பிரணவம் -இத்தை விவரிக்க -பிரணவ சேஷம் -நம நாராயண -ஆகவே ப்ரணவத்தைச் சொன்னது திருமந்திரம் முழுவதையும் சொன்னவர்
வேதத்துக்கு ஓம் என்பது சுருக்கம் -தான் மங்களமாதலால்)

செவிப்பூ
ஸுவயம் போக ரூபம் ஆகையாலே -போக பிரதானமான
த்வயத்தை சொல்லுகிறது –

(மந்த்ர ரத்னம் சந்தத ஸ்புரித -நித்ய அனுசந்தானம் -ப்ரபத்யே -வர்த்தமானம்-அனுசந்தான ரஹஸ்யம் தானே இது )

பாடகம்
பத்த ரூபம் ஆகையாலே -உபாயாந்தர நிவ்ருத்தி பரமான
சரம ஸ்லோகத்தை சொல்லுகிறது –

(தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து தாளிணைக்கீழ் வாழ்ச்சி)

இம் மூன்று ரகஸ்யங்களாலும்
ஞான பக்தி வைராக்யங்களை சொல்லுகிறது
அது எங்கனே என்னில்

திருமந்தரம் -ஆத்ம ஸ்வரூப யாதாம்ய ஞான பரம் ஆகையாலும்
த்வயம் -உத்தர கண்டத்தில் சொல்லுகிற கைங்கர்யத்துக்கு பூர்வ பாவியான பக்தி பிரதானம் ஆகையாலும்
சரம ஸ்லோஹம் த்யாஜ்ய அம்சத்தில் வைராக்யம் பிரதானம் ஆகையாலும்
ஞான பக்தி வைராக்யங்களைச் சொல்லுகிறது –

என்று அனைய
என்று சொல்லப் படுகிற

பல் கலனும்
ஞான பக்தி வைராக்யங்கள் மூன்றும்
ஓர் ஒன்றே விஷய பேதத்தாலே -அநேகமாக இருக்கும் இறே-
ஆகையால் -பல் கலனும் -என்கிறார்கள் –

(ஸ்வரூப ஞானம் -அர்த்த பஞ்சக ஞானம்
பரபக்தி பரஞானம் பரமபக்தி
ஐஸ்வர்ய கைவல்ய வைராக்யம் அஸேவ்ய சேவை -ஆபாச பந்துக்கள் தேவதாந்த்ர த்யாஜ்யம் )

யாம் அணிவோம்
உன்னோடு கூடாத அன்று இவை ஒன்றும் வேண்டாத நாம்
இன்று அணியக் கடவோம்
பகவத் சம்பந்தம் இன்றியிலே ஞான பக்தி வைராக்யங்கள் உண்டானாலும் அபாயம் இறே பலிப்பது –
பௌத்தனுக்கும் ஞான பக்தி வைராக்யங்கள் உண்டு இறே –

(ஏறாளும் இறையோனில் -அவனுடன் இல்லாத ஆத்ம ஆத்மீயங்கள் வேண்டாமே)

ஆடை உடுப்போம்
சேஷத்வ ஞானம் ஆகிற வஸ்த்ரத்தை உடுப்போம்

(நைவளம் ஓன்று ஆராயா நம்மை நோக்கா நாணினார் போல் இறையே நயங்கள் பின்னும்
செய்வளவில் என் மனமும் கண்ணும் ஓடி எம்பெருமான் திருவடிக் கீழ் அணையை இப்பால்
கைவளையும் மேகலையும் காணேன் கண்டேன் கனமகரக் குழை இரண்டும் நான்கு தோளும்
எவ்வளவு உண்டு எம்பெருமான் கோயில் என்றேற்கு இது வன்றோ எழில் ஆலி என்றார் தாமே–22-)

அதன் பின்னே –
அதுக்கு மேலே

பால் சோறு
கைங்கர்யம் ஆனது

மூட நெய் பெய்து
மறையும்படி பாரதந்த்ர்யத்தை வெளி இட்டு

கூடி இருந்து குளிர்ந்து –
போக்தாவான உன்னோடு
போக்யரான நாம்
சம்பந்தித்து இருந்து -விஸ்லேஷ வ்யசனம் எல்லாம் தீரப் பெற்றோம் –
இது வன்றோ நாம் உன் பக்கல் பெரும் சம்மானம்-

(வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம்
பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்
கார் ஒக்கும் காட் கரை அப்பன் கடியனே–9-6-10-அவனே போக்தா நாம் போக்யம் )

(ஸோஸ்னுதே -ஸர்வான் காமான் ஸஹ -ப்ரஹ்மணா ஸஹ –சாதர்மய -சாம்யா பத்தி சுருதிகள் ஸாயுஜ்யம் சொன்னவாறு)

—————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சுத்த சத்வம் தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading