Archive for October, 2013

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -8-9-7-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

October 30, 2013

கேவலம் கொடையாளனாக மட்டும் இருந்தால் போராதே-
காதல் குணம் உண்டாக வேணுமே -என்ன
அவ் ஊரில் தாவரங்களும் கூட ஒன்றுக்கு ஓன்று
பற்றுக் கோடாம்படி அன்றோ
அவனுடைய காதல் குணம் இருந்த படி -என்கிறாள் —

——————————————————————————————————————————————————-

மெல்லிலைச் செல்வ வண் கொடிப் புல்க
வீங்கிளந்தான் கமுகின்
மல்லிலை மடல் வாழை
ஈன் கனி சூழ்ந்து மணம் கமழ்ந்து
புல்லிலைத் தெங்கினூடு
காலுலவும் தண் திருப் புலியூர்
மல்லலஞ் செல்வக் கண்ணன் தாள் அடைந்தாள்
இம் மடவரலே

————————————————————————————————————————————————————–

மெல்லிலைச் செல்வ வண் கொடிப் புல்க-
மிருதுவான இலையை உடைத்தாய்
ஆர்வத்தை உடைத்தாய்
இருக்கிற வளவிய கொடிகள் தழுவ –
தன் கணவனான காமுக்கு தன் உடம்பை
முற்றூட்டாக கொடுக்கும் போலே காணும் –

வீங்கிளந்தான் கமுகின் –
கொடி தழுவ தழுவ வளரா நின்று
ஒருகாலைக்கு ஒருகால் இளகா நின்றுள்ள
தாளையை உடைய கமுகு –
அப்ரமேயம் ஹி தத் தேஜ யஸ்ய சா ஜனகாத்மஜா
நத்வம் சமர்த்த தஸ்தாம் ஹர்த்தும் ராம சாபாஸ்ரயம் வனே -ஆரண்ய -37-18-
அந்த ஜனக குலத்தில் பிறந்த பிராட்டி எவருக்கு மனைவியாக
இருக்கிறாளோ அவருடைய பராக்கிரமம் அளவிடற்கு அரியது –
என்னும் நியாயத்தாலே –
ஒரு ஆயர் மடக்கொடியானவள் மது என்கிற அசுரனைக் கொன்ற கிருஷ்ணனுடைய
தொழில் கொடி போன்ற கையைக் கொடுத்தாள் –
பரிவ்ருத்தி ச்ரமேண எகா சலத்வலய சாலிநீ
ததௌ பாஹூ லதாம் ச்கந்தே கோபீ மது நிகாதின -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13-54-
என்கிறபடியே –
கமுகின் மல்லிலை மடல் வாழை –
கமுகொடே கூடின பெரிய இலையையும்
மடலையும் உடைய வாழை
வெற்றிலைக் கொடிக்கும் கமுகுக்கும் வெய்யில் தட்டாதபடி
நிழல் செய்து நிற்குமாயிற்று வாழை –

ஈன் கனி சூழ்ந்து-
பழத் தாறுகள் தெற்றிக் கிடக்குமாயிற்று –

புல்லிலைத் தெங்கினூடு-
புல்குதல் -தழுவுதல்
ஒன்றுக்கு ஓன்று தழுவப் பட்ட இலையை உடைய தெங்கு -என்னுதல்
வாழை இலையோடு தழுவின தெங்கு -என்னுதல்
சோலை நெருக்கத்தாலே
நேரிதான இலையை உடைய தெங்கு என்னுதல் –

மணம் கமழ்ந்து -காலுலவும் தண் திருப் புலியூர் –
காற்றானது
விளைவது அறியாதே புக்கு
வாசனையில் ஆகையாலே -அங்கே இங்கே சுழித்து
வாசனையை ஏறிட்டுக் கொண்டு
வாழை நெருக்கத்தாலே நெருக்கப் பட்டு
சிறிய வெளியை உடைய தெங்கின் சோலையிலே புறப்பட்டு
சஞ்சரிக்கும் படியான திருப் புலியூர் –

மல்லலஞ் செல்வக் கண்ணன் –
தனக்கு மேல் ஓன்று இல்லாததாய்
அழகிதான செல்வத்தை உடைய
கண்ணன் –

தாள் அடைந்தாள் –
காதல் குணத்துக்கு தோற்று
திருவடிகளைப் பற்றினாள் –

இம் மடவரலே –
முன்பு எனக்கு அடங்கினவளாய் போந்த இவள் கண்டீர்
மீட்க ஒண்ணாதபடி ஆனாள் –

பிரணயிதவம் வேற உண்டே
ஸ்தாவரங்களும் பரஸ்பர சிநேகம் காட்டா நிற்க
வெற்றிலை கொடி பாக்கு மரத்திலே படர்ந்து உள்ளதே
தலைவன் எப்படிய் இருப்பான்
மடவரல்
மல்லல் -செல்வம்
கண்ணன் தாள் அடைந்தாள்
மெல்லிய இலைகள் உள்ள வெற்றிலை கொடி
இளம் தாள் கமுகு
வாழை பழுத்து செறிந்து நிழல் கொடுக்க
தெங்கும் கலந்து பழக –
பர்தாவான கமுகு உடம்பை முற்றூட்டாக கொடுக்க
இளம் கமுகு கொடி ஸ்பர்சத்தால்
பிராட்டி -யஸ்ய ஜனகாத்மஜா ராமன் தேஜஸ் அப்ரமேயம்
இளம் தாள் -இளைமையாக உள்ளதே
போகம் அனுபவித்து தேஜஸ் மிக்கு
பாஹூ-கோபிகள் கொடி போலே -மது நிரசனன்-அணைத்து கொண்டது போலே –
நிழல் செய்து வாழை
ஈன் கனி
காற்று மணம்-ஏறிட்டு கொண்டு –
தென்னஞ்சோலை வழியாக
மல்லல் அம் செல்வம் நிரவதிக அழகிய செல்வம்
முன்பு எனக்கு பவ்யமாக இருக்க
அவன் இடம் சேர்ந்தாள் இன்று

————————————————————————————————————————————————————————–

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -8-9-6-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

October 30, 2013

செல்வம் மாத்ரம் போருமோ –
வள்ளலாக இருக்க வேண்டாவோ -என்ன
அவனுடைய வள்ளல் தன்மையில் அகப்பட்டுக்
களைந்தமைக்கு அடையாளம்
தெளிவாக உண்டு -என்கிறாள் –

—————————————————————————————————————————————-

திருவருள் மூழ்கி வைகலும்
செழு நீர் கண்ணா பிரான்
திருவருள்களும் சேர்ந்தமைக்கு அடை
யாளம் திருந்த உள
திருவருள் அருளால் அவன் சென்று
சேர் தண் திருப் புலியூர்
திருவருள் கமுகு ஒண் பழத்
தது மெல்லியல் செவ்விதழே

————————————————————————————————————————————————

திருவருள் மூழ்கி வைகலும் –
வைகலும் திருவருள் மூழ்கி
பலகாலம் அவனுடைய அருளிலே மூழ்கி –
நாம் கண்டதனை அறிவோம் இத்தனை அன்றோ –
கீழே இன்று இப் புனை இழை-எனபது வைகலும் திருவருள் மூழ்கி என்றது மாறுபட்டது ஆகாதோ -என்பதற்கு –
எதிர் சூழல் புக்கு இப்படி பரிமாறி திரிகிறது எத்தனை காலம் உண்டு
அதனை அறிந்தொமோ –

செழு நீர் கண்ணா பிரான் –
அழகு
எளிமைகளைக்
காட்டிக் காணும் இப்படி அகப்படுதிற்று –

திருவருள்களும் சேர்ந்தமைக்கு –
அவனுடைய அருள் எல்லாம்
இந்த வடிவு ஒன்றினில் வந்து சேர்ந்தமைக்கு

அடை யாளம் திருந்த உள-
அவனுடைய அங்கீகாரம் பெற்றமைக்கு
அடையாளம் தெளிவாக உள –
நீ இதனை அறிந்தபடி யாங்கனம் -என்ன –
திருவருள் அருளால் –
குணாகுணம் நிரூபணம் பண்ணாமல்
அங்கீ கரித்தலாகிற தன்மையை செய்வதற்காக –
திருவருள் செய்கைக்காக -என்றபடி –

அவன் சென்று சேர் தண் திருப் புலியூர் –
கலங்கா பெருநகரம் கலவிருக்கையாய் இருக்க அன்றோ
அவன் இங்கு வந்து அணியன் ஆயிற்று –

திருவருள் கமுகு ஒண் பழத்தது மெல்லியல் செவ்விதழே –
திருவருட் கமுகு -என்று சில உண்டு –
அதாவது நீரால் வளருகை அன்றிக்கே
பெரிய பிராட்டியாரும் சர்வேஸ்வரனுமாக கடாஷிக்க
அதனால் வளருவன சில –
அதன் உடைய அழகிய பழம் போலே இரா நின்றது –
மெல்லிய தன்மையாளான இவளுடைய அதரம்
அவ்வாயிலே அறியலாய் அன்றோ இருக்கிறது-

உதாரனாகவும் இருக்கிறான்
ஐஸ்வர் யம் மட்டும் உள்ளவன் இல்லை
இவள் தோற்றது ஔதார்யத்தில்
அதரம் –
பாக்கு மர பழம் போன்ற சிவந்து
மெல்லிய இலல்பை உடையவள் மெல்லியல் பெண் பிள்ளை
கமுகு -பழம் போன்ற –
திருவருள் கமுகு –
அடையாளம் திருந்த உள
வைகலும் திருவருள் மூழ்கி -ஔதார்யம்
நாம் கண்டத்தை அறிவோம்
எதிர் சூழல் புக்கு அவன் செய்த -கார்யம் அறியோம்
செழுநீர் கண்ணா பிரான்
அழகையும் சௌலப்யமும் காட்டி
அருள் மொத்தமாக -நம் மேல் ஒருங்கே -திரு கடாஷம்
வ்யக்தமாக ஸ்பஷ்டமாக திருந்த அடையாளம் உள
குணா குணா நிரூபணம் பண்ணாமல்
அனைவரையும் விஷயீ கரிக்கும் ஸ்வ பாவம்
இங்கு வந்து நிற்பதே அனைவரையும் அருள
கலங்கா பெரு நகரம் கலவிருக்கை
வாசச் ஸ்தானம் இது தான்
திருவருள் கமுகு
நீரால் வளராமல்
பெரிய பிராட்டி பெருமாள் சேர்ந்து கடாஷிக்க -அத்தால் வளர்ந்த
திருப் புன்னை போலே
அதனுடைய அழகிய பழம் போலே இவள் அதரம்
அவ்வாயாலே
அந்த இடத்திலே
வாயாலே
அறியலாம்
கல் விழுந்து அடிப் பட்ட செங்கல் பட்டு -போலே
சாதுக்தி

————————————————————————————————————————————————

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -8-9-5-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

October 30, 2013

ஆபத்துக்கு துணையாதல் மாத்ரம் போருமோ –
இவளுக்கு தக்க செல்வமும் அவனுக்கு உண்டாக வேணுமே -என்ன –
அதுவும் உண்டு -என்கிறார் –

—————————————————————————————————————————————————————————

புனையிழைகள் அணிவும்
ஆடையுடையும் புது கணிப்பும்
நினையும் நீர்மையதன்று
இவட்கிது நின்று நினைக்கப் புக்கால்
சுனையினுள் தடந்தாமரை மலரும்
தண் திருப் புலியூர்
முனைவன் மூவுலகாளி
அப்பன் திருவருள் மூழ்கினளே

————————————————————————————————————————————————————

புனையிழைகள் அணிவும் –
ஆபரணங்கள் நாம் பூட்டினால் போலே இருந்தனவோ –

ஆடையுடையும் –
முகத்தலை அறிந்து உடுததாய் இருந்ததோ –

புது கணிப்பும் –
நீர் வாய்ந்த வயல் போலே இவள் வடிவிலே பிறந்த செவ்வி பாரீர் கோள்-

நினையும் நீர்மையதன்று இவட்கிது நின்று நினைக்கப் புக்கால் –

நின்று நினைக்கப் புக்கால் -நினையும் நீர்மையதன்று இவட்கிது -தொடங்கி விடுதல் அன்றியே
காலம் என்னும் ஒரு பொருள் உள்ள அளவும் நின்று
ஆராயப் புக்காலும்
இவளுக்கு பிறந்த இவ் அழகுகள்
நினைக்கப் போகா என்றது –
யதோவாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா சஹ – தைத்ரிய ஆனந்த -9-1-
பேச முடியாமல் வேத வாக்குகள் திரும்பின -என்கிற விஷயத்தை அளவிட்டு அறினும்
இவள் படி அளவிட்டு அறிய முடியாது -என்றபடி –

இவை எல்லா வற்றிலும் நீ அறிந்த தன்மை யாது -என்ன
அப்பன் திருவருள் மூழ்கினளே -என்கிறாள் –

சுனையினுள் தடந்தாமரை மலரும்
ஒரு பூவே தடாகத்தை கண் செறி இட்டாப் போலே மலரும் -என்றது –
அவ ஊரில் பொருள்கள் பிறக்கு இடம் கொடா என்கிறாள் -என்றபடி –
இதனால்
இவளுக்கு புறம்பு போக்கு இல்லை என்பதனை தெரிவிக்கிறாள் –
தண் திருப் புலியூர் முனைவன் –
அவ் ஊருக்கு முதல்வன் –

மூவுலகாளி –
எல்லா உலகங்களையும் ஆளுகிறவன் -என்றது
ஐஸ்வர் யத்துக்கு புறம்பு ஒருத்தரைத் தேடித் போக வேண்டாதவன் -என்றபடி

அப்பன் –
ஐஸ்வர்யத்தாலும் குறைவறப் பெற்றேன் என்று
தன ப்ரீதியாலே சொல்கிறாள் –

திருவருள் மூழ்கினளே –
கடல் கொண்ட பொருளை எங்கனே மீட்கப் பார்க்கிறபடி –
அருட்கடலில் மூழ்கின இவளை மீத்கலாமோ உங்களாலே

ஆபத் சகம் மட்டுமே இல்லை
ஐஸ்வர் யமும் உண்டே
நினைத்து பார்க்க முடியாத செல்வம்
அப்பன் -உபகாரகன்
திரு அருளில் மூழ்கினாள்
நினையும் நீர்மை யதன்று
எதோ வாசோ நிவர்ந்தந்தே
திருப் புலியூர் நிர்வாஹகன்
மூ உலகும் ஆள்பவன்
கலந்து ஆபரணங்கள் மாறி இருக்க –
ஆடை -முகத்தலை -தலைப்பு மாறி உடுத்தி
புதுக் கணிப்பு நீர் பாய்ந்த வயல் போலே
வடிவில் செவ்வி
சம்ச்லேஷம் பகவத் ஞானம்
கால தத்வம் ஆராயப் புக்காலும் நினைக்க முடியாதே
இவள் திருமேனி விக்ருதி -பரமாத்வா விஷயத்தை பரிச்செதித்தாலும்
அப்பன் திரு அருள் மூழ்கி –
பதார்த்தங்கள் பிறைக்கு இடம்கொடாமல்
ஒரே தாமரை முழுவதும்
இவளுக்கு புறம்பு போக்கிடம் இல்லை
அனன்யார்ஹை
ஐஸ்வர் யம் புறம்பு வேறு இடம் போக வேண்டாம்
அப்பன் -எனக்கு செய்த உபகாரம்
ஐஸ்வர் யாம் குறை அர பெற்றான் சொல்ல முடிந்ததே
அருள் கடலில் மூழ்கி
கடல் கொண்ட பூமியை கீழே எடுத்தான்
இது அருள் கடல்

———————————————————————————————————————————————————————–

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -8-9-4-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

October 30, 2013

வெறும் ஆண்பிள்ளைத் தனமே போராதே –
ஆபத்துக்கு துணைவன் ஆகவும் வேண்டுமே -என்ன –
அக்குறை தான் உண்டோ அவளுக்கு -என்கிறாள் –
புனல் தரு புணர்ச்சியை அன்றோ -இவள் வாய் புலற்றுகிறது

———————————————————————————————————————————————————

ஊர் வளம் கிளர் சோலையும் கரும்பும்
பெரும் செந்நெலும் சூழ்ந்து
ஏர் வளம் கிளர் தண் பணைக் குட்ட
நாட்டுத் திருப் புலியூர்
சீர் வளம் கிளர் மூவுலகு உண்டு உமிழ்
தேவ பிரான்
பேர் வளம் கிளர்ந்ததன்றிப் பேச்சு இலள்
இன்று இப் புனை இழையே

————————————————————————————————————————————————————

ஊர் வளம் கிளர் சோலையும் –
ஊரில் செல்வத்தை கோள் சொல்லிக் கொடுக்கும் சோலை -என்னுதல்
அன்றிக்கே
ஊர்களுக்கு இட்டுச் சொல்லும் சிறப்புக்களை தெரிவிக்கும் சோலை -என்னுதல்

கரும்பும் பெரும் செந்நெலும் சூழ்ந்து –
வயல் அடங்கக் கரும்பும்
அதற்கு நிழல் செய்யும் செந்நெலும் சூழ்ந்து கிடக்கும்

ஏர் வளம் கிளர் –
ஏரால் உண்டான அழகை உடைத்தாய் -என்னுதல் –
எரினுடைய கூட்டத்தை சொல்லிற்றாதல் -என்னுதல்
என்றது உழுவது நடுவதே செல்லா நிற்கை-

தண் பணைக் –
மருத நிலம் என்னுதல்
அழகிய நீர் நிலம் என்னுதல்
மருத நிலம் என்றால் வயலைச் சொன்னபடி  –

சீர் வளம் கிளர் மூவுலகு உண்டு உமிழ் –
குணங்களின் நன்மை அடைய
செயலிலே தெரியும்படி
எல்லா உலகங்களையும் வயற்றிலே வைத்து
வெளி நாடு காண உமிழ்ந்த

தேவ பிரான் –
அயர்வறும் அமரர்கள் அதிபதி –

பேர் வளம்-
திருப் பெயர்களின் உடைய அழகு என்னுதல்
திருப் பெயர்கள் முழுதும் -என்னுதல்

குட்ட நாட்டுத் திருப் புலியூர் கிளர்ந்ததன்றிப் பேச்சு இலள் –
குணங்களுக்கும் செயல்களுக்கும் வாசக மான திருப் பெயர்களை
கடல் கிளர்ந்தால் போலே பெரிய கிளர்த்தியோடே
அன்றோ இவள் சொல்லுகிறது -என்றது –
நாம் திருப் பெயரைச் சொல்லுமாறு போலேயோ இவள் சொல்லுகிறது -என்றபடி

இன்று –
இவ் வேறுபாடும்
நன்மையையும்
நேற்று இல்லை காண் –

இப் புனை இழையே –
திருப் பெயரைச் சொல்லச் சொல்ல
ஒருபடி ஆபரணம் பூண்டாப் போலே இரா நின்றாள் –

ஆபத் சகனாகவும் வேண்டுமே
வெறும் வீரன் மட்டும் இல்லை
புனல் தரும் புணர்ச்சி
பூ தரும் புணர்ச்சி
தன்னை பேணாதே -கொடுத்த குணத்துக்கு தோற்று -கலந்து –
பிரளயம் அகப்பட்ட பூமியை காத்த குணத்துக்கு -புனல் தரும் புணர்ச்சி ரசோக்தியாக வியாக்யானம் –
சோலை -கரும்பு செந்நெல் -சூழ்ந்து -கிடக்கும்
ஏரால் -உண்டான அழகு –
உழுவது நடுவதாக உள்ள தேசம்
தண் பனை மருதம் வயலும் வயலை சார்ந்த இடம் –
சீர் -சகல லோகங்களையும் வயற்றில் வைத்து
வெளி இட்டான்
பேர் வளம் -திரு நாமம் வளம்
குணம் செஷ்டிதன்கள் திரு நாமம் கடல் கிளர்ந்தது போலே
சொல்லும் பொழுதே
அனந்தாழ்வான் திருவேம்கடத்தான்
பட்டர் அழகிய மணவாளன்
சோமாசி ஆண்டான் எம்பெருமானார்
இன்று இப் =இன்றிபுனை
நேற்று இப்படி இல்லை -இன்று
மெய் உயிர் கிட்டே வந்தால் ஓன்று போம்
இன்று யாம் இன்றியாம் ஆகும் நன்னூல் சூதரம்
திரு நாமம் சொல்ல சொல்ல ஆபரணம் பூண்ட பொலிவு இவளுக்கு உண்டே

 

————————————————————————————————————————————————————-

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -8-9-3-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

October 30, 2013

ஒப்பனை அழகு இருடிகளும் சொல்லார்களோ –
இது கலவிக்கு அறிகுறி ஆக வேண்டுமோ -என்ன
கணவனை நன்றாக தழுவிக் கொண்டாள் -என்கிறபடியே
வீரத்தின் சிறப்பினைக் கண்டு அணைக்கும் பிராட்டியின் வார்த்தை யாக அன்றோ
இவள் வார்த்தை இருக்கிறது -என்கிறாள்

——————————————————————————————————————————————————————————–

புகழும் இவள் நின்று இராப்பகல் பொரு நீர்க்
கடல் தீப் பட்டு எங்கும்
திகழும் எரியோடு செல்வது ஒப்ப
செழும் கதிர் ஆழி முதல்
புகழும் பொரு படை ஏந்தி போர் புக்கு
அசுரரைப் பொன்றுவித்தான்
திகழும் மணி நெடு மாடம் நீடு
திருப் புலியூர் வளமே

———————————————————————————————————————————————————————————

புகழும் இவள் நின்று இராப்பகல்-
வீரத்தின் சிறப்பினை அறிந்து ஈடுபடும் பருவம் இன்றிக்கே இருக்கிற இவள்
கேட்டார் வாய் கேட்டு ஒரு கால் சொல்லி விட்டாளோ
இரவு பகல் நின்று வாய் புலற்றா நின்றாள்
நெஞ்சாலே நினைத்து விட்ட அளவேயோ
நாணம் குடி போய் வாய் விட்டுப் புகழ் கிறாள் -என்பாள் -புகழும் -என்கிறாள் –

பொரு நீர்க் கடல் தீப் பட்டு-
பொரா நின்றுள்ள திரையை உடைத்தான கடல்-

நெருப்புக் கொழுந்தி –

எங்கும்திகழும் எரியோடு செல்வது ஒப்ப-
பரப்பு மாறிக் கொண்டு பிரகாசிக்கின்ற நெருப்போடு கூட
நடந்து சொல்லுமாறு போலே ஆயிற்று
ஆயுதங்களால் வந்த புகரும்
திருமேனியும் இருக்கிறபடி –

செழும் கதிர் ஆழி முதல் புகழும் பொரு படை ஏந்தி –
புகழும் பொரு படை -செழும் கதிர் ஆழி முதல்-ஏந்தி –
போர் செய்கின்ற மிக்க ஒளியை உடைத்தான
திரு ஆழி முதலான அழகிய ஆயுதங்களை ஏந்திக் கொண்டு –
புகழும் படை -என்றது
ஞானம் உடைய திரு ஆழி முதலான ஆயுதங்களாலே
புகழப் பட்ட வெற்றி ஒலியை உடைய பெருமானே –
என்கிறபடியே
ஹேதிபி சேதனாவத்பி உதீரித ஜெயஸ்வனம் – இரகுவம்சம் -10-
அழகிய ஆயுதங்களால் புகழப் படுகின்ற எம்பெருமான் -என்றபடி –
அங்கன் அன்றிக்கே –
பிரசித்தமான வீரத்தை உடையவனும்
பராக்ரமங்களாலே மகிழச் செய்கின்றவனுமான ஸ்ரீ ராம பிரான் -என்கிறபடியே –
சத்ரோ பிரத்யாக வீரஸ்யரஞ்சனி யஸ்ய விக்ரமை
பஸ்யத யுத்த லுப்த அஹம் க்ருத கா புருஷ த்வயா -சுந்தர -105-6
என்கிறபடியே
கையும் ஆயுதமுமாய் பொருத்தம் இருந்தபடி என் என்று பகைவர்கள்
புகழும் படியைச் சொல்கிறது என்று எம்பெருமானார் அருளிச் செய்வர் –

போர் புக்கு அசுரரைப் பொன்றுவித்தான்-
ஆயுதம் தரித்தவனாய்
போரிலே புக்கு தீயோர்களை முடித்தான் –
பொன்றுவித்தான் -முடித்தான்

திகழும் மணி நெடு மாடம் நீடு திருப் புலியூர் வளமே-
ஒளி பொருந்திய மாணிக்கங்களை உடைய
ஓங்கின மாடங்களை உடைத்தாய்
கற்பகாலம் வரையிலும் அழியாததான
திருப் புலியூரிலே அழகைப் புகழும்
வளம் -அழகு –
பகைவர்கள் கிட்ட ஒண்ணாமைக்கு அவன் தான் வேண்டா –
அவ ஊரே அமையும் –
பிராட்டி ஸ்ரீ மிதிலையை விட்டு ஸ்ரீ ராகவன் வீட்டிலே என்று
திரு அயோத்யைப் புகழுமாறு போலே –
சமா த்வாதச தத்ர அஹீம் ராகவச்ய நிவேசதே
புஞ்ஞானா மானுஷான் போகான் சர்வகாம சம்ருத்திநீ -சுந்தர -33-17-
இவள் திரு நகரியை விட்டு திருப் புலியூர் புகழையே புகழா நின்றாள் -என்பாள் வளமே புகழும் -என்கிறாள் –
பகைவர்களால் வெல்ல முடியாத அயோதியை -என்கிற
பரமபதத்தை நினைத்து இருக்குமாறு போலே காணும்
இவள் இவ் ஊரை நினைத்து இருப்பது –
மாக வைகுந்தம் காண்பதற்கு என்மனம்
ஏகம் எண்ணும் இராப் பகல் இன்றியே –

திருவாய் மொழி -9-3-7–

எனபது அன்றோ இவருடைய பாசுரம் –

வீர வாசி கண்டு அணைக்கும் பிராட்டி வார்த்தை போலே பேசுகிறாள் –

அனன்யார்க சேஷத்வம் தெரிவிக்கும் திருவாய்மொழி –
அழகு
ஆபரணம் –
ஒப்பனை
வீரம் -ஆண் பிள்ளை தனம் –
குணம்
ஐஸ்வர்யம்
ஔதார்யம்
பிரணயிதவம்
ஆசாரம்
வேதார்த்த தத்வ ஞானம்
எட்டு விஷயம் எட்டு பாட்டுக்கு விஷயம் –
ரிஷிகளும் ஒப்பனை அழகாய் சொல்வார்களே -சாஷாத் மன்மத -சொல்வார்களே
கலவிக்கு சூசசகம் ஆகுமோ
வீரத்து தோற்றவள்
அணைத்து கொண்டாள் பிராட்டி பர்த்தாரம் -பரிகரிஷ்யதே –
திருப் புலியூர் வளமே இராப்பகல் புகழும் -முதல் கடைசி வரிகள் சேர்த்து
அவன் எப்படிப் பட்டவன் -மற்றவை சொல்லும் –
சக்ராயுதம் ஏந்தி –
தேஜஸ் மிக்கு –
அசுரரை போன்றுவித்தான்
சமுத்ரம் பற்றி எரியுமா போலே
கடல் வண்ணன்
ஹேதி ராஜன் -ஆயுதங்களுக்கு அரசன் –
அஷ்ட புஜம் -செம் பொன் இலங்கு –ஆழியோடு கேடகம்
வாளி அம்பு சிலை தண்டு சங்கு ஆலியொடு கேடகம்
பஞ்சாயுதம் கேடகம் புஷ்பம் -வில் தனியாக அம்பு தனியாக
ஒண் மலர் -எட்டு நினைவு கொள்ள
நடந்து சென்று அசுரர் முடித்தான்
பொருகின்ற நீர் உடைய கடல்
தீப்பற்றி எங்கும்திகழும் எரியோடு ஒப்ப -நடந்து –
புகழும் பொரு படை
அவனை ஸ்தோத்ரம் பண்ணும் திவ்ய ஆயுதங்கள் –
வீர பத்னி –
ஈடுபடும் பருவம் இன்றிக்கே –
வாய் புலத்தா நின்றாள்
ஒரு தடவை யாரோ சொல்லி கேட்டு சொல்ல வில்லை
புகழும் -நெஞ்சாலே நினைத்த அளவேயோ
வெட்கம் இல்லாமல் வாய் புலத்த
அலை மோதும் -பொறா நின்றுள்ள திரை –
நெருப்புடன் நடந்து செல்லுமா போலே
ஆயதங்கள் புகரும் திருமேனியும் இருக்கும்படி
புகழும் பொரு படை –
ரகு வம்சம் பிரமாணம் –
காளிதாசன் சொல்லும் பிரமாணம்
சக்கரவர்த்தி திருமகன் புகழ்ந்து
12 சர்க்கம் –
எம்பெருமான் திவ்ய ஆய்தம் சேதனம்
ஆழி எழ சங்கும் வில்லும் எழ -வெற்றி
உதிரத ஜெயா ச்யாம்
24000 படி ஆளவந்தார் -அருளியதாக பிள்ளான்
எதிரிகள் புகழும்படி பெருமாள் -கையும் ஆயுதம் எம்பெருமானார்
செழும் கதிர் ஆழி –
திகழும் மணி மாடம் –
ரத்னங்கள் இழைத்த மாடம் –
எதிரிகள் கிட்ட ஒண்ணாமைக்கு அவன் வேண்டா ஆயுதங்கள் வேண்டா மாடமே போதும்
பிராட்டி மிதிலை விட்டு அயோதியை புகழுமா போலே
இவர் திரு நகரி விட்டு திருப் புலியூரை
அயோதியை பரமபதம் போலே
மாக வைகுந்தம் -இராப் பகல் புகழும்

—————————————————————————————————————————————————————————————–

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -8-9-2-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

October 29, 2013

அவனுடைய ஆபரணங்களின்
அழகிலே அகப்பட்டாள் –
என்கிறார் –

————————————————————————————————————————————————————-

அன்னைமீரிதற்  கென் செய்கேன்
அணி மேருவின் மீதுலவும்
துன்னு சூழ் சுடர் நாயிறும்
அன்றியும் பல் சுடர்களும் போல்
மின்னு நீண் முடி யாரம்
பல்கலன் தானுடை யெம்பெருமான்
புன்னை பூம் பொழில் சூழ்
திருப் புலியூர் புகழும் இவளே

—————————————————————————————————————————————————————

அன்னைமீரிதற் கென் செய்கேன்
நீங்கள் கற்பித்திலீர் கோள்
நான் கற்பித்திலேன்
இதற்கு நான் என் செய்கேன் –

அணி மேருவின் மீதுலவும்துன்னு சூழ் சுடர் நாயிறும்-
அழகிதான மேருவின் மேலே சஞ்சரிக்கின்றவனுமாய் –
காண்கிற அளவு அன்றிக்கே
நெருங்கிச் சூழ்ந்த ஒளியை உடைய
வேறுபட்ட சிறப்பினை உடைய சூரியனும் –

அன்றியும் பல் சுடர்களும் போல் –
மற்றும் அப்படியே இருக்கிற நஷத்ரங்கள் முதலான
ஒளிப் பொருள்களும் போலே –

மின்னு நீண் முடி-
துன்னு சூழ் சுடர் நாயிறு -என்று சொன்ன திரு முடி –

யாரம் –
அம் சுடர் மதியம் பூண்டு -திருவாசிரியம் -1–என்கிறபடியே பூண்ட திருவாரம் –

பல்கலன்-
அல்லாத திவ்ய ஆபரணங்கள் –

தானுடை யெம்பெருமான்-
யெம்பெருமான் -ப்ரீதியின் வார்த்தை -என்றது
இத் தன்மைகள் பொய் ஆகாதபடி இருந்த என் நாயகன் -என்கிறாள் -என்றபடி –

புன்னை பூம் பொழில் சூழ்-
சோலை வாய்ப்பை அன்றோ இவள் சொல்லுகிறது -என்றது
சோலையில் கலந்தார் வார்த்தை யாய் அன்றோ
இது இருக்கிறது -என்றபடி –

திருப் புலியூர் புகழும் இவளே –
பிள்ளாய் -இவ் ஊர் வாசி எங்கே அறிந்தாள்
அவனுடைய ஆபரணங்களின் அழகைப் போன்று
அவ் ஊரில் சோலையிலும் அவ் ஊரிலும்
குமுழி நீர் உண்டாளாய்த் தோற்றுகிறது
இல்லையோ இவள் வார்த்தையாலே –

ஆபரண சோபையில் அகப்பாட்டாள் என்கிறாள் –
அன்னைமீர் இதற்க்கு என் செவென்
புகழும் இவளுக்கு
மேரு மலை மேல் சூர்யன் போலே திரு முடி
நட்ஷத்ரங்கள் போலே ஆரம்
அழகிய மேரு மலை -சஞ்சரியா நிற்கும்
நட்ஷத்ரங்கள் சேர்ந்து –
திருவாசிரியம் போலே
ஐஞ்சுடர் மதியம் பூண்டு
அழகிய புன்னை மரம் சூழ்ந்த பொழில்
சோலை வாய்ப்பை வாயால்
அங்கு கலந்ததால்
பிள்ளாய் இவ் ஊர் வாசி எங்கே அறிந்தாள்
ஆபரண சோபை
சொளையால்உஊருக்கும் சோபை
அழகில் முழுகி புகழ்கிறாள்

——————————————————————————————————————————————————————————-

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -8-9-1-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

October 29, 2013

கரு மாணிக்க மலை பிரவேசம் –
மேல் திருவாய் மொழியிலே முதல் இரண்டரை பாசுரங்களாலே
அவனுடைய அழகு சீலம் முதலானவைகளை அருளிச் செய்து –
அவற்றைப் போன்று சிறந்ததாய் –
அனன்யார்ஹமுமாய்-
இருக்கிற ஆத்தும ஸ்வரூபத்தை மற்றைப் பாசுரங்களாலே
அருளிச் செய்து இனியர் ஆனார் –
அந்த அடிமை இன்பத்தாலே ப்ரீதராய்
ப்ரீதியின் பரவசத்தாலே -அப்பன் திருவருள் மூழ்கினளே-
தாமான தன்மை அழிந்து
ஒரு பிராட்டி நிலையை அடைந்தவராய்
தம்முடைய நிலையை அன்யாபதேசத்தாலே பேசி இனியர் ஆகிறார் -இத் திருவாய் மொழியிலே –
ப்ரீதியில் அன்யாபதேசம் உள்ளது இத் திருவாய்மொழி ஒன்றுமே -என்று ஆழ்வான் நிர்வஹிப்பர்-

திருப் புலியூரிலே எம்பெருமானோடு இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து பிரிந்தால் ஒரு பிராட்டி –
அவனாலே கொள்ளப் பட்ட மனத்தினை உடையவளாய் இருக்கிறபடியை
உயிர் தோழி யானவள் கண்டு
இவள் வடிவில் வேறுபாட்டாலும் -புனை இழைகள் அணிவும் –
சொற்களின் வேறுபாட்டாலும் -அரு மாயன் பேர் அன்றி பேச்சிலள்-
புணர்ச்சி உண்டானமையை அறிந்தாள் –
இவற்றில் ஒன்றையும் அறியாதே
என்னுடைய தந்தையாரான ஜனக மகராஜர்
கணவனுடைய கல்விக்கு தகுந்த என் வயதைப் பார்த்து –
என்கிறபடியே –
பதி சம்யோக சுலபம் வயோ த்ருஷ்ட்வா ச மே பிதா
சிந்தார்ணவகத பாரம் நாசசாத ஆப்லவோ யதா – அயோத்யா -118-34-
தகுந்த யௌவனப் பருவம் உடையவள் என்னும் இவ்வளவே கொண்டு
தந்தை முதலியோர் சுயம் வரத்துக்கு ராஜ புத்ரர்கள் வருவது என்று நகரத்திலே
மண முரசு அறைவிக்க
அதனைக் கேட்ட தோழி யானவள் -பரதன் இராஜா -என்று அறைவித்த முரசொலி செவிப்பட்ட போது
ஸ்ரீ பரத ஆழ்வான் பட்டது எல்லாம் பட்டு
இம்முரசொலி பெண் பிள்ளை செவிப்படுமாகில்
மானிடர்வர்க்கு என்று பேச்சுப் படில்-நாச்சியார் திருமொழி -1-5-
வாழாத தன்மையளாய்
இருக்கிற இவள் உயிர் தரியாள்
ஏற்கவே தடுக்க வேண்டும்
அது செய்யும் இடத்தில் திருப் புலியூர் நாயனாரோடு புணர்ச்சி
உண்டானமையை அறிவிப்போம் ஆகில்
நம் காவற் சோர்வால் வந்ததாம் என்றாம்
அறிவியாது ஒழியில் இவள் வாழாள்
இனி இவ்வளவில் செய்வது என் என்று பார்த்தாள் –

அங்கனம் பார்த்தவள்
இவர்கள் தாமும் -இவளுக்கு வடிவிலே வேறுபாடு உண்டு
இதற்க்கு காரணம் யாதோ -என்று
விசாரியா நின்றார்கள்
நாமும் இவர்கள் தம்மோடு ஆராய்வதிலே இழிந்து
அவ்வழியாலே அறிந்தோமாய் இதனை விலக்க வேண்டும்
என்று அறுதி இட்டுக் கொண்டு
இவள் வடிவு இருந்தபடியால் இவளுக்கு
திருப் புலியூர் நாயனாரோடு புணர்ச்சி உண்டாயிற்று போலே இருந்தது –
அவனுடைய குணங்களையும் செயல்களையுமே வாய் புலற்றா நின்றாள்
நீங்கள் செய்கிறவற்றைத் தவிருங்கோள் -என்று
அறத்தோடு நிற்க எண்ணி னாளாய்
இது தர்மம் அன்று -என்ன –
ஆனால் நீ சொல்லுகிற திருப் புலியூர் நாயனாருக்கு இவளுக்கு தகுதியான சிறப்பு உண்டாக வேண்டும்
ஒப்பனையும் ஆண்மையும் குணமும் செல்வமும் கொடையும் காதலும் உண்டாக வேண்டும் –
நல் ஒழுக்கம் உடையனாக வேண்டும்
வேதார்த்த தத்வ ஞானம் உடையனாக வேண்டும் –
இவை எல்லாம் உளவோ -என்ன
கூறுகிறாள் மேல் –
நீங்கள் கேட்கிற அளவு அன்று –
இவை எல்லாம் குறைவு அற்றவன்
இவை ஒன்றும் இல்லையாகிலும் இவள் தான்
திருப் புலியூர் நாயனாருக்கே உரியவள் ஆனாள்
நீங்கள் செய்கிற இவற்றைத் தவிருமின் -என்று அதனை விலக்குகிறாள்-
இது மணவிலக்கு -எனபது ஒரு கிளவித் துறை ஆகும் –
திரு மந்த்ரத்திலே
தனக்கும் பிறர்க்குமாய் இருக்கும் இருப்பைக் கழித்து
அவனுக்கே அடிமை யாதல்
என்னும் தன்மையை சொல்லக் கடவது அன்றோ –
அதனை இங்குச் சொல்லுகிறது
மேல் திருவாய் மொழியில் அவனுக்கே அடிமை யாக இருத்தல் என்னும் தன்மையைச் சொல்லிற்று
இத் திருவாய் மொழியிலே
பிறர்க்கு உரியனாய் இருத்தலும்
தனக்குத் தானே உரியனாய் இருத்தலும்
ஆகிய இரண்டும் பேறு அன்று -என்கிறது –
ஒரு கன்னி யாகில் ஒருவனுக்கே யாய் இருக்கையும்
ஒருவனுக்கே ஆனால் பிறர்க்கு உரியள் அல்லளாய் இருக்கையும்
அன்றோ ஸ்வரூபம்

ஜீவாத்மா எம்பெருமானுக்கே உரியது
அனந்யார்கம் என்று காட்ட வேண்டுமே
உகாரார்தம் -சொல்ல –
பரமாத்மாவுக்கு மட்டுமே
அணிய சேஷத்வம் கழிய வேண்டுமே
இதுவும் ஜீவாத்மா ஸ்வரூபம்
பயிலும் -ஏறாளும் -கண்கள் சிவந்து -கரு மாணிக்கம் -நாயனார் காட்டி அருளுகிறார்
பாகவதர்களுக்கு அடிமை பயிலும் சுடர் ஒழி காட்டும்
நெடுமாற்கு அடிமை -எம்மா ஒழிவில் வேய் மறு தோள்-நான்கும் பல ஸ்வரூபம் காட்டும்

தோழி வார்த்தையால்
மண விலக்கு –
அடையாளம் பார்த்தால் –
அப்பொழுது கண்டது போலே ‘
தீர்ப்பாரை வெறி ஆடல்
துவளில் மா மணி மாடம் -நீர் உமக்கு ஆசை இல்லை விடுமினோ
அனன்யார்க சேஷத்வம் மூன்றும் தோழி பாசுரம்
எம்பெருமானுக்கே அற்று தீர்ந்த இவளை
சம்பந்தத்தில் உணர்த்தி -தோழி
உபாய -தாய் பாசுரம் –
பலன்களில் பதற்றம் -தலை மகள் பாசுரம்
அன்னை மீர் -இடம் தலை மகள் பற்றி தோழி வார்த்தை -இதில் –
சௌந்தர்ய சீலாதிகளை அனுசந்தித்து –
அவற்றோபாதி விலஷனமாய் அனந்யார்கமாய் உள்ள ஆத்மாவை
சேஷத்வ ரசத்தால் பிரீதி பாரவச்யம்
தாமான தசை இல்லாமல்
அன்யாபதேசம் வேற்று வாயால் தோழி பாசுரம்
ப்ரீதியில் அன்யாபதேசம் இது ஒன்றே -ஆழ்வான் பணிக்கும் –
திருப் புலியூரில் -குட்ட நாடு -நகரம் மயிலைத் திரு வல்லிக் கேணி போலே
அபஹரித்த சிந்தையாய் இருக்க
வடிவிலும் பேச்சிலும் வேறுபாடு
கலந்த பின்பு
வஸ்த்ரம் கலைந்து -கடைசி பாசுரம்
அத்தை பாட்டி ஒன்றை வயசில் கல்யாணம் -சுவாமி
ஆண்டாள் அம்மாள் பகவத் விஷயம் சொல்லும் அதிகாரி
அப்பா பெண்ணை மடியில் வைத்து தாரை வார்க்க –
முரசு -காதில் விழுந்தால் –
வாழகில்லேன் மானிடர்க்கு என்று பேச்சு பதில்
பரத ஆழ்வான் ராஜன் -ஒலி கேட்டு -பட்டது பட்ட
முரசு அறிவிக்க நினைக்க
பேச்சு படில்
லோகத்தில் -யாரோ யார் இடம் பேசினாலும்
பேச்சு எங்கோ யாரோ பேசினாலும் பிராண ஹானி
ஏற்கவே பரிகரிக்க வேண்டும்
காவல் சோர்வு -வந்தது பழி வருமே
அறிவியாது ஒளியிளிவலை இழக்க நேரிடும்
வடிவில் வேறுபாடு -காட்டி விசாரியா நிற்க –
அவ வழியால் புதிதாக கண்டது போலே
திருப் புலியூர் நாயனார் உடன் சம்ச்லேஷம் போலே தோன்றுகிறது –
குணம் செஷ்டிதங்களையே பேசி
மாயப் பிரான் -அவன் திரு நாமம்
மனம் பரிகொடுத்து -வேறு ஒருவன் இடம் பேசுவது தர்மம் இல்லை
அவனுக்கு -வை லஷண்யம்
ஒப்பனையும்
குணங்களும்
ஐஸ்வர்யமும்
சமயக் ஆச்சாரமும் உள்ளவனாக
வேதார்த்த தத்வ ஞானம்
குறைவற்ற விஷயம்
இல்லா விடிலும் அவனையே கொள்ள வேண்டும்
அனன்யார்கை ஆனாள்
மண விலக்கு துறை –
திரு மந்த்ரத்தில் –
தனக்கும் பிறர்க்கும் உரியவன் அன்று
எம்பெருமானுக்கே உரியவன்
கீழில் திருவாய் மொழி எம்பெருமானுக்கு சேஷத்வம்
ஸு ச்வாதந்த்ரம் அந்ய சேஷத்வம் இல்லாமையும்
கன்னிகை ஒருவனுக்கே பர்த்தாவுக்கே போலே
பூர்வகமாக அனன்யார்க சேஷத்வம்

——————————————————————————————————————————————————————————————–

அவனுடைய திவ்ய அவயவங்களின் அழகினைக் கண்டு
மற்று ஓன்று அறியாதபடி ஈடுபட்டாள்-
என்கிறாள் –
கரு மாணிக்கக் குன்றத்து தாமரை போல் திரு மார்பு
கால் கண் கை செவ்வாய் உந்தியான் -என்று
இருத்தும் வியந்து -திருவாய் மொழியில் அனுபவித்த
அதனை தோழி பேச்சிலே பேசி இனியர் ஆகிறார் –

—————————————————————————————————————————————————————————

கருமாணிக்க மலை மேல்
மணித் தடந்தாமரைக் காடுகள் போல்
திரு மார்பு வாய் கண் கை
உந்தி காலுடை யாடைகள் செய்ய பிரான்
திருமால் எம்மான் செழு நீர் வயல்
குட்ட நாட்டுத் திருப் புலியூர்
அருமாயன் பேரன்றிப் பேச்சிலள்
அன்னைமீர் இதற்கு என் செய்கேனோ

——————————————————————————————————————————————————————————-

கருமாணிக்க மலை மேல் –
அனுபவிப்பார் நெஞ்சு குளிரும்படி கருமையை உடைத்தாய்
பிரகாசத்தால் மிக்கு இருப்பதாய்

தனக்கு மேல் ஒன்றும் இல்லாத இனிமையை உடையதாய்
இருப்பது ஒரு மலை மேலே
அன்றிக்கே
கரிய நிறத்தோடு கூடிய இருள் நீக்குவது ஒரு மலை -என்றுமாம்
இல் பொருள் உவமை இருக்கிறபடி –

மணித் தடந்தாமரைக் காடுகள் போல்-
இப்படி இருப்பது ஒரு மலை மேலே –
தெளிந்தது ஒரு தடாகமாய்
அது காடுபடத் தாமரை பூத்தாப் போலே ஆயிற்று
திருமேனியும்
அழகிய உறுப்புகளும் இருப்பது –

செய்ய திரு மார்பு –
பற்றாசான பெரிய பிராட்டியார் எழுந்து அருளி இருக்கும் திரு மார்பு –
திரு மார்புக்கு சிவப்பு -பிராட்டி எழுது அருளி இருப்பதனாலே –

வாய் –
அவள் வழியாலே உறவு செய்தாருக்கு அனுகூலமான வார்த்தைகளை பேசுகிற திருப்பவளம் –

கண் –
இன் சொற்கள் சொல்லப் புக்கு
இனியனான தன்னைக் கண்ட காட்சியாலே தடுமாறினால்
குறையும் தலைக் கட்டிக் கொடுக்கும் கண் –

கை-
நோக்குக்கு தோற்றாரை அணைக்கும் கை –

உந்தி –
உத்தேச்யமான நிலத்தில் விழா நின்றால் நடுவே கால் கட்ட வல்ல திரு வுந்தி –
நடுவே அமுக்கும் சுழி அன்றோ –

கால் –
இவை எல்லாவற்றுக்கும் தோற்று விழும் திருவடிகள் –
உடை யாடைகள் செய்ய –
செய்ய உடை ஆடைகள் –
அங்கே கிடந்தது அனுபவிக்கும் திருப் பீதாம்பரம் –
கமல பாதம் என்ன -சிவந்த ஆடை -என்னக் கடவது இ றே-

பிரான்-
இவ் உறுப்புகளின் உடைய அழகு முழுவதும் பக்தர்களுக்காக
என்று இருக்குமவன் –
நதே ரூபம் நச ஆகார ந ஆயுதானி ந ச ஆஸ்பதம்
ததாபி புருஷகாரோ பக்தாநாம் த்வம் பிரகாசசே -ஜிதந்தே -5

திருமால் –
அழகே அன்றிக்கே
இவளுக்கு ஈடான மேன்மையும் உண்டு –
அப்ரமேயம் ஹி தத் தேஜ யஸ்ய சா ஜனகாத்மஜா
நத்வம் சமர்த ஸ்தாம் ஹர்த்தும் ராம சரபாஸ்ரயம் வனே -ஆரண்ய -37-18-
யாவர் ஒருவருக்கு அந்த ஜனக குலத்தில் பிறந்த பிராட்டி
மனைவி யாக இருக்கிறாளோ
அந்த பெருமாளுடைய பராக்கிரமம் அளவிட்டு அறியக் கூடாததாய் இருக்கிறது -என்கிறபடியே –

எம்மான் –
இவளை அவனுக்கு கொடுங்கோள் என்றால் –
இவளுக்கு அவன் தரம்
போருமோ -என்ன வேண்டாதபடி இருப்பதே என் நாயகன் -என்கிறாள் –

செழு நீர் வயல்-
அழகிய நிறைந்த தண்ணீரை உடைத்தான
வயல் சூழ்ந்த –

குட்ட நாட்டுத் திருப் புலியூர்-
குட்ட நாடு -என்று அந்நாட்டுக்கு பெயர் –

அருமாயன் –
பெறுதற்கு அரிய
ஆச்சர்யத்தை உடையவன் –

பேரன்றிப் பேச்சிலள்-
பரம் வியூகம் விபவம் என்னும் இவைகட்கு உரிய
திரு நாமங்களைச் சொல்லுகின்றிலள்
அன்றிக்கே
அல்லாத உகந்து அருளின திவ்ய தேசங்களின்
நிற்கிறவர்கள் பெயர்களும் சொல்லுகின்றிலள்
என்னுதல் –

அன்னைமீர் இதற்கு என் செய்கேனோ-
அவர்களோடு ஒக்க தானும் இப்போது அறிந்து சொல்லுகிறாள்
என்னும் இடம் தோற்ற
இதற்கு என் செய்கேனோ–என்கிறாள் –

அரு மாயன் பேர் அன்றி பேச்சு இலள்
கரு மாணிக்க மலை மேல்
மாணிக்கம் சிகப்பு தானே இங்கேயோ கறுப்பாம்
மலை வேற
தாமரை காடு போலே அவயவங்கள்
அனுபவிப்பார் நெஞ்சு குளிரும்படி –
கறுத்தே இருள் நீக்கும் மலை அகடிகட நா சமர்த்தன்
இல் பொருள் உவமை
திருமேனி -கரு மாணிக்க மலை
திரு மார்பு பிராட்டி -சந்நிதானத்தால் சிவந்து
செய்யாள் மையார் கரும் கண்ணி
வாய்
அனுகூல பாஷனம் செய்யும்
கண் -தடுமாறினால் குறையும்தளைக்கட்டி கொடுக்கும்
கை அணைக்கும்
உந்தி -உத்தேச்ய பூமியில் விழு வாராய் நடுவே அமுக்கும் சுழி
விழ திருவடி
செய்ய ஆடை
பிரான்
அழகை அனுபவிக்க பக்தர் களுக்காகவே
அழகே அன்றிக்கே திருமால்
எல்லாம் உண்டு
பிராட்டிக்கு ஈடான மேன்மை
பராங்குச நாயகிக்கு ஈடான
எம்மான் –
என் ஆயன்
குட்ட நட்டு -திருப் புலியூர்
பேச்சு அன்றி பேச்சு இல்லை
பர விபவ வியூக மற்ற அர்ச்சை இல்லாமல்
அரு மாயன் பேர் அன்றி
அன்னைமீர் இதற்க்கு என் செய்கின்றேனோ
இப்பொழுது அறிந்து சொல்வதாக சொல்கிறாள்

——————————————————————————————————————————————————————————–

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -8-8-11-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

October 29, 2013

நிகமத்தில்
இப்பத்தும் கற்றாரை
-தம்மை அங்கீகரித்தாப் போலே அங்கீகரித்து
தன் திருவடிகளின் கீழே வைத்துக் கொள்வான் –
என்கிறார் –

———————————————————————————————————————————-

தெருளும் மருளும் மாய்த்துத்
தன் திருந்து செம் பொற் கழல் அடிக் கீழ்
அருளி இருத்தும் அம்மானாம்
அயனாம் சிவனாம் திருமாலால்
அருளப் பட்ட சடகோபன்
ஓராயிரத்துள் இப்பத்தால்
அருளி யடிக் கீழ் இருத்தும்
நம் அண்ணல் கரு மாணிக்கமே

—————————————————————————————————————————————————-

தெருளும் மருளும் மாய்த்துத்
ப்ரஹ்மாவின் ராஜசம் அடியாக வந்த
குத்ருஷ்டி ஞானமானதும் –
சிவனுடைய தாமச ஞானம் அடியாக வந்த ஆகமம் முதலான
புற ஞானம் ஆகிற அஞ்ஞானமும் மாய்த்து –
அன்றிக்கே
தம்முடைய அனுபவத்துக்கு விரோதியான
இவ்வுலக விஷயமான ஞான அஞ்ஞானங்களை வாசனையோடு போக்கி -என்னுதல்
அந்யதா ஞானம் -பிறர் தெய்வங்கட்கு தன்னை அடிமை என்று நினைத்தல்
விபரீத ஞானம் -தனத்து தானே உரியன் என்றும் கைவல்ய அனுபவ புத்தியையும் -இவற்றைப் போக்கி என்னுதல்

தன் திருந்து செம் பொற் கழல் அடிக் கீழ் –
அடியார்களை வேறு ஒருவர் காலில் குனிய விடாததாய் –
விரும்பத் தக்கதாய் –
வீரக் கழலை உடைத்தான
திருவடிக் கீழ்
இப்போதைய வீரக் கழல்
பிராட்டி முன்னாக அடைந்தாரை அவன் கையிலும் பிறர் கையிலும் காட்டிக் கொடாத வீரக் கழல் –

அருளி இருத்தும் –
கேவல கிருபையாலே இருத்தும் –

அம்மானாம் அயனாம் சிவனாம் திருமாலால் –
பிரமன் சிவன் முதலிய எல்லா ஆத்துமாக்களுக்கும் நிர்வாஹகனாய்
சர்வேஸ்வரனான
திருமகள் கேள்வனாலே-

அருளப் பட்ட சடகோபன் –
மயர்வற மதிநலம் அருளினான் -என்றபடியே
அருளுக்கு பாத்ரமான ஆழ்வார் –
இந்த அருளுக்கு வாய்த்தலை –பிறப்பிடம் -பிராட்டி ஆதலால்
திருமாலால் -என்கிறார் –

ஓராயிரத்துள் இப்பத்தால் அருளி யடிக் கீழ் இருத்தும் நம் அண்ணல் கரு மாணிக்கமே –
ஓராயிரத்துள் இப்பத்தால்-
நம் அண்ணல் கரு மாணிக்கமே –
அருளி யடிக் கீழ் இருத்தும்-
எல்லா பொருள்கட்கும் நிர்வாஹகனாய்
விரும்பத் தக்க வடிவு அழகையும் குணங்களையும் -முடிந்து ஆளும் படியும் -உடையவனுமான
சர்வேஸ்வரன் தானே அருள் செய்து
தன் திருவடிக் கீழே சேர்த்துக் கொள்ளும் –
இத் திருவாய் மொழி கற்றார்க்கு தாம் பெற்ற பேறு என்கிறார் –

நிகமத்தில்
தம்மைப் போலே விஷயீ கரித்து
தன திருவடிகளில் சேர்த்து கொள்வான்
என்கிறார்
அண்ணல் கரு மாணிக்கம் அருளி அடிக் கீழ் இருத்தும்
இப்பத்தால் –
அயனாம் சிவனாம் திருமால்
அந்தர்யாமியாயும் தானாகவும் இருந்து
குத்ருஷ்டி -ராஜச
தாமச -ருத்ரன் -தாமச ஆகமம்
சு அனுபவ விரோதிகளை வாசனை உடன் போக்கி
தன திருந்து –
வேறு ஒருவர் காலில் விழ ஒண்ணாத
திருவடிகள் விடாத திண் கழல் -அவனும் அவளும் விட்டாலும்
வீரக் கழல் –
தன கையிலும் -நிர்ரகம் இல்லாமல்
பிறர் கையிலும் காட்டிக் கொடுக்காமல் இருக்கும் தன்மைக்கு அணிந்த வீரக் கழல்
அருளை புரிந்து இருத்தும் -பிராபக பிராப்யம்
அம்மான்
நிர்வாஹகன் அனைத்துக்கும் –

அருள் தான் சாதனம்
பத்தும் அனுக்ரகம் தோண்டுவதாக இருக்கும்
தான் பெற்ற பேறு கிட்டும்

—————————————————————————————————————————————————————————————

கண் நிறைய வந்து கலந்த மால் இக்கலவி
திண்ணிலை யாவேணும் எனச் சிந்தித்து தண்ணிது எனும்
ஆர் உயிரின் ஏற்றம் அது காட்ட வாய்ந்துரைத்தான்
காரிமாறன் தன் கருத்து–78

சாரம்
கண் நிறைய வந்து கலந்த மால்
சிறியேன் உடைச் சிந்தை
அகல கூடாது
திண்ணியதாக இருக்க வேண்டும் என்று
சிந்தித்து
தண்ணிது என்னும் ஆர் உயிர்
ஏற்றம் அது காட்ட
அதை ஆய்ந்து உரைத்தான்
காரி மாறன் –

——————————————————————————————————————————————————————————

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -8-8-10-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

October 29, 2013

சாங்க்யம் முதலான குத்ருஷ்டி மதங்களில்
நான் புகாதபடி
தானே யாதொரு பயனையும் கருதாது என்னை அங்கீகரித்து
நினைவுக்கு வாய்த்தலையான மனத்திலே நித்ய வாஸம்
செய்கையாலே -என்னுடைய எல்லா துக்கங்களும் போயின –
என்கிறார் –

——————————————————————————————————————————————————————-

உளரும் இல்லை அல்லராய்
உளராய் யில்லை யாகியே
உளர் எம் ஒருவர் அவர் வந்து
என் உள்ளத்துள்ளே யுறைகின்றார்
வளரும் பிறையும் தேய்பிறையும் போலே
அசைவும் ஆக்கமும்
வளருஞ்சுடரும் இருளும் போல்
தெருளும் மருளும் மாய்த்தோமே

———————————————————————————————————————————————————————-

உளரும் இல்லை அல்லராய் –
இல்லை அல்லராய் உளரும்
ஈஸ்வரன் என்பான் ஒருவன் உளன்
இல்லை என்ன ஒண்ணாதே இருக்கிறான் என்ற மாத்ரமாய் இருப்பான் -எனபது
சேஸ்வர சாங்க்ய மதம் என்றது
விதி விலக்குகளை செய்வதற்கு ஆற்றல் இன்றிக்கே இருக்கும் கணவனைப் போன்று
ஈஸ்வரன் என்பான் உலகத்தில் நியமிப்பதில் ஆற்றல் இல்லாதவனாகி
உளன் என்ற மாத்ரமேயாய் இருப்பான் -என்றபடி –

உளராய் யில்லை யாகியே –
இல்லை யாகியே உளராய் –
இல்லையாகியே காண் அவனுடைய உண்மை -என்பான் நிரீஸ்வர சாங்க்யன் –
அந்த மதங்களை மறுக்கிறார் –
அன்றிக்கே
அடியர் அடியர் அல்லாதவர் விஷயமாக்கி
இல்லை அல்லராய் உளராய் இருப்பார் அடியார்க்கு
இல்லை யாகியே உளராய் இருப்பார் அடியார் அல்லாதார்க்கு -என்னுதல் –

உளர் எம் ஒருவர் –
குணம் உலகம் முதலியவைகளால் நிறைந்தவராய் கொண்டு உளராய்
அவற்றைக் காட்டி என்னை அங்கீகரித்த ஒப்பற்றவர் –

அவர் வந்து என் உள்ளத்துள்ளே யுறைகின்றார் –
குணங்களால் மேம்பட்டவரான அவர்
என்னளவும் வந்து
மயர்வற மதிநலம் அருளி
தாம் திருத்தின நெஞ்சிலே
நித்யவாசம் செய்யா நின்றார் –

வளரும் பிறையும் தேய்பிறையும் போலே அசைவும் ஆக்கமும் -வளருஞ்சுடரும் இருளும் போல் தெருளும் மருளும் மாய்த்தோமே
வளரும் பிறை போல் ஆக்கமும் -தேய் பிறை போல் அசைவும்
வளரும் சுடர் போல் தெருளும் இருளும் போல் மருளும் மாய்த்தோம் –
விளக்கின் முன்னர் இருள் நில்லாததுபோன்று
அவர் என் மனத்தில் நித்ய வாஸம் செய்கையாலே
சந்த்ரனுக்கு வருதல் போன்று மாறி மாறி வரக் கூடியதான
வளர்ச்சியும் குறைவும்
சூரியனும் இருளும் மாறி மாறி வருதல் போன்று
மாறி மாறி வரக் கூடியனவான
ஞான அஞ்ஞானங்களும் மாய்க்கப் பெற்றோம்-

சாங்க்ய மதம்
நிரீச்வரன் மூல பிரகிருதி போதும்
செஸ்வர சாங்க்ய -சக்தி உள்ள ஈஸ்வரன் இல்லை வெறும் பார்த்து -சாஷி பூதன் மாதரம்
அந்வயம் எதுவும் இன்றி வேடிக்கை பார்க்கிறான் என்பான் –
இல்லை அல்லார் உளர்
இல்லை சொல்ல வில்லை இருக்கார் சும்மா இருக்கார்
உளராய் இல்லையாகி உளர் –
இப்படிப் பட்ட நிலைக்கு நான் போகாமல் அருளி
தானே வந்து
அஞ்ஞானம் போக்கி
அசைவு தேய்கிறது ஆக்கமும் வளர்கிறது
இத்தை மாய்த்து
பரி பூர்ண ஞானம் அருளினான்
அஸ்தி மாத்ரமாய் -பார்த்தா -விதி நிஷேதம் -அதிகாரி அவள் இடம் –
சிதம்பரமா -நடராஜர் -பிரதானம் -காலி கட்டி
மதுரை -சுந்தரேசர் சந்நிதி போவாரே இல்லை மீனாட்சி அதிகாரம்
உபய பிரதான சம்ப்ரதாயம் நமக்கு –
அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மாபா
திருச் சானூர் பின் கோயில்
தனிக் கோயில் திருமலை வைக்க ஏற்பட
வான மா மலை சுவாமி -சோபனம் கூட்டிப் போக சொல்ல
600 வருஷம் முன்பு
அந்த திருமேனி பத்மாவதி தாயார்
அப்பா ஸ்தானம்
அப்பன் –
லஷ்மி தாத்தாச்சார்யர் லஷ்மி தமப்பானார்
அப்பலாச்சார் அப்பன் ஆச்சார்யர்
அனந்தாழ்வான் அப்பன்
அப்பன் சப்தம் திருமலை ஜீயர்
திருமலை அப்பன்
முதல் ஜீயர் அனந்தாழ்வான் சிஷ்யர்
பெயருக்கு தலைவர் பார்த்தா போலே
கிண்டல் வார்த்தை
சாங்க்ய புருஷன் தானே
அதிகாரம் இல்லை
தலைவர் பெயர்
விதிக்கவோ நிஷேதிக்கவோ அதிகாரம் இல்லை வெறும் அஸ்தி மாத்ரம்-சேஷ்வர சாங்க்ய
ஆஸ்ரித அநாஸ்ரித விஷயம் ஆக்கி
உளர்
இல்லாதவன் இல்லை
அநாஸ்ரிதர்க்கு இல்லை சப்தத்தால் உளன் –
ஒருவர்
அத்வதீயர்
மயர்வற மதி நலம் அருளி
திருத்திய மனத்தில்
வைத்தது அன்றி என்னுள் புகுந்தான்
தீப சன்னதியில் அந்தகாரம் நில்லாதது போலே
சந்தரன் விருத்தி சாயம் இல்லை
சந்தரன் -மதி
ஞானம்
ஞான சுருக்கம்
அமர கோஷம் தெரியாமல் மரன் மரம் போலே இருப்பான்
சந்தரன் ஞானகாரகன்
அம்மாவாசை பௌர்ணமி -பைத்தியம் முதிருமே
ஆதித்யன் சந்நிதியில் சந்தரன் தெரியாதது போலே
அவன் அருளால் அஞ்ஞானம் மாய்க்கப் பெற்றேன்

———————————————————————————————————————————————————————————————————————

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -8-8-9-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

October 29, 2013

அந்திம ஸ்மிருதியிலே ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும்
பேதம் கூறப்படவாறே
இந்த பேதம் உண்மை அன்று
தத்வ ஞானம் பிறந்த ஆத்மாவும் ப்ரஹ்மமும் ஓன்று -என்று கொண்டு
எப்பொழுதும் பிறவியிலே உழன்று திரிகிற ஆத்மாவை ப்ரஹ்மமாகச் சொல்லுகிற
மாயாவாதிகளை இகழ்கிறார்

————————————————————————————————————————————————————————————————-

கூடிற்றாகில் நல் உறைப்பு
கூடாமையைக் கூடினால்
ஆடல் பறவை யுயர் கொடி
எம்மாயனாவாத துவதுவே
வீடைப் பண்ணி யொரு பரிசே
எதிர்வும் நிகழ்வும் கழிவுமாய்
ஓடித் திரியும் யோகிகளும்
உளரும் இல்லை அல்லரே

————————————————————————————————————————————————-

கூடிற்றாகில் நல் உறைப்பு –
முன் கூறியதனையே மீண்டும் கூறுகிறார் –

கூடாமையைக் கூடினால் –
முயல் கொம்பு ஆதல் –
ஆகாயத் தாமரை ஆதல் –
மலடி மகன் ஆதல்
பொருந்தாதன உலகில் இருப்பனவாய் பெசப்ப்படுமாக்கில்-

ஆடல் பறவை யுயர் கொடி எம்மாயனாவது-
சர்வேஸ்வரன் உடைய வாகனம் என்னும் உவகையின் மிகுதியாலே
ஆடா நின்றுள்ள பெரிய திருவடியை கொடியாக உடையவனாய் –
ஆச்சர்யமான குணங்களையும் செயல்களையும் உடையவனாய்
பெரிய திருவடி திருத் தோளிலே பின்பும்
பிறகு வாளியுமாய் -பின்புறம் சாத்துகின்ற ஆபரண விசேடம் –
சம்சாரியாக இவ்வாத்மா இருப்பது –

அது அதுவே –
அந்த ஆத்மவஸ்து அந்த ஆத்மவஸ்துவே
ஒரு பொருள் வேறு பொருள் ஆகாதே அன்றோ –
நித்ய சூரிகளுக்கும் அவ்வருகாக
இச் சம்சாரத்தில் உழல்கின்ற ஆத்மாக்களை சொல்லுவாரும் உளரோ -என்ன –
வீடைப் பண்ணி யொரு பரிசே
ஒரு பரிசே வீடைப் பண்ணி –
சாஸ்த்ரங்களின் மூலமாக அன்றிக்கே
அஞ்ஞானம் கழிதலே மோஷம் என்று
தம்முடைய அறிவாலே ஒன்றைக் கட்டி –

எதிர்வும் நிகழ்வும் கழிவுமாய் –
இறந்த காலம் எதிர்காலம் நிகழ காலம் என்னும் மூன்று காலங்களிலும் உளராய் –

ஓடித் திரியும் யோகிகளும் உளரும் –
பிரயோஜனம் இல்லாமலே தட்டித் திரியும்
மகா யோகிகளும் உளர் –

இல்லை அல்லரே –
இல்லாமை இல்லை –
காலம் அநாதி –
செய்து வைக்கும் பாபங்களுக்கும் எல்லை இல்லை –
ஆனபின்பு இப்படி இருப்பார் மகா புருஷர்கள் சிலர் உண்டாகக் கூடாதோ
இவ்வுலகத்தில் கூடாதது உண்டோ -என்கிறார் –

மாயாவாதிகளை ஷேபிக்கிறார் இதில்
பிரகாரம் தான்
ஜீவாத்மாவே பரமாத்மா இல்லையே-

கதிர் ஆயிரம் இரவி போன்ற தேஜஸ் அனுபவித்து இருக்க
முன் ஆத்மா கண்ணில் பட வில்லை
ஸ்பஷ்டமாக காட்டிக் கொடுக்கிறான்
அடியேன் உள்ளான் -சேஷத்வம் ஸ்வரூபம் அறிந்து இருந்தும்
திருக் கோஷ்டியூர் நம்பி வாயால் விஷயம் பெறவும்
பிரமாணம் –
யானே நீ என் உடைமையும் நீ -முன்பே அருளி –
அந்திம ஸ்ம்ருதி கண்டிப்பாக வேணும்
ஜீவ பர பேதம் பிரச்துதம் ஆனவாறே
மாயாவாதிகளை செபிக்கிறார் அத்வைதி -பெயர் சொல்லாம்மல்
விசிஷ்டாத்வைதம் -சப்தம் சுத்த பிரகாசர் காலத்தில்
விசிஷ்ட ஐக்கியம் பெயர் முன்பு உண்டு
ஸ்ரீ சம்ப்ரதாயம் ராமானுஜ தர்சனம் பெயர்கள் முன்பே உண்டு
மாயாவாதம் -மாயை மற்று எல்லாம்
பௌத்தன் எல்லாம் மாயம் -பிரம்மமும் மாயம் என்பான்
பிரசன்னா பௌத்தன் இவர் என்பர்
அவனை கண்டிக்கிறார் –
முயல் கொம்பு கூடினால் -இதுவும் கூடும்
ககனாரவிந்தம் ஆகாசத் தாமாரை போலே
மலடி மகன் போலே
இவ்வளவு ஸ்பஷ்டமாக இருந்தும் இப்படி சொல்வார்கள் உண்டே –
கூடிற்றாகில் நல் உறைப்பு
கூடாமையை கூடினால்
நடக்காத விஷயம் நடந்தால்
மாயனாவது -அப்படி சொல்லும் பொழுதும் பர பரமம்
ஆடல் பறவை உயர்ந்த
கொடியாக வாகனமாக உயர்த்த
அகில ஹேய பிரத்யநீக –இத்யாதி சொல்லியே சொல்வார்
அவர்கள் மொட்டை அடித்து கொள்வது போலே பிரமத்துக்கும் மொட்டை சூன்ய பரமம்
இவர் என் மாயன் -இப்படி இருக்க அப்படி சொல்வாரும் உண்டே
அது அதுவே -சித்தாந்தம் –
உளர்-இல்லை அல்லர் -இல்லாமல் போகவில்லையே
ஒரு விதமாக வீடை பண்ணி
கல்பித்துக் கொண்டு
ஓடித் திரியும் யோகிகள் உண்டே
இல்லாமல் போக வில்லை –
கூடாமையைக் கூடினால் –
ஜீவாத்மா வேற தான்

 

ஆடா நின்றுள்ள -வாகனம் பெருமை கொண்டு ஆட –
பின்பும் பிறகுவாடி-
முன்னிலும் பின் அழகிய சேவை –
சம்சார சேதனன் -ஆக முடியுமா
எப்படி சொல்கிறார்கள்
இப்படி பெரிய திருவடி வாகனத்தில் திவ்ய மங்கள விக்ரகத்துடன் -உள்ளவன்
தம்மையே ஒக்க அருள் செய்வான் -நமக்கும்
ஜகத் காரண வர்ஜம் உண்டே
தம்மையே ஒக்க -அது அதுவே –
நித்ய சூரிகளுக்கு மேலே அவன் இருக்க –
ஒரு பரிசே வகையாக வீட்டால்
சுய புத்தியாலே சொல்லி
அவித்யையால் சம்சாரம் என்பர்
ஞான ஸ்வரூபம் பிரமத்துக்கே அஞ்ஞானம் என்பர்
இருந்தார் மட்டும் இல்லை
முக்காலத்திலும்இப்படிப் பட்டவர்கள் உண்டே
சங்கர பாஸ்கர -இருந்து போக்கினார்
இவர்கள் மட்டும் உள்ளார்கள் ஆழ்வார் மங்களாசாசனம் செய்து இருப்பதால்
எதிர்வும் நிகழ்வும் கழிவு இருப்பார் –
எதிரி இருந்தால் தான் உத்சாகம் நமக்கு
ஓடித் திரியும் யோகிகள் -ஆழ்வாருக்கு நாம் சொல்லுவது போலே
பிரயோஜனம் இன்றி இவர்கள் -மயர்வற மதி நலம் அருளப் பெறாத
உளர்
இல்லாமை இல்லை –
இப்படி மகா புருஷர்கள் உண்டே –

————————————————————————————————————————————————————————————

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.