திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -8-9-5-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

ஆபத்துக்கு துணையாதல் மாத்ரம் போருமோ –
இவளுக்கு தக்க செல்வமும் அவனுக்கு உண்டாக வேணுமே -என்ன –
அதுவும் உண்டு -என்கிறார் –

—————————————————————————————————————————————————————————

புனையிழைகள் அணிவும்
ஆடையுடையும் புது கணிப்பும்
நினையும் நீர்மையதன்று
இவட்கிது நின்று நினைக்கப் புக்கால்
சுனையினுள் தடந்தாமரை மலரும்
தண் திருப் புலியூர்
முனைவன் மூவுலகாளி
அப்பன் திருவருள் மூழ்கினளே

————————————————————————————————————————————————————

புனையிழைகள் அணிவும் –
ஆபரணங்கள் நாம் பூட்டினால் போலே இருந்தனவோ –

ஆடையுடையும் –
முகத்தலை அறிந்து உடுததாய் இருந்ததோ –

புது கணிப்பும் –
நீர் வாய்ந்த வயல் போலே இவள் வடிவிலே பிறந்த செவ்வி பாரீர் கோள்-

நினையும் நீர்மையதன்று இவட்கிது நின்று நினைக்கப் புக்கால் –

நின்று நினைக்கப் புக்கால் -நினையும் நீர்மையதன்று இவட்கிது -தொடங்கி விடுதல் அன்றியே
காலம் என்னும் ஒரு பொருள் உள்ள அளவும் நின்று
ஆராயப் புக்காலும்
இவளுக்கு பிறந்த இவ் அழகுகள்
நினைக்கப் போகா என்றது –
யதோவாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா சஹ – தைத்ரிய ஆனந்த -9-1-
பேச முடியாமல் வேத வாக்குகள் திரும்பின -என்கிற விஷயத்தை அளவிட்டு அறினும்
இவள் படி அளவிட்டு அறிய முடியாது -என்றபடி –

இவை எல்லா வற்றிலும் நீ அறிந்த தன்மை யாது -என்ன
அப்பன் திருவருள் மூழ்கினளே -என்கிறாள் –

சுனையினுள் தடந்தாமரை மலரும்
ஒரு பூவே தடாகத்தை கண் செறி இட்டாப் போலே மலரும் -என்றது –
அவ ஊரில் பொருள்கள் பிறக்கு இடம் கொடா என்கிறாள் -என்றபடி –
இதனால்
இவளுக்கு புறம்பு போக்கு இல்லை என்பதனை தெரிவிக்கிறாள் –
தண் திருப் புலியூர் முனைவன் –
அவ் ஊருக்கு முதல்வன் –

மூவுலகாளி –
எல்லா உலகங்களையும் ஆளுகிறவன் -என்றது
ஐஸ்வர் யத்துக்கு புறம்பு ஒருத்தரைத் தேடித் போக வேண்டாதவன் -என்றபடி

அப்பன் –
ஐஸ்வர்யத்தாலும் குறைவறப் பெற்றேன் என்று
தன ப்ரீதியாலே சொல்கிறாள் –

திருவருள் மூழ்கினளே –
கடல் கொண்ட பொருளை எங்கனே மீட்கப் பார்க்கிறபடி –
அருட்கடலில் மூழ்கின இவளை மீத்கலாமோ உங்களாலே

ஆபத் சகம் மட்டுமே இல்லை
ஐஸ்வர் யமும் உண்டே
நினைத்து பார்க்க முடியாத செல்வம்
அப்பன் -உபகாரகன்
திரு அருளில் மூழ்கினாள்
நினையும் நீர்மை யதன்று
எதோ வாசோ நிவர்ந்தந்தே
திருப் புலியூர் நிர்வாஹகன்
மூ உலகும் ஆள்பவன்
கலந்து ஆபரணங்கள் மாறி இருக்க –
ஆடை -முகத்தலை -தலைப்பு மாறி உடுத்தி
புதுக் கணிப்பு நீர் பாய்ந்த வயல் போலே
வடிவில் செவ்வி
சம்ச்லேஷம் பகவத் ஞானம்
கால தத்வம் ஆராயப் புக்காலும் நினைக்க முடியாதே
இவள் திருமேனி விக்ருதி -பரமாத்வா விஷயத்தை பரிச்செதித்தாலும்
அப்பன் திரு அருள் மூழ்கி –
பதார்த்தங்கள் பிறைக்கு இடம்கொடாமல்
ஒரே தாமரை முழுவதும்
இவளுக்கு புறம்பு போக்கிடம் இல்லை
அனன்யார்ஹை
ஐஸ்வர் யம் புறம்பு வேறு இடம் போக வேண்டாம்
அப்பன் -எனக்கு செய்த உபகாரம்
ஐஸ்வர் யாம் குறை அர பெற்றான் சொல்ல முடிந்ததே
அருள் கடலில் மூழ்கி
கடல் கொண்ட பூமியை கீழே எடுத்தான்
இது அருள் கடல்

———————————————————————————————————————————————————————–

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading