Archive for October, 2013

ஸ்ரீ திருப்பாவை -உந்து மத களிற்றன் -ஸ்ரீ சுத்த சத்வம் தொட்டாசார்யர் ஸ்வாமிகள் அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் –

October 29, 2013

(கீழே நாயகனாய் நேச நிலைக் கதவம் நீக்கு -ஆச்சார்யர் -அஞ்ஞானம் அஹந்காராதிகளைப் போக்கி மிதுனம் காட்டிக் கொடுப்பவர்
இங்கு பிராட்டியை –வந்து திறவாய் மகிழ்ந்து என்று பிரார்த்தனை -பெருமாள் உடைய அஞ்ஞானம் போக்க
இருவருக்கும் உபதேசித்துப் பார்த்து -திருந்தாமல் இருந்தாலும் மீளாமல்
நம்மை அருளால் திருத்தி அவனை அழகால் திருத்துபவள்
ஆஸ்ரிதர் தோஷ தரிசனத்தில் அஞ்ஞானம் கிட்டும் படி அருளுபவள்
உத்தாரக ஆச்சார்யர் உடையவர் ஒருவரே உலகம் அனைத்தையும் உய்ய அருளுபவர்)

(பொரு சிறைப்புள் உவந்து ஏறும் கைங்கர்யம் ஏத்துக் கொள்ள அவனுக்கு உகப்பு -அதே போல் இவளும் மகிழ்ந்து திறக்க நாமும் மகிழ்வோம்)

(கந்தம் கமழும் குழலி -வாஸனை
கோழி அழைத்தன -குயில் இனங்கள் கூவின-சீரார் வளை ஒலிப்ப-ஸப்த ஸமூஹங்கள்
பந்தார் விரலி-ஸ்பர்சம்
உன் மைத்துனன் பேர் பாட-ரஸம்
செந்தாமரைக் கை-ரூபம்
ஐவகை மதத்தில் ஈடுபட லௌகிக விஷயாந்தரங்களுக்குப் போக மாட்டோம்)

அவதாரிகை –

இப் பாட்டில்
ஆச்சார்யன் முன்னாக
நம்பி மூத்த பிரானை முன்னிட்டு
எழுப்பின இடத்திலும் எழுந்திராமையாலே
அவனை எழுப்புக்கைக்காக
புருஷகார பூதையான நப்பின்னைப் பிராட்டியை எழுப்புகிறார்கள் –

உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்
நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலீ கடை திறவாய்
வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயில் இனங்கள் கூவின காண்
பந்தார் விரலி உன் மைத்துனன் பேர் பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்

பதவுரை

உந்து மத களிற்றன்–(தன்னால் வென்று) தள்ளப் படுகின்ற மத யானைகளை யுடையவனும்
தோள் வலியன்–புஜ பலத்தை யுடையவனுமான
நந்தகோபாலன்–நந்த கோபானுக்கு
மருமகளே–மருமகளானவளே!
நப்பின்னாய்–ஓ! நப்பின்னைப் பிராட்டியே!
கந்தம் கமழும் குழலீ–பரிமளம் வீசா நின்றுள்ள கூந்தலுடையவளே
கடை திறவாய்–தாழ்ப்பாளைத் திறந்திடு’
கோழி–கோழிகளானவை
எங்கும் வந்து-எல்லா விடங்களிலும் பரவி
அழைத்தன காண்–கூவா நின்றனகாண்’ (அன்றியும்),
மாதவி பந்தல் மேல்–குருக்கத்திக் கொடிகளாலாகிய பந்தலின் மேல் (உறங்குகிற)
குயில் இனங்கள்–குயிற் கூட்டங்கள்
பல்கால்-பல தடவை
கூவின காண்-கூவா நின்றன காண்’
ஓடாத–போர்க் களத்தில் முதுகு காட்டி) ஓடாத
பந்து ஆர்விரலி –பந்து பொருந்திய விரலை யுடையவளே!
(க்ருஷ்ணனோடு விளையாடு கைக்கு உபகரணமான) பந்து
உன் மைத்துனன் பேர் பாட-உனது கணவனான கண்ண பிரானுடைய திரு நாமங்களை (நாங்கள்) பாடும்படியாக
சீர் ஆர் வளை ஒலிப்ப வந்து–சீர்மை பொருந்திய (உன்) கை வளைகள் ஒலிக்கும் படி (நடந்து) வந்து
செந்தாமரை கையால்–செந்தாமரைப் பூப் போன்ற (உன்) கையினால்
மகிழ்ந்து திறவாய்-(எங்கள் மீது) மகிழ்ச்சி கொண்டு (தாழ்ப்பாளைத், திறந்திடு’
ஏல் ஓர் எம் பாவாய்

வியாக்யானம்

உந்து மத களிற்றன் –
உன்மஸ்தகமான அஹங்காரத்தை வெல்லும்-பலத்தை உடைய –

(தலைக்கு மேல் ஆணவம் –மத ஜலம் யானைக்கு மத்சகத்தில் இருக்குமே)

ஓடாத தோள் வலியன்-
ஜகத் விலஷணமான-ஞான பலத்தை உடையவனாய் –
ஞானக் கை -என்னக் கடவது இறே –
அஹங்காரத்துக்கு பிற்காலியாத-ஞான பலத்தை உடையவன் என்றுமாம் –

நந்தகோபாலன் –
ஆனந்த நிர்பரனாய்
ஆஸ்ரித ரஷகனான
ஆச்சார்யன் உடைய –

மருமகளே –
ஆசார்யனுக்கு எம்பெருமான் புத்ரவத் விதேயன் ஆனால் –
பிராட்டி மருமகள் ஆகக் குறை இல்லை இறே –

(யதுகிரி மேல் கோட்டையில் உடையவர் சந்நிதி பக்கம் யதுகிரி நாச்சியார் சந்நிதி)

நப்பின்னாய்-
திரு நாமம் –

(திருப்பாவையில் ஐந்து இடங்களில் நந்தகோபன்-
மார்கழி -நந்தகோபன் குமரன் -இப்பாசுரம் வரை மூன்று இடங்களில்
மேல் -ஆற்றப் படைத்தான் மகனே என்கிற இடத்தில் மட்டும் நாமம் நேரடியாக இல்லை)

கந்தம் கமழும் குழலீ –
சர்வ கந்தா -என்னும் அவனுக்கும் வாசனையை கொடா நிற்கிற
பகவத் விஷய வ்யாமோகத்தை உடையவரே –
இத்தால் –
ஸ்வ வ்யாமோகத்தாலே ஈஸ்வரனை வசீகரித்து –
ஆஸ்ரித ரஷணத்திலே மூட்டி
அவனை எல்லாரும் கொண்டாடும்படி
பண்ணுகிறாள் என்னும் இடம் தோற்றுகிறது –

(அவனும் ஸூவ மஹிமையிலே பிரதிஷ்டை –சாந்தோதிக திசையிலும் இவ்வாறே -)

(பிராட்டி இடம் பகவத் விஷய வ்யாமோஹம்
இவனுக்கு பிராட்டி இடம் வ்யாமோஹம்
மா மலர் மங்கை மண நோக்கமுண்டான் –பெரிய திரு மொழி -8-10-1–என்றும்
அல்லி மலர் மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் –திரு வாய் மொழி -3-10-8- -பித்தர் பனி மலர்ப் பாவைக்கு -இத்யாதிஎன்றும் சொல்லுகிறபடி )

கடை திறவாய்-
அவனுடைய பரிமளமும்
உன்னுடைய பரிமளமும்
காட்டில் எறித்த நிலா வாகாமே நாங்கள் அனுபவிக்கும் படி –
தத் விரோதியான
எங்களுடைய அஞ்ஞானத்தை நீக்காய் –

அஞ்ஞானம் போகைக்கு சத்வோத்தரமான காலம் ஆயிற்றோ என்ன –
ஆயிற்று -என்ன –
அதுக்கு அடையாளம் என் என்ன –

வந்து எங்கும் கோழி அழைத்தன காண் –
சத்வோத்தரமான காலம் ஆனவாறே
சர்வோதிக்கமாக பாகவதர் எழுந்து இருந்து
பகவத் கைங்கர்யார்தமாக ஒருத்தரை ஒருவர் எழுப்பா நின்றார்கள் –என்ன
அவர்களை உறங்க ஒட்டாமைக்கு நீங்கள் உண்டே -என்ன –

மாதவிப் பந்தல் மேல் பல்கால் குயில் இனங்கள் கூவின காண்-
வேதாந்தங்களிலே வேதாந்த அர்த்தங்களை அனுபவியா நிற்கும் நாத யாமுநர் போலும்
பரம பாகவத சமூஹங்கள்-சத்வம் தலை எடுத்த பின்பும்
உன்னைக் காணாமையாலே நாக்கு ஒட்டினமை தோற்றப்
பல காலும் கூவா நின்றன காண் –

இப்படி எழுப்பின விதத்திலும் எழுந்திராமையால்
ஜாலகரந்த்ரத்தாலே பார்த்து –

பந்தார் விரலி -என்கிறார்கள் –
சத்வம் தலை எடுக்கும் தனையும் சேதனரைக் கொண்டு லீலா ரசம் அனுபவித்து
சத்வம் தலை எடுத்தவாறே ஒரு கையாலே லீலா உபகரண பூதரான சேதன வர்க்கத்தையும்
ஒரு கையால் இத்தைக் கொண்டு தன்னை லீலா ரசம் அனுபவிப்பித்த ஈஸ்வரனையும் அணைத்துக் கொண்டு கிடப்பதே –
இது என்ன ஐஸ்வர்யம் -என்கிறார்கள் –
இப்போது எழுந்து இருந்து செய்ய வேண்டுவது என் -என்ன –

உன் மைத்துனன் பேர் பாடச்-
நீயும் அவனும் பந்தடிக்கையில் உனக்கு அவன் தோற்ற
தோல்விக்கு அவன் திரு நாமங்களைப் பாட –
ஆகில் கதவைத் தள்ளி உள்ளே புகுங்கோள் என்ன –
அது கூடாது –

செந் தாமரைக் கையால் –
சௌந்தர்ய சௌகுமார்ய சௌகந்த்யங்களாலே
தாமரை போன்ற திருக் கையாலே –
இவ்விடத்தில் –கையாவது -ஜ்ஞானம்
ஜ்ஞானக் கை என்றார் இறே ஆழ்வார் –

ஞானத்துக்கு சௌந்தர்ய சௌகுமார்ய சௌகந்த்யங்கள் ஆவன
இதர விஷய நிவ்ருத்தி -சௌந்தர்யம்
ஸ்வ போக்த்ருத்வ நிவ்ருத்தி -சௌகுமார்யம்
நிரதிசய ப்ரேமாத்மகத்வம்-சௌகந்த்யம்
இப்படி இருந்துள்ள ஞானத்தாலே –

(ஞானம் கனிந்த நலம் கொண்டு –பக்தி ரூபா பன்ன ஞானம் மதி நலம் நிரதிசய ப்ரேமாத்மகத்வம்)

சீரார் வளை ஒலிப்ப-
நிரந்தர பகவத் சம்பந்தத்தாலே பூர்ணங்களாய்-
பகவத் சம்பந்த ஸூசகங்களான-ரகஸ்ய த்ரய அர்த்தங்கள் பிரகாசிக்க –

வந்து திறவாய் –
நம்முடைய பிரயத்னத்தை அபேஷியாமல்
நீயே வந்து
ஸ்வரூப உபாய புருஷார்த்த விஷய விரோதியான
தத் தத் அஞ்ஞானத்தைப் போக்காய்-

மகிழ்ந்து –
புருஷார்த்தம் உன்னதாக வேணும்-

————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சுத்த சத்வம் தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ திருப்பாவை -உந்து மத களிற்றன்-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் வியாக்யானம் -மூவாயிரப்படி

October 29, 2013

அவதாரிகை –

இப்படி எழுப்பின இடத்திலும் எழுந்திராமையாலே
தங்களுக்கு புருஷகார பூதையான நப்பின்னை பிராட்டியை எழுப்புகிறார்கள் –
அவள் புருஷகாரமாக அவனைப் பற்றுவதே பல வ்யாப்தம் ஆவது-

இதுதான் காக விபீஷணாதிகள் பக்கலிலே காணலாம் –
அவளை அநாதரித்து இவனைப் பற்றின சூர்பணகை அனர்த்தப் பட்டாள் இறே
பெருமாளை ஒழிய பிராட்டியைப் பற்றின ராவணனும் அனர்த்தப் பட்டான்
இருவரையும் பற்றினால் இறே ஸ்ரீ விபீஷண ஆழ்வானைப் போலே வாழ்வது

அபிநிவேச ப்ரேரிதர்கள் ஆகையால் முந்துறவே கிருஷ்ணன்
பக்கலிலே மேல் விழுந்தார்கள் இவர்கள் .

அங்கு கார்யம் பலியாமையாலே
வழியே போக வேணும் என்று
புருஷகாரத்தில் இழிந்தார்கள் –

ஆஸ்ரயண வேளையிலே இறே க்ரமம் பார்ப்பது
போக வேளையிலே க்ரமம் பார்க்கப் போகாது இறே-

உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்
நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலீ கடை திறவாய்
வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயில் இனங்கள் கூவின காண்
பந்தார் விரலி உன் மைத்துனன் பேர்பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்

பதவுரை

உந்து மத களிற்றன்–(தன்னால் வென்று) தள்ளப்படுகின்ற மத யானைகளை யுடையவனும்
தோள் வலியன்–புஜ பலத்தை யுடையவனுமான
நந்தகோபாலன்–நந்த கோபானுக்கு
மருமகளே–மருமகளானவளே!
நப்பின்னாய்–ஓ! நப்பின்னைப் பிராட்டியே!
கந்தம் கமழும் குழலீ–பரிமளம் வீசா நின்றுள்ள கூந்தலுடையவளே
கடை திறவாய்–தாழ்ப்பாளைத் திறந்திடு’
கோழி–கோழிகளானவை
எங்கும் வந்து-எல்லா விடங்களிலும் பரவி
அழைத்தன காண்–கூவா நின்றனகாண்’ (அன்றியும்),
மாதவி பந்தல் மேல்–குருக்கத்திக் கொடிகளாலாகிய பந்தலின் மேல் (உறங்குகிற)
குயில் இனங்கள்–குயிற் கூட்டங்கள்
பல்கால்-பல தடவை
கூவின காண்-கூவா நின்றன காண்’
ஓடாத–போர்க் களத்தில் முதுகு காட்டி) ஓடாத
பந்து ஆர்விரலி –பந்து பொருந்திய விரலை யுடையவளே!
(க்ருஷ்ணனோடு விளையாடு கைக்கு உபகரணமான) பந்து
உன் மைத்துனன் பேர் பாட-உனது கணவனான கண்ண பிரானுடைய திரு நாமங்களை (நாங்கள்) பாடும்படியாக
சீர் ஆர் வளை ஒலிப்ப வந்து–சீர்மை பொருந்திய (உன்) கை வளைகள் ஒலிக்கும் படி (நடந்து) வந்து
செந்தாமரை கையால்–செந்தாமரைப் பூப் போன்ற (உன்) கையினால்
மகிழ்ந்து திறவாய்-(எங்கள் மீது) மகிழ்ச்சி கொண்டு (தாழ்ப்பாளைத், திறந்திடு’
ஏல் ஓர் எம் பாவாய்

உந்து மத களிற்றன்-
மதத்தை உந்தா நின்றுள்ள களிறு –
மத்த கஜம் போலே இருக்கும் பலத்தை உடையவன் –
ஆனைகளுடன் பொரும்படியான மிடுக்கை உடையவன் -என்கை –

ஓடாத தோள் வலியன் –
பிரதி பஷத்தைக் கண்டால் பிற்காலியாத தோள் வலியை உடையவன் –
நாட்டில் நடையாடாத தோள் வலியன் -என்னவுமாம் –

இப்போது இவர்கள் உடைய மிடுக்கைச் சொல்லிற்று
தங்களுக்கு தனமான இம் மிதுனத்துக்கு
காவல் உண்டு என்று தங்கள் பய நிவ்ருத்திக்காக –
அங்கோர் ஆய்க் குலம் -என்று
கம்சன் படைவீடான ஸ்ரீ மதுரையை நினைத்து
அஞ்சினார்க்கு அஞ்ச வேண்டாத ஊர் இறே –

தோள் வலியன் –
நம்முடைய அநீதிகளை நினைத்தால்
எம்பெருமான் தோள் வலியை நினைத்து பயம் கெடுமா போலே –
கிருஷ்ணன் உடைய தீம்புகளை நினைத்தால்
இவருடைய தோள் வலியை நினைத்து
பயம் கெடலாய் இருக்கை –
கம்சன் மாளிகை நிழல் கீழ் கிருஷ்ணனுக்கு
ஒரு தீங்கு வாராதபடி வளர்க்க வல்ல
மிடுக்கை உடையவர் இறே –

நந்தகோபாலன் மருமகளே –
ஸ்ரீ கும்பர் மகளே என்னாதே -மாமனாரைச் சொல்லிற்று –
அதிலும் இவளுக்கு இது பிரியம் ஆகையாலே

நப்பின்னாய் –
திரு ஆய்ப்பாடியிலே கிருஷ்ணன் பிறந்த பின்பு
ஸ்ரீ நந்த கோபருக்கு மருமகள் இல்லாதார் உண்டோ –
நமக்கென்-என்று பேசாதே கிடக்க –
நப்பின்னாய் -என்கிறார்கள் –

கந்தம் கமழும் குழலீ –
பரிமளம் தான் நிறம் பெறுவது
இவள் திருக் குழலிலே சேர்ந்த வன்று -என்கிறது –
வாசம் செய் பூம் குழலாள் இறே –
சர்வ கந்தா -என்கிறவனுக்கும் நாற்றம் கொடுக்கும்படி
பரிமளம் மிக்க திருக் குழல் –

கடை திறவாய் –
கிருஷ்ணன் உடைய பரிமளமும்
உன்னுடைய பரிமளமுமாகி
தேங்கி நிற்கிற வெள்ளத்தை –
கதவை திறந்து புறப்பட விட்டு
எங்கள் விடாயைத் தீராய் -என்கிறார்கள் –
கிண்ணகத்தை அணை செய்தாப் போலே
அடைத்துக் கொண்டு கிடவாதே
வெட்டி விடாய் –

மத்திய ராத்ரியில் எழுப்புகிறது என் என்ன
போது விடிந்தது -என்ன
விடிந்ததுக்கு அடையாளம் என்-என்ன

வந்து எங்கும் கோழி அழைத்தன காண் –
கோழி கூவா நின்றது என்ன –

ஒரு கோழி கூவினவாறே விடிந்தது ஆமோ -என்ன

வந்து எங்கும் கோழி அழைத்தன காண் –
துடை தட்டி எழுப்புவாரைப் போலே-
சர்வதோதிக்கமாக கோழி கூவா நின்றன –
உணர்ந்தவை எல்லாம் கூப்பிடும்
பின்னை உறங்குமது தான் சாமக் கோழி -என்ன –

மாதவிப் பந்தல் மேல் பல்கால் குயில் இனங்கள் கூவின காண் –
சுக ஸ்பர்சத்தாலே-படுக்கையிலே உறங்குகிறவை உணரும் போது
விடிய வேண்டாவோ -என்ன –
ஒரு குயில் ஒருகால் கூவும் காட்டில் விடிந்ததோ -என்ன

பல்கால் குயில் கூவிற்றுக் காண் –
உன்னுடைய நோக்கும் ஸ்பர்சமுமே தாரகமான குயில்
விடிந்ததும் உன்னைக் காணப் பெறாமையாலே

பல் காலும் கூவா நின்றது
ஒரு குயில் பல் கால் கூவினது பிரமாணமோ -என்ன –
உன்னைக் காணப் பெறாமையாலே
நாக்கு ஒட்டினமை தோற்ற

குயில் இனங்கள் கூவின காண் –
இனம் இனமாக குயில்கள்
பலகாலும் கூவின –

பந்தார் விரலி –
பந்தும் கையும் பொருந்தி இருக்கிறபடி –
நாங்கள் சைதன்யத்தை விட்டு
அசேதனமாக பெற்றிலோமே -அது என் -என்னில்
உன் கைக்குள்ளே கிடக்கலாமே
இப்போது பந்தின் பிரசங்கம் என் என்றால் –
கிருஷ்ணன் உடன் பந்தடித்து -அவனைத் தோற்பித்து
அவனை ஒரு கையாலும் பந்தை ஒரு கையாலும்
அனைத்துக் கொண்டு கிடக்கை –

அவன் இவளுக்கு போக உபகரணம்
பந்து லீல உபகரணம் –
ஒரு கையில் நாரம் ஆய்த்து –
ஒரு கையில் நாராயணன் ஆய்த்து –
ஒரு கையில் விபூதி ஆய்த்து
ஒரு கையிலே விபூதிமான் ஆய்த்து –
இத்தால்
உபய சம்பந்தத்தால் வந்த புருஷகார பாவம் தோற்றுகிறது –

நீங்கள் வந்தது என் என்ன –

உன் மைத்துனன் பேர்பாடச் –
நீயும் அவனும் மைத்துனமை யாடி
ஒருவருக்கு ஒருவர் ஒன்றுக்கு ஒன்பது சொல்லி
இட்டீடு கொள்ளும் போது
உன் பஷத்தில் நாங்கள் நின்று -அவன் தோல்விக்கு வசை பாட
அவனுக்கு உள்ளது எல்லாம் சொல்லிக் கொடுக்கைக்கும்
இருவரும் ஒன்றாய்ச் செல்லுமன்று செல்லவும்
பிரிந்தால் தாய் பஷத்தில் இ றே பிரஜைகள் நிற்பது –

அவள் இங்கனே ஆகில் திறந்து கொண்டு புகுருங்கோள் -என்ன

செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப –
நீ தானே வந்து திறக்க வேணும்

செந்தாமரைக் கையால் –
அவனும் ஆசைப் படும் கை –
ஈஸ்வர ஸ்வா தந்த்ர்யத்துக்கு நீங்கள் அஞ்ச வேண்டாம் என்னும் கை –
அவள் -அப்படியே செய்கிறோம் -என்று
முன் கையில் வளையைக் கடுக்கி திறக்கப் புக்காள் –

சீரார் வளை ஒலிப்ப –
வளைக்கு சீர்மை யாவது -கழலமல்   இருக்கை –
சங்கு தங்கு முன்கை நங்கை -இறே –
நாங்களும் அத த்வனி கேட்டு வாழும்படி –
தங்கள் கைகள் -இருக்கையில் சங்கு இவை நில்லா -என்று இறே இருப்பது –
சூடகமே -தோள் வளையே -என்று அவர்கள் இருவரும்
கூட்டிப் பூட்டினால் இறே
இவர்களுக்கு உள்ளது –

இப்பாட்டு எம்பெருமானார் விசேஷித்து உகந்த பாட்டு –

வந்து திறவாய் –
யந்த்ரத்தாலே திறக்க ஒண்ணாது -உன்னுடைய நடை அழகு காணும்படி வந்து திற –

மகிழ்ந்து
அர்த்திகள் வாசலிலே நிற்க வேறு அனுபவம் உண்டோ
என்று தர்மத்துக்கு திறக்கை அன்றிக்கே –
பேறும் உன்னதாக வேணும் –

மகிழ்ந்து –
கிருஷ்ண சம்ஸ்லேஷத்தால் வந்த
ஹர்ஷ பிரகர்ஷம் முகத்திலே தோற்றும்படி என்னவுமாம் –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார்
எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ திருப்பாவை -அம்பரமே தண்ணீரே சோறே -ஸ்ரீ சுத்த சத்வம் தொட்டாசார்யர் ஸ்வாமிகள் அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் –

October 28, 2013

(மந்திரத்திலும் -மந்த்ரத்துக்கு உள்ளீடான வஸ்துவிடமும் மந்த்ர பிரதானனான ஆச்சார்யர் பக்கல்லிலும் ப்ரேமம் கனத்து இருக்க வேண்டுமே)

அவதாரிகை –
இப்பாட்டில் கீழ் எழுப்பின கோயில் காப்பான் அனுமதியால்
திருவாசல் காப்பான் உள்ளே புகுர விட
முந்துற ஆச்சார்யனை எழுப்பி
நம்பி மூத்த பிரான் முன்னாக
ஈஸ்வரனை எழுப்புகிறார்கள் –

அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்
எம்பெருமான் நந்த கோபாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே
எம்பெருமாட்டி யசோதா அறிவுறாய்
அம்பரம் ஊடருத்து ஓங்கி உலகளந்த
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழல் அடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்

பதவுரை

அம்பரமே–வஸ்த்ரங்களையே
தண்ணீரே–தீர்த்தத்தையே
சோறே–சோற்றையே
அறம் செய்யும்–தருமமாக அளிக்கின்ற
எம்பெருமான் நந்தகோபாலா–எமக்கு ஸ்வாமியான நந்த கோபரே!
எழுந்திராய்–எழுந்திருக்க வேணும்.
கொம்பு அனார்க்கு எல்லாம்–வஞ்சிக் கொம்பு போன்ற மாதர்களுக்கெல்லாம்
கொழுந்தே–முதன்மை யானவளே!
குலம் விளக்கே–(இக்) குலத்திற்கு (மங்கள) தீபமாயிருப்பவளே
எம்பெருமாட்டி–எமக்குத் தலைவியானவளே!
அசோதாய்–யசோதைப் பிராட்டியே!
அறிவுறாய்–உணர்ந்தெழு’
அம்பாம் ஊடு அறுத்து–ஆகாசத்தை இடைவெளி யாக்கிக் கொண்டு
ஓங்கி–உயர வளர்ந்து
உலகு அளந்த–எல்லா) உலகங்களையும் அளந்தருளின
உம்பர் கோமானே–தேவாதி தேவனே!
உறங்காது–இனிக்) கண்வளர்ந்தருளாமல்
எழுந்திராய்–எழுந்திருக்க வேணும்
செம்பொன் கழல் அடி–சிவந்த பொன்னாற் செய்த வீரக் கழலை அணிந்துள்ள திருவடியை யடைய
செல்வா–சீமானே!
பலதேவா! –பல தேவனே!
உம்பியும் நீயும்–உன் தம்பியாகிய கண்ணனும் நீயும்
உறங்கேல்–உறங்காதொழிய வேணும்’

வியாக்யானம்

அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும் எம்பெருமான் நந்த கோபாலா எழுந்திராய்–
ஆத்ம ஸ்வரூபமான ஈஸ்வர முக விகாசத்தையும்0–(அம்பரமே-போக்யம் )
தத் வர்த்தகமான போக்த்ருத்வ புத்தி நிவ்ருத்தியையும்–(தண்ணீரே-தாரகம்)
தத் தேதுவான கைங்கர்யத்தையும் (சோறே- போஷகம்)
ஓர் ஒன்றையோ இவன் கொடுப்பது என்னும்படி

தன்னுடைய ஆன்ரு சம்ச்யத்தாலே ஸுவயம் புருஷார்த்தமாக கொடா நின்றுள்ள (அறம் செய்யும்)
நமக்கு வகுத்த சேஷியாய் (எம்பெருமான்)
ஆனந்த நிர்ப்பரனாய் (நந்த)
ஆஸ்ரித ரஷகனான (கோபாலா)
ஆசார்யனே -நீ உணர வேணும் -(எழுந்திராய்-)

(சேஷத்வ போக்த்ருத்வங்கள் போல் அன்றிக்கே பாரதந்தர்ய போக்த்ருத்வங்கள் -ப்ரபல தர விரோதி ஸூவ போக்த்ருத்வ புத்தி தவிர்க்க வேண்டுமே)

(அதிகாரம் உள்ளோருக்கு ரக்ஷகன் அரங்கன் -எதிராசா அதிகாரம் இல்லாதவருக்கு அந்தோ நீ இரங்க வேண்டியது)

கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குலவிளக்கே எம்பெருமாட்டி யசோதா அறிவுறாய்
நதி பிரவாஹங்களுக்கு வளைந்து பிழைக்கும் நீர் வஞ்சிக் கொம்பு போலே
சம்சாரிகள் உடைய அபிமானத்துக்கு அனுரூபமாக
தங்களை அமைத்து வைக்கும்

பகவத் மந்தரங்களுக்கு எல்லாம் ஸ்ரேஷ்டமாய் (கொழுந்தே)
பிரபன்ன குலத்துக்கு பிரகாசகமாய் (குலவிளக்கே)
எங்களுக்கு நிருபாதிக ஸ்வாமியாய் (எம்பெருமாட்டி)
தன்னை அனுசந்திப்பார்க்கு ஆபிஜாத்யாதி
சகல அதிசய பிரதமான
திருமந்த்ரமே -அறிவுறாய் –
திருமந்தரம் அறிவுறுகையாவது – ஸ்வார்த்த பிரகாசகமாகை

(நப்பின்னைக்காகவே அவதாரம் -கும்பன் திருமகள் -சூட்டு நன் மாலைகள் –அடலாயர் தம் கொம்பினுக்கே
குலம் தரும் இத்யாதி)

அம்பரம் ஊடருத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்-
நிரீஸ்வர வாதம் பண்ணுபவர்களுக்கு
அவகாசம் அறும்படி அபிவிருத்தனாய்
இவ் விபூதியைத் தன் திருவடிகளின் கீழே சேர்த்துக் கொண்ட
நித்ய ஸூரி நிர்வாஹகன் ஆனவனே
சம்சாரிகள் உறக்கம் தீர்க்க அவதரித்த நீ
உறங்காது ஒழிய வேணும்

இப்படி எழுப்பின இடத்திலும் எழுந்திராமையாலே
அவனை எழுப்புகைக்காக
நம்பி மூத்த பிரானை எழுப்பு கிறார்கள்

செம்பொற் கழல் அடிச் செல்வா பல தேவா உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்-
சிவந்து
ஸ்ப்ருஹணீயமான
ஸ்வர்ணத்தாலே செய்யப்
வீரக் கழலை உடைய
ஸ்வ சேஷத்வத்திலே பகவத் சேஷத்வம் அந்தர் கதமாம் படியாய் இருக்கையாலே
திருவடிகள் விருது பூண்ட என்றுமாம்

செல்வா பலதேவா –
இப்படி சம்பன்னனான பல தேவனே

உம்பியும் நீயும் உறங்கேல்
உனக்கு பவ்யனான கிருஷ்ணனும்
கிருஷ்ணனுக்கு பவ்யனான நீயும்
உறங்காது ஒழிய வேணும்

(ஸ்வரூபத்தால் நம்பி மூத்த பிரான் -பவ்யதை
கண்ணனுக்கு இச்சையால் பவ்யதை -குணம் -அடியாக ஆஸ்ரித பரதந்த்ரன்-அடியார்க்கு மெய்யன் -தாஸ ஸத்யன்)

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சுத்த சத்வம் தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ திருப்பாவை -அம்பரமே தண்ணீரே சோறே-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் வியாக்யானம் –

October 28, 2013

அவதாரிகை –
இவர்களைத் திருக் காப்பு நீக்கி உள்ளே புகுர விட –
ஸ்ரீ நந்தகோபர் தொடக்கமானவரை எழுப்புகிறார்கள் –
முற்பட கிருஷ்ணனை பெண்கள் களவு காண்கிறார்களோ -என்று நினைத்து
காவலாக புறக் கட்டிலே கிடக்கிற ஸ்ரீ நந்த கோபரை எழுப்பு கிறார்கள் –
அநிருத்த ஆழ்வானை அகப்பட களவு காணக் கடவ பெண்கள்
அவன் அழகுக்கும் வாய்த்தலையாய்
சாஷாத் மன்மத -என்கிற கிருஷ்ணனைக் களவு காண சொல்ல வேணுமோ –

அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்
எம்பெருமான் நந்த கோபாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே
எம்பெருமாட்டி யசோதா அறிவுறாய்
அம்பரம் ஊடருத்து ஓங்கி உலகளந்த
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழல் அடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்

பதவுரை

அம்பரமே–வஸ்த்ரங்களையே
தண்ணீரே–தீர்த்தத்தையே
சோறே–சோற்றையே
அறம் செய்யும்–தருமமாக அளிக்கின்ற
எம்பெருமான் நந்தகோபாலா–எமக்கு ஸ்வாமியான நந்த கோபரே!
எழுந்திராய்–எழுந்திருக்க வேணும்.
கொம்பு அனார்க்கு எல்லாம்–வஞ்சிக் கொம்பு போன்ற மாதர்களுக்கெல்லாம்
கொழுந்தே–முதன்மை யானவளே!
குலம் விளக்கே–(இக்) குலத்திற்கு (மங்கள) தீபமாயிருப்பவளே
எம்பெருமாட்டி–எமக்குத் தலைவியானவளே!
அசோதாய்–யசோதைப் பிராட்டியே!
அறிவுறாய்–உணர்ந்தெழு’
அம்பாம் ஊடு அறுத்து–ஆகாசத்தை இடைவெளி யாக்கிக் கொண்டு
ஓங்கி–உயர வளர்ந்து
உலகு அளந்த–எல்லா) உலகங்களையும் அளந்தருளின
உம்பர்கோமானே–தேவாதி தேவனே!
உறங்காது–இனிக்) கண்வளர்ந்தருளாமல்
எழுந்திராய்–எழுந்திருக்க வேணும்
செம்பொன் கழல் அடி–சிவந்த பொன்னாற் செய்த வீரக் கழலை அணிந்துள்ள திருவடியை யடைய
செல்வா–சீமானே!
பலதேவா! –பல தேவனே!
உம்பியும் நீயும்–உன் தம்பியாகிய கண்ணனும் நீயும்
உறங்கேல்–உறங்காதொழிய வேணும்’

அம்பரமே தண்ணீரே சோறே –
புடைவையோடு
தண்ணீரோடு
சோறோடு
வாசி அற
வேண்டுவார்க்கு வேண்டுவதெல்லாம் புஷ்கலமாக கொடுக்கை –
ஏவ காரத்தாலே -இதுவோ இவன் கற்றது என்னும்படி கொடுக்கை –

அறம் செய்யும் –
பால அபிசந்தி ரஹிதமாக-ஆன்ரு சம்ச்யத்தாலே கொடுக்கை –
இத்தால்
நாட்டுக்கு தாரகாதிகளைக் கொடுக்கிற நீ -எங்கள் தாரகத்தையும் தாராய் என்கை –

எம்பெருமான் நந்த கோபாலா எழுந்திராய் –
எங்களுக்கு தாரக போஷாக போக்யங்கள் எல்லாமான-கிருஷ்ணனைப்
பெற்றுத் தந்த ஸ்வாமி-எழுந்திராய் –
வாசுதேவ சர்வம் இதி
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லா பேறும் தானே யானவன் இறே கிருஷ்ணன் –

எம்பெருமான்-
நாட்டில் பெண்களுக்கு தானம் கொடுப்பார் இல்லை-தானம் கொள்ளுகைக்கு அதிகாரிகள் அல்லாமையாலே –
வாசுதேவ சர்வமிதி என்று இருக்கிற எங்களுக்கு-கிருஷ்ணனைத் தரப் புகுகிற நீ
விசேஷித்து எங்கள் நாயகன் அன்றோ –
உணர்ந்து-அவன் அனுமதி பண்ணினபடி தோற்றிக் கிடக்க –

கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே எம்பெருமாட்டி யசோதா அறிவுறாய்-
பிராட்டி முன்னாக அவனை எழுப்புமா போலே
இவள் முன்னாக ஸ்ரீ நந்த கோபரை எழுப்பாமல் விட்டது என் என்னில்
பிள்ளை மேல் சங்கத்தாலே அணித்தாக உள் கட்டிலே கிடைக்கையாலே
பிற்பட அவளை எழுப்பு கிறார்கள் –

கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே-
பெண் பிறந்தார்க்கு எல்லாம் தலையாகப் பிறந்தவளே

கொம்பனார்-
கொம்பு -வஞ்சிக் கோடி
அனார் அத்தை அளையவர்கள்-ஒத்தவர்கள்

குல விளக்கே –
இக் குலத்துக்கு மங்கள தீபம் ஆனவளே-
பெண் பிறந்தார்க்கு எல்லாம் த்ருஷ்டியான விளக்கே -என்னவுமாம்

கொழுந்தே
பெண்களுக்கு ஒரு குறை வரில்-உன் முகம் அன்றோ வாடுவது

எம்பெருமாட்டி –
கிருஷ்ணனைப் பெற்றுத் தந்த-எங்களுக்கு ஸ்வாமிநி ஆனவளே

யசோதாய்
ஸ்ரீ நந்த கோபரைப் போல் அன்றியே
சஜாதீயை யாகையாலே நோயும் அறியுமவளே –
ஹித காமரான ஸ்ரீ நந்த கோபர் எழுந்து இருக்கச் செய்தேயும்
பிரிய காமையாய் இருக்கிற நீ
கிடக்கக் கடவையோ –

அறிவுறாய் –
நீ அறிந்தால் எங்களுக்கு ஒரு குறை உண்டோ -என்கை-
அவள் சம்வதத்தாலே உள்ளே புக்கு-கிருஷ்ணனை எழுப்புகிறார்கள் –

அம்பரம் ஊடருத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய் –
பிரயோஜனாந்த பரரான தேவர்களுக்காக
ஆகாச அவகாசம் எல்லாம் அடங்க
ஒரு பிரதேச நியதி இல்லாதபடி
ஊடருத்து-விம்ம வளந்த –
இத்தால் நிருபாதிக ரஷகன் ஆகையாலே
ரஷகத்வமே விளை நீராக வளர்ந்த படி –

உலகளந்த
உறங்குகிற பிரஜையை-தழுவிக் கொண்டு கிடக்கும் தாயைப் போலே
இருந்ததே குடியாக எல்லார் தலையிலும்
ஊர் எண்ணெய் வார்த்தாப் போலே
திருவடிகளை குளிர வைத்தபடி –

உம்பர் கோமானே –
அச் செயலாலே தேவர்களை எழுதிக் கொண்ட படி –
நித்ய ஸூரிகளை என்னவுமாம்
அதாவது
நமக்கு சிரோ பூஷணமான திருவடிகளை இட்டு
காடும் ஓடையும் அளப்பதே
இது ஒரு வாத்சல்யமே -என்று வாத்சல்யத்துக்கு தோற்கை –

உறங்காது எழுந்திராய் –
ஆண்களுமாய்
பிரயோஜனாந்த பரருமாய்
வேணுமோ முகம் கொடுக்கைக்கு –
அநந்ய பிரயோஜனைகளுமாய்
அபலைகளுமானால் ஆகாதோ
எங்களுக்கு முகம் காட்டும் போது சிறுப்பது பருப்பதாக வேணுமோ –
இருந்தபடியே காட்ட அமையாதோ
உன் வாசி அறியாதே
அந்ய பரமான நாட்டுக்கு சுலபமான திருவடிகளை
உன் வாசி அறியும் எங்களுக்கு காட்டல் ஆகாதோ

உறங்காது எழுந்திராய்
எங்களை உறக்கம் எழுப்ப வந்த நீ
உறங்கக் கடவையோ
அழகாய் இருந்ததீ-

இப்படிச் சொல்லவும் எழுந்திரா மையாலே-முந்துற நம்பி மூத்த பிரானை எழுப்பாதே
முறை கேடாக செய்தோம் என்று அவனை எழுப்பு கிறார்கள்-

செம்பொற் கழல் அடிச் செல்வா பலதேவா –
பிள்ளை பெருகைக்கு பொற் கால் பொலியப் பிறந்த சீமானே –

உம்பியும் நீயும் –
உனக்கு பவ்யமான தம்பியும்-அவனுக்கு பவ்யமான நீயும் –

உறங்கேலோ ரெம்பாவாய்
உறங்காது ஒழிய வேணும்-
எங்களையும் அவனையும் பொருந்த விடுமவன் அல்லையோ நீ-

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ திருப்பாவை -நாயகனாய் நின்ற -ஸ்ரீ சுத்த சத்வம் தொட்டாசார்யர் ஸ்வாமிகள் அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் –

October 28, 2013

(வேதம் வல்லார்கள் -கீழே துயில் எழுப்பி
மேல் விண்ணோர் ஸ்தானத்தில் உள்ளோரை துயில் எழுப்பி
பின்பு பெருமானை துயில் எழுப்புவர்-த்வார பாலகர் க்ஷேத்ர பாலகர் -எண்மர் பாஞ்ச ராத்ரம் சொல்லுமே

ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் அன்றோ -பிரதான த்வார சேஷி எம்பெருமானார் அன்றோ ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு)

அவதாரிகை –

இப் பாட்டில் –
முன்பு உணர்த்தினவர்களும் உணர்ந்தவர்களும் எல்லாரும் கூடி
பகவத் அனுபவத்துக்கு தேசிகனான ஆச்சார்யன் திரு மாளிகையிலே புக்கு
அங்கு கோயில் காப்பானையும் வாசல் காப்பானையும்-எழுப்புகிறார்கள்
ஆச்சார்ய சம்பந்த கடகரை முன்னிட்டு-ஆச்சார்யனை தொழுகையும் பெரியோர் செயல் இறே –

(ஸீர்ஷ மார்க்கம் -காட்டும் தேசிகன்-எடுத்த பேராளன் நந்தகோபன்
அசிந்த்ய அக்லிஷ்ட ஞானம் -மதி நலம் அருளப்பெற்றவரால் அருளப்பெற்ற நாதமுனிகள் தொடக்கமான நம் முன்னோர்)

நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய
கோயில் காப்பானே கொடித் தோன்றும் தோரண
வாசல் காப்பானே மணிக் கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறிமியரோமுக்கு அறை பறை
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேரந்தான்
தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே யம்மா நீ
நேச நிலைக் கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்-

பதவுரை

நாயகன் ஆய் கின்ற–(எமக்கு) ஸ்வாமியாயிருக்கிற
நந்தகோபனுடைய–நந்தகோபருடைய
கோயில்–திரு மாளிகையை
காப்பானே-காக்குமவனே!
கொடி-த்வஜ படங்கள்
தோன்றும்-விளங்கா நிற்கப் பெற்ற
தோரணம் வாசல்–தோரண வாசலை
காப்பானே–காக்குமவனே!
மணி-அழகிய
கதவம்-கதவினுடைய
தாள்–தாழ்ப்பாளை
திறவாய்–திறக்க வேணும்’
ஆயர் சிறுமி யரோமுக்கு–இளமை தங்கிய இடைப் பெண்களாகிய எமக்கு
மாயன்–ஆச்சர்யச் செயல்களை யுடையவனும்
மணி வண்ணன்–நீலமணி போன்ற திரு நிறத்தை யுடையவனுமான கண்ண பிரான்
நென்னலே–நேற்றே
அறை பறை வாய் நேர்ந்தான–ஒலி செய்யும் பறைளைத் தருவதாக வாக்களித்தான்’
துயில் எழ–(அவ் வெம்பெருமான்) துயிலினின்றும் எழுந்திருக்கும்படி
பாடுவான்-பாடுகைக்காக
தூயோம் ஆய்–பரிசுத்தைகளாய்
வந்தோம்–(அடியோம்) வந்திருக்கின்றோம்’
அம்மா–ஸ்வாமி!
முன்னம் முன்னம்–முதல் முதலிலே
வாயால்–(உமது) வாயினால்
மாற்றாதே–மறுக்காதொழிய வேணும்’ (அன்றியும்)
நேசம் நிலை கதவம்–கண்ண பிரான் பக்கலில்) பரிவுற்றிருக்கும் நிலைமையை யுடைய கதவை
நீ–நீயே
நீக்கு–நீக்க வேணும்’

வியாக்யானம்

நாயகனாய் நின்ற-
தன்னுடைய சேஷித்வம் சித்திக்கைக்காக
தனக்கு புறம்பாய் இருப்பான் ஒரு சேஷியை தேடித் போக
வேண்டி இருக்கை அன்றிக்கே-
தானே சேஷித்வ காஷ்டையிலே நிற்கிற –

(தேவும் மற்று அறியேன் -குருகூர் நம்பி)

நந்த கோபனுடைய-
பகவத் அனுபவ ஜனித ஆனந்த நிர்பரனாய்-
சம்ஸ்ரத ரஷகனான ஆச்சார்யன் உடைய

(நந்தி –ஆனந்தம்
கோபன் -சிஷ்யர்களை ரக்ஷிக்குமவன்)

கோயில் காப்பானே –
கோயில் உண்டு-அவனுக்கு பிரதிபாதகத்வேன இருப்பிடமான திருமந்தரம்
அத்தை அநாதாரிகள் செவிப் படுத்தாதபடி-ரஷிக்குமவனே –

கொடித் தோன்றும் தோரண வாசல் காப்பானே –
இவனுடைய ரஷகத்வம் விளங்கா நின்றுள்ள-
அகார நாம சப்தார்தங்களைக் காக்குமவனே-

மணிக் கதவம் தாள் திறவாய்-
ஞான ஆனந்த ஸ்வரூபன் ஆகையாலே-ஸ்லாக்கியமாய் இருந்துள்ள ஆத்ம ஸ்வரூப அனுபவத்தையும்-
அத்தால் வரும் ஸ்வ ஸ்வாதந்த்ர்ய பிரதி பத்தியையும்-தவிர்த்து அருளாய்-

பயமுள்ள தேசத்தில்-அர்த்த ராத்ரியில் வந்து எழுப்புகிறவர்கள் யார் என்ன

ஆயர் சிறிமியரோமுக்கு-
எம்பெருமானே உபாயம் உபேயம்-என்று-அத்யவசித்து இருக்கும் ஜ்ஞான ஜன்மாக்கள் திரு வம்சத்திலே-
பிறந்த பகவத் அனன்யார்ஹ சேஷ பூதர்களான நமக்கு –

நீங்கள் வந்த கார்யம் ஏது என்ன –

அறை பறை-
த்வநிக்கிற வாத்தியம் வேண்டி வந்தோம் என்ன
புருஷார்த்தம் வேண்டி வந்தோம் என்ன

ஆகில் திருப் பள்ளி உணர்ந்த அநந்தரம் விண்ணப்பம் செய்து
தருவிக்கிறேன் -என்ன

மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேரந்தான்-
ஆஸ்ரித பரதந்த்ரனாய்
ஸூலபனாய்
ஸ்ரமஹரமான வடிவை உடையவனாய்
எம்பெருமான்
நென் நேற்றே பறை தருகிறேன் என்று
மன பூர்வகமாக சொல்லி வைத்தான் –
ஆகிலும் நீங்கள் பிரயோஜனாந்த பரர அன்றோ என்ன –

தூயோமாய் வந்தோம் –
பறை என்றது வியாஜ்ய மாதரம்
நாங்கள் அநந்ய பிரயோஜனராய் வந்தோம் –
அநந்ய பிரயோஜனருக்கு கர்த்தவ்யம் என்ன என்ன –

துயில் எழப் பாடுவான்-
திருப்பள்ளி எழுச்சி பாட வந்தோம் –

ஆகில் நில்லுங்கோள் திறக்கிறேன் என்ன
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே யம்மா-
வாக்காலே முந்துற முன்னம் எங்களை நிஷேதியாதே கொள்-
எங்களை முற்பட நிஷேதியாது ஒழிய வேணும் –
நெஞ்சால் நினைத்தாய் ஆகிலும் வாயால் நிஷேதியாது ஒழிய வேணும் —
ஆகில் கதவைத் திறந்து கொண்டு புகுருங்கோள் என்ன –

நீ நேச நிலைக் கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்
நீ வா எனிலும்
ஸ்னேக உக்தமான நிலையை உடைத்தான கதவைத் திறந்து விடாய்

நீ எம்பெருமான் இடத்திலே பிரேம அதிசயத்தாலே
அநாதிகாரிகளுக்கு அவனை உள்ளபடி காட்டாதாப் போலே
ஆத்ம ஸ்வரூபம் ஸுவ வை லஷண்யத்தாலே
அதிகாரிகளுக்கும் பகவத் விஷயத்தை
மறைக்கக் கடவதாய் இறே இருப்பது-

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சுத்த சத்வம் தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ திருப்பாவை -நாயகனாய் நின்ற -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் வியாக்யானம் -மூவாயிரப்படி

October 28, 2013

அவதாரிகை –
கீழில் பத்துப் பாட்டாலும்
முற்பட உணர்ந்தவர்கள் உறங்குகிறவர்களை எழுப்ப
எல்லாரும் கூடி வந்து -ஸ்ரீ நந்தகோபர் திரு மாளிகையிலே சென்று
கோயில் காப்பானையும் வாசல் காப்பானையும் எழுப்புகிறார்கள் –

செய்யாதன செய்யோம் -என்று பண்ணின பிரதிஞ்ஞை-அனுஷ்டான பர்யந்தமாக்க வேணுமே –
ததீயரை முன்னிட்டு பற்றாத அன்று முறை தப்பின சூர்பணகை பட்டது படும் அத்தனை –

வல்ல பரிசு தருவிப்பரேல் அது காண்டும் -என்னும்-
பெரியாழ்வார் திருமகள் இறே இவள்-

நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய
கோயில் காப்பானே கொடித் தோன்றும் தோரண
வாசல் காப்பானே மணிக் கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறிமியரோமுக்கு அறை பறை
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேரந்தான்
தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே யம்மா நீ
நேச நிலைக் கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்

பதவுரை

நாயகன் ஆய் கின்ற–(எமக்கு) ஸ்வாமியாயிருக்கிற
நந்தகோபனுடைய–நந்தகோபருடைய
கோயில்–திரு மாளிகையை
காப்பானே-காக்குமவனே!
கொடி-த்வஜபடங்கள்
தோன்றும்-விளங்கா நிற்கப்பெற்ற
தோரணம் வாசல்–தோரண வாசலை
காப்பானே–காக்குமவனே!
மணி-அழகிய
கதவம்-கதவினுடைய
தாள்–தாழ்ப்பாளை
திறவாய்–திறக்க வேணும்’
ஆயர் சிறுமி யரோ முக்கு–இளமை தங்கிய இடைப் பெண்களாகிய எமக்கு
மாயன்–ஆச்சர்யச் செயல்களை யுடையவனும்
மணிவண்ணன்–நீலமணி போன்ற திரு நிறத்தை யுடையவனுமான கண்ண பிரான்
நென்னலே–நேற்றே
அறை பறை வாய் நேர்ந்தான–ஒலி செய்யும் பறைளைத் தருவதாக வாக்களித்தான்’
துயில் எழ–(அவ் வெம்பெருமான்) துயிலினின்றும் எழுந்திருக்கும்படி
பாடுவான்-பாடுகைக்காக
தூயோம் ஆய்–பரிசுத்தைகளாய்
வந்தோம்–(அடியோம்) வந்திருக்கின்றோம்’
அம்மா–ஸ்வாமி!
முன்னம்முன்னம்–முதல் முதலிலே
வாயால்–(உமது) வாயினால்
மாற்றாதே–மறுக்காதொழிய வேணும்’ (அன்றியும்)
நேசம் நிலை கதவம்–கண்ண பிரான் பக்கலில்) பரிவுற்றிருக்கும் நிலைமையையுடைய கதவை
நீ–நீயே
நீக்கு–நீக்க வேணும்’

நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய கோயில் காப்பானே –
ஸ்ரீ நந்த கோபர் திரு மாளிகைக்கு காவலாய்
எங்களுக்கு நிர்வாஹகன் ஆனவனே –

நாயகன் என்று ஸ்ரீ நந்த கோபரை சொல்லிற்று ஆகவுமாம் –

இவர்களால் பெறுமவன் அன்றோ நாயகன் -ஆவான் –
இவனை நாயகன் என்கிறது என் என்ன –

பல சித்தி ஆச்சார்யனாலே ஆகையாலே -உபகாரகனை நாயகன் என்கிறார்கள்
பிரதான சேஷியைக் காட்டில் த்வார சேஷிகளே எங்களுக்கு
சேஷிகள் என்கிறார்கள் –

நந்த கோபனுடைய கோயில் –
நாங்கள் ஆஸ்ரயிக்கிறவன் பரதந்த்ரன்
தங்களை சேஷிகளாக்க வைக்க இசைவாரோடே கலந்து
பரிமாற விறே இவன் இங்கு வந்து அவதரித்தது –

அடியார் நிலாகின்ற வைகுந்தமோ -என்று
பரமபதத்திலும் தான் பரதந்த்ரனாய் அவர்கள் இட்ட வழக்காய் இறே இருப்பது –

கோயில் காப்பானே –
சிறு பெண்கள் ஆகையாலே
அவன் தொழிலை இட்டு சொல்கிறார்கள் –
இன்னது பிடிப்பான் -என்னுமா போலே
அவனும் உகக்கும்படியாலே சொல்லுகிறார்கள் ஆகவுமாம் –

இத்தால் –
சேஷ வ்ருத்தி பிரயுக்தமான பேரே
இவ் வாத்மாவுக்கு பேர் என்னும் இடம் தோற்றுகிறது-

கொடித் தோன்றும் தோரண வாசல் காப்பானே –
அவன் கண்ணாலே போங்கோள் என்று சொல்ல
திருவாசல் காக்கிறவனை வந்து எழுப்புகிறார்கள் -கோயில் காப்பான் -என்று –
அங்குத்தைக்கும் நிர்வாஹகனாய்
அவன் தன்னையே கொடித் தோன்றும் தோரண வாசல் காப்பான் -என்னவுமாம் –
ஷேத்ராதிபதி தன்னை கோயில் காப்பான் என்று
வேறே திருவாசல் காப்பனைச் சொல்லிற்றாகவுமாம் –
ஆர் விக்நம் பண்ணுகிறார்களோ என்று பயப்பட்டு எல்லார் காலிலும் விழுகிறார்கள் –

கொடித் தோன்றும் தோரண வாசல்-
ஆர்த்த ரஷணத்துக்கு கொடி கட்டி தோரணமும் நட்டு வைத்தாப் போலே
பெண்கள் தடுமாற்றம் தீர முகம் தருகைக்கு அன்றோ உன்னை இங்கே வைத்தது –

மணிக் கதவம் தாள் திறவாய் –
பொன்னியலும் மாடக் கவாடம் கடந்து புக்கு -என்னுமா போலே
புகுவாரை தன் அழகாலே கால் கட்டும் கதவினுடைய தாள் திறவாய்
திரு வாசலுக்குள் புகுவாரை கால் கட்டும் இது
அவன் புக்காரை புறப்படாதபடி கால் கட்டும் தன் அழகாலே –

தாள் திறவாய் -என்றவாறே

அவன் பயமுள்ள தேசத்தில்
மத்திய ராத்ரியிலே வந்து திறக்க
அழைக்கிற நீங்கள் ஆர் -என்ன –

இருந்த இடத்தில் பயம் என் என்ன –

காலம் த்ரேதா யுகமாய்
தமப்பனார் சம்பராந்தகனுமாய்
பிள்ளைகள் தாங்களும் ஆண் புலிகளாய்
மந்த்ரிகள் வசிஷ்டாதிகளாய்
ஊரும் திரு அயோத்யையாய்
பயம் அற்று இருக்கிறதோ –

காலம் கலிக்கு தோள் தீண்டியான த்வாபராந்தம்
தமப்பனார் சாது -ஸ்ரீ நந்தகோபர் –
இவர்கள் சிறு பிள்ளைகள் -அதுக்கு மேலே தீம்பர்கள்
ஊர் இடைச் சேரி
கம்சன் சத்ரு
எழும் பூண்டுகள் எல்லாம் அசூர பூண்டுகள்
பயம் கெட்டு இருக்கலாமோ என்ன –

பெண்களுக்கு பயப்பட வேண்டுமா -என்ன

சூர்பணகை -பெண் அன்றோ என்ன –

அவள் ராஷசி -நாங்கள் ஆயர் சிறுமியர்
இவனுக்கு என்ன வருகிறதோ என்று வயிறு பிடிக்கும் இடையருக்கு
பிறந்த வர்கள் அன்றோ -என்ன –

பூதனைக்கு பின்பு இடைச்சிகளுக்கு அன்றோ பயப்பட வேண்டுகிறது -என்ன

ஆயர் சிறிமியரோமுக்கு
கிரித்ரிமம் அறியாத சிறு பெண்கள் -என்ன-வார்த்தையிலே அறியலாம்
வந்த கார்யத்தைச் சொல்லுங்கோள் -என்ன –

அறை பறை –
நோன்புக்கு பறை வேண்டி வந்தோம் -என்ன
அதுவாகில் திருப் பள்ளி உணர்ந்தால் விண்ணப்பம் செய்கிறோம்
அவ்வளவும் நில்லுங்கோள் -என்ன –

மாயன் –
பெண்கள் கோஷ்டியில் தாழ நின்று பரிமாறின படி –

மணி வண்ணன் –
தாழ நில்லா விடிலும் விட ஒண்ணாத வடிவு அழகு –
பூ அலர்ந்தாப் போலே வார்த்தை சொல்லுகிற போதை ஒஷ்ட ஸ்புரணம் -பிரகாசம் -என்னவுமாம்-
வாக்மீ ஸ்ரீ மான் என்னுமா போலே

நென்னலே –
உன் காலைப் பிடிக்க வேண்டி இருக்கிற இன்று போலேயோ
அவன் காலைப் பிடிக்க இருந்த நென்னேற்றம்
ஒரு நாளே -என்றார்கள் –
ஏகாரத்துக்கு சேர்த்து வியாக்யானம் –

வாய் நேரந்தான் –
ஓலக்கத்தில் ஒரு வார்த்தை சொன்னான் ஆகில்
மெய்யாக வேணுமோ -என்ன

ஒருத்திக்குச் சொன்ன வார்த்தை அவள் விஷயத்தில்
பழுதாய்த்தாகில் அன்றோ
இவ்வார்தையும் பழுதாவது -என்ன –
சொன்னானே யாகிலும் நீங்கள் பிரயோஜனாந்த பரர்கள் அன்றோ என்ன –

தூயோமாய் வந்தோம் –
பறை -என்று ஒரு வியாஜ்யம் –
அநந்ய பிரயோஜனைகள் நாங்கள் –
அதாவது
அவனுக்கு மங்களா சாசனம் பண்ணுமது ஒழிய
தங்களுக்கு ஓன்று அன்றிக்கே இருக்கை-

வந்தோம் –
அவள் செய்வதை நாங்கள் செய்தோம் -என்கை-
நீங்கள் அநந்ய பிரயோஜனைகள் என்கைக்கு
அடையாளம் என் என்ன –

துயில் எழ பாடுவான் –
திருப் பள்ளி எழுச்சி பாட வந்தோம்
பிராட்டி பெருமாள் உறங்குகிற படியைக் கண்டு உகந்தாள் –
இவர்கள் இவன் உணருகிறபடியைக் காண ஆசைப் படுகிறாள்
அங்கனே யாகில் திறக்கிறேன் -நில்லுங்கோள் -என்ன –

வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே –
எங்களை முற்பட நிஷேதியாது ஒழிய வேணும் –
நெஞ்சால் நினைத்தாய் ஆகிலும் வாயால் நிஷேதியாது ஒழிய வேணும் –
உன் கையது கிடாய் இவர்களுக்கு –
அவன் கையது இறே வாழ் நாள்
அவன் சத்தை பெற

அம்மா –
பச்சை இடுகிறார்கள்
உள் இருக்கிறவனோ நாதன்
நீ அல்லையோ -என்ன
தாளை உருவிக் கதவை தள்ளிக் கொடு புகுருங்கோள் என்ன –

நீ நேச நிலைக் கதவம் நீக்கு –
அது உன்னிலும் பரிவுடைத்தான கதவு
எங்களால் தள்ளப் போகாது
நீயே திறக்க வேணும் –
என்கிறார்கள்

சேதன அசேதன விபாகம் இன்றிக்கே
இவ் ஊரில் உள்ளது எல்லாம் அனுகூலமாய் இருக்கிறபடி –
கம்சன் படை வீட்டில் எல்லாம் பிரதிகூலமாய் இருக்குமா போலே –

நேச நிலைக் கதவம் –
செறிந்து இருக்கிற கதவையும் நிலையையும் –

நீக்கு-
நீயே வந்து திறக்க வேணும் –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -8-8-8-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

October 28, 2013

இப்படி அரிதில் பெறத் தக்க
ஞானம் கை வந்தாலும்
அந்திம ஸ்ம்ருதி இல்லையாகில்
செய்தன எல்லாம் பயன் அற்றவை ஆகும்
என்கிறார்-

———————————————————————————————————————————————————————

எய்த்தார் எய்த்தார் எய்த்தார் என்று
இல்லத்தாரும் புறத்தாரும்
மொய்த்து ஆங்கு அலறி முயங்கத்
தாம் போகும் போது உன்
மத்தர் போல் பித்தே ஏறி
அனுராகம் பொழியும் போது எம் பெம்மானோ
டொத்தே சென்று அங்கு உள்ளம்
கூடக் கூடிற்றாகில் நல்லுறைப்பே

———————————————————————————————————————————————————————–

எய்த்தார் எய்த்தார் எய்த்தார் என்று –
இவனுக்கு உடலை விட்டு உயிர் பிரியும் நிலை
வருவதற்கு முன்பே
இவன் இறப்பது விருப்பம் ஆகையாலே
முடிந்தான் முடிந்தான் முடிந்தான் -என்று பலகாலும்
சொல்லா நிற்பர்கள் ஆயிற்று -என்றது
இவன் கலங்கிய நிலையில் நெஞ்சினைத் தெளிவித்து உத்தேச்யமான எம்பெருமானை நினைக்க வல்லனாம்படி செய்கை –
அன்றிக்கே
முடிந்தான் முடிந்தான் முடிந்தான் -என்று இதனையே சொல்லா நிற்பர்கள் -என்றபடி –

இல்லத்தாரும் புறத்தாரும் –
இவன் தான் வாழ்கிற நாளிலே இவர்களுக்கு ஒன்றும் கொடாமையாலே
இவனும் இது ஒரு நடுவில் பெரும் குடியும் என் –
இவன் இறக்க -உள்ள செல்வங்களை நாமோ எடுத்துக் கொண்டால் ஆகாதோ -என்று
இருப்பவர்கள் மனைவி முதலாயினோர்கள் –
அவனும் இவர்க்களுமான கூட்டம் பொறாமையாலே போக அமையும் என்று இருப்பார்கள் புறம்பு உள்ளார்கள் –

மொய்த்து –
கல்யாணத்துக்கு அழைத்தாலும் வாராதவர்கள்
துக்கம் உண்டானவாறே தாங்களே வந்து மேல் விழுவர்கள்-

ஆங்கு அலறி –
இவனுக்கு உள்ள தெளிவும் போம்படி கூப்பிடா நிற்பர்கள்-என்றது
மீண்டாலும் மீளலாம் என்று ஐயம் உண்டான நிலையில்
அச்சத்தாலே பிராணம் போம்படி கூப்பிடா நிற்பர்கள் -என்றபடி-

முயங்கத்-
கட்டிக் கொள்ள -என்றது –
கூப்பீட்டுக்கு போகாத குறை பிராணனும் போம்படி –
அன்புள்ள வர்களைப் போலே மேல் விழுந்து கட்டிக் கொள்வார்கள் என்றபடி –
தாம் போகும் போது -இவர்களையும் இந்த செல்வத்தையும் விட்டுப் போகா நின்றோமே -என்று
மனம் இங்கே இழுக்க
தன்னால் மீள ஒண்ணாமை யாலே சரீரத்தை விட்டு
தாங்களே போகா நிற்பர்கள் –

தாம் போகும் போது -என்கிறார் காண்
அப்பொழுதைய துக்கத்தைப் பற்ற —

உன் மத்தர் போல் பித்தே ஏறி-
ஆசை அற்ற பெரியோர்களும் கூட
உன்மத்தன் உடைய நிலையைப் போன்று அறிவு கெட்டு-என்றது –
தெளிவு பிறந்து தன்னையும் சர்வேஸ்வரனையும் நினைக்க வேண்டிய நிலையிலே கலங்கி -என்றபடி –

அனுராகம் பொழியும் பொழுது –
இளையாளை பொன்னையும் பூட்டிக் கொடுவந்து முன்னே நிறுத்துவர்கள்-
அன்றிக்கே –
புத்திரர் முதலாயினோர்கள் பக்கல் அன்பு செலுத்தாத நாள்களுக்கும் போர அன்பு செலுத்தத் தொடங்குவான் – என்னுதல் –
வாழ்கிற காலத்தில் உலோபத்தாலே இவர்களுக்கு ஒன்றும் செய்யான்
இப்போதாக புதைத்து வைத்த செல்வத்தை ஆபரணமாக பூட்டிக் காணப் பெற்றிலோமே
என்று மதகு திறந்து அன்பு செலுத்துவான் –

எம் பெம்மானோ டொத்தே சென்று அங்கு உள்ளம் கூடக் கூடிற்றாகில் –
இப்படி கலங்குகிற சமயத்தில் -தெளிவு உண்டாய்
தன்னையும் அவனையும் நினைத்து
அவனோடு ஒத்த சுத்தியும் இது உடைத்து -என்று நினைத்தல் ஆகிற இவ்வர்த்தம் கூடிற்று ஆகில் -என்றது
எம்பெருமானும் ஞான ஆனந்த லஷனமாய் இருப்பன்
இவ்வாத்மாவும் ஞான ஆனந்த லஷனமாய் இருக்கும்
என்று நினைக்கும்படி அவ்வாத்ம வஸ்துவில் மனம் சேர்த்தல் ஆகிற இவ்வர்த்தம் கூடுமாகில் -என்றபடி –

நல்லுறைப்பே-
நல்ல வாய்ப்பு –
அல்லாத போது செய்தன வெல்லாம் பயன் இல்லாதவையே யாகும்
உன்மத்தர் போலே பித்தே ஏறில் விரும்பிய பயன் சித்தியாது
அனுராகம் பொழியில்ஆதிபரதனைப் போலே மானாகப் போம் இத்தனை-

எம்பார் நிர்வாகத்துக்கு சேர -ஆத்மா வினுடைய இயல்பான தன்மை பற்றி அருளிச் செய்தார் -இப்படி என்று தொடங்கி-
மேல் திருமாலை ஆண்டான் நிர்வாகத்துக்கு சேர எம்பெருமான் நினைவோடு ஒத்தே சேர்ந்து -சேஷமாக-என்று நினைவு பற்றி -அருளிச்செய்கிறார் –
நின்ற ஒன்றை உணர்ந்தேனுக்கு -என்னும் பாட்டு தொடங்கி
நிஷ்கிருஷ்ட ஆத்மா அனுசந்தானம் மாத்ரமே அன்றிக்கே
பகவானுக்கு அடிமையாம் தன்மை பர்யந்தமாக அனுசந்திக்கிறது என்றும்
இப்பாட்டில் எம்பெருமானோடு ஒத்தே சென்று அங்கெ உள்ளம் கூடக் கூடிற்றாகில் -என்னும் அந்திம ஸ்ம்ருதியும்
எம்பெருமான் தனக்கு அடிமையாக இவ்வாத்மாவை நினைத்து இருக்குமா போலே
இவனும் அவன் நினைவோடே ஒத்து அந்நிலையிலே அடிமையாம் தன்மையை நினைக்கிற நினைவு கூடுமாகில்
நல்ல வாய்ப்பு என்று ஆண்டான் அருளிச் செய்வர் –
நன்று
பகவான் உடைய குணங்களில் ஈடுபட்டவராய் இருக்கிற இவர்
இவற்றை எல்லாம் பேசுவது என் -என்னில் –
இப்படி அரிதாய் இருக்கிற இதனைக் கண்டீர் எனக்கு காட்டித் தந்தது -என்று
அவன் பக்கலிலே செல்லுகின்ற செய்ந்நன்றி அறிதலே காரணமாம் -என்க –

துஸ் சம்பாதமான ஞானம் கை வந்தாலும்
அந்திம ஸ்ம்ருதி இல்லா விடில் வ்யக்தம்
சுலபமாக கிடைக்காதது கை வந்தாலும் -அந்திம ஸ்ம்ருதி இல்லா விடில் வ்யக்தம்
முதல் மூன்று வரிகள் பிராணன் போகும் சமயத்தில்
அவனுக்கு பிரகாரம் ஒத்தே சென்று ஞான ஆனந்தங்களில் சாம்யம் என்ற உணர்வு இல்லை ஆகில்
படுக்கையில் இருக்க –
கட்டி அழ -அதுவே போக்கும் -போயிட்டார் போயிட்டாத் மொய்த்து
இல்லத்தாரும் புறத்தாரும்
கூக்குரல் இட்டும்
உன்மத்தர் போல் -அவனை நினைக்காமல்
பித்தே ஏறி கூட உள்ளார் மேலே ப்ரீத்தி கொண்டு
அனுராகம் பிழியும் பொழுது
இவற்றை விட்டு எம்பெருமான் பற்ற
உத்க்ரமன தசை -இவன் முடிகை தங்களுக்கு இஷ்டமாக இருப்பதால் முடிந்தான் என்பர்
த்வயம் உபதேசம்
செவியில் ஊதுவார் நம் ஆசார்யர்கள்
முடிந்து உள்ள த்ரவ்யம் நாமே கொள்ளலாம் என்று இருப்பார் பார்யாதிகள் –
நம்பிள்ளை லோக ஸ்வாபம் கண்டு இழிகிறார்
மொய்த்து –
வாராமல் உள்ளாறும் வந்து
கல்யாணத்துக்கு அழைத்தாலும் வாராதவர் இப்பொழுது மேல் விழ

தொலைவதை பார்க்க ஆசை
அலறுவதில் பிராணன் போகும்
சுற்றி நின்றால் மூச்சு அடைத்து சாவான் –
ஆங்கு அலறி
முயங்க கட்டி கொள்ள குறை பிராணனும் போகும்
தாம் போகும் போது
நெஞ்சு இங்கே இழுக்க -பந்துக்கள் பணம் -இங்கே
தாம் போகும் போது -அப்படி பட்ட தாம் –
அந்த சமயத்தில் பித்தேறி
தெளிவு பிறந்து தன்னையும் சர்வேஸ்வரனையும் நினைக்காமல்
எம் பெம்மான் உடன் ஒத்தே சென்று –
தன்னையும் அவனையும் அனுசந்தித்து
அவன் போலே சுத்தி உடைத்து
என்கிற அர்த்தம் கூடிற்றாகில் ஞானம் ஆனந்த லஷணம்
அல்லாத போது செய்தது எல்லாம் வ்யக்தம்
சித்தியாது
ஆதிபரதர் போலே மானாய் பிறப்பார் மீண்டும்
ஜீவா காருண்யம்
ஆசை வளர
மானை விட்டு போகிறோமே
பாண்டு வதம் பண்ணினான் இந்த மான் என்பர்
பிரகாரமான ஆத்மா ஸ்வரூபம் சொல்லிற்று
ஆண்டான் பணிக்கும் படி
நின்ற -நின்ற பாசுரம் முதல் இது வரை
தனக்கு -திரு உள்ளதுடன் ஒத்து
ஆத்மா எனக்கு சேஷம் அவன் நினைவு போலே
இவனும் தான் அவனுக்கு சேஷம் என்ற நினைவு கொள்ள வேண்டும்
அடிமை பட்டது என்ற எண்ணம் கொள்ள வேண்டும்
பெம்மானொடுஒத்த
திரு உள்ளதுடன் ஒத்து என்ற அர்த்தத்தில் வியாக்யானம்
அவன் நினைவை பின் சென்று கொள்ள வேண்டும்
அரிதாய் இருக்கிற இத்தை கிடீர் அவன் காட்டிக் கொடுத்தான்
என்று உபகார ச்ம்ருதியால் அருளுகிறார்
காண முடியாத ஒன்றை காட்டி தந்தான் -அவன் கல்யாண குணம் அனுபவிக்கிறார் இதிலும்

——————————————————————————————————————————————————————————————————————-

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -8-8-7-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

October 28, 2013

மேலே கூறிய உபாயத்தின் படியே
அந்த ஆத்துமாவை அடையாமல்
அதிலே ஐயம் தொடரப் பெற்றவர்கள்
உருவக் கிலேசப் பட்டே போம் இத்தனை –
என்கிறார் –

————————————————————————————————————————————————–

அதுவே வீடு வீடு பேற்று
இன்பம் தானும் அது தேறி
எதுவே தானும் பற்று இன்றி
ஆதும் இலிகளா கிற்கில்
அதுவே வீடு வீடு பேற்று
இன்பம் தானும் அது தேறாது
எதுவே வீடு எது இன்பம் என்று
எய்த்தார் எய்த்தார் எய்த்தாரே

——————————————————————————————————————————————————

அதுவே வீடு –
மேலே கூறிய அதுவே -ஆத்துமாவை அடைதல் ஆகிற
மோஷம் ஆகிறது –

வீடு பேற்றுஇன்பம் தானும் அது –
அந்த மோஷத்தை அடைந்தால் வரும் இன்பமும் அதுவே –

தேறி –
இப்படித் தெளிந்து –

எதுவே தானும் பற்று இன்றி –
சரீரத்திலும்
சரீர சம்பந்தம் பட்ட பொருள்களிலும் தொற்று அற்று -என்றது

ஆதும் இலிகளா கிற்கில்-
யாதும் இலிகள் ஆகிற்கில்-
அவற்றில் ருசி வாசனைகளும் அறப் பெறில் –

கர்மங்களைச் செய்து -ஒரு பலத்தையும் கருதாமல் வர்ணாஸ்ரம தர்மப் படி செய்து
ஞானத்தை உடையவனாய் -ஆத்மாவை அடைய சாதனமாய்
ஐம் புலன்களையும் அடக்கி -ஞான யோகத்தில் நிலை நின்று –
ஸ்திதப் பிரஜ்ஞாக்ய அவஸ்தை பிறந்து -உலக விஷயங்கள் வந்து மேலிட்டாலும் கலங்காத தைர்யத்தை உடையவனாய்
ஸ்ரீ கீதை -2-55- ஸ்லோகம் படி –
யோகமும் தலை நின்று -அஷ்டாங்க யோகத்தில் முதிர நின்று –

அதுவே வீடு-
ஆத்மாவை அடைதலே மோஷம் –
வீடு பேற்று இன்பம் தானும் அது –
மோஷத்தை அடைதலால் வரும் இன்பமும் அந்த ஆத்தும அனுபவம் –

தேறாது –
இப்படி தெளிய மாட்டாமல் —

எதுவே வீடு எது இன்பம் என்று எய்த்தார் –
மோஷம் ஆகிறது ஏது –
மோஷ இன்பம் ஆகிறது ஏது –
என்று இளைத்தவர்கள் –

எய்த்தார் எய்த்தாரே –
இளைத்தார் இளைத்தார் என்று உருவக் கிலேசப் பட்டே போம் இத்தனை –
நிராஸ்ரயமாக -யோக சாஸ்திர க்ரமத்தால் அன்றிக்கே –
விசுவாசம் இல்லாமல் -ஆத்தும ஸ்வரூபத்தை நினைப்பதனால் பயன் இல்லை -என்றபடி
எம்பெருமானுக்கு பிரகாரமாக சரீரமாக இருப்பது என்கிற ஆத்ம ஸ்வரூபம் –

அஷ்டாங்க யோகம் -செய்து
பிராப்பிக்க மாட்டாமல்
சம்சயம் உள்ளார் துக்கம் அனுபவிப்பார் -என்கிறார்
அதுவே வீடு பேறு ஆத்மா பிராப்தி அவன் பிரகாரமாக அறிதல்
அதுவே வீடு வீடு பெற்று இன்பமும் அது
தெளிந்து
எதிலும் பற்று இன்றி -அடியோடு அற்று –
கர்மம்-யுகம் அனுஷ்டித்து
பாப சாயத்தால் ஞானம் பெற்று
ஞான யோகம்
ஸ்திப பிரதிஞ்ஞா அவஸ்தை
பகவத் பிரகாரமான ஆத்மா பிராப்தி
சுகமும் அதுவே
இப்படி தெளிய மாட்டாமல்
எது வீடு எது பேறு
இளைத்தே போவார்
துக்கப் பட்டே போவார்கள் –
ஆனந்தம் படுவது
கைங்கர்யம் உண்டாக்கி அவனை பார்த்து ஆனந்தம் கொள்வது தப்பு இல்லை
ஈசன் அடங்க எழில் -அடங்குக உள்ளே
யஜமான் சொத்தை பார்ப்பது தப்பு இல்லை
கைவல்யம் ஆழ்வார் போதும் என்று சொல்ல வில்லை த்யாஜ்யம்
சிற்றின்பம்
அவன் பிரகாரமஎன்ற நினைவு கொண்டால் தப்பு இல்லை
ராஜ குமாரனுக்கு சிறைச் சாலையும் சொத்து போலே
அது போலே ஆத்மா சாஷாத்காரமும் உத்தேச்யம்
இதை தெளியாமல் இளைத்தவர் இளைத்தே போவார்கள்
நிராஸ்ரயமாக
தனியாக நினைத்தால் –
நிஷ் பிரயோஜனம் இதுவும்
துக்கத்துக்கு சமானம்

—————————————————————————————————————————————————————————————

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -8-8-6-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

October 28, 2013

யோக சாஸ்த்ரத்தில் சொல்லுகிறபடியே
இந்திரியங்களை அடக்குதல் முதலியவற்றின் வடிவமான யோகத்தாலே
பிரகிருதியின் நின்று விடுபட்ட ஆத்ம ஸ்வரூபத்தை
வருந்தினால் நேரே காணலாம் –
என்கிறார் –

——————————————————————————————————————————————————————

நன்றாய் ஞானம் கடந்து போய்
நல்இந்திரியம் எல்லாம் ஈர்த்து
ஒன்றாய்க் கிடந்த வரும் பெரும் பாழ்
உலப்பில் அதனை யுணர்ந்து உணர்ந்து
சென்று ஆங்கு இன்ப துன்பங்கள்
செற்றுக் களைந்து பசை யற்றால்
அன்றே அப்போதே வீடு
அதுவே வீடு வீடாமே

——————————————————————————————————————————————————-

நன்றாய் ஞானம் கடந்து போய்-
வேற்பட்டதான நன்மை உடைத்தாய்
இந்திரிய ஞானத்துக்கு அறிய முடியாததாய்
இருக்கும் என்று அவற்றை மீண்டும் அருளிச் செய்கிறார் -என்னுதல்-
அன்றிக்கே –
நன்றாய் -என்று இது கிடக்க –
ஐம்புல இன்பங்களைத் தப்பிப் போய் என்னுதல் –
ஜ்ஞாதாய இதி ஜ்ஞானம் -என்கிற பிரக்ரியையாலே -பிரித்து பொருள் கூறுவதாலே –
ஞானம் என்கிறது -என்றது
ஞானத்தால் காணப் படும் விஷயங்களை ஞானம் என்ற சொல்லாலே சொல்லுகிறது -என்ற படி –

நல்இந்திரியம் எல்லாம் ஈர்த்து –
விஷயங்களைத் தப்பிப் போனாலும்
அவை இருந்த இடங்களிலே கொடு போய் மூட்டக் கடவனவான ஆற்றலை உடைய இந்திரியங்களைக் கழித்து –

ஒன்றாய்க் கிடந்த வரும் பெரும் பாழ் உலப்பில் அதனை யுணர்ந்து உணர்ந்து –
அநாதி காலம்
இவ்வாத்மாவோடு கலந்து கிடப்பதாய்
என்னுடைய மாயை தாண்ட முடியாதது – என்கிறபடியே
தைவி ஹி ஏஷா குணமயீ மம மாயா துரத்தயா
மாமேவ யே ப்ரபத்யந்தே மாயம் ஏதாம் தரந்தி தே-ஸ்ரீ கீதை -7-14-
ஒருவரால் கடக்க அரியதாய்
மகத்து அகங்காரம் முதலிய நிலை வேறுபாடுகளால் பரப்பை உடைத்தாய்
போக மோஷங்களை விளைத்துக் கொள்ளலாம் படியாய் –
பிரவாஹ ரூபத்தாலும் ஸ்வரூபத்தாலும் நித்தியமாய்
இருக்கிற அசித் தத்தவத்தை மிகவும் உணர்ந்து –
மிக உணர்தல் -என்றது –
பிரகிருதி யானது கார்யங்களாயும்-காரணங்களாயும் -நிற்கும்
என்னுமதனை உணர்தலைத் தெரிவித்தபடி-

சென்று ஆங்கு –
ஆங்கு நன்றாய்ச் சென்று
தன் பக்கல் இனிமை உண்டு என்னும் புத்தியை
பிறப்பிக்கக் கூடியதான இதில் கால் தாழாமல்
ஆத்ம ஸ்வரூபத்தின் அளவும் சென்று –

இன்ப துன்பங்கள் செற்றுக் களைந்து –
அதனை விடத்தக்கது என்று விட்டாலும்
சுக துக்கங்களுக்கு காரணமான புண்ணிய பாப கர்மங்கள்
கிடக்குமாகில்
பின்னையும் கொண்டு மூட்டுமே அன்றோ –
அவற்றையும்விட்டு –

பசை யற்றால் –
அவற்றை விட்டாலும்
ருசி வாசனைகள் கிடக்குமாகில்
பின்னையும் கருவிலே தள்ளும் அன்றோ –
ஆதலால் ருசி வாசனைகள் அற்றால் –

அன்றே அப்போதே
அக்காலத்திலே
அம் முகூர்த்தத்திலே –

வீடு –
பிரகிருதி சம்பந்த பட்ட பொருள்களிலும் தொற்று அறும் –
பிரகிருதி போன்று -சுனையும் -நாணமும் -மிருதுத் தன்மையும் உடையார் அலர்
தன் பக்கல் பராமுக புத்தி பண்ணினாரை தானும் முகம் பாராது –

அதுவே வீடு –
அற்றது பற்று எனில் உற்றது வீடு உயிர் -என்கிறபடியே
பிரகிருதி சம்பந்தப்பட்ட பொருள்களில் தொற்று அற்றவாறே
ஆத்துமாவை அடைதல் ஆகிற அதுவே
மோஷமாய் இருக்கும் –
அதற்கு என்று செய்ய வேண்டுவது ஓன்று இல்லை -என்பார்
வீடாமே-என்கிறார் –
வீடாமே
சர்வேஸ்வரனுக்கு பிரகாரமாக ஆத்தும வஸ்துவை நினைத்து
அவ்வழியாலே இதனை பேறாக அன்றோ இவர் தாம் நினைத்து இருப்பது
அவ்வளவு போக மாட்டாமல் இதன் நன்மையைக் கண்டு
இவ்வளவில் கால் தாழ்வார்க்கும் போந்திருந்ததே -என்கிறார்
தம்முடைய உத்தேச்யத்தில் ஒரு சிறு பகுதியை புருஷார்தத்தில்
முடிந்த நிலமாக
கொள்ளுகையால் அன்றோ முன்பு–அது செற்று -திருவாய் -1-2-5– இவர் இதனைச் சிரித்து இருந்தது-

இந்திரிய ஜெயம் -அஷ்டாங்க யோகம் கொண்டு
ஆத்மாவை -பிரகிருதி விட்டு போவதை
சாஷாத்கரிக்கலாம்
அரிது -கஷ்டம் என்னது என்கிறார் இதில்
கைவல்யம் மோஷம்
நன்றாய் ஞானம் கடந்து போய்-அனுபாஷிக்கிறார்
மீண்டும் சொல்லி புரிய வைக்கிறார் –
மற்றவை விட வேறு பட்ட –
சப்தாதி விஷயங்களை
இது நன்றாக இருக்க -தப்பலாம்
நல் இந்த்ரியங்களை எல்லாம் கழித்து
வேண்டாம் நாம் விட்டாளுமிவை ஈடுபடுக்க வைக்குமே
அரும் பெரும் பாழ் -ஆத்மா உடன் ஒன்றிக் கிடக்கும்
அசித்தை விட வேறுபடுத்த முடியாமல்
அநாதி காலம் அசித் ஆத்மா ஒன்றாக கிடக்க
மம மாயா துரத்தயா-
மூலப் பிரகிருதி -கார்யம் காரணம் உணர்ந்து
சூஷ்ம ஸ்தூல நிலை உணர்ந்து
இதில் கால் தாளாமல் -மேலே ஆத்மா ஸ்வரூபத்தளவும் சென்று –
உலப்பில் அதனை உணர்ந்து
இன்ப துன்பங்கள் சேற்று
பிரகிருதி த்யாஜ்யம் விட்டாலும் கர்மங்கள் இதிலே மூட்டும்
புண்ய பாபங்கள் விட்டு அவன் இடம் அர்பணித்து
ருசி வாசனைகள் விட முடியாமல் பண்ணுமே
பசை அற்றால்
அக்காலத்திலே அம் முகூர்த்தத்திலே வீடு
பிரகிருதி போலே ரோஷம் -சுரணை -உள்ள வஸ்து இல்லை என்கிறார் –
வேண்டாம் விட்டால் வாராதே –
பிரகிருதி இவனை விட்டு விடும்
தன் பக்கல் த்யாஜ்ய புத்தி உள்ளாரை தான் அணுகாதே
நீ விட்டால் அதுவே விடும்
ஆத்மபிராப்தி க்கு தனியாக செய்ய வேண்டுவது இல்லை
இத்தை விட்டால் போதும்
இருள் போக்க விளக்கு ஏற்றுகிறோம் தானே போகுமே
ஆசை விட்டால் தானே ஆத்மா பிராப்தி கிட்டும்
அதுவே வீடு அதுவே வீடாமே
அதுவா மோஷம் –
கொள்ளக் கூடாது
பிரகாரமாக ஆத்மவஸ்துவை அனுசந்தித்து
அவ்வழியாலே
பரத்வம்
அரி அயன் அரன் ஒன்றன மனத்தில் வைத்து
பேச நின்ற சிவனுக்கும் நாயகனே அவனே கபால மொக்கத்தில் கண்டு கொள்மின்
அறியாமை யால் சொல்ல வில்லை
இரண்டையும் நிர்வகிக்க
ஸ்வா பாவிக்க தன்மை
அந்தர்யாமி பாவம் உட்கொண்ட
அது போலே பிரகாரமாக அனுபவிக்க
அற்றது பற்றினால் உற்றது வீடு -அது செற்று -முகம் குத்த வேண்டும் சொன்னாரே
இந்த வழியாலே பிராப்யம்
அவன் வஸ்து என்பதால் உத்தேச்யம்
அப்படி போகாமல் இதில் கால் தாழ்ந்த கைவல்யருக்கும் போக்யமாய் இருக்கும்
செய்யும் கார்யத்தில் தப்பு இல்லை
அபிப்ராயத்தால்
தண்டவாளம் பேற்றால் தாமரை பட்டயம் சுதந்தரம் முன் பு
இப்பொழுது கைதாவார்
தம்முடைய உத்தேச்யம் எம்பெருமான் ஏக தேசம் ஆத்மா என்பதால் இதுவும் உத்தேச்யம் என்கிறார் –

——————————————————————————————————————————————————————————

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -8-8-5-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

October 28, 2013

மேல் பாசுரத்தில் பகவான் உடைய சரீரமாக ஆத்மா பேசப் பட்டது –
இதற்கு மேலே நான்கு பாசுரங்கள் –
ஆடையில் உள்ள வெண்மையைப் பிரித்து நிஷ்கர்ஷக சப்தத்தை இட்டுச் சொல்லுமா போலே
நிஷ்கர்ஷகம் ஆவது தர்மத்தையும் தர்மத்தின் உடைய பொருளையும் பிரித்து பேசுவது

அநிஷ்கர்ஷகம் ஆவது தர்மத்தையும் தர்மத்தின் உடைய பொருளையும் அபேதமாக பேசுவது

நியத நிஷ்கர்ஷகம் தரமி தர்மங்களை பிரித்து பேசுதல்

வாசனை உடைய மண் போலே
வைஷிக நிஷ்கர்ஷகம் ஆவது தர்ம தர்மிகளை விருப்பத்துக்கு தக்க பிரித்து பேசுவது -வஸ்த்ரம் வெண்மை நிறத்தை உடையது போலே
மேலே நான்கு பாசுரங்களும் வைஷிக நிஷ்கர்ஷ்கம் என்பார் எம்பார்
அநிஷ்கர்ஷமாக திருமாலை ஆண்டான் நிர்வாகம்

எம் பெம்மானோடு -என்கிற பாசுரம் முடிய கேவல ஆத்மா ஸ்வரூபத்தை சொல்லுகிறது -என்று எம்பார் அருளிச் செய்யும் படி –
திருமலை ஆண்டான் -சரீரமான தன்மையிலே வைத்து சொல்லுகின்றன -என்று பணிப்பர் –

————————————————————————————————————————————————————————————————————
நின்ற ஒன்றை -என்கிற இதில் -பிரகாரி பர்யந்தமாக்கி பிரகாரமான தன்மையிலே சொல்லுகிறது-

பகவான் உடைய திருவருளால் நான் அறிந்த இவ்வ்வாத்மவஸ்து
ஒருவருக்கும் அறியப் போகாது -வருந்தி அறிந்தாலும் கண் கூடாகக் காணப் போகாது -என்கிறார்

நின்ற ஒன்றை உணர்ந்தேனுக்கு
அதன் நுண் நேர்மை அது இது என்று
ஒன்றும் ஒருவர்க்கு உணரலாகாது
உணர்ந்தும் மேலும் காண்பு அரிது
சென்று சென்று பரம்பரம் ஆய்
யாதும் இன்றித் தேய்ந்து அற்று
நன்று தீது என்று அறிவு அரிதாய்
நன்றாய் ஞானம் கடந்ததே

—————————————————————————————————————————————————————————————

நின்ற –
தேகம் இந்திரியம் மனம் பிராணம் ஞானம்
இவற்றைக் காட்டிலும் வேறுபட்டதாய் நின்ற –
அன்றிக்கே
இவை அழியும் அன்றும் அழியாதே ஒரே தன்மையாய் நின்ற -என்னுதல் –
மாதவங்கள் என்று ஓதவங்களின்
மருவு சீவன் என்று ஒருவ நீ பெரும்
பூதமல்லை இந்திரியுமல்லை ஐம்
புலனுமில்லை நற் புத்தி அல்லை காண்
சீதரன் பரந்தாமன் வாமனன்
திருவரங்கனுக்கு அடிமை நீ உனக்கு
ஏதம் இல்லை என்றறி அறிந்தபின்
ஈதின் மாதவம் இல்லை எங்குமே -திருவரங்க கலம்பகம் –

ஒன்றை-
இவற்றை நியமிக்கின்றதுமாய்
வேறுபட்ட சிறப்பினை உடையதுமான
ஆத்துமாவை –

உணர்ந்தேனுக்கு –
ஆராய்ந்தேனுக்கு –
உயர்வற உயர் நலம் -என்று அவனுடைய கல்யாண குணங்களிலே இழிந்தவர் ஆகையாலே
இதற்கு முனு மின்மினி போலே இருக்கிற ஆத்மா ஸ்வரூபத்தில் கண் வைத்திலர்
அன்றிக்கே
பரிகரமும் பக்தியின் உருவத்தை அடைந்த ஞானம் ஆகையாலே
இதனை நினைப்பதற்கு போது பெற்றிலர் -என்னுதல்
இதனை ஆராய்ந்தேனுக்கு இது இருந்தபடி என் என்ன
மேலே அருளிச் செய்கிறார்-

அதன் நுண் நேர்மை –
அதனுடைய வேறுபட்ட சிறப்பு –

அது இது என்று –
அனுபவித்த பொருள்களின் படி என்றாதல்
அனுபவிக்கிறவன் படி என்றாதல் –
அறியப் போகாது –

ஒன்றும் ஒருவர்க்கு உணரலாகாது –
எத்தனையேனும் மேம்பட்ட ஞானியர்கட்கும்
ஒரு சிறிதும் அறியப் போகாது –

உணர்ந்தும் மேலும் காண்பு அரிது –
என்னிடத்தே வைக்கப் பட்ட பக்தியினாலே
உண்மையாக அறிகிறதற்க்கும் பார்க்கிரதற்க்கும் என்னுடைய ஸ்வரூபத்தை அடைகிறதற்கும்
தகுந்தவனாக இருக்கிறான் -என்கிறபடியே –
பக்த்யாது அனந்யயா சக்ய அஹம் எவம் வித அர்ஜுன
ஜ்ஞாதும் த்ருஷ்டும் சத்வேன ப்ரவேஷ்டும் பரந்தப -ஸ்ரீ கீதை -11-54-

சென்று சென்று பரம்பரம் ஆய்
செல்ல செல்ல ஒன்றுக்கு ஓன்று மேலாய் இருக்கிற
அன்னமயம்
பிராண மயம்
மநோ மயம்
அன்யோந்தர ஆத்மா விஞ்ஞான மயம் -தைத்ரியம்
என்னுமிவற்றுக்கு அவ்வருகாய் –
தேக இந்திரிய மன பிராண தீப்யோன்ய -உபநிஷத் –

யாதும் இன்றித் தேய்ந்து அற்று –
அவற்றின் தன்மை ஒன்றும் இன்றிக்கே
அவற்றோடு அறத் தேய்ந்து அற்று

நன்று தீது என்று அறிவு அரிதாய் –
சரீரம்
சரீரத்தைக் காட்டிலும் இந்திரியம்
இந்த்ரியங்களைக் காட்டிலும் மனஸ்
மனசைக் காட்டிலும் பிராணன்
என்று ஒன்றுக்கு ஓன்று சிறப்பை உடைத்தாய் இருத்தல் போன்று
பிரகிருதி சம்பந்தப் பட்ட பொருள்களின் படியால் நன்று என்றும் தீது என்றும் அறிய அரிதாய் இருக்கும்

நன்றாய் –
இயல்பாகவே வேறு பட்டதாய்

ஞானம் கடந்ததே –
இந்திரியங்களால் உண்டான ஞானத்துக்கு எட்டாததை இருக்கும் –
மேலே அவை ஒன்றுக்கு ஓன்று நெடு வாசியாய் இருக்கச் செய்தேயும்
ஒரு பிரமாணத்தால் அறியக் கூடிய ஒப்புமை உண்டு என்றார்
இங்கே அதுவும் இல்லை என்கிறார் –

ஆக
இப்பாட்டில் சாங்கிய சாஸ்த்ரத்தில்
தத்துவங்களை என்னும் முறையாலே
ஆத்ம ஸ்வரூபத்தை சொல்லும் படியையும்
அதனை அறிக்கையில் உண்டான அருமையும் சொல்லிற்று-

நின்ற ஒன்றை உணர்ந்தேனே
ஜீவாத்மாவை சொல்ல வந்தது
விசேஷ்யமான பரமாத்வா வரை செல்ல வேண்டும் –
வையதிகரண்யம் அவனையும் இவனையும் பிரித்து சொல்வது
ராஜ புருஷன் -ராஜா வேற புருஷன் வேற
சாமானாதி காரண்யம்
நீல வாசனை ஒரே வஸ்துவை குறிக்கும்
நீலமாய் மலர்ந்த புஷ்பம் போலே –
பிரவ்ருத்தி நிவ்ருத்தி பேதத்தால்
ஒரே வ்யக்தி -சர்வதா ஐக்கியம் இல்லை சர்வதா பேதமும் இல்லை விட்டு பிரிக்க முடியாதே
தர்சனம் பேதமா அபேதமா பேதாபேதமா
நாலு வரி வேதார்த்த சங்கரகம் ஸ்ரீ பாஷ்யம் சுருக்கம்
மூன்றும் சொல்லும்
சகல வற்றையும் பிரகாரமாக கொண்ட சர்வேஸ்வரன் ஒருவனே அபேதம் சொல்லி
பேதம் -சொல்லும்
தனி தனி உள்ளவை சரீரம் -பேதாபேதம் கூடியும் இருக்கும் பிரிந்துமிருக்கும்
சரீர சரீரி பாவம் -தர்ம பூத ஞானம் விஷயம் –
சம்ப்ரதாயம் திறவு கோல்-key of the system
சரீரம் ஆத்மா அபத்தமும் உண்டே பேதமும் உண்டே
ஸ்வரூபத்தால் பேதம்
சேஷித்வம் சேஷத்வம் ஸ்வரூபம்
இரண்டும் ஞானாந்த ஸ்வரூபம்
அஷ்ட குணங்களில் சாம்யம் உண்டே
நின்ற ஒன்றை -ஆத்மாவை சொல்லி -அபெதத்தால் பரமாத்வை உணர்ந்தேன்
அதன் கூடவே ஜீவாத்மாவை உணர்ந்தேன்-

ஜீவாத்மாவை தனியாக சொல்லி
விசேஷணம் தனியாக
பிரகாரம் -பகவானுக்கு சரீரம் போலே ஆத்மா –
விசெஷணமாய் பிரகாரமாய் -அடைமொழி
படம் வஸ்த்ரம் -சுக்லாம் வெளுப்பு
வச்த்ரத்தில் உள்ள வெண்மை அனுபவித்தோம்
இனி வெண்மையை அனுப்பிக்க போகிறோம் -எம்பார் –
கேவல ஆத்மா ஸ்வரூபம் அனுபவிக்கும் 5-8 பாசுரங்களும்
ஆண்டான் பிரகாரமான வேஷத்தை சொல்கிறது –
கிட்ட தட்ட ஒரே அர்த்தம் கொஞ்சம் வாசி –
நின்ற ஒன்றை –
பகவத் பிரசாதத்தால் நான் அறிந்த ஆத்மா வஸ்து
ஒருவருக்கும் அறிய முடியாது
வருந்தி அறிந்தாலும் சாஷாத்கரிக்க முடியாது -என்கிறார் இதில் –
நின்ற ஒன்றை உணர்ந்தேன் –
ஸுய யத்னத்தால் உணரலாகாது
உணர்ந்து கானல் அரிது
ஆத்மா எப்படி என்று சொல்கிறார்
சென்று சென்று –
அன்னமயம்
பிராண மயம்
மனோ மயம் –
விஞ்ஞான மாயம்
ஆனந்தமயம் அவனை சொல்லும்
ஞானத்துக்கு அப்பால் உள்ளது

நின்ற ஓன்று -நிலைத்து நிற்கும்
நிலைத்து நிற்காதவை -மற்றவை –
தேக இந்திரிய மனோ பிராணன் -நான்கை விட -சென்று சென்று பரம்பரமாய்
தத்வ த்ரயம் -தேகேந்த்ரிய -அந்யனாய்-இருக்குமே ஆத்மா –
மின்மினி போலே உள்ள ஆத்மா ஸ்வரூபத்தில் கண் வைத்திலர்
அடியேன் சிறு ஞானத்தன் அகலப் பார்த்தார்
சிறியேன் சிந்தை உள்ளே
மயர்வற மதிநலம் அருளின அன்றே அறிந்து கொண்டு இருப்பாரே
இப்பொழுது தான் அறிந்தாரா
ஆட்சேபம் இல்லையே
அவன் குனானுபவமே அனுபவித்து
வேறு ஒன்றிலும் புத்தி போகவில்லை
வடிவு அழகும் திருக் கல்யாண குணங்களும் கீழே போக விடாமல் செய்தன
சூர்ய ஒளியில் மினி மினி போலே இவை
பரிகரமும் பக்தி ரூபா ஆபன்ன ஞானம்
மதிநலம்
அனுபவிக்க போது பெற்றிலர்
முக்தன் -நோ பஜனம் ஸ்மரம் -அனைத்தையும் மறக்கிறான்
விச்மிருதியே இல்லா இடத்தில் எப்படி –
விசதமமான ஞானம் லீலா விபூதியும் பந்துக்களும் தெரிய வேண்டுமே
பகவத் அனுபவத்தில் முழுகி இருப்பதால் -திளைத்து அதுவே பிரதானம்
ஞானத்துக்கு அவிஷயம் இல்லை
சித் அசித் ஈஸ்வரன் -விசதமாக காட்டி -ஈட்டின் பிரவேசம் அருளி
உணர்ந்தேன் ஆராய்ந்தேன் இப்பொழுது என்கிறார்
அதனுள் நேர்மை அதன் நுண் நேர்மை நுண்ணிய
பெருமை
அது இது என்று ஒன்றும் உணர முடியாது
அது -அனுபவித்தது போலே இல்லை
உயர்ந்த ஞானம் உள்ளாவருக்கும் அறிய முடியாதே
அறிந்தால் சாஷாத்கரிக்கவும் முடியாதே
பொய் பொய் ஒன்றுக்கு ஓன்று மேலேயாய் இருக்கிற
தேக இந்த்ரிய மன பிராணன் -ஞானம் இவற்றை விட
நன்று தீது என்று அறிய முடியாமல் இருக்கும்
ஒன்றுக்கு ஓன்று உயர்ந்து இருக்கும்
நன்றாய் -அடுத்து
ஸ்வகதா வ்யாவர்தமாய் இருக்கும்
இந்திரியங்களால் அறிய முடியாத
ஞானம் கடந்ததாய் இருக்கும்
இனன் இலன் -உணர் முழு நலம் ஏக பிரமாண கம்யத்வம்
ஒரு விஷயத்தில் சாம்யம்
கரி பொன் ஒப்புமை -சஷூர் கிராகத்வம் ஒரே கண்ணால் கிரக்கிப்படும் வஸ்துக்கள் இரண்டும்
கதை காஞ்சி சுவாமி இதை விவரிக்க
பிராமணர் நீதிபதி –
சேது சௌக்யமா -அவர் இல்லாத பொழுது –
பந்து சொல்லி உண்டு போவாராம்
தம்பியாமே நித்யம் வந்து சாப்பிடுகிறார்
இதோ இருக்கேன் –
நீ யார் –
உனக்கும் எனக்கும் சம்பந்தம்
எந்த எமன் உன்னை பிடிக்கி போகிறானோ அவனே என்னை பிடிப்பான்
சிறு தாயார்
மகா லஷ்மி பிள்ளை
மூ தேவி பிள்ளை
அண்ணா தம்பி
அத்யந்த வைச்கன்யா வச்துக்களிளுமஎதாவது சாம்யம் உண்டே
அது போலே ஆத்மாவுக்கு -ஏக பிரமாண கம்யத்வம் இல்லை –
விஞ்ஞான மயமான ஆத்மா -நன்றாய்
சாங்க்ய சாஸ்திரம் -தத்வம் என்னும் கிரமங்கள் நம் போலே உண்டே-

———————————————————————————————————————————————————————————————-

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.